ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –387-406 -நிர்ஹேதுக கிருபை வைபவ பிரகரணம் –ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் / ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்–

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது ஐந்தாவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் /
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் /

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகாரஞ்ச ச வைபவம் (ச -உபாய வைபவமும் இதில் உண்டே )-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது எட்டாவது பிரகரணம்

த்வய அபிபிரேரிதமான – த்வய யுக்த அர்த்த ஞானமும் -தத் உபதேச ஆச்சார்யர் அனுவர்த்தனைத்தையும் அருளிச் செய்து –
அதுக்கு மூல பூதமான பகவத் கிருபை -ஹேதுதா சங்கதி –
நிவர்த்ய ஞானம்–கர்மா அவித்யாதி தோஷங்கள் நினைத்தால் – பய ஹேது /-நிவர்த்தக பகவத் குண அனுசந்தானம் ஞானம்–பயம் கெடுக்கும் ஹேது
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -/ படிக்கட்டுக்கள் அத்வேஷம் தொடங்கி பிராப்தி வரை -நிர்ஹேதுக கிருபையே காரணம்

——————————————

சூரணை -387-

இவையும் கூட இவனுக்கு விளையும் படி இறே
இவன் தன்னை முதலிலே அவன் சிருஷ்டித்தது —

இப்படி அஞ்ஞாத ஸூஹ்ருதங்களை ஆகிலும் ஹேதுவாக கொண்டு
கடாஷிக்கும் அளவில் -அங்கீகாரம் சஹேதுகம் ஆகாதோ என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
இந்த யாத்ருச்சிகாதி ஸூஹ்ருதங்களும் உள்பட இவனுக்கு உண்டாம் படி இறே
இவற்றுக்கும் யோக்யதை இல்லாதபடி கரண களேபர விதுரனாய் கிடந்த இவன் தன்னை –
சிருஷ்டி காலத்தில் கரணாதிகளை கொடுத்து அவன் உண்டாக்கிற்று -என்கை –
இத்தால் கடாஷ ஹேதுவாக சொன்ன யாத்ருச்சாதிகளும் அவனுடைய கிருஷி பலம் -என்கை –
ச -சப்தத்தாலே துல்ய அந்ய அஞ்ஞாத ஸூஹ்ருத பலங்களும் அடி அவன் கிருஷி -என்கிறது –
அன்றிக்கே –
வஹ்யமான நிருபண  விசேஷங்களை சமுச்சியிகிறதாகவுமாம் –
சிருஷ்டி தான் சேதன கர்ம அநு குணமாக வன்றோ என்னில் –
சிருஷ்டிப்பது கர்மத்தை கடாஷித்தே ஆகிலும் -யௌக பத்யம் அனுக்ரஹ கார்யம்-இறே —

இது இன்னும் ஒரு படி மேல் -ஜீவனால் உண்டாக வில்லையே -கால க்ரமத்தால் விளையும் படி விசித்திர சக்தி உக்தன் அநாதி காலமாக விரகிட்டு –
எப்பொழுதாவது அஞ்ஞான ஸூ ஹ்ருதம் ஏற்படும்படி -பண்ண விதிக்கும் சாஸ்திரமும் விதிக்காமல் தானும் அறியாமல் -ஈஸ்வரன் நினைவாலே தானே இவையும் –
ராவணனுக்கும் அடுத்த பிறவியில் அஞ்ஞாத ஸூஹ்ருதம் வரும் -ஷிபாமி நாக்கிலே குறியிட்டு பயப்படுத்துமா போலே அன்றோ /
கோபமும் அனுக்ரஹ கார்யம் தானே -சீறி அருளாதே என்று உண்டே -/தடுப்பை நீக்கினால் தானே கார்யகரம் ஆகும் -/ தடுக்காமை உபாயம் இல்லை -/
கிருஷி பலிக்காதது கண்டு கிருஷிகன் உடைய தப்பாக நினைக்கக் கூடாதே / அஞ்ஞாத ஸூ ஹ்ருதமும் -உம்மை தொகை-
ஞான ஸூ ஹ்ருதங்களும் இருக்கும் படி அன்றோ ஸ்ருஷ்டித்தது-வஹ்யமான நிருபண  விசேஷங்களை-மேலும் சொல்லப் போகிறதையும் சொல்லிற்றாகவுமாம் –

——————————————

சூரணை -388-

அது தன்னை நிரூபித்தால் -இவன் தனக்கு ஒன்றும்
செய்ய வேண்டாதபடியாய்  -இருக்கும் –

தந் நிரூபணத்தில் இவனுக்கு சம்பவிக்கும் அத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
அசித  விசேஷிதமாய் கிடக்கிற தசையில் -உஜ்ஜீவன உபயோகியான கரண களேபரங்களை பரம தயையாலே அவன் தந்த படியை -அநு சந்தித்தால் –
தத் அதீன சத்தாதிகனான இவன் தனக்கு ஸ்வ உஜ்ஜீவன அம்சத்தில் அவன் செய்தபடி கண்டு இருக்கை ஒழிய
தான் ஒரு ப்ரவருத்தி  பண்ண வேண்டாதபடியாய் இருக்கும் -என்கை –

இந்த சர்வ வித ரக்ஷகத்வ ஸ்வ பாவம் தன்னை -நிரூபித்தால் -தான் ஏற ரஷித்து -மேல் விழுந்து செய்கிறானே –
ஸ்ருஷ்டிக்கும் பொழுது யாதிருச்சிக்க ஸூ ஹ்ருதங்களுக்கு விரகு பார்த்து செய்கிறவன் அன்றோ –
சரீர பூதனான இவனுக்கு புத்தி பூர்வகமாகவும் இவனுக்கு ஏதும் செய்ய வேண்டாம் –
நிர்ஹேதுக –கரண களேபர விதரணம் -உபாயாந்தர நிஷ்டனுக்கும் இப்படியே -சாதாரணம் -அன்றோ–அவரே கொடுத்ததால் அவரே பார்த்து கொள்ளட்டும் –
பிரயத்தனம் செய்பவர்களுக்கும் இதே -நிர்ஹேதுக கடாக்ஷ பிரதத்வ ஹேதுத்வமான ஸூ யத்ன -நிவ்ருத்தி -வேண்டுமே – விஷய விபாகம் -அதனாலே –

—————————————–

சூரணை -389-

பழையதாக உழுவது -நடுவது -விளைவதாய்- போரும் ஷேத்ரத்திலே –
உதிரி முளைத்து -பல பர்யந்தமாம் போலே –
இவை தான் தன்னடையே விளையும் படியாயிற்று –

பக்தி உழவன் பழம் புனத்தை சிருஷ்டித்த கட்டளை –
ஈஸ்வர ஸ்ருஷ்டியால் இவனுக்கு விளையும் அங்கீகார பற்றாசைகள்-யாத்ருச்சிகதிகள் -மாத்ரமே அன்று -இன்னம் சில உண்டு என்று –
தர்சிப்பிக்கைகாக வாதல் -கீழ் சொன்ன இவைதான் உண்டாம் பிரகாரத்தை உபபாதிக்கைக்காக வாதல் -அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது –
புதியதாக தரிசு திருத்தினது அன்றிக்கே  பழையதாக உழுவது -நடுவது -விளைவதாய்க் கொண்டு –
செய்காலாய்ப்  போரும் ஷேத்ரத்திலே -கர்ஷகன் அதுக்கு என்று ஒரு க்ருஷியும் பண்ணாது இருக்க –
உதிரியானது முளைத்து விளைந்து தலைக் கட்டுமா போலே –
மேல் சொல்லப்  படுகிற நிரூபண விசேஷங்கள் ஆதல் – கீழ் சொன்ன யாத்ருச்சிகாதிகள்  ஆதல் –
இதுக்கு என்ன ஒரு கிருஷி செய்ய  வேண்டாதே -இச் சேதனர் பக்கல்
தன்னடையே விளையும் படி ஆயிற்று -பக்திக்கு கர்ஷகனான ஈஸ்வரன்
பிரவாஹ ரூபேண நடக்கிற சம்சாரம் ஆகிற பழம் புனத்தை சிருஷ்டித்து திருத்தும் -என்றபடி –

உதிரி போலே அஞ்ஞான ஸூ ஹ்ருதங்கள் –உண்டாக்க வல்ல சர்வ சக்தன் அன்றோ -அனுக்ரஹம் காடு மேடும் பாயும் -தாதாமி புத்தி யோகம் —
பழையதாக உழுவது -உதிரி விளையும் யோக்கியதையும் இல்லாமல் கூடாதே – நடுவது -சாவி போகாமல் விளைவது -விளைச்சல் பூமி –
அநாதி அவிச்சின்னம் -ஸூ க்ஷேத்ரம் -வியாபாரம் இல்லாமல் இருந்தால் ஜலம் ஒன்றே இருந்தால் -சர்வ அங்குரித்த சஹகாரி தண்ணீர் அன்றோ –
தன்னடையே முளை விட்டு பிரவாஹ ரூபேண -சம்சாரி சேதனன் -அநாதி பகவத் சங்கல்ப வைச்சித்ர சக்தி மாத்திரம் கொண்டே -தண்ணீர் போலே –
பற்றாசாகக் கொண்டு -மற்று ஒரு ஹேது வேண்டாத படி -பலம்-பகவத் அங்கீ காரம் வரை -பழம் புனம்- அநாதி கால சம்சாரம் –
நியமமாய் வரும் கட்டளை -ஆக யாதிருச்சாதிகளும் அவன் சங்கல்பம் அடியாகி என்றதாயிற்று

——————————————-

சூரணை -390-

அவை தான் எவை என்றால் –

இவை என்று கீழ் அருளிச் செய்தவற்றை விசதீகரிக்கைக்காக
தத் விஷய பிரசனத்தை அனுவதிக்கிறார் –

———————————————–

சூரணை -391-

பூர்வ க்ருத புண்ய அபுண்ய பலங்களை- சிரகாலம் பஜித்து-உத்தர காலத்திலே –
வாசனை கொண்டு ப்ரவர்த்திக்கும் அத்தனை -என்னும்படி -கை ஒழிந்த தசையிலே –
நாம் யார் -நாம் நின்ற நிலை யேது-நமக்கு இனிமேல் போக்கடி யேது –
என்று பிறப்பன சில நிரூபண விசேஷங்கள் உண்டு -அவை ஆதல் -முன்பு சொன்னவை ஆதல் –

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

அதாவது –
முன்பு செய்யப்பட்ட-புண்ய பாப ரூப கர்ம த்வ்யத்தினுடையவும் பலங்களை ஸ்வர்க்க நரகாதிகளிலே நெடும் காலம் அனுபவித்து –
மேலுள்ள காலத்தில் – பூர்வ கர்ம வாசனை கொண்டு -புண்ய பாப ரூப கர்மங்களில் ப்ரவர்த்திக்கும் அத்தனை என்று -சொல்லத்தக்கதாம் படி –
அச்ச கர்மாவாய் (அச்ச கர்மாவாய் -ஸூஷ்மம் -ஸ் தூல கர்மம் -பலம் அனுபவிக்கும் தசையில் ) கர்ம பல அனுபவத்தில் கை ஒழிந்து நின்ற தசையிலே –
காண்கிற தேகமோ -தேகாதி இதிரிக்தரோ -ஸ்வதந்த்ரரோ -நாம் யார் என்றும் –
நசிக்கும்படி நின்றோமோ -பிழைக்கும் படி நின்றோமோ -நாம் நின்ற நிலை யேது என்றும் –
இப்படி நின்ற நமக்கு இனிமேல் ஈடேறுகைக்கு ஈடான போக்கடி யேது என்று -தன்னடையே உண்டாவான சில நிரூபண விசேஷங்கள் உண்டு –
அந் நிரூபண விசேஷங்கள் ஆதால்-பூர்வ உக்தங்களான யாத்ருச்சிகாதி ஸூ ஹ்ருதங்கள் ஆதல் -என்கை –

சேதனன் கர்ம பரம்பரைகளை பண்ணுவது -அனுபவிப்பது —ஸூ க துக்கங்களை அனுபவித்து -தத் உபய வாசனை கொண்டு பிரவர்த்திக்கிறான் –
பூர்வ க்ருத கர்மா பலன் அனுபவித்தது -மத்யம தசையில் -மற்று ஓன்று பற்றுவது ஒழிந்த க்ஷணத்தில் -குடம் இட்டு நீக்க நீங்கும் குள பாசி போலே –
மேல் எழ தானே நீங்கப் படும்-அப்படி அந்த க்ஷண கால -கர்ம பல அனுபவம் மேல் எழ நீங்கப் பெற்ற போது -யார் தான் -கெடும் படி நின்றோமோ –
ஈடேறி நின்றோமோ -நினைத்தது செய்யும் ஸ்வா தந்த்ரர் இல்லையே- மேல் உள்ள காலம் ஈடேற போக்கிடம் இன்னது என்று -கண்டு பிடிக்க வில்லை –
இல்லையே என்று இழவு மேலிட கவலை படுவான் – -அச்ச ஸூஷ்மமான காதா சித்கமாக பிறக்கும் ஞான சம்சய விசேஷங்கள்
-ஸ்வரூப ஸ்திதி பலம் பற்றி வரும் அறிவும் சங்கைகளும் வருமே -அநாதி ஸ்ருஷ்ட்டி கால அவன் நினைவால் இவை வருமே –

——————————————–

சூரணை -392-

யதாஹி மோஷகா பாந்தே –என்று துடங்கி இதனுடைய க்ரமத்தை
பகவத் சாஸ்த்ரத்திலே சொல்லிற்று —

இந் நிர்ஹேதுக விஷயீகாரம் சாஸ்த்ரத்தில் எங்கே சொல்லிற்று என்ன –
அருளிச் செய்கிறார் –

பகவத் சாஸ்திரம் நூற்று எட்டு சம்ஹிதையாய் இறே இருப்பது –
அதிலே ஓன்று இறே யஹிர்புத்த்ன சம்ஹிதை –
பாஞ்சராத்ர ச்யக்ருத்ஸ் நஸய வக்தா நாராயண ஸ்வயம் -என்கிறபடியே –
சகலத்துக்கும் ஆதி வக்தா பகவானாய் இருக்கச் செய்தே -தத் தத் சம்ஹிதைகள்
தோறும் -அவாந்தர வக்தாக்களும் உண்டு இறே -அதில் இந்த சம்ஹிதைக்கு
அஹிர் புத்னய சம்ஞகனான ருத்ரன் வக்தாவாய் இருக்கையாலே -இத்தை அஹிர் புத்த்ன்ய  சம்ஹிதை என்கிறது –
இந்த சம்ஹிதையிலே -நுண் உணர்வில் நீலார் கண்டத்து அம்மானும் -என்கிறபடி -சத்வம் தலை எடுத்த போது-சூஷ்ம தர்சியாய் இருக்கும் ருத்ரனை –
தேவர் ரிஷியாய் ப்ரஹ்ம வித்தமனான ஸ்ரீ நாரத பகவான் சென்று அநு வர்த்தித்து
ஸ்வ ஸம்சயங்களை எல்லாம் கேட்க -அவன் நிர்ணயித்து கொண்டு வாரா நிற்க -பதினாலாம் அத்யாயத்தில் -இவன் பண்ணின பிரசனத்துக்கு உத்தரமாக
சம்சாரமோ –மேல்படி ஹேதுக்களாக நிக்ரஹ சக்தி -அனுக்ரஹ சக்தி என்று –
சர்வேஸ்வரனுக்கு இரண்டு சக்தி உண்டு என்று பிரதிக்ஜ்ஜை பண்ணி -அதில் –
திரோதா நகரீச கதி ஸ்ஸா நிக்ரஹா சமாஹ்வயா புமாம் சாம் ஜீவ சம்ஜ்ஞம் ஸா திரோபாவயதி  ஸ்வயம் -என்று துடங்கி –
நிஹ்ரகாத்மிகையான சக்தியிலே -திரோஹித ஸ்வ ஸ்வரூபாதிகனாய் ஜீவாத்மா சம்சரிக்கும் படியை விஸ்தரேண பிரதிபாதித்து –
அநந்தரம்-
அநுக்ரஹாத்மிகையான சக்தியாலே சம்சாரானாம் முக்தனாம் படியை பிரதிபாதிப்பதாக –
ஏவம் சம் சுருதி சக்ரச்தே ப்ராம்யமானே ஸ்வ கர்மபி ஜீவே துக்காகுலே விஷ்ணோ க்ருபாகாப்யு பஜாயதே
சமீ ஷீதச்து தாசோயம் கருணா வர்ஷா ரூப்யா கர்ம சாம்யம் பஜத்யேவஜீவோ விஷ்ணு சமீஷயா
சக்தி பாவஸ் ஸ்வை ஜீவை முத்தாரயதி சம்ஸ்ருதே கரமாநிஸ் ஸ்மே தத்ர தூஷ்ணீம் ப்பாவ முபாகதே-என்று
சம்சார சக்ரச்தனாய் -துக்காகுலானன  ஜீவன் விஷயமாக சர்வேஸ்வரனுக்கு ஒரு கிருபை ஜனிக்கும்படியையும் -அந்த கிருபைக்கு அடியாக
உண்டான அவன் கடாஷத்துக்கு விஷய பூதனனாய் கொண்டு இவன் கர்ம சாம்யத்தை -பஜிக்கும் என்னும் அத்தையும் -அந்த அநுக்ரஹாத்மிகையாந சக்தியினுடைய
சத்பாவம் இவனை சம்சாரத்தின் நின்றும் உத்தரிப்பிக்கும் என்னும் இடத்தையும் –
கீழ் கர்ம சாம்யம் என்றதின் கருத்தையும் சங்க்ரஹேண சொல்லி –
யதா ஹிமோஷ காபந்த்தே பரிபர்ஹமுபெயுஷி நிவ்ருத்த மோஷ னோத்த்யோகா ஸ்தாதாசந்த உபாசதே
அநுக்ரஹாத்மிகாயாஸ்து  சக்தே பாத்ஷா னே ததா உதாசாதே சமீபூய கர்மநீதேசு பாசுபே
தத்பாதாநன்தரம் ஜந்துர் யுகதோமோஷா சமீஷயா ப்ரவர்த்தமான வைராக்யோ விசேஷ அபிநிவேசவான்
ஆகமானநு சஞ்சித்ய குருநபயபசர்வயச லப்த்த சத்த பிரகாரச்த்தை ப்ரபுத்தோ போத பாலன-இத்யாதி அத்யாத சேஷத்தாலே
வழி போகிறவன் சம்பாரத்தை வைத்து மறைய நின்ற அளவிலே -அவனுடைய சம்பாரத்தை அபஹரிப்பதாக உத்யோக்கிகிற தஸ்கரர்-அந்த சம்பாரத்தை அவன் வந்து
கை பற்றின அளவில் -யாதொருபடி -நிவ்ருத்த மோஷண உத்யோகராக நின்று கொண்டு எப்போதும் உதாசீனராய் இருந்து விடுவர்கள் -அப்படியே பகவத் அனுக்ரஹ சக்தி
இவன் பக்கல் வந்த ஷணத்தில் இவ் ஆத்மாவை தந் வழியே இழுப்பதாக நின்ற புண்ய பாபங்கள் இரண்டும் இவனை வந்து மேலிடாமல் உதாசீனத்து இருந்து விடும் –
அந்த அநுக்ரஹாத்மிகையான சக்தி தந் பக்கல் வந்த அநந்தரம் -இச் சேதனன் -மோஷ சமீஷா யுக்தனாய் பிரவ்ருத்தமான வைராக்யனாய் விவேக அபிநிவேசயாய்
சாஸ்திர பிரவணனாய் சதாச்சார்யா சம்ஸ்ராயணம் பண்ணி லப்த்த சத்தாகனாய் லப்த்த ஞானனாய் -அந்த ஞானத்தை ரஷித்து கொண்டு -சாராக் க்ராஹியாய்
சமுசித உபாய பரிக்ரகத்தாலே சம்சார உத்தீரணாய் பரம பதத்தை பிராபிக்கும் என்று சொன்னான் -இறே
ஆகையாலே -யதாஹி மோஷ காபந்த்தே -என்று துடங்கி -இந் நிர்ஹேதுக விஷயீகாரத்தின் உடைய க்ரமத்தை ஆப்த பிரமாணமான
பகவத் சாஸ்த்ரத்திலே சொல்லிற்று -என்கிறார் –

யதாஹி மோஷகா பாந்தே —திருடர்கள் நிலை போலே என்றவாறு –பாப புண்யங்கள் கை வைக்க வந்தது போலே விலகும் அவன் கடாக்ஷத்தாலே -என்றவாறு
லீலா ரசம் இல்லை போக ரசத்துக்கு -முக்கிய அமுக்கிய நிர்ஹேதுக அங்கீ கார விசேஷங்கள் –வேதாந்த யோஜனையிலும் தாத்பர்ய யோஜனையிலும்
அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் இரண்டு அவஸ்தைகள் உண்டே /சாஸ்த்ர தாத்பர்ய வசன சித்தம் அன்றோ இவை இரண்டும் -/
வக்தா நாராயண ஸ்வயம் -தானே அருளிச் செய்த பாஞ்சராத்ரம் -விவரித்து அருளிச் செய்தார் –

—————————————-

சூரணை -393-

வெறிதே அருள் செய்வர் -என்று இவ் அர்த்தத்தை -ஸ்பஷ்டமாக
அருளிச் செய்தார் -இறே –

இப்படி சாஸ்திரம் சொன்ன அளவு அன்றிக்கே -நிரஹேதுக விஷயீகாரத்துக்கு நேரே பாத்திர பூதராய் –
ஆப்த தம அக்ரேசரான ஆழ்வார் இவ் அர்த்தத்தை  தெளிய அருளிச் செய்தார் என்கிறார் -மேல் –

வெறிதே அருள் செய்வர் -என்றது -நிர்ஹேதுகமாக கிருபை பண்ணுவார் -என்றபடி –
இவ் அர்த்தத்தை -ஸ்பஷ்டமாக அருளி செய்தார்-என்றது –
இந் நிர்ஹேதுக விஷயீகாரமாகிற ரகஸ்ய அர்த்தத்தை -சம்சய விபர்யயம் அற சகலரும் அறியும் படி பிரகாசமாக அருளி செய்தார் -என்கை –

வெறிதே அருள் செய்வர் -8–7–8—சாஷாத் நிர்ஹேதுகத்வத்தை அனுபவித்து தாமே அருளிச் செய்தார் -ருத்ரன் விஷயீ காரத்துக்கு ஆள் இல்லையே /
தானே சொன்னார் என்றாலும் அருளினவன் அவன் -அருளப்பட்ட இவர் ஸ்ரீ ஸூ க்திகள்-பிரமாணம் அன்றோ
வெறுமனே -சாஷாத் -நிர்ஹேதுகத்வம் -அஞ்ஞாத ஸூ ஹ்ருதையும் எதிர்பார்க்காமல் –
யாதிருச்சிக்க ஸூ ஹ்ருதம் -அஹேதுத்வம் -சாஸ்த்ர உபதேச வசன சித்தம் -இது தாத்பர்யம் அறிந்தவர் வசன சித்தம்

—————————————–

சூரணை -394-

செய்வார்கட்கு -என்று அருளுக்கு ஹேது -ஸூ ஹ்ருதம் என்னா நின்றதே என்னில் –
அப்போது -வெறிதே -என்கிற இடமும் சேராது –

அந்த திவ்ய ஸூக்திக்கு அநந்தரம் ஓர் உக்தியில் அபிப்ராயம் அறியாதார் சங்கையை அனுவதித்து பரிஹரிக்கிறார் –

அதாவது –
அருள் செய்வர் -என்ற அநந்தரம் -ஆர்க்கு தான் என்னும் அபேஷையில்-செய்வார்கட்கு -என்று
அருளுகுகைக்கு உறுப்பாக திரு உள்ளம் உகக்கும்படி சிலவற்றை செய்யும் அவர்களுக்கு என்கையாலே –
அவன் கிருபை பண்ணுகைக்கு ஹேது -சேதன ஸூஹ்ருதம் -என்னா நின்றதே -என்னில் –
இப்படி சொல்லும் போது -நிர்ஹேதுக வாசகமான -வெறிதே -என்கிற இடம் சங்கதம் ஆகாதே -என்கை –
ஆகையால்-செய்வார்கட்கு -என்றது -தான் செய்ய நினைத்தவர்களுக்கு -என்றபடி –

செய்வார்கட்கு -என்று அருளுக்கு ஹேது எது – -ஸூ ஹ்ருதம்
என்றால் வெறிதே சேராதே -கிருபை பண்ணும் படி யத்னம் பண்ணுபவர்களுக்கு
தெரிந்து செய்த நன்மை -இருந்தால் அருளுவார் -என்ற சங்கைக்கு -ஸூ ஹ்ருதம் அடியாக அருள் செய்வார் என்னில் –
வெறிதே- எதிர்பார்க்காமல் சேராதே -ஸூ வசன விரோதம் வரும் -தான் செய்ய நினைத்தவர்களுக்கு என்பதே பொருளாக வேணும் –

————————————————-

சூரணை -395-

பகவத் ஆபிமுக்க்யம் –ஸூஹ்ருதத்தால் அன்றிக்கே -பகவத் கிருபையாலே பிறக்கிறது –
அத்வேஷம் ஸூஹ்ருதத்தாலே என்னில் -இந்த பல விசேஷத்துக்கு அத்தை சாதனம் ஆக்க ஒண்ணாது —

ஆபிமுக்க்யத்துக்கு பகவத் கிருபை வேணும் –
அத்வேஷத்துக்கு ஸூஹ்ருதம் காரணம் என்று நினைத்து சொல்லுவார் வசனத்தை
அநுவதித்து கொண்டு பரிஹரிக்கிறார் –

அதாவது –
அநாதி காலம் விமுகனாய் போந்த -இச் சேதனனுக்கு பகவத் விஷயத்தில் பிறக்கிற
ஆபிமுக்க்யம் இவனுடைய ஸூஹ்ருத நிபந்தனம் ஆக அன்றிக்கே -கேவல பகவத் கிருபையாலே பிறக்கிறது –
தத் பூர்வ பாவியான அத்வேஷம் ஸூஹ்ருதம் அடியாக பிறக்கிறது என்று சொல்லப் பார்க்கில் -அகில ஆத்ம குணாதியாய் ஆத்ம உஜ்ஜீவன
ஆங்குரமாய் இருந்துள்ள பகவத அத்வேஷமாகிற இப் பல விசேஷத்துக்கு -அதி ஷூத்ரமான யாத்ருச்சிகாதி
ஸூஹ்ருதத்தை காரணம் என்று சொல்ல ஒண்ணாது -என்கை –
ஆகையால்-அத்வேஷத்துக்கும் பகவத் கிருபையே காரணம் என்று சொல்ல வேணும் என்று கருத்து –

இரண்டுமே கிருபையால் தான் ஏற்பட வேண்டும் -இந்த பல விசேஷத்துக்கு ஸூஹ்ருதத்தை சாதனம் ஆக்க ஒண்ணாது —
பகவத் வை முக்கிய நிவ்ருத்தி பலமான கிருபா -யாதிருச்சிக்க ஸூ ஹ்ருதத்தால் அன்றிக்கே -விஷ்ணோர் கடாக்ஷம் -தானே
ஈஸ்வர ஸுஹார்த்தம் -அஞ்ஞாத யாதிருச்சா ஸூ ஹ்ருதம் -விஷ்ணு கடாக்ஷம் -அத்வேஷம் -ஆபி முக்கியம் -ஆத்ம சமர்ப்பணம் -இப்படி தானே படிக்கட்டுக்கள்
பிரசாத பலமாக தானே -முதலிலே ஈஸ்வரஸ்ய ஸூ ஹார்த்தம்-/பூர்வ பாவியாய் இருப்பதாலே சொல்லக் கூடாதே
உஜ்ஜீவன மூலம்- அத்வேஷம்- மகா பல விசேஷம் -ஆகுமே -துச்சமாம் இந்த யாதிருச்சா ஸூஹ்ருதம் சொல்லக் கூடாதே -ரத்னத்துக்கு பலகரை சாதனமாகாதே —
இதுக்கும் மேலே இவை பரம்பரையா காரணங்கள் ஆக மாட்டாவோ என்னில் -ஸூ ர்ய உதய பிரகாச காரணமான உசக் காலம் –
பின் மாலை பொழுது தாமரையை மலர வைக்கும் என்று சொல்லுமா போலே -விஷ்ணு பிரசாத உதய காரணம் -யத்தருஷ்ஷா ஸூ ஹ்ருதம் –
மேல் உள்ளவற்றுக்கு காரணம் ஆக மாட்டாதே கல்பனா கௌரவ தோஷம் வரும் -சரமமான பகவத் ஸூ ஹார்த்தத்துக்கே சொல்லலாம் பரம்பரையா காரணத்வம்-

——————————————-

சூரணை -396-

சாஸ்திரமும் விதியாதே -நாமும் அறியாதே -இருக்கிற இத்தை -ஸூஹ்ருதம் என்று நாம் பேர் இடுகிறபடி என் -என்னில் –
நாம் அன்று -ஈஸ்வரன் என்று -கேட்டு இருக்கையாய் இருக்கும் –

சாஸ்திர அவிஹிதமாய் -சேதன அவிதிதமுமான இந்த யாத்ருச்சிகாதிக்கு
ஸூஹ்ருதம் என்று பேர் இட்டார் என்னும் இடத்தை சங்கா பரிஹர ரூபேண
அருளிச் செய்கிறார் –

அதாவது –
இதம் குர்யாத் -என்று சாஸ்திர விகிதமுமாய் -கர்த்தரு பூதரான சேதனராலே புத்தி பூர்வேண அனுஷ்டிதமுமான ஒன்றை இறே-
ஸூஹ்ருதம் எனபது -அப்படியே இத்தை செய்வான் என்று சாஸ்திரமும் விதியாதே -இன்ன ஸூஹ்ருதம் பண்ணினோம் என்று
தத் கர்த்தாக்களான நாமும் அறியாதே இருக்கிற- இந்த யாத்ருச்சிகாதியை ஸூஹ்ருதம் என்று -நாம் பேரிட்டபடி எங்கனே என்னில் –
இதுக்கு ஸூஹ்ருதம் என்று நாம் பேரிடுகிறோம் அன்று –
சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக சர்வஞ்ஞனான ஈச்வரன் -ஸூஹ்ருதம் என்று பேரிட்டு வைத்தான் என்று தத்வ தர்சிகளான ஆச்சார்யர்கள்
அருளிச் செய்ய கேட்டு இருக்கையாய் இருக்கும் -என்கை-

ஆக –
கீழே வெறிதே அருள் செய்வர் -என்று மயர்வற மதி நலம் அருளப் பெற்றவர்களில் தலைவரான நம் ஆழ்வார்
நிர்ஹேதுக விஷயீகாராம் ஆகிற இவ் அர்த்தத்தை விசதமாக அருளிச் செய்த படியை தர்சிப்பித்து –
அதன் மேல் வந்த சங்க பரிஹாரம் பண்ணி அருளினார் ஆயிற்று –

——————————–

சூரணை-397-

இவ் அர்த்த விஷயமாக -ஆழ்வார் பாசுரங்களில் -பரஸ்பர விருத்தம் போல் தோற்றும்
அவற்றுள் சொல்லுகிற பரிகாரமும் -மற்றும் உண்டான வக்தவ்யங்களும் –
விஸ்தர பயத்தாலே சொல்லுகிறோம் இல்லோம் —

இனி இவ் அர்த்த விஷயமாக ஆழ்வார்கள் பாசுரங்களில் அந்யோந்ய விருத்தம் போல் தோற்றும் அவற்றுக்கு பரிகாரமும் –
இவ் அர்த்த ஸ்தாபகமாக மற்றும் சொல்ல  வேண்டும் பிரமாணங்களும் தர்க்கங்களும் இவ் இடத்திலே
தாம் அருளிச் செய்யாமைக்கு ஹேது இன்னது என்கிறார் –

அதாவது –
நிர்ஹேதுக விஷயீகாரம் ஆகிற இவ் அர்த்த விஷயமாக -இவ் விஷயீ காரத்துக்கு இலக்காய்-
மயர்வற மதி நலம் அருளப் பெற்ற -ஆழ்வார்களுடைய-பகவத் அங்கீகார பிரகாசங்களான-பாசுரங்களில் –
வெறிதே அருள் செய்வர் –
எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே -என்றும் –
திரு மால்  இரும் சோலை மலை என்றேன் என்ன –
மாதவன் என்றதே கொண்டு -என்றும் –
நல்லதோர் அறம் செய்தும் இலேன் -என்றும் –
நோற்றேன் பல் பிறவி -என்றும் –
யான் என் தவத்தால் காண்மின் கொல் இன்று -என்றும் –
யானே தவம் செய்தேன் -என்றும் -இத்யாதிகளாலே
தவத் அங்கீகார ஹேதுக்கள் ஒன்றும் தங்கள் பக்கல் இல்லை என்பதும் -உண்டானாப் போலே சொல்லுவது ஆகையாலே –
கருத்து அறியாதவர்களுக்கு பரஸ்பர விருத்தம் போலே பிரதி பாசிக்கும் -என்கை –
அவற்றில் சொல்லும் பரிகாரங்களான-
மாதவன் -மலை -என்கிறவை வியாவருத்தி உக்தி மாத்ரம் ஆகையால் அவற்றை
ஆரோபித்து வந்து மேல் விழுகிற பகவத் கிருபையே அங்கீகார ஹேது -அவை ஹேது அன்று என்ற இடம் சித்தம் –
நோற்றேன் பல் பிறவி -என்றது இவனுக்கு பல ஜன்மங்கள் உண்டாகும் படியாக
ஆயிற்று நான் சாதனா அனுஷ்டானம் பண்ணிற்று என்று -ஸ்வ நிகர்ஷம் சொன்ன இத்தனை –
அநேக ஜன்மமும் அவனைப் பெருகைக்கு சாதனா அனுஷ்டானம் பண்ணினேன் என்ற படி அன்று –
யானே தவம் செய்தேன் -என்றது -இரும் தமிழ் நன்மாலை இணை அடிக்கே சொல்லப் பெற்ற
ப்ரீதி அதிசயத்தாலே -என்னைப் போலே பாக்கியம் பண்ணினார் இல்லை என்று
இப் பேறு பெற்ற தம்மை ஸ்லாகித்த மாத்ரம் என்று இப்புடைகளிலே –
நிர்ஹேதுக வசன விரோதம் -வராதபடி ச ஹேதுகம் போல் தோற்றும் அவற்றுக்கு பரிகாரங்கள் –
மற்றும் உண்டான வக்தவ்யங்கள் ஆவன –

மற்றும் இந் நிர்ஹேதுக ஸ்தாபன அர்த்தமாக சொல்ல வேண்டும் அவையான –
ஏவம் சம் ஸ்ருதி சக்ரச்தே பப்ராம்யமானே ஸ்வ கர்மபி
ஜீவே துக்காகுலே விஷ்ணோ க்ருபா காப்யுபஜாயதே –
நிர்ஹேதுக கடாஷேன மதீயேன மகாமதே
ஆசார்ய விஷயீகாராத் ப்ராப்னுவந்தி பராம்கதிம்
நாசவ் புருஷகாரேண நசாப் யன்யேன ஹேதுநா
கேவலம் ஸ்வ இச்சயை வாஹம் ப்ரேஷே கஞ்சித் கதாசன -இத்யாதி பிரமாணங்களும்
ஏதத் அனுஹ்ரஹ தர்க்கங்களும் விஸ்தார பயத்தால் சொல்லுகிறோம் அல்லோம் -என்றது -இவை
எல்லாம் சொல்லப் பார்க்கும் அளவில் க்ரந்த பரப்பு வரும் என்று அஞ்சி சொல்லுகிறோம் இல்லை -என்றபடி –

ஆழ்ந்து தெரிந்து கொள்ள முடியாதே -நிர்ஹேதுக விரோதி பரிகாரங்களை —
ச ஹேதுக- நிர்ஹேதுகம் — அ ஹேதுக நிர்ஹேதுகம் –முக்கிய நிர்ஹேதுக விஷயம்
ஏக கண்டர்-அங்கீ கரித்த பிரகாரம்
எண் தான் இன்றியே எண்ணிலும் வரும் -இரண்டும் உண்டே /
வெறிதே அருள் செய்வார் செய்வார் கடுகு
நோற்ற நோன்பிலேன் நோற்றேன் பல் பிறவி
நின் அருளே புரிந்து இருந்தேன் இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன்
உன் அருளே பார்ப்பேன் -வணங்கினால் கிடைக்கும்
போதரே–ஆதாரம் பெறுக வைத்த அழகன் -உன்னை அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி
திருக் கமல பாதம் வந்து -சென்றதாம் என் சிந்தையே
யான் எத்தவத்தால் காண்பேன் -யான் எத்தவம் செய்தேன்
உபய பிரகாரங்களை அருளிச் செய்வதாக மந்த மதிகளுக்கு தோற்றும் –
எண் தான் இன்றியே எண்ணிலும் வரும் –
எண்ணிலும் வருகைக்கு பரிகணநா பிரபாவம் -பகவத் பிரபாவம் சொல்ல வந்தது -என்றவாறு -26-சொல்லவும் வருவானே-
வெறிதே அருள் செய்வார் செய்வார் கட்கு –
நியமித்த சப்தார்த்தம் -செய்ய நினைப்பார்க்கு என்றவாறு
நோற்ற நோன்பிலேன் நோற்றேன் பல் பிறவி
நோற்றேன் க்கு –தத் தரிசன அர்த்தம் இழந்து பல பிறவிகளில் அழுகை -பெற முயற்சி இல்லையே -தெளிவாக நோற்ற நோன்பு இலேன் இத்யாதி இல்லை என்றாரே
நின் அருளே புரிந்து இருந்தேன் இன்று வந்து இங்கு உன்னைக் கண்டு கொண்டேன்
இன்று வந்துக்கு–தத் தரிசன ஜெனித விஸ்லலேஷ அஸஹிஷ்ணுத்வம் – -பிரிந்து இருக்க முடியாமல் ஓடி வந்தேன்
உன் அருளே பார்ப்பேன் -நாம் வேண்டி நிற்பன்
தத் வை லக்ஷண்ய பிரதத்வம் -வேண்டுவதே பொருந்தும் -வேண்டியது காரணம் இல்லை –
அடி இணை வணங்கினேன்
பிரணதி பெருமை -நமஸ்காரம் ஏற்றம் என்பதால் –
போதரே–ஆதாரம் பெறுக வைத்த அழகன் -உன்னை அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி
க்ரூர விஷய ஸ்மரண ஆக்ரோஷம் –நாய் துரத்த ஓடி முதலில் வந்தது போலே
திருக் கமல பாதம் வந்து -சென்றதாம் என் சிந்தையே
சென்றதாம் -விக்ரஹம் அனுபவிக்க ஆசை அபி நிவேசம்
யான் எத்தவத்தால் காண்பேன் கொல் -யான் எத்தவம் செய்தேன்
தவம் செயதேன்- பிரசன்ன பாஷா ஸ்துதி லாபம் -பாடும் பாக்யம் ஆனந்தம் வெளிப்பட
நிர்ஹேதுக அங்கீ காரம் என்றது -ஹேதுவின் அபாவம்- கிருபை தவிர வேறே ஹேது இல்லை என்று சொல்ல வந்தது –
அத்யந்த அ பாவத்தை காட்ட வில்லை -கடம் இல்லை -கட அபாவம் இல்லை -அத்யந்த அ பாவத்தை காட்டாதே
அங்கீ காரம் ஹேது கிருபையுடன் ஓக்க அநாதி சம்சார பந்த விநாசகமாக கூடாதோ என்னில் –ஜல சக காரி தோன்ற விதை முளைக்கும்
அதே போலே லீலா ரஸ போக ரஸ இச்சை சககாரி பெற்றால் கிருபை -சம்சார நிவர்த்தகம் காலாந்தரத்தில் வரலாமே
கிருபை சம்சாரம் -தேஜஸ் இருட்டு ஒரே இடத்தில் கூடாதே என்னில் -அது போலே இல்லை -பாக்ய பாதகங்கள் சம்பந்தம் இல்லையே இவற்றுக்கு
பிரதிபந்தகம் அற்ற சஹகாரம் பெற்ற பின்பு –கிருபை வந்ததும் சம்சாரம் அனைவருக்கும் போகாதே -யாரோ ஒருவனுக்கு தானே -த்ருஷ்டாந்தம் பொருந்தாது
தண்ணீர் சம்பந்தம் எந்த விதைக்கு உண்டோ அது தானே முளை விடும் -அது ஏற்பட்டவனுக்கு இது உண்டாகும் என்றவாறு
சம்சாரம் ஸ்வரூபமே நாசமாகாதே -பகவத் கிருபா அங்கீ காரம் -மாத்திரமே – யாதிருசிக்காதி ஹேது போலே தோற்றும்

வெறிதே அருள் செய்வர் –சாஷாத் நிர்ஹேதுகம்
எந்நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே -செய்ததை தேடுகிறாரோ –
திரு மால்  இரும் சோலை மலை என்றேன் என்ன –செய்த ஒன்றை சொல்கிறாரோ
மாதவன் என்றதே கொண்டு -என்று-ச ஹேதுகமாகுமோ -சொல்லாதவனை விட வேறு பட்டது என்று காட்டவே –
வியக்தி அந்தர –மலையந்தர-மாதவன் அந்தர –வேறே வியக்தி கள் இடம் மாறுபட்டது -ஓன்று பத்தாகி -ஊரை சொல்லி பேரை சொல்லி இவற்றில் இருந்து
நல்லதோர் அறம் செய்தும் இலேன் -என்று-ஒன்றும் செய்ய வில்லை
நோற்றேன் பல் பிறவி -செய்தவற்றை சொல்கிறாரோ –பல ஜென்மங்கள் -ஸூ நிகர்ஷம் -நோற்றுப்பெற வில்லை –உபாயாந்தரங்களை செய்து இழந்தேன் –
பல பிறவிகளில் -தாழ்ச்சியை சொல்லி -இன்று பெற்றேன் -/ அவனை இத்தனை தடவை ஜன்மம் பல பல செய்து – என்னைக் கொள்ளுமாறு செய்தேன் –
யான் என் தவத்தால் காண்மின் கொல் இன்று -ஒன்றும் இல்லையே
யானே தவம் செய்தேன் – செய்தவற்றை சொல்கிறாரோ -ப்ரீதி அதிசயத்தாலே -இப் பேறு பெற்ற தம்மை ஸ்லாகித்த மாத்ரம்
பெற்ற பேற்றை தவம் என்கிறார் /
நான் வைகுந்தம் -மஹா தபசிகளுக்கு கொடுக்கும் — உமக்கு அருளுகிறேன் -ஜடாயுவுக்கு பெருமாள் –கிருபா வைபவம் உமக்கு அவர்கள் தவத்தால் பெற்றதை அருளுகிறேன்
காப்யுபஜாயதே –யார் இடத்திலோ எப்பொழுதோ வரும் -ஸ்வாதந்திரம் ஜீவனம் -/
கேவலம் ஸ்வ இச்சயை வாஹம்-இச்சையாலேயே -மட்டும் -இரண்டு ஏவகாரங்கள் ஸ்திரப்படுத்த /கஞ்சித் கதாசன – யாரையோ எப்பொழுதோ கடாஷிக்கிறேன் -என்றானே /
கல்யாண குணம் -ஒன்றை எதிர்பார்க்கக் கூடாதே / குணங்களும் திரு மேனியும் கல்யாணம் -/நாசவ் புருஷகாரேண -தானே அருளுகிறானே /
எப்போவும் எல்லாருக்கும் -பிராட்டி அல்லாது கார்யம் செய்யான் என்பதும் உண்மை
யாருக்கோ எப்போவோ தானே அருளுவான் இவள் புருஷகாரமும் இல்லாமலும் -இரண்டும் உண்டே -நிராங்குச ஸ் வா தந்த்ரத்துக்கு விஷயமும் வேண்டுமே
யாரோ ஒரு சிலர் இடத்தில் தான் இப்படி அருளுகிறார் -கிருபாதி குணத்துக்கும் நிர்ஹேதுகத்வத்துக்கும் கொத்தை வர கூடாதே /
கொசித் ரஷனே-உபாதை தர்சனம் -ஸ் வா தந்திரமும் -பிராந்தி ஞானத்தால் தான் தோன்றும் உபாய விதி வையர்த்தம் வராதே /

————————————

சூரணை -398-

ஆகையால் இவன் விமுகனான தசையிலும் கூட உஜ்ஜீவிகைக்கு கிருஷி பண்ணின –
ஈஸ்வரனை அனுசந்தித்தால் -எப்போதும் நிர்பயனாயே இருக்கும் இத்தனை –

ஆக
கீழ் -பகவத் குண அனுசந்தானம் அபய ஹேது -என்ன பிரதிக்ஜைக்கு உபபாதமாக -த்ரிபாத் விபூதியிலே -என்று துடங்கி -இவ்வளவும் –
இவ் ஆத்மா உஜ்ஜீவன அர்த்தமாக -விமுக தசையே பிடித்து கிருஷி பண்ணிப் போரும்படியை விஸ்தரேண அருளிச் செய்தார் –
அது தன்னை -நிகமிக்கிறார் –

அதாவது –
ஈஸ்வரன் இவ் ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு கிருஷி பண்ணும் கட்டளை இது ஆகையால் -இப்படி இச் சேதனன் தன் பக்கல் விமுகனான
அவஸ்தையிலும் உட்பட இவன் உஜ்ஜீவிகைக்கு கிருஷி பண்ணிப் போந்த குணாதிகனான அவனை அனுசந்தித்தால் –
ஏவம் பூதனான அவன் இவ் அவஸ்த்த ஆபன்னராக்கின நம்மை கர்ம அநு குணமாக சம்சரிக்க விடான் என்று –
தத் குண விச்வாசத்தாலே சர்வ காலமும் நிர்பயனனாயே இருக்கும் இத்தனை -பய பிரசங்கம் இல்லை -என்றபடி –

ஆய் ஸ்வாமி நான்கு சூரணைகளுக்கும் சேர்ந்தே வியாக்யானம் / கண் முன்னே வியாப்தி -எதிர் சூழல் -/ ஸ்ருஷ்ட்டி அவதாரம் எல்லாம் அடியேனுக்காக –
ஞானாதிகர் அனுசந்தானம்–அதே போலே வியாப்தியும் தமக்காக என்று நினைப்பார்கள் -வியாப்தியும் – /
அஞ்ஞர் தனக்கே கொடுத்தாலும் அவருக்கும் கொடுத்து தானே எனக்கு கொடுத்தான் என்று நினைப்பான் /
நிர்ஹேதுகமாக அங்கீ கரிக்கும் பாந்தம் -உண்டே -அனுசந்திக்க -அதிகாரி கர்தவ்யம் -ஹேது ஒன்றும் இல்லை
அவனுக்கு சரீர பூதன் இந்த சேதனன் -விஷயாந்தர பிரவணனாய் சம்சாரத்தில் உழன்றாலும் -விமுகனாய் -குண லேசமும் இல்லாமலும் இருந்தாலும் – –
அத்வேஷாதிகள் யாதிருச்சிக்க ஸூ ஹ்ருதம் விளைய முன்னமே சங்கல்பித்து கிருஷி பண்ணின ஈஸ்வரன் /
இத்தை அனுசந்திக்க ஞான தசை தொடங்கி நிச்சிந்தையாய் மார்பிலே கை வைத்து உறங்கலாமே/ தன் உடமை தானே கொள்ளுகிறான் என்று இருப்போமே –

கிருஷி பண்ணும் கட்டளை இது ஆகையால்-கர்மாதீன கட்டளையும் கிருபாதீன கட்டளையும் உண்டே- லீலா போக ரசத்துக்கு –
ஸ்வா தந்தர்யமும் – ஸ்வாதந்தர்யத்தால் ஏறிட்டு கொண்ட பாரதந்தர்யமும் உண்டே
அவஸ்த்த ஆபன்னராக்கின நம்மை-அத்வேஷ ஆபி முக்கிய -ஆத்மகுணம் ஆச்சார்ய ஸமாச்ரயணம் தத்வ ஞானம் சாதனாந்தர நிவ்ருத்தி யாதி –விசேஷ
யுக்தராக்கின நம்மை இந்த படிக்கட்டுக்கள் தாண்டிய பின்பு -குண அத்யாவசாயத்தாலே உறுதியான நம்பிக்கையால் -பய பிரசங்கமே இல்லையே

—————————————-

சூரணை -399-

எதிர் சூழல் புக்கு –

விமுகனான தசையிலும் கூட உஜ்ஜீவிகைக்கு கிருஷி பண்ணின -ஈஸ்வரனை அனுசந்தித்தால் -என்று தாம் கீழ்
அருளிச் செய்த அர்த்தத்தில் ஆப்திக்கு உடலாக – ஞானாதிகருடைய அனுசந்தான  விசேஷத்தை அருளிச் செய்கிறார் –

எதிர் சூழல் புக்கு -என்றது -எனக்கு தப்ப ஒண்ணாதபடி பார்த்த இடம் எங்கும் தாமே யாம்படி யான வ்யாப்தியிலே உள் புக்கு என்ற படி –
எதிர் சூழல் -என்கிறது -அவதார பரமாக மற்று உள்ளாராலே வ்யாக்யாதம் ஆயிற்று ஆகிலும் –இப்போது இவர் இவ் இடத்தில் வ்யாப்தி பரமாக
அருளிச் செய்கிறார் -அநேக யோஜனைகள் உண்டாய் இறே இருப்பது –

நம் ஆழ்வார் -ஆப்தர் வசனம் -/ தப்ப ஒண்ணாத படி -நான் தப்பிப் போகாத படி -அவன் தப்பிப் போக முடியாதே விபு தானே /
வியாக்யானங்களில் விபவ பரம் இவர் வியாப்தி பரமாக அருளிச் செய்கிறார் –

——————————————–

சூரணை -400-

ஒருவனைப் பிடிக்க நினைத்து -ஊரை வளைப்பாரை போலே –
வ்யாப்தியும் –

அதுக்கு திருஷ்டாந்தம்  அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் -அவனை தப்பாமல் பிடிக்க வேணும் என்ற அபிநிவேசத்தால் அவ்வூரைச் சேர வளையுமா போலே யாயிற்று –
ஒரு ஆத்மாவை அகப்படுத்தி  கொள்ளுகைக்காக -சகல சேதன அசேதனங்களிலும் வியாபித்து நிற்கும் படி –
ஆகையால் -வ்யாப்தியும் ஸ்வ அர்த்தமாக என்று இறே ஞானாதிகாரர் அனுசந்திப்பது என்கிறார் –
வியாப்தியும் -என்றது -சர்வ சத்தா ஹேதுவான அதுவும் உட்பட -என்றபடி –

சர்வ வியாப்தியும் ஒரு ஜீவனை பிடிக்கவே -சர்வ பூதாத்மா -வியாப்தியும் -உம்மை தொகை -ஸ்ருஷ்ட்டி அவதாரங்கள் என்றுமாம் – –
சர்வ சத்தா ஹேது அதுவும் உள்பட என்றுமாம் -ஆழ்வார் இந்த சர்வா சத்தா ஹேதுவான வியாப்தியைக் கூட
தன்னை அங்கீ கரிக்கவே-கைங்கர்யம் கொண்டு பேற்றை அருள செய்த செயலே என்கிறார்

————————————

சூரணை -401-

சிருஷ்டி அவதாராதிகளைப் போலே-ஸ்வ அர்த்தமாக என்று இறே ஞானாதிகாரர் அனுசந்திப்பது –

சிருஷ்டி அவதாராதிகளை ஸ்வ அர்த்தமாக அனுசந்திக்கையை சித்தவத்கரித்து
இதுக்கு திருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

முந்நீர் ஞாலத்தில் முதல் பாட்டிலே சிருஷ்டியை ஸ்வ அர்த்தமாகவும் –
இரண்டாம் பாட்டிலும் மூன்றம் பாட்டிலும் அவதாரங்களை ஸ்வ அர்த்தமாகவும் –
இவர் தாமே அநு சந்தித்து அருளினார் -இறே
அவதாராதிகள் -என்கிற இடத்தில் -ஆதி -சப்தத்தாலே -குண சேஷ்டாதிகளைச் – சொல்லுகிறது —

முந்நீர் ஞாலம் படைத்த -எம் முகில் வண்ணனே –நம் தலையில் பலித்த பின்னே நீர் முகில் வண்ணன் ஆனீர் -நீல மேக ஸ்யாமளன் ஆனாய் – சிருஷ்டியை ஸ்வ அர்த்தமாகவும் –
வான் மா வையம் அளந்த என் வாமனா –என்றும் அளந்தம் தனக்காக – மாய பல் பிறவியில் ஆழ்ந்து உள்ளேன் இப்படி இருந்தும்
கொல்லா மாக் கொல் செய்து பாரதப் போர் -எல்லா சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய் -அவதாரங்களை ஸ்வ அர்த்தமாகவும் –
எம் என் எந்தாய் -என்றாரே –ஆக ஸ்ருஷ்ட்டி அவதாரங்கள் குணங்கள் சேஷ்டிதங்கள் எல்லாம் ஆழ்வாருக்காகவே என்று தானே அனுசந்திக்கிறார்

———————————-

சூரணை -402-

கர்ம பலம் போலே கிருபா பலமும்
அனுபவித்தே அற வேணும் –

இப்படி இவன் விமுகனான தசையிலும் -சிருஷ்டி அவதாரதிகளாலே இவனுடைய உஜ்ஜீவனத்துக்கு அவன் கிருஷி பண்ணிப் போருகிறது –
தன்னுடைய நிர்ஹேதுக கிருபையாலே இறே –
தாத்ருசா க்ருபா பலம் இவனுக்கு அவசியம் அனுபாவ்யம் என்னும் இடத்தை சத் திருஷ்டாந்தமாக அருளிச் செய்யா நின்று கொண்டு –
கீழ்-நிர்பரனாய் இருக்கும் இத்தனை – என்றவற்றை ஸ்த்ரீகரிக்கிறார் மேல் –

அதாவது –
தான் செய்த புண்ய பாப ரூப கர்ம பலம் -அவசியம் அனுபோக்தவ்யம் -என்கிறபடி –
அனுபவித்தே அற வேண்டுமோபாதி-நித்ய சம்சார ஹேதுவான கர்மத்தை தள்ளி –
நித்ய ஸூரிகளோடு சமான போகபாகி ஆக்குகைக்கு ஹேதுவான அவனுடைய கிருபா பலம் -இவனுக்கு இச்சை இல்லை ஆகிலும்
அவசியம் அனுபவித்தே விட வேணும் -என்கை –

நிர்பரனாய் இல்லாமல் ஸூ ரக்ஷணத்தில் முயன்றும் விலக்க தேடினாலும் அவன் கிருபையை இவனால் தவிரப் போகாதே /
இதே கிருபை மிக்கு இருப்பதால் எம்பெருமானார் ஆனார் / பரம காருணிகரான பெரிய வாச்சான் பிள்ளை -ஸாஷாத்தாக
ஆழ்வார்கள் திரு உள்ளக் கருத்தை நமக்கு காட்டி அருளினார்கள் –
இரண்டும் கரை அழித்து-வருமே – அநாதி அவித்யா சஞ்சிதம் -அனுபவித்தே தீர்க்க வேண்டும் / நமக்கு ஞானம் பிறந்த நாள் தான் தான் பிறந்ததாக நினைப்பான் அவனும்
அனந்த அநாதி பகவத் கிருபா -கர்மம் போலே -கர்மம் சாந்தம் முடியுமே -கிருபை அங்கும் தொடரும் ஆதியும் அந்தமும் இல்லாமல் –
சஞ்சிதமான ஞானம் பிறந்து வைராக்யம் -பக்தி பிரபத்தி மோக்ஷம் -அனந்த ஸ்திர சுக பலம் –புண்ய பாபம் ச அந்தம் அஸ்திரம் -சுகம் துக்கம் கலந்து இருக்குமே /
தன்னால் தவிர்க்க முடியாதே / இவன் விலக்கடி பார்த்து விலக்கும் பொழுதும் உண்டே
ச ஹேதுக கிருபையாக இருந்தால் தான் பார முகம் பொழுது கிருபை இருக்காது -/ கர்மபலத்தை த்ருஷ்டாந்தம் ஆக்கி அருளிச் செய்கிறார் –
நிர்ப்பரனாய் நிரபரமாய் இருக்கலாமே – போகபாகி-பங்கு போட்டுக் கொள்ளலாம் -அங்கே அனந்த போகம் -தானே -/
ஆசை யுடையோர்க்கு ஆரியர்கள் என்ற சொன்ன பின்பு இச்சை இல்லா விடிலும் -நிர்ஹேதுகமாக -என்பதை காட்ட தானே இது – –
நிர்ஹேதுகமாக ருசியையும் விளைவிப்பான் -யார் இடத்திலோ எப்போதோ என்றவாறு –

——————————————–

சூரணை -403-

கிருபை பெருகப் புக்கால் -இருவர் ஸ்வாதந்த்ர்யத்தாலும் –
தகைய ஒண்ணாதபடி -இருகரையும் அழிய பெருகும் –

ஏவம் பூத கிருபை அநாதி யாக இருக்கச் செய்தே கர்மா கர்த்தாவான சேதனனுடையவும்
தத் பல தாதாவான ஈச்வரனுடையவும் ஸ்வாதந்த்ர்யங்களாலே  தகையைப்பட்டு அன்றோ கிடந்து போந்தது —
இன்னும் அப்படி ஆனாலோ என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
கிருபா குணம்– நிரந்குச ஸ்வாதந்த்ரனான ஈஸ்வரன் தானிட்ட  கட்டளையிலே வந்தவாறே -அங்கீகரிக்கக் கடவோம் என்று இச் சேதனனை
கர்ம அனுகுணமாக நிர்வகிக்கும் அளவில்- இருவர் ஸ்வாதந்த்ர்யத்தாலும்- தகையப்பட்டு நிற்கும்
அது ஒழிய -அக்கட்டளையிலே வாராமையாலே- துர்க்கதியே பற்றாசாக -இவனை அவன் தானே மேல் விழுந்து அங்கீகரிகைக்கு உடலாம்படி
பெருகும் அளவில் -ஸ்வ ஆஸ்ரயமான ஈஸ்வரனுடைய -ஸ்ருதி ஸ்ம்ருதிர் மமை ஆஜ்ஜயா யச்தா முல்லன்கைய வர்த்ததே என்கிறபடியே
ஈஸ்வர ஆக்ஜ்ஜையை அதிலங்கித்து நடக்கைக்கு அடியான ஸ்வாதந்த்ர்யத்தாலும் நிரோதிக்க ஒண்ணாதபடி –
விதி வாய்க்கின்று காப்பார் யார் -என்கிறபடியே -உபய ஸ்வாதந்த்ர்யமான இரண்டு தலையும்  உடைந்து அழியும்படி –
ஒரு மட்டில் நில்லாமை மேல் மேலும் பெருகா நிற்கும் -என்கை-

அசக்தனான அவனாலும் –ஸ் வா தந்தர்யம் அடியாக ரஷிக்க அசக்தனாக இருப்பானே – சர்வ சக்தனான அவனாலும் முடியாதே – /
ஸ்வ தந்திரம் அணையை உடைத்து -கடல் உடைத்தால் போலே பெறுக புக்கால் ஸ்வாதந்த்ரயம் -நிரங்குசமானாலும் –
இய்ரற்கையான கிருபையை இயற்கையாய ஸ்வாதந்திரத்தாலும் நம்முடைய ஆகந்துக ஸ்வாதந்தர்யத்தாலும் அடக்கியும் விலக்கவும் முடியாதே –
இரண்டு கரைகளும் அழியும் -அதன் பெருமையை பார்த்து பெருகும் -அக்கரை படுத்தி அல்லாது நில்லாது விதி வாய்க்கின்று காப்பார் யார் -தலையிலே பெருக
தடுப்பவர் இல்லையே –அவனாலும் அவளால் தன்னாலும் தடுக்க முடியாதே / ஜீவ பர ஸ்வாதந்திரங்கள் அழிந்தால் தானே அக்கரை பட முடியும் –
கிருபா மூலம் அங்கீ காரமே -நிர்ஹேதுகமே- பிரபலம் -ச ஹேதுகம் இல்லை -என்றதாயிற்று –
உல்லங்கநம் பண்ணினவனை விடாமல் தண்டிப்பேன் -ஆஜ்ஜை இருந்தாலும் உல்லங்கநம் பண்ணுகிறோம் -இருந்தாலும் கிருபை பெருகி நம்மை உஜ்ஜீவிக்கிறதே

—————————————–

சூரணை -404-

பய ஹேது கர்மம் –
அபய ஹேது காருண்யம் –

பிரகரண ஆதியில் -பய அபய ஹேதுக்களாக சொன்ன -ஸ்வ தோஷ- பகவத் குணங்களில் வைத்து கொண்டு –
கர்ம காருண்யங்கள் பிரதானங்கள் ஆகையால் -அவற்றை உபபாதித்து கொண்டு வந்தார் கீழ் –
அது தன்னை நிகமித்து அருளுகிறார் மேல் –

அதாவது –
ஈச்வரனே உபாயம் என்று இருக்கிற இவ் அதிகாரிக்கு இன்னமும் -சம்சாரம் அனுவர்த்திக்கில் செய்வது என் என்கிற பயத்துக்கு ஹேது –
அநாதி காலம் சம்சரிக்கைக்கு காரணமாய் போந்த -ஸ்வ கர்ம ஸ்மரணம் –
சூழ் பிறப்பும் மருங்கே வரப் பெருமே -திரு விருத்தம் -45–என்கிறபடியே -சம்சாரம் நம் அருகே வர மாட்டாது –
சரீர அவசாநத்தில் பகவத் ப்ராப்திக்கு கண் அழிவு இல்லை என்று நிர் பயனாய் இருக்கைக்கு ஹேது -கர்மத்தை பாராமல் அங்கீகரித்து –
சம்சாரத்தை அடி அறுத்து- தன் திருவடிகளில் சேர்த்து கொள்ளுகைக்கு உறுப்பான -அவனுடைய நிர்ஹேதுக காருண்ய ஸ்மரணம் என்கை –
ஸ்வ தோஷ அனுசந்தானம் -பகவத் குண அனுசந்தானம் -என்று துடங்கினத்தை
நிகமிக்கும் இடம் ஆகையாலே -கர்மம்-காருண்யம் -என்கிற இடத்தில் ஸ்மரண பர்யந்தம்  விவஷிதம் –

ஸ்வ தோஷ அனுசந்தானம் பய ஹேது -பகவத் குண அனுசந்தானம் அபயா ஹேது -366-என்று உபக்ரமித்து -நிகமிக்கப் போகிறார்
சாமான்யம் அங்கு -இங்கு விசேஷம் -ஸூ தோஷத்தில் கர்மம் / பகவத் குணம் காருண்யம் / இவை தானே பிரதானம் –
கிருபா விஷய அதிகாரி பயப்பட வேண்டியதையும் – கிருபையே தஞ்சம் என்று நிர்பயனாய் இருக்க வேண்டியதையும் அருளிச் செய்கிறார்
இன்னம் சம்சரிக்கில் செய்வது என் -பயத்துக்கு ஹே து அநாதி காலமே பிடித்து -ஸூவ க்ருத சத் அசத் கர்ம ஸ்மரணம்
இனி சம்சாரம் அடி அற்றது -சரீர அவசனத்தில் பேறு -என்று இருப்பது பகவத் நிர்ஹேதுக காருண்யமே –
சம்சாரம் அறுத்து அருளைக் -கொடுக்கும் அபங்குர -பங்கப்படாத -காருண்யம் நினைக்கையே – அபய ஹேது
தயை மட்டும் இல்லா விட்டால் ஞானம் பலம் ஐஸ்வர்யாதிகள் எல்லாம் தோஷமாகவே ஆகுமே -இது இருந்தால் தானே அவைகள் கார்யகரம் ஆகும்
நிர்ஹேதுக காருண்ய ஸ்மரணம்–கீழே அனுசந்தானம் -கர்மம் பற்றிய நினைவே பயத்துக்கு காரணம் -காருண்யம் நினைக்கவே பயம் போகும்

———————————————–

சூரணை -405-

பய அபாயங்கள் இரண்டும் மாறி மாறி –
பிராப்தி அளவும் நடக்கும் —

இப் பயம் அபயங்கள் இரண்டும் இவனுக்கு எவ்வளவாக நடக்கும் என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
பகவத் க்ருபா விஷயமாயும் -பிரகிருதி யோடே இருக்கையாலே அநாதி காலம் சம்சரண ஹேதுவாய் போந்த ஸ்வ கர்மத்தை அனுசந்திப்பது –
அத்தைப் பாராதே அங்கீகரித்த பகவத் காருண்யத்தை அனுசந்திப்பதாய்க் கொண்டு இறே இவ் அதிகாரி இருப்பது –
அதில் கர்மத்தை அனுசந்தித்த போது பயமும் – காருண்யத்தை அனுசந்தித்த போது அபயமுமாய் -இரண்டும் மாறி மாறி –
பிரகிருதி சம்பந்தம் அற்று பகவத் ப்ராப்தி பண்ணும் அளவும் நடக்கும் -என்கை –

மோக்ஷ பிராப்தி அளவும் என்பது இல்லை -ஞான உத்பத்தி தசை அளவு தானே –
இங்கேயே வெல்லலாம் பக்தி உபாசகனுக்கு -பிரபன்னனுக்கு சொல்ல வேண்டுமோ
தத் தத் நினைவுகளையே பற்றாசாக கொண்டு மாறி மாறி அர்ச்சிராதி கதி போகும் வரை வரும்
-முமுஷுத்வ லக்ஷணம் விரக்தியும் விசுவாசமும் முற்ற வளர மாறி மாறி வர வேண்டும்
பிரகிருதி உடன் இருப்பதால் -அநாதி காலம் சம்சரிக்க காரணமான கர்மா பற்றி நினைக்க பயமும் –
அத்தை பாராதே அங்கீ கரிக்கும் காருண்யம் நினைக்க பயம் நீங்குமே
பகவத் பிராப்தி உத்பத்தி அளவும் -தொடக்கத்திலே பயம் போகும் -அனுபவாதி ரூப பிராப்தி -ஸ்திரப்படும் அங்கு -இங்கு அஸ்திரம் –
அனுபவத்தில் பயம் இருக்காதே –கால நிர்தேசம் இல்லையே -மாறி மாறி நடக்கும்

————————————————-

சூரணை -406-

நிவர்த்திய  ஞானம் பய ஹேது

இப்படி உபயமும் மாறி மாறி பிராப்தி அளவும் நடக்கிறது என் -தத் குண
விச்வாசத்தாலே எப்போதும் ஒக்க நிர்பயனாய் இருக்க ஒண்ணாதோ -என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
அவனுடைய காருண்யத்தாலே நிவர்த்திக்க படுமதான -அவித்யா -கர்ம -வாசனை–ருசி – பிரகிருதி சம்பந்த விஷய ஞானம் -இவை
கிடைக்கையாலே இன்னும் சம்சாரம் மேலிட்டால் செய்வது என் என்கிற பய ஹேது
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்று சர்வேஸ்வரன் அவற்றை
தள்ளிப் பொகடும் படி பண்ணுகையாலே -இவற்றுக்கு நிவர்தகமான அவனுடைய காருண்ய விஷய ஞானம் -தத் பய ராஹித்ய ஹேது -என்கை –
நிவர்த்தக பலம் அறிந்தாலும் -நிவர்த்யம் கிடக்கும் அளவும்  பயமும் நடு நடுவே கலசி செல்லும் என்று கருத்து –

நிவர்த்தய  ஞானம்–சம்சாரம் -கர்மா -பற்றிய ஞானம் பய ஹேது-நிவர்த்தக ஞானம்–பகவத் கிருபை பற்றிய ஞானம் – அபய ஹேது
பகவத் கிருபையால் நிவர்த்தகம் -பிரபல்ய சம்சாரம் கர்மா -இன்னம் மயக்குண்டு மீண்டும் பிறந்தால் என்று நினைக்கவே பயம் – –
நிர்ஹேதுக அங்கீ காரத்தால் நிவர்த்திக்க – -சவாசனமாக போக்க வல்ல கிருபை நினைக்கவே அபயம் -இனி நாம் மேல் விழுந்தாலும் சம்சாரம் நம்மை கிட்டாதே —

அஞ்ஞாத ஸூ ஹ்ருத நிமித்த அங்கீகாரத்தையும் -தத் அநபேஷமான நிர்ஹேதுகமான அங்கீகாரத்தையும் அருளிச் செய்து -இரண்டும் அபிமதம் என்பதால் இல்லை –
சாஷாத் நிர்ஹேதுக கடாக்ஷம் அபிமதம் -/ ஞான ஸூ ஹ்ருதம் கொண்டே அங்கீ கரிப்பார் என்று சொல்ல வந்தவரை நிரசிக்க
தெரியாமல் செய்த வற்றை கொண்டே அங்கீ கரிப்பார் என்கிறார்
ரஜோ தமஸ் ஒழிக்க -சத்வ குணம் வளர்க்க -முக்குணங்களும் தாண்ட வேண்டுமே -முதலில் இத்தை சொன்னால் எடுபடாதே -அதே போலே இங்கும் –
ஞானத்தை ஸூ ஹ்ருதம் -அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் -சாஷாத் ஸூ ஹ்ருதம் -இப்படி வகைப்படுத்த வேண்டும் -திரஸ்கரிக்க வேண்டும் ஒவ் ஒன்றாக –
வெறிதே அருள் செய்வார் -சாஷாத் -ஒன்றே அபிமதம் -நிரங்குச ஸ்வாதந்தர்யத்துக்கு கொத்தை வாராமல் -/
பகவத் ஸ்வாதந்தர்ய கார்யம் சம்சாரம் -கிருபை கார்யம் மோக்ஷம் என்று பூர்வார் அனுசந்திப்பார்கள் -உபய நிர்ஹேதுகத்வம் -எதையும் எதிர்பார்க்காமல்
ச ஹேதுவ உக்தியால்- அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் என்று மறைத்து வேதாந்த பிரகிரியையால் அருளிச் செய்வார் –

ஸூ தோஷ பர குண அனுசந்தானம் -காரியங்களில் -மாறாடி நினைக்கில் -ஸூ குணம் பகவத் தோஷம் -விபர்யய ஸ்மாரகம் ஆனால்
பர லாப அலாப முக்கிய காரணங்கள் கிருபா கர்மா என்று சொல்லி
நிர்பய யுக்தி பிரேரகத்வ கிருபா / கிருபா பரவச பரி கல்பித -யாதிருச்சிகாதி ரூப நிமித்த ச ஹேதுக அங்கீ காரத்தையும்
நிர் ஹேதுக அங்கீ காரங்களின் துர்பல பிரபல ஸூசக நிரூபண விசேஷணமும்
அதில் அஹேதுக அங்கீகார ஹேதுவான -நம் இடம் ஹேது இல்லை -அவர் இடம் உள்ளஹேது -இப்படி ஹேது -இல்லாமல் இருந்தால் சர்வ முத்தி பிரசங்கம் –
துர் நிவாரம் -பகவத் கிருபை -விதி வாய்க்கின்று -காப்பார் யார் -கிருபா அனுசந்தான பலத்தால் பயம் நீங்குமே

ஆக –
இப் பிரகரணத்தில் –
இவனுக்கு பய அபய  ஹேதுக்களும் -366-
தத் உபய விபர்யயத்தில் சித்திக்கும் அதுவும் -367-
தந் நிபந்தன சங்க பரிகாரங்களும் -368-380-
சர்வேஸ்வரன் சம்சாரிகளுக்கு உஜ்ஜீவனத்தில் கிருஷி பண்ணும் படியையும் -381-
அஞ்ஞாத ஸூக்ருத பகவத் அங்கீகார ஹேதுத்வமும் -381-
அந் நிர்ஹேதுக விஷயீகார வைபவ அநபிஜ்ஞர் படியையும் -383-
ஏதத் வைபவ அபிஜ்ஞர் படியையும் -384-
இவ் அர்த்தம் அபியுக்த வசன சித்தம் என்னும் அதுவும் -385-
அஜ்ஞ்ஞாத ஸூக்ருத் வ்யாஜேனே அவன் அங்கீகரிக்கும் படியையும் -386-
அங்கீகார ஹேது வாக்கும் அஞ்ஞாத ஸூக்ருதங்களின் தத் கிருஷி பலத்வமும் -387
தந் நிரூபண  பலித்வமும் -அங்கீகார பற்றாசாம் அவை காதாசித்கமாக ஸ்வயமேவ விளைக்கைக்கு அடியும் -389-
அவற்றின் த்வை விதயமும் –
ஏவம் பூத விஷயீகார சாஸ்திர சித்தத்வமும் -392-
இவ் விஷயீகாரம் பெற்றவர் இத்தை வெளியாக பேசின படியும்-393-
ஏதத் அநபிஞ்ச வசன பரிகாரமும் -394-
ஆபி முக்யவதத் வேஷ தத் கிருபா ஜனித்வமும் -395-
யாத்ருச்சிகாதிகளின் ஸூக்ருத நாமம் ஈஸ்வர க்ருதம் என்னும் அதுவும் -396-
ஏதத் அர்த்த விஷய அபியுக்த வசன பரஸ்பர விரோதி பரிகாராத் அனுயுக்தி ஹேதுவும் -397-
கீழ் பரக்க உபபாதித்து வந்த இதின் பலிதமும் -398-
தத் ஆப்தி ஹேது தயா ஞானாதிகர் அநு சந்தானமும் -399-
நிர்ஹேதுக கிருபா பல அவஸ்ய அனுபாவ்யத்வமும் -402-
ஈத்ருசா கிருபா பிரவாஹா துர்நிவாரகத்வமும் -403-
பிரகரண ஆதி ப்ரதிஞ்ஞா தத் அர்த்த நிகமனமும் –404-
பய அபய அனுவர்த்தன காலாவதியும் -405-
ஏதத் உபய ஹேது பூத ஜ்ஞான விசேஷங்களும்-406- -சொல்லுகையாலே –
இவ் அதிகாரிக்கு அத்வேஷாதி மோஷ பர்யந்த அகில லாப ஹேதுவான பகவத் ஆகஸ்மிக கிருபா பிரபாவம் விஸ்தரேண பிரதிபாதிக்க பட்டது –

இத்தால் -த்வய உபதேஷ்டரு பூதாசார்ய உபசத்யாதிகளுக்கும் தத் உபதிஷ்ட த்வார்த்த ஞானாதிகளுக்கும் –
ஹேதுவான பகவந் நிர்ஹேதுக கிருபா வைபவம் சொல்லப் பட்டது –
(த்வயத்தை பெற்றது ஆச்சார்யம் மூலம் -உபசத்யாதி-கைங்கர்யாதிகள் –ஆச்சார்யரைப் பெற்றது பகவத் நிர்ஹேதுக கிருபையால் என்றதாயிற்று-)

ஆறு  பிரகரணங்களில் ஐந்தாவதான -பகவந் நிர்ஹேதுக கிருபா பிரபாவம் முற்றிற்று –

——————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: