ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த அர்த்த பஞ்சகம் -ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர்  தனியன்  –

லோகாசார்யாய குரவே கிருஷ்ண பாதச்ய ஸூ நவே
சம்சார போகி சந்தஷ்ட ஜீவா ஜீவாதவே நம-

வாழி உலகாசிரியன் வாழி யவன் மன்னு குலம்
வாழி முடும்பை என்னும் மா நகரம் -வாழி
மனம் சூழ்ந்த பேரின்ப மல்கு மிகு நல்லார்
இனம் சூழ்ந்து இருக்கும் இருப்பு –

——————————————————

ஸ்ரீ யபதியாய்-அகில ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதா நத்வாதி களாய்-ஸ்வ இதர சமஸ்து வஸ்து விலஷணனாய் –
அப்ராக்ருதமாய் -சுத்த சத்வ மயமாய்-ஸ்வ அசாதாரணமாய் -புஷப காச ஸூ குமாரமுமாய் -புண்ய கந்த வாஸித
அநந்தாதிகந்த ராளமாய் -சர்வ அபாஸ்ரயமாய் இருந்துள்ள திவ்ய மங்கள விக்ரஹ உபேதனாய்
நூபுராதி க்ரீடாந்தமான திவ்ய பூஷித பூஷனாய் -சங்க சக்ராதி திவ்யாயுதனாய் நிரதிசய ஆனந்த மயனாய்
தேவ கணம் அபிஜன வாக் மனச அபரிச்சேதய பரம வ்யோமம் ஆகிய ஸ்ரீ வைகுண்டத்தில்
ஆனந்த மயமான திவ்ய ஆஸ்த்தான மண்டபத்திலே பெரிய பிராட்டியாரும் நாய்ச்சிமார் உடன் கோப்புடைய சீரிய சிம்ஹாசனத்திலே எழுந்து அருளி
செங்கோல் செய்ய வீற்று இருந்து அருளி -நித்ய நிர்மல ஞானாதி குணகராய்-ஸ்வ சந்த அனுவ்ருத்தி ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தி பேதராய்
-அஸ்த்தானே பய சங்கிகள் ஆகிற அயர்வரும் அமரர்களாலே அநவரதம் பரிச்சர்யமான சரண நளினமாய்க் கொண்டு அங்கு செல்லா நிற்க
ஸ்வ சங்கல்ப அயத்த ஸ்வரூப ஸ்திதி பிரவ்ருத்தி நிவ்ருத்தகமான சகல சேதன அசேதனங்களை தனக்கு சேஷமாய் தான்
ஸூத்த அஸூத்த இவ்விபூதி த்வய ஏக சேஷியாய் விபுத்வாத் தேச பரிச்சேதய ரஹிதனாய் -நித்யத்வாத் -கால பரிச்சேதய ரஹிதனாய் –
ஸ்வ இதர ஸமஸ்தங்களும் தனக்கு பிரகாரங்களாய்த் தான் பிரகாரியாய் -தனக்கு பிரகாராந்தம் இல்லாமையால் வஸ்து பரிச்சேதய ரஹிதனாய் –
தத்காதா தோஷ அச்மருஷ்டனாய்-ஞானானந்த ரூபனாய் -சத்யத்வாதி ஞானத்வாதி ஸ்வரூப நிரூபக தர்ம யுக்தனாய்
ஞான பல ஐஸ்வர்யாதி வாத்சல்ய ஸ்வாமித்வ ஸுசீல்யாதி அநந்த கல்யாண குண கண சமூக மஹோததியாய்
நாராயணாதி திவ்ய நாம சஹஸ்ரங்களை ஸ்வ வாசகங்களாக யுடைய ஸமஸ்த வாச்யனாய் ஸ்ருதி சிரஸி விதீப்த மானனாய்
ஆக இவ்வனைவற்றாலும் சேதன விசஜாதியானாய் இருந்து வைத்தும் ரக்ஷகாந்தரம் ஒன்றியில் தானே சர்வ பிரகார ரக்ஷகனாய் இருப்பதையிட்டு
ஆஸ்ரித வாத்சல்யத்தாலே -மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -என்கிற திரு முக பாசுரத்தின் படியே
ஜென்ம பரம்பரைகளிலே தோள் மாறிச் சுற்றிச் சுழன்று -சம்சார ஆற்றில் ஆழங்கால் இட்டு
நித்ய நிமக்நராய் அநர்த்தப்படும் தேவ மனுஷ்யாதிகள் சஜாதீயனாய் வந்து தான் பரம கிருபாதிசயத்தாலே அவர்கள்
உதர போஷண கிங்கரராய் -சம்சரிக்கும் அவ்வவோ இடங்களிலே திருவவதாரங்களைப் பண்ணும் ஸ்வபாவனாய்
அவ்வவ வனந்த வவதாரங்களிலும் உதவப் பெறாத கர்ப்ப நிர்பாக்யருக்கும்

சம்சாரியான சேதனனுக்கு தத்வ ஜ்ஞானம் பிறந்து உஜ்ஜீவிக்கும் போது அர்த்த பஞ்சக ஜ்ஞானம் யுண்டாக வேணும் –

சம்சாரியான சேதனனுக்கு-அநாதி மாயயா ஸூப்த-என்கிறபடியே -அனாதையான சம்சார சமுத்திரத்தில் உழன்று இருக்கும் சேதனனுக்கு என்னுதல் –
சம்சாரம் தன்னையே நிரூபகமாம் படி இருக்கிற சேதனனுக்கு என்னுதல் –
( ஞானாத் மோக்ஷ –அஞ்ஞாத சம்சாரம் -/ உஜ்ஜீவனம் -உத்க்ருஷ்ட ஜீவனம் – )
தத்வ ஜ்ஞானம் பிறந்து-
இவர் தாமே -தத்வ ஞானம் ஆவது சர்வ ஸ்மாத் பரனான நாராயணனுக்கு -சர்வ பிரகார பரதந்த்ரரான
சர்வாத்மாக்களினுடையவும் ஸ்வரூபத்துக்கு அனுரூப புருஷார்த்தமான கைங்கர்யத்தை அனாதையாக பிரதிபந்தித்திக்குக் கொண்டு
போருகிற கர்ம சம்பந்தத்தை நிவர்த்திப்பிக்கும் உபாயம் -தத் சரணாரவிந்த சரணாகதி -என்கிற ஞான விசேஷம்
என்று தத்வ சேகரத்தில் சாதித்து அருளின பிரகாரம் –
( தமேவ வித்வான் அம்ருத இஹ பவதி -ஈஸ்வரனை அறியும் பொழுது சேதன அசேதன விசிஷ்டமாகவே அறிய வேண்டுமே )
ஸ்வரூப யாதாம்ய விஷயத்தில் ஞானம் பிறந்து -உஜ்ஜீவிக்கும் போது -உய்யும் போதைக்கு என்றபடி -அர்த்த பஞ்சக ஜ்ஞானம் யுண்டாக வேணும் –
சாஸ்த்ர ஞானம் சேதனனுக்கே -புபுஷுக்களையும் முக்தர்களையும் நித்யர்களையும் வியாவர்த்தித்து –
சம்சாரியான சேதனன் உஜ்ஜீவிக்க தத்வ ஞானம் வேண்டும் என்கிறது –

———————————————-

அர்த்த பஞ்சக ஜ்ஞானம் ஆவது –1- ஸ்வ ஸ்வரூப /2- பர ஸ்வரூப /3- புருஷார்த்த ஸ்வரூப /
4- உபாய ஸ்வரூப /5- விரோதி ஸ்வரூபங்களை -உள்ளபடி அறிக்கை –
இவற்றில் ஒரொரு விஷயம் தான் அஞ்சு படிப் பட்டு இருக்கும் –ஸ்வரூபம் என்றது அசாதாரண ஆகாரம் என்றவாறு

1- ஸ்வ ஸ்வரூபம் -என்கிறது -ஆத்ம ஸ்வரூபத்தை –ஆத்ம ஸ்வரூபம் தான் நித்யர் -முக்தர் -பத்தர் -கேவலர் – -முமுஷூக்கள் -என்று ஐந்து
2-பர ஸ்வரூபம் -என்கிறது ஈஸ்வர ஸ்வரூபத்தை -ஈஸ்வர ஸ்வரூபம் தான் -பரத்வம் வ்யூஹம் விபவம் அந்தர்யாமித்வம் அர்ச்சாவதாரம் என்று ஐந்து –
3- புருஷார்த்த ஸ்வரூபம் -என்கிறது புருஷனாலே அர்த்திக்கிப்படுமது புருஷார்த்தம் –
அந்தப் புருஷார்த்தம் தான் -தர்ம -அர்த்த -காம -ஆத்மானுபவம் -பகவத் அனுபவம் -என்று ஐந்து
4- உபாய ஸ்வரூபம் என்கிறது கர்ம ஜ்ஞான பக்தி பிரபத்தி ஆச்சார்யா அபிமானம் என்று ஐந்து –
5-விரோதி ஸ்வரூபம் என்கிறது -ஸ்வரூப விரோதி பரதவ விரோதி -புருஷார்த்த விரோதி -உபாய விரோதி -ப்ராப்தி விரோதி என்று ஐந்து –

ஞானாநந்தங்கள் தடஸ்தம் என்னும் படி -தாஸ்யம் இ றே அந்தரங்க நிரூபனம் ஆத்மாவுக்கு
-பாரதந்த்ரத்தோடு கூடின சேஷத்வமே நிலை நின்ற லக்ஷணம் -அடியேன் உள்ளான் –
புருஷனாலே சேதனனாலே அர்த்திக்கப்படுமது புருஷார்த்தம் –

—————————————-

1-இவற்றில் நித்யராவார் -ஒரு நாளும் சம்சார சம்பந்தம் ஆகிற அவத்யம் இன்றிக்கே நிரவத்யராய் -பகவத் அனுபவ -அனுகூல்யைக போகராய்
வானிளவரசு வைகுந்தக் குட்டன் வாசுதேவன் -பெரியாழ்வார் -3-6-3-என்கிற ஸ்ரீ வைகுண்ட நாதனுக்கு
விண்ணாட்டவர் மூதுவர் -திரு விருத்தம் -2-என்கிறபடி பட்டம் கட்டுகைக்கு உரியராம்படி மூப்பரான மந்த்ரி களாய்
ஈஸ்வர நியோகாத் சிருஷ்டி ஸ்திதி சம்ஹாரங்களைப் பண்ணவும் சக்தராய்
பர வ்யூஹாதி சர்வ அவச்தைகளிலும் தொடர்ந்து அடிமை செய்யக் கடவராய்
கோயில் கொண்டான் தன் திருக் கடித்தானத்தை கோயில் கொண்டான் அதனோடு என்நெஞ்சகம்
கோயில் கொள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே   -திருவாய் -8-6-5-என்றபடி
கோயில் கொள் தெய்வங்களான -சேனை முதலியார் தொடக்கமான அமரர்கள்-கோயில் கொள்ளல் குடி கொள்ளல் என்றபடி –

சதா பஸ்யந்தி ஸூரய –ஏகாந்திக சதா ப்ரஹ்ம த்யாயின
வைகுண்ட குட்டன் -ஆஸ்ரித பரதந்த்ரன் -வைகுண்ட கூடஸ்தன் / வா ஸூ தேவாய தீமஹி /
வான் இள வைரசு -ஷோடச வர்ஷோமே–யுவா குமாரா
சம்பூர்ண ஷட் குணஸ் தேஷூ வாஸூ தேவோ ஜகத் பதி
தொடர்ந்து -யேன யேன ததா கச்சதி தேன தேன ஸஹ கச்சதி –

——————————————
2-முக்தராவார் -பகவத் பிரசாதத்தாலே பிரகிருதி சம்பந்தத்தால் வந்த க்லேசங்கள் எல்லாம் கழிந்து
பகவத் ஸ்வரூப ரூப குண விபவங்களை அனுபவித்து அவ் வநுபவ ஜனித ப்ரீதி உள்ளடங்காமையாலே வாயாரப் புகழ்ந்து
மீட்சியின்றி வைகுண்ட மா நகரத்திலே -திருவாய் -4-10-11-களித்து ஆனந்திக்கிற முனிவர்கள் –

விகுண்டி தாய் வயிற்றில் பிறக்கையாலே வைகுண்டன் -பகவத் ப்ரஸாதத்தாலே -க்ருபா கர்ப்ப ஜாயதே -பிராகிருத சம்பந்த கிலேச அமலங்கள் எல்லாம் தீர பெற்று –
சரீர சம்பந்தத்தால் வந்த ஆத்மாத்தமிகாதி துக்கங்களும் அஞ்ஞானதி அமல ரூபா தர்மங்களும் நீங்கப் பெற்று -மனனகம் மலம் அற -என்றபடி
அவனுடைய ஸ்வரூப ரூப விபவங்களை அனுபவித்து -அனுபவ ஜெனித ப்ரீதி காரியமாக காவு காவு அஹம் அன்னம் என்று வாயார புகழ்ந்து –

————————————————-

3-பத்தராவார் -பாஞ்ச பௌதிகமாய்-அநித்யமாய்-ஸூக துக்க அநுபவ பரிகரமாய் -ஆத்ம விச்லேஷத்தில் தர்சன ஸ்பர்சன யோக்யம் அல்லாதபடி
அஸூத்தாஸ்பதமாய்- அஜ்ஞான அந்யதா ஜ்ஞான விபரீத ஜ்ஞான ஜநகமான ஸ்வ தேஹமே ஆத்மாவாகவும் -சப்தாதி விஷய அநுபவ ஜனிதமான
ஸ்வ தேக போஷணமே புருஷார்த்தமாகவும்-சப்தாதி விஷய அனுபவத்துக்கு உறுப்பாக வர்ணாஸ்ரம தர்மங்களை அழிய மாறியும்
-அசேவ்ய சேவை பண்ணியும்  -பூத ஹிம்சை பண்ணியும் -பர தார பர த்ரவ்ய அபஹாரம் பண்ணியும் -சம்சார வர்த்தகராய்-பகவத் விமுகரான சேதனர்-

ஞான அநுதயம் -என்கிறது தேஹாத்ம அபிமானத்தை
அந்யதா ஞானம் -யோக்யதா சந்தமானம் -ஸ்வ சேஷத்வ -அந்நிய சேஷத்வ ரூபமான அந்நிய சேஷத்வத்தை
விபரீத ஞானம் -ஸ்வ ஸ்வா தந்தர்ய ஞானத்தை
அன்னம் போஜ்யம் மனுஷ்யானாம்

—————————————-

4-கேவலன் ஆவான் -தனி இடத்திலே மிகவும் ஷூதப்பிப்பாசைகளாலே நலிவு பட்டவன் பாஹ்ய அபாஹ்ய விபாகம் பண்ண மாட்டாதே
தன்னுடம்பைத் தானே ஜீவித்து ப்ரசன்னமாம் போலெ சம்சார தாபா அக்னியாலே தப்தனானவன் சம்சார துக்க நிவ்ருத்திக்கு உறுப்பாக
சாஸ்த்ர ஜன்ய ஞானத்தால் ப்ரக்ருதி ஆத்ம விவேகம் பண்ணி -பிரகிருதி துக்க ஆஸ்ரயமாய் ஹேயா பதார்த்த சமூகமாய் இருக்கிற ஆகாயத்தையும்
ஆத்மா ப்ரக்ருதே பரனாய் பஞ்ச விம்சகனாய் ஸ்வயம் பிரகாசனாய் ஸ்வதஸ் ஸூ கியாய் -நித்யனாய் அப்ராக்ருதனாய் இருக்கிற ஆகாயத்தையும்
அனுசந்தித்து முன்பு தான் பட்ட துக்கத்தின் உபதானத்தாலே இவ் உபாசனத்திலே கால் தாழ்ந்து உணர் முழு நலமான பரமாத்மா விவேகம் பண்ண மாட்டாதே
அமுத வெள்ளத்தானாம் சிறப்பு விட்டு அவ்வாத்மா ப்ராப்திக்கு சாதனமான ஞான யோகத்தில் நிஷ்டனாய் யோக பலமான அவ்வாத்மா அனுபவ மாத்ரத்தையே
புருஷாகாரமாக அனுபவித்து பின்பு சம்சார சம்பந்தமும் பகவத் பிராப்தியும் அற்று யவாதாத்மபாவி அசரீரியாககே கொண்டு திரிவான் ஒருவன்

——————————–

5-மோக்ஷத்திலே இச்சை யுடையவர்களுக்கு முமுஷுக்கள் என்று பேராகக் கடவது
அவர்கள் தான் முமுஷுக்களாய் உபாஸகராயும் இருப்பாரும்
முமுஷுக்களாயும் ப்ரபன்னராய் இருப்பாருமாய் இரண்டு படி பட்டு இருக்கும்

————————————-

ஈஸ்வர விஷயத்தில் பரத்வமாவது -பரமபதத்தில் அ வாக்ய அநா தர -என்று எழுந்து அருளி இருக்கிற ஆதி யம் சோதி உருவான பர வாஸூ தேவர்

அகால கால்யமான நலமந்தம் இல்லாதோர் நாட்டில் -தத் விஷ்ணோ பரமம் பதம் -/ திருமகள் பூமி ஏவ மற்ற அமரர் ஆட்செய்யும் தேசம் /

வ்யூஹமாவது ஸ்ருஷ்ட்டி ஸ்திதி சம்ஹார கர்த்தாக்களான சங்கர்ஷண ப்ரத்யும்ன அநிருத்ரர்கள்

விபவமாவது ராம கிருஷ்ணாதி அவதாரங்கள்

அந்தர் யாமித்வம் இரண்டு படியாய் இருக்கும் –
அதாவது அடியேன் உள்ளான் -என்றும் -எனதாவி -என்றும் -என்னுயிர் -என்றும் போதில் கமல வென்னெஞ்சம் புகுந்து –
அரவிந்தப் பாவையும் தானும் அகம்படி வந்து புகுந்து என்றும் -புந்தியில் புகுந்து தன்பால் ஆதரம் பெறுக வைத்த அழகன் என்றும்
உள்ளூர் உள்ளத்தில் எல்லாம் உடன் இருந்து அறிந்து என்றும் சொல்லுகிறபடி
ஸ்ரீ லஷ்மீ ஸஹிதனாய் வி லேசான விக்ரஹ யுக்தனாய்க் கொண்டு ஹிருதயக் கமலத்து உள்ளும் சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும்
சதா அவலோகநம் பண்ணிக் கொண்டு எழுந்து அருளி இருக்கும் இருப்பு

அந்தரபாவமும் -விக்ரஹ விசிஷ்டமாயும் உண்டே பூதக ஜலம் -கடக்லி / பேரமர் காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி /இரா மதமூட்டுவாரைப் போலே
மருந்தே போக மகிழ்ச்சிக்கு -நித்யருக்கும் / தேனும் பாலும் கன்னலும் அமுதமுமாகி தித்தித்தது என் ஊனில் உயிரினில் உணர்வினில் நின்ற ஒன்றை உணர்ந்தேன்

அர்ச்சாரமாவது -தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே தமர் உகந்தது எப்பேர் அப்பேர் -என்கிறபடி தனக்கு என ஒரு உருவமும் ஒரு பெயரும் இன்றிக்கே
ஆஸ்ரிதர் உகந்த வடிவே வடிவாகவும் அவர்கள் இட்ட பெயரே பெயராகவும் சர்வஞ்ஞனாய் இருக்கச் செய்தே அஸக்தனைப் போலேயும்-சா பேஷனைப் போலே யும்
ரக்ஷகனாய் இருக்கச் செய்தே ரஷ்யம் போலேயும் -ஸ்வ ஸ்வாமி பாவத்தை மாறடிக் கொண்டு கண்ணுக்கு விஷயமாம் படி
சர்வ சுலபனாய்க் கொண்டு கோயில்களிமும் கிருகங்களிலும் தேச கால அவதி இன்றிக்கே எழுந்து அருளி இருக்கும் நிலை –
இருட்டறையில் விளக்கு -தேங்கின மடுக்கள் /ராஜ மகிஷி பார்த்தாவின் பூம் படுக்கையை விட பிரஜை யுடைய தொட்டில் கால் கிடை யோக்யமாகக் கொண்டு
கோயில் திருமலை பெருமாள் கோயில் தொடக்கமான அர்ச்சா ஸ்தலங்கள் -ஸ்வயம் வியக்தம் -தைவம் சைத்யம் -மானுஷம் -நான்கு வகைகள் உண்டே
ஸூ க்ரீவம் நாதம் இச்சாமி -பாண்டவ மாமா பிராணாசி -ஞானீத் வாத்மைவ – போலே ஆசைப்படுமவன்
குடில் கட்டிக்க கொண்டு கிருஷிகன் கிடைக்குமா போலே -குடீ குஞ்சேஷூ-கனிவாய் வீட்டின்பம் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்தைகளும் அர்ச்சாவதாரம் தானே

—————————

புருஷார்த்தங்களில் தர்மமாவது -பிராணி ரக்ஷணத்துக்கு உறுப்பாகப் பண்ணும் வ்ருத்தி விசேஷங்கள்

தாரா புத்ராதிகளுக்கு அன்ன வஸ்த்ராதிகளை இட்டு ரஷிக்க உடலாக

அர்த்தமாவது வர்ணாஸ்ரம அனுரூபமாக தான தானியங்களை ஸங்க்ரஹித்து தேவதா விஷயங்களிலும் பைத்ருகமான கர்மங்களிலும்
பிராணிகள் விஷயமாகவும் உத்க்ருஷ்ட தேச கால பாத்திரங்களை அறிந்து தர்ம புத்தியா வியவயிக்கை -செலவிடுகை

அயோத்யா மதுரா மாயா காஞ்சீ அவந்திகா காசீ துவாரகா /அம்மாவாசை வசந்த காலம் உத்தராயணம் கிரஹணம் / தர்ம புத்தியா -பல த்யாகத்துடன் என்றவாறு

காமமாவது ஐஹிக லௌகீகமாயும் பார லௌகீகமாயும் த்வி விதமாய் இருக்கும்
இஹ லோகத்தில் காமம் ஆவது பித்ரு மாத்ரு ரத்ன தான தான்ய வஸ்து அன்ன பான புத்ர மித்ர களத்ர பசு க்ருஹ க்ஷேத்ர சந்தன குஸூம தாம்பூலத்தி
பதார்த்தங்களில் சப் தாதி விஷய அனுபவத்தால் வந்த ஸூக துக்க விசேஷங்கள்

பார லௌகிக காமமாவது -இதில் வி லக்ஷணமாய் தேஜோ ரூபமான ஸ்வர்க்காதி லோகங்களில் ஆசை சென்று பசி தாக மோக சோக ஜர மரணாதிகள் அன்றிக்கே
ஆர்ஜித்த புண்யத்துக்கு ஈடாக அம்ருத பணம் பண்ணி அப்சரஸ் ஸூ க்களுடன் சப் தாதி விஷய அனுபவம் பண்ணுகை –

ஆத்ம அனுபவம் ஆவது துக்க நிவ்ருத்தி மாத்ரமான கேவல ஆத்ம அனுபவ மாத்ரத்தையும் மோக்ஷம் என்று சொல்லுவார்கள்

இனி பகவத் அனுபவ ரூபமான பரம புருஷார்த்த லேசான மோக்ஷமாவது
பிராரப்த கர்ம சேஷமாய் அவசியம் அனுபாவ்யமான புண்ய பாபங்கள் நசித்து
அஸ்தி ஜாயதே பரிணமதே விவர்த்ததே அபஷீயதே விகசியதே என்கிறபடியே ஷட்பாவ விகாராஸ்பதமாய்
தாபத்ரய ஆஸ்ரயமாய் பகவத் ஸ்வரூபத்தை மறைப்பித்து விபரீத ஞானத்தை ஜெநிப்பிக்கக் காட்டுவதாய் சம்சார வர்த்தகமான
ஸூ தூல சரீரத்தை உபேக்ஷையோடே பொகட்டு ஸூஷூம்நா நாடியாலே சிரக் கபாலத்தை பேதித்துப் புறப்பட்டு ஸூஷ்ம சரீரத்தோடு வானேற வழி பெற்று
மன்னும் கடும் கதிரோன் மண்டலத்தின் நந்நடுவுள் அன்னதோர் இல்லியினூடு போய் ஸூஷ்ம சரீரத்தையும் வாசனா ரேணுவையும்
விராஜா ஸ் நாணத்தால் கழித்து சகல தாபங்களும் ஆறும்படி அமானவ கர ஸ்பர்சமும் பெற்று ஸூத்த சத்வாத்மகமாய் பஞ்ச உபநிஷண் மயமாய்
ஞானானந்த ஜனகமாய் பகவத் ஏக பரிகாரமாய் ஒளிக் கொண்ட சோதி யாய் இருக்கிற அப்ராக்ருத விக்ரஹத்தைப் பெற்று முடியுடை வானவர் முறை முறை எதிர் கொள்ள
நிரதிசய ஆனந்தமயமான திரு மா மணி மண்டபத்தை பிறப்பித்து
ஸ்ரீ லஷ்மீ ஸஹிதனாய் பூமி நீளா நாயகனாய் விலக்ஷனா விக்ரஹ யுக்தனாய் குழுமித் தேவர் குழாங்கள் காய் தொழச் சோதி வெள்ளத்தின் உள்ளே
எழுவதோர் உருவான ஸ்ரீ வைகுண்ட நாதனை நித்ய அனுபவம் பண்ணி நித்ய கிங்கர ஸ்வ பாவனாகை

————————————-

உபாயங்களில் கர்ம யோகமாவது
யஃஞ தான தப த்யான சந்த்யா வந்தன பஞ்ச மஹா யஞ்ஞ அக்னி ஹோத்ர தீர்த்த யாத்திரை புண்ய க்ஷேத்ர வாச
க்ருச்சர சாந்த்ராயண புண்ய நதி ஸ்நான வராத சாதுர்மாஸ்ய பலமூலாசன சாஸ்த்ரா அப்பியாச சமாராதன ஜல தர்ப்பணாதி கர்ம அனுஷ்டானத்தால் வந்த
காய சோஷணத்தாலே பாப நாசம் பிறந்து அத்தாலே இந்த்ரியத்வாரா பிரகாசிக்கிற தர்மபூத ஞானத்திற்கு சப்த்தாதிகள் விஷயம் அல்லாமையாலே விஷய சாபேஷை பிறந்து
எம நியம ஆசன பிராணாயாம ப்ரத்யாஹார த்யான தாரணா சமாதி ரூபமான அஷ்டாங்க யோக க்ரமத்தாலே யோக அப்பியாச காலத்து அளவும்
ஞானத்துக்கு ஆத்மாவை விஷயம் ஆக்குகை

வெங்கானமும் கல்லும் கடலும் எல்லாம் கொதிக்க -/ பூத தேவ பித்ரு மனுஷ்ய ப்ரஹ்ம -பஞ்ச யஞ்ஞங்கள்

இது தான் ஞான யோகத்துக்கு ஸஹ காரியாய் ஐஸ்வர்யத்துக்கு பிரசாதன சாதகமாய் இருக்கும்

கர்மா பத்தி அன்விதம் ஞானம் / ஞானம் பக்தி அன்விதாம் கர்மா /ஜ்யோதிஷ்டோமோதி முகத்தாலே பிரதான சாதனம்

ஞான யோகமாவது –
இப்படி யோக ஜன்யமான ஞானத்துக்கு ஹ்ருதய கமலம் ஆதித்ய மண்டலம் தொடக்கமான ஸ்தல விசேஷங்களில் எழுந்து அருளி இருக்கிற
சர்வேஸ்வரனை விஷயமாகி -அந்த விஷயம் தன்னை சங்க சக்ர கதா தர பீதாம்பர யுக்தமாய் க்ரீடாதி நூபுராந்த திவ்ய பூஷண அலங்க்ருதமாய்
லஷ்மீ ஸஹிதமாகவும் அனுபவித்து யோக அப்பியாச க்ரமத்தாலே அனுபவ காலத்தைப் பெருக்கி அனவரத பாவமாகை

விரோதி நிராசனத்துக்காகவும் -அழகு அனுபவிப்பைக்காகவும் -ஆதி ராஜ்ய ஸூ சகம் திரு அபிஷேகம் –தைல தாராவத் அவிச்சின்ன பாவனா ரூபம் -என்றவாறு –

இது தான் பக்தி யோகத்துக்கு ஸஹ காரியுமுமாய்
கைவல்ய மோக்ஷத்துக்கும் பிரதான சாதனமுமாய் இருக்கும்

அவிச்சின்ன பாவன ரூப அவஸ்தை தனக்கு உண்டாகையாலே தத் அவஸ்தையை ப்ரீதி ரூப அவஸ்தையாக பஜிக்கைக்குப் பண்ண வேண்டுமே
ஐஸ்வர்யார்த்திக்கு ஐஹிக சப்தாதி விஷயம் த்யாஜ்யமாய் ==ஐஸ் வர்யாதிகள் உபாதேயம் –ஜ்யோதிஷ்டோமம் பிரதான சாதனம் –
அதுக்கு அங்கமாக அண்டாதிபதயே நம -என்று பகவன் நமஸ்காரம்
கேவலனுக்கு -ஐஸ்வர்யமும் பகவத் பிராப்தியும் த்யாஜ்யம் -ஆத்ம அனுபவம் புருஷார்த்தம் -சக்தி குண விசிஷ்டனான பகவான் நமஸ்காரம் அங்கம் –
ஆத்ம அனுபவ ஞானம் பிரதான சாதனம்

பக்தி யோகமாவது –
இப்படி தைல தாராவத் அவிச்சின்ன ஸ்ம்ருதி சந்தான ரூபமான அனுபவம்
ப்ரீதி ரூபா பன்னமாக்குக்கையும்-
அது தன்னை அறியப் பார்த்தால் பிராரப்த கர்மம் கழிகையும்
சாதனா சாத்தியங்களை அனுசந்தித்து
அதனுடைய சங்கோச விகாசமாம் படி பரிணமிக்கையும்

சாதனம் என்றது பக்தி யோகத்தை -சாத்தியம் என்றது -ஆத்தாள் சாதிக்கப்படும் ஈஸ்வர அனுபவமும் -ஈஸ்வரனையும் சொல்லும்
பக்தியால் ஈஸ்வரன் பிரசன்னனாவான் – என்று நினையாமல் த்வயி ப்ரசன்னே மம கிம் ருனென-ஈஸ்வரன் விஷயத்தில் ப்ரீதியை விகாசமாக்கும் பணி பரிணமிக்கும்

பிரபத்தி உபாயமாவது
இப்படி கர்ம ஞான ஸஹ ஹ்ருதையான பக்தி யோகத்தில்
அசக்தருக்கும்
அப்ராப்தருக்கும்
ஸூ கரமுமாய்
சீக்ர பல பிரதமுமாய்
உபாயம் ஸக்ருத் ஆகையால்
உபாய அனுஷ்டான சமானந்தம் உண்டாக்க கடைவதான
பகவத் விஷய அனுபவங்கள் எல்லாம்
ப்ராப்ய கோடி கடிதங்கள் ஆகையால்
ஸ்வரூப அனுரூபமாய் இருக்கும்

இது தனக்கு ஸ்வரூபம் தன்னைப் பொறாது ஒழிகை -உபாய வர்ணாத்மகமான தன்னை உபாயம் என்ன சஹியாத படியாய் இருக்கை –
அதாவது ஆபாத ப்ரதீதியில் ஒழிய உள்ளபடி நிரூபித்தால் ஸ்வஸ்மின் உபாய பிரதிபதிக்கு யோக்யமாகாத படி இருக்கை –
அதாவது விடுவது எல்லாம் விட்டு தன்னையும் விடுவதாகும்
பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் -அஞ்ஞார் ஞானாதிகர் பக்தி பரவசர் -இது சர்வாதிகாரம் –கால தேச பிரகார நியதிகள் இல்லை
விதி பரதந்த்ரம் இல்லாமல் ஆச்சார்ய பரிக்ருஹீதாம் / காய கிலேசம் வேண்டாம் / தேக அவசனத்திலே பலம் சித்திக்கும் -அந்திம ஸ்ம்ருதி அவன் பொறுப்பு
பக்தி அசேதனம் இது பரம சேதனம் -அது பல பரத்துக்கு ஈஸ்வரனை அபேக்ஷித்து இருக்கை -இது தானே ப்ராப்யம்
அது பலவாக இருக்க இது ஒன்றாக இருக்குமே
அது ஸ்வரூப வ்ருத்த ஸ்வா தந்த்ர யுக்தனாக செய்கை -இது ஸ்வரூபத்தோடே சேர்ந்த பரதந்த்ரனாகச் செய்கை
பிரபன்னனுக்கு பரிஹார்யம் ஆறு —
1—ஆஸ்ரயண விரோதி / 2–ஸ்ரவண விரோதி /3–அனுபவ விரோதி /4—ஸ்வரூப விரோதி /5–பரத்வ விரோதி /6–பிராப்தி விரோதி
அதாவது அகங்கார மமகாரங்கள் -நாம் ஞானம் அனுஷ்டானம் உடையவன் நல்ல நியமத்துடன் சரணாகதி பண்ணினேன் இவை நம்மை ஒழிய யாருக்கும் இல்லை /
புருஷகாரத்தை இகழ்ந்து நாம் சரணாகதி பண்ணிப் பெற்றோம் நடுவில் ஆச்சார்யர் எதற்கு என்று இருக்கை
பேற்றில் சம்சயதுடன் இருக்கை /
ஸ்ரவண விரோதி-பகவத் குண பரவசனாய் செவி தாழாதே -தேவதாந்த்ர கதைகளை கேட்பது
-அனுபவ விரோதி நித்ய விபூதி யுக்தனுடன் நித்ய அனுபவம் பண்ணாமல் நித்ய சம்சாரிகள் உடன் நித்ய அனுபவம் பண்ணுகை
ஸ்வரூப விரோதி பரதந்த்ரனாய் இருக்கும் தன்னை ஸ்வ தந்த்ரனாக பிரமிப்பது
பரத்வ விரோதி ஷேத்ரஞ்ஞார்களான ப்ரஹ்மாதிகளை ப்ரத்வம் என்று எண்ணுதல்
பிராப்தி விரோதி கைவல்யாதிகள்
ஆகையால் இந்த ஆறு விரோதிகளை பிற்பன்னன் பரிஹரிக்க வேண்டும்
க்ஷிப்ரம் தேவ பிரசாதம் -சிந்திப்பே அமையும் -புருஷகாரமும் ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாதக குண யோகங்களும் ஆஸ்ரயண கார்ய ஆபாதக குண யோகங்களும்
விக்ரஹ யோகமும் சகலவித கைங்கர்ய சம்பத்தியும் ப்ராப்ய கொடியிலே அந்வயிக்கும்

இது தான் ஆர்த்த ரூப பிரபத்தி என்றும் திருப்த ரூப பிரபத்தி என்றும் இரண்டு படி பட்டு இருக்கும் –

ஆர்த்த ரூப ப்ரபத்தியாவது
நிர்ஹேதுக பகவத் கடாக்ஷம் அடியாக -சாஸ்த்ரா அப்யாஸத்தாலும்
சதாசார்ய உபதேசத்தாலும் யதா ஞானம் பிறந்தவாறே
பகவத் அனுபவத்துக்கு விரோதியான தேஹ சம்பந்தமும்
தேச சம்பந்தமும் தேசிகருடைய ஸஹ வாசமும் துஸ் சகமாய்
பகவத் அனுபவத்துக்கு ஏகாந்தமாம் படி விலக்ஷணமான தேகத்தையும் தேசத்தையும் தேசிகருடைய ஸஹ வாசத்தையும் பிராபிக்கையில் த்வரை விஞ்சி
ஓயும் மூப்பு பிறப்பு இறப்பு பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்தான் ஆகையால்
திரு வேங்கடத்தானே புகல் ஒன்றும் இல்லா அடியேன் -என்றும்
வேங்கடத்து உறைவாருக்கு நம -என்றும்
பூர்ண பிரபத்தி பண்ணி
பல நீ காட்டிப் படுப்பாயோ -இன்னம் கெடுப்பாயோ –
இக்கரை ஏறி இளைத்து இருந்தேன் இனி அடைய அருளாய் திருவாணை நின்னாணை கண்டாய் இனி நான் போக்கால் ஓட்டேன்
என்று தடுத்தும் வளைத்தும் பெறுகை

க்ருபா காப்யுப ஜாயதே -யம் பஸ்யேத் மது ஸூ தன -வெறித்தே அருள் செய்வார் -/ ஈஸ்வரனே சேஷி சரண்யன் ப்ராப்யன் என்கிற ஆகார த்ரயத்தையும்
அநந்யார்ஹ சேஷத்வம் அநந்ய சரண்யத்வம் அநந்ய போக்யத்வம் -என்கிற சேதனருடைய ஆகார த்ரயத்தையும் மந்த்ர உபதேசத்தால் பெற்று
கடி மா மலர்ப்பாவை யோடுள்ள சாம்ய ஷட்கம்–போன்ற -யதார்த்த ஞானம் பிறந்தவாறே
அழுக்கு உடம்பு -த்ரிகுணாத்மகமான தேக தேச சம்பந்தத்தில் வெறுப்பும்
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ-எந்நாள் யான் உன்னை வந்து கூடுவேனோ –
உனக்கு ப்ரீதி விஷயமான பிராட்டி மேல் ஆணை -அவளுக்கு ப்ரீதி விஷயமான உன் மேல் ஆணை -இனி நான் உன்னை
என்னை விட்டு அகன்று புறம்பே போக ஓட்டேன் –என்று வழி மறித்தும் சூழ சுற்றிக் கொண்டும் -பகவத் ப்ராப்தியைப் பிராபிக்குமது

த்ருப்தி ரூப ப்ரபத்தியாவது –
சரீராந்தர ப்ராப்தியிலும்
ஸ்வர்க்க நரக அனுபவங்களிலும் விரக்தியும் ப்ரீத்தியும் பிறந்து
அதனுடைய நிவ்ருத்திக்கும் -பகவத் ப்ராப்திக்கும் உறுப்பாக சதாசார்ய உபதேச முகத்தாலே உபாய ஸ்வீ காரம் பண்ணி
விபரீத ப்ரவ்ருத்தி நிவ்ருத்தராய்
வேத விஹிதமான வர்ணாஸ்ரம அனுஷ்டானமும் -பகவத் பாகவத கைங்கர்யமும் –மானஸ வாசிக காயிகங்களாலே யதா பலம் அனுஷ்ட்டித்து
ஈஸ்வரன் –
சேஷியாய்
நியாந்தாவாய்
ஸ்வாமியாய்
சரீரியாய்
வ்யாபகனாய்
தாரகனாய்
ரக்ஷகனாய்
போக்தாவாய்
சர்வஞ்ஞனாய்
சர்வ சக்தியாய்
சர்வ சம்பூர்ணனாய்
அவாப்த ஸமஸ்த காமனாய் இருக்கிற ஆகாரத்தையும்
தான் அவனுக்கு
சேஷமாய்
நியாம்யமாய்
ஸ்வம்மாய்
சரீரமாய்
வ்யாப்யாமாய்
கார்யமாய்
ரஷ்யமாய்
போக்யமாய்
அஞ்ஞனாய்
அசக்தனாய்
அபூர்ணனாய்
சா பேஷனாய் இருக்கிற ஆகாரத்தையும் அனுசந்தித்திக் கொண்டு
களைவாய் துன்பம் களையாது ஒழி வாய் களை கண் மற்றிலேன் -என்று
உபாயத்தில் சர்வ பரங்களையும் அவன் பக்கலிலே பொகட்டு நிர்ப்பரணாய் இருக்கை –

மாறி மாறி பல பிறப்பும் பிறந்து –புண்ய பாப ரூப கர்மங்கள் -மோக்ஷ விரோதித்வ ஆகாரத்தால் த்யாஜ்யம் / இவற்றின் நிவ்ருத்திக்கும் பய நிவ்ருத்திக்கும் –
தாபாதி ஸம்ஸ்கார க்ரமத்தால் ஆச்சார்ய உபதேச க்ரமத்தாலே -ஞான விசேஷம் பிறக்க விசேஷார்த்த உபதேச க்ரமங்கள்/
விபரீத ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகள் –தேவதாந்த்ர–சாதனாந்தர -விஷயாந்தர ப்ராவண்யம் –பாகவத அபசார பிரவ்ருத்திகள் -ஆகிய ஸமஸ்த பிறவிருத்தி நிவ்ருத்திகள்
வர்ணாஸ்ரமம் -ஸ்ரேஷ்ட ஜென்ம –வர்ணா நாம் பஞ்சம ஆஸ்ரானாம் -குலம் தரும் -தொண்டை குலம் -கைங்கர்ய விருத்திகள்
தொழுமினீர் கொள்மின் கொடுமின் -ஞான பரிமாற்றம் / சந்தன குஸூம தாம்பூலாதிகளைப் போலே -இஷ்ட விநியோக அர்ஹமாம் படி
அஹம் அன்னம் -என்றபடி அன்னமாகவும் -அந்நாதா/ அவன் போக்தாவாகவும் / ஞானியை விக்ரகத்தோடே ஆதரிக்கும் –
ஈஸ்வரன் இடம் ஆத்மாத்மீயங்களை சமர்ப்பித்து நிர்ப்பரணாய் இருக்கும்

ஆச்சார்ய அபிமானம் ஆவது இவை ஒன்றுக்கும் சக்தி இருக்கே இருப்பான் ஒருவனைக் குறித்து
இவனுடைய இழவையும்
இவனைப் பெற்றால் ஈஸ்வரனுக்கு உண்டான ப்ரீத்தியையும் அனுசந்தித்து
ஸ்தனந்தய பிரஜைக்கு வியாதி உண்டானாலது தன் குறையாக நினைத்து ஒளஷத சேவையைப் பண்ணும் மாதாவைப் போலே
இவனுக்காகத் தான் உபாய அனுஷ்டானம் பண்ணி ரசிக்க வல்ல பரம தயாளுவான
மஹா பாகவதம் அபிமானத்திலே ஒதுங்கி
வல்ல பரிசு தருவிப்பரேல் அது காண்டம் என்று சொல்லுகிறபடியே
சகல பிரவ்ருத்தி நிவ்ருத்திகளையும் அவன் இட்ட வழக்காக்குகை –

ஆர்த்த திருப்த பிரன்னனாகவும் சக்தன் இன்றிக்கே -மஹா விசுவாச பூர்வகம் இல்லாமல் -/ பகவத் ஸ்வா தந்த்ர ஸ்வரூபத்தையும்
தோஷ விசிஷ்டமான தன் ஸ்வரூபத்தையும் அனுசந்திக்க பயம் வர்த்திக்குமே –
கிருபாதி குணங்களை பார்த்து -என் அடியார் அது செய்யார் -அனுசந்திக்க நிர்பயராய் இருக்கலாமே -இப்படி பய அபயங்கள் மாறி மாறி யாவச் சரிரீபாதம் இருக்குமே
ந சம்சய -கச்சதா -தேவு மாற்று அறியேன் -இருப்பதே ஸ்வரூபம்
ஜன்மாந்தர ஸஹஸ்ரேஷு -கர்மாதிகளுக்கு வேண்டுமே / அநாதி மாயயா ஸூப்தா–சம்சார சாகரத்தில் அழுந்தி இழந்து இருப்பதை அனுசந்தித்து –
மந்திரத்தையும் மந்த்ரார்த்தையும் அருளி திருத்திப் பணி கொண்டு -தத் அனுஷ்டானத்தையும் உபதேசித்து -ஆன்ரு சம்சயம் பரோ கர்மா -பர துக்க அஸஹிஷ்ணுத்வம் –
கியாதி லாப பூஜாதி நிரபேஷமாய்-ஆகாரத்ராய சம்பன்னனாய் -பீதாக வாடைப் பிரானார் பிரம குருவாக வந்து வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே –
பரதந்தரையாய் ஆச்சார்யர் அபிமானத்தில் ஒதுங்கி /
ஆச்சார்யர் குரு ஆசான் தேசிகன் மெய்ஞ்ஞார் தீர்த்தர் பகைவர் பண்டிதர் கடகர் உபகாரகர் உத்தாரகர் -என்பர் இட்ட வழக்காயே இருக்கை

எம்பெருமான் தனித்து நித்ய சித்த ப்ராப்யனாகா நிற்கச் செய்தே
சகல தேவதா அந்தர்யாமியாய்க் கொண்டு ப்ராப்யன் ஆகிறாப் போலே
இவ்வாச்சார்ய அபிமானமும் தனியே உபாயமாகா நிற்கச் செய்தேயும்
எல்லா உபாயங்களுக்கும் ஸஹ காரியுமுமாய்
ஸ்வ தந்திரமு மாயிருக்கும்

குரு வந்தன பூர்வகம் -கர்மாதி உபாய சதுஷ்ட்யத்துக்கும் ஸஹ காரியுமாயும் இருக்குமே -அதாவது அங்கமாய் இருக்குமே
ஸ்வயம் சாதனமாயும் இருக்கும்
இப்படி உபாய ஸ்வரூபம் ஐந்து படி பட்டு இருக்கும்

—————————————-

பரத்வ விரோதியாவது –
தேவதாந்த்ர பரத்வ புத்தியும்
சமத்துவ பிரதிபத்தியும்
ஷூத்ர தேவதா விஷயத்தில் சக்தி யோக பிரதிபத்தியும்
அவதார விஷயத்தில் மானுஷ பிரதிபத்தியும்
அர்ச்சாவதார விஷயத்தில் அசக்தி யோக பிரதிபத்தியும் –

ஹிரண்ய கர்ப்ப -சரீராத்மா பாவம் அறியாமல் / ஸஹ படிதானானவர்கள் என்று கொண்டு சமத்துவ பிரதிபத்தியும் –
ஷூ தரரசு அநித்யராய் ஷூத்ர அநித்ய அல்ப அஸ்திர பலன்களை தருமவர்களாய் /
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்கு பிறந்ததை அறியாமல் -ஆத்மாநாம் மானுஷம் மன்யே-அஹம் வோ பாந்தவோ ஜாத -என்ற
அவன் யுக்திகளைக் கொண்டே அவதாரங்களில் மனுஷ்யத்வ புத்தியும்
பின்னானார் வணங்கும் சோதி -ந சஷூஷா பஸ்யதி–கண் காண நின்று சர்வ பலன்களையும் கொடுத்தாலும்
தத் இச்சையா கேவல ஸ்வா தந்திரயாதிகள் இன்றிக்கே ஆஸ்ரித பரதந்த்ரனாய் இருப்பதை உணராமல்
இப்படி பஞ்சகமும் பர ஸ்வரூப விரோதி யாகுமே

புருஷார்த்த விரோதி யாவது –
புருஷார்த்தங்களில் இச்சையும் –
தான் உகந்த பகவத் கைங்கர்யங்களில் இச்சையும் –

க்ரியதாம் இதி –ஏவிப் பணி கொள்ள விண்ணப்பம் செய்ய வேண்டுமே –ஸ்வ இஷ்ட பகவத் கைங்கர்யத்தில் இச்சை கூடாதே
பிரபன்னனுக்கு ஸ்வீ காரத்தில் ஸ்வகதமும் -அனுபவத்தில் ஸ்வ போக்த்ருத்வமும் கூடாது இறே

உபாய விரோதி யாவது –
உபாயாந்தர வை லக்ஷண்ய பிரதிபத்தியும்
உபாய லாகவமும்
உபேய கௌரவமும்
விரோதி பாஹுள்யமும்

ஆச்சார்ய அபிமானமாகிற சரம உபாயத்துக்கு விரோதி -குரு ரேவா பர ப்ரஹ்ம இத்யாதி / சிறுமை பாராதே சகல கைங்கர்யங்களையும் செய்ய வேண்டுமே
நின் கோயில் சீய்த்து –சீய்க்கப் பெற்றால் கடுவினைகள் களையலாமே-/ கொடுவினையேனும் பிடிக்க நீ ஒரு நாள் கூவுதல் வருதல் செய்யாயே

பிராப்தி விரோதி யாவது –
பிராரப்த சரீர சம்பந்தமாய் -அனுதாப சூன்யமாய் -குருவாய் -ஸ்திரமாய் இருந்துள்ள –
பகவத் அபசார –
பாகவத அபசார –
அஸஹ்யா அபசாரங்கள்

பச்சா தாப லேசமும் இன்றிக்கே -அவஜாநந்தி மாம் மூடா -அகங்கார அர்த்த காம மூலமாக-பகவத் விஷயத்திலும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் விஷயத்திலும் ஸஹிக்க முடியாமல் காரணமே இல்லாமல் பண்ணும் அபசாரங்கள்
ஷிபாமி ந ஷமாமி -என்பதால் நித்தியமாய் செல்லுமே இவை

இவை எல்லா வற்றுக்கும் விரோதி என்று பேராகக் கடவது

————————————-

அன்ன தோஷம் ஞான விரோதியாகக் கடவது –
ஸஹ வாச தோஷம் போக விரோதியாகக் கடவது –
அபி மானம் ஸ்வரூப விரோதியாகக் கடவது –

துரன்னம் -பகவத் -ப்ரபன்னர் இன்றிக்கே ப்ராக்ருதருடைய அன்னம் / துஷ் ப்ரதிக்ரஹ அன்னம் -சண்டாள மிலேச்சாதிகள் மூலம் /
ஜாதி ஆஸ்ரய நிமித்த அனுஷ்டான அன்னம் -காய சுத்தி இல்லாத அன்னம் / பிரபன்ன வேஷத்தை கொண்டு உபாசகர் நிஷ்டையை நடத்தி கொண்டு
இருப்பவன் கொடுத்த அன்னமும் கூடாதே / ஐஸ்வர்யம் சக்தி பூஜா கிரியைகளுக்கா செய்த அன்னமும் கூடாதே
உண்ணும் சோறு -கண்ணன் தத் வ்யாதிரிக்த அன்னங்கள் எல்லாம் கூடாதே
அகங்கார மமகாரங்கள் உள்ளவர்கள் உடன் இருக்கக் கூடாதே

—————————————–

இப்படி அர்த்த பஞ்சக ஜ்ஞானம் பிறந்து முமுஷூவாய் சம்சாரத்திலே வர்த்திக்கிற சேதனனுக்கு மோஷ சித்தி அளவும்
சம்சாரம் மேலிடாத படி கால ஷேபம் பண்ணும் க்ரமம்-வர்ணாஸ்ரம அனுரூபமாகவும் -வைஷ்ணத்வ அனுரூபமாகவும் –
அசநாச்சாதநங்களை சம்பாதித்து -யதன்ன புருஷோ பவதி ததான் நாஸ் தஸ்ய தேவதா -என்கிறபடியே சகல பதார்த்தங்களையும் பகவத் விஷயத்திலே
நிவேதித்து யதாபலம் பாகவத கிஞ்சித் காரம் பண்ணி தேக தாரண மாத்ரத்தை பிரசாத பிரதிபத்தியோடே ஜீவிக்கையும் –
வருந்தியும் தத்வ ஜ்ஞானம் பிறப்பித்த ஆச்சார்யன் சந்நிதியிலே கிஞ்சித் காரத்தோடு அவனுக்கு அபிமதமாக வர்த்திக்கையும்
ஈஸ்வரன் சந்நிதியிலே தன்னுடைய நீசத்வத்தை அனுசந்திக்கையும் –
ஆச்சார்யன் சந்நிதியில் தன்னுடைய அஜ்ஞதையை அனுசந்திக்கையும் –
ஸ்ரீ வைஷ்ணவ சந்நிதியிலே தன்னுடைய பாரதந்த்ர்யத்தை அனுசந்திக்கையும் –
சம்சாரிகள் முன்னில் தன்னுடைய வ்யாவ்ருத்தியை அனுசந்திக்கையும்
ப்ராப்யத்தில் த்வரையும்-
பிராபகத்தில் அத்யவசாயமும் –
விரோதியில் பயமும் –
தேஹத்தில் அருசியும் -ஆர்த்தியும்
ஸ்வரூபத்தில் உணர்த்தியும்
ஸ்வ ரஷணத்தில் அசக்தியும் –
உத்தேச விஷயத்தில் கௌரவமும் –
உபகார விஷயத்தில் க்ருதஜ்ஞதையும் -உத்தாரகப் பிரதிபத்தியும்
அனுவர்த்திக்கையும் வேணும் –

வர்ணாஸ்ரம அனுரூபமாகவும் -வைஷ்ணத்வ அனுரூபமாகவும் –அனு லோம பிரதிலோம அத்ரைவர்ணிக விபாகம் அன்றிக்கே
முமுஷுக்களாய் இருப்பார்க்கு எல்லாம்-சொன்னதாகக் கடவது
அசநாச்சாதநங்களை சம்பாதித்து —ஆசனம் -உணவு / ஆச்சாதனம் -போர்வை / உபகாரங்களிலும் -ஸ்வரூபத்துச் சேராத கார்யங்களைப் பண்ணி
தாரா புத்ராதிகளுடைய போஷண அர்த்தமாகச் சம்பாதியாதே -யோக்கியமான ஸ்தலங்களில் பரிசுத்தமான உபாதான வ்ருத்தியாலே சம்பாதித்து

உத்தேச்யத்வ -உபகாரத்வ -உத்தாரகத்வங்கள் மூன்றும் ஆச்சார்யர் -என்று உணர்ந்து கௌரவமும் க்ருதஞ்ஞத்தையும் உத்தாரகத்வ பிரதிபத்தியும் –
அன்றிக்கே
ஈஸ்வரன் இடம் உத்தேச்யத்வ புத்தியும் அதனால் -கௌரவ புத்தியும்பா /கவதர்கள் உபகாரகர்களாய் – -அவர்கள் பக்கல் க்ருதஞ்ஞத்தையும் /
ஆச்சார்யர் உத்தாரகராய்-அவர் பக்கல் உத்தாரகத்வ பிரதி பத்தியும்
அன்றிக்கே
தேவு மாற்று அறியேன் -என்று ஆச்சார்ய விஷயமே உத்தேவ்யமாய் அது உள்ளது எம்பெருமானாருக்கே என்று நித்ய சத்ருக்கனன் போலே
இரு கரையராகி இல்லாமல் எல்லாம் அவரே என்றும் கூரத் தாழ்வான தொடக்கி திருவாய் மொழிப் பிள்ளை முதலானவர்களால் அன்றோ
நாம் இவரை லபித்தது என்று உபகாரத்வமும் கிருதஞ்ஞத்தையும் அவர்கள் இடத்திலும்
அன்றிக்கே
உத்தேச்ய விஷயத்தில் கௌரவமும் உபகார விஷயத்தில் க்ருத்தஞ்ஞத்தையும் என்று சொன்னது உபகார வஸ்து கௌரவத்தாலே -என்று
ஆச்சார்யனானை உபகரித்த ஈஸ்வரனை மிகவும் உபகாரகன் என்று அருளிச் செய்கையாலே -மூன்றுமே சரம சேஷியான எம்பெருமானார் இடமே பர்யவசிக்கும்

—————————–

இப்படி ஜ்ஞான அனுஷ்டானங்களோடு கூடி வர்த்திக்குமவன் -ஈஸ்வரனுக்கு பிராட்டிமாரிலும் -நித்ய முக்தரிலும் -அத்யந்த அபிமத விஷயமாகக் கடவன் –

————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீஜார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யார் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: