ஸ்ரீ ஓம் புலன்கள் -வாக் -பிராணன் -கண்கள் -காதுகள் -சப்தாதி கள் அனைத்தும் அருளிய பர ப்ரஹ்மத்துக்கே அர்ப்பணித்து
அவன் விஷயத்திலே செலுத்தி அவன் அருளால் அவனை அடைந்து ஸ்வரூப அனுரூப ப்ரீதி காரித்த கைங்கர்யம் செய்வோம்
நம்முள் புகுந்து பேரேன் என்று இருப்பானே –
ஓம் சாந்தி சாந்தி சாந்தி —
கர்ம ப்ரஹ்ம ஸ்தானபார்த்தம் -வேதங்களையும் வேதாந்தங்களையும் கொடுத்து அருளி -தர்ம ஸ்தாபனம் -ஸம்ஸ்தானம் -இரண்டையும்
-8–பிரபாடகங்கள் -அத்தியாயங்கள் -/ உள்ளே கண்டங்கள் / உள்ளே மந்த்ரங்கள்
–12 -கண்டங்கள் -முதல் இரண்டு அத்தியாயங்கள் இந்த லோக வாழ்க்கை பற்றி -/
பிரணவம் -உத்கீத-ஆனந்த சாம கானம் -சாம வேத கீதனான சக்ரபாணி -சந்தோகா –சாம வேதனே/ருக்கு சாமத்தாலே பரம்பி
—————————
1-ஸ்ரீ உத் கீத உபாசனம் -பிரணவம் -அனைத்தின் சாரம் பிருத்வி -பிருத்வியின் சாரம் -நீர் -நீரின் சாரம் -பயிர்கள் -அவற்றின் சாரம் மனுஷ்ய யோனி –
மனுஷ்யனின் சாரம் -வாக் -வாக்கின் சாரம் -ருக்கு -ரூக்கின் சாரம் சாமம் -சாமத்தின் சாரம் உத்கீதம்
வாக் போலே ருக்கு -பிராணன் போலே சாமம் -பிரணவத்தில் வாக்கும் பிராணனும் சேர்ந்தே இருக்குமே -உத்கீதம் உபாசகர் சர்வத்தையும் அடைவான் –
பிரணவமே வேத சாரம் – ஆரம்பத்திலும் -முடிவிலும் –ஞானம் -விசுவாசம் கொண்டு உபாசிக்கவே சர்வ அபிஷிதங்களையும் பெறுவான் –1-1-
தேவ அசுரர் யுத்தம் -தேவர்கள் உத்கீத உபாசனம் பண்ண-பிராணன் -மூக்கு மூலம் -பண்ண -அசுரர்கள் -ஓட்டை போட –
மூக்குக்கு நறு மணம் கெட்ட மணம் -இரண்டும் விஷயம் ஆனதே-
இதே போலே வாக்குக்கும் உண்மையும் பொய்யும் விஷயமானன-கண்ணுக்கும் காதுக்கும் மனசுக்கும் இப்படியே ஆனதே –
அடுத்து பிராணன் மூலம் உத்கீத உபாசனம் பண்ண -அத்தை தகர்க்க முடியாதே —1-2-
பிராண -அபான –மூச்சு வெளியிட்டும் உள்ளே கொண்டும் -பேசும் பொழுது இரண்டும் இல்லாமல் –வியான –இதுவே ருக்கு –
சாமம் பாடும் பொழுது -உத்கீதம் அதன் சாரம் –
உத் -சொல்லி மூச்சு உள்ளே -உத்திஷ்ட -பேச்சு கீ -உணவு தா -ஸ்திதம் –
உத் -பரம ஆகாசம் / கீ ஆகாசம் / தா பிருத்வி /
உத் -சூர்யன் / கீ வாயு -தா -அக்னி /
உத் -சாம வேதம் / கீ யஜுர் / தா ருக்
ஸ்தோத்ரம் -அருளிய குருக்களை த்யானம் செய்து ஸ்தோத்திரங்களை ஸ்வரத்துடன் பாடி விரும்பியவற்றை பெறலாம் –1-3-
மூன்று வேத சாரமே பிரணவம் -தேவர்கள் இத்தை உபாசித்து -அமருத்வம் அபயத்வம் பெற்றார்கள் 1-4-
ஆக உத்கீதமே பிரணவம் -ஆதித்யனும் இத்தை உபாசித்தே கர்தவ்யம் -கௌசீதகி தன் புத்திரனுக்கு இத்தை உபதேசிக்க –
பஞ்ச பிராண ரூபமாய் இருப்பதை உபாசிக்கவே -தாத்பர்யர்ய அர்த்தங்கள் அறியா விடிலும்-ஸ்வரம் தப்பாக இருந்தாலும் பலன் பெறலாம் 1-5-
பிருத்வி ருக் -அக்னி சாமம் -சாமம் ருக்கு மேலே –பிருத்வி ச -அக்னி -ம / ஆகாசம் ருக் -வாயு சாமம் -சாமம் ருக்கு மேலே -ச ஆகாசம் ம வாயு /
பரம ஆகாசம் ச -சூர்யன் ம இதே போலே / நக்ஷத்திரங்கள் ச சந்த்ரம் ம / நீல தோயதா மத்யஸ்தா -கப்யாசம் புண்டரீகாக்ஷம் -1-6-
இதே போலே வாக் ச -பிரயாணம் ம -சேர்ந்தே சாமம் / கண்ணும் மனஸ்ஸூம் / கண்ணின் வெண்மை நீலம்/
அறிந்தவன் ஆத்ய மண்டல வர்த்திக்குள் உள்ளவனும் கண்ணுக்குள் உள்ளவனும் ஒருவனே என்று அறிந்து உபாசிக்கிறான் -1-7-
சலாவத் பிள்ளை சிலக /தல்பய வம்ச சைக்கிதன்ய/ ஜீவால பிள்ளை பிரவகன மூவரும் உத்கீத உபாசனத்தில் சிறந்தவர்கள்
மூவரும் தங்களுக்குள் பேசி இத்தை விளக்குகிறார்கள் -சாம சாரம் -ஸ்வரம் என்றும் -ஸ்வர சாரம் -பிராணன் என்றும் –
பிராண சாரம் அன்னம் என்றும் -அன்ன சாரம் -நீர் என்றும் –
நீரின் சாரம் -பரம ஆகாசம் -அதுக்கு மேல் சாரம் இல்லையே -அதே போலே சாமம் -உபாசகன் சர்வ வல்லமை பெற்றவன் ஆவான் -1-8-
பிருத்வியின் சாரம் ஆகாசம் -முதலில் தொன்று இறுதியில் மறையும் -திண் ஆகாசம் -அன்றோ -இப்படி சார தர உபாஸகத்தால் அனைத்தையும் பெறலாம்
சுனகன் பிள்ளை அதிதன்வன் உதரசண்டில்யனுக்கு இதன் ஏற்றத்தை உபதேசித்து இம்மைக்கும் மறுமைக்கும் ஏற்றம் பெறலாம் -1-9-
குரு தேசத்தில் புயலால் பயிர்கள் அழிய -அங்கு சக்ரன் பிள்ளை உசதியும் அவன் இளைய மனைவியும் வருந்தி இருக்க
அங்கு யானை ஒட்டி ஒருவன் இடம் உணவு கேட்டு -அவன் கொடுத்த கீழ் வகை உணவை உண்ண-தரித்து இருக்க அவற்றை உண்டு மீதியை
மனைவிக்கு கொடுத்தான் -யானை ஒட்டி கொடுத்த பானத்தை பருக வில்லை / மனைவி வேறே உணவு பெற்று உண்டதால் அந்த உணவை சேமித்து வைத்தாள்
அத்தை உண்டு யாகம் செய்யும் அரசன் இடம் சென்று ஸ்தோத்ரம் செய்பவர்கள் உடன் சேர்ந்து ஸ்தோத்ரம் பண்ண
பிரஸ்தாபம் அறியாமல் உத்கீதம் ஸ்தோத்ரம் செய்தால் தலை விழும் என்று சொல்ல ஸ்தோத்ரம் செய்வதை நிறுத்தினார்கள் -1-10-
தேவதை யுடைய பிரஸ்தாபம் அறியாமல் ஸ்தோத்ரம் பண்ணினால் தலை விழும் -என்று சொன்னீர் -தேவதை யார் என்று கேட்க
பிராணன் -அனைத்தும் இதிலே லயம் -அனைத்தும் இதில் இருந்து தானே உத்பத்தி / ஆதித்யன் -அன்னம் -இதே போலே -என்றான் -1-11-
தல்பிய பக-மைத்ரேயக்லவ-என்பான் வேதம் கற்க செல்ல -ஒரு வெள்ளை நாயை கண்டான் -மற்ற நாய்கள் அத்தை சூழ்ந்து
எங்களுக்கு நீ சாம கானம் பாடி உணவை கொடு என்று சொல்ல -பஹிஸ்பவமன கானம் பாட -நாய்கள் தலையாட்டி ஆட
சூர்ய வருண பிரஜாபதி சாவித்ரி தேவதைகளை வணங்கி உணவை தர பிரார்த்திப்பதைக் கண்டான் –1-12-
ஹாவூ-ஹை -அத -இத -ஐ -இவை முறையே பிருத்வி வாயு சந்திரன் ஆத்ம அக்னி
உ இ ஆஹோயி-இவை சூர்யன் விஸ்வதேவ பிரஜாபதி / பிராணன் ஸ்வரம் / யா அன்னம் -வாக் விராட்
ஹிம் -சாம கானம் அறிந்து உபாசிப்பவன் அனைத்து அபேக்ஷித்ங்களையும் பெறுவான் –1-13-
—————————–
பிரணவம் கொண்டு சாம கானம் செய்து அனைத்தையும் பெறலாம் -நல்லது எல்லாம் சாமம் -கெட்டது எல்லாம் அசாமம்
சாமம் உடன் வந்தான் என்றாலே நல்ல எண்ணத்துடன் வந்தான் என்றதாகுமே –
சாம கானம் செய்பவனை எல்லா நன்மைகளும் தானாகே பின் தொடர்ந்து சூழும் -2-1-
ஐந்து இடங்களில் சாம கானம் -பூமியில் -அக்னி ப்ரஸ்ரவ -உத்கீதம் அக்னி -ப்ரதிஹரம் ஆதித்யன் -பரமாகாசம் நிதானம் –
கீழ் லோகங்களில் உள்ளாருக்கு ஆதித்யன் ப்ரஸ்ரவ -ஆகாசம் உத்கீதம் -அக்னி ப்ரதிஹரம் -பூமி நிதானம் -2-2-
மழை உபாசனம் -வாயு -மேகம் பிரஸ்தவம் மழை உத்கீதம் -மின்னலும் இடியும் ப்ரதிஹரம் -வாழ உலகினில் பெய்திட -நிதானம் -2-3-
எல்லா நீர் நிலைகளிலும் -மழை நீர் பிரஸ்தவம் -கீழ் நோக்கி பெருகி ஓடும் நதி உத்கீதம் -மேற்கு நோக்கி பெருகி ஓடும் நதி ப்ரதிஹரம் கடல் நிதானம்
இத்தை அறிந்து உபாசிப்பவன் நீரில் அழுத்தாமல் செழிப்பாக வாழப் பெறுவான் -2-4-
எல்லா பருவங்களிலும் -கோடை காலம் பிரஸ்தவம் -மழை காலம் உத்கீதம் -இலையுதிர் காலம் ப்ரதிஹரம் -குளிர்காலம் நிதானம் -2-5-
மிருகங்கள் -ஆடு -பிரஸ்தவம் பசு உத்கீதம் குதிரை ப்ரதிஹாரம்-மனுஷ்யன் நிதானம் -2-6-
மூக்கு -வாக்கு பிரஸ்தவம் -கண் உத்கீதம் -காது ப்ரதிஹாரம் -மனஸ் நிதானம் -2-7-
ஹும்-வாக்கு -ப்ர-பிரஸ்தவம் -அ காரம் -முதல் அக்ஷரம் -உத் -உத்காதம் -பிரதி பிரதிஹாரம்-உப -உபத்திரவம் -நி-நிதானம் -இவ்வாறு ஏழு வகைகள் -2-8-
ஆதித்யன் -அனைவருக்கும் -உதய சூர்யன் ப்ரஸ்தாவம்-சூர்யா கிரணங்கள் ஆதி -அனைத்துக்கும் ஜீவனம் -மத்திய சூர்யன் உத்கீதம்
மதியத்துக்கு மேலே சாயங்காலம் முன்னால் சூர்யன் ப்ரதிஹரம் / சூர்ய உதயம் முன்னால் உபத்திரவம் -அஸ்தமிக்கும் சூர்யன் நிதானம் -2-9-
ஹிம்கார-பிரஸ்தவ – ஆதி- பிரதிஹார – உத்கீத– உபத்ரவ நிதானம் –2-10-
மனஸ் ஹிம்காரம்–வாக்கு ப்ரஸ்தாவம் –கண் உத்கீதம் -காது ப்ரதிஹாரம் -பிராணன் நிதானம் –
காயத்ரி சாமம் இவ்வாறு பிராணனுடனும் புலன்கள் உடனும் சேரும் 2-11-
ரதந்த்ர சாமம் -உராய்ந்து புகை ப்ரஸ்தாவம் எரிவது உத்கீதம் -குறைவது -ப்ரதிஹாரம் -அணைவது நிதானம்
கௌரவத்துடன் அக்னி உபாசனம் –2-12-
வாமதேவ சாமம் -மிதுனம்-பெண்களை கௌரத்துடன் நோக்க வேணும் -2-13-
உதய சூர்யன் ஹிங்காரம்-இளசூரியன் ப்ரஸ்தாவம் =-மத்திய சூர்யன் உத்கீதம் -பின்பு ப்ரதிஹாரம் -அஸ்தமிக்கும் ஸூர்யம் நிதானம் -ப்ரிஹித் சாமம் -2-14-
விருப சாமம் -வெளுத்த மேகம் ஹிம்காரம் -கார் மேகம் ப்ரஸ்தாவம் -மழை உத்கீதம் -மின்னல் இடி ப்ரதிஹாரம் -இவை நின்றால் நிதானம் -2-15-
வைராஜ சாமம் -இள வேனில் காலம் ஹிம்காரம் -கோடை ப்ரஸ்தாவம் -மழை காலம் உத்கீதம் -இலையுதிர் காலம் ப்ரதிஹாரம் குளிர்காலம் நிதானம் -2-16-
பிருத்வி ஹிம்ஹாரம் ஆகாசம் ப்ரஸ்தாவம் பரமாகாசம் உத்கீதம் -திசைகள் பிரதிஹாரம் -கடல் நிதானம் -சக்வாரி சாமம் -2-17-
ஆடு ப்ரஸ்தாவம் பசு உத்கீதம் குதிரை ப்ரதிஹாரம் நிதானம் மனுஷ்யன் -ரேவதி சாமம் -2-18-
ரோமம் ஹிம்காரம் தோல் ப்ரஸ்தாவம் சதை உத்கீதம் எலும்பு ப்ரதிஹாரம்-மஜ்ஜை நிதானம் யஜன யஜ்நீயா சாமம் -2-19-
அக்னி ஹிங்காரம் -வாயு ப்ரஸ்தாவம் -ஆதித்யன் உத்கீதம் -நக்ஷத்திரங்கள் ப்ரதிஹரம் -சந்திரன் நிதானம் ரஜன சாமம் –2-20-
மூன்று வேதங்கள் ஹிம்காரம் -மூன்று உலகங்கள் ப்ரஸ்தாவம் -அக்னி வாயு ஆத்யன் மூவரும் உத்கீதம் –
நக்ஷத்ரம் பறவைகள் ஆதியை கிரணங்கள் மூன்றும் ப்ரதிஹாரம் -பாம்புகள் கந்தர்வர்கள் தகப்பனார் மூவரும் நிதானம் -2-21-
அக்னி பிரஜாபதி சோமா வாயு இந்திரன் ப்ருஹஸ்பதி வருண -தேவதா சாமம் -2-22-
தியாகம் -அத்யயனம் -ஆராதனம் -பூ புவ சுவ-மூன்று வேத சாரம் -அகார உகார மகாரங்கள் கொண்டு பிரணவம் -சகல வேத சாரம் -2-23-
வசு -க்ரஹபத்ய யாகம் -வடக்கு பார்த்து -முதலில் — -ருத்ர-அக்னித்ரிய யாகம் –வடக்கு பார்த்து -இரண்டாவது –
ஆதித்ய-விஸ்வதேவர்களுக்கு -ஆஹவனீய யாகம் வடக்கு பார்த்து -மூன்றாவது யாகம் –2-24-
———————————
பிரணவம் -தேன் போலே-தெற்கு கிரணங்கள் தேன் கூடு -ருக்குகள் தேன் வண்டுகள் -3-1-
தெற்கு கிரணங்கள் தேன் கூடு -யஜுஸ் தேன் வண்டுகள் யஜுர் வேத பூ -வெள்ளை தேஜஸ் -3-2-
தெற்கு கிரணங்கள் -சாம வேதம் பூ -சாமம் தேன் வேண்டுகோள் -3-3-
வடக்கு கிரணங்கள் -அதர்வண வேதம் -3-4-
பிரணவம் -இம் மூன்று வேத சாரம் -3-5-
வஸூ -சிகப்பு நிறம் —முதல் தேன் -அக்னி முதல் தேவதை -உபாசகன் அக்னி யுடன் ஸாம்யா பத்தி அடைவான் -3-6-
ருத்ரர் -வெளுப்பு நிறம் -இந்திரன் -முதல் தேவன் -சுவர்க்கம் அடைந்து இந்திர பதவி பெறுவான் -3-7-
ஆதித்ய -கருப்பு நிறம் -வருண முதல் தேவதை -சூர்யமண்டலம் அடைந்து சாம்யாபத்தி அடைவான் -3-8-
மருத் — கரு நீலம் நிறம் -சோமன் முதல் தேவதை -மருத் லோகம் அடைந்து சாம்யா பத்தி அடைவான் -3-9-
ஐந்தாவது அம்ருதம் -சத்யா-பிரணவம் முதல் தேவதை -சத்யா லோகம் அடைந்து சாம்யா பத்தி அடைவர் -3-10-
ஹிரண்யகர்ப்பன் இத்தை பிரஜாபதிக்கும் -அவன் மனுவுக்கும் -இப்படியாக உத்தாலக வருணிக்கும் இந்த ஞானம் உபதேசிக்கப் பட்டது –
கௌரவமாக பேணிக் காக்க வேண்டும் -3-11-
உயர்ந்தவை எல்லாம் காயத்ரி – -த்ரிபாத் விபூதி -எங்கும் உள்ளவனே தஹராகாசத்திலும் உள்ளான் -சரீராத்மா பாவம் -அனைத்தும் அவன் சரீரம் -3-12-
ஐந்து கதவுகள் -கிழக்கு பிராண-கண் சூர்யன் -தெற்கு வியான -காது -சந்திரன் -மேற்கு -அபான -வாக் -அக்னி –
வடக்கு -சமண -மனஸ் -பர்ஜன்ய தேவதை -மேலே உதான-வாயு -ஆகாசம் -/ பஞ்ச பிராண உபாசனம் -தேஜஸ் -உள்ளும் புறமும் –
உடலை வெப்பமாக வைத்தும் -காதை மூடினாலும் பிரணவம் ஒலிக்கும் -3-13-
அவனிடமே லயித்து -அவனாலே உண்டாக்கப்பட்டு காக்கப்படும் -மனத்துள்ளான்-பிராணனும் அவன் சரீரம்
பரமாகாசம் -ஆதி -ஸத்யஸங்கல்பன் சத்யகாமன் -சர்வகந்த சர்வரஸ –
ஹ்ருத் புண்டரீகத்துக்குள் அணோர் அணீயான்-சர்வ வியாபகம் -ஒப்பார் மிக்கார் இலையாய மா மாயன் -3-14-
ஜூஹூ கிழக்கும் -ஸஹமான தெற்கும் -ரஜனி மேற்கும் -சுபதா வடக்கும் -பூ புவ சுவ -பூ –பூமி ஆகாசம் பரமாகாசம் –பிராணன்–
புவ -அக்னி வாயு ஆதித்யன் – சுவ -ருக் யஜுர் சாம –3-15-
மனுஷ்யன் தியாகி சந்நியாசி -முதல் -24- வயசு -காயத்ரி அக்ஷரங்கள் -காயத்ரி சந்தஸ் -24-பிராணன் -வஸூ –
அடுத்த -44-திருஷ்டுப் சந்தஸ் -பிராணன் -ருத்ரர் -ருத்ரர்கள் / அடுத்த -48-ஜகதி சந்தஸ் -பிராணன் -ஆதித்யன் -3-16-
புருஷன் -உபாசதஸ் -ஸ்தோத்ர -சாஸ்திரம் -தானம் சத்யம் -அஹிம்சா சமம் தர்மம் -சோஸ்யதி-அசோஸ்தா -அபப்ரதா ஸ்நாநம்
அங்கிரஸஸ் கிருஷ்ணனை கண்டு -நீயே நித்யம் அவிகாராய -பிராண சாரம் -என்று ருக்குகளால் சொன்னான்
ப்ரஹ்மத்தை அறிந்து பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் என்பர் -மனத்துள்ளானை சாஷாத் கரிப்பர்–3-17-
மானஸ உபாசனம் பார்த்தோம் -மேலே பாஹ்ய உபாசனம் –
ப்ரஹ்மம் -வாக்கு -மூக்கு -கண் -காது / அக்னி -வாயு -ஆதித்யன் -திக் பாலர்கள் –
வாக்கு -அக்னி / மூக்கு -வாயு /கண் -ஆதித்யன் /காது -திக் பாலர்கள் -3-18-
உபய விபூதி -லீலா விபூதி வெள்ளி போலே -நித்ய விபூதி தங்கம் -3-19-
————————————–
ஞானஸ்ருதி பவ்த்ரயன-தான தர்மங்களில் சிறந்தவன் -பறவைகள் பறக்க -ஓன்று இவன் பரம தேஜஸ்வீ-அருகில் போனாலே
சுட்டு எரித்து விடும் என்று சொல்ல – ரைக்குவரோ-இவர் -ரைக்குவர் புகழ் பறவைகளுக்கும் எட்டும் படி அன்றோ –
அத்தை கெட்ட ஞானசுருதி -பறவைகள் பேசுவதை அறிய வல்லவன் இவன் –
அவன் இடம் செல்ல -பறவைகள் பேச வந்தாயோ என்றார் ரைக்குவர் –4-1-
ஞான சுருதி பவ்த்ரயன -600-பசுக்கள் -ஸ்வர்ணம் -தேர் -குதிரைகள் உடன் ரைக்குவர் இடம் சென்று உபதேசம் செய்ய பிரார்த்தித்தார்
ஏ சூத்ரா இவற்றை நீயே வைத்துக் கொள்-என்று சொல்ல -மேலும் -1000-பசுக்கள் முதலியவற்றைக் கொடுத்து என்னிடம் உள்ள அனைத்தையும் உமக்கே –
உபதேசித்து அருள வேண்டும் -என்று மீண்டும் பிரார்த்தித்தான் -4-2-
வாயு தான் அனைத்தையும் கொள்ளும் -அக்னிக்கு உள்ளும் ஆழ்ந்து போகும் -ஆதித்யன்-சந்திரன் அஸ்தமிக்கும் பொழுதும் ஆழ்ந்து போகும்
தண்ணீர் நீராவி யாகும் பொழுதும் இப்படியே -சம்வர்க்க தத்வம் -பிராணன் உடம்பிலும் இப்படியே –
தூங்கும் பொழுது வாக்-கண்- காது-மனஸ்-அனைத்தும் பிராணனுக்குள் சேரும்
முன் ஒரு காலத்தில் கபேய சவ்நகன் -காக்சேசனி அபிபிரதரின் -இருவர் இடமும் ஒருவன் அன்ன தானம் கேட்க அவர்கள் கொடுக்க வில்லை –
அவன் இவர்கள் இடம் அனைவர் உள்ளும் அவன் இருப்பதை சொல்லி அவனுக்கு அன்றோ நீங்கள் உணவு தரவில்லை என்றான்
கபேய சவ்நகன்-இத்தைக் கேட்டதும் அவனுக்கு உணவு கொடுத்து மேலும் உபதேசம் செய்ய பிரார்த்தித்தான் –4-3-
சத்யகாம ஜபலா என்பவன் தன் தாயார் ஜாபலாவிடம் -தனது பரம்பரை பற்றி கேட்டான் -அவள் தனக்கு தெரியாது என்றாள்
அவன் ஹரித்ருமத கௌதமர் இடம் சென்று தனக்கு உபதேசிக்க பிரார்த்திக்க -அவர் இவனது பரம்பரை பற்றி கேட்டார்
அவன் உண்மையை சொல்ல அதனால் மகிழ்ந்து அவனுக்கு ஸம்ஸ்காரங்களை செய்வித்து -400-பசுக்களை கொடுத்து அனுப்ப
அவனும் அவற்றை போஷித்து -அவை -1000-பசுக்களாக விருத்தி அடையும்படி வாழ்ந்து நீண்ட ஆயுஸ்ஸூடன் வாழ்ந்தான் -4-4-
ஒரு காளை மாடு அவன் இடம் -நாங்கள் 1000-ஆனோம் -எங்களை குருவிடம் கூட்டிச் செல் என்றது –
ப்ரஹ்மம் ஒரு திருவடி -நான்கு திக்குகளிலும் பிரகாசிக்கும் என்று உணர்ந்து உபாஸிக்க அதுக்கு சொல்லிக் கொடுத்தான் -4-5-
பசுக்களை குருவிடம் கூட்டிச் சென்றான் -அக்னி மூட்டி கிழக்கு முகமாக அவற்றுடன் அமர்ந்தான் –
அக்னி பகவான் முன் தோன்றி திருவடி பூமி ஆகாசம் பரமாகாசம் கடல்கள் எங்கும் வியாபித்து இருப்பதை உணர்ந்து –
உபாசிப்பவன் பரம புருஷார்த்தம் அடைகிறான் என்று உபதேசித்தார் –4-6-
அங்கு ஒரு வாத்து வந்து ப்ரஹ்மம் திருவடி -அக்னி சந்த்ர சூர்ய மின்னல் நான்கையும் வியாபித்து தேஜஸ் மிக்கு இருக்கும்
இத்தை அறிந்து உபாசிப்பவர்கள் அவற்றை வெல்லுவார்கள் -4-7-
மதகு என்ற பறவை பறந்து வந்து -ப்ரஹ்மம் திருவடி -பிராணன் -கண் -காது -மனஸ் -எங்கும் வியாபித்து இருப்பதை
உணர்ந்து உபாசிப்பவன் அனைத்து அபேக்ஷிதங்களையும் பெறுவான் என்றது –4-8-
குரு வந்து பார்த்ததும் சத்யகாமன் முகத்தில் தேஜஸ் விளங்கியபடியை கண்டார்
குருவிடம் உபதேசம் பெற்றது தான் நிலைத்து இருக்கும் என்று கேள்விப்பட்டு உள்ளேன் –
உபதேசித்து அருள பிரார்த்திக்க அவரும் அனைத்தையும் உபதேசித்தார் -4-9-
உபகோஸல கமலாயனர் என்பவர் சத்யகாம ஜபலர் இடம் வந்து -12-ஆண்டுகள் கைங்கர்யம் செய்தார்
அவருக்கு உபதேசம் செய்ய வில்லை -அவன் வருந்தி உபவாசம் இருந்தார்
அக்னி தேவதையே தோன்றி -ப்ரஹ்ம உபதேசம் செய்து -சர்வ வியாபி -ஆனந்தஸ்வரூபன்-பிராணன் –
க ஆகாசம் கா ஹ்ருதயம் -அனைத்திலும் வியாபித்து இருப்பதை உபதேசித்தார் –4-10-
கார்ஹபத்ய அக்னி பகவான் -பூமி அக்னி அன்னம் சூர்யன் அனைத்தும் ப்ரஹ்ம உருவமே -என்று அறிந்து
உபாசிப்பவன் உடைய குலங்கள் அனைத்தும் வாழ்ந்தே போகும் –4-11-
அந்வஹர்யபசன அக்னி -தோன்றி -திக் பாலர்கள் நக்ஷத்திரங்கள் சந்திரன் அனைத்தும் ப்ரஹ்மமே என்று அறிந்து
உபாசிப்பவன் உடைய குலங்கள் அனைத்தும் வாழ்ந்தே போகும் -4-12-
ஆஹவன்யாக்னி தோன்றி பிராணன் ஆகாசம் பரமாகாசம் மின்னல் அனைத்தும் ப்ரஹ்மமே என்று அறிந்து
உபாசிப்பவன் உடைய குலங்கள் அனைத்தும் வாழ்ந்தே போகும் -4-13-
அக்னி பகவான்கள் அனைவரும் உபகோஸலனுக்கு இவ்வாறு உபதேசித்து குரு வந்து மேலும் உபதேசிப்பார் -என்று சொல்லி மறைய
குரு வந்து இவன் முக தேஜஸ் ஸூ கண்டு -மகிழ்ந்து ப்ரஹ்ம ஞானம் அடைந்தவனுக்கு பிரதிபந்தகங்கள் தாமரை இலைத் தண்ணீர் போலே ஒட்டாது
என்று உபதேசித்து அருளிய பின்பு மேலும் உபதேசிக்க பிராத்தித்தான் –4-14-
ப்ரஹ்மமே எங்கும் உள்ளான்-சத்யம் ஞானம் அநந்தம்-வெண்ணெய் தண்ணீர் கண்ணில் தெளித்தாலும் உள்ளே போகாமல் வெளியிலே தள்ளப்படும்
ப்ரஹ்மமே அனைத்தையும் அருளுவான் -ப்ரஹ்ம தேஜஸ் பரஞ்சோதி -அதன் லேசமே மற்ற தேஜஸ் பதார்த்தங்கள்
இத்தை உணர்ந்து உபாசிப்பவர் அர்ச்சிராதி கதி மூலம்
சென்று பலரால் சத்கரிக்கப்பட்டு நச புனராவர்த்தி பரமபதத்தில் சென்று பரம புருஷார்த்த கைங்கர்யம் பெறுவார் –4-15-
மனஸ் வாக்கு இரண்டாலும் உபாசனம் வேண்டும் -ஹோதா -அத்வர்யு -உத்காதிர்/ ப்ரதர் அநுவாகம் தொடங்கிய பின்பு ப்ராஹ்மணர்
மௌனம் குலைத்தால் ஒரு வழி உபாசனம் குலையும் -நொண்டி போலேயும் தேர் சக்கரம் உடைந்தால் போலேயும் ஆகும் –
ஆகவே மௌனமும் முக்கியம் –4-16-
பிரஜாபதி சங்கல்பித்து -பிருத்வியின் சாரமான அக்னியையும் -ஆகாசத்தின் சாரமான வாயுவையும் -பரமாகாசத்தின் சாரமான ஆதித்யனையும்
எடுத்து -அக்னியில் இருந்து ருக்கும் வாயுவில் இருந்து யஜுஸ் ஸூம் ஆத்யனில் இருந்து சாமத்தையும் எடுத்து –
இந்த மூன்றில் இருந்து பூ புவ சுவ மந்த்ரங்களை எடுத்து
ருக்கால் வந்த தப்புக்கு பிராயச்சித்தமாக பூ சுவஹா வைத்து கிரஹபத்யாக்னிக்கும்
யஜுஸ்ஸூ லால் பிறந்த தப்புக்கு பிராயச்சித்தமாக புவ சுவஹா வைத்து தக்ஷிணாக்கினிக்கும் –
சாமத்தால் வந்த தப்புக்கு பிராயச்சித்தமாக வைத்து சுவ சுவஹா என்று ஆஹவனியாக்னிக்கும்
சமர்ப்பித்து தீர்க்க அறிந்த உபாத்தியாயர் கொண்டு பயன் அடையலாம் -4-11-
——————————————
பிரணவம் ஸ்ரேஷ்டம் பிராணன் போலே / வாக்கு / கண் /காது மனஸ் /
புலன்கள் தங்களுக்குள் யார் ஸ்ரேஷ்டம் -என்று பிரஜாபதி இடம் கேட்க -யார் பிரிந்தால் மிக கஷ்டமோ என்று சொல்ல
அனைத்திலும் பிராணன் ஸ்ரேஷ்டம் என்று உணர்ந்தன –5-1-
பிராணனுக்கு தரிக்க அன்னம் -நீர் ஆடை போலே -இத்தை சத்யகாம ஜபலா -கோஸ்ருதிக்கு-வியாக்ரபதர்பிள்ளைக்கு -உபதேசிக்க –
பட்ட மரமும் இப்படி உபதேசம் பெற்று தளிர்க்கும் / இத்தை முழு நிலவு அன்று தயிர் தேன் முதலியன கொண்டு
அக்னிக்கு ஆவாஹனம் செய்து பயன் பெறுவான் -5-2-
ஸ்வேதகேது -அருணா என்பவரின் பேரன் -வர -பிரவாகன -ஜிவலாவின் பிள்ளை இடம் ஐந்து கேள்விகள் கேட்க
இறந்தவர் போகும் இடங்கள் என்ன -நல்லவர்கள் எங்கு செல்வார்கள் -யாகத்துக்கு பலன் தருபவன் யார் போன்றவை
பதில் சொல்ல முடியாமல் தகப்பனார் இடம் செல்ல -அவராலும் இவற்றுக்கு பதில் சொல்ல தெரியாமல் இருக்க
அவன் அரசன் இடம் செல்ல அரசன் அவனுக்கு ஐஸ்வர்யங்கள் கொடுக்க -அவை உம்மிடமே இருக்கட்டும் –
எனக்கு இந்த கேள்விகளுக்கு பதிலை உபதேசித்து அருள வேண்டும் என்று பிரார்த்தித்தார் –5-3-
முதல் அக்னி -சூர்யன் எரி பொருள் -கிரணங்கள் புகை -பகல் ஒளி- சந்திரன் நக்ஷத்திரங்கள் பொறிகள் /சோமன்-5-4-
பர்ஜன்யன் அடுத்த அக்னி -காற்று எரி பொருள் -மேகம் புகை போலே -மின்னல் ஒளி -இடி ஓசை -பொறிகள் -சோமம் ஆஹுதி -மழை பலன் -5-5-
பூமி அடுத்து -சம்வத்சரம் எரி பொருள் -ஆகாசம் புகை -இரவு ஒளி -திக்குகள் பொறி -மழை ஆஹுதி -தான்யம் அன்னம் பலன் -5-6-
மனுஷ்யன் அடுத்து -வாக்கு எரி பொருள் -நாக்கு ஒளி -கண் காது பொறி -அன்னம் ஆஹுதி -விதை பலன் -5-7-
பெண் அடுத்து -ரேதஸ் -கர்ப்பம் -பிள்ளை பலன் -5-8-
பிறந்து இறந்து அக்னியால் கொளுத்தப்பட்டு -பஞ்சாக்கினி வித்யை -5-9-
பஞ்சாக்கினி வித்யை அறிந்து -விஸ்வஸித்து-தவம் இருந்து -காட்டில் சென்று -ப்ரஹ்ம தேஜஸ் -மனுஷ்ய தேவ யோனி –
ஹவிஸ் கொடுத்து –கர்மம் அடியாக ப்ராஹ்மணன் க்ஷத்ரியாதி -சண்டாளன் ஜங்கமம் ஸ்தாவரம் -அரிது அரிது மானிடர் ஆவது அரிது
பஞ்சாக்கினி வித்யையால் பவித்ரன் ஆவான் -5-10-
உபமன்யுவின் பிள்ளை பிரச்சின சலன்–புலசர் பிள்ளை சத்யஜனன்-பல்லவி பிள்ளை இந்த்ரத்யும்னன் -சர்க்கரஸ்கர் பிள்ளை ஜனன்-
அசுவரதர்சவர் பிள்ளை புதிலர்- ஐவரும் வேதம் கற்றவர்கள் -அபி ஜாதி மிக்கவர்கள் கூடி ஆத்ம பர ஸ்வரூபம் பற்றி பேச
அருணர் பிள்ளை உத்தாலகர் இடம் சென்று உபதேசம் பெறலாம் என்று சென்று பிரார்த்திக்க -அவர்கள் இடம் கேகயன் பிள்ளை அஸ்வபதி
வைஸ்வரன வித்யை அறிந்தவர் அவர் இடம் சென்று உபதேசம் பெறலாம் என்று கூட்டிச் செல்ல
அவன் இவர்களை வரவேற்று -என் ராஜ்யத்தில் திருடர்கள் இல்லை -கிருமிகள் இல்லை குடிகாரர்கள் இல்லை அஞ்ஞர்களும் இல்லை -5-11-
ஒவ்பன்யவன் இடம் -எந்த ஆத்மா பற்றி உபாசனம் அறிய விரும்புகிறாய் என்ன -பரமாத்மா என்று சொல்ல
வைச்வானர ஆத்மா -பரஞ்சோதி – பற்றி உபாஸிக்க சொல்லி -தலைவன் ஸ்வாமி -என்றார் -5-12-
சத்யஜன பவ்லுசி -இடம் வைஸ்ரவணா ப்ரஹ்மம் அனைத்திலும் உள்ளான் -கண் போன்றவன் -5-13-
இந்த்ரத்யும்ன பல்லவேயன் இடம் இவனே வேத ப்ரதிபாத்யன் -சகல சாஸ்திரங்களும் இவனை சொல்லி அல்லது நில்லாது -பிராண புதன் -5-14-
ஜன சர்காரகஸ்யன் இடம் ஆகாசம் போன்ற சார புதன் இவனே –5-15-
புதில அஸ்வரதராஸ்வி இடம் சகல ஐஸ்வர்யமும் இவனே –5-16-
உத்தலக அருணி-இவனே சர்வ ஆதாரம் –5-17
அனைவர் இடமும் இவ்வாறு ஒவ் ஓன்று ஆகாரத்தை சொல்லி சர்வத்தையும் அறிவது துர்லபம் -5-18-
பிராண ஸ்வாஹா -கண் -காது ஆகாசம் பரமாகாசம் -ப்ரேரிதா-இவனே –5-19-
வியான ஸ்வாஹா -காது -சந்திரன் -பசு ஐஸ்வர்யம் -அனைத்தும் இவனே –5-20-
அபானா ஸ்வாஹா -வாக்கு -பஞ்ச பூதங்கள் -சகல சாஸ்திரங்கள் அனைத்தும் இவனே –5-21-
சமான ஸ்வாஹா -மனஸ் -பர்ஜன்ய -மின்னல் -ஜோதிஸ்-அனைத்தும் இவனே –5-22-
ஸ்வாஹா ஸ்வாஹா -உதானா ஸ்வாஹா -தோல் -ஆகாசம் -அனைத்தும் இவனே –5-23-
இப்படி அக்னிஹோத்ரம் அறிந்து அனுஷ்ட்டித்து -இருந்தால் பாபங்கள் தீயினில் இட்ட தூசாகும் –
இந்த சேஷத்தை ஸ்வீ கரிக்கும் சண்டாளனும் உஜ்ஜீவிப்பான் –5-24-
——————————–
அருணா பேரனான ஸ்வேதகேது இடம் அவன் தகப்பனார் ப்ரஹ்மச்சாரியாக வாழ்ந்து வேதம் கற்க உபதேசித்தார்
12-வயசு முதல் -24-வயசு வரை கற்று அஹங்கரித்து வர
பிள்ளாய் நீ எது ஒன்றை கற்றால் வேறே ஒன்றையும் கற்க வேண்டாவோ ஒன்றை தர்கா விடில் வேறே எதையும் கற்காதவனாய்
உள்ள ஒன்றை கற்றாயோ என்று கேட்க –
ப்ரஹ்மமே அனைத்துக்கும் காரணம் -காரணத்தை அறிந்தால் கார்யப் பொருள்களை அறியலாம் -6-1-
சதேவ சோம்யா -சத்தாகவே இருந்தது -ஏக மேவ -ஒன்றாகவே -அத்விதீயம் -உப்பில்லாமல் -த்ரிவித காரணமும் இவனே
பஹூஸ்யாம் ப்ரஜாயேவா -சங்கல்பித்தான் –6-2-
த்ரிவித காரணம் -த்ரிவித ஸ்ருஷ்ட்டி -முட்டை -கர்ப்பம் -முளை விட்டு /நாமம் ரூபம் கொடுத்து /த்ரிவித சேதன அசேதனங்கள் -6-3-
அக்னி நிறம் சிகப்பு -நீர் நிறம் வெளுப்பு -பிருத்வி நிறம் கருப்பு -மற்றவை இவை கலந்த நிறங்கள்
சூர்யன் -சிகப்பு நிறம் -சந்திரன் வெண்மை -மின்னல் -சிகப்பு –6-4-
அன்னம் மூன்று வகை -திரவம் மூன்று வகை -அக்னி மூன்று வகை -மனஸ் பிராணன் வாக்கு மூன்றும் -இப்படி அனைத்தும் மூன்று -6-5-
பால் – தயிர் -வெண்ணெய் / அன்னம் -ஜீரணம் -சாரம் மனசுக்கு / நீர் சாரம் பிராணனுக்கு / அக்னி சாரம் வாக்குக்கு -6-6-
ஸ்வேதகேதுவை -15-நாள்கள் உபவாசம் இருக்கச் சொல்லி -தண்ணீர் மட்டும் நிறைய பருக -பிராணன் நிலைக்கும் -/
அன்னம் -மனஸ் / தண்ணீர் -பிராணன் -/ அக்னி வாக் –6-7-
உத்தாலக அருணி தன் பிள்ளை ஸ்வேதகேது இடம் -தூங்கும் பொழுது ப்ரஹ்ம அனுபவம் பற்றி -அனைத்தும் அடங்கி பிராணன் மட்டும் இயங்கி –
பறவை கூட்டுக்குள் சுகமாக இருப்பது போலே -/ தாகம்-பசியை விட -போர் வீரர்களில் தலைவன் போலே –
மரத்துக்கு வேர் போலே -அன்னத்துக்கு நீர் –நீருக்கு அக்னி வேர் /
இறக்கும் பொழுது வாக்கு மனசிலும் மனஸ் பிராணனிலும் -பிராணன் அக்னியிலும் லயமாகும் -6-8-
தேனீக்கள் தேனியை வேறே வேறே புஷபங்களில் இருந்து எடுத்து சேர்த்து ஒன்றாக்குவது போலே சர்வமும் பர ப்ரஹ்மம் இடம் சேரும் -6-9-
நதிகள் கடலில் சேர்ந்து நாமம் ரூபம் இழக்கும் -அதே போலவே -6-10-
வேரை அழித்தால் சர்வமும் அழியும் -ஆத்மா அழியாதே -நித்யம் -சரீரம் முடிந்து சரீராந்தரத்துள் புகுகிறான் -6-11-
ஆலம் விதத்தில் இருந்து பெரிய ஆல மரம் -ஸூஷ்மம் -ப்ரஹ்மம் -6-12-
உப்பும் நீரும் சேர்ந்தால் உப்பு கரைந்து -முழுவதும் உப்பு கரிக்குமே -சர்வமும் ப்ரஹ்மாத்மகமே -6-13-
காந்தார பகுதியில் இருந்து கண்ணை கட்டி தெரியாத இடத்தில் விட்டு -அவன் கிழக்கோ மேற்கோ வடக்கோ தெற்கோ –
இருந்து வந்தேன் தெரியவில்லை என்னுமா போலே -திக்கு தெரியாத சம்சார காடு -6-14-
சுற்றார் உறவினர் தெரிகிறதா என்று கேட்டாலும் -வாக்கு மனசிலும் -மனஸ்ஸூ பிராணனிலும் –
பிராணன் அக்னியிலும் -லயமான பின்பு தெரியாதே -6-15-
தப்பு பண்ணாமல் இருந்தால் தண்டனை கிட்டாது -ப்ரஹ்ம ஞானம் ஏற்பட்டு பிறவியை தாண்டி அவனை அடைந்து அனுபவிக்கலாம் -6-16-
—————————————-
நாரத முனிவர் ஸநத்குமார ரிஷி பகவான் இடம் உபதேசம் கேட்க -நீர் அறிந்தவை என்ன என்று கேட்க –
நான்கு வேதங்கள் -இதிகாசம் புராணம் -வியாகரண சாஸ்திரம் -ஆகம சாஸ்திரம் -அங்கங்கள் உப அங்கங்கள் அனைத்தையும் அறிந்தேன் –
ஆத்ம ஞானம் இன்னும் பெறவில்லை -பெற்றால் பேரின்பம் என்று கேள்விப் பட்டுள்ளேன் -அத்தை போதித்து அருள வேண்டும் -என்று சொல்ல
வேதங்கள் மற்றும் அனைத்தும் ப்ரஹ்மத்தையே சொல்லும் -7-1-
வாக்கு -நாமம் -வேதம் -அனைத்துக்கும் மூலம் -வாக்கையே உபாசனம் பண்ணு என்றான் –
அத்தை விட உயர்ந்தது ஏது என்ன -7-2-
மனஸ் வாக்கையம் நாமத்தையும் விட உயர்ந்தது -மனஸ் பூர்வ வாக் உத்தர -மனஸ் ஒத்துழைக்கவே நாமம் கற்கிறான் -தபஸ் தானம் செய்கிறான்
மனசே ஆத்மா -ப்ரஹ்மம் -என்றதும் அத்தை விட உயர்ந்தது ஏது என்ன –7-3-
சங்கல்பம் உயர்ந்தது -இச்சித்து தானே மனசால் வாக்கு நாமம் தபஸ் தானம் அனைத்தும் -ஆகாசம் நீர் மழை-அன்னம் -பிராணன் -ப்ரஹ்மம் -7-4-
புத்தி சங்கல்பம் விட மேலே -புத்தியால் அறிந்த பின்பே சங்கல்பம் -மனஸ் -வாக்கு -நாமம் -இவை எல்லாம் புத்தியில் அடங்கும் -இதுவே ப்ரஹ்மம் -7-5-
த்ருதி–உறுதி –புத்திக்கு மேலே -7-6-
புரிதல் அதுக்கும் மேலே -7-7-
பலம் அதுக்கும் மேலே -7-8-
அன்னம் அதுக்கும் மேலே -7-9-
நீர் அதுக்கும் மேலே –7-10-
அக்னி அதுக்கும் மேலே -7-11-
ஆகாசம் அதுக்கும் மேலே –7-12-
நினைவு அதுக்கும் மேலே –7-13-
ஆசை அதுக்கும் மேலே –7-14-
பிராணன் அதுக்கும் மேலே –7-15-
ச ஏவ ஏஷ ஏவம் பஸ்யன் நேவம் மந்வாந ஏவம் விஜாந நந்தி வாதி பவதி -7-15-4-இவ்வாறு பார்த்து ஆலோசிப்பவனாக
இப்படி அறிந்து கொண்டு உபாஸ்ய பொருள் அனைத்திலும் பெரியது -பிராணனை அறிபவன் உயர்ந்த பொருள் என்றவாறு
உண்மையே பேசுவேன் -அறிந்தே பேசுவேன் -உண்மையை அறிய ஆசைப்படுவேன் என்னக் கடவது இறே–7-16-
ஏஷ து வா அதிவததி யா சத்யே நாதி வததி -7–16–1-சத்யம் உயர்ந்தது
அறிந்தால் தானே உண்மையை பேசுவோம் -அறியாமல் உண்மை என்று சொல்ல முடியாதே -அறிய ஆசை கொள்ள வேண்டுமே –7-17-
ஆராய்ந்தே அறிய வேண்டும் -ஆராய ஆசை கொள்ள வேண்டுமே –7-18-
நம்பிக்கை இருக்க வேண்டுமே ஆராயவும் –7-19-
உறுதி இருந்தால் தானே நம்பிக்கையே வரும் -ஆசை வேண்டுமே உறுதி கொள்ளவும் –7-20-
செயல்பாடு இருந்தால் தானே உறுதியே வரும் –7-21-
ஆனந்தம் இருந்தால் தானே செயலில் ஈடுபடுவான் –7-22-
ப்ரஹ்மமே ஆனந்தம் -ஆசை வேண்டுமே ப்ரஹ்மம் அறியவும் –7-23-
பூமா த்வேவ விஜிஜ்ஞாசி தவ்ய -7–23–1—பூமா என்பதில் அறிவதில் மட்டும் ஆசை —
ப்ரஹ்மம் அறிந்தவன் வேறே ஒன்றையும் பார்க்கவும் கேட்கவும் மாட்டானே -இதுவே நித்யம் அநந்தம் -இதுவே சர்வ சேதன அசேதனங்களும் -7-24-
ப்ரஹ்மம் சர்வ வியாபி – ப்ரஹ்ம ஞானம் வந்தவன் துக்கமே இல்லாமல் ஆனந்தமயனாக உள்ளான் -சர்வ சாம்யம் அடைகிறான் -7-25-
அஹம் ஏவ அதஸ்தந் அஹம் உபரிஷ்டாத் -7–25–1–தொடங்கி-அஹம் ஏவ இதம் சர்வம் -நான் என்பவனே
கீழாகவும் மேலாகவும் உள்ளேன் –இவை அனைத்தும் நானே
ப்ரஹ்மத்தின் இடம் இருந்தே அனைத்தும் -பிராணன் -ஆசை -நினைவு -ஆகாசம் -அக்னி -நீர் -தோற்றம் -மறைவு -அன்னம் -பலம் -ஆராய்வு -புத்தி –
சங்கல்பம் -மனஸ் வாக்கு -நாமம் -அனைத்தும் -ப்ரஹ்மத்தை அறிந்தவன் துக்கமே இல்லாமல் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான்
ஒன்றாகவும் 3-5–7-9-11-110-1020-ஆகிறான் -சகல துரிதங்களும் நீங்கப் பெறுகிறான் -7-26-
தராதி சோகம் ஆத்மவித்–ஆத்மாவை அறிந்தவன் சோகத்தை கிடக்கிறான்
————————————-
ஏதத் சத்யம் ப்ரஹ்ம புரம் -அஸ்மின் காமா ஸமாஹிதா -யதா ஹி ஏவ இஹ பிரஜா அந்வா விசந்தி -தேஷாம் சர்வேஷூ லோகேஷூ அகாமசாரோ பவதி -8-1-5-
அத யா இஹ ஆத்மாநம் அநுவித்ய வ்ரஜத்யே தாம்ச்ச சத்யான் காமான் தேஷாம் சர்வேஷூ லோகேஷூ காமசாரோ பவதி -8-1-6-
ப்ரஹ்ம புரம்-ஹ்ருத் புண்டரீகம் -தஹர ஆகாசம் -இத்தை அறிந்து உபாஸிக்க வேண்டும் –
சர்வ வியாபி அனைத்தையும் கொண்டு இங்கே நித்ய வாசம் –
இந்த ப்ரஹ்ம புரதத்தில் இல்லாதது ஒன்றுமே இல்லையே
மூப்பு சோகம் எதுவும் இதுக்கு இல்லை -கர்ம வஸ்யத்வமும் இல்லை
இத்தை அறிந்தவன் ஸ்வரூப ஆவிர்பாவம் அடைந்து எங்கும் சஞ்சரிக்கும் சக்தி பெறுகிறான் -8-1-
ப்ரஹ்மத்தின் சங்கல்பம் அடியாகவே தான் தந்தை தாய் சகோதரன் சகோதரி நண்பன் -கந்தங்கள் -புஷபங்கள் -அன்ன பானாதிகள்
இயல் இசை நாடகங்கள் -ஐஸ்வர்யாதிகள் -ஆனந்தாதிகள் –8-2-
புதையல் மேலே நடந்தாலும் இருப்பதை அறியாமல் துக்கித்து இருப்பவர் போலே தஹராகாசம் ஹ்ருத் புண்டரீகத்தில் இருப்பதை உணராமல்
சம்சார துக்க சூழலில் சிக்கி உழல்கிறார்கள் -உணர்ந்தவர் -சத்தாகவும் சத்யம் ஞானம் அநந்தம்
-ச -சத்யம் -இதி-சகல சேதன அசேதனங்கள் -யம்-சேர்த்து பிரேரிதம் செய்பவன் –
இந்த ஞானம் அறிந்தவன் ப்ரஹ்மத்தை அடைகிறான் – 8-3-
ப்ரஹ்ம புரம் -தஹராகாசம் பரமபதம் போலே-/ ப்ரஹ்ம ஞானம் வந்தவன் கண் இல்லாதவன் காண்கிறான்
பரஞ்சோதி ஸ்வரூபன் -ஆச்சார்யர் மூலமே இந்த ப்ரஹ்ம ஞானம் பெற வேண்டும் -8-4-
ப்ரஹ்மசர்யம் -தியாகம் -மௌனம் -த்யானம் -உபவாசம் -சன்யாசம் -அறிந்து புதையல் எடுப்பது போலே பர ப்ரஹ்மத்தை அடைகிறான் -8-5-
விழித்த நிலை ஸ்வப்னம் ஸூ ஷுப்த்தி துர்ய அவஸ்தைகள் -ப்ரஹ்ம அனுபவம் -8-6-
துக்கம் கலசாத -மூப்பு இல்லாத -ம்ருத்யு பசி தாகம் ஆசை இல்லாத நிலை -அறிந்து இந்திரனும் விரோசனனும் பிரஜாபதி இடம் வந்து
-32-வருஷம் சிஷ்ய லக்ஷணத்துடன் -இதன் வைலஷண்யம் அறிந்து -பயம் இல்லாமல் -ப்ரஹ்மத்தை அறிய ஆசை கொண்டார்கள் -8-7-
நீரில் பிம்மத்தை கண்டு -ப்ரஹ்மத்தை சாஷாத்காரித்து உபாஸிக்க சொல்ல -விரோசனன் தன் சரீரத்தையே உபாஸிக்க
தானம் யாகம் அறியாமல் சரீரத்தையே போஷித்து அரக்கர் வழியே சென்றான் -8-8-
இந்திரன் சரீரம் அழியும் என்று உணர்ந்து மேலும் -32-வருஷம் பிரஜாபதி இடம் பிரார்த்தித்து ப்ரஹ்மத்தை நன்றாக அறிய பிரார்த்தித்தான் -8-9-
ஆத்ம ஞானம் பெற்றதும் -மேலும் இது ஸூகம் துக்கங்கள் அனுபவிக்கிறதே -இது ப்ரஹ்மமாக இருக்க முடியாதே என்று உணர்ந்தான்
இத்தை அறிய மேலும் -32-வருஷம் கைங்கர்யம் செய்து கேட்டு அறிய இருந்தான் -8-10-
ஆத்மா நித்யம் -பயம் இல்லாதவன் -என்று உணர்ந்து மேலும் -5-வருஷம் கைங்கர்யம் செய்து -ஆக -101-வருஷங்கள் மொத்தம் செய்தான் -8-11-
ஆத்ம சரீரம் தன்மை உணர்ந்தான் -வாயு மேகம் இடி இவைகளுக்கு சரீரம் இல்லை -நான் பார்க்கிறேன் நான் முகருகிறேன் -நான் பேசுகிறேன்
என்று சொல்லும் பொழுது சரீரத்தில் உள்ள கரணங்கள் கொண்டே செயல்பாடு -பிராணன் தரிக்க வேண்டுமே –
நான் நினைக்கிறேன் -மனஸ் கொண்டு –8-12-
ப்ரஹ்ம ஞானம் வந்ததும் -சரீரம் விட்டு -குதிரை ரோமம் கழிக்குமா போலே -விட்டு ப்ரஹ்மத்தை அடைகிறான் -8-13-
ஏஷ சம் பிரசாத அஸ்மாத் சரீராத் பரம் ஜ்யோதி ரூபா சம்பத்ய ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே –
ஆகாசம் -பரமாகாசம் -ப்ரஹ்மம் -ஸ்ரேஷ்டர்கள் அனைவரிலும் ஸ்ரேஷ்டர்–8-14-
இந்த ப்ரஹ்ம ஞானத்தை பிரஜாபதி மனுவுக்கு சொல்ல -அவன் தன் வம்சாவளிகளுக்கு சொல்ல -இப்படி குரு மூலமே பெற வேண்டும்
ப்ரஹ்ம ஞானம் பெற்றதும் வாழும் நாள்களில் இந்திர வஸ்யதை இல்லாமல் ஆத்ம குணங்கள் நிறைய பெற்று
இறுதியில் ப்ரஹ்மத்தை அடைந்து பரம புருஷார்த்த ப்ரீதி காரித்த பகவத் கைங்கர்யம் செய்யப் பெறுகிறான்
ந ச புநராவர்த்ததே -ந ச புநராவர்த்ததே -8-15-
————————————
ஸ்ரீ ஓம் புலன்கள் -வாக் -பிராணன் -கண்கள் -காதுகள் -சப்தாதி கள் அனைத்தும் அருளிய பர ப்ரஹ்மத்துக்கே அர்ப்பணித்து
அவன் விஷயத்திலே செலுத்தி அவன் அருளால் அவனை அடைந்து ஸ்வரூப அனுரூப ப்ரீதி காரித்த கைங்கர்யம் செய்வோம்
நம்முள் புகுந்து பேரேன் என்று இருப்பானே –
ஓம் சாந்தி சாந்தி சாந்தி —
————————————
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –