பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –5-1–

இப்படி எம்பெருமானை ஆஸ்ரயியுங்கோள் என்று பிறரைக் குறித்து அருளிச் செய்தருளி -தம் பக்கலுள்ள பிராதிகூல்யங்கள் ஒன்றும் பாராதே
நிர்ஹேதுகமாக எம்பெருமான் ஸ்வ சர்வேஸ்வர ஞானத்தையும் -ஸ்வ கைங்கர்ய ப்ராப்யத்வ ஞானத்தையும்
தமக்குக் கொடுத்தருளித் தம்மை ஸ்வ அனுபவ ஏக தாரக போஷாக்கை போக்யராக்கி த் தம் பக்கல் நிரதிசய வ்யாமுக்தனாய்க் கொண்டு
தம்மோடு ஸம்ஸ்லேஷித்த படியை ப்ரீதி அதிசயத்தாலே அருளிச் செய்கிறார் –

——————————–

கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-

ஸ்வ சரண யுகள ஸ்நேஹ கந்த ரஹிதனாய் பிராகிருத விஷய ப்ரவணனாய் இருந்து வைத்து
ஸ்வ விஸ்லேஷத்தில் ஆத்ம தாரண ஷமர் அல்லாதாரைப் போலே
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று நான் சொல்ல என்னுடைய இந்த அதி துஸ் சம்மண பிராதி கூல்யத்தை
ஒன்றும் பாராதே என்னை மெய்யாக ஸ்வ அனுபவ ஏக போகனாக்கி என்னோடே கலந்து அருளினான்
எம்பெருமானுடைய நிரவதிக காருண்ய சமுத்திரம் கறை யுடைந்து பெருக்கப் புக்கால் எம்பெருமான் தன்னாலும் தடுக்க முடியதாகாதே
அவன் சர்வ சக்தன் அல்லனோ அவனாலே முடியாதது உண்டோ என்னில் வல்லனாகில் போவது இறே என்கிறார் –

—————————————–

போனாய் மாமருதின் நடுவே! என் பொல்லா மணியே!
தேனே! இன்னமுதே! என்றேன்றே சில கூத்துச் சொல்லத்
தானேல் எம்பெருமான் அவன் என்னாகி ஒழிந்தான்
வானே மாநிலமே மற்றும் முற்றும் என்னுள்ளனவே.–5-1-2-

தன் திறத்திலே ப்ரேம கந்த ரஹிதனாய் இருந்து வைத்து நிரதிசய ப்ரேம யுக்தர் சொல்லும் பாசுரங்களை
நான் சொல்ல சர்வேஸ்வரனான தான் அத்யந்த நிஹீன தரனான என்னுள்ளே ச பரிகாரமாக வந்து புகுந்து அருளினான் என்கிறார்

——————————————–

உள்ளன மற்று உளவா புறமே சில மாயம் சொல்லி
வள்ளல் மணி வண்ணனே என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும்
கள்ள மனம் தவிர்ந்தே உன்னைக் கண்டு கொண்டு உய்ந்து ஒழிந்தேன்
வெள்ளத்து அணைக் கிடந்தாய் இனி உன்னை விட்டு என் கொள்வனே –5-1-3-

அந்த கரணம் பிராகிருத விஷய ப்ரவணமாய் இருக்கச் செய்தே சர்வஞ்ஞனான நீயும் கூட மெய் என்று இருக்கும் படி
வள்ளல் மணி வண்ணனே என்று என்று புறமே சில மாயம் சொல்லி வஞ்சிக்க நான் இப்போது உன்னுடைய ப்ரஸாதத்தாலே
அந்தக் கள்ளம் தவிர்ந்து அக்ருத்ரிம நிரவதிக பக்தி யுக்தனாய் உன்னைக் கண்டு கொண்டு ஒழிந்தேன் –
வெள்ளத்தணைக் கிடந்தாய் இனி நான் ஆத்மார்த்தமாக உன்னை அல்லது மற்றொரு ப்ராப்யம் வேண்டேன் என்கிறார் –

——————————————-

என் கொள்வன் உன்னை விட்டு என்னும் வாசகங்கள் சொல்லியும்
வன் கள்வனேன் மனத்தை வலித்துக் கண்ண நீர் கரந்து
நின் கண் நெருங்க வைத்தே எனது ஆவியை நீக்க கில்லேன்
என் கண் மலினம் அறுத்து என்னைக் கூவி அருளாய் கண்ணனே –5-1-4-

த்வத் ப்ராப்த்ய அபேக்ஷை யுண்டாய் இருக்கச் செய்தேயும் த்வத் குண அனுசந்தானத்தாலே சிதில மனஸ் சஷூராதி
சர்வ கரணனாகையாலே -அவற்றை நிலை நிறுத்தி த்வத் ஏக ப்ரவணமாக்கி வைக்க நான் ஷமன் ஆகிறேன் இலேன் –
ஆனபின்பு நீயே உன்னுடைய நிரவதிக கிருபையால் என்னை இப்போது த்வத் இதர சகல விஷய விமுக சர்வ கரணனாய்
த்வத் ஏக தாரகனாய் த்வத் விஸ்லேஷ அஸஹிஷ்ணுவாம் படி பண்ணி அருளினாய் –
இனி இந்த பிரதிபந்தகத்தையும் போக்கி உன் திருவடிகளிலே என்னை வாங்கி அருளாய் என்கிறார் –

———————————————

கண்ண பிரானை விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை
நண்ணியும் நண்ணகில்லேன் நடுவே ஓர் உடம்பிலிட்டுத்
திண்ணம் அழுந்தக் கட்டிப் பல செய்வினை வன் கயிற்றால்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே.–5-1-5-

ஸ்ரீ வைகுண்ட நிலையனாய் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்து வைத்து -சர்வ போக்யனாம்படி வந்து
வஸூ தேவ க்ருஹ அவதீர்ணனான உன்னைக் கண்டு வைத்தும் உன் திருவடிகளை பிராபிக்கப் பெறுகிறிலேன் –
என் தான் என்னில் நடுவே ஒரு உடம்பில் இட்டுப் பல செய் வினை வன் கயிற்றால் திண்ணம் அழுந்தக் கட்டிப்
புண்ணை மறைய வரிந்து என்னைப் போர வைத்தாய் புறமே -அதனாலே என்கிறார்

—————————————–

புறமறக் கட்டிக் கொண்டு இருவல் வினையார் குமைக்கும்
முறை முறை யாக்கை புகல் ஒழியக் கண்டு கொண் டொழிந்தேன்
நிறமுடை நால் தடந்தோள் செய்ய வாய் செய்ய தாமரைக் கண்
அறமுயல் ஆழி அங்கைக் கருமேனி அம்மான் தன்னையே–5-1-6-

தம்முடைய இந்த தேஹ சம்பந்த பிரதிபந்தகம் போயிற்றது என்று தோற்றும்படி தமக்கு எம்பெருமான் தன்னை உள்ளபடியே காட்டியருள
அப்படியே கண்டு ப்ரீதராய் அந்த ப்ரீதி அதிசயத்தாலே தாம் கண்டபடியைப் பேசுகிறார் –

———————————————-

அம்மான் ஆழிப் பிரான் அவன் எவ்விடத்தான்? யான் ஆர்?
எம் மா பாவியர்க்கும் விதி வாய்க்கின்று வாய்க்குங் கண்டீர்
கைம்மா துன்பொழித்தாய்! என்று கை தலை பூசலிட்டே
மெய்ம் மாலாய் ஒழிந்தேன் எம்பிரானும் என் மேலானே.–5-1-7-

சர்வ பிரகாரத்தாலும் அத்யந்த நிஹீதனாய்-கைம்மா துன்பொழித்தாய்! என்று-பொய்யே தொழுது அலற்றுகையாகிற
பிராதி கூல்ய யுக்தனுமாய் இருந்த என்னை சர்வ ப்ரகாரேண அபி நிரஸ்த சமாப்ய=திகனாய் இருந்த தான் தன்னுடைய
நிரவதிக காருண்யத்தாலே ஸ்வ விஷய நிரதிசய அக்ருத்ரிம பக்தி யுக்தனாக்கித் தானும் நிரதிசய
அபி நிவேச யுக்தனாய்க் கொண்டு என்னுள்ளே வந்து புகுந்து அருளினான் என்கிறார் –

———————————————————

மேலாத் தேவர்களும் நிலத்தேவரும் மேவித் தொழுஉம்
மாலார் வந்து இனநாள் அடியேன் மனத்தே மன்னினார்
சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும்
மேலாத் தாய் தந்தையும் அவரே இனி ஆவாரே.–5-1-8-

நித்ய சித்த புருஷர்களாலும் கர்ம பூமியிலே வர்த்தமானராய் ப்ரக்ருதி ஸம்ஸ்ருஷ்டராய் இருந்து வைத்து
ஸ்வ அனுபவ ஏக போகரான திவ்ய புருஷர்களாலும் அபிவந்த்ய மானனான எம்பெருமான் இனநாள் அடியேன் மனத்தே மண்ணினான்
இனி சர்வ காலமும் எனக்கு -சேலேய் கண்ணியரும் பெருஞ் செல்வமும் நன்மக்களும் மேலாத் தாய் தந்தையும்
மற்றும் எல்லாம் ஆவான் அவன் என்கிறார் –

———————————————–

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்
நாவாய் போல் பிறவிக் கடலுள் நின்று நான் துளங்கத்
தேவார் கோலத் தொடும் திருச் சக்கரம் சங்கினொடும்
ஆஆ! என்று அருள் செய்து அடியேனொடும் ஆனானே.–5-1-9–

ஆவார் ஆர் துணை? என்று அலை நீர்க் கடலுளழந்தும்-நாவாய் போல் பிறவிக் கடலுள் உள்ளே அதி தயா நீயனாம்படி நின்று நான் நடுங்க
எம்பெருமான் தன்னுடைய நிரவாதிக காருண்யத்தாலே -ஆவான் என்று அருள் செய்து தன்னுடைய சர்வ லோகேஸ்வரத்வ ஸூசகமான
நிரவாதிக ஸுந்தர்யத்தோடும் திருவாழி திருச் சங்கு தொடக்கமாகவுள்ள திவ்ய ஆயுதங்களோடும் கூட வந்து
அவர்களோடு கலந்து அருளுமா போலே அடியேனெடும் கலந்து அருளினான் -என்கிறார்-

——————————–

ஆனான் ஆளுடையான் என்றஃ தே கொண்டுகந்து வந்து
தானே இன்னருள்செய்து என்னை முற்றவும் தானானான்
மீனாய் ஆமையுமாய் நர சிங்கமுமாய்க் குறளாய்க்
கானார் ஏனமுமாய்க் கற்கியாம் இன்னம் கார்வண்ணனே.–5-1-10-

தான் என்னோடே பண்ணின சம்ச்லேஷத்தை அனுசந்தித்த இத்தனையுமே கொண்டு உகந்து வந்து தானே இன்னருள் செய்து
இதுக்கு முன்பு என்னோடு ஒன்றுமே ஸம்ஸ்லேஷியாதானாய்க் கொண்டு என்னை வேறுபாடாக காண ஒண்ணாததொரு படி ஸம்ஸ்லேஷித்து
இதுக்கு முன்பு தான் பண்ணி யருளின சர்வ திவ்ய அவதாரங்களையும் எனக்கு போக்யமாகக் காட்டி அருளினான் –
ஆதலால் இதற்கு முன்பு தான் பண்ணி யருளின இந்தத் திரு வவதாரங்கள் எல்லாம் என் பக்கலுள்ள அபி நிவேசத்தாலே –
வேறும் எனக்காகப் பண்ண எண்ணினத்துக்கும் முடிவுண்டோ என்கிறார் –

——————————————————-

கார் வண்ணன் கண்ண பிரான் கமலத் தடங்கண்ணன் தன்னை
ஏர் வள வொண் கழனிக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
சீர் வண்ண வொண் தமிழ்கள் இவை ஆயிரத்துள் இப்பத்தும்
ஆர் வண்ணத் தாலுரைப்பார் அடிக் கீழ்ப் புகுவார் பொலிந்தே.–5-1-11-

நீல மேக நிபனாய் புண்டரீக தள அமலாய தேஷணனாய் ஆஸ்ரித ஸூலபனான எம்பெருமானைச் சொன்ன
இத்திருவாய் மொழியை ஆர் வண்ணத் தாலுரைப்பார் பகவச் சேஷதைக ரதிகளாய்க் கொண்டு
அவன் திருவடிகளின் கீழே புகப் பெறுவார் என்கிறார் –

————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: