திருவாய் மொழி முதல் பத்தின் சாரம் -ஆச்சார்ய ஹ்ருதயம் / பன்னீராயிரப்படி /

திருவாய் மொழி முதல் பத்தின் சாரம் –ஸ்ரீ ஆச்சார்ய ஹிருதயம் –சூர்ணிகை -219-
ஸ்ரீ மணவாள மா முனிகள் வியாக்யானம் —

இதில் முதல் பத்தாலே-சர்வ ஸ்மாத் பரனான -சர்வேஸ்வரன் –
தன்னுடைய நிர்ஹேதுக கிருபையால்
அஞ்ஞானத்தைப் போக்கி
பக்தி ரூபான்ன ஞானத்தைக் கொடுத்து
இன்னும் இவர் நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று
தம் பக்கல் அவன் தனக்கு உண்டான ஸ்நேஹத்தாலே விடாதே தம்முடைய
ஹ்ருதயத்திலே நிரந்தர வாசம் பண்ண -அத்தாலே –
சம்சய விபர்யய விஸ்ம்ருதி ரஹிதமான தத்வ ஞானத்தை உடையரான ஆழ்வார் –

அவனுடைய குணங்களைத் தம் திரு உள்ளத்தோடே அனுபவித்து –
அவ் விஷயம் தனியே அனுபவிக்க ஒண்ணாமையாலே -சம்சாரிகளையும் பார்த்து –
த்யாஜ்யமான சம்சாரத்தின் தோஷத்தையும் –
தத் த்யாக பிரகாரத்தையும்-
உபாதேயமான பகவத் விஷயத்தின் குணத்தையும்
தத் பஜன பிரகாரத்தையும்
பஜன ஆலம்பமான மந்தரத்தையும் -உபதேசித்து –
பஜநீயவனுடைய
சௌலப்யம் -அபராத சஹத்வம் -சீலவத்தை -ஸ்வ ஆராததை –
ஆஸ்ரயண ரச்யத்தை -ஆர்ஜவம் -சாத்ம்ய போக பரதத்வம் –
பரபக்தி பரி கணைகளுக்கு ஒக்க முகம் காட்டும் சாம்யம் -ஆகிற குணங்களை
தர்சிப்பியா நின்று கொண்டு -அவ் வழியாலே -பஜனத்தின் உடைய
ஸூகரத்வ ரஸ்யதைகளையும் –
பஜிக்கவே சர்வ பலங்களும் சித்திக்கும் என்னும் அத்தையும்
பஜன உபக்ரமத்தில் -பஜன விரோதிகள் அடைய நசிக்கும் -என்னும் அத்தையும் அறிவித்து —
ஆன பின்பு ஸ்ரீ கீதையில் அவன் அருளி செய்த பக்தி மார்க்கத்தில் நின்று தேவதாந்த்ரங்கள் பக்கல்
பரத்வ சங்கா நிவ்ருத்தி பூர்வமாக அவன் விஷயமான ஞானத்தைக் கொண்டு
அவன் பக்கலிலே அநந்ய பிரயோஜனராய் பக்தியைப் பண்ணுங்கோள் என்று –
தமக்கு அவன் மயர்வற மதி நலம் அருளினாப் போலே தாமும் இவர்களுக்கு
அஞ்ஞான நிவ்ருத்தி பூர்வகமாக ஞான பக்திகளை உபதேசத்தாலே உண்டாக்கி
பஜனத்திலே மூட்டுகிறார் என்கிறார் —

1 -பர பரனாய் நின்ற வள வேழ் வைப்பாம் அவையுள் உம்பர்
வானவர் அதிபதி -மயர்வற மன்னி மனம் வைக்கத் திருத்தி
2 -மறக்கும் என்று நல்கி விடாதே மன்னி
அயர்ப்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ
என்னும் படி தத்வ ஜ்ஞனர் ஆனவர்
3 -சுடர் அடி எம்பிரானை விடாது கண்டாய் நீயும்
நானும் என்கிற சஹ்ருதய அனுபவம்
சம்சாரிகளுக்கு ஆம் படி
4 -வீடுமின் என்று த்யாஜ்ய உபாதேய
தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை
சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து
5 -எளிதாக அவதரித்துப் பிழைகளை
சஹித்துப் புரையறக் கலந்து
அல்ப சந்துஷ்டனாய் அம்ருதமே ஒவ்ஷதமாக்கி
6 -நீர் புரையத் தன்னை நியமித்து
போகத்தை சாத்மிப்பித்து
7-பக்திகணனை களுக்கு
ஒக்க வருமவனுடைய சேவைக்கு
எளிமையும் இனிமையும் உண்டு
8-தொழுதால் அரும் பயனாய தரும்
உத்யோகத்தே வினைகளும் மாளும்
9-அவன் உரைத்த மார்க்கத்தே நின்று
இருபசை மலமற உணர்வு கொண்டு
10-நலம் செய்வது என்று
தாம் மயர்வற மதி நலம் அருளி
பஜனத்தில் சேர்க்கிறார்-

முதல் பத்தில் ..
1 -பர பரனாய் நின்ற வள வேழ் வைப்பாம் அவையுள் உம்பர் வானவர் அதிபதி–
அதாவது
வரன் முதலாயவை முழுதுண்ட பரபரன் -என்றும் ,
ஆய நின்ற பரன் -என்றும் ,
வள வேழ் உலகின் முதலாய வானவர் ஏறே -என்றும் ,
வைப்பாம் மருந்தாம் -நலத்தால் உயர்ந்து உயர்ந்து அப் பால் அவன் -என்றும் ,
அவையுள் தனி முதல் -என்றும் ,
உம்பர் வானவர் ஆதி அம் சோதி -என்றும் ,
அயர்வறும் அமரர்கள் அதிபதி -என்று
சகல ஜகத் சர்க்காதி கர்த்ருத்வத்தாலும் –உபயவிபூதி யோகத்தாலும் —
உபய விபூதி நாதத்வத்தாலும் –பிராப்ய பிராபகவத்தாலும் —
அபரிசேத்ய ஆனந்த யுக்ததையாலும் –
சர்வ சரீரி தயா சர்வ சப்த வாச்யத்வத்தாலும் –
நித்ய ஸூரி நிர்வாகத்தாலும் —
நித்ய அசங்குஜித ஞானர் ஆனவர்கள் நித்ய அனுபவம் பண்ணா நின்றாலும்
பரிசேதிக்க ஒண்ணாத பெருமை உடையவன் ஆகையாலும் –
சர்வ ஸ்மாத் பரன் ஆனவன் –

மயர்வற மன்னி மனம் வைக்க திருத்தி –
அதாவது
மயர்வற மதி நலம் அருளினன் -என்றும் ,
மயர்வற என் மனத்தே மன்னினான் -என்று
ஸ்வ கேவல கிருபையாலே –ஞான அனுதய –
அந்யதா ஞான -விபரீத ஞான -ரூபமான அஞ்ஞானத்தை இவருக்கு வாசனையோடு போக்கி
பக்தி ரூபாபன்ன ஞானத்தைக் கொடுத்து –இவர் திரு உள்ளத்திலே புகுந்து –
சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து மாயப் பற்று அறுத்து தீர்ந்து
தன் பால் மனம் வைக்க திருத்தி -என்கிறபடியே
பிரிக்க ஒண்ணாதபடி இவரோடு பொருந்தி கிடக்கிற பிரபலமான
புண்ய பாப கர்மங்களையும் –பாஹ்ய விஷய ருசி வாசனைகளையும் போக்கி –
அயோக்யா அனுசந்தானத்தாலே அகன்ற அளவிலும் -தன் சீலத்தைக் காட்டி இவரை மீட்டு –
அல்லேன் என்று அகலாதே தனக்கே தீர்ந்து தன் பக்கல் நெஞ்கை வைக்கும் படி –
தரிசு கிடந்த நிலத்தை செய்காலாகத் திருத்துவாரைப் போலே திருத்தி

2 -மறக்கும் என்று நல்கி விடாதே மன்ன
அதாவது
மறக்கும் என்று செம்தாமரைக் கண்ணோடு -என்றும் ,
நல்கி என்னை விடான்-என்றும் ,
மறப்பற என்னுள்ளே மன்னினான் -என்கிறபடியே –
இவர் இன்னமும் -நம்மை விஸ்மரிக்கக் கூடும் என்று -நிரதிசய ஸ்நேஹத்தைப் பண்ணி –
இவரை விடாதே அழகிய திருக் கண்களால் குளிர நோக்கிக் கொண்டு –
ஒரு நாளும் மறக்க ஒண்ணாதபடி -இவர் திரு உள்ளத்திலே -ஸ்தாவர பிரதிஷ்டையாய் இருக்க –

அயர்பிலன் அறுத்தேன் என் சொல்லி மறப்பனோ என்னும் படி தத்வ ஜ்ஞானர் ஆனவர் –
அதாவது –
பெருநிலம் கடந்த நல் அடிப் போது அயர்ப்பிலன் -என்றும் ,
தூய அமுதைப் பருகி பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன் -என்றும் –
எம் பிரானை என் சொல்லி மறப்பனோ –என்று
குண அகுண நிரூபணம் பண்ணாதே –பூமிப் பரப்பை அளந்த
பரம போக்யமான திரு அடிகளை -ஒரு காலும் விஸ்மரியேன் —
நிரதிசய போக்யமான அவனை நிரந்தரம் அனுபவித்து -ஆச்சர்யமான ஜன்மம் அடியாக வரும்
அஞ்ஞானத்தை போக்கப் பெற்றேன் –எனக்கு உபகாரகனான அவனை எத்தைச் சொல்லி
விஸ்மரிப்பது என்னும்படி -சம்சய விபர்யய விஸ்ம்ருதி கலசாத தத்வ ஞானத்தை
உடையார் ஆனவர்

3 -சுடர் அடி எம்பிரானை விடாது கண்டாய் நீயும் நானும் என்கிற சஹ்ருதய அனுபவம் சம்சாரிகளுக்கு ஆம் படி
அதாவது
சுடரடி தொழுது எழு என் மனனே-1-1-1- -என்றும் –
எம்பிரானைத் தொழாய் மட நெஞ்சமே -1-10-3-என்றும் –
நெஞ்சமே நல்லை நல்லை -என்றும் –
மலராள் மணவாளனை துஞ்சும் போதும் விடாது தொடர் கண்டாய்-1-10-4- -என்றும் –
கண்டாயே நெஞ்சே கருமங்கள் வாய்க்கின்று -1-10-5–என்றும் –
நீயம் நானும் இந்நேர் நிற்கில் மேல் மற்றோர் நோயும் சார் கொடான் நெஞ்சமே சொன்னேன்-1-10-6- -என்று –
நிரவதிக தேஜோ ரூபமான அவன் திரு அடிகளில் -நித்ய கைங்கர்யத்தைப் பண்ணி
உஜ்ஜீவிக்க பாராய் -என் நெஞ்சே -எனக்கு பவ்யமான நெஞ்சே நமக்கு -உபகாரனான அவனைத் -தொழப் பாராய் –
நெஞ்சே நீ செய்த படி மிகவும் நன்று –நான் அயோக்யா அனுசந்தானத்தாலே அகலும் போதும்
ஸ்ரீ யபதி யானவனை விடாதே கிடாய் ,–நெஞ்சே அவனுடைய நிர்ஹேதுக விஷயீகாரம் இருந்த படி கண்டாயே
தொழச் சொல்லலாம் படி இருக்கிற நீயும் -தொழ சொல்லுகிற நானும் -அயோக்யா அனுசந்தானத்தாலே
அகலாமல் இப்படியே நிற்கப் பெறில் -அநாதிகால ஆர்ஜிதமான கர்மம் -விஷய பிராவண்யம் -பிரயோஜனாந்தர ஸ்ரத்தை –
சாதனாந்தர சங்கம் -முதலான துரிதங்கள் ஒன்றையும் சேர விட்டுக் கொடான் –நெஞ்சே உனக்கு இப் பரமார்த்தத்தை
சொன்னேன் -என்று இப்படி திரு உள்ளத்தைக் குறித்து உபதேசித்து -திரு உள்ளமும் தாமும் கூடி அனுபவித்த
பகவத் அனுபவம் தனியே அனுபவிக்க ஒண்ணாது ஆகையாலும் -ஏகத் ஸ்வாது ந புஞ்சீத –என்கிறபடியே –
தனியே அனுபவிக்க வல்லார் அல்லாமையாலும் -அவனோடு உள்ள சம்பந்தம் சர்வ சாதாரணம் ஆகையாலும் –
பரர் அநர்த்தம் பொறாத பரம கிருபையாலும் –
இவ் அர்த்தம் சம்சாரிகளுக்கும் ஆக வேணும் என்று சம்சாரிகளைப் பார்த்து

4 -வீடுமின் என்று த்யாஜ்ய உபாதேய தோஷ குண பரித்யாக சமர்ப்பண க்ரமத்தை சாலம்பன மந்த்ரமாக உபதேசித்து
அதாவது
வீடு மின் முற்றத்திலே-1-2- –
-வீடு மின் முற்றவும் -1-2-1–என்று த்யாஜ்ய ஸ்வரூபத்தையும் –
மின்னின் நிலையில மன்னுயிர் ஆக்கைகள்-1-2-2- -என்று
அதனுடைய அல்ப அஸ்திரத் வாதி தோஷங்களையும்
நீர் நுமது என்று இவை வேர் முதல் மாய்த்து -1-2-3–என்று
அதனுடைய பரித் த்யாக க்ரமத்தையும்
வீடுடையான்-1-2-1–என்று உபாதேயமான பகவத் ஸ்வரூபத்தையும்
எல்லையில் அந்நலம் -1-2-4–என்று அவ் வஸ்துவினுடைய குணத்தையும்
வீடு செய்மினே –1-2-1-
இறை சேர்மின் –1-2-3-
இறைபற்று –1-2-5-
திண் கழல் சேர் –1-2-10-
என்று அவ் விஷயத்தில் ஆத்மாவை சமர்ப்பிக்கும் க்ரமத்தையும்
வண் புகழ் நாரணன்-1-2-10- -என்று
அந்த சமர்ப்பண ரூப பஜனத்துக்கு ஆலம்பனமான திரு மந்த்ரதோடே உபதேசித்து

5 -எளிதாக அவதரித்து
அதாவது
ஆஸ்ரயிப்பார் -அதீந்திரியன் -என்று இறாயாத படி
பல பிறப்பாய் எளிவரும் இயல்வினன் -1-3-2-–என்று ஸ்ரீ ராம ஸ்ரீ கிருஷ்ணாத்ய அவதார முகத்தாலே
அவர்களுக்கு சுலபனாய்
பிழைகளை சஹித்து
அதாவது
ஆஸ்ரயண தசையிலே சுலபனாய் -அபராதம் கண்டவாறே -கைவிடாதே –
என் பிழைத்தாள் -திரு வடியின் தகவினுக்கு-1-4-7- -என்னும் படி
அபராத சஹனாய்
புரையறக் கலந்து
அதாவது
அபராதம் கண்டு தான் இகழாத அளவு அன்றிக்கே –
அயோக்யா அனுசந்தானத்தாலே தாங்களே அகல்வாரையும்
திசைகள் எல்லாம் திருவடியால் தாயோன் தான் ஒருவனே -1-5-3–என்று தன் குணத்தைக் காட்டி அணுகப் பண்ணி
அவர்களோடு புரை அறக் கலக்கும் சீலனாய் –
அல்ப சந்துஷ்டனாய்
அதாவது
ஆஸ்ரிதரோடு ஒரு நீராகக் கலக்குமே ஆகிலும் அவன் உகக்கும் படி
பச்சை இடப் போகாமையாலே -ஆஸ்ரணீயம் அரிது -என்னாதாம் படி இவன் இட்டது கொண்டு த்ருப்தன்
ஆக வேண்டாத பரிபூர்ணன் ஆகையாலே –
புரிவதுவும் புகை பூவே -1-6-1–என்று
இவன் பக்கலில் பெற்றது கொண்டு சந்தோஷிக்கும் ஸ்வ ஆராதனாய்
அம்ருதமே ஒவ்ஷதமாக்கி
அதாவது
நேர்த்தி இல்லை யாகிலும் உள்ளது தேவையாய் இருக்குமோ என்னாதபடி
அம்ருததையே ஒவ்ஷதம் ஆக்குமா போலே –
தூய அமுதைப் பருகிப் பருகி என் மாயப் பிறவி மயர்வு அறுத்தேன்-1-7-3- -என்று
நிரதிசய போக்யனான தன்னுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே -மிகவும் இனிதாயிருக்கும்
அவற்றையே சம்சார வியாதி பேஷஜமாக்கி

6 -நீர் புரைய தன்னை நியமித்து
அதாவது
இனிதாய் இருக்கும் ஆகிலும் -அவன் நினைவு அறிந்து பரிமாறுகை அரிது
என்னாதபடி -இவர்களைத் தன் நினைவிலே பரிமாறவித்துக் கொள்ளப் பாராதே –
நீர் புரை வண்ணன் -1-8-1–என்று
மேட்டிலே நீரை விரகாலே ஏற்றுமா போலே இவர்கள் செவ்வை கேடும் செவ்வை யாம்படி
தன்னை செவ்வியனாக நியமித்து
போகத்தை சாத்மிப்பித்து
அதாவது
இப்படி ஆனாலும் குளப்படியிலே கடலை மடுத்தார் போலே அசாத்தியமாக
பரிமாறுமோ என்னாத படி —
என்னுடை சூழல் உள்ளான் -1-9-1–என்று தொடங்கி –
உச்சி உளானே-1-9-10- -என்னும் படி சாத்மிக்க தன்னை அனுபவிப்பித்து

7-பக்திகணனை களுக்கு ஒக்க வருமவனுடைய சேவைக்கு —
அதாவது
இப்படி அனுபவிக்கைக்கு ஈடாக முகம் காட்டும் அளவில் இவன் பக்கல்
பிரேம அனுகுணமாகவோ செய்வது என்னாத படி –
கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில் எண்ணிலும் வரும்-1-10-2- – என்று
பரம பக்திக்கும் பரிகணனைக்கும் ஒக்க வந்து முகம் காட்டும் ஸ்வபாவன் ஆனவனுடைய பஜனதுக்கு

-எளிமையும் இனிமையும் உண்டு
அதாவது
எளிதாய் இனிமை அற்று இருத்தல் -இனிதாய் எளிமை அற்று இருத்தல் -அன்றிகே –
கீழ் சொன்ன குண விசேஷங்களை உடையவனுடைய ஆஸ்ரயணம் ஆகையாலே –
எளிதுமாய் இனிதுமாய் இருக்கும் —
பத்துடை அடியவர்க்கு எளியவன் -1-2-1–என்றும் ,
அமுதிலும் ஆற்ற இனியன்-1-6-6- -என்கிறவன்
தன்னை போலே ஆய்த்து தத் ஆஸ்ரயணீயமும்-
ஏவம் பூத பஜனத்தாலே பல சித்தி இருக்கும் படி என் என்னில் –

8-தொழுதால் அரும் பயனாய தரும்-
அதாவது
அவனைத் தொழுதால் வழி நின்ற வல் வினை மாள்வித்து
அழிவு இன்றி ஆக்கம் தரும்-1-6-8- -என்றும் ,
தருமவரும் பயனாய -1-6-9–என்று
அவனை பஜித்தால் ப்ராப்தி பிரதி பந்தங்களையும் நிஸ்சேஷமாக போக்கி –
அழிவு இல்லாத பெறுதற்கு அரிய பிரயோஜனங்களையும் தரும் ..
பஜித்தால் அன்றோ தருவது -பஜன விரோதிகளும் குவாலுண்டே என்னில்
உத்யோகத்தே வினைகளும் மாளும்
அதாவது
நாளு நின்று அடு நம் பழைமை அம் கொடு வினை யுடனே மாளும் -1-3-8–என்று
நாள் தோறும் நின்று இவ் ஆத்மாவை முடிக்கிற -அநாதியாய் அதி க்ரூரமான
கர்மங்கள் பஜன உபக்ரமத்திலே நசிக்கும் –

ஆனால் பஜன உபாயம் யாது என்னில்
9-அவன் உரைத்த மார்க்கத்தே நின்று இருபசை மலமற உணர்வு கொண்டு நலம் செய்வது-1-3-8- என்று
அதாவது
பிணக்கற -1-3-5–என்று தொடங்கி
அம் பகவன் வணக்குடை தவ நெறி வழி நின்று -1-3-5–என்று வைதிக சமயத்துக்கும்
பாஹ்ய ஷட் சமயத்துக்கும் -தன்னில் தான் உண்டான பிணக்கு அறும் படி –
வேத மாரக்கத்தை யதா நிரூபணம் பண்ணி அருளிச் செய்த -நிரவதிக வாத்சல்ய யுக்தனாய் –
ஞாநாதி குண பரிபூர்ணனான கிருஷ்ணன் திரு தேர் தட்டிலே -அர்ஜுன வ்யாஜேன ஸ்ரீ கீதா முகத்தாலே –
பக்த்யா த்வ அந்யா சக்ய -11-54–என்றும் ,
மந்பனா பவ மத் பக்த மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாம் ஏவைஷ்யசி யுக்த்வைவ மாத்மானாம் மத் பராயணா -9-34-– என்றும்
அருளிச் செய்த பக்தி மார்க்கத்திலே நின்று –

நும் இரு பசை அறுத்து -1-3-7–என்றும் ,
மனன கமல மறக் கழுவி-1-3-8- -என்றும்
தேவதாந்தரங்கள் பக்கல் உங்களுக்கு உண்டான சங்கத்தை அறுத்து –
இவனோ அவர்கள் ஆஸ்ரயணீயர் -என்ற சம்சயதையும் மனத்தில் நின்றும் ச வாசனமாகப் போக்கி –
அவனுடை உணர்வு கொண்டு -1-3-5–என்று
தத் விஷய ஞானத்தைக் கொண்டு –

10-நன்று என நலம் செய்வது -1-3-7–என்று
அநந்ய பிரயோஜன பக்தியை பண்ணுங்கோள் என்று
தாம் மயர்வற மதி நலம் அருளி பஜனத்தில் சேர்க்கிறார் முதல் பத்தில் ..
அதாவது
சர்வேஸ்வரன் தமக்கு மயர்வற மதி நலம் அருளினாப் போலே –
சம்சாரிகளுக்கு தம்முடைய கிருபையாலே -தத்வ ஹித புருஷார்த்த –
விஷயமான அஜ்ஞ்ஞானத்தைப் போக்கி –
ஞான பக்திகளை உபதேசித்து –
பகவத் பஜனத்தில் மூட்டுகிறார்
முதல் பத்தால் என்கை-

——————————————————————————-

பன்னீராயிரப்படி–

இப்பிரபந்தத்தில் முதலிட்டு நாலு பத்தாலே சித்த ரூபமான பராவராத்ம யாதாம்யத்தை ப்ரதிபாதிக்கிறது –
முடிவிட்டு நாலு பத்தாலே ஸாத்ய ரூபமான அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வக இஷ்ட பிராப்தியை ப்ரதிபாதிக்கிறது –
நடுவிட்டு இரண்டு பத்தாலே சித்த ஸாத்ய ரூபமான நிர்பய உபாய வரணத்தை ப்ரதிபாதிக்கிறது
-ஸித்தமான உபாயத்தினுடைய வரணம் ஸாத்யம் என்று கருத்து -அதில் சித்த ரூபமான பராவராத்ம யாதாம்யா ப்ரதிபாதிதமான
முதல் நாலு பத்தில் -முதல் பத்தும் இரண்டாம் பத்தும் ப்ராப்யமான பர ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கிறது –
மூன்றாம் பத்தும் நாலாம் பத்தும் ப்ராப்தாவான பிரத்யாகாத்ம ஸ்வரூபத்தை ப்ரதிபாதிக்கிறது –
அஞ்சாம் பத்தும் ஆறாம் பத்தும் பிராப்தி உபாய ஸ்வரூபத்தை பிரதிபாதிக்கிறது –
ஏழாம் பத்தும் எட்டாம் பத்தும் பிராப்தி விரோதி நிவ்ருத்தியை பிரதிபாதிக்கிறது –
ஒன்பதாம் பத்தும் பத்தாம் பத்தும் பிராப்தி பல சித்தியை பிரதிபாதிக்கிறது —

அதில் முதல் பத்து பரனான சேஷியினுடைய ரக்ஷகத்வத்தையும் –
இரண்டாம் பத்து போக்யத்தையும் சொல்லுகிறது –
மூன்றாம் பத்து பகவத் ஏக சேஷ பூதனான ஆத்மாவினுடைய தத் ஏக அநுபவத்தையும்
நாலாம் பத்து தத் ஏக பிரியத்வத்தையும் சொல்லுகிறது –
அஞ்சாம் பத்து நிர்பாயமான உபாய விஷத்தையும்
ஆறாம் பத்து தத் வரண பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஏழாம் பத்து அநிஷ்டமான விரோதி பிரகாரத்தையும்
எட்டாம் பத்து தன் நிவ்ருத்தி பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஒன்பதாம் பத்து பல பிரகாரத்தையும் பத்தாம் பத்து ததவாப்தி பிரகாரத்தையும் சொல்லுகிறது –
ஆக இவ்வர்த்த பஞ்சகத்தினுடைய அவாந்தர அர்த்த பேதத்தாலே இப்பிரபந்தத்திலே பத்துப் பத்துக்கும் வாக்யார்த்தம் சொல்லிற்று ஆயிற்று –

அதில் சேஷியினுடைய ரக்ஷகத்வ பரமான முதல் பத்தில்
முதல் திருவாய்மொழி ரக்ஷகத்வ உபய யுக்தமான சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
இரண்டாம் திருவாய்மொழி சர்வ ஸமாச்ரயணீ யத்வத்தையும்
மூன்றாம் திருவாய்மொழி தத் அனுகுணமான ஸுலப்யத்தையும்-
நாலாம் திருவாய்மொழி ஆஸ்ரித அபராத சஹத்வத்தையும்
அஞ்சாம் திருவாய்மொழி ஸுசீல்ய அதிசயத்தையும்
ஆறாம் திருவாய்மொழி ஸ்வாராததையும்
ஏழாம் திருவாய்மொழி ஆஸ்ரயணத்தில் அத்யந்த சாரஸ்யத்தையும்
எட்டாம் திருவாய்மொழி ஆஸ்ரித விஷயமான ஆர்ஜவ குணத்தையும்
ஒன்பதாம் திருவாய்மொழி சாத்ம்ய போக பிரதத்வத்தையும்
பத்தாம் திருவாய்மொழி நிர்ஹேதுக மஹா உபகாரித்வத்தையும் சொல்லுகையாலே பரம சேஷியினுடைய ரக்ஷகத்வ பூர்த்தியை ப்ரதிபாதித்ததாயிற்று –

அதில் பரத்வ பிரகாசகமான முதல் திருவாய்மொழியில்
1-தத் உபபாதகமான விலக்ஷண குண விபூதி விக்ரஹ யோகத்தையும்
2-ஆஸ்ரயமான ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும்
3-அபரிச்சின்னமான லீலா விபூதி சம்பந்தத்தையும்
4/5/6-அநந்தரம் மூன்று பாட்டாலே விபூதி அந்தர்கத ஸமஸ்த பதார்த்தங்களினுடைய
ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி யாதிகள் ஸ்வ அதீனங்கள் என்னும் இடத்தையும்
4-அதில் முதல் பாட்டில் ஸமஸ்த பதார்த்தங்களின் உடைய ஸ்வரூபம் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனம் என்னும் இடத்தையும்
5-மேலே ரக்ஷண ரூபையான ஸ்திதி வையதி கரண்யத்தாலே தத் அதீனை என்னும் இடத்தையும்
6-சர்வ ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளும் சாமா நாதி கரண்யத்தாலே தத் அதீனங்கள் என்னும் இடத்தையும்
7-தத் உபபாதகமான சரீராத்ம பாவ சம்பந்தத்தையும்
8-அநந்ய ஈஸ்வரத்தையும்
9-அவைதிகரால் அப்ரகம்ப்யத்வத்தையும்
10-அகில வியாபகத்வத்தையும் சொல்லி
அசேஷ சேஷித்வ ரூபமான பரத்வத்தை ஸ்த்ரீ கரித்து அருளுகிறார் –

வீடுமின் முற்றவும் -அவதாரிகை –
இரண்டாம் திருவாய் மொழியில் –இப்படி சர்வ ஸ்மாத் பரனானவனே ஆஸ்ரயணீயன் ஆகையாலே
ஆஸ்ரயண ரூபமான பகவத் பஜனத்துக்கு உபயுக்தமான
1-தத் இதர சகல தியாகத்தையும்
2-பஜன பிரகாரத்தையும்
3-அஸ்தைர்யத்தையும்
4-தியாக பிரகாரத்தையும்
5-தியாக பூர்வகமாக ஆஸ்ரயணீயனுடைய ஸ்வரூப வைலக்ஷண்யத்தையும் –
6-அதிசயித புருஷார்த்தத்வத்தையும்
7-சர்வ ஸமத்வத்தையும்
8-விலக்ஷண ஸ்வரூபமான ஆஸ்ரயண பிரகாரத்தையும்
9-தத் பலமான அநிஷ்ட நிவ்ருத்தியையும்
10-ஆஸ்ரயணீயனுடைய அபிமத பல ரூபத்வ பூர்த்தியையும்
சொல்லிக் கொண்டு ஆஸ்ரயண ரூப பஜனத்தைப் பர உபதேச முகத்தால் அருளிச் செய்கிறார் –

மூன்றாம் திருவாய் மொழியிலே –முதல் திருவாய் மொழியில் பத்தாம் பாட்டிலே
நீர் தொறும் பரந்துளன் -என்று நாராயண சப்தார்த்தை ஸூசிப்பிக்கையாலும் –
கீழில் திருவாய் மொழியில் பத்தாம் பாட்டில் -வண் புகழ் நாரணன் -என்று நாராயண சப்த வாச்யதையைச் சொல்லுகையாலும் –
தத்வம் நாராயண பர -என்றும் த்யேயோ நாராயணஸ் சதா -என்றும் சகல சாஸ்த்ர நிஷ்க்ருஷ்டமான க்ரமத்திலே-
தத்வ ஹிதங்கள் நாராயணனே என்றதாயிற்று –
இப்படி பரனான நாராயணன் -பஜநீயனாம் இடத்தில் பஜன சவ்கர்யாவஹமான
ஸூபாஸ்ரயத்துக்கு ஏகாந்தமான அவதார ப்ரயுக்த சவ்லப்யத்தை பிரகாசிப்பிக்கைக்காக –
1-தத் உப பாதகமான நவநீத ஸுர்ய அபதாநத்தையும் –
2-அவதார க்ருத ஸுலப்யத்தினுடைய உஜ்ஜ்வல்யகரத்வத்தையும்
3-அவதார ஆச்சர்யத்தினுடைய துரவபோதத்தையும்-
4-அவதார க்ருத ரூப நாமங்களினுடைய அபரிச்சேத்யதையும் –
5-ஸூலபனானவனுடைய பஜனத்துக்கு உண்டான ப்ரமாணிகத் வத்தையும் –
6-அவதாரத்திலும் த்ரிமூர்த்தி சாம்யம் விவேகிக்கை அரிது என்னும் இடத்தையும் –
7-அதனுடைய விவேக பிரகாரத்தையும் –
8-விவேகித்து பஜித்தவனுடைய விரோதி நிவ்ருத்தியையும்
9-பஜனீயனுடைய சஜாதிய நிபந்தநமான ஷோப கரத்வத்தையும்
10-அவதார ரஹஸ்யம் அதி கஹனம் என்னும் இடத்தையும்
உபதேசித்து – ஏவம்விதனான ஈஸ்வரனை நான் அனுபவிக்கப் பெறுவதே என்று ப்ரீதராய் சர்வ பிரகாரத்தாலும் அனுபவிக்க உபக்ரமிக்கிறார் –

நாலாம் திருவாய் மொழியிலே -இப்படி ஸூலபனாய் ஸூந்தரனான சேஷியை கரண த்ரயத்தாலும் அனுபவிக்க இழிந்தவர் –
அவன் சடக்கென முகம் காட்டாமையாலே அவசன்னராய் -போக விளம்ப ஹேது பூர்வார்ஜித்த அபராதங்களைப் பொறுத்து
1-ரஷிக்கைக்கு உறுப்பான பரிகார உச்சராயத்தையும் –
2-அமலங்களாக விழிக்கும் புண்டரீகாக்ஷத்வத்தையும் –
3-அநந்யார்ஹம் ஆக்கும் அபதான வைபவத்தையும்
4-அதுக்கு அவ்யஹித சாதனமான அழகையும் –
5-ச ஸ்னேஹமான சர்வ லோக ரக்ஷணத்தையும் –
6-ரக்ஷண தவரைக்கு ஈடான பரிகரவத்தையும் –
7-ஆஸ்ரித தோஷத்தை அத கரிக்கும் ணவத்திகா கிருபையையும்-
8-தோஷமே போக்யமான நிரதிசய வாத்சல்யத்தையும் –
9-அதுக்கு அடியானநிருபாதிக்க பந்தத்தையும் –
10-அதூர வர்த்தித்தவத்தையும்
உடையனாகையாலே நம் தசையை அறியாமல் விளம்பித்தான் அத்தனை என்று அறுதியிட்டு
கடக முகத்தால் ஸ்வார்த்தி அறிவிக்கப் பார்த்து
நாயகனான ஈஸ்வரனைப் பிரிந்த நாயகியினுடைய தூத ப்ரேஷணம் ஆகிற அன்யாபதேசத்தாலே அருளிச் செய்கிறார் –
இவருடைய ஸ்வரூபம் அநந்யார்ஹ சேஷமாயும் -அநந்ய ரஷ்யமாயும் -அநந்ய போக்யமாயும் –
சேஷிக்கு சர்வ பிரகாரத்தாலும் பார்யாவத் பர தந்திரமாகையாலும்
ஈசுவரனுடைய ஸ்வாமித்வத்மத்வ சேஷித்வ பும்ஸ்த்வாதிகள் ஆகிற ஸ்வ பாவங்களை அனுசந்தித்து
சேதனனுக்கு தாஸத்வ தேஹத்வ சேஷத்வ ஸ்த்ரீத்வாதி
ஸ்வ பாவங்கள் அவர்ஜ நீயமாய் வருகையாலும் புருஷோத்தம விஷயத்தில் இவருடைய பிரணயம் நாயகன் பக்கல் நாயகி பிரணயத்தோடு
ச ரூபம் ஆகையால் நாயகி பாசுரத்தாலே அருளிச் செய்யக் குறையில்லை –
இது பிரிந்த தலைமகள் தூது ஆகையால் கைக் கிளையாய் -ஒரு தலைக் காமமாய் -இருக்கிறது –

வள வேழ் உலகின் பிரவேசம் –
அஞ்சாம் திருவாய் மொழியிலே -இப்படி கடக முகத்தால் இவ்வாழ்வார் தம் தசையை அறிவித்த அநந்தரம் -இவர் ஆர்த்தி தீரும்படியாக –
அளவியன்ற ஏழ் உலகத்தவர் பெருமான் கண்ணன் -என்று ப்ரக்ருதமான ப்ரகாரத்திலே
ஸ்வாமித்வ ஸுசீல்ய விசிஷ்டானாய்க் கொண்டு அவ்வளவிலே வந்து
சந்நிஹிதனான சர்வேஸ்வரனுடைய நிரவதிக ஸுசீல்யத்தை அருளிச் செய்வதாக தத் உபபாதகமான –
1-அவனுடைய ஸர்வேஸ்வரத்வத்தையும்–
2-சர்வ காரணத்வத்தையும் –
3-அசேஷ ஜன சம்ச்லேஷத்தையும் –
4-விபூதி த்வய நிர்வாஹகத்வத்தையும் –
5-ஆஸ்ரித அர்த்த ப்ரவ்ருத்தியையும் —
6-போக்யமான ஸ்வபாவ நாம யோகத்தையும் –
7–போக்யதா ப்ரகாசகமான ஸுலபயத்தையும் –
8–ஆஸ்ரித விஷய வ்யாமோஹத்தையும் –
9-ஆஸ்ரித உபகார அதிசயத்தையும் -அனுசந்தித்து
இப்படி விலக்ஷணான சர்வேஸ்வரனை அத்யந்த நிக்ருஷ்டரான நாம் அணுகுகை அவ்த்யாவஹம் –
அதிசய ஞான அணுகிலும் அங்குத்தைக்கு மாலின்ய கரம் என்று அகலப் புக
இவரைத் தன் சீலத்தைக் காட்டி ஆகவிடத் தேட ஸமாஹிதராய் அனுபவித்தவர் பின்னையும்
அவ்வனுசந்தானத்தாலே அகல தன்னுடைய ஹேய ப்ராதிபட்யத்தையும்
ஆஸ்ரித வ்யாமோஹத்தையும் பிரகாசிப்பித்து ஆக்கவிட்டுக் கொள்ள ஸமாஹிதராய்
தம் பக்கல் ஈஸ்வரனுக்குப் பிறந்த உபகாரகத்வத்தையும் மேலுண்டான பாரிப்பையும் அனுபவித்து ஸந்துஷ்டாராகிறார் –

பரிவதில் ஈசனைப்பாடி -பிரவேசம்
ஆறாம் திருவாய் மொழியில் -இப்படி ஸீலவான் ஆகிலும் ஸ்ரீ யபதியாகையாலே அவாப்த ஸமஸ்த காமனான பூர்ணணை ஆராதிக்கும் இடத்தில்
தத் அனுரூபமான உபகரணாத்ய பாவத்தாலே துஷ்கரமாகில் செய்வது என் -என்று கூச வேண்டாத படி பூர்த்தி தானே ஆபி முக்கியமே பற்றாசாக
அங்கீ கரிக்கைக்கு உறுப்பாகையாலே ஆஸ்ரயணம் ஸூகரம் என்று ப்ரதிபாதிக்கைக்காக–
1- ஆராதனை உபகரண ஸுகர்யத்தையும் –
2–ஆராதகனுடைய அதிகார ஸுகர்யத்தையும் —
3-அதிகாரி விஷயத்தில் ஆராத்யன் தோஷ குணம் பாராமையும் தன் பெருமை பாராதே அங்கீ கரிக்கும் பந்த விசேஷத்தையும்
4–அநந்ய ப்ரயோஜன விஷயத்தில் ஆதார அதிசயத்தையும்–
5- அவர்களுக்கு அத்யந்த போக்யனாம் படியையும்—
6-அநிஷ்ட நிவர்த்தகனானவனுடைய ஆஸ்ரயணம் காலஷேப பிரகாரம் என்னும் இடத்தையும்-
7- அஞ்சலி மாத்திரத்தாலே அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணும் என்னும் இடத்தையும்
8-அநிஷ்டத்தை அவிளம்பேந நிவர்த்திப்பிக்கையையும் சொல்லி–
ஸ்வ ஆராதையை உபதேசிக்கிறார் –

பிறவித் துயர் பிரவேசம் –
ஏழாம் திருவாய் மொழியிலே -இப்படி ஸ்வ ஆராதனானாலும் குடி நீர் போலே ஆஸ்ரயணம் சரஸமாய் இராதாகில்
அஹ்ருத்யமாய் இருக்கும் என்று நினைத்து ஆஸ்ரயணத்தினுடைய ரஸ்யதைக்கு உறுப்பாக-
1- ஆஸ்ரயணீயனுடைய பாவநத்வத்தையும்–
2- நிரதிசய ஆனந்த யோகத்தையும் –
3-பர தசையிலும் அவதாரம் அத்யந்த ஸரஸம் என்னும் இடத்தையும்–
4 இப்படி சரசனானவனைப் பிரிய விரகில்லை என்னும் இடத்தையும்-
5-தாம் விட ஷமர் அல்லர் என்னும் இடத்தையும் –
6-அவன் தான் அகலத் தேடிலும் தம்முடைய இசைவு இல்லாமையையும் –
7-தாம் அகலிலும் அவன் நெகிழ விடான் -என்னும் இடத்தையும் –
8-தம்மை அகற்றிலும் தம் நெஞ்சை அகற்ற ஒண்ணாமையையும் –
9-சர்வ பிரகார சம்ஸ்லிஷ்டமான தம்முடைய ஆத்மா அகல பிரசங்கம் இல்லை என்னும் இடத்தையும்–
10- நிரந்தர அனுபவம் பண்ணினாலும் திருப்தி பிறவாமையாலே தவிர அரிது என்னும் இடத்தையும் –
அருளிச் செய்து ஆச்ரயண சாரஸ்யத்தை உபபாதித்து அருளுகிறார் –

எட்டாம் திருவாய் மொழி -ஓடும் புள் பிரவேசம் –
இப்படி சரசனான சர்வேஸ்வரன் நிர்த்தோஷரான நித்ய ஆஸ்ரிதரோபாதி இன்று ஆஸ்ரயிக்கிற நிகில ஆஸ்ரிதருடைய
லீலா விபூதி சம்பந்தம் அடியான செவ்வைக் கேட்டைப் பார்த்து வைஷம்ய பிரதிபத்தி பண்ணாதே –
அவர்கள் செவ்வைக் கேட்டைச் செவ்வை யாம்படி தன்னை ஓக்க விட்டுச் சேரும்படியான ஆர்ஜவ குணத்தை அருளிச் செய்வதாக –
1-அதுக்கு பிரதமபாவியான நித்ய புருஷ சம்ச்லேஷ பிரகாரத்தையும்
2-நிகில ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமான அவதார வை லக்ஷண்யத்தையும்
3-உபய விபூதி சாதாரணமான அர்ச்சாவதார ஸ்திதி யையும்
4-ஆஸ்ரித சம்ச்லேஷ அர்த்தமான ஆபத் ஸகத்வத்தையும்
5-அந்த சம்ச்லேஷத்துக்கு எல்லையான ஸ்வ சம்ச்லேஷத்தையும்
6-இது சம்ச்லேஷ சாதாரணம் என்னும் இடத்தையும்
7-ஆஸ்ரிதர் நினைவே தன் நினைவாம்படி கலக்கும் என்னும் இடத்தையும்
8-ஆஸ்ரித சங்கம் அடியான அவதாரத்துக்கு ஸங்க்யை இல்லை என்னும் இடத்தையும்
9-அவதாரங்கள் ஆஸ்ரித அநு பாவ்யமான அசாதாரண சிஹ்ன யுக்தங்கள் என்னும் இடத்தையும்
10-ஏவம் வித ஸ்வ பாவந் வேதைக சமதி கம்யன் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து ஆஸ்ரித அர்த்தமான ஆர்ஜவ குணத்தை ப்ரதிபாதித்து அருளுகிறார் –

இவையும் அவையும் -பிரவேசம் –
ஒன்பதாம் திருவாய் மொழியில் இப்படி ஆர்ஜவ குணத்தை யுடைய சர்வேஸ்வரன் –
பொய் கலவாது என் மெய் கலந்தான் –1–8–5–என்றும்
என் எண் தான் ஆனான் -1–8–7-என்றும் கீழ் சொன்ன க்ரமத்திலே தன்னுடைய
குண விக்ரஹ மஹிஷீ பரிஜன விபூதி சேஷ்டிதங்களோடே கூட இவரோடு
பரிபூர்ணமாக ஸம்ஸ்லேஷித்து அனுபவிக்கப் பார்த்து -இவர் வெள்ளக் கேடாய் உடை குலையப் படில் செய்வது என்
என்று பார்த்து சாத்மிக்க சாத்மிக்க புஜிப்பிப்பானாக –
1-இவர் பரிசரத்திலே வர்த்திப்பது –
2-இவருக்கு அந்திகஸ்தனாவது –
3-கூட நிற்பது –
4-இவர் சரீரத்தில் ஒரு பக்கத்திலே யாவது –
5-ஹிருதய பிரதேசத்தில் ஆவது –
7-தோள்களில் சேர்வது –
8-நாவிலே நிற்பது –
9-கண்ணுக்குள்ளே யாவது –
10-நெற்றியிலே யாவது –
11-உச்சியிலே யாவதாகக்
கொண்டு க்ரமத்திலே போகம் தலை மண்டையிடும் படி சாத்மிக்க சாத்மிக்க ஸம்ஸ்லேஷித்த படியை அருளிச் செய்கிறார்

பொரு மா நீள் படை -பிரவேசம் –
பத்தாம் திருவாய் மொழியில் -இப்படி சர்வ பிரகார சம்ச்லேஷம் பண்ணுகைக்கு அடி –
அவனுடைய நிர்ஹேதுக மஹா உபகாரத்வம் இறே -என்று அனுசந்தித்து அதுக்கு உபபாதகமாக-
1- அவன் தன் வடிவைத் தம்முடைய கண்ணுக்கு இலக்கான படியையும் –
2-கணநா மாத்ரத்திலும் ஸூலபன் என்னும் இடத்தையும் —
3-அவனுடைய அனுபாவ்ய ஸ்வ பாவத்தையும் –
4-நிரந்தர அனுபாவயதையும்–
5-ஆர்த்தித்தவம் வேண்டாத அதிசயித உபகாரகத்வத்தையும் —
6–அதுக்கடியான பந்த விசேஷத்தையும் –
7-இதுக்குப் படிமாவான ஸூரி போக்யத்தையும் –
8–உபகாரகத்வ உப யுக்தமான பூர்ணதையையும் –
9–இவ்வுபகார க்ரமம் மறக்க அரிது என்னும் இடத்தையும் –
10–மறவாமைக்கு அவன் பண்ணின யத்ன விசேஷத்தையும் —
அருளிச் செய்து -மஹா உபகாரகத்வத்தை அனுபவித்துக் களிக்கிறார்

————————————–

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ வாதிகேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய வாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நஞ்சீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: