ஸ்ரீ திருப்பாவை சாரம் – சிற்றம் சிறு காலே – —

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –

கீழ்ப் பாட்டிலே —உபாய ஸ்வரூபத்தை சொல்லி–
தங்கள் உத்தேச்யம் கைங்கர்யம் என்று பிரபந்த தாத்பர்யத்தைச் சொல்லி-முடிக்கிறார்கள் –
இப்பாட்டில்-உபேய ஸ்வரூபத்தை-விவரிக்கிறார்கள் –இதில் –
1-பிராப்ய ருசியையும்-
2-பிராப்யம் தான் இன்னது என்னும் இடத்தையும் –
3-அத்தை அவனே தர வேணும் என்னும் இடத்தையும் –
4-தங்கள் பிராப்ய த்வரையையும்–அறிவிக்கிறார்கள் –
திருவாய் மொழியில்
எம்மா வீட்டிலே பிராப்யத்தை நிஷ்கர்ஷித்து–
அதில் சரம தசையான அர்த்தத்தை–நெடுமாற்கு அடிமையிலே -அனுபவித்து முடித்தது –
இதில் முந்துற -சரம தசையான -நெடுமாற்கு அடிமையில் அர்த்தத்தை அனுபவித்து–அது நிலை நிற்கைகாகவும்
அத்தை காத்தூட்டுகைக்காகவும்–எம்மா வீட்டில் அர்த்தத்தோடு தலைக் கட்டுகிறது –

நாராயணனே நமக்கே பறை தருவான்–
நாராயணனே தருவான்-உபாயம் கீழே சொல்லி–
இதில் நாராயணனே -–பறை பிராப்யம் -பிரார்த்திக்கிறார்கள்–
திருமந்தரம் -த்வயம் -சரம ஸ்லோகம் முமுஷுப்படி–சரம ஸ்லோகம் சொல்லியும் த்வயமும் -அப்புறம் பல –
யாத்ருசிக படி /–ஞான வேளை -பலம் பெருமை தெரிவித்து -அடைய என்ன ருசி வந்த பின்பு–
அனுஷ்டான வேளை -சாதனம் செய்து பலன் –
நமக்கே அதிகாரி ஸ்வரூபம் இரண்டு பாட்டிலும்–அவனே உபாயம் -அவன் ஆனந்தத்துக்கு கைங்கர்யம் –
அநந்ய போக்யத்வம் -அவனையே போக்யமாக கொள்ளுதல் -வேறு ஒன்றும் இனியது இல்லை
விகித விஷய நிவ்ருத்தி தன்னேற்றம்–
அநந்ய உபாயத்வம்–அநந்ய அர்ஹத்வம்—செல்வச் சிறுமீர்காள் -வையத்து வாழ்வீர்கள் நாமும்
நாங்கள் நம் பாவைக்கு–புண்ணியம் யாம் உடையோம் –
நாம் நாங்கள்–தங்களை உறைத்து பாட்டு தோறும்
ஸ்வரூபத்திலும் -நமக்கே–பிராப்யம் உணர்ந்த நமக்கே–பிராபகம் உணர்ந்த நமக்கே–
தூயோமாய் வந்தோம் —இரண்டு சுத்தி சொல்லி
சித்த உபாயம் பற்றின பின்பு–பற்றின பற்றுதலும் சாதனம் இல்லை–
ஸ்வீகாரத்தில் உபாய பாவம் தவிர்க்கும் ஏக சப்தம்
மாம் ஏகம் சரணம் விரஜ -பற்றுதலும் உபாயம் இல்லை–
சாத்திய உபாயத்தில் ருசி வாசனை இல்லாமல் சித்த உபாயம் பரிகரித்து
உபாய புத்தி இல்லாமல்-இந்த இரண்டும் இல்லை
நம் ஆனந்தம் காரணமாக செய்யும் கைங்கர்யம்- உச்சிஷ்ட அன்னம் போலே –-போக சுத்தி பண்ணுகிறார்கள் இதில் –
ஆசற்றார் மாசற்றார் இரண்டு தோஷமும்–ஆசு -உபாய விஷய குற்றங்கள்–மாசு -உபேய விஷய குற்றங்கள்
சர்வ தர்மான் -உபாய விஷய குற்றங்கள்–சர்வ காமான் சந்தஜ்ய -உபேய விஷய குற்றங்கள்

தொழுமின் தூய மனத்தராய் —ஆறு –
1–பிராபகம்–நிகர்ஷகம் சொல்லி–-
2-பெருமை சொல்லி-
3-–சம்பந்தம் சொல்லி
4-பூர்த்தி சொல்லி–-
5-பிராயாசித்தம் சொல்லி-
6-–பலம் சொல்லி–ஆறு விஷயங்கள் உண்டு
இதிலும்-
1-–பேற்றில் த்வரிக்கை -துடிக்க வேண்டும தேடி -சிற்றம் சிறுகாலை–
சாத்யத்தில் சாதனா புத்தி வரும்படி கலக்கம்-காலமே கண் உறங்காமல் வந்த த்வரை
2- பொற்றாமை அடியே போற்றி –ஆர்த்தியை ஆவிஷ்கரித்து
3–வளைக்கை கொள்ளாமல் போக கூடாது-வடிவைக் காட்டி வளைக்கை
4–உனக்கே நாம் ஆட் செய்வோம் -பிராப்யாந்தர ஸ்ரத்தை குலைக்கை-பரிபூரணம் கைங்கர்ய அபேஷை
5-புருஷார்த்தம் இடைவிடாமல்-அபேஷை-
6- மற்றை நம் காமங்கள் மாற்று-களை அறுத்து-இந்த ஆறும்-

பூர்வ வாக்கியம் -மட்டும் கேட்டு நெஞ்சு துணுக் -எது கேட்டாலும் கொடுத்தாகணுமே –
அல்பம் பலம் கேட்டு போவானே —உத்தர வாக்கியம் கேட்டதும் நெஞ்சு தைர்யம் —
சேதனன் சொல்லும் மாஸூச -வார்த்தை இது
மாஸூச என்கையாலே சோக ஜனகம் -உண்டே —ஸ்வரூப அனுரூபமான பலம்- அத்யந்த பரதந்த்ரம்

நாட்டார்க்கு இசைவுக்கு நோன்பு வியாஜ்யம் பற்றினோம்–
எங்களுக்கு உத்தேச்யம் உன் திருவடிகளில் செய்யும் நித்ய கைங்கர்யம்
எம்மா வீட்டில் அர்த்தத்துடன் தலைக் கட்டி–
தனக்கே யாக எனைக் கொள்ளும் ஈதே-எனக்கு கண்ணனே சிறப்பு 2-9-4-
பிராப்யம் நிஷ்கர்ஷம் -எம்மா வீட்டில்-ஒழிவில் காலம் –
பிராப்யம் பிரார்த்தனை அடிமை செய்ய வேண்டும்-நெடுமாற்கு அடிமை பாகவத சேஷத்வம் -8-10-
ஆண்டாள் தொடங்கும் பொழுதே பாகவத -சேஷத்வம் சொல்லி-பிராப்ய நிஷ்கர்ஷம் கடைசியில்

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்

வியாக்யானம் –

சிற்றம் சிறுகாலே –
சிறு பெண்கள் எழுந்திருக்க ஒண்ணாத குளிர் போதிலே —சத்வம் தலை எடுத்த காலத்திலே-
அநாதி அஞ்ஞான அந்தகாரம் நீங்கி–பகவத் விஷயம் வெளிச்செறித்த காலத்தில் -என்றுமாம் –
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்னுடைய ஆதித்யன் உதித்தான் –
அஸ்தமியாத ஆதித்யனையும் கண்டேன் –
உறங்காத என்னையும் கண்டேன்
முன்பு ஒரு போகியாக உறக்கம் -பின்பு ஒரு போகியாக உணர்ச்சி –
நடுவில் காலம் இறே சிற்றம் சிறு காலை யாவது
சிற்றம் சிறுகாலே -என்று ஜாதி பேச்சு–வெட்ட விடியாலே-என்னுமா போலே –
என்னில் முன்னம் பாரித்து -என்று நீ உணரும் காலத்திலே நாங்கள் உணர்ந்து வந்தோம் -என்கை –

வந்து
வரக் கூடாத நாங்கள் -வந்தோம்-சேவிக்கக் கூடாதவர் சேவித்தோம்-போற்றக் கூடாதவர் போற்றினோம்
பொருள் கேட்கக் கூடாதவர் கேட்டோம் –சிறு பெண்கள் குளிர் காலம் புறப்பட மாட்டாதே-த்வரை பார் –
சிற்றம் சிறுகாலை வந்து –
ஆபிமுக்கியம் பிறந்த காலம்- சத்வ காலமாக முடிந்தது-மாசம் பஷம் போலே -வேளையும் வாய்த்ததே –
ஆத்ம சிந்தனம் -சத்வம்-பௌர்ணமி நன்னாள் திவசம் முகூர்த்தமும்-
ப்ரஹ்மமாகிய ப்ரஹ்ம முஹூர்த்தம் உயர்ந்த முஹூர்த்தம்
காலை –
செங்கல் பொடி கூறை தாமசர் உணரும்
சிறு காலை –
ஆய்ச்சியர் மத்தினால் சுய கிருத்தியம் அதிகரிக்கும் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்திய காலை
சிற்றம் சிறு காலை –
அதற்கும் முன்னே உணர்ந்த தாங்கள் –
இரவு போனது பகல் வர வில்லை நடுவில்-4 மணி-அஞ்ஞானம் தசை முடிந்து-பிராப்தி அடையும் முன்பு
இருக்கும் நாள் குண அனுபவம் போது போக்கு-
முனிவர்களும் யோகிகளும் உணர்ந்த காலை-முக்தன் -இல்லை முமுஷு ஆனபின்பு –
இருள் அகன்ற -வெளிச்சம் வர வில்லை-இதர விஷய பிராவண்யம் அறிவு கேடு இல்லாமல்
பகவத் விஷயம் அறிந்து துடிக்கும் நேரம் பரிமாற்றம் இல்லாமல்-
காலை நல் ஞான துறை-தீர்த்தம் அவஹாகம் யோக்யமான காலம்- திரு விருத்தம்-
தாமரையாள் கேள்வன் ஒருவனை உணர்வும் உணர்வு நல் ஞானம்-
சரியான துறையில் -சதாசார்ய உபதேசம்-பிராட்டி புருஷகாரம்
சிறுகாலை வரில் உன்னை காண ஒண்ணாது என்று சிற்றம் சிறு காலை வந்தோம் –
சிறுகாலை ஊட்டி ஒருப்படுத்தென் யசோதை –இளம் கன்று-காலையில் காலிப் பின் போம்
எல்லியம் போதாக பிள்ளை வரும்-நீராட்டு அமைத்துவை அப்பனும் உண்டிலேன்
ஆடி அமுது செய்-கன்னி ஒருத்தி இரா நாழிகை மூவேழு 21 நாழிகை கழித்து வருவான் –
ஒரு நாழிகை 24 நிமிஷம்-இரவு 2-3-வரை ஆகுமே மாலை ஆறு தொடங்கி–
சிற்றம் சிறுகாலை தானே பிடிக்க முடியும் –

வந்து –
சேதனருக்கு பகவத் லாபம் அவன் வரவாலே இருக்க–வந்து -என்றது ஆதர அதிசயத்தாலே –
இது தான் அங்குத்தைக்கும் மிகையாக இருப்பது –
எங்கனே என்னில் –
பெருமாள் ரிஷிகள் இடம் அருளிய வார்த்தை —நீ இருந்த இடத்தே வந்து–ராகம் க்ரம பிராப்தி சஹியாது இறே –
வந்து –
நீ வர வேண்டி இருக்க நாங்கள் வந்தோம் –போய் இல்லை –வரவுக்கு நோவு படுகிறவன் வார்த்தையால்
சர்வ லோக -சொல்லியும் -புண் படுத்தி-சரண்யராய் பற்றி வந்தாரை -உண்டாக்கி –
புத்தி கொடுத்து கார்யம் கொள்ள வேண்டி இருக்க
இப்படி கார்யம் -தாமதித்தேனே-நாலடி இட்ட நாங்களும் வந்தோம்
ரிஷிகள் -வந்ததும் துடித்தான் பெருமாள்-பரமபதம் அயோதியை -தண்டகாரண்யம்-ரிஷிகள் குடில் மாறி —
தாம் வந்த தூரம் பாராமல் -ஷமை
கண்ணன் -பரமபதம் மதுரை ஆய்ப்பாடி-இவர்கள் -ஓர் அடி வைத்தாலும் –என்னுடைய சோர்வால்
வந்து
மழை கொலோ வருகிறதோ-வீதியூடே-நம் தெருவே நடுவே-கதவின் புறமே வந்து-முற்றம் புகுந்து-நாகணை மேல் நல்கி
நாங்கள் படுக்கை விட்டு காவல் கடந்து –கறவைகள் பின் சென்று நிகர்ஷம் போலே
வந்து –
தப்பைச் செய்தோம் என்கிறார்கள் –
ஸ்வரூபம் உணராது பொழுது பிராப்தமாய் இருக்கும்-ஸ்வரூபம் உணர்ந்தால்
இது துடிப்பு பிராப்தமாய் இருக்கும்-உபாயாந்தரம் நிஷ்டர் நிவ்ருத்தி தோஷம் –

உன்னைச் சேவித்து –
ரஷிக்கும் உன்னைச் சேவித்து —பலமுந்து சீர் என்று இறே இருப்பது –
அதுக்கு மேலே ஓர் அஞ்சலியையும் உண்டறுக்க மாட்டாத
உன்னைச் சேவித்து –
தொழுது எழும் அதுவும் மிகையான உன்னை சேவித்து —
சேவ்யரான நாங்கள் சேவகராம்படி -அத்தலை இத்தலை யாவதே –
முயற்சி செய்வது தோஷம்–சிற்றம் சிறுகாலை எழுந்தது தோஷம்-வந்தது தோஷம்-
எத்தை தின்னால் பித்து தீரும்–பிராப்ய துடிப்பின் காரணம்–
பெண்மையும் சிந்தித்து இராமல்–அடங்காமல் வாசல் படி கடந்து –
வந்து செய்த தப்பு என்ன
உன்னை சேவிக்கவும் செய்தோம்–எங்கள் ஸ்வரூபம் அறியா விட்டால் –
மட்டும் இல்லாமல்–உன் ஸ்வரூபம் தான் உணர்ந்தோமோ –
ஒன்றுமே செய்யாமல் உள்ளம் உருகுவாயே–கடனாளி–அஞ்சலி -பரம்
மித்ர பாவனையே -நண்பன் வேஷம் விடாத உன்னை சேவித்தோம்–
வரவு தானே மிகை–எல்லாம் செய்தோம் -துராதாரர் போலே
செய்தலை நாற்று போலே அவன் செய்வது செய்து கொள்ளட்டும்-
ஓர் அஞ்சலி உண்டு அறுக்க மாட்டாத தத்வம் ஜீரணம் ஆகாதே
உன்னை உருக்கும்படியான கார்யம் –

எங்கள் ஸ்வரூபம் அறியாமலும்
உன் ஸ்வரூபம் அறியாமையாலும்
ஸூய பிரவ்ருத்தி -செய்து
ஸூகத ச்வீகாரம் –
மத் ரக்ஷணம் பொறுப்போ பலமோ என்னது இல்லை

உன் பொற்றாமரை அடியே –
மகார்க்கமுமாய்–போக்யமுமாய்–பிராப்தமுமாய்–இருந்த திருவடிகளிலே –
அடியே -என்று அவதாரணத்துக்கு கருத்து –வேறு ஒரு பிரயோஜனத்துக்கு ஆளாகாது இருக்கை
உன் பொன்னடி–உலகம் அளந்த பொன்னடி இல்லை–காடுறைந்த பொன்னடி வேண்டாம்
உலகம் அனைவருக்கும்–வானவர் தம் சென்னி மலர் கண்டாய் சாழலே
மண் சட்டி தொடக் கூடாது -துத்தம் ஆன காலம்–பித்தளை செப்பு -தொட்டாரே தொடலாம் சுத்தி பண்ணலாம்
வேறு யாரும் தொடக் கூடாது–வெள்ளி யார் தொட்டாலும் சுத்தி–தங்கம் சுத்தி இல்லா விடிலும் யாரும் தொடலாம்
உபயோக படுத்தின வெள்ளி நெருப்பில் காட்டி–தங்கம் தோஷம் இல்லை -சாஸ்திரம்
பொது நின்ற பொன்னம் கழல்–விட்டால் பிழைக்க ஒண்ணாது–பொன் தாமரை அடி
வெறும் பொன் இல்லை–சாதனம் சாத்தியம் இரண்டும் பூர்ணம்–தாமரை பொன் அடி பிராப்ய பிராபக
த்வம் மதியம் தனம் பாத பங்கஜம்–பொன்னும் பூவும் புறம்பே தேட வேண்டாம்–உன் பொன் தாமரை அடி

போற்றும்-
போற்றுகை யாவது ஸ்வாமிக்கு மங்களா சாசனம் பண்ணுகை –
பிராப்தமாய்–ஸ்ப்ருஹணீயமாய்–சௌகந்த்ய சௌகுமார்ய லாவண்யங்களாலே–
பரம போக்யமான-உன் திருவடிகளையே
மங்களா சாசனம் பண்ணுகைக்கு-பிரயோஜனத்தைக் கேளாய் –

பொருள் கேளாய் –
முன்பே இருக்கிறவனை -கேளாய் -என்பான் என் என்னில் —
இவர்களுடைய ஸ்தநாத்ய அவயவங்களிலே-அந்ய பரனாய் இருக்கையாலே
உன் பராக்கை விட்டு நாங்கள் சொல்லுகிற வார்த்தையைக் கேளாய் -என்கிறார்கள் –
அவனும் இவர்கள் பேச்சு அன்றோ -என்று கேட்டான் –
கீதை தான் ஆசார்யன் அர்ஜுனன் சிஷ்யன்–திருப்பாவை -ஆண்டாள் ஆசார்ய ஸ்தானம் அவன் கேட்க –

போற்றும் பொருள்
சொல்லத் தொடங்கினவாறே–சிவந்த போதரிக் கண் அழகை–கோவை கனிவாய் பழுப்பும்
இவர்கள் பொற்றாமரை அடியில் கண்ணை வைத்து–அந்ய பரனாய் இருந்தான்
மையல் மிக்கு வெறித்து பார்த்து இருக்க –

கேளாய் –
முதுகில் தட்டி பராக்கு பார்க்காதே–வார்த்தை சொல்லா நிற்கும் பொழுது கேளாய் சொல்வதால் அந்ய
மாஸூச -சோக ஜனகம் போலே–கேளாய் என்பதால் கேளாமல் பராக்கு பார்த்து இருக்க ஸ்தம்பித்து இருக்க
எங்கள் பிராப்யம் அழித்து உன் பிராப்யம் பெறப் பார்ப்பது–
அடியை விட்டு தொடையை தட்டுகிறார்கள்
அத்யாபயந்தி ஓதுவிக்க இழிந்தவள்-
ஸ்ருனு அர்ஜுனன்–தூங்கி இருப்பவனை எழுப்பி –
எப்பொழுது தூங்கினான் தெரியாமல் அர்ஜுனன்–கேளீரோ பெண்களுக்கு கிருத்யாம்சம் சொல்லி

கேளாய்–
பாகவதர்கள்–இவனுக்கு கர்தவாம்சம் சொல்ல கேளாய்–எனக்கு உங்கள் பேச்சே அழகு–பொருள் கேள்வியாக
உசித மாடு மேய்க்கை தவிர்ந்து–இற்றைக்கு இதுவே–நீ கேளாய்
சீரிய சிங்காசனம்–நீ போற்றும் பொருள் கேளாய்-
கிரமத்தில் செய்வோம் ஆகட்டும் பார்க்கலாம் -ஆறி இருக்க ஒண்ணாது
த்வரிக்க–பேறு உங்கள் நீங்கள் த்வரிக்கை–இவ்வளவாகில் துடித்தது நீ தான் -யோசனை செய்து பார்

கேளாய்
இரண்டாம் பாட்டில் கேளீரோ -பாகவதர்களை சொல்லி
கேளாய் -என்று பகவானை கேளாய் -என்கிறாள் –

பிறந்த நீ –
எதிர் சூழல் புக்கு–கிருஷி பண்ணின நீ -பல வேளையில் ஆறி இருக்க கூடாதே–
குற்றேவல் கொள்ளாமல் போகாது
சூழல் -அவதாரம்–பெரும் சுழல் சம்சாரம் —ருசி வளர்த்த நீ–பேற்றுக்கு முற்பாடனாக வேண்டும்
அவதாரம் பல பிரயோஜனம் உண்டே–வாயை கிளற அவன் வார்த்தை பேச–பிறந்தாய் மட்டும் இல்லை

பெற்றம் மேய்த்து –
ஸூ ரஷணம் பண்ணாத குலம் பர ரஷணமும் செய்யாத குலம்
ஆசைப் பட்டு பிறந்த நீ-வட மதுரை பிறந்தான் பெற்றது ஆயன் இல்லை-
குலத்தில் பிறந்த-பெற்றம் மேய்த்து உண்ணும் குலம்
வயிறு வளர்க்கும் ஜீவனம்-மேய்ந்தால் அல்லது உண்ணாத குலம்-
பசு சாப்பிடா விடில்-பெற்றம் மேய்த்து பிறகு தான் உண்ணும்
குழந்தை உண்ணா விடில் தாய்-ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் -பசு மேய்த்த பின்பு
பக்த விலோசனம் அமுது-பொதுவான கண்ணன்-உங்களுக்கு தனியாக என்ன-
அந்தரங்க விருத்தி குற்றேவல் கொள்ள வேணும் பிரார்த்தனை இல்லை’

கொள்ளாமல் போகாது –
மடி பிடித்து-பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
சாஸ்த்ரத்தில் கேட்டுப் போகக் கடவ நீ–பசுக்கள் மேய்த்து உண்ணக் கடவதான-இடைச் சாதியிலே
வந்து பிறந்த எங்களை அடிமை கொள்ளாது ஒழிய ஒண்ணாது –
ரஷகனான நீ ரஷ்யரான எங்களை கைங்கர்யம் கொள்ளாமல் இருக்க ஒண்ணாது –
ரஷண ரூப கார்யம் இல்லாத போது ரஷ்ய ரஷ்க பாவம் ஜீவியாது இறே –

பெற்றம் மேய்த்து உண்ணும் குலம் –
ரஷ்யமான பசுக்கள் வயிறு நிறைந்தால் அல்லது-தாங்கள் உண்ணாத குலம் –
உன் பிறப்பாலும் எங்கள் கார்யம் தலைக் கட்ட வேணும் -என்று கருத்து –
எங்களில் ஒருத்தி கொள்ள–இளவாய்ச்சியர் நீ உகக்கும் நல்லவர்–
பிறவாதார் உன்னை ஏவ பரமபதத்தில்
பிறந்த உன்னை பிறந்த நாங்கள்–ஆயானாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய்
நீ பிறப்பிலியாய் பிறவாதார் நடுவே இருந்து பிறவி அற்றார்க்கு முகம் கொடுக்கிற
நிலத்திலே வந்தோமா–பரமபதத்திலே வந்தோமோ என்றபடி
பிறவிக்கு போர பயப்பட்டு உன்னையே கால் கட்டுவார் உள்ள இடத்தே -பாற் கடல் -வந்தோமோ
பிறவா நிற்கச் செய்தே ஆசார பிரதானர் புகுந்து நியமிக்கும்
ராஜகுலத்தில் -இஷ்வாகு குலம் பிறவியில் -வந்தோமோ
வாலால் உழக்குக்கு பசு மேய்த்து வந்து வயிறு வளர்க்கும் எங்கள் குலத்திலே–
நீ என் செய்யப் பிறந்தாய் என்று விசாரிக்கலாகாதோ
மேய்த்த பசுக்களை நிறுத்தி வாலுக்கு உழக்கு நெல் என்கை–கணக்கிட்டு சொல்ல வல்லார்கள் இல்லையே
அறியாதார்க்காக ஆனாயனாகிப் போய் -பெரிய திருமொழி–மனுஷ்யத்வே பரத்வம் என்று அறியாதவர்
அறிவு கேட்டுக்கு நிலமாய் இருப்பதொரு குடியிலே பிறக்க வேணும் என்று சங்கல்பித்துக் கொண்டவன்
அதற்கு எல்லை நிலமான இடைக் குலத்திலே பிறக்க வேணுமோ தான்–
கள்ளர் பள்ளர் என்னும் குலங்களில் பிறந்தால் ஆகாதோ -பட்டர் நிர்வாஹம்
அறியாதாரிலும் கேடு கெட்ட இடையனாய் -என்றபடி

குற்றேவல் –
அந்தரங்க வ்ருத்தி –
அன்றிக்கே –உசிதமான அடிமை -என்றுமாம் –
அந்தரங்க ஏவல் குற்றேவல் குறுகிய ஏவல்–கூடவே இருந்து கைங்கர்யம் –
கொம்மை முலைகள் இடர் தீர கோவிந்தர்க்கோர் குற்றேவல்-இம்மைப் பிறவி செய்யாதே
இனிப் போய்ச் செய்யும் தவம் தான் என் –

எங்களை –
பசுக்களுக்கு வேறு ரஷகர் உண்டானாலும்-உன்னை ஒழிய ரஷகர் இல்லாத எங்களை –

கொள்ளாமல் போகாதே-
உனக்கு விஹிதம் –சப்தாதி விஷயங்களே தாரகமாய் இருக்கிறது எங்களை
உன் வடிவு அழகைக் காட்டி
உண்ணும் சோறு பருகு நீர் தின்னும் வெற்றிலை -எல்லாம் கண்ணன் எம்பெருமான் -என்னும்படி பண்ணி
ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யம்-தாராதே போகை-உனக்குப் போருமோ -என்கை –
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் -என்கிறார்கள் –

இவர்கள் சொன்ன சமனந்தரத்திலே
நீங்கள் நோன்புக்கு அங்கமானவற்றை கொண்டு போம் இத்தனை அல்லது
வேறு நீங்கள் அடிமை என்று சொல்லுகிறவை எல்லாம் என் -என்று-பறையைக் கொடுக்கப் புக –

இற்றைப் பறை கொள்வான் அன்று -காண் –
ஒருகாலுக்கு ஒன்பது கால் பறை தருதியாகில் –
பாடி பறை கொண்டு -எண்ணி பார்த்தால் ஒன்பது இருக்கும்-
1-மார்கழி –நாராயணனே நமக்கே பறை தருவான் –
2-கீழ் வானம் –பாடிப் பறை கொண்டு
3-நோற்று ஸ்வர்க்கம் –நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்
4-நாயகனாய் நின்ற –அறை பறை மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேரந்தான்
5-ஒருத்தி –அருத்தித்து வந்தோம் பறை தருதி யாகில்
6-மாலே –சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே
7-கூடாரை –பாடிப் பறை கொண்டு
8-கறவைகள் –இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்
9-சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்ற காண் கோவிந்தா
10-வங்க –அங்கு அப்பறை கொண்ட வாற்றை –

இற்றைக்கும் -பறை கொடுத்தான்–இன்று பிரயோஜனம் கொண்டு போக மாட்டோம்
இன்று ஒரு பிரயோஜனம் கொண்டு போக வந்தோம் அல்லோம் காண் நாங்கள் –
பறையை எடுத்துக் கொள்ளுங்கோள்-என்ன
தேஹி மே ததாமி தே -என்று
ஒரு கையாலே கும்பிட்டு ஒரு கையாலே பிரயோஜனம் கொண்டு போமவர்களோ நாங்கள் –
நீ தாத்பர்ய க்ராஹி அன்றியே-யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் நீ –
இந்த பறையை கொள்ளுகின்ற பேர்கள் அன்று நாங்கள்
பறை என்றால் பறையோ பொருள்–பறை என்றால் த்வனி தெரிய வில்லையோ
கொள்ளும் அத்தனை ஒழிய–எங்களை நீங்கள் கொள்வது–கொள்வான் வந்தோம் அல்லோம்–கொடுப்பான் வந்தோம்
எங்களை நீ கொள்ளும் அத்தனை ஒழிய–கோவிந்தா–
பசுக்களின் பின்னே திரிகிற உனக்கு பெண்கள் வார்த்தை தாத்பர்யம் அறியாமல்
நாலு நாள் எங்களை விட்டு கெட்ட கேடு–
பிரிந்த பின்பு பெருமாள் கோஷ்டி நீரற்று போனதா பாபானாம் சுபானாம் வா
பசுக்களை மேய்க்கை விரும்பி எம்மை விட்டு போவதன் பலன்–குறை ஒன்றும் இல்லா கோவிந்தா -ஞான பூர்த்தி
கோவிந்தா-எங்களையும்-எங்கள் பிராப்தி மறந்தால் போலே-
உன்னையும் மறந்தாய்-இடையர் குலத்தில் பிறந்த கோவிந்தா மறந்து
ஆனால் அத்தால் உங்களுக்கு ஏது என்ன –

கோவிந்தா –
பாவ ஜ்ஞானம் இல்லாத ஜன்மம் இறே-அபிதா வ்ருத்தியைப் போக்கி
தாத்பர்ய வ்ருத்தி அறியாத ஜன்மம் இறே –ஆனால் நீங்கள் சொல்லுகிறது என் என்ன –

நாராயணன் -திருப்பாவை 1-7-10-ஸ்வாமித்வம் வாத்சல்யம் -வ்யாபகத்வம் –
கோவிந்தா -திருப்பாவை -27-28-29-
அபிசந்தி இல்லாத மாத்ரத்தில் ரஷித்த படி–
மாம் ஏகம் -என்ற -அவன் பாசுரம் அன்றோ -கடையாவும் -கழி கோலும் -கையிலே பிடித்த
கணணிக் கயிறும் -கற்றுத் தூளியலே தூ ஸரிதமான திருக் குழலும் -மறித்து திரிகிற போது
திருவடிகளிலே கிடந்தது ஆரவாரிக்கிற கழல்களும் சதங்கைகளும் -குளிர் முத்தின் கோடாலுமாய
நிற்கிற உபாய வேஷத்தை கோவிந்தா –
பாவ ஞானம் இல்லாத ஜன்மம் இறே பசுக்களின் பின்னே திரிவார்க்கு
பெண்களின் வார்த்தையின் கருத்து தெரியாது இறே

1-7-10 மூன்றிலும் நாராயண குண த்ரயம் அருளி காட்டுகிறாள்
1-28-29-முதலில் அருளிய -பறை தருவான் -என்றதை –
பிராப்ய பிராபகங்களை-சிற்றம் -கறவைகள் -விவரித்து அருளுகிறாள் –
பறை என்று பிராப்யம் சொல்லி -தருவான் பிராபகமும் –
பிராப்யம் முன்னாக அருளி -பிராபகம் பின்னாக அருளி -வயுத் பத்தி வேளையிலே –
இப்படி –சப்த த்வயத்திலே அருளியதை
காதா த்வயத்தாலே விவரிக்கும் இடத்து-கறவை -என்று பிராபகம் முன்னாக –
சிற்றம் என்று பிராப்யம் பின்னாக –
அனுஷ்டான வேளையிலே இப்படி மாறாடி தான் இருக்கும் –

முதல் பாசுரத்தில் – நாராயணனே பிராப்ய பிரதிக்ஜை
இதில் – பிரப்யத்தை -கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் -மற்றை நம் காமங்கள் மாற்று –
என்று நிஷ்கர்ஷிக்கிறாள் –
முதல் பாட்டில் -பறை -என்று மறைத்து கூறப்பட்டு -அதை இங்கே வ்யக்தமாக்கப்பட்டது –

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம்-
திரு நாட்டிலே இருக்க்கவுமாம்–ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு சம்சாரத்தில் பிறக்கவுமாம்
அதில் ஒரு நிர்பந்தமும் இல்லை
காட்டிலும் படைவீட்டிலும் ஒக்க இளைய பெருமாள் அடிமை-செய்தாப் போலே யாக வேணும் –
சர்வ தேச–சர்வ கால–சர்வ அவஸ்தைகளிலும்-உன்னோடு ஏக தர்மி என்னலாம் படி
சம்பந்தித்து இருக்கக் கடவோம்

உன் தன்னோடு உற்றோமே ஆவோம் –
நீ ஸ்வாமியாகவும்–நாங்கள் ஸ்வம் ஆகவும்
சம்பந்தித்து இருந்து–எங்கள் ரசத்துக்கு உறுப்பாகையும் அன்றிக்கே-
உனக்கும் எங்களுக்கும் பிறர்க்கும் உறுப்பாகையும் அன்றிக்கே
உன்னுடைய ரசத்துக்கே உறுப்பாக-அனன்யார்ஹ சேஷ பூதரான நாம்-தாச வ்ருத்தியைப் பண்ணக் கடவோம் –
இஸ் சம்பந்தம் என்றும் சித்திக்கும் இத்தனையே எங்களுக்கு வேண்டுவது -என்கிறார்கள்
ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது–எல்லா உறவும் நீயே யாக வேணும் -என்கைக்காக
மாதா பிதா ப்ராதா-நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்றும்
கிருஷ்ண ஆஸ்ரயா கிருஷ்ண பலா கிருஷ்ண நாதாஸ் ச பாண்டவா-என்றும்
சேலேய் கண்ணியரும் பெரும் செல்வமும் நல் மக்களும் – என்னக் கடவது இறே –

சிற்றம் சிறு காலை-ஸ்ரீ மத் த்வாராபதி அனுபவம் -ஸூ சகம்-
உனக்கே நாம் ஆட்செய்வோம் பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பணி செய்ய துவரை என்னுமத்தில்
நாயகராய் வீற்று இருந்த மணவாளர் -பல்லாயிரம் தேவிமாரோடு பௌவம் ஏறி துவரை எல்லாரும் சூழ –

மற்றும் வேண்டுவது என் என்ன –
உனக்கே நாம் ஆட்செய்வோம் —சம்பந்தம் ஒத்து இருக்கச் செய்தே
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விச்லேஷித்து இருக்கை அன்றிக்கே–
இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேண்டும் –
உனக்கே –என்ற அவதாரணத்துக்கு கருத்து
நீ உகந்த அடிமை செய்வோம் —உனக்கும் எங்களுக்குமாக இருக்கும் இருப்பைத் தவிர்ந்து
தனக்கேயாக எனைக் கொள்ளும் ஈதே -என்னுமா போலே–நீ உகந்த அடிமை யாக வேணும் –
அஹங்கார கர்ப்பமான அடிமை புருஷார்த்தம் ஆகாது –

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய் –
நாங்கள் எங்களுக்கு என்று இருக்கிற அதுவும்–நீயும் -இவர்களுக்கு என்று இருக்கும் அதுவும்
இவை இரண்டும் விரோதி யாகையாலே
அத்தைத் தவிர்த்து தர வேணும் -என்கிறார்கள் –
இதுக்கு புறம்பான–நம்முடைய அபிமான க்ரஸ்தமான–பிரயோஜனங்களைப் போக்கு-
உன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும்–பராங்குச நாயகி -பசு மேய்க்க போகல்–வியாஜ்யம்
வேறு கோபி கூட கலக்க போகிறேன்–உனக்கு இஷ்டமானது பண்ணு–
என் கண் வட்டத்தில் பண்ணு–அத்யந்த பாரதந்த்ர்யம் –
உனது ஆனந்தமே -வேண்டியது –

பிராப்தி -மூன்று நிலைகள் -அனுபவம் -இது உந்த -ப்ரீதி -கைங்கர்யம் -நித்ய கிங்கரோ பவதி
அனுபவம் வர பர பக்தி -பர ஞானம் -பரம பக்தி -ஆகிய மூன்று நிலைகள்
பர பக்தி வர பக்தி முதலில் வேண்டுமே –
புண்யம் ஸுஹ்ருதம் –சாது சமாஹம் -பகவத் குண அனுபவம் -இப்படி அன்றோ படிக் கட்டுக்கள் –
தேஷாம் ஞானி நித்ய உக்த — பிரிய அசஹன்- -இப்படிப்பட்ட பக்தனாக்கு-இது முதல் நிலை –
அடிப்படை பக்தி -உனக்கு என்னை இனியவன் ஆக்கு –
ஞானி -ஆத்மை மே மதம் -அவனுக்கே தாரகமாக இருப்பது அடுத்த நிலை
வாசு தேவ சர்வம் ஸூ துர்லபம் -மூன்றாவது நிலை -சர்வமும் அவனே என்று இருப்பது –

சரணாகதி -உபாயத்தை பற்ற வேண்டும் -கைங்கர்யம் -பேற்றை பிரார்த்திக்க வேண்டும் –
இதற்காகவே கறைவைகள் சிற்றம் சிறு காலே / திருப்பாவை ஆகிறது இப்பாட்டு -எல்லே –பாகவத நிஷ்டை சார நிகமனம் /
சிற்றம் -பகவத் நிஷ்டை சார நிகமனம் -சரணம் அடைந்த அநந்தரம் உடனே கைக் கொள்கிறான் /
சம்பந்த உறைப்பால் கூவிக் கொள்ளும் காலம் குறுகாதோ என்று சொல்லும்படி /
ஆறு பாகங்கள் இதிலும் -கீழே போலே
1-சிற்றம் சிறுகாலை வந்து உன்னை சேவித்து -ப்ராப்யத்தில் ஊற்றம் அறிவித்து
2-பொற்றாமரை போற்றும் பொருள் கேளாய் போற்றி ஒன்றும் கேட்காதவர்கள் -போற்றுவதே பொருள் அன்றோ –
ப்ராப்யத்தில் கலக்கம் விண்ணப்பம் இத்தால் -போற்றி -மங்களா சாசனம் -பண்ணுவதே ஸ்வரூபம் –
தன்னை ரக்ஷிப்பானும் அவனே -அவனே அவனை ரக்ஷிக்க வேண்டும் என்கிறது இத்தால்
ஸ்ரீ ராமாயணமும் திருவாய் மொழியும் அரண் அவனுக்கு அன்றோ -பத்தர் பித்தர் பேதையர் பேசினது போலே அன்றோ
பொற்றாமரை அடி தூய்மை இனிமை -பாவானத்வம் போக்யத்வமும் –
3–பெற்றம் மேய்த்து உண்ணும் குலம்-தடுத்தும் வளைத்தும் பிரார்த்தனை -குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது
4-விஷயாந்தரங்களில் ஆசை அற்று -பறை கொள்வான் அன்று -காண் கோவிந்தா -யதா ஸ்ருத அர்த்தம் அறியாமல் –
வேறே ஒன்றில் நசை இல்லை உன்னையே கேட்டு உன்னிடம் வந்தோம்-
கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம் -திருமந்த்ரார்த்தம் அன்றோ
5-சம்பந்தம் உறைப்பு – -உன் தன்னோடு உற்றோமே ஆவோம் –ஏழு ஏழு -அனைத்து பிறவியிலும்
உனக்கே ஆட்ச் செய்வோம் –தனக்கே யாக எனைக் கொள்ளுமீதே –எனக்கும் -அவஸ்தை தாண்டி –
எனக்கும் பிறர்க்கும் -தாண்டி -எனக்கும் உனக்கும் -தாண்டி -உனக்கே யாக ஆக வேண்டும் –
6-மற்றை நம் காமங்கள் மாற்று -உனது பேறாகவே -கைங்கர்யத்தில் களை அறுத்து –

ப்ராப்திக்கு வேண்டுவது -ஆத்ம ஞானமும் -அப்ரதிஷேதமும் -நாராயணாயா -புருஷார்த்தம் –
ஓம் -ஆத்ம ஞானம் / நம -அப்ரதி ஷேதம் / அனைத்தும் திருமந்த்ரத்திலே உண்டே –
பஃதாஞ்சலி ஹ்ருஷ்டா நம இத் ஏவ வாயின —
ஞானத்தால் வந்த விலக்காமை தியாகம் வேண்டுமே –இயலாமையால் இல்லை –
ஞானம் இருந்தாலும் விலக்காமை இல்லாமல் இருந்தால் கார்யகரம் ஆகாதே
எம்பெருமானார் -சாதனாந்தர -உய்யக் கொண்டாருக்கு அருளிச் செய்த வார்த்தை
ஞானாதிகராய் இருந்தார் -அத்யாவசியம் இல்லாமல் -கடாக்ஷம் இல்லாததால் –
மதுரா பிந்து மிஸ்ரமான -பொன் குடம் -கும்ப தீர்த்த சலீலம் துளி விஷம் போலே அஹங்காரம் -பிள்ளான் வார்த்தை –
ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடே உற்றோமே ஆவோம் -ஆத்ம ஞானம்
ஏழு ஏழு பிறவிக்கும் உனக்கே -அப்ரதி ஷேதம் –
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -எம்மா வீட்டில் எம்மா வீடு -திருவாய் மொழி சாரம் –
நாம் ஆட் செய்வோம் -கைங்கர்யம் புருஷார்த்தம் –
கோவிந்தா உனக்கே -என்பதில் -எனக்கு விலக்கு/ எனக்கும் பிறர்க்கும் விலக்கு /
எனக்கும் உனக்கும் விலக்கு /இதுவே அப்ரதி ஷேதம் –
ரக்ஷிக்க -வேறே எதிர் பார்த்தால் -பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தை வருமே –
சம்பந்தம் சாமான்யம் -குடல் துவக்கு உண்டே -எனவே சம்பந்த ஞானம் வேண்டும் என்கிறது –
த்வய உத்தர வாக்யார்த்தம் இதுவே -ஸ்ரீ மதே-ஸ்ரீ க்கு- நாராயணனுக்கு-பிரித்து இல்லை -ஸ்ரீ மன் நாராயணனுக்கு -என்றபடி
வைதேஹி உடன் கூடின உனக்கு கைங்கர்யம் -ஸஹ வைதேஹ்யா -அஹம் சர்வம் கரிஷ்யாமி –
மிதுனத்தில் -கைங்கர்யம் -சேஷி தம்பதி
மேக ஸ்யாமளானுக்கு கைங்கர்யம் -கருத்த கண்ணனுக்கு -சம்ஸ்க்ருதம் -ஸ்யாம வர்ணாயா கிருஷ்ணாயா -வருமே –
விசேஷணத்துக்கும் வேற்றுமை உருபு உண்டு அங்கே -சப்தம் படி பெண் பால் ஆண் பால் இதுவும் உண்டே அதில்
ஸ்ரீ -அவனுக்கு விசேஷணம் -கருப்பு நிறம் பண்பு போலே-பிரகாரம் -தனித்து ஸ்திதி இல்லையே -அப்ருதக் ஸித்தம்
எம்மா- ஒழிவில்- நெடு- வேய் ப்ராப்யம் சொல்லும் நான்கு திருவாய் மொழி அர்த்தங்களும் இதிலே உண்டே
உனக்கே –எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் -ததீய பர்யந்தம் -நீராட போதுவீர் முதலிலே ஆரம்பித்து -/
அவன் ஆனந்தத்துக்கே -உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுவோம் –
பெண்மை ஆற்றோம் -மற்றை நம் காமங்கள் மாற்று இங்கு /

கீழ்–பறை என்று மறைத்து சொன்ன அர்த்தத்தை–இப்பாட்டில்
அவனுக்கு உகப்புக்காக புகராகப் பண்ணும் அடிமை என்று–விச்தீகரித்துச் சொல்லுகிறார்கள் –
பெற்றம் மேய்த்து உண்ணும் குலம் -என்று ஜ்ஞான ஜன்மத்தைச் சொல்லுகிறது
ஜ்ஞாதாக்கள் ஆன்ரு சம்சய பிரதானராய்–பரர் அநர்த்தம் பொறுக்க மாட்டாதே–பிறர் உஜ்ஜீவிக்கும்படி
ஹித பிரவர்த்தனம் பண்ணுகையைப் பற்ற –

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய் -என்றவர்கள் தாங்களே
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது -என்று-கைங்கர்யத்தைப் பிரார்திக்கையாலே
கைங்கர்யம் தானும் மங்களா சாசனம் ரூபமான படியாலே-மங்களா சாசனத்துக்கு பலமாக
அவன் கொடுக்க வேண்டியதும்-இவர்கள் கொள்ள வேண்டியதும்-மங்களா சாசனமே என்றது -ஆய்த்து –
பொய்கை -அடிக்கீழ் ஏத்தினேன் சொல்மாலை ஆரம்பம் —
இறை எம்பெருமான் -சேவடியான் செங்கண் நெடியான் –
இன்றே கழல் கண்டேன் தாள் முதலே நங்கட்கு சார்வு–உன்னதா பாதம் —துயரறு சுடரடி
நாரணன் அடிக்கீழ் நண்ணுவார்–உன் சேவடி செவ்வி–
திருப்பொலிந்த சேவடி என் சென்னியின்–திருக்கமல பாதம் வந்து
நான் கண்டு கொண்டேன் -அடி நாயேன் நினைந்திட்டேனே–
மாறன் அடி–பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

சிற்றம் சிறுகாலே –போற்றும் பொருள் கேளாய் -என்கையாலே-ரஜஸ் -தமஸ் ஸூக்களாலே கலங்கி
தேக அனுபந்திகளான-த்ருஷ்ட பலங்களை-அடியோங்கள்
அபேஷித்தாலும்-ஹித பரனான நீ-கேள்வி கொள்ளவும் கடவை அல்லை-
கொடுக்கக் கடவையும் அல்லை –என்றது ஆய்த்து –

அனுபவ விரோதி–அவ்விடம் ஏகாந்த ஸ்தலம்–திருவடிகளில் நிலை நின்ற நெஞ்சு
மற்று ஒன்றினைக் காணாவே–சிந்தை மற்று ஒன்றின் திறத்தில் அல்ல
கண்ணன் வைகுந்தனொடு–இம்மை -இங்கே இப்பொழுதே உனக்கே–சிந்தயந்தி அவஸ்தை வேண்டாம்
காமம்
மற்றை காமம்
மற்றை நம் காமம் சௌந்த்ர்ய ரூபம் அந்தர்யாமம் அழகு முழுக்கப் பண்ணுமே —-
அனுபவிக்கும் பொழுது தடை கூடாதே
இந்த்ரிய சாபல்யம் அந்த்ரயாமம் -ராமே பிரமாத சுமத்ரை அழகில் கண் வையாதே
காவல் சோர்வு வாராமல் இருக்க
அத்தனையோ
காமங்கள்–இருவர் கூட பரிமாறா நின்றால் இருவருக்கும் உண்டே–விஷய வை லக்ஷண்யம் ப்ரீதி ரூபம்
ஸ்வரூப விரோதி அஹங்கார கர்ப்பமான கைங்கர்யம்–அஹங்காரம் மமகாரம் மாற்றி அருள
அடிமை செய்து நீ உகந்தால்–அது கண்டு–போஜனம் கிருமி கேசம் போலே

பிராப்தி விரோதி–பிராப்யம் விரோதி–இப்பாட்டில் தவிர்த்து–
கறவைகள் பின் சென்று -உபாயாந்தரம் அன்வயம்
பிராப்தி ஷாமணம் பண்ணு கையாலும்–பிராப்ய ருசி த்வரை ஆர்த்தி–
ஸ்வரூப விரோதி–மற்றை நம் காமங்கள் பல விரோதி
கோவிந்தா அகாரம்
ஆய- கோவிந்தனுக்கு
உனக்கே உகாரார்தம்
நாம் மகாரார்தம்
கோவிந்தா உனக்கே நாம் பிரணவம் அர்த்தம்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் நாராயண பதார்த்தம்
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் ஆய
மற்றை நம் காமங்கள் மாற்று நமஸ்
நடுவே நமஸ் கிடப்பது ஸ்வரூப பிராப்ய விரோதி போக்க
த்வரை–பலம் கலக்கம்–ஆர்த்தி -பிராப்யாந்தர சங்க நிவ்ருத்தி–அளவற்ற பாரிப்பு அடியே போற்றும்
ஸூவ பிரவர்த்தி நிவ்ருத்தி சொல்லி–உணருகை–பகவத் சந்நிதி ஏற வருகை–சேவிக்கை
விக்ரக அனுபவம்–சம்ருதியை ஆசாசிக்கை–ஆபி முக்கியம்–அவதார பிரயோஜனம்–ஆர்த்தி பிரகாசிப்பிக்கை
பலாந்தரம் வேண்டாம் சொல்லி–ஸூரிகள் பரிமாற்றம் அபேஷிக்கை
ஸ்வரூப விரோதி போக்கி–கிருஷ்ணன் திரு முகம் பார்த்து விண்ணப்பிக்கிறார்கள்

கூடாரை -வல்லி–வைகுண்ட ஏகாதசி–பெருமாள் சாப்பிடலாம் என்று பண்ணி அடுத்த நாள் உண்ணலாம்
நமக்கு என்று நினைத்து பண்ண கூடாதே–பிராப்யம் சரம நிலை இது
அன்னம் -அனுபவிக்க படுகிறவன்
அன்னம் அத்யந்தம் அஸ்மி -அவனை நான் அனுபவிப்பேன் உபநிஷத்
படியாய் கிடந்தது–அவன் உகக்க–உன் பவள வாய் காண்பேனே —
படியாய் கிடந்தது பவள வாய் கண்டு ஆனந்திக்க வேண்டும் –

சிற்றம் சிறுகாலை -மற்றை நம் காமங்கள் மாற்று -பிராப்ய விரோதி ஸ்பஷ்டமாக அருளி
ஸ்வரூப விரோதி யானே நீ என் உடைமையும் நீயே –
உபாய விரோதி -களையாது ஒழிவாய் –களை கண் மற்றிலேன் –
பிராப்ய விரோதி மற்றை நம் காமங்கள் மாற்று என்று இருக்கை
போக தசையில் ஈஸ்வரன் அழிக்கும் பொழுது நோக்க வேண்டும் -துர்லபம் -அவன் கருத்து –
கேசவ நம்பி கால் பிடித்த அருள் ஒன்றே கேட்பாள் ஆண்டாள்–வேறு தேவதை-புறம் தொழா மாந்தர்
பாரதந்த்ர்யம் -ஸ்வாதந்த்ர்யம் விட ஏற்றம் -தேர் மேல் சந்தோஷமாக பரதன் ஏறினான் —
சொன்னபடி கேட்பதே -அடிமை செய்வதை விட
திருப்பாண் ஆழ்வார் லோக சாரங்க மகா முனி தோள் மேலே ஏறினார் பாரதந்த்ர்யம் அறிந்து –
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்னா நின்றார் இறே-
பிரகர்ஷயித்யாமி -ஆளவந்தார் -ஞானானந்த மயத்வம் ஆத்மா —
கைங்கர்யம் செய்யப் பெற்று அவன் ஆனந்தம் அடைய அது கண்டு நாம் அடைவது ஆனந்தம்
எப்பொழுது -சந்தோஷப்படுத்த போகிறேன் —பிரகர்ஷ்யாமி சொல்லாமல் -பிரகர்ஷயித்யாமி –
அருளி —படியாய் கிடந்தது உன் பவளவாய் காண்பேனே

உந்தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் –நாங்கள் வியக்க இன்புறுதும்
என் பெண்மை ஆற்றோம் —தேவிமார் சால உடையீர் –
உயர் திண் -நோற்ற நாலும் -புருஷார்த்தம் நான்கும் -எம்மா ஒழிவில் நெடுமாற்கு வேய் மரு-தோளினை
இதில் -இந்த புருஷார்த்தம் அர்த்தம் அருளிச் செய்கிறார் –
காலை
சிறுகாலை
சிற்றம் சிறு காலை
சரணாகதி கத்யம் இரவு 11 மணிக்கு சாதித்தார் எம்பெருமானார் -பங்குனி உத்தரம் —
பகவத் சந்நிதி சென்ற வேளையே பிராப்த காலம் –
ஆழ்வார்களில் ஆண்டாளுக்கு வாசி
இனி பிறவி யான் வேண்டேன்–ஆதலால் பிறவி வேண்டேன்
பிராட்டியும் அவதரிக்க வேண்டுமே அவன் உடன்–உற்றோமே ஆவோம் —தர்ம தர்மிகளை போலேயும்
குணம் குணிகள் போலேயும்–கிரியா கிரியாவான்கள் போலேயும்–உனக்கே நாம் ஆட் செய்வோம்
கேசவ நம்பியை -கால் பிடிப்பாள் என்னும் இப் பேறு எனக்கு அருள் கண்டாய் –
தெள்ளியார் -வள்ளல் மால் இரும் சோலை மணாளனார் பள்ளி கொள்ளும் இடத்து கூடுமாகில் கூடலே
ஸ்ரீ ரெங்கம் நிஜதாம்னி–பள்ளி கொள்ளும் இடம் கோயில்-

மற்றை நம் காமங்கள் மாற்று–
மந்திர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா
ஸ்வரூப விரோதி -கழிகை -யானே நீ என்னுடைமையும் நீயே -என்று இருக்கை
உபாய விரோதி -கழிகை-களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் களைகண் மற்று இலேன் –
ப்ராப்ய விரோதி -கழிகை-யாவது -மற்றை நம் காமங்கள் மாற்று -என்று இருக்கை
கதாஹமை காந்திக நித்ய கிங்கர ப்ரஹர்ஷயிஷ்யாமி
நம -கைங்கர்யத்தில் களை அறுக்கிறது –
களை யாவது தனக்கு என்னப் பண்ணுமது-போக்த்ருத்வ பிரதிபத்தியும் -மதீயம் என்னும் பிரதிபத்தியும் –
கைங்கர்ய விரோதி நிவ்ருத்தியும் யாவதாமபாவி -நித்யமாக கைங்கர்யம் போலே –பிராப்ய பூமியிலும் –
மருந்தே நம் போக மகிழ்ச்சிக்கு -நித்ய ஸூரிகள் பிதற்றும் பாசுரம்-
பசிக்கு மருந்து -பசியை உண்டாக்க -பிணிக்கு மருந்து பிணியை போக்க –

மற்றை நம் காமங்கள் மாற்று
தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே–10-7-2—
அவன் ஆழ்வாரை கொண்ட பின்பு -தானே யான் என்பான் ஆகி –யானே என்பான் தானாகி –
சர்வ விஷயமாக -எல்லார் இடத்திலும் நிற்கும் நிலை ஒழிய
இவருடைய திரு மேனியில் நிற்கும் நிலையைச் சொல்லுகிறது
நான் என்ற பெயர் அளவேயாய் நிற்கிற நான் -தான் என்னலாம் படி ஆனேன்
தம்மைத் தடவிப் பார்த்த இடத்தில் காண்கின்றிலர் –
அவன் தலையிலே சுமக்க காண்கிற இத்தனை –
எனக்குத் தேனே பாலே கன்னலே அமுதே-
சர்வ ரச -என்கிற பொதுவான நிலை அன்றிக்கே
எனக்கு நிரதிசய -எல்லை இல்லாத போக்யன் -இனியன் ஆனவனே –
கொடியேன் பருகு இன்னமுதே -என்கிறபடி
தன்னைத் தானே துதித்து -என்கிற இடத்தில் தம்மைக் கண்டிலர்
இங்குத் தாம் உளராகவும்-தமக்கு இனியதாகவும்-தொடங்கிற்று
தாம் பாடின கவி கேட்டு -அவன் இனியனாய் இருக்கும் இருப்பு
தமக்கு இனியதாய் இருக்கிறபடி –

ஏவம் ஸ்வீக்ருத சித்த உபாயனுக்கு — தத் க்ருத ஸ்வரூப அனுரூப பலமும்– தத் விரோதி நிவ்ருத்தியும்
யா காஸ்சந க்ருதய-இத்யாதிப்படியே சொல்லித் தலைக் கட்டுகிறது –
தங்களுக்கு உத்தேச்யமானது கைங்கர்யம் என்று பிரபந்த தாத்பர்யம் சொல்லி முடிக்கிறார்கள்
இத்தால் ஸ்வீக்ருத உபாயத்துக்குப் பலமான புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லுகிறது

——————————————————–

இப் பாசுரத்தில் (திருப்பாவையில்) மூன்றாவது முறையாக கோவிந்த நாமம்
(இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா) எழுப்பப்படுகிறது.
இதற்கு முன், 27வது பாசுரத்தில், “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்றும்,
28வது பாசுரத்தில் “குறைவொன்றும் இல்லாத கோவிந்தா” என்றும் பாடப்பட்டதை நினைவு கூர்க !
பொதுவாக, சங்கல்பத்தின் போது, “கோவிந்தா கோவிந்தா கோவிந்தா” (3 முறை) என்று சொல்வது மரபு.
மேலும், ‘கோவிந்தா’ என்ற சொல்லினுள் ‘கோதா’ இருப்பதும் குறிப்பிடத்தக்கது !

இப்பாசுரத்துடன், கோதை நாச்சியார், கோபியர் பாத்திரத்தில் கிருஷ்ணனிடம் திருப்பாவையில் வேண்டுவதை முடித்துக் கொள்கிறார்.
கடைசி பாசுரத்தில் (வங்கக் கடல் கடைந்த மாதவனை), ஆண்டாளாகவே பாடி, திருப்பாவையை நிறைவு செய்கிறார் !

நோன்புக்காக பறை வேண்டுவதின் சரியான அர்த்தம் இப்பாசுரத்தில் வெளிப்பட்டுள்ளது. அதாவது
(i) உன் திருவடிகளில் கைங்கர்யம் செய்திருத்தல்
(ii) உன்னை விட்டுப் பிரியாதிருத்தல்
(iii) மேற்கூறிய இரண்டுக்கும் ஒவ்வாத ஆசைகளை / எண்ணங்களை நீக்க வேண்டுதல்-ஆகியவையே ஆகும்.

இப் பாசுரத்தில், சொரூப விரோதியும், பிராப்ய விரோதியும் விலகுவது சொல்லப்பட்டுள்ளது.

த்வயத்தின் முற்பகுதியான உபாய சொரூபம் சென்ற பாசுரத்தில் (கறவைகள் பின் சென்று) வெளிப்பட்டது.
இதில், பிற்பகுதியான உபேய சொரூபம் (பரம்பொருள் வடிவம்) வெளிப்படுகிறது !

‘சிற்றஞ்சிறுகாலை’யே எம்பெருமானைக் குறித்த ஞானம் – பக்தி மிகும் சமயம் என்பதாலேயே,
ஆண்டாள் அந்த நேரத்தை, பரமனைப் பற்றி வணங்க வெண்டிய பொழுதாகப் பாடியுள்ளார் என்று பெரியோர் உரைப்பர்.
ஹரிநாம சங்கீர்த்தனத்திற்கு உகந்த நேரமும் அதுவே !

போற்றும் – எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காது பல்லாண்டு பாடுதலைக் குறிக்கும்

குற்றேவல் செய்தல் – பரமன் இட்ட ஏவலைச் செய்தல், நம்மாழ்வார் கூறியது போல,
‘ஒழுவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை’ செய்தல் !!!

‘உன்றன்னோடு உற்றோமேயாவோம்’ என்பது மூல மந்திரத்தில் பிரணவத்தையும்,
‘உனக்கே நாமாட் செய்வோம்’ என்பது நாராயண சப்தத்தையும்,
‘மற்றை நம் காமங்கள் மாற்றேலோ’ என்பது ‘நம’ சப்தத்தையும் உள்ளர்த்தங்களாகக் குறிக்கின்றன.
ஆக, முழு வாக்கியமும் சேர்ந்து “ஓம் நாராயணாய நமஹ” என்ற அஷ்டாட்சர மந்திரத்தை குறிக்கிறது.

மொத்தத்தில், கோபியர் பரமாத்வான கிருஷ்ணனிடம் மோட்ச சித்தி ஒன்றை மட்டுமே
பாவை நோன்பின் வாயிலாக வேண்டி வணங்கிக் கேட்கின்றனர்.

———–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: