திருப்பாவை சாரம் – அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி –– —

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –

தங்கள் அபேஷித்த படியே செய்தருளக் கண்டு வந்த கார்யத்தை மறந்து அத் திருப்பள்ளி யறையில் நின்றும்
திவ்ய சிம்ஹாசனத்தளவும் நடக்கிற போதை நடை அழகுக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –
அவன்-திருப் பள்ளி அறையில் நின்றும் திவ்ய ஆஸ்தான மண்டபத்துக்கு எழுந்து அருள
அந்நடை அழகிலே ஈடுபட்டு-வந்த கார்யத்தை மறந்து மங்களாசாசனம் பண்ணுகிறார்கள் –
காணும் அளவு இறே -அது வேணும் இது வேணும் -என்பது
கண்டால் அவனுக்கு பரியும் இத்தனை இறே-

யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் முந்திய பாசுரம் –
கீழே 8 பாசுரம் -தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் ஆவா என்று ஆராய்ந்து அருள்–
கிருபை செய்து அருள சித்தம்
எங்கள் கார்யம் நீங்கள் செய்கிறீர்களே ரிஷிகள் இடம் பெருமாள் ஷமை கேட்டது போலே-
பேற்றுக்கு த்வரிக்கையும் பேறு தப்பாது என்று
இங்கு நாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள –
பிரயோஜனாந்த பரர்கள் அன்றே -–அநந்ய பிரோஜனம் -அநந்ய-இரண்டும்
பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் வேண்டாமே –பெரியாழ்வார் பரிகரங்கள் என்று அறிந்து கொண்டார் –
சுதர்சன பட்டர் ஸ்ரீ ராம பட்டர் பேரன்-சிநேகம் அஸ்தான பய சங்கை சம்பந்த விசேஷம்-
ப்ரீதி-சிநேகம் -பரிச்சயம் -சாமான்ய பதம்-
சிநேகம் உயர்ந்த பதம்-குன்றனைய குற்றம் செய்யினும் குணம் கொள்ளும்-
அவத்தங்கள் விளையும் -ஆ பின் போகேல் -நம் ஆழ்வார்-
ஸ்நேகாது அஸ்தானே ரஷண சார்ங்க -சங்கு உறகல் உறகல்-

தங்கள் மநோ ரதங்களை மறந்து தண்ட காரண்ய வாசிகள் போலே-
அயோத்யாவாசிகள் தேவதைகள் உட்பட பிராத்தித்தால் போலேயும்
சக்கரவர்த்தி பரசுராமன் இடம் பிரார்த்தித்தால் போலேயும்-
ஸ்ரீ கௌசல்யையார் மங்களா சாசனம் செய்தால் போலேயும்
வசுதேவர் தேவகி கண்ணன் சங்கு சக்கரங்களை மறைக்க வேண்டினால் போலேயும்–
வஸ்துவில் உள்ள ஆதாராதிசயம் தூண்ட-மங்களா சாசனம்

மங்களா சாசனத்தின் மற்று உள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்து அளவு தானன்றி பொங்கும்
பரிவாலே வில்லி புத்தூர் பட்டர் பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர்

ஆதலால் அபயம் என்று -பொழுததத்தே அபய தானம் ஈதலே கடப்பாடு கம்பர் பட்டர் சிஷ்யர்
இயம்பினார் என் மேல் வைத்த காதலால் —பிரேமத்தால் ஆஷேபித்தீர்கள் –
ஆங்கு ஆராவாரம் அது கேட்டு –அழல் உமிழும் பூம் கார அரவணையான் –
ஹாவு ஹாவு ஹாவு -சாம கானம் கேட்டு-

நப்பின்னைப் பிராட்டியோடே கூடி திவ்ய ஸிம்ஹாஸனத்திலே இருந்த இருப்பிலே
சாத்தி அருளின அத்தவாளந்தலை மேலே பறக்க
திருவடிகளைக் கண்டு அத் திருவடிகளைத் திரு முலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொண்டு
உன் சேவடி செவ்வி திருக் காப்பு -நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்கிறார்கள் –
அர்த்திகளாய்ச் சென்றாலும் தந்தாமுடைய புருஷார்த்தத்தை விஸ்மரித்து
மங்களாசாசனம் பண்ண வேண்டும்படியான விஷய வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது –
அப்படியே செய்கிறோம் -என்று ப்ரதிஜ்ஜை பண்ணின படியைக் கண்டு -தாங்கள் வந்த காரியத்தை மறந்து –
தத் காலீநமான அழகிலே ஈடுபட்டு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்

வியாக்யானம் –

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி —
அன்று –
தன் விபூதியை மகாபலி அபஹரிக்க நோவு பட்டு இருக்கிற அன்று–
தன்னைப் பிரிந்து நாங்கள் ஆர்த்தியால் நோவு பட்ட இன்று –
ஜகத்தை மகா பலி யினுடைய அபிமானத்தின் நின்றும் மீட்ட அன்று –
எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தின் நின்றும் மீட்ட இன்று –
நாட்டுக்கு எல்லாம் தன் திருவடிகளை தூளிதானம் பண்ணின அன்று–
அழகையும் சீலத்தையும் எங்களுக்கு தூளிதானம் பண்ணின இன்று-
இது இறே ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் சாம்யம்

இவ் வுலகம் அளந்தாய்-
பிராட்டிமார் பூ தொடுமா போலே கூசிப் பிடிக்கும்-திருவடிகளைக் கொண்டு–
காடும் ஓடையும் அகப்பட அளப்பதே -என்கை –
அன்று எல்லை நடந்து மகாபலி பக்கல் நின்றும்–பூமியை மீட்டுக் கொண்டால் போலே
நடை அழகைக் காட்டி விச்லேஷத்தின் நின்றும்–மீட்டுக் கொண்டான் -என்கை –

யடி போற்றி-
தாங்கள் சொல்லும் அளவில் புறப்பட்டு–ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு–உலாவி அருளின படி –
திரு உலகு அளந்து அருளின ஆயாசம் போரும் என்று மங்களா சாசனம்–பண்ணுகிறார்கள்
திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இறே இட்டது —
இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே –
திரு உலகு அளந்து அருளின அன்று–
இந்த்ரன் பிரயோஜனத்தை கொண்டு போனான்
மகா பலி ஔதார்யம் பெற்றுப் போனான்–
தாங்கள் அன்று உதவப் பெறாத இழவு தீர–திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் என்றுமாம் –

அடி போற்றி –
உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்னுமவர்கள் இறே-
நடந்த சரித்ரமே -ஆழ்வார் நடந்தார்க்கு இடம் நீர் மலையே -கோவல் நகர் நடந்தானா அளந்தானா –
நடந்த கால்கள் நொந்தவோ -வயிறு பிடித்து-தாளால் உலகம் அளந்த அசைவோ கொல் -வாளாது –
மடியாது -அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ இப்படி -படியாய் -திருக் கோளூர் பாசுரம்
அது மூன்று அடி–
இது நாலடி பரிவின் கார்யம்–உலவி அருளினது —என்றைக்கோ நடந்த -கதே ஜலே சேது பந்தம் -இன்று மங்களா சாசனம்
வடிவு அழகையும் சீலத்தையும் தூளி தானம் பண்ணி பூரணமாக —பட்டுப்பையுடன் ஆபரணம்
பசும்பொன் தூள் இருக்குமே -இவ்வுலகம் காடும் ஓடும் காடின்யம்-இருப்பார் வன்மை -இவ் உலகம்
சீல வயோ வருத்தங்களால் -துல்யர் என்று கவி பாட வல்ல -பிராட்டி மான் தோலால் மறைத்து –
பிராட்டி கடாஷம் -ஐஸ்வர்யம் பறித்து கொள்ள முடியாதே–அவளும் கடக்க நிற்கும் படி
வடிவு இணை இல்லா மலர் மகள் நில மகள் எடுத்து கழிக்க முடியாத பூமி பிராட்டி
கூசிப் பிடிக்கும் மெல்லடி கொண்டு–இவ் வெவ்விய உலகம் வ்யாபரிப்பது-உகக்கவும் கூட அறியாத பூமி –
கொண்ட கோல குறள் உருவாய் –பண்டு கொண்ட முன் -மூன்று சப்தங்கள்-கொண்ட கோலம் –
இவனே நினைத்தாலும் கொள்ள முடியாத கோலம் யாசிக்க நினைத்த பொழுதே
திருமேனி சுருங்கி-கொள்ள வேணும் என்று
அவனே நினைத்தாலும் அப்படி கொள்ள முடியாத அழகு–பிரமாணாதித்தார் பெற்ற பேறு –
அடி போற்றி அக்காலத்தே சிலர் இழவு உடன் போனார்கள் -மகாபலி
என் அப்பன் அறிந்திலன் என்றார் சிலர் -நமுசி -வானில் சுழற்றிய–சிலர் பிரயோஜனங்கள் கொண்டு போக
பரிவுக்கு ஆள் இல்லை என்று இவர்
அடி போற்றி திசை வாழி எழ –
எழுவார் -பொருள் -வாங்கி -போற்றி எழுவார் -விடை கொள்வார் -வழுவா வழி நினைந்து வைகல் தொழுவார்

போற்றி –
மன்னன் தேவர் -மாயக் கூத்து கண்டு மகிழ்ந்து–செவ்வடி -அடி போற்றி குடி வழக்கம்
திரு உலகு -சென்னி மேல் ஏறக் கழுவினான் -ஐஸ்வர்யம் ஆன செயல்கள் -அங்கே நின்று ஈரடியால்
ஒன்றே -நிலம் முழு தாக என்னை இங்கே அளந்தது-என்னடா நீ அளக்கிறாய் -ஆழ்வார் கேட்கிறார் –
அடுத்த அடி வைக்க வேண்டி இருந்தது இல்லை -அடுத்த சரித்ரம் நினைந்தது
இரண்டாம் அடியில் தாவடி இட்டு-வருத்தமற செய்தான்
ஜாம்பவான் -பறை-
பிரகிருதி சம்பந்த நிபந்தனமான அஹங்காரம் ஜகத்தை ஆக்ரமித்த அன்று –
அஹங்கார க்ரஸ்தமான இந்த லோகத்தை
அஹங்காரத்தின் நின்றும் மீட்டு தன் திருவடிகளாலே அளந்து தனக்காக்கிக் கொண்டவனே –
உன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் –

சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
அழகுக்கு இலக்கு ஆகாதாரை–அம்புக்கு இலக்கு ஆக்கின படி –
சென்றங்கு –
புலி கிடந்த தூற்றிலே செல்லுமா போலே–பிராட்டியைப் பிரித்த பையல் இடத்தே செல்லுவதே –
சென்று –
வழிப் போக்கிலே -கர கபந்த விராதாதிகளை–அழியச் செய்தபடி -என்றுமாம் –
அங்கு –
நின்ற விடத்தே நின்று–பூ அலர்ந்தாப் போலே அனாயாசேன அளந்த–அளவன்றிக்கே
கானகம்படி உலாவி உலாவி -என்னுமா போலே–கொடிய காட்டிலே அந்த திருவடிகளைக் கொண்டு நடப்பதே -என்கை
எவ்வாறு நடந்தனை -என்று வயிறு பிடிக்கை–இவர்களுக்கு குடிப் பிறப்பு –
ராமவதாரம் தேவத்வம் கலவாத படி-
நாராயணோ தேவ மானுஷ்யம் மன்யே ராமம் தசரதாத்மஜம் சஸ்திர அஸ்த்ர பட உலவி –
சென்று –
மூவடி சென்ற இடம் அழகுக்கு -பூ அலர்ந்தால் போலே -இங்கு சென்ற திருவடி
தென்னிலங்கை-
அழகியதான கோட்டையையும் அரணையும் உடைத்தாய்–
குழவிக் கூடு கொண்டாப் போலே–ஹிம்சிகர் சேர்ந்த தேசம் –
செற்றாய் –
ஆஸ்ரித விரோதிகள் தனக்கு சத்ருக்கள் -என்கை
திறல் போற்றி
மதிளுக்கு மதிள் இடுமா போலே–மிடுக்குக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்னும்–அவர்கள் ஆகையாலே–குடிப் பிறப்பாலே வந்தது –
இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதும் -என்னுமவர்கள் இறே-

இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்ட அளவு அன்றிக்கே
அந்த அஹங்காரத்துக்கு பிறப்பிடமான இடத்தே சென்று –
தர்ச நீயமான பிரகிருதி சம்பந்த நிர்வாஹகமான அஹங்காரத்தை அழித்தவனே-
உன்னுடைய பராவிபவன சாமர்த்தியத்துக்கு பல்லாண்டு –

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி-
ராவணனைப் போலே -விரோதி என்று –இறாய்க்க ஒண்ணாத அபாயம்-
பொன்ற
மாரீசனைப் போலே குற்று உயிர் ஆக்கி மேல் –அநர்த்தம் விளைக்க வையாதே -முடிக்கப் பெற்ற படி –
புகழ் போற்றி –
தாயும் கூட உதவாத தசையிலே-அனாயாசேன திருவடிகளாலே சகடாசுரனை அழித்த புகழ் –
போற்றி –
ராமாவதாரத்தில் காட்டில் மிகவும் அதிகமாக மங்களா சாசனம் பண்ண வேண்டி இருக்கை –
ராமாவதாரத்துக்கு பிதா -சம்பராந்தகன் -ஊர் -திரு அயோத்யை-புரோஹிதர் -மந்த்ரவாதிகளான வசிஷ்டாதிகள் –
பிள்ளைகள் -ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்தவர்கள் –குணவான்களும் பிள்ளைகள் –
இங்கு மாதாபிதாக்கள் -சாது இடையர்–ஊர் இடைச்சேரி–கம்சாதிகள்
எதிரிகள் ஸ்ரீ பிருந்தாவனத்திலே முளைத்து எழும் பூண்டுகள் அடைய ராஷசர்கள்–
தமையன் ஒரு ஷணம் தப்பில் பாம்பின் வாயிலே விழும் தீம்பன் –
பூதனாதிகளாலே பிறந்த அபாயங்களுக்கு ஒரு அவதி இல்லை-
ஆன பின்பு இனி மங்களா சாசனம் ஒழிய காவல் இல்லை –

காம குரோதங்களை–ஸ்வரூபேண நசிக்கும்படி -உன் திருவடிகளாலே உதைத்தவனே —
உன்னுடைய யசஸ்ஸுக்கு பல்லாண்டு –

கன்று -இத்யாதி –
சத்ருவை இட்டு சத்ருவை எறிந்தால்–சங்கேதித்து வந்து இருவரும் ஒக்க
மேல் விழுந்தார்கள் ஆகில் என் செய்யக் கடவோம் -என்று வயிறு பிடிக்கிறார்கள் –
குஞ்சித்த-மடித்த – திருவடிகளுக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –
கன்று குணிலா –
கன்றை எறி தடியாக–குணில் -எறிதடி-கரம் போற்றி என்னாமல் அடி விடாதவர்கள் ஆகையாலே
கழல் போற்றி என்கிறார்கள் –
லோபத்தை எறிதடியாக எறிந்து நசிப்பித்தவனே – உன்னுடைய குஞ்சிதமான திருவடிகளுக்கு பல்லாண்டு –
எறிவதாக இச்சித்து நடந்த போது–குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலையும்–
அகவாயில் சிகப்பையும் கண்டு காப் பிடுகிறார்கள்
அடி போற்றி கழல் போற்றி–நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும்–
சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள்-

கன்று குணிலா எறிந்தாய் –
விளங்கனிக்கு எறிந்த விஷயம் அஸ்பஷ்டம்
கன்று கொன்று விளங்கனி எறிந்து -கலியன் -9-10-7-அஃது ஸ்புடமாகிறது இதில் –

இவ்வளவில் பிரதிகூலர் விஷயத்தில் செய்யும் அம்சத்தைச் சொல்லிற்று –
இனி அனுகூலர் பிரதி கூலித்தால் செய்யும் அம்சத்தைச் சொல்லுகிறது –

குன்று இத்யாதி –
இதுக்கு முன்பு இந்தரனுக்காக செய்த செயல் —
இப்போது அவன் தான் பகையான படி —மலையைக் குடையாக எடுத்து
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தைப் போக்கின படி —
அனுகூலன் பிரதி கூலித்தால் செய்யலாவது இல்லை இறே-
குணம் போற்றி –
பசி க்ராஹத்தாலே கை ஓயும் தனையும் வர்ஷிக்க–மலை எடுத்துக் கொண்டு நின்ற ஆன்ரு சம்சய குணத்துக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
தன்னுடைய ரஷ்ய வர்க்கத்தை மலையை எடுத்து நோக்கின குணம் -உண்பது கொண்டால்
உகிர் கொண்டு தலையை அறுக்கவோ -என்று மலையை எடுத்த ஆந்ரு சமசய குணம்-
இந்த்ரன் சிலா வர்ஷம் வர்ஷித்த போது–பர்வதத்தை குடையாக கொண்டு–
கோ கோப ரஷணம் பண்ணினாப் போலே –
அஞ்ஞான கார்யமான அஹங்காரம்–இவ் வதிகாரிக்கு விஷய ப்ராவண்யத்தை உண்டாக்குவதற்கு-பிரதி கிரியையாக
வைதிகமாய் கைங்கர்ய ரூபமான–விஷய ப்ராவண்யத்தை உண்டாக்கி–
ஸ்வ பிரபன்ன ஜன ரஷகனாம்படியைச் சொல்லுகிறது –
ஆக இப்படி ஆஸ்ரித ரஷகன் ஆனவனே–உன்னுடைய சீல குணத்துக்கு பல்லாண்டு –
அனுகூலர்-அனந்தரம் கோவிந்த அபிஷேகம்-பெரும் பசியால்-உண்பது கொண்டால் உயிர் கொண்டு தலை அறுக்கவோ
கை சலிக்கும் வரையில் தடுப்போம்-தலை அழிக்காதே புகழ்-சபலை குழந்தைக்கு முதுகைக் கொடுக்கும் மாதா போலே
இன்று வந்த ஆயர் –மது சூதனன் எடுத்த-கருணை குணம் போற்றி –பனி மறுத்த பண்பாளா
கோலம் அழியாமல் வாடாமல்-கைக்கு மங்களா சாசனம்-நின்ற திருவடிக்கு-
என் தனக்கு குன்று எடுத்த மலையாளா –ஷமை குணம்

கன்று –குன்று –
கன்று ஆநிரைக்கு –மா மழை நின்று காத்து -கலியன் -9-10-7-
விரோதிகளுக்கு கன்று எடுத்த மாத்ரம் போலே காணும்
கன்று நோக்குகைக்கு குன்று எடுத்தது –

அன்று இவ்வுலகம் -கோவர்த்தன் அனுபவம் ஸூ சகம் –
குன்று குடையாய் எடுத்தான் குணம் போற்றி –செந்தாமரைக் கை விரல்கள்
கோலமும் அழிந்தில –திருவுகிர் நொந்துமில-

வென்று பகை கெடுக்கும் இத்யாதி –
இவன் பக்கல் பரிவாலே -இவன் மிடுக்கைக் கண்டு கண் எச்சில் படுவார் என்று பயப்பட்டு
அத்தை விட்டு -இவ் வேல் அன்றோ இவ் வியாபாரம் எல்லாம் பண்ணிற்று -என்கிறார்கள் –
மிடுக்கு இல்லாமையால் நான் மெலிந்தேன் -என்று இறே இவர்கள் படி –
சக்கரவர்த்தி வில் பிடிக்க பெருமாளும் வில் பிடித்தால் போலே–
கூர் வேல் கொடும் தொழிலன் -என்னுமவர் மகன் ஆகையாலே
வேலே ஆயுதம் –

வென்று பகை கெடுக்கும் –
ஆஸ்ரித விரோதிகளான பிரதி பஷத்தை அறச் செய்து மாய்க்கை –

நின் கையில் வேல் போற்றி –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டி இருக்க–அதுக்கு மேலே வேலைப் பிடிப்பதே -என்று
திரு வேல் பிடித்த திருக் கைக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் —
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்று
திவ்ய ஆயுதங்களுக்கும் மங்களா சாசனம் பண்ணினார் இறே தமப்பனாரும்—
தேஜஸே சேது பந்தம் -தமப்பனாருக்கும் மகளுக்கும் பணி –என்று சீயர் அருளிச் செய்வர் –
ஒரு வியக்தியிலே எல்லா அபதானங்களையும் சொன்னால் த்ருஷ்ட்டி தோஷமாம் என்று
பிடித்த வேலுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
அஹங்காரத்தை ஜெயித்து–தத் விஷய வைமுக்யத்தை மாற்றும்–
நின் திருக் கையில் திரு வாழி யாழ்வானுக்கு-பல்லாண்டு –

அன்று இவ் உலகம் போற்றி –
அருகலிலாய –நம் –திருவாய்மொழி -1-9-3-
அடி போற்றி -திறல் போற்றி -புகழ் போற்றி -கழல் போற்றி -குணம் போற்றி -வேல் போற்றி -ஆகிய ஷட் ரசங்கள்-
அருகலியா பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன் கருகிய நீல நென்மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள் உவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன் ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே -1-9-3-
உபயலிங்கத்வம் -நித்ய விபூதி நிர்வாகத்வம் -திவ்ய விக்ரஹ யோகம் -புண்டரீகாஷத்வம் –
கருட வாகனத்வம் -ஸ்ரீ ய பதித்வம் -ஆகிய ஷட் ரசங்கள்-

இரங்கு-தயா / தயா சிந்து -தந்த அரங்கனுக்கு தன் சரண் தந்திலன் -தான் அது தந்து /
அதிகாரம் இல்லாதார்க்கும் நீ இரங்க-அநாதிகாரிகள் இடம் சொல்லாதே கீதாச்சார்யன் அர்ஜுனனுக்கு /
உலகு நின்ற இடத்தில் அளந்த திரிவிக்ரமன் /
-25-வயசு -39-வயசில் நடந்த பெருமாளுக்கு / சகடம் உதைத்த – 7-மாத குழந்தை /
இரு அசுரர் சேர்ந்து-2-வருஷ குழந்தை / அனுகூல விரோதி -7-வருஷ குழந்தை /
இத்தை லோகம் அறியும்படி சொன்னேனே-அதுக்கு வருந்தி -வேல் போற்றி /

அன்று -இன்று
ஞானம் பிறந்து -இச்சை வந்து -பிரயத்தனம் -மூன்று தசை உண்டே -பாபங்கள் ஒவ் ஒரு தசைக்கும் பிரதிபந்தகங்கள் –
அந்யோன்ய ஆஸ்ரயம் –/ஏவம் ஸம்ஸ்ருதி சக்ர-சுழன்று -கர்மா சூழல் -யந்த்ரரூடன் /
துக்க ஆகுலம் பிராப்தி -கிருபா பிறந்து விஷயம் சிலருக்கு -கிருபா கா அபி உபஜாயதே —
நிவாரகர் இல்லாத ஸ்வாதந்திரம் -பக்தி உள்ளாருக்குள் -தகுதி பக்தி -பக்தி வளர்க்கும் கிருஷிகனும் அவனே –
ஸுஹார்த்தம் -அனைவரையும் சேர்த்து கொள்ளும் குணமும் உண்டே –
அன்று நீ செய்ய சேஷ்டிதங்கள் —ஸுஹார்த்த கார்யங்கள் கீழே சொல்லி –
இன்று வந்தோம் -இரக்கம் தயா கிருபா -பொழிவாய்-என்றவாறு –

ஸுஹார்த்தம் -மாறி -வாத்சல்யம் -உலகு அளந்து -அஹங்காரம் போக்கி –
குன்று குடை -உபகாரம் பெற்றவனே அபகாரம் மேலே -அறிந்தும் செய்தது தயா கார்யம் /
பாத த்ரயத்தில் ஆசை -மூவடி -வாய் பழக்கம் -அளந்து காட்ட விஷயம் இல்லையே –
இரண்டு விஷம் போக்க -அஹங்காரம் மமகாராம் போக்கினதே உலகு அளந்து காட்டி –
நீர் நுமது -என்று இவை வேர் முதல் மாயத்தால் இறை சேர்மினே -அடி பணிந்தே போக்க வேண்டும் –
உலகம் அளந்த பொன்னடி அடைந்து -லோக விக்ராந்த சரணம் /
ஸுசீல்யம் -பராபவன சாமர்த்தியம் -ஹ்ருஷீகேசன் -விவேகம் சாரம் இந்திரியங்கள் வசப்படுத்தியது தவிர்க்க-
திறல் -நமக்கே அறியாமல் அடக்க வேண்டுமே /
விரோதி நிரசன சாமர்த்தியம்-சகடாசுர பங்கம் /
கன்று விளாம்பழம் – புண்ணியம் பாபம் -போக்க வேண்டும்-புகழ் -குட்டிக்கண்ணன் புகழ் இதனாலே பரவி –
வீரக்கழல் -உள் திருவடி சேவை இங்கே தானே -குஞ்சித பாதம் /
குன்று குடை -ரக்ஷணம் அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி /- ஷமா / வேல் பரிகாரம் இருக்கிறதே

தயா –பிரயத்தனம் பண்ணி பரர் கிலேசம் போக்கும் எண்ணம் இச்சா -பிரதியுபகாரம் எண்ணாமல் —
சர்வஞ்ஞத்வம் சர்வ சக்தித்வம் –கொண்டு -இவற்றை செய்து அருளி –
ஹிதம் ஸூபம் தனக்கு நினைப்பது போலே பரருக்கும் -செய்வது தயா
ஞானம் பலம் ஐஸ்வர்யம் சக்தி வீரம் தேஜஸ் -பிரபஞ்சத்தில் -அசேஷ சித் அசித் உடைமை —
இவை அனைத்தும்-தோஷம் ஆகாமல் இருக்கவே தயா தேவி –
அவதாரங்கள் பலித்து நாம் வந்தோம் -இரக்கமே வேண்டும் பேற்றுக்கு /
ஸுஹார்த்தம் -தடுக்க முடியாமல் ஸ்ருஷ்ட்டி -கரண களேபரங்கள் -அப்புறம் தானே -தயா காரியமே இதுவும் –
விதி வாய்க்கின்றது காப்பார் யார் –
இப்படி ஞானம் -இச்சா பிரயத்தனம் அவஸ்தைகள் வந்து -இரங்கு -பிரார்த்தனையை எங்கள் பிரயத்தனம் –

பிரார்த்தனை உபாயம் இல்லை
பிரார்த்திக்காமல் பலன் இல்லை புருஷனால் அத்திப்பதே புருஷார்த்தம்
பிரயத்தனம் வேறே முடியாதே நமக்கு
கதறுகின்றேன்-இது ஒன்றே என்னால முடியும் -ஆர் உளர் அரங்க அம்மான் –
இரக்கம் எளீர்-இதுக்கு என் செய்கேன் -அரக்கர் ஏரி எழுப்பினீர் -அரக்கும் மெழுகும் போலே உருகி /
நெகிழ்தல் ஈடுபடுதல் ஆற்றாமை இவள் இரங்கி -ஆடி ஆடி பதிகம் பாசுரம்

என்று என்றும்
பிரயோஜனம் பெறும் அளவும் சொல்லி -பின்னை தேஹி மே ததாமி தே -என்னுமவர்கள் அன்று –
இது தானே பிரயோஜனமாய் இருக்கும்
சம்சாரிகள் புறம்பும் கொள்ளுவார்கள் -இவன் பக்கலிலும் கொள்ளுவார்கள் —
இவர்கள் புறம்பும் கொள்ளார்கள் -இவன் பக்கலிலும் கொள்ளார்கள்
ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -என்று-அவனுக்கும் தான் கொடுத்து
ஆந்தனையும் கை காட்டி -என்று புறம்பும் தானே கொடுக்கும் என்கை –
இப்படி பல்லாண்டு பாடுகையே – யாத்ரையாய் உன் உடைய–வீர சரிதத்தையே ஏத்தி–புருஷார்த்தத்தை லபிக்கைக்காக
சத்வம் தலை எடுத்த இன்று–உன் கை பார்த்து இருக்கும் நாங்கள்–வந்தோம்

உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் –
உன்னுடைய வீர சரித்ரமே ஏத்தி -உன்னை அனுபவிக்கைக்காக —
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் —என்னுமவர்கள் இறே –

இன்று –
இசைவு பிறந்த இன்று -என்னுதல்—
நீ உறங்க -நாங்கள் உறங்காத இன்று -என்னுதல்–
நென்நேற்று வந்தோமோ –ஊராக இசைந்த இன்று -என்றுமாம் –

யாம் –
பந்துக்களாலே நெடும்காலம் நலிவு பட்ட நாங்கள் –

வந்தோம் –
வ்ருத்தைகள் உறங்க -நாங்கள் ஆற்றாமையாலே வந்தோம்–
எங்கள் இழவுகள் எல்லாம் உன்னாலே தீரும் –

யாம் வந்தோம் –
எங்கள் வரவு உனக்கு புண்ணாய் இருக்க–நாங்கள் ஆற்றாமையாலே வந்தோம் –

இரங்கு –
எல்லாம் பட்டாலும் அவன் இரங்கினால் அல்லது கார்ய கரம் ஆகாமை —
அத் தலைக்கு இரங்குகை ஸ்வரூபம் –
அவனுக்கு என் வருகிறதோ என்று இருக்கை-இத் தலைக்கு ஸ்வரூபம்–
தாங்கள் பண்ணின மங்களா சாசனம் சாதனம் அன்று -என்று இருக்கிறார்கள்-

நீ கிருபை செய்து அருள வேணும் –ஏத்திப் பறை கொள்வான் -என்கிற இடத்தில்-
யேத்துகைக்கு அநந்தரம் புருஷார்த்தம் லாபம் ஆகையாலும்
ஏத்தாத போது புருஷார்த்த லாபம் இல்லாமையாலும்-யேத்துகையே புருஷார்த்தம் -என்கிறது –
இரங்கு -என்று-கிருபையே சாதனம் என்கையாலே-வந்தோம் -என்று ருசி காரியத்தைச் சொல்லுகிறது –
ஏற்றி பறை கொள்வான்-
எங்கள் பலம் நாட்டார் பலம்-பறை -தன்னடையே வரும்-உலகு சுபிஷம் தன்னடையே-இசைவு பிறந்த இன்று வந்தோம்
ஊரார் இசைந்து நாங்களும் இசைந்த இன்று–யாம் குளிர் பொறாத பால்யை யாம் வந்தோம்

திரு விக்ரமன் பெருமாள் சொன்னீரே-அது அவதார செயல்-
இவன் பால்யத்தில் செய்தது போலே பூர்வ அவஸ்தையில்
சிலை ஓன்று இறுத்தாய் திரு விக்ரமா–வருக வருக வாமன நம்பி–கிருஷ்ணனை தாயார்
நீ பிறந்த திருவோணம் வாமனம் நஷத்ரம் இவனுக்கு–பன்னிரு திங்கள் வயிற்றில் 8 மாசம் கொண்டாலும்
என் இளம் சிங்கம் சிறுமையின் வார்த்தையை மகா பலி–மாணிக் குறளனே தாலேலோ
உலகு அளந்த உம்பர் கோமானே–உங்களுக்கு மூன்று பிறவி பிறக்கிறேன்
வில் பிடித்தாரில் சகர்வர்த்தி திருமகன் நான் என்றான் கீதையில் அஹம் தாசரதி

நீ வர பிராப்தம் ஆக இருக்க–ஆற்றாமை விரக தாபம் தூண்ட வந்தோம்
நாங்கள் அறியாமல் செய்தோம்–நீ அறியாமல் செய்தது போலே
இரங்கு
இது ஒன்றே பேறு கொடுக்கும்–என் வருகிறதோ மங்களா சாசனம் செய்தது ஸ்வரூபம்
இத் தலைக்கு இரங்குகை அவன் ஸ்வரூபம்-இரங்காமைக்கு பல செய்தாலும் நீ இரங்க வேண்டும்
போற்றி என்றோம்–வந்தோம்–ஸூ பிரவ்ருத்தி பகவத் பிரவ்ருத்திக்கு விரோதி–பர பக்தி யாதிகள் பேற்றுக்கு உபாயம் இல்லை
அன்று நீ தேடி–வையம் தாவி நீ–காரேறு வாரானால்–கண்ணனும் வாரானால்–பிரதான மகிஷி போலே இல்லை
நாங்கள் வந்தோம் வேறுபாடு பாராய்–சத்தா பிரயுக்தமான கிருபை யாவது செய்து அருள்
அளந்தாய் இரங்கு–நீரேற்ற பிரான் அருளாது போமோ–வசை பாடுவார் படி–இலங்கை அழித்த பிரான் —
இரங்கு ஓன்று ஒன்றுக்கும் அன்வயித்து வியாக்யானம்
குன்று கொடையாக -ஒன்றும் இரங்காதார் உருக்காட்டார் -பாசுரங்கள் கொண்டே வியாக்யானம் –

உலகு அளவாமல் இருந்து இருந்தால் வேதம் உன் திருவடி-சம்பந்தம் பெற்று இருக்க முடியாதே கூரத் ஆழ்வான்-
ஆழி எழ -திசை வாழி எழ-மங்களா சாசனம் உண்டே
திறல் போற்றி -அங்குள்ய – தன் பலம் தானே சொல்லிக் கொண்டான் தன்னை மறைக்க வேண்டிய
அவதாரத்தில் பரத்வம் பீரிட்டு எழுப்ப -இச்சன் கபி -சங்கல்பத்தாலே செய்வான்
ஜடாயு -உத்தரவு கொடுக்கிறேன் -நடுவில் திரு வீதிப்பிள்ளை பட்டர் -நம்பிள்ளை -ஐதீகம் —
சத்யேன லோகன் ஜயதி -தசரதன் கைகேயி இடம் சொல்லிய வார்த்தை –
நம்பூர் வரதர் -ஸ்ரீ ரெங்கம் பக்கம் நம்பூர் கிராமம் -சிந்தின வார்த்தை கொண்டே
சென்று அங்கு தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி -மிடுக்கு —இதிலும் மங்களா சாசனம் உண்டே
இயம் சீதா பத்ரம்-துல்ய சீல வயோவ்ருத்தம் அநு ருப
நம்பியை காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேணும்–கொம்பினை காணும் தோறும் -குறிசிலுக்கு அன்னதேயாம் –
ரிஷிகள் -மங்களம்-ரூபம் சௌகுமார்யம் கண்டு–ஜடாயு ஆயுஷ்மான் —திருக் காலாண்ட
திருவடி தம்மை ரஷிக்கிறதா பரிஷை செய்து தளர்ந்தும் முறிந்தும் -பொன்று பொடி பொடியாகா சகடம் உதைத்த புகழ் –
தன்னையே ரஷித்த புகழ் போற்றி —கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி —குன்று –குணம் போற்றி –
உடலைத் தான் கொண்டோம் உயிரை கொள்ள வேண்டுமோ -குணம் –
பகை கெடுக்கும் நின் கையில் வேல்–கருதும் இடம் பொருது கை சக்கரத்தான் —என்று என்று உன் சேவகமே போற்றி –
இத்துடன் முடியாதே இதுவே யாத்ரை

அடி போற்றி
திறல் போற்றி
புகழ் போற்றி
கழல் போற்றி
குணம் போற்றி
வேல் போற்றி
இவர்கள் நாக்குக்கு இடும் ஷட்ரசம் இருக்கிறபடி–பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் -என்றது
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு உற்றோமே யாய் உனக்கே நாம் ஆட்செய்ய வந்தோம் -என்றபடி
யாம் வந்தோம் இரங்கு–பரகத ஸ்வீகாரமே ஸ்வரூபம்–
ஸ்வகத ஸ்வீகாரம் ஸ்வரூப விருத்தம்-என்று துணிந்து இருக்கும் நாங்கள்
ஆற்றாமை மிக்கு வந்தோம்–பொறுத்து அருள்

சரணாகதிக்கு ஐந்து அங்கங்கள் -ஓரு அங்கி –
கார்ப்பண்ய அனுசந்தானம் – கை முதல் இல்லாமை /பிராதி கூல்ய வர்ஜனம் –
அனுகூல்ய சங்கல்பம் – மஹாவிஸ்வாசம் – கோப்த்ருத்வ வரணம்- அங்கி சரணாகதி தானே ஆகும்
ஞான பல ஐஸ்வர்ய வீர்ய சக்தி தேஜஸ் என்கிற ஆறு குணங்களும் ஆகவுமாம் —
பாஞ்ச ராத்ரம் -லஷ்மி தந்திரம் -அஹிர்புத்ய சம்ஹிதை திரு வாராதனம் -ஆறு ஆசனங்கள் சொல்லும்
இதனாலேயே ஆறு போற்றி -என்றும் சொல்வர்-

இன்று யாம் வந்தோம் இரங்கு- நாப்படைத்த பிரயோஜனம் பிரார்த்தனை- நிர்ஹேதுக கிருபை
அடியேன் இடரைக் களையாயே
நெடியாய் அடியேன் இடரை நீக்கி
அடியேற்கு ஒரு நாள் இரங்காயே
தாமரைக் கண்களால் நோக்காய்
இவன் அர்த்திக்க வேண்டுமோ -சர்வஞ்ஞன் இவன் நினைவு அறியானோ என்னில்
இவன் பாசுரம் கேட்டவாறே திரு உள்ளம் உகக்கும் -முமுஷூப்படி -163-
அதுவும் அவனது இன்னருளே
ஆச்சார்ய பரமாக உபதேசித்து அருள வேணும் -என்றதாயிற்று-

பரம போக்யமான பள்ளி கோளைப் பங்கப் படுத்தினோம் -இக் குற்றத்தை ஷமித்து அருள வேணும்
பிராட்டிமாரும் கூசிப் பிடிக்கும் ஸூ குமாரமான திருவடிகளைக் கொண்டு நடக்கப் பண்ணினோமே -ஷமிக்க வேண்டும்
ரஷய்த்வ ஸ்வரூபத்துக்கு மாறாக பல்லாண்டு பாடினோமே ஷமிக்க வேண்டும்
இன்று யாம் வந்தோம்
இன்றி யாம் வந்தோம் கைம்முதல் இல்லாமல் வந்தோம் -என்றுமாம்
இரக்கத்துக்கு தண்ணீர் துரும்பாக ஒன்றும் இல்லை –

வேல் போற்றி
வேல் -என்றது திருவாழி ஆழ்வானை -திருச் சங்கு ஆழ்வானுக்கும் உப லக்ஷணம்
திரு இலச்சினை –சேஷத்வ விரோதிகளை நிரசித்து –
கோயில் பொறியாலே ஒற்று உண்டு நின்று குடி குடி ஆட் செய்கின்றோம் என்னப் பண்ணுமே
வேல் என்று ஜாதிக்கு உரிய ஆயுதம் என்றுமாம் –
தாடி பஞ்சகம் –
சரித்ரா உத்தர தண்டம்–வஜ்ர தண்டம் -த்ரி தண்டம்–விஷ்வக் சேநோ யதிபதி ஆபூத் வேத்ர சாரஸ் த்ரிதண்ட
திருப் பிரம்பே த்ரிதண்டம் -உபய விபூதி நிர்வாக நிபுணம்-
முக் கோலுக்கு மங்களா சாசனம்––

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: