ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –450-456- சரம பர்வ நிஷ்டா-குரோர் உபாயதாஞ்ச பிரகரணம் –ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் / ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்-

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது ஆறாவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் /
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் /

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகாரஞ்ச ச வைபவம் (ச -உபாய வைபவமும் இதில் உண்டே )-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது ஒன்பதாவது பிரகரணம்

த்வய அபிபிரேரிதமான – த்வய யுக்த அர்த்த ஞானமும் -தத் உபதேச ஆச்சார்யர் அனுவர்த்தனைத்தையும் அருளிச் செய்து –
அதுக்கு மூல பூதமான பகவத் கிருபை -ஹேதுதா சங்கதி –
நிவர்த்ய ஞானம்–கர்மா அவித்யாதி தோஷங்கள் நினைத்தால் – பய ஹேது /-நிவர்த்தக பகவத் குண அனுசந்தானம் ஞானம்–பயம் கெடுக்கும் ஹேது
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -/ படிக்கட்டுக்கள் அத்வேஷம் தொடங்கி பிராப்தி வரை -நிர்ஹேதுக கிருபையே காரணம் –

ஆறு பிரகரணங்களில் இறுதியான
சரம பர்வ நிஷ்டா பிரகரணம் –

———————————————————

சூரணை -450-

பாட்டுக் கேட்கும் இடமும் –
கூப்பீடு கேட்கும் இடமும் –
குதித்த இடமும் –
வளைத்த இடமும் –
ஊட்டும் இடமும் –
எல்லாம் வகுத்த இடமே
என்று இருக்கக் கடவன் —

இப்படி சுலபமான ஆசார்ய விஷயம் ஸ்வ ரஷணத்துக்கு உண்டாய் இருக்க
இத்தை உபேஷித்து துர்லபமான பரத்வாதிகளை வாஞ்சிக்க கடவன் அல்லனே ஆகிலும் –
ப்ராப்யத்வேன அவை இவனுக்கு வாஞ்சநீயங்கள் அன்றோ என்ன -அவை எல்லாம் ஆசார்யனே என்று
இருக்கக் கடவன் -என்கிறார் –

அதாவது –
ஏதத்  சாம காயன் நாஸ்தே -என்கிறபடியே –
நிரந்தர அனுபவத்துக்கு போக்குவீடாகப் பண்ணும் சாம கானம் கேட்க்கும் ஸ்தலமான பரம பதமும் –
அசூர ராஷச பீடிதரான ப்ரஹ்மாதி தேவர்கள் ஆர்த்த நாதம் கேட்க செவி கொடுத்துக் கொண்டு கண் வளரும் வ்யூஹ ஸ்தலமும் –
அவர்கள் ஆர்த்த த்வனி கேட்டு -துடித்துக் கொண்டு எழுந்து இருந்து –
நாகபர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹ்யாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியே –
திருபாற் கடலிலே திரு அரவணையின் நின்று இவ்வருகே வரக் குதிப்பாரைப் போலே -வந்து அவதரித்த -அவதார ஸ்தலமும் –
நினைத்து தலைக் கட்டும் அளவும் -மலையாளர் வளைக்குமா போலே –
இட்டவடி பேர விடாதே -வளைத்துக் கொண்டு இருக்கிற -அர்ச்சாவதார ஸ்தலங்களும் –
ஏஷாம் இந்தீவரச்யாமோ ஹ்ருதயே சூப்ரதிஷ்டத -என்றும் –
ஒண் சங்கதை வாள் ஆழி யான் ஒருவன் அடியேன் உள்ளானே -என்றும் –
சொல்லுகிறபடியே -ஹிருதய கமலத்திலே இருந்து -தான் உகந்தாருக்கு தன் அழகை புஜிப்பிக்கும்-அந்தர்யாமித்வ ஸ்தலம் ஆகிற –
இந்த ப்ராப்ய ஸ்தலங்கள் எல்லாம் –
தனக்கு வகுத்த ஸ்தலமாய் -பிராப்யமுமாய் -இருக்கும் ஆசார்ய விஷயமே என்று
அத்யவசித்து இருக்க கடவன் -என்கை-
வளைத்த இடமாவது -பிறர் அறியாதபடி திரை வளைத்துக் கொண்டு இருக்கிற அந்தர்யாமி  ஸ்தலம் –
ஊட்டும் இடம் ஆவது -சஷூர் விஷயமாய் இருந்து -தன் வடிவு அழகையும் குணங்களையும் –
ஆஸ்ரிதரை புஜிப்பிக்கும் அர்ச்சாவதார ஸ்தலம் -என்று சொல்லவுமாம்–
ஏனைவ குருணா யஸ்ய ந்யாச வித்யா ப்ரதீயதே தசிய வைகுண்ட்ட துக்த்தாப்த்தி  த்வாரகாஸ் சர்வ ஏவச -என்றும் –
வில்லார் மணி கொழிக்கும் -என்று துடங்கி -அருளாலே வைத்தவர் -என்றும் சொல்லக் கடவது இறே–
அன்றிக்கே –
பாட்டு கேட்கும் இடம் -இத்யாதிக்கு -ரஷகமாக அவற்றை ஆசைப் படக் கடவன் அல்லன் என்கிற அளவன்றிக்கே –
அவை எல்லாம் தனக்கு இவ் விஷயமே என்று
இருக்கக் கடவன் என்கிறது என்று கீழோடு சேர யோஜிக்க்கவுமாம் —

ஆச்சார்யரே பிராப்தம் -அனுபவத்துக்கு போக்கு வீட்டு வைகுண்ட செல்வனார் மேல் -ஏதத் ஸாம கானம் /
ஆர்த்தி உடன் -கூப்பீட்டு கேட்க்கும் இடம்
துடித்து எழுந்து அரை குலைய குதித்த அவதார ஸ்தலங்கள்
கண்ணையும் மனத்தையும் வளைக்கும் அர்ச்சை
தேனும் பாலும் -நிரதிசய போக்யமான அந்தர்யாமி ஓவாத ஊணாக ஊட்டும்-நின்ற ஒன்றை உணர்ந்து
பரமபதம் இத்யாதிகள் ஸ்தலம் -இங்கு -இடம் தான் -அனைத்தும் ஆச்சார்யர் திருவடி –
பகவத் அபிமத ஸ்தலம் -விமல சரம திருமேனியை -குற்றம் அற்ற கடைசியான விக்ரஹம் -திருவடி உப லக்ஷணம் –
அன்றிக்கே–பிரகாரம் நிலைகளை பற்றி
அவனுக்கும் தனக்கும் வகுத்த இடம்-ஆச்சார்யரே உபாயம் உபேயம் முக்த கண்டம் –
பகவானுக்கும் ஆச்சார்யர் -அந்தாமத்து அன்பு செய்து என் ஆவி சேர் -அவனுக்கும் உத்தேச்யம்
மனக்கடலில் வாழ வல்ல என் மாய -வ்யூஹம்
வில்லாளன் என் நெஞ்சத்து உள்ளான் -விபவம்
ஒருவன் அடியேன் உள்ளான் அந்தர்யாமி
திருவேங்கடமே எனது உடலே -அவனுக்கும் நமக்கும் இதுவே வகுத்த இடம் -அடியார் திருமேனியையையே விரும்பி உள்ளான் –

———————————————

சூரணை-451-

இவனுக்கு பிரதிகூலர் ஸ்வ தந்த்ரரும் – தேவதாந்தர பரரும் –
அனுகூலர் -ஆசார்ய பரதந்த்ரர் –
உபேஷணீயர்-ஈஸ்வர பரதந்த்ரர் –

ஏவம் பூதனான இவ் அதிகாரிக்கு -ஸ்வரூப நாசகத்வ -ஸ்வரூப வர்த்தகத்வ –
தத் உபய ரஹீதத்வங்களாலே -பிரதிகூலராயும் -அனுகூலராயும் -அநு பயராயும்-
இருக்கும் அவர்களை தர்சிப்பிக்கிறார் மேல் –

அதாவது –
இப்படி ஆசார்ய அபிமான நிஷ்டனாய் -பரத்வாதி பஞ்சகத்திலும் உள்ள ப்ராவண்யம் உடைய –
இவ்விஷயத்திலே ஒரு மடைப் படுத்தி -தேவு மற்று அறியேன் -என்று இருக்கும் இவ் அதிகாரிக்கு –
அணுகில் ஆத்ம நாசத்தை பிறப்பிக்கும் பிரதி கூலர் -ஆத்ம அபஹாரிகளான ஸ்வ தந்த்ரரும் –
பாரதந்த்ர்யத்துக்கு இசைந்து வைத்தே பகவத் வ்யதிரிக்த தேவதைகளுக்கு பாரதந்த்ரமாய் இருக்கும் -அவர்களும் —
ஸ்வ சம்சர்க்கத்தாலே ஸ்வரூபத்தை வளர்க்கும் அனுகூலர் –
ஸ்வரூபத்தை உள்ளபடி உணர்ந்து -தச் சரம அவதி நிஷ்டரான சதாசார்யா பரத்ந்த்ரர் –
இப்படி ஸ்வரூப நாசகரும் ஸ்வரூப வர்த்தகரும் அல்லாமையாலே -வெருவதலுக்கும் விருப்பத்துக்கும் விஷயம் அல்லாத வுபேஷணீயர் –
சரம பர்வமான ஆசார்ய பாரதந்த்ர்யத்தில் ஊற்றம் அன்றியிலே பிரதம பர்வமான பகவத் பாரதந்த்ர்யத்தில் ஊன்றி நிற்கும் அவர்கள் -என்றபடி –
பிரதிகூலரை சொல்லுகிற இடத்தில் -ஸ்வ தந்திர தேவதாந்திர பரதந்த்ரர் இருவரையும் சொன்ன இது –
பிரபத்தி பிரகரணத்தில் சொன்ன மற்று உள்ள பிரதிகூலருக்கும் உப லஷணம்-
பிரதம பர்வ நிஷ்டனுக்கு பிரதிகூலரான அவர்கள் இவனுக்கு பிரதிகூலர் அல்லாமை இல்லை இறே –
இத்தால் கீழ்
பகவத் பிரபன்ன அதிகாரிக்கு -சஹவாச தந் நிவ்ருத்திகளுக்கு உறுப்பாக அனுகூல பிரதிகூல தர்சனம் பண்ணு வித்தாப் போலே –
ஆசார்ய அபிமான நிஷ்டனான இவனுக்கும்
சஹவாச நிவ்ருத்தி விஷயமான பிரதிகூலரையும் -சஹவாச விஷயமான அனுகூலரையும் -தர்சிப்பித்து –
தத் அதிகமான வுபேஷணீய விஷயமும் இவனுக்கு ஓன்று உண்டு என்னும் இடம் தர்சிப்பித்தாராய் ஆயிற்று —

சரம அதிகாரிக்கு -ஸ்வரூப நாசகர் பிரதிகூலர் -விபரீத அந்யதா ஞானிகள் -ஸ்வ தந்த்ரர்கள் தேவதாந்த்ர பரர்கள்
ஸ்வரூபம் வளர்க்கும் அனுகூலர் -உண்மையாக உணர்த்தும் சரம அதிகாரிகளான ஆச்சார்ய பரதந்த்ரர்
ஆச்சார்யர் பாரதந்தர்யம் அற்ற கேவல ஈஸ்வர பரதந்த்ரர்-உபேஷனீயர்
சம்பாஷணாதி அயோக்யர் ஸஹவாஸி அயோகியர் -பிரதிகூலர்
சதா அனுபவ யோக்யர்-அனுகூலர்

————————————————-

சூரணை -452-

ஞான அனுஷ்டானங்கள் இரண்டும்
அல்லாதார்க்கு உபாய அங்கமாய் இருக்கும் –
இவனுக்கு உபேய அங்கமாய் இருக்கும் –

இவ் அதிகாரிக்கு உண்டாக வேண்டும் பிரதிபத்திய அனுஷ்டானங்களை பல படியாலும் அருளிச் செய்தார் கீழ் –
இந்த பிரசங்கத்திலே -அந்ய உபாய நிஷ்டருடைய ஞான அனுஷ்டானங்களுக்கும் –
இவனுடைய ஞான அனுஷ்டானங்களுக்கும் -உண்டான விநியோக விசேஷத்தை
அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது –
தத்வ ஞானமும் -தத் அநு ரூபமான அனுஷ்டானமும் -ஆசார்ய அபிமான நிஷ்டனான இவனை ஒழிந்த அதிகாரிகளுக்கு –
உபாயம் ( பகவான்)-அதிகாரி சாபேஷம் ஆகையாலே –
உபேய ப்ராப்தி அளவும் -உபாய அதிகாரம் நழுவாமல் நடக்கைக்கு உறுப்பாய்க் கொண்டு –
அவ்வழியாலே உபாய சேஷமாய் -இருக்கும் –
ஆசார்ய அபிமானமே உத்தாரகம்  ஆகையாலும் -உபாய அதிகார சேஷமாக வேண்டுவது ஓன்று இல்லாமையாலே –
இவ் அதிகாரிக்கு உண்டான ஞான அனுஷ்டானங்கள் இரண்டும்
ஆசார்யன் முக மலர்த்தி ஆகிற உபேயத்துக்கு சேஷமாய் (காரணமாய் ) இருக்கும் -என்கை –
இவனுக்கு உபேயமாய் இருக்கும் என்ற பாடம் ஆனபோது –
ஆசார்யனுக்கு அபிமதமாய் கொண்டு இவை தான் அவனுக்கு உபேயமாய் இருக்கும் -என்றபடி –

நாராயணனே நமக்கே பறை தருவான் -அடுத்து செய்யும் கிரிசைகள் -அதிகாரி விசேஷணம் -சித்த உபாயம் நழுவாமல் இருக்க –
சரம அதிகாரிக்கு ஞான அனுஷ்டானங்கள் -எதற்கு –
அதிகாரி எதிர்பார்க்காமல் ஆச்சார்யர் -அருளுவதால் உபேய அங்கமாய் இருக்கும் –
நம்பிள்ளை மரத்தை தொட்டு முக்தி -அளித்தார் -அரங்க மாளி இடம் நீர் என்னை விட்டாலும் நான் உன்னை விட்டேன் -ஸ்ரீ பாஷ்யகாரர் –
பசுர் மனுஷ்ய பஷி வா –ஆச்சார்யர் சம்பந்தம் மூலம் –
அதிகாரம் இல்லாதார்க்கு அன்றோ எதிராசா நீ இரங்க வேண்டும்
அதிகாரம் உண்டேல் அவன் -உபாயம் உண்டேல் என்று சொல்ல வில்லை -பிரபன்னனுக்கு அவன் அருளுவான் -உபாயாந்தர ப்ரச்னம் இல்லை –
எதி-யத்னம் செய்பவர்களில் பிரதானர் எதிராசர் என்றவாறே -ஊமை செவிடருக்கும் அருளினார் –
ஜடாயு -ஞானம் அனுஷ்டானம் நிறைய இருந்ததே -ஸ்ரீ ராம கைங்கர்ய நிஷ்டர் -சம்பாதியும் உதவினார் முதலிகளுக்கு —
அதிகாரி சாபேஷமும் இல்லை ஆச்சார்யர் இடம் –
பிராப்தி அனுபவ காலத்தில் ப்ரீதி வளர்க்க திரு முக மலர்த்திக்கு ஞானம் அனுஷ்டானங்கள் அனுபவம் ரசிக்க –
ப்ராப்ய அந்தர்பூதமாய் ஞான அனுஷ்டானங்கள் -உபேய அங்கமாய் இருக்கும் -மற்றவர்களுக்கு உபாயம் நழுவாமல் இருக்க வேண்டும் –
ஆச்சார்ய அபிமதமாய் கொண்டு ஞான அனுஷ்டானங்கள் -இந்த சரம அதிகாரிக்கு போகம் வளர்க்க
மற்றவர்களுக்கு இவை உஜ்ஜீவனம் -அன்ன பானாதிகள் ஜீவனம்
இந்த சரம அதிகாரிக்கு ஞான அனுஷ்டானங்கள் ஜீவனம்
ப்ராப்யமாயும் பிராப்ய அங்கமாயும் என்று இரண்டு நிர்வாஹம் -ஆச்சார்ய முக மலர்த்தியே பிராப்தி அன்றோ
சம்பாவித ஸ்வ பாவங்கள் ஞான அனுஷ்டானங்கள் -ஆனுகூல்ய சங்கல்பாதிகள் -தான் ஞான அனுஷ்டானங்கள் சப்தத்தால் இங்கே

———————————————-

சூரணை -453-

இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம்- தன்னையும் பிறரையும் நசிப்பிக்கையாலே- த்யாஜ்யம்-

இப்படி ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் -ஆசார்ய ப்ரீதி ஹேதுவாக நினைத்து
குறிக் கொண்டு வர்த்திக்கும் இவ் அதிகாரிக்கு அவஸ்யம் நிவர்தநீயங்களை அருளிச் செய்வதாக –
திரு உள்ளம் பற்றி -பிரதமம் -நிஷித்த அனுஷ்டானம் த்யாஜ்யம் என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஏவம் பூதனான இவ் அதிகாரிக்கு -பரதார பரிஹரகாதி நிஷித்த அனுஷ்டானம் –
ஸ்வ விநாசத்தையும்-ஸ்வ அனுஷ்டானம் கண்டவருடைய விநாசத்தையும் –
பண்ணுகையாலே -பரி த்யஜிக்க படுமது ஓன்று என்கை-

மேல் படியில் இருக்கும் இந்த பஞ்சம -சரம அதிகாரி -இவனை பார்த்து மற்றவர்கள் செய்வார்களே –
ஞானம் அனுஷ்டானம் ஜீவனமாக கொண்ட இந்த அதிகாரி -அக்ருத்ய கரணாதி நிஷித்த அனுஷ்டானங்கள் –
சரம அதிகாரியான தன்னையும் -தன்னைக் கண்ட பிறரையும் நசிப்பிக்கும் –
மீண்டு வர முடியாத படி -ஆகையால் வாசனையுடன் விட வேண்டும்
அனைத்து அதிகாரிகளுக்கும் சாதாரணமான நிஷித்த அனுஷ்டானம் இங்கே சொல்லிற்று –

————————————————

சூரணை-454-

தான் நசிக்கிறது மூன்று அபசாரத்தாலும் – அன்வயிக்கையாலே –
பிறர் நசிக்கிறது – தன்னை அநாதரித்தும் – தன் அனுஷ்டானத்தை அங்கீகரித்தும் –

உபய விநாசமும் இத்தாலே வருகிறபடி எங்கனே என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஆசார்ய அபிமானத்திலே ஒதுங்கி –
பகவத் -பாகவத -ஆசார்ய -விஷயங்கள் மூன்றுக்கும் -அபிமத விஷயமாய் இருக்கிற தான் நசிக்கிறது –
அம் மூவருக்கும் அது அநிஷ்டம் ஆகையாலும் –
அபசாரம்-ஆவது -அநிஷ்ட கரணம் ஆகையாலும் –
அதி க்ரூரமான அபசார த்ரயத்திலும் அந்வயிக்கையாலே –
பிறர் நசிக்கிறது –
சரம பர்வ பர்யந்தமாக வந்து நிற்கிற பாகவத உத்தமனான தன்னை நிஷித்த அனுஷ்டானம் பண்ணினான் என்று அநாதரித்து-
தத்வ வித்தான இவன் இப்படிச் செய்கிறான் -இதில் தோஷம் இல்லையாகப் பட்டன்றோ -நமக்கு பின்னை என் என்று –
தன்னுடைய அனுஷ்டானத்தை தாங்கள் அங்கீகரித்தும்  -என்கை —
அநாதரிப்பார் பாகவத வைபவம் அறியாதவர்கள் –
அனுஷ்டானத்தை அங்கீகரிப்பார் -ப்ராப்த ப்ராப்ய விவேக சூன்யர் ஆனவர்கள் –
அனுஷ்டானத்தை அங்கீகரிக்கிறவர்கள் நசிக்கிறார்கள்-அநாதரித்தவர்கள் நசிப்பான் என் –
தோஷம் கண்டால் அநாதாரிக்கல் ஆகாதோ என்னில் –
ராஜ புத்ரனனுக்கு தோஷம் உண்டானால் -ராஜா தான் சிஷித்து கொள்ளும் அது ஒழிய
அவனை அநாதரித்தவர்கள் மேலே நிக்ரஹம் பண்ணி தண்டிக்குமா போலே –
ஸ்வ அபிமதனான இவனுக்கு தோஷம் உண்டானாலும் -சர்வேஸ்வரன் தானே திருத்திக் கொள்ளும் அது ஒழிய
பிறர் அநாதரிக்க பொறாமையாலே- அநாதரித்தவர்களுக்கு விநாசமே பலிக்கையால் அநாதரிகல்  ஆகாது –

அபிசேத சூதுரா சாரோ பஜதேமாம நந்யபாக் சாதுரேவச மந்தவ்ய ஸ் சம்ய க்வ்யவஹி தோஹிச-என்று
உபாஸக விஷயமாக அருளிச் செய்தபடி கண்டால்-எல்லை நிலத்தில் வந்து நின்ற இவ் அதிகாரி
விஷயத்தில் இவன் இருக்கும்படி சொல்ல  வேண்டா இறே-
ஆகையால்-
இப்படி தானும் பிறரும் நசிக்கும்படி இருக்கையாலே -இவனுக்கு நிஷித்த அனுஷ்டானம் பரித்யாஜ்யம் -என்றது -ஆயிற்று –

ஸ்வரூபம் அழியாதே -நசிப்பது என்பது பின்னடைவு –
நிஷித்த அனுஷ்டானத்தில் பயம் கேட்டு அந்வயிப்பதால் பகவத் பாகவத ஆச்சார்ய அபசாரம் –
தனக்கு பிராமாதிகமாய் அறியாமல் செய்த அக்ருத்ய கரணாதி நிஷித்த அனுஷ்டாதானம் கண்டு அநாதரித்தும்
ஞானியான இவன் செய்ய நாம் செய்தால் என் என்று -நோ இதராணி-ஆதரித்து பண்ணும் நல்லத்தை மட்டும் பின் பற்ற வேண்டுமே –
வேணும் விவேக ஞானமும் வேணும் –
தேஜஸ் குற்றங்களை மறைக்கும் -தெரியாமல் செய்த குற்றங்கள் -இவனுக்கு -பார்த்து பிறர் அநர்த்தம் படுவார்கள் –
ஆகையால் அறியாமலும் நிஷித்த அனுஷ்டானங்கள் தவிர்க்க வேண்டுமே
அவனுக்கு அது கிடையாது என்னும்படி அன்றோ உயர்ந்த நிலை சரம பர்வ நிஷ்டனுக்கு

———————————————

சூரணை -455-

விஹித போகம் நிஷித்த போகம் போலே – லோக விருத்தமும் அன்று –
நரக ஹேதுவும் அன்றாய் – இருக்க செய்தே –
ஸ்வரூப விருத்தமுமாய் -வேதாந்த விருத்தமுமாய் -சிஷ்ட கர்ஹிதமுமாய் –
ப்ராப்ய பிரதிபந்தகமுமாய் -இருக்கையாலே -த்யாஜ்யம் –

இப்படி பரதாராதி போகம் -ஸ்வ -பர -விநாச ஹேது வாகைக்கு அடி -சாஸ்திர நிஷித்தமாகை -இறே –
இங்கன் அன்றிக்கே -சாஸ்திர விஹித விஷயமான -ஸ்வதார போகத்துக்கு குறை இல்லையே -என்ன –
அருளிச் செய்கிறார் -மேல் –

அதாவது –
விசிஷ்ட வேஷ விஷயீயான சாஸ்த்ரத்தாலே விதிக்கப் பட்ட -ஸ்வ தாரத்தில் போகம் –
தாத்ருச சாஸ்திர நிஷித்தமான -பர தார போகம் போலே –லோக விருத்தமும் -அன்று –
செம்பினால் இயன்ற பாவையை தழுவுகை முதலான கோர துக்க அனுபவம் பண்ணும் நரக ஹேதுவும் அன்று —
இப்படி ப்ரத்யஷ பரோஷ சித்தங்களான லோக விருத்த நரக ஹேதுக்கள் இரண்டும் அற்று இருக்கச் செய்தே –
அநந்ய போகத்வ ரூபமான ஸ்வரூபத்துக்கு விருத்தமாய் –
சாந்தோதாந்த உபதர ஸ்திதி ஷூச்சமாஹிதோ பூத்வாத்மந்யே வாத்மானம் பச்யேத்-இத்யாதிகளாலும் –
திருமந்த்ராதிகளாலும் -உபாசகனோடு பிரபன்னனோடு வாசி அற-இருவருக்கும் -விஷய போகம் ஆகாது என்னும்
இடத்தைப் பிரதிபாதிக்கிற -வேதாந்தத்துக்கு விருத்தமாய் -தோஷ தர்சனத்தாலும் -அப்ராப்த்த தர்சனத்தாலும் –
விஷய போகத்தை அறுவறுத்து   இருக்கும்
ஆசார்ய பிரதானரான சிஷ்டர்களாலே ஹேயம் என்று நிந்த்திகப் பட்டு இருக்குமதாய் –
அப்ராப்த விஷய விரக்தி பிரியனான ஆசார்யனுக்கு அநபிதம் ஆகையாலே –
ஆசார்ய முக கமல விகாச அனுபவ ரூப ப்ராப்யத்துக்கு பிரதிபந்தகமாய் –
இப்படி அநேக அநர்த்தா வஹமாய் இருக்கையாலே -இவ் அதிகாரிக்கு
பரித்யாஜ்யம் -என்றபடி –

சாஸ்திரம் விஹிதம்-விசிஷ்ட விஷயம் -வர்ணாஸ்ரமம்-சரீரத்துடன் உள்ள ஆத்ம வேஷம் –
நிஸ்க்ருஷ்ட சாஸ்திரம் ரஹஸ்ய த்ரயம் தானே –
கணவனும் மனைவியும் -நிலம் கீண்டதும் -சொல்லிப்பாடி -அது குற்றம் இல்லை -அநந்ய போகத்வ ரூபம் -ஸ்வரூபம் விருத்தம் ஆகக்கூடாதே
நிரந்தர ஸ்னேஹ ரூபம் -பக்த்யா அநந்யா ஸ்நேஹம்-வேதாந்தம் விதிக்கும் -அவிச்சின்ன ஸ்ம்ருதி சிந்தனை வேணும்
அந்தரம் -நடுவே குறுக்கே -அநந்தரம் தடங்கல் இல்லாமல் – அநந்யத்வம் பங்கம் உண்டாகும் –
எம்பார் போல்வார் -விசிஷ்ட வேஷத்திலும் -எங்கும் இருட்டு காண வில்லையே விரக்த அக்ரேஸர்
கைங்கர்யம் முகப்பே கூவி பணி -அர்த்தி அபேக்ஷ நிரபேஷமாய் இருக்குமே

——————————————

சூரணை -456-

போக்க்யதா புத்தி குலைந்து – தர்ம புத்த்யா பிரவர்த்தித்தாலும்
ஸ்வரூபம் குலையும் –

போக்யத்தா புத்தியை விட்டு தர்ம புத்த்யா வர்த்திக்கும் அளவில் -இவை ஒன்றும்
இல்லையே -என்ன -அருளிச் செய்கிறார் -மேல்-

அதாவது –
விஹித விஷய பிரவ்ருத்தியில் காமுகதயா வரும் போக்யதா புத்தியை விட்டு –
உபாசகரான மகரிஷிகள் தொடக்கமான சிஷ்டர் பைத்ரு கருண மோசக பிரஜோத்பாதந அர்த்தமாகவும் –
ஸ்நான திவசத்தில்  அங்கீகரியாவிடில் ப்ப்ரூனஹத்யாதி தோஷம் உண்டு என்னும்  அத்தை பற்றவும் –
தர்ம புத்த்யா ப்ரவர்த்திக்குமா போலே –
இவனும் அப்படி தர்ம புத்த்யா ப்ரவர்த்தித்தாலும்
சித்த தர்ம நிஷ்டனான இவனுக்கு -அந்ய தர்ம அந்வயம்-விரோதி ஆகையாலே –
அநந்ய உபாயத்வ  ரூபமான ஸ்வரூபம் குலையும் -என்கை-
இத்தால்-
போக்க்யதா புத்த்யா ப்ரவர்த்திக்கில் -அநந்ய போகத்வ ரூபமான ஸ்வரூபம் குலையுமோ பாதி –
தர்ம புத்த்யா ப்ரவர்த்திக்கில் -அநந்ய உபாயத்வ ரூபமான ஸ்வரூபம் -குலையும் என்கை —
ஆன பின்பு ஒருபடியாலும் -இவ் அதிகாரிக்கு விஹித  விஷய பிரவ்ருத்தி ஆகாது என்றது -ஆயிற்று –
ஆகையாலே
ஏதேனும் ஒருபடி அன்வயித்தாலும் ஸ்வரூப ஹானி தப்பாது –
ஆனபின்பு பரித்யஜிக்க வேணும் என்னும் இடம் நிச்சிதம் -இறே-

பித்ரு கடன் –தீர்க்க -தர்ம புத்தயா -செய்தாலும் -ஸ்வரூபம் குலையும் –
விஹித போகத்தால்-பிரஜைகளால் -இவை பிரபன்னனுக்கு இல்லை –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்றதோடு விரோதிக்கும் –
தேவ ரிஷி பித்ரு கணங்களுக்கு கிங்கரன் அல்லனே பிரபன்னன் –
கீழே நின்ற நிலைக்கே இல்லாத போது இங்கு சொல்ல வேண்டுமோ –
பகவத் ஏக போக ஸ்வரூபம் குலையக் கூடாதே

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: