அருளிச் செயல்களில் -சரணாகதி –

பெரியாழ்வார் -அருளிச் செயல்களில் -சரணாகதி —
1–துப்புடையாரை –திருவரங்கம் –4–10-பதிகம்
2–வாக்குத் தூய்மை -5–1-பதிகம்
3–துக்கச் சூழலை –திருமாலிரும் சோலை –5–3-பதிகம்
4–சென்னியோங்கு –5–4-பதிகம் –

திருப்பாவை -அங்கண் / மாலே / கூடாரை / கறைவைகள்/சிற்றம் சிறு காலை /வங்கக் கடல் /

நாச்சியார் திருமொழி
தையொரு திங்கள் பதிகம் -முதல் -/தெள்ளியார்–கூடிடு கூடலே-நாலாம் பதிகம் /
நல்லை என் தோழி –விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -11–10-

குலசேகர பெருமாள்
தரு துயரம் தடாயேல் உன் சரண் அல்லால் சரண் இல்லை -ஐந்தாம் -பதிகம்

திருமழிசை பிரான் –
நாயினேன் வீடு பெற்று சிறப்போடும் பிறப்பு இருக்குமா சொல் -திருச் சந்த விருத்தம் -46-
சேர்விடத்தை நாயினேன் தெரிந்து இறைஞ்சு மா சொல் -47-
உன்ன மாதம் என்ன சிந்தை மன்னா வைத்து நல்கினாய் -55-
நின் மாயமே உய்த்து நின் மயக்கினில் மயக்கல் என்னை மாயனே -85-
நின் பற்றலால் ஓர் பற்று மற்ற துற்றிலேன் உரைக்கிலே -87-
சீர் மிகுத்த நின்னலால் ஓர் தெய்வம் நான் மதிப்பனே -89-
நின் இலங்கு பாதமின்றி மற்றோர் பற்றிலேன் எம் ஈசனே -90-
எண்ணிலாத மாய நின்னை என்னுள் நீக்கல் ஒன்றுமே -91-
நின் தனக்கு அடைக்கலம் புகுந்த வென்னை அஞ்சல் என்ன வேண்டுமே -92-
இரங்கு அரங்க வாணனே -93-
கடல் கிடந்த நின்னலால் ஓர் கண்ணிலேன் எம் அண்ணலே -95-
நின் கழல் பொருந்துமாது இருந்த நீ வரம் செய் புண்டரீகனே -96-
நின்னடைந்து உய்வதோர் உபாயம் நீ எனக்கு நல்க வேண்டுமே -97-
நின்ன பாத பத்தியான பாசம் பிறர்க்கு அரிய மாயனே எனக்கு நல்க வேண்டுமே -100-
நின்ன பாத பங்கயம் நிரந்தரம் நினைப்பதாக நீ நினைக்க வேண்டுமே -101-
நின்ன பொற் கழல் தொடர்ந்து விள்விலாது ஓர் தொடர்ச்சி நல்க வேண்டுமே -104-
நின் கழற்கு அலால் நேச பாசம் எத்திறத்தும் வைத்திடேன் எம் ஈசனே -107-
மீளவிலாத போகம் நல்க வேண்டும் மால பாதமே -112-
நம்மை ஆட்க்கொள்வான் முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார் எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே -115-
வல்லி நாண் மலர்க் கிழத்தி நாத பாத பூதனை புல்லி யுள்ளம் விள் விலாது பூண்டு மீண்டதில்லையே -118-
என்னாவி தான் இயக்கெலாம் அறுத்து அறாத இன்ப வீடு பெற்றதே -120-

பொய்கையாழ்வார் —
பழுதே பல பகலும் போயின வென்று அஞ்சி அழுதேன் -அரவணை மேல் கண்டு தொழுதேன் -18-
அயல் நின்ற வல்வினையை அஞ்சினேன் அஞ்சி உய நின் திருவடியே சேர்வான் -57-
தொழுது மலர் கொண்டு தூபம் கையேந்தி எழுதும் எழு வாழி நெஞ்சே -58-
தோள் அவனை அல்லால் தொழா-என் செவி இரண்டும் கேளவனது இன் மொழியே கேட்டிருக்கும்
நா நாளும் கோள் நாகணையான் குரை கழலே கூறுவதே நாணாமை நள்ளேன் நயம் -63-
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -67-
நாட்டிலும் நின்னடியே நடுவன்-88-
ஓரடியும் சாடுதைத்த ஒண் மலர்ச் சேவடியும் ஈரடியும் காணலாம் என் நெஞ்சே ஓரடியில்
தாயவனைக் கேசவனைத் தண் துழாய் மாலை சேர் மாயவனையே மனத்து வை -100-

பூதத்தாழ்வார் –
போராழி ஏந்தினான் பொன் மலர்ச் சேவடியே ஓராழி நெஞ்சே யுகந்து -7-
ஏத்திய நாவுடையேன் பூவுடையேன் நின்னுள்ளி நின்றமையால் காவடியேன் பட்ட கடை -10-
கோல் தேடியோடும் கொழுந்ததே போன்றதே மால் தேடியோடும் மனம் -27-
நமக்கு என்றும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஒத்துவதே நாவினால் ஒத்து -38-
ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே –மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -39-
அருளாலே மா மறையோர்க்கு ஈந்த மணி வண்ணன் பாதமே நீ மறவேல் நெஞ்சே நினை -41-
அறம் தாங்கும் மாதவன் என்னும் மனம் படைத்து மற்றவன் பேர் ஒத்துவதே நாவினாலுள்ளு-44-
மதிக்கண்டாய் நெஞ்சே மணி வண்ணன் பாதம் -51-
பணிந்தேன் திருமேனி பைம் கமலம் கையால் அணிந்தேன் உன் சேவடிமேல் அன்பாய் -65-
யானே இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன் பெரும் தமிழன் நல்லேன் பெரிது -74-
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –81-
இரு நிலத்தைச் சென்று அங்கு அளந்த திருவடியை அன்று கருக் கோட்டியுள் கிடந்தது கை தொழுதேன் -87-

பேயாழ்வார் –
இன்றே கழல் கண்டேன் ஏழ் பிறப்பும் யான் அறுத்தேன் -2-
மருந்தும் பொருளும் அமுதமும் தானே -4-
கழல் தொழுதும் வா நெஞ்சே -7-
நாமம் பல சொல்லி –கண்ணனையே காண்க நம் கண் -8-
இணை அடிக்கே ஆளாய் மறவாது வாழ்த்துக என் வாய் -17-
புனம் துழாய் மாலையான் பொன் அம் கழற்கே மனம் துழாய் மாலாய் வரும் -23-
பொருந்தும் சுடராழி ஒன்றுடையான் சூழ் கழலே நாளும் தொடராழி நெஞ்சே தொழுது -24-
பைம் பொன் முடியான் அடி இணைக்கே பூரித்து என் நெஞ்சே பூரி -44-
கரியான் கழலே தெருள் தன் மேல் கண்டாய் தெளி -57-
குட நயந்த கூத்தனாய் நின்றான் குரை கழலே கூறுவதே நாத்தன்னால் உள்ள நலம் -73-
அரவணையான் சேவடிக்கே நேர்படுவான் தான் முயலும் நெஞ்சு -80-
பொது நின்ற பொன் அம் கழலே தொழுமின் முழு வினைகள் முன்னம் கழலும் முடிந்து -88-
வாணன் தோள் செற்றான் கழலே நிறை செய்து என்னெஞ்சே நினை -92-
வெள்ளத்துயின்றானை உள்ளத்தே வை நெஞ்சே யுய்த்து -93-
அரியாய்– திருமால் திருவடியே வந்தித்து என் நெஞ்சமே வாழ்த்து -95-
குட்டத்துக் கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான் தாள் முதலே நங்கட்குச் சார்வு -99-
சார்வு நமக்கு என்றும் –தேன் அமரும் பூ மேல் திரு -100-

நான்முகன் திருவந்தாதி –
நன்றாக நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணன் நீ என்னை அன்றி இலை-7-
வாழ்த்துக வாய் காண்க கண் கேட்க செவி -மகுடம் -தொல்லை மால் தன்னை -11-
கோளரியை வேறாக ஏத்தி இருப்பாரே வெல்லுமே மற்றவரைச் சாத்தி இருப்பார் தவம் -18-
வெற்பென்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி நிக்கிறேன் -40-
காகுத்தன் அல்லால் ஒரு தெய்வம் யானிலேன் -53-
மா மேனி மாயவனை அல்லாது ஓன்று ஏத்தாது என் நா -74-
கண்ணனையே நாளும் தொழாக் காதல் பூண்டேன் தொழில் -84-
பழுதாகாது ஓன்று அறிந்தேன் பாற்கடலான் பாதம் வழுவா வகை நினைந்து வைகல் தொழுவாரை
கண்டு இறைஞ்சி வாழ்வார் கலந்த வினை கெடுத்து விண் திறந்து வீற்று இருப்பார் மிக்கு-89-
காப்பும் மறந்து அறியேன் கண்ணனே என்று இருப்பன் -93-
இனி அறிந்தேன் ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம் இனி அறிந்தேன் எம்பெருமான் உன்னை
இனி அறிந்தேன் காரணன் நீ கற்றவை நீ கற்பவை நீ நற்கிரிசை நாரணன் நீ நன்கு அறிந்தேன் நான் -96-

திருவிருத்தம் –
தென் பால் இலங்கை வெம் களம் செய்த நம் விண்ணோர் பிரானார் துழாய் துணையா நங்களை மாமை கொள்வான்-77-
பாம்பணை மேல் பள்ளி கொண்டு அருளும் சீதனையே தொழுவார் விண்ணுளாரிலும் சீரியரே -79-
யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடு செய்யும் மாதாவினைப் பிதுவை திருமாலை வணங்குவனே -95-
ஏனத்துருவாய் இடந்த பிரான் –ஞானப்பிரானை யல்லால் இல்லை நான் கண்ட நல்லதுவே -99-

திருவாசிரியம் –
அறை கழல் சுடர்ப்பூம் தாமரை சூடுதற்கு அவாவார் உயிர் உருகி யுக்க-2-
ஓர் ஆலிலைச் சேர்ந்த எம் பெரு மா மாயனை யல்லது ஒரு மா தெய்வம் மாற்றுடையோமோ யாமே -7-

பெரிய திருவந்தாதி –
கண்ணன் தாள் வாழ்த்துவதே கண்டாய் வழக்கு -12-
வல்வினையைக் கானும் மலையும் புகக் கடிவான் தானோர் இருளன்ன மா மேனி எம் இறையார் தந்த அருள் என்னும் தண்டால் அடித்து -26-
அவனாம் அவனே எனது தெளிந்து கண்ணனுக்கே தீர்ந்தால் -36-
செங்கண் மால் நீங்காத மா கதியாம் வெந்நரகில் சேராமல் காப்பதற்கு நீ கதியாம் நெஞ்சே நினை -46-
ஆனீன்ற கன்றுயரத்தாம் எறிந்து காயுதிர்த்தார் தாள் பணிந்தோம் வன் துயரையாவாமருங்கு -54-
மட நெஞ்சே கண்ணன் தாள் வாழ்த்துவதே கல் -67-
சுடர் ஆழியானை இடர் கடியும் மாதா பிதுவாக வைத்தேன் எனதுள்ளே -70-
சார்ங்கன் தொல் சீரை நல் நெஞ்சே ஓவாத ஊணாக யுண்-78-
என் நெஞ்சே எப்போதும் கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் மொய் கழலே ஏத்த முயல் -87-

திரு எழு கூற்று இருக்கை
செல்வம் மல்கு தென் திருக் குடந்தை அந்தணர் மந்திர மொழியுடன் வணங்க
ஆடரவம் அளியில் அறி துயில் அமர்ந்த பரம நின் அடி இணை பணிவன் வரும் இடர் அகல மாற்றோ வினையே

-திருமங்கை ஆழ்வார் -அருளிச் செயல்களில் -சரணாகதி –
1–நைமிசாரண்யம் – -பெரிய திருமொழி –1–6-பதிகம்
2–திருவேங்கடம் –பெரிய திருமொழி-1–9-பதிகம்
3–திருக் காவளம் பாடி -பெரிய திருமொழி–4–6-பதிகம்
4–திரு வெள்ளக் குளம் -பெரிய திருமொழி-4–7-பதிகம்
5–திருவரங்கம் -பெரிய திருமொழி–5-8-பதிகம்
6–திரு விண்ணகர் -பெரிய திருமொழி–6–2-பதிகம்
7–திருவழுந்தூர் -பெரிய திருமொழி–7–7-பதிகம்
8–திருச் சிறு புலியூர்–பெரிய திருமொழி- -7–9-பதிகம்
9–திருப் புல்லாணி –பெரிய திருமொழி–9–4-பதிகம்
10–திருக் குறுங்குடி –பெரிய திருமொழி—9–5-பதிகம்
11–திரு நெடும் தாண்டகம் –29–அன்றாயர் குல மகளுக்கு அரையன் தன்னை –அடி நாயேன் நினைந்திட்டேனே –

திருவாய் மொழி
நோற்ற நான்கு பதிகங்கள் -/ உலகுமுண்ட பெருவாயா/

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: