ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –321-365 -சத் குரூப சேவகம்/-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் –ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது நான்காவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் /
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் /

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் -24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது ஏழாவது பிரகரணம்

——————————————-

சூரணை -321-

சிஷ்யன் எனபது
சாத்யாந்தர நிவ்ருத்தியும்
பல சாதனா சூச்ரூஷையும்
ஆர்த்தியும்
ஆதரமும்
அநசூயையும்
உடையவனை –

ஆக –
தான் ஹித உபதேசம் பண்ணும் போது -என்று துடங்கி -ஆசார்யத்வ பூர்த்தி இல்லை –
என்னும் அளவும் ஆசார்ய ஸ்வரூபம் சோதனம் பண்ணி -அநந்தரம் அதின் மேல் வந்த
பிரா சங்கிக சங்கைகளையும் பரிகரித்தார் கீழ்-
மேல் சிஷ்ய ஸ்வரூப சோதனம் பண்ணுகிறார் –

சிஷ்யன் எனபது -என்றது -உபதேச ஸ்வரணம் மாத்திரம் கொண்டு -மேல் எழுந்த வாரியாக
சொல்லுகை அன்றிக்கே-சிஷ்யன் என்று முக்யமாக சொல்லுவது -என்றபடி –
சாத்யாந்தர நிவ்ருத்தி-யாவது -ஸ்வரூப விரோதியான ஐஸ்வர்ய கைவல்யங்கள் ஆகிற
ப்ராப்யாந்தரத்தில் மறந்தும் அன்வயம் அற்று இருக்கை –
அன்றிக்கே
இவ் ஆசார்யன் தன்னை ஒழிய வேறு ஒரு பிராப்ய வஸ்து அறியேன் என்று இருக்கையும் ஆகவுமாம்-
பல சாதனா சூச்ரூஷை-யாவது -குரு சுச்ரூஷா  தயா வித்யா -என்கிறபடி
ஆசார்யனை தான் பண்ணுகிற சூச்ரூஷையாலே சந்தோஷிப்பித்து ஞானோப ஜீவனம் பண்ணுகை
ப்ராப்தம் ஆகையாலே -ஆசார்யன் தனக்கு உபகரிக்கிற தத்வ ஞானம் ஆகிற
பலத்தினுடைய சித்திக்கு சாதனமாய் இருந்துள்ள ஆசார்ய பரிசர்யை –
அன்றிக்கே –
ஸ்வரூப அநு ரூபமான பலத்திலும் -சாதனத்திலும் உண்டான ஸ்ரோதும் இச்சை யாகவுமாம்-
அதவா
ஆசார்ய முக உல்லாசம் ஆகிற பலத்துக்கு சாதனமான தத் பரிசர்யை -என்னவுமாம் –
ஆர்த்தி -யாவது -இருள் தருமா ஞாலம் -என்கிறபடியே பிறந்த ஞானத்துக்கு விரோதியான
இவ் விபூதி யினின்றும் கடுகப் போகப் பொறாமையாலே வந்த க்லேசம் –
அன்றிக்கே
ஆசார்ய விக்ரக அனுபவ அலாபத்தில் க்லேசம் ஆகவுமாம் –
ஆதரம்-ஆவது -உத்தரோத்தரம் அனுப பூஷை-விருப்பம் – விளையும் படி ஆசார்யன் அருளி செய்கிற
பகவத் குண அனுபவத்தில் மென்மேலும் உண்டாகா நிற்கிற விருப்பம் –
அன்றிக்கே
ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டாப் போலே -தத் அனுபவ
கைங்கர்யங்களிலே மண்டி விழும்படியான விருப்பம் ஆகவுமாம் –
அநசூயை ஆவது -ஆசார்யன் -பகவத் பாகவத வைபவங்களை பரக்க
உபபாதியா நின்றால்-ப்ரவஹ்யாம் ய ந சூயவே -என்னும் படி இதில் அசூயை அற்று இருக்கை –
அன்றிக்கே
ஆசார்யனுடைய உத்கர்ஷத்தையும் -ச பிரமசாரிகளுடைய உத்கர்ஷத்தையும் கண்டால்
அதில் அசூயை அற்று இருக்கை -என்னவுமாம்-அசூயா பிரசவ பூ -என்கிற இதுக்கு ஹிதம் சொன்னவனுடைய உத்கர்ஷமே ஆயிற்று
பொறாது என்று இறே பூர்வர்கள் அருளி செய்தது -பகவத் விஷயத்தில் உள் பட அசூயை
பண்ணா நின்றால் -ததீய விஷயத்தில் சொல்ல வேணுமோ –
இதம் துதே குஹ்ய தமம் ப்ரவஹ்யாம் யநசூயவே-என்றான் இறே –
ஆக -இப்படி இருந்துள்ள  சத் குண சம்பன்னனை ஆயிற்று -நேரே சிஷ்யன் எனபது –

ஸச் சிஷ்ய ஸ்வரூப சோதனம் -சிஷ்ய சப்தத்துக்கு அர்த்தம் இதில் -ஸ்ரவணம் பண்ணும் அனைவரும் சிஷ்யர்கள் இல்லையே -இந்த ஐந்தும் வேன்டும்
யுக்த லக்ஷண சதா ஆச்சார்யர் சேவைக்குத் தக்க ஸச் சிஷ்யர் -ஸூ ஆச்சார்ய கைங்கர்யமும் அவருக்கு உத்தேசியமான பகவத் பாகவத-தத் ததீய – கைங்கர்யமும் —
இதை ஒழிந்து தனக்கு விருப்பம் என்று பண்ணினால் சாத்யாந்தரம் ஆகும் -இதிலே சவாசன நிவ்ருத்தி வேண்டுமே -ஐஸ்வர்யம் கைவல்யாதிகள் -கீழ் நிலை /
1–பல சாதன -பகவத் விஷய ஞானத்துக்கு -சாதன மான -ஆச்சார்யருக்கு-அவருக்கு -கைங்கர்யம் -சிசுரூஷை –
2 –ஸ்வரூப அனுரூபமான ஸ்ரோதும் இச்சா சிசுரூஷா -பலத்தையும் சாதனத்தையும் கேட்க இச்சா -என்றுமாம்
3–பலமான ஆச்சார்யர் அடைதல் -அதுக்கு சாதனம் பகவான் -அதுக்கு சிசுரூஷா
4–பலம் ஆச்சார்யர் அடைய சாதனம் பாகவதர்கள் -அவர்களுக்கு கைங்கர்யம்
5–ஆச்சார்ய கைங்கர்யம் சாஷாத் பலம் -அதுக்கு சாதனம் திருமேனி கைங்கர்யம் -சிசுரூஷை –
இப்படி பல படைகளால் அருளிச் செய்வார்கள் –
சிசுரூஷையும் ஆர்த்தியும் -துடிப்பும் வேண்டுமே -சம்சாரம் பிரதிபந்தகங்கள் -அடிச்சுட்டு -கொதித்து -அதிசயித்து வரும் ஆர்த்தியும்
ஆச்சார்ய விக்ரஹ அனுபவ நித்ய கைங்கர்யம் செய்ய -ஆதாரம் வைகுந்தம் -அதர பரத்ர இங்கும் அங்கும் -நிரந்தர சேவா யோக்ய பூமி கொழுந்து விடும் ஆதாரம்
ஞான அனுஷ்டானம் கண்டும் அவர்கள் பண்ணும் கைங்கர்யம் கண்டும் – ச ப்ரஹ்மசாரிகள் பக்கல் -அந சூயை -கொண்டு –
இப்படி –பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூப–ஈடுபட வேண்டிய விலக்க வேண்டிய -ரூப – சத் குண சம்பன்னனை ஸச் சிஷ்யன் என்னும் –
மேல் சிஷ்ய ஸ்வரூப சோதனம் பண்ணுகிறார் –
மேல் எழுந்த வாரி– வாரி தண்ணீர் -ஆழ்ந்து இல்லாமல் என்றபடி -இந்த ஐந்து லக்ஷணங்கள் உள்ளவனையே ஸச் சிஷ்யன் –
தேவு மற்று அறியேன் என்று இருக்கை -உறாமை உடன் உற்றேன் ஆகாமல் ஒழிந்தது ஆர்த்தி பூர்த்திக்காகத்தானே –
அனுப பூஷை-விருப்பம் -/ அடுத்து அடுத்து பூய ஏவ மஹா பாவோ -திரும்பி திரும்பி அருளிச் செய்வான் – -திரும்ப திரும்ப கேட்க ஆசை அர்ஜுனன் –

——————————————–

சூரணை-322-

மந்த்ரமும் -தேவதையும்- பலமும் –
பல அநு பந்திகளும் -பல சாதனமும் –
ஐஹிக போகமும் -எல்லாம்
ஆசார்யனே என்று நினைக்க கடவன் –

இப்படி உக்த லஷணனான சிஷ்யனுக்கு ஸ்வ ஆசார்யர் விஷயத்தில்
உண்டாக வேண்டும் பிரதிபத்தி விசேஷத்தை விதிக்கிறார் மேல் –

அதாவது –
மந்தாரம் த்ராயத இதி மந்திர -என்கிறபடியே அநு சந்தாத்ரு ரஷகமாய் இருந்துள்ள –
திருமந்த்ரமும் –
தத் பிரதிபாத்ய -பர தேவதையும் –
தத் பிரசாத லப்தமான -கைங்கர்ய ரூப மகா பலமும் –
தத் அநு பந்திகளான-அவித்யாதி நிவ்ருத்தி பூர்வகமான -ஸ்வ ஸ்வரூப ஆவிர்பாகமும் –
சா லோக்யாதிகளும் -ஆகிய இவையும் –
ததாவித பல பிரதமான சாதனமும் –
புத்திர தார க்ருக ஷேத்திர பசு அன்னாத்ய அநு பவ ரூபமான இஹ லோகத்தில் போக்யமான இவை எல்லாம்
நமக்கு நம்முடைய ஆசார்யனே என்று பிரதிபத்தி பண்ணக் கடவன் -என்கை-
குருரேவ பரம் பிரம
குருரேவ பரா கதி
குருரேவ பரா வித்யா
குரு ரேவ பராயணம்
குருரேவ பரா காமோ
குருரேவ பரம் தனம்
யஸ்மாத் தத் உபதேஷ்டா ஸௌ
தஸ்மாத் குருத ரோகுரு-என்றும் –
ஐ ஹிகம் ஆமுஷ்மிகம் சர்வம் ச சாஷ்டாஷர தோகுரு இத்யேவம் யே நமந் யந்தே த்யக்தவ்யாஸ் தே மநீஷிபி-என்றும் இப்படி
சாஸ்த்ரங்களில் சொல்லுகையாலே -நினைக்கக் கடவன் -என்று விதி ரூபேண அருளி செய்கிறார்-

ஈத்ருசனனான சிஷ்யனுக்கு -உண்டாக வேன்டும் அத்யாவசிய விசேஷம் -மனனம் பண்ணுபவனை ரஷிக்கும் திருமந்திரமும் -தன் மந்த்ர பிரதிபாத்ய
பலம் பரதேவதையும் -தத் பிரதாத்மமான கைங்கர்ய பெரும் பலமும் -பலத்துடன் தொடர்ந்து-வருமவையான -விரோதி நிவ்ருத்தியும்
பிராப்தி அனுபவ ப்ரீதி ரூபங்களாயும் -சர்வ தேச கால அவஸ்தா கைங்கர்ய – தத் பல சித்த சாதனமும் -புத்ர பசு அன்னாதி
இஹ லோக ஐஸ்வர்யங்களும் ஆச்சார்யர் -என்று அத்யவசித்து நிர் பரராய் இருக்கக் கடவன் –
சேம நல் வீடும் இத்யாதி திருவாய் மொழியே போலேயும் / மாதா பிதா இத்யாதி போலேயும் /
மந்த்ரமும் பலமும் -சாதன சாத்தியம் -சமான அதிகாரணம் ப்ரதிபாத்ய ப்ரதிபாதக சம்பந்தம் -உபதேசிப்பது -ஸூ ஆச்சார்ய கைங்கர்யம் -விஷய விஷீயீ சம்பந்தம் உண்டே
குருரேவ பரம் பிரம-பர தேவதை
குருரேவ பரா கதி-பரமமான சாதனம் –
குருரேவ பரா வித்யா–மந்த்ரமும்
குரு ரேவ பராயணம்-பரம ப்ராப்யம் பலம்
குருரேவ பரா காமோ-தத் பல அனுபந்திகளும் –
குருரேவ பரம் தனம்-ஐ ஹிக போகம்
யஸ்மாத் தத் உபதேஷ்டா ஸௌ-தஸ்மாத் குருத ரோகுரு–அனைத்தும் சச்சார்யார் என்ற விசுவாசம் வேண்டுமே
ஐ ஹிகம் ஆமுஷ்மிகம் சர்வம் ச சாஷ்டாஷர தோகுரு இத்யேவம் யே நமந் யந்தே த்யக்தவ்யாஸ் தே மநீஷிபி
மந்த்ரம் தேவதா சாதனம் ஐஹிக போகங்கள் ஐஹிகம் -/பலமும் அனுபந்திகளும் ஆ முஷ்மிகம் / அஷ்டாக்ஷரம் கொடுக்கும் ஆச்சார்யரே –
இப்படியாக யார் நினைக்க வில்லையோ அவர்கள் மநுஷ்யரால் கை விடப் பட வேண்டியவர்கள்

——————————–

சூரணை -323-

மாதா பிதா யுவதய -என்கிற
ஸ்லோகத்திலே
இவ் அர்த்தத்தை
பரமாச்சார்யரும் அருளிச் செய்தார் –

இப்படி தாம் அருளிச் செய்த இவ் அர்த்தத்தில் ஆப்திக்கு உடலாக இது பரமாச்சார்ய வசன சித்தமும் -என்று அருளிச் செய்கிறார் –

அதாவது
மாதா பிதா யுவதயஸ் தனயா விபூதி ஸ சர்வம்
யதேவநிய மே நம தன்வயானாம் -என்றி ஐ ஹிக போகங்களையும் -சர்வம் -என்று
அநுக்த சகல கத நத்தாலே -மந்திர தேவதா பலாதிகளையும் எடுத்து –
இத்தனையும் ஆழ்வார் திருவடிகளே என்று அருளிச் செய்கையாலே –
அந்த ஸ்லோகத்தில் இவ் அர்த்தத்தை பரமாச்சார்யான -ஆளவந்தாரும் – அருளிச் செய்தார் என்கை –

ஆழ்வார் திருவடிகளே பிரிய பரமாயும் –விருப்பமாயும் -ஹித பரமாயும் -நலத்தையே -அபிமதமும் -ஆசைக்கு விஷயம் -ஸூ ககரமும் -தனயன் –
ஸ்ப்ருஹணீயமும்-விபூதி -சர்வம் ஐஹிக போகமும் -சர்வம் -சொல்லாமல் விடப்பட்டவை அ நுக்த வாசகம் -பல சாதன அனுபந்திகளும் –பர தேவையும் –
ச விசேஷண-அடை மொழி யுடன் கூடிய ப்ரணதி வாசகம் -ஸ்ரீ மத் தத் அங்கரி யுகளம் -மந்த்ரம் என்னும் இடமும் –வகுளா பரணர் திரு நாமம் உண்டே /
விசேஷணம் -கைங்கர்ய செல்வமுடைய ஆழ்வார் திருவடிகள் -ஆய அர்த்தம் / ப்ரணமாமி நம–மந்திரத்துக்கு வேண்டியவை எல்லாம் உண்டே /
அவதாரணம் நியமேன -ஏவ -அத்யாவசியம் உண்டே /குரோர் நாம சதா ஜபேத் -குரு ரேவ பர ப்ரஹ்ம எழுத்து அக்ஷரம் அறிவித்தவன் இறைவன் ஆவான் –
குரு ரேவ பரம் தனம் -சொத்து குருரவ பர காம –விருப்பம் குரு ரேவ மாதா பிதா –

————————————————–

சூரணை -324-

இதுக்கடி
உபகார ஸம்ருதி-

இப்படி எல்லாம் இவனே என்று அநு சந்திக்கைக்கு அடி எது என்ன-
அருளிச் செய்கிறார் –

அதாவது –
இப்படி ஆசார்யனே நமக்கு சகலமும் என்று அநு சந்திக்கைக்கு ஹேது –
நித்ய சம்சாரயாய் கிடந்த தன்னை -உபதேசாதிகளாலே திருத்தி –
நித்ய சூரிகளுடைய அனுபவத்துக்கு அர்ஹனாம் படி பண்ணின உபகார அநு சந்தானம் -என்கை –

ப்ராந்தனோ என்ற சங்கை வருமே இப்படி ஒன்றை மாற்று ஒன்றாக நினைத்தால் -விபரீத ஞானம் கூடுமோ என்னில் -அறியாதது அறிவித்த மஹா உபகார ஸ்ம்ருதி உண்டே –
அறியா காலத்து உள்ளே அடிமைக்கு அன்பு செய்வித்த -அறியா மா மாயத்து அடியேனை -அத்தன் ஸ்வாமி தந்தை -/
திருத்திப் பணி கொள்வான் -பயன் நன்றாகிலும் பங்கு அல்லராகிலும் -/ க்ருதம் செய்யப்பட்டது அறிநிறான் ஞானாதி -க்ருதஞ்ஞன் /
உபதேசாதி -ஆதி என்றது அனுஷ்டானம் -கருணை -கடாக்ஷ பலம் இவற்றால் / எட்டு எழுத்தே ஸர்வார்த்த சாதகம் -அத்தையே கொடுத்த ஆச்சார்யர் —
வைகுந்த மா நகர் மற்றது கை அதுவே -மந்த்ரம் கிடைத்தால் -/ ஆத்மனோ அதி நீசன் -யோகி த்யேய பதம் அர்ஹம் -ஆகும் படி பண்ணின –
கிருபையால் உபகரித்த -சத்ருசமாக கொடுக்க ஒன்றுமே இல்லை -திருவடிக்கு திரும்பக் கொடுக்க உயிரை கொடுத்தாலும் நிகர் இல்லை –

————————————————–

சூரணை -325-

உபகார ஸ்ம்ருத்திக்கு முதலடி
ஆசார்யன் பக்கல் க்ருதஜ்ஜதை –
முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஜ்ஜதை –

இவ் உபகார ஸ்ம்ருதி பிரசங்கத்திலே -அதனுடைய பிரதம சரம அவதிகளை தர்சிப்பிக்கிறார்-

இச் சேதனன்  முந்துற அநு சந்திப்பது -அஞ்ஞான ஞாபன முகத்தாலே –
தனக்கு அகிலத்தையும் அறிவித்து -பகவத் விஷயத்தை கைப் படுத்தின -ஆசார்யன் பண்ணின உபகாரத்தை ஆகையாலே –
உபகார ஸ்ம்ருத்திக்கு முதலடி ஆசார்யன் பக்கல் க்ருதஜ்ஜதை -என்கிறது –
க்ருதஜ்ஜ்தையும் உபகார ஸ்ம்ருதியும் பர்யாயம்
ஆச்சார்ய கெளரவம் நெஞ்சில்பட -அவ் விஷயத்தில் தன்னைக் கொண்டு வந்து சேர்த்த ஈஸ்வரன் பண்ணின கிருஷி பரம்பரையை பின்னை அநு சந்திக்கையாலே –
முடிந்த நிலம் ஈஸ்வரன் பக்கல் க்ருதஜ்சதை –என்கிறது -இதுவும் ஈஸ்வரன் பக்கல் உபகார ஸ்ம்ருதி என்றபடி –
இத்தால் -பகவத் விஷயத்தை உபகரித்த ஆசார்யன் பண்ணின உபகாரத்தை அநு சந்திக்க இழிந்தால் -அவனுடைய வைபவம் நெஞ்சிலே ஊற்று இருந்தவாறே –
இப்படி இருக்கிற விஷயத்தை நாம் பெற்றது எம் பெருமானாலே அன்றோ என்று தத் க்ருத உபகார அநு சந்தானத்திலே சென்று தலைகட்டும் என்றது ஆயிற்று –

ஒரு பொருள் பன் மொழி -செய் நன்றி அறிதல் -/ அறிவித்த ஆச்சார்யர் கிடைத்ததும் பகவான் இன் அருளாலே தானே /அத்யாவசாய ஹேதுவான –
உபகார ஸ்ம்ருதிக்கு -மந்த்ரமும் –இத்யாதி எல்லாம் ஆச்சார்யனே -ஏவ காரம் தான் அத்யாவசய ஹேது -முதல் படி தன்னை இவ்வளவு ஆக்கின -ஆச்சார்யன் பக்கல்
-கையில் கனி என்ன கண்ணனைக் காட்டித் தந்ததால் உபகாரம் அனுசந்திப்பதால் -/ முடிந்த நிலம் -ஈர்ப்பு காந்தன் பெருமாள் தானே —
ஆச்சார்ய பிராப்திக்கு ஹேதுவான ஈஸ்வரன் பக்கல் இந்த உபகரித்தத்தை அநுஸந்திக்கும் நன்றி உணர்வு உண்டே /
பிரதம உபகார ஸ்ம்ருதி -உபகார்ய வஸ்துவின் வை லக்ஷண்யத்தைப் பற்றி வரும் –ஸ் வ இதர ஸமஸ்த வஸ்து விலக்ஷணன் பகவான் தானே -அதனால் வரும் –
சரம உபகார ஸ்ம்ருதி உபகார்ய வஸ்துவின் கௌரவ்யத்தை பற்றி வரும்-கௌரவம் -மஹா உபாகரத்வம் –
குருர் குரு தம -குருவாக இருப்பதை காட்டிலும் குருவான தன்மை -சர்வேஸ்வரனையே கொடுத்ததால் –
முன்புற ஈஸ்வர வை லக்ஷண்யம் ஆச்சார்யருக்கு வசப்பட்டு இருக்கும் -முடிவில் ஆச்சார்ய கௌரவமும் ஈஸ்வர கௌரவமும் பகவானுக்கு சேஷமாய் இருக்கும் –
வெள்ளி விட தங்கம் ஏற்றமாக இருந்தாலும் -வெள்ளி கொடுத்தவரை விட தங்கம் கொடுத்தவர் ஏற்றம் தானே -ஏற்றம் மாறுமே –
க்ருதம்-செய்ததை ஞானம் -அறிவு – க்ருதஞ்ஞதையும் உபகார ஸ்ம்ருதியும் பர்யாயம் – -வேதம் த்யானம் நித்யாஸனம் உபாசனம் பக்தி பர்யாயம் போலே

———————————

சூரணை-326-

சிஷ்யனும் ஆசார்யனும்
அந்யோந்யம் பிரிய ஹிதங்களை
நடத்தக் கடவர்கள் –

இந்த சாதாச்சர்யா -சச் சிஷ்யர் களுடைய பரிமாற்றம் இருக்கும் படியை
அருளிச் செய்கிறார் மேல் –

அந்யோந்யம் பிரிய ஹிதங்களை நடத்துகை யாவது –
சிஷ்யன் ஆசார்யனுக்கு பிரிய ஹிதங்கள் இரண்டையும் நடத்துகையும் –
ஆசார்யன் சிஷ்யனுக்கு பிரிய ஹிதங்கள் இரண்டையும் நடத்துகையும் –
நடத்தக் கடவர்கள் –என்றது இதனுடைய அவஸ்ய கரணீ யத்வம் -தோற்றுகைக்காக-

சிஷ்ய லக்ஷணம் -அத்யாவசிய வை லக்ஷண்யம் -அருளிச் செய்து – மேல் பரிமாற்றம் இருக்கும் படி -இவர்கள் விருத்தி செய்ய வேண்டிய செயல்கள் பற்றி -/
இருவரும்- அன்யோன்யம் பிரிய ஹிதங்களை -இரண்டையும் -இருவரைக் குறித்து -நடத்த வேன்டும் -/
சிஷ்யர் ஆச்சார்யர் – சம விருத்தி- அந்யோன்ய வியாவ்ருத்தி-நடத்தணும் என்ற அளவு தான் சம விருத்தி – வியாவ்ருத்தி -நடத்தும் முறை மாறும் —
ஹிதம் ஆச்சார்யர் தானே செய்து பிரியம் ஈஸ்வரனை கொண்டும் / சிஷ்யர் ஹிதம் ஈஸ்வரனைக் கொண்டும் ஹிதம் தானே செய்து -என்பதில் வாசி உண்டே /
சாஸ்திரம் ஒத்து கொள்ளும் அடையாளங்கள் உள்ள பிரிய ஹித பரர்களான ஸச் சிஷ்ய சதாசார்யர் -தம் தம் நிலை குலைந்து
அன்யோன்யம் பிரிய ஹிதங்கள் இரண்டையும் -காதா சித்தமாக -ஆச்சார்யர் ஹிதத்தை நித்தியமாக பிரியத்தை காதாசித்தமாக /
சிஷ்யர் ஆச்சார்யர் பிரியத்தை நித்தியமாக -ஹிதத்தை காதாசித்தமாக -இதிலும் வாசி உண்டே /
நடத்த கடவன் -தானாகவும் பிறராலும் செய்வார் என்றபடி /-அனுஷ்ட்டித்தார் -என்றால் தானே செய்பவர் /
பிரியம் -உகப்பிலே அனுகூலமாய் தோற்றும் / ஹிதம் போக போக தான் நல்லது உணர்வோம்-முதலில் தோன்றா விடிலும் /
அப்பவே நன்றாக பிரியம் – அப்புறம் நன்றாக ஹிதம் -/
பிரியம் ஹிதம் இரண்டிலும் விருப்பம் இருக்க வேன்டும் -விருப்பத்துக்கு அனுகுணமாக செயல்பாடு இருக்க வேன்டும் /
சிஷ்யனை புத்ரன் போலே நினைக்க வேன்டும் -ஹித பரனாக -ஆபஸ்தம்பர் பரத்வாஜ கௌதம ரிஷிகள் வசனம் உண்டே

————————————–

சூரணை -327-

சிஷ்யன் தான் பிரியத்தை நடத்தக் கடவன் –
ஈஸ்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக் கடவன் –
ஆசார்யன் மாறாடி நடத்தக் கடவன் –

இருவரும் இரண்டையும் அந்யோந்யம் நடத்தும் க்ரமம் என் என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
சிஷ்யன் ஆசார்யனுக்கு இரண்டையும் நடத்தும் இடத்தில் -தன் ஸ்வரூப அநு குணமாக
ஆச்சார்ய முக உல்லாசமே புருஷார்த்தம் என்று நினைத்து -தன்னுடைய கிஞ்சித் காராதிகளாலே –
தன் ஆசார்யனுக்கு சர்வ காலமும் பிரியத்தை நடத்திப் போரக் கடவன் –
மங்களா சாசன பரனாகையாலே-இவ் விபூதி ஸ்வாபத்தால் திரு உள்ளத்தில் ஒரு கலக்கம்
வாராது ஒழிய வேணும் என்றும் -அப்படி ஏதேனும் ஓன்று வந்த காலத்தில் -இத்தை போக்கிக் தந்து
அருள வேணும் என்று பிரார்த்தித்து ஈஸ்வரனைக் கொண்டு ஹிதத்தை நடத்தக் கடவன் -என்கை –
ஆசார்யன் மாறாடி நடத்துகை -யாவது -ஹித ஏக பரனாகையாலே -இவனுக்கு ஸ்வரூப ஹானி வாராதபடிக்கு
ஹேய உபாதேயங்களினுடைய ஹானி உபாதானங்களிலே ச்க்காலித்யம் பிறவாமல் நியமித்து –
சர்வ காலமும் -நல்வழி நடத்திக் கொண்டு போருகையாகிற ஹிதத்தை தான் நடத்தி –
த்ருஷ்டத்தில் சங்கோசத்தாலே இவன் மிகவும் நலங்கும் அளவில் -இருந்த நாளைக்கு
இவன் நலங்காமல் இவையும் அவனுக்கு உண்டாம்படி திரு உள்ளம் பற்றி அருள வேணும்
என்று அர்த்தித்து -ஈஸ்வரனைக் கொண்டு பிரியத்தை நடத்தக் கடவன் -என்கை —

பிரிய ஏக பரனான சிஷ்யன் -சேஷியான ஆச்சார்யருக்கு நிஷ் களங்க ஸூ வ ஞான அனுஷ்டான -ரூப பிரியத்தை நடத்தக் கடவன்
ஆச்சார்யருக்கு பிராமாதிக ஞானாதி காலித்யம் -கவனக் குறைவாலும் – விக்ரஹம் நோவு சாத்தி கொண்டாலும் –
எங்கள் ஆச்சார்யர் திரு உள்ளம் திரு மேனி கலக்கம் போக்கி அருள வேணும் என்று ஹிதைஷி யான
ஈஸ்வரன் -இடம் காதா சித்தகமாக
ஹிதம் நோக்கும் ஆச்சார்யர் -சிஷ்யர் ஸ்வரூப ஹானி வாராத படி நியமித்து ஹிதத்தையே முடிய நடத்தியும்
இவனுக்கு தத் ததீய கைங்கர்ய உபயோகியான -அதி சங்குசித்தமாகும் போது -இவனுக்கு உசித கைங்கர்யம்
நடக்கும் படி திரு உள்ளம் பற்ற வேன்டும் என்று ஈஸ்வரனை கொண்டு பிரியத்தை காதாசித்கமாக நடத்தியும்
இப்படி சிஷ்யனை போல் அன்றியே பிரிய ஹிதங்களை மாறாடி நடத்தக் கடவன் –
சிஷ்யன் ஸ்வரூபம் -நீசன் நைச்ய கர்ப்ப சேஷத்வ அனுகுணம் /சாஷாத் பலம் மங்களா சாசனம் தானே -அனைவரும் இதற்காகவே –
இந்த லீலா விபூதி மாற்றி விடுமே -அதற்காக ஏதேனும் கலக்கம் வந்தால் போக்கி தர பிரார்த்திக்க வேண்டுமே
ஹேய உபாதேயங்களினுடைய ஹானி உபாதானங்களிலே ச்க்காலித்யம் பிறவாமல் நியமித்து –ஹேய ஹானி —உபாதேய உபாதானம் –
இவற்றில் மாறாடாமல் என்றபடி – தெரியாததை தெரிவிக்க வேண்டுமே –
நலங்கும்– -ஸூ வ உபதேச ஞானம் மூலம் கைங்கர்யம் –செய்து கொண்டே இருந்தாலும் விபூதி ஸ்வ பாவத்தால் -பிரகிருதி சம்பந்தத்தால் – குலையுமே –
இவையும் – சோறு தண்ணீர் உடுக்க உடை இவை அப்ரதானம் – தேக தாரண மாத்ரத்துக்கும் சங்கோசம் உண்டானால் -இவற்றையும் பிரார்த்தித்து கொடுக்க வேன்டும்
போகாத வழியில் போகாமை பிரார்த்திப்பதே – பிரதானம் -தானே செய்ய சக்தி இவருக்கு பெருமாள் அருள வில்லையே –
தத் பாத பக்தி ஞானம் தவிர வேறே பலத்தையும் பிரார்த்திக்க கூடாதே -ஸ்வரூபம் அழியுமே -பரார்த்த பிரார்த்தனை உசிதம் இல்லை –
பக்தி ஞானம் வர தேக தரணம் வேண்டுமே – -இதற்கு சேராததுக்கு பிரார்த்திக்க கூடாதே
குருவுக்கு ஹிதம் நேராக ரகஸ்யத்திலும் சொல்லக் கூடாது -கவனக் குறைவால் செய்தாலும் -நியம அதிக்ரமம் செய்தாலும் -சாஷாத் ஹித போதனம் –
கௌரவ விஷயத்தில் செய்தால் நைச்ய விரோதி ஆகுமே / அதிகாரம் உள்ளோர் ரஹஸ்யத்தில் சொல்லலாம் –நீசனாக இல்லாதவன் தானே சொல்லலாம் /
சீஷா வல்லி ஸ்ருதி கொண்டே ஈஸ்வரனைக் கொண்டே நடத்த வேன்டும் –மங்களா சாசன பரனாக ஆக்கினத்துக்கு இது தானே கர்தவ்யம் /

——————————————

சூரணை -328-

சிஷ்யன் உகப்பிலே ஊன்றிப் போரும் –
ஆசார்யன் உஜ் ஜீவனத்திலே ஊன்றிப் போரும் –

இப்படி செய்து போரும் இடத்தில் இருவருக்கும் இரண்டும் சம பிரதானமாய் இருக்குமோ –
என்கிற சங்கையிலே -அருளிச் செய்கிறார் –

அதாவது –
சிஷ்யன் சேஷ பூதன் ஆகையாலே சேஷியான ஆசார்யனுடைய ப்ரீதியில் ஊற்றமாய் போரும் –
ஆசார்யன் பரம க்ருபாவான் ஆகையாலே -தன்னுடைய சிஷ்யனான இவன் சம்சாராத் உத் தீர்ணனாய் –
உஜ்ஜீவிக்கையிலே ஊற்றமாய் போரும் என்கை –
ஆகையால் சிஷயனுக்கு பிரிய கரணமும்- ஆசார்யனுக்கு ஹித கரணுமுமே- பிரதானம் -என்று கருத்து –

வேறே வார்த்தை உகப்பு பிரியம் -உஜ்ஜீவனம் -ஹிதம் / அந்யோன்யம் ஹித பிரியம் நடத்த வேன்டும் – கீழே பார்த்தோம் –
நிலை நின்ற வேஷம் இதுவே – பிரதானம் -சேஷி சேஷ பூதன் -ஸ்வரூப ஞான விபாகம் ஆகிற உகப்பு -விபாகம் பழுத்து என்றபடி –
நிரந்தரம் -நித்யம் – வேர் விழ -ஆழமாக -ஊன்றி போகும்
ஹிதைஷி ஆச்சார்யன் நிர்மல ஞானம் முதலானவை விருத்தி தானே சிஷ்யனுக்கு ஸ்வரூபம் உஜ்ஜீவனம் -நிரந்தரம் நிச்சலனமாக ஊன்றி போகும்

————————————–

சூரணை -329-

ஆகையால் சிஷ்யன் ஆசார்யனுடைய ஹர்ஷத்துக்கு இலக்காகை ஒழிய –
ரோஷத்துக்கு இலக்காக்கைக்கு அவகாசம் இல்லை –

கீழ் சொன்னவற்றால் பலிக்கும் அத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
சிஷ்யன் ஆசார்யனுடைய பிரிய கரணமும்
ஆசார்யன் சிஷ்யனுடைய ஹித  கரணமும்
பிரதானமாக நடத்திப் போருகையாலே -சிஷ்யனான இவன் ஆசார்யனுடைய ப்ரீதிக்கு விஷயமாக போருகை ஒழிய –
அநிஷ்ட கரணாதிகளாலே நிக்ரகத்துக்கு விஷயம் ஆகைக்கு இடம் தான் முதலிலே இல்லை என்கை –
ஆகையாலே -என்று உகப்பிலே ஊன்றிப் போரும் என்று சொன்னது ஒன்றையும் அநு வதிக்கிறதாகவுமாம்-

ஷமாகவே இருந்து அவராலே உஜ்ஜீவனம் என்று அறிந்து பிரியத்தையே நடத்தி போவதால் -இதுக்கு இலக்காக மாட்டான் –
ஒரு வேளை அப்படி நடந்தாலும் சீறி அருளாதே -கொண்ட சீற்றம் ஓன்று உண்டு -அதுவும் ப்ராப்தமே /ரோஷம் அப்ரீதி கோபம் -/
இப்படி பிரிய கரனாக -ஆச்சார்யருக்கு பிரியம் செய்பவன் –என்றவாறு -இவருக்கு பிரியம் என்பது இல்லை –
ஆச்சார்யருடைய –தன் ஞான அனுஷ்டான அபிவிருத்தி தர்சனத்தாலே –அபிவிருத்தமாம் ஹர்ஷத்துக்கு -நித்ய விஷயமாவது ஒழிய
அப்ரியதுக்கு விஷயமாவது -காதா சித்கமாகவும் கிஞ்சித் அவகாசம் இல்லையே

———————————————

சூரணை -330-

நிக்ரகத்துக்கு பாத்ரமாம் போது-அது ஹித ரூபம் ஆகையாலே –
இருவருக்கும் உபாதேயம் –

பிரகிருதி சம்பந்தத்தோடு இருக்கிறவனுக்கு -எப்போதுமொரு படி பட்டு இருக்குமோ –
காலுஷ்யங்கள் உண்டாகாதோ -அதடியாக நிக்ரஹத்துக்கு பாத்ரமாம் போது –
அந்த நிக்ரஹம் இரண்டு தலைக்கும் -எங்கனே யாகக் கடவது -என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
அநிஷ்ட கரணாதிகள் அடியாக ஆச்சார்ய நிக்ரஹதுக்கு பாத்ரமாம் தசையில் -அந்த நிக்ரஹம்
சிஷ்யனான இவனை யபதே பிரவர்த்தன் ஆகாத படி நியமித்து நல்வழி நடதுக்கைக்கு
உறுப்பாகக் கொண்டு -ஹித ரூபமாய் இருப்பது ஓன்று
ஆகையாலே -இப்படி நம்மை நிக்ரஹிப்பதே என்று -இவன் நெஞ்சு உளைதல்-
இவனை இப்படி நிக்ரஹிக்க வேண்டுகிறதே என்று ஆசார்யன் நெஞ்சு உளைதல் –
செய்கை அன்றிக்கே -நிக்ரஹ விஷயமான இவனுக்கும் -நிக்ரஹ ஆஸ்ர்யமான
ஆசார்யனுக்கும் -அங்கீகார்யம் -என்கை-

சீறினாலும் அருள் தானே -இரக்கத்துடன் அனுக்ரஹம் / கொண்ட சீற்றம் ஓன்று உண்டு என்று அறிந்து சரண் அடைந்தேன் -என்பார் –
நம் விரோதிகளையும் முதலை போலே கோபத்துடன் நிரசிப்பாரே –
காதாசித்தகமாக வரும்– சிஷுகனான ஆச்சார்யர் -திருத்தி பணி கொள்ளும் பொழுது –ஸ்வரூப விருத்தங்களை விட்டு
ஸ்வரூபத்தை பேணி வர்த்திக்கும் படி பண்ணி ஸ்வரூபத்தை உஜ்ஜீவிப்பிக்கும் ஹித ரூபம் ஆகையால்
இருவருக்கும் உபாதேயம் -யுக்தம் தானே /ஸூவ ஸூவ ஸ்வரூப அனுகுணமான தாகுமே
யபதே பிரவர்த்தன் ஆகாத படி -தவறான மார்க்கத்தில் போகாத படி திருத்தி பணி கொள்ள வேண்டுமே –
சம்சாரம் பலாத்காரம் தப்பு பண்ணத் தானே வைக்கும் –
எல்லே -இளங்கிளியே -ஸ் வா பதேசம் -சில் என்று அழையேன்மின் -ஆச்சார்யர் கோபிக்கும் பொழுது இப்படி பதில் சொல்ல கூடாது என்று காட்ட /
அது கண்டு ஆச்சார்யரும் கோபிக்கக் கூடாதே -வல்லை உன் கட்டுரைகள் -/ இப்படி ஆனபின்பு நானே தான் ஆயிடுக -பாகவத லக்ஷணம் சொல்லும் பாசுரம் –

————————————————–

சூரணை -331-

சிஷ்யனுக்கு நிக்ரஹா காரணம்
த்யாஜ்யம் –

நிக்ரஹம் உபாதேயம் ஆகில் -நிக்ரஹ காரணமும் உபாதேயம் ஆகாதோ என்ன -அது
த்யாஜ்யம் என்கிறார் –

அதாவது –
நிக்ரஹம் உபாதேயம் என்று நினைத்து மீளவும் தத் காரணத்தை செய்ய ஒண்ணாது –
யாதொரு காரணத்தாலே நீரிலே நெருப்பு எழுமா போலே -தன் விஷயத்தில் குளிர்ந்து தெளிந்து
இருக்கிற -ஆச்சார்ய ஹிருதயத்தில் நிக்ரஹம் எழுந்து இருந்தது -அந்த காரணத்தை
மறுவலிடாதபடி இட வேணும் -என்கை-

——————————————-

சூரணை -332-

நிக்ரஹம் தான் பகவந் நிக்ரஹம் போலே ப்ராப்ய அந்தர்கதம் –

கீழ் சொன்ன ஆச்சார்ய நிக்ரஹம் ஹித ரூபம் என்று வைதமாக உபாதேயமாம்
அளவன்றிக்கே -இவனுக்கு பிராப்ய கோடி கடிதமாய் இருக்கும் என்னும் அத்தை
ச த்ருஷ்டாந்தமாக அருளிச் செய்கிறார் –

அதாவது ஸ்வ ஆசார்யன் ஸ்வ விஷயத்தில் -ஹித ரூபேண பண்ணுகிற நிக்ரஹம் தான் –
ஸ்வ விரோதி நிவ்ருத்திக்கு உறுப்பாகையாலே-
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு –
செய்யேல் தீவினை -இத்யாதிகளில் சொல்லுகிற
பகவந் நிக்ரஹம் போலே புருஷார்த்த கோடியிலே அந்தர்பூதம் -என்கை-
ஆசார்யன் அர்த்த காமங்களிலே நசை அற்றவன் ஆகையாலே -அவை ஹேதுவாக பொறுக்கவும் வெறுக்கவும் பிராப்தி இல்லை –
இனி இவனுடைய ஹித ரூபமாக வெறுத்தானாகில் அதுவும் பிராப்ய அந்தர்கதமாக கடவது -என்று
இது தன்னை மாணிக்ய மாலையிலே ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் இறே –

ப்ரீதி காரித கைங்கர்யம் தானே ப்ராப்யம் -அவன் இடம் உள்ள எல்லா குணங்களும் உபாதேயம் -கோபமும் அப்படியே
காரணம் த்யாஜ்யமானால்–ஹித ரூப நிக்ரஹம் த்யாஜ்யம் தத் காரியமும் குற்றம் தானே -என்னில் -த்யாஜ்யம் ஆகாதே
ஹிதம் பண்ண கோபித்து கொண்டானே கொண்ட சீற்றம் ஓன்று உண்டே -கோப வாசத்துக்கு பெருமாள் திருவடியை ராவணன் அடித்த பின்பு /
ஆணைத் தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமையால் -பிரிய தமம் பரார்த்த நீயம் -அனுக்ரஹம் போலே கொள்ளத் தக்கதே
ஹர்ஷ வர்த்தகனாய் சிஷ்யன் -நிக்ரஹ ஹேதுக்களை த்யஜித்தும் -ஹித ரூபம் கோபத்தையும் சந்தோஷமாக கொள்ள வேன்டும் –
ப்ராப்யமாக கொள்ளத் தக்கதே -ப்ரீதி காரித கைங்கர்யம் போலே ஆதாரத்துடன் -மோதிரக் கையால் குட்டுப் பட ஆசை வேண்டுமே /
பிராப்தி பிரதிபந்தகங்கள் போக்குவதும் பிறப்பது அந்தரகதம் தானே -கோபம் -திருந்தப் பண்ணி அடைய வைக்கும் –

———————————————-

சூரணை -333-

ஆசார்யன் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணக் கடவன் –
சிஷ்யன் ஆசார்யன் உடைய தேகத்தை பேணக் கடவன் —

கீழ் இருவருக்கும் பிரதான க்ருத்யங்களான சொன்ன -ஹித கரண-
பிரிய கரணங்களின் வேஷத்தை விசதமாக அருளிச் செய்கிறார் –

அதாவது –
உஜ்ஜீவன பரனான ஆசார்யன் உஜ்ஜீவ விஷுவாய் வந்து -உபசத்தி பண்ணி –
உகப்பிலே ஊன்றி போகிற -சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை -பிரேம அதிகமாகவும் –
ஒரு பழுது வாராதபடி ஏகாக்ர சித்தனாய் கொண்டு -உபதேசாதிகளாலே நோக்கிக் கொண்டு போரக் கடவன் –
பிரிய பரனான சிஷ்யன் -தன்னுடைய உஜ்ஜீவன பரனாய்-தன் ஸ்வரூப ரஷணமே
நோக்கிக் கொண்டு போருகிற ஆசார்யனுடைய திருமேனியை -உசித கைங்கர்யங்களாலே –
சர்வ காலமும் -ஏகாக்ர சித்தனாய் நோக்கிக் கொண்டு போரக் கடவன் -என்கை –

கீழ் இருவருக்கும் பிரதான க்ருத்யங்களான சொன்ன -ஹித கரண-
பிரிய கரணங்களின் வேஷத்தை விசதமாக அருளிச் செய்கிறார் –
பரதந்த்ரமான ஸ்வரூபத்தை -வளர்க்க -த்யாஜ்ய உபாதேயங்களை கேடப்பித்து -தியாக பரிக்ரஹ நிஷ்டையை பிறப்பித்து –
தத் ததீய விஷய -ப்ராவண்ய விளைப்பித்து சிஷ்ட அனுஷ்டானங்களை பிறப்பித்து பிராப்தி பர்யந்தமாக பேணக் கடவன்
அஹங்கார கர்ப்பமான விஷய பிராவண்ய வர்த்தகமான தேகத்தை பேணக் கடவன் அல்லன்
சுபாஸ்ரயமான ஆச்சார்யர் யுடைய திரு மேனியை உசித கைங்கர்யங்களால் பேணக் கடவன்
சேஷி ஸ்வரூபம் -சேஷன் பேணக் கடவன் அல்லன் -பேணினால் சேஷத்வத்துக்கு கொத்தை உண்டாகும்
ஸ்வரூப ரக்ஷணம் கர்தவ்யம் அவருக்கு -தேக ரக்ஷணம் பிராப்தி இவனுக்கு –
எல்லாவற்றையும் ஆச்சார்யருக்காக -என்ற எண்ணமும் -உசித திருமேனி கைங்கர்யமும் பண்ண வேன்டும் சிஷ்யனுக்கு

மந்த்ரம் பிரதானம் செய்பவர் -உபகார ஆச்சார்யர் / அர்த்தம் பிரதானம் செய்பவர் உத்தாரக அர்ச்சகர் -பிராவண்யம் பள்ள மடை இவர் இடம் –
ஞானம் அனுஷ்டானம் மிக்கு இருப்பதால் –
இதனால் தானே உத்தாரகத்வம் சித்திக்கும் -/ ஞானம் அவனே உபாயம் என்று இருப்பவர் –அனுஷ்டானம் ப்ராப்யத்தில் த்வரை மிக்கு இருப்பவர் /
அருள் ஒள் வாள் உருவி சம்சாரம் வெட்டி ஆபீமுக்கியமாதி ஏற்படுத்திய உத்தாரகர் / கிருஷி -பண்ணும் படி செய்தவர் உபகார ஆச்சார்யர் -பல பர்யந்தம் இல்லையே –
திருவடிகள் இரண்டு -வை சாம்யம் இல்லையே -அதே போலே இவர் இருவரும் -/
உத்தராக ஆச்சார்யர் ராமானுஜர் மட்டுமே -மற்றவர் பல பர்யந்தம் சேர்க்க ஆள் இல்லையே -இந்த லக்ஷணங்கள் அவர் இடம் மட்டுமே பொருந்தும் /
உடையவர் -விஷ்ணு லோக மார்க்கம் காட்டுபவர் -5000-வருஷ திட்டம் பவிஷ்யத் ஆச்சார்யர் –
அந்தரங்கர்களை மட்டும் – இவர்கள் தானே தங்கள் நெஞ்சில் தோன்றிய படி சொல்ல மாட்டார்கள் -வெளியார் யாரும் உள்ளே வர முடியாது
உள்ளார்களையும் திருத்திப் பணி கொள்ளும் கடமை இவர்களுக்கும் உண்டே /
சிம்ஹாசனாதி பதிகள் வம்சத்தில் பிறந்ததால் பெற்ற மஹிமை உண்டே இவர்களுக்கு -/

——————————————

சூரணை -334-
இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் -பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும் –

இப்படி இருவரும் இரண்டும் பேணினால் -இரண்டு தலைக்கும்
பலிக்கும் அத்தை -அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஆசார்ய்னால் சிஷ்யனுடைய ஸ்வரூபத்தை பேணுகையும் –
சிஷ்யனால் ஆசார்யனுடைய தேகத்தை பேணுகையும் -ஸ்வ அசாதாரணங்கள்
ஆகையாலே -இரண்டும் இருவருக்கும் ஸ்வரூபமாய் -அஹம் அன்னம் -என்கிறபடியே –
அவனுக்கு போக்கியம் ஆகைக்கு யோக்யமாய் வைத்து -அநாதி காலம் அப்படி
விநியோகப்படப் பெறாமல் கிடந்த இவன் ஸ்வரூபம் –
தாத்ருச விநியோக அர்ஹமாய் திருந்தும்படி பேணிக் கொண்டு போருகையும் –
நன்கு என்னுடல் அங்கை விடான் -என்கிறபடியே -அவனுக்கு விட்டு பிடிக்க சஹியாத படி
போக்யமாய் இருக்கிற ஆச்சார்ய விக்ரஹத்தைப் பேணிக் கொண்டு போருகையும் –
பகவானுக்கு  மிகவும் உகப்பு ஆகையாலே –
இவை தான் வஸ்து கதயா பகவத் கைங்கர்யமுமாய் இருக்கும் -என்கை –

சேஷ சேஷிகளாய் கொண்டு ஸூவ ஸூவ ஸ்வரூப அனுரூபமாய் -ஆச்சார்யரால் பேணப்படும் சிஷ்ய ஸ்வரூபமும்
சிஷ்யனால் பேணப்படும் ஆச்சார்யர் திருமேனியையும் -அவன் திருவடி ஸ்தானீயம் தானே -ஸ்வரூபமும் பகவத் விக்ரஹங்கள் ஆகையால் -சரீராத்மா பாவம் உண்டே —
சேஷ சேஷிகள் ஸ்வரூபமும் -சித்திக்கும் கைங்கர்யமும் கிட்டினதாகும்
மங்களா சாசன பரனாக ஆக்குவதே ஸ்வரூபம் பேணுதல் -ஆச்சார்யர் திருமேனி பேணா பகவத் குண அனுசந்தானம் பண்ண முடியும் –
ஆகையால் இரண்டுமே பகவத் கைங்கர்யம் தானே –
ஆச்சார்யரானால் -ஆச்சார்யத்வம் பேணா விடில் நிற்காது –
சிஷ்யன் ஸ்வரூபம் பேணுபவர் எல்லாரும் ஆச்சார்யர் என்று சொல்ல முடியாது -ஈஸ்வரனும் பேணுவானே
வியாப்யம் -சிஷ்யத்வம் -ஆச்சார்ய தேக ரக்ஷணம் வியாபகம் இதே போலே -பண்ணா விடில் சிஷ்யத்வம் நிற்காது -என்றபடி

——————————

சூரணை -335-

ஆசார்யனுக்கு தேக ரஷணம் ஸ்வரூப ஹானி –
சிஷ்யனுக்கு ஆத்ம ரஷணம் ஸ்வரூப ஹானி –

இப்படி வியவச்திததமாக வேணுமோ-ஆசார்யனுக்கு தன்னுடைய தேக ரஷணத்திலும்-
சிஷ்யனுக்கு தன்னுடைய ஸ்வரூப ரஷனத்திலும் அந்வயம் உண்டானால் வரும் அது என் -என்ன
அருளிச் செய்கிறார் –

அதாவது –
தன்னுடைய தேக யாத்ரையில் தான் உபேஷகனாய் இருக்க –
சிஷ்யன் இதுவே நமக்கு ஸ்வரூபம் என்று தன்னுடைய தேகத்தை பேணிக் கொண்டு போருகை ஒழிய –
தன்னுடைய தேகத்தை தான் ரஷிக்கை யாகிற இது -ஆசார்யனுக்கு -ஆசார்யத்வம்  ஆகிற ஸ்வரூபத்துக்கு ஹானி –
தான் ஆசார்யன்  பக்கலிலே ந்யச்த பரனான பின்பு -தன் ஸ்வரூபத்தை அவன் பேணிக் கொண்டு போரக் கண்டு இருக்கை ஒழிய-
தான் தன் ஆத்ம ரஷணம் பண்ணுகை யாகிற இது -சிஷ்யனுக்கு சிஷ்யத்வம் ஆகிற ஸ்வரூபத்துக்கு ஹானி -என்கை –
ஆகையால்-மறந்தும் -சிஷ்யனுக்கு தன்னுடைய ஸ்வரூப ரஷணமும்- ஆசார்யனுக்கு தன்னுடைய தேக ரஷணமும்
கர்த்தவ்யம் அன்று -என்றது ஆயிற்று –

சிஷ்யன் பொறுப்பு -இவர் எடுத்துக் கொண்டால் – -ஸூ தேக உபேக்ஷகனான தன்னுடைய விரக்த ஸ்வரூபத்துக்கு ஹானி
ஸூ ஆத்ம ஹித ரூப ரக்ஷணம் -தான் செய்கை -சிஷ்யனுக்கு -ஸூ ஆத்ம அபிமானம் இல்லாத பரதந்த்ர ஸ்வரூப ஹானி உண்டாகும்
ஆசார்யத்வம் ஆகிற ஸ்வரூபத்துக்கு ஹானி –
-சாஸ்திரம் கற்று அனுஷ்ட்டித்து கற்ப்பித்து-அன்றோ –ஸ்வயம் ஆசரதி -தேக உபேக்ஷை இருக்க வேண்டுமே –

———————————————-

சூரணை -336-

ஆசார்யன் ஆத்ம ரஷணம் பண்ணும் இடத்தில் -அஹங்காரம் விரோதி –
சிஷ்யன் தேக ரஷணம் பண்ணும் இடத்தில் மமகாரம் விரோதி –

இனி ஆசார்யனும் சிஷ்யனும் தம் தாமுக்கு வியவச்திதங்களான ஆத்ம ரஷண-தேக ரஷணங்களை
பண்ணும் இடத்தில் அவசியம் பரிஹர நீயங்களான விரோதிகளை அருளிச் செய்கிறார்-

அதாவது
ஹிதபரனான ஆசார்யன் -ஸ்வ உபதேசாதிகளால் சிஷ்ய ஆத்ம ரஷணம்
பண்ணும் இடத்தில் -நான் ரஷித்து கொண்டு போகிறேன் -என்கிற அஹங்காரம் –
ஆச்சார்ய பரதந்த்ரம் ஆகிற தன் அதிகார விரோதி –
பிரிய பரனான சிஷ்யன் -த்ரவ்யாதிகளாலே ஆச்சார்ய தேக ரஷணம் பண்ணும் இடத்தில் –
என்னுடைய த்ரவ்யங்களாலும் கரணங்களாலும் இப்படி ரஷித்து கொண்டு போகிறேன் -என்கிற மமகாரம் –
சரீர அர்த்த பிராணாதிகள் எல்லாம் ஆச்சார்ய சேஷம் என்று இருக்கக் கடவ -தன் அதிகாரி விரோதி -என்கை –

தான் ஆச்சார்யனே இல்லையே -ஸூ வ ஆச்சார்யருக்கு சிஷ்யன் தானே -இவனும் தன் சிஷ்யன் இல்லையே -ஸூ வ ஆச்சார்யருக்கு சக சிஷ்யர்கள் தானே
அதே போலே சிஷ்யன் அனைத்தையும் சமர்ப்பித்த பின்பு இவனது ஒன்றுமே இல்லையே /தத்-ஆச்சார்யருக்கு சேஷமான த்ரவ்யம் கொண்டு
நிரபிமான ரக்ஷகத்வம் ஆச்சார்யரது -சர்வேஸ்வரனுக்கு அஹங்காரமும் மமகாரமும் உண்டே -அவை வேண்டியவை தானே -இயற்க்கை /
சேஷத்வ அனுகுணமாக ரக்ஷணம் -சிஷ்யன் -ஆச்சார்யர் அபிமானம் இல்லாமல் ரஷிக்க வேண்டுமே /
மமகாராம் சேஷத்வ ரக்ஷண அனுகுண விரோதி
அஹங்காரம் நிரபிமான ரக்ஷண அனுகுண விரோதி / நிர்வாகம் பண்ணி அருளிய -ஸ்ரீ ராமானுஜர் –
தனியாக சிஷ்யரை நெறி வழி படுத்துவது மட்டும் இல்லாமல் – ஆதி சேஷன் அன்றோ /

————————————-

சூரணை -337-

ஆசார்யன் தன்னுடைய தேக ரஷணம் தன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –
சிஷ்யன் ஸ்வ தேக ரஷணம் ஆசார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் –

ஆசார்யனுக்கும் சிஷ்யனுக்கும் தம் தாமுடைய தேக ரஷண தசையில் பிரதிபத்தி
விசேஷங்களை வகுத்து அருளி செய்கிறார் மேல் –

சரீரம் அர்த்தம் பிராணம் ச சத் குருப்யோ நிவேதயத் -என்கிறபடியே சிஷ்ய சர்வமும் -அடியிலே சமர்ப்பிதம் ஆகையாலே –
ஸ்வ தேக ரஷணத்துக்கு உறுப்பாக அவன் கால உசிதமாக கிஞ்சித் கரிக்கும் இவற்றை –
அவனது என்னும் நினைவு அன்றிக்கே -தன்னது என்றே வாங்கி விநியோகம் கொள்ளக் கடவன் -என்கை –
சிஷ்யன் ஸ்வ தேக ரஷணம் ஆசார்யன் வஸ்துவைக் கொண்டு பண்ணக் கடவன் -என்றது –
தனக்கு ஓர் உடைமை இன்றிக்கே -சகலமும் ஆச்சர்ய சேஷம் ஆகையாலே –
ஸ்வ தேக ரஷணத்துக்கு உறுப்பாக விநியோகம் கொள்ளும் அவற்றை -ஆசார்யன் உடைமை என்று
பிரதிபத்தி பண்ணி விநியோகம் கொள்ளக் கடவன் -என்கை –

தேக ரக்ஷணமே பண்ணக் கூடாது -என்னில் -எல்லாம் ஆச்சார்யரது -பொன்னுலகு ஆளீரோ புவனம் முழுதும் ஆளீரோ -சரீரம் பிராணம் அர்த்தம் அனைத்தும் அவரது /
ஸ்வாமியான ஆச்சார்யர் -தேக தாரண பிரதிபத்தியா பண்ணும் -ஸ்நானம் -போலே -தேக ரக்ஷணம் -என்னது என்ற எண்ணம் இல்லாமல் —
அனைத்தையும் சமர்ப்பித்த பின்பு -இது நம்மது இல்லை என்ற வாசனையும் இல்லாமல் இருக்க வேன்டும் -துரபிமானம் இல்லாமல் –
தன்னைத்தானே பர தந்த்ர சிஷ்யனுடைய பரி சுத்த வஸ்து -ஸ்வதந்த்ர லேசமும் இல்லாமல் அபிமானமும் இல்லாமல் கொடுத்த வஸ்து தானே –
ஹீந வஸ்து இல்லையே –கூசாமல் கொள்ள வேண்டுமே –
சிஷ்யனும் -புண்ணுக்கு மருந்து போலே பண்ணும் தேக தாரணம் -ஸூ தேக ரக்ஷணம் -ஸ்வ கீயம் ஆச்சார்ய வசம் —
மாம் மதியஞ்ச யானும் என் உடைமையையும் -சேதன சேதனாத்மகம் -உன் சக்கரப் பொறி ஒற்றிக் கொண்டு –
ஆச்சார்ய வஸ்துவான ஸூ வ வஸ்துவைக் கொண்டு உடமையை பாழாக இறைக்கிறோம் என்ற பிரதிபத்தியைக் கொண்டு நிர்வேதத்துடன் வெறுப்புடன் பண்ணக் கடவன் –
நஞ்சீயர் தோட்டம் நம் பெருமாள் சிக்கு தலைக்கு இல்லை -பட்டர் குழந்தைகள் விளையாடி பாழாகப் போன புஷபங்களே நம் பெருமாளுக்கு போதும் என்பாராம் /
அவன் கால உசிதமாக கிஞ்சித் கரிக்கும் இவற்றை -இந்த காலத்துக்கு இன்ன வேணும் என்று கொடுப்பதே கர்தவ்யம்
சொத்தை ஜாக்ரதையாக பார்க்கும் கடமை – பொறுப்பு அவரது இல்லையே -ஆத்ம ரக்ஷணம் தானே அவர் கர்தவ்யம் –
திருமாளிகைக்கு வேண்டியவற்றை கண்டு கால உசிதமாக செய்வதே சிஷ்யனுடைய கர்தவ்யம் –
சாண்டில்ய வசனம் -ஆச்சார்யர் த்ரவ்யம் தானே சிஷ்யர் -அனைத்தையும் அவரே அனுபவிப்பார் -பிள்ளை தங்க கோப்பை வாங்கி வரும் பொழுது
நம் அவயவம் என்ற எண்ணம் தாய் தந்தைக்கு உள்ளது போலே -சிஷ்யனுடைய அனைத்தும் அவரது தானே

——————————————-

சூரணை -338-

ஆசார்யன் சிஷ்யன் வஸ்துவை கொள்ளக் கடவன் அல்லன் –
சிஷ்யன் தன் வஸ்துவை கொடுக்கக் கடவன் அல்லன் –

ஆசார்யன் தேக ரஷணத்தில் வந்தால் சிஷ்யன் தனக்கு உள்ளது எல்லாம்
அங்குற்றை உடைமை என்னும் நினைவாலே கொடுக்கையும் –
ஆசார்யனும் தாத்ருச வஸ்துவை வாங்குகையும் ஒழிய –
சிஷ்யனுடைய மமதா தூஷிதமான வஸ்துவை இருவரும் கொள்ளவும் கொடுக்கவும்
கடவர்கள் அல்லர் என்கிறார் –

ஆசார்யன் சிஷ்யன் வஸ்துவை கொள்ளக் கடவன் அல்லன் -என்றது -இவன்
மதியம் என்று அபிமானித்து இருக்கும் வஸ்துவை மறந்தும் -அங்கீகரிக்க கடவன் அல்லன் -என்கை –
சிஷ்யன் தன் வஸ்துவை கொடுக்கக் கடவன் அல்லன் -என்றது –
ஸ்வகீயம் என்று அபிமானித்து இருக்கும் வஸ்துவை -அஹங்கார மமகார
ஸ்பர்சம் உள்ளவை விஷம் என்று வெருவி இருக்கும் -ம்ருது பிரக்ருதியான
ஆசார்யனுக்கு விஷத்தை இடுமா போலே சமர்ப்பிக் கடவன் அல்லன் -என்கை –

விஷயம் அதுவே -வேறே மாதிரி அருளிச் செய்து திருடமாக்குகிறார் -அபிமானம் இருந்தால் வாங்கிக் கொள்ளக் கூடாதே –
சிஷ்யனும் தன் வஸ்து என்ற அபிமானதுடன் கொடுக்கக் கடவன் அல்லன் -அஹங்கார மமகார வாசனையும் கூடாதே –
ஸ்வ தந்த்ரனான நான் என் வஸ்துவை கொடுக்கிறேன் என்ற எண்ணம் உபய தூஷித்தம் -பிரமித்து கொடுத்தால் –
ஹீந வஸ்து -ஸ்பர்சிக்கவும் யோக்யதை போலே -அம்ருதத்தில் விஷம் கலந்தால் போலே –
நீச வஸ்து வாசனையும் பொறுக்காத ம்ருத ஸ்வ பாவர்- இவருக்கு -லஜ்ஜா பயம் இல்லாமல் – கொடுக்கவும் கூடாதே-
பணம் பணம் தான் வர்ணம் இல்லை என்று நினைப்பவனாக இருந்தால் கொடுக்கலாம் -ம்ருத பிரக்ருதியான இவருக்கு கொடுக்கக் கூடாதே

——————————————–

சூரணை-339-

கொள்ளில் மிடியனாம் – கொடுக்கில் கள்ளனாம் –

அப்படி கொள்ளுதல் கொடுத்தல் வருவது என் என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
சிஷ்யன் என்னது என்று இருக்கும் வஸ்துவை -சாபலத்தாலே ஸ்வீகரிக்கில் –
ஈஸ்வரன் அகில பர நிர்வாஹனாய் போருகையாலே -நமக்கு என்ன குறை உண்டு என்று இருக்கும் பூர்ணனான தான் –
தேக யாத்ரைக்கும் கூட முதலற்ற தரித்ரனாய் விடும் –
என்னது என்று புத்தி பண்ணி -ஒன்றை ஆசார்யனுக்குக் கொடுத்தால் -சரீரம் அர்த்தம் -இத்யாதிப் படியே
அடியிலே சமர்ப்பிதம் ஆகையாலே -ததீயமாய் இருக்கிற அதிலே மதீயத்வ புத்தி
பண்ணுகையாலே ஆச்சார்ய ஸ்வ அபஹாரியாய் விடும் -என்கை-

ஆச்சார்யர் – கொள்ளில் மிடியனாம் -தரித்ரன் -ஆவான் / என்னது என்று அபிமானித்து -வந்ததை உபேக்ஷியாதே சபலனாய் -அஸ்தானே ஆசை வைத்து –
மஹா பாதகி கள்ளன் -மருத்துவன் சொத்து -கோள் சொல்பவன் இடமும் வாங்கக் கூடாதே -சாஸ்திரம் /
சரீரம் அர்த்தம் பிராணம் மத் குருவஞ்ச என்று சமர்ப்பித்த பின்பு -இந்த நினைவால் இவன் கள்வன் தானே /
உபய விபூதி மானை பற்றின – இவன்-பூர்ண ஐஸ்வர்யம் உள்ளவன் — இத்தைக் கொண்டால் அல்ப அஸ்திர வஸ்துவை கொள்ளில் இதுவும் இல்லாத தரித்ரன் தானே /
சிஷ்யன் கொடுக்கில் கள்ளனாம் –தன்னது என்று அபிமானித்து ஸ்வாமியான ஆச்சார்யருக்கு நிர்பயமும் வெட்கமும் -இல்லாமல் –
ப்ரஹ்ம ஸ்வம் -சொத்தை அபஹாரியான -கோயில் கள்ளன் ஆவான் –ப்ரஹ்ம ஸ்வம் தானே ஆச்சார்யர் -நம் அங்கை கை விடான் தானே -ப்ரஹ்மம் –
தேக யாத்ரைக்கும் கூட முதலற்ற தரித்ரன் ஆவான் என்றது –உம்மை தொகையாலே -ஆத்ம ரக்ஷணம் முடியாது என்று சொல்லவும் வேணுமோ என்றவாறு –
ப்ரஹ்ம ஸ் வம் -ஆச்சார்யர் -ப்ரஹ்மம் சொல்லே ஆச்சார்யரை குறிக்கும் என்றுமாம் –

—————————————

சூரணை -340-

கொள் கொடை உண்டானால் சம்பந்தம் குலையும் –

இவ்வளவே அன்றி சம்பந்த ஹானியும் வரும் என்கிறார் –

அதாவது
சிஷ்ய ஆசார்யத்வம் ஆகிற சம்பந்தம் உண்டானால்-சேஷ பூதனான சிஷ்யன் -சரீரம் அர்த்தம் -இத்யாதிப் படியே
சர்வமும் அங்குற்றையது என்னும் நினைவாலே சமர்ப்பிக்கையும் –
அப்படி சமர்ப்பித்தவற்றை சேஷியான ஆசார்யன் அங்கீகரிகையும் முறையாய் இருக்க –
இவன் தன்னது என்று அபிமானித்த ஒன்றை ஆசார்யன் ஸ்வீ கரிக்கையும் –
இவன் என்னது என்று அபிமானித்த ஒன்றை ஆசார்யனுக்கு சமர்ப்பிக்கையும்-ஆகிற முறை கேடான –
கொள் கொடை -உண்டான போது-சிஷ்ய ஆசார்யத்வ ரூப சம்பந்தம் குலைந்து விடும் -என்கை-

ஆச்சார்ய சிஷ்ய ரூப சம்பந்தமும் குலையும் -கொண்டாலோ கொடுத்தாலோ -சேஷ சேஷி நித்ய சம்பந்தம் மீண்டும் பொறுத்த ஒண்ணாத படி -உடைந்த கண்ணாடி ஒட்டாதே –

——————————

சூரணை -341-

இவன் மிடியன் ஆகையாலே கொடான்
அவன் பூரணன் ஆகையால் கொள்ளான் –

இப்படி தாரித்ர்ய -(த்ரவ்ய )அபஹாரங்கள் வருவதும் – சம்பந்தம் குலைவதும் -கொள் கொடை தான் உண்டாகில் இறே-
அது தான் அவர்கள் செய்யார்கள் என்னும் இடத்தை ச ஹேதுகமாக
அருளிச் செய்கிறார் –

அதாவது –
சிஷ்யனான இவன் சகலமும் ஆச்சார்ய ஸ்வம் -நம்மது என்று சமர்ப்பிக்கலாவது ஒன்றும் இல்லை -என்று இருக்கும் மிடியன் ஆகையாலே –
நாம் அங்குற்றைக்கு ஒன்றைக் கொடுக்கிறோம் என்று கொடான் –
ஆசார்யன் ஆனவன்- ஈஸ்வரன் -சகல பர நிர்வாஹனாய் நடத்திக் கொண்டு போருகையாலே
நமக்கு இனி என்ன குறை உண்டு என்று இருக்கும் பரி பூர்ணனாய் இருக்கையாலே -இவன்
அபிமான துஷ்டமான ஒன்றையும் அங்கீ கரியான் -என்கை-

ஆச்சார்ய ஸ்வமான சிஷ்யன் – ஸ்வாமியான அவருக்கு தன்னது என்று கொடுக்க மாட்டானே – -உபய விபூதிமானை கொண்ட பூர்ணனான அவரும் கொள்ள மாட்டாரே

————————————-

சூரணை -342-

அவனுக்கு பூர்த்தியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –
இவனுக்கு மிடியாலே ஸ்வரூபம் ஜீவித்தது –

இந்த பூர்த்தி தாரித்யங்களால் இருவருக்கும் பலித்தவற்றை அருளிச் செய்கிறார் –

அதாவது –
ஆசார்யனுக்கு இவன் அபிமான துஷ்டமானவை ஒன்றையும் கொள்ளாமைக்கு உடலான
பூர்த்தி யாலே ஆச்சார்யத்வம் ஆகிற ஸ்வரூபம் ஜீவித்தது –
சிஷ்யனான இவனுக்கு ஸ்வ கீயத்வ புத்த்யா ஒன்றையும் சமர்ப்பிக்கைக்கு
யோக்யதை இல்லாத சகலமும் -ததீயத்வ பிரதிபத்தி சித்த தாரித்யத்தாலே சிஷ்யத்வம் ஆகிய ஸ்வரூபம் ஜீவித்தது -என்கை –

இதுக்கு யோக்யதை தான் உண்டாகில் தானே சம்பந்தம் குலையும் -ஆதான -தான -வாங்குவதும் கொள்வதும் -நிவர்த்தக -பூர்த்தியும் தாரித்ர்யமும் –
ஆச்சார்யர் இடம் பூர்த்தி -வாங்க மாட்டார் / சிஷ்யர் இடம் தாரித்ர்யம் -கொடுக்க மாட்டான் –
ஆக ஸ்வரூபம் ஜீவிக்கும் -பிராகிருத வஸ்துவில் நிரபேஷனான ஆச்சார்யர் பூர்த்தியாலே -பிராகிருத பிரயோஜன –நிஸ்ப்ருஹத்வம் என்னும் –
ஆச்சார்ய ஸ்வரூபம் ஜீவிக்கும் -இது தானே அவரை உயர்ந்த நிலையில் வைக்கும் -ஸ் வீ கய வஸ்து சத் பாவ பிரதிபத்தி லேசமும் அற்ற சிஷ்யனுக்கு-
ஸ் வீ யகத்வ ராஹித்ய ஹேதுவான –ததீயன் ஆகிய ஸ்வரூபம் -சேஷன் தானே சித்திக்கும்

பல்லாண்டு பாட -மங்களா சாசனம் பரராக்குவதே பரம பிரயோஜனம் என்னில் ஸ்ரீ -ராமானுஜர் ஆறு கட்டளைகள் உண்டே -இது மட்டுமே போதுமோ என்னில் –
திருப் பல்லாண்டு -12-பாசுரங்களில் அனைத்தும் உண்டே -மண்ணும் மனமும் கொள்மின் / அஸாது சேவை கூடாதே -/
நாம சங்கீர்த்தனம் -ஒவ் ஒரு பாட்டிலும் உள்ள வினைச் சொல் சேர்த்து பார்த்தால் அனைத்துமே இருக்குமே -தொண்டைக்குலம் -தொண்டு புரிவது தானே கைங்கர்யம் –
வழி வழி ஆடச்செய்ய வேன்டும் -குடி குடி ஆள் செய்கின்றோம் சமாஸ்ரயணம் பண்ணி கொண்டே / அத்தாணி சேவகம் –தந்து -அனுபவமும் உண்டே /
உடுத்து களைந்த சூடி உண்டது உண்ண -சமர்ப்பிக்கவும் வேண்டுமே –
அல் வழக்கு ஒன்றுமே இல்லாமல் இருக்க வேண்டுமே /களை அற்ற கைங்கர்யம் பர்யந்தம் யோக்யதை வேண்டுமே
சேனாபதி ஜீயருக்கு எறும்பி அப்பா -அருளிச் செய்த வார்த்தை -கூப்பிட்டு கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேன்டும்

——————————————————-

சூரணை -343-

ஆனால் சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் –

இனி சிஷ்யன் ஆசார்யனுக்கு பண்ணும் உபகாரம் இன்னது என்று
அருளிச் செய்வதாக தத் விஷய பிரச்னத்தை அனுவதிக்கிறார் –

அதாவது –
இப்படி கொள் கொடைகளுக்கு யோக்யதை இல்லை ஆகிலும் –
உபகார ஸ்ம்ருதி  உடைய சிஷ்யன் -மகோ உபகாரனான ஆசார்யனுக்கு
பண்ணும் உபகாரம் ஒன்றும் இல்லையோ என்னில் -என்கை –

சங்கை மட்டும் இங்கே -சமாதானம் அடுத்த சூரணை –ஹித பிரிய பரத்வாதிகளான சிஷ்ய ஆச்சார்ய -சாதாரண -அசாதாரண -விருத்தி
விசேஷங்களை அருளிச் செய்து கொண்டு -மேல் சிஷ்ய சாதாரணமான -பிரவ்ருத்தி நிவ்ருத்தி விசேஷங்களை அருளிச் செய்கிறார்
உபகார ஸ்ம்ருதி செயலில் ஈடுபடுத்த வேண்டுமே –சேஷத்வம் -நானும் உனக்கு பழ அடியேன் -உனக்கே நாம் ஆள் செய்வோம் –
அடிமைத்தனம் சித்திக்க கைங்கர்யம் வேண்டுமே /ஸ்வரூப சித்தி அர்த்தமாக செய்ய வேண்டியது என்ன -என்கிற சங்கைக்கு பதில் -மேலே
உபகார ஸ்ம்ருதியால் உபகாரமும் –தான ஆதான யோக்யதா விரஹத்தாலே தத் அபாவமும் -உபகாரம் செய்யாமையும் –
உபஸித்திதம் ஆகையால் எழுந்த சங்கை போக்கும் பொருட்டு உத்தர கிரந்தம் அருளிச் செய்கிறார் –

———————————————

சூரணை -344-

ஆசார்யன் நினைவாலே உண்டு –

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

அதாவது
ஸ்வரூப ஜ்ஞனான சிஷ்யன் நினைவால் ஒருக்காலும் ஒன்றும் இல்லை –
ஸ்வ கிருஷி பல சந்துஷ்டனான ஆசார்யன் நினைவாலே உண்டு -என்கை –

தன்னிடம் எதுவும் இல்லை என்று அறிந்த -ஸ்வரூப ஞானம் உள்ள சிஷ்யன் நினைவாலே இல்லை -க்ருதஞ்ஞனான ஆச்சார்யர் – நினைவாலே உண்டே –
வில்லாளி-தொடர – திருடன் நடுவில் –பாகவதர் முன்னால்-
வில்லாளி இரும-திருடன் பயந்து விலக்க – பகவான் என் பாகவதனை ரஷித்தான் என்ற கணக்கு எழுதிய கதை –
கிருஷி பலித்ததே என்ற நினைவாலே -ஞானம் பக்தி வளர்ந்து மங்களா சாசன பரனாக ஆனதால் –பலித்ததே போதும் -என்றுமாம்

———————————————

சூரணை -345-

அதாவது- ஜ்ஞான -வ்யவசாய- ப்ரேம- சமாசாரங்கள் –

அது என்ன அருளிச் செய்கிறார் –

ஜ்ஞான வ்யவசாய ப்ரேம சமாசாரங்கள்-ஆவன –
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமும்-
தத் அநு ரூபங்களான உபாய அத்யவசாயமும் –
உபேய ப்ரேமமும்-
இவை மூன்றுக்கும் அநு ரூபமான சம்யக் அனுஷ்டானமும் –
இத்தால் திருமந்த்ரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்க படுகிற ஸ்வரூப -உபாய -புருஷார்தங்களில் –
ஜ்ஞான வ்யவசாய பிரேமங்களையும் -தத் அநு ரூப அனுஷ்டானங்களையும் சொல்லுகிறது –

அதாவது–1 ஜ்ஞான -2-வ்யவசாய- -3 -ப்ரேம–4- சமாசாரங்கள் -நான்கும் / ஞானம் முதலில் -அதுக்கு தக்க விவசாயமும் ப்ரேமமும் சமாசாரங்கள்
திரு மந்த்ர சரம ஸ்லோக த்வயம் -மூன்றாலும்–ஞானம் விவசாயம் -ப்ரேமம் – சமாசாரம் -அனுஷ்டானங்கள் சம்யக் ஆச்சார்யம் -நன்றாக -முன்னோர் அனுஷ்டானம் கொண்டே
விவசாயம் -அத்யாவசியம் -உறுதி -ஏகாக்ர சிந்தை -என்றபடி –
ஆச்சார்யர் நினைவால் உண்டாகும் உபகாரமாவது -திரு மந்த்ரார்த்த ததீயத்வ சேஷ பரியந்த ஞானம் – அதுக்கு அனுரூபமாய் சரம ஸ்லோகார்த்த உபாய விவசாயம் –
தத் ஸித்தமாய்-தயார்த்தமான -உபேய ப்ரேமமும் -உபேய நிஷ்டராய் உறுதி கொண்ட மந்த்ர த்ரயம் -இடை விடாமல் சிந்தித்து ஸ்ரேஷ்டர் உடைய –
சிட்டனே செழு நீர் திருவரங்கத்தாய் -நிர்மல சமாச்சாரம் -இவை நான்கும் -இவன் செய்யும் உபகாரமாக ஆச்சார்யர் நினைத்து இருப்பாரே –
குரு பரம்பரை சேர்த்து ரஹஸ்யார்த்தம் சொல்லி நான்கும் உண்டாகும் –
ஸ்வரூப யாதாத்ம்ய ஞானமும்-தத் அநு ரூபங்களான உபாய அத்யவசாயமும்-பன்மையால் -இந்த ஞானத்தால் வரும் மேல் உள்ளவை –மூன்றும் வருமே –
திருமந்த்ரார்த்தத்திலே இவை எல்லாம் உண்டே -மற்றவை இதன் விவரணம் –ஸ்வரூபத்தில் ஞானமும் -உபாயத்தில் விவசாயமும் -புருஷார்த்தங்களில் ப்ரேமமும் –
இவற்றால் அநு ரூபமான இவனுடைய அனுஷ்டானங்களையும் சொன்னதாகவுமாம் –
ஜ்ஞான வ்யவசாய ப்ரேம சமாசாரங்கள்-ஸமஸ்த பதம் -ஞானத்தையும் -விவசாய ப்ரேம சமாசாரமும்- இப்பொழுது இரண்டாகுமே அதனால் பன்மை –
த்வி வசனம் -சமஸ்க்ருதம் வேறே தெளிவாக தெரியும்
ஏக ஜாதிகள் இவை -ஞானத்தின் கார்யம் இவை என்பதால் -/ ஆச்சார்ய உபதேசத்தால் பெற்றவை -உபதேச கிருஷி பலத்தால் வந்தவை -உபகாரத்வம் –
பிரார்த்தனாயும் சதுர்த்தி யாலே புருஷார்த்த ப்ரேமம் வெளிப்படும் / சப்தார்த்தம் -பொருள் தேறின-தாத்பர்யம் —
ஞானாதி அனுகுண அனுஷ்டானம் -பகவத் ஏக சேஷ பூதன் உபாயம் ப்ராப்யம் -உபாயாந்தரங்களையும் போகாந்தரங்களையும் விட்டு –
பக்தி ஞான சமாசார அனுஷ்டானங்கள்-வைராக்யம் பரத்வாஜ சம்ஹிதை சொல்லுமே /
த்ருஷ்ட மாத்ரத்தால் ப்ரீதி அடைகிறார் ஆச்சார்யர் -/ஞான கார்யமான பக்தி உந்த இவை எல்லாம் –

—————————————–

சூரணை -346-

ஆசார்ய ப்ரீதி அர்த்தமாக இவனுக்கு தவிர வேண்டுவது
பகவத் த்ரவ்யத்தை அபஹரிக்கையும் –
பகவத் போஜனத்தை விலக்குகையும் –
குரு மந்திர தேவதா பரிபவமும் –

ஆசார்யனுக்கு உகப்பாக இவன் பண்ணும் கைங்கர்யம் தான் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமாய் இருக்கையாலே –
பிரவ்ருத்தி ரூபமானவற்றை அருளி செய்த அநந்தரம்-
நிவ்ருத்தி ரூபமானவற்றை அருளிச் செய்கிறார் மேல்-
அவை தன்னை உத்தேசிக்கிறார் -இத்தால் –

குரு மந்திர தேவதா பரிபவமும் -ஒருமையில் சொன்னது ஜாதி ஏக வசனம் -சமமான பக்தி மூவர் இடமும் -ஸ்லோகம் சொல்லலாம் –
ஆச்சார்யர் சொல்லாமல் குரு -பர ப்ரஹ்மம் சொல்லாமல் தேவதா -பிரமாணம் -வாக்கியம் இருப்பதால் –
மந்த்ரத்திலும் மந்திரத்துக்கு உள்ளீடான வஸ்துவிலும் மந்த்ர பிரதனான ஆசார்யன் பக்கலிலும் ப்ரேமம்
கனக்க உண்டானால் கார்யகரமாவது -முமுஷுப்படி -4-இதற்கும் இந்த பிரமாணம் உண்டே /
பக்திக்கு விஷயமாக இருக்க வேண்டியவை மூன்றும் -பரிபவம் -அவமதிப்பது -என்றவாறு
தன் அனுஷ்டானம் கண்டு உகக்கும் ஆச்சார்யர் -இதுவே புருஷார்த்தம் சிஷ்யனுக்கு –இதற்க்கே செயல்பட வேண்டுமே –
இவர் கோபிக்கும் படி நீ என்ன பண்ணினாய் என்று நினைக்க வேன்டும் -கோபித்தாலும் அருள் தான் -சீற்றம் உத்தேச்யம் -காரணமான தோஷங்கள் த்யாஜ்யம் –
ஸ்வரூப ஹானி வராமல் இருக்க இவற்றைத் தவிர்க்க வேண்டுமே –
பிரதானமான பகவத் த்ரவ்யம் –பகவான் இடம் பிரதான த்ரவ்யம் பிறர் நன் பொருள் தானே -ஜீவாத்மா தானே -நிர்பயனாக அபகரிப்பது -ஸ்வ தந்த்ரன் என்று
பண்டே உன் தொண்டாம் பழ உயிரை -பழைமையாக – தொண்டு கொண்ட -கள்வா -/ பஸ்யதோ அபஹாரம் -அன்றோ இது -/
பெரு மிடறு செய்து விரும்பி அமுது செய்யும் பகவத் போஜனத்தை மிடறு செய்து விலக்குகையும் -/
குருவை அவமதித்தால் மிருத்யு -ஸ்வரூபத்தை உருக்குமே
மந்த்ரத்தை அவமதித்தால் தரத்திரன்-ஞானம் இத்யாதி சம்பத்துக்கள் இல்லாமல் விலகும்
கோர நரகத்தில் தள்ளும் தேவதா பர ப்ரஹ்ம பரிபவமும் /

—————————————–

சூரணை -347-

பகவத் த்ரவ்ய அபஹாரம் ஆவது – ஸ்வா தந்த்ர்யமும் – அந்ய சேஷத்வமும் –
பகவத் போஜனத்தை விலக்குகை யாவது -அவனுடைய ரஷகத்வத்தை  விலக்குகை –

இப்படி உத்தேசித்த அவற்றின் பிரகாரங்களை அடைவே
விசதீகரிக்கிறார் மேல்-

பகவத் த்ரவ்யம் -என்கிறது –
பிறர் நன் பொருள் -என்னும் படி -ஸ்ரீ கௌஸ்துபம் போலே ஈஸ்வரனுக்கு ஸ்ப்ருஹநீயமான ஆத்ம த்ரவ்யத்தை –
ஸ்வாதந்த்ர்யம் ஆவது -சேஷத்வைக நிரூபநீயமானவற்றை தனக்கு உரித்தாக நினைத்து இருக்கை-
அந்ய சேஷத்வம் ஆவது -பகவத் ஏக சேஷமானவற்றை தத் இதர சேஷமாக நினைத்து இருக்கை –
இது தான் மாதா பித்ராதி தேவதாந்திர பர்யந்தமாய் இருக்கும் –
இவை இரண்டும் பிரதம அஷரத்தில் சதுர்தியாலும் -மத்யம அஷரத்தாலும் கழிக்கப் படுகிறவை இறே –
இது தன்னை -கின்தேந நக்ருதம்பாபம் சோரேண ஆத்ம அபஹாரினா -என்று சகல பாப மூலமாக சொல்லப்படா நின்றது இறே –
பகவத் போஜனம் இத்யாதி -ரஷணத்தை பகவத் போஜனம் என்கிறது
ரஷ்ய வர்க்கத்தினுடைய ரஷணம்-அவனுக்கு பசித்தவனுக்கு ஊண் போலே தாரகமாய் இருக்கையாலே –
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம் கண்ணன் கண் அல்லது இல்லை யோர் கண்ணே -என்கிற இடத்தில் –
ரஷணம் அவனுக்கு தாரகமாய் இருக்கையாலே -உண்ட என்கிறது -இல்லையேல் -காக்கும் -என்ன அமையும் -என்று இறே நம்பிள்ளை அருளிச் செய்தது –
ஏவம் பூதமான அவனுடைய ரஷகத்வத்தை விலக்குகையாவது-அவ ரஷணே -என்கிற
தாதுவாலே நிருபாதிக சர்வ ரஷகனாக சொல்லப்படுகிற அவனுக்கு ரஷிக்க இடமறும்படி-ஸ்வ யத்னத்தாலே  யாதல் –
பிறராலே ஆதல்-தன்னை ரஷிக்கையில் பிரவிருத்தன்  ஆகை-
இது தான் பகவத் ஏக ரஷ்யத்வ பிரதிபாதகமான -நமஸால்-கழிக்கப் படுகிறது இறே –

நிஷித்தவற்றில் -மிகவும் கொடிய பகவத் த்ரவ்யம் அபகரிப்பது -அவர் சொத்தான தன்னை -பரதந்த்ரனாய் இருந்தும் ஸ் வா தந்தர்யம் ஏறிட்டு கொள்ளுகையும்
அநந்யார்ஹ சேஷ பூதனாய் வைத்து -தத் அந்நிய சேஷம் என்று பிரமிக்கையும் -ஆகிய இரண்டு வகைகளும் –
ஆசையுடன் ரஷிக்க வரும் பொழுது –அஹம் என்றத்தை பற்றவும் இனிதான -மாம் -அஹம் -ஸ்ரீ கிருஷ்ணனை காட்டிலும் இனிதான –
உணவாக இருக்கும் ஜீவாத்மா அவனுக்கு -அவன் திரு உள்ளத்தில் இப்படி எண்ணம் உண்டே /பகவத் போஜனம் -கையைப் பற்றி விலக்குவது போலே –
நிருபாதிக ரக்ஷணத்தை -புறம் கையால் அடித்து விலக்கி -சோற்றில் குற்றம் இல்லை -உள்ளம்கையால் அவன் உண்ண இருக்க –
உன்னை சாப்பிட விட மாட்டேன் என்று விலக்கி -காலால் தள்ளுவது போலே செய்தாலும் அந்தப் பிரயோகத்துக்கு கூசி இப்படி அருளிச் செய்கிறார் –
ஸூ ரக்ஷண ஸ்வான்வயம் கூடாதே -புறங்கையால் எடுக்க முடியாதே -ரக்ஷித்து கொள்ள முடியாதே இவனால் -அதனாலே புறங்கை என்றுமாம் –
கையில் நன் முகம் வைக்கும் நையும்-அவன் கை மட்டும் தானே பட வேன்டும் -உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன் –
அவன் உள் கையால் நம்மை ருசித்து உண்ண வர -நாமோ நிராசையால் தள்ளுகிறோமே
தாத் அர்த்த சித்தம் அவ ரஷணே -சாலப் பலநாள்- காக்கும் இயல்பினன் -கண்ணன் -ஈரக்கையால் தடவி -ரஷிக்கும் -சர்வ ரக்ஷகன் –
நிருபாதிக ரக்ஷகத்வம் -குடல் துவக்கு சாதாரணம் -பெத்த பாவிக்கு விடப் போமோ -காரணம் சம்பந்தம் அல்லவோ என்னில் –
காரணம் சம்பந்தம் அனைவருக்கும் பொதுவான படியால் -நிர்ஹேதுகத்வம் உண்டே /சம்பந்தம் சாமான்யமான படியால் -ராவணன் சிசுபாலனுக்கும் உண்டே /
ஸூ ரக்ஷண அன்வய ரூப புறங்கை -ஈடுபாடு தான் புறங்கை -கார்யம் பலிக்காதே/ ரக்ஷகனுக்கு ரக்ஷகத்வம் தானே ஜீவனம் –
அயோக விபச்சேதம் – தொலைத்து கூடும் -சேஷத்வம் இவனுக்கு -ஆய -இவனுக்கு ஸ்வா தாந்தர்யம் கூடாது –
ஸ்வ இதர சேஷத்வ அபாவம் -தானே ஸ்வா தந்தர்யம் -தன்னைக் காட்டிலும் வேறு பட்ட அனைவருக்கும் அடிமை இல்லை –
அ – -ஆய ஏவ -ம -அவனுக்கே -லுப்த சதுர்த்தி -தாதர்த்த சதுர்த்தி -சேஷத்வம் சித்திக்கும் -ஸ்வா தந்தர்யம் போகுமே இத்தால் –
யோகம் ஸ்தாபித்த பின்பு – அந்நிய யோக விவச்சேதம் -உகாரம் – எனக்கு ஸ்வா தந்திரம் இல்லை என்றாலும் -மற்றவருக்கும் சேஷம் -என்றால்
அவனுக்கே -என்பதால் -பகவானுக்கு சேஷ பூதனே என்பதை மாற்றி பகவானுக்கே சேஷ பூதன் –
அந்நிய தமரில் அந்நிய தமன் -பகவானை தவிர மற்ற யாரும் ரக்ஷகர் இல்லை -நாமும் ரக்ஷகர் இல்லையே
அடியேன் பகவானுக்கே ரஷ்யம் -நான் எனக்கு உரியன் அல்லேன் நமஸ் சொல்லுமே –

———————————————

சூரணை -348-

அவனுடைய ரஷகத்வ க்ரமம் பிரபன்ன பரித்ராணத்திலே சொன்னோம் –

குரு பரிபவம் ஆவது -கேட்ட அர்த்தத்தின் படி அனுஷ்ட்டிக்காது ஒழிகையும் -அநாதிகாரிகளுக்கு உபதேசிக்கையும் –
மந்த்ர பரிபவம் ஆவது -அர்த்தத்தில் விச்ம்ருதியும்- விபரீதார்த்த பிரதிபத்தியும் –
தேவதா பரிபவம் ஆவது -கரண த்ரயத்தையும்- அப்ராப்த விஷயங்களிலே பிரவணம் ஆக்குகையும் –
தத் விஷயத்தில் பிரவணம் ஆக்காது ஒழிகையும் –

அவன் ரஷித்து அருளும் க்ரமம் தான் என்ன -என்ன அருளிச் செய்கிறார் –

அதாவது –
சர்வ ரஷகனான அவனுடைய ரஷகத்வ க்ரமம் பிரபன்ன பரித்ராணம் என்கிற
பிரபந்தத்திலே விசதமாக சொன்னோம் -அங்கே கண்டு கொள்வது என்கை –
அதிலே அவனை ஒழிந்தார் அடங்கலும் ரஷகர் அல்லர் என்னும் அத்தை பிரதிபாதித்த அநந்தரம் –
ஈஸ்வரன் மாதா பிதாக்கள் கை விட்ட அவஸ்தையிலும் –
பின்னு நின்று அடியேனுக்கு உற்றானாய் வளர்த்து -என்கிறபடியே
தன் உருக்கெடுத்து வேற்று உருக் கொண்டு தான் முகம் காட்டி இன் சொல் சொல்லியும் –
என்று துடங்கி -இவனே எல்லார்க்கும் ரஷகன் -என்கிறது அளவாக
அவனுடைய ரஷகத்வ க்ரமத்தை ஸூவ்யக்தமாக அருளிச் செய்தார் இறே

-குரு பரிபவம் -இத்யாதி -கேட்ட அர்த்தத்தின் படி அனுஷ்டியாது ஒழிகை -யாவது –
ஸ்வ உஜ்ஜீவன அர்த்தமாக அவன் அருளிச் செய்து கேட்ட த்யாஜ்ய உபாதேய ரூபமான –
அர்த்த விசேஷங்களுக்கு தகுதியாய் இருந்துள்ள த்யாக ஸ்வீ கார ரூபமான அனுஷ்டானத்தை பண்ணாது ஒழிகை –
அநதிகாரர்களுக்கு உபதேசிக்கையாவது -தனக்கு தஞ்சமாக அவன் உபதேசித்த
சாரார்தங்களை நாஸ்திக்யாதிகளாலே-இதுக்கு அதிகாரி இல்லாதவர்களுக்கு
க்யாதி லாபாதிகளை நச்சி உபதேசிக்கை-
மந்திர பரிபவம் -இத்யாதி -அர்த்தத்தில் விச்ம்ருதி யாவது -ஆசார்யன் அந்த மந்த்ரத்துக்கு அருளிச் செய்த
யதார்த்தங்களை பலகாலும் அனுசந்தித்து நோக்கிக் கொண்டு போருகை அன்றிக்கே -ஒவ்தாசீந்த்யத்தாலே மறந்து விடுகை –
விபரீதார்த்த பிரதிபத்தி -யாவது -ஆசார்யன் அருளிச் செய்த -பிரகாரம் அன்றிகே –
மந்த்ரத்துக்கு விபரீதமாய் இதுக்கும் அர்த்தங்களை இதுக்கு அர்த்தம் என்று ப்ராந்தியாலே பிரபத்தி பண்ணி இருக்க்கை-
தேவதா பரிபவம் இத்யாதி -கரண த்ரயத்தையும் அப்ராப்த விஷயங்களில் பிராவண்யம் ஆக்குகை -யாவது –
விசித்ரா தேக சம்பந்தி ஈச்வராய நிவேதிதும் –
மாயவன் தன்னை வணங்க வைத்த கரணமிவை-என்கிறபடியே- பகவத் பரிசர்யர்த்தமாக ஸ்ருஷ்டங்களாய்
உன் சின்னமும் திரு மூர்த்தியும் சிந்தித்து ஏத்தி கை தொழவே -என்கிறபடியே
அவனை நினைக்கைக்கும் -ஸ்துதிக்கைகும் -வணங்குகைக்கும்-உறுப்பான மனோ வாக் காயங்களை -ஸ்வரூபம் பிராப்தம் அல்லாத
ஹேய விஷயங்களில் -மேட்டில் நீர் பள்ளத்தில் விழுமா போலே பிரவணமாம் படி பண்ணுகை –
தத் விஷயத்தில் பரவணம் ஆகாது ஒழிகை யாவது -மால் கொண்ட சிந்தையராய் –
நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து மெய் தழும்ப தொழுது ஏத்தி -இத்யாதிகளில் சொல்லுகிறபடியே –
ஸ்வரூப ப்ராப்தமான அவ் விஷயத்தில் மண்டி விழும்படி பண்ணுவியாது ஒழிகை –
ஆக –
மாந்தரே தத் தேவதா யாம்ச ததா மந்திர பிரதே குரவ் த்ரிஷூ பக்தி  ச்ஸ்தாகார்யா-என்றும் –
மந்திர நாதம் குரும் மந்த்ரம் சமத்வே நானுபாவயேத்-என்றும் –
பூஜ்யமாக சொல்லப் படுகிற இம் மூன்று விஷயத்தையும் பரிபவிக்கை யாவது இவை ஆயிற்று –

சர்வ வித ரக்ஷகர் இவனே – அந்நியர் ரக்ஷகர் அல்லர் -சூ ஸ்பஷ்டமாக அருளிச் செய்தார் –பெற்றார் பெற்று ஒழிந்தார் பின்னும் நின்று அடியேனுக்கு —
உயிராகி நின்று -பெரிய திரு மொழி -8–9–7–திருக் கண்ணபுரம் -திவ்ய தேசம் ஸ்பஷ்டமாக இல்லாத -4-பத்தில் -இரண்டு இடங்களிலும் -5 – ஒன்பது இடங்களிலும்
-9-பத்தில் ஏழு இடங்களில்18 -பாசுரங்களில் இல்லை / பெற்றோர் உருவில் தான் வருவான் -மற்ற உருக் கொண்டு -இன் சொல்லி சொல்லியும் –
சர்வ வித ரக்ஷகன் -சால பல நாள் உகந்து உயிர்கள் காப்பானே –
அவன் ரஷித்து அருளும் க்ரமம் தான் என்ன -என்ன அருளிச் செய்கிறார் –
அஞ்ஞான அந்தகாரம் போக்கும் குரு ரேவ பர ப்ரஹ்ம குரு ஷாத் -குருவே நம–குரவே நம-என்பதே சரி -/அருளிச் செய்யக் கேட்ட தத்வ ரஹஸ்ய தாத்பர்யம்-படி
சிரேஷ்ட சமாசாரம் அனுஷ்டியாது இருப்பதும் -கேட்டதாய் பாலியில் போடுவது போலெ அதிகாரிகள் அல்லாதார் களுக்கு சொல்லாமையும் அத் தன்மையை
வெளியில் காட்டிய ஆச்சார்யர் வண்மை -இரண்டாலும் நம் இடம் வர -யதார்த்தத்தில் விஸ்ம்ருதியும் –அத்தை வைத்து பிரயோஜனாந்தரத்துக்கு போகக் கூடாதே –
துர்மானித்தவ நிபந்தமான விபரீதார்த்தம் பிரதிபத்தி பண்ணக் கூடாதே
தேவதா -மந்திரத்தால் பிரதிபாதிக்கப்படும் பர ப்ரஹ்மம் -தூ மலர் தூவி தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க – அஞ்சலி ஸ்துதி மனனம் –
மூன்றுக்கும் சாதனம் -தத் கைங்கர்ய உபகரணமான -மூன்றையும் தத் இதரர்களை நெஞ்சினால் நினைத்தும் -வாயினால் மொழிந்தும் நீதி அல்லாதது செய்தும் –
அபிராப்தங்களில் செலுத்தியும் -பிராப்த விஷய ப்ராவண்யம் இல்லாமையும் பரிபவமே – -மால் கொள் சிந்தையராய் –நாத்தழும்பு எழ நாரணா என்று அழைத்து
மெய் தழும்ப தொழுது -ஸ்வரூப பிராப்தமுமாய் -நிரதிசய போக்யமுமான விலக்ஷண தத் விஷயத்தில் மீட்க ஒண்ணாத படி பிரணவம் ஆக்காமல் இருப்பதும் அவமரியாதையே –
நமக்கு தஞ்சமே திருமந்திர சாரார்த்தங்கள் தானே -/ நாஸ்திக்யாதிகளாலே–நாஸ்திகர் -பொறாமை கொண்டவர் –
தபஸ் இல்லாமை- பக்தி இல்லாமை -சிசுரூஷை இல்லாமை –
கொங்கு நாட்டு பெண்மணி -மறந்து -மீண்டும் த்வயம் -கேட்டு -காரேய் கருணை -மறந்து பரிபவம் என்றால் அருளால் இருப்பது ஆச்சார்யார்க்கு கொத்தை யாகுமே –
பள்ளத்தில் விழுமா போலே பிரவணமாம் படி பண்ணுகை –இதுவே இயற்க்கை -அவனை நோக்கி போவது –
நாமோ வலிந்து இவற்றை திருப்பி விஷயாந்தரங்களில் செலுத்துகிறோமே -இதை விலக்கவே அவன் இடம் பிரவணம் ஆகுமே
மந்தரே தத் தேவதா யாம்ச ததா மந்திர பிரதே குரவ் த்ரிஷூ பக்தி  ச்ஸ்தாகார்யா- சதா கார்ய பக்தி கனக்க உண்டாக வேண்டுமே மூவர் இடத்திலும் –
மந்திர நாதம் குரும் மந்த்ரம் சமத்வே நானுபாவயேத்-சமமாகவே கொள்ள வேண்டுமே /
த்யாஜ்ய உபாதேயங்களுக்கு தகுதியான அனுஷ்டானம் –தியாகத்துக்கு த்யாஜ்ய விஷயத்துவமும் ஸ்வீ காரியத்துக்கு ஸ்வீகார்ய விஷயத்தவமும் –
சாஸ்திரம் க்ருத்யம் அக்ருத்யம் வாசி சொல்லி இருந்தாலும் -ஆச்சார்ய உபதேசம் வாங்கிக் கொண்டு விடுவதே பிரமாணம் –
அவன் அருளிச் செய்ய கேட்டு அனுஷ்டானம் அதுக்கு தக்க படி இருக்க வேண்டும் –
உபதேசம் -முதல் நிலை -அறிவது இரண்டாம் நிலை -அனுஷ்டானம் மூன்றாவது நிலை –
இல்லாமல் இருப்பதே பரிபவம் -/ மந்த்ரத்தை நன்றாக காத்து –கேட்க்காமல் மந்த்ரத்தை சொல்லாமல் -/அப்படி கேட்ட்டாலும் நமஸ் -மட்டும் சொல்லி –
மேலும் கேட்ட பின் நாராயணாயா -மீண்டும் மீண்டும் கேட்டால் பிரணவம் -அர்த்தம் சொல்லாமல் குஹ்யதமம் சம்ப்ரதாயம் —
ஆஸ்ரிதர் அதி பக்தாயா -தேவரீர் கதி- சாஸ்த்ரார்த்தம் அறிய அபி நிவேசம் -உள்ளவனுக்கு சொல்ல வேண்டும் /டம்பம் க்யாதி பூஜா காரணமாக சொல்லக் கூடாதே /
பர வான் -தேவரீரை பரனாக உடையவன் -நித்யம் நாராயண பக்தர்களுக்கு கைங்கர்யம் -இதுவே மந்த்ரார்த்தம் / இல்லாமல் இருப்பதே உதாசீனம் –

—————————————–

சூரணை-349-

இவனுக்கு சரீர வாசனத்தளவும் ஆசார்ய விஷயத்தில் –
என்னைத் தீ மனம் கெடுத்தாய் –
மருவி தொழும் மனமே தந்தாய் -என்று
உபகார ஸ்ம்ருதி நடக்க வேணும் –

ஆக இப்படி ஆசார்ய ப்ரீதி அர்த்தமாக செய்ய வேண்டும் அவையும் –
தவிர வேண்டும் அவையும் -அருளிச் செய்தாரார் நின்றார் கீழ் –
இன்னும் அவனுக்கு அபேஷிதமாய் இருப்பது ஒன்றை அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது –
இவ் அதிகாரிக்கு சரீரத்தோடு இருக்கும் காலம் இத்தனையும் -மகோ உபாகாரனான ஆசார்யன் பக்கல்-
என்னுடைய தீய மனசை போக்கினாய் –
அநந்ய பிரயோஜனமாக அனுகூல விருத்திகளை பண்ணும் மனசை தந்தாய் –
என்று உபகார ஸ்ம்ருதி அநு வர்த்திக்க வேணும் என்கை-

சரீர அவசானத்து அளவும் – யாவன் மோக்ஷம் இவனுக்கு ஆச்சார்யர் பக்கல் உபகார ஸ்ம்ருதி விசேஷம் இருக்க வேண்டுமே /
ஆச்சார்யர் இஷ்ட அநிஷ்டங்களே தனக்கும் -பரிபாகம் பிடித்த சிஷ்யனுக்கு -ஆச்சார்யர் ஸமாச்ரயணம் ஆன பின்பும் பிரக்ருதியிலே இருப்பதால் —
உரு மாய்ந்து போக விரோதி ஸ்மரணமும் அனுவர்த்திக்குமே சரீர அவசானம் வரை
துஷ்டமான மனசை வி நஷ்டமாக்கி -தீ மனம் கெடுத்தாய் / என்னை தீ மனம் கெடுத்தாய் -என் தீ மனத்தைக் கெடுத்தாய் -என்றபடி /
நல்ல மனம் கொடுத்தாய் -மருவித் தொழும் மனமே தந்தாய் – -வாமன ஸ்ரீ தர பாசுரங்களில் இந்த இரண்டும் -/
உபகார ஸ்ம்ருதி மறவாமல் இருக்க வேண்டும் -அங்கு போனால் சம்சார ஸ்ம்ருதி லேசமும் கூடாதே -ஆகையால் தீ மனம் கெடுத்தாய் என்று சொல்ல முடியாதே –
நோ பஜனம் சரீரம் ஸ்மரன்-நினைவு வராமல் உபகார ஸ்ம்ருதியும் அங்கே வராதே – -விரோதி ஸ்மரண ஹேதுவான உபகார ஸ்ம்ருதி கூடாதே –
அனந்த கிலேச பாஜனம் இங்கு – நிரதிசய ஆனந்தாவாஹம் அங்கு- -பிரான் இருந்தமை காட்டினீர்- ப்ராப்யம் காட்டுவதற்கு தீமை நினைவு வேண்டாமே —
ப்ராப்ய அனுபவ ஜெனித ஸ்ம்ருதி -வரலாமே / முமுஷு தசையில் நிவர்த்ய விரோதி ஸ்மரணம் / நிவர்த்தகர் -ஆச்சார்யர் -/
முக்த தசையில் தொலைக்கப்பட்ட எதுவிலும் லேச ஸ்மரணமும் கூடாதே /மோக்ஷ ஹேதுவான நெஞ்சு -மருவித் தொழும் மனமே தந்தாய்-
ஆனுகூல்ய ஆகாரம் -ததீயத்வ ஆகாரேண -நினைக்கலாமே என்னில் இதுக்கு பிரதிகோடி தீ மனம் கெடுத்தது ஆகுமே /
பந்த ஹேதுவான பிரதிகூலமான / பிரான் இல்லாமை இல்லை இருந்தமை காட்டினார் / மருவித் தொழும் மனம் என்றால் தொழாத மனம் இருந்தது போலெ இல்லை
பிரான் இருந்தமை காட்டினத்துக்கு பிரதிகூல இல்லாமையே இல்லையே என்றவாறு -/
அந்தமில் பேரின்பத்து அடியாரோடு இருந்தமை அனுகூலமாகவே இருப்பது ஒன்றே அனுசந்தேயம் –

—————————————

சூரணை -350-

மனசுக்கு தீமை யாவது – ஸ்வ குணத்தையும் – பகவத பாகவத தோஷத்தையும் -நினைக்கை –

மனசுக்கு தீமை யாவது என் என்னும் ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார் –

ஸ்வ குணத்தை நினைக்கையாவது -சம தம ஆத்ம குணங்கள் தனக்கு உண்டானாலும் –
நிறை ஒன்றும் இலேன் –
நலம் தான் ஒன்றும் இலேன் –
என்கிறபடியே -நமக்கு ஒரு ஆத்ம குணமும் இல்லை என்று தன் வெறுமையை அனுசந்திக்க வேண்டி இருக்க –
இவை எல்லாம் நமக்கு இப்போது உண்டு என்று தனக்கு உண்டான சத் குணங்களை போரப் பொலிய நினைக்கை –
பகவானுடைய தோஷத்தை நினைக்கை யாவது –
1-தனக்கு பரதந்த்ரமான இவ் ஆத்ம வஸ்து -தன் உபேஷையாலே-அநாதிகாலம் கர்மத்தை வியாஜமாக்கி கை விட்டு இருந்தவன் –
2-அவ்வளவும் அன்றிக்கே -நிர்தயரைப் போலே -யதா கர்ம  பல தாயியாய் நிரயங்களிலே தள்ளி -அறுத்து அறுத்து தீர்த்துமவன் –
3-கைக் கொண்டாலும் -நிரந்குச ஸ்வ தந்த்ரன் ஆகையாலே இன்னபோது இன்ன செய்யும்   என்று விச்வசிக்க ஒண்ணாதவன் என்றால் போலவும் –
4-கிருஷ்ண அவதாரத்தில் ஸ்வைர விஹாரங்களை இட்டு தர்ம சம்ஸ்தாபனம்
பண்ணப் பிறந்தவனுக்கு இங்கன் செய்கை முறைமையாய் இருந்தது இல்லையோ- என்றால் போலவும் நினைக்கை –
அல்லது –
சமஸ்த கல்யாண குணாத்மகமான விஷயத்தில் நினைக்கலாவது ஒரு தோஷம் இல்லை இறே-
இனி பாகவத தோஷத்தை நினைக்கை யாவது –
திருமேனி யோடு இருக்கையாலே மேல் எழத் தோற்றுகிற ஆகாரங்களை இட்டு
பிரகிருதி வஸ்யர் அஹங்கார க்ரஸ்தர் என்றால் போலே நினைக்கை –
ஆக-இது -ஸ்வ குணத்தையும் -பகவத் பாகவத தோஷத்தையும் -நினைக்கை யாவது –

அவன் கெடுத்த மனசின் தீமையை -மனன சாதனமான மனசுக்கு -தீமை -தனக்கு உண்டாய் வருகிற – சாந்தி சம தமாதி குணங்களையும் –
இருக்கிற வற்றையும் நினைக்கக் கூடாதே-நினைத்தால் அஹங்காரம் அபி விருத்தம் ஆகுமே
தோஷ யோக்யதா ஸ்பர்சம் அற்ற பகவத் பாகவத விஷயங்களில் இல்லாத தோஷங்களையும் நினைக்கக் கூடாதே -நினைத்தால் அபசாரம் அபி விருத்தமாகுமே –

——————————————

சூரணை-351-

தோஷம் நினையாது ஒழிகை குணம் போலே -உண்டாய் இருக்க அன்று -இல்லாமையாலே —

ஆனால் தனக்கு சிலம் குணம் உண்டாய் இருக்க -அது நினைக்கலாகாதோ என்கிறாப் போலே –
அத் தலைக்கும் சில தோஷம் உண்டாய் இருக்க நினைக்கலாகாதோ-என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
பகவத் பாகவத விஷயங்களிலே தோஷம் நினையாது ஒழிகிறது-
தனக்கு குணம் உண்டாய் இருக்க -அது நினையாது ஒழிகிறாப் போலே –
உண்டாய் இருக்க நினையாது ஒழிகிறது அன்று -முதலிலே இவ் விஷயங்களிலே அது இல்லாமையாலே -என்கை-
எங்கனே என்னில் –
1-சர்வ முக்தி பிரசங்கம் வாராதபடி தான் இட்ட கட்டளையிலே அங்கீகரிக்கைக்காக –
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் -என்றும்
எதிர் சூழல் புக்கு -என்றும் சொல்லுகிறபடியே
சகல ஆத்மாக்களுடைய உஜ்ஜீவனத்துக்கு ஸ்ருஷ்ட்டி அவதாராதிகளாலே
கிருஷி பண்ணிக் கொண்டு போருகையாலே -அநாதி காலம் உபேஷிகனாய் கை விட்டு இருந்தான் என்ன ஒண்ணாது –
2-நிர்த்தயரைப போலே -கர்ம அநு குணமாக
தண்டிக்கிறதும் -மண் தின்ன பிரஜையை நாக்கிலே குறி இட்டு அஞ்சப் பண்ணும் தாயைப் போலே
ஹித பரனாய் செய்கையாலே -உஜ்ஜீவனத்துக்கு உடலாம் இத்தனை –
3-நிரங்குச ஸ்வாதந்த்ர்யம் பூர்வம் பந்த ஹே துவாய் போந்ததே ஆகிலும் -கிருபா பரதந்த்ரனாய் அங்கீ கரித்த பின்பு –
நித்ய சம்சாரியை நித்ய சூரிகளோடு சம போக பாகி ஆக்கும் அளவில் -நிவாகர் அற செய்கைக்கு உறுப்பாக
இத்தனை ஆகையால் ஸ்லாக்யமாம் இத்தனை –
4-கிருஷ்ண அவதாரத்திலே ஸ்வைர விஹாரம் -யதிமே பிரமசர்யம் ஸ்யாத்-என்கிறபடியே தனக்கு இந்த போகத்தில் ஒட்டு இல்லாமையை வெளி இடுக்கைக்காகவும் –
கோபயா காமாத் -என்கிறபடியே அவ்வழியாலே அவர்களை தன் பக்கல் ப்ரவணராக்கி யுத்தரிப்பிக்கைகாவும் செய்தார் ஆகையாலே -குணம் அத்தனை அல்லது குற்றமன்று –
இனி -பாகவதர்களும் – குற்றம் இன்றி குணம் பெருக்கி -என்கிறபடியே -நிர்தோஷராய்-நிரவதிக
குணராய் இருக்கையாலே உள்ளூற ஆராய்ந்து பார்த்தால் -அவர்கள் பக்கலிலும் காணலாவது தோஷம் இல்லை இறே-
மற்றும் இப்புடைகளிலே -பகவத் பாகவத விஷயங்களில் தோஷங்கள் தோற்றித்தாகில் பரிகாரங்கள் கண்டு கொள்வது –
இவை எல்லாம் திரு உள்ளம் பற்றி ஆயிற்று -இல்லாமையாலே -என்று இவர் அருளிச் செய்தது –

பகவத் பாகவத தோஷம் நினையாது ஒழிகை–நம் குணம் போலே-சிறிது -உண்டாய் இருந்தாலும் இல்லை என்று
மறைத்து நினைக்க வேண்டியது போலே அன்று -என் என்னில் பகவத் பாகவத விஷயங்களில் தோஷமே -இல்லாமையாலே –என்றவாறு –
மித்யா ப்ரதீதி -பொய்யாக தோற்றும் -இவை -தோஷ ஸத்பாவ ஸ்பர்சம் இல்லையே -தீண்டுதலும் இல்லையே / அத்யந்த அபாயம் என்றவாறு –
தனக்கு தோஷம் இருந்து மாறி குணவானாக ஆன பின்பு -முன்பு இவர்கள் குணங்கள் கண்ணில் படாதே -இப்பொழுது நல்லவனான பின்பு அவர்கள் தோஷங்கள்
கண்ணில் படாதே-அவர்கள் தோஷ குணங்கள் இரண்டும் உண்டாய் -தோஷத்தை நினையாது ஒழிகிறான் -குணங்களை நினைக்கிறான் என்றும் சிலர் சொல்லுவார்கள் –
இல்லாத குற்றம் -நினைவே தப்பு -என்பதற்கு மேலே நான்கு விவரணம்-
1-சர்வ முக்தி பிரசங்கம் வாராதபடி -தான் இட்ட கட்டளையிலே -தான் சங்கல்பித்த பிரகாரம்-கருணை காரியமாக ஸ்ருஷ்ட்டி அவதாராதிகள் –
லோகபத்யம் அனுக்ரஹ கார்யம்-பிரயோஜனம் பிரதானம் – -வீட்டைப் பண்ணி விளையாடும் –விளையாடுவதே சேதனன் உஜ்ஜீவனத்துக்காகவே தான்
லீலை -ஆனுஷங்கிக பலம் பிரதானம் இல்லை -கூடவே வந்தது என்றவாறு –சம்சாரிகள் உஜ்ஜீவனமே பிரதானம் -சர்வ சக்தன் என்பதால் லீலை –
ஆனந்தமயன் -துக்க லேசமும் இல்லை -உபேக்ஷகத்வ ரூபா பிரதம தோஷம் பரிஹ்ருதம்
2–நிர்த்தயரைப போலே -கர்ம அநு குணமாக -தண்டிக்கிறதும் -ஹித பரனாய் செய்கையாலே -உஜ்ஜீவனத்துக்கு உடலாம் இத்தனை
உஜ்ஜீவனத்துக்கு உட்பட்டதே தண்டனையும்-
3-கர்ம பலனும் கிருபா பலனும் அனுபவித்தே தீர்க்க வேண்டுமே -கிருபா பரதந்த்ரனாய் அங்கீ கரித்த பின்பு -நிராங்குச ஸ்வா தந்தர்யம் ஸ்லாகியமாகுமே
ஸ்ருஷ்டிக்கு வேண்டிய கிருபை நம்மை எதிர்பார்க்காது -பொதுவான கிருபை அது -இந்த கிருபை வேறே -அங்கீ கரித்து மோக்ஷம் அளிக்கும் கிருபை -இது –
நாமும் பர தந்த்ரர் -இவனது ஏறிட்டுக் கொண்ட கிருபா பாரதந்தர்யம் -இதுவும் தடுக்க முடியாது நிராங்குச ஸ்வா தந்தர்யம் அடியாக
ஏறிட்டு கொண்டதால் – நமக்கு இயற்க்கை -கிருபா பரதந்த்ரன் -கிருபையால் ஸ்வாதந்திரம் தடுக்கப் பட்டு தன் கிருபைக்கு தானே பரதந்த்ரர் ஆனபின்பு தோஷம் இல்லையே-
4-போகத்தில் ஒட்டு இல்லாமையை-ப்ரஹ்மசர்யம் உண்மையானால் பரீக்ஷித் உயிர் -பிழைத்தான் – கோபிகள் காமத்தால் -தன் பக்கல்
பிரவணம் ஆக்கி உத்தரிப்பித்தானே
இப்புடைகளிலே -பகவத் பாகவத விஷயங்களில் தோஷங்கள் தோற்றித்தாகில் பரிகாரங்கள் கண்டு கொள்வது என்பதற்கு –
தாடகா வாதம்—மக ரிஷி வசனம் அடியாக -12-வயசுக்கு பின்பே இவனுக்கு -யமனுக்கு சாபம் -விதுரராக பிறந்தது — / பூதனா நிரசனமும் கன்னி-முதல் – வதம் பெண் வாதம் –
கரவதத்தில் அப தர்ப்பணம் -முன்னே முன்னே சென்று அடிப்பது -சில சமயம் முன்னே போகாமல் பின்னே வந்தது கூடுமோ என்னில் -வீரத்துக்கு குறை இல்லை –
14000-அடி பட்டு துர்கந்தம் -ராமர் க்ஷத்ரியர் ஸூ கந்ததுடன் இருந்தவர் -வாசனை தாங்காமல் பின் வாங்கினார் என்றபடி
வாலிவத மறைந்து பான பிரயோகம் –சுக்ரீவ வதார்த்த சரணாகதி வாலி செய்தால் என் செய்ய-அதனால் முன்னே போக வில்லை –
மஹா லஷ்மி கடாக்ஷம் மஹா பலிக்கு வர கூடாது என்று மறைத்தது போலே /
தேவர் பரதன் சரணாகதி -விளம்பித்து செய்யும் படி -விரோதம் இல்லாமல் நடத்த முடிந்ததே /
ஆயுதம் எடேன் என்று சொல்லியும் ஆயுதம் எடுத்தும் -பகலை இரவாக்கியும் முதலானவற்றுக்கு -ஆஸ்ரித ப்ரதிஜ்ஜா சத்யம் ஆக்கும் கார்யம் -ஆஸ்ரித பரதந்த்ரன் அன்றோ –
பெரிய திருவடி -சுமுகன் -அபயம் அளித்து -இந்திரிய பயம் தோஷம் உண்டோ என்னில் –
பிரஹ்லாத ஆழ்வான்-பேரன் -மஹா பலி -த்ரிவிக்ரமன் -பாதாளத்தில் தள்ளி –எதிர்த்து வந்தான் -பிரக்ருதி ராக்ஷஸ நினைவால் -விரோசனன் தடுத்தும் அடிக்க வந்தானே
நம்பி மூத்த பிரான் -தீர்த்த யாத்திரை சென்று -சமந்தக மணி நிமித்தமாக -சத்ரஜித் -இடம் -சூரியன் கொடுத்தது -தம்பி கொண்டு போக- சிங்கம் அடித்து- தொலைய –
அக்ரூரர் -நாம் கண்ணனை கூட்டி வந்தோம் அஹங்காரம்
ஈஸ்வர சங்கல்பத்தாலே கல்பித்த தோஷங்கள் இவை / சீதா பிராட்டி லஷ்மணன் இடம் பட்ட அபசாரம் போலே / நமக்கு பாகவத அபசாரம் மிக குரூரம் என்று புரிய வைக்க /
இங்கும் பிரகிருதி வச குரூரம் காட்ட -/ தேவதேவி வசம் தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -இதுவும் ஈஸ்வர சங்கல்ப
பஞ்ச இந்திரியங்கள் லீலா விபூதி தோஷ குரூரம் புரிய வைக்க ஈஸ்வர கார்யம் இவை

————————————-

சூரணை -352-

தோஷம் உண்டு  என்று நினைக்கில் பரதோஷம் அன்று- ஸ்வ தோஷம் –

தோஷம் இல்லை என்று ஸ்வ பஷத்தால் சாதித்தார் கீழ் –
இனி பர தோஷத்தால் -தோஷ சத்பாவத்தை அங்கீகரித்து கொண்டு –
தத் பரிகாரத்தை அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது –
கீழ் சொன்னபடி அன்றிக்கே -பகவத் பாகவத விஷயங்களில் தோஷம் உண்டு என்று நினைக்கில் –
அவர்கள் பக்கல் தனக்கு தோற்றுகிற தோஷம் -அவர்கள் தோஷம் அன்று –
தத் த்ரஷ்டாவான தன்னுடைய தோஷம் -என்கை –
நிரதோஷம் அவர்களுக்கு -பிரமித்தால் தோஷ தர்சனம் பண்ணும் ஸூ வ தோஷமே -பரஸப்தம் முக்கியம் -அப்யமமக வாதம்-
நல்ல வஸ்துவில் தோஷம் பார்த்தால் -இல்லாத ஒன்றை இருப்பதாக பார்க்குமதுவே தோஷம் –

——————————————————-

சூரணை -353-

ஸ்வ தோஷம் ஆன படி என் -என்னில் –
அது ஸ்வ தோஷம் ஆனபடியை சாதிக்கைக்காக-

தத் விஷய ப்ரச்னத்தை அநு வதிக்கிறார்-

பரகதமாய் தோற்றுகிற அது -ஸ்வ தோஷமான படி எங்கனே என்னில்-என்றபடி –

——————————————

சூரணை -354-

ஸ்வ தோஷத்தாலும் பந்தத்தாலும் –

அதுக்கு உத்தரம் அருளிச் செய்கிறார் –

அதாவது –
காசாதி துஷ்ட த்ருஷ்டிமானுக்கு சந்திர த்விதாதிகள் தோற்றுமா போலே –
நிர்தோஷமான விஷயங்களில் -தோஷம் தோன்றும்படியான -துர்வாசன துஷ்ட சித்தை யாகிற ஸ்வ தோஷத்தாலும் –
புத்ராதிகள் தோஷம் பித்ராதிகள் தாமாம் போலே அவர்களுக்கு உண்டான தோஷம்
தன்னதாம் படி அவர்களோடு தனக்கு உண்டான பந்த விசேஷத்தாலும் -என்கை –
ஸ்வ தோஷத்தாலும் -என்கிற இது அத்தலையில் தோஷ அபாவத்தை பற்றிச் சொல்லுகிறது –
மற்றை யது தோஷ வத்தையை அங்கீ கரித்து கொண்டு சொல்லுகிறது –

இரண்டு காரணங்களால் -/ உண்மையால் அவன் இடம் தோஷம் இல்லை -/ ஸூ வ சித்த தோஷம் -உள்ளத்து அழுக்கால் தானே இவன் தர்சிக்கிறான் –
கண்களிலும் மனத்திலும் உள்ள தோஷம் -காரணமாக இல்லாததை காண்பது -காசாதி துஷ்ட த்ருஷ்டிமானுக்கு-கண் பார்வையில் குறை உள்ளவனுக்கு -என்றபடி –
பகவத் பாகவத தோஷங்கள் இருந்ததே ஆகிலும் அவனது தன்னதாம் படி உள்ள பந்தம் -சரீராத்மா பாவத்தால் -பந்தத்தால் ஸூ வ தோஷமாகும் -ஒரு சரீரீ –
த்வ சந்த்ர தர்சனம் போலேயும்-மாத்ரு தோஷம் புத்தரானாவது போலே -சொத்து கடன் எல்லாம் பிள்ளையது தானே – குடல் துவக்கு உண்டே /பந்த விசேஷத்தாலே என்றபடி

———————————–

சூரணை-355-

ஸ்வ தோஷம் இல்லை யாகில் குண பிரதிபத்தி நடக்கும் –

ஸ்வ தோஷத்தாலே என்னலாவது-தோஷம் தான் உண்டானால் அன்றோ -என்ன
அருளிச் செய்கிறார் –

அதாவது-
சந்திர த்வித்வ தர்சன ஹேதுவான சஷூர் தோஷம்- இல்லாத போது-சந்திர ஏகத்வமே தோற்றுமா போலே –
தோஷ தர்சன ஹேதுவான ஸ்வ சித்த தோஷம் இல்லாதபோது -பகவத் பாகவத விஷயங்களில் –
குண பிரதிபத்தியே நடக்கும் -என்கை-அது நடவாமையால் தோஷம் உண்டு என்று கொள்ள வேண்டும் -என்று கருத்து –

த்ருஷ்ட்டி தோஷம் இல்லாத போது -த்வி சந்திரன் தோன்றாதே – குண பிரதிபத்தி -பிறர் குணம் கண்ணில் படும் -ஹேது மட்டும் இதில் –
குணம் பிரபத்தி நடவாத படியால் தோஷம் தர்சிக்கிறான் என்றவாறு -ஸூ நிர்தோஷ ஸூ சகையான குண பிரதிபத்தி நடக்கும் –
இதனாலே தான் பர தோஷம் பார்ப்பது ஸூ வ தோஷமே -அவன் நம் குற்றம் பார்க்காமல் இருப்பதே அவன் குற்றம் இல்லாமல் இருப்பதாலே தானே
சம்சாரிகள் இடம் போகாதே -பந்தம் இல்லையே இவர்கள் இடம் -பக்த பாகவத தோஷங்களைப் பற்றியே இது –
சம்சாரிகள் உடன் கூட வாசம் பண்ணுவதும் ஸூ வ தோஷமே -வைராக்யம் வேண்டுமே

————————————–

சூரணை -356-

நடந்தது இல்லையாகில் தோஷ ஜ்ஞானமே -தோஷமாம் —

நடந்தது இல்லையாகில் வரும் தோஷம் என்-என்ன
அருளிச் செய்கிறார் –

அதாவது –
குண பிரதிபத்தி நடவாது ஒழிந்தால் -தோஷ பிரதிபத்தி இறே நடப்பது –
அந்த தோஷ ஜ்ஞானம் தானே -இவனுக்கு பகவத நிக்ரஹ ஹேதுவான தோஷமாம் –
இதடியாக வேறு ஒரு தோஷம் உண்டாம் என்ன வேண்டாம் -என்கை –
இத்தால் இது அவஸ்யம் பரிஹர நீயம் என்னும் இடம் சொலிற்று ஆயிற்று –

நிர்தோஷ குண பூர்ண தத் ததியர் பக்கல் -இவ்வாறு குண பிரதிபத்தி நடந்தது இல்லையாகில்- தோஷ ஜ்ஞானமே -பெரிய -தோஷமாகும் –
கண் முன்னே யானை இருக்க காணாதது கண்ணின் குற்றமே -அதே போலே -ஈவார்கள் இடம் இருப்பது குணங்களே —
தத் தோஷ கிரஹண ரூப ஞானமான ஸூ வ தோஷம் -மஹா பாதகம் -பஞ்ச மஹா பாதகங்களும் மேலே
அத்தால் வருமது தோஷாந்தரம் வேறே என்று என்ன வேண்டாம் -ஆகையால் இத்தை தவிர்க்க வேண்டும் –

————————————–

சூரணை -357-

இது தனக்கு அவசரம் இல்லை –

இது தான் எல்லாம் சொல்ல  வேண்டுவது -இது தனக்கு அவகாசம் இவனுக்கு
உண்டானால் இறே என்கிறார் மேல் –

அதாவது -பகவத் பாகவத தோஷ சிந்தனம் ஆகிற இது -தனக்கு அவசரம் தான்
முதலிலே இல்லை -என்கை –

இது தனக்கு அவசரம் -பொழுது- காலம் இல்லை -என்றவாறே -பிறர் குணம் பார்க்கவும் ஸூ வ தோஷம் பார்க்கவும்
பொழுது யில்லாத பொழுது இதுக்கு ஒதுக்க நேரம் இல்லையே –
ஞானம் உள்ளவனுக்கு -தன் தோஷம் பார்த்து பிராயாச்சித்தம் பண்ணவே பொழுது இருக்காதே

———————————

சூரணை -358-

ஸ்வ தோஷத்துக்கும்- பகவத் பாகவத குணங்களுமே -காலம் போருகையாலே-

அது எத்தாலே என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
நீசனேன் நிறை ஒன்றும் இலேன் –
பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும் இந்நின்ற நீர்மை –
அமர்யாதா சூத்திர சல மதி -ஆளவந்தார்
வித்வேஷமாந மத ராக விலோபமோஹாத் அஜ்ஞான பூமி -கூரத் தாழ்வான்
அதிக்ராமந் நாஜ்ஞாந்தவ விதி நிஷே தேஷு பவதே
ப்யபித்ருஹ் ய ந் வாக்த்தீக்ருதி பிரவி பக்தாய சததம்
அஜாநந்ஜாநந் வாப  வத சஹா நீ யாக சிரத -என்றும் –
ஸ்ரீ ரெங்கேச த்வத் குணா நாமி வாச்மத் தோஷானாங்க
பார த்ருச்வாய தோஹம்-இத்யாதிகளில் சொல்லுகிறபடியே –
அனவதிகமான தன்னுடைய தோஷ அனுசந்தானத்துக்கும் –
அந்த தோஷத்தை பாராமல் -அங்கீகரித்து அருளின -பகவானுடையவும் –
வேதம் வல்லார்களைக் கொண்டும் -என்றும் –
போத யந்த பரஸ்பரம் -என்றும் –
அவன் அடியார் சிறு மா மனிசராய் என்னை ஆண்டார் இங்கே திரிய
நறு மா விரை நாண் மலரடிக் கீழ் புகுதல் -உறுமோ-என்றும் சொல்லுகிறபடியே –
புருஷகார உசாத் துணையும் -ப்ராப்யருமான பாகவதர்கள் உடையவும் –
சமஸ்த கல்யாண குணாம் ருதோததி-
அசங்க்யேய கல்யாண குண கணவ்க மகார்ணவ்-
எதா ரத்னா நிஜல தேர அசங்க்யேயாநிபுத்ரக
ததா குனாஹ்ய நந்தச்ய அசங்க்யேய மகாதமன-
நாஹம் சமர்த்தோ பகவத் ப்ரியாணாம் வக்தும் குனான்
பத்ம புவோப்ய கம்யான்-என்றும் சொல்லுகிறபடியே
அசந்யேயமாய் இருந்துள்ள  குண அனுசந்தானங்களுக்குமே காலம் போந்து -மற்று ஒன்றுக்கு அவகாசம் இல்லாமையாலே -என்கை –
இவற்றுக்கே காலம் போருகையாலே -என்கையாலே –
ஸ்வ குண ஸ்மரணத்துக்கு அவகாசம் இல்லை என்னும் இடம் அர்த்தாத் சித்தம் இறே –

பயனுள்ள செய்து பயன் அல்ல நெஞ்சே -/ நீசனேன் -ஸூ வ தோஷ அனுசந்தானம் -அத்தையே பச்சையாக என்னை ஆள்வர்-எம்மை ஆளும் பரமர் –
கை விடாமல் -அங்கீ கரித்து அடிமை கொள்ளும் பகவான் பாகவதர் -குணங்களை அனுசந்திக்கவும் மேல் உள்ள காலமும் போதாதா பொழுது –
குணங்களுக்கு எண்ணிக்கை இல்லையே -ஸமஸ்த கல்யாண குண நீதியாய் இருக்க தோஷ தரிசனத்துக்கு சேஷிக்கும் காலம் -கலா ஏக தேசமும் இல்லையே —
அர்த்தாத் சித்தம் இறே – -அனுமானித்து அறியலாம்

—————————————-

சூரணை -359-

சம்சாரிகள் தோஷம் -ஸ்வ தோஷம் என்று -நினைக்க கடவன் –

ஆக –
மனசுக்கு தீமையாவது -என்று துடங்கி -இவ்வளவும்
பகவத் பாகவத தோஷ ஸ்மரணம் ஆகாது என்னும் இடமும் –
அவர்களுடைய நைர் தோஷமும் –
தோஷம் உண்டு என்று நினைக்கில் -அது தத் தோஷம் அன்று -ஸ்வ  தோஷம் என்றும் –
அது ஸ்வ தோஷம் ஆகைக்கு நிதானங்களும் –
ஸ்வ தோஷ பாவ சங்கைக்கு உத்தரமும் –
தோஷ பிரதிபத்தி நடக்கில் -அது தான் இவனுக்கு மகா தோஷம் என்றும் –
ஸ்வ தோஷ பகவத் பாகவத குண அனுசந்தானத்துக்கே காலம் போருகையால் இது தனக்கு இவனுக்கு அவசரம் இல்லை -என்றும்
அருளி செய்தார் கீழ்
இப்படி தனக்கு உத்தேச்யமான -பகவத் பாகவத விஷயங்களில் தோஷம் நினையாமலும் –
நினைத்தான் ஆகிலும்  அது தன்னுடைய தோஷமாக நினைத்து இருக்க வேணும் என்று அருளி செய்த பிரசங்கத்திலே –
சம்சாரிகள் தோஷ விஷய அனுசந்தானமும் -இன்னபடியாக வேணும் என்கிறார் -மேல் –
அதாவது-
சம்சாரிகளுக்கு உண்டான பகவத் வைமுக்க்யம்- அநாத்ம ந்யாத்மா புத்தி- யச்வேஸ் ஸ்வ புத்தி –
முதலான தோஷம் கண்டால் -அந்த தோஷங்களை இட்டவர்களை இகழ்ந்து இவர்களுக்கும் நமக்கும் பணி என்று இராதே  –
அவர்களுடைய தோஷம் -தன்னுடைய தோஷம் என்று அனுசந்திக்க கடவன் -என்கை-

கீழே பகவத் பாகவத தோஷ விவரணம் –தத் ததியர் இடம் இல்லாத தோஷங்கள் -/ சம்சாரிகள் இடம் -உண்மையாக உள்ள தோஷங்கள் -நினைக்கலாமே என்ன
அவர்களை துறக்க விரக்கற்ற ஸூ வ தோஷம் -நாற்றும் உள்ள இடத்தில் வாசம் செய்வோமோ புலி துரத்த நிற்போமோ –
அநாதி காலம் நாம் பட்டது பட்டும் திரியும் சம்சாரிகள் -அன்றோ -ஆக இதுவும் ஸூ வ தோஷமே
விடு விடாதே உபதேசம் இல்லை -விட முடியாதது உன் பந்தம் காரணம் ஆகையால் தோஷமே

—————————————

சூரணை -360-

அதுக்கு ஹேது பந்த ஞானம் –

அதுக்கு ஹேது என் -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
தனக்கு சேஷிகளான-பகவத் பாகவதர்கள் தோஷம் ஸ்வ தோஷமாக அனுசந்திக்கைக்கு ஹேது அவர்களோடு தனக்கு உண்டான சம்பந்த ஞானம் ஆனாப் போலே –
சம்சாரிகளுடைய தோஷத்தை தன்னுடைய தோஷமாக அனுசந்திக்கைக்கு ஹேது – நாராயணத்வ பிரயுக்தமான -சம்பந்த ஞானம் -என்கை –
எல்லோர்க்கும் ஈச்வரனோடு சம்பந்தம் ஒத்து இருக்கையாலே -அவ்வழியாலே தனக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் உண்டு ஆகையாலே –
தனக்கு அவர்ஜ நீயரான -பிரகிருதி பந்துக்களுக்கு வந்த தோஷம் தனக்கு வந்ததாக நினைத்து இருக்குமோ  பாதி -சம்சாரிகளுக்கு உண்டான தோஷம்
தன்னுடைய தோஷம் என்றே நினைக்கக் குறை இல்லை -இறே –

நாராயணத்வ ப்ரயுக்த சம்பந்த ஞானம் -ஒரே சரீரீ -இருவரும் அவயவங்கள்-ஏக சரீரத்தில் பற்றின ஏக தேகத்வ தோல் போன்றது தானே
ஏக பித்ருகத்வம் -ஒரே தந்தை உடையோமாய் இருக்கிறோம் / வெட்டி விலக்க முடியாத சம்பந்தம் -ப்ரக்ருதி பந்துக்கள் –
சரீரத்தால் ஏற்பட்ட உறவு -தோல் வியாதி ஓர் இடத்தில் இருக்காதே -சம்சாரிகள் தோஷம் தன்னதாகவே நினைக்க வேண்டும் –

————————————

சூரணை -361-

இறைப் பொழுதும் எண்ணோம் -என்கையாலே அது தான் தோன்றாது –

இது தான் வேண்டுவது -அவர்கள் தோஷம் தான் -இவனுக்கு தோன்றில் இறே –
அது தான் முதலில் இவனுக்கு தோன்றாது என்கிறார் மேல் –

அதாவது –
கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை எண்ணாதே இருப்பாரை இறைப் பொழுதும் எண்ணோமே-என்று
பரம பதத்தில் -நித்ய சூரிகள் பரிந்து பரிசர்யை பண்ண இருக்கும் பெருமை உடையனாய் வைத்து -திருக் கடல் மல்லையிலே வந்து -தங்களை பெறுகைக்காக-
தரைக் கிடை கிடக்கிற நீர்மையை உடையவனை -இது ஒரு நீர்மை இருக்கும் படி என் -என்று
அந்நீர்மையிலே தோற்று -அனவரதம் அனுசந்தானம் பண்ண வேண்டி இருக்க –
அவனிடை ஆட்டம் கொண்டு கார்யம் அற்று கேவல தேக போஷாணாதி பரராய் இருக்கிற சம்சாரிகளை க்ஷண காலமும் நினையோம் -என்கையாலே –
சம்சாரிகள் தோஷம் தான் இவ் அதிகாரிக்கு தோன்றாது -என்கை –
திரு மங்கை ஆழ்வார் அருளி செய்த இது -ஸ்ரீ வைஷ்ணவர்கள் எல்லார்க்கும் ஒக்கும் இறே –

ஸூ சீல ஸுலப விஷயம் -நம்மை பெறத் – தானே -வந்து தரைக்கிடக்கிறான் -பிராகிருத வஸ்துக்களை ஓக்க வாவது ஒருக்காலும் நினைக்காமல் இருக்கும் –
நன்றி கெட்டவர்களை க்ஷணம் கூட எண்ணக் கூடாதே -நாமும் நம் சம்பந்திகளும் ஸ்மரியோம்-என்று
அத்யவசித்து இருக்க வேண்டும் –தோஷம் தர்சனம் பிரசங்கிக்கவும் கூடாதே

——————————————–

சூரணை -362-

தோன்றுவது நிவர்த்தன அர்த்தமாக –

தோன்றாது -என்னப்  போமோ –
சொன்னால் விரோதம் –
ஒரு நாயகம் –
கொண்ட பெண்டிர் -இத்யாதியாலே ஆழ்வாருக்கு உள்பட்ட சம்சாரிகள் குற்றம்
தோன்றிற்று இல்லையோ என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
சம்சாரிகள் தோஷம் தோன்றுவது -அந்த தோஷங்களின் நின்றும்
அவர்களை நிவர்திப்பிக்கைக்காக -என்கை –
சொன்னால் விரோதம் -முதலான வற்றால் ஆழ்வாரும் அதில் திரு உள்ளம் வைத்தது –
அசேவ்ய சேவ்யாதிகளின்  நின்றும் அவர்களை நிவர்திப்பிக்கைகாக இறே –
அது எல்லார்க்கும் ஒக்கும் என்று கருத்து –

ஆழ்வாராதிகளுக்கு-லோக யாத்திரை அறியாத ஆழ்வாரும் சம்சாரிகளை கண்டார் என்னில் தோன்றுவது நிவர்த்தன அர்த்தமாக -/
வீடு சொன்னால் ஒரு கொண்ட நான்காலும் -குற்றங்கள் பட்டதே -என்னில் –
போக்கி நல்லவர்களாக நாடும் ஊரும் உலகமும் தன்னைப் போலே ஆக்கி அருளத் தானே –
அஸேவ்ய சேவை / ஐஸ்வர்ய கைவல்யம்/ஆபாச பந்து பாசம் கூடாது என்பதற்காவே / பணியா அமரர் -சேவிக்க கூடாதவர்களை சேவிக்க மாட்டார்களே
நாம் வர்த்தகாரத்துக்கு -ஒன்றை பத்தாக்கி தோஷங்களை ஆக்குகிறோம் -ஆழ்வாராதிகள் நிவர்த்திக்க அன்றோ –
உறவின் காரியத்தையும் அவன் இடம் பார்த்து கைங்கர்யம் வேண்டி பிரார்த்திக்கிறார் -ஆழ்வார்-

——————————————

சூரணை -363-

பிராட்டி ராஷசிகள் குற்றம் – பெருமாளுக்கும் திருவடிக்கும் -அறிவியாதாப் போலே –
தனக்கு பிறர் செய்த குற்றங்களை -பகவத் பாகவத விஷயங்களில் -அறிவிக்க கடவன் அல்லன் –

ஆக இவ் அதிகாரி சம்சாரிகள் தோஷம் கண்டால் அனுசந்திக்கும் பிரகாரமும் –
தத் தோஷம் தான் இவனுக்கு தோன்றாது என்னும் இடமும் –
தோன்றுவது இன்னதுக்காக என்றும் அருளிச் செய்தார் கீழ் –
இப்படி காதா சித்தமாக தோன்றும் சம்சாரிகள் தோஷங்களை ஸ்வ தோஷமாக நினைத்தும் –
தன் நிவர்தகனாயும் போரும் அளவன்றிகே -ஸ்வ விஷயத்திலே குற்றங்களை செய்தால்
இவன் இருக்க வடுக்கும் படி அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது
ஏகாஷீ-ஏக கர்ணி -முதலான ஏழு நூறு ராஷசிகள் -ஏக திவசம் போலே பத்து மாசம் தர்ஜன பர்த்ச்னம் பண்ண இருந்த பிராட்டி -இவர்கள் அப்படி செய்த குற்றத்தை –
பகவத் விஷயமான பெருமாளுக்கும் -பாகவத விஷயமான திருவடிக்கும் -அறிவியாதாப் போலே –
தன் விஷயமாக பிறர் செய்த குற்றங்களை -பகவத் விஷயத்தில் ஆதல் –
பாகவத விஷயத்தில் ஆதல் -மறந்தும் விண்ணப்பம் செய்ய கடவன் அல்லன் -என்கை –

மூன்றாவது வகை இது -பகவத் பாகவத -சம்சாரிகளை பற்றி அருளிச் செய்த பின்பு -தனக்கு பிறர் செய்த குற்றங்கள் –இந்த மூன்றாவது கோஷ்ட்டி –
கீழ் பொறி புறம் தடவுதல் போலே -தனக்கு ஆபத்து வந்தால் இவை தீருமே –இத்தையும் நினைக்க கூடாதே
சீதை பெருமாள் இடம் சொல்லவில்லை -பகவான் இடம் சொல்ல கூடாது என்பதுக்கு த்ருஷ்டாந்தம் –
திருவடிக்கு சொல்ல வில்லை -பாகவதருக்கு சொல்லக் கூடாது என்பதுக்கு த்ருஷ்டாந்தம் –
அபிமத அந்தரங்கர் இடம் -பேசி பாடாற்றுகிற பிராட்டி -விபீஷணர் -சரமா த்ரிஜடா அனலா-மூவரும் அந்தரங்கர் -பிராட்டிக்கு –
க்ரூர ராக்ஷஸிகள் குற்றம் -மீதும் திரு அயோத்யைக்கு வந்த பொழுதும் சொல்லாமல் -பட்ட காலத்தில் இருந்து விட்ட காலத்து அளவும் சொல்லாமல் –
விரோதியையும் ஆற்றாமையும் அறுத்து ஆகாசம் மார்க்கமான கூட்டி செல்லும்போது பேசி ஆசிவசிப்பிக்க இருக்க -தீக் குறளை சென்றோதோம் –
உதவி ஆசுவாசிப்பித்த திருவடிக்கும் நெஞ்சில் கிடந்த அளவும் சொல்லி இருந்த திசையிலும் – -மறந்தும் அறிவியாதாப் போலே
குற்றம் காண்பது -தூஷணமான தனக்கு -நமக்கு –நிர் நிபந்தனமாக பிறர் நிரந்தரம் செய்யும் குற்றங்களை -பதிலுக்கு அடிக்க வில்லை -நித்தியமாக ஹிம்சித்தாலும் –
நெஞ்சத்து பேராது நிற்கும் பெருமான் இடமும் -எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கும்
தன் நெஞ்சிடம் கோயில் கொண்ட பகவத் பாகவதர்கள் -விஷயங்களில் தீக் குறளை சென்றோதோம் என்றபடி மறந்தும் அறிவிக்க கடவன் அல்லன்
இங்கு நெஞ்சகம் கோயில் கண்டது -நெஞ்சில் நினைக்கவும் கூடாதே என்று -வாயை திறந்து பேசாமல் இருப்பது மட்டும் போதாது –
மனசில் நினைத்தாலும் இவர்கள் அறிவார்கள் –
ராவணனால் -துராத்மாவால் அபகரிப்பட்டதை மட்டும் திருவடிக்கு அருளிச் செய்கையாலே -ராக்ஷஸிகள் குற்றம் அறிவித்தமை ஸ்ரீ ராமாயணத்தில் இல்லை
பெருமாள் இடம் அறிவித்ததும் இல்லை
திருவடி இடம் -சென்று சொல்ல சொல்லி -லஷ்மணன் உடன் கூடி உள்ள பெருமாள் இடம் -ராக்ஷஸிகள் துன்புறுத்த -ப்ராப்ய த்வரா-தூண்ட -துவரையை அறிவிப்பதே நோக்கம்
சோகம் மம தீவிர –ராஷஷிகளால் துன்பப்படுவதையும் -அறிவிப்பீர் -பிரதானம் சோகம் தீர்த்து அடைவதே -/
முன்னும் பின்னும் இந்த வார்த்தை -பாபா நாம் சுபா நாம் வா சொல்லுகையாலே நடுவில் நிக்ரஹ வார்த்தை தாத்பர்யம் இல்லை தானே /

————————————-

சூரணை -364-

அறிவிக்க உரியவன் அகப்பட வாய் திறவாதே –
சர்வஜ்ஞ விஷயங்களுக்கும் மறைக்கும் என்னா நின்றது -இறே —

இது கிம் புனர் நியாய  சித்த மாம்படி -ஈஸ்வரன் படியை அருளிச் செய்கிறார் –

அதாவது-
எதிர் சூழல் புக்கு -என்கிறபடியே -தன் னுடைய சீல ஸௌலப்யாதிகளை காட்டி -சம்சாரி சேதனரை தப்பாமல் அகப்படுத்தி கொள்ளுவதாக வந்து அவதரித்து –
தமக்கு அடியார் வேணும் என்று அபேஷித்தால்-அவர்கள் அப்படி அனுகூலராய் தோன்றாது ஒழிந்தாலும்-இவர்கள் செய்தபடி செய்கிறார்கள்
-நாம் இவர்களுக்கு உறுப்பாக பெற்றோம்  இறே -என்று அது தானே போக்யமாக இருப்பர்-அதுக்கு மேல் அவர்கள் வைமுக்க்யம் பண்ணினார்கள்  என்று
அவர்கள் குற்றத்தை -தனி இருப்பிலே பிராட்டிக்கும் அருளிச் செய்யார் -என்கிற –
சூழ்ந்து அடியார் -என்கிற பாட்டில் சேதனர் செய்த குற்றங்களை -தன் திரு உள்ளத்துக்கு உகந்தவர்களுடன் அறிவிக்கைக்கு பிராப்தனான சர்வேஸ்வரனும்
உள் பட தன் திரு பவளம் திறந்து அருளிச் செய்யாதே -தான் அருளிச் செய்யாது ஒழிந்தாலும் -அறிய வல்ல சர்வஞ விஷயங்களுக்கும் மறைக்கும் என்று
சொல்லா நின்றது இறே -என்கை –
இத்தால் அவன் உட்பட இப்படி மறையா நின்றால்- இவனுக்கு பின்னை சொல்ல வேணுமோ -என்றபடி –

சம்சாரிகள் குற்றங்களை நித்ய ஸூ ரிகளுக்கும் சர்வஞ்ஞன் சொல்ல மாட்டான் -என்று பெரிய திருவந்தாதியில் ஆழ்வார் அருளிச் செய்கிறாரே
ஸ்ரீ கிருஷ்ணன் தன்னுடை சோதிக்கு தனியாக எழுந்து அருளி -தன்னுடன் பற்ற குற்றங்களையும் அறிவிக்க வில்லை
ஆகையால் இவனுக்கு சொல்ல வேண்டாம் –
சூழ்ந்து அடியார் -சீல ரூப குணங்களுக்கும் சரிதங்களுக்கும் ஒருவருக்கும் அகப்படாமல் -தரையை மோதி – முட்டி அழுவது -அவஜாநந்தி மாம் மூடா –
அவமரியாதை பண்ணினதை நித்ய சூரிகள் -வந்தவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்து அந்தமில் அடியார் சூழ்ந்து இவனை எதிர் கொண்டு –
தேவர் ப்ரதிஜ்ஜை படி ஒருவரும் வர காண வேயில்லையே என்று கேட்டாலும் -திருந்தினார்கள் இல்லை வருகிறார்கள் இல்லை இரண்டும் சொல்ல மாட்டாமல்-
மற்ற மறுமாற்றம் காணாமல் –சுற்றும் முற்றும் பர பர என்று பார்த்து வெட்க்கி திகடாடுகிற தசையில்
சொல்லுவது போலே திரு அதரம் -திரு பவளத் துண்டம் போலே -ஈரப்பசைக்கு உதட்டை நனைத்து -ஸ்புரிப்பது -மந்த ஸ்மிதம் -முறுவல் செய்து –
அசட்டு சிரிப்பு சிரித்து -புறத்தே வழியை கடைக் கணிப்பது வருகிறார்கள் என்று பார்க்குமா போலே – ப்ரதிஜ்ஜை வெற்றி நிலை நாட்டுவதாக கொண்டு —
இருக்க மேலே கேட்க்காமல் உள்ள நித்யர்கள் வாழ்ந்திடட்டுமே -ஆழ்வார் அருளிச் செய்கிறார் /பெரு வாழ்வு வாழ்வார் -பாவனை அறிந்தும் திருந்தால் போன குற்றவாளர்கள்
அந்தரங்கருக்கு உள்ளத்தை உள்ள படி சொல்ல வேண்டிய பின்பும் குணம் சொல்ல தேடுகிறான் –
வரேன் என்று சொல்லி உள்ளவர்கள் குணங்களை தேடி ஸ்புரிக்கும் –
குற்றம் சொல்லில் பேசாமல் இருக்க காரணத்துக்கு சாக்கு தேடி -நாம் பிரபுத்வத்தால் பேசாமல் இருப்பதை –
சர்வசக்தன் போக்கற்று நின்றானே -திரு உள்ளம் திருந்தினார்கள் என்று நினைத்தால் திருந்தினராகவே நம்புவார்கள் -இப்படிப் பட்ட -சர்வேஞ்ஞர்கள் –
நித்ய ஸூ ரிகள்-வாழ்ந்தே போகட்டும் – மாய மயக்கு திரை இட்டு மயக்கும் -/ நமக்கு பிரகிருதி பகவத் ஸ்வரூபத்தை மறைக்கும் –
அவன் சாகச செயல்களும் திருமேனி வைலஷ்ணயம் இவர்களுக்கு மறைக்க உபகரணங்கள்
நிஷ் கலங்க ஸூஷ்ம தர்சி பிரமாணம் பிரபன்ன ஜன கூடஸ்தர் அருளிச் செயல்
புதிதாக நம்மிடம் அறிவித்து – -ரிஷிகளுக்கு நினைவு படுத்தி -நித்ய சூரிகள் மறைக்க விஷயம் -கேள்வியே மறக்கும் படி திரு விக்ரஹ வைலக்ஷண்யம் –
ஸ்ம்ருதி ஞானம் மறதி மூன்றும் என் ஆதீனம் –ஸ்ரீ கீதை -அபோகனம் கர்மம் அடியாக வந்தால் தானே குற்றம்

————————————-

சூரணை -365-

குற்றம் செய்தவர்கள் பக்கல்-
1-பொறையும்-
2-கிருபையும் –
3-சிரிப்பும் –
4-உகப்பும் –
5-உபகார ஸ்ம்ருதி யும்
நடக்க வேணும் –

இப்படி உத்தேச்ய விஷயங்களில் அறிவியாது இருக்கும் மாத்ரம் போராது –
குற்றம் செய்தவர்கள் விஷயமாக -ஷம தயாதிகளும்-நடக்க வேணும் என்கிறார் -மேல் –

1-பொறை யாவது -அவர்கள் செய்த குற்றத்துக்கு -தாம் ஒரு பிரதி க்ரியை பண்ணுதல் –
நெஞ்சிலே கன்றி இருத்தல் -செய்யாமை ஆகிற அபராத சஹத்வம் –
2-கிருபை-யாவது -நாம் பொறுத்து இருந்தோம் ஆகிலும் -எம்பெருமான் உசித தண்டம்
பண்ண அன்றோ புகுகிறான் -ஐயோ இனி இதுக்கு என் செய்வோம் -என்கிற பர துக்க அசஹிஷ்ணுத்வம் –
3-சிரிப்பாவது -அத்ருஷ்ட விரோதமாக இவர்களால்  செய்யலாவது ஓன்று இல்லை இறே  –
பாருஷ்யாதி முகத்தாலே -க்யாதி லாபாதி த்ருஷ்ட விரோதங்கள் இறே இவர்களால் செய்யலாகாது -அப்படி சிலவற்றைச் செய்தால்
தங்களோபாதி நாமும் இவற்றால் சபலராய் – இவற்றினுடைய ஹானியை பற்ற நெஞ்சாறல் பட்டு தளர்வுதோம் என்று இருந்தார்கள் ஆகாதே –
இவர்கள் அறிவிலித்தனம் இருந்தபடி என் என்று பண்ணும் -ஹாஸ்யம்
4-உகப்பு -ஆவது -அவர்கள் பண்ணும் பரிபவாதிகளுக்கு விஷயமான சரீரத்தை தனக்கு சத்ருவாகவும் -அவர்கள் ஹானி பண்ணும் த்ருஷ்ட பதார்த்தங்கள் –
தனக்கு பிரதி கூலங்களாகவும் – நினைத்து இருக்கையாலே -தன்னுடைய சத்ரு விஷயமாக ஒருவன் பரிபவாதிகளை பண்ணுதல் –
தனக்கு பிரதிகூலங்கள் ஆனவற்றை போக்குதல் -செய்தால் உகக்குமா போலே – அவர்கள் அளவில் பிறக்கும் -ப்ரீதி
5-உபகார ஸ்ம்ருதி யாவது -நம்முடைய தோஷங்களை நாம் மறந்து இருக்கும் தசைகளிலே உணர்த்தியும் -நமக்கு இவ் இருப்பில் நசை அறும்படியான
வெறுப்புக்களை செய்தும் -இவர்கள் நமக்கு பண்ணும் உபகாரம் என் தான் என்று இருக்கும் –
க்ருதக்ஜ்ஜை – நடக்க வேணும் -என்றது இவை இத்தனையும் குற்றம் செய்தவர்கள் விஷயத்திலே
இவனுக்கு அவஸ்யம் உண்டாய் போர வேணும் என்று தோற்றுகைகாக-

ஆக
இப் பிரகணத்தால்-ஹித உபதேச சமயத்தில் -விபிரதி பத்தி விசேஷங்களும் -308-ஆரம்பித்து-
தத் ரஹிதமாக உபதேசிக்க வேணும் என்னும் இடமும் –
உபதேச சாஷாத் பலமும் -311-
உபதேஷ்டாவின் ஆசார்யத்வமும் சித்திக்கும் வழிகளும் –
வி பிரதிபத்தி யுடன் உபதேசிக்கில் உபயர்க்கும் ஸ்வரூப சித்தி இல்லாமையும் -312-
உபதேஷ்டாவான ஆசார்யனுக்கு அவஸ்ய அபேஷித குண த்வயமும் -313-
சாஷாத் ஆச்சர்யத்வம் இன்ன மந்த்ரத்தை உபதேசித்தவனுக்கு என்றும்-315- – சொல்லுகையாலே –
சதாசார்யா லஷணத்தையும் -308-320-
தத் அநந்தரம்-
சச் சிஷ்ய லஷணத்தையும் –321-
தத் உபயருடைய பரிமாற்றங்களையும் –
சிஷ்யனுக்கு ஆச்சார்ய விஷயத்தில் -தீ மனம் கெடுத்தாய் -இத்யாதி படியே
யாவச் சரீர பாதம் உபகார ஸ்ம்ருதி நடக்க வேணும் -எனும் அத்தையும் –
மனசுக்கு தீமை என்னது என்னும் இடத்தையும் –
அதில் உபபாத நீயாம்சத்தின்  உபபாதநத்தையும்
தத் பிரசங்கத்திலே-
மற்றும் இவனுக்கு அபேஷிதமான அர்த்த விசேஷங்களையும் -பிரதிபாதிக்கையாலே –
கீழ் சொல்லி வந்த த்வய நிஷ்டனான அதிகாரிக்கு –
தத் உபதேஷ்டாவான ஆச்சார்ய விஷயத்தில் உண்டாக வேணும் பிரதி பத்திய அனுவர்தன பிரகாரங்களும் சொல்லப் பட்டது –

ஆறு பிரகரணங்களில் நான்காவதான-சதாசார்யா அனுவர்தன பிரகரணம் -முற்றிற்று –

தத் ததீய விஷயங்களில் – அறிவிக்க ஒண்ணாத அளவே அன்று -மேலே இந்த ஐந்தும் உண்டாக -வேண்டும் —
அஸஹ்யங்களான -பாருஷ்யம் -ஆதி -கண்டபடி ஏசி அடித்து முக்கரணங்களாலும் தீரக் கழிய செய்தவர்கள் -பக்கலில்
சக்தர்களுக்கு பூஷணம் ஷமா -காணா கண் இட்டு இருக்க/ பர துக்க அஸஹிஷ்ணுத்வ ரூபையான கிருபை -பத்ம கோடி சஹஸ்ரம் மன்னிக்காமல் அவர் கோபத்துக்கு இலக்காவானே இவன் – கிருபை பிறக்க வேணும் -இரக்கத்தின் கார்யம் –
குற்றத்துக்கு இலக்கான சரீரத்தை பார்த்து-உமக்கு இத்தனையும் வேண்டும் -எள்ளி நகை ஆடுவது —வாய் சிரிக்கும் -அகவாய் உய்க்கும் -நம் உடம்பை பார்த்து இவை – /
அன்றிக்கே -கடலை கையாலே முகந்து கொட்டுமா போலே என் குற்றங்களை சொல்லி முடிக்கும் என்று ஆரம்பித்ததை பார்த்து சிரிக்கவும்-ஷேம சிரிப்பும் என்றவாறு –
கடவுள் காப்பாற்றட்டும் என்னுமா போலே – குற்றம் சொல்ல சொல்லக் கேட்டு–திரு முன் காணிக்கை -உபகாரங்கள் உடன் சமர்ப்பிப்பது –
மேல் மேல் பாசம் செய்யும் உகப்பும் –நாம் இதுக்கு முன் அறியாத குற்றங்களை அறிவித்த -உபகார ஸ்ம்ருதியும் -/
குற்றம் செய்த போது எல்லாம் குறையாமல் இவை நடக்க வேணும் -/ இவை ஒன்றில் ஓன்று அதிகமான ஞான பரிபாக விசேஷங்கள் /
அறிவு முதல் நிலை -மேலே இந்த ஐந்தும் -வர வேண்டுமே / நம் தோஷங்களை அறிவிப்பது கர்தவ்யம் என்ற நினைவு வர வேண்டுமே
பட்டர் ஒரு நாள் பெருமாள் சந்நிதியில் தோஷ அனுசந்தானம் பண்ணா நிற்க-பகவத் குண அனுபவத்துக்கே அவகாசம் இல்லாமல் இருக்க –
நாலு பேர் இவர் தோஷம் பட்டியலை வாசிக்க பஹுமானம் சமர்ப்பித்து –வைக்கிறான் என்று அஞ்சி கொடுக்க வில்லை –
அறியாதவற்றை பெருமாள் திருச் செவி சாத்தும் படி செய்ததும் உபகார ஸ்ம்ருதி —
நஞ்சீயர் -தொடையில் கண் வளர்ந்து த்வயம் சாதித்து அருளிச் செய்தார் -இங்கு பஹுமானம் கொடுத்தது -இவன் உகந்தவற்றை தானே கொடுக்க வேண்டுமே –
சம்சாரிகள் இவர்கள் -நாம் உகந்ததை கொடுக்க பெறாமல் பன்றி உகந்ததை அதுக்கு கொடுத்தது போலே -என்று நம்பிள்ளை அருளிச் செய்வார்
ஆச்சார்யர் உபதேசத்தால் மநோ தோஷம் அற்ற ஸச் சிஷ்யன் –
தன் குணம் நினையாமல் பர தோஷம் நினையாமல் -கந்தமே அற்று -இருப்பர்
அபவாதி – ஹரித் பாபம் -வைத்தவன் நம் பாபத்தை போக்கி -அபவாதம் உண்மை இல்லாதவற்றை சொல்லி -/ அபவாதம் செய்பவன் இடம் நம் பாபங்கள் போகுமே –
பாப ஹரணம் சித்த உபாய நிஷ்டனுக்கு முகாந்தரேண அநுசிதம் அன்றோ -அப்படி என்றால் எவ்வாறு உபகாரம் ஆகும் என்னில் —
தோஷ கதன ஸ்மரண -த்வாரா -புன புன பிரதிபத்தி சங்கையே வரக் கூடாதே -/ பிரதிபந்தகம் -நம்பிக்கை இல்லாமல் பண்ணுவது -வசவு தடுப்பதால் –உபகாரம் தானே

விகசித ஞான -சேஷத்வம் -அனைவருக்கும் சிஷ்யத்வம் உண்டே -சகல ஆத்மா சாதாரண்யம் -/ முக்தர் நித்யர் -தாயார் -கரை ஏற்றுமவனுக்கும் நாலாறும் அறிவிப்பார்
அவனுக்கும் உண்டே- பரம ஆப்த உபதேசத்தால் ஸ்புரிக்கும் ஞானம் -சேஷன் சிஷ்யன் -விகசித ஞானம் -அடைந்த அடிமை -/சத்தா நிபந்தம் -இது / உபதேச நிபந்தனையும் இருக்கும்
ததேக பரதந்தரையான பிராட்டி தொடங்கி-சத்தா நிபந்த சேஷத்வம் / ஞான விகாசம் நித்தியமாய் இருக்குமே நித்யருக்கும் பிராட்டிக்கும் -/ சங்கல்பம் நித்யம் –
அத்தால் இவர்கள் நித்யர் /இல்லை யாக்கை முடியாதே / சங்கல்பத்துக்கும் நித்யத்துக்கும் கொத்தை வராதே /
தத் ததீயா பரந்தரனான முக்தர்களுக்கும் -பக்தர்களுக்கும் -சங்கல்பத்தை தொடர்ந்து அனுஷ்டிப்பவர்கள் இவர்கள் இருவருக்கும் உபதேச நிபந்தம் – –
ஞான விகாசம் இதனால் -அநாதி சங்கல்ப சித்த தத் உபாய பாவ காதாசித்க கடாக்ஷ உபதேசங்களால் விகசித ஞானம் /
நித்ய பத்தர்களுக்கு -தத் சங்கல்பத்தால் -ஞான விகாசம் ஏற்படாத -நித்ய சங்கல்பம் இல்லை -இங்கு – கேட்டு திருந்த வேண்டும் -நாளை கேட்டு மாறும் யோக்யதை உண்டே
லஷ்மீ ப்ரப்ருதி குரு பரம்பரைக்கு –ஆச்சார்யத்வம் -ஸூ வ ஸூ வ குரு சிஷ்யத்வமே நிலை நின்ற வேஷம் -கடாக்ஷ உபதேச சுத்தமான ஆச்சார்யத்வம் –
பரம குருவினால் -கடாக்ஷத்தால் வரும் -அத்தனை – அனுபவ ஹர்ஷ பாரவஸ்ய . அயதா கிரஹண ரூபமான அஞ்ஞானம் த்வயம் —
பரமகுருவின் சிஷ்யர் அல்லார் இல்லார் -அகல் விசும்பும் நிலனும் இருளார் வினை கெட செங்கோல் நடாத்துவானே -/
நர ரூபமான சிஷ்ய ஏக காலத்வ- நாராயண ரூபமான ஆச்சார்யத்வம் -ப்ராதுர்பாவமும் ஒரே காலம் -/ பின்ன காலத்தில் ஜனன மரணம் மற்றவர்களுக்கு /
ஸூ க துக்க ஜென்ம மரண கர்ம பேதங்களும் பல அனுபவ பேதங்களும் உண்டே -ஆக ஐக்கியம் இல்லையே சிஷ்யருக்கும் ஆச்சார்யருக்கும்
ஸ்வராட் -கர்மத்தின் தலையில் இருந்து விடுதலை -சிஷ்யர் ஆவதற்கு குறை இல்லையே / பிரான் இருந்தமை காட்டினீர் -அங்கும் சிஷ்யத்வம் உண்டே /
உபகார ஸ்ம்ருதி அங்கும் உண்டே -/ உபய திசையிலும் அழியாத ஒன்றே /
கேவல சிஷ்யத்வம் -மாத்திரம் என்ற படி -ஆச்சார்யத்வ விசிஷ்ட சிஷ்யத்வம் -இரண்டு வகைகள் –
விசிஷ்டம் இரண்டு வகை -சாஷாத் தன் நினைவால் – பரம்பரையா சிஷ்யத்வம்
தனது ஆச்சார்யரது காரணமாக இருந்து உபதேசம்/
கேவல சிஷ்யத்வம் -ஆச்சார்ய ஸ்வரூப-குண பிரயுக்தம் -திருமேனி ப்ரயுக்தம்
ஸ்வரூப குண -மஹத் குணம் பற்றியும் ஸுலப்யம் பற்றியும் ஆக இரண்டு வகை
விக்ரஹ -பிரதானம் -சரண பிரதானம் -தத் சம்பந்தி -அடியார்கள் -உன் தொண்டர்கட்கே அன்பு உற்று இருக்கும் படி ஆக இரண்டு வகைகள் உண்டே
இதுவே பிரதானம் -ஏவ காரம் -வர வர முனி தாசர்கள் இடம் நித்ய யோகம் எறும்பு அப்பா அந்திம உபாய நிஷ்டர்
யதிகட்க்கு இறைவன் இணை அடியாம்- சரண சம்பந்தமும் -பெரிய நம்பிகள் சம்பந்தமும் சித்திக்கும் இத்தால் –
வடுக நம்பிகள் -பாதுகை கோயில் ஆழ்வார் மேல் வைத்து எழுந்து அருளினை ஐதிக்யம்
ஸ்வரூப குண ப்ரயுக்த சிஷ்யத்வம் -உபாய உபேய பிரதான சிஷ்யத்வம் என்றும் / திருமேனி ப்ரயுக்த சிஷ்யத்வமும் –இங்கும் உபாய உபேய பிரதான சிஷ்யத்வம்
திரு மேனி பிராப்யம்- நம்பிள்ளை திரு முதுகு அழகை சேவிப்பதே பரமபுருஷார்த்தம் என்று இருந்தாரே –
உபாய பிரதானம் -அங்க உபாய -ஸ்வ தந்த்ர உபாய சிஷ்யத்வம் -அங்கம் ஈஸ்வரன் -அவர் மூலம் ஆச்சார்யரைப் பற்ற -/
உபேய பிரதான சிஷ்யத்வம் -பிரதம உபேயம் -சரம உபேய பிரதானம் –
இப்படி பலவகைகளால் பிரிந்து – ஆச்சார்ய விஷயத்தில் பகவத் பிரதிபத்தி / மதுர கவி ஆழ்வார் போல்வாரும் / பகவத் விஷயத்தில் ஆச்சார்ய பிரதிபத்தி மற்றுள்ள ஆழ்வார்கள்
ஸ்ரீ ராமானுஜரை சேர்த்தே மதுரகவி ஆழ்வார் ஆண்டாள் -பற்றி உபதேச ரத்னா மாலை பாசுரங்கள்

இத்தால்
சிஷ்யருக்கு உண்டாம் ஸச் சிஷ்ய சத் குண அத்வவசாயமும்
சிஷ்ய ஆச்சார்யர் சாதாரண அசாதாரண பரிமாற்றங்களையும்
ஆச்சார்ய ப்ரீத்தி விஷயமான ஸச் சிஷ்யருக்கு வேண்டிய ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி விசேஷங்களையும்
உபகார ஸ்ம்ருதி ஹேது சிஷ்ய சித்த தோஷ நிவ்ருத்தியும் சொல்லப்பட்டது

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: