Archive for May, 2018

ஸ்ரீ நாச்சியார் திருமாளிகை-ஸ்ரீ வில்லிபுத்தூர் மஹாத்ம்யம் -ஸ்ரீ கோயில் அண்ணர் -1000-ஆவது உத்சவ விழா மலரில் இருந்து எடுத்த அமுத முத்துக்கள் –

May 18, 2018

ஸ்ரீ ஆண்டாள் -நாச்சியார் -வளர்த்த கிளி தான் கோலக் கிளி –

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண்ணினை துஞ்சா
இன்னடிசிலோடு பாலமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை
உன்னோடு தோழமைக் கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய் –

ஸ்ரீ ஆண்டாளுக்கும் கிளிக்கும்-ஒற்றுமை வைத்து அருளப்பட்ட ஸ்லோகம்
ஸ்யாமாம்-த்விஜாதி பஸூதாம் -ஸ்ரவணாபி ராம மஞ்சஜூ ஸ்வநாம் -மதன மீஸ்வரஜம் பஜந்தீம்-
கோதே குரோஸ் த்ரி ஜெகதாம் குண சாலி நீம் த்வாம் லீலா ஸூ கீம் க்ருததிய சமுதாஹரந்தி

ஸ்யாமாம்-வண்ண ஒற்றுமை
த்விஜாதி பஸூதாம் -முட்டை இடுதல் குஞ்சு பொறித்தல் இரண்டு பிறவிகள் -நாச்சியாருக்கும் உண்டே
ஸ்ரவணாபி ராம மஞ்சஜூ ஸ்வநாம் -மென் கிளி போலே மிக மிழற்றும் –கிளி மொழி -மதுரா மதுரா லாபா
மதன மீஸ்வரஜம் பஜந்தீம்—மன்மதனுக்கு வாஹனம்-அநங்க தேவா உன்னையும் உம்பியும் தொழுதேன்
கோதே குரோஸ் த்ரி ஜெகதாம் குண சாலி நீம் த்வாம் லீலா ஸூ கீம் க்ருததிய சமுதாஹரந்தி
பெரியாழ்வார் உடைய பகுதி பூங்காவில் வளர்ந்த மதிப்புடைய சோலைக் கிளி அன்றோ நம் நாச்சியார் –

மின்னனைய நுண் இடையர் விரி குழல் மேல் நுழைந்த வண்டு இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் -ஸ்ரீ ஆண்டாள்
திருக் குழலில் நுழைந்த தூவி அம் புள்ளுடைத் தெய்வ வண்டு
மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் -அன்னமாய் அறநூல் உரைத்த -வேண்டிய வேதங்கள் ஓதி –
பிராஹா வேதான் அசேஷான்-வேதப்பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் –
க்ரீடார்த்தம் அபி யத் ப்ருயுஸ் ச தர்ம ப்ரமோமத -அவர் விளையாடுவதாக அருளிச் செய்கிறாள் –

திருமாலுக்கு தாய் நதிகள் -உனக்கோ துளஸீ இயற்கையிலே பரிமளம்
சமுத்திர ராஜன் தந்தை அங்கு -பொங்கும் பரிவால் பல்லாண்டு அருளிய பெரியாழ்வார் இங்கே
சந்திரன் அமிர்தம் ஆலகால விஷம் -உடன் பிறந்தவர் -கோயில் அண்ணர்-திருப்பாவை ஜீயர் – இங்கு
ஷீராப்தி நாதன் மணவாளன் அங்கு -அரங்கத்தின் இன்னமுதர் குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் இங்கு
கோலச் சுரி சங்கை மாயன் செவ்வாயின் குணம் வினவும்
சீலத்தனள் தென் திரு மல்லி நாடி செழும் குழல் மேல்
மாலைத் தொடை தென்னரங்கருக்கு ஈயும் மதிப்புடைய
சோலைக் கிளி யவள் தூய நல் பாதம் துணை நமக்கே –

மின்னு புகழ் வில்லிபுத்தூர் / சீராரும் வில்லிபுத்தூர் /முப்புரி யூட்டின திவ்ய தேசம் என்பதாலே மா முனிகள் இந்த விசேஷணங்கள்
அணி புதுவை அன்றோ -மணியும் முத்தும் பொன்னும் இட்டுச் செய்த திவ்ய ஆபரணம் அன்றி இத்திவ்ய தேசம்
மாலே மணி வண்ணன் வட பெரும் கோயிலுடையான்
மின்னு நூல் விட்டு சித்தன் முத்து /சூடிக்கொடுத்த சுடர்க்கொடி பொன் ஆண்டாள் –
ஆதி நாதர் ஆழ்வார் தேவஸ்தானம் போலே உபய பிரதானம் அங்கு -நாச்சியார் தேவஸ்தானம் இங்கு
இவளுக்கே முதலில் விஸ்வரூப சேவை
தம்மையே நாளும் வணங்கித் தொழுவார்க்கு தம்மையே ஓக்க அருள் செய்வதை அனுஷ்டான பர்யந்தம் பிரத்யக்ஷம் அன்றோ இங்கு
கங்கை யமுனை சரஸ்வதி -தடாக ரூபமாக முக்குளம்-
சீராரும் வில்லிபுத்தூரைக் கண்டு அன்றோ வண்டின முரலும் சோலையையும் மறந்து ஸ்ரீ ரெங்க மன்னார் இங்கேயே நித்ய வாசம் –

முப்புரி யூட்டிய திவ்ய தேசம் -பிரமாணம் -ப்ரமேயம் -பிரமாதா -/ ஆண்டாள் ரெங்கமன்னார் கருடாழ்வார் என்றுமாம் /
கோதை பிறந்தவூர் -கோவிந்தன் வாழுமூர் -வேதக்கோனூர் -என்பதாலும் –
———————————–

மாதா சேத் துளஸீ பிதா யதி தவ ஸ்ரீ விஷ்ணு சித்தோ
மஹான் பிராதா சேத் யதிசேகர பிரியதம ஸ்ரீ ரெங்க தாமா யதி
ஞாதார ஸ்தநயாஸ் த்வதுக்தி சரஸஸ் தந்யேந சம்வர்த்தி தா கோதா தேவி
கதம் த்வமந்ய ஸூ லபா சா தாரணா ஸ்ரீ ரஸி–ஸ்ரீ அனந்தாழ்வான் -ஸ்ரீ கோதா சதுஸ் ஸ்லோகி

——————————————————–

ஸ்ரீ ரெங்கத்தில் ஸ்ரீ ராமானுஜர் சந்நிதி உடையவர் சந்நிதி -போலே -ஸ்ரீ வில்லிபுத்தூரில் -கோயில் அண்ணர் சந்நிதி -என்றே பெயர் –

யதா தேஹே ததா பேரே ந்யாஸ கர்மா சமா சரேத்-என்றும் -அர்ச்ச கஸ்ய ஹரி சாஷாத் -என்றும்
எம்பெருமானுடைய ப்ரீதி ப்ரேம பக்தி -அவனுக்கும் செய்யும் கைங்கர்யங்களாலே -எம்பெருமான் தன் அம்ச லேஸம் அர்ச்சர்கர்களுக்கு அளிக்கிறான் –
அர்ச்சகர் மூலமாகவே – நம் கோயில் அண்ணரே வாரும் -என்று அழைத்து நாச்சியார் வெளிப்படுத்தி அருளினாள்-
இன்றும் மார்கழி நீராட்டம் உத்சவம் முடிந்து நாச்சியார் ஆஸ்தானம் எழுந்து அருளியதும்
நம் கோயில் அன்னான் என்று அருளிப் பாடிட்டு எட்டு நாள்களும் நாச்சியார் திவ்ய சிம்ஹாசனத்துக்கு அருகே
ஆசனம் சமர்ப்பித்து அன்றைய நாள் பாட்டு கோஷ்ட்டியாராலே சேவித்து கௌரவிக்கப் படுகிறது –

வாழி திருப்பாவை பாடும் மடப்பாவை
வாழி அரங்க மணவாளர் -வாழி என
மாடு நிற்கும் புள்ளரையன் வாழி பெரியாழ்வார்
பாடு நிற்கும் வேதாந்தப் பா -என்றும்

மெல்லிய பஞ்சடியும் துவராடையும் மேகலையும்
வல்லியை வென்ற மருங்கும் முத்தாரமும் வனமுலையும்
சொல்லிய வண்மையும் வில்லிபுத்தூர் அம்மை தோள் அழகும்
முலையை வென்ற நகையும் எல்லாம் என் தன் முன் நிற்குமே -என்றும் -ஸ்ரீ ராமானுஜர் பணித்த பாசுரங்கள் என்பர் -செவி வழிச் செய்தியாக அறிந்தது –

———————-

மஹா பாரதத்தில் விடப்பட்ட விஷய தொகுப்பு ஸ்ரீ ஹரி வம்சம்-ஸ்ரீ பாரத சேஷம் -போலே
ஸ்ரீ வராஹ புராணத்தில் விடப்பட்ட விஷயங்கள் தொகுப்பு ஸ்ரீ வராஹ சேஷம் –
அதில் ரஹஸ்ய கண்டத்தில் திருப்பாவை -ஸ்ரீ லஷ்மீ நித்யா -என்ற பெயர் –

————————-

ஸர்வேஷாம் ஏவ மந்த்ராணாம் மந்த்ர ரத்னம் ஸூபாவஹம்
ஸக்ருத் ஸ்மரண மாத்ரேண ததாதி பரமம் பதம்
மந்த்ர ரத்னம் த்வயம் ந்யாஸ ப்ரபத்திஸ் சரணாகதி
லஷ்மீ நாராயணா யேதி ஹிதம் சர்வ பல ப்ரதம்–நம்பி திருச்செவியில் பெரிய நம்பியாக பாவித்து அருளிச் செய்ததைக் கேட்டு
நாமும் நம் இராமானுஜரை யுடையோம் ஆனோம் என்று உகந்து ஸ்ரீ வைஷ்ணவ நம்பி -தாஸ்ய திருநாமம் பெற்றார் –

——————————-

கலி பிறந்து -47-வயதான குரோதன வருஷம் -ஆனி -ஸ்வாதி – ஏகாதசி -ஞாயிற்றுக் கிழமை -கருடாழ்வார் அம்சம் –
ஸ்ரீ முகுந்த பட்டருக்கும் ஸ்ரீ பத்மாவதி அம்மையாருக்கும் ஐந்தாவது திருக் குமாரர் ஸ்ரீ விஷ்ணு சித்தர்
கலி பிறந்து -98- நள வருஷம் -ஆடி -சுக்ல பக்ஷம் சதுர்த்தசி -செவ்வாய் கிழமை -திருப்பூரம் – ஸ்ரீ நாச்சியார் திருவவதாரம் –
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணின குடி இ றே-அதீத கால அபதானங்களுக்கும் வயிறு பிடிப்பதே இருவருக்கும் பணி-

———————————

சூடிக் கொடுத்த சுடர் கொடி-சாத்திய மாலை -கொடிகளில் உள்ள புஷ்ப தொடை மாலை -சாத்த தோஷம் இல்லையே –
அத்யந்த பக்தி யுக்தாநாம் நைவ சாஸ்திரம் ந ச க்ரம

——————————-

நீராட்டம் உத்சவம் -மார்கழி -22-இரவு பெரிய பெருமாள் இடம் விடை கேட்க எழுந்து அருளி –
அங்குச் சென்று திருமஞ்சனம் கண்டு அருளி -கைத்தலத்தில் சத்ர சாமராத்திகளுடன் மூல ஸ்தானம் எழுந்து அருளி –
ஸ்ரீ அரையர் ஸ்வாமிக்கு அருளப்பாடு
திருப்பாவை 30-பாசுரங்களும் முதல் பாட்டுக்கு வியாக்யானமும்
மறு நாள் விடியலில் பஞ்ச லக்ஷம் பெண்களை எழுப்பிக் கொண்டு மாலே மணி வண்ணா சேவிக்க மரங்களும் இரங்கும்
அவரால் அங்கு அளிக்கப்படும் சங்கு பறை விளக்கு கொடி விதானம் பல்லாண்டு இசைப்பார் கூட்டத்துடன் திரு முக்குளம் சென்று நீராடி
ஆறாம் திருநாள் தண்டியல் சேவை அன்று நாச்சியார் வில்லிபுத்தூர் உறைவான் பாக்கள் எழுந்து அருளி –
ஏற்ற கலம் -அங்கண் மா ஞாலம் மாரிமலை பாசுரங்கள் நாள் பாட்டாக அரையர் செவிக்கும் பொழுதும்
வந்து தலைப்பு பெய்தொம் -இங்கனே போந்தருளி -கார்யம் ஆராய்ந்து அருள் -என்னும் போது உள்ளம் உருகும்
தை மாதம் முதல் நாள் மா முனிகளுக்காக -தம் சந்நிதி வாசலில் எழுந்து அருளி நிற்கும் நாச்சியாரை
கைத்தலத்தில் மா முனிகள் எழுந்து அருளி -எமக்காக அன்றோ -பலகாலம் சேவிப்பார்கள் -அப்பொழுது உடலும் உருகுமே –

சங்கராந்தி அன்று காலையில் நாச்சியார் சந்நிதியில் இருந்து குளிர் போர்வை சாற்றிக் கொண்டு
ஸ்ரீ வட பெரும் கோயிலுடையான் ராஜ கோபுர வாசலில் எழுந்து அருள
குளிர் போர்வை களையப்பட்டு -அரையர் மாலே மணி வண்ணா பாசுர சேவை –
பூங்கொள் திரு முகத்து பால் அன்ன வண்ணத்து வெள்ளை விளி சங்கையும்-பெரும்பறையும் -கோலவிளக்கையும் –
கொடி விதானங்களையும் -பல்லாண்டு இசைக்கும் வேத வாய்த் தொழிலாரையும் பிரசாதிக்க
இன்று மட்டும் எண்ணெய் காப்பு திரு மஞ்சன மண்டபத்தில் -மற்றைய நாள்களில் உள் மண்டபத்தில் –
பின்புஉபதேச ரத்ன மாலை கோஷ்ட்டி தொடக்கம்
நாச்சியார் பெரிய பெருமாள் சந்நிதி கோபுர வாசலுக்கு எழுந்து அருளிய பின்பு
கம்பன் குஞ்சம்-சாத்தப்படும் இன்று ஒரு நாள் மட்டுமே -‘கம்ப நாட்டாழ்வான் சமர்ப்பித்தது –

இருக்கு ஓதும் அந்தணர் சூழ் புதுவாபுரி எங்கள் பிரான்
மருக்கோதை வாழும் வட பெரும் கோயில் மணி வண்ணனார்
திருக் கோபுரத்துக்கு கிளை அம் பொன் மேருச் சிகரம் என்றே
பருக்கோதாலா மன்றி வேறு யுவமானப் பனிப்பிள்ளையே –கம்பர் பாடல் கல் வெட்டு கோபுரத்தில் உள்ளது

சிங்கம்மாள் குறட்டில் வைத்து மா முனிகளுக்கு சேவை -நத்து மூக்குத்தி சாத்திக் கொள்வார்
உபதேச ரத்ன மாலை சாற்றுமுறை ஆண்டாள் கோயில் வாசல் திரு மண்டபத்தில் நடந்து
ஊஞ்சல் மண்டபம் எழுந்து அருளுவார்
இன்று தான் ஸ்ரீ வில்லிபுத்தூ ரில் கூடாரை வெல்லும் சீர் வைபவம் –
பெரிய பெருமாள் ஆண்டாள் சந்நிதிக்கு எழுந்து அருளி – பெரியாழ்வார் நம்மாழ்வார் மற்றைய ஆழ்வார்கள்
கோயில் அண்ணண் -கூரத் தாழ்வான்-அனைத்து ஆச்சார்யர்களும் அழகு ஒழக்கமாக கூடி இருந்து வைபவம்
கூடாரை /கறவைகள் சிற்றம் வங்கம் -பாசுரங்கள் சேவித்து நடைபெறும்

தீர்த்த வரிசை -அரையர் -பெரிய நம்பி -வேதாப்பிரான் பட்டர் -அப்பன் -தத்து ஐயங்கார் -நல்லார் -ஜீயாள் -மற்ற தீர்த்த காரர்கள்

—————————————————

பிதாச ரஷகஸ் சேஷீ பர்த்தா ஜ்ஜேயோ ரமாபதி
ஸ்வாம் யாதாரோ மாமாத்மாஸ போக்தா மநூதித-

அகாரார்த்தம் -பிதா புத்ரசம்பந்தம்
ரஷ்ய ரஷக சம்பந்தம் – தாது அர்த்தம்
சேஷ சேஷீ சம்பந்தம் -லுப்த சதுர்த்தி அர்த்தம்
உகாரார்த்தம் -பர்த்ரு – பார்யா சம்பந்தம்
மகாரார்த்தம்-ஜ்ஞாத்ரு-ஜ்ஜேய சம்பந்தம்
நமஸ் சபித்தார்த்ர்த்தம் -ஸ்வ ஸ்வாமி சம்பந்தம்
நார சபிதார்த்தம் -சரீர சரீரி சம்பந்தம்
அயன சபிதார்த்தம் -ஆதார -ஆதேய சம்பந்தம்
ஆய சபிதார்த்தம் -போக்த்ருத்வ போக்யத்வ சம்பந்தம் –

———————————————

ஆம் முதல்வன் இவன் -குளப்படியில் தேங்கினால் குருவி குடித்துப் போம் –
வீராணத்தில் தேங்கினால் அது லோகம் அடைய உஜ்ஜீவிக்குமே –
பொலிக பொலிக பொலிக -பூதங்கள் மண் மேல் -ஸ்ரீ பெரும்பூதூரில் திருவவதாரம் ஸூசகம் -தரிசன முதல்வன் –

———————————————

படித்வா பாஷ்யம் தத் பிரவசனம் அசக்தவ சடரி போர்கிரி ச்ரத்தாவாச
பிரபுபரி சிதஸ்தாந நிவஹே ப்ரபோ கைங்கர்யம் வா பிரபதன மநோரர்த்தமநம்
ப்ரபந்நாநாம் வா மே பவது பரிசர்யா பரிசய குடீம் க்ருத்வா தஸ்மிந்
யதுகிரி தடே நித்ய வசதி ஷடார்த்த ஸ்ரீ ஸஸ்ய பிரபதனவிதவ் சாதகதமா –ஸ்ரீ பாஷ்யகாரர் ஆறு கட்டளைகள் –

————————————–

விதானம் பிரார்த்தித்து -ஸ்ரீ ராமானுஜர் திருவவதாரத்துக்கு அடி வைக்கிறாள் பிராட்டி –
வேதார்த்தம் அறுதியிடுவது -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –

பிரார்த்தனா பஞ்சகம் –
இப்பிரபந்தம் -நடாதூர் அம்மாள் சிஷ்யர் கடிகா சஹஸ்ர ஆச்சார்யாரோ –
ஸ்ருதி ப்ரகாசிகா ஆச்சார்யரான ஸ்ரீ ஸூதர்சன பட்டரோ –
எறும்பி அப்பாவோ -கோயில் அண்ணண் திருப்பேரானாரோ -என்பர் –

யதீஸ்வர ஸ்ருணு ஸ்ரீமன் க்ருபயா பரயா தவ
மம விஜ் ஞாபநம் இதம் விலோக்ய வரதம் குரும்–ஸ்லோகம் -1-
அடியேன் குருவான வரத குரு ஆச்சார்யரை திரு உள்ளத்தில் கொண்டு காரேய் கருணை இராமானுசா-
அடியேனுடைய விண்ணப்பங்களைக் கேட்டு அருள்வாய்

அநாதி பாப ரசிதாம் அந்தக்கரண நிஷ்டிதாம்
யதீந்த்ர விஷயே சாந்த்ராம் விநிவர்த்தய வாசநாம் –ஸ்லோகம் -2-
வாசனா ருசிகளை போக்கி அருள பிரார்த்தனை இதில் –

அபி ப்ரார்த்த யமா நாநாம் புத்ர ஷேத்ராதி சம்பதாம்
குரு வைராக்ய மேவாத்ர ஹித காரின் யதீந்த்ர ந –ஸ்லோகம் -3-
விஷயாந்தர வைராக்யம் பிறப்பித்து அருள பிரார்த்தனை இதில் –

யதா அபராதா ந ஸ்யுர்மே பஃதேஷூ பகவத்யபி
ததா லஷ்மண யோகீந்த்ர யாவத் தேஹம் ப்ரவர்த்தய –ஸ்லோகம் -4-
பாகவத அபசாராதிகள் நேராதபடி அருள பிரார்த்தனை இதில் –

ஆமோஷம் லஷ்மணார்ய த்வத் ப்ரபந்ந பரிசீல நை
காலேஷே போ அஸ்து நஸ் சத்பி ஸஹவாஸம் உபேயுஷாம் –ஸ்லோகம் -5-
கீழே யாவத் தேஹம் -இங்கு ஆ மோக்ஷம் -ரஜஸ் தமஸ் குணங்கள் உள்ள ப்ரக்ருதி -கழிந்து பரம பதம் செல்லும் வரை
கால ஷேபம் திருமால் அடியாரோடே ஸஹவாஸம் – பூர்வாச்சார்ய பிரபந்த கால ஷேபம்-வேண்டி பிரார்த்தனை இதில் –

பராங்குச முனீந்திராதி பரமாசார்ய ஸூக்தயா
ஸ்வதந்தாம் மம ஜிஹ்வாயை ஸ்வத ஏவ யதீஸ்வர –ஸ்லோகம் -6-
ஆழ்வார்களையே பரமாச்சார்யா சப்தத்தால் -அருளி- செவிக்கு இனிய செஞ்சொல் –
அருளிச் செயல்களில் ஆழ்ந்து இருக்க பிரார்த்தனை இதில் –

இத்யேதத் சாதரம் வித்வான் ப்ரார்த்தநா பஞ்சகம் படன்
ப்ராப்நுயாத் பரமம் பக்திம் யதிராஜ பாதாப்ஜயோ–ஸ்லோகம் -7
ஸ்வாமி திருவடிகளில் பேரின்பத்தை இந்த ஸ்லோகங்கள் சொல்ல பெறுவார் என்று பலன் அருளிச் செய்து நிகமிக்கிறார்
சாதரம் படன்-என்று பொருள் உணர்ந்தோ உணராமலோ சொன்னாலும் பலன் கிட்டுவது நிச்சயம் என்றவாறு –

காஷாய ஸோபி கமநீய ஸிகா நிவேசம்
தண்ட த்ரய உஜ்ஜ்வல கரம் விமல உபவீதம்
உத்யத் தி நேச நிபம் உல்லஸத் ஊர்த்வ புண்ட்ரம்
ரூபம் தவாஸ்து யதிராஜ த்ரு ஸோர் மமாக்ரே –ஸ்லோகம் -8-
ஸ்வாமி திவ்ய மங்கள விக்ரஹம் திவ்ய சோபை எப்பொழுதும் நம் கண்களுக்கு விளங்க பிரார்த்தனை –

உய்ய ஒரே வழி உடையவர் திருவடி –

சரம ஸ்லோக தத்வார்த்தம் ஜ்ஞாத்வா ஆர்யாஜ்ஞாம் விலங்க்யச
தததே தம் சவகீயேப்யோ யதிராஜாய மங்களம் –

வல்லார்கள் வாழ்த்தும் குருகேசர் தம்மை மனத்து வைத்துச்
சொல்லார் வாழ்த்தும் மணவாள மா முனி தொண்டர் குழாம்
எல்லாம் தழைக்க எதிராச விம்சதி ஈன்று அளித்தான்
யுல்லார விந்தத் திருத்தாள் இரண்டையும் போற்று நெஞ்சே –

———————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

அழகிய மணவாளச் சீயர் அன்போடு அருளிச் செய்த பன்னீராயிரப்படி –10-10-

May 17, 2018

பத்தாம் திருவாய் மொழியில் கீழ் -அர்ச்சிராதி மார்க்கத்தாலே போய் தேச விசேஷத்திலே புக்குத்
திரு மா மணி மண்டபத்திலே ஏறி ஸூரி பரிஷத்திலே அந்தர்பவித்து நிரதிசய ஆனந்த யுக்தனாய்க் கொண்டு
முக்தன் இருக்கும் இருப்பை அபரோஷிக்க –
பர ஞானத்தால் இது தம்முடைய பேறாக சாஷாத் கரித்து அனுபவித்தவர் -அந்த சமாதி குலைந்தவாறே –
முன்பு இருந்த சம்சாரத்தை தரிசித்து -கொடு உலகம் காட்டேலே -என்று தாம் அஞ்சி இருந்த சம்சாரத்தைத் தரிசித்து
மிகவும் ஆர்த்தராய் அபரோக்ஷ ஸித்தமான இப்பேற்றை பெற்று அல்லது தரிக்க மாட்டாத படி
பரமபக்தி ரூபமான நிரவதிக அபி நிவேசம் பிறந்து
இவ்வளவும் நம்மைப் புகுர நிறுத்தினவன் தானே முழுக்க நிர்வஹிப்பானாக ஏறிட்டுக் கொண்டு
பெரிய திருவடி திருத் தோளிலே ஸந்நிஹிதனாய்த் தம் தலையிலே திருவடிகளை வைத்து
பல பிரதானத்திலே அதி த்வரிதானாம் படியை அனுசந்தித்து
அவ்வனுசந்தான பாவநத்வத்தாலே அபரோக்ஷ சித்தனான சர்வேஸ்வரனுடைய உபகாரமான
போக்ய விக்ரஹத்தையும்
ஸ்ரீ மஹா லஷ்மீ வல்லபத்வத்தையும்
சர்வ காரணத்வத்தையும்
ஸமஸ்த வாஸ்து பிரகார யோகத்தையும்
அதிசயித போக்யத்வத்தையும்
அத்யந்த பிரணயித்வத்தையும்
ஆஸ்ரித ரக்ஷகத்வத்தையும்
சர்வ அந்தராத்மவத்தையும்
ஸமஸ்த பிரதானத்வத்தையும்
பரிபூர்ண போக பிரதத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனுடைய சந்நிதியில் தம்முடைய
ஆர்த்தியும் அபி நிவேச அதிசயமும் தோற்றும்படி அவனுடைய உபகாரகத்வாதிகளைச் சொல்லி
மறுக்க ஒண்ணாத படி பிராட்டி திருவாணை இட்டு-
சர்வ பிரகார ரக்ஷகனான நீ எனக்குப் பூர்ண அனுபவத்தைத் தர வேணும் -என்று மிகவும் கூப்பிட
அவனும் இவருடைய வரவுக்கு ஈடாக குண விக்ரஹ விபூதி பரிபூர்ணனாய்க் கொண்டு பிராட்டியோடும் கூட
ஏக ரஸமாம்படி ஸம்ஸ்லேஷித்த பிரகாரத்தை அனுசந்தித்து
இனி இந்தப் பேற்றுக்குத் தட்டில்லை என்று நிஷ்கர்ஷித்து தாம் அவாப்த ஸமஸ்த பலரான படியைப் பேசி முடித்து அருளுகிறார் –

—————————————————

முதல் பாட்டில் ஸ்ருஷ்டியாதி முகத்தால் அடியே பிடித்து உபகாரகனாய்ப் போந்து
வடிவு அழகைக் காட்டி ருசியைப் பிறப்பித்து உன்னை ஒழியச் செல்லாதபடி யாக்கி
என்னை அனுபவிப்பிப்பதாக த்வரித்து வந்து ஸந்நிஹிதனான நீ
இனி குண ஆவிஷ்காரத்தாலே வஞ்சித்து அகலப் போக இசையேன் என்கிறார் –

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

முனியே -நாம ரூப விபாக அநர்ஹமாய்-சித் அசித் விசேஷிதமாய்க் கொண்டு ஸம்ஹ்ருதமாய் –
ஏகீபவித்துக் கிடக்கிற தசையில் ஆஸ்ரயண அர்ஹமாகக் கொண்டு ஸ்ருஷ்ட்டி பிரகாரத்தை மனனம் பண்ணுமவனாய்
நான்முகனே–மஹதாதி ரூப சமஷ்டியை ஸ்வயமேவ ஸ்ருஷ்டித்து -அண்டாந்த வர்த்தியான வ்யஷ்டி ஸ்ருஷ்ட்டியைப்
பண்ணுகைக்காக சதுர்முகனை சரீரமாக யுடையையாய்
முக்கண் அப்பா -ஸம்ஹ்ருதி சமயத்தில் ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய உபஸம்ஹார அர்த்தமாக சக்தி ஸூசகமான
த்ரி நேத்ரத்தை யுடையனாய் -அதி ப்ரவ்ருத்த கரணருடைய உப சம்ஹாரத்தாலே
உபகாரகனான ருத்ரனை சரீரமாக வுடையையாய்
என் பொல்லாக் கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா–அவர்கள் இருவருக்கும் நடுவே
ரக்ஷகனான தசையில் எனக்கு உன் பக்கலில் ருசி பிறக்கைக்கு அடியான பக்குவ பலம் போலே போக்யமான
திரு அதரத்தையும்-தாமரைப் பூப் போலே தர்ச நியாமான திருக் கண்ணையும் யுடைத்தாய் இருபத்தொரு
துளையாத கரு மாணிக்கம் போலே இருக்கிற திவ்ய வடிவை யுடையையாய் –
அநாதியாக ஆத்ம அபஹாரம் பண்ணிப் போந்த சோரனான என்னையும்
அவ்வழகாலே அறியாதபடி வஞ்சித்து அபஹரித்துக் கொண்டவனாய்
தனியேன் ஆர் உயிரே -அப்ராப்த பலனாகையாலே-தனிமைப்பட்டு எனக்கு குண ஆவிஷ்காரத்தைப் பண்ணித்
தன்னை ஒழியச் செல்லாத படி எனக்குப் பரிபூர்ண பிராணனானவனே
என் தலை மிசையாய் வந்திட்டு–செழும் பறவை தான் ஏறித் திரிவான் தாளிணை என் தலை மேலே -என்னும்படி
என் தலைக்கு மேலாயக் கொண்டு வந்து சமைந்து
இனி நான் போகல் ஒட்டேன் –சம்சார தோஷத்தோடே புருஷார்த்தத்தையும் ஆவிஷ்கரித்து
ஆர்த்தியையும் அபி நிவேசத்தையும் ஜெநிப்பித்த பின்பு
உன்னாலே லப்த ஞான ப்ரேமனாய்க் கொண்டு அதி த்வரிதனாய் –
உன் த்வரையையும் அறிந்து இருக்கிற நான் -முன்பு போலே நீ அகன்று போக இசையேன்
ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–உன்னைப் பெறா விடில் முடியும்படியான என்னை
சம்சார தசையில் விஷயாந்தரங்களைக் காட்டி அந்நிய பரனாக்கினவோ பாதி யாதல் –
ருசி பிறந்த பின்பு குண ஆவிஷ்காராதிகளைப் பண்ணி ஆஸ்வசிப்பித்தவோ யாதல் –
சிறிதும் வஞ்சியாது ஒழிய வேணும் –

———————————————————————–

அநந்தரம் -தம்முடைய கார்யம் செயகைக்காக மறுக்க ஒண்ணாதபடி வல்லபையான பிராட்டியுடைய திருவாணை இடுகிறார் –

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

மாயம் செய்யேல் என்னை -முன்பு ஆர்த்தனாய்க் கூப்பிட்ட தசைகள் தோறும் குண ஆவிஷ்கார மாத்திரத்தாலே ஆஸ்வசிப்பித்து
அகல நின்றால் போலே க்ஷண காலமும் உன்னைப் பிரியில் முடியும் தசையான
என்னை இனி வஞ்சியாது ஒழிய வேணும்
உன் திரு மார்வத்து மாலை நங்கை வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்–நான் நினைத்தபடி செய்கிறோம் என்று
ஸ்வா தந்தர்யம் கொண்டாடப் பார்த்தாய் ஆகில்
உனக்கு நிருபாதிக சம்பத் ஆகையால் சர்வாதிகமான ஸ்வரூபத்துக்கு நிரூபக பூதையாய்-தானும் -அகலகில்லேன் -என்று
விரும்பும்படியான திரு மார்புக்கு பரபாகமாம் படியாய் –
ஹிரண்மயமான மாலை போலே திவ்ய மங்கள விக்ரஹத்துக்கு நிருபாதிக பூதையாய்
உன்னோபாதி ஸமஸ்த கல்யாண குண பூர்ணை யாகையாலே
கண்ணாடியில் நிழல் எழுமா போலே இக் குணங்களும் நிறம் பெறும்படி பண்ணுமவளாய் –
சர்வ கந்த -என்னும்படி உனக்கும் அதி வாசகரமாய் விலக்ஷணமான திருக் குழலை யுடையளாய்க் கொண்டு –
போக்ய பூதை யாகையாலே விபூதி யபிமானியான ஸ்ரீ மஹா லஷ்மீ பிராட்டியினுடைய கௌரவ்யமான ஆணையானது –
ஸமஸ்த ஜகத்தையும் உன் ஆணையால் நிர்வஹிக்கிற உனக்கு ஆணையாக –
இப்படி ஆணை இட்டு நிர்ப்பந்திக்கிறது த்வரையாலே என்று நினைத்து
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே–நிர்ஹேதுகமாக ஸ்நேஹித்து -ஹேய ப்ரத்ய நீகனான உன்னோடே
ஹேய ஸம்ஸ்ருஷ்டனான என்னை
உன்னது என்னதாவியும் என்னது உன்னதாவியும் -என்னும்படி ஆத்ம சேஷம் பிரவாதபடியாக –
அப்ருதக் ஸித்தியாலே ஏக பிரதிபத்தி பிறக்கும்படிக்கு ஈடாக
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –என் நிகர்ஷத்தைப் பார்த்துக் கூசாதே
அடியே பிடித்து அங்கீ கரித்து அருளினாய் –
இப்படி உன் ப்ரவ்ருத்தி அறிந்து இருக்கிற என்னை என் முன்னே வந்து
ஆழ்வீர் போதீரோ என்று திரு மிடற்று ஓசையைக் காட்டி அழைத்துக் கொண்டு அருள வேணும் –
ஐயோ நீ தானே த்வரிக்கிற இக்காரியத்துக்கு நான் ஆணை இட வேண்டி இருப்பதே

—————————————————

அநந்தரம்-ப்ரஹ்மாதி சகல சேதனர்க்கும் உத்பாதகமான திரு நாபீ கமலத்துக்கு மூல கந்தமான
நீ வந்து விஷயீ கரித்து அருள வேணும் என்கிறார்

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

என் பொல்லாக் கருமாணிக்கமே-எனக்கு நிரதிசய போக்யமாய் துளையாத மாணிக்கம் போலே விலக்ஷணமான வடிவை யுடையையாய்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம் நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–தம்தாமுடைய பத
சித்த்யர்த்தமாகக் கிட்டி ஆஸ்ரயிக்கக் கடவரான பிரம்மா ருத்ர இந்த்ரர்கள் முதலானார்க்கும் முதலான
திரு நாபி கமலத்துக்கு கந்த பூதனாய் –
இப்படி ஸ்ருஜ்யர் அன்றியே மேலாய் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தரான நித்ய ஸூரிகளுக்கும்
அப்படியே சத்தா ஸ்த்தித் யாதிகளுக்கு நிர்வாஹகானானவனே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –என் ஆத்மாவுக்கு அபாஸ்ரயமாய்
இருப்பதொரு உபக்நம் உன்னை ஒழிய நான் அறிகின்றிலேன் –
ஆனபின்பு நீ தானே வந்து அழைத்துக் கொண்டு அருள வேணும் –
ஐயோ உன் கார்யம் நான் சொல்ல வேண்டுவதே –

—————————————————————

அநந்தரம் -சர்வ பிரகார விசிஷ்டனான நீ பிரகார பூதனான என்னுடைய கார்யம் நிர்வஹிப்பதாக ஏறிட்டுக் கொண்டு
வைத்து என்னை இந்த விபூதியில் போர விட்டாய் இத்தனை அன்றோ என்று ஆர்த்தராய்க் கூப்பிடுகிறார் –

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

உம்பர் அம் தண் பாழேயோ -அதனுள்- மிசை நீயேயோ–பூதமான மஹாதாதி களுக்கு எல்லாம் பிரதான காரணமாகையாலே
மேலாய் -உனக்கு லீலா உபகரணம் ஆகையாலே விலக்ஷணமாய் –
குண த்ரய ஸாம்ய அவஸ்தமாகையாலே-குளிர்ந்து இருப்பதாய் போக மோக்ஷங்களை விளைத்துக் கொள்ளுகைக்கு
ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டானாய்க் கொண்டு
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ-அண்டகாரணமான ஆகாசம் விலக்ஷணமான தேஜஸ்ஸூ முதலான பூதங்களை
ஸ்ருஷ்டித்து தத் பிரகாரியாய் –
பூத ஆரப்தமான அண்டத்துக்கு உள்ளே ப்ரஹ்ம ருத்ராதிகளை உத்பாதித்து தத் தத் பிரகார விசிஷ்டனானவன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ–பிராணி ஜாதங்களுக்கு மேலான தேவர்களையும் மனுஷ்யாதி சகல சேதனரையும்
தத் தத் கர்ம விபாக மனனம் பண்ணி ஸ்ருஷ்டித்தவன் நீ இப்படியாய் இருக்க
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–பிரகார பூதனான என்னுடைய தேகத்தை நிர்வஹிப்பதாக ஏறிட்டுக் கொண்டு
பிராப்தி பர்யந்தமாக அபரோஷிப்பித்து உன்னை ஒழியச் செல்லாத என்னை பின்னையும் இங்கே போர விட்டிட்டு வைத்தாய்
ஓ என்கிற அசை-நீ என்னும் இடம் தோறும் கூட்டி -ஓர் ஒன்றே ரஷிக்க ஹேது போந்து இருக்க
அநாதரித்தாய் என்று கூப்பிடுகிற ஆர்த்தியை ஸூசிப்பிக்கிறது –

————————————————————————

அநந்தரம் எனக்கு நிரதிசய போக்ய பூதனாய் இருந்து வைத்து நீ என்னை உபேக்ஷிக்கப் பார்த்தால்
எனக்கு ஒரு உஜ்ஜீவனம் உண்டோ -என்கிறார் –

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –தன் காய்ச்சல் தீரும்படி இரும்பானது
உண்ட நீர் போலே என் ஆத்மாவின் விடாய் எல்லாம் தீரப் பரிபூர்ணமாக பருகைக்கு
எனக்கு திருஷ்ணை தொடாத அம்ருதமானாயே -இப்படி இருக்க –
இரும்புண்ட நீர் போலே என் ஆத்மாவை முற்றாய் பருகினான் என்கிறபடியே நீ பூர்ணமாகப் பானம் பண்ணுகைக்கு உறுப்பாக
உன் போக்யதையை எனக்குப் பிரகாசிப்பித்தாய் என்னவுமாம் –
போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் -உன் வாசி அறிந்து புஜிக்கும் படி பண்ணி பிராப்தி பர்யந்தமாக பிரகாசிப்பித்த நீ
அத்தைக் குலைத்துப் போரவிட்டு அசேதனவத் அநாதரித்து
அநந்ய கதியான என்னை உனக்குப் புறம்பான விஷயாந்தரத்திலே போக்க நினைத்தால் –
பின்னை யான்ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்- – சர்வ சக்தியான நீ அநாதரித்த பின்பு
அசக்தனான நான் புருஷார்த்த சாதகராய் இருப்பார் மாற்று யாரைக் கொண்டு எந்த புருஷார்த்தத்தை ஐயோ சாதிப்பேன்
என்னது என்கைக்கு ஒரு கர்ணாதிகள் இல்லை
நான் என்கைக்கு ஒரு ஸ்வ தந்த்ரனான கர்த்தா இல்லை
இது வேறு உண்டோ என்று கருத்து –
ஆரைக் கொண்டு எத்தை என்கிற இரு உக்தியாலே விஷண்ணராகிறார்–

————————————————————

அநந்தரம் -பிராட்டி பக்கல் பிரணயியானால் போலே என் பக்கலிலும் நிரதிசய ப்ரணயத்தை யுடைய நீ
உன் போக்யதையை பிரகாசிப்பித்து புஜிப்பித்தாய் -இனி முழுக்க நிர்வஹித்து விட வேணும் என்கிறார்

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்–தன் நிலத்தில் அலர்ந்த காயாம்பூப் போன்ற நிறத்தை யுடையையாய்
புண்டரீகம் போலே இருக்கிற திருக் கண்களையும் சிவந்த திருப் பவளத்தையும் யுடைய
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–உனக்கு அனுரூபமான திரு வடிவை யுடையளாய்
பூவில் பிறப்பால் நிரதிசய போக்ய பூதையாய் ஸ்த்ரீத்வ அனுரூபமான ஆத்மகுணத்தை யுடைய
ஸ்ரீ மஹா லஷ்மீ பிராட்டிக்கு அன்பை யுடையையாய் –
என் அன்பு தானே ஒரு வடிவாய் இருக்கிறவனே
எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை-எனக்கு நிரதிசய போக்யனாய் ஹேயமான என்னுடைய
ப்ரக்ருதியையும் விலக்ஷணமான ஆத்மாவையும்
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-ஹ்ருதயத்துக்கு திருப்தி பிறவாதபடி விரும்பி நிரந்தரமாக புஜித்தாய்-
இனித் தொடங்கி நீ குறையும் புஜிப்பித்தே விட வேணும்
ஈஸ்வரனுக்கு நிருபாதிக போக்த்ருத்வமும்-சேதனனுக்கு போக்யத்வமும் இ றே ஸ்வாபாவிகம் –
அதனுடைய அனுபவ ஜெனித ப்ரீதியாலே வருகிற பர்யவாசநம் இ றே சேதன போக்த்ருத்வம் -ஈஸ்வர போக்யத்வமும்
ஆகை இறே ஸ்வரூபத்தை நிர்த்தேசித்து இவனுடைய போக்யத்வத்தையும் ஈசுவரனுடைய போக்த்ருத்வத்தையும் சொல்லி
சைதன்ய ப்ரயுக்தமான பர்யவசாநத்தாலே சேதன போக்த்ருத்வத்தையும் சுருதி சொல்லி முடித்தது
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத என்று –

——————————————————————-

அநந்தரம் -ஆஸ்ரித ரக்ஷகனாக உன்னைப் பெற்று வைத்து இனி விடுவேனோ என்கிறார் –

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ–வடிவு அழகையும் போக்யத்தையும் யுடையளான பிராட்டிக்கு
உகப்பான வத்தாலே என் பக்கலிலும் அதி ப்ராவண்யத்தை யுடையையாய்
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்–நீல ரத்ன கிரியானது இரண்டு பிறையை கவ்வி எழுந்து இருந்தால் போலே
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்–விலக்ஷணமான வடிவு அழகை யுடைத்தாய் அத்விதீயமாய்
இருபத்தொரு ஸ்ரீ மஹா வராஹமாய் பூமியை பிரளயத்தில் புக்கு முழுகி எடுத்து திரு எயிற்றிலே வைத்த அபதானத்தாலே
என்னை சம்சாரத்தில் நின்றும் எடுக்கும் ஆகாரத்தை பிரகாசிப்பிக்கும் ஸ்வாமியாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –உன் திரு வடிவின் நிழலீட்டாலே நீலமான கடலைக் கடைந்து
யரும் தொழில் செய்து ஆஸ்ரிதரை ரஷித்தவனே –
இப்படி புருஷகார பூர்வகமாய் எனக்கு நல்லையாய் -என்னை ரக்ஷிக்குமவனான உன்னை லபித்து வைத்து
கை புகுந்த பின்பு நழுவ விடுவேனோ –
நீலக்கடல் -என்று நீல ரத்னத்தை யுடைய கடல் என்றுமாம் –

—————————————————-

அநந்தரம் சர்வ தாரகனாம் படி அந்தராத்மாவாய் எனக்கு தாரகனான உன்னைப் பெற்று வைத்துக் கை விடுவேனோ என்கிறார் –

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–

உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்–இரண்டு வைக்கப்பட்ட புண்ய பாப ரூப கர்மங்களுக்கு நிர்வாஹகனாய் —
கர்ம வஸ்யனான ஆத்மாவுக்கு நியந்தாவாய் -அந்தக் கர்மங்களால் யுண்டான ஸூக துக்கங்களை பிரதாவாய்க் கொண்டு
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு-இந்த ஜகத் த்ரயம் எல்லாம் ஆகிற பெரிய தூற்றை பிரகாரமாக யுடையையாய் —
கர்ம நிபந்தனமாக பிரவேசித்தார்க்குப் புறப்பட வழி இல்லாத ஸ்வ சங்கல்பத்தாலே ஸ்வ தந்திரனாய் பிரவேசித்து
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-ஒரு பிரகாரத்தாலும் அறிய ஒண்ணாத படி ஸூஷ்ம பூதனாய்க் கொண்டு
மறைந்து நிற்குமவனாய் எனக்கு உன்னைக் கிட்டுக்கைக்கு பிரதம ஸூக்ருதமான அத்விதீய காரணம் ஆனவனே –
பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை- எனக்கு நிரூபமாய் அபரிச்சின்னமான பிராண பூதனாய் இருக்கிற
உன்னை கை புகுரப் பெற்று வைத்து உன்னை விடில் முடியும்படியான அவஸ்தை பிறந்த பின்பு விட விரகு உண்டோ –
ஓ என்கிற அசை விடில் செய்வது என் என்கிற விதாதத்தைக் காட்டுகிறது –

——————————————————————-

அநந்தரம் காரண கார்ய உபய அவஸ்தமான சகல சேதன அசேதனங்களுக்கும் பிரகாரித்வாதிகளாலே பிரதானனாய்
தத் வ்யாவ்ருத்தமான விலக்ஷண ஸ்வரூப குணாதிகளை யுடைய உன்னை என்று வந்து கிட்டக் கடவேன் என்கிறார்

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்–அவி கல்ப பூர்ணமான ஜகத் த்ரயம் முதலான ஸமஸ்த வஸ்துக்களும்
பிரதானமான நிமித்த காரணமாய் -சஹகாரி நிரபேஷமாய் அத்விதீய உபாதான காரனுமாய்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்- -கார்ய பூதமான ஜகத்தில் அண்டாத் பஹிர் பூதமாயும்
அந்தரகதமுமாய் இருக்கிற பூர்ணமான ஸமஸ்த பதார்த்தங்களையும் வியாபித்து
அத்விதீய காரணமாய்
போக மோக்ஷங்கள் ஆகிற வாழ்ச்சிக்கு விளை நிலமான மூல பிரக்ருதிக்கு நியாமகனாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–ப்ரக்ருதி பிராகிருத நியந்த்ருதவத்தாலே பிரதானமாய் –
அசித் ஸ்வ பாவ வ்யாவ்ருத்தியாலே நிரூபமாய் –
தர்ம பூத ஞான முகத்தால் வ்யாப்தமாய்க் கொண்டு -பத்துத் திக்கிலும் உண்டாய் நிதயமான ஆத்மவர்க்கத்துக்கு நியாந்தாவானவனே
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்–இப்படி சர்வ பிரதானனாயக் கொண்டு நிரூபமான உன்னை
அந்த ஜெகதாகாரத்தில் அன்றியே அத்யந்த வ்யாவ்ருத்தமான விலக்ஷண
ஸ்வரூப ரூப குண விசிஷ்டானாய்க் கொண்டு இருக்கிற உன்னை பிராபித்து அனுபவிக்கப் பெறாமையாலே
பெரு விடாய்ப் பட்டு இருக்கிற நான் எந்நாள் வந்து கூடக் கடவேன்

—————————————————–

அநந்தரம் தத்வ த்ரயத்துக்கும் அவ்வருகாம்படியான என் அபி நிவேசமானது கெடும்படியாக
சர்வ பிரகார பரிபூர்ணனாய்க் கொண்டு ஸம்ஸ்லேஷித்தாய் -என்று தமக்கு சாயுஜ்ய ஸித்தமான
பரிபூர்ண போக பிரதானம் பண்ணின படியை அருளிச் செய்கிறார்

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ–கார்ய வர்க்கத்தை அடங்கச் சூழ்ந்து -வியாபித்து விஸ்தீர்ணமாய்
கீழும் மேலும் உண்டாகையாலே பத்துத் திக்கிலும் ஸந்நிஹிதமாய்-
உத்பத்தி விநாச ரஹிதமாகையாலே நித்தியமாய் –
ஸமஸ்த காரியங்களுக்கும் அவ்வருகு ஆகையால் அபரிச்சின்னமாய் –
போக மோக்ஷங்களை விளைக்க நல் தரையான ப்ரக்ருதியை பிரகாரமாக யுடையையாய் –
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ-அந்தப் பிரகிருதி தத்துவத்தை ஸ்வ ஞானத்தால் வ்யாபித்துக் கொண்டு
காட்டில் பெருத்து ஏக ரூபத்வாதிகளாலே மேலாய்
ஸ்வயம் ப்ரகாஸத்வாதி வை லக்ஷண்யத்தை யுடையையாய்
விகாச ஸ்வ பாவமான ஞான பிரபையையுடைய ஆத்மாவை பிரகாரமாக யுடையையாய்
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ-இந்த பிரகிருதி புருஷர்கள் இருவரையும் வியாபித்து அதுக்கு அவ்வருகாய்
கல்யாண குணங்களால் உஜ்ஜவலமான ஞானானந்த லக்ஷண ஸ்வரூபத்தை யுடைய நியந்தா வானவனே
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–அந்தத் தவ்ய த்ரயத்தையும் வளைத்துக் கொண்டு
அதுக்கு அவ்வருகாம் படியாய் இருக்கிற என் அபி நிவேசமானது
சமிக்கும் படியாக ஸ்வரூப ரூப குண விக்ரஹ பூஷண ஆயுத மஹிஷஹீ பரிஜன ஸ்தான விசிஷ்டானாய்க் கொண்டு
பரிபூர்ணனான உனக்கு உள்ளே யாம்படி சாயுஜ்ய மோக்ஷத்தைத் தந்தாய் இ றே
ஓ ஓ ஓர் அதிசயமே என்று அடி தோறும் ஹ்ருஷ்டராகிறார்

—————————————————————-

அநந்தரம் பல அவாப்தி பிரகாரத்தை ப்ரதிபாதித்துக் கொண்டு இத்திருவாய் மொழிக்குப் பலமாக
இதில் ஞானம் யுடையவர்களுடைய ஜென்ம உதகர்ஷத்தை அருளிச் செய்கிறார்

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி-ஆஸ்ரிதருடைய அபி நிவேசம் தீரும்படி நிரவதிக சம்ச்லேஷம் பண்ணுகையாலே
விஸ்லேஷ துக்க நிர்ஹரண ஸ்வ பாவனாய் –
வஸ்ய ஸூ த்தி பண்ணும் படியான அவா அறும் படியாகத் தன் குணாதிகளாலே சூழ்ந்து ஹரித்துக் கொள்ளுமவன் என்றுமாம்
முக்த ப்ராப்யதயா பூர்வ பக்ஷதயா சங்கிதனான ஹிரண்ய கர்ப்பனுக்கும் அந்தராத்மாவாய்-
அப்படி பசுபதி மத ப்ராப்யனான ருத்ரனுக்கும் அந்தராத்மாவான
பரம ப்ராப்ய பூதனை பிராபிக்கையில் யுண்டான த்வரையாலே கூப்பிட்டு –
ப்ராப்ய ஸித்தியாலே-அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -சொன்ன
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் அதி பர பக்தி ரூபமாக முடிந்த
அவா இல் அந்தாதி களான இப்பத்தையும் அனுசந்தித்து பிறந்தார் உயர்ந்தே–
`இது கலி விருத்தம் –

————————————————

இப்படி ஸ்ரீ யபதியான நாராயணனுக்குப் பிரகார பூதனான சேதனனுக்கு உபாயத்வேன ப்ரவ்ருத்தனாய்க் கொண்டு
அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்ட ப்ராப்தியையும் பண்ணும் என்கிற மஹா வாக்யார்த்தத்தினுடைய
அவாந்தரார்த்த ரூபமான ப்ராப்ய ப்ரஹ்ம ஸ்வரூபாதிகளாயுள்ள அர்த்த பஞ்சகத்தையும்
தத் பிரகார விசிஷ்டானாம்படி சமர்மமாக அருளிச் செய்து தலைக்கட்டினார் ஆய்த்து-

இதில் முதல் பத்திலும் இரண்டாம் பத்திலும் -ரக்ஷகத்வ போக்யத்வ விசிஷ்டமான சேஷித்வ ஸ்வரூபம் சொல்லுகையாலும்
மூன்றாம் பத்திலும் நாலாம் பத்திலும் தத் ஏக அனுபவத்வ தத் ஏக பிரியத்வ ரூபமான சேஷத்வ ஸ்வரூபம் சொல்லுகையாலும்
இந்நாலும் அநுவ்ருத்தமாக இந்த சேஷித்வ சேஷத்வங்களினுடைய அசாதாரண்யத்தைச் சொல்லுகையாலும்
பிரதம அக்ஷரத்திலே சேஷித்வத்தைச் சொல்லி
த்ருதீய அக்ஷரத்தில் சேஷத்வ ஆஸ்ரயத்தைச் சொல்லி
அவதாரணார்த்தமான உகாரத்தில் உபயோஸ் சம்பந்த தாஸ்யத்தைச் சொல்லுகிற ப்ரணவார்த்தத்தை பிரதிபாதித்ததாய்

அநந்தரம்
அஞ்சாம் பத்திலே உபாய ஸ்வரூபத்தையும்
ஆறாம் பத்திலே உபாய வரணத்தையும்
ஏழாம் பத்தில் விரோதி ஸ்வரூபத்தையும்
எட்டாம் பத்தில் தன் நிவ்ருத்தி பிரகாரத்தையும் சொல்லுகையாலே
சாப்தமாகவும் அர்த்தமாகவும் ஸித்தமான நமந நாமந வானான ஈசுவரனுடைய உபாய பாவத்தையும் –
நமந ரூபமான சரணாகதி ஸ்வரூபத்தையும் -ஆத்மாத்மீய ஸித்தமான அஹங்கார மமகார ரூப
விரோதி ஸ்வரூபத்தையும் தத் நிஷேதத்தையும் சொல்லுகிற நமஸ் சப்தார்த்தத்தை ப்ரதிபாதித்தாய்

ஒன்பதாம் பத்திலும் பத்தாம் பத்திலும் சர்வ வித பந்துத்வ கைங்கர்ய பிரதி சம்பந்தித்வ அபிவிஷ்டமான
பல அவாப்தியைச் சொல்லுகிற சரம பதார்த்தத்தை பிரதிபாதித்தாய்
பிரபந்த சங்க்ரஹமான் முதல் பாட்டில் அருளிச் செய்த க்ரமத்திலே சர்வ ஸாஸ்த்ர சங்க்ரஹமான
மூல மந்த்ரார்த்தை இப்பிரபந்தத்தில் விஸ்தரேண ப்ரதிபாதித்தார் ஆய்த்து

இன்னமும் பிரதமத்திலே ஸ்ரீ யபதித்தவ நாராயணத்வங்களை பிரதிபாதித்து
நாராயணனுடைய சீல ஸுலப்யாதிகளாயும் ஞானாதிகளாயும் உள்ள குணங்களை ஸஹரசமாக ப்ரதிபாதித்து
உத்தமமான க்ரியா பாதத்தால் விரோதி பூத ரஹிதமான புருஷார்த்த ரூப பகவத் கைங்கர்ய அவாப்தியை ப்ரதிபாதிக்கையாலும்
வாக்ய த்வயாத்மகமான சரணாகதி ஸ்வரூபத்தையும் வீசதீகரித்து அருளினார் ஆய்த்து

இவ்வுபாய வரணம் தத் இதர சகல நிவ்ருத்தி யுக்தமாய் இருக்கும் என்றும்
உபாய பூத குண விசிஷ்டானாய் அத்விதீயனாய் இருக்கும் என்றும் ப்ரதிபாதித்து
உபாய கார்யமான ஸமஸ்த விரோதி நிவ்ருத்தியையும்
பல சித்தி நிபந்தன தாதர்யத்தையும் ப்ரதிபாதிக்கையாலே சரம ஸ்லோகார்த்தத்தையும் விசதீகரித்து அருளினார் ஆய்த்து

ஆக சர்வ பிரகார பகவச் சேஷ பூதனாய் -அநந்ய பிரயோஜனனாய் -அநந்ய சரண்யனான இவ்வதிகாரிக்கு
ஞாதவ்யமான ரஹஸ்ய த்ரயத்தையும் சப்பிரகாரமாக பிரகாசிப்பிக்கையாலே –
இப்பிரபந்தமானது விலக்ஷணரான சாத்விக அக்ரேசர்க்கு நித்ய அனுசந்தேயமாகக் கடவது –

———————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –10-10-

May 17, 2018

இப்படி அந்தமில் பேரின்பத்து அடியரோடு இருந்த ஆழ்வார் தாம் இந்த பிரக்ருதியில்
இருந்த இருப்பைக் காணாய் என்று ஏங்கிக் கூப்பிடுகிறார்

—————————————————

முனியே நான்முகனே முக்கண் அப்பா என் பொல்லாக்
கனிவாய்த் தாமரைக் கண் கரு மாணிக்கமே என் கள்வா
தனியேன் ஆர் உயிரே என் தலை மிசையாய் வந்திட்டு
இனி நான் போகல் ஒட்டேன் ஒன்றும் மாயம் செய்யேல் என்னையே–10-10-1-

நிகில புவன நிர்மாண த்ராண ஸம்ஹரணாதி லீலனாய் –
நிரவதிக ஸுந்தர்ய ஸுகுமார்ய லாவண்யா யவ்வனத்தி அபரிமித உதார குண சாகரனாய் இருந்த
உன்னுடைய ஸுந்தர்யாதி குணங்களைக் காட்டி என்னைத் தோற்பித்து அடிமை யாக்கி
எனக்கு ஒருவனுக்கும் உன்னுடைய உன்னுடைய குணங்களையே தாரகமாக்கி
என் நெஞ்சம் நிறையப்புகுந்து இருந்த உன்னை இனி நான் போகல் ஓட்டேன்
இனிப் பண்டு போலே உன்னுடைய குண சேஷ்டிதாதிகளை என் நெஞ்சிலே காட்டி வஞ்சித்து
என்னை ஒன்றும் மறப்பிக்க ஒண்ணாது –
இனி மெய்யே வந்து கலந்து அருள வேணும் -என்று கொண்டு
தம்முடைய அபேக்ஷிதம் செய்து அல்லது எம்பெருமானுக்குத் திரு நாட்டிலும் கூட இருக்க ஒண்ணாத தொருபடி
பெரிய ஆர்த்தியோடே பெரும் கூப்பீடாகக் கூப்பிடுகிறார் –

———————————————————-

மாயம் செய்யேல் என்னை உன் திரு மார்வத்து மாலை நங்கை
வாசம் செய் பூங்குழலாள் திரு ஆணை நின் ஆணை கண்டாய்
நேசம் செய்து உன்னோடு என்னை உயிர் வேறின்றி ஒன்றாகவே
கூசம் செய்யாது கொண்டாய் என்னைக் கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ –10-10-2-

பண்டு உன்னைக் காண வேணும் என்று ஆசைப்பட்டுக் காணப் பெறாமையாலே நான் வியசனப்படும் அளவில்
கண்ணாரக் கண்டால் போலே விசதமாம்படி என் நெஞ்சில் யுன்னைக் காட்டி காண வேணும் என்னும் அபேக்ஷையைப் பிறப்பித்து
என்னுடைய வியசனத்தை ஸமாயநம் பண்ணினால் போலே செய்து அருள ஒண்ணாது –
இனி யுன்னைக் காட்டாதே வஞ்சித்து ஒளிக்கில் உனக்கு நிரவதிக சம்பத்தாய் நிரவதிக போக்ய பூதையாய்
உன்னாலும் பஹுமந்தவ்யையாய் உன் திருமேனிக்கு வாசம் செய்யா நின்ற அழகிய திருக் குழலை யுடையளாய்
இருந்த பெரிய பிராட்டி திருவாணை நின் திருவாணை கண்டாய் –
ஸமஸ்த ஹேயாஸ் பதமாய் இருந்த என்னை யருவாதே என் பக்கலிலே அதி ஸ்நேஹத்தைப் பண்ணி
உன்னோடே ஓன்று என்று சொல்லலாம் படி என்னோடே கலந்து அருளினாய் –
ஆதலால் அது பெறா ஆணை அன்று –
6இனிச் செய்கிறோம் என்னப் பற்றாது ஈண்டென வந்து என்னைக் கூவிக் கொள்ளாய் என்கிறார் –

————————————————

கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ என் பொல்லாக் கருமாணிக்கமே
ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் யான்
மேவித் தொழும் பிரமன் சிவன் இந்த்ரன் ஆதிக்கெல்லாம்
நாவிக் கமல முதல் கிழங்கே உம்பரந்ததுவே–10-10-3-

ப்ரஹ்ம ஈஸா நாதிகளுடைய ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி ஐஸ்வர்யாதிகளும் த்வத் பிரசாத அதீனம் ஆதலால்
என்னுடைய உஜ்ஜீவனத்துக்கு உபாயமும் நீ யல்லது மற்று ஒன்றும் காண்கிறிலேன்-
நீயே உன் திருவடிகளில் என்னை வாங்கி அருளி பிரானே உன் திரு அழகைக் காட்டி அருளாய் என்கிறார் –

————————————————

உம்பர் அம் தண் பாழேயோ அதனுள் மிசை நீயேயோ
அம்பரம் நற் சோதி அதனுள் பிரமன் அரன் நீ
உம்பரும் யாதவரும் படைத்த முனிவன் அவன் நீ
எம்பரம் சாதிக்கல் உற்று என்னைப் போர விட்டிட்டாயே–10-10-4-

பிரகிருதி புருஷ மஹான் அகங்கார பிருதிவ்யாதி பூத சதுர்முக ருத்ர தேவாதி ஸ்தாவராந்த சேதன அசேதனாத்மக
ஸமஸ்த வஸ்துக்களினுடைய ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி யாதிகளுக்கும் நீயே நிர்வாஹகானாய் இருந்து வைத்து
என்னுடைய பரமத்தனையும் நானே நிர்வஹிக்கக் கடவேனாகப் பார்த்து அருளினாயாகில்
என்னைக் கை விட்டாய் என்கிறார் –

———————————————————–

போர விட்டிட்டு என்னை நீ புறம் போக்கல் உற்றால் பின்னை யான்
ஆரைக் கொண்டு எத்தை அந்தோ எனது என்பன் என் யான் எனபது என்
தீர இரும்பு உண்ட நீரது போலே என் ஆர் உயிரை
ஆரப் பருக எனக்கு ஆரா அமுது ஆனாயே –10-10-5-

உம்முடைய பரத்தை நான் நிர்வஹிக்கத் தவிர்த்தால் அந்த பரத்தை நீரே நிர்வஹித்துக் கொள்ளலாகாதோ என்னில்-
நீ என்னைக் கை விட்டு உபேக்ஷித்தால் பின்னை யாரைக் கொண்டு எத்தைச் செய்வது –
நான் என்று ஓன்று உண்டோ -என்னுடையது என்று ஓன்று உண்டோ -அடைய முடிந்தது இ றே-ஆனபின்பு
அக்னி சந்தப்த்தமான இரும்பு தாபம் தீரும்படி நீரைப் பருகினால் போலே
உன்னைப் பிரிந்த என்னுடைய ஸந்தாபம் எல்லாம் தீரும்படி யுன்னைப் பருக எனக்கு ஆராவமுதானாய் –
இனிக் குறையும் நீயே செய்து அருளாய் என்கிறார் –

————————————————————

எனக்கு ஆரா அமுதமாய் எனது ஆவியை இன்னுயிரை
மனக்கு ஆராமை மன்னி உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
புனக்காயா நிறத்த புண்டரீகக் கண் செங்கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா என் அன்பேயோ–10-10-6-

ஸுந்தர்யாதி சர்வ குணங்களினாலும் உனக்கு ஏற்கும் கோல மலர்ப்பாவைக்கு போக்யமானால் போலே
எனக்கு போக்யமாய் இருந்து வைத்த அத்தனையே அன்றியே
என்னுடைய ப்ரக்ருதியையும் என்னுடைய ஆத்மாவையும் நிரவாதிகமான அபி நிவேசத்தோடே புஜித்து அருளினை நீ
பிரானே என்னைப் பொகடாதே கொள்ளாய் என்கிறார் –

—————————————————————-

கோல மலர்ப் பாவைக்கு அன்பு ஆகிய என் அன்பேயோ
நீல வரை இரண்டு பிறை கவ்வி நிமிர்ந்தது ஒப்பக்
கோல வராகம் ஒன்றாய் நிலம் கோட்டிடைக் கொண்ட எந்தாய்
நீலக் கடல் கடைந்தாய் உன்னைப் பெற்று இனி போக்குவனோ –10-10-7-

பெரிய பிராட்டியார் பக்கலிலும் ஸ்ரீ பூமிப் பிராட்டியார் பக்கலிலும் பண்ணும் வ்யாமோஹத்தை
என் பக்கலிலே பண்ணிக் கொண்டு என்னை புஜித்து அருளின உன்னைப் பெற்று
இனி விடுவேனோ என்கிறார் –

———————————————————————————-

பெற்று இனிப் போக்குவேனோ உன்னை என் தனிப் பேர் உயிரை
உற்ற இரு வினையாய் உயிராயப் பயன் ஆயவையாய்
முற்ற இம் மூ உலகும் பெரும் தூறாய் தூற்றில் புக்கு
முற்றக் கரந்து ஒளித்தாய் என் முதல் தனி வித்தேயோ-10-10-8–

புண்ய பாப ரூப கர்ம தத் பல போக்த்ரு சேதன கர்ம பல போக உபகரண ப்ரப்ருதி
சர்வ ஜன அந்தராத்மா பூதனாய் சர்வ ஜகத் காரணமாய் சர்வைரத்ருஸ்யனாய் இருந்த
உன்னைப் பெற்று இனி விடுவேனோ -என்கிறார் –

—————————————————————-

முதல் தனி வித்தேயோ முழு மூ உலகு ஆதிக்கெல்லாம்
முதல் தனி யுன்னை யுன்னை எனை நாள் வந்து கூடுவன் நான்
முதல் தனி அங்கும் இங்கும் முழு முற்று உறு வாழ் பாழாய்
முதல் தனி சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடுவிலீயோ–10-10-9-

நான் ஜெகதாகாரனாய் இருக்கிற இருப்பைக் கண்டீர் ஆகில் இனி மற்ற அபேக்ஷிதம் என் என்னில்
எனக்கு அதுவே அமையாது –
நீ ஜெகதாகாரனாய் இருக்கிற இருப்பே அன்றியே இவற்றோடு ஒரு கலப்பு இன்றியே
திரு நாட்டிலே நீயாய் இருக்கும் இருப்பைக் காண வேணும் என்கிறார் –

————————————————————-

சூழ்ந்து அகன்று ஆழ்ந்து உயர்ந்த முடிவு இல் பெரும் பாழேயோ
சூழ்ந்து அதனில் பெரிய பர நன் மலர்ச் சோதீயோ
சூழ்ந்து அதனில் பெரிய சுடர் ஞான இன்பமேயோ
சூழ்ந்து அதனில் பெரிய என் அவா அறச் சூழ்ந்தாயே–10-10-10-

இப்படி எம்பெருமானுக்கும் மறுத்து அருள ஒண்ணாத தொருபடி பிராட்டி திருவாணை யையும் தன் திருவாணை யையும் இட்டு
நிர்ப்பந்தித்துக் கொண்டு ஆர்த்த ஸ்வரத்தாலே கூப்பிடும் அளவில்-
தாம் மநோ ரதித்த படியே எம்பெருமானும் எழுந்து அருள -அவனைக் கண்டு –
மஹான் அஹந்காராதிகள் எல்லா வற்றையும் வியாபித்து அவற்றில் காட்டிலும் பெரிதான மூல பிரக்ருதிக்கும் –
அத்தையும் வியாபித்து அதிலும் பெரிதான முக்தாத்மாவுக்கும் –
அதிலும் பெரிதான உன்னுடைய சங்கல்ப ஞானத்துக்கும் ஆத்மாவாய் இருந்த நீ
அந்த சங்கல்ப ஞானத்தில் காட்டிலும் பெரிதாய் இருந்த என்னுடைய விடாய் எல்லாம் தீரும்படி
அந்த ஜெகதாகாரனான படி அன்றியே நீயான படியே வந்து சூழ்ந்தாய் –
என்னுடைய மநோ ரதமும் ஒரு படியே முடிந்தது என்கிறார்

——————————————————————

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி
அவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொல்
அவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்த
அவா இல் அந்தாதி இப்பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே–10-10-11-

ப்ரஹ்ம ருத்ராதி சர்வ ஆத்மாக்களுக்கு அந்தராத்மா பூதனாய் ஸமஸ்த ஹேய ப்ரத்ய நீகனாய் –
அனவதிக அதிசய அசங்க்யேய கல்யாண குண நீதியாய்
அப்ராக்ருத ஸ்வ அதாசாரண திவ்ய ரூப பூஷண ஆயுத மஹிஷீ பரிஜன ஸ்தான விசிஷ்டானாய் இருந்த எம்பெருமானை அலற்றி
அவா அற்று நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகராய் அவனைப் பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்ன
அவாவில் அந்தாதி களால் இவை ஆயிரமும் அவற்றிலே தம்முடைய அபேக்ஷிதம் பெற்று விடாய் தீர்ந்த பத்து
இவற்றை அறிந்தார் பிறந்து வைத்தே அயர்வறும் அமரர்களுக்கும் மேற்பட்டார் என்கிறார் –

—————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அழகிய மணவாளச் சீயர் அன்போடு அருளிச் செய்த பன்னீராயிரப்படி –10-9-

May 16, 2018

ஒன்பதாம் திருவாய் மொழியில் -கீழில்-திருவாய் மொழி இறுதியாக பகவத் விஷயமாகத் தமக்கு
அனுபவ ப்ராவண்ய ரூபமான பரபக்தி நடந்தபடியே அருளிச் செய்து
அனுபவத்தில் அன்விதாரான இவர்க்குப் பரிபூர்ண அனுபவத்தில் ப்ராவண்ய அதிசயம் பிறக்கைக்கு உறுப்பாக
இவரைக் கொண்டு போய் அனுபவிப்பிப்பதாக நினைத்து
அர்ச்சிராதி மார்க்கம் முதலாக பிராப்தி பர்யந்தமான ப்ரயோஜன அம்சத்தைப்
பரஞ்ஞான விஷயமாம்படி பிரகாசிப்பிக்க நினைத்த சர்வேஸ்வரனுடைய
போக்ய குண பூர்த்தியையும்
நிருபாதிக சேஷித்வத்தையும்
அநந்யார்ஹத அபாதகத்வத்தையும்
போக்யத்வ பூர்த்தியையும்
அதுக்கு அடியான ஸ்ரீ யபதித்வத்தையும்
சேஷித்வ சிஹ்னத்தையும்
சமுத்திர ஸாயித்வாதிகளால் வந்த சர்வாதிகத்வத்தையும்
ஆஸ்ரித ஸுலப்யத்தையும்
பரமபத நிலயத்வத்தையும்
ஸத்காரத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பூதனான சர்வேஸ்வரன் முக்தராய்ப் போகிற பாகவதருக்கு பந்தவ்யமான அர்ச்சிராதி மார்க்கத்தையும்
அங்கு உண்டான ஆதி வாஹிக சதிகார பிரகாரங்களையும்
தேச விசேஷ ப்ராப்தியையும்
நித்ய ஸூரி பரிஷத் அந்தர்பவாத்தையும்
அபரோஷித்த க்ரமத்திலே முக்தராய்ப் போகிற பாகவருடைய ஸத்கார பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

——————————————————-

முதல் பாட்டில் அர்ச்சிராதி மார்க்க கமனத்தில் ஒருப் பட்டவர்களாய் போக்ய குண பூர்ணனான சர்வேஸ்வரனுடைய
சேஷ பூதரான பாகவதரைக் கண்டு சராசராத்மகமான ஜகத்துக்கு உண்டான ப்ரீதி விகாரத்தை அருளிச் செய்கிறார் –

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-

என் அப்பன் வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –எனக்கு அசாதாரண பந்துவாய் குண பிரதையையுடைய
நாராயணனுக்கு அசாதாரண பந்துக்களான சேஷ பூதரைக் கண்டு பிரியப்பட்டு
சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின–சர்வ பிரதேசத்திலும் சூழ்ந்த ஆகாசத்தில் திரண்டு தோன்றின
மேகங்களானவை தூர்ய கோஷத்தைப் பண்ணிட்டன
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின-ஆகாயமான கடல்களானவை அலைந்து வருகிற திரையை கையாக எடுத்து ஆடிற்றான
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய -சப்த த்வீபங்களும் உபகார ரூபமான நல்ல வஸ்துக்களை ஏந்திற்றின
வளம் என்று புதுக்கணிப்பு ஆகவுமாம்-

————————————————————–

அநந்தரம் -நிருபாதிக சேஷியான நாராயணனுக்கு சேஷ பூதரானவர்களைக் கண்டு
லோகத்தார் சத்கரித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்-நிருபாதிக சேஷியான நாராயணனுக்கு சேஷ பூதரானவர்களைக் கண்டு
உகப்பை யுடைத்தாய் சுத்தமான ஜலத்தாலே பூரணமான மேகமானது
முகில் என்கிற ஒருமை ஜாதிபரம்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்–த்வார வேதிகளில் போலே உயர்ந்த ஆகாசத்தில் பூரணமான பொற்குடங்களாக நிறைத்தது
நீரணி கடல்கள் நின்றார்த்தன -நீரை வஹிக்கிற கடல்களானவை ஒரு படிப் பட்டு நின்று கோஷித்தன
நெடுவரைத் தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–நெடு வரைகளாகிற தோரணங்களை நிரைத்து உலகில் உள்ளார் எங்கும் தொழுதனர்
உலகம் என்று லோக பிரதானரை லஷிக்கிறது
இவ்விரண்டு பட்டாலும் அந்தரிக்ஷ பர்யந்தமான பூ லோகமானது உகந்து ஆதரித்த படியை ப்ரதர்ஸிப்பித்தாராய்த்து –

——————————————————-

அநந்தரம் -அநந்யார்ஹத ஆபாதகனான த்ரிவிக்ரமனுக்கு சேஷ பூதரானவர்கள் சந்நிதியில்
ஆதி வாஹிக லோகத்தில் உள்ளார் சத்கரித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே எழுமின் என்று –அன்று மஹா பலி என்னது என்று அபிமானித்த அன்று
பூமியை அநந்யார்ஹமாம் படி அளந்தவனுடைய சேஷ பூதருடைய சந்நிதியில்
தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை பொழிவனர்–தூப பூர்வகமாக நன்றான புஷ்ப வர்ஷத்தை பொழிவராய்க் கொண்டு
அவ்வோ லோகங்களில் உள்ளார் தங்கள் சேஷத்வ அனுரூபமாக அஞ்சலி வந்தனம் பண்ணினார்கள் –
முனிவர்கள் வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே-இருமருங்கு இசைத்தனர் –அந்த லோகங்களில் வாக் நியதி யுடையரான
முனிவரானவர்கள் -அந்த நியதியைத் தவிர்ந்து
ஸ்ரீ வைகுண்டத்துக்குப் போமவர்களுக்கு வழி இது என்று சொல்லி
எழுந்து அருள லாகாதோ என்று இரண்டு பக்கத்திலும் நின்று சாதாரமாகச் சொன்னார்கள் –

—————————————————

அநந்தரம் போக்யதா பூர்ணனான ஸ்ரீ யபதியினுடைய சேஷ பூதரைக் கண்டு தேவ லோகத்தில்
உள்ளார் சத்கரித்த படியை அருளிச் செய்கிறார் –

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-

மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே–மதுவை விகசிக்கிற திருத் துழாயைத் திரு முடியிலேயுடைய
ஸ்ரீ யபதிக்கு சேஷ பூதரானவர்களுக்கு
எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்-அநிமிஷராய்க் கொண்டு தேவர்கள் இவர்கள் போகிற வழிக்கு முன்னே
வாஸஸ் ஸ்தானமான உபகார்யைகளை சமைத்தார்கள்-
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்–துவாதச ஆதித்யர்களும் தம் தாம் அடைவிலே கிரணங்கள் ஆகிற
கைகளை நிரையாகக் கொடுத்தார்கள்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த -அவர்கள் ப்ரவர்த்திப்பித்த முரசங்கள் அதிருகிற
குரலானவை அலைகிற கடலில் முழக்கு ஒத்தன –

————————————————————

அநந்தரம் வழியில் வருண இந்திர ப்ரஜாபதிகளானவர்கள் ஸ்ரீயபதியானவனுக்கு
சேஷ பூதர் என்று ஆதரித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார்

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்–வருண இந்த்ர ப்ரஜாபதிகள் ஆகிற ஆதி வாஹிக தேவர்களானவர்கள்
தம் தாம் பதங்களில் தலை வாசலிலே வந்து நின்று ஸ்ரீ யபதிக்கு சேஷ பூதர்கள் இவர் என்று ஆதரித்து
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்-இங்கனே எழுந்து அருளுங்கோள் -எங்கள் அதிகாரமான ஸ்த்தலங்களில்
பிரவேசியுங்கோள்-என்று பஹுமானமாக சத்கரித்த அளவிலே –
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–அவ்விடங்களில் கர்மஜ தேவராய்-வேத உச்ச்சாரணத்தாலே விலக்ஷண முனிவரானவர்கள்
தங்கள் யாகாதி கர்மங்களை சபலமாகப் பெற்றதே என்று
சாதரமாய்க் கொண்டு இவர்கள் திருவடிகளில் சமர்ப்பித்து
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்- கின்னர்களும் கருடர்களும் கீதங்களை பாடினார்கள் –

————————————————————–

அநந்தரம் சேஷித்வ சிஹ்னமான திருவாழியை யுடையவனுக்கு சேஷ பூதரான நீங்கள் இந்த ஊர்த்வ லோகத்தை
நிர்வஹியுங்கோள் என்று ஆதி வாஹிக மஹிஷிகள் வாழ்த்தின படியை அருளிச் செய்கிறார்

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை–வைதிகர் சகல கர்மங்களை சமர்ப்பித்த அளவிலே
பரிமளத்தைப் ப்ரவஹிக்கிற ஸூ கந்தமான தூபங்களானவை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்–எங்கும் கலந்து காளங்களையும் வலம் புரிகளையும் த்வநிப்பித்தார்கள்-
இவர்களைக் கண்ட ப்ரீதியாலே
வாள் ஒண் கண் மடந்தையர்-ஒளியை யுடைத்தாய் தர்ச நீயமான கண்களையுடைய தேவ ஸ்த்ரீகளானவர்கள்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று வாழ்த்தினர் மகிழ்ந்தே–திருவாழியை யுடைய சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதரான நீங்கள்
இந்த ஸ்வர்க்காதி பதங்களை ஆளுவுதி கோளாக வேணும் என்று ப்ரீதியை யுடையராய்க் கொண்டு வாழ்த்தினார்கள் –

—————————————————————–

அநந்தரம் ஷீரார்ண சாயியாய் சர்வாதிகனாய் அர்ச்சாவதார ஸூ லபனானவனுடைய சேஷ பூதருக்கு
மருத் கணங்களும் வஸூ கணங்களும் பின் தொடர்ந்து ஸ்தோத்ரம் பண்ணின படியை அருளிச் செய்கிறார் –

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

தொடு கடல் கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி-குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–-அகாதமான கடலிலே –
தொடுதல் -தூண்டுதலால் ஆழத்தைக் காட்டுகிறது -கண் வளர்ந்து அருளி
என் போல்வாரோடு ப்ரஹ்மாதிகளோடே நித்ய ஸூரி களோடு வாசியற எல்லார்க்கும் உத்பாதகனான கேசவனாய் –
எங்களை அனுபவிக்கிற அந்த சேஷித்வ ஸூ சகமாய் கிளர்ந்து ஒளியை யுடைத்தாய் மணிமயமான
திரு அபிஷேகத்தை யுடையனாய்க் கொண்டு
கண் வளர்ந்து அருளுகிற ஸ்ரீ கிருஷ்ணனுக்கு சந்தானமாக அடிமையானவர்களை பற்ற
மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும் தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் –தாமதாமுடைய ஸ்த்ரீகள் வாழ்த்தினை
அளவிலே மருத்துக்களும் அஷ்ட வஸூக்களும் -பகவத் அனுபவ த்வரையால்
அவர்கள் சீக்ரகாமிகளாகையாலே எங்கும் தொடர்ந்து சென்று ஸ்தோத்ரங்களைப் பண்ணினார்கள் –

——————————————————

அநந்தரம் -ஆஸ்ரித ஸூலபனான ஸ்ரீ கிருஷ்ணனுடைய அடியார் என்கிற ஆதரத்தாலே பரமபத வாசிகள்
நாட்டு எல்லையில் வந்து எதிர் கொள்ளப் பரமபதத்தைக் கிட்டின படியை அருளிச் செய்கிறார்

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று-இவர் ஆஸ்ரித அர்த்தமாக அவதீர்ணனான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு
அநந்யார்ஹமான குலத்தையுடைய அடியார் என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள-ஈஸ்வரனோ பாதி அபிஷேகாதி ஸாரூப்யத்தை யுடையரான நித்ய ஸூரிகள்
தம் தாம் தரங்கள் தப்பாமல் இவர்கள் வருகிறார்கள் என்று
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–அலங்க்ருதமான திவ்ய வடிவை யுடையனாய் ஸ்ரீ மஹா லஷ்மி பிராட்டியாரோடே
கூட எழுந்து அருளி இருக்கிற சர்வேஸ்வரனுடைய ஸ்ரீ வைகுண்டத்தில் பிரவேசிக்கைக்கு உறுப்பாக
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்-தங்கள் வரவுக்கு அலங்காரமாக எடுத்துக் கட்டின கொடியால் அலங்க்ருதமாய்
உயர்ந்த மதிளை யுடைத்தான தலை வாசலிலே புக்கார்கள் –

————————————————————————

அநந்தரம்-ஸ்ரீ வைகுண்ட நாதனுடைய சேஷ பூதரானவர்கள் நமக்கு உத்தேசியர் என்று
திரு வாசல் காக்கும் முதலிகளானார் ஆதரித்த படியை அருளிச் செய்கிறார் –

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்–ஸ்ரீ வைகுண்டத்தில் சென்று புக்க அளவிலே திரு வாசல் காக்கும் முதலிகளானவர்கள்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று-வியந்தனர் – ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு ஆதரணீயரானவர்கள் நமக்கு உத்தேச்யர்-
எங்கள் அதிகாரத்தில் புகுர வேணும் என்று உகந்தார்கள்
வைகுந்தத்து அமரரும் முனிவரும் –அத்தேசத்தில் கைங்கர்ய பரராயும் குண அனுபவ பரராயும் இருக்கிற அமரரும் முனிவரும்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–என்று வியந்தனர் -பூமியிலே சப்தாதி விஷய ப்ரவணராய் இருந்தவர்கள் பரமபதத்தே
புகுவது ஒரு பாக்யமே என்று உகந்தார்கள்
வியந்தனர் என்கிற இடம் -எமது இடம் புகுது என்று வியந்தனர் என்றும் –
அமரரும் முனிவரும் வியந்தனர் -என்றும் இரண்டு இடத்திலும் அந்வயிக்கிறது –

———————————————————————

அநந்தரம் -ஸ்ரீ வைகுண்ட நாதன் நியோகத்தாலே ஸூரி களும் திவ்ய அப்சரஸ் ஸூக்களும்
ஆதரித்த படியை அருளிச் செய்கிறார்

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்-நம்முடைய பாக்ய ரூபமான ஈஸ்வர நியோக பிரகாரத்தில் வந்து புகுந்தார்கள் –
என்று ப்ரீதராய் விலக்ஷண ஸ்வ பாவராய் வேதாந்த வேத்யரான ஸூரிகள்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்-தம் தம்முடைய திவ்ய ஸ்த்தானங்களில் சோபசாரமாக அவர் திருவடிகளை விளக்கினார்கள்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்–ஆஸ்ரிதற்கு நிதியான திருவடி நிலைகளையும் திரு மேனியோட்டை ஸ்பர்சத்தாலே
விலக்ஷணமான திருச் சூர்ணத்தையும் பூர்ண கும்பங்களையும் மங்கள தீபங்களையும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–இவர்கள் தர்சனத்தாலே பூர்ண சந்திரனைப் போலே விளங்குகிற முகத்தை யுடையராய்
தங்கள் பாரதந்தர்ய ஸூசகமான மடப்பத்தையுடைய திவ்ய அப்சரஸ்ஸூக்கள் எதிரே வந்து ஏந்தினார்கள் –

—————————————————————-

அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக பகவத் அனுபவத்தை அருளிச் செய்கிறார் –

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து–ஸ்ரீ மஹா லஷ்மீ ஸஹாயரான அவர் தாமே வந்து
எதிர் கொள்ள திரு மா மணி மண்டபத்திலே
வந்தவர் எதிர் கொள்ள என்று -பிரதானரான விஷ்வக் சேனாதிகள் ஆகவுமாம்
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை-முடிவின்றியே அபரிச்சின்னமான ஆனந்தத்தை யுடைய
ஸூ ரிகளோடே கூடி இருந்த பிரகாரத்தை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்–பூங்கொத்து அலருகிற பொழிலை யுடைய திரு நகரிக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்ததாய்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–சந்தஸ்ஸூக்களான வ்ருத்த பேதங்களை யுடைய ஆயிரத்தில்
இப்பத்தையும் அனுசந்திக்க வல்லவர்கள் பரமபதத்தில் பகவத் குண மனன சீலராவார்கள்
சந்தஸ்ஸூக்கள் என்று வேதமாகவுமாம்
இது கலி விருத்தம் –

————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –10-9-

May 16, 2018

இப்படி நிர்ஹேதுகமாக எம்பெருமானோடே ஸம்ஸ்லிஷ்டரான ஆழ்வார்
தாம் திரு நாடு ஏற எழுந்து அருளும்படியையும்
தாம் எழுந்த அருளும் போது சர்வ லோகங்களும் தம்மைக் கொண்டாடும்படியையும்
திரு உள்ளத்தால் ப்ரத்யஷீ கரித்து அந்யாபதேசத்தாலே பேசுகிறார் –

——————————————————-

சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின
ஆழ்கடல் அலைதிரைக் கை எடுத்து ஆடின
ஏழ் பொழிலும் வளம் ஏந்திய என் அப்பன்
வாழ் புகழ் நாரணன் தாமரைக் கண்டு உகந்தே –10-9-1-

திருநாடு ஏறப் போகையில் பிரவ்ருத்தரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டு உகந்து
மேகங்களும் கூட இவர்கள் போக்க தடவிய ஆகாசத்தை எல்லாம் பூஷித்துக் கொண்டு நின்று தூர்ய கோஷத்தைப் பண்ணின –
கடல்கள் ஆகிறவை திரைகள் ஆகிற கை எடுத்து ஆடின –
இப்படி சர்வ லோகங்களும் மங்களமான செயல்களை செய்தன -என்கிறார் –

——————————————————

நாரணன் தாமரைக் கண்டு உகந்து நன்னீர் முகில்
பூரண பொற் குடம் பூரித்தது உயர் விண்ணில்
நீரணி கடல்கள் நின்றார்த்தன நெடுவரைத்
தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகே–10-9-2-

நாரணன் தமரைக் கண்டு மேகங்கள் உகந்தன –
ஆகாச சரரான தேவாதிகள் ஆகாசத்தில் பூர்ண கும்பங்களை பூரித்தார்கள் –
நீரணி கடல்கள் நின்று ஆர்த்தன –
நெடுவரை போலே இருந்த தோரணம் நிரைத்து எங்கும் தொழுதனர் உலகர்கள் என்கிறார் –

———————————————

தொழுதனர் உலகர்கள் தூப நல் மலர் மழை
பொழிவனர்பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே
எழுமின் என்று இருமருங்கு இசைத்தனர் முனிவர்கள்
வழி இது வைகுந்தர்க்கு -என்று வந்து எதிரே–10-9-3-

பூமி அன்று அளந்தவன் தமர் முன்னே தூப நன் மலர் மழை பொழிவனர் –
ஸ்ரீ வைகுண்டத்து ஏறப் போவார்க்கு வழி இது வென்று எதிரே வந்து இங்கனே எழுந்து அருள ஒண்ணாதோ என்று
இரு மருங்கும் முனிவர்கள் நின்று இசைத்தனர் என்கிறார் –

—————————————————–

எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுத்தனர்
கதிரவர் அவர் அவர் கைந்நிரை காட்டினர்
அதிர் குரல் முரசங்கள் அலை கடல் முழக்கு ஒத்த
மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கே-10-9-4-

மது விரி துழாய் முடி மாதவன் தமர்க்கு இவர்கள் ஒருகால் இங்கே பர்யவசிக்கப் பெறுவது காண் என்னும் ஆசையால்
இமையவர்-எதிர் எதிர்- இருப்பிடம் வகுத்தனர்-அர்ச்சிராத்யாதி வாஹிக கணங்கள் பார்த்து அருளீர் பார்த்து அருளீர்
என்று என்று கைந்நிரை காட்டினர்-
கடல் இரைத்தால் போலே முரவ பணவாதி வாத்யங்கள் சர்வ லோகங்களுக்கும் அபி பூரிதமாம் படி முழக்கப்பட்டன
என்கிறார்

————————————————————–

மாதவன் தமர் என்று வாசலில் வானவர்
போதுமின் எமது இடம் புகுதுக என்றலும்
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்
வேத நல் வாயவர் வேள்வியுள் மடுத்தே–10-9-5-

இவர்கள் போகிற வழியில் வர்த்திக்கும் தேவர்கள் இவர்கள் மாதவன் தமர் என்று உகந்து
தம் தம்முடைய ஸ்த்தானங்களையும் ஐஸ்வர்யங்களையும் இவர்களுக்கு இவற்றைக் கொள்ள வேணும் என்று சமர்ப்பித்தார்கள்-
கீதங்கள் பாடினார் கின்னரர் கருடர் –
வேத நல் வாயவர் ஜ்யோதிஷ்டோமாதி யாக ஸித்தமான தங்கள் ஸம்ருத்தியைக் கொடுத்தார்கள் என்கிறார் –

————————————————————-

வேள்வி உள் மடுத்தலும் விரை கமழ் நறும் புகை
காளங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர்
ஆண்மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே–10-9-6-

இவர் சிலர் ஸ்வ க்ருதமான யாக பலத்தைக் கொடுக்கும் அளவில் வேறே சிலர் தூப தீபாதிகளால் அப்யர்ச்சனம் பண்ணினார்கள் –
சிலர் காளாங்கள் வலம் புரி கலந்து எங்கும் இசைத்தனர் –
வாள் ஒண் கண் மடந்தையர் இவர்களைக் கண்ட ப்ரீதி அதிசயத்தினாலே இவர்கள் தங்கள் வரப் புகுகிற மங்களத்தில் காட்டில்
மேற் பட்டதொரு மங்களம் இல்லாமையால் ஆழியான் தமரான நீங்கள்
ஆண்மின்கள் வானகம் என்று இது தன்னையே மங்களமாக ஆசாசித்தார்கள் என்கிறார் –

—————————————————————-

மடந்தையர் வாழ்த்தலும் மருதரும் வசுக்களும்
தொடர்ந்து எங்கும் தோத்திரம் சொல்லினர் தொடு கடல்
கிடந்த எம் கேசவன் கிளர் ஒளி மணி முடி
குடந்தை எம் கோவலன் குடி அடியார்க்கே–10-9-7-

ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாகத் திருப் பாற்கடல் திருக் குடந்தை தொடக்கமாகயுள்ள தேசங்களில் வந்து திருவவதாரம் பண்ணி
அருளின எம்பெருமானுக்கு குடியடியாரான இவர்களை இப்படி மடந்தையர் வாழ்த்தும் அளவிலே
மருத்துக்களும் வஸூ க்களும் தம் தாமுடைய லோகங்கள் அன்றியே
லோகாந்தரங்களிலும் தொடர்ந்து தொடர்ந்து ஸ்துதித்தார்கள் என்கிறார் –

————————————–

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று
முடி யுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
கொடி அணி நெடு மதிள் கோபுரம் குறுகினர்
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகவே–10-9-8-

குடி அடியார் இவர் கோவிந்தன் தனக்கு என்று இவரை சேஷத்வ சாம்ராஜ்யத்தில் அபிஷிக்தராய்
அதுக்கு முடி சூடி இருந்த அயர்வறும் அமரர்கள் முறை முறை எதிர் கொள்ள-
வடிவுடை மாதவன் வைகுந்தம் புகுகைக்காக
இவர்கள் முன்னமே த்வஜ பதாகாதிகளாலே அலங்க்ருதமான பெரிய திருக் கோபுரத்தைச் சென்று
குறுகினர்கள்-என்கிறார்

—————————————————————–

வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-

ஸ்ரீ வைகுந்தம் புகும் அளவில் வாசலில் வானவர் -ஸ்ரீ வைகுந்தன் தமர் ஆகையால் எங்களுக்கு ஸ்வாமிகளான நீங்கள்
எங்களுடைய பகவத் கைங்கர்ய ரூபமான ஸம்ருத்திகளைக் கொள்ள வேணும் என்று சமர்ப்பித்து
பகவத் குண அனுபவ ஜெனித நிரதிசய ப்ரீதி காரித சர்வ பரிசர்ய ஏக போகரான அமரரும்
பகவத் குண அனுபவ ஜெனித ப்ரீதியாலே அப்ரக்ருதிங்கதராய் ஒரு பிரவ்ருத்தி பண்ணுகைக்கு
ஷமர் இன்றியே இருக்கும் முனிவரும்
பூமியுள்ளே யுள்ள ஸ்ரீ வைஷ்ணவர்கள் திரு நாட்டிலே வருகைக்கு நாம் என்ன பாக்யம் பண்ணினோம்
என்று விஸ்மயப் பட்டார்கள் என்கிறார் –

——————————————————————–

விதி வகை புகுந்தனர் என்று நல் வேதியர்
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்
நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்
மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே–10-9-10-

நம்முடைய பாக்யத்தினாலே இங்கே புகுந்தார் என்று அஸ்கலித ஜ்ஞானரான அயர்வரும் அமரர்கள்
தங்கள் திரு மாளிகைகளில் யதோசிதமாக இவர்களுடைய திருவடிகளை விளக்கினார்கள் –
சிரகால விரஹித புத்ர சந்தர்சனத்தினாலே ஜநநி ப்ரீதையாமாப் போலே-இவர்களைக் கண்டு ப்ரீதைகளாய்
அந்த ப்ரீதி அதிசயத்தினாலே சரத்காலத்தில் பரிபூர்ண சந்த்ர மண்டல சத்ருசமான திரு முக மண்டலங்களை யுடையரான
பெரிய பிராட்டியாரும் ஸ்ரீ பூமிப பிராட்டியாரும் ஸ்ரீ நப்பின்னைப் பிராட்டியாரும்
தங்களுடைய நித்ய பரிசாரிகைகளோடே கூட தங்களுக்குப் பரம தனமான
ஸ்ரீ சடகோபனும் நல் சுண்ணமும் நிறை கூட விளக்கமும் மற்றும் மங்களமான சத்கார உபகரணங்களை எல்லாம்
ஏந்திக் கொண்டு வந்து எதிர் கொண்டார்கள் என்கிறார் –

————————————————————–

வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து
அந்தமில் பேர் இன்பத்து அடியரொடு இருந்தமை
கொந்து அலர் பொழில் சூழ் குருகூர்ச் சடகோபன் சொல்
சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே–10-9-11-

சர்வேஸ்வரனாய் ஸ்ரீ யபதியாய் இருந்த எம்பெருமான் தானும் வந்து எதிர் கொள்ளத்
திரு மா மணி மண்டபத்திலே சென்று
அந்தமில் பேரின்பம் விளையும்படியாக அயர்வரும் அமரர்களோடே கூடத் தாம் இருந்தமையைச் சொன்ன
இத்திருவாய் மொழியை வல்லார்
அந்தமில் பிரின்பத்து அடியரோடு இருக்கப் பெறுவார் என்கிறார் –

——————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அழகிய மணவாளச் சீயர் அன்போடு அருளிச் செய்த பன்னீராயிரப்படி –10-8-

May 15, 2018

எட்டாம் திருவாய் மொழியில் -கீழே -தாம் அபேக்ஷித்தபடியிலே ஈஸ்வரன் கார்யம் செய்வதாக அறுதியிட்டு படியைக் கண்டு
இப்படி நம் பக்கல் வ்யாமோஹம் பண்ணுகைக்கும் –
நாம் அபேக்ஷித்த கார்யம் செய்யும்படி பரதந்த்ரன் ஆகைக்கும்-
நம் பக்கல் ஒரு ஹேதுவில்லை -நிர்ஹேதுகமாக நம்மை விஷயீ கரித்து
அருளினானாம் அத்தனை என்று அறுதியிட்டு -அதுக்கு அடியான அவனுடைய
யாதிருச்சிக அனுகூல்ய நிபந்தனமான பூர்ண அங்கீ காரத்தையும்
அங்கீகார ஸ்த்தைர்யத்தையும்
ஸூகமத்வ அதிசயத்தையும்
புருஷார்த்த பிரதத்வத்தையும்
பிராப்தி பிரதிபந்தக நிவர்த்தகத்வத்தையும்
போக ரஸ பிரதத்வத்தையும்
நித்ய அனுபாவ்யத்வத்தையும்
நிரவாதிக சர்வ பிரகார போக்யத்வத்தையும்
நிர்ஹேதுக உபகாரகத்வத்தையும்
நித்ய கைங்கர்ய பிரதி சம்பந்தித்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் பூதனான சர்வேஸ்வரன் நிருபாதிக பூர்ண விஷயீ காரத்தைப் பண்ணி
ஸமஸ்த விரோதியும் நிரஸ்தமாம்படி திருப்பேரிலே ஸந்நிஹிதனாய்
நிரதிசய ஆஹ்லாத காரமான அனுபவத்தைப் பிறப்பித்தான் –
இது ஒரு சீல அதிசயமே என்று மிகவும் ஹ்ருஷ்டராகிறார்-

—————————————————-

முதல் பாட்டில் யாதிருச்சிகமாகத் திருமலையைப் போய்க் கிட்டும் காட்டில்
ஸ்ரீ மஹா லஷ்மீ பிராட்டியார் ஸஹாயனாய்க் கொண்டு என் நெஞ்சிலே வந்து புகுந்தான் என்கிறார் –

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன-திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-நாட்டு வார்த்தை மர்யாதையாலே
திருமாலிருஞ்சோலை என்று சொன்ன அளவிலே
ஸ்ரீ யபதியாய் -பரிபூர்ணனான தான் சாபேஷரைப் போலே வந்து
யுக்திக்குக் கூட்டுப்படாதே இருக்கிற என் நெஞ்சுக்குள்ளே
வாக்குக்கு பூர்வபாவி யல்லவோ மனாஸ் ஸூ என்கிற ஸ்வ அபிப்ராயத்தாலே
அவளும் தானுமாக பரிபூர்ணமாக புகுந்தான் –
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால் திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-என் நெஞ்சில் வருகைக்காக
பிராட்டியுடன் ஒரு தேச விசேஷத்திலே இருக்கிறவன்
சென்று கண் வளர்ந்து அருளின இடம்
அதி ஸ்லாக்யமான மாணிக்கங்களை உந்துகிற புகழையுடைய பொன்னியின் தென் பக்கத்தில் தர்ச நீயமான திருப்பேர் –

——————————————————–

அநந்தரம் முன்பு குறைவாளரைப் போலே இன்று ஒரு காலும் போகேன் என்று
என் நெஞ்சிலே பூர்ணனாய்ப் புகுந்தான் என்கிறார்

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்–திருப்பேரிலே நித்யவாஸம் பண்ணி
அருளும் சர்வேஸ்வரன் முன்பு குறைவாளனாய் இருந்தால் போலே
இன்று நிர்ஹேதுகமாகத் தானே சா பேஷனாய் வந்து
இனிப் போ வென்றால் ஒரு காலும் போகேன் என்று என் நெஞ்சிலே பரிபூர்ணமாம் படி புகுந்தான் -ஆகையால்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும் ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–புஷ்கலாவர்த்த காதிகளான மேகங்கள் ஏழையும்
சமுத்திரங்கள் ஏழையும் குலா பர்வதங்கள் ஏழையும் யுடைத்தான லோகத்தை எல்லாம்
அமுது செய்தும் ரக்ஷணத்திலே பாரிப்பாலே நிறையாத திரு வயிற்றை யுடையானை
என்னுள்ளே புகுந்து சர்வ பிரகார பரிபூர்ணனாம்படியாகக் கொண்டு அனுபவிக்கப் பெற்றேன் –

————————————————————–

அநந்தரம் ஆஸ்ரித ஸூலபனான சர்வேஸ்வரனுடைய திருவடிகளைக் கிட்டுகை எனக்கு எளிதான படி –
அது அடியாக ஸமஸ்த துரிதமும் நிவ்ருத்தமாம் படி யாய்த்து -என்கிறார்

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்–கொடிகளை யுடைய கோபுரங்களாலும் மாடங்களாலும் சூழப்பட்ட
திருப்பேரை வாஸஸ் ஸ்தானமாக வுடைய ஸூலபனானவனுடைய
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–திருவடிகளைச் சேருகை எனக்கு எளிதான பிரகாரம் இருந்தபடி
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்-நிர்ஹேதுகமாக அவன் திருவடிகளை பிரதமத்திலே பிடிக்கப் பெற்றேன் –
அது அடியாக ஜென்ம சம்பந்தத்தை அறுத்தேன் -அத்தாலே வரும் துக்கங்களைச் சேரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை-சம்சாரத்தில் நிற்கையாகிற அஞ்ஞானத்தை நிவ்ருத்தம் ஆக்கினேன் –

————————————————–

அநந்தரம் -எனக்குப் பரமபதத்தைத் தருவானாய் இரா நின்றான் -அத்தாலே
என் கண்ணும் நெஞ்சும் களிக்கும் படி ஆனந்தியாகா நின்றேன் என்கிறார் –

எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4-

எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்-எனக்குப் பிராப்ய லாபம் எளிதான படி
காலாந்தரத்திலே ஒரு தேச விசேஷத்திலே போகாதே இக்காலத்தில் என் விடாய்த்த கண்களானவை
துர்லபமான ப்ராப்யம் ஸூலபமாவதே என்று களிக்கும் படியாக
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்-ஹர்ஷாவிஷ்டமான நெஞ்சை யுடையேனாய்க் கொண்டு ஆனந்தி யாகா நின்றேன் –
அதுக்கு அடி
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்-கிளிகள் தாவும்படி செறிந்த சோலைகள் சூழ்ந்த திருப்பேரிலே
ஸூ லபனாய்க் கொண்டு ஸந்நிஹிதனானவன்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–பரம சத்வமயமாகையாலே ப்ரகாசாத்மகமாய் ப்ரஹ்ம பதாதிகளிலும்
அவ்வருகான பரம வ்யோமத்தை தருவானானான் –

—————————————————————————

அநந்தரம் இப்படி புருஷார்த்தத்தைத் தருவானாகக் கோலி ஸமஸ்த விரோதிகளையும் போக்கினான் என்கிறார்

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-

தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–வண்டு செறிந்த பொழிலை யுடைத்தாய்
தர்ச நீயமான திருப்பேராகிற நகரத்திலே வர்த்திக்கிறவன் எனக்கு
தேன்-மதுவாகவுமாம் –
வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி-பரமபதத்தைத் தருவானாகக் கொண்டு சங்கல்பித்து என்னோடே ப்ரதிஞ்ஜை பண்ணி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று-மாம்சம் செறிந்த கூடாய் இருக்கிற இஸ் சரீரத்துக்குள்ளே -அபேஷா நிரபேஷமாக இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்-தானே வந்து புகுந்து தன்னைப் பிரிந்து தடுமாறுகைக்கு அடியான புண்ய பாபங்களை போக்கினான் –

———————————————————

அநந்தரம் அல்லாத உகந்து அருளின தேசங்களில் காட்டில் என் நெஞ்சிலே ஆதரித்துப் புகுந்து அனுபவிக்க –
அனுசந்தித்து ஆனந்தி யானேன் என்கிறார்

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப் பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து–என்னைக் கிட்டுக்கைக்காக
திருப்பேர் நகரிலேயாய் அநந்தரம் ஆசன்னமாக திருமாலிருஞ்சோலை என்று திரு நாமமான திரு மலையிலே
நித்ய வாசம் பண்ணுகிற மஹா உபகாரகன் இன்று ஒரு ஹேது இன்றிக்கே இருக்க தானே வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்-இங்கே இருக்கக் கடவென என்று சங்கல்பித்து என் நெஞ்சு பூர்ணமாம் படி புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –அவனுடைய நிரதிசய பஹுமானத்தை ஒரு படிப்படப் பெற்று
குண அனுபவ ரூபமான அம்ருத பானத்தைப் பண்ணி ஆனந்தியானேன் –

————————————————–

அநந்தரம் இங்கு நித்ய அனுபவம் பண்ணும்படி ஸந்நிஹிதன் ஆனவனை அனுபவித்துக்
களிக்கிற எனக்கு மேல் என்ன குறை யுண்டு என்கிறார்

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்-வண்டுகளானவை மது பானத்தைப் பண்ணிக் களிக்கும் பொழில் சூழ்ந்த திருப்பேர் நகரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-தன்னை சதா தர்சனம் பண்ணிக் களிக்கும் படி என் கண்ணுக்கு விஷயமாய் நின்று போகிறிலன்
உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத் தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்–
இப்படி நித்ய அனுபவம் பண்ணிக் களித்த எனக்கு மேல் ஒரு தேச விசேஷத்திலே போய்ப் பண்ணும் அனுபவத்தில் குறை கிடந்தது ஏது –
தாஸ்ய ரசமானது உகளித்து முடிவிலே தொழுகைக்கு வாசகமான நமஸ் சப்தத்தைச் சொல்லப் பெற்றேன் –
உகளித்தல்-மிகுதல் –

——————————————————

அநந்தரம் சர்வ பிரகாரத்தாலும் நிரதிசய போக்யனாய்க் கொண்டு என் நெஞ்சிலே த்ருடமாகப் புகுந்தான் என்கிறார் –

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்-பாஹ்யமான கண்ணுக்கு நித்ய அனுபவ விஷயமாய் அகலுகிறிலன் –
இவன் நினைவைப் பார்த்த இடத்தில் இங்கு நின்றும் ஒரு தேச விசேஷத்து ஏறக் கொடு போய்
அனுபவிக்கைக்கு ஈடான பாரிப்பில் பெரியனாய் இரா நின்றான் –
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே–தம் தாம் அறிய என்று என்னும் அளவில் அதி ஸூஷ்மான
ஸ்வ பாவங்களை யுடையனாய் –
தானே அனுபவிக்கும் அளவில் சப்த ஸ்வர சா ரஸ்யத்தை யுடையனாய்
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்-நாநா வர்ணமாய் ஸ்லாக்யமான மாணிக்கண்களால் சமைந்த மாடங்கள்
சூழ்ந்த திருப்பேரிலே வர்த்திக்கிறவன்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –தன்னைப் பெறுகைக்கு விடாய்த்த என் நெஞ்சிலே
நிர்ஹேதுகமாக இன்று செறிந்து த்ருடமாம் படி புகுந்தான் –

————————————————————–

அநந்தரம் இன்று நிர்ஹேதுகமாக உபகரித்தவன் முன்பு உபேக்ஷித்தத்துக்கு ஹேது என் என்று
கேட்க வேண்டி இருந்தது என்கிறார் –

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்–பிரதம கடாக்ஷம் பண்ணி இதுக்குப் பின்பான இக்காலம் –
முன்பு அசன்நேவ என்னும்படி கிடந்த என்னை சந்தமேநம்-என்னும்படி வஸ்துவாக்கி –
விலக்ஷண போக்ய பூதனான தன்னை -ஹேயமான என் நெஞ்சுக்குள்ளே தானே கொடு வந்து வைத்தான் –
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்-அந்த கடாக்ஷத்துக்கு முன்பான அன்று -தான் இட்ட வழக்காம் படி
பராதீனனான என்னை -தன் பக்கலிலே விமுகனாய் விஷயாந்தரங்களிலே கை கழிந்து போம்படி
சங்கல்பித்தது ஏது செய்வானாக –
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்-குன்று என்று சொல்லலாம்படி விளங்குகிற மாடங்கள் சூழ்ந்த திருப்பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–இவை இரண்டிலும் ஒன்றுக்கு ஹேதுவை எனக்கு அருளிச் செய்க்கைக்காக
தன் திரு உள்ளத்திலே படும்படி அறிவிக்க வேணும் என்று உத்யோகித்து இருந்தேன்
ஓன்று சொல்ல மற்றையது தத் வ்யதிரேக சித்தம் என்று கருத்து
நிர்ஹேதுக விஷயீ காரத்துக்கு ஹேது ப்ரச்னம் பண்ணில் சர்வஞ்ஞனுக்கும் உத்தரம் இல்லை இ றே

————————————————————
அநந்தரம் கைங்கர்ய பிரதிசம்பந்தியான அவன் திருவடிகளை அடிமை செய்து பெற்றேன் –
யாவதாத்ம பாவி எனக்கு இதுவே அமையும் என்கிறார் –

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம் பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்—நிர்ஹேதுகமாக
உன் திருவடிகளைக் கிட்டினேன் -அத்தாலே -ப்ரீதி ப்ரேரிதனாயக் கொண்டு
வாசிகமான அடிமை செய்து பரம ப்ராப்ய பூதனான உன் திருவடிகளைப் பெற்றேன் –
நிருபாதிக பந்துவானவனே -இவ்வடிமையே இவ்வாத்மாவுக்கு உள்ளதனையும் அபேக்ஷிதம் -இது உண்டாகவே
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–ஆச்சார்ய முகத்தால்
ஞாதவ்யங்களை அப்யசித்தவர்களாய் ஸ்ருதமான வேதார்த்தங்களை நிர்வஹிக்க சமர்த்தரானவர்கள்
பகவத் அனுபவத்தோடு வாழுகிற திருப்பேரிலே வர்த்திக்கிற உனக்கு –
அடியார் தமக்கு அனுபவ பிரதிபந்தக பாவங்கள் தன்னடையே நில்லாது இறே
அற்றாருக்கு அடியார் என்றுமாம் –

——————————————————————-

அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக ஸ்வா ராஜ்ய ப்ராப்தியை அருளிச் செய்கிறார் –

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்-துக்கத்துக்கு வாஸஸ் ஸ்தானம் அல்லாத தேசமாய்
பெரிய பரப்பை யுடைத்தான வயல்களாலே சூழப்பட்ட திருப்பேர் விஷயமாக
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்-விலக்ஷண புருஷரானார் பலரும் திருவாய் மொழி கேட்டு வாழ்கிற
திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாருடைய
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்-சொல்லாய்ச் சேர்ந்து இருக்கிற தமிழனா ஆயிரத்தில் இவை பத்தையும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–அப்யஸிக்க வல்லரான பாகவதரானவர்கள் தங்கள் நிர்வாஹகராய்
நடத்துமது அபரிச்சின்னமாய்க் கொண்டு வ்யாப்தமாய்
தேஜோ மாயமாய் பரம வ்யோம சப்த வாஸ்யமான பரமபதம் –
இது கலித்துறை –

———————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –10-8-

May 15, 2018

இப்படி அபி நிவிஷ்டனாய்க் கொண்டு என்னோடே கலந்து பரிமாறுகைக்கு ஹேது என் -என்று
எம்பெருமானைக் கேட்டால் அங்கனே அபி நிவிஷ்டனாய் இருந்த அவனாலும் பரிக்லுப்தமான
ஹேதுக்களில் ஒரு ஹேதுவும் என் பக்கல் யுண்டாகச் சொல்ல ஒண்ணாது –
இனி என் பக்கல் இல்லாத ஹேதுவை என் பக்கலிலே அத்யாரோபித்துச் சொல்லப் பார்க்கிலும் –

—————————————————–

திருமால் இரும் சோலை மலை என்றேன் என்ன
திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பால்
திருமால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே-10-8-1-

திருமாலிருஞ்சோலை மலை என்னும் இச்சொல்லைச் சொன்னேன் என்னும் இதுக்கு மேற்படச் சொல்லலாவதொரு
ஹேது என் பக்கலில் இல்லை -இச்சொல் இத்தனையும் மெய்யே சொன்னேன் ஹேதுவாக
குரு மா மணி உந்து புனல் பொன்னித் தென் பாலான தென் திருப் பேரைத் திரு நகரியாக யுடையனாய் இருந்த
எம்பெருமான் பெரிய பிராட்டியாரோடே கூட என் நெஞ்சு நிறைய புகுந்து
இப்படி என்னோடே கலந்து பரிமாறுவதே –
ஒருவனுடைய அபி நிவேசம் இருக்கும் படியே என்கிறார்–

————————————————————

பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
காரேழ் கடல் ஏழ் மலை ஏழ் உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே–10-8-2-

அகாரணமாக இன்று வந்து இனிப் பேரேன் என்று நெஞ்சு நிறைய புகுந்தான் –
இதற்கு முன்பு இப்படி என் நெஞ்சில் புகுந்து அருளப் பெறாமையாலே
சர்வ ஜகத் ஈஸ்வரனாய் இருந்து வைத்தும் சா பேஷனாய் இருந்தவன்
இன்று என்னுள்ளே புகுரப் பெற்று நிரபேஷனானான் என்கிறார் –

————————————————–

பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிது ஆயினவாறே–10-8-3-

எம்பெருமானை இனி ஒரு நாளும் விஸ்லேஷியாதபடி பற்றினேன் –
ஸூர நர திர்யகாதி நாநா வித தேஹ பிரவேச ரூப ஜன்மத்தையும் ஜென்ம நிபந்தனமான துக்கத்தையும் போக்கினான் –
தத் துக்க ஹேது வாய் அநாதி காலம் தொடங்கி இன்று அளவும் செல்லுகிற இந்த பிரகிருதி சம்பந்தத்தையும் நிவர்த்திப்பித்தேன் –
இப்படி திருப்பேரான் அடி சேர்வது எனக்கு எளிது ஆவதே -என்று களிக்கிறார்-

—————————————————

எளிது ஆயினவாறு என்று என் கண்கள் களிப்பக்
களிது ஆகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிது ஆகிய சேண் விசும்பு தருவானே–10-8-4-

திருப்பேர் நகரனைப் பெற்று என்னுடைய சர்வ கரணங்களோடும் கூட நான் களிக்கின்றேன்-
இப்படி திருப்பேரிலே தான் எழுந்து அருளி இருக்கிற இருப்பை எனக்கு காட்டித் தந்து அருளின இவன்
இனித் திருநாட்டையும் தந்து அருளும் என்கிறார்

—————————————

வானே தருவான் எனக்காய் என்னோடே ஒட்டி
ஊனேய் குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடுமாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனே ஏய் பொழில் தென் திருப் பேர் நகரானே–10-8-5-

நமக்கு அவன் திரு நாட்டைத் தந்து அருளுகைக்கு நம் பக்கலிலே பிரதிபந்தகங்கள் இல்லையோ என்னில் –
திருப்பேர் நகரான எனக்கு வானே தருவானாய் நான் ஓட்டேன் என்னிலும் என்னை வென்று
ப்ரஸஹ்யவாகிலும் புகுரக் கடவனாய் ஒட்டிக் கொண்டு
அத்யந்த ஹேயமான என்னுடைய இந்த பிரக்ருதியிலே புகுந்து தானே
அந்த பிரதிபந்தகங்களையும் போக்கி அருளினான் என்கிறார் –

——————————————————————-

திருப் பேர் நகரான் திருமால் இரும் சோலைப்
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6-

திருப்பேரையும் திருமாலிருஞ்சோலையையும் தனக்கு கோயிலாக யுடையவன் தனக்கு ஓர் இருப்பிடம் இல்லாதாரைப் போலே
இன்று வந்து இருப்பேன் என்று என்னை இரந்து கொண்டு என் நெஞ்சு நிறைய புகுந்தான் –
பின்னையும் ஒரு நாளைக்கு ஒரு நாள் அவனுக்கும் ஸ்ப்ருஹணீயனாய்
நானும் அவனுடைய குணங்கள் ஆகிற அம்ருதத்தைப் புஜித்துக் களிக்கப் பெற்றேன் என்கிறார் –

———————————————————————

உண்டு களித்தேற்கு உம்பர் என் குறை மேலைத்
தொண்டு உகளித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்ப கண்ணுள் நின்று அகலானே-10-8-7-

என்னுள் அடங்காதே பொங்கிப் புறப்படுகிற பரம பத்தி அவசான ரூபமாய் –
இவ்வாத்மாவினுடைய பகவத் சேஷத்வ ப்ரதிபாதகமான திரு மந்திரத்தினால் ப்ரதிபாத்யமாய் இருந்த பகவத் கைங்கர்ய
ஏக ரதித்வத்தைப் பெற்ற நான் கண்கள் ஆர அளவும் நின்று கண்டு களிக்கும் படியாகத்
திருப்பேரான் என் கண்ணுள் நின்று அகலான்-
இப்படி அவனை புஜித்துக் களிக்கப் பெற்ற எனக்கு இனிமேல் அநவாப்தவ்யமாய் இருபத்தொரு ப்ராப்யம் உண்டோ என்கிறார் –

———————————————————–

கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் ஏழிசையின் சுவை தானே
வண்ண நல் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8-

வாக் மனஸ் அகோசர ஸ்வரூபனாய் பரம போக்யனாய் இருந்த திருப்பேரான் கண்ணுள் நின்று அகலான் –
தன்னாலும் விஸ்லேஷிக்க ஒண்ணாத தொருபடி என் நெஞ்சிலே புகுந்து செறிந்தான் –
இன்னம் இவ்வளவன்று இவனுடைய பாரிப்பு என்கிறார் –

———————————————

இன்று என்னைப் பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான்
குன்று என்னத் திகழ் மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே–10-8-9-

திருப்பேர் நகரான் இன்று என்னை ஸ்வ விஷய திவ்ய ஞானவான் ஆக்கித் தன்னை என்னுள்ளே வைக்கைக்கு ஹேது என் –
இதற்கு முன்பு இப்படிச் செய்யாது ஒழிகைக்கு ஹேது என் என்று அவனை நான் கேட்க்கிறேன் –
இதற்க்கு ஓர் உத்தரம் வல்லனாகில் சொல்லுவான் என்கிறார் –
ஒரு க்ஷணம் பிரியில் தரிக்க மாட்டாதே மத் ஏக தாரகனாய் இருக்கிற இவன் இதுக்கு முன்பு
அநாதி காலம் எல்லாம் என்னை விட்டு எங்கனே தரித்து இருந்தான் என்று கிடக்கிறார் என்றுமாம் –

——————————————————

உற்றேன் உகந்து பணி செய்ய உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய்
கற்றார் மறை வாணர்கள் வாழ் திருப் பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லால் நில்லாவே–10-8-10-

எம்பெருமான் ஒரு உத்தரம் காணாமை உம்முடைய திறத்தில் நான் செய்த செயல் எல்லாம்
சொன்னபடியே நிர்ஹேதுகமாகவே செய்தேன் -அது நிற்க —
இனி நான் செய்ய வேண்டுவது என் என்ன –
உன் திருவடிகளைப் பெற்றேன் -பெறுகிறேன் -உகந்து பணி செய்து கொண்டு உன் திருவடிகளை பெற்றேன் –
இன்னம் உன் திருவடிகளில் அடிமை செய்யும் இதுவே எனக்கு வேண்டுவது எந்தாய் என்று ஆழ்வார் சொல்ல
எம்பெருமானும் அப்படியே செய்கிறோம் -என்று அருளிச் செய்ய –
ஆழ்வாரும் திருப்பேர் நகரான் திருவடிகளை பற்றினார்க்கு ஒரு கர்மம் -பந்தம் -பாவம் – இல்லை யாகாதே என்கிறார் –

——————————————

நில்லா அல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ் குருகூர்ச் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே–10-8-11-

அவன் திருவடிகளை ஆஸ்ரயித்தார்க்கு அல்லல் நில்லாதே -இது நிச்சிதம் -என்று கொண்டு
இத்தையே பின்னையும் அநு பாஷித்து திருப்பேரை ப்ரதிபாதித்த இத்திருவாய் மொழி வல்லார்
இட்ட வழக்காம் திரு நாடு என்கிறார்

——————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அழகிய மணவாளச் சீயர் அன்போடு அருளிச் செய்த பன்னீராயிரப்படி –10-7-

May 15, 2018

ஏழாம் திருவாய் மொழியில் கீழ் இவர்க்குப் பரமபதத்தைக் கொடுக்கையில் யுத்யோகித்த சர்வேஸ்வரன்
இவர் முடியில் திருவடிகளை வைத்துத் திரு உள்ளத்திலே பூர்ணமாகப் புகுந்து இருந்து –
விரை குழுவு நாறும் துளவம் மெய்ந்நின்று கமழும்என்னும்படி
திருமேனி முழுக்கத் திருத்துழாய் பரிமளமாம்படியாக இவருடைய சரீரத்தோடு அந்த கரணத்தோடு
மற்றும் உள்ள அவயவங்களோடு வாசியற அத்யபி நிவிஷ்டனாய்
ஆதரிக்கிறபடியைக் கண்டு இவ்வாதார அதிசயத்துக்கு ஹேது வான அவனுடைய
ஆச்ரித விஷயமான அபி நிவேசத்தையும்
அதிசயித போக்யத்வத்தையும்
ஆஸ்ரித தேகத்தில் ஆதாரத்தையும்
அதில் அத்யந்த அபி நிவேசத்தையும்
ரசிகத்வத்தையும்
சர்வாதிகத்வத்தையும்
ஆஸ்ரிதார்த்த திவ்ய தேச வாசத்தையும்
சர்வ பிரகார சம்ச்லேஷத்தையும்
ஜகத் ஸ்ருஷ்ட்யாதி ஹேதுத்வத்தையும்
அபேக்ஷ அபராதீனத்வத்தையும்
அனுசந்தித்து ஏவம் விதனான சர்வேஸ்வரன் யுடைய ஆதார அதிசயம் இருந்த படியால் நாம் இனி யாம் உறாமை -என்று
உபேக்ஷித்த தேஹாதிகளையும் விளம்பமறக் கொண்டு போவாரைப் போலே இரா நின்றது –
அஸ்த்திரமாய் தோஷ பூயிஷ்ட்ட்மாகையாலே அ புருஷார்த்தமாய் அனுபவ விரோதி யாகையாலே
இருக்கிற இத்தை நம் பக்கல் ஆதரத்தாலே விரும்பா நின்றான் –
இத்தை அறிவித்தும் நாம் அவனை அர்த்தித்தும்-விடுவித்துக் கொள்ளுவோம் என்று
தெற்கில் திருமலையில் அவனை அபேக்ஷிக்க அதுக்காக அவன் நிவர்த்திப்பிக்கையிலே உத்யுக்தனாம் படியைக் கண்டு ஹ்ருஷ்டராகிறார் –

—————————————————————

முதல் பாட்டில் கவி பாடுவித்துக் கொள்ள -என்ற ஒரு வ்யாஜத்தாலே ஈஸ்வரன் தம் பக்கல் பண்ணின
அபி நிவேசத்தைக் கண்ட ஹர்ஷத்தாலே தந்தாமை வேண்டி இருப்பார்
இவ்விஷயத்தில் அகப்படாமல் ஆத்மாவை நோக்கிக் கொண்டு அடிமை செய்யுங்கோள் என்று
தாம் பட்ட படியை அருளிச் செய்கிறார் –

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-

திருமால் இரும் சோலை வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து –ஆஸ்ரித அனுக்ரஹ அர்த்தமாகத் திருமலையில்
ஸந்நிஹிதனாய்-அகப்பாட்டாருடைய சர்வஸ் வத்தையும் அபகரிக்கும் இடத்தில் –
அபஹாரகன் என்று அறிய ஒண்ணாதபடி வஞ்சித்து அபஹரிப்பானாய்-
அதுக்கு அடியாய் எதிர்த்தலையை மதி மயக்கும் அத்ய ஆச்சர்யமான ரூப குணாதிகளை யுடையனானவன் –
கவி பாடுவித்துக் கொள்ளுகை யாகிற க்ருத்ரிம வ்யாபாரத்தாலே யுளனாய் –
நாம் இருந்த இடத்திலே தான் அபி நிவிஷ்டனாய் வந்து -உள்ளுறை காட்டுவரைப் போலே
என் நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் –என் நெஞ்சுக்குள்ளேயும் ஆத்மாவுக்குள்ளேயும் ஒரு நீராகக் கலந்து
பரிசர வர்த்திகளான ஸ்ரீ மஹா லஷ்மீ பிராட்டிமார் ப்ரப்ருதிகளும் அறியாதபடி அந்த
என் நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–என் நெஞ்சையும் உயிரையும் பிரித்துக் காண ஒண்ணாத படி க்ரஸித்து-
அசேதனமான நெஞ்சோ பாதி சேதனனுடைய போக்த்ருத்வமும் அசத் சமமாம் படி தானே போக்தாவாய்ப்
பெறாப் பேறு பெற்று-இப்பொழுது தான் – அவாப்த ஸமஸ்த காமனானான்
செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் –பிரயோஜனம் இல்லாத செவ்வையை யுடைத்தாய் ஸ்வயம் ப்ரயோஜன ரூபமான
சொற்களாலே கவிபாட வல்லவர்கள்
அவன் கையில் உங்களுடைய ஆத்மாத்மீயங்கள் அகப்படாதபடி காத்துக் கொண்டு வாசிகமான அடிமை செய்யப் பாருங்கோள் –
அநந்ய ப்ரயோஜனராய் இழிவார்க்கு ஆத்மாத்மீயங்கள் அவனாலே அபஹ்ருதமாய் அவர்ஜனீயம் என்று கருத்து –

—————————————————————————-

அநந்தரம் -என்னோடு ஸம்ஸ்லேஷித்த அதிசயத்தாலே எனக்கு நிரதிசய போக்ய பூதனாய்க் கொண்டு
க்ருதக்ருத்யனாய் இரா நின்றான் என்கிறார் –

தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–9-7-2-

என்னை முற்றும் உயிர் உண்டே–என்னை சர்வ பிரகாரத்தாலும் ஆத்ம போகத்தைப் பண்ணி அத்தாலே
தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்-ப்ரதானனாயக் கொண்டு பரிபூர்ணனாய்
ஸமஸ்த லோகங்களும் தத் கதமான பிராணி ஜாதங்களும் தானேயாம்படி
அந்தராத்ம தயா நிர்வாஹகனாய் -அப்படி பொது இன்றியே
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்-அஹம் புத்தி வியவஹார விஷயமான நான் என்கிற வஸ்துவும்
தானேயாம்படியாய் -அந்த அப்ருதக் பாவத்தால் ஸ்துத்யனான தன்னைப் பற்ற ஸ்தோதாவும் தானேயாய்க் கொண்டு ஸ்துதித்து –
அத்தால் தனக்குப் பிறந்த யுகப்பை
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக் கோனே யாகி நின்று ஒழிந்தான் எனக்குப் பிரகாசிப்பிக்கையாலே
தேனும் பாலும் கன்னலும் அமுதுமாய் அதில் சர்வ வித போக்யமும்
திருமால் இரும் சோலையிலே எழுந்து அருளி இருக்கிற ஸ்வாமியான தானேயாய் நின்று விட்டான் –
போக்தாவும் தானேயாய் போக்யமும் தானேயாய் என்று கருத்து –

—————————————————————————-

அநந்தரம் -என் அளவு அன்றியே என் தேஹத்தையும் ஆதாரம் பண்ணி அத்தாலே ஸந்துஷ்டானாய்
ப்ரதிஷ்ட்டிதன் ஆகா நின்றான் என்கிறார்

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு–சர்வ பிரகாரத்தாலும் ஆத்ம அனுபவம் பண்ணி –
அவ்வளவில் நில்லாதே என்னுடைய அஞ்ஞானாதிகளுக்கு ஹேது வாய்க் கொண்டு –
பிரகிருதி கார்யமாய் பிரத்யக்ஷ சித்த தோஷத்தை யுடைத்தான பந்தகமான
சரீரத்துக்குள்ளே புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்-அபிமாநீ ஜீவனான என்னையும் அனுபந்தியான சரீராதி
ஸமஸ்த வஸ்துவையும் பற்ற தானேயாய் –
அஹந்தா மமதாதிகள் இத்தலையில் நடையாடாதபடி -தானே அபிமானியாய் –
அத்தாலே க்ருதக்ருத்யனாய் நின்ற
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களையுடைய நிருபாதிக ஸ்வாமி யானவன் பொருந்தி வர்த்திக்கிற தேசமாய்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்-தெற்குத் திக்குக்கு ஸ்லாக்யமாய் இருக்கிற திருமாலிருஞ்சோலை
யாகிற திருமலையில் நிற்கிற திக்கை நோக்கி
சேஷத்வ அனுரூப விருத்தியைப் பண்ணி கிட்டின நான் –
அவ்வளவு அன்றியே -அவன் தேசத்து அளவு அன்றியே –
தென்னன் -என்று அத்தேசத்தில் ராஜாவைச் சொல்லவுமாம் –
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–அத்திக்கையும் ஆதரிக்கும் படியான அளவு பிறந்த பின்பு
ஒரு கந்தவ்ய பூமி யுண்டாய்ப் போகிறேனோ –
நிருபாதிக சேஷியாய் இருக்கிறவனுடைய அபி நிவேசங்கள் என்னாய் இருக்கிறது –
இதில் காட்டில் வேறு சில ப்ராப்யங்கள் யுண்டாய் அவற்றை உபகரிக்கப் பாரிப்பாரைப் போலே இரா நின்றது என்று கருத்து –

——————————————————–

அநந்தரம் -என் சரீரத்தை விரும்புகைக்கு ஹேது வாகையாலே திருமலையையும் ஆதரித்து
இரண்டு ஸ்த்தளத்தையும் கை விடுகிறிலன் என்கிறார் –

என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-

உலகும் உயிரும் தானேயாய்–ஒருவனைப் பிடிக்கைக்கு ஊரை வளைப்பாரைப் போலே என்னைப் பெறுகைக்காக
சர்வ லோகங்களும் சர்வ பிராணிகளும் தானேயாம்படி அந்தராத்மாவாய்க் கொண்டு வ்யாப்த்தனாய் –
அவ்வளவில் நில்லாதே
நண்ணா அசுரர் நலியவே–தன்னை ஆஸ்ரயிக்கையில் விமுகரான அஸூர ப்ரக்ருதிகள் நசிக்கும்படியாக
ஞாலத்தூடே நடந்து உழக்கி-த்ரை விக்ரம அபதான முகத்தால் என்னை பஜிக்கைக்கு ஸ்த்தலம் தேடுவாரோ பாதி
பூமிக்குள்ளே நடந்து மிகுத்து
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை–தெற்கு என்கிற பேரைக் கொண்ட திக்குக்கு சிரஸாவாஹ்யமாய்
இருக்கிற திருமாலிருஞ்சோலை என்ற பேராய இருக்கிற
நங்கள் குன்றம் கை விடான் -நம் போல்வார்க்கு அனுபாவ்யமான திரு மலையை -என்னை புஜிக்கைக்கு அனுரூப ஸ்த்தலம் என்று
விரும்பிக் கை விடுகிறிலன் -அது வழியாக
நன்கு என் உடலம் கை விடான் -என் சரீரத்தையும் மிகவும் கை விடுகிறிலன்
என் கொல் அம்மான் திருவருள்கள் -ஸ்வாமியானவனுடைய உபகாரங்களான சீல பிரகாரங்கள் என்னாய் இருக்கிறன-

—————————————————–

அநந்தரம் தம்மோடு ஸம்ஸ்லேஷித்து திருவாய் மொழி பாடக் கேட்ட ப்ரீதியாலே
ரசிகனாய் ஆளத்தி வையா நின்றான் என்கிறார்

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த–பகவத் விஷயத்தைக் கிட்டக் கடவோம் அல்லோம் என்று
ப்ரத்யூஹராய் இருக்கும் ஆஸூர ப்ரக்ருதிகள் -இவ்வதிசயம் பொறுக்க மாட்டாமல் விநாசத்தை அடையவும் –
பக்தி பரராய்க் கொண்டு அனுகூலரான தேவ வர்க்கம் மிகவும் உகப்பாலே ஸம்ருத்தியை லபிக்கவும்
நலிவு -நாசம்
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப-அவாப்த ஸமஸ்த காமனுடைய குண விபூதிக்கு மேலே
இதுக்கு முன்பு என்ன அறியாத அதிசயங்களை ப்ரேமத்தாலே
ஆஸாஸியா நிற்கும் -ஸ்நேஹ யுக்தராய்-அனுபவ சீலரான முனிவர்கள்-
கேட்டு அனுபவித்து ஆனந்த நிர்ப்பரராகவும்
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி–பான் நிறைந்த இசையை யுடைய இனிய கவிகளை
தனக்கு பிரகார பூதனானனாய்க் கொண்டு –
ஸ்த்வயனாய் ஸ்தவப்ரியனான தன்னை -ஸ்தோதாவாய்க் கொண்டு தானே பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–திருமாலிருஞ்சோலையானாய் நிற்கிற என் ஸ்வாமி யானவன்
தன் மேன்மை பாராதே பாட்டில் ரசாதிசயத்தாலே தென்னா என்று ஆளத்தி வையா நிற்கும் –

——————————————————————

அநந்தரம் ப்ரஹ்ம ருத்ராதிகளுக்கும் உபகாரகனாய் ஸ்ரீ யபதியானவன் திருமலையில் நின்று
என்னை அடிமை கொள்ளுக்கைக்கு வ்யாமுக்தனாய் இரா நின்றான் என்கிறார்-

திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-

சிவனும் பிரமனும் காணாது அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–ஞானாதிகனான ருத்ரனும் ப்ரஹ்மாவும் காணப் பெறாதே
பெறுதற்கு அரிதான அதிசயித பக்தியை யுடையராய்க் கொண்டு திருவடிகளை ஸ்தோத்ரம் பண்ண
தன் நிரவதிக கிருபையால் அபேக்ஷித பிரதானம் பண்ணின சர்வாதிகனாய்
செழு மூஉலகும் தன் ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்–விலக்ஷணமான ஜகத் த்ரயத்தையும்
அகடிதகடநா சமர்த்தனான தன்னுடைய அத்விதீயமாய்
அடங்கின இடம் தெரியாமல் அடக்க வல்ல சக்தி மஹாத்ம்யத்தை யுடைய
திரு வயிற்றினுள்ளே ஒரு புடையில் வைத்து கல்பம் தோறும் தலையாக ரக்ஷிக்குமவனாய்
ஒரு மா -என்று ஏக தேசமான அத்யல்ப ஸங்க்யையைச் சொல்லிற்று ஆக வுமாம் –
திருமால் இரும் சோலையானே யாகி-இந்த சேஷித்வ ரக்ஷகத்வங்களுக்கு உத்பாதகமான ஸ்ரீ யபதித்வத்தை யுடையவன்
திருமாலிருஞ்சோலையிலே நிலையை யுடையனாய்க் கொண்டே –
திருமால் என்னை ஆளுமால் -என்னை அடிமை கொள்ளுகையிலே பெரும் பித்தனாய் இரா நின்றான் –

————————————————

அநந்தரம் தம்மை அங்கீ கரிக்கைக்காக அவன் வந்து நின்ற திருமலையினுடைய வை லக்ஷண்யத்தைப் புகழ்ந்து அருளுகிறார்

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்-என்னுடைய ஸ்வாமி யானவனே -உன்னுடைய கிருபையைத் தந்து
அருள வேணும் என்று கொண்டு த்ரி நேத்ரனாய்-ஈஸ்வர அபிமானியான ருத்ரனும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்- உபயுக்தமான ஞானாதி குணத்தை யுடைய ப்ரஹ்மா வாகிற
ஸ்ருஜ்ய ஜகத் பதியும் தேவர்களுக்கு நிர்வாஹகானான இந்திரனும் த்ரயஸ் த்ரிம்சத் கோடி தேவர்களும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை-ஸ்வரூப புருஷார்த்த விஷயமான ஞான அபாவம் அந்யதா ஞானம்
விபரீத ஞானம் முதலான தமஸ்ஸூ க்களை புராணாதி யுபதேச முகத்தால் போக்கக் கடவரான பரம ரிஷிகளும்
ஸ்தோத்ரம் பண்ணும் படியான ஸ்வாமி யானவனுடைய வாசஸ் ஸ்தானமான திரு மலையாய்
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–பிராப்தி பிரதிபந்தகமான அவித்யாதி சகல பிரமங்களையும்
போக்கக் கடவதாய் நிரதிசய போக்யமாம்படி விலக்ஷணமான
திருமாலிருஞ்சோலை என்று திரு நாமமான திருமலை இறே –

————————————————————–

அநந்தரம் திருமலை தொடக்கமான திவ்ய தேசங்களோடு ஓக்க என்னுடைய சர்வ அவயவங்களை விரும்பி
ஒரு க்ஷண ஏக தேசமும் பிரிகிறிலன் -இவன் ஒருவனாய் இருக்கிறானே என்று விஸ்மிதராகிறார் –

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே–திருமாலிருஞ்சோலை மலையையும் திருப் பாற்கடலையும்
அவற்றோடு ஓக்க என் தலையையும் –
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே-ஸ்ரீ யபதியாய்க் கொண்டுஇருக்கிற ஸ்ரீ பரமபதத்தையும்
ஸ்ரமஹரமான பெரிய திருமலையையும் அப்படியே என் சரீரத்தையும்
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே–துஸ் தரமாய் அதிசயிதையாய் ஆச்சர்யமான ப்ரக்ருதியோடே
ஸம்ஸ்ருஷ்டமான என் ஆத்மாவையும் மனசையும் வாக்கையும் கிரியையும்
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–ஒரு க்ஷணத்தில் ஒரு மாப் பொழுதும் பிரிகிறிலன்-
என்னை லபிக்கைக்காகக் கால உபலஷித சகல பதார்த்தங்களும் காரண பூதன் ஆனவன் ஒருவனாய் இருக்கிறானே –
கீழில் ஏவகாரங்கள் -எண்ணாதல்-அவையே அசாதாரணமாம் படி விரும்பின படியாதலாய் இருக்கிறது -நொடி -க்ஷணம் –

————————————————————————

அநந்தரம் ஜகத் ஸ்ருஷ்ட்யாதி ஹேது பூதனான சர்வேஸ்வரன் தம்முடைய சரீராதிகளை விரும்பின படியைக் கண்டு
அத்தை விடும்படிக்கு ஈடாக அவன் எழுந்து அருளி நிற்கிற திருமலையை ஆஸ்ரயி –
ஒரு காலும் கை விடாதே கொள் என்று தம் திரு உள்ளத்தைக் குறித்து அருளிச் செய்கிறார் –

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்–கால உபலஷித ஸமஸ்த வஸ்துக்களும் ஒருவனே காரண பூதனாக
சதேவ இத்யாதி சுருதி வாக்யங்களிலே சொல்லப்பட்ட அத்விதீயனாய் ஸமஸ்த லோகங்களையும்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்–ஸ்ருஷ்ட்யாதி அனுகூல காலம் தோறும் தன் சங்கல்ப ஏக தேசத்துக்குள்ளே
ஸ்ருஷ்டித்து ரஷித்து சம்ஹரித்து இது தானே யாத்திரையாக நடத்தும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை-அபரிச்சின்ன ஸ்வ பாவனாய் இந்த பிராப்தி முகத்தால்
எனக்கு ஸ்வாமியானவனுடைய தர்ச நீயமாய் ஸ்ரமஹரமான திருமாலிருஞ்சோலையை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–நெஞ்சே நமக்கு த்யாஜ்யமான தேஹ பிராணாதிகள் மங்கும்படியாக
செறிந்து ஆஸ்ரயிக்கப் பாராய் –
நம் கார்யம் செய்து முடிக்கும் தனையும் கை விடாதே கொள் –
இத்தாலே நீ வாழ்வாயாக வேணும் -அபரிச்சின்ன போக்யமான விக்ரஹத்தை யுடையவன் என்றுமாம் –

—————————————

அநந்தரம் இப்படி திரு உள்ளத்தால் திருமலையை ஆஸ்ரயித்து இருக்கச் செய்தேயும் அவனுடைய
அத்யபி நிவேசத்தை நிவர்த்திப்பிக்கைக்காக ப்ரக்ருதி ப்ராக்ருதங்களினுடைய ஹேயதையைப் பரிஹணித்து-
ஏவம் பூதையான உன்னுடைய மாயை நசிக்கும்படி அனுமதி பண்ணி அருள வேணும் என்று பிரார்த்திக்கிறார் –

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-

திரு மால் இரும் சோலை மேய–நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே–திருமாலிருஞ்சோலை மலையிலே
நித்ய வாசம் பண்ணி என் போல்வாருக்கு ஸ்வாமி யானவனாய்
நானே எனக்கு பரிஹரித்துக் கொள்ளுமா போலே வேறு பாடற நீ தானேயாய் என்னை ரஷித்து அருளினவனே –
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்–போக்யத்தையாலே கிளர்ந்து புலப்படுகிற சப்தாதி விஷயங்கள் ஐந்தும்
அவ்விஷயங்களிலே பிரவர்திக்கைக்கு ஹேதுவான கர்மேந்த்ரியங்கள் ஐந்தும்
சப்தாதி ஆஸ்ரயமாயும் இந்திரிய ஆஸ்ரய சரீராரம்தகமாயுள்ள பிருதிவ்யாதி பூதங்கள் ஐந்தும் –
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–சம்சார தசையில் ஜீவனோடே அத்யந்த ஸம்ஸ்ருஷ்டமான
மூல பிரகிருதி வ்யவசாய ஹேதுவான மஹான் ஆகிற
மங்க ஒட்டு உன் மா மாயை – உன்னுடைய அத்யாச்சர்யமான ப்ரக்ருதி ப்ராக்ருதங்களானதுகள்
மங்கும் படி இசைந்து அருள வேணும் –

——————————————————————–

அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக இவர் அர்த்தித்த படியே ஈஸ்வரனுடைய விரோதி நிரசன
உத்யோகத்தைச் சொல்லிக் கொண்டு அதுவே இத்திருவாய் மொழிக்குப் பலமாக அருளிச் செய்கிறார் –

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க–மஹான் அஹங்கார மனஸ் ப்ரமுகமான சரீர சம்பந்தம் நசிக்கும்படியாகவும் –
பிரபலமான இந்திரியங்கள் ஐந்தும் ஸ்வ விஷயங்களோடு மங்கிப் போம்படியாகவும்
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்–தானே பெரிய அபிமானத்தை யுடையனாய்க் கொண்டு புகுந்து
என் ஆத்மாவும் தானேயாய் ஆத்மீயமும் தானேயானவனை
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்–வண்டுகளுடைய செருக்கை யுடைத்தான பொழிலையுடைய
திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–திருமாலிருஞ்சோலை மலைக்கே யான இவை பத்தும்
மஹான் அஹங்கார உபலஷித ஸமஸ்த விரோதி நிவ்ருத்தியிலே தாத் பயம்
இப்பத்தும் அப்யசித்தார்க்கு மஹான் அஹங்காராதிகள் தானே கழியும் என்று கருத்து
இது ஆறு சீர் ஆசிரிய விருத்தம்-

———————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –10-7-

May 15, 2018

தான் சொன்னபடியே செய்யக் கடவனாகச் சமைந்து கொண்டு தம்முடைய திரு உள்ளத்திலே புகுந்து அருளினை
எம்பெருமான் தம்மோடு கலந்த கலவியாலே தமக்குப் பிறந்த நிரவதிக ப்ரீதி அதிசயத்தாலே –

————————————————–

செஞ்சொற் கவிகாள் உயிர் காத்து ஆட்செய்மின் திருமால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே–9-7-1-

எம்பெருமானைக் கவி பாடுகிறவரைக் குறித்து நீங்கள் அவனுக்கு அடிமை செய்யும் இடத்தில்
உங்கள் உயிரைக் காத்துக் கொண்டு அடிமை செய்யுங்கோள்-
அவன் தனக்கு அடிமை செய்வாரை அசாத்ம்யமாம் படி அதி மாத்ர சம்ச்லேஷத்தைப் பண்ணி பாதிக்குமே-
அவர்களுடைய இச்சை அனுகுணமாக அடிமை செய்வித்துத் கொள்ளும் ஸ்வ பாவன் அல்லனோ என்னில் –
அவன் பாதிக்கும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்தே பாதியாதானைப் போலே இருக்கும் ஒரு மஹா வஞ்சகன் கிடி கோள்-
எங்கனே என்னில் -என்னை உபகரணமாகக் கொண்டு கவி சொல்லுகை என்னும் வ்யாஜத்தினாலே என்னுள்ளே புகுந்து கலந்து –
இன்னபடி செய்து அருளினான் -என்று அயர்வறும் அமரர்க்கும் அறிய நிலம் அல்லாத தொரு படி
என் நெஞ்சையும் உயிரையும் தன்னுள்ளே அடக்கி தானேயாம்படி
மாள புஜித்து பரிபூர்ணன் ஆனான் என்கிறார் –

———————————————————–

தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே யாய்
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே அமுதே திருமால் இரும் சோலைக்
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே–9-7-2-

இப்படி என்னுயிரை முற்றும் உண்டு தானே யாகி பரிபூர்ணனாய் இதினாலே சர்வேஸ்வரனுமாய்
என்னுயிரை மாள புஜித்தும் திருப்தனாகாதே நான் சொல்லும் சொற்களைக் கொண்டு அனுபவிக்கைக்காக
என்னைக் கொண்டு திருவாய் மொழியைச் சொல்லுவித்து
இப்படியே என்னோடுள்ள சம்ச்லேஷம் தனக்கு இனிதாகைக்காக எனக்குத் தன்னையே நிரவதிக போக்யமாக்கி அருளினான் –
திருமாலிருஞ்சோலை மலை நாயகனாய் நின்ற நிலை அவனுக்கு சபலமாய்த்து என்று கொண்டு
தத் அபிப்ராயத்தாலே சொல்லுகிறார் –

———————————————————–

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னம் போவேனே கொலோ என் கொல் அம்மான் திருவருளே–10-7-3-

என்னை புஜித்து அருளுகிறார் -இந்த ஹேயமான ப்ரக்ருதியினுள்ளே புகுந்து என்னை புஜித்து என்னை முற்றும் தானே யானான் –
இப்பேறு பெறுகைக்கு ஹேது என் என்னில் –
அவன் சேர் தென்னன் திருமால் இரும் சோலைத் திசை கை கூப்பப் பெற்றேன் –
என்னுடன் இப்படியே கலந்து பரிமாறியும் பின்னையும் கலந்து பரிமாறாதானாய்
அடி தொட்டுக் கலந்து பரிமாறுகையிலே பாரித்து அருளா நின்றான் –
இன்னம் இதுக்கு மேலும் ஒரு சம்ச்லேஷம் உண்டோ -திரு உள்ளம் என் தான் -என்கிறார் –

———————————————————-

என் கொல் அம்மான் திருவருள்கள் உலகும் உயிரும் தானேயாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென்கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திருமால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே–10-7-4-

என்னுடைய ப்ரக்ருதியினுள்ளே புகுந்து இவ்வாத்மாவை புஜித்து அருளுகையும் அன்றியே சர்வ ஜெகதீஸ்வரனாய் இருந்தான் –
என்னுடைய ப்ரக்ருதி தன்னையும் கூடத் தனக்கு போக்யமாகக் கொண்டு ஒரு க்ஷணமும் கை விடுகிறிலன் –
இப்படி என்னோடுள்ள சம்ச்லேஷம் பெறுகைக்கு ஈடான தேசமேதோ-என்று தேடிக் கொண்டு
திருமலையில் வந்து புகுந்து தான் கருதின படியே அங்கே ஸம்ஸ்லேஷித்து ப்ரீதனாய்
இந்த ஸம்ருத்தி எல்லாம் விளைவித்தது திருமலை இறே என்று கொண்டு திருமலையையும் –
என்னுயிரும் உடலும் போலே தனக்கு போக்யமாகக் கொண்டு கை விடுகிறிலன் –
என்னுயிரையும் உடலையும் திருமலையையும் அனுபவித்து ப்ரீதனானான் –
பிரதிகூலர் இந்த ஸம்ருத்தி கண்டு பொறுக்க மாட்டாதே தறைப்படும்படி ப்ரீதனானான் என்கிறார் –

————————————————————

நண்ணா அசுரர் நலிவு எய்த நல்ல அமரர் பொலிவு எய்த
எண்ணா தனகள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா என்னும் என் அம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5-

பிரதிகூலர் தறைப்படும்படியாகவும் தனக்கு நல்லரான அமரர் ஸம்ருத்தராம் படியாகவும் –
லீலா உபகரணமாயும் போக உபகரணமாயும் இருந்த நிரதிசய ஸம்ருத்திகள் எம்பெருமானுக்கு
உளவாய் இருக்கச் செய்தே இவை ஒழியவே-அதின் மேலே
ஸத்ய சங்கல்பனாய் இருந்த எம்பெருமான் தன்னாலும் சம்பாதிக்க ஒண்ணாதே வாக் மனஸ் அகோசரமான அபர்யந்த ஸம்ருத்திகள்
எம்பெருமானுக்கு உளவாக வேணும் என்று மநோ ரதியா நிற்கும் நல் முனிவர் –
நம்முடைய மநோ ரத அபிவர்த்தியான நிரவதிக ஸம்ருத்திகள் எம்பெருமானுக்கு விளையப் பெற்றோம் –
இனி நமக்கு ஒரு குறையில்லை -என்று கொண்டு
நிரவதிக நிர்வ்ருத்தியை யுடையராம்படியாகவும் பண்ணார் பாடலான இந்த கவிகளை என்னை இட்டுப் பாடுவித்து
இக்கவிகள் ஆகிற அம்ருதத்தைப் பருகிக் களித்து
அம்ருத பானம் பண்ணின வண்டுகள் போலே தென்னா தெனா வென்று திருமலையில் நின்று பாடி அருளா நின்றான் என்கிறார் –

————————————————-

திருமால் இரும் சோலையானே யாகி செழு மூஉலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி ஊழி தலை அளிக்கும்
திருமால் என்னை ஆளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்தி அடி பரவ அருளை ஈந்த அம்மானே–10-7-6-

த்ரை லோக்யம் எல்லாம் தன் சிறு திரு வயிற்றிலே வைத்து யுகம் தோறும் ரஷித்து அருளும் ஸ்வ பாவனாய்
ஸ்ரீ யபதியாய்-ப்ரஹ்ம ருத்ராதிகளால் அனவரத அபிஷ்டுத சரண யுகளனாய்-
தத் சமீஹித பலப்ரதனாய் சர்வேஸ்வரனாய் இருந்த திருமாலிருஞ்சோலையான்
எனக்குப் பித்தனாய் என்னைப் பிரிகிறிலன் என்கிறார் –

————————————————————

அருளை ஈ என் அம்மானே என்னும் முக்கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர்கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திருமால் இரும் சோலை மலையே–10-7-7-

இஸ் ஸம்ருத்தி எல்லாம் திருமலையை ஆஸ்ரயித்து இறே வந்தது என்று கொண்டு திருமலையை நின்று ஏத்துகிறார் –

————————————————–

திருமால் இரும் சோலை மலையே திருப் பாற் கடலே என் தலையே
திருமால் வைகுந்தமே தண் திரு வேங்கடமே எனது உடலே
அருமா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒருமா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே–10-7-8-

விளைந்த ஸம்ருத்தி தான் எது என்னில் இதை என்கிறார் –
திருமாலிருஞ்சோலை திருப் பாற் கடல் திருநாடு திருமலை தொடக்கமாகத் தான் எழுந்து அருளி இருக்கும் திரு நகரிகள்
எல்லாவற்றிலும் உள்ள சம்ச்லேஷத்தினால் ப்ரீதனமாம் போலே
என்னுடைய அவயவங்களிலே ஓரோர் அவயவத்தோடுள்ள சம்ச்லேஷத்தினால் என்னை ஒரு க்ஷணமும் பிரியில் தரிக்க மாட்டு கிறிலன் –
ஒருவனுடைய அபி நிவேசம் இருக்கும் படியே இது என்கிறார் –

———————————————————

ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என் அம்மான் அம் தண் திரு மால் இரும் சோலை
வாழி மனமே கை விடேல் உடலும் உயிரும் மங்க ஓட்டே–10-7-9-

நமக்கு இந்த ஸம்ருத்தி எல்லாம் திருமலையாலே வந்த ஸம்ருத்தி கிடாய் –
நெஞ்சே இனி திருமலையைக் கை விடாதே கிடாய் என்று நெஞ்சைக் குறித்துச் சொல்லி
இவ்வாத்மாவினுடைய நிகர்ஷம் பாராதே இத்தோடு கலந்து அருளினாய் யாகிலும்
என்னுடைய ஹேயமான இந்த பிரக்ருதியில் அபி நிவேசத்தை விட்டு அருள வேணும் -என்று
எம்பெருமானைப் பிரார்த்திக்கிறார் –

————————————————————–

மங்க ஒட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே யானே நீ ஆகி என்னை அளித்தானே
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம் பூதம்
இங்கு இவ் வுயிர் ஏய் பிரகிருதி மான் ஆங்காரம் மனங்களே–10-7-10-

தாம் இப்படி பிரார்த்திக்கச் செய்தேயும் தம்முடைய ப்ரக்ருதியில் உள்ள லோகத்தினாலே
எம்பெருமான் தம்முடைய சொல்லை யாதரியாது இருக்க
அவனுக்கு இதினுடைய ஹேயதையை ப்ரதர்ஸிப்பித்து இந்த ஹேயமான ப்ரக்ருதியில் அபி நிவேசத்தை அவஸ்யம் விட்டு
அருள வேணும் என்று பின்னையும் அபேக்ஷிக்கிறார் –

—————————————————————————

மான் ஆங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தான் ஆங்கார மாயப் புக்கு தானேதானே ஆனானைத்
தேன் ஆங்காரப் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மான் ஆங்காரத் திவை பத்தும் திருமால் இரும் சோலை மலைக்கே–10-7-11-

நான் சொன்னபடியே செய்து அருளும் ஸ்வ பாவனானவாறே தனக்கு அத்யந்தம் அபிமதமாய் இருந்த
இப்பிரக்ருதியில் அபி நிவேசத்தை விட்டருளி பெரிய செருக்கோடு கூட என்னுள்ளே புகுந்து கலந்து அருளின
எம்பெருமான் என்னோடே கலந்து பரிமாறுகையால் அவனுக்குள்ள கர்வத்தைச் சொல்லுகிறதாய்
எம்பெருமானை ப்ரதிபாதித்த ஆயிரம் திருவாய் மொழியிலும் பெரிய கிளர்த்தியோடே எழுந்த
இத்திருவாய் மொழி திருமாலிருஞ்சோலையை ப்ரதிபாதிக்கிறது -என்கிறார் –

——————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அழகிய மணவாளச் சீயர் அன்போடு அருளிச் செய்த பன்னீராயிரப்படி –10-6-

May 14, 2018

ஆறாம் திருவாய் மொழியில் இவ்வாழ்வாருடைய பக்தி வைலக்ஷண்யத்தையும் அது தம் அளவில் நில்லாமல்
பிறர்க்கும் உபதேசித்து ப்ரீதராம்படியையும் கண்ட ஈஸ்வரன் –
இப்படி ப்ரவணரான இவரை
யாவதாத்மபாவியாம் படி அமர்ந்த நிலத்திலே கொண்டு போய் அனுபவிக்க வேணும் என்று பார்க்கிற அவனுடைய
உபகார உத்யோகத்தையும்
அசாதாரண சம்பந்தத் யத்தையும்
பல பிரதான த்வரையையும்
ஆஸ்ரித ரக்ஷகத்வத்தையும்
அதிசயித அங்கீ காரத்தையும்
ஸ்த்திரா சக்தி யோகத்தையும்
ஆஸந்தி ஸூசக லக்ஷண கரத்வத்தையும்
சம்ச்லேஷ ஜெனித உஜ்ஜ்வல்யத்தையும்
அத்யாதர விசிஷ்டாத்வத்தையும்
அனவதிக உபகாரத்தையும்
அனுசந்தித்து -ஏவம் பூதனான சர்வேஸ்வரன் தமக்குப் பரதந்த்ரனாய் நின்று பண்ணுகிற
ஆதராதிசயத்தைத் தம்முடைய திரு உள்ளத்தோடு கூட உசாவி ஹ்ருஷ்டராகிறார் –

—————————————————————-

முதல் பாட்டில் தன் விஷயத்தில் சேஷத்வ காஷ்ட்டையை யுடைய நமக்கு நிரவதிக உபகாரத்தைப் பண்ணுவதாக உத்யோகியா நின்றான் –
அது தானும் நாம் நியமித்த படியே செய்வானாய் இரா நின்றான் என்று நெஞ்சைக் குறித்து அருளிச் செய்கிறார் –

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–10-6-1-

அருள் பெறுவார் அடியார் தன் அடியனேற்கு ஆழியான்–தன்னுடைய நிரவதிக ப்ரஸாதத்தைப் பெறுகையை நிரூபகமாக யுடையராய்
அதுக்கு அடியான சேஷத்வ ஞானத்தை யுடையாருக்கு அசாதாரண சேஷ பூதனாய் இருக்கிற எனக்கு –
திருவாழி ஆழ்வானைக் கை விடாதே போலே
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே–ஸ்வ விஷயமான பூர்வ அனுபவ ரூப மஹா உபகாரத்தை
பண்ணுவானாக உத்யுக்தனாய் இரா நின்றான் –
அதுவும் ஸ்வ தந்த்ரனான தான் நினைத்தபடியே செய்கை அன்றிக்கே
புருஷார்த்தம் ஆகையால் நாம் விதித்த பிரகாரத்தில் ஆகா நின்றது -ஆனபின்பு
இருள் தரும் மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்-அஞ்ஞான பாதகமாய் இருக்கிற பெரிய ஜகத்தில் –
அவனுடைய விஷயீ காரம் பெற்ற பின்பு-
இழி பட்டோடும் உடலினுள் பிறந்து தன் சீர் யான் கற்று -என்கிறபடியே -பகவத் பாகவத அனுபவ ப்ரீதி யர்த்தமாகவும்
பிறக்கையை அவன் நினைவு அறிந்த நான் இச்சிக்கிறிலேன்
மருள் ஒழி நீ மட நெஞ்சே வாட்டாற்றான் அடி வணங்கே–பற்றிற்று விடமாட்டாத சபலமான நெஞ்சே -அவன் நினைவு ஒழிய
நாம் நினைத்தபடி அர்ச்சாவதாராதி அனுபவம் பண்ண வேணும் என்கிற
ஸ்வ தந்த்ர அபிசந்தி ரூபமான அறிவு கேட்டை நீ தவிரப் பார்
தவிர்ந்தமை தோற்ற திரு வாட்டாற்றிலே நமக்கு பல பிரதனாயக் கொண்டு வந்து நிற்கிறவன்
திருவடிகளை உன் ஐக மத்யத்தாலே வணங்கப் பார் –

—————————————————-

அநந்தரம் -சர்வ பிரகார உபகாரகனாய் நிருபாதிக பந்துவானவனை நாம் கிட்டப் பெற்ற படி கண்டாயே
என்று பூர்வ உபகார பரம்பரையை ஸ்மரிப்பிக்கிறார்

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே கேசவன் எம்பெருமானைப்
பாட்டாயே பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2-

வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலம் பிறப்பு அறுப்பான்-மஹா பிருத்வியிலே யுண்டான ஜென்ம சம்பந்தத்தை அறுக்கைக்காக
திரு வாட்டாற்றிலே ஆஸ்ரித ஸூலபனானவனுடைய திருவடிகளை ஆஸ்ரயித்து
கேசவன் எம்பெருமானை –போக பிரதிபந்தகமான கேசியை நிரசித்தவனாய் -அப்படியே நம்முடைய விரோதியையும் போக்கி அடிமை கொண்டவனை
பல -பாட்டாயே- பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து–பஹு விதமான கீதங்கள் ஆனவற்றை பாடுகையாகிற கைங்கர்யத்தைப் பண்ணி
அநாதிகளான அவித்யா கர்மாதிகளை ச வாசனமாக அறுத்து
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து -அஹந்காராதி தூஷித்தரான லௌகிகரோடு ஸஹவாசத்தையும் தவிர்த்து
நாரணனை நண்ணினமே–கேட்டாயே மட நெஞ்சே -நிருபாதிக பந்துவாய்க் கொண்டு இன்று பல ப்ரதா ன
உத்யுக்தனான நாராயணனை கிட்டப் பெற்றோம்
என்னோடே உடன்பட்டு பவ்யமான நெஞ்சே இவ்வுபகார பரம்பரைகள் இருந்தபடி கேட்டாயே –

—————————————————-

அநந்தரம் -நாம் த்வரிக்க வேண்டும் காரியத்தில் தான் மிகவும் த்வரியா நின்றான் –
இது நாம் நினைத்த அளவன்றியே இரா நின்றதீ என்று ஹ்ருஷ்டராகிறார் –

நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் என் நெஞ்சே –10-6-3-

என் நெஞ்சே- நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி–எனக்கு அனுபவ உபகரணமான நெஞ்சே –
மேன்மைக்கும் நீர்மைக்கும் போக்யத்தைக்கும் ப்ரகாசகமான பல திரு நாமங்களையும் சொல்லி –
அந்த திரு நாமங்களுக்கு எல்லாம் பிறப்பிடமான நாராயணன் என்கிற நாமத்தை யுடைய
நிருபாதிக பந்துவை கிட்டப் பெற்றோம்
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்று–பூ லோகத்தில் சீல ஸுலப்யாதி குண சம்பத்தினுடைய மிகுதியை
யுடையனாய்க் கொண்டு திரு வாட்டாற்றிலே நிற்கிறவன் –
நான் சொல்ல வேண்டாதபடி தானே உத்யுக்தனாய்க் கொண்டு
வந்து நம் பக்கல் முன்பு ஒரு ஹேது இன்றிக்கே இருக்க இன்று
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே–பரமபதத்தை நம் அனுமதி கொண்டு தருவானாக விரையா நின்றான்
எண்ணினவாறு ஆகா இக் கருமங்கள் -இக்காரியங்கள்- நாம் அவன் பாடே செல்லவும்- நாம் அர்த்திக்கவும்-
நாம் அதிலே தவரிக்கவும்- அவன் நினைவு பார்க்கவும் -எண்ணி இருந்த பிரகாரம் அன்றியே
தானே வருகையும் -அபேக்ஷிக்கையும் -த்வரிக்கையும் – நினைவு தான் பார்க்கையுமாக ஆய்விட்டான் –

—————————————————–

அநந்தரம் -ஆஸ்ரித ரக்ஷணத்தில் பக்ஷபாதியானவன் நமக்கு நிரவதிக உபகாரகனாய் இரா நின்றான் என்கிறார் –

என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து
வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்
நன்னெஞ்சே நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே-10-6-4-

நன்னெஞ்சே- வன்னெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்–பகவத் விஷயம் என்றால் ப்ரவணமான நெஞ்சே –
ப்ராவண்யம் இல்லாத அளவு அன்றியே -ப்ர த்வேஷ பூபிஷ்ட்ட்மாம் படி வலிய நெஞ்சை யுடைய ஹிரண்யனை –
நோய் நின்ற விடம் குட்டமிட்டுப் பரிஹரிப்பாரைப் போலே அவன் நெஞ்சு இருக்கிற மார்பை இடந்து –
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக திரு வாட்டாற்றிலே ஸந்நிஹிதனாய்
மன் அஞ்சப் பாரதத்து பாண்டவர்க்காய் படை தொட்டான்–ராஜாக்கள் எல்லாரும் அஞ்சும்படி பாரத ஸமரத்திலே பாண்டவர்களுக்காக
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்த பஷ பாதியாய்
நம் பெருமான் -இவ்வாபதானங்களாலே நமக்கு ஸ்வாமி யானவன் –
என் நெஞ்சத்து உள் இருந்து இங்கு இருந்தமிழ் நூல் இவை மொழிந்து-அந்நிய பாரமான என் ஹ்ருதயத்தை ஸ்வீ கரித்து
உள்ளே பொருந்தி இருந்து
இவ்விருப்பிலே அத்யந்த விலக்ஷணமாம் படி பெரிய த்ரமிட மயமான ஸாஸ்த்ர ரூபமாய்
அபரோக்ஷ ஸித்தமான போக்யதையை யுடைத்தான இத்திருவாய் மொழி தன்னை
தானே ப்ரவர்த்தனாக அருளிச் செய்து –
நமக்கு அருள் தான் செய்வானே-அவ்வளவில் நில்லாதே நமக்கு அதிசயித உபகாரங்களை
பண்ணுவானாகத் தானே பாரியா நின்றான் –

————————————————–

அநந்தரம் -அவன் அருளிச் செய்த பிரகாரத்தில் நான் பரமபதத்தைப் பெறா நின்றேன் –
அதுக்கு அடியான விஷயீ காரத்தாலே போக்யமான திருவடிகள் என் தலையிலே யாய்த்தின என்கிறார் –

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-10-6-5-

வான் ஏற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே–பரமபதத்தில் போகைக்கு உறுப்பாக போம் வழியைத் தரும் -என்கிறபடியே
அர்ச்சிராதி மார்க்கத்தை யுண்டாக்கிக் தந்து அத்தாலே கொண்டு போவதாக
திரு வாட்டாற்றிலே ஸந்நிஹிதனானவன்-பண்டே பரமன் பணித்த பணி வகையே -என்கிறபடியே
நான் ஏறப் பெறுகின்றேன் -அவன் நினைவே நினைவாம்படியான நான் மேலே செல்ல பெறா நின்றேன் –
தேன் ஏறு மலர்த் துளவம் திகழ் பாதன் செழும் பறவை-அதுக்கு அடியாக மதுவானது மிகா நின்றுள்ள மலரை யுடைய
திருத் துழாய் செவ்வி பெற்று விளங்கும்படியான திருவடிகளை யுடையனாய்
தர்ச நீய ஆகாரனான பெரிய திருவடியை –
தான் ஏறித் திரிவான தாளிணை என் தலை மேலே-தான் விரும்பி ஏறி ஆஸ்ரித அர்த்தமாக சஞ்சரிக்குமவனுடைய
அந்த போக்யமான திருவடிகள் இரண்டும் என் தலை மேல் ஆய்த்தின
நரகத்தை நகு நெஞ்சே-நெஞ்சே சம்சாரத்தை சாவஞ்சமாகச் சிரித்து போம்படி பார்-

——————————————–

அநந்தரம் திருவடிகளைத் தலையிலே வைத்த அளவு அன்றியே என் நெஞ்சிலே ஸ்த்திரமாகப்
புகுந்து நிற்கிறவன் திருவடிகளைக் கூடப் பெற்றோம் என்கிறார் –

தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–10-6-6-

தலை மேலே தாளிணைகள் தாமரைக் கண் என் அம்மான்–அவன் திருவடிகள் என் தலை மேல் இரா நின்றன –
அத்தாலே வந்த உகப்பு தன்னைத்தான் படி தோன்ற தாமரை போலே சிவந்த திருக் கண்களை யுடையனாய் –
என்னைப் பெறாப் பேறாகப் பெற்றானாய்க் கொண்டு எனக்கு ஸ்வாமி யானவனாய் -அவ்வளவு அன்றியே
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்-என் நெஞ்சுக்குள்ளே எப்போதும் நின்ற நிலை பேரானாய்
என் பக்கலிலே நிலை பெறுகையாலே சர்வாதிகனாய் –
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் –எனக்கு உபகரிக்கைக்காக மலை போலே இருக்கிற மாடங்களை யுடைய
வாட்டாற்றிலே திரு அரவணையின் மேலே
மதம் மிக்க கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே–மதத்தால் மிக்கு கொலையில் உபயுக்தமான
குவலயா பீடத்தை சுருங்க பங்கம் பண்ணினால் போலே
என் அனுபவ விரோதியை அழித்தவனுடைய வீரக் கழலில் த்வனியை யுடைய திருவடிகளை கூடப் பெற்றோம் –

—————————————————————-

அநந்தரம் -தான் ஸம்ஸ்லேஷித்ததுக்கு அடையாளம் தோன்றும்படி ஆஸ்ரித ஸூலபனான
ஸ்ரீ கிருஷ்ணன் தான் என் நெஞ்சிலே பூர்ணமாக இருந்தான் என்கிறார் –

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–10-6-7-

குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்–விலக்ஷணமான திருவடிகளை குறுகப் பெற்றோம் –
நிலை பேரான் -என்கிறபடியே நமக்கு பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணனானவன் பரிபூர்ணமாக
நம் நெஞ்சை குடியிருப்பாக ஸ்வீ கரித்தான் -அத்தாலே
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன–திரைகள் திரளத் திரண்ட கடலால் பரிசரத்திலே சூழப்பட்டு
தென்னாட்டுக்குத் திலகம் போல் இருப்பதாய்
வரை குழுவு மணி மாடம் வாட்டாற்றான் மலர் அடி மேல்-மலைகள் திரள இருந்தால் போலே இருக்கிற மணிமயமான
மாடங்களையுடைய திரு வாட்டாற்றிலே எழுந்து அருளி இருக்கிறவனுடைய
விகசித பத்மம் போலே நிரதிசய போக்யமான திருவடிகளின் மேலே
விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே–பரிமலங்கள் திரண்டு கமழுகிற திருத் துழாயானது
என் சரீரத்தில் ஸ்த்திரமாகா நின்றது -கமழும் -கந்தியா நின்றது

—————————————————————————-

அநந்தரம் -நிரதிசய போக்யமான திவ்ய வடிவோடே என் நெஞ்சிலே புகுந்து உஜ்வலன் ஆகைக்கு
அவனுக்கு என்ன நன்மை செய்தேன் என்கிறார் –

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது புனல்
மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–10-6-8-

மெய்ந்நின்ற கமழ் துளவ விரை ஏறு திரு முடியன்–திரு மேனி முழுக்க நின்று பரிமளத்தைப் பண்ணுகிற
திருத் துழாயினுடைய ஸுந்தர்யம் அதிசயித்து வருகிற திரு முடியை யுடையனாய்
கைந்நின்ற சக்கரத்தன் கருதுமிடம் பொருது –திரு உள்ளத்தில் நினைத்த இடத்திலே போய் பொருது மீண்டு
திருக் கையிலே நின்ற திருவாழியை யுடையனாய்
புனல் மைந்நின்ற வரை போலும் திரு உருவ வாட்டாற்றாற்கு–சமுத்திர ஜாலம் போலே ஸ்த்திரமான கருமையை யுடைத்தான
மலை போலே திவ்ய உரு மிக்க அழகிய திவ்ய வடிவை யுடையனாய்க் கொண்டு
திரு வாட்டாற்றிலே ஸூல பனானவனுக்கு
எந்நன்றி செய்தேனோ என்நெஞ்சில் திகழ்வதுவே–பிராணன் ஒரு தலையாக அடிமை செய்த பெரிய யுடையாரைப் போலேயும்
திருவடியைப் போலேயும் என்ன நன்மை தனக்குச் செய்தேனாக
என் நெஞ்சிலே புகுந்து உஜ்ஜவலன் ஆகிறது –

—————————————————–

அநந்தரம் -ஸ்ரீ யபதியாய்க் கொண்டு திரு வாட்டாற்றிலே நின்றவன் என் நெஞ்சை ஒரு காலும் பிரிகிறிலன்-என்கிறார் –

திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–10-6-9-

திகழ்கின்ற திரு மார்வில் திரு மங்கை தன்னோடும்–ஸ்வாபாவிகமாக விளங்குகிற திரு மார்பில்
நித்ய யவ்வன ஸ்வ பாவையான ஸ்ரீ மஹா லஷ்மி பிராட்டியாரோடே கூட
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தண் வாட்டாறு–விளங்குகிற ஸ்ரீ யபதியானவன் தான் நித்ய வாசம்
பண்ணுகிற இடம் ஸ்ரமஹரமான திரு வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்–சேஷத்வ கீர்த்திக்கு வாஸஸ் ஸ்தானமான
பெரிய திருவடியை நடத்துவானாய் –
இவ்வாஹன பலத்தால் யுத்த உத்தபலரான ராக்ஷஸருடைய திரளை நசிப்பித்தவன்
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே–ஹேயமான என் நெஞ்சிலே ஒரு க்ஷணமும் இன்றியே
சர்வகாலமும் பிரிகிறிலன் –

————————————————–

அநந்தரம் பெரியவர்கள் எதிர்தலையிலே சிறுமை பாராதே தம் தரத்தில் உபகரிப்பார் என்னும்
இத்தை எனக்கு பிரகாசிப்பித்தான் என்கிறார்

பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் காட்டினனே-10-6-10-

பிரியாது ஆட்செய்து என்று பிறப்பறுத்து ஆள் அறக் கொண்டான்-யாவதாத்மபாவி பிரியாதே அடிமை செய் என்று சொல்லி
அதுக்கு விரோதியான ஜென்ம சம்பந்தத்தை அறுத்து மிகவும் அடிமை கொண்டவனாய்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று–பெற்ற தமப்பனாலே ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் ஈடுபட்ட அன்று
ஸ்ரீ நரஸிம்ஹமாய் ஹிரண்யனுடைய சரீரத்தை பிளந்தவனாய்
வரி வாள்வாய் அரவணை மேல் வாட்டற்றான் -வரியையும் ஒளியையும் யுடைத்தாய் பஹு முகமான திரு அரவணையின் மேலே
திரு வாட்டாற்றிலே கண் வளர்ந்து அருளுகிறவன்
பெரியார்க்கு ஆட்பட்டக் கால் பெறாத பயன் பெறுமாறு காட்டினனே-பெரியவர்களுக்கு அடிமைப்பட்டால் பெறுதற்கு அரிதான
பெரும் பிரகாரத்தை காட்டி அருளினான் –

—————————————————–

அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக இத்தினுடைய நித்ய ஸூரி போக்யதையை அருளிச் செய்கிறார் –

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப்பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செஞ்சொல்லே–10-6-11-

காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த–நிரதிசய போக்யமாம்படி சப்த உத்தரமான வீரக் கழலை யுடைய
தன் திருவடிகளைக் காட்டி துஸ் ஸஹமான சம்சார நிரய பிரவேசத்தை ஒழித்த
வாட்டாற்று எம் பெருமானை வளம் குருகூர்ச் சடகோபன்-திரு வாட்டாற்றிலே ஸ்வாமியானவனைப் பற்றி
அழகிய திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாருடைய
பாட்டாய தமிழ் மாலை செவிக்கு இனிய –திருப் பாட்டாய் இருக்கிற தமிழ்த் தொடையான செவிக்கு மதுரமாய்
ஆயிரத்துள் இப்பத்தும் கேட்டு ஆரார் வானவர்கள் செஞ்சொல்லே–கரண த்ரயமும் ஏக ரூபம் ஆகையால் செவ்விய சொல்லாய் இருக்கிற
இவை பத்தையும் நித்ய ஸூரிகள் கேட்டு ஒரு காலும் திருப்தராகார்
இது கலி விருத்தம் -தாழிசை யாகவுமாம் –

———————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-