பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –6-8-

திருக் கோளூரிலே போய்ப் புக்கு எம்பெருமானோடு ஸம்ஸ்லேஷித்தது எல்லாம் மநோ ரத மாத்ரமாய்
பழையபடியே எம்பெருமானைக் காணப் பெறாமையாலே தத் விரஹம் அஸஹ மாநராய் –
அந்யாப தேசத்தாலே ஒரு பிராட்டியாய் அவனைக் குறித்து தூத ப்ரே க்ஷணம் பண்ணுகிறார் –
இப்படித் திருக் கோளூரிலே எழுந்து அருளின பிராட்டியோடுள்ள சிரகால சம்ச்லேஷ ஜனித்த அநவதிக ஆனந்த மஹார்ணவ
அந்தர் நிமக்நனான எம்பெருமான் -அந்த ஆனந்த வெள்ளம் தனக்கு அஸாத்யமானவாறே
அது சாத்மிக்கைக்காக விஸ்லேஷித்து நெடும் காலம் எழுந்து அருளாது இருந்தவாறே –
தத் விஸ்லேஷத்தாலே அத்யந்தம் அவசன்னையான பிராட்டி தன்னுடைய ஆற்றாமையால்
அவனைக் குறித்து சில பஷிகளைத் தூதாக விடுகிறாள் என்றுமாம்
திருக் கோளூரிலே போய்ப் புக வேணும் என்று புறப்பட இப்பிராட்டி தன்னுடைய அவசாதத்தாலே
பின்னைப் போக க்ஷமை இன்றியே அங்கே உத்யானத்திலே இருந்து
எம்பெருமானைக் குறித்து தூத ப்ரே க்ஷணம் பண்ணுகிறாள் என்றுமாம் –

————————————————————

பொன்னுல காளீரோ? புவனிமுழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான்இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன்கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-

மத் ஸம்ஸ்லேஷைக தாரக போஷக போக்யனாய் -மத் அதீன ஸ்வரூப ரூபா விபவ ஐஸ்வர்யனாய்கே கொண்டு
என்னோடு ஸம்ஸ்லேஷித்து விஸ்லேஷிக்கிறான்
என்னுடைய சர்வஸ்வத்தையும் அபஹரித்துக் கொண்டு என்னைத் தோற்பித்துத் தனக்கு அடிமை யாக்கிக் கொண்ட எம்பெருமான்
தன்னைப் பிரிந்து நான் படுகிற வ்யசனத்தைச் சென்று சொல்ல வேணும் என்று புள்ளினங்களை குறித்துச் சொல்ல
அவை பின்னையும் போகாது இருந்தவாறே -அவன் நம்முடைய அபேக்ஷிதம் செய்யாது ஒழியில் செய்வது என் -என்று
போகாது இருந்தனவாகக் கொண்டு அவன் பரம காருணிகனாகையாலும்-ஆஸ்ரித வத்சலனாகையாலும் நம் அபேக்ஷிதம் செய்து அருளும்
ஆதலால் என்னுடைய தசையைச் சொல்ல வேணும் என்று சொல்லி
அவற்றில் பக்கலுள்ள ப்ரீதி அதிசயத்தாலே திரு நாட்டையும் லீலா உபகரணமான அண்டங்களையும் அடங்க
இவை செய்கிற உபகாரத்துக்குக் கைமாறாகக் கொடுத்து பின்னையும்
நிரூபித்து இவை செய்கிற மஹா உபகாரத்துக்குக் கைம்மாறாகப் போராது என்று பார்த்து
பரம தயாளுக்களான உங்களுடைய நிரவதிக தயையாலே சம்சார நிமக்னையான
என்னுடைய தசையைச் சென்று சொல்ல வேணும் என்று பிரார்த்திக்கிறாள் –

——————————————-

மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார் முன்பு என்கை இருந்து
நெய்யமர் இன்னடிசில் நிச்சல் பாலொடு மேவீரோ?
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப்பெரு மானைக் கண்டு
மெய்யமர் காதல் சொல்லிக் கிளிகாள்! விரைந்தோடி வந்தே.–6-8-2-

ஒரு தாமரையில் ஒரு தாமரை பூத்தால் போலே திருக் கையும் திருவாழியும் சேர்ந்து இருக்கிற அழகாலும்
திருவாழியைக் கண்டா ப்ரீதியாலே புதுக்கணித்த திருப் பவளத்தை அழகாலும் என்னை அடிமை யாக்கினவனுடைய
அழகைக் கண்டு நீங்கள் சம்ருத்தராய் பின்னை அவளுக்கு உன் பக்கலுள்ள ஸ்நேஹம் மெய்யான ஸ்நேஹம் என்று
அவனுக்குச் சொல்லி -அவன் அருளிச் செய்யும் வார்த்தைகளை நான் முடிவதற்கு முன்னே விரைந்தோடி வந்து
எனக்குச் சொல்லி என்னை தரிப்பித்து என்னுடைய தோழிமார் எல்லாரும் உங்களுடைய ஸம்ருத்தியைக் கண்டு
ஆசைப்படும்படி என் கையிலே இருந்து அவன் திரு நாமங்களை நான் கற்பிக்கக் கற்று வாழி கோள் என்று
தன் கிளிகளை நோக்கிச் சொல்லுகிறாள் –

——————————————————

ஓடிவந்து என்குழல்மேல் ஒளிமாமலர் ஊதிரோ?
கூடிய வண்டினங்காள்! குருநாடுடை ஐவர்கட்காய்
ஆடிய மாநெடுந்தேர்ப் படைநீறுஎழச் செற்றபிரான்
சூடிய தண்துளபம்உண்ட தூமது வாய்கள்கொண்டே.–6-8-3-

ராஜ்ய ப்ராப்தராய் ஸமாஸ்ரிதருமான பாண்டவர்கள் பக்கலுள்ள வாத்சல்யத்தாலே த்ரை லோக்ய விஜய உபகரண பூதமாய்
அதிஉன்னதமாய் இருந்த திருத் தேரிலே நின்று அவர்களுக்கு சாரத்யம் பண்ணி தத் விரோதிகளை நிரசித்து அருளின சமயத்திலே
பரமபக்தி யுக்தரான திருத் துழாய் மதுவைப் பணம் பண்ணி அத்தூ மதுவாய்களைக் கொண்டோடி வந்து
மதுவையும் அதி சீதளமான திவ்ய கந்தத்தையும் என் குழல் மேலே ஓளி மா மலர்களில் வர்ஷிக்க வேணும் –
வர்ஷிக்கவே மலர்களும் வளர்ந்து புதுக்கணிக்கும் -எந்நிறம் பண்டு பாண்டே போல் ஒக்கும்
கெண்டை ஒண் கண்ணும் துயிலும் என்று பரஸ்பர சம்ச்லேஷ ஏக போகமான
வண்டுகளை நோக்கிச் சொல்லுகிறாள் –

————————————————————

தூமது வாய்கள்கொண்டு வந்து, என்முல்லைகள்மேல் தும்பிகாள்!
பூமது உண்ணச் செல்லில் வினையேனைப் பொய்செய்தகன்ற
மாமது வார்தண் துழாய்முடி வானவர் கோனைக்கண்டு
தாம்இதுவோ தக்கவாறு என்னவேண்டும் கண்டீர் நுங்கட்கே.–6-8-4-

நீங்கள் பூ மது உண்ணச் செல்லில் பாக்ய ஹீனையான எனக்கு சம்ச்லேஷம் என்றோர் இந்திர ஜாலத்தைக் காட்டி
என்னை அகன்று திரு நாட்டிலே திரு மா மணி மண்டபத்திலே அயர்வரும் அமரர்கள் திவ்ய பரிஷத்திலே
குணைர் தாஸ்யம் உபாகதராய் இருந்த அவர்களால் அலங்க்ருதனாய் இருந்த அவனைக் கண்டு
அவன் திருக் குழலில் திருத் துழாயின் மது வெல்லத்தை உங்கள் தூ மது வாய்கள் கொண்டு பருகிப் பின்னை
உம்மை ஒருத்தி இன்று ஆசைப்பட்டுக் கூப்பிடா நிற்க அவளை நினையாது இருக்கும் இதுவோ உம்முடைய கிருபையாவது என்று
அவர் சந்நிதியில் சொல்ல வேணும் என்று
தனக்குப் பரம ஸூ ஹ்ருத்துக்களாய்த் தன் முல்லைகளிலே வந்து இருக்கிற தும்பிகளை நோக்கிச் சொல்லுகிறாள்

——————————————

நுங்கட்கு யான்உரைக்கேன் வம்மின் யான்வளர்த்த கிளிகாள்!
வெங்கட் புள்ளூர்ந்து வந்து வினையேனை நெஞ்சம்கவர்ந்த
செங்கட் கருமுகிலைச் செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை
எங்குச்சென் றாகிலும் கண்டு இதுவோ தக்கவாறு என்மினே!–6-8-5-

க்ருச அவலோகந கால அநல பிரதிகூல ஜாலனான பெரிய திருவடி திருத் தோளிலே ஏறி யருளி வந்து என்னோடே ஸம்ஸ்லேஷித்து
விஸ்லேஷிக்கிற போது-அதி சீதளமாய் ம்ருத சஞ்சீவனமான திவ்ய கடாக்ஷங்களாலும் அதி மதுரமான பணி மொழிகளினாலும்
திரு மேனியில் அழகாலும் ஆத்ம அநு ரூபமான பரிஷ்வங்கத்தாலும்-என்னுடைய மனஸ் ப்ரப்ருதி சகல கரணங்களையும்
அபஹரித்துக் கொண்டு போனவனைத் திருநாட்டில் சென்றாகிலும் கண்டு உம்முடைய தக்கவாறு இதுவோ என்று சொல்லவேணும்
என்று தான் வளர்த்த கிளிகளைக் குறித்துச் சொல்லுகிறாள் —

————————————

என்மின்னு நூல்மார்வன் என்கரும்பெருமான் என்கண்ணன்
தன்மன்னு நீள்கழல்மேல் தண்துழாய் நமக்கன்றி நல்கான்
கன்மின்கள் என்று உம்மை யான் கற்பியா வைத்த மாற்றம்சொல்லிச்
சென்மின்கள் தீவினையேன் வளர்த்த சிறு பூவைகளே!–6-8-6-

இதுவோ தக்கவாறு என்று சொல்ல வேணும் என்று தான் வளர்த்த பூவைகளை அபேக்ஷிக்க பின்னையும் அவை போகாது
இருந்தவாறே நம் அபேக்ஷிதம் அவன் செய்து அருளா விடில் செய்வது என் என்று போகாது இருந்தனவாகக் கொண்டு –
ஸ்வ கீய அசங்க்யேய திவ்ய பூஷண பூஷிதமான திவ்ய ரூபத்தையும் தன்னையும் எனக்கே போக்யமாகப் பரிகல்பித்துக் கொண்டு
இருக்கிற என் ஸ்ரீ கிருஷ்ணன் தன் மன்னு நீள் கழல் மேல் தண் துழாய்
நமக்கன்றி நல்கான் -ஆதலால் ஈண்டச் சொல்லுங்கோள் என்கிறாள் –

———————————————–
பூவைகள் போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும்கண்ணன்
யாவையும் யாவருமாய் நின்ற மாயன்என் னாழிப்பிரான்
மாவைவல் வாயபிளந்த மதுசூதற்குஎன் மாற்றம் சொல்லிப்
பாவைகள்! தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.–6-8-7-

நான் வளர்த்த சிறு பூவைகளினுடைய நிறம் போலே இருந்த திரு நிறத்தையும் புண்டரீகங்கள் போன்று இருந்த கண்களையும்
அக்கண்களாலே ஸூசுத்தமான சேதன அசேதன ஸமஸ்த வஸ்துக்களினுடைய நியமன ரூப ஆச்சர்யத்தையும் –
என்னைத் தோற்பித்து அடிமையாக்கின திருவாழியை ஏந்தின அழகையும் -திருக் கைத் தழும்பாலே ஸூசி தமான
மது கைடாபாதி பிரதிகூல நிராசன திவ்ய சேஷ்டிதங்களையும் அடையாளமாக யுடையனாய் இருந்த எம்பெருமானுக்கு
என் மாற்றம் சொல்லி என் இழவை நீங்களே தீர்க்கத் தீரும் அத்தனை -என்னால் ஒரு செயல் இல்லை என்று
தன்னுடைய நிரவதிக வ்யசனத்தாலே கலங்கித் தன் பாவைகளை பிரார்த்திக்கிறாள் –

———————————————————–

பாசற வெய்தி இன்னே வினையேன் எனைஊழி நைவேன்?
ஆசறு தூவி வெள்ளைக்குருகே! அருள்செய் தொருநாள்
மாசறு நீலச் சுடர்முடி வானவர் கோனைக்கண்டு
ஏசறும் நும்மை அல்லால் மறுநோக்கிலள் பேர்த்துமற்றே.–6-8-8-

நீங்களும் சொல்ல வேணும் என்று சில குருகுகளை அபேக்ஷிக்க அவை போகாது இருந்தவாறே
பிரிந்த யுத்தர ஷணத்திலே தூத ப்ரேக்ஷணம் பண்ணும் இத்தனையோ –
அவன் விளம்பித்தால் அல்லவோ தூத ப்ரேக்ஷணம் பண்ணுவது -என்று போகாது இருந்தனவாகக் கொண்டு
அவனை இழந்து இப்படியே வ்யஸனப் படுகிறது எத்தனை யாயிரம் ப்ரஹ்ம கல்பமுண்டு –
ஆதலால் பர துக்க அஸஹிஷ்ணுதைக ஸ்வ பாவரான நீங்கள் விமல நீல ஜ்யோதிர் மய குந்தள ஹார அலங்க்ருதனாய்
பரம ஸூரி பரிசரித சரண யுகளனாய் இருந்த எம்பெருமானுக்கு
அநாத்ருதப ரோக்தோ பாலம்பையாம் படி உன் பக்கலிலே அபி நிவிஷ்டையானாள்
நீ உபேக்ஷிக்கிலும் உன்னுடைய கடாக்ஷம் அல்லது வேறொரு துணை யுண்டு என்று இராள் என்று
சொல்ல வேணும் என்று குருகுகளை இரக்கிறாள்

————————————————————–

பேர்த்து மற்றோர் களை கண் வினையாட்டியேன் நான் ஒன்றிலேன்
நீர்த்திரை மேல்உலவி இரை தேரும் புதா இனங்காள்!
கார்த்திரள் மாமுகில்போல் கண்ணன் விண்ணவர்கோனைக்கண்டு
வார்த்தைகள் கொண்டருளி யுரையீர் வைகல் வந்திருந்தே.–6-8-9-

ஸஸ்யங்கள் உலரா நிற்க மேகங்கள் கடலிலே வர்ஷிக்குமா போலே தன்னுடைய கடாக்ஷம் ஒழிய வேறொரு யுக்தி இன்றியே
நான் தளரா நிற்கத் தன்னுடைய ஸ்வரூப ரூப குண விபூதி விஷய சர்வ கால சாஷாத்கார ஜனித நிரவதிக ஆனந்த மஹார்ணவ
அந்தர் நிமக்நரான அயர்வரும் அமரர்களுக்கே தன்னை அனுபவிக்கக் கொடுக்கும் அத்தனையோ என்று
எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்து பின்னை அவன் அருளிச் செய்து அருளின வார்த்தைகளைக் கேட்டு பிரகிரியையாலே இருந்து
என் பக்கலிலே கிருபையைப் பண்ணி எனக்கு எப்போதும் அவற்றைச் சொல்லி
என்னை தரிப்பிக்க வேணும் என்று சில புதாவினங்களை நோக்கிச் சொல்லுகிறாள் –

—————————————————

வந்திருந்து உம்முடைய மணிச்சேவலும் நீருமெல்லாம்
அந்தரம் ஒன்றுமின்றி அலர்மேல் அசையும் அன்னங்காள்!
என்திரு மார்வற்குஎன்னை இன்னவாறிவள் காண்மின்என்று
மந்திரத் தொன்றுணர்த்தி உரையீர்மறு மாற்றங்களே.–6-8-10-

திரு ஓலக்கத்தில் எழுந்து அருளி இருந்த சமயத்திலே திரு உள்ளம் அந்நிய பாரமாய் இருக்கிற போது சொல்லாதே
அவ்வோலக்கம் கிளம்பி திவ்ய அந்தப்புரத்தில் எழுந்து அருளினால் அங்கே பிராட்டியுடைய திவ்ய சந்நிதியில்
திரு உள்ளத்திலே படும்படி என் திறம் விண்ணப்பம் செய்து அவன் அருளிச் செய்து அருளின மறு மாற்றம் கொண்டு
என் அருகே வந்திருந்து சொல்ல வேணும் என்று
அனவரத சம்ச்லேஷ ஏக போகமான அன்னங்களைக் குறித்துச் சொல்லுகிறாள் –

———————————————————–

மாற்றங்கள் ஆய்ந்து கொண்டு மதுசூதபிரான் அடிமேல்
நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன்சொன்ன
தோற்றங்க ளாயிரத்துள் இவையும்ஒரு பத்தும்வல்லார்
ஊற்றின்கண் நுண்மணல்போல் உருகாநிற்பர் நீராயே.–6-8-11-

பொலிந்து நின்ற பிரான் திருவடிகளில் நாற்றங்கொள் பூம்பொழில் சூழ் குருகூர்ச்சட கோபன் அசங்கல்ப பூர்வகமாக
தத்விஷய நிரதிசய அநுராக ப்ரேரிதனாயக் கொண்டு அதி மதுரமாய் மிருதுவாய் இருந்த சொற்களால் சொன்ன
ஆயிரத்துள் இத்திருவாய் மொழியில் ஆழ்வாருக்குச் சென்ற வ்யஸனத்தை அநு சந்தித்தார்
ஆத்ம தாரண ஷமர் இன்றியே ஊற்றின்கண் நுண்மணல்போல் நீராய் உருகாநிற்பர்-என்கிறார் –

————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: