பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –8–2-

இந்த வ்யஸனம் முறுகி-எம்பெருமானோடே கலந்து பிரிந்த பிராட்டியாய் காண வேணும் என்று கூப்பிடுகிறார் –
ஸ்ரீ வைகுண்ட நாதனான சர்வேஸ்வரனும் உன்னுடைய கடாக்ஷ லஷ்யமாகப் பெறுவது காண் என்று
ஆசைப்பட வேண்டும்படியான வடிவையுடைய நீ ஆசைப்படுகைக்கு ஈடாய் இருபத்தொரு விஷயம் யுண்டோ –
நீ ஆசைப்பட்ட விஷயம் ஏது என்றும் உனக்குச் செல்லுகிற அவசாதம் ஏது என்றும் இவளுடைய தோழிமார் கேட்க –

————————————————

நங்கள் வரி வளை யாயங்களோ
நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்கு யான் ஓன்று உரைக்கும் மாற்றம்
நோக்குகின்றேன் எங்கும் காண மாட்டேன்
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன்
தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன்
வெங்கண் பறவையின் பாகன் எங்கோன்
வேங்கட வாணனை வேண்டிச் சென்றே–8-2-1-

யுகாவாதார் முன்பு என்னுடைய அவசாதத்தை வ்யஞ்சிப்பிக்கையில் உள்ள லஜ்ஜையாலும் அவசாதம் தான் நிரவதிகமாய் இருக்கையாலே
அதுக்கு வாசகமாய் இருபத்தொரு சப்தம் காணாமையாலும் என்னுடைய அவசாதத்தை உங்களுக்குச் சொல்ல மாட்டு கிறிலேன்-
இப்படி அவசாதம் வருகைக்கு ஆசைப்பட்டது என் என்னில் –
தீஷ்ண நிரீக்ஷண நிர்வாஹ்ய பிரதிபஷனான பெரிய திருவடியை வாகனமாக யுடைய திருவேங்கடமுடையானை ஆசைப்பட்டு
சங்கம் சரிந்தன சாய் இழந்தேன் தடமுலை பொன்னிறமாய்த் தளர்ந்தேன் -என்கிறார் –

—————————————————-

வேண்டிச் சென்று ஓன்று பெறுகிற்பாரில்
என்னுடைத் தோழியர் நுங்கட்கேலும்
ஈண்டு இது உரைக்கும்படியை அந்தோ
காண்கின்றிலேன் இடராட்டியேன் நான்
காண் தகு தாமரைக் கண்ணன் கள்வன்
விண்ணவர் கோன் நங்கள் கோனைக் கண்டால்
ஈண்டிய சங்கும் நிறைவும் கொள்வான்
எத்தனை காலம் இளைக்கின்றேனே ?–8-2-2-

நீ ஆசைப்பட்ட விஷயம் திருவேங்கடமுடையானாகில் அது யுக்தம் -உனக்கும் கூட ஸ்ப்ருஹனீயனாவன் ஆகிலும்
நீ ஆசைப்பட்டால் கிடையாதது உண்டோ -என்னில் ஆசைப்பட்ட பொருள் பெறுவார் எல்லாரிலும் தலையாய் இருக்கச் செய்தேயும்
ஆசைப்பட்டுப் பெறாதே நான் படுகிற வ்யஸனம் வாசா மகோசரம் ஆகையால் வ்யசனப்படும் அத்தனை அல்லது
உங்களுக்குச் சொல்லுகைக்கு ஒரு சொல்லு சொல்லக் காண்கிறிலேன் –
அவனை ஆசைப்பட்டால் உத்தர க்ஷணம் பெறாது ஒழியில் தளர்ந்து கொண்டு நிற்கும் அத்தனையோ என்னில் –
சதா அனுபாயமான மானாலும் அபூர்வ தர்ச நீயமாய் புண்டரீக தள அமலாயதமான திருக் கண்களையும் யுடையனாய்
தத் ஸுந்தர்ய பரிமுஷித சகல ஜன மநோ நயனனாய்-
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து என்னை அடிமை கொண்ட பரம சீலனாய் இருந்த அவனை ஆசைப்பட்டுப் பெறாதே
என்னுடைய வலயாதி பூஷணங்களையும் ஆத்மகுணங்களையும் இழந்து
அவை கொள்கைக்கு நான் வருந்துகிறது எத்தனை காலமுண்டு -என்கிறார் –

———————————————————-

காலம் இளைக்கில் அல்லால் வினையேன் நான்
இளைக்கின்றிலன் கண்டு கொண்மின்
ஞாலம் அறியப் பழி சுமந்தேன் நன்னுதலீர் !
இனி நாணித் தான் என் ?
நீலமலர் நெடுஞ்சோதி சூழ்ந்த
நீண்ட முகில் வண்ணன் கண்ணன் கொண்ட
கோல வளை யோடு மாமை கொள்வான்
எத்தனை காலமும் கூடச் சென்றே–8-2-3-

அவனை ஆசைப்பட்டுப் பெறாதே உனக்குள்ளவையும் இழந்து அவை பெறுகைக்கு நெடும் காலம் வருந்தியும் பெறாத பின்பு
இனித்தான் வருந்தினால் கிடைக்குமோ -இனி அவை பெறுகையில் வருந்தாதே விட்டாலோ என்னில் –
நீல ஜ்யோதி பரிவ்ருத்த மஹாவலாஹக சத்ருசமான திருமேனியை யுடையனான ஸ்ரீ கிருஷ்ணனாலே அபஹ்ருதமான
கோல வளையோடு மாமை கொள்வான் உத்யுக்தையான நான் எத்தனை காலம் கூடச் சென்றாகிலும் கொள்வன் –
இக்கால தத்வம் தான் முடிந்து போம் அத்தனை அல்லது நான் கண்டு அல்லது விடேன்-இத்தைக் கண்டு கொண்மின் –
அவன் தான் ஆசைப்பட அவனுக்கும் அரியையாய் இருக்கக் கடவ நீ அவனை ஆசைப்பட்டால் உனக்குப் பழி வரும் என்று
லஜ்ஜை இல்லையோ என்னில் -ஞாலம் அறியப் பழி சுமந்தேன் -நன்னுதலீர் இனி நாணித்தான் என் என்கிறார் –

—————————————————————–

கூடச் சென்றேன் இனி என் கொடுக்ககேன்
கோல் வளை நெஞ்சத்து தொடக்கம் எல்லாம்
பாடற்று ஒழிய இழந்து வைகல்
பல்வளையார் முன்பு பரிசு இழந்தேன்
மாடக் கொடி மதிள் தென் குளந்தை
வண் குடபால் நின்ற மாயக் கூத்தன்
ஆடற் பறவை யுயர்த்த வெல் போர்
ஆழி வலவனை யாதரித்தே–8-2-4-

இதுக்கு முன்பு அவனை யாசைப்பட்டு உன்னுடைய உபகரணங்களை இழந்தால் போலே இனி யுள்ளவற்றையும் இழவாதே
அவனை யாசைப்படத் தவிர்ந்தாலோ என்னில் – ஹேம கிரி சிகர சத்ருச பிரசாத அலங்க்ருதமாய் த்வஜ விராஜித பிரகார பரிவ்ருதமாய்
தக்ஷிண திக் திலக பூதமாய் இருந்த திருக் குளந்தையில் பரம உதாரமான மேலைத் திக்கிலே
வைநதேய விஜி திரிபுர நிகர ஸூ தர்சன விஸ்ராந்த தக்ஷிண புஜனாய்க் கொண்டு ஸூ ந்ருத்தவத் தர்ச நீயனாம் படி
நின்று அருளின அவனை ஆதரித்துக் கூடச் சென்றேன் –
சென்று கோல் வளை நெஞ்சம் தொடக்கம் எல்லாம் பாடாற்ற ஒழிய இழந்து வைகல் பல் வலையர் முன்னே
என் ஸ்வ பாவம் எல்லாம் இழந்தேன் -இனி என் கொடுக்கேன் -என்கிறார் –

——————————————————————————–

ஆழி வலவனை ஆதரிப்பும்
ஆங்கவன் நம்மில் வரவுமெல்லாம்
தோழியர்காள் ! நம்முடையமே தான் ?
சொல்லுவதோ ?இங்கரியது தான்
ஊழி தோறூழி யொருவனாக
நன்கு உணர்வார்க்கும் உணரலாகா
சூழலுடைய சுடர் கொளாதித்
தொல்லை யஞ்சோதி நினைக்கும் காலே-8-2-5-

அவனை ஆசைப்பட்டால் பெற ஒண்ணாத துஷ் பிராபன்-அவனை ஆசைப்பட வேண்டா வென்னில் –
பரஞ்சோதிஸ்ஸான நினைக்கப் புக்கால் ஞான வதாம் அக்ரேஸர்களான சனகாதி முனிகளுக்கும் ஊழி தோறு ஊழி கூடினாலும்
ஒருவனாக உணர ஒண்ணாத திவ்ய சேஷ்டிதங்களையும் தேஜோ ப்ரப்ருத்ய அஸங்க்யேய கல்யாண குணத்தையும் உடையான்
ஒருவனாகிலும் அந்த சங்க சக்ர கதா தரனாய் இருந்தவனை ஆசைப்படுகையும்
ஆசைப்பட்ட நம் போல்வார் பக்கல் அவன் வருகையும் நாம் தொடங்கியோ -இப்படி அரியனாய் இருக்கச் செய்தே
ஆசைப்படுவாரும் பெறுவாரும் எத்தனைவர் –
அவன் அரியன் அவனை ஆசைப்பட வேண்டா என்று சொல்லுகை எளிது என்னாச் சொல்லும் இத்தனையோ -என்கிறார் –

———————————————————————

தொல்லை யஞ் சோதி நினைக்குங்கால்
என் சொல்லளவன்று இமையோர் தமக்கும்
எல்லையிலாதன கூழ்ப்புச் செய்யும்
அத்திறம் நிற்க எம்மாமை கொண்டான்
அல்லி மலர்த் தண் துழாயும் தாரான்
ஆர்க்கிடுகோ இனிப்பூசல் ?சொல்லீர்
வல்லி வள வயல் சூழ் குடந்தை
மா மலர்க்கண் வளர்கின்ற மாலே-8-2-6-

அவன் அரியன் அல்லனோ என்னில் நாம் சொல்லும் அளவோ அவனுடைய அருமை -ப்ரஹ்மாதி தேவர்களுக்கும் கூட
அறிய ஒண்ணாத ஸ்வரூப ஸ்வ பாவங்களை யுடையான் ஒருவன் அல்லனோ –
அத் திறம் நிற்க என்னை விஷயீ கரித்து அருளுகைக்காகத் திருக் குளை ந்தையிலே புகுந்து வைத்து
என்னுடைய சர்வஸ்வாதத்தையும் அபஹரித்துத் தன் திருவடிகளில் அல்லி மலர்த் தண் துழாயும் தருகிறிலன் –
இப்படி அநியாயம் செய்த அவனை ஒழிய மற்று ஆரைக் கூப்பிடுவோம் -சொல்லீர் -என்கிறார் –

————————————————————-

மாலரி கேசவன் நாரணன்
சீ மாதவன் கோவிந்தன் வைகுந்தன் என்று என்று
ஓலமிட வென்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றுமுருவுஞ் சுவடுங்காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் !
என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
காலம் பல சென்றும் காண்பதாணை
உங்களோடும் எங்களிடை இல்லையே–8-2-7-

இப்படி கூப்பிடச் செய்தேயும் தன்னைக் காட்டாது இருக்கிற அவனை ஆசைப்படுவார் உண்டோ என்னில் –
ஆஸ்ரித வத்சலன் -ஆஸ்ரித ஆர்த்தி ஹரன் -ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வபாவன் -சர்வ சக்தி ஸமஸ்த கல்யாண குண நிதி –
ஸ்ரீ யபதி-பரம ஸீலாவான் -ஸ்ரீ வைகுண்ட நிலயன்-என்று கூப்பிடும்படி பண்ணி விட்டிட்டு ஒன்றும் உருவும் சுவடும் காட்டான்
ஏல மலர்க்குழல் அன்னைமீர்காள் ! என்னுடையத் தோழியர்காள் ! என் செய்கேன் ?
-வியஸனம் பொறுக்கலாய் இருக்கிறது இல்லை -காலம் பல சென்றும் உங்கள் ஆணையே கண்டு அல்லது விடேன் –
நீங்கள் இதற்கு விரோதத்தைப் பண்ணில் உங்களோடும் உறவில்லை என்கிறார்

——————————————————

இடையில்லை யான் வளர்த்த கிளிகாள்!
பூவைகாள் ! குயில்காள் ! மயில்காள் !
உடைய நம்மாமையும் சங்கும் நெஞ்சும்
ஒன்றும் ஒழிய வொட்டாது கொண்டான்
அடையும் வைகுந்தமும் பாற் கடலும்
அஞ்சன வெற்புமவை நணிய
கடையறப் பாசங்கள் விட்ட பின்னை யன்றி
அவனவை காண் கொடானே–4-2-8-

தன்னை பிரதிபந்திக்கிற அன்னைமாரோடும் உறவறச் செய்தேயும் அவனைக் காணாது ஒழிந்தவாறே தான் வளர்த்த
தன்னுடைய லீலோ உபகரணமான கிளிகள் பூவைகள் குயில்கள் மயில்கள் என்கிற இவற்றோடு உள்ள சம்பந்தம் ஆகாதே
அவனைக் காண்கைக்கு பிரதிபந்தகம் என்று பார்த்து அவற்றை நோக்கிச் சொல்லுகிறாள் –
அவன் நம்முடைய நிறமும் வளையும் நெஞ்சும் தொடக்கமாக யுள்ள சர்வஸ்வத்தையும் அபஹரித்துக் கொண்டு போனாலும்
பரம ப்ராப்யமான திரு நாடும் திருப் பாற் கடலும் திரு மலையும் தன்னை ஆசைப்பட்டார்க்குக் காணல் நணியவாகில்
காட்டாது ஒழிவான் என்னில் உங்கள் பக்கலுள்ள சங்கம் நிஸ்சேஷமாகப் போனால் அல்லது அவன்
அவை காண் கொடான் ஆதலால் இனி உங்களோடும் உறவில்லை என்கிறார் –

——————————————————————-

காண்கொடுப்பான் அல்லனார்க்கும் தன்னைக்
கை செயப் பாலதோர் மாயம் தன்னால்
மாண் குறள் கோல வடிவு காட்டி
மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
சேண் சுடர்த் தோள்கள் பல தழைத்த
தேவ பிராற்கு என் நிறைவினோடு
நாண் கொடுத்தேன் இனி என் கொடுக்கேன்
என்னுடை நன்னுதல் நங்கைமீர்காள்–8-2-9-

உனக்குத் தன்னைக் காட்டானோ என்னில் -ஸ்வ வ்யாதிரிக்த விஷய சங்கம் விட்டால் அல்லது ஆர்க்கும் தன்னைக் காட்டான் என்று
அவற்றை நோக்கிச் சொல்லி தத் தர்சன அர்த்தமான ஸ்வ உத்யோகத்தை பிரதிபந்திக்கைக்காக –
அவனை ஆசைப்பட்டு இதுக்கு முன்பு உன்னுடைய உபகரணங்களை இழந்தால் போலே இன்னம் உள்ளவற்றை இழவாதே
இருக்கப் பார்க்கில் அத்தை விடு -என்று அந்நியராய் இருப்பார் சொல்ல –
அவர்களை நோக்கி -சர்வஞ்ஞனாய்-சர்வசக்தியாய் இருந்த சர்வேஸ்வரனாலும் இப்படி நிர்மிக்க முடியாது என்னும்படி
ஆச்சர்யமாய் நிரதிசய ஸுந்தர்ய விசிஷ்டனுமாய் சர்வ வசீ கரணமான தன்னுடைய மாண் குறள் கோல வடிவு காட்டி
மஹா பலியுடைய சர்வ இந்த்ரியங்களையும் அபஹரித்து நெய்தல் பூ வளர்ந்தால் போலே சர்வ லோகமும் நிறையும்படி மலர்ந்த
திரு மேனியையும் கற்பகச் சோலை தழைத்தால் போலே தழைத்த நிரதிசய உஜ்ஜவலமான திருத் தோள்களையும் யுடையனாய் இருந்த
கோல பிரார்க்கு என் நிறைவினோடு நாண் கொடுத்தேன் –
இனி என் கொடுக்கேன் -என்னுடைய நன்னுதல் நங்கைமீர்காள் -என்று சொல்லுகிறார் –

——————————————————————

என்னுடை நன்னுதல் நங்கை மீர்காள்
யானினிச் செய்வதென் என்னெஞ்சென்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி
நேமியும் சங்கு மிரு கைக்கொண்டு
பன்னெடுஞ் சூழ் சுடர் ஞாயிற்றோடு
பால் மதி ஏந்தி யோர் கோல நீல
நன்னெடும் குன்றம் வருவதொப்பான்
நாண் மலர்ப்பாத மடைந்ததுவே-8-2-10-

ஆகிலும் அவனை ஆசைப்படுகை யீடல்ல என்று அவர்கள் சொல்ல நான் தோழிமாரை விட்டால் போலே என் நெஞ்சு என்னை
நின்னிடையேன் அல்லேன் என்று நீங்கி சங்க சக்ர கதா தரனாய் நீலமான திருமேனியை யுடையனாய்
நிரதிசய தீப்தி யுக்த திவாகர நிசாகர அலங்க்ருத நிரதிசய ரமணீய வரணீய ஜங்கம நீல மஹா ஸலம் போலே இருந்த
அவனுடைய நாண் மலர்ப் பாதம் அடைந்தது -யான் இனிச் செய்வது என் என்னுடைய நன்னுதல் நங்கைமீர்காள் என்கிறார் –

——————————————

பாதமடை வதன் பாசத்தாலே
மற்றவன்பாசங்கள் முற்ற விட்டு
கோதில் புகழ்க் கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன
தீதில் அந்தாதி ஓர் ஆயிரத்துள்
இவையுமோர் பத்திசை யோடும் வல்லார்
ஆதுமோர் தீதிலராகி
இங்கு மங்கு மெல்லாம் அமைவார்கள் தாமே–8-2-11-

திருவடிகளைச் சேர வேணும் என்னும் ஆசையால் தத் வியதிரிக்த விஷய சங்கத்தை நிஸ் சேஷமாக விட்டு
ஸ்வ வியதிரிக்த சகல விஷய சங்க நிவர்த்தகமான கல்யாண குணங்களை யுடையனான ஸ்ரீ கண்ணன் தன்னடி மேல்
வண் குருகூர் சடகோபன் சொன்ன நிரவதிக போக்யமான இத்திருவாய் மொழியை வல்லார்
நிரஸ்த ஸமஸ்த துக்கராய் அங்கும் இங்கும் எல்லாப்படியாலும் பரிபூர்ணர் -என்கிறார் –

———————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: