பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –5–5-

அநு பூத பரம புருஷ குண ஸ்மரணத்துக்கும் கூட ஷமை யல்லாதபடி ராத்திரியில் மதி எல்லாம் உள் கலங்கி அத்யந்தம் அவசன்னையாய்
விடிந்தவாறே லப்த சம்ஜ்ஜையாய் -பண்டு கண்டு அனுபவித்த நம்பியுடைய திரு நகரியினுடைய அழகையும்
நம்பி தம்முடைய ஸுந்தர்ய ஸுகந்த்ய ஸுகுமார்ய லாவண்யா யவ்வனாதி அனவதிக அசங்க்யேய கல்யாண குணங்களையும்
திவ்ய பூஷண திவ்ய ஆயுத ஜெனிதமான அழகையும் ஸ்மரித்து -அந்த ஸ்மரண ஜெனிதமான ப்ரீதியாலும்
தத் ஸம்ச்லேஷ அலாப நிபந்தமான அப்ரீதியாலும் விசிஷ்டையாய் -தத் ஸம்ச்லேஷ அர்த்தமாக இருந்து நோவு படுகிற பிராட்டி
பரம பிரணயியான எம்பெருமான் பக்கல் நீ உன்னுடைய அபி நிவேசம் தோற்ற இருத்தல் -அந்த விஸ்லேஷ ஜெனிதமான
அவசாதம் தோற்ற இருத்தல் -அவன் எழுந்து அருளி இருந்த திருக் குறுங்குடியிலே போக உத்யோகித்தல் செய்யல்
தன்னை யுத்திஸ்ய இவள் இப்பாடு படா நிற்கச் செய்தே வாராது ஒழிவதே -ஒருவனுடைய கொடுமை இருந்தபடி என் -என்று கொண்டு
இந்த லோகம் அவன் பக்கலிலே நைர்க்ருண்யாதி தோஷத்தை சங்கிக்கும் -இது வல்லது நம் குடிக்குப் பழி இல்லை
ஆனபின்பு அவன் தானே ஸம்ஸ்லேஷிக்கக் கண்டு இருக்கும் அத்தனை அல்லது இப்படிப் படுகை ஈடல்ல -என்று தன்னைப் பொடிந்து
தனக்கு முகம் காட்டாதே இருந்த தன்னுடைய அன்னைமாரைக் குறித்து
நம்பியுடைய ஸ்வத சித்தமாயும் அந்யோன்ய சம்சர்க்க சித்தமாயும் – சதா அனுபயமானமாய் இருக்கச் செய்தே அபூர்வவத்
விஸ்மயமாபயநமுமாய் இருந்த -நிரவதிக திவ்ய ஸுந்தர்யமும் திவ்ய அவயவ திவ்ய பூஷண திவ்ய ஆயுதங்கள் எல்லாம்-
என் நெஞ்சுள்ளும் புகுந்து நிறைந்து இருக்கிற இருப்பும்- அவற்றில் என்னெஞ்சு விழுந்து அவையல்லது அறியாதே
இருக்கிற இருப்பும்-உங்களுக்குத் தெரியாமை இறே நீங்கள் என்னைப் பொடிகிறது-என்று சொல்லுகிறாள்-

——————————————-

எங்ஙனேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவது நீர்!
நங்கள் கோலத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சங்கி னோடும் நேமி யோடும் தாமரைக் கண்களோடும்
செங்கனி வாய் ஒன்றினோடும் செல்கின்றது என்நெஞ்சமே.–5-5-1-

என்னுடைய ப்ரக்ருதி அறிந்து இருக்கிற தாய்மாரான நீங்கள் என்னுடைய அவசாதத்துக்கு அடியான நம்பியுடைய அழகை
இன்னாதாகாதே என்னைப் பொடிகிறபடி எங்கனே -நமக்காக நிரதிசய ஸுந்தர்யத்தோடே திருக் குறுங்குடியிலே
நின்று அருளின நம்பியை நான் கண்ட பின் -சங்கு சக்கரங்களோடும் தாமரை போன்ற திருக் கண் மலர்களோடும்
சிவந்த கனி போலே இருக்கிற திருப் பவளம் ஒன்றோடும் மிகவும் பூணா நின்றது என்னுடைய அந்தக்கரணம் -என்கிறாள் –

——————————————

என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திருமறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2-

நம்பி திரு அழகை நாங்கள் அனுபவித்தோம் அல்லோமோ -நாங்கள் பேசாது இருக்க நீ இங்கனே படுகிறது என்
என்று அவர்கள் பொடியை -என்னை நீங்கள் பொடியாதே உங்களுக்குக் காண வேனுமாகில் என்னைப் போலே ஸ்நேஹ யுக்தமான
நெஞ்சை யுடையீராய்க் கொண்டு அநு சந்தித்து அறியுங்கோள் –
தென்னாட்டுச் சோலை சூழ்ந்த திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்னமின்னா நின்றுள்ள திரு யஜ்ஜோ பவீதமும்
திருக் குண்டலங்களை திரு மார்வில் திரு மறுவும் திரு யுதம்போதே பொருந்தின திரு அணிகலன்களும் திருத் தோள் அழகும்
சுற்றும் வந்து என்னை நெருக்கம் நின்றன என்கிறாள் –

————————————————–

நின்றிடும் திசைக்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
குன்ற மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
வென்றி வில்லும் தண்டும் வாளும் சக்கரமும் சங்கமும்
நின்று தோன்றிக் கண்ணுள் நீங்கா நெஞ்சுளும் நீங்காவே.–5-5-3-

நம்பியுடைய ஸுர்யாதிகளிலே அகப்பட்டமை அறிந்த தாய்மாரான நீங்களும் -ஸ்தப்தை யாகா நின்றாள் -அறிவு கெடா நின்றாள் –
சிதிலை யாகா நின்றாள் -என்று பொடியா நின்றிகோள் -குன்றம் போலே நெடு மாடங்களை யுடைய
திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் வெற்றியைக் கொடுக்கும் வில்லு முதலான திவ்ய ஆயுத வர்க்கம் புறம்புள்ளும் ஓக்க
நிரந்தரமாகத் தோற்றா நின்றன என்கிறாள் –

——————————————-

நீங்க நில்லா கண்ண நீர்கள் என்று அன்னையரும் முனிதிர்
தேன் கொள் சோலைத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
பூந்தண் மாலைத் தண் துழாயும் பொன் முடியும் வடிவும்
பாங்கு தோன்றும் பட்டும் நாணும் பாவியேன் பக்கத்தவே.–5-5-4-

நம்பியைப் பிரிந்தாள் தரிக்க மாட்டாள் என்று அறிந்த தாய்மாரான நீங்களும் கண்ண நீர்
மாறுகிறது இல்லை என்று பொடியா நின்றி கோள்
தேன்களைச் கொரியா நின்ற திருச் சோலையை யுடைய திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
தர்ச நீயமாய்க் குளிர்ந்து இருந்த திருத் தோள் மாலையும் நிரதிசய ப்ரீதி யுக்தமான திரு அபிஷேகமும் திரு உடம்பும்
திருவரைக்குத் தகுதியாகத் தோற்றுகிற பட்டும் விடு நாணும் கண்டு வைத்து அநு பாவிக்கப் பெறாத பாபத்தைப் பண்ணின
என்னுடைய பார்ஸ்வத்திலே நின்று என்னை நலியா நின்றன என்கிறாள் –

————————————————————–

பக்கம் நோக்கி நிற்கும் நையும் என்று அன்னையரும் முனிதிர்
தக்க கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
தொக்க சோதித் தொண்டை வாயும் நீண்ட புருவங்களும்
தக்க தாமரைக் கண்ணும் பாவியேன் ஆவியின் மேலனவே.–5-5-5-

தன் தசையை அனுசந்தித்து ஸர்வபா அருகே வரக் கூடும் என்று வர சம்பாவனை யுள்ள பார்ஸ்வத்தைப் பார்த்து நில்லா நின்றாள் –
பின்னை இங்கனே நிற்க மாட்டாதே சிதிலை யாகா நின்றாள் என்று என்னோடு பழகி இருக்கிற
தாய்மாரான நீங்களும் பொடியா நின்றி கோளே
திருக் குறுங்குடிக்குக் கீர்த்தி தகுதியானாப் போலே ஒன்றுக்கு ஓன்று தகுதியாய்த் திரண்ட சோதியை யுடைத்தாய்
தொண்டை போலே சிவந்து இருக்கிற திரு வாயும் திரு புருவத்துக்குத் தகுதியாய்த் தாமரைப் போப் போலே இருக்கிற திருக் கண்களும்
அவன் அழகை நினைத்தால் நோவு படுகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின என்னை
உயிர் நிலையிலே நலியா நின்றன என்கிறாள் –

————————————-

மேலும் வன்பழி நங்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சோலை சூழ் தண் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
கோல நீள்கொடி மூக்கும் தாமரைக் கண்ணும் கனிவாயும்
நீல மேனியும் நான்கு தோளும் என் நெஞ்சம் நிறைந்தனவே.–5-5-6-

இப்போது அன்றிக்கே மேலும் நம் குடிக்கு நிலை நிற்கும் பழியை விளைக்கும் இவள் என்று தாயார்
நம்பியைக் காண இடம் கொடாதே நோக்கா நின்றாள்
சோலைகளாலே சூழப்பட்ட திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின் கோலம் கொழுந்து விட்டதொரு கொடி போலே இருக்கிற
திரு மூக்கு முதலான திவ்ய அவயவங்களினுடைய அழகுகள் என்நெஞ்சம் நிறைய புகுந்து நலியா நின்றன என்கிறாள் –

————————————————————

நிறைந்த வன்பழி நம்குடிக்கு இவள் என்று அன்னை காணக் கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த நீண்ட பொன் மேனியொடும்
நிறைந்து என்னுள்ளே நின்றொழிந்தான் நேமி அம் கை உளதே.–5-5-7-

ஒருவராலும் போக்க ஒண்ணாத வன் பழியை நம் குடிக்கு விளைக்கும் இவள் என்று அன்னை காண கொடாள்
சிறந்த கீர்த்தித் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்டபின் நிறைந்த சோதி வெள்ளம் சூழ்ந்த
போக்யதை மிக்கு விலக்ஷணமான திரு மேனி அழகும்
அல்லாத அழகில் காட்டில் திருக்கையும் திருவாழியுமான சேர்த்தி அழகும் என் நெஞ்சிலே வேர் விழுந்தது என்கிறாள் –

———————————————–

கையுள் நன்முகம் வைக்கும் நையும்என்று அன்னையரும் முனிதிர்
மைகொள் மாடத் திருக்கு றுங்குடி நம்பியை நான் கண்டபின்
செய்ய தாமரைக் கண்ணும் அல்குலும் சிற்றிடையும் வடிவும்
மொய்ய நீள்குழல் தாழ்ந்த தோள்களும் பாவியேன் முன்னிற்குமே.–5-5-8-

கை தொடப் பொறாத ஸூ குமாரமான திரு முகத்தைக் கையிலே வைக்கும் –
மிகவும் அவசந்தனையாம் என்று அன்யரைப் போலே தாய்மாரான நீங்களும் பொடியா நின்றி கோளே
நம்பியுடைய திருமேனியில் நீல வர்ணமான தேஜஸ்ஸாலே மை கொள் மாடமான திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
செய்ய தாமரைக் கண்ணும் அகன்ற நிதம்பமும் சிறுத்த இடையும் நிருபமான வடிவும் அழகிய குழல் தாழ்ந்த தோள்களும்
இவற்றை அனுபவித்துப் பிரிகைக்கு ஈடான பாபத்தைப் பண்ணின என்னுடைய முன்னே நின்று நலியா நின்றன என்கிறாள் –

—————————————-

முன்னின்றாய் என்று தோழிமார்களும் அன்னையரும் முனிதிர்
மன்னு மாடத் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
சென்னி நீண்முடி ஆதியாய உலப்பில் அணி கலத்தன்
கன்னல் போல் அமுதாகி வந்து என் நெஞ்சம் கழியானே.–5-5-9-

ஒருவராலும் காண ஒண்ணாதபடி வார்த்தைக்கும் ஸ்த்ரீத்வத்தை யுடையளான நீ கண் காண நிற்பதே என்று
தோழிமாரும் தாய்மாரும் திரள நின்று நலியா நின்றீர்கள் -நித்யமாய்ச் செல்லுகிற மாடங்களையுடைய
திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
சென்னி நீண் முடி யாதியாய் முடிவில்லாத திவ்ய பூஷண பூஷ்யங்களுடைய சேர்த்தியாலே
கண்ட சக்கரையும் பாலும் கலந்தால் போலே நிரதிசய போக்யனாய்
என் நெஞ்சில் புகுந்து எனக்கு மறக்க ஒண்ணாத படி ஒரு க்ஷணமும் என் ஹ்ருதயத்தை விட்டுப் போகிறிலன்-என்கிறாள்

————————————————–

கழிய மிக்கதோர் காதலள் இவள் என்று அன்னை காணக்கொடாள்
வழுவில் கீர்த்தித் திருக்குறுங்குடி நம்பியை நான் கண்டபின்
குழுமித் தேவர் குழாங்கள் கைத்தொழச் சோதி வெள்ளத்தினுள்ளே
எழுவதோர் உரு என் நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே.–5-5-10-

லோகத்தில் தங்களுக்கு அபிமதரைப் பிரிந்தால் நாள் செல்ல நாள் செல்ல ஸ்நேஹம் குறையாக கடவதாய் இருக்க
இவளுக்கு வர்த்தியா நின்றது என்று தாயாரானவள் நம்பியை அனுசந்திக்க ஒட்டுகிறிலள்
பூர்ணையான கீர்த்தியை யுடைய திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்பு அயர்வறும் அமரர்களுடைய சமூகங்கள்
திரண்டு அனுபவிக்க அழகு வெள்ளத்தின் நடுவே உஜ்ஜவலமாய்த் தோற்றுகிற விலக்ஷணமான
நம்பியுடைய திருமேனி என் நெஞ்சிலே பிரகாசிக்கிற படி ஒருவருக்கும் கோசாரம் அன்று என்கிறாள்

———————————————

அறிவரிய பிரானை ஆழி அம் கையனையே அலற்றி
நறிய நன்மலர் நாடி நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன
குறி கொள் ஆயிரத்துளிவை பத்தும் திருக்குறுங்குடி யதன்மேல்
அறியக் கற்று வல்லார் வைட்ணவர் ஆழ்கடல் ஞாலத்துள்ளே.–5-5-11-

கையும் திருவாழியுமாய் இருக்கிற தன்னுடைய திரு அழகு ஒருவருக்கும் அறிய ஒண்ணாத படியாய் இருக்கிற மஹா உபகாரகனை
அவ்வுபகார ஜனித்த ப்ரீதி ப்ரகரஷத்தாலே பரவசராய் அலற்றி செவ்விப் பூவைக் கொண்டு நம்பியுடைய
திரு அழகை முட்டக் காண்கைக்கு ஈடான
ப்ரபாவத்தையுடைய ஆழ்வார் அருளிச் செய்த பகவத் திவ்ய லாஞ்சன விஷயமான ஆயிரம் திருவாய் மொழியிலும்
ஸுந்தர்ய ஸுசீல்யாதி களால் திரு நாட்டிலும் திரு அவதாரங்களிலும் காட்டிலும் பரத்வம் உள்ளது நம்பி பாக்களில் என்று
உபபாதித்த இத்திருவாய் மொழியை வ்யக்தமாக அப்யசித்தவர்கள் சம்சாரத்திலே இருந்து வைத்தே ஸ்ரீ வைஷ்ணவர்கள் என்கிறார் –

—————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: