ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -217-228-தத் அதிகாரி க்ருத்யம் /பெறுவான் முறை /-சித்த உபாய நிஷ்டா வைபவம்– ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் / ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை /-மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————–

சூரணை-217–

ஸ்வசோபி மஹீ பால

இவ் அர்த்தத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் –

ஸ்வ சோபி மஹீ பால – விஷ்ணு பக்தோ த்விஜாதிக-விஷ்ணு பக்தி விஹீநச்து யதிச்ச ஸ்வபசாதம -என்கிற படி
எத்தனை யேனும் நிக்ருஷ்ட ஜன்மாவாய் இருந்தானே ஆகிலும்–பகவத் பக்தனானவன் த்வைஜநிர் காட்டில் அதிகன்-
உத்க்ருஷ்ட ஜன்மவான் அளவு அன்றிக்கே -உத்தம ஆஸ்ரரமியுமாய்  இருந்தானே ஆகிலும்
பகவத் பக்தி ஹீனனானவன் -ஸ்வ பசனிர் காட்டிலும் அதமன் என்று
வர்ணாஸ்ரமங்களிலே சரக்கு அறுத்து பகவத் சம்பந்தமே உத்க்ருஷ்ட ஹேதுவாக-சொல்லுகையாலே –
பிரம சம்பாவனாதி களாலே தத் சம்பந்த விரோதியான ஜன்மங்களில் காட்டிலும் -தத் அனுரூபமான ஜன்மமே ஸ்ரேஷ்டம் என்று கருத்து
இங்கன் அன்றாகில் -கீழ் சொன்ன அர்த்தத்துக்கு இது பிரமாணம் ஆக மாட்டாது இறே-

பகவத் ப்ரேமம் சம்பந்தம் அற்ற -உத்க்ருஷ்ட உத்தமன் -விட சம்பந்தம் உள்ள நிக்ருஷ்ட அதமன் என்று பிரமிக்கும் —
நாய்வ மாம்சம் உண்டாவாக இருந்தாலும் விஷ்ணு பக்தி இருந்தவனாக இருந்தாலும் பக்தி இல்லாத -த்விஜ -ப்ராஹ்மணனை விட உயர்ந்தவன் –
மேலே ஆஸ்ரம யதி பற்றி / வர்ணாஸ்ரம கேவல உத்க்ருஷ்ட பிரமம் போக வேண்டுமே /யதியாகவே இருந்தாலும் -ச காரம் / அபி -உம்மை தொகை /
விஷ்ணு பக்தி உக்தன் -என்றது அநந்யார்ஹத்வ சேஷத்வமும் ஒன்றே /சினேக பூர்வம் அநு சந்தானம்-ஞானம் வளர்ந்தே பக்தி ஆகுமே /
அநு சப்தம் இருப்பதால் -பிரதானம் முன் அப்பிரதானம் பின் வருமே /
தாழ்ச்சியை நினைத்து சினேகா பூர்வம் அநு த்யானம் -பஜ கீர்த்தனம் பஜ சேவாயாம் -கைங்கர்யத்தை காட்டுமே /
ச காரம் அபி சப்தம் -உத்க்ருஷ அபகிருஷ நிர்ணயம் இவற்றால் இல்லையே -தாழ்ந்தவனாக இருந்தானே ஆகிலும் –இருப்பவனாக என்று -சொல்ல வில்லை –
பூர்வ வ்ருத்தம் பற்றி தானே இது /பெருமாள் திரு உள்ளத்தில் பூர்வ வ்ருத்த நினைவே இருக்காதே -மறப்பானோ சர்வஞ்ஞன் –ஸத்யஸங்கல்பன் அன்றோ /
கிருபாதீன கார்யம் தான் இதுவும் /அப்ரீதி தானே பாபம் -நினைவு இருக்க பாபம் போகாதே / நானும் வேண்டாம் நீயும் வேண்டாம் தன்னடையே போகும் என்றானே /
போக்க நினைவும் போக்க முயற்சியும் போன நிலைமையும் வேறே வேறே இல்லை /
உத்க்ருஷ்ட வர்ணம் உத்தம ஆஸ்ரமி -யதி மூன்று வர்ணத்திலும் வழக்கம் இல்லை -ப்ராஹ்மண யதியையே குறிக்கும் /
சந்நியாசி -அனைத்தையும் விட்ட த்ரிவித தியாகம் -ஸ்வ பசன் -நாய் மாமிசம் உண்ணுபவன் /
பகவத் சம்பந்தமே உத்கர்ஷ ஹேது –விஷ்ணு பக்தியே பகவத் சம்பந்தம் -அநந்யார்ஹ சேஷத்வம் -கைங்கர்யம் -பஜனம்- சேவை – அதுவே பக்தி என்றதாயிற்று –
உத்தம ஆஸ்ரமம் ப்ராஹ்மணனுக்கே ஆகும் / ப்ராஹ்மண ஜென்மத்திலும் ஏத்தி -உயர்ந்ததில் உயர்ந்தவனை காட்டிலும் என்று காட்ட –
சரக்கு அற்று -பசை அறுத்து -ப்ராஹ்மத்வம் யதித்வம் இவைகளை போக்கி /சினேக பூர்வ அநு தியானமே -பஜ தாது சேவாயாம் /
விஷ்ணு பக்தன் —சாத்தியம் சாதனம் -சம்பந்தம் -நாய் மாமிசம் உண்ணுபவனாக இருந்தானாகிலும் -இது ஹேதுவா விஷ்ணு பக்திக்கு /
கிட்டே கொண்டு வருமே -நைச்யன் நீசன் இதை விட வேறே வழி இல்லை போக்கற்ற புத்தி வரும் -கர்ம ஞான சஹ ஹ்ருத
கீதையில் சொன்ன பக்தி இல்லையே / நிர்ஹேதுகமாக பகவத் கிருபையால் -நீசன் என்ற எண்ணத்தால் வந்த பக்தி அன்றோ
கறவைகள் பின் சென்ற ஆய்க்குலம் அறிவு ஒன்றுமே இல்லாத –ஒன்றுமே இல்லா விடிலும் -உன் தன்னை புண்ணியம் யாம் யுடையோம் -எல்லாம் உள்ளதே -/
பள்ள மடையார் கீழே சொன்ன பக்ஷம் இல்லை / இவர் வந்து பிறந்த பின்பு தானே உயர்வு -அதனால் பகவத் சம்பந்தம் பெற்றார்கள் அன்றோ –
பிறவி உயர்வுக்கு காரணம் இல்லையே / விஷ்ணு பக்தனுக்கு உபயோகி நாய் மாமிசம் உண்ணுவது /
யதி ப்ராஹ்மணன் அஹங்காரம் வர நிறைய வாய்ப்பு உண்டே–சேஷத்வ விரோதி இல்லை யாகிலும் -ததீய சேஷத்வ பர்யந்தம் கைங்கர்யம் பண்ண விரோதி ஆகலாம் – –
விஷ்ணு பக்தன் ஆவதற்கு தடங்கலாக இருக்கும் -பட்டர் கைங்கர்யத்துக்கு இழவுக்கு உறுப்பானால் திரி தண்டத்தை உடைத்து வெள்ளை வஸ்திரம் கொள்வேன் என்றாரே /

எக்குற்றவாளர் -இத்யாதி –மேவும் நல்லோர் -முன்பே எப்படி இருந்தாலும் -அந்த தாழ்வே ஈர்க்கும் -பிடிக்குமோ என்னில்
தீய ஒழுக்கம் பிடித்தால் தப்பு வரும் / நினைவே கூடாதே பூர்வ வ்ருத்தம் பற்றி -அத்தை எனக்கு பிடிக்கும் என்று பறை வேறே சாற்றுவோம் –
ப்ராஹ்மணராகவோ உயர்ந்தவனான் -பேற்றுக்கு இழவுக்கு அவை காரணம் இல்லை -ராமானுஜர் சம்பந்தத்தால் காரே கருணை -திருமேனி அழகால்-
இல்லை எனக்கு எதிர் என்ன பண்ணுமே / உடையவர் சம்பந்தமே மோக்ஷம் / குற்றம் பிறப்பு இயல்வு -ஜென்ம விருத்தம் ஞானம் ஹேயம் என்ற
நினைவு வந்த பின்பு -நிற்கிற உருகும் நிலையே நம்மை ஆள்கொள்ளும் என்றவாறு /
அஹங்கார ஹேதுதயா தாழ்ந்ததாக நினைத்து பயப்பட அதுவே உத்தேச்யம் என்றவாறு
மிஸ்ர ஸம்ப்ரதாயர்–ரஹஸ்ய த்ரய பாஹ்யர்களும் -பள்ள மடையார்–ரஹஸ்ய த்ரய குத்ருஷ்டிகளும் –
மூலத்துக்கும் வியாக்யானத்துக்கும் தங்கள் மதப்படி அர்த்தம் சொல்லி- -இரண்டு பக்ஷமும் -நிரசித்து விலக்ஷண ஞான ஜென்ம சித்தாந்தம் /
சாமான்ய சப்த பிரயோகம் -உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட-மற்றையவன் / ப்ராஹ்மணர் என்றோ சூத்ரர் என்றோ சொல்லாமல் -ஒவ் ஒருவருக்கும்
ஒவ் ஒன்றுமே உதகர்ஷமாகவும் அபகரக்ஷகமாகவும் உள்ளதே /
பள்ளமடையான் பக்ஷம் படி நாய் மாம்சம் உண்பவனும் உத்க்ருஷ்டம் -என்பான் -/குலங்களாய நாலில்-ஆபீஜாதியாதிகள் –
அஹங்கரித்து நசிக்கும்-நால்வர் -கும்பி நரகர் ஏத்துவரேலும்-மணி வண்ணனுக்கு ஆளானால் ஆழ்வார் திருவடி தலை மேல் கொள்வார் /
வேத தத் அங்க உபாகங்களிலே ஆபாத ப்ரதீதியாலே மேலோட்டமாக ப்ராஹ்மணாதிகள் உத்க்ருஷ்டம் போலே
திராவிட அருளிச் செயல்களிலும் ஆபாத ப்ரதீதி இவன் பக்ஷம் உத்க்ருஷ்டம் /இருவருக்கும் பொது-தேக சம்பந்தம் உபாதியால் /

நிரபேஷ சித்த உபாயம் -பர கத ஸ்வீகாரமோ ஆச்சார்ய அபிமானம் இத்யாதி ஸ்ரீ பாஷ்யத்திலே இல்லை -கர்ம ஞான பக்தி இத்யாதிகளை தானே சொல்லிற்று /
நாயமாத்மா சுருதி -சேதன க்ருதி-ப்ரீதி ரூபாபன்ன பக்தி ஹேதுக பகவத் ஸ்வீ காரம் –அனவரத கால ஷேபம் செய்தே இத்தை உணரலாம் /
பிரபத்தி சர்வாதிகாரம் / ஸக்ருத் /பல காலம் நினைக்கில் பேறு நழுவும் / பக்தி துல்ய சாதானாந்தரம் பிரபத்தி / அத்யந்த அபிமதமான ரஹஸ்ய த்ரயம் பிரகிரியை –
அவதார ரஹஸ்ய ஞானத்துடன் பக்தி செய்தால் தேகாவசனத்தாலே மோக்ஷம் -உபாயாந்தரமாக இத்தையும் முமுஷுப்படியில் /
தேச வாச த்வய சங்கீர்த்தநாத்திகள் -மோக்ஷம் போகலாம் பிரசம்ஹா பாவம் உண்டாகலாம் -/
கர்மாதீனமான சரீரம் எல்லாம் பய ஜனகம் தானே என்றவாறு –
தூண்டில் போலே -இந்த லகு உபாயங்களை காட்டி நீக்குதியோ /அவற்றில் இழிந்த நித்ய சம்சாரியான நான் அன்றோ -முன்பு நின்ற நிலையம் கெடுமே /
நிரபேஷ உபாய பூதன் ஒருவனே சரண்யன் ஆவான் /
காலேஷு –விலக்ஷண காலம் தேசம் / பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -சோகமும் அச்சமும் சரீர காரணம் /
உபாயாந்தர சம்பந்தம் மஹா பயம் /விஷயாந்தரத்தால் வந்த பயத்துக்கு கிருபையை பிரார்த்திக்கலாம் -அத்தையும் நழுவ விட்டானே /
அச்சுதன்-சர்வ உபாய ஸூன்யராய் இருப்பாரையும் நழுவ விடாதவன் / துவாரகா நிலைய அச்சுத ரக்ஷமாம் -அவள் கை விட்டாள் -நீர் கை விட வில்லையே /
சேஷியுடைய போகத்தை அழிக்கக் கூடாதே / ஞானத்தால் வந்த தால் -திருமந்திர யாதாம்ய அர்த்தம் அறிந்த ஆழ்வார் நிஷ்டை –பிறப்பால் அல்ல –/
பாகவதர் இடம் கைங்கர்யம் கொள்ள மேன்மை வேணும் -கைங்கர்யம் செய்ய தாழ்ச்சி உணர வேணும் / என்னை வணங்கினார் -அனுவர்த்தனத்துக்கு –
மேன்மையால் இசைவானாகில் ஸ்வரூப நாசகமாகுமே / அத்யந்த பாரதந்தர்யம் ரூப நைச்ய அனுசந்தானத்தால் இசைந்து இருப்பதே —
கைங்கர்யம் ஏற்று கொள்ள உதகர்ஷம் வேண்டாம் –நீசன் இருந்தாலும் அவருக்கு பரதந்த்ரன் அவர் சொல்வதை கேட்க வேண்டுமே /
ஆச்சார்யர் ஸ்ரீ பாத தீர்த்தம் -சேர்க்கும் பொழுது -தம் ஆச்சார்யர் உடைய சிஷ்யன் தாமும் இந்த சிஷ்யனும் என்ற எண்ணம் வேன்டும் –
அத்யந்த பரதந்த்ரன் என்ற எண்ணம் வேணும் / உத்தவர் சுகர் -நைச்யம் ஸ்தாவர பாகவதர்கள் இடம் /
ஆண்டாள் பட்டர் ஸ்ரீ பாத தீர்த்தம் ஸ்வீ கரித்து நைச்யம் இயற்க்கை / சரீரம் பார்க்காமல் ஆத்மாவை பார்த்து அன்றோ /

நைச்யம் ஜென்ம சித்தம் -ஸ்வரூப பிராப்தம் -/ ஸ்தாவர ஜங்கம பாகவதர்களை பார்த்தால் நான்காம் வர்ணத்தவர் தங்களை நீசராக நினைக்க மாட்டார்களே
திருமந்திர யாதாம்ய ஞானம் அறிந்தவன் தானே இவ்வாறு நடப்பான் / திருமந்த்ரார்த்த ஸ்ரவண ஜன்ய ஞானம் உள்ளவர்களுக்கே பொருந்தும் /
சர்வாதிகார உபாயாந்தர பயம் -தேச வாஸம்-அவதார ரஹஸ்ய ஞானம் – இத்யாதி /
தேகத்தால் உயர்வு சொன்னால் -1-பாகவத ஜென்மம் கண்டு தாழ்வாக எண்ண வைக்கும் /-2-ஸஹ காரி ஜாதி என்ற குற்றம் வரும் -நிர்ஹேதுகத்வத்துக்கு கொத்தை வருமே
3–துர் ஜாதி சஹத்வம் பெருமை பக்திக்கு -4-சாத்யாந்தர சாதனாந்தர பயம் /5–தேக உபாதி கொண்டு ப்ராஹ்மண பாகவதர் -ஜென்ம நிரூபணம் அபசாரம் ஆகுமே /
6–ஹே ப்ராஹ்மணரே என்பதும் ஹே சூத்ரன் என்பதும் குற்றமே-அர்ச்சா த்ரவ்யம் உபாதானம் சொல்வது போலே -/
7–என்னை விட எல்லா பாகவதரும் உயர்ந்தவர்கள் -அவர்களுக்கும் சிலர் உயர்ந்தார் என்று சொன்னால் குற்றமோ என்னில் -ஆச்சார்யர் சாம்யத்தில்
இவர்களை வைக்க வேண்டி இருக்க இப்படி நினைப்பதும் குற்றமே /
8–நிக்ருஷ்ட ஜென்ம பாகவதர்களை ஆச்சார்யராக நினைக்க சொல்லிற்றோ என்னில் –சகலரையும்-சம்சாரிகளிலும் தன்னிலும் -ஈஸ்வரனை யும் விட உயர்ந்தவர் –
ஆச்சார்யருக்கு சமம் என்றும் கொள்ள வேன்டும் -என்பதே விவரணம் பிறரை காட்டிலும் குறைந்தவர் என்று நினைப்பதும் அபசாரம்-
மீமாம்ச சாஸ்திரம் ஸ்ரீ வசன பூஷணம் -உயர்த்தி சொல்ல தான் வந்தேன் -அவதி காட்ட தாழ்ச்சி என்பான் என்னில் /
ஈஸ்வரன் நீ சம்சாரி இவர்களை விட சொல்லி கொள்ளலாமே -எதுக்கு இன்னும் ஒரு பாகவதரை சொல்ல வேன்டும் /
தன்னை தாழ விட்டு வந்து நம்மை திருத்த -கண்ணுற நிற்கிலும் -கணகில்லா -ஆச்சார்யர் உயர்ந்தவர் -/
மிருத சிலா மயமாக இருந்தாலும் -தாழ நின்றவராக இருந்தாலும் -என்று காட்டவே -இந்த வாக்கியம் உபாதானம் சொல்ல வந்தது இல்லை /

வாய் திறந்து த்யாஜ்ய உபாதேயங்களை உபதேசிக்கும் ஆச்சார்யர் ஸ்ரேஷ்டம் / இருப்பதில் தாழ வந்த பெருமாள்
நமக்காக -வந்தவர் -என்று காட்டவே – ம்ருத்ம்யம்
தேஹாத்ம அபிமானிகள் ரிஷிகள் பர்வத பரமாணு -படிக்கட்டு ஏற்றி ஆண்டாள் ஏற்றம் சொல்ல வந்தது –இப்படி உயர்ந்தவர் காட்டி உள்ளார்கள் பூர்வர்–
அவரை சிரித்து இருப்பார் ஒருவர் -என்று ஒப்பிட்டமை உண்டே / இருந்தாலும் இவற்றை பாகவத அபசாரம் என்பார் இல்லையே /
ஞான தாரதம்யத்தால் சொல்ல வந்தவை -ஜென்ம நிரூபணத்தால் இல்லை / கீழே ஞான உதகர்ஷம் அபகர்ஷம் சொல்ல வில்லை –
பெரியாழ்வார் ஆண்டாளை விட உத்க்ருஷ்ட ஞானவான் என்பார் இல்லையே / உண்டோ சட்கோபார்க்கு ஒப்பு உண்டோ ஒப்பு அனைவருக்கும் சொல்லி / எதனால் சொன்னீர் –
பகவத் அங்கீ காரத்தால் வந்த தாரதம்யமே/ அவன் அபிமதத்துக்கு காரணம் சொல்ல முடியாதே /நிவாரகர் இல்லாத ஸ்வா தந்திரம் கொண்டவன் /
நிர்ஹேதுக கிருபையால் குணங்களால் ஆலங்கால் பட்டு மஹிஷிகளாகவும் / அற்று தீரும் படி யாவதாத்மா பாவியாக கைங்கர்யம் செய்யவும் /
அஸ்தானே பய சங்கிகளாக பண்ணி மங்களா சாசனம் / ஆஸ்ரித பரதந்த்ரன் -குணம் காட்டி சரம பர்வ நிஷ்டராக்கி
யாவதாத்மா பாவியாக அடியார்க்கு ஆட்படுத்தும் -இப்படி நான்கு வகைகள் உண்டே /
திவ்ய மஹிஷிகள் / மற்ற ஆழ்வார்கள் / பெரியாழ்வார் / மதுரகவி ஆழ்வார் வடுக நம்பி போன்றோர் – இப்படி நான்கு வகைகள் /
தாரதம்ய நிரூபணம் -ஆஸ்ரய த்தில் உள்ள உயர்வு தாழ்வு காரணம் இல்லையே -பகவத் விஷயீ காரம் வாசியால் தானே -உயர்வு தாழ்வு என்பதே இல்லையே -/
ஈஸ்வர குண ரூபமாய் இருக்குமே இவை -/ தேக உபாதி மூலம் சொன்னால் ஆஸ்ரய ஏற்றத் தாழ்வு உண்டாகும் -அபசாரம் ஆகுமே /
விலக்ஷண பாகவதர் உயர்ந்தவர் -உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட சப்தம் நீரே சொல்கிறீர் என்னில் -விலக்ஷண பாகவதர் உயர்ந்தவர் -அவிலக்ஷணர் தாழ்ந்தவர் /
அவிலக்ஷண பாகவதர் என்று சொல்ல வில்லையே / விலக்ஷணர் விஷயத்தில் பேசும் உயர்வு தாழ்வு தானே அபசாரம் /
நான் சொன்ன உயர்வு தாழ்வு அவிலக்ஷணர் என்பான் பூர்வ பக்ஷி இதுக்கும் /

அவிலக்ஷணருக்கு ஜாதி போகாதே –/ விலக்ஷண பாகவதருக்கு ஜாதி போகுமே /பிரமாணம் இதுக்கு என் என்னில் -நீ தான் /
இவ்வளவு சொல்லியும் உம் கண்ணில் இருந்து ஜாதி விஷயம் போகவில்லையே /உம் கண் பார்வையே காட்டிக் கொடுக்கும் /
ப்ரத்யக்ஷ சித்தம் -இது /இது இல்லா விடில் தாரதம்யம் சொல்ல மாட்டாய் -பகவத் சம்பந்தமே பிரயோஜகம் -உன் கண்ணில் பட்டதாலேயே -210-சூரணை பிறந்தது –
தனியனில் கோத்ராதிகள் வம்சம் சொல்லுவான் என் என்னில் என்பான் பூர்வ பக்ஷி
சுகர் -வயம் விஷ்ணு தாச யூயம் ப்ராஹ்மண வர்ணர்-என்பார் /நர ஹரி தாச தாச தாச பூதர்
பிருகு வம்சம் திரு மழிசை ஆழ்வார் -கிருஷ்ணாநாம் -கறுப்பு நெல் -வாயை திறவாமல் -வேதம் பெரும் புலியூர் அடிகள் -குலங்களாய ஈரிரண்டில் பிறந்திலேன் /
த்ரரை வரண அதிகார வேதம் கற்க வில்லை /
வழக்கம் அபிவாதம் சொல்லும் பொழுது அடியேன் ராமானுஜ தாசன் என்றே சொல்லி கொள்ள வேன்டும் /-
லோக ஸங்க்ரஹ அர்த்தம்–பகவத் சம்பந்தம் வளர்க்க -மர்யாதா பாலான அர்த்தம் –சிஷ்யர்களுக்கு பரம போக்யம் -என்பதால் தனியன் கோத்ரம் வம்சம் –
ஆச்சார்யர் ஆழ்வார் பூர்வ விருத்தங்கள் எல்லாம் உத்தேச்யம் – விப்ர நாராயணன் பற்றியும் உண்டே -/வர்ணாஸ்ரம தர்மம் பண்ணி காட்ட வேண்டுமே லோகத்துக்கு /
பகவத் ஏக நிரூபணம் தானே பாகவதர் -இவர்களே விலக்ஷணர் –

பகவத் பக்தி -சர்வ விஷய உதகர்ஷத்துக்கு ஸூ வ ஆஸ்ரயத்துக்கு கொடுக்கும் /படிப்படியாக /-இரண்டு அவஸ்தைகள் -பூர்வ உத்தர அவஸ்தைகள்
பூர்வம் ஞான அவஸ்தை / உத்தர ப்ரேம அவஸ்தைகள் /சம்பந்த உபாய பலன்களுக்கு –தோழி தாய் மகள் // பக்திசா ஞான விசேஷ தச வித நிலைகளை உண்டாக்கும் ப்ரேமம் -/-
1- அத்வேஷம் –வெறுக்காமல் –லோக நியமனம் லோக பாவனம் ஸ்ரீ வைஷ்ணவர்களை த்வேஷிக்காமல் /கிருஷி பலித்தது என்ற நினைவால் வெறுக்காமல்
2-ஆனுகூலஸ்ய /-பூர்வ பூர்வ அபேக்ஷயா உத்தர உத்தர ஸ்ரேஷ்டம் – அநு வர்த்தனங்களுக்கு -பகவத் பாகவத விஷயங்களில்
3–திவ்ய நாம -பெயராக வைத்து ப்ரீதி விஷய அனுகூல்ய ஞானம் -/ விரலை வெட்டி ஏகலைவன் /பச்சை குத்தி /
4—சக்ராங்கிதம் -பொறி ஒற்றிக் கொண்டு -வைஷ்ண ரூபம் துளசி மலை/ தரித்து -தேவதாந்த்ர பஜனம் இல்லாமை
5—மந்த்ர பாடித்வம் -ரஹஸ்ய த்ரயம் / த்வயம் உச்சாரணம் / சாதன அபேக்ஷை பிறந்து ஸூ கர சாதனம் இழிந்து
6–வைஷ்ணவத்வம் -பக்தி உபாயம் -சாதனாந்தர நிஷ்டர்கள் /புருஷார்த்தங்களை விட்டு -அரதி -விரக்தனாய் அவனைப் பெற -தேக பந்துக்களை விடாமல்
7-ஸ்ரீ வைஷ்ணவத்வம்-தேக பந்துக்களை விட்டு – ச வாசனமாக விட்டு -விஷயாந்தர பரர்களை விட்டு -ஆத்ம பந்துக்கள் உத்தேச்யம் -பகவத் விஷய ஞானத்தால் விளைந்ததாய் இருக்க வேன்டும்
8–பிரபன்னத்வம் ஆவது –பக்திக்கு அங்கமாக -அங்க பிரபன்னர் -ஸூ தேக விருப்பத்தையும் விட்டு / சாதன பக்தன் -பக்தி ஆரம்ப விரோதி போக்க பிராயச்சித்த ஸ்தானத்தில் பிரபத்தி —
9—ஏகாந்தி –கிருஷ்ணனே ஏக சாதனம் -சாத்தனாந்தரங்களை ச வாசனமாக -தான் உபாயமாக பகவானை பற்றி இருக்கை
10–பர மை காந்தி -கிருஷியால் -அவனே உபாயம் -ஸூ வ கத ஸ் வீகார நிஷ்டர் கீழே / பர கத நிஷ்டர் இவர் -நீரே உபாயம் உபேயம் –தன்னையும் இல்லை என்று இருப்பவர் /
நம்மை நம் வசத்திலே விட வேண்டாம் – தன் திருவடிக்கு கீழே வைத்து கைங்கர்யம் அருளி / சித்த உபாய வரணத்தையும் விட்டு -காம்பற தலை சிறைத்து –
நோற்று ஸ்வர்க்கம் கோபி இது–யாருக்கு ப்ரஹ்மமாத்தால் ஆனந்தம் ஊட்டப் பட்டனோ / -கீழே தூ மணி மாடம் கோபி -ஆனந்தம் ப்ரஹ்மணோ வித்வான் /
அதுவும் அவனது இன்னருள் –யானும் தானாய் ஒழிந்தானே -அவன் பண்ணும் ஸ்வீ காரம்
கீழே இவன் பண்ணும் ஸ்வீ காரம் / ஏறு சேவகனார்க்கு என்னையும் உளள் -தூது -திரு வண் வண்டூர் / பிராப்தியை அறிவிக்க தானே ஓடி வருவானே /
11-பக்தத்வம்–ப்ரேம அவஸ்தா கார்யங்கள் மேலே -கீழே ஞான கார்யங்கள் –வேறே யாரையும் அண்டாமல் என் பக்தர்கள் இடம் பிரியம் -அடியார்க்கு அடியார் –
மத் பக்த ஜன பிரியர் -சினேக ரூபமாய் -பாகவதர் வரை வந்தவர் —
ஒருவன் பக்கல் ஞானம் ஏற்பட்டால் கூட இருப்பவர் கண்டு கொள்ளாமல் / பகவத் விஷய பிரியம் வந்தால் தான் சம்பந்தி சம்பதிகள் அளவும் போகுமே
12–பாகதத்வம் -அர்த்த பஞ்சகம் -ஆகார த்ரய சம்பன்ன -சகலார்த்த விஷயமாய் – ஆச்சார்ய அங்கீ கார விஷயீ க்ருதராய்–
பாகவதர் இடத்தில் அநந்யார்ஹ சேஷத்வ சரண்யத்வ போக்யத்வ
ஆக –முதல் ஒன்பது -சர்வாத்மா -முழுவதுமாக பகவத் பக்தி இல்லை -கார்யங்களை தன் தலையிலே ஏறிட்டு கொள்ளாமல் -யாவச் சரீர பாவம் ஜாதி போகாது
பத்தாம் அதிகாரி முழுவதும் பகவானை பற்றியதால் -நதி கடலில் கலக்க பெயர் ரூபம் போகுமே -முனையில் கலந்தால் இரண்டு வர்ணமும் தெரியுமே / வரணம் ஜாதி என்றுமாம் /
விஷ்ணு நாமம் கோத்ரம் சரண சூத்ர கூடஸ்தர்– பராங்குச பரகால யதிவராதிகள் / நிரதிசய ப்ரீத்ர் -ஆத்ம சத்தை உண்டாக பெற்றிலன் –
அத்யந்த ப்ரீதிக்கு விஷயம் ஆக வில்லையே -பகவத் விஷயீ க்ருதன் இல்லை
அடுத்த அதிகாரி -பாகவத விஷயத்தில் சினேக பூர்வ பக்தி தான் பூஜ்ய விஷயம் இல்லை -தனக்கு சமம் என்கிற நினைவில் உள்ளான் –
அத்யந்த அபிமதம் இவனுக்கும் இல்லை
பன்னிரண்டாம் அதிகாரி -ததீய பக்தி -தேவன் இடம் பக்தி ஆச்சார்யர் இடம் பண்ணுபவன் -சத்தை பற்று -பாகவதத்வம் என்ற ஜாதி பிறந்து
சர்வ உத்க்ருஷ்டன் -ஆழ்வார்களும் ஆச்சார்யர்களும் /
பயிலும் சுடர் ஒளிக்கும் நெடுமாற்க்கு அடிமை நெடு வாசி -இது தான் -11-/-12- அதிகாரிக்கும் வாசி / கொடு மா வினையேன் -என்று பாகவத சேஷத்வம் இழந்தேன் –
என்பது முதல் -9-அதிகாரிகள் / ஆழ்வார்களும் இதனாலே பத்தும் இரண்டும் -ஆண்டாளும் மதுரகவி ஆழ்வாரும் சரம பர்வ நிஷ்டர்கள் /
எதிராசரை சேர்த்து இவர்களையும் ஒரே பாசுரத்தால் மா முனிகள் /
தனக்கு சமம் என்ற புத்தி இல்லாமல் /பாகவத விஷயத்தில் மஹா நீயா விஷய பக்தியும் ப்ரீதியும் கொண்டவன் -12-அதிகாரி / எம்மை ஆளும் பரமர் -சேஷிகள் என்றவர் /
ஸ்வாமி என்றும் பரம போக்யன் என்றும் அறிந்து
அடியார் அடியோங்கள் கூடவே இருக்க -முனி மா பிரம முதல் தனி வித்தாய் –தனி மா தெய்வம் தளிர் அடிக் கீழ் புகுதல் அன்றி அவர் அடியார் –
எடுத்து கழிக்க இவ்வளவு பெருமை சொல்லி /அடியார் நனி மா கல்வி இன்பம் -போகம் அனுபவிக்க ஆசை பட்டார் /
சயமே அடியார் -தலை நின்றார் படியும் –நீக்கமில்லா அடியார் -கோதில் அடியார் -மூவர் நிலையையும் கொண்ட அடியாருக்கு அடியாராக ஆசைப்பட்டார்
இது வரை தான் ஸ்ரீ எம்பார் ஸ்வாமி அரும் பதம் காணப்படுகிறது –

——————————-

சூரணை -218–

நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷம் சமிப்பது விலக்ஷண சம்பந்த்தாலே-

ஆக நிக்ருஷ்ட உத்க்ருஷ்ட ஜம்னங்கள் இன்னது என்று நிரூபிக்க பட்டது கீழே-
அதில் நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷம் சமிப்பது எத்தாலே என்ன -அருளி செய்கிறார் மேலே –

அஹங்கார கர்ப்பமான -ஜென்மம் -பகவத் சம்பந்தம் இல்லாத -துஷ்ட ஜென்மம் -துஷ் ப்ரதி க்ரியா தோஷம் -பிராயச்சித்தம் பண்ணி போக்கிக் கொள்ள முடியாதே /
மேலிடாமல் சமிப்பது -நெருப்பில் இட்டது போலே-தீயினில் தூசாகும் / ஈர் இரண்டில் ஒன்றிலும் பிறந்திலன் -அதில் உள்ள பிரதிபத்தியை விட்டேன் -/
தாஸ்ய ஜென்மமே உயர்ந்தது -என்றவாறு -ச தோஷ ஜென்ம சம்பந்தம் -உபாயாந்தர சம்பாவனை இல்லாமலும் நைச்யம் பாவிக்க வேண்டாத –
இரண்டு தோஷங்களும் இல்லாமல் -தேக உபாதியால் வருமவை இல்லாமல் –
ஸ்வரூப அனுரூப ஜென்ம வ்ருத்தராய்/–ஹீந ஸ்பர்சம் பொறுக்காத விலக்ஷணரான சரம ததியர்கள் -ஸ்பர்ச நாதி சம்பந்தத்தால் போகும் –

அதாவது
அகங்கார ஹேதுத்யா நிக்ருஷ்ட ஜன்மம் அடியாக வந்த நைச்யம் பாவிக்க வேண்டுகையாகிற தோஷம் மறுவலிடாதபடி மாறுவது  –
ஜன்ம சித்தமான நைச்ச்சயத்தை உடையராய் -உபாயாந்தர அன்வய யோக்யதா கந்த
ரஹிதராய் இருக்கும் விலக்ஷண அதிகாரிகளோடு உண்டான சேஷத்வ ரூப சம்பந்த்தாலே என்கை-தரிசித்து ஸ்பரிசித்து கைங்கர்யம் பண்ண தோஷங்கள் விலகும்

—————————————–

சூரணை -219–

சம்பந்தத்துக்கு யோக்யதை உண்டாம் போது-ஜன்ம கொத்தை-போக வேணும் –

தத் சம்பந்த யோக்யதை சம்பவிக்கும் படி என் என்ன அருளி செய்கிறார் –

அதாவது
அவ் விலக்ஷணரோட்டை சம்பந்தத்துக்கு -அர்ஹதை இவனுக்கு உண்டாம் போது
தன்னுடைய ஜன்ம கதமான கொத்தை கழிய வேணும் என்ற படி

பாக்ய வசத்தால் தத் சம்பந்தம் ஏற்படும் பொழுது -/ அஹங்காரம் போவது பாகவத சம்பந்தத்தால் -அது ஏற்பட இது போக வேன்டும் –/
இந்திரியங்கள் வசப்பட என்னை தியானி / என்னை தியானிக்க வசப்படுத்து என்றால் போலே இங்கும் /அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் /
சத்வ குணம் வளர – ஞானம் வளர இவை போலே /பய க்ருதும் பய நாசகனும் அவனே -ஆஜ்ஜை அதி லங்கனம் பண்ணுபவனுக்கு பயம் உண்டாக்கி —
ஆஜ்ஜா அனுவர்த்திகளுக்கு பயம் போக்கி / தான் ஏற நாள் பார்த்து இருப்பானே –நிவேதியத மாம் சிப்ரம் -என்றானே /
அபிஜன அபிமானம் போனால் தான் பாகவத சம்பந்தத்தால் / ச வாசனமாக போக்கும் பாகவத சம்பந்தம் /
ஆத்ம ஞானம் வந்து கர்ம யோகத்துக்கு வந்து பண்ண பண்ண சித்தம் நிர்மலமாகி ஞான யோகம் நிலைத்து ஞானம் வளரும்- /
ஆத்மா தேக விலக்ஷணம் என்கிற ஞானம் வந்தால் தானே கர்ம யோகத்துக்கே வருவான் -அது கீழ் நின்ற ஞானம் -இது மேல் உள்ள ஞான நிலைகள் /
அதே போலே அஹங்காரம் மாத்திரம் தொலைந்து விலக்ஷண சம்பந்தம் ஏற்பட்டு -மேல் நிலைகள் -ஸ்வாமி போக்யம் இத்யாதி நிலைகள் வரும் /
விலக்ஷண சம்பத்தை தூஷகமான துர் அபிமான தூஷித்தமான நிக்ருஷ்ட ஜென்மம் -அஹங்கார ஜென்மம் -ச வாசனமாக போகும்
அனுகுணமான யோக்யதை -அஹங்காரம் தொலைந்தால்–துளி மாறினால் அதிகாரம் பிறக்கும் — இல்லை போல் இருக்கு என்று வாய் மாத்திரம் சொன்னாலே போதும்
ஜென்ம கொத்தை ச வாசனமாக போகும் -அஹங்காரம் மறுவல் விடாதபடி போகும் -திரும்ப முளை விடாதபடிக்கு நிவ்ருத்தமாகும்

————————————————–

சூரணை  -220–

ஜென்மத்துக்கு கொத்தையும் அதுக்கு பரிகாரமும் -பழுதிலா ஒழுகல்–என்ற பாட்டிலே அருளிச் செய்தார்-

ஜென்மத்துக்கு கொத்தை ஏது -அதற்க்கு பரிகாரம் ஏது ?-என்னும் ஆ காங்க்ஷையிலே அருளி செய்கிறார் –

ஸூஷ்ம அர்த்தம் ஸூ வியக்தமாக அருளிச் செய்கிறார் -பழுது குற்றம் இல்லாத பிரவாஹா ரூபமான ஜென்மம் -பேதிமார்களே -சதுர் வேதி களை கூப்பிட்டு –
இழி குலத்தவர்கள் ஆகிலும் எம் அடியார்களாகில் -நின்னோடும் ஓக்க -உம்மை -கடைசி பக்ஷம் என் அளவாகாவாது -என்றவாறு /
மதிள் திருவரங்கத்தானே -அனுஷ்டான பர்யந்தமாக காட்டி -லோக சாரங்க முனிவர் -திருப் பாண் ஆழ்வார் /
ஜன்மத்துக்கு கொத்தை -ஒழுகல் ஆறா -சதுப்பேதிமார்கள்/ போக்க பரிகாரமும் காட்டி / தொண்டர் அடி பொடியை தலையிலே சூட்டி –
பெயரே பிரமாணம் தானே -விப்ர நாராயணர் பேர் மறந்து -அடியார்க்கு ஆட்படுத்த பிரார்த்தித்து அடியார்க்கு ஆட்படுத்திய விமலன் –ஏக கண்டர்/
நெடுக போகும் வம்ச பரம்பரை –உள்ள அனைவரையும் விழித்து உபதேசம் / பரம பக்தனை பிராணாயாமம் நமஸ்காரம் பண்ணி –
ஞானம் ஆதரித்து சொல்லியும் -கேட்டும் க்ருதார்த்தராக வேன்டும் / பரம சேஷி என்னும் அளவுக்காகவாது -பிரியா ஞானி அத்யந்த பிரியம் –
அங்கும் இப்படியே அருளிச் செய்வான் / த்வார சேஷிகளையும் நினைத்து / நாயகனாய் நின்ற நந்த கோபன் / நாயகனாய் நின்ற கோயில் காப்பான் /
நாயகனாய் நின்ற வாசல் காப்பான் -/பரம ரஹஸ்யம் -அர்த்தம் விசேஷித்து காட்டி அருளினான் மதிள் திருவரங்கத்தான் அபிஜனம் அபிமானம் ஜன்மத்துக்கு கொத்தை –
தொலைத்து விலக்ஷண ததியர் -எம் அடியார்களாகில் -அநந்யார்ஹ சேஷத்வம் /-அருளிச் செய்ததை அனுசரித்து வித்தாராகிறார் பிள்ளை லோகாச்சார்யார் /
வித்யா தானம் -ஆச்சார்யத்வ ப்ரீதி – கொடுமின் கொள்மின் -ஞான தான ஆதாயம் -என்றவாறு -சரீர சம்பந்தம் இல்லையே –

அதாவது –
மயர்வற மதி நலம் அருளப் பெற்று -தத்வ ஹித அக்ரேசராய் -ததீய சேஷத்வ சீமா பூமியான
ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் -பழுதிலா ஒழுகல்-இத்யாதியாலே -பிரம்மா தொடங்கி தங்கள் அளவும் வர
நெடுகப் போகிற வம்ச பிரவாகத்தில் ஒரு தோஷம் இன்றிக்கே இருக்கும் அவர்களாய் -பலராய் இருக்கிற சதுர் வேதிகாள்
இதில் கீழ்ப் பட்டது இல்லை என்னும் நிஹீன குலத்தில் பிறந்தார்களே  ஆகிலும்
என்னோடு உண்டான அசாதாராண சம்பந்தத்தை அறிந்து -அந்த ஞான அனுரூபமான ஸ்வ ஆசாரத்தை உடையார் ஆகில் –
நீங்கள் அவர்கள் காலில் விழுந்து ஆராதியுங்கோள் -அவர்கள் உங்கள் பக்கில் ஞான அபேஷை பண்ணில் -நீங்கள் ஆதரித்து சொல்லுங்கோள் –
அவர்கள் பகவத் ஞானத்தை உங்களுக்கு பிரசாதிக்கையில் -கேட்டு கிருதார்தர் ஆகுங்கோள் –
எனக்கு மேல் பூஜ்யரில்லாமையாலே -என்மாத்ரம் ஆகிலும் அவர்களை ஆராதித்து-நல் வழி போகுங்கோள் என்ற இந்த பரம ரகஸ்யத்தை –
பக்தி ரஷ்ட விதாஹ் ஏஷா யஸ்மின் ம்லேசேபி வர்த்ததே-தஸ்மை தேயம் ததோ க்ராக்யம் ச ச பூஜ்யோ யதாஹ் யஹம் -என்று
பரம ஆப்தரான தேவர் அருளி செய்த பின்பு இதில் ஒரு சம்சயம் உண்டோ ?
இப்படி உபதேச மாத்ரமாய் போகாதே -கோவிலிலே வந்து அருளி -லோக சாரங்க முனிகள்
தலையிலே திரு பாண் ஆழ்வாரை வைத்து இவ் அர்த்தத்தை வியாபரித்துக் காட்டிற்று இலரோ என்ன –
இப் பாட்டிலே -அபிஜனாத்ய  அபிமான ஜன்ம கொத்தை -அந்த துர் அபிமானம் இல்லாத
விலக்ஷணரான ததீயர்கள் அளவில் பண்ணும் அனுவர்தன விசேஷம் அதுக்கு பரிகாரம் என்று-
ஸூ வ்யக்தமாக அருளிச் செய்தார் என்கை-

——————————————–

சூரணை -221–

வேதக பொன் போலே இவர்களோட்டை சம்பந்தம்-

ஏவம் பூதமான ஜன்ம கொத்தை கழிந்து -விலக்ஷணரோடு சம்பந்தம் உண்டாகவே
இவனும் விலக்ஷணனனாய் விடுமோ என்ன அருளி செய்கிறார் —

வேதகம் என்கிற இத்தை -வேதகம் என்று திராவிட உக்தியாலே அருளி செய்கிறார்-
வேதக பொன்னாவது-அநேக சித்த ஒவ்ஷதங்கள் இட்டு  -பல்கால் உருக்கி குளியையாக பண்ணி –
ரசவாதிகள் கையிலிருக்கும் ஸ்வ ஸ்பர்ச வேதியான பொன்–அது ஸ்பர்ச மாத்ரத்திலே இரும்பை பொன்னாக்குமே போலே ஆய்த்து–
ஜன்ம சித்தமான நைச்ச்யாதிகள் உடைய விலக்ஷணரான இவர்களோட்டை சம்பந்தம்
நிக்ருஷ்ட ஜன்மத்தால் வந்த தோஷத்தை போக்கி இவனையும் விலக்ஷணம் ஆக்கும் படி –

ரஸ குளிகை –வேதகம் பேதனம் மாற்றி விடும் -பேதம் பண்ணும் பொன் என்றபடி -பித்தளை ஹாடகம் பித்தலாட்டம்
இது நிஜமாகவே மாற்றும் /
சாம்யா பத்தியை கடுக உண்டாக்கும் -ஸ்பர்சம் தர்சனம் கைங்கர்யம் மூலம் உண்டாக்கும் /
வேதம் வல்லார்களை கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிய வேன்டும் என்று -இடையர்கள் அறிந்தவாறு என் என்னில்
ரஸ குளிகை போலே கண்ணன் இருக்க இவர்கள் கிருத்யம் இதுவாகும் /
சதாசார்ய கைங்கர்யம் செய்யச் செய்ய -கசடு அற்ற ஞானம் பிறந்து –அஹங்கார தூஷிதராய் -அசத் கல்பராய் இருந்தவர்களையும் –விலக்ஷணர் ஆக்குமே /

————————————–

சூரணை -222–

இவர்கள் பக்கல் சாம்ய புத்தியும் ,ஆதிக்ய புத்தியும்நடக்க வேணும் —

ஸ்வ சாம்யா பத்தியை தரும் விலக்ஷணரான இவர்களை எங்கனே பிரதிபத்தி-இருக்க வேணும் என்ன அருளி செய்கிறார் –

இவர்கள் பக்கலிலே சாம்யா புத்தியும் -ஆதிக்ய புத்தியும்-நடக்க வேணும் என்று –

சமமானவர்களாயும் உயர்வானவர்களையும் என்றது -ஆச்சார்யருக்கு சாம்யம் / சம்சாரிகளிலும் தன்னிலும் ஈஸ்வரனிலும் உயர்ந்தவர்கள் -கீழேயே பார்த்தோமே /
இவர்கள் – ஸூ வ சம்பந்த ஹேதுக -சாம்யா பத்தி பிரதத்வ ரூப-உபய தோஷ ராஹித்யம் -உள்ள -விலக்ஷணர் -/
உத்க்ருஷ்ட தமரான ஆச்சார்யருக்கு சாம்யம் -நிக்ருஷ்ட சம்சாரிகளிலும்- உத்க்ருஷ்ட ஈஸ்வரனை விட ஆதிக்ய புத்தி

—————————————–

சூரணை-223–

அதாவது ஆச்சர்ய துல்யர் என்றும் சம்சாரிகளிலும் தன்னிலும் ஈச்வரனிலும்
அதிகர் என்றும் நினைக்கை-

ஆச்சார்யர் துல்யர் என்று நினைக்கை ஆவது -குரு ரேவ பர ப்ரக்ம-இத்யாதி படியே-
தனக்கு சர்வ பிரகார  உத்தேச்யனனான ஆச்சார்யனோடு இவர்களை சமரராக பிரபத்தி பண்ணுகை –
சம்சாரிகளில் அதிகராக நினைக்கை யாவது -ஜாதி யாதிகளை இட்டு சம்சாரிகளோடு சம புத்தி பண்ணாதே –
ஞாநாதிகளால் வந்த வியாவ்ருத்தியாலே -தத் அதிகர் என்று பிரபத்தி பண்ணுகை –
தன்னில் அதிகர் என்று நினைக்கை யாவது -சம்சாரிகளில் வியாவ்ருத்தி தனக்கு உண்டு ஆகையாலே –
அத்தை இட்டு தன்னோடு ஒக்க நினைத்து இருக்கை அன்றிக்கே -தனக்கு சேஷிகளான ஆகாரத்தாலே -தன்னில் அதிகர் என்று பிரபத்தி பண்ணுகை –
ஈச்வரனில் அதிகர் என்று நினைக்கை யாவது -சேஷித்வத்தை இட்டு நமக்கு அவனும் இவர்களும் ஒக்கும் என்று இராதே –
கர்ம அனுகுணமாக லீலையிலும் விநியோகம் கொள்ளக் கடவனாய் ஸ்வ சரண கமல சமாச்ராயண தசையில்  புருஷகாரம் வேண்டும் படியாய் –
உகந்து அருளின நிலங்களிலே -சந்நிஹதனாய் இருக்கச் செய்தேயும் -அர்ச்சாவதார சமாதியாலே -வாய் திறந்து ஒரு வார்த்தை சொல்லக் கடவன் அன்றிக்கே –
இருக்கும் அவனைப் போல் அன்றியே -ஸ்வரூப அனுகுணமாகவே விநியோகம் கொள்ளும் அவர்களாய் –
ஸ்வ ஆஸ்ரயணத்தில் புருஷகார நிரபேஷராய்–வாய் திறந்து த்யாஜ்ய உபாதேயங்களை உபதேசித்து நோக்கிக் கொண்டு
போரும் அவர்கள் ஆகையாலே -அதிகர் என்று பிரபத்தி பண்ணுகை –

புத்தி த்வயம் -ஆத்ம ஈஸ்வர விலக்ஷணரான சதா ஆச்சார்யர் சாம்யம் / ஞானம் இல்லா சம்சாரிகளை விட /
ஞானம் இருந்தாலும் சேஷியான தன்னில் அதிகராய் / ஸூ ஆச்சார்ய பரதந்த்ரராய் -உபதேசித்து –திருத்தும் –
பெருமாள் உதாசீனராய் -ஸ்வ தந்தரராய் மௌனியாய் இருக்க -மூன்றாலும் அதிகராய் அன்றோ /
லீலையிலும் விநியோகம் கொள்ளக் கடவனாய்-உம்மை தொகை -போகத்தில் ஆழ்வாராதிகளை விநியோகம் கொள்ளுவான் –
ஸ்வரூப அனுகுணமாகவே -ஸ்வா தந்த்ர ஹேதுக கர்ம அனுகுணமாக -கர்ம பரதந்த்ரனாக வேஷம் ஏறிட்டுக் கொண்டு -ஸ்வா தந்த்ரனாய் இருந்தே
ஸ்வரூப விருத்தனாய் அன்றோ ஈஸ்வரன் -அவனைப் போலே இல்லாமல் ஆச்சார்யர்கள் –ஸ்வரூப அனுகுணமாகவே விநியோகம் கொள்ளுவார்கள் –
சரம சேஷித்வ-சரம ப்ராபகத்வ -சரம ஸ்வரூப ஞான ஹேதுத்வ–அநந்யார்ஹ சேஷ பூதன் என்ற ஞானமும் இவரால் -சரம ப்ராப்யத்வ —
திருமந்த்ரார்த்த தாத்பர்யம் இது தானே -சர்வ பிரகாரத்தாலும் ஆச்சார்யருக்கு துல்யர் என்றது -மாதா பிதா -விபூதி சர்வம் போலே /–
சத்தா ஞான -தாரகம் ஆச்சார்யர் தானே -ஆகவே சர்வ பிரகாரத்வம் -/இப்படி ஐந்தும் உண்டே /
கொண்ட பெண்டிர் -மக்கள் உற்றார் -அனைத்தும் அவனே-9–1- /
அந்த உறவுக்கு ஏற்ற கைங்கர்யம் பண்ண வேண்டுமே –
9–2-எல்லா உறவின் காரியமும் பண்டை நாளாலே-நின் கடைத்தலை -பிரார்திக்கிறார் -ஆச்சார்யர் பகவானே ஆழ்வாருக்கு /
ஜாதியாதி ஜாதி ஜென்ம விருத்தம் / ஞானாதிகள் ஞானம் பக்தி வைராக்யம் –வேதம் வேதாங்கம் ஞானம் –
-ஸ்வரூப யாதாம்ய ஞானம் பாகவத அநந்யார்ஹ சேஷத்வ ஞானம் /

—————————————–

சூரணை -224-

ஆச்சார்ய சாம்யத்துக்கு அடி ஆச்சார்ய வசனம் –

ஆச்சர்யனோடு ஒரு விஷயத்தையும் சம புத்தி பண்ணுகை அயுக்தமாய் இருக்க –
ஆச்சர்ய சாம்ய புத்திக்கு அடி எது என்னும் ஆ காங்க்ஷையிலே அருளி செய்கிறார் –

அதாவது ஆச்சார்ய சாம்ய பிரபத்திக்கு மூலம் -ஸ்ரீ வைஷ்ணவர்களைக் கண்டால் நம்மைக் கண்டாப் போலே காணும் – என்று
உபதேச சமயத்திலே ஆச்சார்யன் அருளிச் செய்த வசனம் என்கை-

ரஜோ குணத்துடன் சொன்ன புராணங்களை அப்ரதானமாகம் / சொன்னது ப்ரஹ்மாவே சாத்விக புராணத்திலே /
ஆச்சார்யத்தை விரும்பிய ஈஸ்வரனே சொன்னதாகவும் உண்டே / ஸ்ருத பலத்தால் -ஸ்ரீ கீதையில் -உண்டே /
ஜாதியாதிகளால் சம்சாரி சாம்யமும் / ஞானாதிகளால் ஸூ சாம்யமும் -சங்கை வருமே பாகவதர்களையும் நினைக்க தோன்றுமே /
ஞானாதிக்த்வ சேஷித்வங்கள் இவற்றை தடுக்க வேன்டும் -/தத் உபய ஆதிக்ய புத்தியை பிறப்பிக்கும் / அஞ்ஞானம் இருளை போக்கும்
அஞ்ஞானம் போக்கும் இவர்களும் ஈஸ்வரனும் -சாம்யா புத்தி வந்தாலும் /
பர ஹிதை மட்டுமே நினைக்கும் இவர்கள் -புருஷகாரமாகவும் இருப்பதால் பகவானை விட ஆதிக்யம் /
சர்வாதிகா-ஆச்சார்யருக்கு சாம்யா புத்தி சாதிக்க -கிரமமாக -நிக்ருஷ்ட –மத்யம -உத்க்ருஷ்ட -அதிகராயும் -சர்வ உத்க்ருஷ்ட சாம்யருமான -புத்தி -/
சம்சாரி வைஷ்ணவ ஈஸ்வர ஆதிக்யம் -/ பரம்பரையா ஹேது கீழ் இரண்டும் / சாஷாத் ஹேது மூன்றாவது /
ஸங்க்ரஹம் ஆச்சார துல்யர் என்பது எதனால் என்றால் -தத் இதர சர்வாதிகா புத்தி விவரணம் -குரு ரேவ -ஏவ சப்தம் இந்த ஸூ இதர சர்வாதிக்யம் சொல்லுமே-
ஆத்ம சிந்தனையில் ஈடுபட்டு -இதர விஷயாந்தரங்களை விட்டு -உபாஸ்ய நித்யம் வைஷ்ணவன் –பிரகார விசேஷ ஆகாங்கஷையிலே —
ஆச்சர்யவத்–தெய்வவத் –மாதாவத் –ராஜாவத் –சமம் என்பதுக்கு பிரமாணம் /
பக்திர் அஷ்டவித –ஆச்சார்ய பதத்தை ஏறிட்டுக் கொண்டு கீதாச்சார்யன் — என்னைப் போலே பரம பாகவதனை -என்றானே –
இத்தாலும் ஆச்சார்ய சாம்யம் / ச பூஜயக-என் அளவிலாவது பூஜிக்க தக்கவன் /
சாஸ்த்ர அனுகுண தத் வசன மூலம் -குரு ரேவ -இந்த விலக்ஷண பாகவதர்களை தவிர வேறே யாரையும் கொள்ளக் கூடாது என்றபடி –
ஆகாரங்களை பற்ற தெய்வவத் -ஆச்சார்யவத்- மாத்ருவத்-உண்டே என்னில் -சர்வ பிரகாரத்தாலும் -ஒவ் ஒரு பிரகாரத்தாலும் இவர்கள் சமம் என்றபடி /
ஆச்சார்யர் போலே ஸமாச்ரயணம் பண்ணாதார்கள் அன்றோ இவர்கள் /

——————————————–

சூரணை -225-

இப்படி நினையாது ஒழிகையும் அபசாரம் –

இப்படி நினையாத போது வரும் அநர்த்தம் உண்டோ என்ன அருளி செய்கிறார் –

அதாவது -ஜந்மாதிகளை இட்டு நிகர்ஷ புத்தி பண்ணுகை -அபசாரம் ஆனாப் போலே –
இப்படி நினையாது ஒழிகையும் அபசாரமாய் தலைக் கட்டும் என்ற படி –

அகரணே ப்ரத்யவாயம் உண்டே -/ ஆச்சர்ய சமமாக சொல்வது தன் நினைவால் இல்லை -ஆச்சார்ய வசனம் அடியாக சொல்வதால் விகல்பிக்காது /
பகவானை போலே பூஜிக்க தக்கவன் –இத்யாதி சொன்னதால் -ஆச்சார்ய வசனம் கேட்க்காமல் இருந்தால் பகவத் பாகவத -அஸஹ்யா அபசாரமாகவும் ஆகும்
அபாகவதர்களை கண்டு வையாமல் விலகுவது போலே இங்கும் வாழ்த்தாமல் போனால் அபசாரம் ஆகும் / காம்ய விதி
செய்யாமல் இருந்தால் பாபம் வராதே – நித்ய விதி நைமித்திக விதி செய்யாமல் விட்டால் பாபம் வருமே /பூர்வ யுக்த ஜென்ம நிரூபணம் அபசாரம் போலே
இங்கே சொல்லாமல் விடுவதும் ஜென்ம நிரூபணம் அடியாக நினையாமல் வாழ்த்தாமல் போவதும் /
குருவின் இடத்திலும் பாகவதர்கள் இடத்திலும் கௌரவ புத்தி அபாவமும் அபசாரமும்/

——————————————

சூரணை -226-

இவ் அர்த்தம் இதிகாச புராணங்களிலும் –பயிலும் சுடர் ஒளி நெடுமாற்கு அடிமையிலும் –
கண் சோர வெம் குருதியிலும் -நண்ணாத வாள் அவுணரிலும் -தேட்டறும் திறல் தேனிலும் —
மேம் பொருளுக்கு மேலில் பாட்டுக்களிலும் -விசதமாகக் காணலாம் –

இப்படி பட்ட பாகவத வைபவம் ஆப்த வசனங்களில் விசதமாக காணலாம் இடங்கள் உண்டோ
என்ன அருளிச் செய்கிறார் –

இவ் அர்த்தம் என்று -கீழ் விச்த்ரேணே உக்தமான பாகவத வைபவத்தைப் பராமர்சிக்கிறது –
மகா பாரதத்தில் -மத் பக்தம் சூத்திர சாமான்ய தவமன்யந்தி யே நாரா நரகேஷ்வ வதிஷ்டந்தி
வர்ஷ கோடீர் நராதம -சண்டாள அபி மத் பக்தம் நாவமன்யேத புத்திமான் -அவமாநாத் பதத்யேவ ரவ்ரவே நரகேச ச –இத்யாதியாலும் 
ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் சம்ருத –சர்வ வர்ணே ஷு தே சூத்ரா எக்ய பக்தா ஜனார்தனே -இத்யாதியாலும் –
மத் பக்த ஜன வாத்சல்யம்- பூஜா யாஞ்ச அனுமோதனம்-சுயம் அர்ப்ப அர்ச்சனஞ்சைவ- மதர்தே டம்ப வர்ஜனம்
மத் கதா சரவண பக்திஸ் ஸ்வர நேத்ராங்க விக்ரியா – மம அனு ச்ம்ரணம் நித்யம்- யச்சமாம் நோபா ஜீவதி-
பக்திர் அஷ்ட விதாக்யேஷா யஸ்மின் மிலேச்சேபி வர்த்ததே சவிப்ரேந்த்ரோ முனிஸ் ஸ்ரீமான் சயதிஸ் சச பண்டித
நமே பூஜ்யஸ் சதா சாசவ் மத் பக்தஸ் ச்வபசோபி யா -தஸ்மை தேயம் ததொக்ராக்யம் சசபூஜ்யோ  யதாக்யகம்-இத்யாதியாலும் –
பல இடங்களிலும் பாகவத வைபவம் பிரதிபாதிதம்
இதிகாச உத்தமத்தில் -சூத்ரம் வா பகவத் பக்தம் நிஷாதம் ச்வபசம் ததா வீஷாதே ஜாதி சாமான்யாத் ச யாதி நரகம் நர-இத்யாதியாலும் –
பாகவத பிரபாவம் பிரகீர்திதம் -இன்னும் இதிகாசங்களிலே பல இடங்களிலும் பாகவத மகாத்ம்ய பிரதிபாதனம் வந்த இடங்களிலே கண்டு கொள்வது
ஸ்ரீ வராஹ புராணத்திலே , “மத் பக்தம்  ச்வபசம் வாபி நிந்தாம்-குர்வந்தி யே  நரா:, பத்மகோடி  சதேநாபி ந ஷமாமி வஸுந்தரே ” இத்யாதியாலே -–பாகவத வைபவம் ப்ரோக்தம்
ஸ்ரீ பாகவதத்திலே – “ச்வபசோபி  மஹீபால விஷ்ணு பக்தோ த்விஜாதிக: விஷ்ணு பக்தி  விகீநச்து  யதிச்ச  ச்வபதாசம :”.
“விப்ராத்  த்விஷட் குணயுதாத்   அரவிந்த நாப பாதார விந்த  விமுகாச் ச்வபசம் வரிஷ்டம்–
மந்யே  ததர் பிதமேநா வசேந ஹிதாரத்த  ப்ராண: பு நாதி ஸகலம்  நது பூரி மாந:” இத்யாதிகளாலே  பாகவத வைபவம் பல விடங்களிலும் அபிஹிதம் –
லைங்கத்திலும் “வைஷ்ணவானாம்  விசேஷோச்த்தி விஷ்ணோ ராயாதனம்  மஹத
ஜங்கம ஸ்ரீ  விமாநாநி ஹிரு தயாதி மநீஷிணாம் . ய: பஸயதி சு பாசாரம்  வைஸ் ணவம்
வீத கல்மஷம் ,யஸ்மின் கஸ்மின் குடூலஜாதம்  பிரணமேத்  தண்டவத்புவி ” இத்யாதியாலே  – பாகவத வை பவம்  ப்ரதிபாதிதம்-
இப்படி  பாகவத மாஹாத்ம்ய ப்ரதிபாதநம்  பல புராணங்களிலும் உண்டாகையாலே , அந்த அந்த ஸ்தலங்களிலே-கண்டு கொள்வது-
இதிகாசாதிகளில் உபாதித்த வசனங்களிலே–
1- பாகவதர்களை ஜன்ம நிரூபேணன அவமதி செய்தால் வரும் அநர்த்த விசேஷமும் –
2-பாகவதர் ஆன போதே அவர்கள் அபக்ருஷ்ட ஜாதியர் அல்லர் -உத்க்ருஷ்ட ஜாதிய துல்யர் என்னும் இடமும் –
3–உத்க்ருஷ்ட ஜாதியரிலும் ஸ்ரேஷ்டராய் -அவர்களுக்கு ஞான பிரதாத் க்ருத்ய குருக்க்களுமாய் -பரம சேஷியான ஈச்வரனோபாதி பூஜ்யரும் ஆவர் கள் என்னும் இடமும் –
4–அவர்கள் திறத்தில் அபசாரம் கால தத்வம் உள்ளதனையும் ஈஸ்வரன் பொறான் என்னும் இடமும் –
5–கரண த்ரய வியாபாரத்தோடு -அர்த்தத்தோடு -பிராணாதிகளோடு-வாசியற பகவத் விஷயத்தில் சமர்ப்பித்து -நிர்  அபிமாநியராய் இருக்கும் அவர்கள் ஸ்பர்ச பாவனர் என்னும் இடமும் –
6–அவர்கள் ஹிருதயம் ஈஸ்வரனுக்கு ஜங்கம ஸ்ரீ விமானம் என்னும் இடமும் –
7–அவர்களை கண்டால்  தண்டவத் ப்ரணாமம் செய்வான் என்னும் இடமும் – சொல்லப் பட்டது இறே- இப்படி இதிகாச  புராணங்களிலும் –

நம் ஆழ்வார்
பாற் கடல் சேர்ந்த பரமனை பயிலும் திரு உடையார் பயிலும்-பிறப்பு இடை தோறும் எம்மை ஆளும் பரமர் -என்று தொடங்கி –
பகவத் குண சேஷ்டிதாதிகளிலே ( ஒன்பது பாசுரங்களில் குணங்களும் ஒரு பாசுரத்தில் சேஷ்டிதங்களையும் ) ப்ரவணரான பாகவதர்களே
தமக்கு சேஷிகள் என்னும் இடத்தை பிரதி பாதித்து அருளும் இடத்தில் –
யாவரேலும் அவர் கண்டீர் –
கும்பி நரகர்கள் எத்துவரேலும் அவர் கண்டீர் –
எத்தனை நலம் தான் இல்லாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும் -என்று
ஜந்மாதிகள் எத்தனை ஏனும் தண்ணியரே ஆகிலும் -சேஷத்வ விரோதியான ஜன்மாத்ய அபிமானம் இல்லாதவர்கள் கிடீர் தமக்கு 
மிகவும் உத்தேச்யர் என்று அருளி செய்த -பயிலும் சுடரொளி யிலும் –

கொடு மா வினையேன் -அவன் அடியார் அடியே கூடும் இது அல்லால் -வியன் மூ உலகு பெறினும் விடுமாறு எனபது என் அந்தோ -என்று தொடங்கி –
பாகவதர்களே தமக்கு பரம ப்ராப்யர் என்னும் இடத்தை பிரதிபாதிக்கிற அளவில் –
ஜன்ம விருத்தாதி விபாகம் இன்றிக்கே –
சயமே அடிமை தலை நின்றார் –
அவன் அடியார் –
மணி மலை போல் கிடந்தான் தமர்கள் –
கோதில் அடியார் –
நீக்கமில் அடியார் –
என்று பகவத் சவ்ந்த்ர்யாதிகளில்-(கீழே ஸ்வரூப குணம் சேஷ்டிதங்களில் தோற்றவர்கள் புயல் மேகம் போல் / மன்மதனும் மடல் எடுக்கும் படி அழகு /)
தோற்று இருக்கும் ஆகாரமே அவர்களுக்கு நிரூபகமாக அருளிச் செய்த -நெடுமாற்கு அடிமையிலும் –

திரு மங்கை ஆழ்வார் –
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -என்று தொடங்கி -(மா மதலை பெருமாளையும் சேவிக்கலாம் இங்கே )
அர்ச்சாவதார ப்ரவணரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் எனக்கு சிரசா வஹ்யர் -சதா த்யேயர் -சூரிகளிலும்
கைங்கர்ய ஸ்மிர்த்தி உடையவர்கள் -அவர்களை ஒரு ஷணமேலும் பிரிய ஷமன் அல்லேன் –
அவர்களுக்கு என் ஹிருதயம் தேனூறி எப்பொழுதும்  இனியதாக  நின்றது –
அவர்களை கண்ட மாத்ரத்திலே -கண்டீ கோளே என்னுடைய மநோ திருஷ்டிகள் களிக்கிற படி –
அவர்கள் அளவிலே ஆகா நின்றது என் அன்பானது –
அவர்களை நெஞ்சாலே நினைக்கவே ம்ருத்யுவுக்கும் பாபத்துக்கும் அஞ்ச வேண்டாம் –
என்னுடைய ஹிருதயம் அவர்கள் விஷயத்தில் ஈடுபட்டு கிடைத்தை கண்டீ கோளே-இப்படி பாசுரம் தோறும்
ஜென்மாதி பிரசங்கம் அற அருளிச் செய்தார் -நம்மாழ்வார் சண்டாள சண்டாள பிரசங்கம் உண்டே

கடல் மலை தல சயனமார் எண்ணும் நெஞ்சுடையார் அவர் எம்மை ஆள்வாரே – என்று
ஏதேனும் ஜன்ம விருத்தாதிகளை உடையராகவுமாம் -திருக் கடல் மலை தல சயனத்தை
அனுசந்திக்கும் அவர்கள் நின்ற நிலைகளிலே பிரமாணம் காட்டாதே நம்மை கார்யம் கொள்ள உரியார் என்று தொடங்கி –
ஞானத்தின் ஒளி உருவை நினைவார் என் நாயகர் –
அவர் எங்கள் குல தெய்வமே -என்று –
உகந்து அருளின நிலத்திலே ப்ரவணராய் இருக்கும் அவர்களே நமக்கு சேஷிகள் என்று
அருளிச் செய்த -நண்ணாத வாள் அவுணரிலும் –

ஸ்ரீ குலசேகர பெருமாள் –
மெய் அடியார்கள் தங்கள் ஈட்டம் கண்டிட கூடுமேல் அது காணும் கண் பயனாவது –
தொண்டர் அடி பொடி ஆட நாம் பெறில் கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை என்னாவது –
இத்யாதிகளால் தம்முடைய பாகவத பிரேம பிரகர்ஷத்தை  பிரதிபாதிக்கிற அளவில் –
ஜந்மாத் உத்கர்ஷ அபகர்ஷ பிரசங்கம் இன்றியே -பகவத் பக்தி பாரவச்யமே-(மால் கொள் சிந்தையராய் என்பதே ) அவர்களுக்கு
நிரூபகமாக அருளிச் செய்த -தேட்டரும் திறல் தேனிலும் –

ஸ்ரீ தொண்டர் அடிபொடி ஆழ்வார்
த்வய நிஷ்டர் பக்கல் ஈஸ்வரனுக்கு உண்டான உகப்பை அருளிச் செய்த – மேம் பொருள் -என்கிற பாட்டுக்கு மேலில் –
எத்தனை ஏனும் தண்ணிய ஜன்மங்களில் பிறந்தவர்களே ஆகிலும் –
1-மேம் பொருளிலே சொன்ன ஞானத்திலே நிஷ்டை உடையவர் ஆகில் –
திரு துழாயோபாதி ஈஸ்வரனுக்கு சிரஸ்  அவாக்யர் என்றும் –
2-ஜன்மத்தால் வந்த தண்மையே  அன்றிக்கே -எத்தனையேனும் தண்ணிய விருத்தம்
உடையாரும் -இந்த ஞான நிஷ்டர் ஆகில் -அந்த துஷ்க்ருத பலம் அனுபவியார் என்றும் –
3-தங்களுக்கு ஜன்ம விருத்தாதிகளால் வரும் குறை இல்லாமையே அன்று -தங்களோடு
சம்பந்த்தித்த சம்சாரிகளும் -தங்கள் பிரசாத ச்வீகாரத்தால் பரிசுத்தராம் படியான உத்கர்ஷம் உடையார் என்றும் –
4-ஜன்ம விருத்தாதிகளால் குறைய நின்ற இந்த ஞானம் உடையவர்கள் -இந்த ஞான விதுரராய்-
ஜன்ம விருத்தாதிகளால்  உயர்ந்தவர்களுக்கு சர்வேச்வரனோ பாதி பூஜ்யராய் -ஞான தான பிரதிக்ரகங்களுக்கு – அர்ஹர் ஆவார் என்றும் –
5-ஜன்ம விருத்தாதிகளுக்கு மேலே ஞான அதிகருமானவர்கள் -ஜன்ம விருத்தாதி வைலஷண்யம் இன்றிக்கே -இந்த ஞானம் உடையவர் ஆனவர்களை –
பகவத் பிரபாவத்தால் வந்த வைலஷன்யத்தை புத்தி பண்ணாதே – கர்ம நிபந்தனமான ஜன்மாத்ய அபகர்ஷத்தையே புத்தி பண்ணி
தாழ நினைத்தார்கள்  ஆகில் -அந்த ஷணத்திலே -அவர்கள் கர்ம சண்டாளர்கள் ஆவார்கள் என்றும் –
6-இப்படி பிரசாத்தித்த அர்த்தங்கள் சம்பவிக்கும் என்னும் இடம்  ப்ரஹ்மாதிகளுக்கும் துர்லபமான பேற்றை
திர்யக் ஜாதியிலே பிறந்தான் ஒருவன் -கஜேந்திர ஆழ்வான் -பெற்ற பின்பு சொல்ல வேணுமோ என்று — அருளிச் செய்த ஆறு பாட்டுகளிலும் –
விசதமாகக் காணலாம் என்றது -சம்சய விபர்யயமற தர்சிக்கலாம் என்ற படி –

இப்படி பட்ட பாகவத வைபவம் ஆப்த வசனங்களில் விசதமாக காணலாம் இடங்கள் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –
சாத்விகர்கள் பிரமாணம் காட்டி அருளுகிறார் -/ஆப்த தமர்கள் அன்றோ / ஜென்மாதி மினுக்கும் அற்ற ததீயரும்-ஒளிக்கு மினி மினி சப்தமே இது த்யாஜ்யம் என்று காட்டும்
ஜென்மாதி -ஞான ஜென்மத்தால் – உத்க்ருஷ்ட பஹுமந்தவ்யர் -இவர்கள் –
தமேவ பூஜ்ய -மத் பக்தன் நாய் மாமிசம் உண்பவராகிலும் –பகவத் பக்தர்களாகில் / பாகவதர்கள் சேஷிகள் /குண ஏக தாரகர்/
பரம சேஷியர் பயிலும் சுடர் ஒளி-பரம போக்யர் நடுமாற்கு அடிமை / அர்ச்சாவதார ப்ரவணர் சேஷிகள் //பக்தி பரவசர்கள் தர்ச நீயர்கள் /
வாழும் சோம்பரை யுகத்தி -ஈஸ்வரன் உகப்பை காட்டி அடுத்து –/ ஜென்மாதி மினுக்கும் இல்லா -கடமை பட்ட குக்கர் -ததியர் முடியினில் துளவம் மொய் கழற்கு அன்பு செய்யும் /
அருவினை பயனை அடையார் / ஸூ பாவன ப்ரசாதர் போனகம் செய்த சேதம் தருவரேல் புனிதம் அன்றே / ஞான ப்ரதிக்ரஹ யோக்யர் கொடுமின் கொள்மின் /
தன் நிந்தையர் கர்ம சண்டாளர் -நுமர்களை பழிப்பராகில் புலையர் போலும் / துர் லப பல லாபிகள் -வெள்கி நிற்ப –ஆனைக்கு அன்று அருளை ஈந்த /
மேலில் பாட்டுக்களில் -ஆறு பாசுரங்களிலும்-சம்சயம் இல்லாமல் விசதமாக நிதி தர்சனவத் -த்வியைக நிஷ்டையர்கள் பக்கலில் ஈஸ்வரனுக்கு அத்யந்த அபிமதம் -யுகத்தி போலும் /
ஸ்ரீ ராமாயணத்தில் இந்த அர்த்தம் பிரமாணம் நிறைய இடங்களில் இல்லை -பெருமாள் அன்றோ / கண்ணன் தானே தாழ நின்று தூதுவனாய் இத்யாதி காட்டி அருளினான்
மெய்யடியார்கள்-அடியார்-மெய் சிலிர்ப்பவர் – -பாகவத நிரூபணம் மட்டுமே /சாதி பற்றி நம்மாழ்வார் மட்டும் -நாலிலும் கீழ் இழிந்த /
பேர் ஆறு போல் கண்ண நீர் கொண்டு -தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே –பகவத் பக்தி பாரவச்யமே-இவர்களுக்கு நிரூபகம் /
த்வயத்தில் த்வி வசனம் -இரண்டு திருவடித் தாமரைகளை -உபாய நிர பேஷம் சூசகம் – சரம ஸ்லோகம் விதியை காதில் வாங்கிய பின்பு தானே த்வயம் அனுஷ்டானம் –
மாம் -கண்ணன் தொட்டுரைத்த திருமேனி வாசகம் – -ஸ்ரீ மன் நாராயண அர்த்தம் -சரணவ் – —
குண பூர்த்தி உள்ள இடமே சரண்யம் -அர்ச்சாவதாரம் -அர்ச்சா திருமேனி வரை -தாய்க்கு பால் பிரவஹிக்கும் ஸ்தனம் போலே திருவடிகள் –
உபாயமும் பிராப்யமும் இங்கே – மாம் -அஹம் இரண்டும் காட்ட இரண்டு திருவடிகள் — சாதனாந்தரம் விட்டதையும் –பிரயோஜனாந்தரம் விட்டதையும் –
ஸூ வ போக்யத்வம் விட்டதையும் — காம்பற -என்று காட்டி –
ப்ரபத்யே -வர்த்தமானம் -வாழும் சோம்பர்கள் –கால ஷேபம் போக ஹேது / யுகத்தி போலும் -நிரதிசய ப்ரீதி காட்டுவான்
சம்பாவன விஷயம் –மொய் கழல் சரண சப்தார்த்தம் / திரு மறு மார்பா -ஸ்ரீ மத் சப்தார்த்தம் -மேலில் பாட்டுக்களை த்வயார்த்தம் தானே /

போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதம் அன்றே-பாத்திர சேஷம் இருக்குமே அத்தை – சொல்லுமோ என்னில் — /விளம்பிதம் ஆகும் -சாப்பிட்ட இலையில் உள்ளதே /
ஆச்சார்யர் விஷயத்தில் ஒக்கும் / இங்கே பாகவதர்கள் விஷயத்திலே தானே /உச்சிஷ்டம் கூடாதே கீதை -குருக்கள் முதலாமவர் தவிர -கீதா பாஷ்யம் /
ஆச்சார்யர் பிதா ஜ்யேஷ்ட பிராதா பர்த்தா பரம பாகவதர்கள் -தேசிகன் / நாராயண ஏக நிஷ்டர்கள் செய்யும் அனைத்தும் உத்தேச்யம் -ஜல்பம் தான் ஜபம் –
சேஷம் பாவனம் -ஸ்ரீ பாத தீர்த்தத்துக்கு நிகர் இல்லை யுக்தியே மந்த்ரம் /இந்த பிரமாணத்தில் உச்சிஷ்டம்–இழை சேஷம் – -மோர் முன்னால் ஐயன் -உண்டே /
சாமான்ய விசேஷ பர்யவசயாம் -நாராயண ஏக நிஷ்டர் பொது– குரு விசேஷம் -பர்யவசான விதி கொள்ளலாமோ என்னில் -/
வேத அத்யயனம் பண்ணி வைத்த குருவை பற்றி சொல்லிய வசனம் -வேத அத்யயனம் பண்ணுபவர்கள் எல்லாம் நாராயண ஏக நிஷ்டராக இருக்க மாட்டார்களே /
பரத்வாஜ சம்ஹிதை -பிரமாணம் -திரு மந்த்ரம் அருளிய -குரு உச்சிஷ்டம் பாவனம் வசனம் உண்டே -/
பாதம் வந்தால் தானே பொது வசனம் விசேஷ அர்த்தத்தில் பர்யவசாயம் பண்ண வேன்டும் /தூய பெரு நீர் யமுனை –கோபிகளும் கண்ணனும் கொப்பளித்த தூய்மை உண்டே

—————————————————

சூரணை-227-

ஷத்ரியனான விஸ்வாமித்திரன் பிரம ரிஷி ஆனான் .

இப்படி இதிகாசாதிகளிலே -பாகவத வைபவம் சொல்லப் பட்டதே ஆகிலும் –
ந சூத்ரா பகவத் பக்தா விப்ரா பாகவதாஸ் ஸ்ம்ருதா ச விப்ரேந்த்ரோ முநிஸ் ஸ்ரீ மான் சயதிஸ் சச பண்டித -என்று சொன்ன
விப்ருத்வாதிகள் – அர்த்த வாதமாம் இத்தனை அல்லது அபக்ருஷ்ட ஜன்மவானவன் –
அந்த சரீரம் தன்னில் உத்க்ருஷ்டனாக கூடுமோ என்ன –கூடும் என்னும் இடத்துக்கு உதாஹரண தயா
அருளிச் செய்கிறார் –

அதாவது
ஷத்ரிய குலோத்பவனான விஸ்வாமித்திரன்- அந்த ஜன்மத்திலே- தான் பண்ணின தபோ விசேஷம் அடியாக –
வசிஷ்ட வாக்யத்தாலே- ஷத்ரியத்வம் பின்னாட்டாத படி பிரம ரிஷயாய் விட்டான் இறே-
ஆகையாலே அத்யந்த அபக்ருஷ்ட குலோத்பவர் ஆனாலும் -அந்த சரீரம் தன்னோடே-
அனவதிக சக்திக பகவத் சம்பந்த ரூப சம்ஸ்கார விசேஷத்தாலே -அத்யந்த உத்க்ருஷ்ட
குலஜாத அனுவர்த நீயராம் படி உத்க்ருஷ்ட தமராகக் குறை இல்லை என்கை –
அல்ப சக்திக வசிஷ்ட வாக்கியம் செய்த படி கண்டால்- சர்வ சக்தி சம்பந்த விசேஷம்- என் செய்ய மாட்டாது-

தேகத்தோடே இருக்கும் பொழுது அந்த பிறவியிலே சாதி போகுமோ என்ற சங்கைக்கு -வசிஷ்டர் வாக்கால் ப்ரஹ்ம ரிஷி பட்டம் பெற்ற வ்ருத்தாந்தம்
கர்ம விசேஷத்திலே -வர்ணாந்தரம் காண்கையாலே வர்ணம் அநித்தியம் என்பது சித்தம் -அல்ப சக்தன் வசிஷ்டராலே முடிந்தால்
விலக்ஷண -சர்வ சக்தி சம்பந்தஜம் பண்ணும் என்று சொல்ல வேணுமோ –
சரு வால் ஏற்பட்டது இல்லை -தபோ விசேஷத்தால் மாறினார் பிரமாணம் / ரிஜிகர் பிள்ளை ஜமதக்கினி பிள்ளை பார்கவ ராமர் /
சத்யவதி இரண்டு சரு கொடுக்க -மாறி போக-ஷத்ரியருக்கு உண்டான -க்ரூர பிள்ளை பிறந்து -தாயார்-ப்ராஹ்மணருக்கு உள்ள தபோ பிள்ளை /
உள்ளுக்குள்ளே ப்ராஹ்மண தன்மை வெளிப்பட்டது என்று ஆஷேபம் / சரு மாறாட்டம் தன்மைக்கு தான் காரணம் -ஜமதக்கினி –
விச்வாமித்ரர் – தபஸுக்கு முன்பே இருந்தது சொல்ல முடியாதே -ஸ்ரீ ராமாயணம் வஸிஷ்டர் வாக்கால் வந்தது -பிராபல்ய பிரமாணம் /
சருவுக்கு ப்ராஹ்மண உத்தேச்யம் இல்லை / சம தமத்துடன் பிள்ளை கேட்டே சரு / ஜாதி பெற்றவர்கள் இடம் வரும் –
புத்ரன் நிச்சயம் இல்லை -அவற்றை சரு கொடுக்கும் / அதே போலே சாதுர்யம் வீரம் -மாற்றி கொடுத்ததால் விபரீதம் -ஜாதி பிரயுக்தம் சொல்ல வில்லை /
பூர்வம் செய்த வர்ணாஸ்ரம சம்ஸ்காரங்கள் -செல்லுபடியாமல் போகுமே /
அனவதிக சக்திக -ப்ரஹ்ம ஸூ த்ரம் -2-1–27-/-28-/உபாதானம் -நிர்விகாரம் நிர் அவயவம் சேர்ந்து இருப்பது -சுருதியில் சொல்லி இருக்கிறபடியால்
ஒத்து கொள்ள வேன்டும் / மண் குயவன் -சப்த மூலத்வாத் -ப்ரத்யக்ஷத்துடன் ஒப்பிட்டு பார்க்க கூடாதே -ப்ரஹ்மம் அறிந்ததே சப்தம் மூலம் தானே /
விசித்திர சக்தி படைத்து இருக்கிற படியால் பொருந்தும் /இங்கே பரசுராமனை சொல்லாமல் விச்வாமித்ரர்–அபசாரம் பட்ட கோபத்தால் தான் ஷத்ரிய தன்மை /
திரிசங்கு விருத்தாந்தம் சொல்ல வில்லை -/ இங்கு லஷ்யம் வஸிஷ்டர் வசனத்தால் உயர்ந்ததை காட்ட வேன்டும் -அந்த இரண்டிலும் இப்படி சொல்ல முடியாதே
ஸூ வசனத்தால்- தன்னுடைய வசனத்தாலே- ஆக்கினார் பட்டர் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாம பாஷ்யத்தில் உண்டே –

——————————————–

சூரணை -228-

ஸ்ரீ விபீஷணனை குல பாம்சன் என்றான் –பெருமாள் இஷ்வாகு வம்ச்யனாக நினைத்து
வார்த்தை அருளிச் செய்கிறார் –

இதிகாசாதி பிரமாண முகத்தாலே பாகவத வைபவத்தை தர்சிப்பித்தார் கீழ் —
சிஷ்டர்களுடைய வாசார முகத்தாலும் பாகவத வைபவத்தை தர்சிப்பிக்கிறார்  மேல் –
தர்மஞ்ஞய சமய பிரமாணம் -என்று ஆப்த பிரமாணமான வேதத்துக்கு முன்னே எடுக்கும் படி இறே
சிஷ்டா சாரத்தினுடைய பிரமாண்யம் இருப்பது -அதில்
பிரதமத்திலே -அபக்ருஷ்ட ஜாதியார் ஆனவர்கள் அந்த சரீரத்தோடு சஜாதிய வ்யாவிருத்தராய் உத்க்ருஷ்ட தமர் ஆவார்கள் என்று
கீழ் சொன்ன அர்த்தத்தை ச்வீகரிக்கைகாக ராவண அனுஜனை குறித்து பெருமாள் அருளிச் செய்த வார்த்தையை அருளிச் செய்கிறார் –

அதாவது –
ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ-என்று தனக்கு ஹிதத்தை சொன்ன தர்மாத்மாவான ஸ்ரீ விபீஷண
ஆழ்வானை பாபிஷ்டனான ராவணன் -குபிதனாய் -த்வாந்து திக் குல பாம்ச்னம் -என்று
இக்குலத்துக்கு இழுக்காக பிறந்த உன்னை வேண்டேன் என்று பருஷித்து தள்ளி விட்டான் –
இஷ்வாகு குல நாதனான பெருமாள் -இவனை ஆதார பூர்வகமாக அங்கீகரித்த அநந்தரம்-
ஆக்க்யாஹி மம தத்வே நராஷா ஸாநாம் பலாபலம் -என்று
ராஷசர் உடைய பலாபலம் இருக்கும் படியை நமக்கு சொல்லும் -என்கையாலே -இவனை
ராஷச ஜாதியனாக நினையாதே திருத் தம்பிமாரோபாதி யாக அபிமானித்து வார்த்தை அருளிச் செய்த்தார் என்கை –
இவ்வாக்யத்தாலே ராவணன் பரித்யஜித்தமையும் பெருமாள் பரிகிரஹித்தமையும் சொல்லுகையாலே
பாகவத அனுகூல்யம் உண்டாகவே ப்ராக்ருதர் -இவன் நமக்கு உடல் அல்லன் -என்று கை விடுவார்கள் என்னும் இடமும் –
பகவான் விரும்பி மேல் விழுந்து பரிக்ரஹிக்கும்   என்னும் இடமும் சொல்லப் பட்டது-

புதல்வரால் பொலிந்தான் உந்தை –புகல் அரும் கானம் தந்ததே இதற்கு தானே -இஷுவாகு வம்சனாக கொண்டாரே பெருமாள் /
பஹுமதி பண்ணினத்துக்கு திருஷ்டாந்தம்-பெருமாள் முதலானோர் -பலர் உண்டு -மேலே ஆறு சூரணை காலிலே விவரணம்
விபீஷணஸ்து தர்மாத்மா -சூர்ப்பணகை வாக்கியம் -ந து ராக்ஷஸ சேஷ்டிதா/ பிரதீயதாம் தாசாரதி மைதிலி சொன்னதே காரணமாக
குபித்தனான ராவணன் -குலத்துக்கு கோடரி காம்பே -அதர்ம செடியில் களை போலே இது / தள்ளுண்டவனை அஸ்மாத் துல்ய பவது /
ஸூ க்ரீவன் வாக்கியம் -தங்கள் நால்வரையும் பெருமாள் சொன்னதாக -தம்பி ஆக்கிக் கொண்டாரே பெருமாள் -திரு உள்ளம் பற்றி -திருவாய் மலர்ந்து கைக் கொண்டார்
இத்தால் – ஸூ வ ஜனம் கை விட்டவனை பெருமாள் கைக் கொண்டது அறிகிறோம் –
தர்மஞ்ஞய சமய பிரமாணம்-தர்மம் அறிந்தவனின் அனுஷ்டானமும் பிரமாணம் -முதலில் சொல்லி அப்புறம் வேதம் பிரமாணம் -அதுவே பிரதானம் -/
கலை இலங்கு மொழியாளார்–திருக் கண்ணா புரத்தில் -திண்ணை பேச்சும் வேதார்த்தம் அன்றோ -வேத வேத்யனை கையிலே வைத்தவர்கள் –
வேதம் இவர்கள் பின் செல்லுமே – த்வதீய கம்பீர மனஸ் அநு சாரி -ஆளவந்தார்
உங்கள் பலாபலம் -கேட்க்காமல் ராக்ஷஸ ஜாதி அபிமத விரஹமும் –ராவண வதம் அநந்தரம் -உனக்கு எப்படியோ எனக்கும் அப்படியே -ஸூ பிராதா என்றாரே –
தனக்கு உடன் பிறந்தவராக திரு உள்ளம் /அனுகூல புத்தியால் சஜாதீய வ்யாவ்ருத்தம் வருமே — குலத்துக்கு கோடாலி என்பதாலே வியாவருத்தம் –
உத்க்ருஷ்டம் பெருமாள் அங்கீ கரித்த பின்பு தானே -ஆக இரண்டு நிலைகள் இத்தால் அறிவோம்
நாயகா நாயினேனை உடன் உதித்தவர் உடன் ஒருவனாக நினைத்தீர் -குடல் துவக்கு உடையார் – கோஷ்ட்டி -விபீஷணன் கூட வந்த நால்வரையும் –
எமர் கீழ் மேல் ஏழு பிறப்பும் -கேசவ தமர் ஆழ்வார் -21-சம்பந்திகளும் நம் வரை பாயுமே

—————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: