திருப்பாவை சாரம் -அவதாரிகை –

இன்றோ திரு ஆடிப் பூரம் எமக்காக
அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள் –குன்றாத
வாழ்வான வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து
ஆழ்வார் திரு மகளாராய்-22

அஞ்சு குடிக்கு ஒரு சந்ததியாய் ஆழ்வார்கள்
தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய் -பிஞ்சாய்
பழுத்தாளை ஆண்டாளை பத்தி உடன் நாளும்
வழுத்தாய் மனமே ! மகிழ்ந்து -24

பூர்வாச்சார்யர்கள் பலரும் அருளிச் செய்த வியாக்யானங்களில் உள்ளவற்றில் சில துளிகளை
அடியேன் உங்களுடன் பகிர்ந்து கொண்டு சத்தை பெற உள்ளேன் –

தேகாத்ம அபிமானிகளுக்கும் ஆத்ம ஸ்வரூபம் கை வந்து இருக்கும் ரிஷிகளுக்கும்
பர்வத பரமாணு வோட்டை வாசி போரும் –
ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் அத்தனை வாசி போரும் –

மற்றை ஆழ்வார்கள் போல அன்று பெரிய ஆழ்வார்-
மங்களாசானம் காதா சித்தம் அவர்களுக்கு –போற்றி போற்றி என்பார்கள் சேர்ந்து இருக்கும் பொழுது-

சோராத காதல் பெரும் சுழிப்பால் தொல்லை மாலை யொன்றும்
பாராது அவனைப் பல்லாண்டு என்று காப்பிடும் பான்மையன் தாள்
பேராத வுள்ளத்து இராமானுசன் தன பிறங்கிய சீர்
சாரா மனிசரைச் சேரேன் எனக்கு என்ன தாழ்வினையே –

மங்களா சாசனத்தின் மற்றுள்ள ஆழ்வார்கள்
தங்கள் ஆர்வத்தளவு தான் அன்றி -பொங்கும்
பரிவாலே வில்லிபுத்தூர்ப் பட்டர் பிரான் பெற்றான்
பெரியாழ்வார் என்னும் பெயர் —

பெரியாழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் அத்தனை வாசி போரும்-
பதின்மருடைய ஞானமும் ஸ்த்ரீ தனமாக இவள் பக்கலிலே இறே குடி கொண்டது –
பத்துப் பேர்க்கு ஒரு பெண் பிள்ளை இறே –

தேஹாத்ம அபிமானத்துக்கு கூனியும் கைகேயியும் –
தார்மிகத்வத்துக்கு சக்ரவர்த்தி
ஆத்ம ஞானத்துக்கு வசிஷ்டாதிகள்
கைங்கர்யத்துக்கு இளைய பெருமாள்
பாரதந்தர்யத்துக்கு ஸ்ரீ பரத ஆழ்வான்-
இளைய பெருமாள் படி ஆழ்வார்களது –
ஸ்ரீ பரத ஆழ்வான் படி பெரியாழ்வாரது –
ஸ்ரீ சத்ருன ஆழ்வான் படி ஆண்டாளது
பெரியாழ்வார் பகவத் ஸம்ருத்தியை ஆசைப்பட்டார் –
இவள் பாகவத ஸம்ருத்தியை ஆசைப்பட்டாள்-
முந்துறவே பல்லாண்டு என்றார் அவர் -இவள் நீராடப் போதுவீர் -என்றாள்-
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வானும் நாய்ச்சியாரும் மதுரகவிகளோடு ஒப்பர்கள் –
நாய்ச்சியார் பெரியாழ்வாரையே உபாயமாக விஸ்வஸித்து இருப்பர் –

ஆழ்வார் திருமகளார் ஆண்டாள் மதுரகவி
ஆழ்வார் எதிராசராம் இவர்கள் –வாழ்வாக
வந்து உதித்த மாதங்கள் நாள்கள் தம்மின் வாசியையும்
இந்த வுலகோற்கு உரைப்போம் யாம் -21–ஆசார்ய அபிமானமே உத்தாரகம் -சரம பர்வ நிஷ்டர்கள்-

மூக்கரிந்திட்ட குமரனார்-சொல்லும் பொய்யானால் நானும் பிறந்தமை பொய்யன்றே-என்றும் –
திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு -வார்த்தை விட்டு சித்தர் கேட்டு இருப்பார்-என்றும்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாய் தேசுடைய தேவர் திருவரங்கர் பேசியிருப்பனகள்-என்றும்
சரம ஸ்லோகங்கள் –மூன்றும் வெறும் -சொல் வார்த்தை பேச்சு-இவளுக்கு –
விஷ்ணு சித்தரதோ மெய்ம்மை பெரு வார்த்தையாய் இருக்கும்
இவளுக்கு உபாயம் விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும்
பெரியாழ்வார் தம்மை அழித்து இவனைப் பெற இருக்க –
இவள் தன்னை அழித்து அவர்களை பெறப் பார்க்கிறாள்
நம்மாழ்வார் -நெடுமாற்கு அடிமையிலும் -வேய் மறு தோளிணையிலும்-
தொண்டர் அடிப் பொடி ஆழ்வாருக்கு மேம் பொருளுக்கு மேலிட்ட பாட்டுக்களிலும்
வெளியிட்டு அருளிய பாகவத சேஷத்வமாகிற சரம பர்வ நிஷ்டை -இவளுக்கு முற்பட்டது –

அர்ஜுனன் தசரதன் வாஸூ தேவாதிகள் -ஆச்சார்யர் இல்லாமல் நேராக பகவானைப் பற்றி
பரம புருஷார்த்தம் இழந்தார்கள் அன்றோ –
கலியுகம் வேறே -ரஜஸ் தமஸ் மிக்கு இருக்க -சத்வ குணம் வளர்க்கவும் ஆச்சார்யர் வேண்டுமே –
படி -32-எழுத்துக்கள் –தானாகவே அமையுமே -அவனை அனுசந்தித்து உருகி அருளிச் செய்த வியாக்யானங்ககள்

ஆழ்வார்கள் எம்பெருமானாலே மயர்வற மதிநலம் அருளப் பெற்றனர் –
இவள் தான் எம்பெருமானுக்கு மயர்வற மதி நலம் அருளினாள்
இவள் அருளுகையாவது எம்பெருமானை எழுப்பித் தன் குறையை எம்பெருமானுக்கு விண்ணப்பம் செய்கை–

அவர்களில் இவளுக்கு வாசி என் என்னில் அநாதி மாயயா- சம்சாரத்தில் உறங்கு கிறவர்களை எழுப்பி
எம்பெருமான் தானே தன்னைக் காட்ட கண்டார்கள் ஆழ்வார்கள் –
இவள் தானே சென்று எம்பெருமானை எழுப்பி தன் குறையை அறிவித்தாள்-
ஆகையால் அவர்களிலும் இவள் விலக்ஷணை
இளைய பெருமாள் -பால்யாத் ப்ரப்ருதி ஸூஸ்நிக்தரானாப் போலே –
இவளும் தொடக்கமே பிடித்து-பகவத் குணங்களில் அவஹாகித்து ஸ்நேஹித்துக் போரும் –

புருஷன் புருஷனைக் கண்டு ஸ்நேஹிப்பதில் காட்டில்-ஸ்திரீ புருஷனைக் கண்டு ஸ்நேஹிக்கை பள்ளமடை –
ஆழ்வார்களைக் காட்டிலும் எம்பெருமான் பக்கல் பரம பக்தி உடையாளான ஆண்டாள் அருளிச் செய்த திருப்பாவைக்கு கருத்து –
மார்கழி நீராட –
நோன்பு வியாஜ்யமாக கொண்டு -நோன்பு என்ற ஒரு வியாஜ்யத்தாலே எம்பெருமான் பக்கலிலே சென்று
உனக்கு சேஷமாய் இருக்கிற ஆத்மா அனர்த்தப் படாதபடி பண்ணி
இதுக்கு ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யங்களையும் கொடுத்து
அது தானும் யவதாத்ம பாவியாம் படி பண்ணி அருள வேணும் -என்று அபேஷிக்கிறது-–

இவள் பிறந்திட்டாள்-என்னுமா போலே அந்யாபதேசத்தாலே அனுபவிக்க வேண்டாதே
அவனைப் பருத்தி பட்ட பன்னிரண்டும் படுத்த வல்ல ஸ்த்ரீத்வத்தை உடையளாய் இருக்கும் –
அவர்களில் காட்டிலும் ஆற்றாமை தன்னேற்றம் -எம்பெருமான் தன் அழகையும் குணங்களையும் இவளுக்கு கொடுத்தான் –
பிராட்டிமாரும் தங்களுடைய ஸ்வரூப ஸ்வ பாவங்களையும் இவளுக்குக் கொடுத்தார்கள் –
தமப்பன்மாரைப் போலே ஏறிட்டுக் கொண்ட பெண்மை என்று -இவளுக்கு ஓர் அந்யாபதேசம் யுண்டு -அதாகிறது
ப்ரமணி இடைச்சியாகை-குலம் தரும் -என்று அவனுக்கு அந்நிய குலம் இறே –

இந் நோன்புக்கு மூலம் என் என்னில் -மீமாம்ஸையிலே -ஹோளாதிகரண நியாயத்தாலே சிஷ்டாசார சித்தம்
மேலையார் செய்வனகள் -என்று ஆண்டாள் தானும் அருளிச் செய்தாள்-
உத்தேச்யம் மழை இல்லை -பகவத் -சம்ச்லேஷம் -தானே-
வ்ரத உபவாசம் வடிவைக் -கண்டால் பரம -சேதனன் அன்றோ வர்ஷிப்பான் தானே
வருண -பகவான்-காருண்ய-மழை -எம்பெருமான் அனுக்ரகம் நிச்ச்சயம் -கிடக்கும்
பொய்யே நோற்கிறோம் -என்று சொல்லலாமோ என்னில் –
விவாஹங்களிலும் மரண பர்யந்தமான தசைகளிலும் வந்தால் பொய் சொல்லலாம் –என்று சாஸ்திரம் உண்டு
உண்டு என்று சொல்ல வேணுமோ அனுஷ்டானம் யன்றோ பிரதானம் –
இவ் விரண்டுக்கும் கைம் முதல் வேறே தேட வேணுமோ -இவர்களுடைய ஆற்றாமை தான் என் செய்யாது –

தங்கள் ஆற்றாமையாலே-
துஷ்ட காளிய திஷ்டாத்ர கிருஷ்ணோஹம் இதி சாபரா -என்று கிருஷ்ணனை அனுகரித்து தரித்தாப் போலே-
இவளையும் அனுகரித்து தரிக்கச் சொல்ல–
இவளும் கிருஷ்ணனை அனுகரிப்பதிலும்
கிருஷ்ணனை அனுகரித்த பெண்களை அநுகரிக்கை நன்று – என்று பார்த்து அனுகரித்து தரிக்கிறாள் –
அவன் போல் -கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் இத்யாதியில்—விபவத்தில்-அனுகரிப்பார் நம் ஆழ்வார் –
வடவரை நின்றும் வந்து இன்று கணபுரம் இடவகை கொள்வது யாம் என்று -அர்ச்சையில்-அனுகரிப்பார் திரு மங்கை ஆழ்வார்-
கோபிகள் அநுகாரம்- கண்ணனாகவும் காளியனாகவும் – காளியனாக அனுகரித்தவள்-கண்ணனாக அனுகரித்தவளை அதிக ஆனந்தம்- –
அவன் திரு அடி ஸ்பர்சம் –பூத்த நீள் கதம்ப -வ்ருஷம்– காளியனாக ஆசை கொண்டார்களே—
ஆண்டாள் கோபிகளாக அநுகாரம்-
அவ் வநுகாரம் முற்றி -இடை முடியும் இடை நடையும் இடைப் பேச்சும் முடை நாற்றமுமாய் விட்டது
இப்படி தான் இருந்த ஸ்ரீ வில்லி புத்தூரே திருவாய்ப் பாடியாகவும் –
வட பெரும் கோயில் ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையாகவும் –
வட பெரும் கோயிலுடையானே கிருஷ்ணனாகவும் –
தன்னைப் பிராட்டியாகவும் தோழிமாராகவும் அனுகரித்துக் கொண்டு நோற்கிறாள் –

கோப வ்ருத்தர் எல்லாரும் கிருஷ்ணனையும் அழைத்து -பெண்களை நோற்கச் சொல்லி
இவர்கள் நோன்புக்கு நீ கடகனாக வேணும் -என்று கிருஷ்ணனை அபேக்ஷிக்க –
அவன் எனக்கு ஷமம் அன்று -என்ன
இத்தனையும் செய்ய வேணும் -என்று மறுக்க ஒண்ணாத படி நிர்பந்திக்க
அவனும் இசைந்த பின்பு எல்லாரும் திரள இருந்து
பெண்கள் நோற்பார் -இதுக்கு வேண்டுவது கிருஷ்ணன் சஹகரித்து கொடுப்பான் -என்று ஓம் அறைந்து
கிருஷ்ணன் கையிலே பெண்களைக் காட்டிக் கொடுத்து
கோப வ்ருத்தர் எல்லாரும் போன பின்பு -பெண்களும் கிருஷ்ணனும் கூட இருந்து –
திருக் குரவை கோத்த ராத்திரி போலே பெண்காள் இதுவும் நமக்கு ஒரு ராத்திரியே -என்று கிருஷ்ணன் கொண்டாடி
யமுனா தீரத்தில் பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களை யடைய
மெய்க் காட்டிக் கொண்டு கழகம் இருந்து
இனி நாம் வைகல் இருக்கில் மாதா பிதாக்கள் அதி சங்கை பண்ணுவார்கள் –
உந்தம் அகங்களிலே போய்ச் சேருங்கோள்-என்று தானும் நப்பின்னை பிராட்டி திரு மாளிகை சேர
பெண்களும் தந்தாம் அகங்களிலே போய்ப் படுக்கையிலே சேர படுக்கை அடி கொதித்து
மென்மலர்ப் பள்ளி வெம் பள்ளியாய் மத்திய ராத்ரியிலே எழுந்து இருந்து சிலர் உறங்குகின்ற பெண் பிள்ளைகளை எழுப்புகிறார்கள்
உறங்குகிறவர் யார் எழுப்புகிறவர் யார் என்னில்
குண வித்தர் உறங்குகிறார்கள் -கைங்கர்ய பிறர் எழுப்புகிறார்கள்
ராம சரம் ஒருபடிப் பட்டு இராது இறே
சின்னம் பின்னம் -அப்படி கிருஷ்ண குணங்களும் நாநாவாய் இறே இருப்பது
இரண்டு பிரகாரமும் பரமபதத்தில் உண்டு -அமரரும் முனிவரும் – இறே –
முனிவரோடு ஒப்பார் உறங்குகிறார்கள் -அமரரோடு ஒப்பார் எழுப்புகிறார்கள் –

மயர்வற மதிநலம் அருள பெற்ற போதே -ப்ராப்ய பிராப்பகங்கள் அவனே என்று நினைவிட்டு இருப்பர்கள்-
இது ஆழ்வார்களும் ஒக்கும் ஆண்டாளுக்கு ஒக்கும் –
எம்பெருமானை ஒழிய அரை க்ஷணமும் தங்களுக்கு தேஹ யாத்திரை நடவாமையாலே கிடந்து
அலமந்து கூப்பிட்ட பாசுரங்கள் இப்பிரபந்தங்கள் -சாஷாத் ப்ரமேயம் இது –
அல்லாதது பகவத் அபிப்ராயத்தாலே அர்த்தாத் சித்தங்கள்-

ஸ்ரீ ஜனக ராஜன் திருமகளுடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள்
சக்ரவர்த்தித் திருமகனைப் பெறுகைக்கு உடலாக விழுந்தால் போலே
ஆண்டாளுடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள் பெரிய பெருமாள் திருவடிகளை பிராபிக்கைக்கு உடலாய் விழுந்தது –

திருப்பல்லாண்டுக்கு ஆள் கிடைக்கிலும் திருப்பாவைக்கு ஆள் கிடையாது
மோவாய் எழுந்த முருடர் கேட்கைக்கு அதிகாரிகள் அல்லர்
முலை எழுந்தார் கேட்க வேணும் -அவர்களிலும் எம்பெருமானை தானே அனுபவிக்க
வேணும் என்று இருக்கும் பரிவாணிச்சிகளான பிராட்டிமார்க்கும் கேட்க நிலம் இல்லை
பல சொல்லி என்
பத்து ஆழ்வார்கள் உடைய சார பூதையான தானே சொல்லி தானே கேட்கும் இத்தனை –
எம்பெருமானார் அருளிச் செய்வர்-

பலாத்காரம் பண்ணி அனுபவித்தாள் மாலை — ..திரு மாலை கட்டின பா மாலை -புஷ்ப மாலை-
மாலையே மாலை கட்டின கோதா- பூ மாலை கட்டிய பா மாலை –
திரு மாலை கட்டின கோதா–இதையே தனியனாக பராசர பட்டார் அருளி இருக்கிறார்
கண்ணனுக்கே ஆமது காமம்–மாலை மாலையாலே விலங்கு இட்டாள்-
கால் விலங்காகில் இறே கழற்றுவது -தந்தை காலில் விலங்கு அற -தந்தை தளை கழல
காமிநி அன்றோ -பத்தினிக்கு தோற்பான் பரம ரசிகன் –
கண்ணியாலே கட்டுண்டான்-கண்ணியார் குறும் கயிற்றால் கட்டுண்டபடி

நாராயணனே நமக்கே பறை தருவான் என்று உபாயத்தை முதலிலே நிலையிட்டு
முடிவிலே உனக்கே நாம் ஆட்ச் செய்வோம் -என்று உபேயத்தை நிலையிட்டு
நடுவே தேஹ யாத்ரைக்கு உடலாக்கி விடுகிறாள் ஆண்டாள் –.பிஞ்சாய் பழுத்தாள் ஐந்தே வயசில் எல்லாம் அருளினாள்-

அப்பொழுது தோன்றிய ஹனுமான் இடம் கேட்டாள் சீதை– சங்கரையா உன் செல்வம் சால அழகியதே– –
குழல் அழகர் –என் அரங்கத்து இன் அமுதர் ..திரு பவள வாய் தித்தித்து இருக்குமோ என்று அன்றோ -கேட்டாள்-இதிலும் ஏற்றம்
நாண் ஒலியும் சங்கு ஒலியும் சீதை ருக்மிணி பிராட்டிகள் இருவர் கேட்டதை -சேர்த்து கேட்டாள்-
திரி ஜடை சொப்பனம் கண்டு சீதை ஆசுவாச பட இவளே கனா கண்டேன் தோழி நான் என்று அருளுகிறாள்.
கொள் கொம்பிலே சேர்க்க வேண்டிய பருவம் –
மானிடருக்கு என்று பேச்சு படில் -யாராவது பேசினாலும் -வாழ கில்லேன் –
கோல் தேடி ஓடும் கொழுந்தே போல் மால் தேடி ஓடும் -மனம் உடையவள்
பாரிப்போடு -தழுவி அணைத்து கொள்ள –மனம் உடையவள்-

மின்னார் தட மதிள் சூழ் வில்லிபுத்தூர் என்று ஒரு கால்
சொன்னார் கழல் கமலம் சூடினோம் -முன்னாள்
கிளி யறுத்தான் என்று உரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழி யறுத்தோம் நெஞ்சமே வந்து –

வில்லிபுத்தூர் என்று ஒரு கால் பெரியாழ்வாரும் ஆண்டாளும் சொன்னதே
ஸ்ரீ வில்லிபுத்தூர் திவ்ய தேச மங்களா சாசன அருளிச் செயல்கள் –

மின்னனைய நுண் இடையார் விரி குழல் மேல் நுழைந்த வண்டு
இன்னிசைக்கும் வில்லிபுத்தூர் இனிது அமர்ந்தாய் உன்னைக் கண்டார்
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள்
என்னும் வார்த்தை எய்துவித்த இருடீகேசா முலை யுணாயே–2-2-6-

மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொரு கயல் கண்ணினை துஞ்சா
இன்னடிசிலொடு பாலமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை
உன்னோடு தோழமை கொள்ளுவன் குயிலே உலகளந்தான் வரக் கூவாய் –5-5–

அன்னம் வண்டு என்றதே பெரியாழ்வாரையும் பெரிய பெருமாளையும் ஸூசிப்பிக்கும்–
அசாரம்- அல்ப சாரம் – சாரம்- சார தரம் -இவற்றைத் தள்ளி -சார தமம் அன்றோ அன்னம் கொள்ளும் –

ஆண்டாளை சொல்லி–அவள் குழல் மேல் ஒரு வண்டு நுழைந்ததாம்
தூவி யம் புள்ளுடை தெய்வ வண்டு -எம்பெருமான் ஆகிற வண்டு காதல் கொண்டது–கூந்தல் வண்டு இழுக்கும்-
இவள் தான் சூடிய மாலையாலே அவனை ஆகர்ஷித்தாள்–

இதில் ஹம்ச விருத்தாந்தம் -இருள் நீங்க வேதம் உரைக்கத் தோன்றிய திரு வவதாரம்
அன்னமதாய் இருந்து அங்கு அற நூல் உரைத்த -கலியன்
பின் இவ்வுலகினில் பேரிருள் நீங்க அன்று அன்னமதானானே அருமறை தந்தானே —பெரியாழ்வார்-
ப்ராஹ வேதான் அசேஷான் -இவ் உலகிருள் நீங்க–வேண்டிய வேதங்கள் ஓதி
வேத ப்ராதுர்பாவ விசேஷமான திவ்ய பிரபந்தத்தையும் அருளிச் செய்து–வேதப் பயன் கொள்ள வல்ல விட்டு சித்தன் –
பெரியாழ்வார் -தம்மையே -அன்னமாக–ஆச்சார்ய ஹிருதயத்திலும் –
நயா சலன் மெய் நாவன் நாத யாமுநர் போல்வாரை அன்னம் என்னும் –
ஆக ஆண்டாள் பெருமையை பெரியாழ்வாரும்–பெரியாழ்வார் பெருமையை ஆண்டாளும்–அருளிச் செய்ததாயிற்று-

ஸூகரம் அருளிய ஸூ கரமான உபாயம் -நில மடந்தை இடந்து எடுத்து –
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க-தூ மலர் தூவி தொழுது வாயினால் பாடி –
மனத்தினால் சிந்திக்க—போய பிழையும் புகுதருவான் நின்றனவும்-தீயினில் தூசாகும்-
இதை அருள வந்தவள் கண்ணன் மீது தனக்கு இருந்த காதலும்
இவள் பேரில் உள்ள கண்ணன் காதலும் அருள இரண்டு பிர பந்தங்கள்-

பறை–10 -பிரயோகங்கள் / நீராட்டம்–6-பிரயோகங்கள் / திருவடி –6 -பிரயோகங்கள் / பாடி- 18-பிரயோகங்கள் -/
நாராயணன் -3- பிரயோகங்கள் -/ ஓங்கி உலகளந்த-3-/ -கோவிந்தன் -3- பிரயோகங்கள் -/ -நப்பின்னை -4- பிரயோகங்கள் -/
நந்தகோபன் -5- பிரயோகங்கள் -/ஆராய்ந்து -2-பிரயோகங்கள் -/ புள்-4-பிரயோகங்கள் -/தூயோமாய்-3-பிரயோகங்கள் -/
கறவை-3-பிரயோகங்கள் -/எழுந்திராய் -19- பிரயோகங்கள் -/எம்பாவாய் -30– பிரயோகங்கள் –

நீராட்டம்–6-பிரயோகங்கள் திருப் பாவை–அணி அரங்கம் ஆடுதுமோ தோழி-திரு நெடும் தாண்டகம்-
அப்பன் திருவருள் மூழ்கினாள்–
பொற்றாமரை கயம் நீராட போனாள் -அடுத்து-அழகிய மணவாளன் -தான் பொற்றாமரை கயம்-சேஷ சயன -சௌந்தர்ய கடல்-
திரு மண தூண் ஆலம்ப -ஸ்தம்ப த்வயம் போல்-

திருப்பாவை முதலிட்டு ஐஞ்சு பாட்டுக்களாலும் –
பிரபன்ன நிஷ்டா க்ரமங்களையும் -பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் பேசுகிறது –
மேல் பத்து பட்டாலும்
பிரபத்வயனுடைய திருநாம சங்கீர்த்தனம் ப்ரபன்னனுக்கு கால ஷேபம் ஆகையால்
அந்த சங்கீர்த்தனத்துக்கு அதிகாரிகள் ஆனவர்களை எழுப்பிக் கூட்டிக் கொள்ளும் படியை சொல்லுகிறது –

முதல் ஐந்து -பர வ்யூஹ வைபவம் அர்ச்சை அந்தர்யாமி ஐந்தையும்
இரண்டாவது -ஐந்து -அவதார ஐந்து –
மூன்றாவது ஐந்து -அர்த்த பஞ்சகம்
நாலாவது ஐந்து -சரணாகதிக்கு பஞ்ச அங்கங்கள்
ஐந்தாவது ஐந்து -பஞ்ச கால பராயணர் -அதி கமனாதிகள் ஆக கால பஞ்சகம் –
ஆறாவது ஐந்து -பாகவத ஸ்வரூப பஞ்சகம் -சாமன்யக் நிர்வேதத்தி வைராக்யா அபராத பீரு பக்தி பரவச ப்ரீதி யோகியர்
பகவத் கீதையில் ஏற்றம் பகவதீ கீதைக்கு ஏற்றம் -அது அர்ஜுனனுக்கு இது கிருஷ்ணனுக்கு அன்றோ உபதேசம் –
ரக்ஷண தர்மம் -உணர்த்தி -அத்யாபயந்தி —

ஏஷ நாராயண ஸ்ரீ மான் – ஷீரார்ணவ நிகேதனன் -நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய -ஆகாதோ மதுராம் புரீம்-
மன்னு வட மதுரை மைந்தன் – -கண்ணனுக்கு முன்பு வாமனன்-ஓங்கி உலகு அளந்த உத்தமன் –
ராமன் -சார்ங்கம் உததைத்த சாரம் -இப்படி அன்றோ முதல் ஐந்தும் –

திருமந்த்ரார்த்தம் -மார்கழி / த்வயார்த்தம் -வையத்து – சரம ஸ்லோகார்த்தம் -ஓங்கி –
ஆச்சார்யர் வைபவம் -ஆழி மழை/ குரு பரம்பரை -மாயன் -என்றுமாம்

கூடி இருந்து குளிர பாகவதர்களுக்கும் திரு பள்ளி எழுச்சி அருளி மற்றைய ஆழ்வார்களையும் உணர்த்துகிறாள் ..
கேசவ நம்பியைக் கால் பிடிக்க ஆசை கொண்டு அரங்கனையே -அர்ச்சா மூர்த்தியையே -பெரிய பெருமாளையே -கால் பிடிக்கிறாள் –

மார்கழி வையத்து ஓங்கி ..முதல் வார்த்தையும் அர்த்தம் பொதிந்தவை..திருப்பாவையில்
நாராயணனே தருவான் -உபாயமும்
நாராயணனே பறை -புருஷார்த்தம் பிராப்யம்-அனுபவ ஜனித ப்ரீதி கார்ய கைங்கர்யம்
நமக்கே -இச்சையே -அதிகாரமாக கொண்ட செல்வ சிறுவர்களான நமக்கு-
அனுபவ பரிவாகம் திருப்பாவை வாய் வழியே – –ஸ்ரீ கோதோ உபநிஷத் –

இச்சையே அதிகாரம்-இரக்கமே உபாயம்-
இன்று யாம் வந்தோம் இரங்கு–அவனின் இனிமையே பரம பிராப்யம்-வகுத்த பிராப்த விஷயம்-
போதுமினோ போதுவீர் -ஸ்வரூபம்–

ஆக நோன்புக்குக் காலத்தைச் சொல்லி
இதுக்குச் செய்யக் கடவன சொல்லி
அனுமதி பண்ணினார்க்கு உண்டான நன்மை சொல்லி
வர்ஷிக்கும் படியை நியமித்து
நாம் இதிலே அந்வயிக்கவே சகல பிரதிபந்தகங்களும் போம் என்று சொல்லி
மேல் பத்துப் பாட்டாலே ஒருவரை ஒருவர் எழுப்புகிறார்கள்
மேல் விசதமாக இருக்கும் —

நாச்சியார் திருக்கோலம் -பிரசித்தம் -ஸ்த்ரீ அவதாரம் எடுக்காத இழவு தீர –
மோஹினி அவதாரம் என்றோ எதற்கோ அன்றோ –
கருணை பொறுமை இனிமை -ஸ்ரீ பூமி நீளா -பின்னை கொல் திரு மா மகள் கொல் ஆய் மகள் கொல் அன்றோ இவள்
ராஜ மஹிஷி உஞ்ச வ்ருத்தி போலே அன்றோ ஆண்டாள் மடல் எடுப்பது -ஆகவே பாவை நோன்பு
பட்டர் திருப்பாவை கால ஷேபம் செய்த பொழுது அறுவை சிகிச்சை -செய்யச் சொன்னாராம் —
திருப்பாவை ஜீயர் அன்றோ ஸ்வாமி –
மே மே புலி ஆட்டை கொள்வது போலே -ம ம்ருத்யு -யமானால் -சேதனன்-மாறி மாறி பல பிறப்பும் பிறந்து உழன்று
அம்மே -நான் எனக்கு அல்லன்–நீர் நுமது -வேர் முதல் மாய்த்து -இதுவே வேண்டியது
அம்மே என்பது போலே அன்றோ நம் நாச்சியார் திரு மொழி இத் திருப்பாவை –
சீர்த்த முலை பற்றி -வேதம் -இதிஹாச புராணங்கள் ஸ்ம்ருதிகக்ள் அருளிச் செயல்கள் இவற்றின்
ஞானம் இல்லா விடிலும் அம்மே என்று தாய் முலைப் பால் உண்டே உஜ்ஜீவிக்கும் அஸ்மாதாதிகள்
கூட உஜ்ஜீவிக்க அன்றோ இந்த திருப்பாவை –

ஸ்ரீ மத்யை விஷ்ணு சித்தார்ய மநோ நந்தன ஹேதவே
நந்த நந்தன ஸூந்தர்யை கோதாயை நித்ய மங்களம் —

——————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: