Archive for May, 2018

ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –407-420 – சரம பர்வ நிஷ்டா-குரோர் உபாயதாஞ்ச பிரகரணம் –ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் / ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்-

May 21, 2018

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது ஆறாவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் /
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் /

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகாரஞ்ச ச வைபவம் (ச -உபாய வைபவமும் இதில் உண்டே )-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது ஒன்பதாவது பிரகரணம்

த்வய அபிபிரேரிதமான – த்வய யுக்த அர்த்த ஞானமும் -தத் உபதேச ஆச்சார்யர் அனுவர்த்தனைத்தையும் அருளிச் செய்து –
அதுக்கு மூல பூதமான பகவத் கிருபை -ஹேதுதா சங்கதி –
நிவர்த்ய ஞானம்–கர்மா அவித்யாதி தோஷங்கள் நினைத்தால் – பய ஹேது /-நிவர்த்தக பகவத் குண அனுசந்தானம் ஞானம்–பயம் கெடுக்கும் ஹேது
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -/ படிக்கட்டுக்கள் அத்வேஷம் தொடங்கி பிராப்தி வரை -நிர்ஹேதுக கிருபையே காரணம் –

ஆறு பிரகரணங்களில் இறுதியான
சரம பர்வ நிஷ்டா பிரகரணம் –

———————————————————

சூரணை-407-

ஸ்வ தந்த்ரனை உபாயமாக தான் பற்றின போது இறே-
இப்ப்ரசங்கம் தான் உள்ளது –

இப்ப்ரபந்தத்தில் -உபக்ரமமே பிடித்து -இவ்வளவாக -சித்த உபாய பூதனான சர்வேஸ்வரனே சேதனருக்கு -பரம புருஷார்த்த லஷணம்-
மேல்படி சித்திக்கு நிரபேஷ சாதனம் என்று அருளிச் செய்து –
உபய பூதனான சர்வேஸ்வரன் கர்ம நிபந்தனமாக சம்ச்கரிப்பிகவும் –
காருண்ய நிபந்தனமாக முக்தன் ஆக்கவும் வல்ல -நிரந்குச ஸ்வ தந்த்ரன் ஆகையாலே –
அவனை உபாயமாக பற்றி இருக்கும் அவர்களுக்கு –
ஸ்வ கர்ம அநு சந்தானத்தாலும் -தத் காருண்ய அநு சந்தானத்தாலும் –
வரும் பய அபயங்கள்- யாவத் ப்ராப்தி மாறி மாறி நடக்கும் படியையும் -தர்சிப்பித்தார் கீழ் –

இனி மேல் –
சாஷாத் நாராயணோ தேவோ க்ருத்வா மர்த்ய மயீம் தநும்-என்றும் –
திரு மா மகள் கொழுநன் தானே குருவாகி -என்று சொல்லுகையாலே –
அந்த சித்த உபாய பகிர்பூதம் அன்றியே -தச் சரம அவதியாய் –
பந்த மோஷங்கள் இரண்டுக்கும் பொதுவாய் இருக்கை அன்றிகே –
மோஷ ஏக ஹேதுவாய் இருக்கையாலே தந் நிஷ்டருக்கு பய பிரசங்கம் இன்றியே –
எப்போதும் ஒக்க நிர்பயராய் கொண்டு இருக்கலாம் படியாய் –
சரம அவதியான ஸ்வரூப ப்ராப்யங்களுக்கு அநு ரூபமான சரம உபாயம் -சதாச்சார்யா அபிமானமே -என்று -சகல வேதாந்த சார வித்தமரான
பூர்வாச்சார்யர்கள்  தங்களுக்கு தஞ்சமாக -அநு சந்தித்தும் -உபதேசித்தும் -போந்த ரஹச்ய அர்த்தத்தை சகலரும் அறிந்து உஜ்ஜீவிகும் படி –
பிரபந்த சேஷத்தாலும் ஸூ ஸ்பஷ்டமாக அருளிச் செய்கிறார் –

அதில் இப்படி பய அபயங்கள் இரண்டும் மாறி மாறி அநு வர்த்தியாமல் –
எப்போதும் ஒக்க நிர்பயனாய் இருக்கலாவதொரு வழி இல்லையோ என்னும்
ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –

அதாவது
கர்ம அநு குணமாக சம்சரிப்பிக்கவும் -காருண்ய அநு குணமாக சம்சார நிவ்ருத்தியைப் பண்ணி –
திருவடிகளில் சேர்த்துக்   கொள்ளவும் வல்ல -நிரந்குச ஸ்வ தந்த்ரனான ஈஸ்வரனை
இஷ்ட அநிஷ்ட பிராப்தி பரிகாரங்களுக்கு உபாயமாகப் பற்றின போது இறே –
யாவத் பிராப்தி பய அபயங்கள் இரண்டும் மாறி மாறி நடக்கும் இப் ப்ரசங்கம் தான் உள்ளது -என்கை-
பரதந்திர ஸ்வரூபனாய்-மோஷ ஏக ஹேதுவான ஆச்சார்யனை உபாயமாகப் பற்றினால் – இப்ப்ரசங்கம் இல்லை –
சதத நிர்பயனாய் இருக்கலாம் என்று கருத்து –
உபாயமாகத்தான் -என்று ஒரு முழு சொல் இத்தனை –

பஞ்சம உபாய நிஷ்டை -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –
நிர்ஹேதுக அங்கீகார விஷய பூதனான -சரம அதிகாரிக்கு சரம ப்ராபகம் ப்ராப்யம் சொல்லி தலைக் கட்டுகிறார்
அதில் முந்துற யாவன் மோக்ஷம் அனுவர்த்திக்கும் பயாபயங்கள்- மாறி மாறி வரும் பயங்களும் அபயங்களும் -ஸ்வ தந்த்ரனை பற்றின போது தானே
பரதந்த்ர சேஷியைப் பற்றினால் உண்டாகாதே -சேராததை சேர்க்கும் சக்தன் -ஆச்சார்யரை பரதந்த்ர சேஷி -ஆக்குவானே
திருவடிகளை பற்றின அன்றே ப்ராப்யம்
பந்தம் மோக்ஷம் இரண்டுக்கும் காரணம் நிரங்குச ஸ்வாதந்த்ரன் -அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமாக இஷ்ட பிராப்தி –
ரக்ஷகன் -சம்சார -தன் நிவர்த்தனம் -அனுசந்தான காரியமே பயமும் அபயமும் -கமன ரூபம் -சித்த விகாரம் அடையும் –
பிரசங்கம் நிரங்குச ஸ்வதந்த்ரனை பற்றும் பொழுது தானே
மோக்ஷ ஏக ஹேது -தன் ஆச்சார்யருக்கு பரதந்த்ரர் -சரம உபாயம் பற்றினால் -கலசாமல் நிர்பயத்வம் மாத்திரமே உள்ளது –

சாஷாத் நாராயணோ தேவோ க்ருத்வா மர்த்ய மயீம் தநும்-தானே மானிடராக –
லோகம் மக்கிப் போக சாஸ்திரம் கை கொண்டே கருணையால் மேலே தூக்குகிறார் –
சாஸ்திரம் ஆகிய கை என்றும் -சாஸ்திரம் பிடித்த மனுஷ்ய ஆச்சார்யர் என்றுமாம்
திரு மா மகள் கொழுநன் தானே குருவாகி —-அருளாள பெருமாள் எம்பெருமானார் –அங்குசம் இட அவள் உண்டே –
அந்த சித்த உபாய பகிர்பூதம் அன்றியே-தனித்து வெளிப்பட்டவர் இல்லையே -பிரபந்தத்துக்கு ஒரே அர்த்தம் -தச் சரம அவதியாய் –இது இருக்குமே
ஆச்சார்யனை உபாயமாகப் பற்றினால்-உபாயாந்தரம் ஆகாதோ என்னில் –சாஸ்த்ர பாணித்வ லிங்கம் -ஆச்சார்ய பகவத் அநந்யத்வம் கண்ட யுக்தம் சித்தம் –
கேவல பகவத் அநந்யத்வம் -ஸ்வா தந்த்ர பயம் -நாராயணன் -மட்டும் இருந்தால் -ஸ்ரீ லஷ்மீ தத் பதிகளுடைய விசேஷ அதிஷ்டானம் ஆச்சார்யர் -சங்கை போக்கி –
பிரதிபத்திக்கு விஷயம் –சித்திர் பவதி நஸம்சய ஆச்சார்யரை பற்றினால் -/ ஆஸந்நத்வாத் அருகில் தயை மட்டும் காட்டி -தத்வ தர்சி -ஏற்றம்
இவரே அவரானால் பயம் கெட காரணம் எது என்னில் -ஸ்தல விசேஷம் –
ராஜா -நிக்ரஹ சங்கல்பம் யுத்த களத்தில் -தர்பார் -அந்தரங்கம் -வேறே அவஸ்தை தானே
பிரமாணம் வைஷம்யம் -வேறு படுத்தி -அவஸ்தா பேதம் -உபபன்னம் ஆகுமே –

உபாயமாகத்தான் -என்று ஒரு முழு சொல் இத்தனை -என்றது -தான் உபாயமாகப் பற்றியது என்று பிரித்து சொல்ல வில்லை என்றவாறு
சரமாவதியான ஸ்வரூபம் ததீய பர்யந்தம் சேஷத்வம் -சரம -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -சரமாவதியான புருஷார்த்தம் ததீய பர்யந்த கைங்கர்யம்
ஆச்சார்ய அபிமானம் -நம்முடைய அபிமானம் -அவரால் அபிமானம் -மூன்றாம் ஆறாம் வேற்றுமை உருபுகள்
பிரதானம் -அவர் நம்மை அபிமானிப்பதே -கர்மத்வமே விலக்ஷணம் -குருவால் அபிமானிக்கப்படுகிறானோ -ஸ்ரேஷ்டம் என்றவாறு –

———————————————–

சூரணை -408-

உண்டபோது ஒருவார்த்தையும் –
உண்ணாத போது ஒரு வார்த்தையும் –
சொல்லுவார் பத்து பேர் உண்டு இறே –
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று
இவ்வர்த்தம் அறுதி இடுவது —

பிரமாணாத் பிரமேய நிச்சயம் பண்ண வேணும் இறே -இவ் அர்த்தம் என் கொண்டு
நிச்சயிக்கக் கடவோம் என்னும் ஆ காங்ஷையிலே -அருளி செய்கிறார் –

மயர்வற மதி நலம் அருளப் பெற்று -பகவத் அனுபவ  ஏக தாரகராய் இருக்கும் ஆழ்வார்களுக்கு –( உண்ணும் சோறு -எல்லாம் கண்ணன் )
உண்ட போதும் உண்ணாத போதும் ஆவன -பகவத் அனுபவ தத் லாப அலாபங்கள் –
அதில் பகவத் அனுபவம் பண்ணி ஹ்ருஷ்டரான போது -தத் தாஸ்ய விருத்தி காம தயா -ததீய தாஸ்யத்தில் ஊன்றி –
பயிலும் பிறப்பிடை தோறும் எம்மை ஆளும் பரமர் –
நாளும் பிறப்பிடை தோறும் எம்மை ஆளுடை நாதர் –
வருமையும் இம்மையும் நம்மை ஆளும் பிராக்கள் –
சலிப்பின்று ஆண்டு எம்மை சன்ம சன்மம் தோறும் காப்பர் –
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பர் –
எம் பல் பிறப்பிடை தோறும் எம் தொழு குலம் தாங்கள் –
அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரியவே -செந்தாமரை கண் திருக் குறளன்
நறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் உறுமோ பாவியேனுக்கு-என்றும் –
ஆர் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே –
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகரே-
நச்சித் தொழுவாரை நச்சு என்றன் நன்நெஞ்சே-
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே –
கண்ணாரக் கண்டு உருகி கையாரத் தொழுவாரை கருதும் கால் உண்ணாது வெம் கூற்றம் ஓவாத பாவங்கள் சேராவே -என்றும் –
ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயனாவதே –
தொண்டர் அடிப் பொடி ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவதே –
இன்புறும் தொண்டர் சேவடி ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே -என்றும்
இத்யாதிகளாலே தத் விஷயத்திலும் காட்டில் ததீயரே நமக்கு சேஷிகளும்-உபாய உபேய பூதரும் என்று அத்ய ஆதரத்தை பண்ணிப் பேசுவது –

பகவத் அனுபவ  அலாப க்லிஷ்டர் ஆனபோது -அப்படி பரம சேஷிகளும் பரம பிராப்ய பிராபக
பூதருமான ததீயர் சந்நிஹிதருமாய் இருந்தாலும்-
( திருமங்கை ஆழ்வாரும் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் கூட இருந்து இருப்பாரே அருள் மாரி பெயர் –
திரு மழிசை ஆழ்வாரும் முதல் ஆழ்வாரும் ஒரே காலம் ) -அவர்கள் பக்கல் நெஞ்சு செல்லாமல் –
பகவத் விஷயமே பிராப்யமும் பிராபகமுமாய் நினைத்து-
காண வாராய் –
காணுமாறு அருளாய் –
வரிகொள் வெஞ்சிலை வளைவித்த மைந்தனும் வந்திலன் என் செய்கேன் -( பெரிய திருமொழி -8–5-அழுகை -திருவாயமொழி -8-5-போலவே )
வெஞ்சமத்து அடு சரம் துரந்த வெம்மடிகளும் வாரானால் –
வாஸூதேவா உன்  வரவு பார்த்து –வார் மணல் குன்றில் புலர நின்றேன்-( இது ஊடல் -மற்றவை அலற்றுவது )
என்று இத்யாதிகளால் -ஆர்த்தி பரவசராய் –
அலற்று வது
ஊடுவது –
வெஞ்சிறைப் புள் – (வெறுப்பது )
உங்களோடு எங்கள் இடை இல்லை -(உதறுவது)
இத்யாதிகளாலே –
வெறுப்பது
உதறுவது
ஆகையாலே -உண்டபோது ஒருவார்த்தையும் –
உண்ணாத போது ஒரு வார்த்தையும் -சொல்லுவார் என்கிறார் –

ஆழ்வார்கள் எல்லாரும் ஏக பிரக்ருதிகளாய்-ஏக கண்டராய் இருக்கையாலே –
பத்துப் பேர் உண்டு இறே -என்கிறார் –
அவர்கள் பாசுரம் கொண்டு அன்று இவ்வர்த்தம் அறுதி இடுவது -என்றது –
மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்கள் ஆகையாலே பிரதம பர்வத்தில் காட்டில்
சரம பர்வத்துக்கு உள்ள தன்னேற்றம் அடையத் தெளியக் கண்டு பேசினார்களே ஆகிலும் –
சரம பர்வ ஏக நிஷ்டர் அன்றியே -பிரதம பர்வதத்திலே மண்டி –
தத் அனுபவ ஹ்ருஷ்டரான போது ஒன்றைச் சொல்லுவது –
தத் அலாப க்லிஷ்டரான போது ஒன்றைச் சொல்லுவதாய்-
ஒருபடி பாடர் அல்லாதவர்கள் பாசுரம் கொண்டு அன்று –
ஆச்சார்யனே உபாயம் என்று இவ் அர்த்த நிச்சயம் பண்ணுவது -என்கை –

பகவத் அனுபவத்தால் மகிழ்ந்தும் -இல்லாவிடில் வருந்தியும் / அன்றிக்கே பாகவத அனுபவமே உணவு -என்றுமாம் –
பர தந்த்ர சேஷியை உபாயமாக –நிஷ்டை உள்ளவர்களை கொண்டே நிர்ணயிக்க வேண்டும் இந்த சரம பர்வ நிஷ்டை
ஓவாத உன் -பகவத் விக்கிரக அனுபவம் -ஜெனித ஹர்ஷ -உந்த கர்வம்
இனி யாவர் நிகர் அகல் வானத்தே -மாறுளதோ இம் மண்ணின் மிசையே -பகவத் அனுபவ ஜெனித ஹர்ஷ ப்ரகர்ஷ கர்விதமான வார்த்தை
உண்ணும் நாள் இல்லை -பாஹ்ய சம்ச்லேஷ அலாபத்தால் -மானஸ அனுபவம் முதல் பாசுரத்தில் உண்டே /
விக்ரஹ அனுபவம் பெறாத போது -ஒருத்தி மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால் /
உன் வாய் அலகில் இன் அடிசில் வைப்பாரை நாடாயே-பெரிய திருமலை நம்பி -சாயலோடு – மாமை தளர்ந்தேன் -திரை விலக்கி-அருளிச் செய்தார் /
சோக பிரகர்ஷம் இது -கத்கதம் நா தழுதழுத்தது பேசுவார்கள் – மாற்றி மாற்றி சொல்லுவார் பத்து பேரும்
நாகணை மிசை நம்பிரான் சரணே சரண் -பிரதம பரவ நிஷ்டர் -தெளிவாக உள்ளவர்கள் பாசுரம் கொண்டா இந்த ஆச்சார்யர் நிஷ்டை சொல்வது
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே – தனக்கே யாக என்னைக் கொள்ளுமீதே- உன் தீர்த்த அடிமைக்கு குற்றேவல் செய்து –
ஸ்வ தந்த்ர பகவத் விஷயமே உபாய உபேயம் அறுதியிட்டு -சோக ஹர்ஷ கலப்பனான பாசுரங்கள் கொண்டு –
சதாசார்யர் திருவடிகளே உபாய உபேயம் அறுதியிட்டு -சம்சயம் விபர்யயம் இல்லாமல் சொல்ல முடியாதே

—————————————-

சூரணை -409-

அவர்களை
சிரித்து இருப்பார்
ஒருவர் உண்டு இறே –
அவர் பாசுரம் கொண்டு –
இவ்வர்த்தம் அறுதி இடக் கடவோம் –

பின்னை யார் பாசுரம் கொண்டு அறுதி இடுவது என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
மேவினேன் அவன் பொன்னடி -தேவு மற்று அறியேன் -என்று –
ஸ்வ ஆசார்யாரான ஆழ்வார் திருவடிகளைப் பிராப்யமும் பிராபகமுமாய்
புரை அறப்பற்றி -அவிதித  அந்ய தேவதராய் –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன் -என்று தத் சங்கீர்த்த ஆநந்த நிர்பரராய்-
அடியேன் சதிர்த்தேன் -என்று உறுவது அறிந்து பற்றின சதுரராய் -இருக்கையாலே –
சரமபர்வத்தில் ஏற்றம் அறிந்து பேசா நிற்கச் செய்தே -தத் ஏக நிஷ்டர் அன்றியே –
பிரதம பர்வத்தில் மண்டி -தத் வைலஷண பரவசராய் -உண்டபோது ஒருவார்த்தையும் –
உண்ணாத போது ஒருவார்த்தையும் -சொல்லுகிற ஆழ்வார்கள் பதின்மரையும் –
அடியிலே ஒரு ஆசார்யன் திருவடிகளைப் பற்றி அநவரத ஸூகிகளாய் இருக்கப் பெறாதே –
ஸ்வ வை லஷண்யத்தாலே பிச்சேற்றும் பகவத் விஷயத்திலே முந்துற முன்னம் இழிந்து –
தத் அனுபவ தசையில் ஒன்றைச் சொல்லுவது –
தத் அலாப தசையில் ஒன்றைச் சொல்லுவதாய் –
இவர்கள் படுகிற பாடு என் என்று -பரிஹசித்து இருக்கும் ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் ஒருவர்
உண்டு இறே –
சரம பர்வ நிஷ்டராய் -சதைக ரூப வசனரான இவருடைய பாசுரமான –
கண்ணி நுண் சிறுத்தாம்பை கொண்டு -இவ்வர்த்த த்தை சம்சய விபர்யய கந்தம் அற
நிச்சயிக்கக் கடவோம் -என்கை –

அதவா –
உண்டபோது -இத்யாதிக்கு பகவத் அனுபவம் பண்ணின போது –
உண்டு களித்தேற்க்கு உம்பர் என் குறை –
யாவர் நிகர் அகல் வானத்தே –
மாறுளதோ இம்மண்ணின் மிசை -என்று
இப்படி பகவத் அனுபவ ஜனித ஹர்ஷ ப்ரகர்ஷ கர்விதமான ஒரு வார்த்தையும் –
தத் அனுபவம் பெறாத போது –
மதி எல்லாம் உள் கலங்கி மயங்குமால்-
சாயலோடு மணிமாமை தளர்ந்தேன் நான் –
காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து –
தீயோடு உடன் சேர் மெழுகாய் உலகில் திரிவேனோ -என்று இப்படி
சோக வேக ஜனிதமான ஒருவார்த்தையும்
சொல்லுவார் ஒருவர் இருவர் அன்றிக்கே-பத்து பேர் உண்டு இறே –
ததீயரே சேஷிகளும் -உபாய உபேய பூதரும் என்று அறிந்து இருக்கச் செய்தே –
தத் அநு குணமாக நிற்க மாட்டாமல் -பகவத் விஷய வைலக்ஷண்ய   பரவசராய் -இப்படி
உண்ட போது ஒரு வார்த்தை
சொல்லுகிறவர்கள் உக்தி கொண்டு அன்று –
ஸ்வ ஆச்சார்ய சரண யுகளமே உபாயம் என்கிற இப் பரமார்த்த நிர்ணயம் பண்ணுமது
அவர் திருவடிகளையே தனக்கு தஞ்சமாகப் பற்றி -தேவு மற்று அறியேன் -என்று இருக்கையாலே –
பிரதம பர்வதத்திலே மண்டி ஹர்ஷ சோக பரவசராய் பேசுகிறவர்களை
பரிஹசித்து இருப்பார் ஒருவர் உண்டு இறே -அப்படி இருந்துள்ள
ஸ்ரீ மதுரகவிகள் திவ்ய ஸூக்தியை கொண்டு இவ்வர்த்தம் நிச்சயம் பண்ணக் கடவோம்
என்று இங்கனே யோஜிக்கவுமாம்-

இள நெஞ்சரைப் பார்த்து சிரித்து -ஹர்ஷை ஏக ஹேது சரம விஷயத்தை பற்றி –
சுகித்து இருக்க மாட்டாமல் -சோகம் ஹர்ஷம் இரண்டுக்கும் ஸ்வ தந்த்ரனைப் பற்றி
இவர்கள் படுகிற பாட்டைக் கண்டு -மேவினேன் அவன் பொன்னடி -விஸ்லேஷ கந்தம் இல்லாமல் –இறந்த காலம் –
நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்-இன்பம் மிக்கு ஆழ்வாருடைய உபாய உபேயம் திருவடிகளே பற்றி நிஸ்ஸலந சிந்தையாக –
பாதுகையை சிரஸா வகித்து -ஸ்வாமியை பார்த்து -நீர் தரிக்கும் கிரீடம் உயர்ந்ததா என் தலையில் உள்ளது நன்றாக உள்ளதா -/
கண்ணன் திருவடி தலையில் வைத்தவரை பார்த்து -சிரித்தால்
இது அபசாரம் ஆகாதோ என்ன ஆச்சார்யர் ப்ரீதி வளர்க்கும் -அபசாரமாக தலைக் கட்டாது இவர் சிரிப்பு –
பிரேம அதிசயத்துக்கு போக்கு வீடாக -தத்- பக்தி வல்லி- பூத்த பூவாகவே இவருக்கு முக்கிய ஆபரணம்

—————————————————

சூரணை -410-

ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும்
சேர்ந்து இருக்க வேணும்
இறே பிராபகம் –

இப்படி பிரமாண சித்தமான அர்த்தத்தை உப பத்தியாலே ( உபபத்தி -வஸ்து சாமர்த்தியம் )
ஸ்தீரீகரிக்கிறார் மேல் –

அகாரம் ஆச்சார்யர் -என்று கொண்டு ஓங்காரத்திலே அர்த்தம் கொண்டு சரம பர்வ —
சாஷான் நாராயண தேவ -அவனே ஆச்சார்யராக அவதரித்து -இதுக்கு சுருக்கமே அகார வாச்யன் –
நமஸ் -நேராகவே அர்த்தம் கொள்ளலாம் –
மகாரம் -ஆச்சார்யருக்கு சேஷன் -இப்படி ஓங்காரத்தாலே -சரம பர்வ நிஷ்டை –
நமஸ் அர்த்தம் நயனம் பண்ணி -ஆச்சார்ய கைங்கர்யத்துக்கு ஆச்சார்யர் உபாயம்-

ஸ்வரூப உபாய புருஷார்த்தங்களை நிஷ்கரிஷிக்கும்  அளவில் -பிரதமம் ஸ்வரூபத்தை
உள்ளபடி நிஷ்கரிஷித்து -அநந்தரம்-பிராப்யத்தை தத் அநு ரூபமாக நிஷ்கரிஷித்து –
பிராபகத்தை தத் உபய அநு ரூபமாக நிஷ்கரிஷிக்க வேணும் இறே –
வ்யுத்புத்தி தசையிலும் -உபேயம் முற்பட்டு -உபாயம் பிற்பட்டு இருக்கும் –
அனுஷ்டான தசையில் மாறாடி இருக்கும் -(பறை தருவான் –புருஷார்த்தம் முதலில் சொல்லி /
தருவான் பறை -கறவைகள் சிற்றம் சிறுகாலை போலே /
அன்னம் புருஷார்த்தம் – மனுஷ்யன் ஸ்வரூபம் அறிந்து கிருஷி பண்ண வேண்டுமே )
ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும் சேராமையால் இறே உபாயாந்தரத்தை
பரித்யஜித்தது –
ஆகையாலே -ஸ்வரூபத்துக்கும் பிராப்யத்துக்கும் சேர்ந்து இருக்க வேணும் இறே-
என்கிறார் -( உபாயாந்தரம் விட்டது -ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேராதே -ஸ்வாதந்தர்யம்-ஸ்வாரத்ததை இல்லாமல் )

இனி ஸ்வரூபம் தன்னை நிரூபித்தால் -ஞான ஆனந்தங்களும் புற இதழ்  என்னும்படி –
பகவத் அனந்யார்க்க சேஷத்வமே  வடிவாய் -அதனுடைய யாதாத்ம்யம் தச் சேஷத்வமும்
புற இதழ் என்னும்படி ததீய சேஷத்வமே வடிவாய் இறே இருப்பது –
ஏவம் பூத ஸ்வரூப அநு ரூபமான ப்ராப்யத்தை நிரூபித்தால் -தத் கைங்கர்யம்
பிரதம அவதியாய் -ததீய கைங்கர்யம் சரம அவதியாய் இருக்கும் –
ஸ்வரூப பிராப்ய வேஷம் இது ஆகையாலே -தத் உபய அநு குணமான
பிராபகம் ததீயரே யாக வேண்டி இறே இருப்பது -இனி அந்த ததீயரில் வைத்து கொண்டு –
முதலடியில் தன்னை அங்கீகரித்து –
தத்வ ஞான பிரதானத்தை பண்ணின மகா உபகாரனான ஸ்வ ஆசார்யருக்கே
சேஷமாய் இருக்கை -சமஸ்த பாகவதருடைய உகப்புமாய் -தந்
ஸ்வரூபத்தின் உடைய எல்லை நிலமுமாய் இருக்கும் –
இந்த ஸ்வரூபத்துக்கு அநு ரூபமான பிராப்யமும் ஸ்வ ஆச்சார்யன் திருவடிகளில் பண்ணும்
கைங்கர்யமுமாய் இருக்கும் –
இப்படி ஸ்வரூப பிராப்யங்களாய் ஆன  இவை இரண்டுக்கும் சத்ருசமான
பிராபகம் ஸ்வ ஆச்சார்ய சரண யுகளுமாய் வேணும் -என்கை –
இதுவே ஸ்வரூப பிராப்யங்களுக்கு சேர்ந்த உபாயம் என்கையால் –
ஈஸ்வர ஸ்வா தந்த்ர்ய பீத்யா நிர்பயத்வத்தை பற்ற இதில் போந்த அளவல்ல –
முக்கய உபாயம் இதுவே என்னும் இடம் சம்ப்ரதிபன்னம் இறே —

பிரதம -மத்யம -சரம -தசை என்பது கரும்பின் கணைகள் போலே ஒரே வியக்தியில் வரும் அவஸ்தா விசேஷங்கள் –
சிஷ்ய கர்த்ருகத்வம் – ஆச்சார்ய கர்த்ருகத்வம் -இரண்டும் கொண்டே ஆச்சார்ய அபிமானம் -என்றால்
ஆச்சார்யர் இடம் அபிமானம் என்றும் ஆச்சார்யரது அபிமானம் என்றுமாம் –
அவர் அபிமானம் உபாயம்-பஞ்சம உபாய நிஷ்டை இது – -மூன்றாவது நிலை -ஸ்வரூபம் முதலில் அறிந்து –
அடுத்து புருஷார்த்தம் அறிவது இரண்டாவது நிலை /
பகவத் சேஷத்வம் ஸ்வரூபம் என்றும் பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்றும் அறிந்து இதுக்கு பகவத் திருவடிகள் உபாயம் என்பது முதல் நிலை –
பாகவத சேஷத்வம் ஸ்வரூபம் -பாகவத கைங்கர்யம் புருஷார்த்தம் -பாகவதர் திருவடிகள் உபாயம் நடு நிலை -இங்கு பாகவதர் பொது சொல் -இதுக்கு மேலே
ஆச்சார்ய சேஷத்வம் ஸ்வரூபம் -ஆச்சார்யர் கைங்கர்யம் புருஷார்த்தம் -ஆச்சார்யர் அபிமானம் உபாயம் சரம நிலை -ஆகுமே /
அடிப்பாகம் -கணை மேல் மேல் போலே கரும்பின் ஒரே விஷயமே இது –
சித்த உபாயம் முதல் பிரகரணம் -சரம பரவ ஆச்சார்ய அபிமானமே உபாயம் இதில் -அருளிச் செய்கிறார் –

ஆச்சார்யர் தத் சத்ருசகர் உகக்கும் படி சிரித்து இருக்கும் இவர் சொன்ன -நம்பிக்கு ஆள் உரியனாய் -ஸ்வரூபம் -ஆச்சார்ய ஏக சேஷத்வம் –
பீதியால் இல்லை -இது தான் யாதாத்ம்யம் -நம்பிக்கு ஆள் புக்க காதல் அடிமை பயன் அன்றே -ஸ்வரூப அனுரூப பிராப்தி -ஆச்சார்ய கைங்கர்யம் தானே புருஷார்த்தம்
மேவுனேன் அவன் பொன்னடி-ஸ்வரூப பிராப்பியங்களுக்கும் நடுவில் -உபய மத்யஸ்ய -உபாயம் -ஆச்சார்ய அபிமானம்
மூன்றுமே தத்வம் ஹிதம் புருஷார்த்தம் -அவர் பாசுரத்தில் இருந்து –
ஸ்வரூபம் சரம சேஷிக்கு சேஷம்/தத் கைங்கர்யமேச ரம ப்ராப்யம் சரம ஞான விவசாயம் உறுதி பிறந்தால் -சரம சேஷி உபாயம் ஆகா விட்டால் சேராச் சேர்த்தி ஆகுமே /
பிரதம சேஷத்வம் -பாகவத சேஷத்வத்துக்கு சென்று சரம சேஷத்வம் சென்ற பின்பு பகவத் ஆச்சார்ய -இரண்டையும்-முக்கியமாக -பிடித்துக் கொண்டு இருப்பது சேராதே
பிரதம நமசிலே –திருமந்திர மத்யமாம் பதம் -அடியேன் எனக்கு உரியேன் அல்லேன் – -த்வய நமஸ் / பிரதம த்ருதீய அக்ஷரம்
-லுப்த சதுர்த்தியால் –அகாரம் ஆச்சார்யர் -மகாரம் சிஷ்யன் சேஷன் -ஆய -ஆச்சார்யருக்கு கைங்கர்யம் சொன்னால் தான் இடைப்பட்ட நமஸ் பொருந்தும் /

சித்த உபாய ஸ்வீ காரம் அபிமதம் -ஆச்சார்ய அபிமானம் -அத்யந்த அபிமதம்–அதிகார பேதம் -விதி நிஷேதங்கள் அதிகாரி பேதத்தால் –
பய அபயங்கள் மாறி மாறி நடக்கும் -பகவானைப் பற்றினால் -இது முக்கிய காரணம் இல்லை –
ஸ்ரீ வரதராஜ ஸ்த்வம் – பரிஜன –பரம பதம் –ஆத்மதேகம் -வரத சகலமும் பக்தருக்காக -ஜிதந்த்தே-பக்தானாம் —
உன் அடியார்க்கு என் செய்வன் என்றே இருத்தி நீ –தர்மம் பிரகாரம் -அவர் திரு உள்ளபடி செயல்பட வேண்டுமே –
அதே தர்ம ஸ்வரூபம் அடியேனுக்கும் உண்டே -சகல மேது ஸம்ஸரித்தார்த்தம் ஜகர்த்த —
ஸ்வ இதர –தன்னைத் தவிர மற்றவர்களுக்கு -சேதன தர்மி ஸ்வரூபம் –
அவன் திரு உள்ளபடியே நடப்பது -நித்ய பிரகாரம் ஆதேயம் சேஷம் -அந்தரங்க நிரூபகம்-
ஆச்சார்ய அபிமானம் -வித்து மரம் பிரணவம் அனைத்தும் போலே சகலமும் சித்தம் –
சரம அவதி நிரதிசய ப்ரீதி ஹேதுத்வம் –

—————————————————–

சூரணை -411-

வடுக நம்பி
ஆழ்வானையும்
ஆண்டானையும்
இருகரையர்
என்பர் —

இவ் அர்த்த விஷயமாக ஓர் ஐதிஹ்யத்தை அருளிச் செய்கிறார் மேல் –

தத் உபய விபரீத பிரபாகந்தர பரிக்ரகம் -பகவானை பற்றி பகவானை அடைவது -சரம நிஷ்டருக்கு அநபிமதம் –
திருப் பவித்ரமான கூரத் தாழ்வானையும் -திரி தண்டமான ஆண்டானையும் –

அதாவது ஆழ்வார் திருவடிகளில் ஸ்ரீ மதுரகவிகள் இருந்தால் போலே
பிராப்ய பிராபகங்கள் இரண்டும் எம்பெருமானார் திருவடிகளே என்று பிரதிபத்தி பண்ணி –
தேவு மற்று அறியேன் -என்று இருக்கும் வடுக நம்பி -( உம்மை ஒழிய மற்று ஒரு தெய்வம் அறியா வடுக நம்பி )
எம்பெருமானாருக்கு நிழலும் அடி தாறும் போலே அவிநா பூதராய்-
ராமானுஜச்ய சரணவ் சரணம் ப்ரபத்யே –
ராமாநுஜார்ய வசக பரிவர்த்திஷீய (பரிசரணம் -பரிகைங்கர்யம் என்றபடி- அழகர் இடம் பிரார்த்தனை ) -என்று
உபாய உபேயங்கள் அவர் திருவடிகளும் -அத் திருவடிகளில் பண்ணும் கைங்கர்யம் என்று இருக்கும் கூரத் ஆழ்வானையும் –
தாத்ருசரான முதலி ஆண்டானையும் –
சம்சாரத்தில் இருப்பில் அடிக் கொதிப்பால் வந்த ஆர்த்தியின் மிகுதியாலே கலங்கி -காதாசித்கமாக பெருமாள் பக்கலிலும் சென்று பல் காட்டுவது –
தத் வை லஷண்யம் கண்ட வாறே பிரவணராய்ப் போருவதாம் இவ்வளவைக் கொண்டு –
(ஆழ்வார்கள் போலே பிரசுரம் இல்லை -எப்போதும் இல்லை எப்போதோ என்றபடி -வடுக நம்பி நிஷ்டைக்கு உயர்த்தி சொல்ல வந்தது )
எம்பெருமானார் திருவடிகளே பிராப்யமும் பிராபகமும் ஆனால் -தேவுமற்று அறியேன் -என்று இருக்க வேண்டாவோ –
அங்கன் இன்றிகே -சரம அவதியிலும் பிரதம அவதியிலும் கை வைத்து நிற்கிறவர்கள் -இரு கரையர் என்று அருளிச் செய்வர் -என்றபடி —
(அர்வாஞ்சோ–ஆழ்வான் சம்பந்தத்தால் உகந்த எம்பெருமானார் –
ஆஸ்ரய தோஷம் இல்லை -விஷய தோஷம் -என்பதால் இவர்கள் இடம் குறை இல்லை -விஷய தோஷமே தத் விஷய வை லக்ஷண்யம்
கண்ணி நுண் சிறு தாம்பில் கட்டுண்ணப் பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்-தடுமாறி மீண்டார் இ றே ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் )

——————————————–

சூரணை -412-

பிராப்யத்துக்கு பிரதம பர்வம் -ஆச்சார்ய கைங்கர்யம் –
மத்யம பர்வம் -பகவத் கைங்கர்யம் –
சரம பர்வம் -பாகவத கைங்கர்யம் —

ஆச்சார்ய பகவத் பாகவத விஷய கைங்கர்யம் இல்லை -ஆச்சார்ய பகவத் பாகவத ப்ரீதி விஷய கைங்கர்யம் என்றபடி –

ஸ்வரூபத்துக்கும் ப்ராப்யத்துக்கும் சேர்ந்து இருக்க வேணும் இறே- என்கிற இடத்தில் ஸ்வரூபத்தை ஒரு வழியால் இசைந்து –
பகவத் கைங்கர்யம் அன்றோ பிராப்யம் -பிராப்யத்துக்கு சத்ருசமாக வேணும் என்றபடி எங்கனே என்பாருடைய சங்கையை பரிகரிக்கைக்காக
பிரதமம் பிராப்ய வேஷத்தை யோட வைத்துக் காட்டுகிறார் –

பகவத் பாகவத ஆச்சார்ய விஷய கைங்கர்ய த்ரயம் -ஸ்வரூபம் -ஞான பரிபக்குவமாக – பர்வம் அம்சம் பகுதி –
எண்ணெய் சுத்தி கரிப்பு நிலை -தார் – -டீசல் பெட்ரோல் -போலேயும் -கரி வைரம் போலேயும்-
பிரதம -மத்யம அம்சம் -சரம அம்சம் -மாறாடி அர்த்தம் -பகவத் கைங்கர்யம் பாகவத கைங்கர்யத்தில் மூட்டும்
அது ஆச்சார்ய கைங்கர்யத்தை நிலை நிறுத்தும்
பகவத் கைங்கர்யம் பாகவத கைங்கர்யம் ஆகாதே மக்கள் சேவை ஆகாதே மகேசன் சேவை
சாமான்யமான பாகவத கைங்கர்யத்தில் விசேஷமான ஆச்சார்ய கைங்கர்யம் ஆகாது –
ஆச்சார்ய கைங்கர்யத்தில் இவை இரண்டுமே சேரும் –
பகவத் கைங்கர்யம் கை விட்டால் பாகவதர் ஆச்சார்யர்கள் கை கொள்ளார்கள்
ஆச்சார்ய பாகவத ப்ரீதி வளர்க்கும் பாகவத கைங்கர்யம்
மூன்றும் பண்ண வேண்டும் -முற்றிய நிலை அது -ஆச்சார்ய கைங்கர்யம் முப்புரி போலே –
பகவத் கைங்கர்யம் நிரூபாதிகம் -பாகவத ஆச்சர்ய கைங்கர்யம் உபாதி -பகவத் சரீர பூதர் என்று இருப்பர் பிரதம நிஷ்டர்
சத்தா நிபந்தம் என்று பண்ணுவார்
ததியர்-கைங்கர்யம் -உபதேச நிபந்தனை புத்தியால் பண்ணுவார்
சரம நிஷ்டர் சத்தா -இது -ப்ரீதியால் மற்றவை –
கைங்கர்ய த்ரயமும் அவர்ஜனீயம்–பாகற்காய் சாப்பிட்ட பின்பு பால் சாப்பிட்டால் போலே –
பாலும் பழமும் உண்டு ஹரிதா -கடுக்காய் போலே அது
ஞான பரிபாகம் -ரசனை மாறி பர்வ மாறி -ஒன்றில் ஓன்று சாரமாய் – இருக்கும்

பிராப்யமாவது -சேஷத்வ ஏக நிரூபணீயமான ஆத்ம வஸ்துவுக்கு புருஷார்த்தமான கைங்கர்யம் -பர்வ சப்தம் அம்ச வாசி –
இங்கு பிரதம பர்வமாக சொல்லுகிற -ஆச்சார்ய கைங்கர்யம் ஆவது -திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆக்கி -என்கிறபடியே –
முதலடியிலே தன்னை அங்கீகரித்து -பகவத் விஷயத்துக்கு ஆளாகும்படி திருத்தின ஆசார்யனுக்கு உகப்பாக பண்ணும்  பகவத் கைங்கர்யம் –
மத்யம பர்வமாக சொல்லுகிற பகவத் கைங்கர்யமாவது -அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்கிறபடியே –
தான் உகந்தாரை தன் அடியார்க்கு அடிமைப் படுத்தும் பகவானுக்கு உகப்பான -பாகவத கைங்கர்யம் –
சரம பர்வமாக சொல்லுகிற பாகவத கைங்கர்யம் ஆவது -ஆசார்ய பரன் என்று உகக்குமவர்களாய்- ஆச்சார்ய வைபவ ஜ்ஞாபகராய் –
ஆசார்ய கைங்கர்யத்தின் ஏற்றம் அறியுமவர்களான-பாகவதர்கள் எல்லாருக்கும் உகப்பாகப் பண்ணும் ஆச்சார்ய கைங்கர்யம் –
ஆக –
ஆச்சார்ய ப்ரீதி விஷயமான பகவத்  கைங்கர்யத்தை -ஆச்சார்ய கைங்கர்யம் -என்றும் –
பகவத் ப்ரீதி விஷயமான பாகவத கைங்கர்யத்தை -பகவத் கைங்கர்யம் -என்றும் –
பாகவத ப்ரீதி விஷயமான ஆச்சார்ய கைங்கர்யத்தை -பாகவத கைங்கர்யம் -என்றும் -சொல்லிற்று ஆயிற்று –
ஆகையால் –
ஆச்சார்ய கைங்கர்யம் பிராப்யம் என்று சொன்னதில் குறை இல்லை என்று கருத்து –

———————————————————–

சூரணை-413-

ஸ்வரூப பிராப்தியை -சாஸ்திரம் புருஷார்த்தமாக சொல்லா நிற்க –
பிராப்தி பலமாய் கொண்டு -கைங்கர்யம் வருகிறாப்  போலே –
சாத்திய விருத்தியாய் கொண்டு சரம பர்வம் வரக் கடவது —
(ஸ்வரூப பிராப்தி- ஸ்வரூப ஆவிர்பாவம் -அஷ்ட குண சாம்யாபத்தி –அதுக்கு பலம் -ப்ரீதி காரித கைங்கர்யம் தானே-விசேஷ வ்ருத்தி )

இப்படி ஆச்சார்ய கைங்கர்யமே சரம பர்வம் என்று சாஸ்திரம் சொல்லா நிற்கச் செய்தே –
இது வருகிற வழி தான் என்-என்கிற சங்கையிலே -அருளிச் செய்கிறார் –

கந்தல் கழிந்தால் -சேஷத்தவ ஏக நிரூபகம் -இயற்க்கை இதுவே பிராப்திக்கு பலம் – பகவத் கைங்கர்யம் —
வி விருத்தி -வளர்ந்து பாகவத ஆச்சார்ய கைங்கர்யம் வரை வளர்ந்து -ப்ரீதி அதிசய -ராக பிராப்தமாக தன்னடையே வரக்கடவது –
ஸ்வ அசாதாராண ஆகாரத்தினுடைய ஆவிர்பாவ ரூபையான-பிராப்தியே-
அஷ்ட குணங்கள் -ஆவிர்பாவம் -சாதாரணம் -சேதனனுக்கும் பகவானுக்கும் -அசாதாரண ஆகாரம் –
திரோதிகமான இருந்தது -சேதனனுக்கு மட்டும் -பரமாத்மாவுக்கு அதீனமாய்-அவன் அருளி பெற்றதால் –
நித்ய சங்கல்பத்தால் நித்யத்வம் நித்ய ஸூரிகளுக்கு-அருளி -அடங்கி -இரண்டையும் சமன்வயப்படுத்த நித்ய சங்கல்பம் -ஸத்ய சங்கல்பம் -அன்றோ –

அதாவது –
பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேன ரூபேண அபி நிஷ்பத்யதே -என்று
பர பிராப்தி பூர்விகையா யநாதி கர்ம நிபந்தன அசித் சம்பந்த்தாலே –
மலாவ குண்டித மணி பிரபை போலே திரோஹிதமான ஸ்வ அசாதாராண ஆகாரத்தினுடைய ஆவிர்பாவ ரூபையான-பிராப்தியே –
வேதாந்த சாஸ்திரம் புருஷார்த்தமாகச் சொல்லா நிற்க -இப்படி ஆவிர்பூதமான ஸ்வரூபத்தை உடைய ஆத்மா –
சேஷத்வ ஏக நிரூபணீயதயா-சேஷி விஷய கிஞ்சித்காரத்தால் அல்லது செல்லாதபடியாய் இருக்கையாலே –
அந்த ஸ்வரூப பிராப்தி பலமாய் கொண்டு -பகவத் அனுபவ ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யம் வருகிறாப் போலே –
சேஷியான பகவானுக்கு -ஸ்வ விஷய கிஞ்சித்காராத்திலும் –
ஸ்வகீய கிஞ்சித்காரம் உகப்பு ஆகையாலே -அந்த பாகவத கைங்கர்யம் ஆகிற
சாத்தியத்தின் விருத்தி ரூபமாய் கொண்டு மத்யம பர்வமான பாகவத கைங்கர்யம் வரக் கடவதாய்-
அந்த பாகவதர் எல்லார்க்கும் ஸ்வ விஷய கிஞ்சித்காரத்திலும் தனக்கு உபகாரகனான ஆச்சார்ய விஷயத்தில் கிஞ்சித்காரமே உகப்பு ஆகையாலே –
அந்த சாத்தியத்தின் உடைய விசேஷ விருத்தியாய்க் கொண்டு -சரம பர்வமான ஆச்சார்ய கைங்கர்யம் வரக் கடவது -என்கை-

—————————————

சூரணை -414-

இது தான் துர்லபம் –

இந்த சரம பர்வ லாபத்தின் அருமையை தர்சிப்பிக்கிறார் மேல் –

மனசை அடக்குவது துர்லபம் -இந்திரியங்கள் வலிமை -ஸ்ரீ கீதையில் அருளி -மேலே அப்பியாசம் –
தன்னிடம் வைக்கச் சொல்லி -அதே போலே இங்கும் ருசி பிரதிபந்தக ப்ராபல்யத்தாலே துர்லபம் –
தாது அர்த்தம் -அடைவது அருமை -கீழே ஆச்சார்ய கைங்கர்யம் -மத் பக்த பஃதேஷு ப்ரீதி -ஞாபகப்படுத்தி வந்ததால் –
பழக்கத்தால் வந்ததனால் அருமை இருக்காதே -பகவத் கைங்கர்யம் இயற்கை -அதிலே இருந்து இழுத்து கொண்டு நிலை நாட்டியதால் -துர்லபம் –
பகவத் ஸமஸ்த கல்யாண குணங்களே தடங்கல் என்று மேலே அருளிச் செய்கிறார் – பிள்ளை லோகாச்சார்யார்
மா முனிகள் போல்வாருக்கு மட்டுமே பலித்தது
மா முனிகள் திரு வாக்காக பிரதிவாதி பயங்கர அண்ணன்-ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம் அருளி –

—————————————

சூரணை -415-

விஷய பிரவணனுக்கு-அத்தை விட்டு –
பகவத் விஷயத்திலே வருகைக்கு உள்ள அருமை போல் அன்று –
பிரதம பர்வதத்தை விட்டு -சரம பர்வதத்திலே-வருகைக்கு உள்ள அருமை –

இது தன்னை விவரிக்கிறார் மேல் –

ஏக தேசத்திலே சுழி ஆறு படுத்தும் -அநந்தம்-ஸ்திரம் -தோள் கண்டார் தோளே கண்டார் -ஆக்குமே /
அபரிமித போக்கிய தர்மமான ஸ்வரூபம் ரூபம் குணங்கள் உண்டே -தத் கைங்கர்யங்களில் ஆழம்கால் படுத்தும் –
தத் இஷ்ட தமமான ஆச்சார்ய கைங்கர்யம் -துர்லபம்
நிர்தோஷம்-கல்யாண குணங்களுக்கு இருப்பிடம் இங்கு –

அதாவது –
சூத்திர விஷயங்களின் புறப் பூச்சான வைலஷண்யத்தில் ஈடுபட்டு மீட்க ஒண்ணாதபடி அவற்றிலே பிரவணனாய் நின்ற அவனுக்கு –
அவற்றைக் கை விட்டு -வகுத்த விஷயமான பகவத் விஷயத்திலே வருகைக்கு உள்ள அருமை போல் அன்று –
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாரியான -பகவத் விஷய பிரவணனாய் -தத் கைங்கர்ய நிரதனானவனுக்கு
பிரதம பர்வமானவற்றை விட்டு -சரம பர்வமான ஆச்சார்ய கைங்கர்யத்தில் வருகைக்கு உள்ள அருமை -என்றபடி —

————————————

சூரணை -416-

அங்கு தோஷ தர்சனத்தாலே மீளலாம் –
இங்கு அது செய்ய ஒண்ணாது –

அது எங்கனே என்னும் ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

வாழ்க்கைப்பட்ட சிறு பெண் -புக்ககம்-செல்லும் அருமை போலே -சூத்ர விஷயங்களில் -மெள்ள வாவது மீளலாம் –
சரீர தோஷம் துர்கந்தம் -உள்ளது வெளியதானால் காக்கை ஓட்ட ஆளில்லை –
நிரவதிக தேஜா மயமான -ஒளி மணி வண்ணன் என்கோ–நிரவதிக ஸூ கந்தத்வாதி திவ்ய குண பூர்ணன் –
தோஷ தர்சனம் பண்ண முடியாது -எண்ணிறந்த குணங்கள் – ஒன்றுமே இல்லாத தோஷங்கள் -இரண்டையும் எண்ண முடியாதே இங்கு

அதாவது –
சூத்திர விஷயங்களில் -தேக தோஷாதிகளும்-(வாதம் பித்தம் கபம் -மூன்றும் -சேர்ந்தே இருக்கும் -ஆதி -மனஸ் தோஷம் -மன அழுத்தம் இத்யாதி )
அல்ப அஸ்த்ரத்வாதி தோஷங்களும்
உண்டாய் இருக்கையாலே அவற்றை தர்சிக்கவே அறுவறுத்து மீளலாய் இருக்கும் –
விலஷண விக்ரக யுக்தமாய் -சமஸ்த கல்யாண குணாத்மகமாய்-நித்தியமாய் -அபரிச்சேத்யமான –
இவ்விஷயத்தில் தோஷ கந்தம் இல்லாமையாலே -தோஷ தர்சனம் பண்ணி மீளப் போகாது -என்கை –
சங்க்யாதும் நைவ சக்யந்தே குணா தோஷச்ச சார்ங்கிணா
ஆனநத்யாத் பிரதமோ ராசிர் அபாவ தேவ பச்சிம -என்ன கடவது இறே-

கருவரை போல் நின்றானை -கண்ணபுரம் ஓன்று உடையானுக்கு -மீள வழி இல்லை –

——————————————

சூரணை -417-

தோஷம் உண்டானாலும் –
குணம் போலே –
உபாதேயமாய்
இருக்கும் –

சூத்திர விஷயங்களுக்கு சொல்லுகிற தோஷம் ஒன்றும் இங்கு சொல்லல் ஆவது
இல்லை ஆகிலும் -ஸ்வ விஷய பக்தி பரவசர்க்கு -சம்ச்லேஷ சுகத்தை
உருவ நடத்தாதே விச்லேஷித்து துக்கத்தை விளைக்கையாலே –
கடியன் கொடியன் -இத்யாதிபடியே சொல்லலாம் படி தோற்றுவன சில தோஷம் உண்டே –
அது தான் மீளுகைக்கு உடலாமோ என்ன –
அருளிச் செய்கிறார் –

விஷப்பால் அமுதுண்டான் -விஷமே அமுதமாகும் அவனால் -ஆகிலும் -கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்-ஆழ்வார்
ராவணன் எவ்வளவு குணவானாக ராமன் இருந்தாலும் என் உள்ளம் செல்லாது -மாற்றி சொல்லி மாய்ந்தான் –
ஆற்றாமையால் -தோன்றும் தோஷங்கள் -என்றவாறு –

அதாவது –
அப்படி ஆற்றாமையாலே தோற்றுவன சில தோஷம் உண்டானாலும் –
கொடிய வென்நெஞ்சம்  அவன் என்றே கிடக்கும் -என்று அவை தன்னை விரும்பி
மேல் விழும்படி இருக்கையாலே ஹேயமாய் இராது –
விஷயத்தை விரும்பி மேல் விழுகைக்கு உடலான குணம் போலே –
உபாதேயமாய் இருக்கும் -என்கை –

———————————

சூரணை -418-

லோக விபரீதமாய் இறே இருப்பது –

லோகத்தில் தோஷம் ஹேயமாய் -குணம் உபாதேயமாய் அன்றோ இருப்பது –
தோஷம் குணம் போலே உபாதேயம் ஆமோ என்ன –
அருளிச் செய்கிறார் –

தோஷம் -உபாதேயமாக இல்லையே லோகத்தில் -இங்கு குண தோஷ விபாகம் இல்லாமல் -லோக ஸ்வபாவ விபரீதம் –

அதாவது –
தோஷம் விடுகைக்கு உடலாய் –
குணம் பற்றுகைக்கு உடலாய் -இருக்கும் லோக பிரக்ரியை அன்றியே -தோஷமும் குணம் போலே
உபாதேயமாய் இறே இவ்விஷயத்தில் இருப்பது -என்கை –

அது இது உது-என்னாலாவன அல்ல உன் செய்கை என்னை நைவிக்கும்-
நல்ல குணம் உள்ளவர் நல்லவர் லோகத்தில் -உன்னிடம் உள்ள குணம் நல்லதாகும் உன் சம்பந்தத்தால் -ஸ்ரீ கூரத் தாழ்வான்-இங்கிதம் நிமிஷதஞ்ச தாவகம்-

————————————————–

சூரணை -419-

குணம் உபாதேயம் ஆகைக்கு ஈடான ஹேது –
தோஷத்துக்கும் உண்டு இறே —

எல்லாம் செய்தாலும் -தோஷம் குணம் போலே உபாதேயமாக கூடுமோ என்னும்
ஆ காங்ஷையிலே -அருளிச் செய்கிறார் –

பிராப்தி என்பதால் -ஆஸ்ரய வைலஷண்யம் -உயர்ந்தது -ஏற்றம் -பிராப்தன் -அபிமதன் -சேஷி மூன்றும் உண்டே இங்கு –
அபிமத விலக்ஷண விஷய தோஷமும் அபிமதம் தானே –
ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் – குண க்ருத தாஸ்யம் -இரண்டும் உண்டே –
குணங்களும் தோஷங்களும் பிராப்த சேஷியிடம் இருப்பதால் கொள்ளத் தக்கவையே –

அதாவது –
பகவத் குணம் தத் பிரவணருக்கு உபாதேயமாகைக்கு ஈடான பிராப்த சேஷி கதத்வம் ஆகிற ஹேது –
அவ்விஷயத்தில் தோற்றுகிற தோஷத்துக்கும் உண்டு இறே -என்கை –
இத்தால் –
அவன் பக்கல் உள்ளது என்னும் அத்தாலே குணம் உபாதேயம் ஆகிறவோ பாதி –
அவன் பக்கல் உள்ளது என்னும் அத்தை பற்ற -தோஷமும் -உபாதேயமாக- குறை இல்லை என்றது ஆயிற்று –
இப்படி ஆகையாலே -தோஷம் உண்டானாலும் அது மீளுகைக்கு உடல் ஆகாது என்று கருத்து –

————————————–

சூரணை -420-

நிர்குணன் என்ன -வாய் மூடுவதற்கு முன்னே –
க்ருணாவான் என்று -சொல்லும்படியாய் இருந்தது இறே —

விஸ்லேஷ தசையில் தோற்றும் நைர்க்க்ருண்யாதி தோஷத்தை அங்கீகரித்து –
அது தான் குணத் உபாதேயமாய்  இருக்கும் படியை அருளிச் செய்தார் கீழ் –
அந்த நைர்க்க்ருண்யாதி தோஷம் தான் முதலிலே இவ் விஷயத்தில் இல்லை
என்னும் இடத்தை அபியுக்த வசனங்களாலே தர்சிப்பிக்கிறார் மேல் –
அதில் முதலில் ஆழ்வாருடைய வசனத்தை தர்சிப்பிக்கிறார் –

ஆடி ஆடி –தாய் பாசுரம் -தவள வண்ணர் தகவுகளே-கருணை உண்டா -ஈரம் காயும் முன்பு தகவுடையவனே என்னும் –
பிறர் தோஷம் சொல்ல கேட்கவும் பொறாத விஷய ஸ்வ பாவம் -அன்றோ -விசேஷ வசனம் –
இவள் இராப்பகல் வாய் வெருவி-பெருமாள் இருப்பது போலே இவள் -கண்ணநீர் கொண்டாள்-
தண் அம் துழாய் கொடீர்-வண்டுக்களுக்கு கொடுக்கிறீர் -வெள்ளை வண்ணம் -சத்வம் -இருந்தபடி -ஷேபத்துடன்-தாயார் சாதிக்க –
சொல்லி வாய் மூடுவதற்கு முன்னே -வாயை புதைத்தால் போலே -சகல குண பூர்த்தி உள்ளவன் -உயிருக்கு அமுதம் –
மிக விரும்பும் பிரான் -என்று சொல்லி -நேராக வந்தால் போலே சாஷாத்கார சாமான்ய ஆகாரம் -மானஸ அனுபவம் –
நித்ய கிருபையை நிரூபகமாக யுடையவன் -என்பாள் –
இறை தேடும் குருகே-தகவு இல்லை -சொல்ல சொல்லி -மயர்வற மதி நலம் அருள பெற்ற நான் தான் சொல்ல வேண்டும்-
பிறர் சொல்ல பொறுக்க மாட்டாள் –

அதாவது –
என தவள வண்ணர் தகவுகளே -என்று
எங்கனே இருந்தன சுத்த ஸ்வாபரான உம்முடைய கிருபைகள் -நாட்டிலே இப்படி
ருஜுக்களுமாய் -பர துக்க அசஹிஷ்ணுக்களுமாய் இருப்பார் சிலர் தார்மிகர்
நடையாட -அபலைகளுக்கு அழகியதாக குடி கிடக்கலாய் இருந்தது என்று பெண்பிள்ளை
ஆற்றாமைக்கு உதவாதது கொண்டு திருத் தாயார் நிர்க்குணன் என்ன -வாய் மூடுவதற்கு
முன்னே -அவள் வாயைப் பொதைத்தாப் போலே -தகவுடையவனே -என்று கெடுவாய்- ஆகரத்தில்
தகவு மறுக்குமோ -அது நம் குற்றம் காண் -என்று க்ருணாவாத்யைச் சொல்லும்படியாய்
இருந்தது  இறே என்றபடி –

பொற் குவியல் அக்ஷய பாத்திரம் -கிருபைக்கு பிறப்பிடம் அன்றோ -அங்கே குறை இல்லை –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –13-

May 20, 2018

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம நூல் ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் -13 அத்யாயம் –

1- ஸ்ரீ அநுக்ரஹாத்மிகா சக்ர சக்திர் மே பஞ்சமீ சம்ருதா
தாமிமாம் தத்வதோ வத்ச வதாமி தாவ சாம்ப்ரதம் –1-
ஸ்ரீ மஹா லஷ்மி இந்த்ரனிடம் தன்னுடைய ஐந்தாவது சக்தியாகிய அநுக்ரஹம் பற்றி சொல்லத் தொடங்குகிறாள் –

2- அவித்யயா சமாவித்தா அஸ்மிதாதி வசீக்ருதா
மச்சக்த்யைவ திரோ பூதாஸ் திரோதா நாபி தாநயா–2-
அவித்யையால் சூழப்பட்ட ஜீவாத்மாக்கள் அஸ்மிதா எனப்படும் அஹங்காரத்தால் பீடிக்கப் பட்டு
என்னுடைய திரோதானம் என்னும் சக்தியால் -ஆணவத்தை உண்டாக்கி மறைப்பது -மூடப்படுகிறார்கள்-

3- உச்சான் நீசே பதந்தச்தே நீசாதுத்பத யாலவ
நிபத்தாஸ் த்ரிவிதைர் பந்தை ஸ்தான த்ரய விவரத்தின -3-
ஜீவாத்மாக்கள் உயர்ந்த நிலையில் இருந்து தாழ்ந்த நிலையில் விழ -மீண்டும் உயர்ந்த நிலைக்கு செல்ல முயன்றபடி உள்ளனர்
மூன்று விதமான பந்தங்களால் பீடிக்கப் பட்டு மூன்று நிலைகளில் உள்ளனர் –

4-சம்சாராங்கார மதயஸ்தா பச்யமாநா ஸ்வ கர்மணா
ஸூ காபி மா நி நோ துக்கே நித்யம் அஜ்ஞான தர்ஷிதா –4-
கர்மங்களின் காரணமாக சம்சாரத்தின் நடுவில் சிக்கி -அவர்கள் இன்பத்தை நாடினாலும்
அறியாமை காரணமாக துக்கத்தில் உழன்றபடி உள்ளனர்

5- தா யோநீரநுதா வந்தச் சராசர விபேதி நீ
அபூர்வா பூர்வ பூதாபிச்சித்ர தாபி ஸ்வ ஹேதுபி –5

6- தேஹேந்த்ரிய மநோ புத்தி வேதநா பிரஹர்நிசம்
ஜன்மானி ப்ரபத் நந்தோ பரணாநி ததா ததா -6-
ஜீவாத்மாக்கள் அசையும் பொருள்கள் மற்றும் அசையாப் பொருள்கள் -ஸ்தாவரம் -போன்ற பல்வேறு சரீரங்களை எடுத்து
எல்லையற்ற சுழற்சியிலே சிக்கியபடி உள்ளனர் -தங்களுடைய பலவிதமான கர்மங்கள் காரணமாக உண்டாகும் பலன்களால்
சரீரம் இந்த்ரியங்கள் மனம் புத்தி இவற்றால் பீடிக்கப் பட்டபடி
எண்ணற்ற ஜன்மங்களை எடுத்து அவற்றுக்கான பலன்களை அனுபவித்தோ அனுபவிக்காமலோ வாழ்கிறார்கள் –

7-க்லேச்யமாநா இதி க்லேசைஸ் தைஸ்தைர் யோக வியோக ஜை
உதயக் காருண்ய சந்தான நிர்வாபிதத தாசஸா–7

8- மயா ஜீவா சமீஷ்யன்ஹே ச்ரியா துக்க விவர்ஜிதா
ஸோ அநு க்ரஹ இதி ப்ரோக்த சக்தி பாதா பராஹ்வய –8-
இந்த துன்பங்கள் எல்லையற்ற கருணையை அவர்கள் பால் உண்டாக்குகின்றன
நான் அவர்களுடைய பாபங்களை நீக்குகின்றேன்
ஸ்ரீ என்னும் நான் அப்படிப்பட்ட துன்பங்களின் பிடியில் நின்றும் வெளி ஏற்றுகின்றேன்
கருணையின் காரணமாக பிறக்கும் இந்த அநு க்ரஹம் என்னுடைய உயர்ந்த சக்தியின் வெளிப்பாடாகும்

9- கர்ம சாம்யம் பஜந்த்யேதே ப்ரேஷ்யமாணா மயா ததா
அபச்சிமா தநு ஸா ஸ்யாஜ்ஜீவா நாம் ப்ரேஷிதா மயா –9-
என்னுடைய அநு க்ரஹத்தைப் பெற்ற பின்பு தங்களுடைய கர்மங்களின் நின்றும் விடுபடுகிறார்கள்
ஆனபின்னர் அபச்சிமம் -என்னும் சாத்விகமான சரீரத்தை அடைகிறார்கள்-

10-அஹமேவ ஹி ஜா நாமி சக்தி பாத ஷணம் ஸ தம்
நாசௌ புருஷ காரேண ந சாப்யன்யேவ ஹேது நா–10-
இந்த அநு க்ரஹம் எந்த நேரத்தில் யுண்டாகும் என்பதை நான் மட்டும் அறிவேன் –
ஜீவாத்மாக்களின் எந்த செயலும் அல்லது எந்த சிபாரிசு மூலமும் இது உண்டாகாது

11-கேவலம் ஸ்வ இச்சையவாஹம் ப்ரேஷ கம்சித் கதாப்யஹம்
தத ப்ரப்ருதி ஸ ஸ்வ ச்ச ஸ்வ ச்சாந்த கரண புமான் —11
சிலரை தனது இச்சையால் கடாஷித்து அதனால் அவர்களின் அந்தகரணங்கள் தூய்மை அடைந்து பரிசுத்தம் ஆகிறார்கள்-

12- கர்ம சாம்யம் சமாசாத்ய சுக்லகர்மா வ்யபாச்ரய
வேதாந்த ஜ்ஞான சம்பன்ன சாங்க்ய யோக பராயண –12-
கடாஷம் கிட்டப் பெற்ற ஒருவன் கர்மம் செய்வதில் சமநிலை அடைந்து நற்செயல்களை மட்டுமே செய்து
வேதாந்த ஞானம் பெறுவதில் முனைந்தபடியும் சாங்க்ய யோகத்தில் நிலைத்த படியும் உள்ளான் –

13-சமயக் சாத்த்வத விஜ்ஞாநாத் விஷ்னௌ சத் பக்தி முத்வாஹன்
கலேந மஹதா யோகீ நிர்தூத க்லேச சஞ்சய –13-
தொடர்ந்து சாத்த்வத தத்வத்தில் சொல்லிய படி மகா விஷ்ணுவிடம் ஸ்திரமான பக்தியை அடைந்து
நாளடைவில் தன்னுடைய துன்பங்கள் அனைத்தையும் அந்த யோகி விடுகிறான் –

14- விதூய விவிதம் பந்தம் த்யேதமா நஸ்ததஸ்தத
ப்ராப்நோதி பரம் ப்ரஹ்ம லஷ்மீ நாராயணாத் மகம் –14
தொடர்ந்து தன்னுடைய பந்தங்கள் அனைத்தையும் உதறியவனாக உயர்ந்த பரப்ரஹ்மம் ஆகிற ஸ்ரீ லஷ்மீ நாராயணனை அடைகிறான்-

15-ஏஷா து பஞ்சமீ சக்திர் மதீய அநு க்ரஹாத்மிகா
ஸ்வா ச்சந்த்யமேவ மே ஹேதுஸ் திரோபாவாதி கர்மணி –15
இதுவே என்னுடைய அநு க்ரஹம் என்னும் ஐந்தாவது சக்தியாகும்
திரோபாவம் முதலான வற்றில் நான் ஈடுபடுதல் எனபது என்னுடைய விருப்பம் காரணமாகவே ஆகும் –

16-1- இத்தம் சக்ர விஜா நீஹி தாநு யோஜ்ய மத பரம் -16-1-
இந்த்ரனே என்னுடைய ஐந்து சக்திகளைக் குறித்து அறிந்தே -மேலே இவற்றைக் குறித்து ஏதும் இல்லை –

16-2-சக்ர –
நமோ சரோருஹாவாசே நமோ நாராயணாஸ்ரயே –
இந்த்ரன் -மஹா லஷ்மியிடம் -தாமரையில் வசிப்பவளே -நாராயணன் இடம் எப்பொழுதும் பொருந்தி உள்ளவளே -உனக்கு எனது நமஸ்காரங்கள் –

17-நமோ நித்யா நவத்யாயை கல்யாண குண சிந்தவே
த்வத் வாகம்ருத சந்தோஹ ஷாலிதம் மே மஹத்தமே –17-
திருக் கல்யாண குணங்களினுடைய சமுத்ரமாகவே உள்ள உனக்கு எனது நமஸ்காரங்கள்
என்னுடைய அறியாமை என்னும் இருளானது உன்னுடைய அமிர்தம் போன்ற வாக்குகள் மூலம் விலகின

18-1- பூயோஹம் ஸ்ரோதும் இச்சாமி சித்சக்தி ரூபமுத்தமம் –18-1-
உன்னுடைய உத்தமமான சித்சக்தி ரூபம் குறித்து நான் கேட்க ஆவலாக உள்ளேன் -என்றான்-

18-2-எகோ நாராயணோ தேவ பரமாத்மா சனாதன –18-2-
நாராயணன் ஒருவனே தேவர்களுக்கும் தேவன் -பரமாத்மா எப்போதும் உள்ளவன் –

19-சதா ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்த்யோஜசாம் நிதி
அநாதிர் அபரிச்சேத்யோ தேச கால ஸ்வரூபத –19-
அவன் ஞானம் பலம் ஐஸ்வர்யம் வீர்யம் சக்தி தேஜஸ் ஆகிய ஆறு குணங்களின் இருப்பிடமாக உள்ளவன்
எப்போதும் இருக்குமவன் காலம் இடம் ரூபம் இவற்றைக் கடந்தவன்

20-தச்யாஹம் பரமா தேவீ ஷாட்குண்ய மஹிம உஜ்ஜ்வலா
சர்வகார்யகரீ சக்திரஹந்தா நாம சாச்வதீ –20-
நான் அவனுடைய சக்தி /அவனுடைய நான் -/ஆறு குணங்களை பிரகாசிக்கச் செய்பவள்
அனைத்து செயல்களையும் செய்யும் சக்தி -எப்போதும் அவனுடனேயே இருப்பவள்

21-சம்விதேகா ஸ்வரூபம் மே ஸவச் சஸ்வசந்த நிரபரா
சித்தயோ விஸ்வ ஜீவா நாமா யதந்தே அகிலா மயி –21
என்னுடைய ஸ்வரூபம் தூய்மை சித்மயம் -ஜீவாத்மாக்களில் உள்ள யோகிகள் அனைவரும் என்னில் உள்ளனர் –

22-ஆத்ம பித்தௌ ஜகத் சர்வம் ஸ்வேச்சய உன்மீலயாம் யஹம்
மயி லோகா ஸ்புரந்த்யேத ஜலே சகுநயோ யதா -22-
என்னுடைய தடையில்லாத விருப்பம் காரணமாக அனைத்து உலகங்களையும் என்னை ஆதாரமாகக் கொண்டு இருக்கும் படி செய்கிறேன்
பறவைகள் நீரைத் தேடிச் செல்வதைப் போலே அனைத்து உலகங்களும் என்னில் நிலை நிற்கின்றன –

23-ஸ்வா ச்சந்த்யா தவ ரோஹாமி பஞ்சக்ருத்ய விதாயி நீ
சாஹம் யாதவ ரோஹாமி சா ஹி சிச்சக் திருச்யதே –23
என்னுடைய இச்சை காரணமாக நான் ஐந்து விதமான செயல்களை ஆற்றும் பொருட்டு எல்லையுடன் கூடிய வடிவுகளை எடுக்கிறேன்
இப்படியாக என்னை தாள தாழ விட்டுக் கொள்ளுதலே என்னுடைய சித் சக்தியாகும்-

24–சங்கோசோ மாமக சோயம் ஸ்வச்ச ஸ்வச்சந்த சிந்தன
அஸ்மின் நபி ஜகத்பாதி தர்பனோ தர சைலவத்-24-
என்னுடைய அபரிச்சேதயமான தூய்மையான ஸ்வதந்த்ரமான ரூபங்கள் பெரிய மலை
கண்ணாடிக்குள் புலப்படுவது போலே இந்த சிறிய ரூபங்களுடன் கூடப் புலப்படும் –

25-வஜ்ர ரத்ன வதே வைஷ ஸ்வ ச்ச ஸ்புரிதி சர்வதா
சைதன்ய மஸ்ய தர்மோ ய ப்ரபா பா நோரி வாமலா –25
என்னுடைய ரூபங்கள் தெளிவாகவும் வைரக்கல் போன்று ஒளிர்ந்த படியாகவும் உள்ளன
பிரகாசம் சூரியன் இடம் இயல்பாக உள்ளது போலே இந்த ரூபங்களில் இயல்பாக சைதன்யம் உள்ளது-
தயா ஸ்புரிதி ஜீவோ அசவ் ஸ்வத ஏவ அநு ரூபயா
விதத்தே பஞ்ச க்ருத்யானி ஜீவோ அயமபி நித்யதா -26-
யா வ்ருத்திர் நீல பீதாதவ் ஸ்ருஷ்ட்டி சா கதிதா புதை
ஆ சக்திர்யா விஷயே தத்ர சா ஸ்திதி பரிகீரத்தயதே –27-
க்ருஹீதாத் விஷயாத்யோ அஸ்ய விராமோ அந்யஜிக் ருக்ஷயா
சா ஸம்ஹ்ருதி சமாக்யாதா தத்துவ சாஸ்த்ர விசாரதை–28
தத் வாசனா திரோ பாவோ அனுக்ரஹஸ் தத் விலாபநம்
க்ராஹ்ய க்ரஸ்ன சீலோ அயம் வஹ்னிவத் க்ரஸ்ன சதா –29
புஷ்யத்யேஷ சதா ஜீவோ மாத்ராய மே சமிந்தனம்
அவித்யம் மத் ஸ்வரூபம் து வ்யாக்யாதம் தே புரா மயா– 30-
சுத்த வித்யா சமா யோகாத் சங்கோசம் யஜ்ஜஹாத்ய சவ்
ததா ப்ரத்யோத மாநோயம் சர்வதோ முக்த பந்தன –31-
ஜ்ஞான க்ரியா சமாயோகாத் சர்வவித் சர்வக்ருத சதா
அநணுச்சாப்ய சங்கோசான் மத்பாவாயோபபத்யதே–32-
யாவன் நிரீஷ்யதே நாயம் மயா காருண்ய வத்தயா
தாவத் சந்குசிதா ஜ்ஞான கரணவ்ர் விஸ்வ மீஷதே –33-
சஷூஷாலோக்ய வஸ்தூநி விகல்ப மனசா ததா
அபிமத்யாபி அஹங்காராத் புத்யைவ ஹ்யத்ய வஸ்யதி –34-
ஜாகராயாமத ஸ்வப்னே கரணை ராந்த ரைச் சரன்
விஹாய தா ஸூ ஷூப்தவ் து ஸ்வரூபேணா வதிஷ்டதே– 35-
அவஸ்தாஸ்தா இமாஸ்தி ஸ்த்ர ப்ராக்ருதயோ நைவ ஜீவிகா
துர்யாபி யா தசா ஜீவே சமாதிஸ்தே ப்ரஜாயதே –36-
சாபி நை வாஸ்ய கிம் த்வேஷா சுத்த சத்த்வ வ்யவஸ்திதி
அநவஸ்தமநா க்ராதம கிலை ப்ராக்ருதைர் குணை–37-
அநவ் உபாதிக மச்சேத்யம் ஜீவ ரூபம் து சின் மயம்
ஏவம் ரூபம் அபி த்வேதச் சாத்யதே அநாத்ய வித்யயா–38-
ஸூத்ருச் யாமாத்ம பூதம் மாம் நைவ பஸ்யத்யசவ் தத
ஸூத்ருச் யாசி கதம் தேவி ப்ரமாணாதிகதி சதீ –39-
வேதாந்தா அபி நைவ த்வாம் விதுரித்தம் தயாம் புஜே -40-1-

ஸ்ரீ உவாச –
மாம் து சக்ர விஜாநீஹி ப்ரத்யக்ஷாம் சர்வ தேஹினாம் 40-2-
ஸமாஹித மநா பூத்வா ச்ருணுஷ் வேதம் மதம் மம –40 -3

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –12-

May 20, 2018

இந்திரன் கேட்பது-

சிச் சக்திரேவ தே சுத்த யதி ஜீவ சனாதன
கிலேச கர்மாசய ஸ்பர்ச கதமஸ்ய சரோருஹே–12-1-
கிலேசா கே கதி தே ப்ரோக்தா கர்ம கீத்ருச் ச கிம்விதம்
ஆசயோ நாம கோ தேவி ததேதத் கிம்பலம் ஸ்ம்ருதம் –12-2-
சிந்து கன்யே ததே தன்மே ப்ரூஹி துப்யம் நமோ நம
சர்வஞ்ஜே ந த்வத் அன்யேன வக்துமே தத்தி சக்யதே –12-3-

ஸ்ரீ மஹா லஷ்மீ அருளிச் செய்தது –

அஹம் நாராயணீ தேவீ ஸ்வச் சஸ்வச் சந்த சின்மயீ
ஸ்வ தந்த்ரா நிரவத்யாஹம் விஷ்ணோ ஸ்ரீர் அநபாயிநீ –12-4-
ஈஸ ஈஸித்வய பேதேந த்விதா ரூபம் மயா க்ருதம்
ஈஸிதவ்யம் ச தத் பின்னம் ஸ்வாச் சந்த்யா தேவ மே த்விதா –12-5-
சிச் சக்தி ரேகா போக்த்ராக்யா பரா போக்யாதி ரூபிணீ
கால கால்ய விபேதேந ச த்விதா பேதிதா மயா –12-6-
தத்ர கால்யாத்மிகா சக்திர் மோஹிநீ பந்தநீ ததா
ப்ரக்ருதி சவிகாரைஷா சிச் சக்திர் பத்யதே அநயா–12-7-
க்லஸ்யதே தேந ரூபேண சிச் சக்திர் போக்த்ருதாம் கதா
ச கிலேச பஞ்சதா ஜ்ஜேயோ நாமாந் யஸ்ய ச மே ச்ருணு –12-8-
தமோ மோஹா மஹா மோஹஸ் தாமிஸ்ரோ ஹி அந்த சஞ்சித
அவித்யா பஞ்ச பர்வைஷா தமஸோ கதிருத்தமா –12-9-
அசங்கிந்யபி சிச் சக்தி சுத்தாப்ய பரிணாமிநீ
ஆவித்மாத்மநோ ரூபம் நைர்மல்யேந பிபர்த்தி ச –12-10-

இந்திரன் -கேள்வி
வியாஹதமிவ பச்யாமி சிச் சக்தே கிலேச சங்கிதாம்
முஹ்ய தீவ மநோ மேத்ய தம் மோஹம் சிந்தி பத்மஜே -12-11-

மஹா லஷ்மி அருளிச் செய்கிறாள்
ஸ்வ தந்த்ரா சர்வ ஸித்தீ நாம் ஹேதுச் ஸாத்ர மஹாத் பூதா
சக்திர் நாராயணஸ் யாஹம் நித்யா தேவீ சதோதிதா –12-12-
தஸ்யா மே பஞ்ச கர்மாணி நித்யானி த்ரிதஸேஸ்வர
திரோ பாவஸ் ததா ஸ்ருஷ்ட்டி ஸ்திதி ஸம்ஹ்ருதி ரேவ–12-13-
அனுக்ரஹ இதி ப்ரோக்தம் மதியம் கர்ம பஞ்சகம்
ஏதேஷாம் க்ரமசோ வ்யாக்யாம் கர்மணாம் சக்ர மே ஸ்ருணு–12-14-

திரோபாவம் -ஸ்ருஷ்ட்டி -ஸ்திதி -சம்ஹாரம் -அனுக்ரஹம் -ஐந்து வித கார்யங்கள் சத்ய சங்கல்பம் அடியாக –

தத்ர நாம திரோ பாவோ அந்யத் பாவ பரிகீர்த்யதே
ஸ்வாச் சாபி சா மதீயா ஹி சித்சக்திர் போக்த்ரு சம்ஜ்ஜிதா–12-15-
மதீயயா யயா சக்த்யா வர்த்ததே ப்ரக்ருதேர் வஸே
திரோபாவாபிதாநா மே சா வித்யா சக்தி ருச்யதே –12-16-
மதீயம் பேதிதம் ரூபம் சத்ய சங்கல்பயா மாயா
யோ அவரோஹா மதீ யஸ்தே வர்ணித ப்ரதமம் புரா –12-17-
சிச் சக்திர் ஜீவ இத்யேவம் விபுதை பரிகீர்த்யதே
மஸ்த்வாச் சந்த்யவாசதேவ தஸ்ய பேத ப்ரகீர்த்தித–12-18-
மதீயம் சைத்ய ரூபம் யத் ஸத்யஸங்கல்பயா க்ருதம்
மயா ததேதீ கரணம் சிச்சக்தே க்ரியதே இதை ஸ்ம்ருத-12-19-
அவித்யா சா பரா சக்திஸ் திரோபாவ இதி சம்ருத
பஞ்ச பர்வாணி தஸ்யாஸ்து சந்தி தானி நிபோத மே –12-20-
தமஸ்து ப்ரதமம் பர்வ நாமா வித்யேதி தஸ்து து
அநாத்மன்யஸ்வ பூதே ச சைத்யே ஜீவஸ்ய யா மதி –12-21-
ஸ்வதயா அஹந்தயா சைவ தமோ அவித்யா ச சா ஸ்ம்ருதா
ஸ்வீக் ருதே அஹந்தயா சைத்யே மநோ யஸ்தந்த்ர ஜாயத–12-22-
அஸ்மிதாக்யோ மஹா மோஹா த்விதீயம் கிலேச பர்வதத்
சைத்ய சேதனயோ ரேக பாவபத்திர வித்யயா –12-23-
மோஹா அஸ்மிதா மஹா மோஹ இதி சப்தைர் நிகத்யதே
ஸூக அநு ஸ்ம்ருதி ஹேதுர்யா வாசனாஸ்மிதயா ஹித –12-24-
ச ராகோ ரஞ்ஜய விஷயஸ் த்ருதீயம் கிலேச பர்வ தத்
துக்க அநு ஸ்ம்ருதி ஹேதுர்யா வாசனாஸ் மிதயாஹிதா –12-25-
ச த்வேஷா த்வேஷ்ய விஷயச் சதுர்த்தம் கிலேச பர்வ தத்
துக்கம் ஜிஹா சதோ யோகை ப்ரேப் ச தச்ச ஸூ கம் ததா –12-26-
தத் அந்தராயைர் வித்ராசோ மத்யே யோ நாம ஜாயதே
அந்தாக்யோ அபி நிவேச ச பஞ்சமம் கிலேச பர்வ தத் –12-27-
தேஹம் ஆத்மதயா புத்த்வா ததஸ் தாதாத்ம்யமாகத
ரஞ்சனீய மபிப்ரேப் ஸூர் ஜிஹா ஸூச்சா ததே தரத்–12-28-
தத் அந்தராய வித்ரஸ் தஸ்தத் ப்ரிதீகாரமா சரன்
இஷ்டஸ்ய ப்ராப்தயே அநிஷ்ட விகாதாய ச சேதன –12-29-
யதயம் குருதே கர்ம த்ரிவிதம் த்ரிவிதாத்மகம்
தத் கர்ம கதிதம் சத்பி சாங்க்ய யோக விசஷணை–12-30-

அவித்யை -தமஸ் / அகங்காரம்-மஹா மோகம் /மமகாராம் அஸ்மிதா / ராகம் – / த்வேஷம் -ஆகிய ஐந்து நிலைகள்
சரீராத்மா பிரமம் -விஷயாந்தர பிராவண்யம்-அக்ருத்ய கரணம் -க்ருத்ய அகரணம் -கர்ம சேர்க்கை இவற்றால் –

தத் ப்ரசூதம் ஸூகம் துக்கம் ததா ஸூகாத்மகம்
விபாகஸ் த்ரிவித ப்ரோக்தஸ் தத்துவ சாஸ்த்ரி விசாரிதை–12-31-
வாசனா ஆசயா ப்ரோக்தா கிலேச கர்ம விபாகஜ
அந்தகரண வரத்திந்ய சமந்தாச்சே ரதே ஹி ததா –12-32-
ஜன்யந்தே வாசனா நித்யம் பஞ்சபி கிலேச பர்வபி
சத்ருசாரம்ப ஹேதுச்ச வாசனா கர்மணாம் ததா –12-33-
ஸூ காதி வாசனா சைவ விபாகைர் ஜன்யதே த்ரிதா
சதுர்பிர் லக்ஷணை ரித்தம்பூதா கிலேசாதி நாமகை –12-34-
பந்தநீ ஜீவ கோசஸ்ய திரோ பாவாபிதா விதா
சக்த்யா நயைவ பத்தா நாம் ஜீவா நாம் மம நித்யதா –12-35-
சாந்தத் யேந ப்ரவர்த்தந்தே மம ஸ்ருஷ்ட்யாதி சக்த்யா
ஸ்ருஷ்ட்டி சக்திர் தவிதா சா மே சுத்தயசுத்தி வசான் மயா–12-36-
விவிச்ய தர்சிதா சா தே சா புந சப்ததா ஸ்திதா
அநிசம் க்ரியதே த்வேகா பிராஜா பத்யதே கர்மணா –12-37-

ஸ்ருஷ்ட்டி சக்தியான என்னை ஏழுவிதமாக -அதில் முதல் ப்ராஜாபத்யம் -கர்மம் மூலம் ஸ்ருஷ்ட்டி தொடங்குவது –

ஷட் கோச ஸம்பவாஸ் த்வன்யாஸ் தத் தத் காலச முத்பவா
சரக்க க்ரமே ப்ரக்ருத்யுத்தே ஸ்ருஷ்டிர் ஜ்ஜேயோ த்ரிதா புன -12-38-
பாவிகீ லைங்கிகீ சைவ பவ்திகீ சேதி பேதித
யதா ந்யக்ரோத தாநாயாம் த்ரை குண்யே ப்ரக்ருதவ் ததா –12-39-
யதா ஸ்திதிர் மஹா ததே ச பாவ ஸ்ருஷ்டிர் நிகத்யதே
சமஷ்டி வியஷ்ட்டி பேதேந லிங்கம் யத் ஸ்ருஜ்யதே மயா–12-40-
விராஜச்ச ததான்யேஷாம் பூதா நாம் லிங்கஜா து சா
மஹதாத்யா விசேஷாந்தா விம்சதிச்ச த்ரயச்ச யே –12-41-
பதார்த்தா லிங்க தேஜஸ்தா விராஜ பரிகீர்த்திதா
காநாம் சமஷ்டி பூதா நாம் தத் அந்த கரணஸ்ய ச –12-42-
த்ரிதா ஸ்தி தஸ்ய யே யே அசா பிரதி ஜீவம் வியவஸ்திதா
ஸ்தூலாநாம் சைவ பூதா நாம் யே ஸூஷ்மா கீர்த்திதா புரா –12-43-
வியஷ்டயோ அஷ்டாத சேமாச்ச கிலேசா கர்மணா வாசனா
ப்ராணாச்சேதி ததுத்திஷ்டம் லிங்கம் ஜீவ கணாஸ்ரயம் –12-44-
சிச் சக்த்யோ ஹி லிங்கஸ்தா சம்சரயந்தி யதா ததா
சுத்தே ஹி பகவஜ் ஞானே சாதகர்ம ஜீவிநாம்–12-45-
ஜீவா நாம் விநிவர்த்தந்தே லிங்கான் யே தானி நான்யதா
விராஜ ஸ்தூல தேஹோ யோ ப்ரஹ்மாண்டா பர நாமவான் –12-46-
சதுர்விதானி சான்யானி சரீராணி சரீரிணாம்
ஏஷா மே பவ்திகீ ஸ்ருஷ்ட்டி ரிதீதிம் ஸ்ருஷ்ட்டி சிந்தனம்–12-47-

ஜீவ ஸ்தூல சரீரங்கள் நான்கு வகை -யோனிஜம் -/அண்டஜம் -முட்டையில் இருந்து பறவைகள் போல்வன /
ஸ்வேதஜம் -வியர்வையில் இருந்து கொசு போன்றவை /உத்பிஜ்ஜம் பூமியை பிளந்து உண்டாகும் தாவரம் —
மேலே மூன்றாவது சக்தி ஸ்திதிர் பற்றி –

ஸ்திதிர் நாம த்ருதீயா மே சக்திர்யா தே புரோதிதா
தஸ்யா ஸ்வரூபம் வஷ்யாமி தன்மே சக்ர நிசாமயே –12-48-
ஆத்யா ஸ்ருஷ்ட்டி ஷனோ யஸ்து சஞ்ஜி ஹீர்ஷ்ணாச் ச ய
யஸ்தைர் கரணம் நாம தயோரந்த்ர வர்த்தி நாம் –12-49-
நாநா ரூபவ்ர் மதீயை சா ஸ்திதி சக்தி பரா மம
விஷ்ணு நா தேவ தேவந மயா சைவ ததா ததா –12-50-
யா ஸ்திதி கதிதா சா து பிரதமா தத்துவ சிந்தகை
மன்வந்த்ராதி பவ்ச்சவை த்வதீயா பரிகீர்த்திதா –12-51-
மனு புத்ரைஸ் த்ருதீயாந்தா ஷூத்ரைரித சதுர்வித
சதுர்த்தா ஸம்ஹ்ருதி சக்திஸ் தஸ்யா பேதமிதம் ச்ருணு –12-52-

ஸ்ரீ விஷ்ணு உடன் -மனுக்களுடன் -மனு புத்ரர்களுடன் இருந்து ஸ்திதி மூன்று வகை -மேலே ஸம்ஹ்ருதி பற்றி –

நாஸோ ஜராயுஜாதீநாம் பூதானாம் நித்யதா து யா
சா நித்யா ஸம்ஹ்ருதி ஸ்வன்யா சக்ர நைமித்திகீ ஸ்ம்ருதா–12-53-
த்ரை லோக்ய விஷயா சா து ப்ரஹ்ம ப்ரஸ்வாப ஹேதுகா
த்ருதீயா ப்ராக்ருதீ ப்ரோக்தா மஹதாதி வ்யாபாஸ்ரயா–12-54-
ப்ராசூதீ து சதுர்த்தோ ஸ்யாதவ்யக்த விஷயா து சா
மாயீ யா பஞ்சமீ ப்ரோக்தா ப்ரசூதி விஷயா து யா –12-55-
சக்தீ ஷஷ்டீ து விஜ்ஜேயா மாயா சா விஷயா து சா
சப்தம் யாத்யந்தகீ ப்ரோக்தா விலயோ யோகிநாம் மயி –12-56-
ஸூஷ் மாணி விநிவர்த்தந்தே சரீராணி ததா சதாம்
ஏஷா சப்தவிதா சக்ர ஸம்ஹ்ருதிஸ்தே மயோதிதா
பஞ்சம் யநுக்ரஹாக்யா மே சக்திர் வ்யாக்யாமி மாம் ச்ருணு –12-57-

நித்ய ஸம்ஹ்ருதி ஜராயுஜா / நைமித்திக ஸம்ஹ்ருதி கல்பத்தின் முடிவில் /ப்ரக்ருதி ஸம்ஹ்ருதி /
ப்ரசூதி ஸம்ஹ்ருதி /மாயீ ஸம்ஹ்ருதி/சக்தி ஸம்ஹ்ருதி ஆத்யந்துக ஸம்ஹ்ருதி -ஏழு வகைகள் –
மேலே ஐந்தாவது சக்தியான அனுக்ரஹம் பற்றி

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –11-

May 20, 2018

நிர்த்தோஷோ நிரதிஷ்டேயோ நிரவத்ய சநாதந
விஷ்ணுர் நாராயண ஸ்ரீ மான் பரமாத்மா சநாதந –11-1-
ஷாட் குண்ய விக்ரஹோ நித்யம் பரம் ப்ரஹ்மாஷாரம் பரம்
தஸ்ய மாம் பரமாம் சக்திம் நித்யம் தத் தர்ம தர்மிநீம் -11-2-
ஸர்வ பாவாநுகாம் வித்தி நிர்தோஷம் அநபாயிநீம்
ஸர்வ கார்ய கரீ சாஹம் விஷ்ணோர் அவ்யய ரூபிண-11-3-
சுத்தம் அசுத்தம் அந்யைர் பாவைர் விதத்யாத்மந மாத்மந
பர வ்யூஹாதி சம்பேதம் வ்யூஹ யந்தீ ஹரே சதா -11-4-
சுத்த ஷாட் குண்யா மாதாய கல்ப யந்தீ ததா ததா
தேந நாநா விதம் ரூபம் வ்யூஹாத் யுசித மஞ்ஜசா -11-5-
உந்மேஷயாமி தேவஸ்ய பிரகாரம் பவத் உத்தரம்
வியாபாரஸ் தஸ்ய தேவஸ்ய சாஹம் அஸ்மி ந சம்சய -11-6-
மயா க்ருதம் ஹி யத் கர்ம தேந தத் க்ருதம் உச்யதே
அஹம் ஹி தஸ்ய தேவஸ்ய ஸ்ம்ருதா வ்யாபிரிய மாணதா –11-7-
இதி சக்ர பரம் ரூபம் வ்யூஹ ரூபம் ச தர்சிதம்
த்ருதீயம் விபவாக்யம் து ரூபமத்ய நிசாமய –11-8-
துர்யாதி ஜாக்ரத் அந்தம் யத் ப்ரோக்தம் பத சதுஷ்டயம்
வா ஸூ தேவாதி நா வ்யாப்தம் அநிருத் தாந்தி மேந து –11-9-
தத்ர தத்ர பதே சைவ சாது ராத்ம்யம் ததா ததா
அவ்யக்தக வ்யக்த ரூபை ஸ்வை ருதிதம் தே யதோதிதம்–11-10-
வ்யூஹாத் வ்யூஹ சமுத் பத்தவ் பதாத்யாவத் பதாந்தரம்
அந்தரம் சகலம் தேசம் சம்பூரயதி தேஜஸா –11-11-
பூஜிதஸ் தேஜஸாம் சரீர வ்யக்தோ மூர்த்தி வர்ஜித
விசாக யூப இத்யுக்தஸ் தத்த ஜ்ஞானாதி ப்ரும் ஹித –11-12-
தஸ்மிம்ஸ் தஸ்மிந் பதே தஸ்மாத் மூர்த்தி சாகா சதுஷ்டயம்
வாஸூ தேவாதிகம் சக்ர ப்ராதுர் பவதி வை க்ரமாத் -11-13-
ஏவம் ஸ்வப்ந பதாஜ் ஜாக்ரத் பத வ்யூஹ விபாவநே
ஸ்வப்நாத் பதாஜ் ஜாக்ர தந்தே தைஜச பூஜ்யதே மஹாந் -11-14-
விசாக யூபோ பகவான் ச தேவஸ் தேஜஸாம் நிதி
துர்யாத்யே ஸ்வபந பர்யந்தே சாது ராத்ம்ய த்ரிகே ஹி யத் -11-15-
தத் தத் ஐஸ்வர்ய சம்பந்நே ஷாட் குண்யம் ஸூவ்ய வஸ்திதம்
ததா தாயாகிலம் திவ்யம் சுத்த சம்வித் புர சரம் -11-16-
விபஜந் நாத்ம நாத்மாநம் வா ஸூ தேவாதி ரூபத
புநர் விபவ வேளயாம் விநா மூர்த்தி சதுஷ்டயம் -11-17-
விசாக யூப ஏவைஷ விபவாந் பாவ யத்புத
தே தேவோ விபவாத்மாந பத்ம நாப ஆதயோ மத -11-18-

விசாக யூபம் -வ்யூஹம் முன்பு பார்த்தோம் -மேலே விபவம் -பத்ம நாபாதி உள்ளிட்ட பல உண்டே

பத்ம நாபோ த்ருவ அநந்த சக்தீசோ மது ஸூதந
வித்யாதி தேவ கபிலோ விஸ்வ ரூபோ விஹங்கம -11-19-
க்ரோடாத்மா வடவாவக்ரோ தர்மோ வாகீஸ்வரஸ் ததா
ஏகார்ண வாந்த ஸாயீ ச ததைவ கமடாக்ருதி –11-20-
வராஹோ நரசிம்ஹம்ச அபி அம்ருதா ஹரணஸ் ததா
ஸ்ரீ பதிர் திவ்ய தேஹோ அத காந்தாத் மாம்ருத தாரக –11-21-
ராஹு ஜித் காலநேமிக்ந பாரிஜாத ஹரஸ் ததா
லோக நாதஸ்து சாந்தாத்ம தத்தாத்ரேயோ மஹா ப்ரபு –11-22-
ந்யக்ரோதஸாயீ பகவான் ஏக ஸ்ருங்கததுஸ் ததா
தேவோ வாமநே தேஹஸ்து ஸர்வ வ்யாபி த்ரி விக்ரம -11-23-
நரோ நாராயணஸ் சைவ ஹரி கிருஷ்ணஸ் ததைவ ச
ஜ்வலத் பரசு ப்ருத் ரோமோ ராமச் சாந்யோ தநுர் தர -11-24
வேதவித் பகவான் கல்கீ பாதாள சயன ப்ரபு
த்ரிம் சஸ்சாஷ்டா விமோ தேவோ பத்ம நாபாதயோ மதா -11-25-

பத்ம நாபன் –த்ருவன் -அநந்தன் -சக்தீசன் -மது ஸூதநன்-வித்யாதி தேவன் -கபிலர் -விஸ்வ ரூபன் -விஹங்காமன்-க்ரோடாத்தமன் –
வடவக்த்ரன் -இவரே ஹயக்ரீவன் -தர்மன் -வாகீஸ்வரன் -ஏகார்ண வாந்த ஸாயீ -கூர்மம் -வராஹன்-நரசிம்ஹன் -அம்ருத ஹரணன்-
திவ்ய மங்கள விக்ரஹம் ஸ்ரீ யபதி -அமிர்தம் கொணர்ந்த காந்தாத்மன் -ராஹுஜித் –கால நேமிக்நன் -பாரிஜாத ஹரீ–
லோக நாதன் -சாந்தாத்மா-தத்தாத்தரயர்-ந்யக்ரோத ஸாயீ -ஏக ஸ்ருங்க தநு -ஒரு கொம்பு கொண்ட மீன் -வாமனன் –
த்ரி விக்ரமன் -நர நாராயணன் -ஹரி -கிருஷ்ணன் -பரசுராமன் -ராமன் -கல்கி -பாதாள சயநன் -ஆகிய -39-விபவ ரூபங்கள் –

விபோர் விசாக யூபஸ்ய தத் தத் கார்ய வசதிமே
ஸ்பூர்த்தியோ விபவா க்யாதா கார்யம் சைஷாம்ய சங்கரம் –11-26-
சுத்த அசுத்தாத் வநோர் மத்யே பத்ம நாபோ வ்யவஸ்தித
த்ருவாதய அபரே தேவா விவ்ருதா விச்வா மந்திரே –11-27-
ரூபாண்யஸ் த்ராணி சை தேஷாம் சக்தயச் சாபரா விதா
சர்வம் தத் சாத்த்வதே சித்தம் சஞ்ஜா மாத்ரம் ப்ரதர்ஸிதம்-11-28-

விசாக யூப பகவானே ஒவ் ஒரு கார்ய நிமித்தமாக இந்த விபவங்கள்-சாத்துவத சம்ஹிதையில்
இவற்றின் ரூபங்கள் ஆயுதங்கள் சக்தி இவை சொல்லப்பட்டுள்ளன –

சாகாஸ்து வாஸூ தேவாத்யா விபோர் தேவஸ்ய கீர்த்திதா
விசாக யூபோ பகவான் விததாபி கருதி தத் –11-29-
சதஸ் ரூப்யா அத சாகாப்ய கேசவாத்யம் த்ரயம் த்ரயம்
தாமோதராந்தம்ருத் பூதம் தத் வ்யூஹாந்தரம் உச்யதே –11-30-
தாப்ய ஏவ ஹி சாகாப்ய ச்ரியாதீ நாம் த்ரயம் த்ரயம்
பூர்வத்ய அநு ரூபேண சக்தீ நாம் ச சமுத்கதம்–11-31-

கேசவாதி -ஸ்ரீ யாதி -12 -வ்யூஹாந்தரங்கள்

பராதி விபவாந்தாநாம் ஸர்வேஷாம் தேவாதாத்ம நாம்
சுத்த ஷாட் குண்ய ரூபாணி வபூம்ஷி த்ரிதேஸ்வர-11-32-
யாவந்த்ய சஸ்த்ராணி தேவாநாம் சக்ர சங்காதி காநி வை
பூஷணாநி விசித்ராணி வாஸாம்சி விவிதானி ச –11-33-
த்வஜாச்ச விவிதாகார காந்தயச்ச சிதாதிகா
வாஹனாநி விசித்ராணி சத்யாத்யாநி ஸூ ரேஸ்வர –11-34-
சகதயோ போக தாச்சைவ விவிதாகார ஸம்ஸ்திதா
அந்த கரணிகோ வர்க்கஸ் ததீயா வ்ருத்தயா அகிலா –11-35-
யச்ச யச்ச உபகரணம் சாமான்யம் புருஷோத்தரை
ஷாட் குண்ய நிர்மிதம் வித்தி தத் சர்வம் பல ஸூதந–11-36-
சுத்த சம்வின் மயீ சாஹம் ஷாட் குண்ய பரிபூரிதா
ததா ததா பவாம்யேஷா மிஷ்டம் யத்தி யதா யதா –11-37-
ந விநா தேவ தேவேந ஸ்திதிர்மம ஹி வித்யதே
மயா விநா ந தேவஸ்ய ஸ்திதிர் விஷ்ணோர் ஹி வித்யதே –11-38-
தாவாவா மேகதாம் ப்ராப்தவ் த்விதா பூதவ் ச ஸம்ஸ்திதவ்
விதாம் பஜாவஹே தாம் தாம் யத் யத் யத்ர ஹி அபேக்ஷிதம் –11-39-

அப்ருதக் சித்தம் -இந்திராதி தேவர்கள் –

சிந்து கன்யே நமஸ் துப்யம் நமஸ்தே ஸரஸீ ருஹே
பர வியூகாதி பேதேந கிம் பிரயோஜனம் ஈஸிது– 11-40-

அனுக்ரஹாய ஜீவா நாம் பக்தானாம் அநு கம்பயா
பர வியூஹாதி பேதேந தேவ தேவ ப்ரவ்ருத்தய –11-41-

தேவ தேவ ப்ரியே தேவி நமஸ்தே கமலோத்பவே
அநுக்ரஹாய பக்தானாம் ஏகை வாஸ்து விதா ஹரே –11-42-

ஜீவா நாம் விவிதா சக்ர ஸம்ஸிதா புண்ய சஞ்சயா
சம் சின்வந்தி ந தே ஜீவாஸ் துல்ய காலம் கதஞ்சன –11-43-
கச்சித்தி ஸூக்ருதோன் மேஷாத் கதாசித் புருஷோ ந்ருஷூ
ஸ்ரீ மதா கமலேக்ஷண ஜாயமாநோ நிரீஷ்யதே–11-44-
அந்யதா புருஷ அந்யச்சேத் யேவம் பிந்நா சுபாசயா
பேத அதிகாரிணாம் புண்ய தாரதம்யேந ஜாயதே –11-45-
விவேக கஸ்ய சின்மந்தோ பகவத் தத்வ வேதநே
மத்ய மஸ்து பரஸ்யாத திவ்ய அந்யஸ்ய து ஜாயதே –11-46-
ஈஸா அனுக்ரஹ வைஷம்யா தேவம் பேதே வியவஸ்திதே
தத் தத் கார்ய அநு ரோதேந பர வியூஹாதி பாவநா –11-47-
க்ரியதே தேவ தேவேந சக்தி மா மதி திஷ்டதா
சம்சித்த யோக தத்வாநாம் அதிகார பராத்மநி –11-48-
வ்யா மிஸ்ர யோக யுக்தாநாம் மத்யா நாம் வியூஹ பாவேந
வைபவீயாதி ரூபேஷூ விவேக விதுராத்ம நாம் –11-49-
அஹந்தா மமதார்த்தா நாம் பக்தாநாம் பரமேஸ்வர
அதிகாரஸ்ய வைஷம்யம் பக்தா நாம் அநு த்ருஸ்ய ச –11-50-
பஜதே விவிதம் பாவம் பர வியூஹாதி சப்திதம்
இதி தே லேசத சக்ர தர்சிதா உபயாத்மகா –11-51-
பவத் பாவோத்தரா வியூஹா மம நாராயணஸ்ய ச
சுத்தே சுத்தே த ரஸ்மிம்ச்ச கோசவர்க்க மத் உத்பவே–11-52-
ஸ்திதிதவ் தர்சிதா தே அத்ய ப்ருதக் ஸஹ ச கேவலா
ஏவம் பிரகாரம் மாம் ஞாத்வா ப்ரத்யக்ஷாம் சர்வ சம்மதாம் –11-53-
உபாயைர் விவிதைர் சஸ்வத் உபாஸ்ய விவிதத்மிகாம்
கிலேச கர்மாசயாதீதோ மத் பாவம் பிரதிபத்யதே –11-54-

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –10-

May 20, 2018

ஷீரோத மத நாயாச பல ரூபே மதுத்விஷ
நமஸ் சந்த்ர ஸஹோ தர்யை நமஸ்தே அம்ருத யோநயே–10-1-
பவோத்தரா பிரகாராஸ்தே ஸ்ருதாஸ் த்வத் வக்த்ர பங்கஜாத்
இதா நீம் ஸ்ரோதும் இச்சாமி பிரகாரான் பவத் உத்தரான்–10-2-
வைஷ்ணவா அவதாராஸ்தே கிம் ரூபா கதி வாம்புஜே
ஏதத் ப்ருஷ்டா மயா ப்ரூஹி நமஸ்தே பங்கஜாசநே -10-3-

இந்திரன் ஸ்தோத்ரம் பண்ணி -தாயே உனது இருப்பு நிலை -பவத் -பற்றி மஹா விஷ்ணுவின்
அவதாரங்கள் ஸ்வரூபங்கள் குறித்து அருளிச் செய்ய வேண்டும் -என்று பிரார்த்தித்தான் –

ஸ்ரீ ஹந்த தே சக்ர வஷ்யாமி பிரகாரான் பவத் உத்தரான்
வைஷ்ணவா அவதாராஸ்தே யாவந்தோ யத்விதாச்ச தே -10-4-
ஷாட் குண்யம் அமலம் ப்ரஹ்ம நிர் தோஷம் அஜரம் த்ருவம்
ஸர்வ சக்தி நிரா தங்கம் நிரா லம்பந பாவநம் -10-5-
ததுந் மிஷதி வை பூர்வம் சக்தி மச் சக்தி பாவத
நாராயண பரோ தேவ சம்ஸ்தித சக்தி மத்தயா -10-6-
ஸ்திரா சக்திர் அஹம் தஸ்ய ஸர்வ கார்ய கரீ விபோ
தாவா வாம் ஜகத அர்த்தாய பஹுதா விக்ரியாவஹே -10-7-
யதாஹமாஸ்திதா பேதைஸ் ததா தே கதிதம் புரா
விகாராநா விகாரஸ்ய விஷ்ணோ ச்ருணு மயோதிதான் -10-8-

உலக நன்மைக்காக அவதாரம் செய்கிறோம் -அவன் செயல்பாடுகள் இயற்ற உதவும் அனைத்து சக்தியாகவே நான் உள்ளேன்
மஹா விஷ்ணுவின் திவ்ய அவதாரங்களை உனக்கு கூறுகிறேன்

அப்ராக்ருதாந நவ் பம்யாந் அசிந்த்ய மஹிம உஜ்ஜவலாந்
ஸ்வாம் சக்திம் மா மதிஷ்டாய ப்ரக்ருதிம் பரமாத் புதாம் -10-9-
த்ரை ருண்யேண ஜெகந்நாத சமுதேதி ஜகத்திதே
ஆத்யேந பர ரூபேண வ்யூஹ ரூபேண சாப்யத–10-10-
ததா விபவ ரூபேண நாநா பாவம் உபேயுஷா
வ்யாபகோ பகவான் தேவோ பக்தாநுக்ரஹ காம்யயா -10-11-
அநவ் பம்யம நிர்த்தேச்யம் வபு ச பஜதே பரம்
விஸ்வாப்யாய நகம் காந்த்யா பூர்ணேந்த்வ யுத துல்யயா –10-12-

பர வ்யூஹ விபவம் -பல ரூபங்களில் நாங்கள் அவதாரம் –

வரத அபய ஹஸ்தம் ச த்வி புஜம் பத்ம லோசநம்
ரேகா மயேந சக்ரேண சங்கேந ச கரத்வயே -10-13
அங்கிதம் நிர் விகாராங்க்ரிஸ் திதம் பரம் சோபநம்
அந்யூநா நதிரிக்தவ் ஸ்வைர் குண ஷட் பிர லங்க்ருதம் -10-14-
சமம் சம விபக் தாங்கம் ஸர்வ அவயவ ஸூந்தரம்
பூர்ணம் ஆபரணை சுப்ரை ஸூ தா கல்லோல சங்குலை –10-15-
ரஸ்மி பூதைர மூர்த்தை ஸ்வைர் அச்யுதாத் யைரவிச்யுதம்
ஏகா மூர்த்திரியம் திவ்யா பராக்யா வைஷ்ணவீ பரா –10-16-
யோக சித்தா பஜந்தேயே நாம் ஹ்ருதி துர்ய பாதாஸ்ரிதாம்
அத வ்யூஹ ஸ்வரூபம் தே த்வி தீயம் வர்ணயாம் அஹம் -10-17-

யோகிகள் த்யானத்தில் பர ஸ்வரூபம் -மேலே வ்யூஹ ஸ்வரூபம் பற்றி சொல்கிறேன்

வ்யூஹ ஆத்மா நம் சதுர்த்தா ஸ்வம் தேவ பிரகார பேதத
வாஸூ தேவாதி பேதேந ஸு ஷூப்தாத்வநி திஷ்டதி -10-18-
ஸம்ஸ்தானம் ஆதி மூர்த்தேர்வை ஸர்வேஷாம் து சமம் ஸ்ம்ருதம்
ஷட் குணம் ப்ரதமம் ரூபம் த்வந்த்வை ஜ்ஞானாநி சம்பவை -10-19-
இதராணி ஸ்வரூபாணி கதிதாநி மயா புரா
வஹ்நயர் கேந்து சஹஸ்ராபம் ஆநந்தாஸ் பந்த லக்ஷணம் -10-20-
பீஜம் ஸர்வ கிரியாணாம் ஹத் விகல்ப்பாநாம் ததாஸ்பதம்
ஸுஷூப்தம் சாதுராத்ம்யம் தத் ப்ரதமம் வித்தி வாசவ -10-21-
அத ஸ்வாப்நே பதே அபி ஏவம் விபஜ்யாத்மாந மாத்மநா
தேவ பிரகாதி பேதேந வாஸூ தேவாதி ரூபத–10-22-
சமாசவ்யா ச பேதேந குணா நாம் புருஷோத்தம
சித ரக்த ஸூவர்ணா ப்ரஸத்ருஸை பரமாத்ப்புதை–10-23-
ஆதி மூர்த்தி சமை ரூபைச் சதுர்த்தா வ்யவதிஷ்டதே
கைவல்ய போக பலதம் பவ பீஜஷ யங்கரம் –10-24-
சாதுராத்ம்யம் த்வி தீயம் தத் ஸூதா ஸந்தோஹ ஸூந்தரம்
அத ஜாக்ரத் பதே தேவ ஸூ தரக்தாதி பேதத–10-25
சதுர் புஜை ருதா ராங்கை சங்க சக்ராதி சிஹ்நிதை
நாநாத் வஜ விசித் ராங்கை வாஸூ தேவாதி சஞ்ஜிதை -10-26
வ்யூஹை ஸ்வம் ப்ரவிபஜ் யாஸ்தே விபுர் நாம ஸ்வ லீலயா
தத் ராத்யம் பகவத் ரூபம் ஹிமகுந்தேந்து காந்தி மத் -10-27-
சதுர் புஜம் ஸும்ய வக்த்ரம் புண்டரீக நிபேஷணம்
பீத கௌசேய வசனம் ஸூபர்ண த்வஜ பூஜிதம் -10-28-
முக்ய தக்ஷிண ஹஸ்தேந பீதாநாம் அபய ப்ரதம்
ததா விதேந வாமேந ததாநம் சங்கம் உத்தமம் -10-29-
அபரேண ததாநம் ச தஷிணேந ஸூ தர்சனம்
வாமேந ச கதம் குர்வீம் நிஷண்ணாம் வ ஸூதாதலே -10-30-
சஞ்சிந்தயேத் புரோ பாகே வாஸூ தேவம் இதி ஈத்ருசம்
சிந்தூர சிகாராகாரம் ஸும்ய வக்த்ரம் சதுர் புஜம் -10-31-
அதஸீ புஷ்ப ஸங்காச வசனம் தால லாஞ்சிதம்
முக்யேந பாணி யுக்மேந துல்யமாத் யஸ்ய வை விபோ -10-32-
சீரம் தச் சக்ர ஹஸ்தே அஸ்ய முஸலம் து கதா கரே
தஷிணே சிந்தயேத் பாகே சங்கர்ஷணம் இதி ஈத்ருசம் -10-33-
ப்ராவ்ருண் நிசா ச முதித்கத்யோத நிசயப்ரபம்
ரக்த கௌசேய வசனம் மகர த்வஜ சோபிதம் -10-34-
ஸும்ய வக்த்ரம் சதுர் பாஹும் த்ருதீயம் பரமேஸ்வரம்
முக்ய ஹஸ்த த்வயம் சாஸ்ய பிராக்வத் துல்யம் மஹாமதே -10-35-
வாம அபரஸ்மிந் சார்ங்கம் ச தஷிணே பண பஞ்சகம்
அபரே சிந்தயேத் பாகே பிரதியும்ந மிதி கீர்த்திதம் -10-36-
அஞ்ஜ நாத்ரி பிரதீ காசம் ஸூ பீதாம்பர வேஷ்டிதம்
சதுர் புஜம் விசாலாக்ஷம் ம்ருக லாஞ்சன பூஷிதம் –10-37-
ஆதிவத் பாணி யுகலமாத்ய மஸ்ய விசிந்தயேத்
தஷிணாதி க்ரமேணாத த்வாப்யாம் வை கட்க கேடகௌ -10-38-
ததா நம் அநிருத்தம் து ஸும்யபாகே விசிந்தயேத்
வனமாலா தரா சர்வே ஸ்ரீ வத்ச க்ருத லக்ஷணா –10-39-
சோபிதா கௌஸ்து பேநைவ ரத்ந ராஜேந வக்ஷஸி
ஜாக்ரத்பதே ஸ்திதம் தேவம் சாது ராத்ம்யம் அநுத்தமம் -10-40-
ஸ்திதி உத்பத்தி பிரளய க்ருத் சர்வோப கரணாந் விதம்
திவ்யம் தச் சிந்தயேத் யஸ்ய விஸ்வம் திஷ்டதி சாஸநே -10-41-
த்ரி விதம் சாது ராத்ம்யம் து ஸூ ஷூப்த்யாதி பத த்ரிகே
ஸூவ் யக்தம் தத் பதே துர்யே குண லஷ்யம் பரம் ஸ்திதம் -10-42-
ஜ்ஞான க்ரியாதிபிர் விஷ்ணோர் லோகாந் அநு சிஸ்ருஷத
வ்யூஹ சஞ்ஜாமிதம் ரூபம் த்விதீயம் கதிதம் மயா -10-43-
த்ருதீயம் விப வாக்யம் து விஸ்வ மந்திரமத்யகம்
நாநாகார க்ரியா கர்த்ரு ரூபம் விஷ்ணோர் நிசாமய -10-44-

வாஸூ தேவ த்யானம் –
விழிப்பு நிலை –பனி மல்லிகை சந்திரன் போன்ற வெண்மை நிறம் -நான்கு திருக் கரங்கள் –
மஞ்சள் நிற பீதாம்பர வஸ்திரம் -கருட கொடி -அஞ்சேல் அபய ஹஸ்தம் -சங்கு சக்ர கதா தரன்-கிழக்கு திசை
சங்கர்ஷண தியானம்
சிவந்த நிறம் -நான்கு திருக் கரங்கள் -அதஸீ -ஆளிச் செடி -நீல நிற வஸ்திரம் -தால -பனை மரம் அடையாளம்
சங்கு சக்கரம் பதிலாக கலப்பை உலக்கை -தெற்கு திசை
பிரதியும்ந த்யானம்
சிவந்த பட்டாடை -மகரக் கொடி -வில் -ஐந்து அம்புகள் -மேற்கு தசை
அநிருத்தன் த்யானம்
அஞ்சன குன்றம் போல் -மஞ்சள் வஸ்திரம் -மான் கொடி /வாள் கேடயம் தரித்து -வடக்கு தசை
மேலே விபவ நிலை -அர்ச்சா ரூபம் சேஷ்டிதங்கள் கூறுவேன் –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –9–

May 20, 2018

அஹம் நாராயணீ தேவீ நாராயணம் அநு வ்ரதா
ஞானானந்த க்ரியாத்மாநம் ஞானானந்த க்ரியா மயீ -9-1-
தஸ்யா மே ந விநா பாவஸ் தேந வா தஸ்ய வா மயா
பிரகர்த்தும் சக்யதே காலே கஸ்மிம்ச் சித்தேச ஏவ வா –9-2-
தத் தத் கார்ய வசாச் சைவாந் யத் பூதாத் பூத ரூப கவ்
ஆத்ம யோக பலாத்தவ் ஸ்வ சஹைவ ச விநைவ ச -9-3-
ப்ரஹ்மாதிர் தத்தவாந் யாத்ருக்த போயோக பலாத்க்ருத
தைத் யாதிப்யோ ஜகத்த்வம் சகரேப்யோ வரமுத்தமம் -9-4-
தாத்ருசம் தாத்ருசம் ரூப மாஸ்தாயாவாம் சநாதநவ்
தத் தத் ப்ரீதி சிகீர்ஷாயை சராவோ தேவ கார்யத-9-5-
மாயயா பாவமாச் ஸாத்ய பரமார்த்தம் ஸ்வ தேஜஸா
அஹமே வாவதீர்ணா ஹி தத் தத் தவம் சிஜி காம் சயா -9-6-

மாயையால் பரமார்த்த ஸ்வரூபத்தை மறைத்து -என் சக்தியால் அசுரர்களை அழிக்கும் பொருட்டு அவதரிக்கிறேன்

ஆதவ் தேவீ மஹா லஷ்மீ ஸ்ம்ரு தாஹம் பரமேஸ்வரீ
அ பூவம் ச புநர்த் வேதா கிருஷ்ணா ப்ராஹ்மீதி ரூபத-9-7-

ஆதியில் மஹா லஷ்மீ அவதாரம் -பின்பு கிருஷ்ணா -காளீ /ப்ராஹ்மீ -மஹா வித்யா -என்ற இரண்டு ரூபங்கள்

குண த்ரய விபாகேந ரூபம் ஏதத் பரம் மம
மஹா லஷ்மீ ரஹம் சக்ர புந ஸ்வாயம்புவே அந்தரே–9-8-
ஹிதாய சர்வ லோகா நாம் ஜாதா மஹிஷ மர்த்த நீ
மதீயா சக்தி லேசா யே தத் தத் தேவ சரீரகா –9-9-
சம்பூய தே மமா பூவந் ரூபம் பரம சோபநம்
ஆயுதாநி ச தேவா நாம் யாநி யாநி ஸூரேஸ்வர–9-10-
தச் சக்தயஸ் ததா காரா ஆயுதா நி மமாபவந்
அபிஷ்டுதா ஸூ ரை சாஹம் மஹிஷிம் ஜக்நுஷீ க்ஷணாத் –9-11-

ஸ்வாயம்பு மனு காலத்தில் என் சக்தி எல்லாம் ஒன்றாகத் திரண்டு -மஹிஷ மர்த்தநியாக அவதாரம் –

மஹிஷாந்தகரீ ஸூக்தம் சர்வ சித்தி ப்ரதம் ததா
தேவ்யா யயா -திகம் த்ருஷ்டும் சேந்த்ரைர்தேவை சஹர்ஷிபி-9-12-

அப்பொழுது இந்திராதி தேவர்களும் ரிஷிகளும் மஹிஷனைக் கொன்றவளை –
தேவ்யா யயா ததமிதம்-என்று தொடங்கி ஸூக்தம் கொண்டு ஸ்துதித்தார்கள்
மார்க்கண்டேய புராணம் -81-3-முதல் -81-29-வரை காணலாம் –

உத்பத்திம் யுத்த விக்ராந்திம் ஸ்தோத்ரம் சேதி ஸூரேஸ்வர
கதயந்தி ஸூ விஸ்தீர்ணம் ப்ராஹ்மணா வேதபாரகா –9-13
ஏவம் பிரபாவம் தேவீம் தாம் ஸ்துவந் த்யாயன் நமத்ராபி
லபதே ச பலம் சஸ்வதாதி பத்யம நஸ்வரம் -9-14

தோற்றத்தையும் வீரச் செயல்களையும் ஸ்தோத்ரம் பண்ணினார்கள்
இந்த ரூபம் கொண்ட தேவியை ஸ்துதித்தும் த்யானித்தும் வணங்கியும் சகல புருஷார்த்தங்களையும் பெறலாமே

யோக நித்ரா ஹரே ருக்தா யா சா தேவீ துரத்யயா
மஹா காளீ தநும் வித்தி தாம் மாம் தேவீம் ச நாதநீம் -9-15-

ஸ்ரீ ஹரி யோக நித்திரை -மஹா காளீ -இணைத்து கூறப்படும் அவதாரம் –

மது கைடப நாசே ஹி மோஹிதவ் தவ் தயா ததா
ஜக் நாதே வரலாபேந தேவ தேவேந விஷ்ணு நா –9-16-
விஸ்வேஸ்வர்யாதிகம் ஸூக்தம் த்ருஷ்டும் தத் ப்ரஹ்மணா சதா
ஸ்துதயே யோக நித்ராயா மம தேவ்யா புரந்தர –9-17-

யோக நித்ரா ரூபத்தில் அழித்தமை-நான்முகன் -விஸ்வேஸ்வரீ ஜகத்தாத்ரீம் -என்று தொடங்கும் ஸூக்தம் –
மார்க்கண்டேய புராணம் –78-53-முதல் -78-67-வரை காணலாம் –

ஏஷ சா வைஷ்ணவீ மாயா மஹா காளீ துரத்யயா
ஸ்துத்யா வசீக்ருதா குர்யாத்வசே ஸ்தோ துச்ச ராசரம் –9-18-
அஸ்யா தேவ்யா ஸமுத்பத்திஸ்வரிதம் ஸ்தோத்ர மித்யாபி
ஹிதாய ஸர்வ பூதா நாம் தார்யந்தே ப்ரஹ்ம வாதிபி –9-19-

தவம் செய்து இவளை ஸ்துதித்தால் சர்வ அபேஷிதங்களையும் பெறலாம்
இவள் உத்பத்தி சரிதம் ஸ்துதிகள் உலக நன்மைக்காகவே –

தாமஸே த்வந்தரே சக்ர மஹா வித்யா ஹி யா பரா
கௌரீ தேஹாத் ஸமுத்பூதா கௌசிகீதி ததா ஹி அஹம் -9-20-

தாமஸ மனுவின் காலத்தில் கௌரி சரீரத்தில் இருந்து கௌசிகீ பெயருடன் அவதாரம்

வதாய துஷ்ட தைத்யா நாம் ததா சும்ப நிசும்பயோ
ரக்ஷணாய ச லோகாநாம் தேவா நாம் உபகாரிணீ -9-21-

சும்பன் நிசும்பன் -அரக்கர்களை வதம் செய்து தேவர்களுக்கு உபகாரம் செய்தேன்

மதீயா சக்தயோ யாஸ்தா தேவச்ரேஷ்ட சரீரகா
தாஸ்தாஸ் மத்ரூப தாரண்ய சாஹாய்யம் வித துர்மம-9-22-
தாபிர் நிஹத்ய தைத்யேந்த்ரான் ஹந்த்வயா யே ததா ததா
ஸம்ஹ்ருத்யாத்ம நி தா சர்வா மதீயா விப்ருஷ அகிலா -9-23-
அஹம் நிஜக்நுஷீ பச்சாத்யோ சும்ப நிசும்பயோ
தேவி ப்ரபந்நாதி ஹரே ப்ரஸீ தேத் யாதிகம் ததா -9-24-
நாராயணீ ஸ்துதிர்நாம் ஸூக்தம் பரம சோபநம்
ஸ்துதயோ மே ததா த்ருஷ்டா தேவைர் வாஹ்நி புரோ கமை -9-25-

அரக்கர்களை வதம் செய்யும் பொருட்டு சக்திகள் அனைத்தும் பல ரூபங்கள் எடுத்து உதவிற்றே –
சும்பன் நிசும்பனை அழித்த பின்பு –
தேவி ப்ரபந்நாதி ஹரே ப்ரஸாதே-நாராயணீ ஸ்துதி -மார்க்கண்டேய புராணம் -88-2-தொடங்கி -88-35-வரை

ஏஷா சம்பூஜிதா பக்த்யா சர்வஞ்ஞத்வம் பிரயச்சத்தி
கௌசிகீ ஸர்வ தேவேச பஹு காம ப்ரதா ஹி அஹம் -9-26-
உத்பத்திர் யுத்த விக்ராந்தி ஸ்துச் சேதி புராதனை
பட்யதே த்ரிதயம் விப்ரைர் வேத வேதாங்க பாரகை -9-27-

உத்பத்தி யுத்தம் செய்த விதம் -புகழ்ந்த ஸ்தோத்ரம் -வேதம் அறிந்தவர் சொல்வதை அறிந்து
என்னை பூஜித்து வணங்குவார்கள் அனைத்து அபேஷிதங்களையும் பெறுவார்

வைவஸ்வதே அந்தரே சைதவ் புந சும்ப நிசும்ப கவ்
உத்பத்ஸ் யேதே வரோந் மத்தவ் தேவோ பத்ரவ காரிணவ் -9-28-
நந்த கோப குலே ஜாதா யசோதா கர்ப்ப சம்பவா
வாஹம் நாசயிஷ்யாமி ஸூ நந்தா விந்த்ய வாசி நீ -9-29-

வைவஸ்வத மன்வந்தரத்தின் போது இந்த சும்பன் அசும்புண் அரக்கர்கள் மீண்டும் பிறக்க
நந்தகோபர் யாதவ குலத்தில் யசோதையின் கர்ப்பத்தில் ஸூ நந்தா அவதாரம் எடுத்து விந்திய மலையில்
இருந்து அவர்களை அளிப்பேன் -மார்க்கண்டேய புராணம் -88-38-.39-

புநஸ்சாப் யதி ரவ்த்ரேண ரூபேண ப்ருதிவீ தலே
அவதீர்ய ஹி நிஷ்யாமி வைப்ரசித்தாந் மஹா ஸூராந் -9-30-
பக்ஷ யந்த்யாச்ச தாநுக்நான் வைப்ரஸித்தாந் மஹா ஸூராந்
ரக்தா தந்தா பவிஷ்யந்தி தாடிமீ குஸூமோப-9-31-
ததோ மாம் தேவதா சர்வே மர்த்ய லோகே ச மாநவா
ஸ்து வந்தோ வ்யாஹரிஷ்யந்தி சததம் ரக்த தந்திகாம் -9-32-

கஸ்யபருக்கும் தானுவுக்கும்-100-புத்திரர்கள் -அவர்களுள் விப்ரசித்தி ஒருவன்
இவன் ஹிரண்யகசிபு மகள் ஸிம்ஹிகாவை மணந்து வாதாபு-நமுசி -நரகன் -ராஹு புத்திரர்கள் –
இவர்கள் வம்சம் தானவ வம்சம் -அவர்களை அழிக்க பயங்கர ரூபம் கொண்டு -ரக்தந்திகா-அவதாரம்
மாதுளை மலர் போன்ற சிவந்த பற்களுடன் அவர்களை அழிப்பேன்-
அனைவரும் என்னை போற்றுவர் -மார்க்கண்டேய புராணம் -88-40-/42-

தஸ்மிந் ஏவாந்தரே சக்ர சத்வாரிம் சத்தமே யுகே
ஸர்வத சத வார்ஷிக் யாமநா வ்ருஷ்டயாம நம்பசி -9-33-
முநிபி ஸம்ஸ்ம்ருதா பூமவ் சம்பவிஷ்யாம் யயோநிஜா
தத சதேந நேத்ராணாம் நிரீஷிஷ் யாம் யஹம் முநீந் -9-34-
கீர்த்தயிஷ் யந்தி மாம் சக்ர சதாஷீமிதி மாநவா
ததாஹ மகிலம் லோக மாத்ம தேஹ ஸமுத்பவை -9-35-
பரிஷ்யாமி சுபை சாகைராவிஷ்டை பிராண தாரகை
சாகம்பரீதி மாம் தேவாஸ்ததா ஸ்தோஷ் யந்தி வாசவ -9-36-
தத்ர ஏவ ச ஹநிஷ்யாமி துர்க்கமாக்யம் மஹாஸூரேம
துர்க்கா தேவீ தி விக்யாதிம் ததோ யாஸ்யாம் யஹம் புவி -9-37-
சாகம் பரீம் ஸ்துவந் த்யாயன் சக்ர சம்பூஜயந் நமந்
அக்ஷய்யா மஸ்நுதே சீக்ர மந்ந பாநோத் பவாம் ரதிம் -9-38-

தாமஸ மன்வந்தர காலம் -40- யுகத்தில் கடுமையான வறட்சியும் பஞ்சமும் இருக்க -என் சாகம்பரி அவதாரம்–
100- கண்கள் -கடாக்ஷம் மூலம் ஸ்தாவரங்களை போஷிப்பேன் -மார்க்கண்டேய புராணம் -88-45-/-46-
துர்க்கா அவதாரம் -சாகம்பரியான- என்னை ஸ்துதித்து வணங்கினவன் விரும்பிய உணவு தண்ணீர் பெறுவான்

சதுர் யுகே ச பஞ்சா சத்தேம முநி ப்ரார்த்திதா
ஸூந்தரம் சாதி பீமம் ச ரூபம் க்ருத்வா ஹிமாசலே -9-39-
ரஷாம் சி பக்ஷயிஷ்யாமி முநீநாம் த்ராண காரணாத்
ததோ மாம் முநய சர்வே ஸ்தோஷ் யந்த்யா நம்ர மூர்த்தய 9-40-
பீமே தேவி ப்ரஸீ தேதி பீமா மபயதாயிநீம்
யுகே ஷஷ்டிதமே கச்சி தருணோ நாம தாநவ -9-41-

தாமஸ மன்வந்தர நான்காம் யுகம் -ஹிமாலயத்தில் -பீமா தேவி அவதாரம் -பீமே தேவி ப்ரஸீ தே-என்று ஸ்துதிப்பர் –
அந்த தாமஸ மன்வந்த்ரத்தின் ஆறாவது யுகத்தில் அருணன் என்ற அசுரன் தோன்றுவான் –

மநுஜாநாம் முநீ நாம் ச மஹா பாதாம் கரிஷ்யதி
தத்ராஹம் ப்ராமரம் ரூபம் க்ருத்வா ஸங்க்யேய ஷட்பதா-9-42-
த்ரை லோக் யஸ்ய ஹிதார்த்தாய வதிஷ்யாமி மஹா ஸூரம்
ப்ராமரீதி ச மாம் லோகாஸ் ததா ஸ்தோஷ் யந்தி ஸர்வதா -9-43-

ஷட் பத வண்டு ரூபம் எடுத்து அந்த அரக்கனை வதம் செய்ததும்- ப்ராமரீ -என்று அழைத்து ஸ்துதித்தார்கள்

இத்தம் யதா யதா பாதா தாந வோத்தா பவிஷ்யதி
ததா ததா வதீர்யாஹம் ஹநிஷ்யாமி மஹா ஸூராந் -9-44-
அமீ தே லேசத சக்ர தர்சிதா பரமாத்புதா
அவதாரா நிரா தங்கா மதீயா கேவலாஹ் வயா -9-45-

துஷ்ட நிக்ரஹத்துக்காக நான் செய்யும் பல அத்புத அவதாரங்கள் பற்றி சுருக்கமாக உரைத்தேன்

ஏதேஷாம் பரமா ப்ரோக்தா கூடஸ்தா சா மஹீ யசே
மஹா லஷ்மீர் மஹா பாகா ப்ரக்ருதி பரமேஸ்வரீ -9-46-
அமுஷ்யா ஸ்துதயே த்ருஷ்டும் ப்ரஹமாத்யை சகலை ஸூ ரை
நமோ தேவ்யாதிகம் ஸூக்தம் ஸர்வ காம ப்ரதம் வரம் -9-47-
இமாம் தேவீம் ஸ்துவந் நித்யம் ஸ்தோத்ரேணாநேந மாமிஹ
க்லோசா ந நீத்ய சகலா நைஸ்வர்யம் மஹதஸ்நுதே -9-48-

இந்த அவதாரங்களை விட பரமமான பிரகாசமான மஹா லஷ்மீ ஸ்வரூபமே -பரமேஸ்வரீ -ரூபமே மிக உயர்ந்தது ஆகும் –
நமோ தேவ்யை மஹா தேவ்யை -என்று நான்முகன் முதலான தேவர்கள் -ஸூக்தம் -கொண்டு ஸ்துதித்தார்கள் –
இந்த ஸ்துதி மூலம் துன்பங்கள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெறலாம் –

அமுஷ்யா சாவதாராயா மஹா லஷ்ம்யா மமாநக
ஜன்மாநி சரிதை சார்தம் ஸ்தோத்ரைர் வைபவ வாதிபி -9-49-
கதிதாநி புரா சக்ர வசிஷ்டேந மஹாத்மநா
ஸ்வாரோசிஷே அந்தரே ராஜ்ஜே ஸூரதாய மஹாத்மநே -9-50-
சமாதயே ச வைஸ்யாய ப்ரணதாய வசீததே
பக்தி ச்ரத்தாவதா நித்யம் வசிஷ்டேந க்ருதேதி மே -9-51-
ஹ்ருதி ஸ்திதா சதா சேயம் ஜென்ம கார்மாவலி ஸ்துதி
ஏதாம் த்விஜ முகாச்ச்ருத்வா ஹி அதீயாநோ நர சதா -9-52-
விதூய நிகிலாம் மாயாம் சம் யக்ஞானம் சமஸ்நுதே
ஸர்வாம் சம்பத மாப் நோதி து நோதி சகலாபத -9-53-
மம பிரபாவாத் ஸுபாக்யம் கீர்த்திம் சைவ சமஸ்நுதே
கேவலா அபி யத்யதே மதீயா விஷ்ணு நா விநா -9-54-

ஸ்வாரோசிஷா மன்வந்த்ரத்தின் போது -ஸூரதன் அரசனுக்கும் சமாதி என்னும் வைச்யனுக்கும்
என் அவதாரங்கள் ஸ்துதிகளைக் குறித்தும் என் நிலையான மஹா லஷ்மீ ஸ்வரூபாதிகளைக்
குறித்தும் வசிஷ்ட மகரிஷி உரைத்தார் –
இவற்றை ஸ்ரத்தையுடன் எண்ணி ஸ்துதிப்பவர்கள் வசிஷ்டராகவே ஆவார்கள் –
பாபங்களை விலக்கப் பெற்று உண்மையான ஞானம் பெற்று அனைத்தையும் பெறப் பெறுவார் –

ந மே அஸ்தி சம்பவ சோயம் அஹம் பூத ஸ்தித அத்ர து
அந்யோன்ய அநா விநா பாவாதந்ய அந்யேந சமன்வயாத்-9-55-
மய்யயம் தேவ தேவே சஸ் தத்ராஹம் ச சநாதநீ
இத்யேதே லேசத சக்ர தர்சிதா ச பிரகாரகா -9-56-

ஆயினும் விஷ்ணு இல்லாமல் நான் இல்லையே -இந்த அவதாரங்களில் –
என் அஹந்தையாகவே -அவன் உள்ளான் -இருவரும் அப்ருதக் சித்தம்

அவதாரா மதீ யாஷ்தே ஸம்பூதா கோச பஞ்சகே
சுத்தே கோசே ஸமுத்பூதா பவத்பாவாத் மகா பரே–9-57-
தத் ராப்யேஷா ஸ்திதிர் ஜேயா விஷ்ணோர் மம ஸஹ ஸ்திதி
ஏவம் பிரகாராம் மாம் ஜ்ஞாத்வா ப்ரத்யக்ஷாம் ஸர்வ சம்மதாம்–9-58-
உபாயைர் விவிதை சச்வது பாஸ்ய பஹு தாத்மிகாம்
க்லேச கர்மா சயாதீதோ மத்பாவம் பிரதிபத்யதே –9-59-

இப்படியாக பஞ்ச கோசங்களில் என் அவதாரங்கள் அடங்கி உள்ளன -ஆறாவது கோசம் என்பதில்
நாங்கள் இருவரும் சேர்ந்தே விட்டுப் பிரியாமல் அவதரிக்கிறோம் என்று கூறுவதை
அறிந்து உபாசிக்கும் உபாசகர் -சோகங்கள் கடந்து -கர்மங்கள் அழிக்கப் பட்டு -எனது ஸ்வரூபம் அடைகிறான் –

—————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –8–

May 20, 2018

நமஸ்தே சிந்து ஸம்பூதே நமஸ்தே பத்ம சம்பவே
நாம சரோருஹா வாஸே நாராயண குடும்பி நீ –8-1-
அவதாராஸ்து யே ப்ரோக்தாஸ் த்வதீயா கோச பஞ்சக
தாந்மே விஸ்தரத பத்மே ப்ருச்சதே வக்தும் அர்ஹஸி -8-2-
கிமர்த்தா கிம் பிரகாராஸ்தே கியந்த கிம் ஸ்வரூபகா
தத்வம் கதய மே தேவி சர்வஞ்ஞா ஹி அஸி ஸாஸ்வதீ -8-3-

மாயை முதல் ஜீவன் வரை உள்ள பஞ்ச கோசங்களில் நீர் உள்ள விதத்தை சொல்வீர்

அதரங்கம் அ நிர்தேஸ்யபிர் அகம்ப்யம் அநுபமம்
அ பிரகாரம் அ சம்பேத்யம் அ விகல்பம் அ நா குலம்–8-4-
ஏகம் நாராயணம் ப்ரஹ்ம ஸூந்யம் சுத்தம் நிராமயம்
யதிதம் த்ருச்யதே கிஞ்சிச் ஸூயதே வாநு மீயதே–8-5-
பிராமண த்ரய ஸம்போத்யம் பாவ அபாவ ஸ்வ லக்ஷணம்
சராசரம் அணு ஸ்தூலம் சேதன அசேதனம் ஜகத் –8-6-
ததிதம் சகலம் ப்ரஹ்ம நாராயணம் அநுத்தரம்
அவித்யா அவிதுராந்த ஸ்வச்சஸ் வச் சந்த சித்தனம் -8-7-
பவத் பாவாத் மகம் திவ்ய மத்வந பாரமுத்தமம்
சக்தி மச் சக்தி பாவேந தத் த்விதா வ்யவதிஷ்டதே-8-8-
சக்தி மத்தத் பரம் ப்ரஹ்ம நாராயணம் அஹம் பவத்
சக்தி நாராயணீ சாஹமஹந்தா பாவ ரூ பிணீ–8-9-
ச பிரதேசோ ந தஸ் யஸ்தி யேந பூதம் மயா விநா
ச பிரதேசோ ந மே கச்சித் விநா தத்யேந பூயதே -8-10-
ஏகதா ச த்விதா சைவ தைஸ் தைஸ் தத் வாப்தி பாராகை
வ்யபதிச் யாவஹே சாஸ்த்ரை ஸ்தாவாவாம் சர்வ காரணம் -8-11-

பவத் -சத்தாக ஸ்வரூபம் -அவன் -/பாவம் -நான் என்ற எண்ணம் நான் -அவன் சக்தி நாராயணீ நான் -எங்கும் மிதுனமே-
சர்வ காரணம் நாங்கள் -ப்ரஹ்மம் என்று ஏகமாகவும் ஸ்ரீ யபதி-என்று இருவராகவும் வேத சாஸ்த்ர ஆர்ணவம் கோஷிக்கும்

பாவோத்தரா க்வசித் ஸ்ருஷ்டி க்வசித் சா பவதுத்தரா
பவத் பாவோத்தரா க்வாபி வித்வாம்ஸ் தத்ர ந முஹ்யதி -8-12-

அனைத்தும் நிலை நிற்கும் ப்ரஹ்மத்திலே லயிக்கும் -ப்ரஹ்மத்தின் நின்றும் வெளியிடப்படும்

ஏக ஏவ அவதீர்னோ ஹி தேவா நாம் கார்ய வத்தயா
நாராயணோ யதா சாஹம் தத்ர தத் பாவ பாவிநீ –8-13
ஏக ஏவ ச அவதீர்ணாஹம் யதா தேவஹிதேப் சயா
அஹந்தா யாம் மயி வ்யக்த ச தேவ அஹம் பதார்த்த வாந் –8-14-
அவதீர்ணை யதா துல்யம் தேவ கார்ய சிகீர்ஷயா
அந்யோந்யோ ஸ்திதாவாவாம் பவத் பாவாத் மகவ் த்வயோ -8-15-

சில சமயம் நாராயணன் மட்டும் அவதாரம் –அவன் செயல்களைப் புரியும் நிலையாக அப்பொழுது நான் உள்ளேன்
சில சமயம் நான் மட்டும் அவதாரம் -அப்பொழுது-நான் -என்ற தன் நிலையை என்னுள் வைக்கிறான் -இப்படி இருவரும் அந்யோன்யம்-

இத்தம் வியவஸ்திதே தத்தேவ ஹி அவதார கதிம் ச்ருணு
அநிருத்தோ விபுர் தேவோ தேவ தேவ சநாதந -8-16-
மஹா வித்யா ஸமுத்பூதஸ் ததாஹமபி வாசவ
மத்த ஏவ மஹா லஷ்ம்யா அபூர்வம் கமலாக்யயா-8-17-

அநிருத்தன் மஹா வித்யாவிடம் இருந்து வெளிப்பட -மஹா லஷ்மி யான என்னிடம் இருந்து கமலா வெளிப்படுகிறாள்

தாவிமவ் தம்பதீ திவ்யவ் பிதரவ் ஜெகதாம் மதவ்
பத்ம நாப அவதாரே து தாவேதவ் த்வாவ யோநிஜவ் -8-18-

அநிருத்தன் கமலா -திவ்ய தம்பதிகள் -உலக தாய் தந்தை –
பத்ம நாப திரு அவதாரத்தின் பொழுது இவர்கள் திரு அவதாரம் -யோநி மூலம் பிறக்க வில்லை

நாராயண அவதாரோ ய சக்தீசோ நாம நாமத
பிரகாரா பஹவஸ் தஸ்ய ஸர்வத்ராஹ மநு வ்ரதா -8-19-
ஏகதா த்விச சதுர்த்தா ச ஷோடா ச ஏவ ததாஷ்ட தா
புநர் த்வாத சத ச ஏவ தத்ர நாமாநி மே ச்ருணு -8-20-
ஸ்ரீ நாம த்வி புஜஸ் யாஹம் அங்கஸ்தா வர வர்ணி நீ
தஸ்யை வோபயதோ ரூபே ஸ்ரீச்ச புஷ்டிச்ச வாசவ -8-21-

இரண்டு திருக் கரங்கள் உடன் அவன் திரு மடியில் -ஸ்ரீ என்னும் திரு நாமம் கொண்டு வீற்று இருக்கிறேன்
இரண்டு பக்கங்களிலும் வீற்று இருந்த பொழுது ஸ்ரீ -என்றும் புஷ்டி என்றும் அழைக்கப் படுகிறேன் –

சதுர்த்திசம் து தஸ்ய ஏவ ஸ்ரீ கீர்த்திச் ச ஜெயா ததா
மாயேதி க்ருத்வா ரூபாணி புஜ்யே அஹம் தேந விஷ்ணு நா -8-22-

ஸ்ரீ -கீர்த்தி -ஜெயா -மாயா -நான்கு ரூபங்களுடன் அவனது நான்கு பக்கங்களிலும் இருந்து அவனை பூஜிக்கிறேன்

தஸ்ய ஏவ கோண ஷட் கரஸ்த ஷோடாஹம் ச்ருணு நாம ச
சுத்திர் நிரஞ்ஜனா நித்யா ஞான சக்திச்ச வாசவ -8-23-
தத் அபராஜிதா ச ஏவ ஷஷ்டீ து ப்ரக்ருதி பரா
தஸ்ய ஏவ சாஷ்டதா திஷூ சாஹம் ரூபைர் வ்யவஸ்திதா -8-24-
லஷ்மீ ஸரஸ்வதீ சர்வ காமதா ப்ரீதி வர்த்த நீ -8-25-

ஆறு கோணங்களில் அவனை சுற்றி இருக்கும் பொழுது சுத்தி -நிரஞ்ஜனா -நித்யா -ஞான சக்தி -அபராஜிதா -பிரகிருதி -என்றும்
எட்டு கோணங்களில் -லஷ்மீ-ஸரஸ்வதீ -சர்வ காமதா-ப்ரீதி வர்த்த நீ-யசஸ் கரீ -சாந்தி தா-துஷ்டிதா-புஷ்டி –எட்டு ரூபங்களில் வீற்றுள்ளேன்

கோண த்வி ஷட்கே தஸ்ய ஏவ ஸ்திதா த்வாதஸதாஸ்ம் யஹம்
ஸ்ரீச்ச காமேஸ்வரீ காந்தி க்ரியா சக்தி விபூதய–8-25-
இச்சா ப்ரீதீ ரதிச் சைவ மாயா தீர் மஹி மேதி ச
ஏவம் சதுர் புஜஸ்யாபி ஷோடாஹம் க்ரமச ஸ்திதா -8-27-

நாராயணனை இரண்டு வித ஆறு கோணங்களில் சூழ்ந்து -12-ரூபங்களை எடுத்து
ஸ்ரீ -காமேஸ்வரீ -காந்தி -க்ரியா -சக்தி -விபூதி -ப்ரீதி -ரதி -மாயா -தீ -மஹிமா -என்று
நான்கு கரங்களுடன் சூழ்ந்துள்ளேன் –

தஸ்யைவ ஷட்புஜஸ் யாஹம் அஷ்ட பாஹோச் ச வாசவ
த்வி ஷட் பாஹோஸ் ததா சாஹம் த்வி சப்தக புஜஸ்ய ச -8-28-
ததா ஷோடச ஹஸ்தஸ்ய புஜத்வி நவ கஸ்ய ச
விபஜ்ய பஹு தாத்மா நமியத் பேதா வ்யவஸ்திதா -8-29-

அவனுடைய ரூபங்களுக்கு ஏற்றால் போலே -பல வெளிப்பாடுகள் –
பல ரூபங்கள் -6-8-14-16-மற்றும் 18-திருக் கரங்களுடன் உள்ளேன் –

அவதாரோ ஹி யோ விஷ்ணோ ஸிந்து ஸாயீதி சம்ஜிதா
ஸ்தி தாஹம் பரிதஸ் தஸ்ய சதுர்த்தா ரூபமே யுஷீ–8-30-
லஷ்மீர் நித்ரா ததா ப்ரீதீர் வித்யா சேதி விபேதி நீ
அவதாரோ ஹி யோ விஷ்ணு ஸ்ரீ பதிர்நாம நாமத–8-31-
ஸ்ரீ ரித்யே வாக்யயா தத்ர தஸ்யாஹம் வாமத ஸ்திதா
அவதாரோ ஹி யோ விஷ்ணோர் நாமத பாரிஜாத ஜித் -8-32-
ததம்சஸ்தகரா தஸ்ய வாமோத் சங்கே ஹரே ஸ்திதா
அவதாரோ ஹி யோ விஷ்ணோர் நாம் நா மீ நதர சுப -8-33-
அநு பிரமாமி தம் தத்ர சாஹம் நவ் ரூப தாரிணீ
த்ரி விக்ர மோதயோ விஷ்ணோர் அவதார பர ஸ்ம்ருத -8-34-
ஆஹ்ருதா ஜநநீ கங்கா தத் பாதாத் ப்ரபவாம் யஹம்
அநந்த சயநோ நாம யா அவதாரோ ஹரே ரஹம்–8-35-
ஸ்திதா சதுர் திசம் தஸ்ய சாது ராத்ம்யம் உபேயுஷீ
லஷ்மீ ச் சிந்தா ததா நித்ரா புஷ்டிச் சேத்யாக்யயா யுதா -8-36

ஸிந்து ஸாயீ அவதாரத்தில் மஹா விஷ்ணு விளங்கும் பொழுது -லஷ்மீ -நித்ரா -ப்ரீதி -வித்யா -என்கிற நான்கு ரூபங்களுடன் விளக்குகிறேன்
அவன் ஸ்ரீ யபதி-அவதாரம் எடுக்கும் பொழுது -ஸ்ரீ என்று பெயர் கொண்டு இடப்புறம் உள்ளேன் –
அவன் பாரிஜாதஜித் அவதாரம் கொள்ளும் பொழுது அவனது இடது தொடையில் வீற்று இருந்து என் திருக் கரத்தை அவன் தோளிலே வைத்துள்ளேன்
அவன் மீனதரனாக ரூபம் கொள்ளும் பொழுது நான் கப்பல் போன்ற வடிவில் பின் தொடர்கிறேன்
அவனது திரிவிக்ரம அவதாரத்தில் அவன் திருவடிகளில் மகிழ்ந்து பாயும் கங்கையாக உள்ளேன்
அவன் அநந்த சயனன் நிலையில் நான் -லஷ்மீ சிந்தா -நித்ரா -புஷ்டி -போன்ற பல வடிவங்களில் அவனைச் சுற்றி உள்ளேன் –

இத்யேஷூ ஸஹ சித்த அஹம் அவதீர்ண அண்ட மத்யத
அவதாரா ப்ருதக் பூதா யதா ப்ரஹ்மாண்ட மத்யத –8-37
அநு வ்ரதா தத் ஏவ அஹம் அவதீர்ணா ப்ருதக் ப்ருதக்
அவதாரோ ஹி யோ நாம வராஹோ வேத விஸ்ருத –8-38-
ததாஹமபி பூர் நாம ப்ருதக் பூதா பஜாம் யஹம்
அவதாரோ ஹி யோ நாம அதர்மோ விஷ்ணு புராதன -8-39-
ததாஹம் பார்கவீ நாம க்யாதிஜ ஸ்ரீ ப்ரகீர்த்திதா
அவதாரோ ஹி யோ நாம தத்தாத்ரேய அத்ரி நந்தன -8-40-
ததா ஹி தஸ்ய போகாய சரஸ அஹம் சமுத்திதா
அவதாரோ ஹி யோ நாம வாமணா வைஷ்ணவ சுப -8-41-
பத்மா தஹம் சமுத் பந்நா ததா பத்மேதி விஸ்ருதா
அவதாரோ யதா விஷ்ணோர் பார்க்கவோ ராம சஞ்ஜித -8-42-
ததாஹம் தரணீ நாம சக்திரா சமயோ நிஜா
அவதாரோ ஹி யோ நாம ராமோ தாசரதி சுப -8-43-
ஜாதா ஜநக யஜ்ஜே அஹம் ஷேத்ராத் தலமுகஷதாத்
நாம்ஹா ஸீதேதி விக்யாதா தசாநந விநாசி நீ -8-44-

இப்படியாக ஒவ் ஒரு அவதாரத்திலும் நான் அவனுடன் இந்த அண்டத்தில் வெளிப்படுகிறேன் –
ஆண் தனியாக அவதாரம் செய்தாலும் அந்த அவதார செயல்களுக்கு துணையாக வெளிப்படுகிறேன் –
அவன் வராஹ வடிவம் எடுக்கும் பொழுது நான் தனியாக -பூ -என்று அழைக்கப்பட்டு வெளிப்படுகிறேன்
அநாதி விஷ்ணு அவதாரம் பொழுது ஸ்ரீ என்ற பிரசித்தி பெற்ற நான் பார்கவி திரு நாமத்துடன் அவதரிக்கிறேன்
அவன் அத்ரியின் புத்ரன் தத்தாத்ரேயனாக அவதரிக்கும் பொழுது அங்குள்ள தடாகம் ஒன்றில் இருந்து அவன் அனுபவிக்கும் படி வெளிப்படுகிறேன்
அவன் வாமன அவதாரம் -நான் பத்மா / அவன் பரசுராமன் -அவன் சக்தியாக தாரணீ -உலக ரூபம் /
சக்கரவர்த்தி திருமகன் -ஸ்ரீ சீதா தேவி

அவதாரோ ஹி யோ விஷ்ணோச் சதுர்த்தா சம்ப விஷ்யதி
மதுராயாம் அஹம் வ்யக்திம் சதுர்த்தைஷ் யாமி வை ததா -8-45-
ரேவதீ ருக்மிணீ ச ஏவ ரதிர் நாம்நா ததா ஹி உஷா
அவதாராந்தரம் யத்து மோஹனம் புத்த சம்ஜகம்-8-46-
தாராஹம் தத்ர நாம்நா சைவ தாரா ச ஏவ ப்ரகீர்த்திதா
த்ருவா தாயோ அவதாரோ யே கேவலா வைஷ்ணவா ஸ்ம்ருதா -8-47-
தத் தச் சரீர பூதாஹம் தேஷாம் போக்யா வ்யவஸ்திதா
யத்து மே மோஹனம் ரூபம் ஸ்ரூயதே அம்ருத தாரகம் -8-48
பவத் பாவவ் ததா தத்ர ரூபே துல்யோ பலஷிதவ்
தேவை புருஷ ரூபேண ஸ்த்ரீ ரூபேண ததே தரை -8-49-
ஸஹ சித்தம் ப்ருதக் சித்தம் இது ஏதத் ஜென்ம மே அத்புதம்
கீர்த்தி தம் தவ தேவேச கேவலம் ஜென்ம மே ச்ருணு -8-50-

அவன் மதுராவில் அவதாரம் – நான்கு ரூபங்களில் -பலராமன் -கிருஷ்ணன் -ப்ரத்யும்னன் -அநிருத்தன் –
நான்–ரேவதி -ருக்மிணீ -ரதி -உஷா -வெளிப்படுகிறேன்
அவன் புத்தர் -நான் தாரா /அவன் துருவன் போன்ற சில உருவங்கள் -நான் அவர்களின் சரீரமாக இருந்து அவர்களால் அனுபவிக்கப்படுகிறேன்
அமிர்தம் ஏந்திய தன்வந்திரி -மோஹினி -இருப்பாகவும் இருப்பின் நிலையாகவும்-பாவத் -பாவ – நாங்கள் இருவரும்
மேலே எனது தனியான அவதாரங்களை கூறுவேன் –

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் –7–

May 20, 2018

வ்யாஸ ஷே அஹம் தத் சக்ர க்ரம சஸ் தத்வ பத்ததிம்
சுத்த அசுத்த விமிஸ்ரேயம் தத்வ பத்ததி உச்யதே -7-1-

மஹா லஷ்மி இந்திரன் இடம் -சக்ரா உனக்கு அடுத்து தத்துவங்களின் உத்பத்தி -நிலைகள் குறித்து கூறுகிறேன்
உத்பத்தி தூய்மையானதும் அசுத்தமானதும் கலந்ததே ஆகும் -என்று கூறத் தொடங்கினாள் –

நிரம்போதாம்ப ஆபாசோ நிஷ் பந்தோ ததி ஸந்நிப
ஸ்வச்ச ஸ்வச்சந்த சைதன்ய சதா நந்த மஹோ ததி -7-2-

பகவான் பெரிய கடல் போலே -அமைதி -தூய்மை அபரிச்சேதய ஞான ஆனந்த மயமாக இருப்பவன்

ஆகார தேச காலாதி பரிச்சேத விவர்ஜித
பகவான் இதி விஜ்ஜேய பரமாத்மா ச நாதந -7-3-

தேச கால ரூப அபரிச்சேத்யன் -பலமாயவன் -ஆகாசம் போன்ற தூய்மை -நித்யம் சாஸ்வதம்

தஸ்ய அஹந்தா பரா தாத்த்ருக் பகவத்தா ச நாத நீ
நாராயணீ பரா ஸூஷ்ம நிர் விகல்பா நிரஞ்ஜனா -7-4-

அவனுடைய -நான் -எண்ணமாகவே நாராயணீ இருக்கிறாள் -அவள் சாஸ்வதம் -ஸூஷ்மமாயும்
விகாரங்கள் இல்லாமலும் -தோஷங்கள் அற்றவளாயும் இருக்கிறாள் –

ஞான சக்தி பல ஐஸ்வர்ய வீர்ய தேஜோ மஹோ ததி
ஷண்ணாம் யுகபத் உந்மேஷோ குணா நாம் பிரதமோ ஹரி -7-5-

கடல் போன்ற அபரிமித ஞானம் சக்தி பலம் ஐஸ்வர்யம் வீர்யம் தேஜஸ் ஆகியவை ஒரே நேரத்தில்
உந்மேஷ முதல் நிலையில் ஜாக்ரத் நிலை இயக்க நிலையில் புகுகின்றன –

பவத் பாவாத் மகத்வேந த்விதா ச வ்யாபதிஸ்யதே
பவம்ஸ்து வாஸூ தேவ அத்ர பாவ அஸ்மின் வாஸூ தேவதா -7-6-

இப்படியாக உள்ள நிலைகள் -பவத்-பாவ -என்று -இருப்பும் -இருக்கும் நிலையும் -இரண்டாய்
பவத் -இருப்பு -வா ஸூ தேவன் எனவும் -பாவ நிலை -இருக்கும் நிலை -வா ஸூ தேவதா எனவும் கூறப்படும்

சாந்திர் நாம் நா சமாக்யாதா சாஹம் தேவீ ச நாத நீ
ஸங்கர்ஷணா தயோ வ்யூஹா சா ஹந்தா ப்ராங்நிரூபி தாம் -7-7-

வாஸூ தேவதா என்பதே நித்தியமாக உள்ள என்னுடன் தொடர்புடையதாக -சாந்தி -என்று அழைக்கப்படுவதாக உள்ளது
சங்கர்ஷணன் போன்ற மற்ற வ்யூஹங்களின் தத்வம் குறித்து முன்பே கூறி விட்டேன்

த்ரயச்ச சாதுராத்ம்யம் தச் சத்வர அமீ ஸூ ரேஸ்வர
ஏதாவத் பகவத் வாஸ்யம் நிஸ் தத்வம் தத்வம் உத்தமம் -7-8-

மற்ற மூன்று வ்யூஹங்கள் -சங்கர்ஷணன் -ப்ரத்யும்னன் -அநிருத்தன்-சேர்ந்து வாஸூ தேவன் ஆகிய
நான்கு வ்யூஹங்களும் பகவான் என்ற பெயரால் கூறப் படுகின்றன
மற்ற தத்வங்களுடன் கலக்காத தூய்மையான தத்வம் இதுவே யாகும் –

நமஸ்து பரமம் வ்யோம பரமாகாச சப்திதம்
யத்ர தேவோ மயா சார்தம் விபஜ் யாத்மாந மாத்மநா -7-9-
க்ரீடதே ரமயா விஷ்ணு பரமாத்மா ச நாதந
ஷாட் குண்யஸ்ய சமுந்மேஷ ச தேச பரமாம் பரம் –7-10-

பரம வ்யோமம் -பரம ஆகாசம் -பரம பதம் இரண்டாவது தத்வம் ஆகும்
அங்கு தான் பர ப்ரஹ்மம் சாஸ்வதம் -மஹா விஷ்ணு -ரமா என்ற என்னுடன் விளையாடி மகிழ்ந்து இருக்கிறான்

புருஷா போக்த்ரு கூடஸ்த சர்வஞ்ஞா சர்வதோமுக
அம்சத ப்ரசரந்த்யஸ் மாத் சர்வே ஜீவா ச நாதநா -7-11-

ஹிரண்ய கர்ப்பனான புருஷன் -அனுபவிப்பவர்கள் கூட்டம் -சர்வஞ்ஞன் -சர்வ வ்யாபி –
அநாதியான ஜீவர்களும் அவன் அம்சமே -இது மூன்றாவது தத்துவமாகும்

பிரளயே த்வபி யந்த்யேநம் கர்மாத்மநோ நரம் பரம்
இயம் மாத்ருதசா சா மே யா தே பூர்வம் மயோதிதா -7-12-

கர்ம வஸ்ய ஜீவர்கள் பிரளயத்தின் போது நாராயணன் இடம் சென்று லயம் அடைகிறார்கள்
இந்த நிலை பற்றி முன்பே உனக்கு 6-அத்தியாயத்தில் கூறினேன் —

மஹா லஷ்மீ சமாக்யாதா சக்தி தத்வம் மநீ ஷிபி
நியதிஸ்து மஹா வித்யா கால காளீ ப்ரகீர்த்திதா–7-13

சக்தி ரூபமாக உள்ள என்னை மஹா லஷ்மீ என்பர் –
நியதி -விதி -என்பது மஹா வித்யா -என்றும் -காலம் -என்பது காளீ என்றும் சொல்வர்

சத்த்வம் ரஜஸ் தமச்சேதி குண த்ரயம் உதாஹ்ருதம்
ஸூ க ரூபம் ஸ்ம்ருதம் சத்த்வம் ஸ்வச்சம் ஜ் ஞானகரம் லகு -7-14-

சத்வம் ரஜஸ் தமஸ் முக்குணம் பற்றி முன்பே சொன்னோம்
இவற்றில் சத்வம் இன்பமே வடிவெடுத்து தெளிவாக ஞான மயமாக லகுவாக உள்ளது

துக்க ரூபம் ரஜோ ஜ்ஜேயம் ஸலம் ரக்தம் ப்ரவர்த்தகம்
மோஹ ரூபம் தமோ ஜ்ஜேயம் குரு கிருஷ்ணம் நியாமகம் -7-15

ரஜோ குணம் துயரமே வடிவானது -சஞ்சலம் பொறாமை வளர்க்கும் -சிவந்த நிறம்
தமோ குணம் மயக்க நிலையில் ஆழ்த்தும் -சோம்பலை வளர்க்கும் -கறுத்த நிறமாகும்

மாயா சைவ ப்ரஸூதிச் ச ப்ரக்ருதிச் சேதி வாசவ
புரஸ்தாத் வ்யாக்ருதம் துப்யம் ததே தத் ப்ரக்ருதி த்ரிகம் -7-16-

வாசவனே – உனக்கு உலகைப் படைக்கும் மாயா -ப்ரஸூதி -ப்ரக்ருதி -குறித்து முன்பே கூறினோம்

பூதாநி தச சங்க்யாநி ததா காநி த்ரயோதச
த்ரயோ விம்சதி ரப்யதே ஸூஸ்பஷ்டம் வ்யாக்ருதா புரா -7-17-

பூதாநி-ஸ்தூல ஐந்தும் -ஸூஷ்ம ஐந்தும் ஆக இவை பத்தும் -காநி இந்திரியங்கள்-மனம் புத்தி அஹங்காரம் மூன்றும் –
கர்ம ஞான இந்திரியங்கள் பத்தும் ஆக -13-/இந்த -23-தத்துவங்களை பற்றி முன்பே கூறினோம்

ததயம் மம சங்கோச பிரமாதா சுத்த சின்மய
ஸ்வாந்த ஸ்புரித தத் வேதை ஸ்திதோ தர்பண வத் சதா -7-18-

இப்படியாக அறிந்து கொள்ள வல்ல ஜீவன் -எனது சுருக்கமான ஞானத்தை
பூர்ணமாக யுடையவனாயும் கண்ணாடி போன்றும் உள்ளான் –

சாது ரூப்யம் து யத் தஸ்ய ததி ஹை கமநா ஸ்ருணு
ஆத்யம் சூன்ய மயோ மாதா மூர்ச்சாதவ் பரிகீர்த்தித–7-19-

ஜீவனுடைய நான்கு நிலைகளை மேல் சொல்லுகிறேன் கவனமாக கேள்
தூரிய நிலையில் -மூர்ச்சை அடைந்த நிலையைப் போன்று எதனுடன் தொடர்பு அற்ற சூன்ய நிலையில் உள்ளான் –

தத பிராண மயோ மாதா ஸூ ஷூப்தவ் பரிகீர்த்தித
பிராணா ஏவ பிரதா யந்தே ஸூ ஷூப்தவ் புருஷஸ்ய து -7-20-

ஆழ்ந்த உறக்க நிலையில் ஜீவன் பிராண வடிவிலே உள்ளான்
பிராணனை மட்டும் -சுவாசித்து இருப்பான் –

மூர்ச்சா விஷோப காதாதவ் ப்ரானோ அபி வி நிவர்த்ததே
கேவலம் ஸ்வாத் மசத் தைவ தத சூன்யஸ்த்தா பூமாந் -7-21-

மூர்ச்சை அடைந்த நிலை போன்றவைகளில் பிராணன் சீராக இருப்பதில்லை
ஆத்மா மட்டும் உடலில் சூன்ய நிலையில் உள்ளான் –

த்ருதீய அஷ்ட புரீ மாத்ர ஸ்வப்நே மாதா ப்ரகீர்த்திதே
பிராணா பூதாநி கர்மாணி கரணாநி த்ரயோ குணா -7-22-
ப்ராக் வாசநா அவித்யா ச லிங்கம் புரி அஷ்டகம் ஸ்ம்ருதம்
ஸ்வப்நே அந்த கரணே நைவ ஸ்வைரம் ஹி பரிவர்த்ததே –7-23-

ஸ்வப்ன தசையில் -எட்டு பட்டணங்களை யுடையவன் ஆகிறான் -இவை பிராணன் – பஞ்ச பூதங்கள் /
கர்மங்கள் -இந்திரியங்கள் /வாசனை -அவித்யை / ஸூஷ்ம சரீரம் -இவை எல்லாம் சேர்ந்து அஷ்ட புரி எனப்படும்
புலன்கள் உதவியுடன் புருஷன் மிகவும் விருப்பத்துடன் செயல்படுகிறான் –

சேஷ்ட மாந ஸ்வ தேஹேந தேஹீ ஜாக்ரத் ருசாம் கத
ஸாதூ ரூப்யமிதம் பும்ஸ த்ரை ரூப்யம் அபி மே ச்ருணு -7-24-

ஜீவன் -தேஹீ -விழிப்பு நிலையில் -செயல்பாடுகள் அனைத்தும் கடினப்பட்டு செய்யும் படியாக உள்ளது
ஆக விழிப்பு -உறக்கம் -கனவு -மூர்ச்சை ஆகிய நான்கு நிலைகள் –

ஜ்ஞான க்ரியா ஸ்வரூபாணாம் சங்கோச த்ரிவிதஸ்து ய
தஸ்ய தத்தி த்ரி ரூபத்வம் தஸ்ய வ்யாக்யாமிமாம் ச்ருணு -7-25

மூன்று வித சங்கோசம் -ஞான சங்கோசம் -செயல்பாட்டு சங்கோசம் – ஸ்வரூபம் இன்னது என்று உணராமல் –
இப்படிப்பட்ட மூன்று சங்கோசங்களின் இயல்பை கேள் –

மாயயா ஞான சங்கோச ஆநைஸ்வர்யாத்ரிக யாவ்யய
அசக்தே ரணுதா ரூபே த்ரிதைவ வ்யபதிஸ்யதே -7-26-

மாயை காரணமாக ஞான சங்கோசம் -ஐஸ்வர்ய குறைவால் கர்ம சங்கோசம் -செய்வதில் சாமர்த்திய சங்கோசம் –
சக்தி அற்றவனாக உள்ளதால் ஜீவன் அணு அளவாகவே உள்ளான் –

அணு கிஞ்சித் கரச் சைவ கிஞ்சிஜி ஞச்சாய மித்யுத
த்வை ரூப்யமைக ரூப்யம் ச பூர்வமேவ நிரூபிதம்–7-27

இவ்வாறு -அணு ஸ்வரூபம் -ஞான கர்ம சங்கோசம் உள்ளவன் -ஆகிய மூன்று நிலைகள்
கீழே ஜீவனின் ஒன்றான இரண்டாக நிலைகளைப் பார்த்தோம்
பரமாத்மா விபு சர்வஞ்ஞன் சர்வசக்தன் சரவக்ருத் -என்பதை உணர வேண்டும் –

ஏவம் மாத்ரு தசா மே அத்ய ச விசேஷா ப்ரகீர்த்திதா
அந்த கரணி கிஞ்சி சைவ தஸாம் சக்ராத்ய மே ச்ருணு -7-28-

இனி அந்த கரண நிலையை கேள் -தானே ஜீவனாக உள்ளமை ஸ்ரீ லஷ்மீ சொல்வது பஹுஸ்யாம் -போலே –

ஸ்வச் சந்தா சம்விதே வாஹம் ஸ்வதச்சேத நதாம் கதா
ஹித்வா சேதநதாம் தாம் சாப்ய வரூடா ததா க்ரமாத் -7-29-

நானே உண்மையான ஞானமாக உள்ளேன் -சங்கல்பம் அடியாகவே சேதனர்களாக உள்ளேன் –
இப்படி சேதனர் தொடங்கி அசேதனங்கள் வரை சுருக்கம் கொண்டவளாக இச்சை காரணமாக பலவாக நிற்கிறேன் –

சைத்ய சங்கோசநீ சித்த மந்த காரண மீரிதம்
மநோ புத்தி அஹங்கார இதி ஏதத் த்ரி தயம் ச தத் -7-30-

சங்கோசத்துக்கு காரணம் அந்த கரணங்களே -இவை மனம் புத்தி அஹங்காரம் என்பவை ஆகும் –

விகல்ப அத்யவ சா யச்ச அபி அபிமா நச்ச வ்ருத்தய
மநோ விகல்பயத் யர்த்தம் அஹங்கார அபி மந்யதே -7-31-

மனசின் செயல்பாடு விகல்பம்-புத்தியின் செயல்பாடு அத்யவசாயம்-அஹங்காரத்தின் செயல்பாடு அபிமானம்

அத்யவஸ் யதி புத்திச்ச சேதநா திஷ்டிதா சதா
புத்தி அத்யாத்மம் இத்யுக்தா நிர்ணய அப்யதிபூதிகம் -7-32-

அத்யவசாயம் -முடிவு செய்வது புத்தியால் என்று தோன்றினாலும் சேதனன் உறுதியால் மட்டுமே எடுக்கப்படுகிறது
ஆக புத்தி என்பது ஆத்மாவைச் சார்ந்தது என்றும் அத்யவசாயம் இயற்க்கைச் சார்ந்தது என்றும் அறிவாய் –

புத்தி தர்ப்பண சம்லீந ஷேத்ரஞ்ஞச்ச அதி தைவதம்
அஹம் க்ருதிஸ்த அத்யாத்மம் அபிமான அதி பூதகம்–7-33-

புத்தி என்னும் கண்ணாடி மாளிகையின் அதிபதி ஆத்மா –
அஹங்காரம் -அபிமானம் -என்னுடையது என்ற எண்ணம் அதன் இயல்பாக உள்ளது –

அதி தைவதமதோ ருத்ரோ மந அத்யாத்மம் ப்ரகீர்த்திதம்
விகல்ப அப்யதி பூதஸ்து சந்த்ரமா அதி தைவதம் –7-34-

அஹங்காரத்தின் அதிபதி தேவதை -ருத்ரன் -மனசுக்கு இயல்வு விகல்பம் -சந்திரனை அதிபதியாக கொண்டது –

பிராண சம்ரம்ப சங்கல்பா குண ஏஷாம் க்ரியா விதவ்
பிராண ப்ரயத்ன இத்யுக்த சம்ரம்போ கர்வ உச்யதே -7-35-
பல ஸ்வாம்ய ஸ்வரூபச்ச கர்வ சம்ரம்ப உச்யதே
ஓவ்தா ஸீந் யஸ்யுதி ப்ரோக்த சங்கல்போ மாநசோ புதை -7-36-

செயல்கள் நடை பெறும் போது -புத்தி -அஹங்காரம் -மனம் -ஆகியவற்றின் தன்மைகளாக –
பிராணன் -சம்ரம்பம் -சங்கல்பம் ஆகியவை உள்ளன -பிராணன் என்பதையே பிரயத்னம்-என்றும்
-சம்ரம்பம்-என்றது கர்வம் என்றும் கூறப்படும் -செயல்களின் பலன் தன்னுடையதே-என்ற எண்ணம்
புத்தி -முடிவு செய்வதும் செயல் புரிவதும் / அஹங்காரம் -எனது நான் -போன்ற சிந்தனை -கர்வம் அடியாக /
மனம் -எது சரி எது தவறு ஆராய்ந்து முடிவு எடுப்பது என்றவாறு –
உதாசீனம் நீங்கி அறியும் தன்மை மனசுடையது -சங்கல்பம் ஆகும்

வ்யாக்யா தேயம் த்விதீயா மே ஹி அந்த கரணிகீ தசா
பிரஸ்ய வந்தீ ததோ ரூபா தாந்த கரணி காதஹம் 7- 37-

இவ்வாறு இரண்டாவது நிலையான அந்த கரணி பற்றி சொன்னேன்
மேல் அடுத்த நிலையை சொல்லுகிறேன்

சத்யா நதாம் க்ரமச ப்ராப்தா பஹிஷ் கரண சஞ்ஜிதா
கரணாநி து பாஹ்யாநி வ்யாக்யாதாநி மயா புரா -7-38

இந்த நிலையில் நான் ஸ்தூல வடிவம் எடுக்கிறேன் -இந்நிலையில் புலன்கள் என்ற பெயர் கொள்கிறேன் –
இவற்றை முன்பே பார்த்தோம் –

ஞானேந்த்ரிய ப்ரவ்ருத்தவ் து மந ஆதி ப்ரவர்த்ததே
ச ஷூ ஆலோக்யத் யர்த்தம் விகல்பயதி தந்மந -7-39-

புலன்கள் மூலமே மனசின் செயல்பாடு -இவற்றின் ஆதியாக மனமே –
கண்கள் ஒரு பொருளைக் காணும் போது அந்த பொருளைக் குறித்த ஆய்வை மனம் செய்து முடிவு எடுக்கிறது

ஆலோகந விகல்பஸ்தம் அஹங்கார அபி மந்யதே
அத்ய வஸ்ய ததோ புத்தி ஷேத்ரஞ்ஞாய பிரயச்சத்தி –7-40-

இப்படி புலன்கள் மூலம் உணரப்பட்ட பொருளைப் பற்ற முடிவுக்கு வரும் மனசானது அதனை
அஹங்காரம் மூலமாக ஆத்மாவுக்கு உணர்த்துகிறது -பின்பு பகுத்து அறியும் புத்தியானது அதைப் பற்றி ஆத்மாவுக்கு உணர்த்தும் –

கர்மேந்த்ரிய ப்ரவ்ருத்தவ் து விபர்யஸ்த க்ரம ஸ்ம்ருத
சங்கல்பாதே பராஸீநா வசநாதி க்ரியா யத -7-41-

கர்ம இந்திரியங்கள் விஷயம் தலை கீழாக -ஆகுமே –
சங்கல்பம் -உறுதியான முடிவு எடுத்த பின்னரே பேச்சு முதலானவை வெளிப்படும்

அத்யாத்ம அதி விசேஷ அத்ர சர்வ பூர்வ முதீரித
த்ருதீ யேயம் விதாக்யாதா பஹிஷ் கரண வர்த்தி நீ -7-42-

அத்யாத்மம் போன்ற பலவற்றை முன்பே சொன்னோம்
இப்படியாக மூன்றாவது நிலைப்பாடு கர்மேந்த்ரியங்கள் மூலம் உணர்த்தப்பட்டது

சதுர்த்திம் த்வமிமாம் கோடிம் மேய ரூபாம் து மே ச்ருணு
மேயம் து த்விதம் தாவத் பஹிரந்தர் வ்யவஸ்தயா–7-43-

அடுத்து நான்காவது நிலை -இந்திரியங்கள் மூலம் அறியப்படும் பொருள்கள் பற்றி கூறுவோம்
இத்தகைய பொருள்கள் உள் பொருள்கள் வெளிப் பொருள்கள் -என்று இரண்டு வகை –

பாஹ்யம் து நீல பூதாதி ஸூக துக்காதி அந்தரம்
ஆபிச் சதஸ் ருபிச் வாஹம் விதாபி ஸ்த்யாநதாம் கதா -7-44-

நீலம் மஞ்சள் போன்றவை வெளிப் பொருள்கள் -ஸூக துக்க

ஸ்வ சித்தோத்த விகல்பார்த்தை ப்ரத்யஷாப் யஸ்மி விஸ்ம்ருதா
சதா சார்ய உபதேசேந சத்த கர்மநுருந்ததா -7-45
நிரூப்யே நிபுணைர் யத்ர மேயே அபி அஸ்மி ததா ஸ்புடம்
விலாப்ய சாகலம் பாவம் சேத்ய ரூபம் இமாம் ததா -7-46

உபாசனம் மூலம் சிரமப்பட்டு என்னை சிலர் அடைகிறார்கள் -ஆயினும் என் ஸ்வரூபம் பூர்ணமாக அவர்கள் அறிவது இல்லை
ஆச்சார்யர் உபதேசம் மூலம் மட்டுமே ஸ்வரூபத்தை அறிந்து எங்கும் வியாபித்து உள்ளதை அறியலாம்

ஸ்வச் சந்தா பூர்ண சித் ரூபா பிரகாச அஹம் ததா ஸ்வயம்
ஸ்வச்சா ஸ்வச் சதரா சாஹம் தத கரண சம்ஜ்ஜி தா –7-47-

அதன் பின்னர் என்னை முழுமையாக -பிரகாசமாயும் -தூய்மையாகவும் -ஸ்வ இதர வி லக்ஷணமாய்
இருப்பதை காட்டி அருளுகிறேன் -இப்படியான என்னை காரணப் பொருள் என்று அறிகின்றனர் –

ஆரோஹம் அவரோஹம் ச பாவயந் மாமகாவுபவ்
மச்சித்தோ மத்கத ப்ரானோ மத் பாவா யோபபத்யதே-7-48-

இதுக்கும் மேலே என்னை பூர்ணமாக வெளிப்படுத்த உபாசகர்கள் சித்தத்தில் உளேன்
இப்படி என் முழு நிலைகளை உணரும் உபாசகன் தன சித்தம் முழுவதையும் என்னில் வைத்து
தன்னையும் தன உடைமையையும் என்னிடம் அர்ப்பணித்து எனது நிலையையே அடைகிறான்

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் -6-

May 20, 2018

பூர்ணஸ்தம் இத ஷாட் குண்ய சித் ஆனந்த மஹா ததே
அஹம்தா அஹம் ஹரே ராத்யா நிஸ் தரங்கார்ணவ ஆக்ருதே –6-1-

ஞானாதி கல்யாண குண பரிபூர்ணன் அஹம் எண்ணமே நான்-
ஞான ஆனந்த குணக் கடல் – அலைகள் இல்லாத சமுத்திரம் -போன்றவன் அவன் –

ச அஹம் ஏவம் விதா சுத்தா க்வசித் உத்ஸூ நதாம் கதா
சிஸ்ருஷா லக்ஷணா தேவீ ஸ்வ தந்த்ரா சச்சிதாத் மிகா -6-2-
ஷட்கோசதாம் சமா பத்யே சத்தாஹம் வைஷ்ணவீ பரா
சக்திர் மாயா ப்ரஸூதிச்ச ப்ரக்ருதி த்ரி குணாத்மிகா -6-3-
ப்ரஹ்மாண்டம் ஜீவ தேஹச் சேத்யேதே ஷட்கோச சஞ்ஜிதா
சிஸ்ருஷயா யா பரா விஷ்ணோ ராகம் தாயா சமுதகதா -6–4-

தூய்மையானவள் -சாந்தமானவள் -ஞான ஆனந்த மயமானவள் –
சக்தி மாயா ப்ரஸூதி-முக்குண மய ப்ரக்ருதி -ப்ரஹ்மாண்டம் -ஜீவ சரீரங்கள் -ஆகிய ஆறு கோசங்களாக வடிவு எடுக்கிறேன்
ஸ்ரீ ஹரி யுடைய -அஹம் -எண்ணத்தில் இருந்து ஸ்ருஷ்டிக்க வேண்டும் என்னும் ஆவல் ஏற்படுகிறது

சக்தி ச ப்ரதமம் கோச சுத்த மார்க்க ப்ரவர்த்திநீ
கோச குலாயபர்யாய சரீரா பர நாமவான் -6-5-

முதல் கோசம் -சக்தி -தூய்மையான ஸ்ருஷ்டியின் அடிப்படை –
கோச -குலாயம் – கூடு பொருளில் -சரீரம் என்பதின் வேறு பெயர் ஆகும்

சுத்தே அஸ்மின் ப்ரதமே கோசே பிரதம உந்மேஷ லக்ஷணே
அஹம்மா நீ பரோ ஹி ஆஸீத் ஏவ ஸங்கர்ஷணா பிரபு –6-6-

ஸ்ருஷ்டியின் செயல்பாட்டை குறிக்கும் தூய்மையான முதல் கோசம் -சங்கர்ஷணன் அம்சம் வெளிப்பாடு

திலகாலகவத் தத்ர விகாரோ மஸ்ருண ஸ்தித
தஸ்ய அஹந்தா து யா தேவீ ச அஹம் ஸங்கர்ஷணீ பரா –6-7-

உடம்பில் மச்சங்கள் செயல் அற்று இருப்பது போலே சங்கர்ஷணன் திரு மேனியில் அனைத்து ஸ்ருஷ்டிகளும் முதலில் செயல் அற்று உள்ளன –
சங்கர்ஷணன் அஹம் -நான் -என்ற எண்ணமாக நான் உள்ளேன் –
இந்த நிலையில் ஸங்கர்ஷணீ எனப்படுகிறேன்

ஸ்ரீ ரித்யேவ சாமக்யாதா விஞ்ஞான பலசாலி நீ
யஸ்தஸ்யா மே சமுந் மேஷ பிரதியும்ந சது கீர்த்தயதே –6-8-

ஸ்ரீ -நிலையில் உள்ள போது-விஞ்ஞானமும் பலமும் நிறைந்தளவாக உள்ளேன்
அப்படிப்பட்ட ஸ்ரீ நிலையில் இருந்து ப்ரத்யும்னன் வெளிப்படுகிறான்

சங்கர்ஷணஸ்ய தேவஸ்ய சக்தி கோஸாபி மாநிந
புத்தித்வே வர்த்ததே தேவ பிரதியும்ந புருஷோத்தம -6-9-

சக்தி கோசத்தின் அபிமான தேவதையாக சங்கர்ஷணன் உள்ளான் -அவனது புக்தியாக ப்ரத்யும்னன் உள்ளான் –
இந்தப் பிரத்யும்நனே புருஷோத்தமன் என்றும் கூறப்படுகிறான் –

போக்த்ரு போக்ய சமஷ்டிஸ்து நிலீநா தத்ர திஷ்டதி
மநோ பூதஸ்ய தேவஸ்ய தஸ்ய அஹந்தா து யா ஸ்ம்ருதா –6-10-

அந்த ப்ரத்யும்னன் இடம் போக்த்ருவும் போக்யமும் செயல் அற்ற நிலையில் ஒடுங்கி உள்ளன
மனதின் அபிமான தேவதையாக உள்ள ப்ரத்யும்னனின்-அஹந்தா -நான் என்ற எண்ணமாகவே நான் உள்ளேன்

சாஹம் ஸரஸ்வதீ நாம வீர்ய ஐஸ்வர்ய விவர்த்தி நீ
யோ மே தஸ்ய சமுன்மேஷ ச அநிருத்த ப்ரகீர்த்தித-6-11-

வீரியமும் ஐஸ்வர்யமும் நிரம்பிய எனது நிலையானது ஸரஸ்வதீ எனப் பெயர் பெறும் –
இந்த சரஸ்வதி நிலையில் இருந்து அநிருத்தன் வெளிப்படுகிறான் –

தஸ்ய சங்கர்ஷணஸ்ய அஹம் அஹங்காரவிதவ் ஸ்திதா
ஸங்கர்ஷணா தயோ தேவாஸ் த்ரய ஏதே புராதநா –6-12-
ஜீவோ புத்திர் அஹங்கார இதி நாம்நா ப்ரகீர்த்திதா
நை வைதே பிராக்ருதா தேவா கிந்து சுத்த சிதாத்மகா -6-13-

இந்த அநிருத்தினன் நிலை சங்கர்ஷணன் அஹங்காரமாகவே உள்ளது
சங்கர்ஷணன் தலைமையில் உள்ள இந்த மூன்று நிலைகளும் -ஜீவன்-சங்கர்ஷணன்/புத்தி -ப்ரத்யும்னன்-/அஹங்காரம்-அநிருத்தினன்
எனப்படுகின்றன -இந்த மூன்றும் முக்குண வசப்பட்ட இந்த உலகுக்கு அப்பால் பட்ட மிகவும் தூய்மையானதாகும் –

ஆதி வியூஹஸ்ய தேவஸ்ய வாஸூ தேவஸ்ய தீவ்யத
தத் தத் கார்ய கரத்வேந தத்தந்நாம்நா நிரூபிதா –6-14-

ஆதி தேவனாகிய வாஸூ தேவனின் லீலை காரணமாகவே மற்ற மூன்று வ்யூஹங்களும்
அவர் அவர்களின் செயல்களுக்கு உரியபடி பெயர்களைப் பெறுகின்றனர்

சர்வே தே ஷட் குணா ப்ரோக்தா சர்வே தே புருஷோத்தமா
பூர்ணஸ்திமித ஷாட் குண்ய சதாநந்த மஹோததே -6-15-

ஒவ் ஒருவரும் இரண்டு குணங்கள் -அனைவரும் புருஷோத்தமர்கள் –
ஒருவருக்கு மட்டும் ஆறு குணங்களும் பரி பூர்ணமாக எப்போதும் வெளிப்பட்டபடி உள்ளது

ஷண்ணாம் யுகபத் உந்மேஷா குணாநாம் கார்ய வத்தயா
ய அபூத்ச வாஸூதேவஸ்து வ்யூஹ பிரதம கல்பித -6-16-

இந்த ஒருவன் ஆனந்த மயமான கடலாகிய ஆறு குணங்களில் இருந்து வெளிப்பட்டு வாஸூ தேவன் எனப்படுகிறான் –

தஸ்ய சாந்திர் அஹந்தா து சாஹம் சக்தி ப்ரகீர்த்திதா
சக்தி கோஸஸ்திதா தேவா ஸூ யந்தே யத்ர சிந்திதா–6-17-

வாஸூ தேவனின் அஹந்தா வாகவே -பத்தினியாக -நான் -சாந்தி -என்பவளாக உள்ளேன்
இந்நிலையில் சக்தி என்று அழைக்கப்படுகிறேன் –
இந்த நிலையில் சங்கர்ஷணன் ப்ரத்யும்னன் அநிருத்தன் மூவருக்கும் ஆதாரமாக உள்ளேன்

அநிருத்தஸ்ய ய அஹந்தா ரதி இதி ஏவ சஞ்ஜிதா
ச ஏவ தேவீ மஹா லஷ்மீர் மயா கோச ச உச்யதே -6-18-

அநிருத்தனின் -நான் -என்ற எண்ணமாக -ரதி என்பவளாக -நான் உள்ளேன்
இந்த நிலையில் மஹா லஷ்மீ -என்று -மாயா கோசம் -என்ற பெயர் –

மஹா லஷ்ம்யா ய உந்மேஷா மாயாயா குண சஞ்சஜிதா
மஹா காளீ மஹா வித்யா த்வயம் சம்பரிகீர்த்யதே -6-19-

மஹா லஷ்மியின் இயக்க நிலைகளுக்கு மஹா காளீ என்றும் -மஹா வித்யா என்றும் பெயர்கள் உள்ளன –
இவை அவளின் மாயையின் குணங்களாக உள்ளன –

மஹா லஷ்மீ மஹா மாயா மஹா வித்யா மயோ மஹான்
ப்ரஸூதிர் நாம கோசோ மே த்ருதீய பரிபட்யதே -6-20-

ப்ரஸூதி -என்னும் கோசமானது மிக உயர்ந்த நிலையாகும்
மஹா லஷ்மீ மஹா மாயா மாயா வித்யா ஆகிய நிலைகளைத் தன்னுள் அடக்கியதாகும்

த்ரீண் யத்ர மிதுநா ந்யாசந் யாநி பூர்வோதிதாநி தே
பிரதானம் சலிலீ க்ருத்ய யச்சேத பூருஷோத்தம -6-21-
சா ப்ரோக்தா ப்ரக்ருதிர் யோநிர் குண ஸாம்ய ஸ்வரூபிணீ
விரிஞ்ச அஜ நயத்யத்வை பூர்வ பண்டம் ஸ்வம் ஆத்ம நி -6-22-

ப்ரஸூதி கோசத்தில் முன்பு -5-அத்தியாயத்தில் -8-/15-ஸ்லோகங்களில் கூறிய மூன்று ஜோடிகள் உள்ளன –
அந்த பிரதானம் -நீராக மாற்றப்பட்டு அதில் புருஷோத்தமன் சயனித்து உள்ளான் –
இதுவே பிரகிருதி எனப்படும் -இதில் முக்குணங்களும் சம நிலையில் உள்ளன –
அவன் இடம் இருந்து உருவானதும் -அவனையே அடங்கியதும் -அவனில் அடங்கி இருப்பதும் ஆகிய பேர் அண்டம் ப்ரக்ருதி எனப்படும்
இது தொடக்கத்தில் விரிஞ்சி எனப்படும் நான்முகனால் கொண்டாடப் படுகிறது –

தத் ஏக ப்ரக்ருதிம் ப்ராஹூஸ் தத்த்வ சாஸ்த்ர விசாரதா
மஹா தாத்யை ப்ருதிவ் யந்தை ரண்டம் யத் நிர்மிதம் ஸஹ –6-23-
தத் ப்ரஹ்மாண்டம் இதி ப்ரோக்தம் யத்ர ப்ரஹ்மா விராட பூத்
அங்க ப்ரத்யங்க யுக்தம் யத் சரீரம் ஜீவிநா மிஹ–6-24-
ஏஷா கோச விதா ஷஷ்டி க்ரம சாஸ்த நுதாம் கதா
அவரோஹா ஷடேதே மே பூர்ணாயா பரிகீர்த்திதா –6-25-

ஸ்ருஷ்டியின் போது பேர் அண்டம் -மஹத் தொடங்கி ப்ருத்வி முடிய பலவாக உள்ளடக்கிய பிரம்மாண்டம் ஆகிறது
அந்த அண்டத்தின் அதிகாரியாக நான்முகன் தோன்றினான்
ஆறாவதான அந்த கோசம் உடல் உறுப்புக்களுடன் கூடியதாகவும் ஸ்தூல சரீரங்களுடன் கூடியதாகவும் உள்ள உயிர் இனங்களை
உள்ளடக்கியதாகும் இந்த ஆறு கோசங்களாகவும் பூர்ணமாகவும் உள்ளே நானே இருக்கிறேன் –

ஆத்யே கோசே ஸ்வயம் தேவ த்ரிதைவா ஹந்தயா ஸ்தித
பஞ்சஸ் வந்யேஷூ கோசேஷூ ஜீவா நாநாவிதா ஸ்திதா -6-26-

முதல் கோசமான சக்தி கோசத்தில் வாஸூ தேவன் மற்ற -சங்கர்ஷண -ப்ரத்யும்ன -அநிருத்தன
ஆகிய மூன்று வ்யூஹங்களின்-அஹந்தையாக உள்ளான்
மற்ற ஐந்து கோசங்களில் ஜீவர்கள் பலவாக உள்ளன –

சுப அசுப விபாகோத்தாம் பஜந்தே விவிதாம் தஸாம்
திவ்யாஸ் திஸ்ர த்ரயரஸ்தாசாம் மிதுநா நிச யாநி து -6-27-

அந்த ஜீவன்கள் தங்கள் புண்ய பாப -ரூபா கர்மங்களுக்கு ஏற்ப பலன்களை அனுபவிக்கின்றனர்
இந்த கோசங்களில் இருந்து மூன்று திவ்ய சரீரங்களும் மூன்று ஆண்-பெண் ஜோடிகளும் வெளி வருகின்றனர் –

அண்ட மத்யே அவதாராச்ச தாஸாம் தேஷாம் ச யே ஸ்ம்ருதா
ஸ்வா தந்தர்ய நிர்மிதாஸ்த் வேத ந ஏவ கர்ம வசாநுகா -6-28-

அண்டத்தின் நடுவில் நிகழும் அவர்கள் அவதாரங்களும் அவர்களது படைப்புகளும் எனது ஸ்வதந்த்ரத்துக்கு உட்பட்டதால் நிகழ்கின்றன
இந்த உத்பத்தி அவர்கள் புண்ய பாப கர்மங்களால் யுண்டானது அல்ல

அப்ராக்ருதாச்ச தே தேஹா உபயேஷாம் ப்ரகீர்த்திதா
அந்யே பஞ்ச ஸூ கோசேஷூ தேவாத்யா ஸ்தாவ ராந்தி மா -6-29-
நாநா ஸ்தாந ஜூஷோ ஜீவா கர்மபி சம்சரந்தி யே
அதிகாரா ஷயம் நீத்வா சுபபாக வஸாதிமே -6-30-
சம்ப்ராப்ய ஜ்ஞான பூயஸ்த்வம் யோக்க்ஷபி கல்மஷா
ஆரோ ஹந்தி சனை கோசநா ரூடா ந பதந்தி தே -6-31-

இப்படி வெளிவரும் தேவதைகள் சரீரம் அப்ராக்ருதம்
ஐந்து கோசங்களில் உள்ள ஜீவன்கள் -நான் முக்கண் தொடங்கி -புல் பூண்டு வரை -தங்கள் கர்மத்துக்கு ஏற்ப சரீரம் பெறுகின்றனர்
பிறவிகள் மாறி மாறி தொடர்ந்து வரும் இவர்களுக்கு
தர்ம வாழ்வு மூலம் சிலர் கர்ம பலன்களை கை விடக் கூடும்
இவர்கள் யோகமே பாபங்களை போக்கும் -அதன் பின்பே அபரிமிதமான அவர்களுக்கு ஞானம் வருகிறது
அதன் பின்பு அவர்கள் இந்த கோசங்களில் மேலே மேலோர் ஏறிச் செல்கின்றனர்
அவர்கள் கீழே விழுதல் இல்லை

ஸத்ய லோகாத் ப்ரப்ருத்யேதே யாம் பூமிம் அதி ரோஹிதா
புநஸ்தே ந நிவர்த்தந்தே திஷ்டந்தி ஊர்த்வம் வ்ரஜந்தி வா -6-32-

இப்படியாகச் செல்லும் அவர்கள் ஸத்ய லோகத்தை அடைகின்றனர் -அங்கு இருந்து மீண்டும் பூமிக்கு திரும்புவதில்லை
அங்கேயே தங்கி விடுகின்றனர் -அல்லது மேலே செல்லுகின்றனர் –

ஷீரோத சம்பவே தேவி பத்ம நாப குடும்பிநி -6-33-

தாமரையில் உதித்தவளே -திருப் பாற் கடலில் தோன்றியவளே-பத்ம நாபனின் திரு பத்னியே
உன்னை வணங்குகின்றேன் -ஜீவன் என்பது யார் என்பதை விளக்கி அருள்வாய் -என்று இந்திரன் கேட்டான்

பூர்ணா ஹந்தா ஹரே ராத்யா ச அஹம் ஸர்வேச்வரீ பரா
தஸ்யா சம்ருதாச்ச தஸ்த்ரோ மே தசா த்ரிதசா புங்கவ -6-34

மஹா லஷ்மி சொல்லத் தொடங்கி -ஸ்ரீ ஹரியுடைய நான் என்ற எண்ணமாகவே சர்வேஸ்வரியான நான் உள்ளேன்
அவனது நான் என்கிற எண்ணமே நான்கு நிலையாக உள்ளது –

ப்ரமாதேதி விதா த்வேகா தத் அந்தகரணம் பரா
பஹி கரணாம் அந்யா ச சதுர்த்தீ பாவ பூமிகா –6-35-

அந்த நான்கு நிலைகளில் முதல் நிலை -பிரமாதா -அறிபவள்-ஜீவன் -ஆகும்
இரண்டாவது நிலை -மனம் புத்தி அஹங்காரம் -சேர்ந்த அந்த கரணம் ஆகும்
மூன்றாவது நிலை கர்ம ஞான இந்திரியங்கள் ஆகும்
நான்காம் நிலை -ப்ரமேய ப்ரபஞ்சகங்கள் இணைந்த பாவ பூமிகா ஆகும்

ப்ரமாதா சேதந ப்ரோக்தா மத் சங்கோச ச உச்யதே
அஹம் ஹி தேச காலாத்யை அபரிச்சேதமீ யுஷீ -6-36-
ஸ்வா தந்தர்யா தேவ சங்கோசம் பஜாமய ஜஹதீ ஸ்வதாம்
பிரதமஸ் தத்ர சங்கோச பிரமாதேதி பிரகீர்த்யதே-6-37-

இதில் பிரமாதா என்பது சேதனர்களைக் குறிக்கும் -நான் எனது இயல்பாகவே த்ரி வித அபரிச்சேத்யவளாக இருந்த போதிலும்
என்னுடைய ஸூ தந்திரம் காரணமாகவே இது போன்ற நிலைகளில் என்னைக் கட்டுப் படுத்திக் கொள்கிறேன்
இப்படிச் செய்தாலும் என்னுடைய ஸ்வரூபத்தை நான் கை விடுவது இல்லை –
இப்படிப்பட்ட உன் முதல் நிலை பிரமாதா எனப்படும் –

சித் ஆத்மநி யதா விஸ்வம் மயி லீநம் அவஸ்திதம்
பிரமாதரி தத் ஏவ ஏதத் தர்பனோதர சைலவத் –6-38-

இந்த உலகம் முழுவதும் என்னுள் அடங்கியது -இதே போன்றே பிரமாதா என்ற நிலைக்குள்ளும் இந்த உலகம் அடங்கும்
ஒரு கண்ணாடிக்குள் மலை அடங்குவது போன்று பிரமாதாவுக்குள் இந்த உலகம் உள்ளது –

ஏக ரூப்யம் த்வி ரூபத்வம் த்ரி ரூபத்வம் சதுர்பிதாம்
சப்த பஞ்சக ரூபத்வம் பிரமாதா யத் ப்ரபத்யதே -6-39-

ஜாக்ரத் -ஸ்வப்நம் -ஸூ ஷூப்தி -தூரியம்–முதலான -35- நிலைகள் ஜீவனுக்கு உள்ளது

பிரகாசே நாத்மநோ ஹி ஏகோ க்ராஹ்ய க்ராஹ கதா வசாத்
த்வை ரூப்யம் தத் த்ரீ ரூபத்வம் ஞானாகார க்ரியாத்மநா–6-40-
சப்த பஞ்சக ரூபத்வம் தத் தத் தத்வஸ் திதை ஸ்திதம்
காநி தத்வாநி பத்மாஷி கதி கீதருக்விதா நி ச -6-41-
ஏதத் ப்ருஷ்டா மயா ப்ரூஹி நமஸ்தே சிந்து சம்பவே
ஸ்தூல ஸூஷ்ம விபேதேந பூதாநி தச குணி ச -6-42-
ஞான கர்ம விபேதேந த்ரீண்யத கரணாநி ச
ப்ரக்ருதிச்ச ப்ரஸூதிச் ச மாயா சத்வம் ரஜஸ் தமஸ் -6-43-
காலாச்ச நியதி சக்தி புருஷ பரமம் நப
பகவான் இதி தத்வாநி சாத்வதா சமகீயதே–6-44-

தன்னை மட்டும் வெளிப் படுத்தும் போது ஜீவன் ஒருவனாக உள்ளான்
தன்னையும் மற்றவற்றையும் அறியும் போது இரண்டாகிறான் –
ஞானம் -ஞானத்தால் அறியப்படும் வஸ்துக்கள் -ஞானம் மூலம் உண்டாகும் விவேகம் -ஆகியவற்றால் மூன்றாகிறான் –
இப்படியாக பிரபஞ்சத்தின் தத்துவங்களைப் பார்க்கும் போது ஜீவனுக்கு -37-நிலைகள் உள்ளன –
என்றதும் -இந்திரன் -மஹா லஷ்மியிடம் -தாமரை கண்ணாளே-திருப் பாற் கடலிலே உதித்தவளே
உன்னால் கூறப்பட்ட -37-தத்வங்கள் எவை -அவற்றின் தன்மைகள் எவை
உன்னை வணங்கி பிரார்த்திக்கும் எனக்கு இவற்றை விளக்கி அருள்வாய் -என்றான்
ஸ்தூலமாயும் ஸூஷ்மாமாயும் உள்ளவை 10-/கர்ம ஞான இந்திரியங்கள் -10-/மனம் புத்தி சித்தம் மூன்று /
ஸாத்வதர்கள் கூறும் பிரகிருதி ப்ரஸூதி மாயா இவை மூன்று /சத்வம் ரஜஸ் தமஸ் இவை மூன்று /
காலம்- நியதி -சக்தி -புருஷன் – பரம் -நபம் -மற்றும் பகவான் -என மற்றவை என்று கூறினாள்

மயா ஸ்ருதாநி தத்வாநி த்வத் வக்ர ஸரஸீரு ஹாத்
வ்யாஸஷ் வைதாநி மே தேவி நமஸ்தே ஸரஸீ ருஹி -6-45

இந்திரன் மீண்டும் இவற்றை விளக்குவாயாக என்று விண்ணப்பித்தான் –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் -5-

May 20, 2018

யா சாஹம்தா ஹரே ராத்யா சார்வாகார சநாதநீ
சுத்த ஆனந்த சிதாகாரா ஸர்வத சமதாம் கதா –5-1-

ப்ரஹ்மத்தின் அஹம் அர்த்தமே நான் -அஹம் என்பதே பல ரூபங்கள் -அநாதி ஆனந்த ஞான மயம்

சாஹம் சிச்ருஷயா யுக்தா ஸ்வல்பால்பே நாத்ம பிந்துநா
ஸ்ருஷ்டிதம் க்ருதவதீ சுத்தாம் பூர்ண ஷாட்குண்ய விக்ரஹாம்–5-2-

அனைத்தையும் ஸ்ருஷ்டிக்க எனக்கு இச்சை பிறந்த பொழுது சுத்த ஸ்ருஷ்ட்டியை தொடங்குகிறேன் –
அப்பொழுது எனது சிறிய பகுதிகளானவை என்னுடைய ஆறு குணங்களையும் முழுமையாகக் கொண்டு வடிவம் எடுத்த படி இதனைச் செய்கின்றன

அநுஜ்ஜித ஸ்வரூபாஹம் மதீயே நால்ப பிந்துநா
மஹா லஷ்மீ சமாக்யாதா த்ரை குண்ய பரிவர்த்திநீ -5-3-

எனது முழுமையான வடிவு இது போன்று பிரிவது இல்லை -எனது ஒரு சிறு பகுதியே மூன்று குணங்களின்
வடிவாகத் தோன்றி இவற்றைச் செய்கின்றன -இந்தப் பகுதியே மஹா லஷ்மீ எனப்படுகிறாள் –

ரஜஸ் பிரதான தத் ராஹம் மஹா ஸ்ரீ பரமேஸ்வரீ
மதீயம் யத்தமோ ரூபம் மஹா மாயேதி ச சம்ருதா -5-4-

ரஜோ குணம் மிக்கு உள்ள பகுதி மஹா ஸ்ரீ என்றும் பரமேஸ்வரீ என்றும்
தமஸ் குணம் மிக்கு உள்ள பகுதி மஹா மாயா என்றும் சொல்லப்படும்

மதீயம் சத்த்வ ரூபம் யன் மஹா வித்யேதி சா சம்ருதா
அஹம் ச தே காமின்யவ் தா வயம் திஸ்ர ஊர்ஜிதா–5-5-

சத்வ குணம் மட்டுமே நிறைந்த மஹா லஷ்மியின் பகுதி மஹா வித்யா எனப்படும்-மஹாஸ்ரீ எனப்படும் நானும்
மற்ற இருவரும் மஹா மாயா வித்யா மூவரும் சேர்ந்து இணைந்து ஸ்ருஷ்ட்டி செய்ய விரும்பிய படி உள்ளோம் –

ஸ்ருஷ்டவத் யாஸ்து மிதுநாந்யநு ரூபாணி ச த்ரிதா
மதீயம் மிதுனம் யத்தந் மாநஸம் ருசிராக்ருதி –5-6-

எங்கள் மூவருடன் இருந்து மூன்று ஆண் பெண் ஜோடிகள் உருவாகின்றன -எனது மனசால்
ஸ்ருஷ்ட்டி செய்யப்பட இந்த மூன்று ஜோடிகளும் மிகவும் அழகாகவே காணப்படும் –

ஹிரண்ய கர்ப்பம் பத்மாஷம் ஸூந்தரம் கமலாசனம்
ப்ரத்யும்னாம் சாதிதம் வித்தி ஸம்பூதம் மயி மாநஸம்–5-7-

எனது ப்ரத்யும்னன் அம்சத்துக்கும் மஹா ஸ்ரீ க்கும் ஹிரண்ய கர்ப்பம் என்பது அழகான கண்களுடனும் அழகான உடலுடனும்
தாமரையில் அமர்ந்ததாகவும் தோன்றுகிறது -இந்தப் படைப்பு எனது ப்ரத்யுமந அம்சத்தால் மானசீகமாகப் படைக்கப் படுவதாகும்-

ததா விதிர் விரிஞ்சச் ச ப்ரஹ்மா ச புருஷ சம்ருத
ஸ்ரீ பத்மா கமலா லஷ்மீ ஸ் தத்ர நாரீ ப்ரகீர்த்திதா -5-8-

அந்த ஹிரண்ய கர்ப்பத்தில் இருந்து ஆண்களாகிய தாதா-வி தாதா -விரிஞ்சி -பிரம்மன் -ஆகியோரும்
ஸ்ரீ – பத்மா -கமலா – லஷ்மீ ஆகியோரும் வெளிப்படுகின்றனர்-

சங்கர்ஷண அம்சதோ த்வந்த்வம் மஹா மாயா ஸமுத்பவம்
த்ரி நேத்ரம் சாரு சர்வாங்கம் மாநஸம் தத்ர யா புமாந் -5-9-

மஹா மாயா என்ற எனக்கும் சங்கர்ஷண அம்சத்துக்கும் மானசீகமாக நிகழும் தொடர்பு மூலம் உண்டாகும்
ஜோடிகள் மூன்று கண்களுடன் அழகான உடல் அமைப்புகளுடன் உள்ளனர் –

ச ருத்ர சங்கர ஸ்தாணு கபர்த்தி ச த்ரி லோசந
தத்ர த்ரயீஸ்வரா பாஷா வித்யா சைவாஷரா ததா -5-10-
காம தேனுச் ச விஜ்ஜேய ச ஸ்த்ரீ கவ்ச்ச ஸரஸ்வதீ
அநிருத்த அம்ச ஸம்பூதம் மஹா வித்யா ஸமுத்பவம் -5-11-
மிதுனம் மாநஸம் யுத்தத் புருஷ தத்ர கேசவ
விஷ்ணு கிருஷ்ணோ ஹ்ருஷீகேசா வாஸூ தேவோ ஜனார்த்தன -5-12-

இவர்களில் ருத்ரன் -சங்கரன் -ஸ்தாணு -கபர்த்தி -த்ரி லோசனன் -ஆகியோர் புருஷர்கள் ஆவர் –
மூன்று ஈஸ்வரர்களாகிய வித்யா -பாஷா -அக்ஷரா -காமதேனு -மற்றும் சரஸ்வதி ஆகியவர்கள் ஸ்த்ரீகள் ஆவர் –
மஹா வித்யா என்ற எனக்கும் அநிருத்தனுக்கும் ஏற்படும் மானசீகமான தொடர்பு காரணமாக சில ஜோடிகள் உத்பத்தி ஆகின்றனர் –
இப்படியாக மஹா வித்யாவுக்கு அநிருத்தனுக்கும் மானசீக தொடர்பு காரணமாக பிறந்தவர்களில் புருஷர்களாக உள்ளவர்கள்
கேசவன் விஷ்ணு கிருஷ்ணன் ஹ்ருஷீகேசன் வாஸூ தேவன் மற்றும் ஜனார்த்தனன் ஆவர் –

உமா கௌரீ ஸதீ சண்டா தத்ர ஸ்த்ரீ ஸூபகா ஸதீ
ப்ராஹமணஸ்து த்ரயீ பத்னீ சா பபூவ மமாஜ்ஞய–5-13
ருத்ரஸ்ய தயிதா கௌரீ வாஸூ தேவஸ்ய ச அம்புஜா
ரஜஸ் ச தமஸ் ச்ச ஏவ சத்தவஸ்ய ச விவர்த்தனம் –5-14-

இவர்கள் உமா -கௌரீ -ஸதீ -சண்டா -ஆகியோர் ஆவர் -எனது ஆணைப் படி மூன்று பெண்கள் மூன்று ஆண்களுக்குப் பத்னீ யானார்கள்
அவர்களில் ஸூபகா என்பவள் பிரமனுக்கும் -கௌரீ ருத்ரனுக்கும் -அம்புஜா வஸூ தேவனுக்கும் -பத்னீ யானார்கள்
இப்படியாக ரஜஸ் தமோ மற்றும் சத்வ குணங்களின் ஸ்ருஷ்ட்டி கூறப்படுவது நிறைவு பெறுகிறது –

ஆத்யம் பர்வ ததே தத்தே கதிதம் மிதுன த்ரயம்
மத்யமம் பர்வ வஷ்யாமி குணா நாம் தத் இதம் ஸ்ருணு -5-15-
தொடக்கத்தில் என்னால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட மூன்று ஜோடிகளை சொன்ன பின்பு
இந்த குணங்கள் குறித்த ஸ்ருஷ்டியின் இடைப்பட்ட கால கட்டத்தைப் கூறுவதை கேட்ப்பாயாக –

பாஷயா சக சம்பூய விரிஞ்ச அண்ட மஜீ ஜனத்
மத் ஆஜ்ஞயா பிபேதைதத் ச கௌர்ய ஸஹ சங்கர –5-16-

பிரமனும் சரஸ்வதியாக இணைந்து அண்டத்தை உத்பத்தி செய்தனர் -அதன் பின்னர் எனது ஆணைக்கு ஏற்ப
ருத்ரனும் கௌரியுமாகச் சேர்ந்து அந்த அண்டத்தில் பல விதமான பேதங்களை உண்டாக்கினர் –

அண்ட மத்யே பிரதானம் யத் கார்யம் ஆ ஸீத்து வேதச
தத் ஏதத் பாலயாமாச பத்மயா ஸஹ கேசவ –5-17-

அந்த அண்டத்தில் பிரதானம் உத்பத்தி செய்யப்பட்டது -இதனை பிரம்மன் செய்தான் –
அதன் பின்னர் அந்த பிரதானத்தை கேசவனும் பத்மாவும் பாதுகாத்தனர் –

தத் ஏதத் மத்யமம் பர்வ குணாநாம் பரிகீர்த்திதம்
த்ருதீயம் பர்வ வஹ்யாமி ததிஹை கமநா ஸ்ருணு -5-18-

இப்படியாக குணங்களின் மத்யப்பகுதி உத்பத்தி என்னால் கூறப்பட்டது
இனி மூன்றாவது பகுதி குறித்து நான் கூறப்போவதை கேட்ப்பாயாக

அண்ட மத்யே பிரதானம் ஹி யத் தத் சத சதாத்மகம்
த்ரை குண்யம் ப்ரக்ருதி வ்யோம ஸ்வ பாவோ யோநி அக்ஷரம் -5-19-

அண்டத்தின் நடுவுள்ள பிரதானம் -அனைத்தையும் தன்னுள் அடக்கி -தன்னுடைய காரணப் பொருளாக மூன்று குணங்களையும்
கொண்டுள்ளது -அனைத்துக்கும் பிறப்பிடமாகவும் -தன்னுள் ஏதும் இல்லாததும் -அழியாததாயும் உள்ளது –

தத் ஏதத் சலிலீ க்ருத்ய தத்வம் அவ்யக்த சம்ஜஞகம்
ஹ்ருஷீகேச ச பகவான் மத்மய ஸஹ வித்யயா -5-20-

அதன் பின்பு அவ்யக்தம் எனப்படும் பிரதானம் நீராக மாற்றப்பட்டு அதன் மீது ஹ்ருஷீ கேசன் சயனித்தான்
அவன் திருவடிகளில் பத்மாவும் வித்யாவும் காணப்பட்டனர் –

அப்ஸூ ஸம்சயனம் சக்ரே நித்ரா யோகம் உபாகதா
யாசா ப்ரோக்தா மஹா காளீ ச நித்ரா தாமஸீ அபூத்-5-21-

சயனித்த ஹ்ருஷீகேசன் யோக நித்திரையில் ஆழ்ந்தான் –
மஹா காளீ எனப்படுமவள் தாமசம் நிறைந்த அவனுடைய நித்திரையாக மாறினாள்

ச யா நஸ்ய ததா பத்மம் அபூந் நாப்யாம் புரந்தர
தத் கால மய மாக்யாதாம் பங்கஜம் யத பங்கஜம் –5-22-

அப்போது ஒரு அழகிய தாமரை மலர் வெளி வந்தது -மண்ணில் இருந்து வெளிவராமல்
திரு நாபியில் இருந்து வெளிவந்த அந்தத் தாமரை கால மயம் எனப்பட்டது

ஜலாதி கரணம் பத்மம் ஆதர புஷ்கரம் ததா
சக்ரம் ச புண்டரீகம் சேத்யேவம் நாமாநி தஸ்ய து –5-23-

தண்ணீரில் இருந்து தோன்றாமல் திரு நாபியில் இருந்து வெளிப்பட்ட அந்த தாமரை –
பத்மம் -ஆதாரம் -புஷ்கரம் -சக்ரம் -புண்டரீகம் -என்ற பல பெயர்களால் அழைக்கப் பட்டது –

சித் அசித் தத்வமாக்யாதம் சேதனச் சித் ப்ரகீர்த்தித
அசித் த்ரை குண்யம் இதி யுக்தம் கால அபர ஸ்ம்ருத-5-24-

இந்திரன் மஹா லஷ்மியிடம் -சித் அசித் -இரண்டு தத்துவங்களை விளக்கினீர் –
சித் ஞானமயம் என்றும் அசித் மூன்று குணங்களை உள்ளடக்கியது என்பதையும் அருளிச் செய்தீர்
காலம் என்பதைப் பற்றி நீர் அருளிச் செய்ய வேண்டும் என்றான் –

அசித் அம்ச அபர கால த்ரை குண்யம் அபரம் ஸ்ம்ருதம்
பலாதிகம் து யத் பூர்வம் ஷாட் குண்யே த்ரிகம் ஈரிதம்–5-25-

அசித் அம்சமான காலம் -மூன்று குணங்களையும் அடக்கியதாகவே உள்ளது -இங்கு சத்வம் ரஜஸ் தமஸ் பற்றி சொல்ல வில்லை –
இவை பலம் ஐஸ்வர்யம் வீர்யம் என்பதே –
ஞான பலம் ஐஸ்வர்யம் சக்தி வீர்யம் தேஜஸ் ஆறு குணங்களில் உள்ள இம் மூன்றையும் முதலில் பார்ப்போம் –

தத் ஏதத் கால ரூபேண ஸ்ருஷ்டவ் சம்பரிவர்த்ததே
ஸ்வ தச்ச அபரிணாம் இதம் த்ரை குண்யம் பரிணாமிதத் -5-26-

மாறாமல் உள்ள இந்த மூன்று குணங்களும் ஸ்ருஷ்ட்டி காலத்தில் தோன்றுகின்றன –
இந்தக் காலம் என்பது மாறுபாடு அடையாமல் உள்ளது -குணங்கள் மாறுபாடு அடைவது இல்லை –
ஆனால் அவை சேரும் போது ஏற்படும் மாற்றம் இருக்குமே -இந்தக் காலம் என்பது மூன்று குணங்களின் சேர்க்கை மாற்றம் காரணமாக உண்டானது –

கால கால்யாத்மகம் த்வந்த்வம் அசித் ஏதத் ப்ரகீர்த்திதம்
ஸ்ருஜ்ந்த்யா விவிதான் பாவாந்மம தேவ்யா மஹாஸ்ரீய–5-27-

காலமும் -அதன் விளைவுகளும் -கால்ய – அசித் வஸ்துக்களாக உள்ளன –
எனது ஓர் அம்சமான மஹா ஸ்ரீ என்பவள் இடம் காலம் ஒரு கருவியாக உள்ளது
இதன் மூலம் அவள் நொடிக்கு நொடி அனைத்தையும் படைத்தபடி உள்ளாள் –

கால அயம் கரணத்வேந வரத்திதே மந்மய சதா
தஸ்மாத் கால மயாத் பத்மாத் விஷ்ணு நாபி ஸமுத்பவாத் –5-28-
ப்ரஹ்மா வேத மயோ ஜஜ்ஜே ச த்ரய்யா ஸஹ வீர்யவான்
ஹிரண்ய கர்ப்ப உக்தோ யா பூர்வம் லஷ்மீ ஸமுத்பவ –5-29-

எல்லா செயல்களும் காலத்தின் மூலம் நடக்கின்றன –அதாவது காலத்தை எனது ஸ்வரூபமாகக் கொண்டு நான் நடத்திக் கொள்கிறேன்
மஹா விஷ்ணுவின் திரு நாபியில் இருந்து வெளிப்பட்ட காலமயமான தாமரை மலரில் வேதங்களுடன் கூடிய
பிரம்மன் தனது மனைவி த்ரயீ என்னும் சரஸ்வதி உடன் வெளிப்பட்டான்
இந்த பிரம்மனே முன்பு ஒரு கால கட்டத்திலே ஸ்ரீ லஷ்மீ மூலமாக வெளிப்பட்ட ஹிரண்ய கரப்பான் ஆவான் –

மஹா காளீ சமுத் பூதா யா சா நாரீ த்ரயீ ஸ்ம்ருதா
ததே தத் மிதுனம் ஜஜ்ஜே விஷ்ணோர் நாபி சரோருஹாத் –5-30-

த்ரயீ என்ற இவள் மஹா காளியிடம் இருந்து தோன்றியவள் –
இப்படியாக விஷ்ணுவின் திரு நாபியில் இருந்து பிரம்மன் த்ரயீ ஜோடி வெளிப்பட்டது –

பத்மம் பத்ம உத்பவ த்வந்த்வம் தத் ஏதத் த்ரிதயம் ஸஹ
மஹான் தமஸ ஆக்யாதோ விகார பூர்வகைர் புதை -5-31-

இந்த தாமரை மலர் -பிரம்மன் -த்ரயீ என்னும் சரஸ்வதி மூன்றும் இணைந்து மஹான் உருவாகக் காரணம்
இந்த மஹான் தாமசம் நிறைந்ததாகவே உள்ளது -இப்படியே அனைத்தும் உணர்ந்தவர்கள் முன்பு கூறி உள்ளார்கள் –

ப்ரானோ ஹிரண்ய கர்ப்பச் ச புத்திச்சா இதி த்ரிதா பிதா
பத்ம பும்ஸ்த்ரீ சமலம்பாந் மஹாத்த்வம் தஸ்ய சப்த் யதே -5-32-

இந்த மஹான் உருவாக காரணமான தாமரை மலர் பிராணனையும் -ஹிரண்ய கர்ப்பன் என்பது ஆணையும் –
புத்தி என்பது பெண்ணையும் குறிப்பதாக உள்ளது –

குண ப்ராணஸ்ய து ஸ்பந்தோ புத்தேரத்ய வசாயதா
தர்மாதிக தர்மாத்யம் த்வயம் பும்சோ குணோ மத –5-33-

பிராணன் என்பதன் தன்மையானது நகர்தல் அதிர்தல்-ஸ்பந்தம் -எனலாம் /
புத்தியின் தன்மை சிந்தித்தல் அத்யாவசியம் / புருஷர்களின் லக்ஷணம் என்பது தர்மம் அதர்மம் என்பதாகும்

தர்மோ ஞானம் ச வைராக்யம் ஐஸ்வர்யம் சேத்தி வர்ணித
தர்மாதி கோருணோ யஸ்மாத் அதர்மாத்யா ப்ரகீர்த்திதா -5-34-

தர்மம் என்பது -தர்மம் -ஞானம் -வைராக்யம் -மற்றும் ஐஸ்வர்யம் -ஆகியவற்றைத் தன்னுள் அடக்கியதாகும்
இவற்றின் எதிர்மறை -அதர்மம் -என்பது -அதர்மம் -அஞ்ஞானம் -வைராக்யம் இல்லாமை -மற்றும் குறைகள் உடன் இருத்தல் என்பவை –

மஹாந்தம் ஆவி சாந்த்யேநம் ப்ரேரயாமி ஸ்வ ஸ்ருஷ்டயே
ப்ரேர்யாமாணத் தாத்தா தஸ்மாத் அஹங்காரச்ச ஜஜ்ஜிவாந் –5-35-

ஸ்ருஷ்டியின் பொருட்டு நான் அந்த மஹான் என்பதில் பிரவேசித்தேன்
இந்த செய்ய மூலமாக மஹத் என்ற அதில் இருந்து அஹங்காரம் வெளிப்பட்டது

பூர்வம் ய சங்கர ப்ரோக்தா மஹா மாயா ஸமுத்பவ
யா பத்னீ தஸ்ய கௌரீ சா ஜஜ்ஜே அபிமதிரத்ர து –5-36

மஹா மாயாவில் இருந்து வெளிப்பட்டவளும் -சங்கரின் பத்னியும் ஆகிய கௌரி என்னுடையது என்ற எண்ணமாக வடிவம் எடுத்தாள்-
நான் என்பது அஹங்காரம் -எனது என்பது அஹமதி என்பதாகும்

ஆவிஸ்ய அமும் அஹங்காரம் ஸ்ருஷ்டயே ப்ரேரயாம்யஹம்
ச பபூவ த்ரிதா பூர்வம் குண வ்யதிக ராத்ததா –5-37-

அந்த அஹங்காரம் என்பதில் பிரவேசித்த நான் அதனை மேலும் வளரச் செய்கிறேன் –
மூன்று குணங்களின் காரணமாக அந்த அஹங்காரம் என்பது மூன்று விதமாக உருவெடுத்தது –

தாமஸ தத்ர பூதாதிஸ் தஸ்ய சர்வம் இதம் ஸ்ருணு
பூதாதே சப்த தந் மாத்ரம் தந் மாத்ராத் சப்த சம்பவ -5-38-

தாமஸ குணத்தின் பாதிப்பு காரணமாக அஹங்காரத்தில் இருந்து பூதாதி உத்பத்தி ஆகிறது
இந்த பூதாதியில் இருந்து சப்தத்தின் அடிப்படை தந் மாத்திரை வெளிப்படுகிறது
இந்த சப்த தந் மாத்ரையில் இருந்து சப்தம் உண்டாகிறது –

மத் ப்ரேரிதாத் சப்த மாத்ராத் ஸ்பர்ச மாத்ரம் பபூவ ஹா
ஸ்பர்சஸ் து ஸ்பர்ச தந் மாத்ராத் ப்ரேரிதாந் மயா -5-39-

சப்தம் என்ற அதில் இருந்து எனது தூண்டுதலின் காரணமாக ஸ்பர்சம் என்பதின் அடிப்படை தந் மாத்திரை வெளிப்படும்
இந்த ஸ்பர்ச தந் மாத்ரையில் இருந்து ஸ்பர்சம் வெளிப்படுகிறது –

தத் ஆஸீத் ரூப தந் மாத்ரம் தஸ்மாத் ச ப்ரேரிதாந்மயா
ரூபம் ஆவிர்ப்ப பூதாத்யம் ரஸ மாத்ரம் தத பரம் -5-40-

ஸ்பர்ச தந் மாத்ரையில் இருந்து ரூப தந் மாத்திரை வெளிப்படுகிறது
இந்த ரூப தந் மாத்ரையில் இருந்து எனது தூண்டுதலின் காரணமாக ரஸ தந் மாத்திரை வெளிப்படுகிறது –

ரஸ மாத்ராந் மயா ஷிப்தாத் தஸ்மாஜ்ஜ் ஜே ரஸஸ்தத
கந்த தந் மாத்ரம் அபி ஆஸீத் தஸ்மாத் ச ப்ரேரிதாந் மயா -5-41-

இந்த ரஸ தந் மாத்ரையில் இருந்து எனது தூண்டுதலின் காரணமாக ரசம் என்னும் நீர் வெளிப்பட்டது
அதில் இருந்து கந்த தந் மாத்திரை வெளிப்பட்டது –

சுத்தோ கந்த ஸமுத்பூத இதீயம் பவ்திகீ பிதா
மாத்ராணி ஸூஷ்ம பூதாநி ஸ்தூல பூதாநி ச அபரே -5-42-

கந்த தந் மாத்ரையில் இருந்து கந்தம் வெளிப்பட்டது -தந் மாத்திரைகள் ஸூஷ்மம் -மற்றவை அனைத்தும் ஸ்தூலம்

சப்தா தயா சமாக்யாதா குணா சப்தாதயஸ்து யே
ஸ்தூல பூதா விசர்க்காஸ்தே நான்யே சப்தா தயோ குணா -5-43-

சப்தம் முதலியவை அந்தந்த தந் மாத்திரைகளின் வெளிப்பாடாகாவே உள்ளன
அவை இல்லாமல் தனியாக இவை இருக்க இயலாதே –

சாந்தத்வம் ச ஏவ சோதரத்வம் மூடத்வம் ச இதி தத் த்ரிதா
சத்வாத் உந்மேஷ ரூபாணி தான ஸூஷ்மேஷூ சந்தி ந-5-44-

சத்வம் முதலான குணங்களின் வெளிப்பாடாக உள்ள -சாந்தமாக இருத்தல் -அசைதல் -அறிவற்று இருத்தல்
முதலிய தன்மைகள் ஸூஷ்ம நிலையில் காணப் பட மாட்டாது

தேந தந் மாத்ரதா தேஷாம் ஸூஷ் மாணாம் பரி கீர்த்தி தா
ஸூ க துக்காதிதாயித்வாத் ஸ்தூ லத்வம் இதரத்ர து –5-45-

கீழே சொன்ன காரணத்தால் ஸூஷ்ம மாக உள்ள அனைத்தும் தன்மாத்திரைகள் தன்மைகளை அப்படியே கொண்டு உள்ளன என்று கூறப்படுகின்றன –
மற்ற அனைத்தும் சுக துக்கங்களை அளித்தபடி-வெளிப்படுத்தியபடி – உள்ளதால் -அவை ஸ்தூலத்தின் தன்மை கொண்டுள்ளன என்றதாகிறது –

ஸ்தூல நாமேவ பூ தா நாம் த்ரிதா வஸ்தா ப்ரகீர்த்தி தா
ஸூ ஷ் மாச்ச பித்ரு ஜாஜ்ச ஏவ ப்ரபூத இதி பேதத–5-46-

ஸ்தூல மான வஸ்துக்கள் அனைத்தும் மூன்று வித நிலைகளில் -ஸூஷ்மம் -பித்ருஜம் -ப்ரபூதம் -என்பதாகும்

கடாத்யா விவிதா ப்ரஹ்மா ப்ரபூத இதி சப்த்யதே
சுக்ல சோனீத ஸம்பூதா விசேஷா பித்ருஜா சம்ருதா -5-47-

கடம் போன்றவை ப்ரபூதா என்றும் -இரத்தத்துடன் விந்து கலப்பதால் உண்டாகும் உயிர்கள் அனைத்தும் பித்ருஜம் எனப்படும் –

ஸூஷ்மாஸ் து பஞ்ச பூதா ஸ்யு ஸூஷ்ம தேஹ வ்யபாஸ்ரய
சர்க்கோ பூதாதி ஜோ ஹி ஏவம் க்ரமச பரிகீர்த்தித–5-48-

ஸூஷ்ம நிலையானது பஞ்ச பூதங்களான ஆகாயம் காற்று நெருப்பு பூமி ஆகியவற்றுடன் கூடியது
இதன் மூலம் ஸூஷ்ம நிலையில் உள்ள தேகம் உண்டாகிறது
இப்படியாக பூதாதி என்பதில் இருந்து அனைத்தும் தோன்றும் விதமானது நிறைவு செய்யப்பட்டது –

அஹங்காரஸ்ய யாவம்சவ் ரஜஸ் சத்வ மயம் ஆச்ரயவ்
வைகாரிக இதி ப்ரோக்த சாத்த்விகோ அஸ்தயோ பர-5-49-

சத்வம் மற்றும் ரஜஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய அஹங்காரம் என்பதில் சத்வம் மட்டும் உள்ள பகுதி யானது வைகாரிகம் எனப்படும்

தைஜஸ் கதித சத் பிஸ்தயோ ஸ்ருஷ்ட்டி மிமாம் ஸ்ருணு
வைகாரிகாத் அஹங்காராத் ஆஸீத் ஸ்ரோத்ராதித் இந்திரியம் -5-50

அஹங்காரம் என்பதில் ரஜஸ் மட்டும் உள்ள பகுதி தைஜஸம் எனப்படும்
இவற்றில் இருந்து மற்றவை தோன்றுவதை மேலே சொல்வேன்
ஞான இந்திரியங்கள் அனைத்தும் வைகாரிக அஹங்காரத்தில் இருந்து வெளிப்படுகின்றன

கர்ம இந்திரியம் ச வாகாதி தைஜஸாத் ஸம்ப்ரவர்த்ததே
உபயஸ்மாத் ததச் சாஸீத் புத்தி கர்ம இந்திரியம் மன–5-51-

வாக்கு முதலான கர்ம இந்திரியங்கள் அனைத்தும் தைஜஸ அஹங்காரத்தில் இருந்து தோன்றுகின்றன
கர்ம ஞான இந்திரியங்களின் கலவையான புத்தி என்பது வை காரிகம் தை ஜசம் ஆகிய இரண்டிலும் இருந்தும் தோன்றுகிறது

ஸ்ரோத்ரம் த்வக் ச ஏவ ச ஷச்ச ஜிஹ்வா த்ராணாம் ச பஞ்சமம்
புத்தி இந்த்ர்யாணி பஞ்சாஹூ சக்தி ரேணா மதாத்மிகா-5-52-
வாக் ச ஹஸ்தவ் ச பாதவ் ச ததோ பஸ்தம் ச பாயு ச
கர்ம இந்த்ரியாணி பஞ்சா ஹூ சக்திரேண மதாத்மிகா -5-53-

ஐந்து கர்ம இந்திரியங்களின் சக்தியாகவும் நானே உள்ளேன் –
வாக் பாணி பாதம் ததோ பஸ்தம்-ஐந்தும் தானே கர்ம இந்த்ரியங்கள் -அவற்றின் சக்தியும் நானே

யா சா விஞ்ஞான சக்திர் மே பாரம்பர்ய க்ராமாகதா
புத்தி இந்த்ரியாணி அதிஷ்டாய விஷயேஷு ப்ரவர்த்ததே –5-54-
க்ரியா சக்திச் ச யா சா மே பாரம்பர்ய க்ராமாகதா
கர்ம இந்த்ரியாணி அதிஷ்டாய கர்த்தவ்யேஷூ ப்ரவர்த்ததே -5-55-

சர்வஞ்ஞனாக சர்வசக்தியாக நானே இந்த உத்பத்திகளில் இறங்கி ஞான இந்த்ரியங்களின் செயல்களையும்
செய்ய வைத்து தங்களுக்கான பொருள்களை உணர இயல்கிறது –
கர்ம இந்திரியங்களை அவற்றின் செயல்களில் ஈடுபடுத்துகிறது –

ஸ்ரோத் ரஸ்ய விஷய சப்த ஸ்ரவணம் ச க்ரியா மதா
த்வ சச்ச விஷய ஸ்பர்ச ஸ்பர்சநம் ச கிரியா மதா –5-56-
சஷூஷோ விஷயோ ரூபம் தர்சனம் ச க்ரியா மதா
ஜூஹ்வாயா விஷயோ ரஸ்யோ ரசனம் ச க்ரியா மதா–5-57-
க்ராணஸ்ய விஷயோ கந்த ஆக்ராணம் ச க்ரியா மதா
வ்ருத்தயோ விஷயேஷ் வஸ்ய ஸ்ரோத்ராதே ஸ்ரவணாதய –5-58-
ஆலோச நாதி கத்யந்தே தர்மி மாத்ர க்ரஹச்ச ச
திக் ச வித்யுத் ததா ஸூர்ய சோமோ வஸூ மதீ ததா -5-59-
அதி தைவதம் இதி ப்ரோக்தம் க்ரமாச் ஸ்ரோத்ராதி பஞ்சகே
அதி பூதாம் இதி ப்ரோக்த சப்தாத் யோ விஷய க்ரமாத்-5-60-

கேட்க்கும் உறுப்பின் விஷயம் ஒலி/ உணர்ந்து கொள்ளும் உறுப்பின் விஷயம் தொடுதல் /
பார்க்கும் உறுப்பின் விஷயம் காட்சி /சுவையின் உறுப்பின் விஷயம் சுவை
நுகரும் கேட்க்கும் உறுப்பு விஷயம் மணமும் கேள்வியும் –
இப்படி பொருள்கள் தனித் தனியே பிரித்து அறியப் படுகின்றன -திசைகள் மின்னல் ஸூர்யான சந்திரன் பூமி –
ஐந்து இந்திரியங்களின் அபிமான தேவதைகளாக உள்ளன -இவற்றின் விஷயமாக உள்ள ஒலி போன்றவை -பூதங்கள் என்று கூறப்படுகின்றன –

ஸ்ரோத்ராதி பஞ்சகம் த்வேததத் யாத்மம பரீ கீர்த்திதம்
ஸ்ரோத் ராதே சாத்விகாத் ஸ்ருஷ்ட்டிர் வியதாதித்ய பேஷயா -5-61-

ஸ்ரோத்ராதி ஐந்து இந்திரியங்களும் அத்யாத்மம் எனப்படும் -இவை சாத்விக குணத்தில் இருந்து வெளிப்படும் –

தேந பவ்திகம் இதி யுக்தம் க்ரமாச் ஸ்ரோத்ராதி பஞ்சகம்
வாசஸ்து விஷய சப்தோ வசனம் ச க்ரியா மதா -5-62-
ஹஸ்த இந்த்ரியஸ்ய சாதேய மாதாநம் ச க்ரியா மதா
பாத இந்த்ரியஸ்ய கந்தவ்யம் கமனம் ச க்ரியா மதா -5-63-
உபஸ்தஸ்ய தத் ஆனந்த்ய மாநந்தச் ச க்ரியா மதா
வி ஸ்ருஜ்யம் விஷய பார்யோர் விசர்க்கச் ச க்ரியா மதா -5-64-
ஹஸ்தாதிகம் சதுஷ்கம் யத்தத் பஞ்ச விஷயாத்மகம்
அக்னி இந்த்ரச்ச விஷ்ணுச்ச தைத்தவாத்ய பிரஜாபதி -5-65-
மித்ரச்ச இதி க்ரமாஜ்ஜேயா ஆதி தேவோ விசேஷணை -5-66-1-

இவ்வாறு ஸ்ரோத்ராதி கரணங்கள் ஐந்தும் அந்தந்த பூதங்களைச் சேர்ந்ததாக உள்ளன –
இவற்றின் அதிபதி தேவதைகளாக -அக்னி வாக்குக்கும் -இந்திரன் கைகளுக்கும் -விஷ்ணு கால்களுக்கும்
பிரஜாபதி மர்மக் குறிக்கும் மித்ரன் ஆசனவாய்க்கும் -உள்ளனர் -என்றே கற்றவர்கள் கூறுகின்றனர் –

சப்த பஞ்சாத்மகம் ச ஏவ வாகாதேர் விஷயோ ஹி யா -5-66-2-
ச ஆதி பூத இதி ப்ரோக்தோ வாகாத்யத் யாத்மம் உச்யதே
மநஸ்து ஸஹ கார்ய அஸ்மிந் உபயத்ராபி பஞ்சகே –5-67

விஷயமான பஞ்ச பொருள்களும் ஆதி பூதம் எனப்படும் -வாக்யாதி கரணங்கள் அத்யாத்மம் எனப்படும்
மனம் கர்ம ஞான இந்திரியங்களுக்கு துணையாகும்

ஞானேந்திரிய கணைச் ச ஏதத் விகல்பம் தநுதே மந
விகல்போ விவிதா க்ல்ருப்தி ஸ்தச் ச ப்ரோக்தம் விசேஷணம் -5-68-

மனஸ் ஞான இந்த்ரியங்களுடன் சேர்ந்து வஸ்துக்களை விகல்பித்து பொருள்களின் விசேஷ தன்மைகளை அறியும் –
விகல்பம் பூ போன்ற பெயர்ச் சொல் -விசேஷணம் மனம் போன்ற தன்மை –

தர்மேண ஸஹ சம்பந்தோ தர்மிணச்ச ச உஸ்யதே
விகல்ப பஞ்சத ஜ்ஜேயோ த்ரவ்ய கர்ம குணாதிபி–5-69-

தர்மம் தர்மி பற்றியும் இவற்றின் தொடர்பையும் த்ரவ்யம் கர்மம் குணம் போன்ற வேறுபாடுகள் ஐந்தாகும்

தண்டீதி த்ரவ்ய சம்யோகாச் சுக்லோ குண சமன்வயாத்
கச்சதீதி க்ரியா யோகாத் புமான் சாமான்ய ஸம்ஸ்திதே -5-70-
டித்த சப்த ஸமாயோகாதி தீயம் பஞ்சதா ஸ்திதி
கர்மேந்த்ரிய குணை ச ஏதத் சங்கல்பம் தநுதே மன -5-71-

குச்சி பொருள் -வெண்மை குணம் -நடுவது செயல்பாடு கர்மம் -இப்படி பொருள் குண கர்ம வேறுபாடுகள் /
பண்பு சப்தம் இவற்றால் பிரிவுகளிலும் வகைகளிலும் வேறுபாடுகள் உண்டே
கர்ம இந்திரியங்கள் துணையால் மனம் சங்கல்பம் என்ற உறுதி கொள்ளும் –

ஒவ்தாசீஷ்யச் யுதிர்யா சா சங்கல்ப உத்யோக நாமிகா
அஹங்காரேண ச ஏதஸ்மிந் உபயத்ர குணே ஸ்திதி -5-72-

வேறுபாடுகளை களைந்து தெளிவு அடைவதே சங்கல்பம் ஆகும் -வேறுபாடுகளை களையும் செயல்பாடு உத்யோகம் ஆகும் –
இது அஹங்காரத்துடன் சேர்ந்து கொண்டு கர்ம ஞான இந்திரியங்களை ஓன்று சேர்க்கும்

ஞானேந்திரிய குணே சோ அயமிமா நேந வர்த்ததே
தேச கால அந்வயோ ஜ்ஞாது அபிமான ப்ரகீர்த்தித -5-73

ஞான இந்த்ரியங்களுடன் இணைந்த அஹங்காரம் அபிமானமாக பரிணமிக்கும்
அபிமானம் இந்த தேசம் இந்த இடம் போன்று மற்றவற்றுடன் இணைத்து கொள்வதாகும் -இதுபோன்ற சிந்தனையே ஆகும் –

மமாத்ய புரதோ பாதீத்யேவம் வஸ்து பிரதீயதே
கர்மேந்த்ரிய குண த்வேஷ சம்ரம்பேண ப்ரவர்த்ததே -5-74-

கர்ம இந்திரியங்களின் காரணமாகவே நான் இப்போது இந்த இடத்தில் காணப்படுகிறேன் –
இதுவே சம்ரம்பம் என்பது தோன்றக் காரணமாக உள்ளது

சங்கல்ப பூர்வ ரூபஸ்து சம்ரம்ப பரிகீர்த்தித
புத்தி அத்யவசாயேந ஞானேந்த்ரிய குணே ஸ்திதா -5-75-

சங்கல்பம் உண்டாக சம்ரம்பம் தொடக்கம் –
புத்தியானது ஞான இந்திரியங்களின் குணங்களில் நிலை நின்றாள் அத்யாவசாயம் உண்டாகும்

புத்தி அத்யவசாய அர்த்த அவதாரணம் உதீர்யதே
அவதாரணம் அர்த்தா நாம் நிச்சய பரிகீர்த்தித–5-76-

அத்யவசாயம் -உறுதியான தீர்மானம் அவதாரணம் -நிச்சயம் ஆகும்

கர்மேந்த்ரிய குணே புத்தி ப்ரயத்நேந
த்ரயோதச விதம் ஜேயம் தத் ஏதத் கரணம் புதை –5-77-

கர்மேந்த்ரியங்கள் துணை கொண்டு புத்தி பிரயத்தனம்
இப்படியாக -13-வகைகள் ஞானத்துக்கு கருவிகள் –

பாஹ்யம் தசவிதம் ஜேயம் த்ரிதா அந்தகரணம் ஸ்ம்ருதம்
த்ரயோ விம்சதிரேதே து விகாரா பரிகீர்த்திதா –5-78-

இப்படியாக வெளி இந்திரியங்கள் -கர்ம ஞான -10-உண்டே / அந்தகரணம் –புத்தி -மனம் -அஹங்காரம் ஆகிய மூன்றும்
கீழே -13-இந்த -10-சேர்ந்து 23-விகாரங்கள் எனப்படும் –

கரணாநி தசா த்ரீணி ஸூஷ் மாம்சா ஸ்தூல சம்பவா
ஏதஸ் ஸூஷ்ம சரீரம் து விராஜ பரி கீர்த்திதம் –5-79-

ஸ்தூலத்தில் இருந்து வெளிப்பட்ட பத்து வெளி இந்திரியங்களும் மூன்று அந்தகரணங்களும்
விராஜ எனப்படும் ஸூஷ்ம சரீரத்தை உண்டாக்கும்

வ்யஷ்ட்ய ஸூஷ்ம தேஹாச்ச ப்ரதீ ஜீவம் வியவஸ்திதா
அபவர்க்கே நிவர்த்தந்தே ஜீவேப்யஸ்தே ஸ்வயோநிஜா -5-80-

ஸூஷ்ம சரீரம் ஒவ் ஒரு ஜீவனுக்கும் வேறே வேறாக இருக்கும்

அன்யோன்ய அனுக்ரஹணைதே த்ரயோ விம்சதி ருத்திதா
மஹதாத்ய விசேஷாந்தா ஹி அண்ட முத்பாதயந்தி தே –5-81-

மஹத் தொடங்கி விசேஷணம் வரை உள்ள 23-தத்துவங்களும் ஒன்றுக்கு ஓன்று உதவியபடி உள்ளன
இதன் மூலம் அண்டம் உத்பத்தி ஆகிறது

தத் அண்டம் அபவத் ஏமம் சஹஸ்ராம்சு ஸமப்ரபம்
தஸ்மிந் ப்ரஜாபதிர் ஜஜ்ஜே விராட் தேவச் சதுர்முக -5-82-

அந்த அண்டம் -ஆயிரம் கதிர்களுடன் கூடிய ஸூர்யன் போன்ற ஒளி யுடன் காணப்படும்
அதில் இருந்து விராட் என்றும் பிரஜாபதி என்றும் கூறப்படும் நான்முகன் தோன்றுகிறான்

விராஜச்ச மநுர் ஜஜ்ஜே மநோஸ்தே மாநவா சம்ருதா
மரீசி ப்ரமுகாஸ்தேப்யோ ஜகத் ஏதத் சராசரம் –5-83-

விராட் புருஷனிடம் இருந்து மனு பிறந்தான் -மனு வம்சத்தினர் மாநவாகர் எனப்படுபவர்
இவர்களின் தலைவனாக உள்ள மரீசியிடம் இருந்தே சராசரங்கள் உள்ள உலகம் இதப்பத்தி ஆனது –

பிரகார அயம் மமோத்யாத்யா லேசதஸ்தே பிரதர்சித
ஸ்வத சுத்தாபி சித் சக்தி சம்வித அநாதி அபித்யயா –5-84-

இந்திரா உனக்கு என் சிறிய பகுதியைப் பற்றி உனக்கு கூறி வந்தேன்
தூய்மையான ஞான மயமானவள் -ஜீவர்களின் எல்லை யற்ற அவித்யை காரணமாக
அறியாமை சூழ்ந்த படியே உள்ள நிலையிலே ஸ்ருஷ்டித்து விடுகிறேன்

துக்கம் ஜென்ம ஜராத்யுத்தம் தத்ரஸ்தா பிரதிபத்யதே
சுத்த விஞ்ஞான சம்பந்தாச் சுத்த கர்ம சமன்வயாத்
யதா நுநோத்யவித்யாம் தாம் ததா ச ஆனந்தம் அஸ்நுதே -5-85-

அவித்யை அடியாக துக்கம் ஜரா மூப்பு –இவை கர்ம யோகாதிகளால் விலக்கப்பட்டு
இயல்பான ஸ்வரூப ஆவிர்பாவத்தை ஜீவன் அடைகிறான் –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-