ஸ்ரீ யாமுனாசார்யர் அருளிச் செய்த-ஸ்ரீ தத்வ பூஷணம் –

ஸ்ரீ மாலாதர வம்ச மௌக்திக மணி கண்டீரவோ வாதி நாம்
நாம்நா யமுனா தேசிக கவிவர பாதாஞ்சலே பண்டித –யோக சாஸ்திரத்தில் சிறந்தவர் -வாதிகளுக்கு ஸிம்ஹம் போன்றவர்

ஆக்யாய யாமுனாசார்ய ஸும்ய ராஜ புரோஹித
அரீ ரசதி தம் பும்ஸாம் பூஷணம் தத்வ பூஷணம் –

ஸ்ரீ திருமாலை ஆண்டான் திருக் குமாரர் -ஸ்ரீ சுந்தரத் தோளுடையான்-என்னும் ஸ்ரீ பெரியாண்டான் –
அவர் திருக் குமாரர் -இளையாழ்வார் -என்று எம்பெருமானார் திருநாமம் சாத்த –
இவர் உடைய பௌத்ரர் ஸ்ரீ யமுனாசார்யர் –
இவர் வாதிகேசரி அழகிய மணவாள சீயர் உடைய சிஷ்யர்-
இவர்-ஸ்ரீ ப்ரமேய ரத்னம் -ஸ்ரீ தத்வ பூஷணம் -ஸ்ரீ ரஹஸ்ய த்ரய சாரம் (இது தற்போது கிடைக்க வில்லை ) -மூன்று நூல்களை இயற்றி அருளி உள்ளார் –

நெஞ்சினால் நினைந்தும் வாயினால் மொழிந்தும் நீதி யல்லாதன செய்தும் -என்று சொல்லுகிறபடியே த்ரிவித கரணங்களாலும் பாபார்ஜனம் பண்ணி
ஓடி ஓடிப் பல பிறப்பும் -என்கிறபடியே -பிறப்பது இறப்பதாய்-வேத நூல் பிராயம் நூறு மனுசர் தாம் புகுவரேலும் பாதியும் உறங்கிக் கழிப்பது –
நின்றதில் பதினை ஆண்டிலே பேதை பாலகனாய்க் கழிப்பது
நடுவில் உள்ள காலத்திலே-சூதனாய்க் கள்வனாய் தூர்த்தரோடு சேர்ந்து அல்ப சாரங்களை அனுபவிக்கைக்காக அஸேவ்ய சேவை பண்ணுவது
அதில் ஆராமையாலே பர த்ரவ்ய அபஹாரம் பண்ணுவது -அதுக்கு மேலே பர ஹிம்ஸையிலே ஒருப்படுவது
பெரு நிலத்தார் உயிர்க்கு எல்லாம் செற்றமே வேண்டி -மனிசரில் துரிசனாயும் பின்புள்ள காலத்தில் –
பண்டு காமரானவாறும் பாவையர் வாயமுது யுண்டவாறும் வாழ்ந்தவாறும் ஓக்க உரைத்து இருமித் தண்டு காலா யூன்றி யூன்றித்
தள்ளி நடப்பதாய்க் கொண்டு -பால்யத்தில் அறிவில்லாதனாயும் -யவ்வனத்தில் விஷயபரனாயும் -வார்த்தக்யத்திலே அசக்த கரணனாயும் -இப்படி
பழுதே பல பகலும் கழித்துப் -புறம் சுவர் கோலம் செய்து -நண்ணாதார் முறுவலிப்ப நல்லுற்றார் கரைந்து ஏங்கும்படி முடிவிலே முள் கவ்வக் கிடப்பது –
ஈங்கி தன் பால் வெந்நரகம் என்று அனந்தரம் நரகானுபவம் பண்ணுவது
அனுபவிக்கும் இடத்து வெஞ்சொலாளர்கள் நமன் தமர் கடியர் கொடிய செய்வனவுள-என்கிறபடியே
பயங்கரரான எம கிங்கரருடைய வெவ்விதான சொற்களாலும் ஈடுபடுவது
அதுக்கு மேலே ரௌரவம் மஹா ரௌரவம் என்று தொடங்கி உண்டான நன்றாக விசேஷங்களை அனுபவிப்பது
பிறர் பொருள் தாரம் என்று இவற்றை நம்பினால் எரி எழுகின்ற செம்பினால் இயன்ற பாவையைத் தழுவுவதாய்
இப்படி அறுப்புண்பது சூடுண்பது தள்ளுண்பதாய் -நாநா விதமான நரக அனுபவம் பண்ணுவது
மீண்டு கர்ப்ப வேதனையை அனுபவிப்பதாய் -மாதாவினுடைய கர்ப்ப கோளகத்தோடு எம தண்டமோடு வாசியறப் போக்குவரத்து செய்து
ஒத்து ஒவ்வாத பல் பிறப்பிலே பிறப்பதாய் படுகிற கண் கலக்கத்தைக் கண்டு
ஏவம் சம்ஸ்ருதி சக்ரஸ்தே பிராம்யமாணே ஸ்வ கர்மபி –ஜீவே து காகுலே விஷ்ணோ க்ருபா காப்யுபாஜாயதே-என்றும்
நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன் -என்றும் சொல்லுகிறபடியே ராஜாவானவன் தண்டயனாய் இருப்பான் ஒருவனை
ஒவ்வொரு பகுதியாகக் கட்டினால் ஒரு பகுதியிலே இவன் படும் ஈடுபாட்டைக் கண்டு மற்றைப் பகுதிகளைக் கழித்துப் பொகடுமா போலே
ஈஸ்வரனும் ஒரு கர்மத்தில் இவன் படும் ஈடுபாட்டைக் கண்டு ஒரு கர்மத்தினுடைய முடிவிலே ஒரு கர்மம் ஆரம்பிப்பதற்கு முன்னே
நடுவே நிர்ஹேதுக கடாக்ஷத்தைப் பண்ணா நிற்கும்
இது அடியாக இவன் பக்கலிலே யாதிருச்சிக்க ஸூஹ்ருதம் பிறக்கும்
இத்தாலி சர்வம் பிரகாசிக்கும் -சத்வம் விஷ்ணு பிரகாசகம் -என்கிறபடியே
சத்வ குணத்தால் பகவத் பிரபாவம் நெஞ்சிலே படும்
இது நெஞ்சிலே படப் பட த்யாஜ்ய உபாதேய விபாகம் பிறக்கும்
இது அறிகைக்காக சாஸ்த்ர அபேக்ஷை பிறக்கும் –
இந்த சாஸ்த்ர ஸ்ரவணம் பண்ணுகைக்காக ஆச்சார்ய அபேக்ஷை பிறக்கும்
அவ்வபேஷை பிறந்தவாறே -தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஸ்நேந சேவயா -உபதேஷ்யந்தி
தே ஜ்ஞானம் ஜ்ஞானி நா தத்வ தர்சிந -என்கிறபடியே ஆச்சார்ய அநு வர்த்தகம் பண்ணும்
அவ்வநுவர்த்தனத்தாலே இவன் அளவிலே பிரசாதம் பிறக்கும்
ஆச்சார்யவான் புருஷ வேத -என்கிறபடியே ஆச்சார்யரானவர் இவன் பக்கலிலே தனக்குப் பிறந்த
பிரசாதம் அடியாக அர்த்த உபதேசத்தை பண்ணா நிற்கும்
இவ்வர்த்த உபதேசத்தால் -பாணனார் திண்ணம் இருக்க -என்கிறபடியே இவனுக்கு அத்யவசாயம் பிறக்கும்
இவ்வத்யவசாயத்தாலே பகவத் அங்கீ காரம் பிறக்கும்
பகவத் அங்கீ காரத்தாலே சத் கர்ம ப்ரவ்ருத்தி யுண்டாகும்
இக்கர்ம பரிபாகத்தாலே ஞானம் பிறக்கும்
அந்த ஞான பரிபாகத்தாலே பிரேம ரூபையான பக்தி பிறக்கும்
பக்தி யநந்தரம் பகவத் கடாக்ஷம் பிறக்கும்
பகவத் கடாக்ஷ விசேஷத்தாலே ஸாத்ய உபாய நிவ்ருத்தியும் சித்த உபாய நிஷ்டையும் பிறக்கும்
சித்த உபாய நிஷ்டையாலே ப்ரபந்ந அதிகாரம் பிறக்கும்
இப்படிக்கு ஒத்த பிரபன்ன அதிகாரிக்கு ஸ்வரூப சித்தி பிறப்பது தத்வ தர்சனத்தாலே
இங்கு தத்வம் என்னப் பார்க்கிறது உபாய உபேய தத்வங்களை
உபாய உபேயத்வ ததிஹ தவ தத்வம் ந து குணவ் -என்கையாலே இவ்வதிகாரிக்கு உபாய உபேய ரூபமான தத்வ தர்சித்தவம் யுண்டாம் போது
ஞாதவ்யமாய் இருப்பது மூன்றாய் இருக்கும் -தத்வ த்ரய விஷய ஞானமும் –தத்வ த்வய வைராக்கியமும் -தத்வ ஏக விஷய பக்தியும்
இதிலே தத்வ த்ரய விஷய ஞானமாவது -அசித் விஷய ஞானமும் -சித் விஷய ஞானமும் -ஈஸ்வர விஷய ஞானமுமே –
அசித்து த்யாஜ்யதயா ஞாதவ்யம் -சித்து த்யாஜ்ய உபாதேய தயா ஞாதவ்யம் -ஈஸ்வரன் உபாதேய தயா ஞாதவ்யன் –

இதில் அசித்து மூன்று படியாய் இருக்கும் -அவ்யக்தம் -வியக்தம் -காலம் –
இதில் அவ்யக்தத்தின் நின்றும் மஹான் பிறக்கும்
மஹானின் நின்றும் அஹங்காரம் பிறக்கும் –
அஹங்காரத்தின் நின்றும் சாத்விக ராஜஸ தாமச ரூபங்களான குண த்ரயங்கள் பிறக்கும்
அதில் சாத்விக அஹங்காரத்தின் நின்றும் ஸ்ரோத்ர த்வக் சஷூர் ஜிஹ்வா க்ராணங்கள் ஆகிற ஞான இந்திரியங்கள் ஐந்தும்
வாக் பாத பாணி பாயு உபஸ்தங்கள் ஆகிற கர்ம இந்திரியங்கள் ஐந்தும்
இந்திரிய கூடஸ்தமான மனஸ்ஸூம் -ஆக இந்திரியங்கள் -11-பிறக்கும்
தாமச அஹங்காரத்தின் நின்றும் சப்த ஸ்பர்ச ரூப ரஸ கந்தங்களும்
தத் குண ரூபமான பிருத்வி அப்பு தேஜோ வாயு ஆகாசங்கள் என்கிற பஞ்ச பூதங்களும் பிறக்கும்
ராஜஸ அஹங்காரம் இரண்டுக்கும் ஸஹ காரியாய் இருக்கும்
ஆக இப்படி வியக்தமாகிறது -23- தத்வமாய் இருக்கும்
அவ்யக்தமானது இவ் வ்யக்தத்துக்கும் காரணமாய் -குண த்ரயங்களினுடையவ் சாம்யா அவஸ்தையை யுடைத்தாய்
மூல ப்ரக்ருதி சப்த வாஸ்யமாய் -முடிவில் பெரும் பாழ்-என்று சொல்லும்படியாய் இருக்கும்
இனி காலமும் அசித் விசேஷமுமாய் -நித்தியமாய் ஜடமாய் நிமிஷ காஷ்டாதி விகாரங்களை யுடைத்தாய்
எம்பெருமானுக்கு பிரகாரதயா சேஷமாய் இருக்கும் –
இவ்வசித்தை -24-தத்துவமாக பிரதமாச்சார்யரும் மங்கவொட்டு-என்கிற பாட்டிலே அனுசந்தித்து அருளினார்
ஆக இவ்வசித் தத்வம் -நித்தியமாய் -ஜடமாய் -விபூவாய் -குண த்ரயாத்மகமாய் -சதத பரிணாமியாய் –
சந்தத க்ஷண க்ஷரண ஸ்வ பாவமாய் -சர்வேஸ்வரனுக்கு லீலா உபகாரணமாய் இருக்கும் –

அநந்தரம் சித் ஸ்வரூபம் இருக்கும் படி என் என்னில்
அப்ராக்ருதமாய் -ஞான ஸ்வரூபமாய் -ஞான குணகமுமாய்-அஹம் புத்தி கோசாரமுமாய் -ஆனந்த ரூபமாய் –
உத்க்ரந்திகத்யாதிகள் உண்டாகவே அநு பூதமாகையாலே தீபமும் ப்ரபையும் போலே ஸ்வரூப ஸ்வ பாவத்தை யுடையதாய் –
அநேகமாய் -அகார வாச்யனான எம்பெருமானுக்கு அப்ருதக் சித்த விசேஷணமாய் இருக்கும்
திருமாளையாண்டான் பெரிய முதலியாரைப் பார்த்து ஆத்மாவினுடைய வேஷம் இருக்கும்படி என் என்று விண்ணப்பம் செய்ய
சேஷத்வமும் பாரதந்தர்யமும் காண் வேஷமாய் இருப்பது என்று அருளிச் செய்தார் –
கூரத் தாழ்வான்-இவ்வாத்மாவுக்கு உஜ்ஜீவனம் எம்பெருமானுடைய கிருபை என்று பணிக்கும் –
முதலியாண்டான் -ஈஸ்வர ஸ்வா தந்தர்யம் உஜ்ஜீவனம் என்று நிர்வஹிப்பர் –
நம்பிள்ளையை ஆத்மஸ்வரூபம் இருக்கும் படி என் என்று கேட்க உன் இணைத் தாமரைகட்கு அன்புருகி நிற்குமது என்று அருளிச் செய்தார்

இப்படிக்கொத்த ஆத்மாக்களும் மூன்று படியாய் இருக்கும் -நித்யர் -முக்தர் பத்தர் -என்று
நித்யராவார் அஸ்ப்ருஷ்ட சம்சார கந்தராய் -பகவத் இச்சையாலே அவனுடைய திவ்ய குணங்களோபாதி நித்யபூதராய்
யத்ர பூர்வே ஸாத்யாஸ் சந்திதேவ -என்றும் -விண்ணாட்டவர் மூத்தவர் -என்றும் –
சொல்லலாம்படியான அனந்த கருட விஷ்வக்ஸேன ப்ரப்ருதிகளான ஸூரிகள்-
முக்தராவார் -சந்த்ரைகத்வம் ச்ருதமானாலும் சாஷூஷமான திமிரதோஷம் நிவ்ருத்தம் ஆகாமையாலே சந்த்ர த்வித்வ புத்தி
அநு வர்த்திக்குமோபாதி பிரக்ருதே பரம் -என்கிற ஸ்ரவண ஞானம் யுண்டேயாகிலும் ஆத்ம சாஷாத்காரம் இல்லாமையால்
பின்னையும் தேகாத்ம அபிமானம் அநு வர்த்திக்க
சதாச்சார்ய பிரசாதத்தாலே ஆத்ம சாஷாத்காரமும் பிறந்து அதடியாக தேகாத்ம அபிமானம் நிவ்ருத்தமாயும்
பகவத் ஏக போக்யதா விஷய சாஷாத் காரத்தாலே -விஷயாந்தர ருசி நிவ்ருத்தமாயும் –
அந்த ஞான விசேஷத்தாலே -அதனில் பெரிய என் அவா -என்கிறபடியே
கங்கு கரையுமற பெருகுகிற காவேரி போலே நடக்கிற பகவத் ப்ரேமம் என்ன
ப்ரேம அநு ரூபமாக நடக்கிற பகவத் நிரந்தர அனுபவ ஆத்மகதை என்ன
அந்த அனுபவ விரோதியான தேக பரித்யாகம் என்ன -அர்ச்சிராதி மார்க்க கமனம் என்ன –
அவ்வர்ச்சிராதி மார்க்க கமனத்தோடே போம்போது சூழ் விசும்பு அணி முகில் தூரியம் முழக்கின-
ஆழ் கடல் அலை திரை கை எடுத்தாடின -என்கிறபடியே ஆகாசமானது மேக முகத்தால் திரைகளாகிற
கைகளை எடுத்து ச சம்பிரம ந்ருத்தம் பண்ண -ஓங்காரம் ரதம் ஆருஹ்ய -என்கிறபடியே
பிரணவம் ஆகிற தேரிலே ஏறி மநோ ரதத்தோடே கூடிக் கொண்டு
மனஸ்ஸானது ஸுமநஸ்யம் தோன்றும்படி சாரத்யம் பண்ணி வாயு லோகத்தில் சென்ற அளவிலே அவனும்
தன்னுடைய பாவனத்வம் தோன்றும்படி சத்கரிக்க -அநந்தரம்
தேரோர் நிறை கதிரோன் மண்டலத்தைக் கீண்டு புக்கு -என்கிறபடியே ஆதித்ய மண்டலத்தைக் கீண்டு புக்கு –
அவ்வருகே சந்த்ர லோகத்தைக் கிட்டி -அநந்தரம்
வித்யுத் புருஷன் எதிர் கொள்ள -அவ்வருகே வருண லோகத்தில் சென்று -இந்த்ர லோகத்தில் சென்று – பிரஜாபதி லோகத்தில் சென்று –
அங்குள்ளார் அடைய பூர்ண கும்பம் வைப்பார் -தோரணம் நாட்டுவார் –மங்கள தீபம் வைப்பார் -மாலைகள் கொண்டு நிற்பார் –
ஏத்துவார் -சிறிது பேர் வாழ்த்துவர் வணங்குவாராய்
வழி இது வைகுந்ததற்கு -என்று இப்படித் தந்தான் எல்லை அளவும் வந்து தர்சிக்க அவ்வருகே போய்
அண்ட கபாலத்தைக் கீண்டு தச குணோத்தரமான ஏழு ஆவாரணத்தையும் கடந்து -அநந்தரம் -மூல ப்ரக்ருதியையும் கடந்து -சம்சாரம் அற
பரமபதத்துக்கு எல்லையான விரஜையிலே வாசனா தோஷம் கழித்து அதிலே குளித்து அழுக்கு அறுப்புண்டு ஸூஷ்ம சரீரத்தைக் கழித்து
அப்ராக்ருத திவ்ய விக்ரஹத்தை பரிக்ரஹம் பண்ணி யுவராஜ உன்முகனான ராஜகுமாரன் பட்டத்துக்கு உரிய ஆனையை மேல் கொண்டு வருமா போலே
நலமந்தம் இல்லாதோர் நாட்டிலே புக்கு -ஐரம் மதீயம் -என்கிற சரஸைக் கிட்டின அளவிலே பார்த்திரு சகாசத்துக்கு போகும் பெண்பிள்ளையை
ஒப்பித்துக் கொண்டு போமா போலே -நிதியும் நற்சுண்ணமும் நிறைகுட விளக்கமும் மதிமுக மடந்தையர் ஏந்தினர் -என்கிறபடியே
ப்ரஹ்ம அனுபவத்துக்கு அநு ரூபமாக அலங்கரித்திக் கொண்டு கலங்கா பெரு நகரான பரம பதத்திலே சென்ற அளவிலே
பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவுவார் –தொடர்ந்து எங்கும் தோத்திரம் பண்ணுவார் –
கொடி யணி நெடு மதிள் கோபுரத்து வாசலிலே சென்று புக்கு
முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ளத் திரு மா மணி மண்டபத்திலே சென்ற அளவிலே -எதிர் எதிர் இமையவர் இருப்பிடம் வகுப்பார்
கதிரவர் அவரவர் கைந்நிரை காட்டுவாராய்க் கொண்டு பார்த்த இடம் எங்கும் அஞ்சலி பந்தமாம் படி மங்களா சாசனம் பண்ணுவாராய்
இவனுடைய சம்சார தாபமடைய போம்படி அம்ருத தாரைகளை வர்ஷித்தால் போலே அழகிய கடாக்ஷங்களாலே எளியப் பார்ப்பாராய்
இப்படி இவர்கள் ஆதரிக்க திவ்ய பர்யங்கத்தைக் கிட்டி -முத்தினை மணியை -என்கிறபடியே முக்தா வலிக்கு எல்லாம் நாயக்க ரத்னமான
ஸ்ரீ வைகுண்ட நாதனைக் கண்டு வேரற்ற மரம் போலே விழுந்து எழுந்திருப்பதாக அவனும் அங்கே –
பரதம் ஆரோப்ய-என்னுமா போலே அரவணைத்து அடியிலே வைக்க
அவனுடைய திவ்ய மங்கள விக்ரஹம் என்ன -தத் குண அனுபவம் என்ன -தத் கைங்கர்ய அனுபவம் என்ன –
இப்படி ச விபூதிக ப்ரஹ்ம அனுபவம் பண்ணும் பாக்யாதிகாரிகள்

பத்தராவார் -சேற்றிலே இருக்கிற மாணிக்கம் போலவும் -ராஹு க்ரஸ்தனான சந்திரனைப் போலவும் -பகவத் சேஷ பூதரான
ஆத்ம ஸ்வரூபராய் இருக்கச் செய்தேயும் அநாத்ய வித்யையாலே திரோஹித ஸ்வரூபராய் -இருட்டறையில் புக்கு
வெளிநாடு காண மாட்டாதாப் போலே இருப்பாராய் -சார்ந்த இரு வல்வினைகள் ஆகிற இரட்டை விலங்காலே கட்டுண்டு திரியக் கடவராய்
சப்தாதி விஷய பிரவணராய் ப்ரஹ்மா தலையாக எறும்பு கடையாக நடுவுல ஆத்ம ஜாதிகள்

அநந்தரம் ஈசுவரனுடைய ஸ்வரூபம் மூன்று படியாய் இருக்கும் -நியந்த்ருத்வம் -வியாபகத்வம் -உபய லிங்க விசிஷ்டத்வம்-என்று –
இதில் நியந்த்ருத்வமாவது -உபய விபூதியும் தான் இட்ட வழக்காம் படி -அவற்றுக்கு அந்தராத்மதயா நியமித்துக் கொண்டு நிற்கும் நிலை –
வியாபகத்வமாவது தன் ஸ்வரூப ஏக தேசத்திலே உபய விபூதியும் தரிக்கும் படி விபுவாய் இருக்கை-
உபய லிங்க விசிஷ்டத்வம் ஆவது -ஹேய ப்ரதிபடத்வமும்-கல்யாணை கதாநத்வமும் –
ஹேய திபடத்வம்-ஆவது -உலகு உன்னோடு ஒன்றி நிற்க வேறு நிற்றி -என்கிறபடியே தத்காதா தோஷம் தட்டாது இருக்கை –
கல்யாணை கதாநத்வமும் -ஸூபாஸ்ரயத்வம் –
ஆக இவ்விரண்டாலும் அநிஷ்ட நிவ்ருத்தியும் இஷ்ட பிராப்தியும் சொல்லுகிறது –
அதாகிறது உபாய உபேயத்வங்கள் இ றே ஈஸ்வரனுக்கு ஸ்வரூபம்

ஆக -அசித்து ஜ்ஜேயதைக ஸ்வரூபத்தாலே போக்யமாய் இருக்கும்
சித்து ஜ்ஞாத்ரு தைக ஸ்வரூபத்தாலே போக்தாவாய் இருக்கும்
பரமாத்மா நியன்தரு தைக ஸ்வாபாவத்தாலே ஈஸ்வரனாய் இருக்கும்
இப்படி மூவருடைய ஸ்வரூபத்தையும் அறிந்த பின்பு உபய விபூதிக்கும் ஈஸ்வரியான பிராட்டி ஸ்வரூபம்
அசித் கோடியிலேயோ ஆத்ம கோடியிலேயோ ஈஸ்வர கோடியிலேயோ என்று நிரூபித்தால்
அறிவுண்டாகையாலே அசித் கோடியில் அன்று -ஐஸ்வர்யத்தாலே ஆத்ம கோடியில் அன்று -நித்ய பாரதந்தர்யத்தாலே ஈஸ்வர கோடியில் அன்று
ஆனால் தத்வம் நாலாகிறதோ என்னில் அதுக்கு பிராமண உபபத்திகள் இல்லை
ஆனால் இவளுடைய ஸ்வரூபம் அறுதியிடும்படி என் என்னில் -நிரூபக விசேஷணம் -நிரூபித விசேஷணம் என்று இரண்டாய்
சேதனன் நிரூபித விசேஷணமாய் இவள் நிரூபக விசேஷணமாய் இருக்கும்
ஆனால் அஸ்ய ஈஸாநா ஜகத -என்றும் -ஈஸ்வரீம் சர்வ பூதானாம் -என்றும் -ஸ்ருதிகளிலே ஈஸ்வரியாக ஓதிப் போருகையாலே ஈஸ்வர கோடியிலேயாகக் குறையில்லையே என்னில்
அப்போது நாட்டுக்கு இரண்டு ஈஸ்வரர்கள் கூடாமையாலும்
பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் –ஷராத்மாநா வீசதே தேவ ஏக –என்றும் தொடங்கி உண்டான பிராமண பரம்பரைகளுக்கு
விரோதம் பிறக்கையாலும் யுக்தி இல்லாமையாலும் ஈஸ்வரத்வம் கூடாது –
அங்கு ஓதிப் போருகிற ஈஸ்வரத்வம் பத்னீத்வ நிபந்தனமாகக் கடவது –ராஜ மஹிஷியை சோபசாரமாகச் சொல்லாத போது
அவனுடைய ரோஷத்துக்கு இலக்காம் அத்தனை இறே
பும்பிரதான ஈஸ்வர ஈஸ்வரீம் -என்று தொடங்கி இவளுடைய வைபவங்களை ப்ரதிபாதிக்கிற பிரதேசங்களில் அவளுடைய
போக்யதா அதிசயத்தை சொல்லுகிறது அத்தனை

ஆனால் ஈஸ்வரனோ பாதி இவளுக்கும் ஜகத் காரணத்வம் உண்டாகத் தடை என் என்னில் -ஒருவனுக்கு காரணத்வம் உண்டாம் போது
க்ராஹக ஸாமர்த்யத்தாலும்-அன்வய வ்யதிரேகத்தாலும் -அர்த்தாபத்தியாலும்-ஸ்ருதியாதி பிரமாணங்களாலும் இறே உண்டாகக் கடவது
இவளுக்கு காரணத்வ சக்தி யுண்டாகையாலே தர்மி க்ராஹத்வம் யுண்டு
பிரபஞ்சம் இவள் பார்த்த போது யுண்டாய் தத் அபாவத்திலே இல்லாமையால் அன்வய வ்யதிரேகம் யுண்டு –
இது தன்னாலே அர்த்தா பத்தி யுண்டு பகவச் சாஸ்திரங்களில் காரணத்வ ஸூ சகங்களான பிரமாணங்கள் உண்டு –
ஆகையால் காரணத்வம் உண்டாகக் குறை என் என்னில்
சக்திமத்வம் குணத்தால் அல்ல பத்நீத்வ நிபந்தம் -வீக்ஷணாதீந வ்ருத்திமத்வமாகக் கடவது அன்வய வ்யதிரேகம் –
இத்தாலே ஜகத் ஸித்தியிலே இவளை ஒழிய உபபத்தி யுண்டு –
ஸ்ருதியாதி பிரமாணங்களும் ப்ரஹ்மாத்மகமான ஜகத்தினுடைய விலோகந பரங்களாய் இருக்கும்
ஆகையால் இவளுக்கு காரண பாவத்தில் அந்வயம் இல்லை –

ஈஸ்வரன் ஸ்ரீ லஷ்மீ விசிஷ்டானாய் அன்றோ காரண பூதனாகிறது –
ஆகையால் இவளுக்கும் காரணத்வத்தில் அந்வயம் யுண்டாகக் குறை என் என்னில்
அவன் லீலா விபூதியை ஸ்ருஷ்டிக்கும் போது நித்ய விபூதி விசிஷ்டானாய் அன்றோ இருப்பது –
அப்போது நித்ய விபூதிக்கும் காரணத்வம் யுண்டாகிறதோ -அவ்வோபாதி அவளுக்கும் காரணத்வம் இல்லை
ஆனால் இவளுக்கு ஜகாத் ஸ்ருஷ்ட்யாதி காரணத்வத்தில் ஓர் அந்வயம் இல்லையோ என்னில் அநு மோதனத்தால் வரும் அந்வயம் யுண்டு –
காரண வஸ்துவே உபாஸ்யமுமாய் சரண்யமுமாய் ஆகையால் இவளுக்கு உபாய பாவத்தில் அந்வயம் இல்லை
இவளுக்கு உபாய பாவத்தில் அந்வயம் யுண்டாக பிரமாணங்கள் யுண்டே என்னில் அது சரண்யனுடைய இச்சா அநு விதாயித்தவமாகக் கடவது –
யதா சர்வகதோ விஷ்ணு ததைவேயம் த்விஜோத்தம –என்று தொடங்கி இவளுடைய வியாப்தி சொல்லா நின்றது இறே என்ன
ரிஷி தானே விபாகம் பண்ணுகையாலே ஸ்வ விபூதி சரீரங்களில் யுண்டான வியாப்தி ஒழிய ஸர்வத்ர வியாப்தி இல்லை
இந்த வியாப்தி தான் குணத்தால் வருவது ஓன்று இறே

ஸுபரியைப் போலே -ஆனால் இவளுக்கு சேதன சாமானையோ என்னில் -அப்படி அன்று –
பத்தரைக் காட்டில் முக்தர் வ்யாவருத்தர் –
முக்தரைக் காட்டில் நித்யர் வ்யாவருத்தர்
நித்யரைக் காட்டில் அனந்த கருடாதிகள் வ்யாவருத்தர் –
அவர்களில் காட்டில் தேவீ ஜனங்கள் வ்யாவருத்தர்
தேவீ ஜனங்களில் காட்டில் பூ நீளைகள் வ்யாவருத்தர்
பூ நீளைகள் காட்டில் இவள் வ்யாவருத்தை –ஆகையால் இ றே உபய விபூதிக்கும் ஈஸ்வரியாய் போரு கிறது
இவளுக்கு ஸ்வரூபத்தாலே சேதன சாம்யம் யுண்டு -ஸ்வ பாவத்தால் ஈஸ்வர சாம்யம் யுண்டு
இது நித்யருக்கும் முக்தருக்கும் யுண்டோ என்னில் -இவர்களுக்கும் இன்றியிலே -தேவீ ஜனங்களுக்கும் இன்றியிலே –
ஈஸ்வரன் தனக்கும் இன்றியிலே இருப்பன சில குண விசேஷங்கள் யுண்டு
அவை எவையென்னில்
நிரூபகத்வம் –அநு ரூப்யம்–அபிமதத்வம் –அசேஷ சேஷித்வ சம்பந்த த்வராபாவம் -ஆஸ்ரயண சித்தி –ப்ராப்ய பூரகத்வம் –
இவ்வர்த்தத்தை அபியுக்தரும் வெளியிட்டார்கள்-

திருவினுக்கு அரசே -திருமாலே -என்று நிரூபகத்தையும்
உனக்கேற்கும் கோல மலர்ப்பாவை -என்று அநு ரூபத்தையும்
அல்லி மலர் மகள் போக மயக்குகள்-என்று போக்யதையும் -பூவின் மிசை நங்கைக்கும் இன்பன் -என்று அபிமதத்வத்தையும் –
திரு மா மகளால் அருள் மாரி -என்றும் -திருமாலால் அருளப் பட்ட சடகோபன் -என்றும் -அசேஷ சேஷித்வ சம்பந்த த்வார பாவத்தையும் –
திருக் கண்டேன் பொன்ம் மேனி கண்டேன் -என்று ஆஸ்ரயண ஸித்தியையும்
திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்கள் -என்று ததீயா பர்யந்தமான ப்ராப்ய பூரகத்தையும் வெளியிட்டு அருளினார்கள்
ஆக இந்த குணங்களாலே இ றே இவள் சர்வ அதிசயகாரியாய் இருப்பது
திரு மா மகள் கேள்வா தேவா -என்றும்
பெருமையுடைய பிரானார் -என்றும்
எம்பெருமானுக்கு சேஷித்வ பூர்த்தி பிறப்பது இவளாலே-
இவளுடைய சத்தை எம்பெருமான் இட்ட வழக்காய் இருக்கும் –
எம்பெருமானுடைய ஐஸ்வர்யம் இவள் இட்ட வழக்காய் இருக்கும்
இவருடைய ஸ்வரூபமும் பூவும் மணமும் போலே இறே -பூவை ஒழிய மணத்துக்கு சத்தை இல்லை -மணத்தை ஒழிய பூவுக்கு ஏற்றம் இல்லை
ஆதித்யனும் பிரபையும் போலே இவருடைய சம்பந்தமும் அவிநா பூதமாய் இருக்கும்
இருவரையும் பிரித்துக் காண்பார் யுண்டாகில் சூர்பனகையும் ராவணனும் பட்டது படுவார்கள்
ஆகையிறே-திருமாலே நானும் உனக்குப் பழ வடியேன் -என்று சேஷத்வ பிரதிசம்பந்தி ஒரு மிதுனமாய்
நாளும் நம் திருவுடை அடிகள் தம் நலம் கழல் வணங்கி -என்று ஆஸ்ரயண பிரதிசம்பந்தி ஒரு மிதுனமாய்
அடிமை செய்வார் திருமாலுக்கே என்று -கைங்கர்ய பிரதிசம்பந்தியும் ஒரு மிதுனமாய் இ றே இருப்பது
இத்தாலே இ றே ஸ்ரீ பாஷ்யகாரரும் -மிதுனம் ஒழிய ஒரு வஸ்து இல்லை -என்று அறுதியிட்டது –
மத்ஸயத்தினுடைய ஆகாரம் எல்லாம் ஜலமாய் இருக்குமோ பாதி ஸ்ரீ மானுடைய வடிவெல்லாம் ஸ்ரீ மயமாய் இருக்கும் என்று
பெரிய முதலியாரும் நஞ்சீயரும் அருளிச் செய்து போருவார்கள் –

ஏவம்பூதமான மிதுன வஸ்துவுக்கு பரதந்தர்யம் ஆத்மவஸ்து
ஆத்மவஸ்துவுக்கு பரதந்தர்யம் அசித்வஸ்து
இப்படி வஸ்து த்ரய யாதாம்ய ஞானம் பிறக்கை-தத்வ த்ரய ஞானமாவது

அநந்தரம் தத்வ த்வய விஷய வைராக்யமாவது என் என்னில்
சேதனனாய் இருப்பான் ஒருவனுக்கு புருஷார்த்தம் மூன்று படியாய் இருக்கும்
ஐஸ்வர்யம் -கைவல்யம் -பகவத் பிராப்தி -என்று
இதில் ஐஸ்வர்யம் மூன்று படியாய் இருக்கும் -ராஜபதம் -இந்த்ர பதம் -ப்ரஹ்ம பதம் -என்று
கைவல்யமாவது –
சிறுக நினைவதோர் பாசமுண்டாம் பின்னும் வீடில்லை -என்றும்
தெரிவரிய அளவில்லாச் சிற்றின்பம் -என்றும் சொல்லுகிறபடியே
ஐஸ்வர்யத்தைக் காட்டில் வியாவருத்தி யுண்டாய் இருக்கச் செய்தேயும் பகவத் அனுபவம் இல்லாமையால் விதவை அலங்கார
சத்ருசமாம் படி ஸ்வ அனுபவம் பண்ணி இருக்கை
ஆக -ஜட ரூபமான ஐஸ்வர்யத்தையும் -சிற்றின்பமான கைவல்யத்தையும் விடுகை தத்வ த்வய விஷய வைராக்யமாவது –

இனி தத்வ ஏக விஷய பக்தியாவது
தத்வம் ஏகோ மஹா யோகீ-என்று சொல்லுகிறபடியே எம்பெருமான் பக்கலிலே அநவரத பாவனையாகச் செல்லக் கடவதான ப்ரேமம் –
பக்தி தான் மூன்று படியாய் இருக்கும் -பக்தி -பர பக்தி -பரம பக்தி -என்று
பத்துடை அடியவர்க்கு எளியவன் -என்றும்
பக்தி க்ரீதோ ஜனார்த்தன -என்றும் சொல்லுகிறபடியே
இந்த பக்தியால் ஏவிக் கொள்ளலான அகார வாச்யனுடைய ஆகாரமும் மூன்று படியாய் இருக்கும் –
நீர்ப் பூ நிலப் பூ மரத்தில் ஒண் பூ -என்று பிரதமாச்சார்யாரும் அருளிச் செய்தார்
மரத்தில் ஒண் பூ என்கையாலே பரத்வம் சொல்லுகிறதாய் -நீர்ப் பூ என்கையாலே வ்யூஹம் சொல்லுகிறதாய் –
நிலப் பூ என்கையாலே அவதாரம் சொல்லுகிறது
ஆனால் அந்தர்யாமித்வமும் அர்ச்சாவதாரமும் சொல்ல வேண்டாவோ என்னில் –
பரத்வ அந்தர்பூத்தம் -அந்தராமித்வம் -அவதார விசேஷம் அர்ச்சாவதாரம்-
ஆகையால் ஈஸ்வரனுடைய ஆகாரமும் மூன்று என்னத் தட்டில்லை-

இப்படி ஆகார த்ரய விசிஷ்டனான எம்பெருமானை பிராபிக்கக் கடவனான சேதனனுடைய ஸ்வரூபம் மூன்று படியாய் இருக்கும்
அநந்யார்ஹத்வம் -அநந்ய சாதனத்வம் -அநந்ய ப்ரயோஜனத்வம் –
இருவரையும் சேர விடக் கடவளான பிராட்டி ஸ்வரூபம் –
சேஷத்வ பூர்த்தி -புருஷகாரத்வம் -கைங்கர்ய வர்த்தகம் -என்றும் மூன்று படியாய் இருக்கும்
இவனை பிரதமத்திலே அங்கீ கரித்த ஆச்சார்யருடைய ஸ்வரூபம் –
அஞ்ஞான நிவர்த்தகம் -ஞான ப்ரவர்த்தகம்-ருசி ஜனகத்வம் – என்றும் மூன்று படியாய் இருக்கும்
இவனுக்கு வரக் கடவதான விரோதி ஸ்வரூபம் -ஸ்வரூப விரோதி -உபாய விரோதி -ப்ராப்ய விரோதி -என்று மூன்று படியாய் இருக்கும்
இந்த விரோதிக்கு இரட்டைவித்தாய்ப் போருகிற அஹங்கார மமகாரங்களும் -அஞ்ஞான -ஞான -போக -தசைகளில் என்று மூன்று படியாய் இருக்கும்
இந்த அஹங்கார மமகார ஹேதுவான அஞ்ஞானம் -ஞான அனுதயம் -விபரீத ஞானம் -அந்யதா ஞானம் என்று மூன்று படியாய் இருக்கும்
ஞான அநுதயம் -தேகாத்ம அபிமானம்
விபரீத ஞானம் -ஸ்வ ஸ்வா தந்தர்யம்
அந்யதா ஞானம் -தேவதாந்த்ர சேஷத்வம் –
இந்த அஞ்ஞானத்தைப் பற்றி வரும் அபசாரமும் -பகவத் பாகவத அஸஹ்ய அபசாரம் என்று மூன்று படியாய் இருக்கும்
இந்த அபசாரத்தைப் பற்றி வரும் அகமும் -பூர்வாகம் உத்தராகம் ப்ராரப்தம் என்று மூன்று படியாய் இருக்குc
இதன் அடியாக வரக் கடவதான தாப த்ரயமும் -ஆத்யாத்மீகம் ஆதி பவ்திகம் ஆதி தாய்விகம் என்று மூன்று படியாய் இருக்கும்
இப்படிக்கு ஒத்த பாபத்தை குட நீர் வழியும் போது விவேகஞானம் –
ஆத்ம அநாத்ம விவேக ஞானம் -புருஷார்த்த அபுருஷார்த்த விவேக ஞானம் -உபாய அநுபாய விவேக ஞானம் -என்று மூன்று படியாய் இருக்கும்
இந்த அஞ்ஞானத்தைப் பற்றி வரும் அபசாரமும் -பகவத் பாகவத அஸஹ்ய அபசாரம் என்று மூன்று படியாய் இருக்கும்
இந்த அபசாரத்தைப் பற்றி வரும் அகமும் -பூர்வாகம் உத்தராகம் ப்ராரப்தம் என்று மூன்று படியாய் இருக்கும்
இதன் அடியாக வரக் கடவதான தாப த்ரயமும் -ஆத்யாத்மீகம் ஆதி பவ்திகம் ஆதி தாய்விகம் என்று மூன்று படியாய் இருக்கும்
இப்படிக்கு ஒத்த பாபத்தை குட நீர் வழியும் போது விவேக ஜானம் –
ஆத்ம அநாத்ம விவேகம் –புருஷார்த்த அபுருஷார்த்த விவேகம் -உபாய அநுபாய விவேகம் -என்று மூன்றுபடியாய் இருக்கும்
இந்த விவேகத்துக்கு ஸ்தானமாய் -தத்வம் -அபிமதம் -விதானம் என்றும் –
ஸ்வரூப ப்ரதிபாதிகமான திருமந்திரம் தத்வமாவது -புருஷார்த்த ப்ரதிபாதிதமான மந்த்ர ரத்னம் அபிமதமாவது –
ஹித விதாயமாய் சரண்யா அபிமதயாலே ப்ரவ்ருத்தமான சரம ஸ்லோகம் விதானமாகிறது

இதில் தத்வ ரூபமான திருமந்திரமும் பத ரூபத்தாலே மூன்று படியாய் இருக்கும்-
இதிலே பிரதம பதத்தாலே சேதனனுடைய ஸ்வரூபம் சொல்லுகிறது -மத்யம பதத்தாலே ஸ்திதி சொல்லுகிறது –
த்ருதீய பதத்தாலே வ்ருத்தி சொல்கிறது
இந்த ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்திகள் மூன்றும் எம்பெருமான் இட்ட வழக்காய் இருக்கும்
பிரதம பதத்தாலே இவனுடைய அநந்யார்ஹத்வம் சொல்கிறது -மத்யம பதத்தாலே அநந்ய சரண்யத்வம் சொல்கிறது –
த்ருதீய பதத்தாலே அநந்ய போக்யத்வம் சொல்கிறது
இவனுக்கு பிரதிசம்பந்தியாய் இருக்கிறவனுடைய சேஷித்வம் சொல்கிறது பிரதம பதத்தாலே –
அவனுடைய சரண்யத்வம் சொல்கிறது மத்யம பதத்தாலே -அவனுடைய போக்யத்வம் சொல்கிறது த்ருதீய பதத்தாலே –
இந்த ஞானம் அடியாக அஹங்கார ஜன்யமான அஞ்ஞானம் போம்படி சொல்கிறது பிரதம பதம்
அர்த்த ஜன்யமான அஞ்ஞானம் போம்படி சொல்கிறது மத்யம பதம்
கர்ம ஜன்யமான அஞ்ஞானம் போம்படி சொல்கிறது த்ருதீய பதம்
பிரதம பதத்தில் சொல்லுகிற ஞாத்ருத்வமும் -மத்யம பதத்தில் சொல்லுகிற கர்த்ருத்வமும்
த்ருதீய பதத்தில் சொல்லுகிற போக்த்ருத்வமும் எம்பெருமான் இட்ட வழக்காய் இருக்கும்
திருமந்திரம் சாமாந்யேன ஸ்வரூப பாரமாய் இருக்கும் -சிலர் வாக்ய த்ரயம் என்று நிர்வஹிப்பர்கள்-
சிலர் வாக்ய ஏக வாக்யத்தாலே ஏக வாக்கியம் என்று நிர்வஹிப்பார்கள் –
சிலர் ஸ்வரூப புருஷார்த்தம் என்று நிர்வஹிப்பர்கள்
சிலர் அர்த்த பஞ்சக பரம் என்று நிர்வஹிப்பார்கள்
சிலர் பிரபத்தியையும் கூட்டி ஷடர்த்த பரம் என்று நிர்வஹிப்பர்கள்
சிலர் ஆத்ம சமர்ப்பணம் என்று நிர்வஹிப்பர்கள்

திரு வெட்டு எழுத்தும் கற்று நான் உற்றதும் உன்னடியார்க்கு அடிமை -என்று பத க்ரமத்துக்கும் தாத்பர்யமான அர்த்தம்
ததீய சேஷத்வம் என்று அருளிச் செய்தார் திரு மங்கை ஆழ்வார்
பிரதம ஆச்சார்யரான நம்மாழ்வாரும் பயிலும் சுடர் ஒளியிலே -எம்மை ஆளும் பரமர் -என்றும் –
எம்மை ஆளுடையார்கள் -என்றும் -எமக்கு எம் பெரு மக்களே -என்றும்
ததீயர்களை சேஷிகளாக ப்ரதிபாதிக்கையாலும்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே-என்றும் –
சன்ம சன்மாந்தரம் காப்பரே -என்றும் -நாளுய்யக் கொள்கின்ற நம்பரே -என்றும் -ததீயரையே சரண்யராக பிரதிபாதிக்கையாலும் –
ஆக பிரதம பத ஸித்தமான சேஷிகளும் ததீயரேயாய் -மத்யம பத ஸித்தமான சரண்யரும் ததீயரேயாய் -த்ருதீய பத ஸித்தமான
ப்ராப்யரும் ததீயரே யானபடியாலே-திருமந்த்ரத்துக்குத் தாத்பர்யமான அர்த்தம் ததீய சேஷத்வம் என்று அறிகை
நிருபாதிக தேவதா -பரமாத்மா / நிருபாதி கோயாக-ஆத்ம சமர்ப்பணம் -/ நிருபாதிகோ மந்த்ர -பிரணவம் /
நிருபாதிக பலம் – மோக்ஷம் -என்று ஓதுகையாலே ப்ரணவத்துக்குக் கர்மாத்மாகத்வம் யுண்டு
ஏதத் ஞானம் ச ஜ்ஜேயம் ச சேஷ அந்யோ க்ரந்த விஸ்தர-என்கையாலே ஞானமும் இதுவாகக் கடவது
ஓமித் யாத்மாநம் த்யாயீதா -என்கையாலே பக்தியும் இதுவாகக் கடவது
ப்ரஹ்மணே த்வாமஹச ஓமித் யாத்மாநம் யூஞ்ஜீத – என்கையாலே பிரபத்தியும் இதுவேயாகக் கடவது –
பிரணவம் ஸ்வரூப யாதாம்யத்தைச் சொல்லுகையாலே –
பரம் ஜ்யோதி ரூப சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே-என்று சொல்லுகிற பலமும் இதுவேயாய் இருக்கும் –

பிரணவம் தான் அக்ஷர ஸ்வ பாவத்தால் -அகாரம் உகாரம் மகாரம் என்று மூன்று படியாய் இருக்கும் –
அதில் அகாரம் காரணத்வத்தையும் -ரக்ஷகத்வத்தையும் -சேஷித்வத்தையும் -ஸ்ரீ யபதித்வத்தையும்-சொல்லக் கடவதாய் இருக்கும் –
இதில் காரணத்வத்தாலும் ரக்ஷகத்வத்தாலும் உபாய பாவத்தை வெளியிடுகிறது
சேஷித்தவத்தாலும் ஸ்ரீ யபதித்வத்தாலும் உபேய பாவத்தை வெளியிடுகிறது
வாஸ்ய பூதனான எம்பெருமானுடைய ஸ்வரூபமும் உபாய உபேயத்வங்ககள் ஆகையால்
வாசகமான இவ் வகாரமும் உபாய உபேயத்வங்களைச் சொல்லுகிறது

இவ் வகாரத்தில் ஏறிக் கழிந்த சதுர்த்தி எம்பெருமானுக்கு அதிசய கரத்வமான சேஷத்வத்தைச் சொல்லுகிறது
இச் சேஷத்வத்தினுடைய ஆஸ்ரயத்தைச் சொல்லுகிறது வ்யஞ்ஜன ரூப மகாரம்
அகாரத்தாலே சேஷித்வத்தைச் சொல்லி -மகாரத்தாலே சேஷத்வ ஆஸ்ரயமான சேதனனைச் சொல்லி –
அவதாரண வாசியான உகாரத்தாலே இவர்களுடைய சம்பந்தம் அவிநா பூதம் என்கிறது –
இக்கிரமத்தை அபியுக்தரும் வெளியிட்டு அருளினார்கள்

கண்ணபுரம் ஓன்று யுடையானுக்கு -என்று -சதுர்த் யந்தமான அகாரார்த்தத்தை வெளியிட்டு –
அடியேன் -என்று மகாரார்த்தத்தைவெளியிட்டு –
ஒருவருக்கு உரியேனோ -என்று உகாரார்த்தத்தை வெளியிட்டு அருளினார் –
மூன்று எழுத்ததனை மூன்று எழுத்ததனால் மூன்று எழுத்தாக்கி மூன்று எழுத்தை ஏன்று கொண்டு இருப்பார் என்கிறபடியே
நித்ய அனுசந்தானமாய் இருப்பது பிரணவம் இ றே

இப்படி சேஷத்வத்துக்கு ஓம் என்று இசைந்தவர்களுக்கு வரக் கடவதான ஸ்வார்த்த ஹானியைச் சொல்லுகிறது –
அத்யந்த பாரதந்தர்ய ப்ரகாசகமான மத்யம பதத்தாலே –
மத்யம பதம் தான் இரண்டு எழுத்தாய் இருக்கும் -நம -என்று
அஹம் அபி மம ந பகவத ஏவாஹமஸ்மி -என்று றே இதன் அர்த்தம் இருக்கும் படி
சம்பந்த சாமான்ய வாசியான ஷஷ்டியாலே ஸ்வர்த்ததையைச் சொல்லுகிறது -ஸ்வார்த்தத்வமானது ஸ்வா தந்தர்யமும் ஸ்வத் முமம் –
ஸ்வா தந்தர்யமாவது -அஹங்காரம் -ஸ்வத்மாவது மமகாராம் -அவ் வஹங்காரம் தான் இரண்டு படியாய் இருக்கும் –
தேகாத்ம அபிமான ரூபம் என்றும் தேகாத் பரனான ஆத்மாவினுடைய ஸ்வா தந்தர்ய அபிமான ரூபம்
மமதையும் இரண்டுபடியாய் இருக்கும் -தேக அநு பந்தி போக்ய போக உபகரணாதிகளை விஷயீ கரித்து இருக்கையும்
பார லௌகிகமான பல தத் சாதனங்களை விஷயீ கரித்து இருக்கையும்
ஆக நாலு வகைப் பட்டு இருக்கிற ஸ்வார்த் தத்துவமும் காட்டப் படுகிறது –
உகாரத்தாலே பிறர்க்கு உரியன் அன்று என்றவிடம் சொல்லி நமஸ் ஸாலே தனக்கு உரியன் அன்று என்றவிடம் சொல்லுகிறது
ஆகிஞ்சன்ய அநந்ய கதித்வங்களாலே பூர்ணமாகையாலே பிரார்த்தனா ரூப சரணாகதியாகவுமாம்
நமஸ் சக்ருர் ஜனார்த்தனம் -என்று ஸ்தான ப்ரமாணத்தாலே பிரபத்தி யாகவுமாம்
ந்யாஸ வாசகமான நமஸ் சப்தமானது சாஷாத் உபாய பூதனான பரமாத்மாவைச் சொல்லுகையாலே முக்ய ப்ரபத்தியாகக் குறையில்லை
இப்படி இங்கு பிரபத்தி வாசகமான நமஸ்ஸிலே மத் யாஜீ மாம் நமஸ் குரு -என்று பக்தியும் ஸூஸிதையாகப் போருகிறது

இப்படி பிரதம பதத்தாலே இவனுடைய ஸ்வரூபம் சொல்லி -மத்யம பதத்தாலே ஸ்வரூப அநு ரூபமான உபாயம் சொல்லி –
உபாய அநு ரூபமான புருஷார்த்தம் சொல்லுகிறது த்ருதீய பதத்தாலே
இது தான் -நார -என்றும் -அயன -என்றும் -ஆய -என்றும் மூன்றாய் இருக்கும் –
மகார விவரணமான நார சப்தம் ஸமூஹ வாசியாய் -இதிலே பஹு வசனமும் பஹுத்வ வாசியாகையாலே
பஞ்ச உபநிஷண் மயமான திவ்ய மங்கள விக்ரஹமும் -ஞான சக்த்யாதி குணங்களும் -திவ்ய ஆபரணங்களும் -திவ்ய ஆயுதங்களும் –
ஸ்ரீ லஷ்மீ ப்ரப்ருதி திவ்ய மஹிஷீ வர்க்கமும் -நித்ய விபூதியும் -ப்ரவாஹ ரூபேண நடக்கிற லீலா விபூதியுமாக
உபய விபூதியும் நார சப்தத்தாலே சொல்லப் படுகிறது
அதில் யுண்டான பஹு வரீஹீ சமாசத்தாலும் தத் புருஷ சமாசத்தாலும் அந்தர்யாமித்வமும் ஆதாரத்வமும் சொல்லுகிறது
அந்தர்யாமித்வத்தாலே எம்பெருமானுடைய சரீரத்வம் சொல்லுகிறது –
ஆதாரத்வத்தாலே அதிசயம் சொல்லுகிறது –
அகார விவரணமான அயன பதத்திலே கர்மணி வ்யுத்பத்தியாலும் கரணே வ்யுத்பத்தியாலும் ப்ராப்ய ப்ராபகங்கள் சொல்லப்படுகிறது –
அதாவது உபாய உபேயத்வங்கள் இறே
ஆக இப்படி பிரணவத்தாலே -தன் ஸ்வரூபம் பகவத் அநந்யார்ஹ சேஷத்வம் என்று ப்ரதிஜ்ஜை பண்ணி
ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவர்த்தகமான மத்யம பதத்தாலே அத்யந்த பாரதந்தர்யம் என்று உபபாதித்து
கீழ் ப்ரஸ்துதமான சேஷத்வமே ஆத்மாவுக்கு ஸ்வரூபம் என்று நிகமிக்கிறது

சதுர்த்தியாலே சேஷ சேஷிகளுடைய போகம் சொல்லுகிறது –
அஹம் அன்னம் -என்ற பலம் -ந மம -என்றும் -படியாய்க் கிடந்தது உன் பவள வாய் காண்பேனே -என்றும்
சொல்லுகிறபடியே -இதில் சாஷாத் போகம் எம்பெருமானதாய் சைதன்ய ப்ரயுக்தமான போகமாய் இருக்கும் இவனுக்குள்ள அளவு
இந்த போகம் தான் சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தோசிதமாய் சர்வாதிகாரமாய் இருக்கும்
ஆக பிரதம பதத்தாலே ப்ரக்ருதே பரத்வ பூர்வகமாக ஸ்வ ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது –
மத்யம பதத்தாலே ஸாத்ய உபாய நிவ்ருத்தி பூர்வகமாக சித்த உபாய நிஷ்டையைச் சொல்லுகிறது –
த்ருதீய பதத்தாலே ஸ்வ போக நிவ்ருத்தி பூர்வகமாக பர போக நிஷ்டையைச் சொல்லுகிறது –
இடைஞ்சல் வராதபடி களை அறுத்துக் கொடுக்கிறது மத்யம பதம் –
விளைந்து ஸ்வாமிக்கு போகம் கொடுக்கிறது த்ருதீய பதம்

பிரதம பதத்தாலே பாணி கிரஹணம் பண்ணுகிறது -மத்யம பதத்தாலே உடை மணி நீராட்டுகிறது –
த்ருதீய பதத்தாலே சதுர்த்தி படுக்கையாய் இருக்கிறது -என்று பிள்ளை உறங்கா வல்லி தாசர் நிர்வஹிப்பர்-
சேஷத்வம் பிறந்தது இல்லையாகில் பிரதம பதத்தில் அந்வயம் இல்லை -ஞானம் பிறந்து இல்லையாகில் மத்யம பதத்தில் அந்வயம் இல்லை –
ப்ரேமம் பிறந்து இல்லையாகில் த்ருதீய பதத்தில் அந்வயம் இல்லை -என்று பட்டருக்கு எம்பார் அருளிச் செய்வர்
ஸ்வரூப சாஷாத்காரம் பிறந்தது இல்லையாகில் பிரதம பதத்தில் ஒட்டில்லையாகக் கடவது –
உபாய சாஷாத்காரம் பிறந்தது இல்லையாகில் மத்யம பதத்தில் ஒட்டில்லையாகக் கடவது –
போக சாஷாத்காரம் பிறந்தது இல்லையாகில் த்ருதீய பதத்தில் ஒட்டில்லையாகக் கடவது -என்று நம்பிள்ளைக்கு நஞ்சீயர் அருளிச் செய்வர்
இப்படி சகல நிகமாந்தங்களும் பத த்ரயமான மூல மந்திரத்துக்கு விவரணமாய் இருக்கும் –

இந்த மூல மந்திரத்துக்கு த்வயம் விவரணமாய் இருக்கும் -இது விவரணமான படி என் என்னில்
ஈஸ்வர உபாய மாத்ரமேயாய் -புருஷகாரத்தையும் அதனுடைய நித்ய யோகத்தையும் -உபாய பாவத்துக்கு உறுப்பான குண விசேஷங்களையும்-
அக் குணங்களோபாதியான விக்ரஹ வைலக்ஷண்யத்தையும் உபாய விஷயமாக இந்த அதிகாரிக்கு யுண்டாம் வியவாசத்தையும்
அங்குச் சொல்லாமையாலும் இங்கே சாப்தமாகப் ப்ரதிபாதிக்கையாலும் மத்யம பதத்துக்கு பூர்வ வாக்கியம் விவரணமாகக் கடவது –
இங்கு சர்வேஸ்வரனுக்குக் கிஞ்சித்க்கார பிரார்த்தனா மாத்ரமேயாய் கிஞ்சித்க்காரம் கொள்ளுமவன் ஸ்ரீ மானாக வேணும் என்றும்
கிஞ்சித்க்காரம் பண்ணுமவன் நிரஹங்கார நிர்மமனாக வேணும் என்றும் சொல்லாமையாலும் இங்கு சாப்தமாகச் சொல்லுகையாலும்
த்ருதீய பதத்துக்கு உத்தர வாக்கியம் விவரணமாகக் கடவது -ஆகையால் இப்படி வாக்ய த்வயமாகக் கடவது

ஸ்ரீ யபதி உபேயங்களுக்கு அவதியாய் இருக்குமோபாதி இது உபாயங்களுக்கு அவதியாய் இருக்கும்
அவன் ஞான சக்த்யாதி ஷட் குணங்களையும் உடையவனாய் இருக்குமோபாதி
இதுவும் கார்ப்பண்யாதி ஷட் அங்கத்தையும் யுடைத்தாய் இருக்கும்
அவன் தேவகீ புத்ர ரத்னமாய் இருக்குமோபாதி இதுவும் மந்த்ர ரத்னமாய் இருக்கும்
இம்மந்திரம் தான் ஸ்ரீ மன் நாத முனிகள் -உய்யக் கொண்டார் -மணக்கால் நம்பி -ஆளவந்தார் -என்று சொல்லுகிற
பரமாச்சார்யர்களுடைய நெஞ்சாகிற செப்பிலே வைத்துச் சேமிக்கப் பட்டு இருக்கும் –
அர்த்தோ விஷ்ணு -என்று சொல்லப் படுகிற அர்த்தவான்களுக்குக் காட்டக் கடவதாய் அறப் பெரு விலையதாய் இருக்கும்
சர்வ உபாய தரித்தற்கு சர்வ ஸ்வம்மாய் இருக்கும்

இந்த உபாயம் அஞ்ஞருக்கும் அசக்தருக்கும் வைத்த தண்ணீர்ப் பந்தலாய் இருக்கும் –
ஆச்சார்யன் பிரமாதா என்றும் -அர்ச்சாவதாரம் ப்ரமேயம் என்றும் -த்வயம் பிரமாணம் என்றும் அருளிச் செய்வார் உய்யக் கொண்டார்
இது சம்சார விஷ தஷ்டனுக்கு ரசாயனமாய் இருக்கும் என்று அருளிச் செய்வார் மணக்கால் நம்பி
அந்தகனுக்கு மஹா நிதி போலே இருக்கும் என்று அருளிச் செய்வர் பெரிய முதலியார்
ஷூத்தார்த்தனுக்கு அம்ருத பானம் போலே இருக்கும் என்று அருளிச் செய்வர் திருமாலை ஆண்டான்
ஸ்தந்தய பிரஜைக்கு ஸ்தந்யம் போலே இருக்கும் என்று அருளிச் செய்வர் திருக் கோஷ்ட்டியூர் நம்பி
ராஜகுமாரனுக்கு முடியும் மாலையும் போலே பிரபன்னனுக்கு த்வய உச்சாரணம் என்று அருளிச் செய்வர் ஸ்ரீ பாஷ்ய காரர்
சம்சாரத்தில் இந்த உபாய விசேஷம் விலங்கு இடப்பட்டவன் தலையிலே முடியை வைத்தால் போலே என்று அருளிச் செய்வர் எம்பார் –
வாஸ்யங்களில் எம்பெருமானுக்கு அவ்வருகு அல்லாதாப் போலே வாசகங்களில் பிரபத்தியில் காட்டில் அவ்வருகு இல்லை என்று அருளிச் செய்வர் நஞ்சீயர்
ராஜகுமாரனுக்கு கர்ப்பூர நிகரம் போலே இவனுக்கு பிரபத்தியை விடில் நாக்கு வற்றும் -என்று அருளிச் செய்வர் நம்பிள்ளை
எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்ஜியம் பெறுவாரோபாதி என்று பணிக்கும் திருக் குருகைப் பிரான் பிள்ளான்
குரு பரம்பரையை ஒழிந்த பிரபத்தியும் சாத்தனாந்தரங்களோடு ஒக்கும் என்று நிர்வஹிப்பர் முதலியாண்டான்
த்வயம் பிறவி மிடியன் கையில் சிந்தாமணி புகுந்தால் போலே என்று நிர்வஹிப்பர் பிள்ளை உறங்கா வல்லி தாசர்

இப்படி ஆச்சார்ய அபிமதமாய்ப் போருகிற பிரபதனம் -தென்னன் திரு மாலிரும் சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான் -என்கிறபடியே
அல்லாத உபாயங்கள் போல் அன்றியே இதுவே கை கூடின உபாயம் இறே
இதில் கோப்த்ருத்வ வரணத்தையும்-ஆத்ம நிக்ஷேபத்தையும் சொல்லுகையாலும் -த்வயம் என்று திரு நாமமாய்
-25- திரு அக்ஷரமாய் -ஆறு பதமாய் -ஸமஸ்த பதத்தாலே பத்து அர்த்தமாய் இருக்கும் –
இதில் பூர்வ கண்டத்திலும் உத்தர கண்டத்திலும் மா மலர் மங்கையாகிற ஸ்ரீ ரத்னத்தோடே கூடுகையாலே இருதலை மாணிக்கமாய் இருக்கும்
இப்படிக்கொத்த த்வயமும் அர்த்த ப்ராதான்யத்தாலே மூன்று படியாய் இருக்கும் –
விசேஷண பிரதானம் -விசேஷ்ய பிரதானம் -விசிஷ்ட பிரதானம் -என்று
ஆஸ்ரயண தசையில் -விசேஷண பிரதானமாய் இருக்கும் —
உபாய தசையில் விசேஷ்ய பிரதான்யமாய் இருக்கும் –
போக தசையில் விஸிஷ்ட பிரதானமாய் இருக்கும்

இதில் பிரதம பதத்திலே -ஸ்ரீ சப்தத்தால் –
ஸ்ரயந்தீ வைஷ்ணவம் பாவம் ஸ் ரீயமாணா அகிலைர் ஜன –என்றும்
ஸ்ருணோதி தத் அபேக்ஷ உக்திம் -ஸ்ராவயந்தி ச தா பரம் -என்றும்
ஸ்ருணுதி நிகிலான் தோஷான் ஸ்ருணுதி ச குணைர் ஜகத் -என்றும் சொல்லுகிறபடியே
சகல ஜனனியான பிராட்டி சர்வேஸ்வரனை ஆச்ரயணம் பண்ணி இருக்கையும் –
ஸ்வ வ்யதிரிக்த ஸமஸ்த சேதனராலும் தான் ஸமாஸ்ரிக்கப் பட்டு இருக்கையும்
இவர்கள் அபேஷா ஸூக்திகளை கேட்க்கையும் -கேட்ட ஸூக்திகளை ஈஸ்வரனை கேட்ப்பிக்கையும்
அஞ்ஞநாதி தோஷங்களை போக்குகையும் ஞான குண அத்யாவசாயத்தை யுண்டாக்குகையும்
ஆக ஷட் பிரகார விசிஷ்டமான புருஷகாரத்தையும்
மதுப்பாலே அதனுடைய நித்ய யோகத்தையும் -ஆக ஸ்ரீ மத் சப்தத்தாலே புருஷகார பூர்த்தியைச் சொல்லுகிறது

அநந்தரம் -நாராயண பதத்தாலே
வாத்சல்யமும் ஸ்வாமித்வமும் ஸுசீல்யமும் ஸுலப்யமும் ஞானமும் சக்தியும் பிராப்தியும் பூர்த்தியும் கிருபையும் காரணத்வமும்
ஆக ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாதக-ஆசிரிய கார்ய ஆபாதக குணங்களைப் பிரதிபாதிக்கிறது
இதில் வாத்சல்யம் -தோஷம் போகமாய் இருக்கை / ஸ்வாமித்வம் -சொத்தின் பக்கல் உண்டான அபிமானம் /
ஸுசீல்யம் -தன்னில் தாழ்ந்தவனோடு தன் மேன்மை தோன்றாதபடி புரை யறச் சேர்ந்து இருக்கை –
ஸுலப்யம் -அர்ச்சாவதார பர்யந்தமாக எளியனாம் படி சந்நிதி பண்ணி இருக்கை
ஆக இந்த நாலு குணங்களாலும் -ஸ்வ அபராதங்களாலும் -பந்துத்வ ஹானியாலும் -தண்மையாலும் –
கிட்ட ஒண்ணாமையாலும் உண்டான பயம் நிவர்த்தமாகிறது
ஞானம் -ஆஸ்ரிதருடைய நினைவை அறிகை / சக்தி அந்த நினைவை தலைக் கட்டிக் கொடுக்கை /
பூர்த்தி -ஐஸ்வர்யம் தான் இட்ட வழக்காய் இருக்கை / பிராப்தி -சேஷி சேஷ பாவத்தால் உண்டான உறவு
ஆக இந்த நாலு குணங்களாலும் அஞ்ஞான் அசக்தன் அபூர்ணன் அப்ராப்தன் என்கிற சங்கா களங்க நிவ்விருத்தியும் ஆகிறது
கிருபை -கீழ்ச் சொன்ன நாலு குணங்களும் இவனுடைய கர்மத்தை கணக்கிட்டே பலம் கொடுக்க உறுப்பாகையாலே –
அது வராதபடி ஈடுபாடு கண்டு இவன் அளவிலே பண்ணுகிற இரக்கம் -/ காரணத்வம் அபீஷ்ட அர்த்தங்களை நிதானமாய் இருக்கை
ஆக சரணாகதிக்கு உறுப்பான ஆச்ரய குணங்களைச் சொல்லுகையாலே புருஷகாரமும் மிகை என்னும்படியான குண பூர்த்தியைச் சொல்லுகிறது

சரணவ்-என்கிற பதத்தில் தாதுவில் யுண்டான அர்த்த விசேஷத்தாலே ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும்
திருவடிகளே என்று சொல்கிறது -இந்த பதம் விக்ரஹத்துக்கு உப லக்ஷணமாய் இருக்கும்
சரணம் ப்ரபத்யே -என்கிற பதங்களால்-ஈஸ்வரன் அறிவும் ஆசையும் யுடையாருக்கு அபிமதத்தை கொடா நிற்கும் –
அவன் அடியும் அறிவும் ஆசையும் யுண்டாக்கி அபிமதங்களைக் கொடா நிற்கும்
இது சிந்தையந்தி பக்கலிலும் ஸ்ரீ மாலா காரர் பக்கலிலும் காணலாம்
ஆக கீழ்ச் சொன்ன குணங்கள் இத்தனையும் தொடைக் கொள்ளலாம்படியான விக்ரஹ பூர்த்தியைச் சொல்லுகிறது

உத்தர வாக்கியத்தில் ஸ்ரீ சப்தத்தால் தாதார்த்ய பல கிஞ்சித்க்கார பிரதிசம்பந்த பூர்த்தியைச் சொல்லுகிறது
மதுப்பாலே புருஷார்த்தினுடைய சர்வ பிரகார நித்ய பூர்த்தியைச் சொல்கிறது
இந்த பதத்திலே கைங்கர்ய பிரதிசம்பந்தி யுண்டாகில் அனந்த பதத்தாலே சொல்லுகிறது என் என்னில்
கைங்கர்யம் ப்ரீதி ஜன்யமாகையாலும் -ப்ரீதி அனுபவ ஜன்யமாகையாலும் -அனுபவம் அனுபாவ்ய சாபேஷம் ஆகையால் –
அனுபாவ்யங்களான ஸ்வரூப ரூப குண விபூதியாதிகளைச் சொல்லுகிறது
ஆக -நாராயண பதத்தாலே ஸ்வரூப ரூப குண விபூதியாதி அபரிச்சின்னத்வ பூர்த்தியைச் சொல்கிறது
சதுர்த்தியாலே கிஞ்சித்க்கார பிரார்த்தனா பூர்த்தியைச் சொல்லுகிறது
நமஸ்ஸாலே அதுக்குண்டான விரோதி நிவ்ருத்தி பூர்த்தியைச் சொல்கிறது

1-புருஷகார பூதையான சாஷாத் லஷ்மியையும்
2-தத் சம்பந்தத்தையும் –
3-சம்பந்தம் அடியாக பிரகாசிக்கும் ஸுலப்யாதி குணங்களையும்
4-குணவானுடைய சரண கமலத்தையும்
5-சரண கமலங்களினுடைய உபாய பாவத்தையும்
6-உபாய விஷயமான வ்யவசாயத்தையும்
7-வ்யவசிதனுடைய கைங்கர்ய பிரதிசம்பந்தியையும்
8-பிரதிசம்பந்தி பூர்ணமாகையும்
9-பூர்ண விஷயத்தில் பண்ணும் கைங்கர்ய பிரார்த்தனையும்
10-கைங்கர்ய விரோதியான அஹங்கார மமகார நிவர்த்தியையும்
ஆக -பத்து அர்த்தத்தையும் –
எட்டுப் பதமும்-மதுப்பும்-சதுர்த்தியுமாகச் சொல்லுகிறது -என்று நிர்வஹிப்பர் ஆச்சான் பிள்ளை

1-ஆஸ்ரயண த்வாரத்தையும்
2-ஆஸ்ரயண வஸ்துவையும்
3-தத் உபாய பாவத்தையும்
4-தத் வரணத்தையும்
5-ஆஸ்ரயண வஸ்துவினுடைய அதிசயத்தையும்
6-தத் பூர்த்தியையும்
7-தத் தாஸ்ய பிரார்த்தனையையும்
8-தத் விரோதி நிவ்ருத்தியையும் -ப்ரதிபாதிக்கிறது என்று நிர்வஹிப்பர் நஞ்சீயர்

1-பிரதம பதத்தில் விசேஷண பதத்தாலே பிராயச்சித்த வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
2-பிரதம பதத்தாலே உபாயாந்தர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
3-த்விதீய பதத்தாலே உபேய வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
4-க்ரியா பதத்தாலே அதிகாரி வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
5-உத்தர வாக்கியத்தில் பிரதம பதத்தாலே ப்ராப்யாந்தர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
6-த்விதீய பதத்தாலே தேவதாந்த்ர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
7-இதில் சதுர்த்தியாலே பிரயோஜனாந்தர வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது
8-த்ருதீய பதத்தாலே ஸ்வபாவ வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –என்று நிர்வஹிப்பர் பெரிய பிள்ளை

1-பிரதம பதத்தில் விசேஷணத்தில் பிரதம அஷரத்தாலே புருஷகாரத்யபாவ வாதிகளை நிரசிக்கிறது
2-அனந்தர பதத்தாலே நிர்குண ப்ரஹ்ம வாதிகளை நிரசிக்கிறது
3-பிரதம பதாந்தமான த்வி வசனத்தாலே நிர்விக்ரஹ வாதிகளை நிரசிக்கிறது
4-அனந்தர பதத்தாலே உபாய த்வித்வ வாதிகளை நிரசிக்கிறது
5-க்ரியா பதத்தாலே அத்யவசாயாபாவ வாதிகளை நிரசிக்கிறது
6-மதுப்பாலே அநித்யயோக வாதிகளை நிரசிக்கிறது
7-உத்தர வாக்கியத்தில் பிரதம பதத்தாலே ஆத்ம சாம்யா வாதிகளை நிரசிக்கிறது
8-அனந்தர பதத்தாலே ஈஸ்வர ஸாம்ய வாதிகளை நிரசிக்கிறது
9-இதில் சதுர்த்தியாலே கிஞ்சித்கார புருஷார்த்த பிரதிபட வாதிகளை நிரசிக்கிறது
10-அனந்தர பதத்தாலே ஸ்வ ப்ரயோஜன வாதிகளை நிரசிக்கிறது -என்று நிர்வஹிப்பர் நடுவில் திரு வீதிப் பிள்ளை

1-ஸ்ரீ மச் சப்தத்தாலே ஆனு கூல்ய சங்கல்பத்தையும் –
2-பிரதிகூல்ய வர்ஜனத்தையும் ப்ரதிபாதிக்கிறது
3-நாராயண சப்தத்தாலே ரஷிக்கும் என்கிற விசுவாசத்தை பிரதிபாதிக்கிறது
4-உத்தர வாக்கியத்தில் ஸ்ரீமச் சப்தத்தால் கோப்த்ருத்வ வரணத்தை ப்ரதிபாதிக்கிறது
5-நாராயண பதத்தாலே ஆத்ம நிக்ஷேபத்தை பிரதிபாதிக்கிறது
6-விரோதி நிவர்த்தக பதத்தாலே கார்ப்பண்யத்தைப் பிரதிபாதிக்கிறது
ஆக ஷடங்க சம்பூர்ணமாய் மந்த்ர ரத்னம் என்னும் திரு நாமத்தை யுடைத்தாய் இருக்கும்

இதில் சரண சப்தத்தால் சரணாகதி என்று திருநாமம்
க்ரியா பதத்தாலே பிரபத்தி என்று திருநாமம்
வாக்ய த்வயத்தாலே த்வயம் என்று திரு நாமம்
சதுர்த்யந்தமான இரண்டுக்கும் நிஷேபம் என்றும் ந்யாஸம் என்றும் திருநாமம்
விரோதி நிவர்த்தக பதத்தாலே தியாகம் என்ற திருநாமம்

இதில் க்ரியா பதத்தாலே உபாய பிரார்த்தனை
சதுர்த்தியாலே உபேய பிரார்த்தனை
இவை இரண்டும் அதிகாரி க்ருத்யம்

ஏவம் பூதமான த்வயத்தில் நிஷ்டையாவது -ஸ்வாச்சார்ய புரஸ் சரமாக -கோவலர் பொற்கொடியான பிராட்டி இருக்க -சரணம் புக்கு
கொடி வழியாகச் சென்று ப்ரஹ்ம தருவாய் ஆஸ்ரயித்து இளைப்பாறி இருக்கை
ரகு ராக்ஷஸ சம்வாதத்திலும் வ்யாக்ர வானர சம்வாதத்திலும் -கபோத உபாக்யானத்திலும் -கண்டூப உபாக்யானத்திலும்
சரணாகதியினுடைய ஏற்றத்தைக் கண்டு கொள்வது –

——————————

அநந்தரம் ஏவம்பூதமான நியாசத்துக்கு விவரணமாய் இருக்கும் சர்வ தர்ம பரித்யாக பூர்வகமாக இத்தை விதிக்கிற சரம ஸ்லோகம்
இது விவரணமான படி என் என்னில்
அங்கு உபாயாந்தர தியாகத்தையும் உபாய நைரபேஷ்யத்தையும் சொல்லாமையாலே பூர்வ வாக்யத்துக்கு பூர்வார்த்தம் விவரணமாகிறது
இங்கு பிராப்தி பிரதிபந்தகங்கள் அடையப் போகக் கடவது -போக்குவான் உபய பூதனானவன் என்று சொல்லாமையாலே
உத்தர வாக்யத்துக்கு உத்தரார்த்தம் விவரணமாகக் கடவது

இப்படிக்கொத்த சரம ஸ்லோகம் மூன்று படியாய் இருக்கும் -பரித்யாகம் என்றும் -ஸ்வீ காரம் என்றும் -சோக நிவ்ருத்தி -என்றும் –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்று தியாகம் சொல்லுகிறதாய் -மாமேகம் சரணம் வ்ரஜ என்று ஸ்வீ காரம் சொல்லுகிறதாய் –
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி -என்கையாலே சோக நிவ்ருத்தியைச் சொல்லுகிறது –
இதில் பிரதம பதத்திலே சோதனா லக்ஷணமான தர்ம சப்தத்தாலே -உபசன்னனான அர்ஜுனனைக் குறித்து
மோக்ஷ உபாயமாக அருளிச் செய்த உபாஸனாத்மிகையான பக்தியைச் சொல்லுகிறது
இதில் பஹு வசனத்தாலே கர்ம ஞானங்களைச் சொல்லுகிறது –
இது தன்னாலே யஜ்ஞம் தானம் தபஸ்ஸூ தீர்த்த கமனம் நித்யம் நைமித்திகம் காம்யம் தொடங்கி யுண்டான கர்ம பேதங்களையும்
சத் வித்யை தகர வித்யை அந்தராதித்ய வித்யை அஷி வித்யை என்று தொடங்கி யுண்டான ஞான பேதங்களையும்
த்யானம் அர்ச்சனம் தொடங்கி யுண்டான பக்தி பேதங்களையும்
அவதார ரஹஸ்ய ஞானம் புருஷோத்தம வித்யை திரு நாம சங்கீர்த்தனம் என்று தொடங்கி யுண்டானவற்றையும் சொல்லுகிறது
வஷ்யமான தியாகத்தினுடைய கர்ம பாவத்தைச் சொல்கிறது த்விதீயா விபக்தியாலே
விசேஷணமான சர்வ சப்தத்தாலே கர்ம ஞான பக்திகளுக்கும் யோக்யதாபாதகங்களான வர்ணாஸ்ரம ஆசாரங்களைச் சொல்லுகிறது –
அநந்தரம் பரித்யஜ்ய என்கிற பதத்தாலே அவற்றினுடைய தியாக பிரகாரத்தைச் சொல்லுகிறது –
இங்கு தியாகம் என்னப் பார்க்கிறது கர்ம ஞான பக்திகளினுடைய சாதனத்வ புத்தி விடுகை –
இந்த பிரகாரத்தை லயப்பாலே -சொல்லி -பரி என்கிற உப சர்க்கத்தாலே
கர்மாதிகளுடைய சாதனத்வ புத்தியை ச வாசனமாக விடச் சொல்கிறது –

இப்படி சகல தர்மங்களும் த்யாஜ்யமாய் யுள்ள இடத்தில் நயத்தை தர்ம தியாகம் இல்லை -எங்கனே என்னில்
கர்ம ராசி மூன்று படியாய் இருக்கும் -அநர்த்த சாதனம் -என்றும் -அர்த்த சாதனம் என்றும் அநர்த்த பரிஹாரம் என்றும்
இதில் அநர்த்த சாதனம் என்கிறது ஹிம்ஸாஸ் தேயாதிகமான கர்ம ராசி –
அர்த்த சாதனம் என்கிறது கர்ம ஞானாதிகமான கர்ம ராசி
சரணார்த்திக்குப் பூர்வம் அநிஷ்டாவஹமாகையாலே த்யாஜ்யம் -உத்தரம் உபாய வரணத்துக்கு அங்கமாகையாலே த்யாஜ்யம்
அநர்த்த பரிஹாரமான கர்ம ராசி இரண்டு வகையாய் இருக்கும் -இதில் ஒரு வகை பூர்வார்ஜிதமான
பாபத்தைப் போக்குகைக்கு ப்ராயச்சித்தமாய் இருக்கும் -இதுவும் த்யாஜ்யமாகக் கடவது –
மற்றவை ஆகாமியான அநர்த்தத்தை பரிஹரிக்கையாலே இது அநுஷ்டேயமாகக் கடவது -இது இறே நியதி தர்மம் ஆகையாவது

க்ரியமாணம் ந கஸ்மைசித் யதார்த்தாய பிரகல்பதே அக்ரியாவதநர்த்தாய கர்ம தத்து சமாசரேத் -என்கிறபடியே
நியதி தர்மம் கர்த்தவ்யமாகக் கடவது –
அவிப் லவாய தர்மாணம் பாவநாய குலஸ்ய ச–ஸங்க்ரஹாய ச லோகஸ்ய மர்யாதா ஸ்தாப நாய ச –
ப்ரியாய மம விஷ்ணோச் ச தேவ தேவஸ்ய சார்ங்கிண -மநீஷீ வைதிகாசாரான் மனஸாபி ந லங்கயத் -என்கிறபடியே
தர்மங்களுக்கு நழுவுதல் வாராமைக்காகவும்-குலா பாலான அர்த்தமாகவும் -லோக ஸங்க்ரஹார்த்தமாகவும் –
மர்யாதா ஸ்தாபநார்த்தமாகவும் அனுஷ்டிப்பான் –
இது வேண்டா என்று இருந்தானாகில் பகவத் ப்ரீணாரத்தமாக அனுஷ்ட்டிக்க வேணும் –
ப்ராப்த ஹேதுத்வ புத்தி விட்டு ப்ரீதி ஹேது என்று அனுஷ்ட்டிப்பார் –என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –

அநந்தரம் -மாம் -என்கிற பதத்தாலே -சாத்யங்களாய் -அசேதனங்களாய் -அநேகங்களாய் -த்யாஜ்யங்களான -உபாயங்களைக் காட்டில்
சுத்தமாய் -பரம சேதனமாய் -ஏகமாய் -விசிஷ்டமான -உபாயத்தினுடைய வ்யாவ்ருத்தியைச் சொல்லுகிறது –
பதர்க் கூட்டத்தை விட்டு பர்வதத்தை அண்டை கொள்ளுமாப் போலே -என்று நம்பிள்ளை அருளிச் செய்வர் –
இந்த சித்த உபாயத்தை விட்டு ஸாத்ய உபாயங்களில் அந்வயித்தான் ஆகில் மரக்கலத்தை விட்டு
தெப்பத்தைப் பற்றுமோபாதி -என்று நிர்வஹிப்பர் சோமாசி ஆண்டான்
அதர்மத்திலே தர்ம புத்தி பண்ணி இருக்கிற அர்ஜுனனுடைய தோஷம் பாராமல் தத்வ உபதேசம் பண்ணுகையாலே வாத்சல்யமும்
ஒரு மரகத மலையை உரு வகுத்தால் போலே மேசகமான திவ்ய மங்கள விக்ரஹமும் ஸேநா தூளி தூசரிதமான மை வண்ண நறுங்குஞ்சிக் குழலும்
மையல் ஏற்றி மயக்கும் திரு முகத்திலே அரும்பின குரு வேர் முறுவலும் கடுக்கின மசிலையும்
கையில் பிடித்த உழவு கோலும் சிறு வாய்க் கயிறுமாய் ஒரு தட்டுத் தாழ நிற்கையாலே ஸுசீல்யமும்
விஸ்வரூப தர்சனத்தாலே பீதனான அர்ஜுனனுக்கு தர்ச நீயமான வடிவைக் காட்டுகையாலே ஸுலப்யமும்
வேதாஹம் சமதீதாநி-என்கையாலே ஞானமும்
ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைக்கையாலே சக்தியும்
நாநவாப்தம் அவாப் தவ்யம்-என்கையாலே பூர்த்தியும்
சர்வாத்ம பாவத்தை அருளிச் செய்கையாலே பிராப்தியும்
ஆக இந்த குணங்கள் அத்தனையும் விச்வாஸ அர்த்தமாக இந்தப் பதத்திலே அநு சந்தேயம்

அநந்தரம் ஏவம் குண விசிஷ்டனான சரண்யனுடைய நைர பேஷ்யத்தைச் சொல்லுகிறது -அவதாரண ரூபமான ஏக சப்தத்தால்
சாதன சாத்யங்களினுடைய ப்ருதுக் பாவ ஜன்யமான த்வித்வத்தையும்-ஸ்வீ கர்த்தாவினுடைய அன்வயத்தாலே வருகிற த்வித்வத்தையும்
வ்யாவர்த்திகையாலே சரண்யனுடைய சுணை யுடைமையைச் சொல்லுகிறது –

அநந்தரம் -சரண -சப்தத்தால் ஸ்வீ காரத்துக்கு உபாயத்வம் கொள்ளில் ஸ்வீ கர்த்தா அகலும் –
ஸ்வீ காரத் த்வாரா ஸ்வீ கர்த்தா அகலில் தத் அந்வயம் யுண்டாம் –
ஆகையால் இரண்டையும் வ்யாவர்த்தித்து ஸ்வீ காரனான எம்பெருமானை உபாய புதன் என்று சொல்லுகிறது

அநந்தரம் -வ்ரஜ -என்கிற பதத்தாலே இவ்வுபாயத்தினுடைய வரணத்தைச் சொல்லுகிறதாய் –
இத்தாலே பிரபத்தி மாத்ரத்தில் யுண்டான ஸுகர்யம் சொல்லுகிறது

அநந்தரம் -அஹம் -சப்தத்தால் -அநிஷ்ட நிவர்த்தகனுடைய சர்வஞ்ஞத்வம்–சர்வ சக்தித்வம் —
அவாப்த ஸமஸ்த காமத்வம் -பரம காருணீகத்வம்-என்று தொடங்கி யுண்டானவை அநு சந்தேயம்

அநந்தரம்-த்வா-என்கிற பதத்தாலே-நான் சரண்யன் -நீ சரணாகதன்-நான் பிரபத்தவ்யன் -நீ பிரபத்தா –
நான் பூர்ணன் -நீ அகிஞ்சன்யன் -ஆகையால் என் பக்கலிலே பர ந்யாஸம் பண்ணியிருக்கிற யுன்னை -என்கிறது –

அநந்தரம் -சர்வ பாபேப்யோ என்கிற பதத்தாலே புண்ய பாபங்களைச் சொல்லுகிறது -புண்ணியமும் பாபமோ என்னில்
அபிமத விரோதி பாபமாகையாலே மோக்ஷத்தைபி பற்ற புண்ணியமும் விரோதி யாகையாலே பாபம் என்கிறது –
இதில் பஹு வசனத்தாலே -அவித்யா கர்மா -வாசனா -ருசி -ப்ரக்ருதி சம்பந்தங்களையும் பூர்வாக உத்தராகங்களையும் சொல்லுகிறது
சர்வ சப்தத்தால் -க்ருதம் -க்ரியமாணம்-கரிஷ்யமாணம் -அபுத்தி பூர்வகம் -ஆரப்தம் -என்று தொடங்கி உண்டானவற்றைச் சொல்கிறது

அநந்தரம் -மோக்ஷயிஷ்யாமி -என்கிற பதத்தாலே -தாத்வர்த்தத்தாலே பூர்வாக உத்தராகங்களுடைய அஸ்லேஷ விநாசத்தைப்
புத்ர மித்ர களத்ரங்களில் அசல் பிளந்து ஏறிட்ட புண்ய பாபங்களையும் அதிகாரி விசேஷஸ்தமான ஆரப்த நிரசனத்தையும் –
ஆக இந்த விமோசனத்தைச் சொல்லி-
இதில் ணி ச்சாலே உபாய பூதனுடைய பிரயோஜக கர்த்ருத்வத்தைச் சொல்லி -இத்தாலே-
ஆதித்ய சந்நிதியில் அந்தகாரம் போலெ சும்மெனாதே கைவிட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே -என்கிறபடி முன்பு யாவை யாவை
சில பாபத்துக்கு பீதனாய்ப் போந்தாய்-அவை தான் உனக்கு அஞ்சிப் போம்படி பண்ணுவேன் என்றபடி

அநந்தரம் -மாஸூச -என்கிற பதத்தாலே -வ்ரஜ -என்கிற விதியோ பாதி மாஸூச என்கிற இதுவும் விதியாகையாலே
ஸ்வீ காரத்தோ பாதி சோக நிவ்ருத்தியும் கர்த்தவ்யம் என்கை
பலியானவனுக்கு பல அபாவத்தில் சோகம் உத் பன்னமாம்
உபாய கர்த்தாவுக்கு உபாய பாவத்தில் சோகம் உத் பன்னமாம்
இந்த உபாயத்தில் பல கர்த்ருத்வங்கள் இரண்டும் உனக்கு இல்லாமையாலும்
இவை இரண்டும் நாமே யாகையாலும் நீ சோகிக்க வேண்டா என்கை
உன்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா -என்னைப் பார்த்தாலும் சோகிக்க வேண்டா –
அதாவது உன்னைப் பார்த்து நிர்ப்பரனாய் இரு -என்னைப் பார்த்து நிர்ப்பரனாய் இரு -என்கை –
இனி சோகித்தாயாகில்-உன் ஸ்வரூபத்தையும் அழித்து என் வைபவத்தையும் அழித்தாயாம் அத்தனை –
முன்பு சோகித்திலை யாகில் அதிகாரி சித்தி இல்லை -பின்பு சோகித்தாயாகில் பல சித்தி இல்லை –
துஷ்கரத்வ ஆபன்னமாய்-ஸ்வரூப விரோதியான -சாதனா பரித்யாகத்தாலே சோகிக்க வேண்டா
ஸ்வீ கார உபாயம் ஸூலபமாகையாலே சோகிக்க வேண்டா
அது சா பேஷம் அல்லாமையாலே சோகிக்க வேண்டா
அவ்யஹித உபாயம் ஆகையால் சோகிக்க வேண்டா
மானஸ மாத்திரம் ஆகையால் சோகிக்க வேண்டா –
உபாயம் அபாய ரஹிதமாக பல விதரண நிபுணமாகையாலே சோகிக்க வேண்டா
விரோதி போமா போகாதோ என்று சோகிக்க வேண்டா
வ்ரஜ -என்கிற பதம் ஸ்வீ கார நிபந்தனமாய் இருக்குமோபாதி இந்தப் பதமே நிர்ப்பரத்வ நிபந்தனமாய் இருக்கும்
கமுகு உண்ணில் வாழையும் யுண்ணும் என்று இருக்கை –
ஆக பல பிராப்தி அவிளம்பேந கை புகுருகையாலே ஒரு பிரகாரத்தாலும் உனக்கு சோக ஹேது வில்லை -என்று தலைக் கட்டுகிறது –

ஆக —
1-த்யாஜ்யத்தையும்
2-த்யாஜ்ய பாஹுள்யத்தையும்
3-த்யாஜ்ய சாகல்யத்தையும்
4-தியாக விஸிஷ்ட வரணத்தையும்
5-தந் நைர பேஷ்யத்தையும்
6-தத் யுபாய பாவத்தையும்
7-தத் வரணத்தையும்
8-தத் அநிஷ்ட நிவர்த்தக குண யோகத்தையும்
9-தந் ந்யஸ்த பரத்வத்தையும்
10-தத் பாபத்தையும்
11-தத் பாஹுள் யத்தையும்
12-தத் சர்வவிதத்தையும்
13-தந் மோசன பிரகாரத்தையும்
14-தந் மோசன சங்கல்பத்தையும்
15-தந் ந்யஸ்த பர சோக நிவ்ருத்தியையும் –பிரதிபாதிக்கிறது –

ஸ்ரீ பாஷ்யகாரர் ஆழ்வானுக்கு -சரம ஸ்லோகத்தை உபதேசித்து -இருந்தபடி என் -என்று கேட்டருள
ஒரு ஜென்மத்தில் இருந்தும் ஒரு ஜென்மத்தில் போந்தால் போலே இருந்தது -என்று பணித்தார்
நஞ்சீயர் சரம ஸ்லோகத்தைக் கேட்டுத் தலைச் சுமை போட்டால் போலே இருந்தது என்றார்
ஸ்வரூப பிரகாச வாக்கியம் திரு மந்த்ரம் -அனுஷ்டான பிரகாச வாக்கியம் த்வயம் -விதான பிரகாச வாக்கியம் சரம ஸ்லோகம்
சாஸ்த்ர அபிமதம் திரு மந்த்ரம் -ஆச்சார்ய அபிமதம் த்வயம் -சரண்ய அபிமதம் சரம ஸ்லோகம் -என்று ஆச்சான் பிள்ளை நிர்வஹிப்பர்
பிராமண ஹ்ருதயம் திருமந்திரம் -பரமாத்ரூ ஹிருதயம் த்வயம் -ப்ரமேய ஹிருதயம் சரம ஸ்லோகம் -என்று ஜீயர் நிர்வஹிப்பர்
திரு மந்த்ரம் திரு முகப் பாசுரமாய் இருக்கும் -த்வயம் படி எடுப்பாய் இருக்கும் -சரம ஸ்லோகம் வெட்டாய் இருக்கும் –

இந்த சரம ஸ்லோகத்துக்கு ஸங்க்ரஹம் த்வயம் -த்வயத்துக்கு ஸங்க்ரஹம் திரு மந்த்ரம்
திருமந்திரத்தில் பிரதம பதத்தில் பிரதம அக்ஷரமான அகாரம் ப்ரக்ருதி என்றும் ப்ரத்யயம் என்றும் இரண்டாய்
இதில் பிரக்ருதியான அகாரம் உபாயத்தைச் சொல்கிறது -ப்ரத்யயமான சதுர்த்தி உபேயத்தைச் சொல்லுகிறது –
அகார விவரணம் உகாரம் -உகார விவரணம் மத்யம பதம் -மகார விவரணம் த்ருதீய பதம்
மத்யம பத விவரணம் த்வயத்தில் பூர்வ கண்டம் -த்ருதீய பத விவரணம் உத்தர கண்டம்
பூர்வ கண்ட விவரணம் சரம ஸ்லோகத்தில் பூர்வார்த்தம் -உத்தர கண்ட விவரணம் உத்தரார்த்தம்
பிரதம பதத்தில் மத்யம அக்ஷரமும் -மத்யம பதமும் -த்வயத்தில் பூர்வ கண்டமும் –
சரம ஸ்லோகத்தில் பூர்வார்த்தமும் உபாய வாசகமாய் இருக்கும் –
பிரதம பதத்தில் த்ருதீய அக்ஷரமும் -த்ருதீய பதமும் -த்வயத்தில் உத்தர கண்டமும் –
சரம ஸ்லோகத்தில் உத்தரார்த்தமும் உபேய வாசகமாய் இருக்கும்
சரம ஸ்லோகத்தில் உத்தார்த்த ஸங்க்ரஹம் த்வயத்தில் உத்தர கண்டம் –
உத்தர கண்ட ஸங்க்ரஹம் திருமந்திரத்தில் த்ருதீய பதம் -த்ருதீய பத ஸங்க்ரஹம் மகாரம்
சரம ஸ்லோகத்தில் பூர்வார்த்த ஸங்க்ரஹம் த்வயத்தில் பூர்வ கண்டம் –
பூர்வ கண்டம் ஸங்க்ரஹம் மத்யம பதம் -மத்யம பத ஸங்க்ரஹம் உகாரம்
மகார ஸங்க்ரஹம் சதுர்த்தி -உகார ஸங்க்ரஹம் அகாரம்
ஆக -சரம ஸ்லோக ஸங்க்ரஹம் த்வயமாய் -த்வய ஸங்க்ரஹம் திரு மந்திரமாய் -திரு மந்த்ர ஸங்க்ரஹம் பிரணவமாய் –
பிரணவ ஸங்க்ரஹம் பிரதம அக்ஷரமான அகாரமாய் இருக்கும்

இந்த அகாரம் -அ இதி ப்ரஹ்ம-ஹாரோ விஷ்ணு வாசக -என்கிறபடியே பகவத் வாசகமாய் இருக்கும் –
பகவத் வாசகமாய் இருக்கிற அகாரம் உபாய உபேயங்களைச் சொல்லுகையாலே வாஸ்ய பூதனுடைய ஸ்வரூபமும் உபாய உபேயத்வமுமாம்
உபாய உபேயத்வம் ஸ்வரூபமான படி என் என்னில் –
ப்ரஹ்ம ஸ்வரூபம் ஞானாநந்தம் என்று ஸூ பிரசித்தம் ஆகையால் ஞானம் உபாயம் -ஆனந்தம் உபேயம் -‘
இவ்வுபாய உபேயங்கள் எம்பெருமானுக்குத் தத்வம் என்று தத்வ ரூபமான திரு மந்திரத்தாலும்
ஹித ரூபமான த்வயத்தாலும் -விதான ரூபமான சரம ஸ்லோகத்தாலும் -அறிகை இவ்வதிகாரிக்கு தத்வ தர்சித்வமானது-

இந்த தத்வ தர்சனத்தாலே இ றே இவனுக்கு ஸ்வரூப சித்தி பிறப்பது
ஆனால் ஜனகாதிகள் கர்மா நிஷ்டராயும் பரதாதிகள் ஞான நிஷ்டராயும் ப்ரஹ்லாதமுகரானார் பக்தி நிஷ்டராயும்
மோக்ஷம் பெறுகையாலே இவை உபாயமாகக் குறை என் -என்னில்
பாண்டுரோகியானவன் மாணிக்கத்தைக் கொடுத்து மண்ணாங்கட்டியைக் கொள்ளுகை போலே
அத்ருஷ்ட ரூபமான கர்மமும் சேதன அபிப்பிராயத்தாலே த்ருஷ்டத்தில் நோக்குகிறதாய் இருக்கும் –
செத்துகிடந்த புலியை ம்ருத சஞ்சீவினியை இட்டு எழுப்பினால் பின்பு அது தானே பாதகமாய் இருக்குமா போலே
ப்ரக்ருதி வஸ்யன் ப்ரக்ருதி ஆத்ம விவேகத்தை பண்ணா நிற்கச் செய்தேயும் -ஸ்வதந்த்ரோஹம் -என்று இருக்கையாலே பாதகமாய் இருக்கும் –
முக்தி ஹேதுவாகா நிற்கச் செய்தேயும் ஏவம்விதமான ஞானமும் அநர்த்த ஹேதுவாய் இருக்கும்
பிச்சானையை மேற்கொண்டு வீர பதம் பெறுவாரைப் போலே இருக்கும் பக்தி யோகம்
இப்படி தோஷ பூயிஷ்டங்கள் ஆகையால் சிர தர ஜென்ம சாத்தியங்கள் ஆகையால் -அதுக்கும் மேலே
எம்பெருமானுடைய சரணமுடைமையை அழிக்கையாலும் இவையும் யுபாயம் அன்று
இனி உபாயம் ஏது என்று பார்த்தால் பிரபத்தியே உபாயமாக வேணும் -பக்தி ப்ரபத்திகள் இரண்டும் தம்மில் ஒவ்வாதோ என்னில்
பக்திக்கு க்ருஷ்யாதி த்ருஷ்டாந்தம் -ப்ரபத்திக்கு ரத்ன வாணிஜ்யம் த்ருஷ்டாந்தம் –
க்ருஷ்யாதி அர்த்த சாதனமாம் போது-அநேக யத்னங்களை யுடைத்தாய் ஓன்று விகலமானாலும் பல வை கல்யம் பிறக்கும்
ரத்ன வாணிஜ்யம் அல்ப யத்னமும் அநேக அர்த்தங்களுக்கு சாதனமாய் இருக்கும்
ஆகையால் அஸக்ருத் கார்யையான பக்தியில் காட்டில் ஸக்ருத் கார்யையான ப்ரபத்திக்கு உத்கர்ஷம் யுண்டு
அதுக்கும் மேலே பக்தியில் காட்டில் பிரபத்திக்கு பிராரப்த பங்க ரூபமான பலாதிக்யம் யுண்டு -ஆகையால் பிரபத்தி உத்க்ருஷ்டமாகக் கடவது

பிரபத்தி தான் உபாயமாம் அளவிலே சப்த உச்சாரண மாத்ரமும் உபாயம் அன்று –
இது உபாயமாகில் சாதனாந்தர விசேஷமாய் இருக்கும் –
இனி உபாயம் ஏது நின்று நிஷ்கர்ஷித்தால் பிரபத்தவ்யனே உபாயமாகக் கடவது
உபாய உபேயங்கள் ஸ்வரூபம் ஆகையால் உபேய பூதனானவனே உபாயமாகும் அளவில்
இவ்வதிகாரிக்குச்செய்ய வேண்டிய க்ருத்யம் ஒன்றும் இல்லை-
இவன் ஆர்த்த ப்ரபன்னன் ஆகில் அப்போதே ப்ராப்ய சித்தி பிறக்கும்
திருப்த ப்ரபன்னனாகில் சரீர அவசான சமனந்தரம் பிறப்பிய சித்தி பிறக்கும் –
இப்படி உபாய உபேயங்கள் ஈஸ்வரனுக்கு தத்வம் என்று -உபாய உபேயத்வே ததிஹ தவ தத்வம் நது குணவ் -என்று ப்ரதிஜ்ஜை பண்ணி
ரஹஸ்ய த்ரய பரந்தமாக இத்தை உபபாதித்து கர்மா ஞான சக க்ருதையான பக்தியில் காட்டில் பிரபத்தி வ்யாவ்ருத்தி
சொல்லுகிற முகத்தாலே உபாய உபேயத்வங்கள் தத்வம் என்று நிகமிக்கிறது –

இப்படிக்கொத்த தத்வம் அறியும் போது -உபதேஷ்யந்தி தி ஞானம் ஞானி ந தத்வ தர்சின -என்கிறபடியே
தத்வ தர்சியான ஆச்சார்யனை ஆஸ்ரயித்து தன் முகத்தாலே உபதேசிக்க அறிய வேணும் என்று
ஜீயர் 12-சம்வத்சரம் ஆஸ்ரயித்த பின் இ றே பட்டரும் தத்வ உபதேசம் பண்ணி அருளினார்
வேதாந்தச்சார்யரான உடையவர் -18-பர்யாயம் சென்று ஆஸ்ரயித்த பின்பு இறே
திருக் கோஷ்டியூர் நம்பி இந்த தத்வ உபதேசம் பண்ணி அருளினார்
சர்வஞ்ஞரான உய்யக் கொண்டார் ஸர்வத்ர அனுவர்த்தனம் பண்ணின பின்பு இறே
ஸ்ரீ மன் நாதமுனிகள் தத்வ உபதேசம் பண்ணி அருளினார்

ஆச்சார்யன் இந்த அர்த்தத்தை -கசடர்க்கும் -கர்ம பரவசர்க்கும் -கில்பிஜ ஜீவிகளுக்கும் -அபிமான க்ரஸ்தருக்கும் -குத்ஸித ஜனங்களுக்கும் –
க்ருதக்னருக்கும் -கேவலாத்ம பரர்க்கும் -கைதவ வாதிகளுக்கும் -கோபிகளுக்கு -கௌத்ஸகுதற்கும் -அமரியாதர்க்கும் –
அஸூயா பரர்க்கும் -வஞ்சன பரர்க்கும் -சஞ்சல மதிகளுக்கும் -டாம்பீகருக்கும் -சாதனாந்தர நிஷ்டர்க்கும் – உபதேசிப்பான் அல்லன் –
கீர்த்தியைப் பற்றவும் ஸத்காரத்துக்காகவும் உபதேசிப்பான் அல்லன் –
கார்ப்பண்ய நிஷ்டரான அதிகாரியினுடைய ஆர்த்தியைக் கண்டு இரங்கி உபதேசிக்கிறவன் ஆச்சார்யன் ஆகிறான் –
சிஷ்யனாகில் தான் ஸத்ய ப்ரக்ருதியாய் சதாசார்யர் பரிசாரத்திலே சர்வ காலமும் வர்த்திக்கக் கடவனாய் சந்ததம் சத்வ குதூஹலியாய்
சம்சாரத்தில் உண்டான ஸூக அனுபவத்தை சப்தார்ச்சிஸ்ஸினுடைய ஜ்வாலையை விழுங்கி ஸந்தாபத்தைப் போக்குமாபாதியும்
விஷ வ்ருஷ பலாஸ்வாதனத்தோ பாதியும் நிர்வேதம் பண்ணி இருக்கக் கடவனாய் -சஹி வித்யா தஸ்தம் ஜனயதி -என்கிறபடியே
ஆச்சார்யனாகிற பிதாவுக்குத் திருமந்திரம் ஆகிற மாதாவின் பக்கலிலே அபிஜாதனாய் -ஆஸ்திக்யாதி குண விசிஷ்டனாய் –
ஆச்சார்யருடைய சாயையை அனுவர்த்திக்கக் கடவனாய் -ஆத்ம யாத்திரையும் தேக யாத்திரையும்
ஆச்சார்யன் இட்ட வழக்காம் படி அவன் பக்கலிலே பர ந்யாஸம் பண்ணி இருக்குமவன் சிஷ்யன்

தேவு மற்று அறியேன் -என்று ஸ்ரீ மதுரகவி ஆழ்வாரும் ஆச்சார்ய பர ந்யாஸம் பண்ணினார் –
விட்டு சித்தர் தங்கள் தேவர் -என்று நாச்சியாரும் பர ந்யாஸம் பண்ணினார்
இந்த அர்த்தத்தை இன்னார் சொல்லி இன்னார் கேட்க வேணும் என்கிற நியதி இல்லை
பிதா புத்ர சம்வாதத்திலே பிதாவுக்கு புத்ரன் உபதேசம் பண்ணினான்
அகஸ்தியருக்கு லோபாமுத்திரை உபதேசம் பண்ணினாள்
கௌரிக்கு ருத்ரன் உபதேசித்தான்
ஆச்சார்ய புத்திரனான சுக்ரனுக்கு ஜனகன் உபதேசித்தான்
பரம ரிஷிகளுக்கு தர்ம வ்யாதன் உபதேசித்தான்
ஆண்டாள் பட்டர் பக்கலிலே ஸ்ரவணம் பண்ணி இருந்தாள்
பரதாய அப்ரமேயாய குஹோ கஹந கோசார -என்கிறபடியே ஸ்ரீ குஹப் பெருமாள் ஸ்ரீ பரத்தாழ்வானுக்கு ஸ்ரீ ராம வ்ருத்தாந்தம் சொன்னான்
விருப்புற்று கிடக்கின்றேன் சொல் ஆழி வெண் சங்கே -என்று நாச்சியார் ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தைக் கேட்டாள்
ஆகையால் -பகவத் வைபவம் சொல்லுமவன் ஆச்சார்யன் -கேட்க்குமவன் சிஷ்யன்

இவ்வதிகாரி ஆச்சார்யன் பக்கலிலே கேட்க்கும் போது ஜனகன் வாசலிலே சுக்ரன் பட்டது பட்டாகிலும் கேட்க வேண்டும்
ஊஷர ஷேத்ரத்திலே நல்ல விரையிட்டாலும் பிரயோஜனம் இல்லை –
ஸூ ஷேத்ரத்திலே பொட்டை விரையிட்டாலும் பிரயோஜனம் இல்லை
நல்ல தரையிலே நல்ல விரையை இட்டால் இறே கார்யகரமாவது
ஆகையால் அவன் சத்வ ப்ரக்ருதியுமாய் நல்ல கேள்வியில் ச்ருதமாக வேண்டும் –
இப்படிக்கொத்த தத்துவத்தை உபதேசித்த ஆச்சார்யனுக்கு சிஷ்யன் செய்யும் உபகாரம் என் என்று பார்த்தால்
சரீரம் அர்த்தம் பிராணம் ச சத் குருப்யோ நிவேதயத்-என்கிறபடியே -ஆச்சார்ய சமர்ப்பணம் பண்ணுகிற சரீரமும் அர்த்தமும் பிராணனும்
இதுக்கு சத்ருசம் அல்லாமையாலே அதுக்கு ஈடாக இவன் செய்யலாவது ஒன்றும் இல்லை
இனி ஆச்சார்யன் பக்கலிலே உபகார ஸ்ம்ருதி பண்ணி இருக்கை இறே நம்மாழ்வார் நஞ்சீயர் நம்பிள்ளை என்று போருகிறது –

ஆச்சார்யர்களுக்கு எல்லை நிலம் ஸ்ரீ கூரத்தாழ்வான்
ஆச்சார்ய விசுவாசத்துக்கு எல்லை நிலம் சபரியும் பொன்னாச்சியாரும்
ஆச்சார்ய குணங்களுக்கு எல்லை நிலம் இரக்கம்
சிஷ்ய குணங்களுக்கு எல்லை நிலம் உபகார ஸ்ம்ருதி
ஆச்சார்யர் உபதேசிக்கும் திரு மந்திரத்துக்கு எல்லை நிலம் மந்த்ர ரத்னம்
மந்த்ர ரத்னத்தின் சொல்லுகிற ஆஸ்ரய குணங்களுக்கு எல்லை நிலம் ஸுலப்யம்
இந்த குண விசிஷ்டனுக்கு விக்ரஹங்களுக்கு எல்லை நிலம் அர்ச்சாவதார
இவனைப் பெறுகைக்கு உண்டான உபாயங்களுக்கு எல்லை நிலம் இவன் தான்
இவ்வுபாய விசுவாசத்துக்கு எல்லை நிலம் திரௌபதியும் திருக் கண்ண மங்கை ஆண்டானும்
உபாய பூதனான அவன் தானே உபேயத்துக்கும் எல்லை நிலம்
இவ்வுபேய விசுவாசத்துக்கு எல்லை நிலம் சிந்தையந்தியும் பெரிய யுடையாரும்
இம்மந்திரத்துக்கு எல்லை நிலமான அதிகாரி பிரபன்னன்
பிரபன்னனுடைய கால ஷேபத்துக்கு எல்லை நிலம் பகவத் கைங்கர்யம்
பகவத் கைங்கர்யத்துக்கு எல்லை நிலம் அனந்தாழ்வான்
பாகவத கைங்கர்யத்துக்கு எல்லை நிலம் எண்ணாயிரத்து எச்சான்
பிரபன்னனுடைய கால ஷேபம் கைங்கர்ய அன்விதம் –

ஞானம் பிறக்கை ஸ்வரூபம் –ஆச்சார்யனுக்கு மிதுன க்ருதஞ்ஞாபநம் ஸ்வரூபம் –இத்தை அறிந்த அதிகாரிக்கு வியவசாயம் ஸ்வரூபம்
ஆக -இந்த பூர்ண அதிகாரியானவன் -இப்படி தத்வ உபதேசம் பண்ணின ஆச்சார்யன் பக்கலிலே
பர ஸ்வரூபத்தையும்
ஸ்வ ஸ்வரூபத்தையும்
உபாய ஸ்வரூபத்தையும்
விரோதி ஸ்வரூபத்தையும்
பல ஸ்வரூபத்தையும்
அறிந்து -அவன் பக்கலிலே க்ருதஞ்ஞனுமாய் —
ஸ்ரீயப்பதியான எம்பெருமானே சேஷியாகவும் -தன்னை சேஷ பூதனாகவும்
அவனை ஸ்வாமியாகவும் தன்னை தாச பூதனாகவும்
அவனை ஆத்மாவாகவும் தன்னை சரீர பூதனாகவும்
அவனைப் புருஷனாகவும் தன்னை ஸ்த்ரீத்வ குண யுக்தனாகவும் -அனுசந்தித்து
நம்முடைய த்ருஷ்டத்தை கர்மாதீனமாகவும் நிர்வஹிக்கும்
அத்ருஷ்டத்தை க்ருபாதீனமாகவும் நிர்வஹிக்கும் -என்று
அவன் பக்கலிலே பர ந்யாஸம் பண்ணி இருக்குமவனுக்கு ஸ்வரூப சித்தி பிறக்கும் –

தத்வ பூஷணம் முற்றிற்று

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ யாமுனாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: