திருப்பாவை சாரம் – ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளர –– —

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –

உங்களுக்கு வேண்டுவது என் -என்ன–
ஏதேனும் பிரதி பந்தகம் உண்டே யாகிலும் நீயே போக்கி-எங்கள் துக்கம் எல்லாம் கெட-விஷயீ கரிக்க வேணும் –
என்கிறார்கள்-இப்பாட்டில் –
கீழ்ப் பாட்டில் -ஏற்றிப் பறை கொள்வான் -இன்று யாம் வந்தோம் -இரங்கு -என்று இவர்கள் அபேஷிக்கையாலே
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் -என்ன —
நெடுமாலே -நீ புருஷார்த்தத்தை கொடுத்தாயாகில் —நாமும்
உன்னையும் உன் குணங்களையும்–ப்ரீதிக்கு போக்கு வீடாகப் பாடி–பட்ட வ்யசனம் எல்லாம் தீர்ந்து-
மகிழக் கடவோம் –என்கிறார்கள் –

பெண்காள் நோன்பு ஒழிய உங்கள் நெஞ்சிலே ஓன்று உண்டு போலே என்ன
நாங்கள் உன்னை அர்த்தித்து வந்தோம் என்ன
என்னை அர்த்தித்துப் பெற்றார் உண்டோ என்ன
எங்களோட்டையார் பெற்றார் உண்டு -என்கிறார்கள் –

அச்சுவை கட்டி என்கோ -அறுசுவை அடிசில் என்கோ —போற்றி அறுசுவை அடிசில் பார்த்தோம் –
ராம நாமாமமே கல்கண்டு அதில் ரசம் அறியாதவர் கல் திண்டு
இன்று யாம் வந்தோம் இரங்கு —இன்றி யாம் சேர்ந்த பொழுது –அன்று அங்கே அன்றிங்கே-
மற்று யாதும் மற்றியாதும்-கொண்ட பெண்டிர் -காதல் மற்றியாதும் இல்லை மற்று யாதும் பதம்
இன்றி யாம் வந்தோம்–ந பக்திமான் அகிஞ்சனன் – நோற்ற நோன்பு இலேன் -கார்பண்யம் –
ராஜ்யத்துக்கு எலுமிச்சம் பழம் போலே–ரத்னத்துக்கு பலகறை போலே நம் இடம் உள்ளவை அவனை பெற
உண்மையான கார்யம் இன்றைய பாசுரத்தில் சொல்கிறார்கள் -உன்னை அருத்தித்து வந்தோம் –
பறை தருதியாகில்–திருத்தக்க செல்வமும் -சேவகமும் யாம் பாடி -வருத்தமும் தீர்ந்து
உன்னிடத்தில் உன்னை அர்த்தித்து வந்தோம் -வேறு ஓன்று வேண்டி வர வில்லை–ஏக பக்தி விசிஷ்யதே
பகவத் கீதா சாரம் –
நாயமாத்மா பிரவசநேந லப்த்ய ந பகுணா ஸ்ருனாயா
என் இஷ்டம் -மாலை போட்டு வரிக்க -என்னுடைய சர்வாங்கத்தையும் முற்றூட்டாக கொடுப்பேன் –
பாத கமலங்கள் காணீரே -யசோதை -கண்கள் இருந்தவா குழல்கள் இருந்தவா -காணீரே –
த்வாம் தன் திருமேனியை நன்றாக பரிபூர்ணமாக தான் யாரை வரித்தானோ –
காட்டிக் கொடுக்கிறான் -ஒன்றும் ஒழிக்காமல் –
முதல் ஒருத்தி ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் காணுமாறு அருளாய் –
குன்றினால் குடை கவித்ததும் –கோல குரவை கோத்ததும் –
கன்றினால் விளவு எறிந்ததும் முதலா -நல் விளையாட்டு அனைத்தையும் –

ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பன்ன நின்ற நெடுமாலே யுன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

ஒருத்தி –
அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜனாநாம் சர்வாத்மா -என்கிறபடியே
சர்வ லோகங்களுக்கும் நியாமகனானவனையும் கூட நியமிக்குமவள் என்கையாலே
நாட்டில் தனக்கு ஒப்பற்று இருக்குமவள்-

ஒருத்தி மகனாய்-
சர்வ லோகங்களுக்கும் பிதாவானவன்–ஒருத்தி மகனாய் ஆவதே –
சக்கரவர்த்தி தபஸ்ஸூ பண்ணி மாணிக்கம் போலே நாலு பிள்ளைகளைப் பெற்றாப் போலே–
நால்வரும் கூடி தபஸ் ஸூ பண்ணி–ஒரு மகனைப் பெற்றபடி –

மகனாய் பிறந்து –
பிறந்த போதே–சொல்லிற்று செய்கை —சக்கரவர்த்தி திருமகன்-பெருமாள் -24 திரு நஷத்ரம்-
பக்வனான பின்பு பித்ரு வசன பரிபாலனம் பண்ணினான் –
இவன் பிறந்த போதே–ஆழ்வார்களையும் தோள்களையும் மறைத்தான் இறே –
சங்கு சக்கர கதாதர -உபசம்கரித்தான் —சொன்ன உடன் மறைத்துக் கொண்டான்
என் நின்ற யோனியுமாய் பிறந்து நாட்டில் பிறந்து படாதன பட்டு
மகனாய் பிறந்த –
மகனாய்-ஆய -கிருத் பிரத்யம் -இல்லாததை ஆக்குவது —குண்டலம் குண்டலீ கிருதம் –
மகன் ஒருவருக்கு இல்லாத -மகனாய் ஆனான்
கிருபையினால் —மகனாகவே இருக்கிறான்–மாதா பிதா பரதந்த்ரன்

பிறந்து –
ஆவிர்பவிக்க லாகாதோ —பத்து மாசம் வயிற்றிலே இருப்பார்கள் ஆகில் பன்னிரண்டு மாசம்
வயிற்றிலே இருந்து பிறக்க வேணுமோ –
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்டவிறே —
பிறந்தான் -என்கை அவத்யம் -என்று பரிஹரித்தான் ரிஷி
அது தான் அவத்யம் என்று பிறந்தான் என்கிறார்கள்–
நம்முடைய கர்மம் நம்மோடு அவனை சஜாதீயன் ஆக்கும்
அவனுடைய கிருபை நம்மை அவனோடு சஜாதீயன் ஆக்கும் —
அவன் பிறவி நமக்கு என்று கோல –நம் பிறவி அவன் மாதா பிதாக்கள் காலில் விலங்கு பட்டது படும் —
நம் பிறவி -நம்மையும் அவனையும் அகற்றுகைக்கு உடலாய் இருக்கும்
அவன் பிறவி இருவரையும் அணுகுகைக்கு உடலாய் இருக்கும் –
சிறையர் சிறைக் கூட்டத்தில் பிணை உண்கைக்குப் புகும் –
நியாமகன் சிறைக் கூட்டத்தை விடுவிக்கப் புகும்
புகுகையிலே இத்தனை நெடுவாசி உண்டு
அவன் பிறந்தால் இவன் பிறவி தனக்குத் தட்டாமை யல்ல
நம் பிறவியைப் போக்கி நம்மை தன் போலே யாக்க வல்லனாய் இருக்கும்
ஜென்ம கர்மா ச மே திவ்யம் இத்யாதி

அஷ்டாஷரீ பிரதிபாத்யனாய்க்–குண விக்ரஹ விபூதி விசிஷ்டனாய்–அவதரித்து –

சம்சாரிகள் தண்மை—பிறந்த குழந்தையை இருக்க ஒட்டாமல் —நெய்யாடல் சோபனம் சொல்லாமல்
எண்ணம் சுண்ணம் -பெரியாழ்வார் அனுபவம் தானே–கூரியம் கொட்டி -வாத்திய கோஷம் இல்லாமல்
சர்வேஸ்வரன் இங்கே வந்தால் நம்முடைய கர்மம் அவனுக்கு சாம்யம் கொடுக்கும்–
அங்கே போனால் தன்னுடைய சாம்யம் கொடுக்கும் கிருபை
தம்மையே ஒக்க அருள் செய்வர்–இணைவனாம் எப் பொருள்களுக்கும் -முதல் பிரமாணம்–
தன்னையே ஒக்க அருள் செய்வர்
நம் பிறவி அவனை விட்டு நீக்கும்–அவன் பிறவி நம்மை அவன் இடம் கூட்டிச் செல்லும்
ஜன்ம கர்ம மே திவ்யம் அவதார ரகசியம் புனர் ஜன்மம் இல்லை–
அவன் பெற்றவர் காலில் விலங்கு பட்டது படும்

யசோதை அனுபவம் ரிஷிகள் யாரும் சொல்ல வில்லையே–
பெரியாழ்வார் -எல்லாம் தெய்வ நங்கை யசோதை பெற்றாளே-
தொழுகையும் இவை கண்ட யசோதை –தொல்லை இன்பத்து இறுதி கண்டாளே ––
பரமபதம் அந்தமில் பேர் இன்பம் பரிச்சின்னம் ஆனதே
எனக்கு யார் நிகர் -ஆழ்வார் —வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்ததும்–
வீங்கி இருள் வாய் பூண்டு அன்று அன்னை புலம்ப போய் அங்கு ஓர் ஆய்க்குலம் புக்கு–
காண்டல் இன்றி வளர்ந்தது -அந்தர்யாமி பட்டது படுகிறான் –
இரா மடம் ஊட்டுவாரை போலே உள்ளே கிடந்தது சத்தையை நோக்கி போகும்–
உன்னை அர்தித்து வந்தோம் –
உன்னிடம் வந்தோம் அல்லோம்
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னையே தந்த கற்பகம் –
ஆழ்வார்-அர்த்தி கல்பக ஆபத் சகன் -கதய த்ரயம் யாசகர்களை கல்பக மாக நினைக்கிறான் –

ஓர் இரவில் –
அவ்விரவிலே யசோதை பிராட்டிக்கும் பிள்ளையாக வேண்டுகையாலே-திருவாய்ப்பாடியிலே புக்கு –
நாய்க்குடலுக்கு நறு நெய் தொங்காதாப் போலே-
கம்சாதிகள் தன்மை ஸூ திகா கிருஹத்திலே-ஓர் இராத் தங்க ஒட்டிற்றிலை -என்கை –

ஓர் இரவு –
அவ்விரவை ஒக்கும் இரவு முன்பும் இல்லை பின்பும் இல்லை –
ஓர் இரவில் –
கால க்ருத பரிணாமம் இல்லாத தேசத்தில் வஸ்து-கால அதீனமான தேசத்தில் பிறப்பதே –
அவர்கள் தங்களோபாதியும் பெற்றிலன் -என்கை –
வேண்டி தேவர் இரக்க வந்து பிறந்து–வீங்கு இருள்வாய்–
அந்த இரவே நமக்கு தஞ்சம் -பிள்ளை உறங்கா வல்லி தாசர்

ஒருத்தி மகனாய் –
ஒருத்தி -இவனை மகனாய் பெற வேணும் -என்று ஆஸ்ரயிக்க-
அவளுக்கு அவதார ரசத்தைக் கொடுத்து-
இவளுக்கு லீலா ரசத்தை அனுபவிப்பித்த படி –
அந்ந வான் அந்நாதோ பவதி -இரண்டையும் உபநிஷத் சொல்லுமே —
அன்னம் கிடைக்கப் பெற்றவள் ஒருத்தி-தேவகி வசுதேவர்கள் /
அன்னம் புஜித்தவள் ஒருத்தி -யசோதை நந்தகோபர்கள் /
ஓர் அவதாரத்திலே யாதவ சஜாதீயனுமாய்-கோப சஜாதீயனுமாய் -ஆனபடி –
மகனாய்
பிறப்பில் புரை இல்லாதாப் போலே-இவள் மகனான இடத்திலும் புரை அற்று இருக்கை –
அவள் கரும்பின் கோதைக் கொண்டவோபாதி இவளும் கரும்பின் நடுவைக் கொண்டால் போலே இருக்கிறது –
கட்டவும் அடிக்க்கவும்படி -நியமிக்கப் படும்படி மகனாய் –
நந்தன் பெற்றனன்-என்னை கை பிடித்த -நல் வினை இல்லா -நாங்கள் கோன்-
மணி வாய் இடை முத்தம் தருதலும் நின் தாதையைப் போலே வடிவு கொண்டு-
தனக்கும் -வார்த்தை சொல்ல -வெகுளியாய் நின்று உரைக்கும்
மழலை சொல்லும்-பாக்ய ஹீனத்தால்-திருவிலேன் ஒன்றும் பெற்றிலேன்-
இசைந்து அம்மே என்றால் அடியேன் என்கைக்குக் கிட்ட இருக்கிறான் –

கும்குமு -வெண்ணெய்-திரண்டு வர —என்னது -பூதம் மிக -விழுங்கும்–
நான் விழுங்குவேன் முன்னம்–அம்மா நவநீதம் -போலே பூதம் இருக்கே –
நேர கேட்ட யசோதை–மந்த ஸ்மிதம் –
திருப் பிரதிஷ்டை பண்ணினவர்களில் காட்டிலும்–ஜீரணோத்தாரணம் பண்ணினவர்களே முக்கியர்-
ஈன்ற முதல் தாய் சடகோபன் -மொய்ம்பால் வளர்த்த இதத்தாய் இராமானுசன் –
இதனால் தான் இராமானுசன் தர்சனம் என்று பேரிட்டு நம் பெருமாள் நாட்டி வைத்தார் –

ஒளித்து வளரத் –
கம்சனுடைய விஷ திருஷ்டி படாமே வளர்ந்தபடி-நாட்டார் செய்வன செய்யப் பெறாதே–
கள்ளர் பட்டது படுவதே
திரு அவதரித்து இருக்கச் செய்தே அந்தர்யாமி பட்டது படுவதே –
உள்ளே இருக்கச் செய்தேயும் இவனில்லை என்று எழுத்திடுமவன்–முகம் காண சம்மதிக்குமோ -என்கை –
அந்தர்யாமியாய் மறைய நிற்கிறது -பிச்சேறின பிரஜை தாய் முன்னே நிற்கில் தாயைக் கொல்லும் –
அவள் பேர நிற்கில் தன்னை முடித்துக் கொள்ளும்-
அதுக்காக முகம் தோற்றாதே நின்று இரண்டு தலையையும் நோக்கும் மாதாவைப் போலே-
இசைந்து அம்மே -என்றால் ஏன் என்கைக்கு கிட்டே விருக்கிறபடி -என்றுமாம் –
பேர் சொல்லாதே ஒருத்தி -என்றது-அத்தத்தின் பத்தா நாள் -என்றவள் மகள் ஆகையாலே-
பயத்தாலே ஒளிக்கிறாள் –
அபிசரிக்கிலும் அதுவோ இதுவோ என்று சந்தேஹிக்கைக்காக –
ஒளித்து வளர
பிறந்த இடம்-வளர்ந்த இடத்திலும்–நாட்டார் போலே–பூதனை -போல்வார்–
அசுரர்கள் தலைப்பெய்யில் யவம் கொலாம் என்று ஆழும் என்னாருயிர் ஆன பின் போகல் -என்றும்
கண்ணா நீ நாளைத் தொட்டு கன்றின் பின் போகல் கோலம் செய்து இங்கே இரு -என்றும்
வானிடை தெய்வங்கள் காண -அந்தியம் போது அங்கு நில்லாய்-என்பவள் பிரதிகூலரை காண விடுவாளே-
கன்று பின் போகல்–சதா தர்சனம் பண்ணி அனுபவிக்க வேண்டிய வஸ்து–கள்ளர் பட்டது பட்டான்

லௌகிகர் அறியாத அத்விதீய காலத்தில் –
வாசுதேவ த்வாதச அஷரீ பிரதிபாத்யனாய் -குண விக்ரஹ விபூதி களாலே சங்குசித்து
ஸ்வரூப மாத்ரேண வளரா நிற்க –

ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்-ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்-
உபநயனம் -ப்ராஹ்மண ஜென்மம் கொடுக்கும் -ஸமாச்ரயணம்-
ப்ரபந்ந ஜென்மம் கொடுக்கும் -சடக்கென பண்ண வேண்டும் –

ஒருத்தி -திருக்கண்ணபுரம் அனுபவம் -ஸூ சகம்-
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் –
தாய் எடுத்த சிறு கோலுக்கு உளைந்து ஓடித் தயிர் உண்ட வாய் துடைத்த மைந்தன்-

ஒருத்தி மகனாய் –
வேண்டித் தேவர் இரக்க -திருவாய்மொழி -6-4-5-
இரண்டிலும் கண்ணன் தேவகி புத்ரனாய் அவதரித்ததும் -யசோதை புத்ரனாய் வளர்ந்ததும் –
கஞ்சனைக் கொன்றவாற்றையும் ஒரே க்ரமத்தில் அனுபவித்தார்கள்-
பிறந்தவாறும் வளர்ந்தவாரும் -திருவாய்மொழி -5-10-1-
இரண்டிலும் பிறந்தவாற்றையும் வளர்ந்தவாற்றையும் அனுபவம்-

தரிக்கிலானாகித் –
கிருஷ்ணன் வளரா நின்றான் -என்று கேட்ட பின்பு அவன் தரிக்க மாட்டிற்று இலன் –
ஈஸ்வர சத்தையையும் பொறாத ஆஸ்ரயம் இறே –
ஸ்வரூப மாத்ரேண-ஈஸ்வர சத்தையையும் பொறாதவனாய் –

தான் தீங்கு நினைந்த –
பயத்தாலே பரிந்து மங்களா சாசனம் பண்ணும் விஷயத்தில் தீங்கு நினைத்தது -துஷ் பிரகிருதி யாகையாலே
தான்
உத்தர ஷணத்திலே படப் புகுகிற பாடு அறியாத தான் –
தான் –
அஹங்காரம் காட்ட–தான் தீங்கு நினைந்த கஞ்சன்
தான்-போலும் என்று எழுந்தான் தரணி யாளன் -கோன் போலும் என்று எழுந்தான் ராவணன் வார்த்தை என்று கேட்டு பட்டர்
தீங்கு நினைந்த –
தங்கள் வாயாலே சொல்ல மாட்டாமையாலே -தீங்கு என்கிறார்கள்
அதாவது
பூதனை உள்ளிட்டாரை வரக் காட்டியும்-வில் விழவுக்கு என்று அழைத்து நலியத் தேடின படி –
உன்னை சிந்தையினால் இகழ்ந்த இரணியன்–நெஞ்சில் பொல்லாங்கு என்று அறிய கை தொட்டு அளைந்து
அளந்திட்ட தூணை உளம் தொட்டு -ஹிருதயத்தில்–கை கொள்ளும் இடத்தில் மித்ர பாவேனே -போதுமே
சாது சனத்தை நலியும்–தீய புந்தி கஞ்சன்

கருத்தைப் பிழைப்பித்துக் –
பூதனை முதலானோர் நலிவுகளைப் பண்ணப் புக —அத்தைத் தப்பி தன்னை நமக்குத் தந்தபடி –
அவன் நினைவை அவன் தன்னோடு போம்படி பண்ணி -என்றுமாம் –
நூற்றுவர் மேல் வைத்து–அசுரர் தீ செய் குந்தா–அனுமான் -வாலில் நெருப்பு ஜில்–ஜனகதாமஜா சோக வயிற்று நெருப்பு
தேவகி வயற்றில் பிள்ளை–அண்ணன் வயிற்றில் நெருப்பு–கஞ்சன் –நெருப்பு கரு முகில் எந்தாய் -தேவகி வயிற்றில் நீர்
கம்சன் -கண்ட காட்சியில் -பாபம் கழிய நின்ற நிலை —வெந்நரகம் சேரா வகையே சிலை குணித்தான் இதுவே நரகம்
இப்படி சொன்னவரை பார்க்க வேண்டும்–நஞ்சீயர் மடலும் தமிழும் முன்பே தெரியும்

கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற –
கம்சன் அநாதி காலம் சஞ்சிதமான பாபம் இத்தனையும்-கண்ட காட்சியிலே அனுபவித்து அறும்படி நின்றவன்
ஆஸ்ரிதர் வயிற்றில் நெருப்பை கம்சன் வயிற்றில் கொளுத்தினவன் என்கை- –

தீங்கு -திருப்பாவை -25
பொல்லா -திருப்பாவை -13
இன்னது என்று சொல்ல மாட்டாமையாலே தீங்கு பொல்லா என்கிறார்கள்
இராவணன் பொல்லாங்குக்கு பாசுரம் இட்டு சொல்ல முடியாமல் -பொல்லா -என்னும் அளவே சொல்கிறார்கள்
கம்சனுடைய தீமையும் வாசாம் அகோசரம் -என்றபடி

தான் தீங்கு நினைந்த -திருப்பாவை -25
உன்னைச் சிந்தையினால் இகழ்ந்த -திருவாய்மொழி -2-6-6-
நினைந்த -மனஸ் சஹ காரம் உண்டாவதே
உக்தி மாதரமான அளவில் நலியாதே நெஞ்சில் பொல்லாங்கு சோதித்தால் ஆய்த்து கை விடுவது –
கைக் கொள்ளும் இடத்து கழுத்துக்கு மேலும் அமையும் –
கைவிடும் இடத்தில் அக வாயிலும் உண்டு என்று அறிந்தால் அல்லது விடான் –
அவன் விடுவது புத்தி பூர்வம் பிரதி கூல்யம் பண்ணினவரை
கைக் கொள்ளுகைக்கு மித்ர பாவம் அமையும் –

நெடுமாலே –
இது எல்லாம் பட வேண்டிற்று –ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமோகத்தால் -என்கை –
அப்போது ஸ்ரீ வசுதேவர் பக்கலிலும் ஸ்ரீ தேவகியார் பக்கலிலும்-திரு உள்ளம் மண்டின படி என்றுமாம் –
அவளுக்கு முலை சுரவா நின்றாது ஆகில் –இவள் அழுது முலை உண்ணா நின்றான் ஆகில்
உமக்கு என்ன -சேதம் விசாரம் பட்டர் நஞ்சீயர்

அநவரதம் மங்களா சாசனம் பண்ணக் கடவ விஷயத்திலே–அவனால் ஒரு உபத்ரவம் உண்டாய்
பொல்லாமையை நினைக்கை அன்றிக்கே —தானே–த்வேஷத்தை நினைந்த அபிப்ராயத்தை வ்யர்த்தமாக்கி
அஹங்காரத்தின் உடைய வயிற்றிலே–நெருப்பைக் கொளுத்தினாப் போலே ஜ்வலித்து-
அவன் அருகே நின்ற ஸ்வ சேஷ பூத சேதன விஷய–வ்யாமோஹ அதிசயத்தை உடையவனே –

உன்னை –
அர்தித்வத்தில் நிரபேஷனான உன்னை –ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் இரப்பாளனாய்
இவ்வளவும் வந்தது ஆர் அபேஷித்து –
நெடுமாலே உன்னை அர்தித்து வந்தோம் –
பண்டே வ்யாமுக்தனான உன்னை அர்த்திக்கையாலே–பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம் –
அர்த்தித்தின் அளவு எங்கள் வடிவைப் பார்க்க அமையும் –
பிறந்து காட்ட வேண்டாம்–
வளர்ந்து காட்ட வேண்டாம்–
கொன்று காட்ட வேண்டாம்–
உன்னையே -கேட்டு வந்தோம்
உன்னுடன் கேட்டு வேறு பிரயோஜனம் பெற வர வில்லை–
அர்த்தித்து–
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கு தன்னை தன்னை தந்த கற்பகம்

பறை தருதியாகில் –
எங்களுக்கு உத்தேச்யம் செய்குதியாகில்-நீ புருஷார்த்தத்தை கொடுப்பாயாகில்
ஆகில் -என்றது
நம்முடைய அர்த்தித்வாதிகள் அப்ரயோஜகம் –அவன் நினைவாலே பலம் என்கை –பொது நின்ற பொன் அம் கழல் சடாரி
உன் அழகாலே பிழைப்பியாதே செய்தருளப் பார்ப்பாயாகில் -என்னவுமாம் –
அவன் நினைவே பல சாதனம்–இவன் எல்லாம் செய்தாலும்–
அவன் அல்லேன் என்ற வன்று ஸ்வ தந்த்ரனை வளைப்பிட ஒண்ணாதே
ஆகையால் தருதியாகில் -என்கிறார்கள்–
எத்தனையேனும் மேலானவர்களை எத்தனையேனும் தாழ்ந்தவர்கள்
திரு உள்ளம் ஆகில் செய்து அருள வேணும் -என்று இறே சொல்வது

திருத் தக்க செல்வமும் –
ஸ்ரீய பதித்வத்தால் வந்த சம்பத்தையும் —
பிராட்டி ஆசைப் படும் சம்பத் -என்னவுமாம்
பெரிய பிராட்டியாருக்கு தகுதியான-ஸ்வரூப ரூப குண விக்ரஹ விபூதி -விசிஷ்டனாய் இருக்கிற செல்வத்தையும் —
உன் தன்னோடு உற்றோமே ஆவோம் இதுவே உத்தேச்யம் சிற்றம் சிறு காலில் சொல்வோம்
திருத் தக்க செல்வமும் -சம்ப்ரதாயம் திரு ஆராதனம் -திருத் துழாய் -திரு மடப்பள்ளி –
திரு சப்தம் சொல்லாமல் சொல்லி திருடன் வர டன் வந்தான் -கதை –திரு மால் உரு ஒக்கும் மேரு —
அம் மேருவில் செஞ்சுடரோன் –சின்னமே பிதற்றவே நிற்பதோர் -திருமால் -எங்கே வரும் தீவினையே ஆழ்வார் –
ஸ்ரீ மத் ருக்மிணி பிராட்டி திருக் கல்யாணம் பர்யந்தம் ஸ்ரீ மத் பாகவதம் -பூர்ண அவதாரம் அன்றோ –

சேவகமும் –
அத்தை காத்தூட்ட வல்ல வீரியமும்-வீர சரிதையையும்
செல்வமும் ஆற்ற படைத்தான் மகனே செல்வம் —சேவகமும் -கப்பம் தவிர்க்கும் கலியே -வீரம்

யாம் பாடி –
உன் பேர் சொல்லப் பெறாத நாங்கள்–உகப்போடே அத்தைச் சொல்லி -அதுவே தாரகமான நாம் பாடி –

வருத்தமும் தீர்ந்து –
உன்னைப் பிரிந்து படும் துக்கமும் தீர்ந்து–பிரிந்தார் படும் பாடறிய–உன்னை நீ பிரிந்து அறியாயே –

மகிழ்ந்து –
உம்மைத் தொகையால் கைவல்யம் போலே துக்க நிவ்ருத்தி மாத்ரமே அன்றி–ப்ரீதிக்கு போக்கு விடும்படி யாக வேணும்-
உன்னைப் பிரிந்து பட்ட வ்யசனம் எல்லாம் நிஸ் சேஷமாக தீர்ந்து -ஆனந்திக்கக் கடவோம் –

வருத்தம் தீர்ந்து–மகிழ்ந்து–
கேவலர் போலே இல்லை–அநிஷ்ட நிவ்ருத்தி வியாதி போக்க–இஷ்ட பிராப்தி அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம்
ப்ரீதிக்கு போக்கு வீடாக பாடுவது ஆனந்தம்–நினைந்து இருந்தேன் சிரமம் தீர்ந்தேன் –
வருத்தம் தீர்ந்து–உகந்தென் என் உள்ளம் -மகிழ்ந்து –
சாதனமே பலம் -இங்கு-அனுசந்தானம்–தூய அமுதை பருகி மாய பிறவி மயர்வு அறுத்தேன்–
வருத்தம் தீர சேவகம் பாடி–மகிழ-வீவில் இன்பம்
அபிமத சித்தி உண்டானதே –

சேவகமும் யாம்பாடி–வருத்தமும் தீர்ந்து–மகிழ்ந்து–உன்னை அருத்தித்து வந்தோம் -என்று அந்வயம் –
மகிழ்ந்திடுவோம் என்றது ஆயிற்று-

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து –
திருத்தக்க செல்வமும் –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் -எம்பெருமானார் -பிராட்டி ஒத்த செல்வம் -எம்பெருமான் அடி சேர்ப்பிக்கை
சேவகம் -பரதவ சௌலப்யம் இரண்டையும் பாடி–பாங்கு அல்லர் ஆகிலும் திருத்திப் பணி கொண்டு
இராமுனுஜா இம் மண் அகத்தே இருத்தித் திருமகள் கேள்வனுக்கு ஆக்கிய பின் –
பணி மானம் பிழையாமே யடியேனைப் பணி கொண்ட –
திருமால் தலைக் கொண்ட நங்கட்கு எங்கே வரும் தீ வினையே
திருவுக்கும் திருவாகிய செல்வன் -சுவையன் திருவின் மணாளன்
பரம ரசிகன் இந்த ரசிகத்துக்கு ஊற்று வாய் சொல்கிறது
மேல் திருவின் மணாளன் என்று-பெரிய பிராட்டியார் அகலகில்லேன் இறையும் என்னப் பிறந்தவன்

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து —
வருத்தம் -ஐஸ்வர்யம் –வருத்தமும் -கைவல்யம் தீர்ந்து பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் –
அவதார ரஹஸ்யம் -ஜென்மம் கர்மம் -மகனாய் -பிறந்து -மகனாய் -ஒளித்து வளர்ந்தது அறிந்து -அந்தர்யாமி பட்டது பட்டு –
புனர் ஜென்மம் அற்று என்னை அடைகிறான் -கீதா உபநிஷத் அர்த்தம் இதில்
புருஷோத்த வித்யையாலும் -பக்தி யோக நிஷ்டனுக்கு இந்த இரண்டும் உண்டே –
நெடு மால் இதில் -மால் -அடுத்து -அவா அற சூழ்வானே
உன்னை அர்த்தித்து வந்தோம் -உன்னிடத்தில் இல்லை -உன்னையே பலமாக கேட்டு வந்தோம் /
இத்துடன் ஐ ஐந்து முற்றி அடுத்து ஐந்தும் –
சாம்யா பத்தி- சாயுஜ்யம்- சரணாகதி-அதுக்கு பலம் அடுத்த நான்கு பாசுரங்கள்-
ஐந்தாவதில் தானான பாசுரத்துடன் நிகமிக்கிறாள்

நெடுமால்–அச்யுத பதாம்புஜ யுகம ருக்ம வ்யாமோஹத
நித்ய கைங்கர்ய அபேஷை 16 தடவை கத்ய த்ரயம்-
மெய் தானா -ராமோ த்வைய இரண்டாவது வார்த்தை பேசாதவன்-
இது மயைய உக்தம் நித்ய கைங்கரோ பவோ-உற்றோமே ஆவோம் உனக்கே ஆட் செய்வோம்-

நாராயணனே நமக்கே பறை தருவான் -உபக்ரமம் -இதில் உன்னை அர்த்தித்து வந்தோம் -பிரார்த்தித்து இறைஞ்சி –
பறை தருதியாகில் -பிரார்த்தனையை அபேக்ஷித்து இருப்பானா -வியாபாரம் இல்லையே –
கேட்டதற்காக கொடுக்க வில்லை -கேட்ட பின்பு கொடுப்பான் -பசி சாப்பிட காரணம் இல்லை –
கால தத்வம் உணர்த்த ஸ்ருஷ்ட்டி -காலதத்வம் அசித் வர்க்கம்-ஸ்ருஷ்டிக்கு காரணம் இல்லை –
கிருபை உந்த தானே ஸ்ருஷ்ட்டி –
இதுவரை அர்த்தித்து வராமை எங்கள் குற்றம் –
இங்கு ஆகில் -சங்கை எதனால் -மாரி யார் பெய்கிற்பார் -ஏரி வெட்டி வைப்பதே கர்தவ்யம் –
அர்த்திதார்த்த பரிதாக்ஷர தீஷிதம் கொண்டுள்ளான் –
ஒருத்தி -இங்கே கௌசல்யா ஸூப்ரதாரம் அங்கும் –
அஷ்டாக்ஷரம் –பிறந்த கண்ணன் –துவாதச அக்ஷரம் -வா ஸூ தேவ மந்த்ரம் -12-ஆக வளர்ந்து –
அவனே இவன் என்று தெரியாமல் ஒளித்து -வளர்ந்து
ஷட் அஷரி விஷ்ணு நடுவில் விட்டு விட்டு
ரிக் -சாமம்-திரு விருத்தம் பிறந்து -மறைந்து -திருவாய் மொழி -11-பாசுரமாக வளர்ந்து -அனைவரும் அறியாமல் ஒளித்து –
திரு விருத்தம் -திரு வாசிரியம் -பெரிய திருவந்தாதி இம் மூன்றில் சுருக்கிய ஐந்தும் –
அர்த்த பஞ்சகமும் வளர்ந்து -திருவாய் மொழியிலே – உண்டே – என்றுமாம் –
அர்த்த பஞ்சகம் அஹங்காராதிகள் அறுத்த பஞ்சகம் -கந்தல் கழிந்தால் கௌஸ்துபம்
அர்ச்சாவதாரம் என்றோ -இன்று வளர்ந்து பரவி -சர்வான் தேவன் நமஸ்க்ருதி பெருமாளுக்கு /
தங்கள் திருக் கோயில் சங்கிடுவான்- கிருஷ்ணுக்கும் உண்டே
வெற்பு என்று வேங்கடம் பாடும் -நாயகி பாவம் பிறந்து -கீழில் மேலில் இல்லை -நிழலாடி இதில்
மேலே வளர்ந்து தோழி தாய் மகள் அவஸ்தைகள்
அகாரம் –சம்பந்தம் உபாயம் உபேயம் -அனைத்தும் -பிரணவமாக வளர்ந்து -நமஸ் -நாராயணா -த்வயம் சரம ஸ்லோகமாக வளர்ந்து
அகாரம் -நாராயண -ஸ்ரீ யபதி -மாம் -தொட்டு உரைத்த சொல்–த்வ்யத்தின் ஆழ் பொருள் –
அஹம் -இப்படி ஒளித்து வளர்ந்து -வியக்தமாக விஸ்திருதம் –
ப்ராப்ய நிஷ்கர்ஷம்-எம்மா வீட்டில் –வாசிக கைங்கர்யம் புகழும் நல் ஒருவன் என்கோ -வளர்ந்து ஒழிவில் காலம்
நாராயணன் -அஷ்டாக்ஷரம் / கண்ணனாக வளர்ந்து வாஸூ தேவன் –
ஆனைத்தாலி கொழுமோர் -கொடுத்து ரஷிக்கும் படி ஒளித்து வளர்ந்து

திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து என்னுமா போலே
ஓர் இரவில் ஒளித்து வளர – யாதவ பிரகாசர் -கங்கா யாத்திரை -விந்தியாடாவியில் ஒளித்து
ஓர் இரவில் சத்ய வ்ரத க்ஷேத்ரம் வந்த வ்ருத்தாந்தம் ஸூஸிதம்
தரிக்கிலானாகி தீங்கு நினைத்த யாதவ பிரகாசர் இடம் தப்பித் போம்படியும் -அவனையும் உஜ்ஜீவிப்பித்து அருளிய படியும்
நெருப்பு அன்ன நின்ற நெடுமால் -கோபிகள் பாயாக்னியை கொண்டே கம்சன் வயிற்றில் நெருப்பாக நின்றானே
அப்படியே இராமானுசன் இத்தலத்து உதித்து –இறந்தது வெங்கலி –கலியும் கெடும் கண்டு கொண்மின்

ஏதேனும் இப்பிரவ்ருத்திக்கு ஒரு பிரதி பந்தகம் உண்டே யாகிலும் நீயே போக்கி
எங்கள் துக்கம் எல்லாம் கெட விஷயீ கரிக்க வேணும் என்கிறார்கள் –
ஸ்வரூப லாபத்தோ பாதி துக்க நிவ்ருத்தியும் தத் ஆஸ்ரயணத்தாலே -என்கிறது –
இத்தால் ஸ்வரூப லாபம் அத் தலைக்கே கூறானவோபாதி துக்க நிவ்ருத்தியும்
அத்தலைக்கேயாம் என்னும் இவ்வர்த்தம் சொல்லுகிறது –

——————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: