ஸ்ரீ அருளிச் செயல் ரகஸ்யம்-1 –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ..

ஒரு கடல் துறையிலே படுகிற முத்து மாணிக்கங்களில் சில ஒளி வுடையவாய் ,
சில கோது பெற்று ,அவற்றிலே சிலவற்றைக் கடைந்து , சேர்ந்தவாறே நல்ல  ஒரு கோவை ஆம் போல ,-
பெரும் புறக் கடலான – (பெரிய திரு மொழி 7-10-1 )-நாராயணன் வுடைய சங்கல் பத்தாலே சத்தையைப் பெறுகிற ஆத்மாக்களிலே சிலர் —
துளங்கு ஒளி சேர் தோற்றத்து நல் அமரர் ()-என்னும் படி நித்யராய்
சிலர் -வன் சேற்று அள்ளலிலே- திரு விருத்தம் -100-அழுந்தி அழுக்கு ஏறி ஆப்புண்டு – (திரு விருத்தம் -95 )..பத்தராய் ,
அவர்களில் சிலர் –மலம் அறக் கழுவி    மாசு அறுக்கப் பட்டு – (திருவாய் மொழி -1-3-8 )..
ஒளி கொண்ட சோதியோடே – (திருவாய்மொழி -2-3-10 )..வானத்து அணி   அமரர் ஆக்குவிக்க – ( ).
வானவர்க்கு நற் கோவையாம் –  (திருவாய்மொழி -4-2-11 )-படி முக்தராக கடவர்கள் ..
நல் சரக்கு ஒளியின் வுடைய மிகுதி குறைவால் உள்ள   பெருமை சிறுமை ஒண் பொருள் ஆன – (திரு வாய் மொழி -1-2-1 ).. 
ஆத்மாவுக்கும் எந்த ஞானத்தின் வுடைய ஏற்ற சுருக்கத்தாலே வுண்டாகக் கடவது ..

சம்சாரிகளின் பகவத் அனுபவ யோக்யதை
அயர் வறும்   அமரர்களான நித்யரும் ,
கரை கண்டோர் (திரு வாய் மொழி 5-3-10 )  என்கிற முக்தரும் ,
எம்பெருமானையும் தங்களையும் உள்ள படி உணர்ந்து , அறிவுக்குச் சேர்ந்த போகமும் அடிமையும்   பெற்று
பெரு மக்கள் உள்ளவர் (திரு வாய் மொழி 3-7-5 ) என்னும் படி உள்ளாராகிறாப் போல ,
மறந்தேன் உன்னை (பெரிய திருமொழி 6-2-2 ) 
யானே என்னை அறிய கில்லாது ( திரு வாய் மொழி 2-9-9 ) என்னும் படி   இரண்டு தலையையும் மறந்து   
மறந்த மதி (பெரிய திருமொழி -6-2-2 )யும் இன்றிக்கே ,
அகங்கார   மம காரங்களும் ,
ராக த்வேஷங்களும்  
புண்ய பாபங்களும்  
தேஹ   சம்பந்தமும் ,
பந்து சங்கமும் ,
விஷய பிராவண்யமும் ,
அர்த்த ஆர்ஜனமும் ,
தேஹ போஷணமும் ,
பிரயோஜனந்த ரஸ்யத்தையும் ,
தேவா தாந்த்ர பஜனமும் ,
சமயாந்தர ருசியும் ,
சாதனாந்தர நிஷ்டையுமாய்
ஸ்வர்க நரக கர்பங்களிலே வளைய , வளைய வந்து   வழி திகைத்து (திரு வாய் மொழி 3-2-9 )
நின்று இடறி (திரு வாய் மொழி 4-7-7 ) அனர்த்தக் கடலில் அழுந்தி ( பெரியாழ்வார் திருமொழி -5-3-7 )
நானில்லாத முன் எல்லாம் ( திரு சந்த விருத்தம் -65 )
பொருள் அல்லாத என்னும் படி ( திரு வாய் மொழி 5-7-3 ) என்னும் படி
உரு அழிந்த மா நிலத்து வுயிர்களான ( திரு மாலை -13 ) சம்சாரிகளும்
எம்பெருமான் சேஷியாய்   தங்கள் அடியராய் இருக்கிற ஒழிக்க ஒழியாத உறவை ( திருப் பாவை -28 )  உணர்ந்து
ஆம் பரிசான   ( திரு மாலை -38 ) அனுபவமும் அடிமையும் பெற்றால் இறே –  
அடியேனை பொருள் ஆக்கி ( திரு வாய் மொழி 10-8-9 )
யானும் உளன் ஆவான் ( பெரிய திருவந்தாதி -76 )  என்கிற படி சத்தை பெற்றார்கள் ஆவது ..

பகவத் க்ருஷி ..
இந்த மெய் ஞானம் இன்றி ,வினையியல் பிறப்பு அழுந்துகிற   இவர்களுக்கு  
தாமரையாள் கேள்வன் ஒருவனையே (முதல் திருவந்தாதி -67 ) நோக்குகிற ஞானத்தை அறிவிக்கைக்கு  
நீர்மை யினால் அருள் செய்த (பெரிய திரு மொழி 2-8-5 )
சரணமாகிய வேத சாஸ்திரங்கள் ( திரு வாய் மொழி 8-3-2 ) 
நூல் கடல் ( மூன்றாம் திரு அந்தாதி -32 )  என்னும் படி பரந்து
மன்னா இம் மனிசப் பிறவியுள்   (பெரிய திருமொழி 1-10-6 ) மதி இல்லா மானிடங்களான (திரு மாலை -9 )  இவர்களுக்கு
கரை காண ஒண்ணாமை யாலே ,
ஒத்தின் பொருள் முடிவை ஒத்தின் சுருக்காய் இருப்பது   ஒன்றாலே அறிவிக்க வேண்டும் என்று  
தெய்வ வண்டாய்   ( திரு வாய் மொழி 9-9-4 ) 
அன்னமாய் ( பெரிய திரு மொழி 5-7-3 ) 
அமுதம் கொண்ட   ( பெரிய திருமொழி 6-10-3 ) 
மைத்த சோதி (பெரிய திரு மொழி 1-3-6 ) எம்பெருமான்  
வேத சாகை களிலும் ,
ஓதம் போல் கிளர் ( திரு வாய் மொழி 1-8-10 )  நால் வேத கடலிலும் ( பெரிய திரு மொழி 4-3-11 ) ,
தேனும் பாலும் அமுதுமாக ( பெரிய திரு மொழி 6-10-6 )  சேர்த்து   பிரித்து எடுத்து  
அற நூல் சிங்காமை விரித்தவன் ( பெரிய திரு மொழி 6-10-1 )   என்னும் படி
நர நாராயண ரூபத்தைக் கொண்டு சிஷ்யாச்சார்யா கிரமம் முன்னாக  
பெரு விசும்பு அருளும் ( பெரிய திருமொழி 1-4-4 )  பேர் அருளாலே  
பெரிய திரு மந்த்ரத்தை   ( திரு நெடும் தாண்டகம் -4 ) வெளி இட்டு அருளினான்

——————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: