Archive for January, 2018

திருப்பாவை சாரம் – கறவைகள் பின் சென்று – – —

January 23, 2018

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

முதல் பாட்டில் -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று-
சங்கரஹேண சொன்ன பிராப்ய பிராபகங்களை-
இதிலும் அடுத்த சிற்றம் சிறு காலையிலும் பாட்டாலே விவரிக்கிறது –
அதில் இப் பாட்டாலே –
நாட்டார் இசைகைக்காக -நோன்பு -என்று ஒரு வ்யாஜத்தை இட்டு புகுந்தோம் இத்தனை –
எங்களுக்கு உத்தேச்யம் அது அன்று –
உன் திருவடிகளில் கைங்கர்யமே -என்று-தங்களுக்கு உத்தேச்யமான புருஷார்த்த சித்திக்கு –
தங்கள் ஆகிஞ்சன்யத்தையும் -பிராப்தியையும் -முன்னிட்டு –
நீயே உபாயமாக வேணும் -என்று அபேஷித்து-
இதுக்கு ஷாமணம் பண்ணிக் கொண்டு-பிராப்ய பிரார்தனம் பண்ணித் தலைக் கட்டுகிறது –
மேலில் பாட்டாலே -பிராப்ய பிரார்தனம் பண்ணா நின்றதாகில்–
இங்குப் பண்ணுகிறது என் என்னில்-பிராபகம் பிராப்ய சாபேஷம் ஆகையாலே சொல்லுகிறார்கள் –

இதுக்கு கீழ் அடங்க ஓர் அதிகாரிக்கு சம்பவிக்கும் ஸ்வபாவங்களைச் சொல்லிற்று ஆயிற்று
இப்பாட்டில் அதிகாரி ஸ்வரூபமான உபாய ஸ்வீகாரத்தை ச பிரகாரமாய்ச் சொல்லுகிறது

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்

வியாக்யானம் –

கறவைகள் –
அறிவு கேட்டுக்கு நிதர்சனமான பசுக்கள் –ஞாநேந ஹீந பஸூபிஸ் சமாந -இறே

பின் சென்று –
நாங்கள் தேவரைப் பெருகைக்கு குருகுல வாசம் பண்ணின படி —இவற்றை அனுவர்த்தித்தோம் -இத்தனை –
எங்களைப் பார்த்தால் -பசுக்கள் -வசிஷ்டாதிகளுக்கு சத்ருசமாக போரும் —
பசுக்கள் அசுக்காட்டில் -அனுகரிக்கையில் -ஆர்ஜவம் –

கானம் சேர்ந்து –
தம் தாமுடைய வ்ருத்திகளாலே ஒரு நன்மைக்கு உடலாம் மனுஷ்யர் திரியும் நாட்டிலே வர்த்தித்திலோம்-
புல் உள்ள காட்டிலே வர்த்தித்தோம் இத்தனை –
இருப்பாலே நன்மையை விளைவிக்கும் தேசத்திலே வர்த்தித்திலோம்—காட்டிலே வர்த்தித்தோம் -என்றுமாம் –

சேர்ந்தோம் –
ஊரில் கால் பொருந்தாத படி இறே காட்டில் பொருந்தின படி –

உண்போம் –
வைச்யருக்கு -கோ ரஷணம் தர்மம் ஆனால் -தத் அனுரூபமாக காட்டிலே வர்த்திக்கையும்-
வான பிரஸ்த ஆஸ்ரமிகளோபாதி தர்ம ஹேது ஆகிறது என்ன –
காட்டில் வர்த்தித்தாலும் -வீத ராகராய் -வான பிரஸ்த ஆஸ்ரமிகளோபாதி–சரீரத்தை ஒறுத்து
அவ்வருகே ஒரு பலத்துக்காக வர்த்தித்தோம் அல்லோம் –
கேவலம் சரீர போஷண பரராய் வர்த்தித்தோம் இத்தனை –
இத்தால் –
வ்ருத்தியில் குறை சொல்லிற்று-
இது இறே உன்னைப் பெறுகைக்கு நாங்கள் அனுஷ்டித்த கர்ம யோகம்-என்கிறார்கள் –

கறவைகள் -இத்யாதி –
ஜ்ஞான ஹீநரான சம்சாரிகளை அனுவர்த்தித்து–சம்சாரத்தைப் பிராப்யமாகப் பற்றி —தேக போஷண ஏக பரராய்
இருந்தோம்–இது இறே உன்னை நாங்கள் பற்றுகைக்கு அனுஷ்டித்த கர்ம யோகம் –

கறவைகள் -ஸ்ரீ பிருந்தாவனம் அனுபவம் -ஸூ சகம்–
கானம் சேர்ந்து உண்போம் -கானம் என்றும் வேணு காந கோஷ்டியில் என்றுமாம்

அறிவொன்றும் இல்லாத –
இப்போது இல்லை யாகில் விடுங்கோள்–
விதுராதிகளைப் போலே ஜன்மாந்தர ஸூஹ்ருதத்தால் பிறந்த-ஞானம் தான் உண்டோ -என்னில்
அதுவும் இல்லை –
எங்களை பார்த்தால் பசுக்கள் வசிஷ்டர் பராசாராதிகள்–எங்கள் இளிம்பு கண்டு பசுக்கள் சிரிக்கும்–
அவர்கள் வழி காட்ட பின்னே திரிவோம்

ஒன்றும் –
பகவத் ஞானத்துக்கு அடியான ஆத்ம ஞானமும் இல்லை —தத் சாத்யமான பக்தியும் இல்லை -என்கை –
பக்தி இல்லை -என்கிறது -பக்தி யாவது ஞான விசேஷம் ஆகையாலே —இவர்கள் அலமாப்பு பக்தி அன்றோ வென்னில் –
அது ஸ்வரூபம் ஆகையாலே -உபாயமாக நினையார்கள்
ஆக
இத்தால் கர்ம ஞான பக்திகள் இல்லை என்கை —ந தர்மோஷ்டமி ந பக்திமான்–நோன்ற நோன்பிலேன்
குளித்து மூன்று அனலை ஓம்பும் -இத்யாதி —இவை அன்றோ அறிவுடையோர் வார்த்தை
அவர்களோடு ஒத்து இருக்கிறார்களோ -என்ன –
ஞானமும் ஞான விசேஷமான -பக்தி யோகமும் -இல்லாத –

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –
நம்பீ -திருமாலை -25
குண பூர்த்தி -அனுபவம் இருவரும்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம் -நைச்ய அநு சந்தானம் –
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -அவன் மேன்மை அனுசந்தானம் –
அந்தணமை தன்னை ஒளித்திட்டேன் -என் கண் இல்லை -நின் கணும் பக்தன் அல்லேன் -நைச்ய அநு சந்தானம் –

ஆய்க் குலத்து –
அறிவு உண்டு என்று சங்கிக்க ஒண்ணாத குலம் —
கீழ் சொன்ன உபாய ஹானி தோஷம் ஆகாதே குணமாம் படியான ஜன்மம் –
எங்கள் ஜன்மத்தைக் கண்டு வைத்து அறிவு உண்டு என்று சொல்லுகிற நீ அறிவு கேடன் -இத்தனை –
இத்தால் –ஜன்ம வ்ருத்த ஞானங்களால் உண்டான நிகர்ஷம் சொல்லுகிறது –

அகவாயில் நிழல் -கண்ணனை இவர்கள் அனுபவிக்க ஆசை
நாட்டாருக்காக–அணி ஆய்ச்சியார் சிந்தையுள் குழகனே–
குழகன் குழைஞ்சு பேசுவான்–எடுத்தார் எடுத்தார் இடைகளில் செல்வான்
இவர்கள் நெஞ்சில் கலக்குமவன்–உள்ளுவார் உள்ளத்தில் நினைவு அறிவான்–மேலுக்கு சங்கங்கள் கேட்டீர்கள்
மேல் சொல்லுமவையும்–நீங்கள் நின்ற நிலை அறிய வேண்டும்–
பேறு உங்களான பின்பு நீங்களும் சிறிது எத்தனிக்க வேண்டும்
மேலையார் செய்வனகள் அனுஷ்டானம் வந்தது நமக்கு

எங்களைக் கண்டால் சாதனம் இருக்கா கேட்கும்படியாக உள்ளதா–
கேவலம் தயா விஷயம்–நீ எங்கள் கார்யம் செய்து அருள வேண்டும்
உபாய சூன்யம்–போற்றி யாம் வந்தோம்–உன் திருக் கண்கள் விழியாவோ
பிராப்ய ருசி சொல்லி–பிராப்யம் பெற ஆகிஞ்சன்யம்–ந கிஞ்சன அஸ்தி இதி அகிஞ்சன -ஒன்றும் இல்லாமை
அவன் உபாய பாவமும் சொல்லி–நாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருளு என்றார்கள்
அகவாயில் சாதனம் உண்டு ஆராய இழிந்தான்-இருந்தால் போ கை கழிய விட ஆராய்ந்தான்
நின் அருளே புரிந்து இருந்தோம் என்று இருந்தோம்
எடுத்துக் கழிக்கவும் ஒன்றும் இல்லை
இரங்கு -அருள் –
பிரதிபந்தமாக கிடப்பன–சர்வஞ்ஞன் அறிய யாதாம்ய உள்ளபடி–சித்தோ உபாயம்
கைம்முதல் இல்லை –உன்னோடு உறவு சம்பந்த ஞானம்–பூர்வ அபராத ஷாபனம்–இறைவா நீ தாராய் பறை
அதிகார அங்கங்கள் ஆறும்–ஆநுகூல்ய சங்கல்பம் ஆறும்–
குணம் பூர்த்தி–நம்பி–மாயனே எங்கள்-உன் அடியேன் புகல் ஒன்றும் இல்லா அடியேன்-சீறி அருளாதே
நாயினேன் செய்த குற்றம் நற்றமாகவே கொள்-அபசார –நானாவித -அசேஷதாக ஷமஸ்வ பொறுத்துக் கொள்
சன்மம் களையாய்

இறைவா நீ தாராய்
உன் அடி சேர் வண்ணம் அருளாய் அபேஷித்து–பிராப்ய சித்திக்கு நீயே
கார்ய நிர்ணய வேளை ஆகையாலும்–சர்வேஸ்வரன் சந்நிதி ஆகையாலும்
பலம் கிடைக்க உண்மை சொல்ல வேண்டியதாலும்–பிஷக் முன்பு வ்யாதியச்தன் சொல்லுவது போலே –
புஜிக்கும் அமிர்தம் ஆறும் இவனே
வேட்கை நோய் -வியாதி சம்சாரம் பிரிந்த நிதானம் ஆதி காரணம் நோய் நாடி நோய் முதல் நாடி -இவனே
மாலே மணி வண்ணா மருத்துவனாய் நின்ற–ஆயர் கொழுந்து மருந்தாய்–பேஷஷும் தானே
எங்கள் அமுது கிருஷ்ணன்–மருந்தும் பொருளும் அமுதமும் தானே–வியாதி ரஹீதர் அமிர்தம்
உபாசனம் மருந்து போலே நினைக்க–பிரபன்னர் அமிர்தம்
நோய்கள் அறுக்கும் மருந்து–அங்கு உள்ளார் போக மகிழ்ச்சிக்கு மருந்தே -ஆனந்தம் விருத்தி பண்ணும் மருந்து
பசிக்கு மருந்து–இரண்டு வகை-பசியே இல்லை -உண்டாக்க-எத்தை உண்டாலும் பசி போக வில்லை-
அதுக்கும் பசிக்கு மருந்து அடக்க-பிரவ்ருத்தி-அடக்கவும் கிளப்பவும் மருந்து-
நோய் இல்லாதான் ஒருவன் தான் தான் மருந்து என்று அறியான் –
தேனில் இனிய பிரானே அருமருந்து ஆவது அரியாய் –
பிரபலமான இருப்பதொரு ஔஷதம்-உன்னால் அல்லாது செல்லாதது
சிறு வார்த்தை பொறுத்து அருள-உபசார புத்தியால் செய்யும் அபசாரம் சமஸ்த ஷமை புருஷோத்தமா-

அறியாத பிள்ளைகளோம்
இப்பொழுதே எம்மை நீராட்டு
கண் அழிவு அற்ற பிராபகம் நிச்சயம்-பிராபக ச்வீகாரம் –
வேறு ஒன்றையும் பற்றாமல் -நினைவு கூட இல்லாமல் மகா விசுவாச பூர்வகமாக

ஆனால் விடும் அத்தனையோ -என்ன –
உன் தன்னைப் பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம் –
பேற்றுக்கு உடலான புண்யம் இல்லாதார் இழக்கும் அத்தனை அன்றோ வென்ன —
அங்கன் சொல்லலாமோ எங்களை –
புண்யத்துக்கு சோறிட்டு வளர்கிறவர்கள் அன்றோ —
சாஷாத் தர்மமான உன்னை -ராமோ தர்ம விக்ரவான் –

பிறவி பெறும் தனை –
நாட்டார் ஆஸ்ரயணீயன் இருந்த இடத்தே போய் ஆஸ்ரயிப்பார்கள்
அவர்களைப் போலேயோ நாங்கள்–
ஆஸ்ரயணீயனான நீ தானே நாங்கள் இருந்த இடத்தே–எங்களோடு சஜாதீயனாய் வந்து
அவதரிக்கும் படி அன்றோ எங்கள் உடைய ஏற்றம் –
புண்ணியம் யாம் உடையோம் —புண்ணியத்தை பற்றினவர்கள் அன்றோ –

நாமுடையோம்
சித்த சாதனத்தை பற்றினவர்களில் காட்டில்–இருந்த இடத்தே சென்று ஆஸ்ரயிக்க வேண்டாத படியான
ஏற்றத்தை உடையவர்கள் நாங்கள் —நினைத்த படி விநியோகம் கொள்ளலாம் படி
கைப்புகுந்த உன்னை உடையோம் அன்றோ –

அறிவொன்றும் இல்லை–
புண்ணியம் யாம் உடையோம்–என்பதாய்க் கொண்டு வ்யாஹத பாஷணம் பண்ணா நின்றி கோள்-என்ன
கண்டிலையோ —இது தானே அன்றே அறிவு கேடு–ஆனால் விடும் அத்தனையோ -என்ன
கறைவைகள் இத்யாதி –
இவ்வளவும் தங்கள் உடைய–ஆகிஞ்சன்யத்தையும்–அநந்ய கதித்வத்தையும்–உபாயத்தின் உடைய நைரபேஷ்யத்தையும்
சொன்னார்கள் ஆய்த்து –
அறிவு இல்லை–
அறிவு ஓன்று இல்லை–
அறிவு ஒன்றும் இல்லை–
உன் பக்கலில் உண்டான -பக்தி ரூபாபன்ன ஞானம்
சமதமாதி முமுஷு–அறிவு இல்லை -கர்ம யோகம் இல்லை–அறிவு ஓன்று இல்லை -ஞான யோகம் அறிவு இல்லை
தனித்து உபாயமாக இருக்கும்–அறிவு இல்லை என்பதும் அறிவின் கார்யம்–
இதுவே சாதனம்–ஒன்றிலும் அறிவு இல்லை என்கிறார்கள்

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –
எங்களுக்கு குற்றம் சொன்னோம் இத்தனை போக்கி–உன்னுடைய பூர்த்திக்கு குற்றம் சொன்னோமோ
சர்வ நிரபேஷன் -என்கை
எங்களுடைய அறிவொன்றும் இல்லாமைக்குப் போராதோ–உன்னுடைய குறை ஒன்றும் இல்லாமை –
எங்கள் குறையாலே எங்களுக்கு இழக்க வேண்டுவது –
உன்னுடைய பூர்த்தியால் ஏதேனும் குறை உண்டாகில் அன்றோ -என்கிறார்கள் –
இப் பள்ளத்துக்கு அம் மேடு நிரப்பப் போராதோ —இப் பாதளத்துக்கு அப் பர்வதம் நேர் என்கை –
எங்கள் பக்கல் ஞான வ்ருத்தாதிகள் ஏதேனும் உண்டோ -நாங்கள் இழக்கைக்கு -என்று கருத்து
இத்தால்
உபாய நைரபேஷ்யம் சொல்லிற்று -சர்வ நிரபேஷன் அன்றோ நீ என்று கருத்து –

இடைக்குலத்தில் பிறக்கை புண்ணியம்–உபாயமும் ஸூஹ்ருதமம் நீயே–
ஆய்க்குலம் அத்தனையும் உஜ்ஜீவிக்க–வீடுய்ய தோன்றி –
ததி பாண்டன் -தயிர் -சட்டி பானை பதினெட்டு நாடன் பெரும் கூட்டம்–
உன் தன்னை–
சூரிகள் -குற்றேவல் செய்யும்
எப்படிப்பட்ட உன்னை -உன்னை சொல்லாமல் உன் தன்னை —எங்கள் பின்னால் வந்தாய்
தடம் கடல் சேர்ந்த உன்னை கானம் சேர்ந்த குலத்தில் -ஆய்க்குலம்
அனஸ்னன் சாப்பிடாத -புஜிக்காத உன்னை – உண்ணும் குலத்தில் பிறக்கப் பெற்றோம்
திவ்ய ஞானம் உள்ளார் பெரும் உன்னை -அறிவு ஒன்றும் இல்லாத–இமையோர் தம் குல முதல் ஆயர் தம் குலம்
வெம் கதிரோன் குலத்தில் காட்டில் பகல் விளக்கு–ஆயர் குலத்துக்கு அணி விளக்கு விசேஷம்
பிறவி–ஆவிர்பவித்த யாதவ குலம்–நந்தன் பெற்ற ஆனாயன்–
பறை தரும் புண்ணியம் இறே தன்னை–பிறக்கைக்கு ஹேது தருவதற்கும் ஹேது
வேண்டி வந்து பிறந்ததும் தேவர் இரக்க —தேவர்கள் இரக்க வந்து பிறந்தான் -வேண்டி வேண்டிய படியால்
வேண்டி இரக்க -இரண்டு சப்தம்–
தானாக வேண்டி ஆசைப்பட்டு —பிரார்த்தித்து வியாஜ்யம் -வந்து
இச்சா க்ருஹீதா -வேண்டி —கிருபையே பிறக்கைக்கும் அருளுவதருக்கும்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ யசோதைக்கு–யாமுடையோம்–பெற்று உடையாள் ஆனால் அவள்
இருந்த ஊரில் இருந்த மானிடர்கள் எத்தவம் செய்தார்களோ–உங்கள் தவப்பலமாக பெற்றீர்கள்
எங்கள் புண்ணியம் ஒன்றாய் ஏக வசனம்–
நாட்டில் புண்ணியங்கள் பல பிரதிபந்தகங்கள்–எல்லாருக்கும் பொதுவாக இருக்கும்

கோவிந்தா –
நீங்கள் என்னைப் பூர்ணனாக பேசின படியால்–
வேண்டி இருந்தோமாகில் செய்தல் -இல்லையாகில் தவிர்த்தல் அன்றோ -என்ன
நிரபேஷமான பரம பதத்தில் வந்தோமோ –
எங்களை ஒழியச் செல்லாமையாலே வந்து அவதரித்து–
எங்களுக்கு கையாளாக இருந்த இடத்தே அன்றோ-நாங்கள் அபேஷிக்கிறது –
இத்தால்
சௌலப்யம் சொல்லுகிறது

குறைவாளர்க்கு நிறைவாளர் கொடுக்கக் கடவர்கள் என்று–ஓன்று உண்டாகில் அன்றோ-
என் பூர்த்தியும் உங்கள் அபூர்த்தியும் சொல்லுவது என்ன
அதுவோ –
பலம் கொடுத்தால் குறையும் என்ன ஒண்ணாது–
பூரணன்–பிரபல கர்மத்தால் தகிக்க முடியாது சர்வேஸ்வரன் சர்வ சக்தன்
நிரபேஷனன் பூரணன் -பிரபல பாபங்களை போக்குவேன்–சர்வ தரமான் -வார்த்தை பொய்யாகாதே
ராஜாக்கள் போக மேடும் பள்ளமும் சமமாக்கி -தேர் குலுங்காமல்–ராஜாதி ராஜன் சர்வேச்வரன் –
கடலை தூர்த்து வானர சேனையை நடை இட்டால் போலே–நீ எங்கள் அனுக்ரகம் செய்து
குறைவில்லாமை எங்கள் மேல் இட்டு–அறிவு ஒன்றும் இல்லாத -குறை ஒன்றும் இல்லாத சேர்த்து
பாழும் தாறு நிரப்ப பௌஷ்கல்யம் பூர்த்தி உண்டே–குறைவு இல்லாமை அறிவில்லாமையை அபேஷித்து
நாரணனே நீ நான் இன்றி இலேன்–பயன் இருவருக்குமே -அமுதனார்
நீ குறைவில்லாமை இருக்க பிரயோஜனம்–குறைவாளரை ஒழிய நீ நிறைவாளனாக எப்படி இருக்க முடியும்
அமுதனார் -நீசதைக்கு -அருளுக்கும் அக்தே புகல் -பழுதே அகலும் பொருள் என் –
நிகரின்ற நின்ற என் நீசதைக்கு -நீசனேன் நிரை ஒன்றும் இலேன்–
உன்னுடைய அருளுக்கும் -என்னை விட தாழ்ந்தவன் இல்லையே
பயன் இருவருக்கும் ஆனபின்பு–மா முனிகள் ஆர்த்தி பிரபந்தம் –எனைப் போல் பிழை செய்வார் உண்டோ
உனைப் போலே பொறுப்பார் உண்டோ–மேட்டுக்கு ஒரு பள்ளம் நேர் அன்றோ —ஒன்றும் இல்லை -ஸ்வரூப
கோவிந்தா –
உனக்கு ஞானம் இருந்தால் சூரிகள் நடுவில் இராயோ–
அவனுடைய அஞ்ஞானமே நமக்கு பற்றாசு –
ஆஸ்ரித தோஷங்களை அறியாமை -உண்டே –
அவிஞ்ஞாதா -தெரியாதவன் இதனால்–உண்டு நமக்கு -என்று உள்ளம் தளரேல்
தொண்டர் செய்யும் பல்லாயிரம் பிழைகள் பார்த்திருந்தும்–காணும் கண் இல்லாதவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி உன்னை நீ அறிந்தே ஆகில் பசுக்கள் பின்னே போவாயோ

கோவிந்தா சப்த அர்த்தம்–
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா–பரத்வம் இல்லை–தாழ நின்ற இடத்தில்
சாம்ய பன்னருக்கும் -நித்யர் -அவர்களில் சிறிய முக்தர் -ஒத்தர் முக்த ப்ராயர் —குறை இருந்து –
இருந்தோம் என்ற இழவும் இன்றிக்கே –
பொருந்திக் கிடக்கிறவன்–குறையால் இழக்க வேண்டி -உன்னுடைய பூர்த்தியில் குறை உண்டாகில் அன்றோ
கன்றுகள் மேய்த்து காலிப் பின்னே மேய்த்து–வாத்சல்யதிகள் -கோவர்த்தன விருத்தாந்தம் – சக்தி உணர்ந்த ஞானம் –
ஞான சக்திகள் குறை இல்லாமல்–கோவிந்தா -மாம் ஏகம்—நிறைவாளன் சாதனம் எதிர் பார்க்கலாமா –
பிரதி எதிர் பார்க்காத பூரணன் பிராப்தி–மாம் ஏகம் -என்றவன் பாசுரம்–
கையும் உழவு கோலும் -சாரத்திய வேஷம் மாம்–உனக்கு கையாளாய்–
கடை ஆவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறு
கற்று தூசி கோமள கேச வேஷம்–உபாய வேஷம்,சௌலப்ய கோவிந்தா–உங்கள் பேற்றுக்கு உடலாக நிரபேஷன்
குறைவாளர் ஒருவருக்கு நிறைவாளர் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் என்ன
ஸ்வதந்த்ரம்
நீங்கள் சொன்னது -கொடுக்க -இழவுக்கு உடலோம்–நாம் அல்லோம் கை விட உடல்–நிரபேஷன் நிரந்குச ஸ்வதந்த்ரன்
முடிந்தால் முடியாது சொல்லிப் பார்–பூர்த்தி வேண்டுமானால் குறைத்து கொள்ளலாம்–பந்துத்வம்
குடல் துவக்கு உண்டாகில் ஸ்வாதந்த்ரம் கட்ட முடியுமோ–

உறவேல் ஒழிக்க ஒழியாது– —
உறவை ஒழிக்க ஒழியாதே–பிரகாரத்தை ஒழிய பிரகாரி உண்டோ
ஸ்திதி உண்டோ -பிரகாரம் நம் போல்வார் -பிரகாரி
உன் தன்னோடு உறவு –
நீ எங்களுக்கு உறவு அன்றோ –எங்கள் கார்யம் செய்ய வேண்டாவோ -என்ன
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கே ஒழிக்க ஒழியாது –
உன்னோடு உண்டான சம்பந்தம் -உன்னாலும் விட ஒண்ணாது —எங்களாலும் விட ஒண்ணாது –
இருவரும் கூட க்ருத சங்கேதர் ஆனாலும் விட ஒண்ணாது –
இருள் தரும் மா ஞாலமான இத் தேசத்தாலும் போக்க ஒண்ணாது –
சம்பந்த ஞான ரூபம் ஆகையாலே இதுக்கு விஸ்மிருதி இங்கே வரக் கூடாதோ என்ன
இப்படி சொல்லுகிறது என்ன உரப்பு -என்ன –
நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே –
நீ என்னை அன்றி இலை -என்ற-பிரமாணத்தைக் கொண்டு -என்ன –
அவர்கள் உங்களைப் பெற்றவர்கள் அன்றோ என்ன –
ஆனால் நீ எங்கள் கையிலே தந்த மூலப் பிரமாணத்தில் முதல் எழுத்தைப்
பார்த்துக் கொள்ளாய் -என்கிறார்கள் –
அதாவது
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று அடியிலே சொன்னோம் -என்றபடி —
நீ சர்வ பிரகார பரி பூரணன் ஆகையாலே
நாங்கள் நித்ய சாநித்யசாபேஷராய் இருக்கிற உறவு -என்றுமாம்-
தயா பூர்ணனான உன்னோடு–தயநீயதயா பூரணை களான -எங்களுக்கு உண்டான உறவு -என்றுமாம் –
ஒன்பது சம்பந்தம் -உறவு ஒழிக்க ஒழியாதே –பிதா ரஷக சேஷி பார்த்தா ரமாபதி ஸ்வாமி போக்தா –

அறியாத -இத்யாதி
கீழ் தாங்கள் நெருக்கின அதுக்கு ஷாமணம் பண்ணுகிறார்கள் –
அறியாத
அநவதாநத்தாலே வந்த அஞ்ஞானம் –
பிள்ளைகள்
பால்யத்தாலே வந்த அஞ்ஞானம் –
அன்பு –
பிரேமத்தாலே வந்த அஞ்ஞானம் –
இந்த ஹேதுக்களால் வந்த அறியாத் தனம் பொறுக்க வேணும் –
ப்ரேமாந்தரைக் குற்றம் கொள்ளுகையாவது —ஒரு படுக்கையிலே இருந்து –
கால் தாக்கிற்று கை தாக்கிற்று -என்கை இறே-
அறியாத –
ஞானம் இல்லை–
பிள்ளைகள் –
பருவம்–
அன்பினால்
சிநேகத்தால்–
தெரியாமல் –
அஞ்ஞர் செய்தது பொறுக்க வேண்டும்
பாலர் செய்ததை–ச்நேகிகள் செய்ததை பொறுக்க வேண்டும்–
பிரேமத்தால் வந்த இருட்சியால்–எங்களால் அறிவு கேட்டோம்
பிறவியாலே அறிவு–யாதுவும் ஒன்றும் இல்லாத பிள்ளைகள்–உன்னாலே அறிவு கேட்டோம்–அழகு மயக்க
அறிவு இழந்தனர் ஆய்ப்பாடி ஆயர் இடையரை பண்ணினது–
ஒத்த பருவத்தினர்–பித்தர் சொல்லிற்றும்–பேதையர் சொல்லிற்றும்
பத்தர் சொல்லிற்றும்–பன்னப் பெருவரோ பிரசித்தம் -கம்பர்–
குற்றம் சொல்வது ஒரு படுக்கையில் இருந்து கை பட்டது

உன் தன்னை–
கோவிந்த பட்டாபிஷேகம்–அபராதம் மன்னித்தாய்–அனவதானம் அன்பு விளைக்கைக்கு நிமித்தம் ஆனதே
நாமம் உடை நாரண நம்பி–அந்தபுரத்தில் நாட்டுக்கு கடவன்–காதில் கடிப்பிட்டு கலிங்கம் எதுக்கு இது என்
பிரணயி அல்லன்–உபய விபூதிக்கும் -முடி சூட்டிய–பசுக்களை மேய்த்தான் முடி சூட்டி கோவிந்தன் -விசேஷம்
நாராயணன் அனுவாகம்–கோவிந்தா நெஞ்சு உடையார்க்கு சொல்வதை–
கோவிந்த தாமோதர மாதவேதி
சஹஸ்ர த்வாதச அஷரங்கள் எட்டு எழுத்து சிறுக்க–மூன்று எழுத்து கண்டதும்-
பராங்கதி கண்டு கொண்டான்-முழுகி மூக்கை புதைப்பாருக்கு

அழைததோம் பல தடவை சொல்லி–பேய் பெண்ணே -அழைத்தோம் இவற்றையும் சீறி அருளாதே
சர்வமும் சமஸ்த–த்ரிவித அபசாரம் உபலஷணம்–மனம் மொழி வாய் பகவத் பாகவத அசஹ்யா அபாசரம்
புகு தருவான் நின்றவற்றில் -புத்தி பூர்வகமாக–உபசார புத்தி செய்ததும் அபசாரம்–சுலபனை பரன் சொல்லி அபசாரம்
சீறி அருளாதே
செய்தது எல்லாம் செய்து சீறி அருளாதே சொல்லும் உறவு உண்டே நமக்கு–
இத்தலையில் ஆராயில் சீர வேண்டியது தான்
நப்பின்னை பிராட்டி முன்னிட்டவர்கள் பூர்வ விருத்தம் ஆராய கூடாதே
விஸ்வரூபம் -அர்ஜுனன் -அசத்காரம் பொறுத்து அருள வேண்டும்––
கோபிகள் சௌலப்யம் கண்டவாறே பரத்வ புத்திக்கு
பக்தியில் தலை நின்றாலும்–கிட்டினவர் சொல்லும் வார்த்தை இது

சீறி அருளாதே
உபாயம் என்று நினையாதே பிரகிருதி என்று கொள்ள வேணும்
இத் தலையால் பற்றும் பற்று சீற்றத்துக்கு விஷயம்
இத் தலைக்கு குறையும் அத் தலைக்கு ரக்ஷையும் ஸ்வரூப ப்ரயுக்தம்
அறியாமையாலும்–பால்யத்தாலும்–பிரேமத்தாலும்–உன்னை சிறு பேராலே அழைத்தோமே யாகிலும்
சர்வஞ்ஞனாய்–சர்வ ஸ்மாத் பரனாய்–பிரேம பரவசனான நீ
சீறி அருளாது ஒழிய வேணும் -இறைவா—
வானோர் இறையை நினைத்தன்று —ஆய்க்குலமாக வந்து தோன்றின நம் இறை –

உன் தன்னை -இத்யாதி
கோவிந்தாபிஷேகம் பண்ணின பின்பு-முதல் திருநாமம்-சொல்லுகை குற்றம் இறே
நாராயணன் -என்றார்கள் கீழ் —
நீர்மை சம்பாதிக்கப் போந்த இடத்தே மேன்மை சொல்லுகை குற்றம் இறே –

இறைவா –
தன் கை கால் தப்புச் செய்தது என்று
பொடிய -விரகு -உண்டோ —உடைமையை இழக்கை உடைவன் இழவு அன்றோ –

இறைவா –
பிழைப்பர் ஆகிலும் தம் அடியார் சொல் பொறுப்பது பெரியோர் கடன் அன்றே –
நீ இறைவனாகைக்கும் சீறுகைக்கும்-என்ன சேர்த்தி உண்டு –
இத் தலையால் பற்றும் பற்று சீற்றத்துக்கு விஷயம்
இத் தலைக்கு குறையும் அத் தலைக்கு ரக்ஷையும் ஸ்வரூப ப்ரயுக்தம்

நீ தாராய் பறை –
விலக்காமை பார்த்து இருக்கும் நீ–எங்கள் அபேஷிதம் செய்யாய் –
நீ தாராய் பறை
விலக்குகைக்கு ஆள் இல்லை -நீ தரும் அத்தனை –

இறைவா–நீ
தர விலக்குவார் இல்லை–நிரந்குச ஸ்வாதந்த்ரன்–உன் ஸ்வரூபம் உணராய்
அழிக்க ஒண்ணாத சேஷித்வம்–அறியாமல் சேஷத்வம் அழியலாம்–பேற்றுக்கு அத்வேஷம் ஒன்றே வேண்டுவது
பேற்றுக்கு கனத்துக்கு கீழ் சொன்னவை எல்லாம் அத்வேஷம் தானே–
ஆய்க்குலமாய் வந்த நம் இறை
வானோர் இறை சொல்ல வில்லை–
இறைவா–கோவிந்தா–
உன்னை பார்த்தாலும்–எங்களை பார்த்தாலும் கை விட முடியாதே
தேவர் எல்லையில் வர்த்திக்கும் எங்களுக்கு குறை இல்லையே–குடல் துவக்கால்–ராஜா பிரஜை ரஷிப்பது
ஈஸ்வரத்தால்–வஸ்து வேண்டுமானால் அருளுவாய்–ரஷிகிறது–
சீறாமைக்கு ‘–செய்த குற்றம் நற்றமாக கொள்
சாது பரித்ராண்ம்–கோபி ஜனம்–ஆராய்ந்து கொடு என்றான் அருகில் உள்ளாரை பிராட்டி இடம் சொல்ல
நீ தாராய்–அவள் தருவது தந்தாள்

நீ தாராய்
புருஷகாரம் செய்து அருளினாள்–உபாய நிஷ்டை அவள் கிருபை
உபாயமாக வரிக்கை–அஸ்துதே அவள் செய்தால்–மோஷயிஷ்யாமி நீ சொல்ல வேண்டாவோ
சுலபன்–சுவாமி நீ தாராய்–
ருசியை சாதனம் ஆக்காமல்–ருசி பொது எல்லா பலன்களுக்கும்
சைதன்ய கார்யம்–பதறி துடித்தோம்–உபாயம் இல்லை–சித்த ஸ்வரூபன் உன்னையே பார்த்து
எங்களை பார்க்கிலும் தீன தசை–எங்களையும் உன்னையும் உறவு
உன்னை பாராமல் எங்களை பார்த்தாயகில் இழக்கிறோம்–எங்களுக்கு விருத்த ஞான ஜன்மங்கள் வந்த
குலையாத சம்பந்தம் உண்டு என்றோம்–எங்கள் தப்புக்கு அனுபவித்தோம்
இனி உன்னை இழவாமல் உன் கார்யம் செய்யப் பாராய்–
மாம் சரணம் விரஜ -நீ வந்து பற்றி–
ஞான சக்தி பூர்ணம்–பிராப்தியும் உண்டு–சமஸ்த விரோதிகளையும் போக்குவேன்
மாஸூச சொல்லி–ஆகிஞ்சன்யம் அயோக்யதை உபாய பூர்த்தி பிராப்தி சொல்லி–கிருஷ்ணனை பற்றி -பேறு –
ராமோ விக்ராகவான் தர்ம மாரீசன் வார்த்தை–
கிருஷ்ணன் தர்மம் சனாதனம்–செய்த வேள்வியர் வையத்தேவராய் -ஸ்ரீ வர மங்கல நகர் –

சாதனா நிஷ்டனுக்கு -அறிந்து -அடைய மநோ ரதம் -யத்னம் பண்ணி -அடைந்து –
இவர்கள் -உன் தன்னை –நாம் உடையோம் என்ற சின்ன அறிவு –சிற்றத்தின் வயிற்றில் சிறியது பிறந்ததே -ஞானம் வந்ததே /
பூர்ணன் -குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன் அன்றோ -இத்தையே பேற்றுக்கு சத்ருசமாக திரு உள்ளம் கொள்வானே –
பாரமாய் பல வினை பற்று அறுத்து -கோர மாதவம் செய்தனன் கொல்-
மேலே சவால் -சாத்விக அஹங்காரம் -உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
உறவு முன்பு இல்லை என்பது இல்லையே -உறவின் கார்யமான கைங்கர்யம் கொடுக்கா விட்டால் பயன் இல்லையே –
சிறு பேர் -அகாரம் — விரித்து நாராயணா -பாற் கடல் துயின்ற பரமன் -உலகு அளந்த உத்தமன் –
ஊழி முதல்வன் பத்ம நாபன் -மால் நெடுமால் கோவிந்தன் -என்று நிகமனம்
வண் புகழ் நாரணன் —ஆகியும் ஆக்கியும் காக்கும் அவையுள் தனி முதல்-என்று எல்லாம் சொல்லி
என் அம்மான் கண்ண பிரான் என் அமுதம் – என்றது போலே இங்கும் கோவிந்தனில் நிகமனம்
நாராயணா என்னும் நாமம் –நானும் சொன்னேன் –என்று பரக்க பேசி —
தண் குடந்தை கிடந்த மாலை அடி நாயேன் நினைந்திட்டேனே -நிகமனம் –
மூ உலகு உண்டு உமிழ்ந்த முதல்வா -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -கண்ணனை அரங்க மாலை –நிகமனம்
இப்படி பரத்வத்தில்-காரணம் நியாந்தா உத்தமன் -இப்படி எல்லாம் – உபக்ரமித்து ஸுலபயத்தில் நிகமனம்
கோவிந்த பட்டாபிஷேகம் பண்ணி -அஹம் வோ பாந்தவ ஜாந்தா -அருளினவன் அன்றோ –
குன்றம் எடுத்த பிரான் அடியவர்கள் இடம் ஒன்றி கூடி இருந்து குளிர நினைப்பார்கள் அனைவரும் –

ஞானம் பக்தி வைராக்யம் -ஸூவ ஞானம் -ப்ராப்ய ஞானம் -ப்ராபக ஞானம் -தத்வம் ஹிதம் புருஷார்த்தம்
-ஐந்தை சுருக்கிய மூன்று -திருமந்திரம் -ஞானம் த்வயம் பக்தி சரம ஸ்லோகம் வைராக்யம்
கோயில் பெருமாள் கோயில் திருமலை -ஸ்ரீ வைஷ்ணவ ஞானம் பிறக்கவும் -வளர்க்கவும் –
பின்பு புகல் இடமாகவும் அன்றோ இம் மூன்றும் -இவையே தத்வம் ஹிதம் புருஷார்த்தம்
ஸூய ஞானம் -சொல்லியே பர ஞானம் -சரீரம் பிரகாரம் –
நம்மாழ்வார் -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் நைச்யம் பண்ணி விலக– கூடாரை வென்றான் இத்தைக் காட்டியே –
விரோதி ஞானம் இவற்றில் அந்தர்கதம்-
ஐந்தையும் -ஒன்றாக சுருக்க –ப்ராப்ய ஞானம் -பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே புருஷார்த்தம் ஒன்றே பிரதானம் –
பிராபகம் பற்றி ப்ராப்யத்தை பிரார்த்திக்கிறாள் -கோதை இரண்டு பாசுரங்களால் –
சரணாகதோஸ்மி- தவாஸ்மி தாஸ்ய -ப்ராபக ஞானம் -ப்ராப்ய பிரார்த்தனை கத்யத்திலும் உண்டே –
உணர்வில் உள்ளே இருத்தினேன் -அதுவும் அவனது இன்னருளே-

நீரே உபாயம் என்று புரிந்து கொள்ளும் ஞானம் மட்டும் இல்லை -பிரார்த்திக்க வேண்டுமே -பிரார்த்தனா மதி சரணாகதி
பிராப்தி -அடைதல் /-எதை- ப்ராப்யம் /எதன் மூலம் பிராபகம் -/
நாயந்தே -அடியேன் உமக்காக இந்த கைங்கர்யம் செய்ய சித்தம்
இறைவா நீ தாராய் -பிராப்யம்-பிரார்த்தனை-அடுத்த பாசுரத்துக்கு முன்னோட்டம் -இந்த பாசுரத்தில் -கீழே எல்லாம் பிராபகம் –
கறைவைகள் –ஆறு பகுதியாக பிரித்து -த்வய பூர்வ வாக்யார்த்தம் -இதில்
ஆகிஞ்சன்யம் – கறைவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் –
அறிவு இல்லை ஞானம் -அறிவு ஓன்று இல்லை ஞானம் யோகம் இல்லை —
அறிவு ஒன்றும் இல்லை ஆய்க்குலம் -பக்தி யோகம் இல்லை என்றுமே இல்லை
உன் தன்னை பிறவி –தேடி வந்த புண்ணியம் யாம் உடையோம் –குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –
சம்பாதிக்க வில்லை -விதி வாய்க்கின்றது காப்பார் யார் -சித்த உபாயம்
நான்காவது பாகம் – உறவு ஒழிக்க முடியாத -குடல் துவக்கு நித்ய நிருபாதிக நிர்ஹேதுக சம்பந்தம் –
வந்த உறவு இல்லை-ஏற்பட்ட உறவு இல்லை – இருக்கும் உறவு தானே
ஐந்தாவது-அறியாத –சிறு பேர் -சீறி அருளாதே -செய்த குற்றங்களுக்கு ஷாமணம் –
ஆறாவது -இறைவா நீ தாராய் –

இறைவா நீ தாராய் -பறை என்றதன் உட்கருத்தை விவரணம் அடுத்த பாசுரம்
இரங்கு -அருள் -அபேஷித்தோம்-பேற்றுக்கு கைம்முதல் –
நல் கருமம் ஒன்றும் இல்லை-மேலும் செய்ய யோக்யதையும் இல்லை
தங்கள் உடைய அபகர்ஷத்தை அனுசந்தித்து –
மூல ஸூஹ்ருதமான ஈஸ்வரன் உடைய குண பூர்த்தியையும் அனுசந்தித்து
சம்பந்தத்தை உணர்ந்து-பூர்வ அபராதங்களுக்கு ஷாமணம் பண்ணி-
உபாய பூதனான ஈஸ்வரன் பக்கல் உபேயத்தை அபேஷிக்கை
இந்த ஆறும் அதிகார அங்கங்கள் -இவை கூறப் படுகின்றன
எட்டாம்பாட்டில் -கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு-
கூடாரை வெல்லும் சீர் –பாடிப் பறை கொண்டு
பறை கொண்டதாக அன்றோ அருளிச் செய்கிறாள்-
அங்கு பாடுகையாகிற உத்தேச்யம் பெற்றதாக கொண்டு –
பறை கொண்டு -பறை கொள்ள -என்றே பொருள் அங்கும்-

ஆச்சார்ய பரமாக
குறை ஒன்றும் இல்லா கோவிந்தா
ஞானம் அனுஷ்டானங்களில் ஒன்றும் குறை இல்லாத வித்வ சிகா மணியே
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
பசு பிராயர்கள் -சம்சார ம்ருகாந்தரத்திலே உண்டியே உடையே உகந்து ஓடி உழலும்
இனி
காமதேனு போன்ற ஆச்சார்யர்களை அனுவர்த்தித்து
ஏதத் சாம காயன் நாஸ்தே–அஹம் அன்னம் –அஹம் அந்நாத
அறிவு இல்லாத -அறிவு ஓன்று இல்லாத -அறிவு ஒன்றும் இல்லாத –
தத்வ ஹித புருஷார்த்தங்களில் ஒன்றும் அறியாத
உன் தன்னை
உன் தன்னால்
சஹி வித்யாதாஸ் –ஸ்ரேஷ்டம் ஜென்மம் -ஞான ஜென்மம் -அருள வேண்டும் –
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன் -என்றவாறு-

————————————————————————–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பாவை சாரம் – கூடாரை வெல்லும் சீர் – —

January 23, 2018

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –

நோற்றால்–அவன் பக்கல் பெறக் கடவ பேறு–சொல்லுகிறார்கள் –

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்

வியாக்யானம் —

கூடாரை வெல்லும் –
ஆந்தனையும் பார்த்தால் —ந நமேயம் -என்பாரை வெல்லும் இத்தனை –
அவர்களை வெல்லுமா போலே கூடினார்க்கு தான் தோற்கும் இத்தனை –
தங்கள் பட்ட இடரை அறிவித்து அத்தலையை தோற்பிக்க நினைத்தார்கள் –
அவன் தன் தோல்வியைக் காட்டி அவர்களைத் தோற்பித்த படியைச் சொல்லுகிறது
எங்களைத் தோற்பித்த நீ யாரை வெல்ல மாட்டாய் -என்கிறார்கள்
அதாவது -நாங்கள் முன்னே வந்து நின்று -வார்த்தை சொல்லும்படி -பண்ணினாயே
ஆந்தனையும் பார்த்தால் -ந நமேயம்-என்று கூடாரை வெல்லும் அத்தனை –
கூடினால் தான் தோற்கும் அத்தனை

கூடாரை-
சங்கங்கள் கேட்டர்கள்–பாஞ்ச ஜன்யம்–
புள்ளரையன் கோயில் வெள்ளை விளி சங்கு–
ஆநிரை யினம் மீளக் குறித்த சங்கு
பறை
ஜாம்பவான் நம் ஜெயம் சாற்றின பறை–
பெரும் பறை
இலங்கை பாழாளாக நம் ஜெயம் சாற்றின பறை
சாலப் பெரும் பறை–
நாம் பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க குடம் ஆடின போது அரையிலே கட்டின பறை உண்டு
பல்லாண்டு பாட
பெரியாழ்வாரையும் பொலிக பொலிக நம் ஆழ்வாரையும் தருகிறேன்
கோல விளக்கு
நப்பின்னை பிராட்டி–
கொடி
கருளக் கொடி ஓன்று உடையீர்
மதுரையில் இருந்து இச் சேரி வரும் பொழுது அனந்தன் தொடுத்த மேல் விதானம்
நோன்பு தலைக் கட்டின பின்பு வேண்டிய பஹூமானங்கள்–

மழலை சொல்லுக்கு தோற்று கொடுத்தால்–வெல்லும் சீர்
கூடுவோம் என்பாரை வெல்ல முடியாதே —
எங்களை வெல்ல நினைத்தாய்- நாங்கள் கூடுவோமாய் வந்தோம்- தோற்றாய் –
பரசு ராமன் ஷத்ரிய புருஷன் ஒருவனை கொல்ல நினைத்து வந்தான்–
அவன் கையில் வில்லை கொடுத்து அஞ்சலி பண்ணிப் போந்தான்
வில்லோடு நமஸ்கரித்தான் ஆகில் -இவராய்த்து தோர்த்து இருப்பார்
கூடினவர்களை–கூடின விபீஷணனுக்கு வில் வெட்டி ஏவல் செய்தார் பெருமாள்–கூடினார் குற்றேவல் கொண்டு
சுக்ரீவன் வசனாத் அபிஷேகம்–சொன்னால் கேட்பார்–
அர்ஜுனன் -உறவு -கொண்ட ந நமேயம் ராவணனை வென்று–தூத்வ சாரத்வ
விஜிதாத்மா –
நன்கு திருக் கல்யாண குணங்கள் காட்டும் கண்ணாடி–விஜிதாத்மா -சங்கரர் -அனைவரையும் வென்றார்
பக்தர்களால் ஜெயிக்கப் பட்டவர் பட்டர் -தோற்கடிக்கப் பட்டவர் –
விதேயாத்மா -சேர்த்து -அவிதேயாத்மா -யாருக்கும் கீழ் படாதவர்
வினை கொடுத்து வினை வாங்குவார் போலே அகாரம் சேர்க்க வேண்டாமே-
தன்னுடைய அடியவர் சொன்னபடி விதேயர்
சத் கீர்த்தி-
இத்தையே கீர்த்தியாக கொண்டவன்–

கூடாதார் சத்ருக்கள் மட்டும் இல்லை
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் ஆண்டாள் விரோதிகள் அனைவரையும் வியாக்யானம்-
அஞ்சிறை மட நாராய் தூது விட வந்து அருளி –
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான்–
வளம் மிக்க மால் பெருமை மன் உயிரின் தண்மை–உளமுற்று -தளர்வுற்று நீங்க நினைத்த -மாறனை
பாங்குடனே சேர்த்தான் மகிழ்ந்து –
கூடாரை வெல்லும் சீர் –சௌசீல்யம் மகதோ மந்தைச்ய நீர் சம்ச்லேஷ –
புரை அறக் கலந்து நாடு புகழும் பரிசு -நாம் பெரும் சம்மானம்
இன்னம் அங்கே நட நம்பி–எற்றுக்கு அவளை விட்டு இங்கே வந்தாய்
மட்டை அடி -மின்னிடை மடவார் -நம் ஆழ்வார் -உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் பந்தும் கழலும் தந்து போகு நம்பி
போகு நம்பி -உன் தாமரைக் கண்ணும் செய்ய வாயும் –ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோம்
மின்னிடையார் சேர் கண்ணன் –
தான் தள்ளி உன்னுடனே கூடன் என்று –குலசேகரர் ஆழ்வார் -வாசுதேவ உன் வரவு பார்த்தே –
நீ உகக்கும் -கண்ணினாரும் அல்லோம் ஒழி –என் சினம் தீர்வன் நானே-
கோபிகள் -பிரணய ரோஷம்
காதில் கடிப்பிட்டு –எதுக்கு இது இது என் இது என்னோ–கதவின் புறமே வந்து நின்றீர் -திருமங்கை ஆழ்வார்
நிச்சலும் என் தீமைகள் செய்வாய்–அல்லல் விளைத்த பெருமானை–
குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற நந்த கோபாலன்
விநயம் காட்டி சேர்த்துக் கொள்வான் –

எம்பெருமானார் யஞ்ஞமூர்த்தி யாதவ பிரகாசாதிகளை வென்றது போலேயும்
பட்டர் மேல் நாட்டு வேதாந்தி-நஞ்சீயரை சம்பிரதாயத்துக்கு கொண்டு அருளியது போலேயும்
நம்பிள்ளை -துன்னு புகழ் கந்தாடை தோழப்பர்-நடுவில் திரு வீதிப்பிள்ளை பட்டர் போல்வாரை
அடிமை கொண்ட சரிதைகள் அனுசந்தேயம்
கோவிந்தா– கோ- ஸ்ரீ ஸூக்திகளை கொண்டே வென்றவைகள் அன்றோ இவை

கூடாரை வெல்லும் கோவிந்தா –
பருப்பதத்து -பெரியாழ்வார் திருமொழி -5-4-7-
அத்வேஷ மாதரத்தை பற்றாசாக கொண்டு அவன் அருளும் தன்மை இரண்டாலும் அருளப்படுகிறது –
கூடுவோம் அல்லோம் என்று அபிசந்தி இல்லாத மாதரத்தில் ரஷித்த படி
பொருந்தோம் என்று துர் அபிமானம் இன்றிக்கே -ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும்
பசுக்களோடு பொருந்துமவன் கோவிந்தன்
பருப்பத்தது -விலக்காமை ஒன்றே வேண்டுவது
வருவானும் -விரோதிகளை போக்குவானும் -தன் விஜயத்துக்கு அடையாளம் இடுவானும் தானே
பலத்துக்கு வேண்டுவது ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்தி –
ஸ்வ சாசநாதி வரு ததி வ்யவசாய நிவ்ருத்தி மாத்ரேண -ரசன அநு பபத்தி அதிகரண ஸ்ரீ பாஷ்யம் எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்தி —
விலக்காமை ஆத்ம ஞானம் -பிரளயத்தில் மோஷ பிரதானம் பண்ண இதுவே ஹேது
ததேக சேஷத்வ ததேக ரஷ்யத்வ ஞானம் இல்லை பிரளயத்தில் -தத் கார்யமான விலக்காமை அப்போது இல்லையே –

சீர் –
எல்லாரையும் வெல்லுவது குணத்தாலே–
கூடுவாரை சீலத்தாலே வெல்லும்–கூடாதாவரை சௌர்யத்தாலே வெல்லும்
சௌர்யம் அம்புக்கு இலக்காகும்–சீலம் அழகுக்கு இலக்காகும்–அம்புக்கு இலக்கானார்க்கு மருந்திட்டு ஆற்றலாம்
சீலமும் அழகும் நின்று ஈரா நிற்கும்–ஈர்க்கும் குணங்கள் தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ
அம்பு தோல் புரையே போம்–அழகு உயிர் கொலையாக்கும்
சர்வஞ்ஞரை -எத்திறம் -என்னப் பண்ணும் குணம் இறே-ஆழ்வார் -நிச்சயம் -கூடேன்-வெண்ணெய் போலே காட்டி-
அம்புவாய் -மருந்தூட்ட தீர்க்கலாம்–நீர் கொன்றாப் போலே இதுக்கு பரிகாரம் இல்லை –
ந நமேயம் என்று இருப்பாரை-தன்னுடைய சௌர்யாதி குணங்களாலும்-சீலாதி குணங்களாலும் வெல்லும் இத்தனை –
வில் பிடியைக் காட்டி ராவணனை ஜெயித்தான் –
இது பிரதம யுத்தத்திலே இவனும் அதுக்கு எதிர்பார்த்து போந்தவன் தோலாமை இல்லை இறே
ஆனால் மறுபடியும் யுத்தமுண்டான படி எங்கனே என்னில்-பெருமாளுடைய நிரதிசய சௌர்யத்தை
பிரகாசிப்பிக்கைக்காக மறுபடியும் யுத்தம் பண்ணினான் இத்தனை-என்று நம்முடைய ஆச்சார்யர் அருளிச் செய்வர் –
தன்னுடைய வடிவு அழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான்
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே சர்வ ஸ்மாத் பரனான தன்னுடைய-வை லஷண்யத்தைக் காட்டி ஆழ்வார்களை ஜெயித்தான்
இவை ஒன்றிலும் ஈடுபடாத நம் போல்வாரை ஆழ்வார்-சம்பந்தத்தை வ்யாஜீ கரித்து ஜெயிக்கும் இத்தனை –

கூடாரை கொல்லும் சீர் இல்லை வெல்லும் -கொள்ளூம் என்றபடி –
IT IS DIFFICULT TO WIN OVER ENEMIES BUT EASY TO DEFEAT THEM -ABULKALAAM
பூதனை-பூதனை வளர்ப்புத்தாய் கம்சனுக்கு –
அவனுக்கே என்று விஷம் கொடுத்ததால் -பாலையையும் அவள் உயிரையும் அவள் மறு பிறவியையும் சேர்த்து உறிஞ்சினான்
பூத உடல் சந்தனம் கமழ
சகடாசுரன் திருவடி ஸ்பர்ஸத்தால் புனிதனாகி அசுரத்தன்மை அற்று மோக்ஷம்
சிசுபாலன்-சிசுபாலன் பிறந்ததுமே மூன்று கண்கள் நான்கு கைகள்-தூக்கினாள் ஒரு கண்ணும் இரண்டு கைகளும் மறையும்
-தூக்கிக் கொண்டவன் எமனாவன் -கண்ணன் தூக்க –
தனது அத்தையிடம் -99-வசவுகளை மேலே ஒரு நாளில் சொன்னால் தான் கொல்வேன் சத்யம்
-ஏசினாலும் திருநாமம் சொல்லிக் கொண்டே கால ஷேபம் என்பதால் மோக்ஷம்
எதிரிகளும் கொண்டாடும் சீர்க் குணம் பெருமாளாது
கோவிந்தா -கோ விந்ததி-பூமி பாலகன் -ஆ நிரை ரக்ஷகன் -பூமி இடந்தவன் -வேதம் அளித்தவன் –
வேதங்களால் புகழப்படுபவன் போன்ற பல பொருள்கள் உண்டே –
மார்கழி–மாரை தட்டி அஹங்கரிப்பது கழிந்தால் தானே மதி நிறையும் –
சீர்க் குணம் –சீரான ஒழுங்கான -குணங்கள் என்றுமாம் –
திரு விண்ணகர் -நண்ணாரை வெல்லும் -அ லவணம்-உப்பில்லா –லாவண்யம் காட்டி -ஒப்பில்லா
இரண்டாம் நாளிலும் ஒன்பதாம் நாளிலும் ஆழி எடுத்து -கூடினவருக்கு தோற்றானே

கோவிந்தா –
கூடுவோம் அல்லோம் என்னும் அபிசந்தி இல்லாத–மாத்ரத்திலே ரஷித்த படி –
கோவிந்தா- –
திர்யக்குகள் உடன் பொருந்தும் நீர்மை-
கூட மாட்டோம் என்னும் அபிசந்தி இல்லாத அளவே அன்றிக்கே –
கூடுவோம் என்னவும் அறியாத அசேதனங்களையும் காத்து அருள்பவனே
திவத்திலும் பசு நிரை உகப்பான்–பரம பதத்தில் காட்டிலும்–
அங்கும் ஹா ஹா டியோ டியோ சொல்லி —ஹாவு ஹாவு நீங்கள் சொல்வது போலே
அர்த்தம் இல்லாத மந்த்ரம் போலே —பசு மேய்க்கிற மந்த்ரம்-

வுன் தன்னைப் பாடிப் –
ஹிரண்யாய நம -என்கை தவிர்ந்து–வகுத்த உன்னுடைய பேரை–
ஸுயம் பிரயோஜனமாகச் சொல்லப் பெறுவதே -என்கை –
கோபீ ஜன வல்லபனான உன்னை பாடுகையே எங்களுக்கு பிரயோஜனம் போரும் -என்னவுமாம் –
சர்வ ஸ்மாத் பரனாய்-சர்வ சுலபனான உன்னை-த்வத் அனுபவ ஜனித ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடி –
கோபர் இசைந்து -சந்நிதியில் பாடி–வகுத்த -உன்னை
உன் தன்னை–
வேறு பிரயோஜனம் இல்லாமல்–வாயினால் பாடி–நா படைத்த பலன் பெற்றோம்–அத்தலை இத்தலையாக வந்தோம்
கோவிந்தன் குழல் -எங்கள் வாசலில் நீ பாடி எங்களை தோற்பிக்க —–ஆவி காத்து இராதே
பறை கொண்டு–பிராப்யத்தில் பிராபகம் ஆற்றாமை யால் –

உன்னைப்பாடி –
உன் தன்னைப் பாடி –
தேவும் தன்னையும் பாடி ஆடத் திருத்தி –
பரத்வம் சௌலப்யம்–ஸ்வாபாவிகம் சௌலப்யம் இயற்க்கை பரத்வம் வந்தேறி –
பக்த பராதீனன் -ஆத்மாநாம்–தேவும் தன்னையும் பாடி–உன் தன்னை -சௌலப்யம்–யாம் பெரும் சம்மானம்
ஆழ்வான் பணிக்கும்–தானான தன்மையை இழவாதே கொல்
ஆஸ்ரித பவ்யத்தை அனுகூலயத்தை மீறாதே -என்று அர்த்தம் —உன்னை ஸ்வ தந்த்ரன் எனபது போய்
சேனையோர் உபய மத்யே மே ரதம் சொல்ல நிறுத்தினான் –

யாம் –
உன்னை பாடுவதே -நிச்சயம் பேறு

யாம் பெரும் சம்மானம் –
தோளில் மாலையை வாங்கி இடுகை -இவருக்கு பெறாப் பேறு -என்கை-
பெருமாள் தோளில் மாலையை வாங்கி இட்டார் –
அநாதி காலம் எல்லாராலும் பட்ட பரிபவம் மறக்கும்படி கொண்டாடுகை –
பிரயணித்வம் நிபந்தனம்–ஸ்வரூப நிபந்தனம்–விதம் விதி–ராக பிராப்தம் இஷ்டம்-
ஸூயம் பிரயோஜனம் விதி பார்க்க வேண்டாமே

நாடு புகழும் பரிசினால் –
ஒருவன் கொடுக்கும்படியே–சிலர் பெறும்படியே—என்று நாட்டார் கொண்டாட வேணும் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை வியாஜ்யமாக வைத்து திருவரங்கம் பெருமாளை நமக்கு தந்த பரிசு –
இது வன்றோ பூர்ணம் –

நன்றாக –
இந்த்ரன் வரக் காட்டின ஹாரத்தை–பெருமாளும் பிராட்டியும் கூட இருந்து–திருவடிக்கு பூட்டினாப் போலே பூண வேணும் –
சிலரை இட்டு ஒப்பிக்கை அன்றிக்கே–தானும் பிராட்டியும் கூட இருந்து ஒப்பித்த தன்னேற்றம் –
ஆபரணத்தைப் பூண்டு அவன் வரவு பார்த்து இராது ஒழிகை -என்றுமாம்
நாடு புகழும் –
அவனும் சத்தை பெற–இவர்களை ஒப்பிக்கை அவனுக்கு ஸ்வரூபம்–
அவனை ஒப்பிக்க அனுமதிக்கை இவன் உடைய ஸ்வரூபம்
யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக–பரத அக்ருரர் மாருதி–வேடன் வேடுவிச்சி –மாலா காரார் -அவன் தம்பி 18 நாடான் பெரு வீடு –

சூடகமே-
பிரதமத்தில் ஸ்பர்சிக்கும் கைக்கிடும் ஆபரணம்–
பரம பிரணயி ஆகையாலே தன் தலையிலே வைத்துக் கொள்ளும் கை –
சூடகமே –
அணி மிகு தாமரைக் கை இவர்கள் ஆசை படுவது போலே-
அடியார் கையை தான் அணிய ஆசை பட்டுகைக்கு இட கடவ ஆபரணம்
வெள்ளி வளைக் கைப் பற்ற -என்கிறபடியே
அநன்யார்ஹைகளாகப் பிடித்த கைகளிலே இறே முதல் ஆபரணம் பூட்டுவது
அடிச்சியோம் தலைமிசை நீ யணியாய் -என்னுமா போலே
அவன் சொல்லி மார்விலும் தலையிலும் வைத்துக் கொள்ளூம் கைக்கு இடும் சூடகம்
தம் மணிம் ஹ்ருதயே க்ருத்வா -இத்யாதி வைத்த -முந்துறக் காணும் இடம் –
முந்துறத் தான் உறவு பண்ணும் இடம்

தோள் வளையே –
அந்த ஸ்பர்சத்தாலே-அணைக்க வேண்டும் தோளுக்கு இடும் ஆபரணம் –

தோடே –
பொற்றோடு பெய்து -என்று-பண்டே தோடு இட்டாலும்-அவன் இட்டாப் போலே இராது இறே –

செவிப் பூவே –
அணைத்த திருக் கையில் உறுத்தும் ஆபரணங்கள் போல் அன்றிக்கே-
அணைத்த அநந்தரம் ஆக்ராணத்துக்கு விஷயமான இடம் –

பாடகமே –
அணைத்தால் தோற்றுப் பிடிக்கும் காலுக்கு இடும் ஆபரணம் –

என்றனைய பல்கலனும்-
பருப்பருத்தன சில சொன்னோம் இத்தனை –நீ அறியும் அவை எல்லாம் என்கை –
பல பலவே யாபரணம் இறே –
அனைய -பல
கிரீட -ஹார –கௌச்துப நூபுராதி அபரிமத திவ்ய பூஷணம்-
பல பலவே ஆபரணம்-ஆபரணங்கள் அழகு கொடுக்கும் அவயவங்கள் இவர்களுக்கு

யாம் அணிவோம் –
வ்யதிரேகத்திலே-மலரிட்டு நாம் முடியோம் -என்கிறவர்கள்–பூண்போம் -என்கிறார்கள்
அவனுக்கு இவர்கள் அனுமதி பண்ணுகையே அமையும் -என்கை-

சூடகமே –
கை வண்ணம் -திரு நெடும் தாண்டகம் -21
இருவரும் அடைவு கெட அனுபவம்
பிடித்த கைக்கும்
அணைத்த தோளுக்கும்
அணைத்த விடத்தே உருத்தும் அதுக்கும்
ஸ்பர்சத்துக்கு தோற்று விழும் துறைக்கு ஆபரணம் –
அம்மி மிதித்த காலத்திலேயே என் காலைப் பிடித்த கை –
ஆதி ஷடேமம அசமாநம ஆசமேவ த்வம சத்திரா பவ -என்று அப்போதே மந்த்ரம் சொன்ன வாய் –
இமாம் சமேத பச்யதே -அப்போதே காலே பிடித்து கரிய குழல் அளவும் பார்த்த கண்
பின்பு சப்தபதீ பர கரணத்தில் நடந்த திருவடிகள் –

ஆடை யுடுப்போம் –
பண்டு உடுத்தார்களோ -என்னில்–அவன் உடுத்து உடாதது உடை அன்று இறே என்று இருப்பது –
அவன் திருப் பரியட்டம் இவர்கள் அறையிலே யாம்படி கூறை–மாற வேணும் -என்றுமாம் –
நோன்பை முடிக்கையாலே நல்ல பரிவட்டம் உடுக்க -என்றுமாம் –
உடுத்துக் களைந்த -என்னுமவர்கள் இறே இவர்கள்
ஸ்வேத கந்த உக்தமாய் அவன் உடுத்து முசிந்த ஆடை -என்றுமாம் –
தூரவாசி புடவை பெற–சந்நிதிதனாக இருக்க கூறை உடுக்க சொல்ல வேணுமோ

அதன் பின்னே பாற்சோறு மூட நெய் பெய்து –
அதுக்கு மேலே பாற்சோறு மூடும்படியாக நெய் பெய்து –
இத்தால்
பகவத் சம்பந்தமுள்ள திருவாய்ப்பாடியிலே-சம்ருத்தி எல்லாம் பிரியமாய் இருக்கும்படி –

முழங்கை வழி வாரக்
நம்பி திரு வழுதி வளநாடு தாசர் -நெய் படாதோ -என்ன-
கிருஷ்ண சன்னதியாலே த்ருப்தைகளாய் இருந்தவர்களுக்கு
சோறு வாயில் தொங்கில் அன்றோ-நெய் வாயில் தொங்குவது -என்று பட்டர் அருளிச் செய்தார் –
உண்ணாமல் நோன்பு நூற்றதால் கண்ணபிரானும் உண்ணாமையால் ஊரில் நெய் பால் அளவற்று கிடந்து
பால் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழியார

வ்யதிரேகத்தில் நெய் உண்ணோம் பால் உண்ணோம் -என்று-சொன்னவர்கள் இன்று ஆசைப் படுகிறார்கள் –
கோவிந்தா -உன் தன்னை பாடி -அவனைப் பற்றி சர்வ லாபமும் உண்டு
நெய் உண்ணோம் விரதம் தவிர்ந்து–அவனும் உபவாசம் -இருந்தானாம்
நெய்யிடை நல்லதோர் சோறு தடவி எடுக்கும் படி
கண்ணனை-அனுபவிக்க-கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து

கூடி இருந்து –
பிரிந்து பட்ட கிலேசம் தீரக்-கூடி தொட்டுக் கொண்டு இருக்கையே பிரயோஜனம் –
புஜிக்கை பிரயோஜனம் அன்று –
குளிர்ந்து –
பிரிந்து கமர் பிளந்த நெஞ்சுகள் குளிரும்படி –நம்பெருமாள் திருநாள் -என்று ஒரு பேரை இட்டு
ஸ்ரீ வைஷ்ணவர்களைத் திரட்டிக் காணுமா போலே-ஒருவருக்கு ஒருவர் போக்கியம் இறே

உபகரணங்கள் நேற்று -ஸம்மானம் இதில் /சாம்யா பத்தி நேற்று /
இன்று -சாயுஜ்யம் கல்யாண குண அனுபவம் ஒன்றே இதுவே அக்கார அடிசில் –
கூடி இருந்து குளிர்வது இதுவே -யாவதாத்மா பாவி -கோவிந்தா மூன்று தடவை சொல்லி நிகமனம் /
இங்கும் கூடித்தான் உள்ளோம் -அபிருத்தக் சித்தம் -ஆனால் ஞானம் மழுங்கி -அவித்யா கர்மம் -வாசனா ருசி-ப்ராக்ருதம் உண்டே
அங்கு -நிரஸ்த ஸூப பாவக லக்ஷணம் -/ அர்ச்சிராதி கதி சிந்தனம் -ஸூஷ்ம சரீரம் கழியா விட்டாலும் -/
அங்கே அப்ராக்ருத திரு மேனி -சுத்த சத்வம் –
ஆபரணங்கள் முதலில் –ஆடை அப்புறம் -அக்ரமம் –
முழங்கை வழி–உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று இருப்பவர்கள் -பிரதான போக்யம் அவனே –
கோவிந்தா -நாமம் சொல்லி ஆடை உடுப்போம் -திரௌபதி -/ நேராக வந்தால் ஆடை பரிப்பானே -நாம வைபவம்

கூடி யிருந்து குளிர்ந்து
பசி தீர உண்ணுவது அன்றிக்கே பிரிந்து பட்ட விசனம் எல்லாம் தீர கூடி களித்து இருக்கை உத்தேச்யம்-
கூடி இருந்து குளிர்ந்து –பல்கலனும் அணிவோம் ஆடை உடுப்போம்-
ஸோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா/

கூடாரை திருவேங்கடம் அனுபவம் -ஸூ சகம்–விரோதி நிரசனமும் கூடி இருந்து குளிர்ந்த படியும் –
அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து -ஒழிவில் காலம் எல்லாம்
உடனே மன்னி இருக்க பாரித்தது வேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே –
குளிர் அருவி வேங்கடம் –

ஆண்மின்கள் வானகம் மங்களா சாசனம்–
ஆதிவாகார் சத்கரிக்க–சதம் மாலா ஹச்தாகா அலங்கரிக்க ஒப்பிக்கும் படி-ப்ரஹ்ம அலங்காரம்
சம்சார தாப ஸ்பர்சம் இன்றிக்கே-நிரதிசய போக்கியம் அனுபவிக்க
அஹம் அன்னம்–அந்நாதா அன்னம் புஜிக்க–அஹம் அன்னம் புஜிக்கிறவனை சாப்பிடுகிறேன் —மூன்றாலும் சொல்லி –
பாலே போல் சீர் -கை கழிய போகிற சிநேகம்–முகத்தாலே சூசிபபிகிறார்கள்-
இதில் சாம்யாபத்தி என்றும் கீழே குண அனுபவம் என்றும் சொல்லாலாம்
கோவிந்தன் தன் குடி அடியார் -தனக்கு முடி உடை வானவர் எதிர் கொள்ள–

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
உன் தன்னை பாடி–தேசாந்தரே தேகாந்தரே இல்லாமல்–இங்கே இந்த தேசத்தில்–
ஸூரி வர்க்கம் திவ்ய மகிஷி பரமபதம்
முமுஷு முக்தன் ஸூசகம்–கூடி இருந்து –ஆடை உடுப்போம் சேர்த்து
கூடி இல்லாத காலத்தில் ஆடை ஆபரணம் பால் சோறு வேண்டாம்–
பிரிந்த போது -சீதை பரியட்டம் ஆபரணங்கள் எங்கேயேனும் பொகட்டு-கிஷ்கிந்தை
ராஷசிகள் நடுவில் இவை எதற்கு–பிராட்டி சேர்த்த பின்பு சர்வாலங்கார பூஷிதை
பரதனை கிட்டிய பின்பே ஸ்நானம் வஸ்த்ரம் அலங்காரம் பெருமாள் போலே கிருஷ்ணனும் -கோபிகள் -சேர்ந்த பின்பு
பரத ஆழ்வான் கூடின பின்பு ஜடை களைந்து ஸ்நானம் மாலை சந்தனம் வஸ்த்ரம் உடுத்து-இவனும் கூடி குளித்து ஒப்பித்து
கூடி இருந்து பல் கலனும் யாம் அணிவோம்- கண்ணனையும் சேர்த்து–கூடி இருந்து ஆடை உடுப்போம்
கூடி இருந்து பால் சோறு நெய் பேர்ந்து–விச்லேஷம் இல்லாத நல கூட்டம்
வாய் பாட -முக்கரணங்களும் அவன் இடம்-குளிர்ந்து -நீர் வண்ணன் மார்பிலே தோய வேண்டும்-

சூடகமே —காப்பே
தோள் வளையே —திரு இலச்சினையே
தோடு —திரு மந்த்ரமே
செவிப்பூவே–த்வயமே
பாடகமே–சரம ஸ்லோகமே
இவை
ஸ்வரூபஞ்ஞனான முமுஷுவான அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதங்களாய் —
பகவத் சம்பந்தத்யோதகங்களாய் -இருப்பன
இதில் தோடு –
மண்டல ஆகாரமாய் -மந்திர சேஷ விவரிணி யான பிரணவ ஆகாரத்துக்கு த்வதோகமாய் -இருக்கையாலே –
திருமந்த்ரத்தை சொல்லுகிறது –
செவிப்பூ
ஸுவயம் போக ரூபம் ஆகையாலே -போக பிரதானமான த்வயத்தை சொல்லுகிறது –
பாடகம்
பத்த ரூபம் ஆகையாலே -உபாயாந்தர நிவ்ருத்தி பரமான-சரம ஸ்லோகத்தை சொல்லுகிறது –
இம் மூன்று ரகஸ்யங்களாலும்-ஞான பக்தி வைராக்யங்களை சொல்லுகிறது –
அது எங்கனே என்னில் –
திருமந்தரம் -ஆத்ம ஸ்வரூப யாதாம்ய ஞான பரம் ஆகையாலும்
த்வயம் -உத்தர கண்டத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு-பூர்வ பாவியான பக்தி பிரதானம் ஆகையாலும்
சரம ஸ்லோஹம் த்யாஜ்ய அம்சத்தில் வைராக்யம் பிரதானம் ஆகையாலும்–
ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –
என்று அனைய–என்று சொல்லப் படுகிற–பல்கலனும்-ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும்
ஓர் ஒன்றே விஷய பேதத்தாலே -அநேகமாக இருக்கும் இறே-
ஆகையால் -பல்கலனும் -என்கிறார்கள் –

யாம் அணிவோம்
உன்னோடு கூடாத அன்று இவை ஒன்றும் வேண்டாத நாம்-இன்று அணியக் கடவோம்
பகவத் சம்பந்தம் இன்றியிலே ஞான பக்தி வைராக்யங்கள் உண்டானாலும் அபாயம் இறே பலிப்பது –
பௌத்தனுக்கும் ஞான பக்தி வைராக்யங்கள் உண்டு இறே –

ஆடை உடுப்போம்–
சேஷத்வ ஞானம் ஆகிற வஸ்த்ரத்தை உடுப்போம்
அதன் பின்னே —அதுக்கு மேலே
பால் சோறு-
கைங்கர்யம் ஆனது
மூட நெய் பெய்து–
மறையும்படி பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு –
கூடி இருந்து குளிர்ந்து –
போக்தாவான உன்னோடு-போக்யரான நாம்-சம்பந்தித்து இருந்து -விஸ்லேஷ வ்யசனம் எல்லாம் தீரப் பெற்றோம் –
இதுவன்றோ நாம் உன் பக்கல் பெரும் சம்மானம்

சூடகமே -கையில் தோள் வளையே -தோடு -செவிப்பூவே பாடகமே–ஐந்து ஆபரணங்கள் பஞ்ச சம்ஸ்காரம்
திரு ஆபரணங்கள் ஆத்மாவை அலங்கரிக்க
தாப -எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டம் -தீயில் -அக்னியில் காட்டிலும் அக்னியில் காட்டிய -பொலிகின்ற செஞ்சுடர் –
கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி குடி ஆட செய்கின்றோம் –
திரு இலச்சினை–தோள் வளையே -திரு இலச்சினை–கங்கணம் கட்டி -ஸூடகம்–
பட்டம் சூடகம் ஆவன -பூட்டும் ஆத்ம பூஷணங்கள் –
சம்சார நிவர்தகமான திரு மந்த்ரம் உபதேசித்த-உத்தாராக ஆசார்யர் –
புண்டர -தோடு செவிப்பூ இரண்டு காதுக்கு குரு பரம்பரை ரகஸ்ய த்ரயம் –

சாம்யாபத்தில் கீழ் பாசுரத்தில்–குண அனுபவம் இங்கே–
ஆண்மின்கள் வானகம்-வலம்புரிகள் கலந்து எங்கும் இசைத்தன
சங்கு -திருச்சின்னம்–விரஜா ஸ்நானம் -கோஷம்–மங்களா சாசனம்
ஆதி வாஹிகர் சத்கரிக்க–ஒப்பிக்க கடவர் அலங்காரம்–
சதம் அஞ்சன ஹஸ்தா ஆபரணம் ஹஸ்தா–வஸ்த்ரம் சந்தனம் வாசனாதி திரவியம்
கூடி இருந்து குளிர்ந்து –

சீர் -ஸ்வாமி ஸ்வரூபம் ரூபம் குண விபூதிகள்
வடுக நம்பி போலவும்–வாழி எதிராசன் -மா முனிகள் போலேயும்–உன் தன்னோடு உற்றோமே ஆவோம்
கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்–உன் தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்

பெரியாழ்வார் தம் பல்லாண்டில் விழைந்த பரிசுகள்

“நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும்தந்து என்னை வெள்ளுயிராக்க வல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே !”

1-26 வரையிலான பாசுரங்கள் மூலமாக, கோபியர்கள் கண்ணனைப் பற்றியே சிந்தித்தும் (ஸாலோக்யம் )
கண்ணனை நெருங்கியும் (ஸாமீப்யம் ),கண்ணனை தரிஸித்தும் (ஸாரூப்யம் ) ப்ரபத்தி என்கிற சரணாகதியைச் செய்தனர்.
இந்தப் பாசுரத்தில் இவை மூன்றையும் தாண்டி, தாம் கண்ணனோடே ஒன்றாய்க் கூடிக் கலந்து மகிழ வேண்டும் என்ற
விண்ணப்பத்தை வைக்கின்றனர்.(ஸாயுஜ்யம் -கூடிக் குளிர்ந்தே ).
மேலும், இப்பாசுரத்தில் வீடுபேறு பெற்ற பின் அடியார்கள் வைகுண்டத்தில் பெறுகின்ற இன்பங்களைப் பரிசுகள்
என்ற குறிப்பால் ஆண்டாள் உணர்த்துகிறாள்.
அதில் தலையாயது, இறைவனுக்குப் புரியும் தொண்டு (கைங்கர்யம்) என்று முடிக்கிறாள்.

கோ என்பதற்கு ஸ்வர்கம் , மோக்ஷம் என்று பொருள் கொண்டு ‘விந்தயத்தி’ அதைத் தருபவன் என்று பொருள் கொண்டால்-
கோவிந்தன்- நல்லவர் நட்பு,வீடுபேறு அருளும் இறைவன் என்று பொருளாகும்.

கோ என்பதற்கு அரிய அஸ்திரங்கள் என்று பொருள் கொண்டால், விந்ததி – அதைப் பெற்றவன் என்று கொண்டால்,
இராமாவதாரத்தில் விஸ்வாமித்ர முனிவரிடமிருந்து அரிய ஆயுதங்களைப் பெற்றிருப்பவன் என்று பொருள்.

கோ என்பதற்கு பசுக்கள் என்று பொருள் கொண்டால், விந்ததி- பசுக்களாகிய சீவாத்மாக்களை அறிந்தவன், காப்பவன் என்று பொருள் படும்.

கோ என்பதற்கு வேதம் என்று பொருள் கொண்டால், விந்தயதே – அவற்றின் மூலமே உணரப்படக்கூடியவன் என்று
பொருள் கொண்டு, வேதத்தின் சாரமாக, பொருளாக இருப்பவன், இறைவன் என்று பொருள் படும்.

கோபி- கோபிஹி-கோபியர்கள் என்பதே, நான்மறைகள், அதன் அங்கங்கள் என்ற பொருளில் தான் வரும். அவற்றைக் காப்பவன், கோவிந்தன்.

கோ என்பதை முக்கண் பார்வை எனப் பொருள் கொண்டால், விந்ததி- என்பது எல்லாவிதத்திலும் பார்வையுடையவன்,
நடந்தது, நடப்பது,நடக்கப்போவது அனைத்தையும் அறிந்தவன் என்று பொருள் படும்.

கோ என்பதற்கு என்று ஜ்வாலை, தீப்பிழம்பு, சுடர், ஒளி என்று பொருள் கொண்டால் விந்ததி – ஸூர்யமண்டல மத்யவர்த்தி –
ஸூரியனுடைய உட்கருவில், நடுவில் இருக்கின்ற ஒளிபொருந்திய தேவன், இறைவன் என்று பொருள் படும்.

கோ- என்பதற்கு ஆதார நீர் என்று பொருள் கொண்டால், விந்ததி- அவற்றில் தோன்றிய, அவற்றைத் தாங்கிய
முதலாவதாரங்களான மத்ஸ்ய,கூர்ம (மீன், ஆமை) அவதாரங்களைக் குறிக்கும்.

கோ – என்பதற்கு பூமி என்று பொருள் கொண்டால்- விந்ததி-வராஹனாய் பூமிதேவியைக் காத்ததையும்,
திரிவிக்கிரமனாய் அனைத்துலகங்களையும் அலைந்ததையும்,பரசுராமனாய் பூமியெங்கும் காலால் நடந்து திரிந்ததையும் குறிக்கும்.

கோ என்பதை மீண்டும் வேதம் என்று பொருள் கொண்டால், விந்ததி- அவற்றையெல்லாம் நன்குணர்ந்த, ஹயக்ரீவ அம்சத்தைக் குறிக்கும்.

கோ என்பதை- இந்திரியங்கள் என்று பொருள் கொண்டால், விந்ததி- அவற்றையெல்லாம் நல்வழியில் செலுத்துபவன் என்று பொருள் படும்.

கோவிந்த நாமத்தைப் போலவே கோதா நாமத்திற்கு பொருளுண்டு. கோ என்றால் நல்ல உயர்ந்த கருத்துகள் என்று பொருள் கொண்டால், ததாயதே- தா- என்றால் தருவது என்று கொண்டால், கோதா- அத்தகைய உயர்ந்த கருத்துக்களைத் தந்தவள் என்று பொருள். திருப்பாவை முழுதுமே மிகவுயர்ந்த வேத ஸாரத்தை உள்ளடக்கியது தானே ?

மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும் இவையும் தன்னோடு கூடுவது இல்லை யான் –
நூலின் நேர் இடையார் திறத்து நிற்கும் ஞாலம் தன்னொடும் கூடுவது இல்லை யான் –
மாறனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும் பாரினாரோடும் கூடுவது இல்லை யான் –
உண்டியே உடையே உகந்தொடும் இம் மண்டலம் தன்னொடும் கூடுவது இல்லை யான் –
தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய் நீதியாரோடும் கூடுவது இல்லை யான் –
கூடத் தகாதவர்களை ஸ்ரீ குலசேகர ஆழ்வார்

கூடத் தகுந்தவர்களை –
தொல் நெறிக் கண் நின்ற தொண்டர் –
நினைந்து உருகி யேத்துமவர்கள்
அணி யரங்கத்து திரு முற்றத்து அடியவர்கள்
மால் கொள் சிந்தையராய் –அழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் –
ஒருகாலும் பிரிகிலேன -என்று இருக்குமவர்கள்
பழுதே பல காலும் போயின -அஞ்சி அழுது இருக்குமவர்கள்
த்ருணீ க்ருத விரிஞ்சாதி நிரந்குச விபூதிகர்கள்
ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலிகள்
வர வர முனி ப்ருத்யைரச்து மே நித்ய யோக -நித்ய குதூகுல சாலிகள்
மணவாள மா முனிவன் பொன்னடியாம் செங்கமலப் போதுகளை உன்னிச் சிரத்தாலே தீண்டுமவர்கள்
நித்ய அனுபவ யோக்யர்கள்
இன்னும் அங்கே நட நம்பி -புள்ளுவம் பேசாதே போகு நம்பி
கூடோம் என்று ஊடினவர்கள்
அக் கொடிய நிலை எல்லாம் தொலைந்து எப்போதும் கூடுவோம் என்று கூடி இருந்து குளிர்வோம்
கூடி இருந்து கண் வளர்ந்து போது போக்காமல் குளிர்ந்து-

நோற்றால் பெறக் கடவ பேறு சொல்லுகிறது –
இத்தால் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -என்று அலங்காராதிகளும் பகவத் பிரசாத அயத்தம் என்கிறது –
தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -என்கிறபடியே
கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் என்று அறுதியிட்டு
பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் உத்தேசியமான புருஷார்த்த ஸித்திக்கும் அனுகுண
அலங்காரம் அவனே பண்ண வேணும் என்கிறது –

கூடி இருப்பது -வஸ்து சித்தம் -அறிந்து கொள்வதே கர்தவ்யம் —
ஞானம் இல்லாதவர்களை வெல்பவன் -சாஸ்திரம் -தானே அவதாரம் –
ஆழ்வாராதிகள் ஆச்சார்யாதிகள் மூலம் இந்த சித்த ஞானம் இல்லாதாருக்கு ஞானம் அளிக்கிறான் –
கூடாரை வெல்லும் ஆரம்பம் -நடுவில் அவன் கர்தவ்யம் –
கூடி இருந்து குளிர்ந்து நிகமனம்

ஞானம் மறந்தவர் -நிலை வேறே -சூர்ப்பணகை விபீஷணன் இராவணன் நிலை வேறே -ஆகவே சீர் -வேண்டுமே –
தாரதம்யம் -ஆர்ஜவம் –
மனஸ் ஒன்றே ப்ரஹ்மம் பார்க்கும் உபகரணம் -சுத்த மனஸ் -உணர்வில் உன்னை வைக்க நீயே அருள வேண்டும் –
த்ருஷ்ட சுத்தி -அத்ருஷ்ட சுத்தி -இரண்டுமே உண்டே –
கூடாரை அழிப்பவன் இல்லை வெல்லுபவன் –கிருஷிகன் -பல பாடு பட்டு இந்த ஞானம் உண்டாக்கி –
சதுர்வித பஜந்தா -பீடிகை பெரிதாக சொல்லி-பக்தனை கொண்டாடி மன்மனா பவா- -9-அத்யாயம் இறுதி ஸ்லோகம் பக்தி பற்றி
நித்ய யுக்த -என்றும் கூடி இருக்க ஆசை கொண்டவன் –மநோ ரதம் இருப்பவன் –
தைத்ரியம் -நெருங்க நெருங்க அபயம் -விலக விலக பயம் –

நமக்குள் கூடி குளிர்ந்து -ஆச்சார்யர் உடன் கூடி -அவனே ஆசைப்பட்டு கூடி
அறியாமல் கூடியவர்கள் -முதல் ஆழ்வார்கள் -அவன் ஏற்பாடு –
புலவர் நெருக்கு உகந்த பெருமாள் –வையம் -அன்பே -திரு –
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் -கடல் கிடக்கும் மாயன் -யாராவது ஒருவனை பிடிக்க –
கூற்றமும் சாரா –வகை அறிந்தேன் –
மெய் அடியார் தம் ஈட்டம் கண்டிட கூடுமேல் -அடியார் குழாங்கள்
கூடினால் குளிரலாமா -இருந்தால் குளிரலாமா -கூடினால் -இருந்தால் குளிரும் -யோகம் க்ஷேமம் -இரண்டும் வேண்டும்
ஆகவே கூடி குளிர்ந்து இல்லை -கூடி இருந்து குளிர்ந்து
யானே இசைந்து என்று கொலோ இருக்கும் நாளே
அபகத -அது மே நித்ய யோகம் -மா முனிகள் அடியார்கள்
அ உ ம கூடி பிரணவம் -/ பாதங்கள் கூடி திருமந்திரம் /சேஷத்வம் பராதந்தர்ய கைங்கர்யம் அறிந்து குளிர்ந்து
ரஹஸ்ய த்ரயம் கூடி -மந்த்ர விதி அனுஷ்டானம் -முக்கூடல் -அக்ஷர பத ரஹஸ்ய த்ரயம்

குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபன் -கால திரை கடந்து சேர ஆசை
ஆபத்து -ஏற்படுத்தி கூடி இருக்கும் வாய்ப்பை உண்டாக்கினான் -அத்தை நினைக்காமல் கூட ஆசை
பெருமாள் கூட ஆசை -என்று பரதன்-மகாத்மா- சத்ருக்கனன் வீரன் உன்னுடன் -உடன் லஷ்மணன் உடன்
ஒருவன் இடம் கூடா விட்டாலும் சத்தை இல்லையே
முதல் தனி வித்தேயோ -முழு மூ உலகுக்கு ஆதிக்கு எல்லாம் —
முதல் தனி உன்னை என்று வந்து கூடுவேனோ -1100-பாசுரம்
கூடி -இருந்து -குளிர பிரார்த்தனை அங்கும் –
ஆச்சார்யன் செய்த உபகாரம் -அனுபவித்து நமக்கும் எழுதி வைத்து –
நெஞ்சு தன்னில் தூயதாக தோன்றுமேல் தேசாந்திரம் இருக்க மாட்டோமே
தெய்வ வாரி ஆண்டான் -ஆளவந்தார் -விஸ்லேஷத்தால் -கிட்டே வர திருமேனி உஜ்ஜ்வலம் -நம் தெய்வம் தொழுதோம் –
பரஸ்பர நீச பாவத்துடன் கூடி -பிரியாமல் இருந்து குளிர்வோம் –

——————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த அர்த்த பஞ்சகம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

January 23, 2018

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவா ஜீவாதவே நம-

வாழி உலகாசிரியன் வாழி யவன் மன்னு குலம்
வாழி முடும்பை என்னும் மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேரின்ப மல்கு மிகு நல்லார்
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு –

——————————————————

ஸ்ரீ யபதியாய்-அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதா நத்வாதி களாய்-ஸ்வ இதர சமஸ்து வஸ்து விலஷணனாய் –
அப்ராக்ருதமாய் -சுத்த சத்வ மயமாய்-ஸ்வ அசாதாரணமாய் -புஷப காச ஸூ குமாரமுமாய் -புண்ய கந்த வாஸித
அநந்தாதிகந்த ராளமாய் -சர்வ அபாஸ்ரயமாய் இருந்துள்ள திவ்ய மங்கள விக்ரஹ உபேதனாய்
நூபுராதி க்ரீடாந்தமான திவ்ய பூஷித பூஷனாய் -சங்க சக்ராதி திவ்யாயுதனாய் நிரதிசய ஆனந்த மயனாய்
தேவ கணம் அபிஜன வாக் மனச அபரிச்சேதய பரம வ்யோமம் ஆகிய ஸ்ரீ வைகுண்டத்தில்
ஆனந்த மயமான திவ்ய ஆஸ்த்தான மண்டபத்திலே பெரிய பிராட்டியாரும் நாய்ச்சிமார் உடன் கோப்புடைய சீரிய சிம்ஹாசனத்திலே எழுந்து அருளி
செங்கோல் செய்ய வீற்று இருந்து அருளி -நித்ய நிர்மல ஞானாதி குணகராய்-ஸ்வ சந்த அனுவ்ருத்தி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதராய்
-அஸ்த்தானே பய சங்கிகள் ஆகிற அயர்வரும் அமரர்களாலே அநவரதம் பரிச்சர்யமான சரண நளினமாய்க் கொண்டு அங்கு செல்லா நிற்க
ஸ்வ சங்கல்ப அயத்த ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தகமான சகல சேதன அசேதனங்களை தனக்கு சேஷமாய் தான்
ஸூத்த அஸூத்த இவ்விபூதி த்வய ஏக சேஷியாய் விபுத்வாத் தேச பரிச்சேதய ரஹிதனாய் -நித்யத்வாத் -கால பரிச்சேதய ரஹிதனாய் –
ஸ்வ இதர ஸமஸ்தங்களும் தனக்கு பிரகாரங்களாய்த் தான் பிரகாரியாய் -தனக்கு பிரகாராந்தம் இல்லாமையால் வஸ்து பரிச்சேதய ரஹிதனாய் –
தத்காதா தோஷ அச்மருஷ்டனாய்-ஞானானந்த ரூபனாய் -சத்யத்வாதி ஞானத்வாதி ஸ்வரூப நிரூபக தர்ம யுக்தனாய்
ஞான பல ஐஸ்வர்யாதி வாத்சல்ய ஸ்வாமித்வ ஸுசீல்யாதி அநந்த கல்யாண குண கண சமூக மஹோததியாய்
நாராயணாதி திவ்ய நாம சஹஸ்ரங்களை ஸ்வ வாசகங்களாக யுடைய ஸமஸ்த வாச்யனாய் ஸ்ருதி சிரஸி விதீப்த மானனாய்
ஆக இவ்வனைவற்றாலும் சேதன விசஜாதியானாய் இருந்து வைத்தும் ரக்ஷகாந்தரம் ஒன்றியில் தானே சர்வ பிரகார ரக்ஷகனாய் இருப்பதையிட்டு
ஆஸ்ரித வாத்சல்யத்தாலே -மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்கிற திரு முக பாசுரத்தின் படியே
ஜென்ம பரம்பரைகளிலே தோள் மாறிச் சுற்றிச் சுழன்று -சம்சார ஆற்றில் ஆழங்கால் இட்டு
நித்ய நிமக்நராய் அநர்த்தப்படும் தேவ மனுஷ்யாதிகள் சஜாதீயனாய் வந்து தான் பரம கிருபாதிசயத்தாலே அவர்கள்
உதர போஷண கிங்கரராய் -சம்சரிக்கும் அவ்வவோ இடங்களிலே திருவவதாரங்களைப் பண்ணும் ஸ்வபாவனாய்
அவ்வவ வனந்த வவதாரங்களிலும் உதவப் பெறாத கர்ப்ப நிர்பாக்யருக்கும்

சம்சாரியான சேதனனுக்கு தத்வ ஜ்ஞானம் பிறந்து உஜ்ஜீவிக்கும் போது அர்த்த பஞ்சக ஜ்ஞானம் யுண்டாக வேணும் –

சம்சாரியான சேதனனுக்கு-அநாதி மாயயா ஸூப்த-என்கிறபடியே -அனாதையான சம்சார சமுத்திரத்தில் உழன்று இருக்கும் சேதனனுக்கு என்னுதல் –
சம்சாரம் தன்னையே நிரூபகமாம் படி இருக்கிற சேதனனுக்கு என்னுதல் –
( ஞானாத் மோக்ஷ –அஞ்ஞாத சம்சாரம் -/ உஜ்ஜீவனம் -உத்க்ருஷ்ட ஜீவனம் – )
தத்வ ஜ்ஞானம் பிறந்து-
இவர் தாமே -தத்வ ஞானம் ஆவது சர்வ ஸ்மாத் பரனான நாராயணனுக்கு -சர்வ பிரகார பரதந்த்ரரான
சர்வாத்மாக்களினுடையவும் ஸ்வரூபத்துக்கு அனுரூப புருஷார்த்தமான கைங்கர்யத்தை அனாதையாக பிரதிபந்தித்திக்குக் கொண்டு
போருகிற கர்ம சம்பந்தத்தை நிவர்த்திப்பிக்கும் உபாயம் -தத் சரணாரவிந்த சரணாகதி -என்கிற ஞான விசேஷம்
என்று தத்வ சேகரத்தில் சாதித்து அருளின பிரகாரம் –
( தமேவ வித்வான் அம்ருத இஹ பவதி -ஈஸ்வரனை அறியும் பொழுது சேதன அசேதன விசிஷ்டமாகவே அறிய வேண்டுமே )
ஸ்வரூப யாதாம்ய விஷயத்தில் ஞானம் பிறந்து -உஜ்ஜீவிக்கும் போது -உய்யும் போதைக்கு என்றபடி -அர்த்த பஞ்சக ஜ்ஞானம் யுண்டாக வேணும் –
சாஸ்த்ர ஞானம் சேதனனுக்கே -புபுஷுக்களையும் முக்தர்களையும் நித்யர்களையும் வியாவர்த்தித்து –
சம்சாரியான சேதனன் உஜ்ஜீவிக்க தத்வ ஞானம் வேண்டும் என்கிறது –

———————————————-

அர்த்த பஞ்சக ஜ்ஞானம் ஆவது –1- ஸ்வ ஸ்வரூப /2- பர ஸ்வரூப /3- புருஷார்த்த ஸ்வரூப /
4- உபாய ஸ்வரூப /5- விரோதி ஸ்வரூபங்களை -உள்ளபடி அறிக்கை –
இவற்றில் ஒரொரு விஷயம் தான் அஞ்சு படிப் பட்டு இருக்கும் –ஸ்வரூபம் என்றது அசாதாரண ஆகாரம் என்றவாறு

1- ஸ்வ ஸ்வரூபம் -என்கிறது -ஆத்ம ஸ்வரூபத்தை –ஆத்ம ஸ்வரூபம் தான் நித்யர் -முக்தர் -பத்தர் -கேவலர் – -முமுஷூக்கள் -என்று ஐந்து
2-பர ஸ்வரூபம் -என்கிறது ஈஸ்வர ஸ்வரூபத்தை -ஈஸ்வர ஸ்வரூபம் தான் -பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதாரம் என்று ஐந்து –
3- புருஷார்த்த ஸ்வரூபம் -என்கிறது புருஷனாலே அர்த்திக்கிப்படுமது புருஷார்த்தம் –
அந்தப் புருஷார்த்தம் தான் -தர்ம -அர்த்த -காம -ஆத்மானுபவம் -பகவத் அனுபவம் -என்று ஐந்து
4- உபாய ஸ்வரூபம் என்கிறது கர்ம ஜ்ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்யா அபிமானம் என்று ஐந்து –
5-விரோதி ஸ்வரூபம் என்கிறது -ஸ்வரூப விரோதி பரதவ விரோதி -புருஷார்த்த விரோதி -உபாய விரோதி -ப்ராப்தி விரோதி என்று ஐந்து –

ஞானாநந்தங்கள் தடஸ்தம் என்னும் படி -தாஸ்யம் இ றே அந்தரங்க நிரூபனம் ஆத்மாவுக்கு
-பாரதந்த்ரத்தோடு கூடின சேஷத்வமே நிலை நின்ற லக்ஷணம் -அடியேன் உள்ளான் –
புருஷனாலே சேதனனாலே அர்த்திக்கப்படுமது புருஷார்த்தம் –

—————————————-

1-இவற்றில் நித்யராவார் -ஒரு நாளும் சம்சார சம்பந்தம் ஆகிற அவத்யம் இன்றிக்கே நிரவத்யராய் -பகவத் அனுபவ -அனுகூல்யைக போகராய்
வானிளவரசு வைகுந்தக் குட்டன் வாசுதேவன் -பெரியாழ்வார் -3-6-3-என்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு
விண்ணாட்டவர் மூதுவர் -திரு விருத்தம் -2-என்கிறபடி பட்டம் கட்டுகைக்கு உரியராம்படி மூப்பரான மந்த்ரி களாய்
ஈஸ்வர நியோகாத் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களைப் பண்ணவும் சக்தராய்
பர வ்யூஹாதி சர்வ அவச்தைகளிலும் தொடர்ந்து அடிமை செய்யக் கடவராய்
கோயில் கொண்டான் தன் திருக் கடித்தானத்தை கோயில் கொண்டான் அதனோடு என்நெஞ்சகம்
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே   -திருவாய் -8-6-5-என்றபடி
கோயில் கொள் தெய்வங்களான -சேனை முதலியார் தொடக்கமான அமரர்கள்-கோயில் கொள்ளல் குடி கொள்ளல் என்றபடி –

சதா பஸ்யந்தி ஸூரய –ஏகாந்திக சதா ப்ரஹ்ம த்யாயின
வைகுண்ட குட்டன் -ஆஸ்ரித பரதந்த்ரன் -வைகுண்ட கூடஸ்தன் / வா ஸூ தேவாய தீமஹி /
வான் இள வைரசு -ஷோடச வர்ஷோமே–யுவா குமாரா
சம்பூர்ண ஷட் குணஸ் தேஷூ வாஸூ தேவோ ஜகத் பதி
தொடர்ந்து -யேன யேன ததா கச்சதி தேன தேன ஸஹ கச்சதி –

——————————————
2-முக்தராவார் -பகவத் பிரசாதத்தாலே பிரகிருதி சம்பந்தத்தால் வந்த க்லேசங்கள் எல்லாம் கழிந்து
பகவத் ஸ்வரூப ரூப குண விபவங்களை அனுபவித்து அவ் வநுபவ ஜனித ப்ரீதி உள்ளடங்காமையாலே வாயாரப் புகழ்ந்து
மீட்சியின்றி வைகுண்ட மா நகரத்திலே -திருவாய் -4-10-11-களித்து ஆனந்திக்கிற முனிவர்கள் –

விகுண்டி தாய் வயிற்றில் பிறக்கையாலே வைகுண்டன் -பகவத் ப்ரஸாதத்தாலே -க்ருபா கர்ப்ப ஜாயதே -பிராகிருத சம்பந்த கிலேச அமலங்கள் எல்லாம் தீர பெற்று –
சரீர சம்பந்தத்தால் வந்த ஆத்மாத்தமிகாதி துக்கங்களும் அஞ்ஞானதி அமல ரூபா தர்மங்களும் நீங்கப் பெற்று -மனனகம் மலம் அற -என்றபடி
அவனுடைய ஸ்வரூப ரூப விபவங்களை அனுபவித்து -அனுபவ ஜெனித ப்ரீதி காரியமாக காவு காவு அஹம் அன்னம் என்று வாயார புகழ்ந்து –

————————————————-

3-பத்தராவார் -பாஞ்ச பௌதிகமாய்-அநித்யமாய்-ஸூக துக்க அநுபவ பரிகரமாய் -ஆத்ம விச்லேஷத்தில் தர்சன ஸ்பர்சன யோக்யம் அல்லாதபடி
அஸூத்தாஸ்பதமாய்- அஜ்ஞான அந்யதா ஜ்ஞான விபரீத ஜ்ஞான ஜநகமான ஸ்வ தேஹமே ஆத்மாவாகவும் -சப்தாதி விஷய அநுபவ ஜனிதமான
ஸ்வ தேக போஷணமே புருஷார்த்தமாகவும்-சப்தாதி விஷய அனுபவத்துக்கு உறுப்பாக வர்ணாஸ்ரம தர்மங்களை அழிய மாறியும்
-அசேவ்ய சேவை பண்ணியும்  -பூத ஹிம்சை பண்ணியும் -பர தார பர த்ரவ்ய அபஹாரம் பண்ணியும் -சம்சார வர்த்தகராய்-பகவத் விமுகரான சேதனர்-

ஞான அநுதயம் -என்கிறது தேஹாத்ம அபிமானத்தை
அந்யதா ஞானம் -யோக்யதா சந்தமானம் -ஸ்வ சேஷத்வ -அந்நிய சேஷத்வ ரூபமான அந்நிய சேஷத்வத்தை
விபரீத ஞானம் -ஸ்வ ஸ்வா தந்தர்ய ஞானத்தை
அன்னம் போஜ்யம் மனுஷ்யானாம்

—————————————-

4-கேவலன் ஆவான் -தனி இடத்திலே மிகவும் ஷூதப்பிப்பாசைகளாலே நலிவு பட்டவன் பாஹ்ய அபாஹ்ய விபாகம் பண்ண மாட்டாதே
தன்னுடம்பைத் தானே ஜீவித்து ப்ரசன்னமாம் போலெ சம்சார தாபா அக்னியாலே தப்தனானவன் சம்சார துக்க நிவ்ருத்திக்கு உறுப்பாக
சாஸ்த்ர ஜன்ய ஞானத்தால் ப்ரக்ருதி ஆத்ம விவேகம் பண்ணி -பிரகிருதி துக்க ஆஸ்ரயமாய் ஹேயா பதார்த்த சமூகமாய் இருக்கிற ஆகாயத்தையும்
ஆத்மா ப்ரக்ருதே பரனாய் பஞ்ச விம்சகனாய் ஸ்வயம் பிரகாசனாய் ஸ்வதஸ் ஸூ கியாய் -நித்யனாய் அப்ராக்ருதனாய் இருக்கிற ஆகாயத்தையும்
அனுசந்தித்து முன்பு தான் பட்ட துக்கத்தின் உபதானத்தாலே இவ் உபாசனத்திலே கால் தாழ்ந்து உணர் முழு நலமான பரமாத்மா விவேகம் பண்ண மாட்டாதே
அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு அவ்வாத்மா ப்ராப்திக்கு சாதனமான ஞான யோகத்தில் நிஷ்டனாய் யோக பலமான அவ்வாத்மா அனுபவ மாத்ரத்தையே
புருஷாகாரமாக அனுபவித்து பின்பு சம்சார சம்பந்தமும் பகவத் பிராப்தியும் அற்று யவாதாத்மபாவி அசரீரியாககே கொண்டு திரிவான் ஒருவன்

——————————–

5-மோக்ஷத்திலே இச்சை யுடையவர்களுக்கு முமுஷுக்கள் என்று பேராகக் கடவது
அவர்கள் தான் முமுஷுக்களாய் உபாஸகராயும் இருப்பாரும்
முமுஷுக்களாயும் ப்ரபன்னராய் இருப்பாருமாய் இரண்டு படி பட்டு இருக்கும்

————————————-

ஈஸ்வர விஷயத்தில் பரத்வமாவது -பரமபதத்தில் அ வாக்ய அநா தர -என்று எழுந்து அருளி இருக்கிற ஆதி யம் சோதி உருவான பர வாஸூ தேவர்

அகால கால்யமான நலமந்தம் இல்லாதோர் நாட்டில் -தத் விஷ்ணோ பரமம் பதம் -/ திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட்செய்யும் தேசம் /

வ்யூஹமாவது ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹார கர்த்தாக்களான சங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்ரர்கள்

விபவமாவது ராம கிருஷ்ணாதி அவதாரங்கள்

அந்தர் யாமித்வம் இரண்டு படியாய் இருக்கும் –
அதாவது அடியேன் உள்ளான் -என்றும் -எனதாவி -என்றும் -என்னுயிர் -என்றும் போதில் கமல வென்னெஞ்சம் புகுந்து –
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து என்றும் -புந்தியில் புகுந்து தன்பால் ஆதரம் பெறுக வைத்த அழகன் என்றும்
உள்ளூர் உள்ளத்தில் எல்லாம் உடன் இருந்து அறிந்து என்றும் சொல்லுகிறபடி
ஸ்ரீ லஷ்மீ ஸஹிதனாய் வி லேசான விக்ரஹ யுக்தனாய்க் கொண்டு ஹிருதயக் கமலத்து உள்ளும் சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்
சதா அவலோகநம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருப்பு

அந்தரபாவமும் -விக்ரஹ விசிஷ்டமாயும் உண்டே பூதக ஜலம் -கடக்லி / பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி /இரா மதமூட்டுவாரைப் போலே
மருந்தே போக மகிழ்ச்சிக்கு -நித்யருக்கும் / தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகி தித்தித்தது என் ஊனில் உயிரினில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேன்

அர்ச்சாரமாவது -தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே தமர் உகந்தது எப்பேர் அப்பேர் -என்கிறபடி தனக்கு என ஒரு உருவமும் ஒரு பெயரும் இன்றிக்கே
ஆஸ்ரிதர் உகந்த வடிவே வடிவாகவும் அவர்கள் இட்ட பெயரே பெயராகவும் சர்வஞ்ஞனாய் இருக்கச் செய்தே அஸக்தனைப் போலேயும்-சா பேஷனைப் போலே யும்
ரக்ஷகனாய் இருக்கச் செய்தே ரஷ்யம் போலேயும் -ஸ்வ ஸ்வாமி பாவத்தை மாறடிக் கொண்டு கண்ணுக்கு விஷயமாம் படி
சர்வ சுலபனாய்க் கொண்டு கோயில்களிமும் கிருகங்களிலும் தேச கால அவதி இன்றிக்கே எழுந்து அருளி இருக்கும் நிலை –
இருட்டறையில் விளக்கு -தேங்கின மடுக்கள் /ராஜ மகிஷி பார்த்தாவின் பூம் படுக்கையை விட பிரஜை யுடைய தொட்டில் கால் கிடை யோக்யமாகக் கொண்டு
கோயில் திருமலை பெருமாள் கோயில் தொடக்கமான அர்ச்சா ஸ்தலங்கள் -ஸ்வயம் வியக்தம் -தைவம் சைத்யம் -மானுஷம் -நான்கு வகைகள் உண்டே
ஸூ க்ரீவம் நாதம் இச்சாமி -பாண்டவ மாமா பிராணாசி -ஞானீத் வாத்மைவ – போலே ஆசைப்படுமவன்
குடில் கட்டிக்க கொண்டு கிருஷிகன் கிடைக்குமா போலே -குடீ குஞ்சேஷூ-கனிவாய் வீட்டின்பம் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளும் அர்ச்சாவதாரம் தானே

—————————

புருஷார்த்தங்களில் தர்மமாவது -பிராணி ரக்ஷணத்துக்கு உறுப்பாகப் பண்ணும் வ்ருத்தி விசேஷங்கள்

தாரா புத்ராதிகளுக்கு அன்ன வஸ்த்ராதிகளை இட்டு ரஷிக்க உடலாக

அர்த்தமாவது வர்ணாஸ்ரம அனுரூபமாக தான தானியங்களை ஸங்க்ரஹித்து தேவதா விஷயங்களிலும் பைத்ருகமான கர்மங்களிலும்
பிராணிகள் விஷயமாகவும் உத்க்ருஷ்ட தேச கால பாத்திரங்களை அறிந்து தர்ம புத்தியா வியவயிக்கை -செலவிடுகை

அயோத்யா மதுரா மாயா காஞ்சீ அவந்திகா காசீ துவாரகா /அம்மாவாசை வசந்த காலம் உத்தராயணம் கிரஹணம் / தர்ம புத்தியா -பல த்யாகத்துடன் என்றவாறு

காமமாவது ஐஹிக லௌகீகமாயும் பார லௌகீகமாயும் த்வி விதமாய் இருக்கும்
இஹ லோகத்தில் காமம் ஆவது பித்ரு மாத்ரு ரத்ன தான தான்ய வஸ்து அன்ன பான புத்ர மித்ர களத்ர பசு க்ருஹ க்ஷேத்ர சந்தன குஸூம தாம்பூலத்தி
பதார்த்தங்களில் சப் தாதி விஷய அனுபவத்தால் வந்த ஸூக துக்க விசேஷங்கள்

பார லௌகிக காமமாவது -இதில் வி லக்ஷணமாய் தேஜோ ரூபமான ஸ்வர்க்காதி லோகங்களில் ஆசை சென்று பசி தாக மோக சோக ஜர மரணாதிகள் அன்றிக்கே
ஆர்ஜித்த புண்யத்துக்கு ஈடாக அம்ருத பணம் பண்ணி அப்சரஸ் ஸூ க்களுடன் சப் தாதி விஷய அனுபவம் பண்ணுகை –

ஆத்ம அனுபவம் ஆவது துக்க நிவ்ருத்தி மாத்ரமான கேவல ஆத்ம அனுபவ மாத்ரத்தையும் மோக்ஷம் என்று சொல்லுவார்கள்

இனி பகவத் அனுபவ ரூபமான பரம புருஷார்த்த லேசான மோக்ஷமாவது
பிராரப்த கர்ம சேஷமாய் அவசியம் அனுபாவ்யமான புண்ய பாபங்கள் நசித்து
அஸ்தி ஜாயதே பரிணமதே விவர்த்ததே அபஷீயதே விகசியதே என்கிறபடியே ஷட்பாவ விகாராஸ்பதமாய்
தாபத்ரய ஆஸ்ரயமாய் பகவத் ஸ்வரூபத்தை மறைப்பித்து விபரீத ஞானத்தை ஜெநிப்பிக்கக் காட்டுவதாய் சம்சார வர்த்தகமான
ஸூ தூல சரீரத்தை உபேக்ஷையோடே பொகட்டு ஸூஷூம்நா நாடியாலே சிரக் கபாலத்தை பேதித்துப் புறப்பட்டு ஸூஷ்ம சரீரத்தோடு வானேற வழி பெற்று
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நந்நடுவுள் அன்னதோர் இல்லியினூடு போய் ஸூஷ்ம சரீரத்தையும் வாசனா ரேணுவையும்
விராஜா ஸ் நாணத்தால் கழித்து சகல தாபங்களும் ஆறும்படி அமானவ கர ஸ்பர்சமும் பெற்று ஸூத்த சத்வாத்மகமாய் பஞ்ச உபநிஷண் மயமாய்
ஞானானந்த ஜனகமாய் பகவத் ஏக பரிகாரமாய் ஒளிக் கொண்ட சோதி யாய் இருக்கிற அப்ராக்ருத விக்ரஹத்தைப் பெற்று முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
நிரதிசய ஆனந்தமயமான திரு மா மணி மண்டபத்தை பிறப்பித்து
ஸ்ரீ லஷ்மீ ஸஹிதனாய் பூமி நீளா நாயகனாய் விலக்ஷனா விக்ரஹ யுக்தனாய் குழுமித் தேவர் குழாங்கள் காய் தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே
எழுவதோர் உருவான ஸ்ரீ வைகுண்ட நாதனை நித்ய அனுபவம் பண்ணி நித்ய கிங்கர ஸ்வ பாவனாகை

————————————-

உபாயங்களில் கர்ம யோகமாவது
யஃஞ தான தப த்யான சந்த்யா வந்தன பஞ்ச மஹா யஞ்ஞ அக்னி ஹோத்ர தீர்த்த யாத்திரை புண்ய க்ஷேத்ர வாச
க்ருச்சர சாந்த்ராயண புண்ய நதி ஸ்நான வராத சாதுர்மாஸ்ய பலமூலாசன சாஸ்த்ரா அப்பியாச சமாராதன ஜல தர்ப்பணாதி கர்ம அனுஷ்டானத்தால் வந்த
காய சோஷணத்தாலே பாப நாசம் பிறந்து அத்தாலே இந்த்ரியத்வாரா பிரகாசிக்கிற தர்மபூத ஞானத்திற்கு சப்த்தாதிகள் விஷயம் அல்லாமையாலே விஷய சாபேஷை பிறந்து
எம நியம ஆசன பிராணாயாம ப்ரத்யாஹார த்யான தாரணா சமாதி ரூபமான அஷ்டாங்க யோக க்ரமத்தாலே யோக அப்பியாச காலத்து அளவும்
ஞானத்துக்கு ஆத்மாவை விஷயம் ஆக்குகை

வெங்கானமும் கல்லும் கடலும் எல்லாம் கொதிக்க -/ பூத தேவ பித்ரு மனுஷ்ய ப்ரஹ்ம -பஞ்ச யஞ்ஞங்கள்

இது தான் ஞான யோகத்துக்கு ஸஹ காரியாய் ஐஸ்வர்யத்துக்கு பிரசாதன சாதகமாய் இருக்கும்

கர்மா பத்தி அன்விதம் ஞானம் / ஞானம் பக்தி அன்விதாம் கர்மா /ஜ்யோதிஷ்டோமோதி முகத்தாலே பிரதான சாதனம்

ஞான யோகமாவது –
இப்படி யோக ஜன்யமான ஞானத்துக்கு ஹ்ருதய கமலம் ஆதித்ய மண்டலம் தொடக்கமான ஸ்தல விசேஷங்களில் எழுந்து அருளி இருக்கிற
சர்வேஸ்வரனை விஷயமாகி -அந்த விஷயம் தன்னை சங்க சக்ர கதா தர பீதாம்பர யுக்தமாய் க்ரீடாதி நூபுராந்த திவ்ய பூஷண அலங்க்ருதமாய்
லஷ்மீ ஸஹிதமாகவும் அனுபவித்து யோக அப்பியாச க்ரமத்தாலே அனுபவ காலத்தைப் பெருக்கி அனவரத பாவமாகை

விரோதி நிராசனத்துக்காகவும் -அழகு அனுபவிப்பைக்காகவும் -ஆதி ராஜ்ய ஸூ சகம் திரு அபிஷேகம் –தைல தாராவத் அவிச்சின்ன பாவனா ரூபம் -என்றவாறு –

இது தான் பக்தி யோகத்துக்கு ஸஹ காரியுமுமாய்
கைவல்ய மோக்ஷத்துக்கும் பிரதான சாதனமுமாய் இருக்கும்

அவிச்சின்ன பாவன ரூப அவஸ்தை தனக்கு உண்டாகையாலே தத் அவஸ்தையை ப்ரீதி ரூப அவஸ்தையாக பஜிக்கைக்குப் பண்ண வேண்டுமே
ஐஸ்வர்யார்த்திக்கு ஐஹிக சப்தாதி விஷயம் த்யாஜ்யமாய் ==ஐஸ் வர்யாதிகள் உபாதேயம் –ஜ்யோதிஷ்டோமம் பிரதான சாதனம் –
அதுக்கு அங்கமாக அண்டாதிபதயே நம -என்று பகவன் நமஸ்காரம்
கேவலனுக்கு -ஐஸ்வர்யமும் பகவத் பிராப்தியும் த்யாஜ்யம் -ஆத்ம அனுபவம் புருஷார்த்தம் -சக்தி குண விசிஷ்டனான பகவான் நமஸ்காரம் அங்கம் –
ஆத்ம அனுபவ ஞானம் பிரதான சாதனம்

பக்தி யோகமாவது –
இப்படி தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபமான அனுபவம்
ப்ரீதி ரூபா பன்னமாக்குக்கையும்-
அது தன்னை அறியப் பார்த்தால் பிராரப்த கர்மம் கழிகையும்
சாதனா சாத்தியங்களை அனுசந்தித்து
அதனுடைய சங்கோச விகாசமாம் படி பரிணமிக்கையும்

சாதனம் என்றது பக்தி யோகத்தை -சாத்தியம் என்றது -ஆத்தாள் சாதிக்கப்படும் ஈஸ்வர அனுபவமும் -ஈஸ்வரனையும் சொல்லும்
பக்தியால் ஈஸ்வரன் பிரசன்னனாவான் – என்று நினையாமல் த்வயி ப்ரசன்னே மம கிம் ருனென-ஈஸ்வரன் விஷயத்தில் ப்ரீதியை விகாசமாக்கும் பணி பரிணமிக்கும்

பிரபத்தி உபாயமாவது
இப்படி கர்ம ஞான ஸஹ ஹ்ருதையான பக்தி யோகத்தில்
அசக்தருக்கும்
அப்ராப்தருக்கும்
ஸூ கரமுமாய்
சீக்ர பல பிரதமுமாய்
உபாயம் ஸக்ருத் ஆகையால்
உபாய அனுஷ்டான சமானந்தம் உண்டாக்க கடைவதான
பகவத் விஷய அனுபவங்கள் எல்லாம்
ப்ராப்ய கோடி கடிதங்கள் ஆகையால்
ஸ்வரூப அனுரூபமாய் இருக்கும்

இது தனக்கு ஸ்வரூபம் தன்னைப் பொறாது ஒழிகை -உபாய வர்ணாத்மகமான தன்னை உபாயம் என்ன சஹியாத படியாய் இருக்கை –
அதாவது ஆபாத ப்ரதீதியில் ஒழிய உள்ளபடி நிரூபித்தால் ஸ்வஸ்மின் உபாய பிரதிபதிக்கு யோக்யமாகாத படி இருக்கை –
அதாவது விடுவது எல்லாம் விட்டு தன்னையும் விடுவதாகும்
பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் -அஞ்ஞார் ஞானாதிகர் பக்தி பரவசர் -இது சர்வாதிகாரம் –கால தேச பிரகார நியதிகள் இல்லை
விதி பரதந்த்ரம் இல்லாமல் ஆச்சார்ய பரிக்ருஹீதாம் / காய கிலேசம் வேண்டாம் / தேக அவசனத்திலே பலம் சித்திக்கும் -அந்திம ஸ்ம்ருதி அவன் பொறுப்பு
பக்தி அசேதனம் இது பரம சேதனம் -அது பல பரத்துக்கு ஈஸ்வரனை அபேக்ஷித்து இருக்கை -இது தானே ப்ராப்யம்
அது பலவாக இருக்க இது ஒன்றாக இருக்குமே
அது ஸ்வரூப வ்ருத்த ஸ்வா தந்த்ர யுக்தனாக செய்கை -இது ஸ்வரூபத்தோடே சேர்ந்த பரதந்த்ரனாகச் செய்கை
பிரபன்னனுக்கு பரிஹார்யம் ஆறு —
1—ஆஸ்ரயண விரோதி / 2–ஸ்ரவண விரோதி /3–அனுபவ விரோதி /4—ஸ்வரூப விரோதி /5–பரத்வ விரோதி /6–பிராப்தி விரோதி
அதாவது அகங்கார மமகாரங்கள் -நாம் ஞானம் அனுஷ்டானம் உடையவன் நல்ல நியமத்துடன் சரணாகதி பண்ணினேன் இவை நம்மை ஒழிய யாருக்கும் இல்லை /
புருஷகாரத்தை இகழ்ந்து நாம் சரணாகதி பண்ணிப் பெற்றோம் நடுவில் ஆச்சார்யர் எதற்கு என்று இருக்கை
பேற்றில் சம்சயதுடன் இருக்கை /
ஸ்ரவண விரோதி-பகவத் குண பரவசனாய் செவி தாழாதே -தேவதாந்த்ர கதைகளை கேட்பது
-அனுபவ விரோதி நித்ய விபூதி யுக்தனுடன் நித்ய அனுபவம் பண்ணாமல் நித்ய சம்சாரிகள் உடன் நித்ய அனுபவம் பண்ணுகை
ஸ்வரூப விரோதி பரதந்த்ரனாய் இருக்கும் தன்னை ஸ்வ தந்த்ரனாக பிரமிப்பது
பரத்வ விரோதி ஷேத்ரஞ்ஞார்களான ப்ரஹ்மாதிகளை ப்ரத்வம் என்று எண்ணுதல்
பிராப்தி விரோதி கைவல்யாதிகள்
ஆகையால் இந்த ஆறு விரோதிகளை பிற்பன்னன் பரிஹரிக்க வேண்டும்
க்ஷிப்ரம் தேவ பிரசாதம் -சிந்திப்பே அமையும் -புருஷகாரமும் ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாதக குண யோகங்களும் ஆஸ்ரயண கார்ய ஆபாதக குண யோகங்களும்
விக்ரஹ யோகமும் சகலவித கைங்கர்ய சம்பத்தியும் ப்ராப்ய கொடியிலே அந்வயிக்கும்

இது தான் ஆர்த்த ரூப பிரபத்தி என்றும் திருப்த ரூப பிரபத்தி என்றும் இரண்டு படி பட்டு இருக்கும் –

ஆர்த்த ரூப ப்ரபத்தியாவது
நிர்ஹேதுக பகவத் கடாக்ஷம் அடியாக -சாஸ்த்ரா அப்யாஸத்தாலும்
சதாசார்ய உபதேசத்தாலும் யதா ஞானம் பிறந்தவாறே
பகவத் அனுபவத்துக்கு விரோதியான தேஹ சம்பந்தமும்
தேச சம்பந்தமும் தேசிகருடைய ஸஹ வாசமும் துஸ் சகமாய்
பகவத் அனுபவத்துக்கு ஏகாந்தமாம் படி விலக்ஷணமான தேகத்தையும் தேசத்தையும் தேசிகருடைய ஸஹ வாசத்தையும் பிராபிக்கையில் த்வரை விஞ்சி
ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்தான் ஆகையால்
திரு வேங்கடத்தானே புகல் ஒன்றும் இல்லா அடியேன் -என்றும்
வேங்கடத்து உறைவாருக்கு நம -என்றும்
பூர்ண பிரபத்தி பண்ணி
பல நீ காட்டிப் படுப்பாயோ -இன்னம் கெடுப்பாயோ –
இக்கரை ஏறி இளைத்து இருந்தேன் இனி அடைய அருளாய் திருவாணை நின்னாணை கண்டாய் இனி நான் போக்கால் ஓட்டேன்
என்று தடுத்தும் வளைத்தும் பெறுகை

க்ருபா காப்யுப ஜாயதே -யம் பஸ்யேத் மது ஸூ தன -வெறித்தே அருள் செய்வார் -/ ஈஸ்வரனே சேஷி சரண்யன் ப்ராப்யன் என்கிற ஆகார த்ரயத்தையும்
அநந்யார்ஹ சேஷத்வம் அநந்ய சரண்யத்வம் அநந்ய போக்யத்வம் -என்கிற சேதனருடைய ஆகார த்ரயத்தையும் மந்த்ர உபதேசத்தால் பெற்று
கடி மா மலர்ப்பாவை யோடுள்ள சாம்ய ஷட்கம்–போன்ற -யதார்த்த ஞானம் பிறந்தவாறே
அழுக்கு உடம்பு -த்ரிகுணாத்மகமான தேக தேச சம்பந்தத்தில் வெறுப்பும்
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ-எந்நாள் யான் உன்னை வந்து கூடுவேனோ –
உனக்கு ப்ரீதி விஷயமான பிராட்டி மேல் ஆணை -அவளுக்கு ப்ரீதி விஷயமான உன் மேல் ஆணை -இனி நான் உன்னை
என்னை விட்டு அகன்று புறம்பே போக ஓட்டேன் –என்று வழி மறித்தும் சூழ சுற்றிக் கொண்டும் -பகவத் ப்ராப்தியைப் பிராபிக்குமது

த்ருப்தி ரூப ப்ரபத்தியாவது –
சரீராந்தர ப்ராப்தியிலும்
ஸ்வர்க்க நரக அனுபவங்களிலும் விரக்தியும் ப்ரீத்தியும் பிறந்து
அதனுடைய நிவ்ருத்திக்கும் -பகவத் ப்ராப்திக்கும் உறுப்பாக சதாசார்ய உபதேச முகத்தாலே உபாய ஸ்வீ காரம் பண்ணி
விபரீத ப்ரவ்ருத்தி நிவ்ருத்தராய்
வேத விஹிதமான வர்ணாஸ்ரம அனுஷ்டானமும் -பகவத் பாகவத கைங்கர்யமும் –மானஸ வாசிக காயிகங்களாலே யதா பலம் அனுஷ்ட்டித்து
ஈஸ்வரன் –
சேஷியாய்
நியாந்தாவாய்
ஸ்வாமியாய்
சரீரியாய்
வ்யாபகனாய்
தாரகனாய்
ரக்ஷகனாய்
போக்தாவாய்
சர்வஞ்ஞனாய்
சர்வ சக்தியாய்
சர்வ சம்பூர்ணனாய்
அவாப்த ஸமஸ்த காமனாய் இருக்கிற ஆகாரத்தையும்
தான் அவனுக்கு
சேஷமாய்
நியாம்யமாய்
ஸ்வம்மாய்
சரீரமாய்
வ்யாப்யாமாய்
கார்யமாய்
ரஷ்யமாய்
போக்யமாய்
அஞ்ஞனாய்
அசக்தனாய்
அபூர்ணனாய்
சா பேஷனாய் இருக்கிற ஆகாரத்தையும் அனுசந்தித்திக் கொண்டு
களைவாய் துன்பம் களையாது ஒழி வாய் களை கண் மற்றிலேன் -என்று
உபாயத்தில் சர்வ பரங்களையும் அவன் பக்கலிலே பொகட்டு நிர்ப்பரணாய் இருக்கை –

மாறி மாறி பல பிறப்பும் பிறந்து –புண்ய பாப ரூப கர்மங்கள் -மோக்ஷ விரோதித்வ ஆகாரத்தால் த்யாஜ்யம் / இவற்றின் நிவ்ருத்திக்கும் பய நிவ்ருத்திக்கும் –
தாபாதி ஸம்ஸ்கார க்ரமத்தால் ஆச்சார்ய உபதேச க்ரமத்தாலே -ஞான விசேஷம் பிறக்க விசேஷார்த்த உபதேச க்ரமங்கள்/
விபரீத ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் –தேவதாந்த்ர–சாதனாந்தர -விஷயாந்தர ப்ராவண்யம் –பாகவத அபசார பிரவ்ருத்திகள் -ஆகிய ஸமஸ்த பிறவிருத்தி நிவ்ருத்திகள்
வர்ணாஸ்ரமம் -ஸ்ரேஷ்ட ஜென்ம –வர்ணா நாம் பஞ்சம ஆஸ்ரானாம் -குலம் தரும் -தொண்டை குலம் -கைங்கர்ய விருத்திகள்
தொழுமினீர் கொள்மின் கொடுமின் -ஞான பரிமாற்றம் / சந்தன குஸூம தாம்பூலாதிகளைப் போலே -இஷ்ட விநியோக அர்ஹமாம் படி
அஹம் அன்னம் -என்றபடி அன்னமாகவும் -அந்நாதா/ அவன் போக்தாவாகவும் / ஞானியை விக்ரகத்தோடே ஆதரிக்கும் –
ஈஸ்வரன் இடம் ஆத்மாத்மீயங்களை சமர்ப்பித்து நிர்ப்பரணாய் இருக்கும்

ஆச்சார்ய அபிமானம் ஆவது இவை ஒன்றுக்கும் சக்தி இருக்கே இருப்பான் ஒருவனைக் குறித்து
இவனுடைய இழவையும்
இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு உண்டான ப்ரீத்தியையும் அனுசந்தித்து
ஸ்தனந்தய பிரஜைக்கு வியாதி உண்டானாலது தன் குறையாக நினைத்து ஒளஷத சேவையைப் பண்ணும் மாதாவைப் போலே
இவனுக்காகத் தான் உபாய அனுஷ்டானம் பண்ணி ரசிக்க வல்ல பரம தயாளுவான
மஹா பாகவதம் அபிமானத்திலே ஒதுங்கி
வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டம் என்று சொல்லுகிறபடியே
சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் அவன் இட்ட வழக்காக்குகை –

ஆர்த்த திருப்த பிரன்னனாகவும் சக்தன் இன்றிக்கே -மஹா விசுவாச பூர்வகம் இல்லாமல் -/ பகவத் ஸ்வா தந்த்ர ஸ்வரூபத்தையும்
தோஷ விசிஷ்டமான தன் ஸ்வரூபத்தையும் அனுசந்திக்க பயம் வர்த்திக்குமே –
கிருபாதி குணங்களை பார்த்து -என் அடியார் அது செய்யார் -அனுசந்திக்க நிர்பயராய் இருக்கலாமே -இப்படி பய அபயங்கள் மாறி மாறி யாவச் சரிரீபாதம் இருக்குமே
ந சம்சய -கச்சதா -தேவு மாற்று அறியேன் -இருப்பதே ஸ்வரூபம்
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு -கர்மாதிகளுக்கு வேண்டுமே / அநாதி மாயயா ஸூப்தா–சம்சார சாகரத்தில் அழுந்தி இழந்து இருப்பதை அனுசந்தித்து –
மந்திரத்தையும் மந்த்ரார்த்தையும் அருளி திருத்திப் பணி கொண்டு -தத் அனுஷ்டானத்தையும் உபதேசித்து -ஆன்ரு சம்சயம் பரோ கர்மா -பர துக்க அஸஹிஷ்ணுத்வம் –
கியாதி லாப பூஜாதி நிரபேஷமாய்-ஆகாரத்ராய சம்பன்னனாய் -பீதாக வாடைப் பிரானார் பிரம குருவாக வந்து வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே –
பரதந்தரையாய் ஆச்சார்யர் அபிமானத்தில் ஒதுங்கி /
ஆச்சார்யர் குரு ஆசான் தேசிகன் மெய்ஞ்ஞார் தீர்த்தர் பகைவர் பண்டிதர் கடகர் உபகாரகர் உத்தாரகர் -என்பர் இட்ட வழக்காயே இருக்கை

எம்பெருமான் தனித்து நித்ய சித்த ப்ராப்யனாகா நிற்கச் செய்தே
சகல தேவதா அந்தர்யாமியாய்க் கொண்டு ப்ராப்யன் ஆகிறாப் போலே
இவ்வாச்சார்ய அபிமானமும் தனியே உபாயமாகா நிற்கச் செய்தேயும்
எல்லா உபாயங்களுக்கும் ஸஹ காரியுமுமாய்
ஸ்வ தந்திரமு மாயிருக்கும்

குரு வந்தன பூர்வகம் -கர்மாதி உபாய சதுஷ்ட்யத்துக்கும் ஸஹ காரியுமாயும் இருக்குமே -அதாவது அங்கமாய் இருக்குமே
ஸ்வயம் சாதனமாயும் இருக்கும்
இப்படி உபாய ஸ்வரூபம் ஐந்து படி பட்டு இருக்கும்

—————————————-

பரத்வ விரோதியாவது –
தேவதாந்த்ர பரத்வ புத்தியும்
சமத்துவ பிரதிபத்தியும்
ஷூத்ர தேவதா விஷயத்தில் சக்தி யோக பிரதிபத்தியும்
அவதார விஷயத்தில் மானுஷ பிரதிபத்தியும்
அர்ச்சாவதார விஷயத்தில் அசக்தி யோக பிரதிபத்தியும் –

ஹிரண்ய கர்ப்ப -சரீராத்மா பாவம் அறியாமல் / ஸஹ படிதானானவர்கள் என்று கொண்டு சமத்துவ பிரதிபத்தியும் –
ஷூ தரரசு அநித்யராய் ஷூத்ர அநித்ய அல்ப அஸ்திர பலன்களை தருமவர்களாய் /
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்ததை அறியாமல் -ஆத்மாநாம் மானுஷம் மன்யே-அஹம் வோ பாந்தவோ ஜாத -என்ற
அவன் யுக்திகளைக் கொண்டே அவதாரங்களில் மனுஷ்யத்வ புத்தியும்
பின்னானார் வணங்கும் சோதி -ந சஷூஷா பஸ்யதி–கண் காண நின்று சர்வ பலன்களையும் கொடுத்தாலும்
தத் இச்சையா கேவல ஸ்வா தந்திரயாதிகள் இன்றிக்கே ஆஸ்ரித பரதந்த்ரனாய் இருப்பதை உணராமல்
இப்படி பஞ்சகமும் பர ஸ்வரூப விரோதி யாகுமே

புருஷார்த்த விரோதி யாவது –
புருஷார்த்தங்களில் இச்சையும் –
தான் உகந்த பகவத் கைங்கர்யங்களில் இச்சையும் –

க்ரியதாம் இதி –ஏவிப் பணி கொள்ள விண்ணப்பம் செய்ய வேண்டுமே –ஸ்வ இஷ்ட பகவத் கைங்கர்யத்தில் இச்சை கூடாதே
பிரபன்னனுக்கு ஸ்வீ காரத்தில் ஸ்வகதமும் -அனுபவத்தில் ஸ்வ போக்த்ருத்வமும் கூடாது இறே

உபாய விரோதி யாவது –
உபாயாந்தர வை லக்ஷண்ய பிரதிபத்தியும்
உபாய லாகவமும்
உபேய கௌரவமும்
விரோதி பாஹுள்யமும்

ஆச்சார்ய அபிமானமாகிற சரம உபாயத்துக்கு விரோதி -குரு ரேவா பர ப்ரஹ்ம இத்யாதி / சிறுமை பாராதே சகல கைங்கர்யங்களையும் செய்ய வேண்டுமே
நின் கோயில் சீய்த்து –சீய்க்கப் பெற்றால் கடுவினைகள் களையலாமே-/ கொடுவினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே

பிராப்தி விரோதி யாவது –
பிராரப்த சரீர சம்பந்தமாய் -அனுதாப சூன்யமாய் -குருவாய் -ஸ்திரமாய் இருந்துள்ள –
பகவத் அபசார –
பாகவத அபசார –
அஸஹ்யா அபசாரங்கள்

பச்சா தாப லேசமும் இன்றிக்கே -அவஜாநந்தி மாம் மூடா -அகங்கார அர்த்த காம மூலமாக-பகவத் விஷயத்திலும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் விஷயத்திலும் ஸஹிக்க முடியாமல் காரணமே இல்லாமல் பண்ணும் அபசாரங்கள்
ஷிபாமி ந ஷமாமி -என்பதால் நித்தியமாய் செல்லுமே இவை

இவை எல்லா வற்றுக்கும் விரோதி என்று பேராகக் கடவது

————————————-

அன்ன தோஷம் ஞான விரோதியாகக் கடவது –
ஸஹ வாச தோஷம் போக விரோதியாகக் கடவது –
அபி மானம் ஸ்வரூப விரோதியாகக் கடவது –

துரன்னம் -பகவத் -ப்ரபன்னர் இன்றிக்கே ப்ராக்ருதருடைய அன்னம் / துஷ் ப்ரதிக்ரஹ அன்னம் -சண்டாள மிலேச்சாதிகள் மூலம் /
ஜாதி ஆஸ்ரய நிமித்த அனுஷ்டான அன்னம் -காய சுத்தி இல்லாத அன்னம் / பிரபன்ன வேஷத்தை கொண்டு உபாசகர் நிஷ்டையை நடத்தி கொண்டு
இருப்பவன் கொடுத்த அன்னமும் கூடாதே / ஐஸ்வர்யம் சக்தி பூஜா கிரியைகளுக்கா செய்த அன்னமும் கூடாதே
உண்ணும் சோறு -கண்ணன் தத் வ்யாதிரிக்த அன்னங்கள் எல்லாம் கூடாதே
அகங்கார மமகாரங்கள் உள்ளவர்கள் உடன் இருக்கக் கூடாதே

—————————————–

இப்படி அர்த்த பஞ்சக ஜ்ஞானம் பிறந்து முமுஷூவாய் சம்சாரத்திலே வர்த்திக்கிற சேதனனுக்கு மோஷ சித்தி அளவும்
சம்சாரம் மேலிடாத படி கால ஷேபம் பண்ணும் க்ரமம்-வர்ணாஸ்ரம அனுரூபமாகவும் -வைஷ்ணத்வ அனுரூபமாகவும் –
அசநாச்சாதநங்களை சம்பாதித்து -யதன்ன புருஷோ பவதி ததான் நாஸ் தஸ்ய தேவதா -என்கிறபடியே சகல பதார்த்தங்களையும் பகவத் விஷயத்திலே
நிவேதித்து யதாபலம் பாகவத கிஞ்சித் காரம் பண்ணி தேக தாரண மாத்ரத்தை பிரசாத பிரதிபத்தியோடே ஜீவிக்கையும் –
வருந்தியும் தத்வ ஜ்ஞானம் பிறப்பித்த ஆச்சார்யன் சந்நிதியிலே கிஞ்சித் காரத்தோடு அவனுக்கு அபிமதமாக வர்த்திக்கையும்
ஈஸ்வரன் சந்நிதியிலே தன்னுடைய நீசத்வத்தை அனுசந்திக்கையும் –
ஆச்சார்யன் சந்நிதியில் தன்னுடைய அஜ்ஞதையை அனுசந்திக்கையும் –
ஸ்ரீ வைஷ்ணவ சந்நிதியிலே தன்னுடைய பாரதந்த்ர்யத்தை அனுசந்திக்கையும் –
சம்சாரிகள் முன்னில் தன்னுடைய வ்யாவ்ருத்தியை அனுசந்திக்கையும்
ப்ராப்யத்தில் த்வரையும்-
பிராபகத்தில் அத்யவசாயமும் –
விரோதியில் பயமும் –
தேஹத்தில் அருசியும் -ஆர்த்தியும்
ஸ்வரூபத்தில் உணர்த்தியும்
ஸ்வ ரஷணத்தில் அசக்தியும் –
உத்தேச விஷயத்தில் கௌரவமும் –
உபகார விஷயத்தில் க்ருதஜ்ஞதையும் -உத்தாரகப் பிரதிபத்தியும்
அனுவர்த்திக்கையும் வேணும் –

வர்ணாஸ்ரம அனுரூபமாகவும் -வைஷ்ணத்வ அனுரூபமாகவும் –அனு லோம பிரதிலோம அத்ரைவர்ணிக விபாகம் அன்றிக்கே
முமுஷுக்களாய் இருப்பார்க்கு எல்லாம்-சொன்னதாகக் கடவது
அசநாச்சாதநங்களை சம்பாதித்து —ஆசனம் -உணவு / ஆச்சாதனம் -போர்வை / உபகாரங்களிலும் -ஸ்வரூபத்துச் சேராத கார்யங்களைப் பண்ணி
தாரா புத்ராதிகளுடைய போஷண அர்த்தமாகச் சம்பாதியாதே -யோக்கியமான ஸ்தலங்களில் பரிசுத்தமான உபாதான வ்ருத்தியாலே சம்பாதித்து

உத்தேச்யத்வ -உபகாரத்வ -உத்தாரகத்வங்கள் மூன்றும் ஆச்சார்யர் -என்று உணர்ந்து கௌரவமும் க்ருதஞ்ஞத்தையும் உத்தாரகத்வ பிரதிபத்தியும் –
அன்றிக்கே
ஈஸ்வரன் இடம் உத்தேச்யத்வ புத்தியும் அதனால் -கௌரவ புத்தியும்பா /கவதர்கள் உபகாரகர்களாய் – -அவர்கள் பக்கல் க்ருதஞ்ஞத்தையும் /
ஆச்சார்யர் உத்தாரகராய்-அவர் பக்கல் உத்தாரகத்வ பிரதி பத்தியும்
அன்றிக்கே
தேவு மாற்று அறியேன் -என்று ஆச்சார்ய விஷயமே உத்தேவ்யமாய் அது உள்ளது எம்பெருமானாருக்கே என்று நித்ய சத்ருக்கனன் போலே
இரு கரையராகி இல்லாமல் எல்லாம் அவரே என்றும் கூரத் தாழ்வான தொடக்கி திருவாய் மொழிப் பிள்ளை முதலானவர்களால் அன்றோ
நாம் இவரை லபித்தது என்று உபகாரத்வமும் கிருதஞ்ஞத்தையும் அவர்கள் இடத்திலும்
அன்றிக்கே
உத்தேச்ய விஷயத்தில் கௌரவமும் உபகார விஷயத்தில் க்ருத்தஞ்ஞத்தையும் என்று சொன்னது உபகார வஸ்து கௌரவத்தாலே -என்று
ஆச்சார்யனானை உபகரித்த ஈஸ்வரனை மிகவும் உபகாரகன் என்று அருளிச் செய்கையாலே -மூன்றுமே சரம சேஷியான எம்பெருமானார் இடமே பர்யவசிக்கும்

—————————–

இப்படி ஜ்ஞான அனுஷ்டானங்களோடு கூடி வர்த்திக்குமவன் -ஈஸ்வரனுக்கு பிராட்டிமாரிலும் -நித்ய முக்தரிலும் -அத்யந்த அபிமத விஷயமாகக் கடவன் –

————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீஜார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

திருப்பாவை சாரம் – மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான் —

January 23, 2018

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –

உங்களுக்கு அபேஷிதம் என் -என்ன–நோன்புக்கு வேண்டும் உப கரணங்களையும் அபேஷிக்கிறார்கள் –
கிருஷ்ண சம்ஸ்லேஷ ரச உத்சாகரான இவர்கள்–இவற்றை அபேஷிக்கைக்கு அடி -என் என்னில்
அந்த சம்ச்லேஷத்துக்கு ஏகாந்தமான நோன்பை பிரஸ்தாவிக்கையாலும்–
கிருஷ்ணன் முகத்தை வெளியிலே காண்கைக்கு ஹேதுவாகையாலும் –
அவனுடைய திரு நாமங்களை வாயாரச் சொல்லுகைக்கு ஹேதுவாகையாலும்–
இடையர் பக்கல் உபகார ஸ்ம்ருதியாலும்
நோன்புக்கு அங்கங்களை வேண்டிக் கொள்கிறார்கள்-
பெண்காள்-எளிவரும் இயல்வினன் என்கிறபடி நம்மை உள்ளபடி அறிந்தீர்கள் –
உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன
தங்களுக்குச் செய்ய வேண்டுவது சொல்லுகிறார்கள் –
இத்தால் துக்க நிவ்ருத்தியோபாதி
போக உபகரண சித்தியும் அவனாலேயே என்கிறது –

மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்-

மாலே-
முன்பு -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று-
அபரிச்சேத்யமான மேன்மையையும் நினைத்து இருந்தார்கள் –
இப்போது இத் தலைக்கு –வாத்சல்யமே ஸ்வரூபம் என்று நிலை இட்டார்கள் –
பிராட்டி சக்ரவர்த்தி திருமகனை -சரணாகத வத்ஸல-என்று ஸ்வரூபத்தை நிலையிட்டாள் –
அதுவே ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணம் –
இங்கு இவள் சரணாகத பக்ஷபாதி -என்று நிலையிட்டார்கள்
இதுவே மஹா பார்த்ததுக்கு உள்ளீடான பிரதான குணம் –
வ்யாமோஹ குணத்தை –மாலே -என்கிற சம்போதனத்தாலே இவர்கள் நிலை இட்டார்கள் –
இவர்கள் பேச்சை கேட்ட பின்பு –முந்தியிலும் பெரும் பித்தனானபடி —
அவனை கண்ட வாறே–தங்கள் வ்யாமோஹம் குழப்படி -குதிரை குழம்பு அடி நீர் போலே
அவன் வ்யாமோஹம் கடல் போலே –
பிச்சு ஒரு வடிவு கொண்டால் போலே–மையல் வேட்கை ஆசை அரங்கனாகிய பித்தன் –மாலே
பார்க்கும் முன்பு துடிக்க விட்டானே தாங்கள் ஆசைப் பட்டவாறு சொல்லிப் போந்தார்கள்
நாங்கள் தெளிந்து நோன்பு நோற்று வந்தோம்–
நோற்கவும் ஷமன் இல்லாமல் உறங்கி மயங்கி இருக்க

அனந்தாழ்வான் எம்பெருமானார் சரம திருமேனி காண வர–அபவரத ஸ்நானம்- வட திருக் காவேரி- செய்ய
கூட வந்தவர் மரம் ஏறி விழ பார்த்தவர்–கேட்ட பின்பும் பிராணன் தரித்து–மரம் ஏற பலமும் இருந்து
கால் கை தான் உடையும் -நாச்சியார் திருமொழி ஐதிகம்–
கண்ணன் நோற்கவும் ஷமன் இன்றி மோஹித்து இருக்க
நாராயணன் பையத் துயின்ற பரமன் மேன்மை எல்லாம் –
இடு சிவப்பு -மருதாணி–நீர்மை -பிரகிருதி வாத்சல்யமே -அன்பே –வடிவானவன் –
கோபி த்ருஷ்ணா தத்வம்

மாலே –
மாலை உடையவனே சொல்லாமல் அன்பே–அன்பு வேற அவன் வேற இல்லை

பெருமாள் -ரகு குலத்தில் உள்ளார் ராவணன் பின் பிறந்தாரை–
ராவணனை ஆசைப் படுகிறவர் அவன் தம்பியாவது கிடைக்கப் பெற்றோமே
இதுவே இரண்டு தலைக்கும் வாசி —
ஒரு மாசம் ஜீவியேன் -ஒரு ஷணம் ஜீவியேன்-இவன் நிலை –
ஆசார்யர்-பிராட்டி பெருமை தான் இத்தால் காட்டி–
இழந்த வஸ்துவின் பெருமை–காசை இழந்தவன் மணியை இழந்தவன் –
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் இவர்–ஆர்வுற்ற என்னை ஒழிய
என்னில் முன்னம் பாரித்து –தான் என்னை முற்ற பருகினான்
இவர் விழுங்க திட–பருகினான் -த்ரவ்ய–வ்யாமோஹம் கண்டு ஆழ்வார் உருக அத்தை பருகினான் –
எனைத்தோர் பல நாள் அழைதேற்கு–எந்தன் கருத்தோடு வீற்று இருந்தான்
அதனில் பெரிய அவா–தத்வ த்ரயம் விட பெரிய என் அவா –
விளாக்கொலை கொண்ட ஆழ்வார் ஆசை–அவா அற என்னை சூழ்ந்தாரே -அவனது

மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளன்-
மன்றில் குரவை மால் செய்தான்-
கண்ணன் என்னும் கரும் தெய்வம் – உன் கரிய திருமேனி –
வேதாஹமேதம் -ஒத்தார் மிக்கார் இல்லா பெரியவன் –
இத்தனை -அரங்கனாய பித்தனை பெற்றும் அந்தோ பிறவியுள் பிணங்குமாறே -திருமாலை -4-
சதுர்விஜா ஆர்த்தா விஞ்ஞாசு அர்த்தாதி ஞானி – அல்பதுக்கும் தன்னிடம் வருகிறாள்
ஞானி து ஆத்மைவ மே மதம் -என் மதம் இது நிச்சயம்
அறிவிலேனுக்கு அருளாய் அறிவார் உயிர் ஆனாய் -ஆளவந்தார்
அறிவார் ஞானிகளுக்கு உயிர் ஆனவனே ஆளவந்தார் கேட்டு – அன்மொழித் தொகை
அறிவாரை உயிர் ஆக உடையவனை
உன்னை அர்த்தித்து வந்தோம் -நீயே வேணும் என்பாரை
நவ கோடி நாராயணன் வேண்டாம் நீ தான் வேணும் என்ற அர்ஜுனன் போலே
என்னையே விரும்பி – சேவை சாதிக்க அவயவ பூதிகள் இவைகள் பறை கரங்க
மன்றில் கூத்தாடினான் காணேடி என்றும் அரியன் இமையோர்க்கும் சாழலே —

மாலே –
நெடுமாலே -திருவாய்மொழி -5-8-1-
இருவரும் ஆஸ்ரித வ்யாமோகத்தை அருளுகிறார்கள் –
சம புத்தியால் மாலே இடைப்பென்கள் வார்த்தை மால் வியாமோகம்
நெடுமால் மிக வியாமோகம் -நீராய் அலைந்து கரைய என்கிற அடைவு

மணி வண்ணா –
அபரிச்சேத்யனாய் இருக்கச் செய்தேயும்–
முந்தானையிலே முடிந்து ஆளலாம் படி இருக்கை –
கீழ்ச் சொன்ன வ்யாமோஹம் வடிவிலே நிழல் இடுகை –
இந்நீர்மை இன்றிக்கே–காதுகனானாலும் விட ஒண்ணாத வடிவு அழகு —
பெண்கள் பிச்சுக்கு நிதானமான வடிவு -என்னவுமாம் –
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை -என்னக் கடவது இறே-
பனி மலராள் -வந்து இருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன்

மால்
பெரியோன்-கருமை- பெருமை -மையலுமாம்
சூட்டு நன் மாலைகள் -விண்ணோர் நன்னீராட்டி
மணி வண்ணா வெண்ணெய் உண்ட வாயன்
முந்தானையில் முடிந்து ஆளலாம் சௌலப்யம் –
மணி ஸ்வாபம்
உண்டு என்றால் உயிர் இருக்கும் –
ஆழ்வார் படி விச்லேஷம் துடிப்பார்-உடையவர் காலில் சர்வரும் விழ
இழந்தார் பிழையார்–கைப்பட்டாருக்கு பூணலாம்–அழித்து உண்ணலாம் படி–
கிளிச் சீரையில் அடக்கலாம்
பிறர்க்கே இருக்கும்–கொடுத்தோம் என்று நினைக்காமல்–வேறு ஒன்றில் கண் வைக்காமல் இருக்க வைக்கும்
செம்படவன் -மாணிக்கம் -வியாபாரி -அரசன் -கதை–
பெருமை அறியாதார் அல்ப பலம் பெற்று போவார் -ஐஸ்வர்யம்
ரிஷிகள் போல்வார் தபஸ் துருவ பதம் பரும ரிஷி மோஷம் வியாபாரி போலே -கைவல்யம் -சாதனாந்தர நிஷ்டர்
பிரபன்னர் -சாதனம் ஆக்காமல் ஸ்வயம் போக்கியம் ஞானி வாசுதேவம் சர்வம் இதி –
வண்ணம் ஸ்வ பாவம்
என்றும் எனக்கு இனியானை -தாய் சொல்ல–தாய்க்கு மணி மாமை குறை இல்லாமை -அழகியார் -நீங்கள்
உங்களுக்கு நான் தகுதியா–போந்த கார்யம் சொல்ல–நீங்கள் வந்தது என் -என்ன-
வந்த கார்யத்தைச் சொல்லுகிறார்கள் –

மார்கழி நீராடுவான் –
மார்கழி நீராடுகைக்கு உப கரணங்கள் வேண்டி வந்தோம்—
ஆஸ்திக்யாதிரேகத்தாலே -அங்கி கைப்படத் இருக்கச் செய்தேயும் –
அங்கத்தை விடாது ஒழிகிறார்கள் –மார்கழி நீராட்டமாவது என் -என்ன –
இது பிரசித்தம் அன்றோ -என்ன –

மார்கழி நீராடுவான்-
மார்கழி மாசத்தில் நோன்புக்கு அங்கமாக குளிக்கை —இந் நோன்பு தான்–
காம்யார்த்திகளுக்கு சாதகமாயும்
நிஷ்காமருக்கு நித்தியமாயும்–
பிரபன்ன அதிகாரிகளுக்கு பகவத் கைங்கர்யமாயும் -இருக்கும் ஆகையாலே
பிரபன்ன அதிகாரிகளுக்கு சொல்லுகிற கர்ம த்யாகம்–சாஸ்த்ரோக்தமான ஆகாரத்தாலே அனுஷ்டியாது ஒழிகை ஒழிய
கேவலம் அனநுஷ்ட ரூப த்யாகமாகம் அன்று என்றது ஆய்த்து

மேலையார் செய்வனகள் –
பிரசித்த தமம் காண் இது –
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலும் சிஷ்டாசாரம் இறே பிரசித்த பிரமாணம் –
பிரமாணங்களில் தலையான சிஷ்டாசார்யம் –
நாராயணனே நமக்கே பறை தருவான் –
பிரபன்னர் அனுஷ்டானம் பிரபல பிரமாண சித்தம்-பலம் சித்திக்கு சம்சயம் இல்லை
விதி சாஸ்திரம் மட்டும் இருந்தால் சங்கை வரலாம்-
அனுஷ்டானம் படி இருப்பதால் விசுவாசம் உண்டே-சங்கை இல்லையே
விஸ்வாமித்ரர் சொன்னான்-கண்டு சொன்னான்-கபோத்ய வியாக்யானம்-பூர்வர் அனுஷ்டானம்
பட்டர் வேடர்-வணங்கி தேன் தினை மா கொடுத்து-காட்டில் விசேஷம்-
முயல் -ஓட -குட்டி முயல் கிடைக்க-தாய் முயல் முன்னே சுற்றி வர
எழுந்து நிற்க-பரிதாபம் பட்டு குட்டி விட்டேன்-நஞ்சீயர்-
சரணாகதி சாஸ்திரம் சொல்லிக் கொடுத்தவர் இல்லை-
பலம் உண்டு முயலுக்கு யார் உபதேசித்தார் –
யாதொன்றை யாதொன்றை ஸ்ரேஷ்டர்கள் ஆசரித்தார்கள்-
யாதொரு அளவு செய்தார்கள் அவ்வளவு லோகம், அனுவர்த்திக்கும் என்று
சிஷ்டாசாரமே ஸ்திர பிரமாணம் என்று தேர் தட்டிலே நின்று சொன்ன நீ எங்களைக் கண்டவாறே மறந்தாயோ
சாஸ்திரம் விதித்ததே யாகிலும் சிஷ்டானுஷ்டானம் இல்லா இடத்தில் தவிரக் கண்டறியாயோ—
சாஸ்திரம் விதித்தாலும் ஸ்ரேஷ்டர் அனுஷ்டானம் இல்லாமல் செய்யோம்
அஷ்ட யாகம் பசு -மேய்க்கும் ஆள் அறிவாரோ–
கறவைகள் எங்கள் ஸ்ரேஷ்டர்–உன்னை பர தேவதை சப்தம் நாராயணன் அறிந்தது
வேதம் மூலம் இல்லை–விஷ்ணு சித்தர் தங்கள் தேவர் –
திருபுரா தேவி எம்பெருமானார் -காளிச்சால் மூலை தேவதை ஈசான்ய மூலை-புளிக்க பழைய சாதம் வைப்பார்
ருத்ரன் —பரதவதை எம்பெருமானார் காட்டி–விஷ்ணு சித்தர் விரும்பிய சொல்
த்வதீய கம்பீர அனுவர்த்திக்கும்
நாராயணா –வாசு தேவன் -விஷ்ணு -அசிஷ்ட பரிக்ரகம் -நாராயணன் கைக் கொண்டும்
மந்திர ரத்னத்துக்கு ஆசார்ய ருசி பரிகிரகீதம்–
திரு மால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின்–த்வயமே உத்தேச்யம்

மேலையார் செய்வனகள்- என்ன ஆகில் வேண்டுவது சொல்லுங்கோள் என்ன –
வேண்டுவன கேட்டியேல் –
கேட்புதியாகில் -என்கிறது-அந்ய பரதையாலே –
அந்ய பரதை என் -என்னில்
பஞ்ச லஷம் குடியில் பெண்களும் முன்னே நிற்கையாலே-
இவர்கள் முலையிலும் இடையிலும் கண்ணிலும் முகத்திலும்
துவக்குண்டு ஆனைக்குப்பு ஆடுவாரைப் போலே இருக்கையாலே–தட்டி எழுப்புகிறார்கள் –
இத்தால் -ஸ்வாபதேசத்தில்
ஜ்ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது —இவை இறே ஒரு அதிகாரிக்கு அழகு ஆகிறது –
காண்கைக்கு ஹேது வாகையாலே கண் -என்று ஜ்ஞானத்தைச் சொல்கிறது –
போக உபகரணம் ஆகையாலே முலை -என்று பக்தியைச் சொல்லுகிறது –
கார்ச்யத்தாலே இடை என்று வைராக்யத்தைச் சொல்லுகிறது ––
கார்ச்யத்தாலே -வைராக்கியம் தோற்றுமோ -என்னில்
கார்ச்யத்தாலே விரக்தியைச் சொல்லிற்றாய்–அத்தால் விஷயாந்தர ஸ்பர்ச ராஹித்யத்தை சொல்லுகிறது –
உங்கள் வடிவு கண்ணுக்கு போக்யமோபாதி–உங்கள் வார்த்தை செவிக்கு போக்கியம் அன்றோ–
சொல்லுங்கோள் என்ன -சொல்லுகிறார்கள்-

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
யத் யதாசரதி ஸ்ரேஷ்டஸ் தத்ததே வேத்ரோ ஜன / தர்மஞ்ஞஸ் சமய பிரமாணம்
இதுக்கு சங்கரர் ஆனந்த தீர்த்தர் யத் பிரமாணம் என்பதை பதச்சேதம் பண்ணி
ஸ்ரேஷ்டர் யாது ஒன்றை பிரமாணமாக கொள்கிறார்களோ அத்தையே லோகமும் ப்ரமாணமாகக் கொள்ளும் என்று வியாக்யானம்
பெரியோர்கள் அனுஷ்டிக்கிற கர்மத்தையே -என்றும்
அவர்கள் எந்தவிதமாக அனுஷ்டிக்கிறார்களோ அவ்விதமாகவே லோகமும் அனுஷ்ட்டிக்கும் -என்றும்
மேலையார் செய்வனகள் கேட்டுதியேல் மட்டும் இல்லையே– மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டுதியேல்
வேண்டாதவற்றை விட்டு வேண்டுவன செய்வார் மேலையார் என்றபடியே
திருப்பாவை ஜீயர் -சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் –
யத் பிரமாணம் பஹு வ்ரீஹி சமாசம் கொண்ட ஒரே பதமாக பாஷ்யம் இட்டு அருளினார்-

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
ஜகத்தை எல்லாம் வாழும்படிக்கு–த்வநிக்கைக்கு இடமுடைத்தானவை –
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலி இறே தாரகம் —
அப்படியே நாடெல்லாம் இந்த-த்வனி கேட்டு வாழ வேணும் –
இவர்கள் தாங்களும் -வலம்புரிபோல் நின்று அதிர வேணும் -என்று இறே சொல்லிற்று
பாலன்ன –
பாலைத் திரட்டினாப் போலே இருக்கை —இப்படி இருப்பன பல சங்கு வேணும் –
அதி போக்யமாய்-அதி பரிசுத்தமாய்
இத்தால் –
அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானம் வேணும் -என்கிறது –
சங்க த்வனி ஓங்காரம் என்று ஜகத்திலே பிரசித்தமாய் இருக்கையாலே
ஓங்கார அர்த்தம் அனன்யார்ஹ சேஷத்வம் ஆகையாலே-லஷண்யா- சேஷத்வ ஞானத்தை சொல்லுகிறது –

போய்ப்பாடு –
பேரிடமாய் இருக்கை —இடம் உண்டாகில் இறே த்வனி முழங்கி இருப்பது –
புகழ் என்றுமாம் —ருக்மிணி பிராட்டி போல்வாருக்கு உதவினான் என்கிற புகழ் –
பின்னையோ வென்ன –

சாலப் பெரும் பறையே ––
ஒரு மன்றில் த்வநிக்கை அன்றிக்கே–எங்கும் ஒக்க த்வநிப்பது ஒரு பறை வேணும் –
மிகவும் த்வநிக்கிற மத்யத்திலே இருக்கிற பறை -என்கையாலே
பகவத் அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான–ஸ்வ ஸ்வா தந்த்ரியத்தையும்–சேஷத்வ சிஹ்னமான கைங்கர்யத்தில்
ஸ்வ அதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும் -நிவர்ப்பிக்குமதாய்
மத்யே இருக்கிற நமஸ் சப்த அர்த்தமான பாரதந்த்ர்ய ஞானமும்-உண்டாக வேணும் என்னும் இடம் சொல்லுகிறது –
பின்னையோ வென்ன-

பல்லாண்டு இசைப்பாரே ––
திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு போருவார் வேணும் -சத் சஹாவாசம் வேணும் –
பின்னையோ வென்ன –

கோல விளக்கே–
அழகிய விளக்கு -அதாவது மங்கள தீபம் -பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு
அத்யந்தம் மனோஹரம் ஆக்குகிற–பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –

கொடி
திருக் கொடியாட வேண்டும் –
கீழ் சொன்ன சேஷத்வ லஷணமான-கைங்கர்யமும் வேணும் –

விதானம் –
மேல் கட்டி வேணும் -அக் கைங்கர்யத்தில் போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேணும்-
என்று இவற்றை அபேஷிகக –

சங்கும் பல கிடையாது-ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை கொள்ளுங்கோள்-என்றான்
தன்னைப் போலே இருப்பார் சில உண்டாகில் இறே
புறம்பு-ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கும் சங்கு உண்டாவது –

பறைக்கு பாரோர்கள் எல்லாம் மகிழ-
பறை கறங்க கூத்தாடின போது-திரு வரையில் கட்டின பறையையும்
திருப் பல்லாண்டு பாடுகைக்கு –பெரியாழ்வாரையும்
விளக்குக்கு –நப்பின்னைப் பிராட்டியையும் –
கொடிக்கு –பெரிய திருவடியையும்
மேல் கட்டிக்கு –அத்த வாளத்தையும்-கொள்ளுங்கோள் என்றான் –

விதானத்துக்கு திருவவதரித்த அன்று பணத்தை இட்டுக் கவித்துக் கொண்டு போந்த
திரு வநந்த வாழ்வானைக் கொடாது ஒழிவான் என் என்னில் –
எல்லாரையும் போகச் சொன்னாலும் தன்னை ஒழிய
ஓரடி இட மாட்டாதவன் ஆகையாலே -அத்த வாளத்தைக் கொடுத்தான் –
பெருமான் அறையில் பீதக வண்ண வாடை கொண்டு இறே வாட்டம் தணிய சொல்லிற்று –
ஓர் ஓன்று போராது -இப்படி இருப்பன பல வேண்டும் -என்ன
இல்லாததை தேடப் போமோ -என்ன உனக்கு அரியது உண்டோ -என்ன
எனக்கு எளியதாய் இருந்ததோ -என்ன

ஆலினிலையாய் –
சிறியதொரு வடிவைக் கொண்டு-சர்வ லோகத்தையும் திரு வயிற்றிலே வைத்து-
பவனாய் இருந்ததொரு ஆலம் தளிரிலே
கண் வளர்ந்த உனக்கு முடியாதது உண்டோ –லோகத்தில் இல்லாததும் எங்களுக்காக உண்டாக்க வல்லை என்று கருத்து –
அருள்-வேண்டாது ஒழியில்-செய்யலாவது இல்லை –
சக்தி இல்லாமை இல்லை-இத்தலையில் பேற்றுக்கு எல்லாம் ஹேது அவன் பிரசாதம் என்கை –
பவனான ஆலின் இலை -கிடந்து–
நீ வளர்ந்த -ஆல் வேலின் நீரில் உள்ளதோ – —
புறப்பாடும் இன்றி முழுவதும் அகப்பட உள்ளே போக–விண்ணதோ மண்ணதோ –
பட்டர் -வேடிக்கையாக முதலில்–கார்யம் செய்வது என் வேலை–
தொண்டன் சமாதானம் செய்ய வேண்டும்
வஸ்துக்களை உள்ள தாங்கி ஆலின் இலையை வெளியில் தாங்கி அவனுக்கும் ஒரு ஆதாரம் உண்டோ -பட்டர் –
ஆலின் நிலையாய் -ஆதாரமாக இருந்தவன்–வடதள சாயி ஆலிலை கண்ணன் -சந்தான கோபாலன்

மாலே -ஸ்ரீ வில்லி புத்தூர் அனுபவம் -ஸூ சகம்-ஆலினிலையாய் –
பாலகன் என்று பரிபவம் செய்யேல் பண்டு ஒரு நாள் ஆளிநிலை வளர்ந்த சிறுக்கன் இவன்

மாலே மணி வண்ணா –
என்கிற இத்தால் –மாம் -சௌலப்யத்தை சொல்லிற்று
ஆலினிலையாய் –
அஹம் -என்கிற இடத்தில்-சஹாயாந்தர நிரபேஷமான உபாய வேஷத்தை சொல்லிற்று –
சுருதி அர்த்தம் இப்பாட்டில் சொல்கிறது-

ஆலின் நிலையாய்-
பல் கலையோர் தாம் மன்ன வந்த இராமானுசன்
அபரிமிதமான சாகைகள் உள்ள ஆல மரம் போல் சிஷ்ய கோடிகள் நிறைந்து
சங்கம் -ஸ்பர்சத்தால் துருவனுக்கு
ஸ்வாமி ஸ்பர்சத்தால் ஆண்டான் ஆழ்வான் எம்பார் அனந்தாழ்வான் பிள்ளான் போல்வார்
கோல விளக்கு -ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு குல பிரதீபம்
கொடி -சித்தாந்த விஜய த்வஜம்
விதானம் -தொடுத்து மேல் விதானமாய் பௌவ நீரார் அரவணை-

அருள் -வருத்தமும் தீரவும் மகிழவும் / உபகரணங்களும் அருள் வேண்டும் -வந்த கார்யம் ஆராய்ந்து அருள் –
பல்லாண்டு பாடவும் அருள் வேண்டும் -அர்த்தித்து வரவும் அருள் வேண்டும் -/ நித்ய அனுக்ரஹகம் பிரபன்னனுக்கு -/
கத்யத்திலும் -ஆறு இடங்களில் அருள் பிரசாதம் -கேவலம் மதிய யைவ தயையாலே -நீர் கேட்டவை எல்லாம் -என்று நம் பெருமாள் /
ஞான-10- -ப்ரேம பக்குவ நிலைகள் -11-12—
ஞான -பூர்வ அவஸ்தை–ப்ரேம பக்தி உத்தர அவஸ்தை -பக்தி ரூபா பன்ன ஞானம் – க்ருஷிகன் -அன்றோ /
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்-என்று பிரார்த்திக்க வேண்டும்
பருத்தி படும் பாடு பட வேண்டும் -உழவன் கண் கொத்தி பாம்பாக இருந்து வளர்க்கிறான்

த்வேஷம் -உபேக்ஷை -அத்வேஷம் -உபேக்ஷித்து -இருக்க -அவன் கிருபையால் —
1-அத்வேஷம் -வெறுக்காமல் – – /-2-அநு கூலம்-பின் தொடர்ந்து -பகவத் பாகவத அனுவர்த்தனம் செய்து –இச்சை -/
-3-திவ்ய நாம தரம்-பேராக இட்டு இருப்பது-சம்பந்தம் உணர்ந்த பின் ஆசை உந்த -மஹநீய விஷய ப்ரீதி -நைச்யம் தாஸ்ய ரூபம் /
-4-சக்ராங்கிகத்வம் –பொறி ஒற்றிக் கொண்டு -தேவதாந்த்ர பஜனம் ஜூகூபூஸ்த்தை உண்டாகி /
-5-மந்த்ர -அஷ்டாக்ஷரம் சாதனமாக -ஸூ கர சாதனம் –
-6-வைஷ்ணத்வம் -விஷ்ணு பிராப்தி -புருஷாந்தர விரக்தன் -பக்தி உபாயம் -சாத்தனாந்தரம் பற்றி உள்ளவன் -சாதனா பக்தி நிஷ்டன்
-7-ஸ்ரீ வைஷ்ணத்வம் –தேக பந்துக்கள் இடம் விரக்தி -மால் பால் மனம் -மங்கையர் தோள் கை விட்டு
-8-ப்ரபன்னத்வம் -தேகத்தில் விருப்பம் விட்டவன் இவன் -கீழே தேக பந்துக்கள் இடம் விட்டவன் -சப்தாதி விஷய விரக்தன்
-9- ஏகாந்தி -தூ மணி -ஸ்வகத ஸ்வீ கார நிஷ்டை
-10-பரமைகாந்தி –சாதனா புத்தி தவிர்ந்து -ஸாத்ய அனுபவமே உத்தேச்யம் -பகவத் –பர கத நிஷ்டன் இவன் –நோற்று சுவர்க்கம்
கீழ் வரை ஞான தசையில் அவஸ்தா பேதங்கள் -மேலே பக்தி ப்ரேம தசையில் அவஸ்தா பேதங்கள் –
ஞானம் கனிந்து தானே மேல் அவஸ்தைகள் -ததீய சேஷத்வம் –
-11-பக்த்தத்வம் —ஸ்வகத ஆச்சார்ய நிஷ்டன் -பக்த ஜன பிரியன் -ப்ராப்யம் பாகவதர்களே-அவர்கள் கைங்கர்யமே உத்தேச்யம் —
12- பாகவதத்வம் –பரகத ஆச்சார்ய ஸ்வீகார நிஷ்டன் -அர்த்த பஞ்சக ஞானம் -ஆகார த்ரய ஸம்பன்னன் -ஆச்சார்ய அங்கீகார விஷய பூதன் –
அதுவும் அவனது இன்னருள் -ஆச்சார்ய கைங்கர்யமே புருஷார்த்தம்
ஒவ் ஒன்றுக்கும் அருள் இரக்கம் வேண்டுமே

கத்யம் -பிராட்டி இடம் முதலில் -/அஸ்து தே/ அவன் இடம் -அத்ர த்வயம் /
பிதரம்-லோக விக்ராந்த -விட்டேன் சொல்லி ஆறாவது சூர்ணகை/த்வமே மாதா –சர்வம் -ஏழாவது /
எட்டாவது குருவும் நீயே /பாபங்களை போக்க பிராப்தி ஒன்பதாவது -பூர்ணர் /
-10–11–12-சூர்ணிகை மேலே அவன் வார்த்தையை திரும்ப சொல்லி -கர்மங்கள் தொலைத்து -அஞ்ஞானம் போக்கி /
-10- மநோ வாக் காயா -அபசாரங்கள் -சேர்வான் க்ஷமஸ்வ -நமக்காக பிரார்த்தனை / அநாதி கால விபரீத ஞானம் தொலைத்து –
11-சூர்ணிகை /பிரகிருதி சம்பந்தம் போக்கி அருள -12–சூர்ணிகை -கர்மத்தால் வரும் திரோதானம் -ஸ்வரூபம் மறைக்கும் -/
சரணாகதன்-பூர்வ வாக்யார்த்தம் தேவரீருக்கு தாஸ்யன் -உத்தர வாக்யார்த்தம் / சாபம் ஒழிந்து வருத்தமும் தீர்ந்து –
மேலே வேண்டியதை -இஷ்ட பிராப்தி – வருத்தம் பற்றி –மேலே பாசுரங்களில் இல்லையே -ஆகவே இது வேறே ஐந்து
பர பக்தி பர ஞான பரம பக்தி ஏக -கைங்கர்யம் ருசிக்க இவை வேண்டுமே –
நித்ய கிங்கரன் -அனுபவ ஜெனித ப்ரீதி உந்த கைங்கர்யம் -ஏற்படும்படி கடாக்ஷிக்க /
நம் பெருமாள் அருளும் பொழுதும் இதே படிக்கட்டுக்கள் -கேவலம் மதியைவ தயையால் மத் பிரசாதத்தால் –
யோக்யதை இல்லை என்றாலும் -அயோக்யதைகள் இருந்தாலும் -அபசாரம் பட்டு இருந்தாலும் -நமக்காக இப்படி வார்த்தைகள் –

ஆலினையாய் அருள் –
அம்புலியை அழைக்கும் இடத்து -பாலகன் என்று பரிபவம் செய்யேல் –
பண்டு ஒரு நாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கனவனிவன்
செங்கீரை யாட -உய்ய உலகு படைத்ததுண்ட –ஆலினை அதன் மேல் பையவு யோகு துயில் கொண்ட பரம்பரனே –
அக்காக்காய் கோல் கொண்டு வா -என்னும் போதும் ஆலத்திலையான் அரவின் அணை மேலான் –
பூச்சூட அழைக்கும் பொழுதும் உண்டிட்டு உலகினை ஏழும் ஓர் ஆலிலையில் துயில் கொண்டே
நளி மதிச் சடையனும் –ஓர் ஆலிலைச் சேர்ந்த எம்பெருமான் மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்று உடையோமொயாமே -திருவாசிரியம் –
ஆலினிலையானுடைய இதிகாசம் இதர தெய்வங்களின் அவரத்வத்தையும்
ஸ்ரீ மன் நாராயணன் உடைய பரதத்வத்தையும் கையிலங்கு நெல்லிக் கனியாக தெரிவிக்க அவதரித்தது ஆயிற்று
பாலனதனதுருவாய் ஏழ் உலகுண்டு–ஆலினிலை மேல் அன்று நீ வளர்ந்த மெய்யன்பர்
ஆலன்று நீர் உள்ளதோ விண்ணதோ மண்ணதோ சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு —
அகடிதகட நா சாமர்த்தியம்
பிரமத்தின் உடைய அநீர்வசநீயமான சக்தி சாஸ்திரம் கொண்டே அறிய முடியும்-

எல்லாத்தையும் கொடுத்தாலும் தன்னை ஒழிய ஓர் அடி இடாத பெண்கள் ஆகையாலே-
நயாமி பரமாம் கதிம்-என்கிறபடியே அத்தவாளத்தலையைக் கவித்துக் கொண்டு போனான் என்றும்
கள்வன் கொல் -லில் -பிராட்டியை போலே ஒளித்துக் கொண்டு போக வேண்டாவோ
அது வேண்டாவே -ஊர் இசைந்ததே
அஹம் சர்வம் கரிஷ்யாமி என்கிறபடியே ஒருவனே எல்லா அடிமையும் செய்வானை யுடையனாய் நின்றாள்
சென்றால் குடையாம் -என்கிறபடியே எல்லா அடிமையும் செய்ய வல்ல ஒருவனையும் கொடுத்து விடாதே
நித்ய விபூதியில் உள்ளார் அனைவரையும் கொடுக்கிறது என் என்னில்
எல்லாரும் ஸ்வரூப லாபம் பெறுகைக்காக-

ஆலின் நிலையாய் -என்று பிரித்து
எம்பெருமான் திருவடியில் ஒதுங்குதல் பனை நிழலில் ஒதுங்கினால் போலே
எம்பெருமானார் திருவடிகளிலே ஒதுங்குதல் ஆலமரத்தின் நிழலிலே
ஒதுங்குவாரைப் போலே -அம்மங்கி அம்மாள் வார்த்தை –

——————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பாவை சாரம் – ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர –– —

January 23, 2018

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –

உங்களுக்கு வேண்டுவது என் -என்ன–
ஏதேனும் பிரதி பந்தகம் உண்டே யாகிலும் நீயே போக்கி-எங்கள் துக்கம் எல்லாம் கெட-விஷயீ கரிக்க வேணும் –
என்கிறார்கள்-இப்பாட்டில் –
கீழ்ப் பாட்டில் -ஏற்றிப் பறை கொள்வான் -இன்று யாம் வந்தோம் -இரங்கு -என்று இவர்கள் அபேஷிக்கையாலே
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் -என்ன —
நெடுமாலே -நீ புருஷார்த்தத்தை கொடுத்தாயாகில் —நாமும்
உன்னையும் உன் குணங்களையும்–ப்ரீதிக்கு போக்கு வீடாகப் பாடி–பட்ட வ்யசனம் எல்லாம் தீர்ந்து-
மகிழக் கடவோம் –என்கிறார்கள் –

பெண்காள் நோன்பு ஒழிய உங்கள் நெஞ்சிலே ஓன்று உண்டு போலே என்ன
நாங்கள் உன்னை அர்த்தித்து வந்தோம் என்ன
என்னை அர்த்தித்துப் பெற்றார் உண்டோ என்ன
எங்களோட்டையார் பெற்றார் உண்டு -என்கிறார்கள் –

அச்சுவை கட்டி என்கோ -அறுசுவை அடிசில் என்கோ —போற்றி அறுசுவை அடிசில் பார்த்தோம் –
ராம நாமாமமே கல்கண்டு அதில் ரசம் அறியாதவர் கல் திண்டு
இன்று யாம் வந்தோம் இரங்கு —இன்றி யாம் சேர்ந்த பொழுது –அன்று அங்கே அன்றிங்கே-
மற்று யாதும் மற்றியாதும்-கொண்ட பெண்டிர் -காதல் மற்றியாதும் இல்லை மற்று யாதும் பதம்
இன்றி யாம் வந்தோம்–ந பக்திமான் அகிஞ்சனன் – நோற்ற நோன்பு இலேன் -கார்பண்யம் –
ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம் போலே–ரத்னத்துக்கு பலகறை போலே நம் இடம் உள்ளவை அவனை பெற
உண்மையான கார்யம் இன்றைய பாசுரத்தில் சொல்கிறார்கள் -உன்னை அருத்தித்து வந்தோம் –
பறை தருதியாகில்–திருத்தக்க செல்வமும் -சேவகமும் யாம் பாடி -வருத்தமும் தீர்ந்து
உன்னிடத்தில் உன்னை அர்த்தித்து வந்தோம் -வேறு ஓன்று வேண்டி வர வில்லை–ஏக பக்தி விசிஷ்யதே
பகவத் கீதா சாரம் –
நாயமாத்மா பிரவசநேந லப்த்ய ந பகுணா ஸ்ருனாயா
என் இஷ்டம் -மாலை போட்டு வரிக்க -என்னுடைய சர்வாங்கத்தையும் முற்றூட்டாக கொடுப்பேன் –
பாத கமலங்கள் காணீரே -யசோதை -கண்கள் இருந்தவா குழல்கள் இருந்தவா -காணீரே –
த்வாம் தன் திருமேனியை நன்றாக பரிபூர்ணமாக தான் யாரை வரித்தானோ –
காட்டிக் கொடுக்கிறான் -ஒன்றும் ஒழிக்காமல் –
முதல் ஒருத்தி ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் காணுமாறு அருளாய் –
குன்றினால் குடை கவித்ததும் –கோல குரவை கோத்ததும் –
கன்றினால் விளவு எறிந்ததும் முதலா -நல் விளையாட்டு அனைத்தையும் –

ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பன்ன நின்ற நெடுமாலே யுன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

ஒருத்தி –
அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜனாநாம் சர்வாத்மா -என்கிறபடியே
சர்வ லோகங்களுக்கும் நியாமகனானவனையும் கூட நியமிக்குமவள் என்கையாலே
நாட்டில் தனக்கு ஒப்பற்று இருக்குமவள்-

ஒருத்தி மகனாய்-
சர்வ லோகங்களுக்கும் பிதாவானவன்–ஒருத்தி மகனாய் ஆவதே –
சக்கரவர்த்தி தபஸ்ஸூ பண்ணி மாணிக்கம் போலே நாலு பிள்ளைகளைப் பெற்றாப் போலே–
நால்வரும் கூடி தபஸ் ஸூ பண்ணி–ஒரு மகனைப் பெற்றபடி –

மகனாய் பிறந்து –
பிறந்த போதே–சொல்லிற்று செய்கை —சக்கரவர்த்தி திருமகன்-பெருமாள் -24 திரு நஷத்ரம்-
பக்வனான பின்பு பித்ரு வசன பரிபாலனம் பண்ணினான் –
இவன் பிறந்த போதே–ஆழ்வார்களையும் தோள்களையும் மறைத்தான் இறே –
சங்கு சக்கர கதாதர -உபசம்கரித்தான் —சொன்ன உடன் மறைத்துக் கொண்டான்
என் நின்ற யோனியுமாய் பிறந்து நாட்டில் பிறந்து படாதன பட்டு
மகனாய் பிறந்த –
மகனாய்-ஆய -கிருத் பிரத்யம் -இல்லாததை ஆக்குவது —குண்டலம் குண்டலீ கிருதம் –
மகன் ஒருவருக்கு இல்லாத -மகனாய் ஆனான்
கிருபையினால் —மகனாகவே இருக்கிறான்–மாதா பிதா பரதந்த்ரன்

பிறந்து –
ஆவிர்பவிக்க லாகாதோ —பத்து மாசம் வயிற்றிலே இருப்பார்கள் ஆகில் பன்னிரண்டு மாசம்
வயிற்றிலே இருந்து பிறக்க வேணுமோ –
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்டவிறே —
பிறந்தான் -என்கை அவத்யம் -என்று பரிஹரித்தான் ரிஷி
அது தான் அவத்யம் என்று பிறந்தான் என்கிறார்கள்–
நம்முடைய கர்மம் நம்மோடு அவனை சஜாதீயன் ஆக்கும்
அவனுடைய கிருபை நம்மை அவனோடு சஜாதீயன் ஆக்கும் —
அவன் பிறவி நமக்கு என்று கோல –நம் பிறவி அவன் மாதா பிதாக்கள் காலில் விலங்கு பட்டது படும் —
நம் பிறவி -நம்மையும் அவனையும் அகற்றுகைக்கு உடலாய் இருக்கும்
அவன் பிறவி இருவரையும் அணுகுகைக்கு உடலாய் இருக்கும் –
சிறையர் சிறைக் கூட்டத்தில் பிணை உண்கைக்குப் புகும் –
நியாமகன் சிறைக் கூட்டத்தை விடுவிக்கப் புகும்
புகுகையிலே இத்தனை நெடுவாசி உண்டு
அவன் பிறந்தால் இவன் பிறவி தனக்குத் தட்டாமை யல்ல
நம் பிறவியைப் போக்கி நம்மை தன் போலே யாக்க வல்லனாய் இருக்கும்
ஜென்ம கர்மா ச மே திவ்யம் இத்யாதி

அஷ்டாஷரீ பிரதிபாத்யனாய்க்–குண விக்ரஹ விபூதி விசிஷ்டனாய்–அவதரித்து –

சம்சாரிகள் தண்மை—பிறந்த குழந்தையை இருக்க ஒட்டாமல் —நெய்யாடல் சோபனம் சொல்லாமல்
எண்ணம் சுண்ணம் -பெரியாழ்வார் அனுபவம் தானே–கூரியம் கொட்டி -வாத்திய கோஷம் இல்லாமல்
சர்வேஸ்வரன் இங்கே வந்தால் நம்முடைய கர்மம் அவனுக்கு சாம்யம் கொடுக்கும்–
அங்கே போனால் தன்னுடைய சாம்யம் கொடுக்கும் கிருபை
தம்மையே ஒக்க அருள் செய்வர்–இணைவனாம் எப் பொருள்களுக்கும் -முதல் பிரமாணம்–
தன்னையே ஒக்க அருள் செய்வர்
நம் பிறவி அவனை விட்டு நீக்கும்–அவன் பிறவி நம்மை அவன் இடம் கூட்டிச் செல்லும்
ஜன்ம கர்ம மே திவ்யம் அவதார ரகசியம் புனர் ஜன்மம் இல்லை–
அவன் பெற்றவர் காலில் விலங்கு பட்டது படும்

யசோதை அனுபவம் ரிஷிகள் யாரும் சொல்ல வில்லையே–
பெரியாழ்வார் -எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே-
தொழுகையும் இவை கண்ட யசோதை –தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே ––
பரமபதம் அந்தமில் பேர் இன்பம் பரிச்சின்னம் ஆனதே
எனக்கு யார் நிகர் -ஆழ்வார் —வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும்–
வீங்கி இருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்ப போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கு–
காண்டல் இன்றி வளர்ந்தது -அந்தர்யாமி பட்டது படுகிறான் –
இரா மடம் ஊட்டுவாரை போலே உள்ளே கிடந்தது சத்தையை நோக்கி போகும்–
உன்னை அர்தித்து வந்தோம் –
உன்னிடம் வந்தோம் அல்லோம்
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னையே தந்த கற்பகம் –
ஆழ்வார்-அர்த்தி கல்பக ஆபத் சகன் -கதய த்ரயம் யாசகர்களை கல்பக மாக நினைக்கிறான் –

ஓர் இரவில் –
அவ்விரவிலே யசோதை பிராட்டிக்கும் பிள்ளையாக வேண்டுகையாலே-திருவாய்ப்பாடியிலே புக்கு –
நாய்க்குடலுக்கு நறு நெய் தொங்காதாப் போலே-
கம்சாதிகள் தன்மை ஸூ திகா கிருஹத்திலே-ஓர் இராத் தங்க ஒட்டிற்றிலை -என்கை –

ஓர் இரவு –
அவ்விரவை ஒக்கும் இரவு முன்பும் இல்லை பின்பும் இல்லை –
ஓர் இரவில் –
கால க்ருத பரிணாமம் இல்லாத தேசத்தில் வஸ்து-கால அதீனமான தேசத்தில் பிறப்பதே –
அவர்கள் தங்களோபாதியும் பெற்றிலன் -என்கை –
வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்து–வீங்கு இருள்வாய்–
அந்த இரவே நமக்கு தஞ்சம் -பிள்ளை உறங்கா வல்லி தாசர்

ஒருத்தி மகனாய் –
ஒருத்தி -இவனை மகனாய் பெற வேணும் -என்று ஆஸ்ரயிக்க-
அவளுக்கு அவதார ரசத்தைக் கொடுத்து-
இவளுக்கு லீலா ரசத்தை அனுபவிப்பித்த படி –
அந்ந வான் அந்நாதோ பவதி -இரண்டையும் உபநிஷத் சொல்லுமே —
அன்னம் கிடைக்கப் பெற்றவள் ஒருத்தி-தேவகி வசுதேவர்கள் /
அன்னம் புஜித்தவள் ஒருத்தி -யசோதை நந்தகோபர்கள் /
ஓர் அவதாரத்திலே யாதவ சஜாதீயனுமாய்-கோப சஜாதீயனுமாய் -ஆனபடி –
மகனாய்
பிறப்பில் புரை இல்லாதாப் போலே-இவள் மகனான இடத்திலும் புரை அற்று இருக்கை –
அவள் கரும்பின் கோதைக் கொண்டவோபாதி இவளும் கரும்பின் நடுவைக் கொண்டால் போலே இருக்கிறது –
கட்டவும் அடிக்க்கவும்படி -நியமிக்கப் படும்படி மகனாய் –
நந்தன் பெற்றனன்-என்னை கை பிடித்த -நல் வினை இல்லா -நாங்கள் கோன்-
மணி வாய் இடை முத்தம் தருதலும் நின் தாதையைப் போலே வடிவு கொண்டு-
தனக்கும் -வார்த்தை சொல்ல -வெகுளியாய் நின்று உரைக்கும்
மழலை சொல்லும்-பாக்ய ஹீனத்தால்-திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன்-
இசைந்து அம்மே என்றால் அடியேன் என்கைக்குக் கிட்ட இருக்கிறான் –

கும்குமு -வெண்ணெய்-திரண்டு வர —என்னது -பூதம் மிக -விழுங்கும்–
நான் விழுங்குவேன் முன்னம்–அம்மா நவநீதம் -போலே பூதம் இருக்கே –
நேர கேட்ட யசோதை–மந்த ஸ்மிதம் –
திருப் பிரதிஷ்டை பண்ணினவர்களில் காட்டிலும்–ஜீரணோத்தாரணம் பண்ணினவர்களே முக்கியர்-
ஈன்ற முதல் தாய் சடகோபன் -மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் –
இதனால் தான் இராமானுசன் தர்சனம் என்று பேரிட்டு நம் பெருமாள் நாட்டி வைத்தார் –

ஒளித்து வளரத் –
கம்சனுடைய விஷ திருஷ்டி படாமே வளர்ந்தபடி-நாட்டார் செய்வன செய்யப் பெறாதே–
கள்ளர் பட்டது படுவதே
திரு அவதரித்து இருக்கச் செய்தே அந்தர்யாமி பட்டது படுவதே –
உள்ளே இருக்கச் செய்தேயும் இவனில்லை என்று எழுத்திடுமவன்–முகம் காண சம்மதிக்குமோ -என்கை –
அந்தர்யாமியாய் மறைய நிற்கிறது -பிச்சேறின பிரஜை தாய் முன்னே நிற்கில் தாயைக் கொல்லும் –
அவள் பேர நிற்கில் தன்னை முடித்துக் கொள்ளும்-
அதுக்காக முகம் தோற்றாதே நின்று இரண்டு தலையையும் நோக்கும் மாதாவைப் போலே-
இசைந்து அம்மே -என்றால் ஏன் என்கைக்கு கிட்டே விருக்கிறபடி -என்றுமாம் –
பேர் சொல்லாதே ஒருத்தி -என்றது-அத்தத்தின் பத்தா நாள் -என்றவள் மகள் ஆகையாலே-
பயத்தாலே ஒளிக்கிறாள் –
அபிசரிக்கிலும் அதுவோ இதுவோ என்று சந்தேஹிக்கைக்காக –
ஒளித்து வளர
பிறந்த இடம்-வளர்ந்த இடத்திலும்–நாட்டார் போலே–பூதனை -போல்வார்–
அசுரர்கள் தலைப்பெய்யில் யவம் கொலாம் என்று ஆழும் என்னாருயிர் ஆன பின் போகல் -என்றும்
கண்ணா நீ நாளைத் தொட்டு கன்றின் பின் போகல் கோலம் செய்து இங்கே இரு -என்றும்
வானிடை தெய்வங்கள் காண -அந்தியம் போது அங்கு நில்லாய்-என்பவள் பிரதிகூலரை காண விடுவாளே-
கன்று பின் போகல்–சதா தர்சனம் பண்ணி அனுபவிக்க வேண்டிய வஸ்து–கள்ளர் பட்டது பட்டான்

லௌகிகர் அறியாத அத்விதீய காலத்தில் –
வாசுதேவ த்வாதச அஷரீ பிரதிபாத்யனாய் -குண விக்ரஹ விபூதி களாலே சங்குசித்து
ஸ்வரூப மாத்ரேண வளரா நிற்க –

ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்-ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்-
உபநயனம் -ப்ராஹ்மண ஜென்மம் கொடுக்கும் -ஸமாச்ரயணம்-
ப்ரபந்ந ஜென்மம் கொடுக்கும் -சடக்கென பண்ண வேண்டும் –

ஒருத்தி -திருக்கண்ணபுரம் அனுபவம் -ஸூ சகம்-
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் –
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடித் தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தன்-

ஒருத்தி மகனாய் –
வேண்டித் தேவர் இரக்க -திருவாய்மொழி -6-4-5-
இரண்டிலும் கண்ணன் தேவகி புத்ரனாய் அவதரித்ததும் -யசோதை புத்ரனாய் வளர்ந்ததும் –
கஞ்சனைக் கொன்றவாற்றையும் ஒரே க்ரமத்தில் அனுபவித்தார்கள்-
பிறந்தவாறும் வளர்ந்தவாரும் -திருவாய்மொழி -5-10-1-
இரண்டிலும் பிறந்தவாற்றையும் வளர்ந்தவாற்றையும் அனுபவம்-

தரிக்கிலானாகித் –
கிருஷ்ணன் வளரா நின்றான் -என்று கேட்ட பின்பு அவன் தரிக்க மாட்டிற்று இலன் –
ஈஸ்வர சத்தையையும் பொறாத ஆஸ்ரயம் இறே –
ஸ்வரூப மாத்ரேண-ஈஸ்வர சத்தையையும் பொறாதவனாய் –

தான் தீங்கு நினைந்த –
பயத்தாலே பரிந்து மங்களா சாசனம் பண்ணும் விஷயத்தில் தீங்கு நினைத்தது -துஷ் பிரகிருதி யாகையாலே
தான்
உத்தர ஷணத்திலே படப் புகுகிற பாடு அறியாத தான் –
தான் –
அஹங்காரம் காட்ட–தான் தீங்கு நினைந்த கஞ்சன்
தான்-போலும் என்று எழுந்தான் தரணி யாளன் -கோன் போலும் என்று எழுந்தான் ராவணன் வார்த்தை என்று கேட்டு பட்டர்
தீங்கு நினைந்த –
தங்கள் வாயாலே சொல்ல மாட்டாமையாலே -தீங்கு என்கிறார்கள்
அதாவது
பூதனை உள்ளிட்டாரை வரக் காட்டியும்-வில் விழவுக்கு என்று அழைத்து நலியத் தேடின படி –
உன்னை சிந்தையினால் இகழ்ந்த இரணியன்–நெஞ்சில் பொல்லாங்கு என்று அறிய கை தொட்டு அளைந்து
அளந்திட்ட தூணை உளம் தொட்டு -ஹிருதயத்தில்–கை கொள்ளும் இடத்தில் மித்ர பாவேனே -போதுமே
சாது சனத்தை நலியும்–தீய புந்தி கஞ்சன்

கருத்தைப் பிழைப்பித்துக் –
பூதனை முதலானோர் நலிவுகளைப் பண்ணப் புக —அத்தைத் தப்பி தன்னை நமக்குத் தந்தபடி –
அவன் நினைவை அவன் தன்னோடு போம்படி பண்ணி -என்றுமாம் –
நூற்றுவர் மேல் வைத்து–அசுரர் தீ செய் குந்தா–அனுமான் -வாலில் நெருப்பு ஜில்–ஜனகதாமஜா சோக வயிற்று நெருப்பு
தேவகி வயற்றில் பிள்ளை–அண்ணன் வயிற்றில் நெருப்பு–கஞ்சன் –நெருப்பு கரு முகில் எந்தாய் -தேவகி வயிற்றில் நீர்
கம்சன் -கண்ட காட்சியில் -பாபம் கழிய நின்ற நிலை —வெந்நரகம் சேரா வகையே சிலை குணித்தான் இதுவே நரகம்
இப்படி சொன்னவரை பார்க்க வேண்டும்–நஞ்சீயர் மடலும் தமிழும் முன்பே தெரியும்

கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற –
கம்சன் அநாதி காலம் சஞ்சிதமான பாபம் இத்தனையும்-கண்ட காட்சியிலே அனுபவித்து அறும்படி நின்றவன்
ஆஸ்ரிதர் வயிற்றில் நெருப்பை கம்சன் வயிற்றில் கொளுத்தினவன் என்கை- –

தீங்கு -திருப்பாவை -25
பொல்லா -திருப்பாவை -13
இன்னது என்று சொல்ல மாட்டாமையாலே தீங்கு பொல்லா என்கிறார்கள்
இராவணன் பொல்லாங்குக்கு பாசுரம் இட்டு சொல்ல முடியாமல் -பொல்லா -என்னும் அளவே சொல்கிறார்கள்
கம்சனுடைய தீமையும் வாசாம் அகோசரம் -என்றபடி

தான் தீங்கு நினைந்த -திருப்பாவை -25
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த -திருவாய்மொழி -2-6-6-
நினைந்த -மனஸ் சஹ காரம் உண்டாவதே
உக்தி மாதரமான அளவில் நலியாதே நெஞ்சில் பொல்லாங்கு சோதித்தால் ஆய்த்து கை விடுவது –
கைக் கொள்ளும் இடத்து கழுத்துக்கு மேலும் அமையும் –
கைவிடும் இடத்தில் அக வாயிலும் உண்டு என்று அறிந்தால் அல்லது விடான் –
அவன் விடுவது புத்தி பூர்வம் பிரதி கூல்யம் பண்ணினவரை
கைக் கொள்ளுகைக்கு மித்ர பாவம் அமையும் –

நெடுமாலே –
இது எல்லாம் பட வேண்டிற்று –ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமோகத்தால் -என்கை –
அப்போது ஸ்ரீ வசுதேவர் பக்கலிலும் ஸ்ரீ தேவகியார் பக்கலிலும்-திரு உள்ளம் மண்டின படி என்றுமாம் –
அவளுக்கு முலை சுரவா நின்றாது ஆகில் –இவள் அழுது முலை உண்ணா நின்றான் ஆகில்
உமக்கு என்ன -சேதம் விசாரம் பட்டர் நஞ்சீயர்

அநவரதம் மங்களா சாசனம் பண்ணக் கடவ விஷயத்திலே–அவனால் ஒரு உபத்ரவம் உண்டாய்
பொல்லாமையை நினைக்கை அன்றிக்கே —தானே–த்வேஷத்தை நினைந்த அபிப்ராயத்தை வ்யர்த்தமாக்கி
அஹங்காரத்தின் உடைய வயிற்றிலே–நெருப்பைக் கொளுத்தினாப் போலே ஜ்வலித்து-
அவன் அருகே நின்ற ஸ்வ சேஷ பூத சேதன விஷய–வ்யாமோஹ அதிசயத்தை உடையவனே –

உன்னை –
அர்தித்வத்தில் நிரபேஷனான உன்னை –ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் இரப்பாளனாய்
இவ்வளவும் வந்தது ஆர் அபேஷித்து –
நெடுமாலே உன்னை அர்தித்து வந்தோம் –
பண்டே வ்யாமுக்தனான உன்னை அர்த்திக்கையாலே–பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம் –
அர்த்தித்தின் அளவு எங்கள் வடிவைப் பார்க்க அமையும் –
பிறந்து காட்ட வேண்டாம்–
வளர்ந்து காட்ட வேண்டாம்–
கொன்று காட்ட வேண்டாம்–
உன்னையே -கேட்டு வந்தோம்
உன்னுடன் கேட்டு வேறு பிரயோஜனம் பெற வர வில்லை–
அர்த்தித்து–
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கு தன்னை தன்னை தந்த கற்பகம்

பறை தருதியாகில் –
எங்களுக்கு உத்தேச்யம் செய்குதியாகில்-நீ புருஷார்த்தத்தை கொடுப்பாயாகில்
ஆகில் -என்றது
நம்முடைய அர்த்தித்வாதிகள் அப்ரயோஜகம் –அவன் நினைவாலே பலம் என்கை –பொது நின்ற பொன் அம் கழல் சடாரி
உன் அழகாலே பிழைப்பியாதே செய்தருளப் பார்ப்பாயாகில் -என்னவுமாம் –
அவன் நினைவே பல சாதனம்–இவன் எல்லாம் செய்தாலும்–
அவன் அல்லேன் என்ற வன்று ஸ்வ தந்த்ரனை வளைப்பிட ஒண்ணாதே
ஆகையால் தருதியாகில் -என்கிறார்கள்–
எத்தனையேனும் மேலானவர்களை எத்தனையேனும் தாழ்ந்தவர்கள்
திரு உள்ளம் ஆகில் செய்து அருள வேணும் -என்று இறே சொல்வது

திருத் தக்க செல்வமும் –
ஸ்ரீய பதித்வத்தால் வந்த சம்பத்தையும் —
பிராட்டி ஆசைப் படும் சம்பத் -என்னவுமாம்
பெரிய பிராட்டியாருக்கு தகுதியான-ஸ்வரூப ரூப குண விக்ரஹ விபூதி -விசிஷ்டனாய் இருக்கிற செல்வத்தையும் —
உன் தன்னோடு உற்றோமே ஆவோம் இதுவே உத்தேச்யம் சிற்றம் சிறு காலில் சொல்வோம்
திருத் தக்க செல்வமும் -சம்ப்ரதாயம் திரு ஆராதனம் -திருத் துழாய் -திரு மடப்பள்ளி –
திரு சப்தம் சொல்லாமல் சொல்லி திருடன் வர டன் வந்தான் -கதை –திரு மால் உரு ஒக்கும் மேரு —
அம் மேருவில் செஞ்சுடரோன் –சின்னமே பிதற்றவே நிற்பதோர் -திருமால் -எங்கே வரும் தீவினையே ஆழ்வார் –
ஸ்ரீ மத் ருக்மிணி பிராட்டி திருக் கல்யாணம் பர்யந்தம் ஸ்ரீ மத் பாகவதம் -பூர்ண அவதாரம் அன்றோ –

சேவகமும் –
அத்தை காத்தூட்ட வல்ல வீரியமும்-வீர சரிதையையும்
செல்வமும் ஆற்ற படைத்தான் மகனே செல்வம் —சேவகமும் -கப்பம் தவிர்க்கும் கலியே -வீரம்

யாம் பாடி –
உன் பேர் சொல்லப் பெறாத நாங்கள்–உகப்போடே அத்தைச் சொல்லி -அதுவே தாரகமான நாம் பாடி –

வருத்தமும் தீர்ந்து –
உன்னைப் பிரிந்து படும் துக்கமும் தீர்ந்து–பிரிந்தார் படும் பாடறிய–உன்னை நீ பிரிந்து அறியாயே –

மகிழ்ந்து –
உம்மைத் தொகையால் கைவல்யம் போலே துக்க நிவ்ருத்தி மாத்ரமே அன்றி–ப்ரீதிக்கு போக்கு விடும்படி யாக வேணும்-
உன்னைப் பிரிந்து பட்ட வ்யசனம் எல்லாம் நிஸ் சேஷமாக தீர்ந்து -ஆனந்திக்கக் கடவோம் –

வருத்தம் தீர்ந்து–மகிழ்ந்து–
கேவலர் போலே இல்லை–அநிஷ்ட நிவ்ருத்தி வியாதி போக்க–இஷ்ட பிராப்தி அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம்
ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடுவது ஆனந்தம்–நினைந்து இருந்தேன் சிரமம் தீர்ந்தேன் –
வருத்தம் தீர்ந்து–உகந்தென் என் உள்ளம் -மகிழ்ந்து –
சாதனமே பலம் -இங்கு-அனுசந்தானம்–தூய அமுதை பருகி மாய பிறவி மயர்வு அறுத்தேன்–
வருத்தம் தீர சேவகம் பாடி–மகிழ-வீவில் இன்பம்
அபிமத சித்தி உண்டானதே –

சேவகமும் யாம்பாடி–வருத்தமும் தீர்ந்து–மகிழ்ந்து–உன்னை அருத்தித்து வந்தோம் -என்று அந்வயம் –
மகிழ்ந்திடுவோம் என்றது ஆயிற்று-

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து –
திருத்தக்க செல்வமும் –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -எம்பெருமானார் -பிராட்டி ஒத்த செல்வம் -எம்பெருமான் அடி சேர்ப்பிக்கை
சேவகம் -பரதவ சௌலப்யம் இரண்டையும் பாடி–பாங்கு அல்லர் ஆகிலும் திருத்திப் பணி கொண்டு
இராமுனுஜா இம் மண் அகத்தே இருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் –
பணி மானம் பிழையாமே யடியேனைப் பணி கொண்ட –
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே
திருவுக்கும் திருவாகிய செல்வன் -சுவையன் திருவின் மணாளன்
பரம ரசிகன் இந்த ரசிகத்துக்கு ஊற்று வாய் சொல்கிறது
மேல் திருவின் மணாளன் என்று-பெரிய பிராட்டியார் அகலகில்லேன் இறையும் என்னப் பிறந்தவன்

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து —
வருத்தம் -ஐஸ்வர்யம் –வருத்தமும் -கைவல்யம் தீர்ந்து பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் –
அவதார ரஹஸ்யம் -ஜென்மம் கர்மம் -மகனாய் -பிறந்து -மகனாய் -ஒளித்து வளர்ந்தது அறிந்து -அந்தர்யாமி பட்டது பட்டு –
புனர் ஜென்மம் அற்று என்னை அடைகிறான் -கீதா உபநிஷத் அர்த்தம் இதில்
புருஷோத்த வித்யையாலும் -பக்தி யோக நிஷ்டனுக்கு இந்த இரண்டும் உண்டே –
நெடு மால் இதில் -மால் -அடுத்து -அவா அற சூழ்வானே
உன்னை அர்த்தித்து வந்தோம் -உன்னிடத்தில் இல்லை -உன்னையே பலமாக கேட்டு வந்தோம் /
இத்துடன் ஐ ஐந்து முற்றி அடுத்து ஐந்தும் –
சாம்யா பத்தி- சாயுஜ்யம்- சரணாகதி-அதுக்கு பலம் அடுத்த நான்கு பாசுரங்கள்-
ஐந்தாவதில் தானான பாசுரத்துடன் நிகமிக்கிறாள்

நெடுமால்–அச்யுத பதாம்புஜ யுகம ருக்ம வ்யாமோஹத
நித்ய கைங்கர்ய அபேஷை 16 தடவை கத்ய த்ரயம்-
மெய் தானா -ராமோ த்வைய இரண்டாவது வார்த்தை பேசாதவன்-
இது மயைய உக்தம் நித்ய கைங்கரோ பவோ-உற்றோமே ஆவோம் உனக்கே ஆட் செய்வோம்-

நாராயணனே நமக்கே பறை தருவான் -உபக்ரமம் -இதில் உன்னை அர்த்தித்து வந்தோம் -பிரார்த்தித்து இறைஞ்சி –
பறை தருதியாகில் -பிரார்த்தனையை அபேக்ஷித்து இருப்பானா -வியாபாரம் இல்லையே –
கேட்டதற்காக கொடுக்க வில்லை -கேட்ட பின்பு கொடுப்பான் -பசி சாப்பிட காரணம் இல்லை –
கால தத்வம் உணர்த்த ஸ்ருஷ்ட்டி -காலதத்வம் அசித் வர்க்கம்-ஸ்ருஷ்டிக்கு காரணம் இல்லை –
கிருபை உந்த தானே ஸ்ருஷ்ட்டி –
இதுவரை அர்த்தித்து வராமை எங்கள் குற்றம் –
இங்கு ஆகில் -சங்கை எதனால் -மாரி யார் பெய்கிற்பார் -ஏரி வெட்டி வைப்பதே கர்தவ்யம் –
அர்த்திதார்த்த பரிதாக்ஷர தீஷிதம் கொண்டுள்ளான் –
ஒருத்தி -இங்கே கௌசல்யா ஸூப்ரதாரம் அங்கும் –
அஷ்டாக்ஷரம் –பிறந்த கண்ணன் –துவாதச அக்ஷரம் -வா ஸூ தேவ மந்த்ரம் -12-ஆக வளர்ந்து –
அவனே இவன் என்று தெரியாமல் ஒளித்து -வளர்ந்து
ஷட் அஷரி விஷ்ணு நடுவில் விட்டு விட்டு
ரிக் -சாமம்-திரு விருத்தம் பிறந்து -மறைந்து -திருவாய் மொழி -11-பாசுரமாக வளர்ந்து -அனைவரும் அறியாமல் ஒளித்து –
திரு விருத்தம் -திரு வாசிரியம் -பெரிய திருவந்தாதி இம் மூன்றில் சுருக்கிய ஐந்தும் –
அர்த்த பஞ்சகமும் வளர்ந்து -திருவாய் மொழியிலே – உண்டே – என்றுமாம் –
அர்த்த பஞ்சகம் அஹங்காராதிகள் அறுத்த பஞ்சகம் -கந்தல் கழிந்தால் கௌஸ்துபம்
அர்ச்சாவதாரம் என்றோ -இன்று வளர்ந்து பரவி -சர்வான் தேவன் நமஸ்க்ருதி பெருமாளுக்கு /
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான்- கிருஷ்ணுக்கும் உண்டே
வெற்பு என்று வேங்கடம் பாடும் -நாயகி பாவம் பிறந்து -கீழில் மேலில் இல்லை -நிழலாடி இதில்
மேலே வளர்ந்து தோழி தாய் மகள் அவஸ்தைகள்
அகாரம் –சம்பந்தம் உபாயம் உபேயம் -அனைத்தும் -பிரணவமாக வளர்ந்து -நமஸ் -நாராயணா -த்வயம் சரம ஸ்லோகமாக வளர்ந்து
அகாரம் -நாராயண -ஸ்ரீ யபதி -மாம் -தொட்டு உரைத்த சொல்–த்வ்யத்தின் ஆழ் பொருள் –
அஹம் -இப்படி ஒளித்து வளர்ந்து -வியக்தமாக விஸ்திருதம் –
ப்ராப்ய நிஷ்கர்ஷம்-எம்மா வீட்டில் –வாசிக கைங்கர்யம் புகழும் நல் ஒருவன் என்கோ -வளர்ந்து ஒழிவில் காலம்
நாராயணன் -அஷ்டாக்ஷரம் / கண்ணனாக வளர்ந்து வாஸூ தேவன் –
ஆனைத்தாலி கொழுமோர் -கொடுத்து ரஷிக்கும் படி ஒளித்து வளர்ந்து

திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து என்னுமா போலே
ஓர் இரவில் ஒளித்து வளர – யாதவ பிரகாசர் -கங்கா யாத்திரை -விந்தியாடாவியில் ஒளித்து
ஓர் இரவில் சத்ய வ்ரத க்ஷேத்ரம் வந்த வ்ருத்தாந்தம் ஸூஸிதம்
தரிக்கிலானாகி தீங்கு நினைத்த யாதவ பிரகாசர் இடம் தப்பித் போம்படியும் -அவனையும் உஜ்ஜீவிப்பித்து அருளிய படியும்
நெருப்பு அன்ன நின்ற நெடுமால் -கோபிகள் பாயாக்னியை கொண்டே கம்சன் வயிற்றில் நெருப்பாக நின்றானே
அப்படியே இராமானுசன் இத்தலத்து உதித்து –இறந்தது வெங்கலி –கலியும் கெடும் கண்டு கொண்மின்

ஏதேனும் இப்பிரவ்ருத்திக்கு ஒரு பிரதி பந்தகம் உண்டே யாகிலும் நீயே போக்கி
எங்கள் துக்கம் எல்லாம் கெட விஷயீ கரிக்க வேணும் என்கிறார்கள் –
ஸ்வரூப லாபத்தோ பாதி துக்க நிவ்ருத்தியும் தத் ஆஸ்ரயணத்தாலே -என்கிறது –
இத்தால் ஸ்வரூப லாபம் அத் தலைக்கே கூறானவோபாதி துக்க நிவ்ருத்தியும்
அத்தலைக்கேயாம் என்னும் இவ்வர்த்தம் சொல்லுகிறது –

——————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பாவை சாரம் – அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி –– —

January 23, 2018

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –

தங்கள் அபேஷித்த படியே செய்தருளக் கண்டு வந்த கார்யத்தை மறந்து அத் திருப்பள்ளி யறையில் நின்றும்
திவ்ய சிம்ஹாசனத்தளவும் நடக்கிற போதை நடை அழகுக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –
அவன்-திருப் பள்ளி அறையில் நின்றும் திவ்ய ஆஸ்தான மண்டபத்துக்கு எழுந்து அருள
அந்நடை அழகிலே ஈடுபட்டு-வந்த கார்யத்தை மறந்து மங்களாசாசனம் பண்ணுகிறார்கள் –
காணும் அளவு இறே -அது வேணும் இது வேணும் -என்பது
கண்டால் அவனுக்கு பரியும் இத்தனை இறே-

யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் முந்திய பாசுரம் –
கீழே 8 பாசுரம் -தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் ஆவா என்று ஆராய்ந்து அருள்–
கிருபை செய்து அருள சித்தம்
எங்கள் கார்யம் நீங்கள் செய்கிறீர்களே ரிஷிகள் இடம் பெருமாள் ஷமை கேட்டது போலே-
பேற்றுக்கு த்வரிக்கையும் பேறு தப்பாது என்று
இங்கு நாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள –
பிரயோஜனாந்த பரர்கள் அன்றே -–அநந்ய பிரோஜனம் -அநந்ய-இரண்டும்
பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் வேண்டாமே –பெரியாழ்வார் பரிகரங்கள் என்று அறிந்து கொண்டார் –
சுதர்சன பட்டர் ஸ்ரீ ராம பட்டர் பேரன்-சிநேகம் அஸ்தான பய சங்கை சம்பந்த விசேஷம்-
ப்ரீதி-சிநேகம் -பரிச்சயம் -சாமான்ய பதம்-
சிநேகம் உயர்ந்த பதம்-குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்-
அவத்தங்கள் விளையும் -ஆ பின் போகேல் -நம் ஆழ்வார்-
ஸ்நேகாது அஸ்தானே ரஷண சார்ங்க -சங்கு உறகல் உறகல்-

தங்கள் மநோ ரதங்களை மறந்து தண்ட காரண்ய வாசிகள் போலே-
அயோத்யாவாசிகள் தேவதைகள் உட்பட பிராத்தித்தால் போலேயும்
சக்கரவர்த்தி பரசுராமன் இடம் பிரார்த்தித்தால் போலேயும்-
ஸ்ரீ கௌசல்யையார் மங்களா சாசனம் செய்தால் போலேயும்
வசுதேவர் தேவகி கண்ணன் சங்கு சக்கரங்களை மறைக்க வேண்டினால் போலேயும்–
வஸ்துவில் உள்ள ஆதாராதிசயம் தூண்ட-மங்களா சாசனம்

மங்களா சாசனத்தின் மற்று உள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்து அளவு தானன்றி பொங்கும்
பரிவாலே வில்லி புத்தூர் பட்டர் பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்

ஆதலால் அபயம் என்று -பொழுததத்தே அபய தானம் ஈதலே கடப்பாடு கம்பர் பட்டர் சிஷ்யர்
இயம்பினார் என் மேல் வைத்த காதலால் —பிரேமத்தால் ஆஷேபித்தீர்கள் –
ஆங்கு ஆராவாரம் அது கேட்டு –அழல் உமிழும் பூம் கார அரவணையான் –
ஹாவு ஹாவு ஹாவு -சாம கானம் கேட்டு-

நப்பின்னைப் பிராட்டியோடே கூடி திவ்ய ஸிம்ஹாஸனத்திலே இருந்த இருப்பிலே
சாத்தி அருளின அத்தவாளந்தலை மேலே பறக்க
திருவடிகளைக் கண்டு அத் திருவடிகளைத் திரு முலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொண்டு
உன் சேவடி செவ்வி திருக் காப்பு -நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்கிறார்கள் –
அர்த்திகளாய்ச் சென்றாலும் தந்தாமுடைய புருஷார்த்தத்தை விஸ்மரித்து
மங்களாசாசனம் பண்ண வேண்டும்படியான விஷய வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது –
அப்படியே செய்கிறோம் -என்று ப்ரதிஜ்ஜை பண்ணின படியைக் கண்டு -தாங்கள் வந்த காரியத்தை மறந்து –
தத் காலீநமான அழகிலே ஈடுபட்டு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்

வியாக்யானம் –

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி —
அன்று –
தன் விபூதியை மகாபலி அபஹரிக்க நோவு பட்டு இருக்கிற அன்று–
தன்னைப் பிரிந்து நாங்கள் ஆர்த்தியால் நோவு பட்ட இன்று –
ஜகத்தை மகா பலி யினுடைய அபிமானத்தின் நின்றும் மீட்ட அன்று –
எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தின் நின்றும் மீட்ட இன்று –
நாட்டுக்கு எல்லாம் தன் திருவடிகளை தூளிதானம் பண்ணின அன்று–
அழகையும் சீலத்தையும் எங்களுக்கு தூளிதானம் பண்ணின இன்று-
இது இறே ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் சாம்யம்

இவ் வுலகம் அளந்தாய்-
பிராட்டிமார் பூ தொடுமா போலே கூசிப் பிடிக்கும்-திருவடிகளைக் கொண்டு–
காடும் ஓடையும் அகப்பட அளப்பதே -என்கை –
அன்று எல்லை நடந்து மகாபலி பக்கல் நின்றும்–பூமியை மீட்டுக் கொண்டால் போலே
நடை அழகைக் காட்டி விச்லேஷத்தின் நின்றும்–மீட்டுக் கொண்டான் -என்கை –

யடி போற்றி-
தாங்கள் சொல்லும் அளவில் புறப்பட்டு–ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு–உலாவி அருளின படி –
திரு உலகு அளந்து அருளின ஆயாசம் போரும் என்று மங்களா சாசனம்–பண்ணுகிறார்கள்
திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இறே இட்டது —
இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே –
திரு உலகு அளந்து அருளின அன்று–
இந்த்ரன் பிரயோஜனத்தை கொண்டு போனான்
மகா பலி ஔதார்யம் பெற்றுப் போனான்–
தாங்கள் அன்று உதவப் பெறாத இழவு தீர–திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் என்றுமாம் –

அடி போற்றி –
உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்னுமவர்கள் இறே-
நடந்த சரித்ரமே -ஆழ்வார் நடந்தார்க்கு இடம் நீர் மலையே -கோவல் நகர் நடந்தானா அளந்தானா –
நடந்த கால்கள் நொந்தவோ -வயிறு பிடித்து-தாளால் உலகம் அளந்த அசைவோ கொல் -வாளாது –
மடியாது -அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ இப்படி -படியாய் -திருக் கோளூர் பாசுரம்
அது மூன்று அடி–
இது நாலடி பரிவின் கார்யம்–உலவி அருளினது —என்றைக்கோ நடந்த -கதே ஜலே சேது பந்தம் -இன்று மங்களா சாசனம்
வடிவு அழகையும் சீலத்தையும் தூளி தானம் பண்ணி பூரணமாக —பட்டுப்பையுடன் ஆபரணம்
பசும்பொன் தூள் இருக்குமே -இவ்வுலகம் காடும் ஓடும் காடின்யம்-இருப்பார் வன்மை -இவ் உலகம்
சீல வயோ வருத்தங்களால் -துல்யர் என்று கவி பாட வல்ல -பிராட்டி மான் தோலால் மறைத்து –
பிராட்டி கடாஷம் -ஐஸ்வர்யம் பறித்து கொள்ள முடியாதே–அவளும் கடக்க நிற்கும் படி
வடிவு இணை இல்லா மலர் மகள் நில மகள் எடுத்து கழிக்க முடியாத பூமி பிராட்டி
கூசிப் பிடிக்கும் மெல்லடி கொண்டு–இவ் வெவ்விய உலகம் வ்யாபரிப்பது-உகக்கவும் கூட அறியாத பூமி –
கொண்ட கோல குறள் உருவாய் –பண்டு கொண்ட முன் -மூன்று சப்தங்கள்-கொண்ட கோலம் –
இவனே நினைத்தாலும் கொள்ள முடியாத கோலம் யாசிக்க நினைத்த பொழுதே
திருமேனி சுருங்கி-கொள்ள வேணும் என்று
அவனே நினைத்தாலும் அப்படி கொள்ள முடியாத அழகு–பிரமாணாதித்தார் பெற்ற பேறு –
அடி போற்றி அக்காலத்தே சிலர் இழவு உடன் போனார்கள் -மகாபலி
என் அப்பன் அறிந்திலன் என்றார் சிலர் -நமுசி -வானில் சுழற்றிய–சிலர் பிரயோஜனங்கள் கொண்டு போக
பரிவுக்கு ஆள் இல்லை என்று இவர்
அடி போற்றி திசை வாழி எழ –
எழுவார் -பொருள் -வாங்கி -போற்றி எழுவார் -விடை கொள்வார் -வழுவா வழி நினைந்து வைகல் தொழுவார்

போற்றி –
மன்னன் தேவர் -மாயக் கூத்து கண்டு மகிழ்ந்து–செவ்வடி -அடி போற்றி குடி வழக்கம்
திரு உலகு -சென்னி மேல் ஏறக் கழுவினான் -ஐஸ்வர்யம் ஆன செயல்கள் -அங்கே நின்று ஈரடியால்
ஒன்றே -நிலம் முழு தாக என்னை இங்கே அளந்தது-என்னடா நீ அளக்கிறாய் -ஆழ்வார் கேட்கிறார் –
அடுத்த அடி வைக்க வேண்டி இருந்தது இல்லை -அடுத்த சரித்ரம் நினைந்தது
இரண்டாம் அடியில் தாவடி இட்டு-வருத்தமற செய்தான்
ஜாம்பவான் -பறை-
பிரகிருதி சம்பந்த நிபந்தனமான அஹங்காரம் ஜகத்தை ஆக்ரமித்த அன்று –
அஹங்கார க்ரஸ்தமான இந்த லோகத்தை
அஹங்காரத்தின் நின்றும் மீட்டு தன் திருவடிகளாலே அளந்து தனக்காக்கிக் கொண்டவனே –
உன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் –

சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
அழகுக்கு இலக்கு ஆகாதாரை–அம்புக்கு இலக்கு ஆக்கின படி –
சென்றங்கு –
புலி கிடந்த தூற்றிலே செல்லுமா போலே–பிராட்டியைப் பிரித்த பையல் இடத்தே செல்லுவதே –
சென்று –
வழிப் போக்கிலே -கர கபந்த விராதாதிகளை–அழியச் செய்தபடி -என்றுமாம் –
அங்கு –
நின்ற விடத்தே நின்று–பூ அலர்ந்தாப் போலே அனாயாசேன அளந்த–அளவன்றிக்கே
கானகம்படி உலாவி உலாவி -என்னுமா போலே–கொடிய காட்டிலே அந்த திருவடிகளைக் கொண்டு நடப்பதே -என்கை
எவ்வாறு நடந்தனை -என்று வயிறு பிடிக்கை–இவர்களுக்கு குடிப் பிறப்பு –
ராமவதாரம் தேவத்வம் கலவாத படி-
நாராயணோ தேவ மானுஷ்யம் மன்யே ராமம் தசரதாத்மஜம் சஸ்திர அஸ்த்ர பட உலவி –
சென்று –
மூவடி சென்ற இடம் அழகுக்கு -பூ அலர்ந்தால் போலே -இங்கு சென்ற திருவடி
தென்னிலங்கை-
அழகியதான கோட்டையையும் அரணையும் உடைத்தாய்–
குழவிக் கூடு கொண்டாப் போலே–ஹிம்சிகர் சேர்ந்த தேசம் –
செற்றாய் –
ஆஸ்ரித விரோதிகள் தனக்கு சத்ருக்கள் -என்கை
திறல் போற்றி
மதிளுக்கு மதிள் இடுமா போலே–மிடுக்குக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்னும்–அவர்கள் ஆகையாலே–குடிப் பிறப்பாலே வந்தது –
இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதும் -என்னுமவர்கள் இறே-

இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்ட அளவு அன்றிக்கே
அந்த அஹங்காரத்துக்கு பிறப்பிடமான இடத்தே சென்று –
தர்ச நீயமான பிரகிருதி சம்பந்த நிர்வாஹகமான அஹங்காரத்தை அழித்தவனே-
உன்னுடைய பராவிபவன சாமர்த்தியத்துக்கு பல்லாண்டு –

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி-
ராவணனைப் போலே -விரோதி என்று –இறாய்க்க ஒண்ணாத அபாயம்-
பொன்ற
மாரீசனைப் போலே குற்று உயிர் ஆக்கி மேல் –அநர்த்தம் விளைக்க வையாதே -முடிக்கப் பெற்ற படி –
புகழ் போற்றி –
தாயும் கூட உதவாத தசையிலே-அனாயாசேன திருவடிகளாலே சகடாசுரனை அழித்த புகழ் –
போற்றி –
ராமாவதாரத்தில் காட்டில் மிகவும் அதிகமாக மங்களா சாசனம் பண்ண வேண்டி இருக்கை –
ராமாவதாரத்துக்கு பிதா -சம்பராந்தகன் -ஊர் -திரு அயோத்யை-புரோஹிதர் -மந்த்ரவாதிகளான வசிஷ்டாதிகள் –
பிள்ளைகள் -ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்தவர்கள் –குணவான்களும் பிள்ளைகள் –
இங்கு மாதாபிதாக்கள் -சாது இடையர்–ஊர் இடைச்சேரி–கம்சாதிகள்
எதிரிகள் ஸ்ரீ பிருந்தாவனத்திலே முளைத்து எழும் பூண்டுகள் அடைய ராஷசர்கள்–
தமையன் ஒரு ஷணம் தப்பில் பாம்பின் வாயிலே விழும் தீம்பன் –
பூதனாதிகளாலே பிறந்த அபாயங்களுக்கு ஒரு அவதி இல்லை-
ஆன பின்பு இனி மங்களா சாசனம் ஒழிய காவல் இல்லை –

காம குரோதங்களை–ஸ்வரூபேண நசிக்கும்படி -உன் திருவடிகளாலே உதைத்தவனே —
உன்னுடைய யசஸ்ஸுக்கு பல்லாண்டு –

கன்று -இத்யாதி –
சத்ருவை இட்டு சத்ருவை எறிந்தால்–சங்கேதித்து வந்து இருவரும் ஒக்க
மேல் விழுந்தார்கள் ஆகில் என் செய்யக் கடவோம் -என்று வயிறு பிடிக்கிறார்கள் –
குஞ்சித்த-மடித்த – திருவடிகளுக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –
கன்று குணிலா –
கன்றை எறி தடியாக–குணில் -எறிதடி-கரம் போற்றி என்னாமல் அடி விடாதவர்கள் ஆகையாலே
கழல் போற்றி என்கிறார்கள் –
லோபத்தை எறிதடியாக எறிந்து நசிப்பித்தவனே – உன்னுடைய குஞ்சிதமான திருவடிகளுக்கு பல்லாண்டு –
எறிவதாக இச்சித்து நடந்த போது–குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலையும்–
அகவாயில் சிகப்பையும் கண்டு காப் பிடுகிறார்கள்
அடி போற்றி கழல் போற்றி–நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும்–
சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள்-

கன்று குணிலா எறிந்தாய் –
விளங்கனிக்கு எறிந்த விஷயம் அஸ்பஷ்டம்
கன்று கொன்று விளங்கனி எறிந்து -கலியன் -9-10-7-அஃது ஸ்புடமாகிறது இதில் –

இவ்வளவில் பிரதிகூலர் விஷயத்தில் செய்யும் அம்சத்தைச் சொல்லிற்று –
இனி அனுகூலர் பிரதி கூலித்தால் செய்யும் அம்சத்தைச் சொல்லுகிறது –

குன்று இத்யாதி –
இதுக்கு முன்பு இந்தரனுக்காக செய்த செயல் —
இப்போது அவன் தான் பகையான படி —மலையைக் குடையாக எடுத்து
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தைப் போக்கின படி —
அனுகூலன் பிரதி கூலித்தால் செய்யலாவது இல்லை இறே-
குணம் போற்றி –
பசி க்ராஹத்தாலே கை ஓயும் தனையும் வர்ஷிக்க–மலை எடுத்துக் கொண்டு நின்ற ஆன்ரு சம்சய குணத்துக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
தன்னுடைய ரஷ்ய வர்க்கத்தை மலையை எடுத்து நோக்கின குணம் -உண்பது கொண்டால்
உகிர் கொண்டு தலையை அறுக்கவோ -என்று மலையை எடுத்த ஆந்ரு சமசய குணம்-
இந்த்ரன் சிலா வர்ஷம் வர்ஷித்த போது–பர்வதத்தை குடையாக கொண்டு–
கோ கோப ரஷணம் பண்ணினாப் போலே –
அஞ்ஞான கார்யமான அஹங்காரம்–இவ் வதிகாரிக்கு விஷய ப்ராவண்யத்தை உண்டாக்குவதற்கு-பிரதி கிரியையாக
வைதிகமாய் கைங்கர்ய ரூபமான–விஷய ப்ராவண்யத்தை உண்டாக்கி–
ஸ்வ பிரபன்ன ஜன ரஷகனாம்படியைச் சொல்லுகிறது –
ஆக இப்படி ஆஸ்ரித ரஷகன் ஆனவனே–உன்னுடைய சீல குணத்துக்கு பல்லாண்டு –
அனுகூலர்-அனந்தரம் கோவிந்த அபிஷேகம்-பெரும் பசியால்-உண்பது கொண்டால் உயிர் கொண்டு தலை அறுக்கவோ
கை சலிக்கும் வரையில் தடுப்போம்-தலை அழிக்காதே புகழ்-சபலை குழந்தைக்கு முதுகைக் கொடுக்கும் மாதா போலே
இன்று வந்த ஆயர் –மது சூதனன் எடுத்த-கருணை குணம் போற்றி –பனி மறுத்த பண்பாளா
கோலம் அழியாமல் வாடாமல்-கைக்கு மங்களா சாசனம்-நின்ற திருவடிக்கு-
என் தனக்கு குன்று எடுத்த மலையாளா –ஷமை குணம்

கன்று –குன்று –
கன்று ஆநிரைக்கு –மா மழை நின்று காத்து -கலியன் -9-10-7-
விரோதிகளுக்கு கன்று எடுத்த மாத்ரம் போலே காணும்
கன்று நோக்குகைக்கு குன்று எடுத்தது –

அன்று இவ்வுலகம் -கோவர்த்தன் அனுபவம் ஸூ சகம் –
குன்று குடையாய் எடுத்தான் குணம் போற்றி –செந்தாமரைக் கை விரல்கள்
கோலமும் அழிந்தில –திருவுகிர் நொந்துமில-

வென்று பகை கெடுக்கும் இத்யாதி –
இவன் பக்கல் பரிவாலே -இவன் மிடுக்கைக் கண்டு கண் எச்சில் படுவார் என்று பயப்பட்டு
அத்தை விட்டு -இவ் வேல் அன்றோ இவ் வியாபாரம் எல்லாம் பண்ணிற்று -என்கிறார்கள் –
மிடுக்கு இல்லாமையால் நான் மெலிந்தேன் -என்று இறே இவர்கள் படி –
சக்கரவர்த்தி வில் பிடிக்க பெருமாளும் வில் பிடித்தால் போலே–
கூர் வேல் கொடும் தொழிலன் -என்னுமவர் மகன் ஆகையாலே
வேலே ஆயுதம் –

வென்று பகை கெடுக்கும் –
ஆஸ்ரித விரோதிகளான பிரதி பஷத்தை அறச் செய்து மாய்க்கை –

நின் கையில் வேல் போற்றி –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டி இருக்க–அதுக்கு மேலே வேலைப் பிடிப்பதே -என்று
திரு வேல் பிடித்த திருக் கைக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் —
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்று
திவ்ய ஆயுதங்களுக்கும் மங்களா சாசனம் பண்ணினார் இறே தமப்பனாரும்—
தேஜஸே சேது பந்தம் -தமப்பனாருக்கும் மகளுக்கும் பணி –என்று சீயர் அருளிச் செய்வர் –
ஒரு வியக்தியிலே எல்லா அபதானங்களையும் சொன்னால் த்ருஷ்ட்டி தோஷமாம் என்று
பிடித்த வேலுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
அஹங்காரத்தை ஜெயித்து–தத் விஷய வைமுக்யத்தை மாற்றும்–
நின் திருக் கையில் திரு வாழி யாழ்வானுக்கு-பல்லாண்டு –

அன்று இவ் உலகம் போற்றி –
அருகலிலாய –நம் –திருவாய்மொழி -1-9-3-
அடி போற்றி -திறல் போற்றி -புகழ் போற்றி -கழல் போற்றி -குணம் போற்றி -வேல் போற்றி -ஆகிய ஷட் ரசங்கள்-
அருகலியா பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நென்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள் உவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன் ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே -1-9-3-
உபயலிங்கத்வம் -நித்ய விபூதி நிர்வாகத்வம் -திவ்ய விக்ரஹ யோகம் -புண்டரீகாஷத்வம் –
கருட வாகனத்வம் -ஸ்ரீ ய பதித்வம் -ஆகிய ஷட் ரசங்கள்-

இரங்கு-தயா / தயா சிந்து -தந்த அரங்கனுக்கு தன் சரண் தந்திலன் -தான் அது தந்து /
அதிகாரம் இல்லாதார்க்கும் நீ இரங்க-அநாதிகாரிகள் இடம் சொல்லாதே கீதாச்சார்யன் அர்ஜுனனுக்கு /
உலகு நின்ற இடத்தில் அளந்த திரிவிக்ரமன் /
-25-வயசு -39-வயசில் நடந்த பெருமாளுக்கு / சகடம் உதைத்த – 7-மாத குழந்தை /
இரு அசுரர் சேர்ந்து-2-வருஷ குழந்தை / அனுகூல விரோதி -7-வருஷ குழந்தை /
இத்தை லோகம் அறியும்படி சொன்னேனே-அதுக்கு வருந்தி -வேல் போற்றி /

அன்று -இன்று
ஞானம் பிறந்து -இச்சை வந்து -பிரயத்தனம் -மூன்று தசை உண்டே -பாபங்கள் ஒவ் ஒரு தசைக்கும் பிரதிபந்தகங்கள் –
அந்யோன்ய ஆஸ்ரயம் –/ஏவம் ஸம்ஸ்ருதி சக்ர-சுழன்று -கர்மா சூழல் -யந்த்ரரூடன் /
துக்க ஆகுலம் பிராப்தி -கிருபா பிறந்து விஷயம் சிலருக்கு -கிருபா கா அபி உபஜாயதே —
நிவாரகர் இல்லாத ஸ்வாதந்திரம் -பக்தி உள்ளாருக்குள் -தகுதி பக்தி -பக்தி வளர்க்கும் கிருஷிகனும் அவனே –
ஸுஹார்த்தம் -அனைவரையும் சேர்த்து கொள்ளும் குணமும் உண்டே –
அன்று நீ செய்ய சேஷ்டிதங்கள் —ஸுஹார்த்த கார்யங்கள் கீழே சொல்லி –
இன்று வந்தோம் -இரக்கம் தயா கிருபா -பொழிவாய்-என்றவாறு –

ஸுஹார்த்தம் -மாறி -வாத்சல்யம் -உலகு அளந்து -அஹங்காரம் போக்கி –
குன்று குடை -உபகாரம் பெற்றவனே அபகாரம் மேலே -அறிந்தும் செய்தது தயா கார்யம் /
பாத த்ரயத்தில் ஆசை -மூவடி -வாய் பழக்கம் -அளந்து காட்ட விஷயம் இல்லையே –
இரண்டு விஷம் போக்க -அஹங்காரம் மமகாராம் போக்கினதே உலகு அளந்து காட்டி –
நீர் நுமது -என்று இவை வேர் முதல் மாயத்தால் இறை சேர்மினே -அடி பணிந்தே போக்க வேண்டும் –
உலகம் அளந்த பொன்னடி அடைந்து -லோக விக்ராந்த சரணம் /
ஸுசீல்யம் -பராபவன சாமர்த்தியம் -ஹ்ருஷீகேசன் -விவேகம் சாரம் இந்திரியங்கள் வசப்படுத்தியது தவிர்க்க-
திறல் -நமக்கே அறியாமல் அடக்க வேண்டுமே /
விரோதி நிரசன சாமர்த்தியம்-சகடாசுர பங்கம் /
கன்று விளாம்பழம் – புண்ணியம் பாபம் -போக்க வேண்டும்-புகழ் -குட்டிக்கண்ணன் புகழ் இதனாலே பரவி –
வீரக்கழல் -உள் திருவடி சேவை இங்கே தானே -குஞ்சித பாதம் /
குன்று குடை -ரக்ஷணம் அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி /- ஷமா / வேல் பரிகாரம் இருக்கிறதே

தயா –பிரயத்தனம் பண்ணி பரர் கிலேசம் போக்கும் எண்ணம் இச்சா -பிரதியுபகாரம் எண்ணாமல் —
சர்வஞ்ஞத்வம் சர்வ சக்தித்வம் –கொண்டு -இவற்றை செய்து அருளி –
ஹிதம் ஸூபம் தனக்கு நினைப்பது போலே பரருக்கும் -செய்வது தயா
ஞானம் பலம் ஐஸ்வர்யம் சக்தி வீரம் தேஜஸ் -பிரபஞ்சத்தில் -அசேஷ சித் அசித் உடைமை —
இவை அனைத்தும்-தோஷம் ஆகாமல் இருக்கவே தயா தேவி –
அவதாரங்கள் பலித்து நாம் வந்தோம் -இரக்கமே வேண்டும் பேற்றுக்கு /
ஸுஹார்த்தம் -தடுக்க முடியாமல் ஸ்ருஷ்ட்டி -கரண களேபரங்கள் -அப்புறம் தானே -தயா காரியமே இதுவும் –
விதி வாய்க்கின்றது காப்பார் யார் –
இப்படி ஞானம் -இச்சா பிரயத்தனம் அவஸ்தைகள் வந்து -இரங்கு -பிரார்த்தனையை எங்கள் பிரயத்தனம் –

பிரார்த்தனை உபாயம் இல்லை
பிரார்த்திக்காமல் பலன் இல்லை புருஷனால் அத்திப்பதே புருஷார்த்தம்
பிரயத்தனம் வேறே முடியாதே நமக்கு
கதறுகின்றேன்-இது ஒன்றே என்னால முடியும் -ஆர் உளர் அரங்க அம்மான் –
இரக்கம் எளீர்-இதுக்கு என் செய்கேன் -அரக்கர் ஏரி எழுப்பினீர் -அரக்கும் மெழுகும் போலே உருகி /
நெகிழ்தல் ஈடுபடுதல் ஆற்றாமை இவள் இரங்கி -ஆடி ஆடி பதிகம் பாசுரம்

என்று என்றும்
பிரயோஜனம் பெறும் அளவும் சொல்லி -பின்னை தேஹி மே ததாமி தே -என்னுமவர்கள் அன்று –
இது தானே பிரயோஜனமாய் இருக்கும்
சம்சாரிகள் புறம்பும் கொள்ளுவார்கள் -இவன் பக்கலிலும் கொள்ளுவார்கள் —
இவர்கள் புறம்பும் கொள்ளார்கள் -இவன் பக்கலிலும் கொள்ளார்கள்
ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -என்று-அவனுக்கும் தான் கொடுத்து
ஆந்தனையும் கை காட்டி -என்று புறம்பும் தானே கொடுக்கும் என்கை –
இப்படி பல்லாண்டு பாடுகையே – யாத்ரையாய் உன் உடைய–வீர சரிதத்தையே ஏத்தி–புருஷார்த்தத்தை லபிக்கைக்காக
சத்வம் தலை எடுத்த இன்று–உன் கை பார்த்து இருக்கும் நாங்கள்–வந்தோம்

உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் –
உன்னுடைய வீர சரித்ரமே ஏத்தி -உன்னை அனுபவிக்கைக்காக —
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் —என்னுமவர்கள் இறே –

இன்று –
இசைவு பிறந்த இன்று -என்னுதல்—
நீ உறங்க -நாங்கள் உறங்காத இன்று -என்னுதல்–
நென்நேற்று வந்தோமோ –ஊராக இசைந்த இன்று -என்றுமாம் –

யாம் –
பந்துக்களாலே நெடும்காலம் நலிவு பட்ட நாங்கள் –

வந்தோம் –
வ்ருத்தைகள் உறங்க -நாங்கள் ஆற்றாமையாலே வந்தோம்–
எங்கள் இழவுகள் எல்லாம் உன்னாலே தீரும் –

யாம் வந்தோம் –
எங்கள் வரவு உனக்கு புண்ணாய் இருக்க–நாங்கள் ஆற்றாமையாலே வந்தோம் –

இரங்கு –
எல்லாம் பட்டாலும் அவன் இரங்கினால் அல்லது கார்ய கரம் ஆகாமை —
அத் தலைக்கு இரங்குகை ஸ்வரூபம் –
அவனுக்கு என் வருகிறதோ என்று இருக்கை-இத் தலைக்கு ஸ்வரூபம்–
தாங்கள் பண்ணின மங்களா சாசனம் சாதனம் அன்று -என்று இருக்கிறார்கள்-

நீ கிருபை செய்து அருள வேணும் –ஏத்திப் பறை கொள்வான் -என்கிற இடத்தில்-
யேத்துகைக்கு அநந்தரம் புருஷார்த்தம் லாபம் ஆகையாலும்
ஏத்தாத போது புருஷார்த்த லாபம் இல்லாமையாலும்-யேத்துகையே புருஷார்த்தம் -என்கிறது –
இரங்கு -என்று-கிருபையே சாதனம் என்கையாலே-வந்தோம் -என்று ருசி காரியத்தைச் சொல்லுகிறது –
ஏற்றி பறை கொள்வான்-
எங்கள் பலம் நாட்டார் பலம்-பறை -தன்னடையே வரும்-உலகு சுபிஷம் தன்னடையே-இசைவு பிறந்த இன்று வந்தோம்
ஊரார் இசைந்து நாங்களும் இசைந்த இன்று–யாம் குளிர் பொறாத பால்யை யாம் வந்தோம்

திரு விக்ரமன் பெருமாள் சொன்னீரே-அது அவதார செயல்-
இவன் பால்யத்தில் செய்தது போலே பூர்வ அவஸ்தையில்
சிலை ஓன்று இறுத்தாய் திரு விக்ரமா–வருக வருக வாமன நம்பி–கிருஷ்ணனை தாயார்
நீ பிறந்த திருவோணம் வாமனம் நஷத்ரம் இவனுக்கு–பன்னிரு திங்கள் வயிற்றில் 8 மாசம் கொண்டாலும்
என் இளம் சிங்கம் சிறுமையின் வார்த்தையை மகா பலி–மாணிக் குறளனே தாலேலோ
உலகு அளந்த உம்பர் கோமானே–உங்களுக்கு மூன்று பிறவி பிறக்கிறேன்
வில் பிடித்தாரில் சகர்வர்த்தி திருமகன் நான் என்றான் கீதையில் அஹம் தாசரதி

நீ வர பிராப்தம் ஆக இருக்க–ஆற்றாமை விரக தாபம் தூண்ட வந்தோம்
நாங்கள் அறியாமல் செய்தோம்–நீ அறியாமல் செய்தது போலே
இரங்கு
இது ஒன்றே பேறு கொடுக்கும்–என் வருகிறதோ மங்களா சாசனம் செய்தது ஸ்வரூபம்
இத் தலைக்கு இரங்குகை அவன் ஸ்வரூபம்-இரங்காமைக்கு பல செய்தாலும் நீ இரங்க வேண்டும்
போற்றி என்றோம்–வந்தோம்–ஸூ பிரவ்ருத்தி பகவத் பிரவ்ருத்திக்கு விரோதி–பர பக்தி யாதிகள் பேற்றுக்கு உபாயம் இல்லை
அன்று நீ தேடி–வையம் தாவி நீ–காரேறு வாரானால்–கண்ணனும் வாரானால்–பிரதான மகிஷி போலே இல்லை
நாங்கள் வந்தோம் வேறுபாடு பாராய்–சத்தா பிரயுக்தமான கிருபை யாவது செய்து அருள்
அளந்தாய் இரங்கு–நீரேற்ற பிரான் அருளாது போமோ–வசை பாடுவார் படி–இலங்கை அழித்த பிரான் —
இரங்கு ஓன்று ஒன்றுக்கும் அன்வயித்து வியாக்யானம்
குன்று கொடையாக -ஒன்றும் இரங்காதார் உருக்காட்டார் -பாசுரங்கள் கொண்டே வியாக்யானம் –

உலகு அளவாமல் இருந்து இருந்தால் வேதம் உன் திருவடி-சம்பந்தம் பெற்று இருக்க முடியாதே கூரத் ஆழ்வான்-
ஆழி எழ -திசை வாழி எழ-மங்களா சாசனம் உண்டே
திறல் போற்றி -அங்குள்ய – தன் பலம் தானே சொல்லிக் கொண்டான் தன்னை மறைக்க வேண்டிய
அவதாரத்தில் பரத்வம் பீரிட்டு எழுப்ப -இச்சன் கபி -சங்கல்பத்தாலே செய்வான்
ஜடாயு -உத்தரவு கொடுக்கிறேன் -நடுவில் திரு வீதிப்பிள்ளை பட்டர் -நம்பிள்ளை -ஐதீகம் —
சத்யேன லோகன் ஜயதி -தசரதன் கைகேயி இடம் சொல்லிய வார்த்தை –
நம்பூர் வரதர் -ஸ்ரீ ரெங்கம் பக்கம் நம்பூர் கிராமம் -சிந்தின வார்த்தை கொண்டே
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி -மிடுக்கு —இதிலும் மங்களா சாசனம் உண்டே
இயம் சீதா பத்ரம்-துல்ய சீல வயோவ்ருத்தம் அநு ருப
நம்பியை காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேணும்–கொம்பினை காணும் தோறும் -குறிசிலுக்கு அன்னதேயாம் –
ரிஷிகள் -மங்களம்-ரூபம் சௌகுமார்யம் கண்டு–ஜடாயு ஆயுஷ்மான் —திருக் காலாண்ட
திருவடி தம்மை ரஷிக்கிறதா பரிஷை செய்து தளர்ந்தும் முறிந்தும் -பொன்று பொடி பொடியாகா சகடம் உதைத்த புகழ் –
தன்னையே ரஷித்த புகழ் போற்றி —கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி —குன்று –குணம் போற்றி –
உடலைத் தான் கொண்டோம் உயிரை கொள்ள வேண்டுமோ -குணம் –
பகை கெடுக்கும் நின் கையில் வேல்–கருதும் இடம் பொருது கை சக்கரத்தான் —என்று என்று உன் சேவகமே போற்றி –
இத்துடன் முடியாதே இதுவே யாத்ரை

அடி போற்றி
திறல் போற்றி
புகழ் போற்றி
கழல் போற்றி
குணம் போற்றி
வேல் போற்றி
இவர்கள் நாக்குக்கு இடும் ஷட்ரசம் இருக்கிறபடி–பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் -என்றது
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாய் உனக்கே நாம் ஆட்செய்ய வந்தோம் -என்றபடி
யாம் வந்தோம் இரங்கு–பரகத ஸ்வீகாரமே ஸ்வரூபம்–
ஸ்வகத ஸ்வீகாரம் ஸ்வரூப விருத்தம்-என்று துணிந்து இருக்கும் நாங்கள்
ஆற்றாமை மிக்கு வந்தோம்–பொறுத்து அருள்

சரணாகதிக்கு ஐந்து அங்கங்கள் -ஓரு அங்கி –
கார்ப்பண்ய அனுசந்தானம் – கை முதல் இல்லாமை /பிராதி கூல்ய வர்ஜனம் –
அனுகூல்ய சங்கல்பம் – மஹாவிஸ்வாசம் – கோப்த்ருத்வ வரணம்- அங்கி சரணாகதி தானே ஆகும்
ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் என்கிற ஆறு குணங்களும் ஆகவுமாம் —
பாஞ்ச ராத்ரம் -லஷ்மி தந்திரம் -அஹிர்புத்ய சம்ஹிதை திரு வாராதனம் -ஆறு ஆசனங்கள் சொல்லும்
இதனாலேயே ஆறு போற்றி -என்றும் சொல்வர்-

இன்று யாம் வந்தோம் இரங்கு- நாப்படைத்த பிரயோஜனம் பிரார்த்தனை- நிர்ஹேதுக கிருபை
அடியேன் இடரைக் களையாயே
நெடியாய் அடியேன் இடரை நீக்கி
அடியேற்கு ஒரு நாள் இரங்காயே
தாமரைக் கண்களால் நோக்காய்
இவன் அர்த்திக்க வேண்டுமோ -சர்வஞ்ஞன் இவன் நினைவு அறியானோ என்னில்
இவன் பாசுரம் கேட்டவாறே திரு உள்ளம் உகக்கும் -முமுஷூப்படி -163-
அதுவும் அவனது இன்னருளே
ஆச்சார்ய பரமாக உபதேசித்து அருள வேணும் -என்றதாயிற்று-

பரம போக்யமான பள்ளி கோளைப் பங்கப் படுத்தினோம் -இக் குற்றத்தை ஷமித்து அருள வேணும்
பிராட்டிமாரும் கூசிப் பிடிக்கும் ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு நடக்கப் பண்ணினோமே -ஷமிக்க வேண்டும்
ரஷய்த்வ ஸ்வரூபத்துக்கு மாறாக பல்லாண்டு பாடினோமே ஷமிக்க வேண்டும்
இன்று யாம் வந்தோம்
இன்றி யாம் வந்தோம் கைம்முதல் இல்லாமல் வந்தோம் -என்றுமாம்
இரக்கத்துக்கு தண்ணீர் துரும்பாக ஒன்றும் இல்லை –

வேல் போற்றி
வேல் -என்றது திருவாழி ஆழ்வானை -திருச் சங்கு ஆழ்வானுக்கும் உப லக்ஷணம்
திரு இலச்சினை –சேஷத்வ விரோதிகளை நிரசித்து –
கோயில் பொறியாலே ஒற்று உண்டு நின்று குடி குடி ஆட் செய்கின்றோம் என்னப் பண்ணுமே
வேல் என்று ஜாதிக்கு உரிய ஆயுதம் என்றுமாம் –
தாடி பஞ்சகம் –
சரித்ரா உத்தர தண்டம்–வஜ்ர தண்டம் -த்ரி தண்டம்–விஷ்வக் சேநோ யதிபதி ஆபூத் வேத்ர சாரஸ் த்ரிதண்ட
திருப் பிரம்பே த்ரிதண்டம் -உபய விபூதி நிர்வாக நிபுணம்-
முக் கோலுக்கு மங்களா சாசனம்––

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பாவை சாரம் – மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்தது உறங்கும்– —

January 22, 2018

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

ஸ அபராதரைப் போலே சாந்த்வனம்-நல்ல வார்த்தை – பண்ணுமவன் ஆகையாலே–
பெண்களை சாந்த்வனம் பண்ணி அருளினான் –
அவ்வளவிலே நாங்கள் வந்த கார்யத்தை கேட்டு அருள வேணும்-என்கிறார்கள் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை –தம் குற்றம் என்று நினைத்து -மதுர பாஷணங்களாலே-சந்தோஷிப்பித்தாப் போலே-
இப்பாட்டில்
பெண்காள் -என் செய்தி கோள் -என் பட்டி கோள்–பெண்களை எழுப்புவது–
கோயில் காப்பான் முதலானாரை எழுப்புவது-நப்பின்னை பிராட்டியை எழுப்புவது–
நம்மை எழுப்புவதாக–பஹு ஸ்ரமப் பட்டி கோளே-உங்களுக்கு நான் செய்ய வேண்டுவது என் -என்ன —
பேரோலக்கமாய்–சிம்ஹாசனத்தில் இருந்து–கேட்டருள வேணும் –என்கிறார்கள் –

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் போங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்

மாரி மலை முழஞ்சில்-
வர்ஷா காலம் ராஜாக்கள் படை வீடு விட்டு புறப்படதாப் போலே
சிம்ஹமும் வர்ஷாகாலம் முழைஞ்சு விட்டுப் புறப்படாது –
பெருமாள் வர்ஷா காலம் மால்யவானில் எழுந்தருளினாப் போலே –
விஸ்லேஷித்தார் கூடும் காலமுமாய்-
கூடி இருந்தார் போக ரசமும் அனுபவிக்கும் காலமுமாய் இருக்க –
நாங்கள் உன் வாசலிலே நின்று துவளக் கடவமோ -என்கை –

மன்னிக் கிடந்து –
மிடுக்காலே ஒருவருக்கும் அஞ்ச வேண்டாமையாலே குவடு போலே பொருந்தி-
வீசு வில் விட்டு எழுப்பினாலும் எழுப்பப் போகாது இருக்கை –

மன்னிக் கிடந்து -உறங்கும் –
தன் பேடையோடே ஏக வஸ்து என்னலாம்படி பொருந்திக் கிடக்கிற -என்னவுமாம் –
இங்கு
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா -என்று
நப்பின்னைப் பிராட்டிக்கு ஒரு ஆபரணம் என்னலாம் படி இறே
முலையோடே பொருந்திக் கிடக்கிற படி –
சிங்கம் மலைக்கு ஆபரணம்–
கண்ணன் முலைக்கு ஆபரணம்
உறங்கும் –
சம்சாரிகள் உறக்கம் போலே தமோபிபூதியால் அன்றே இவன் உறக்கம் –
வ்யதிரேகத்தில் ஆற்றாதார் வரும் அளவும் ஆகையால் -அவ் உறக்கத்திற்கு ஸ்மா ரகமாய் இருக்கை –

சீரிய சிங்கம் –
உறக்கத்திலும் சூத்திர மிருகங்கள் மண் உண்ணும்படி –
வீர ஸ்ரீ யை உடைத்தாய் இருக்கை -ஸ்மாரகமாய் இருக்கை –
இந்த யசோதை இளம் சிங்கம்–நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா என்கிறபடி
சீரிய சிங்கம் பிறக்கும் பொழுதே சிங்கம் பெயர் பெற்ற சீர்மை–
சிற்றாயர் சிங்கம் யசோதை இளம் சிங்கம்

அறி வுற்றுத் –
பூ அலர்ந்தாப் போலே காலம் உணர்த்த உணருகை –
சம்சாரிகள் காலம் உணர்த்த உணருவர்கள்- இவன் ஆஸ்ரிதர் ஆர்த்தி உணர்த்த உணரும் –

தீ விழித்து-
பிரதம கடாஷ சன்னி பாதத்திலே–பேடைக்கும் அருகு நிற்க ஒண்ணாது இருக்கை –
ஐஸ்வர்யமான தேஜஸ் முன் ஒருவர்க்கும் நிற்க ஒண்ணாது இருக்கை –

வேரி மயிர் பொங்க –
வேரி -பரிமளம்–ஜாதி உசிதமான கந்தம் -உளை மயிர் பொங்க -சிலும்ப ஸ்மா ரகமாய் இருக்கை –

எப் பாடும் பேர்ந் துதறி –
ஒரு கார்யப் பாடு இல்லாமையாலே-நாலு பாடும் போருகிறபடி –
உதறி –
அவயவங்களைத் தனித் தனியே உதறின படி –

மூரி நிமிர்ந்து –
உடல் ஒன்றாக நிமிர்ந்தபடி –

முழங்கிப் –
ஸ்வ வ்யதிரிக்த மிருகங்கள் முழுக் காயாக அவிந்து கிடக்கும் படி –
பெண்காள் வந்தி கோளோ-வென்கை-

ஜகத் சிருஷ்டியில் உத்யோகித்து–தன்னோடு அவிபக்த நாம ரூபங்களாய்–
ஸ்வா வயங்களான சேதனாசேதனங்களை
விபக்த நாம ரூபங்கள் ஆம்படி பண்ணி–இப்படி ஸ்வா வயவ விசிஷ்டனான தான் தண்டாகாரமாய் நீண்டு
பிண்டாகாரமாய் நிமிர்ந்து–மகா சம்ப்ரமத்துடனே–
மகதாதி ரூபேண பிரகிருதியில் நின்றும் வேறு பட்டு வருமா போலே-

உன் கோயில் நின்றும் இங்கனே போந்து அருளி -சதுர் கதி — -ஹ்ருதயம் -பிரணவம் உபய பிரதானம் –
ஸ்ருஷ்ட்டி -மகதாதி ரூபேண பிரக்ருதியில் நின்றும் வேறுபட்டு வருமா போலே
சமன்வய -காரணம் -ப்ரஹ்மமே -பொருந்த விட்டு முதல் அத்யாயம் /
அவிரோதம் வேறு இடத்தில் பொருந்தாது -இவன் இடம் பொருந்தாமை இல்லை /
காரணந்து த்யேயா சாதன உபாசனம் / பலம் மோக்ஷம் அடுத்து /
பிரகிருதி அதிகரணம் -முதல் அத்யாயம் -ப்ரக்ருதிச் ச ப்ரதிஜ்ஜா த்ருஷ்டாந்தம் -உபாதான காரணம் ப்ரஹ்மம் –
நிமித்த காரணம் குயவன் போலே நிறைய பேர் / மண் உபாதானம் -மாறி குடம் –
பிரகிருதி வைத்து ப்ரஹ்மம் பிராகிருதம் படைக்கிறார்
தஸ்மாத் மாயி ஸ்ருஜ்யத்தை விஸ்வம் சுருதி உண்டே /
சாந்தோக்யம் உபநிஷத் -சதேவ சோம்ய ஏகமேவ அத்விதீயம் -ப்ரதிஜ்ஜா வாக்கியம் -காரணம் அறிந்து கார்யங்களை அறியலாம்
உபாதானம் காரணம் அறிந்தால் தானே எல்லாம் அறிந்தது ஆகும் –
ஆதேசம் சப்தத்தால் இத்தை சொல்லி –
ஏக விஞ்ஞான சகலம் விஞ்ஞானம்
ஆகவே ப்ரஹ்மம் உபாதானம் -ப்ரதிஜ்ஜை உடன் பொருந்தும்
விஷய வாக்கியம் -விஸ்வம் வேறே ப்ரஹ்மம் வேறே –
விசிஷ்ட ப்ரஹ்மம் உபாதானம் அடுத்த படி
ப்ரஹ்ம ஸ்வரூபம் வேறே – சேதன அசேதனங்கள் சரீரம் -சேர்ந்ததே சரீரம் / பிரகார பிரகாரி
மன்னி கிடந்து -இருந்த அவஸ்தை மாறி -அவஸ்தை மாற பிரார்த்திக்கிறாள் இதில்
தண்டாகாரம் பிண்டா காரம் –
தன்னுள்ளே திரைத்து –எழ –பரிணாமம் ஐஸ்வர்யம் காட்டி ஸ்ருஷ்ட்டி -படைக்கிறார் இல்லை படைத்துக் கொள்கிறார் என்றவாறு –
மாறுகிறார் -குயவன் மாற மாட்டார் நிமித்த மாத்திரம் அங்கு -அனுமானத்தால் அறிய முடியாத ப்ரஹ்மம் –
சர்வஞ்ஞன் சர்வ சக்தன் -அபரிச்சின்னம் -அபின்ன நிமித்த உபாதான ப்ரஹ்மம்

மாரி மலை முழஞ்சில் -திருவரங்கம் அனுபவம் -ஸூ சகம்-உன் கோயில் நின்று இங்கனே –
கோயில் -திருவரங்கம் -ஞாலத்தூடே நடந்தும் நின்றும்
நடை அழகை நம் பெருமாள் பக்கல் காணலாம்-

கர்மத்தால் வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி / அனுக்ரகத்தால் சமஷ்டி ஸ்ருஷ்ட்டி /
ஸ்வயம் அக்ருத-தன்னையே ஸ்ருஷ்டித்து கொண்டு -பஹுஸ்யாம் ப்ரஜாயேய –
அநேக ஜீவேன ஆத்மாந அநு பிரவேஸ நாம ரூப வ்யாக்ரவேனா –
மூன்றாம் வேற்றுமை -ஜீவனாகிற நான் -கர்த்தா -உள்ளே புகை நாமம் ரூபம் மாறும் –
ஸ்ருஷ்டிக்கு கர்த்தாவும் நான் விஷயமும் நான்
அறிந்தால் சர்வம் கல்விதம் ப்ரஹ்மம் சொல்லலாமே -காரண தசை மாறி காரிய தசை
உபய ஆம்னாய -வேதம் சொல்லுமே –
சேதனம் ஸ்வ பாவ மாறுதல் -அசேதனம் ஸ்வரூபம் மாறுதல் -இதுவே படைப்பு –
சர்வ சப்த வாச்யன் -அனைத்தும் ப்ரஹ்மத்தின் இடம் பர்யவசிக்கும் -இங்கனே போந்து அருளி -யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் –

மகாராஜர் -தாரை -பெருமாள் உடன் செய்த சமயம் பிரதிஞ்ஞை மறந்து–பெருமாளும் சீறி –
சபாந்தமாக அழிக்க கடவோம்
கிஷ்கிந்தை நாண் ஒலி எழுப்ப–நின்ற திருவடியை பார்த்து போக்கடி–தீரக் கழிய அபராதம் செய்த
உனக்கு ஒரு அஞ்சலி செய் என்ன
சாபராதன் நேர் கொடு நேர் போகாமல் தாரையை விட–தாரா -நீர் தாரை வைத்து கோபாக்னி அணைத்து
கிம் கோபம் மனுஷ்ய -கேட்க -மனுஷ இந்திர புத்ரா -சக்கரவர்த்தி பிள்ளையாய் இருந்து–
உமக்கு கோபத்துக்கு போருவாருமுண்டா
பொறுப்பித்து கொள்ளும் காலம் வர்ஷா காலம்

கொண்ட சீற்றம் –
ஆஸ்ரிதர் தஞ்சமாக–முதலை பற்ற மற்றது நின் சரண் நினைப்ப கொடியவாய்
விலங்கின் உயிர் கெட கொண்ட சீற்றம்
உன் செய்கை நைவிக்கும்

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமா போலே நீ போதர வேணும்–
சிம்ஹமோ நமக்குத் திருஷ்டாந்தம் என்ன

நீ பூவைப் பூ வண்ணா –
காம்பீர்யத்துக்கு திருஷ்டாந்தமாக ஒன்றைச் சொன்னோம் அத்தனை –
வடிவு அழகையும் நிறத்தையும் உன்னைப் போலே பண்ணப் போமோ –
பூவைப் பூவின் நிறம் உனக்கு திருஷ்டாந்தமாக வன்று இறே சிம்ஹம்
உனக்கு த்ர்ஷ்டாந்தம் ஆவது -என்னவுமாம் –

வுன் கோயில் நின்று இங்கனே போந்தருளிக்
பிராட்டி மங்களா சாசனம் பண்ண சுமந்த்ரனோடே புறப்பட்டாப் போலே காண வேணும் –
போந்தருளி –
சதுர்க்கதி இறே–நடையிலே
ரிஷபத்தின் உடைய வீறும்
மத்த கஜத்தின் உடைய மதிப்பும்-வாரணம் பைய ஊர்வது போலே
புலியினுடைய சிவிட்கும்
சிம்ஹத்தின் உடைய பராபிபவன சாமர்த்தியமும்
தோற்றி இருக்கை
நமக்கு இவை எல்லாம் நம்பெருமாள் நடை அழகிலே காணலாம் –
நரசிம்ஹ -ராகவ –யாதவ -சிங்கம் எல்லாம் ரெங்கேந்திர சிங்கம் பக்கல் காணலாம் இறே

உன் கோயில்-
நந்த கோபன் கோயில் என்றார் கீழே —வாசம் ஒன்றாய் இருவருக்கும் பொது
இவன் வர்த்திக்கும் கோயிலுக்கு சேஷி சேஷ பிரதான்யம் உண்டே–பிரணவம் போலேயும் –
ஹிருதய கமலம் போலேயும் உபய பிரதான்யம்
சப்தம் -ஜீவாத்மா–அர்த்தம் பரமாத்மா பிரதான்யம்
அர்ஜுன ரதம் போலே -ரத சேனயோர் உபயோர் மத்யே -சேஷ பூதன் கலக்கம் அவனுக்கும் ஆசார்யன் சாரதி —
ஆழ்ந்து பார்த்தால் இவனுக்கு பிரதான்யம்
ஹிருதயகமலம் தாங்கும் -அந்தர்யாமி —திருவரங்கம் நம்மூர்–எம்பெருமான் கோயில்–என்றால் போலே

இங்கனே போந்தருளி –
படுக்கையில் வார்த்தையாய்ப் போகாமே-தனி மண்டபத்திலே வார்த்தை யாக வேணும் -கோப்புடைய –
சராசரங்களை அடைய தொழிலாக வகுப்புண்டிருக்கை –உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டிருக்கை -என்னவுமாம்
தர்ம ஜ்ஞானாதிகளாலும்-அதர்ம அஜ்ஞானாதிகளாலும்-கோப்புடைய சிம்ஹாசனம் -என்றுமாம் –
கோப்புடைய
தர்மம் அதர்மம் ஞானம் அஞ்ஞானம் வைராக்கியம் அவைராக்யம் ஐஸ்வர்யம் அனைச்வர்யம் எட்டுக்கால்கள்

சீரிய சிங்காசனத்து –
இந்த சிம்ஹாசனத்தில் இருந்து நினைப்பிட்டது என்றால்-அறுதியாய் இருக்கை –
கடல் கரையில் வார்த்தை என்னுமா போலேயும்–தேர்த் தட்டில் வார்த்தை என்னுமா போலேயும்
பெண்களும் கிருஷ்ணனுமாய் இருந்து சொல்லிலும்-அமோகமாய் இருக்கை –
அணுவாகில் கிருஷ்ணனோடு ஒத்த வரிசையைக் கொடுக்க வற்றான-சிம்ஹாசனம் என்றுமாம் –
இருந்தால் சிங்காசனமாம்

இருந்து –
நடை அழகு போலே-இருப்பில் வேண்டற்ப்பாட்டையும் காண வேணும் -என்கை –
கண்ணினைக் குளிரப் புது மல ராகாத்தைப் பருக -இருந்திடாய் -என்னுமா போலே
உன்னைக் காண விடாய்த்த கண்களின் விடாய் கெட்டு அனுபவிக்கலாம் படி இருந்து –

யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்
அநந்ய பிரயோஜனைகளான நாங்கள்-வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேணும் –
தண்ட காரண்யத்தில் ரிஷிகளின் உடைய துக்க நிவ்ருத்திக்கு-
நாம் முற்பாடராக-பெற்றிலோமே என்று வெறுத்தாப் போலே
பெண்கள் நோவு பட பார்த்து இருந்தோம் ஆகாதே -என்று வெறுத்து –
அவர்களை அழைத்து-உங்களுக்கு செய்ய வேண்டுவது என் -என்ன-இங்கனே சொல்ல ஒண்ணாது
பேர் ஓலக்கமாய் இருந்து கேட்டருள வேணும் -என்கிறார்கள் –
நப்பின்னைப் பிராட்டி பரிகிரமாய் இருக்க-சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம் –என்று
அநந்ய கதிகளாக சொல்லுவதே -என்று –
அழகர் கிடாம்பி ஆச்சானை அருள் பாடிட்டு-ஓன்று சொல்லிக் காண் என்ன –
நம் இராமானுசனை உடையையாய் இருந்து வைத்து-அகதிம்-என்னப் பெறாய் -என்று அருளிச் செய்தார் –

ஆகையால் இருப்பில் வேண்டற்பாட்டையும் காண வேணும் –
வந்த கார்யத்தை -சிற்றம் சிறு காலைக்கு-வைக்கிறார் –
இப்போது சொல்லாதே -அதுக்கு அடி என் என்னில் –
அவசரத்தில் சொல்ல வேணும் என்று நினைத்து –
அதாவது –
அவர்களோடு ஆர்த்தியையும் காட்டி திருவடிகளிலே சென்று விழ-இரங்குவர் காண் என்று
நினைத்து வந்த ஸ்ரீ பரத ஆழ்வானுக்கும்
அவன் நினைத்து வந்ததுக்கு அங்கு அவசரம் இல்லாமையாலே-அனபியவ நீயர் ஆனார்
ஆனால் அவசரத்திலே சொல்லக் கடவோம் என்று இருந்தார்கள் –
பரத ஆழ்வான்-நினைத்து வந்ததுக்கு சமயம் இல்லாமை
திருவடி நிலைகளைக் கொடுத்து விடும் ச்வதந்த்ரன் –

ஆராய்ந்து அருள் –
நீங்கள் என் பட்டி கோள்-என் செய்தி கோள் -என்கை
அதாவது
பெண்களை எழுப்புவது —வாசல் காப்பானை எழுப்புவது —ஸ்ரீ நந்த கோபர் உள்ளிட்டாரை எழுப்புவது —
நம்மை எழுப்புவதாய்-
ஐயரை எழுப்பி–ஆய்ச்சியை எழுப்பி–நம்மை எழுப்பி–அண்ணரை எழுப்பி–மீளவும் நம்மை எழுப்பி–
போர வ்யசனப்பட்டி கோள் ஆகாதே -என்கை –
எதிர் சூழல் புக்குத் திரியுமவனுக்கு–இவை எல்லாம் தன் குறையாகத் தோற்றும் இறே –
உன்னுடைய திவ்ய அந்தப்புரத்தின் நின்றும்–திவ்ய ஆஸ்தான மண்டபத்துக்கு–எழுந்தருளி –
கோப்புடைய இத்யாதி –
ஏழு உலகும் தொழிலாக வகுப்புண்டதாய்–நினைப்பிட்ட கார்யம் தலைக் கட்டும் படியான
சீர்மையை–உடைய சிம்ஹாசனத்திலே
எழுந்தருளி இருந்து உனக்கு அனன்யார்ஹ சேஷ பூதரான–நாங்கள் வந்த–கார்யத்தை
விசாரித்து அருள வேணும்-

எங்கள் மநோ ரதம் ஓலக்கத்தில் பெரிய கோஷ்டியாக எழுந்து அருளி கேட்க வேண்டியது ஒழிய
ரஹச்யமாக பிரார்த்திக்கக் கூடியது இல்லை -என்கிறார்கள்

சயன அழகு ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் -எத்தனை நாள் கிடைத்தாய்
இருந்த அழகு எம்பிரான் இருந்தமை காட்டினீர் தொலை வில்லி மங்கலம்
நடை அழகில் கண் வைக்காமல் கைங்கர்யம் இளைய பெருமாள்
சிம்மம் -நடை -ரிஷபம் –கானகம் படி உலாவி உலாவி – –ஆடல் பாடல் மறக்கும் படி அன்றோ
கண்ணபிரான் நடை அழகு
எல்லாரும் சூழ சிங்கா சனத்தே இருந்தானைக் கண்டார் உளர் -பெரிய ஆழ்வார் –
தீம் குழல் ஊதின போது -வெள்கி மயங்கி ஆடல் பாடல் மறந்து –
இரும் பொழில் சூழ் -நறையூர் திருவாலி குடந்தை கோவல் –நின்றான் இருந்தான் கிடந்தான் நடந்தான் -திரு நீர் மலையே –
நீராய் -நெஞ்சு அழிய மாலுக்கு ஏரார் விசும்பின் இருப்பு அரிதாய் -ஆராத காதல் –
மண்ணும் விண்ணும் மகிழ –மாய அம்மானே -நண்ணி ஒரு நாள் ஞாலத்தூடே நடவாயே நண்ணி நான் கூத்தாட -6-9-2-
எம்பெருமானார் உகந்த பாசுரம்
ஐதிக்யம் –வடக்கு நின்றும் போர ஒருவன் -நடை அழகு காட்டி

ஆழி மழைக்கு அண்ணா ஓன்று நீ கை கரவேல்
பூவை பூ அண்ணா உன் கோயில் இங்கும் –

யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள்
எட்டாம் பாட்டில் ஆராய்ந்து அருள் -தேவாதி தேவனை நான் சென்று சேவித்தால்
அவன் ஆராய்ந்து ஆவா வென்று அருளுவன் என்றது அங்கு
இங்கும் அருள வேணும்

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே -என்றும் –
அம்மா மலர்க்கண் வளர்கின்றானே என் நான் செய்கேன் -என்றும்
அரவணையே ஆயர் ஏறே துயில் எழாயே -என்றும்
திருப்பள்ளி உணர்த்த -புறப்பட்டு அருளும் அழகு -வீற்று இருக்கும் அழகு -பிரார்த்தித்துப் பெற்றார்கள் இதில்
பல்லாண்டு பாட வேண்டும் என்ற பிரார்த்தனை அடுத்த பாசுரத்தில் பெறுவார்-

எம்பார் இந்த பாசுரத்துக்கு வேதோக்தம் ஸ்ரீ சைல சிந்தோ -மயா கேசரி -நாதே -எதி சார்வ பௌமா நிர்பயக –

கோயில் திருமலை பெருமாள் கோயில் திருநாராயணபுரம்-
நடை –வடை –கொடை –குடை -20 ஜான் குடை -வைர முடி
நடை அழகை பிரார்த்திக்கிறார்கள் இதில் கடாஷம் பெற்றதும்–
தென் அத்தியூர் கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன் ராமானுசன் –
தேவ பெருமாள் -2 மாதம் நாலாயிரமும் -சேவை நித்ய அனுசந்தானம்–அருளிச் செயலில் மயக்கி அரங்கன் –
ஆழியான் அத்தி ஊரான் –நாகத்தின் மேல் துயில்வான் -எங்கள் பிரான்–இரண்டையும் பாடி அரையர் –
வேண்டியது எல்லாம் கொடுத்தோம்–நம் இராமானுசனை தந்து அருள வேணும்

வலிமிக்க சீயம் –கலி மிக்க செந்நெல் -ஒலி மிக பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து –
ராமானுச முனி வேழம் -மாறன் பசும் தமிழ் ஆனந்தம் பாய் மதம் விண்டிட –
கோயில் நின்று இங்கனே போந்தருளி -ஸ்ரீ பெரும் பூதூரில் இருந்து
திருக் காஞ்சி திருமலை திரு அரங்கம் திரு நாராயண புரம் திவ்ய தேசங்கள் தோறும்-
பூவைப் பூ வண்ணா –
போந்தது என் நெஞ்சு என்னும் பொன் வண்டு -பூவைப் பூ வண்ணா
அடி பூ தெளி தேன் உண்ண பல் கலையோர் தாம் மன்ன வந்த ராமானுசன் – சரணாராவிந்தம் –
மூரி நிமிர்ந்து சோம்பலை விட்டு- 120 சம்வத்சரம் சந்த்யா வந்தனம்
போதருமா போலே இதுவே உபமானம் உபமேயம்
உன் கோயில் ஸ்ரீ பெரும் புதூர் -காஞ்சிபுரம் திருபுட்குழி விந்த்யாசலம் காஞ்சி திருமலை இங்கனே போந்து அருளி
சிங்காசனம்
சீரிய சிங்காசனம்
கோப்புடைய சீரிய சிங்காசனம்
பேத அபேத கடக சுருதி –ஸ்ருதிகள் மூன்றும்-
ஒன்றே ஒன்றால் ஒன்றேயாம் -பல வென்று உரைக்கில் பலவேயாம் –
அந்தர்யாமித்வம் ஆத்மா சரீர-ஆராய்ந்து அருள் –

மலை -பரத்வாஜர் மூன்று வேதம் மூன்று மலை —வேதாசலம் – வேதகிரி -வேதாரண்யம் –
முழைஞ்சு- குகை -யஞ்ஞன் -கேள்வி -எது வழி -தர்மர் பத்தி சொல்லி தம்பிகளை மீட்டு –
வேதம் தர்ம சாஸ்திரம் புராணங்கள் -கொண்டு அர்த்தம் நிர்ணயிக்க முடியாதே –
குரு சிஷ்யர் விரோதம் இல்லாத அன்யோன்யம் ஏக கண்டமாக அருளிச் செய்து -ஆழ்வார்கள் –
மேலையார் செய்வனகள் வேண்டியன கேட்டீர்கள் -சூஷ்ம அர்த்தம் இது தானே
மன்னிக் கிடந்தது உறங்கும் சீரிய சிங்கம் ராமானுஜர்–அறிவுற்று ஆராய்ந்து -அவதார பிரயோஜனம்
தீ விளித்து -புத்திர் மதி -பிரஞ்ஞா தீமா புத்திமான் -சாஸ்த்ரங்களில் செலுத்தி
வேரி மயிர் -காஷாய சோபி சிகாயவேஷம்
எப்பாடும் பேர்ந்து உதறி
ஸ்ரீ ரெங்கம் கரிசைலம் அஞ்சனகிரிம் தார்ஷ்யாத்ரி சிம்ஹாசலௌ
ஸ்ரீ கூர்மம் புருஷோத்தமஞ்ச பத்ரி நாராயணம் நைமிசம்
ஸ்ரீ மத் த்வாராபதி ப்ரயாகா மதுரா அயோத்யா கயாபுஷ்கரம்
சாளக்ராமகிரிம் நிஷேவ்ய ரமதே ராமானுஜோயம் முனிம்-

————————————————————————–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பாவை சாரம் – அங்கண் மா ஞாலத்து அரசர்– —

January 22, 2018

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –
கீழ் பாட்டிலே–தங்களுடைய அபிமான சூன்யதையை சொல்லிற்று –
இப்பாட்டில் – அனன்யார்ஹ சேஷத்வம் சொல்லுகிறது-
நம-அபிமானம் தொலைய–திரு மந்த்ரம் நம–த்வயம் நம
ஸ்திரீக்கு மோவாய் எழுந்தால் போலேயும்–புருஷர் முலை வந்தால் போலே –
கர்ம பரதந்த்ரராய் இருந்துள்ள பிரயோஜனந்த்ர பரரில் காட்டிலும்
அநந்ய ப்ரயோஜனராய் சாதனாந்தர நிஷ்டராய் இருக்குமவர்களில் காட்டிலும்
சித்த சாதனம் பண்ணினார் குற்றம் போகத் தன் கைம்முதல் இல்லாமையால்
ஈஸ்வரனே ப்ரபுத்தனாய்க் கொண்டு
சம்விதானம் பண்ண வேணும் என்று அபேக்ஷிக்க அவ்வதிகாரத்தைச் சொல்லுகிறது –

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்

அங்கண் –
அழகிய இடம் –
பிரம்மாவுக்கும் தன் போக உபகரணங்களோடு அனுபவிக்கலாய் இருக்கை –
பீபிலிக்கும் தன் போக உபகரணங்களோடு அனுபவிக்கலாய் இருக்கை –

மா ஞாலத்து அரசர் –
அழகிய விசாலமான பெரிய பூமி மூன்று விசேஷணங்கள்–
போகய போக உபகரண போக ஸ்தானங்களை பிரஹ்மா பிப்லி -தக்க அபிமானம் –
எரும்புக்கும் பிரஹ்மாவுக்கும் அஹங்காரம் வாசி இல்லை
மகா ப்ருதிவியில் ராஜாக்கள் –இப் பரப்பு எல்லாம் -என்னது -என்று அபிமானம் பண்ணுகை –
யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன் -என்கிறதை
பௌண்டரீக வாசுதேவன் போலே அனுகரிக்கிற படி
ஈஸ்வர சர்வ பூதானாம் நீ இருக்குமா போலே பதிம் விச்வச்ய–ஈச்வரோஹம் -என்று இருப்பார்

அபிமான பங்கமாய் வந்து –
அபிமான சூன்யராய் வந்து –ராஜ்யங்களை இழந்து எளிவரவு பட்டு வந்து –

நின் பள்ளிக் கட்டில் கீழே –
அந்த ராஜ்யங்களைக் கொடுத்து-போங்கோள் என்றாலும்
பழைய எளிவரவை நினைத்து -அவை வேண்டா என்று-உன் சிம்ஹாசனத்தின் கீழே –

சங்கம் இருப்பார் போல் –
திரளவிருந்து ஓலக்கமாக இருக்குமவர்களைப் போலே-அவர்கள் போக்கற்றுப் புகுந்தார்கள் –
இவர்கள் கைங்கர்யத்துக்கு புகுந்தார்கள் –
இளைய பெருமாளைப் போலே -இவர்களையும் கிருஷ்ண குணம் தோற்பித்து அடிமையில் மூட்டிற்று –

அபிமான-பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே-
இளைய பெருமாளைப் போலே / குணைர் தாஸ்யம் உபாகத -இறே –
சங்கம் இருப்பார் போல் –
வெளியே திரியில் பின்னை ராஜ்யம் பண்ணு என்று தலையிலே முடியை வைப்பார்கள் -என்று
அஞ்சி அணுக்க ஓலக்கத்திலே சேவிப்பார்கள்

அம் கண் மா ஞாலம் -திரு மால் இரும் சோலை அனுபவம் -ஸூ சகம் –
அபிமான பங்கமாய் வந்து அடி பணிந்தமை -கொன்னவில் கூர் வேல் கோன் நெடுமாறன்
தென் கூடல் கோன் தென்னன் கொண்டாடும் தென் திரு மால் இரும் சோலையே –
இதமிமே ஸ்ருணுமோ மலயத்வஜம் நருபமிஹ-ஆழ்வான்-

வந்து தலைப் பெய்தோம் –
கீழே எல்லாரையும் எழுப்பிப் பட்ட வ்யசனம் எல்லாம்-சபலமாம்படி வந்து கிட்டப் பெற்றோம் –
அநாதி காலம் இந்த சம்பந்தத்தை இழந்து போந்த நாங்கள்-இன்று நிர்ஹேதுகமாகக் கிட்டப் பெற்றோம்
ஒரு படி வந்து கிட்டப் பெறுவதே -என்கை —வி சத்ருசமான இது சங்கதமாகப் பெறுவதே
ஆக
இந்த ராஜாக்கள் தம் தாமுடைய அபிமானங்களை விட்டும்–க்ரம ப்ராப்தமான ராஜ்யாதிகளை விட்டும்
அம்புக்குத் தோற்று உன் கட்டில் கால் கீழே-படுகாடு கிடக்குமா போலே –
நாங்களும்
எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தை விட்டும்–வேறு உண்டான போகங்களையும் விட்டும்
உன்னுடைய குண ஜிதராய்க் கொண்டு வந்தோம் –
அதவா –
அந்த ராஜாக்களைப் போலே நாங்களும்–அநாதி காலம் பண்ணிப் போந்த–தேகாத்ம அபிமானத்தை விட்டு
தேகாத்பரனான ஆத்மாவின் பக்கல் ஸ்வா தந்த்ரியத்தையும் விட்டு–அநந்ய பிரயோஜனராய் வந்தோம் -என்றுமாம் –
ஈரரசு தவிர்ந்து -நீ தான் அரசன் ஒத்து கொண்டு வந்தோம்

ஏழு ஜன்மம் -ஜனித்து -சாதனா அனுஷ்டானம் செய்து -ப்ரஹ்மா யுக கோடி சஹஸ்ராணி —
ஏழு ஜன்மம் சூர்யன் -ருத்ரன் பக்தி உண்டாகும்–ஏழு ஜன்மம் ருத்ரன் -நாராயண பக்தி உண்டாகும்
இவ் வருகே – அல்ப ஞானம் தண்மையாய் இருப்பார் சரீர அவகாசம் காலத்தில் கிடைக்கும்
என்று கட்டு சோறு கட்டி இருக்கிறார்கள்
பொதி சோறு -நிச்சயம் சித்தம்-நஞ்சீயர் பட்டர் இடம் கேட்க –சேர இருக்கும்படி எங்கனம் என்னில்-
அவன் தன விபூதி பரப்பு அளவும் பச்சை இட்டு-பெரிய அஹங்காரம் விட வேண்டும் அவன்-
இவனுக்கு விட வேண்டிய அம்சம் ஒன்றும் இல்லையே
எதோ உபாசனம் பலம் –ஒன்றும் இல்லாமை அனுசந்தித்து நீயே கடவை காலிலோ விழும்-
அவனும் அப்படியே தன தலையில் ஏறிட்டு கொண்டு ரஷிக்க
ஈஸ்வரனை முதலில் பற்றிற்று-அவன் சாதனம் அனுஷ்டித்து –peon general menager relieve செய்யும் காலம்
ஸ்தானம் உட்கார்ந்தாலே அஹங்காரம் ஒட்டிக் கொள்ளும்-
முக்குரும்பும் குழியைக் கடக்கும் கடத்தும் நம் கூரத் ஆழ்வான்-
கல்வி குலம் செல்வம் செருக்கு இல்லை –
மூன்றும் கொள்ள காரணம் இருந்தும் -என்பதால் விசேஷித்து சொல்கிறோம் –

ஒரு நாயகமாய் ஓட உலகுடன் வாழ்ந்தவர் –பெரு நாடு காண இம்மையிலே பிச்சை
தாம் கொள்வர் -இம்மையிலே அதே ஜன்மம்
காணிக்கை கொடுக்கும் பொழுது அலட்ஷியம் -இப்பொழுது பிச்சை எதிர்பார்த்து
தாம் -இவன் கையால் வாங்கி கொள்ள மாட்டான் முன்பு கௌரவம் பார்த்து–கொள்வர் –
கொள்ள சித்தம் கொடுப்பார் தான் இல்லை –
கரு நாய் கவர்ந்த காலர்
கருமை
கர்ப்ப நாய் –
வீரக் கழல் அணிந்த காலை உடையவர் முன்பு
ராஜா பெரியவரா பகவான் பெரியவரா -கேள்வி ஆரம்பித்து —திண்டாட வைக்க —
ராஜா தான் பெரியவர்–அரசன் கோபிக்க -முட்டாள்
அவனால் செய்ய முடியாத கார்யம் நீர் செய்யலாம்–சொல்வது உண்மை–இல்லை
என்றால் ராஜ்ஜியம் விட்டு வெளி இடுவேன்
இத்தை பகவானால் கொடுக்க முடியாதே —-எல்லாம் அவன் தேசம் அப்பால் ஒன்றும் இல்லையே —
பெருமை வேறு விதமாக சொல்லப்பட்டது –

பதிகம் அரசனை நா கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்–கண்டவா தொண்டரை பாடி
பல்லவன் விலோலவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம்–நந்தி வர்மன் பரமேஸ்வர பல்லவ ராஜன்
பரமேஸ்வர விண்ணகரம் வைகுண்ட பெருமாள் திருக் கோயில்–திண் திறலோன் -கடுவாய் பறை உடை பல்லவர் கோன்
நந்தி பணி செய்த நந்தி புர விண்ணகரம்–63 செங்கணான் கோ சோழன் நாயனார் ஒருவன்
சிவனுக்கு 70 கோயில் கட்டி நாச்சியார் கோயில் திருப்பணி-பூர்வ ஜன்மம் சிலந்தி யானை ஏற முடியாத கோயில்
உலகம் ஆண்ட -எழில் மாடம் எழுது செய்த செங்கணான் கோ சோழன் 10 பாட்டிலும்
மலையரையன் பணி செய்த மலையத்வஜ பாண்டிய ராஜன் பூம் கோவலூர்–நெடு மாறன் திரு மால் இரும் சோலை
தொண்டையர் கோன் செய்த மயிலை–தந்தி வர்மன் பிள்ளை இவன் என்பர்
வயிர மேகன் -அரசன் -தொண்டையர் கோன் –அவன் வணங்கும் அஷ்ட புஜ பெருமாள் – -திரு வல்லிக் கேணி

தலைப்பெய்தோம் –
திரு மாளிகை வாசலில் -மகா விசுவாச பூர்வகம் –
களைவாது ஒழியாய்–களைகண் மற்று இலேன் நின் அருளே நோக்கி –மா முகிலே பார்த்து இருக்கும் அநந்ய கதித்வம்
கொண்டானை அல்லால் அறியா குல மகள் போல்–கோல் நோக்கி வாழும் கொடி போல்
இசைவித்து என்னை உன் தாளிணை கீழ் இருத்தும் அம்மான்–ஜாயமான கடாஷம் மது சூதனா —அமலங்களாக விளிக்கும்
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னாது கருவிலா திரு இல்லாதீர் காலத்தை கழிக்கின்றீரே
அன்று கருவரங்கத்து உள் கிடந்தது கை தொழுதேன்–அன்று கருக் கூட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
வனதமலர் கருவதனில் வந்த மைந்தன் வாழியே–புஷ்ப வாஸம் பொழுதே கை தொழுது

அபிமான பங்கமாய் —அபிமானம் -கர்வோ அபிமானம் அஹங்காரம்–
அபிமான துங்கன் செல்வனைப் போலே -உபாதேயம்
அபிமான துங்கனை –திருக் கோஷ்டியூர் —வந்து தலைப் பெய்தோம் –

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே –
ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே எங்கள் ஆற்றாமைக்கு அலருமவை இறே இவை –
அர்த்திகளைக் கண்டால் அலருமவை இறே இந்தத் தாமரைப் பூ –

செங்கண் –
வாத்சல்யத்தாலே சிவந்து இருக்கை –
உபமானம் நேர் இல்லாமையாலே உபமேயம் தன்னையே -சொல்லுகிறது ஆகவுமாம் –

சிறுச் சிறிதே-
ஓர் நீர்ச் சாவியிலே வெள்ளம் ஆகாமே சாத்மிக்க சாத்மிக்க -என்கை
பிரதம பரிஸ்பந்தமே பிடித்து காண வேணும் -என்றுமாம் –
சிறுச் சிறிதே கிண் கிணி
குற்றம் குறைகள் நினைத்து பாதி மூடியும்–கூக்குரலை கேட்டு பாதி திறந்தும் –

எம்மேல் விழியாவோ –
கோடை யோடின பயிரிலே ஒரு பாட்டம் -என்னுமா போலே –
சாதகம் வர்ஷ தாரையை ஆசைப் படுமா போலே –விழியாவோ -என்று தங்கள் மநோ ரதம் –

சொத்து பிரகாரம் சரீரம் -நாம்–குண ஜாதிகள் போலே த்ரவ்யமாய் இருக்கச் செய்தே
வெண்மை வஸ்த்ரம் -தனி இருப்பு இல்லை–ப்ருதக் ஸ்திதி பூதனை–இருப்பும் நடவடிக்கையும்
கௌஸ்துபம் போலே அத் தலைக்கு அதிசயம் விளைவித்து–
ஸ்வரூப லாபம் சேதனன் இழந்து–அசித் கலந்து சரீரம் தேவோஹம்
அஹங்கரித்து–அசித் சமம் ஆகி–ஷிபாமி கை கழிய அவன் செய்யும்படி–
யாத்ருசிகமாக ஸூக்ருதம் ஊரை சொன்னாய் பேரை சொன்னாய்
அறியாமல் தற் செயலாக சொல்லியதையும்-அனந்தரம் கடாஷம் யோக்யதை-
ஈஸ்வரனுக்கு சேஷம் ருசி விளைந்து
உபாயம் அவனை பற்றி-த்வரை பிறந்து–திருவடி கிடக்கும் படி ஆகி விட்டதே –

1-தேகாத்ம அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
2-ஸ்வ ஸ்வா தந்த்ரிய அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
4-அந்ய சேஷத்வ நிவ்ருதியை உண்டாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே
5-ஜ்ஞாத்ருத்வ பிரயுக்தமான ஸ்வ ஸ்மிநிஸ்வ சேஷத்வ நிவ்ருத்தியை உண்டாக்கி -அதுக்கு இசைந்தவாறே
6-ஸ்வ ரஷண ஸ்வான்வயத்தை நிவர்த்திப்பித்து – அதுக்கு இசைந்தவாறே –
7-உபாயாந்தரங்களை விடுவித்து -அதுக்கு இசைந்தவாறே
8-தத் ஏக உபாயனாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே –
9-ஸ்வ வியாபாரத்தில் ஸ்வாதீன கர்த்ருத்வ நிவ்ருத்தியைப் பண்ணுவித்து -அதுக்கு இசைந்தவாறே
10-பாரதந்த்ரிய பிரதிபத்தியைப் பிறப்பித்து அதுக்கு இசைந்தவாறே
11-சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனான தன்னை அனுபவிப்பித்து –
12-அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யத்தை உண்டாக்கி
13-அக் கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியை தவிர்ப்பிக்கை –
முழு நோக்கு பெறும் அளவானவாறே -என்றது-இவ்வளவான பாகம் பிறந்தவாறே -என்றபடி –
இப்படி அல்லது தேகாத்ம அபிமானத்துக்கு பரம பக்தி உண்டாக்கிலும் உண்டாகாது இறே

யாத்ருசிக்க சுக்ருதம்–நணுகினம் நாமே —திடீர் கரை அடைந்தது போலே–அக்கரை -இக்கரை ஏறி
நானா வந்து சேர்ந்தேன் ஆசர்யம்–சித்ர கூடம் பரதன் -அடையாளம் கண்டு –
பரத்வாஜர் -பிராப்தாச்ய -அடைந்தோம் நினைந்து மகிழ்ந்தால் போலே
வானரானாம் நராணாம் சம்பந்தம் கதம் சமானகம்–ஏவம் இப்படி —
அந்தபுர கார்யம் எவ்வளவு அர்த்தம் திருவடி
பெண்டாட்டி சமாசாரம் தம்பி அனுப்பாமல்–நணுகினம் நாமே–
நாமா அடைந்தோம் யோக்யதை உண்டா பயப்பட இருக்க
வந்து எங்கு தலைப் பெய்வேன் கவலை தீர்ந்து வந்து கிட்டப் பெறுவதே பரம பாக்கியம்–

வந்து தலைப் பெய்தோம்– கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம் மேல் விழியாவோ-
வந்து அருளி என் நெஞ்சு இடம் –திருக் கமல பாதம் வந்து -ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் –
இவர் பற்றியதாக சொல்ல வில்லை -தாயாரே முலையை பிரஜை வாயிலே வைப்பாரைப் போலே /
இச்சா ருசி விருப்பம் த்வரை-திரு முடி சேவை -உச்சி யுள்ளே நிற்கும் தேவ தேவர்க்கு –நிச்சலும் விண்ணப்பம் செய்ய
நீள் கழல் சென்னி போருமே -இச்சையில் செல்ல உணர்த்தியும் -ஒன்றே வேண்டுவது -சைதன்ய கார்யம் –
அறிவுற்று -வந்தோம் -வந்து தலைப் பெய்தோம் –கடாக்ஷம் –மாறி மாறி பரிமாற்றம் –
முதல் அடி அவனதே -ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -நாராயணனே நமக்கே பறை தருவான் -மற்றை நம் காமங்கள் மாற்று –
நீராடப் போதுவீர் போதுமினோ -முதல் வினைச் சொல் -பயன் கருதாமல் -இச்சையில் ஆரம்பம் –

கிண்கிணி -மாறி மாறி –
அநாதி கால பாபங்கள் -நம்மை பார்த்து மூட -பிராட்டி புருஷகாரம் -விழிக்க பண்ணுமே –
சிறு சிறிதே -நமது -மநோ ரதமும்-தேவரீர் சங்கல்பம் தொடங்கி -உன் தாமரைக் கண்களால் நோக்காய்
சம்ச்லேஷம் விஸ்லேஷம் மாறி மாறி அன்றோ பக்தியை காதலை வளர்க்கிறான் –
இணைக் கூற்றங்களோ அறியேன் -என்னவும் பண்ணுமே –
கடாக்ஷ மநோ ரதம் -இதில் -கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் —
கண்ணே உன்னை காண எண்ணே கொண்ட சிந்தையனாய் –
ஞானக் கை தா காலக் கழிவு செய்யேல் –
ஞானம் -தர்சனம் -ஞானம் த்ரஷ்டும்-பின்பு பிராப்தி /பகவத் விஷயத்தில் மநோ ரதம் வளர்க்க வேண்டுமே –

நடை அழகு -இருப்பு அழகு -கிடை அழகு -பேசி -பாவி என்று ஓன்று சொல்லாய் -பாவியேன் காண வந்து —
அணைத்து -கைங்கர்யம் கொண்டு -சொல்லு உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -/
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசி வாழி கேசனே /ஓன்று ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப /
கட்ச்செவி-ஆதி சேஷனுக்கு உண்டே / பிடிக்கும் மெல்லடியை -கூவுதல் வருதல் செய்யாய் –
முதலில் கூவுதல் -ராவணனோபாதி பிரிக்கக் கூடாதே–கூவுதல் நீ வருவது நான் என்றுமாம் /

எடுப்பும் சாய்ப்புமாக -கிண்கிணி /
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ -முகப்பே கூவிப் பணி கொள்ளாய் / நல்லார் அறிவீர் -வாழ்ந்தே போம் –
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்வோமே /அடியேற்கு இறையும் இரங்கீர்-மநோ ரதம் விஞ்சி –
இப்படி பிரார்த்தனை செய்ய கிருஷிகனும் அவனே /கண் இணையும் செவ்வாய் முறுவலும் ஆகுலங்கள் செய்ய நோற்றோமே –
கனம் குழை இட காது பெருக்குவாரைப் போலே / மாச உபவாசிக்கு போஜன புறப் பூச்சு போலே /
மஹா க்ரம -அவன் திரு நாமம் -வர -போகு நம்பீ ஊடல் –/ பாத பங்கயமே தலைக்கு அணியாய்/
மாக வைகுந்தம் காண என் மனம் ஏகம் எண்ணும் – / உன் மனத்தால் /
மங்க ஒட்டு உன் மா மாயை -அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய் / சிறு சிறிதே கடாக்ஷித்து இப்படி வளர்ப்பான் /
பிராப்தி பலம் பெற வேண்டாவோ
கிண் கிணி கடாக்ஷம் முதலில்-
மேலில் -அறிவுற்று / தீ விழித்து /வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து/ உதறி /மூரி நிமிர்ந்து /
முழங்கி / புறப்பட்டு / போதர வேண்டுமே -வரிசையாக வினைச் சொற்கள் –
பூவைப் பூ வண்ண -மார்த்வம் -மகாத்மாவை பிரிய அஸஹ்யமாக -/ உன் கோயில் -கீழே நந்த கோபன் கோயில் –
நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன –
நாண் ஒலியும் சங்கு ஒலியும் -ஆசைப்பட்டவள் அன்றோ –
சீரிய சிங்காசனம் -சீர்மை திவ்ய தேசத்துக்கு -ஆசைப்பட்டு வருவானே

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் –
ப்ரதிகூலர்க்கு அணுக ஒண்ணாமையும் அனுகூலர்க்கு தண்ணளி மிக்கு இருக்கையும்
அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்-உன்னைப் பெறாத விடாய் ஆறுகைக்கும் -என்றுமாம் –
தண்ணளியும் பிரதாபமும் கூடி இறே இருப்பது –

அங்கண் இரண்டும் கொண்டு –
சந்திர சூர்யர்கள் கோப பிரசாதங்களுக்கு ஒப்பர் அல்லர் என்கை –
இரண்டும் கொண்டு–முழு நோக்கு பொறுக்கும் அளவானவாறே -இரண்டும் -என்று சொல்கிறார்கள் –

எங்கள் மேல் –
உன் நோக்குப் பெறாதே உறாவின எங்கள் பக்கல் –

நோக்குதியேல் –
தங்கள் தலையால் கிட்டுவது ஓன்று அன்றே –

எங்கள் மேல் சாபம் இழிந்து
தங்கள் யாதனா சரீரம் போலேயும்–சாபோபஹதரைப் போலேயும்-விஸ்லேஷ வ்யசனமே படுகிற-எங்கள் துக்கம் –
அனுபவித்தே விட வேண்டுகையாலே -சாபம் -என்கிறது –
அன்றியே
விஷஹாரி ஆனவன் பார்க்க விஷம் தீருமா போலே-அவன் நோக்காலே சம்சாரம் ஆகிய விஷம் தீரும்
ஆகையால்
அங்கண் இரண்டும் கொண்டு–எங்கள் மேல் நோக்குதியேல்–எங்கள் மேல் சாபம் இழியும்–என்று அந்வயம் –

நோக்குதியேல்–
தங்கள் பிரத்யனத்தால் கிட்ட முடியாதே எங்கள் மேல் சாபம்
அனுபவித்தே தீர வேண்டிய பாபம்- பிராயச்சித்தம் கொண்டு போக முடியாதே சாபத்தை –
பிறர் உடைய சாபம் போலே அன்றே
விஸ்லேஷ விசனம் அனுபவித்தே போக்கிக் கொள்ள வேண்டும் ப்ரஹ்ம சாபம் மார்வில் வேர்வை கொண்டே
துர்வாச சாவம் மார்வில் இருப்பவள் கடாஷத்தால் தீர்ந்தது
அகலிகை சாபம் திருவடி துகளாலே போக்கி
தஷ சாபம் -கலைகள் -தடாகம் தீர்த்தம் சந்திர புஷ்கரணி-எங்கள் சாபம் போக்க இத்தனையும் வேணும்-

மாற்றார் நேற்றைய பாசுரம் -அபிமானம் / அரசர் அபிமானம் தொலைத்து இதில் –
ப்ரஹ்மாதிகள் விட வேண்டியவை மஹத் அன்றோ -நமக்கு விடுவது எளியது தான் –
விஷ்ணு பக்தோ பர தேவ அரசர் -இவர்கள் மாற்றார்கள் இல்லையே ஸ்வாதந்தர்யம் மிக்கு இருக்குமே –
விசிஷ்ட வேஷம்- அரசர் –பள்ளிக்கு கட்டின் கீழே வந்த பின்பு -சங்கம் ஒரே வார்த்தையால் சொல்லும்படி –
கந்தல் கழிந்தால் -அடியான் –நாம ரூபம் இழந்து ப்ரஹ்மானுபவம் -தாஸ்யமே -நிஷ்க்ருஷ்ட வேஷம் –
நோக்குதியேல் –நோக்கு எப்பொழுதும் உண்டே -சாபம் இழிந்து -வந்து தலைப் பெய்தோம்-
உள்ளத்தால் தள்ளி இருந்தோம் அபிமானத்தால் -இது வரை -இன்று தான் –
அபிமான பங்கமாய் வந்து தலைப் பெய்தோம் -கருணை காற்று -கடாக்ஷம் தீர்த்தம் -தேவராஜஅஷ்டகம் -திருக் கச்சி நம்பி –
துர்வாசர் சாபம் இந்திரன் -அகலிகை சாபம் -தக்ஷ பிரஜாபதி சாபம் சந்திரன் –எங்கள் மேல் சாபம் –
நா நா வித நரகம் புகும் வல்வினைகள்
தமர்கள் கூட்ட வல் வினையை –வல் வினையும் கூட்டம் -தமர்களும் கூட்டம் –
தமர்களும் ஒவ் ஒருவரும் வல்வினையை கூட்ட–இவ்வளவு இருந்தாலும் – நாசம் செய்யும் சதிர் மூர்த்தி –

சந்திர சூர்யர்கள் இருவரும் உச்சிப் பட்டால் போலே இருக்கிற அழகிய திருக் கண்கள் இரண்டையும் கொண்டு –
இவ்வளவான பாகம் பிறந்த எங்களை கடாஷித்தாய் ஆகில் –
அதாவது–பரம பக்தியை உண்டாக்குகை-
அத்தால்
எங்கள் மேல் சாபம் இழிந்து –
மேல்-அவசியம் அனுபாவ்யமாய் இருக்கிற விஸ்லேஷ வியசனம் தீரும் –
ஆகையால்
உக்த ரீத்யா கடாஷிக்க வேணும் என்று கருத்து –
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போலே -என்றது
அவன் கடாஷம் சுக ரூபமாயும் அஞ்ஞான நிவர்தகமாயும் இருக்கையாலே –
தன்னடையே போவதற்கு நிவாரணம் வேண்டாமே–
திருக்கண் நோக்கம் பட்டதுமே பிரிந்து உழலும் சாபங்கள் தன்னடையே போம்
ச்ரமணி விதுர ரிஷி பத்நிகளை பூதராக்கின புண்டரீகாஷன் நெடு நோக்கு சாபம் இழிந்து
என்னப் பண்ணும் இறே -நாயனார் -95
திருவடித்தூள் அஹல்யையின் சாபம் தீர்த்தது–
திரு முழம் தாள் குபேர புத்ரர் நளகூபர மணிக்ரீவர் -சாபம் தீர்த்தது -யமளார்ஜூன பங்கம் –
திருத் துடைகள் மது கைடபர்களின் சாபம் தீர்த்தன–திரு மார்பு ஸவேதம் ருத்ரன் சாபம் தீர்த்தது
துர்வாசர் சாபம் மார்பில் இருப்பவளால் தீர்ந்தது–திருக்கண் -கருவிலே திரு ஜாயமானம் –

திங்களும் ஆதித்யனும்–
உபய வேதாந்தம்–ஸ்ரீ பாஷ்ய கால ஷேபம் -அருளிச் செயல் கால ஷேபம்-
இப்படிச் சொல்வதும் ஊற்றத்தைப் பற்ற —பரசமய நிரசன பூர்வகம் அது –
செவிக்கு இனிய செஞ்சொல் இது–சஷூஸ் மத்தா து சாஸ்த்ரேண

புண்டரீகாஷா -விதுர போஜனம் -புண்டரீக நயன -கப்யாசம் ஏவம் அஷீணி
செந்தாமாரைப் பூவை -நீரை விட்டு -ஆதித்யன் உலர்ந்துமா போலே–
ஆசார்ய சம்பந்தம் தாலி இருந்தால் சர்வ பூஷணங்களும் சூட்டிக் கொள்ளலாம்
பூதராக்கின புண்டரீகாஷா நெடு நோக்கு சபரி விதுரர் ரிஷிபத்னி–
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் -அபேஷிக்காமல் –
நம் மேல் ஒருங்கே பிரள வைத்தீர் -நம் ஆழ்வார் –
இன்றும் சடாரி சாதித்து -இதனாலே –
எம் மேல் விழியாவோ– எங்கள் மேல் நோக்குதியேல்–எங்கள் மேல் சாபம்
மூன்று தடவை சொல்கிறார்கள்
ஸ்வரூப விரோதி -கழிந்தவர்கள் -யானே என் தனதே இல்லாமல் யானே நீ என் உடைமையும் நீயே
பிராப்ய விரோதி -கழிந்தவர்கள் -மற்றை நம் காமங்கள் மாற்று
உபாய விரோதி கழிந்தவர்கள் -களைவாய் துன்பம் களையாது ஒளியாய் களை கண் மற்று இலேன் –

புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம் பூதம் குடி தானே–
செங்கண் சிறுச் சிறிதே- வல்லுயிர் சாபம் அவித்யாதிகள்
அலர்ந்தும் அலராமல் இருக்க ஹேதுக்கள் அருளிச் செய்கிறார்

ஸுந்தர்யம் செம்பளிக்க பண்ணும்–நப்பின்னை பிராட்டி ஸ்பர்சம் அலரப் பண்ணும்
அபராதம் மொட்டிக்க பண்ணும்–அபராத சஹத்வம் விகசிக்கப் பண்ணும்
கர்ம பாரதந்த்ர்யம் மொட்டிக்க பண்ணும்–ஆஸ்ரித பாரதந்த்ர்யம் அலரப் பண்ணும்
காலத்தின் இளமை மொட்டிக்க பண்ணும்–ஆஸ்ரித ஆர்த்த த்வனி விகசிக்க பண்ணும்
ஆதித்யனை கண்டு விகசிக்குமா போலே -ஆற்றாமை கண்டு விகசிக்கும்
செங்கண் -உபமானம் சொல்லி தலைக் கட்ட முடியாமல் உபமேயம் -இத்தையே சொல்லிற்று

சிறு சிறிதே -புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும்
திங்களும் ஆத்யனும் -ஸ்ரீ பாஷ்ய சத தூஷணாதிகள் /மதுபானம் பண்ணுவது- அருளிச் செயல்கள்
அங்கண் இரண்டும் –
வெளி கண்கள் உள் கண்கள் இரண்டும் –
யம் யம் ஸ்ப்ரு சதி பாணிப்யாம் யம் யம் பச்யதி சஷுஷா -கடாக்ஷம் வேண்டுமே ஆ முதல்வன் இவன் –
ஏகயைவ குரோர் த்ருஷ்ட்யா த்வாப்யாம் வாபி லபேத யத் நதத் திஸ்ருபி ரஷ்டாபிஸ் ஸஹஸ்ரேண அபி
கஸ்ய சித்-ஆச்சார்யர் கடாக்ஷத்தின் உத்கர்ஷம் –

சாபம் இழிந்து நோக்குதியேல் -என்று அந்வயம்
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து -என்று கீழோடே -அந்வயம்-

—————————————————

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பாவை சாரம் – ஏற்ற கலங்கள் —

January 22, 2018

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –

நப்பின்னைப் பிராட்டி —போகத்தில் வந்தால் -நானும் உங்களில் ஒருத்தி அன்றோ –
நாம் எல்லாரும் கூடி கிருஷ்ணனை அர்த்திக்க–வாருங்கோள் என்ன –
அவன் குணங்களிலே தோற்றார்–தோற்றபடி சொல்லி எழுப்புகிறார்கள் –
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய் ஒரு தடவை–
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்–ஒரே பாசுரத்தில் இரண்டு தடவை-திருப்பள்ளி எழுச்சி இதில் –
மதுரையில் அவதரித்து இங்கே நந்த கோபன் மகனாக வந்த பிரயோஜனம் ஆராய்ந்து பாராய்-
ஆனாயன் கடி மனையில் தயிர் உண்டு நெய் பருக வெண்ணெய் உண்ண வந்தாய் -திருமங்கை
ஆண்டாள் -நாச்சியார் -29-கார் இருள் –போந்தாய் -இன் கன்னியரோடு -குறையினால்
நம் ஆழ்வார் -ஆயர் குலத்தை வீடுய்ய தோன்றிய -கரு மாணிக்க சுடர் 6-2-10-
மகனே அறிவுறாய் -காரணம் ஆராய்ந்து பாராய்–கிருபை–
நான் செய்ய வேண்டியது என்ன கேட்க–
கடாஷம் பிரார்த்திக்கிறார்கள்-

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்-

வியாக்யானம் –

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப –
ஏற்ற கலங்கள் எல்லாம் எதிரே பொங்கி வழியும்படி –கலமிடாதார் தாழ்வே –
இட்ட கலங்கள் எல்லாம் நிறையும் –ஏலாத கலங்கள் நிறையாது ஒழிகிறது பாலின் குறை அன்றே –
ஏற்ற கலங்கள் –
பெருமை சிறுமை இல்லை –கடலை மடுக்கிலும் நிறைக்கும் அத்தனை –
இவையும் கிருஷ்ணன் படியாய் இருக்கை –
அர்த்தியாதார் குற்றமத்தனை போக்கி-அவன் பக்கல் குறை இல்லை –
ஸ்வீகாரமே அமையும் இறே அவனுக்கு –
உபதேச பாத்திர பூதரான சிஷ்யர்கள் -ஆச்சார்ய உபதேசத்தாலே பரி பூரண ஞானரான சிஷ்யர்களுக்கு –
ஆச்சார்யனுக்கும் உக்துபதேசம் பண்ணும்படி – ஞானமானது பொங்கி வழியும்படியாக

எதிர் பொங்கி மீது அளிப்ப –
ஸத்பாத்ரங்கள் -புத்ராதிச்சேத் பராஜயம் / சிஷ்யாதிச் சேத் பராஜயம் /
விளக்கில் கொளுத்தின தீவட்டி போலே அன்றோ சிஷ்யர்கள் பிரபாவம்
வளர்த்ததனால் பயன் பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கை கூப்பி வணங்கினாளே

மாற்றாதே பால் சொரியும் –
முலைக் கடுப்பாலே-கலம் இடுவார் இல்லை என்னா-அது தவிராது –
மாறாமல் –
பால் போலே போக்யமான -ஞானத்தை உபதேசியா நிற்குமவர்களாய்-
அர்த்த விசேஷங்கள் வர்ஷித்து-மாற்றாதே- இடைவிடாமல்
ஊற்று மாறாமல் பால் சொரியும்
அர்ஜுனன் -பூய ஏவ மகா பாஹோ ச்ருணு வாக்கியம் சந்தோஷத்துடன் நாரதர் சொல்லி
மைத்ரேயர் இதம் தே ஸ்ருணு-நல்ல அர்த்தம் இழக்க ஒண்ணாது என்று
மாற்றாதே –
அர்த்தம் மாற்றாமல்
பிறர் சொல்லி–முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டு பின்னும் ஓர்ந்து அத்தை பேசுதல்
பிரமாணம் மாற்றாமல்–
ஏமாற்றாமல் -சிஷ்யர்களை

வள்ளல் –
சிலருக்கு உபகரித்ததாய் இருக்கை இன்றிக்கே-தன் கார்யம் செய்ததாக உபகரிக்கை –
கிருஷ்ணனைப் போலே-பெண்ணுக்கும் பேதைக்கும் அணைக்கலாம் படி பவ்யமாய் இருக்கை -என்றுமாம்
சிஷ்ய விதேயர்களுமாய் –
வீடுமுன் முற்றவும் அர்த்தியாது இருக்கச் செய்தே–
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே இது கொண்டே மதுரகவி
ஆயிரம் இன் தமிழ் பாடின வண் சடகோபர் வண்மை மிக்க–அருள் மாரி நமரும் உரைமின்

பெரும் பசுக்கள் –
ஸ்ரீ சத்ருஞ்ஜயனைப் போலே இருக்கை –
கிருஷ்ண ஸ்பர்சத்தாலே வளர்ந்து அவன் ஏழு வயசிலே பதினாறு வயஸூ குமாரன் என்னும்படி
இருக்குமா போலே இருக்கும் –
கீழே -17/18 நந்தகோபன் அற நெறியும்- தோள் வலியும் பேசி –
இதில் கறவை செல்வ சிறப்பு-பசுக்கள் -பெரும் பசுக்கள் -வள்ளல் பெரும் பசுக்கள் –

பகவத் குண அனுபவத்தாலே பரிபுஷ்டரான சிஷ்யர்களை –
அபேக்ஷையால் கொடுக்கும் அவனைப் போலே அவையும் அபேக்ஷித்ததற்காக செய்தது -என்கை
அர்த்திக்கை உபாயம் ஆகாதோ என்னில்
ரக்ஷணம் அவனுக்கு ஸ்வரூபமானவோ பாதி ஸ்வரூபத்தில் புகலாம் இறே
அர்த்தித்தவம் நித்தியமாக வேணுமோ என்னில்-முக்தனானாலும் வேணும்
இல்லையாகில் அது ப்ராப்யமாக மாட்டாது என்கை –
சம்சார போகம் சாவதியாகையாலே அர்த்தித்தவம் ஓர் அளவிலே பர்வசிக்கும் –
அங்கு நித்யமாகையாலே உள்ளதனையும் வேணும்
அகலகில்லேன் இறையும் / மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு

ஆற்றப் படைத்தான் –
கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி-வழியார முத்தீன்று வளம் கொடுக்கும் திரு நறையூர் –
அதாவது-தொகை இன்றிக்கே இருக்கை –

படைத்தான் மகனே –
அவர்க்கு ஆர்ஜித்து வந்தது -இவன் பிறந்து படைத்த சம்பத்து
இத்தால்
ஸ்ரீ நந்த கோபர் சம்பத்துக்கு இட்டுப் பிறந்த ஏற்றம் –
நீர் தாழ வந்து -நீர்மை நீரின் தன்மை சௌலப்யம்
இடையனுக்கு மகனாய் பிறந்ததே சௌலப்யம்-நந்த கோபன் மகனே
பரமபதம் போலேயும்–நாரயணத்வம் போலேயும்–தான் தோன்றி அன்றே இது –
அசங்க்யாதமாக ஆர்ஜித்துப் படைத்த- ஆச்சார்யனுக்கு புத்ரவத் விதேயன் ஆனவனே –

அறிவுறாய்-
சர்வஞ்ஞனானவனை உணர்த்த வேண்டி இறே உள்ளுச் செல்லுகிறது –
கைப்பட்ட பெண்களை சரக்கிலே வாங்கி–கைப் படாதவர்களைக் கைப் படுத்துகைக்காக உண்டான
உபாய அந்ய பரதையாலே-எழுப்புகிறார்கள் ஆகவுமாம் –
நீ ப்ரபோதத்தை அடைய வேணும் –
சம்பந்தத்தால் தான் கிடைக்கும் — சாதனையால் இல்லை–
உணர்த்தி உண்டால் போதும் பலம் நிச்சயம் அறிவுற்றாலே போதும்
அறிவியாது பொழுது தான் இழவும் துக்கமும்

பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே –
அடியோமுக்கே எம்பெருமான் -கலியன் -4-9-5-
உன்னை நீ உணர வில்லை -உன் பிறவியைப் புத்தி பண்ணி எங்களுக்காக உணராய்
பரம பதத்தில் வந்தோமோ -ஷீராப்திக்கு வந்தோமோ -எங்களைத் தேடி நீ திருவாய்ப்பாடிக்கு அன்றோ
வந்தாய் -இங்கே உறங்கலாமோ -ஆண்டாள் –
எங்களைத் தேடி திரு இந்தளூர் எழுந்து அருளிய ஸ்ரீ பரிமள ரெங்க நாதனே உணராய் –

ஊற்றமுடையாய் –
த்ருட பிரமாண சித்தனாகை – –
ஆஸ்ரித பஷபாதம் உடையவனே –

பெரியாய் –
எதோ வாசோ நிவர்த்தந்தே என்று
அந்த பிரமாணங்களுக்கும் தன்னுடைய அவதி-காண ஒண்ணாதாய் இருக்கை –
அபரிச்சின்ன ஸ்வரூப குண விபூதிகளை உடையவனே –

ஏற்ற கலங்கள் -திருக் கண்ண மங்கை- அனுபவம் -ஸூ சகம்
பெரியாய் -பெரும் புறக் கடல் –விண்ணில் விண்ணவராய் மகிழ்வு எய்துவர்
பலன் சொல்லி பெரியாராய் ஆக்கி அருளுபவன் -பற்றார் நடுங்க முன் பாஞ்ச சந்நியத்தை வாய் வைத்த போர் ஏறே
ச கோஷா தாரத்த ராஷ்ட்ரானாம் ஹ்ருதயா நிவ்யதாரயத்-வெண் சங்கம் ஓன்று ஏந்திய கண்ணா-
ஆற்றப் படைத்தான் மகனே -திரு நாராயண புரம்–அனுபவம் -ஸூ சகம்-
யதிராஜ சம்பத் குமாரனே -பல்கலையோர் -பெரும் பசுக்கள் -தோற்றமாய் நின்ற சுடர்
புற்றில் மறைந்து பின்பு தோற்றமாய் நின்ற இதிகாசம் பிரசித்தம் இ றே-

உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே –
என்றும் ஓலைப் புறத்திலே கேட்டுப் போகை அன்றிக்கே-எல்லாரும் காணலாம்படி-
அஜஹத் ஸ்வபாவனாய்க் கொண்டு அவதரித்து –-சகல மநுஜ நயன விஷய தாங்கதன் ஆனவனே –

சுடரே –
சம்சாரிகளைப் போலே பிறக்க பிறக்க கறை ஏறுகை அன்றிக்கே-
சாணையில் இட்ட மாணிக்கம் போலே ஒளி விடா நிற்கை
நிலை வரம்பிலே பல பிறப்பாய் ஒளி வரு முழு நலம் -என்றும் சொல்லக் கடவது இறே –

ஊற்றமுடையாய் –
ஆஸ்ரிதர் விஷயத்தில்-பண்ணின பிரதிஞ்ஞையை-மகாராஜர் உள்ளிட்டாரும் விட வேணும் என்னிலும்
விடாதே முடிய நின்று தலைக் கட்டுகை –

பெரியாய் –
1-அந்த பிரதிஞ்ஞை-சம் ரஷணத்து அளவு அன்றியே இருக்கும் பலம் என்றுமாம் –
பெரியாய் –
2-ஆஸ்ரித விஷயத்தில் எல்லாம் செய்தாலும்-ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -என்று
3-தன் பேறாய் இருக்கை என்றுமாம் –
4-தன் பெருமைக்கு ஈடாக ரஷிக்குமவன் -என்றுமாம்

உலகினில் தோற்றமாய் நின்ற –
கீழ் சொன்ன ஆஸ்ரித பஷ பாதம் லோகத்தில் பிரசித்தம் ஆம்படி இருக்கை
அதாவது –
சிசுபால துரியோதனாதிகளுக்கும் பாண்டவர் பக்கல் பஷபாதம் தோற்ற இருக்கை –
சுடரே –
லோகத்தில் தோற்றின பின்பு நிறம் பெற்ற படி –
இந்த லோகத்தில் சஷூர் விஷயமாம் படி அவதரித்தவனாய் சிரகாலம் இருந்து தேஷிஷ்டனானவனே-
ஆஸ்ரித பஷ பாதம் லோகத்திலே பிரசித்தமாம்படி நின்று தேஷிஷ்டனானவனே–என்றுமாம் –
தோற்றமாய் நின்ற சுடர்–
ஆஸ்ரித பாரதந்த்ர்யத்தால் வந்த ஔஜ்வல்யம்
இன்னார் தூதன் என நின்றான் –
சொல்லிய பின்பு நின்றான்
நிலை–தரித்து நின்றான்
அவதாரம் எடுப்பதில் நின்றும் நின்றான் –
ஆசைப்பட்டது பெற்றதால்–ஐவர்க்கு அருள் செய்த –-பரஞ்சுடர்

துயில் எழாய் –
இப்போது உணராமையாலே-அந்த குணமும் மழுங்க இறே புகுகிறது –
நீ படுக்கையில் நின்றும் எழுந்திருக்க வேணும்–ரஷணம் பிரசக்தமாய் இருக்க
ரஷண சிந்தை பண்ணக் கடவதோ –என்று தாத்பர்யம்

மாற்றார் உனக்கு வலி தொலைந்து-
உன் வாசல் கண் ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே-
சத்ருக்கள் ஆனவர்கள் உன் மிடுக்குக்குத் தோற்று-போக்கடி இல்லாமையாலே-
உன் திருவடிகளிலே வந்து விழுமா போலே –
மாற்றார் தங்கள் வலி மாண்டு வந்து விழுமா போலே -என்றுமாம் –
மாற்றார் –
என்று சத்ருக்கள்
நாராயணன் ஆகையாலே-சம்பந்தம் எல்லாரோடும் ஒத்து இருக்க-இவனுக்கு சத்ருக்கள் உண்டோ -என்னில்
ஆஸ்ரித விரோதிகள் இவனுக்கு சத்ருக்கள் –
இத்தால் –
உகாவாதார் வீரத்துக்குத் தோற்று வருமா போலே
உகந்த நாங்கள் உன் நீர்மைக்குத் தோற்று வந்தோம் -என்கிறார்கள் –
அவர்களுக்கு முடிந்து பிழைக்கலாம் –குணஜிதர்க்கு அதுக்கும் விரகு இல்லை இறே-
பிரமஹாஸ்தரம் விட வேண்டும்படி-பிராட்டி பக்கலில் அபராதத்தைப் பண்ணி-ஓர் இடத்திலும் புகலற்று
பெருமாள் திருவடிகளிலே விழுந்த காகம் போலே -இருக்கை
அம்பு பட்டாரோபாதி குண ஜிதர் -என்றது இறே –
வணக்கம் ஸ்வரூபத்துக்கு என்று இராதே ஆற்றாமைக்கு என்று இருக்கை

போற்றி
போற்றுகையாவது -திருப் பல்லாண்டு பாடுகை-பெரியாழ்வாரைப் போலே வந்தோம் –

யாம் வந்தோம் –
அவர் தன்னைப் பேணாதே-உன்னைப் பேணினாப் போலே
நாங்களும் எங்கள் ஸ்வரூபத்தைப் பாராமல்-ஆற்றாமை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமையாலே –
வந்தோம்
நசை முடிய ஒட்டாது –
ஆற்றாமை இருந்த இடத்தே இருக்க ஒட்டாது இறே –
உன்னுடைய சௌந்தர்ய சௌசீல்யாதி குணங்கள் பிடித்து இழுக்க வந்தோம்

யாம் வந்தோம் –
சத்ருக்கள் துரபிமானத்தாலே ந நமேயம் என்று இருக்குமா போலே
ஸ்வரூப ஞானத்தாலே -தத் சத்ருசம் -என்று இருக்கும் நாங்கள்-ஆற்றாமை இருக்க ஒட்டாமையாலே வந்தோம் –
பெரியாழ்வாரை போலேயும் வந்தோம்–
அல்லாதாரைப் போலேயும்-சத்ருக்களைப் போலேயும் –
வந்தோம்-
நாங்கள் செய்வது எல்லாம் செய்தோம்–
நீ பெறினும் பேறு இழக்கிலும் இழ -என்றபடி-

புகழ்ந்து –
எங்களை தோற்பித்த குணங்களைச் சொல்லி –

லௌகிக சத்ருக்களடைய உன்னுடைய மிடுக்குக்கு தங்கள் வலி மாண்டு உன் திருவாசலிலே
பழைய ராஜ்யத்தைக் கொடுத்து
நீ போ என்றாலும் முன்புத்தை எளிவரவை நினைத்து பொறுக்க மாட்டாதே
உன் திருவடிகளை ஆஸ்ரயிக்குமா போலே –
நாங்களும்
உன்னுடைய நிருபாதிக சேஷித்வத்துக்கு தோற்று–தேகாத்ம அபிமானத்தையும்–ஸ்வ ஸ்வாதந்தத்ர்யத்தையும்
அந்ய சேஷத்வத்தையும்–ஸ்வாதீன கர்த்ருத்வ போக்த்ருத்வங்களையும்–பந்துக்கள் பக்கல் சிநேகத்தையும்
உபாயாந்தர–உபேயாந்தரங்களையும் விட்டு
இவற்றை நீ கொடுத்தாலும்
பழைய துக்கத்தை நினைத்து வேண்டோம் என்று–உன் திருவாசலிலே வந்து –

போற்றி யாம் யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்-
நீயே சமஸ்தவித பிராப்யங்களும் பிராபகங்களும் என்று-உன் திருவடிகளை ஸ்துதித்து-
மங்களா சாசனம் பண்ணி வந்து ஆஸ்ரயித்தோம் –
இத்தால் பிரபுத்தனாய் தங்கள் கார்யம் செய்கைக்கு –
ஏத்த ஏழு உலகம் கொண்ட -என்கிறபடியே ஆஸ்ரிதரானவர்களுக்கு நிர்மமராய்க் கொண்டு
அவன் குண கீர்த்தனம் பண்ணுகை கர்த்தவ்யம் என்கிறது –

போற்றி யாம் வந்து புகழ்ந்து
வலி மாண்டு அநந்ய கதித்வம் தோன்ற உன் திரு வாசலிலே படுகாடு கிடந்தது போற்றிப் புகழுமா போலே
உன் பாலே போன்ற சீரிலே பழுத்து ஒழிந்து புகழ் உரைகளை –
ஆச்சார்ய பரம் -குரும் பிரகாசயேத் தீமான் –
வாதம் செய்து வலி மாண்டு அடி பணிந்தவர் எம்பெருமானார் இடத்தில் –
யாதவ பிரகாசர் யஞ்ஞ மூர்த்தி போல்வார்
பட்டர் இடம் தஞ்சீரை ஞானியர்கள் தாம் புகழும் வேதாந்தி -நஞ்சீயர் ஆகி அடி பணிந்தார்
துன்னு புகழ் கந்தாடை தோழப்பர்-நடுவில் திரு வீதிப் பிள்ளை பட்டர் போல்வார் நம்பிள்ளை இடம்

எற்றி மனத்து எழில் ஞான விளக்கை இருள் அனைத்தும்
மாற்றினவருக்கு ஒரு கைம்மாறு மாயனும் காண கில்லான்
போற்றி உகப்பதும் புந்தியில் கொள்வதும் பொங்கு புகழ்
சாற்றி வளர்ப்பதும் சற்று அல்லவோ முன்னம் பெற்றதற்கே

எம்பெருமானார் -சிஷ்யர் தேடி -நீ விட்டாலும் நான் உம்மை விடேன் –
ஊற்றம்–பிள்ளை உறங்கா வல்லி தாசர்
பெரியாய்–உபகார வஸ்து கௌரவத்தால்–என் அப்பனிலோ -பெரியாய்
உலகினில் தோற்றமாய் நின்ற சுடர்–வாதம் வென்ற ஆசார்யர்
திருநாராயணபுரம் காட்டும் பாசுரம்
எம்பெருமானார் -12000 ஸ்ரீ வைஷ்ணவர்கள் 700 சன்யாசிகள்–மகன் எதிராஜ சம்பத்குமார்
பெரியாய் -ராமன் கண்ணன் இருவராலும் ஆராதிக்கப் பட்ட–வெளிப்படுத்தி திருமண் தேடும் பொழுது
சுடர் குன்றின் மேல் இட்ட விளக்கு–எதிசைல தீபம்
அடி பணியுமா போலே துலுக்க பெண் —பெரிய பிராட்டியார் தான் சம்ப்ரதாயம்

நவ ஒன்பது புதியது -இரண்டு அர்த்தம் இன்றி ஆர்ஜவம் கோணல் புத்தி இல்லாமல்
சோழ சக்கரவர்த்தி இல்லை -மாறும் பார்ப்போம் -பூ மண்டலம் முழுவதும் ஆளாமல்
முப்பத்து மூவர் ஆளவந்தார் பிரகரணம்
ஏற்ற கலங்கள் -நிறைய ஆசார்யர் பரமான பாசுரம்
இத்துடன் பகவானை எழுப்பும்
அம்பர் ஊடருத்து உம்பர் கோமானே எழுப்பி -சௌலப்யம் சொல்லி
மலர் மார்பா எழுந்திராய் -ராசிக்யம் சொல்லி
கப்பம் தவிர்க்கும் கலியே -பரத்வம் சொல்லி எழுப்புகிறார்கள் மூன்று தடவை –
தேவத்வமும் நிந்தை ஆனவனுக்கு ஒளி வரும் -ஜன்மம் -அவதரித்து ஒளி மிக்கு
எத்திறம் உரலோனோடு இணைந்து ஏங்கி இருந்த எளிவே மூன்று கண்டம் ஆழ்வார்
பிறந்தவாறும் -நானும் பிறந்து நீயும் பிறக்க வேண்டுமோ –
மகனே அறிவுறாய் என்கிறாள் -இதில் நான்காவது தடவை
அவன் உகக்கும் என்று
ராமன் கிருஷ்ணன் அஹம் பாந்தவோ-

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி -மீதளிப்ப -உக்தி சாதுர்யம்
தகுதியான சிஷ்யர்கள் சத் பாத்ரம் -ஏற்ற கலங்கள்

எதிர் பொங்கி மீது அளிப்ப –
கீதாச்சார்யர் -அளித்தது -மன் மநா பவ –9th அத்யாயம் இறுதி ஸ்லோகம் -பூய ஏவ -ச்ருணு மீண்டும் கேளு –
பரமம் வாச -பரமமான -வாக்கியம் -மாற்றாதே பால் சொரிந்தான் -துக்தம் கீதாம்ருதம் –
முடிவு எடுக்கும் புத்தி அருளி -ததாமி புத்தி யோகம் -முடிவை சொல்லாமல் -சைதன்யம் இருப்பதால் –
முடிவு எடுக்கும் யோக்யதை -அருளி -சாஸ்திரம் -ஆழ்வார் ஆச்சார்யர் உபதேசம் அருளி –
புத்தி வளர்ந்து -அடியேன் என்று சார்ந்து இருக்க வேண்டுமே –
தேஷாம் சதத யுக்தானாம் ப்ரீதி பூர்வகம் ததாமி புத்தி யோகம் -அத்தை ஆலம்பனமாக கொண்டு என்னை அடைய–
எதிர் பொங்கி மீது அளித்தவை கீதார்த்த ஸங்க்ரஹம்-ஸ்ரீ கீதா பாஷ்யம் -இத்யாதிகள்
இரண்டு ஜீவாத்மா -நாரதர் -வால்மீகி -ப்ரக்ருஷ்ட வாக்கியம் அப்ரவீத் -ச்ருணு -கோன் வஸ்மி –
பிரமா அனுக்ரஹம் வால்மீகிக்கு சாஷாத்காரம் -முக்காலம் நடப்பதை –
சத கோடி -ஸ்லோகம் ப்ரஹ்ம லோகம் -24000-அர்த்த ஸ்புஷ்டியுடன் சுருக்கி எதிர் பொங்கி மீது அளிக்க
ஸ்ரீ ராம ராமேதி -ஒன்றாக கொடுத்ததும் எதிர் பொங்கி மீது அளித்தான் ருத்ரனும் –
பால் -வெண்ணெய் நெய்-திரட்டு பால் -சாரம் கொடுப்பதே -சரம ஸ்லோகம் -அருளியதால் எதிர் பொங்கி மீது அளிப்பது
நித்ய சத்ருக்ந அநீத-சாரம் -கண்ணி நுண் சிறுத் தாம்பு -மற்றவரை சிரித்து இருப்பாரே –
ராமர் -பொதுவான தர்ம சாஸ்திரம் -பால் போலே சீர் -சாமான்ய -பசுக்கள் –
லஷ்மணன் -சேஷத்வம் -பெரும் பசுக்கள் –
பரதன் -மாற்றாதே பால் சொரியும் பெரும் பசுக்கள் திரு உள்ளம் -பார தந்தர்யம்
கடல் போலே -நீர் கரை போலே அடியேன் -கரைக்கு உட்பட்டு -பாதுகை பெற்று திரும்பி –
எதிர் பொங்கி மீது அளிக்கும் மாற்றாதே பால் சொரியும் -வள்ளல் பெரும் பசு -சத்ருக்கனன் -பாகவத பாரதந்தர்யம் –
ராமனை அன்றி மற்று ஓன்று அறியாத பரதனை இன்றி மற்று ஓன்று அறியாத சத்ருக்நனனே நமக்கு தஞ்சம் –
சாஸ்திரம் -பகவத் கைங்கர்யம் -திரு உள்ளம் உகக்கும் கைங்கர்யம் -திருவடி ஸ்தானீயர் திரு உள்ளம் உகக்கும் கைங்கர்யம்
இதே போலே பரத்வம் -கூப்பீடு -விபவம்-அந்தர்யாமி -அர்ச்சை -இவையும் கருணையில் எதிர் பொங்கி சேவை
ரிஷிகள் -ஆழ்வார்கள்-மதுரகவி – -இதே ரீதியில் -கோது அருளி –

ஆச்சார்யர் உபதேசம் -சிஷ்ய பரம்பரைகள் ஒருவருக்கு ஒருவர் -எதிர் பொங்கி மீது அளிக்கும் படி
பசுக்கள் -பெரும் பசுக்கள் -வள்ளல் பெரும் பசுக்கள் –
உபதேசம் கால் வாசி -கடாக்ஷம் -அவகாசம் இல்லாமையால் -அனுக்தமானவை எல்லாம் ஸ்புரிக்க –
கிரந்த அவகாஹனம் நித்தியமாக செல்ல வேணுமே
அறிவுறாய் -மனஸ் உணர்ந்து -துயில் எழாய்-அடுத்த அவஸ்தை /
செற்றார் -கீழே இங்கு மாற்றார் -மாறி -ஆற்றாதவர்களாகி -ஆசற்றார் மாசற்றார் போலே –

மாற்றாதே பால் சொரியும் முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் -ஸ்திரமான
பணிமானம் பிழையாமே அடியேனைப் பணி கொண்டாய் கிடாம்பி ஆச்சான் -எம்பெருமானார் – -4-8-2-
ஊற்றம் உடையாய் -திட பிரமாணத்தால் சித்திக்கப்படுபவன்
இல்லை என்பவன் வார்த்தை கொண்டு இருக்கிறவன் என்று
இங்கே இல்லை இப் பொழுது இல்லை இருந்தே தீர வேண்டும்
மலடி பிள்ளை -மலடியும் உண்டு பிள்ளையும் உண்டு சம்பந்தம் தான் இல்லை –
ஒரே பதம் சொல்லி இல்லை சொல்லு –
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ்வருவங்கள்

பெரியாய் -ரிணம்-செய்தது எல்லாம் செய்தாலும்
உலகினில் தோற்றமாய் சுடரே –
நின்ற சுடரே -பிரித்து வியாக்யானம்
சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லதே பேரேன் என்று –
மாற்றார் -அடி பணியுமா போலே பிரபத்தி பண்ணுகிறார்கள் –
யாதவ பிரகாசர் -எம்பெருமானார் –
அவரே அடி பணியும் படி -வலி தொலைந்து உன் வாசல் கண் வந்து அடி பணியுமா போலே –

பால் சொரியும் திருமலை அருவி போலே
மாற்றாதே தான் சொல்லி மாற்றாமல்
முன்னோர் சொன்ன வழி மாறாமல்
ஏமாற்றாதே –
வள்ளல் உதாரர் -இருப்பது அனைத்தையும் வழங்கி
பெரும் பசுக்கள் –
ஆற்ற படைத்தான் –
மகனே மகான் சுவாமி போலே
அத்யவாசாயம் ஈடுபாடு 87 திரு நஷத்ரம் அன்றும் உபன்யாசம் செய்து அருளி —பெரியாய் –

வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்ற படைத்தான் –
ஸ்வாமி சிஷ்ய ஏகாந்தி நாம் த்வாதசபிஸ் சஹஸ்ரை
சம்சேவிதஸ் சமயமி சப்த சத்யா அனைவரும் ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
சிஷ்யாதிச்சேத் பராஜ்யம் -விஞ்சி இங்கே செய்யவோ –
இரண்டு ஆற்றின் நடுவே விண்ணப்பம் செய்யவோ -ஆழ்வான்
பால் சொரியும் –
அர்த்த விசேஷங்கள் ஆற்ற படைத்தான் –
அபரிமிதமாக மாற்றார் வலி தொலைந்து –யாதவ பிரகாசர் வந்து பணிந்த விருத்தாந்தம்-

—————————————————

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருப்பாவை சாரம் – முப்பத்து மூவர் —

January 22, 2018

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –
அவனுக்கும் எங்களுக்கும் அடியான நீ எங்களை நீராட்டுவுதி என்று
கிருஷ்ணனையும் நப்பின்னை பிராட்டியையும்
கூட எழுப்புகிறார்கள் –
இப்பாட்டில்–மீளவும் எம்பெருமானை எழுப்பி–அங்கு மறுமாற்றம் பிறவாமையாலே–
நப்பின்னை பிராட்டியை எழுப்பி வந்த கார்யத்தை அறிவிக்கிறார்கள் —
திரு உள்ளம் பார்த்து உணர்த்த சமயம்–
இவள் தன்னையும் –பற்றினாலும் கார்யம் செய்யக் கடவன்–போக -பரவசன் -வார்த்தை கோபம் வருமோ
நீ முன்பு ஆர்த்த ரஷணம் பண்ணி ஆர்ஜித்த குணங்கள் இழக்கப் போகிறாய் சொன்ன இடத்திலும்
வாய் திறவாமையாலே
நப்பின்னை பிராட்டி இடம் -தத்துவம் அன்று தகவு -என்று சொன்னதும் அசஹ்யமாய் போனதே
தேக ஆத்ம குணங்கள் சொல்லி ஏத்தி–அவன் பர தந்த்ரன் —
எங்களுக்கும் அவனுக்கும் கடவையான நீ -கடகர் சேர்த்து -இருவருக்கும் எஜமானி நீ –
உன் மணாளனையும் தந்து எங்களை நீராட்டு என்கிறார்கள்-

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பமுடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்

முப்பத்து மூவர் –
இத்தால் துர்லபத்வம் சொல்லுகிறது –
ரஷணத்துக்கு சங்க்யா நியதி உண்டோ –
பஞ்ச லஷம் குடியில் பெண்கள் ஆனால் ரஷிக்கல் ஆகாதோ –
ஆர்த்தியே கைம்முதலாக ரஷிக்குமவன் அல்லையோ ––
அபரிமித சாங்க்யரான –
எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர் 33 -பொய்கை ஆழ்வார்
இரு நால்வர் ஈர் ஐந்தின் மேல் ஒருவர் -எட்டோடு ஒரு நால்வர் ஓர் இருவர் –யாம் ஆர் வணக்கமாறு பெரிய திருவந்தாதி –
மூவர் -ப்ரஹ்ம ருத்ரன் இந்த்ரன் -முன் சென்று கப்பம் தீர்த்தான்-
முப்பத்தி மூன்று வித பக்தி -மூவர் அதிகாரிகள் மூவர் -மூன்று வித பக்தி பிரபத்தி
அஜஞாநத்தாலே ஞானாதிக்த்தாலே பக்தி பாரவச்யத்தால் பிரபத்தி
ஸ்தான த்ரயோதி பக்தி கத்யம் -கர்ம யோகம் -ஞான யோகம் -பகவத் அனுபவம் –
ஜனக சக்கரவர்த்தி -கர்ம யோகி –

அமரர்க்கு-
ஜ்ஞான சங்கோசம் இல்லாதவர்களுக்கு –
எல்லா அளவிலும் சாவாதார்க்கோ உதவல் ஆவது –
உன் நோக்குப் பெறாவிடில் சாகும் எங்களுக்கு உதவலாகாதோ –
முகாந்தரத்தாலே ஜீவிப்பார்க்கோ உதவலாவது –
உன் முகத்தாலே ஜீவிப்பாருக்கு உதவலாகாதோ –
பிரயோஜனாந்த பரருமாய் மிடுக்கரும் ஆனார்க்கோ உதவலாவது–
அநந்ய பிரயோஜநைகளுமாய் அபலைகளுமாய் இருப்பார்க்கு உதவலாகாதோ –
சமிதி பாதி -சாவித்திரி பாதி –ஸுய ரஷணம் செய்தால் தான் ரஷிப்பாயா-
வியதிரேகத்தில் பிழையாத நாங்கள் இருக்க

முன் சென்று –
அவர்களுக்கு பிரகிருதி சம்சர்க்கத்தாலே சங்கோசம் வருவதற்கு முன்பே ரஷகனான தான் அவதரித்து நின்று
நோவு வருவதற்கு முன்னே சென்று–ஏற்கவே ரஷிக்க கடவ நீ–
நோவு பட்டு வந்த எங்களை ரஷிக்க லாகாதோ –
நினைவில் குற்றம் ஆக்கி நினைவுக்கு முன்னே வரை முன் ஏந்தும் மைந்தனே
முன்
இடமும் காலமும் முன்
பார்த்தன் தன் முன்–வரைக்கு –முன் சென்று- ஒவ் ஒன்றுக்கும் பாவம் காட்டி அருளுகிறார்-
ஆதி மூலமே என்று அழைத்த ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு நீ வந்த த்வரைக்கு
நமஸ்காரம் என்றார் அன்றோ ஸ்ரீ பராசர பட்டர் –

சென்று –
நீ சென்று உதவக் கடவ உனக்கு – உன் வாசலிலே வந்த எங்களுக்கு உதவலாகாதோ –
உன் பக்கலிலே வருகை மிகை என்னுமவன் அல்லையோ –
எழுதும் என்னுமது மிகையாய் அன்றோ இருப்பது-

கப்பம் தவிர்க்கும் –
கம்பம் என்கிற இத்தை கப்பம் என்று வலித்துச் சொல்கிறது – அதாவது நடுக்கும்
கம்பம் தவிர்க்கையாவது –
அசுர ரஷசாதிகளாலே குடி இருப்பும் அகப்பட இழந்து கிலேசித்த அத்தை தவிர்க்கை –
நாட்டார் நடுக்கத்தை தடுக்கக் கடவ நீ எங்களை நடுங்கப் பண்ணாதே கொள்ளாய் –
துக்க நிவ்ருத்தியை ஆசைப்பட்ட தேவர்களுக்கோ உதவலாவது –
நீ உணரும்படியைக் காண ஆசைப்பாட்டாருக்கு உதவலாகாதோ –

கப்பம் தவிர்க்கும் –கப்பம் -கம்பம் என்றபடி
இரு கூறா நகந்தாய் -திருவாய்மொழி -9-4-7-நகந்தாய -நகத்தாய என்றபடி
வல்லொற்று மெல்லொற்றாக மாறிய இடங்கள்
நகத்தை தாவும்படி பண்ணின விசேஷ அர்த்தமும் பன்னீராயிரப்படியில் அருளி உள்ளார்-

கலியே –
மிடுக்கை உடையவனே -சாமர்த்தியத்தை உடையவனே –
அபலைகளான எங்களுக்கு உன் மிடுக்கை ஒழிய உண்டோ –
அரணிமையை-கல் மதிள் போலே ஆழ்வார்கள் அருளிச் செயல்களை – உடையவன் -என்றுமாம் –

செப்பமுடையாய் –
ஆஸ்ரிதர்க்கு செவ்வை அழியாது இருக்குமவனே —
எங்களுக்கு செவ்வை அழியாது இருக்க வேண்டாவோ-
செப்பம் –
ரஷை -என்றுமாம் —
செப்பம் –
ஆர்ஜவம்-ஆஸ்ரிதர் தம்மை அனுபவிக்கும்படி தான் பாங்காய் இருக்குமவனே
எங்கள் செவ்வை கெடும் உன்னுடைய செவ்வியால் நிரப்புவாய் என்று இருந்தோம்
நாங்கள் வர நீ உணராமால் அசத் சமம்–விரகாலே நீரை மேட்டிலே ஏற்றி–வாத்சல்யம் ஏறிப் பாய வேண்டாமா-

திறலுடையாய் –
அநாஸ்ரிதர்க்கு கிட்ட ஒண்ணாதவனே –
திறல் –
பராபிபவன சாமர்த்யம்-அநாஸ்ரிதர்க்கு அன்றிகே எங்களுக்கு அணுக ஒண்ணாது இருக்கைக்கோ –

செப்பமுடையாய் திறலுடையாய் –
பாண்டவர்களுக்கு செவ்வியனாய்–துரியோதனாதிகளுக்கு அனபிபவநீய னானவனே
திறல் –
மிடுக்காகவும்-

முப்பத்து மூவர் -திருப்பாடகம் அனுபவம் -ஸூ சகம்-அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் –
அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சி இடாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் –
பாண்டவர்கள் கப்பம் கம்பம் நடுக்கத்தை தீர்த்தவாறு –

செற்றார் -பிராமண பிரமேய பிரமாதா மூன்றுக்கும் விரோதி –வெப்பம் கொடுக்கும் -ஆனாலும் –விமலா –
இதில் -செற்றாரை திறல் அழித்தாலும் அகில ஹேய ப்ரத்ய நீகனாய் விமலனாய் இருந்தமையும் அருளிச் செய்கிறார்
அடுத்த பாசுரத்தில் மாற்றாரை மாற்றி ஆற்றாதாராக பண்ணியதை அருளிச் செய்து-
செறுவாரும் நட்பாகுவார் அன்றோ செங்கோன் அருள் பெற்றவாறே-திருவிருத்தம் -27-
த்ருஷ்டம் நிரூபணம் புலன்கள் மூலம் -சேது அணை–nasa. ஆராய்ந்து /அத்ருஷ்டம்-64-சதுர்யுகம் நிரூபிக்க பார்க்க கூடாதே –
நிரூபணத்துக்கு விஞ்ஞானம் ஒரு வழி -ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்த பிரமாணங்கள் -சாஸ்திரம் வேதம் வேறே /
மானா மேனா-பிரமாணம் கொண்டே பிரமேயம் சாத்தியம் –
ஸாஸ்த்ர யோநித்வாத்
கூரத்தாழ்வானையும் –கூரத்தாழ்வார் -களை அறக் கற்ற மாந்தர் காண்பாரோ கேட்பரோ -என்று அருளிச் செய்த ஐதிக்யம்
பராசரர் -ரு ஹிம்சை தாதார்த்தம் -உறையில் இடாதவர் திரு மழிசைப் பிரான்
சம்சாரத்துக்கு வியாதிக்கு மருத்துவர் -சம்சாரமே வியாதி உணர்ந்து ஆச்சார்யர்
ப்ரஹ்மத்தை நீ அறிந்த முறையில் அறிவது த்ருஷ்ட்டி விதி -சூர்ய சந்திரர்கள் மூலம்

செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா –
நீ ஆஸ்ரித விரோதிகளுக்கு துக்கத்தைப் பண்ணும் -செய்குந்தா வரும் தீமை -இத்யாதி–
இப்போது அனுகூலர் பக்கலில் ஆய்த்ததோ –

விமலா –
என்றது-சம்பந்தம் ஒத்து இருக்க–ஆஸ்ரிதர்க்காக கண்ணற்று அழிக்க வல்ல சுத்தி –
பாகவத விரோதிகளுக்கு நடுக்கத்தைக் கொடுக்கும் சுத்தி யோகத்தை உடையவனே –
இத்தால்
பய நிவ்ருத்தி மாத்ரம் அன்றிக்கே பய ஹேது நிவ்ருத்தியும் ரஷக கார்யம் -என்றது ஆய்த்து –
பாஞ்சாலி பட்ட துக்கம் நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்தான் -பெருக்கி ஒருத்திக்கும் நூறு பங்கு
நூற்றுவர் தம் பெண்டிரும் அலக்கண் எய்தி நூல் இழப்ப —நூல் வஸ்த்ரம் திருமாங்கல்யம்

துயில் எழாய்-
அம்பு எய்ய வேணுமோ எங்களுக்கு —எழுந்திருந்து நோக்க அமையாதோ –

செப்பன்ன மென் முலை –
அவன் பக்கல் மறுமாற்றம் பெறாமையாலே–
புருஷகார பூதையான நப்பின்னை பிராட்டியை எழுப்புகிறார்கள் –
இது முதல் அவன் அகப்படும் சுழிகள் சொல்லுகிறது –
நிதி இட்டு வைக்கும் செப்புப் போலே அவன் கிடக்குமிடம் —
மலராள் தனத்துள்ளான் -என்னக் கடவது இறே-
செப்புப் போலே சந்நிவேசம் என்னவுமாம் –
அம் முலையில் வர்த்திக்கும் -மலையில் உள்ளார் உகந்து உண்ணும் கனியும் தேனும்–
செவ்வாய் கோவை வாயாள் பொருட்டு
முறுவலுக்காய் வல் தலைவன்

மென்முலை
விரஹ சகம் அன்றிக்கே இருக்கை-

செவ்வாய்
அவனைத் தனக்காகிக் கொள்ளும் ஸ்மிதம் –
அந்த முலையிலே இருந்து அனுபவிக்கும் ஜீவனம் –

சிறு மருங்குல் –
மேலும் கீழும் கொண்டு-இடை உண்டு -என்று அறியும்படி–பய ஸ்தானமாய் இருக்கை

நப்பின்னை நங்காய் –
பூர்ணை ஆனவளே–பூர்த்தி ஆகிறது —அநுக்த சௌந்தர்ய சமுச்சயம் –

திருவே
ஒசிந்த ஒண் மலராள் என்னுமா போலே —சம்ச்லேஷத்தால் வந்த துவட்சி –
சம்போக ஸ்ரீ உடையவள் –

துயில் எழாய் –
நீ உணர்ந்து எங்கள் சத்தையை உண்டாக்காய் –

திருவே துயில் எழாய் –
பிராட்டியைப் போலே ஆஸ்ரிதைகளான எங்களுக்காக உணர வேண்டாவோ —
ஆஸ்ரிதர்காக அன்றோ பத்து மாசம் உறங்காது இருந்தது –

விஷய க்ராஹகமாய்–விஷய விரஹ அசஹிஷ்ணு வாய்–பகவத் விஷய பக்தியையும்–
விஷயாந்தர வைராக்யத்தையும்-உடையையாய்-
நப்பின்னை என்கிற திரு நாமத்தை உடையையாய்–பிராப்யத்வ–புருஷகாரத்வோப யுக்த–
கல்யாணகுண பூர்னையான பெரிய பிராட்டியாரே
நீ படுக்கையில் நின்றும் எழுந்திருக்க வேணும் –

எழுந்திருந்து உங்களுக்கு செய்ய வேண்டுவது என் -என்ன –
உக்கமும் தட்டொளியும் தந்து–உக்கம் -ஆலவட்டம்–தட்டொளி -கண்ணாடி–பறை என்றுமாம் –

உன் மணாளனை –
புருவம் நெறித்த இடத்திலே கார்யம் செய்யும்படி பவ்யன் ஆனவனை–
உக்கத்தோபாதி அவனையும் இவள் தர வேணும் -என்கை –
உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு -என்றுமாம் –
உக்கம் ஸ்ரமம் ஆற்ற–கண்ணாடி எங்கள் வைலஷண்யம் காண–
வாசத் தடத்தில் அவஹாகிக்கும் படி பண்ணி அருள வேணும்
ஞான -உக்கம்–தர்சன -கண்ணாடி–பிராப்தி -உன் மணாளன்–மூன்றுமே செய்து அருள வேண்டும் .
உக்கம் -தட்டொளி –உன் மணாளன் / ஞான தரிசன -பிராப்தி
பர பக்தி பர ஞான பரம பக்தி -பரிபூரணம் அருள வேண்டும்

ஈஸ்வரனை அழகாலே திருத்தும்–அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் இருக்கும் அம்மான் –
யானோர் துக்கம் இலேனே
நப்பின்னை நங்காய்–திருவே -சாஷாத் மகா லஷ்மி தானே –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் -பிராட்டி அனுபவிக்க விஸ்வ ரூபம் எடுத்தான் –

இருவரையும் திருத்துவது உபதேசத்தால் –
உபதேசத்தால் மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் -ஈஸ்வரனை அழகாலே திருத்தும் –
ஆச்சார்யன் சிஷ்யன் ஆர் உயிரைப் பேணுமவன் -தேசாரும் சிஷ்யன் அவன் சீர் வடிவை -என்பதாகில்
ஆச்சார்யருடைய திவ்ய மங்கள விக்ரஹமே உத்தேச்யம்
சீராரும் எதிராசர் திருவடிகள் வாழியே
செய்ய தாமரைத் தாளிணை வாழியே -நிச்சலும் அனுசந்திக்கிறோம்

இப்போதே –
பிற்றைப் போதைக்கு இராத எங்களை –

எம்மை
பஸ்யதி என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறார்கள் –

எம்மை –
பேய்ப் பெண்ணே -என்றும்–நாயகப் பெண் பிள்ளாய் -என்றும்–தங்களில் தாங்கள் சொல்லும் இத்தனை –
பேற்றில் வந்தால் எல்லாரும் ஒத்து இருப்பார்கள் -என்றுமாம் –
எம்மை –
எங்களையும் அவனையும் கூட–முழுக்காட்ட வேண்டும் -என்றுமாம் –

நீராட்டு
இவர்கள் உகப்பது இவள் தந்த கிருஷ்ணன் -என்று —பெருமாள் பிராட்டி உடைய சௌந்த்ர்யாதிகள் கிடக்க
ஐயர் பண்ணி வைத்த விவாஹம் என்று உகப்பர்—
அது போல் கிருஷ்ணன் பக்கல்–பிராப்தியும் போக்யதையும் கிடக்க –
இவள் தந்த கிருஷ்ணன் என்று உகப்பர்கள் –

ஸ்வா பதேசத்தில்
கைங்கர்யத்தில் அஹங்கார மமகார நிவ்ருத்தியும்–
யதாவஸ்தித ஸ்வரூப ஜ்ஞானமும்–இவ்விரண்டையும் கொடுத்து –
உனக்கு பவ்யனான–ஈஸ்வரனை இந்த ஷணத்திலே–பிற்றை ஷணத்துக்கு பிழையாத எங்களை–
சம்ச்லேஷிப்பி -என்கிறார்கள் –
உன் மணாளனையும் தந்து–நீராட்டு என்கிறார்கள் -ஆகவுமாம் —
இந்த யோஜனையில்-பிராட்டிக்கு எம்பெருமான் அத்யந்த விதேயன் என்னும் இடம் தோற்றுகிறது –

இப்போதே எம்மை நீராட்டு –
தாபத் த்ரயம் தீர
எம்பெருமானுக்கு தாபம் -நான் அடிமை செய்ய விடாய் நானானேன்–
எம்பெருமான் தாம் அடிமை கொள்ள விடாய் தானானான்
ஆனதற்கு பின் வெள்ளக் குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம் உள்ளக்குளத் தேனை ஒத்து
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய ஷணம் அபி தே யத் விரஹோதி துஸ் சஹ -ஸ்தோத்ர ரத்னம் -56-
ஷூத்ருட் பீடித நிரதநரைப் போலே கண்டு கொண்டு பருகி -ஆச்சார்ய ஹிருதயம்-

செப்பம் உடையாய்
ஆர்ஜவம் -மநோ வாக் காயம் கரண த்ரய சாரூப்யம்
திறலுடையாய் –
பராபிபவன சாமர்த்தியம்-செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும்
தஸ்மை ராமானுஜார்யாய நம பரம யோகினே-
யஸ் சுருதி ஸ்ம்ருதி ஸூ தராணாம் அந்தர் ஜுவரமசி சமத்–
அத்தை செற்றார் உள்ளத்திலே போக்க விட்டார்-
சோக வஹ்நிகம் ஜனகாத்மஜாயா ஆதாய தேநைவ ததாஹா லங்காம் -என்று
பிராட்டி திரு வயிற்றில் இருந்த சோக அக்னியை கிளப்பி இலங்கையை கொளுத்தின திருவடி போலே-
சுருதி அந்தர் ஜுரங்களை எடுத்து செற்றார் வயிற்றில் எரித்த படி-

நாட்டிய நீச சமயங்கள் மாண்டன ஒரு கார்யம்
நாரணனை காட்டிய வேதங்கள் களிப்புற்றது -இரண்டாவது
தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மூன்றாவது
எதிராசர் பேர் அருளால் வியாக்யானம் பகவத் விஷயம்
விமலா துயில் எழாய் -கலியன் ஸ்வாமி –
பசி தாகம் இருக்கும் நினையாமல் –
விமலா
அகில ஹேய பிரத்யநீகன் –கல்யாண -ஞான ஆனந்த-வி ம லா
மூன்று எழுத்து-ஆளவந்தார் கப்பம் தவிர்த்த கதை

———————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –