திருப்பாவை சாரம் – அங்கண் மா ஞாலத்து அரசர்– —

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————————————–

அவதாரிகை –
கீழ் பாட்டிலே–தங்களுடைய அபிமான சூன்யதையை சொல்லிற்று –
இப்பாட்டில் – அனன்யார்ஹ சேஷத்வம் சொல்லுகிறது-
நம-அபிமானம் தொலைய–திரு மந்த்ரம் நம–த்வயம் நம
ஸ்திரீக்கு மோவாய் எழுந்தால் போலேயும்–புருஷர் முலை வந்தால் போலே –
கர்ம பரதந்த்ரராய் இருந்துள்ள பிரயோஜனந்த்ர பரரில் காட்டிலும்
அநந்ய ப்ரயோஜனராய் சாதனாந்தர நிஷ்டராய் இருக்குமவர்களில் காட்டிலும்
சித்த சாதனம் பண்ணினார் குற்றம் போகத் தன் கைம்முதல் இல்லாமையால்
ஈஸ்வரனே ப்ரபுத்தனாய்க் கொண்டு
சம்விதானம் பண்ண வேணும் என்று அபேக்ஷிக்க அவ்வதிகாரத்தைச் சொல்லுகிறது –

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்

அங்கண் –
அழகிய இடம் –
பிரம்மாவுக்கும் தன் போக உபகரணங்களோடு அனுபவிக்கலாய் இருக்கை –
பீபிலிக்கும் தன் போக உபகரணங்களோடு அனுபவிக்கலாய் இருக்கை –

மா ஞாலத்து அரசர் –
அழகிய விசாலமான பெரிய பூமி மூன்று விசேஷணங்கள்–
போகய போக உபகரண போக ஸ்தானங்களை பிரஹ்மா பிப்லி -தக்க அபிமானம் –
எரும்புக்கும் பிரஹ்மாவுக்கும் அஹங்காரம் வாசி இல்லை
மகா ப்ருதிவியில் ராஜாக்கள் –இப் பரப்பு எல்லாம் -என்னது -என்று அபிமானம் பண்ணுகை –
யாவையும் யாவரும் தானாம் அமைவுடை நாரணன் -என்கிறதை
பௌண்டரீக வாசுதேவன் போலே அனுகரிக்கிற படி
ஈஸ்வர சர்வ பூதானாம் நீ இருக்குமா போலே பதிம் விச்வச்ய–ஈச்வரோஹம் -என்று இருப்பார்

அபிமான பங்கமாய் வந்து –
அபிமான சூன்யராய் வந்து –ராஜ்யங்களை இழந்து எளிவரவு பட்டு வந்து –

நின் பள்ளிக் கட்டில் கீழே –
அந்த ராஜ்யங்களைக் கொடுத்து-போங்கோள் என்றாலும்
பழைய எளிவரவை நினைத்து -அவை வேண்டா என்று-உன் சிம்ஹாசனத்தின் கீழே –

சங்கம் இருப்பார் போல் –
திரளவிருந்து ஓலக்கமாக இருக்குமவர்களைப் போலே-அவர்கள் போக்கற்றுப் புகுந்தார்கள் –
இவர்கள் கைங்கர்யத்துக்கு புகுந்தார்கள் –
இளைய பெருமாளைப் போலே -இவர்களையும் கிருஷ்ண குணம் தோற்பித்து அடிமையில் மூட்டிற்று –

அபிமான-பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே-
இளைய பெருமாளைப் போலே / குணைர் தாஸ்யம் உபாகத -இறே –
சங்கம் இருப்பார் போல் –
வெளியே திரியில் பின்னை ராஜ்யம் பண்ணு என்று தலையிலே முடியை வைப்பார்கள் -என்று
அஞ்சி அணுக்க ஓலக்கத்திலே சேவிப்பார்கள்

அம் கண் மா ஞாலம் -திரு மால் இரும் சோலை அனுபவம் -ஸூ சகம் –
அபிமான பங்கமாய் வந்து அடி பணிந்தமை -கொன்னவில் கூர் வேல் கோன் நெடுமாறன்
தென் கூடல் கோன் தென்னன் கொண்டாடும் தென் திரு மால் இரும் சோலையே –
இதமிமே ஸ்ருணுமோ மலயத்வஜம் நருபமிஹ-ஆழ்வான்-

வந்து தலைப் பெய்தோம் –
கீழே எல்லாரையும் எழுப்பிப் பட்ட வ்யசனம் எல்லாம்-சபலமாம்படி வந்து கிட்டப் பெற்றோம் –
அநாதி காலம் இந்த சம்பந்தத்தை இழந்து போந்த நாங்கள்-இன்று நிர்ஹேதுகமாகக் கிட்டப் பெற்றோம்
ஒரு படி வந்து கிட்டப் பெறுவதே -என்கை —வி சத்ருசமான இது சங்கதமாகப் பெறுவதே
ஆக
இந்த ராஜாக்கள் தம் தாமுடைய அபிமானங்களை விட்டும்–க்ரம ப்ராப்தமான ராஜ்யாதிகளை விட்டும்
அம்புக்குத் தோற்று உன் கட்டில் கால் கீழே-படுகாடு கிடக்குமா போலே –
நாங்களும்
எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தை விட்டும்–வேறு உண்டான போகங்களையும் விட்டும்
உன்னுடைய குண ஜிதராய்க் கொண்டு வந்தோம் –
அதவா –
அந்த ராஜாக்களைப் போலே நாங்களும்–அநாதி காலம் பண்ணிப் போந்த–தேகாத்ம அபிமானத்தை விட்டு
தேகாத்பரனான ஆத்மாவின் பக்கல் ஸ்வா தந்த்ரியத்தையும் விட்டு–அநந்ய பிரயோஜனராய் வந்தோம் -என்றுமாம் –
ஈரரசு தவிர்ந்து -நீ தான் அரசன் ஒத்து கொண்டு வந்தோம்

ஏழு ஜன்மம் -ஜனித்து -சாதனா அனுஷ்டானம் செய்து -ப்ரஹ்மா யுக கோடி சஹஸ்ராணி —
ஏழு ஜன்மம் சூர்யன் -ருத்ரன் பக்தி உண்டாகும்–ஏழு ஜன்மம் ருத்ரன் -நாராயண பக்தி உண்டாகும்
இவ் வருகே – அல்ப ஞானம் தண்மையாய் இருப்பார் சரீர அவகாசம் காலத்தில் கிடைக்கும்
என்று கட்டு சோறு கட்டி இருக்கிறார்கள்
பொதி சோறு -நிச்சயம் சித்தம்-நஞ்சீயர் பட்டர் இடம் கேட்க –சேர இருக்கும்படி எங்கனம் என்னில்-
அவன் தன விபூதி பரப்பு அளவும் பச்சை இட்டு-பெரிய அஹங்காரம் விட வேண்டும் அவன்-
இவனுக்கு விட வேண்டிய அம்சம் ஒன்றும் இல்லையே
எதோ உபாசனம் பலம் –ஒன்றும் இல்லாமை அனுசந்தித்து நீயே கடவை காலிலோ விழும்-
அவனும் அப்படியே தன தலையில் ஏறிட்டு கொண்டு ரஷிக்க
ஈஸ்வரனை முதலில் பற்றிற்று-அவன் சாதனம் அனுஷ்டித்து –peon general menager relieve செய்யும் காலம்
ஸ்தானம் உட்கார்ந்தாலே அஹங்காரம் ஒட்டிக் கொள்ளும்-
முக்குரும்பும் குழியைக் கடக்கும் கடத்தும் நம் கூரத் ஆழ்வான்-
கல்வி குலம் செல்வம் செருக்கு இல்லை –
மூன்றும் கொள்ள காரணம் இருந்தும் -என்பதால் விசேஷித்து சொல்கிறோம் –

ஒரு நாயகமாய் ஓட உலகுடன் வாழ்ந்தவர் –பெரு நாடு காண இம்மையிலே பிச்சை
தாம் கொள்வர் -இம்மையிலே அதே ஜன்மம்
காணிக்கை கொடுக்கும் பொழுது அலட்ஷியம் -இப்பொழுது பிச்சை எதிர்பார்த்து
தாம் -இவன் கையால் வாங்கி கொள்ள மாட்டான் முன்பு கௌரவம் பார்த்து–கொள்வர் –
கொள்ள சித்தம் கொடுப்பார் தான் இல்லை –
கரு நாய் கவர்ந்த காலர்
கருமை
கர்ப்ப நாய் –
வீரக் கழல் அணிந்த காலை உடையவர் முன்பு
ராஜா பெரியவரா பகவான் பெரியவரா -கேள்வி ஆரம்பித்து —திண்டாட வைக்க —
ராஜா தான் பெரியவர்–அரசன் கோபிக்க -முட்டாள்
அவனால் செய்ய முடியாத கார்யம் நீர் செய்யலாம்–சொல்வது உண்மை–இல்லை
என்றால் ராஜ்ஜியம் விட்டு வெளி இடுவேன்
இத்தை பகவானால் கொடுக்க முடியாதே —-எல்லாம் அவன் தேசம் அப்பால் ஒன்றும் இல்லையே —
பெருமை வேறு விதமாக சொல்லப்பட்டது –

பதிகம் அரசனை நா கொண்டு மானிடம் பாட வந்த கவியேன் அல்லேன்–கண்டவா தொண்டரை பாடி
பல்லவன் விலோலவன் மல்லையர் கோன் பணிந்த பரமேஸ்வர விண்ணகரம்–நந்தி வர்மன் பரமேஸ்வர பல்லவ ராஜன்
பரமேஸ்வர விண்ணகரம் வைகுண்ட பெருமாள் திருக் கோயில்–திண் திறலோன் -கடுவாய் பறை உடை பல்லவர் கோன்
நந்தி பணி செய்த நந்தி புர விண்ணகரம்–63 செங்கணான் கோ சோழன் நாயனார் ஒருவன்
சிவனுக்கு 70 கோயில் கட்டி நாச்சியார் கோயில் திருப்பணி-பூர்வ ஜன்மம் சிலந்தி யானை ஏற முடியாத கோயில்
உலகம் ஆண்ட -எழில் மாடம் எழுது செய்த செங்கணான் கோ சோழன் 10 பாட்டிலும்
மலையரையன் பணி செய்த மலையத்வஜ பாண்டிய ராஜன் பூம் கோவலூர்–நெடு மாறன் திரு மால் இரும் சோலை
தொண்டையர் கோன் செய்த மயிலை–தந்தி வர்மன் பிள்ளை இவன் என்பர்
வயிர மேகன் -அரசன் -தொண்டையர் கோன் –அவன் வணங்கும் அஷ்ட புஜ பெருமாள் – -திரு வல்லிக் கேணி

தலைப்பெய்தோம் –
திரு மாளிகை வாசலில் -மகா விசுவாச பூர்வகம் –
களைவாது ஒழியாய்–களைகண் மற்று இலேன் நின் அருளே நோக்கி –மா முகிலே பார்த்து இருக்கும் அநந்ய கதித்வம்
கொண்டானை அல்லால் அறியா குல மகள் போல்–கோல் நோக்கி வாழும் கொடி போல்
இசைவித்து என்னை உன் தாளிணை கீழ் இருத்தும் அம்மான்–ஜாயமான கடாஷம் மது சூதனா —அமலங்களாக விளிக்கும்
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னாது கருவிலா திரு இல்லாதீர் காலத்தை கழிக்கின்றீரே
அன்று கருவரங்கத்து உள் கிடந்தது கை தொழுதேன்–அன்று கருக் கூட்டியுள் கிடந்தது கை தொழுதேன் கண்டேன்
வனதமலர் கருவதனில் வந்த மைந்தன் வாழியே–புஷ்ப வாஸம் பொழுதே கை தொழுது

அபிமான பங்கமாய் —அபிமானம் -கர்வோ அபிமானம் அஹங்காரம்–
அபிமான துங்கன் செல்வனைப் போலே -உபாதேயம்
அபிமான துங்கனை –திருக் கோஷ்டியூர் —வந்து தலைப் பெய்தோம் –

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே –
ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே எங்கள் ஆற்றாமைக்கு அலருமவை இறே இவை –
அர்த்திகளைக் கண்டால் அலருமவை இறே இந்தத் தாமரைப் பூ –

செங்கண் –
வாத்சல்யத்தாலே சிவந்து இருக்கை –
உபமானம் நேர் இல்லாமையாலே உபமேயம் தன்னையே -சொல்லுகிறது ஆகவுமாம் –

சிறுச் சிறிதே-
ஓர் நீர்ச் சாவியிலே வெள்ளம் ஆகாமே சாத்மிக்க சாத்மிக்க -என்கை
பிரதம பரிஸ்பந்தமே பிடித்து காண வேணும் -என்றுமாம் –
சிறுச் சிறிதே கிண் கிணி
குற்றம் குறைகள் நினைத்து பாதி மூடியும்–கூக்குரலை கேட்டு பாதி திறந்தும் –

எம்மேல் விழியாவோ –
கோடை யோடின பயிரிலே ஒரு பாட்டம் -என்னுமா போலே –
சாதகம் வர்ஷ தாரையை ஆசைப் படுமா போலே –விழியாவோ -என்று தங்கள் மநோ ரதம் –

சொத்து பிரகாரம் சரீரம் -நாம்–குண ஜாதிகள் போலே த்ரவ்யமாய் இருக்கச் செய்தே
வெண்மை வஸ்த்ரம் -தனி இருப்பு இல்லை–ப்ருதக் ஸ்திதி பூதனை–இருப்பும் நடவடிக்கையும்
கௌஸ்துபம் போலே அத் தலைக்கு அதிசயம் விளைவித்து–
ஸ்வரூப லாபம் சேதனன் இழந்து–அசித் கலந்து சரீரம் தேவோஹம்
அஹங்கரித்து–அசித் சமம் ஆகி–ஷிபாமி கை கழிய அவன் செய்யும்படி–
யாத்ருசிகமாக ஸூக்ருதம் ஊரை சொன்னாய் பேரை சொன்னாய்
அறியாமல் தற் செயலாக சொல்லியதையும்-அனந்தரம் கடாஷம் யோக்யதை-
ஈஸ்வரனுக்கு சேஷம் ருசி விளைந்து
உபாயம் அவனை பற்றி-த்வரை பிறந்து–திருவடி கிடக்கும் படி ஆகி விட்டதே –

1-தேகாத்ம அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
2-ஸ்வ ஸ்வா தந்த்ரிய அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
4-அந்ய சேஷத்வ நிவ்ருதியை உண்டாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே
5-ஜ்ஞாத்ருத்வ பிரயுக்தமான ஸ்வ ஸ்மிநிஸ்வ சேஷத்வ நிவ்ருத்தியை உண்டாக்கி -அதுக்கு இசைந்தவாறே
6-ஸ்வ ரஷண ஸ்வான்வயத்தை நிவர்த்திப்பித்து – அதுக்கு இசைந்தவாறே –
7-உபாயாந்தரங்களை விடுவித்து -அதுக்கு இசைந்தவாறே
8-தத் ஏக உபாயனாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே –
9-ஸ்வ வியாபாரத்தில் ஸ்வாதீன கர்த்ருத்வ நிவ்ருத்தியைப் பண்ணுவித்து -அதுக்கு இசைந்தவாறே
10-பாரதந்த்ரிய பிரதிபத்தியைப் பிறப்பித்து அதுக்கு இசைந்தவாறே
11-சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனான தன்னை அனுபவிப்பித்து –
12-அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யத்தை உண்டாக்கி
13-அக் கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியை தவிர்ப்பிக்கை –
முழு நோக்கு பெறும் அளவானவாறே -என்றது-இவ்வளவான பாகம் பிறந்தவாறே -என்றபடி –
இப்படி அல்லது தேகாத்ம அபிமானத்துக்கு பரம பக்தி உண்டாக்கிலும் உண்டாகாது இறே

யாத்ருசிக்க சுக்ருதம்–நணுகினம் நாமே —திடீர் கரை அடைந்தது போலே–அக்கரை -இக்கரை ஏறி
நானா வந்து சேர்ந்தேன் ஆசர்யம்–சித்ர கூடம் பரதன் -அடையாளம் கண்டு –
பரத்வாஜர் -பிராப்தாச்ய -அடைந்தோம் நினைந்து மகிழ்ந்தால் போலே
வானரானாம் நராணாம் சம்பந்தம் கதம் சமானகம்–ஏவம் இப்படி —
அந்தபுர கார்யம் எவ்வளவு அர்த்தம் திருவடி
பெண்டாட்டி சமாசாரம் தம்பி அனுப்பாமல்–நணுகினம் நாமே–
நாமா அடைந்தோம் யோக்யதை உண்டா பயப்பட இருக்க
வந்து எங்கு தலைப் பெய்வேன் கவலை தீர்ந்து வந்து கிட்டப் பெறுவதே பரம பாக்கியம்–

வந்து தலைப் பெய்தோம்– கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம் மேல் விழியாவோ-
வந்து அருளி என் நெஞ்சு இடம் –திருக் கமல பாதம் வந்து -ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் –
இவர் பற்றியதாக சொல்ல வில்லை -தாயாரே முலையை பிரஜை வாயிலே வைப்பாரைப் போலே /
இச்சா ருசி விருப்பம் த்வரை-திரு முடி சேவை -உச்சி யுள்ளே நிற்கும் தேவ தேவர்க்கு –நிச்சலும் விண்ணப்பம் செய்ய
நீள் கழல் சென்னி போருமே -இச்சையில் செல்ல உணர்த்தியும் -ஒன்றே வேண்டுவது -சைதன்ய கார்யம் –
அறிவுற்று -வந்தோம் -வந்து தலைப் பெய்தோம் –கடாக்ஷம் –மாறி மாறி பரிமாற்றம் –
முதல் அடி அவனதே -ஈஸ்வரஸ்ய ஸுஹார்த்தம் -நாராயணனே நமக்கே பறை தருவான் -மற்றை நம் காமங்கள் மாற்று –
நீராடப் போதுவீர் போதுமினோ -முதல் வினைச் சொல் -பயன் கருதாமல் -இச்சையில் ஆரம்பம் –

கிண்கிணி -மாறி மாறி –
அநாதி கால பாபங்கள் -நம்மை பார்த்து மூட -பிராட்டி புருஷகாரம் -விழிக்க பண்ணுமே –
சிறு சிறிதே -நமது -மநோ ரதமும்-தேவரீர் சங்கல்பம் தொடங்கி -உன் தாமரைக் கண்களால் நோக்காய்
சம்ச்லேஷம் விஸ்லேஷம் மாறி மாறி அன்றோ பக்தியை காதலை வளர்க்கிறான் –
இணைக் கூற்றங்களோ அறியேன் -என்னவும் பண்ணுமே –
கடாக்ஷ மநோ ரதம் -இதில் -கட்கிலி உன்னைக் காணுமாறு அருளாய் —
கண்ணே உன்னை காண எண்ணே கொண்ட சிந்தையனாய் –
ஞானக் கை தா காலக் கழிவு செய்யேல் –
ஞானம் -தர்சனம் -ஞானம் த்ரஷ்டும்-பின்பு பிராப்தி /பகவத் விஷயத்தில் மநோ ரதம் வளர்க்க வேண்டுமே –

நடை அழகு -இருப்பு அழகு -கிடை அழகு -பேசி -பாவி என்று ஓன்று சொல்லாய் -பாவியேன் காண வந்து —
அணைத்து -கைங்கர்யம் கொண்டு -சொல்லு உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -/
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசி வாழி கேசனே /ஓன்று ஒன்றின் செயல் விரும்ப உள்ளது எல்லாம் தான் விரும்ப /
கட்ச்செவி-ஆதி சேஷனுக்கு உண்டே / பிடிக்கும் மெல்லடியை -கூவுதல் வருதல் செய்யாய் –
முதலில் கூவுதல் -ராவணனோபாதி பிரிக்கக் கூடாதே–கூவுதல் நீ வருவது நான் என்றுமாம் /

எடுப்பும் சாய்ப்புமாக -கிண்கிணி /
கூவிக் கொள்ளாய் வந்து அந்தோ -முகப்பே கூவிப் பணி கொள்ளாய் / நல்லார் அறிவீர் -வாழ்ந்தே போம் –
நம்மை ஒரு கால் காட்டி நடந்தால் நாங்கள் உய்வோமே /அடியேற்கு இறையும் இரங்கீர்-மநோ ரதம் விஞ்சி –
இப்படி பிரார்த்தனை செய்ய கிருஷிகனும் அவனே /கண் இணையும் செவ்வாய் முறுவலும் ஆகுலங்கள் செய்ய நோற்றோமே –
கனம் குழை இட காது பெருக்குவாரைப் போலே / மாச உபவாசிக்கு போஜன புறப் பூச்சு போலே /
மஹா க்ரம -அவன் திரு நாமம் -வர -போகு நம்பீ ஊடல் –/ பாத பங்கயமே தலைக்கு அணியாய்/
மாக வைகுந்தம் காண என் மனம் ஏகம் எண்ணும் – / உன் மனத்தால் /
மங்க ஒட்டு உன் மா மாயை -அடியார்க்கு என்னை ஆட்படுத்தாய் / சிறு சிறிதே கடாக்ஷித்து இப்படி வளர்ப்பான் /
பிராப்தி பலம் பெற வேண்டாவோ
கிண் கிணி கடாக்ஷம் முதலில்-
மேலில் -அறிவுற்று / தீ விழித்து /வேரி மயிர் பொங்க எப்பாடும் பேர்ந்து/ உதறி /மூரி நிமிர்ந்து /
முழங்கி / புறப்பட்டு / போதர வேண்டுமே -வரிசையாக வினைச் சொற்கள் –
பூவைப் பூ வண்ண -மார்த்வம் -மகாத்மாவை பிரிய அஸஹ்யமாக -/ உன் கோயில் -கீழே நந்த கோபன் கோயில் –
நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன –
நாண் ஒலியும் சங்கு ஒலியும் -ஆசைப்பட்டவள் அன்றோ –
சீரிய சிங்காசனம் -சீர்மை திவ்ய தேசத்துக்கு -ஆசைப்பட்டு வருவானே

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல் –
ப்ரதிகூலர்க்கு அணுக ஒண்ணாமையும் அனுகூலர்க்கு தண்ணளி மிக்கு இருக்கையும்
அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்-உன்னைப் பெறாத விடாய் ஆறுகைக்கும் -என்றுமாம் –
தண்ணளியும் பிரதாபமும் கூடி இறே இருப்பது –

அங்கண் இரண்டும் கொண்டு –
சந்திர சூர்யர்கள் கோப பிரசாதங்களுக்கு ஒப்பர் அல்லர் என்கை –
இரண்டும் கொண்டு–முழு நோக்கு பொறுக்கும் அளவானவாறே -இரண்டும் -என்று சொல்கிறார்கள் –

எங்கள் மேல் –
உன் நோக்குப் பெறாதே உறாவின எங்கள் பக்கல் –

நோக்குதியேல் –
தங்கள் தலையால் கிட்டுவது ஓன்று அன்றே –

எங்கள் மேல் சாபம் இழிந்து
தங்கள் யாதனா சரீரம் போலேயும்–சாபோபஹதரைப் போலேயும்-விஸ்லேஷ வ்யசனமே படுகிற-எங்கள் துக்கம் –
அனுபவித்தே விட வேண்டுகையாலே -சாபம் -என்கிறது –
அன்றியே
விஷஹாரி ஆனவன் பார்க்க விஷம் தீருமா போலே-அவன் நோக்காலே சம்சாரம் ஆகிய விஷம் தீரும்
ஆகையால்
அங்கண் இரண்டும் கொண்டு–எங்கள் மேல் நோக்குதியேல்–எங்கள் மேல் சாபம் இழியும்–என்று அந்வயம் –

நோக்குதியேல்–
தங்கள் பிரத்யனத்தால் கிட்ட முடியாதே எங்கள் மேல் சாபம்
அனுபவித்தே தீர வேண்டிய பாபம்- பிராயச்சித்தம் கொண்டு போக முடியாதே சாபத்தை –
பிறர் உடைய சாபம் போலே அன்றே
விஸ்லேஷ விசனம் அனுபவித்தே போக்கிக் கொள்ள வேண்டும் ப்ரஹ்ம சாபம் மார்வில் வேர்வை கொண்டே
துர்வாச சாவம் மார்வில் இருப்பவள் கடாஷத்தால் தீர்ந்தது
அகலிகை சாபம் திருவடி துகளாலே போக்கி
தஷ சாபம் -கலைகள் -தடாகம் தீர்த்தம் சந்திர புஷ்கரணி-எங்கள் சாபம் போக்க இத்தனையும் வேணும்-

மாற்றார் நேற்றைய பாசுரம் -அபிமானம் / அரசர் அபிமானம் தொலைத்து இதில் –
ப்ரஹ்மாதிகள் விட வேண்டியவை மஹத் அன்றோ -நமக்கு விடுவது எளியது தான் –
விஷ்ணு பக்தோ பர தேவ அரசர் -இவர்கள் மாற்றார்கள் இல்லையே ஸ்வாதந்தர்யம் மிக்கு இருக்குமே –
விசிஷ்ட வேஷம்- அரசர் –பள்ளிக்கு கட்டின் கீழே வந்த பின்பு -சங்கம் ஒரே வார்த்தையால் சொல்லும்படி –
கந்தல் கழிந்தால் -அடியான் –நாம ரூபம் இழந்து ப்ரஹ்மானுபவம் -தாஸ்யமே -நிஷ்க்ருஷ்ட வேஷம் –
நோக்குதியேல் –நோக்கு எப்பொழுதும் உண்டே -சாபம் இழிந்து -வந்து தலைப் பெய்தோம்-
உள்ளத்தால் தள்ளி இருந்தோம் அபிமானத்தால் -இது வரை -இன்று தான் –
அபிமான பங்கமாய் வந்து தலைப் பெய்தோம் -கருணை காற்று -கடாக்ஷம் தீர்த்தம் -தேவராஜஅஷ்டகம் -திருக் கச்சி நம்பி –
துர்வாசர் சாபம் இந்திரன் -அகலிகை சாபம் -தக்ஷ பிரஜாபதி சாபம் சந்திரன் –எங்கள் மேல் சாபம் –
நா நா வித நரகம் புகும் வல்வினைகள்
தமர்கள் கூட்ட வல் வினையை –வல் வினையும் கூட்டம் -தமர்களும் கூட்டம் –
தமர்களும் ஒவ் ஒருவரும் வல்வினையை கூட்ட–இவ்வளவு இருந்தாலும் – நாசம் செய்யும் சதிர் மூர்த்தி –

சந்திர சூர்யர்கள் இருவரும் உச்சிப் பட்டால் போலே இருக்கிற அழகிய திருக் கண்கள் இரண்டையும் கொண்டு –
இவ்வளவான பாகம் பிறந்த எங்களை கடாஷித்தாய் ஆகில் –
அதாவது–பரம பக்தியை உண்டாக்குகை-
அத்தால்
எங்கள் மேல் சாபம் இழிந்து –
மேல்-அவசியம் அனுபாவ்யமாய் இருக்கிற விஸ்லேஷ வியசனம் தீரும் –
ஆகையால்
உக்த ரீத்யா கடாஷிக்க வேணும் என்று கருத்து –
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போலே -என்றது
அவன் கடாஷம் சுக ரூபமாயும் அஞ்ஞான நிவர்தகமாயும் இருக்கையாலே –
தன்னடையே போவதற்கு நிவாரணம் வேண்டாமே–
திருக்கண் நோக்கம் பட்டதுமே பிரிந்து உழலும் சாபங்கள் தன்னடையே போம்
ச்ரமணி விதுர ரிஷி பத்நிகளை பூதராக்கின புண்டரீகாஷன் நெடு நோக்கு சாபம் இழிந்து
என்னப் பண்ணும் இறே -நாயனார் -95
திருவடித்தூள் அஹல்யையின் சாபம் தீர்த்தது–
திரு முழம் தாள் குபேர புத்ரர் நளகூபர மணிக்ரீவர் -சாபம் தீர்த்தது -யமளார்ஜூன பங்கம் –
திருத் துடைகள் மது கைடபர்களின் சாபம் தீர்த்தன–திரு மார்பு ஸவேதம் ருத்ரன் சாபம் தீர்த்தது
துர்வாசர் சாபம் மார்பில் இருப்பவளால் தீர்ந்தது–திருக்கண் -கருவிலே திரு ஜாயமானம் –

திங்களும் ஆதித்யனும்–
உபய வேதாந்தம்–ஸ்ரீ பாஷ்ய கால ஷேபம் -அருளிச் செயல் கால ஷேபம்-
இப்படிச் சொல்வதும் ஊற்றத்தைப் பற்ற —பரசமய நிரசன பூர்வகம் அது –
செவிக்கு இனிய செஞ்சொல் இது–சஷூஸ் மத்தா து சாஸ்த்ரேண

புண்டரீகாஷா -விதுர போஜனம் -புண்டரீக நயன -கப்யாசம் ஏவம் அஷீணி
செந்தாமாரைப் பூவை -நீரை விட்டு -ஆதித்யன் உலர்ந்துமா போலே–
ஆசார்ய சம்பந்தம் தாலி இருந்தால் சர்வ பூஷணங்களும் சூட்டிக் கொள்ளலாம்
பூதராக்கின புண்டரீகாஷா நெடு நோக்கு சபரி விதுரர் ரிஷிபத்னி–
பெரும் கேழலார் தம் பெரும் கண் மலர் புண்டரீகம் -அபேஷிக்காமல் –
நம் மேல் ஒருங்கே பிரள வைத்தீர் -நம் ஆழ்வார் –
இன்றும் சடாரி சாதித்து -இதனாலே –
எம் மேல் விழியாவோ– எங்கள் மேல் நோக்குதியேல்–எங்கள் மேல் சாபம்
மூன்று தடவை சொல்கிறார்கள்
ஸ்வரூப விரோதி -கழிந்தவர்கள் -யானே என் தனதே இல்லாமல் யானே நீ என் உடைமையும் நீயே
பிராப்ய விரோதி -கழிந்தவர்கள் -மற்றை நம் காமங்கள் மாற்று
உபாய விரோதி கழிந்தவர்கள் -களைவாய் துன்பம் களையாது ஒளியாய் களை கண் மற்று இலேன் –

புள்ளு பிள்ளைக்கு இரை தேடும் புள்ளம் பூதம் குடி தானே–
செங்கண் சிறுச் சிறிதே- வல்லுயிர் சாபம் அவித்யாதிகள்
அலர்ந்தும் அலராமல் இருக்க ஹேதுக்கள் அருளிச் செய்கிறார்

ஸுந்தர்யம் செம்பளிக்க பண்ணும்–நப்பின்னை பிராட்டி ஸ்பர்சம் அலரப் பண்ணும்
அபராதம் மொட்டிக்க பண்ணும்–அபராத சஹத்வம் விகசிக்கப் பண்ணும்
கர்ம பாரதந்த்ர்யம் மொட்டிக்க பண்ணும்–ஆஸ்ரித பாரதந்த்ர்யம் அலரப் பண்ணும்
காலத்தின் இளமை மொட்டிக்க பண்ணும்–ஆஸ்ரித ஆர்த்த த்வனி விகசிக்க பண்ணும்
ஆதித்யனை கண்டு விகசிக்குமா போலே -ஆற்றாமை கண்டு விகசிக்கும்
செங்கண் -உபமானம் சொல்லி தலைக் கட்ட முடியாமல் உபமேயம் -இத்தையே சொல்லிற்று

சிறு சிறிதே -புள்ளுப் பிள்ளைக்கு இரை தேடும்
திங்களும் ஆத்யனும் -ஸ்ரீ பாஷ்ய சத தூஷணாதிகள் /மதுபானம் பண்ணுவது- அருளிச் செயல்கள்
அங்கண் இரண்டும் –
வெளி கண்கள் உள் கண்கள் இரண்டும் –
யம் யம் ஸ்ப்ரு சதி பாணிப்யாம் யம் யம் பச்யதி சஷுஷா -கடாக்ஷம் வேண்டுமே ஆ முதல்வன் இவன் –
ஏகயைவ குரோர் த்ருஷ்ட்யா த்வாப்யாம் வாபி லபேத யத் நதத் திஸ்ருபி ரஷ்டாபிஸ் ஸஹஸ்ரேண அபி
கஸ்ய சித்-ஆச்சார்யர் கடாக்ஷத்தின் உத்கர்ஷம் –

சாபம் இழிந்து நோக்குதியேல் -என்று அந்வயம்
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து -என்று கீழோடே -அந்வயம்-

—————————————————

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: