பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –5—2

ஒன்றும் தேவில் தம்முடைய உபதேசத்தாலே ஸ்ரீ வைஷ்ணவீ க்ருதரரான ஜனங்களைக் கண்டு
நிரதிசய ஹர்ஷ யுக்தராய் -அந்த ஹர்ஷ ப்ரகரஷத்தாலே அவர்களைத் திருப் பல்லாண்டு பாடுகிறார் –

—————————-

பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்
நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்று மில்லை
கலியுங் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்.–5-2-1-

சர்வாத்மாக்களுடைய சர்வ பாபங்களும் போய் தத் பல பூமியான நரகங்களும் தத்பல யாதநா ரஹிதங்களாய்
தத் பல அனுபவ ப்ரயோஜகனான யமனும் ஸ்வ கர்த்தவ்ய ரஹிதனாய் இனி மேலும் ரௌரவாதி நரக யாதநாஸ் பதமான
அவைஷ்ணவ ஜந்துக்கள் உளவாகாத படியாகவும் எம்பெருமானுடைய
அபரிமித காம்பீர்ய உதாராதி கல்யாண குண அனுபவ லப்த சத்தாகரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் இந்த ஜகத்து எல்லாம்
நிறையும் படி வந்து புகுந்து எம்பெருமானுடைய ஸ்வரூப ஸ்வரூப ரூப குண விபவ சேஷ்டிதங்களைப் பாடியாடி வர்த்திக்கக் காணப் பெற்றோம்
இந்த ஸம்ருத்தி நித்ய ஸித்தையாக வேணும் என்கிறார்

——————————————–

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-

கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம் தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்-
அது என் என்னில்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல் பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றன-என்கிறார் –

———————————————

திரியும் கலியுகம் நீங்கித் தேவர்கள் தாமும் புகுந்து
பெரிய கிதயுகம் பற்றிப் பேரின்ப வெள்ளம் பெருகக்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல்
இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டனவே.–5-2-3-

ஸ்ரீ வைஷ்ணவ தர்ம விபர்யய ஹேதுவான கலியுகம் நீங்கி சர்வ காலமும் கலியுகாத்ய வ்யவஹிதமாய்க் கொண்டு
கேவல க்ருத யுகமேயாய்ச் செல்லும்படியாகவும் -அயர்வறும் பாமரர்களும் புகுந்து பேரின்ப வெள்ளம் பெருகும் படியாகவும்
கரிய முகில் வண்ணன் எம்மான் கடல் வண்ணன் பூதங்கள் மண் மேல் இரியப் புகுந்து இசை பாடி எங்கும் இடம் கொண்டன
இவர்களைத் தொழுது தொழுது நின்று ஆர்த்தும் தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்கிறார் –

——————————————

இடங்கொள் சமயத்தை எல்லாம் எடுத்துக் களைவன போலே
தடங்கடற் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களே யாய்க்
கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பலபல பாடி
நடந்தும் பறந்தும் குனிந்தும் நாடகம் செய்கின்றனவே.–5-2-4-

சர்வ ஜகத்தையும் ஆக்ரமித்துக் கொண்டு இருக்கிற வேத பாஹ்ய சமயங்களை எல்லாம் எடுத்துக் களைவன போலே
ஜகத்து எல்லாம் தடம் கடல் பள்ளிப் பெருமான் தன்னுடைப் பூதங்களேயாய் -பரம புருஷ நிரவதிக கல்யாண குண அம்ருத பணத்தாலே
மத்தராய்க் கிடந்தும் இருந்தும் எழுந்தும் கீதம் பல பல பாடி நடந்தும் பறந்தும் குனிந்தும் இங்கனே தர்ச நீயமான
சேஷ்டிதங்களைப் பண்ணா நின்றார் –
இவர்களைத் தொழுது தொழுது நின்று ஆர்த்தும் தொண்டீர் எல்லீரும் வாரீர் என்கிறார் –

————————————————

செய்கின்ற தென் கண்ணுக்கு ஒன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து
வைகுந்தன் பூதங்களே யாய் மாயத்தினால் எங்கும் மன்னி
ஐயம் ஒன்றில்லை அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல்
உய்யும் வகை இல்லை தொண்டீர் ஊழி பெயர்த்திடும் கொன்றே.–5-2-5-

என் கண்ணுக்கு ஓன்று செய்கிறாப் போலே இரா நின்றது -என் என்னில் -இந்த லோகத்தில் எங்கும் ஆச்சர்யமாம் படி
வைகுந்தன் பூதங்களேயாய் எங்கும் அவர்களே மன்னுகையாலே அவைஷ்ணவரான உங்களுக்கு உய்யும் வகை இன்றியே
அதத் விஷய ப்ரவணரான நீங்கள் எல்லாரும் உப ஸம்ஹ்ருதராய் ஸ்ருஷ்ட்டி பேருமா போலே இருந்தது –
இது நிஸ் சம்சயம் என்கிறார் –

—————————————-

கொன்று உயிர் உண்ணும் விசாதி பகைபசி தீயன எல்லாம்
நின்று இவ் வுலகில் கடிவான் நேமிப்பிரான் தமர் போந்தார்
நன்று இசை பாடியும் துள்ளி ஆடியும் ஞாலம் பரந்தார்
சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.–5-2-6-

சர்வாத்மாக்களுடைய சர்வ ஆபாதா பரிகார்த்தமாக சங்க சக்ர கதா ஸார்ங்காதி திவ்ய ஆயுத உபேத பரம புருஷ கைங்கர்ய ஏக
ஸ்வ ரூபரான ஸ்ரீ வைஷ்ணவ ஜனங்கள் இந்த லோகத்தில் போந்து நன்று இசை பாடும் துள்ளி யாடியும் ஞாலம் பரந்தார்-
நீங்களும் இந்த தேவதைகளை விட்டு அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு எம்பெருமானை ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –

——————————————-

நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் தெய்வங்கள் உம்மை உய்யக்கொள்
மறுத்தும் அவனொடே கண்டீர் மார்க்கண்டேயனும் கரியே
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை
இறுப்பதெல்லாம் அவன் மூர்த்தி யாயவர்க்கே இறுமினே.–5-2-7-

மற்று நாங்கள் ஆஸ்ரயிக்கிற ப்ரஹ்ம ருத்ராதி தேவதைகள் எங்களுக்கு ரக்ஷகராக மாட்டாரோ என்னில்
உங்களாலே ஸமாச்ரிதைகளான தேவதைகள் உங்களை எம்பெருமான் ரஷிக்கும் இடத்தில் புருஷகாரமாம் அத்தனை –
இப்பொருளில் மார்க்கண்டேயனும் சாக்ஷி
ஆகையால் நாராயணனே சர்வேஸ்வரன் -இதில் ஒன்றும் சமசயிக்க வேண்டா -ஆகையால் அவனை ஆஸ்ரயியுங்கோள்
அக்னி இந்திராதி தேவதைகளையும் ஆராத்யதயா சாஸ்திரங்கள் பிரதிபாத்தியா நின்றன இறே என்னில்
அப்படி அன்று சாஸ்திரங்களில் சொல்லுகிறது -எங்கனே என்னில்
அக்னி இந்திராதி ஸமஸ்த தேவதா அந்தர்யாமிதயா சரீரி பூதனான பரம புருஷனே சர்வ கர்ம சாமராத்யன் என்கிறது
ஆனபின்பு நித்ய நைமித்திக காம்ய ரூப சர்வ கர்மங்களாலும் அக்னி இந்திராதி ஸமஸ்த தேவதா அந்தர்யாமியான
பரம புருஷனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்-

———————————–

இறுக்கும் இறை இறுத்து உண்ண எவ்வுலகுக்குந் தன்மூர்த்தி
நிறுத்தினான் தெய்வங்களாக அத் தெய்வ நாயகன் தானே
மறுத் திரு மார்வன் அவன் தன் பூதங்கள் கீதங்கள் பாடி
வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார் மேவித் தொழுது உய்ம்மினீரே.–5-2-8-

கேவல இந்த்ராதிகளையே ஸ்வ கர்மங்களாலே சமாராதித்து ஸ்வ அபி லஷிதா புத்ர பசுவாதி பலன்களை
அவர்கள் பக்கலிலே பெற்று அன்றோ எல்லாரும் பூஜிக்கிறது என்னில் -இந்த்ராதிகளை எல்லாரும்
ஸ்வ அதிகார அநு குண கர்மங்களாலே யாராதித்து ஸ்வ அபி லஷிதங்களைப் பெற்று அநுபவிக்கும் படி அந்த சர்வேஸ்வரனான
பரம புருஷன் தானே ஸ்வ சரீர பூதரான அந்த இந்த்ராதிகளை சர்வ கர்ம சமாராத்யாராய் சமாராதாக அபி லஷிதா பல பிரதான
சமர்த்தராம்படி பண்ணி அருளினான்
ஆதலால் அவனே சர்வேஸ்வரன் -இப்படி சர்வேஸ்வரன் ஆகையாலும் பகவத் ஏக போகரான ஸ்ரீ வைஷ்ணவர்களாலே
இந்த லோகம் பூர்ணமாகையாலும் நீங்களும் எம்பெருமானையே அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு
ஆஸ்ரயித்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –

—————————————-

மேவித் தொழுது உய்ம்மின்னீர்கள் வேதப் புனித இருக்கை
நாவிற் கொண்டு அச்சுதன் தன்னை ஞான விதி பிழையாமே
பூவிற் புகையும் விளக்கும் சாந்தமும் நீரும் மலிந்து
மேவித் தொழும் அடி யாரும் பகவரும் மிக்கது உலகே.–5-2-9-

பகவத் ஸ்வரூப ரூப குண விபூதி ப்ரதிபாதகமாய் பரி ஸூத்தமான ருக்குகளைச் சொல்லிக் கொண்டு பக்தி மார்க்கம் தப்பாமே
புஷ்ப தூப தீபாதுலேபந சலிலாத் உபகரணங்களாலே அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு எம்பெருமானுக்கு அடிமை செய்கிற பரிஜனங்களும்
பரம புருஷ குண சேஷ்டிதஅனுபவ ஏக போகரான திவ்ய ஜனங்களுமே யாயிற்று இந்த லோகம்
நீங்களும் அப்படியே அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு எம்பெருமானுக்கு அடிமை செய்து உஜ்ஜீவியுங்கோள் என்கிறார் –

————————————————

மிக்க உலகுகள் தோறும் மேவிக் கண்ணன் திருமூர்த்தி
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாகத்
தொக்க அமரர் குழாங்கள் எங்கும் பரந்தன தொண்டீர்!
ஒக்கத் தொழகிற்றிராகில் கலியுகம் ஒன்றும் இலையே.–5-2-10-

சதுர்முக பசுபதி சத்தமாக ப்ரப்ருதி சமாஸ்தா தேவ நிகரங்களும் பரம புருஷ ஸமாச்ரயணத்தாலே சப்த லோகாதிபத்யரானார்கள்
ஆனபின்பு நீங்களும் அவர்களை போலே எம்பெருமானை யாஸ்ரயிக்க வல்லி கோளாகில் இக்கலியுகம் ஒன்றும் இல்லை -என்கிறார்

——————————————–

கலியுகம் ஒன்றும் இன்றிக்கே தன்னடியார்க்கு அருள் செய்யும்
மலியும் சுடரொளி மூர்த்தி மாயப் பிரான்கண்ணன் தன்னைக்
கலிவயல் தென்னன் குருகூர்க் காரிமாறன் சடகோபன்
ஒலிபுகழ் ஆயிரத்து இப்பத்து உள்ளத்தை மாசறுக் கும்மே.–5-2-11-

ஸ்வ ஆஸ்ரிதர் அபேக்ஷித்தால் கலியுகத்தையே க்ருத யுகமாக்கி யருளும் ஸ்வ பாவனாய் இருந்த எம்பெருமானைச் சொன்ன
இத்திருவாய் மொழி ஸ்ரீ வைஷ்ணவத்வ விரோதி சகல விரோதங்களையும் போக்கும் என்கிறார் –

———————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: