பரபக்தி தசை —

ஞான தர்சன பிராப்தி / ஸ்வரூபம் -உபாயம் உபேயம் / தோழி தாய் தலைமகள் /திரு நெடும் தாண்டகம் மூன்று பத்துக்கள் /
ஞானம் முதிர்ந்து- பக்தி – அது கைங்கர்யத்தில் மூட்டும் -மூன்று தசைகள் –
கனிந்த உள்ளம் – -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் தானே பரம புருஷார்த்தம்–ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீ ஸூக்தி –

————————————————————

ஆச்சார்ய ஹ்ருதயம் — சூரணை -230-ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம்

அதில் இவ் ஆர்த்திக்கு அடியான -பர பக்தி -பர ஞான -பரம பக்திகளின்
தசைகள் எந்த திரு வாய் மொழிகள் என்னும் அபேஷையிலே அவற்றை
அருளிச் செய்கிறார் மேல் மூன்று வாக்யத்தாலே –அது தன்னில் பரபக்த்ய வஸ்தை
இன்னது என்கிறார் இதில் –

கமலக் கண்ணன் என்று தொடங்கி
கண்ணுள் நின்று இறுதி கண்டேன்
என்ற பத்தும் உட் கண்ணலேயாய்
காண்பன வாவுதல் அதிலிரட்டி யாகையாலே
கண்டு களிப்ப வளவும் பரஞான கர்ப்ப
பரபக்தி —

அதாவது –
1-கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான்-1-9-9- -என்று
புண்டரீகாஷனானவன் என் கண்ணுக்கு விஷயமானான் என்று தொடங்கி –
10-கண்ணுள் நின்று அகலான் -என்று என் கண் வட்டத்திலே நின்றும் கால் வாங்கு கிறிலன்
என்னுமதளவாக –
2-என் கண்ணனை நான் கண்டேனே –
3-கலைப் பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டு கொண்டு –3-2-10-
4-நறும் துழாய் என் கண்ணி யம்மா நான் உன்னைக் கண்டு கொண்டே –
5-கை தொழ இருந்தாயது நானும் கண்டேனே –
6-ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் அம்மானே –
7-திரு விண்ணகர் கண்டேனே –
8-தேவர்கட்க்கு எல்லாம் கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே –
9-கண்டேன் கமல மலர் பாதம் –
என்று இப்பத்து சந்தையாலும் சொன்ன சாஷாத்காரம் –
நெஞ்சு என்னும் உட் கண் என்கிற ஆந்தர சஷுசான மனசாலே உண்டானதாய் –
1-கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பான் அவாவுவன் நான் –
2-அடியேன் காண்பான் அலற்றுவன் –1-5-7-
3-உம்மைக் காணும் ஆசையுள் நைகின்றாள் –
4-கூவுகின்றேன் காண்பான்-3-2-8-
5-மெய் கொள்ளக் காண விரும்பும் என் கண்களே –3-8-4-
6-கூவியும் காணப் பெறேன் உன் கோலமே –
7-உன்னை எந்நாள் கண்டு கொள்வேனே –
8-கோல மேனி காண வாராய் –4-7-1-
9-தடவுகின்றேன் எங்குக் காண்பன் –
10-பாவியேன் காண்கின்றிலேன் –
11-உன்னைக் காண்பான் நான் அலப்பாய் –
12-உலகம் பரவக் கிடந்தாய் காண வாராயே –
13-என்று கொல் கண்கள் காண்பதுவே –3-6-10-
14-விளங்க ஒருநாள் காண வாராய் –
15-உன்னைக் காண்பான் வருந்தி எனை நாளும் –
16-அலை கடல் கடைந்த அப்பனே காணுமாறு அருளாய் –
17-ஒருநாள் காண வாராய் –
18-தொண்டனேன் உன் கழல் காண ஒருநாள் வந்து தோன்றாயே –
19-உன்னை எங்கே காண்கேனே-
20-உன்னைக் காணக் கருதும் என் கண்ணே –
என்று பாஹ்ய சஷுசாலே அவனைக் காண ஆசைப் பட்டு கூப்பிட்ட சந்தைகள் –
அதில் இரட்டி உண்டாகையாலே –
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலான் -என்று
திருமால் இரும் சோலை அளவாக ஆந்த்ர அனுபவம் செல்லா நிற்க –
பெற்று அன்று தரியாத -பாஹ்ய அனுபவ அபேஷை -நடக்கையாலே –
பர ஞானத்தை கர்ப்பித்து கொண்டு இருக்கிற பர பக்தி என்கை —

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: