திருப்பாவை சாரம் – -ஓங்கி உலகளந்த உத்தமன் –

இன்றோ திரு வாடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22-

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24 –

——————

அவதாரிகை –
இவர்கள் முதலிலே தொடங்கி நாராயணன் என்று உபய விபூதி யோகத்தை சொல்லி–
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்று திருவவதார அர்த்தமாக பள்ளி கொண்டருளின படியைச் சொல்லி–
அங்கு நின்றும் போந்து அவதரித்த அளவும் வர–அடி ஒற்றுகிறார்கள்-
இப் பாட்டில்
தங்கள் நோன்புக்கு அனுமதி தானம் பண்ணினாருக்கு வரக்கடவ–த்ருஷ்ட பலத்தை சொல்லுகிறார்கள்-
பல சுருதி இரண்டு பாசுரங்கள்– ஓங்கி உலகு அளந்த -வங்க கடல் கடைந்த -பாசுரங்கள் –
கண்ணாடி அறை உத்சவ கந்தம் போலே திருப்பாற்கடல் அவதார கந்தம்
ஏஷ நாராயான ஷீராப்தி நிகேதன ஆகாதாம் மதுரா புரிம்-
வாமனன் அழகு நினைவில் இருக்க திரிவிக்ரமன் அப்புறம் வாமன சொல்கிறோம் த்வாதச நாமாவளியில் –

அஷ்டாக்ஷரம் -மார்கழி / த்வயம் வையத்து – / சரம ஸ்லோகம் ஓங்கி
புருஷோத்தமன் -பேர் பாடி -திருமந்த்ரார்த்தம் -வெளிப்படுத்திய உத்தமன் –
வியாதி துர்பிஷை தத்கரா -வியாதி பஞ்சம் திருட்டு-

தங்கள் நோன்பாலே லோகத்துக்குப் பலிக்கும் பலம் சொல்லுகிறது –
சாது கோட்டியுள் கொள்ளப்படுவாரே-என்று தங்களோடு ஒரு கோவையாகக் கூடுகை பரம புருஷார்த்தம் –
அதில்லாத பின்பு ஐஹிக போக்யத்தை யாகிலும் இழவாதே பெற்றிடுவர்கள் என்கை —
நம்மார்த்தி தீர நாம் குளிக்க- நாடு வாழப் பெறுவதே -என்கிறார்கள் –
ருஷ்யருங்கன் திரு வாயோத்த்யையிலே –அங்க தேசத்திலே ?-புகுந்த பின்பு
அநா வ்ருஷடி நீங்கி ஸம்ருத்தமானால் போலே –
ஸ்ரீ பரத ஆழ்வான் வியசனம் தீர -நாடு ப்வ்ரஹ்ருஷ்டம் உதித-ஆய்த்து இறே-
இவர்களும் கிருஷ்ணனும் கூடின பின்பு நாட்டுக்கு வர்ஷ ஸம்ருத்தி இறே –
இவர்கள் விஸ்லேஷமே இறே நாட்டுக்கு அநா வ்ருஷடி –

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெரும் செந்நெலூடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத
தேங்காதே புக்கிருந்து தீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய் –3-

ஓங்கி –
பிறர் கார்யம் செய்ய -என்றால் பணைக்கும் இறே –
உவந்த உள்ளதனாய் யுலகமளந்து அண்டமுற நீண் முடியன்-
பனியில் சாய்ந்த மூங்கில் ஆதித்யனைக் கண்டால் எழுமா போலே
பிறர் கார்யம் செய்கை சத்தா ப்ரயுக்தம் -என்கை –
ஓங்குகைக்கு அடியான வெய்யில் அங்கு –
இங்கு ஆர்த்த நாதம் -வளர்ந்த சடக்கு –
கையில் விழுந்த நீரும் ப்ரஹ்மா திருவடி விளக்கினை நீரும் ஓக்க விழும் படியாகை
ஓங்கினான்–
குணங்களால் ஓங்கி–வியாபித்து –
சத்தை கொடுக்க-தத் ஸ்ருஷ்ட்வா அனுபிரவேசித்து –
அளந்தது -வேற காரணம் -தனக்கு சத்தை பெறவாம்-தாய் குழைந்தை முதுகில் அணைத்து
தளிர் புரையும் -திருவடி என் தலை மேலேவே-
கண்கள் சிவந்து -வாயும் சிவந்து கனிந்து வெண் பல் இலகு -மகர குண்டலத்தன் –
கொண்டல் வண்ணன்-அந்தாமத்து அன்பு செய்து –ஆரம் உள-

இரப்பு பெறுவதற்கு முன்பு வாமனன் ஆனவன் இரப்பு–வாய்ந்த ப்ரீதியாலே வளர்ந்த படி ஆகவுமாம் –
கையிலே நீர் விழுந்த பின்பு வளர்ந்த கடுமை-
ப்ரஹ்மா திருவடிகள் விளக்கின நீரும் கூட விழுந்த படி-தாரா ஜலமும் ஸ்ரீ பாத தீர்த்தமும்
கூட விழும்படியான வேகம் சொல்லிற்று
ஓங்கி-
சம்சார சேதன உஜ்ஜீவன அர்த்தமாக பரம பதத்தின் நின்றும்
திருப் பாற்கடலிலே சாய்ந்து அருளி
ரஷ்ய அபேஷாம் ப்ரதீஷனாய் இருக்கிற காலத்தில்
ஒருவனுக்கு ஆகஸ்மிக ஸ்வ கடாஷத்தாலே–சத்வ உத்ரேகம் பிறந்து–
அஹங்கார அபிபூதரான நமக்கு ரஷகன் ஆவான் ஆர் -என்று
ரஷக அபேஷை பிறந்தவாறே-அதுவே விளை நீராக அபிவிருத்தனாய்-

உலகு அளந்த
குணாகுணம் நிரூபணம் பண்ணாதே சர்வ பிராணிகள் பக்கலிலும் திருவடிகளை வைத்த படி —
இவற்றுக்கு அபேஷிதம் இன்றிக்கே இருக்கச் செய்தேயும்–
உறங்குகிற பிரஜையை அணைத்துக் கொண்டு கிடக்கும் மாதாவைப் போலே-
இவற்றோடு ஸ்பர்சம் தனக்குத் தான் உகக்கிறான் இறே-
அந்யத்ர-அநஸ் நந்நந்ய-என்று ஒட்டற்று நின்றான் -இங்கு தனக்கு தாரகமாக நின்றான் –
வரையாமையும் —அதி மானுஷ சேஷ்டிதங்களும்-வடிவு அழகும்-
கிருஷ்ணாவதாரத்தோடு ஒத்து இருக்கையாலே-
ஸ்ரீ வாமன அவதாரத்தை அனுபவிக்கிறார்கள்
இத்தால்–அஹங்கார க்ரஸ்தர் ஆனவர்களை–மகா பலி அபிமானத்தின் நின்றும்
பூமியை மீட்டு தன் திருவடிகளாலே அளந்து
தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டால் போலே இத்தால்–
தனக்கு சேஷம் ஆக்கிக் கொண்டமையை சொல்லுகிறது-
இசையாதார் பக்கல் விழுமவன் இசைந்தார் பக்கல் மேல் விழச் சொல்ல வேணுமோ –
உலகமாக தொட்டது –அது ஊராகத் தொட்டது இது –

உத்தமன் –
இத்தை இவர்களுக்கு ஒரு உபகாரம் பண்ணினாக அன்றிக்கே தன் பேறாக நினைத்து இருக்கிறபடி
பிறரை ஹிம்சித்து தான் வாழ வேண்டும் என்று இருக்குமவன் அதமன்
பிறரும் ஜீவிக்க வேணும் தானும் ஜீவிக்க வேணும் என்று இருக்குமவன் மத்யமன்
தன்னை அழிய மாறி யாகிலும் பிறர் ஜீவிக்க வேணும் என்னுமவன் உத்தமன் —
மகாபலி அதமன்–
இந்த்ரன் மத்யமன்–
இவன் அழிய மாறி உத்தமன்
தென்றலும் நிலவும் போலே பிறர்க்கேயாய் இருக்கை
ந தே ரூபம் -இத்யாதிப்படியே -நமக்கு பகவத ஏவாஹமஸ்மி போலே அவனுக்கு –
ந தே ரூபம் பக்தா நாம் -ஆகையும்-
ஆகையால் உத்தமன் ஆனான்
சர்வாதிகன் -என்கை –
தான் நிர்ஹேதுகமாக ரஷிக்கையும்
அது தன் பேறாய் இருக்கையும் –
ஈஸ்வரர்களும் அகப்பட இவன் காலிலே வணங்கப் புகுகையாலே இவனே பரதத்வம்
தன் திருவடிகளை கிருபையால் தன் பேறாகத் தலைகளில் வைக்கையாலே -ப்ராப்யமும் ப்ராபகமும் தானே –

ஓங்கி உலகளந்த உத்தமன் -திருக் கோவலூர் அனுபவம்-
உத் -உத்தர –உத்தமன் –இத்தால் பர வ்யூஹங்களை கழித்து விபவம் –
அதிலும் -திருவிக்ரம -ராம -அவதாரங்களைக் கழித்து -வட மதுரை யில் -ஒருத்தி மகனாய் பிறந்த கோவிந்தன்

உலகளந்த உத்தமன் -பாற் கடல் துயின்ற பரமன் உத்தரன்-நாராயணன் -உத்-தஸ்ய உத் நாம-ஸ்ரீ வைகுண்டம்
உத்தர-தேவர்களுக்கு கருணையால் -வீட்டு மாப்பிள்ளை அவமானம் பொறுத்த உயர்ந்தவன் –
உத்தமன் -விபவம் -உலகு அளந்த -அனைத்து ஜீவ ராசிகளில் தலையிலும் திருவடி ஸ்பர்சம்

நாராயணனே- பரம் தத்வம் -பரம் ஜோதி -பரம் ஆத்மா -பரம் ப்ரஹ்மம் –
இத்தையே நாராயணன் -பையத்துயின்ற பரமன் -உத்தமன் –
உத்க்ருஷ்ட -உத் -விவரணம் திருவாய்மொழி -தாரதம்யம் -தர தமம்
தத்வம் -உண்மை பொருள்களில் உயர்ந்தவன் -தத்வ த்ரயம் -அறிவோம்
தர -இரண்டுக்கும் உயர்ந்தது -தம -அனைத்திலும் உயர்ந்தது –
உண்மை பொருள் காட்ட தத்வம் -சைதன்யம் உள்ளது -ஆத்மா -ஸ்வரூப ஸ்வபாவ விகாரம் இல்லாமல் தேஜஸ் –
உயர்வற உயர்நலம் உடையவன் -குணங்களில் முதலில் இழிந்தார் நம்மாழ்வார் –
திவ்ய மங்கள விக்ரஹ அழகில் இழிந்தார் திருமங்கை ஆழ்வார்
ஸ்ரீ வால்மீகியும் கோன் வஸ்மி குணவான் என்று உபக்ரமித்து
ஆண்டாளுக்கு ஸ்வரூப ரூப குணம் சேஷ்டிதங்கள் அனைத்தும் வேண்டுமே –

நீங்காத செல்வம் நிறைந்து -யோக -செல்வம் சேர்ந்து -க்ஷேமம் -நீங்காமல் தங்கி
நாட்டார்க்காக
செல்வம் -ருசி விஸ்வாசங்களே இவர்களுக்கு
மழை -குண மழை -மூன்றாம் பாசுரம் நான்காம் பாசுரங்கள் இரண்டிலும் உண்டே –
குண சாகரம் -ஸமஸ்த கல்யாண குணாத்மகன் அவன் -அன்றோ அவன் –
திருவிக்ரமன் கல்யாண குணங்கள் இதிலும் / ஊழி முதல்வன்-ஸ்ருஷ்ட்டி உன் முகனான சர்வேஸ்வரன் –
பற்ப நாபன் கல்யாண குணங்கள் அடுத்ததில் -அத்வாரக சத்வாரக இரண்டு ஸ்ருஷ்டிகளும் உண்டு /
சமஷ்டி வயஷ்டி ஸ்ருஷ்ட்டி -என்றுமாம்
ப்ரக்ருதி -அவிபக்தம் -விபக்தம் -அக்ஷரம் –
(விதை -தண்ணீர் வாங்கி பருத்து -வெடித்து -முளை யிட்டு -பூமிக்குள்ளே -வெளியில் வந்து காண்பது போலே )
மாயா -பிரதானம்–பல அவஸ்தைகள் -முக் குணங்கள் சேர்ந்தவை-
முக் குணங்கள் சமம் -பிரளயம் -விஷமமானால் ஸ்ருஷ்டி –
(வாதம் பித்தம் கபம் சமமாக இருந்தால் நோய் இல்லையே)
ஜீவ சமஷ்டி பிரக்ருதியில் கர்ப்பமாக இருக்கும் -அசித் அவிசேஷிதான்-ஞான சூன்யம் போலே –
அக்ஷரம் மூன்றாவது அவஸ்தை -soft ware-வைத்து தானே hard ware உபயோகம்
ஜீவன் புகும் யோக்யதை வந்த பின்பு என்றவாறு

பேர் பாடி –
இக் குணங்களுக்கு வாசகமான திரு நாமங்களை ப்ரீதி பூர்வகமாக பாடி –
பேர் பாடி
திருநாம சங்கீர்த்தனம் இதிலிருந்து 18 தடவை
உத்தமன் பேர் என்கிறது –
அவனுடைய வாத்சல்ய பிரகாசகமான-திருமந்த்ரத்தை –அத்தை ஸ்வயம் புருஷார்தமாகப் பாடி
முதல் பாட்டில்
நாராயணன் என்கையாலும் -சப்தம் சொல்லி
இரண்டாம் பாட்டில்
பரமன் -என்று அந்த மந்த்ரார்தமான குண பூர்த்தியை சொல்லுகையாலும்–
இதில்
மந்த்ரோக்த வ்யாப்திக்கு ப்ரத்யாபிஜ்ஞ்ஞாகரமான–த்ரைவிக்ரம அபதானத்தை சொல்லுகையாலும்–
திருமந்த்ரத்தைச் சொல்லுகிறது –
திருமங்கை ஆழ்வார்
மந்த்ரத்தை மந்தரத்தால் -என்று மந்தரத்தை சொல்லி
அனந்தரத்தில் —அதில் உக்தமான வ்யாப்த்திக்கு பிஜ்ஞ்ஞாகரமான
த்ரைவிக்ரம அபதானத்தை–அநந்தரம் பாட்டிலே அருளிச் செய்தார் இறே

அடி பாடி கீழே சொல்லி இங்கு பேர் பாடி –
அவளும் அவனும் விட்டாலும் விடாத திண் கழல் -கழல்கள் ஒரு நாளும் நம்மை கழற்ற ஒட்டாதே
அவன் தூரஸ்தனானாலும் இது -திரு நாமம் கிட்டே வந்து உதவுமே

உத்தமன் பேர் –
அவன் தனக்கும் அல்லாதாருக்கும் உண்டான வாசி போரும்–
அவனுக்கும் திரு நாமத்துக்கும்–
ஒருவன் திரு நாமத்தைச் செவியில் சொல்லி உறவை அறிவித்துத் தலையிலே
திருவடிகளை வையாமையாலே யன்றோ
எனக்கு உன் திருவடிகள் சம்பந்தம் அந்தராத்மத்தையோடு ஒத்து நிலையில்லாதே போய்த்து
கட்டிப் பொன் போலே அவன் பணிப் பொன் -ஆபரண பொன் -போலே திருநாமம் —
அவன் தன்னை இல்லை செய்கிறவர்களும் திரு நாமத்தை–கொண்டு கார்யம் கொள்ளா நிற்பர்
அதாவது வியாதி பரிகார அர்த்தமாக திரு நாம சங்கீ ர்தனத்தை விதித்தால்–
அத்தை அப்போதே செய்யா நிற்பர்கள்
இனி– மாத்ரு காதுகனுக்கும் கை நொந்தால் அம்மே -என்ன பிராப்தி உண்டாம் போலே–
திரு நாமம் சொல்லுகைக்கு எல்லாருக்கும் பிராப்தி உண்டாய் இருக்கும் –
திரு நாமம் சொல்லுகைக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டா–
இது தானே யோக்யதையை பண்ணிக் கொடுக்க வற்று
கங்கையில் நீராட போவான் உவர் குழியில் நீராடி விட்டு போக வேண்டுமா
சங்கல்பம் செய்ய சுத்தி வேண்டுமே–
சமுத்ரம் நீராட குளித்து விட்டு தான் போக வேண்டும்–யோக்யன் -யோக்யதை விட வேண்டாம்
பெருமாள் -சரண் -திருநாமம் உள்ளீட்டு விஷயம்–வேல் வெட்டிப் பிள்ளை வார்த்தை–
கிழக்கு நோக்கி வீற்று இருந்து–குடி பிறப்பால் வந்த ஆசாரம்
விபீஷணன் கடலில் ஒரு முழுக்கு கூட போட வில்லையே–
கர்ம யோகிக்கு விரோதி போகைக்கும் கர்மம் செய்து தலைக் கட்டுகைக்கும் திரு நாமம் வேணும்
ஞான யோகிக்கு ஞானம் விசதமாகைக்கும் விரோதி போகைக்கும்
பக்திமானுக்கு விரோதி போகைக்கும் பக்தி வர்த்திகைக்கும்
பிரபன்னனுக்கு சோறும் தண்ணீரும் போலே தேஹ யாத்ரைக்கும் வேணும்
இப்படி எல்லார்க்கும் திரு நாமம் வேணும்

பாடி –
மடி கோலாதே-இதுவே பிரயோஜனம்-
பாடி
நெய் உண்ணோம்–இன்று அமுது செய்திடல் ஓன்று நூறு ஆயிரமாக கொடுப்பேன்
என்னையும் என் உடைமையும் கொடுத்தல்

நாங்கள்-
திரு நாமத்தை வாயால் சொல்லா விடில் தரிக்க மாட்டாத நாங்கள்–
நெஞ்சு காவல் இடுகிற ஊரிலே
இது நமக்கு சித்திப்பதே என்று ப்ரீதைகளாய்-தங்களை ஸ்லாக்கிக்கிறார்கள்
பேர் பாடா விடில் தரியாத நாங்கள் –
உபாய அம்சம் அவனேயானால் தாரகமும் அவனேயாம் அத்தனை இறே-

நம் பாவைக்கு
ப்ராபகதயா வன்றிக்கே பிராப்ய ருசி இருந்த இடத்தில் இருக்க ஒட்டாமல் செய்கிற நோன்புக்கு-
அனுஷ்டானமும் அநநுஷ்டானமும் விகல்பிக்கலாம் படி –
அனுஷ்டித்ததாகில் சாதனம் என்று கொள்ள ஒண்ணாதே ப்ராப்ய ருசியால் வந்தது என்கை –
அனுஷ்டித்தது இல்லையாகில்-அவனே உபாயம் என்கையாலே
பலத்தில் அழிவில்லாமை பெறுமதுவும் கிருஷணனேயாய்-
பெறுவிப்பவனும் கிருஷ்ணனேயான நோன்பு -–

பாவைக்கு சாற்றி நீராடினால் –
நம் பாவைக்கு செய்யும் கிரிசைகள் -கீழே சொல்லி –
நம் பாவைக்கு -சாற்றி நீராடினால் -இங்கே —
நாட்டார்க்கு நோன்பு என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
நம்முடைய–விரஹ தாபம் போக நாம் குளித்தால்-
நோன்பு என்ற ஒரு வியாஜ்யத்தை இட்டு கிருஷ்ண சம்ச்லேஷத்தைப் பண்ணினால் –
சாற்றி நீராடினால்-
நாட்டுக்கு புண்யம் -நமக்கு விரஹ சமனம்

பேர் பாடி -நீராடினால் –
சம்பந்த ஜ்ஞான பூர்வகமாக–கிருஷ்ண சம்ச்லேஷம் பண்ணினால்–
பலமும்–பல பிரதாதாவான உலகு அளந்தவன் படியாகை
நாங்கள் நம் பாவைக்கு சாற்றி
அநந்ய உபாயரான நாங்கள்–ஸ்வயம் பிரயோஜனமான நோன்பை–உத்தேசித்து வ்யாஜ்யமாக்கி–
நீராடினால்–
பகவத் அனுபவத்தைப் பண்ணினால்

தீங்கின்றி நாடெல்லாம்
யத்ர அஷ்டாக்ஷர -இத்யாதிப்படியே
நாட்டில் உள்ள பாவம் எல்லாம் சும்மெனாதே கை விட்டோடித் தூறுகள் பாய்ந்தனவே-என்று சொல்லுகிறபடியே –
நாட்டில் வியாதி துர்பிஷ்யாதி அமங்களங்கள் எல்லாம் போய் சம்ருதமாய்–
தேகாத்மா அபிமானாதி தோஷங்கள் ஒன்றும் இன்றிக்கே–
இவ் ஊரே அன்றிக்கே இவ் ஊருடன் சம்பத்தித்த நாடெல்லாம் மங்களம் ஆகை
அல் வழக்கு ஒன்றும் இல்லாமல் என்றபடி –

திங்கள் மும்மாரி பெய்து –
வெள்ளக் கேடும் வறட்சி கேடும் இன்றிக்கே
ஊர் வெண்ணெய் விட்டாப் போலே இருக்கை —
ஒன்பது நாள் வெய்யிலும் ஒரு நாள் மழையுமாய் அபேஷித்த காலத்தில் உண்டாய் இருக்கை–
சத்வோத்தரமான காலத்திலே–அனன்யார்ஹ சேஷத்வ–அநந்ய சரணத்வ–அநந்ய போக்யத்வங்கள் ஆகிற
ஆகார த்ரய ஜ்ஞானம் உண்டாய்–அத்தாலே அபிவிருதங்களாய்-

மும்மாரி பெய்து –
ரஹஸ்யத்ரயம்
ஆகார த்ரய ஜ்ஞானம்-அநந்யார்ஹ சேஷத்வம் -அநந்ய சரண்யார்த்வம் -அநந்ய போக்யத்வம் என்றுமாம்

மும்மாரி
மூன்று சோகங்கள் அர்ஜுனனுக்கு
ப்ரக்ருதி ஆத்ம பிராந்தி ஜெனித சோகம் -பூத உடல் -பஞ்ச பூத உடல் –
தேவ அசுரர் விபாக ஸ்ரவண ஜெனித சோகம்
முடிவு எடுக்க முடியாத பரதந்த்ரன் அறிவால் மூன்றாம் சோகம்
மூன்று மாஸூக
மூவாறு மாசம் மோகம் ஆழ்வாருக்கு
தர்ம வீர்ய ஞானத்தால் தெளிந்து வால்மீகி –
இவரோ அருளின பக்தியால் உள் கலங்கி -சோகித்து மூவாறு மாசம் மோகித்து-
பத்துடை அடியவர்க்கு எளியவன்-
அவாப்த ஸமஸ்த காமன் வெண்ணெய் திருடி ஆப்புண்டு – -1-3-/–
பிறந்தவாறும்-அகர்மவஸ்யன் பிறக்கவோ-
பரஞ்சுடர் உடம்பாய் அழுக்கு பதிந்த உடம்பு ஏறிட்டுக் கொண்டு -5-10-/-
மாயக் கூத்தனின் கண்கள் வாயும் சோர்ந்து- இருத்தும் வியந்து –
வீற்று இருந்தான் கண்டு கொண்டே –கண்கள் சிவந்து -8-6–
மூன்று தீர்த்தம் -தேக மனஸ் ஆத்ம சுத்தி –

ஓங்கு பெரும் செந்நெலூடு கயல் உகள –
கீழ் சொன்ன திரு உலகு அளந்த சர்வேஸ்வரனோடு ஒத்து இருக்கை —
விடுவோரை நட்டு நாயிறு பட்டபோது வந்து பார்த்தால்-கை கவித்துப் பார்க்க வேண்டும்படி இருக்கை
மாரீசன் பெருமாளை -சீதா ராம பிரபாவம் சொன்னால் போலே ஆயிற்று–
இவர்களுக்கும் வாமன நிமித்தமாக இருக்கிறபடி

ஓங்கு பெரும் செந்நெல்
ஒரு முதலே ஒரு செய்யை விளாக்குலை கொண்டு அங்கன்–ஒரு வரம்பு இல்லாமையாலே–
ஆகாச அவகாசம் உள்ள அளவும் வளர்ந்து இருக்கை
சுற்றுடைமையும் -ஊக்கமும் -வரம்புக்கு அவ்வருகே போக ஒண்ணாமையாலே
ஒரு முதலே செயுள்ள தடையக் கொண்டு
ஆகாசத்துக்கு எல்லை இல்லாமையால் மேல் நோக்கி உயரா நின்றது -என்கை

ஊடு கயல் உகள –
செருக்காலே யானைக் கன்று போலே வளர்ந்த கயல்கள் ஆனவை
செந்நெல் களின் உள்ளே புக்கு-போக இடம் பொறாமையாலே துள்ளா நிற்கும்
விழுக்காடு அறியாமே அகப்பட்ட படி –
திரு யுலகு அளந்து அருளின எம்பெருமானைக் கண்டு அனுகூலர் செருக்கி
ப்ரீதிக்குப் போக்குவிட்டு சஞ்சரிக்குமா போலே கயல்கள் திரிகிற படி –

பூம் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப
பூத்த குவளை -என்னுதல்–
காலத்திலே என்னுதல்–
தர்ச நீயமான குவளைப் பூவிலே என்னுதல் –
பொறி வண்டு கண் படுப்ப –
மது பானத்தாலும்–அன்யோன்ய சம்ச்லேஷத்தாலும்–பிறந்த புகரை உடைய வடிவிலே தொடை கொள்ளலாம் படி
இருக்கிற வண்டுகள்-தன்னில் தான் ஒரு மகா பாரதத்தைப் பாரித்துக் கொண்டு புக்கு–
புஷ்பத்திலே ஸ்பர்ச சௌக்யத்தாலே–
நஞ்சு உண்டாரைப் போலே கிடந்து உறங்கி உணர்ந்து-
எழுந்து இருக்கும் பொழுது–என்னை நீ எழுப்பிற்று இல்லை என்னை நீ எழுப்பிற்று இல்லை–என்று
ஒன்றுக்கு ஓன்று சீறு பாறு என்னா நிற்கும்
பள்ளிக் கமலத்திடைப் பட்ட பகுவாய் அலவன் முகம் நோக்கி –நள்ளி ஊடும் -என்னக் கடவது இறே-
பகுவாய் அலவன் –
பெரிய வாயை உடைய புருஷ நண்டு–நள்ளி பெண் நண்டு

ஊடு கயல் உகள –பூம் குவளைப் போதில் பொறி வண்டு
குவளைப் பூவிலே வண்டு–மது பானம் பண்ண என்று படிந்த தசையிலே–கயல் ஊடே உகள–
செந்நெலும் குவளையும் ஒக்க அசைந்து-
தூங்கு மெத்தையில் உறங்கும் ராஜ புத்ரர்கள் போலே–
வாயில் மதுவோடு வண்டுகள் கண் படுப்ப -என்றபடி
இது வயலின் சம்ருத்தி–
இனி ஊரில் சம்ருத்தி இருக்கும்படி சொல்லுகிறது ஆகவுமாம்-
இவர்களுக்கு அங்குள்ளது எல்லாம் உத்தேஸ்யமாய் இருக்கை

பூம் குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்ப-
ஜ்ஞாநிகளோடு ஒக்க வளர்ந்து அத்தாலே தர்ச நீயரான ஞானாதிகர்–இடங்களிலே
ஸ்வாமித்வ ஸூசகமான திரு அபிஷேகம் உடையனாய்-
பரஞ் ஜோதிஸ்ஸான சர்வேஸ்வரன் லஷ்மி சனாதனாய்–
ஜ்ஞான லப்தனாய் வந்து அவர்கள் உடைய ஹிருதயங்களிலே-
சுகஸ் ஸ்பர்சத்தாலே கண் வளர ––
இது சேதன சம்ருத்தி–இனி சைதன்ய சம்ருதியைச் சொல்லுகிறது-
இது சிஷ்ய சம்ருதியைச் சொல்லிற்று ஆகவுமாம்-

தேங்காதே புக்கிருந்து –
எத்தனையேனும் முன்கை யுரவியராய் இருப்பார்–இழிய வேணும் யாய்த்து பசு கறக்கப் புகும் போது-
இதுக்கு அடி —பால் மாறாமையாலே எழுந்து இருக்கப் போகாது–
இத்தால் பால் போரும் பெருமையை அனுசந்தித்த வாறே-கறக்க ஒருப்படுவார் இல்லை–
திருவடி சமுத்ரம் கடக்க ஒருப்பட்டாப் போலே–ஒருப்பட்டுக் கொண்டு இழிய வேண்டும்படி யாய்த்து இருப்பது

நீர் வளம் -நில வளம் -பால் வளம்-மூன்றும் சொல்லி – -ஓங்கு -அவன் அளவும் ஓங்கி கவரி வீச
வள்ளல்-அவனைப் போலே பெரும் பசுக்கள் —

இருந்து –
பால் மாறில் இறே எழுந்து இருக்கலாவது–ஸ்தாவர பிரதிஷ்டை போலே இருந்து-
பிற்காலியாமல் குருகுலத்திலே பிரவேசித்து–
ஸூஸ்த்ரனாய் இருந்து தன்னைப் பற்றினார்க்கு
பரம பத நாதனோடு–பரம சாம்யா-பத்தியைப் பண்ணிக் கொடுக்கும் சீர்மை உடையனாய்–
பிரஜைக்கு முலை போலே சிஷ்யனுக்கு தாரகமான திருவடிகளைப் பற்றி பிரார்த்திக்க-
உபதேச பாத்ர பூதரான சிஷ்யரை பரி பூர்ண–ஜ்ஞானிகள் ஆக்குமவர்களாய்–சிஷ்ய விதேயராய்–
நிரந்தர பகவத் குணானுபவத்தாலே-பரிபுஷ்டரான ஆசார்யர்கள் உடைய–அவிச்சின்னமான சம்பத்து பரிபூர்ணம் ஆய்த்து
யாதோ வாசோ நிவர்த்தந்தே -என்னும் விஷயத்தை –
அத் தலையை உண்டாக்குகைக்காக தம் குற்றம் பார்த்து இறாயாதே ஸ்வீ கரிக்குமா போலே

சீர்த்த முலை
விரலிட்டு சுற்றிப் பிடிக்க ஒண்ணாது-
இரண்டு கையாலும் அணைத்து கறக்க வேண்டும்படி கனத்து இருக்கை

பற்றி வாங்கக் குடம் நிறைக்கும் –
வாங்குகை –
வலிக்கையாய்–பற்றிக் கறக்க குடம் நிறைக்கும் என்னுதல்–
முலையைப் பற்றி கை வாங்க தானே நின்று பால் சொரியும் என்னுதல்-
இட்ட குடங்கள் வாங்க வாங்க நிறைக்கும் என்னுதல்–குடமிடாதார் இழக்கிறது பசுவின் குற்றம் அன்றே
இச்சை உடையார் ஈஸ்வரனைப் பற்றி க்ருதக்ருத்யராம் போலே யாய்த்து இவையும்

வள்ளல் –
கீழே பால் போரும் பெருமையை சொல்லிற்று ஆகில்–
இனி வள்ளல் தனமாவது என் என்னில்–
கிருஷ்ணன் படி இவற்றுக்கும் உண்டாய் இருக்கை-
ஆரேனும் இவன் கழுத்தில் ஓலை கட்டி தூது போ என்றால்–போமாப் போலே யாய்த்து இவையும்–
சிறு பிரஜைகளும் கூட கட்டவும் அடிக்கவும் ஆம்படி
தன்னைக் கொடுத்துக் கொண்டு நிற்கை

பெரும் பசுக்கள்
புல்லும் தண்ணீரும் தாரகமாக வளர்ந்தவை அன்றிக்கே–
கிருஷ்ண ஸ்பர்சமே தாரகமாக வளர்ந்தவை ஆகையாலே
ஸ்ரீ சத்ருஞ்ஜயனைப் போலே யாய்த்து இருப்பது-
கண்ணன் புல்லாங்குழல் நாதம் கேட்டு வளர்ந்த பசுக்கள் –
செவிகள் ஆட்டகில்லா
எம்பெருமான் நியமனம் ஒரு முலை–
சிஷ்யர் பிரார்த்தனை சமித் பாணி ஒரு முலை —
துர்கதி கண்டு வருந்தியாவது -காருண்யத்தால் -தரித்து இருந்தேன் ஆகவே -நான்காவது முலை-
கீதாசார்யன் -அர்ஜுனன்–நாரதர் -வால்மீகி–பராசர பகவான் -மைத்ரேயர்
தேங்காதே -ஆசார்யர் இடம் புக்கு -இருந்து –
சீர்த்த முலை-
சுருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணங்கள் அருளிச் செயல்கள்-
குடம்
தயா பாத்ரம் -நிறைக்கும் ஆத்ம குணங்களால் -தன்னைப் போலே ஆக்கும் ஆசார்யர் –
இது தான் நீங்காத செல்வம்
வள்ளல் பெரும் பசுக்கள் –
கிருபாமாத்ரா பிரசன்னாசார்யர்கள் –
புள்ளு பாஷ்யகாரர் பிள்ளை நாம் -வேதாந்தங்கள் அநந்தம்-நமக்கு தேடிக் கொடுத்து –
பசுக்கள் –
பெரும் பசுக்கள் –
வள்ளல் பெரும் பசுக்கள் –
குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் –
பஞ்சம உபாயம் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் அன்றோ

ஓங்கி உலகளந்த உத்தமன் –
மண் மிசை யோனிகள் தோறும் பிறந்து எங்கள் மாதவன் கண்ணுற நிற்கிலும் காணகில்லா —
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே –நாரணற்கு ஆயினேரே –
ஞானம் கனிந்த நலம் கொண்டு -இராமானுசன் தன்னை எய்தினர்க்கு அத்தானம் கொடுப்பது
தன் தகவு என்னும் சரண் கொடுத்தே
எம்பெருமானை விட ஓங்கி அதிசயித்து –
தம் கருணையால் தாமே சென்று அருளி உத்தமர் –
உலகத்தை எல்லாம் ஸ்வ அதீனமாக ஆக்கிக் கொண்ட உத்தமர் அன்றோ –
ஓராண் – வழியாய் உபதேசித்தார்-முன்னோர் –
ஆசை உடையார்க்கு உபதேசிக்க -வரம்பு அறுத்த உத்தமர் அன்றோ –
மற்றொரு பேறு மதியாது அரங்கன் மலர் அடிக்கு ஆளுற்றவரே தனக்கு உற்றவராகக் கொள்ளும் உத்தமன் –
நற்றவர் போற்றும் இராமானுசன் அன்றோ –

தீங்கு –
தேஹாத்மா ஸ்வ தந்திர அந்ய சேஷத்வ பிரமங்கள் -இல்லாமல் –
ஆசார்யர் இடம் -ஜ்ஞானம் -கிரியாம்சம் விட ஜ்ஞானாம்சம்–இதுவும் பலத்தின் ஏகாம்சம்-
மும்மாரி –
தத்வ ஹித புருஷார்த்த ஜ்ஞானங்கள் -தத்வ த்ரய ஜ்ஞானங்கள்-
வேதம் வல்லவர்க்கு ஒரு மழை-
நீதி நெறி தவறாத மன்னருக்கு ஓர் மழை-
மாதர் மங்கையர் கற்பினுக்கு ஓர் மழை–
கற்பு நடமாடக் கண்டேன் -திருவடி -பொறை-கற்பு –

பாரோர் -புகழப் படிந்து –உய்யுமாறு உகந்து -நீங்காத செல்வம் நிறைந்து –
மங்கள சொற்கள் நிறைந்த -மார்கழி வையம்-ஓங்கி -திருப்பாவை ஏற்றம்
பெரும் செந்நெல் -சரணாகதர்கள் – வரம்புற்ற கதிர் செந்நெல் -தலை சாய்த்து –
தாள் சாய்க்கும் தென்னரங்கம் -உரம் பெற்ற மலர்க்கமலம்-உலகு அளந்த சேவடி போல் உயர்ந்து காட்ட –
சரணாகதி இங்கும் நடக்கிறது-
குவளை புஷ்பம் தாமரை தஹார புண்டரீகம் -ஆத்ம யாத்ரை சித்தம்-தேக யாத்ரைக்கு கரைய வேண்டாம்
கரைந்தால் நாஸ்திகன்-ஆத்ம யாத்ரைக்கும் கரைய வேண்டா கரைந்தான் ஆகில் சரணாகதன் ஆகான்
பொறி வண்டு –
தெய்வ வண்டு –

வாமனன் -போலே ஆச்சார்யர்கள் மனுஷ்ய சஜாதீயனாக்கிக் கொண்டு மஹாபலி போன்ற சம்சாரிகளுக்கு
ரஹஸ்ய த்ரயம் -ஷட்க த்ரயம் -தத்வ த்ரயம் -மூன்றையும் கேளுங்கோள் என்று இரப்பாளனாகி
அவன் கொள்ள கொண்ட வேஷம் -இவர்கள் கொடுக்கக் கொண்ட வேஷம் -வாசி உண்டே
ஸ்ரீ பாத தீர்த்தம் சாதித்து சிஷ்யர்களை உஜ்ஜீவிப்பார்கள் அவனைப் போலவே
அதம குரு -புலையறமாகி நின்ற புத்தோடு சமணம் எல்லாம் –ஜைன புத்தாதி மதங்களை போதிப்பவர்
அனுவர்த்தித்தாலும் ஒன்றுமே உபதேசியாதாரும் அதம குரு
ஞானம் அனுஷ்டானம் ஏதும் இல்லாமல் எத்தையோ உபதேசிப்பவர் அதம குரு
மத்யம குரு -சாமான்ய ஸாஸ்த்ர ப்ரவர்த்தகர் –
அனுவ்ருத்தி நிர்பந்தங்கள் நிபபந்தனமாக வருந்தி உபதேசிப்பவர்களும் மத்யம குரு
ஞானம் அனுஷ்டானம் ஒன்றை மட்டும் இருந்து உபதேசிப்பவர் மத்யம குரு
பயன் நன்றாகிலும் பங்கு அல்லராகிலும் செயல் நன்றாகத் திருத்திப் பனி கொண்டு
சாத்விக மஹார்த்தங்களை உபதேசித்து அருளுபவர் உத்தம குரு –
ஞானம் அனுஷ்டானம் இவை நன்டயராகவே கொண்டு உபதேசித்து அருளுபவர் உத்தமர் என்றுமாம் –

அஷ்டாஷரம் பெருமை -மார்கழி -நாராயணனே நமக்கே பறை தருவான் –நாராயணன் – பர நிலை-
வையத்து -த்வய மகா மந்த்ரம் -நாமும் நம் பாவைக்கு சாற்றி நீராடினால் -வ்யூஹம் -பாற் கடலில் பையத் துயின்ற
ஓங்கி -சரம ச்லோகார்த்தம் -விபவம் -வாமனன்-ஸ்வஸ்தி வாக்ய வேத மந்த்ரம் போலே ஓங்கி உலகு அளந்த –
பகவத் ஸமாச்ரயண பலமான கைங்கர்யம் ஒழியவே-ஆயுர் ஆசாஸ்தே -என்கிறபடியே
ஐஹிக பலன்களும் ஆநுஷங்கிக ஸித்தமாய்க் கொண்டு ஸித்திக்கும்-என்கிறது –
அடுத்து அந்தர்யாமி அர்ச்சா -இப்படி ஐந்தும்
மார்கழி வையத்து ஓங்கி –
பக்தி யோக பிரபத்தி –
ஞான கர்மம் அங்கங்கள் -பக்திக்கு -பிரபதிக்கு ஐந்து அங்கங்கள் -பிரபத்தியே ஓங்கிய மார்க்கம் –

————————-

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் சுவாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: