அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி –6-7- –

ஏழாம் திருவாய் மொழியில் -கீழ் ஆத்மாத்மீய ஸ்வ பாவங்கள் எல்லாம் தத் அதீனமாம்படி அவற்றில் தமக்கு
ஸ்வாம்யநிவ்ருத்தி பிறந்த படியை அனுசந்தித்து அருளினவர்
அத்தலையில் தமக்குப் பிறந்த ப்ராவண்ய அதிசயத்தால் அதி த்வரித சித்தராய் –
ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரன் விஷயமாகத் தமக்கு த்வரை பிறக்கைக்கு அடியான
அவனுடைய தாரக போஷக போக்யத்வாதி ஆகாரத்தையும்
ஸர்வ லோக பிரசித்தமான நாமாதி யோகத்தையும்
அத்திரு நாமத்தினுடைய ஸர்வ உபயோக யோக்யதையையும்
ஐஸ்வர்ய அதிசயத்தையும்
அத்யந்த விலக்ஷணமான போக ஸ்த்தானவத்தையும்
ஆகர்ஷகமான அவயவ சோபையையும்
அனவதிக வ்யாமோஹத்தையும்
அதிசயித போக்யயான ஸ்ரீ லஷ்மீ விஷயத்தில் அபிமத தமத்வத்தையும்
ஆஸ்ரித ஸுலப்யத்தையும்
அகில ஜகத் ஸ்வாமித்வத்தையும்
அனுசந்தித்து -தமக்குப் பிறந்த த்வரா அதிசயத்தாலே அவனை பிராபிக்கையிலே உத்யோகித்து நடந்த இவருடைய அவஸ்தையை
அனுசந்தித்துப் பரிவரானவர்கள் ஈடுபட்ட பிரகாரத்தை நாயகனான சர்வேஸ்வரனைப் பிரிந்து ஆற்றாமையால்
அத்யந்த த்வரா விஷ்டையாய்க் கொண்டு அவன் இருந்த திருக் கோளூரை நோக்கி
அபி சாரிகா விருத்தியைப் பண்ணிக் கை கழிந்த தலைவியைப் பற்ற
நல் தாய் இரங்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

————————————————————

முதல் பாட்டில் -தாரக போஷக போக்யாதிகள்-எல்லாம் தானேயாய் இருக்கிற ஸ்ரீ கிருஷ்ணன் வர்த்திக்கிற
திருக் கோளூரே இவள் சென்று புகுமூர் என்று அறுதி இடுகிறாள்

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–6-7-1-

உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும்வெற்றிலையு மெல்லாம்–தாரகத்வேந உண்டு கொண்டு நிற்க வேண்டும்படியான சோறும் –
த்ருஷ்ணா சாந்தி கரமாய்க் கொண்டு போஷகம் ஆகையால் பானம் பண்ணி நிற்க வேண்டும்படியான தண்ணீரும்
ப்ரீதி ஹேதுவாய்க் கொண்டு போக்யமாகையாலே தின்னக் கடவ வெற்றிலையும் –
இப்படி தாரகாதிகளுக்கு உறுப்பான வஸ்துக்கள் எல்லாம்
கண்ணன்எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி–வஸூ தேவ தநயனான ஸ்ரீ கிருஷ்ணனாய் –
எனக்கு ஸ்வாமியான அவன் என்று என்றே பல காலும் ஆவர்த்தித்து –
அவனுடைய அசந்நிதானத்தாலே கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர்வளம் மிக்கவன் ஊர்வினவித்-அவன் ஆஸ்ரித சந்நிதான அர்த்தமாக வந்த பூமியிலே
அவனுடைய ஸுலப்ய ஸுந்தர்ய ஸுசீல்யாதி திருக் குணங்களையும்
பிரணயித்வ சம்பத்தியால் பரிபூர்ணனானவனுடைய ஊரையும்-தான் அநுஸந்திக்கும் அளவன்றியே
ப்ரணய பாரவஸ்யத்தாலே -அநபிஜ்ஜையைப் போலே ஸந்நிஹிதரையும் வினவி வழிக்குத் தாரகமாக உஸாவா நின்று கொண்டு
திண்ணம் என்இளமான் புகுமுர் திருக்கோளூரே.–என் பிள்ளையாகையாலும் மௌக்யமான மான் போலே
பேதைப் பருவமாகையாலும் வேறொரு இடத்தில் தூரப் போக வல்லல் அல்லள்-
அவள் போய்ப் புகுமூர் திருக் கோளூரே -இது நிச்சிதம் –

—————————————-

அநந்தரம் சர்வ லோக ப்ரஸித்தமாம்படி அவனுடைய நாமாதிகளை ப்ரவர்த்திப்பிக்கும் இவள் -நிரதிசய போக்யமான
திருக் கோளூரிலே போய்ப் புக்கு மீண்டு போருமோ-என்று அவளுடைய லீலா உபகரணமான பூவைகளைக் கேட்க்கிறாள் –

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –6-7-2-

ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே அவனுடைய–தான் இருந்த ஊரும் -அத்தோடு சேர்ந்த நாடும் –
நாட்டோடு அணைந்த லோகமும் தன்னைப் போலவே அவனுடைய
பேரும் தார்களுமே பிதற்றக் கற்பு வான் இடறி-பேரையும் தாரையும் பஹு முகமாகப் பிதற்றும்படியாக
ஆகாசவத் அநதி லங்க்யமான ஸ்த்ரீத்வ மரியாதையைக் கடந்து
சேரும் நல் வளம் சேர் பழனத் திருக் கோளூர்க்கே-வி லக்ஷணமான ஸம்ருத்தியோடே சேர்ந்து நீர் நிலங்களை யுடைத்தான
திருக் கோளூர்க்கே சென்று சேருமவளாய்
போருங்கொல் உரையீர் கொடியேன் கொடி பூவைகளே –தன்னைப் பிரிகைக்கு ஈடான கொடுமையையுடைய என் பெண் பிள்ளையாய்
உபக்ந அபேக்ஷமான கொடி போலே -அவனைக் கிட்டி யல்லது தரிக்க மாட்டாதவள் மீண்டு போருமோ –
பூவைகாள் -என்னைப் போல் அன்றே உங்களுக்குச் சொல்லிப் போகக் கூடுமிறே-சொல்லுங்கோள்-

——————————————————————–

அநந்தரம் -தன்னுடைய லீலா உபகரணங்களால் உள்ள ரசம் எல்லாம் திரு நாம உச்சாரணத்தாலே பிறக்கும்படியாய் இருக்கிற இவள்
திருக் கோளூரிலே புக்கு அவன் தன் நினைவுக்கு ஈடாகப் பரிமாறாமையாலே
கண்ணும் கண்ணநீருமாய் எங்கனே க்லேசப்படுகிறாளோ -என்கிறாள்-

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும் என்
பாவை போய் இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?–6-7-3-

பூவை பைங்கிளிகள் பந்து தூதை பூம்புட்டில்கள்–லீலா உபகரணமான பூவைகள் -பசுத்த கிளிகள் -பந்து -தூதை -பூ விடும் புட்டில்கள்
யாவையும் திருமால் திரு நாமங்களே கூவி எழும்என்-இவை எல்லாவற்றாலும் உள்ள ரசம் பிறக்கும்படி
திருமாலுடைய திருநாமங்களையே உச்சரித்து -பாத்தாலே உஜ்ஜீவிக்கும்படியான என்னுடைய
பாவை போய்இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே-பெண்பிள்ளையானவள் -இத்திரு நாம உச்சாரண ரசம் கிடக்கச் செய்தே-
பின்னையும் குளிர்ந்த பழனங்களையுடைய திருக் கோளூர்க்கே போய் –
அவன் எதிர்வந்து ஸ்வா காதிகளைப் பண்ணி ஆலோக ஆலாபா லிங்க நாதிகளாலே ஆஸ்வாசிப்பியாமையாலே
கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொடு என்செய்யுங்கொலோ?–கோவைப் பழம் போலே இருக்கிற அதரம் துடிப்ப
வர்ஷம் போலே தாராளமான நீரையுடைத்தான கண்களோடு நின்று என் செய்கிறார்களோ
யாவற்றையும் திருமால் திரு நாமங்களைச் சொல்லும் என்றுமாம் –

—————————————————–

அநந்தரம் -நிரதிசய ஐஸ்வர்ய விசிஷ்டனானவனுடைய திருக் கோளூர்க்கே போக ஒருப்பட்டு விட்டாள்-
இவளை ஊரார் என்ன சொல்லுவார்களோ -என்கிறாள் –

கொல்லை என்பர்கொலோ? குணம்மிக்கனள் என்பர்கொலோ?
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!
செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.–6-7-4-

செல்வம் மல்கி அவன் கிடந்த திருக்கோளூர்க்கே–அதிசயித ஐஸ்வர்யத்தை யுடையவனாய்க் கொண்டு –
அவன் கண் வளர்ந்து அருளினை திருக் கோளூர்க்கே
மெல்லிடை நுடங்க இளமான் செல்ல மேவினளே.–மெல்லிய இடையானது நுடங்கும்படி முக்தமான மான் போலே இருக்கிற இவள் –
தன் பல ஹானியையும் பருவத்தையும் பாராதே போகையில் நெஞ்சு பொருந்திப் போய் விட்டாள் –
சில்லைவாய்ப் பெண்கள் அயற்சேரி உள்ளாரும் எல்லே!–சிலுக்கிடுகையே ஸ்வ பாவமான வாயை யுடையவர்களாய்
ஆசன்னைகளான பெண்களும் அயல் சேரியில் உள்ளாரும்
கொல்லை என்பர்கொலோ? -வரம்பு அழிந்தாள் என்று கர்ஹிப்பார்களோ –
குணம்மிக்கனள் என்பர்கொலோ?–அதிசயிதமாய்-அனுரூபமான விஷயத்தை அறிந்து மேல்விழும்படியான விலக்ஷண
குணாதிசயத்தை யுடையவள் என்று கொண்டாடுவர்களோ
எல்லே -இது என்னதாய் இருக்கிறதோ என்று விஷாத ஸூசகம்

——————————————

அநந்தரம் ஸ்ரீ யபதியானவனுடைய விலக்ஷண லோக ஸ்த்தானத்தைக் கண்டு எங்கனே பிரியப்படுகிறாளோ -என்கிறாள் –

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என்சிறுத்
தேவி போய் இனித் தன் திருமால் திருக் கோளூரில்
பூவியல் பொழிலும் தடமும் அவன்கோயிலும் கண்டு
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–6-7-5-

மேவி நைந்து நைந்து விளையாடலுறாள் என்சிறுத் தேவி போய் –அவனுடைய ஸுந்தர்ய ஸீலாதிகளை நெஞ்சால் கிட்டி –
க்ஷணம் தோறும் சிதிலையாய் -விளையாடுகையிலும் பொருத்தம் அற்று இருப்பாளாய்
பருவம் நிரம்பாத சிறுமையை யுடையளாய் இருக்கச் செய்தே வாசி அறியும்படியான திவ்ய ஸ்வ பாவத்தை யுடையளான
என் பெண்பிள்ளை -இங்கு நின்றும் போய்
இனித் தன் திருமால் திருக் கோளூரில் பூவியல் பொழிலும் தடமும் –தனக்கு அசாதாரணமான ஸ்ரீமானுடைய திருக் கோளூரிலே
பூவை இயல்பாக யுடைத்தான பொழில்களையும் -பொழிலிலுக்குச் செவ்வி கொடுக்கும்படி தடாகங்களையும்
அவன்கோயிலும் கண்டு–ஸ்ரீ மஹா லஷ்மியோடே அவன் வர்த்திக்கிற போக ஸ்த்தானமான கோயிலையும் -நினைத்து
முன்பு சிதிலையானவள் இனி காணப் பெற்று
ஆவிஉள் குளிர எங்ஙனே உகக்குங்கொல் இன்றே?–பிராண ஆச்ரயமான நெஞ்சு குளிரும்படியாக
தனக்கு நல் விடிவான இன்று எங்கனே உகக்கிறாளோ

————————————————-

அநந்தரம் அவனுடைய திவ்ய அவயவ சோபையை அனுபவித்து ஹர்ஷத்தாலே சிதிலையாம் என்கிறாள் –

இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப்போய்த்
தென்திசைத் தலத மனைய திருக்கோளூர்க்கே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.–6-7-6-

இன்று எனக்கு உதவாது அகன்ற இளமான் இனிப்போய்த்–தன்னைப் பிரிந்து நோவுபடுகிற எனக்கு இப்போது உதவாதே
கை கழியப் போன சிறப் பெண்பிள்ளையானவள் வருந்தி வழி கடந்து போய்
தென்திசைத் தலத மனைய திருக்கோ ளூர்க்கே–தெற்குத் திக்குக்கு திலகம் போலே அலங்காரமான திருக் கோளூரிலே
சென்று தன் திருமால் திருக்கண்ணும் செவ்வாயும் கண்டு–பிரவேசித்து இனி புக்க பின்பு ஸ்வ அபிமத ஸம்ஸ்லேஷத்தைத்
தனக்கு பிரகாசிப்பித்துத் தன்னை உற்றாரோடு உறவு அறுத்த ஸ்ரீமானுடைய சாதராபி வீக்ஷணம் பண்ணுகிற கண்களையும்
ச அநு நயமான ஸ்வாகதாதி வசனத்தாலே உஜ்ஜ்வல ரூபமான அதரத்தையும் கண்டு
நின்று நின்று நையும் நெடுங்கண்கள் பனிமல்கவே.–தன்னுடைய நெடிதான கண்களானவை ஆனந்தஸ்ரு பூர்ணமாம்படி
ஹர்ஷ அதிசயத்தாலே பிரதி க்ஷணம் சிதிலையாகா நிற்குமிறே

——————————————————————-

அநந்தரம் -இவள் காண்கைக்கும் உகக்கைக்கும் அடியான அதிசயித வ்யாமோஹத்தை யுடையவனை
வாய் புலற்றிக் கொண்டு வருந்தி நடந்து போய் எங்கனே அவ்வூரிலே புகுவது -என்கிறாள் –

மல்குநீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்
அல்லும்நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப்போய்ச்
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே
ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–6-7-7-

மல்குநீர்க் கண்ணொடு மையலுற்ற மனத்தினளாய்–விரஹத்தாலே மிக்க நீரை யுடைத்தான கண்களோடு
பிரமத்தை அசைந்த நெஞ்சை யுடையளாய்
இப்படி பாஹ்ய அந்தர கரணங்கள் அவிதேயமாய் இருக்க ப்ராவண்ய வாசனா அதிசயத்தாலே
அல்லும்நன் பகலும் நெடுமால் என்றழைத் தினிப்போய்ச்–அவனைச் சொல்லுகைக்கு உறுப்பான நன்மையையுடைய
இரவும் பகலும் அதிசயித வ்யாமோஹத்தை யுடையவனே-என்று கூப்பிட்டு -அவ்வார்த்திக்கு மேலே
செல்வம் மல்கி அவன்கிடந்த திருக்கோளூர்க்கே ஒல்கி ஒல்கி நடந்து எங்ஙனே புகுங்கொல் ஒசிந்தே?–ஒடுங்கி அசைந்து நடந்து
தளர்ந்து போய் அபி வ்ருத்த ஐஸ்வர்யனாய்க் கொண்டு
அவன் கண் வளர்ந்து அருளின திருக் கோளூர்க்கே எங்கனே புகக் கடவளோ
ஓசிவு -தளர்த்தி / ஒல்குதல்-ஒடுக்கமாய் -அசைதல்

———————————————————————

அநந்தரம் நிரதிசய போக்ய போதையான ஸ்ரீ மஹா லஷ்மீக்கு நித்ய அபி மதனானவனுடைய ஊரிலே
ஸச்தையாய் என்னை விட்டவள் தத் சங்கமே தாரகமாக அங்கே சென்று புக வல்லளோ-என்கிறாள்

ஒசிந்த நுண்ணிடைமேல் கையை வைத்து நொந்துநொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண்மல ராள்கொழுநன திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்தஎம் காரிகையே.–6-7-8-

ஒசிந்த ஒண்மல ராள்கொழுநன திருக்கோளூர்க்கே–ரசிக பிரமர உபயுக்தையான புஷ்பா வளி போலே
சோகத்தால் துவண்ட வை லக்ஷண்யத்தை யுடைய பத்ம வாசிநீக்கு அபி மதனான நாயகனுடைய திருக் கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்தஎம் காரிகையே.–ஆர்த்த சித்தையாய் என்னை விட்ட அபி ரூபையான என் பெண்பிள்ளை
ஒசிந்த நுண்ணிடைமேல் கையை வைத்து நொந்துநொந்து-பாண்டே தளர்ந்த மெல்லிய இடையின் மேலே தன் இளைப்பாலே
கையை வைத்து -அது தானே யடியாக மேன்மேலும் நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ணநீர் துளும்பச் செல்லுங்கொல்?-நெஞ்சில் ஈரப்பாட்டே துணையாக யுடையாளாய்
கண்ணநீர் அழியும்படி சென்று விடக் கூடுமோ –

—————————————-

அநந்தரம் -நல்லது கண்டால் தனக்கு ஸூ லபனான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு என்று இருக்குமவன்
ஊரார் சொல்லும் பழியை மதியாதே போனாளே -என்கிறாள் –

காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–6-7-9-

காரியம் நல்லனகள் அவைகாணில் என் கண்ணனுக்கு என்று-நன்றாய் செயல்பாட்டை யுடைத்தான பதார்த்தங்களானவற்றை
காணில் எனக்கு பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு என்று
ஈரியா யிருப்பாள் இதெல்லாம் கிடக்க இனிப்போய்ச்–ஆர்த்த ஸ்வ பாவையாய் இருப்பாளாய் மெல்லிய ஆபரணத்தை
யுடையளான இவள் ததார்த்தமாக தான் சங்கல்பித்த இவ்விபூதி எல்லாம் கிடைக்க பின்னையும் விட்டுப் போய்
சேரி பல்பழி தூஉய் இரைப்பத் திருக்கோளூர்க்கே-சேரியில் உள்ளார் பலவகையும் பழி தூற்றி கோஷியா நிற்க திருக் கோளூர்க்கே
நேரிழை நடந்தாள் எம்மை ஒன்றும் நினைத்திலளே.–நடந்து சென்றாள்-என்னையும் ஒருபடியும் நினைத்திலள்
ஊராராகவும் நினைத்திலள்
உடன்பாடையாகவும் நினைத்திலள் -என்று கருத்து

——————————————

அநந்தரம் அகில ஜகத் ஸ்வாமியான அரவிந்த லோசனனை ஏக தேசமும் விடாளாகக் கொண்டு
குடிப்பழியும் பாராதே அவ்வூரிலே புக்கு விட்டாள் என்கிறாள்

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப்போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக்கோளூர்க்கே
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.-6-7-10-

நினைக்கிலேன் தெய்வங்காள்! நெடுங்கண் இளமான் இனிப்போய்–தெய்வங்காள் இவளுடைய அதிப்ரவ்ருத்தி
நினைக்க மாட்டுகிறிலேன்–அவன் பெருமையை எல்லாம் தன் அகவாயிலே ஆக்கும்படி பெரிய கண்ணை யுடையளாய் –
பருவத்தைப் பார்த்தால் முக்தமான மான் போலே இருக்கிற இவள் -தன் கண் அழகு தனக்கு உண்டாயிருக்கப் பின்னையும் போய்ப் போய்
அனைத்துலகு முடைய அரவிந்த லோசனனை–சர்வலோகத்துக்கும் ஸ்வாமியானமைக்குத் தகுதியான அரவிந்த லோசனனை
தினைத்த னையும் விடாள் அவன்சேர் திருக்கோ ளூர்க்கே–அவன் வர்த்திக்கிற திருக் கோளூருக்கே சடக்கெனச் சென்றாள் –
தான் செல்லுகை
மனைக்கு வான் பழியும் நினையாள் செல்ல வைத்தனளே.–குடிக்கு மிக்க பழி என்றும் நினைக்கிறிலள்
செல்ல வைத்தனள் என்று லோக யுக்தியாலே கடுக்கச் சென்றாள் என்று கருத்து –

———————————————————-

அநந்தரம் இத்திருவாய் மொழியை சஹ்ருத்யமாகச் சொல்ல வல்லவர்கள்
பரமபதத்துக்கு நிர்வாஹகராவர் என்று பலத்தை அருளிச் செய்கிறார்

வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.–6-7-11-

வைத்தமா நிதியாம் மதுசூ தனையே அலற்றிக்–சேமித்து வைத்த மஹா நிதி போலே நிரதிசய ப்ராப்ய பூதனாய்
போக பிரதிபந்தக விரோதி நிராசன சீலனானவனை அலாப நிபந்தமான ஆர்த்தியாலே அலற்றி
கொத்தலர் பொழில்சூழ் குருகூர்ச்சட கோபன் சொன்ன–பூங்கொத்து அலறுகிற சோலையாலே சூழப்பட்ட திரு நகரிக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
பத்து நூற்றுள் இப்பத்து அவன்சேர்திருக்கோ ளூர்க்கே–ஒரோ அர்த்த விசேஷங்களுக்கு வாசகமான பத்தான நூற்றினுள்ளும்
ப்ராப்யத்வரா ப்ரகாசகமான இப்பத்தை அவன் வர்த்திக்கிற திருக் கோளூர்க்கே
சித்தம் வைத்துரைப் பார்திகழ் பொன்னுல காள்வாரே.–நெஞ்சம் வைத்து சொல்ல வல்லார் பகவத் அனுபவ உஜ்ஜ்வல்யத்தை யுடைத்தாய்
ஸ்லாக்யமான பரமபதத்தை தாங்கள் நினைத்தபடி நிர்வஹிக்கப் பெறுவர்கள் –
இது கலித்துறை –

——————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: