ஸ்ரீ மத் ரஹஸ்ய த்ரய சாரம் — -அதிகாரம் -29–ஸ்ரீ சரம ஸ்லோக அதிகாரம் -சர்வ தர்மான் பரித்யஜ்ய விளக்கம் –ஸ்ரீ வேதாந்த தேசிகன் ஸ்வாமி–

ஸ்ரீ மான் வேங்கட நாதார்ய கவிதார்க்கிக கேசரீ
வேதாந்தாசார்ய வர்யோமே சந்நிதத்தாம் சதா ஹ்ருதி —

சீரொன்று தூப்புல் திருவேங்கடமுடையான்
பாரொன்றச் சொன்ன பழ மொழியில் ஓரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு –

——————————————————————————–

ய உபநிஷதாம் அந்தே யஸ்மாத் அநந்த தயாம்புதே
த்ருடித ஜநதா சோக ஸ்லோக ஸமஜாயதே
தமிஹ விதிநா கிருஷ்ணம் தர்மம் பிரபத்ய சநாதாநம்
சமித துரித சங்கா தங்க த்யஜ ஸூக மாஸ்மகே

துர் விஞ்ஞாநைர் நியமகஹநை தூர விஸ்ராந்தி தேசை
பால அநர்ஹை பஹூபி அயநை சோசதாம் ந ஸூ பந்தா
நிஷ் ப்ரத்யூகம் நிஜ பதமசவ் நேது காம ஸ்வபூம்நா
சத் பாதேயம் கமபி விததே சாரதி சர்வ நேதா

ஒண் டொடியாள் திருமகளும் தானுமாகி
ஒரு நினைவால் ஈன்ற உயிர் எல்லாம் உய்ய
வண் துவரை நகர் வாழ வசு தேவற்காய்
மன்னவர்க்குத் தேர் பாகனாகி நின்ற
தண் துளவ மலர் மார்பன் தானே சொன்ன
தனித் தருமம் தானே எமக்காய்த் தன்னை என்றும்
கண்டு களித்து அடி சூட விலக்காய் நின்ற
கண் புதையல் விளையாட்டைக் கழிக்கின்றானே

————————

அவதாரிகை –

ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யந்தம் உத்ஸ்ருஜ்ய ஹி ஆகதோ மதுராம் புரீம் –ஸ்ரீ ஹரி வம்சம் -113-62-
என்கிறபடியே ஸ்ரீ யபபதியான சர்வேஸ்வரன் -சாது பரித்ராண துஷ்க்ருத விநாச தர்ம சம்ஸ்தானங்களுக்காக
வண்டுவராபதி மன்னனாய் -வந்து திருவவதரித்து அருளி சர்வ ஸூலபனாய் –
த்ரௌபத்யா சஹிதா சர்வே நமஸ் ஸக்ரூர் ஜனார்த்தனம் -என்கிறபடியே
சரணாகதரான பாண்டவர்களுக்காக இன்னார் தூதன் என நின்று
அர்ஜுனனை ரதியாக்கித் தான் சாரதியாய் அவனுக்கு விதேயனாய் நின்ற அளவிலே

இவ்வர்ஜுனன் தன்னை நிமித்த மாத்ரமாகக் கொண்டு சர்வேஸ்வரன் தன் பிரதிபக்ஷங்களை நிரசிக்க நின்ற நிலையைக் கண்டு
பந்து விநாசம் சித்தம் என்று நிச்சயித்து அஸ்தாந ஸ்நேஹத்தாலே பிறந்த சோகத்தால் அஸ்தாந கிருபையாலும்
ஆச்சார்யாதிகள் யுத்த யுன்முகரே யாகிலும் அவர்கள் வாதத்தாலே பாபம் வருகிறது என்கிற பயத்தாலும் கலங்கி
எது ஹிதம் என்று தெளிய வேண்டும் என்று பார்த்து
யச் ஸ்ரேயா ஸ்யாந் நிச்சிதம் ப்ரூஹி தந்மே சிஷ்யஸ்தே
அஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம் –ஸ்ரீ கீதை -2-7–என்று விண்ணப்பம் செய்ய
அவனுடைய சோகத்தை நிவர்த்திப்பிக்கைக்காக தேகாதி வியதிரிக்தமாய் பர சேஷ தைக ரசமான நித்யாத்ம ஸ்வரூபத்தையும்
இஸ் ஸ்வரூபம் தெளிந்தவனுக்குப் பரம புருஷார்த்த லாபத்துக்குப் பரம்பரயா காரணங்களாக கர்மயோக ஞான யோகங்களையும்
சாஷாத் உபாயமாகச் சோதிதமான பக்தியோகத்தையும் ச பரிகரமாக உபதேசிக்க

இப்பரம புருஷார்த்தத்தைக் கடுகப் பெற வேணும் என்கிற த்வரை யுண்டே யாகிலும் ச பரிகரமான இவ்வுபாயத்தினுடைய துஷ்கரதையாலும்
இவ்வுபாய அனுஷ்டானத்துக்கு அபேக்ஷித ஞான சக்திகள் யுண்டேயாகிலும் அநேக அவதானத்தோடே கூடச் சிரகால சாத்தியமான உபாய
ஸ்வபாவத்தாலே அபிமதம் கடுகத் தலைக் கட்டாதபடி இருக்கையாலும்-நிரதிசய சோகாவிஷ்டனான அர்ஜுனனை வியாஜமாகக் கொண்டு
பரம காருணிகனான ஸ்ரீ கீதா உபநிஷதாச்சார்யன் –

பக்த்யா பரமயாவாபி பிரபத்த்யா வா மஹா மதே ப்ராப்யோஹம் நாந்யதா பிராப்யோ மம கைங்கர்யம் லிப்ஸூபி –
என்று தான் விகல்பித்து விதித்த உபாயங்களில் –
தாவ தார்த்திஸ் ததா வாஞ்ச தாவந் மோஹஸ் ததா அஸூகம் -என்கிறபடியே
தன் திருவடிகளைப் பெறுகைக்கும் மற்றும் அபிமதமானவை எல்லாவற்றுக்கும் பொதுவான ஸாதனமாய்
ஆநு கூல்ய சங்கல்பாதி வ்யதிரிக்த பரிகார நிரபேஷமாய் லகு தரமாய் க்ஷணம் மாத்ர சாத்தியமான ரஹஸ்ய தம உபாயத்தை
ஸ்ரோதவ்ய சேஷம் இல்லாத படி உபதேச பர்யவசனமான சரம ஸ்லோகத்தால் சர்வ லோக ரஷார்த்தமாக அருளிச் செய்கிறான்

ஸ்ருதி ஸித்தமான இவ்வர்த்தத்தை சரண்யனான சர்வேஸ்வரன் தானே உபதேசிக்க இது தானே
சந்த்யஜ்ய விதிநா நித்யம் ஷட்விதம் சரணாகதிம் ஆச்சார்ய அநுஜ் ஞாயா குர்யாத் சாஸ்திர த்ருஷ்டேன வர்த்மநா -என்று
ஸ்ரீ விஷ்ணு தத்வாதிகளிலே சொன்ன ஆச்சாரய அநுஜ்ஜையுமாயிற்று-

——————-

சர்வ தர்மான் -விளக்கம் –

சர்வ தர்மான்-
இந்த ஸ்லோகத்துக்கு-சங்கராதி குத்ருஷ்டிகள் சொல்லும் பொருள்களை எல்லாம் தாத்பர்ய சந்திரிகையிலும்
நிஷேபரக்ஷையிலும் பரக்க தூஷித்தோம் –
இங்கு சாரமான அர்த்தங்களை சத் சம்பிரதாய ஸித்தமான படியே சொல்லுகிறோம் –

இதில் பூர்வார்த்தம் உபாய விதாயகம்
உத்தரார்த்தம் பல நிர்த்தேசாதி முகத்தால் விதி சேஷம்
ஆகையால் இஸ் ஸ்லோகம் உபாய விதி பிரதானம் –

தர்மமாவது சாஸ்திரமே கொண்டு அறிய வேண்டியிருக்கும் புருஷார்த்த சாதனம்
தர்மான் -என்கிற பஹு வசனத்தாலே
அபிமத சாதனமாக சாஸ்திர சோதிதங்களான தர்மங்களினுடைய பாஹூல்யத்தைச் சொல்கிறது
சர்வ சப்தத்தாலே ச பரிகரமான நிலையை விவஷிக்கிறது
தர்ம பரிகரங்களையும் தர்மம் என்று சொல்லக் குறையில்லை இறே-
இஸ் சர்வ சப் தத்தை ஏக சப்த பிரதி சம்பந்தியாக யோஜிக்கும் போது இது அங்கிகளான
நாநா தர்மங்களினுடைய கார்த்ஸ் ந்யத்தைச் சொல்லுகிறது
இப்படி பொதுவிலே சொன்னாலும் இங்குப் பிரகரண வசத்தாலே மோஷார்த்தமாக சாஸ்திர விஹிதங்களுமாய்
ச பரிகரங்களாய் நாநா பிரகாரங்களான உபாசனங்களை எல்லாம் சொல்லுகையிலே தாத்பர்யம் –

புருஷோத்த மத்வ ஞானம் சர்வ வித்யைகளுக்கும் உபகாரமான தத்வ ஞான மாத்ரமாகவும் –
அவதார ரஹஸ்யம் சிந்தனம் அனுஷ்டிக்கிற உபாசனாதிகளுடைய சீக்ர நிஷ்பந்தி ஹேதுவாகவும்
தேச வாசாதிகள் உபாய விரோதி பாப க்ஷய ஹேதுக்களாய்க் கொண்டு உபாய நிஷ்பாதங்களாகவும்
ஸ்ரீ கீதா பாஷ்யாதிகளிலே சமர்த்திக்கையாலே
இவற்றை சாஷான் மோக்ஷ உபாயங்களாக்கி அங்கி பஹுத்வ விஷயமான பஹூ வசனத்தாலே விவஷிக்கிறது என்கை உசிதம் அன்று
நாநா சப்தாதி பேதாத் -ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -3-3-56–என்கிறபடியே இவை ஒழியவும் சத் வித்யா தஹர வித்யாதி பேதத்தாலே அங்கு
பஹூத்த்வம் கிடைக்கையாலே இப் பஹு வசனம் சார்த்தம் –
அங்கி பஹூ த்வத்தையும் பரிகர பஹூ த்வத்தையும் கூட விவஷித்தாலும் விரோதம் இல்லை –

பரித்யஜ்ய-
பரித்யஜ்ய என்கிற இடத்தில்
தியாகமாவது -அநயா ச ப்ரபத்யா மாம் ஆகிஞ்சனந்யை க பூர்வகம் -இத்யாதிகளில் படியே அகிஞ்சனனான தன்
நிலையைக் கண்டு உபாயாந்தரங்களிலே பிறந்த நைராச்யம் -ஆசையாலே பற்றானால் ஆசையை விடுகை தியாகம் என்ன உசிதம் இறே
அதில் பரி-என்கிற உபசர்க்கத்தாலே –
அநாகத அநந்த கால சமீஷயா அபி அத்ருஷ்ட சாந்தார உபாய -ஸ்ரீ ரெங்க கத்யம் 2–என்றும்
த்வத் பாத கமலாத் அந்யத் ந மே ஜன்மாந்தரேஷ்வபி -ஜிதந்தே -1–10-இத்யாதிகளில் படியே அத்யந்த அகிஞ்சனனுக்கு
சர்வ காலத்திலும் சர்வ பிரகாரத்திலும் யோக்யதை இல்லாமை தெளிகையாலே பிறந்த நைராஸ்ய அதிசயம் சொல்லப்படுகிறது
சர்வ பிரகாரத்தாலும் தியாகமாவது பூரண அனுஷ்டான சக்தி இல்லாத போது யதா சக்தி அனுஷ்டானம் பண்ணுகிறோம் என்றும்
அதுக்கு யோக்யதை இல்லாத தசையில் வேறே சில அநு கல்பங்களை யாதல் உபாய உபாயங்களை யாதல் அனுஷ்டிக்கிறோம் என்றும்
தனக்கு துஷ்கரங்களைக் கனிசிக்கும் துராசை யற்று இருக்கை-

இவ் வனுவாதத்துக்கு அதிகார விசேஷத்தை காட்டுகை பிரயோஜனம் –
அதில் பரி என்கிற உப சர்க்கம் அதிகார புஷ்கல்யத்தை விவஷிக்கிறது
அநித்யம் அஸூகம் லோகம் இமாம் ப்ராப்ய பஜஸ்வ மாம் -ஸ்ரீ கீதை -9–33-என்கிற இடத்தில் பிராப்ய என்கிறது -விதி அன்றிக்கே
ப்ராப்ய வர்த்தமான த்வம்-என்று வியாக்யாதம் ஆனால் போலே
இங்கும் பரித்யஜ்ய ஸ்தித த்வம் -அனைத்து வழி முறைகளையும் கை விட்ட நீ –என்று விவஷிதமாகக் கடவது
இப்படி அர்த்தாந்தரங்களிலும் பிரயோகம் யுண்டாகையாலே –
கத்வா -ஸ்ருதி மாத்ரத்தைக் கொண்டு தியாகம்-கை விடுதல் -ப்ரபத்தியுடைய – அங்கம் என்ன ஒண்ணாது

பரித்யஜ்ய -என்கிறது விதியான போது
ப்ரபாத்யாயாதிகளில் விதிக்கிறபடியே ஆகிஞ்சன்ய பிரதி சந்தனாதி ரூபமான கார்ப்பண்யம் ஆகிற –
வேறு கதி அற்றவன் -என்கிற பிரபத்யங்கத்தை விதிக்கிறது என்றால் அர்த்தத்தில் விரோதம் இல்லை —
அப்போது சர்வ தர்மான் பரித்யஜ்ய என்கிற இது
அஹம் அஸ்மி அபராதாநாம் ஆலய–அகிஞ்சன அகதி -ந தர்மே நிஷ்டே அஸ்மி -இத்யாதிகளில் படியே
சர்வ தர்மங்களும் தன்னை யோக்யதா பர்யந்தமாக கழித்த படியை முன்னிட்டுக் கொண்டு என்றபடி
இப்படி விளம்பித ப்ரதீதிகமான அர்த்தமும் பஹு பிராமண அநு குணமாகையாலே அவற்றுக்கு விருத்தமாக
சங்கராத் யுக்தங்களான சர்வ தர்ம ஸ்வரூப தியாக அர்த்தங்களில் காட்டிலும் உபாதேயம்

ப்ராப்திக்காக ஒரு தர்மமும் அனுஷ்ட்டிக்க வேண்டா என்று ப்ரபத்தியினுடைய நைரபேஷ்யத்தைச் சொல்லுகிறது
என்கை விதி பஷத்துக்கு உசிதம்
அப்போது பரி என்கிற உப சர்க்கம் –
ஆஸாந்தேந கர்தவ்யம் சுசிநா கர்தவ்யம் -இத்யாதிகளில் சொல்லுகிற சர்வ சாதாரண
யோக்யதா ஆபாதகங்களும் இதுக்கு அங்கமாக ஸ்வீ கார்யங்கள் ஆகா என்று விவஷிக்கிறது

இங்கன் அன்றிக்கே கர்ம யோகம் ஞானயோகம் பக்தியோகம் என்கிற தர்மங்களினுடைய ஸ்வரூப தியாகம்
ப்ரபத்திக்கு அங்கம் என்னும் பக்ஷத்தில் பிரபத்தி சர்வாதிகாரம் இன்றிக்கே ஒழியும்-
தர்ம நிஷ்டான சக்தனுக்கு இறே அவற்றினுடைய தியாகத்தை விதிக்க வேண்டுவது
இது பஹு பிராமண சித்தமான கார்ப்பண்யம் ஆகிற அங்கத்துக்கும் –
புகல் ஒன்றில்லா அடியேன் – குலங்களாய -குளித்து மூன்று –
ந தர்ம நிஷ்டா அஸ்மி-இத்யாதிகளிலே பிரசித்தமான அகிஞ்சன அதிகாரம் என்கிற சம்பிரதாயத்துக்கு விருத்தமாம்
ஈஸ்வரனைப் பற்ற அத்யந்த பாரதந்த்ரையாலே உபாயாந்தரங்களுக்கு ஷேத்ரஞ்ஞன் நித்ய அசக்தன் என்று காட்டி இவனுக்கு
அவற்றினுடைய தியாகத்தை விதிக்கும் என்னுமது
சர்வ சாஸ்த்ர ஸ்வ வசன ஸ்வ ப்ரவ்ருத்தியாதி விரோதத்தாலே அத்யந்த பரிஹாஸ்யம் –
அப்போது துல்ய நியாயதையாலே -வ்ரஜ-என்பது தானும் கடியாது
உபாயாந்தரங்களுக்கு ஜீவாத்மா நித்ய அசக்தன் என்கை தங்களுக்கு அநிஷ்டமான அநுவாத பஷத்துக்கு ஸ்த்ரீ கரணம்
பண்ணினபடியாம் அத்தனை
ஏக பிரயோகம் தானே அசக்தனைப் பற்ற தியாக அநுவாதமாய் இதரனைப் பற்ற தியாக விதியாகை ஏக வாக்கியத்தில் கடியாது

பலத்தில் வைஷம்யம் இன்றிக்கே அதிகாரியும் ஏகனாய் இருக்க -குரு-லகு -விகல்பமும் சொல்ல ஒண்ணாது
குரு உபாயத்திலே சக்தனானவனுக்கே அதன் தியாக விசிஷ்டமான லகு உபாயத்தை விதித்தால்
குரு உபாயத்தில் ஒருத்தரும் பிரவர்த்திப்பார் இல்லாமையாலும்
வேறு ஒரு முகத்தால் அதிகாரி பேதம் சொல்ல ஒண்ணாமையாலும் குரு உபாயத்தை விதிக்கிற சாஸ்திரங்கள்
எல்லாம் பிரமாணம் இன்றிக்கே ஒழியும்
லகு உபாய ப்ரோசன அர்த்தமாக குரு உபாயத்தை விதித்து அது தன்னையே நிஷேதிக்கிறது என்கையும் அத்யந்த அனுசிதம்
அநு பாயங்களை உபாயங்களாக விதிக்கிறது என்றால் ஸ்ருதி ஸ்ம்ருதிகள் மோஹன சாஸ்த்ரங்களாக
பிரசங்கிக்கையாலே சரண்ய ஸ்வரூபாதிகளும் சித்தியாத படியாம்
குருக்களான க்ருஷ்யாதி வியாபாரங்களும் லகுக்களான ரத்னவாணி ஜ்யாதிகளும் அர்த்தார்த்திகள் பக்கல் விகல்ப்பிக்கறதும்
அதிகாரி விசேஷ வியவஸ்தையாலே என்னும் இடம் லோக பிரசித்தம் –
ஆழ்வானுடைய சரம ஸ்லோக வியாக்யானத்திலும்
இவ்வளவே விவஷிதம் ஆகையால் ஒரு விரோதமும் இல்லை
சமாவர்த்த நாதிகளில்-ப்ரஹ்மசர்யம் முடித்து க்ருஹஸ்தனாகும் பொழுது செய்யும் ஸ்நநாதிகள் – குரு லகு விகல்பமும்
அவஸ்தா விசேஷங்களாலே நியதம் என்று கொள்ளாத போது குரு விதாந வையர்த்தமும் வரும் –

ஞான பூர்த்தியாதல் -விசுவாச பூர்த்தி யாதல் -யுடையவன் ப்ரபத்திக்கு அதிகாரி –
ஞான மாந்த்யமாதல்-விசுவாச மாந்த்யமாதல் யுடையவன் உபாச நாதிகளுக்கு அதிகாரி என்றால்
இச் சரம ஸ்லோகாதிகளுக்கு உப தேஷ்டாக்களுமாய் பரம ஆஸ்திகரும் ஆகையால்
பூர்ண ஞான விசுவாசரான வ்யாஸாதிகளுக்கு உபாஸனாதிகளில் அதிகாரம் இல்லையாம்
அவர்கள் உபதேச காலத்தில் ஞான விசுவாசங்கள் யுடையராகப் பின்பு கலங்கி உபாசகர் ஆனார்கள்
என்கைக்கு ஒரு பிரமாணம் இல்லை –

பிரபன்னராய் வைத்து லோக ஸங்க்ரஹார்த்தமாக உபாஸனாதிகளை அனுஷ்ட்டித்தார்கள் என்கைக்கும்
அவ்வோ பிரபந்தங்களில் ஒரு வசனம் இல்லை –
அப்படி கல்பிக்கப் புக்காலும் தன் அதிகாரத்துக்கு நிஷித்தமானவற்றை லோக ஸங்க்ரஹமாக அனுஷ்ட்டிக்கப் புக்கால் அவை
இவன் தனக்கும் பாபமாய் அதிகாரத்துக்கு விருத்த அனுஷ்டானம் பண்ணுகையாலே தன் அனுஷ்டானத்தையிட்டு லோக ஸங்க்ரஹம்
பண்ணவும் கடப்படாது ஒழியும்
தனக்கு இரண்டு வழிகள் சாஸ்த்ர அநு மதங்கள் ஆனால் அவற்றில் லோகத்தாருக்கு ஸக்யமாய்
அவர்களுக்கு இதமாய் இருப்பது ஒன்றைத் தான் அனுஷ்டித்துக் காட்டி லோகத்தாரை அதிலே நிலை நிறுத்துகையே
லோக ஸங்க்ரஹம் என்று ஸ்ரீ கீதா பாஷ்யத்திலே அருளிச் செய்தார் –
அல்லது சந்நியாசிக்கு நிஷித்தமான க்ருஹஸ்த ஏகாந்த தர்மத்தை
சந்நியாசி அனுஷ்ட்டித்துக் காட்டுமது லோக ஸங்க்ரஹார்த்தம் ஆகாது
இது ஆஞ்ஞாநா அதி லங்கனாம் அத்தனை –
இப்படியே பிரபத்தி அதிகாரிக்கு நிஷித்ததை அவன் தானே கைங்கர்ய புத்தியாலே அனுஷ்டிக்கையும் ஸ்வ அதிகார விருத்தம்
பிரபத்திக்கு அந பேஷிதங்களான சாஸ்த்ரீயங்களை கைங்கர்ய புத்தியாலே அனுஷ்ட்டிப்பார்க்கு விரோதம் இல்லை

தம் தாம் ஜாதியாதிகளுக்கு அநு ரூபங்களுமாய்த் தம் தமக்கு ஸக்யங்களுமான சர்வ தர்மங்களினுடைய ஸ்வரூப தியாகம் அங்கமாக
விதேயம் என்னும் பாசத்திலும் பிரபத்தி உத்தர காலம் தன் வர்ணாஸ்ரம அதிகாரங்களுக்கு அநு ரூபமாக அடைத்த கைங்கர்யத்தையும் இழந்து
அஹிம்சா சத்ய வசனாதி சாமான்ய தர்மங்களையும் ஆச்சார்ய வந்தனாதிகளையும் தவிர்ந்து பசு மிருக பக்ஷியாதிகளைப் போலே திரியும்படியாகும்

நிஷேத வாக்ய சித்தங்களான நிவ்ருத்தி ரூப தர்மங்கள் ஸ்வ ரக்ஷணார்த்த ஸ்வ வியாபாரம் அல்லாமையாலே சரணாகதியோடு
விரோதம் இல்லாமையால் இங்குப் ப்ரவ்ருத்தி ரூப தர்மங்களினுடைய தியாகமே விவஷிதம் என்னும் நிர்வாகமும் மந்தம் –
நிவ்ருத்தியும் வியாபார விசேஷம் என்னும் இடமும் அதுவும் ஸ்வ ரக்ஷணார்த்த மாம் என்னும் இடமும் லோக வேத சித்தம் இறே

இவ்விதி பலத்தாலே ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபங்களான சர்வ தர்மங்களையும் தவிர்ந்து திரிகை தானே
பிரபன்னனுக்கு சாஸ்த்ரார்த்தம் ஆனாலோ என்னில்
பிரபன்னரான பூர்வர்களும் இப்போது உள்ளாறும் சாவதானமாகப் பண்ணிப் போகிற கைங்கர்யங்களும்
அபசார பரிகாரங்களும் விருத்த அனுஷ்டானமாம்
யதா பிரமாணம் பிரபத்தி சம்பிரதாய ப்ரவர்த்தகராய்ப் பரம காருணிகருமாய் இருக்கிறவர்களுக்கு
ப்ரம விப்ர லம்ப சம்பாவனையும் இல்லை

யாவஜ் ஜீவம் சர்வ தர்ம தியாகம் விதேயமாகில் அன்றோ இவ்விரோதம் உள்ளது –
பிரபத்ய அனுஷ்டான க்ஷணத்தில் சர்வ தர்மங்களினுடைய
ஸ்வரூப தியாகம் அங்கமானால் விரோதம் இல்லையே என்னில் –
அப்போது சம்பாவிதம் அல்லாதவற்றினுடைய ஸ்வரூப தியாகம் விதிக்க வேண்டா –
சம்பாவிதம் ஆனவற்றினுடைய ஸ்வரூப தியாகம் விதேயமாகில் அப்போது உண்டான பகவத் க்ஷேத்ர வாச சிகா யஜ்ஜோபவீத
ஊர்த்வ புண்டர தாரணாதிகளைத் தவிர்ந்து கொண்டு பிரபத்தி பண்ணப் பிரசங்கிக்கும் –

ஆகையால் உபாசனத்தில் வரும் கர்மாதி யங்கங்களாலே நிரபேஷையாய் இருக்கிற பிரபத்திக்கு அங்கமாக
ஒரு தர்மத்தையும் பற்ற வேண்டா
என்கையை தியாக விதி பஷத்துக்கு உசிதம் –
இந்தத் தியாக விதியான பக்ஷம் தன்னிலும் உபாயாந்தர சாமர்த்தியம் இல்லாதார்க்கும் –
அது உண்டாகிலும் விளம்ப ஷமர் அல்லாதார்க்கும் இப்பிரபத்தியில் அதிகாரம் –
அப்படியானால் ஒரு பிரமாணத்துக்கும் விரோதம் இல்லை

பூர்வாச்சார்யர்களும் இவ்விடத்தில் சர்வ தர்ம ஸ்வரூப தியாகம் பிரபத்யங்கம் என்றும் இப்படி அன்று என்றும்
விவாதமும் பண்ணினார்கள் அல்லர் –
பிரபத்திக்கு அதிகாரமான ஆகிஞ்சன்யமும் ப்ரபத்தியினுடைய நைரபேஷ்யமும் இச் சரம ஸ்லோகத்தில்
எந்தப் பதங்களிலே விவஷிக்கை விமர்சித்தார்கள் அத்தனை

அதிகாரம் புரஸ் க்ருத்ய உபாயஸ்ய நிரபேஷதாம் ஏக சப்தேந வக்தீதி கேசித் வாக்ய விதோ விது –என்று
பிரபத்திக்கு அதிகாரம் ஆகிஞ்சன்யம் என்று சொல்லி
மேலே -ஏகம்-மூலம் நைரபேஷ்யம் -வேறே அங்கங்கள் வேண்டாம் -என்பதாகவே பொருள் உரைத்தார்கள்

நைரபேஷ்யம் புரஸ் க்ருத்ய விஹிதஸ்ய லகீயஸ உபாயஸ்ய அதிகாரம் து சோக த்யோத்யம் விது பரே-என்று
நைரபேஷயம் சொன்ன பின்பு
இந்த லுகுவான உபாயத்தை கைக் கொள்ளும் தகுதி உள்ள அதிகாரி மாஸூச -என்று
உபாயாந்தரங்களை கைக் கொள்ள இயலாத நிலை என்பதே

இத்தம் அர்த்த அவிசேஷ அபி யோஜநா பேத மாத்ரத ப்ராஸாம் விவாத சம்விருத்தோ பாஷ்ய காரை அவாரித–என்று
கருத்து வேறுபாடு ஒன்றும் இல்லை –
எந்தப் பதம் எத்தைக் காட்டும் என்பதிலேயே யோஜனா பேதம் –
ஆகவே ஸ்ரீ பாஷ்யகாரர் தடுக்கவில்லை

அஞ்ஞாத பூர்வ வ்ருத்தாந்தை யத் தத்ர ஆரோபிதம் பரை தத் து ஸ்ரீ விஷ்ணு சித்தாத்யை நிர்மூலம் இதி தர்சிதம் –என்று
முன்பு உள்ளவற்றைக் குறித்து அறியாதவர்களாக –
சரம ஸ்லோகத்தில் தர்மங்களைத் துறக்க வேண்டும் என்று ஒரு இல்லாத அம்சம் கூறப்பட்டதோ-
அதுவே வேறில்லாத கருத்து என்று ஸ்ரீ எங்கள் ஆழ்வான் போன்றார் அருளிச் செய்தது –

ஆனால் இதம் சரணம் அஞ்ஞானம் இதமேவ விஜாநதாம்-இதம் திதீரஷதாம் பாரம் இதம் ஆனந்த்யம்
இச்சதாம் -ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -17- 101-என்றும்
அவித்யாதோதேவே பரிப்ருட தயா வா விதி தயா -ஸ்வ பக்தேர் பூம்நா வா ஜகதி கதம்
அந்யாம் அவிதுஷாம் –ஸ்ரீ பட்டர் முக்த ஸ்லோகம் -என்றும்
சொல்லுகிற அதிகார பேதம் இருக்கும்படி என் என்னில்-
இவ்விடத்தில் சொன்ன அஞ்ஞானம் உபாஸ நாதிகளில் தெளிவில்லாமை யாதல்
பிரபத்தி தன்னிலும் ஸூஷ்ம விசேஷங்கள் அறியாமை யாதலாம் அத்தனை
இவற்றில் -விஜாநதாம் -என்றும் –
தேவே பரி வ்ருடதயா வா விதி தயா -என்றும் சொன்ன ஞான விசேஷமும் உபாஸனாதிகளில் தெளிவாதல்
பிரபத்திக்கு உபயுக்தமான சரண்ய குணாதி விஷயத்தில் தெளிவாதலாம் அத்தனை அல்லது
இதுக்கு அந பேஷிதமான சர்வ விஷய ஞானம் அன்று
பரி வ்ருடத்வ ரூபமான சரண்ய குண விசேஷ ஞானம் இறே இங்கு சொல்லப் படுகிறது
இவ்வுபயுக்த ஞானம் யுண்டானாலும் உபாயாந்தரத்தில் சக்தி இல்லாத போது அகிஞ்சனனாய் ப்ரபத்திக்கு அதிகாரியாம்-
சக்தி யுண்டேயாகிலும் -சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந –மாம் நயத்யேதி காகுத்ஸ்த-
தத்தஸ்ய சத்ருசம் பவேத் -ஸ்ரீ ஸூந்தர -39–30- என்கிறபடியே
ரக்ஷகன் கை பார்த்து தான் கை வாங்கி இருக்கை அன்றோ உசிதம் என்னில்
இதி பிரபன்னனுடைய உத்தர க்ருத்ய விசேஷத்துக்கு உதாஹரணமாம்
அல்லாத போது உபாய விதாயக சாஸ்திரங்கள் நிரார்த்தங்கள் ஆகும் –

உபாயாந்தரத்தில் தனக்கு ஞானமுண்டாய் -அதில் அனுஷ்டான சக்தியும் யுண்டானாலும் விளம்ப ஷமன் அன்றிக்கே இருக்குமாகில்
கடுக பலம் தர வல்ல ப்ரபத்தியே நமக்கு உசிதை என்று இருக்குமவனும் இப்பிரபத்திக்கு அதிகாரியாம்
இத்தை -இதம் திதீர்ஷ்தாம் பாரம் -இத்யாதிகளில் சொல்லுகிறது -எங்கனே எனில் –
திதீர்ஷ்தாம் பாரம்-என்றது
கடுக அநிஷ்ட நிவ்ருத்தி பிறக்க வேணும் என்னும் த்வரை யுடையார்க்கு என்றபடி –
ஆனந்த்யம் இச்சதாம் என்றது
ஸ்வரூப ப்ராப்ய பரிபூர்ண பகவத் அனுபவத்தைப் பெற்று அல்லது தரிக்க மாட்டார்க்கு -என்றபடி –

இவ்விரண்டையும் நினைத்து -ஸ்வ பக்தே பூம்நா வா -என்கிறார் –
இங்கு பக்தி என்றது ப்ரேம பரவஸ்யத்தைச் சொன்னபடி
அல்லது பக்தி யோகத்தைச் சொன்னபடி அன்று –
இப்படி பக்தியினுடைய பூமாவாகிறது கடுகப் பிராப்தி கிடையாத போது அழியும்படியான அவஸ்தா விசேஷம்
இது சிலருக்கு கட்டளைப் பட்ட பக்தியோகம் இல்லையாகிலும் ஸூக்ருத விசேஷ மூலமான பகவத் பிரசாதத்தாலே வரும்
இவ்வவஸ்தை யுடையவனும் ப்ரபத்திக்கு அதிகாரி

இப்படியாகையால் உபாயாந்தரத்தில் அஞ்ஞராய் –
இவ்வுபாயத்தில் சமுதாய ஞான மாத்ரமாய் யுடையராய் இருப்பார்க்கும்
இதிலும் உபாயாந்தரத்திலும் தெளிவு யுண்டானாலும் உபாயாந்தரத்தில் அனுஷ்டான சக்தி இல்லாதார்க்கும்
இவை இரண்டும் யுண்டானாலும் விளம்பம் பொறாத ஆர்த்தி யதிசயம் யுடையார்க்கும்
பிரபத்தியிலே இழியலாம்
இவ்விளம்ப ஷமனும் தான் நினைத்த காலத்தில் பலம் பெறுகைக்கு உபாயாந்தர ரஹிதன்
இப்பிரகாரத்தை நினைத்து -ஜகதி கதிம் அந்யாம் அவிதுஷாம் -என்கிறது –

வியாசாதிகள் அதிகாரி புருஷர்கள் ஆகையால் விளம்ப ஷமருமாய் இருப்பார்கள் -ஆகையால் உபாசனத்திலே இழிந்தார்கள்
அல்லது ஞான மாந்த்யமாதல்-விசுவாச மாந்த்யமாதல் -உண்டாகி இழிந்தார்கள் அல்லர் –
அசக்தஸ்யாதி க்ருச்சேஷூ துராசா தார்டடய சாலிந -கஸ்ய சித் புத்தி தவ்ர்பல்யம் லகு த்யாகஸ்ய காரணம் -என்றும்
தத்ர பிரபத்ய நர்ஹாணாம் அந்யாதித்யபி யுஜ்யதே வியாஸாதிஷூ து நைவஷா நீதி சம்சய காதிஷூ -என்றும்
இப்படி உபாசனை பிரபதங்களுக்கு அதிகாரம் வியவஸ்திதம் ஆகையால் இரண்டு சாஸ்திரமும் ச பிரயோஜனம் –
இரண்டு அதிகாரிகளுக்கும் ஸ்வ தர்மத்தில் பிரதிபத்தி வைஷம்யமே உள்ளது –
பிரபன்னனுக்கு கோரின பலத்தைப் பற்ற
வேறு ஒன்றை அனுஷ்டிக்கில் ப்ரஹ்மாஸ்த்ர பந்த நியாயத்தாலே விரோதம் யுண்டானாலும்
ஸ்வயம் பிரயோஜனமாக வாதல் பகவத் பாகவத ஸம்ருத்தி யாதி பலாந்தரத்தைப் பற்ற வாதல்
வேறு ஒன்றை அனுஷ்ட்டித்தால் விரோதம் இல்லை –

இப்படி ஸ்வரூப தியாகம் கூடாது ஒழிந்தாலும் உபாயத்வ புத்தி தியாகம் பண்ணுகை -பரித்யஜ்யவுக்குப் பொருளானாலோ என்னில்
பிரபன்னனுக்கு உத்தர க்ருத்ய கோசாரங்களான வாக்கியங்களில் உபாயத்வ புத்தி தியாகம் விதிக்கிற இடம் உசிதம் –
இங்கு உத்தர க்ருத்ய பரம் அன்றிக்கே உபாய விதாயகமாய் இருக்கிற இவ்வாக்கியத்தில் சொல்லுகையாலே
இப்புத்தி தியாக பூர்வகமான தர்ம ஸ்வரூபம் ப்ரபத்திக்கு அங்கமாக அநுஷ்டேயம் என்று பலிக்கையாலே
ஸ்வயம் பிரயோஜனமாக கேவல கைங்கர்யம் உத்தர க்ருத்யம் என்கிற பதம் சித்தியாது –

இவ்வுபாயத்துக்குச் சொல்லுகிற தர்மாந்திர நைரபேஷ்யமும் கிடையாது -இவ்வுபாயம் அகிஞ்சனாதிகாரம் அன்றிக்கே ஒழியும்-
எங்கனே என்னில் -உபாயம் அல்லாதவற்றில்
உபாயத்வ புத்தி தியாகம் இங்கே விதிக்க வேண்டா -உபாயமானவற்றில் உபாயத்வ புத்தி தியாகம் பண்ணி அனுஷ்டிக்கை யாவது
பழைய உபாஸ நாதிகளில் நிலையாம் –
இங்கு உபாயத்வ புத்தி தியாகம் பொருளாகச் சொல்லுகிற பக்ஷத்தில் தியாக விதிக்கும் அனுஷ்டான விதிக்கும் அதிகாரி பேதத்தாலே
விரோதம் பரிஹரித்த இடம் அநபேஷித வசனம் –
இங்கு ஸ்வரூப தியாகம் சொல்லும் போது இறே இவ்விரோத பிரசங்கம் உள்ளது -இப்படி புத்தி விசேஷ தியாக பூர்வக
கர்ம ஞான பக்திகளைப் பிரபத்திக்கு அங்கமாக இசையும் பக்ஷத்தில் உபாசன பிரபதனங்களுக்கு
அங்காங்கி வியபதேசத்தில் மாறாட்டமே யுள்ளது
அங்க பாவத்தில் யதா கதஞ்சித் அனுஷ்டானம் அமையும் என்கிற வைஷம்யமும் பந்தம் –
சகல அங்கோப சம்ஹாரே காம்ய கர்ம ப்ரஸித்யதி -என்று சொல்லப் பட்டது இறே

அத ஸ்வரூப தியாக உக்தவ் கைங்கர்யஸ்ய அபசாரதா உபாயத்வம் இதி தியாகோ தத் ஸ்வரூப அங்கதா பவேத் -என்றும்
சாத்விக தியாக யுக்தாநாம் தர்மாணம் ஏகத் அங்கதா நூநம் விஸ்ம்ருத காகாதி வ்ருத்தாந்தை உபவர்ணிதா -என்றும்
ஸக்ருத் ப்ரபத நேந ஏவ தர்மாந்தர தவீயஸா தத் ஷணே அபிமதம் பூர்வே சாம்ப்ராபு இதி சுச்ருமே -என்றும்
ப்ரஸக்த அங்கத்வ பாதே து ப்ரஹ்மாஸ்த்ர சம தேஜஸே உபாயஸ்ய ப்ரபாவச்ச கைங்கர்யாதி ச ஸூஸ் திரம் -என்றும்
சொல்லக் கடவது இறே

ஆகையால் –
இங்கு சர்வ தர்மங்களினுடைய ஸ்வரூப தியாகத்தை அங்கமாக விதிக்கிறது -என்றும் –
அவை அங்கமாம் படி இங்கு புத்தி விசேஷ தியாக மாத்திரம் விதிக்கிறது -என்றும்
சொல்லுகிற பக்ஷங்கள்
ஆஞ்ஞா அநு பாலனாதி சாஸ்த்ரங்களுக்கும் -ப்ரபத்திக்கு நைரபேஷ்யம் சொல்லுகிற சாஸ்த்ரங்களுக்கும்-
பூர்வாச்சார்ய சம்பிரதாயங்களுக்கும் ப்ரபன்னராய்ப் போந்த பூர்வ சிஷ்டர்களுடைய ஆசாரத்துக்கும் விருத்தங்களாம்

இப்படி யுக்த தோஷங்களாலே தர்மங்களினுடைய ஸ்வரூப தியாகமும் ப்ரபத்திக்கு அங்கமன்று –
யுக்த நைரபேஷ்யத்தாலே அந்த தர்மங்களினுடைய ஸ்வரூபமும் இதுக்கு அங்கம் அன்று
ஆகையால் இங்கு மற்றொரு தர்மத்தாலும் இப்பிரபத்திக்கு அபேக்ஷை இல்லை என்கையில் இத் தியாக விதிக்கு தாத்பர்யம்

இப்படி ப்ரதிஷேதிக்கைக்குப் பிரசங்கம் வேணும் -இங்கு என்ன தர்மங்கள் ப்ரஸக்தங்களாகப் ப்ரதிஷேதிக்கப் படுகின்றன என்னில்
வேதாந்த சோதிதைகளான வித்யைகளில் ஒரு வித்யையில் ஓதி அங்கங்களாகத் தோற்றின வர்ணாஸ்ரம தர்மங்களும் கதி சிந்த நாதிகளும்
வித்யாந்தரத்திலும் வருமா போலே ந்யாஸ வித்யையிலும் இவை துல்ய நியாதயையாலே அங்கங்களாய் வரப் புக
இப்படி அங்கத்வ பிரசங்கம் உடைய சர்வ தர்மங்களாலும் இதுக்கு அபேக்ஷை இல்லை என்கை இவ்விடத்துக்கு உசிதம்

இத் தர்மங்களுக்கு -ஸஹ காரித்வேந –ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -3–4-33-என்பதில் சொன்ன வித்யா ஸஹ காரித்வ வேஷம் தவிர்த்தாலும்
விஹிதத் வாச்சாச்ரம கர்மாபி -3-4-32-என்பதில் சொன்ன விநியோகாந்தரத்துக்கு ப்ரபன்னன் பக்கல் நிவாரகர் இல்லை –
ஆகையால் இத் தர்மங்களினுடைய அனுஷ்டானமும் -தர்மங்களைத் த்யஜிக்கையும் ப்ரபத்திக்கு அங்கம் இல்லாமையால்
அசக்யங்களில் நைரஷ்யம் அதிகாரத்தில் சொருகும் -ஸக்யமான நித்ய நைமித்திகங்களினுடைய
அனுஷ்டானம் ஆஞ்ஞா அநு பாலனமான கைங்கர்ய மாத்ரமாம்

சங்கல்ப மாத்ரமேவ அங்கம் ஸ்ருதம் ஆசரணம் புந அநங்கம் ஆஞ்ஞயா பிராப்தம் சங்கல்ப நிபந்தநம்–

இப்படியாகில் இவனுக்கு நித்ய நைமித்திகங்களில் அடைக்க ஒண்ணாத ப்ரபூத கைங்கர்யங்களுக்கு ப்ரயோஜகர் -ஆர் என்னில் –
இவை இவனுக்கு உபாயாந்தரத்தில் புகா –
அங்காந்தர நிரபேஷையான ப்ரபத்திக்கு பரிகரங்களும் ஆகா -அகரணத்தில் ஈஸ்வரன் வெறுக்கும் என்று செய்கிறானும் அல்லன்-
தனியே இவை தமக்கு ஒரு பாப க்ஷய ஸ்வர்க்க பசு புத்ராதி பலாந்தரத்தை ஆசைப்பட்டுச் செய்கிறானும் அல்லன் –
லௌகிகரானவர்கள் த்யூயாதிகள் பண்ணுமாப் போலே கேவலம் தன உகப்பாலே ப்ரவர்த்திக்கிறானும் அல்லன் –
முக்தரைப் போலே பகவத் அபிப்ராயத்தைப் பிரத்யக்ஷமாகக் கண்டு அவனை உகப்பிக்கைக்காக ப்ரவர்த்திக்கிறானும் அல்லன் –
மற்று எங்கனே என்னில்
இக்கைங்கர்யங்களுக்கும் பலாந்தரங்கள் போலே பகவத் ப்ரீதியும் பலமாக சாஸ்த்ர சித்தமாகையாலே அவன் உகப்பிலே
சத்வோத்தரனான தன் ப்ரக்ருதி ஸ்வ பாவத்தாலே ருசி பிறக்கையாலே
ஸூஹ்ருத் புத்ராதி உபாலாலனங்களில் போலே சர்வவித பந்துவான அவனுடைய ப்ரீணநங்களிலே சாஸ்திரம் கை விளக்காகப் பிரவர்த்திக்கிறான்

இவ்விடத்தில் சிலர் சர்வேஸ்வரன் பக்கலிலே சர்வ பர ந்யாஸம் பண்ணின விவேகிக்குத் த்யாஜ்ய உபாதேய விபாக நிர்ணயகம் ஸ்வரூப அஞ்ஞானம் அன்றோ –
இப்படி இவன் ஸ்வரூப வச்யனாம் அத்தனை போக்கி சாஸ்த்ர வச்யனாம் படி என் என்று சொல்லுவார்கள் –
இதுவும் அநு பந்நம் -எங்கனே என்னில்
ஸ்வரூபம் இன்னபடி இருக்கும் என்று சாஸ்திரத்தைக் கொண்டு அறுதியிட்டால் -இஸ் ஸ்வரூபத்துக்கு இன்ன புருஷார்த்தமும் தத் உபாயமும் த்யாஜ்யம்
இன்ன புருஷார்த்தமும் தத் உபாயமும் உபாதேயம் -என்று பிரித்துத் தெளிகைக்கு முக்தனாம் அளவும் சாஸ்திரம் ஒழிய வழியில்லை –
ஸ்வரூபத்தில் சேக்ஷத்வாதிகளைக் கொண்டு சில ஓவ்சித்திய மாத்திரம் அறியலாம் அத்தனை அல்லது -சேஷி உகந்த கைங்கர்யத்தின் பிரகாரம் இது –
இக்கைங்கர்யத்துக்கு உபாயங்கள் இவை -என்று ஸ்வரூப ஞானம் நியமித்துக் காட்டாது –
ஆனபின்பு சாஸ்திரத்தை அநாதரித்து நிஷித்த த்ரவ்யங்களைக் கொண்டதால் -விஹிதங்கள் தம்மிலும் நியாய ஆர்ஜிதம் அல்லாத த்ரவ்யங்களைக் கொண்டதால் –
தனக்கு ருசித்த படியே சாஸ்த்ர விருத்தமாய் இருக்கும் கட்டளையிலே கைங்கர்யத்தை நடத்தப் பார்த்தால் உபசார அபசாரங்களுக்குப் பிரிவில்லையாம்
அப்போது தன் ருசி ஒழிய வேறு நியாமகம் இல்லாமையால் முமுஷுக்கள் தவிர்ந்து போருகிற சர்வ நிஷித்தங்களையும்
தன் ருசி மாத்திரத்தாலே கைங்கர்யமாக அனுஷ்ட்டிக்கப் பிரசங்கிக்கும்
ஹவிர் நிவேதனத்திலும் ஸ்ரீ பாஷ்யகாரர் -சாஸ்த்ர விருத்தாநி சம்ப்ருத்ய-ஸ்ரீ நித்ய கிரந்தத்தில் -என்று அருளிச் செய்தார்
ஆகையால் சாஸ்த்ர வஸ்யனாய் தன் அதிகாரத்துக்கு சாஸ்திரம் அடைத்த கைங்கர்யங்களையே பண்ணப் பிராப்தம் –

தஸ்மாத் சாஸ்திரம் பிரமாணம் தே கார்ய அகார்ய வியஸ்திதவ் ஜ்ஞாத்வா சாஸ்த்ர விதா நோக்தம் கர்ம கர்த்தும்
இஹ அர்ஹஸி -ஸ்ரீ கீதை -16-24-என்ற உபதேசம் -சர்வாதிகாரிகளுக்கும் பொதுவாய் இருக்கும் –
ஆளவந்தார் ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹத்திலே -ஜ்ஞாநீ து பரமை காந்தி ததாயத்தாத்ம ஜீவந –
தத் சம்ச்லேஷ வியோகைக ஸூக துக்கஸ்ததேகதீ-29- -என்றும்
பகவத் த்யான யோகோக்தி வந்தன ஸ்துதி கீர்த்தனை லப்தாத்மா தத் கத பிராண மநோ புத்தி இந்திரிய க்ரிய-30–என்றும்
விஜ கர்மாதி பக்தயந்தம் குர்யாத் ப்ரீத் யைவ காரித உபாயதாம் பரித்யஜ்ய நியஸ்யேத்தேவே து தமபி -31–என்றும் அருளிச் செய்தவிடத்தில் –
ப்ரீத் யைவ காரித-என்றதுவும் சாஸ்திரம் வேண்டா என்றபடி அன்று –
இங்கு சாஸ்திரம் கொண்டே அறிய வேண்டுகிற கைங்கர்யம் தன்னில்
ஸ்வாமி சந்தோஷ ஜனகத்வம் அடியாக சேஷபூதனான தனக்குப் பிறக்கிற ப்ரீதியினுடைய ப்ரேகத்வ அதிசயம் சொல்லுகையிலே தாத்பர்யம் –

இஸ் ஸ்லோகங்களை உபாசன அதிகாரி பக்கலிலே யோஜிக்கும் போது உபாஸ நாதிகளுடைய ஸ்வாதுதமத்வத்தையும்
பல உபாயமான சரண்யனுக்குப் ப்ரசாதனமாய்க் கொண்டு பலத்துக்கு சாஷாத் உபாயம் அன்றிக்கே நிற்கிற நிலையையும்
இவ்வுபாச நத்தாலே ப்ரசன்னமான சர்வேஸ்வரன் தானே பலத்துக்கு சாஷாத் உபாயமாய் நிற்கிற நிலையையும் சொல்லுகையிலே நோக்காகக் கடவது –

ஸ்வதந்த்ர பிரபத்தி நிஷ்டன் திறத்தில் -இஸ் ஸ்லோகங்களை யோஜிக்கும் போது-
இவை ஆஞ்ஞா அநுஜ்ஜைகளாலே பண்ணும் கைங்கர்யங்கள் எல்லாம்
பக்தி யோகாதிகளின் கட்டளை குலையாது இருந்தாலும் ஸ்வாமி ஸந்தோஷம் ஒழிய வேறொரு ஸ்வர்க்க மோஷாதி பிரயோஜனத்துக்கு
உபாயமாக அனுஷ்டிக்கிறான் இல்லாமையாலே-
இவனுக்கு அநந்ய உபாயதையும் அநந்ய ப்ரயோஜனதையும் குலையாதே இருக்கிற படியையும்
அகிஞ்சனான இவனுக்கு ஈஸ்வரன் தானே உபாயாந்தர ஸ்தானத்தில் நின்று பலம் கொடுக்கிறபடியையும் சொல்லுகையிலே தாத்பர்யம் –

இரண்டு அதிகாரிகளும்
பிரதிபுத்தா ந சேவந்தே-என்றும் –
அநந்ய தேவதா பக்தா -என்றும்
நான்யம் தேவம் நமஸ்குர்யாத்-என்றும் -இத்யாதிகளில் படியே
பரமைகாந்திகளாய் இருக்க –
இங்கு நிஜ கர்மாதி பக்தயந்தம் –ஸ்ரீ கீதார்த்த ஸங்க்ரஹம் -31-என்று அருளிச் செய்தபடியே
வர்ணாஸ்ரமாதி தர்மங்களை இவர்கள் அனுஷ்ட்டிக்கப் புக்கால்
அக்னீ இந்திராதி தேவதா வ்யாமிஸ்ரதையாலே பரமை காந்தித்தவம் குலையாதோ-என்று வேதாந்த வ்யுத்புத்தி பண்ணாதார் சோத்யம் பண்ணுவார்கள்
இவ்விடத்தில் சாஷாதப்ய விரோதம் ஜைமினி -1 –2–29-என்கிற ஸூத்ரத்தின் படியே அக்நயாநாதி வ்யுத்புத்தி வசத்தால் அக்நயாதி சப்தங்களை
சர்வேஸ்வரனுக்கு சாஷாத் வாசகங்களாக நிர்வஹிக்கலாம் இடத்தில் இவை ஸ்ரீ சஹஸ்ர நாமத்தின் திருநாமங்கள் படியே
நிற்கையாலே இவற்றில் தேவதாந்ந்த்ர ஸ்பர்சம் இல்லை –

தேவான் ருஷீன் பித்ரூன் பகவாதத்மகாந் த்யாத்வா சந்தர்ப்யம்-என்று நித்ய ப்ரப்ருதிகளிலே ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்த படியே
தத் தத் தேவதா சரீரிகனாய்ப் பரமாத்வை அனுசந்தித்திக் கொண்டு தத் தத் கர்மங்களை அனுஷ்டிக்கை சாஸ்த்ர பல ஸித்தமான இடத்தில்
உபாஸாத் தரைவித்யாத் ஸ்ரீ ப்ரஹ்ம ஸூத்ரம் -1–1–32–என்கிறபடியே ப்ரதர்தன வித்யாதிகளிலே விதேஷ்யமான திவ்யாத்ம ஸ்வரூபத்தாலும்
சேதன அசேதன விசிஷ்டனாகவும் பரமாத்மாவை உபாசியா நின்றாலும் விசேஷணமான சேதன அசேதனங்களில் ஆராதயத்வம் இல்லாதாப் போலே
இவ்விடத்தில் விசேஷணமான தேவ ரிஷி பித்ராதிகளை இவன் ஆராதிக்கிறான் அல்லன்

அஹம் ஹி சர்வ யஞ்ஞாநாம் போக்தா ச பிரபு ரேவச -ஸ்ரீ கீதை -9–24-என்றும்
ஹவ்ய கவ்யம் புகேகஸ் த்வம் பித்ரு தேவ ஸ்வரூபத்ருத் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -1- 19-73-என்றும்
யே யஜந்தி பித்ரூன் தேவான் ப்ராஹ்மணான் சஹுதாச நாந் சர்வ பூதாந்த்ர ஆத்மாநம்
விஷ்ணுமேவ யஜந்தி தே -சாந்தி பர்வம் -355-41-என்றும்
சர்வ அந்தர்யாமியானவனே பிரதிபுத்தனான இவனுக்கு ஆராத்யன் ஆகையால் இப்படி தெளிந்து அனுஷ்டிக்குமவனுக்கு
யதா சாஸ்திரம் அனுஷ்டிக்கிற கைங்கர்யங்களால் உபாயாந்தர ஸ்பர்சம் வராதாப் போலேயும்
ஆராத்ய விசேஷணமாக விதி பல ப்ராப்தங்களான சேதன அசேதனங்களால் தேவதாந்த்ர ஸ்பர்ச தோஷம் வாராது

நாராயணம் பரித்யஜ்ய ஹ்ருதிஸ்தம் பிரபுமீஸ்வரம் -யோ அந்நியம் அர்ச்சயதே தேவம் பரபுத்தயா ச பாப பாக் -ப்ரஜாபத்தியா ஸ்ம்ருதி
யஸ்து நாராயணம் தேவம் சாமான்யேநாபி மந்யதே மந்யதே -ச யாதி நரகம் கோரம் யாவச் சந்த்ர திவாகரம் -என்றும்
புத்த ருத்ராதி வசதீம் மசாநம் சவமேவ ச அடதீம் ராஜதாநீம் ச தூரத பரிவர்ஜயேத்-சாண்டில்ய ஸ்ம்ருதி -என்றும் இத்யாதிகளில் படியே
தேவதாந்த்ரங்களிலே பரத்வ புத்தி பண்ணுதல் -சமத்துவ புத்தி பண்ணுதல் –
நித்ய நைமித்திகங்களிலே துவக்கற்ற தேவதாந்த்ரங்களிலே செல்லுதல் செய்யில் பரமைகாந்திக்கு தோஷமாம் அல்லது
நித்ய நைமித்திகங்களில் ஆராத்யனான சர்வ அந்தர்யாமிக்குச் சரீரமாய் நிலையில் இத்தேவதைகள் பக்கல்
பரத்வ புத்தியும்- சாம்ய புத்தியும் -ஸ்வ நிஷ்ட புத்தியும் -ஆராத்யத்வ புத்தியும் -பல பிரதான புத்தியும் -இல்லாமையாலே
உபாஸ்ய விசேஷணங்களான பிராண வைஸ்வாநர த்ரைலோக்யாதிகளால் இவனுக்கு வியபிசாரம் வராதாப் போலே
சாஸ்த்ர சித்தங்களான அக்னீ இந்திராதி விசேஷணங்களால் இவனுக்கு ஏகாந்த்ய விரோதம் வாராது –

வங்கிபுரத்து நம்பியும் ப்ரபன்னனுக்கு அஹோராத்ர க்ருத்யமான பகவத் சமாராதனத்தை சொல்ல இழிந்து
காயத்ரீ ஜெப பர்யந்தம் மந்த்ர ஆசமன பூர்வகம் -சாந்த்யம் கர்மாகிலம் சாது ஸமாப்ய ச யதா விதி –
ஸமிதாஜ் யாதிபிர் த்ரவ்யை மந்தரைரபி யதோதிதை-ஹூத்வா அக்னீந் அக்னி ஹோத்ராதவ் யுக்தம் காலமபி ஷிபன் -என்றும்
ததோ மாத்யந்தினம் கர்ம ஸ்வோதிதம் ஸ்ருதி சோதிதம்-ஸ்நாநாதி ப்ரஹ்ம யஞ்ஞாந்தம் க்ருத்வா அகில மதந்த்ரித-என்றும்
ஹோமம் பித்ரு க்ரியாம் பச்சாத் அநு யாகாதிகம் ச யத் -என்றும் இப்பிரகாரங்களிலே
தத் தந்மந்த்ர பூர்வகங்களான வர்ணாஸ்ரம தர்மங்களை அருளிச் செய்தார்

பட்டரும் ஆழ்வானும் தாம் தாங்கள் அருளிச் செய்த நித்யங்களிலே –
ஸ்ருதி ஸ்ம்ருதி யுதிதம் கர்ம யாவச் சக்தி பாராத்மந –
ஆராதநத்வே நாபாத்ய ச ஊர்த்வ புண்டரச்ச தர்ப்பயேத் -இத்யாதிகளை அருளிச் செய்தார்

பெரிய ஜீயரும் -நம் ஜீயரும் -ஸ்ரீ பராசர்ய பட்டார்ய சரணவ் ஸம்ஸ்ரேயமஹி -இத்யாதியாலே
சம்பிரதாய விசேஷ ஞாபந அர்த்தமாக குரு நமஸ்காராதிகளைப் பண்ணி
பகவச் சரணாம் போஜ பரிசார்ய விதிக்ரமம் -ஏகாந்திபிர் அநுஷ்டேயம் நித்யம் சமபிதத்யமஹே -என்று தொடங்கி
ஆபோ ஹித்யாதிபிர் மந்த்ரை வாசகை பரமாத்மன சம் ப்ரேஷிய மந்த்ர ஆசமனம் மந்த்ரைஸ் தத் ப்ரதிபாதிகை–
ஆதித்யாந்த ஸ்தி தஸ்ய அர்க்க்யம் விதீர்ய பரமாத்மன -ப்ரதிபாதி கயா விஷ்ணோ சவித்ரயா தம் ஜபேத்விரம்-த்யாயன் ஜப்த்வோ
பதிஷ்டேத தமேவ புருஷோத்தமம்-நாராயணாத் மகான் தேவான் ருஷீன் சந்தர்ப்பயேத் பித்ரூன் -என்று அருளிச் செய்தார்

பாஷ்யகார சம்பிரதாயத்தில் உள்ள குலங்கள் எல்லாம் இன்று அறுதியாக ஸ்வ ஸூத்ர உக்தத்தின் படியே தத் தத் தேவதா
மந்த்ரங்களைக் கொண்டு விவாஹ உப நயனாதிகள் அனுஷ்ட்டிக்கவும் காணா நின்றோம்
பெரிய நம்பி முதலான பரமாச்சார்யர்களும் தம் தம் ஸூத்ரங்களின் படியே யஞ்ஞாதிகள் பண்ணினார்கள்
என்னும் இடம் சர்வருக்கும் பிரசித்தம்

ஆன பின்பு பாஷ்யகாரருடையவும் தத் சிஷ்ய ப்ரவிஷ்யர்களுடையவும் உபதேச அனுஷ்டானங்களில் நிஷ்டை யுடையாருக்கு
ஆகம சித்தாந்த அநு வர்த்திகளான சம்ஹிதா விசேஷங்களில் பிரதிநியதமாகச் சொல்லும் மந்த்ர விசேஷங்களைக் கொண்டு
க்ரியா விசேஷங்கள் அனுஷ்ட்டிக்க ஒண்ணாது
அதிகாராதிகளுக்கு அநு ரூபமாகச் சதுர்வித பஞ்சராத்ரமும் விபக்தமாய் நிற்கும் நிலையம் வசன விரோதம் இல்லாவிடத்தில்
அநுக்தம் அந்யதோ க்ராஹ்யம் -என்கிற நியாயம் நடக்கிறபடியும்
நாலு ஆஸ்ரமத்திலும் ப்ரஹ்ம வித்யையும் மோக்ஷ பலமும் யுண்டு என்று
சாரீரகாதிகளிலே சமர்த்தித்தால் போலே ஆகம சித்தாந்திகள் நாலிலும் சாஷான் மோக்ஷ உபாயமும் மோக்ஷ பிராப்தியும் யுண்டு என்றும்
ஸ்ரீ பாஞ்ச ராத்ர ரக்ஷையிலே உபபாதித்தோம்
இச் சாஸ்திரங்களில் வியவஸ்திதமாக விதித்தபடி ஒழியத் தம் தமக்கு ருசித்த மந்த்ரங்களைக் கொண்டு சர்வ கர்மங்களையும்
அனுஷ்ட்டித்தால் ப்ராயச்சித்தாதிகளும் பரக்கச் சொல்லப் பட்டன –
ஆனபின்பு முக்தனாம் அளவும் ஸ்வ அதிகார அநு குணமாகச் சாஸ்திரம் சொன்ன கட்டளை அன்றிக்கே கைங்கர்யம் பண்ண விரகில்லை

இப்படி பிரபன்னனுக்கும் சாஸ்த்ர வஸ்யனாய் சாஸ்த்ர யுக்த கைங்கர்யமே பண்ண வேண்டுகையாலே
விதி நிஷேத லங்கந பேஷமும் விஹித நிஷித்த தியாக பக்ஷமும்
வர்ணாஸ்ரம தர்மங்கள் உபாதி நிமித்தங்கள் ஆகையால் ஸ்வரூப ஞானம் பிறந்தவனுக்கு த்யாஜ்யங்கள் என்கிற பக்ஷமும்
இவை செய்யவுமாம் தவிரவுமாம் -என்கிற பக்ஷமும் இவை தவிர்ந்தாலும் உகப்பிக்குமத்தனை ஒழிய
வேறொரு ப்ரத்யவாயாம் இல்லை என்கிற பக்ஷமும்
இவை அனுஷ்டியாத போது லோக விரோத மாத்திரமே ப்ரத்யவாயம் என்கிற பக்ஷமும் மற்றும் இப்புடைகளில் உள்ள பக்ஷங்களும் எல்லாம்
சம்மயங்நியாய அநு க்ருஹீத சாஸ்த்ர சம்பிரதாய விருத்தங்களான படியால் சத்வஸ்தர்க்கு அநு பாதேயங்கள்

சந்யாச ஆஸ்ரமஸ்தர்க்குப் பண்டுள்ளவை சிலவற்றை நிஷேதித்துப் புதியனவற்றை சிலவற்றை விதிக்குமா போலே
பாகவத தத்வம் அடியாகச் சிலவற்றை நிஷேதித்துச் சிலவற்றை அபூர்வமாக விதித்தாலும் –
சந்த்யா ஹீந அசுசிர் நித்யம் அநர்ஹ சர்வ கர்மஸூ -இத்யாதிகளிலே
அவசிய கர்தவ்யங்களாகச் சொல்லப்பட்ட கர்மங்களை விட ஒண்ணாது –
தர்ம சாஸ்த்ர ஸூத்ர பேதங்களில் போலே
பகவத் சாஸ்த்ர சம்ஹிதா பேதங்களிலும்
இதிஹாச புராணங்களிலும் சொல்லும் சந்த்யா உபாசன பேதங்களை அவ்வோ சாஸ்திரங்களில் இழிந்தவர்கள் அனுஷ்ட்டிக்கக் கடவர்கள்

தைவதான்யபி கச்சேது -என்றும் –
தேவ ஸ்தான ப்ரணாமனம் -என்றும் இப்புடைகளிலே தர்ம சாஸ்த்ர இதிஹாசாதிகளில் சொன்ன ஆசாரமும்
பரமை காந்திக்கு சாஸ்த்ர பலத்தால் பகவத் விஷயத்திலே நியதம் -ஆகையால் ஒரு சாஸ்திரத்துக்கும் விரோதம் இல்லை –
தஸ்மாத் அஷ்டாக்ஷரம் மந்த்ரம் மதபக்தைர் வீதிகல்மஷை -சந்த்யா காலேஷூ ஜப்தவ்யம் சததம் சாத்மசுத்தயே -என்று
ஸ்ரீ வைஷ்ணவ சாஸ்திரங்களில் சொன்னதுவும்
த்வயம் அர்த்தானுசந்தாநேந ஸஹ சதைவம் வக்தா -என்று கத்யத்தில் அருளிச் செய்ததுவும்
மற்றும் இப்புடைகளில் உள்ளவையும் எல்லாம்
அவசிய கர்தவ்யங்களான நித்ய நைமித்திகங்களுக்கு விரோதம் வராதபடி அவற்றுக்குப் போக்கி மிக்க காலத்திலே யாகக் கடவன்
ஸ்ரவ்த ஸ்மார்த்தா விருத்தேஷூ காலேஷூ ஜபம் ஆசரேத் -என்று நாரதாதிகளும் சொன்னார்கள்
ஹூத்வா அக்னீந் அக்னி ஹோத்ராதவ் யுக்தம் காலமபி ஷிபன் -என்று வங்கிபுரத்து நம்பியும் அருளிச் செய்தார்
பாஷ்யகாரர் அந்திம திசையிலும் வருந்தி யெழுந்திருந்து சந்த்யா காலத்திலே ஜலாஞ்சலி ப்ரஷேபம் பண்ணி அருளினார்

ஆகையால் வர்ணாஸ்ரம தர்மங்கள் உபாதி நிமித்தங்கள் என்று த்யஜிக்கை பூர்வ அனுஷ்டானாதி விருத்தம் –
இப்படி த்யஜிக்கில் தேக இந்திரியாதி உபாதிகளை ஒழிய
மாலா கரண தீபா ரோபணாதி விசேஷ கைங்கர்யங்களும் அனுஷ்ட்டிக்க ஒண்ணாமையாலே அவையும் எல்லாம்
உபாதி நிமித்தங்களாகத் த்யாஜ்யங்களாம்
அவை அனுஷ்ட்டிக்க ஆசைப்படில் அவற்றுக்கு யோக்யதா ஆபாதங்களான ஆசார ஸம்ஸ்காராதிகளையும் விட ஒண்ணாதே -ஆனபின்பு
1–ஆஹார க்ரஹ மந்த்ராதி ஜாத்யாதி நியமைர் யுத-குர்யாத் லஷ்மீ ச கைங்கர்யம் சக்த்யா அநந்ய ப்ரயோஜன –
2–மங்கல்ய ஸூத்ர வஸ்த்ரா தீந் சம்ரக்ஷதீ யதா வதூ -ததா ப்ரபந்ந சாஸ்த்ரீயா பதி கைங்கர்ய பத்ததிதம்
3–யத்வத் மங்கல்ய ஸூத்ராதே த்யாகே சம் ரஷணேபி அபி வா -ரஷேத் நிரோதை போகைர் வா பதி தத்வத் இஹ அபி
4—அவஜ் ஞார்யம் அநர்த்தாயா பக்த ஜென்மாதி சிந்தனம் சாஸ்த்ர வியவஸ்தா மாத்ரார்த்தம் ந து தத் தூஷ்யதி க்வசித்
5–அத ஏவ ஹி சாஸ்த்ரேஷூ தத் தத் ஜாத்யைவ தர்சிதா–தர்மவ்யாத துலாதார சபரீ விதுராய
6–ஸ்வ ஜாதி அநு குண ஏவ ஏஷாம் வ்ருத்தி அபி இதிஹாஸிகீ விசேஷ விதி சித்தம் து தத்வலாத் தத்ர யுஜ்யதே –
7—தேச காலாதி கார்யாதி விசேஷ ஷூ வியவஸ்திதா ந தர்மா ப்ராப்திம் அர்ஹந்தி தேச காலாந்தராதிஷூ
8–கேசித் தத் தத் உபாக்யாந தாத்பர்ய க்ரஹணாஷமா-கலி கோலா ஹல க்ரீடாம் வர்த்தயந்தி ரமாபதே
9–மாத்ருபி பித்ருபிச் சா ஏதா பதிபிர் தேவரை ததா -பூஜ்யா பூஷயிதா வ்யாச்ச பஹு கல்யாணம் ஈப்ஸூபி
10–ஜாமயோ யாநி கேஹாநி சா பந்தி அப்ரதி பூஜிதா -தாநி க்ருத்யா ஹதா நீவ விநச்யந்தி சமந்தத
11–ஏவ மாதி ஷூ பூஜோக்தி யதா ஓவ்சித் யாத் நியமதே -பக்த ம்லேச்சாதி பூஜோக்தி ஏவம் ஏவ நியம்யதாம்
இந்நியமங்கள் எல்லாம் சம் பிரதிபன்ன சிஷ்ட அனுஷ்டான பரம்பரையாலும் சித்தங்கள்
ஆகையால் தன் வர்ணாஸ்ரமாதிகளுக்கு அடைத்த நியமங்களோடே பகவத் கைங்கர்யம் பண்ணுகை பரமை காந்தித்தவ விருத்தம் அன்று –

1-சாஷாத் லஷ்மீ பதவ் ஏவ க்ருதம் கைங்கர்யம் அஜ்ஞசா -சார கல்க விபாகேந த்விதா சாத்பி உதீர்யதே
2-க்ருதக்ருத்யஸ்ய கைங்கர்யம் யத் அநந்ய பிரயோஜனம் குர்வாதி ரக்ஷனார்த்தம் வா தத் சாரம் சம் ப்ரசக்ஷதே
3-டம்பார்த்தம் பர பீடார்த்தம் தந் நிரோதார்த்தம் ஏவ வா ப்ரயோஜநா அந்தரார்த்தம் வா கைங்கர்யம் கல்க இஷ்யதே
பரமை காந்திகள் அல்லாதார் பண்ணும் கைங்கர்யத்தை சர்வேஸ்வரன் திருவடிகளால் கைக் கொள்ளும் என்னும் இடத்தையும்
பரமை காந்திகள் பண்ணும் கைங்கர்யத்தைத் திரு முடியாலே கைக் கொள்ளும் என்னும் இடத்தையும்
தத் சர்வம் தேவ தேவஸ்ய சரணா யுபதிஷ்டதே -என்றும்
யா க்ரியா சம் ப்ரயுக்தா ஸ்யு ஏகாந்த கத புத்திபி தா சர்வா சிரஸா தேவ பிரதி க்ருஹணந்தி வை ஸ்வயம் -என்றும்
ஸ்ரீ வேத வியாச பகவான் அருளிச் செய்தான்

இப்படி இவன் பகவத் ஆஞ்ஜையாலே அனுஷ்டிக்கிற நித்ய நைமித்திகங்களும் –
பகவத் அநுஜ்ஜையாலே இவன் உகப்பே பிரயோஜனமாக
அனுஷ்டிக்கிற ஏற்றமான கைங்கர்யங்களும் இப் பிரபத்தியோடே துவக்கற்று நின்ற நிலை –
சர்வ தர்மான் பரித்யஜ்ய -என்கிற விதானத்தாலே ஸித்தமாயிற்று

அத சக்யானி ஸர்வாணி ந பிரபத்யர்த்தம் ஆசரேத் -அசக்யேஷூ ச சாமர்த்யம் ந ததர்த்தம் சமார்ஜயேத் –
இந்த யோஜனையில்-அதிகாரமான ஆகிஞ்சன்யமும் -சோகியாதே கொள்-என்று தேற்றுகிற வாக்யத்தாலே ஸூசிதம்
அநு வாத பக்ஷத்தில் தன் அசக்தியால் கழிந்தவை ஒழிய ஸக்யமாகச் செய்கிற ஆஞ்ஞா அநு பாலநாதிகளும்
ப்ரபத்தியில் துவக்கு ஒண்ணா என்னும் இடம் ஏக -சப்தத்தில் விவஷிதமாகக் கடவது
இப் பஷத்தில் மாஸூச என்கிற வாக்கியம் -சர்வ தர்மான் பரித்யஜ்ய என்று யுக்தமான அதிகாரத்தை வ்யக்தமாக்கிக் கொண்டு
மேல் உள்ள நிர்ப்பரத் வாதிகளை முன்னிட்டு உத்தர காலத்தில் இருக்கக் கடவ படியை எல்லாம் உப லஷிக்கிறது

தியாக விதி பஷத்துக்கு பிரமாணம் விரோதம் வராதபடி சில கதிகள் உண்டு –
ஆத்ம அசக்ய வ்ருதா ஆயாச நிவாரணம் இஹ அபி வா –லஜ்ஜா புரஸ்சர தியாக வாத அபி அத்ர நியம்யதாம் –
ஸ்வ துஷ் கரேஷூ தர்மேஷூ குசகாச அவலம்பத–ஆசா லேச அநு வ்ருத்தி வா தியாக உக்த்வா விநி வார்யதே-
அவி சிஷ்ட பலத்வேந விகல்போ யச்ச ஸூத்ரிதா –தந் முகேந அபி ப்ரஹ்மாஸ்த்ர நியாய ஸூசநம் –
அஸக்யத்திலே ப்ரவ்ருத்தனை தவிர் என்கையும்-
தனக்கு துஷ் கரங்களாய் கழிந்து நிற்கிறவற்றிலே அபி நிவேசம் யுடையவனை இது வேண்டா என்கையும் –
விகல்ப்பித்த உபாயாந்தரங்களிலே ஒன்றை இங்கே கூட்டில் ப்ரஹ்மாஸ்த்ர நியாயத்தாலே விரோதிக்கும் என்று கழிக்கையும் விதி பிரகாரங்கள்

சர்வ தர்மான் பரித்யஜ்ய -ஆறு பொருள்களின் சுருக்கம் –
அதோ அசக்த அதிகாரத்வம் ஆகிஞ்சன்ய ப்ரஸ் க்ரியா –அநங்க பாவோ தர்மாணாம் அசக்ய ஆரம்ப வாரணம் –
தத் ப்ரத்யாசா பிரசமனம் ப்ரஹ்மாஸ்த்ர நியாய ஸூசநம் -சர்வ தர்ம பரித்யாக சப்தார்த்தா –சாது சம்மதா-
தேவதாந்த்ர தர்மாதி தியாக யுக்தி -அவிரோதி நீ -உபாசகே அபி துல்யவாத் இஹ சா ந விசேஷிகா -உபாய உபாய ஸந்த்யாகீ-
இத்யாதிகளில் சொன்ன உபாய தியாகமும் இப்பிரகாரங்களிலே நிர்வாஹ்யம்

மூண்டாலும் அரியதனில் முயல வேண்டா
முன்னமதில் ஆசை தன்னை விடுகை திண்மை
வேண்டாது சரண நெறி வேறோர் கூட்டு
வேண்டில் அயனத்திரம் போல் வெள்கி நிற்கும்

நீண்டாகு நிறை மதியோர் நெறியில் கூடா
நின் தனிமை துணையாக என்தன் பாதம்
பூண்டால் உன் பிழைகள் எல்லாம் பொறுப்பன் என்ற
புண்ணியனார் புகழ் அனைத்தும் புகழ்வோமே

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தேசிகன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: