ஸ்ரீ நம்மாழ்வார் திரு அத்யயன உத்சவ திருமஞ்சனக் கட்டியங்கள் –

ஸ்ரீ மதுரகவி ப்ரப்ருதி சாத்விக சஜ்ஜனங்கள் ஒரு மகா மேருவாக விண்ணப்பம் செய்யா நின்றார்கள் –
ஸ்ரீ :
ஸ்ரீ மதே சடகோபாய நம:

சத்த்வாஸ்ரயம் ஷட்பத பாவ யுக்தம் ஸூ ஹம்ச சேவ்யம் ஸூ மனஸ் சமேதம்
ஸூ ரேஸ் வராஹ்லாத கரம் விபும் த்வாம் வதந்தி சந்த சடகோப மேரும்-

நாயந்தே ! நாயந்தே !
ஜாயமானம் ஹி புருஷம் யம் பச்யேத் மது ஸூதன சாத்விகஸ் சாது விஜ்ஞேய ச வை மோஷார்த்த சிந்தக -என்னும்படி
உத்பத்தி காலத்திலே தன்னுடைய விசேஷ கடாஷத்தாலே சம்சாரி சேதனரை நிரஸ்த ரஜஸ் தமஸ்கரராயும்
ப்ரவ்ருத்த சத்வ குணராம்படியாகவும் பண்ண வல்ல சர்வேஸ்வரனுடைய நிரந்தர கடாஷ பாத்ர பூதராய்
உபாய உபேயங்கள் இரண்டும் ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுடைய திருவடிகளும் –
அந்தத் திருவடிகளில் பண்ணும் கைங்கர்ய முகமாகவே நிஷ்கர்ஷித்து இருக்குமவராய்
ஜிதேந்த்ரியராலே சேவிக்கப் படுமவராய் –
சம்சார சேதனரை உஜ்ஜீவிப்பிக்கையில் நோக்கமான திரு உள்ளத்தை உடையவராய்
உக்தி விருத்திகளாலே சர்வேஸ்வரனை உகப்பிக்கும் ஸ்வபாவராய்
அபரிச்சேத்ய மகிமரான தேவரை சத்துக்களானவர்கள் ஸ்வ பாவ சாம்யத்தாலே மகா மேருவாக விண்ணப்பம் செய்யா நின்றார்கள் –
அது இங்கனே இரா நின்றது -எங்கனே என்னில் –

சத்த்வாஸ்ரயம் –
அந்த மகா மேருவானது -பஞ்சாசத்கோடி விச்தீர்ணமாய் பூமிக்கு ஒரு ஆணி அடித்தால் போலே
நிற்கைக்கு ஈடான பலத்துக்கு ஆஸ்ரயமாய் இருக்கும் –
தேவர் ரஜஸ் தமஸ்ஸூக்கள் கலசாதபடி சத்வ குணம் ஒன்றுக்குமே ஆஸ்ரயமாய் எழுந்து அருளி இருப்பீர்-

ஷட் பத பாவ யுக்தம்
அந்த மகா மேருவானது நாநாவித புஷ்ப ரஸா ஸ்வாத மத்த ப்ருங்கா வளியாலே சேஷ்டாயுக்தமாய் இருக்கும்
தேவரீர் ஆறு விதமான சரணாகதி விஷயமான திரு உள்ளத்தை உடையராய் எழுந்து அருளி இருப்பீர்-

ஸூ ஹம்ச சேவ்யம் –
மகா மேருவானது மானசாதி சரோவர்த்திகளான அழகிய அன்னங்களாலே சேவிக்கப் படுமதாய் இருக்கும்
தேவர் நாத யாமுன யதிவராதிகளான பரம ஹம்சர்களால் சேவ்யமானராய் எழுந்து அருளி இருப்பீர்-

ஸூ மனஸ் சமேதம்
அந்த மகா மேருவானது உத்யான தடாக ஜலங்களிலே இருக்கிற நாநாவித புஷ்பங்கள் உடன் கூடி இருக்கும்
தேவர் சர்வேஸ்வரன் கை விட்ட சம்சாரிகளையும் திருத்துகையிலே தத்பரர் ஆகையாலே
அழகிய திரு உள்ளத்தை உடையராய் எழுந்து அருளி இருப்பீர்-

ஸூ ரேஸ் வராஹ்லாத கரம் –
அந்த மேரு தேவர்களுக்கு நிர்வாஹகரான ப்ரஹ்மாதிகளுக்கு ஸ்வ வை லஷண்யத்தாலே ஆஹ்லாத கரமாய் இருக்கும்
தேவர் -பக்கம் நோக்கு அறியான் என் பைம் தாமரைக் கண்ணன் -என்றபடி
நிரந்தர கடாஷம் பண்ணி கொண்டு இருக்கும் படி அயர்வறும் அமரர்கள் அதிபதிக்கும் ஆஹ்லாத காரராய் எழுந்து அருளி இருப்பீர்-

விபும்
அந்த மேருவானது பூமிக்கு மேலே 84000 யோஜனை உயர்த்தியை உடையதாய் பர்வதாந்தரங்களை காட்டிலும் பெரியதாய் இருக்கும்
தேவர் அடியார் நிலை நின்ற வைகுந்தமோ வையமோ நும் நிலையிடமே -என்னும்படி
உபய விபூதியிலும் அடங்காத பெருமையை உடையராய் எழுந்து அருளி இருப்பீர் –

ஆக இப்படிகளால் தேவரீரை- வதந்தி சந்த சடகோப மேரும்-
ஸ்ரீ மதுரகவி ப்ரப்ருதி சாத்விக சஜ்ஜனங்கள் ஒரு மகா மேருவாக விண்ணப்பம் செய்யா நின்றார்கள் –

—————————————

திரு அத்யயன உத்சவம்-இரண்டாம் நாள் திரு மஞ்சனக் கட்டியம் –
திருமஞ்சனம் சேவிப்பாரை எல்லாம் சிந்தயந்தி ஆக்கி அருளுகிறீர் –

காதும் பூர்ணஸ்தி தேந்தும் மதுரகவிமுகை ப்ருத்ய வரக்கை ஸ் ச ஸார்த்தம்
ஸ்நாதும் வேத்யாம் நிஷண்ணஸ் தத் அனுகுண மால்யாத் யம்ப ரஸ்த்வம் சடாரே
தாதும் முக்திம் ஸ்வ காந்த யேச்ச ஸி கிமிஹ ந்ருணாம் சாஸ்திர மார்க்காதிகா நாம்
ஸ்வ தந்தர்யாதேவ கிருஷ்ண பிரதம மிஹ யதா சிந்தயந்த்யா ஸ்வரூபம்-

நாயந்தே ! நாயந்தே !
அந்தம் தமஸ் திமிர நிர்மித மேவ யத்ச்யாத் தத் சாரசாதித ஸ்வ தந்தயதி வ்ருத்தவார்த்தம் -என்கிறபடியே
திமிர சார நிர்மிதம் என்னும் படி இருண்ட சுருண்ட திருக் குழல் கற்றையும்
அஷ்டமி சந்திர நிபமான திரு நெற்றியும்
அந்த சந்திர மத்யத்திலே ஒரு அம்ருத தாரை என்னலாம்படி திரு நெற்றியிலே அழகு பெறச் சாத்தின திரு நாமமும்
மன்னிய சீர் மதனன் கருப்புச் சிலையையும் தன் அழகாலே வெல்லும் திருப் புருவமும்
அநவதிக தய அனுராக வாத்சல்ய ஸூசகங்களாய் அப் பொழுதைத் தாமரைப் பூ போலே இருக்கிற திருக் கண்களும்
கல்ப லதா கல்பமான திரு மூக்கும்
பிம்ப வித்ரும தம்ப ஹாரியான திரு வதரமும்
ஸூத்த நிஸ்த லாலி போலே இருக்கிற திரு முத்து நிறையும்
கர்ணிகா விலசிதமான கர்ண பாசமும்
திருஷ்டி சித்த அபஹாரிகளான சுபுக கபோலங்களும்
க்ரமுக தருண க்ரீவாகம்பு பிரதிமமான திருக் கழுத்தும்
கனக கிரியைக் கடைந்து எடுத்தால் போலேயாய் ப்ரணத ரஷண தீஷிதமான திருத் தோள்களும்
ஜ்ஞான ப்ரதன் என்னும் இடத்தை கோள் சொல்லுகிற ஜ்ஞானமுத்ரா சஹிதமான கர காந்தியும்
அகில ஜன மநோ ஹரமாய் -அநேக பூஷண பூஷிதமாய் வகுள தாம விராஜிதமான வஷஸ் ஸ்தலமும்
அஷய பாப ஹாரியான குஷி பிரதேசமும்
சௌந்தர்ய அம்ருத நீர பூர பரிவாஹவர்த்த கர்த்தாயிதமான திரு நாபியும்
திருவரை பூத்தால் போலே இருக்கிற திவ்ய அம்பர சோபையும்
ரம்பா ஸ்தம்ப சஹோதரமான திருத் தொடைகளும்
க்குத் மத்ககுத் நிபமான திரு முழம் தாள்களும்
பங்கஜ நாள துல்யைகளான ஜங்கைகளும்
யத்வா சரண்யம் அசரண்ய ஜனச்ய -என்கிறபடியே-

அசரண்ய சரணமுமாய்
தத் ஷண உன்மீலித சரசிஜா ஜைத்ரமான சரண யுகளுமுமாய்
ஆக
இப்படி சர்வ அவயவ ஸூந்தரமான திவ்ய விக்ரஹத்தை தேவர் இப்போது
திரு அத்யயன உத்சவ தீஷிதராய் ஸ்வ சிஷ்ய தாரரான மதுரகவி ப்ரப்ருதி சஜ்ஜனங்களோடு
பொலிந்து நின்ற பிரானை பாடி அருளுவதாக சங்கல்ப்பித்து
அலங்க்ருதகாத்ரராய்ச் சென்று சேவிக்க வேண்டுகையாலே
தத் அங்கமாக திரு மஞ்சனம் செய்ய வேணும் என்று மஞ்சன வேதிகா மத்யத்திலே
ஜ்ஞானமுத்ரா சஹிதராய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில்-

சிந்தயந்தீ ஜகத் ஸூ திம் பர ப்ரஹ்ம ஸ்வரூபிணம்
நிருச்ச் வாசதயா முக்திம் கதான்யா கோப கன்னிகா -ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-13
அஜ்ஞ்ஞாத பகவத் விஷயையான சிந்தயந்திக்கு ஸ்வ விக்ரஹ ஸ்மரண ஹேதுவாக
தன்னுடைய நிரந்குச ஸ்வாதந்த்ர்யத்தாலே முக்தியைக் கொடுத்த கிருஷ்ணனைப் போலே
இஹ லோகத்தில் விஷய பிரவணராய் ரூப ஆபாசம் கண்டு விஷயங்களிலே மேல் விழுந்து திரிகிற
சம்சாரி சேதனருக்கு தேவர் வடிவு அழகாலே விஷயாந்தர வைமுக்ய பூர்வகமாக
ஸ்வ விஷய ருசியை விளைவித்து
நம்பினேன் மடவாரையும் முன்னெலாம் செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு அன்பனாய் அடியேன் சதிர்த்தேன் இன்றே
என்று வாய் புலம்பும்படி பண்ணி
மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே தேவு மற்று அறியேன் -என்று
அவிதான்ய தைவிதமாய்க் கொண்டு தேவர் திருவடிகளைப் பற்றி நின்று
அடிமை செய்கையாகிற கைங்கர்ய ஆனந்தத்தையும் கொடுத்து அருளுவதாக திரு உள்ளம் பற்றி
ததர்த்தமாக திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது

————————————————————–

திரு அத்யயன உத்சவம்-இரண்டாம் நாள் திரு மஞ்சனக் கட்டியம் –

பிரதஷிண நமஸ் க்ரியா ப்ரப்ருதிபிர்வ நாதரே புரா
பஜ த்வமிதி சோதிதம் பகவதோ குண உபாசனம்
யதத்யய ந்லஷ்யதே பிரகடயன் ஸ்வ வ்ருத்யாதி நா
சமஸ்த ஜன கோசரம் சடாரி போதய சம்ஸ் நாசிபோ —

நாயந்தே ! நாயந்தே !
தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே -நாராயணாத் ருத்ரோ ஜாயதே
ப்ரஜ்ஞா ச தஸ்மாத் ப்ரஸ்ருதா புராணீ-என்கிறபடியே
இருவர் அவர் முதலான அரவணை மேல் திரு மாலாலே மயர்வற மதி நலம் அருளப் பெற்றுடையவராய்
பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்தோ லஷ்மணோ லஷ்மி வர்த்தன -என்றும்
அறியாக் காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து என்றும் சொல்லுகிறபடியே
பேதைப் பருவத்திலே மூதுவராம் விண்ணாட்டவருடைய நித்ய வ்ருத்தியிலே அபி நிவிஷ்டராய்
ந ச சீதா த்வயா ஹீநா நசா ஹம்பி ராகவா முஹூர்த்தம் அபி ஜீவாவோ ஜலான் மத்ஸ்யா விவோத்த்ருதௌ-என்றும்
நின்னலால் இலேன் காண்-என்றும் சொல்லுகிறபடி
மா மலராள் கோனை விடில் நீரில் குதித்து எழுந்த மீன் எனவே ஆக்கை முடியும்படியான தசையை யுடையவராய்
ந தேவ லோகா க்ரமணம் நாமரத்வ மஹம் வ்ருணே ஐஸ்வர்யம் வாபிலோகா நாம் காமயே ந த்வயா விநா-என்கிறபடியே-

கைம்மா துன்பம் கடிந்த அம்மானுடைய செம்மா பாதபற்பு தலை சேருகையிலே த்வரையாலே
எம்மா வீட்டுத் திறமும் செப்பம் -என்றும்
தருணீ க்ருதா நுத்தம புத்தி முக்தகராய் பெரு நிலம் கடந்த நல்லடிப்போது அலற்றுவன் தழுவுவன் வணங்குவன் என்று
திரு வுலகு அளந்த திருவடிகளிலே த்ரிவித கரணங்களாலும் உண்டான
விவித கைங்கர்யங்களே சர்வ வித புருஷார்த்தம் என்று அறுதி இட்டு அருளி

தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே -என்று
அந்த புருஷார்த்தத்தை நிஷ் பிரயோஜனம் ஆக்குமதான ஸ்வ பிரயோஜனத்தைக் கழித்து
சபிரயோஜனம் ஆக்கி அருளின தேவரீர்
இப்போது திரு அத்யயனம் என்கிற வ்யாஜத்தாலே கிண்ணகத்துக்கு படல் இட்டால் போலே
க்ரீடாதி நூபுர அந்தமான மெய்யமர் பல் கலன்களையும் நன்கு அணிந்து
த்வஜ சத்ர சாமர பேரீ கீதா காஹள சங்காஸீஸ் ஸ்துதி கோலாஹலத்துடனே புறப்பட்டு அருளி
தணியா வெந்நோய் உலகில் தவிர்த்து ஆளுமாளார் என்கிறவனுடைய தனிமையைத் தீர்க்கைக்கு ஆள்பார்த்து உழி தந்து
மீண்டு எழுந்து அருளி திருமேனி இன்ன வண்ணம் என்று காட்டீர் என்று இருப்பார்க்கு
காட்சி கொடுக்கைக்காக

சர்வ பூஷண பூஷார்ஹா -என்கிறபடியே
ஆபரண ஸ்யாபரணமான திருமேனியில் அழகு வெள்ளத்தை முழு மதகாகத் திறந்து
செழு மா மணிகள் சேரும் திரு மா மணி மண்டபமான இத் திரு வோலகத்திலே ஒரு நாயக ரத்னம் அங்குரித்தால் போலே
மஞ்சன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதமாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருக்கும் இருப்பு இங்கனே இரா நின்றது
அது எங்கனே என்னில்-

தஸ்மின் யதந்தஸ் ததுபாசிதவ்யம் தஸ்மின் யதந்தஸ் ததன்வேஷ்டவ்யம் -என்று சாஸ்த்ரங்களில் சொல்லுகிறபடியே
பலமுந்து சீரில் படிமின் -என்று விதித்த பகவத் குண உபாசனத்தை சாங்க மாக்க வேண்டுகையாலே
மாலிரும் சோலை தளர்விளர் ஆகில் சார்வது சதிரே –
மாலிரும் சோலை பதியது ஏத்தி எழுவது பயனே
மாலிரும் சோலை தொழக் கருதுவதே துணிவது சூதே
மாலிரும் சோலை வலம் செய்து நாளும் மருவுதல் வழக்கே
மாலிரும் சோலை நெறி படவதுவே நினைவது நலமே -இத்யாதிகளால்
ஷேத்திர வாச
சங்கீர்த்தன
அஞ்சலி
பிரதஷிண
கதி -சிந்தநாத் அங்கங்களை மலை இலக்கா முன்பு விதித்த படியை அக்காலத்தில் அனுஷ்டிக்கப் பெறாத
கர்ப்ப நிர்பாக்யரான அடியோங்களும் இழவாத படி
அன்பன் தன்னை அடைந்தவர்க்கு எல்லாம் அன்பனான தேவருடைய இவ்வுலகினில் மிக்க அருளாலே
மாட மாளிகை சூழ்ந்து அழகாகிய திருக் குருகூர் அதனைப் பாடி யாடி பரவிச் சென்மின்கள் -என்கிறபடியே
உறியமர் வெண்ணெய் யுண்டவன் நீள் குடக் கூத்தனாய் மேவி உறை கோயில் விஷயமான தேவர் உடைய
வந்தன
கீர்த்தன
அர்ச்சனாதி பிரகாரங்களாலே வெளியிட்டு அருளுவதாக திரு உள்ளம் பற்றி
ததார்த்தமாக திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருளி இருக்கும் இருப்பு என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

————————————————-

திரு அத்யயன உத்சவம்-மூன்றாம் நாள் திருமஞ்சனக் கட்டியம் –

அவிச் சின்னம் காலம் சகலமவிபோக ந ஸூத்ருடம்
சமஸ்தம் கைங்கர்யம் சட மதன குர்யா மஹமிதி
யதாப்யாத்யா ப்ரோக்தம் ஸூப தரருசே சர்வ ஸூஹ்ருதே
புநஸ் ஸ்பஷ்டீ குர்வன்நிஹ சதசி சம்ஸ் நாஸி ததயோ-

நாயந்தே ! நாயந்தே !
சர்வம் கல்விதம் ப்ரஹ்ம-
விஸ்வ மேவ தகும் புருஷ –என்று சொல்லுகிறபடியே
சர்வ சப்த வாச்யத்தை -முழுதுமாய் முழுதி யன்றாய்-என்று அருளிச் செய்தும்
அது தான் க்ராமேசயம் புருஷ -என்னுமா போலே அமுக்யம் ஆகாதபடி
அந்தர் பஹிச்ச தத் சர்வம் வ்யாப்ய நாராயணஸ் ஸ்தித –
அணோர் அணீ யான் மஹதோ மஹீ யான் -இத்யாதிகளால் அவனுக்கு சொல்லுகிற பரி சமாப்தி வ்யாப்தியை
எங்கணும் நிறைந்த வெந்தாய்-என்றும்
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவர நிறைந்து நின்ற -என்று அருளிச் செய்தும் -அது தான் ஆகாச வ்யாப்தி போலே யாகாத படி
அந்த பிரவிஷ்டா சாஸ்தா ஜநாநாம் சர்வாத்மா -என்று அவனுக்குச் சொல்லப்படுகிற நியந்த்ருத்வேன வ்யாப்தியை
ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி -என்று அருளிச் செய்தும்
அது தான் ஜீவாத்மாவுக்கு போலே ஹேய ஸ்பர்ச சஹம் ஆகாத படி
அனஸ் நன்நன்யோ அபி சாக சீதி-என்று அவனுக்குச் சொல்லப்படுகிற தத் கத தோஷ ஸ்பர்ச ராஹித்யத்தை
அவரவர் சமயம் தோறும் தோய்விலன் -என்று அருளிச் செய்தும்
ஆக
இப்படி சர்வ அந்தர்யாமிதயா
சர்வ சப்த வாச்யனான
சர்வேஸ்வரனுடைய
சர்வ ஹேய ப்ரத்ய நீகமான -ரூபத்தை அருளிச் செய்து

ஹிரன்யமஸ் மஸ்ரு ஹிரண்ய கேச ஆப்ரணகாத் சர்வ ஏவ ஸூ வர்ண –
தஸ்ய யதா கப்யாசம் புண்டரீகம் ஏவம் அஷிணீ-என்று
ஆணிப் பொன்னுருவமான திவ்யாத்மா ஸ்வரூபத்துக்கு மாணிக்கச் செப்பு போலே பிரகாசகமாய்
அனுக்ரஹ ஏக பாத்ரமான அவர்களுடைய விரோதியை நிக்ரஹிக்கைக்காக பரிக்ரஹித்த விக்ரஹத்தை
முடிச் சோதியாய் உனது முகச் சோதி மலர்ந்ததுவோ -என்று தொடங்கி
சுட்டுரைத்த நன்பொன் நின் திருமென் ஒளி ஒவ்வாது -என்றும்
அப்பொழுதைத் தாமரைப் பூ கண் -என்றும் அருளிச் செய்தும்-

ச ஏக்தா பவதி த்விதா பவதி த்ரிதா பவதி சத்தா பவதி அபரிமிததா பவதி
இமான் லோகான் காமான் காம ரூப்யநுசஞ்சரன் ஸ தத்ர பர்யேதி -என்று சொல்லப்படுகிற
விக்ரஹ அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யத்தில் அபி நிவேச அதிசயத்தை
தெழி குரல் அருவித் திருவேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி வழு விலா யடிமை செய்ய வேண்டும் நாம் -என்று பிரார்த்தித்து அருளி-

இப்படி பிரார்த்தித்தது சார்த்தமாம் படி
எங்கும் தானாய் நின்ற தன் சர்வாத்ம பாவத்தை சர்வேஸ்வரன் சாஷாத் கரிப்பிக்கையாலே பெரும் காற்றில் விழு பழம் எடுப்பாரைப் போலே
புகழு நல ஒருவன் என்கோ-என்று தொடங்கி
இகழ்வில் இவ்வனைத்தும் என்கோ -என்றும்
கூவுமாறு அறிய மாட்டேன் யாவையும் எவரும் தானே -என்று துரும்பை கூடாகக் கண்டு யாசிதையான வாசிக வ்ருத்தியை செய்து அருளி

அது தான் அவ்வளவிலே தவறிப் போகாத படி
நங்கள் வானவர் ஈசன் நிற்க–இழியக் கருதியோர் மானிடம் பாடல் என்னாவது –
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளும் –
வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என் வள்ளல் மணி வண்ணன் -தன்னைக் கவி சொல்ல வம்மின் என்று
நிஷ்க்ருஷ்டையான ஸ்வ வ்ருத்தியிலே மூட்டி யருளி
ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ -என்று மீளவும் தேவரீர் உடைய அனுஷ்டானத்திலே பிரகாசிப்பித்தது
அருளுவதாக திரு உள்ளம் பற்றி ததார்த்தமாக திருமஞ்சனம் செய்து அருள எழுந்து அருளி இருக்கிற இருப்பு என்று
விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

—————————————————-

திரு அத்யயன உத்சவம் -நாலாம் நாள் திருமஞ்சன கட்டியம் –

பிரஜாபதி சிவாதி ஷூ பரவண சேத சாமா கமை
பராவர விபாகதம் பரம சாஸ்திர முக்த்வா புரா
விபாதி சடகோப தத் பிரபல சாஸ்திர சங்கா ஹ்ருதாம்
பவான் ஸ்நபந பூர்வகம் சத்த மத்ய கர்த்தும் யதா —

நாயந்தே ! நாயந்தே !
சதேவ சோம்யே தமக்ர ஆஸீத் –
ப்ரஹ்மவா இத மேகமே வாக்ர ஆஸீத் –
ஆத்மா வா இத மேகமே வாக்ர ஆஸீத்
ஏகோ ஹை வை நாராயண ஆஸீத் ந ப்ரஹ்மா நே சாந-
தத்ர ப்ரஹ்மா சதுர்முகோ ஜாயதே –
புத் புதா ரஷய ஸூ ல பாணி புருஷோ ஜாயதே –
நாராயணாத் ப்ரஹ்மா ஜாயதே நாராயணாத் ருத்ரோ ஜாயதே
ப்ரஹ்மாதி ஷூ ப்ரலீ நேஷூ நஷ்டே லோகே சராசரே ஏகதிஷ்டதி விச்வாத்மா ச து நாராயண பர –
தஸ்மின் ஜஞ்ஞே ஸ்வயம் ப்ரஹ்மா ப்ரஹ்மணஸ் சாபி சம்பூதஸ் சிவா – என்னும் இப்படி

ஜகத் காரண முகேன நாராயணன் உடைய சர்வ ஸ்மாத் பரத்வத்தையும்
ஸ்ருதி ஸ்ம்ருதி புரஸ் சரமாக சகல சாஸ்திரங்களும் ஏக கண்டமாக நின்று கோஷிக்கச் செய்தேயும்
ஸ்ரஷ்ட்ருத்வ சம்ஹாரகத்வ முகேன ருத்ர பிரஜாபதி முக தேவதாந்தர பரத்வத்தையும்
அநாகலித மூல பிரகிருதி சம்பந்த பங்க வாசனா ரூஷித மாநாசர் ஆகையாலே
வைதிக பத விமுகராய் -பாஹ்ய பத அபிமுகராய் லோகாயதர் என்று பேரிட்டு அநாதி மாயையாலே
ஸூ ப்தரான தங்களை புத்தராக பிரதிபத்தி பண்ணியும்

பகவத் விமுகராய் கொண்டு துர்க்கதராய் இருக்க ஸூகதர் என்று பேரிட்டுக் கொண்டு
பகவத் குண கதனத்தாலே சௌ பாஷிகராய் இருக்க மாட்டாதே வை பாஷிகராயும்
ப்ரஹ்ம ஸூத்திர வேதனத்தாலே அசௌத்ராந்திகர் என்ன வேண்டி இருக்க
சௌ த்ராந்திகர் என்று பட்டம் கட்டி யோகாசாரன் என்று பேரிட்டு
வைதிக சரணியில் அயோகாசாரராயும் மாத்யமிகர் என்னச் செய்தே ஸூந்ய பஷவாதிகளாயும்
நியாய வாதிகள் என்று பேர் பெற்று பிரத்யஷத்துக்கு அனுமானம் சொல்லி அநியாய வாதிகளாயும்
பிரமாண பிரமேய விசேஷம் அறியாமையாலே அவைசேஷிகராய் இருக்க வைசேஷிகர் என்று விருது பிடித்தும்

ஸூ பர்ண ஆஸ்ரிதமான வாசூதேவ தருச் சாயையை விட்டு அபர்ண ஆஸ்ரிதமான ஸ்தாணுவின் கீழே ஒதுங்கி
பாசூபத தீஷிதராய் சம்சார வடத்திலே -கர்த்தத்திலே -ஆஸூ பதிதராயும்
இப்படி இவர்கள் தாங்கள் சர்வஞ்ஞர் என்னும்படி மானம் ப்ரதீபவமிவ என்கிறபடியே
சகல சாஸ்திர ப்ரகாசகமான பிரமாணத்தை அவலம்பித்து வைத்து
விளக்கைப் பிடித்துக் கொண்டு கிணற்றிலே விழுவாரைப் போலே
அதபதிதர் ஆகையாலே ஸூ த்ருஷ்டிகலான வேதாந்திகளால் குத்ருஷ்டிகள் என்று பேர் பெறுவாரும்
இவை இத்தனைக்கும் தப்பி –

ஸ்வத்வமாத்மநி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் -என்று
நித்ய சேஷத்வ பிரதிபத்திக்கு ய்க்தமான மனசை யுடையனாய் வைத்து
அந்த சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷித்வ
ஹிரண்ய கர்பஸ் சமவர்த்த தாக்ரே –
பூதஸ்ய ஜாத பதிரேக ஆஸீத் –
ததா யதா பூர்வம கல்பயத் –
பிரஜாபதி பிரஜா அச்ருஜத்-
ந சந் நாசச்சிவ ஏவ கேவல –
சம்பு ராகாஸ மத்யே த்யேய-
ஏக ஏவ ருத்ர -என்றும் சொல்லுகிறபடியே-

ஹிரண்ய கர்ப்ப -தாத்ரு -பிரஜாபதி -சப்தங்களாலும்
சிவ சம்பு ருத்ர சப்தங்களாலேயும் பிரதிபாதிதமான சாம்யத்தாலே
சம்ப்ரதிபன்ன ஷேத்ரஞ்ஞரான ப்ரஹ்ம ருத்ராதிகள் அளவிலே சேஷித்வ புத்தியைப் பண்ணியும் அனர்த்தப் படுகிற சேதனருக்கு
நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே –
நாடி நீர் வணங்கும் தெய்வமும் உம்மையும் முன் படைத்தான் வீடில் சீர்ப்புகழ் ஆதிப்பிரான் –
பரன் திறம் அன்றி பல்லுலகீர் தெய்வம் மற்று இல்லை –
பேச நின்ற சிவனுக்கும் பிரமன் தனக்கும் பிறர்க்கும் நாயகன் அவனே கபால நன் மோக்கத்துக் கண்டுகொண்மின் –
ஈசன் பாலோர் அவம் பறைதல் என்னாவது
நும் தெய்வமும் ஆகி நின்றான் –பொலிந்து நின்ற பிரான் கண்டீர் –
உம்மை இன்னே தேற்றி வைத்தது எல்லீரும் வீடு பெற்றால் உலகில்லை என்றே –
ஆடு புட்கொடி ஆதிமூர்த்திக்கு அடிமை புகுவது
மிக்க ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் விளம்புதிரே
உம்மை உய்யக்கொண்டு போகுறில் திருக் குருகூர் அதனை உளம் கொள் ஞானத்து வைம்முன்
குறிய மாண் யுருவாகிய நீள் குடக் கூத்தனுக்கு ஆட்செய்வதே உறுவதாவது
என்று இப்படி பத்தும் பத்தாக பர அவர விபாக போதன பரம சாஸ்த்ரமான திருவாய்மொழியை
முன்பே அருளிச் செய்து அருளின தேவரீர்

இப்போது திரு அத்யயன உத்சவ வ்யாஜ்யத்தாலே புறப்பட்டு உலாவி அருளி
மீண்டு எழுந்து அருளி
திருமஞ்சனம் செய்து அருளுவதாக மஞ்சன வேதி காம்யத்திலே
ஜ்ஞான முத்ரா சஹிதராய் இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில் உகத நிர்தோஷ சாஸ்திர சித்தமான அர்த்த தாத்பர்ய சம்சய மநாக்களை
லப்த விஸ்வாச யுக்தராம்படி சசேல ஸ்நான பூர்வகமாக சப்த கர்மத்தினாலே தீஷித்துக் கொண்டு
எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது-

———————————————————————————–

திரு அத்யயன உத்சவ ஐந்தாம் நாள் திருமஞ்சன கட்டியம் –

ஸ்ரீ மன் ஸ்ரீ சடகோப சம்ப்ரதி பவான் பூர்ண ப்ரவாவோத்தராம்
கீதிம் காதும் உபக்ரமன் ஸூ விஹிதஸ் நா நக்ரியோ ராஜதே
சத்யம் மாம் ந ஜகாதி ஸ ஷணமபி ச்நேஹாத் குருங்காதிப
சித்தே மே வ சதீதி வாச முதிதான் உத்தர்த்தம் இச்சந்நிவா –

நாயந்தே ! நாயந்தே !
த்ரைவித்ய வ்ருத்த ஜன சிரோ பூஷணமாய்
சாத்விக ஜன சாதன சம்பத்தாய்
ஆஸ்ரித சர்வவித பந்து பூதமாய்
அசரண்ய சரண்யமாய் இருக்கையாலே
மேவினேன் அவன் பொன்னடி -என்கிறபடியே சரணவரண அர்ஹமான சரண யுகளமும்
பங்கஜ நாள துல்யைகளான ஜங்கைகளும்
ஜ்ஞானத்வந்த கதிதி வர்த்தகமான ஜா நுத்வந்த்வமும்
சாருக்களான ஊருக்களும்
பத்தலேசமான மத்ய சௌந்தர்யமும்
அஷிப்ரியா வஹமான குஷி பிரதேசமும்
ஆவர்த்த ரூபமான திரு நாபியும்
அதி விசால பீநமாய்-அநேக பூஷித பூஷிதமாய் -வகுள தாம விராஜிதமான வஷஸ்தலமும்
பஜதாம பயதமான புஜ காந்தியும்
க்ரமுக தருண க்ரீவை போலே பந்துரையான கந்தரையும்
ஸூ வர்ண குண்டல மண்டிதமான கர்ண பாசமும்
திருஷ்டி சித்த அபகாரிகளான சிபுக கபோலங்களும்
அருணராக விமோசகமான அதரராகமும்
கந்தர்ப்ப மத ஹரமான மந்த ஸ்மிதமும்
பாசா மநோ ஹரமான நாஸா வலியும்
கிருஷ்ண ராக சஹிதமாய் ஸ்ருத்ய வலம்பி களான திருக் கண்களும்
லோலாயதமான ப்ரூ லதா யுகமும்
அர்த்த சந்திர தளாயுதமான அளீகதேசமும்
அதில் அம்ருதச்யுதி என்னாலான திரு நாமமும்
திமிர கோசமான கேசபாசமும்
ஆக இப்படி பாதாதி கேசாந்தமான அவயவ சோபையாலும்
பரமார்த்த போதகையான ஜ்ஞான முத்ரையாலும்
ஸ்ரீ மான் என்றும் ஸ்ரீ சடகோபன் என்றும் சொல்லப் படுகிற தேவர்

இப்போது நம்பியினுடைய திருவாய் மொழியைப் பாடி அருளுவதாகக் கோலி
சக்ரமமாகத் திரு மஞ்சனம் செய்ய வேணும் என்று மஞ்சன வேதிகா மத்யத்திலே
ஜ்ஞான முத்ரா சஹிதராய் கொண்டு எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது – எங்கனே என்னில்

அல்லு நன்பகலும் இடைவீடு இன்றி நல்கி என்னை விடான் நம்பியே -என்று
குருங்க ஷேத்திர வாசியான பூர்ணாபி நாதன் என்னுடைய ஹிருதயத்திலே சச்நேஹமாக நித்ய வாஸம் பண்ணி
என்னை ஒருக்காலும் விட்டு அகலகில்லேன் என்று
தேவரீர் அருளிச் செய்து அருளின வசனத்திலே
அவிஸ்ரம்ப புத்திகளுக்கு
நிறைந்து என்னுள்ளே நின்று ஒழிந்தான் நீல மேனியும் நான்கு தோளும் என்நெஞ்சம் நிறைந்தனவே
குழுமித் தேவர் குழாங்கள் கை தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே எழுவதோர் உரு என்நெஞ்சுள் எழும் -என்று
சொல்லி சபதம் பண்ணிக் கொடுக்க எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது-

————————————————–

திரு அத்யயன உத்சவம் -ஆறாம் திருநாள் திரு மஞ்சன கட்டியம் –

புரா லோகம் புக்த்வா புநரபி நிவிஷ்டம் பஹூ குணம்
பரா பாவ்யாப் தாங்கம் விபுல மகிலாத்மா நமமலம்
க்ருதாவாசம் தேவம் தரணி திலகே வேங்கட கிரௌ
சடரோத்ய ஸ்நாநம் சரண முபகந்தும் வித நுஷே –

நாயந்தே ! நாயந்தே !
அச்யேசானா ஜகதோ விஷ்ணு பத்னீ –
நித்யைவைஷா ஜகன்மாதா விஷ்ணோஸ் ரீர நபாயி நீ-என்றும் சொல்லுகிறபடியே
சகல ஜகத் ஸ்வாமிநியாய -உனக்கு ஏற்கும் -யென்னும்படியாய் -தனக்கு ஹிருதய காமினியாய்
மலர்மகள் -என்றும் -மலர்ப்பாவை -என்றும் -தாமரை மங்கை என்றும்
பூவின் மிசை மங்கை -என்றும் சொல்லுகிறபடி -பங்கயத்தில் பரிமளத்தை பருக்கை யற வடித்து
பாவையாக வகுத்து மங்கைப் பருவத்தில் மங்கையாய் -வாஸம் செய் பூம் குழலாள்-என்கிறபடியே
சர்வகந்த -என்கிற வாசத் தடத்துக்கும் வாஸம் செய்யுமதான கேசத்தை உடையளாய்
விதி தஸ் ஸ ஹி தர்மஜ்ஞ் சரணாகத வத்சலா மித்ரமௌபிகம் கர்த்தும் ராமஸ் ஸ்தானம் பரீப்சதா-இத்யாதிப்படியே
அவிஹிதசாரி யாகையாலே அஹிதனானவன் விஷயத்திலும் அத்யந்த ஹித பாஷிணியாய்
ப்ரியம் ஜன மபச்யந்தீம் பச்யந்தீம் ராஷசீ கணம் ஸ்வ கணேன ம்ருகீம் ஹீ நாம் ஸ்வ கணை ராவ்ருதமிவ -என்கிறபடியே

ஏகாஷீ எககர்ணீ முதலான துர் ஜனங்கள் உடைய தர்ஜனங்களாலே
பத்துக்கோடி செந்நாய்களால் சுற்றப் பட்ட மான்பெடை போலே தான் பட்டது ஒன்றையும் பாராதே
பவேயம் சரணம் ஹிவ -என்றும்
தா ஸீ நாம் ராவணஸ் யாஹம் மர்ஷயாமீஹ துர்பலா -என்றும்
விதேயா நாஞ்ச தாசி நாம் க குப்யேத் வானரோத்தம -என்றும்
கார்யம் கருண மார்யேண் ந கச்சின் ந அபராத்யதி -என்றும் சொல்லுகிறபடியே
புருஷகாரிகள் ஆனவர்கள் விஷயத்திலும் புருஷகார பரையாய்

ஸ்ரீர்தேவி பயசஸ் தஸ்மாத் துத்திதா -என்றும்
செழும் கடல் அமுதினில் பிறந்தவள் என்றும்-சொல்லுகிறபடியே
விண்ணவர் அமுதுண அமுதில் வரும் பெண்ணமுதான பெரிய பிராட்டியார் அனபாயினியாய் இருக்கச் செய்தேயும்
அபாயாதி சங்கையாலே-இறையும் அகல கில்லேன் -என்று மார்பிலே இருந்து மடல் எடுக்கும்படியான வடிவை உடையவனாய்
உலகமுண்ட பெரு வாயா இத்யாதிப்படியே பிரளய அபி பூதையான பூமியை ரஷித்து இருக்கச் செய்தேயும்
ரஷணத்தில் அபிவ்ருத்தமான அபி நிவேசத்தையும் ரஷண அநு குணமான குண கணத்தையும்
ரஷகத்வ ப்ரகாசகமான விக்ரஹத்தையும் உடையனாய்
சௌகுமார்யாதி கல்யாண குண விசிஷ்டனாய் சம்ஸ்ரித சத்தா தாரகனாய்
உலகுக்குத் திலதமான திரு வேங்கட மா மலையிலே -வட மா மலை யுச்சி என்னும்படி
அதன் உச்சியிலே பச்சை மா மலை போல் நிற்கிற நச்சு மா மருந்தான அச்சுதனை அனுபவித்து
நிரபயமான உபாயத்தை பிரார்த்தித்து அருளின தேவரீர் இப்போது திரு அத்யயன உத்சவ அங்கமாக
திவ்ய ஸ்ரகம்பர பரிஷ்கரண அங்க ராகாதிகளால் அழகிய திரு மேனியை அலங்கரித்துக் கொண்டு

நல்லார் நவில் குருகூரிலே எல்லாருடைய பொல்லாங்குகளையும் போக்கி –
பயன் நன்றாகிலும் செயல் நன்றாக திருத்திப் பணி கொள்வதாகப் புறப்பட்டு அருளி
அதி விலாசத்துடனே உலாவி யருளி -மீண்டு எழுந்து அருளி
சாம்சாரிக சகல தாபங்களையும் மாய்க்குமதான வாய்க்கும் தண் பொருநலிலே தெளிந்து எழுந்த நீரிலே
திரு மஞ்சனம் செய்து அருளுவதாக மஞ்சன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதராய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது – எங்கனே என்னில் –

த்வயேன மந்த்ர ரத்நேன -என்கிறபடியே தந்திர சித்தமான மந்திர ரத்னத்திலே பூர்வ வாக்ய பிரக்ரியையாலே
அகலகில்லேன் -என்று தொடங்கி
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று சாபராத சேதனர் உடைய சர்வ அபராதங்களையும் சர்வேஸ்வரனை சஹிப்பித்து
சமாஸ்ரயிப்பிக்கும் புருஷகார நித்ய யோகத்தையும்
சமாஸ்ரயண சௌகர்ய ஆபாதங்களான சௌலப்யாதி சத்குண சாஹித்யத்தையும் அருளிச் செய்து
ஆஸ்ரயணத்துக்கு ஆகாங்ஷிதங்களான-ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களையும் ஆவிஷ்கரித்து
ஆஸ்ரயணத்துக்கு அடைந்த விஷயமான அவன் துயர் அறு சுடர் அடிக் கீழே அமர்ந்து புகுந்து
இப்படி பக்தி யுபாயத்திலே சக்தி ஹீனர்க்கும் முக்தி யுபாயமாய் விதிக்கப்பட்ட ஸ்வ சித்த உபாய நிஷ்டையை
உக்த்ய அனுஷ்டானங்களாலே வ்யக்தமாக்கி அருளிச் செய்தேயும்

அநாதி பாப வாசனா தூஷித அசேஷ சேமுஷீகர் ஆகையாலே
இவ்வர்த்தத்தில் மகா விஸ்வாச பஞ்சகமான சங்க அவகாச லேசங்களை யுடைய சமஸ்த சேதனர் யுடையவும்
சம்ரஷண விஷயமான
தேவருடைய சௌஹார்த்தாதிசயத்தாலே
சக்ருதேவ ஹி சாஸ்த்ரார்த்த க்ருதோசயம் தார யேந்தரம் -என்கிறபடியே
சக்ருத் கரணீயமாய் இருக்கச் செய்தேயும் போக்யாதிசயத்தாலே அசக்ருதா வ்ருத்திக்கு யோக்யதை யுண்டாய் இருக்கையாலே
திரு வேங்கட மா மலையிலே சென்று சேர்ந்து திருக் குருகூர் அதனுள் பரன் அடிக் கீழ் மீளவும் அமர்ந்து
சரணம் புகுவதாக கோலி ததார்த்தமாக திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது –

————————————————————

திரு அத்யயன உத்சவத்தில் ஏழாம் நாள் திரு மஞ்சன கட்டியம் –

ஷீராப்தே ரங்க நாம் நா சஹ விதி சதநம் ஸ்ரீ விமாநேன கத்வா
ரூபேண ஸ்வேன ஸார்தம் ஸூ சிரமத பு வீஷ்வாகு புர்யா முஷித்வா
மத்யே காவேரி ஸூ ப்தம் பணி நிதத இஹ த்வத்க்ருதே ரங்கராஜம்
மத்வா காதும் சடாரோ அபி ஷவ விதி முகைஸ் த்வாமி வா லங்கரோஷி –

நாயந்தே ! நாயந்தே !
பக்தி பிரபாவ பவதத்புத பாவ பந்த சந்து ஷித ப்ரணய சார ரசௌக பூர்ண – என்றும்
ஆராத காதல் குருகூர்ச் சடகோபன் -என்றும் சொல்லுகிறபடியே
கிருஷ்ண த்ருஷ்ணா தத்தவ கல்பராய் -த்ரைவித்ய வ்ருத்த ஜனத்துக்கும்
சாத்விக ஜனத்துக்கும் அசரண்ய ஜனத்துக்கும் சிரோ பூஷண சம்பத் சரண்யமாய்
மாதா பித்ரு பரப்ருதி சர்வவித பந்துவுமான சரண நளின யுகளத்தை யுடையரான தேவர் இப்போது
திரு நஷத்ர உத்சவ தீஷிதராய்
கரசரசி ஜத்ருத கௌதுகராய்
நிரவதிக சௌந்தர்யாதி கல்யாண குண கண நிதியான திவ்ய மங்கள விக்ரஹத்தை
சகல மநுஜ நயன விஷயமாக்கிக் கொண்டு புறப்பட்டு உலாவி யருளி மீண்டு எழுந்து அருளி திரு மஞ்சனம் செய்து அருளுவதாக
மஞ்சன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதராய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது எங்கனே என்னில் –

வைகுண்டே து பரே லோகே -என்கிறபடியே பரமபதமான ஸ்ரீ வைகுண்டத்திலே
ஸூ த்த சத்வ மயமாய் ஸ்வயம் பிரகாசமாய் -நிரவதிக தேஜோ ரூபமான
திவ்ய மங்கள விக்ரஹத்தோடே நித்ய முக்தர்க்கு போக்யனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற இது
பக்த சேதன ஜாதத்துக்கு தேச விப்ரக்ருஷ்டம் ஆகையாலே புக்த போகத்தில் நெஞ்சு செல்லாமல் என் செய்வோம் என்று ஊகித்துக் கொண்டு வ்யூஹித்து

அடையும் வைகுந்தமும் பாற்கடலும் -என்கிறபடியே படுக்கைப் பற்றான திருப் பாற் கடலிலே எடுத்து விட்டு
பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம் கேட்டேயும் காலாழும் நெஞ்சு அழியும் கண் சுழலும் -என்று
நிதாநஞ்ஞர் யீடுபடும்படி பவாப்தி மக்நரான சம்சாரிகளை உத்தரிப்பிக்கைக்காக மகாபதி மத்யே பள்ளி கொண்டு அருளின இதுவும்
அதி சயித பாகதேயரான விதி சிவ சனகாதிகளுக்கு லபிக்குமதாய்-
மண்ணில் பிறந்து மண்ணாகும் மானிடர்க்கு கண்ணுக்கு விஷயாகப் பெறாமையாலே அந்த ஜல சயனத்தை விட்டு
ஸ்தல சயனத்தை விரும்பி -பாலில் கிடந்ததுவும் பண்டு அரங்கம் மேயதுவும் -என்கிறபடி
யாவரும் வந்து அடி வணங்க அரங்க நகர் துயிலுவதாக கோலி எழுந்து அருளி இருக்கிற அளவில்

சதுர்முக தப்பல நிர்வஹணார்த்தமாக ஸ்ரீ ரெங்க விமானத்தோடு ஸ்வ அசாதாராண திவ்ய மங்கள விக்ரஹ விசிஷ்டனாய் கொண்டு
ப்ரஹ்ம லோகத்தில் எழுந்து அருளின பின்பு இஷ்வாகுவினுடைய தபோ வ்யாஜ்யத்தாலே
அங்கண் நெடு மதிள் புடை சூழ் அயோதியை என்னும் அணி நகரத்திலே எழுந்து அருளி இருந்து
இஷ்வாகு பிரப்ருதி தசரத பர்யந்தமான ராஜாக்களாலும்
தயரதர்கு மகனான தம்மாலும் அர்ச்சிதராய்
ராமாவதார சரமத்தில் -ஸ்ரீ மத் ரங்கம் மஹத்தாம சத்த்வஜம் சபரிச்சதம் பிரதத்தம் ராஷசேந்தராய ப்ரியாய ப்ரிய காரிணே –
என்கிறபடியே செல்வ விபீடணற்கு வேறாக நல்லன் ஆகையாலே
மின்னிலங்கு பூண் விபீடன நம்பிக்கு கோயில் ஆழ்வாரோடு தம்மை உபகரித்து அருள
அவரும் தம்முடைய படைவீடான இலங்கையை நோக்கி எழுந்து அருளுவித்துக் கொண்டு போகா நிற்க-

கங்கையில் புனிதமாய காவேரி நடுவில்
ஸ்ரீ சந்திர புஷ்கரணி தீர பிரதேசமான புளினத்திலே எழுந்து அருளிவித்த அனந்தரம்
அவராலும் எழுந்து அருளுவிக்க ஒண்ணாதபடி அவ்விடத்திலே திரு உள்ளம் வேர் பற்றி
மன்னுடைய விபீடணனை அனுக்ரஹித்து -மதிள் இலங்கை ஏறப் போக விட்டு
அரவரசப் பெரும் சோதி அனந்தன் என்னும் அணி விளங்கும் உயர் வெள்ளை அணையை மேவி
பரத்வம் போலே ஆஸ்ரியிப்பார்க்கு அந்தரம் பட்டு இருத்தல்
வ்யூஹம் போலே கடல் கொண்டு கிடத்தல்
விபவம் போலே தாத்காலிகமாய் இருத்தல்
அந்தர்யாமி போல் அப்ரத்யஷம் ஆதல் செய்கை இன்றிக்கே
வடிவுடை வானவர் தலைவனே -என்றும்
கடலிடம் கொண்ட கடல் வண்ணா காகுத்தா கட்கிலீ -என்னும்படி பரத்வாதிகளில் உள்ள
பரதவ சௌலப்யாதிகளை பிரகாசிப்பித்துக் கொண்டு

அன்போடு தென் திசை நோக்கி பக்கம் நோக்கி அறியாதே தேவரை கடாஷித்துக் கொண்டு
பள்ளி கொண்டு அருளுகிற முகில் வண்ணரான பெரிய பெருமாளை
அடியை அடைந்து அருள் சூடி உய்ந்து சொல் மாலை ஆயிரமும் அருளிச் செய்து அருளின தேவரீர் இப்போது
கங்குலும் பகலும் பாடி அருளுவதாக திரு உள்ளம் பற்றி
பர்த்ரு போகார்த்தமாக குளித்து ஒப்பித்துச்செல்லும் பார்யை போலே
என் திருமகள் சேர் -என்கிறபடியே விஸ்வ பதியான அழகிய மணவாளர்க்குத் திரு என்னும்படி லஷ்மி சத்ருசர் ஆகையாலே
அலங்க்ருத சர்வ காத்ரராய்ச் செல்ல வேணும் என்று ததார்த்தமாக
திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருளி இருக்கும் இருப்பு என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

——————————————————

திரு அத்யயன எட்டாம் நாள் உத்சவ திரு மஞ்சன கட்டியம் –

பராவரே சாங்க்ரி சரோஜசேவா பராதிராகாதி தரான் விஹாய
புரேப்சிதா மத்யே ததங்க்ரி வ்ருத்தம் சரன் சடாரே தநுஷே அபிஷேகம்

நாயந்தே ! நாயந்தே !
தேவிமார் ஆவார் திருமகள் பூமி -என்கிறபடியே
உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மணமகள் ஆயர் மடமகள் -என்கிற தேவிமார் மூவரையும் உடையனாய் –
மற்று அமரர் ஆட்செய்வார் -என்கிறபடியே ஏழ் உலகும் தனிக் கோல்செல்ல வீற்று இருந்து அருளுகிற சேர்த்திக்கும்
போற்றி என்று ஆட்செய்கிற அயர்வறும் அமரர்கள் அதிபதியாய்
மேவிய உலகம் மூன்றவை யாட்சி என்கிறபடியே அந்த நித்ய சூரிகளோபாதி ப்ரகாரதயா சேவ்யமான ஆகாரத்தாலே
தனக்குத் தகுதியாய் இருக்கிற லோகத் த்ரயத்துக்கும் ஏக நாயகனாய்
வேண்டு வேண்டுருவம் நின்னுருவம் -என்கிறபடியே
ஆஸ்ரித அதீனமான ஸ்நான ஆசன சயநாதிகளை உடைய சர்வேஸ்வரனுடைய சௌஹார்த்த விசேஷத்தாலே
சஹஜ சார்வஜ்ஞ்யாதி சத் குண சமேதராய் –

என்னால் தன்னை இன் தமிழ் பாடிய ஈசன் -என்கிறபடியே
திறத்துக்கே துப்புரவாம் திருமாலான அவன்
தேவரைக் கொண்டு திருவாய் மொழி பாடுவித்த சீரை
இறைப் பொழுதில் காலம் பருகி இருக்கச் செய்தேயும் அதில் ஆராமையாலே
இன் கவி பரம கவிகளால் தன் கவி தான்தன்னைப் பாடுவியாது -என்கிறபடியே
வியாச பராசர வால்மீகி ஸூ க சௌநகாதிகளும்
முதல் ஆழ்வார்களும் ஆகிற பாலேய் தமிழரும் பத்தருமான பரம கவிகளாலே பாடுவியாதே
தேவரை ஆம் முதல்வன் இவன் என்று நா முதல் வந்து புகுந்து தூ முதல் பத்தரான
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகளை வாய் முதல் அப்பனாய்தப்புதல் அறச் சொன்ன உதவிக் கைம்மாறு
என்னுயிர் என்ன உற்று எண்ணில்-

இயம் சீதா மம ஸூ தா சஹாதர்ம சாரீதவ
ப்ரதீச்ச சைநாம் பத்ரம் தே பாணிம் க்ருஹணீஷ்வ பாணிநா-என்கிறபடியே
வேந்தர் தலைவனான சனகராசன் எனது பெருமை இராமனுக்கு
காந்தள் முகிழ் விரல் சீதையை கடும் சிலை சென்று இறுக்க உதவிக் கைம்மாறாக கைப் பிடித்தாப் போலே
தாள்களை எனக்கே தலைத் தலை சிறப்பத் தந்த பேருதவிக் கைம்மாறா
தோள்களை ஆரத்தழுவி என்னுயிரை அறவிலை செய்தனன் என்கிறபடியே
உபகார ஸ்ம்ருதி கொண்டும் மார்பும் தோளும் பணைக்கையாலே
ஆரத் தழுவி அறவிலை செய்த ஆத்மா ஸ்வரூபத்தின் உடைய அத்யந்த போக்யதையும்
அனன்யார்ஹ சேஷத்வத்தையும்
அதனுடைய பரா காஷ்டையான ததீய பாரதந்திர பரம புருஷார்த்தையும்
அவனே பிரகாசிக்கப் பெற்று உடையீர் ஆகையாலே
வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே யானாலும் சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
அவன் அடியாரான சிறு மா மனிசர் அடியே கூடும் இது வல்லால் பாவியேனுக்கு உறுமோ
என்று அதிகரித்ததான அந்த புருஷார்த்தத்தில் ஆதார அதிசயத்தையும்
வ்யதிரிக்தமான விஷயங்களில் வைத்ருஷ்ண்யத்தையும் விசதமாக்கி அருளின தேவர்
இப்போது-திரு அத்யயன வ்யாஜத்தாலே

வரையார் மாட மன்னு குருகூரில் திரு வீதிகள் தோறும் சிறப்புடனே புறப்பட்டு உலாவி அருளி
மீண்டு எழுந்து அருளி திரு மஞ்சனம் செய்து அருளுவதாக எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில்

இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த செங்கோலத்த பவளச் செவ்வாய் செந்தாமரைக் கண் என்னம்மான்
பொங்கேழ் புகழ்கள் வாய் வாய்ப்புலன் கொள் வடிவு என்மனத்ததாய்
அங்கேய் மலர்கள் கையவாய் வழி பட்டோட அருளில் இங்கே திரிந்தேற்கு இழுக்கு உற்று என் -என்று
ஆபத்சகனானவன் திருவடிகளில் அகில கரணங்களாலும் உண்டான நிகில கைங்கர்யங்களுமே
அந்த பாகவதர்களுக்கு உகப்பு ஆகையால் பரந்த தெய்வமும் பல்லுலகும் அன்று உடனே விழுங்கி கரந்து உமிழ்ந்த
திருக் குருகூர் அதனுள் பரன் திறத்தில் அந்தக் கைங்கர்யத்தைச்
சிந்தையாலும் சொல்லாலும் செய்கையினாலும் செய்து அருளத் திரு உள்ளம் பற்றி
ததர்த்தமாக திரு மஞ்சனம் செய்ய எழுந்து அருள இருக்கிற இருப்பு என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

————————————————-

திரு அத்யயன உத்சவத்தில் ஒன்பதாம் திருநாள் திருமஞ்சன கட்டியம் –

ந்யசன பஜன பாதாவாப்தி வாங் மாத்ர காந
பிராணி பத கராணாம் முக்தி ருக்தாசபி தஸ்யாம்
அபி ருசிர ஹிதா நாம் கிருஷ்ண வச்ச க்தி யோக்யம்
சட மதன ஜநா நாம் ஸ்நாசி சரவாக சாந்த்யை-

நாயந்தே ! நாயந்தே !
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று யாதும் இல்லை -இத்யாதிகளாலே
நல்ல புதல்வர் ,மனையாள் ,நவையில் கிளை இல்லம் மாடு இவை யனைத்தும் அல்ல வென்று
ஔபாதிக பந்துக்கள் உடைய அபந்துத் வாதிகளையும்
எண்டிசையும் கீழும் மேலும் முற்றவும் உண்டபிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் கண்டீர் துணை-இத்யாதிகளால்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நன்மக்களும் மேலாய்த் தாய் தந்தையரும் அவரே -என்று
சர்வேஸ்வரனுடைய நிருபாதிக பந்துத்வாதிகளையும் உபதேசித்து அருளி-

இப்படி அசேவ்ய சேவாதிகளான அப்ராப்த விஷய பிராவண்யம் கழிகையாலே
அநந்த சாகமாக நிரந்தர அபிவ்ருத்தமான அபி நிவேச அதிசயத்தை யுடையராய்
ஆகம் சேர் நரசிங்கமதாகி -என்கிறபடியே விருத்தமான நரத்வ ஹரித்வங்களை பொருந்தின திருத்தத்தாலே
அரி பொங்கிக் காட்டும் அழகு என்ற சீரிய சிங்கமதாகிய வடிவைக் கண்ட போதே
பயாக்னி கொழுந்திலே தும்பிப் பதம் செய்த வாள் அவுணன் உடைய உடலை வாடின கோரை கீறினால் போலே வளர்ந்த
வாள் உகிராலே அளைந்த கோளரியான அவுணன் உள்ளம் பொருந்தி உறைகிற விளங்கும் சுடர்ச் சோதி உயரத்தொருத்தா என்றே யதுவது என்று
ஒருபடிப் படத் திரு உள்ளம் பற்றி நாளேல் அறியேன் எனக்கு உள்ளன வென்று நித்ய கைங்கர்யத்தை கழித்து-

வைத்தநாள் வரை எத்தனை என்கிற பிரச்னத்துக்கு உத்தரம் தத்தமாவதற்கு முன்னே சைதில்யம் பிறந்து
மல்லிகை கமழ் தென்றலும் மாலைப் பூசலுமாய் மயங்குகையாலே
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் என்கிறபடியே
சரண -சரணவரண பலசித்தியை திருக் கண்ணபுரத்து தரணியாளன் கருணையாலே
மரணாவதியாக்கி தந்தருளப் பெற்றுடையீர் தேவர்
இப்போது திரு அத்யயன வ்யாஜத்தாலே புறப்பட்டு உலாவி அருளி மீண்டு எழுந்து அருளி
மஞ்சன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதராய்க் கொண்டு
எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது -எங்கனே என்னில் –

காலை மாலை கமல மலரிட்டு மாலை நண்ணித் தொழுது எழுமின் -என்று அர்ச்சநாதி அங்க யுக்தமான பக்தியையும்
அதில் அசக்தருக்கு -தனதாள் அடைந்தார்க்கு எல்லாம் சரணமாகும் -என்று -ஸ்வ பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபையான பிரபத்தியையும் –
அதில் அசக்தருக்கு -திருக் கண்ணபுரம் செல்ல நாளும் துயர் பாடு சாராவே -என்று அர்ச்சா ஸ்தலத்தின் உடைய உச்சாரண மாத்ரத்தையும்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப்பத்தும் பாடி யாடிப் பணிமின் -என்று
பூர்வ உகத சர்வ உபாயங்களிலும் அந்வய ஸூன்யர் ஆனவர்களுக்கு ந்ருத்த பிரமாண உக்தமான
இப்பத்துப் பாட்டின் உடைய கீரத்த நத்தையும்
துர்ஜன பீடிதரான அர்ஜுனாதிகளுக்கு தூதனாய் கீதாச்சார்யனைப் போலே
அதிகார அனுகுணமாக நெறி எல்லாம் எடுத்து உரைத்து இருக்கச் செய்தேயும்
அதில் ஆசை இன்றிக்கே ஈசி போமின் என்பர் அளவிலே நாசமான பாசத்தில் நலிவு படுகிற நீசரான
அடியோங்கள் உடைய பிரபல பாப நிபந்தனமான
சகல தாபங்களையும் போக்கி விமலர் ஆக்குகைக்காக எழுந்து அருளி இருக்கும் இருப்பு என்று விண்ணப்பம் செய்யலாய் இரா நின்றது –

—————————————————————–

திரு அத்யயன உத்சவ பத்தாம் திரு நாள் திரு மஞ்சன கட்டியம் –

பர்யாயேண சமேதிதா பகவதா பக்தி பராயா பரம்
ஜ்ஞானம் தே பரமா ச பக்திரிதி யா தத் ப்ராப்திரூபா தசா
தச்சங்காம் சடகோப சம்சமயிதும் சப்ரத்யயம் பிராணி நாம்
சம்ஸ் நாத கரிய யாதசாம் விசத யந்தாம் தாமி வாபாசிபோ.

நாயந்தே
த்ரைவித்ய வருத்த ஜன சிரோ பூஷணமாய்
சாத்விக ஜன சனாதன சம்பத்தாய்
ஆஸ்ரித சர்வ வித பந்து ரூபபூதமுமாய்
அசரண்ய சரணமுமாய் இருக்கையால்

மன்னுயிர்கட்கு எல்லாம் அரனமான சரண பங்கஜங்களும்
நளின நாள லலிதங்கள் ஆகையாலே அவற்றைப் போலான இணைக் காலான கணைக் கால்களும்
யௌவன ப்ரகர்ஷ ப்ரருதோத்போதம் பொழு உத் பானுக்களான ஜானுக்கள்ளும்
கரிப்பிரவர கரங்கள் போலே உருக்களான ஊருக்களும்
கனகாசல தடி போலே இருக்கிற கடி காந்தி லோகாந்தையான படி காந்தையும்

வடபத்ர புடம் போலே ஸூ ந்தரமான துந்தி ஸ்தலமும்
சௌந்தர்ய சரிதாவர்த்த கர்தாபமாய் அதி கம்பீரமான நாபீ சரஸ் ஸூம்
நிரந்தர சஞ்சல புத்தி ஜனகமான மத்திய தேசமும்
அவிரளதரள விராஜிதமாய் அமுகுள வகுள அலங்க்ருதமாய் அதிதரா ஹார பூஷிதம் ஆகையாலே
அநவரத தாஹிச்தமான வஷஸ் ஸ்தலமும்

அவஞ்சகரான அகிஞ்சனருக்கு ஸ்வ ஸ்திதாயியான ஹஸ்த பத்மமும்
அரக்க சாமான தர்க்க ஜாலத்தின் உடைய மாநஹாரியான ஜ்ஞான முத்ரையும்
சம்சார போகி சந்தஷ்ட ஜீவா ஜீவாதுவான க்ரீவா பிரதேசமும்
அகவாயில் அனுராகத்துக்கு வாய்த்தலை போலேயாய்முகிழ் விரிகிற பங்கயமனைய செங்கனி வாயும் திரு முத்து நிரையும்
மகரம் தழைக்கும் தளிரோ என்கிற வர்ண நிர்ணாயகமான கர்ண பாசமும்

சித்தம் சிறை கொள்ளுமதான முத்தின் குழையும்
கற்பகத்தின் வல்லியோ கொழுந்தோ என்கிற உபமானசம்சயத்துக்கு உதாசிகையான நாசிகையும்
கர்ணாந்தர பிரத்யபேஷையாலே சரவண குதூஹலங்களாய் பரவண ரஷண தீஷிதங்களான ஈஷணங்களும்
நயன பங்கஜங்களை வளைந்து படிகிற மதுகர நிகரங்கள் போலே கருத்தை வருத்துமதான திருப் புருவங்களும்
நாள் மன்னு வெண் திங்கள் போல் கோள் மன்னி ஆவி யடுகிற திரு நுகிலும்

ருக்ணே தோகே சர்வ ஜனனீ தத் கஷாயம் பிபந்தீ -என்கிறபடியே கருநாடு காடு எழச் சாத்தின திரு நாமமும்
சம்சார துக்கார்க்க தாப நாசகரமான வாசத் தடம் என்று பேசத் தகுதியான திரு முக மண்டலமும்
வக்தரமாகிற சித்ர பானுவுக்கு பரபாகமாய் அதி காளிகையான அளகாளிகையும்
சேஷித்வத்துக்கு தலையான தண் துழாய் பொன் முடி போலே சேஷத்வத்துக்கு அடியான மணி முடியும்

ஆக இப்படி ஆராகிலும் நீராய் அலைந்து கரையும்படி
ப்ராவண்ய ஜனகமான லாவண்ய ராசி ஒரு வடிவு கொண்டால் போலே இருக்கிற தேவரீர் இப்போது
திரு அத்யயன உத்சவ வ்யாஜத்தாலே

குன்றம் போலே மணி மாட நீடு திருக் குருகூர் அதனுள் நின்ற ஆதிப் பிரான் உலாவி அருளின நெடு வீதிகள் தோறும்
யேன யேன தாதா கச்சதி தேன தேன சஹ கச்சதி -என்கிறபடியே
உலாவி அருளி மீண்டு எழுந்து அருளி
பொருநல் சங்கணித் துறையில் துகில் வண்ணத் தூ நீராலே திரு மஞ்சனம் ஆடி அருளி ஸ்நானா சனத்திலே
நாநாவித கந்த புஷ்பாதிகளால் அலங்க்ருதராய் எழுந்து அருளி இருக்கிற இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில்

ஜ்ஞானாதி கல்யாண குண கண பூஷிதனான சர்வேஸ்வரன் நிதா நஜ்ஞர் ஈடுபடும்படி ஆமத்தை அறுத்து
பசியை மிகுத்து சோறிடுவாரைப் போலே
மயர்வற மதி நலம் அருளினான் -என்கிறபடியே-அஜ்ஞ்ஞானத்தை சவாசனமாகப் போக்கி அருளி
பக்தி ரூபாபன்ன ஜ்ஞானத்தை தந்து அருளி
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்து -என்றும்
காதல் கடலில் மிகவும் பெரிதால் -என்றும்
காதல் உரைக்கில் தோழி மண்டிணி ஞாலமும் ஏழ் கடலும் நீள் விசும்பும் கழியப் பெரிதால் -என்றும்
அதனில் பெரிய என் அவா -என்கிறபடியே
தத்வ த்ரயத்தையும் விளாக் குலை கொள்ளும்படி

பரபக்தி பரஞான பரம பக்தி ரூபேண அந்த பக்தியையும் அபி வருத்தை யாக்கி
என்னை அவா அறச் சூழ்ந்தாயே -என்னும்படி
கடல் போன்ற ஆதாரத்தோடு சோந்து தாபங்களை ஹரித்து
அவா வற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் -என்னும்படி

ஸ்வ சரண கமல ப்ராப்தி பர்யந்தமான பர்வ க்ரமேண விளைத்த சர்வ அவஸ்தைகளையும்
கைய பொன்னாழி வெண் சங்கோடும் காண்பான் அவாவுவன் நான் –
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் -என்றும்
அந்தமில் பேரின்பத்து அடியரொடு இருந்த அளவில் முடிந்த அவாவில் அந்தாதி இப்பத்து என்று
தேவர் தெருள் கொள்ள அருளி இருக்கச் செய்தேயும்
அநாதி பாப வாசனா தூஷித அசேஷ சேமுஷீகர் ஆகையாலே இவ்வர்த்த விசேஷமாக சந்தேஹித்து இருக்கிற
மந்த மதிகளுடைய சங்கா வாகாச லேசங்களை சப்ரத்யயமாக
அவ்வோதசைகளிலே அனுஷ்டானத்தாலே விசதமாக்கா நின்று கொண்டு சமிப்பித்து அருளுவதாக திரு உள்ளம் பற்றி
ததார்த்தமாக திரு மஞ்சனம் செய்து எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது –

———————————————————-

வீடுவிடைத் திருமஞ்சனக் கவி

மேசம் கேசாதி தேவாவிதித நிஜபதம் வ்யூடம் ஆத்யாமரேந்தரம்
ச்வேசம் ஸ்வாசாதிரேக ப்ரவஹித வாசநா பிஷ்டுதம் த்வத்ய க்ருத்வா
கீதம் கீத்வாசத கோதா க்ருதமிஹா தமலம் தர்ப்பயித்வா ச லப்த்வா
கேஹம் தஸ்மாத் க்ருதார்த்த ஸ்தவமிஹ சடரிபோ ஸ்நாசி ந ஸ்ராந்தி சாந்த்யை

நாயந்தே நாயந்தே
ஸ்ரீ யபதியாய் -அவாப்த சமஸ்த காமனாய் –
சமஸ்த கல்யாண குணாத் மகனாய் -ஸ்ரீ வைகுண்ட நிகேத்னாய்
நித்ய ஸூரி பரிஷம் நிரந்தர சேவ்யமான சரண நளிதனாய்க் கொண்டு
நித்ய ஆனந்த நிர்பரனாய் செல்லா நிற்கச் செய்தே

ச ஏகாகீ ந ரமேத -என்று உண்டது உருக்காட்டாதே அசித் விசிஷ்டமான சேதன சமஷ்டி பக்கல்
அருள் புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து -என்கிற படியே பரம காருணிகனாய்
ஸ்வ சரண கமல சமாஸ்ரயண அனுகூலமான கரண களேபரங்களை கொடுக்கக் கோலி-

ப்ரஹ்மாதி ஷூ ப்ரவீ நேஷூ நஷ்டே லோகே சராசரே
ஏகஸ் திஷ்டதி விச்வாத்மா ச து நாராயண பர -என்றும்

ஒன்றும் தேவும் உலகும் உயிரும் மற்றும் யாதுமிலா யன்று நான் முகன் தன்னோடு தேவர் உலகோடு உயிர் படைத்தான் -என்றபடி
சதுர்முக பிரமுக பஹூ முக சிருஷ்டியைப் பண்ணி
ஸ்ருஷ்டரான சேத்னர்களுக்கு நல்லதும் தீயதும் விவேகிக்கைக்கு சாஸ்தரங்களான நேத்ரங்களை கொடுத்து இருக்கச் செய்தேயும்

அஜ்ஞ்ஞான ஆர்ணவ மகனாரான இவர்களை உத்தீர்ணா ஆக்குகைக்கு
மனிசரும் மற்றும் முற்றுமாய் மாயாப்பிறவி பிறந்து -என்கிறபடியே ராம கிருஷ்ணாதி ரூபேண அவதரித்து அருளியும்

இப்படி பண்ணின அவதாரங்கள் தானும் தத் காலி நர்களுக்கே உஜ்ஜீவன மாத்ர சேஷம் ஆகையாலே
தத் அனந்தரகாலீ நரரான அச்மதாதி சகல பாமர ஜன உஜ்ஜீவன அர்த்தமாக
மாட மாளிகை சூழ்ந்து அழகாய திருக் குருகூரிலே வீடில் சீர்ப் புகழ் ஆதிபிரானாய் மேவியும்
மலிந்து செந்நெல் கவரி வீசும் திருக் குருகூர் அதனுள் பொலிந்து நின்ற பிரானே நின்றும்

நிலை அழகிலே கண்ட வாற்றால் தனதே உலகென நின்றான் -என்றும்
நீயும் திரு மகளும் நின்றாயால் -என்றும்
நிலையார நின்றான் -என்றும் சொல்லுகிறபடியே
சர்வ ஸ்மாத் பரன் என்னும்படியை அறுதி இட்டு
ஈடுபட்டு அறிவுடையார் அடங்கலும் ஆஸ்ரயித்து உஜ்ஜீவிக்கும் படி

நல்லார் நவில் குருகூரிலே நித்ய சந்நிதி பண்ணி இருக்கிற குறிய மாண் உருவாகிய
நீள் குடக் கூத்தனை பாடி அருளுவதாக சங்கல்பித்து
ஸ்தோத்ரம் வேத மயம்கர்த்தும் தத்ர திராவிட பாஷயா தத்ர வேதாஸ் சமஸ்தாஸ் ச திராவிட த்வாம் உபாகத -என்கிறபடியே

ருக் யஜூஸ் சாம அதர்வணங்களை -திருவிருத்தம் முதலான திவ்ய பிரபந்த சதுஷ்ட்யமாக்கி
மதிள் அரங்கர் வண் புகழ் மேல் ஆன்ற தமிழ் மறையை அதிகரித்தார்க்கு
உடைந்து நோய்களை ஒடுவிக்குமே -என்றும்
நல்ல பதத்தால் மனை வாழ்வர் கொண்ட பெண்டிர் மக்களே -என்றும்
மீட்சி இன்றி வைகுண்ட மா நகர் மற்றது கையதுவே -என்றும்
ஐஹிக ஆமுஷ்மிக பல பிரதான சஹிதமாக விண்ணோர் பெருமான் தன்னை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி அருளின தேவர்

இப்போது சாத்விக ஜன சார்த்தங்களை க்ருதார்த்தராம்படி திவ்ய உத்சவ வ்யாஜத்தாலே
கோயில் நின்றும் புறப்பட்டு அருளி விவித விதான புஜ்ஞ ரஞ்சிதமாய் செழு மா மணிகள் சேரும்
திரு மா மணி மண்டபமான இத் திரு ஓலக்கத்திலே ஒரு நாயக ரத்னம் அங்குரித்தால் போலே
மஜ்ஞன வேதிகா மத்யத்திலே ஜ்ஞான முத்ரா சஹிதராய் கொண்டு ஏறி அருளி
பொங்கிள யாடை அரையில் சாத்தி – திருச் செய்ய முடியும் ஆரமும் படையுமான திவ்ய அலங்காரத்துடனே
அபிஷேக ஜலார்த்த காத்ரராய்
சாத்விக ஜன நேத்ரோத்வச காரராய் -ஆர்த்த வசன பூஷண பூஷிதராய் எழுந்து அருளி இருக்கும் இருப்பு இங்கனே இரா நின்றது
எங்கனே என்னில்

மேசம் மா -என்ற திரு நாமம் உடைய பெரிய பிராட்டியாருக்கு நாயகனாய்
கேசாதி தேவாவிதித நிஜபதம் –
க என்றும் ஈசன் என்றும் சொல்லப் படுகிற ப்ரஹ்ம ருத்ராதிகள் தொடக்கமான சர்வ தேவதைகளாலும்
அறிய அரியதான ஸ்ரீ வைகுண்டத்தை இருப்பிடமாக உடையவனாய் –
வ்யூடம்
வி -பஷி வாசகம் -த்ரயீமயனான திருவடியை வாஹனமாகக் கொண்டு
ஆத்யாமரேந்தரம் –
முன்னை அமரர் -என்கிறபடியே ஆத்யரான அமரர்கள் அதிபதி யாய்
ச்வேசம் –
ஆத்மேச்வரம் -என்கிறபடி தனக்குத் தானே நியாமகனாய்

ஆக இப்படி
ஸ்ரீ யபதித்வ -பரமபத நிலயத்வ -கருட வாகனத்வ -ஸூரி போக்யத்வ –
நிரந்குச ஸ்வா தந்த்ரங்கள் உடன் கூடிய சர்வ ஸ்மாத் பரனான சர்வேஸ்வரனை
ஸ்வாசாதிரேக ப்ரவஹித வாசநா பிஷ்டுதம் த்வத்ய
க்ருத்வா –
அவாவில் அந்தாதி -என்கிறபடியே
தேவரீர் உடைய பக்தி பிரகர்ஷத்தாலே வழிந்து புறப்பட்ட சொற்களாலே வாயாரப் புகழ்ந்து
கீதம் கீத்வாசத கோதா க்ருதமிஹா தமலம் தர்ப்பயித்வா ச –

அவ்வளவும் அன்றிக்கே
பெரியாழ்வார் உடைய குடல் துவக்காலே தேவரீருக்கு திரு மகளாரான ஆண்டாள் உடைய சங்கத் தமிழ் மாலையான
திருப் பாவையை பாடி அருளி
தேவரீர் உடைய திவ்ய பிரபந்த ஸ்ரவணத்தாலே ப்ரீதனான அவனை மிகவும் பிரியப் படுத்தி
லப்த்வா கேஹம் தஸ்மாத் –

திரு அத்யயன உத்சவ அர்த்தமாக
பத்னீ பரிஜனாதிகள் உடன் தேவரீர் உடைய திருப் புளிக் கீழ் வீட்டிலே
பத்து நாளும் எழுந்து அருளி இருந்து
மேவி உறை கோயிலிலே ஏறி அருளுவதாக உத்யோகித்து அருளிய பொலிந்து நின்ற பிரானை
ராஜ நீதியை அனுசரித்து நின்று
ஒரு ரசத்தை விளைப்போம் என்று பார்த்து
வீடு தர வேண்டும் என்று அபேஷித்து
சசானமாகப் பெற்று
க்ருதார்த்த ஸ்தவமிஹ சடரிபோ –

ஆக இப்படி அத்தலைக்கும் சர்வ பிரகார சாவஹர் ஆகையாலே க்ருதார்த்தரான தேவரீர் இப்போது
ஸ்நாசி ந ஸ்ராந்தி சாந்த்யை –
ஸ்நான வ்யாஜத்தாலே படி களைந்து மதகு திறந்தால் போலே ஒரு மடை கொள்ள ப்ரவஹிக்கிற தேவரீருடைய
திருமேனி அழகு வெள்ளத்திலே
முழுக்காட்டி அடியோங்கள் உடைய சாம்சாரிக சகல தாபங்களும் ஆறுவதாக
எழுந்து அருளி இருக்கிறாப் போலே இரா நின்றது –

————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ மதுரகவி பிரப்ருதிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: