திருப்பாவை சாரம் – முப்பத்து மூவர் —

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –
அவனுக்கும் எங்களுக்கும் அடியான நீ எங்களை நீராட்டுவுதி என்று
கிருஷ்ணனையும் நப்பின்னை பிராட்டியையும்
கூட எழுப்புகிறார்கள் –
இப்பாட்டில்–மீளவும் எம்பெருமானை எழுப்பி–அங்கு மறுமாற்றம் பிறவாமையாலே–
நப்பின்னை பிராட்டியை எழுப்பி வந்த கார்யத்தை அறிவிக்கிறார்கள் —
திரு உள்ளம் பார்த்து உணர்த்த சமயம்–
இவள் தன்னையும் –பற்றினாலும் கார்யம் செய்யக் கடவன்–போக -பரவசன் -வார்த்தை கோபம் வருமோ
நீ முன்பு ஆர்த்த ரஷணம் பண்ணி ஆர்ஜித்த குணங்கள் இழக்கப் போகிறாய் சொன்ன இடத்திலும்
வாய் திறவாமையாலே
நப்பின்னை பிராட்டி இடம் -தத்துவம் அன்று தகவு -என்று சொன்னதும் அசஹ்யமாய் போனதே
தேக ஆத்ம குணங்கள் சொல்லி ஏத்தி–அவன் பர தந்த்ரன் —
எங்களுக்கும் அவனுக்கும் கடவையான நீ -கடகர் சேர்த்து -இருவருக்கும் எஜமானி நீ –
உன் மணாளனையும் தந்து எங்களை நீராட்டு என்கிறார்கள்-

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பமுடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்

முப்பத்து மூவர் –
இத்தால் துர்லபத்வம் சொல்லுகிறது –
ரஷணத்துக்கு சங்க்யா நியதி உண்டோ –
பஞ்ச லஷம் குடியில் பெண்கள் ஆனால் ரஷிக்கல் ஆகாதோ –
ஆர்த்தியே கைம்முதலாக ரஷிக்குமவன் அல்லையோ ––
அபரிமித சாங்க்யரான –
எண்மர் பதினொருவர் ஈர் அறுவர் ஓர் இருவர் 33 -பொய்கை ஆழ்வார்
இரு நால்வர் ஈர் ஐந்தின் மேல் ஒருவர் -எட்டோடு ஒரு நால்வர் ஓர் இருவர் –யாம் ஆர் வணக்கமாறு பெரிய திருவந்தாதி –
மூவர் -ப்ரஹ்ம ருத்ரன் இந்த்ரன் -முன் சென்று கப்பம் தீர்த்தான்-
முப்பத்தி மூன்று வித பக்தி -மூவர் அதிகாரிகள் மூவர் -மூன்று வித பக்தி பிரபத்தி
அஜஞாநத்தாலே ஞானாதிக்த்தாலே பக்தி பாரவச்யத்தால் பிரபத்தி
ஸ்தான த்ரயோதி பக்தி கத்யம் -கர்ம யோகம் -ஞான யோகம் -பகவத் அனுபவம் –
ஜனக சக்கரவர்த்தி -கர்ம யோகி –

அமரர்க்கு-
ஜ்ஞான சங்கோசம் இல்லாதவர்களுக்கு –
எல்லா அளவிலும் சாவாதார்க்கோ உதவல் ஆவது –
உன் நோக்குப் பெறாவிடில் சாகும் எங்களுக்கு உதவலாகாதோ –
முகாந்தரத்தாலே ஜீவிப்பார்க்கோ உதவலாவது –
உன் முகத்தாலே ஜீவிப்பாருக்கு உதவலாகாதோ –
பிரயோஜனாந்த பரருமாய் மிடுக்கரும் ஆனார்க்கோ உதவலாவது–
அநந்ய பிரயோஜநைகளுமாய் அபலைகளுமாய் இருப்பார்க்கு உதவலாகாதோ –
சமிதி பாதி -சாவித்திரி பாதி –ஸுய ரஷணம் செய்தால் தான் ரஷிப்பாயா-
வியதிரேகத்தில் பிழையாத நாங்கள் இருக்க

முன் சென்று –
அவர்களுக்கு பிரகிருதி சம்சர்க்கத்தாலே சங்கோசம் வருவதற்கு முன்பே ரஷகனான தான் அவதரித்து நின்று
நோவு வருவதற்கு முன்னே சென்று–ஏற்கவே ரஷிக்க கடவ நீ–
நோவு பட்டு வந்த எங்களை ரஷிக்க லாகாதோ –
நினைவில் குற்றம் ஆக்கி நினைவுக்கு முன்னே வரை முன் ஏந்தும் மைந்தனே
முன்
இடமும் காலமும் முன்
பார்த்தன் தன் முன்–வரைக்கு –முன் சென்று- ஒவ் ஒன்றுக்கும் பாவம் காட்டி அருளுகிறார்-
ஆதி மூலமே என்று அழைத்த ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு நீ வந்த த்வரைக்கு
நமஸ்காரம் என்றார் அன்றோ ஸ்ரீ பராசர பட்டர் –

சென்று –
நீ சென்று உதவக் கடவ உனக்கு – உன் வாசலிலே வந்த எங்களுக்கு உதவலாகாதோ –
உன் பக்கலிலே வருகை மிகை என்னுமவன் அல்லையோ –
எழுதும் என்னுமது மிகையாய் அன்றோ இருப்பது-

கப்பம் தவிர்க்கும் –
கம்பம் என்கிற இத்தை கப்பம் என்று வலித்துச் சொல்கிறது – அதாவது நடுக்கும்
கம்பம் தவிர்க்கையாவது –
அசுர ரஷசாதிகளாலே குடி இருப்பும் அகப்பட இழந்து கிலேசித்த அத்தை தவிர்க்கை –
நாட்டார் நடுக்கத்தை தடுக்கக் கடவ நீ எங்களை நடுங்கப் பண்ணாதே கொள்ளாய் –
துக்க நிவ்ருத்தியை ஆசைப்பட்ட தேவர்களுக்கோ உதவலாவது –
நீ உணரும்படியைக் காண ஆசைப்பாட்டாருக்கு உதவலாகாதோ –

கப்பம் தவிர்க்கும் –கப்பம் -கம்பம் என்றபடி
இரு கூறா நகந்தாய் -திருவாய்மொழி -9-4-7-நகந்தாய -நகத்தாய என்றபடி
வல்லொற்று மெல்லொற்றாக மாறிய இடங்கள்
நகத்தை தாவும்படி பண்ணின விசேஷ அர்த்தமும் பன்னீராயிரப்படியில் அருளி உள்ளார்-

கலியே –
மிடுக்கை உடையவனே -சாமர்த்தியத்தை உடையவனே –
அபலைகளான எங்களுக்கு உன் மிடுக்கை ஒழிய உண்டோ –
அரணிமையை-கல் மதிள் போலே ஆழ்வார்கள் அருளிச் செயல்களை – உடையவன் -என்றுமாம் –

செப்பமுடையாய் –
ஆஸ்ரிதர்க்கு செவ்வை அழியாது இருக்குமவனே —
எங்களுக்கு செவ்வை அழியாது இருக்க வேண்டாவோ-
செப்பம் –
ரஷை -என்றுமாம் —
செப்பம் –
ஆர்ஜவம்-ஆஸ்ரிதர் தம்மை அனுபவிக்கும்படி தான் பாங்காய் இருக்குமவனே
எங்கள் செவ்வை கெடும் உன்னுடைய செவ்வியால் நிரப்புவாய் என்று இருந்தோம்
நாங்கள் வர நீ உணராமால் அசத் சமம்–விரகாலே நீரை மேட்டிலே ஏற்றி–வாத்சல்யம் ஏறிப் பாய வேண்டாமா-

திறலுடையாய் –
அநாஸ்ரிதர்க்கு கிட்ட ஒண்ணாதவனே –
திறல் –
பராபிபவன சாமர்த்யம்-அநாஸ்ரிதர்க்கு அன்றிகே எங்களுக்கு அணுக ஒண்ணாது இருக்கைக்கோ –

செப்பமுடையாய் திறலுடையாய் –
பாண்டவர்களுக்கு செவ்வியனாய்–துரியோதனாதிகளுக்கு அனபிபவநீய னானவனே
திறல் –
மிடுக்காகவும்-

முப்பத்து மூவர் -திருப்பாடகம் அனுபவம் -ஸூ சகம்-அமரர்க்கு முன் சென்று கப்பம் தவிர்க்கும் –
அரவு நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சி இடாதே இட
அதற்குப் பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெரும் திசை அடங்கிட நிமிர்ந்தோன் –
பாண்டவர்கள் கப்பம் கம்பம் நடுக்கத்தை தீர்த்தவாறு –

செற்றார் -பிராமண பிரமேய பிரமாதா மூன்றுக்கும் விரோதி –வெப்பம் கொடுக்கும் -ஆனாலும் –விமலா –
இதில் -செற்றாரை திறல் அழித்தாலும் அகில ஹேய ப்ரத்ய நீகனாய் விமலனாய் இருந்தமையும் அருளிச் செய்கிறார்
அடுத்த பாசுரத்தில் மாற்றாரை மாற்றி ஆற்றாதாராக பண்ணியதை அருளிச் செய்து-
செறுவாரும் நட்பாகுவார் அன்றோ செங்கோன் அருள் பெற்றவாறே-திருவிருத்தம் -27-
த்ருஷ்டம் நிரூபணம் புலன்கள் மூலம் -சேது அணை–nasa. ஆராய்ந்து /அத்ருஷ்டம்-64-சதுர்யுகம் நிரூபிக்க பார்க்க கூடாதே –
நிரூபணத்துக்கு விஞ்ஞானம் ஒரு வழி -ப்ரத்யக்ஷம் அனுமானம் சப்த பிரமாணங்கள் -சாஸ்திரம் வேதம் வேறே /
மானா மேனா-பிரமாணம் கொண்டே பிரமேயம் சாத்தியம் –
ஸாஸ்த்ர யோநித்வாத்
கூரத்தாழ்வானையும் –கூரத்தாழ்வார் -களை அறக் கற்ற மாந்தர் காண்பாரோ கேட்பரோ -என்று அருளிச் செய்த ஐதிக்யம்
பராசரர் -ரு ஹிம்சை தாதார்த்தம் -உறையில் இடாதவர் திரு மழிசைப் பிரான்
சம்சாரத்துக்கு வியாதிக்கு மருத்துவர் -சம்சாரமே வியாதி உணர்ந்து ஆச்சார்யர்
ப்ரஹ்மத்தை நீ அறிந்த முறையில் அறிவது த்ருஷ்ட்டி விதி -சூர்ய சந்திரர்கள் மூலம்

செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா –
நீ ஆஸ்ரித விரோதிகளுக்கு துக்கத்தைப் பண்ணும் -செய்குந்தா வரும் தீமை -இத்யாதி–
இப்போது அனுகூலர் பக்கலில் ஆய்த்ததோ –

விமலா –
என்றது-சம்பந்தம் ஒத்து இருக்க–ஆஸ்ரிதர்க்காக கண்ணற்று அழிக்க வல்ல சுத்தி –
பாகவத விரோதிகளுக்கு நடுக்கத்தைக் கொடுக்கும் சுத்தி யோகத்தை உடையவனே –
இத்தால்
பய நிவ்ருத்தி மாத்ரம் அன்றிக்கே பய ஹேது நிவ்ருத்தியும் ரஷக கார்யம் -என்றது ஆய்த்து –
பாஞ்சாலி பட்ட துக்கம் நூற்றுவர் தம் பெண்டிர் மேல் வைத்தான் -பெருக்கி ஒருத்திக்கும் நூறு பங்கு
நூற்றுவர் தம் பெண்டிரும் அலக்கண் எய்தி நூல் இழப்ப —நூல் வஸ்த்ரம் திருமாங்கல்யம்

துயில் எழாய்-
அம்பு எய்ய வேணுமோ எங்களுக்கு —எழுந்திருந்து நோக்க அமையாதோ –

செப்பன்ன மென் முலை –
அவன் பக்கல் மறுமாற்றம் பெறாமையாலே–
புருஷகார பூதையான நப்பின்னை பிராட்டியை எழுப்புகிறார்கள் –
இது முதல் அவன் அகப்படும் சுழிகள் சொல்லுகிறது –
நிதி இட்டு வைக்கும் செப்புப் போலே அவன் கிடக்குமிடம் —
மலராள் தனத்துள்ளான் -என்னக் கடவது இறே-
செப்புப் போலே சந்நிவேசம் என்னவுமாம் –
அம் முலையில் வர்த்திக்கும் -மலையில் உள்ளார் உகந்து உண்ணும் கனியும் தேனும்–
செவ்வாய் கோவை வாயாள் பொருட்டு
முறுவலுக்காய் வல் தலைவன்

மென்முலை
விரஹ சகம் அன்றிக்கே இருக்கை-

செவ்வாய்
அவனைத் தனக்காகிக் கொள்ளும் ஸ்மிதம் –
அந்த முலையிலே இருந்து அனுபவிக்கும் ஜீவனம் –

சிறு மருங்குல் –
மேலும் கீழும் கொண்டு-இடை உண்டு -என்று அறியும்படி–பய ஸ்தானமாய் இருக்கை

நப்பின்னை நங்காய் –
பூர்ணை ஆனவளே–பூர்த்தி ஆகிறது —அநுக்த சௌந்தர்ய சமுச்சயம் –

திருவே
ஒசிந்த ஒண் மலராள் என்னுமா போலே —சம்ச்லேஷத்தால் வந்த துவட்சி –
சம்போக ஸ்ரீ உடையவள் –

துயில் எழாய் –
நீ உணர்ந்து எங்கள் சத்தையை உண்டாக்காய் –

திருவே துயில் எழாய் –
பிராட்டியைப் போலே ஆஸ்ரிதைகளான எங்களுக்காக உணர வேண்டாவோ —
ஆஸ்ரிதர்காக அன்றோ பத்து மாசம் உறங்காது இருந்தது –

விஷய க்ராஹகமாய்–விஷய விரஹ அசஹிஷ்ணு வாய்–பகவத் விஷய பக்தியையும்–
விஷயாந்தர வைராக்யத்தையும்-உடையையாய்-
நப்பின்னை என்கிற திரு நாமத்தை உடையையாய்–பிராப்யத்வ–புருஷகாரத்வோப யுக்த–
கல்யாணகுண பூர்னையான பெரிய பிராட்டியாரே
நீ படுக்கையில் நின்றும் எழுந்திருக்க வேணும் –

எழுந்திருந்து உங்களுக்கு செய்ய வேண்டுவது என் -என்ன –
உக்கமும் தட்டொளியும் தந்து–உக்கம் -ஆலவட்டம்–தட்டொளி -கண்ணாடி–பறை என்றுமாம் –

உன் மணாளனை –
புருவம் நெறித்த இடத்திலே கார்யம் செய்யும்படி பவ்யன் ஆனவனை–
உக்கத்தோபாதி அவனையும் இவள் தர வேணும் -என்கை –
உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு -என்றுமாம் –
உக்கம் ஸ்ரமம் ஆற்ற–கண்ணாடி எங்கள் வைலஷண்யம் காண–
வாசத் தடத்தில் அவஹாகிக்கும் படி பண்ணி அருள வேணும்
ஞான -உக்கம்–தர்சன -கண்ணாடி–பிராப்தி -உன் மணாளன்–மூன்றுமே செய்து அருள வேண்டும் .
உக்கம் -தட்டொளி –உன் மணாளன் / ஞான தரிசன -பிராப்தி
பர பக்தி பர ஞான பரம பக்தி -பரிபூரணம் அருள வேண்டும்

ஈஸ்வரனை அழகாலே திருத்தும்–அல்லி மலர் மகள் போக மயக்குகள் ஆகியும் இருக்கும் அம்மான் –
யானோர் துக்கம் இலேனே
நப்பின்னை நங்காய்–திருவே -சாஷாத் மகா லஷ்மி தானே –
தோள்கள் ஆயிரத்தாய் முடிகள் ஆயிரத்தாய் -பிராட்டி அனுபவிக்க விஸ்வ ரூபம் எடுத்தான் –

இருவரையும் திருத்துவது உபதேசத்தால் –
உபதேசத்தால் மீளாத போது சேதனனை அருளாலே திருத்தும் -ஈஸ்வரனை அழகாலே திருத்தும் –
ஆச்சார்யன் சிஷ்யன் ஆர் உயிரைப் பேணுமவன் -தேசாரும் சிஷ்யன் அவன் சீர் வடிவை -என்பதாகில்
ஆச்சார்யருடைய திவ்ய மங்கள விக்ரஹமே உத்தேச்யம்
சீராரும் எதிராசர் திருவடிகள் வாழியே
செய்ய தாமரைத் தாளிணை வாழியே -நிச்சலும் அனுசந்திக்கிறோம்

இப்போதே –
பிற்றைப் போதைக்கு இராத எங்களை –

எம்மை
பஸ்யதி என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறார்கள் –

எம்மை –
பேய்ப் பெண்ணே -என்றும்–நாயகப் பெண் பிள்ளாய் -என்றும்–தங்களில் தாங்கள் சொல்லும் இத்தனை –
பேற்றில் வந்தால் எல்லாரும் ஒத்து இருப்பார்கள் -என்றுமாம் –
எம்மை –
எங்களையும் அவனையும் கூட–முழுக்காட்ட வேண்டும் -என்றுமாம் –

நீராட்டு
இவர்கள் உகப்பது இவள் தந்த கிருஷ்ணன் -என்று —பெருமாள் பிராட்டி உடைய சௌந்த்ர்யாதிகள் கிடக்க
ஐயர் பண்ணி வைத்த விவாஹம் என்று உகப்பர்—
அது போல் கிருஷ்ணன் பக்கல்–பிராப்தியும் போக்யதையும் கிடக்க –
இவள் தந்த கிருஷ்ணன் என்று உகப்பர்கள் –

ஸ்வா பதேசத்தில்
கைங்கர்யத்தில் அஹங்கார மமகார நிவ்ருத்தியும்–
யதாவஸ்தித ஸ்வரூப ஜ்ஞானமும்–இவ்விரண்டையும் கொடுத்து –
உனக்கு பவ்யனான–ஈஸ்வரனை இந்த ஷணத்திலே–பிற்றை ஷணத்துக்கு பிழையாத எங்களை–
சம்ச்லேஷிப்பி -என்கிறார்கள் –
உன் மணாளனையும் தந்து–நீராட்டு என்கிறார்கள் -ஆகவுமாம் —
இந்த யோஜனையில்-பிராட்டிக்கு எம்பெருமான் அத்யந்த விதேயன் என்னும் இடம் தோற்றுகிறது –

இப்போதே எம்மை நீராட்டு –
தாபத் த்ரயம் தீர
எம்பெருமானுக்கு தாபம் -நான் அடிமை செய்ய விடாய் நானானேன்–
எம்பெருமான் தாம் அடிமை கொள்ள விடாய் தானானான்
ஆனதற்கு பின் வெள்ளக் குளத்தே விடாய் இருவரும் தணிந்தோம் உள்ளக்குளத் தேனை ஒத்து
மஹாத்மபிர் மாம் அவலோக்யதாம் நய ஷணம் அபி தே யத் விரஹோதி துஸ் சஹ -ஸ்தோத்ர ரத்னம் -56-
ஷூத்ருட் பீடித நிரதநரைப் போலே கண்டு கொண்டு பருகி -ஆச்சார்ய ஹிருதயம்-

செப்பம் உடையாய்
ஆர்ஜவம் -மநோ வாக் காயம் கரண த்ரய சாரூப்யம்
திறலுடையாய் –
பராபிபவன சாமர்த்தியம்-செற்றாருக்கு வெப்பம் கொடுக்கும்
தஸ்மை ராமானுஜார்யாய நம பரம யோகினே-
யஸ் சுருதி ஸ்ம்ருதி ஸூ தராணாம் அந்தர் ஜுவரமசி சமத்–
அத்தை செற்றார் உள்ளத்திலே போக்க விட்டார்-
சோக வஹ்நிகம் ஜனகாத்மஜாயா ஆதாய தேநைவ ததாஹா லங்காம் -என்று
பிராட்டி திரு வயிற்றில் இருந்த சோக அக்னியை கிளப்பி இலங்கையை கொளுத்தின திருவடி போலே-
சுருதி அந்தர் ஜுரங்களை எடுத்து செற்றார் வயிற்றில் எரித்த படி-

நாட்டிய நீச சமயங்கள் மாண்டன ஒரு கார்யம்
நாரணனை காட்டிய வேதங்கள் களிப்புற்றது -இரண்டாவது
தென் குருகை வள்ளல் வாட்டமிலா வண் தமிழ் மறை வாழ்ந்தது மூன்றாவது
எதிராசர் பேர் அருளால் வியாக்யானம் பகவத் விஷயம்
விமலா துயில் எழாய் -கலியன் ஸ்வாமி –
பசி தாகம் இருக்கும் நினையாமல் –
விமலா
அகில ஹேய பிரத்யநீகன் –கல்யாண -ஞான ஆனந்த-வி ம லா
மூன்று எழுத்து-ஆளவந்தார் கப்பம் தவிர்த்த கதை

———————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: