ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -229-242-தத் அதிகாரி க்ருத்யம் /பெறுவான் முறை /-சித்த உபாய நிஷ்டா வைபவம்–ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை /-மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————–

சூரணை -229-

பெரிய உடையாருக்கு பெருமாள் ப்ரஹ்ம மேத சம்ஸ்காரம் பண்ணி அருளினார் –

இப்படி உக்தி மாத்ரத்தால் அன்றிக்கே -பாகவத வைபவத்தை விருத்தியாலும் –
பெருமாள் வெளி இட்ட படியை அருளிச் செய்கிறார் –

மர்யாதா நாஞ்ச லோகஸ்ய கர்த்தா காரயிதாச ஸ-என்கிறபடியே
லோக மர்யாதா ஸ்தாபனார்தமாக அவதரித்து பித்ரு வசன பரிபாலனாதிகளாலே
சாமான்ய தர்ம ஸ்தாபன சீலராய் இருப்பார் ஒருவர் இறே பெருமாள் –
ஏவம் பூதரானவர் -பிராட்டி பிரிவு கண்டு பொறுக்க மாட்டாமல் தம்மை அழிய மாறின பெரிய உடையாருக்கு –
ஜன்ம விருத்தாதிகளால் உத்க்ருஷ்டர் ஆனவர்களுக்கு தத் புத்ர சிஷ்யர்கள் பண்ணும் ப்ரஹ்ம மேத சம்ஸ்காரத்தை –
அவருடைய ப்ரஹ்ம ஆதிக்யமே ஹேதுவாக -திருத்தம்பியாரும் கூட இருக்க செய்தே -தாமே சாதாரமாக பண்ணி அருளினார் இறே –
இத்தால் ஜன்மாத் யுக்த்க்ருஷ்டரானவர்கள் அவற்றால் குறைந்து இருக்கும் விலக்ஷண பாகவத விஷயத்தில்
புத்ர க்ருத்தியம் அனுஷ்டிக்கலாம் என்னும் இடம் காட்டப் பட்டது –

ஆச்சார பிரதான அன்றோ பெருமாள் /ஐவரில் முற்பட்ட நால்வரில் முற்பட்ட மூவரில் முற்பட்ட அனுஷ்டானம் -சந்தேகியாமல் -சஹஜரோடே செய்த புத்ர க்ருத்யம் /
தர்மர் சந்தேகம் இல்லாமல் -விதுரர் நான்காம் வர்ணம் –அசரீரி சங்கை போக்கி ப்ரஹ்ம ஞானிக்கு ஏற்றபடி செய்தார் /
பெருமாள் சஹஜரோடே -கூடப் பிறந்த இளைய பெருமாள் உடன் ஜடாயு மஹா ராஜருக்கு செய்த சம்ஸ்காரம் /
பெரிய நம்பிகள் புரோடாசமாக செய்த க்ருத்யம் / நிஷ்க்ருஷ்ட வேஷம் அறிந்தவர்களே இவற்றை செய்வார்
-காயம் அன்னம் -ஸ்தலம் சுத்தி மூவர் -பிள்ளை உறங்கா வல்லி தாசர் /
பெருமாளுடைய ஸ் வீ காரத்தை உடையவர் -என்பதால் பெரிய உடையார் -ஸ்ரீ பிராட்டி கார்யம் -என்றுமாம் -/ சாமான்ய தர்மம் ஸ்தாபனம்
பித்ரு வாக்கியம் பரிபாலனம் – வரண தர்மம் பார்ப்பவர் – இருந்தாலும் ஜென்மாதி ஞானம் விருத்தம் இவற்றால் வந்த தாழ்ச்சி பாராமல் /
புத்திரர்கள் க்ருஹஸ்தர்களுக்கு- சிஷ்யர் யதிகளுக்கு –சத் புத்ர சத் சிஷ்யர் -நல்லவராக இருக்க வேண்டுமே -பெறாத பேறாக அன்றோ பெருமாள் பண்ணினார் –
யுக்தி மாத்திரம் பெரிய பெருமாள்-உடையவருக்கு உபய விபூதியையும் கொடுத்து அருளி -அனுஷ்டானம் திருவேங்கடமுடையான் -சீட்டு கொண்டு வந்தவளுக்கு கொடுத்து காட்டினார் –
கர்த்தா காரயிதாச ஸ-சொல்வான் மட்டும் அன்றி செய்வானும் நானே செய்விப்பானும் நானே -என்று பெருமாள் –
ஆள் இட்டு அந்தி தொழுவார் உண்டோ -தாமே பண்ணி அருளினார் பெருமாள் –
அன்பு காட்டிய பெரிய உடையார்க்கு பெருமாள் ஆதரவு காட்டி -விலக்ஷணர் -என்பதாலாயே -/த்விஜாதியருக்கு செய்ய வேண்டிய ப்ரஹ்ம மேத சம்ஸ்காரம் சாஸ்திரம் சொல்லுமே
பூஜா நீயர்-தகப்பனார் போலே மஹா யசஸ் -பறவை அரசன் -மஹான் -பெரிய தகப்பனார் -கச்ச லோகான் -என்னால் இந்த த்வஜன் சம்ஸ்காரம் செய்யப்படுகிறான் –
மந்த்ரம் இல்லாமல் செய்யப்பட வில்லை /பெருமாள் ஜெபித்தார் -உண்டே /த்விஜாதி -விலக்ஷணர் ப்ராஹ்மணர் என்பதால் இந்த சப்தம் /
சாதுக்கள் எங்கும் இருப்பார்கள் எந்த யோனியிலும் இருப்பார் -வியக்தி விசேஷ என்பதால் செய்யாமல் பிரேமாதிக்யத்தால் செய்தார்

——————————————-

சூரணை -230-

தர்ம புத்ரர் அசரீர வாக்யத்தையும் ஞான ஆதிக்யத்தையும் கொண்டு ஸ்ரீ விதுரரை
ப்ரஹ்ம மேதத்தாலே சம்ஸ்கரித்தார்–

இவ்வர்த்தத்தை தர்ம புத்ரர் அனுஷ்டானத்தாலும் தெளிவிக்கிறார் –

பெருமாள் பரார்த்தமாக சாமான்ய தர்மத்தை பண்ணிப் போந்தாரே ஆகிலும் -விசேஷ தர்மத்திலே ஊற்று இருக்கையாலும் அவருக்கு செய்யலாம் –
இவர் செய்தது இறே அரிது –
ஸ்வ வர்ண தர்மத்தையே உத்தேச்யமாக நினைந்து சர்வ அவஸ்தை யிலும் அதுக்கு ஒரு
நழுவுதல் வராத படி சாவதானமாக நடத்தி கொண்டு போரும் அவர் இறே  இவர் –
இப்படி இருக்கிற இவர் ஸ்ரீ விதுரரை சம்ஸ்கரித்த தசையிலே -அவருடைய வர்ணத்தை பார்ப்பது –
ஞான ஆதிக்யத்தைப் பார்ப்பதாய் -என் செய்யக் கடவோம் -என்று வியாகுல படா நிற்கச் செய்தே –
தர்மா ராஜஸ்து தத்ரை நம் சஞ்சிஸ் கார யிஷுஸ் ததா தகது காமோப்வத் வித்வான் அதா ஆகாசே வசோ
ப்ரவீத்-போபோ ராஜன் நாதக்த வ்யமேதத்  விதுர சம்ஜிதம் களேபரம் இஹதைத் தே நைஷ தர்மஸ்
சனாதய -லோக வை லக்ஷணயோ நாம பவிஷ்யத் யஸ்ய பார்த்திவ யதி தர்ம மவாப்தோ  சவ் ந சோச பரதர்ஷப –
என்று இவர் ப்ரஹ்மேத சம்ஸ்காரகர் என்று சொன்ன அசரீரி வாக்யத்தாலும் -சம்ப்ரதி பந்தமான
இவருடைய ஞான ஆதிக்யத்தாலும் சந்தேகம் அற்று விதிக்க அக்ரேசருக்கு செய்யக் கடவ
ப்ரஹ்மேத சம்ச்காரத்தாலே -சம்ஸ்கரித்தார் இறே-

வரண தர்மத்தயே பேணிப் போரும் -விஸ்வ நீயமான அசரீரி வாக்கியத்தையும் ஸ்ரீ கிருஷ்ண விசேஷ அங்கீ கார யோக்ய
ஞான சிறப்பையும் –வரண அபகர்ஷம் பாராமல் அனுவர்த்தித்தாரே
சம்ஸ்காரம் செய்ய ஆசையுடன் இருந்த தர்ம புத்திரர் -சந்தேகத்துடன் விருப்பம் இருந்தது –யதி பண்டிதர் போலே -சாஸ்திரம் -எட்டு வித பக்தன்
விப்ரர் தலைவன் யதி பண்டிதன் சாஸ்திரம் சொல்லுமே /பகவத் ப்ரீதி -அதிசய -உத்க்ருஷ்டராக்கி /யதிக்கு சிஷ்யர் –மேலாடையில் -வைத்து –
அமர்த்தி எழுந்து அருளி வைத்து –திருப் பள்ளிப் படுத்தி -/ க்ருஹஸ்தர் என்பதால் விதுரரை அக்னியால் -யதிகளுக்கும் இப்படியும் உண்டே -சுருதி சித்தம் இரண்டுக்கும் /
தேஜஸ் விசேஷத்தால் -இவருக்கு இது தகும் -விசாரம் பண்ணி அசரீரி செல்வதாலும் ஞாணாதிக்யத்தாலும் செய்தார்

—————————————-

சூரணை-231-

ருஷிகள் தர்மவ்யாதன் வாசலிலே துவண்டு தர்ம சந்தேகங்களை சமிப்பித்து கொண்டார்கள் –

அநந்தரம்-ஜன்மாத் யுத்க்ருஷ்டரான ருஷிகள் தத் அபக்ருஷ்டன் பக்கலிலே தர்ம ஸ்ர வணம்
பண்ணின படியை அருளிச் செய்கிறார் –

சதுர வேத தரராய் சர்வோத்க்ருஷ்டராய் இறே ருஷிகள் இருப்பது -ஏவம் பூதமானவர்கள்
வேத ஸ்ரவண யோக்யதை இல்லாத குலத்திலே பிறந்துள்ளவனாய் -ஜாதி சம்ரூதியோடே ஜாதன்
ஆகையாலே -பூர்வ ஜன்ம சித்தமன ஞானத்தில் ப்ரசம் இல்லாமையாலும் -மாதா பித்ரு சுஸ்ருஷா
விசேஷத்தாலும்-சகல தர்ம சூஷ்ம ஞானவானாய் இருக்கும் தர்மவ்யாதன் வாசலிலே சென்று –
மாதா பித்ரு சுச்ரூஷை  பரனாய் இருக்கிற அவன் அவசரம் பார்த்து துவண்டு ஞாதவ்யங்களான
தர்மங்களிலே தங்களுக்கு சந்நிக்தங்கள் ஆனவை எல்லாம் அவன் பக்கலிலே கேட்டு அதில்
சந்தேகங்களை போக்கிக் கொண்டார்கள் என்கை-

கச்சித் த்விஜாதி ப்ரவரோ வேதாத்யா யீ தபோதன
தபஸ்வீ  தர்ம சீலச்ச கௌ சிகொநாம  பாரத ஸாங்கோ பநிஷாதான்
வேதான் அதீத த்வீஜா சத்தம சவ்ருஷ மூலே கச்மிம்ச்சித் வேத அனுச்சாரயன் ஸ்தித
உபரிஷ்டாச்ச வ்ருஷச்ய பலாகா சம்ன்யலீயாத தயா புரீஷ முத்ஸ்ருஷ்டம்
ப்ராஹ்மணஸ்ய ததோரசி-என்று தொடங்கி
கௌசிகன் என்று பேர் உடையனாய் (-மிதிலா தேச வாசியாய் ) -அதீத சாங்க சசிரச்க சகல வேதத்தை உடையனாய்
இருப்பான் ஒரு பிராமண உத்தமன் -ஒரு வ்ருஷ  மூலத்திலே -வேதங்களையும் உச்சரித்து கொண்டு
நிற்கச் செய்தே -அதின் மேல் இருந்த தொரு கொக்கு எச்சம் இட்டது தன மார்பிலே பட்டவாறே
க்ருத்தனாய்-பார்த்த பார்வையிலே அது பட்டு விழ -அத்தைக் கொண்டு தப்த சித்தனாய் – கனக்க சோகித்து –
ராகத்வேஷ பலாத்க்ருதராய் கொண்டு அக்ருத்யத்தை செய்தோம் -என்று
பலகாலும் சொல்லிக் கொண்டு ஆசன்னமான கிராமத்திலே -பிஷார்த்தமாகப் போய் -ப்ரதமம் ஒரு கரஹத்திலே சென்று –
பிஷாம் தேஹி -என்று யாசித்த அளவில் -அந்த க்ருஹீணியானவள்-
நில்லும் வருகிறேன் -என்று சொல்லி -கர சுத்தியாதிகளை  பண்ணி பிஷை கொண்டு வருவதாக
உத்யோகியா நிற்க செய்தே -பர்த்தாவானவன் -அதீவ ஷூதார்த்தனாய் வந்து புகுர -அவள் பதி வ்ரதையாகையாலே –
பிஷை கொண்டு வருவதை விட்டு -பாத்ய ஆசமனீய ஆசன ப்ரதாநாதிகளாலே-(பகவத் சமாராதானம் பண்ணும் ) அவனை சிஸ்ருஷிக்கிற பராக்கிலே –
பிராமணன் நிற்கிறதை மறந்து -நெடும் போது நின்று -பின்னை அவன் நிற்கிறதைக் கண்டு நடுங்கி -பிஷை கொண்டு வந்த அளவில் –
என்னை நிற்கச் சொல்லி இத்தனை போது நீ புறப்படாது இருப்பான் என்?-என்று அவன் குபிதன் ஆனவாறே –
அவள் அவனை சாந்த்வனம் பண்ணி -இத்தை பொறுக்க வேண்டும் -என்று வேண்டிக் கொண்டு –
-நான் பார்த்தாவே தெய்வம் என்று இருப்பாள் ஒருத்தி -அவன் இளைத்து வருகையாலே -தத் சிச்ருஷை பண்ணி நின்றேன் இத்தனை –
என்ன -உனக்கு பர்த்தாவை அன்றோ சத்கரிக்க வேண்டுவது –பிராமணர் அளவில் கௌரவ பிரபத்தி இல்லையே –
என்று வ்யவங்கமாக சொல்லி -க்ருக தர்மத்திலே வர்த்திக்கிற நீ பிராமணரை இப்படி அவமதி பண்ணலாகாது காண் -என்ன-
நான் ஒருகாலும் பிராமணரை அவமதி பண்ணேன் -பிராமணருடைய வைபவம் எல்லாம் நன்றாக அறிவேன் -என்று பரக்கச்
சொல்லிக் காட்டி -இவ் அவபராதத்தை பொறுக்க வேணும் -பார்த்தாவே தெய்வம் என்று இருக்கையாலே -தத் சுஸ்ருஷையிலே பரவசையாய்
நின்றேன் இத்தனை -என்னுடைய பதி சுஸ்ருஷை யினுடைய பலத்தை பாரீர் -உம்முடைய ரோஷத்தால் அந்த கொக்கு யாதொருபடி –
தக்தமாய்த்து -அதுவும் எனக்கு விதிதம் காணும் -என்று சொல்லி –

குரோதஸ் சத்ருஸ் சரீர சத்தோ மனுஷ்யாணாம் த்விஜோத்தம ய
க்ரோத மோஹவ் த்யஜதி தம் தேவா பிராமணம் வித்து-என்று தொடங்கி –
காம க்ரோதாதிகள் பிராமணனுக்கு ஆகாது -சத்யார்ஜவாதிகள் உண்டாக வேணும் –
என்று விஸ்தரேண தான் பிரதிபாதித்து –
பவநாபிச தர்மஞ்சஸ் ஸ்வாத்யாய நிரதச்சுசி
நது தத்வேன பகவான் தர்மான் வேத்சீதி மே மதி
மாதா பித்ருப்யாம் சுஸ்ருஷூஸ் சத்யவாதீ ஜிதேந்த்ரிய
மிதிலாயாம் வசந் வயாதஸ் ச தே தர்மான் ப்ரவஷ்யதி
தத்ர கச்சஸ்வ பத்ரம் தே யதா காமம் த்விஜோத்தம
வ்யத பரமதர்மாத்மா சதேஸ்  தேச்யதி சம்சயான்-என்று
நீரும் தர்மஞ்ஞர் -வேதாத்யயன நிரதர் -சுத்தராய் இருக்க செய்தேயும் –
தர்மங்களை உள்ளபடி அறியீர் -என்று எனக்கு நினைவு –
மாதா பித்ரு சுஸ்ருஷூவாய் -சத்யவாதியாய்-ஜிதேந்திரனாய் கொண்டு
மிதிலையில் இருக்கிற வ்யாதன் உமக்கு தர்மங்களை சொல்லக் கடவன் –
அங்கே போம் -உமக்கு நன்மை உண்டாவதாக -பரம தர்மாத்மாவாய் இருக்கிற
அந்த வியாதன் வேண்டினபடி உம்முடைய சம்சயங்களை எல்லாம் போக்க கடவன் -என்ன

அவன் ப்ரீதனாய் இவளை கனக்க ஸ்தோத்ரம் பண்ணி -அங்கு நின்றும் மிதிலையிலே சென்று –
பஞ்ச காநி பவித்ராணி சிஷ்டாசாரேஷூ நித்யதா-ஏதன் மகாமதே வ்யாத பரப்ரவீஹி யதாததம்-என்று –
சிஷ்டா ஆச்சாரங்களிலே எப்போதும் உளவாய் இருக்கிற பவித்தரங்கள் ஐஞ்சும் எவை -மகா மதியாணவனே –
இத்தைச் சொல்ல வேணும்-என்ன –
யஞ்ஞோ தானம் தபோ வேதஸ் சத்யஞ்ச த்வி ஜோத்தம
பஞ்சைதானி பவித்ராணி சிஷ்டாசாரேஷூ நித்யதா -என்று
யஞ்ஞமும் தானமும் தபஸ்ஸும் வேதங்களும் சத்தியமும் ஆகிற
பவித்தரங்கள் ஆன இவை ஐந்தும் சிஷ்டா சாரங்களில் எப்போதும்
உளவாய் இருக்கும் -என்று இத்யாதியாலே -அவன் இத்தை உபதேசிக்க –
இப்படி மென்மேலும் தனக்கு சம்சயம் ஆனவை எல்லாம் இவன் கேட்க கேட்க –
உபதேச முகத்தாலே–( தர்சன சம்பாஷணை மாத்திரத்தாலே சம்சயன்கள் தீர பெற்றானே ) -சகல தர்ம சம்சயங்களும் தர்ம வ்யாதன் அறுத்த பிரகாரத்தை
தர்மபுத்ரனுக்கு மார்கண்டேயர் அனுஹரித்ததாக ஆரண்ய பர்வத்தத்திலே -இரு நூறாம் அத்யாயம் தொடங்கி –
பதின் மூன்று அத்யாயத்தாலே -பரக்கச் சொல்லப் பட்டது இறே
இன்னமும் இப்படி பலரும் இவன் வாசலில் துவண்டு தர்ம சந்தேஹங்கள் சமிப்பித்து கொண்டமை பல இடங்களிலும் உண்டு –
இத்தால் ஜன்மாத்யுத்க்ருஷ்டனாவர்களுக்கு  தத் அபக்ருஷ்டரானவர்கள்
ஞானாதிகராய் இருக்கில் அவர்கள் வாசலிலே துவண்டு ஞாதவ்யார்த்தங்கள் கேட்கக் குறை இல்லை என்னும் இடம் காட்டப் பட்டது –

யஞ்ஞோ தானம் தபோ வேதஸ் சத்யஞ்ச நித்ய திருவாராதனம் / அருளிச் செயல் அனுசந்தானம் / ஆர்ஜவமான சத்யவாதித்தவம்
திருக் கச்சி நம்பி ஆச்சார்யராக ஒத்து கொள்ள வில்லையே -அபிவாதம் பண்ணினார் தர்ம வ்யாதன் -ஆச்சர்யத்வம் பொருந்துமோ என்னில் –
கேகேய ராஜா ஷத்ரியன் -இடம் ப்ராஹ்மணர் / ஜனகர் ஷத்ரியன் இடம் ஸ்வேதகேது போல்வார் -ஜாதியால் வணங்கலாம் –
ஞானவான் என்பதால் ஆச்சார்யத்வம் குறை இல்லை -சம்பாவனை விசேஷம் -வணங்குவது சம் பிரதிபன்ன சிஷ்யர் ஆச்சார்யர் இடம் காணலாமே –
கொண்மின் கொள்மின்

——————————————

சூரணை-232-

கிருஷ்ணன் பீஷ்மத் துரோணாதிகள் க்ரஹங்களை விட்டு
ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே அமுது செய்தான்-

அநந்தரம்-யத்யதாசரதி ஸ்ரேஷ்ட -என்று கிருஷ்ணன் ஆஸ்ரயித்த படியை
அருளி செய்கிறார் –

தர்ம சமஸ்தான அர்த்தமாக அவதரித்து அருளி -லோக சங்க்ரஹ மேவாபி சம்பச்யன்
கர்த்தும் அர்ஹசி-என்று ஞானி யானாலும் லோக சங்க்ரஹத்தை பார்த்து வர்ண ஆஸ்ரம தர்மங்களை
நன்றாக அனுஷ்டிக்க வேணும் -என்று உபதேசித்தும் -யதிஹ்யஹம் ந வர்த்தேயம் ஜாது கர்மணிய தந்த்ரித
மாமாவர்த்தம் அநு வர்த்ததந்தே மனுஷ்யா பார்த்த சர்வச -என்று ஒருகால் கர்மத்தில் சோம்பாதே நான் ப்ரவர்த்தியேன்
ஆகில் மனுஷ்யர் எல்லாம் என் வழியே பின் செல்லும் -என்ற படி பரார்த்தமாக தான் குறிக் கொண்டு அனுஷ்டித்து போரும் ஸ்வாபன் இறே கிருஷ்ணன் –
ஏவம் பூதனானவன் ஸ்ரீ தூது எழுந்து அருளின போது-பீஷ்மத் துரோண அதி க்ரம்யா மாஞ்சைவ மது சூதன -கிமர்த்தம் புண்டரீகாஷா புக்தம் வ்ருஷல போஜனம் -என்னும் படி –
உத்க்ருஷ்ட வர்ண வ்ருத்தராய் இங்கே எழுந்து அருளுவர் என்று பார்த்து கொண்டு இருந்த
பீஷ்மாதிகளுடைய க்ருஹங்களை உபேஷித்து-வர்ணாத் யுத்கர்ஷ ரஹிதராய்-
அத்தாலே இங்கு எழுந்து அருளுவர் என்னும் நினைவும் அற்று இருந்த ஸ்ரீ விதுரர் திரு மாளிகையிலே சாதாரமாக சென்று புக்கு –
சம்ப்ரமைஸ் துஷ்ய கோவிந்த ஏதன் ந பரமம் தனம் -என்று பக்தி பரவசரான அவர் பண்ணின சம்ப்ரமங்களை எல்லாம் கண்டு உகந்து –
விதுரான் நாதி புபுஜே சுசீநி குணவந்திச-என்கிறபடியே
அஹங்கார உபஹதம் அல்லாமையாலே -பரம பாவனமாய் பக்தி யுபஹ்ருதம் ஆகையாலே பரம போக்யமாய் இருக்கிற அன்னத்தை –
அந்த பாவனத்வ போக்யத்வங்கள் அடியாக அத்யாதரம் பண்ணி அமுது செய்தான் இறே –

புண்டரீகாக்ஷனே என்று விழித்து -உண்மையை சொல்ல -/மின்னிடை மடவார் கொண்டாடலாமா என்ற இடத்தில் -உண்மையை உண்மையாக தான் பேச வேன்டும் /
அலங்க்ருத க்ருஹங்களை புறக்கணித்து -ஆனந்த அஸ்ரூ பங்கிலமாய் -கண்ணா நீரால் முற்றம் சேவடி சேறு -சதம்ப்ரும ந்ருத்தம் –தடுக்கூட்டமாய் பரவி –
சந்தோஷ அதிசயத்தாலே -பெருத்த திருமாளிகையிலே -சுசீநி குணவந்திச-என்கிறபடியே-பாவானத்வம் போக்யத்வங்கள் பரிமள சாரஸ்யம்
திரு பவளத்திலும் திரு உள்ளத்திலும் -ருசி நாக்குக்கு–பாவானத்வம் உள்ளத்துக்கு -உகந்து அமுது செய்தானே –
மடி தடவாத சோறு -சுருள் நாறாத பூ -சுண்ணாம்பு கலவாத சந்தனம் -அஹங்கார உபகதம் இல்லாமல் பக்தி உபஹ்ருதம் –
தூய்மையும் குணமும் உண்டே -இதுவே பாவானத்வம் போக்யத்வம் –
பீஷ்ம துரோணர் க்ருஹம் விட்டது எதற்கு -விதுரர் க்ருஹம் உண்டது எதனால் -என் க்ருஹம் வராதது எதனால் –மூன்று கேள்விகள் –ஒரே பதில்
விரோதி வீட்டில் கை நனைக்கக் கூடாதே மம ப்ராணான் பாண்டவர் நீ த்வேஷிக்கிறாய்/
உன் சம்பந்தி அவர்கள் க்ருஹங்கள் போக வில்லை–த்வேஷி சம்சரக்கமும் அஹங்கார ஸ்பரிசமும் உண்டே இவர்களுக்கு
நீ பண்ணின தப்பை சொல்லிய விதுரர் உன் சம்பந்தி இல்லை என் சம்பந்தியே -ந சூத்திரர் பகவத் பக்தர் -விப்ரர்
சண்டாளத்வம் துரியோதனனுக்கு வர -விதுரர்க்கு போனதே-பகவத் பக்தி அதிசயத்வம் தத் ப்ரயுக்த சூத்ர நிவர்த்தியும் -அஹங்கார சம்பாவனை இல்லாமையும் உண்டே –

————————————–

சூரணை -233-

பெருமாள் ஸ்ரீ சபரி கையினாலே அமுது செய்து அருளினார் –

ஏதத் பூர்வ அவதாரத்தாலும் இப்படி அனுஷ்டித்த பிரகாரத்தை அருளிச் செய்கிறார் –

அதாவது –
ரகு குல திலகராய் ஆசார பிரதானரான பெருமாள் – சபர்யா பூஜிதஸ் சமயக் ராமோ தசரதாத் மஜா-என்னும் படி வேடுவச்சியாய் வைத்தே
குரு சுச்ரூஷ்யையிலே பழுத்து ஞானாதிகையாய் -தன் நாவுக்கு இனிதாய் இருந்த பல மூலாதிகள் எல்லாம் இங்குத்தைக்கு என்று சஞ்சயித்து கொண்டு
வரவு பார்த்து இருந்த ஸ்ரீ சபரி -தன் ஆராதன அநு குணமாக தன் கையாலே அமுது செய்யப் பண்ண – அதி சந்துஷ்டராய் அமுது செய்தார் என்கை-
இத்தால் -அபிஜாதாதிகளால் வரும் அபிமான கந்தமற்ற ஞான ப்ரேமாதிகருடைய அபிமான ஸ்பர்சம் உள்ளவை ஆத்மா குணைக தர்சிகளான விசேஷஞர்க்கு
அதீத பாவன போக்யங்களாய் இருக்கும் என்னும் இடம் காட்டப் பட்டது –

பாவன பதார்த்த வாசி அறியும் பெருமாள் -/ ஞானவாள் பரிவையாயும் இருந்த சபரி -ஜல ஸ்பர்சம் இல்லாத திருக் கையால் -முன்பு தான் பரீக்ஷித்து
த்வஜ ஸ்பர்சம் -பல்லால் கடித்த -பறவை கிளி கொத்தின பழம் என்றுமாம்–விவித விசித்திர பல மூலாதிகள் -அனுபவ ஏக வேத்யம் -சுவை இருப்பது அறிந்து —
சஜாதீயங்களில் குணாகுணம் ஸூ சகம் /-பழங்களும் வேர்களும் என்றபடி -துறை வாசி அறிந்து -ரஹஸ்ய த்ரய ஞானம் அறிந்து
ஆச்சார்ய அபிமானத்தில் ஒதுங்கினதால் -விலக்ஷண -அதனால் பரம பாவனமுமாய் -பரமபோக்யமுமாய்–பரார்த்த நீயமுமாய் -இருக்குமே –
அபிஜாதாதிகளால் -அபிஜாதி ஞானம் வ்ருத்தம் -/கோன் வஸ்மின் குணவான் –சரித்ரான் -நல்ல நடத்தை –அனுஷ்டான ஸ்ரேஷ்டர் -பெருமாள் /

———————————————

சூரணை -234-

மாறனேர் நம்பி விஷயமாக பெரிய நம்பி உடையவருக்கு அருளிச் செய்த
வார்த்தையை ஸ்மரிப்பது-

இப்படி ஸ்ரீ இராமாயண மகா பாரத சித்தமான சிஷ்டாச்சாரங்களாலே பாகவத வைபவத்தை பிரகாசித்தார் கீழ் –
இன்னமுமிவ் அர்த்த விஷயமாக பூர்வாச்சார்ய வசனத்தை ஸ்மரிப்பிக்கிறார்-

அதாவது –
அபிமான ஹேதுவான ஜன்ம வ்ருத்தாதிகள் அன்றிக்கே -ஆளவந்தார் ஸ்ரீ பாதத்தை உடையராய்
அத்யாத்ம ஞான பரி பூரணராய் இருக்கிற மாறனேர் நம்பி -தம்முடைய அந்திம தசையில் -ஆளவந்தார்
அபிமானித்து அருளின இத்தேஹத்தை பிரகிருதி பந்துக்கள் ஸ்பர்சிக்கில் செய்வது என் -என்று
அதி சங்கை பண்ணி ச பிரமசாரிகளான பெரிய நம்பியைப் பார்த்து -புரோடாசத்தை  நாய்க்கு இடாதே கிடீர் –
என்று அருளிச் செய்து திரு நாட்டுக்கு எழுந்து அருள -பெரிய நம்பியும் அப்படியே பிறர் கையில்
காட்டிக் கொடாதே தாம பள்ளி படுத்தி வந்து எழுந்து அருளி நிற்க -இத்தை உடையவர் கேட்டு அருளி –
பெரிய நம்பி ஸ்ரீ பாதத்தில் வந்து -ஜீயா மரியாதை கிடக்க கார்யம் செய்ய வேண்டாவோ -தேவரீர் செய்து அருள
வேண்டிற்றோ -என்ன -ஆள் இட்டு அந்தி தொழவோ-நான் பெருமாளில் காட்டிலும் உத்க்ருஷ்டனோ
இவர் பெரிய உடையார் காட்டில் அபக்ருஷ்டரோ -பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமை
கடலோசையோபாதியோ -ஆழ்வார் அருளிச் செய்த வார்த்தையை சிறிது குறைவாகிலும் ஆசரிக்க
வேண்டாமோ -என்று அருளிச் செய்த வார்த்தை –

தனக்கு என்ன செய்ய வேன்டும் என்பதை பற்றி ஒன்றுமே அருளால் மாறனேர் நம்பி எழுந்து அருள -ப்ரஹ்ம மேதம்-ஏற்றி அருள –
உடையவர் ஆச்சார்யர் திரு வாக்காக இருக்க வேன்டும் என்று கேட்டார் /
வர்ணாஸ்ரம தர்ம அனுஷ்டானம் -ஸ்ரேஷ்டம் -வேலி நீர் வெட்டலாமோ -நான் பெருமாளின் தர்ம புத்ரரில் உயர்ந்தவனா இவர் விதுரர் பெரிய உடையாரின் சிறியரோ
நாட்டார் இயல்வு ஒழிந்தால் தான் நாரணனை நண்ண முடியும் -ததீய சேஷத்வம் இங்கே அந்வயிக்காமல் வேறே எங்கே போய் அந்வயிக்க –
-உடையவர் உகந்து வித்தரானார் -இவர் ஒன்றுமே அருளிச் செய்யாமல் திரும்ப எழுந்து அருளி -ஸ்லோக த்வயம் காணும் உடையவர்க்கு அனுசந்தானம் —
அந்திம தசை என்பதால் இந்த வராஹ சரம ஸ்லோகம் -அஹம் ஸ்மாராமி -பெரிய நம்பி மூலம் நயாமி பரமாம் கதம் / வாக்ய த்வயமாகவும் கொள்ளலாம் /
பெண் கண்ட பிச்சன் வார்த்தை அன்றோ வராஹ வார்த்தை /
இப் பெண்ணின் உடைய நித்ய யோகத்தை அனுசந்தித்து அருள வேண்டாவோ -நித்யை வேஷம் ஜெகன் மாதா அன்றோ –நமக்கு என் குறை –
பெண் கண்ட பிச்சும் நித்யமாகுமே / நம்பியும் உகந்து விசேஷ கடாக்ஷம் பண்ணி மீண்டும் த்வயம் அருளிச் செய்கிறார் –
ஸ்ரோதா ராமானுஜர் த்வய மஹா மந்த்ரம் ஆசைப்பட்டு மீண்டும் பெற்றார் -அருளிச் செத்த வார்த்தை இது அளவும் உணர வேன்டும் –
ஞானாதிக்யத்தை பார்த்து ததீயரை ஆதரித்து அனுவர்த்திப்பதே ததியர் அனுஷ்டான சித்தம் –
ஆச்சார்யர் ருசித்து செய்த அனுஷ்டானத்துக்கு ஏற்றம் அன்றோ / பாகவத கைங்கர்யத்துக்கு ஆள் விட்டு செய்யவோ /
சாமான்ய சாஸ்த்ர யுக்த விவஸ்தை -பார்க்காமல் விசேஷ சாஸ்த்ர வையர்த்தம் ஆகாமல் போக கூடாதே

———————————————-

சூரணை -235-

ப்ராதுர்ப்பாவை -இத்யாதி

இனி பாகவத ஜென்மாதி ஸ்லாக்யதா  கதன பூர்வகமாக அபாகவத உத்கர்ஷ-நிந்த்யதையை பிரகாசிப்பிக்கிறார் –

ப்ராதுர்பாவைஸ் சூர நர சமோ தேவதேவஸ் ததீய ஜாத்யா வ்ருத்தைரபிச  குணதஸ் தாத்ருசோ நாத்ர கர்ஹா
கிந்து ஸ்ரீ மத் புவன பவன த்ரணதா   அன்யேஷு வித்யா வ்ருத்த ப்ராயோ பவதி விதவா கல்ப கல்ப ப்ரகர்ஷ –
இத்தால் –
அயர்வறும் அமரர்கள் அதிபதி யானவன் ப்ராதுர்பாவங்களாலே சூர நர சஜாதீயன் ஆகா நிற்க்கும்-
ததீயரும் ஜாதியாலும் -வ்ருத்தங்களாலும் -குணத்தாலும் -அப்படியே இதர சமரா இருப்பார்கள் –
இதில் கர்ஹை இல்லை -ச்லாக்யையே உள்ளது -உபயரும் இப்படி நிற்கிறது இந்த லோக ரக்ஷண நிமித்தமாக –
இனி அபாகவதர் பக்கலில் உண்டான வித்யா வ்ருத்த பாஹுள்ய ரூபமான உத்கர்ஷம்
விதவா அலங்காரம் போலே நிந்த்யம் ஆகா நின்றது என்கிறது –

வாமனன் தேவ சமன் -ராம கிருஷ்ணன் மனுஷ்ய சமன் -போலே –ததீயரும் அப்படியே -என்ற எண்ணம் வேன்டும் –

——————————————

சூரணை -236-

பாகவதன் அன்றிக்கே வேதார்த்த ஞானாதிகளை உடையவன் -குங்குமம் சுமந்த
கழுதை யோபாதி என்று சொல்லா நின்றது இறே –

பாகவதர்கள் அன்று என்ன-அவர்களுக்கு உண்டான வேத வித்யாதிகள்
வ்யர்த்தமோ என்ன -அப்படி பிரமாணம் சொல்லா நின்றது இறே -என்கிறார்-

அதாவது –
சதுர் வேத தரோ விப்ரோ வாசூதேவம் ந விந்ததி-வேத பார பராக்ராந்தஸ் சவை பிராமண கர்தப-என்று
வேத தாத்பர்யமான பகவத் ஞானாதிகள் இல்லாமையாலே -பாகவதன் அன்றிக்கே வேத அத்யயனத்தோடே
அதில் ஸ்தூலார்த்த ஞானாதிகளை உடையனாய் இருக்கும் அவன் -போகிகளாய் இருப்பார் விரும்பும்
பரிமள த்ரவ்யமான குங்குமத்தை சுமந்து திரியா நிற்கச் செய்தே அதின் வாசி அறியாத கழுதை போலே –
பூர்வோத்தர பாகங்களால் ஆராதன  ஸ்வரூபத்தையும் ஆராத்ய ஸ்வரூபத்தையும் பிரதிபாதியா நின்று கொண்டு –
பகவத ஏக பரமாய் இருக்கிற வேதம் ஆகிற விலக்ஷண வஸ்து -பாரத்தை கினிய சுமந்து கொண்டு
இருக்கச் செய்தே அதன் சுவடி அறியாத பிராமண கழுதை என்று -வேத உப ப்ரும்ஹணமான
பிரமாணம் சொல்லா நின்றது இறே -என்கை-

வேதத்தின் உட்ப்பொருள் பகவத் சம்பந்த ஞானம் அனுஷ்டானம் இல்லாமல் ஸ்தூல தர்சி -ஸூஷ்ம தர்சனம் இல்லாமல்
வேத பரிமள த்ரவ்ய பாகத்தை அறியாமல் –இருப்பவனை தாக்ஷிண்யம் இல்லாமல் இதை த்ருஷ்டாந்தம் ஆக்கிக் காட்டிற்றே

—————————————————-

சூரணை-237-

ராஜாவான ஸ்ரீ குலசேகர பெருமாள்-திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை ஆசைப் பட்டார் –

பகவத் சம்பந்த ரஹிதமான ஜந்மாதிகள் சத் கர்ஹிதம் என்னும் அத்தை தர்சிப்பித்தார் கீழ் –
தத் சம்பந்த சஹிதமான திர்யக் காதி ஜந்மமும் சத் ப்ரார்த் நீயமாய் என்னும் அத்தை தர்சிப்பிக்கிறார் மேல் –
அதாவது –
த்வதீய வர்ணரான ஏற்றத்தை உடைய ஸ்ரீ குலசேகர பெருமாள் -திர்யக் ஸ்தாவர ஜன்மங்கள் ஆனவை -வாசிகை பஷி ம்ருகதாம் -இத்யாதிகளாலே
பாப யோநிகளாக சொல்லப்  படா நிற்க செய்தே –
வேம்கடத்து கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –
மீனாய் பிறக்கும் விதி உடையேன்   ஆவேனே –
செண்பகமாய் இருக்கும் திரு உடையேன் ஆவேனே –
தம்பகமாய் இருக்கும் தவம் உடையேன் ஆவேனே -என்று
திருமலை ஆழ்வாரோடு சம்பந்தமுடைய திர்யக் ஸ்தாவர ஜன்மங்களை பெறாப் பேறாக ஆசைப் பட்டார் -என்றபடி-

ரமணீயமானவற்றை ஆசைப்படும் குலசேகரப் பெருமாள் -அலாப்ய் லாபமாக -திருமலை ஆழ்வாரோடு சம்பந்தமான –
திர்யக் ஸ்தாவர ஜென்மங்களை -ஆசைப்பட்டு பிராத்தித்தாரே –
வாக்கால் அபசாரப்பட்டால் பக்ஷிகள் -காயத்தால் அபசாரப்பட்டாக்கள் திர்யக் -சாஸ்திரம் சொல்லுமே /
ஏதேனும் ஆவேனே -திருவேங்கடமுடையானாக ஆனாலும் குறையில்லா கைங்கர்யம் வேன்டும் /ஸ்வா தந்தர்யம் ஏறிட்டு கொண்டாலும் அநந்யார்ஹ சேஷத்வம் வேன்டும் /
உத்தர உத்தர அபகர்ஷம் குருகு மீன் செண்பகம் தம்பகம்-இப்படி ஆசைப்பட்டார் —

————————————————————

சூரணை -239-

ப்ராஹ்மண உத்தமரான-பெரிய ஆழ்வாரும்-திரு மகளாரும்-
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணினார்கள் –

இப்படி ஆசைப் பட்ட அளவு அன்றிக்கே -தாழ்ந்த ஜென்மத்தை
ஆஸ்தானம் பண்ணினவர்களை அருளிச் செய்கிறார் –

அதாவது –
இனி இதுக்கு மேல் இல்லை -என்னும்படியான வர்ணத்தில் அவதரித்து –
வித்யா மாஹாத்ம்யாதிகளாலே -தஜ்  ஜாதீய சகல உத்தமரான பெரிய ஆழ்வாரும் –
வேத பயன் கொள்ள அவர் தம்மை போலே பேதை பருவத்திலே வேத சாரார்த்த வித்தமையாய் இருக்கும் அவர் திரு மகளான ஆண்டாளும்-
ஸ்ரீ கிருஷ்ண அவதார அனுபவத்தில் -அபிநிவேச அதிசயத்தாலே –
மிடுக்கு இலாமையால் நான் மெலிந்தேன் நங்காய் –
என் மகன் கோவிந்தன் –
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட அப் பாங்கினால் -இத்யாதியாலும் –
ஆயர்பாடி செல்வ சிறுமீர்காள் –
நாமும் நம் பாவைக்கு –
ஆய்க்குலத்து உன் தன்னை பிறவி பெரும் தனை புண்ணியம் யாம் உடையோம் -இத்யாதியாலும் –
தான் அவளாகப் பேசும்படி -தாங்கள் அவதரித்த வர்ணத்துக்கு மூன்றாம் வர்ணம் ஆகையால் தண்ணிதாய் இருந்துள்ள –
அறிவு ஒன்றும் இல்லாத கோப ஜென்மத்தை புரையற ஏறிட்டுக் கொண்டார்கள் -என்கை-

உத்க்ருஷ்ட ஜென்மத்தை ஆசைப்படாத படி -வேண்டிய வேதங்கள் ஓதி வேதார்த்த ஸ்தாபனம் பண்ணும் பெரியாழ்வார்
வேதம் அனைத்துக்கும் வித்தான பிரபந்தம் அருளி பிஞ்சிலே பழுத்த ஆண்டாளும் –முடை நாற்றம் இத்யாதி –
தாங்கள் அவதரித்த வர்ணத்துக்கு நீசமான அறிவு ஒன்றுமே இல்லாத கோப ஜென்மத்தை -இடையர் படி வடிவில் தொடை கொள்ளும் படி -தான் அவனாக மீளாத படி ஆஸ்தானம்
தத் ததீய சம்பந்தம் உடைய ஜென்மமே -உத்க்ருஷ்டம் -வையத்தில் இதுவே வாழ்ச்சி / இதர- பகவத் பாகவத சம்பந்தம் அபகர்ஷம் –
குலசேகர பெருமாள் ஆசைப்பட்டார் -தசரதன் கௌசல்யை தேவகி ஷத்ரிய வம்சமாக அன்றோ அருளிச் செய்தார் /
வித்யா மாஹாத்ம்யாதிகளாலே–ஜென்மம் பிறப்பால் ப்ராஹ்மணர் / சம்ஸ்காரம் பண்ணி த்விஜன் /வித்யையால் விப்ரர் /
மூன்றும் சேர்ந்து ஸ்ரோத்ரியர் /சத்கர்மங்கள் அத்யயனம் தானம் யஜனம் பண்ணு பண்ணுவித்து /
-தேவ -பத்து வித விப்ரர்- தேவ விப்ரர் – முனி விப்ரர் -ராஜ விப்ரர் – வைஸ்ய விப்ரர் – சூத்ர விப்ரர் – மிலேச்ச விப்ரர் /
உஞ்ச விருத்தி பண்ணி உண்பவன் -கிடைத்ததை கொண்டு ஸந்துஷ்டன் -தேவ விப்ரர் பெரியாழ்வார் –
மாமன் மகளே பிராகிருத சம்பந்தத்தை ஆசைப்பட்டாள் –
ஆஸ்தானம் -ஆரோபணம் பண்ணுவது -அபூர்வ கோப ஜென்மாவை –பாவனா பிரகர்ஷா இடை பேச்சும் இடை முடியும் இடை நடையும் – முடை நாற்றமும் உண்டே

——————————————-

சூரணை -239-

கந்தல் கழிந்தால் சர்வருக்கும் நாரீணாம் உத்தமை உடைய அவஸ்தை வரக் கடவதாய் இருக்கும் –

இப்படி ஆசைப் படுகையும் -ஆஸ்தானம் பண்ணுகையும் -ஒழிய -கந்தல் கழிந்தால்
ஸ்வரூபம் இருக்கும் படி தான் என்ன -என்ன -அருளிச் செய்கிறார் –
அன்றிக்கே –
இப்படி விசிஷ்ட வேஷ பிரயுக்தமான தாரதம்ய அவஸ்தைகள் இன்றிக்கே -கந்தல் கழிந்தால் சகல ஆத்மாக்களுக்கும்
வரும் அவஸ்தை தான் எது என்ன -அருளிச் செய்கிறார் ஆகவுமாம்-

அதாவது –
ஆத்மா ஸ்வரூபத்தை உள்ளபடி பிரகாசியாதபடி அநாதி காலம் அனுபவித்து போந்த வந்தேறியான -அவித்யாதி தோஷம் –
பகவத் பிரசாத விசேஷத்தாலே – பின்னாட்டாதபடி சவாசனமாக போனால் -சகல ஆத்மாக்களுக்கும் –
சர்வ லஷண சம்பன்னா  நாரீணா முத்தமாவதூ -என்கிறபடியே –
ஸ்த்ரீத்வ லஷணங்கள் எல்லாவற்றிலும் குறைவற்று – ஸ்வ இதர சகல ஸ்த்ரீண உத்தமையாய் இருக்கும் பெரிய பிராட்டியருடைய நிலை
தன்னடையே வரக் கடவதாய் இருக்கும் என்கை-

வால்மீமி பூமி புற்றில் இருந்து -ஸ்ரீ ராமாயணம் -பூமா தேவியே ஆண்டாள் / சர்வருக்கும் பிராட்டி உடன் சாம்யம் உண்டே -ப்ரக்ருதி -சரீரம் கர்மா கழிந்த பின்பு –
ஸ்வரூபத்தை துறுப்பற்றின ஸ்வா தந்தர்யம் -கந்தல் -இரும்பு போல் வலிய நெஞ்சம் தானே -அநாதி காலமாக இருந்ததே -அஹங்காரம் துர் அபிமானம்
தத் அனுக்ரஹத்தாலே தொலைய– பாரதந்த்ரமே வடிவான –உயர்ந்த பிராட்டி அவள் அபிமானத்தாலே தல் லக்ஷணம் -நிரதிசய ப்ரேம அவஸ்தை தன்னடையே
வரக் கடவதாய் இருக்கும் /- -நிஷ்க்ருஷ்ட ஆத்ம ஸ்வரூபம்- ஆவிர்பாவம் அடையும் -பக்தி காதல் அன்பு ப்ரேமம் -கோபிகளுக்கு சமம் சொல்லவும் வேண்டாம் என்ற கருத்து
சேது உடைந்தால் நீரை வரச் சொல்ல வேண்டாமே –குடகு மலை வெள்ளம் வந்தால் காவேரி நீர் வருமே –

———————————————-

சூரணை -240-

ஆறு பிரகாரத்தாலே-பரி சுத்த ஆத்ம ஸ்வரூபத்துக்கு தத் சாம்யம் உண்டாய் இருக்கும் –

அது எங்கனே என்னும் அபேஷையிலே அத்தை உபபதிக்கிறார் –

அதாவது –
1-அனந்யார்க்க சேஷத்வம் –
2-அநந்ய சரணத்வம் –
3-அநந்ய போக்யத்வம் –
4-சம்ச்லேஷத்தில் தரிக்கை –
5-விச்லேஷத்தில் தரியாமை-
6-ததேக நிர்வாஹ்யத்வம் -ஆகிற ஆறு பிரகாரத்தாலே –
நிச்சேஷ நிவ்ருத்த அவித்யாதி தோஷ தயா பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு
பிரகார ஷட்க பரி பூரணையான பிராட்டியோடு சாம்யம் நை சர்கிகமாக உண்டாய் இருக்கும் என்கை –
இந்த சாம்ய ஷட்கத்தை நினைத்து இறே-
கடி மா மலர் பாவை ஒப்பாள் –பெரிய திருமொழி -3 -7 -9 -என்று ஆழ்வார் அருளி செய்தது –
ஆக இவ் இரண்டு வாக்யமும் ப்ராசங்கிகம்-

இப்படி அவஸ்தை உண்டாகும் வழி என்ன என்ன –அநந்யார்ஹ சேஷத்வம் / அநந்ய சரண்யாத்வம் / அநந்ய போக்யத்வம் -திரு மந்த்ரம் அறிந்து /
சம்ச்லேஷத்தில் தரித்தும் விஸ்லேஷத்தில் தரியாமையும் –ஆய -பிரார்த்தநாயாம் வியக்த சதுர்த்தி /
ததேக நிர்வாஹத்யம் -சமாசம் -நாரங்களை அயனாக உடையவன் -நாரங்களுக்குள் அயனம் –
சேஷ பரதந்த்ர ஸ்வரூப சேதன ஸ்வரூப அனுரூபமான -ஸ்வா தந்தர்ய கந்தம் இல்லாமல் பரிசுத்தமான ப்ரத்யக் ஸ்வரூபம் ஸ்வ சித்தம் –
கடி மா மலர்ப் பாவை யுடன் ஸ்வ பாவ சாம்யம் ஸூத சித்தம் -இயற்க்கை /

———————————————-

சூரணை -241-

த்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்காரத்திலே-
அத்ருஷ்டத்தில் உத்கர்ஷம்-அஹங்கார ராஹித்யத்தாலே –

இனி அவர்கள் உத்க்ருஷ்டமான ஜன்மங்களை உபேஷித்து –
நிக்ருஷ்டமான ஜன்மங்களை விரும்புவான் என்  -என்ன அருளி செய்கிறார் –

அதாவது –
ஆபிஜாத்யாதிகளும் -ஐஸ்வர்யமும் ஆகிற த்ருஷ்ட புருஷார்த்தத்தில்-ஒருவனுக்கு உண்டாம் உயர்த்தி –
விச்வாமித்ராதிகளை போலே தான் நின்ற நிலைக்கு மேலே உத்கர்ஷம் தேடப் பண்ணும் அஹங்காரத்தாலே உண்டாம் –
சேஷத்வாதிகளும்-கைங்கர்ய சம்பத்தும் ஆகிற -அதருஷ்ட புருஷார்த்தத்தில் ஒருவனுக்கு உண்டாம் உயர்த்தி –
இவற்றினுடைய அபிவிருத்தியில் ஆசையாலே நிலைக்கு நிலை தாழப் போம் படியான அஹங்கார ராஹித்யத்தாலே உண்டாம் -என்கை –

ப்ராஹ்மண உத்க்ருஷ்டரானவர்கள் -ப்ரஹ்ம ஜென்மத்தை உபேக்ஷித்து கோப ஜென்மத்தை ஆதரிப்பது –
அவற்றின் அஹங்காரம் / இவற்றின் அஹங்காரம் இல்லாமை என்பதாலே /
சரீரத்துடன் உள்ள வேஷத்துக்கு உத்க்ருஷ்டம் அஹங்காரம் அடியால் -விசிஷ்ட வேஷத்தில் இது அ நகத்தை அஹம் என்ற நினைவே அஹங்காரம் /
நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் –சரீரமே இல்லையே -வஸ்துவே இல்லாத போது அஹங்கார ராஹித்யம் உண்டாகும் –
அஹங்கார ஹேது வர்ணாதிகளாலே-விசிஷ்ட வேஷத்தில் – -உத்கர்ஷம் -சேக்ஷத்வாதிகளாலே நிஷ்க்ருஷ்ட வேஷத்தில் உத்கர்ஷம் –
உத்க்ருஷட ஜென்மத்தில் உபேக்ஷை -அஹங்கார ஹேது -த்ருஷ்டத்தில் தானே –
அபக்ருஷ்ட ஜென்மத்தில் உபேக்ஷை -அநஹங்கார ஹேது -அத்ருஷ்டத்தில் தானே என்றபடி –
ஷத்ரியன் ராஜ ரிஷி மஹா ரிஷி ப்ரஹ்ம ரிஷி ஆவது விசிஷ்ட -த்ருஷ்டத்தில் அஹங்காரம் அடியாக —
வீத கவ்யர் இப்படி விச்வாமித்ரர் போலே -மேலே மேலே அபிவிருத்தமாகும் நிலை
ஆழ்வாராதிகள் அத்யந்த சேஷன் பரதந்த்ரன் அநந்யார்ஹத்ஹவம் அசித் வத் பாரதந்தர்யம் –அத்ருஷ்ட புருஷார்த்தம் —
தாழ தாழ போய் அபிவிருத்தமாகும் நிலை இங்கே

————————————————–

சூரணை -242-

ப்ரஹ்மாவாய் இழந்து போதல்-இடைச்சியாய் பெற்று விடுதல்- செய்யும் படியாய் இருக்கும் –

இவ் அஹங்கார- தத் ராஹித்யங்கள்- இழவு பேறுகளுக்கு உடலாம் படியை அருளிச் செய்கிறார் –

அதாவது –
த்ருஷ்ட உத்கர்ஷ அதிசயத்துக்கு தக்க அஹங்கார அதிகனான ப்ரஹ்மாவாய்-
த்வி பரார்தா வாசனே மாம் பிராப்தும் அர்ஹசி பத்மஜ -என்றும் –
கடி கமலத்துக்குள் இருந்தும் காண்கிலான்-கண்ணன் அடிக் கமலம் தன்னை அயன் -மூன்றாம் திரு அந்தாதி -56 –
என்றும் சொல்லுகிறபடியே இழந்து போதல் –
அஹங்கார ஹேதுக்கள் ஒன்றும் இலாமையாலே தத் ரஹீதையாய் -இடக்கை வலக்கை அறியாத இடைச்சியான சிந்தயந்தியாய்-
முக்திம் கதான்ய கோப கன்யகா-என்னும்படி-அவன் திருவடிகளைப் பெற்று விடுதல் செய்யும் படியாய் இருக்கும்
இவ் அஹங்கார தத் ராஹித்யங்களின் ஸ்வாபம் என்கை –
இப்படி அஹங்கார தத் ரஹீத்யங்கள் அவனை-இழகைக்கும் பெருகைக்கும் உடல் ஆகையாலே
ஸ்ரீ குலசேகர பெருமாள் முதலானவர்கள் அஹங்கார ஹேதுவான ஜன்மங்களை அனாதரித்து
தத் ரஹித ஜன்மங்களை ஆதரித்தார்கள் -என்று கருத்து —

அதிகார நிஷ்டையில் இறுதி சூரணை இது / அஹங்காரத்தால் இழந்து போவது ப்ரஹ்மாவை போலே / அஹங்கார ராஹித்யத்தால் பெற்றாளே சிந்தையந்தி போல்வார் /
த்வி பரார்தா வாசனே மாம் பிராப்தும் அர்ஹசி பத்மஜ – –இரண்டு பரார்த்தங்கள் சென்ற பின் நீர் என்னை வந்து அடையலாம் –
நா அஹம் -எனக்கு தெரியாது- என் பிள்ளைகளுக்கு தெரியாது -எங்கே இருந்து பிறந்தோம் என்று அறியாமல் தன் பிறந்த இடம் போனதும் –
தபஸ் பண்ண அசரீரி வாக்கியம் -அந்த தபஸால் கண்ட பெருமாள் வசனம் இது -/
த்ரயோ தேவா துல்யா -மூன்றுக்கும் மேலே பரா சக்தி -பரா அஸ்ய சக்தி தன்னிகரற்றவனை மாற்றி சொல்லுவார்கள் /
கடி கமலத்துக்குள் இருந்தும் காண்கிலான்-கண்ணன் அடிக் கமலம் தன்னை அயன்-நாபிக் கமலத்தில் இருந்தாலும் -அநர்த்த பட்டானே /
அத்ருஷ்டத்தில் முக்திந் கதா கோப கன்யா -அஹங்கார ராஹித்யம் –சிந்தயந்தி -இதுவே நிரூபணம் இவளுக்கு -சிந்தையிலே கண்ணனை நினைத்துக் கொண்டே –
கண்ணன் கழலை நண்ணி -எண்ணினாள் -நண்ணினாள் -சிந்தயந்தி —
அண்டாதிபத்யம் -விட வேண்டியவை நிறைய உண்டே அவனுக்கு /இவளுக்கு விட ஒன்றுமே இல்லையே /
குடிசை பற்றி வரும் அஹங்காரமும் திருக் குழலோசை ஒன்றுமே போதுமே -கடுக பெற்றாள்-
வந்து அடையலாம் விளம்பிற்று ஆகலாம் -சமஸ்க்ருத பிரமாணம்-பத்மஜா -எந்த பத்மம் என்றும் சொல்ல வில்லையே -இந்த குறைகள் இல்லாமல் –
ஜென்ம உத்கர்ஷமும் வாச உத்கர்ஷமும் ஆழ்வார் சொல்லி -பிறந்த இடத்தின் உத்கர்ஷம் சொல்லி -அடிக் கமலம் காண்கிலான் –
அகார வாஸ்யா ஜாயதே -அ கார வாச்யன் இருந்து பிறந்தவன் அஜன் –
அஜன் -ஆபி ஜாதியம் -கர்ப்ப வாஸம் இல்லையே -அஹங்கார ஹேது இதுவும் -பாதார விந்தம் காண்கிலான் –

ஆக இப்பிரகரணத்தால் -ஒன்பதில் இது என்று கொள்ள வேன்டும்-சித்த உபாய நிஷ்டருடைய வைபவம் முற்றும் -மேல் அவர்களின் தினசரியா சொல்லும் பிரகரணம்
ஆறு பிரகாரணத்தில் இன்னும் மூன்றாம் பிரகாரணம் -307-வரை தொடரும்
பகவத் அங்கீகாரம் -புருஷகாரம் வேன்டும் என்றும் அங்கீ க்ருத – குண விருத்தி– தூஷக அஹங்காராதி -ஆதி -விஷய ஸ்பர்சம் -181-சூரணை பார்த்தோம் –
தத் கார்ய அபசார கோரத்தையும் – நிரஹங்கார–ததீய பிரசித்த பாகவத வைபவத்தையும் –
சரீர ஜென்ம தோஷத்தையும் -சேஷத்வ ஞான ஜென்ம உத்க்ருஷ்டத்தையும் அருளிச் செய்தாரே

————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: