ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -249-267-தத் அதிகாரி க்ருத்யம் /பெறுவான் முறை /-பிரபன்ன தினசரியா- ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் / ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ .வே . வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை /-மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————-

சூரணை -249-

இவர்கள் நம்முடைய கோடியிலே
என்னும்படி ஆயிற்று ஆழ்வார்கள் நிலை –

இன்னும் இவ் அர்த்தத்துக்கு உதாரணமாக -கீழ் சொன்னவர்கள் காட்டில் வ்யாவிருத்தரான
ஆழ்வார்களுடைய மங்களா சாசன நிஷ்டையை அருளிச் செய்கிறார் –

இவர்கள்-என்று சக்கரவர்த்தி முதலாக -கீழ் சொன்ன அதிகாரிகள் அடைய பராமர்சிக்கிறது —
ஆனால் பிராட்டியையும் ஒக்க சொல்லலாமா என்னில் -ஆழ்வார்களில் தலைவரான
நம் ஆழ்வாரைக் காட்டிலும் பெரிய ஆழ்வாருக்கு ஏற்றம் சொல்லுகிற வோபாதி –
போக பரவசையான அவளைக் காட்டிலும் மங்களா சாசனத்திலூற்றத்தாலே
ஆழ்வார்களுக்கு ஏற்றம் சொல்லக் குறை இல்லை –
ஆனாலும் -நம்முடைய கோடியிலே -என்னலாமோ -என்னில் -இவ் அர்த்த நிஷ்டையில் இவர்களுடைய
ஆதிக்யத்தை தர்சிப்பிகைக்காக சொன்னது ஆகையாலே விரோதம் இல்லை –
ஆகையால் இவ் விஷய வை லக்ஷண்ய கலுஷ சித்தராய்-இதுக்கு என் வருகிறதோ என்று பரிந்து
நோக்கினவர்களாகக் கீழ் சொல்லப் பட்டவர்கள் எல்லாரும் என்ற படி –
நம்முடைய கோடியிலே என்னும் படி ஆயிற்று -என்றது -இவ் விஷயத்திலே அன்வயித்து இருக்கச் செய்தேயும் –
பிரேம பாவத்தாலே மங்களா சாசனத்திலூற்றம் அற்று இருக்கும் நம் போல்வர் மாத்ரம் என்று
சொல்லாம் படி ஆயிற்று என்றபடி –
ஆழ்வார்கள் நிலை -என்றது மயர்வற மதிநலம் பெற்றவர்கள் ஆகையாலே
நிரதிசய பிரேம யுக்தரான ஆழ்வார்களுடைய மங்களா சாசன நிஷ்டை என்ற படி –

கண்ட காட்சியில் ஸ்நேஹம் இவர்களது -புதியது உண்டு அறியாமல் உள்ளவர்கள் – -நமக்கு நன்மை தேடும் தண்ணியர் -நம் போல் உள்ளவர் என்று தோற்றும்
புரையறக் கலந்த ஆழ்வார்கள் -உத்யோதக கல்பர் -குளப்படி-இவர்கள் ஆழ்வார்களை பார்த்தால் –
பிராட்டி ஜனகராஜர் பிள்ளை உறங்கா வல்லி தாசர் ஒழிய இவர்கள் என்றபடி என்பர் ஆய் ஸ்வாமிகள் –
மதி நலம் பக்தி ரூபா பன்ன ஞானம்- ப்ரேம யுக்தர் -அத்வேஷ ஆபீ முக்கியம் சம்பந்த ஞானம் நமக்கும் உண்டே சேஷம் என்று அறிவோம்-
இதனாலே நாமும் இதிலே அன்வயம் என்கிறார்

—————————————————–

சூரணை-250-

ஆழ்வார்கள் எல்லோரையும்
போல் அல்லர் பெரிய ஆழ்வார்-

இவ் ஆழ்வார்கள் தாங்கள் மங்களா சாசனத்தில் வந்தால்
தங்களில் ஒப்பார்களோ என்ன -அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது
மங்களா சாசனத்தில் மற்றுள்ள ஆழ்வார்களுக்கும் பெரிய ஆழ்வாருக்கும் நெடுவாசி உண்டு என்கை-

ஏக சப்தத்தால் ஆழ்வார்கள் -பரஸ்பர சாம்யம் இருப்பதால் கீழே சொல்லி / -தாரதம்யம் இல்லா ஞானம் பக்தி வைராக்யம் /
பர்வத பரம அணு வாசி உண்டே மங்களா சாசனத்தில் வந்தால் /அனைவரும் கூடினாலும் இவருக்கு ஒரு புடையாக மாட்டார்கள்

—————————————–

சூரணை -251-

அவர்களுக்கு இது காதா சித்தம் –
இவர்க்கு இது நித்யம் –

அவர்களை பற்ற இவர்க்கு இதில் ஏற்றம் எது என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
மயர்வற மதிநலம் அருளப் பெற்றமை  ஒத்து இருக்கச் செய்தே -வைர உருக்காய்- ஆண்களையும் பெண்ணுடை உடுத்தும் –
பாகவத விக்ரக வைலக்ஷண்யத்தை அநு சந்தித்தால் -உத்தோரத்தர அனுபவ காமராராக இருக்கும் -மற்ற ஆழ்வார்களுக்கு
பர சம்ருத்தியே பிரயோஜநமான இந்த மங்களா சாசனம் -எப்போதும் ஒக்க இன்றிகே -எங்கேனும் ஒரு தசையிலே தேடித் பிடிக்க
வேண்டும்படியாய் இருக்கும் –
தத் வை லக்ஷண்யத்தை தர்சன அநந்தரம்-தத் அனுபவ பரராகை அன்றிகே -அஸ்தானே பய சங்கை பண்ணி -திருப் பல்லாண்டு பாடும் –
பிரேம ஸ்வாபரான இவருக்கு இந்த மங்களா சாசனம் சர்வ கால வர்த்தியாய் செல்லும் என்கை —

கதறுவது எப்போதோ கூடுவோம் இதுவே இவர்களுக்கு நித்யம் /மங்களா சாசனத்தில் மற்று உள்ள ஆழ்வார்களில் -தங்கள் ஆர்வத்து அளவு தான் அன்றி –
பொங்கும் பரிவால் -பெரியாழ்வார் அன்றோ –/இலஷ்மணன் பரதன் சத்ருக்கனன் மூவரையும் மற்ற ஆழ்வார்கள் -பெரியாழ்வார் -ஆண்டாள் -/
பெருமாளை அன்று மற்று ஓன்று அறியா பரதனை அன்றி மற்று ஓன்று அறியா நிஷ்டை யாலே /
நித்யம் மங்களா சாசனம் இன்றும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் கைத்தல சேவை யுடன் அரையர் -நித்ய அனுஷ்டானம் /
ஆற்றாமையால் வரும் ஸூவ ஸம்ருத்தி அன்வய சம்பாவனை அவர்களுக்கு உண்டே -உயர்நிலை சுயநிலம் –
பகவானுக்கு கைங்கர்யம் அடியேனுக்கு அஹங்காரத்தால் இல்லை -ஆற்றாமையால் அன்றோ -/பர ஸம்ருத்தி ஏக வேஷம் மங்களா சாசனம் அன்றோ /
அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு -பாட அடியேன் வேண்டுமே -சாமர்த்தியமான -திரு மாங்கல்யம் உடன் நீ நூறு வருஷம் இருக்க வேன்டும் போலே /
அவர்களுக்கு தேடித் பிடிக்கும் படி மங்களா சாசனம் – இவருக்கு பர ஸம்ருத்தியே ஏக பிரயோஜனம் -ஸூ ஸம்ருத்தி அன்வய கந்தம் இல்லாத /
ஞான திசையிலும் ப்ரேம திசையிலும் இவருக்கு -வேண்டிய வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்த ஞான தசையிலும் மங்களா சாசனம் உண்டே இவருக்கு /
அடியோம் –பல்லாண்டு –சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு -மூன்றையும் காட்டி
அடியோம் பல்லாண்டு இந்த விபூதியில் -கலங்கி ப்ரேம தசையில்
பல்லாண்டு சூழ்ந்து இருந்து ஏத்துவார் பல்லாண்டு அங்கே அதீத ஞான தசை –
மயர்வற மதி நலம் உடையவர் என்னாமல் பெற்றவர் -நிர்ஹேதுகமாக பகவானால் -அக்லிஷ்ட்ட ஞானம் –சிரமம் இல்லாமல் பெற்ற பகவத் பக்தி ஞானம் வைராக்யம் அன்றோ
பெண்மையை -அவாவும் தோளினாய்–ஸம்ஸலேஷிக்க ஆசைப்படுவார்கள் அவர்கள் -இவரோ அஸ்தானே பய சங்கை -/
போற்றி காதாசித்தம் அவர்களுக்கு -பய நிவர்த்தகங்களுக்கு பயப்படுவார் இவர் -ஞான திசையிலும் ப்ரேம ஸ்வ பாவம் இவருக்கு

————————————————–

சூரணை -252-

அவர்களுடைய ஆழம்கால் தானே இவருக்கு மேடாய் இருக்கும் –

அதுக்கு ஹேது ஏன் என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
அனுபவபரரான அவர்களை -த்ருஷ்டி சித்த அபகாரம் பண்ணி -ஆழம்கால் படுத்தும்-அவனுடைய சௌந்தர்யம் தானே -அதுக்கு என் வருகிறதோ
என்று அஞ்சி -மேன்மேலும் காப்பிடும்படி -மங்களா சாசன பரரான இவர்க்கு தரித்து
நின்று மங்களா சாசனம் பண்ணுகைக்கு ஈடான நிலமாய் இருக்கும் என்கை –

அவர்களைப்போல இள நெஞ்சு அல்லாதவர் இவர் -அழகை அனுபவிக்காமல் என் வருகிறதோ என்பர் –
ரெங்க ராட்டினம் பார்ப்பத்துக்கும் ரெங்கனே ராட்டினமாக பண்ணுபவன் என்ற எண்ணம் வாசி உண்டே
ஸுந்தர்ய சபலர்-அவர்கள் -சுழித்து குமிழ் நீரூட்டும் அகாத ஸுந்தர்யம் -மங்களா சாசன சபலர் -நாம் ஐஸ்வர்ய சபலர் / அவன் ஆஸ்ரித சபலன் -அனைவருக்கும் சபல புத்தி
-ஸுந்தர்யத்தின் இனிமையில் கண் வைப்பார்கள் அவர்கள் – -இவர் மேன்மையில் கண் வைப்பார்
-இளவரசன் அழகு -அழகில் முக்யத்வம் அவர்களது -இளவரசில் கண் வைத்தார் இவர்-
மரகத குன்றம் ஒக்கும் -அழகு –அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதம் -இனிமையை முக்கியம் அவர்களுக்கு -மல்லாண்ட தோள்களுக்கு பல்லாண்டு இவர் –

————————————-

சூரணை -253-

அவர்களுக்கு
உபய சேஷத்வத்தையும் அழித்து
ஸ்வரூபத்தை குமிழ் நீருண்ணப் பண்ணும் அது -விருத்திக்கும் ஹேதுவாய்
ஸ்வரூபத்தை கரை ஏற்றும் –

இவருக்கு பய ஹேது எங்கனே -என்னும்  அபேஷையில் அருளிச் செய்கிறார் –

அதாவது
பகவத் அனுபவ ஏக பரராய் -தத் அலாபத்தால் ஆற்றாமை கரை புரளும்படி
இருக்கும் மற்றை ஆழ்வார்களுக்கு –
கண்ண புரம் ஓன்று உடையானுக்கு  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -என்றும் –
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும்
அநு சந்திக்கும் படி -பிரதம மத்தியம பத சித்தமான பகவத் சேஷத்வமும்-
தத் காஷ்டையான பாகவத சேஷத்வமும் -ஆகிய உபய சேஷத்வத்தையும் –
நமக்கே நலமாதலில் -என்னும் படி ஸ்வ பிரயோஜனத்தில் மூட்டியும் -விளம்ப ரோஷத்தாலே –
போகு நம்பீ
கழகமேறேல் நம்பீ -என்னும்படி ஆக்கியும் –
ஸ்வ பிரவ்ருத்தி ஆகாதோ என்னும் அளவில் –
உங்களோடு எங்களிடை இல்லை -என்று உதறும்படி பண்ணியும் –
வன்சிறைப் புள் -இத்யாதியாலே வெறுத்து வார்த்தை சொல்லுவித்தும் -அழித்து –
பராதிசயகரத்வமே  வடிவான ஸ்வரூபத்தை -மங்களா சாசனம் எனபது -ஓன்று
அறியாதபடி -தன பக்கலிலே மக்நமாக பண்ணுமதான பகவத் ஸௌ ந்த்ர்யம் –

அந்த ஸௌ ந்தர்ய தர்சனத்தில் -அனுபவத்தில் நெஞ்சு செல்லாதே -அதுக்கு என் வருகிறதோ என்று வயிறு  எரிந்து காப்பிடும் வரான இவர்க்கு –
உன் செவ்வடி செவ்வி திருக் காப்பு –
மங்கையும் பல்லாண்டு –
சுடர் ஆழியும் பல்லாண்டு –
அப் பாஞ்சசன்யமும் பல்லாண்டு -என்று
தத் விஷயத்துக்கும் -ததீய விஷயத்துக்கும் -மங்களா சாசனம் பண்ணுவிக்கையாலே –
உபய சேஷத்வ விருத்திக்கும் ஹேதுவாய் -ஸ்வரூபத்தை தன் பக்கல் மக்னம் ஆகாதபடி நடத்தும் என்றபடி –

ஆக -அவர்களுக்கு அப்படி ஸ்வரூபத்தை குமிழ் நீர் உண்ணப் பண்ணுகிற அவனுடைய ஸௌ ந்த்ர்யம் -இவருக்கு இப்படி செய்கையாலே –
அவர்களுடைய ஆழம் கால் தானே இவர்க்கு மேடாய் இருக்கையாலே -அவர்களுக்கு போலே காத சித்தம் ஆகை அன்றிகே –
மங்களா சாசனம் இவர்க்கு நித்தியமாய் செல்லும் என்றது ஆயிற்று –

பகவத் பாகவத சேஷத்வம் -தத் ததீய -உபய சேஷத்வம்-அழகை அனுபவிக்க கைங்கர்யம் நழுவுமே -ஸ்வரூபம் அழியுமே -/ உபய விருத்தி -இவருக்கு வளரப் பண்ணும் /
ஸுந்தர்ய அபிலாஷைகள் -ஆற்றாமை கரை புரண்டு -ஸ்வரூபம் போகுமே /
ஸூ பிரயோஜன நிவ்ருத்தி பயன் தத் சேஷத்வ பலன் -அந்த சேஷத்வத்தை ஒழிக்கும் இவர்களுக்கு / இதுவே போன பின்பு ததீய சேஷத்வம்
பற்றி கேட்க வேண்டுமோ -நமக்கே நலமாதலில் -ஸூவ பிரயோஜனம் உண்டே -சாதன பக்தி -ஓதி நாமம் குளித்து –பயப்படுத்துகிறார் திருப் புல்லாணி பெருமாளை /
ததேக சேஷம் -உருவு அழிக்கும் / ஸுந்தர்யம் தன்னில் ஏக தேசத்தில் அழுத்தி ததீய சேஷத்வத்தை இழக்கப் பண்ணுமே /
இது த்யாஜ்யம் அது உத்தேச்யம் என்று போக மாட்டார்களே / ஸுந்தர்யம் வெளி விழுங்கில் என் ஆகும் என்று பீத பீதராய்-அடியோமோடும் —
வல மார்பினில் வாழும் மங்கையும் பல்லாண்டு –பாஞ்ச ஜன்யமும் பல்லாண்டு –அடியோமோடும் முதலில் -யசோதை பாவனை உண்டே -/
பகவத் சேஷத்வம் வளர்ந்து அது மூட்ட -ததீயருக்கும் பல்லாண்டு -உபயமும் விருத்தி -அதே அழகு இப்படி அவர்களையும் இவரையும் பண்ணுமே –
ததீய சேஷத்வ பர்யந்த தத் சேஷத்வம் -பர ஸம்ருத்தி ஏக பிரயோஜனம் ஆகிய கரை ஏற்றும் -/ குமிழ் நீர் உண்ணுவார்கள் அவர்கள் ஸூ பிரயோஜனத்தால் –
இது தான் நதி -இதன் கரையே பர ஸம்ருத்தி / ஸுந்த்ரம் ஆஸ்ரய விஷயத்தில் மங்களா சாசனம் -தத் சேஷத்வ = ததீய சேஷத்வம் –சர்வ ததீய சேஷத்வம் -விருத்தம் –
சேவைடி -நின்னோடும் தத் சேஷத்வம் / மங்கை ஆழியும் ததீய சேஷத்வம் – /-அடியோமோடும் -சர்வ ததீய சேஷத்வம்
பிரதம மத்யம பத சித்தம் தானே தத் சேஷத்வமும் ததீய சேஷத்வம் -எட்டாம் பத்தில்-கண்ண புரம் ஓன்று உடையானுக்கு  அடியேன் ஒருவர்க்கு உரியேனோ -என்றும் –
உற்றதும் உன் அடியார்க்கு அடிமை -என்றும்-உபய சேஷத்வத்தையும் -அநு சந்திக்கும் படி – சொல்லி -ஒன்பதாம் பத்தில் -வண்டே கரியாக வந்து கை விட்டு போனார் —
நமக்கே நலமாதலில் -முன்பே திருக் கல்யாணம் ஆனது என்று -பெருமாள் சொல்லும் படியான வார்த்தை -கை விட்ட குற்றம் கூடாதே -பயப்படுத்த –
யாம் மடலூர்த்தூம் போலே பயத்திலே ஒருப்படுத்தி கார்யம் கொள்வார்களே / மடல் எடுத்து பலப்படுத்தினார் இவர் / மன்னு வட நெறியே வேண்டி /
பயப்படுத்துவதற்காக சொன்னதும் ஸூ பிரயோஜனம் வர அர்ஹதை காட்டியவை பல இடங்களில் உண்டே –
ஒரே ஸுந்தர்யம் அவர்களை அப்படி பண்ணுவித்து இவருக்கு இப்படி பண்ணுவிக்குமே -பர பிரயோஜனம் இவருக்கு ஸூ பிரயோஜன லேஸம் அவர்களுக்கு
காத சித்தகம் நித்யம் / ஆழம்கால் மேடு -/ஸ்வரூபம் அழித்து வளர்க்க பண்ணும் -என்று மூன்று சூரணை களில் அருளிச் செய்த அர்த்தங்களை சமன்வயப்படுத்துகிறார் –

————————————————-

சூரணை -256-

1-பய நிவர்தகங்களுக்கு பயப்படுவது –
2-பிரதி கூலரையும் அநு கூலர் ஆக்கிக் கொள்ளுவது –
3-அதீத காலங்களில் அபதானங்களுக்கு உத்தர காலத்திலேயே வயிறு எரிவது
4-பிராப்தி பலமும் இதுவே எனபது –
5-அநிமிஷரை பார்த்து -உறகல் உறகல் – என்பதாய் கொண்டு -இது தானே -யாத்ரையாய் நடக்கும் —

மற்றை ஆழ்வாருக்கு மங்களா சாசனம் காதா சித்தமாக செய்தே -இவர்க்கு
நித்யம் ஆகைக்கு -நிதானம் இன்னது என்று தர்சிப்பிக்கிறார் கீழ் –
இதுதான் இவர்க்கு நித்யமாக செல்லும்படி தன்னை வ்யக்தமாக அருளிச் செய்கிறார் மேல் –

அதாவது –
1-தன் ஸௌ குமார்யத்தை கண்டு கலங்கி -இவ் விஷயத்துக்கு என் வருகிறதோ
என்று மறுகுகிற இவர் பயத்தை பரிகரிகைக்காக -மல்ல வர்க்கத்தை அநாயாசேன
அழித்த தோள் வலியைக் காட்ட -இந்த தோள் வலியை நினைத்து மதியாதே -அசூர
ராஷச யுத்தத்தில் புகில் என்னாக கடவது என்று -அது தனக்கு பயப்பட்டு மங்களா சாசனம் பண்ணுவது –
உண்டான அவமங்களங்கள் போக்கைகும் -இல்லாத மங்களங்கள் உண்டாகைகும் தன் கடாஷமே அமைந்து இருக்கிற இவள் –
அகலகில்லேன் இறையும்-என்று நம்மை பிரிய மாட்டாதே இருக்க -நமக்கு வருவதொரு அவமங்களங்கள் உண்டோ -என் செய்யப் படுகிறீர் என்று –
லஷ்மீ சம்பந்தத்தை காட்ட -இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வரில் செய்வது என் என்று அஞ்சி -மங்கையும் பல்லாண்டு -என்று மங்களா சாசனம் பண்ணுவது —
இந்த பயத்தை பரிகரிக்கைகாக -இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வராதபடி -கல் மதிள் இட்டால் போலே இருக்கிற  இவர்களை பாரீர் என்று -இரண்டு இடத்திலும்
ஏந்தின ஆழ்வார்களைக் காட்ட -அவர்களுக்கு ஒரு தீங்கு வரில் செய்வது என் என்று அஞ்சி –
சுடர் ஆழியும் பல்லாண்டு –
அப் பாஞ்ச சந்யமும் பல்லாண்டு -என்று மங்களா சாசனம் பண்ணுவது –
2-அநந்ய பிரயோஜன தயா அனுகூலரான பகவத் சரணார்த்திகளை துணையாக கூட்டிக் கொண்ட அளவால் -பர்யாப்தி பிறவாமையாலே-
பிரயோஜனாந்தர பர தயா பிரதிகூலரான கேவலரையும் -ஐஸ் வர்யார்த்திகளையும் திருத்தி -மங்களா சாசனத்துக்கு ஆளாகும் படி அனுகூலர் ஆக்கிக் கொள்ளுவது –
3-இலங்கை பாழ் ஆளாக  படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதுமே -இத்யாதியாலே
கீழ் கழிந்த காலத்தில் அவன் செய்த அபதானங்களுக்கு -பிற் காலத்திலேயே -சம காலத்தில் போல் வயிறு எரிந்து -மங்களா சாசனம் பண்ணுவது –
4-சூழ்ந்து இருந்து ஏத்துவர் பல்லாண்டே -என்று பகவத் பிராப்திக்கு பலமும் அந்த மங்களா சாசனமே எனபது –
5-ச்நேஹாத அஸ்த்தாந ரஷாவ்யசநி பிரபயம் சாரங்க சக்ராசி முக்க்யை-என்கிறபடியே
அஸ்தானே ரஷாவ்யசநிகள் ஆகையாலே -அநிமிஷராய் இருக்கிற திவ்யாயூத ஆழ்வார்கள்
முதலானவரை பார்த்து -குண வித்தராய் -நஞ்சுண்டாரை போலே உந்தமை அறியாது இருத்தல் –
அனுபவத்திலே அழுந்து கைங்கர்ய பரராய் இருத்தல் செய்யாதே -உணர்ந்து நோக்கும் கோள் என்று பலகாலும் சொல்லுவதாய் கொண்டு –
இவ் மங்களா சாசனமே விருத்தியாய் செல்லும் என்கை –

இந்த மங்களாசாசன ஏக யாத்திரை -ஸுகுமார்யத்தால் வந்த பயம் கெட-இவன் மல்லர் நிரசனம் -பிரபல புஜ லஷ்மி /
ஸ்ரீ மஹா லஷ்மி / சுடர் ஆழி / பாஞ்ச ஜன்யமும் /-வீர ஸ்ரீ –ஸ்ரீயபதித்தவம்– திவ்ய ஆயுதங்கள் காட்ட –/ என் வருகிறதோ
கைவல்ய ஐஸ்வர்யார்த்திகளையும் கூட்டு அனுகூல ராக்கியும் -/அபி சப்தம் பிரதி கூலரையும் -பிரதி யோகி சமுச்சய பரம் —
ஸ்வ தந்த்ர அபிமான ஸூ போக்த்ருத்வ புத்தியையும்-இந்த இரண்டும் கைவல்யார்த்திக்கு உள்ள தோஷங்கள் / -தேஹாத்ம அபிமானம் -தத் அனுபந்தி போக்த்ருத்வம் -இவை இரண்டும் ஐஸ்வர்யார்த்திகள் தோஷம் அனுகூலரர்களை பரம அனுகூலர்களாக்கி சாதனாந்தர சங்கையும் ஸூவ கத ஸ் வீகாரம் மாற்றி – ஸூ வ பிரயோஜனத்தையும் மாற்றி –
ராவண வதம் இப்பொழுது நடக்கும் என்று நினைத்து இலங்கை பாழாளாக படை பொருதானுக்குப் பல்லாண்டு பாடுவார் -அதீத அபதானம்-உத்தர காலம் வயிறு எரிவது
பிராப்தி சீமா -பர ஸம்ருத்தி ஏக ஸ்வரூபம் -அங்கும் இதுவே –
ஹரி வக்ஷஸ்தல தயா லஷ்மயா-தேவர்களுக்கு மங்களத்துக்கு இவளே காரணம் / -விஷ்ணு பரான்முக- அசுரர் -இழந்து /
சதா பஸ்யந்தி உன் நித்ரா ஜாக்ரதையாக பார்த்து இருப்பாரையும் சங்கித்து பார்த்து -தாமஸரை உணர்த்துவது போலே -அங்கே சுத்த சத்வமேயாக இருக்கும் -மறந்து
பல காலும் உணர்த்த -நியமித்து எழுப்ப -இதுவே தேக யாத்திரையும் கால யாத்திரையும் இவருக்கு -குண அனுசந்தானம் குண அனுபவம் யாத்திரை அவர்களுக்கு –
அன்று-இன்று போற்றி -ஆண்டாள் -இவர் சம காலத்தில் போலே-குன்றம் எடுத்த பிரான் அடியாரோடும் ஒன்றி நின்ற -அன்று இருந்த கோப குமாரர்ர்கள் உடன்-போலே இவரும்
குணம் விஷமாகப் படுத்தும் இணைக் கூற்றங்களோ அறியேன் என்றாரே வசம் இழந்து /

—————————————————

சூரணை-255-

அல்லாதவர்களைப் போல் கேட்கிறவர்களுடையவும் சொல்லுகிறவர்களுடையவும்
தனிமையை தவிர்க்கை அன்றிகே –
ஆளும் ஆளார்-என்கிறவனுடைய தனிமையைத் தவிர்க்கைகாக வாயிற்று
பாஷ்யகாரரும் இவரும் உபதேசிப்பது –

இப்படி மங்களா சாசனத்துக்கு ஆள் தேடி -பிரதி கூலரை அனுகூலர்
ஆக்குகைக்கு பண்ணுகிற உபதேசம் திருப் பல்லாண்டு ஒன்றிலும் அன்றோ உள்ளது -மேல் இவர் உபதேசித்த இடங்களில் –
அல்லாதார் உபதேசத்தில் காட்டிலும் வ்யாவிருத்தி என்கிற சங்கையில் அருளிச் செய்கிறார் –

அதாவது
பரோ உபதேசத்தில் வந்தால் -மற்றுள்ள ஆழ்வார்களையும் ஆச்சார்யர்களையும் போல் –
உபதேசிக்கிறவர் தம்மிடம் கேட்கிற சம்சாரிகளுடைய அநாதி அஞாநாத்தாலே-நல துணையான பகவத் விஷயத்தை அகன்று திரிகையால் வந்த தனிமையையும் –
வக்த்தாக்களான தங்களுடைய பகவத் குண அநு சந்தான தசையில் -போதயந்த பரஸ்பரம் பண்ணுகைக்கு உசாத் துணை இல்லாமையால் வந்த தனிமையையும் –
தவிர்க்கை பிரயோஜனமாக உபதேசிக்கை அன்றிக்கே -சௌகுமார்ய அநு சந்தானத்தாலே வயிறு மறுகின ஆழ்வார் ஆராய்ந்து பார்த்த இடத்தில் –
அடைய அந்ய பரராய் தோற்றுகையாலே –
உபய விபூதியிலும் பரிகைக்கு ஆளில்லை -தம் வாசி அறிந்து நோக்க்குகைகும் -ஒரு ஆளும் ஆளுகிறிலர்- என்று
பேசும்படி இருக்கிற நிரதிசய சௌகுமார்யா யுக்தனான சர்வேஸ்வரனுடைய தனிமை தீர
மங்களா சாசனத்துக்கு இவர்கள் ஆளாக வேணும் என்று -இதுவே பிரயோஜனமாக வாயிற்று –
பரம காருணிகரான-பிராமாணிகரான- ஆச்சர்யர்களில் பாஷ்ய காரரும் -மயர்வற மதி நலம் அருள பெற்றவர்களில் -இவ் ஆழ்வாரும் உபதேசித்து அருளுவர் என்கை-
ஆகையால் –
இவ் ஆழ்வார் பிரதிகூலரை அனுகூலராக-அனுகூலர் ஆகும்படியாக – உபதேசிக்கும் இடம் எல்லாம் மங்களா சாசன அர்த்தமாக என்னக் குறை இல்லை -என்று கருத்து –
எம்பெருமானார் என்னாதே பாஷ்ய காரர் என்றது -ஸ்ரீ பாஷ்ய முகத்தாலே வேதாந்த தாத்பர்யம் பண்ணி அருளினவர் என்னும் வைபவம் தோற்றுகைக்காக–

பெரியாழ்வாருக்கும் பாஷ்யகாரருக்கும் சாம்யம் -/ உபயருக்கும் -உபதேசித்து நிறுத்துவது வேதாந்தம் அறுதி இட்டு -நிர்ணயம் -ஸ்ரீ பாஷ்யம் முகேன-
ஆளவந்தாரின் மூன்றில் ஓன்று இது -கிரந்த நிர்மாணம் -பண்ணி – வேண்டிய வேதங்கள் ஓதினார் பெரியாழ்வார் -/
வேதாந்த நிர்ணயம் சமஸ்க்ருதம் தமிழ் -இரண்டாலும் -நிர்ணயம் -மங்களா சாசனம் தானே வேதாந்த தாத்பர்யம் /
பிரதிகூலர் அனுகூலராக மற்ற ஆழ்வார்கள் திருத்தி -இது மங்களா சாசனமாக பர்யந்தம் இவர்கள் இருவருமே /
திரு குருகூர் அதனை உள்ளத்து கொள்மின் -உம்மை உய்யக் கொண்டு போக -தனிமை போக / இனி யாரைக் கொண்டு உஸாக –
என் நெஞ்சினாரும் அங்கே ஒழிந்தார் -தன் தனிமை தீர்க்கவும் -உபதேசம் உண்டே –
ஆளும் ஆளார் -பூ ஏந்தினால் போலே இருப்பதும் தலை சுமையாக நினைத்து -உபதேச வஸ்துவின் ஸுகுமார்யம் அறிந்து தம்மை போலே
மங்களா சாசனம் பண்ண ஆள் இல்லாமையால் –குறையை நிறைவேற்ற ஆள் இல்லை -அழுதார் -பகவான் தனிமையை தீர்க்க ஆள் இல்லையே
தனிமையை தவிர்ப்பித்து -பெரியாழ்வார் -பலர் உண்டாக முயன்று வெற்றி அடைந்து –
சமன்வய அவிரோத சாதன பல ரூப அத்யாய சதுஷ்டய வேதாந்த -ப்ரஹ்மம் ஜகத் காரணம் -அவனே காரணம் -அவனே உபாயம் -அவனே பலம் -என்பதே நான்குக்கும் –
இப்படி ஆகார வேதாந்தத்தின் -யதார்த்த நிர்ணய ஸ்ரீ பாஷ்யம் —அவனுக்காக வந்து கைங்கர்யம் -அவன் தனிமையை தீர்த்து -திருத்தி திருமகள் கேள்வனுக்கு ஆக்கி –
கலியும் கெடும் காண்மின் ஸூ சிப்பித்து நம்மாழ்வார் பாதுகையாய் இருந்து அவர் ஆசைப்பட்டதை முடித்து வைத்தார் –
வேண்டிய வேதங்கள் ஓதி வேதாந்த நிர்ணயம் பண்ணிய பெரியாழ்வார் -அனுகூல பிரதிகூல வாசி இல்லாமல் அனைவருக்கும் /-
பிரயோஜனாந்தர பரர்கள் இவருக்கு பிரதிகூலர் / வேதாந்தத்துக்கு பிரதிகூலர்களுக்கு ஸ்ரீ பாஷ்யகாரர் / உபதேச வஸ்துவின் சீர்மையை அறிந்து
அவருக்கு தனிமை தவிர்த்து சகாயம் வேண்டிய இவர்கள் இருவரும் மற்றவர்களுக்கு வியாவருத்தம் உண்டே /
கைங்கர்யத்தில் அந்நிய பரராய் -லீலா விபூதியில் போகத்தில் ஆழ்ந்து-நித்ய விபூதியில் குண அனுபவத்தில் ஆழ்ந்து அந்நிய பரராக இருக்க -இவர் உபதேசித்து திருத்தினார்
இவர்களுடைய ப்ரேம ஆதிக்ய ஹேதுக -அஸ்தான சங்கா க்ருத -விபூதி த்வய மங்களா சாசன அர்ஹ அபாவம் -அனுசந்தான ஆயத பகவத் அஸஹாயத்வம் –
திருப்பல்லாண்டு -உறகல்-இத்யாதி -உபக்ரம உப சம்ஹாரம் -மங்களா சாசனம் உண்டே /
ஆளவந்தார் மநோ ஹர க்ருத ஸ்ரீ பாஷ்யம் க்ருதம் –தாத்பர்யம் -காட்டி -யாதாத்ம்ய ஞானம் –உபதேச விதேய சாஸ்திரம் -காரணத்தை தியானித்து –
கைங்கர்யத்துக்கு ஆள்களை சேர்த்து –பலமே மங்களா சாசனம் -அனுஷ்டான பர்யந்தமாக காட்டி அருளி
ஸ்ரீ பாஷ்யகாரர் -பெரியாழ்வார் ஆளவந்தார் ஸ்ரீ பாஷ்யகாரர் -சேர்ந்து செய்த இந்த பேசிற்றே பேசும் ஏக கண்டர் –

—————————————

சூரணை-256-

அல்லாதார்க்கு சத்தா சம்ருத்திகள்
பகவத் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலே
இவர்க்கு
மங்களா சாசனத்தாலே –

மயர்வற மதிநலம் பெற்றவர்கள் எல்லாருக்கும் -சத்தா சம்ருத்திகள் -பகவத் தர்சன அனுபவ கைங்கர்யங்களாலேயாக   அன்றோ தோற்றுகிறது-
அவ்வாகாரம் இவர்க்கும் ஒவ்வாதோ –
அப்போதைக்கு மங்களா சாசனமே யாத்ரையாக நடக்கும் என்னுமது கூடும்படி என்-என்கிற சங்கையிலே அருளிச் செய்கிறார் –

சத்தை யாவது -தாங்கள் உளராகை-இது பகவத் தர்சன அனுபவ கைங்கர்ய பரரான மற்றை ஆழ்வார்களுக்கு அவனைக் காணாத போது தரிக்க மாட்டாதே –
காண வாராய் -என்று கூப்பிடுகையாலே -தத் தர்சனத்தாலே யாய் இருக்கும் –
அவராவி துவராமுன் -அவர் வீதி ஒருநாள் -அருளாழி புள் கடவீர் -என்று எங்கள் சத்தை கிடைக்கைக்கு
ஜால கரந்தரத்திலே ஆகிலும் ஒருக்கால் காணும்படி எங்கள் தெருவே
ஒருநாள் போக அமையும் என்று -சொல்-என்கையாலே தர்சனமே சத்தா ஹேது என்னும் இடம் சித்தம் இறே–
சம்ருத்தியாவது -உளராய் இருக்கிற மாதரம் அன்றிக்கே -மேலுண்டாய் செல்லும் தழைப்பு அது அவர்களுக்கு
அந்தாமத்து  அன்பு -முடிச்சோதி-துடக்கமானவற்றில் போலுண்டான அனுபவத்தாலும் –
ஒழிவில் காலத்தில் படியே செய்யும் கைங்கர்யத்தாலுமாய் இருக்கும் —
அன்றிகே –
தர்சன -அனுபவங்கள் இரண்டாலும் சத்தையும் –
கைங்கர்யத்தால் சம்ருத்தியுமாக சொல்லவுமாம்–
அங்கனம் அன்றிக்கே –
அந்த சத்தை பிராவண்ய கார்யமான அனுபவம் இல்லாத போது குலையும் -என்று இவர் தாமே கீழே அருளிச் செய்கையாலும் –
நாளை விநியோகம் கொள்ளுகிறோம் என்னில் அழுகவும் கூட சத்தை இல்லை என்று –
கைங்கர்யம் சத்தா ஹேதுவாக அநு சந்தானத்திலே சொல்லுகையாலும் –
கண்டு களிப்பன்-என்று தர்சனம் தான் சம்ருத்தி ஹேதுவாக தோற்றுகையாலும்-
சத்தைக்கும் சம்ருத்திக்கும் மூன்றுமே காரணமாம் என்னவுமாம் –

மயர்வற மதிநலம் அருளப் பெற்ற அன்று முதல் பகவத் ஸௌகுமார்யாதிகளைக் கண்டு
இவற்றுக்கு என் வருகிறதோ என்று -வயிறு எரிந்து மங்களா சாசன அபிநிவிஷ்டரான இவர்க்கு -மங்களா சாசன விச்சேதம் வரில்
தாமுளராக மாட்டாமையாலும் –
அப்படி அவிச்சின்னமாக  செல்லுகை தானே தழை புக்கு உடலாய் இருக்கையாலும் –
சத்தையும் சம்ருத்தியும் இரண்டும் மங்களா சாசனத்தாலே யாய் இருக்கும் –
ஆகையால் இவர்க்கு மங்களாசாசனம் நித்யமாக செல்லத் தட்டில்லை -என்று கருத்து –

இருப்பதும் செழிப்பாக இருப்பதும் இது ஒன்றாலே / தர்சனம் அனுபவம் கைங்கர்யகளும் இதுக்காக தானே / அபிலாஷை மற்றவர்களுக்கு
அவர் வீதி ஒரு நாள் ஜாலாகிரந்தரத்தாலே காண வாராய் -/ ஸக்ருத் தர்சனம் போதும் -துவர்ந்து போகாமல் இருக்க –சத்தை இருக்க தர்சனம்-/
ஸம்ருத்திக்கு அனுபவமும் கைங்கர்யமும் எல்லாம் / சேஷத்வ ரூப ஸம்ருத்தி–இருக்க தர்சனம் -செழிப்பாக இருக்க இவை-அனுபவமும் கைங்கர்யமும் – வேன்டும்
ஸுகுமார்ய ஏக ஸம்ருத்தி -அடியோம் என்கிற தர்சனம் சத்தைக்கு வாழ இது வேன்டும் /சூழ்ந்து இருந்து ஏத்துவார் என்கிற
ஸம்ருத்தியும் பல்லாண்டு என்கிற மங்களா சாசனத்தாலே தானே இவருக்கு /

——————————–

சூரணை -257-

உகந்து அருளின நிலங்களை
அநு சந்தித்தால்
ஊணும் உறக்கமும் இன்றிக்கே
இவருடைய யாத்ரையே
நமக்கு எல்லாம்
யாத்ரையாக வேணும் –

ஆக – மங்களா சாசனத்தில் -பெரிய ஆழ்வாருக்கு உண்டான -அநவரத நிஷ்டையை தர்சிப்பித்தார் கீழ் –
இனி மேல் அவருடைய யாத்ரையே நமக்கு எல்லாம் யாத்ரையாக வேணும் என்று –
முன்பு தினசரியையில் யுக்தமான மங்களா சாசனத்தினுடைய அவஸ்ய கர்தவ்யதையை அருளி செய்கிறார் –

அதாவது –
அத்யந்த சுகுமாரனான சர்வேஸ்வரன் -ஆஸ்ரித சுலபத் வர்த்தமாக தன்னை அமைத்து கொண்டு – தான் உகந்த வூர் என்னும்படி –
தான் அத்ய ஆதாரத்தை பண்ணி வர்த்திக்கும் -கோவில் திருமலை -முதலான திவ்ய தேசங்களை அநு சந்தித்தால் –
அபாய பஹூள்யமான தேசம் ஆகையாலே -இங்கு எழுந்து அருளி நிற்கிற நிலைக்கு
ஏதேனும் ஒரு தீங்குகள் வரில் என்னாகக் கடவதோ என்னும் வயிறு எரிச்சலாலே-
ஆகார -நித்ரைகளிலும் -அந்வயம் இன்றிக்கே –
நிரதிசய பிரேம யுக்தரான இவ் ஆழ்வாருடைய நிரந்தர மங்களா சாசன யாத்ரையே
சேஷ பூதரான நமக்கு எல்லாம் யாத்ரையாக வேணும் -என்கை-

இது நமக்கு உபதேசம் -/அவர்களுக்கு தர்சநாதிகளால் பிறக்குமது எல்லாம் மங்களாசாசனம் -தானுகந்த ஊர் எல்லாம்-உகந்து அருளினை நிலங்களுடைய –
வைலக்ஷண்யத்தை -ப்ரீதி புரஸ்தாரமாக அனுசந்தித்தால் -உண்ணா நாள் பசி ஆவது ஒன்றுமே இல்லை -/ உன பாதம் நண்ணா நாள் –
உண்ணும் நாள் இல்லை உறக்கமும் தான் இல்லை –உண்ணாது உறங்காது ஒலி கடலை அடைத்த பெருமாள் –/
கோல வில்லி ராமன் -வீர ராகவனை நினைக்க -சரீர ஸ்திதி ஹேதுவான -ஊணும் தத் லகுவாக ஹேதுவான உறக்கமும் –மூச்சாடுகை அன்றியே –
மங்களா சாசனம் -இவருடைய -மருவில்லாத -சரம யாத்திரையே வெறும் ஊணும் உறக்கமும் -பல்லாண்டு என்று மேல் எழ சொல்வது மட்டுமே
யாத்திரையாக இருக்கும் நமக்கு -அவர் அருளாலே நிரந்தர யாத்திரையாக வேணும் -இதுவே சேஷத்வ சித்தியாகும்
அபாய பஹூள்யமான தேசம் -அநபாயினி–நித்ய பிரிவின்மை – அபாயம் -பிரிவு -/

———————————–

சூரணை -258-
ஆகையால் மங்களா சாசனம் ஸ்வரூப அநு குணம்-

உக்த அர்த்தத்தை நிகமித்து அருளுகிறார் –

அதாவது –
இப்படி சேஷ பூதரான வர்களுக்கு எல்லாம் அவஸ்ய கர்த்தவ்யமாய் இருப்பது ஓன்று ஆகையாலே –
மங்களா சாசனம் ஸ்வரூபதுக்கு சேரும் என்கை –
சேஷ வஸ்து வாகில்-சேஷிக்கு அதிசயத்தை விளைத்தே –தன் ஸ்வரூப சித்தி ஆகையாலே –
சேஷிக்கு அதிசயத்தை யாசாசிக்கிற இது சேஷ பூதனான இவனுடைய ஸ்வரூபத்துக்கு அநு குணம் இறே –

இதுவே தாரகம் -இவருடைய சரம அதிகாரம் -புஷ்ப்ப கைங்கர்யத்தை விட வேதங்கள் ஓதி விரைந்து கிளி அறுத்தத்தை விட இதுவே பிராரத்த நீயம் –
நித்ய மங்களா சாசனமும் இத்தாலே வரும்- உபய கைங்கர்ய விருத்தியும் அதுவே தேக யாத்திரை -அதுக்கு ஆள் தேடி பிடிக்கையும் அதுவே
சத்தா ஸம்ருத்திக்கு ஹேதுவாகவும் அதுவே ப்ராப்திக்கு பலமாகவும் -இவருடைய விருத்தியே சத் பரார்த்த நீயம் – நிரதிசய ஸுந்தர்ய விசிஷ்ட சேஷிக்கு
மங்கள சாசனம் -தத் ஸுகுமார்ய அனுசந்தான ஜெனித ப்ரேம பரவச சேஷ பூத சரம ஸ்வரூப அனுரூபம் -ஸ்வரூப விருத்தம் அல்ல என்று நிகமிக்கிறார்-
ராக பிராப்தமான மங்களா சாசனத்துக்கு ஸூ பிரயோஜக பரம்பரயா அவஸ்ய கர்தவ்யம் -அவாப்த ஸமஸ்த காமனுக்கு இத்தால் ஓன்று உண்டாக வேண்டாம்–
இது ஒரு ஸ்வபாவ விசேஷம் என்று அவன் திரு உள்ளம் நிரதிசய ப்ரீதி அதிசயத்துக்கு ஹேதுவாகுமே -அதிசய ஆசாசனம் ஆகும் –
சேஷிக்கு அதிசயத்தை விளைப்பதே சேஷ புதனுக்கு கர்தவ்யம் -ஏற்புடையதே –

——————————————-

சூரணை -259-

அனுகூலர் ஆகிறார்
ஞான பக்தி வைராக்யங்களிட்டு மாறினாப்போல வடிவிலே தொடை கொள்ளலாம் படி
இருக்கும் பரமார்த்தர் —

இப்படி தினசரியையில் உக்தமான மங்களா சாசனத்தினுடைய ஸ்வரூப விருத்தத்வ சங்கையை பரிகரித்த அநந்தரம்-
அனுகூல சஹவாசம் –என்ற இடத்தில் சொன்ன அனுகூலருடைய லஷணத்தை அருளிச் செய்கிறார் –

அனுகூலர் ஆகிறார் -என்றது
ஞானாதி வர்த்தகர் ஆகையாலே -சஹவாச யோக்யராய் கீழ் சொல்லப்பட்ட அனுகூலர் ஆகிறார் -என்றபடி –
ஞான பக்தி வைராக்யங்கள் ஆவன –
தத்வ யாதாத்ம்ய ஞானமும் – பகவத் ஏஷ விஷையை யான பக்தியும் –
தத் உபய கார்யமாய் வரும் -பகவத் வ்யதிரிக்த விஷய விரக்தியும் -இவை தான் வைஷ்ணவ அலங்காரங்கள் இறே –
இவற்றை இட்டு இறே வைஷ்ணவர்கள் ஏற்றம் சொல்லுவது –
ஆகை இறே நாத முநிகளுடைய திவ்ய வைபவத்தை அருளிச் செய்கிற ஆளவந்தார் –
அசிந்த்ய அத்புத அக்லிஷ்ட ஞான வைராக்ய ராசயே அகாத பகவத் பக்தி சிந்தவே -என்று அருளிச் செய்தது –
இட்டு மாறினாப் போலே -என்றது
ஒரு பதார்த்தம் இருந்த பாத்ரத்திலே -பதார்த்தாந்தரத்தை இட்டு -முன்பு இருந்ததை மாற்றினால் –
அதுவே உள்ளதாய் தோற்றுமா போலே –
இந்த ஞானாதிகள் மூன்றும் -ஏக ஆஸ்ர்ய கதமாய் இருக்கச் செய்தே -இவற்றில் ஒரொன்றை பார்க்கும் அளவில் –
ஒன்றை இட்டு மற்றவற்றை மாற்றினாப் போலே இதுவே இவ் ஆச்ரயத்தில் உள்ளது என்று தோற்றும்படி இருக்கை–
வடிவிலே தொடை கொள்ளலாம் படி இருக்கை யாவது –
இவர்கள் வடிவு கண்ட போதே இவற்றோடு இவர்களுக்கு உண்டான சம்பந்தம் க்ரஹிக்கலாம் படி இருக்கை –
த்யாஜ்ய உபாதேய விவேக பூர்வகமான பரிமாற்றத்தாலே ஞானம் வடிவிலே தொடை கொள்ளலாம் –
ஆஹ்லாத சீத நேத்ராம்பு -காலும் எழா கண்ணா நீரும் நில்லா -இத்யாதிப் படியே இருக்கையாலே -பக்தி வடிவிலே தொடை கொள்ளலாம் –
இதர விஷயங்களை கடைக் கணியாமல் இருக்கையாலே வைராக்கியம் வடிவிலே தொடை கொள்ளலாம் –
அன்றிக்கே –
ஞான பக்தி வைராக்யங்கள் மூன்றும்  நவ நவ உன்மேஷ சாலிகளாய் வருகையாலே அபூர்வமான ஞானாதிகளை இட்டு
பூர்வத்தில் அவற்றை மாற்றினால் போலே – தங்கள் வடிவிலே இவை காணலாம் படி இருக்கும் பரமார்த்தர் என்னவுமாம்
பரமார்த்தர் -என்றது –
சம்சாரத்தில் பொருந்தாமையாலும் – பகவத் விஷயத்தை கிட்டப் பெறாமையாலும் –
இனி இதுக்கு மேல் இல்லை என்னும்படியான ஆர்த்தியை உடையவர்கள் -என்கை –

இனி -அர்த்தஅந்தர ஸூசகம் -வேறே விஷயம் தொடக்கம் -ஞானாதி பிரேமம் வைராக்யம் -வளர்த்துக் கொடுக்கும் ஸஹவாஸிகள் –
தத்வ த்ரய விஷயீ கரிக்கும் ஞானம் -/ ஈஸ்வர ஞானம் அடியான பக்தி-ராகம் /தத்வ த்வயம் பற்றி வைராக்யம் -நிஸ்ப்ருஹை /’வைஷ்ணவ அலங்காரங்கள் இவை –
ஒவ் ஒன்றிலே மட்டும் நிலை நில்லாமல் -ஒவ் ஒன்றிலும் நிலைத்து இருப்பவர்கள் -உண்டோ ஒப்பு -பெரியாழ்வாருக்கும் நம்மாழ்வாருக்கும்-உபதேச ரத்னமாலையில் –
இட்டு மாறினாப் போலே என்றது –வாசனை மிகுந்து — தோள் கண்டார் தோளே கண்டார் போலே –
சமுதாய ரூபமான வடிவு -காணலாம் படி புற வெள்ளம் இடும் படி இருக்கும் பரம ஆர்த்தர் / ஞான அனுரூபமான பிராப்தி அலாபம்–
பக்தி அனுரூப அனுபவ அலாபம் – வைராக்ய அனுரூப விரோதி நிவ்ருத்தி அலாபம் -மூன்றாலும் -தவித்து துடித்து –உடன் கூடுவது என்று கொல் –
அதனில் பெரிய அவா -பக்தி / பொல்லா ஆக்கையின் புணர்வினை அறுக்கல் அறா —பெரு மிடறு செய்து கூப்பிடுவார்கள் —
இவை எங்கே தெரியும் -வடிவிலே தொடை கொள்ளுவார்கள் -என்றது கண்ணிலே தெரியுமே
காணக் கருதும் கண் -ஏக்கம் காட்டுமே / பொன்னி பேர் ஆறு போலே கண்ணநீர் கொண்டு / உருவொடு பேர் அல்லால் கண் -/
அரங்கவோ என்று அழைக்கும் திருப் பவளம் / ஆடிப் -பாட அழைக்கும் -வாய் அவனை அல்லது வாழ்த்தாது / கையாரத் தொழுவார் –
தோள் அவனை அல்லால் தொழா/ ஞானம் பக்தி வைராக்யங்கள் காணலாய் இருக்குமே –
ஞான வைராக்ய ராசயே அகாத பகவத் பக்தி சிந்தவே ஞான வைராக்ய ரத்ன குவியல் -ஆழம் கால் காண முடியாத பக்தி கடல் –
இட்டு மாறி -பதாந்தரம் -முதல் நிர்வாகம் –அன்றிக்கே -இவர் இடமே உத்பத்தியாய் -ஞானவானாய் இருந்து -அது மாறி -பக்திமானாகி –
அது மாறி வைராக்ய சீலராய் இருப்பார் என்றுமாம் –புதியது புதியதாக உயர்ந்த தசை என்றவாறு –
ஆஸ்திகன் -பரம ஆஸ்திகன் -வைராக்யம் மிக்கு -ஆர்த்தி மிக்கு இனி இனி என்று இருபதின் கால் கூப்பிடுவார் –
இப்படி உள்ளோர்களுடன் நாம் ஸஹவாசம் கொள்ள வேன்டும் என்றவாறு –

—————————————————-

சூரணை -260-

ஒரு செய் நிரம்ப நீர் நின்றால்
அசல் செய் பொசிந்து காட்டுமாப் போலே
இவை இல்லாதார்க்கும்
இவர்களோட்டை சம்பந்த்தாலே வுறாவுதல்
தீரக் கடவதாய் இருக்கும்

இவர்களோட்டை ஸஹ வாசத்தால் சித்திக்கும் அது எது -என்ன அருளி செய்கிறார் –

அதாவது
ஒரு வயலிலே நிறைய நீர் நின்றால் -நீரற்று உறாவிக் கிடக்கிற அசல் வயல் –
தத் அசலாக இருப்பதாலே வந்த பொசிவாலே வாட்டம் அற்று கிடக்குமா போலே –
ஞான பக்தி வைராக்யங்கள் ஆகிய இவை இல்லாமையாலே ஸ்வரூபம் உறாவிக் கிடக்கிறவர்களும்
இவற்றால் பரி பூர்ணரான இவர்களோட்டை ஸஹவாச ரூப சம்பந்த்தாலே இவற்றிலே சிறிது அந்வயம் உண்டாய் –
இவை நேராக இல்லாமையால் -உண்டான வுறாவுதல் தீரக் கடவதாய் இருக்கும் -என்கை-

ஞானாதிகள் இல்லாத குறை தீரும் / உகந்தவன் உகந்து மடை விடவே விளைவது ஒரு நல்ல வயல் செய்யில் -நிரம்ப நிரந்தரம் நீர் நின்றால் –
உடையவன் உபேக்ஷிக்கும் அசல் செய் -உபேக்ஷை அடியாக ஞானாதிகள் பசை அற்று -உலர்ந்த சம்சாரிக்கும் அந்த ரக்ஷகனான பூர்ண கடாக்ஷத்தாலே
ஸ்ரீ வைஷ்ணவ தர்சன ஸ்பர்ச மாத்திரத்தாலே -ஞானாதி பசை இல்லா உறாவுதல் தீர –வறட்சி கெட தோன்ற பொசிந்து காட்டுமா போலே–
நெஞ்சப் பெரும் செய்யை யுடையவராக கடவதாய் இருக்கும் –மடல் எடுக்க பாரித்த திருவாய்மொழி காதல் கடல் புரைய விளைவித்த காரமர் கண்ணன் –
அனுகூலர் சஹ வாசத்தால் ஞானாதிகள் நமக்கும் உண்டாகும் -என்றவாறு -ஸஹ வாச ரூப சம்பந்தம் -தர்சனம் ஸ்பர்சம் வேண்டுமே –

—————————————-

சூரணை -261-

ஆறு நீர வர அணித்தானால் – அதுக்கு ஈடான அடையாளங்கள் உண்டாமா போலே –
பிராப்தி அணித்தானவாறே இந்த ஸ்வபாவ விசேஷங்கள்  தன்னடையே விளையக் கடவதாய் இருக்கும் –

ஏதத் சகவாசத்தால் -இப்படி உறாவுதல் தீர்ந்து -கிடக்கும் அளவோ என்னில் –
இவ்வளவும் அன்று -இந்த ஸ்வபாவ விசேஷங்கள் பிராப்திக்குமாக விளைந்து அறும் என்கிறார் –

அதாவது –
வற்றிக் கிடக்கிற ஆறு நீர் வரத்து ஆசன்னவாறே -தத் சூசகமான மணல் பொசிகை முதலான அடையாளங்கள் உண்டாமா போலே –
பகவத் பிராப்தி ஆசன்னையான வாறே -தத் சூசகமான –
இந்த ஞானாதி ஸ்வபாவ விசேஷங்கள் ஸ்வயமேவ  விளையக் கடவதாய் இருக்கும் -என்கை –

மோக்ஷ ப்ராப்தியே ஆற்று நீர் -ஞானாதிகள் வெளிப்படும் இந்த நிலையிலே /பூர்ணமாக விளையும் -கீழே பொசியும் –
இப்போது உண்டாக காணா விட்டாலும் -மறைந்து இருந்தாலும் -சரம காலத்தில் வெளிப்படும்
புது நீர் இன்றோ நாளையோ அணித்தானால் வற்றிய ஆற்றில் மணல் திரண்டு -பிராப்தி காலம் அணித்த வாறே -விசத தம ஞான பக்தி வைராக்யம் –
விசதம் -விசத தரம் – விசத தமம் –சிறப்பான விளக்கமான -நிர் யத்னமாக வளர்ந்து -கைங்கர்யம் செய்ய செய்ய -நிறைவேற பிராப்தி ஸூ சகமாக -சரம பாகமாய் விளையும் –
அனுகூல ஸஹ வாஸம் அப்பொழுது பலித்து இல்லை யாகிலும் பிராப்தி காலத்தில் பலியாது ஒழியாது என்றவாறு

——————————-

சூரணை -262-

இவற்றைக் கொண்டு சரம சரீரம் என்று
தனக்கே அறுதி இடலாய் இருக்கும் –

இவை இப்படி விளைந்து வரப் புக்கால் -பிராப்தி அணித்தது என்று தோற்றி இருக்குமோ என்ன –
அருளிச் செய்கிறார் –

அதாவது –
இப்படி மேன்மேலும் புதுக் கணித்து விளைந்து வருகிற -ஞான பக்தி -வைராக்யங்களைக் கொண்டு –
இனி நமக்கு ஒரு சரீர பரிக்ரஹம் இல்லை -இது சரம சரீரம் என்று தம் மனசுக்கே -நிச்சயித்துக் கொள்ளலாய் இருக்கும் -என்கை –

யானே என்னை அறியகிலாத-நிலை தவிர்ந்து –பிராப்தி அணித்தவாறே நாமே அறியும் படி -நமக்கு தெளிவைக் கொடுக்கும்–
ஸ்ரீ வசன பூஷண ஸ்ரீ ஸூ க்திகள் இது போல்வனவே –திருவாய் மொழி அனுபவ பரம் -இது அனுஷ்டானத்துக்கு வழி கொடுக்கும் –
பரதராஜர் ஆஸ்ரமம் -பரத ஆழ்வான் அறிந்தான் / அன்னலனுடை ஒருவனை நணுகினம் நாமே -இதுவே சரம தசை பரதனுக்கு
க்ஷணம் தோறும் புதுக்கணித்து பேறு தப்பாது -என்று –சங்கித்து போன தனக்கே சம்சயம் இல்லாமல் தானே அறுதி இடலாம் படி விசத தமமாக இருக்கும் –
கர்மாந்தரேஷூ -பலத்துக்காக ஒன்றுமே செய்யாமல் நீர் பண்டமாக உருகி விரக்தி நிறைந்து உகந்து இருக்கும் பாகவத கைங்கர்யத்தில் ஆழ்ந்து
சோம்பல் இல்லாமல் சிரத்தை யுடன் ஆடம்ப வர்ஜனம் லோபி இல்லாமல் க்ரோதம் மோகம் இல்லாமல் -பயமும் அற்று -தேக இந்திரிய சுத்தி –
த்ரவ்ய தேச சுத்தி -அகால நித்திரை ஆசனம் ஆண் பெண் கூடுதல் இல்லாமல் – -ஸர்வதா சாஸ்திரம் வழி -பாரவஸ்யம் பிரமாணம் -என்று அறிந்து –
நிஷித்த வர்ஜனம் -தயா ஷாந்தி அத்ரோகம் சர்வ ஐந்துஷூ -தயை ஷாந்தி -சத் ஸ்வ பாவங்கள் வந்த பின்பு ஜீவன் பகவானை அடைவான் என்று
கண்டு கொள்ள வேன்டும் –சாண்டில்ய ஸ்ம்ருதி -இந்த குணங்கள் ஞானம் -பக்தி வைராக்யம் அந்தர்கதம்

———————————————

சூரணை -263-

பிரதி கூலராகிறார் –
1-தேக ஆத்ம அபிமானிகளும் –
2-ஸ்வ தந்த்ரரும் –
3-அந்ய சேஷ பூதரும் –
4-உபாயாந்தர நிஷ்டரும் –
5-ஸ்வ பிரயோஜன பரரும் –

ஆக -இப்படி ஸஹவாச விஷயமாக  தினசர்யையில் சொன்ன அனுகூலருடைய
லஷணத்தையும்-தத் ஸஹ வாச பலத்தையும் -அருளிச் செய்து -தத் -அநந்தரம் –
ஸஹ வாச நிவ்ருத்தி விஷயமாக சொன்ன பிரதிகூலர் இன்னார் என்னும் இடம்
அருளிச் செய்கிறார் மேல் –

பிரதிகூலர் ஆகிறார் -என்றது -ஞானாதி நாசகர் ஆகையாலே -ஸஹ வாச யோக்யர் அல்லாராக கீழ்-சொன்ன பிரதி கூலர் ஆகிறார் என்றபடி –
1-தேகாத்ம அபிமானிகள்-இத்யாதி -தேகாத்ம அபிமானிகள் ஆகிறார் -காண்கின்ற தேகத்துக்கு
அவ்வருகு ஓர் ஆத்மா உண்டு என்று அறியாதே -தேகத்தில் அஹம் புத்தியைப் பண்ணி –
இத்தையே ஆத்மாவாக அபிமானித்து இருக்கும் அவர்கள் –
2-ஸ்வ தந்த்ரர் ஆகிறார் -தேக அதிரிக்தமான ஆத்மவஸ்துவை அறிந்து இருக்கச் செய்தே அத்தை தனக்கு உரித்தாகவே நினைத்து
ஒரு விஷயத்திலும் சேஷத்வத்துக்கு இசையாதவர்கள் –
3-அந்நிய சேஷ பூதராகிறார் -சேஷத்வத்தை இசைந்து இருக்கச் செய்தே அத்தை அபிராப்த விஷயங்களில் விநியோகித்து இருக்குமவர்கள்
4-உபாயாந்தர நிஷ்டராகிறார் -பிராப்த சேஷி விஷய சேஷத்வத்தை யுடையராய் வைத்தே தத் பிராப்தி யுபாயம்
தத் சரணார விந்த சரணா கதி என்று இருக்கை அன்றிக்கே கர்மாதி யுபாயங்களைப் பற்றி நிற்கிறவர்கள்
5-ஸ்வ ப்ரயோஜன பரராகிறார் ஆகிறார் -பிராப்த  சேஷி கமலங்களை -உபாயமாகப் பற்றி இருக்கச் செய்தே –
தாங்கள் பற்றின பற்றை உபாயமாக நினைத்தும் -உபேயமான கைங்கர்யத்தை ஸ்வ போக்யமாக  நினைத்து இருக்கும் அவர்கள் –
இப்படி இருக்கிற இவர்கள் பிரணவத்தில்
1-த்ருதீயஅஷரத்தாலே ஆத்மாவினுடைய தேக அதிரிக்தத்தையும் –
2-பிரதம அஷரத்தில் -சதுர்தியால் -பகவத் சேஷத்வத்தையும் –
3-மத்யம அஷரத்தில் -தத் அனந்யார்ஹத்வத்தையும்-
4-மத்யம பதத்தால்-அநந்ய சரண்யத்வத்தையும்-
5-சரம பதத்தால் -அநந்ய போக்யத்வத்தையும் -தர்சிக்கும் அதிகாரிக்கு -பிரதிகூலர் இறே-

அநு கூல லக்ஷணமும் தத் ஸஹ வாச பலமும் அருளிச் செய்த அநந்தரம் –பிரதி கூல வகை இன்னது என்றும் -உத்தேசயாதி பேதம் இன்னது என்றும் அருளிச் செய்கிறார் –
ஞானாதி நாசகராய் கொண்டு -பிரதி கூலர் -ஸஹ வாச யோக்யதை அல்லாத -தேஹாத்ம அபிமானிகள் – ஆத்ம பரமாத்மா விவேகம் அற்ற ஸ்வ தந்த்ரரும்-
பிராப்த சேஷி அபிராப்த சேஷி அறியாத அந்நிய சேஷ பூதரும்-சித்த உபாய விவேகம் அற்ற உபாயாந்தர நிஷ்டரும் -அநு ரூப ப்ரயோஜன
பகவத் ப்ரீதி காரித கைங்கர்யம்-அவன் ப்ரீதிக்கு உகப்பாக -இல்லாமல் அப்ரயோஜன விவேகம் அற்ற – ஸூ ப்ரயோஜன பரர்–
ஸ்வம் தந்திரம் -பிரதானம் – ஸ்வ தந்த்ரர் /
1-த்ருதீயஅஷரத்தாலே ஆத்மாவினுடைய தேக அதிரிக்தத்தையும் –மகாரார்த்தம் -ஞான ஸ்வரூபன் ஞான குணகன் -அவ்வானவர்க்கு மவ்வானவன் அடியான்
2-பிரதம அஷரத்தில் -சதுர்தியால் -பகவத் சேஷத்வத்தையும் –ஏறிக் கழிந்த லுப்த சதுர்த்தி ததார்த்தம் —
3-மத்யம அஷரத்தில் -தத் அனந்யார்ஹத்வத்தையும்– -கோவிந்தா உனக்கே நாம் ஆடச்செய்வோம் உகா ரார்த்தம்
4-மத்யம பதத்தால்-அநந்ய சரண்யத்வத்தையும்–நமஸ் -அர்த்தம்
5-சரம பதத்தால் -அநந்ய போக்யத்வத்தையும்-நாராயணாயா அர்த்தம் –
ஒவ் ஒன்றுமே மேல் மேல் கூட்டிச் செல்லுமே -ஐந்தையும் அறியலாமே-அஷ்ட ஸ்லோகி அர்த்தம்
அனுகூலர் ஸஹ வாஸம் தர்சனம் ஸ்பர்சனம் வேண்டுமே -இங்கே பிரதி கூலர் உதார வீக்ஷணை பார்த்தால் ஆபத்து– தள்ளி இருக்க வேன்டும் –

———————————————-

சூரணை -264-

இவர்களுக்கு உத்தேச்யரும் –
உபாய உபேயங்களும் –
பேதித்து இருக்கும் –

இந்த பிரதி கூல்யதை உபபாதிக்கைக்காக இவர்களுடைய விப்ரதிபத்தி
நிபந்தனமான -உத்தேச்யாதி பேதங்களை அருளிச் செய்கிறார் –

உத்தேச்யர் ஆகிறார் ஆதரணீயர்-
அவர்கள் ஆகிறார் இவ்விடத்தில் ஸ்வ அபிமத பிரதரானவர்கள் –
உபாயங்கள்-யாவன –
ஸ்வ அபிமத புருஷார்த்த சாதனங்கள் –
உபேயங்கள் -யாவன –
ஸ்வ அபிமத புருஷார்த்தங்கள் –
இவை பேதித்து இருக்கை யாவது –
தத் தத் விப்ரப்ரதிபதி அநு குணமாக வேறு பட்டு இருக்கை —

இந்த பிரதி கூல்யதை உபபாதிக்கைக்காக இவர்களுடைய விப்ரதிபத்தி
நிபந்தனமான -உத்தேச்யாதி பேதங்களை அருளி செய்கிறார்
இவர்களுக்கு -பிரதி கூலர்களுக்கு -விப்ரதிபத்தி -ஸ்வரூபத்தை ஜடம் என்றும் -ஸ்வ தந்த்ரன் என்றும் –
அந்நிய சேஷம் என்றும் -ப்ராப்யம் ஸ்வ யத்ன சாத்தியமும் ஸ்வார்த்தமும் என்றும் -வருகிற விப்ரதிபத்தி உடைய பிரதி கூலர்கள்-
இவர்களுக்கு -ஸூ அபிமத பிரதரான உத்தேசியர் வேறே வேறே
-ஸூ அபிமத -உபாயங்களும் -ஸூ அபிமத உபேயங்களும் -ரஜஸ் தமஸ் குணம் அடியாக பேதித்து இருக்குமே
பக்தி உபாயம் -உத்தேசியர் பெருமாள் உபாசகனுக்கு -பிடித்ததே புருஷார்த்தம் -ஆக மூன்றும் உண்டே -தத் தத் விப்ரபத்தி அடியாக வேறு பட்டு இருக்குமே –
யாகத்து ஜ்யோதிஷட ஹோமம் -யாகம் பண்ணுவது -உபாதேயம் -ஸ்வர்க்கம் உத்தேச்யம் -எதனால் என்றால் யாகம் –
ஆதரணீயர் இங்கே -அர்த்தம் -அடையப் போகும் புருஷார்த்தம் உபேயத்தில் உண்டே -பிரதிகூலருக்கு உபாதேயத்வமும் உத்தேச்யத்வமும் இல்லை
ஆகையால் ஆதரிக்கத் தக்கவர் என்பதே –பல பிரதர் ஆதரணீயர் என்றவாறு

————————————-

சூரணை -265-

1-தேக ஆத்மா அபிமானிகளுக்கு உத்தேச்யர் –
தேக வர்த்தகரான மனுஷ்யர்கள் –
உபாயம்-அர்த்தம்
உபேயம் -ஐஹிக போகம்–
2-ஸ்வ தந்த்ரர்க்கு -உத்தேச்யர் -ஸ்வர்க்காதி போக ப்ரதர் –
உபாயம் -கர்ம அனுஷ்டானம் –
உபேயம்-ஸ்வர்க்காதி போகம்-
3-அந்ய சேஷ பூதர்க்கு உத்தேச்யர் -பிரம ருத்ராதிகள்
உபாயம் -தத் சமாஸ்ரயணம்
உபேயம் -தத் சாயுஜ்யம் –
4-உபாயாந்தர நிஷ்டர்க்கு உத்தேச்யன் -தேவதா அந்தர்யாமியான சர்வேஸ்வரன் –
உபாயம் -கர்ம ஞான பக்திகள் –
உபேயம் -பகவத் அனுபவம் –
5-ஸ்வ பிரயோஜன பரர்க்கு உத்தேச்யன் -நெஞ்சினால் நினைப்பான்  யவன் -என்கிறவன் –
உபாயம் -ஸ்வ கீய ஸ்வீகாரம்
உபேயம் -ஸ்வார்த்த கைங்கர்யம் –

அதுதன்னை அடைவே உபபாதிக்கிறார் மேல் –

அதாவது –
1-தேகத்தையே தானாக அபிமானித்து இருக்கிறவர்களுக்கு உத்தேச்யர் –
தாரக -போஷக -போக்ய பதார்த்தங்களை இட்டு -தேகத்தை நன்றாக வளர்த்துக் கொண்டு போரும் மனுஷ்யர் –
அபிமத சித்திக்கு உபாயம் – ஸ்வர்ணயாதி யான தனம்
அபிமதமான உபேயம் -இஹ லோகத்தில் உண்டான ஸ்த்ரி அன்ன பானாதி விஷய அனுபவம் –
2-தேக அதிரிக்தனாய் இருப்பான் ஒரு ஆத்மா உளன் அவன் தான் -ஞாத்ருத்வ -கர்த்ருத்வ -போக்த்ருத்வ -யுக்தனாய் இருக்கும் என்கிற மாத்ரத்தை
சாஸ்திர முகத்தாலே அறிந்து -தங்களை ஸ்வ தந்த்ரராக நினைத்து இருக்கும் அவர்களுக்கு உத்தேச்யர் –
அனுஷ்டித்த சாதனத்துக்கு அநு குணமாக ஸ்வர்க்காதி ஆமுஷ்மிக போகங்களைக் கொடுக்கும் மக்ன இந்த்ராதிகளான தேவதைகள் -உபாயம்-
ஜோயிஷ்டோமேன ஸ்வர்க்க காமோ யஜதே -இத்யாதிகளால் சொல்லப்படுகிற-பல அபிசந்தி சஹிதமான யாகாதி கர்ம அனுஷ்டானம் – உபேயம்-
3-ஐகிக போகாத் விலக்ஷண ஸ்வர்காத்யனுபவம்-ஜகத்து -தெய்வாதீனம் -என்னுமத்தை சாஸ்த்ரங்களில் கேட்கையாலே சேஷத்வத்தை இசைந்து –
வைத்தே அத்தை பர தேவதா பர்யந்தமாக போக வறியாதே-ஆபாத பிரதீத சித்தங்களிலே ஒன்றைப் பற்றி நிற்கும் -அந்ய சேஷ பூதர்க்கு உத்தேச்யர் –
ஜகத் சர்காதி கரதருதையா-பரத்வ புத்தி அர்ஹ ரான பிரம ருத்ராதிகள் –
உபாயம் -துராரதரானவர்கள் பக்கல் பண்ணும் துஷ்கர சமாஸ்ரண்யம் –
உபேயம் அவர்களோடு -சாமான போக்யானாகை ஆகிற சாயுஜ்யம் –
சாயுஜ்யம்  உபயோரத்ரா போக்தவ்ய ஸ்யா   விசிஷ்ட தா சார்ஷ்ட்டி தாததிர போக்யச்ய தாரதம்ய விஹீ நதா-என்னக் கடவது இறே-
4-ஆத்ம ஸ்வரூபம் -பகவத் அனந்யார்க்க சேஷம் என்னும் இடத்தை-வேதாந்த முகேனே அறிந்து வைத்தே -அபிமத லாபத்துக்கு அவன் தன்னையே –
உபாயமாக பரிக்ரஹிக்க அறியாதே -உபாயாந்தர நிஷ்டர் ஆனவர்களுக்கு உத்தேச்யன் -அக்னி இந்த்ராதி தேவதைகளுக்கு அந்தர் யாமியான ஈஸ்வரன் –
இது கர்ம யோகத்துக்கு ஸ்வரசம்-ஞான யோக பக்தி யோகங்களுக்கு அசாதாரண விக்ரக விஷயத்வம் உண்டாய் ஆகிலும் –
கர்மாநுஷ்டானம் தளமாக எழுந்து இருந்தவை ஆகிலும் -கர்ம ஆராத்யனாவனே -ஸ்வ சாதாரண விக்ரஹ விசிஷ்ட வேஷத்தை நமக்கு
பிரகாசிப்பித்தான் என்னும் நினைவு நடக்கையாலும் -தேவதாந்தர அந்தர்யாமியே உத்தேச்யனாக சொல்லுகிறது என்று கொள்ள வேணும் –
உபாயம் -தனித்தனியே மோஷ சாதன தயா -சாஸ்திர சித்தங்களான-கர்ம ஞான பக்தி -யோகங்கள் –
இவை தனித் தனியே உபாயமாம் இடத்தில் -ஓர் ஒன்றுக்கு மற்றவை இரண்டும் அங்கமாய் இருக்கும் –
ஞான பக்தி அன்விதம் கர்ம ஜனகாதிஷூ த்ருச்யதே கர்ம பக்தி அன்விதம் ஞானம் ப்ரா யேன பரதாதிஷூ
கர்ம ஞான அன்விதம் பக்தி பிரகலாத பிரமுகாஸ்ரையா-என்னக் கடவது இறே –அன்றிக்கே –
கர்ம ஞான பக்திகள்-என்கிற இடத்தில் -வேதாந்த மரியாதையால் -கர்ம ஞான அநு க்ருஹீதையான -பக்தியே உபாயமாய் -தத் அங்க தயா கர்ம ஞானங்களை –
உபாயம் என்று உபசரித்து சொல்லுகிறது ஆகவுமாம்-
உபேயம் -சோஸ்நுதே சர்வான் காமான் சஹா ப்ரஹ்மணா விபச்சிதா -இத்யாதி ஸ்ருதிகளாலும் –
நிரஸ்த அதிசய ஆஹ்லாத சுக பாவைக லஷண பேஷஷம் பகவத் பிராப்திர் ஏகாந்த ஆத்யந்த கீம்தா -இத்யாதி சுருதி உப ப்ருஹ்மணங்களாலும்
சொல்லப்படுகிற நிரதிசய அதிசய ஆனந்த ரூப பகவத் அனுபவம் –
இந்த ஸ்லோகத்தில் -பகவத் பிராப்தி -என்கிற இது -பகவத் அனுபவகமாக இறே
நம் ஆச்சார்யர்கள் (-எங்கள் ஆழ்வான் -விஷ்ணு சித்தம் -இந்த ஸ்லோகம் ஸ்ரீ விஷ்ணு புராணம் )- ஸ்வ பிரபந்தங்களிலே அருளிச் செய்தது –
கர்மாத் உபாயங்களில் -துஷ்கரத்வ புத்தியாலே அவற்றை விட்டு-ஸூ கரத்வ புத்த்யா
5-பிரபத்தியில் இழிந்த -ஸ்வ பிரயோஜன பரர்க்கு-உத்தேச்யன் -நெஞ்சினால் நினைப்பான் எவன் – என்கிறபடியே ஆஸ்ரிதர் தங்கள் நெஞ்சால்
யாதொரு த்ரவ்யத்தை தனக்கு திருமேனியாக கோலினார்கள்-அத்தையே தனக்கு திருமேனியாக -அபிமானித்து -அதிலே அப்ப்ராக்ருத விக்ரஹத்தில்
பண்ணும் ஆதாரத்தை பண்ணிக் கொண்டு அத்யந்த ஸூ லனனாய் இருக்கிற அர்ச்சாவதாரமான சர்வேஸ்வரன்
உபாயம்-அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட பிராப்திக்கும் அவனை உபாயமாக நினைத்து -தான் பற்றின பற்று –
உபேயம் -தனக்கு உகப்பாக பண்ணும் கைங்கர்யம்-

பகவத் விஷய-ஆத்ம விஷய ஞான கந்தம் அற்ற தேகாத்ம அபிமானிகள் -உத்தேசியர் பாலும் சோறும் இட்டு -தேக வர்த்திகள் -மரணத்தை தர்மமாக கொண்டு /
உபாயம் -தனமும் தானியமும் பொருளும் /உபேயம்-ஸ்நானம் பானம் -போஜன லேபனம்-ஐஹிக போகம் -கண்டு கேட்டு உற்று மோந்து உழல்வார்கள்
இரண்டாவது வகை – பரமாத்மா ஞானம் அற்ற -பாரதந்த்ரர் என்று அறியாமல் ஸ்வ தந்திரர்க்கு உத்தேச்யம் ஸ்வர்க்காதி போக பிரதர் —
அல்ப அஸ்திரமான ஸ்வர்க்காதி -அக்னி இந்த்ராதி ப்ரஹ்மாதிகள் / உபாயம் -காம தகா க்ருதம் யாகாதிகள்
பலத்தில் அபிசந்த யுக்த பிரவ்ருத்தி கர்ம அனுஷ்டானம் /ப்ராப்யம் அல்ப அஸ்திர ஸ்வர்க்காதிகள்
மூன்றாவது வகை -அந்நிய சேஷ பூதர்-பகவத் சேஷத்வ தூஷர்களான -தத் அந்நிய சேஷ பூதருக்கு ஸூ அநு ரூப உத்தேச்யம் ஷேத்ரஞ்ஞர் –
ப்ரஹ்ம ருத்ராதிகள் படைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும் கர்ம வஸ்யர்களான-இவர்கள் -உத்தேசியர்-
உபாயம் -துஷ்கரமான தத் சமாஸ்ரயணம் -ராவணன் தலை அறுத்து ஹோமம் -பிள்ளை கறி கேட்க்கும்
பலம் -சாம்சாரிக போக சாயுஜ்யம் அவர்கள் லோகம் அடைந்து
நான்காவது -உபாயாந்தர நிஷ்டர் -ஸாத்ய உபாய நிஷ்டர் -உபாஸ்யனான உத்தேசியர் -அக்னி இந்த்ர- அந்தர்யாமியான சர்வேஸ்வரன் -இவர் தானே இவர்களுக்கும் பலம் கொடுப்பார் /
உபாயம் -பல அபிசந்தி ரஹித கர்ம யோகம் -இந்திரிய உப ரதி ஒய்வு கொடுத்து -அடக்கிய -ஞான யோகம் -உபய சாத்தியமான அவிச்சின்ன ஸ்ம்ருதி
சந்தான ரூபம் -தைல தாராவத் –பக்தி யோகம் – உபேயம் சோஸ்னுதே -நிரந்தர ஆனந்த நிர்ப்பரே பகவத் அனுபவம்
பிரபன்னர் -பர ஏக பிரயோஜத்வ தூஷக -தனக்கே யாக என்னைக் கொள்ளுமீதே மறந்து -ஸூ பிரயோஜன பரரான -பிரபதவ்யன் -நெஞ்சினால் நினைப்பான் –
அர்ச்சாவதார எம்பெருமான் உத்தேசம் -கீழ் போலே அந்தர்யாமி தயா இல்லை இவனுக்கு / பர ஏக பிரயோஜனராக இருக்கும் அனுகூலர்க்கு யார் உத்தேசியர் என்றால் –
அர்ச்சாவதார -வேறே வகை இவனுக்கு -மா முனிகள் அருளிச் செய்கிறாரே /
உபாயம் -அஹங்கார கர்ப்பமான ஸ்வ கீய ஸ்வீ காரம் -தான் பற்றும் பற்றுதல்-உபாயம்
உபேயம் -ஸூ போக்த்ருத்வ கர்ப்பமான பகவத் கைங்கர்யம்-

மனுஷ்யர்-மரண தர்மம் நினைத்து இருப்பவர்கள் /ஞாத்ருத்வ -கர்த்ருத்வ -போக்த்ருத்வ -யுக்தனாய் இருக்கும் என்கிற மாத்ரத்தை-அறிவு இருந்தால் தான்
கர்த்தாவாகவும் அனுபவித்து போக்தாவாயும் -ஆத்மா -மூன்றை மாத்ரத்தையே -சேஷத்வத்தை அறியாத ஸ்வ தந்த்ர புத்தி -ஜீவன் தனித்து ஸ்வர்க்கம் போகலாம்
என்று அறிந்து இருப்பானே /அக்னி இந்திராதி தேவதைகளை உத்தேசித்து பலத்துக்காக யாகம் தானம் ஹோமம் அனுஷ்டானங்களை செய்து –
ஸ்வர்க்காதி -சாந்த்ரா லோகம் இத்யாதிகள் உண்டே /மேல் அதிகாரி சேஷத்வத்தை அறிந்து -அநந்யார்ஹம் அறியாமல் அனன்ய தேவதா –
வேதம் பிரம்மாவை இந்திரனை அக்னியை வணங்கச் சொல்லி இருப்பதை மேலோட்டமாக அறிந்து -ஆபாத ப்ரதீதி -சித்தம் தானே இது —
ஈ ஆடுவதோ கருடன் எதிரே — இரவிக்கு எதிர் மின் மினி ஆடுவதோ நாய் ஆடுவதோ நர கேசரி முன் /
சாயுஜ்யம் உபயோரத்ரா போக்தவ்ய ஸ்யா   விசிஷ்ட தா சார்ஷ்ட்டி தாததிர போக்யச்ய தாரதம்ய விஹீ நதா—
சாலோக்யம் சாமீப்யம் சாரூப்பியம் -சாயுஜ்யம் -ச யுஜ்யோ பாவ சமான போக்யனாகை/ ஐகிய பாவம் இல்லை -போக்த்ரு சக்தி தாரதம்யம் —
போக்யம் ஒன்றாக இருந்தாலும் -சக்தி வேறு பாட்டால் -அனுபவம் மாறுமே –சார்ஷ்டித மோக்ஷம் -வஸ்து ஒன்றாகவும் தார தம்யாம் இல்லாமல் அனுபவிப்பார் –
சக்தியிலும் வேறு பாடு இல்லை என்றவாறு –
சாஸ்திரம் தெளிவாக இப்படி சொல்வதால் ஐக்யம் இல்லையே / அவன் இவர்களை அனுபவிக்கும் பொழுது சமமாக அனுபவிப்பதால் சாயுஜ்யம் /
இவர்கள் அங்கு உள்ளவற்றை அனுபவிப்பதில் வேறுபாடு இல்லாமல் அனுபவிப்பது சார்ஷ்டிதம் என்றவாறு –
ஞான யோக பக்தி யோகங்களுக்கு அசாதாரண விக்ரக விஷயத்வம் உண்டாய் ஆகிலும் –அந்தர்யாமியாய் இல்லாமல் -இருந்ததே ஆகிலும் -வாசனை –
கர்ம யோகம் தளம் -நிலம் -அகல் விளக்கு போலே கர்ம யோகம் -ஆராத்யனாக இருந்ததால் மறக்க மாட்டானே இவனும் –
ஞான பக்தி அன்விதம் கர்ம ஜனகாதிஷூ த்ருச்யதே
கர்ம பக்தி அன்விதம் ஞானம் ப்ரா யேன பரதாதிஷூ
கர்ம ஞான அன்விதம் பக்தி பிரகலாத பிரமுகாஸ்ரையா-
கர்ம யோகத்தால் ஜனகன் -இவர்களுக்கு ஞானம் பக்தி அங்கங்கள்
ஆதி ஜட பரதர் ஞான யோகம் பிரதானம் -கர்ம பக்தி யோகம் அங்கம்
பிரகலாதனுக்கு பக்தி -இவர்களுக்கு கர்ம ஞானம் அங்கம்
இப்படி தனித் தனியே என்றும் பக்தியே உபாயம் இவையே சொன்னது உபசாரத்துக்காக என்றுமாம் –
உபாயங்கள் கர்ம ஞான பக்தி -என்று சொல்லாமல் உபாயம் என்றது தனி தனி என்றுமாம் / ப்ருதக் உபாயத்வம் ஒத்து கொள்ளப்படுகிறது -சாஸ்திரங்களில் –
ந கர்மணா -கேவல கர்மாக்களுக்கு இல்லை- கர்ம யோகத்தால் மட்டும் தான் –
ந அந்நிய பந்தா -தமேவ வித்வான் அம்ருதம் பவதி -வேதனம் தவிர வேறே ஓன்று இல்லை –அந்நிய சப்தம் -கர்ம யோகம் தவிர வேறே என்றவாறு -இது அங்கமாகும் –
பரஸ்பர ஸஹிதமாக இவை இருக்கும் –
வித்யா த்வயம் ப்ரதர்தன மது வித்யை -வைஸ்வாரண வித்யை -அந்தர்யாமி -நேராக -சர்வ வித்யா சாதாரணத்வம்
-32-வித்யைகளிலும் -சில சாஷாதாக இருந்தாலும் –
கர்மாத் உபாயங்களில் -துஷ்கரத்வ புத்தியாலே அவற்றை விட்டு–ஐந்தாம் அதிகாரி —அநு கூலர் பிராப்தம் இல்லை என்று தானே விடுவார்கள் –
இவர்கள் -பிரயோஜன பரர்கள் – எளிதாக இருப்பதாலே பிரபத்தியில் இழிந்த வர்கள் -இவர்கள் அர்ச்சாவதாரத்துக்கு அந்தர்யாமியாக நினைப்பார்கள்
அநு கூலர் அர்ச்சாவதாரமான என்று பிரிக்க மாட்டார்கள் /
நிரஸ்த அதிசய ஆஹ்லாத சுக பாவைக லஷண பேஷஷம் பகவத் பிராப்திர் ஏகாந்த ஆத்யந்த கீம்தா- நிரஸ்த அதிசயத்வம்– ஆஹ்லாதத்வம் -தாபம் தீர்க்கும் –
ஸுகாந்தர அனுபவத்துக்கு போக வேண்டாம் -துக்கம் கலசாத -ஆத்யந்திகம் நித்யம் -என்றவாறு
பேஜஷம் சம்சாரத்துக்கு மருந்து
பரித்யஜ்ய -துஷ் கரம் என்று விட்டு – கீதா ஸ்லோகார்த்தம் -ஸ்வரூபத்துக்கு அப்ராப்தம் ரஹஸ்ய த்ரயார்த்தம் -வாசி உண்டே
அனுபாய பிரபத்தி -பல பிரபத்தி -பல அனுபத்துக்கு யோக்யதை கொடுப்பது -உபாய புத்தி இல்லை -அதிகாரி விசேஷணம் தானே
அர்ச்சை தான் உத்தேச்யம் இருவருக்கும் -உபாய பிரதிபத்திக்கு -விசிஷ்டம் அவனுக்கு –/ இவன் அர்ச்சையே ஸ்வயமேவ உத்தேசித்து இருப்பானே –

———————————————————–

சூரணை-266-

முதல் சொன்ன மூவரும்- நிக்ரஹத்துக்கு இலக்கு
மற்றை இருவரும்- அனுக்ரஹத்துக்கு இலக்கு ..

ஆக உத்தேச்யாதி பேதத்தாலே -அவர்களுக்கு உண்டான -அந்யோந்ய விசேஷத்தை தர்சிப்பித்தார் கீழ் –
இவர்களில் பகவத் விஷயத்தோடு ஓட்டற நின்ற மூவருக்கும் -பகவத் விஷயத்தையே பற்றி நின்ற இருவருக்கும்
உண்டான விசேஷத்தை தர்சிப்பிக்கிறார் மேல் –

அதாவது –
தேக ஆத்ம அபிமானமும் –
ஸ்வ ஸ்வா தந்த்ர்யமும் –
அந்ய சேஷத்வமும் -ஆகிய இவற்றுக்கு அவ்வருகே ஒன்றும் அறியாமையாலே
பகவத் அன்வய கந்த ரஹீதரான மூவரும் -ஷிபாமி -என்கிற பகவத் நிக்ரஹத்துக்கு விஷயம் –
ப்ரக்ருதே பரமாய் -பகவத் அனந்யார்ஹ சேஷமான ஸ்வரூபத்தை அறிந்து –
பகவத் அனுபவ கைங்கர்யங்களை புருஷார்த்தமாக கொள்ளுகையாலே –
அநந்ய பிரயோஜனராய் –
கர்ம ஞாநாதிகளான-உபாயாந்தரங்களிலும்
பிரபத்த நத்திலும்-
நிஷ்டரான இருவரும் –
ததாமி –
மோஷ இஷ்யாமி –
என்கிற பகவத் அனுக்ரஹதுக்கு விஷயம் -என்கை-

பகவத் பாகவதருக்கு-இந்த ஐவரில் -பிரதி கூலர்கள் —
நிக்ரஹ அனுக்ரஹ யோக்யதை இன்னார் என்றும் -266- -கர்ம விநாச ஹேது -இன்னது என்றும் -267-அருளிச் செய்கிறார்
ஸஹ பாடின யோக்யர் -முதல் மூவர் -பகவத் லாபம் உத்தேச்யம் இல்லை -தேக ஸ்வர்க்க ப்ரஹ்மாதி சாயுஜ்ய பிராப்தி தானே இவர்களுக்கு -நேராக பிரதி கூலர் –
பாகவதருக்கு நிக்ரஹத்துக்கு இலக்காவார் —
தேகாதி விலக்ஷணமாய் பகவத் பர தந்திரமாய் தத் ஏக சேஷமாய் ஸ்வரூபம் என்று தெளிந்த பாகவதர்கள் –
இவற்றை கால் கடை கொண்டு இருக்கும் விலக்ஷணர்கள்-
இவர்களுக்கு இம் மூன்று பேரும் -எங்கள் குழுவினால் புகுதல் ஓட்டோம் என்று -தள்ளிக் கதவு அடைத்து -காண கண் புதைக்கை ஆகிற நிக்ரஹத்துக்கு நேரே இலக்கு –
மேல் இருவரும் -உபாயாந்தர பரரும் ஸூ பிரயோஜன பரரும் முமுஷுக்கள் -தர்சன ஸ்பர்சன சம்பாஷணத்துக்கு இலக்காவார்கள்
அன்றிக்கே பகவத் நிக்ரஹம் அனுக்ரஹத்துக்கு இலக்கு என்றுமாம்

———————————————–

சூரணை -267-

மூவருடைய கர்மம்-அனுபவ விநாச்யம்-
நாலாம் அதிகாரிக்கு-பிராய சித்த விநாச்யம் –
ஐஞ்சாம் அதிகாரிக்கு-புருஷகார விநாச்யம் –

இவர்களுக்கு கர்ம விநாச ஹேது பேதத்தால் வந்த விசேஷங்களை
தர்சிப்பிக்கிறார்  மேல் –

அதாவது –
நிக்ரஹத்துக்கு இலக்கான  மூவருடையவும் அநாதி கால ஆர்ஜிதமான சத் அசத் கர்மம் –
அவசியம் அநு போக்தவ்யம் கர்த்தும் கர்ம சுபாசுபம் நா புக்தம் ஷீய தே கர்ம கல்ப கோடி சதை ரபி-என்கிறபடியே
அவச்யம் தத் பலமுள்ளத்தை அனுபவித்தால் அன்றி நசியாமையாலே -அனுபவ விநாச்யம் -என்கிறார்-
அனுக்ரஹத்துக்கு இலக்காக சொன்ன இருவரிலும் -வைத்துக் கொண்டு – உபாயாந்தர நிஷ்டனான நாலாம் அதிகாரிக்கு –
கர்ம ஞான பக்திகள் ஆகிற உபாய விசேஷங்களில் ஒன்றை அனுஷ்டித்தால் அத்தை பிராயச்சித்த ஸ்தாநீயமாக்கி –
ஈஸ்வரன் சர்வ கர்மங்களையும் கழிக்கையாலே-கர்மம் பிராயச் சித்த விநாச்யம் என்கிறார் –
பிரபதன நிஷ்டனான ஐஞ்சாம் அதிகாரிக்கு – ஆஸ்ரயண வேளையில் அநாதி கால க்ருத அபராத பீதனாய் -அவற்றை அடைய ஈஸ்வரன்
பொறுக்கைக்கு  உறுப்பாக -பிராட்டியை புருஷகாரமாக முன்னிட்டு ஆஸ்ரயிக்கையாலே-அவளுக்காக இவனுடைய அபராதத்தை எல்லாம்
பொறுத்து அங்கீகரித்து இவனுடைய அகில கர்மங்களையும் தள்ளிப் பொகடுகையாலே-புருஷகார விநாச்யம் -என்கிறார்-

தத் – ததீய -நிக்ரஹத்துக்கு இலக்கான அம் மூவருடைய அநாதி கால ஆர்ஜிதமான சத் அசத் கர்மங்கள் தத் தத் பல சுக துக்க விநாஸ்யம் –
அல்ப அனுக்ரஹத்துக்கு இலக்கு உபாயாந்தர நிஷ்டர் -பாபம் அசத் கர்மம் -பிராயச்சித்த தர்மத்தால் போக்கி கொள்ள வேன்டும்
பிராயச்சித்தம் பண்ணி போக்க முடியாத புண்ணியம் பாபம் -இரண்டையும் -பகவத் பிரசாதத்தால் போக்கி கொள்ள வேன்டும்
அனுக்ரஹ விசேஷத்துக்கு இலக்காகும் பிரபன்னர் -ஸூ வ பிரயோஜன பரர் – ந கச்சின் ந அபராத்யதி -பிராட்டி புருஷகார பலத்தால் பொருப்பித்து -அபராத பய நிவ்ருத்தி
அநிஷ்ட நிவர்த்தகம் சித்த உபாய காரியமானாலும் – ஆஸ்ரயண விரோதி நிவ்ருத்தி மாத்திரம் பிராட்டி கார்யம் -தத் சங்கல்பம் அடியாக பிராட்டிக்கு இந்த அதிகாரம் அருளி –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: