திருப்பாவை சாரம் – வையத்து வாழ்வார்கள் –

இன்றோ திரு ஆடி பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24

நம் பூர்வாச்சார்யர்கள் அருளிச் செய்த வியாக்யானங்களில் உள்ளவற்றில் சில துளிகளை
அடியேன் உங்களுடன் பகிர்ந்து கொண்டு சத்தை பெற உள்ளேன் –

———————–

அவதாரிகை –
க்ருத்ய அக்ருத்ய விவேகம் பண்ணுகிறது –
அல்பமுமாய் அஸ்திரமுமாய் ஹேயமுமாய் இருக்கிற–விஷயங்களை விட்டு–
சமஸ்த கல்யாண குணாத்மகனை பற்றுகையாலே
விடுகையும் பற்றுகையும் இரண்டும் எளிதாய் இருக்கும்

கீழில் பாட்டில்
பிராப்ய ஸ்வரூபத்தையும்–பிராபக ஸ்வரூபத்தையும்–அதிகாரி ஸ்வரூபத்தையும்–சொல்லிற்று
இதில்–அந்த அதிகாரிக்கு சம்பாவித ஸ்வபாவங்களை சொல்லுகிறது
இப் பாட்டில் பகவத் கைங்கர்யத்துக்கு ருசி உடையராய் அவனையே உபாயமாக பற்றி இருக்கிற இவ் அதிகாரிக்கு-
சம்பாவித ஸ்வபாவ விசேஷங்களை அருளிச் செய்கிறார் –

—————————–

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மை இட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்று ஓதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்–2-

வையத்து வாழ்வீர்காள்
திருவாய்ப்பாடியிலே–வாழ்வை உடையவர்கள் என்று–சப்தார்தம் –
சர்வேஸ்வரன் திருவாய்ப்பாடியிலே கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து–
தன்னை தாழ விட்டு பரிமாறுகிற காலத்தில் வாழப் பிறந்த பாக்யவதிகாள்-
இங்குத்தை வாழ்ச்சிக்கு பரமபதமும் சத்ருசம் அன்று–அங்கு மேன்மை காணலாம் இத்தனை போக்கி–
நீர்மை கண்டு அனுபவிக்கலாம் படி இருப்பது இங்கே இறே
அங்கு போக்தாக்கள் அங்குசதராய் இருப்பார்கள் —இங்கு போக்யம் அங்குசிதமாய் இருக்கும் —
தயநீர் உண்டான இடத்தில் இறே தயாதி குணங்கள் அனுபவிக்கலாவது –
அங்கு விஷயம் இல்லாமையாலே தயாதி குணங்கள் பிரகாசிக்கப் பெறாதே —
அக் குறை தீருகைக்காக இறே நித்ய சூரிகள் இங்கே வந்து அனுபவிக்கிறது —
அவதாரத்தில் நீர்மையில் அகப்பட்டாருக்கும் மற்றோர் இடம் பொறாத படியாய் இருக்கும்
பாவோ நான்யத்ர கச்சதி -என்றான் இறே திருவடி –
அச்சுவை பெறினும் வேண்டேன் -என்றாரும் உண்டு இறே–
கண்ட கண்கள் மற்று ஒன்றினைக் காணாவே -என்றார் இறே
மரு பூமியில் தண்ணீர் போலே–இருள் தரும் மா ஞாலமான இவ் விபூதியிலே பிறந்து வைத்து
பகவத் அனுபவம் பண்ணப் பெற்ற பாக்ய வதிகாள்-
பகவத் குணங்கள் ஸ்வ ஸ்வ விஷயத்திலே சேர்ந்து–விளங்கா நின்றுள்ள இவ் விபூதியிலே பிறந்து
பகவத் குணாநுபவம் பண்ணுகிற பாக்யவதிகள் என்கிறார்கள் ஆகவுமாம் –
இத்தால் விண்ணுளாரினும் சீரியர் -என்கிறது–
விண்ணுளாருக்கும் இங்கே வந்து இறே சீலாதி குணங்களை அனுபவிக்க வேண்டுவது –
இங்கு உள்ளாருக்கு ஸ்வரூப ஜ்ஞானம் உண்டானால்–யாவத் குண விசிஷ்டனை இங்கே அனுபவிக்கலாம் இறே

வாழ்வீர்காள் –
அவ் வூர் தன்னிலே பிறந்து வைத்து பருவம் நிரம்பி இருக்கை–அன்றிக்கே–
அவனுடைய கடாஷத்துக்கு இலக்காம்படி ஒத்த பருவமாய் இருக்கை –
கிருஷ்ண அவதாரத்துக்கு முன்னாதல் பின்னாதல் அன்றிக்கே–சம காலத்தில் பிறக்கப் பெறுவதுமாம் –
அது தன்னிலும் இவ் ஊரை ஒழிந்த இடத்தே அன்றியே இவ் ஊரிலேயே பிறக்கப் பெறுவதாம் –
அது தன்னிலும் அவனோடு ஒத்த பருவமாகப் பெறுவதாம்–இது ஒரு பாக்யாதிசயம் இருக்கும்படி என் –

கிருஷி பூமியிலே -பலம் அனுபவிக்கும் -இவர்கள்–கர்ம பூமியிலே அங்கே பலம் —வையத்திலும் பலம்-
வையத்திலே வாழ்வீர்காள்–
வானுலகம் போய் சிறை இராதே
பெருமாள் காடேற போக அயோத்தியில் இருப்பது போலே–
திருவாய்ப்பாடியில் இருக்க மதுரையில் இருப்பு போலே
மாம் வித்தி ஜனகாத்மஜா அயோத்யா வனம் வித்தி–ராமம் தசரதம் வித்தி கச்சதா–அழவே இல்லை –
சந்தோஷமாக போகிறான் —மனம் அறிந்து அர்த்தம் —காட்டை -நீர்மை குணாதிக்யத்தால் வஸ்துவுக்கு ஏற்றம்–
தொல்லை இன்பத்து இறுதி கண்டாள்–தொல்லை இன்பம் -பரமபத இன்பம் -நித்யாஞ்சலிபுடா அங்கே–
சீல குணத்தில் அகப்பட்டார் வேறு ஒன்றில் அகப்படார்

வையத்து வாழ்வீர்கள் -வாழ்ச்சி உள்ளது இங்கே இறே–
காக்கா ஓட்டுகிற மந்த்ரம் -காக்கை பின் போவதே ஹாவு ஹாவு ஹாவு

வாழ்வீர்காள் –
அவ் ஊரில் வர்த்தகம் என்றும் வாழ்ச்சி என்றும் இரண்டு இல்லை –
அவன் நித்ய வாஸம் பண்ணும் இடத்தில் வர்த்தகமே வாழ்ச்சியாய் இருக்கும் இறே
வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் -என்னக் கடவது இறே–
இது கோயிலிலே வர்த்தகம் போலே காணும்-

சொல்லுகிற தங்களுக்கும் வாழ்ச்சி ஒத்து இருக்க–
வாழ்வீர்காள் என்று பிறரைச் சொல்லுகிறது என் என்னில் –
தாங்கள் தனியே அனுபவிக்கும் அனுபவம் ரசானுபவமாய்–தோற்றாமையாலே–
அத்தை ரசமாக்கித் தருமவர்களைக் கொண்டாடுகிறார்கள்-

நாமும் –
அத் தலையால் பேறு -புருஷார்த்தம்-என்று இருக்கிற நாமும் —
அவனாலே பேறாகிலும் ருசி இருந்த இடத்திலே இருக்க ஒட்டாது இறே –
இந்தப் பலம் ஒருநாள் வரையிலே கை வந்ததாக வற்றே -என்று இருக்கிற நாமும் -என்னவுமாம்

நாமும் –
உம்மைத் தொகை –
பேற்றுக்கு பிரவ்ருத்தி பண்ண உரிமை அற்றதாய் இருக்க–
ருசி தூண்ட பதறி செய்யும் கார்யம்
அப்ராப்த விஷயங்களில் சக்தனானவன் அது லபிக்க வேணும் என்று இரா நின்றால்–
பிராப்த விஷய பிரவணனுக்கு சொல்ல வேண்டா இறே
அனுஷ்டானமும் அனநுஷ்டானமும் உபாய கோடியிலே அன்வயியாது–
அநந்ய உபாயத்வமும் அநந்ய உபேயத்வமும் அநந்ய தைவத்மமும்-குலையும்படி பிரவ்ருத்தி காணா நின்றோம் இறே–
ஜ்ஞான விபாக கார்யமான அஜ்ஞானத்தாலே வருமவை எல்லாம் அடிக் கழஞ்சு பெறும்-
உபாய பலமாய் உபேய அந்தர்பூதமாய் இருக்குமது உபாய பிரதிபந்தகம் ஆகாது

நம் பாவைக்கு –
நம்முடைய நோன்புக்கு–
அவனையையும் அவனுடையாரையும் அழிக்கைக்குப் பண்ணும்-இந்த்ரிஜித் பிரப்ருதிகள் -பௌண்டரீக வாசுதேவாதிகள்
போல்வார் உடைய யாகம் போல் அன்றியே–ததீயரும் அவனும் வாழுகைக்குப் பண்ணும் யாகம் –
பிரயோஜனாந்த பரமான நோன்பு அன்றிக்கே கிருஷ்ண விபூதியும் உண்டாக்குகைக்கு பண்ணுகிற நோன்பு –
ப்ராப்ய ருசி பரவசராய் நாம் அனுஷ்டிக்கிற நோன்புக்கு– பகவத் விஷய மங்களா சாசன பரரான நாம்–
நம் பாவைக்கு-
அனுஷ்டிக்கிற நோன்புக்கு -என்னவுமாம்

செய்யும் கிரிசைகள்
அவசியம் அனுஷ்டேயமான–பண்ணக் கடவ க்ருத்யங்கள்–
சேதனன் ஆகையாலே ப்ராப்ய சித்தி அளவும் கால ஷேபத்துக்காக இழிந்து
அனுபவிக்கக் கடவ அனுஷ்டானம் என்றபடி —
ஆரம்பித்துத் தவிருமவை அல்ல —பத்தும் பத்தாக செய்து அற வேணும்-மடல் போலே காட்டி விடுமதல்ல –

செய்யும் கிரிசைகள் கேளீரோ உய்யுமாறு எண்ணி –
கைங்கர்யமாக -உபாசன பரமாக இல்லை –
திருக்கண்ண மங்கை ஆண்டான் -தர்சன புஷ்கரணி -நாத முனி சச் சிஷ்யர் –
நாய் -யஜமானன் -அபிமானம்–இப்படியா -பகவத் – ஸுய வியாபாரத்தை விட்டார்
அலகிட்டு தொண்டு செய்து -பரம பதம் -பெருக்கினதால் என்ன சாதனை -இரண்டையும் பாரே -அழுக்கு மனசில் –

கேளீரோ –
பெண்கள் கிடாய் கிருஷ்ணன் கிடாய் என்று நிஷேதிக்கிற ஊரிலே–இங்கனே ஒரு சேர்த்தி உண்டாவதே
பகவத் விமுகர் கோலா ஹலத்திலே கிருஷ்ண அனுபவத்துக்கு இத்தனை பேர் உண்டாவதே–என்று அவர்கள்
இந்த லாப-அனுசந்தானத்தாலே சதப்தைகளாய்–இருக்கையாலே -கேளீரோ –என்கிறார்கள் –
அந்ய பரதை இல்லாமல் கேளுங்கோள்–
பகவத் விமுக கோலா ஹலத்திலே தாங்கள் பகவத் அனுகூலராய் பகவத் அனுகூலரைத் தேடி
அழைக்கும் படி இத்தனை பேர் உண்டாவதே -என்று அந்ய பரராய் இருக்க –
கேளீரோ –
என்று அந்ய பரதையை தவிர்க்கிறார்கள்
மேய்ச்சல் தலையிலே -கிருஷ்ண சம்ச்லேஷம் பண்ணும் காலம் –அசை இடுவார் உண்டோ –
இந்த நாலு நாளும் போனால் நம்மை ஒருவரை ஒருவர் சேர ஓட்டுவார்களோ-

கேளீரோ
சம்ச்ரவே மதுரம் வாக்யம்-என்னும்படியே ஸ்ரவணம் தானே–பிரயோஜனமாய் இருக்கிற படி-
புருஷார்த்தோ அயமேவைகோ யத்தா ஸ்ரவணம் ஹரே -என்றான் இறே –
வைசம்பாயன பகவான் இடம் சிஷ்யன் ஜனமேஜயன் தனக்கு புருஷார்த்தமாக சொல்லியது —
சொல்லுகிறவர்கள் தான் ஆச்சார்ய பதம் நிர்வஹிக்கைக்காக–சொல்லுகிறார்கள் அல்லர் —
கேட்கிறவர்கள் தங்களுக்கு அஞ்ஞாதமாய் கேட்கிறவர்கள் அல்லர்
போதயந்த பரஸ்பரம் -என்று இங்கனே அல்லது போது போகாமல் இருந்த படி –
எங்களுக்கு எதனால் நல்லது ஆகில் சொல்லல் ஆகாதோ -என்ன–மேல் சொல்லுகிறார்கள்

கேளீரோ
கேட்டாயே மட நெஞ்சே -திரு வட்டாறு பாசுரம் –
கேசவ நம்பிரானை பாட்டாய பல பாடி பழ வினை பற்று அறுத்து–
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து நாரணனை நண்ணினோமே –

கேளீரோ
வாயால் கேட்பது -காதால் கேட்பது -முன்னோர் உபதேசம் கேட்பது -மூன்றும் உண்டே

பாற் கடலுள் பையத் துயின்ற –
பரம பதத்தில் நின்றும் ஆர்த்த ரஷணத்துக்காக–திருப் பாற் கடல் அளவும் ஒரு பயணம் எடுத்து–
ஜகத் ரஷண சிந்தையிலே அவகாஹிதனாய்-
ஆர்த்த த்வனிக்கு செவி கொடுத்துக் கொண்டு கிடக்கிற படி
சந்தரன் கடலைக் கண்டு பொங்கும்-பொங்கிய பாற்கடல்
சந்த்ரம மா மனசா -பொங்கிய பாற் கடல் பத்து சந்தரன்கள் இங்கே உண்டே -பத்து திரு விரல்கள் –

பையத் துயின்ற –
வெள்ளை வெள்ளத்தின் மேல் ஒரு பாம்பை மெத்தையாக விரித்து-
அதன் மேல் கள்ள நித்தரை கொள்கின்ற -என்னக் கடவது இ றே-
இவ் உறக்கத்தின் உண்மை அறிந்தவர் கள்ளம் என்று வெளி இட்டார் இறே

பையத் துயின்ற
பிராட்டி மாரோடு போகத்துக்கு இடம் கொடாதே–
ஆராலே ஆருக்கு என்ன நலிவு வருகிறதோ என்று அதிலே–அவஹிதனாய் கொண்டு சாய்ந்தபடி

முதல் பாட்டிலே
நாராயணத்வம் சொல்லி–இப்பாட்டில் அங்கு நின்றும் திரு அவதார அர்த்தமாக–
திருப் பாற் கடலிலே சாய்ந்த படியைச் சொல்லுகிறது-

பரமன்
தகட்டில் அழுத்தின மாணிக்கம் போலே–திரு அனந்த ஆழ்வான் மேலே சாய்ந்து அருளின பின்பு–
வடிவில் பிறந்த புகரின் பெருமையைச் சொல்லுகிறது
அன்றியே
ஜகத் ரஷண அர்த்தமாக வந்து கண் வளர்ந்து அருளுகையாலே–
குணத்தின் ஏற்றத்தை சொல்லிற்றாகவுமாம்–சர்வத்தாலும் அதிகன் என்றபடி
பெருமாள் -பெரும் ஆள் -புருஷோத்தமன் -ஓத்தார் மிக்கார் இலையாய மா மாயன்

வையத்து —பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –
ஏஷ நாராயண ஸ்ரீ மன் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்யஹி ஆகாதோ மதுராம் புரிம் –
அரவத் தமளியினோடும்- அழகிய பாற் கடலோடும்

அடி பாடி-
அவனுடைய ஆதிக்யத்தின் எல்லையை அனுசந்தித்தால்–
பின்னை தங்கள் தாழ்ச்சியின் எல்லையில் நிற்கும் இத்தனை இறே
கிருஷ்ணனை அனுபவிக்கப் புகுந்து ஷீராப்தி நாதனை சொல்லுகிறது என் என்னில் –
கிருஷ்ணனைச் சொல்லி பண்டே சங்கித்து இருக்கிற இடையர்–நமக்கு தைவம் தந்த இந்த சேர்த்தியை
அழிக்கிறார்களோ–என்று பயப்பட்டு கிருஷ்ணனுக்கு அடியான ஷீராப்தி நாதனைச் சொல்லுகிறார்கள் –
ஏஷ நாராயணஸ் ஸ்ரீ மான்–ஷீரார்ணவ நிகேதன–நாக பர்யங்க முஸ்த்ருஜ்ய–ஹ்யாகதோ–மதுராம் புரீம் -என்னக் கடவது இறே
பாடி –
உகந்து -செய்வதே சந்தோஷம்- உபாயம் இல்லையே இதுவே பிராப்தம் -பலானுபவம் இது
பரம பதத்தில் நின்றும் சம்சார சேதன சம்ரஷணார்த்தம்–திருப் பாற் கடலிலே
அவசர ப்ரதீஷனாய்க் கொண்டு கண் வளர்ந்து அருளுகையாலே
வந்த குணாதிசயத்துக்கு ஒப்பு இல்லாதவனாய்–திரு அநந்த ஆழ்வான் மேல் சாய்ந்து அருளுகையால் வந்த–
பரபாக சோபைக்கு ஒப்பு இல்லாதவனாக இருக்கிற
எம்பெருமான் உடைய திருவடிகளை ப்ரீதிக்கு போக்கு வீடாக–
பாடி
போக்யாந்தராங்களிலே அந்வயியோம்

பரமன் அடி பாடி –
அவனுடைய ஆதிக்யத்தின் எல்லையை அனுசந்தித்தால்–
பின்னை தங்கள் தாழ்ச்சியின் எல்லையில் நிற்கும் இத்தனை இறே
சேஷி எல்லை சேஷ எல்லை –
மானேய் நோக்கு -நாயகி பாவ சரணாகதி
திரு வல்ல வாழ் உறையும் கோனாரை -அடியேன்–அடி கூடுவது என்று கொலோ – –
பரமன் அடி இங்கு -கூடினால் தானே அடிமைத்தனம் சித்திக்கும் –

அப ரம-ரமா இவள் பதி -இவளுடைய சம்பந்தத்தால் பரமன் —
ஸ்ரீமத் சரணவ் -நாராயண சரணவ் -பிராட்டி இருப்பிடம் -கல்யாண குணங்களுக்கு இருப்பிடம் –
திரு நாரணன் -உலகம் அளந்த பொன்னடி
பையத் துயின்ற பரமன் அடி ஓங்கி உலகு அளந்த உத்தமன் இங்கு
நடந்த கால்கள் நொந்தவோ -நடந்த அடி
முடிச்சோதி –அடிச்சோதி –
மை வண்ண –கண் இணையும் அரவிந்தம் -அடியும் அஃதே –
படைத்த பார்த்து நாவாவோ -அளந்த பத்ம பாதாவோ –
காண் தகு தோள் அண்ணல் –கழல் இணைக் கீழ் பூண்ட அன்பாளன்
இப்படி பரத்வ ஸுலப்ய அனுபவம் -அடி உடன் சேர்த்து அனைத்தும்

பாடி அடியை அடைவோமா -அடி அடைந்து பாடுவோமா –
மாறி மாறி பல பிறப்பும் பிறந்து -அடியை அடைந்து -துரும்பு அலைகளால் தள்ளி கரைக்கு வந்தது போலே
அடைந்து உள்ளம் தேறி -க்ரம பிராப்தி இல்லை -நிருஹேதுக கிருபா விசேஷம் -இன்ப வெள்ளத்தில் மூழ்கினேன் –
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லல் மற்ற ஓர் அரசும் எண்ண மாட்டேன்
வாட்டாற்றான் அடி வணங்கே–சங்கை போக்கி -விசுவாசம் பிறப்பித்து -அனைத்துக்கும் திருவடி இணைகளே –
காட்டி தன் கனை கழல் காட்டி நரகம் புகல் ஒழிந்த -சம்சாரம் நீக்கி
கைங்கர்யம் கொள்ளுவதும் திருவடியே

பாற் கடலுள் பையத் துயன்ற பரமன் –
உன் பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்தேன் –
பகவத் குணங்கள் பாலாகவும்–சீர்க்கடலை உள் பொதிந்த -குணங்களை கடலாகவும்
அனந்த குண சாகரம் ப்ரஹ்ம-குணங்களையே வாய் வெருவிக் கொண்டு
திவ்ய பிரபந்தங்களையே அனுசந்தித்துக் கொண்டு-

பாடி நெய் உண்ணோம் பால் உண்ணோம் –
போக்யாந்தரங்களில் அந்வயியோம்—
உண்டார்க்கு உண்ண வேண்டா விறே –(நெய் பால் காம க்ரோதம் -ஸ்வாபதேசம் )
இவர்கள் உண்டார்களோ என்னில்–ஓம்–உண்ணா நாள் பசியாவது ஓன்று இல்லை -நமோ நாராயணா என்று
உன் பாதம் நண்ணா நாள் அவை பட்டினி நாளே -என்றும்–
எல்லாம் கண்ணன் -என்றும்–
கூறை சோறு இவை வேண்டுவது இல்லை -என்றும்
பாதேயம் புண்டரீகாஷ நாம சங்கீர்த்தன அமிர்தம் -என்றும்–
வாசு தேவஸ் சர்வம் -என்றும்–இப்படி இறே ஜ்ஞானம் பிறந்தால் இருப்பது –

குடியோம் -என்னாதே உண்ணோம் -என்பான் என் என்னில்
உண்ண என்று குடிக்கைக்கு ஜாதி பேச்சு–ஆகை இறே
நெய் உண்டான் வெண்ணெய் உண்டான் என்று–கிருஷ்ணனுக்கு பேராகிறது
முதல் தன்னிலே கிருஷ்ணன் பிறந்த பின்பு அதில் வுயுத்பத்தி இல்லாமை–
அவன் வரும் அளவும் உபவாச க்ருசைகளாய் இருக்கக் கடவோம்
இவர்கள் தான் ஆரைக் கெடுக்க பட்டினி கிடக்கிறது என்னில்–
இவர்கள் உண்ணாது ஒழிந்தால் பட்டினி விடுவான் அவன் போலவே காணும்
ஆகையில் இறே இவர்கள் இங்கனே சொல்லுகிறது

நாட்காலே நீராடி –
அவன் வந்தால் குளிக்க இராதே–
முன்பே தத் போக போக்யமாக குளித்து விடுவோரைப் போலே–குளிக்கக் கடவோம்
அவன் திருப் பாற் கடலிலே வந்து சாய்ந்து அருளினதை அசத்–சமமாக ஆக்கக் கடவோம்-
மகிஷியானவள் ஸ்வ ரஷணத்திலே பிரவர்த்திக்கும் படியாக–இருக்கைக்காக மேற்பட–புருஷனுக்கு அவத்யம் இல்லை இறே
அதாவது தங்கள் த்வரையாலே அத்தலையில் உபாய பாவத்தை அழிக்கிறார்கள்
ஓதி நாமம் குளித்து உச்சி தன்னால் ஒளி மா மலர்ப் பாத–நாளும் பணிவோம் நமக்கே நலம் ஆதலில் -என்கிறார்கள்
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போலே விரஹ தாபம் ஆறுகைக்காக–
நோன்பு -என்கிற வியாஜ்யத்தை இட்டு குளிக்கத் தேடுகிறார்கள் இறே

நாட்காலே நீராடி
ப்ராதஸ் ஸ்நானத்தைப் பண்ணி–இத்தால் கர்ம யோகத்தை உப லஷிக்கிறது–
இத்தால் தத் தத் வர்ணாஸ்ரம உசிதமான ஸ்நானாதி நித்ய கர்மங்கள்
இவ்வதிகாரிக்கு யாதாவத அனுஷ்டேயம் என்றது ஆய்த்து–
பாடி –
என்ற இது–பாடக் கடவோம் என்றபடி–
நீராடி –
என்றது நீராடக் கடவோம் என்றபடி
தத்து கர்மசமா சரேத் என்று இவ்வதிகாரிக்கு–அநபிசம்விதஸ்வ பாவ விசேஷங்களை அருளிச் செய்கிறார் –

ஆக நீராடி மூன்று அர்த்தம்–போகார்தம்–சாதனமாக–விரஹ தாபம் தீர

மை இட்டு எழுதோம் –
முதலிலே மைய கண்ணாள் இறே–இனி அஞ்சனம் இடுவதும் மங்களார்த்தமாக விறே
அது தவிரக் கடவோம் என்கையாலே அவனுக்கு அவகாச பிரதானம் பண்ணக் கடவோம் அல்லோம் என்கிறார்கள் –
இவர்கள் அஞ்சனம் எழுதப் புக்கால் குறையும் தலைக் கட்டுவான் அவனே இறே
பரிபூர்ண விஷயத்தில் இப்படி அவகாச பிரதானம் பண்ணப் பெறாத அன்று–கிஞ்சித் கரித்ததாக விரகு இல்லை இறே
அவனும் பரம பிரணயி யாகையாலே -இங்கே கிஞ்சித் கரித்து–ஸ்வரூபம் பெற வேணும் என்று இருக்கும் –

மலரிட்டு நாம் முடியோம் –
சுரும்பார் குழல் கோதை -என்றும்-
வாசம செய் பூம் குழலாள் -என்றும் இறே இருப்பது–
இனி பூவுக்கும் தான் நாற்றம் கொடுக்கைக்காக வாய்த்து பூ முடிப்பது –
அது நாம் செய்யக் கடவோம் அல்லோம் என்கை –
அவன் தான் மாலையைக் கொடு வந்து–மயிரை முடித்து அலங்கரித்து–விரல் கவ்வி
இது வாங்காது ஒழிய வேணும் -என்னுமாகில் செய்யலாவது இல்லை-
அவன் தீம்பாலே செய்யுமத்தை நம்மால் செய்யலாவது இல்லை –
நாமாக செய்யாது ஒழியும் இத்தனை இறே வேண்டுவது–

நெய் உண்ணோம் -எம்பெருமானே போக்யம்–வர்ணாஸ்ரம கர்மங்கள் விடாமல் அனுஷ்டிக்க நாட்காலே நீராடி
மை கண்ணுக்கு – பிரகாசகம் -ஆத்ம யாதாத்மிய ஞான யோகம் அன்வயிக்கலாகாது —ஐஸ்வர்ய ஆசை ஒழிந்தோம் என்றுமாம்
மலரிட்டு முடிகை பக்தி யோகம்–கைவல்யாசை ஒழிந்தோம்–நாம் முடியோம் -அவனே ஞான பக்த்யாதிகள் அருளி

செய்யாதன செய்யோம்
விதி உண்டாகிலும் பூர்வர்கள் ஆசரித்ததற்கு மேற்பட–ஆசசரிக்க கடவோம் அல்லோம்
அதாகிறது -ஸூ ஹ்ருதம் சர்வ பூதாநாம் -என்று அவன் சர்வ பூத ஸூ ஹ்ருத்தாக இருந்தானே யாகிலும்
ததீயரை முன்னிட்டுக் கொண்டு அல்லது அவனைக் கிட்டக் கடவோம் அல்லோம் என்கை –
பெண்களில் முற்பட உணர்ந்தார்–ஒருவரை ஒருவர் எழுப்பி–எல்லாரும் கூடி அல்லது
கிருஷ்ணனைக் கிட்டக் கடவோம் அல்லோம் -என்கை
நிவேதயதாம் மாம் ஷிப்ரம் -என்றும்–பிதா மஹம் நாதமுநிம் விலோக்ய ப்ரசத் -என்றும்–இவை இறே பிரமாணங்கள்
ஸ்ரீ பரத ஆழ்வானை முடி சூட சொன்ன இடத்திலும்–சர்வ பிரகாரத்தாலும் யோக்யதை உண்டாய் இருக்க-
இக் குடியில் இதுக்கு முன்பு செய்யாதன நான் செய்ய மாட்டேன் -என்றான் இறே

தீக் குறளை சென்றோதோம்
பிறர்க்கு அநர்த்தரவஹமாக பொய் சொல்லக் கடவோம் அல்லோம்–
பிராட்டி பெருமான் பக்கல் ஏகாந்தத்திலும் ஏகாஷி ஏக கர்ணிகள்-நலிந்தபடி சொல்லிற்றாக
வில்லையே ஸ்ரீ ராமாயணத்தில்
நம்மில் நாம்–நப்பின்னை நங்காய் -என்றும்–நாயகப் பெண் பிள்ளாய் -என்றும் –
நிர்வாஹகையாக இருந்த படி இதுவோ -என்று வெறுத்து சொன்ன வார்த்தை –
பேய்ப் பெண்ணே -என்றும்–ஒருவருக்கு ஒருவர் இட்டீடு கொண்டு சொன்னவை–
கிருஷ்ணன் செவிப் படுத்த கடவோம் அல்லோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி —
ஐயம் ஆவது யோக்ய விஷயத்திலே குருவாக இடுமது
பிச்சை யாகிறது–ப்ரஹ்மசாரிகளுக்கும் சந்யாசிகளுக்கும் இடுமது–
ஐயம்
பகவத் வைபவம்–
பிச்சை
பாகவத் வைபவம்–யதா சக்தி கூற வேண்டும்
இங்கு கிருஷ்ண அனுபவம் பண்ணுவோம் -என்பாருக்கு அவனை அனுபவிப்பித்தும்
ததீயரை அனுபவிப்போம் என்பாருக்கு அவர்களை அனுபவிப்பித்தும் போரக் கடவோம் –

பகவானை காட்டினார் எம்பெருமானார் —
கரண்ட மாடு பொய்கை -புஷ்கரணி -திருக்குறுங்குடி —குறிய மாண் உருவாய் –வைஷ்ணவ நம்பி –
இவரை காட்டிக் கொடுக்க–ஐயமும் பிச்சையும் -கை காட்டி –
திரிபுரா தேவி -ஈசான முல்லையில் கை காட்டில்–கையில் கனி என்ன கண்ணனை காட்டி தரிலும்–
தன் சரண் அது தந்திலன் தான் அது தந்து –
பாலே போல் சீரில் பழுத்து ஒழிந்து ப்ரஹ்மானுபவம் செய்த நம் ஸ்வாமி –
அடி பாதுகை -அந்தரங்க சிஷ்யர்களை -குரு பரம்பரை அனுசந்தானம் பூர்வகமாகவே அனைத்தும்

ஆந்தனையும் –
அவர்கள் கொள்ள வல்லராந்தனையும்–அர்த்திகள் ஆமளவும்–கை காட்டி–
சர்வத்தையும் கொடுத்தான்-ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -என்று இருக்கை
இவர்களை கிருஷ்ண அனுபவம் பண்ணி வைத்தும் இவர்கள் திறத்தில்–
ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கையை சொல்லுகிறது

அதவா
ஐயம் ஆகிறது –
ஈஸ்வரனுடைய ஸ்வரூப ரூப குண விஷய ஜ்ஞானம்–
பிச்சை யாகிறது –
ஆத்ம ஸ்வரூப மாத்ர ஜ்ஞானம்-இவற்றைத் தனக்கு உள்ளளவும் உபதேசிக்கை என்றுமாம் –

கை காட்டி
இப்படி ஞான உபகாரகன் ஆனாலும் அவ் உபகாரம் தன் நெஞ்சிலே தட்டாது இருக்கை

உய்யுமாறு எண்ணி
இந்தப் பிரகாரங்களினாலே உஜ்ஜீவிக்கும் படிகளை எண்ணி —
பகவத் விஷயத்தில் உள் புக்க அன்று இறே இவன் உஜ்ஜீவித்தான் ஆகிறது –
அது இல்லாத போது-அசந்நேவ-இறே-
ஆறு கேள்விகளில் பதில் சொல்லவே ஸ்ரீ மத் பாகவதம் /
ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் -த்வயம் ஷட் பதம் –
ஸ்ரீ ராமாயணம் ஆறு காண்டங்கள் –
ஆறி இருக்க வேண்டும் -சாஸ்த்ர சாரம் –
உய்யுமாறு ஆறு வார்த்தைகள் -திருக் கச்சி நம்பி–எம்பெருமானார் ஆறு வார்த்தை -என்னவுமாம் –

உய்யுமாறு எண்ணி -ஆறு வழி -ஆறு வார்த்தை த்வயம் எண்ணி -கீழே மூல மந்த்ரம் -இதில் த்வயம் –
ஸ்ரீ ஆறு வ்யுத்பத்தியையும் எண்ணி

ஷடாங்க பிரபத்தி -ஷட்பதம் த்வயம் –25 –எழுத்துக்கள் –
மூன்றில் ஒரு மூன்றும்-முவ்விரண்டும்-முந்நான்கும்–அனுசந்திக்க -தொலையும் துயிர் -தேசிகன் –
மூன்றில் ஒரு மூன்றும் -திரு அஷ்டாக்ஷரம்
முவ்விரண்டும் -த்வயம்
முந்நான்கும் -சரம ஸ்லோகம் -12-பாதங்கள் –
ஆறு ஐந்துகள் -ஐ ஐந்தும் ஐந்தும் அன்றோ
செய்ய வேண்டிய ஆறும் -செய்யக் கூடாத ஆறும் –
ஷாட் குணங்களும் பிரகாசிக்கும் ஆறு -என்பதால் –

வையத்து வாழ்வீர்காள் -பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் –உனது பாலே போல் சீரிலே பழுத்து ஒழிந்தேன் –
பகவத் குணங்களே பால் –சீர் கடலை உள் பொதிந்த –
அநந்த குண சாகரம் -அக் குணங்களே கடல் –இவற்றையே வாய் வெருவி –
பகவத் குண சாகரத்தில் அஸ்தமிதான்ய பாவராய் இன்புறும் பரமர் எம்பெருமானார் -என்கை –

உய்யுமாறு எண்ணி–ஆறு வார்த்தைகள்–என்னவுமாம் –ஸ்ரீ காஞ்சி ஸ்வாமிகள் அருளிச் செய்யும் படி –
1-வதுவை வார்த்தை –வதுவை வார்த்தையுள் ஏறு பாய்ந்ததும் -திருவாய் -5-10-2-
2–நெய்யுண் வார்த்தை -நெய்யுண் வார்த்தையுள் உன்னைக் கோல் கொள்ள -5-10-3-
3-வெண்ணெய் வார்த்தை -ஆய்ச்சியாகிய அன்னையால் அன்று வெண்ணெய் வார்த்தையுள் சீற்றம் உண்ட அழு கூத்தப்பன் -6-2-11-
4-நடந்த வார்த்தை -தேசம் அறிய ஒரு சாரதியாய் சென்று சேனையை நாம் செய்திட்டு நடந்த நல் வார்த்தை -7-5-9-
5-மெய்ம்மைப் பெரு வார்த்தை -செம்மை யுடைய திருவரங்கர் தாம் பனித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை -நாச் -11-10-
6-கஞ்சன் விடுத்தான் என்பதோர் வார்த்தை -கஞ்சன் கறுக்கொண்டு நின் மேல் கருநிறச் செம்மயிர்ப் பேயை
வஞ்சிப்பதற்கு விடுத்தான் என்பதோர் வார்த்தையும் உண்டு -பெரியாழ்வார் -2-8-6-

ஆறும்
முதல் ஐந்து -பர வ்யூஹ வைபவம் அர்ச்சை அந்தர்யாமி ஐந்தையும் /
இரண்டாவது -ஐந்து -அவதார ஐந்து -/
மூன்றாவது ஐந்து -அர்த்த பஞ்சகம் /
நாலாவது ஐந்து -சரணாகதிக்கு பஞ்ச அங்கங்கள் /
ஐந்தாவது ஐந்து -பஞ்ச கால பராயணர் -அதி கமனாதிகள் ஆக கால பஞ்சகம் -/
ஆறாவது ஐந்து -பாகவத ஸ்வரூப பஞ்சகம் -சாமன்யக் நிர்வேதத்தி வைராக்யா அபராத பீரு பக்தி பரவச ப்ரீதி யோகியர்
பகவத் கீதையில் ஏற்றம் பகவதீ கீதைக்கு ஏற்றம் -அது அர்ஜுனனுக்கு இது கிருஷ்ணனுக்கு அன்றோ உபதேசம் –

உய்யுமாறு ஆறு –
கண்கள் சிவந்து -8-8-ப்ரணவார்த்தம் /நமஸ் சாப்த்தமான அர்த்தம் -கரு மாணிக்க மலை -8-9-
ஆர்த்தமான அர்த்தம் -நெடுமாற்கு அடிமை -8-10-/நாராயண அர்த்தம் கொண்ட பெண்டிர்-9-1-
ஆய -சதுர்த்தி அர்த்தம் பண்டை நாளால்-9-2- / வியாபக மந்த்ர ஸ்ரேஷ்டம் -ஓர் ஆயிரமாய் -9-3-
ஸ்ரீ நடுவில் திரு வீதிப் பிள்ளை -அருளிச் செய்த சங்கதி –ஆறு திருவாய்மொழிகளுக்கும் –

உய்யும் ஆறு –
அர்த்த பஞ்சகம்-நவ வித சம்பந்த ஞானமும் வேண்டுமே உஜ்ஜீவனத்துக்கு

எண்ணி உகந்து –
மநோ ரத வேளையே தொடங்கி ரசிக்கிற படி–
ஸூ ஸூ கம் கர்த்தும் அவ்யயம் -என்கிறபடியே-
ஸ்மர்த்தவ்ய விஷயத்தின் ரச்யதையாலே ஸ்ம்ருதி வேளையே தொடங்கி ரசிக்கும் இறே

எண்ணி உகந்து –செய்யும் கிரிசைகள் கேளீரோ -என்று அந்வயம்
ஏல் ஓர் எம்பாவாய் -பாதத்தைப் பூரித்துக் கிடக்கிறது-

இரண்டாம் பாட்டில்
நோன்புக்கு பெண்கள் தங்கள் செய்யக் கடவ க்ருத்யத்தை நியமிக்கிற முகத்தாலே-
இவ்விஷயத்தில் இழிவாருடைய விரக்தியையும்
சம்பாவித ஸ்வ பாவத்தையும் சொல்லுகிறது என்று ஒரு ஸ்வா பதேசம்
இப்பாட்டில்
இந்த ப்ரபந்ந அதிகாரிக்கு சம்பாவிதமான நிஷ்டா க்ரமங்களையும்
பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் சொல்லுகிறது
ஒரு பயணம் எடுத்து ஷீர சாகரத்தில் திருவந்தாழ்வான் மேலே ஜகத் ரக்ஷண சிந்தையாலே சாய்ந்து அருளி –
ஆஸ்ரிதர்களிலே யாராலே ஆருக்கு என்ன தீங்கு வருகிறதோ -என்று
அந்த வுரைக்குச் செவி கொடுத்து கண் வளருகிறதாக நினைத்திருக்கையும்
சகல சேதன உஜ்ஜீவனமான த்வயத்தை பெரிய பிராட்டியாருக்கு உபதேசம் பண்ணுகிற
ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை வாயாலே சங்கீர்த்தனம் சதா பண்ண வேணும் என்று தாத்பர்யம் –

செல்வம் -ருசி விஸ்வாசங்களே இவர்களுக்கு
நாமும் நம் பாவைக்கு -சாத்விக அஹங்காரம் உத்தேச்யம் —
கீழே நமக்கே நாராயணன் பறை தருவான் நாமும் -சர்வ கர்ம பல தியாகம் –
செய்யும் கிரிசைகள் கேளீரோ -நமக்கே -என்பதிலே இந்த அர்த்தம் வந்ததே –
ஆழ்வார் அநுகாரம் -உற்றார்கள் எனக்கு இல்லை யாரும் என்னும் –
இத்தையும் தாயார் கேட்டு சொல்ல /என் சிறகில் கீழ் அடங்கா பெண் பெற்றேன் –
இரு நிலத்தில் ஓர் பழி படைத்தேன் /உற்றார்கள் எனக்கு இங்கு எல்லார் என்னும்/
உற்றார்களை செய்வேனும் யானே என்னும் /உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்/
உற்றார்களுக்கு உற்றெனும் யானே என்னும் / -உற்றார் இலி மாயன் இவள் மேல் ஏறக் கொலோ /
திக்ப்ரமம்-போலே –
கர்மம் அடியாக உறவு இல்லை / குடல் துவக்கு – நித்ய நிருபாதிக சம்பந்தம் -ஆத்ம பரமாத்ம சம்பந்தம் /
உற்றேன் -சரணம் அடைய வைப்பவனும் யானே –செய்வேனும் யானே /
பிரயோஜனாந்தர -பரர்களை அழிப்பேனும் யானே -அழித்தல்-
என்னை பெற்றால் வாழ்ச்சி இல்லையாம் வீழ்ச்சி தானே /
உற்றார்களுக்கு உற்றேனும் -அநந்ய ப்ரயோஜனர்க்கு நெருங்கி உள்ளேன் /
உற்றார் இலி மாயன் -யாரும் தங்கள் யத்னத்தால் அடைந்தார்கள் இல்லையே –
அனுக்ரஹத்தாலே உற்றார்கள் தானே உண்டு
செய்கின்ற கிறி எல்லாம் யானே என்னும் -கர்மமும் இல்லை -/
செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் -/ செய்வார்களை செய்வேனும் யானே என்னும் –
அஸீ தேக்ஷிணா என்பவள் புண்டரீகாக்ஷன் ஆனாள்-செய்ய கமலா கண்ணன் ஏறக் கொலோ – /
செய்யும் கிரிசைகள் கேளீரோ என்பான் என் என்னில் –
சர்வ கர்ம பல த்யாகத்துடனே செய்ய வேண்டும் -மத் பராகா -சர்வாணி கர்மாணி மயி சந்யாச /
ம்ருத்யு சம்சார சாகராத் தேஷாம் ஸமுத்யர்த்த சம்யக் உத்யர்த்தா –
நாமும் –
ஏது சர்வாணி கர்மாணி -சந்யாச /
கண்ணனையே பயனாக கொண்ட நமக்கே –
ஸமுத்யர்த்தா-சம் உத்யர்த்த- ம்ருத்யு சம்சார சாகரம் -இதற்காக அன்றோ
நமக்கே பறை தருவதற்காகவே -அவன் உறங்குவான் போலே யோகு கொள்கிறான்
பரமன் அடி பாடி –
நெய் உண்ணோம் இத்யாதி -பிரயோஜனாந்தர பரர்கள் அல்லையே –
திருவடித் தாமரை தேன் இருக்க உள்ளித் தாமரை கள்ளிச் செடி போவார் உண்டோ –
ப்ரபன்னர் நிஷ்டை சொல்லும் பாசுரம் -இது –
பிரபத்திக்கு வாசகம் -நாமம் -திருமந்த்ரார்த்தம் கீழே –
இங்கு த்வயார்த்தம் -பாற் கடலில் தானே பிராட்டிக்கு த்வய உபதேசம்
மத் பராகா–என்னை நோக்கி சிந்தனை -விசேஷ கடாக்ஷம் –
வாஸூ தேவ சர்வம் -உண்ணும் சோறு -இத்யாதி
அளியல் நம் பையில்-அபிமானம் –
நீரிலே சாதம் பண்ணுகிறோம் -நெருப்பும் வேணும் –
செய்யும் கிரிசைகள் செய்வேனும் யானே என்னும் இத்யாதி –
அந்தர்யாத்மாவாக செலுத்தி நிர்வாகம்
தேஷாம் அஹம் ஸமுத்யர்த்தா -படிப்படியாக தூக்கி விடுவான் –
அக்காராக்கனி -என்று உணர வேண்டும்

இங்கு ரஸ அனுபவம் பண்ணுகிற வரைக்கும் -இதர விஷயங்களில் –
தவாம்ருதஸ் யந்தி நி பாத பங்கஜே
நிவேசிதாத்மா கதம் அந்யது இச்சதி -என்கிறபடி
பஃயமான மது சர்க்கர ஷீர ததி க்ருதாதிகளிலும் நைர பேஷ்யத்தையும்
த்ரிவிக்ரம த்வச் சரணாம்புஜ த்வயம் மதிய மூர்த்தா நா மலங்கரிஷ்யதி -என்கிறபடியே –
அவன் திருவடிகளை சர்வ அலங்காரமாகப் பற்றுகையும் –
அது இல்லாமல் ஸ்ரக் சந்தன வஸ்திராத் யாபரணங்களை நிஷேத்திமையும்
அவனுக்கு சேஷமாய் இருக்கிற சகல வஸ்து விஷயங்களில் ஜாதி பேதத்தால்
விரும்பத் தக்கதாய் இருக்கச் செய்தேயும்
பரம அம்ருதம் மாதிரி ஸ்வீ கரிக்கையும்
யதா சக்தி பாகவதருக்கு நித்ய ததீ யாராதனம் பண்ணிவித்து ஒன்றுமே
செய்யப் பெற்றிலோம் -என்று இருக்கையும் –
இப்படி அதிகாரி நிஷ்டா க்ரமம்-சொல்லுகிறது

இரண்டாம் பாட்டில் வியூஹம் சொல்லுகிறது –

————————

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: