ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை –308-320 -சத் குரூப சேவகம்/-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம்–ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் / ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ . வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

1–புருஷகார வைபவம் -24-
2–சாத நஸ்யா கௌரவம் -23–79-
3–தத் அதிகாரி க்ருத்யம் -8o–307–
4–சத் குரூப சேவகம் —308-365-
5–நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
6–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது நான்காவது பிரகரணம்
உபதேசாதிகளை நாலாவதிலும் —உபதிஷ்ட மான அர்த்த விஷய மஹா விசுவாச ஹேது கிருபா வைபவம் – -நிர்ஹேதுகத்வம் -கிருபை- ஐந்தாவதில் /
உபாதிஷ்டமான அர்த்த சரமாவதியையும் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -கிரமத்தில் அருளிச் செய்வார் /

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
1–புருஷகார வைபவம் -24-
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
6-சதாச்சார்ய அனுவர்த்தன பிரகரணம் -308—320-
7-ஸச் சிஷ்ய லக்ஷண பிரகரணம் -321–365-
8-நிர்ஹேதுகம் அவன் கிருபை வைபவம் -366-406
9–குரோர் உபாய தாஞ்ச -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -407-463
இப்படி பிரித்து அனுபவம் –

ஒன்பது பிரகரணமாக பார்த்தால் இது ஆறாவது பிரகரணம்

——————————————-

த்வயார்த்தம் முடிந்தது இது வரை -கண்ட யுக்தமானவை இது வரை / ஆர்த்தமான அர்த்தங்கள் மேல் – அபிபிரேதமான அர்த்தங்கள் இனி மேல் என்றவாறு
ஆச்சார்ய கைங்கர்யம் -நிர்ஹேதுக கிருபா வைபவம் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் இவை மூன்றும் த்வயத்தில் சப்தத்தில் இல்லை /
அவன் திரு உள்ளத்தில் உள்ளவை அன்றோ இவை -இத்தை ஓராண் வழியாக உபதேசித்து -அவிச்சின்னமாக பரம்பரையா சம்பிரதாயத்தில் வந்த அர்த்தங்கள் –
முன்னோர் முறை தப்பாதே கேட்டு இருக்க வேண்டுமே /
த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை /-மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

பூஜ்ய விஷய விசாரம் மீமாம்சை -வேத -வேதாந்த -வேதாந்த தாத்பர்ய மீமாம்சைகளை மூன்றும் உண்டே /-
சாஸ்திரம் சாப்தமாக உபதேசித்தது -முதல் சொல்லி –தர்ச பூர்ண மாசம் -அக்னி ஹோத்ரம்-சோமா யாகம் -கிருஷ்ண யாகங்கள் -மூன்றையும் விவரித்து சொல்லிற்று –
ஷட்க பேதம் பூர்வ மீமாம்சை ஜைமினி -கர்ம விசாரம் / உபதேச முதல் ஆறும் – அதி தேசம் அடுத்த ஆறும் /
த்ரவ்யத்தை தேவதைக்கு தியாகம் செய்வதே யாகம் –
உபதேசமாக அர்த்தங்களை வைத்து மற்றவற்றுக்கு ஊகிக்க வேன்டும் -தேவதை த்ரவ்யம் பலம் இவற்றை ஏதாவது ஒன்றைக் கோடி காட்டும் –

த்விக பேதம் உத்தர மீமாம்சை வேதாந்த விசாரம் / சித்த ஸாத்ய த்வீகங்கள்/ உபேய உபாய த்வீகங்கள் என்றவாறு /
சமன்வய அவிரோத -இரண்டும் ப்ரஹ்மம் குறித்து சித்த த்விகம்-உபாய த்விகம்–காரணந்து த்யேய சொல்ல வந்ததால் /
சாதன பல அத்தியாயங்கள் -ஸாத்ய த்விகம் – உபேய த்விகம்-பக்தி உபாசனம் ஸ்வயம் பிரயோஜனம் அதுவே உபேயமாகுமே /

பூர்வ த்ரிதகம்-அவை -மேலே – உத்தர த்ரிகம் -இதுவும் மீமாம்சை -பூர்வ உத்தர மீமாம்சைகளை போலே இதுவும் /
இங்கும் கண்ட உக்தமும் அபி பிரேரிதமாயும் இருக்கும் –த்வய நிஷ்டருக்கு வேண்டிய ஆழமான கருத்துக்கள் மேலே என்றவாறு -/

————————————–

சூரனை -308-

தான் ஹித உபதேசம் பண்ணும் போது-
தன்னையும்
சிஷ்யனையும்
பலத்தையும்
மாறாடி நினைக்கை
க்ரூர நிஷித்தம் –

அநந்தரம்-தான் ஹித உபதேசம் பண்ணும் போது–என்று துடங்கி –
உகப்பும் உபகார ஸ்ம்ருதியும் நடக்க வேணும் -என்னும் அளவாக
இவ் அதிகாரிக்கு கீழ் சொன்ன அர்த்த விசேஷங்கள் எல்லாம் -உபதேஷ்டாவான
ஆசார்ய விஷயத்தில் -உண்டாக வேணும் பிரதிபத்திய அநு வர்தன பிரகாரங்களை தர்சிப்பிக்கைக்காக –
சதாசார்யா லஷணம் –
சச் சிஷ்ய லஷணம் –
தத் உபயருடைய பரிமாற்றம் -இவை இருக்கும் படியை ப்ரசக்த அநு ப்ரசக்தமாக அருளிச் செய்கிறார் –
இவ் அதிகாரிக்கு அசக்தி விஷயமான நிஷித்தங்கள் சொன்ன பிரசங்கத்தில்
அவை எல்லாத்திலும் -க்ரூர நிஷித்தம் -பர உபதேச சமயத்தில் -விப்ரதிபத்தி – என்று அருளிச் செய்கிறார் –

அதாவது
கீழ் பிரபந்தத்தில் சொல்லப்பட்ட அதிகாரி லஷணங்கள் எல்லாத்தாலும் குறை அற்று
இருந்துள்ள தான் -உஜ்ஜீ விஷுக்களாய் வந்து -தன்னை உபசத்தி பண்ணினவர்களுக்கு
உஜ்ஜீவன ஹேதுவான மந்திர ரூப ஹிதத்தை உபதேசிக்கும் காலத்தில் –
உபதேஷ்டாவான தன்னையும் –
உபதேச பாத்ரனான சிஷ்யனையும் –
உபதேச பலத்தையும் –
விபரீத பிரதிபத்தி பண்ணுகை-பூர்வ உக்த நிஷிதங்களில் காட்டில் -க்ரூர நிஷித்தம் -என்கை-
அவ்வோ நிஷித்தங்கள் இவன் தனக்கு நாசகம் இத்தனை இறே
அவ்வளவு இன்றிக்கே –
இவன் உபதேசம் கேட்டவனுக்கும் கேடாகையாலே இத்தை
அவற்றிலும் காட்டில் க்ரூர நிஷித்தம் என்கிறது –
இருவருக்கும் ஸ்வரூப சித்தி இல்லை என்று இறே மேல் சொல்லத் தேடுகிறது –

மாறாடி நினைத்தால் க்ரூரமாகவும் நிஷித்தமாகவும் இருக்கும் –கீழே -300-நிஷித்தம் நாலு வகை -ஒன்றுக்கு ஓன்று க்ரூரமாகவும் நிஷித்தமாகவும் இருக்கும்
இவை அதை விட குரூரம் -இது தானும் கெட்டு சேர்ந்தவர்களையும் கெடுக்கும் /
ஆச்சார்யனான தான் -என்ற நினைவு கூடாதே -மாறாடுவது/ சிஷ்யனாக நினைத்தால் பிரதி சம்பந்தி ஆகும் -தன் ஆச்சார்யருக்கு சிஷ்யன்
பலம் திருத்தி பணி கொள்வது இல்லை -மங்களா சாசனம் பண்ண வைப்பதே பலம் -இஹ லோக பர லோக மோக்ஷம் கொடுப்பது என்ற நினைவு மாறாடுவது –
யுக்த தினசர்யா -பிரகரணம்-அனுசந்தான உபதேஷ்டாவான சதாசார்ய ஸ்வரூப சோதனம் பண்ணுகிறார் –
மாறாடி நினைப்பவர் அசத் ஆச்சார்யர் ஆவார் -சதாசார்யர் ஆக மாட்டார்
308-320-வரை ஆய் ஸ்வாமிகள் ஒன்பதில் ஆறாவது இது என்று அவதாரிகை / மா முனிகள் -ஆறில் நாலாவதாக அவதாரிகை /
ஸூவ பர-சிஷ்ய- ஸ்வரூப விபர்யய ஸ்மரணம் -க்ரூரமாயும் நிஷித்தமாயும் இருக்கும்
ஸூ வ ஆச்சார்ய பர தந்திரனாய் -அநந்ய பிரயோஜனாய் -கிருபாவானாய் -ஆப்த தமனாய் -சத் சம்பிரதாய க்ரமம் தப்பாத படி –
பூர்வ உத்தர ரஹஸ்ய மீமாம்சைகளை ஒன்றுமே தப்பாமல் சமன்வயப்படுத்தி –ஸச் சிஷ்ய ஸ்வரூப ஹிதமான-/அவசர பிரதீஷானாய் இருந்து
சிஷ்யன் கேட்டு கொள்ள வேன்டும் தேசிகன் -/சார மந்த்ரார்த்தைப் பேணி உபதேசிக்கும் பொழுது -சாஸ்த்ர சாரம் -வேதாந்தம் சாரம் -ரஹஸ்ய த்ரயம் -/
ரூப ஹிதம் -சரீரகதம் -வேதம் பார்க்கும் /ஸ்வரூப ஹிதம் இங்கு /ஹித உபதேசம் -மந்த்ர ரூபம் -என்றது -மோக்ஷத்தில் இச்சையுடன் வருபவன் என்பதால் –/
வேத சார உபநிஷத் சாரதர அநுவாக சார தம காயத்ரியின் முதல் ஓதுகின்ற பொருள் முடிவான சுருக்கை -என்றவாறே –
போஷித்து உபதேசிக்க வேன்டும் -மந்திரத்தையும் மந்திரத்தின் அர்த்தங்களையும் ஸூ வ ஆச்சார்ய பரதந்த்ரனாக உபதேசிக்கும் தன்னையும் –
மாறாடி நினைப்பது ஸ்வ தந்த்ரனாக நினைப்பது தானே
சம்சார நிர்வேதம் பிறந்து -வந்து உபதேசம் கேட்க்கிற சிஷ்யனையும் -உபதேச அனுகுண பலத்தையும் -உள்ளபடி நினையாமல் மாறாடி -நினைக்கை
உபய ஸ்வரூப நாசகார -தானும் கெட்டு சிஷ்யனும் கெட்டு-க்ரூரமுமாய் சான்றோர்களால் தவறு என்று சொல்லப்படும் –
கீழ் சொன்ன நிஷித்த விஷயம் போலே இல்லையே -அதி க்ரூரமாய் இருக்கும் என்றவாறு
பிரதிபத்திய அநு வர்தன பிரகாரங்களை-எண்ணத்தையும் செயலையும் -என்றவாறு /

—————————————-

சூரணை-309-

தன்னை மாறாடி நினைக்கையாவது – தன்னை ஆசார்யன் என்று நினைக்கை –
சிஷ்யனை மாறாடி நினைக்கை யாவது – தனக்கு சிஷ்யன் என்று நினைக்கை –
பலத்தை மாறாடி நினைகை யாவது –
த்ருஷ்ட பிரயோஜனத்தையும் –
சிஷ்யனுடைய உஜ்ஜீவனத்தையும் –
பகவத் கைங்கர்யத்தையும் –
ஸஹ வாசத்தையும் –
பலமாக நினைக்கை —

தன்னையும் சிஷ்யனையும் பலத்தையும் -மாறாடி நினைக்கை யாவது -எது என்னும்
ஆ காங்ஷையிலே -அவற்றை உபபாதிக்கிறார் –

அதாவது
உபதேஷ்டாவான தன்னை உள்ளபடி நினையாமல் -மாறாடி நினைக்கை யாவது –
உபதேச சமயத்தில் -தன்னுடைய ஆசார்யனையே இவனுக்கு உபதேஷ்டாவாகவும் –
தான் அங்குத்தைக்கு கரண பூதனாகவும் -பிரதி பத்தி பண்ணிக் கொண்டு உபதேசிக்க வேண்டி இருக்க –
அப்படி செய்யாதே -ஸ்வாசார்ய பரதந்த்ரனான இருக்கிற தன்னை இவனுக்கு ஆசார்யன் என்று நினைக்கை –
உபதேச பாத்ரனான சிஷ்யனை உள்ளபடி நினையாமல்-மாறாடி நினைக்கை யாவது –
தன்னோபாதி இவனையும் -தன்னுடைய ஆசார்யனுக்கு சிஷ்யனாய் பிரதிபத்தி பண்ணி உபதேசிக்க
வேண்டி இருக்க -அது செய்யாதே -இவனை தனக்கு சிஷ்யன் -என்று நினைக்கை –
உபதேச பலத்தை உள்ளபடி நினையாதே -மாறாடி நினைக்கை யாவது -பர உபதேசம் பண்ணும்
அளவில் -இவ் ஆத்மா திருந்தி -ஆளும் ஆளார் -என்கிற விஷயத்துக்கு மங்களா சாசனத்துக்கு
ஆளாக வேணும் என்னும் இதுவே பலமாக உபதேசியாதே -இவனால் வரும் அர்த்த சிஸ்ருஷ ரூபமான
த்ருஷ்ட பிரயோஜனத்தை ஆதல் –
சிஷ்யனான இவன் சம்சாராது உத் தீர்னனாய் வாழுகை யாகிற உஜ்ஜீவனத்தை ஆதல் –
திரு நந்தவனாதிகளை செய்கிற இதிலும் காட்டில் ஓர் ஆத்மாவை திருத்தினால்
எம்பெருமான் திரு உள்ளம் உகக்குகையாலே -இப்படி இருந்துள்ள பகவத் கைங்கர்யம் ஆதல் –
சம்சாரத்தில் இருக்கும் நாள் தன் தனிமை தீர கூடி வர்திக்கை யாகிற சகவாசத்தை யாதல் –
உபதேசத்துக்கு பலமாக நினைக்கை -என்றபடி –

ஸ்பஷ்டீ கரிக்கிறார் -யதாக்ரமத்தை மாறாடி-தன்னை -தன் ஆச்சார்யருக்கு சேஷம் என்று நினைக்காமல் சேஷி என்று நினைப்பது –
ஸூ ஆச்சார்ய பரதந்த்ரனான தான் -என்ற நினைவு வந்தாலே சிஷ்யனை தனது சிஷ்யனாக என்ன மாட்டானே – தனக்கு–தன்னை பற்றி சரியாக எண்ணி —
ஆச்சார்யருக்கு பரதந்த்ரனான இவனை தனது சிஷ்யனாக நினைக்கை –
இப்படி இரண்டில் ஓன்று தப்பானாலும் க்ரூரமாகுமே -ஸ்வரூப நாசம்
உபதேச பலத்தை -நம் ஆச்சார்யர் நமக்கு அந்தர்யாமியாய் உபதேசிக்க -யானாய் தன்னைத் தான் பாடி போலே -இருக்க வேண்டுமே -இதுக்கு பிரயோஜனம்
பலம் அந்தராத்மாவுக்குச் சேர வேன்டும் –திருவடி ஸ்தானீயம் தானே ஆச்சார்யர் -ஸூ வ ஆச்சார்யருக்கு -மங்களா சாசனத்துக்கு அதிகாரி யாம் என்று நினைக்க வேன்டும்
ஆக இந்த சரம நிஷ்டையில் பெருமாள் ஒரே இடத்தில் மட்டுமே நிர்ஹேதுக கடாக்ஷம் தான் / இங்கு ஆச்சார்யர் -நம் ஸமாச்ரயண ஆச்சார்யர் பர்யந்தம் வர வேன்டும்
என்பதால் தான் உத்தாரக -உபகார ஆச்சார்யர் பர்யந்தம் வரவழைக்க தானே இந்த பிரபந்தம் –
நாம் சிறிது த்ருஷ்டம் பெறலாம் என்றோ- உஜ்ஜீவிப்பவன் ஸூ ஆச்சார்யர் என்று நினையாதே தானே கார்யம் என்று நினைப்பதுவும் –
மா முனிகள் இங்கே உஜ்ஜீவனம் என்று நினைப்பதே மாறாடுதல்-என்பர் -/ஸூ நிமித்த உஜ்ஜீவனத்தை பலமாக மாறாடி நினைக்கை தோஷம் /
நம் ஆச்சார்யர் திருத்தி பகவத் கைங்கர்யம் செய்கிறார் என்று நினைக்க வேன்டும் -நாம் அங்குத்தைக்கு ஆளாக பண்ணினோம்
நமக்கு பகவத் கைங்கர்யம் என்ற நினைவு கூடாதே –
ஸஹ வாஸம் பண்ண தம் ஆச்சார்யர் வழி வகுத்தார் என்று நினைக்காமல் தன் உபதேசம் -ஸூ பிரயோஜன ஸஹ வாஸம் என்று நினைப்பதும் தோஷம் –
இந்த நாலும் வேன்டும் –ஆச்சார்யர் நினைவு -தானே தப்பு -ஸூ ப்ரயத்னத்தால் இல்லை –
அங்குத்தைக்கு கரண பூதனாகவும் –தன் ஆச்சார்யர் -பரமாச்சார்யர் திருக் கைகள் நாக்கு திரு உள்ளம் போல -பரதந்த்ரனாக-பிரதிபத்தி -பண்ண வேண்டுமே –
இப்படியே அவர் நினைவும் -அஸ்மத் ஆச்சார்யர் பர்யந்தாம் -இதனாலே இன்றும் ஜீவிக்கிறது இந்த தனியன் -அவிச்சின்ன குரு பரம்பரை —
சிஷ்யன் இவரை ஆச்சார்யராக நினைக்க வேண்டுமே -அவரை பொறுத்த படி நினைக்க கூடாதே -இரண்டையும் சமன்வயப்படுத்தி அடுத்த சூரணை யிலே அருளிச் செய்கிறார் –
ஆளும் ஆளார்–என்று ஆழ்வார் -மங்களா சாசன பரராக ஆசைப்பட்டார் -எழுந்து இருந்து திரு ஆழி திருச் சங்கு பிடிக்க ஷமர் இல்லார் –
கிஞ்சித்காரம் பண்ணாதவனுக்கு சேஷத்வம் சித்திக்காதே –
ஆச்சார்ய அதீன விருத்தி–அனைத்தும் இருக்க வேன்டும் -சாஸ்திரம் கற்று அது படி நடந்து சிஷ்யனை அதன்படி நிலை நிறுத்த வேன்டும் –
சிஷ்யன் இவற்றை செய்யும் பொழுது தன் ஆச்சார்யரை உள்ளத்திலே நினைத்து செய்தால் தான் நிலை நிற்கும் -தனியன் சொல்லியே கால ஷேபம் –
ஆச்சார்யர் வாக்காக நினைத்தே உபதேசம் -மங்களா சாசன பரராக ஆக்குவதே பெரியாழ்வார் -பிரயத்தனம் -பரம பிரயோஜனம் இதுவே –
அவாப்த ஸமஸ்த காமனுக்கு இதுக்கு மேற்பட்ட ப்ரீதி தருவது வேறே இல்லையே -மங்களா சாசன யோக்யதை ஏற்படுத்தவே உபதேசம் –
ஆறு தொழில் அந்தணன் -தானம் த்ருஷ்ட பலம் வாங்கி கொள்ளலாம் கொடுக்கலாம் உள்ளதே என்னில் -விசேஷ சாஸ்திரம் பரமை ஏகாந்தி –
சிசுரூஷா லாபம் யஜஸ் அர்த்தமாக செய்யக் கூடாதே கிருபையால் விருப்பம் இல்லாமல் செய்ய வேண்டுமே / திருமுக மலர்த்திக்கு ஒப்பிட்டால்
உஜ்ஜீவனமும் வேண்டாம் -அச்சுவை பெறினும் வேண்டேன் -அத்தை விட இதுக்கு ஏற்றம் என்றவாறு -பிரதானம் இதுவே என்பதால் -/
திவ்ய அர்ச்சா ப்ரதிஷ்டை ஆராமம் தடாகம் கைங்கர்யங்கள் தானே-இவற்றுக்கும் மேலே சேதன ஸம்ஸ்கார பல பூதனாக்குவது – –
மங்களா சாசனம் இதுக்கும் மேலே என்றவாறு -வளர்த்ததனால் பயன் பெற்றேன் என்பதுவும் அதி அல்பம் மங்களா சாசனம் பார்த்தால் என்றபடி –
ஸஹ வாஸம் பண்ண போதயந்த பரஸ்பரம் -என்றாலும் இத்தை விட அல்பம் என்றவாறு /
மத் சித்தா மத் கத பிராணா போதயந்த பரஸ்பரம் மூன்றும் திரு நெடும் தாண்டகம் மூன்று பத்துக்களும் -/

————————————————-

சூரணை -310-

நினையாது இருக்க -இந் நாலு பலமும்
சித்திக்கிறபடி என் என்னில் –
சேஷ பூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் சித்திக்கும் —
ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் –
ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் சித்திக்கும் –
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் –

இவன் இப்படி நினையாது இருக்க -இந் நாலு பலமும் சித்திக்கிறபடி என் -என்கிற
தஜ்ஜிஞாசூ ப்ரச்னத்தை அனுவதித்துக் கொண்டு -அவை சித்திக்கும் வழி  அருளிச் செய்கிறார் –

சேஷ பூதனான சிஷ்யன் நினைவாலே த்ருஷ்ட பலம் சித்திக்கும் -என்றது –
சிஷ்யனாவன் தனக்கு சேஷத்வமே ஸ்வரூபம் என்று அநு சந்தித்து இருக்கையாலே –
கிஞ்சித்காரம் இல்லாதபோது -சேஷத்வம் கூடாது என்று -தன் ஸ்வரூப லாபத்துக்காக
தன்னாலான கிஞ்சித்காரம் பண்ணிக் கொண்டு போருகையாலே -அர்த்த சிஸ்ருஷைகள்
ஆகிற த்ருஷ்ட பலம் -சித்திக்கும் -என்றபடி –
ஈஸ்வரன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் -என்றது –
எதிர் சூழல் புக்கு திரிந்து -தன் விசேஷ கடாஷங்களாலே அத்வேஷாதிகளை உண்டாக்கி-
ஆசார்ய சமாஸ்ரயணத்திலே மூட்டி -இவ் ஆச்சார்யனுடைய உபதேச அன்வயத்தை
உண்டாக்கி -அதடியாக இவனை சம்சாரத்தின் நின்று அக்கரைப் படுத்த வேண்டுகிற
எம்பெருமானுடைய க்ருபா கார்யமான நினைவாலே சிஷ்யனுடைய உஜ்ஜீவனம் சித்திக்கும் -என்றபடி –
ஆசார்யன் நினைவாலே பகவத் கைங்கர்யம் சித்திக்கும் –என்றது –
இவன் ஹிதோபதேசம் பண்ணி மங்களா சாசனத்துக்கு ஆளாம்படி சேதனரை திருத்துகிற இது –
எம்பெருமான் திரு உள்ளத்துக்கு மிகவும் உகப்பாகையாலே -இது பகவத் கைங்கர்யம் அன்றோ
என்று அநு சந்தித்து இருக்கும் தன்னுடைய ஆசார்யன் நினைவாலே -உபதேஷ்டாவான தனக்கு கைங்கர்யம் சித்திக்கும் -என்றபடி –
உபகார ஸ்ம்ருதியாலே சஹவாசம் சித்திக்கும் –என்றது –
அநாதி காலம் அஹங்கார மமகாரங்களாலே நஷ்ட ப்ராயனாய் கிடந்த தன்னை –
நிர்ஹேதுகமாக அங்கீகரித்து -அஞ்ஞாத ஞாபன முகத்தாலே -அவற்றில் ருசியை மாற்றி –
மங்களா சாசனத்துக்கு ஆளாம்படி பண்ணின மகானுபாவன் அன்றோ -என்கிற
உபகார ஸ்ம்ருதியாலே -சிஷ்யனானவன் ஷண காலமும் பிரிய ஷமன் அன்றிக்கே
கூடி நடக்கையால் அவனோடு உண்டான சஹவாசம் தன்னடையே சித்திக்கும் -என்றபடி —

அவர்ஜ நீயமான -விலக்க முடியாததனான -இந்த நான்கும் -த்ருஷ்ட பலம் ஆச்சார்யருக்கும் மூன்றும் சிஷ்யனுக்கும் -ஆத்மாத்மீயங்கள் அனைத்தும்
ஆச்சார்யர் இடம் சமர்ப்பித்து – -சரீரம் அர்த்தம் பிராணம் சத் குருவிடம் நிவேதயத் –ஆச்சார்ய சேஷம் -சத்தா நிபந்தனம் –
திருமாலே நானும் உனக்கு பழ அடியேன் போலே –பரம்பரையா உண்டே / மதீயத்வ எண்ணம் கந்தம் இல்லாமல் தெளிந்த சிஷ்யன் நினைவாலே
த்ருஷ்ட பலம் ஆச்சார்யார்க்கு கிட்டும் -கட்டாம் தரை மேல் பாட்டம் மழை போலே -அவரது அவர் வாங்கிக் கொள்வதால் இவருக்கும் குறை இல்லை -/
ப்ராப்த த்ருஷ்ட பலன் -பகவத் பாகவத ஸூ வ ஆச்சார்ய கைங்கர்ய அர்த்தமாக -இது சித்திக்கும் -என்றவாறு -/
நமக்கு எட்டுப் படாமல் -மாதவன் கண்ணுற நிற்கிலும் காண கில்லா -எதிர்மலைந்து- அசத் கல்பனான இவனை -நமக்கும் நம் உடையாருக்கும்
மங்களா சாசனம் பண்ணும்படி திருத்தி திரு மகள் கேள்வனுக்கு ஆக்கிய இம் மஹாநுபாவன் என்ற
கௌரவ புத்தி – திரு உள்ளத்தால் உகக்கவே -ஈஸ்வர ப்ரீதி தானே புண்யம் -பரமம் சாம்யம் உபைதி -மோக்ஷம் சித்திக்கும்
அடுத்து பகவத் கைங்கர்யம் -ஸூ வ ஆச்சார்யர் நினைவால் -பூர்வாச்சார்யர் அநுஸந்திக்கும் கிரமத்தில் -பால் பாய திருத்தி மங்களா சாசனத்துக்கு
பிராப்தனாக்கி பகவத் கைங்கர்யம் இவன் பண்ணப் பெறுவதே என்று அகவாயிலே நினைக்கும் -அந்த நினைவாலே இது பழுதற சித்திக்கும் —
இனி ஸஹ வாஸம் -உபகார ஸ்ம்ருதியால் -என் நன்றி செய்வேனோ என் நெஞ்சில் திகழ –செயல் நன்றாக திருத்தி -பூர்ண விஷயம் அன்றோ
நித்ய ஸேவ்யன் என்று பாத சாயையாக வர்த்திக்க ஆசைப்படுவான் –
ஆக ஆச்சார்யர் நினையாது இருக்க -பல சதுஷ்டயமும் சிஷ்ய- -ஈஸ்வர -ஸூ வ ஆச்சார்ய -பிரதிபத்தி விசேஷங்களாலே சித்திக்கையாலே -/
ஆபத்து நீங்கி சம்பத்து -சேஷித்வ அபகாரம் நீங்கி -ஸூ ஆச்சார்ய த்ரவ்ய அபகாரமும் நீங்கி -ஸூத்ர பிரயோஜன ஆ காங்ஷையும் நீங்கி /
ஸூ வ பிரபாவை ஸ்மரணம் ஆகிய குற்றமும் நீங்கி /ஸூ கர்த்ருத்வ ஆரோபண தோஷமும் நீங்கி /ஸூ பூஜா அபேக்ஷையும் ஆகிய
தோஷ விஷய பிரசங்கமும் நீங்கி -இதுக்கு தானே ஸஹ வாஸம் எதிர்பார்ப்பு –
உஜ்ஜீவனம் தன்னாலே வரும் -கைங்கர்யம் பர்யந்தம் சித்திக்கும் /இதுக்கு மாறாடினால்-சித்திக்காததும் இல்லாமல் தோஷமும் வந்து இருவர் ஸ்வரூபமும் நாசமாகும்
காணுமோ கண்ணபுரம் என்று காட்டினாள்- -பாணனார் திண்ணம் இருக்க இனி இவள் நாணுமோ–/ பகவான் நம்மை பெற கிருஷி -என்பதை –
அவன் நினைவாலே உஜ்ஜீவனம் சித்திக்கும் -நாம் ஆச்சார்யர் மூலமே அவனை பெற வேன்டும்

———————————————–

சூரணை -311-

சாஷாத் பலமும்
ஆசார்யத்வமும்
சித்திக்கிற படி என் என்னில்
தன் நினைவாலும் –
ஈஸ்வரன் நினைவாலும் –
சித்திக்கும் –

இப்படி இவன் நினையாது இருக்க -இப்பல சதுஷ்ட்யமும்-சிஷ்ய ஈஸ்வர -ஸ்வாசார்யர்கள்
நினைவாலே சித்திக்கும் என்னும் இடம் அருளிச் செய்து –
உபதேசத்துக்கு சாஷாத் பலமாய் உள்ளதும் –
உபதேஷ்டாவான ஆசார்ய பரதந்த்ரனுக்கு உபதேச பாத்ரமானவனை குறித்து உண்டாம் ஆசார்யத்வமும் –
சித்திக்கும் படியை -பிரசநோத்தர ரூபேண அருளிச் செய்கிறார் –

சாஷாத் பலமாவது-உபதேச பாத்ரமான இவன் திருந்தி மங்களா சாசனத்துக்கு ஆளாகை-
இது தன் நினைவாலே சித்திக்கை யாவது -உபதேஷ்டாவான தான் விப்ரதிபத்திகள் ஒன்றும் இன்றி
இதுவே பலமாக நினைத்து உபதேசிக்க -அவன் அப்படி திருந்தி மங்களா சாசன அதிகாரி ஆகை-
ஆசார்யத்வம் ஆவது -தன்னை ஆசார்ய பரதந்த்ரனாகவே அநு சந்தித்து இருக்கிற இவன்
தன் பக்கல் உபதேசம் கேட்கிறவனுக்கு ஆசார்யன்  ஆகை –
இது -ஈஸ்வரன் நினைவால் சித்திக்கை யாவது –
இப்படி -தன்னையும் -சிஷ்யனையும் -பலத்தையும் -விப்ப்ரபத்தி பண்ணாதே
உள்ளபடி அநு சந்தித்து உபதேசிக்கும் பரிபாகம் உடையனான இவன் -இவனுக்கு
ஆசார்யன் என்று நினைப்பிட்டு அருளுகையாலே இவனுக்கு ஆசார்யத்வம் உண்டாகை-

சிஷ்யனுக்கு சாஷாத் பலம்-ஸூ ஆச்சார்யனுக்கு -மங்களா சாசனம் தானே -/ இவருக்கு ஆச்சார்யத்வம் சித்திப்பதும் சாஷாத் பலன் தானே -/
இந்த முக்கிய இரண்டு பலங்களை பற்றி இங்கே /
இவர் சிஷ்யனுக்கு சாஷாத் பலன் கிடைக்க நினைக்கலாமா என்னில் இத்தை தான் நினைக்க வேன்டும் -பலத்தை மாறாடி தானே நினைக்கக் கூடாது என்றார் கீழே /
பலத்தை உத்தேச்யமாக இல்லாமல் மந்த புத்தி உள்ளவனும் செய்ய மாட்டானே /
ஆப்த தமர் ஆச்சார்யர் -இரக்கம் உடைய தன் நினைவாலே -இவன் நமது ஆச்சார்யருக்கு மங்களா சாசனம் -சூழ்ந்து இருந்து ஏத்த -பரம்பரையாக-சரம ப்ராப்யம் -சித்திக்கும் -/
நம்மாலும் திருத்த ஒண்ணாத இவன் திருத்த -ஈஸ்வரன் திரு உள்ளது நினைவாலே -சித்திக்கும் –
பரம ஆச்சார்யர் -ஈஸ்வரன் அனுக்கிரகத்தால் பேறு கிட்டாதோ
இவருக்கும் ஈஸ்வரன் எதுக்கு பரம ஆச்சார்யர் நினைவாலே கிட்டாதோ -என்னில் –
குரு பரம்பரையால் சிஷ்யனுக்கு நன்மை உண்டாம் என்ற நியதி வேண்டுமே -/
ஸூ ஆச்சார்யர் தன்னை ஆச்சார்யராக ஆக்கினால் தானும் சிஷ்யனுக்கு தரலாம் என்ற எண்ணம் வருமே – –
ஸாஜாதீய ஸ்வஸ் சித்த -புத்தி தவிர்க்க வேண்டுமே -பகவத் சங்கல்பம் அதீனம் ஆச்சார்யத்வம் ஸ்வதஸ் சித்தம் இல்லை என்றவாறு
ஸ்வரூப சித்திக்கு தன் ஆச்சார்யர் மங்களா சாசனம் -அவர் ப்ரீதிக்காக பரமாச்சார்யருக்கு மங்களா சாசனம் -இப்படி விநியோகம் கொள்ளும் படி ஆக்கிக் கொள்ள வேண்டுமே /
பரமாச்சார்யருக்கும் ஸூ ஆச்சார்ய பரமாச்சாரியார் ஒழிந்த -மணக்கால் நம்பி ஆளவந்தார் ஒழிய –
பெரிய நம்பி எம்பெருமானார் கூரத் தாழ்வான் –தன் ஆச்சார்யருக்கு இவர்கள் சிஷ்யர் என்ற எண்ணம் வேன்டும் –
குருவி தலையில் பனங்காய் போலே -எல்லாம் ராமானுஜர் திருவடிகளில் சேரும் -/ சிஷ்யனுக்கு சித்த ஆச்சார்ய ஸ்மரணம் -ஒழிய சாதிக்கப் பட்டவர் என்ற எண்ணம் கூடாதே
பகவத் சங்கல்பத்தால் பெற்றோம் என்ற நினைவு வேன்டும் –
நினைக்கைக்கு பிராப்தரும் -சக்தரும் -க்ருதஞ்ஞருமாய் -நம்மால் திருத்த முடியாத -என்ற செய் நன்றி -உண்டே –
ஆச்சார்ய ஈஸ்வர நினைவாலே சிஷ்ய ஆச்சார்ய சாஷாத் பலன்கள் சித்திக்கும் என்றவாறு
யதா பிரதிபத்தி ரூபம் பொருந்தி இருக்கும் –விப்ரதிபத்தி மாறாடி இருப்பது / நினைப்பிடுகை -சங்கல்பம் / யதா ப்ர திபத்தி யுக்த -உபதேசிக்கும் ஆச்சார்யர் –
மந்த்ர ரூப ஹித உபதேசிக்கும் -இவரே ஆச்சார்யர் -/ வியாச பகவான் -முக்கிய விருத்தி சர்வேஸ்வரன் இடம் தானே மற்றவை உபசார வழக்கு /
இதே போலே ஆச்சார்யர் – மற்றவர்கள் இடம் உபசார வழக்கு /
பூர்த்தி இவர் இடம் மட்டுமே -/ பரம்பரையா வந்த ஆச்சார்ய பரம்பரை -பிரகாசம் -பதவி -பகவத் சங்கல்பத்தாலே பிரகாசப்படும் /
உடையவர் இடம் விட்டு -74-சிம்ஹாசனாதிபதிகள் மூலம் -ஸத்யஸங்கல்பன் / ஜீவாத்மாவை அழிக்க சக்தனாக இருந்தும் ஸத்யஸங்கல்பன் என்பதால் நித்யம் /
சுலபமாக நாம் அடைய வைத்த வழி தானே இது -சம்பிரதாய அடிப்படை -பகவத் சங்கல்பம் அடியாகவே -ஆச்சார்ய பரம்பரை என்றவாறு
பரதன் ஜ்யேஷ்ட ராம பக்தன் -தம்பியான படியால் இல்லை பரதன் ஆனபடியால் -அதே போலே உபதேசத்தால் மறைந்து உள்ள ஆச்சார்யத்வம் சங்கல்பத்தாலே பிரகாசிக்கும்

————————————–

சூரணை -312-

இப்படி ஒழிய உபதேசிக்கில்
இருவருக்கும்
ஸ்வரூப சித்தி இல்லை –

இங்கன் அன்றி க்ரூர நிஷிதமாக அடியில் சொன்ன விப்ரதிபத்தியாலே உபதேசிக்கில்
உபய ஸ்வரூபமும் சித்தியாது -என்கிறார் –

இருவருக்கும் ஸ்வரூப சித்தி இல்லை -என்றது –
கீழ் சொன்னபடியே யதா பிரதிபத்தியோடே உபதேசிக்கில் ஒழிய -ஈஸ்வரன் இவனை
ஆச்சார்யனாக நினைப்பிடாமையாலே -உபதேஷ்டாவுக்கு ஆசார்யத்வம் ஆகிற ஸ்வரூப
சித்தி இல்லை-அப்படி யதா பிரதிபத்தியாலே இவன் உபதேசியாத அளவில் -உபதேச
சுத்தி இல்லாமையாலே அவனுக்கு சிஷ்யத்வம் ஆகிற ஸ்வரூப சித்தி இல்லை -என்கை

இந்த நினைவு மாறாடினால் -இருவர் ஸ்வரூபமும் -நாசமாகும் -ஸூ ஆச்சார்ய பரதந்த்ரனான இவருக்கும் சிஷ்யருக்கும் என்றவாறு

—————————————

சூரணை -313-

ஆசார்யனுக்கு சிஷ்யன் பக்கல்
கிருபையும்
ஸ்வாசார்யன்  பக்கல்
பாரதந்த்ர்யமும் வேணும் –

ஆசார்யனுக்கு இரண்டு குணம் அவஸ்யம் வேணும் என்கிறார் –

அதாவது
உபதேஷ்டாவான ஆசார்யனுக்கு உஜ்ஜீவிஷூவாய் வந்து உபசன்னான சிஷ்யன் பக்கல்
ஐயோ என்று இரங்கி -அவன் உஜ்ஜீவிகைக்கு உறுப்பான உபதேசாதிகளை பண்ணுகைக்கு ஈடான கிருபையும் –
தன்னைக் கர்த்தாவாக நினையாதே -அத்தலைக்கு கரண பூதனாக
அநு சந்திக்கைக்கு ஈடான ஸ்வாசார்ய விஷயத்தில் பாரதந்த்ர்யமும் அவஸ்யம் உண்டாக வேணும் என்கை-

நியதமாக வேண்டுவது -தத்துவார்த்த உபதேஷ்டா -தத் சாரார்த்த ஸ்ரோதாவாய் வந்து ஆஸ்ரயித்த சிஷ்யர் பக்கல் -சரம அர்த்தம் அறிந்து உஜ்ஜீவிக்க கிருபையும் –
இரக்கம் இருந்தாலே போதும் -/ உரிமை உடையவர் அருளியது தானே / சிஷ்ய ஆச்சார்ய சம்பந்தம் ஈஸ்வர சங்கல்ப அதீனம் தானே -/
தனது ஆச்சார்யர் தனக்கு நியாந்தா -பாரதந்தர்யம் -அவருக்கு கருவியாக உபதேசம் செய்யும் எண்ணமும் வேன்டும்

—————————————-

சூரணை -314-

கிருபையாலே
சிஷ்யன் ஸ்வரூபம் சித்திக்கும் –
பாரதந்த்ர்யத்தாலே
தன் ஸ்வரூபம் சித்திக்கும் –

இவற்றால் பலிக்கும் அவற்றை அருளிச் செய்கிறார் –

அதாவது –
அப்படி அவன் ஸ்வரூபம் திருந்தும் அளவும் உபதேசாதிகளை பண்ணிப் போரும்
இவன் கிருபையாலே -நாளுக்கு நாள் ஸ்வரூபம் நிர்மலம் ஆகையாலே சிஷ்யனுடைய ஸ்வரூபம் சித்திக்கும் –
ஸ்வ கர்த்ருத்வ புத்தி அற்று -ஸ்வாசார்ய கரண பூதனாக தன்னை அநு சந்திக்கைக்கும் –
மற்றும் சர்வ கார்யத்திலும் -தத் அதீனாய் வர்திக்கைக்கும் உடலான பாரதந்த்ர்யத்தாலே
ஆசார்யனான தன்னுடைய ஸ்வரூபம் சித்திக்கும் -என்கை –

ஆக
கீழ் செய்ததாய் ஆயிற்று ஹித உபதேச சமயத்தில்
ஸ்வ விஷயத்திலும் –
சிஷ்ய விஷயத்திலும் –
பல விஷயத்திலும்-
உண்டாம் விப்ரதிபத்திகள் தான் இன்னது–308-என்றும்
இவன் நினையாது இருக்க -த்ருஷ்ட பிரயோஜனாதிகள் வந்து சித்திக்கும் வழியும் -310-
சாஷாத் பல ஆசார்யத்வங்கள் சித்திக்கும் வழியும் -311-
இப்படி அன்றியே விப்ரபுத்த்யா உபதேசிக்கில் உபய ஸ்வரூபமும் சித்தியாமையும் -312-
ஆசார்யனான அவனுக்கு  அவஸ்ய அபேஷித குண த்வயமும் -313-
தத் உபய பலமும் -314-
சொல்லிற்று ஆயிற்று –

தயா நீயானான -சிஷ்யன் -தயாளு ஆச்சார்யர் இத்தை பெற -தகுதி உடையவன் -ஸூ அசாதாரண ரூபம் -சரம ஞானமும் அனுஷ்டானமும் –
பலம் கிடைக்க இரக்கத்தால் சித்திக்கும்
தனது ஆச்சார்யர் அதீனம் -உபதேச கர்த்தா அவரே தான் கருவி தானே / ஈஸ்வரன் ஆசைப்பட்டு மடியிலே வைத்து கொள்ளலாமே அதே போலே
இவர் ஆச்சார்யர் என்ற நினைவால் சித்திக்கும் / ஸூ ஆச்சார்ய நித்ய பாரதந்தர்யம் இவருக்கு உண்டே -உபதேச கர்த்ருத்வம் தட்டாமல் ஆச்சார்யத்வம் சித்திக்கும் /
உபதேச ப்ரேரத்வம் -சிஷ்யர் தூண்ட ஆச்சார்யர் உபதேசம்-நம்மாழ்வார் மைத்ரேயர் தானே அவர் அவா இது தூண்ட த் தூண்டத் தானே திருவாய் மொழி /
இரக்கம் தானே பிரேரிதம்- தூண்டும் -உபதேசம் பண்ண -ஸ் வ தந்த்ர கர்த்தா என்ற தூஷணம் போக்கிக் கொள்ள
ஆச்சார்ய பரதந்தர்யர் என்ற எண்ணத்தால் போக்கி கொள்ளலாமே /

——————————————

சூரணை -315-

நேரே ஆசார்யன் எனபது –
சம்சார நிவர்த்தகமான
பெரிய திருமந்த்ரத்தை
உபதேசித்தவனை –

இப்படி உபதேச  அநு குண நியமங்களை தர்சிப்பித்த அநந்தரம் -உபதேசிக்கும் அளவில் –
இந்த மந்த்ரத்தை உபதேசித்தவனையே -சாஷாத் ஆசார்யன் எனபது -என்கிறார் –

நேரே ஆசார்யன் எனபது –என்கிறது -ஆசார்யத்வம் குறைவன்றி இருக்க செய்தே –
ப்ரதீதி மாத்திரம் கொண்டு செல்லும் அளவு அன்றிக்கே -சாஷாத் ஆசார்யன் என்று சொல்லுவது -என்றபடி –
சம்சார நிவர்த்தகமான பெரிய திருமந்த்ரத்தை உபதேசித்தவனை -என்றது
ஐஹ லவ்கிகம் ஐஸ்வர்யம் -இத்யாதிப் படியே அகில பல பிரதமாய் இருந்ததே ஆகிலும் –
அந்ய பலங்களில் தாத்பர்யம் இன்றிக்கே -மோஷ பலத்தில் நோக்காய் இருக்கையாலே –
சர்வ வேதாந்த சாரார்த்த சம்சார ஆர்ணவ தாரக கதிர் அஷ்டாஷ ரோந ரூணாம் அபுநர்ப்பவ காங்ஷீணாம்-என்கிறபடியே
சம்சார நிவர்தகமாய் -அத ஏவ – மந்த்ராணாம் பரமோ மந்த்ரோ குஹ்யானாம் குஹ்ய முத்தமம்
பவித்ரஞ்ச பவித்ரானாம் மூல மந்த்ரஸ் சநாதன -என்கிறபடியே
சர்வ மந்த்ராந்தர உத்க்ருஷ்டமான பெருமை உடைத்தான திரு மந்த்ரத்தை –
சம்சார நிவர்தகத்வ பிரதி பத்தி யோடே கூட உபதேசித்தவனை-என்கை –
த்வயம் பூர்வ உத்தர வாக்யங்களாலே -இதில் மத்யம சரம பத விவரணமாய் -சரம ஸ்லோகம்
பூர்வ உத்தர அர்த்தங்களாலே அதில் பூர்வோத்தர வாக்ய விவரணமாய்
இருக்கையாலே -மற்றைய ரஹச்ய த்வயமும் -பிரதம ரஹச்யமான இத்தோடே அன்வயமாய்
இருக்கையாலே -இத்தை சொல்லவே – அவற்றினுடைய  உபதேசமும் தன்னடையே
சொல்லிற்றாம் என்று திரு உள்ளம் பற்றி -பெரியதிரு மந்த்ரத்தை உபதேசித்தவனை – என்கிறார் –
ஆகையால் இது ரஹச்ய த்ரயத்துக்கும் உப லஷணம் –

சம்சார வர்த்தகம் -ராம கோபால மந்த்ரங்கள் குழந்தை பேற்றுக்கும் ஐஸ்வர்யத்துக்கும் / ஏவம் குண விசிஷ்டன் கிருபை பாரா தந்தர்யம் –
விசிஷ்ட பரிஹிரீத திருமந்திரம் /சடக்கென -ஸக்ருத் உச்சாரண மாத்திரம் -உபய ரஹஸ்யமும் தன் பக்கல் அடங்கும் படியான த்வயம் –
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதமான குரு பரம்பரையா பூர்வக த்வயம் -தத் ஏக நிஷ்டராய் -நினைவில் மாறாட்டம் இல்லாமல் உபதேசிப்பவன் –
சர்வ சங்க்ரஹமாய் -எம்பெருமானே சிஷ்யனுமாய் -உபதேசித்த பெருமை -சம்சார நிவர்த்தக சர்வ மந்த்ரார்த்த உத்க்ருஷ்டமான -திரு மந்த்ரம் -என்றும் அருளிச் செய்வார்
சரம ஸ்லோகம் விதிக்கும்-த்வயம் அனுஷ்டானம் -சரணாகதியைக் காட்டிய -சரம ஸ்லோகமும் -என்றுமாம் -ஆக ரகஸ்ய த்ரயமும் அனுசந்தேயாம்

———————————————————-

சூரணை -316-

சம்சார வர்தகங்களுமாய்
ஷூத்ரங்களுமான
பகவந் மந்த்ரங்களை
உபதேசித்தவர்களுக்கு
ஆசார்யத்வ பூர்த்தி இல்லை –

பகவன் மந்த்ரங்களில் ஏதேனும் ஒன்றை உபதேசித்தவர்களுக்கும்
ஆசார்யத்வம் இல்லையோ என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
சம்சாரத்தை நிவர்த்திப்பியாத மாத்திரம் அன்றிக்கே -வளர்க்குமவையாய்-
பெருமை அன்றிக்கே ஷூத்ரங்களுமாய் இருந்துள்ள -தத் இதர பகவன் மந்த்ரங்களை
உபதேசித்தவர்களுக்கு -உபதேஷ்ட்ருத்வ பிரயுக்தமான ஆசார்யத்வ பிரதிமாத்ரம் ஒழிய தத் பூர்த்தி இல்லை -என்கை –

ஒழிந்த தன் மந்த்ர உபதேஷ்டாக்களுக்கும்-பூர்த்தியும் இல்லை -/ ருசி பேதத்தால் -ஷூத்ரம்/ கைங்கர்யமாக ராம கோபால மந்த்ரம் சொன்னால்
அவை ஷூத்ரம் ஆகாதே -பலம் கருத்து சொன்னால் தானே ஷூத்ரமாகும்-/ மஹா மந்திரத்துக்கு எதிர்த்தட்டாக -அல்ப அஸ்திரம் /
வியாபக மந்த்ரங்கள் மூன்றும் -மற்றவை அவ்யாபக மந்த்ரங்கள் / ஓம் கேசவயா நம -ஓம் நமோ நாராயணாயா –
நம முன்பும் திரு நாமம் பின்பும் இவற்றில் மட்டும் தானே -சம்சார நிவர்த்தகம் இவற்றுக்கு என்பதால் /அசிஷ்டர்களும் சொல்லுவார்கள் மற்றவற்றை -/
அபூர்ண அர்த்தத்வம் இவற்றுக்கு / வியாப்தி –
யார் நாராயணன் –யாரை -நாரங்களை -வியாபகம் வியாபகம் வியாப்தி பூர்த்தி பலம் ஐந்தையும் -பூர்ணமாக உபாயம் ப்ராப்யமாக -இதில் மட்டுமே –
அஷ்ட ஸ்லோகி -சொல்லுமே / மேல் எழுந்த ஆச்சார்யத்வம் மட்டும் ப்ரதீதி- உபசாரமாக மற்றவர்களுக்கு

——————————-

சூரணை -317-

பகவந் மந்த்ரங்களை
ஷூத்ரங்கள் என்கிறது
பலத்வாரா –

ஷூத்ரங்கள் எனபது -ஷூத்ர தேவதா மந்த்ரங்களை அன்றோ –
பகவந் மந்த்ரங்களை இப்படிச் சொல்லுகிறது என் -என்ன
அருளிச் செய்கிறார் –

அதாவது –
பரதேவதையான பகவத் விஷயம் ஆகையாலே வந்த பெருமையை உடைய மந்த்ரங்களை
ஷூத்ரங்கள் என்று சொல்லுகிறது -அர்த்த காம புத்திர வித்யாதி சூத்திர
பலன்களை கொடுக்கிற வழியாலே –

———————————————

சூரணை-318-

சம்சார வர்த்தகங்கள்
என்கிறதும்
அத்தாலே –

சம்சார வர்த்தகங்கள் என்கிறது என் என்ன -அருளிச் செய்கிறார் –

அத்தாலே -என்றது கீழ் சொன்ன பந்தகமான சூத்திர பலன்களை
கொடுக்கையாலே -என்கை –

ஆத்ம பிரதிகூல ரூப துக்கம் -ஆவஹமான அநாதிகால அவித்யா வஸ்யனாய் -மகா பல பிரவர்த்தகம் –
சம்சாரிக துக்க பிராய பலன் -சுகம் போலே தோன்றும் –கிடைத்தாலே சம்சாரம் வளரும்

——————————————

சூரணை -319-

இது தான் ஒவ்பாதிகம் –

ஆனால் இவற்றுக்கு இது ஸ்வாபாவிகமோ என்ன -அருளிச் செய்கிறார் –

இது தான் -என்று சூத்திர பல பிரதத்வத்தை பராமர்சிக்கிறது –
ஒவ்பாதிகம் -என்றது -உபாதி பிரயுக்தமாய் வந்தது இத்தனை -என்கை –

இயற்கையிலே இப்படி இல்லை -காரணத்தால் -கொடுக்கும் – சம்சார வர்த்தகம் -உபாதி ப்ரயுக்தமாய் வந்தது-

—————————————–

சூரணை -320-

சேதனனுடைய
ருசியாலே
வருகையாலே –

அத்தை உபபாதிக்கிறார் –

அதாவது –
பகவன் மந்த்ரங்கள் ஆகையால் -மோஷ ப்ரதத்வசக்தியும் உண்டாய் இருக்க செய்தே -இவற்றினுடைய சூத்திர பல ப்ரதத்வம்
பிரகிருதி வச்யனான சேதனனுடைய சூத்திர பல ருசியாலே வருகையாலே -என்கை –
ஐஸ்வர்ய காமர்க்கு கோபால மந்த்ராதிகளும் –
புத்திர காமர்க்கு ராம மந்த்ராதிகளும் –
வித்யா காமர்க்கு ஹயக்ரீவ மந்த்ராதிகளும் –
விஜய காமர்க்கு -சுதர்சன நார சிம்ஹ மந்த்ராதிகளுமாய் (ஸூ தர்சன மந்த்ரமும் நாரா ஸிம்ஹ மந்த்ரமும் சுதர்சன நாரா ஸிம்ஹ மந்திரங்களும் என்றுமாம் -)
இப்படி நியமேன சூத்திர பலன்களையே கொடுத்துப் போருகிற இது -சேதனனுடைய ருசி அநு குணமாக
இவ்வோ மந்த்ரங்களில் இவ்வோ பலன்களைக் கொடுக்கக் கடவது என்று ஈஸ்வரன் நியமேன கல்பித்து வைக்க இறே –
அது தான் சேதனருடைய ருசி அநு குணமாக கல்பித்தது
ஆகையாலே அவற்றுக்கு அவை ஸ்வாபாவிகம் அன்று -ஒவ்பாதிகம் என்னலாம் இறே –

மந்த்ர ஜபம் பண்ணும் -பிரகிருதி வஸ்யன்-நிபந்தனமாக ஹீந ருசியாலே வரும் –
உபதேசம் -செய்யும் யோக்யதை -பகவத் சங்கல்பத்தால் பிரகாசப்படும் -ஆச்சார்யத்வம் -பண்பு –
ஜாதி – குணம் -கிரியை -போதக சக்தி சப்தத்துக்கு -சாப்தம் ஆர்த்தம்-இரண்டும் உண்டே / ஆச்சார்யத்வம் இருப்பது பகவான் இடம் தான் -ஆச்சார்யர் இடம் இல்லை –
கீதாச்சார்யன் -/ திருவாய் மொழியும் -அவன் இடம் தான் -நிஷ்க்ருஷ்ட பகவத் ஸ்வரூப தர்மம் / விசிஷ்ட பகவத் ஸ்வரூபம் இரண்டும் கொண்டு இவற்றை /
விலக்ஷண ஆத்ம விசிஷ்ட பகவத் ஸ்வரூப தர்மம் -ஆச்சார்யத்வம் -பரம்பரையா உபதேசிக்கும் இடத்தில் -/
பாரம்பர்ய உபதேசத்திலும் நிஷ்க்ருஷ்ட வேஷம் கூடாதோ என்னில் -விசிஷ்ட ப்ரஹ்மம் எதற்கு -குரு பரம்பரைக்கு -ஸ்வரூப ஐக்கிய தோஷம் பிரசங்கிக்கும் —
தத் அதிஷ்டித குரு பரம்பரை ஜீவாத்மா ஸ்வரூப தர்மம் என்று சொன்னால் – -ஆத்ம தர்மம் -ஆத்ம புத்தி தோஷம் பிரசங்கிக்கும் -தேவு மற்று அறியேன் -பொருந்தாதே –
அன்றிக்கே இருவருக்கும் உண்டே -என்று சொல்வோம் ஆகில் -ஆச்சார்யத்வம் பொதுவாக சொன்னால் –பரமாத்மா தர்மம் ஜீவாத்மா தர்மம் இரண்டும் சொல்வது பொருந்தாதே –
ஜாதியே வேறே -ஒரு ஆச்சார்யத்வத்தில் பர்யவசாயம் ஆக முடியாதே ஸ்வாமி தாச -ஈசன் ஈஸித்வயம் -ஆத்ம சரீரம் -பார்த்தா பார்யா -அன்றோ -/
ஏக பத அர்த்த த்வதீய வ்யாவ்ருத்தி தோஷம் வருமே -ஆக பகவத் குணம் என்றே கொள்ள வேணும் –
லோக அநல வத்– உருகின இரும்பில் இரும்பும் நெருப்பும் கலந்து -இரும்பை அதிஷ்டானம் செய்த நெருப்பு -தானே
தன்மை இரும்பினதா நெருப்பினதா – நெருப்பின் தான் -அதிஷ்டானம் பண்ணப்பட்ட இரும்பு ஆச்சார்யன் -அதிஷ்டாதா பகவான் -என்றால் பொருந்தும் அன்றோ -/
தேவு மற்று அறியேன் – -நாராயண வசதி நம்மாழ்வார் -வடதள சடகோப வாக் வபுஸில் -விலக்ஷண -ஆத்ம உடன் விசிஷ்டமாக இருந்து திருவாய் மொழி அருளினான் –
குரு ரேவ பரம் பிரம -ஆச்சார்யனே ஈஸ்வரன் என்னத் தட்டு இல்லை பரா கதி சாஷாத் அவரே -சாமா நாதி கரண்யம்-இவர் தான் அவர் என்னலாம் -/
ஆச்சர்யரை மனுஷ்யர் என்னும் அந்யதா ஞானம் போகும் /ஸ்வரூப ஐக்கியம் குரு பரம்பரை வீண் -பிரமமும் போகும் /
ஆச்சார்யர் இடத்தில் பகவத் பிரதிபத்தியை பண்ணுவான் சிஷ்யன் –
ஸூ விஷயத்தில் -தன்னுடைய ஆச்சார்யர் இடம் பரதந்த்ரர் என்று தன்னை எண்ணுவான்
மாறாடினால் குறை -/ பிரதிபத்தி த்வயத்தால் –ஒரே ஆசார்யனை சிஷ்யன் சேஷி என்றும் தான் சேஷன் என்றும் நினைப்பதால் த்வயம் பிரதிபத்தி உண்டாகும்
வியாவருத்த ஸ்வரூப விசேஷம் -விபரீத பிரதிபத்தி த்வயத்தாலே ஒன்றிலே ஒதுக்குகை -அவரும் சேஷி என்று நினைத்தால் -தோஷம் உண்டாகும் /
அப்பா பிள்ளைக்கு -இருந்தாலும் தன் அப்பாவுக்கு பிள்ளையே -/ இரண்டும் உண்டாகும் –
ஒன்றிலே ஒதுக்கினால் விபரீத பிரதிபத்தி உண்டாகும் /பகவானே இவர் என்று நினைத்தால் -அதிஷ்டானம் என்று நினைக்காமல் குரு பரம்பரை ஐக்கியம் உண்டாகும்
ஸூ -பர பிரதி பத்தியாலும் -ஸூ பர விபாகம் இல்லாமல் இருப்பது சர்வேஸ்வரன் ஒருவன் இடம் தானே –
சேஷி -ஏக பிரதிபத்தி -/ மா முனிகள் இடம் மட்டும் சேஷன் -ஈடு சாதித்த பின்பு / ஸூ பர பிரதிபத்தி த்வயம் மற்ற எங்கும் –
ஏக பிரதிபத்தி நடப்பது ஸ்வ தந்த்ர சேஷிக்கு மட்டுமே -மற்றவர் பரதந்த்ர சேஷி -ஸூ பிரதிபத்தி பரதந்த்ரர் பர சிஷ்யர் நினைவால் சேஷி தானே
சிஷிதனான இவன் -அஹம் என்ன மாட்டானே -ஞானம் வந்ததே -அப்படி அன்றாகில்
சேஷி என்று சொன்னால் பழைய தேவோஹம் என்பதே தலைக் கட்டுமே /
சரீர ப்ரயுக்தம் போலே ஆகுமே -தேஹாத்ம அபிமானம் அங்கு இங்கு உயர் நிலை அபிமானம் –
இவை க்கு தக்க வீக்கம் -சேஷனாக இருக்க சேஷி என்ற நினைவு –
ஆச்சார்யத்வம் ஸூ வ ஆச்சார்யத்வம் பரமாச்சார்யத்வம் தவிதம் —
பரமாச்சார்யரான ஆளவந்தார் என்பர் எப்பொழுதும் ராமானுஜரை நிலையில் வைத்து அருளிச் செய்வார்
அதில் ஸூ ஆச்சார்யர் -ஸ் வ தந்த்ர ஆச்சார்யர் என்றும் பரதந்த்ர ஸூ வ ஆச்சார்யர் என்றும் இரண்டு –
குரு பரம்பரை ஒத்து கொள்ளாமலுமொத்துக் கொண்டும்
பரமாச்சார்யரும் இப்படி இரண்டு –
ஸ் வ தந்த்ர ஆச்சார்யருக்கு சத் பாவ யோக்யதையே இல்லையே –
பர தந்த்ர ஸ்வாச்சார்யருக்கு -பரதந்த்ர பரமாச்சார்யருக்கும் தத் உபயமும் உள்ளது –

—————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: