ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -243-248-தத் அதிகாரி க்ருத்யம் /பெறுவான் முறை /-பிரபன்ன தினசரியா- ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை /-மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————–

சூரணை-243-

இப்படி சர்வ பிரகாரத்தாலும் நாச ஹேதுவான அஹங்காரத்துக்கும்-அதனுடைய கார்யமான
விஷய ப்ராவண்யத்துக்கும் விளை நிலம் தான்-ஆகையாலே –
1–தன்னைக் கண்டால் சத்ருவைக் கண்டால் போலேயும் –
2–அவற்றுக்கு வர்த்தகரான சம்சாரிகளைக் கண்டால் சர்ப்பத்தை கண்டால் போலேயும் –
3–அவற்றுக்கு நிவர்தகரான ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் பந்துக்களை கண்டால் போலேயும் –
4–ஈஸ்வரனைக் கண்டால் பிதாவைக் கண்டால் போலேயும் –
5–ஆசார்யனைக் கண்டால் பசியன் சோற்றைக் கண்டால் போலேயும் –
6–சிஷ்யனைக் கண்டால் அபிமத விஷயத்தை கண்டால் போலேயும் -நினைத்து –
அஹங்கார -அர்த்த- காமங்கள் மூன்றும்–(த்ரி த்வாரங்கள் இவை நரகத்தில் தள்ள )-அஹங்காரம் அனுகூலர் பக்கல் அநாதாரத்தையும்–அர்த்தம் -பிரதிகூலர் பக்கல் பிராவண்யத்தையும்-
காமம் – உபேஷிக்கும் அவர்கள்-(பைய நடமின் எண்ணா முன்) பக்கல் அபேஷையும்-பிறப்பிக்கும் என்று அஞ்சி –
ஆத்ம குணங்கள் நம்மாலும் -பிறராலும்-பிறப்பித்துக் கொள்ள ஒண்ணாது –
சதாசார்ய பிரசாதம் அடியாக வருகிற பகவத் பிரசாதத்தாலே பிறக்கும் அத்தனை என்று துணிந்து –
7–தேக யாத்ரையில் உபேஷையும் –
8–ஆத்ம யாத்ரையில் அபேஷையும் –
9–பிராக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்தி நிவ்ருத்தியும் –
10–தேக தாரணம் பரமாத்ம சமாராதான சமாப்தி பிரசாத பிரதிபத்தி என்கிற புத்தி விசேஷமும் -(-பிராசாதம் அடியாகவே இந்த தேக தாரணம் இதுக்கு என்ற பிரதிபத்தி உண்டாகும் )
11–தனக்கு ஒரு க்லேசம் உண்டானால் கர்ம பலம் என்றாதல்-
க்ருபா பலம் என்றாதல்-பிறக்கும் ப்ரீதியும் (-இந்த பூமி கஷ்டம் விலகாத பூமி என்ற எண்ணம் வேண்டுமே -இந்த பூமியில் கஷ்டம் வேண்டாம் என்று நினைக்காமல் -கிருபா பலத்தால் கஷ்டம் கொடுத்து மோக்ஷம் இச்சை பிறப்பிக்கிறான் என்ற எண்ணம் வேண்டுமே )
12–ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தி நிவ்ருத்தியும் –
13–விலஷணருடைய ஜ்ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சையும் –
14–உகந்து அருளின நிலங்களில் ஆதராதிசயமும் ,மங்களாசாசனமும் –
15–இதர விஷயங்களில் அருசியும் –
16–ஆர்த்தியும்
17–அனுவர்தன நியதியும் -(-45-விஷயங்கள் அனுவர்த்த நியதிகள் இதில் மேல் விவரிப்பார் )
18–ஆகார நியதியும் –
19–அனுகூல சஹவாசமும் –
20–பிரதிகூல சஹாவாச நிவ்ருத்தியும் –
சதாசார்ய ப்ரசாதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் –

இரண்டாம் பிரகரணம் முற்றிற்று-

தன்னை தானே முடிக்கை யாவது -என்று தொடங்கி-இவ்வளவாக
அஹங்காராதிகளின் தோஷம் உபபாதிக்க பட்டது –
அநந்தரம் பிராப்ய பிராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்கும்
பிரபன்ன அதிகாரி உடைய திநசர்யா விசேஷம் சொல்லப் படுகிறது –

இப்படி சர்வ பிரகாரத்தாலும் -என்று தொடங்கி -சதாசார்யா பிரசாதத்தாலே
வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் -என்னும் அளவாக —
இப்படி -என்று கீழ் உக்தமான பிரகாரத்தை பரமார்சிக்கிறது –
சர்வ பிரகாரத்தாலும் நாச ஹேதுவாகை யாவது -ஸ்வரூபேண முடித்தும் –
பாகவத விரோதத்தை விளைத்து முடித்தும் -பகவல் லாப விரோதியையும் -எல்லாப் படியாலும் –
அசந்நேவ-என்கிறபடியே -அசத் கல்பமாம் படி ஸ்வரூபத்தை உருவு அழிய பண்ணுமதாய் இருக்கை-

அஹங்காரம் தான் தேக ஆத்ம அபிமான ரூபமாயும் –
தேஹாதிரிக்த  ஆத்ம விஷயத்தில் -ஸ்வாதந்திர அபிமான ரூபமாயும்-இரண்டு வகை பட்டு இறே இருப்பது –
இவ்விடத்தில் இவை இரண்டும் சேர சொல்லப் படுகிறது –
அதனுடைய கார்யமான விஷய பிராவண்யத்துக்கும் -தேக ஆத்ம அபிமானமும் -ஸ்வா தந்திர அபிமானமுமே விஷயங்களை
ஸ்வ போக்யத்வேன விரும்புகைக்கு மூலம் ஆகையாலே -விஷய பிராவண்யத்தை அஹங்கார கார்யம் என்கிறது –
விஷய சப்த்தாலே கீழ் அனுகூலமாகவும் பிரதி கூலமாகவும் சொல்லப்பட்ட -விஹித நிஷித்த தத் ரூப விஷய த்வத்தையும் சொல்லுகிறது –
விளை நிலம் தான் ஆகையாலே -என்றது -இவை இரண்டுக்கும் ஜன்ம பூமி பகவத் ஸ்வரூப திரோதாநாதிகளை பண்ணக் கடவ குண த்ரயாத்மாக –
பிரகிருதி பரிமாண ரூபமாய் -ஸ்வ கர்ம விசேஷா ரப்தமாய் இருக்கிற -சரீர விசிஷ்டனான தான் ஆகையாலே என்றபடி –
கர்ம அனுகுணமாக ரஜஸ் தமசுகளாலே கலங்க வடிக்கும் சரீர விசிஷ்டைதையாலே –
மதி மயங்கி-தான் அல்லாத தேகத்தை தானாகவும் -தனக்கு உரியன் அல்லாத தன்னை ஸ்வதந்த்ரனாகவும் அபிமானித்து தனக்கு
அநர்த்த கரமான விஷயங்களிலே அத்ய ஆதரத்தை பண்ணுவதாம் அவன் தானே இறே –
தன்னைக் கண்டால் -இத்யாதி -இப்படி அனாதிகாலம் போந்தவனாய் -இப்போதும் அதுக்கு யோக்யமான
சரீர விசிஷ்டனாய் இருக்கிற தன்னை தர்சித்தால்-கொன்று அல்லது விடேன் என்று –
ச ஆயுதராய் பல் கவ்வித் திரியும் சத்ருவை கண்டால் போலே -குடல் கரித்து -தனக்கு நாசகனாய் நினைத்தும் –

தங்களுடைய உக்தி விருத்திகளாலே -துர் வாசனையை
கிளப்பி -அஹங்காராதிகளை மேன்மேலும் வளரும்படி பண்ணும் -தத் உபய வஸ்ரான சம்சாரிகளை
கண் எதிரே கண்டால்-அணுகில் மேல் விழுந்து அள்ளிக் கொள்ளும் அதிக குரூரமான சர்பத்தை
கண்டால் போலேயும் அஞ்சி நடுங்கி பிற் காலித்து நமக்கு பாதகர் என்றே நினைத்தும் –

தங்களுடைய உபதேசம் அனுஷ்டானங்கள் இரண்டாலும் -அஹங்காராதிகளின் தோஷ தர்சனத்தை
பண்ணுவித்து -தத் பிரசங்கத்திலே பீத பீதனாம் படி பண்ணி -சவாசனமாக அவற்றை நிவர்திப்பிக்கும்
மத்யம பத (-நமஸ்-உகாரம் என்றுமாம்) நிஷ்டரான ஸ்ரீ வைஷ்ணவர்களை காணப் பெற்றால்-தன்னுடைய அநர்த்த ஆப்யுதங்கள்
இரண்டும் தங்களதாய்-தீயது விலக்கி-நல்லத்தில் மூட்டி ரஷிக்கும் ஆப்த பந்துக்களை கண்டால் போலே
அத்ய ஆதரம் பண்ணி நமக்கு நல் துணை யானவர்கள் என்று நினைத்தும் –

அடியிலே கரண களேபரங்களை தந்து -அவற்றை கொண்டு வியபிசரியாமல் நல் வழி நடக்கும் படி சாஸ்த்ரங்களை காட்டி –
அக்ருத்ய கரணாதிகளில் சிஷித்து சர்வ அவஸ்தையிலும் தன்னுடைய ஹிதமே பார்த்து போரும் ஈஸ்வரனை
அர்ச்சா ஸ்தலங்களிலே கண்களார கண்டால் -உத்பாதகனாய் -வித்யாப்ரதனாய் –
அபேத பிரவர்தகனாதபடி நியமித்து நடத்தி கொண்டு போரும் ஹிதைஷியான
பிதாவை கண்டால் போலே -சிநேக சாத்வச வினயங்களை உடையனாய் கொண்டு -நமக்கு ஹித பரன்-என்று நினைத்தும் –

அநாதி காலம் அசந்நேவ என்னும் படி -கிடந்த தன்னை -பகவத் சம்பந்தத்தை அறிவித்து –
சத்தானாக்கி மென் மேலும் தன் உபதேசத்தாலே ஞான வைராக்ய பக்திகளை  விளைவித்து –
கையில் கனி என பகவத் விஷயத்தை காட்டித்தரும் -மகா உபகாரகனாய் –
உன் சீரே உயிர்க்கு உயிராய் -என்றும் –
உன் தன் மெய்யில் பிறங்கிய சீர் அன்றி வேண்டிலேன் -என்றும்
சொல்லும்படி -குண விக்ரஹங்களாலே தனக்கு தாரக போக்யனுமாய் இருக்கும்
சதாச்சார்யனை  கண்ணுக்கு இலக்காகும் படி கண்டால் -கண்ணாஞ்சுழலை இடும்
பெரும் பசியன் -தாரகமும் போக்யமுமான சோற்றை கண்டால் போலே
அத்ய அபிநிவேசதோடே அனுபவித்து -நமக்கு தாரக போக்ய விஷயம் என்றே நினைத்தும் –

சாத்யாந்தர நிவ்ருத்தாதி சமஸ்த ஸ்வாபவ  சம்பன்னதயா -சம்யக் ஞான பிரேமவானாய்
இருக்கும் சச் சிஷ்யனைக் கண்டால்-தனக்கு ஆனந்த ஆகவமான அபிமத விஷயத்தை
கண்டால் போலே -பகவத் குண அனுசந்தான தசையில் -நாம் சொல்லுகிற பகவத் குணங்களை
ஆதரித்து கேட்ப்பது -அனுபாஷிப்பது -வித்தனாவதாம் ஆகாரங்களாலே நமக்கு
ஆனந்த அவஹன் என்று நினைத்தும் –

அஹங்கார அர்த்த காமங்கள் மூன்றும் -இத்யாதி –
இவை மூன்றிலும் வைத்து கொண்டு -அஹங்காரம் அனுகூலர் பக்கல் -அநாதாரத்தை பிறப்பிக்கும் –
அதாவது சேஷத்வத்தை தன் சன்னிதியில் ஜீவிக்க ஒட்டாத படி இறே அகங்காரத்தின் பலம் இருப்பது –
அஹங்காரி யானவன் -ந ந மேயம் கதஞ்சன-என்று இருக்குமது ஒழிய ஒரு விஷயத்திலும் தலை சாய்க்க இசையானே –
ஆகையாலே அஹங்காரம் மேல் இடுமாகில் -ஸ்வரூப வர்த்தகராய் கொண்டு அனுகூலராய் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களை கண்டால் –
நம்முடைய சேஷிகள் என்று துடை நடுங்கி எழுந்து இருந்து பிரணமாதி பூர்வகமாக அனுவர்தகங்களை பண்ண ஒட்டாதே -தன்னை
அவர்களில் அதிகனாவாதல் -அவர்களை தன்னோடு சமராகவதால் -புத்தி பண்ணி அநாதாரிக்கும் படி பண்ணும் என்கை –

அர்த்தம் பிரதி கூலர் பக்கல் ப்ராவண்யத்தை பிறப்பிக்கும் -அதாவது –
ஆரையாகிலும் சென்று அநு வர்த்தித்து -ஒரு காசு பெற்றதாய்
விட வேணும் என்னும் படி இறே அர்த்த ராகம்  இருக்கும் படி –
ஆகையால் அது ஸ்வரூப நாசகத்வேன-பிரதி கூலரான சம்சாரிகளைக் கண்டால் –
வெருவி ஓடிப் போக வேண்டி இருக்க -ஒரு காசை நச்சி அவர்களோடே உறவு பண்ணி –
அவர்கள் இருந்த இடங்களிலே -பலகாலம் செல்லுவது -அவர்களை அழைத்து விருந்து இடுவது –
அவர்கள் குண கீர்த்தனம் பண்ணுவதாம் படி -அவர்கள் விஷயத்தில் பிராவண்யத்தை  உண்டாக்கும் என்கை-

காமம் உபேஷிக்கும் அவர்கள் பக்கல் அபேஷையை பிறப்பிக்கும் -காமயத இதி காம -என்கிறபடி –
காம சப்தத்தாலே விஷய சம்போக சுகத்தை சொல்லுகிறது -அது ஈசி  போமின் – இத்யாதிப் படியே –
தாரித்ர்ய வார்த்தகாதிகள் அடியாக தன்னை முகம் பாராமல் தள்ளி -கதவடைத்து -உபேஷாவாதம் பண்ணும்
ஸ்திரீகள் பக்கலிலே -ஏழையர் தாம் இழிப்ப  செல்வர் -என்கிறபடியே -அவர்கள் உபேஷாவாதம்
முதலானவை தன்னையே உத்தேச்யமாய் கொண்டு செல்லும் படி -வி லஷணர் கேட்டால் சிரிக்கும் படியான
ஹேய அபேஷையை விளைக்கும் என்கை –

ஆக இப்படி அஹங்காராதிகள் மூன்றும் –
ஸ்வரூப வர்த்தகரை அநாதரிக்கும் படியும் –
ஸ்வரூப நாசகரை ஆதரிக்கும் படியும் –
ஸ்வரூப நாசகதையோடே -உபேஷகருமாய் இருக்கும் அவர்களை அபேஷிக்கும் படியும் –
பண்ணும் என்று அவற்றின் கொடுமைகளை அநு சந்தித்து -என் செய்ய தேடுகிறதோ -என்று அஞ்சி –
அர்த்த காம அபிமானங்கள் மூன்றும் -என்று பாடம் ஆனாலும்- (கர்வ அபிமான அஹங்காரம் என்றும் உண்டே ) அபிமான
சப்தத்தாலே அஹங்காரத்தை சொல்லுகிறது ஆகையாலே -அனுகூலர் பக்கல் -இத்யாதியை –
நிரை நிரை ஆக்காதே -யதா யோகம் கொண்டு கீழ் சொன்ன பிரகாரத்திலே யோசிக்க கடவது –

ஆத்ம குணங்கள் -இத்யாதி -சம தமாதி ஆத்ம குணங்கள் -அநாதி காலம்  அஹங்காராதிகளுக்கு
விளை நிலமாய் -அநாத்ம குணங்களை கூடு பூரித்து கொண்டு -கர்ம பரதந்த்ராய் இருக்கிற
நம்முடைய யத்னத்தாலும் -ஆத்ம குண உதய விரோதிகளான அஹங்காராதிகளுக்கு வர்த்தகராய்-
அநாத்ம குண பரி பூரணராய் -கர்ம வஸ்ரராய் -இருக்கிற பிறருடைய யத்னத்தாலும் –
பிறப்பித்துக் கொள்ள  ஒண்ணாது -ஆத்ம குணங்களுக்கு எல்லாம் கொள்கலமாய்-அடியிலே
தன்னுடைய நிர்கேதுஹ கிருபையாலே நம்மை அங்கீகரித்து அருளி -நமக்கு
ஆத்ம குணம் உண்டாவது எப்போதோ என்று பல காலும் கரைவது -பகவானை
அர்த்திப்பதாய் கொண்டு போரும் சதாச்சார்யன் உடைய பிரசாதம் அடியாக வருகிற நம்முடைய
ஆத்ம குண உதய விரோதி பாப ஷயம் பண்ணி -அமலங்களாக விழிக்கும் பகவானுடைய
பரிபூர்ண பிரசாதத்தாலே பிறக்கும் அத்தனை என்று அத்யவசித்து

தேக யாத்ரையில் உபேஷை யாவது -தேக ரஷண அர்த்தமான வியாபாரத்தில் விருப்பமற்று இருக்கை-
ஆத்ம யாத்ரையில் அபேஷை யாவது -சேஷத்வமே வடிவான ஆத்மாவுக்கு தாகரகாதிகளான
குண அனுபவ கைங்கர்ய பிரவ்ருத்தியில் -பெற்ற  அளவால் த்ருப்தனாய் இராதே -மேன்மேலும் ஆசைப் படுகை-

பிரக்ருத வஸ்துக்களில் போக்யதா புத்தி நிவ்ருத்தி யாவது -அசந ஆசாதனங்களுக்கு-(உண்ணவும் உடுக்கவும் உறுப்பான
பிராக்ருத பதார்த்தங்களில் ஆதரத்துக்கு அடியான போக்யத்வ புத்தி தவிருகை –
தேக தாரணம் -இத்யாதி -அதாவது -அந்த பிராக்ருத வஸ்துக்களில் தேகம் தரிக்கைக்கு  தக்க அளவு புஜிக்கை–
பரமாத்மாவான சர்வேஸ்வரனுடைய சமாராதனத்தின் சமாப்தி ரூபையான பிரசாத பிரதி பத்தி என்கிற -புத்தி விசேஷமும் என்கை –
அன்றிக்கே -பரமாத்ம சமாராதன சமாப்தி -என்கிற புத்தி விசேஷமும் -தத் பிரசாத பிரதி பத்தி என்கிற – புத்தி விசேஷமும் -என்னவுமாம் –

தனக்கு -இத்யாதி -அதாவது -முமுஷுவாய் -பிர பன்னன் ஆனாலும் -பிராரப்த சரீரம் இருக்கும் அளவும் -தாப த்ரயம் வருவது தவிராது இறே -ஆகையாலே
இச் சரீரத்தோடு இருக்கிற தனக்கு -தாப த்ரயங்களில் -ஏதேனும் ஒரு க்லேசம் உண்டானால் -இது அனுபவ விநாச்யமான பிராரப்த கர்ம பலமன்றோ –
ஏவம் பூதம் கர்மங்கள் உள்ளவை கழியும் அளவன்றோ -இச் சரீரத்தோடு எம்பெருமான் வைக்கிறது-
பிராப்தி பிரதிபந்தங்களில் ஒன்றாகிலும் கழியப் பெற்றோமே என்கிற அநு சந்தானத்தாலே ஆதல் –
துர் வாசனையாலே இவ் உடம்பை விட இசையாமல் -பிராக்ருத பதார்த்தங்களையும்
ஜீவித்து கொண்டு -சம்சாரத்துக்கு உள்ளே பொருந்தி இருக்கிற நம்மை -துக்க தர்சனத்தை
பண்ணுவித்து இதில் பற்று அறுத்து கொண்டு போக நினைக்கிற சர்வேஸ்வரனுடைய
கிருபையின் பலம் அன்றோ -இது என்கிற அநு சந்தானத்தாலே ஆதல்-உண்டாகக் கடவ ப்ரீதியும் என்கை –
பூர்வாகம் உத்தராகம் பிராரப்த கண்டம் எல்லாம் கழிக்கிற வனுக்கு -வர்த்தமான சரீரத்தில் அனுபாவ்ய கர்மம் இத்தனையும் கழிக்கை அரிதன்று இறே –
கர்ம பலமான துக்க பரம்பரைகளை அனுபவியா நின்றாலும் -இத் தேகத்தை விட என்றால்
இசையாத இவனை -நிர் துக்கனாக்கி வைப்போம் ஆகில் -இச் சரீரத்தோடு நெடும் காலம்
இருக்க இச்சித்தல் -இன்னும் ஒரு சரீரம் தன்னை இச்சிக்குதல் செய்யும் ஆகையால் –
இச் சரீரத்துக்கு உள்ள கர்மம் அனுபவித்தே இருக்கக் கடவன் என்று இறே வைக்கிறது –
ஆனபின்பு மற்று உண்டான கர்மங்கள் எல்லாம் கழித்தது சம்சாரத்தில் நின்றும் இவனை
கடுக திருவடிகளிலே சேர்த்து கொள்ளுகையில் உண்டான கிருபையாலே ஆனாப் போலே –
இத்தனையும் கழியாமல் வைத்ததும் கிருபையாலே  இறே –
அநாதி காலம் பரிக்ரஹித்த சரீரம் தோறும் அனுபவித்த துக்கம் -பகவன் நிக்ரஹ பலம் -இவன்
அனுக்ரஹ பலம் -யஸ்ய அனுக்ரகம் இச்சாமி -தஸ்ய வித்தம் ஹராம் யஹம் -என்றார் இறே– ஆகையால்-இத்தை கிருபா பலம் -என்கிறது –

ஸ்வ அனுஷ்டானத்தில் சாதனத்வ புத்தி நிவ்ருத்தி -யாவது -பிரபன்னனான தன்னுடைய
அதிகார அநு குணமாக அனுஷ்டித்து கொண்டு போரும் நல் ஒழுக்கங்களை-பேற்றுக்கு சாதனமாக நினையாது ஒழிகை –
விலஷணருடைய ஞான அனுஷ்டானங்களில் வாஞ்சை யாவது -நாட்டாரோடு இயல் ஒழிந்து
நாரணனை நண்ணி இருக்கையாலே -நிர்மல ஞான பக்திகராய் இருக்கும் -விலஷணரான பூர்வர்களுடைய –
விலஷணமான அந்த ஞானமும் அனுஷ்டானமும் நமக்கு உண்டாக வேணும் என்னும் ஆசை –

உகந்து அருளின நிலங்களில் ஆதார அதிசயம் -ஆவது -தான் உகந்த ஊர்  -என்கிறபடியே
சர்வேஸ்வரன் உகந்து வர்த்திக்கிற திவ்ய தேசங்கள் என்றாதல்-
கண்டியூர்  அரங்கம் மெய்யம் கச்சி பேர் மலை என்று மண்டினார் -என்றபடியே
மனஸ் அங்கே மண்டி விழும்படி மென்மேலும் பெருகுகிற  ஆதரம் –
மங்களா சாசனம் ஆவது -அவ்வோ திவ்ய தேசங்களில் விரும்பி வர்திக்கிறவனுடைய சௌகுமாரதையும் வாசி அறிந்து நோக்கும் பரிவர் இல்லாமையும் –
பிரதிகூலர் வர்க்கங்களின் அதிசயத்தையும் நினைத்து ஏங்கி -என் செய்ய தேடுகின்றது என்று வயிறு எரிந்து இரவும் பகலும் திருப் பல்லாண்டு பாடுகை –

இதர விஷயங்களில் அருசி யாவது -பகவத் வியதிரிக்தங்களான ஹேய விஷயங்களில் -தோஷ தர்ச நாதிகளாலே விருப்பம் அற்று இருக்கை –
ஆர்த்தி -யாவது -இதர விஷய ப்ராவண்ய ஹேதுவான இவ் உடம்போடு இருள் தரும்  மா ஞாலத்தில் இருக்கிற இதில் அடிக் கொதிப்பாலும் –
பிரப்ய வைலஷண்ய தர்சனத்தால் வந்த பிராப்தி விளம்ப அசஹத்வத்தாலும் படும் கிலேசம் –
அனுவர்தந நியதி யாவது -பகவத் பாகவத விஷயங்களில் -ஸ்வ சேஷத்வ அநு குணமாக –
நீச உக்தி நீச விருத்திகளாலே பண்ணும் அநு வர்த்தநத்தை -பிராக்ருத விஷயங்களில் மறந்தும் செய்யாது ஒழிகை —

ஆகார நியதி -யாவது -ஜாத்ய ஆஸ்ரய நிமித்த அதுஷ்டங்களாய் -சர்வேஸ்வரனுடையவும் ததீயருடையவும்
பிரசாதங்களான வஸ்துக்களையே ஆகாரமாகக் கொள்ளும் அது ஒழிய -தத் இதரங்கள் ஆனவை கொள்ளக் கடவோம் அல்லோம் என்று இருக்கை –

அனுகூல சஹவாசம்–ஆவது -ஸ்வ சம்சர்க்கத்தாலே ஜ்ஞானாதிகளை வர்திப்பியா நிற்கும் அனுகூலர் ஆனவர்களுடன் ஷண காலமும் பிரியாதே கூடி வர்த்திகை –
பிரதி கூல சஹவாச நிவ்ருத்தி -யாவது -ஸ்வ சம்சர்க்கத்தாலே -ஜ்ஞான அனுஷ்டானங்களை நசிப்பியா நிற்கும் பிரதிகூலரானவர்களுடன் ஷண காலமும் கூடி வர்த்தியாது ஒழிகை –
இங்கு சொன்ன அனுகூலரும் பிரதி கூலரும் இன்னார் என்னும் இடம் மேலே தாமே அருளிச் செய்ய கடவர் இறே —

சதாச்சார்யா பிரசதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் -அதாவது –
கீழ் சொன்ன இவை இத்தனையும் – ஜ்ஞான அனுஷ்டான பரிபூர்ணனான சதாச்சார்யன் உடைய சர்வ மங்கள ஆவஹமான
பிரசாதத்தாலே தன்னடையே மேன்மேலும்  அபிவிருத்தமாம் படி செய்து கொண்டு-போரக்  கடவன் என்றபடி –
சதாச்சார்யா பிரசாதத்தாலே வர்த்திக்கும் படி இவன் பண்ணிக் கொண்டு போருகை யாவது – தத் பிரசாதகங்களை  செய்து கொண்டு போருகை –
தத் பிரசாதகங்கள் ஆவன -இதனுடைய உபபாதன ஸ்தலத்தில் அருளி செய்கிறவை –
போரக் கடவன் -என்று விதி ரூபேண அருளிச் செய்தது -இதனுடைய அவஸ்ய அனுஷ்டேத்யத்வம் தோற்றுகைக்காக-

இப்படி -என்று தொடங்கி –உபேய விரோதிகளாக இருக்குமவை -307–உபய வைபவ விசிஷ்ட பிரபன்னன் – தினசரியா அனுசந்தானம்
அஹங்கார விஷயங்கள் -ஸ்வரூபேண முடித்தும் பாகவத விஷய விரோதியாயும் -பிராப்தி பிரதிபந்தகங்கள் -சர்வ பிரகாரம் இம் மூன்றாலும் -அசத் சாம்யா பத்தி ஆக்கும்
சரீரத்தை பற்றி வரும் அஹங்காரம்/ ஆத்மாவை பற்றி வரும் அஹங்காரம் – -தேகாத்ம பிரமம் ஸூ வ ஸ் வா தந்த்ர பிரமம் – –
விஹித நிஷித்த ரூப விஷய ப்ராவண்யம் –உத்பத்தி விநாசம் விளை நிலம் –
அஹங்கார விஷய ப்ராவண்ய ஹேய தேகம் –விசிஷ்ட தான் ஆகையால் / சரீரத்தை கெட்ட வழியில் -நடத்தும் தானே /
அஹங்கார விஷய ரதி க்ராஹ க்ரஸ்தனாய் -முதலைகளால் பிடிக்கப் பட்டவனாய் -/ பகவத் விமுகனாய் போன தன்னை -ஸ்ரவண -மனன- தர்சனத்தால்-உள்ள படி கண்டால்
உருவின வாளும்-இறுக்கின பல்லும்-சத்ருவைக் கண்டால் போலே சரீர விசிஷ்டனான தன்னை கண்டால் இது நாஸகம் என்று நினைத்தும் –

இதுக்கு தூபம் போடுவார்கள் சம்சாரிகள் -/தத் -வசீகராய் திரியும் —சம்சாரிகளை காதா சித்கமாக கண்டால்-திவ்ய தேச வாசித்தால் இது துர்லபம் தானே –
சீறி துஷ்ட சர்ப்பம் போலே பாதகர் என்று நினைத்தும் -கீழே நாஸகம் -இங்கு பாதகம் -சிகிச்சை பண்ணி சரி பண்ணலாம் –

அஹங்காராதிகளில் தோஷ தரிசனத்தை பண்ணுவித்து -பேர் சொல்ல கருகி குலையும் படி சவாசனமாக நிவர்த்தகரான தத் உபய ஸ்பர்சம் அற்ற ஸ்ரீ வைஷ்ணவர்கள் –
ஈட்டம் கண்டிட கூடுமேல் -தூர தேசம் போய் திரும்பி வந்த அபிமத பந்து -சர்ப்பங்கள் -சத்ருக்கள் மத்யத்தில் பயந்து இருப்பவன் அத்தை -கெட
அபிமத பந்துவை சென்று கை பிடித்தது போலே நினைத்தும்

இவர்களை முன்னிட்டு -ஆசைப்பட்ட படி விடாய் தீர அர்ச்சாவதார -பிதா போலே -ஹிதம் ஸ்நேஹம் பயம் இரண்டும் -ஸ்வ தந்த்ர ஸ்வாமி என்று நினைத்தும்

கையில் கனி என காட்டித் தரும் ஆச்சார்யரை விருப்பத்துடன் பக்தியுடன் -பெரும் பசியால் சேர்ப்பால் சோற்றை கண்டால் போலே அபி நிவேசத்துடன் மேல் விழுந்தும்

ஆச்சார்ய சேவையால் பழுத்த ஸச் சிஷ்யன் -தான் உகந்த -சேஷத்வ பாரதந்தர்ய ஆத்ம பூஷணங்களை-பூட்டி -சூடகமே இத்யாதி பராபர குருக்கள் பூட்டும் இவை —
வைராக்யம் ஆகிற கட்டுக்குள்ளே அந்நிய த்ருஷ்ட்டி படாதபடி மறைத்து -பகவத் குண அனுபவ போக விஷயம் ஆக்கி
நிரந்தரம் நெடு நோக்கு கொள்ளும் விஷயம் -இருந்தான் கண்டு கொண்டே -என்றபடி

ஆக – விரோதி வர்த்தக ஸ்வரூப விஷயத்தில் பாதக பிரதிபத்தியும் -/தன் நிவர்த்த விஷயத்தில் ஸ்வரூப வர்த்தக பிரதிபத்தியும் -/
ஸ்வ தந்த்ர சேஷி பக்கல் ஹிதைஷி பிரதிபத்தியும் / -ஆச்சார்ய பர தந்த்ர சேஷி பக்கல் பிராப்ய ஏக பிரதிபத்தியும்-/
தத் பரதந்த்ரர் பக்கல் ஆதரணீய பிரதிபத்தியும் கொண்டு

சம்சார ஹேதுவாய் கொண்டு அநர்த்த காரமான -அஹங்காரம் -அர்த்தம் -காமம் -ஆஸ்ரயியாய் அஹங்காரம் இது தானே மூலம் -ஸ்வரூப வர்த்தகராய் கொண்டு —
ஸ்ரீ வைஷ்ணவர்களை உபாசிக்கப் பண்ணும் -ஸூ ஆதிக்ய சாம்யா புத்தி நினைக்க வைக்கும் என்று கருகி குலைக்கும் என்று அஞ்ச வேண்டுமே
அர்த்தம் -பிரதி கூலர் பக்கல் சம்சாரிகள் பக்கல் இடா காசுக்கு பின்னால் தொடர்ந்து நச்சு பண்ணும் ஆத்ம நாசகரமான ப்ராவண்யத்தை பிறப்பித்தும்
அபிராப்த விஷய காமம் -கிருஷ்ண காமம் இல்லை -தன் கால் மேல் விழில் உதைத்து தள்ளி -முகம் காட்டாமல் உபேக்ஷிக்கும் ஸ்த்ரீகள் பக்கல் –
கால் ஸ்பர்சம் -முகம் தர்சனம் கண்டு ஆனந்தித்து –அபஹாஸ்யம் -என்று அஞ்சியும் -குடல் குலைந்து
ஆத்ம குணங்கள் –தன்னால் வளர்க்க முடியாதே -பிறராலும் -அநாத்ம குண பூதர் -இருப்பதையும் குலைப்பார் -/
சகல ஆத்ம குண சம்பூர்ணரான சதாச்சார்யர் உடைய நிர்ஹேதுக கடாக்ஷம் அடியாக – –ஞானாதி குண பூர்னரான -பகவத் கடாக்ஷம் -மூலமே வரும் -என்று துணிந்து
தேக யாத்திரை -குளித்து உண்டு உடுத்தி -பூசி புலர்த்தி மதரத்து -திரிகை —-கடைக் கணியாமல் உபேக்ஷிக்கையும் –
சத்துக்கள் உடன் சேர்ந்து சதாச்சார்யர் தத்வ அர்த்த சிந்தனை பண்ணி -சம்சார நிவ்ருத்தி ப்ராப்ய அர்ச்சிராதி -ஆத்ம யாத்திரையில் இடைவிடாத விருப்பமும்
அன்னம் பானீயம் நெய் ஷீரம் சந்தனம் பூ வஸ்திரம் தாம்பூலாதி பிராகிருத வஸ்துக்கள் – -ராகம் ஆசை வளர்த்து போக்யதா புத்தியை சவாசனமாக விட்டு
பரமாத்மா கைங்கர்யம் பண்ணி அந்தர்யாமி சமாராதான சதாப்தி பிரசாத பிரதிபத்தி -தத் ததீய பிரசாத பிரதிபத்தி –
அர்த்த புத்ர விநாச கிலேசம் நினைவில்லாமல் உண்டானால்
பிராப்தி பிரதிபந்தகத்தில் கொஞ்சம் குறைந்ததாக நினைத்து –
பிராப்தி காலம் அணித்தாக வந்ததே என்ற எண்ணமும் -வருந்தி பிறக்கும் ப்ரீதியும் -கர்வ ஹேதுவை போக்கி -கிருபா பலம் –
அஹங்காரம் தலை சாய்த்து சம்சாரத்தை அடி அறுத்து வருத்தம் இல்லாமல் பெற்ற ப்ரீதியும் –
அத்தலையில் குறை இல்லாதபடி நடுவில் கர்மம் வந்ததே என்ற எண்ணமும் –
பிராரப்த கர்மம் அனுவர்த்திக்கும் / உடம்பே ஆபத்து -உடம்பில் ஆபத்து இல்லை / கிருபா பல புத்தியில் -ஸமாச்ரயணம் பண்ணின போது –
இச்சா ஹேதுக்கா சரீரா வாசனா தோஷங்களை கிருபையால் வைத்து மோக்ஷ விருப்பம் பிறப்பித்தும் –
த்வயம் நித்ய அனுசந்தானம் -மோக்ஷ ஹேது என்ற நினைவு இல்லாமல் -சாதன புத்தி இல்லாமல் -சவாசன நிவ்ருத்தியும்
ஞான பக்தி விலக்ஷணர் பூர்வாச்சார்யர் உடைய நிர்மல ஞான அனுஷ்டானங்களில் நித்தியமான ஆசையும்
ஜங்கம ஸ்ரீ விமானம் -பாகவதர் திரு உள்ளம் -ஆதரவு வைக்க வேன்டும் -/ மங்களா சாசனம் ஆதார அதிசயம் -பாகவதர்களுக்கும்
இதர தோஷ பூயஸ்தம் -அருசியும் ஜுகுப்ஸனை வெறுப்பும் /திருஷ்ணை விளைந்து கூப்பிடும் ஆர்த்தியும் -காண வாராய் -துடிப்பும்
ததியர் விஷயத்தில் நீச யுக்தி- விநயம் – அஞ்சலி நமஸ்காரம் -ப்ராக்ருதர் பக்கல் மறந்தும் செய்யாமல் -/
நிஷித்த பிராகிருத பதார்த்தம் ஸ்பர்சியாமல் -ஆகார சுத்தி / பகவான் கண்டு அருளியது மட்டுமே ஸ் வீ கரித்து
ஞான அனுஷ்டான வர்த்தகர் அநு கொள்ள ஸ்ரீ வைஷ்ணவர் -நிரந்தர சகவாசம் /பிரதி கூலர் பக்கல் இருக்க ஒட்டாமல் –
க்ஷணம் தோறும் ஆச்சார்யர் அனுவர்த்தனம் பண்ணி தடங்கல் இல்லா நித்ய ப்ரஸாதத்தால் வளரும் -முமுஷு பிரபன்னர் தினசரியா முதல் சூரணை -இது

அஹங்காரம் தான் தேக ஆத்ம அபிமான ரூபமாயும் –
தேஹாதிரிக்த  ஆத்ம விஷயத்தில் -ஸ்வாதந்திர அபிமான ரூபமாயும்-இரண்டு வகை பட்டு இறே இருப்பது –
இவ்விடத்தில் இவை இரண்டும் சேர சொல்லப் படுகிறது –

உபாய உபேய அதிகாரங்களில் சில கீழே பார்த்தோம் சக்தி லஜ்ஜை விட்டு இத்யாதி -உதாரணங்களையும் பார்த்தோம் –
த்யாஜ்யம் உபாதேயம் -தினசரியா அந்தர்கதம்-
நவ பிரகரணத்தில் -நாலாவது சித்த உபாய நிஷ்டை சொல்லி இது ஐந்தாவது
த்வய விவரணம் -நமஸ் அர்த்தம் கீழே சொல்லி – கைங்கர்யம் பண்ண பெறுவேன் ஆக வேன்டும் -/ ஸ்யாம்–இருக்க வேன்டும் –
தருவித்து கொள்ள வேன்டும் -உத்தம புருஷன் -பிரபத்யே -உத்தம புருஷன்
நான் என்ன மாதிரி இருக்க வேன்டும் – நான் அடியேனாக வேணுமே முதலில் -அதுக்கு தான் தினசரியா -இருக்கும் அளவில்
அதிகாரி விசேஷம் -அனுஷ்டான விஷயம் -இருக்கும் நாள் வரை -இதுவே சங்கதி -/
உபாய அதிகாரி மார்பில் கை வைத்து உறங்கலாம் உபேய அதிகாரி இவை எல்லாம் பண்ண வேண்டுமே /
அஹங்கார மூலம் தான் என்கையாலே ப்ரஹ்மாவாய் இழந்து போவது தான் தானே -அதனால் இப்படி தொடங்குகிறது –
விஹித நிஷித்த ரூப விஷயாந்தரங்களை எனக்கு விருப்பம் -என்றாலே தேகாந்தர புத்தி / பகவத் சேஷ பூதன் என்று அறியாமலும் ஸூ போக்யத்வ புத்தி வரும் -/
அஹங்காரம் விஷயாந்தர ப்ராவண்யத்துக்கு விளை நிலம் ஜென்ம பூமி -பகவத் ஸ்வரூபம் திரோதான கரி-எத்தாலும் மறைக்க முடியாத
ஸ்ரீ வைகுண்டம் தேஜஸ் -அதுக்கே பகவான் ஆதாரம் -இத்தையே மறைக்கும் மாயா -பிரகிருதி காரியம்-சரீரம் / குண த்ரயாத்மகம் -பிரகிருதி பரிணாம ரூபம் /
ஸூ கர்ம விசேஷ ஆராப்தமாய் இருக்குமே -கர்மத்தால் தொடங்கிய சரீரம்
கர்ம பலம் அனுபவிக்க தானே சரீரம் -ரஜஸ் தமஸ் இவற்றால் கலங்கப் பண்ணுமே -சரீர விசிஷ்டதயா மயங்கி–சரீரமாகவே தான் என்று மதி மயங்கி – –
ஸ்வ தந்தர்ய புத்தி -அபிமானம் -தனக்கு -ஆத்மாவுக்கு –அநர்த்த விஷயங்களில் அதீத ஆதரமும் பண்ணுவான் -/
ஸ்தாலீ பாகம் – பானை தண்ணீர் நெருப்பு -போலே ஆத்மா சரீரம் கர்மா -அஹம் அன்னம் -பக்தி உழவன் -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
தன்னை -தேக விசிஷ்ட ஸூ பரம் -/ கண்டால்-தரிசித்தால் -தர்சனம் போலே பார்க்க வைக்கும் –

ஸ்ரீ வைஷ்ணவர்கள் -இந்திரிய அர்த்தம் திரும்பி பார்க்காமல் க்ரோதம் லோபம் மானம் மோகம் ஆலஸ்யம் இல்லாதவர்கள் –
அஹங்காரம் தொலைத்து -நமஸ் பத நிஷ்டர்-அநந்யார்ஹ சரண்யத்வம் உடையவர்கள் -இங்கு -ஆத்ம பந்து தானே ஆப்த பந்து ஆவார்கள் /-
பந்து -ஆப்த பதம் என்றவாறு – -தன்னை வணங்க வைத்த கரணங்கள் உமக்கு அன்று என்று சொல்லி உபதேசிப்பார்களே –
காருணிகனான சர்வேஸ்வரன் நீர்மையினால் அருள் செய்தான் -நியமன சீலன் -ஸூ ஹ்ருதயம் -ஈஸ்வரன் கண்டால் -என்றது அர்ச்சா ஸ்தலங்களில் கண்களார கண்டு
பிறப்பித்தவர் -வித்யா ப்ரவர்த்தகர் -ஸ்நேஹம் பயம் பணிவு -ஹிதைஷி -அரவிந்தம் போன்ற நீண்ட நீண்ட கண்ணானை கண்டு கொண்டேனே /பாதீதி பிதா -ரக்ஷகன்
சம்பந்த ஞானம் தெரிந்தால் தானே சத்தாவான் -கையில் கனி என்ன கண்ணனைக் காட்டித் தரும் சதாசார்யர் -உன் தன் மெய்யில் பிரங்கிய சீர்
திருமேனி யையும் குணங்களை யையும் -அனுபவித்து -தாரக போக்யங்களாக – வேன்டும் படி காட்டிக் கொடுப்பார் –
ஆச்சார்ய அபிமானம் கைங்கர்யம் தவிர வேறே வேண்டாம் என்று இருக்கும் சாத்யாந்த நிவ்ருத்தி உள்ள ஸச் சிஷ்யர்
போதயந்த பரஸ்பரம் -சாத்யாந்தர நிவ்ருத்தாதி-ஆதி பல சாதன சிசுரூஷா -கைங்கர்யம் என்றபடி –
சந்நிதி -அருகில் இருந்தால் என்ற பொருளில் – /அர்த்தம் நீச வ்ருத்தி பண்ண வைக்கும் /பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்று அலைய வைக்கும் /-
சேஷத்வ ஸ்வரூப நாஸகம் ஆக்கும் அஹங்காரம் அர்த்தம் காமம் மூன்றும் –

என் நான் செய்கேன் -யாரே களை கண் என்னை என் செய்கின்றாய் –பகவத் பிரசாதம் சதாசார்ய பிரசாதத்தாலே வரும் என்று துணிந்து இருக்க வேன்டும் –
காருண்யா சாஸ்த்ர பாணிநா /ஆத்ம குணம் பிறக்க அநாதிகாலம் பிரதிபந்தகங்கள் இருக்க அமலங்களாக விழிக்கும் -கமலக் கண்ணன் என் கண்ணில் உள்ளான் –
அயன புண்ணிய காலம் என்றதும் ஸ்ரீ ராமானுஜர் உத்தரீயம் மேலே வீசி மகிழ்ந்து அணுகப் பெரும் நாளிலே ஒரு அயனம் ஒழிந்ததே என்ற திரு உள்ளம் கொண்டாரே –
யஸ்ய அனுக்ரகம் இச்சாமி -தஸ்ய வித்தம் ஹராம் யஹம் -அனுக்ரஹம் தர இச்சிப்பவனுக்கு சொத்தை பிடுங்கி பந்துக்களை விரோதிகளாக்கி –
நோய் நொடிகள் கொடுத்து -செய்வேன் என்றானே ஸ்ரீ கீதாச்சார்யன் பூர்வாகம் உத்தராகம் வெட்டி -சொத்தை அடைவது எப்போதோ என்று-திருவடிகளில்
சேர்த்துக் கொள்வது எப்பதோ என்று பார்த்து இருக்கும் ஸ்வாமி அன்றோ /கீழ் சரீரம் பெற்றது நிக்ரஹ பலம் -சரணாகதி அடைந்த இந்த பிறவியில் அனுக்ரஹ பலம் /
பரஸ்பர நீச பாவம் பாகவதர்கள் இடத்தில் -பிராகிருத விஷயங்களில் கூடாது /பிரசாதகங்கள்-தூண்டி விடுவது என்றபடி –
அனுவர்த்தனம் -ப்ரீதி அனுகுண வியாபாரம் -அருகில் பார்த்து சடக்கென எழுந்து நிற்க வேணும் -பிராண வாயு தானாகவே எழுமே –
தள்ளிப் பார்த்தாலும் எழுந்து இருக்க வேணும் / தர்சன அனுபவ ப்ரீதி வேன்டும் / சாஷ்டாங்க பிராணிபாதனம் / நிவேதனம் -அறிமுகம் / திருவடி தொழுது வந்தனம் /
எழுந்து அருள கை கொடுத்து / மார்க்க பிரதர்சனம் / பின்புறம் பக்கவாட்டு முன்னால் நடந்து கூட்டிப் போக வேன்டும் -ஜெயா ஜெயா வீர பாஷாணம் சொல்லி -பராக் கய்யியம் சொல்லி /
வீட்டுக்கு மரியாதை உடன் கூட்டி சென்று /சாந்தமான இடம் -ஆசனம் / பாத பூஜை / அர்க்கம் உபகாரம் /ஸூ ஸ் வாகதம்/ வீசி / ஷாமணம் -அபசாரங்களுக்கு /
ப்ரீதி -பகவத் சம்கதை / உப ஆசனம் –பக்கத்தில் கீழே உட்க்கார்ந்து -கடாக்ஷம் பெற / ஆஸ்ரயணம்/ ஆத்மாத்மீய நிவேதனம் /ஆஜ்ஜா -என்ன நியமனம் கேட்டு /
ஆலோக நிர்தேசம் வசனம் ஆதரவு மூன்றிலும் / சம்பந்தா சாதனம்-சம்பத்துக்களை கொடுத்தல் / இஷ்ட ஆதார / அநிஷ்ட நிவர்த்தனம் /
விரஹ அநிஷ்ட அஸஹிஷ்ணுத்வம் / தாஸ்ய அபிமானம் /அநு வ்ரஜ்யா-அவர் திரு மாளிகை வரை கூட சென்று / ஸ்ரவணம் கீர்த்தனம் / ஸ்ம்ருதி -/
பக்தி ஞான சமாச்சார வைராக்யம் கொண்டாட்டம் அனுமோதனம்/ சங்கம இச்சை உப கமனம் -நோக்கி நடத்தல் / அவர் உட்க்கார்ந்த பின் உட்க்கார்ந்து /
சமான சுக துக்கத்வம் -/ பரஸ்பர அர்த்த சிந்தனம் / ஆத்ம க்ஷேமகரம் / கிரியா காலே-வரித்து கூட்டி வர வேன்டும் / சதஸ் அக்ரேஸ பூஜ்ஜியம்/
சாந்நித்யம் சூரிகள் நடுவே / ஆஜ்ஜை பெற்ற மேலே கார்யங்கள் -/இப்படி பலவற்றையும் செய்ய வேன்டும் /
பாகவத கைங்கர்யம் மரம் கொடுக்கும் பழம் தானே மோக்ஷம் -பரத்வாஜர் சம்ஹிதை / ஸ்ரீ பாத தீர்த்தம் புத்ர பத்னி கொடுத்து பாவனத்வம்/ திருவடி பிடித்து விட்டு
ஜாதி ஆஸ்ரய நிமித்த ப்ரயுக்த துஷ்ட ஆகாரங்கள் -தாழ்ந்த ஜாதி வஸ்துவை -வெங்காயம் பூண்டு / ஆஸ்ரய -தர்மம் நழுவி சமைத்த உணவு /
நிமித்தம் தீட்டு உடன் செய்த அன்னம் கூடாதே /கால துஷ்டம் –ஊசி போன / தைலம் முதலான தீண்டப்படாத -/
பழையது உண்ணலாமோ -ஜலத்தில் வைத்த உணவு உண்ணலாம் / ஊறுகாய் சாப்பிடலாமே /
கிரியா துஷ்டம் -சூடு பண்ணி பக்குவம் -நெய் இல்லாமல் பண்ண கூடாதாம் -/சம்சாரக்கம் துஷ்டம் கேசம் புழு இத்யாதி / இப்படி ஆறும் துஷ்டங்கள் /
பாகவதர்கள் போனகமே உத்தேச்யம் -ஞானம் அனுஷ்டானம் வளர்த்து கொடுக்கும் /
சாஸ்திரம் ஆகமம் பார்க்காதவர்கள் இடம் சங்கமம் கொள்ளாமல் இருக்க வேன்டும் /

———————————————-

சூரணை-244-

மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ என்னில் –
ஜ்ஞான தசையில் -ரஷ்ய ரஷக பாவம் தன் கப்பிலே கிடக்கும் –
பிரேம தசையில் த்ட்டு மாறிக் கிடக்கும் –

இந்த திநசர்யையில் சொன்னவற்றை விவரிக்க வேண்டுமவற்றை விவரிப்பதாக
திரு உள்ளம் பற்றி -பிரதமத்தில் மங்களா சாசனத்தை
விவரித்து அருளுகிறார் –

ஹேய பிரத்ய நீகனாய் -கல்யாண ஏக தானனாய் -ஸ்வ இதர சகல ரஷகனாய் இறே
சர்வேஸ்வரன் இருப்பது -இப்படி இருக்கிறவனை தனக்கு உண்டான அமங்களங்களைப் போக்கி –
இல்லாத மங்களங்களை உண்டாக்கிக் கொள்ளக் கடவ தத் ரஷய பூதனான இவன்-
தனக்கு ரஷகனானவன் அவனுக்கு தான் மங்களங்களை யாசாஸிக்கை-ததேக ரஷ்யத்வ ரூபமான
ஸ்வரூபதுக்கு விருத்தம் அன்றோ என்கிற சங்கையை அநு வதிக்கிறார்-

மங்களா சாசனம் ஸ்வரூப விருத்தம் அன்றோ என்னில் -என்று -அத்தை பரிகரிக்கிறார் –
ஜ்ஞான தசையில் -என்று தொடங்கி-ஜ்ஞான தசை யாவது -சர்வேஸ்வரனே ரஷகனாகவும் –
தான் அவனுக்கு ரஷ்ய பூதனாகவும் -பிரணவத்தில் சொல்லுகிறபடியே-(ஜ்ஞான தசையில்) தெளியக் கண்டு அநு சந்தித்து இருக்கும் தசை -அந்த தசையில் –
களைவாய் துன்பம் களையாது ஒழிவாய் -இத்யாதிப் படியே
தன்னுடைய அநிஷ்ட நிவ்ருத்யாதிகளுக்கு அவனே கடவன் என்று இருக்கையாலே –
ரஷ்ய ரஷக பாவம் தனக்கடைத்த ஆஸ்ரயத்திலே கிடக்கும் –
பிரேம தசை யாவது -சர்வேஸ்வரனுடைய சௌந்தர்ய சௌகுமார்யங்களை அநு  சந்தித்து இவ் விஷயத்துக்கு என் வருகிறதோ என்று –
அஸ்தானே பய சங்கை பண்ணி -அவன் ஸ்வரூபத்தை அனுசந்திக்க ஷமர் அன்றிக்கே நெஞ்சு மறுகிறபடியான தசை –
அந்த தசையிலே ஈஸ்வரனை ரஷிக்க வழி தேடி தடுமாறுகையாலே- –
ஈஸ்வரன் பக்கலிலே ரஷ்ய பாவமும் -சேதனன் பக்கலிலே ரஷக பாவமும் -தனக்கடைத்த ஆஸ்ரயத்தில் அன்றிக்கே மாறாடிக் கிடக்கும் என்றபடி-

ஸ்வரூப நாஸகம் -வர்த்தகம் -விஷய புத்தியும் -ஆத்ம குணம் வளர்க்க -பிரபன்னன் தினசரியை சொல்லிய அநந்தரம் –
மங்களா சாசனம் – அனுகூல ஸஹவாஸ– பிரதி கூல ஸஹவாஸ நிவ்ருத்தி -மூன்றையும் விவரிக்க தொடங்கி —
பிரதி கூல சப்தார்த்தம் -சாதனாந்தர நிஷ்டர் -உபாஸகரை பிரதி கூலர் என்னலாமோ -ஸூ கத ஸ்வீகார நிஷ்டரை எப்படி /
ஞான பக்தி வைராக்யம் இருந்தும் மங்களா சாசனம் பண்ணாதார் எந்த கோஷ்ட்டி /
மங்களத்துக்கு மங்களம் சர்வ ரக்ஷகர் -மங்களம் போக்கி கொள்ள அசக்த ரஷ்ய பூதன் -மேலும் மேலும் அபி நவ –
இன்னும் ஒரு நூற்று ஆண்டு இரும் என்று -விபர்யய கரணம் விருத்தம் அன்றோ –
அநுசிதமாயும் அசம்பாவிதமாயும் இருக்கும் -ஹேய ப்ரத்ய நீகன் -அமங்களங்களே இருக்காதே அவன் இடம் /
கல்யாண ஏக ஸ்தானம் -மங்கள அசத்தா விரஹம்- இல்லாமை இருக்காதே /ஸ்வ இதர சகல ரக்ஷகன் -இவனை எல்லாரும் உள்ள ஒருவன் சொல்வது பொருந்தாதே –
அவனே ரக்ஷகன் -நாம் ரஷக பூதர்-அநந்யார்ஹ சேஷ பூதன் என்கிற -ஸ்வரூப ஞான தசையில் –தாத் யர்த்த அனுசந்தானம் -அவ ரக்ஷனே தாது –
அகார வாச்யன் ரக்ஷகன் மகார வாச்யன் ரஷ்யகம் -பரதந்தர்ய ஸ்வாதந்தர்ய அனுரூபமான நிருபாதிக ரஷ்ய ரஷக பாவங்கள் –
தன் கப்பிலே-தன் தன் -ஸ்தானத்தில் இருக்குமே /
லாவண்யம் தேஜஸ் ஸுந்தர்ய ஸுகுமார்ய தர்சன அனுசந்தான -ஜெனித ப்ரேம கஷ்ய- உள்ளம் அஸ்தானே பய சங்கை -பக்தியின் முதிர்ந்த நிலை -ப்ரேம தசை –
நாராயணாயா -சர்வ தேச -சர்வ கால சர்வ அவஸ்தை சர்வ வித கைங்கர்யம் பண்ண -பர தந்த்ரன் இடத்தில் ரக்ஷகத்வம் மாறி /ஸ்வ தந்த்ரன் இடத்தில் ரஷ்ய பாவமும் -/
அஸ்தானே பய சங்கை அங்கும் உண்டே– அழல் உமிழும் -ஹாவு ஹாவு சப்தம் கேட்டு –/ தத் உபய பாவமும் மீட்சி இல்லாமல் மாறாடி இருக்குமே /

——————————————————

சூரணை -245-

அவன் ஸ்வரூபத்தை அநு சந்தித்தால் அவனைக் கடகாகக் கொண்டு தன்னை நோக்கும் –
ஸௌகுமார்யத்தை அநு சந்தித்தால் தன்னைக் கடகாகக் கொண்டு அவனை நோக்கும் –

உக்தார்த்தத்தை விசதீகரிக்கிறார் –

அதாவது –
பிரதம அஷரத்தில் சொல்லுகிறபடியே -சர்வஜ்ஞ்ஞனாய் -சர்வ சக்தியாய் -சர்வ ரஷகனான -அவனுடைய ஸ்வரூபத்தை அநு சந்தித்தால் –
அவனை -தனக்கு அநிஷ்ட நிவாரகனாய் கொண்டு -அஞ்ஞனாய் -அசக்தனாய்-பிராப்தனான தன்னை ரஷித்துக் கொள்ளும் –
பேசப் பிசகும் படியான அவன் ஸௌகுமார்யத்தை அநு சந்தித்தால் –
அவனுடைய சர்வ சக்தித்வாதிகளை மறந்து -குழைச் சரக்காக நினைத்து -தன்னை ரஷகனாகக் கொண்டு மங்களா சாசனம் பண்ணி அவனை ரஷிக்கும் என்கை-
இவ்விடத்தில் ஸௌந்தர்யம் சொல்லிற்றே ஆகிலும் -அதுவும் மங்களாசாசன ஹேதுவாகையாலும்-மேலே சொல்லுகையாலும் –
ஸௌகுமார்யம் இதுக்கும் உப லஷணம்–

தசா த்வய ஹேதுவான அனுசந்தான பேதம் -விபர்யய ஹேது -ரஷ்ய ரஷாக பாவம் -யுக்த அர்த்தம் ஸ்திரமாக்குகிறார்
தாது அர்த்தம் பிறந்து -சர்வ சக்தன் சர்வ ரக்ஷகத்வம் சர்வ நியாந்தா -ததேக மனனாய்–அநிஷ்டம் போக்கும் காக்கும் கடகாக –
அபிராப்தமாய் அசக்தமாய் உள்ள -தன்னை ரஷிப்பதில் வாசனை கூட இல்லாமல் நோக்கும்
அவனுடைய விக்ரஹ ஸுகுமார்யத்தை திருமேனி மேன்மை -நாராயண -பதார்த்தம் -இப்பேர் பட்ட திருமேனிக்கு கைங்கர்யம் அனுசந்திக்க –
சர்வ சக்தித்வம் மறந்து இத்தலைக்கு என் வருகிறதோ என்று -நிரந்தர மங்களா சாசனம் பண்ணி -கண் எச்சில் வாராத படி நோக்கும்
ஸ்வரூப அனுசந்தானம் யாதாவாக பண்ணும் –ததேக ரக்ஷகத்வம் மாறாதே / ரூப குண அனுசந்தானம் தன் ஸ்வரூபத்தை மாறாடப் பண்ணுமே
ஸமஸ்த சப்த மூலத்வாத் -அகாரம் -அவ ரஷனே -காரணத்வம் சொல்லி சர்வ சக்தித்வம் சர்வ ரக்ஷகத்வம் சர்வ நியாந்தா -/
ஆயிர நாக்கு வாங்கி பேச முடியாது என்று சொல்ல -பேச பிசகும் படியாக இருக்குமே / பிராட்டிக்கு திரு ஆபரணம் சாத்த கண்ணால் பார்க்க
சிவந்து இருக்குமே கண்ணடி பட்டு -கிம் புன நியாய சித்தம் -அவன் ஸுகுமார்யம்
கண்ணடி பட்டா சொல்லடி பட்டா என்று தெரியாதபடியான ஸுகுமார்யம் அன்றோ -சாத்த சொல்வதாலா / பொல்லா கரு மாணிக்கம் அன்றோ

——————————————

சூரணை -246-

இவ் அர்த்தம் சக்கரவர்த்தி –
ஸ்ரீ ஜனக ராஜன் திருமகள் –
விஸ்வாமித்திரன் –
ஸ்ரீ தண்ட காரண்ய வாசிகளான ருஷிகள் –
திருவடி –
மகா ராஜர் –
ஸ்ரீ நந்த கோபர்
ஸ்ரீ விதுரர்
பிள்ளை உறங்கா வில்லி தாசர்
தொடக்கமானவர்கள் பக்கலிலே காணலாம்-

இப்படி ஸௌ குமார்யாதிகளை கண்டு கலங்கி -ரஷகனான அவனுடைய சர்வ சக்தி வைபவத்தை மறந்து -தான் அவனை ரஷிக்கும்  என்கிற
இவ் அர்த்தம் -எங்கே காணலாம் என்கிற அபேஷையிலே-இது சிஷ்டாசார சித்தம் என்னுமிடம் காட்டுகிறார் மேல் –

சக்கரவர்த்தி -பெருமாள் பிராட்டி யை திரு மணம் புரிந்து – மீண்டு எழுந்து அருளா நிற்க –
பரசுராமன் வந்து தோன்றின  அளவிலே -தாடகாதாடகேய நிரசனங்களாலே -இவருடைய சக்தி வைபவத்தை வியக்தமாக அறிந்து இருக்கச் செய்தேயும் –
இவருடைய பால்யத்தையும் ஸௌகுமாரத்தையுமே பார்த்து -என்னாகப் புகுகிறதோ என்று பீதனாய் -தான் முன்னோடியாகச் சென்று –
ஷத்ர ரோஷா த்ப்ரசாந்தத்வம் ப்ராக்மனச்ச மகாயஸா பாலானாம் மம புத்ரானாம் அபயம் தாது மர்ஹசி -என்று சரணம் புக்கு –
பின்னையும் அவன் பெருமாள் மேலே அடர்ந்து செல்கிறபடியைக் கண்டு -நிஷ் பிராணனாய் நின்று –
கதோ ராம இதி ச்ருத்வா ஹ்ருஷ்ட பிரமுதி தோன்ரூப புனர் ஜாதம் ததா மேன சூதா நாத்மான மேவச -என்கிறபடியே
அவன் தோற்று மீண்டு போனான் என்று கேட்ட பின்பு -தானும் பிள்ளைகளும் – மறு பிறவி பிறந்தாராக  நினைத்து இருந்தான் இறே–

ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகள் -தலை நீர்ப்பாட்டிலே -இவருடைய வைபவம் எல்லாம் அறிந்து இருக்குமவளாய் இருக்கச் செய்தேயும் –
திரு அபிஷேகம் பண்ணுகைகாக- அலங்க்ருத திவ்யகாத்ரராய் கொண்டு -சக்கரவர்த்தி திருமாளிகைக்கு எழுந்து அருளுகிற போது-
இவர் அழகிலே தோற்று -இதுக்கு என் வருகிறதோ என்று பிரேமத்தால் கலங்கி –
பதி  சம்மா நிதா சீதா பர்த்தாரம் அஸி தேஷணா ஆத்வாரம் அநுவவ்ராஜ மங்களான் யபிதத்த்னுஷீ -என்று
திருவாசல் அளவும் தான் மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு பின் சென்று –
பூர்வாம் திசம் வஜ்ரத ரோ தஷிணாம் பாது தோயம் வருண பச்சிமா மாசாம் தனச்தூத்தராம் திசம் -என்று
திக்பாலர்களை இவர்க்கு ரஷகராக அபேஷித்தாள் இறே –

ஸ்ரீ ஜனகராஜன் -என்றும் -திரு மகள் -என்றும் பிரித்து சொல்லவுமாம்-
அப்போதைக்கு -ஸ்ரீ ஜனக ராஜன் -மகேச்வர தனுர் பங்கத்தாலே-பெருமாளுடைய சக்தி வைபவத்தை கண்டு இருக்கச் செய்தேயும் –
இயம் சீதா மம சூத சக தர்ம சரீதவ பிரதீச்ச்ச சைனாம் பத்ரந்தே பாணிம் க்ருஹ்ணீ  ஷவ பாணி நா -என்று
ஆபி ஜாதியாதிகளால் வீறு உடையவளான இவளை கை கொண்டு அருளும் என்று காட்டிக் கொடுக்கும் அளவில் –
இவருடைய அழகையும் ஸௌ குமார்யத்தையும் கண்டு கலங்கி இச் சேர்த்திக்கு ஒரு தீங்கு வாராது ஒழிய வேணும் என்று -பத்ரந்தே –
என்று மங்களா சாசனம் பண்ணினான் என்கை–

விஸ்வாமித்திரன் -தன்னுடைய அத்த்வர த்ராணார்த்தமாக பெருமாளை அழைத்து கொண்டு போகிற போது –
நடுவே தாடகை பெரிய ஆரவாரத்தோடு ஆக்கிரமித்து கொண்டு வருகிற படியை கண்டு –
அஹம் வேத்மி மகாத்மாநாம்  ராமம் சத்ய பராக்கிரமம் -என்கிறபடியே
பெருமாளுடைய சக்தி வைபவத்தை அறிந்து இருக்கச் செய்தேயும் -ஸௌ குமார்யத்தை பார்த்து கலங்கி –
விச்வாமித்ரஸ்து ப்ரஹ்ம ரிஷிர் ஹூன்காரேண அபி பர்த்ச்யதாம் ஸ்வஸ்தி ராகவ யோரஸ்து ஜெயஞ்சைவ அப்ய பாஷத–என்கிறபடியே
தான் முன்னே நின்று அவளை ஹூங்கரித்து பெருமாளுக்கும் திரு தம்பியாருக்கும் ஒரு தீங்கு வாராமைக்கு ஆக மங்களா சாசனம் செய்தான் இறே –

ஸ்ரீ தண்ட காரண்ய வாசிகளான ருஷிகள்-
தே தம் சோம மிவோத்யந்தம் த்ருஷ்ட்வாவை தர்ம சாரின மங்களாநி பர யுஜ்ஞானா பிரத்யக்ருக்ணன் த்ருட வரதா -என்று
தங்கள் ஆபத் நிவ்ருதியையும் -அபிமத சித்தியையும் -பண்ணித் தருவார் இவரே என்று –
சாதன அனுஷ்டானம் பண்ணுகிற தாங்கள் -இவர் சந்நிகிதர் ஆனவாறே -அவற்றை மறந்து –
இவர் வடிவு அழகிலே துவக்குண்டு மங்களா சாசனம் பண்ணினார் இறே –

திருவடி -பிரதம  தர்சநத்திலே-
ஆயதாச்ச சூவ்ருத்தாச்ச பாஹவ பரிகோபமா சர்வ பூஷண பூஷார்ஹா கிமர்த்தம் நவி பூஷிதா -என்று கணையங்கள் போலே
இருக்கிற திரு தோள்களிலே மிடுக்கைக் கண்டு -நமக்கு இவர் ரஷகர் ஆகக் குறை இல்லை என்று புத்தி பண்ணி நிற்க செய்தேயும் –
அவற்றின் அழகைச் கண்டு ஈடுபட்டு -பிறர் கண் எச்சில் படி என் செய்வது என்று அதி சங்கை பண்ணி -திரு ஆபரணங்களாலே இதை மறைத்திட்டு வையாதே
இப்படி வெளி இட காரணம் என் என்று வயிறு பிடித்து -பின்பு பெருமாளுடைய சக்தி விசேஷத்தை பஹூ முகமாகக் காணா  நிற்கச் செய்தேயும் –
ஸௌ குமாரய அநு சந்தானத்தாலே இவர்க்கு என் வருகிறதோ என்று -துணுக்கு துணுக்கு சர்வ தசையிலும் கூட நின்று நோக்கிக் கொண்டு திரிந்தான் இறே –

மகா ராஜர் -வாலி வதாதிகளாலே பெருமாளுடைய சக்தி கௌரவத்தைக் கண்டு இருக்கச் செய்தேயும் –
சௌ குமாரத்தையே பார்த்து கலங்கி -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நாலு பேரும் தானும் வந்து தோற்றின போது –
ஏஷ சர்வாயுதோபேத ச்சதுர்பிஸ் சஹா ராஷசை ராஷசோ ப்ப்யேதிபச்யத்த்வம அஸ்மான்  ஹந்தும் ந சம்சய –
என்று நமக்கு எல்லாம் ஓர் உயிரான  பெருமாளை நலிகிற வழியாலே -நம்மை எல்லாம் முடிப்பதாக வருகிறான் இவன் என்று அறுதி இட்டு முதலிகளுக்குக் காட்டி –
ராகவம்  சரணம் கத – நிவேதயதமாம்  ஷிப்ரம் -என்கிற உக்திகளைக் கேட்டு வைத்தும் –
வத்த்ய தாமே ஷதீவ்ரென தண்டே ந சசி வைஸ் சக ராவணச்ய ந்ருசம்சசஸ் யப்ப்ராதா ஹ்யேஷா விபீஷணா -என்று
ராவண சம்பந்த்தையே பார்த்து -இவனை சித்ர வதம் பண்ண வேணும் எனபது
ராவணே ந ப்ரணி ஹிதம் தமவேஹி நிசாசரம் தச்யாஹம் நிஹ்ரகம் மந்யே ஷமம் ஷமவ தாம்வர -என்று ராவணன் வரவிட வந்தவன் என்றே
அவனை திரு உள்ளம் பற்ற வேணும் -அவனை தண்டிகையே பிராப்தம் என்று புத்தி பண்ணா நின்றேன்
என்பதாய்-இப்புடைகளிலே பலவற்றையும் சொல்லி -இவனை சர்வதாக கொள்ள ஒண்ணாது என்று ஒரு நிலை நின்று –
பிசாசான் தானாவான் -இத்யாதியாலே தம்முடைய பலத்தையும் காட்டியும்
கபோதோபாக்யானம் கண்டூபாக்யானம் இவை அருளிச் செய்தும் -தெளிவித்து -பயத்தைக் கெடுத்து –
ஆநயை  நம் ஹரிஸ்ரேஷ்ட -என்ன எண்ணும் படி -பெருமாளை குழை சரக்காக நினைத்து காத்துக் கொண்டும் போந்தான் இறே –

மகாராஜர் -என்று ஸ்ரீ ஜடாயு மகாரஜரையும் சொல்வார்கள் -அதாவது
ஸ்ரீ ஜடாயு மகாராஜர் பிராட்டிக்காக ராவணனோடு பொருது குத்துயிராக கிடக்கிற தம்மை பெருமாள் வந்து கண்ட அளவிலே –
ஜனஸ்தானத்தில் இருந்த பதினாலாயிரம் ராஷசர்களையும் தனி வீரம் செய்து நின்று கொன்ற தோள் வலியை அறிந்து இருக்க செய்தேயும் –
யாமோஷ திமிவாயுஷ் மன் நன்வேஷ சிமகாவனே சாதேவீ மம சபிராணா ராவண நோ பயம் ஹ்ருதம் -என்று
அருமருந்து தேடுவார் அடவிதொரும் தடுமாருமாப் போலே -எவள் ஒருத்தியை இந்த பரந்த காட்டிலே தேடிக் கொண்டு திரிகிறீர் -உமக்கு –
நித்ய பிராண சமையானவளும் என்னுடைய பிரானங்களும் -இரண்டும் -ராவணன் ஆகிற பையலாலே அபயஹ்ருதயமாயிற்று காணும்
என்று சொல்லா நிற்க செய்தே -இவருடைய விரக கிலேசத்தால் வந்த தளர்த்தியையும் – ஸௌ குமாரத்தையும் -ராஷசரோட்டை வான் பகையையும் நினைத்து –
என்னாக தேடுகிறதோ என்று அஞ்சி -ஆயுஷ்மன்-என்று ஆயுஸ்ஸை பிரார்த்தித்தார் இறே –

ஸ்ரீ நந்தகோபர் -பூதன நிரசனத்தாலே கிருஷ்ணனுடைய திவ்ய சக்தி யோகத்தை கண்டு இருக்கச் செய்தேயும் –
சைசவ பிரயுக்தமான ஸௌ குமாரத்தையே பார்த்து கலங்கி வயிறு எரிந்து –
ரஷது த்வாம ஷோனாம் பூதானாம் ப்ரபவோ ஹரி யஸ்ய நாபி சமுத்பூதபங்கஜா தவவஜ்ஜகத் -என்று சர்வ ஜகத் காரண பூதனாய் –
ஸகல விரோதி நிரசன சீல னான   சர்வேஸ்வரன் உம்மை ரஷிப்பான் ஆக என்று ரஷை இட்டார் இறே –

ஸ்ரீ விதுரர் -கிருஷ்ணனுடைய சர்வஞ்ஞத்வ  சர்வ சக்தித்வாதிகளை அறிந்து இருக்கச் செய்தேயும் –
துர்யோதன கோஷ்டியில் எழுந்து அருளின போது -பொய்யாசனம் இட்டபடியை கண்டு அஞ்சி –
ப்ரேமாந்ததையாலே-சம்ச்புரு சன்னாசனம் ஸௌ ரேர் விதுரச்ச மகா மதி -என்று
தம்முடைய திரு மாளிகையிலே -தாம் இட்ட ஆசனத்தையும் அதி சங்கை பண்ணி -தன் கையாலே அமுக்கி பார்த்தார் இறே –

பிள்ளை உறங்கா வல்லி தாசர் -அத் தலையில் -ஜ்ஞான சக்தி யாதிகளை எல்லாம் அறிந்து –
பெருமாளே நமக்கு ரஷகர் என்று அறிந்து நிற்க செய்தேயும் -பிரேம பரவசர் ஆகையாலே –
பெருமாள் உலாவி வரும் போது -எங்கேனும் ஒரு சலனம் பிறக்கில் -நம் பிராணனை விடும் இத்தனை என்று
சொட்டையை உருவிப் பிடித்து கொண்டு சேவிப்பார் என்று பிரசித்தம் இறே

துடக்கமானவர்கள் -என்ற இத்தால் –
ஸ்த்ரியோ வ்ருத்தாஸ் தருன்யச்ச சாயம்ப்ரதாச்ச்மாஹிதா சர்வாந்தேவான் நமஸ்யந்தி ராமச்யார்த்தே யசச்வின-என்ற திரு அயோத்யா வாசி ஜனங்கள் –
யன் மங்கலம் சுபர்ணச்ய வினதாகல்பாய த்புரா அம்ருதம் பிரார்த்தயா நஸய தத்தேபவது மங்கலம் -என்று ஸ்ரீ கௌ சல்யார்-
சாதோ சசிதேவ தேவேச சங்கு சக்கர கதாதரா திவ்ய ரூபம் இதம் தேவ பிரசாதே நோப சம்கர-என்ற ஸ்ரீ வசுதேவரும் –
உபசம்கர சர்வாத்மன் ரூபமே தச் சதுர் புஜம் ஜானாதுமாவதாரந்தே கம்சோசயம் திதி ஜன்மஜ -என்று தேவகி பிராட்டி
முதலானோரை எல்லாம் நினைக்கிறது –

சக்தி விசேஷத்தை மறந்து பண்ணக் கண்ட இடம் -அனுஷ்டான சேஷமாக காணலாம் -சர்வ சக்தியாதிகளை மறைத்து -தாடகா தாடகேயர்களை-நிரசித்த
தோள்வலிமை அறிந்து இருந்தும் -ஷத்ர ரோஷா த்ப்ரசாந்தத்வம் ப்ராஹ்மணஸ்ய மகாயஸா பாலானாம் மம புத்ரானாம் அபயம் தாது மர்ஹசி–
பாலர்களை ரஷிக்க -பல் காட்டி அபயம் பெற சரணம் புக்கு –மங்களா சாசனம் –
ஜனகன் -பத்ரம் தே –கையைப் பிடி சொல்ல போவதை மனசில் நினைத்த க்ஷணமே சொல்வதற்கு முன்னே மங்களா சாசனம் –
வில்லிறுத்த சக்தி அறிந்து இருந்தும் -/ஆபீஜாத்யாதி இயம் சீதா –இத்யாதி -லஜ்ஜித்து நின்ற நிலை நினைத்து காப்பிட்டாரே /
திரு அபிஷேகத்துக்காக வினீத வேஷத்துடன் சக்கரவர்த்தி கூப்பிடுகிறார் என்றதும் பிறந்த விநயம் –திரு வாசல் அளவும் பின் தொடர்ந்து –
திக்பாலர்கள்–பதியாலே ஸம்மானம் பண்ணப் பெற்று -கண் ஒளியால் கரி பூசி –மைப்படி கண்ணாள் -காப்பிட்டாள்- /
குபேரன் வருணன் யமன் -இது தான் வால்மீகி கரி பூசுவது -முருகன் போலே அழகு போலே
விச்வாமித்ரர் -ஸ்வஸ்தி ராகவஸ்ய -அஹம் வேத்மி-தெரிந்தும் -நிலத்தை கிள்ளி பெருமாள் திரு முகத்தில் அபிமந்திரித்து ஆசீர்வதித்தார்
தண்டகாரண்ய ரிஷிகள் காட்டில் காந்தி தேஜஸ் விட்ட பெருமாளை மங்களா சாசனம்
பையல் நம் பிராணங்களை கொண்டு போனான் -மங்களா சாசனம் செய்த ஜடாயு மஹாராஜர்
முக்த சிசு அறியா பிள்ளைக்கு -கோபுச்சம் -கொழு மோர் காச்சி -அச்சு தாலி – ஆமைத் தாலி -கூர் வேல் கொடும் தொழிலான நந்த கோபரும்
பொய்யாசனம் இடக் கண்ட பீதியாலே -தாம் இட்ட ஆசனத்தையும் அழுத்தி பார்த்த ஸ்ரீ விதுரர் மஹா மதி
உருவின வாளும் கையுமாய் இருக்கும் பிள்ளை உறங்கா வல்லி தாசர்
மோஹித்த உடையவர் -நாவல் பழமும்-திதியோதனம் ஒன்றாக கொடுத்ததால் -கஷாயம் காய்ச்சி கருட வாஹன பண்டிதர் –
பால் அமுது சுடும் என்று வாயால் ஊதியும் எண்ணெய் காப்பு -கண்ணை கரிக்கும் என்று வங்கி புரத்து ஆய்ச்சி முன் கையால் வழித்தும்

பாலானாம்-பால்யத்தை சொன்னது ஸுகுமார்யத்துக்கும் உப லக்ஷணம் / தேவர் -தசரதர் -இலக்குமன் பரதன் விபீஷணன் கடல் அரசன் இடம் –ஆறு சரணாகதிகள் உண்டே /
தலை நீர்ப்பாட்டிலே-குளத்தின் அருகில் -ராமன் மஹா சாகரம் முழுவதும் அறிந்த சீதா பிராட்டி -தெரியாத அம்சமே இல்லையே
அஹம் வேதமி -நான் அறிவேன் அத்தனை போக்கி நீயே அறிய மாட்டாய் –வில்லும் கை புல்லும் கை /ஸ்வர்ண மகுடம் சடையும் முடியும்/ ஆசனம் மேல் நீ கீழ்
ராமனுக்கு உலகுக்கு கர்ப்பம் -இப்படி பல அர்த்தங்கள் -உண்மையான வீறு கொண்ட ராமன் -வசிஷ்டோபி மஹா தேஜா – அவரும் ஒத்தும் கொள்ளுவார்
பூஷண பூஷார்ஹா-பூஷணத்துக்கு பூஷணம் -ஆபரணங்களை ஆபரணமாக அன்றோ இவர் –
அஸ்மான்  ஹந்தும்-54-கோடி வானர முதலிகளையும் சேர்த்து -பெருமாளை உட்க்கொண்டே -நம் அனைவரையும் –அநேக சதா சஹஸ்ர வ்யக்தி
கரமாக இலக்காக கொண்ட ஏக ஹனன கிரியை ஒருவரால் செய்வது அஸஹ்யம்–சர்வ ஜீவித பூதரான -பெருமாளை நலிவதையே உப லஷிக்கிறது –
பிசாசான் தானாவான் -இத்யாதியாலே-ஒரு சொல் மேலே பேசாத பெருமாள் மூன்று வார்த்தைகள்-மித்ரா பாவேந -ஸக்ருத் -இத்யாதி – அன்றோ
அருளிச் செய்து சுக்ரீவனை சம்மதிக்க வைத்தார் –
கோசல சராசரங்கள் -பெருமாளுக்காக -அர்ச்சனை -சர்வான் தேவன் நமஸ்யந்தி ஆயுசு ஆரோக்யம் -காம்யார்த்தம் –
வினதை அம்ருதம் கொண்டு வர பெரிய திருவடியை ஆசீர்வாதம் பண்ணியது போலே பன்னிரு திங்கள் மணி வயிற்றில் பெற்ற ஸ்ரீ கௌசல்யை மங்களா சாசனம்

————————————————

சூரணை-247-

இளைய பெருமாளை ஸ்ரீ குகப் பெருமாள் அதி சங்கை பண்ண –
இருவரையும் அதி சங்கை பண்ணி –
ஸ்ரீ குகப் பெருமாள் பரிகரம் பெருமாளை நோக்கிற்று இறே —

இவ் விஷய வைலஷண்யம் யாரையும் மங்களா சாசனத்தில்
மூட்டும் என்னும் இடத்துக்கு இன்னுமொரு உதாரணம் காட்டுகிறார் –

அதாவது –
ஸ்ருங்கி பேர புரத்திலே எழுந்து அருளி ஸ்ரீ குகப் பெருமாளை விஷயீகரித்து
அருளின அன்று -பாங்கு அறிந்து இளைய பெருமாள் படுத்து குடுத்த பர்ண சய்யையிலே –
பிராட்டியும் பெருமாளும் பள்ளி கொண்டு அருளா நிற்க -பால்யாத் பிரப்ருதி சுச்நிக்தர்
ஆகையாலே -என் வருகிறதோ என்று அஞ்சி -முதுகில் இட்ட அம்பராதூணியும்-
கட்டின விறல்சரடும்-நாண் ஏறிட்டு நடுக் கோத்த வில்லும் தாமுமாக நடையாடும்
மதிள் போலே வளைய வருகிற இளைய பெருமாளைக் கண்டு ஸ்ரீ குகப் பெருமாள் –
ஒரு தம்பி தாயைக் கொண்டு ராஜ்யத்தை வாங்கி -கட்டின காப்போடே காட்டிலே தள்ளி விட்டான் –
இவனும் அவ்வோபாதி ஒரு தம்பி அன்றோ -தனி இடத்திலே என் செய்ய நினைத்து இப்படி
யாயத்தமாய் நின்றான் -என்று தெரியாது என்று அதி சங்கை பண்ணி -அப்படி ஏதேனும் ஒரு தீங்கு நினைக்கில்
இவன் தன்னை தீரக் காணக் கடவோம் என்று வில்லும் கோலுமாய்  கொண்டு -இவர் இட்ட அடியிலே அடி இட்டு நிற்க –
ஸ்ரீ குகப் பெருமாள் யேவல் தொழில் செய்து திரியும் பரிகரம் -அவன் ஜ்ஞாதி- இவன் குறும்பனான அந்நியன்
இவர்கள் இருவருமாக இவ் விஷயத்தை என் செய்ய தேடுகிறார்களோ என்று -இருவரையும் அதி சங்கை
பண்ணி -அப்படி செய்யில் இவர்களை அழிய செய்தும் -நாம் அத் தலையை நோக்க கடவோம் என்று –
தனித் தனியே கையில் வில்லுமாக  கொண்டு பெருமாளை ரஷித்தது இறே என்கை —

ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு விசேஷம் சொல்லுகிற இடத்தில் ஸ்ரீ குகப் பெருமாள்
நியம்யப்ருஷ்டேது தலான்குலித்ரவான் சரச்சூ பூர்ணாமிஷூ திம்பரம் தப
மகத்த நுஸ் சஜ்ய மகோப்ய லஷ்மனோ நிசா மதிஷ்டத்  த்வரிதோ அசய கேவலம் ததஸ்
தவஹந்ஜோத்தம சாப பாண பிருத்  ஸ்திதிதோ பவம் தத்ரச்ய த்ர லஷ்மண
அதந்த்ரிபிர் ஜ்ஞாதிபி ஆர்த்த கார்முகைர் மகேந்திர கல்பம் பரிபாலயம் சத்தா-என்று அந்த ராத்ரியில் விருத்தாந்தத்தை சொன்னான் இறே —

லஷ்மணன் வைபவம் பற்றி பரதனுக்கு குகன் சொல்ல –கண்கள் துஞ்சாமல் -இடத்தையும் காட்டி -பெருமாள் பின் செல்ல ஒருவன் இருந்தானே என்று பரதன் மகிழ /
விசேசஞ்ஞர் அவிசேஷஞ்ஞர் வாசி இல்லாமல் -மங்களா சாசனம் என்பதற்கு த்ருஷ்டாந்தம்
இளைய பெருமாள் -ஆதி சேஷம் சிந்தாமணி மடியிலே வைத்து பார்த்து அழல் உமிழிலும் -நான் ஏற்றினர் இறக்காமல் பட்டா பரிவு
பெருமாள் இறக்க சொல்ல ரிஷி இடம் செல்லும் பொழுது சேவிக்க -தர்ம சாஸ்திரம் எங்கும் சொல்வாரே –
ஏற்றின வில்லுடன் அமையாது நோக்கும் -குறும்பு அடித்து திரிந்து அன்று வந்து கண்ட ஸ்ரீ குகப் பெருமாள் -அனுக்ரஹத்துக்கு பாத்திரமான பின்பு ஸுந்தர்யம்
ஒரு தம்பி காடேற தள்ள -ஒரு தம்பி பின் வந்து சா யுதாயுதனாய் இடம் பார்த்து நிற்கிறான் -உருவின வேலும் தாணுமாய் அதி சங்கை
ஒருவன் கூடப் பிறந்தவன் ஒருவன் குறும்பன் இவர்கள் பொல்லாங்கு நினைத்தால் -அதி சங்கை பண்ணி –
பரிவரான குகனுக்கு தீர்த்தவர்கள் அடங்க உருவின கத்தியுடன் நோக்கினார்கள் –
கீழே வாசிக மங்களா சாசனம் -இது காயிகம் / நடமாடும் மதிள் போலே அன்று இவர்கள் /
குளத்தின் வைபவத்தை கடலுக்கு பின்பு சொன்னான் என்பர்- அப்ரமேயம் பரதன் -மஹாத்மா லஷ்மணன் ஸ்லோகம் /

——————————————————

சூரணை -248-
ஒருநாள் முகத்தில் விழித்தவர்களை
வடிவு அழகு படுத்தும் பாடு ஆயிற்று இது —

ஸ்ரீ குகப் பெருமாளுக்கும் பரிகரத்துக்கும் கண்ட மாதரம் ஒழிய -பெருமாள் உடன் முன்பு வாசனை  இல்லை இறே —
இப்படி இருக்கச் செய்தே இவர்களுக்கு இவ்வாகாரம் கூடின படி என் -என்ன -அருளிச் செய்கிறார் –

அதாவது –
நெடுநாள் வாசனை பண்ணுகை அன்றிக்கே -ஒருநாள் முக தர்சனம் பண்ணினவர்களையும் –
அவன் விக்ரக வைலஷண்யம் படுத்தும் படி ஆயிற்று இது -என்கை –
சதா பஸ்யந்தி -பண்ணினாரோபாதி -சக்ருத் தர்சனம் பண்ணினாரையும் –
பிரேமாந்தரராய் -அஸ்தானே பய சங்கையாலே-அனுகூலரையும் அதிசங்கை பண்ணி பரிந்து
நோக்கும் படி பண்ண வற்றாய் இறே -பகவத் விக்ரக ஸௌந்தர்யம் இருப்பது –

ஏக க்ஷணத்தில் என்றபடி -முகம் ஈடுபடுத்த அவயவ ஏக தேசம் / விழித்த- ஸக்ருத் தர்சனம் போதும் -என்கிறது
விழித்தவர்கள் இன்னார் என்பது இல்லை
இது -ஸுந்தர்யம் -ஸ்வரூப குண வியாவர்த்தி / கண்ட காட்சியில் அறிந்தவர்களோ அறியாதவர்களோ மங்களா சாசனத்தில் மூத்தவற்று ஸுந்தர்யம்

நள தமயந்திகள் போலே -அன்ன பறவை சொன்னதை வைத்தே கண்டதும் காதல் கொண்டதும் அன்பு வளர்ந்தது -அந்யோன்ய தர்சனம்

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: