பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –8-5-

இப்படி அந்தத் தாமரைத் தடாகம் இருந்த திருச் செங்குன்றூரில் திருச் சிற்றாறு ஏறச் செல்ல வேணும் என்று
மநோ ரதித்துப் போக உத்யோகித்தவர்
எம்பெருமானைக் காணப் பெறாத விடாயின் மிகுதியால் போக ஷமர் இன்றியே –
நான் வர ஷமன் ஆகிறிலேன்-நீ வாராய் -என்று அந்தத் தாமரைத் தடாகத்தைக் கூப்பிட்டு அழைக்கிறார் –

—————————————-

மாயக் கூத்தா வாமனா
வினையேன் கண்ணா கண் கை கால்
தூய செய்ய மலர்களா
சோதித் செவ்வாய் முகிழதா
சாயல் சாமத் திருமேனி
தண் பாசடையா தாமரை நீள்
வாசத்தடம் போல் வருவானே
ஒரு நாள் காண வாராயே-8-5-1-

ஸ்ரீ வாமனனாயும் ஸ்ரீ வஸூ தேவர் திருமகனாயும் வந்து திருவவதாரம் பண்ணி ஆச்சர்யமாய் தர்ச நீயமான
திவ்ய சேஷ்டிதங்களைப் பண்ணுகிறது அடியேனுக்காக வன்றோ –
பின்னையும் நான் பாக்ய ஹீனனாகையாலே காணப் பெறுகிறிலேன் –
அடியேனுடைய கண்களின் விடாய் தீரும்படி ஒரு நாள் காண உன்னுடைய திருக் கண் கை கால்கள் தூய செய்ய மலர்களாகவும்
சோதிச் செவ்வாய் முகிழதாகவும்-உஜ்ஜவலமாய் ஆச்சர்யமாய் இருந்த திருமேனியைக் குளிர்ந்த இலையாகவும் யுடையையாய்
புண்ய கந்த வாசித அனந்த கந்தராளனுமாய் இருந்த நீ ஒரு தாமரைத் தடாகம் நடந்து வருமா போலே வாராய் என்று கூப்பிடுகிறார் –

——————————————————————–

காண வாராய் என்று என்று
கண்ணும் வாயும் துவர்ந்து அடியேன்
நாணி நன்னாட்டலமந்தால்
இரங்கி யொருநாள் நீ யந்தோ
காண வாராய் கரு நாயிறுதிக்கும்
கருமா மாணிக்கம்
நாள் நன்மலைபோல் சுடர்ச் சோதி
முடிசேர் சென்னி யம்மானே–8-5-2-

காண வாராய் என்று என்று கண்ணும் வாயும் துவர்ந்து நான் இப்பாடு படச் செய்தேயும் நீ வாராது ஒழிந்த வாறே
உன்னை நிர் குணன் என்று லோகத்தார் சொல்லுகிறார் என்று அடியேன் லஜ்ஜித்து –
உன்னைக் காணப் பெற்று சம்ருத்தமான இந்நாட்டில் நான் ஒருவனும் காணப் பெறாதே அலமந்தால்
என் பக்கலிலே கிருபை பண்ணி ஜாஜ் வல்யமான நீலாலக சன்ய சன்ய உத்தர மாங்கனாய் நீல ஜ்யோதிர் மய திவ்ய ரூபனாய்
நீல பஹஸ்திமாலி விலஸிதமாய் புஷ்ப்ப ஹாஸ ஸூ குமாரமாய் இருபத்தொரு
கருமா மாணிக்க மலை நடந்து வருமா போலே காண வாராய் என்கிறார்

——————————————-

முடி சேர் சென்னி யம்மா
நின் மொய் பூந்தாமத் தண் துழாய்
கடி சேர் கண்ணிப் பெருமானே
என்று என்றே ஏங்கி அழுதக்கால்
படிசேர் மகரக் குழைகளும்
பவளவாயும் நால் தோளும்
துடி சேரிடையும் அமைந்ததோர்
தூ நீர் முகில் போல் தோன்றாயே–8-5-3-

நிரதிசய பரிமள துளஸீ லலித அலகாபாரத்தை யுடையவனே என்று என்று ஏங்கி
கர்ண பாச ஸூ ஸம்ஸ்லிஷ்ட மகர குண்டல வித்ரும சத்ருச அதர சதுர் பாஹு தநுதர மத்ய சோபிதமாய்
விமல சலில பரிபூர்ணமாய் இருபத்தொரு பயோயம் போலே வந்து தோன்றுகிறிலை-என்கிறார்

——————————————————-

தூ நீர் முகில் போல் தோன்றும்
நின் சுடர் கொள் வடிவும் கனி வாயும்
தே நீர்க் கமலக் கண்களும்
வந்தென் சிந்தை நிறைந்தவா
மாநீர் வெள்ளி மலை தன்மேல்
வண் கார் நீல முகில் போலே
தூ நீர்க் கடலுள் துயில்வானே
எந்தாய் சொல்ல மாட்டேனே-8-5-4-

விமல பரிபூரணமாய் இருபத்தொரு பயோயம் போலே இருந்த உன்னுடைய உஜ்ஜவலமான திருவடியும் கனிவாயும்
மகரந்த நிர்ஹரமாய் கம்பீராம் பஸ்ஸமுத்பூதமாய் ஸூம்ருஷ்ட நாளமாய் ரவிகர விகசிதமான புண்டரீக தளம் போலே இருந்த
திருக் கண்களும் நயனகோசரம் இன்றியே வந்து என் சிந்தை நிறைந்து
வ்யசனகரமாகிற படி சொல்ல நிலம் அல்ல என்கிறார் –

———————————————————-

சொல்ல மாட்டேன் அடியேன்
உன் துளங்கு சோதித் திருப்பாதம்
எல்லையில் சீரிள நாயிறு
இரண்டு போல் என்னுள்ளவா
அல்லல் என்னும் இருள் சேர்த்தற்கு
உபாயம் என்னே ஆழி சூழ்
மல்லை ஞாலம் முழுதுண்ட
மா நீர்க் கொண்டல் வண்ணனே-8-5-5-

பிரளய கால சகல சலில பரிபூரணமான மேகத்தின் நிறம் போலே இருந்த திரு நிறத்தை யுடையவனே –
உன்னுடைய நிரதிசய தீப்தி யுக்தமான திருவடிகள் நிரதிசய தேஜோ மயமாய்
நிரவதிக ஸுந்தர்ய நிதியாய் இருப்பது இள நாயிறு இரண்டு போலே
என்னுள்ளே விளங்குகிற படி மறக்கவும் முடிகிறது இல்லை -என்கிறார் –

—————————————————–

கொண்டல்வண்ணா குடக்கூத்தா
வினையேன் கண்ணா கண்ணா -என்
அண்ட வாணா வென்று என்னை
ஆளக் கூப்பிட்டு அழைத்தக்கால்
விண் தன்மேல் தான் மண் மேல்தான்
விரி நீர்க் கடல் தான் மற்றுத் தான்
தொண்டனேன் உன் கழல் காண
ஒரு நாள் வந்து தோன்றாயே-8-5-6-

மேக ஸ்யாமளனே -அசேஷ மநோ நயன அபஹாரி திவ்ய சேஷ்டிதங்களை யுடையவனே
பாக்ய ஹீனனான என்னுடைய கண்ணா கண்ணா என்று என்னை அடிமை கொள்ளுகைக்காக கூப்பிட்டு அழைத்தக்கால் –
திரு நாட்டில் நின்றதால் -பூமியிலுள்ள திரு நகரிகளில் நின்றதால் திருப் பாற் கடலில் நின்றதால் –
ஒரு தூணில் நின்றதால் –
தொண்டனேன் உன் கழல் காண ஒரு நாள் வந்து தோன்றாய்-என்கிறார் –

———————————————-

வந்து தோன்றாயன்றேல்
உன் வையம் தாய மலரடிக் கீழ்
முந்தி வந்து யான் நிற்ப
முகப்பே கூவிப் பணி கொள்ளாய்
செந்தண் கமலக் கண் கை கால்
சிவந்த வாயோர் கரு நாயிறு
அந்தமில்லாக் கதிர் பரப்பி
அலர்ந்தது ஒக்கும் அம்மானே–8-5-7-

ஆதாம்ர சீதள ஸரோருஹ சத்ருசமான நயன பாணி வதனங்களை யுடைத்தாய் நிரவதிக தீப்தி யுக்தமாய் இருபத்தொரு
கரு நாயிறு போலே இருந்த நீ வந்து தோன்றாய்-அன்றேல் –
அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யமாய் லோக விக்ராந்தமாய் இருந்த உன் திருவடி மலர்களின் கீழே
உன் திரு உள்ளத்தில் அபேக்ஷிதமான கைங்கர்யத்தை
நீ அருளிச் செய்வதற்கு முன்பே அறிந்து செய்யக் கடவனாய்ச் சமைந்து நிற்க
முகப்பே கூவிப் பணி கொள்ளாய் என்கிறார் –

————————————————————————

ஒக்கும் அம்மான் உருவம் என்று
உள்ளம் குழைந்து நாணாளும்
தொக்கமே கப்பல் குழாங்கள்
காணும் தோறும் தொலைவன் நான்
தக்க வைவர் தமக்காயன்று
ஈரைம்பதின்மர் தாள் சாய
புக்க நல் தேர்ப் தனிப் பாகா
வாராயிதுவோ பொருத்தமே-8-5-8-

உன் திருமேனியோடு ஒக்கும் என்று தொக்க மேகப் பல் குழாங்கள் காணும் தோறும் நாள் நாளும் உள்ளம் குழைந்து தொலைவன் காண் –
உன்னை மறந்து இருக்க ஓட்டுகிறது இல்லை இந்த மேகங்கள் –
உன் திருவடிகளையே ப்ராப்யமும் பிராபகமும் என்று இருக்கும் ஐவருக்கு சேஷ பூதனாய் அன்று
ஈரைம்பதின்மர் தாள் சாயப் புக்க நல் தேர்த் தனிப் பாகா –
அத்தேரை இங்கனே நிறுத்திக் கொண்டு வாராய் இதுவோ உன்னுடைய பிரணயித்தவம் என்கிறார்-

——————————————————————————

இதுவோ பொருத்தம் மின்னாழிப் படையாய்
ஏறு மிருஞ் சிறைப்புள்
அதுவே கொடியா வுயர்த்தானே
என்று என்று ஏங்கி யழுதக்கால்
எதுவேயாகக் கருதுங்கொல்
இம்மா ஞாலம் பொறை தீர்ப்பான்
மதுவார் சோலை
உத்தர மதுரைப் பிறந்த மாயனே-8-5-9-

திரு வாழியை மின்னாக வுடைய திவ்ய ரூபமாகிற நீல மேகத்தை யுடையவனே -ஆஸ்ரிதருடைய ஆபத்துக்கு உதவ வருகைக்கு
ஈடான பெரிய திருவடியை திவ்ய வாஹனமாக யுடையவனே –
இதுவோ முடிந்தது என்று என்று ஏங்கி அழுதக்கால் ஆஸ்ரித துக்க அஸஹிஷ்ணுவாகையாலே
தத் நிர்வாஹரணார்த்தமாக மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த ஆச்சார்ய பூதனே –
நீ எதுவாக நினைத்து இருக்கும் என்கிறார் –

————————————————————————–

பிறந்த மாயா பாரதம் பொருத மாயா
நீ யின்னே
சிறந்த கால் தீ நீர் வான்
மண் பிறவுமாய பெருமானே
கறந்த பாலுள் நெய்யே போல்
இவற்றுள் எங்கும் கண்டு கொள்
இறந்து நின்ற பெருமாயா
உன்னை எங்கே காண்கேனே-4-5-10-

சாது பரித்ராண அர்த்தமாகவும் துஷ்க்ருத் விநாச அர்த்தமாகவும் ஸ்ரீ மதுரையிலே பிறந்து அருளின ஆச்சர்ய பூதனே –
நீ இப்படி ஸர்வத்ர ஸந்நிஹிதனாய் இருந்து வைத்து உன்னைக் காட்டி அருளுகிறிலை –
இனி உன்னை எங்கே காண்கேன்-என்கிறார் –

—————————————————–

எங்கே காண்கேன்
ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று என்று
அங்கே தாழ்ந்த சொற்களால்
அந்தண் குருகூர்ச் சடகோபன்
செங்கேழ் சொன்ன வாயிரத்துள்
இவையும் பத்தும் வல்லார்கள்
இங்கே காண விப் பிறப்பே மகிழ்வர்
எல்லியும் காலையே-8-5-11-

எங்கே காண்கேன் ஈன் துழாய் அம்மான் தன்னை யான் என்று அங்கே ப்ரவண மனசராய்
ப்ரேமார்த்த விஹ்வலமான சொற்களால் அந்தண் குருகூர்ச் சடகோபன்-ஆர்ஜவ உபேதமாகச் சொன்ன
வாயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்-இந்த லோகத்தில் இஜ் ஜென்மத்தில் எல்லாரும் காண
எம்பெருமானை எப்போதும் காணப் பெற்று மகிழ்வர் என்கிறார் –

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: