திருப்பாவை சாரம் – கூடாரை வெல்லும் சீர் – —

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –

நோற்றால்–அவன் பக்கல் பெறக் கடவ பேறு–சொல்லுகிறார்கள் –

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்

வியாக்யானம் —

கூடாரை வெல்லும் –
ஆந்தனையும் பார்த்தால் —ந நமேயம் -என்பாரை வெல்லும் இத்தனை –
அவர்களை வெல்லுமா போலே கூடினார்க்கு தான் தோற்கும் இத்தனை –
தங்கள் பட்ட இடரை அறிவித்து அத்தலையை தோற்பிக்க நினைத்தார்கள் –
அவன் தன் தோல்வியைக் காட்டி அவர்களைத் தோற்பித்த படியைச் சொல்லுகிறது
எங்களைத் தோற்பித்த நீ யாரை வெல்ல மாட்டாய் -என்கிறார்கள்
அதாவது -நாங்கள் முன்னே வந்து நின்று -வார்த்தை சொல்லும்படி -பண்ணினாயே
ஆந்தனையும் பார்த்தால் -ந நமேயம்-என்று கூடாரை வெல்லும் அத்தனை –
கூடினால் தான் தோற்கும் அத்தனை

கூடாரை-
சங்கங்கள் கேட்டர்கள்–பாஞ்ச ஜன்யம்–
புள்ளரையன் கோயில் வெள்ளை விளி சங்கு–
ஆநிரை யினம் மீளக் குறித்த சங்கு
பறை
ஜாம்பவான் நம் ஜெயம் சாற்றின பறை–
பெரும் பறை
இலங்கை பாழாளாக நம் ஜெயம் சாற்றின பறை
சாலப் பெரும் பறை–
நாம் பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்க குடம் ஆடின போது அரையிலே கட்டின பறை உண்டு
பல்லாண்டு பாட
பெரியாழ்வாரையும் பொலிக பொலிக நம் ஆழ்வாரையும் தருகிறேன்
கோல விளக்கு
நப்பின்னை பிராட்டி–
கொடி
கருளக் கொடி ஓன்று உடையீர்
மதுரையில் இருந்து இச் சேரி வரும் பொழுது அனந்தன் தொடுத்த மேல் விதானம்
நோன்பு தலைக் கட்டின பின்பு வேண்டிய பஹூமானங்கள்–

மழலை சொல்லுக்கு தோற்று கொடுத்தால்–வெல்லும் சீர்
கூடுவோம் என்பாரை வெல்ல முடியாதே —
எங்களை வெல்ல நினைத்தாய்- நாங்கள் கூடுவோமாய் வந்தோம்- தோற்றாய் –
பரசு ராமன் ஷத்ரிய புருஷன் ஒருவனை கொல்ல நினைத்து வந்தான்–
அவன் கையில் வில்லை கொடுத்து அஞ்சலி பண்ணிப் போந்தான்
வில்லோடு நமஸ்கரித்தான் ஆகில் -இவராய்த்து தோர்த்து இருப்பார்
கூடினவர்களை–கூடின விபீஷணனுக்கு வில் வெட்டி ஏவல் செய்தார் பெருமாள்–கூடினார் குற்றேவல் கொண்டு
சுக்ரீவன் வசனாத் அபிஷேகம்–சொன்னால் கேட்பார்–
அர்ஜுனன் -உறவு -கொண்ட ந நமேயம் ராவணனை வென்று–தூத்வ சாரத்வ
விஜிதாத்மா –
நன்கு திருக் கல்யாண குணங்கள் காட்டும் கண்ணாடி–விஜிதாத்மா -சங்கரர் -அனைவரையும் வென்றார்
பக்தர்களால் ஜெயிக்கப் பட்டவர் பட்டர் -தோற்கடிக்கப் பட்டவர் –
விதேயாத்மா -சேர்த்து -அவிதேயாத்மா -யாருக்கும் கீழ் படாதவர்
வினை கொடுத்து வினை வாங்குவார் போலே அகாரம் சேர்க்க வேண்டாமே-
தன்னுடைய அடியவர் சொன்னபடி விதேயர்
சத் கீர்த்தி-
இத்தையே கீர்த்தியாக கொண்டவன்–

கூடாதார் சத்ருக்கள் மட்டும் இல்லை
ஆழ்வார்கள் ஆசார்யர்கள் ஆண்டாள் விரோதிகள் அனைவரையும் வியாக்யானம்-
அஞ்சிறை மட நாராய் தூது விட வந்து அருளி –
அம்மான் ஆழிப்பிரான் அவன் எவ்விடத்தான்–
வளம் மிக்க மால் பெருமை மன் உயிரின் தண்மை–உளமுற்று -தளர்வுற்று நீங்க நினைத்த -மாறனை
பாங்குடனே சேர்த்தான் மகிழ்ந்து –
கூடாரை வெல்லும் சீர் –சௌசீல்யம் மகதோ மந்தைச்ய நீர் சம்ச்லேஷ –
புரை அறக் கலந்து நாடு புகழும் பரிசு -நாம் பெரும் சம்மானம்
இன்னம் அங்கே நட நம்பி–எற்றுக்கு அவளை விட்டு இங்கே வந்தாய்
மட்டை அடி -மின்னிடை மடவார் -நம் ஆழ்வார் -உன்னுடைய சுண்டாயம் நான் அறிவன் பந்தும் கழலும் தந்து போகு நம்பி
போகு நம்பி -உன் தாமரைக் கண்ணும் செய்ய வாயும் –ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோம்
மின்னிடையார் சேர் கண்ணன் –
தான் தள்ளி உன்னுடனே கூடன் என்று –குலசேகரர் ஆழ்வார் -வாசுதேவ உன் வரவு பார்த்தே –
நீ உகக்கும் -கண்ணினாரும் அல்லோம் ஒழி –என் சினம் தீர்வன் நானே-
கோபிகள் -பிரணய ரோஷம்
காதில் கடிப்பிட்டு –எதுக்கு இது இது என் இது என்னோ–கதவின் புறமே வந்து நின்றீர் -திருமங்கை ஆழ்வார்
நிச்சலும் என் தீமைகள் செய்வாய்–அல்லல் விளைத்த பெருமானை–
குறும்பு செய்வானோர் மகனைப் பெற்ற நந்த கோபாலன்
விநயம் காட்டி சேர்த்துக் கொள்வான் –

எம்பெருமானார் யஞ்ஞமூர்த்தி யாதவ பிரகாசாதிகளை வென்றது போலேயும்
பட்டர் மேல் நாட்டு வேதாந்தி-நஞ்சீயரை சம்பிரதாயத்துக்கு கொண்டு அருளியது போலேயும்
நம்பிள்ளை -துன்னு புகழ் கந்தாடை தோழப்பர்-நடுவில் திரு வீதிப்பிள்ளை பட்டர் போல்வாரை
அடிமை கொண்ட சரிதைகள் அனுசந்தேயம்
கோவிந்தா– கோ- ஸ்ரீ ஸூக்திகளை கொண்டே வென்றவைகள் அன்றோ இவை

கூடாரை வெல்லும் கோவிந்தா –
பருப்பதத்து -பெரியாழ்வார் திருமொழி -5-4-7-
அத்வேஷ மாதரத்தை பற்றாசாக கொண்டு அவன் அருளும் தன்மை இரண்டாலும் அருளப்படுகிறது –
கூடுவோம் அல்லோம் என்று அபிசந்தி இல்லாத மாதரத்தில் ரஷித்த படி
பொருந்தோம் என்று துர் அபிமானம் இன்றிக்கே -ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும்
பசுக்களோடு பொருந்துமவன் கோவிந்தன்
பருப்பத்தது -விலக்காமை ஒன்றே வேண்டுவது
வருவானும் -விரோதிகளை போக்குவானும் -தன் விஜயத்துக்கு அடையாளம் இடுவானும் தானே
பலத்துக்கு வேண்டுவது ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமுமே -ஸ்ரீ வசன பூஷணம் ஸ்ரீ ஸூக்தி –
ஸ்வ சாசநாதி வரு ததி வ்யவசாய நிவ்ருத்தி மாத்ரேண -ரசன அநு பபத்தி அதிகரண ஸ்ரீ பாஷ்யம் எம்பெருமானார் ஸ்ரீ ஸூக்தி —
விலக்காமை ஆத்ம ஞானம் -பிரளயத்தில் மோஷ பிரதானம் பண்ண இதுவே ஹேது
ததேக சேஷத்வ ததேக ரஷ்யத்வ ஞானம் இல்லை பிரளயத்தில் -தத் கார்யமான விலக்காமை அப்போது இல்லையே –

சீர் –
எல்லாரையும் வெல்லுவது குணத்தாலே–
கூடுவாரை சீலத்தாலே வெல்லும்–கூடாதாவரை சௌர்யத்தாலே வெல்லும்
சௌர்யம் அம்புக்கு இலக்காகும்–சீலம் அழகுக்கு இலக்காகும்–அம்புக்கு இலக்கானார்க்கு மருந்திட்டு ஆற்றலாம்
சீலமும் அழகும் நின்று ஈரா நிற்கும்–ஈர்க்கும் குணங்கள் தாமரைக் கண்கள் கொண்டு ஈர்தியாலோ
அம்பு தோல் புரையே போம்–அழகு உயிர் கொலையாக்கும்
சர்வஞ்ஞரை -எத்திறம் -என்னப் பண்ணும் குணம் இறே-ஆழ்வார் -நிச்சயம் -கூடேன்-வெண்ணெய் போலே காட்டி-
அம்புவாய் -மருந்தூட்ட தீர்க்கலாம்–நீர் கொன்றாப் போலே இதுக்கு பரிகாரம் இல்லை –
ந நமேயம் என்று இருப்பாரை-தன்னுடைய சௌர்யாதி குணங்களாலும்-சீலாதி குணங்களாலும் வெல்லும் இத்தனை –
வில் பிடியைக் காட்டி ராவணனை ஜெயித்தான் –
இது பிரதம யுத்தத்திலே இவனும் அதுக்கு எதிர்பார்த்து போந்தவன் தோலாமை இல்லை இறே
ஆனால் மறுபடியும் யுத்தமுண்டான படி எங்கனே என்னில்-பெருமாளுடைய நிரதிசய சௌர்யத்தை
பிரகாசிப்பிக்கைக்காக மறுபடியும் யுத்தம் பண்ணினான் இத்தனை-என்று நம்முடைய ஆச்சார்யர் அருளிச் செய்வர் –
தன்னுடைய வடிவு அழகைக் காட்டி கோபிமார்களை ஜெயித்தான்
ஸ்வரூப ரூப குண விபூதிகளாலே சர்வ ஸ்மாத் பரனான தன்னுடைய-வை லஷண்யத்தைக் காட்டி ஆழ்வார்களை ஜெயித்தான்
இவை ஒன்றிலும் ஈடுபடாத நம் போல்வாரை ஆழ்வார்-சம்பந்தத்தை வ்யாஜீ கரித்து ஜெயிக்கும் இத்தனை –

கூடாரை கொல்லும் சீர் இல்லை வெல்லும் -கொள்ளூம் என்றபடி –
IT IS DIFFICULT TO WIN OVER ENEMIES BUT EASY TO DEFEAT THEM -ABULKALAAM
பூதனை-பூதனை வளர்ப்புத்தாய் கம்சனுக்கு –
அவனுக்கே என்று விஷம் கொடுத்ததால் -பாலையையும் அவள் உயிரையும் அவள் மறு பிறவியையும் சேர்த்து உறிஞ்சினான்
பூத உடல் சந்தனம் கமழ
சகடாசுரன் திருவடி ஸ்பர்ஸத்தால் புனிதனாகி அசுரத்தன்மை அற்று மோக்ஷம்
சிசுபாலன்-சிசுபாலன் பிறந்ததுமே மூன்று கண்கள் நான்கு கைகள்-தூக்கினாள் ஒரு கண்ணும் இரண்டு கைகளும் மறையும்
-தூக்கிக் கொண்டவன் எமனாவன் -கண்ணன் தூக்க –
தனது அத்தையிடம் -99-வசவுகளை மேலே ஒரு நாளில் சொன்னால் தான் கொல்வேன் சத்யம்
-ஏசினாலும் திருநாமம் சொல்லிக் கொண்டே கால ஷேபம் என்பதால் மோக்ஷம்
எதிரிகளும் கொண்டாடும் சீர்க் குணம் பெருமாளாது
கோவிந்தா -கோ விந்ததி-பூமி பாலகன் -ஆ நிரை ரக்ஷகன் -பூமி இடந்தவன் -வேதம் அளித்தவன் –
வேதங்களால் புகழப்படுபவன் போன்ற பல பொருள்கள் உண்டே –
மார்கழி–மாரை தட்டி அஹங்கரிப்பது கழிந்தால் தானே மதி நிறையும் –
சீர்க் குணம் –சீரான ஒழுங்கான -குணங்கள் என்றுமாம் –
திரு விண்ணகர் -நண்ணாரை வெல்லும் -அ லவணம்-உப்பில்லா –லாவண்யம் காட்டி -ஒப்பில்லா
இரண்டாம் நாளிலும் ஒன்பதாம் நாளிலும் ஆழி எடுத்து -கூடினவருக்கு தோற்றானே

கோவிந்தா –
கூடுவோம் அல்லோம் என்னும் அபிசந்தி இல்லாத–மாத்ரத்திலே ரஷித்த படி –
கோவிந்தா- –
திர்யக்குகள் உடன் பொருந்தும் நீர்மை-
கூட மாட்டோம் என்னும் அபிசந்தி இல்லாத அளவே அன்றிக்கே –
கூடுவோம் என்னவும் அறியாத அசேதனங்களையும் காத்து அருள்பவனே
திவத்திலும் பசு நிரை உகப்பான்–பரம பதத்தில் காட்டிலும்–
அங்கும் ஹா ஹா டியோ டியோ சொல்லி —ஹாவு ஹாவு நீங்கள் சொல்வது போலே
அர்த்தம் இல்லாத மந்த்ரம் போலே —பசு மேய்க்கிற மந்த்ரம்-

வுன் தன்னைப் பாடிப் –
ஹிரண்யாய நம -என்கை தவிர்ந்து–வகுத்த உன்னுடைய பேரை–
ஸுயம் பிரயோஜனமாகச் சொல்லப் பெறுவதே -என்கை –
கோபீ ஜன வல்லபனான உன்னை பாடுகையே எங்களுக்கு பிரயோஜனம் போரும் -என்னவுமாம் –
சர்வ ஸ்மாத் பரனாய்-சர்வ சுலபனான உன்னை-த்வத் அனுபவ ஜனித ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடி –
கோபர் இசைந்து -சந்நிதியில் பாடி–வகுத்த -உன்னை
உன் தன்னை–
வேறு பிரயோஜனம் இல்லாமல்–வாயினால் பாடி–நா படைத்த பலன் பெற்றோம்–அத்தலை இத்தலையாக வந்தோம்
கோவிந்தன் குழல் -எங்கள் வாசலில் நீ பாடி எங்களை தோற்பிக்க —–ஆவி காத்து இராதே
பறை கொண்டு–பிராப்யத்தில் பிராபகம் ஆற்றாமை யால் –

உன்னைப்பாடி –
உன் தன்னைப் பாடி –
தேவும் தன்னையும் பாடி ஆடத் திருத்தி –
பரத்வம் சௌலப்யம்–ஸ்வாபாவிகம் சௌலப்யம் இயற்க்கை பரத்வம் வந்தேறி –
பக்த பராதீனன் -ஆத்மாநாம்–தேவும் தன்னையும் பாடி–உன் தன்னை -சௌலப்யம்–யாம் பெரும் சம்மானம்
ஆழ்வான் பணிக்கும்–தானான தன்மையை இழவாதே கொல்
ஆஸ்ரித பவ்யத்தை அனுகூலயத்தை மீறாதே -என்று அர்த்தம் —உன்னை ஸ்வ தந்த்ரன் எனபது போய்
சேனையோர் உபய மத்யே மே ரதம் சொல்ல நிறுத்தினான் –

யாம் –
உன்னை பாடுவதே -நிச்சயம் பேறு

யாம் பெரும் சம்மானம் –
தோளில் மாலையை வாங்கி இடுகை -இவருக்கு பெறாப் பேறு -என்கை-
பெருமாள் தோளில் மாலையை வாங்கி இட்டார் –
அநாதி காலம் எல்லாராலும் பட்ட பரிபவம் மறக்கும்படி கொண்டாடுகை –
பிரயணித்வம் நிபந்தனம்–ஸ்வரூப நிபந்தனம்–விதம் விதி–ராக பிராப்தம் இஷ்டம்-
ஸூயம் பிரயோஜனம் விதி பார்க்க வேண்டாமே

நாடு புகழும் பரிசினால் –
ஒருவன் கொடுக்கும்படியே–சிலர் பெறும்படியே—என்று நாட்டார் கொண்டாட வேணும் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை வியாஜ்யமாக வைத்து திருவரங்கம் பெருமாளை நமக்கு தந்த பரிசு –
இது வன்றோ பூர்ணம் –

நன்றாக –
இந்த்ரன் வரக் காட்டின ஹாரத்தை–பெருமாளும் பிராட்டியும் கூட இருந்து–திருவடிக்கு பூட்டினாப் போலே பூண வேணும் –
சிலரை இட்டு ஒப்பிக்கை அன்றிக்கே–தானும் பிராட்டியும் கூட இருந்து ஒப்பித்த தன்னேற்றம் –
ஆபரணத்தைப் பூண்டு அவன் வரவு பார்த்து இராது ஒழிகை -என்றுமாம்
நாடு புகழும் –
அவனும் சத்தை பெற–இவர்களை ஒப்பிக்கை அவனுக்கு ஸ்வரூபம்–
அவனை ஒப்பிக்க அனுமதிக்கை இவன் உடைய ஸ்வரூபம்
யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாக–பரத அக்ருரர் மாருதி–வேடன் வேடுவிச்சி –மாலா காரார் -அவன் தம்பி 18 நாடான் பெரு வீடு –

சூடகமே-
பிரதமத்தில் ஸ்பர்சிக்கும் கைக்கிடும் ஆபரணம்–
பரம பிரணயி ஆகையாலே தன் தலையிலே வைத்துக் கொள்ளும் கை –
சூடகமே –
அணி மிகு தாமரைக் கை இவர்கள் ஆசை படுவது போலே-
அடியார் கையை தான் அணிய ஆசை பட்டுகைக்கு இட கடவ ஆபரணம்
வெள்ளி வளைக் கைப் பற்ற -என்கிறபடியே
அநன்யார்ஹைகளாகப் பிடித்த கைகளிலே இறே முதல் ஆபரணம் பூட்டுவது
அடிச்சியோம் தலைமிசை நீ யணியாய் -என்னுமா போலே
அவன் சொல்லி மார்விலும் தலையிலும் வைத்துக் கொள்ளூம் கைக்கு இடும் சூடகம்
தம் மணிம் ஹ்ருதயே க்ருத்வா -இத்யாதி வைத்த -முந்துறக் காணும் இடம் –
முந்துறத் தான் உறவு பண்ணும் இடம்

தோள் வளையே –
அந்த ஸ்பர்சத்தாலே-அணைக்க வேண்டும் தோளுக்கு இடும் ஆபரணம் –

தோடே –
பொற்றோடு பெய்து -என்று-பண்டே தோடு இட்டாலும்-அவன் இட்டாப் போலே இராது இறே –

செவிப் பூவே –
அணைத்த திருக் கையில் உறுத்தும் ஆபரணங்கள் போல் அன்றிக்கே-
அணைத்த அநந்தரம் ஆக்ராணத்துக்கு விஷயமான இடம் –

பாடகமே –
அணைத்தால் தோற்றுப் பிடிக்கும் காலுக்கு இடும் ஆபரணம் –

என்றனைய பல்கலனும்-
பருப்பருத்தன சில சொன்னோம் இத்தனை –நீ அறியும் அவை எல்லாம் என்கை –
பல பலவே யாபரணம் இறே –
அனைய -பல
கிரீட -ஹார –கௌச்துப நூபுராதி அபரிமத திவ்ய பூஷணம்-
பல பலவே ஆபரணம்-ஆபரணங்கள் அழகு கொடுக்கும் அவயவங்கள் இவர்களுக்கு

யாம் அணிவோம் –
வ்யதிரேகத்திலே-மலரிட்டு நாம் முடியோம் -என்கிறவர்கள்–பூண்போம் -என்கிறார்கள்
அவனுக்கு இவர்கள் அனுமதி பண்ணுகையே அமையும் -என்கை-

சூடகமே –
கை வண்ணம் -திரு நெடும் தாண்டகம் -21
இருவரும் அடைவு கெட அனுபவம்
பிடித்த கைக்கும்
அணைத்த தோளுக்கும்
அணைத்த விடத்தே உருத்தும் அதுக்கும்
ஸ்பர்சத்துக்கு தோற்று விழும் துறைக்கு ஆபரணம் –
அம்மி மிதித்த காலத்திலேயே என் காலைப் பிடித்த கை –
ஆதி ஷடேமம அசமாநம ஆசமேவ த்வம சத்திரா பவ -என்று அப்போதே மந்த்ரம் சொன்ன வாய் –
இமாம் சமேத பச்யதே -அப்போதே காலே பிடித்து கரிய குழல் அளவும் பார்த்த கண்
பின்பு சப்தபதீ பர கரணத்தில் நடந்த திருவடிகள் –

ஆடை யுடுப்போம் –
பண்டு உடுத்தார்களோ -என்னில்–அவன் உடுத்து உடாதது உடை அன்று இறே என்று இருப்பது –
அவன் திருப் பரியட்டம் இவர்கள் அறையிலே யாம்படி கூறை–மாற வேணும் -என்றுமாம் –
நோன்பை முடிக்கையாலே நல்ல பரிவட்டம் உடுக்க -என்றுமாம் –
உடுத்துக் களைந்த -என்னுமவர்கள் இறே இவர்கள்
ஸ்வேத கந்த உக்தமாய் அவன் உடுத்து முசிந்த ஆடை -என்றுமாம் –
தூரவாசி புடவை பெற–சந்நிதிதனாக இருக்க கூறை உடுக்க சொல்ல வேணுமோ

அதன் பின்னே பாற்சோறு மூட நெய் பெய்து –
அதுக்கு மேலே பாற்சோறு மூடும்படியாக நெய் பெய்து –
இத்தால்
பகவத் சம்பந்தமுள்ள திருவாய்ப்பாடியிலே-சம்ருத்தி எல்லாம் பிரியமாய் இருக்கும்படி –

முழங்கை வழி வாரக்
நம்பி திரு வழுதி வளநாடு தாசர் -நெய் படாதோ -என்ன-
கிருஷ்ண சன்னதியாலே த்ருப்தைகளாய் இருந்தவர்களுக்கு
சோறு வாயில் தொங்கில் அன்றோ-நெய் வாயில் தொங்குவது -என்று பட்டர் அருளிச் செய்தார் –
உண்ணாமல் நோன்பு நூற்றதால் கண்ணபிரானும் உண்ணாமையால் ஊரில் நெய் பால் அளவற்று கிடந்து
பால் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழியார

வ்யதிரேகத்தில் நெய் உண்ணோம் பால் உண்ணோம் -என்று-சொன்னவர்கள் இன்று ஆசைப் படுகிறார்கள் –
கோவிந்தா -உன் தன்னை பாடி -அவனைப் பற்றி சர்வ லாபமும் உண்டு
நெய் உண்ணோம் விரதம் தவிர்ந்து–அவனும் உபவாசம் -இருந்தானாம்
நெய்யிடை நல்லதோர் சோறு தடவி எடுக்கும் படி
கண்ணனை-அனுபவிக்க-கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து

கூடி இருந்து –
பிரிந்து பட்ட கிலேசம் தீரக்-கூடி தொட்டுக் கொண்டு இருக்கையே பிரயோஜனம் –
புஜிக்கை பிரயோஜனம் அன்று –
குளிர்ந்து –
பிரிந்து கமர் பிளந்த நெஞ்சுகள் குளிரும்படி –நம்பெருமாள் திருநாள் -என்று ஒரு பேரை இட்டு
ஸ்ரீ வைஷ்ணவர்களைத் திரட்டிக் காணுமா போலே-ஒருவருக்கு ஒருவர் போக்கியம் இறே

உபகரணங்கள் நேற்று -ஸம்மானம் இதில் /சாம்யா பத்தி நேற்று /
இன்று -சாயுஜ்யம் கல்யாண குண அனுபவம் ஒன்றே இதுவே அக்கார அடிசில் –
கூடி இருந்து குளிர்வது இதுவே -யாவதாத்மா பாவி -கோவிந்தா மூன்று தடவை சொல்லி நிகமனம் /
இங்கும் கூடித்தான் உள்ளோம் -அபிருத்தக் சித்தம் -ஆனால் ஞானம் மழுங்கி -அவித்யா கர்மம் -வாசனா ருசி-ப்ராக்ருதம் உண்டே
அங்கு -நிரஸ்த ஸூப பாவக லக்ஷணம் -/ அர்ச்சிராதி கதி சிந்தனம் -ஸூஷ்ம சரீரம் கழியா விட்டாலும் -/
அங்கே அப்ராக்ருத திரு மேனி -சுத்த சத்வம் –
ஆபரணங்கள் முதலில் –ஆடை அப்புறம் -அக்ரமம் –
முழங்கை வழி–உண்ணும் சோறு எல்லாம் கண்ணன் என்று இருப்பவர்கள் -பிரதான போக்யம் அவனே –
கோவிந்தா -நாமம் சொல்லி ஆடை உடுப்போம் -திரௌபதி -/ நேராக வந்தால் ஆடை பரிப்பானே -நாம வைபவம்

கூடி யிருந்து குளிர்ந்து
பசி தீர உண்ணுவது அன்றிக்கே பிரிந்து பட்ட விசனம் எல்லாம் தீர கூடி களித்து இருக்கை உத்தேச்யம்-
கூடி இருந்து குளிர்ந்து –பல்கலனும் அணிவோம் ஆடை உடுப்போம்-
ஸோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா/

கூடாரை திருவேங்கடம் அனுபவம் -ஸூ சகம்–விரோதி நிரசனமும் கூடி இருந்து குளிர்ந்த படியும் –
அப்பனுக்கு சங்கு ஆழி அளித்து -ஒழிவில் காலம் எல்லாம்
உடனே மன்னி இருக்க பாரித்தது வேங்கடத்து எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே –
குளிர் அருவி வேங்கடம் –

ஆண்மின்கள் வானகம் மங்களா சாசனம்–
ஆதிவாகார் சத்கரிக்க–சதம் மாலா ஹச்தாகா அலங்கரிக்க ஒப்பிக்கும் படி-ப்ரஹ்ம அலங்காரம்
சம்சார தாப ஸ்பர்சம் இன்றிக்கே-நிரதிசய போக்கியம் அனுபவிக்க
அஹம் அன்னம்–அந்நாதா அன்னம் புஜிக்க–அஹம் அன்னம் புஜிக்கிறவனை சாப்பிடுகிறேன் —மூன்றாலும் சொல்லி –
பாலே போல் சீர் -கை கழிய போகிற சிநேகம்–முகத்தாலே சூசிபபிகிறார்கள்-
இதில் சாம்யாபத்தி என்றும் கீழே குண அனுபவம் என்றும் சொல்லாலாம்
கோவிந்தன் தன் குடி அடியார் -தனக்கு முடி உடை வானவர் எதிர் கொள்ள–

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா
உன் தன்னை பாடி–தேசாந்தரே தேகாந்தரே இல்லாமல்–இங்கே இந்த தேசத்தில்–
ஸூரி வர்க்கம் திவ்ய மகிஷி பரமபதம்
முமுஷு முக்தன் ஸூசகம்–கூடி இருந்து –ஆடை உடுப்போம் சேர்த்து
கூடி இல்லாத காலத்தில் ஆடை ஆபரணம் பால் சோறு வேண்டாம்–
பிரிந்த போது -சீதை பரியட்டம் ஆபரணங்கள் எங்கேயேனும் பொகட்டு-கிஷ்கிந்தை
ராஷசிகள் நடுவில் இவை எதற்கு–பிராட்டி சேர்த்த பின்பு சர்வாலங்கார பூஷிதை
பரதனை கிட்டிய பின்பே ஸ்நானம் வஸ்த்ரம் அலங்காரம் பெருமாள் போலே கிருஷ்ணனும் -கோபிகள் -சேர்ந்த பின்பு
பரத ஆழ்வான் கூடின பின்பு ஜடை களைந்து ஸ்நானம் மாலை சந்தனம் வஸ்த்ரம் உடுத்து-இவனும் கூடி குளித்து ஒப்பித்து
கூடி இருந்து பல் கலனும் யாம் அணிவோம்- கண்ணனையும் சேர்த்து–கூடி இருந்து ஆடை உடுப்போம்
கூடி இருந்து பால் சோறு நெய் பேர்ந்து–விச்லேஷம் இல்லாத நல கூட்டம்
வாய் பாட -முக்கரணங்களும் அவன் இடம்-குளிர்ந்து -நீர் வண்ணன் மார்பிலே தோய வேண்டும்-

சூடகமே —காப்பே
தோள் வளையே —திரு இலச்சினையே
தோடு —திரு மந்த்ரமே
செவிப்பூவே–த்வயமே
பாடகமே–சரம ஸ்லோகமே
இவை
ஸ்வரூபஞ்ஞனான முமுஷுவான அதிகாரிக்கு அவஸ்ய அபேஷிதங்களாய் —
பகவத் சம்பந்தத்யோதகங்களாய் -இருப்பன
இதில் தோடு –
மண்டல ஆகாரமாய் -மந்திர சேஷ விவரிணி யான பிரணவ ஆகாரத்துக்கு த்வதோகமாய் -இருக்கையாலே –
திருமந்த்ரத்தை சொல்லுகிறது –
செவிப்பூ
ஸுவயம் போக ரூபம் ஆகையாலே -போக பிரதானமான த்வயத்தை சொல்லுகிறது –
பாடகம்
பத்த ரூபம் ஆகையாலே -உபாயாந்தர நிவ்ருத்தி பரமான-சரம ஸ்லோகத்தை சொல்லுகிறது –
இம் மூன்று ரகஸ்யங்களாலும்-ஞான பக்தி வைராக்யங்களை சொல்லுகிறது –
அது எங்கனே என்னில் –
திருமந்தரம் -ஆத்ம ஸ்வரூப யாதாம்ய ஞான பரம் ஆகையாலும்
த்வயம் -உத்தர கண்டத்தில் சொல்லுகிற கைங்கர்யத்துக்கு-பூர்வ பாவியான பக்தி பிரதானம் ஆகையாலும்
சரம ஸ்லோஹம் த்யாஜ்ய அம்சத்தில் வைராக்யம் பிரதானம் ஆகையாலும்–
ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –
என்று அனைய–என்று சொல்லப் படுகிற–பல்கலனும்-ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும்
ஓர் ஒன்றே விஷய பேதத்தாலே -அநேகமாக இருக்கும் இறே-
ஆகையால் -பல்கலனும் -என்கிறார்கள் –

யாம் அணிவோம்
உன்னோடு கூடாத அன்று இவை ஒன்றும் வேண்டாத நாம்-இன்று அணியக் கடவோம்
பகவத் சம்பந்தம் இன்றியிலே ஞான பக்தி வைராக்யங்கள் உண்டானாலும் அபாயம் இறே பலிப்பது –
பௌத்தனுக்கும் ஞான பக்தி வைராக்யங்கள் உண்டு இறே –

ஆடை உடுப்போம்–
சேஷத்வ ஞானம் ஆகிற வஸ்த்ரத்தை உடுப்போம்
அதன் பின்னே —அதுக்கு மேலே
பால் சோறு-
கைங்கர்யம் ஆனது
மூட நெய் பெய்து–
மறையும்படி பாரதந்த்ர்யத்தை வெளி இட்டு –
கூடி இருந்து குளிர்ந்து –
போக்தாவான உன்னோடு-போக்யரான நாம்-சம்பந்தித்து இருந்து -விஸ்லேஷ வ்யசனம் எல்லாம் தீரப் பெற்றோம் –
இதுவன்றோ நாம் உன் பக்கல் பெரும் சம்மானம்

சூடகமே -கையில் தோள் வளையே -தோடு -செவிப்பூவே பாடகமே–ஐந்து ஆபரணங்கள் பஞ்ச சம்ஸ்காரம்
திரு ஆபரணங்கள் ஆத்மாவை அலங்கரிக்க
தாப -எங்கள் குழுவினில் புகுதல் ஓட்டம் -தீயில் -அக்னியில் காட்டிலும் அக்னியில் காட்டிய -பொலிகின்ற செஞ்சுடர் –
கோயில் பொறியாலே ஒற்றுண்டு நின்று குடி குடி ஆட செய்கின்றோம் –
திரு இலச்சினை–தோள் வளையே -திரு இலச்சினை–கங்கணம் கட்டி -ஸூடகம்–
பட்டம் சூடகம் ஆவன -பூட்டும் ஆத்ம பூஷணங்கள் –
சம்சார நிவர்தகமான திரு மந்த்ரம் உபதேசித்த-உத்தாராக ஆசார்யர் –
புண்டர -தோடு செவிப்பூ இரண்டு காதுக்கு குரு பரம்பரை ரகஸ்ய த்ரயம் –

சாம்யாபத்தில் கீழ் பாசுரத்தில்–குண அனுபவம் இங்கே–
ஆண்மின்கள் வானகம்-வலம்புரிகள் கலந்து எங்கும் இசைத்தன
சங்கு -திருச்சின்னம்–விரஜா ஸ்நானம் -கோஷம்–மங்களா சாசனம்
ஆதி வாஹிகர் சத்கரிக்க–ஒப்பிக்க கடவர் அலங்காரம்–
சதம் அஞ்சன ஹஸ்தா ஆபரணம் ஹஸ்தா–வஸ்த்ரம் சந்தனம் வாசனாதி திரவியம்
கூடி இருந்து குளிர்ந்து –

சீர் -ஸ்வாமி ஸ்வரூபம் ரூபம் குண விபூதிகள்
வடுக நம்பி போலவும்–வாழி எதிராசன் -மா முனிகள் போலேயும்–உன் தன்னோடு உற்றோமே ஆவோம்
கையில் கனி என்னக் கண்ணனைக் காட்டித் தரிலும்–உன் தன் மெய்யில் பிறங்கிய சீரன்றி வேண்டிலன் யான்

பெரியாழ்வார் தம் பல்லாண்டில் விழைந்த பரிசுகள்

“நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கையடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும்தந்து என்னை வெள்ளுயிராக்க வல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே !”

1-26 வரையிலான பாசுரங்கள் மூலமாக, கோபியர்கள் கண்ணனைப் பற்றியே சிந்தித்தும் (ஸாலோக்யம் )
கண்ணனை நெருங்கியும் (ஸாமீப்யம் ),கண்ணனை தரிஸித்தும் (ஸாரூப்யம் ) ப்ரபத்தி என்கிற சரணாகதியைச் செய்தனர்.
இந்தப் பாசுரத்தில் இவை மூன்றையும் தாண்டி, தாம் கண்ணனோடே ஒன்றாய்க் கூடிக் கலந்து மகிழ வேண்டும் என்ற
விண்ணப்பத்தை வைக்கின்றனர்.(ஸாயுஜ்யம் -கூடிக் குளிர்ந்தே ).
மேலும், இப்பாசுரத்தில் வீடுபேறு பெற்ற பின் அடியார்கள் வைகுண்டத்தில் பெறுகின்ற இன்பங்களைப் பரிசுகள்
என்ற குறிப்பால் ஆண்டாள் உணர்த்துகிறாள்.
அதில் தலையாயது, இறைவனுக்குப் புரியும் தொண்டு (கைங்கர்யம்) என்று முடிக்கிறாள்.

கோ என்பதற்கு ஸ்வர்கம் , மோக்ஷம் என்று பொருள் கொண்டு ‘விந்தயத்தி’ அதைத் தருபவன் என்று பொருள் கொண்டால்-
கோவிந்தன்- நல்லவர் நட்பு,வீடுபேறு அருளும் இறைவன் என்று பொருளாகும்.

கோ என்பதற்கு அரிய அஸ்திரங்கள் என்று பொருள் கொண்டால், விந்ததி – அதைப் பெற்றவன் என்று கொண்டால்,
இராமாவதாரத்தில் விஸ்வாமித்ர முனிவரிடமிருந்து அரிய ஆயுதங்களைப் பெற்றிருப்பவன் என்று பொருள்.

கோ என்பதற்கு பசுக்கள் என்று பொருள் கொண்டால், விந்ததி- பசுக்களாகிய சீவாத்மாக்களை அறிந்தவன், காப்பவன் என்று பொருள் படும்.

கோ என்பதற்கு வேதம் என்று பொருள் கொண்டால், விந்தயதே – அவற்றின் மூலமே உணரப்படக்கூடியவன் என்று
பொருள் கொண்டு, வேதத்தின் சாரமாக, பொருளாக இருப்பவன், இறைவன் என்று பொருள் படும்.

கோபி- கோபிஹி-கோபியர்கள் என்பதே, நான்மறைகள், அதன் அங்கங்கள் என்ற பொருளில் தான் வரும். அவற்றைக் காப்பவன், கோவிந்தன்.

கோ என்பதை முக்கண் பார்வை எனப் பொருள் கொண்டால், விந்ததி- என்பது எல்லாவிதத்திலும் பார்வையுடையவன்,
நடந்தது, நடப்பது,நடக்கப்போவது அனைத்தையும் அறிந்தவன் என்று பொருள் படும்.

கோ என்பதற்கு என்று ஜ்வாலை, தீப்பிழம்பு, சுடர், ஒளி என்று பொருள் கொண்டால் விந்ததி – ஸூர்யமண்டல மத்யவர்த்தி –
ஸூரியனுடைய உட்கருவில், நடுவில் இருக்கின்ற ஒளிபொருந்திய தேவன், இறைவன் என்று பொருள் படும்.

கோ- என்பதற்கு ஆதார நீர் என்று பொருள் கொண்டால், விந்ததி- அவற்றில் தோன்றிய, அவற்றைத் தாங்கிய
முதலாவதாரங்களான மத்ஸ்ய,கூர்ம (மீன், ஆமை) அவதாரங்களைக் குறிக்கும்.

கோ – என்பதற்கு பூமி என்று பொருள் கொண்டால்- விந்ததி-வராஹனாய் பூமிதேவியைக் காத்ததையும்,
திரிவிக்கிரமனாய் அனைத்துலகங்களையும் அலைந்ததையும்,பரசுராமனாய் பூமியெங்கும் காலால் நடந்து திரிந்ததையும் குறிக்கும்.

கோ என்பதை மீண்டும் வேதம் என்று பொருள் கொண்டால், விந்ததி- அவற்றையெல்லாம் நன்குணர்ந்த, ஹயக்ரீவ அம்சத்தைக் குறிக்கும்.

கோ என்பதை- இந்திரியங்கள் என்று பொருள் கொண்டால், விந்ததி- அவற்றையெல்லாம் நல்வழியில் செலுத்துபவன் என்று பொருள் படும்.

கோவிந்த நாமத்தைப் போலவே கோதா நாமத்திற்கு பொருளுண்டு. கோ என்றால் நல்ல உயர்ந்த கருத்துகள் என்று பொருள் கொண்டால், ததாயதே- தா- என்றால் தருவது என்று கொண்டால், கோதா- அத்தகைய உயர்ந்த கருத்துக்களைத் தந்தவள் என்று பொருள். திருப்பாவை முழுதுமே மிகவுயர்ந்த வேத ஸாரத்தை உள்ளடக்கியது தானே ?

மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும் இவையும் தன்னோடு கூடுவது இல்லை யான் –
நூலின் நேர் இடையார் திறத்து நிற்கும் ஞாலம் தன்னொடும் கூடுவது இல்லை யான் –
மாறனார் வரி வெஞ்சிலைக்கு ஆட் செய்யும் பாரினாரோடும் கூடுவது இல்லை யான் –
உண்டியே உடையே உகந்தொடும் இம் மண்டலம் தன்னொடும் கூடுவது இல்லை யான் –
தீதில் நன்னெறி நிற்க அல்லாது செய் நீதியாரோடும் கூடுவது இல்லை யான் –
கூடத் தகாதவர்களை ஸ்ரீ குலசேகர ஆழ்வார்

கூடத் தகுந்தவர்களை –
தொல் நெறிக் கண் நின்ற தொண்டர் –
நினைந்து உருகி யேத்துமவர்கள்
அணி யரங்கத்து திரு முற்றத்து அடியவர்கள்
மால் கொள் சிந்தையராய் –அழைத்து அயர்வெய்தும் மெய்யடியார்கள் –
ஒருகாலும் பிரிகிலேன -என்று இருக்குமவர்கள்
பழுதே பல காலும் போயின -அஞ்சி அழுது இருக்குமவர்கள்
த்ருணீ க்ருத விரிஞ்சாதி நிரந்குச விபூதிகர்கள்
ராமானுஜ பதாம் போஜ சமாஸ்ரயண சாலிகள்
வர வர முனி ப்ருத்யைரச்து மே நித்ய யோக -நித்ய குதூகுல சாலிகள்
மணவாள மா முனிவன் பொன்னடியாம் செங்கமலப் போதுகளை உன்னிச் சிரத்தாலே தீண்டுமவர்கள்
நித்ய அனுபவ யோக்யர்கள்
இன்னும் அங்கே நட நம்பி -புள்ளுவம் பேசாதே போகு நம்பி
கூடோம் என்று ஊடினவர்கள்
அக் கொடிய நிலை எல்லாம் தொலைந்து எப்போதும் கூடுவோம் என்று கூடி இருந்து குளிர்வோம்
கூடி இருந்து கண் வளர்ந்து போது போக்காமல் குளிர்ந்து-

நோற்றால் பெறக் கடவ பேறு சொல்லுகிறது –
இத்தால் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -என்று அலங்காராதிகளும் பகவத் பிரசாத அயத்தம் என்கிறது –
தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -என்கிறபடியே
கைங்கர்யமே ஸ்வரூப அனுரூபமான புருஷார்த்தம் என்று அறுதியிட்டு
பிரதிபந்தக நிவ்ருத்திக்கும் உத்தேசியமான புருஷார்த்த ஸித்திக்கும் அனுகுண
அலங்காரம் அவனே பண்ண வேணும் என்கிறது –

கூடி இருப்பது -வஸ்து சித்தம் -அறிந்து கொள்வதே கர்தவ்யம் —
ஞானம் இல்லாதவர்களை வெல்பவன் -சாஸ்திரம் -தானே அவதாரம் –
ஆழ்வாராதிகள் ஆச்சார்யாதிகள் மூலம் இந்த சித்த ஞானம் இல்லாதாருக்கு ஞானம் அளிக்கிறான் –
கூடாரை வெல்லும் ஆரம்பம் -நடுவில் அவன் கர்தவ்யம் –
கூடி இருந்து குளிர்ந்து நிகமனம்

ஞானம் மறந்தவர் -நிலை வேறே -சூர்ப்பணகை விபீஷணன் இராவணன் நிலை வேறே -ஆகவே சீர் -வேண்டுமே –
தாரதம்யம் -ஆர்ஜவம் –
மனஸ் ஒன்றே ப்ரஹ்மம் பார்க்கும் உபகரணம் -சுத்த மனஸ் -உணர்வில் உன்னை வைக்க நீயே அருள வேண்டும் –
த்ருஷ்ட சுத்தி -அத்ருஷ்ட சுத்தி -இரண்டுமே உண்டே –
கூடாரை அழிப்பவன் இல்லை வெல்லுபவன் –கிருஷிகன் -பல பாடு பட்டு இந்த ஞானம் உண்டாக்கி –
சதுர்வித பஜந்தா -பீடிகை பெரிதாக சொல்லி-பக்தனை கொண்டாடி மன்மனா பவா- -9-அத்யாயம் இறுதி ஸ்லோகம் பக்தி பற்றி
நித்ய யுக்த -என்றும் கூடி இருக்க ஆசை கொண்டவன் –மநோ ரதம் இருப்பவன் –
தைத்ரியம் -நெருங்க நெருங்க அபயம் -விலக விலக பயம் –

நமக்குள் கூடி குளிர்ந்து -ஆச்சார்யர் உடன் கூடி -அவனே ஆசைப்பட்டு கூடி
அறியாமல் கூடியவர்கள் -முதல் ஆழ்வார்கள் -அவன் ஏற்பாடு –
புலவர் நெருக்கு உகந்த பெருமாள் –வையம் -அன்பே -திரு –
ஆற்றங்கரை கிடக்கும் கண்ணன் -கடல் கிடக்கும் மாயன் -யாராவது ஒருவனை பிடிக்க –
கூற்றமும் சாரா –வகை அறிந்தேன் –
மெய் அடியார் தம் ஈட்டம் கண்டிட கூடுமேல் -அடியார் குழாங்கள்
கூடினால் குளிரலாமா -இருந்தால் குளிரலாமா -கூடினால் -இருந்தால் குளிரும் -யோகம் க்ஷேமம் -இரண்டும் வேண்டும்
ஆகவே கூடி குளிர்ந்து இல்லை -கூடி இருந்து குளிர்ந்து
யானே இசைந்து என்று கொலோ இருக்கும் நாளே
அபகத -அது மே நித்ய யோகம் -மா முனிகள் அடியார்கள்
அ உ ம கூடி பிரணவம் -/ பாதங்கள் கூடி திருமந்திரம் /சேஷத்வம் பராதந்தர்ய கைங்கர்யம் அறிந்து குளிர்ந்து
ரஹஸ்ய த்ரயம் கூடி -மந்த்ர விதி அனுஷ்டானம் -முக்கூடல் -அக்ஷர பத ரஹஸ்ய த்ரயம்

குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபன் -கால திரை கடந்து சேர ஆசை
ஆபத்து -ஏற்படுத்தி கூடி இருக்கும் வாய்ப்பை உண்டாக்கினான் -அத்தை நினைக்காமல் கூட ஆசை
பெருமாள் கூட ஆசை -என்று பரதன்-மகாத்மா- சத்ருக்கனன் வீரன் உன்னுடன் -உடன் லஷ்மணன் உடன்
ஒருவன் இடம் கூடா விட்டாலும் சத்தை இல்லையே
முதல் தனி வித்தேயோ -முழு மூ உலகுக்கு ஆதிக்கு எல்லாம் —
முதல் தனி உன்னை என்று வந்து கூடுவேனோ -1100-பாசுரம்
கூடி -இருந்து -குளிர பிரார்த்தனை அங்கும் –
ஆச்சார்யன் செய்த உபகாரம் -அனுபவித்து நமக்கும் எழுதி வைத்து –
நெஞ்சு தன்னில் தூயதாக தோன்றுமேல் தேசாந்திரம் இருக்க மாட்டோமே
தெய்வ வாரி ஆண்டான் -ஆளவந்தார் -விஸ்லேஷத்தால் -கிட்டே வர திருமேனி உஜ்ஜ்வலம் -நம் தெய்வம் தொழுதோம் –
பரஸ்பர நீச பாவத்துடன் கூடி -பிரியாமல் இருந்து குளிர்வோம் –

——————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: