அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி –5-3-

மூன்றாம் திருவாய் மொழியிலே கீழ் அநு சந்தித்த பாகவத உத்கர்ஷ ஹேதுவான
பகவத் உத்கர்ஷத்தையும் குண விக்ரஹாதி வைலக்ஷண்யத்தையும் அநு சந்தித்து
அவனுடைய ஆலோகாலாபாதி முகத்தாலே ஸம்ஸ்லேஷித்து அநு பவிக்கைக்கு ஆசைப்பட்டு அது கிடையாமையாலே
ஆசா ஜனகமான ஆபி ரூபியாதி அதிசயத்தையும்
அவயவ விசேஷ வை லக்ஷண்யத்தையும்
பிரதிபந்தக நிவர்த்தகமான பால சேஷ்டிதத்தையும்
அபி நிவேச வர்த்தகத்வத்தையும்
அநந்யார்ஹத ஆபாகத்வத்தையும்
ஆகர்ஷகத்வ ஸ்வ பாவ யோகத்தையும்
ஆசத்தி ஹேதுவான அர்ணவ ஸாயித்வாதிகளையும்
அகில விரோதி நிவர்த்தனத்தில் அநாயா சத்தையும்
உத்துங்க தேச வாஸித்வத்தையும்
அசாதாரண சிஹ்ன யோகத்தையும்
அனுசந்தித்து -ஏவம் விசிஷ்டனான சர்வேஸ்வரன் விஷயத்தில் தமக்குப் பிறந்த அபி நிவேச அதிசயத்தாலே
இரண்டு தலைக்கும் அநநு ரூபமான ஸ்வ ப்ரவ்ருத்தி விசேஷத்தாலேயாகிலும் பிராபிக்கக் கடவோம் என்கிற த்வர அதிசயத்தாலே
தமக்குப் பிறந்த விவசாய விசேஷத்தை அந்யாபதேச முகத்தாலே
நாயகனான ஈஸ்வரனோடு கலந்து பிரிந்தாள் ஒரு நாயகி தத் ப்ராப்த்ய அபி நிவேச த்வரையாலே
தன் குடிப் பிறப்புக்கும் பெண்மைக்கும் அநநு ரூபமாம் படி அவனுடைய மெய்ப்பாட்டை அழித்து மடலூர்ந்தும் பெறக் கடவோம் என்கிற
அறுதிப் பாட்டை பாங்கிக்கு உரைத்த பாசுரத்தாலே அருளிச் செய்கிறார் –

—————————————

முதல் பாட்டில் இவளுடைய வ்யவசாயம் அறிந்த தோழி விலக்க உத்யோகித்து ஊரார் பழி சொல்வார் காண் -என்ன
அவனுடைய ஆபி ரூப்யாதிகளில் அகப்பட்டுக் கலங்கின என்னை ஊர்ப் பழி என் செய்யும் என்கிறாள் –

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–5-3-1-

மாசறு சோதி என் செய்ய வாய் மணிக் குன்றத்தை–அழுக்கு அற்ற தேஜஸ்ஸை யுடைத்தாய் சிவந்த வாயை யுடைத்தான
மாணிக்க மலை போலே எனக்கு போக்யனானவனாய் -பிரணயித்வத்தால் வந்த தாழ்ச்சியாலே
ஆசறு சீலனை ஆதி மூர்த்தியை நாடியே-குற்றம் அற்ற சீலத்தை யுடையவனாய் தான் முற்பாடானாய் வந்து அனுபவிப்பித்த
ஸ்வாமியானவனை நிரந்தரமாகத் தேடி
பாசற வெய்தி அறிவிழந்து எனை நாளையம்-மேனியில் பசுமை அழிந்து அறிவும் இழந்து எத்தனை காலத்தோம்
பாசறவு-நிறம் அழிவு / பாசென்று ஸ்நேஹமாய் அத்தை மிக எய்தி என்றுமாம்
ஏசறும் ஊரவர் கவ்வை தோழி! என்செய்யுமே?–தோழீ ஏசுதலிலே அறுதிப் பட்ட ஊரவரது ஆரவாரம் எத்தைச் செய்வது –
ஏசுதல் -பழித்தல் -/ கவ்வை -அலர்

————————————————-

அநந்தரம் -அவன் கண் அழகாலே என் சர்வஸ்வத்தையும் அபகரித்து என் வை லக்ஷண்யம் அடங்க
அழிந்து இருக்க ஊரார் என் செய்வது என்கிறாள் –

என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை
என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–5-3-2-

என் செய்யத் தாமரைக் கண்ணன் என்னை நிறைகொண்டான்–சிவந்த தாமரை போன்ற திருக் கண் அழகை யுடையனாய்க் கொண்டு –
எனக்கு பவ்யனானவன் என்னை பூர்த்தி அபகாரம் பண்ணினான் -ஸ்த்ரீத்வ பூர்த்தி போனபடியாலே
முன் செய்ய மாமை இழந்து மேனி மெலி வெய்தி–முன்பு தோற்றுகிற விலக்ஷணமான மாமை நிறமும் இழந்து
அதுக்கு ஆஸ்ரயமான சரீரமும் மெலிவு எய்தி
அவன் செய்ய வாயும் செய்ய தாமரைக் கண்ணும் குறி யழியாது இருக்க
என் செய்ய வாயும் கருங்கண்ணும் பயப்பூர்ந்தவே.–என் செய்ய வாயும் கரும் கண்ணும் ஒரு வெளுப்பாம்படியான வைவர்ண்யம் பரந்தன
என் செய்யும் ஊரவர் கவ்வை? தோழீ! இனி நம்மை–தோழீ இனி நம்மை ஊரவர் கவ்வை என் செய்யும்
நம்மை என்று சம துக்கையான தோழியையும் கூட்டிக் கொள்ளுகிறாள் –

———————————–

அநந்தரம் அவனுடைய விரோதி நிவர்த்தகமான அதி பால சேஷ்டிதத்திலே அகப்பட்ட என்னை
ஊரார் அலர் என் செய்யும் என்கிறாள் –

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–5-3-3-

ஊர்ந்த சகடம் உதைத்த பாதத்தன் பேய் முலை–நலிய நினைந்து ஊர்ந்து வந்த சங்கடத்தை ஸ்தந்யார்த்தியாய் அழுது நிமிர்ந்த
அந்நிய பர வியாபாரத்தால் முறிந்து விழும்படி உதைத்த திருவடிகளை யுடையவனாய் -அது பக்குவ தசையாம் படி
அதி சைஸ அவஸ்த்தையிலே பேய் முலையை
சார்ந்து சுவைத்த செவ்வாயன் என்னை நிறை கொண்டான்-தாய் முலையோ பாதி நெஞ்சு பொருந்திச் செறிந்து
பிராண ஸஹிதமாகப் பசையற உண்ட சிவந்த திருப் பவளத்தை யுடையவன்
இப்பருவம் நிரம்பாச் செயலாலே என் நிரப்பத்தை அபகரித்தான் -ஆகையால்
பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோடு அன்றி ஓர் சொல்லில்லேன்-மீண்டும் மீண்டும் அவனோடு சேர்ந்ததன்றி வேறொரு வார்த்தையை உடையேன் அல்லேன்
தீர்ந்த என் தோழி! என் செய்யும் ஊரவர் கவ்வையே?–என்னோடு ஒரு நெஞ்சாம்படி அறுதியுடைய தோழீ ஊரவருடைய அலர் எத்தைச் செய்யும் –
அவன் கொண்ட நிறையை மீள அழைக்குமோ
அவனை ஒழிய வேறே சிலரை நான் பெற்றிடாப் பண்ணுமோ -என்று கருத்து –

———————————————-

அநந்தரம் தன் பக்கலிலே அபி நிவேசத்தை வளரும்படி கிருஷி பண்ணின உபகார சீலனை அநுபகாரகரைப் போலே
குறையச் சொல்லக் கடவையோ என்று தன்னை மீட்கைக்காக அவனை இயல் பழித்த தோழியைக் குறித்து சொல்லுகிறாள் –

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–5-3-4-

ஊரவர் கவ்வை எருவிட்டு அன்னை சொல் நீர்படுத்து–ஊரார் அலராகிற எருவை இட்டு -தாயாருடைய
நிரந்தர ஹித வசனமாகிற நீரை நிறுத்தி
ஈர நெல் வித்தி முளைத்த நெஞ்சப் பெருஞ் செய்யுள்-ஆசையாகிற நெல்லை விரைத்து -அது முளைத்த
நெஞ்சமாகிற பெரிய விளை நிலத்துக்குள்ளே
பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த–மிகவும் பெருத்து ஊர்ப் பூசலை யுடைத்தான அபி நிவேசத்தை
கடல் போலே சம்ருத்தமாக பலிக்கும் படி பண்ணின
பேரமர்-பெரிய வமர்த்தியுமாம்
காரமர் மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?–வர்ஷூக வலாஹக ஸ்வ பாவத்தை உடைத்தான் திரு மேனியை யுடையனாய்
நமக்கு பவ்யனான ஸ்ரீ கிருஷ்ணன் -முன்பு அவன் குணத்தைச் சொல்லி மூட்டின தோழீ இன்று அவன் குறை சொல்லி
இயல் பழிக்கும்படி கடியனானானோ –

—————————————–

அநந்தரம் நீ இயல் பழித்த படியே குண ஹீனனாகிலும் என் நெஞ்சு என்னை
அநந்யார்ஹம் ஆக்கின அவனை ஒழிய அறியாது என்கிறாள் –

கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமே!–5-4-5-

கடியன் கொடியன் நெடியமால் உலகங் கொண்ட–ஸ்வ காரியத்தில் எதிர்த் தலை பாராமல் சீக்ர ப்ரவ்ருத்தி பண்ணும்
கடுமையை யுடையனாய் அக்காரியம் தலைக் கட்டினால் புரிந்து பாராமல் போம் கொடியவனாய் -போகப் புக்கால் விலக்க
வரிதாம் படி பிரியா மேன்மையை யுடையனாய்
லோகம் அடங்க தன்னதே யாம்படி எதிர்த் தலைக்கு ஒன்றும் ஒட்டாமல் அநந்யார்ஹம் ஆக்கி
மால் -பெருமையும் வ்யாமோஹமும்
அடியன் அறிவரு மேனி மாயத்தன் ஆகிலும்–காற்கடைக் கொள்ளும் வஞ்சகனாய் விவேகிக்க அரிதாம் படி அழகாலே
மயக்கும் ஆச்சர்யத்தை யுடையவனே யாகிலும்
கொடிய என் நெஞ்சம் அவனென்றே கிடக்கும் எல்லே!–லோக மரியாதை அன்றியே குற்றம் சொல்லி மீட்க அரிதாம் படி
கொடிதான என் நெஞ்சமானது கீழ்ச் சொன்ன ஸ்வ பாவ விசேஷங்களை யுடைய அவனே தஞ்சம் என்று கிடவா நிற்கும்
தான் முற்பாடானாய் மேல் விழுகையாலும் புறம்புள்ள உறவில் பற்று அறுக்கையாலும் அதிசயித வ்யாமோஹத்தாலும்
அநந்யார்ஹம் ஆகும்படி தன் காற்கீழே இட்டுக் கொள்ளுகையாலும் நம் அளவில் பண்ணின உபகாரம் பரிச்சேதிக்க
அரிதான வடிவையுடைய ஆச்சர்ய பூதனாகையாலும் இக்குணங்களை யுடையவன் என்று நினைத்து இரா நின்றது –
இது ஒரு நெஞ்சின் ஸ்வ பாவம் இருந்தபடியே
எல்லே -என்பது என்னே என்றாய் ஆச்சர்யமாதல் / தோழியை எல்லே என்று ஸம்போத்தித்தல் ஆதல்
துடி கொள் இடை மடத்தோழி! அன்னை என் செய்யுமே!–துடியின் அழகை கொள்வதான இடையையும் மடப்பத்தையும் யுடைய தோழீ –
நீ இந்த ப்ரணய தாரையில் வாசி அறியும் ஆபி ரூப்யாத்ம குணங்களை யுடையையாய் இருக்க
நிஷேதித்தது தாயார் நியமனத்துக்கு அஞ்சி இறே – அன்னையானவள் எத்தைச் செய்வது

——————————-

அநந்தரம் அவனுடைய ஆகர்ஷகமான ஸ்வ பாவங்களில் யகப்பட்டேன்-என்னை நீங்கள் ஆசையற அமையும் என்று
திரள வந்த தோழிமாரைக் குறித்துச் சொல்லுகிறாள் –

அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? தோழிமீர்!
என்னை இனி உமக்கு ஆசை இல்லை அகப்பட்டேன்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி
மன்னன் மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.–5-3-6-

தோழிமீர்!–ஸமான ஸூக துக்கைகளான தோழிமீர்
முன்னை அமரர் முதல்வன் வண் துவராபதி-மன்னன் –பிரதமஜரான நித்ய ஸூரிகளுக்கு பிரதானனான மேன்மையை யுடையனாய்
நிரதிசய சம்பத்தை யுடைய ஸ்ரீ மத் துவாரகைக்கு நிர்வாஹகனான நீர்மையை யுடையவனாய் -இரண்டும் இல்லாத அன்றும் விட ஒண்ணாத
மணி வண்ணன் வாசுதேவன் வலையுளே.-அகப்பட்டேன்–நீல ரத்னம் போலே தர்ச நீயமான ஆபி ரூப்யத்தை யுடையனாய் –
அழகு இல்லையாகிலும் விட ஒண்ணாத அநு ரூபமான ஆபி ஜாதியத்தை யுடைய வஸூ தேவத நயனானவனுடைய –
இப்படி நாலு பாடும் கண்ணியான ஆகர்ஷக சேஷ்டித ரூபமான வலைக்குள்ளே தப்ப ஒண்ணாத படி அகப்பட்டேன்
என்னை இனி உமக்கு ஆசை இல்லை –மீட்க வரிய என்னைப் பற்ற -மீட்க நினைத்து இருக்கிற உங்களுக்கு விதேயையாக
ஆசைப்பட வேண்டுவது இல்லை -ஆகையாலே
அன்னை என் செய்யில் என்? ஊர் என் சொல்லில் என்? –தாயார் எது செய்யில் என் -ஊரவர் எது சொல்லில் என்
அவள் செய்யும் பிரியத்தோடு அப்ரியத்தோடு வாசி இல்லை
அவர்கள் சொல்லும் குணத்தோடு தோஷத்தோடு வாசி இல்லை -என்று கருத்து –

—————————————–

அநந்தரம் ஆஸ்ரயண அர்த்தமான ஷீரார்ணவ சயனத்தை யுடைய சர்வேஸ்வரனை நாட்டார் முன்பே நாம் கண்டு
ஆதரிக்கக் கூடுமோ என்று அந்தரங்கையான தோழியைக் குறித்து உரைக்கிறாள் –

வலையுள் அகப்படுத்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு
அலைகடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு
தலையில் வணங்கவு மாங்கொலோ? தையலார் முன்பே.–5-3-7-

வலையுள் அகப்படுத்து என்னை நன்நெஞ்சம் கூவிக் கொண்டு–என்னை தன்னுடைய ஆகர்ஷக குண சேஷ்டிதங்கள் ஆகிற வலையுள்
அகப்படுத்தி என்னிலும் தன் பக்கல் நலத்தை யுடைய நெஞ்சை அடி அறுத்து அழைத்துக் கொண்டவனாய்
அந்த நெஞ்சு தன் பக்கலிலே ப்ரவணம் ஆகைக்கு அடியாக திரைக்குள்ளே கிடப்பாரைப் போலே
அலைகடற் பள்ளி அம்மானை ஆழிப் பிரான் தன்னைக்–அலைகிற கடலுக்குள்ளே ஏகாந்தமாகப் பள்ளி கொள்வானாய் –
அக்கிடை அழகைக் காட்டி என்னை அடிமை கொண்ட ஸ்வாமியாய் –
அவ் வழகைக் காத்தூட்டும் திருவாழியை யுடைய மஹா உபகாரகன் ஆனவனை
கலை கொள் அகல் அல்கும் தோழி!நம் கண்களாற் கண்டு–பரிவட்ட யுடை அழகை யுடைத்தாய்
விஸ்தீர்ணமான அல்குலை யுடைய தோழீ – இருவரும் ஓக்க நம் கண்களாலே கண்டு
தலையில் வணங்கவு மாங்கொலோ? தையலார் முன்பே.–பழி சொல்லுகிற தையலார் முன்பே
அவன் வந்த உபகாரம் தோன்ற தலையால் வணங்கவும் ஆகக் கூடுமோ –

———————————————

அநந்தரம் -அநாயாசேந அகில விரோதியையும் நிவர்த்திப்பிக்கும் அவனை நான் கிட்டுவது என்றோ என்கிறாள் –

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை
போய் முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–5-3-8-

பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து மருதிடை-போய் -பேயின் முலையை உண்டு -சகடத்தை பாய்ந்து மருதின் நடுவே போய்
முதல் சாய்த்துப் புள்வாய் பிளந்து களிறு அட்ட–வேர் பறித்து விழ விட்டு பகாஸூரனாகிற பஷியின் வாயை பிளந்து
குவலயா பீடத்தை நிரசித்தவனாய்
விரோதிகளினுடைய பற்றாசறுதியாலே சர்வ ஜ்ஞாமாக ஸ்மிதம் பண்ணுகையாலே
தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை எந்நாள் கொலோ?–வெளுத்த முறுவல் ஒளியையும் தொண்டைப் பழம் போலே
சிவந்த அதர சோபையையும் ஆச்ரிதைகளான கோபிமாரை அநு பவித்த உபகாரகனை
நாம் உறுகின்றது தோழீ! அன்னையர் நாணவே.–தோழீ -அவனைக் குற்றம் சொன்ன அன்னையர்
லஜ்ஜிக்கும் படியாக நாம் கிட்டுவது என்றாய் இருக்கிறதோ
நாம் கிட்டினால் அவர்கள் நானும் அத்தனை என்று கருத்து –

——————————————-

அநந்தரம் என்னை சர்வ ஸ்வாபஹாரம் பண்ணி எட்டாமல் இருக்கிறவனை சர்வ லோகமும் பழிக்கும் படி
மடலூரக் கடவேன் என்று தோழிக்குத் தன் நெஞ்சை வெளியிடுகிறாள் –

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–5-3-9-

நாணும் நிறையும் கவர்ந்து என்னை நன்நெஞ்சம் கூவிக்கொண்டு-என்னை லஜ்ஜையையும் பூர்த்தியையும் அபஹரித்து
ஸ்நேஹ உத்தரமான நெஞ்சையும் அழைத்துக் கொண்டு
சேணுயர் வானத்திருக்கும் தேவ பிரான் தன்னை–மிகவும் உயர்ந்த பரம ஆகாச சப்த வாஸ்யமான பரம பதத்தில்
இருப்பானாய் நித்ய ஸூரி களுக்கு இங்குப் பண்ணின பிறவிருத்திகளைப் பிரகாசிப்பிக்கும் சர்வாதிகனானவனை
ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி ஆம்–எனக்கு விதேயமான தோழீ உன் ஆணையே -சர்வ லோகங்களிலும்
பழி ப்ரஸித்தமாம்படி தூற்றி என்னால் செய்யலாம்
கோணைகள் செய்து குதிரியாய் மடல் ஊர்துமே.–மிறுக்குகள் அடங்க செய்து ஒருவர்க்கு அடங்காத
நாணம் அற்ற பெண் ஆய்க் கொண்டு மடல் ஊரக் கடவேன்
குதிரி-நாணாப் பெண் / கோணை-மிறுக்கு-

———————————————–

நிரதிசய போக்யமான அசாதாரண சிஹ்னங்களை யுடையவனை எங்கும் பழி தூற்றி ஜகத் ஷோபம்
பிறக்கும்படி மடலூர்ந்தே யாகிலும் அவன் மாலையைச் சூடுவோம் என்கிறாள் –

யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்
யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–5-3-10-

யாமடம் இன்றித் தெருவு தோறு அயல் தையலார்–அத்யந்த அபி நிவேசத்தாலே ஏதேனும் ஒருபடி யாலும்
ஸ்த்ரீத்வ அநு ரூபமான ஒடுக்கம் இன்றியே -லோகத்து அளவில் பர்யவசியாதே
தெருவு தோறும் புக்கு அயலாரான ஸ்த்ரீகளானவர்கள்
யாமடம் என்றது ஏதேனும் ஒரு மடப்பம் என்றபடி –
நாமடங்காப் பழி தூற்றி நாடும் இரைக்கவே.–நா ஓவாதே சொல்லும் பழியைத் தூற்றி சகல ஜகத்தும்
ஷூபிதமாய்க் கூப்பிடும்படி
யாமடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரானுடைத்-மடலூரத் தகாத ஸ்த்ரீத்வத்தை யுடைய நாம் நமக்கு ஈடு அல்லாத
மடலை ஊர்ந்தே யாகிலும் –
கையும் திருவாழியுமான அழகை அனுபவிப்பித்து நம்மை வசீ கரித்த உபகாரகனுடைய
தூமடல் தண்ணத் துழாய் மலர் கொண்டு சூடுவோம்-செவ்வியாலே தூய்தான இதழை யுடைய ஸ்ரமஹரமாய் தர்ச நீயமான
திருத் துழாய் பூந்தாரை -கையிலே மடல் வாங்குகைக்காக அவன் தர வாங்கி நம் தலையிலே சூடக் கடவோம்
பன்மை -மடலூரத் துணிந்த பர்வ யுக்தி –

—————————

அநந்தரம் இத்திருவாய் மொழியை அனுசந்திக்க வல்லவர்கள் இருந்த தேசமே
பரம பதமாம் என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–5-3-11-

இரைக்குங் கருங்கடல் வண்ணன் கண்ணபிரான் தன்னை-அலை எறிந்து இரைக்கிற கருங்கடல் போலே அபி வ்ருத்தமான
வடிவழகை யுடையனாய் அவ் வழகை ஆஸ்ரிதர்க்கு அனுபவிப்பிக்கும் ஸ்வ பாவனான ஸ்ரீ கிருஷ்ணனை
விரைக்கொள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொன்ன–பரிமள உத்தரமான பொழிலை யுடைய திரு நகரியில் உள்ளார்க்கு
நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
நிரைக்கொள் அந்தாதி ஓர் ஆயிரத்துள் இப்பத்தும்-எழுத்தும் அசையும் சீரும் தளையும் அடியும் தொடையும் பாவும் இனமும் இசையும்
தாளமும் மற்றுமுள்ள சப்த அலங்காரமும் யுடையதாய் அந்தாதியாய்
அத்விதீயமான ஆயிரம் திருவாய் மொழியினுள்ளும் இவை பத்தையும்
உரைக்க வல்லார்க்கு வைகுந்த மாகுந்தம் மூரெல்லாம்.–சப்த மாத்ர உச்சாரணம் பண்ணுமவர்களுக்கு
தம் தங்கள் இருந்த ஊர் எல்லாம் பரமபதம் என்னலாம் படி ஆனந்தாவஹமாய் இருக்கும் –
இது கலித்துறை –

———————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: