Archive for March, 2018

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி –4–6-

March 20, 2018

ஆறாம் திருவாய் மொழியில்
கீழில் திருவாய் மொழியில் இவருக்குப் பிறந்த ஹர்ஷ ப்ரகர்ஷம் மானஸ அனுபவ ஜெனிதமாகையாலே தத் அனுரூபமாக
அவனுடைய ஆலோகநா லாபாதி முகத்தாலே ஸம்ஸ்லேஷித்து அனுபவிக்கப் பெறாத அவசாதம் அதிசயிக்க
அநு பாவ்யனான அவனுடைய ஆஸ்ரித விஷய பக்ஷ பாதத்தையும்
ஆதிக்ய ஸூ சகமான அசாதாரண சிஹ்னங்களையும் அதிசயித போக்யத்வத்தையும்
ஆபத் ஸகத்வத்தையும்
விரோதி நிவர்த்தகத்வத்தையும்
விலக்ஷண விக்ரஹ யோகத்தையும்
அத்யாச்ரயமான உபகாரகத்வத்தையும்
நித்ய ஸூரி சேவ்யத்வத்தையும்
நிரதிசய ஸுலப்யத்வத்தையும்
நித்ய பிராமண கம்யத்தவத்தையும்
அனுசந்தித்து -ஏவம்விதமானவன் நம்மை அனுபவிப்பியாது ஒழிவதே என்று அப்ரக்ருதிங்கதராய் மோஹிக்க
பார்ஸ்வஸ்தரான பரிவார் இவரை ஆஸ்வசிப்பிக்கத் தேடி பரிவின் கனத்தாலே அமார்க்கங்களாலே யாகிலும் பரிஹரிக்கப் போமோ
என்று உத்யோகிக்க இவர் பிரகிருதி அறிந்த பிரபல ஸூ ஹ்ருத்துக்களான ஸ்ரீ மதுரகவி போல்வார் அத்தை விலக்கி
பகவத் திரு நாம சங்கீர்த்தன ததீய பாத பராஸ் ஸ்பர்சாதிகளாலே பரிஹரணீயம் என்று ப்ரதிபாதித்த பாசுரத்தை
நாயகனைப் பிரிந்து ஆற்றாளாகிய தலைமகள் வேறுபாடு கண்டு ப்திரா பன்ன பாஷிணியாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி வார்த்தை கேட்டு
வெறியாட்டாலே பரிஹரிக்கத் தொடங்கின செவிலி தொடக்கமானாரைப் பார்த்து இவள் ப்ரக்ருதி அறிந்த பிரபல்ப்பையான தோழி
அவர்கள் உத்யோகத்தை விலக்கித் தான் இப்போது நிரூபித்து நோயின் நிதானம் அறிந்தாளாக பாவித்து
ஸ்ரீ கிருஷ்ணன் அடியாக வந்த நோவுக்கு அவனை அநு சந்தித்துப் பிழைக்குமது ஒழிய இது பரிஹாரம் அல்ல -என்று
வெறி விலக்கின பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

————————————–

முதல் பாட்டில் -இவள் பாண்டவ பக்ஷபாதியான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஈடுபட்டால் என்னும் இடம் நிரூபித்து அறிந்தோம்
ஆனபின்பு இவள் நோய் தீர்ப்பாரை எங்கே தேடுவோம் என்று தோழியானவள் தாயாரைக் குறித்துச் சொல்லுகிறாள் –

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-

அன்னைமீர்!–இவள் பக்கல் பரிவாலே ஏதேனும் ஒரு வழியாலும் இவள் நோய் சமிப்பிக்க வேணும் என்று இருக்கிற அன்னைமீர்
தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் –அது பரிஹாரமாகாத பின்பு இந்நோய் தீர்ப்பாரை -என்னோடு உங்களோடு வாசியற
நோயின் அடி அறியாத எல்லாரும் கூட ஆராய என்றாலும் எங்கனே ஆராய்வோம் -இப்படிச் சொல்லுகிற நீ அறிந்தாயோ என்னில்
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;–இப்போது நிரூபிக்கையாலே இந்த அழகிய நுதலையுடையவள்
உள்ளூறப் பெற்ற ஸ்லாக்யமான இந்த நோயைத் தேறினோம்
இவள் ஸ்வ பாவத்தாலும் இவள் அவயவ சோபையாலும் நோய் ஆந்தரமாகஉற்ற படியாலும் வேறொரு சரீர ரோகம் அல்ல –
விலக்ஷண ரூப ப்ராவண்ய ரூபமான ஸ்லாக்யமான நோய் என்று அறுதியிட்டோம்
தேறினோம் என்ற பன்மையால் அவர்கள் கலக்கம் தனக்கும் ஒத்தவோபாதி தன் தெளிவே அவர்களுக்கும் தெளிவு என்று கருத்து –
இது எந்த விஷயம் அடியாக வந்தது -என்னில்
போர்ப்பாகு தான் செய்து அன்று -யுத்தத்துக்கு வேண்டும் நிர்வாஹங்களை யடைய தானே செய்து -துர்யோதனாதிகள் பாண்டவர்களை மேலிட்ட அன்று
ஐவரை வெல்வித்த மாயப்போர்த்–ஐவரும் வெல்லும்படியாகப் பண்ணின -ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்தும்
பகலை இரவாக்கியும் பண்ணின க்ருத்ரிம ரூபமான ஆச்சர்ய சேஷ்டிதங்களையுடைய யுத்தத்திலே
தேர்ப் பாகனார்க்கு -அர்ஜுனன் தேரிலே எதிரிகள் அம்பு தன மேலே படும்படி முன்னே சாரதியாய் நின்றவனுக்கு
இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–இவளுடைய நெஞ்சானது பிரமித்து அறிவு அழியா நின்றது

———————————————–

அநந்தரம் இவள் நோய் ஷூ த்ர தேவதா மூலமல்ல -சர்வாதிக தேவதா மூலம் -அவனுடைய
அசாதாரண சிஹ்னங்களைச் சொல்லில் இவளைக் கிடைக்கலாம் -என்கிறாள்

திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2-

திசைக்கின்றதே இவள் நோய் –இவளோடு உங்களோடு வாசியற மதி கெடுகிறது -இவள் நோயாலாய் இருக்கும்
இது மிக்க பெரும் தெய்வம்-இதை சர்வாதிகமாய் அபரிச்சேத்ய மஹாத்ம்யத்தையுடைய தேவ மூலம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது–இது உங்களுக்கும் இவள் தனக்கும் நோய்க்கும்
சேராதபடி நீங்கள் தைவா விஷ்டராய் ஆடுகிற அல்ப தேவதை அன்று
திசைப்பின்றியே -புறம்பு சொல்வார் வார்த்தையைக் கேட்டு பிராமியாதே
சங்கு சக்கரம் என்று இவள் கேட்க –அந்த சர்வாதிக தேவதைக்கு அசாதாரண சிஹனங்களாகிற சங்கு சக்கரங்கள்
என்று மோஹித்துக் கிடக்கிற இவள் கேட்க
நீர் இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –நீங்கள் சொல்ல வல்லீர்களாகில் நன்றாகவே இல்லிருப்புப் பெறும்
இத்தை அப்ரோக்ஷித்துக் காணுங்கோள்-
இல் என்று இருப்பிடமாய் -இவ்விடத்தில் இவள் சத்தையோடு இருக்கப் பெறும் என்றபடி
அன்றியே நாயகன் பக்கலிலே இல் வாழ்க்கையைப் பெறும் என்றுமாம் –

——————————————————

அநந்தரம் -நிந்த்யமான ஸூரா மாம்ஸங்களைக் கொண்டு இதர தேவதா சாந்தி பண்ணாதே நிரதிசய
போக்யனானவன் திருவடிகளை ஏத்தினால் அதுவே இவள் நோய்க்கு பேஷஜமாய் போக்யமுமாம் -என்கிறாள் –

இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3-

இது காண்மின் அன்னைமீர்! -பெற்று வளர்த்தோம் என்கிற மேன்மையாலே சொல்லிற்றுக் கேளாது இராதே
நான் சொன்ன பரிஹாரத்தைப் பண்ணி பலத்தைக் காணுங்கோள்
இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்-இந்தத் தண்ணியளான கட்டுவிச்சியுடைய தகுதியில்லாத வார்த்தையை
கைக் கொண்டு உங்கள் ஸ்வரூபத்தைப் பாராதே
எதுவானும் செய்து அங்கு -ஹேய தேவத அநு வ்ருத்தி ரூபமானது ஏதேனும் ஒன்றை அனுஷ்ட்டித்து அந்த ஸ்தலத்திலே
ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!–ஹேயமாய் இருப்பது ஒரு மதுவையும் மாமிசத்தையும் தூவி தூஷியாதே கொள்ளுங்கோள்
ஆனால் பரிஹாரம் ஏது என்னில் -பாலுமாய் மருந்துமாய் -என்னுமா போலே
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் -மதுஸ்யந்தியான திருத் துழாயாலே அலங்க்ருதமான முடியையுடையனாய்
ஆச்சர்யமான குண சேஷ்டிதங்களை ஆசைப்பட்டார்க்கு அனுபவிப்பிக்கும் மஹா உபகாரகனுடைய
கழல் வாழ்த்தினால்–திருவடிகளுக்கு மங்களா சாசனம் பண்ணினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–அந்த மங்களாசாசனம் உங்கள் ஸ்வரூப அனுரூபமாம் அளவன்றியே
இவள் உள்ளுற்றக் கொண்ட நோய்க்கு பெறுதற்கரிய மருந்துமாய் இவளுக்கு போக்யமுமாய்
இவள் நோய் கண்டு நீங்கள் படுகிற கலக்கத்துக்குப் பரிஹாரமுமாம் –

————————————–

அநந்தரம் க்ருத்ரிமையான கட்டுவிச்சி சொல்லிற்றுச் செய்து ஒரு பிரயோஜனம் இல்லை –
ஆபத்சகனான சர்வேஸ்வரனுடைய திரு நாமத்தைச் சொல்லில் இவளைக் கிடைக்கும் -என்கிறாள் –

மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4-

மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்–பரிஹாரம் இல்லாதத்தை பரிஹாரம் என்று பிரதிபத்தி பண்ணி
இன்ன இடத்திலாள் இன்னாள் என்று சொல்லவும் ஒண்ணாகாள் ஒரு க்ருத்ரிமையாய் பிரதி பன்ன பாஷிணியானவளுடைய
வார்த்தையை விஸ்வஸித்து தேவதாந்த்ர ஸ்பர்ச யோக்யதை இல்லாத நீங்கள்
இவள் பக்கல் பரிவாலே கலங்கி சாத்விக அன்னமான சுத்த அன்னம் அன்றியே தாமஸமாயும் ராஜஸமாயும் உள்ள
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?–கரும் சோற்றையும் தத் வியதிரிக்தமான செஞ்சோற்றையும் கொண்டு
தேவதாந்த்ர சந்நிதான ஸ்தலத்திலே அவற்றுக்கு ப்ரீணநமாம் படி சொல்லுகிற கணக்கிலே இட்டால் என்ன பிரயோஜனம் உண்டு
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட–ஆஸ்ரித அநாஸ்ரித விபாகமற சர்வ லோகங்களையும் ஒரு காலே
பிரளயம் விழுங்காத படி தான் விழுங்கி ரஷித்து அது போனவாறே மீள உமிழ்ந்த
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–பர தேவதையினுடைய திரு நாமத்தை
சொல்ல வல்லீர்களாகில் விலக்ஷணையான இவளைப் பெறுதிகோள் –

———————–

அநந்தரம் -நீங்கள் பண்ணுகிற பரிஹாரம் இவள் நோய் விஞ்சா நின்றது -பிரபல விரோதி நிவர்த்தகனான
ஸ்ரீ கிருஷ்ணனுடைய திரு நாமத்தை உச்சரித்துப் பரிசுத்த சூர்ணத்தை ஸ்பர்சிப்பியுங்கோள் என்கிறாள் –

இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்
தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.–4-6-5-

இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ–நிரதிசய வை லக்ஷண்யத்தையுடைய இவளை பெறும் பிரகாரம்
இந்த அணங்கேறியாடுதல் அன்று -ஐயோ இவளுக்கு நோய் விஞ்சினா படி
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;–குவளைப் பூ போலே மைத்துப் பரப்பையுடைத்தான
கண்களும் கோவைப் பழம் போலே சிவந்த ஆதாரமும் தன்நிறம் அழிந்து பயந்த நிறத்தை யுடையவாம்படி யானாள்
இனி இதுக்குப் பரிஹாரமாவது
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்–மதுகரமான மருந்துகளைக் கவளம் கொண்டு கடம் இழியும் படி
மதித்த குவலயா பீடம் ஆகிற ஆனையைக் கொன்று -மதுரையில் பெண்களுக்கு முகம் கொடுத்த மஹா உபகாரகனுடைய
விரோதி நிரசன ஸூ சகமான திரு நாம உச்சாரணத்தாலே ப்ரஹ்ம நிஷ்டரான பாகவதருடைய
தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.–-பரிசுத்தமான பாத தூளியை கொண்டு இவள் பக்கல் பரிவாலே
வழி யல்ல வழி யாகிலும் பரிஹரிக்கத் தேடுகிற நீங்கள் இவள் ஸ்பர்சிக்கும் படி சடக்கென பிரயோகியுங்கோள் –
இவளுக்கு விஞ்சி இருக்கிற வை வர்ணயம் தணியும்
குவளை -நெய்தல் / கடாம் -மதமாதல் -ஆணையின் கைதுப்பாதல் -/ தவளம் என்று வெளுப்பாய் சுத்தியைச் சொல்லுகிறது

————————————————————-

அநந்தரம் நீங்கள் இடைவிடாமல் அணங்காடுகிற இத்தால் இவள் நோய் வளருகிறது ஒழிய மீளுகிறது இல்லை –
ஆதலால் விலக்ஷண விக்ரஹ விசிஷ்டனான சர்வேஸ்வரன் பக்கலிலே பந்தவான்களான பாகவதருடைய
சரண ரேணுவை தரிப்பிக்கையிலே உத்யோகியுங்கோள் என்கிறாள் –

தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.–4-6-6-

தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!–பெற்றியோளான பக்வதையாலே-பாலை அன்றோ இவள் என்று
என் வார்த்தை கேளாதே தவிருவதொரு பொழுது இன்றி நீங்கள் அணங்காடா நின்றிகோள்
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;–இது தானே ஹேதுவாக இவள் நோயும் பெருகி வருகிறது ஒழிய தவிருகிறது இல்லை –
இனி மீளுகைக்குப் பரிஹாரம்
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு–நீல ரத்னத்தின் காட்டில் நிரதிசய விலக்ஷணமான நிறத்தையுடையனாய்
ஆச்சர்ய சேஷ்டிதனான ஸ்ரீ கிருஷ்ணன் விஷயமாயுள்ள சேஷத்வ சம்பந்த ஞானவான்களான பாகவதருடைய தவளப் பொடி என்று
சொல்லப்பட்ட பாத தூளியை தரிப்பிக்கும் படி உத்யோகிக்கப் பெறில்
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.–இந்த திவ்ய ஸ்வ பாவ்யையான பெண் பிள்ளைக்கு இத்தோடு ஒத்த
வேறொரு பரிஹாரம் இல்லை காணுங்கோள்
இது பிரயோகித்த போதே ஆசுவாசம் கண்டிகோள் அன்றோ என்று கருத்து
அழகுக்கு ஈடுபட்ட இவளுக்குப் பரிஹாரம் அத்துறையில் அகப்பட்டாருடைய அநு பந்தமே என்றபடி
மணியின் -என்கிற ஐந்தாம் வேற்றுமை உவமையாகவுமாம்

——————————–

அநந்தரம் இவள் சத்தை அழியும்படி தேவதாந்த்ர விஷய ப்ரவ்ருத்தி பண்ணினால் பிரயோஜனம் இல்லை
ஆச்சர்ய பூதனான சர்வேஸ்வரனுக்கு சேஷ பூதரான வைதிக அக்ரேஸரை ஆஸ்ரயியுங்கோள் என்கிறாள் –

அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள்குலைக் கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம்கண்டு என்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7-

அன்னைமீர் அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,-அன்னைமீர் -உங்கள் பக்வதை பாராதே
திவ்யையான பெண் பிள்ளைக்கு பெறுதற்கு அரிய மருந்து என்று நினைத்து அந்த தேவதாந்த்ர விஷயமாக நிஷித்தமான
ஆடறுக்கவும் மது நிவேதிக்கவும் பிரார்த்தித்து –
துணங்கை எறிந்து,நும் தோள்குலைக் கப்படும் -அதிதேவதை ஆவேசத்தாலே உடம்பு மயிர்க் கோள் எறிந்து –
உங்கள் தோள்கள் அசைத்தாட படா நின்றது
சுணங்கை -மயிர்க் கோள் / துணங்கை என்று பாடமாய் -துணங்கை என்ற கூத்தாகவுமாம்
சுணம் கையாலே எறிந்து என்றும் சொல்லுவார்
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம்கண்டு என்பயன்?–உணங்குகிற நெல்லு கெட -அது தின்கிற கழுதையினுடைய
உதடாட்டத்தை கண்டு என்ன பிரயோஜனம் உண்டு
அது போலே இவள் சத்தை அழிய தேவதாந்த்ர விஷய வியாபாரத்தால் பிரயோஜனம் இல்லை -ஆனால் செய்யப் பெறும் என்னில்
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை இவளுக்கு உபகரித்து
அனுபவிப்பித்தவனுடைய அடியாராய் வைதிக அக்ரேசரரான பாகவதரை வணங்கும்படி பாருங்கோள்

————————————-

அநந்தரம் பாகவத புருஷகார பூர்வகமாக ஸூரி செவியன் திருவடிகளை ஆஸ்ரயித்து இவள் நோயைப் பரிஹரியாதே
இதர தேவதா ப்ரீணநமான அணங்காடல் உங்களுக்கு கீழ்மை என்கிறாள்

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8-

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் –சகல வேத தாத்பர்ய நிர்வாஹ ஷமரான பாகவதரை
புருஷகாரமாகக் கொண்டு நித்ய ஸூரி செவ்வியனான சர்வேஸ்வரனுடைய
திருப் பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,–நிரதிசய போக்யமான திருவடிகளை ஆஸ்ரயித்து

———————————————-

கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பலசொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்;
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து;
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே.–4-6-9-

————————————–

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-

————————————–

அநந்தரம் இத்திருவாயமொழியை ப்ரேமத்தால் விக்ருதராய் அனுசந்திப்பார் பகவத் விஸ்லேஷாதி
துக்க ரஹிதராவர்கள் -என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்கசீலம் இலர்களே.–4-6-11-

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த–சேஷத்வ அநு ரூபமான அஞ்சலியைப் பண்ணி அந்த ப்ரீதியாலே
ச சம்ப்ரம ந்ருத்தம் பண்ணி உஜ்ஜவலமான நீல ரத்னம் போலே இருக்கிற நிறத்தையுடைய ஸ்ரீ கிருஷ்னனுக்கு இது தானே கைங்கர்யமாகச் செய்து
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்-சர்வ பிரகாரத்தாலும் தேவதாந்த்ர சம்சாரக்கம் ஆகிற வழுவதல் இன்றியே
ஸ்வா பாவிகமான பகவத் ஏக சேஷத்வ பிரதையை யுடையராய் விலக்ஷணமான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்ததாய்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்–பகவத் ஸ்வரூபாதிகளில் ஒன்றும் நழுவாத படி ப்ரதிபாதிக்குமதான
ஆயிரம் திருவாய் மொழிக்குள்ளே வெறியாட்டு விஷயமாக விலக்கி யுரைத்த இவை பத்தையும் இதில் அர்த்த அனுசந்தான வித்தராய்க் கொண்டு –
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்கசீலம் இலர்களே.–தொழுது ஆடி ப்ரேம பாரவசயத்தாலே பாட வல்லவர்கள்
பகவத் விஸ்லேஷ ஜெனித துக்கமும் தத் பரிஹாரார்த்த தேவதாந்த்ர அநு வ்ருத்தி துக்கமும் உண்டாகும் ஸ்வ பாவம் இல்லாதவர்கள் ஆவார்கள் –
இது கலித்துறை

——————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –4-6–

March 20, 2018

ஏவம் பூதனாய் இருந்த எம்பெருமானை விஸ்லேஷித்து அத்யந்தம் அவசன்னையாய்-மோஹ தசாபன்னையாய் இருந்த பிராட்டி
திருத் தாயாரும் உறவு முறையாரும் இவளுடைய அவசாதத்தைக் கண்டு இவளுக்கு இந்த அவசாதம் எத்தாலே வந்தது என்றும்
இதுக்குப் பரிஹாரம் என் என்றும் ஒரு கட்டுவிச்சியை கேட்க -அவளும் -ஷூத்ர தேவ க்ருதம் என்றும் இதுக்குப் பரிஹாரம் தத் ப்ரீனநம் -என்றும் சொல்ல
அவர்களும் அது கேட்டு இவள் பாக்களுள்ள ஸ்நேஹ அதிசயத்தாலே -ஏதேனும் ஒரு தெய்வத்தை ஆஸ்ரயித்து ஆகிலும்
இவளைப் பெறில் அதுவே எங்களுக்கு ஆத்ம லாபம் என்று பார்த்து அந்த ஷூத்ர தேவ ப்ரீனநத்திலே ப்ரவ்ருத்தராய்ச் செல்லா நிற்க
இப்பிராட்டியினுடைய திருத் தோழியானவள் நீங்கள் கருதிகிறவை ஈடல்ல பரிஹாரமும் அல்ல -நோயும் நீங்கள் கருதுகிறது அல்ல
இன்னது நோய் -இன்னது பரிஹாரம் -என்று சொல்லி அவர்களை நிவர்த்திப்பிக்கிறாள் –

———————————–

தீர்ப்பாரை யாம் இனி எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்!
ஓர்ப்பால் இவ் வொண்ணுதல் உற்ற நல் நோய் இது தேறினோம்;
போர்ப்பாகு தான் செய்து அன்று ஐவரை வெல்வித்த மாயப்போர்த்
தேர்ப் பாகனார்க்கு இவள் சிந்தை துழாஅய்த் திசைக்கின்றதே.–4-6-1-

இவளுக்கு இந்த நோய் எங்கனே வந்தது என்று நிரூபித்து -அந்நீரூபணத்தாலே இவளுற்ற நன்நோயை அறிந்தோம்
இது எத்தாலே வந்தது என்னில்
துர்யோதனாதிகள் நடுங்கும் படி சேனையை அணி வகுத்து அன்று ஐவரை வேல்வித்த மாயப் போர்த் தேர்ப் பாகனாரை
ஆசைப்பட்டுப் பெறாமையாலே வந்தது
இந்த நோய் தீர்ப்பாரை நாம் எங்கே தேடுவோம் -அன்னைமீர் -என்று கொண்டு அவர்கள் பரிஹாரமாகச் செய்கிற செயல்களை
இவளுடைய தோழி நிவர்த்திப்பிக்கிறாள் –

————————————-

திசைக்கின்றதே இவள் நோய் இது மிக்க பெரும் தெய்வம்
இசைப்பின்றி நீர் அணங்கு ஆடும் இளம் தெய்வம் அன்று இது
திசைப்பின்றியே சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர்
இசைக்கிற்றீர் ஆகில் நன்றேயில் பெறுமிது காண்மினே –4-6-2-

நீங்கள் இவளுடைய நோயினை ஒன்றும் அறிகிறிலீர்-இந்நோய் மிக்க பெரும் தெய்வத்தாலே வந்தது –
விசத்ருசமாக நீங்கள் நின்று அணங்காடுகிற ஷூத்ர தேவ க்ருதம் அல்ல -இதுக்குப் பரிஹாரம் என் என்னில்
சொல்லுவார் சொல்லிற்றைக் கேட்டுத் திகையாதே -சங்கு சக்கரம் என்று இவள் கேட்க நீர் இசைக்கிற்றீராகில்
நன்றே இவளைப் பெறலாம் -இப்போதே இப்பொருளை ப்ரத்யஷிக்கலாம் என்கிறாள்

———————————————

இது காண்மின் அன்னைமீர்! இக்கட்டு விச்சி சொற் கொண்டு நீர்
எதுவானும் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்!
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்தினால்
அதுவே இவள் உற்ற நோய்க்கும் அரு மருந்தாகுமே.–4-6-3-

இக்கட்டுவிச்சி சொற்கொண்டு நீர் ஏதுவானும் ஒன்றைச் செய்து அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன்மின்–
மற்றைச் செய்வது என் என்னில்
மதுவார் துழாய் முடி மாயப்பிரான் கழல் வாழ்த்துங்கோள்- வாழ்த்தினால்-அதுவே இவளுற்ற நோய்க்கு
அரு மருந்தாமாம் -யுக்தமும் அதுவே -இது நிச்சிதம் -என்கிறாள் –

———————————————-

மருந்து ஆகும் என்று,அங்கு ஓர் மாய வலவை சொற் கொண்டு,நீர்
கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்து என் பயன்?
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில், இவளைப் பெறுதிரே.–4-6-4-

மருந்தாகும் என்று வஞ்சகையாய்த் தோற்றிற்றுச் சொல்லக் கடவளாய் இருப்பாள் ஒரு கட்டுவிச்சி சொற்கொண்டு
நீர் கருஞ்சோறும் மற்றைச் செஞ்சோறும் களன் இழைத்துஎன்ன பிரயோஜனம் உண்டு
ஒருங்காகவே உலகு ஏழும் விழுங்கி உமிழ்ந்திட்ட பெருந்தேவனுடைய திருநாமத்தைச் சொல்லில் இவளைப் பெறலாம் -என்கிறாள்

————————————

இவளைப் பெறும் பரிசு இவ்வணங்கு ஆடுதல் அன்று;அந்தோ!
குவளைத் தடங்கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்;
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தால்
தவளப் பொடிகொண்டு நீர் இட்டிடுமின்; தணியுமே.–4-6-5-

ஷூத்ர தைவாவிஷ்டராய் நின்று நீர் அணங்காடுகிற இது இவளைப் பெறுகைக்கு உபாயம் அன்று –
இவள் குவளைத் தடம் கண்ணும் கோவைச் செவ்வாயும் பயந்தனள்-ஆனபின்பு ஈண்டு
கவளக் கடாக்களிறு அட்டபிரான் திரு நாமத்தாதைச் சொல்லிப் பரிசுத்தமான பொடியைக் கொண்டு
நீங்கள் இடுங்கோள் -இடவே இவள் நோய் தணியும் என்கிறாள் –

——————————————–

தணியும் பொழுது இன்றி நீர் அணங்கு ஆடுதிர்; அன்னைமீர்!
பிணியும் ஒழிகின்றது இல்லை, பெருகும் இது அல்லால்;
மணியின் அணி நிற மாயன் தமர் அடி நீறு கொண்டு
அணிய முயலின், மற்று இல்லை கண்டீர் இவ்வணங்குக்கே.–4-6-6-

தவளப் பொடியாகிறது இன்னது என்கிறது -நீர் அணங்காடுகிற இத்தால் ஒரு க்ஷண மாத்திரம் இவளுக்கு
ஒரு ஸூக கேசமும் பிறக்கிறது இல்லை –
அதுவேயோ -பிணியும் ஒழிகின்றது இல்லை -பெருகுகிற இத்தனை அல்லது -ஆனபின்பு மணியின் அணிநிற மாயன்
தமர் அடி நீறு கொண்டு அணிய முயலும் இத்தனை அல்லது மாற்று இவளுக்கு ஒரு பரிஹாரமும் இல்லை என்கிறாள் –

——————————————

அணங்குக்கு அருமருந்து என்று,அங்கு ஓர் ஆடும் கள்ளும்பராய்,
துணங்கை எறிந்து,நும் தோள்குலைக் கப்படும் அன்னைமீர்!
உணங்கல் கெடக் கழுதை உதடு ஆட்டம்கண்டு என்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் வேதம் வல்லாரையே.–4-6-7-

இவள் தளரா நிற்க இவளுக்கு அருமருந்து என்று அங்கு ஓர் ஆடும் கள்ளும் பாராய்ச் சில அசங்க தங்களைப் பண்ணினால்
உங்களுக்கு என்ன பிரயோஜனம் உண்டு -ஆனபின்பு இவளுடைய நோய் எல்லாம் தீர்க்கும்படி
வேத வித் அக்ரேசரரான ஸ்ரீ வைஷ்ணவர்களைச் சென்று ஆஸ்ரயியுங்கோள் என்கிறாள்

————————————–

வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து,இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய்,
ஏதம் பறைந்து,அல்ல செய்து,கள்ளூடு கலாய்த்தூஉய்,
கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே.–4-6-8-

ஸ்ரீ வைஷ்ணவர்களை ஆஸ்ரயித்தல் -ஸ்ரீ வைஷ்ணவர்களைப் புருஷகாரமாகக் கொண்டு எம்பெருமானை ஆஸ்ரயித்தல் செய்து
இவள் நோய் இது தீர்த்துக் கொள்ளாது போய் அவாஸ்யங்களைச் சொல்லி அக்ருத்யங்களைச் செய்து –
கள்ளூடு கலாய்த்தூஉய்,கீத முழவிட்டு, நீர் அணங்கு ஆடும் இது சாலத் தண்ணியது -என்கிறாள் –

———————————

கீழ்மையினால் அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்
நாழ்மை பலசொல்லி, நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன்;
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் இந் நோய்க்கும் ஈதே மருந்து;
ஊழ்மையில் கண்ணபிரான் கழல் வாழ்த்துமின் உன்னித்தே.–4-6-9-

———————————

உன்னித்து மற்றொரு தெய்வம் தொழாள், அவனை அல்லால்;
நும் இச்சை சொல்லி,நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!
மன்னப் படுமறை வாணனை வண் துவராபதி
மன்னனை ஏத்துமின்! ஏத்துதலும்,தொழுது ஆடுமே.–4-6-10-

———————————

தொழுது ஆடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்து நோய் தீர்ந்த
வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
வழுவாத ஆயிரத்துள் இவை பத்து வெறிகளும்
தொழுது ஆடிப் பாடவல்லார் துக்கசீலம் இலர்களே.–4-6-11-

வண் துவராபதி மன்னன் -என்கிற இந்த ம்ருத சஞ்சீவனமான திருநாமத்தைக் கொண்டு ஜீவித்து நோய் தீர்ந்து தொழுது
ஆடிப் பாடித் தூ மணி வண்ணனுக்கு ஆட்செய்த-வழுவாத தொல் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல் வழுவாத
ஆயிரத்துள்-தேவதாந்த்ர பஜன நிவ்ருத்தி பரமான இவை பத்தும் தொழுது ஆடிப் பாட வல்லார் துக்க சீலமிலர்கள்-என்கிறார் –

—————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி –4–5-

March 19, 2018

அஞ்சாம் திருவாய் மொழியில் –
கீழ் சத்ருசமாயும் சம்பந்தியாயும் உள்ள வஸ்துக்களுடைய தர்சனத்தாலே பிரமிக்கும் படி இவர்க்கு உண்டான
ஆர்த்தி அதிசயம் தீருகைக்காக சர்வேஸ்வரன் தன்னுடைய நிரதிசய விபூதி வைலக்ஷண்யத்தையும்
மஹா உதார சேஷ்டிதங்களையும் அனுபவிக்க அனுபவித்து ப்ரீதராய் –
அவனுடைய அகில லோக நிர்வாஹகத்வத்தையும்
அதுக்கு அடியான லஷ்மீ பதித்தவத்தையும்
உபய ஸித்தமான ஆனந்தாதி குண யோகத்தையும்
இக்குணாதி போக்தாக்களை காத்தூட்டும் வாஹன ஆயுதவாஹத்தையும்
போக அனுகுணமான ஞான ப்ரேமாதி பிரதத்வத்தையும்
அஸ் கலித ஞானர்க்கு அநு பாவ் யமான விக்ரஹ வைலக்ஷண்யத்தையும்
இந்த போக்யதைக்கு சர்வ அவஸ்தையிலும் ஓத்தாரும் மிக்காரும் இல்லாத மேன்மையையும்
அதுக்கு உபபாதகமான விபூதி திவ்ய யோகத்தையும்
தத் விஷயமான வ்யாப்த்யாதிகளையும்
வ்யாப்ய ரக்ஷண அர்த்தமான தர்சனீய வியாபாரங்களையும்
அனுசந்தித்து -இப்படி பரி பூர்ணனான சர்வேஸ்வரனை அனுபவித்துப் பிறந்த ஹர்ஷ அதிசயத்தாலே ஸூரிகளைப் போலே
வாய் விட்டுப் புகழ்ந்து இந்தளத்திலே தாமரை போலே இங்கே இந்த அனுபவம் கிடைக்கையாலே
எனக்கு சத்ருசம் உண்டோ என்று தமக்குப் பிறந்த செருக்கை அருளிச் செய்கிறார் –

—————————————–

முதல் பாட்டில் ஸமஸ்த லோக நிர்வாஹகானான சர்வேஸ்வரனை மங்களா சாசனம் பண்ணி ஸ்துதிக்கப் பெற்ற
எனக்கு சர்வ காலத்திலும் ஒரு குறையில்லை -என்கிறார் –

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

வீற்று -சர்வ ஆதாரத்வ – சர்வ நியந்த்ருத்வ -சர்வ சேஷித்வ -சர்வ வியாபகத்வாதிகளாலே-ஸ்வ இதர ஸமஸ்த வ்யாவருத்தனாய்க் கொண்டு
இருந்து -லோகா நாம சம்பேதார்த்தமாக திவ்ய விபூதியிலே திவ்ய பர்யங்கத்திலே இருந்து
ஏழுலகும் -வ்யக்த அவ்யக்த கால ரூபமாயும் ஸூத்த சத்வ ரூபமாயும் சதுர்விதமான அசேதன வர்க்கமும்
பத்த முக்த நித்ய ரூபேண த்ரிவிதமாயுள்ள சேதன வர்க்கமுமாகிற ஏழு வகைப்பட்ட லோகங்களிலும்
தனிக்கோல் செல்ல, ஸ்வ சங்கல்ப ரூபமாய் அத்விதீயமான செங்கோல் நடக்கும் படி
வீவு இல் சீர்-அப்ரதிஹதமான ஞான சக்த்யாதி அசங்க்யேய கல்யாண குண கனாய்க் கொண்டு
ஆற்றல் மிக்கு -ஸ்வா பாவிக மாகையாலே மதோத்ரேக ரஹிதமாய்
ஆளும் அம்மானை -இது சாத்யமாம் படி ஸ்வரூப வைபவத்தை யுடையனாய்க் கொண்டு போருகிற சர்வ ஸ்வாமியாய்
வெம்மா பிளந்தான்றனைப்–ரக்ஷணீய வர்க்கத்துக்கு விரோதியாய் மஹா ரௌத்ர என்கிறபடி வெம்மையே நிரூபகமான
கேசியாகிற அஸூராவிஷ்டமாயுள்ள குதிரையை இரு கூறாய் விழும்படி வாய் பிளந்த சர்வேஸ்வரனை
போற்றி என்றே -போற்றி போற்றி என்று இப்பெருமைக்கு மங்களா சாசனம் பண்ணிக் கொண்டே
கைகள் ஆரத் தொழுது,–விண்ணைத் தொழுது என்ற கைகள் வயிறு நிறையும் படி அஞ்சலி பந்தம் பண்ணி
சொல் மாலைகள்–சப்த ஸந்தர்ப்ப ரூபமான மாலைகளை
ஏற்ற நோற்றேற்கு -அவன் சிரஸா வகிக்கும் படி சமர்ப்பிக்கைக்கு -விதி வாய்க்கின்று -என்கிறபடியே அவனுடைய நிருபாதிக
கிருபா புண்யத்தை யுடைய எனக்கு இனி மேல் ஏழு ஏழு படிகாலான ஜென்மம் யுண்டாகிலும் என்ன குறையுண்டாம்
சரீர விமோசன தேச ப்ராப்த்யாதி களாகிற குறையுண்டாகாது என்று கருத்து
ஆற்றல் -பொறையும் மிடுக்கும்

—————————————

இந்த மேன்மைக்கு அடியான ஸ்ரீ லஷ்மீ சம்பந்தத்தை யுடையவனை ஜகத் சம்பந்தியான
சகல கிலேசமும் தீர்க்கும்படி புகழப் பெற்றேன் -என்கிறார்

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-

மைய கண்ணாள் –அவன் மார்பிலே எப்போதும் கணிசமாகையாலே அவ்வடிவு நிழல் இட்டது அடியாக அஸி தேஷணையான
ஸ்வ பாவத்துக்கு மேலே மாய் யணிந்து என்னலாம் படியான திருக் கண்களை யுடையளாய் -இந்த ஆபீரூப்யத்துக்கு மேலே
மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்–தாமரைப் பூவிலே பிறப்பால் வாசித்தாலும் அபிஜாதையுமாய்ப் பரிமளம் வடிவு கொண்டால் போலே
போக்ய பூதையுமான ஸ்ரீ லஷ்மீ நித்ய வாசம் பண்ணும்படி நிரதிசய போக்யமான மார்பை யுடையனாய்
செய்ய கோலத்தடங் கண்ணன் –பத்ம வர்ணையான அவளை அனுபவிக்கையாலே பழைய சிவப்புக்கு மேலே சிவந்து அழகை யுடைத்தாய் –
ப்ரேம பாரவசயத்தாலே விஸ்தீர்ணமான திருக் கண்களை யுடையனாய்
விண்ணோர் பெருமான் தனை-இப்படி பரஸ்பர ஸம்ஸ்லேஷ சாரஸ்யத்தைப் பரம பாத வாசிகளுக்கு அனுபவிப்பித்து
அவர்களுக்கு அதிபதியாய் இருக்கிற சர்வேஸ்வரனை
மொய்ய சொல்லால் -அவர்கள் சாம கானம் பண்ணுமா போலே செறிந்த சொற்களால் சமைந்ததாய் இசையை யுடைத்தான மாலைகளாலே
வியன் ஞாலத்து-விஸ்தீர்ணமான ஜகத்திலே இருக்கச் செய்தே
வெய்ய நோய்கள் முழுதும் வீயவே-பரிதாப ஹேதுவாய் இருக்கிற அவித்யா கர்ம வாசனா ருசி ப்ரக்ருதி சம்பந்தங்களான
ஸமஸ்த கிலேசங்களும் நாட்டிலே நடையாடாத படி ஸ்வயமேவ நசிக்கும் படியாக
இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்–ஏத்தி ஸ்தவாப் ப்ரியனான அவனுடைய முக மலர்த்தியை என் நெஞ்சால் அனுபவிக்கப் பெற்றேன்
மைய கண்ணாள் -செய்ய கோலத் தடம் கண்ணன் -என்கிற இடம் அவள் கண் நிழலீட்டாலே இவனுடைய ஸ்யாமளத்வமும்
இவன் கண் நிழலீட்டாலே அவளுடைய பத்மவர்ணமும் என்று கருத்தாகவும் சொல்லுவார்கள்
ஆகிலும் கண்ணுக்கு விஷயாதீ நத்வம் உசிதம் –

————————————-

அநந்தரம் மேன்மையாலும் ஸ்ரீ யபதித்வத்தாலும் ஸித்தமான ஆனந்தாதி குண யோகத்தை யுடையவனை
ஸ்தோத்ரம் பண்ணிக் கிட்டப் பெற்று நிரதிசய ஆனந்த பூர்ணனானேன் என்கிறார் –

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்–அவிச்சின்னமான ஆனந்தமானது ஆனந்த வல்லீ க்ரமத்திலே
அவாங் மனஸ் கோசாரமாம் படி மிகுதியான எல்லையில் வர்த்திக்கிற ஆகாரத்தை என் போல்வார்க்கு அனுபவிப்பிக்கிற
அப்ரச்யுத ஸ்வ பாவனாய் -அவ்வானந்தத்துக்கு அடியாகச் சொல்லப்பட்ட
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை –முடிவு இல்லாத யுவத்வாதி நித்ய குண விபூதி வைலக்ஷண்யத்தை யுடையனாய்
இவ்வதிசயத்துக்கு ஸூ சகமாம் படி புண்டரீ காஷனாய் -இக்கண் அழகாலே-விண்ணோர் பரவும் தலை மகனானவனை
வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;-ஓழிவில்லாத காலம் எல்லாம் கான ரூபமான ஸந்தர்ப்பத்தாலே ஸ்துதித்து கிட்டப் பெற்றேன்
ஆனந்தமயனானவைக் கிட்டி -அவனோடு ஒத்த
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–முடிவில்லாத ஆனந்தத்தினுடைய அபரிச்சேதயமான அபிவிருத்திகள் உண்டாயிற்றன
நிகழ்ந்தனம் -என்று ப்ரீதியாலே பஹுமாந உக்தியாகவுமாம்

——————————————-

அநந்தரம் போக்தாக்களான அநந்ய ப்ரயோஜனரைக் காத்தூட்டும் வாஹனா யயாதிகளை
யுடையவனை ஸ்துதித்துக் கிட்டப் பெற்றேன் -என்கிறார்

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-

மேவி நின்று தொழுவார் வினை –அநந்ய ப்ரயோஜனராய்க் கலந்து -நிலை நின்று -அனுபவிப்பாருடைய -அனுபவ விரோதி பாபங்கள்
போக மேவும் பிரான்- ஸ்வயமேவ நசிக்கும் படி தான் அவர்களோடே சம்ச்லேஷிக்கும் மஹா உபாகாரகனாய்
தூவி அம் புள்ளுடையான் –அஞ்சிறைப் புள்ளும் ஓன்று ஏறி வந்தார் -என்கிறபடியே இவர்கள் இருந்த இடத்தே தன்னைக் கொண்டு
வருவதான பக்ஷ பாதத்தையும் அழகையுமுடைய பெரிய திருவடியை வாஹனமாகயுடையனாய்
அடல் ஆழி அம்மான் தன்னை- கை கழலா நேமியான் நம் மேல் வினை கடிவான் என்கிறபடியே ஆஸ்ரித விரோதி நிரசன அர்த்தமாக
யுத்தோன் முகமான திருவாழியை யுடையனான சர்வேஸ்வரனை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி -நாவினுடைய விருத்தியாலே கான ரூபமான சந்தர்ப்பங்களை இட்டு ஏத்துகையாகிற
நண்ணப் பெற்றேன்;–நண்ணுதலைப் பெற்றேன்
ஆவி என் ஆவியை –எனக்கு அந்தராத்மா பூதனாய் தாரகனானவன் -தனக்கு சரீரமான என்னுடைய ஆத்மாவை
ஸ்துதிப்பித்து உகப்பித்து விரும்புகிற பிரகாரம்
யான் அறியேன் செய்த ஆற்றையே.–நான் பரிச்சேதித்து அறிய மாட்டு கிறிலேன்
அறிவும் ஆழங்கால் படுகைக்கு உறுப்பாயிற்று -என்று கருத்து –

—————————————–

அநந்தரம் அனுபவ உபகரணமான ஞானாதிகளைக் கொடுத்து அனுபவிப்பிக்கும் சர்வேஸ்வரனை
சகல கிலேசமும் சகாரணமாகச் சடக்கென ஸ்வயமேவ நசிக்கும் படி ஸ்துதிக்கப் பெற்றேன் -என்கிறார் –

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை –ஆஸ்ரய அநு ரூபமாக பொறுக்கும் படி -அனுபவ உபகரணமாம் படி விலக்ஷணமாயுள்ள
ஞான பக்திகள் பரபக்தி பரஞான பரமபக்திகளாகிற பிரகாரங்களை போக்தாக்களுக்கு பிரகாசிப்பிக்கும் நிருபாதிக ஸ்வாமியாய்
அமரர் தம் ஏற்றை -இந்த பிரகாரமுடையாரை நித்ய ஸூ ரிகள் அனுபவிக்குமா போலே அனுபவிப்பிக்கும் செருக்கை யுடையனாய்
எல்லாப் பொருளும் விரித்தானை -கீத உபநிஷத் முகத்தால் இவ்வார்த்தை விசேஷங்களை விஸ்தீர்ணமாக உபதேசித்து
எம்மான் தன்னை–எனக்கு நிர்ஹேதுகமாக அபகரித்த ஸ்வாமியானவனை
வினை நோய்கள்-ஞான பிரேமாதி பிரதிபந்தகங்களான பாபங்களும் ராக த்வேஷாதி மஹா வியாதிகளும்
காற்றின் முன்னம் கடுகி கரியவே.–சீக்ர காமியான காற்றுக்கு முற்பட சடக்கென ஓடிப் போய் வெந்து போம் படியாக
மாற்ற மாலை புனைந்து ஏத்தி -சப்த சந்தர்ப்பங்களை நிர்மித்து ஸ்தோத்ரம் பண்ணி /-மாற்றம் -சப்தம் / புனைதல் -தொடுத்தல்
நாளும் மகிழ்வு எய்தினேன்;–சர்வ காலமும் மகிழ்ச்சியைப் பெற்றேன் –

———————————————-

அநந்தரம் அஸ்கலித ஞான ப்ரேமரானார்க்கு நிரதிசய அநு பாவ்யமான அழகை யுடையவனை
ஸ்தோத்ர முகத்தால் அநு பவிக்கப் பெற்ற எனக்கு துர்லபம் உண்டோ என்கிறார் —

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்-ஸ்யாமளமான வடிவு அழகுக்கு மேலே அஞ்சன சூர்ணத்தை அளவில் அணிகிற
வெளியம்-அஞ்சனம் -அன்றியே ஸ்யாமளமான திரு மேனி மேலே அலங்கார அர்த்தமான
கர்ப்பூர சூர்ணத்தை அளவுபடச் சாத்தின பெரிய ஒப்பனையை யுடைய -என்றுமாம் –
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை- நிரதிசய ஸுந்தர்ய யுக்தமாய் விஸ்தீர்ணமான கண் அழகை யுடையவனாய்
இவ்வழகு வெள்ளத்திலே ஸூ ரிகளைக் குமிழ் நீரூட்டும் மேன்மையை யுடையனான சர்வேஸ்வரனை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு–இவ்வழகுக்குத் தகுதியான சொல்லாலே சமைந்த கான ரூப
சந்தர்ப்பங்களை இட்டு ஸ்துதித்து அனுபவிக்கப் பெற்றேனான எனக்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–அனுபவ ஆரம்பமான இன்று தொடங்கி இனி
மேலுள்ள காலம் எல்லாம் துர்லபமாய் இருப்பது ஓர் அர்த்தம் உண்டோ

———————————————————–

அநந்தரம் சாமாப்யதி ரஹிதையான போக்யதையை யுடைய ஸ்ரீ கிருஷ்ணனை ஸ்துதிக்கப் பெற்ற எனக்கு என்ன குறையுண்டு -என்கிறார்

என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7-

என்றும் ஒன்று ஆகி –பரத்வத்தோடு அவதாரத்தோடு வாசியற சர்வ அவஸ்தையிலும் -ஒரு பிரகார அந்வயியாய்க் கொண்டு
ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு-சமராயும் அதிகராயும் இருப்பார்
தன்னுடைய நிரதிசய போக்யமான ஸுலப்யாதி களாகிற அசாதாரண ஆகாரத்துக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக்–இன்றியிலே நின்றவனாய் அந்நிலையிலே
ஸமஸ்த லோகத்தையும் தனக்கு சேஷமாக யுடையனாய்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்-சேஷ வஸ்துக்களுக்கு இந்திரனால் வந்த வர்ஷாபத்தை
கண்டதொரு மலையாலே காத்த மஹா உபகாரகனானவனை சப்தமயமான மாலைகளை
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–அவன் ஆதரித்து சூடும்படி பண்ணுகைக்கு ஈடான பாக்யத்தை கிட்டப் பெற்றோம் –
நமக்கு ஒரு குறையுண்டோ –
அத்தலையில் கிருபையில் குறையுண்டாகில் இ றே இத்தலையில் பேற்றுக்குக் குறையுண்டாவது என்று கருத்து
விதி -தப்ப ஒண்ணாத கிருபையை நினைக்கிறது –
நமக்கு -என்கிற பன்மை பஹு மானத்தாலே

——————————————–

அநந்தரம் உபய விபூதி யுக்தனான சர்வேஸ்வரனை ஸ்துதிக்கிற எனக்குப் பரமபத வாசிகளில் சத்ருசம் உண்டோ என்கிறார்

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை –அநாதி அஞ்ஞானாதி சம்சாரக்கத்தாலே நித்ய சம்சாரிகளுக்கும் இவ்வருகான நமக்கும் –
பூவில் பிறப்பால் வந்த போக்யதையாலும் ஆத்ம குண பூர்த்தியாலும் நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகான
பிராட்டிக்கும் தன் போக்யதா அதிசயத்தாலே ஆனந்த ஜனகனனாய்
ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் –இவ்விரண்டு ஆகாரத்துக்கும் உப பாதகமாய் அவிசேஷஞ்ஞரான
லீலா விபூதியில் உள்ளாரோடு -விசேஷஞ்ஞரான பரமபத வாசிகளோடு வாசியற நிருபாதிகமான சர்வ சேஷித்வத்தை யுடையனாய்
இந்த போக்யதைக்கும் மேன்மைக்கும் மேலே ஸுந்தர்ய ஸுகந்த்ய ஸுகுமார்ய லாவண்யாதி குணங்களுக்குத் தோற்று
தண் தாமரை சுமக்கும் பாதப் பெருமானைச் –செவ்வியையுடைய தாமரை சுமக்கும்படியான திருவடிகளை யுடையனான சர்வாதிகனை
இவ்வாகார அநு சந்தானத்தாலே உடை குலைப்படாதே
சொல்மாலைகள் சொல்லுமாறு அமைக்க வல்லேற்கு-சப்த சந்தர்ப்பங்களை சொல்லும்படியாக என்னை அமைத்து தரிக்க வல்ல எனக்கு
இனியாவர் நிகர் அகல் வானத்தே?–அதி விஸ்தீரணையான த்ரிபாத் விபூதியில் அதிகார ஆகாரராய் அனுபவிக்கிறவர்கள் ஆர் தான் இனி ஒப்பார்
இந்தளத்திலே தாமரை போலே இருள் தரும் மா ஞாலத்தில் அனுபவிப்பார்க்கு தெளி விசும்பில் அனுபவிப்பார் சத்ருசர் அல்லர்கள் என்று கருத்து –

———————————

அநந்தரம் -வியாப்தி தசையோடு அவதார தசையோடு வாசியற விளாக்குலை கொண்டு
ஸ்துதிக்க வல்ல எனக்கு சத்ருசம் உண்டோ என்கிறார்

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-

வானத்தும் வானத்துள் உம்பரும் -ஆகாச சப்த வாஸ்யமான ஸ்வர்க்கத்திலும்–
உள் வானத்து -ஊர்த்வ ஆகாச வர்த்திகளான -உம்பரும் -உபரிதந லோகங்களிலும்
மண்ணுள்ளும் -பூமிக்குள்ளும்
மண்ணின் கீழ்த் தானத்தும் –பூமியின் கீழ் பாதாள ஸ்தானங்களிலும்
எண் திசையும் -இவற்றில் உண்டான தேவாதி ஜாதி பேதத்தாலும் ப்ராஹ்மணாதி வர்ண பேதத்தாலும் அஷ்ட விதமான பதார்த்தங்களிலும்
தவிராது நின்றான் தனை,–ஒன்றும் நழுவாதபடி வியாபித்து நின்ற ஸ்வரூபத்தை யுடையனாய்
இப்படி முகம் தோன்றாமே நின்று ரஷிக்கை அன்றியே
கூனற் சங்கத் தடக்கை யவனை, –புடையுடைமையாலே கூனியாய் தர்ச நீயமான ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தையுடைய பெரிய திருக்கை யை யுடையனாய்
குடமாடியை,–குடக் கூத்து முகத்தாலே-சர்வ ஜன மநோ ஹாரியான சேஷ்டிதங்களை யுடையனாய் –
இந்நிலையில்
வானக் கோனைக் -நித்ய ஸூ ரிகளுக்கும் அனுபவிக்கும் மேன்மையை யுடையனானவனை
வியாப்தியோடு அவதாரத்தோடு சேஷ்டிதத்தோடு பரத்வத்தோடு வாசியறக் கபளீ கரித்து
கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–கவி சொல்ல வல்ல எனக்கு இனி எதிர் உண்டோ
ஓர் ஓர் ஆகாரத்தை ஸ்துதிக்கப் புக்குப் பிற்காலிக்கும் உபய விபூதியிலும் எதிர் இல்லை என்று கருத்து –

——————————————————————–

அநந்தரம் வியாப்ய விஷய ரக்ஷண அர்த்தமான மநோ ஹாரி சேஷ்டிதங்களை யுடையவனை
ஆஸ்ரிதர்க்கு ஆனந்தாவஹமாம்படி கவிபாட பாக்யம் பண்ணினேன் -என்கிறார் –

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்–பிரளய ஆபத்தில் திரு வயிற்றிலே வைத்தும் -அநந்தரத்திலே உமிழ்ந்தும்
அந்நிய அபிமானம் போம்படி அளந்து திருவடி கீழே இட்டும் -அவாந்தர பிரளயத்தில் ஸ்ரீ வராஹ ரூபியாய் இடந்து எடுத்தும்
கடற்கரையிலே கிடந்தும் -ராவண வத அநந்தரம் தேவர்களுக்கு காட்சி கொடுத்து நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்–மீண்டு வந்து திரு அபிஷேகம் பண்ணின திருக் கோலத்தோடே எழுந்து அருளி இருந்தும்
நித்ய உத்சவமாம் படி ஸ்ரீ பூமிப் பிராட்டியோடே ஸம்ஸ்லேஷித்து ராஜ்ஜியம் பண்ணியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை–இப்படி ப்ரத்யக்ஷ ஸித்தமான சேஷ்டித பிரகாரங்களாலே
பிராமண நிரபேஷமாக லோகம் தனக்கே சேஷம் என்று நாடாகச் சொல்லும்படி நின்ற சர்வேஸ்வரனைப் பற்ற
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–விலக்ஷணமாய் சர்வாதிகாரமான திராவிட பிரபந்தத்தை நிர்மிகைக்கு-
அவனுடைய அங்கீ காரமாகிற புண்யத்தைப் பண்ணினேன்
அவனுக்கு அடியாராக பாகவதருக்கு இப்பிரபந்தம் ஆனந்த வர்ஷியான மேகமாய் இறே இருக்கிறது –

———————————–

அநந்தரம் இத்திருவாய் மொழிக்கு பலமாக இதில் அன்வய மாத்திரத்தாலே பகவத் அனுபவ விரோதியான
சகல பாபங்களையும் தன் கடாக்ஷத்தாலே ஸ்ரீ லஷ்மி போக்கி அருளும் என்கிறார் –

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே–4-5-11-

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை–வர்ஷம் மாறாத படியால் குளிர்ந்து தர்ச நீயமாய் திரு வேங்கடம் என்று
திரு நாமமான திரு மலையிலே -தாழ்தற்கு முகம் கொடுக்கைக்காக வந்து நிற்கிற சீலத்தையுடைய நிருபாதிக ஸ்வாமியை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்–பாதபாதிகளுக்கு சிசிர உபசாரம் பண்ணுகிற ஜல ஸம்ருத்தி மாறாத
தர்ச நீயமான புஷ்ப ஸம்ருத்தியையுடைய பொழிலாலே சூழப்பட்ட திரு நகரியிலே
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்–காரி என்று பேரான பித்ரு சம்பந்தத்தை யுடையராய் -மாறன் என்னும்
குடிப்பேரையுடைய ஆழ்வார் அருளிச் செய்த ஆயிரத்தில் இப்பத்தாலே
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே–மது பிரவாகம் மாறாத தாமரையில் நித்ய வாசம் பண்ணுகிற
ஸ்ரீ லஷ்மி அனுபவ விரோதியான ஸமஸ்த பாபங்களையும் தன் கடாக்ஷத்தாலே போக்கும்
இவள் கடாஷித்த விஷயத்தில் ஈஸ்வரனுடைய அபராத சஹத்வம் அவர்ஜ நீயம் என்று கருத்து –
இது கலித்துறை

—————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –4-5–

March 19, 2018

ஸ்ரீ வைகுண்ட நிலையனாய் -அனந்த போகிநி ஸ்ரீயாசஹாஸீநனாய் -சேஷ சேஷாசன வைநதேய
பரப்ருத் அபரிமித பரிஜன பரிவ்ருத்தனாய் இருந்த எம்பெருமானை அவனுடைய நிரவதிக காருண்யத்தாலே
கண்களாலே கண்டு கைகளாரத் தொழுது வாயாலே திருவாய் மொழி பாடப் பெற்ற
எனக்கு இனி என்ன குறையுண்டு என்கிறார் –

——————————————-

வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல, வீவு இல் சீர்
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை வெம்மா பிளந்தான்றனைப்
போற்றி என்றே கைகள் ஆரத் தொழுது,சொல் மாலைகள்
ஏற்ற நோற்றேற்கு இனி என்ன குறை எழுமையுமே?–4-5-1-

ஸ்ரீ வைகுண்டத்தில் திரு வனந்த ஆழ்வான் மேலே தன்னுடைய சர்வ லோகாதி ராஜ்ஜியம் எல்லாம் தோன்றும் படி இருந்து அருளி –
ஸ்வ சங்கல்ப சஹஸ்ர ஏக தேசத்தாலே நிர்வாஹித சர்வ லோகனாய்
நித்ய நிர்தோஷ நிரவாதிக கல்யாண குண விசிஷ்டனாய் இப்படி பரிபூர்ணனாய் இருக்கச் செய்தே அநு த்ரிக்த ஸ்வ பாவனாய்
ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாக வஸூ தேவ க்ருஹே அவ தீர்ணனாய்-ஆஸ்ரித விரோதி நிரசன ஏக ஸ்வ பாவனாய் இருந்த
எம்பெருமானைத் திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு என் கைகளினுடைய விடாய் எல்லாம் தீரும் படி தொழுது
திருவாய் மொழி படுக்கைக்கு பாக்யம் பண்ணினேன் -எனக்கு இனி ஒரு நாளும் ஒரு குறையில்லை என்கிறார் –

——————————-

மைய கண்ணாள் மலர்மேல் உறை வாள் உறை மார்பினன்
செய்ய கோலத்தடங் கண்ணன் விண்ணோர் பெருமான் தனை
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன்
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீயவே.–4-5-2-

இப்படி சர்வ லோகாதி ராஜ்யத்தைச் செலுத்திக் கொண்டு சேஷ போக பர்யங்கத்திலே பெரிய பிராட்டியாரோடே கூட
ஸூகாஸீநனாய் -தத் ஸம்ஸ்லேஷ ஜெனித நிரதிசய ப்ரீதியாலே செய்ய கோலத் தடங்கண்ணனாய் அனந்த வைநதேய விஷ்வக்ஸேன
ப்ரப்ருதி அசங்க்யேய திவ்ய பரிஜன பரிவ்ருத்தனாய் இருந்த எம்பெருமானை என்னுடைய வெய்ய நோய்கள் முழுதும்
இந்த ப்ரக்ருதியிலே இருக்கச் செய்தே வீயும்படி அழகிய சொல்லாலே இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்றேன் -என்கிறார்

————————————–

வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல்காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப்பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-

ஆஸ்ரித வாத்சல்ய ஸுசீல்ய ஐஸ்வர்ய ஸுந்தர்யாதி அசங்க்யேய-அனவதிக மங்கள குண விசிஷ்டனாய் ஸ்வ பரிசரண–
சேஷ சேஷாசனாதி அபரிமித நித்ய சித்த பரம ஸூரிபிர் அனவ்ரத ஸம்ஸேவ்யமானனாய்-ஸ்ரீ வைகுண்ட நிலையனாய் –
ஸ்ரீ லஷ்மீ பூமி நீளா நாயகனாய் இருந்த தன்னைத் தான் அனுபவித்ததினாலே தனக்கு வந்த நிரதிசய ஆனந்தமும் –
தன்னைத் திருவாய் மொழி பாடுகையால் எனக்கு வந்த ஆனந்தமுமானால்
இதிலே சஹஸ்ர ஏக தேசத்துக்குப் போறுமா அது என்கிறார் –

——————————————————————–

மேவி நின்று தொழுவார் வினை போக மேவும் பிரான்
தூவி அம் புள்ளுடையான் அடல் ஆழி அம்மான் தன்னை
நாவியலால் இசை மாலைகள் ஏத்தி நண்ணப் பெற்றேன்;
ஆவி என் ஆவியை யான் அறியேன் செய்த ஆற்றையே.–4-5-4-

கீழ்ச் சொன்ன விண்ணோர் ஆகிறார் -பெரிய திருவடி திருவாழி திருச் சங்கு திரு வனந்த வாழ்வான்
ஸ்ரீ சேனாதிபதி ஆழ்வான் முதலான திவ்ய புருஷர்கள் –
அந்தத் திவ்ய புருஷர்களாலே பரிச்சர்யமான சரணாரவிந்த யுகளனாய்-பக்தி யுக்த ஜன ஸமஸ்த துக்காபநோதன ஸ்வ பாவனாய் –
தத் ஸம்ச்லேஷ ஸ்வ பாவனாய் இருந்த எம்பெருமானைத் திருவாய் மொழி பாடிக் கொண்டு சம்ச்லேஷிக்கப் பெற்றேன்
அத்யந்த நிக்ருஷ்டனான என்னை இப்படி விஷயீகரித்து அருளுவதே -ஒருவனுடைய குணாவத்தை இருக்கும்படியே இது -என்கிறார்

————————————————

ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை அமரர் தம்
ஏற்றை எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை
மாற்ற மாலை புனைந்து ஏத்தி நாளும் மகிழ்வு எய்தினேன்;
காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியவே.–4-5-5-

அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் வஸூ தேவ க்ருஹே அவதீர்ணனாய் -அர்ஜுனன் வ்யாஜத்தாலே சர்வாத்மாக்களுக்கும்
சகல வேதார்த்த ப்ரகாசகனாய் இருந்த தன்னை எனக்கு சாத்மிக்க சாத்மிக்கக் காட்டித் தந்து அருளினான் –
நானும் அவனைக் கண்டு காற்றின் முன்னம் கடுகி வினை நோய்கள் கரியும் படி திருவாய் மொழி பாடி நாளும் மகிழ்வு எய்தினேன் -என்கிறார்

——————————————

கரிய மேனி மிசை வெளிய நீறு சிறிதே இடும்
பெரிய கோலத் தடங்கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி உள்ளப்பெற்றேற்கு
அரியது உண்டோ எனக்கு இன்று தொட்டும் இனி என்றுமே?–4-5-6-

நீலமேக திவ்ய ரூப உசித திவ்ய அங்க ராகத்தாலே அநு லிப்தனாய் -அதி விசாலமாய் அதி ரமணீயமாய் இருபத்தொரு
தாமரைத் தடாகம் போலே இருந்த திருக் கண்களை யுடையனாய் அவ்வழகாலே விண்ணோர் பெருமானாய் இருந்த எம்பெருமானை
அவனுக்கு சத்ருசமான சொற்களால் இசை மாலைகள் ஏத்தி உள்ளப் பெற்ற எனக்கு இன்று தொட்டும் இனி என்றும் அறியாது உண்டோ -என்கிறார் –

————————————————————

என்றும் ஒன்று ஆகி ஒத்தாரும் மிக்கார்களும் தன் தனக்கு
இன்றி நின்றானை எல்லா உலகும் உடையான்றனைக்
குன்றம் ஒன்றால் மழைகாத்த பிரானைச் சொன் மாலைகள்
நன்று சூட்டும் விதி எய்தினம் என்னகுறை நமக்கே?–4-5-7-

சர்வ காலமும் ஏக பிரகாரமாக நிரஸ்த சாமாப்யதி ரஹிதையனாய்- சர்வ லோகேஸ்வரனாய்ப் பரம காருணிகனாய் இருந்த
எம்பெருமானைத் திருவாய்மொழி பாடுகைக்கு அவனுடைய நிர்மர்யாத க்ருபையாகிற மஹா பாக்யத்தை யுடையோமானோம் –
இனி நமக்கு என்ன குறையுண்டு -என்கிறார் –

—————————

நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் இன்பனை ஞாலத்தார்
தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானைத் தண் தாமரை
சுமக்கும் பாதப் பெருமானைச் சொல்மாலைகள் சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு இனியாவர் நிகர் அகல் வானத்தே?–4-5-8-

இன்று தன் திருவடிகளை ஆஸ்ரயித்த நாமும் பெரிய பிராட்டியாருமானால் -பெரிய பிராட்டியார் பக்கலில் காட்டிலும்
நம் பக்கல் வியாமுகனாய் -ஙாஸ்ரீதரான தேவர்களுக்கும் மநுஷ்யர்களுக்கும் ஒரு வாசி இன்றியே ஓக்க அரியனாய்
ஸுகுமார்ய சரணயுகளனாய் இருந்த எம்பெருமான் என்னை ஓன்று சொல்லும் காண் என்று அருளிச் செய்து அருளினால்
சொல்லலாம் படி சொல் மாலைகள் அமைக்க வல்லேற்கு இனித் திரு நாட்டிலே தான் நிகருண்டோ என்கிறார் –

———————————-

வானத்தும் வானத்துள் உம்பரும் மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் எண் திசையும் தவிராது நின்றான் தனை,
கூனற் சங்கத் தடக்கை யவனை, குடமாடியை,
வானக் கோனைக் கவிசொல்ல வல்லேற்கு இனி மாறுஉண்டோ?–4-5-9-

ஸ்வர்க்காதி உபரிதந லோகங்களுக்கும் பிருதிவ்யாதி அதஸ்தன லோகங்களுக்கும் தத் அந்தரவர்த்தி அகில சராசரங்களும் ஆத்ம பூதனாய் –
சங்க சக்ர கதாதரனாய் -ஆஸ்ரித பரித்ராணார்த்தமாக மனுஷ்யாதி ரூபேண அவ தீர்ணனாய்-அதி மநோ ஹர திவ்ய சேஷ்டிதனாய்-
ஸ்ரீ வைகுண்ட நாதனாய் இருந்த எம்பெருமான் தன்னைக் கவி சொல்ல வல்ல என்னோடு ஒக்குமோ –
சர்வேஸ்வரனான எம்பெருமான் தான் -என்கிறார் –

—————————————————

உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் கிடந்தும் நின்றும்
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் மணம் கூடியும்
கண்ட ஆற்றால் தனதே உலகு என நின்றான் றன்னை
வண்தமிழ் நூற்க நோற்றேன் அடியார்க்கு இன்ப மாரியே.–4-5-10-

நிகில ஜெகன் நிஹரண- உத்கரண-சயன -ஸ்தான -ஆசன -சம்ஸ்லேஷாதி ஸ்வ கீரை திவ்ய சேஷ்டிதங்களாலும்
ஸ்வ அசாதாரண திவ்ய ஸுந்தர்யத்தாலும்-ஸ்வ கீய திவ்ய ரூபத்தாலும் தனதே உலகு என நின்றான் றன்னை
திருவாய் மொழி பாடுகைக்கு ஒரு மஹா பாக்யம் பண்ணினேன்
பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி யாதாம்ய ப்ரதர்சகமாய்-அதி மதுரமாய் -அதி ரமணீய ஸுந்தர்யமாய் அதி மதுர ஸ்வரமாய் இருந்த
இத்திருவாய் மொழியை எம்பெருமானுக்கு நல்லராய் இருப்பார் கேட்டால் என் படுவாரோ என்கிறார் –

————————————-

மாரி மாறாத தண் அம் மலை வேங்கடத்து அண்ணலை
வாரி மாறாத பைம்பூம் பொழில் சூழ் குருகூர் நகர்க்
காரி மாறன் சடகோபன் சொல் ஆயிரத்து இப்பத்தால்
வேரி மாறாத பூமேல் இருப்பாள் வினை தீர்க்குமே–4-5-11-

சம்சார தாவ அக்னி தக்த சர்வ ஐந்து ஸந்தாப நாசகரமான தண் திருமலையைத் தனக்கு திவ்ய ஸ்தானமாக யுடையனான
திருவேங்கடமுடையானுடைய ஆஸ்ரித வாத்சல்யாதி கல்யாண குண ப்ரதிபாதகமான இத்திருவாய் மொழி வல்லாருடைய
ஸமஸ்த துக்கங்களையும் பகவத் ஆஸ்ரித வாத்சல்யாதி கல்யாண குண ஏக போகையான பெரிய பிராட்டியார் போக்கும் என்கிறார் –

—————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி –4–4-

March 17, 2018

நாலாம் திருவாய் மொழியிலே இப்படி மானஸ ஸம்ஸ்லேஷத்தாலே அனுபவிப்பித்து கற்பித்த ஈஸ்வரனுடைய
பிரணயித்வ குணத்தை அனுசந்தித்த ஆதார அநு ரூபமான பாஹ்ய அனுபவ அபி நிவேசத்தைப் பண்ணி
அது கிட்டாமையாலே ஆர்த்தரான இவர் தம்முடைய ஆர்த்தி சாந்தி ஹேதுவான ஸ்வ பாவங்களை யுடையனான ஈஸ்வரனுடைய
விபூதி திவ்ய யோகத்தையும்
சர்வ சமாஸ்ரயணீயத்வத்தையும்
பிரதாப அநுக்ரஹ வத்தையும்
உஜ்ஜவலமாய் உத்துங்கமாய் ஸ்ரமஹரமான விக்ரஹ வைலக்ஷண்யத்தையும்
ரக்ஷணார்த்த ப்ரவ்ருத்திகளையும்
அநு பாவ்ய சேஷ்டிதங்களையும்
பரத்வ சிஹ்னங்களையும்
ஐஸ்வர்ய அபி ரூப்ய விசிஷ்டமான ஆதரணீயத்வத்தையும்
ஆச்ரித விஷயத்தில் உபகாரகத்வத்தையும்
ஸுலப்ய பாரம்யத்தையும்
அநு சந்தித்து -ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரனுக்கு சம்பந்திகளாயும் சத்ருசங்களாயும் உள்ள பதார்த்த தர்சனத்தாலே
ஈடுபட்ட பிரகாரத்தை பார்ஸ்வஸ்தரான பரிவர் சொன்ன பாசுரத்தை நாயகனைப் பிரிந்த தலையுடைய
ஆற்றாமை கண்ட நல் தாய் வார்த்தையாலே அருளிச் செய்கிறார் –

———————————————–

முதல் பாட்டில் வினவ வந்த அயலார்க்கு விபூதி த்வய சம்பந்தத்தை அனுசந்தித்து
பூமி அந்தரிக்ஷங்களைக் கண்டு விக்ருதையாகா நின்றாள் -என்கிறாள் –

மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–4-4-1-

மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;–பூமியை இருந்து துழாவி இது
அந்நிய அபிமானம் வாராத படி வாமனனாய் அவன் இரந்து அளந்து கொண்ட மண் என்னா நிற்கும்
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;–ஊர்த்வமான ஆகாசத்தை நோக்கி அஞ்சலி பண்ணி
அவன் நித்ய வாசம் பண்ணுகிற பரம வ்யோம சப்த வாஸ்யமான ஸ்ரீ வைகுண்டம் என்று சொல்லி அபரோஷித்தாரைப் போலே
ஹஸ்த முத்திரையால் பிறருக்கும் காட்டா நிற்கும்
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;–உள் நீர் -அகவாயில் அஸ்ரு ஜலமானது கண்ணையும் விஞ்சி புறப்படும்படி நின்று
இப்படி தம்பினொடு சம்பந்தித்த விபூதி த்வயமும் எனக்கு விஷயமாம் படி கடல் போலே ஸ்ரமஹரமான தன வடிவு அழகைக் காட்டி
அநு பதிப்பித்த அபரிச்சின்ன ஸ்வ பாவன்-என்னும்
அன்னே!என் பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!-அம்மே என்னுடைய முக்தையான பெண்ணை இப்படி
அதிசயிதமான பிச்சை பண்ணினவருக்கு இவள் வளை போலே கழலுகை இன்றியே இடப்பட்ட வளையை யுடையவர்களே எத்தை செய்வேன்
அவரை அழைத்துக் கொடுக்க மாட்டு கிறிலேன்
அவர் தாமே வரும் அளவும் இவள் பிச்சைத் தவிர்க்க மாட்டுகிறிலேன் -என்று கருத்து
அன்னே -என்று வெறுப்பைக் காட்டுகிறது –
பெய் வளையீரே-என்கையாலே நீங்கள் கையும் வளையுமாய் இருக்க இவள் கை நிலம் துழாவும் படி யாவதே -என்கை –
விண் என்று பூதாகாசமாய் இருக்க அவ்வளவும் பிரகாசித்த படி

———————————————————

அவனோடு சம்பந்தமுடைய கடலையும் ஆதித்யனையும் கண்டு சிதிலை யாகா நின்றாள் -என்கிறாள் –

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2-

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘–பலகாலும் கழன்று இடப்படா நிற்கிற வளைகளை யுடைய கைகளைக் கூப்பி அஞ்சலி பண்ணி
தன் முன்னே கோஷிக்கிற கடலைப் பார்த்து
பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;–சரணம் புக்க தேவர்களுக்கு முகம் காட்டும் உபகாரகனானவன் –
எனக்கு முகம் காட்டக் கிடக்கிற கடல் என்னா நிற்கும்
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘-ராத்திரி அவசானத்திலே உதித்து சிவந்த ஒளியாலே அத்விதீயனான ஆதித்யனைக் கை காட்டி –
சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;-பெரிய பிராட்டியாரோடே கூடி உபாஸ்யனான ஸ்ரீ தரன் இருக்கிற வடிவு இது என்னா நிற்கும்
நையும் -இப்படி சரண்யனுமாய் உபாஸ்யனுமானவனைக் கிட்டி அனுபவிக்கப் பெறாமையாலே சிதிலை யாகா நிற்கும்
அதை சைல்யத்தாலே
கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; –கண்ணீர் மல்க நின்று நிருபாதிக சம்பந்த யுக்தனான நாராயணன் என்னா நிற்கும்
அன்னே!என் தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–அம்மே -என்னுடைய -ஸூரிகள் வடிவு போலே
அப்ராக்ருதமான வடிவை யுடையளாய் முக்தமான மான் போலே இளைய பருவத்தை யுடையளான இவள் செய்கிறது ஒன்றும் அறிகிறிலேன்
சரண்ய ஸ்தலத்தை அஞ்சலி பண்ணா நின்றாள்
உபாஸ்ய ஸ்தலத்தைக் காட்டா நின்றாள்
ஒன்றிலே நின்றாளாக அறியப் போகிறது இல்லை என்று கருத்து –

——————————————————

அநந்தரம் அவனுடைய பிரதாப அநுக்ரஹங்களை நினைத்து அக்னியையும் வாயுவையும்
அவன் தானாக பிரதிபத்தி பண்ணி மேல் விழா நின்றாள் என்கிறாள் –

அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3-

அறியும் செந்தீயைத் தழுவி அச்சுதன்’ என்னும்;-சுடும் என்று அறிந்து போரப் படுவதாய் -சிவந்த நிறத்தை யுடைத்தான நெருப்பை
தேஜோ மய விக்ரஹத்தை யுடையவனாகக் கொண்டு மேல் விழுந்து அணைத்து என்னை விடாதவன் அன்றோ என்னும்
மெய் வேவாள்;-இஇப்படி தாஹகமான அக்னியை மேல் விழச் செய்தே ப்ரஹ்லாத சரீரம் போலே உடம்பு வேகிறிலள் –
இவள் பிரமித்தாலும் அவனுக்கு அஞ்சுகையாலே தஹியாது இ றே
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;–வீசுகிற குளிர்ந்த தென்றலை அணைத்து -அது குளிர்ந்து இருக்கையாலே
பிரணயியான அவனாக நினைத்துத் தழுவி எனக்கு பவ்யனான கோவிந்தன் –
பசு மேய்க்கப் போய்-நான் கிலேசிக்கிறேன் என்று காற்றில் கடியனாய் வந்தது என் -என்னும்
வெறி கொள் துழாய் மலர் நாறும் -இவள் பரிமள பிரசுரமான திருத் துழாய் நாறா நிற்கும்
ஓர் தண் தென்றல் வந்து அம் பூந்துழாயின் இன் தென் புயலுடை நீர்மையினால் தடவிற்று என் புலன் கலனே-என்கிறபடியே
இவள் உயலிடம் பெற்று உய்கைக்காகக் காற்றோடு கலந்து புகுந்தாராகக் கூடும்
வினையுடை யாட்டியேன் பெற்ற-இப்படி பிரமித்துக் காணும் படியான பாபத்தை யுடைய நான் பெற்றவளாய்
செறிவளை முன்கைச் -போலி கண்டு அவனாக நினைத்து மேல் விழுகையாலே பூரித்துச் செறிந்த வளையை யுடைத்தான முன் கையை யுடையளாய்
சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–
முக்தமான மான் போலே இருக்கிற இவள் செய்கிற வியாபாரம் என் கண்ணுக்கு ஒன்றாக இருக்கிறது இல்லை -பஹு விதமாய் இருக்கிறது –
நெருப்புச் சுடாமையாலே லோகத்தார் படி அல்லள்
காற்றுச் சுடாமையாலே பிரிந்தார் படி அல்லள்
போலி கண்டு பிரமிக்கையாலே கூடினார் படி அல்லள்
திருத் துழாய் மணக்கை யாலே கூடாதார் படி அல்லள்
என்று கருத்து –

————————————————————-

அநந்தரம் உஜ்ஜவலமாய் உத்துங்கமாய் ஸ்ரமஹரமான வடிவை யுடையவனை அனுசந்தித்து
சந்த்ரனையும் மலையையும் மேகத்தையும் அவனாக ப்ரமியா நின்றாள் -என்கிறாள்

ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.–4-4-4-

ஒன்றிய திங்களைக் காட்டி, ‘என்னும்;–எல்லாக் கலைகளாலும் ஒன்றப் பட்ட சந்த்ரனை-அருகு நின்றார்க்குக் காட்டி
ஒளி மணி வண்ணனே!’ ஒளியை யுடைத்தான ஸ்படிக மணி போன்ற வடிவை யுடையவனே என்னா நிற்கும்
நின்ற குன்றத்தினை நோக்கி, அந்த சந்த்ர பதத்து அளவும் உயர்ந்து முன்னே நிற்கிற மலையைப் பார்த்து
நெடுமாலே! –உன்னுடைய வடிவு போலே நெடிதான ஸ்நேஹத்தை யுடையவனே
வா!’ என்று கூவும்;—சாபராதரைப் போலே தேங்கி நிற்கிறது என் -கேளாமல் போன நீ யாரைக் கேட்டுப் புகுருகைக்கு நிற்கிறது –
வாராய் என்று தண் ப்ரணயம் தோன்ற அழையா நிற்கும் –
நன்று பெய்யும் மழை காணில், ‘–உறாவின பயிர் கொந்தளிக்கும் படி நன்றாக வர்ஷிக்கும் மேகத்தை காணில்
நாரணன் வந்தான்’ என்று ஆலும்;–நார சப்த வாஸ்யமான அப்புக்களை யுடைய நாராயணன் நம் உறாவுதல் தீர வந்தான்
என்று மேக சந்நிதியில் மயில் ஆலிக்குமா போலே ஹர்ஷ சப்தத்துடன் ச சம்ப்ரம நிருத்தம் பண்ணா நிற்கும்
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.–என்னுடைய மிருது ஸ்வ பாவையான பெண் பிள்ளையை
என்று காண் இப்படிப்பட்ட பிரமங்களை பண்ணினார்
இவ்வஸ்தையிலே இதுக்கு எல்லாம் கலமுண்டோ -என்று கருத்து –

——————————————–

அநந்தரம் அவனுடைய ரக்ஷண ப்ரவ்ருத்திகளை அனுசந்தித்து கன்றுகளையும் சர்ப்பத்தையும் கண்டு
அவன் ரஷித்தவை என்றும் ரக்ஷண அர்த்தமாக வந்து கிடைக்கும் படுக்கை என்றும் சொல்லா நின்றாள் என்கிறாள்

கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5-

கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;–இளையவாய் பெரியவான கன்றுகளை தழுவி
பசு மேய்க்க முடி சூடின கோவிந்தன் இனிது உக்காந்து மேய்த்தன என்னா நிற்கும்
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;–ஸ்வைர சஞ்சாரமாகப் போகா நிற்கிற இளையதான நாகத்தின் பின்னே போய்
அவன் கிடக்கிற படுக்கை இது என்னா நிற்கும்
அருவினை யாட்டியேன் பெற்ற-அனுபவித்து முடிக்க அரிய பாபத்தை யுடையேனான நான் இப்படி ஈடுபடுக்கைக்கு உறுப்பாகப் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–மிருது ஸ்வ பாவையாய் -கொள் கொம்பு இல்லாத கொடி போலே
தரைப் படுகிற இவளை ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவன் பிச்சேற்றிபி பண்ணுகிற கூத்தாட்டு
ஆம் அளவு ஒன்றும் அறியேன்-எவ்வளவாம் என்று ஒன்றும் அறிகிறிலேன்
இவள் பாம்பின் வாயிலே அகப்பட்டு முடியுமாகில் அவனும் அவன் விபூதியும் கூட முடியும் இ றே என்று கருத்து
கிடக்கை -படுக்கை
ஆண் கன்றை -என்ற பாடமாகவுமாம் –

——————————————————

அநந்தரம் அவனுடைய மநோ ஹர சேஷ்டிதங்களை அனுசந்தித்து அவற்றுக்குப் போலி கண்டு ப்ரமியா நின்றாள் -என்கிறாள்

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!–4-4-6-

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;–கூத்தாடுமவர்கள் குடம் எடுத்து ஆடினார்கள் ஆகில்
கோ ஸம்ருத்தியை யுடையவன் ஆகையாலே செருக்கு மிக்குக் கூத்தாடுகையே ஸ்வ பாவமாக யுடைய
ஸ்ரீ கிருஷ்ணன் ஆம் என்று காண்கைக்கு ஓடா நிற்கும்
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்று மையாக்கும்;–நன்றாய் நெஞ்சை வருத்தும் குழலோசை கேட்டாள் ஆகில்
இடைப் பெண்களுடைய ப்ரணய ரோஷம் ஆறும் படி தன் தாழ்ச்சி வைத்தூதும் குழலோசையை யுடைய
ஆச்சர்ய பூதனான ஸ்ரீ கிருஷ்ணன் என்று மோஹியா நிற்கும் –
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;-இடைச்சிகள் கையில் வெண்ணையை கண்டாளாகில்
அவன் அமுது செய்த வெண்ணெயோடு சஜாதீயம் இது என்னா நிற்கும்
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!–பூதனையுடைய முலையை பிராணனோடு சுவைத்துத் தம்மை
லோகத்துக்குக் கொடுத்த மஹா உபகாரகர்க்கு கொடி போலே மெல்லிய வடிவை யுடைய என் பெண் பிள்ளை
தலை மண்டையிடும்படி கொண்ட பிச்சு இருந்த படி –

——————————————————–

அநந்தரம் அவனுடைய பரத்வ சிஹ்னங்களை அனுசந்தித்துக் கலங்கின போதோடு தேறின போதோடு வாசியற
அவன் படிகளில் உள்ளாய் இரா நின்றாள் என்கிறாள் –

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–4-4-7-

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’–மிகைத்த ப்ரேமத்தோடே கூடி இருக்கச் செய்தே
வேதாந்த வித்துக்கள் சொல்லுமா போலே சர்வ லோகமும் ஸ்ரீ கிருஷ்ணனுடைய ஸ்ருஷ்ட்டி என்னா நிற்கும்
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;–பஸ்மத்தைக் கொண்டு செவ்விதாக இட கண்டாளாகில்
த்ரவ்யம் இன்னது என்று அறியாதே ஊர்த்வ புண்டரமே அடையாளமாக ஆஸ்ரிதர் பக்கல் அத்யந்த வ்யாமுக்தனான
சர்வேஸ்வரனுடைய அடியார் என்று பிரமித்து அவர்கள் இருந்த இடத்தை நோக்கி ஓடா நிற்கும்
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;–பரிமள உத்தரமான திருத் துழாயின் பூந்தாரைக் காணில்
சர்வ ஸ்வாமியான நாராயணனுடைய மாலை இது என்னா நிற்கும் –
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–இப்படி தேறின அளவிலும் கலங்கின அளவிலும் இத்திரு
மிகவும் கலங்காத அந்தத் திருவைப் போல் அன்றியே பிரிந்த தசையில் சத்ருச வஸ்துக்களையும் சம்பந்தி பதார்த்தங்களையும்
கண்டு கலங்கும் இத்திரு வானவள் ஆச்சர்யமான பரத்வ சிஹ்னங்களை யுடையவன் திறத்திலே யாகா நின்றாள்
அநபாயியான சம்பத்தாய் இருக்கை இருவருக்கும் ஒக்கும் இறே

—————————————————————–

அநந்தரம் அவனுடைய ஐஸ்வர்ய அபி ரூப்யா ஆதரணீயத்வங்களை அனுசந்தித்து போலி கண்டாலும்
சர்வ அவஸ்தையிலும் அவனையே விரும்பா நின்றாள் -என்கிறாள் –

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8-

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;–பூர்ணமான ஐஸ்வர்யத்தை உடைய ராஜாக்களைக் காணில்
பரி பூர்ண விபூதிகனான ஸ்ரீ யபதியை கண்டேனே என்னா நிற்கும்
கடலும் -காயாவும் -கரு விளையும் தொடக்கமான -உருவுடை வண்ணங்கள் காணில்,-விலக்ஷண ரூபங்களை உடையவாயுள்ள பதார்த்தங்களை காணில்
‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;–திரு வுலகு அளந்து அருளின போது ஒரு நாளே வளர்ந்து அருளின செவ்வியை யுடைய
ரூப சோபையை யுடையவன் என்று ஸம்ப்ரமித்து ஆடா நிற்கும்
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;–ப்ரதிமா கர்ப்பத்தை உடைத்தான் தேவ க்ருஹங்கள் எல்லாம்
ஆஸ்ரிதர் ஆதரிக்கைக்காக கடல் போலே தர்ச நீயமான வடிவையுடைய சர்வேஸ்வரன் சந்நிதி பண்ணின கோயில்களே என்னா நிற்கும்
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–பந்து சந்நிதியால் அஞ்சின போதோடு -ஆர்த்தியாலே மோஹித்த போதோடு வாசியற
இடைவிடாதாளாய்க் கொண்டு ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளை ஆதரியா நிற்கும் –
வெருவுதல் -அஞ்சுதல் / வீழ்தல் -மோஹித்தல்-

———————————————————

அநந்தரம் -ஆஸ்ரிதர் பக்கல் அவனுடைய உபகாரகத்வத்தை அனுசந்தித்து தத் சத்ருச சம்பந்திகளைக் கண்டு
வாய் புலற்றி மோஹிக்கும் படி பண்ணினான் என்கிறாள்

விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.–4-4-9-

பகவரைக் காணில், –பகவர்–சந்நியாசிகள் – –ஞானாதி குண பூர்த்தியாலே ஆஸ்ரிதரை ஸ்வ அபிமான
அந்தரக்கதராக்கி ரக்ஷிப்பாராய் யுள்ள பகவத் ரூபரான மோஷாஸ்ரமிகளைக் காணில்
விரும்பிப்-அத்யாதரத்தைப் பண்ணி
‘வியலிடம் உண்டானே’ என்னும்;-விஸ்தீர்ணமான ஜகத்தை வயிற்றிலே வைத்து நோக்கின சர்வ ரக்ஷகனே-இது நிச்சிதம் என்னா நிற்கும்
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;–கறுத்து பெருத்த மேகங்களை காணில் –
ஞான அஞ்ஞான விபாகம் அறத் தன் வடிவைக் காட்டி அபகரிக்கும் ஸ்ரீ கிருஷ்ணன் என்று மேலே எழப் பறக்கத் தேடா நிற்கும் –
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;–அதிப்ர பூதமாய் தர்ச நீயமான பசுத் திரளைக் கண்டாளாகில்
இவற்றை வயிறு நிறைய மேய்த்து ரஷிக்கும் மஹா உபகாரகன் கூட வருகிறான் என்று அவற்றின் பின்னே போகா நிற்கும்
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.–பெறுதற்கு அரியளான இப்பெண்ணை இப்படி உபகார
சேஷ்டிதங்களை யுடைய ஆச்சர்ய பூதன் வாய்விட்டு அலற்றும்படி பண்ணி அதுக்கு மேலே மோஹிக்கும் படி பண்ணா நின்றான் –

——————————————-

அநந்தரம் அவனுடைய ஸுலப்ய அதிசயத்தை அனுசந்தித்து சத்ருச சம்பந்தி வஸ்துக்களையும்
காண்கைக்கு யோக்யதை இல்லாத ஆர்த்தி விஞ்சின படியைச் சொல்லி இவளுக்கு என் செய்வேன் என்கிறாள் –

அயர்க்கும்;சுற்று ம்பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–4-4-10-

அயர்க்கும்;–துல்ய சம்பந்தி வஸ்துக்களையும் காண ஒண்ணாத படி மோஹியா நிற்கும் –
உணர்த்தி வந்தவாறே இவ்வவஸ்தையில் அவன் வாராது ஓழியான்-என்று நினைத்து
சுற்றும்பற்றி நோக்கும்; –சுற்றும் பல காலும் பாரா நிற்கும் –
அவ்வளவிலும் காணா விட்டவாறே தூரத்திலே நிற்கிறானாக நினைத்து
அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;-பார்த்த கண்ணை ஒட்டி நெடும் போது பாரா நிற்கும்
வியர்க்கும்; –அங்கும் காணாமையாலே ப்ரணய ரோஷத்தாலே வேர்த்து நீராக நிற்கும்
மழைக் கண் துளும்ப -மழை போலே அருவிச் சொரிகிற தண்ணீரானது கோப அக்னியாலே சுவறி அடி யற்று கண் அளவிலே துளும்பும் படி
வெவ் வுயிர் கொள்ளும்;-அவ்வெம்மை தோன்ற நெடு மூச்சு எறியும்
மெய் சோரும்;-அந்த பரிதாபத்தாலே சரீரம் தரிக்க மாட்டாமல் சோரும்
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; –பின்னையும் ஆசை பேசாது இருக்க ஒட்டாமையாலே -பெண்களுக்கு சர்வ கால ஸூலபனான
ஸ்ரீ கிருஷ்ணனே என்று சம்போதித்துச் சொல்லா நிற்கும்
இப்பேர் கேட்டவாறே வந்தானாக நினைத்து
பெருமானே, வா!’என்று கூவும்;-என் நினைவளவன்றியே அதிசயிதமாக அபகரிக்கும் என்னுடைய நாதனே வரலாகாதோ என்று அழையா நிற்கும்
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–இப்படி பிச்சேறும் படி பெரிய காதலையுடைய
என் சொல் கேளாப் பெண்ணுக்கு -இவளை இப்படி காண்கைக்கு அடியான அதிபிரபல பாபத்தை யுடைய நான் எத்தைச் செய்வேன்
வாராதவனை வரப் பண்ணுவேனோ
இது கண்டு பொறுத்து இருப்பேனோ –என்று கருத்து –

———————————–

அநந்தரம் இத்திருவாய் மொழி அப்யசித்தவர்கள் நித்ய ஸூரி களாதாக்கும் படியாக
ஸ்வ சேஷத்வ சாம்ராஜ்ய ப்ரதிஷ்டித்தராவார்கள் என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11-

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்–ஆஸ்ரிதர் தன்னை ஸம்ஸ்லேஷிக்கைக்கு விலக்கான சகல பாபங்களையும்
போக்கும் ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணனை -சர்வ சம்பத் சம்ருத்தமான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்–வாசிக சேஷ விருத்தி ரூபத்தாலே அருளிச் செய்த கான ரூபமான
பாட்டுக்கள் ஆயிரத்துள் இவை பத்தையும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்-விலக்ஷண விருத்தி விசேஷம் என்று கற்குமவர்கள்
பகவத் அனுபவ ஆனந்தத்தை உடைத்தான் பரம பதத்தை கிட்டி
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–அநாதி ஸித்தமான அவித்யாதி தோஷங்கள் மறுவலிடாதபடி அங்குள்ள
ஸூரி கள் எல்லாரும் தங்களுடைய ததீயா சேஷத்வம் தோன்றும்படி தாழ்ந்து ஆதரித்து ஸம்ப்ரமத்தாலே பெரிய கிளர்த்தியை
யுடையராம்படியாக தங்கள் சேஷத்வ சாம்ராஜ்யத்தால் உள்ள வேறுபாடு தோன்ற இருக்கப் பெறுவார்கள் –
இது ஆறு சீர்க் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் –

——————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –4-4–

March 17, 2018

இப்படி ப்ரணய ஸ்வ பாவனான எம்பெருமானை விஸ்லேஷித்தாள் ஒரு பிராட்டி -அந்த விஸ்லேஷ வியசனத்தாலே
பிச்சேறிச் சொல்லுகிற பாசுரங்களை அவளுடைய திருத் தாயார் சொல்லி அலற்றுகிறாள் –

—————————————–

மண்ணை இருந்து துழாவி, ‘வாமனன் மண் இது’ என்னும்;
விண்ணைத் தொழுது, அவன் மேவு வைகுந்தம்’ என்று கை காட்டும்;
கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல்வண்ணன்’ என்னும்;அன்னே!என்
பெண்ணைப் பெருமயல் செய்தாற்கு என் செய்கேன், பெய் வளையீரே!–4-4-1-

எம்பெருமானைப் பிரிந்த வ்யசனத்தை ஆற்ற மாட்டாதே -பண்டு எம்பெருமான் இந்த லோகத்தை அளந்து
அருளின போது -அவன் திருவடிகளோடே சம்பந்தித்தது இம் மண் என்று பார்த்து இந்த மண்ணைக் கொண்டு
ஆஸ்வஸித்து அந்தப் ப்ரீதியாலே -அடியேன் வாமனன் மண் இது வென்னும்
ஆகாசத்தை நாம சமயத்தாலே திரு நாடாகக் கருதித் தொழுது அடியேன் அவன் மேவு வைகுந்தம் என்று கை காட்டும்
அவனைக் காணாது ஒழிந்த வாறே -கண்ணை உண்ணீர் மல்க நின்று, ‘கடல் வண்ணா வென்று அழைக்கும்
இப்படி என் பெண்ணைப் பெரு மையல் செய்தார்க்கு என் செய்கேன் பெய் வளையீரே!–-என்று அலற்றுகிறாள் –

————————————————-

பெய் வளைக் கைகளைக் கூப்பி, ‘பிரான் கிடக்கும் கடல்’ என்னும்;
செய்யது ஓர் ஞாயிற்றைக் காட்டி, ‘சிரீதரன் மூர்த்தி ஈது’ என்னும்;
நையும் கண்ணீர் மல்க நின்று, ‘நாரணன்’ என்னும்; அன்னே!என்
தெய்வ உருவிற் சிறுமான் செய்கின்றது ஒன்று அறியேனே.–4-4-2-

இக்கடலை அவன் கண் வளர்ந்து அருளுகிற திருப் பாற் கடலாகக் கருதி -தன்னுடைய பெய் வளைக் கைகளைக் கூப்பி
பிரான் கிடைக்கும் கடல் என்னும்
எம்பெருமானும் பிராட்டியும் ஆதித்யனும் அவனுடைய பிரபையையும் போலே இருக்கையாலே அந்த ஆதித்யனைக் காட்டி
சிரீதரன் மூர்த்தி ஈது என்னும்
தன் கைக்கு அவன் எட்டாது ஒழிந்தவாறே நையும்
அந்த வ்யசனத்தை சகிக்க மாட்டாமையாலே கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும்
ஆச்சர்ய பூதையான இவள் செய்கிற செயல் ஒன்றும் தெரிகிறதில்லை என்கிறாள் –

————————————————–

அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;மெய் வேவாள்;
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;
வெறி கொள் துழாய் மலர் நாறும் வினையுடை யாட்டியேன் பெற்ற
செறிவளை முன்கைச் சிறுமான் செய்கின்றது என்கண்ணுக்கு ஒன்றே?–4-4-3-

அறியும் செந்தீயைத் தழுவி,‘அச்சுதன்’ என்னும்;–எல்லாராலும் தாஹ ஸ்வ பாவத் வேந அறியப்படுகிற செந்தீயை அதினுடைய
உஜ்ஜ்வல்யத்தாலே எம்பெருமானாகக் கருதிச் சென்று ஸம்ஸ்லேஷித்து -அந்த ஸம்ஸ்லேஷ ஜெனித ப்ரீதியாலே அச்சுதன் என்னும் –
மெய் வேவாள்;–அதினுடைய சைத்ய அதிசயத்தாலே நிரஸ்த ஸமஸ்த சந்தாபையாய் இருக்கும்
எறியும் தண் காற்றைத் தழுவி, ‘என்னுடைக் கோவிந்தன்’ என்னும்;–அதி சீதளமாய்க் கொண்டு வருகிற தென்றலை
பசு மேய்க்கப் பெற்று வருகிற வண்டுவரைப் பெருமாள் என்று நிச்சயித்து அக்காற்றைத் தழுவி அடியேன் இவன் என்னுடைய கோவிந்தன் என்னும்
வெறி கொள் துழாய் மலர் நாறும்
இப்படி எம்பெருமானைப் பிரிந்து படுகைக்கு அர்ஹை அன்றியே இருக்கச் செய்தே-இவள்
என்னுடைய பாபத்தாலே பிச்சேறிச் செய்கிற செயல்கள் இவ்வளவோ -என்கிறாள்

———————————————-

ஒன்றிய திங்களைக் காட்டி, ‘ஒளி மணி வண்ணனே!’ என்னும்;
நின்ற குன்றத்தினை நோக்கி, ‘நெடுமாலே! வா!’ என்று கூவும்;
நன்று பெய்யும் மழை காணில், ‘நாரணன் வந்தான்’ என்று ஆலும்;
என்று இன மையல்கள் செய்தார் என்னுடைக் கோமளத்தையே.–4-4-4-

அதி சீதள பிரசனான பூர்ண சந்திரனைக் காட்டி இவன் ஒளி மணி வண்ணனே!’ என்னும்;
நின்ற குன்றத்தினை நோக்கி–இந்த லோகத்தை அளந்து அருளுகைக்காக மண்ணும் விண்ணும் நிறைய மலர்ந்த
எம்பெருமான் என்று நிச்சயித்து , ‘நெடுமாலே! வா!’ என்று கூப்பிட்டு அழைக்கும்
இலங்கு ஒலி நீர் பெரும் பவ்வம் மண்டியுண்ட பெருவயிற்ற கரு முகிலைக் காணில் நாரணன் வந்தான் என்று
மயில்கள் நின்று ஆலுமா போலே ஆலும்-என்று இப்படியே பித்தேறப் பண்ணினான் என்னுடைக் கோமளத்தை என்கிறாள் –

——————————————–

கோமள வான் கன்றைப் புல்கி, ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய், ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
ஆம் அளவு ஒன்றும் அறியேன் அருவினை யாட்டியேன் பெற்ற
கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்தே!–4-4-5-

கோமள வான் கன்றைப் புல்கி, -இவை ‘கோவிந்தன் மேய்த்தன’ என்னும்;
போம் இள நாகத்தின் பின் போய்,-அத்தைப் புல்கி இவ்விளமையும் மார்த்தவமும் அழகும் எம்பெருமானோடே கலந்த
திரு வனந்த வாழ்வானுக்கு அல்லது கூடாது ஆதலால் ‘அவன் கிடக்கை ஈது’ என்னும்;
அருவினை யாட்டியேன் பெற்ற கோமள வல்லியை மாயோன் மால் செய்து செய்கின்ற கூத்து
என்னாய் விளையும் என்று அறிகிறிலேன் -என்கிறாள் –

—————————————————————-

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,‘கோவிந்தனாம்’எனா ஓடும்;
வாய்த்த குழல் ஓசை கேட்கில், ‘மாயவன்’ என்றுமை யாக்கும்;
ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
பேய்ச்சி முலை சுவைத்தாற்கு என் பெண் கொடி ஏறிய பித்தே!–4-4-6-

கூத்தர் குடம் எடுத்து ஆடில்,–கோவிந்தன் அல்லன் காண் என்றாலும் ஆம் காண் ‘என்னா ஓடும்;-
அன்றியே ஒழிந்த வாறே தளரும் –
அழகிய குழல் ஓசை கேட்கில்,–இவளைப் பெற ஒண்ணாது என்று கேளாததொரு படி காத்துச் செல்லா நிற்கச் செய்தே
எங்கேனும் ஓர் இடத்திலே பின்னையும் லப்தமான வாறே அடியேன் ‘மாயவன்’ என்று ஓடும்
அவன் அன்றியே ஒழிந்தவாறே மோஹிக்கும்
பின்னையும் ஆய்ச்சியர் வெண்ணெய்கள் காணில், ‘அவன் உண்ட வெண்ணெய் ஈது’ என்னும்;
மாய்த்தல் எண்ணி வாய் முலை தந்த பேய்ச்சியை மாய்த்த இச் செயல் கிடீர் இவளை இப்பாடு படுத்துகிறது -என்கிறாள்

———————————————–

ஏறிய பித்தினோடு ‘எல்லா உலகும் கண்ணன் படைப்பு’ என்னும்’
நீறு செவ்வே இடக் காணில், நெடுமால் அடியார்’ என்று ஓடும்;
நாறு துழாய்மலர் காணில்,‘நாரணன் கண்ணி ஈது’ என்னும்;
தேறியும் தேறாதும் மாயோன் திறத்தனளே இத் திருவே.–4-4-7-

எத்தனையேனும் பித்தேறினாலும் எல்லா யுலகும் கண்ணன் படைப்பு என்னும் -இது ஒன்றும் தப்பாமல் சொல்லும் –
த்ரவ்யம் ஏதேனும் ஆகிலும் ஊர்த்வமாக இடக் காணில் நெடுமால் அடியார் என்று ஓடும்
ததீய வஸ்து சாத்ருஸ்யத்தாலே ததீயம் அல்லாதவற்றையும் ததீயமாகக் கருதிப் பிதற்றுகிற இவள் அவனுக்கு
அசாதாரண சேஷ பூதமான திருத் துழாயைக் கண்டால் என் படும்
பல சொல்லி என் -இனி தெரியும் தேறாதும் மாயோன் திறம் அல்லது அறியாள் இத்திரு என்கிறாள் –

——————————————-

திருவுடை மன்னரைக் காணில், ‘திருமாலைக் கண்டேனே’ என்னும்;
உருவுடை வண்ணங்கள் காணில், ‘உலகுஅளந் தான்’என்று துள்ளும்;
‘கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;
வெருவிலும் வீழ்விலும் ஓவாக் கண்ணன் கழல்கள் விரும்புமே.–4-4-8-

ஸ்ரீ மான்களான ராஜாக்களைக் காணில் ஏவம் விந்தையான ஸ்ரீ மத்தை யானது ஸ்ரீ யபதியான சர்வேஸ்வரனுக்கு அல்லது கூடாதாதலால் –
இவன் ஸ்ரீ யபதியே என்று நிச்சயித்து திரு மாலைக் கண்டேனே என்னும்
அழகிய நீல மேகங்கள் குவளைகள் காயா மலர்கள் கடல் என்னும் இவற்றைக் காணில் உலகு அளந்தானே என்று துள்ளும்
கருவுடைத் தேவில்கள் எல்லாம் கடல்வண்ணன் கோயிலே’ என்னும்;-அங்கே போய்ப் புக்கு அவன் அன்றியே ஒழிந்தவாறே ஏங்கி விழும் –
பின்னையும் தவிராதே கண்ணன் கழல்கள் விரும்பும் என்கிறாள் –

——————————————-

விரும்பிப் பகவரைக் காணில், ‘வியலிடம் உண்டானே’ என்னும்;
கரும் பெரு மேகங்கள் காணில், ‘கண்ணன்’ என்று ஏறப் பறக்கும்;
பெரும் புலம் ஆநிரை காணில், ‘பிரான் உளன்’ என்று பின் செல்லும்;
அரும் பெறல் பெண்ணினை மாயோன் அலற்றி அயர்ப்பிக்கின்றானே.–4-4-9-

அபரிமித பகவத் ஞான விசிஷ்டராய் அத ஏவ பகவத் வ்யதிரிக்த விஷயங்களில் நிரபேஷராய் இருப்பாரைக் காணில்
ஏவம்வித நைர பேஷ்யம் எம்பெருமானுக்கு அல்லது கூடாதாதலால் வியலிடமுண்டானே என்று சாதாரமாகச் சொல்லும் –
கரும் பெரும் மேகங்கள் காணில் அடியேன் கண்ணன் என்று தன்னுடைய ப்ரீதி அதிசயமே சிறகாகக் கொண்டு ஏறப் பறக்கும்
தனக்கு எட்டாதே ஒழிந்தவாறே தளரும் -பின்னையும்
லப்த சம்ஜஜையாய் அதி சமக்ரமான பசு நிரை காணில் அடியேன் பிரான் உளன் என்று அவற்றின் பின் செல்லும்
இப்படி என்னுடைய யரும் பெறல் பெண்ணினை மாயோன் தன்னை அலற்றி யயர்க்கும் படி பண்ணா நின்றான் என்கிறாள் –

—————————————————

அயர்க்கும்;சுற்று ம்பற்றி நோக்கும்; அகலவே நீள் நோக்குக் கொள்ளும்;
வியர்க்கும்; மழைக் கண் துளும்ப வெவ் வுயிர் கொள்ளும்;மெய் சோரும்;
பெயர்த்தும்‘கண்ணா!’என்று பேசும்; ‘பெருமானே, வா!’என்று கூவும்;
மயற் பெருங் காதல் என் பேதைக்கு என் செய்கேன் வல் வினையேனே?–4-4-10-

வியசனாதி அதிசயத்தாலே அறிவழிந்து கிடக்கும்-பின்னையும் நெடும் போது கூட ப்ரபுத்தையாய் தன்னருகே
வந்தானாகக் கருதிச் சுற்றம் பற்றி நோக்கி அருகு காணாது ஒழிந்தவாறே அகலவே நீள் நோக்குக் கொள்ளும் –
தூரத்திலும் காணாது ஒழிந்தவாறே நீராய் உருகும் –
மழைக் கண் துளும்ப வெவ்வுயிர் கொள்ளும் -மெய் சோரும்
பின்னையும் கண்ணா வென்று பேசும் -பெருமானே வாராய் என்று கூப்பிட்டு அழைக்கும்
இப்படி காதல் மையல் ஏறின என் பெண் பேதைக்கு என் செய்கேன் பாவியேன் -என்று அலற்றுகிறாள் –

————————————————————

வல்வினை தீர்க்கும் கண்ணனை வண் குருகூர்ச் சடகோபன்
சொல் வினையாற் சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும்
நல்வினை என்று கற்பார்கள் நலனிடை வைகுந்தம் நண்ணித்
தொல் வினை தீர எல்லாரும் தொழுது எழ வீற்றிருப்பாரே.–4-4-11-

ஆஸ்ரித ஜன ஸமஸ்த துக்காப நோதந ஸ்வ பாவனாய் ஆஸ்ரித ஸூ லபனாய் இருந்த எம்பெருமானைச் சொல் வினையால்
சொன்ன பாடல் ஆயிரத்துள் இவை பத்தும் அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு கற்பார்கள்
நலனுடை வைகுந்தம் நண்ணி எல்லாரும் தொழுது எழ வீற்று இருப்பார் -என்கிறார் –

——————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி –4–3-

March 17, 2018

மூன்றாம் திருவாய் மொழியிலே
இவருடைய ஆர்த்தி தீர்க்கும்படி ஸம்ஸ்லேஷித்த சர்வேஸ்வரன் இவருடைய அபி நிவேச ஹேதுவான அநு ராக விசேஷத்தைக் கண்டு
அவனும் இவர் பக்கலிலே அத்யந்த அபி நிவிஷ்டனாம் படி அநு ரக்தனாம் படியை அநு சந்தித்த இவர்
அவனுடைய பிராப்தி பிரதிபந்தக ஸமஸ்த விரோதி நிவர்த்தகத்வத்தையும்
ரக்ஷகத்வ ப்ரயுக்த சம்பந்தத்தையும்
சர்வாத்ம பாவாதியால் வந்த நாராயணத்வத்தையும்
அநு கூல சத்ரு நிராசன சாமர்த்யத்தையும்
ஸுசீல்யாதி குண யோகத்தையும்
ரக்ஷண உபகரண வத்தையையும்
அநந்யார்ஹம் ஆக்கி அடிமை கொள்ளும் ஸ்வ பாவத்தையும்
சர்வ வ்யாபகத்வத்தையும்
பாரமார்த்திக பரத்வ உஜ்ஜ்வல்யத்தையும்
அபரிச்சேத்ய மஹாத்ம்யத்தையும்
அநுபவித்து -ஏவம்விதனான சர்வேஸ்வரன் தம்முடைய ஆத்மாத்மீயங்கள் எல்லாம் ஸ்ரக் வஸ்திர ஆபரணங்கராகாதிகளோ பாதி
தனக்கு அதிசயித போக்யமாம் படி விரும்பின பிரணயித்தவத்தை அருளிச் செய்து ஸந்துஷ்டாராகிறார்

———————————————-

முதல் பாட்டில் -பிராப்தி விரோதிகளை அளிக்கும் ஸ்வ பாவனான சர்வேஸ்வரனை நோக்கி
என் நெஞ்சை உனக்கு அங்க ராகமாகக் கொண்டாய் -என்கிறார்

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள்இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குலநல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1-

கோவை வாயாள் பொருட்டு -கோவைப் பழம் போலே சிவந்த ஆதாரத்தை யுடைய நப்பின்னைப் பிராட்டிக்காக
ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! -எருதுகளினுடைய பிடரை முறித்தவனாய்
மதிள்இலங்கைக்-மதிளை யுடைய இலங்கைக்கு
கோவை வீயச் சிலை குனித்தாய்! -நிர்வாஹகனான ராவணனை முடியும்படியாக வில்லை வளைத்தவனாய்
குலநல் யானை மருப்பு ஒசித்தாய்!–ஜாதி வைலக்ஷண்யத்தையும் லக்ஷண வைலக்ஷண்யத்தையும் யுடைய குவலயாபீடத்தினுடைய கொம்பை முறித்தவனே
இப்படி நப்பின்னைக்கும் ஜனக ராஜன் திரு மகளுக்கும் மதுரையில் பெண் பிள்ளைகளுக்கும் பிராப்தி விரோதியைப் போக்கின உன்னை
பூவை வீயா நீர்தூவிப் -புஷ்பத்தை அகலாத ஜலத்தை ப்ரேமத்தாலே அக்ரமமாகப் பரிமாறி
போதால் வணங்கேனேலும், –யுக்த காலங்களிலே வணங்கிற்றிலேன் ஆகிலும்
நின் பூவை வீயாம் மேனிக்குப் -உன்னுடைய பூவைப் பூ நிறத்தை யுடைய திரு மேனிக்கு
பூசும் சாந்து என் நெஞ்சமே.-சாத்தத் தகுதியான அங்க ராகம் என் நெஞ்சம் ஆவதே
ஆஸ்ரய தோஷம் பாராதே அநு ராக லேசமே பற்றாசாக அங்க ராகம் ஆக்கினாய்
அதுக்கு அடி-அவஸ்தா சப்தக விகாரத்தையும் கழித்து- தச இந்த்ரியாநநமான தீ மனத்தையும் கெடுத்து –
பிரவேச விரோதியான துர்மானத்தையும் அழிக்குமவன் ஆதலால் என்று கருத்து –

—————————————————–

அநந்தரம் சர்வ நியந்தாவாய் -சர்வ ரக்ஷகனான ஸ்வாமிக்கு என் கரண த்ரயமும் போக்யமாகா நின்றது -என்கிறார் –

பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-

ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த .–நிருபாதிக நியாந்தாவாய் -பிரளய ஆபத்தில் உண்பது உமிழ்வது
ஆகையாலே ஸமஸ்த பதார்த்தத்துக்கும் சர்வ பிரகார ரக்ஷகனாய்
எந்தை –இவ்வபதானத்தாலே என்னை யடிமை கொண்ட அஸ்மத் ஸ்வாமியாய் –
ஏக மூர்த்திக்கே–நிரதிசய போக்யமாகையாலே அத்விதீயமான விக்ரஹத்தை யுடையவனானவனுக்கு
பூசும் சாந்து என்நெஞ்சமே; –கூனி இட்ட சாந்து போலே தகுதியான சாத்துப்படி என் நெஞ்சு ஆகா நின்றது
புனையும் கண்ணி எனதுடைய வாசகம் செய் மாலையே;-ஸ்ரீ மாலாகாரர் மாலை போலே உகந்து சாத்தும் திரு மாலை
என்னுடைய வாக் விருத்தியான சப்தத்தாலே தொடுக்கப்பட்ட மாலையாய் இரா நின்றது
பூம் பட்டாம் என்கிறபடியே திரு வனந்த ஆழ்வான் சமர்ப்பித்தது என்னலாம் படி –
வான் பட்டாடையும் அஃதே;–சீரியதான பரிவட்டமும் அந்த வாக் விருத்தியே
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;–தேஜஸ் கரமாம் படி அணியப்பட்ட ஆபரணமும் என்னுடைய அஞ்சலி பந்தமே
வாசகம் பட்டாடை யாவது -ஒப்பனைக்குப் புஷ்கல்ய கரமாகை
அஞ்சலி ஆபரணம் ஆகையாவது -இவர் தலையிலே வைத்த அஞ்சலி அவன் திரு முடியில் அபிஷேகாதி
ஆபரணங்களோ பாதி அவனுக்கு உஜ்ஜ்வல்ய அவஹமாகை –

—————————-

அநந்தரம் சர்வாத்மஹாவாதியால் வந்த சம்பத்தை யுடைய உன் வடிவு அழகை இப்படி அனுபவித்து என் ஆத்மாவானது
கீழ் பிரகிருத துக்கம் தீரப் பெற்றதே என்கிறார் –

ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.–4-3-3-

ஏக மூர்த்தி –ஸூஷ்ம சித் அசித் விசிஷ்டமாய் -ஏக மேவ என்கிறபடியே காரண ரூபத்தை யுடையனாய்
இருமூர்த்தி -அந்த அவ்யக்த கார்யமான மஹத் அஹங்காரங்களை வடிவாக யுடையனாய்
மூன்று மூர்த்தி -அந்த மஹத் அஹங்காரங்களினுடைய த்ரை வித்யா ஹேதுவான
சத்வ ரஜஸ் தமோ ரூப குண த்ரய வைஷம்யங்களை பிரகாரமாக யுடையனாய்
பல மூர்த்தி யாகி –வை காரிக கார்யமான ஏகாதச இந்திரியங்களை பிரகாரமாக யுடையனாய்
ஐந்து பூதமாய் -பூதாதியான தாமச அஹங்கார கார்யங்களான பஞ்ச பூதங்களை பிரகாரமாக யுடையனாய்
இரண்டு சுடராய் -அண்டாந்தர வர்த்தியான வ்யஷ்டி ஸ்ருஷ்டிக்கு உதாஹரணமான ஸூர்யா சந்த்ரர்கள் சுடர் இரண்டையும் வடிவாக யுடையனாய்
அருவாகி-அவற்றுக்கு அந்தராத்ம தயா அநு பிரவேசித்து ஸூஷ்ம பூதனாய்
ஸ்ருஷ்டமான ஜந்துக்களினுடைய ரக்ஷண அர்த்தமாக
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற –திரு வனந்த ஆழ்வான் மேல் ஏறி திருப் பாற் கடல் நடுவே கண் வளர்ந்து அருளி
நாராயணனே-இந்த அந்தராத்மத்வத்தாலும் சமுத்திர ஸாயித்வத்தாலும் ஸித்தமான நாராயண சப்தத்துக்கு வாஸ்யமானவனே
கீழ்ச் சொன்ன ப்ரக்ரியையாலே
உன் ஆக முற்றும் அகத்து அடக்கி -உன்னுடைய வடிவையும் -என் சகல கரணங்களையும் உனக்கு சர்வ அலங்காரமுமாகக் கொண்ட
அழகையும் எல்லாம் என் நெஞ்சுக்குள்ளே கபளீ கரித்து அனுபவித்து
ஆவி அல்லல் மாய்த்ததே-என் ஆத்மாவானது கீழில் திருவாய் மொழியில் பட்ட துக்கத்தைப் போக்கப் பெற்றதே –
பல மூர்த்தி -என்னும் அளவும் பர வ்யூஹ விபவ விக்ரஹங்களைச் சொல்லி
ஐந்து பூதம் இரண்டு சுடர் என்கிற இடம் லீலா விபூதி சம்பந்தத்தைச் சொல்லுகிறது என்பாரும் உளர் –
அதில் சர்வ பிரதானமாய் ப்ராப்யம் ஆகையாலே அத்விதீயமான வாஸூ தேவ மூர்த்தியாய் -அது தான்
சாந்தோதித நித்யோதித பேதத்தை யுடைத்தாய்க் கொண்டு இரு மூர்த்தியாய்
நித்யோதித வேஷம் தானே சங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்த பேதத்தாலே மூன்று மூர்த்தியாய்
அவை தாம் கேசவாதி துவாதச மூர்த்தியையும் தசாவதார ரூபமாயும் பல மூர்த்தியாய் இருக்கும் என்றபடி –

————————————————-

அநந்தரம் அநு கூல சத்ருவான பூதனையை நிரசித்து என்னை அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட
ஸ்ரீ யபதியான உனக்கு என் பிராணன் திரு முடிக்கு விசேஷ அலங்காரம் ஆவதே -என்கிறார் –

மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!
பூத்தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்
பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.–4-3-4-

மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய் -முடிப்பதாக நினைத்து திருப் பவளத்திலே முலையை வைத்த
அநு கூலமான மாத்ரு வேஷ பரிக்ரஹத்தை யுடைய வஞ்சப் பேயினுடைய
உயிர் மாய்த்த ஆய மாயனே! -பிராணனை முடித்து விட்ட கோபால பாலகத்வத்தில் புரையற்ற ஆச்சர்ய பூதனே
வாமனனே! -இந்த அபதானத்தாலே ஜகத்தை அநந்யார்ஹம் ஆக்கும் ஸ்வாமித்வத்தை பிரகாசிப்பிக்கிற வாமன அவதாரத்தையும் சபலமாக்கி
மாதவா!-ஸ்வ பாவிக்கமான ஸ்ரீ யபதித்வத்தையும் நிலை நிறுத்தினவனே –
உன்னைப் –
பூத்தண் மாலை கொண்டு போதால் -விலக்ஷண புஷ்ப யுக்தமாய் குளிர்ந்த மாலைகளைக் கொண்டு அவஸ்த அநு ரூபமாக
வணங்கேனேலும்,–ஆராதிக்கப் பெற்றிலேனே யாகிலும்
நின்-உன்னுடைய
பூத்தண் மாலை -புஷ்ப மாயமாய் செவ்வியை யுடைத்தான மாலையால் அலங்க்ருதமாய்
நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.–-
ஆதி ராஜ்ய ஸூ சகமான ஊக்கத்தை யுடைய திரு முடிக்கு அலங்காரமாகச் சாத்தும் மாலை என்னுடைய பிராணன் ஆவதே –

————————————————-

அநந்தரம் போக்யனாய் ஸ்வாமியாய் உபகாரகனாய் ஸூ லபனான ஸ்ரீ கிருஷ்ணனுக்கு
என்னுடைய பிரேமாதிகள் ஆபரணாதி சமஸ்தமுமாகா நின்றன -என்கிறார்

கண்ணி எனது உயிர்காதல் கனகச் சோதி முடி முதலா
எண்ணில் பல்கலன்களும்; ஏலும் ஆடை யும் அஃதே;
நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே;
கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.–4-3-5-

கால சக்கரத் தானுக்கே.–கால நிர்வாஹகமான திருவாழியை யுடையனாய்
எம்மான் -அவ்வழகைக் காட்டிக் கால வச்யனாகாத படி என்னை அடிமை கொண்ட ஸ்வாமியாய்
எம்பிரான் –காலம் உள்ளது தனையும் அவ்வழகை அனுபவிப்பிக்கும் மஹா உபகாரகனாய்
கண்ணன் -கால அநு ரூபமாக அவதரித்து ஸூலபனானஸ்ரீ கிருஷ்ணனுக்கு
கண்ணி எனது உயிர்–என் அபிமான அந்தரகதமான ஆத்மவஸ்து சிரசாவாஹ்யமான மாலையாகா நின்றது
காதல் கனகச் சோதி முடி முதலா-ஆத்ம தர்மமான ப்ரேமமானது கனக மயமாய் -ஆதி ராஜ்ய ஸூசகமான உஜ்ஜ்வல்யத்தை யுடைய முடி முதலாக
எண்ணில் பல்கலன்களும்; –அசங்க்யேயமான திவ்ய ஆபரணங்களுமாகா நின்றது
ஏலும் ஆடை யும் அஃதே;–அநு ரூபமாய் -சர்வ ஸ்மாத் பரத்வ ஸூசகமான திருப் பீதாம்பரமும் அதுவே
நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே;–த்ரிவித ஆத்ம வர்க்கமும் கிட்டி வாய் புலற்றக் கடவ கீர்த்தியும் அதுவே
இவருடைய ப்ரேமத்துக்குத் தான் விஷயீ பவிக்கையை பேர் ஒப்பனையாகவும் பெரும் புகழாகவும் நினைத்தான் என்று கருத்து –

——————————————

அநந்தரம் ஆஸ்ரித விரோதி நிரசன பரிகாரத்தை யுடைய ரக்ஷகனான நீ என் அபேஷா அநு ரூபமாக முகம் காட்டிற்று
இல்லையே யாகிலும் உன் திருவடிகளில் சம்பந்தமே இத்தலையில் சத்திக்கு அதிசய கரம் என்று
பிரணயியான அவன் பக்கல் தமக்கு உண்டான ப்ரணயத்தை அருளிச் செய்கிறார்

கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்றுஎன்று,
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே.–4-3-6-

கால சக்கரத்தொடு –விரோதிகளை அழிக்கைக்குக் காலனாம் படியான ஸ்வ பாவத்தை யுடைய திருவாழி யோடே
வெண் சங்கு !-பரபாக ரசாவகமான வெளுப்பாய் யுடைய ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை
அம் கை ஏந்தினாய்-அவற்றுக்கு சோப அவஹமான அழகிய திருக் கையில்
ஞால முற்றும் உண்டு –ரஷ்யமான ஜகத்துக்கு ஆபத்து வந்தால் அந்த பிரளய ஆபத்தில் அகப்படாத படி
ஓன்று ஒழியாமல் தன் வயிற்றிலே வைத்து ரஷித்து
உமிழ்ந்த நாராயணனே!’ -அது போனவாறே வெளிநாடு காண உமிழ்ந்த நிருபாதிக பந்தத்தை யுடைய நாராயணனே
என்றுஎன்று,–என்று இந்த ஸ்வ பாவங்களைத் தனித் தனியே சொல்லி
ஓல மிட்டு நான் அழைத்தால் –கூப்பிட்டு இருந்த இடத்தில் நின்றும் எழுந்து இருந்து வருகைக்கு யோக்யதை இல்லாத நான் அழைத்தாலும்
ஒன்றும் வாராயாகிலும்,–அருகும் சுவடும் தெரிவுணரோம் -என்கிறபடியே நீ முகம் காட்டுகைக்கு ஈடாய்
இருப்பது ஒரு அடையாளம் தெரியாதபடி வாராது இருந்தாயே யாகிலும்
என் சென்னிக்கு-அன்பே பெருகும் மிக என்கிற கணக்கிலே உன்னை ஒழியச் செல்லாத சத்தையை யுடைய என் தலைக்கு
உன் கமல மன்ன குரை கழலே.–சேஷியான உன்னுடைய கமலம் போலே நிரதிசய போக்யமான ஆஸ்ரித ரக்ஷண பிரசித்தி
தோற்றும்படி த்வநிக்கிற வீரக் கழலை யுடைய திருவடிகள்
கோலமாம் -அலங்காரமாய்க் கொண்டு தேஜஸ் கரமாகா நின்றது
உன் திருவடிகளிலே ப்ரேமம் எனக்கு சத்தா ப்ரயுக்தம் என்று கருத்து –

———————————————

அநந்தரம் நான் அகிஞ்சித் காரனாய் இருக்கிலும் அநந்யார்ஹம் ஆக்கி அடிமை கொள்ளும்
ஸ்வ பாவத்தை யுடைய உன் வடிவு என் ஆத்மாவை விஷயீ கரித்து இரா நின்றது -என்கிறார் –

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே.–4-3-7-

குரை கழல்கள் நீட்டி -அநந்யார்ஹத அபதான ப்ரஸித்திக்கு இட்ட வீரக் கழலை யுடைய திருவடிகளை நிமிர்த்து
மண் கொண்ட கோல வாமனா!-ஜகத்தை அளந்து கொண்ட வடிவு அழகை யுடைய வாமனனாய்
குரை கழல் கை கூப்புவார்கள் -அத்திருவடிகளை உத்தேசித்து ஓர் அஞ்சலி பந்தம் பண்ணினார்
கூட நின்ற மாயனே!–தன்னையே பிராபிக்கும் படி -உபாயமும் உபேயமாகவும் நின்ற ஆச்சர்ய பூதனே
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் -பரிமள பிரசுரமான புஷ்பத்தையும் பாத்யாதி ஜலத்தையும் கொண்டு
உன்னை ஆராதிக்கைக்கு உறுப்பாக ஆபி முக்யார்த்த ஸ்தோத்ரம் பண்ண சக்தன் அல்லேன் ஆகிலும்
உரை கொள் சோதி உன் -வேதாந்த வசனங்களால் அபரிச்சேத்யமான தேஜஸ்ஸை யுடைய உன்னுடைய
திருவுருவம் என்னது ஆவி மேலதே.–திரு மேனியானது என் ஆத்மாவின் மேலே அபி நிஷ்டமாய் இரா நின்றது

——————————————-

அநந்தரம் எனக்காக சர்வ லோகத்தையும் வியாபித்து என்னை அங்கீ கரித்த உன் படியைச் சொல்லப் போமோ -என்கிறார் –

என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8-

என்னது ஆவி மேலையாய்! -என் ஆத்மவஸ்துவின் மேலே அபி நிவிஷ்டனாய்க் கொண்டு
உனக்கு வியாப்ய பூதமான
ஏர் கொள் ஏழ் உலகமும்-உஜ்ஜ்வல்யத்தை ஸ்வ பாவமாக யுடைய சப்த விதமான சர்வ லோகங்களிலும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி -பூர்ணமாக வியாபித்து ஸமஸ்த பதார்த்தங்களும் தனக்குப் பிரகாரமாம் படியாய்
நின்ற ஸ்வயம் ஜ்யோதி ரூபமான
ஞான மூர்த்தியாய்!-ஞானத்தை ஸ்வரூபமாக யுடையவனே
என்னது ஆவி உன்னதும் -என் ஆத்ம ஸ்வரூபம் உனது போக்யமும்
உன்னது ஆவி என்னதும் -உன் திவ்யாத்ம ஸ்வரூபம் எனது போக்யமுமான
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–இப்படியிலே நின்றாய் இதுக்கு என்ன பாசுரம் இட்டுச் சொல்லுவேன்
என்று உபய அநு ராகமும் சொல்லிற்று ஆயிற்று –

—————————————-

அநந்தரம் பாரமார்த்திக பரத்வ உஜ்ஜ்வல்யத்தை யுடைய உன்படி என்னால் பேசி முடிக்கப் போமோ -என்கிறார்

உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4-3-9-

உரைக்க வல்லன் அல்லேன்; –ஆஸ்ரித விஷயத்தில் உன் ப்ரணய குணத்தை நான் பாசுரம் இட்டுச் சொல்ல சக்தன் அல்லேன் –
அது எத்தாலே என்னில்
உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்-முடிவு இல்லாத உன்னுடைய பிரணயித்வ பிரதையாகிற சமுத்ரத்தினுடைய
கரைக்கண் என்று செல்வன் நான்? -கரையிடத்துநான் என்று செல்வன்
அடியிலே பேச இழிந்து
காதல் மையல் ஏறினேன்;–என் ப்ரேமத்தாலே மிக்க கலக்கத்தை யுடையேன் ஆனேன்
புரைப்பு இலாத பரம்பரனே -புரையற்ற பாரமார்த்திக சர்வ ஸ்மாத் பரத்வத்தை யுடையவனாய்
என்னோட்டைக் கலவியில்
பொய்யிலாத பரஞ்சுடரே!-பொய் இல்லாமையால் அம்மேன்மையோபாதி நிரதிசயமான உஜ்ஜ்வல்யத்தை யுடையனானவனே
நல்ல மேன்மக்கள் , –விலக்ஷண ஞானாதி ஸ்வ பாவராய் சர்வ உத்க்ருஷ்டரான நித்ய ஸூரிகள்
இரைத்து ஏத்த – பெரும் கடல் கிளர்ந்தால் போலே கோஷித்து -ஹாவு ஹாவு ஹாவு என்று ஏத்த
யானும் ஏத்தினேன்.–ப்ரேம பரவசனான நானும் ஏத்தினேன் அத்தனை –

—————————————————-

அநந்தரம் ஒருவராலும் எல்லை காண ஒண்ணாத அபரிச்சேத்ய மஹாத்ம்யத்தை யுடையவனை
என் சத்தா சித்தி அர்த்தமாக ஏத்தினேன் -என்கிறார் –

யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10-

யானுமேத்தி -அவனால் மயர்வற மதி நலம் அருள பெற்ற நானும் ஏத்தி
ஏழுலகும் முற்றுமேத்தி -அஞ்ஞ ஸர்வஞ்ஞ விபாகம் அற இந்த லோகங்கள் எல்லாம் ஏத்தி
பின்னையும் தானுமேத்திலும் -அதுக்கும் மேலே சர்வஞ்ஞனாய் சர்வருக்கும் ஞானப் பிரதனான அவன் தானும் ஏத்தினாலும்
தன்னை யேத்த வேத்த -அபரிச் சின்ன ஸ்வ பாவனான தன்னை ஒருகால் சொன்ன இடம் ஒரு கால் சொல்லாமல் மேன் மேல் என ஏத்தினால்
வெங்கு எய்தும்-எங்கே முடிவெய்தும் -ஆகிலும் ஏத்துகைக்கு அடி
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப-தேனும் பாலும் கண்ணாலும் அமுதும் போலே சர்வ பிரகாரத்தாலும் ரசிக்க
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –மஹா உபகாரகனையே நான் உஜ்ஜீவிக்கைக்கு யானும் ஏத்தினேன்

—————————————————–

அநந்தரம் இத்திருவாய் மொழி வல்லவர்கள் உபய விபூதியும் ஸ்வ நியமனத்திலே
நிர்வஹிப்பார்கள் என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11-

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, –உஜ்ஜீவன உபாயம் வேறு இல்லாமையை அறுதியிட்டு
கண்ணன் ஒண் கழல் மேல்-ஆஸ்ரித பிரணயியான ஸ்ரீ கிருஷ்ணனுடைய பரம போக்யமான திருவடிகள் விஷயமாக
செய்ய தாமரைப் பழனம் -சிவந்த தாமரையை யுடைய நீர் நிலங்களை யுடைத்தாய்
தென்னன் குருகூர்ச் சடகோபன்-தெற்குத் திக்கில் ஸ்லாக்யநீயமான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாருடைய பிரணயித்வ குணத்தில்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் -பொய் இல்லாதபடி பாடின ஆயிரம் திருவாய் மொழியில்
இவையும் பத்தும் வல்லார்கள்-இவை பத்தையும் அர்த்த அநு சந்தானத்தோடே அப்யஸிக்க வல்லவர்கள்
வையம் மன்னி வீற்றிருந்து -பூமியிலே சிரகாலம் ஸ்திரமாம் படி தங்கள் வ்யாவ்ருத்தி தோன்ற இருந்து
விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–இந்த பூமியோடு பரமபதத்தையும் தங்கள் நியமனத்தில் படி நிர்வஹிப்பர்கள்
இது ஆறு சீர் ஆசிரிய விருத்தம் –

———————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –4-3–

March 17, 2018

இப்படி அவசன்னரான தம்முடைய அவசாதம் எல்லாம் போம்படி தம்மோடு கலந்து அருளின எம்பெருமானுடைய
பிரணயித்தவ குண அனுபவ ஜெனித ப்ரீதியாலே அந்த பிரணயித்தவத்தைப் பேசுகிறார் –

————————————

கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்! மதிள்இலங்கைக்
கோவை வீயச் சிலை குனித்தாய்! குலநல் யானை மருப்பு ஒசித்தாய்!
பூவை வீயா நீர்தூவிப் போதால் வணங்கேனேலும், நின்
பூவை வீயாம் மேனிக்குப் பூசும் சாந்து என் நெஞ்சமே.–4-3-1-

அதி பல வ்ருஷ ரூப அஸூரா சப்தக ச புத்ர ஜன பாந்தவத சாஸ்ய குவலயா பீட கம்சாத்யாதி விரோதி நிரசன ஜெனிதமான
உன்னுடைய ஸ்ரமாபநோத நார்த்தமான சிசிரோபசாரங்களைத் தத் தத் காலங்களிலே உன் திறத்தில் நான் செய்யாது இருக்கச் செய்தேயும்
என்னுடைய மனஸ்ஸானது சீதளமாய் நிரதிசய ஸூகந்தமாய் புஷ்ப காச ஸூ குமாரமான உன்னுடைய திரு வுடம்புக்கு சத்ருசமாய்
சர்வ ஸ்ரமாபநோதனமான திவ்ய அங்க ராகமாவதே -இது என்ன பிரணயித்தவம் -என்கிறார் –

———————————

பூசும் சாந்து என்நெஞ்சமே; புனையும் கண்ணி எனதுடைய
வாசகம் செய் மாலையே; வான் பட்டாடையும் அஃதே;
தேசமான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே;
ஈசன், ஞாலம் உண்டு உமிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.–4-3-2-

நிகில புவன கிரண உத் கிரண அவகத சர்வேஸ்வர ஸ்வ பாவனாய் -சதைக ரூபனாய்க் கொண்டு
ஸ்ரீ வைகுண்ட நிலயனாய் இருந்த எம்பெருமானுக்கு
ஸ்வ விஷயமாக மத் க்ருதமான ஸ்ம்ருதி கீர்த்தன அஞ்சலி ப்ரப்ருதி ஏகைக விருத்தியே திவ்ய கந்த அநு லேபந
திவ்ய மால்ய அம்பர நிரதிசய தீப்தி யுக்த திவ்ய பூஷணாதி சர்வ போக உபகரணங்களும் ஆயின –
ஒருவனுடைய வ்யாமோஹம் இருக்கும் படியே -என்கிறார் –

————————————–

ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பல மூர்த்தி
ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி
நாகம் ஏறி நடுக்கடலுள் துயின்ற நாராயணனே!உன்
ஆக முற்றும் அகத்து அடக்கி ஆவி அல்லல் மாய்த்ததே.–4-3-3-

அப்ராக்ருத நித்ய சித்த திவ்ய ரூப விசிஷ்டனாய் -ஸ்ரீ வைகுண்ட நிலயனாய்க் கொண்டு ப்ரக்ருதி மஹத் த்ரிவித அஹங்கார
மன ப்ரப்ருதி கரண பஞ்ச பூத சந்த்ர ஸூர்யாதி பதார்த்தங்களும் தத் அந்தரவர்த்தி சேதன ஜாதத்துக்கும் ஸ்ரஷ்டாவாய்-
அவற்றினுடைய ஸ்தித் யர்த்தமாக அந்தர்யாமி தயா வஸ்திதனாய்-ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய ரக்ஷண அர்த்தமாகத்
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளி நாக பாருங்க சாயியாய் இருந்த நாராயணனே
உன் திரு மேனிக்கு அபேக்ஷித்தமான சர்வ போக்யங்களும் நான் உன் திறத்துப் பண்ணும் ஸ்ம்ருதி கீர்த்த நாதி
விருத்திகளேயாகக் கொண்டு இருக்கிற உன்னுடைய மஹா குணத்தை அனுபவித்து என்னுடைய கிலேசமும் தீர்ந்தேன் -என்கிறார்

——————————————————–

மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய் உயிர்
மாய்த்த ஆய மாயனே! வாமனனே! மாதவா!
பூத்தண் மாலை கொண்டு உன்னைப் போதால் வணங்கேனேலும்,நின்
பூத்தண் மாலை நெடு முடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.–4-3-4-

ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவனாய் -ஆஸ்ரித சமீஹித பிரதனாய் ஸ்ரீ யபதியாய் இருந்த உன்னை ப்ராப்த காலங்களிலே
பூத் தண் மாலை கொண்டு வணங்காது இருக்கச் செய்தேயும் -உன்னுடைய பூத் தண் மாலை நெடு முடிக்கு
என்னுடைய ஆத்மாவே புனையும் கண்ணி யாயிற்று -என்கிறார் –

——————————————-

கண்ணி எனது உயிர்காதல் கனகச் சோதி முடி முதலா
எண்ணில் பல்கலன்களும்; ஏலும் ஆடை யும் அஃதே;
நண்ணி மூவுலகும் நவிற்றும் கீர்த்தியும் அஃதே;
கண்ணன் எம்பிரான் எம்மான் கால சக்கரத் தானுக்கே.–4-3-5-

பிரதிகூல நிரசன ஸ்வ பாவனான திருவாழி யுடையனான கண்ணனுக்கு தன் திருவடிகளிலும்
திரு மார்பிலும் திருத் தோளிலும் சாத்தி அருளக் கடவ திருத் துழாய் என்னுடைய ஆத்மா
அசங்க்யேய நாநா வித திவ்ய பூஷணங்களும் ஸ்வ உசித திவ்ய பீதாம்பரமும் சர்வ லோகங்களும் சொல்லி ஏத்தும்
தன்னுடைய கீர்த்தியும் மற்றும் எல்லாம் என் காதலே என்கிறார்

——————————————-

கால சக்கரத்தொடு வெண் சங்கம் கை ஏந்தினாய்!
ஞால முற்றும் உண்டு உமிழ்ந்த நாராயணனே!’ என்றுஎன்று,
ஓல மிட்டு நான் அழைத்தால் ஒன்றும் வாராயாகிலும்,
கோலமாம் என் சென்னிக்கு உன் கமல மன்ன குரை கழலே.–4-3-6-

சர்வஞ்ஞனாய் -சர்வ சக்தியாய் இருந்த உன்னாலும் விஸ்லேஷிக்க ஒண்ணாத ஒரு படி என்னோடே ஸம்ஸ்லேஷித்து அருளினாய் என்கிறார் –
ஆஸ்ரித விரோதி நிரசன ஸ்வ பாவமான சங்க சக்ராதி திவ்ய ஆயுத உபேதனாய் காருண்ய ஸுஹார்த்த ஸுசீல்யாதி கல்யாண
குண விசிஷ்டனாய் இருந்த நீ இப்படி என்னோடு ஸம்ஸ்லேஷியாது ஒழிந்தாலும்
உன்னுடைய சத்தையே எனக்கு சர்வ போக்யமாம் படி என்னைப் பண்ணி அருளினாய் என்னவுமாம் –

————————————-

குரை கழல்கள் நீட்டி மண் கொண்ட கோல வாமனா!
குரை கழல் கை கூப்புவார்கள் கூட நின்ற மாயனே!
விரைகொள் பூவும் நீரும் கொண்டு ஏத்த மாட்டேனேலும் உன்
உரை கொள் சோதித் திருவுருவம் என்னது ஆவி மேலதே.–4-3-7-

பிரணத ஜன பரித்ராண அர்த்தமாக அவதீர்ணனாய் அத்யத்புத திவ்ய சேஷ்டிதனாய்-பக்தி ஏக சமதிகம்யனான உன் திருவடிகளிலே
அதி சீதள புண்ய கந்த புஷ்ப தோயாதி களைக் கொண்டு நான் சில விருத்திகளைப் பண்ணினால் அவை உனக்கு
போக்யமாகை அன்றிக்கே நான் ஒரு விருத்தி பண்ணாது இருக்கச் செய்தேயும்
வாக் மனாஸ் அபரிச்சேதய தேஜோ மய திவ்ய ரூபனான உனக்கு என்னுடைய ஆத்மசத்தையே தாரகமும் போக்யமும் ஆயிற்று -என்கிறார்

——————————-

என்னது ஆவி மேலையாய்! ஏர் கொள் ஏழ் உலகமும்
துன்னி முற்றும் ஆகிநின்ற சோதி ஞான மூர்த்தியாய்!
உன்னது என்னது ஆவியும்; என்னது உன்னது ஆவியும்;
இன்ன வண்ணமே நின்றாய் என்று உரைக்க வல்லனே?–4-3-8-

நியந்தருதயா சர்வ லோக அந்த ப்ரவிஷ்டனாய் அவாப்த ஸமஸ்த காமனாய் இருந்து வைத்து மத் ஏக தாரகனாய் இருந்தவனே
என்னுடைய ஆத்மா நீ இட்ட வழக்காய் உன்னுடைய திவ்யாத்ம ஸ்வரூபமும் நான் இட்ட வழக்காம் படியாக என்னுடனே
கலந்து அருளினாய் என்று தம்மோடு கலந்து அருளின படியைப் பேசி -அது ஒன்றும் போராமையாலே
பின்னையும் இன்னபடி என்னோடே கலந்து அருளினாய் என்று ஒன்றும் சொல்ல நிலம் அல்ல என்கிறார் –

————————————————

உரைக்க வல்லன் அல்லேன்; உன் உலப்பு இல் கீர்த்தி வெள்ளத்தின்
கரைக்கண் என்று செல்வன் நான்? காதல் மையல் ஏறினேன்;
புரைப்பு இலாத பரம்பரனே பொய்யிலாத பரஞ்சுடரே!
இரைத்து நல்ல மேன்மக்கள் ஏத்த, யானும் ஏத்தினேன்.–4-3-9-

நான் உரைக்க வல்லேன் அல்லேன் -வல்ல அம்சத்தைச் சொன்னாலோ என்னில் -என்னோடே நீ கலந்த
கலவியாகிற உன்னுடைய நிரவதிக கீர்த்தி வெள்ளத்தின் கரையின் அருகே தான் செல்ல முடியுமோ
இப்படி அபூமியான கீர்த்தியைச் சொல்லுவான் என் என்னில் உன்னை உள்ள படியே எனக்குக் காட்டித் தந்து பின்னை
அநந்ய ப்ரயோஜனனாய்க் கொண்டு என்னோடு கலந்த கலவியையே நிரவதிக தேஜஸ்ஸாக யுடையவனே-
இந்தக் கலவியைப் பரம பக்தி யுக்தரான அயர்வறும் அமரர்கள் அபி நிவேச அதி சயத்தாலே பித்தேறி ஏத்தினேன் -என்கிறார் –

————————————

யானுமேத்தி ஏழுலகும் முற்றுமேத்தி பின்னையும்
தானுமேத்திலும் தன்னை யேத்த வேத்த வெங்கு எய்தும்
தேனும் பாலும் கன்னலும் அமுதமாகித் தித்திப்ப
யானும் எம்பிரானையே ஏத்தினேன் யானுய்வானே –4-3-10-

ஏத்த வல்லீராய் ஏத்தினீர் ஆனாலோ என்னில் -நானும் சர்வ லோக வர்த்திகளான சர்வாத்மாக்களும்
ஸ்வ பாவிக சார்வஞ்ஞாதி குண விசிஷ்டனான எம்பெருமான் தானும் கூட நின்று சர்வகாலமும்
ஏத்தினால் தான் அவனுடைய நிரவதிகமான கீர்த்தி சமுத்திரத்தின் அருகே செல்ல முடியுமோ
இப்படி எம்பெருமான் தன்னாலும் கூட ஏத்த முடியாத அவனுடைய கீர்த்தியை நீர் ஏத்துவான் என் என்னில்
இனிதாய் இருந்தவாறே ஏத்தினேன் -இனிது என்றால் முடியாதது ஓன்று தொடங்குவார் உளரோ என்னில்
நான் ஏத்தி அல்லது தரிக்க மாட்டாமையாலே ஏத்தினேன் -என்கிறார் –

——————————————-

உய்வு உபாயம் மற்று இன்மை தேறி, கண்ணன் ஒண் கழல் மேல்
செய்ய தாமரைப் பழனம் தென்னன் குருகூர்ச் சடகோபன்
பொய்யில் பாடல் ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
வையம் மன்னி வீற்றிருந்து விண்ணும் ஆள்வர் மண்ணூடே.–4-3-11-

பொய்யில் பாடல் என்றது இப்படி எம்பெருமான் நிரவாதிகமான அபி நிவேசத்தோடே கூட
என்னோடு கலந்து பரிமாறின பரிமாற்றம் இத்தனையும் மெய் -என்கிறார் –

—————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

ஸ்ரீ பூமி நீளா தேவிமார் மஹிமை -ஸ்ரீ உ . வே .வேளுக்குடி ஸ்வாமிகள் –

March 16, 2018

ஸ்ரீ – ஸ்வரூப நிரூபக தர்மம் -அவனுக்கு -மணம்-புஷ்ப தன்மை / போலே/
இடை வெளி இல்லாமல் –
அவ்யாப்தி அதி வியாப்தி -இரண்டும் இல்லாத ஸ்வரூப நிரூபக தர்மம் –
வட தள–ஆலிலை துயின்ற -ஸ்ரீ வில்லி புத்தூர் –முக்த சிஸூ -அன்ன வசம் செய்யும் அம்மான் -மார்க்கண்டேயர் —
கண் ஜாடை -சிறு விறல் -ஸ்ரீ வத்ஸ மறு பீடம் -ப்ரஹ்மணா அஹந்தா-
மாணிக்கம் ஒளி -அப்ருதக் சித்தம் –மணம் ஒளி போலே -அசித் இல்லை ஜீவ கோடியில்-குணம் தர்மம் போலே விட்டுபி பிரியாமல் –
திருவுக்கும் திருவாகிய செல்வன் -தெய்வத்துக்கு அரசு -க ஸ்ரீ ஸ்ரீ யாக -கஹா புருஷோத்தமன் -பரதேவதா பாரமார்த்திக அதிகாரம் –
மீனைத் தொடும் இடம் எல்லாம் தண்ணீர் போலே –
அகில புவன ஜென்ம ஸ்தேம பங்காதி லீலே-ப்ரஹ்மணீ –ஸ்ரீ நிவாஸே
அங்கீ காரம் ஆலோக்யம் –இவள் கடாக்ஷம் -புருவ நெரிப்பே பிரமாணம் -லஷ்யதே –பார்வைக்கு லஷ்யம் -லஷ்மீ –
அருளுக்கும் சிந்தனைக்கும் இலக்கு –
மாதஸ் -கமலா –ஈஸானா–பிரபத்தி -பெரிய பிராட்டி முன்னிட்டுக் கொண்டு தான் ஸ்தோத்ரம் மங்களம் –
ஸ்ரீ தேவி பிரதம நாமம் -லோக ஸுந்தரீ–12-திரு நாமம் –
உயிர் காப்பான் –உயிர்கள் காப்பான் –சாலப் பல நாள் உயிர்கள் காப்பான் -சாலப் பல நாள் உயிர்கள் உகந்து காப்பான் –
சாலப் பல நாள் உயிர்கள் உகந்து காப்பான் -கோலத் திரு மா மகளுடன்-
அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் நிற்கும் அம்மான் –அநந்யார்ஹம் -அநந்ய சரண்யத்வம் -அநந்ய போக்யத்வம்
பனி மலர் பாவைக்கு பித்தன் -சுவையன் திருவின் மணாளன் – ஸ்ரீ பார்ஸ்வன் -சி பாரிசு -புருஷகாரம் –
ரதி -மதி -சரஸ்வதி- ஸம்ருத்தி- த்ருதி அனைவரும் அஹம் அஹம் இக —
லோக நாதன் -மாதவன் -பக்த வத்சலன் / மா மாயன் மாதவன் வைகுந்தன் -இவள் சம்பந்தம் அடியாகவே அனைத்தும் –
அமுதில் வரும் பெண்ணமுது கொண்ட பெம்மான் —செழும் கடல் அமுதினில் பிறந்த அவளும் நின் ஆகத்து
இருந்தது அறிந்தும் ஆசை விடாலாள்-சேர்ப்பிக்க அவள் இருக்க நிச்சய புத்தி உண்டாகும் –
நாச்சியார் விழி விழிக்க ஒண்ணாதே -சஷூஸ் சந்த்ர ஸூர்யர்-உமக்கு -கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நித்யம் அஞ்ஞான நிக்ரஹ-அஸி தேக்ஷிணை அன்றோ இவளது –
தூதோஹம் ராமஸ்ய என்றவர் தாஸோஹம் கோசலேந்த்ரஸ்ய-என்று சொல்லும் படி அன்றோ இவள் சம்பந்தம்

—————————————–

ஸ்ரீ ஹ்ருஷ்யதே லஷ்மீ ச பத்ந்யவ் –முதலில் சொன்னதே பூமி பிராட்டி தானே –
ஓம் நாராயணாய –வாஸூ தேவாய –விஷ்ணு -மூவரில் முதல் போலே
பொறுமைக்கு -பிருத்வி ராமனுக்கு -வால்மீகி
ஆண்டாள் -பெருமாளின் பெண் அவதாரமே இல்லையே -துஷ்க்ருதம் க்ருதவான் ராமா-விட்டுப் பிரிந்த பிரபு /
ஆழ்வார்கள் ஆச்சார்யர்கள் கோஷ்ட்டியில்
ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையால் –
ஜென்ம சித்த ஸ்த்ரீத்வம்
லோக நாத -மாதவ -பக்த வத்சலா -ஸ்ரீ நடுவில் /பரத்வ ஸுலப்யம் / மா மாயன் மாதவன் வைகுந்தன் /
பத்துடை அடியவர்க்கு எளியவன் -பிறர்களுக்கு அரிய வித்தகன் மலர் மகள் விரும்பும் அரும் பெறல் அடிகள் /
தாமரைக் கை அவனது -செந்தாமரைக் கை -இவளது –
அனைத்துக்கும் ஆதாரமே ஸ்ரீ பூமி பிராட்டி -திவ்ய தேசங்கள் -விபவ அவதாரங்கள் —
ஆதரவு ஸ்ரீ தேவி -ஆதாரம் பூமிப் பிராட்டி
ஸ்ரேயசாம் -பிரேயஸ் -இரண்டும் -உண்டே -ஸ்ரீ தேவி ஸ்ரேயஸ் சேர்க்க -விஸ்வ தாரிணீம் மஹிஷீம் –
பூமிப் பிராட்டி -விஸ்வம் -அவனையே குறிக்கும் -விபவ அர்ச்சை தரிப்பது பிரத்யக்ஷம்
கருணை பொழிய தடைகளை நீக்கும் பூமிப் பிராட்டி -தேசிகன்

ஸ்ரீ பூமி ஸூக்தம் –

பூமிர் பூம் நாத் யவ்ர் வரிணா அந்தரிக்ஷம் மஹீத்வா
உபஸ்தே தே தே வ்யதிதே அக்நி மந் நாத மந் நாத் யாய ததே

ஆயங்கவ் பிரதிஸ் நிரக்மீத சநத் மாதரம் புந பித்தராஞ்ச ப்ரயன் ஸூவ

த்ரிம் சத் தாம விராஜதி வாக் பதங்காய ஸீ ஸ்ரீ யே ப்ரத்யஸ்ய வஹத் யுபி

அஸ்ய ப்ராணாத பாநத் யந்தஸ் சாரதி ரோசநா
வ்யக்யந் மஹிஷஸ் ஸூ வ

யத் த்வா க்ருத்த பரோவப மந்யுநா யத வர்த்யா
ஸூ கல்ப மக் நே தத்தவ புநஸ்த் வோத் தீபயாமசி

யத்தே மந்யுபரோப் தஸ்ய ப்ருதி வீமநு தத்வஸே
ஆதித்யா விசவே தத்தே வா வசவஸ்ச சமாபரந்

மேதி நீ தேவீ வஸூந்தரா ஸ்யாத் வஸூதா தேவீ வாஸவீ
ப்ரஹ்ம வர்ச்சஸ பித்ரூணாம் ஸ்ரோத்ரம் சஷூர் மந

தேவீ ஹிரண்ய கர்ப்பிணீ தேவீ ப்ரஸூவரீ
சத நே சத்யாய நே சீத

சமுத்ராவதீ ஸாவித்ரீ அநோதே வீமஹ் யங்கீ
மஹோ தரணீ மஹோ வ்யதிஷ்டா

ஸ்ருங்கே ஸ்ருங்கே யஜ்ஜே யஜ்ஜே விபீஷணீ
இந்தர பத்நீ வ்யாபிநீ ஸூரா சரிரிஹ

வாயுமதீ ஜல சயிநீ ஸ்ரீ யந்தா ராஜா சத்யந்தோ பரி மேதி நீ
சோபரி தத் தங்காய

விஷ்ணு பத்னீம் மஹீம் தேவீம் மாதவீம் மாதவ ப்ரியாம்
லஷ்மீ ப்ரிய சகீம் தேவீம் நமாம் யஸ்யுத வல்ல பாம்

ஓம் தநுர்த் தராயை வித்மஹே ஸர்வ சித்தயைச தீ மஹீ
தந்நோ தரா ப்ரசோதயாத்

ஸ்ருண் வந்தி ஸ்ரோணாம் அம்ருதஸ்ய கோபம்
புண்யாம் அஸ்யாம் உபஸ்ப்ருனோமி வாசம்
மஹீம் தேவீம் விஷ்ணு பத்நீ மஜூர்யாம்
ப்ரதீஸீமே நாம் ஹவிஷா யஜாம

த்ரோதா விஷ்ணு ருருகாயோ விசக்ரமே
மஹீம் தெய்வம் ப்ருதி வீ மந்தரிஷம்
தச்ச்ரோணைதி ஸ்ரவ இச்சமாநா
புண்யம் ஸ்லோகம் யஜமாநாய க்ருண்வதீ

————————–

பூமி -மிக பெரியவள் –அனைத்தையும் அடக்கி -விஸ்வம் பர -அவனையும் தரிக்கும் ஸ்ரீ பாதுகை -அத்தையும் தரிக்கும் –
பூம் நா பரந்து விரிந்து சப்த த்வீபங்கள் -ஜம்பூத் த்வீபம் நாம் -/மேருவின் தக்ஷிண திக்கில் நாம் உள்ளோம்
லக்ஷம் யோஜனை நடுவில் உள்ள ஜம்பூத் த்வீபம் / கடல் அதே அளவு -அடுத்த த்வீபம் -இரண்டு லக்ஷம் -இப்படியே -பூ லோகம்
மேலே ஆறு லோகங்கள் -கீழே ஏழு லோகங்கள் –/அண்டகடாகங்கள் -ஒவ் ஒரு அண்டத்துக்கும் ஒரு நான்முகன் -/
யவ்ர்வரிணா– மேன்மை -ஆகாசம் /
கர்ப்பத்துக்குள் உதைக்கும் குழந்தை -தாய் மகிழ்வது போலே நாம் பண்ணும் அபசாரங்களை கொள்கிறாள் –
தாங்கும் ஆதாரம் –
தேசோயம் ஸர்வ காம புக் –ஷேத்ரங்களே அபேக்ஷிதங்களைக் கொடுக்கும் -/
ஸ்ரீ தேவி சாஸ்த்ர காம்யம் -இவளை ஸ்பர்சிக்கலாமே -தாய் நாடு தாய் மொழி –கர்ம பூமி -சாதனம் செய்து அவனை அடைய –

யவ்ர்வரிணா–ஆகாசமாகவே -ஸ்வர்க்கமும் சேர்த்து
அந்தரிக்ஷம் மஹீத்வா -அந்தரிக்ஷமும் பூமி பிராட்டியே
உபஸ்தே தே தே – வ்யதிதே அக்நி மந் நாத மந் நாத் யாயததே -ஜீவாத்மா சோறு -அருகில் சேர்ப்பது -அவனை தருவாள்
ஆயங்கவ் பிரதிஸ் நிரக்மீத -ஸூர்ய மண்டல மத்திய வர்த்தீ -நாராயணன் –
செய்யாதோர் ஞாயிற்றை காட்டி ஸ்ரீ தரன் மூர்த்தி ஈது என்னும் -அந்தர்யாமியாக வரிக்க
சநத் மாதரம் புந பித்தராஞ்ச ப்ரயன் ஸூவ -இவளைப் பற்ற வேண்டும் -பிராட்டி பரிகரம் என்றே உகப்பான் அன்றோ –

மேதி நீ தேவீ வஸூந்தரா ஸ்யாத் வஸூதா தேவீ வாஸவீ
திரு நாமங்கள் வரிசையாக -அருளிச் செய்கிறார் –
மேதிநீ -நம் மேல் ஆசை -மேதஸ்-மதம் மது கைடபர் இருந்ததால் -குழந்தை அழுக்கை தான் தாங்கி
பாசி தூர்த்துக் கிடந்த பார் மகள் –
தேவீ –காந்தி -பிரகாசம் -அழுக்கு கீழே சொல்லி -அதனாலே ஓளி –விடுபவன்
ஹிரண்ய வர்ணாம் -பெருமையால்
ராமன் குணங்களால் பும்ஸாம் சித்த அபஹாரி –கண்ணன் தீமையால் தோஷங்களால் ஜெயித்தவன் -கண்டவர் மனம் வழங்கும் –
வஸூந்தரா -தங்கள் வெள்ளி ரத்னம் அனைத்தும் கொடுப்பவள் -வஸூ செல்வம்
வஸூ தா -வாஸவீ–போஷித்து வளர்க்கிறாள் –அன்னம் இத்யாதி
தரணீ -தரிக்கிற படியால்
பிருத்வி –பிருத் மஹா ராஜா -காலம் -பஞ்சம் வர -தநுஸ் கொண்டு துரத்த —
என்னை வைத்துக் கொண்டே வாழ -பசு மாட்டு ஸ்தானம் -இடைப்பிள்ளையாக பிறந்து கரந்து கொள்
கடைந்து அனைத்தும் வாங்க பட்டதால் பிருத்வீ
அவனி –சர்வம் சகேத் சகித்து கொள்வதால்

ஸ்ரீ விஷ்ணு சித்த கல்ப வல்லி–சாஷாத் ஷமா -கருணையில் ஸ்ரீ தேவியை ஒத்தவள் -இரண்டையும்
ஸ்ரீ வராஹ பெருமை -பட்டர் -/ மீன் சமுத்திரத்தில் அவரே / கூர்மம் மந்த்ரம் அழுத்த / நரசிம்மம் கழுத்துக்கு மேல் / வாமநன் வஞ்சனை
கண்ணன் ஏலாப் பொய்கள் உரைப்பான் /சம்சார பிரளயம் எடுக்க ஸ்ரீ வராஹம் –
சத ரூபை என்பவள் -ஸ்வயம்பு மனு கல்யாணம் -ஸ்ரீ வராஹ அவதாரம் -சப்புடா பத்ர லோசனன் -அப்பொழுதும் தாமரைக் கண்ணன்
ஆமையான கேசனே -கேசமும் உண்டே -ப்ரஹ்ம வர்ச்சஸ பித்ரூணாம் ஸ்ரோத்ரம்
ஈனச் சொல் ஆயினுமாக -பிரியம் ஹிதம் அருளும் மாதா பிதா -ஆழ்வார் -நைச்ய பாவம்–கிடந்த பிரான் –
இரு கற்பகம் சேர் வானத்தவர்க்கும் -தன்னையே கொடுக்காதே -அதுவும் –
ஞானப் பிரானை அல்லால் இல்லது இல்லை – -நான் கண்ட நல்லதுவே –
அந்த ஞானப் பிரான் -பூமி பிராட்டியை இடம் வைத்து நமக்கு இவள் திருவடிகளைக் காட்டி அருளுகிறார் –
தானே ஆசன பீடமாக இருந்து காட்டிக் கொடுத்து அருளுகிறார் –
அவன் இடம் உபதேசம் பெற்று நம்மிடம் கொடுத்து அருளினாள் ஆண்டாள் –
கீர்த்தனம் -பிரபதனம் -ஸ்வஸ்மை அர்ப்பணம் -முக்கரணங்கள் -வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்துக் கை தொழுது
ஸூ கரம் சொன்ன ஸூ கர உபாயம் –
அப்பொழுது தானே இவள் நடுக்கம் போனது –
அப்பொழுதைக்கு இப்பொழுதே சொல்லி வைத்தேன் -அஹம் ஸ்மராமி –நயாமி மத் பக்தம்-
திரு மோகூர் ஆத்தன் இவன் வார்த்தையை நடத்தி காட்டி அருளுகிறார் -ஆப்தன் -காள மேகப் பெருமாள் –
சரண்ய முகுந்தத்வம் ஸுரி பெருமாள் –
கிடந்து இருந்து நின்று அளந்து இடந்து உண்டு உமிழ்ந்து பார் என்னும் மடந்தையை -மால் செய்யும் –
ஜீவனாம்சம் போலே மார்பில் ஏக தேசம் கொடுத்து –இவள் இடம் -மால் –
திரு மால் – திருவின் இடம் மால் -திரு இடம் மால் -வேறே இடத்தில் மால் -என்றுமாம்
விராடன் -அரவாகி சுமத்தியால் –எயிற்றில் ஏந்திதியால்–ஒரு வாயில் ஒளித்தியால்-ஓர் அடியால் அளத்தியால்-
மணி மார்பில் வைகுவாள் இது அறிந்தால் சீறாளோ-சா பத்னி –நிழல் போலே –
லஷ்மீர் -ராஜ ஹம்சம் -பஷி-ஆனந்த நடனம் -சாயா இவ -இவர்கள் –
நிழல் தானே நிழல் கொடுக்க முடியும் -இவள் மூலமே நமக்கு –சேர்ந்து கைங்கர்யம் –
திரு மகளும் மண் மகளும் ஆய் மகளும் சேர்ந்தால் திரு மகளுக்கே/–வருந்தி அழ வில்லை –
கடல் அசையும் நானே ஸ்திரம் -கால மயக்கம் துறை -பட்டர் நிர்வாகம்
மழை காலம் வருவேன் சொன்னவன் வர வில்லை -தோழி சமாதானம் -மழை இல்லை -ஸ்ரீ தேவி -கூட போனதால் பூமி பிராட்டி அழுகை –
வருத்தம் -இல்லை -பொய்யான விஷயம் சொல்லி சமாதானம் -/
சஜாதீயை பூமி தேவதை –ஸ்ரீ தேவி விஜாதீயை -/ விஷ்ணு -வைஷ்ணவி -ஸ்ரீ வைஷ்ணவி ஆக முடியாதே அவள் –
குணம் அவள் -மணம் இவள் / செல்வம் அவள் -செல்வம் விளையும் ஸ்தானம் இவள் /
அழகு கொண்டவள் / புகழ் கொண்டவள் / ஆதரவு -ஆதாரம் /
அஹந்தை-கோஷிப்பாள் -போஷிப்பவள் இவள் /

சமுத்ராவதீ ஸாவித்ரீ -ஆடை சமுத்திரம் நெற்றி திலகம் ஸூரியன்- சுடர் சுட்டி சீரார் –
மலைகள் திரு முலைத் தடங்கள்/ -புற்று -காது -வால்மீகி -24000-ஸ்லோகங்கள் -பூமி பிராட்டியே சாஷாத் திருப்பாவை –
கோதாவுக்காகவே தக்ஷிணா -ஸ்ரீ அரங்கன் -தேசிகன் -தந்தை சொல்ல மாட்டார்களே -அதனால் விபீஷணனுக்காக
கூந்தல் -மழை –த்ரி வேணி சங்கம் -/
படி எடுத்து காட்டும் படி அன்று அவன் படிவம் –தோற்றிற்று குரங்கை கேட்க -ஆண்டாள் -சங்கரய்யா உன் செல்வம் சால அழகியதே –
த்ரிஜடை கனவால் அவள் -ஆயனுக்காக தான் கண்டா கனவு / சங்கொலியும் சாரங்க வில் நாண் ஒலியும் சேர்த்து வேண்டும் இவளுக்கு –
தெளிந்த சிந்தைக்கு போக்ய பாக துவரை–பூமியில் நின்றும் இருந்தும் கிடந்தும் -என் நெஞ்சுள்ளே –
அரங்கன் இடமும்-ஸேவ்யமான அம்ருதம் நம் பெருமாள் –
தொட்டிலுலும் -ராமன் கிருஷ்ணன் -கிடந்தவாறும் -நின்றவாறும் -இருந்தவாறும் –

ஓம் தநுர்த் தராயை வித்மஹே ஸர்வ சித்தயைச தீ மஹீ
தந்நோ தரா ப்ரசோதயாத் –தனுர் திருக்கையில் வைத்து நம் -ஞானம் -தூண்டி விடுகிறாள்
குற்றம் இல்லையே –அவள் பொறுக்க சொல்ல -இவள் யாருமே குற்றம் செய்ய வில்லை -இருவர் இருக்க நமக்கு என் குறை –

———————————–

ஸ்ரீ தேவி -சீதா ருக்மிணி –குற்றங்களை பொறுப்பிக்கும் -குற்றம் செய்யாதவர் யார் -திருவடி இடம் –
குற்றம் பார்க்காமல் ஸ்ரீ பூமி ஆண்டாள் – / குற்றமே அறியாமல் -ஸ்ரீ நீளா தேவி -நப்பின்னை –
திரு வெள்ளறை –ஸ்ரீ வில்லிபுத்தூர் -ஸ்ரீ நறையூர் -/ பஞ்ச சம்ஸ்காரம் செய்விக்கும் திருக் கோலம் -/
ஹரி வம்சம் நப்பின்னை பிராட்டி சொல்லும்
நீளா -வரணத்தாலே –திரு நாமம் -சரக சம்ஹிதை -நீளா கொடி -மருத்துவ குணம் -சம்சார விஷ முறிவுக்கு
செல்வம் ஸ்ரீ தேவி -செல்வம் விளையும் பூமி -பூ தேவி -சேர்த்து அனுபவிக்கும் நீளா தேவி –
ஆனந்தம் கொடுக்கும்
ஹிரண்ய வர்ணாம் பொன் மங்கை -மண் மங்கை -ஆனந்த மங்கை இவள் -/
ஸ்ரீ தேவி சீதை ருக்மிணி ராஜ குலம் அவதாரம் -ஆயர் குலத்தில் தோன்றும் அணி விளக்கு -ஏற்ற நப்பின்னை –
ஜனக குல ஸூ ந்தரி –வேயர் குல பட்டர் பிரான் கோதை -ஆயர் குலம் அநு காரம் –பெரியாழ்வாரும் ஆண்டாளும்
உறி அடி உத்சவம் -அருள் பொழியும் குலத்தில் சேர்ந்து பட்டர் அனுபவம்
கும்பன் திரு மகள் -யசோதை கூட பிறந்தவர் –
தோளி சேர் பின்னை பொருட்டா –மிதிலா தேசம் இருந்த கும்பன் -கும்பகன் –தர்மதா பார்யை–தர்ம தேவர் பேர்
ஆண் -ஸ்ரீ தாமா -/ பெண் -பின்னை /
ரூப ஓவ்த்தார்ய குண சம்பன்னாம் -குல ஆயர் கொழுந்து -ஆயர் மங்கை வேய தோள் விரும்பி அவன் அவதாரம்
வைஷ்ணவி -ஸ்ரீ தேவி / ஸ்ரீ வைஷ்ணவி பூமா தேவி / இருவரையும் சேர்த்து -ததீயர் பர்யந்தம்
பொற்றாமரை அடி-
ஸ்ரீ தேவி மார்பை பிரார்த்தித்தாள் கூராளும் கூட்டு அன்றோ இது -இவளோ திருவடி
இத்திரு இருவரையும் பற்றும் / அறுகால சிறு வண்டே தொழுதேன் உன்னை –
வீசும் சிறகால் பறக்கும் –ஆரும் – திருவடிகள் -ஆச்சார்யர் பத்னி புத்திரர் -ஸ்ரீ வைஷ்ணவர் திருவடி –
அவன் அடியார் அடியோடும் கூடும் இது அல்லால் -ஸ்ரீ வைஷ்ணவி திருவடி அடைந்த முதல் பிரபாவம் –
அல்லிக் கமலக் கண்ணனாய் இருப்பான் -அப்பொழுது அலர்ந்த செந்தாமரையை வென்ற திருக் கண்கள் –
மத் பக்த பக்தேஷு–கரிய கோல திரு உருக் காண்பான் நான்
அருள் பெறுவார் –அடியார் தம் அடியேனுக்கு அருள் தருவான் அமைகின்றான் அது நம் விதி வகையே –
பெரு நில மங்கை மன்னர் மலர் மங்கை நாதன் -புல மங்கை கேள்வன் -புலன் இந்திரியங்களுக்கு விருந்து -வளர்த்து அருளுபவள்
கண்ணன் இந்திரியங்களுக்கும் -யத் போக பாடலை த்ருவம் -இவள் அனுபவத்தால் கண் சுழல –
பக்த தோஷ தர்சனம் காண முடியாமல் -தயா சதகம் –
இவளால் மறக்கப்பட்ட அவன் கண் கடாக்ஷம் நம்மை ரக்ஷிக்கட்டும் -குற்றம் என்பதே அறியாதவள் –
கங்குலும் பகலும் கண் துயில் அறியாள் போலே –
என் திருமகள் சேர் மார்பனே என்னும் என்னுடைய ஆவியே என்னும் -நாச்சியார் பரிகரம் -நேரடித் தொடர்பு இல்லை –
நின் திரு எயிற்றால் இடந்து நீ கொண்ட நில மகள் கேள்வனே என்னும் –
அன்று உரு ஏழும் தழுவி நீ கொண்ட ஆய் மகள் அன்பனே என்னும்
-14-கொம்பில் விழுந்து வஞ்சிக் கொம்பைப் பிடித்தான் -எதில் தலையில் குதித்தாலும் தழுவினது போலவே அவன் திரு உள்ளம்
சூட்டு நன் மாலைகள் -ஆங்கு ஓர் மாயையினால் -ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து–
கோட்டிடை -ஆடின கூத்து -அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –
தோளி சேர் பின்னை பொருட்டு -கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் இருத்தம் இறுத்தாய் –
நப்பின்னை காணில் சிரிக்கும் –
14 -கொம்புகள் -ஜீவாத்மாவை கொள்ளுவதற்கு –திரு விருத்தம் அவதாரிகையில் -பாப புண்ய ரூப கர்மாக்கள் இரண்டு கொம்புகள் –
அஸ்வ இவ ரோமானி போலே தொலைத்து -/ஏழு நிலைகளில் -கர்ப்ப ஜென்ம பால்ய யவ்வன ஜரா-மூப்பு – மரண -நரகம் –
கருவரங்கத்துள் கிடந்தது கை தொழுது ஸ்ரீ மான் உண்டே / ஜாயமான மது ஸூதன கடாக்ஷம் /
விஷய ஸூகம் -யவ்வனம் -நதி வேகவத்-சீக்கரம் போகும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் -பேதை பாலகன் அதாகும் —
புள் கவ்வக் கிடக்கின்றார்களே -/ செம்பினால் இயன்ற பாவையை பாவி நீ தழுவு -என்று மொழிவதற்கு அஞ்சி -/
அஜாமளன் வ்ருத்தாந்தம் –
லஷ்மீ லலித க்ருஹம் -திரு மார்பு -/கோயில் கட்டணம் / விளக்கு- மாலை தோரணம் கோலம் -கோயில் சாந்து -கரசல் பிரசாதம் –
தாரார் தடம் தோள்கள் உள்ளளவும் கை நீட்டி-பானை விளிம்பில் -கோயில் சாந்து வைத்தே அடையாளம் –
மாலதி தாம கல்பம் –புஷ்பம் -மேல் கட்டி விதானம் –
கௌஸ்துபம் -ஐந்து -அசித் பத்த முக்த நித்ய ஈஸ்வரன் -ஸ்ரீ வத்சம் -/
கோலம் -எருதுகள் கொம்பு திரு மார்பில் பட்டு -அது போலே குதித்து -உல்லேக சித்திரம் / தட வரை அகலகம் உடையவர் —
ஆண்டாளாலும் எழுப்பப்பட்டு -ஏற்றம் நப்பின்னைக்கே –
-18-/-19-/-20-நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
நந்த கோபன் மருமகள் -என்றே ஏற்றமாக கொள்ளுபவள் -சக்கரவர்த்தி திருமகன் போலே-தசரதன் மருமகள் என்றே சீதையும் போலே /
கண்ணனுக்கு எல்லாம் இரண்டு -வார்த்தை உள்பட -அவளுக்கும் மெய்யன் அல்ல –
மதுரா திருவாய்ப்பாடி / தேவகி வசுதேவர் யசோதை நந்த கோபர் / ருக்மிணி நப்பின்னை–ஸத்ருசி /
கந்தம் கமழும் குழலீ -ஸர்வ கந்தனுக்கு கந்தம் ஊட்டும்-கந்தங்கள் பிறப்பிடமே இது தான்
புல மங்கை கேள்வன் -உந்து -பாசுரம் /கடை திறவாய் -கண்ணுக்கு விருந்து
கந்தம் கமழும் மூக்குக்கு / வளை ஒலிப்ப -காதுக்கு விருந்து / பந்தார் விரலி -ஸ்பர்சம் /பேர் பாட -நாக்குக்கு விருந்து /
மைத்துனன் பேர் பாட –தோற்றத்துக்கு -பரிஹாஸம்-இங்கு -/ மச்சி –வார்த்தை போலே கணவன் -இடையர் சம்ப்ரதாயம்
சீரார் வளை ஒலிப்ப -சங்கு தங்கு முன்கை நங்காய்
யாமி -ந யாமி -பரம ஸந்தோஷம்/ சீதை -பூமி-ஸ்ரீ வராஹம் எடுக்க வேண்டும் படி போலே இல்லையே நப்பின்னைக்கு –
ஸ்ரீ வைகுண்டம் -ஸ்ரீ பூமி நீளா/-இருவர் திருப் பாற் கடல் / ஸ்ரீ ராமர்-ஸ்ரீ சீதை /ஸ்ரீ வராஹம் -ஸ்ரீ பூமி பிராட்டி /
ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ நப்பின்னை –
பார்யை — பொறுமை செல்வம் கீர்த்தி -மூவரும் தசரதர் வால்மீகி மூன்று த்ருஷ்டாந்தம் –

ஸ்ரீ நீளா ஸூக்தம்

நீளம் தேவீம் சரணம் அஹம் ப்ரபத்யே க்ருணாஹி

க்ருதவதீ ஸவிதராதி பத்யை
பயஸ்வதீ ரந்திராசா நோ அஸ்து
த்ருவா திசாம் விஷ்ணு பத்ந்யகோரா
ஸ்யேசாநா ஸஹசோ யா மநோதா

ப்ருஹஸ் பதிர் மாதரிஸ் வோதா வாயுஸ்
சந்து வாநா வாதா அபி நோ க்ருணந்து
விஷ்டம் போதிவோ தருண ப்ருதிவ்யா
அஸ்யே சாநா ஜகதோ விஷ்ணு பத்நீ

மஹா தேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி தந்நோ நீளா ப்ரசோதயாத் –

க்ருதவதீ –புருஷகாரம்
ஸவிதராதி பத்யை -நெருக்கம் போகும் தலைமை இவளுக்கே
பயஸ்வதீ -நெய் பால் அனைத்தும் அளிப்பவள்
அந்திராசா நோ அஸ்து -ஸர்வ அபீஷ்டங்களையும் அளிப்பவள்
த்ருவா திசாம் -வழி -நிலை பெற்ற திசை காட்டி அருளுபவள்
விஷ்ணு பத்ந்யகோரா -கோரா பார்வை இல்லை -ஸ்ரீ விஷ்ணு பத்னீ
ப்ருஹஸ் பதிர் மாதரிஸ் வோதா வாயுஸ் –ப்ருஹஸ்பதியும் வாயுவும் -அடங்கி வழிபடுபவர் –

————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ உ . வே .வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி –4–2-

March 16, 2018

இரண்டாம் திருவாய் மொழியிலே
கீழ் -இதர புருஷார்த்தங்களுடைய அபகர்ஷ உபதேச பூர்வகமாக ஈஸ்வரனுடைய பரம ப்ராப்யத்வத்தை உபதேசிக்கையாலே
ஆத்மாவினுடைய அநந்ய போக்யதையை அனுசந்தித்து அவ்வழியாலே பஹு வித சஹஜ போக்ய ஆகார யுக்தனான
சர்வேஸ்வரனுடைய விப்ரக்ருஷ்ட அபதானங்களில் போக அபி நிவேச யுக்தராய்
அவனுடைய வடதள ஸாயித்தவத்தையும்
கோபிகா லீலா சங்கித்வத்தையும்
த்ரை விக்ரம பிரகாரத்தையும்
பரத்வ வைபவத்தையும்
சப்த ருஷப நிரசனத்தையும்
ஸ்ரீ வராஹ ப்ராதுர் பாவத்தையும்
அம்ருத மதன வ்ருத்தாந்தத்தையும்
லங்கா நிரசனத்தையும்
அசாதாரண சிஹ்னங்களையும்
ஆபரண சோபையையும்
அனுசந்தித்து -ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரன் திருவடிகளிலே போக்யதா ஸூ சகமான திருத் துழாய் விஷயமாகத்
தமக்குப் பிறந்த ஆதர விசேஷத்தைப் பரிவார் பார்ஸ்வஸ்தர்க்குச் சொல்லுகிற பாசுரத்தை விஸ்லிஸ்டையான நாயகியினுடைய
ஆர்த்தி அதிசயம் கண்டா நாள் தாயாரானவள் வினவினார்க்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

———————————–

முதல் பாட்டில் -வடதள சாயிதிருவடிகளிலே திருத் துழாயைப் பெற வேணும் என்று ப்ரமியா நின்றாள் என்கிறாள்

பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, பரிவு இன்றி
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்
தாளிணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
மாலுமால் வல் வினையேன் மட வல்லியே.–4-2-1-

பாலன் ஆய், ஏழ் உலகு உண்டு, –அதி பால்யமான வடிவை யுடையனாய் ஸமஸ்த லோகங்களையும் அமுது செய்து -அத்தால்
பரிவு இன்றி-ஒரு மிறுக்கு இன்றியே
ஆலிலை அன்ன வசம் செயும் அண்ணலார்-ஆலந்தளிர் மேலே உண்டதும் ஈடாகக் கிடைக்கும் ஸ்வாமி யானவருடைய
தாளிணை மேல் அணி -திருவடிகள் இரண்டின் மேலே -இவ்வபதானத்துக்குத் தோற்று அன்புடைய ஸூரி கள்-சாத்தின
தண் அம் துழாய் என்றே-குளிர்ந்த செவ்வியை யுடைய திருத் துழாயைப் பெற வேணும் என்றே
மாலுமால் -அதீத காலத்தில் அது இப்போது கிட்டாது என்று அறியாதே ப்ரமியா நின்றாள்
வல் வினையேன் -இக்கலக்கம் காண்கைக்கு அடியான பாபத்தை யுடையளான என்னுடைய
மட வல்லியே-பற்றிற்று விடாத துவட்சியை யுடையளாய் -உபக்ன அபேக்ஷமான கொடி போலே இருக்கிற இவள் –
அகடிதங்களை கடிப்பிக்கும் சர்வ சக்திக்குச் செய்ய ஒண்ணாதது இல்லை என்று இருக்கை-
காலிணை மேல் அணி தண்ணம் துழாய் -என்று பாடம் சொல்வாரும் உளர் –

———————————

அநந்தரம் -திருக் குரவை கோத்த ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளிலே திருத் துழாயை எப்போதும் பிதற்றிடா நின்றாள் -என்கிறாள் –

வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்
நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–4-2-2-

வல்லி சேர் நுண்ணிடை ஆய்ச்சியர் தம்மொடும்–வல்லியோடு ஒத்த நுண்ணிய இடையையுடைய ஆய்ச்சியர்
தங்களோடு ஒரு கோவையாக -அவர்கள் வரம்பு அழியும்படி
கொல்லைமை செய்து குரவை பிணைந்தவர்-அமர்யாதமான வியாபாரத்தைப் பண்ணி குரவையைக் கோத்தவருடைய
நல்லடி மேல் அணி நாறு துழாய் என்றே-ந்ருத்தத்துக்கு ஈடாக மிதிக்கிற அழகிய திருவடிகளிலே அணியப் பட்ட
பரிமள உத்தரமான திருத் துழாய் என்றே
சொல்லுமால் சூழ்வினை யாட்டியேன் பாவையே.–சொல்லா நின்றாள் -இவளை இப்படிக் காணும்படி தப்பாமல்
சூழ்ந்த பாபத்தையுடைய என் பெண் பிள்ளையானவள் –

—————————————–

அநந்தரம் சர்வ லோகமும் ஸ்துதிக்கும் படியான த்ரிவிக்ரமன் திருவடிகளிலே
திருத் துழாயைச் சொல்லி அழையா நின்றாள் என்கிறாள் –

பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே
கூவுமால் கோள்வினை யாட்டியேன் கோதையே.–4-2-3-

பாவியல் வேத நன் மாலை பல கொண்டு,–சந்தஸிஸிலே வர்த்திப்பதான வேத ஸூக் தங்களையும் -திவ்யமாய்
பல வகைப்பட்ட மாலைகளையும் கொண்டு
தேவர்கள் மா முனிவர் இறைஞ்ச நின்ற-தேவர்களும் ஸ்லாக்யரான சனகாதி முனிகளும் ஆராதிக்கும் படி லோகத்தை அளந்து நின்ற
சேவடி மேல் அணி செம் பொன் துழாய் என்றே கூவுமால் -சிவந்த திருவடிகளின் மேலே அவர்கள் அணிந்த
சிவந்த பொன் போலே ஸ்ப்ருஹணீயமான திருத் துழாயைச் சொல்லியே கூப்பிடா நின்றாள்
கோள்வினை யாட்டியேன் கோதையே.–பிரபலமான பாபத்தை யுடையேனான என்னுடைய பூ மாலை போலே இருக்கிறவள்
மாலையை யுடையாளாகவுமாம் -கோள்-மிடுக்கு / கூவுதல் -அழைத்தலாய் -கூப்பிடுதல் –

————————————-

அநந்தரம் -ஸூரி போக்யனான சர்வேஸ்வரனுடைய திருவடிகளில் திருத் துழாயைச் சொல்லி பாராயணம் பண்ணா நின்றாள் என்கிறாள்

கோது இல் வண்புகழ் கொண்டு, சமயிகள்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் பிரான், பரன்
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே
ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–4-2-4-

கோது இல் –ஸ்வ உத்கர்ஷ அர்த்தம் ஆகிற கோது இன்றியே -பரார்த்தமாயே அநு பாவ்யமாய் இருக்கிற
வண்புகழ் கொண்டு, -விலக்ஷணமான குணங்களைக் கொண்டு
சமயிகள்-சீலாதி களாயும் ஸுர்யாதி களாயும் -ஆனந்தாதி களாயும் இருக்கிற குணங்களில் தனித் தனியே வ்யவஸ்திதராய்
பேதங்கள் சொல்லிப் பிதற்றும் -தத் தத் குண உத்கர்ஷ பேதங்களை சொல்லி அக்ரம யுக்திகளைப் பண்ணும்படி இவர்களை அனுபவிப்பிக்கிற
பிரான், பரன்-மஹா உபகாரகனான சர்வ ஸ்மாத் பரனுடைய
பாதங்கள் மேல் அணி பைம் பொன் துழாய் என்றே-திருவடிகளிலே குண வித்தரான ஸூரி கள் சாத்தின பசுத்து நன்றான திருத் துழாய் என்றே
ஓதுமால்; ஊழ் வினையேன் தடந் தோளியே.–எப்போதும் சொல்லா நின்றாள் -அனாதி ஸித்தமான மஹா பாபத்தை யுடையேனான
என்னுடைய சுற்றுடைத்தான தோளை யுடையவன் – ஊழ் வினை-பழ வினை –

————————————

அநந்தரம் எருது ஏழு அடர்த்த ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளில் திருத் துழாயைச் சொல்லி சிதிலை யாகா நின்றாள் என்கிறாள் –

தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ்தழீஇக்
கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார்
தாள் இணை மேல் அணி தண் அம்துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5—

தோளி சேர் பின்னை பொருட்டு –அவன் விரும்பும் படியான தோளை யுடையளாய் -சீலாதி களால் அவனுக்கு சத்ருசையான நப்பின்னைக்காக
எருது ஏழ்தழீஇக்-கோளியார், -எருது ஏழையும் ஒரு காலே தழுவிக் கொள்ளும் ஸ்வ பாவராய்
கோவலனார்,குடக் கூத்தனார்-அவர்களுக்கு அநு ரூபமான கோப குலத்தை யுடையராய் –
குடக் கூத்தாலே மநோ ஹர சேஷ்டித்தரானவருடைய
தாள் இணை மேல் அணி தண் அம்துழாய் என்றே–திருவடிகளின் இரண்டின் மேலே அந்த வீர அபதானத்துக்குத் தோற்று
அவர்கள் இட்ட குளிர்ந்து அழகிய துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–நாள் தோறும் நாள் தோறும் என் பெண் பிள்ளை நைகிறது-

————————————————-

அநந்தரம் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு உதவின ஸ்ரீ வராஹ நாயனார் திருவடிகளிலே திருத் துழாய் என்று
எப்போதும் சொல்லும் படி இவள் பிச்சேறினாள் என்கிறாள்

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ஏனமாய்,
ஆதி அம் காலத்து அகலிடம் கீண்டவர்
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே
ஓதும்மால் எய்தினள் என்றன் மடந்தையே.–4-2-6-

மாதர் மா மண் மடந்தை பொருட்டு ,–நாரீணாம் உத்தமையாய் ஸ்லாக்யையான ஸ்ரீ பூமிப் பிராட்டிக்காக
ஏனமாய்-நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத ஸ்ரீ வராஹ வேஷத்தை யுடையனாய்
ஆதி அம் காலத்து –கல்பாதியாய் ப்ராதுர்பாவ யோக்யதை யாகிற நன்மையை யுடைய காலத்திலே
அகலிடம் கீண்டவர்-விஸ்தீர்ணையான பிருத்வியை அண்டத்தின் நின்றும் ஒட்டு விடுவித்து எடுத்துக் கொண்டு ஏறினவருடைய
பாதங்கள் மேல் அணி பைம்பொன் துழாய் என்றே-திருவடிகளின் மேலே சனகாதிகள் சாத்தின பசுத்த தர்ச நீயமான திருத் துழாய் என்றே
ஓதும்மால் எய்தினள் என்றன் மடந்தையே.–எப்போதும் சொல்லும்படியான பிரமத்தை அடைந்தாள் விலக்ஷணமான மடப்பத்தை யுடையவள் –

—————————————

அநந்தரம் அம்ருத மதன தசையில் பிராட்டியைத் திரு மார்பில் வைத்தவனுடைய திருவடிகளிலே
திருத் துழாய் நிமித்தமாக இவள் துவளா நின்றாள் என்கிறாள் –

மடந்தையை வண் கமலத் திரு மாதினைத்
தடங்கொள் தார் மார்பினில் வைத்தவர் தாளின் மேல்
வடங்கொள் பூந் தண் அம்துழாய் மலர்க்கே இவள்
மடங்குமால்; வாணுதலீர்!என் மடக்கொம்பே.–4-2-7-

மடந்தையை -நித்ய அநு பாவ்யமான மடந்தை பருவத்தை யுடையளாய்
வண் கமலத் –விகாசம் கந்தாதி இவற்றுக்கு ஒப்பாகும் தர்ச நீயமான தாமரைப் பூவை இருப்பிடமாக யுடையளாய்
திரு மாதினைத்-ஸ்ரீ -திரு நாமத்தை யுடையளாய் மாதுமையால் யுண்டான ஸுந்தர்யாதிகளை யுடையவளை
தடங்கொள் தார் மார்பினில் -பரப்பை யுடைத்தாய் ஈஸ்வரத்வ ஸூ சகமான மாலையை யுடைய திரு மார்பிலே
வைத்தவர்-அவள் ஏறும்படி வைத்து அருளின வருடைய
தாளின் மேல்-திருவடிகளிலே தத்கால வர்த்திகளான தேவர்கள் சாத்தின
வடங்கொள் பூந் தண் அம்துழாய் மலர்க்கே இவள்-தொடையை யுடைத்தாய் தர்ச நீயமாய் குளிர்ந்த செவ்விய திருத் துழாய்ப் பூந்தாருக்கு
வடங்கொள்கை -தழைத்தல் ஆகவுமாம்
மடங்குமால்; வாணுதலீர்!என் மடக்கொம்பே.–உஜ்ஜவலமான நெற்றியை யுடையவர்களே எனக்கு பவ்யையாய்
வஞ்சிக் கொம்பு போலே தர்ச நீயையான இவள் அவசந்னையாய்ச் சுருளா நின்றாள் –
உங்களைப் போலே இவளையும் உஜ்ஜவலாவயவையாகக் காண வல்லளே-என்று கருத்து

—————————–

அநந்தரம் ஜனகராஜன் திரு மகளுக்காக லங்கா நிராசனம் பண்ணின சக்ரவர்த்தி திருமகன்
திருவடிகளில் திருத் துழாய்க்கு விருப்பத்தை யுடையாளாகா நின்றாள் -என்கிறாள் –

கொம்பு போல் சீதை பொருட்டு, இலங்கை நகர்
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் அணி
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்
நம்புமால்; நான் இதற்கு என்செய்கேன் நங்கைமீர்?–4-2-8-

கொம்பு போல் சீதை பொருட்டு, -வஞ்சிக் கொம்பு போலே அபிரூபையாய் அயோ நிஜையான ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளுக்காக
இலங்கை நகர்-இலங்கா நகரத்திலே
அம்பு எரி உய்த்தவர் தாள் இணை மேல் -சராக்னியை பிரவேசிப்பித்தவருடைய திருவடிகளின் மேலே
அணி-பவோன் நாராயணா தேவா என்று ஸ்துதித்த ப்ரஹ்மாதிகள் சாத்தின
வம்பு அவிழ் தண் அம் துழாய் மலர்க்கே இவள்-அபி நவ பரிமள விகாஸியாய் குளிர்ந்து அழகிய திருத் துழாயினுடைய பூம் தாருக்கு இவள்
நம்புமால்; நான் இதற்கு என்செய்கேன் நங்கைமீர்?–-விருப்பத்தை யுடையாளாகா நின்றாள் -பூர்ணைகளானவர்களே
இந்த அதீத விஷய அபி நிவேசத்துக்கு நான் எத்தைச் செய்வேன்
அவன் தான் இன்னமும் அவதரித்து உபகரிக்குமது ஒழிய என்னால் செய்யலாவது இல்லை என்று கருத்து

————————————————–

அநந்தரம் அவனுடைய அசாதாரண சிஹ்னங்களை எப்போதும் சொல்லா நின்றாள் என்கிறாள்

நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?–4-2-9-

நங்கைமீர்! நீரும் ஓர் பெண் பெற்று நல்கினீர்;-பரி பூர்ணைகளான நீங்களும் ஒரு பெண்ணைப் பெற்று ஸ்நேஹித்து வளர்த்தி கோள்
எங்ஙனே சொல்லுகேன் யான் பெற்ற ஏழையை?-நான் பெற்ற சபலையான இவளை எப்படி சொல்லுவேன்
ஆனமட்டும் சொல்லில் -அவனுக்கு அசாதாரண சிஹ்னமான
சங்கு என்னும்; சக்கரம் என்னும்; துழாய் என்னும்;-சங்கு என்பது -சக்கரம் என்பது -அவன் திருவடிகளில் திருத் துழாய் என்பதாய்க் கொண்டு
இங்ஙனே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்?–அஹோ ராத்ர விபாகம் இல்லாதபடி இப்படித் தனித் தனியே சொல்லா நின்றாள் -இதற்கு ஏது செய்வேன்
ஸ்வரூபத்தைபி பார்த்து இவள் வாய் மூடும்படி பண்ணவோ –
தாத்காலிகமான அசாதாரண சிஹ்னத்தை சொல்லும்படி பலத்தை யுண்டாக்கவோ
அவை தன்னை இப்போதும் சன்னிஹிதம் ஆக்கவோ
ஒன்றும் செய்ய முடியாது என்று கருத்து
நீரும் ஒரு பெண் பெற்று நல்கினீர் என்ற இடம் இவ்வாழ்வாருடைய பிரேம தசைக்கு அல்லாத ஆழ்வார்களுடைய
ப்ரேம தசை ஒவ்வாது என்கிற பாவத்தை ஸூசிப்பிக்கிறது –

——————————————-

அநந்தரம் எனக்கு விதேயை யன்றியே ஸ்ரீ கிருஷ்ணனுடைய ஆபரண சோபையிலே அகப்பட்டு
அவனுடைய திருவடிகளிலே திருத் துழாய் தன் முலைக்கு அலங்காரமாக வேணும் என்று உடம்பு இளையா நின்றாள் -என்கிறாள் –

என் செய்கேன்? என்னுடைப் பேதை,என் கோமளம்,
என் சொல்லும் என் வசமும் அல்லள்; நங்கைமீர்!
மின்செய் பூண் மார்பினன் கண்ணன் கழல் துழாய்
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–4-2-10-

நங்கைமீர்!-நங்கைமீர்
என்னுடைப் பேதை,என் கோமளம்,-ஹிதம் கேட்க்கும் பருவம் அல்லாத பேதையாய் -ஹிதம் சொல்லுப் பொறுக்க மாட்டாத மார்த்தவத்தை யுடைய இவள்
என் சொல்லும் என் வசமும் அல்லள்; -என் சொல்லிலும் என் நினைவிலும் வருகிறிலள்
என் செய்கேன்? -நான் இதற்குச் செய்வது யுண்டோ
இவள் அவஸ்தை இருந்தபடி –
மின்செய் பூண் மார்பினன் -ஒளியை யுடைத்தான கௌஸ்துபாதி ஆபரண சோபிதமான மார்பை யுடைய
கண்ணன் கழல் துழாய்-ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகளிலே திருத் துழாயை
பொன்செய் பூண் மென்முலைக்கு என்று மெலியுமே.–விரஹ வைவர்ணயம் ஆகிற பொன்மையாலே செய்யப்பட ஆபரண சோபையை யுடைய
விஷலிஷ அஸஹமாய்த் துவண்ட முலைக்கு அலங்காரமாக வேணும் என்று ஆசைப்பட்டு அது கிடையாமையாலே க்ருச சரீரை யாகா நின்றாள்

————————————————-

அநந்தரம் இத்திருவாய் மொழி கற்றார் நித்ய ஸூ ரி களோடு ஒரு கோவையாவர்கள் என்று பலத்தை அருளிச் செய்கிறார்

மெலியும் நோய் தீர்க்கும் நம் கண்ணன் கழல்கள் மேல்
மலிபுகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.–4-2-11-

மெலியும் நோய் தீர்க்கும் – இப்படி சிதிலர் ஆகைக்கு அடியான விரஹ வ்யதையை போக்கும்
நம் கண்ணன் கழல்கள் மேல்–ஆஸ்ரித ஸூ லெபனான் ஸ்ரீ கிருஷ்ணன் திருவடிகள் விஷயமாக
மலிபுகழ் –விப்ரக்ருஷ்ட அநு பவத்திலும் அபி நிவிஷ்டர் என்னும் படி வளர்ந்த புகழை யுடையராய்
வண் குருகூர்ச் சடகோபன் சொல்–ஸ்லாக்யமான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
ஒலிபுகழ் ஆயிரத்து –கொண்டாடப்பட்ட குண புஷ்கல்யத்தை யுடைத்தான ஆயிரம் திருவாய் மொழியிலும்
இப்பத்தும் வல்லவர்-இப்பத்தையும் பாவ யுக்தமாக அப்யஸிக்க வல்லவர்கள்
மலிபுகழ் வானவர்க்கு ஆவர் நற்கோவையே.–அபி வ்ருத்தமான பகவத் அனுபவ பரத்தையை யுடைய ஸூரிகளுக்கு
ஸ்லாக்யராய்க் கொண்டு ஒரு கோவையாவர்கள்
இது கலி விருத்தம் –

——————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-