ஸ்ரீ பாஞ்சராத்ர ஆகம சாஸ்திரத்தில் உள்ள – ஸ்ரீ லஷ்மீ தந்த்ரம் –அத்தியாயம் -5-

யா சாஹம்தா ஹரே ராத்யா சார்வாகார சநாதநீ
சுத்த ஆனந்த சிதாகாரா ஸர்வத சமதாம் கதா –5-1-

ப்ரஹ்மத்தின் அஹம் அர்த்தமே நான் -அஹம் என்பதே பல ரூபங்கள் -அநாதி ஆனந்த ஞான மயம்

சாஹம் சிச்ருஷயா யுக்தா ஸ்வல்பால்பே நாத்ம பிந்துநா
ஸ்ருஷ்டிதம் க்ருதவதீ சுத்தாம் பூர்ண ஷாட்குண்ய விக்ரஹாம்–5-2-

அனைத்தையும் ஸ்ருஷ்டிக்க எனக்கு இச்சை பிறந்த பொழுது சுத்த ஸ்ருஷ்ட்டியை தொடங்குகிறேன் –
அப்பொழுது எனது சிறிய பகுதிகளானவை என்னுடைய ஆறு குணங்களையும் முழுமையாகக் கொண்டு வடிவம் எடுத்த படி இதனைச் செய்கின்றன

அநுஜ்ஜித ஸ்வரூபாஹம் மதீயே நால்ப பிந்துநா
மஹா லஷ்மீ சமாக்யாதா த்ரை குண்ய பரிவர்த்திநீ -5-3-

எனது முழுமையான வடிவு இது போன்று பிரிவது இல்லை -எனது ஒரு சிறு பகுதியே மூன்று குணங்களின்
வடிவாகத் தோன்றி இவற்றைச் செய்கின்றன -இந்தப் பகுதியே மஹா லஷ்மீ எனப்படுகிறாள் –

ரஜஸ் பிரதான தத் ராஹம் மஹா ஸ்ரீ பரமேஸ்வரீ
மதீயம் யத்தமோ ரூபம் மஹா மாயேதி ச சம்ருதா -5-4-

ரஜோ குணம் மிக்கு உள்ள பகுதி மஹா ஸ்ரீ என்றும் பரமேஸ்வரீ என்றும்
தமஸ் குணம் மிக்கு உள்ள பகுதி மஹா மாயா என்றும் சொல்லப்படும்

மதீயம் சத்த்வ ரூபம் யன் மஹா வித்யேதி சா சம்ருதா
அஹம் ச தே காமின்யவ் தா வயம் திஸ்ர ஊர்ஜிதா–5-5-

சத்வ குணம் மட்டுமே நிறைந்த மஹா லஷ்மியின் பகுதி மஹா வித்யா எனப்படும்-மஹாஸ்ரீ எனப்படும் நானும்
மற்ற இருவரும் மஹா மாயா வித்யா மூவரும் சேர்ந்து இணைந்து ஸ்ருஷ்ட்டி செய்ய விரும்பிய படி உள்ளோம் –

ஸ்ருஷ்டவத் யாஸ்து மிதுநாந்யநு ரூபாணி ச த்ரிதா
மதீயம் மிதுனம் யத்தந் மாநஸம் ருசிராக்ருதி –5-6-

எங்கள் மூவருடன் இருந்து மூன்று ஆண் பெண் ஜோடிகள் உருவாகின்றன -எனது மனசால்
ஸ்ருஷ்ட்டி செய்யப்பட இந்த மூன்று ஜோடிகளும் மிகவும் அழகாகவே காணப்படும் –

ஹிரண்ய கர்ப்பம் பத்மாஷம் ஸூந்தரம் கமலாசனம்
ப்ரத்யும்னாம் சாதிதம் வித்தி ஸம்பூதம் மயி மாநஸம்–5-7-

எனது ப்ரத்யும்னன் அம்சத்துக்கும் மஹா ஸ்ரீ க்கும் ஹிரண்ய கர்ப்பம் என்பது அழகான கண்களுடனும் அழகான உடலுடனும்
தாமரையில் அமர்ந்ததாகவும் தோன்றுகிறது -இந்தப் படைப்பு எனது ப்ரத்யுமந அம்சத்தால் மானசீகமாகப் படைக்கப் படுவதாகும்-

ததா விதிர் விரிஞ்சச் ச ப்ரஹ்மா ச புருஷ சம்ருத
ஸ்ரீ பத்மா கமலா லஷ்மீ ஸ் தத்ர நாரீ ப்ரகீர்த்திதா -5-8-

அந்த ஹிரண்ய கர்ப்பத்தில் இருந்து ஆண்களாகிய தாதா-வி தாதா -விரிஞ்சி -பிரம்மன் -ஆகியோரும்
ஸ்ரீ – பத்மா -கமலா – லஷ்மீ ஆகியோரும் வெளிப்படுகின்றனர்-

சங்கர்ஷண அம்சதோ த்வந்த்வம் மஹா மாயா ஸமுத்பவம்
த்ரி நேத்ரம் சாரு சர்வாங்கம் மாநஸம் தத்ர யா புமாந் -5-9-

மஹா மாயா என்ற எனக்கும் சங்கர்ஷண அம்சத்துக்கும் மானசீகமாக நிகழும் தொடர்பு மூலம் உண்டாகும்
ஜோடிகள் மூன்று கண்களுடன் அழகான உடல் அமைப்புகளுடன் உள்ளனர் –

ச ருத்ர சங்கர ஸ்தாணு கபர்த்தி ச த்ரி லோசந
தத்ர த்ரயீஸ்வரா பாஷா வித்யா சைவாஷரா ததா -5-10-
காம தேனுச் ச விஜ்ஜேய ச ஸ்த்ரீ கவ்ச்ச ஸரஸ்வதீ
அநிருத்த அம்ச ஸம்பூதம் மஹா வித்யா ஸமுத்பவம் -5-11-
மிதுனம் மாநஸம் யுத்தத் புருஷ தத்ர கேசவ
விஷ்ணு கிருஷ்ணோ ஹ்ருஷீகேசா வாஸூ தேவோ ஜனார்த்தன -5-12-

இவர்களில் ருத்ரன் -சங்கரன் -ஸ்தாணு -கபர்த்தி -த்ரி லோசனன் -ஆகியோர் புருஷர்கள் ஆவர் –
மூன்று ஈஸ்வரர்களாகிய வித்யா -பாஷா -அக்ஷரா -காமதேனு -மற்றும் சரஸ்வதி ஆகியவர்கள் ஸ்த்ரீகள் ஆவர் –
மஹா வித்யா என்ற எனக்கும் அநிருத்தனுக்கும் ஏற்படும் மானசீகமான தொடர்பு காரணமாக சில ஜோடிகள் உத்பத்தி ஆகின்றனர் –
இப்படியாக மஹா வித்யாவுக்கு அநிருத்தனுக்கும் மானசீக தொடர்பு காரணமாக பிறந்தவர்களில் புருஷர்களாக உள்ளவர்கள்
கேசவன் விஷ்ணு கிருஷ்ணன் ஹ்ருஷீகேசன் வாஸூ தேவன் மற்றும் ஜனார்த்தனன் ஆவர் –

உமா கௌரீ ஸதீ சண்டா தத்ர ஸ்த்ரீ ஸூபகா ஸதீ
ப்ராஹமணஸ்து த்ரயீ பத்னீ சா பபூவ மமாஜ்ஞய–5-13
ருத்ரஸ்ய தயிதா கௌரீ வாஸூ தேவஸ்ய ச அம்புஜா
ரஜஸ் ச தமஸ் ச்ச ஏவ சத்தவஸ்ய ச விவர்த்தனம் –5-14-

இவர்கள் உமா -கௌரீ -ஸதீ -சண்டா -ஆகியோர் ஆவர் -எனது ஆணைப் படி மூன்று பெண்கள் மூன்று ஆண்களுக்குப் பத்னீ யானார்கள்
அவர்களில் ஸூபகா என்பவள் பிரமனுக்கும் -கௌரீ ருத்ரனுக்கும் -அம்புஜா வஸூ தேவனுக்கும் -பத்னீ யானார்கள்
இப்படியாக ரஜஸ் தமோ மற்றும் சத்வ குணங்களின் ஸ்ருஷ்ட்டி கூறப்படுவது நிறைவு பெறுகிறது –

ஆத்யம் பர்வ ததே தத்தே கதிதம் மிதுன த்ரயம்
மத்யமம் பர்வ வஷ்யாமி குணா நாம் தத் இதம் ஸ்ருணு -5-15-
தொடக்கத்தில் என்னால் ஸ்ருஷ்டிக்கப்பட்ட மூன்று ஜோடிகளை சொன்ன பின்பு
இந்த குணங்கள் குறித்த ஸ்ருஷ்டியின் இடைப்பட்ட கால கட்டத்தைப் கூறுவதை கேட்ப்பாயாக –

பாஷயா சக சம்பூய விரிஞ்ச அண்ட மஜீ ஜனத்
மத் ஆஜ்ஞயா பிபேதைதத் ச கௌர்ய ஸஹ சங்கர –5-16-

பிரமனும் சரஸ்வதியாக இணைந்து அண்டத்தை உத்பத்தி செய்தனர் -அதன் பின்னர் எனது ஆணைக்கு ஏற்ப
ருத்ரனும் கௌரியுமாகச் சேர்ந்து அந்த அண்டத்தில் பல விதமான பேதங்களை உண்டாக்கினர் –

அண்ட மத்யே பிரதானம் யத் கார்யம் ஆ ஸீத்து வேதச
தத் ஏதத் பாலயாமாச பத்மயா ஸஹ கேசவ –5-17-

அந்த அண்டத்தில் பிரதானம் உத்பத்தி செய்யப்பட்டது -இதனை பிரம்மன் செய்தான் –
அதன் பின்னர் அந்த பிரதானத்தை கேசவனும் பத்மாவும் பாதுகாத்தனர் –

தத் ஏதத் மத்யமம் பர்வ குணாநாம் பரிகீர்த்திதம்
த்ருதீயம் பர்வ வஹ்யாமி ததிஹை கமநா ஸ்ருணு -5-18-

இப்படியாக குணங்களின் மத்யப்பகுதி உத்பத்தி என்னால் கூறப்பட்டது
இனி மூன்றாவது பகுதி குறித்து நான் கூறப்போவதை கேட்ப்பாயாக

அண்ட மத்யே பிரதானம் ஹி யத் தத் சத சதாத்மகம்
த்ரை குண்யம் ப்ரக்ருதி வ்யோம ஸ்வ பாவோ யோநி அக்ஷரம் -5-19-

அண்டத்தின் நடுவுள்ள பிரதானம் -அனைத்தையும் தன்னுள் அடக்கி -தன்னுடைய காரணப் பொருளாக மூன்று குணங்களையும்
கொண்டுள்ளது -அனைத்துக்கும் பிறப்பிடமாகவும் -தன்னுள் ஏதும் இல்லாததும் -அழியாததாயும் உள்ளது –

தத் ஏதத் சலிலீ க்ருத்ய தத்வம் அவ்யக்த சம்ஜஞகம்
ஹ்ருஷீகேச ச பகவான் மத்மய ஸஹ வித்யயா -5-20-

அதன் பின்பு அவ்யக்தம் எனப்படும் பிரதானம் நீராக மாற்றப்பட்டு அதன் மீது ஹ்ருஷீ கேசன் சயனித்தான்
அவன் திருவடிகளில் பத்மாவும் வித்யாவும் காணப்பட்டனர் –

அப்ஸூ ஸம்சயனம் சக்ரே நித்ரா யோகம் உபாகதா
யாசா ப்ரோக்தா மஹா காளீ ச நித்ரா தாமஸீ அபூத்-5-21-

சயனித்த ஹ்ருஷீகேசன் யோக நித்திரையில் ஆழ்ந்தான் –
மஹா காளீ எனப்படுமவள் தாமசம் நிறைந்த அவனுடைய நித்திரையாக மாறினாள்

ச யா நஸ்ய ததா பத்மம் அபூந் நாப்யாம் புரந்தர
தத் கால மய மாக்யாதாம் பங்கஜம் யத பங்கஜம் –5-22-

அப்போது ஒரு அழகிய தாமரை மலர் வெளி வந்தது -மண்ணில் இருந்து வெளிவராமல்
திரு நாபியில் இருந்து வெளிவந்த அந்தத் தாமரை கால மயம் எனப்பட்டது

ஜலாதி கரணம் பத்மம் ஆதர புஷ்கரம் ததா
சக்ரம் ச புண்டரீகம் சேத்யேவம் நாமாநி தஸ்ய து –5-23-

தண்ணீரில் இருந்து தோன்றாமல் திரு நாபியில் இருந்து வெளிப்பட்ட அந்த தாமரை –
பத்மம் -ஆதாரம் -புஷ்கரம் -சக்ரம் -புண்டரீகம் -என்ற பல பெயர்களால் அழைக்கப் பட்டது –

சித் அசித் தத்வமாக்யாதம் சேதனச் சித் ப்ரகீர்த்தித
அசித் த்ரை குண்யம் இதி யுக்தம் கால அபர ஸ்ம்ருத-5-24-

இந்திரன் மஹா லஷ்மியிடம் -சித் அசித் -இரண்டு தத்துவங்களை விளக்கினீர் –
சித் ஞானமயம் என்றும் அசித் மூன்று குணங்களை உள்ளடக்கியது என்பதையும் அருளிச் செய்தீர்
காலம் என்பதைப் பற்றி நீர் அருளிச் செய்ய வேண்டும் என்றான் –

அசித் அம்ச அபர கால த்ரை குண்யம் அபரம் ஸ்ம்ருதம்
பலாதிகம் து யத் பூர்வம் ஷாட் குண்யே த்ரிகம் ஈரிதம்–5-25-

அசித் அம்சமான காலம் -மூன்று குணங்களையும் அடக்கியதாகவே உள்ளது -இங்கு சத்வம் ரஜஸ் தமஸ் பற்றி சொல்ல வில்லை –
இவை பலம் ஐஸ்வர்யம் வீர்யம் என்பதே –
ஞான பலம் ஐஸ்வர்யம் சக்தி வீர்யம் தேஜஸ் ஆறு குணங்களில் உள்ள இம் மூன்றையும் முதலில் பார்ப்போம் –

தத் ஏதத் கால ரூபேண ஸ்ருஷ்டவ் சம்பரிவர்த்ததே
ஸ்வ தச்ச அபரிணாம் இதம் த்ரை குண்யம் பரிணாமிதத் -5-26-

மாறாமல் உள்ள இந்த மூன்று குணங்களும் ஸ்ருஷ்ட்டி காலத்தில் தோன்றுகின்றன –
இந்தக் காலம் என்பது மாறுபாடு அடையாமல் உள்ளது -குணங்கள் மாறுபாடு அடைவது இல்லை –
ஆனால் அவை சேரும் போது ஏற்படும் மாற்றம் இருக்குமே -இந்தக் காலம் என்பது மூன்று குணங்களின் சேர்க்கை மாற்றம் காரணமாக உண்டானது –

கால கால்யாத்மகம் த்வந்த்வம் அசித் ஏதத் ப்ரகீர்த்திதம்
ஸ்ருஜ்ந்த்யா விவிதான் பாவாந்மம தேவ்யா மஹாஸ்ரீய–5-27-

காலமும் -அதன் விளைவுகளும் -கால்ய – அசித் வஸ்துக்களாக உள்ளன –
எனது ஓர் அம்சமான மஹா ஸ்ரீ என்பவள் இடம் காலம் ஒரு கருவியாக உள்ளது
இதன் மூலம் அவள் நொடிக்கு நொடி அனைத்தையும் படைத்தபடி உள்ளாள் –

கால அயம் கரணத்வேந வரத்திதே மந்மய சதா
தஸ்மாத் கால மயாத் பத்மாத் விஷ்ணு நாபி ஸமுத்பவாத் –5-28-
ப்ரஹ்மா வேத மயோ ஜஜ்ஜே ச த்ரய்யா ஸஹ வீர்யவான்
ஹிரண்ய கர்ப்ப உக்தோ யா பூர்வம் லஷ்மீ ஸமுத்பவ –5-29-

எல்லா செயல்களும் காலத்தின் மூலம் நடக்கின்றன –அதாவது காலத்தை எனது ஸ்வரூபமாகக் கொண்டு நான் நடத்திக் கொள்கிறேன்
மஹா விஷ்ணுவின் திரு நாபியில் இருந்து வெளிப்பட்ட காலமயமான தாமரை மலரில் வேதங்களுடன் கூடிய
பிரம்மன் தனது மனைவி த்ரயீ என்னும் சரஸ்வதி உடன் வெளிப்பட்டான்
இந்த பிரம்மனே முன்பு ஒரு கால கட்டத்திலே ஸ்ரீ லஷ்மீ மூலமாக வெளிப்பட்ட ஹிரண்ய கரப்பான் ஆவான் –

மஹா காளீ சமுத் பூதா யா சா நாரீ த்ரயீ ஸ்ம்ருதா
ததே தத் மிதுனம் ஜஜ்ஜே விஷ்ணோர் நாபி சரோருஹாத் –5-30-

த்ரயீ என்ற இவள் மஹா காளியிடம் இருந்து தோன்றியவள் –
இப்படியாக விஷ்ணுவின் திரு நாபியில் இருந்து பிரம்மன் த்ரயீ ஜோடி வெளிப்பட்டது –

பத்மம் பத்ம உத்பவ த்வந்த்வம் தத் ஏதத் த்ரிதயம் ஸஹ
மஹான் தமஸ ஆக்யாதோ விகார பூர்வகைர் புதை -5-31-

இந்த தாமரை மலர் -பிரம்மன் -த்ரயீ என்னும் சரஸ்வதி மூன்றும் இணைந்து மஹான் உருவாகக் காரணம்
இந்த மஹான் தாமசம் நிறைந்ததாகவே உள்ளது -இப்படியே அனைத்தும் உணர்ந்தவர்கள் முன்பு கூறி உள்ளார்கள் –

ப்ரானோ ஹிரண்ய கர்ப்பச் ச புத்திச்சா இதி த்ரிதா பிதா
பத்ம பும்ஸ்த்ரீ சமலம்பாந் மஹாத்த்வம் தஸ்ய சப்த் யதே -5-32-

இந்த மஹான் உருவாக காரணமான தாமரை மலர் பிராணனையும் -ஹிரண்ய கர்ப்பன் என்பது ஆணையும் –
புத்தி என்பது பெண்ணையும் குறிப்பதாக உள்ளது –

குண ப்ராணஸ்ய து ஸ்பந்தோ புத்தேரத்ய வசாயதா
தர்மாதிக தர்மாத்யம் த்வயம் பும்சோ குணோ மத –5-33-

பிராணன் என்பதன் தன்மையானது நகர்தல் அதிர்தல்-ஸ்பந்தம் -எனலாம் /
புத்தியின் தன்மை சிந்தித்தல் அத்யாவசியம் / புருஷர்களின் லக்ஷணம் என்பது தர்மம் அதர்மம் என்பதாகும்

தர்மோ ஞானம் ச வைராக்யம் ஐஸ்வர்யம் சேத்தி வர்ணித
தர்மாதி கோருணோ யஸ்மாத் அதர்மாத்யா ப்ரகீர்த்திதா -5-34-

தர்மம் என்பது -தர்மம் -ஞானம் -வைராக்யம் -மற்றும் ஐஸ்வர்யம் -ஆகியவற்றைத் தன்னுள் அடக்கியதாகும்
இவற்றின் எதிர்மறை -அதர்மம் -என்பது -அதர்மம் -அஞ்ஞானம் -வைராக்யம் இல்லாமை -மற்றும் குறைகள் உடன் இருத்தல் என்பவை –

மஹாந்தம் ஆவி சாந்த்யேநம் ப்ரேரயாமி ஸ்வ ஸ்ருஷ்டயே
ப்ரேர்யாமாணத் தாத்தா தஸ்மாத் அஹங்காரச்ச ஜஜ்ஜிவாந் –5-35-

ஸ்ருஷ்டியின் பொருட்டு நான் அந்த மஹான் என்பதில் பிரவேசித்தேன்
இந்த செய்ய மூலமாக மஹத் என்ற அதில் இருந்து அஹங்காரம் வெளிப்பட்டது

பூர்வம் ய சங்கர ப்ரோக்தா மஹா மாயா ஸமுத்பவ
யா பத்னீ தஸ்ய கௌரீ சா ஜஜ்ஜே அபிமதிரத்ர து –5-36

மஹா மாயாவில் இருந்து வெளிப்பட்டவளும் -சங்கரின் பத்னியும் ஆகிய கௌரி என்னுடையது என்ற எண்ணமாக வடிவம் எடுத்தாள்-
நான் என்பது அஹங்காரம் -எனது என்பது அஹமதி என்பதாகும்

ஆவிஸ்ய அமும் அஹங்காரம் ஸ்ருஷ்டயே ப்ரேரயாம்யஹம்
ச பபூவ த்ரிதா பூர்வம் குண வ்யதிக ராத்ததா –5-37-

அந்த அஹங்காரம் என்பதில் பிரவேசித்த நான் அதனை மேலும் வளரச் செய்கிறேன் –
மூன்று குணங்களின் காரணமாக அந்த அஹங்காரம் என்பது மூன்று விதமாக உருவெடுத்தது –

தாமஸ தத்ர பூதாதிஸ் தஸ்ய சர்வம் இதம் ஸ்ருணு
பூதாதே சப்த தந் மாத்ரம் தந் மாத்ராத் சப்த சம்பவ -5-38-

தாமஸ குணத்தின் பாதிப்பு காரணமாக அஹங்காரத்தில் இருந்து பூதாதி உத்பத்தி ஆகிறது
இந்த பூதாதியில் இருந்து சப்தத்தின் அடிப்படை தந் மாத்திரை வெளிப்படுகிறது
இந்த சப்த தந் மாத்ரையில் இருந்து சப்தம் உண்டாகிறது –

மத் ப்ரேரிதாத் சப்த மாத்ராத் ஸ்பர்ச மாத்ரம் பபூவ ஹா
ஸ்பர்சஸ் து ஸ்பர்ச தந் மாத்ராத் ப்ரேரிதாந் மயா -5-39-

சப்தம் என்ற அதில் இருந்து எனது தூண்டுதலின் காரணமாக ஸ்பர்சம் என்பதின் அடிப்படை தந் மாத்திரை வெளிப்படும்
இந்த ஸ்பர்ச தந் மாத்ரையில் இருந்து ஸ்பர்சம் வெளிப்படுகிறது –

தத் ஆஸீத் ரூப தந் மாத்ரம் தஸ்மாத் ச ப்ரேரிதாந்மயா
ரூபம் ஆவிர்ப்ப பூதாத்யம் ரஸ மாத்ரம் தத பரம் -5-40-

ஸ்பர்ச தந் மாத்ரையில் இருந்து ரூப தந் மாத்திரை வெளிப்படுகிறது
இந்த ரூப தந் மாத்ரையில் இருந்து எனது தூண்டுதலின் காரணமாக ரஸ தந் மாத்திரை வெளிப்படுகிறது –

ரஸ மாத்ராந் மயா ஷிப்தாத் தஸ்மாஜ்ஜ் ஜே ரஸஸ்தத
கந்த தந் மாத்ரம் அபி ஆஸீத் தஸ்மாத் ச ப்ரேரிதாந் மயா -5-41-

இந்த ரஸ தந் மாத்ரையில் இருந்து எனது தூண்டுதலின் காரணமாக ரசம் என்னும் நீர் வெளிப்பட்டது
அதில் இருந்து கந்த தந் மாத்திரை வெளிப்பட்டது –

சுத்தோ கந்த ஸமுத்பூத இதீயம் பவ்திகீ பிதா
மாத்ராணி ஸூஷ்ம பூதாநி ஸ்தூல பூதாநி ச அபரே -5-42-

கந்த தந் மாத்ரையில் இருந்து கந்தம் வெளிப்பட்டது -தந் மாத்திரைகள் ஸூஷ்மம் -மற்றவை அனைத்தும் ஸ்தூலம்

சப்தா தயா சமாக்யாதா குணா சப்தாதயஸ்து யே
ஸ்தூல பூதா விசர்க்காஸ்தே நான்யே சப்தா தயோ குணா -5-43-

சப்தம் முதலியவை அந்தந்த தந் மாத்திரைகளின் வெளிப்பாடாகாவே உள்ளன
அவை இல்லாமல் தனியாக இவை இருக்க இயலாதே –

சாந்தத்வம் ச ஏவ சோதரத்வம் மூடத்வம் ச இதி தத் த்ரிதா
சத்வாத் உந்மேஷ ரூபாணி தான ஸூஷ்மேஷூ சந்தி ந-5-44-

சத்வம் முதலான குணங்களின் வெளிப்பாடாக உள்ள -சாந்தமாக இருத்தல் -அசைதல் -அறிவற்று இருத்தல்
முதலிய தன்மைகள் ஸூஷ்ம நிலையில் காணப் பட மாட்டாது

தேந தந் மாத்ரதா தேஷாம் ஸூஷ் மாணாம் பரி கீர்த்தி தா
ஸூ க துக்காதிதாயித்வாத் ஸ்தூ லத்வம் இதரத்ர து –5-45-

கீழே சொன்ன காரணத்தால் ஸூஷ்ம மாக உள்ள அனைத்தும் தன்மாத்திரைகள் தன்மைகளை அப்படியே கொண்டு உள்ளன என்று கூறப்படுகின்றன –
மற்ற அனைத்தும் சுக துக்கங்களை அளித்தபடி-வெளிப்படுத்தியபடி – உள்ளதால் -அவை ஸ்தூலத்தின் தன்மை கொண்டுள்ளன என்றதாகிறது –

ஸ்தூல நாமேவ பூ தா நாம் த்ரிதா வஸ்தா ப்ரகீர்த்தி தா
ஸூ ஷ் மாச்ச பித்ரு ஜாஜ்ச ஏவ ப்ரபூத இதி பேதத–5-46-

ஸ்தூல மான வஸ்துக்கள் அனைத்தும் மூன்று வித நிலைகளில் -ஸூஷ்மம் -பித்ருஜம் -ப்ரபூதம் -என்பதாகும்

கடாத்யா விவிதா ப்ரஹ்மா ப்ரபூத இதி சப்த்யதே
சுக்ல சோனீத ஸம்பூதா விசேஷா பித்ருஜா சம்ருதா -5-47-

கடம் போன்றவை ப்ரபூதா என்றும் -இரத்தத்துடன் விந்து கலப்பதால் உண்டாகும் உயிர்கள் அனைத்தும் பித்ருஜம் எனப்படும் –

ஸூஷ்மாஸ் து பஞ்ச பூதா ஸ்யு ஸூஷ்ம தேஹ வ்யபாஸ்ரய
சர்க்கோ பூதாதி ஜோ ஹி ஏவம் க்ரமச பரிகீர்த்தித–5-48-

ஸூஷ்ம நிலையானது பஞ்ச பூதங்களான ஆகாயம் காற்று நெருப்பு பூமி ஆகியவற்றுடன் கூடியது
இதன் மூலம் ஸூஷ்ம நிலையில் உள்ள தேகம் உண்டாகிறது
இப்படியாக பூதாதி என்பதில் இருந்து அனைத்தும் தோன்றும் விதமானது நிறைவு செய்யப்பட்டது –

அஹங்காரஸ்ய யாவம்சவ் ரஜஸ் சத்வ மயம் ஆச்ரயவ்
வைகாரிக இதி ப்ரோக்த சாத்த்விகோ அஸ்தயோ பர-5-49-

சத்வம் மற்றும் ரஜஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய அஹங்காரம் என்பதில் சத்வம் மட்டும் உள்ள பகுதி யானது வைகாரிகம் எனப்படும்

தைஜஸ் கதித சத் பிஸ்தயோ ஸ்ருஷ்ட்டி மிமாம் ஸ்ருணு
வைகாரிகாத் அஹங்காராத் ஆஸீத் ஸ்ரோத்ராதித் இந்திரியம் -5-50

அஹங்காரம் என்பதில் ரஜஸ் மட்டும் உள்ள பகுதி தைஜஸம் எனப்படும்
இவற்றில் இருந்து மற்றவை தோன்றுவதை மேலே சொல்வேன்
ஞான இந்திரியங்கள் அனைத்தும் வைகாரிக அஹங்காரத்தில் இருந்து வெளிப்படுகின்றன

கர்ம இந்திரியம் ச வாகாதி தைஜஸாத் ஸம்ப்ரவர்த்ததே
உபயஸ்மாத் ததச் சாஸீத் புத்தி கர்ம இந்திரியம் மன–5-51-

வாக்கு முதலான கர்ம இந்திரியங்கள் அனைத்தும் தைஜஸ அஹங்காரத்தில் இருந்து தோன்றுகின்றன
கர்ம ஞான இந்திரியங்களின் கலவையான புத்தி என்பது வை காரிகம் தை ஜசம் ஆகிய இரண்டிலும் இருந்தும் தோன்றுகிறது

ஸ்ரோத்ரம் த்வக் ச ஏவ ச ஷச்ச ஜிஹ்வா த்ராணாம் ச பஞ்சமம்
புத்தி இந்த்ர்யாணி பஞ்சாஹூ சக்தி ரேணா மதாத்மிகா-5-52-
வாக் ச ஹஸ்தவ் ச பாதவ் ச ததோ பஸ்தம் ச பாயு ச
கர்ம இந்த்ரியாணி பஞ்சா ஹூ சக்திரேண மதாத்மிகா -5-53-

ஐந்து கர்ம இந்திரியங்களின் சக்தியாகவும் நானே உள்ளேன் –
வாக் பாணி பாதம் ததோ பஸ்தம்-ஐந்தும் தானே கர்ம இந்த்ரியங்கள் -அவற்றின் சக்தியும் நானே

யா சா விஞ்ஞான சக்திர் மே பாரம்பர்ய க்ராமாகதா
புத்தி இந்த்ரியாணி அதிஷ்டாய விஷயேஷு ப்ரவர்த்ததே –5-54-
க்ரியா சக்திச் ச யா சா மே பாரம்பர்ய க்ராமாகதா
கர்ம இந்த்ரியாணி அதிஷ்டாய கர்த்தவ்யேஷூ ப்ரவர்த்ததே -5-55-

சர்வஞ்ஞனாக சர்வசக்தியாக நானே இந்த உத்பத்திகளில் இறங்கி ஞான இந்த்ரியங்களின் செயல்களையும்
செய்ய வைத்து தங்களுக்கான பொருள்களை உணர இயல்கிறது –
கர்ம இந்திரியங்களை அவற்றின் செயல்களில் ஈடுபடுத்துகிறது –

ஸ்ரோத் ரஸ்ய விஷய சப்த ஸ்ரவணம் ச க்ரியா மதா
த்வ சச்ச விஷய ஸ்பர்ச ஸ்பர்சநம் ச கிரியா மதா –5-56-
சஷூஷோ விஷயோ ரூபம் தர்சனம் ச க்ரியா மதா
ஜூஹ்வாயா விஷயோ ரஸ்யோ ரசனம் ச க்ரியா மதா–5-57-
க்ராணஸ்ய விஷயோ கந்த ஆக்ராணம் ச க்ரியா மதா
வ்ருத்தயோ விஷயேஷ் வஸ்ய ஸ்ரோத்ராதே ஸ்ரவணாதய –5-58-
ஆலோச நாதி கத்யந்தே தர்மி மாத்ர க்ரஹச்ச ச
திக் ச வித்யுத் ததா ஸூர்ய சோமோ வஸூ மதீ ததா -5-59-
அதி தைவதம் இதி ப்ரோக்தம் க்ரமாச் ஸ்ரோத்ராதி பஞ்சகே
அதி பூதாம் இதி ப்ரோக்த சப்தாத் யோ விஷய க்ரமாத்-5-60-

கேட்க்கும் உறுப்பின் விஷயம் ஒலி/ உணர்ந்து கொள்ளும் உறுப்பின் விஷயம் தொடுதல் /
பார்க்கும் உறுப்பின் விஷயம் காட்சி /சுவையின் உறுப்பின் விஷயம் சுவை
நுகரும் கேட்க்கும் உறுப்பு விஷயம் மணமும் கேள்வியும் –
இப்படி பொருள்கள் தனித் தனியே பிரித்து அறியப் படுகின்றன -திசைகள் மின்னல் ஸூர்யான சந்திரன் பூமி –
ஐந்து இந்திரியங்களின் அபிமான தேவதைகளாக உள்ளன -இவற்றின் விஷயமாக உள்ள ஒலி போன்றவை -பூதங்கள் என்று கூறப்படுகின்றன –

ஸ்ரோத்ராதி பஞ்சகம் த்வேததத் யாத்மம பரீ கீர்த்திதம்
ஸ்ரோத் ராதே சாத்விகாத் ஸ்ருஷ்ட்டிர் வியதாதித்ய பேஷயா -5-61-

ஸ்ரோத்ராதி ஐந்து இந்திரியங்களும் அத்யாத்மம் எனப்படும் -இவை சாத்விக குணத்தில் இருந்து வெளிப்படும் –

தேந பவ்திகம் இதி யுக்தம் க்ரமாச் ஸ்ரோத்ராதி பஞ்சகம்
வாசஸ்து விஷய சப்தோ வசனம் ச க்ரியா மதா -5-62-
ஹஸ்த இந்த்ரியஸ்ய சாதேய மாதாநம் ச க்ரியா மதா
பாத இந்த்ரியஸ்ய கந்தவ்யம் கமனம் ச க்ரியா மதா -5-63-
உபஸ்தஸ்ய தத் ஆனந்த்ய மாநந்தச் ச க்ரியா மதா
வி ஸ்ருஜ்யம் விஷய பார்யோர் விசர்க்கச் ச க்ரியா மதா -5-64-
ஹஸ்தாதிகம் சதுஷ்கம் யத்தத் பஞ்ச விஷயாத்மகம்
அக்னி இந்த்ரச்ச விஷ்ணுச்ச தைத்தவாத்ய பிரஜாபதி -5-65-
மித்ரச்ச இதி க்ரமாஜ்ஜேயா ஆதி தேவோ விசேஷணை -5-66-1-

இவ்வாறு ஸ்ரோத்ராதி கரணங்கள் ஐந்தும் அந்தந்த பூதங்களைச் சேர்ந்ததாக உள்ளன –
இவற்றின் அதிபதி தேவதைகளாக -அக்னி வாக்குக்கும் -இந்திரன் கைகளுக்கும் -விஷ்ணு கால்களுக்கும்
பிரஜாபதி மர்மக் குறிக்கும் மித்ரன் ஆசனவாய்க்கும் -உள்ளனர் -என்றே கற்றவர்கள் கூறுகின்றனர் –

சப்த பஞ்சாத்மகம் ச ஏவ வாகாதேர் விஷயோ ஹி யா -5-66-2-
ச ஆதி பூத இதி ப்ரோக்தோ வாகாத்யத் யாத்மம் உச்யதே
மநஸ்து ஸஹ கார்ய அஸ்மிந் உபயத்ராபி பஞ்சகே –5-67

விஷயமான பஞ்ச பொருள்களும் ஆதி பூதம் எனப்படும் -வாக்யாதி கரணங்கள் அத்யாத்மம் எனப்படும்
மனம் கர்ம ஞான இந்திரியங்களுக்கு துணையாகும்

ஞானேந்திரிய கணைச் ச ஏதத் விகல்பம் தநுதே மந
விகல்போ விவிதா க்ல்ருப்தி ஸ்தச் ச ப்ரோக்தம் விசேஷணம் -5-68-

மனஸ் ஞான இந்த்ரியங்களுடன் சேர்ந்து வஸ்துக்களை விகல்பித்து பொருள்களின் விசேஷ தன்மைகளை அறியும் –
விகல்பம் பூ போன்ற பெயர்ச் சொல் -விசேஷணம் மனம் போன்ற தன்மை –

தர்மேண ஸஹ சம்பந்தோ தர்மிணச்ச ச உஸ்யதே
விகல்ப பஞ்சத ஜ்ஜேயோ த்ரவ்ய கர்ம குணாதிபி–5-69-

தர்மம் தர்மி பற்றியும் இவற்றின் தொடர்பையும் த்ரவ்யம் கர்மம் குணம் போன்ற வேறுபாடுகள் ஐந்தாகும்

தண்டீதி த்ரவ்ய சம்யோகாச் சுக்லோ குண சமன்வயாத்
கச்சதீதி க்ரியா யோகாத் புமான் சாமான்ய ஸம்ஸ்திதே -5-70-
டித்த சப்த ஸமாயோகாதி தீயம் பஞ்சதா ஸ்திதி
கர்மேந்த்ரிய குணை ச ஏதத் சங்கல்பம் தநுதே மன -5-71-

குச்சி பொருள் -வெண்மை குணம் -நடுவது செயல்பாடு கர்மம் -இப்படி பொருள் குண கர்ம வேறுபாடுகள் /
பண்பு சப்தம் இவற்றால் பிரிவுகளிலும் வகைகளிலும் வேறுபாடுகள் உண்டே
கர்ம இந்திரியங்கள் துணையால் மனம் சங்கல்பம் என்ற உறுதி கொள்ளும் –

ஒவ்தாசீஷ்யச் யுதிர்யா சா சங்கல்ப உத்யோக நாமிகா
அஹங்காரேண ச ஏதஸ்மிந் உபயத்ர குணே ஸ்திதி -5-72-

வேறுபாடுகளை களைந்து தெளிவு அடைவதே சங்கல்பம் ஆகும் -வேறுபாடுகளை களையும் செயல்பாடு உத்யோகம் ஆகும் –
இது அஹங்காரத்துடன் சேர்ந்து கொண்டு கர்ம ஞான இந்திரியங்களை ஓன்று சேர்க்கும்

ஞானேந்திரிய குணே சோ அயமிமா நேந வர்த்ததே
தேச கால அந்வயோ ஜ்ஞாது அபிமான ப்ரகீர்த்தித -5-73

ஞான இந்த்ரியங்களுடன் இணைந்த அஹங்காரம் அபிமானமாக பரிணமிக்கும்
அபிமானம் இந்த தேசம் இந்த இடம் போன்று மற்றவற்றுடன் இணைத்து கொள்வதாகும் -இதுபோன்ற சிந்தனையே ஆகும் –

மமாத்ய புரதோ பாதீத்யேவம் வஸ்து பிரதீயதே
கர்மேந்த்ரிய குண த்வேஷ சம்ரம்பேண ப்ரவர்த்ததே -5-74-

கர்ம இந்திரியங்களின் காரணமாகவே நான் இப்போது இந்த இடத்தில் காணப்படுகிறேன் –
இதுவே சம்ரம்பம் என்பது தோன்றக் காரணமாக உள்ளது

சங்கல்ப பூர்வ ரூபஸ்து சம்ரம்ப பரிகீர்த்தித
புத்தி அத்யவசாயேந ஞானேந்த்ரிய குணே ஸ்திதா -5-75-

சங்கல்பம் உண்டாக சம்ரம்பம் தொடக்கம் –
புத்தியானது ஞான இந்திரியங்களின் குணங்களில் நிலை நின்றாள் அத்யாவசாயம் உண்டாகும்

புத்தி அத்யவசாய அர்த்த அவதாரணம் உதீர்யதே
அவதாரணம் அர்த்தா நாம் நிச்சய பரிகீர்த்தித–5-76-

அத்யவசாயம் -உறுதியான தீர்மானம் அவதாரணம் -நிச்சயம் ஆகும்

கர்மேந்த்ரிய குணே புத்தி ப்ரயத்நேந
த்ரயோதச விதம் ஜேயம் தத் ஏதத் கரணம் புதை –5-77-

கர்மேந்த்ரியங்கள் துணை கொண்டு புத்தி பிரயத்தனம்
இப்படியாக -13-வகைகள் ஞானத்துக்கு கருவிகள் –

பாஹ்யம் தசவிதம் ஜேயம் த்ரிதா அந்தகரணம் ஸ்ம்ருதம்
த்ரயோ விம்சதிரேதே து விகாரா பரிகீர்த்திதா –5-78-

இப்படியாக வெளி இந்திரியங்கள் -கர்ம ஞான -10-உண்டே / அந்தகரணம் –புத்தி -மனம் -அஹங்காரம் ஆகிய மூன்றும்
கீழே -13-இந்த -10-சேர்ந்து 23-விகாரங்கள் எனப்படும் –

கரணாநி தசா த்ரீணி ஸூஷ் மாம்சா ஸ்தூல சம்பவா
ஏதஸ் ஸூஷ்ம சரீரம் து விராஜ பரி கீர்த்திதம் –5-79-

ஸ்தூலத்தில் இருந்து வெளிப்பட்ட பத்து வெளி இந்திரியங்களும் மூன்று அந்தகரணங்களும்
விராஜ எனப்படும் ஸூஷ்ம சரீரத்தை உண்டாக்கும்

வ்யஷ்ட்ய ஸூஷ்ம தேஹாச்ச ப்ரதீ ஜீவம் வியவஸ்திதா
அபவர்க்கே நிவர்த்தந்தே ஜீவேப்யஸ்தே ஸ்வயோநிஜா -5-80-

ஸூஷ்ம சரீரம் ஒவ் ஒரு ஜீவனுக்கும் வேறே வேறாக இருக்கும்

அன்யோன்ய அனுக்ரஹணைதே த்ரயோ விம்சதி ருத்திதா
மஹதாத்ய விசேஷாந்தா ஹி அண்ட முத்பாதயந்தி தே –5-81-

மஹத் தொடங்கி விசேஷணம் வரை உள்ள 23-தத்துவங்களும் ஒன்றுக்கு ஓன்று உதவியபடி உள்ளன
இதன் மூலம் அண்டம் உத்பத்தி ஆகிறது

தத் அண்டம் அபவத் ஏமம் சஹஸ்ராம்சு ஸமப்ரபம்
தஸ்மிந் ப்ரஜாபதிர் ஜஜ்ஜே விராட் தேவச் சதுர்முக -5-82-

அந்த அண்டம் -ஆயிரம் கதிர்களுடன் கூடிய ஸூர்யன் போன்ற ஒளி யுடன் காணப்படும்
அதில் இருந்து விராட் என்றும் பிரஜாபதி என்றும் கூறப்படும் நான்முகன் தோன்றுகிறான்

விராஜச்ச மநுர் ஜஜ்ஜே மநோஸ்தே மாநவா சம்ருதா
மரீசி ப்ரமுகாஸ்தேப்யோ ஜகத் ஏதத் சராசரம் –5-83-

விராட் புருஷனிடம் இருந்து மனு பிறந்தான் -மனு வம்சத்தினர் மாநவாகர் எனப்படுபவர்
இவர்களின் தலைவனாக உள்ள மரீசியிடம் இருந்தே சராசரங்கள் உள்ள உலகம் இதப்பத்தி ஆனது –

பிரகார அயம் மமோத்யாத்யா லேசதஸ்தே பிரதர்சித
ஸ்வத சுத்தாபி சித் சக்தி சம்வித அநாதி அபித்யயா –5-84-

இந்திரா உனக்கு என் சிறிய பகுதியைப் பற்றி உனக்கு கூறி வந்தேன்
தூய்மையான ஞான மயமானவள் -ஜீவர்களின் எல்லை யற்ற அவித்யை காரணமாக
அறியாமை சூழ்ந்த படியே உள்ள நிலையிலே ஸ்ருஷ்டித்து விடுகிறேன்

துக்கம் ஜென்ம ஜராத்யுத்தம் தத்ரஸ்தா பிரதிபத்யதே
சுத்த விஞ்ஞான சம்பந்தாச் சுத்த கர்ம சமன்வயாத்
யதா நுநோத்யவித்யாம் தாம் ததா ச ஆனந்தம் அஸ்நுதே -5-85-

அவித்யை அடியாக துக்கம் ஜரா மூப்பு –இவை கர்ம யோகாதிகளால் விலக்கப்பட்டு
இயல்பான ஸ்வரூப ஆவிர்பாவத்தை ஜீவன் அடைகிறான் –

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: