ஸ்ரீ பார்த்த ஸ்வாமி திருமஞ்சனக் கட்டியம்-

நாயந்தே ! நாயந்தே !

அக்ரே க்ருத்வா கமபி சரணம் ஜாநுநைகேந திஷ்டன்
பச்சாத் பார்த்தம் விவலந ஜூஷா சஷூஷா ப்ரேஷமாண
சவ்யே தோத்ரம் கர சரசிஜே தஷிணே ஞானமுத்ராம்
ஆபிப் ப்ராணோ ரதமதி வசந் பாதுநஸ் ஸூதவேஷ

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்க முத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் –
தாஸாம் ஆவீரபூத சவ்ரி ஸ்மயமாந முகாம் புஜ -பீதாம்பர தர ஸ்ரக்வீ சாஷான் மன்மத மன்மத –

ஆழ்வார்கள் மடல் எடுக்கும் அழகுடைய பெருமாள் –
ஆய்ச்சியரைப் பணி கொண்ட மணவாளப் பெருமாள் –
ஆழ்ந்தாரைக் கரையேற்ற அவதரித்த பெருமாள் –
ஆனைக்கு அன்று அருளை ஈந்த அருளாளப் பெருமாள் –
ஆழி கொண்டு அன்று இரவி மறைத்து அருள் செய்த பெருமாள் –
ஆனை மறித்து அழகாலே வெல்ல வல்ல பெருமாள் –
ஆழ் கடலைக் கடைந்து அமரர்க்கு அமுதூட்டும் பெருமாள் –
ஆழ்வார்க்குப் பின்னெறியை அளித்து உகந்த பெருமாள் –
நம் தெய்வ சிகாமணிப் பெருமாள் –

திருவுக்கும் திருவாகிய வான் இளவரசான தேவர் –
அடலாயர் தம் கொம்பினுக்கு விடை கொண்டு நீளா துங்க ஸ்தந கிரி தடீ ஸூ ப்தராய்
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பு அழகை பின்னானார் வணங்க வந்து
திரு மடந்தை மண் மடந்தை இருப்பதாலும் திகழ
சிங்காசனத்தின் மேல் தண் தாமரை சுமக்கச் செங்கமலக் கழலும் சிற்றிதழ் போல் விரலுமாய்
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் அலர்ந்ததுவோ -என்னும்படி நிலையார நின்ற அழகும் –

கறையினார் துவருடுக்கைக் கடையாவின் கழி கோல் கைச் சறையினராய்
பசு நிரை மேய்ப்பு உகந்து-கன்று மேய்த்து இனிது உகந்த வாத்சல்யம் விளங்கும்படி
நல் அங்கம் உடையதோர் கோலூன்றி நின்ற அழகும் –

முடிச்சோதி யானது முகச்சோதி மலர்ந்ததுவோ என்று கோவிந்த அபிஷேகத்தால்
திரு முடியில் நல் தரித்த ஸ்வாமித்வ பிரகாசமாய் கதிர் ஆயிரம் இரவி கலந்து எறிந்தால் ஒத்த நீண் முடியும் –

ச விலாச ஸ்மித அதரம் பிப்ராணம் முக பங்கஜம் -என்கிறபடியே
முறுவல் எடுத்த கலம் என்றலாய் -ஸ்வாமித்வ பல உபாதான ஸுசீல்ய ப்ரகாசகமான ஸ்மயமான முகாரவிந்தமும் –

அலர்ந்து குளிர்ந்து இருக்கிற இரண்டு தாமரைப் பூக்களை மதத்தாலே அமுக்கு ஆடுகிற
இரண்டு வண்டு ஒழுங்கு போல் இருக்கிற தன் கைச் சார்ங்கம் அதுவே போல் அழகிய திருப் புருவ வட்டங்களும்

பதிம் விஸ்வஸ்ய-என்கிற பிரமாணம் வேண்டாதே அனைத்து உலகும் யுடைய வரவிந்த லோசனன் என்று
ஸர்வேஸ்வரத்வ சிஹ்னமாய் -மிதோபத்தஸ் பர்த்தஸ்ப் புரித ச பரதவ த்வந்வ லலிதங்களான திருக் கண்களும்

கஸ்தூரீ கலிதோர்த்வ புண்டர திலகம் -என்று திரு நெற்றியில் சாத்தின கஸ்தூரி திலகமும்

மாட்டுயர் கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ -என்று நித்ய சந்தேக ஜனகமான கோல நீள் கொடி மூக்கின் அழகும்

அதினுடைய பல்லவ உல்லாசம் போல் இருக்கிற திருக் கபோலங்களும்

அதினுடைய நவ குஸூமம் போலேயாய்-பன்னிலா முத்தம் தவழ் கதிர் முறுவல் செய்து -என்கிறபடியே
பூர்ண சந்திரன் முழு நிலாவைச் சொரிந்தால் போலே திரு முகத்தின் ஒளியை ப்ரவஹிக்கிற ஸ்மித விலாசமும்

சீலாஜ்ஜடீ பூயதே -என்று அந்த ஸுசீல்ய காஷ்டா பூத ஸுலப்ய ப்ரகாசகமாய்
அலவலமை தவிர்த்த அழகன் என்றும்
ஆதரம் பெறுக வைத்த அழகன் என்றும்
குழல் அழகர் வாய் அழகர் கண் அழகர் கொப்பூழில் எழு கமலப் பூ அழகர் -என்றும்
அனுகூல பிரதிகூல விபாகமற -ஆண் பெண் வாசி அறுத்து
மற்று ஒன்றினைக் காணாமல் -கண்டவர் தம் மனம் வழங்க
சகல மனுஜ நயன விஷய தங்காதமாய்
மாம் என்னும் தொட்டுக் காட்டின வெளுத்து இளைத்த திரு மேனியும் –

அர்ச்சக பராதீன அகிலாத்ம ஸ்திதி -என்று அர்ச்சக பாரதந்தர்யத்தைத் தன்னை இட்டுப் பார்த்து அஞ்சின அச்சமற
திருக் கையிலே ஞான சக்தி பிரகாசமாய் எடுத்துக் பிடித்த திவ்யாயுதங்களும்

அனைத்து உலகுமுடைய அரவிந்த லோசனன் என்று சேஷித்வ ஸூசகமாய்
கரியவாகிப் புடை பெயர்ந்து மிளிர்ந்து செவ்வரியோடி ஆழ்வார்கள் அளவும் நீண்டு அலை எறிந்த நெடு நோக்கின் அழகும்

இத்தலையைத் தேற்றி யன்றித் தரியாத அளவான பூர்த்திக்கு பிரகாசமாய்
மாஸூச என்று கொண்டு வைத்த அஞ்சல் என்ற திருக் கையும்

இரண்டு இடத்திலும் மரகத கிரியைக் கடைந்து மடுத்தால் போல் –
திண்ணியவாய் -அலம் புரிந்து என்கிறபடியே தனக்கு உபய விபூதியும் வழங்கி
திவ்ய அஸ்திர புஷ்பிதங்களான கற்பகக் காவென நற்பல தோள்களும் –

பெரிய பிராட்டியாருக்குக் கோயில் கட்டணமாய் -நித்ய அனுபவம் பண்ணச் செய் தேயும் இறையும் அகலகில்லேன் என்று
அவளைப் பிச்சேற்றக் கடவதாய்-கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும்
ஸ்ரீ கௌஸ்துபம் தொடக்கமான குருமா மணிப் பூண் குலாவித் திகழ்கிற திரு மார்பின் அழகும் –

காளமேகத்தில் மின்னல் கொடி படர்ந்தால் போலே திரு மேனிக்கு பரபாக ரசாவகமாய் –
அழகு வெள்ளத்துக்கு அணை காட்டினாள் போலே இருக்கிற வெண் புரி நூலின் அழகும் –

ஸுந்தர்ய சாகரம் இட்டளப்பட்டுச் சுழித்தால் போல் நெஞ்சையும் கண்ணையும் சுழியாறு படுத்துகிற திரு வுந்தியும் –

ஸுந்தர்ய ராக ரஞ்சிதமான ஆகாசம் போலே திருமேனிக்குப் பரபாக ரசாவகமாய்த்
திருவரை பூத்தால் போலே இருக்கிற அந்தி போல் நிறத்து ஆடையும்

ரம்பா ஸ்தம்பாதி கம்பீரங்களான திருத் தொடைகளும் –
அங்கராகம் ப்ரவஹிக்கும் போது இரண்டு குமிழி நீர் எழுந்தால் போல் இருக்கிற திரு முழம் தாள்களும் –

கள்ளச் சகடத்தைக் கலக்கு அழியச் சாடிக்
கன்று மறித்தோடிக்
காளியன் மீதாடிக்
காளிந்தி நீராடிக்
குரவை பிணைந்து ஆடிக்’
குடம் ஏறிட்டு ஆடிக்
கருணையால் தூதோடிக்
கன்னியரோடூடிக்
கழகம் மிதித்து ஏறிச்
சிற்றில் அழித்து ஆடிச்
சரணாகதி தந்து ஒழிந்த
திண் கழல் இருந்த அழகும் –

சீரியதோர் நிதி போலே திரு முன்பே வீற்று இருந்த ஸ்ரீ சடகோபன் இருந்த அழகும் –

இவ்வழகில் ஆழங்கால் பட்டு அலைகின்ற உலகு எல்லாம் சூழ்ந்து இருந்து ஏத்தும் அழகுமாய்
நீராட எழுந்து அருளி இருக்கும் அழகு இது ஏதேனும் சிந்தை மருளோ –
ஜெகன் மோகன மந்த்ர ப்ரபாவமோ
சகல ரசகுளிகா விலாசமோ
சர்வ போக சிந்தாமணி ப்ரகாசமோ
சகல ஜன ஸூஹ்ருத விபாகமோ –
நிகில பல கல்ப லதா பிரசரமோ –
அகில ஜெகஜ் ஜீவன மூலமோ –
அதுலாநந்த கந்தாவதாரமோ –
ஸமஸ்த சம்பத் சாம்ராஜ்ய வேஷமோ
சர்வ மங்கள சந்தான ப்ரஸவமோ –
சகல கலா ரஹஸ்ய சர்வ ஸ்வமோ –
ஈது எல்லாம் திரண்டு எழுந்து கொண்டதோர் வடிவோ –
இதுவும் அன்றியில் அப்ரமேய தேஜஸ் ஸோ-
நாங்கள் ஏது என்று அறியா இவ்வழகுடன் தேவரீர் ஊழி தோறும் ஊழி தோறும் வாழ்ந்திடுகவே
யது ஸார்வ பவ்மனே -திருமஞ்சனம் கண்டு அருளவே ஜய விஜயீ பவ —

சஹஸ்ர தாரைக் திருமஞ்சன கட்டியம்

நாயந்தே நாயந்தே
த்வம்மே அஹம்மே குதஸ்தத் ததபி தவ குதோ வேத மூல பிராமணத்
ஏதச்சா நாததி சித்த அனுபவ விபவாத் தர்ஹி சாக்ரோச ஏவ க்வாக்ரோச
கஸ்ய கீதாதிஷூ மம விதிதி கோத்ர சாஷீ ஸூதி
ஸ்யா ஹந்த த்வத் பஷ பாதீச இதி ந்ருகல ஹே ம்ருக்ய மத்த்யஸ்த் த்வத்தவம்
ச இதா நீமபி முநே த்ருச்யதே தத்ர மாநவை
ருக்மிண்யாச அநிருத்தேனே ப்ரத்யும்நேந ச சேவித ஹலாயுதே ந சஹிதஸ் ததா சாத்யகி
நா ஸஹ பார்த்தசாரதி ரித்யேவ விஸ்ருதோ ஜெகதீபதி
பராக் பராக் ஸ்வாமீ பராக்
அன்றிய வாணன் ஆயிரம் தோளும் துணிய அன்று ஆழி விடுத்த அசைவோ –
கன்று அதனால் விளவு எறிந்து கனி யுதிர்த்து ஆ நிரை மேய்த்த அசைவோ –
கும்ப மிகு மத யானை மருப்பு ஓசித்து கஞ்சன் குஞ்சி பிடித்து அடித்த அசைவோ –
பாழியால் மிக்க பார்த்தனுக்கு அறு மூன்றும் அளித்து உரைத்த அசைவோ –
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்து ஐவர்க்குத் திறங்கள் காட்டியிட்ட அசைவோ –
அடியார்கள் வினைத்தொடரை அருள் என்னும் ஓள் வாள் உருவி வெட்டிக் கலைந்த அசைவோ –
வடிவாரும் மா மலராள் வலவருகும் மற்றை மண் மகள் இடவருகும் இருக்க
நடுவாக வீற்று இருக்கும் இவ்வழகுடன் தேவரீர் ஊழி தோறும் ஊழி தோறும் வாழ்ந்திடுக வாழ்ந்திடுகவே
ஸ்ரீ பார்த்த ஸூதனே-திருமஞ்சனம் கண்டு அருளவே -ஜய விஜயீ பவ –

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: