திருப்பாவை சாரம் – புள்ளின் வாய் கீண்டானை — —

இன்றோ திருஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –
நம் கண் அழகு -போதரிக் கண்ணினாய் –உண்டாகில் தானே வருகிறான் என்று கிடக்கிறாள்
ஒருத்தியை எழுப்புகிறார்கள்-
இப்பாட்டில்-நமக்கு ஸ்வரூப ஞானமுண்டாகில் அவன் தானே வருகிறான் என்று
நிர்ப்பரராய் இருக்குமவளை எழுப்புகிறார்கள் –

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்

புள்ளின் வாய் கீண்டானை –
பகாசுரனைப் பிளந்தபடி –ஸ்வ ஆஸ்ரிதருக்கு–ஸ்வ அனுபவ விரோதியான –காமாதி தோஷ நிவர்தகனாய்

பொல்லா அரக்கனைக் –
தாயையும் தமப்பனையும் உடலையும் உயிரையும் பிரித்தாப் போலே பிரித்த நிர்க்குணன் —
சுரி குழல் கனி வாய் -இத்யாதி
முன் பொலா இராவணன் -என்னும் இத்தனை போக்கி அவன் தண்ணிமைக்கு ஒரு பாசுரம் இல்லை இறே
அத்தாலே இறே பிராட்டியும் -நல்ல அரக்கனும் -உண்டு என்றாள் இறே –
பொல்லாத அப்ராப்த விஷய சூசகமான அஹங்காரத்தை–அஹங்காரத்துக்கு நன்மை தீமைகள் ஆவன –
அஹங்காரத்துக்கு நன்மை யாவது –
அஹம் மம -என்றால்–ஈஸ்வரனும் ஈஸ்வர விபூதியும் ஸ்வ அபிமான விஷயமாக தோன்றுகை–
தீமையாவது –
தேகமும் ஆத்மாவும் ஸ்வ தந்தரமாக தோன்றுகை —
அனுகூலமான அஹங்காரத்துக்கு அழல் தட்டாதபடி நிரசித்தவனுடைய

கிள்ளிக் களைந்தானைக் –
திருவிளையாடு சூழலிலே நோய் புக்க இடங்களைக் கிள்ளிப் பொகடுமா போலே
தோஷாம்சத்தை வாங்கிப் பொகட்ட படி –

பொல்லா அரக்கனை –
சுரி குழல் –அரக்கன் -கலியன் -5-7-7-
முன் பொலா இராவணன் -திருக் குறும் தாண்டகம் -15
பொல்லாங்கே வடிவு எடுத்தவன் இராவணன் -ஆண்டாள் கலியன் -பிராட்டியை பிரித்த பொல்லாங்கு –
பொல்லா ஆக்கை -திரு வாய் மொழி -3-2-3-
விபீஷணச்து தர்மாத்மா -நல்ல அரக்கனும் உண்டு
துரியோதனன் பிரதி கூலனாய் தோன்றினான் -ஆக்கை அநு கூலமாக போலே
ஆயிற்று இருந்து பிரதி கூல்யம் ஆயிற்று –

புள்ளின் வாய் கீண்டான் –
ஸ்ரீ கிருஷ்ண அவதாரம்
மனத்துக்கு இனியான் பாசுரம் கேட்டு–அசல் மாளிகை–அபராதம் தீர வார்த்தை சொல்ல-
பெண்காள் இங்கே ஸ்ரீ ராம வ்ருத்தாந்தாம் சொன்னார் உண்டோ–
ஸ்ரீ ராமாயணமும் பாரதமும் ஸ்ரீ பாஞ்ச ராத்ரமும் அகப்பட சொன்னோம் என்கிறார்கள்–
வெள்ளத்தரவில் துயில் அமர்த்த வித்து -பாஞ்சராத்ரம்- பாஞ்ச ராத்ரத்தில் வியூஹத்தில் நோக்கு–
பரத்வ-பரமுது வேதம்– வ்யூஹ வ்யாப்தி அவதரணங்களில் ஓதின நீதி கேட்ட மனு படுகதைகளாய்
ஆக மூர்த்தியில் பண்ணிய தமிழ் ஆனவாறே வேதத்தை திராவிடமாக செய்தார் என்னும் -ஆச்சர்ய ஹிருதயம்
பள்ளமடையான ஸ்ரீ கிருஷ்ணாவதாரமும் தன்னைப் போலே
பிராட்டி பட்ட பாடு பொறுக்க மாட்டாத படியால் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தான் என்று ஸ்ரீ ராமாவதாரமும்
இனியானை பாடவும் உம்மை சொல்லி -ஸ்ரீ கண்ணன் பாடினால் தூங்கலாமா-
பெண்களை படு கொலை–அவளுக்கும் மெய்யன் அல்லை
ஒருத்தி தன்னை புணர்த்தி ஐந்து பெண்களை சொல்லி–உண்ணாது உறங்காது ஸ்ரீ ராமன் ஒரு பெண்ணுக்காகா
வேம்பேயாக வளர்த்தாள்–குறும்பு செய்வானோர்- மகள்–வைதாலும் ஸ்ரீ கண்ணன் நாமம் –
ஏசியே யானாலும் பேசியே போக்கே
ஸ்ரீ ராமன் நாமம் சொல்லவா–ஸ்ரீ சீதைக்கு தான் செய்தான்–
ஸ்ரீ கண்ணன் ஏக தார வ்ரதன் இருந்தால் நாம் எல்லாரும் போக முடியுமா
பிறர் மனை நோக்காத–பிராப்தியே இல்லையே நமக்கு அவனுடன்–இரண்டு கோஷ்டியாக பிரிந்து
பும்ஸாம் திருஷ்டி சித்த அபஹாராணம் –கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபுரத்து அம்மான்
கண்ணன் ராமன் —வருக வருக வாமன நம்பி காகுத்தன் வருக
சீத வாய் அமுதம் உண்டாய் சிற்றில்–தர்மி ஐக்கியம் உண்டே சமாதானம் பண்ண–
கிருஷ்ண கோஷ்டியார் சமாதானம் அடைய வில்லை
இருவரும் சொல்லிப் போவோம் -என்ன–இரண்டு கோஷ்டி
புள்ளின் வாய் கீண்டானை -முன்னால்–கிள்ளிக் களைந்தானை பின்னால்-

எந்த சரித்ரம் சொல்லி இருக்க வேண்டும்–
பொல்லா அரக்கன் ராவணனை கிள்ளிக் களைந்தான்–இவர்கள் கொக்கு சுட்ட கதை
புள் இது என்று பொதுக்கோ சடக்கென பெரியாழ்வார் –
பேச்சு வழக்கு சாமான்யமான சரித்ரம்–இது இவர்களுக்கு ராவண வதம் பண்ணின படி –
அவ்வளவு பெரிய கதை–அதே சுலபம் ராமனுக்கு –உசந்த தாழ்ந்த சரித்ரம் எனபது இல்லை–
வதுவை –நப்பின்னை -மாய மா கேசி -குரவை
அது இது உது என்னாலாவது இல்லை-உன் செய்கை என்னை நைவிக்கும்–நீ செய்தாய் என்பதே —
ராவணன் வீரத்தில் இலக்கானான்–தங்கை அழகில் கலங்கி–தம்பி சீலத்தில் இலக்கானான்

பொல்லா அரக்கரை கிள்ளிக் களைந்தானை கீர்த்திமை பாடி என்றது
அரக்கர் அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் உய்யும் வகை இல்லை தொண்டீர் –
கலியும் கெடும் கண்டு கொண்மின்
ஜெயதி திசா முகேஷூ யதிராஜா யரஸ் பாடஹ-யதிராஜா சப்ததி இத்யாதி
ராமானுஜர் ஸ்தோத்ராதிகளையும் அனுசந்தானம் என்றவாறு

பொல்லா அரக்கரை கிள்ளிக் களைந்தானை
அவுணன் உடல் கீண்ட -அமலன் -8
கல் எடுத்து கல் மாரி காத்தாய்-கலியன் -திரு நெடும் தாண்டகம் -13
வீர பத்னி ஆகையாலே கல் எடுத்து என்னுமா போலே கிள்ளிக் களைந்தான் என்கிறாள்
தோஷம அசத்தி -கிள்ளிப் பொகட்டிய படி
உலர்ந்த தாழை நாரை கிழித்தால் போலே அஹங்கார ஹேதுவான தேகத்தை பொகட்டான்
சோலை சூழ் குன்று எடுத்தான் -கல் எடுத்தான் என்றது அனாயசேன எடுத்தமை காட்ட
கிட்டுவதும் அனுபவிப்பதும் பெறுவதும் ஈஸ்வர சக்தியாலே -என்று இருக்குமவள் இறே

பாடிப் போய்-
பாட்டே தாரகமாக போனார்கள்
விரஹ தாபம் போக்க- பாதேயம் புண்டரீகாஷ நாம சங்கீர்த்தனம் அம்ருதம்–
கட்டு சோறு -ராகவ ஸிம்ஹம் யாதவ ஸிம்ஹம் நர ஸிம்ஹம் ரெங்கேந்திர ஸிம்ஹம்-
நால்வரையும் பாடி என்றவாறு –

தான் உகந்த ஊர் எல்லாம் தன் தாள் பாடி–பாடி போய் பகவானால் கொடுக்கப் பட்ட பலம்-
பாடுகையாலே பலம் ஏற்பட்டு–உபன்யாசம் செய்தால் தான் பலம் வரும் காஞ்சி சுவாமிகள்
மற்றவர் உஜ்ஜீவனம் அடைய வைக்கும் சந்தோசம்–

கீர்த்திமை –
எதிரிகளுக்கும் நெஞ்சு உளுக்கும்படியான வீர சரித்ரத்தை –
உகவாதாருக்கு விட ஒண்ணாத வீரம் உகந்த பெண்களுக்குச் சொல்ல வேணுமோ –

பிள்ளைகள் எல்லோரும்
நாம் சென்று எழுப்ப வேண்டும் பாலைகளும் –உனக்கு முன்னே உணர்ந்து புறப்பட்டார்கள் –
நாம் சென்று எழுப்ப வேண்டிய அகில பாகவதரும் –

பாவைக் களம் புக்கார்
கிருஷ்ணனும் தாங்களும் கழகமிடும்-ஓலக்கம் இடம் —சங்கேத ஸ்தலம் புக்கார்கள் –
அனந்யார்ஹரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் நிரூபகமான
சங்கேத ஸ்தலத்தை பிரவேசித்தார்கள் -நெல் களம் போர் களம் போலே பாவைக் களம்-
பாலைகள் அறியாமல் போனார்கள்-போனேன் வல்வினையேன் என்பர் பரகால நாயகி –
அதாவது காலஷேப கூடம்–அவர்கள் போகைக்கு பொழுது விடிந்ததோ என்ன –

வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று-
வெள்ளி உச்சிப் பட்டது–வியாழம் அஸ்தமித்தது–
உங்களுக்கு நஷத்ரம் எல்லாம் வெள்ளியும் வியாழமுமாய் இறே இருப்பது என்ன-அதுவே யன்றி –
பரிசுத்தமான ஞானம் அபிவ்ருத்தமாய்–அஞ்ஞானம் தலை மடிந்தது –
சுக்ரன் -வெள்ளி -சுக்ரோதயம் அருணோதயம் சூர்யோதம்–ப்ரஹச்பதி மறைந்து வெள்ளி எழுந்து
நின்ற குன்றம் நோக்கி நெடுமால் சொல்வீர்–விடிவுக்கு உடல் இல்லை–திரளாக நாங்கள் வந்தோம்–ஈட்டம் கண்டால் கூடுமே
பிரியவே இல்லையே–புள்ளும் சிலம்பின–அது கூட்டில் எழுந்து இருக்கும் பொழுது–ஆகாரம் தேடும் பொழுது சிலம்பின
திர்யக் விருத்தாந்தம் கொண்டோ கால நியதி–நாங்கள் சொல்லவதற்கு விபரீதம்-

புள்ளும் சிலம்பின காண் –
புட்கள் உணர்ந்த மாதரம் அன்றிக்கே இரை தேடி சிலம்பி போயிற்றன –
மற்றுள்ள பாகவதர்களும் த்வரித்துக் கொண்டு போந்தார்கள்
புலம்பின புட்களும் -போயிற்று கங்குல் புகுந்தது புலரி -என்பர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் –

போதரிக் கண்ணினாய் –
புஷ்பம் போலேயும் மான் போலேயும் இருந்துள்ள கண்–அரி என்று மான்
அன்றிக்கே பூவிலே வண்டு இருந்தாப் போலே என்றுமாம் -அரி என்று வண்டு
அன்றிக்கே
போதை ஹரிக்கிற கண் என்றுமாம்–பூவோடு சீறு பாறு என்னும் கண் என்னவுமாம் –
ஸ்வச்சமாய் ஸ்லாக்கியமாய் சாராஹ்ராஹியான ஞானத்தை உடையவரே –

போதரிக் கண்ணினாய் -ஞான வன்மை / நா உடையாய் -அனுஷ்டானம் -எடுத்து உபதேசம் -ஆச்சார்யர் விஷயம் தானே மேலும்
பிள்ளாய் தொடங்கி -மேலே மேலே உயர்ந்த நிலை -18-திருக் கோஷ்ட்டியூர் நம்பி மூலம் நமக்கு தெரிவிக்க –
சரம் -விவேகம் கொண்டு அஹங்காரங்களை போக்குவது -ஸ்வாபதேசம்
திவ்ய தேச குணங்கள் வ்யூஹ ஸுஹார்த்தம் பிரதானம் -விசேஷம் போலே பிள்ளாய் தொடங்கி நா உடையாய் வரை –

குள்ளக் குளிரக் –குடைந்து-
நீர் கொதிப்பதற்கு முன்னே -அவனைப் பிரிந்த வ்யசனம் எல்லாம் நிஸ் சேஷமாய் போம்படி –
ஆழ முழுகி விரஹ தாபத்தால் குளிருமே என்று அறியாமல்
முதல் கோபி விரஹ அக்னியால் யமுனை நீர் வற்றி போகுமே -ஒன்றாகவே போகலாம் கிருஷ்ண விரஹ தாபம்-
கண் அழகை நினைத்து கௌரவம்- அவன் உபாசகன் -தேடி வர வேண்டும் அஸி தீஷணை புண்டரீகாஷன்
நெடு நீண் கண் -அனைத்து உலகும் உடைய அரவிந்த லோசனன் ஒரு மூலையில் -அவனும் அவன் விபூதியும்
தாயார் கடாஷம் விழிக்க போகாதே- போது அரி கண்ணினாய் பூ /மான் போன்ற கண்
பூவில் படிந்த வண்டு போன்ற கண் ஹரதி பூவுடன் சீறு பாறு வென்ற கண் போதுகின்ற அரி உலாவும் மான்
குள்ளக் குளிர –
அடுக்குத் தொடர் அதிகமாக செக்க சிவந்து-மீமிசை சொல் –
மிகவும் குளிர்ந்து ஆதித்ய கிரணம் பட்டு கொதிக்கும் முன்பே

நீராடாதே –
கிருஷ்ண குணங்கள் சேஷ்டிதங்கள் அவஹாகித்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ
கண்ணாலே -இருவர் கண்ணுக்கும் இலக்கு உன்னுடைய சௌந்த்ர்யம் எங்கள் பேற்றுக்கு உடல்

குடைந்து நீராடாதே
கிருஷ்ண விரஹ ஆர- நீராடப் போகாதே நமக்கு கிருஷ்ண விச்லேஷம் பிறவாமைக்கும்
கிருஷ்ண குணங்களிலே அவஹாகித்து அனுபவிக்கப் பெறாதே
கால ஷேப கூடத்திலே பிரவேசித்து–பகவத் அனுபவத்தைப் பண்ணாதே -தனித்து குணானுபவத்தைப் பண்ணுகிறாயோ

பள்ளிக் கிடத்தியோ –
கிருஷ்ண ஸ்பர்சம் உடையதோர் படுக்கையை–மோந்து கொடு கிடக்கிறாயோ-
விளைந்து கிடக்க உதிர் நெல் பொறுக்குகிறாயோ –

புள்ளின் வாய் கீண்டான் -திருக்குடந்தை அனுபவம் -ஸூ சகம் -பள்ளிக் கிடத்தியோ ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் –
நாகத்தணைக் குடந்தை –திருமழிசைபிரான் முற்பட அருளிச் செய்தார் இறே

போதரிக் கண்ணினாய்
உன் கண்ணாலே கிருஷ்ணனை தோற்பித்து–அவன் கண்ணாலே குமிழ் நீர் உண்ணப் பண்ணாதே–
நெடுங்கண் இள மான் இவள்
அனைத்து உலகமுடைய அரவிந்த லோசனன் அவன்–இருவர் கண்ணுக்கும் இலக்கானவர்கள் இறே இவர்கள் –
உன்னுடைய சௌந்தர்யம் எங்கள் பேற்றுக்கு உடல் என்று இருந்தோம் —அங்கன் இன்றிக்கே இழவுக்கு உடலாகா நின்றதோ –

போதரிக் கண்ணினாய் பாவாய்–
கொல்லி அம் பாவாய் -திருவிட எந்தை -உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் –
போதம் -ஞானம் அறிவு ஞான போதினி தத்வ போகினி–
போதில் கமல வன்நெஞ்சம் -பெரியாழ்வார் -போதத்துக்கு இல் ஸ்தானம் ஆன கமலம் –
ஞானம் அரிக்கும் கண்ணினாய் -மகா ஞானம் மிக்கவள் –

பாவாய் நீ –
தனிக் கிடை கிடக்க வல்லள் அல்லையே நீ –
தனித்து குணாநுபவம் பண்ண வல்லையோ நீ
பாவாய் -கொல்லி அம் பாவை -பதி விரதை நிருபாதிக ஸ்த்ரீத்வம்

நன்னாளால் –
கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் என்று நாட்டாரும் இசைந்து–அவனும் நாமுமாய் ஜலக்ரீடை பண்ணி
அவன் மடியிலே சாயலாம் காலத்தைப் பெற்று வைத்து–படுக்கையை மோந்து கொடு கிடப்பதே –
நன்னாளால் —
மேல் வருகிற நாள் ராவணாதிகளைப் போலே பிரிக்கிற நாள் இறே-
சத்வோத்தரமான காலம் நேர்பட்ட படி என் தான் –
நல் நாள் காலம் போய் கொண்டே இருக்கும் -கிருஷ்ண அனுபவம் பெரியவர் கொடுத்து இருக்க வீணாக கழிப்பதே
பரம பதத்தில் உள்ளாறும் கைங்கர்யம் துடிக்க கிருஷ்ணன் கிடாய் பெண்கள் கிடாய் -ஆறி இருக்கிறது என்ன
மேய்ச்சல் கடையிலே அசை இடுவார் உண்டோ
நல் நாள்
ஆண்டாள் -பட்டர் இடம் தீர்த்தம் தாரும் பெரிய திரு நாளில் இந்த ஏகாதசி எங்கே தேடி கண்டு பிடித்தீர்கள் –
கைங்கர்யம் செய்ய உடம்பில் பலம் வேண்டும் ஏகாதசி உபவாசம் கைங்கர்ய விரோதி
நித்யம் பெருமாள் அனுபவம் ஏகாதசி நினைவு எப்படி வரும் – நல் நாள்

கள்ளந்தவிர்ந்து கலந்து –
கள்ளமாவது -தனியே கிருஷ்ண குண சேஷ்டிதங்களை நினைத்துக் கிடக்கை–
அத்தை தவிர்ந்து எங்களோடு கலந்து
எங்களுக்கு உன்னைக் காட்டாதே மறைக்கை யாகிற–ஆத்மா அபஹாரத்தை தவிர்ந்து எங்களோடு கல -என்றுமாம்
சேஷத்வத்தை பொதுவாக உண்பதனை நீ தனியே உண்ண புக்கால்-
சேஷத்வத்தை அபஹரித்தால் சேஷியை ஷமை கொள்ளலாம்–
சேஷித்வத்தை அபஹரித்தால் பொறுத்தோம் என்பார் இல்லை –யார் இடம் விண்ணப்பிக்க
குற்றம் நின்றே போம் இத்தனை —
கலந்து -குள்ளக் குடைந்து நீராடாதே பள்ளிக் கிடத்தியோ -என்று அந்வயம்
உன்னை எங்களுக்கு காட்டாமல் இருக்கிற களவை விட்டு எங்களோடு ஒரு நீராக கலந்து
இவ்வளவு பேர்- எங்கள் உடன் கலந்து
அவன் உடன் கலந்த உடம்பை காண ஆசைப் படும் பாகவதர்கள் -எங்கள் சத்தையை உண்டாக்காய்-

ஸூவ நிஷ்டை- யுக்தி நிஷ்டை -ஆச்சார்யர் சொல்ல திரும்பி சொல்லி – ஆச்சார்ய நிஷ்டை -மூன்று நிலைகள் உண்டே
பகவத் கைங்கர்யம் -பகவான் உகந்த பாகவத கைங்கர்யம் -பாகவதர் உகந்த கைங்கர்யம் -ஆச்சார்யர் கைங்கர்யம்
பேர் உறக்கம் -சரம பர்வ நிஷ்டைக்கு உள்ளார் இடம் தான் பெறுவாள் இப்பெண் -ஆய்ப்பாடியில் இவன் நீக்கமற நிறைந்து இருக்க –
ஈஸ்வரன் தானும் ஆச்சார்ய பதத்தை ஆசைப்பட்டு இருக்கும் –
கோபிமார் அனுஷ்டானம் -ஆண்டாள் அநுகாரம் -அப்யாஸம் -மூவருக்கும் பாவைக்களம்-உண்டே
பகவத் அனுபவத்துக்கு சேர்ந்த இடம் -ஸ்த்ரீ பிராயர் நாம் – கால ஷேப கூடம் –
யாஜ்ஜ்வல்க்யர் -ஜனகர் வந்தால் தான் கால ஷேபம் – -கால ஷேப கூட்டமே பாவைக் களம் –
ஞான பூர்வகமாக பக்தி -பிரமாணம் -உண்மை அறிவை ஏற்படுத்தும் கருவி -மூலம் பிரமேயம் -காட்டுபவர் பிரமாதா –
பிரேமா – புத்தியால் இவன் என்று அறிவது –
தத்வ தர்சினிகள் -ஓராண் வழி -பிள்ளைகள் எல்லாரும் -நம்பிள்ளை கோஷ்ட்டியோ நம் பெருமாள் கோஷ்ட்டியோ
த்யான யோகம் -தனிமை -ப்ரஹ்மானுபவம்-ஜனக்கூட்டம் தவிர்த்து -பிறப்பு இறப்பு ஜனீ-தாண்டி – –
அடியார் குழாங்கள் -ஈட்டம் கண்டு -பிள்ளைகள் எல்லாரும் இங்கும் –
நல்ல கந்தம் –தீய கந்தம் -உபதேச ரத்னமாலை இரண்டு பாசுரங்கள்
தனியாக யோகம் -சக்தி வளர்த்து பின்பு தீய கந்தம் மாற்ற -இரண்டுமே வேண்டுமே -பக்தி யோகத்துக்கு தனிமை /
பிரபத்தி மார்க்கத்துக்கு -அடியார் -கரிய கோல திரு உரு காட்டுவான்
யோகம் முதிர்ந்து அனுபவம் இங்கு -கீதா உபநிஷத் யோகம் தனிமை -கோதா உபநிஷத் எல்லாரும் பாவைக் களம் புக்கார் –
நரனுக்கு நாராயணன் -உபதேசம் / பெருமாள் பிராட்டிக்கு / கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு -இவை முன்பு பாவைக் களம்
சுவையன் திருவின் மணாளன் -இவனுக்கும் சொல்லிக் கொடுத்து -இது பாவையுடைய களம்
நம்மாழ்வார் மூலம் உலகோரை திருத்த -அவர் நாவில் அமர்ந்து -அவர் திரு மேனி பாவைக் களம் –
என் வாய் முதல் அப்பன் -மெய் நின்று கேட்டு அருளாய் -மெய் சத்யம் சரீரம் -யாகம் பண்ணுவது பெருமாளே இங்கு
குரு பரம்பரைக்கு வித்து/ நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினாரே மதுரகவி -அனுபவம் பகிர்ந்து -யோகம் உபதேசம் -மாறி அனுபவம்
நாத முனிகள் -உபதேசம் தொடக்கம் -அஷ்டாங்க யோகம் கை வந்தவர் -இவர் இடம் அனுபவ ருசி கை வந்து –
உய்யக் கொண்டார் -பிணம் கிடக்க மணம் புணர்வார் உண்டோ –
மணக்கால் நம்பி ஆச்சார சிஷ்யரை தேடி ஆளவந்தாரை சம்பிரதாயத்துக்கு –முன்பு எல்லாம் சிஷ்யர் தேடித் போக –
பாவைக் களம் ராஜ சபை இங்கு –கீதை சொல்லி -அரங்கனை தன்னைக் காட்டச் சொல்லி –
பலர் மூலம் பஞ்ச ஆச்சார்யர் மூலம் ராமானுஜருக்கு அருளி -கடாக்ஷ பலத்தால் அருளும் முறை தொடக்கம் –
ஆ முதல்வன் இவன் என்று-மதுராந்தகம் பாவைக் களம் -இருவரும் எழுந்து அருளி -சடக்கென செய்ய வேண்டும் –
மின்னின நிலையில மன்னுயிர் ஆக்கைகள் –
கப்பும் களையுமாகா ராமானுஜர் –12000–ஸ்ரீ வைஷ்ணவர்கள் -700-சந்யாசிகள் –ஆண்டாள் கோஷ்ட்டி –
நமக்காக சரணாகதி அனுஷ்ட்டித்து -அனுபவம் ஒன்றே நமக்கே -ஆச்சார்ய அபிமானம் –
ஆசை யுடையார்க்கு எல்லாம் -பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி -ஞானம் எழ / ஆம்பல் கூவிற்று சம்சார அந்தகாரம் போனதே /
நம்பிள்ளை -100-ஈடு சாத்தி –ஈடு படுத்தி அனுபவம் எங்கும் பரந்து விரிய /
மா முனிகள் -நம்பெருமாளுக்கும் ஈடு சாத்தி அருளி -இந்த குரு பரம்பரை ஹாரமே நமக்கு பாவைக் களம் –

ஸ்வா பதேசம்
ஸ்வரூப ஞானம் முற்று பெற்று–நாமே எழுந்து செல்லுகை பொருந்தாது என்று இருக்கும்
பாகவதரை உணர்த்தும் பாசுரம் இது
போதரிக் கண்ணினாய் –
ஞானம் உடைமையை கூறினவாறு
புள்ளின் வாய் கீண்டான்
கருடன் வேதமயன் -வேதத்தின் வாய் கீண்டானை உள்ளே புகுந்து தாத்பர்யமாய் இருக்கிறவனை
பொல்லா அரக்கனை–
மமஹாரம் அஹங்காரங்கள் ஒழித்து
பாவைக் களம்–பாகவதர் திரள்
வெள்ளி எழுந்து வியாழன் உறங்கிற்ற–சாத்விக ஞானம் தலை எடுத்து தாமஸ ஞானம் தலை சாய்த்து
புள்ளும் சிலம்பின
வைதிகர் அத்யயனம் உபக்ரமிக்க வேத கோஷம் செவிப்படா நின்றது
குள்ளக் குளிர–
தனியாக பகவத் அனுபவம் செய்யலாமோ இனியது தனி அருந்தேல்

கள்ளம் தவிர்ந்து கலந்து –
ஆத்மா அபஹாரி–இனியது தனி அருந்தேல்–
பாவைக்களம்-
கால ஷேப மண்டபம் -ஆசை உடையோரை எல்லாம் புக்க விட்டாரே-எம்பெருமானார்

வானமா மலை -சுவாமிகள் –
கோவலர் தம் பொற் கோடி -யாமுனமுனி
நற் செல்வன் தங்கை -ராம மிஸ்ரர் -திரு குமாரத்தியார் சேற்றில் படியாய் கிடந்தது –
மணக்கால் நம்பி -மணல் கால் பட்டாதால் –
மனத்துக்கு இனியான் ராம மிஸ்ரர்–போதரிக் கண்ணினாய் புண்டரீகாஷர் உய்யக் கொண்டார்
பிணம் கிடக்க மணம் புணர்ந்தார் உண்டோ–
யோக ரகசியம் வேண்டாம் தான் மட்டும் கலந்து அனுபவம் வேண்டாம்-
உலகம் உஜ்ஜீவிக்க வைக்க நினைத்த -உய்யக் கொண்டார் –
போதரிக் கண்ணினாய் –என்றும்
பங்கயக் கண்ணானைப் பாட –என்கையாலே ஸ்ரீபுண்டரீ காஷாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது

தொண்டர் அடி பொடி ஆழ்வார் –
கிருஷ்ணன் ராம– இருவரையும் சொல்லி அருளி-
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமினீரே
சிலையினால் இலங்கை செற்ற தேவனே தேவன் ஆவான்
வச்த்ராபரணம் -துகில் உடுத்தி ஏறினர் பள்ளி எழுந்து அருளாய்–அயோத்தி அம் அரச -கண்ணன் ராமன்
நம் பெருமாள் -வசிஷ்டர் விநயம் எல்லாம் தோற்ற –
பெரிய பெருமாள் யசோதை பிராட்டி வளர்த்த மொசு மொசுப்பு எல்லாம் காணலாம் –
நஷத்ர கதி–பறவைகள் ஒலி- அடையாளம் கதிரவன் வசுக்களும் வந்து ஈண்டி
பெரியாழ்வார் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் புள்ளும் சிலம்பின காண் –
போதை அரிவதில் கண்ணை உடையவர்-
புலம்பின புட்களும் -போயிற்று கங்குல் புகுந்தது புலரி -என்பர் தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரும் —
குள்ளக் குளிர குளித்து -அந்தணமை ஒழித்திட்டேன்
பழியாக தாசி வீட்டில் மாதரார் -கயலில் பட்டு பாவாய் -அரங்கனை தவிர பாடாத பதி விரதை
நல் நாள் மார்கழி திங்கள் மதி -மார்கழி கேட்டை
கள்ளம் தவிர்ந்து கலந்து -வட்டில்
ஆழ்வார் கோஷ்டியில் கலந்து கள்ளம் தவிர்ந்து -தொண்டர் அடி பொடி –

பிள்ளைகள் எல்லாரும் பாவை களம் புக்கார் –
இரவியர் -வந்து வந்து ஈண்டி -வம்பவர் -அனைவரும் வந்தனர் -சுந்தரர் நெருக்க
வெள்ளி வியாழன் துன்னிய தாரகை மின்னொளி சுருங்கி -புள்ளும் சிலம்பின –தோட்டம் வாழ்ந்த ஆழ்வார்கள்
போதரிக் கண்ணினாய்
புஷ்பத்தை பறிப்பதில் கண்ணை உடையவர் குளித்து மூன்று அனலை ஓம்பும் -ஒழித்திட்டேன்
பள்ளிக் கிடத்தியோ
அரக்கத்தம்மா பள்ளி எழுந்து அருளாயோ
பாவாய் பதி
வ்ரதை இவர் தானே
பதின்மர் பாடும் பெருமாள் -பாக்கியம் இல்லையே ஜீயர் அரையர் இடம் சொல்ல
சோழியன் கெடுத்தான்
உச்சி குடுமி பெரியாழ்வார் தொண்டர் அடி பொடி ஆழ்வார் மதுர கவி ஆழ்வார் மூவரும்
நல் நாள் -மார்கழி கேட்டை -மன்னிய சீர் மார்கழி கேட்டை
கள்ளம் தங்க வட்டில் திருடி –
ஆழ்வார் கோஷ்டியில் கலந்து –

போதரிக் கண்ணினாய் –என்றும்
பங்கயக் கண்ணானைப் பாட –என்கையாலே ஸ்ரீபுண்டரீ காஷாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது

———————————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: