ஸ்ரீ திருப்பாவை –மீண்டும் மீண்டும் வரும் பத பிரயோகங்கள் —

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

பறை–10 -பிரயோகங்கள்

திருச் சேவைக்கான திருவருள் என்பதை உட்பொருளாகக் கொண்ட ”பறை” என்ற சொல் 11 பாசுர வரிகளில் உள்ளன

நாராயணனே நமக்கே பறை தருவான் – பாசுரம் 1
பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு – பாசுரம் 8
போற்றப் பறை தரும் புண்ணியனால் – பாசுரம் 10
அறை பறை மாயன் மணி வண்ணன் – பாசுரம் 16
என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் – பாசுரம் 24
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் – பாசுரம் 25
சாலப் பெரும் பறையே பல்லாண்டு இசைப்பாரே – பாசுரம் 26
பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம் – பாசுரம் 27
இறைவா நீ தாராய் பறையேலோர் எம்பாவாய் – பாசுரம் 28
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா – பாசுரம் 29
அங்கு அப்பறை கொண்ட ஆற்றை – பாசுரம் 30

(பரம பதம் வேண்டும் -பாசுரம் (24-30) 7 பாசுரங்களிலும் ”பறை” தொடர்ச்சியாக இடம் பெற்றுள்ளதை கவனிக்கவும்)

——————————-

ஸ்ரீயைக் குறிக்கும் “செல்வம்” 7 பாசுர வரிகளில் வருகிறது.
(புருஷகாரம் இன்றி பரமனைச் சேர முடியாது என்பதை ஆண்டாள் இப்படி உணர்த்துகிறாள் )

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் “செல்வச் சிறுமீர்காள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்
சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி *நீ-
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்*
செம் பொற் கழலடிச் செல்வா பலதேவா*
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி*
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்*

————

நீராட்டம்–6-பிரயோகங்கள்

மார்கழி —நீராடப் போதுவீர் போதுமினோ
ஓங்கி –நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
ஆழி –நாங்களும் மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்
புள்ளின் வாய் –குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
முப்பத்து மூவர் –இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்
மாலே –மார்கழி நீராடுவான்

——————————–

திரு அடி–6 -பிரயோகங்கள்

வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி
அம்பரமே –செம் பொற் கழல் அடி செல்வா பலதேவா
ஏற்ற –ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே –
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி –
அன்று –கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி –
சிற்றம் –உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்

————————————-

பாடி- 18-பிரயோகங்கள் –

வையத்து –பையத் துயின்ற பரமன் அடி பாடி
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி –
மாயனை –தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
கீசு கீசு என்று –நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ
கீழ் வானம் —பாடிப் பறை கொண்டு
தூ மணி –மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று நாமம் பலவும் நவின்று
நோற்றுச் –நாராயணன் நம்மால் போற்றப் பறை தரும் புண்ணியனால்
கற்றுக் கறிவை –முகில் வண்ணன் பேர் பாட
கனைத்து இளம் —மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
உங்கள் –பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
எல்லே –மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்
நாயகனாய் –துயில் எழப் பாடுவான்
உந்து –உன் மைத்துனன் பேர் பாட
ஏற்ற –போற்றி யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்
அன்று –என்று என்று உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
ஒருத்தி –திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
கூடாரை –உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு
கறைவைகள் –உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவும்
சிற்றம் –உன் பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய் –

ஏத்து கின்றோம் நா தழும்ப (10-3)-என்று தோற்றவர்கள் பாடுமா போலே

வாயினால் பாடி (5)-என்று அவதார க்ரமம் பாடின படி சொல்லிற்று –

கேசவனைப் பாட (7)-என்றும்
பாடிப் பறை கொண்டு -என்றும் –
கீர்த்திமை பாடி -என்றும் -விரோதி நிவர்த்தகம் பாடின படி சொல்லிற்று

முகில் வண்ணன் பேர் பாட -என்று வடிவு அழகுக்குத் தோற்று பாடின படி

சங்கோடு சக்கரம் ஏந்தும் -என்று திவ்ய ஆயுதங்களும்
அவயவ சோபைக்கும் தோற்றுப் பாடின படி

இங்கு மாயனைப் பாட (15 )வெறும் கையோடு நின்ற படிக்கும் –
தங்களுக்குத் தோற்ற படியையும் பாடுகிறார்கள் –

————————————

மாயன்: 4 -பிரயோகங்கள் –

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்*
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று*
வல்லானை* மாயனைப் பாடேலோர் எம்பாவாய்
மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்*

————-

நாராயணன் -3- பிரயோகங்கள் –

மார்கழி —நாராயணனே நமக்கே பறை தருவான்
கீசு —நாராயணன் மூர்த்தி கேசவனைப் பாடவும்
நோற்றுச் –நாற்றத் துழாய் முடி நாராயணன் –

—————————————————

உலகளந்த – 3-பிரயோகங்கள் –

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி நமக்கே பறை தருவான் –
அம்பரமே –அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த உம்பர் கோமானே
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி –

——————————————————

கோவிந்தன் -3- பிரயோகங்கள் –

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
கறைவைகள் –குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
சிற்றம் –இற்றைப் பறை கொள்வான் அன்று கான் கோவிந்தா

——————————————————

கேசவன் என்ற் திருநாமம்—2-பிரயோகங்கள் –

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ*
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை*

————

மாதவன்: 2 பிரயோகங்கள் –

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று*
வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை*

———–

நப்பின்னை -4- பிரயோகங்கள் –

உந்து –நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்
குத்து –கொத்தலர் பூம் குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா
முப்பத்து —நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
மாலே–கோல விளக்கே

———————————————

போற்றி 7 பிரயோகங்கள்

போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி*
சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி*
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி*
கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி*
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி*
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி*

———

நந்தகோபன் -5- பிரயோகங்கள் –

மார்கழி –கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் குமரன்
நாயகனாய் நின்ற நந்த கோபனுடைய
அம்பரமே –எம்பெருமான் நந்த கோபாலா எழுந்திராய்
உந்து —நந்த கோபாலன் மருமகளே நப்ப்பின்னாய்
ஏற்ற —ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்

——————————————————————

யசோதை 2 தடவை பிரயோகங்கள்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் – பாசுரம் 1
எம்பெருமாட்டி ”யசோதாய் அறிவுறாய்* – பாசுரம் 17

————

திருச்சங்கானது (பாஞ்சஜன்யம்) திருப்பாவையில் 5 பிரயோகங்கள் –

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து*
வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ*
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்*
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்*
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே

—————-

தாமரை மலரை ஒத்த, சிவந்த திருக்கண்கள் 4 பிரயோகங்கள் –

கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்* – பாசுரம் 1
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ* – பாசுரம் 22
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்* – பாசுரம் 30
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய். – பாசுரம் 14

————–

திருவாய்: 3 பிரயோகங்கள் –

மாயன் மணி வண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்*
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்*
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே*

———-

மாட்டைக் குறிக்கும் சொற்கள் (பசு, எருமை, கறவை, பெற்றம்..) 7 பிரயோகங்கள்

வாங்க * குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்*
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்*
கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு*
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து*
கனைத்து இளம் கற்றெருமை கன்றுக்கு இரங்கி*
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்*
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து

————-

“ஆய்/ஆயர்” குலம், 5 பிரயோகங்கள்

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்*
மணிக் கதவம் தாள் திறவாய்* ஆயர் சிறுமியரோமுக்கு*
சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்*
வாச நறும் குழல் ஆய்ச்சியர்*
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க் குலத்து உன் தன்னை

————-

“பால்” என்ற பதம் 6 பிரயோகங்கள்

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி*
நினைத்து முலை வழியே நின்று ‘பால்’ சோர*
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்*
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே*
பாற்கடலுள்- பையத் துயின்ற பரமனடி பாடி*
ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு*

————-
“முலை” என்ற் பதம் 4 பிரயோகங்கள்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி – பாசுரம் 3
பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு* – பாசுரம் 6
நினைத்து முலை வழியே நின்று பால் சோர* – பாசுரம் 12
செப்பென்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்* – பாசுரம் 20

———-

கோயில்: 4 பிரயோகங்கள் –

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்*
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதன்றார்*
நாயகனாய் நின்ற நந்தகோபன் உடைய*கோயில் காப்பானே.
உன்-கோயில் நின்று இங்ஙனே போந்தருளிக் *

————-

விளக்கு: 5 பிரயோகங்கள் –

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்*
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்*
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே குல விளக்கே*
குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்*
கோல விளக்கே கொடியே விதானமே*

————–

பிள்ளை/பிள்ளாய் என்ற சொற்பதங்கள் 5 பிரயோகங்கள் –

பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு*
நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி*
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்*
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்*
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை*

—————

மார்கழி: 3 பிரயோகங்கள் –

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்*
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்
மாலே. மணிவண்ணா. மார்கழி நீராடுவான்*

————–

திங்கள் என்ற சொல்: 4 பிரயோகங்கள் –

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்*
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து*
திங்களும் ஆதித்தனும் எழுந்தாற் போல்*
திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி*

————–

“தாமரை”: 5 -பிரயோகங்கள் –

செந்தாமரைக் கையால் சீரார் வளை ஒலிப்ப*
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே*
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்.
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்*
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன*

———————–

மலர் என்ற சொல்: 3 -பிரயோகங்கள் –

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்*
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது*
வைத்துக் கிடந்த மலர் மார்பா வாய் திறவாய்*

————-

“மழை/மாரி” 4 பிரயோகங்கள் –

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து*
ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்*
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழை போல்*
மாரி மலை முழைஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்*

————-

ஆராய்ந்து -2-பிரயோகங்கள் –

கீழ் வானம் –தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால் ஆவா வென்று ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்
மாரி- மலை முழைஞ்சில் —சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய் –

————————————————————

புள்-4-பிரயோகங்கள் –

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயில்
புள்ளின் வாய் கீண்டானை —புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்

——————————————-

தூயோமாய்-3-பிரயோகங்கள் –

மாயனை —தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
நாயகனாய் —தூயோமாய் வந்தோம்
தூ மணி மாடத்து

———————————–

பெண்ணின் கண்ணின் அழகு 3 பிரயோகங்கள் –

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்* – பாசுரம் 1
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்* – பாசுரம் 13
மைத் தடம் கண்ணினாய் நீ உன் மணாளனை* – பாசுரம் 19

————————————————-

எழுந்திராய் -20- பிரயோகங்கள் –

பிள்ளாய் எழுந்திராய்
பேய்ப்பெண்ணே –நாயகப் பெண் பிள்ளாய் –
கோதுகலமுடைய பாவாய் எழுந்திராய்
உன் மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ ஏமப் பெரும் துயில் மந்திரப் பட்டாளோ
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற வம்மனாய் –கும்பகர்ணனும் தோற்றும் உனக்கே பெரும் துயில் தான் தந்தானோ ஆற்ற அனந்தல் உடையாய் அரும் கலமே –
பொற்கொடியே புற்றரவல்குல் புனமயிலே –செல்வப் பெண்டாட்டி எற்றுக்கு உறங்கும் பொருள் –
நற்செல்வன் தங்காய்–நீ வாய் திறவாய் –ஈது என்ன பேர் உறக்கம்
போதரிக் கண்ணினாய் –பாவாய் –கள்ளம் தவிர்ந்து கலந்து
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
எல்லே இளம் கிளியே இன்னம் உறங்குதியோ –

அடியார் இடம் உண்டான கலவியின் இன்பம் அறியாதகோபிகை
அந்த இனிமையை உணர்ந்தும் உணராத கோபிகை
கண்ணன் தனது தலையினால் தாங்கி ஆதரிக்கும் சீர்மை உடைய கோபிகை
எம்பெருமானே ரட்ஷகன் என்று உணர்ந்து மார்பில் கை வைத்து உறங்கும் கோபிகை
எம்பெருமான் தானும் தனக்கு தாரகமாய் அபிமானித்து இருக்கும் கோபிகை
எம்பெருமான் உடன் இடையறாத தொடர்பு உள்ள மஹா நீயர் குலத்தில் பிறப்புடைய கோபிகை
கிருஷ்ணன் கைங்கர்யத்தில் ஈடுபட்டு தன் தர்மத்தை செய்ய மாட்டாமல் இருக்கும் செல்வனே இருக்கும் கோவலன் தங்கையான கோபிகை
ஞானம் பக்தி வைராக்யங்கள் நிறைந்த கோபிகை /நிறைவும் நிர்வாகத் தன்மையும் நிறைந்த கோபிகை
அடியார்கள் குழாங்களை ஓன்று சேர காணும் ஆசை உடைய கோபிகை -ஆகிய 10 கோபிகைகள்

நந்தகோபாலா எழுந்திராய்
யசோதா அறிவுறாய்

உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
பலதேவா உம்பியும் நீயும் உறங்கேல்
மலர்மார்பா வாய் திறவாய்
கலியே துயில் எழாய்

நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்

விமலா துயில் எழாய்
மகனே அறிவுறாய்
சுடரே துயில் எழாய்

——————————————–———————-

எம்பாவாய் -30– பிரயோகங்கள் –

————————————————————————–——————————————————–

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: