ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –381-386 -நிர்ஹேதுக கிருபை வைபவ பிரகரணம் –ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் / ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது ஐந்தாவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் /
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் /

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகாரஞ்ச ச வைபவம் (ச -உபாய வைபவமும் இதில் உண்டே )-24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது எட்டாவது பிரகரணம்

த்வய அபிபிரேரிதமான – த்வய யுக்த அர்த்த ஞானமும் -தத் உபதேச ஆச்சார்யர் அனுவர்த்தனைத்தையும் அருளிச் செய்து –
அதுக்கு மூல பூதமான பகவத் கிருபை -ஹேதுதா சங்கதி –
நிவர்த்ய ஞானம்–கர்மா அவித்யாதி தோஷங்கள் நினைத்தால் – பய ஹேது /-நிவர்த்தக பகவத் குண அனுசந்தானம் ஞானம்–பயம் கெடுக்கும் ஹேது
பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -/ படிக்கட்டுக்கள் அத்வேஷம் தொடங்கி பிராப்தி வரை -நிர்ஹேதுக கிருபையே காரணம்

——————————————

சூரணை-381-

த்ரிபாத் விபூதியிலே
பரிபூர்ண அனுபவம் நடவா நிற்க
அது உண்டது உருக்காட்டாதே
தேசாந்தர கதனான புத்திரன் பக்கலிலே
பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே
சம்சாரிகள் பக்கலிலே திரு உள்ளம் குடி போய் –
இவர்களைப் பிரிந்தால் ஆற்ற மாட்டாதே –
இவர்களோடே கலந்து பரிமாறுகைக்குக் –
கரண களேபரங்களைக் கொடுத்து –
அவற்றைக் கொண்டு வ்யாபரிக்கைக்கு ஈடான
சக்தி விசேஷங்களையும் கொடுத்து –
கண் காண நிற்கில் -ஆணை இட்டு விலக்குவார்கள் என்று –
கண்ணுக்குத் தோற்றாத படி -உறங்குகிற பிரஜையத் தாய்
முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே –
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே –
அகவாயிலே அணைத்துக் கொண்டு -ஆட்சியிலே தொடர்ச்சி நன்று என்று –
விடாதே சத்தையை  நோக்கி உடன் கேடனாய்-

இவர்கள் அசத் கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் போது-
மீட்க மாட்டாதே அனுமதி தானத்தை பண்ணி –
உதாசீனரைப் போலே இருந்து -மீட்கைக்கு இடம் பார்த்து –
நன்மை என்று பேரிடலாவதொரு தீமையும் காணாதே –
நெற்றியைக் கொத்திப் பார்த்தால் ஒரு வழியாலும் பசை
காணாது ஒழிந்தால் -அப்ராப்யம் என்று கண்ணா நீரோடே மீளுவது –

தனக்கேற இடம் பெற்ற அளவிலே –
என்னூரைச் சொன்னாய் –
என் பேரைச் சொன்னாய் –
என்னடியாரை நோக்கினாய் –
அவர்கள் விடாயைத் தீர்த்தாய் –
அவர்களுக்கு ஒதுங்க விடாய் கொடுத்தாய் –
என்றாப்  போலே சிலவற்றைப் பேரிட்டு –
மடிமாங்காய் இட்டு –
பொன் வாணியன் பொன்னை உரை கல்லிலே யுரைத்து
மெழுகாலே எடுத்துக் கால் கழஞ்சு என்று திரட்டுமா போலே –
ஜன்ம பரம்பரைகள் தோறும்
யாத்ருச்சிகம் –
ப்ராசங்கிகம்-
ஆநு ஷங்கிகம்-
என்கிற ஸூக்ருத விசேஷங்களைக் கற்ப்பித்துக் கொண்டு –
தானே அவற்றை ஓன்று பத்தாக்கி
நடத்திக் கொண்டு போரும் –

இனி பகவத் குண அனுசந்தானம் -அபய ஹேது -என்று கீழ் அருளிச் செய்ததை விசதீகரிகைக்காக –
ஈஸ்வரன் இவ் ஆத்ம உஜ்ஜீவனத்துக்கு பண்ணும் கிருஷி பரம்பரையை -அருளிச் செய்கிறார் –

த்ரிபாதாஸ் யாம்ருதம் திவி -என்கையாலே -நித்ய விபூதியை த்ரிபாத் விபூதி என்னக் கடவது இறே-
இதனுடைய த்ரிபாத்த்வம் பல படியாக நிர்வகிக்கலாய் இருக்கும் –
எங்கனே என்னில் –
பாதேரச்ய விசவா பூதானி திரிபாத ச்யாம்ருதம் திவி -என்று இந்த விபூதியில் –
எல்லா பூதங்களும் இவனுக்கு நாலாத் தோன்றும் என்னும் படி அல்பமாய் இருக்கும் –
பரம ஆகாசத்தில் இவனுடைய நித்தியமான விபூதி -த்ரிபாத் -என்னும் படி மும் மடங்காய் இருக்கும் –
இந்த விபூதி த்வய விஷயமான -பாத சப்தமும் -திரிபாத -சப்தமும் –
அல்ப மகத்வங்களுக்கு-உப லஷணம் இத்தனை ஒழிய –
பரச்தேத பரம் அன்று -லீலா விபூதியில் அண்டங்கள் தானே அசங்கயாதங்களாய்-இறே இருப்பது –
என்று -தீப பிரகாசத்திலே ஜீயர் அருளி செய்கையாலே –
இவ்விபூதியில் -கார்யா ரூப பிரதேசத்தை  பற்ற-பரம ஆகாசத்தில் நித்ய விபூதி
மும்மடங்காய் இருக்கும் என்னவுமாம் –
அன்றிக்கே –
இத்ய ப்ராக்ருதம் சத்தாநமுச்யதே  த்ரிபாத்த்வஞ்ச அப்ராக்ருதைர் போக்ய போக உபகரண போக ஸ்தான விசேஷைர்வா-
பூஷணா அஸ்த்ராதி ரூபேண ஜகத் அந்தரகத வஸ்த அபிமானிபிர்
நித்யை பகவத் அனுபவ மாத்ர பரைச்ச நித்ய சித்தைர் முக்தைச்சாத்மா பிர்வா சம்பவதி -என்று
ஸ்ருத பிரகாசிகையிலே பட்டர் அருளி செய்தபடி –
அப்ராக்ருதமாய் இருந்துள்ள -போகய விசேஷங்கள் போக உபகரண விசேஷங்கள் –
போக  ஸ்தான விசேஷங்கள் -ஆக மூன்று அம்சங்களோடு இருக்கையாலே ஆதல் –
அஸ்த்ர பூஷணத்தியாயத்தில் படியே பூஷண அஸ்த்ராதி ரூபத்தாலே –
ஜகத் அந்தர்கத வச்தபிமாநிகளான-நித்தியரும்  –
கேவல பகவத் அனுபவராய் இருக்கும் -நித்தியரும் முக்தருமாய் -இப்படி
மூன்று அம்சமாய் இருக்கும் ஆத்மாக்களை உடைத்தாயாகையாலே –
த்ரிபாத் -என்னவுமாம் –
ஆக இப்படி லீலா விபூதியில் -அத்யந்த வ்யாவ்ருத்தை ஆகையாலே
நிரதிசய சுக வஹையான நித்ய விபூதியிலே –
பரி பூர்ண அனுபவம் -நடவா நிற்க –
நித்ய முக்தரோடே கூடி இருந்து வேறு ஒன்றே -நிரதிசய ஆனந்த ஜனகமான –
ஸ்வரூப ரூப குண விபூதிகள் -எல்லாவற்றையும் -யுகபவதேவ – அநுபகிக்கை
ஆகிற பரி பூர்ண அனுபவம் -அவிச்சின்னமாய் செல்லா நிற்க –
அது உண்டது உருக்காட்டாதே –
அதாவது –
அப்போது அப்போது வடிவிலே இட்டு மாறினால் போலே -புதுக்கணித்து வரப் பண்ணும்
அந்த அனுபவம் ஒன்றும் வடிவிலே தோன்றாதே என்கை-

தேசாந்தர கதனான புத்திரன் பக்கலிலே
பித்ரு ஹிருதயம் கிடக்குமா போலே சம்சாரிகள் பக்கலிலே திரு உள்ளம் குடி போய் -அதாவது –
அநேக புத்ரர்களில் வைத்து கொண்டு -ஒருவன் ஸ்வ கர்ம அனுகுணமாக
தேசாந்தரமே போனால் -மற்று உண்ட புத்ரர்களும் தானுமாய் இருந்து ஜீவியா நிற்கச் செய்தேயும் –
இவர்களோபாதி அவனும் கூடி இருந்து -வாழுகைக்கு இட்டு பிறந்து வைத்து -இத்தை
ஒழிந்து கிடக்கிறானே என்று -தேசாந்தர கதனான அந்த புத்திரன் பக்கல் பிதாவினுடைய
ஹிருதயம் கிடக்குமா போலே -நித்தியரும் முக்தரும் தானும் கூடி இருந்து வாழச் செய்தே –
இப்போகத்தில் ப்ராப்தி உண்டாய் இருக்க -இச் சேதனன் இழந்து கிடப்பதே என்று –
தேசாந்தர ஸ்தரான சம்சாரிகள் பக்கல் திரு உள்ளம் நேராக போய் -என்கை –

இவர்களை பிரிந்தால் ஆற்ற மாட்டாதே –
அதாவது –
சம்ஹ்ருதி சமயத்தில் பிராப்தி உண்டாய் இருக்க -நித்ய விபூதியில்
சம்சாரி சேதனரை தான் பிரிந்து தான் இருக்கும் அளவில் -புத்திர பௌ த்ராதிகளோடு
ஜீவித்தவன் -அவர்களை இழந்து -தனியனானால் போலே –
ச ஏகாகீ ந ரமேத -என்கிறபடி -அவ் இழவு சஹிக்க மாட்டாதே -என்கை –
சம்ஹ்ருதராய்க் கிடக்கும் அளவில் -இவர்களை சரீரமாய் கொண்டு -தான்
சரீரியாய் இருக்க செய்தேயும் -அத்தை ஒரு கலவியாக நினையாதே –
கரண களேபர சஹிதராய் அவர்கள் வர்த்திக்கிற காலத்தில் -அந்தர் ஆத்ம தயா –
பிரவ்ருத்தி நிவ்ருத்திகளை -நிர்வகித்து கொண்டு இருக்கை முதலான வற்றை இவர்களோடு
கலவி யாகவும் -இவர்கள் கரண களேபர விதுரராய்-அசித் அவிசேஷிதராய் கிடக்க -தான்
நித்ய விபூதியில் இருக்கும் இருப்பை இவர்களை பிரிந்து இருக்கிற இருப்பாகவும்
நினைத்து இருக்கையாலே -இவர்களை பிரிந்தால் -என்று அருளி செய்கிறார் –

இவர்களோடு கலந்து பரிமாறுகைக்கு கரண களேபரங்களைக் கொடுத்து –
அதாவது –
அந்தராத்மதையாலும் –
அவதார –
அர்ச்சாவதார ங்களாலும் –
இவர்களோடு கலந்து பரிமாறிக்கைக்கு உறுப்பாக –
விசித்ரா தேக சம்பந்தி -இத்யாதிப்படியே –
ஸ்வ சரண கமல ஸமாஸ்ரயேண உபகரணமான கரண களேபரங்களை  தயமானமனாவாய் கொடுத்தது என்கை –

அவற்றைக் கொண்டு வ்யாபரிகைக்கு ஈடான சக்தி விசேஷங்களையும் கொடுத்து –
அதாவது –
அந்த கரண களேபரங்களைக் கொண்டும் அவற்றை அறிந்து -செய்ய வேண்டும் அவற்றை செய்து
தவிர வேண்டும் அவற்றை தவிர்ந்து -இப்படி வ்யாபரிக்கைக்கு ஈடான –
சித் சக்தி -பிரவ்ருத்தி சக்தி -நிவ்ருத்தி சக்திகள் ஆகிற சக்தி விசேஷங்களையும் கொடுத்தது -என்கை –

கண் காண நிற்கில் ஆணை இட்டு விலக்குவார்கள் என்று
கண்ணுக்கு தோற்றாத படி –
அதாவது –
இத்தனையும் செய்து -ஸ்வாமித்வ ப்ராப்தி தோற்ற இவர்கள் கண்ணுக்கு விஷயமாக நிற்கில் –
த்வம்மே – என்றால் சஹியாமல் –
அஹம்மே -என்றும் ஸ்வ தந்த்ரர் ஆகையாலே -எங்கள் கண் முகப்பில் நீ ஒருக்காலும் –
நிற்க்கக் கடவை இல்லை -என்று திரு ஆணை இட்டு -நிஷேதிப்பர்கள் என்று -நினைத்து –
ந சஷூஷா பஸ்யாதி கைச்ச நைநம் – –
கட்கிலி –
என்கிற படி இவர்கள் -கண்ணுக்கு ஒருக் காலமும் விஷயம் ஆகாதபடி -என்கை –

உறங்குகிற பிரஜையத் தாய் முதுகிலே அணைத்துக் கொண்டு கிடக்குமா போலே –
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக விட மாட்டாதே -அகவாயிலே அணைத்து-

அதாவது –
தன்னையும் தாயும் அறியாதே கிடந்தது உறங்குகிற பிரஜையை –
வத்சலை யானவள் -தான் அறிந்த ரஷ்ய ரஷக  பாவ சம்பந்தம் அடியாக -முதுகிலே அணைத்து –
கொண்டு கிடக்குமா போலே -அநாதி மாயயா சூப்தராய் -ஸ்வ பர ஸ்வரூபங்களில் ஒன்றையும் அறியாமல் –
கிடக்கிற இச் சேதனரை-சேஷியான தான் அறிந்த -ரஷ்ய ரஷக சம்பந்தமே ஹேதுவாக விட -ஷமன் அன்றிக்கே –
யா ஆத்ம நிதிஷ்டந்-என்கிறபடியே -அந்தராத்மத்வேண -இவற்றை ஸ்பரிசித்து கொண்டு -என்கை –

ஆட்ச்சியில் தொடர்ச்சி நன்று என்று விடாதே சத்தையை நோக்கி –
அதாவது –
ஒருவன் உடைமையை வேறு ஒருவன் அபஹரித்து ஆளா நிற்க -உடையவனாய் வைத்து
உடைமையை இழந்தவன் தன்னது என்ன தோற்ற பல நாளும் தொடர்ந்து போந்தால் பின்பு
வ்யவஹாரத்தில் விஜய ஹேதுவாக நிற்கும் இறே –
அப்படியே -அனுபவ விபவாத் -என்கிற சேதனர் ஆட்சியிலும் நம்மது என்னும் இடம் தோற்ற
ஒரு தலை பற்றிக் கொண்டு போருகிற தொடர்ச்சி பிரபலம் என்று நினைத்து –
அந்தராத்மா தயா வஸ்திதனான தான் இவர்களை ஒருக்காலும் கை விடாதே –
தாரகனாய் கொண்டு தாரக  பூதரான இவர்கள் சத்தை அழியாமல் நோக்கி -என்கை –

உடன் கேடனாய் –
அதாவது
இப்படி சத்தா தாரக தயா -ஸ்வர்க்க நரக ப்ரேவேசாதி-சர்வ அவஸ்தையிலும் –
இவர்களுக்கு துணையாக போருகை-
உடன் கேடன் -எனபது -இவன் கேடு தன் கேடாய் இருக்கும் அவனை  இறே

இவர்கள் அசத் கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் போது-மீட்க மாட்டாதே அனுமதி தானத்தை பண்ணி –
உதாசீனரைப் போலே இருந்து -மீட்கைக்கு இடம் பார்த்து –
அதாவது –
ஆதவ் ஈச்வரதத் தயைவ புருஷ -ஸ்வாதந்த்ர்ய சக்த்யா ஸ்வயம்-தத் தத் ஜ்ஞான சிகீர்ஷாண பிரயத்நாதி உத்பாதயன் வர்த்ததே -என்கிறபடியே
அடியிலே தான் கொடுத்த ஜ்ஞாத்ருத்வ ரூப ஸ்வாதந்த்ர்ய சக்தியாலே -ஸ்வ ருஷ்ய அநுகுணமாக –
பிரவ்ருத்தீகளைக் கொண்டு போருகைக்கு யோக்யரான இச் சேதனர் துர்வாசன பலத்தாலே
பாப கர்மங்களிலே ப்ரவர்த்திக்கும் அளவிலும் –
அந்தர்யாமியான தான் நினைத்தால் மீட்க்கலாய் இருக்கச் செய்தேயும் -அப்படி செய்யும் அளவில் –
ஸ்வ ஆஞ்ஞா  ரூப சாஸ்திர விநியோகம் அறும் என்னத்தை பற்றவும் -மீட்க மாட்டாதே
அனுமதி தானத்தை பண்ணியும் -உதாசீனன் அன்றிக்கே இருக்கச் செய்தேயும் -இவர்கள் என் பட்டால்
நல்லது என்று இருக்கும் உதாசீனரைப் போலே இருந்தும் -அசத் கர்மாவில் பிரவர்த்திக்கும் பொழுது மீட்க நன்மை என்னும்
பேர் வைக்கும்படி தீமையும் கிடைக்காத பொழுது -அதில் நின்றும் அவர்களை மீட்க்கைக்கு
உறுப்பாக சொல்லிக் கொள்ள தக்கதொரு நன்மை ஆகிய அவகாசம் பார்த்து -என்கை –

நன்மை என்று பேரிடலாவது தீமையும் காணாதே –
அதாவது –
பரஹிம்சை செய்து கொண்டு திரியா நிற்கச் செய்தே -பகவத் பாகவத விரோதிகளாய் இருப்பாரை -யாத்ருச்சிகமாக ஹிம்சிக்கை –
விஷய ப்ரவணனாய் பகவத் தாசி களைப்ப் பின் பற்றி பல காலம் கோவில்களிலே புக்கு புறப்படுகை –
வயல் தின்ன பசுவை தொடர்ந்தவாறே அது ஒரு கோவிலிலே வளைய  வருமாகில் அத்தை அடிக்கையில் உண்டான ஆக்ரஹத்தாலே தானும் வளைய வருகை –
நிந்தார்த்தமாக திருநாமங்களை சொல்லுகை -முதலானவை –

நெற்றியைக் கொத்திப் பார்த்தால் ஒரு வழியாலும் பசை காணாது ஒழிந்தால் -அப்ராப்யம் என்று கண்ண நீரோடே மீளுவது–
அதாவது –
சர்பதஷ்டராய்  ம்ருத கல்பர் ஆனவர்களை -மந்த்ராதிகளால் எழுப்புகைக்கு
பிராண ஸ்த்தி பரிஷார்த்தமாக நெற்றியை கொத்திப் பார்த்தால் ஒரு பிரகாரமும்
ரத்த ஸ்பர்சை காணாத அள்ளவிலே -இவ் விஷயம் நமக்கு இனி கை புகுகிறான் என்று
இராதே இழவோடு கை வாங்கும் பந்துக்களைப் போலே -நன்மை காணாத அளவில்– விடாதே –
நன்மை என்று பேரிடலாவது -தீமை தான் உண்டோ என்னும் அளவாக பார்த்த அளவிலும்
ஒரு பிரகாரத்தாலும் இவர்கள் பக்கல் பசை காணா விட்டால் இவ் விஷயம் நமக்கு ப்ராபிக்க
படுமது அல்ல -இத்தை இழந்தோம் என்று அழுது கண்ண நீரோடு மீளுவது -என்கை –

அன்றிக்கே –
நன்மை என்று பேரிடலாவதொரு தீமை -என்கிறது –
ச்யேநேந அபி சரண்யஜேத-என்று ஆஸ்திக்ய ஜனகமாய் -விஹிதம் ஆகையாலே –
நன்மை என்று பேரிடலாய் இருக்குமதாய் -பர ஹிம்சை ஆகையாலே தீமை ஆகிற
ச்யேன வித்ய அனுஷ்டானத்தையாய் -அங்கீகாரத்துக்கு உடலானதொரு நன்மை
காணாத அளவு அன்றிக்கே -சாஸ்திர மரியாதை யாலே மேல்- தானாகிலும் ஆக்கிக் கொள்ளுகைக்கு
யோக்யமான சாஸ்திர ஆஸ்திக்யத்துக்கு  உடலான -அது தானும் உட்பட இவர்கள் பக்கல் காணப் பெறாதே என்னவுமாம் –
அப்போதைக்கு -நெற்றியை கொத்திப் பார்த்தால் -இத்யாதியால் -ஜ்ஞாத ஸூ ஹ்ருத யோக்யதை இல்லாமையாலே -அஜ்ஞ்ஞாத ஸூஹ்ருதம் தான் உண்டோ
என்று ஆராய்ந்து-அதுவும் இல்லாமையாலே ஒரு வழியாலும் அங்கீகார யோக்யதை அற்று -இழவோடு   மீளும் படி சொல்லிற்று –

தனக்கேற இடம் பெற்ற அளவில் –
அதாவது –
இப்போது மீண்டால் போலே -மீண்டு விடுகை அன்றிக்கே -இவர்களை
உஜ்ஜீவிப்பிகைக்கு அவகாசம் பார்த்து திரியும் -தனக்கேற அவகாசம் பெற்ற அளவில் -என்கை –

என்னூரைச் சொன்னாய் -இத்யாதி -என்றால் போலே சிலவற்றை ஏறிட்டு –
அதாவது –
அவ்வூர் இவ்வூர் என்று இவன் பல ஊர்களையும் சொல்லா நிற்க -கோவில் திருமலை
முதலாக தானுகந்த ஊர்களிலே ஏதேனும் ஒன்றைச் சொன்னால்-அம்மாத்ரமே பற்றாசாக
என்னுடைய ஊரைச் சொன்னாய் என்றும் -அவர் இவர் என்றால் போலே சொல்லா நிற்க -ஒருவன் பேரை சொல்லுகிறதாக
திரு நாமங்களிலே ஒன்றைச் சொன்னால் -அவ்வளவைக் கொண்டு என்பேரைச் சொன்னாய் என்றும் –
சில பாகவதர் காட்டிலே வழி போகா நிற்க -அவர்களை ஹிம்சித்து கையில் உள்ளது அபஹரிப்பதாக
வழி பறிக்காரர் உத்யோக்கிக்கும் அளவில் -ஸ்வ காரியத்தில் போகிறான் ஒரு சேவகன் அவர்கள் பின்னே தோன்ற –
அவனை தத் ரஷண அர்த்தமாக வருகிறான் என்று நினைத்து -அவர்கள் பயப்பட்டு பறியாது ஒழிய -அது பற்றாசாக அந்த சேவகனை
என் அடியாரை நோக்கினாய் என்றும் –
ஒருவன் கர்ம-வெயில்- காலத்திலே தன் வயல் தீய புக்க வாறே -நீருள்ள இடத்தில் -நின்று
வயலிலே வர நெடும் தூரத்திலே துலை இட்டு இறையா நிற்க -மரு பூமியிலே நெடும் தூரம் நடந்து
இத்தனை ஜலம் பெறில் தம் பிராணன் தரிக்கும் என்னும்படி இளைத்து வருகிறார்கள் சில பாகவதர்கள்-அவன் அறியாமல்
அந்த நீரிலே தங்கள் ஸ்ரீ பாதம் முதலான வற்றை விளக்கி இளைப்பாறிப்  போனால் -அதடியாக -என் அடியார் விடாய் தீர்த்தாய் -என்றும் –
ஒருவன் தனக்கு சூது சதுரங்கம் போருகைகும் -காற்று அபேஷிதமான போது வந்து இருக்கைக்கும் -இவற்றுக்காகா புறம் திண்ணை கட்டி வைக்க –
வர்ஷ பீடிதரா -அங்கே ஒதுங்குவோம் என்று -வருகிறார் சில பாகவதர் அங்கே ஒதுங்கி இருந்து போக –
தாவன் மாத்ரத்தாலே என் அடியார்க்கு ஒதுங்க நிழல் கொடுத்தாய் -என்றும் –
இப்புடைகளிலே சிலவற்றை அவர்கள் அறியாது இருக்க -தானே ஆரோபித்து -என்கை –

மடி மாங்காய் இடுகை  -ஆவது-
மாங்காய் எடாமல் வெறுமனே வழி போகிறவன் மடியிலே -மாங்காயை மறைத்து கொண்டு சென்று இட்டு மாங்காய் களவு கண்டாய் -என்கை –
இது வலிய வாரோபிக்கும் அதுக்கு திருஷ்டாந்தம் –

பொன் வாணியான் -இத்யாதி -ஓன்று பத்தாக்கி நடத்திக் கொண்டு போரும் –
அதாவது –
பொன் வாணியம் செய்வான் ஒருவன் ஆரேனும் பரீஷிக்கைக்காக காட்டின பொன்னை
உரை கல்லிலே வைத்து -ஒன்றும் சோராதபடி மெழுகாலே ஒத்தி எடுத்து –
நாள் வட்டதுடனே கால் பொன்னாயிற்று கழஞ்சு பொன்னாயிற்று என்று திரட்டுமா போலே –
ஒரு ஜன்மம் இரண்டு ஜன்மத்து அளவு அன்றிகே சேதனருடைய ஜன்ம பரம்பரைகள் தோறும் –
விடாயைத் தீர்த்தாய் -ஒதுங்க நிழலைக் கொடுத்தாய் -என்றால் போலே – உண்டாக்கும் -யாத்ருச்சிகம் –
ஊரைச் சொன்னாய் -பேரைச் சொன்னாய் -என்றால் போலே வரும் ப்ராசங்கிகம்-
அடியாரை நோக்கினாய் -என்றாப் போலே உண்டாகும் ஆநு ஷங்கிகம்-என்கிற ஸூஹ்ருத விசேஷங்கள் –
சாஸ்திர விஹிதமும் -சேதன விதிதமும் அன்றி இருக்க -தானே கல்ப்பித்தும் -கல்பிதமான தன்னை ஒன்றையே அநேகமாக்கி நடத்திக் கொண்டு போரும் -என்கை –

ஸ்ருஷ்டி இத்யாதி பரம்பரையான உபகாரங்கள் -முதல் பகுதி – -நாம் செய்யும் பிரவ்ருத்திகள் நிவ்ருத்திகள் -இரண்டாம் பகுதி –
-பேற்றுக்கு இவன் செய்த நிர்ஹேதுகத்வ கிருஷிகள் -மூன்றாம் பகுதி –
அசேதனமான கர்மம் இழவுக்கு -காரணம் இல்லை -பகவத் –ஸ்வாதந்திரமே இழவுக்கு அடி -ஸ்வ தந்த்ர ஸ்வாமி யுடைய கிருபையே பேற்றுக்கு அடி –
என்னும் இடத்தை உபாயன அருளிச் செய்து -கிருபை -சா பேஷம் நிரபேஷம் -இரண்டு வகை -/ யாதிருச்சிக்காதிகளை எதிர்பார்த்து கிருபை –
தானே தலையில் இட்டதை காரணமாகக் கொண்டு –சா பேஷம் இது /
சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக–/ மேலே இதுவும் கூட வேண்டாம் என்று நிரபேஷ கிருபை /
நிர்ஹேதுக ப்ரதீதி விஷயமான முற்பட்ட சா பேஷை கிருபை –எதிர்பார்ப்பது கண் துடைப்பு என்று காட்டி அருள இந்த சூரணை/ –
த்ரிபாதாஸ் யாம்ருதம் திவி -லீலா விபூதியில் மும் மடங்கு-நித்ய விபூதி – -அபரிச்சின்ன -ஆனந்த அனுபவம் பரிபூரணம் -இருந்தாலும் -கீழ் ஆறு போய் உண்டது உருக்காட்டாதே
சந்நிஹித்த புத்ரன் இங்கு இருந்தாலும் – தேசாந்தர கத புத்ரன் -அறியாத பிள்ளைகள் இடம் திரு உள்ளம் சென்று -வாத்சல்யம் -பிதா புத்ர ஸ்மரண க்ரஸ்த ஹிருதயம் —
இலஷ்மணன் கூட இருந்ததை கனீசியாமல் எப்பொழுது பரதனை கூடுவேனோ சத்ருக்னனை கூடுவேனோ உன்னையும் கூடுவேனோ -என்றது போலே –
சந்நிஹிதர் பால் பற்று அற்று ச வாசனமாக குடி போய் -ச ஏகாகீ ந ரமேத– நிரந்தர கவலை -அஞ்ஞர் தூரஸ்தர் சம்சாரிகள் பக்கல் -ஸ்நேஹம் மிக்கு —
ஆற்றல் மிக்க அடக்கம் அற்று ஆற்ற மாட்டாதே கரண ஸூ ன்யராய்- சம்சாரிகள் பக்கல் புரை அறக் கலந்து பரிமாற உப கரணங்களான கரண களேபரங்களை கிருபையால் கொடுத்து

ஸூ பர ஸ்வரூபத்தை அறியாதே -அநாதி மாயயா ஸூக்தனான -அறிவிலி பத்த ஜீவன் -தான் அறிந்த சம்பந்தமே காரணமாக த்யஜிக்க மாட்டாதே
மேலே பல படி உயர்ந்து த்ருஷ்டாந்தம் இல்லையே அவன் படி -ஒரு பிறவியில் கர்மாதீனம் இது -அநாதி காலம் -சர்வரையும்
உள்ளும் பூராவும் வியாபித்து –
அனுபவம் ஆகிற -வாழ்ச்சியில் -ஜீவனை அனுபவிக்க ஆசை கொண்டு –ஆக்ரோஷம் ஆகிய தொடர்ச்சி -விடாமல் அவதரித்து -வியவஹாரம் ஆகிற வெற்றிக்கு
சத்தை குலையாத படி பர்த்தா- தாங்கி தாரகனாய் கொண்டு நோக்கி -சத்தை அழியாமல் -சத் அசத் கர்மா பலமான -ஸ்வர்க்க நன்றாக அவஸ்தைகளிலும் விட மாட்டாதே –
வாத்சல்ய விஷயமான இவர்கள் -ஸூ கத -இவன் கொடுத்த சக்தி கொண்டு ஆத்மாவின் விரோத செயல்களில் ஈடுபட்டு –பேகணிப்பித்து
மருந்து கொடுத்து ரஷிக்கும் தாய் போலே -ருசியை பின் சென்று அசத் கர்மம் அனுமதியும் கொடுத்து உதாசீனனைப் போலே இருக்கிறார் –

உதாசீனம் அன்றிக்கே இருக்கச் செய்தேயும் -போலே -இருந்து நியமனாதி யோக்யதை உண்டாய் இருக்க -உபேக்ஷித்து இருக்கும் –
ஸ்வரூப அனுரூப ருசியில் மூட்டுவதற்காக -பகவத் பாகவத கைங்கர்யத்தில் ஈடுபடுத்த -ச வாசனமாக விஷயாந்தரங்களில் இருந்து மீட்க
அபி சந்தி விராமம் –விருப்பம் அற்ற செயல் –முன் விரும்பி தப்பு -இப்பொழுது விருப்பம் இல்லை -செயல்களில் இருந்து ஒய்வு இல்லையே இன்னும் –
நினைக்க அவகாசம் காத்து உள்ளேயே பதி கிடந்தது -அங்கீ கரித்து -திரு முன்னில் அவிக்கிற விளக்கை திருடுவதுக்கு தூண்டுகை –
அணையும் விளக்கை தூண்டினான் என்ற கணைக்கால் -யாதிருச்சிகம்
திரு ஆபரணங்களை அபகரிக்கை –வணங்கி -இதுவே -நம்மை என்ற பேர் இடலாம் படி -தீமையும் சர்வஞ்ஞனும் காணாமல் /அறியாமல் –
சர்ப்பம் -புத்ரனை நெற்றி கொத்தி பார்த்து மருந்தும் மந்திரித்தும் -சுக்கிட்டு ஊதி பிராணம் பசை காணாமல் -ஒதுங்கின பிராணன் உண்டோ என்று முயலும் பிதா
பரிதவித்து கண்ணும் கண்ணநீரும் கொண்டு –
சப்தாதி விஷய சர்ப்பம் -அஹங்காராதி விஷம் தலை மண்டி -சைதன்யம் மூச்சு அற்று –விவேக ஞானம் இல்லாமல் –அசத் கல்பனாய் –
முக்கிய கரணம் நெற்றி -சாஸ்திரம் கத்தி -உபதேசம் கூரிய கத்தி -மீளுமோ
தாத்பர்ய உபதேசம் -சுக்கு -ரஹஸ்ய த்ரயார்த்தம் -/ அவதார ரூபம் பசு மருந்து வாழ்த்தும் -ததீய ஆகார ஸ்பர்சம் மந்த்ரம்
சேஷத்வ ஞான உதயமான பிராண பசை இல்லாமல் ஆத்ம வஸ்து இழந்தோம் என்று கலங்கி -சஞ்சாத பாஷபம் -வாலி வத அனந்தரம் –
உரு அழிந்து கண்ண நீர் -வசந்த வழி தன் வீடு ஏறி போவது -மடக்கியும் -போக முடியாமல்
ஆத்ம வஸ்து சபலனான தனக்கே ஏற புறப் பூச்சு இடம் பெற்ற அளவிலே -இவன் அவ்வூர் இவ்வூர் என்று திருக் கோளூர் இத்யாதி -வாயாரச் சொன்னாய் –
தேசோயம் சர்வ காமம் துக் -பாவத் விஷய வாசினா அயோத்யையில் இருந்ததே கொண்டு அன்று சராசரங்கள் வைகுந்தது ஏற்றி –
அவன் இவன் என்றால் போலே திருப் பேர் நகரான -பேர் ஆயிரம் உடையான் என்றால் போலே ஓர் ஆயிரமாய் நம்முடைய பெயரை
எல்லாரும் கேட்க சொன்னாய் -மாமாயன் மாதவன் வைகுந்தன் -போலே -வீறுடைய பேர் –
ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை இருவர் பறிக்க முன்னும் பின்னும் சென்று -வில்லாளி -திருடன் – தர்ச நீயரான அடியாரை பறியாமல் நோக்கினாய்
வாய் கொப்பளிக்க -அடியார் -நாம் அறிய தீர்த்தாய் -சாஸ்த்ரா முகத்தால் இல்லை நாமே நாம் மட்டுமே அறிய –
தனக்காக கட்டின இரப்பு வாரத்தில் -நிழலை பண்ணிக் கொடுத்தாய் -அவன் அறியாதது சிலவற்றை அவன் தலையில் ஏறிட்டு –
மாடி மாங்காய் இட்டு அவன் அகப்பட்டு நிற்கும் படி / நம்முடையவன் என்று பிடித்து -பொன்னில் அதி லுப்தனான – பொன் வாணியன்
ஓன்று இரண்டு உரையில் -நெடும் பொன் க்ரஹிஷிக்கும் -உடையவன் அறியாமல் உரைத்து -ஸூஷ்ம-இழகின மெழுகால் – ஒத்தி எடுத்து –
ஒன்றும் சேஷியாத படி -எடுத்து -உருக்கி கால் பொன்னாயிற்று -அல்ப அல்பமாக சில திரட்டுமா போலே
பேராசை –ஆத்ம லுப்தனான சர்வேஸ்வரன் -அநாதி பிடித்து அந்தாதியாய் வரும் ஜென்ம பரம்பரைகள் தோறும் -என் அடியாரை நோக்கினாய் என்ற யாதிருச்சிகம் –
என் பேரை சொன்னாய் பிராசங்கிக்கம் -விடாய் தீர்க்கை ஆனு ஷங்கிகம் செய்தவன் அறியாமல் தானே அறிந்து -தானே கல்பித்து -அல்பம் அநேகம் ஆகும்படி
ஓன்று பத்தாக்கி மேல் மேல் என நடத்தி கொண்டு போகும்
ஸ்ப்ருஹநீயமான ஆத்ம வாசத்தை தர்ம சாதனம் உரைகல் – சம்சரிக்கை ஆகிய உரை உரைத்து கிருபா ஆர்த்த சித்தம் ஆகிய மெழுகால் –ஒத்தி எடுத்து –
ஸூ ஹ்ருதம் – பொன் துளிகள் பற்ற எடுத்து -த்ருஷ்ணா விசேஷத்தால் உருக்கி -ஒவ் ஒரு ஸூ ஹ்ருத தவமாக தானே பெருக்கி அது பெற்றாசாக வாழ முயலும்
ஸ்வாதந்திரம் அடக்கி ஆள வல்ல கிருபா -பூர்ண அனுபவத்தை போலி வழிக்கும் பர துக்கத்தை நினைவு படுத்தி வேண்டியது எல்லாம் செய்வித்து –
அவனை அடைய தானே கல்பித்து -சேதனன் அறியா ஒன்றை இடுக்கி -சாதகன் ஒன்றுமே பண்ணாமல் இருக்க செய்வதால் நிர்ஹேதுகம்
யாதிருச்சிகாதிகளை எதிர்பார்த்தாலும் சேதனனுக்கே தெரியாதே –

அஞ்ஞாத ஸூ ஹ்ருதத்தை கொண்டே -நமக்கே தெரியாத -நல்லதாக செய்யப்பட்டதை கொண்டே -கைக் கொள்ளுகிறான் –
யதர்ச்சையாக -யாரோ ஒருவர் இச்சை அடியாக -பிரசங்கம் -ப்ராசங்கிக்கமாக பேசு வாக்கில் /ஆனு ஷங்கிகம் பின் தொடர்ந்து -சேர்க்கை -/
இப்படி மூன்று விதம் -ஆக நிர்ஹேதுகம் -என்றவாறு –
த்ரிபாதாஸ் யாம்ருதம் திவி–1 –மூன்று மடங்கு பெருத்த நித்ய விபூதி -பரம வ்யோமம்- மாக வைகுந்தம் -அம்ருதம் -நித்யம் என்றபடி /
அல்பம் லீலா விபூதி -மஹத் நித்ய விபூதி என்றபடி / இதுக்கு கீழ் எல்லை இல்லை -அதுக்கு மேல் பக்க எல்லைகள் இல்லை /
-தீப பிரகாசத்திலே –வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் அருளி செய்கையாலே –
த்ரிபாத்த்வ-மூன்று-2- போக்யம்-கல்யாண குணங்கள்-திரு மேனி / போக ஸ்தானம் -திரு மா மணி மண்டபம் / போக உபகரணங்கள்-செடி புஷபம் சந்தனம் –
அனைத்தும் அப்ராக்ருதங்கள் /இங்கு அல்பம் இந்த மூன்றும் –
வேறே மூன்றும் –3 -ஜகத் அந்தர்கத வச்தபிமாநிகளான-நித்தியரும்  -கேவல பகவத் அனுபவராய் இருக்கும் -நித்தியரும் முக்தருமாய் –
இப்படி மூன்று அம்சமாய் இருக்கும் ஆத்மாக்களை -திரு ஆழி திருச் சக்கரம் திரு ஆபரணம் அந்தரகதம் – வைகுந்தத்து அமரரும் முனிவரும் –
இப்படி மூவகை ஆத்மாக்கள் அங்கு -இங்கு சம்சாரிகள் முமுஷுக்கள் -கைவல்யம் பகவத் அனுபவம் -மூன்றும் உண்டே
யுகபவதேவ – அநுபகிக்கை-நித்ய முத்தர்கள் உடன் கூடி தன்னுடைய நித்யோதிக தசை-தன் ஸ்வரூபத்தை அனுபவித்தும் –
சாந்தோதித தசை -தன் ரூபம் குணம் விபூதி சேஷ்டிதங்களை அனுபவிக்கை –
அது உண்டது உருக்காட்டாதே -ராஜ் போக்-இத்யாதி திருத் துவாரகை அப்போது அப்போது புது திரு உடைகள் சாத்தி அனுபவம் இங்கே உண்டே
ப்ரஹ்ம தேஜஸ் முகத்தில் தெரியும் -அனுபவித்து -ஜீவனுக்கு /ப்ரஹ்மதுக்கு அனுபவம் சொல்ல வேணுமோ -திரு உள்ளம் நேராக சம்சாரிகள் இடம் தானே சென்று –
நிரங்குச ஸ்வா தந்தர்யம் –உண்டே –
சம்ஹ்ருதராய்க் கிடக்கும் அளவில்–இவன் போகும் வழியில் போகாமல் இருக்க கோபத்தால் தான் சம்ஹாரம் செய்ததை மறந்து -கரண களேபரங்கள் இல்லாமல்
இழக்கிறார்கள் என்ற திரு உள்ளத்தால் தானே ஸ்ருஷ்ட்டி -/ பிரிவே இல்லாத இவன் -சரீராத்மா பாவம் சம்ஹார திசையிலும் உண்டே அப்ருதக் சித்தம் தானே /
பரதன் கூட சேர்ந்தால் தான் இருப்பு இவனுக்கு /
ஏகாகி-தனியன் – அரத்திமான் பவதி -ஹேய ப்ரத்ய நீகன் -ஆனந்த மயத்வம் ஸ்ருதி விரோதிக்காதோ -கர்ம மூலத்து இல்லை -இது கிருபா மூலம் தானே –
சித் சக்தி ஞானம் -இத்தை கொண்டே பிரவ்ருத்தி நிவ்ருத்திகள்
எனக்காக படைத்து -அவன் திரு உள்ளம் படி நடக்காமல் இருந்தும் பொறுத்தும்- -ஜீவ ஸ்வாதந்தர்யம் நாம் தானே கொடுத்தோம் என்ற திரு உள்ளத்தால் -கிருபை பொழிவானே-
எல்லா ஜீவ ராசிகளுக்கும் ஆனுகூல்யமே செய்வதாக சங்கல்பித்து உள்ளான் –
சத்தா தாரக தயா -உளன் கண்டாய் உத்தமன் என்று உள்ளுவார் உள்ளம் உடன் கண்டாய் -எங்கும் சத்தா தாரகத்துக்காக இருந்தாலும்-
அறிந்தவர் உள்ளத்தில் மகிழ்ந்து இருப்பானே –
ஜ்ஞான சிகீர்ஷாண பிரயத்நாதி -அறிகை –முடிவு எடுத்து -பிரயத்தனம் -என்றவாறு
நன்மை என்று பேரிடலாவது–யார் எண்ணத்தால் நன்மை -சாஸ்திரத்தாலும் சேதனன் அறிந்தும் இல்லாமல் தன் திரு உள்ளபடியே என்றபடி –
ச்யேநேந அபி சரண்யஜேத -அபிசார கர்மா -சாஸ்திரத்தில் உள்ளதே -பக்தன் பிரபன்னன் செய்யக் கூடாதே –

——————————————–

சூரணை-382-

லலிதா சரிதாதிகளிலே -இவ்வர்த்தம் –
சுருக்கம் ஓழியக் காணலாம் –

இவ் அஜ்ஞ்ஞாத ஸூ ஹ்ருதம் அடியாக ஈஸ்வரன் அங்கீ கரிக்கும் என்னும் அது –
காணலாம் இடம் உண்டோ -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
விதர்ப்ப ராஜ சூதையாய் -காசி ராஜ மகிஷியான லலிதை -ச பத்நிகளான முன்னூறு ஸ்திரிகளில் காட்டில் –
ஆபிரூப்யம்-அதிவச்ய பர்த்ருமத்தை -தேக தேஜஸ் ஸூ -சர்வ குண சம்பத்தி -இவை உடையளாய்-அஹோராத்ரா விபாகம் அற-
பகவத் சந்நிதியிலே அநேகம் திரு விளக்கு ஏற்றி -அதிலே நிரதையாய் போருகிற படியைக் கண்டு –
உனக்கு இவ் ஆபி ரூபாதிகளுக்கும் தீப ஆரோபண கைங்கர்ய ப்ராவன்யத்துக்கும்-காரணம் என் என்று ச பத்நிகள் கேட்க –
அவள் ஜாதி ஸ்ம்ருதியோடே பிறந்தவள் ஆகையால் –
ததேஷா கதயாம் யேதத்யத்வ்ருத்தம்  மமசோ ப நா -என்று துடங்கி –
ஸௌ வீர  ராஜஸ் யபுரா மைத்ரேயோ பூத்புரோஹிதா
தேனசாய தனம் விஷ்ணோ காரிதம் தேவி கா தடே –
அஹன்யஹாநி சிச்ரூஷாம் புஷ்ப தூபாம் புலேபனை
தீபா தானாதி பிச்சைவ சக்ரே தத்ர வசந்திவிஜா -என்று
ஸௌ வீர ராஜ புரோகிதனான மைத்ரேயன் -தேவி ஆற்றம் கரையிலே -ஓர் எம்பெருமான் கோவில் உண்டாக்கி –
அங்கே நாள் தோறும் சகல கைங்கர்யங்களையும் பண்ணி வர்த்தித்த படியையும் –

கார்த்திகே தீப தோ தீப  உபாத்தஸ் தேன சைகைதா
ஆசின் நிர்வாண பூயிஷ்டோ தேவஸ்ய புரதோ நிசி –
தேவதா ஆயதனே சாசம் தத் ராஹா ம்பி மூஷிகா
பிரதீ  பவர்த்தி க்ரஹேண க்ருத புத்த்திர் வராநனா
க்ருஹீ தாசம யாவர்தீ ப்ரூஷதம் சோர ராவச
நஷ்டா சாஹம் ததஸ் தஸ்ய மார்ஜாலச்ய பயா நுகா
வக்த்ர ப்ராந்தே  நனஸ் யந்த்யா சதி பப்ரேரிதோ மயா
ஜ்ஜ்வால பூர்வத் தீப்த்யா தஸ்மின் நாயத நே பு ந -என்று
கார்த்திகை மாசத்திலே அவன் அந்த எம்பெருமான் சன்னதியில் ஏற்றின திரு விளக்கவியத் தேடுகிற அளவில் –
அக் கோவிலிலே பெண் எலியாய் கொண்டு
வர்த்திக்கிற தான் -அத் திரு விளக்கிலே திரியைக் கவ்விக் கொண்டு போவதாக நினைத்து கவ்வின அளவில் –
ஒரு பூனை கத்தின குரலைக் கேட்டு அஞ்சி –
மரணத்தை அடையா நிற்க -அப்போது பயத்தாலே நடுங்குகிற தன் மூஞ்சியாலே அத் திரி தூண்டப் பட்டு –
முன்பு போலே அத் திரு விளக்கு பள பளத்து எரிந்த படியும் –
ம்ருதாசாஹம்  ததோ ஜாதா வைதர்ப்பீ ராஜா கன்யகா
ஜாதிஸ் மரா காந்திமதீ பவதீ நாம் பரா குணை-என்று
அநந்தரம் தான் மரித்து விதர்ப்ப ராஜனுக்கு புத்ரியாய்-ஜாதி ஸ்ம்ருதியாதிகளோடே பிறந்த படியையும் –
ஏஷ பிரபாவோ தீபச்ய கார்த்திகே மாசி சோபனா
தத் தஸ்ய விஷ்ணு ஆயுதனே யஸ் ஏயம் வுயுஷ்டி ருத்தமா
அசம்கல்பிதம் அப்யச்ய ப்ரேரணம் யத்தக்  ருதம் மயா
விஷ்ணு ஆயுதனே தீபச்ய தச்யத்தப் புஜ்யதே பலம்
ததோ ஜாதி ஸ்ம்ருதிர் ஜன்ம மானுஷ்யம் சோபனம் வபு
வஸ்ய பதிர் மே சர்வாசம் கிம்பு நர் தீப தாயினாம் -என்று அந்த அஜ்ஞ்ஞாத ஸூ ஹ்ருதம் பலமாக
தனக்கு இவ் ஏற்றங்கள் எல்லாம் உண்டான படியையும் -சொன்னாள் என்று –
ஸ்ரீ விஷ்ணு தர்மத்திலே லலிதா சரிதம் விஸ்தரேண சொல்லப் பட்டது இறே-

இனி -ஆதி -சப்தத்தாலே –
தத்வ வித்தாய் இருப்பான் ஒரு பிராமணனுடைய புத்ரியான ஸூ வ்ரதை-அதி பால்யத்திலே மாத்ரு ஹீனையாய் -அது தோற்றாதபடி-பரம தயாளுவான –
பிதா வர்த்தித்துக் கொண்டு போர வளர்ந்து -இனி ஒருவர் கையிலே பிரதானம் பண்ண ப்ராப்தம் என்னும் அளவிலே –
அந்த பிதாவும் மரிக்கையாலே-யதீவ சோகார்த்தையாய்
யேன சம்வர்த்தி தாபாலா எனாச்மி பரிரஷிதா
தேன பித்ரா வியுக்தாஹம் நஜீவயம் கதஞ்சன
நத்யாயம்வா நிபதிஷ்யாமி சமித்தேவா ஹூதாசனே
பர்வ தாத்வா பதிஷ்யாமி பித்ரு ஹீனா  நிராஸ்ரையா-என்று தேஹா த்யாகோத்யுக்தையான  அளவிலே
ஆகத்ய கருணா விஷ்டோ யமஸ் சர்வ ஹிதே ரத
ஸ்தவிரோ ப்ரஹ்மனோ பூத்வா ப்ரோவாசே தம் வசச்ததா -என்கிறபடியே
சர்வ பிராணிகள் உடையவும் ஹிதத்தில் நிரதனாய் இருக்கும் யமன் -க்ருபா விஷ்டனாய் -ஒரு பிராமண வேஷத்தை கொண்டு  வந்து –
அலம்பாலே விசாலாஷி ரோத நே நா தி வஹ்வலே
ந பூய ப்ராப்ய தேதாத ச்தச்மான் நார்ஹதி சோசிதும் -இத்யாதியாலே இவளுடைய சோகாப நோதனத்தை பண்ணி –
தச்மாத்த்வம் துக்க முத்ஸ்ருஜ்ய ச்ரோதும் மர்ஹசி சூவ்ரதே
பித்ருப்ப்யாம் விப்ரயோகோயம் யேனா பூத் கர்மணாதவ-என்று- ஆகையால் உன்னுடைய துக்கத்தை விட்டு -இந்தா மாதா பித்ரு வியோகம்
உன்னுடைய யாதொரு கர்மத்தாலே உண்டாயிற்று -அத்தை சொல் கேள் என்று தான் சொல்லி –
புராத்வம்  சுந்தரி நாம வேச்ய பரம சுந்தரி
நிருத்த கீதாதி நிபுணா வீணா வேணு விசஷணா-என்று துடங்கி –
நீ பூர்வ ஜன்மத்தில் -சுந்தரி என்பாள் ஒரு வேச்யை-உன்னாலே வசீக்ருதனாய் -உன்னுடன் சம்ஸர்க்கித்து   போருவான்
ஒரு பிராமண புத்ரனை உன் நிமித்தமாக
ஸ்பர்சையாலே -ஒரு சூத்திரன் வதிக்க-அவனுடைய மாதா பிதாக்கள் எங்கள் புத்ரனை கொல்லுவித்த நீ –
இனி ஒரு ஜன்மத்தில் மாதா பிதாக்களை இழந்து மருகி பரிதவிப்பாய் என்று
சபித்த படியாலே காண் உனக்கு இந்த சோகம் வந்தது என்ன -ஆனால் இந்த பாவியான நான் உத்தம ஜன்மத்தில் பிறக்கைக்கு ஹேது என் என்று கேட்க –
ஸ்ருணு தஸ்ய மகா ப்ராஜ்ஞ்ஞே நிமித்தங்க ததோ மம
யே நத்வம் ப்ராக்மணச்யாச்ய குலே ஜாதா மகாத்மான -என்று துடங்கி –
ஞ்ஞாநாதிகனாய்  ஒன்றிலும் பற்று அற்று -சர்வத்ர சம தர்சியாய் -பகவத் த்யான பரனாய் –
க்ராமைக்ராந்தர ந்யாயத்தாலே எங்கும் சஞ்சரிப்பான் ஒரு பாகவதன் ஒரு ராத்திரி உன்
புறத் திண்ணையிலே ஒதுங்கின அளவிலே -தலாரிக்காரன்  அவனை கள்ளன் என்று பிடித்து கட்ட –
அவ்வளவிலே நீ வோடிச் சென்று -அக்கட்டை விடுவித்து அந்த பாகவதனை
உன்க்ரஹத்திலே கொண்டு புக்கு ஆஸ்வசிப்பித்தாய்-அத்தாலே உனக்கு இது உண்டாயிற்று என்று
இதிகாச சமுச்சயத்திலே சொல்லப்பட்ட ஸூ வ்ரதோ உபாக்யானமும்

இன்னம் ஒரு ஸ்திரி யமபடராலே அத்யந்த பீடிதையாய் -ஆகாசத்திலே ரஷக அபேஷை தோற்ற -கூப்பிட்டுக் கொண்டு வரா நிற்க –
அஸ்வத்த தீர்த்தத்திலே சிரகாலம் தபசு பண்ணி இருந்த மாதலி -அத்தை கண்டு கிருபை பண்ணி -தான் ஒரு நாள் செய்த தப பலத்தை அவளுக்கு கொடுக்க –
அப்போதே யம படரும் பந்து பூதராய்-யாம்ய மார்க்கமும் – ஸூ கோத்தரமாய் யதனா சரீரமும் போய் -விலஷண சரீரமுமாய் இவளையும் கொண்டு அவர்கள் யம சந்நிதியில் சென்ற அளவில் –
பிதேவ தர்ம ராஜோ பூத் தச்யாஸ் தத்ப்ரிய தர்சன
சாந்த்வயன்ச மஹாதேஜோ வியாஜ ஹாராச தாம்ப்ரிதி -என்று பித்ருவத் ப்ரன்னவதனாய் இவளைக் குறித்து இன்னும் சொல்லும் சொல்லி யமன் –
பத்ரேத்வையா சூஷ்டுக்ருதம் நகிஞ்சிதிஹா வித்யதே
இதோ த்வாதச ஜன்மாந்தே த்வாம் கச்சித் சித்த ஆவிசத்
விஷ்ணு பக்தோ நிவாசார்த்தம் ராத்ர்யா
சாஹிவை பிரம விதுஷீ ஸ்ரீமத் ரங்கம் உபாச்ரிதா
தத்ர தீர்தோத்தமம் ஸ்ரீ மத ச்வத்தம் நாம சம்ஸ்ரிதா
தர்மஜ்ஞா தர்ம பரமா யச்யாச்தே சங்கமோ பவத் -என்று மாதலியினுடைய அங்கீகாரம் உனக்கு வருகைக்கு உறுப்பாக நீ அறியச் செய்த ஒரு நன்மை இல்லை –
இன் ஜென்மத்துக்கு பன்னிரண்டாம் ஜன்மத்திலே ஒரு ராத்திரி உன்னுடைய க்ரஹத்திலே தங்கிப் போகைகாக ஒரு பாகவதன் வந்து உன்னைக் கிட்டி இருந்து போனான் –
தத் சந்நிதானத்தினாலே உண்டது காண் உனக்கு இந்த சாது சமாஹம் என்று முன்பே உண்டானதோர் அஞ்ஞாத ஸூஹ்ருதத்தை இவள் பேற்றுக்கு அடியாக சொன்னான
என்கிற காருட புராணத்திலே கோவில் மகாத்ம்யத்தில் கதையும் முதலான வற்றை சொல்லுகிறது –

சுருக்க மொழியக் காணலாம் -என்றது விஸ்தரேண காணலாம் என்றபடி –
இவ் அஞ்ஞாத ஸூஹ்ருதங்கள் அடியான பகவத் கடாஷமே இவர்களுக்கு இவ்வோ  பலங்கள் வருகைக்கு ஹேதுவாகையாலே-
அஞ்ஞாத ஸூஹ்ருதங்களை பற்றாசக் கொண்டு ஈஸ்வரன் அங்கீகரிக்கும் என்னும் இதுக்கு இவை உதாஹரணம் ஆகலாம் இறே

யாதிருச்சிக்க ஸூ ஹ்ருதம் பல ஹேதுவாக கண்ட இடங்கள் -விஷ்ணு தர்மம் -காசிராஜா-சாறு சர்மா – -360-மனைவி -லலிதை -அத்யந்த அபிமதை-அபி ருபாய் –
தீபம் ஏற்றி கைங்கர்யம் செய்து -ச பத்னிகள் கேட்க-சொல்கிறாள் – -தேவி ஆற்றங்கரையில் –சிந்து சவ்வீரா ராஜா மைத்ரேயன் ஏற்றின திரு விளக்கை
கவ்வித் தள்ள -பெண் எலி யான தான் –கவ்வா நிற்க -பூனை வந்து கழுத்தை கவ்வி ஏங்கி சாவும் நான் -நடுங்கும் மூஞ்சி –
அத்திரியை வாங்கி அவிக்கிற விளக்கு நன்றாக ஏறிய அதன் பலமாக இந்த நன்மைகள் உண்டாயின -என்று சொன்னாள்-
ஸூ வ்ரதை சரித்திரம் –தத்வ வித் ப்ராஹ்மணர் புத்தரை தாயார் இல்லை தந்தையும் போக தர்ம ராஜன் ப்ராஹ்மண வேஷம் கொண்டு வர -பூர்வ ஆர்ஜித பலம் இது –
தெரியாமல் துஷ் க்ருதம்- சுந்தரி வேசியை ஸ்த்ரீ ப்ராஹ்மண புத்ரனை மாற்று ஒருவன் ஹிம்சிக்க –
அவனுடைய மாதா பிதாக்கள் புத்ரனை கொல்வித்த நீ தாய் தந்தை இழந்து சபிக்க
தசரதன் -முகந்து சப்தம் கேட்டு மானை கொன்றால் போலே அதனால் சாபம் அடைந்தான்
பாபியான நான் உத்தம ஜென்மத்தில் -பிறந்து -படுவது எதனால் என்ன –உன் வாசல் திண்ணையில் ஒதுங்கின ஸ்ரீ வைஷ்ணவர் -தலையார் கள்ளன் என்று பிடிக்க
நீ ஆசுவாசம் படுத்தி வீட்டுக்கு உள்ளே கொண்டு சென்றாய் – அத்தாலே உண்டாயிற்று என்று எம தர்ம ராஜன் சொல்லிப் போக – –
இதனால் அஞ்ஞாத ஸூ ஹ்ருதமே ஹேதுவாக -சாதனா புத்தியால் அந்த பல பிராப்தி ஒக்கும் -இந்த இரண்டு சரித்ரங்களால் –
க்ருத புத்த்திர் வாராணனா –இழுக்க வேண்டும் என்று சங்கல்பித்து இழுத்தேன் -செய்தது தீமை ஸ்பஷ்டம்
யுகபத் ஸ்ருஷ்ட்டி -ஒரே காலத்தில் அனைவரையும்-இதுக்கு காரணம் சங்கல்பம்-அனுக்ரஹ அதீனம் இதுக்கு அடி -மேலே
/கர்மம் அடியாக ஒவ் ஒருவரையும் -பிறப்பித்து –
அஸ்வத்த தீர்த்தத்திலே-ஸ்ரீ ரெங்க புண்ய தீர்த்தங்களில் ஓன்று

————————————–

சூரணை-383-

அஞ்ஞரான மனுஷ்யர்கள்
வாளா தந்தான் என்று
இருப்பர்கள்-

ஆக –
சர்வேஸ்வரன் தன் நிர்ஹேதுக கிருபையாலே சம்சார சேதனை உஜ்ஜீவிப்பிக்கையில் யுத்யுக்தனாய் –
கரண களேபர பிரதாநாதிகளைப் பண்ணி -ஸ்வ ஆஞ்ஞா ரூப சாஸ்திர அநு குணமாக இவர்கள் பக்கலிலே சில ஸூ ஹ்ருத விசேஷம் கண்டு
அங்கீகரிக்கலாம் வழி உண்டோ என்று பார்த்து -தத் அபாவத்தில் –
சர்வ முக்தி  பிரசங்கமும் -வைஷம்ய நைர் க்ருண்யமும் வாராமைக்காக -அஞ்ஞாத ஸூஹ்ருதங்களை தானே கல்பித்து –
அவை தன்னை ஜன்ம பரம்பரைகள் தோறும் -ஓன்று பத்தாக்கி நடத்திக்  கொண்டு போரும்படியை விஸ்தரேண அருளிச் செய்து –
அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் அங்கீகார ஹேதுவாம் படியையும்-தர்சிப்பித்தாராய்  நின்றார் கீழ் –
இந் நிர்ஹேதுக விஷயீகார வாசி அறியாதவர்கள் -இதுக்கு இசைந்து வைத்தே -ஏதத் அநு சந்தான வித்தர் ஆகாமல் இருப்பர்கள் என்கிறார் மேல் –

அஞ்ஞர் ஆகிறார் -நிர்ஹேதுக விஷயீகார வைபவம் அறியாதவர்கள் –
வாளா தந்தான் என்று இருப்பர்கள் -என்றது -இப்படி உபகரித்து அருளுவதே என்று தலை சீத்து ஈடுபடுவது வேண்டி இருக்க –
அது செய்யாமல் -வெறுமனே உபகரித்தான் என்கிற மாத்ரத்தை அநு சந்தித்து இருந்து விடுவர்கள் என்றபடி –

ஹேது ஆகாது -சர்வ முக்தி பிரசங்கம் ஆகாமைக்கும் -/ வைஷம்யம் நைர் க்ருண்யம் வாராமைக்கும் தானே –
மந்த அதிகாரிகள் -பெருமை தெரியாமல் -ஸூ யத்ன கந்த அஸஹத்வம்-பாரதந்த்ரம் உள்ள -ஞானிகள் -இல்லாதார் அஞ்ஞானிகள் /
யாதிருச்சிகாதிகளை கண்டு அருளினான் என்று ஈடுபடாமல் வாளா இருப்பார்கள்
அன்றிக்கே
வாளார் –என்றுமாம் -ஸூ பிரயோஜனம் வாழ் கையில் கொண்டு வாழ் வழி ஸூ சக்தியால் இத்தைப் பெற்றோம் என்று இருப்பார்கள் –
காருண்யம் வெளிப்படுத்தவும் -வைஷம்யம் நைர் க்ருண்யம் இல்லாமல் கடாஷிப்பான் என்று சொன்னால் தான் பெருமை –
எனவே அஞ்ஞான ஸூ ஹ்ருதம் அடியாக என்று உணர வேண்டும் வெறுமனே சொல்ல கூடாதே வெறுமனே-உபகரித்தான் -நிர் ஹேதுகம் என்பர் மந்த அதிகாரிகள் –
அஞ்ஞாத ஸூஹ் ருதம் அடியாக கடாக்ஷித்தான் என்று ஈடுபடாமல் -பெருமையை உணராமல் என்றபடி –

——————————————

சூரணை -384-

ஞானவான்கள் –
இன்று என்னைப் பொருளாக்கித் தன்னை என்னுள் வைத்தான் –
எந்நன்றி செய்தேனா என்நெஞ்சில் திகழ்வதுவே-
நடுவே வந்து உய்யக்  கொள்கின்ற நாதன் –
அறியாதன அறிவித்த அத்தா நீ செய்தன அடியேன் அறியேனே –
பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்-
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவித் தொழும் மனமே தந்தாய் –
என்று ஈடுபடா நிற்பர்கள்–

இதன் வாசி அறிந்தவர்கள் ஈடுபடும் படியை அருளி செய்கிறார் –
ஞானவான்கள் ஆகிறார் -நிர்ஹேதுக விஷயீகார வைபவத்தை உள்ளபடி அறியும் அவர்கள்-
இன்று என்னை பொருள் ஆக்கி தன்னை என்னுள் வைத்தான் -இத்யாதி –
அநாதி காலம் அவஸ்துவாய் கிடந்த என்னை -இன்று வஸ்துவாக்கி -நித்ய ஸூரிகளுக்கும் அவ்வருகான தன்னை –
நித்ய சம்சாரிகளுக்கும் இவ்வருகான என்னுடைய ஹேயமான நெஞ்சுள் வைத்தான் –
பெரிய உடையாரைப் போலே தலை உடன் முடிந்தேனோ -திருவடியைப் போலே -த்ருஷ்டா சீதா -என்று வந்தேனோ –
அன்றிக்கே –
தன்னுடைய ஆஞ்ஞா அனுவர்தனம் பண்ணினேனாம் படி விஹித கர்மங்களை அனுஷ்டித்தேனோ –
என்ன நன்மை செய்தேனாக என் நெஞ்சிலே புகுந்து -பெறாப் பேறு பெற்றானாய் விளங்குகிறது –
விஷய பிரவணனாய் போகா நிற்க நடுவே வந்து உஜ்ஜீவிப்பியா நின்ற ஸ்வாமீ-
எனக்கு அஞ்ஞாத ஞாபனத்தை பண்ணி ஸ்வாமியான நீ சேஷ பூதனான என் பக்கல் பண்ணின உபகாரம் -உபகரித்த நீ அறியில் அறியும் இத்தனை என்னால்
சொல்லித் தலைக் கட்டப் போமோ –
அசந்நேவ-என்கிறபடியே -அசத் கல்பனாய் கிடந்த என்னை -சந்தமேனம்-என்கிறபடியே சத்தான   ஒரு வஸ்துவாம்படி பண்ணி -அந்த சத்தை நிலைநிற்கும் படி
கைங்கர்யத்தையும் கொண்டு அருளினாய் –
அம்ருதத்தையும் விஷத்தையும் ஒக்க விரும்புவாரைப் போலே
உன்னையும் உகந்து ஸூ த்திர விஷயங்களையும்  உகக்கும்  பொல்லாத நெஞ்சைப் போக்கினாய் –
அநந்ய பிரயோஜநமாய்  கொண்டு உன்னையே அனுபவிக்கும் மனசை தந்தாய் –
என்று அவன் நிர்ஹேதுகமாகப் பண்ணின உபகார விஷயங்களை அநு சந்தித்து தலை சீய்த்து ஈடுபடா நிற்ப்பர்கள் -என்கை
அன்றிக்கே-
அஞ்ஞர் இத்யாதிக்கு -வாளார் தந்தார் -என்று பாடமாகில் –
இப்படி சர்வேஸ்வரன் தன நிர்ஹேதுக கிருபையாலே தங்களை உஜ்ஜீவிப்பிக்க கிருஷி பண்ணிக் கொண்டு வரும் பிரகாரத்தை அறியாத மனுஷ்யர் –
வாள் வலியாலே ஜீவித்து திரிவார் -தங்களுக்கு வந்த தொரு சம்ருதியை நம்முடைய  வாளார் தந்தார் என்று நினைத்து இருக்குமா போலே –
நிர்ஹேதுகமாக வந்த பகவத் அங்கீகாரத்தை தங்கள் ஸூக்ருத பலத்தாலே வந்ததாக நினைத்து இருப்பர்கள் என்று பொருளாகக் கடவது –
அப்போதைக்கு –
சகலமும் அவன் அருளாலே வந்தது என்று தெளிய கண்டவர்கள்- அவன் நிர்ஹேதுகமாக பண்ணின உபகார விசேஷங்களை அநு சந்தித்து ஈடுபடும்படியை
அருளிச் செய்கிறார் என்று -மேலில் வாக்யத்துக்கு சங்கதி

ஞானவான்கள் – நிர்ஹேதுக கிருபா வைபவம் அறிந்தவர்கள் -என்றபடி
சாஷாத் நிர்ஹேதுகம் -வெறுமனே நிர்ஹேதுகம் இல்லை –எது என்று நாமும் வேதமும் அறியாத தான் மட்டுமே அறிந்த ஓன்று
உபகாரம் -உபகரித்த நீ அறியில் அறியும் இத்தனை என்னால் சொல்லித் தலைக் கட்டப் போமோ —
பர தந்த்ர விசேஷண ஸ்வரூபம் அறிந்தவர்கள் –ஸ்வதந்த்ர விசேஷண பர ப்ரஹ்மத்தையே பற்றி –அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் ஹேது வாகாதே–
என்னது இல்லையே நாம் அறியோம் -சாஸ்திரமும் அறியாதே -காரணம் ஆக்க முடியாதே -குறுக்கே இந்த அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் –
இன்னும் மற்ற பேர் எதனால் போக வில்லை என்று தடுக்கவும் அவன் தலையில் குற்றம் ஏறிடாமைக்கும் தானே /
அவஸ்துவான என்னை வஸ்துவாக்கி -நித்ய ஸூ ரிகளுக்கும் அவ்வருகான தன்னை நித்ய சம்சாரிகளுக்கும் கீழே -உள்ள என்னை -அபேஷா நிரபேஷமாக –
நெஞ்சில் திகழ்கின்றானே தலையோடு முடிந்தேனோ -ஜடாயு போலே செய்ய வில்லையே -/ கண்டேன் என்று வந்தேனோ த்ருஷ்டா சீதா திருவடி போலே –
எந்த நன்மையையும் செய்யாமல் இருக்க –பெறாத பேறு பெற்று விளங்குகிறான்
உதிரக் கையானாய் பர ஹிம்சை யே யாத்திரையாக திரியா நிற்கவும் மத்யே நினைவரை வந்து உஜ்ஜீவிப்பித்துக் கொள்ளும் ஸ்வாமி -நடுவே வந்து உய்யக் கொள்கின்ற நாதன்
அறியாதது அறிவித்த அத்தா -கானா கண்டு அறியாத தத்வார்த்தங்களை அறிவித்த ஸ்வாமி -சேஷி நீர் பண்ணிய உபகரணம் சேஷ பூதனான அடியேன் அறியளாய் இருந்ததோ
அசத்தான என்னை சத்தாக்கி சத்தையை நிலையிட்டாய் -அடிமை கொண்டாய் -அஞ்ஞான குரூரமான மனசை நினைவர கெடுத்து -ஸூ மனஸ் ஸூ அருளி –
தான் அறிந்த சம்பந்தமே ஹேதுவாக கொண்டு அருளியதை ஈடுபட்டு அருளுவார் –சாஷாத் -அவன் மட்டுமே அறிந்த நிர்ஹேதுகம் –

———————————————-

சூரணை -385-

பாஷ்யகாரர் காலத்திலே ஒருநாள் -பெருமாள் புறப்பட்டு அருளும் தனையும் பார்த்து –
பெரிய திருமண்டபத்துக்கு கீழாக -முதலிகள் எல்லாரும் திரள இருந்த அளவிலே –
இவ்வர்த்தம் ப்ரஸ்துதமாக -பின்பு-பிறந்த வார்த்தைகளை ஸ்மரிப்பது–

இந்த நிர்ஹேதுக விஷயீகார ஸ்தாபகம் ஆனதோர் ஐதிஹ்யத்தை ஸ்மரிப்பிக்கிறார்-

அதாவது –
சகல வேதாந்த தாத்பர்ய அர்த்தங்கள் எல்லாம் -சம்சய விபர்யயம் அற நடந்து செல்லுகிற -நல்லடிக் காலமான பாஷ்யகாரர் காலத்தில் –
ஒருநாள் பெருமாள் புறப்பட்டு அருளும் தனையும் பார்த்து -பெரிய திருமண்டபத்துக்கு கீழாக ஞானாதிகரான முதலிகள் எல்லாரும் திரள இருந்த அளவிலே –
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் இது நெடும் காலம் யார்வாசலில் அவர்கள் புறப்பாடு பார்த்து இருந்தோமோ என்று தெரியாது –
இன்று வகுத்த சேஷியான பெருமாள் புறப்பாடு பார்த்து வந்து இருக்க என்ன-ஸூஹ்ருதம் பண்ணினோம் என்ன –
தத் பிரசங்கத்திலே -நித்ய சம்சாரியாய் போந்தவனுக்கு -பகவத் விஷயத்தில் ருசி பிறக்கைக்கு அடி என் என்று விசாரிக்கச் செய்தே –
யாத்ருச்சிக ஸூஹ்ருதம் என்ன -அஞ்ஞாத ஸூஹ்ருதம் என்ன பிறந்ததாய்-
அவ்வளவிலே கிடாம்பி பெருமாள் இருந்தவர் -நமக்கு பகவத் விஷயம் போல ஸூஹ்ருத தேவர் என்னும் ஒருவர் உண்டோ ஆஸ்ரயணீயர் என்ன –
பிள்ளை திரு நறையூர் அரையர் ஸூஹ்ருதம் என்று சொல்லுகிறது – நினைக்கிற விஷயம் தன்னைக் காண் -என்று அருளிச் செய்ய –
ஆக -இப்படி பின்பு பிறந்த வார்த்தைகளை இவ்விடத்திலே நினைப்பது -என்றபடி –
இக்கதை தான் -தரு துயரம் தடாயேல்-என்கிற பாட்டில் வ்யாக்யானத்திலே சங்க்ரஹேண பூர்வர்கள் அருளி செய்து வைத்தார்கள் -இறே –
இத்தால் அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் உண்டாயிற்று ஆகிலும் பல ஹேது அன்று –
அத்தை வ்யாஜமாக்கி அங்கீகரிக்கும் ஈச்வரனே பல ஹேது என்றது ஆயிற்று –

அஞ்ஞர்– பேற்றுக்கு அடி அஞ்ஞாதமான அசேதனம் -என்று நினைப்பர் -அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் தான் அடி என்ற நினைவு உண்டே -இவர்களுக்கு /
அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் சங்கல்பித்த அவனே பேற்றுக்கு அடி -விஞ்ஞாதமான பரம சேதனம் -நன்றாக அறிந்தவன் -ஞான வான்கள் மெய்ஞ்ஞானிகள் கூற்று
வேதாந்தம்-தாத்பர்யம்-ரஹஸ்ய த்ரயம் – -இரண்டும் – சாம்ராஜ்யம் பண்ணும் நல்லடிக்காலம் -இவ்வர்த்தம் வெளிப்படும் நல்ல நாள்
அங்கு ஏதும் சோராமே ஆள்கின்ற நம் பெருமாள் -புறப்பாடு -தனையும்-பெருமாளுக்கு தக்க -பெரிய திரு மண்டபத்தில் -கிழக்கு பக்கம் –
உடையவரை அழகை சேவித்துக் கொண்டு காத்து இருக்கும் நிழலில் -பகவத் குண அனுபவம் பண்ணிக் கொண்டு
ஸூ ஹ்ருதம் அடியாக இங்கே கூடி நிற்கிறோம்
பிரபாகர் அபூர்வ தேவதையை கல்பித்தால் போலே -அபூர்வம் கிளம்பி -மகா பூர்வம் -அபூர்வ வாதம்-
அதே போலே ஸூ ஹ்ருத தேவரை நீர் கல்பித்தீரோ-இதுவும் அசேதனம் தானே —
பிரசங்காத்த ப்ரஸ்த்துதாம் -சாத்யமாய் அசேதனம் புறப் பூச்சு -இல்லை –சித்தம் -பரம சேதனம் -வைரம் பற்றின அனந்தன் மேல் கிடந்த எம் புண்ணியனை-
வடிவு பட்ட சாஷாத் ஸூஹ்ருதம் காணும் அவர் சொல்வது -நிர் ஹேதுகம் –
ஸ்ரீ பாஷ்ய காரர் ஸ்ரீ ஸூக்திகளை அதிகாரிகள் அல்லாதார் கேட்க கூடாதே நினைவில் கொள்ள வேண்டும் –

சாஷாத்தாக -நிர்ஹேதுகமாக பல பர்யந்தம் -அருளினாலும் -அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் பற்றாசாக -என்பது –
வரவாறு ஓன்று இல்லை -அடியேனுக்கும் தெரியாது -சாஸ்திரமும் ஒத்துக் கொள்ள வில்லையே -ஆகவே நிர்ஹேதுகம்
ஆகையால் சாஷாத் -இத்தையும் எதிர்பார்க்காமல் –என்று நேராக சொல்லாமல் -ப்ராதிதிக தோற்றுவதால் –
நிர் ஹேதுகத்வம் ஸூ சகம் வேதாந்தத்தில் -மறைந்ததே இருக்கும்
நாயமாத்மா-அயம் ஆத்மா -தியானாதிகளால் அடைய முடியாதே -எமே ஏஷ வ்ருணித தேன லப்ய –
அடையப் படுகிறான் -தன்னை அவனுக்கே முழுவதுமாக காட்டி அருளுகிறார்
யார் ஒருவன் -ஏதாவது பண்ண வேண்டுமா வேண்டாமா -பிரியதமனாக இருப்பவனையே வர்ணித்து கொள்கிறான் -ஹேது இருக்குமே பிரியதமன்-
ஆனால் இவனால் எத்தாலும் அடைய முடியாது என்று அருளிச் செய்த அனந்தரம் ஏதோ அல்பம் எதிர்பார்ப்பதாக சொன்னால் விரோதிக்குமே
சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் -பற்றாசாக கொண்டு கடாஷியா நிற்கும்
இது இவர் திரு உள்ளம் இல்லையே -எதிர்பார்க்கிறான் என்று சொல்ல முடியாதே
சாஸ்த்ர தாத்பர்யம் -ரஹஸ்ய த்ரயம் –வேதாந்த தாத்பர்ய உபய த்ருஷ்ட்டி வேண்டுமே –அதனாலே ஸ்ரீ பாஷ்யகாரர் ஸ்ரீ ஸூ க்திகளைக் காட்டி அருளுகிறார் –
ஈஸ்வரன் ஸுஹார்த்தாலே அனைத்தையும் பண்ணினான் என்றாலே சர்வ முக்தி பிரசங்கம் வருமே –
நடுவில் ஏதோ ஓன்று நடக்கும் -என்றால் அவன் ஸ்வாதந்தர்யத்துக்கும் நிரபேஷத்துக்கும் குறை வராமல்
வைஷம்ய நைர் க்ருண்யம் வாராமல் இருக்க -ஆழ்வார் பாசுரங்கள் கீழே பலவும் காட்டி அருளினார்
அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் இவற்றில் ஒன்றுமே இல்லையே -மறைத்து அருளிச் செய்கிறார் என்று ஆய் ஸ்வாமி இதனால் அருளிச் செய்கிறார்-
மேல் வேறே ஓன்று குழப்பம் – உபாயாந்தரம் ச ஹீதுகம் புரியும் / நமக்கு நிர்ஹேதுகம் -ஆழ்வாருக்கு நிர்ஹேதுகம் -இரண்டுக்கும் நிறைய வாசி உண்டே
நமக்கும் பக்தி யோகானுக்கும் வாசி ஸ்பஷ்டம் / அத்யந்த பாரதந்தர்யம் அறிந்தவர்கள் ஆழ்வார்கள் /
எல்லா குணங்களும் எல்லா சாஸ்திரமும் ஜீவிக்க வேண்டும்
ஸாத்ய உபாயம் -சித்த உபாயம் இரண்டும் -ஸ்வா தந்தர்யம் இருப்பார்க்கும் இல்லாதவருக்கும் -இது தெளிவு /
நிரங்குச ஸ்வாதந்தர்யம் அடியாக -இந்த இரண்டு கோஷ்டிக்கும் வேலை இல்லையே
இதற்கு ஆழ்வார்கள் -/ நம்மிடம் அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் அதிகாரம் -/ நிராங்குச ஸ்வாதந்தர்யத்துக்கு விநியோகம் வேண்டுமே -இத்தையும் வேண்டாமல் ஆழ்வார்களுக்கு –
மயர்வற மதி நலம் அருளினது நிர்ஹேதுகம் -அத்தை வைத்துக் கொண்டு நாம் உரிமை கொள்ள முடியாதே /
சாஸ்த்ர யோஜனையில் -அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் அடியாக -என்றும் -தாத்பர்ய யோஜனையில் -ஒன்றுமே இல்லாமல் -என்றும் -கொண்டு
நாம் உபாயாந்தரம் ஒன்றும் பற்றாமல் அபாயத்தையே பண்ணிக் கொண்டே இருக்கிறோம் -ஈச்வரஸ் ச ஸுஹார்த்தம் -போது அனைவருக்கும்
யாதர்ச்சுக ஸூ ஹ்ருதம் அடுத்து -இதுவும் அனைவருக்கும் வருமே –பொது கடாக்ஷம் மாற்றி விசேஷ கடாக்ஷம் எங்கே மாறும் -அவன் மாற மாட்டார் –
தண்டவாளம் தானே மாற்ற வேண்டும் -ரயில் தானே மாறாதே -அதே போலே -தடம் புரண்டது என்கிறோம் ரயில் புரண்டது என்று சொல்லாமல் -தப்பு தண்டவாளத்தில் தானே
உபாய பாவம் இருந்தாலும் அபாய பாவம் இருந்தாலும் சித்த உபாயம் சித்திக்காதே –அஞ்ஞாத ஸூ ஹ்ருதமும் அவனே சேர்த்து வைத்து இருக்க –
உபாய அபாய பாவத்தால் இவை வேலை செய்யாதே -/ கடாக்ஷிக்க வரும் பொழுது குற்றங்கள் -பாப கர்மாக்களோ விஷயாந்தர சம்பந்தமோ
தேவதாந்த்ர பஜனமோ பாகவத அபசாரமோ இருந்தால் -கார்யகரம் ஆகாதே –
அபாயம் உள்ளவர்களுக்கு பலிக்க வில்லை என்றால் -அபாயம் இல்லாமை ஹேது வாக்குமோ என்னில் -இல்லையே -அதிகாரம் தானே
தடம் மாறாமல் இருக்க தானே புகை வண்டி நிலையத்துக்கு வர முடியும் -இது காரணம் இல்லையே -அதே போலே –தடம் புரளாமல் இருப்பதே இதன் கர்தவ்யம் /
அபாயம் இல்லாமை இதே போலே அதிகாரி விசேஷணம் தான் -இதுவே தாத்பர்ய சாரார்த்தம் -/
உபாயத்தையும் அபாயத்தையும் பற்றாமல் -அவனையே தடுக்காமல் இருக்க வேண்டும் -தடுத்தவர்கள் பலம் அடியார்கள் –
ஞானாதிகரான முதலிகள் –384 -இனி ஞானாதிகர் ஈடுபட்டு இருக்கும்-ஆய் ஸ்வாமிகள் வியாக்யானம் – -ஞானவான் -சூரணை வார்த்தை /
ஞானம் அதிகம் உள்ள ஆழ்வாராதிகள் என்று காட்டாமல் / ஆழ்வார்கள் பாசுரம் பிரமாணம் -அதிலும் நம்மாழ்வார் பாசுரங்களையே பிரமாணம் காட்டி அருளுகிறார் –
ஞானாதிகர் -அவர் ஒருவரே -அஞ்ஞாத ஸூ ஹ்ருதத்தையும் எதிர்பாராமல் இவர் இருப்பாரே /
இப்படி யார் இருந்தாலும் இப்படி தான் ஈடுபடுவார்கள் என்று காட்டி அருளுகிறார் –
ஸூஹ்ருதம் என்று சொல்லுகிறது நினைக்கிற விஷயம்-நினைப்பது ச சர்வேஸ்வரன் தானே -நாமும் அறியோம் -சாஸ்திரமும் அறியாதே –
உன் தன்னைப் பிறவி புண்ணியம் நாம் உடையோம் என்பது போலே -உன் சரண் அல்லால் வேறே சரண் இல்லை -உன் நினைவே சரண் -பேற்றுக்கு அடி அவன் நினைவே

———————————————————–

சூரணை -386-

ஆகையால் அஞ்ஞாதமான
நன்மைகளையே பற்றாசாகக் கொண்டு
கடாஷியா நிற்கும் —

கீழ் உக்தமான அர்த்தத்தை நிகமிக்கிறார்-

அதாவது –
கீழ் சொன்ன  பிரகாரத்தாலே –
சர்வ முக்தி பிரசாங்காதிகள் வாராமைக்காக இச் சேதனன் அறியாமல் விளையும் அவையான சில ஸூஹ்ருத விசேஷங்களையே-இவனை
அங்கீகரிக்கைக்கு பற்றாசாக பிடித்து கொண்டு விசேஷ கடாஷத்தை பண்ணா நிற்கும் -என்கை-

தன் சம்பந்தமே ஹேதுவாக -அங்கீ கரிக்கிறார் -அஞ்ஞாத ஸூ ஹ்ருதம் தேவை இல்லையே -சர்வ முக்தி பிரசங்கம் வாராமைக்காக சேதனனால்
அஞ்ஞாதமான ஸூ ஹ்ருத -துச்ச நன்மைகள் -சேதன அங்கீ கார பற்றாசாக கொண்டு – கடாஷியா நிற்கும் –
ஆகையால் -சாஷாத் நிர்ஹேதுக உத்தி சித்த தாத்பர்யம் -வேதாந்தம்- ரஷ்யாம் அபேக்ஷை எதிர்பார்க்கிறான் என்பதால் – -ஏதாவது ஒன்றையே –
காரண விசேஷம் இன்னது என்று அறிய முடியாத காரணத்தை பற்றி அருள்கிறான் -/ வேதாந்த யோஜனைக்காக மறைத்து அருளுகிறார் –

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: