ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -194-216-தத் அதிகாரி க்ருத்யம் /பெறுவான் முறை /-சித்த உபாய நிஷ்டா வைபவம்– -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை /-மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————–

சூரணை -194-

பாகவத அபசாரம் தான் அநேக விதம் –

இப்படிப் பட்ட பாகவத அபசாரத்தின் வைவித்யத்தை அருளிச் செய்கிறார் இத்தால்-

-சரீரகத ப்ராஹ்மணன் -வேறே தான் /பஞ்ச சம்ஸ்காரம் -அர்த்த பஞ்சகம் -அறிந்த -பஞ்ச உபாய நிஷ்டர் -ஆச்சார்ய அபிமானம் உத்தாரகம் –
வர்ணத்தால் பஞ்சமாக இருந்தாலும்- -விஷ்ணு பக்தர்களாக இருந்து -பஞ்ச கால பராயணராக -இருந்தே பாகவதர்களாக வேணும் /
மத் பக்த ஜன வாத்சல்யம் –எட்டு வித பக்தி -கதை கேட்டு கண்ணீர் விட்டு / எதையும் எதிர்பார்க்காமல் -முனி ஸ்ரீ மான் யதி பண்டிதன் -மிலேச்சனாக இருந்தாலும் /
விஷ்ணு பக்தத்வம் என்பது இருந்தும் -வர்ண சதுஷ்ட்யம் தாண்டி பஞ்சமம் -இதுவே விஷ்ணு பக்தன் -திருக் குலத்தார் -என்ற பெயர் —
ஞான தானம் கொடுக்கவும் பெற்றுக் கொள்ளவும் யோக்யமாய் – ஈஸ்வர ஆராதன சமமுமாய் -பகவானுக்கும் ஆராத்யனுமாய் –இருப்பார்களே –
ஆழ்வார்களும் அருளிச் செயல்களையும் தாழ்வாக நினைக்க கூடாதே -வர்ணம் கொண்டும் -பாஷை கொண்டும் -நினைத்தால் நரகில் வாழ்வார்கள் –
ஏகாந்தி -கிராமம் குலம் கோத்ரம் -விஷ்ணு வைத்தே அடையாளம் -பெண் பிள்ளை ரஹஸ்யங்கள் உண்டே -பாண்டிய தேசத்தில் சரம நிஷ்டை உறுதி நிறைய உண்டே /
திரு வடி தாமரை நெருப்பால் தாழ்ந்த ஜாதி அழுக்கை போக்கி -ஜ்வாலா பேதம் அறியாமல்–திரி குறைந்து வந்தாலும் -ஒரே ஜ்வாலை என்னுமா போலே –
மனுஷியோகம் தேவோஹம் -ஷூத்ரோஹம் -ஜென்ம நிரூபணம் சகல லோக வியாபகம் -/
சாஸ்த்ர கண்ணோட்டம் வேண்டுமே உண்மை அறிய -/

அநேக விதம் என்றது –ஜன்ம நிரூபணம் ,ஞான நிரூபணம் ,விருத்த நிரூபணம்-
ஆகார நிரூபணம்- ,பந்து நிரூபணம்- வாச நிரூபணம் இத்யாதிகளால்- பல படிப் பட்டு இருக்கும்

———————————————————

சூரணை -195-

அவற்றில் ஓன்று தான் அவர்கள் பக்கல் ஜன்ம நிரூபணம் –

அவற்றில் வைத்து கொண்டு,ஜன்ம நிரூபணத்தின் உடைய க்ரைர்யத்தை அருளிச் செய்வதாக
அத்தை உபாதானம் பண்ணுகிறார் இதில்-

அவயவ நிரூபணம் -ஆய் ஸ்வாமிகள் சேர்த்து / பாகவத சமாஹம் முக்கியம் /சாண்டில்ய -பெரிய திருவடி -அபசாரம் பிரபலம் /
பங்கு வக்கிரம் -ஆகாரம்-போன்றவை / ஆரண்ய சண்டாளர் இடங்கள் /ஸ்தாலீ பாக-நியாயம் ஒரு பானைக்கு ஒரு சோறு பதம் –
ஜென்ம நிரூபணம் முதலில் -உலகம் முழுவதும் பேசப்படுவதால் -இன்றும் இதுவே பிரதானம் /
ஞானம் விருத்தம் -அனுஷ்டானம் -பாகவதர் சொன்னதும் வரும்
ஆகாரம் குள்ளம் குருடு -கூன் -மாற்ற முடியுமே / பிறந்த ஜென்மம் மாறாதே / நிகர்ஷம் -நித்ய முக்தர் -சனகாதி தேவாதி -அசுரர் ராக்ஷசர் —
மனுஷ்யர் -பிராமணர் -சூத்திரர் -சண்டாளர் -எறும்பு திர்யக்குகள் -ஸ்தாவரங்கள் -இப்படி மேல் இருந்து கீழ் உண்டே /

இவை எல்லாம் ஒரு தட்டும் -ஜென்ம நிரூபணம் ஒரு தட்டு -அத்விதீயமாய் -சத்தா நாசகமாய் இருக்கும் -/
அவதீர்ணம்–ஆழ்வாராதிகளும் அவதாரம் போலே தாழ விட்டு -சம்சாரிகளை தூக்கி விட அவதரிக்கிறார்கள்/
பிறப்பு எப்படி இருந்தாலும் விஷ்ணு பக்தியே வேண்டுவதே /
பிரவாஹ ரூபம் தேவர் மனுஷ்யர் -இத்யாதி-பகவத் ஸ்வரூபாதிகள் திரோதானம் –தேக ஆரம்ப கர்ம விசேஷ உபாதிகள்–/
சாதனாந்தர சாத்யாந்தர நிஷித்த பிரவ்ருத்திகளில் ஈடுபட்டு உள்ளாரை உத்தரிக்க / கீழ் குலம் புக்க வராஹ கோபாலர்களை போலே –
மக்களை உத்தரிக்க ஆழ்வார்கள் /ஜகத் உஜ்ஜீவன ஹேது -என்பதால் அவத்தீர்ணம் சப்தம் / தத்தாத்தரயர் -ஜமதக்னீ -பங்கிரதர் வசூ நந்த ஸூனு –
யுக கிரமம் வரண கிரமம் நான்காவது யுகம் நான்காவது வர்ணம் -ஆழ்வார் /
சர்வ உத்க்ருஷ்டம் பகவத் பக்தியால் அழும் தொழும் பத்திமை நூல் வரம்பில்லாமல் –சர்வ பிரகார பூஜ்ய அர்ஹராய் எம்பெருமானுக்கு கூட பூஜா நீயராய்/
பக்தன் வீட்டு செடி கொடி கூட மோக்ஷம் போகுமே / தர்சன மாத்ரத்தால் பாபங்கள் மாய்ந்து போகுமே / அத்யந்த பாவன தர்சநாதிகளை யுடையவர்கள் /
சம தர்சனம் ஷாந்தி -திருவடி துகள்களால் பாவனம் ஆகும் -நானும் விரும்புகிறேன் -/ விமல சரம திருமேனி கூட பாவனம் -/பாஞ்ச ராத்ரமும் கோஷிக்குமே/
தீர்த்தம் பிரசாதித்த பின்பும் -பிருந்தாவன தரிசனமே உத்தரிக்கும் -ஸம்ஸ்கார பஸ்மமும் -உத்தரிக்கும் /
கங்கை யமுனை விட பாவனம் இவர்கள் ஸ்ரீ பாத தீர்த்தம் -அகல்யா சாப விமோசனம் பெருமாளாலே -நம் போல்வாருக்காக ராம பக்தர்கள் -பராசர ஸ்ம்ருதி சொல்லுமே /
சபரி தேவி நித்ய ஸ்நானம் தீர்த்தத்தை கங்கைக்கு தெளித்து புனிதம் பெருமாள் கோதண்டத்தால் -சாரங்க கோடி யால் அருளினான் பாத்திமா புராணம் சொல்லும் /
பாகவதருடைய ஜல்பத்தையும் ஜெபமாக கொள்கிறான் /உண்ட மிச்சம் உண்பதே பாவனம் -அப்ரதிம வைபவம் கண்டா கோஷமாக அனைத்தும் சொல்லுமே
நிகர்ஷ புத்தியா -யாரேனும் ஒருவர் ஜென்மத்தை காட்டிலும் ஒப்பிட்டு தானே -சொல்லுவோம் -தார தம்யம் -உயர்ந்தது -மிக உயர்ந்தது என்கிற விசாரம் /
பகவானை விட தாழ்ந்தது என்றும் கொள்ளக் கூடாதே -இதுவும் அபசாரம் ஆகும்– அவன் திரு உள்ளம் இப்படியே தானே –
ப்ராஹ்மண பாகவதர் அஹங்காரம் இருக்கும் என்றும் சொல்லக் கூடாது என்றுமாம் -சங்கை இல்லாமல் ஜென்ம நிரூபணம் பண்ணக் கூடாது என்கை –
ஒருபடியாலும் நிகர்ஷத்துக்கு உடலாகாதே -பாகவதர் என்றாலே அவதாரம் போலே என்ற எண்ணம் வேண்டும் –
பக்த பாகவதர் என்றே கொள்ள வேண்டும் —
நிகர்ஷ புத்தியா நிரூபணம் -சிந்திக்கையே -அபசாரம் -வாத்சல்யயாதி-ஸுலப்யம் முதலியவை ஆதி – குணங்களாலே –கலந்து –
என்நின்ற யோனியுமாய் பிறந்து அந்த அந்த ஸ்வ பாவங்களைக் கொண்டு –இரண்டறக் கலந்து -அதே பிறவி அதே ஒழுக்கம் கொண்டு -இருக்க
எப்படி தாழ்ந்த பிறவி என்று சொல்ல முடியும் /
மீனாகவும் ஆமையாகவும் வராஹமாகவும் -அவதாரம் போலே இந்த பாகவதரும் –எக்குற்றவாளர் -ஏது பிறப்பு ஏது இயல்வு —எக்குலத்தார் —
அக்குற்றம் அப்பிறப்பே அவ்வியல்வே -நம்மை ஆள் கொள்ளுமே –ராமானுஜர் திருவடிகளைப் பற்றி பின்பு இவை இருக்காதே –

ஜன்ம நிரூபணம் ஆவது நிக்ருஷ்ட குலங்களிலே யவதீர்ணரான பாகவதர்களை
பகவதீயத்வ பிரயுக்தமான மகாத்ம்யத்தைப் பாராதே நிகர்ஷ புத்யா தத்தம் ஜன்மங்களை நிரூபிக்கை-

————————————

சூரணை –196–

இது தான் அர்ச்சா அவதாரத்திலும்  உபாதான ஸ்ம்ருதியிலும் காட்டில் க்ரூரம்-

இதன் உடைய க்ரைர்யம் அருளி செய்கிறார் இத்தால்-

சீதா பிராட்டி -சிறிய பெரிய அபசாரம் இத்தை விளக்கிக் காட்டி -பிரசித்தம் வைத்து புரிய வைக்க -ஸ்ரீ ராமாயணத்தில்
– மூலப் பொருள் ஆராய்வதை விட பாகவத ஜென்ம நிரூபணம் குரூரம் /
பூர்ண விஷயமான அர்ச்சாவதாரத்தில் உபாதான சிந்தனை விட இது -குரூரம் –ஸூ வ சத்தா நாசகாரம் இது –
ஆவிர்பாவ வாசகம் -அர்ச்சாவதாரம் என்பது /உபாதானம் மூலப் பொருள் மாறுபாட்டுக்கு உட்படும் /ஸ்ம்ருதி சிந்தா வாசகம்
ஆஸ்ரிதர் உகந்த த்ரவ்யத்தை தனக்கு திவ்ய சமஸ்தானம் ஆக்கிக் கொண்டு -இருக்கும் வைபவம் —
ஸ்வயம் வியக்தம் -8-ஷேத்ரங்கள் /தேவர்- சித்தர்- ரிஷிகள்- மனுஷ்யர் மூலம் பிரதிஷ்டம் உண்டே –பஞ்சவிதம் -அர்ச்சைகள்//
பாஞ்ச ராத்ர ஆகமங்கள் ஸ்ம்ருதிகள் அர்ச்சா எழுந்து அருள பண்ண உபாதானங்கள் பற்றி ஸ்ரீ ஸூ க்திகள் உண்டே /
ஸ்வயம் வியக்தத்தில் இவை ஒன்றுமே பேசப்பட வில்லையே அக்ருதகம்-உருவானது இல்லை -இந்த திவ்ய தேசத்தில் வியக்தமானவை -ஏற்கனவே சித்தம் இவை —
திருவாய் மொழி வேதங்கள் போலே -இவை அக்ருதகம் -உபாதான ஸ்மரண அர்ஹதையே இல்லையே -/ வியக்தம் என்றாலே
மறைந்து இருந்தவை வெளியே தெரியும் படி ஆனவை என்றபடி /
செப்பால்/ வெள்ளியால் / ஸ்வர்ணத்தால் /ரத்னத்தால் /ஸ்ரீ விஷ்ணு தர்மம் போன்றவற்றில் உண்டே /
பராசர சம்ஹிதை பஞ்ச கவ்யத்தால் பிரோக்ஷணம் -திரு மந்த்ரம் சொல்லி மண்ணால் தண்ணீரால் –ரஹிதா த்ரவ்ய தோஷம் – சொல் அளவில் உபாதானம் உண்டே /
இதில் உபாதான சிந்தனை கிரூரம் என்றால்
ஸ்வயம் வியக்தத்தில் கை முதிக நியாய சித்தம் -சாஷாத் சித்தம் விட கை முதிக நியாயம் பிரபலம் /க்ரூர அதிசயம் சித்திக்கும் /
அசாதாரணமான திருமேனி/ போக ஸ்தானம் என்று சங்கல்பம் /ஆகம சாஸ்திரம் சில்ப சாஸ்திரம் /
பகவத் சரீரம் அல்லாத தொரு வஸ்துவே இல்லையே சர்வ வியாபகம் -அர்ச்சைக்கு ஏற்றம் -/ நூல் புடவை சொல்ல கூடாதே
நூலுக்குள்ளும் அவன் உள்ளான் குத்ருஷ்டிகள் கேள்வி /வஸ்து சத்தைக்காக இவற்றுள்
போகத்தை பாகவதர்கள் உடன் அனுபவிக்க அர்ச்சா -போக ஆயதனம்-மற்றவை லீலா காரியம் /
அர்ச்சையில் தான் ஹாரம் தீபம் திருவாராதனம் கொள்வதை சங்கல்பித்து உள்ளான் /
நெஞ்சினால் நினைப்பவன் எவன் -ஆஸ்ரிதர் தமர் உகந்த உருவம் /கிருபா வசத்தால் ஏற்றுக் கொண்ட பிராகிருத மூர்த்தி /கர்ம நிபந்தனம் இல்லை /

த்வயம் உச்சாரண ரூப கைங்கர்யமே புருஷார்த்தம் என்றும் அத்தை அடைய -ஆச்சர்ய அபிமானமே உத்தாரக உபாயம் என்றும் – –
அதுக்கு விரோதி பாகவத அபசாரம் என்றும் ஸ்ரீ பாஷ்யகாரர் அருளிச் செய்வார் –

பாகவத ஜன்ம நிரூபணத்தை பராமர்சிகிறது –ஆஸ்ரிதர் உகந்த ஏதேனும் ஒரு த்ரவ்யத்தை
தனக்கு திருமேனியாகக் கொண்டு ,அதிலே அப்ராக்ருத திவ்ய விக்கிரகத்தில் பண்ணும் விருப்பத்தைப்
பண்ணி எழுந்து அருளி இருக்கும் வைபவத்தை அறியாதே ,நிகர்ஷ புத்தி பண்ணி ,விக்ரக உபாதான த்ரவ்யம் இன்னது
அன்றோ என்று சிந்திக்கை–அதிலும் காட்டிலும் க்ரூரம் ஆகையாவது -அத்தை பற்றவும் சர்வேச்வரனுக்கு அத்யந்த  நிக்ரஹ ஹேது ஆகை

—————————————

சூரணை -197–

அத்தை மாத்ரு யோனி பர்ஷை யோடு ஒக்கும் என்று சாஸ்திரம் சொல்லும் —

அது தன்னுடைய க்ரூரம் தான் எவ்வளவு என்கிறார்-

அச்சு எழுத்து குறைவாக உள்ளது முதலில் -சமமான பிரதானம் / இதிஹாச புராணம் போலே -அத்தாலே அது முற்பட்டது /
இங்கு வைஷ்ணவ உத்பத்தி -எழுத்து குறை -அபசாரம் எதிர்மறை -அதனால் இது முன்னாக -வந்தது –
யதா ஸ்ருதம் -மேல் எழுந்தவாறு -சமமாக -உள்ளே புகுந்து பார்த்தால் வைஷ்ண உத்பத்தி சிந்தனம் அதி குரூரம் /
சாதக பாதக யாக்தி விசேஷம் பண்ணி–கர்மாதீன பிராகிருத சம்பந்தம் இந்த மாதா –நிருபாதிகம் ஸ்வரூப பிராப்தம் சர்வவித பந்து வாக -உள்ள
பகவத் பாகவத விஷயத்தில் -அது தானே குரூரம் / பகவத -பாகவத -ஆச்சார்ய -தத் பக்த விஷய குரூரம் மேலே மேலே க்ரூரம் ஆகும் /
வயாக்ர பசு ப்ராஹ்மணர் ஹத்தி தார தம்யம் போலே / மாத்ரு யோனி -அர்ச்சாவதார உபாதானம் -வைஷ்ணவ உத்பத்தி -இவையும் மேலே மேலே க்ரூரங்கள்

அர்ச்சாவதார உபாதான வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் மாத்ரு யோனி பர்ஷா யஸ் துல்யம் ஆஹூர் மனீஷின–என்ன நின்றார் இறே –
இப்படி உபயத்தையும் மாத்ரு யோனி பரிஷா சமமாக சாஸ்திரம் சொல்லிற்றே ஆகிலும் அது அர்ச்சா அவதாரத்தில் உபாதான ஸ்ம்ருத்திக்கு நிதர்சனமாம் இத்தனை
வைஷ்ணவ உத்பத்தி சிந்தனம் அதிலும் குரூரம் என்று இவர் கருத்து
அந்நிய ஸ்திரீ யோனி வைசலஷண்யா வசிச லக்ஷண்ய நிரூபண வாசனையாலே ,இத்தையும் அப்படி நிரூபிக்கை
இப்படி நிரூபித்தால்,அதுக்கு எத்தனை பாபம் உண்டு ..அர்ச்சா அவதார உபாதான சிந்தையிலும் அத்தனை பாபம் உண்டு என்ற படி.

———————————————–

சூர்ணிகை -198-

திரிசங்குவைப் போலே கர்ம சண்டாளனாய் -மார்விலிட்ட
யஜ்ஜோபவீதம் தானே வாராய் விடும் —

இவ்வபசாரத்துக்குப் பலம் தக்த படம் போலே நஷ்ட கல்பனாய் இருந்து தேக அவஸானத்திலே வுருமாய்ந்து போம் அளவே அல்ல –
இவ்வபசாரம் பண்ணின போதே கர்ம சண்டாளனாய் விடும் என்கிறார் -திரிசங்குவைப் போலே-என்று தொடங்கி –

உத்தம வர்ணத்தவனை நீச வர்ணத்தவன் ஆக்குமே பாகவத அபசாரம் -இதுக்கு த்ருஷ்டாந்தம் /ச சரீர ஸ்வர்க்கம் பெற விபரீத ஆசை கொண்ட
திரிசங்கு -இஷுவாகு வம்ச அரசன் -முற்பட வசிஷ்டரையும் சிஷ்யர்களை அபேக்ஷிக்க -எங்களால் முடியாது -விசுவாமித்திரர் பக்கல் போ என்ன –
அவரும் பண்ணிக் கொடுக்க -வசிஷ்டர் கோபத்தால் சபிக்க -ஒழுக்க கேட்டால் கர்ம சண்டாளன் -வாராக போனதே சண்டாள வேஷம் -திரிசங்கு ராஜா ஆனான் -அதே போலே
பாகவத அபசாரம் பண்ணினால் உத்தம லக்ஷணமும் நீச லக்ஷணம் ஆகுமே / ஞான கண்களுக்கு புலப்படும் -ஞானிகள் இவனை தள்ளி வைப்பார்கள் -என்றவாறு –
குல குரு தானே ஸ்ரேஷ்டர்-குலம் குலமாக ஆச்சார்யர் வம்சம் ஸ்ரேஷ்டம் அன்றோ-
ஜாதி ஷத்ரியன் -கர்ம சண்டாளன் ஆனான் -/பரம்பரை ஆச்சார்யன் –கிருபா மாத்ர பிரசன்ன ஆச்சார்யர் –இவன் குடும்ப முன்னோரையும் அறிவாரே
-ப்ரத்ய அக்ரரர்-அப்போது கிடைத்த -ஆச்சார்யர் -அனுவர்த்த பிரசன்னாச்சார்யார் இவர் –
-35-ராஜா பெருமாள் -வசிஷ்டர் குலம் குலமாக ஆச்சார்யர் இஷுவாகு வம்சத்துக்கு / அவர் அனுமதி இல்லாமல் வேறே ஆச்சார்யர் இடம் போனதே அபசாரம் /

பாஞ்சராத்ரம் –பிராட்டியும் பெருமாளும் ஐந்து ரிஷிகளுக்கு உபதேசம் /
குல க்ரமத்தில் ஆகாத -வந்தார் -ஏஷ நாராயணா போலே -காருண்யன் பரதந்த்ர வேஷத்துடன் ஏறிட்டுக் கொண்டு வந்தவர்
ஏழாட் காலும் பழிப்பிலோம் -பரார்த்தமாகவே கர்மங்கள் இவரது -/அவிச்சின்ன பரம்பரை -தத்வ போதனம் பண்ணவே /பூர்வ தேசிக அபாவத்தால் –
இன்று கண்ணில் கிடைத்தவரை அனுவர்த்தித்து -பஞ்ச சம்ஸ்காரம் தீக்ஷை அருளி -/ஸமித் சிஷ்ருஷை பண்ணி அனுசரித்து -வைஷ்ணவன் ஆகி –
குல ஆச்சார்யர் பூஜை நூறு யாகங்களின் பலன் -/நிர்ஹேதுகமாக மதீயம் என்று அபிமானித்து-அஞ்ஞான தசையிலும் பூர்வர் திருவடிகள் என்று
வம்சத்துக்கும் உஜ்ஜீவனம் இவரால் –இந்த லாபம் ப்ரத் அக்ர ஆச்சார்யர் மூலம் கிடைக்காதே / இந்த சமஸ்தானம் ஸ்ரீ பாஷ்யகாரர் ஏற்படுத்தி அருளினார் -/
அனுவர்த்தி ப்ரசன்னாச்சார்யாரோ ஆஸ்ரயிக்கும் இவன் ஒருவனை மட்டுமே உஜ்ஜீவிக்கிறார் -/ ஸூ வ ஆச்சார்ய அபிமானத்தால் ஐஹிகத்தில் யோக க்ஷேமமும் –
பகவத் மூலமாகவும் ஆமுஷ்மிகத்தில் ச குடும்பத்துக்கும் தானாகவே பிராப்தி உஜ்ஜீவனம் அருளுகிறார் /ஆத்ம லாபம் இவர் கையிலே தானே -/
ஒரு ப்ரஹ்ம வித்தால் –ஏழு ஏழு தலைமுறைகளுக்கும் கேசவன் தமர் மா சதிர் பெற்று நம்முடைய வாழ்வு வாய்கின்றதே என்றபடி /
தலை கீழாக இருக்கவே நரக துல்யமே / ஆச்சார்யர் வாக்கியம் மீறி -ஸ்வர்க்கமே நரகமாயிற்றே /
நரகம் ஸ்வர்க்கம் -ஆனதே -கத்திரபந்து அன்றோ பராங்கதி பெற்றான் -நரகமே ஸ்வர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி அன்றோ /

மானஸ அபசாரம் -மற்ற ஒருவரை சமமாக / காயிக அபசாரம் -விசுவாமித்திரர் இடம் சென்றது / அபசாரத்தினாலே சண்டாளனாவான் –
சண்டாளனாவாய் என்று சபித்தது வசிஷ்டர் புத்ரர்களுடைய கோபமே ஹேது
ஆச்சார்யர் அபசாரம் பட்டானே என்ற கோபத்தால் / விஷயம் இவர் கை மீறி பகவான் இடம் போகுமே ஆச்சார அபச்சாரம் பண்ணினால் -/
ஜாதி சண்டாளன் இல்லை -அபசாரத்தாலே – கர்ம சண்டாளனாக இருந்தவனை வேஷத்தாலும் சண்டாளனாக சாபம் பண்ணிற்றே /பூர்ண சண்டாளன் ஆனான்/
தேசாந்தரத்திலோ காலாந்தரத்திலோ தேகாந்தரத்திலோ இல்லையே –அபசாரம் பண்ணின போதே -/ யோக சாமர்த்தியம் இல்லா பாகவதர் இடம்
அபசாரம் பட்டால் அந்த க்ஷணமே சித்திக்கும் கர்ம சண்டாளத்வம் /
யஜ்ஜோ பவித்ரம் பரமம் பவித்ரம் —தானே -மற்றும் அவன் உடன் சம்பந்தித்த தண்டம் குண்டலம் எல்லாம் சண்டாளனுக்குத் தக்க படி ஆகுமே –
திரிசங்கு விஷயத்தில் பிரத்யக்ஷம் -மற்றவர் விஷயத்தில் சாஸ்த்ர சித்தம் –வேஷ சண்டாளம் லௌகீகம் / கர்ம சண்டாளத்வம் அலௌகீகம் /
சாபம் -கொடுக்காத ஷமா நிதிகள் இருப்பதால் கர்ம சண்டாளன் மட்டும் இங்கே / பகவான் திரு உள்ளம் சங்கல்பத்தால் கர்ம சண்டாளத்வம் அலௌகீகம்
வசிஷ்டர் புத்ராதிகள் லோகத்தில் இருப்பதால் சாபம் மூலம் வந்த சண்டாளத்வம் -லௌகீகம்
-ஞான கண் மூன்று விதம் -திவ்யம் தாதாமி தே சஷூஸ் போலே -பகவத் பிரசாதத்தால் தெய்வ கண்
ஆர்ஷ சஷூஸ் -ரிஷிகள் எஜ்ஜம் தானம் தபஸ் மூலம் பெற்ற
சாதானாந்தர உபாசன ஞான த்ருஷ்ட்டி / ஆகாம்யகம் -சாஸ்த்ர ஜன்ய ஞானம் மூன்றாவது -சஞ்சயன் கண்டான் -பத்தாஞ்சனம் -பூசிய -சாஸ்த்ர கண்ணால்
ஜனார்த்தனை பார்க்கிறேன் -என்றானே /
பாகவத அபசாரம் -ஞான த்ருஷ்டியால் தானே அலௌகிக சண்டாளத்வம் பார்க்க முடியும்

அநாசாரான் துராசாரான் அஞ்ஞானம் -மூன்றும் இருந்தாலே –ஹீன ஜன்மா / க்ருத்ய அகரணம் அ நாசாரம் / அக்ருத்ய கரணம் -துராசாரன் /
அஞ்ஞானம் ஒன்றுமே அறியாமல் அவற்றுக்கு மூல காரணம் /
புரா -திருவடிகளை ஆச்ரயிப்பதற்கு முன் / பக்தர்களுக்கு இவை இல்லையே / குளிர்ந்த நெருப்பை கொண்டு வர முடியாதே /ஆகையால் புரா தருவித்து அர்த்தம்
அபி எவ்வளவு தாழ்ந்தவனும் மாறலாம் -என்றவாறு /
மத் பக்தன் -முன்னால் சொல்லும் குற்றங்கள் க்ஷணம் பொழுதில் அழிக்கும் பின்னால் எப்படிப் பட்டவனும் இவன் மேல் அபசாரம் பட முடியாமல்
அவனை எரிக்கும் பலம் உண்டே /அபசாரம் பட்டால் சடக்கென சண்டாளத்வம் /
ஸ்ரீ ராமாயணத்தில் விசுவாமித்திரர் தன்னை பற்றி சொல்லிக் கொண்டாரே -பெருமாள் இளைய பெருமாள் இடம் /

அதாவது -இஷுவாகு வம்சனாய் இருக்கிற திரிசங்குவாகிற ராஜா தன் குல குருவாய் இருக்கிற வசிஷ்ட மகரிஷியை –
ச சரீர ஸ்வர்க்க அவாப்த அர்த்தமாக என்னை யஜிப்பிக்க வேணும் -என்று அபேக்ஷிக்க –
மஹரிஷி நமக்கு அசக்யம் -என்ன –
அங்கு நின்றும் தத் புத்திரர்கள் தபஸ்ஸூ பண்ணுகிற இடத்திலே சென்று இச்செய்தியைச் சொல்லி அவர்களை மிகவும் அநு வர்த்தித்து –
நீங்கள் என்னை இப்படி யஜிப்பிக்க வேணும் -என்று நிர்பந்திக்க
நீ துர்புத்தியாய் இருந்தாய் -மஹரிஷி போகாது என்றத்தை எங்களால் செய்யப் போமோ என்ன
தேஷாம் தத் வசனம் ச்ருத்வா க்ரோத பர்யாகுலா ஷரம் ச ராஜா புநேரேவைதா நிதம் வசந அப்ரவீத் ப்ரத்யாக்கயாதோ பகவதா
குரு புத்ரைஸ் தத்தைவச அந்யாம் கதம் கமிஷ்யாமி ஸ்வஸ்தி வோஸ்து தபோதநா -என்று அவன் க்ருத்தனாய்
குருவானவரும் -தத் புத்ரர்களான நீங்களும் மாட்டோம் என்றிகோள் ஆகில் நான் மற்றொர் இடத்தில் போகிறேன் நீங்கள் ஸூகமாய் இருங்கோள் -என்ன
ருஷி புத்ராஸ்து தச்ச்ருத்வா வாக்கியம் கோராபி சம்ஹிதம் சோபு பரம சங்க்ருதாச் சண்டாளத்வம் கமிஷ்யசி -என்று
ஸ்வாச்சார்யனையும் தத் புத்ரர்களான தங்களையும் இவன் அவமதி பண்ணிச் சொன்ன வார்த்தையைக் கேட்டு அவர்கள் மிகவும் க்ருத்தராய்
நீ சண்டாளனாகக் கடவாய் -என்று சபிக்க
அத ராத்ரியாம் வ்யதீதா யாம் ராஜா சண்டாள தாங்கத நீல வஸ்திர தரோ நீல புருஷோ த்வஸ்த மூர்த்தஜ சித்ரமால் யாங்க ராகாச்ச ஆயாசா பரனோ பவேத் -என்கிறபடியே
அநந்தரம் அவன் கர்ம சண்டாளனாய் விட்டான் இ றே
அப்படியே பாகவத அபசாரம் பண்ணின போதே கர்ம சண்டாளனாய் ப்ரஹ்ம வர்ச்சஸ்வத்துக்கு உறுப்பாக மார்பிலிட்ட யஜ்ஜோபவீதம் தான்
சண்டாள வேஷத்துக்கு அடைத்த வாராய் விடும் என்கை –
அங்கு சாப சித்தமாகையாலே ப்ரத்யக்ஷமாய்த்து -இங்கு சாஸ்த்ர சித்தமாகையாலே ஞான த்ருஷ்ட்டி விஷயமாக இருக்கும்
அநாசாராந் துராசாராந் அஞ்ஞாத்ருந் ஹீந ஜன்மன -மத் பக்தாந் ஸ்ரோத்ரியோ நிந்தந் சத்யச் சண்டாளதாம் வ்ரஜேத் -என்னக் கடவது இறே

—————————————–

சூர்ணிகை –199-

ஜாதி சண்டாளனுக்கு காலாந்தரத்திலே பாகவதனாகைக்கு யோக்யதை யுண்டு –
அதுவும் இல்லை இவனுக்கு –

சண்டாளனோபாதி யாகிலும் இவனும் ஒரு காலத்திலே ஈடேறும் என்று நினைக்கைக்கு அவகாசம் இல்லாதபடி –
ஜாதி சண்டாளனில் கர்ம சண்டாளனுக்கு உள்ள தண்மையை அருளிச் செய்கிறார் –

கர்ம சண்டாளனுக்கு இதுவும் இல்லையே -மீளாத கதி -ஜன்மாந்தரத்திலே -ஜாதி சண்டாளன் -பாகவத சமாகத்திலோ
ஆச்சார்ய கடாக்ஷத்தாலோ பகவத் ஸூ ஹ்ருத்வத்தாலோ மாறலாம் -/ சர்வசக்தன் அன்றோ -அவன் மஹாத்ம்யத்தாலே ஈடேறலாம் –
ஸத்ய சங்கல்பம் -தன் சம்பந்தம் அற்றதாக திரு உள்ளத்தில் கொள்வான் இந்த கர்ம சண்டாளனை

அதாவது ஜாத்ய சண்டாளனுக்கு தஜ் ஜென்மத்தில் யாதல் ஜன்மாந்தரத்திலே யாதல் பகவத் கடாக்ஷம் உள்ளதொரு கால விசேஷத்திலே
நாம ரூபங்களை யுடையவனாய் பகவத் சம்பந்த நிருபித்னாகைக்கு யோக்யதை யுண்டு
அந்த யோக்யதையும் இல்லை -பாகவத அபசார ரூப கர்மத்தால் சண்டாளனான இப் பாபிஷ்டனுக்கு

———————————-

சூர்ணிகை –200-

ஆரூட பதிதனாகையாலே-

அதுக்கடி பாகவதத்வமாகிற உயர்ந்த நிலத்திலே ஏறி -பத்ம கோடி சதே நாபி ந ஷாமாமி என்னும்படி அதி குரூரமான பகவத் நிக்ரஹத்துக்கு
ஹேதுவான பாகவத அபசாரத்தாலே பாற வடியுண்டு அதி பதித்தவனாகையாலே –

ஸ்ரீ வைஷ்ணத்வம் ஆகிற உயர்ந்த நிலத்திலே ஏறி பாகவத அபசாரம் பெரும் காற்று தள்ள -சம்சார ஆர்ணவத்தில் அழுந்தி ஈடேற விரகே இல்லை
நெல் நுனி அபசாரம் செய்தாலும் கல்ப கோடி ஜென்மம் ஆனாலும் மீளான்/
ஷமா நிதி- தயாளு- வத்சலன்- ஸ்ரீ சகன்- ஸ்திர- வீரன் -இருந்தாலும் பிராணன் போன்ற பக்தர் –
அபசாரத்தால் கலங்கி ந ஷமாமி-அதீத நிக்ரஹம் ஹேது ஆகுமே /

—————————————

சூர்ணிகை –201-

இது தனக்கு அதிகாரி நியமம் இல்லை –

இது தான் ஜென்மாதிகளாலும் ஞானாதிகளாலும் அபக்ருஷ்டரானவர்கள் உத்க்ருஷ்டர் விஷயத்தில் பண்ணும் அளவிலேயே
அவற்றால் உத்க்ருஷ்டரானவர்கள் அபக்ருஷ்டர் விஷயத்தில் பண்ணும் அளவிலே ஒக்குமோ என்ன அருளிச் செய்கிறார்

அதாவது பாகவத அபசாரத்துக்கு அப்படி இருபத்தொரு அதிகாரி நியமம் இல்லை என்கை –

அபசாரப் படுபவனுக்கு அதிகாரி நியமம் இல்லை -உயர்வு தாழ்வு இல்லை /
மேலே மூன்று சூரனைகளிலே அபசாரம் யார் இடம் என்கிற அதிகாரி நியமம் இல்லை -என்பார்
அதிபதிப்பிக்கும் -தாழ விழ வைக்கும் பாகவத அபசாரம் -பெரியவன் பட்டால் ஆரூட பதிதன் பார்த்தோம் / சிறியவன் பட்டாலும் அவ்வளவு உண்டே –
ஜென்மாதி -ஆதி ஆகாரம் பந்து வாஸம் இத்யாதிகள் / ஞான ஆதி -சப்தம் சம தமாதிகளை சொன்னபடி –
அபக்ருஷ்டர் இவைகள் எல்லாவற்றாலும் -அன்றிக்கே ஏதாவது ஒன்றாலும் இருந்தாலும் பட்டது பட்டதே –
-நாலு வகைப்பட்ட பாகவதர்கள் இடமும் அபசாரம் ஸ்வரூப நாசா ஹேது
பாஹ்ய குத்ருஷ்டிகர்கள் இருவரையும் -கானல் நீர் தேடி போன மான் நிஜ நீர் குடுக்கும் மான் புலியால் கொல்லப்பட்டால் இரண்டும் சமம் என்பது போலே –

——————————————————–

சூர்ணிகை -202-

தமர்களில் தலைவராய் சாதி அந்தணர்களேலும் -என்கையாலே

இது தனக்கு பிரமாணம் உண்டோ என்னும் ஆ காங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –

மேம்பொருளில் மேலில் பாட்டுக்கள் ஆறு –சதுப்பேதிமாரில் -சதிர்வேதம் அறிந்தவர்களின் -இழி குலத்தவர்களாகிலும் எம் அடியார்கள் ஆகில் –
தொழுமினீர் -பெருமாள் ஸ்ரீ ஸூ க்தி
இப்படி உபசாரம் பண்ண வேண்டும் என்று அருளிச் செய்த பின்பு அடுத்த பாசுரத்தில் -ஆறு அங்கங்களையும் நன்றாக அமர ஓதி –
பக்தர்களில் தலைவர் -சாதியால் அந்தணர்களாக இருந்தாலும்
நுமர்களை பழித்தால் -நொடிப்பதோர் அளவில் -அந்த க்ஷணமே சண்டாளன் ஆவான் -புலையைர் போலும் –
சதுர் வேத ஆறு அங்கம் எட்டு உப அங்கம் -படித்த உத்க்ருஷ்டர் -ஜென்மாதிகளை இட்டு நிந்திப்பார்களாகில் -பேர்த்து அடி இடுவதற்கு முன் –
புலையர் ஆவார் -முகம் பார்க்க யோக்யதை அற்றவர்கள் –சண்டாளரை போலியாக சொல்வதற்கு ஒக்கும்-அவர்களிலும் நீசர் –

பாடி -நிற்க்கப்பாடி வேதத்தின் உட்ப்பொருள் -தத்வ யாதாம்யா தர்சி -பாகவத சேஷத்வம் பாகவத பாரதந்தர்யம் /
ச அங்கமாக வேதங்கள் – பாதி உடன் கூடிய ஐந்து மாதம் அத்யயனம் -ஆவணி பவ்ர்ணமி முதல் நான்கும் பாதி மாசமும் –
மீதி உள்ள நாள்களில் சுக்ல பக்ஷம் திருவாய் கிருஷ்ண பக்ஷம் இதிஹாச புராணம் அங்கங்கள் /விப்ரான் மாஸான் அர்த்த பஞ்சமான் –/
ஞான உதகர்ஷம் சொல்கிறது -அமர ஓர் அங்கம் ஆறும் வேதம் ஓர் நான்கும் ஓதி –சாதி அந்தணர்களேலும் /மா முனிகள் பாசுரம் தழுவியே வியாக்யானம் /
ததீயர்களில் ஸ்ரேஷ்டர் ஆவது இப்படி வேதங்களையும் அங்கங்களையும் அத்யயனம் / சகல வேதம் திராவிட வேதங்களையும் சேர்த்து –
உம்மை தொகை அப்ரதானம் என்பதால் இல்லை / ப்ராஹ்மண்யம் வைஷ்ணத்வம் சித்திக்க திராவிட வேதம் அத்யயயன் வேணும் –
செய்ய மறை தன்னுடனே சேர்ந்து கீழே மா முனிகள் ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்கள் வாழி என்று அருளிச் செய்த அநந்தரம் -மார்க்கண்டேய புராணம் –
பராங்குசர் -திராவிட சம்ஹிதம் நித்யம் -கலி யுகம் தோறும் ஞான யோகிகள் பிரசாதிப்பார்கள் -வேத வியாசர் பிரித்து அருளுவது போலே -நித்ய ஸூ ரிகள் அம்சம் /
சனத் குமாரர் விஷ்வக் சேனர் சம்வாதத்தில் உண்டே இதில் /நம் பிள்ளை போல்வார் பொழுது போக்கு அருளிச் செயலில் ருசி வளர –
சமஸ்க்ருத வேதம் உண்மையை அறிய மட்டும் / ஆதித்ய புராணமும் சொல்லும் -திராவிட ஆம் நாயம் அறியாதவர் -துர் மதி –
மூன்று குலம் சொல்லா விட்டால் ப்ராஹ்மணத்ம் நழுவும் -பிரணவம் போலே இவையும் -அநிருத்தர சம்ஹிதையும் சொல்லும் —
ப்ராஹ்மணாதிகளுக்கு ஏற்றமாக சொன்னது இது கொண்டு பகவானை ஆராதிப்பது -செம்புகன் தன்னை -வர்ணாஸ்ரமத்துக்கு தக்கபடி செய்ய வில்லையே /
தலை கீழே நின்று தபஸ் இருந்தான் /அவனை கொன்று செற்ற பிள்ளையை மீட்டார் பெருமாள் / புருஷ சூக்தாதிகளாலே ஆராதித்தால் அதுக்கு இட்ட
ஜென்மம் இல்லா விட்டாலும் / பண்ண வேண்டியவன் பண்ணாமல் இருந்தாலும் குற்றமே /
அஷ்ட வித பக்தி ஏதேனும் ஒன்றாவது இருந்தாலும் மிலேச்சனாக இருந்தாலும் பக்தியே நெருப்பாகி குற்றங்களை எரித்து அழிக்கும் /
நான்கு வரணங்களிலும் ஆஸ்ரயங்களிலும் இல்லாமல் -இருந்தாலும் -நரஹரி திருமேனி தாச தாச சம்பந்தம் –
அல்லி மாதர் புல்க நின்ற சிங்க வேழ் குன்றத்தான் இடம் கைங்கர்யமே நிரூபகமாக
-கொண்ட ஸ்ரீ வைஷ்ணவர்களை -பாகவதர்களை என்று சொல்லாமல் -கிரம குலம் சொல்லாமல் சர்வம் வாசுதேவ ஏக குடும்பம் என்று —
விப்ரர்க்கு –பரசார பராங்குச யதிவராதிகள் கோத்ராதிகள் -சரண கூடஸ்தர் -இவர்களே /
நதிகள் -பதி சமுத்திர ராஜன் இடம் சேர்வது போலே நாம ரூபங்கள் இல்லாமல் இருக்குமே /
விஷ்ணு சம்பந்தம் கிட்டே வைஷ்ணவர்கள் / பகவத் சம்பந்தத்தால் நிவர்த்தமான ஜென்மாதிகளை ஆரோபித்து அபசாரம் –
கரமாந்தரங்கள் தேசாந்தரத்தில் தேகாந்தரங்களில் காலாந்தரங்களில் பலம் கொடுப்பது போலே இல்லாமல் அப்பொழுதே – அவ்விடம் தன்னிலே -நிரபேஷ சாதனம்
கர்மங்களால் பலன் கொடுக்க முடியாதே -பகவானை எதிர்பார்த்து இருக்க வேண்டுமே -இங்கு அப்படி இல்லையே –

அதாவது –ச அங்கமாக சகல வேதங்களையும் அத்யயனம் பண்ணி ததீய ஸ்ரேஷ்டருமாய் -உத்க்ருஷ்ட ஜன்மாக்களுமாய் இருந்தார்களே யாகிலும்
தேவரீர் திருவடிகளில் சம்பந்த ஏக நிரூபகரான ஸ்ரீ வைஷ்ணவர்களை ஜென்மாதிகளை இட்டு நிந்திப்பார்களாகில்
காலாந்தரே தேசாந்தரே அன்றிக்கே -அப்போதே அவ்விடம் -தன்னிலே அவர்கள் தாங்கள் சண்டாளரும் –
இவர்களுக்கு ஒரு போலி மாத்திரம் என்னும் படி அவர்களில் காட்டில் அத்யந்த நீசராவார் என்று
தத்வ யாதாம்ய தர்சிகளான தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் அருளிச் செய்கையாலே என்கை –

————————————————–

சூர்ணிகை -203-

இவ்விடத்தில் வைநதேய விருத்தாந்தத்தைத்தையும்
பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தையையும் ஸ்மரிப்பது

இவ்வார்த்தை விஷயமாக இரண்டு ஐதிக்யத்தை ஸ்மரிப்பிக்கிறார் –

வைநதேய விருத்தாந்தமாவது –விச்வாமித்ரன் பக்கலிலே வித்யைகள் எல்லாம் அதிகரித்த காலவன் என்கிற ப்ராஹ்மணன்
குரு தக்ஷிணை கொடுத்தால் ஒழிய நமக்கு இவ்வித்யைகள் நிலை நில்லாது என்று பார்த்து -நான் இங்குத்தைக்கு தக்ஷிணையாகத் தரத் தக்கது ஏது-என்று கேட்க
நீ நமக்கு ஒன்றுமே செய்ய வேண்டா -நாம் உன்னுடைய சுச்ருஷையாலும் பக்தியாலும் மிகவும் ப்ரீதரானோம்
இனி உன்னுடைய இஷ்டத்திலே போய் இரு -என்று பலகாலும் சொன்ன அளவிலும் -இவன் அது செய்யாதே ஸர்வதா என் பக்கலில்
தக்ஷிணை வாங்கிக் கொள்ள வேணும் என்று அதி நிர்பந்தம் பண்ணுகையாலே
கிஞ்சிதா கத சம்ரம்போ விச்வாமித்ரோ பிரவீதிதம் ஏக தச்சயாம கர்ணா நாம் சதான் யஷ்டவ் து தேஹி மே ஹயா நாம் சந்த்ர சுப்ராணம் கச்ச காலவ மா சிரம் -என்று
அவன் குபி தானாய் இவனைப் பார்த்து -உடம்பு எங்கும் சந்த்ர மண்டலம் போலே வெளுத்து ஒரு செவி பச்சையாய் இருக்கும் எண்ணூறு குதிரை நமக்கு கொண்டு வந்து தா
என்ன -இத்தைக் கேட்டு மஹா வ்யாகுலனாய் -இதுக்கு இனிச் செய்வது என் –
என்று பஹு முகமாக விசாரித்து சர்வ அபேக்ஷித பிரதானனான சர்வேஸ்வரனை உபாசிப்போம் என்று
உத்யோகிக்கிற அளவிலே முன்பே இவனுக்கு சகாவாய் இருக்கிற பெரிய திருவடி நாயனார் இவனுக்கு முன்னே வந்து நிற்க அவரை ஸ்தோத்ரம் பண்ணி
இதுக்கு செய்ய அடுத்து என் என்று கேட்க
அவர் – உன்னை நான் இப்பூமி எங்கும் கொண்டு போகிறேன் இருவரும் கூட ஆராய்வோம் வா என்று இவனை இடுக்கிக் கொண்டு திரிகிற அளவிலே
இளைப்பானவாறே -இங்கே இளைப்பாறிப் போகக் கடவோம் என்று மேல் சமுத்ரத்திலே ரிஷபம் என்கிற பர்வதத்தின் மேலே வசியா நிற்பவளாய்
ஞானாதிகையாய் இருந்த சாண்டிலி என்கிற பாகவதையைச் சென்று கண்டு அபிவாத நாதிகளை பண்ண -அவள் அத்யாதரத்தோடே மிகவும் சத்கரிக்க
அநந்தரம் விஸ்ராந்தராய் சயிக்கிற அளவிலே -இப்படி விலக்ஷணையாய் இருக்கிற இவள் ஒரு விலக்ஷண தேசங்களிலே வசிக்கப் பெற்றதில்லையே என்று
பெரிய திருவடி நாயனார் விசாரித்து இவளை இங்கு நின்றும் நாம் ஒரு திவ்ய தேசங்களிலே கொண்டு போய் வைக்கக் கடவோம் என்று
நினைத்துக் கொண்டு கிடக்கச் செய்தே அந்த பாகவதை இருந்த தேசத்தைக் குறைய நினைத்த இவ் வாபசாரத்தாலே சிறகுகளும் உதிர்ந்து நிஸ் சேஷ்டராய் விட
இத்தைக் கூடப் போன ப்ராஹ்மணன் கண்டு -கிந்னு தே மனசா த்யாதம் அசுபம் பததாம் வர நஹ்யயம் பவதஸ் ஸ்வல்போ வ்யபிசாரோ பவிஷ்யதி -என்று
ஏதேனும் உம்முடைய திரு உள்ளத்தால் தீங்கு நினைத்தது உண்டோ தேவரீருக்கு அல்பமும் வியபிசாரம் வருகைக்கு யோக்யதை இல்லை என்ன
உண்டாய்த்து காண் -என்று தாம் அந்த பாகவதை விஷயத்தில் நினைத்த பிரகாரத்தை அவனுக்கு அருளிச் செய்து –
அநந்தரம் இத்தைப் பொறுக்க வேணும் என்று என்று அவளைச் சென்று வர்த்தித்து அவள் அனுக்ரஹத்தாலே
அவ்வபசாரம் நீங்கி முன்பு போலே ஆனார் என்கிறது
இது தான் கிருஷ்ணன் ஸ்ரீ தூது எழுந்து அருளின போது நாரதாதி மஹரிஷிகள் பலரும் வந்து இருக்கிற அளவிலே கிருஷ்ணன் திரு உள்ளக் கருத்தை
பின் செல்லுகைக்கு உறுப்பாக த்ருதராஷ்ட்ரனைக் குறித்து பல கதைகளும் சொல்லி வருகிற பிரகரணத்திலே
ஸ்ரீ நாரத பகவான் அனுக்ரஹித்ததாக உத்யோக பர்வதத்தில் யுக்தமாகையாலே வேதாந்த உபபிரும்ஹண சித்தம் இறே

பிள்ளைப் பிள்ளை யாழ்வானுக்கு ஆழ்வான் பணித்த வார்த்தை-யானது
பிள்ளைப் பிள்ளை ஆழ்வானை அங்கீ கரித்து நாளிலே -இவர் ஆபிஜாதியாதிகளாலே உத்க்ருஷ்டராகையாலே பாகவத விஷயங்களில் அவிநயமாக
வர்த்தித்திக் கொண்டு போகிறபடியைக் கண்டு –
இவருக்கு இப பாகவத அபசாரம் இவருடைய ஞான அனுஷ்டானங்கள் எல்லாவற்றையும் கீழ்ப் படுத்தி தானே மேலாய் விநாச பர்யந்தம் ஆக்கிவிடும்
அதுக்கு வேலியிட்டு வைக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி ஓர் அயனத்தின் அன்று நீராடி ஏறின அளவிலே இவரைப் பார்த்து
எல்லாரும் தானம் பண்ணுகிற காலத்தில் நீரும் நமக்கு ஒரு தானம் பண்ண மாட்டீரோ என்ன –
அடியேன் எத்தை தானம் பண்ணுவது -எல்லாம் அங்குத்தையாய் இருந்ததே என்ன
அர்த்த ஸ்திதி அன்றோ ஆவது -அவ்வளவு போராது-கரண த்ரயத்தாலும் பாகவத அபசாரம் பண்ணாமல் வர்த்திக்கக் கடவன் என்று
நம் கையிலே உதகம் பண்ணித் தார வேணும் என்ன –
அப்படியே இவரும் உதகம் பண்ணிக் கொடுத்த அநந்தரம் ஒரு பாகவத தோஷத்தை பூர்வ வாசனையால் நினைத்து நாம் இனி முடிந்தோம் என்று பயப்பட்டு
மூடிக் கொண்டு தன் திரு மாளிகையில் கண் வளர இவர் முன்பு வருகிற காலத்தில் வரக் காணாமையாலே ஆழ்வான் இவர் திரு மாளிகையில் எழுந்து அருளி
ஏன் தான் முசிப்பு என் என்று வினவி அருள -தான் மனத்தால் நினைத்ததை விண்ணப்பம் செய்து கரண த்ரயத்தாலும் அபசாரம் புகுராதபடி
இத்தேகத்தோடே வர்த்திக்கை அரிதாய் இரா நின்றது என் செய்யக் கடவேன் என்று திருவடிகளைக் கட்டிக் கொண்டு கிலேசிக்க
இத்தனை அனுதாபம் இவருக்கு உண்டாகப் பெற்றோமே -என்று உகந்து அருளி மனசாலே நினைந்ததுக்கு அனுதாபம் உண்டாகவே
ஈஸ்வரன் ஷமித்து அருளும் -ப்ரத்யக்ஷ தண்ட பயத்தாலே காயிகமாக ஒருவரையும் நலியக் கூடாது –
ஆனபின்பு அவை இரண்டும் உமக்குக் கழித்துத் தந்தோம் –
இனி வாக்கு ஒன்றையும் நன்றாகக் குறிக் கொண்டு வர்த்தித்துப் போரும் என்று அருளிச் செய்தது –

இதிஹாச த்வயத்தையும் ஸ்மரிப்பது / காலவன் ச ப்ரஹ்மச்சாரி பெரிய திருவடி /விந்திய பர்வதத்தில் நடந்த விருத்தாந்தம் /
விம்மல் பொருமலாய் -அபராத ஷாமணம் பண்ண -திருக் கைகளால் ஸ்பர்சிக்க -ஸ்வஸ்த மானார் -/
குருவியின் கழுத்தில் பனங்காயை வைத்தால் போலே ஏதேனும் அருளிச் செய்தது உண்டோ என்ன ஆண்டாள் ஆழ்வான் இடம் கேட்க –ஆம் என்று
திரு மாளிகை எழுந்து அருளினார் -அபசார ஹேது சரீரம் விடாமல் படுத்துகிறதே -முன்பு ஸந்தோஷம் -இவ்வளவு அனுதாபம் பிறந்ததே —
வாசகம் தவிர்ந்து இரும் நுணலும் தன் வாயால் கெடும் / மௌனியாய் பெறும்படி பணித்தது /
நித்ய சூரிகள் முமுஷு இருவருக்கும் பாகவத அபசாரம் இல்லாமல் வர்த்திக்க வேண்டும் என்று இவ்விரண்டும் காட்டுமே –

ஞானாதிகையாய் இருந்த சாண்டிலி என்கிற பாகவதையைச் சென்று கண்டு அபிவாத நாதிகளை பண்ண / லிங்க புராணம் சொல்லுமே
வைஷ்ணவனை கண்ட உடன் தண்டவத் பிராணாமம்- / வைகுண்ட பரே லோக ஸ்லோகமும் லிங்க புராணத்தில் உண்டே /
சங்கு சக்கர லாஞ்சனையிருந்தால் உடனே வணங்க தக்கவன் /ஸ்திரீயாக இருந்தாலும் வணங்கா விடில் சாஸ்திரம் கற்ற பலனே இல்லை /
தாஸ்ய நாம கீர்த்தனா பூர்வகமாக வணங்குவதே அபிவாதனம் /
வைகுண்ட பிரிய தர்சனம் -வைகுண்ட நாதனுக்கு பிரியமான பாகவதர்கள் -அன்றோ –
பாகவதை விஷயத்தில் -அபசாரம் –அவளை தாழ நினைத்ததும் -அவள் இருந்த இடத்தை தாழ நினைத்ததுவும் அபசார கோஷ்ட்டி /
வேதாந்த உபபிரும்ஹணம் இதிகாசம் – / வேத உபபிரும்ஹணம் ஸ்ம்ருதி தானே /
விஷ்ணு தாசர் -வேறே துறையில் நீராடி -விஷ்ணு கிங்கரர் இந்திரிய கிங்கரர் -தாச விருத்திகள்-இப்படி விலக்ஷணமாக இருந்தும்
-லோக விலக்ஷணம் இல்லாமல் என்று நினைத்தது – -குணங்களை -அனுபவிக்க வகுத்த இடம் —
லீலா விபூதிக்கு விலக்ஷணம் திவ்ய தேசம் -பாலை வனத்தில் சோலை வனம் —த்ருதீய விபூதி என்னலாம் படி –பூ வைகுண்டம் —
குண அனுபவம் பகவானது பாகவத கைங்கர்யங்கள் செய்யலாமே இங்கு –இப்படி மனத்தில் ஆலோசனம் பண்ணினார் —
மூன்று யோஜனை தூரம் சங்கு சக்கரம் லாஞ்சனை உள்ளவர் இடம் நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே
பிராப்ப்ய பூமி -வைகுந்தம் -நம்புவார் வாழும் பதியே வைகுந்தம் -இரண்டும் உண்டே / இவள் சம்பந்தத்தால் ஏற்றம் /
சிறகுகளும் உம்மை தொகை -பகவானது அத்யந்த அபிமதம் போகுமே -கர்ம சண்டாளத்வம் முதலில் -வேஷ சண்டாளம் அப்புறம் /
சத்தா நாசம் முதலிலே உண்டாகும் / முடவன் போலே நிஸ் சேஷ்டித்தர் பாத சாரியை போகவும் செல்ல முடியாதே /
சண்டாளர் தானே ஆக வேண்டும் -ஸ்ரோத்ரியா நிந்தைக்கு / ஆணவத்தால் அபசாரம் பட்டார் -வீசும் சிறகால் பரப்பாரே-அத்தை அழிக்க வேன்டும் —
ஸ்ரோத்ரிய அபிமானத்தால் நிந்தித்தால் அது போகும் / விருத்த அபிமானத்தால் அபிமானத்தால் ஆச்சாரம் இல்லா இடத்தில் பிறப்பான் /
யாவர் யாவர் எவை எவை காரணத்தால் நிந்தித்தாலும் அந்த அபிமானத்தை -அழிக்க நேர் எதிராக பலம் /
இவள் இங்கே இருப்பது இட்ட கால் இட்ட கைகளாக இருப்பதை சக்தியாக நினைத்து பக்ஷி ராஜனான நான் இவளை இடுக்கி செல்லலாம் என்று நினைத்து /
சர்வேஸ்வரனுக்கு வாஹனம் என்ற நினைப்பால்- சர்வேஸ்வரனை எழுந்து அருளி போவது போலே என்னாமல்
காலவனை இடுக்கி போவது போலே இவளை இடுக்கி செல்ல நினைந்த எண்ணத்தாலும் அபசாரம் /
தான் கூட சஞ்சரிக்க முடியாமல் பாத சலனமும் பண்ண முடியாமல் நிர் விகாரமாய் போனதே /
வியபிசாரம் ஆவது–பகவத் பாகவத கைங்கர்யத்துக்கு இட்டு பிறந்த கரணங்களை –கொண்டு –
பாகவதை யாகிற விஷயத்திலும் தேச விஷயத்திலும் அபசாரம் -எம்பெருமானை விட குறைந்தவள் என்ற நினைவு / திவ்ய தேசம் விட குறைவு என்ற நினைவு /
அவள் இடம் ஷாமணம் -பிரார்த்தனையை குற்றம் போக்கும் -ஆற்றில் கெடுத்து குளத்தில் தேட கூடாதே -பகவான் இடம் கேட்க்காமல் -அவள் இடமே –
பிராணிபாத மாத்ர பிரசன்ன மாத்திரத்தாலே -/பக்தனுக்காக அவனே விரும்பி திவ்ய தேசத்துக்கு வாஸம் செய்பவனாக இருக்க /
-சதா முக்தன் பக்தானாம் பாசக் கயிற்றால் கட்டுப்பட்டு -அவர்களால் ஜெயிக்கப்பட்டவன் /அவிதேயாத்மா / கிம் கார்யம்சீதையா மம என்பவன் அன்றோ /
ஆத்மாத்மீயங்கள் வீண் இவள் கிடைக்காமல் என்று நினைப்பவன் அன்றோ /
அவனையும் கூட தொழ விப்பவள் -தொல்லை இன்பத்து இருத்தி கண்டாள் யசோதை
ஜென்மாதிகள் ஞானாதிகள் நிறைந்த –பெரிய திருவடி -மானஸ அபசாரம் -ஷாமணம் பண்ணி நீங்கப் பெற்றார் /
பிராமாதிகமாக வருமானால் -கவன குறைவால் -ஷமை கொள்ள ஷமிக்கும்/ பெண்ணை தார குறைவாக நினைக்க வில்லை –
அதி விலக்ஷணம் இவள் என்று நினைத்தார் -அவள் இருக்கும் தேசமும் விலக்ஷணமும் என்ற நினைவு தானே இல்லை இவருக்கு /

இங்கும் மானஸ அபசாரம்-கீழே பாகவத அபசாரம் மட்டுமே இருந்தது இவருக்கு முன்னால் -இப்பொழுது ஆச்சார்யருக்கு தானமாக கொடுத்த பின்பும்
செய்ததால் ஆச்சார்ய அபசாரமும் வந்ததே-தாரா பூர்வகமாக தத்தம் பண்ணினால் மீண்டும் கொள்ளார்களே சம்சாரிகளும் கூட /
அனுதாபம் உண்டாகவே ஈஸ்வரன் மானஸ அபசாரம் பொறுப்பான்/ பேறு இழவுகள் ஆச்சார்யரது-பெற்றோமே என்கிறார் கூரத் தாழ்வான் /
மானஸ அபசாரத்துக்கும் வாயாலே ஷாமணம் கேட்க வேணுமே -அனுதாபம் ஏற்பட்டத்தை தெரிவிக்க -வெட்கம் பட கூடாது வாயாலே சொல்ல /
பெரிய திருவடிக்கு அனுதாபம் முதலிலே வந்தது -அதனால் சிறகு உண்டாக வில்லை -அனுதாபம் தூண்ட -அதுக்கு பின்பே
அனு வர்த்தனம் பண்ணினார் –பின்பே சிறகுகளை பெற்றார் /

——————————————————-

சூர்ணிகை -204-

ஞான அனுஷ்டானங்களை ஒழிந்தாலும் பேற்றுக்கு அவர்கள் பக்கல் சம்பந்தமே அமைகிறாப் போலே
அவை யுண்டானாலும் இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரம் போரும் –

பகவல் லாப ஹேதுவான ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் பரிபூர்ணனாய் யுடையான் ஒருவனுக்கு பாகவத அபசாரம் யுண்டாய்த்தாகிலும்
பகவான் அதுக்கு லகுவானதொரு தண்டனைகளைப் பண்ணிக் கூட்டிக் கொண்டு விடானோ
அவை இரண்டும் அசத் சமமாய் அபசாரம் பிரபலமாய் எம்பெருமானை இழந்தே போய் விடும் என்னலாமோ என்ன அருளிச் செய்கிறார் –

ததீய சம்பந்தமும் ததீய அபசாரமும் -பேற்றுக்கும் இழவுக்கும் ஹேது ஆகுமே /ததீய கைங்கர்ய பர்யந்தமான பேற்றுக்கும் /
ஞான அனுஷ்டான பூர்ணரான பாகவதர் பக்கல் தர்சனம் ஸ்பர்சனாதி களே பெற்று தரும் -அவர்கள் சம்பந்தமே /
பகவத் கடாக்ஷம் தொடங்கி பாகவத கைங்கர்யம் பர்யந்தமான– பேற்றின் இழவுக்கு அபசாரம் மாத்திரமே -நிரபேஷ ஹேதுவாகுமே /
பசுர் மனுஷ்ய பஷீ வா-நடுவில் மனுஷ்யர் -இதனால் வாசி இல்லை -வைஷ்ணவன் திருவடிகளை பற்றியதே காரணமாக அடைகிறார்கள் /
யத்தை எத்தை யாரை யாரை தொடுகிறானோ கடாஷிக்கிறானோ அவர்களுக்கே உண்டே -பந்துக்களுக்கு கிடைப்பது சொல்ல வேணுமோ
சம்பந்தம் ஒன்றையே மனசால் ஏற்றுக் கொள்ள வேன்டும் / மோக்ஷ இச்சையும்- வேறே ஹேது இல்லை என்ற எண்ணமும் வேணும் –
பரம பாகவத சம்பந்தமே ஹேதுவாக விசேஷ கடாக்ஷம் பண்ணி இச்சையும் விளைவித்து -ருசியையும் வளர்த்து சடக்கென மோக்ஷம் /
பெருமாள் உகந்த திருமேனி என்ற பிரதிபத்தி வேணுமே பாகவதர்கள் மேலே /திரும்ப பார்க்க வைத்து -கடாக்ஷம் பொழிய மாறன் சொல் வேராகும் வீடு /
ஞானம் அனுஷ்டானம் பலம் -கைங்கர்யம் செய்வதே -/ஞான அனுஷ்டானங்களுக்கு அர்ஹம் இல்லாத ஸ்தாவரங்களும் -இதர நிரபேஷனான பாகவத சம்பந்தமே
ஹேதுவாக பகவத் பிராப்தி பிரதிபந்தகங்களான சம்சாரத்தில் இருந்து விடுப்பட்டன என்றால் இவன் பந்துக்கள் பிராப்தி பற்றி பேச்சுக்கு இடமே இல்லையே –

நிரபேஷ சாதனம் என்றது -/ உபாஸனாதிகள் சா பேஷன் -கர்ம ஞான யோகங்கள் அங்கமாக வேண்டுமே /அங்கங்கள் எதிர்பார்க்காத -சித்த உபாயம் –
பக்தி கைங்கர்யம் ரூபமாக வேன்டும் -உபாய அதிகார -தன்னை பேணாமை தரியாமை இத்யாதிகள் முன்பே பார்த்தோம் -ஞான அனுஷ்டான சா பேஷம் இதுக்கும் உண்டே–
ஆக கர்ம ஞானங்கள் வேண்டுமே -சீதை திரௌபதி திருக் கண்ண மங்கை ஆண்டான் -அதிகார ஞானம் வேன்டும் –
நிவ்ருத்தி அனுஷ்டானமும் வேண்டுமே -எதிர்பார்க்கும் சித்த உபாயம் போலே அன்றிக்கே /பாகவத சம்பந்தம் ஒன்றே -போதுமே —
சரம பர்வ நிஷ்டருக்கு -அதிகார ரூபமான ஞான அனுஷ்டானங்களை வேண்டாம் /ஒன்றே எதிர்பார்க்கும் இது நிரபேஷ உபாயம் என்ற ஞானம் இருக்க வேண்டுமோ என்னில் –
ஸ்தாவரங்களும் சம்பந்தத்தால் -தர்சன கடாக்ஷம் மூலம் பசு பக்ஷி ஸ்தாவரங்களும் பெற்றனவே / பிரகலாதனன் விரோசனன் மஹா பலி –
பாகவத சம்பந்தமே பற்றாசாக -எப்பொழுதாவது பிராப்தி உண்டே இப்பொழுது இல்லை என்றாலும் /உபாய அதிகார பூத ஞான அனுஷ்டானங்களை வேண்டாமே /
-கைங்கர்யம் பர்யந்தமாக பகவத் பிராப்திக்கு த்ருஷ்டாத்வாரா காரணங்களாய் உபேய அனுகுணமாக ஞானம் அனுஷ்டானம் -கோசல கோகுல சராசரங்களை கூட
ஸூ சம்ச்லேஷ விஸ்லேஷ சுக துக்கங்கள் அனுபவிக்கும் படி பண்ணி / ஏற்படுத்திய மோக்ஷம் -இது தானே உபய அதிகாரம் -ருசி வளர வேண்டுமே /
சரம தசையில்-ஸூ வந்தர்யா ஆவிஸ்காரத்தாலே –சேவித்த க்ஷணத்தில் அனைத்து பாபங்களும் புண்ணியங்களும் போகுமே —
அப்படியே பாகவத சம்பந்திகளுக்கும் -சாரா சரங்களுக்கும் -யாம் யாம் ஸ்ப்ருஷதி– பசு பக்ஷி மனுஷ்ய ஸ்லோகங்கள் படி – –
பக்தி ரூபா பன்ன ஞானங்களையும் -தத் அனுரூப இதர விஷய வைராக்யங்கள் -புருஷார்த்தாந்தர நிவ்ருத்தி அனுஷ்டானமும் அருளி —
ஸூ சம்ச்லேஷ சுகம் விஸ்லேஷ துக்கம் உண்டாக்கி /ஒரு நாள் முகத்தில் விழித்தாரை படுத்தும் பாடு அன்றோ ஸூந்தர்யம் /
இப்படி உபேய அதிகாரமும் உண்டாக்கி பிராப்தி அருளுகிறார் –
பகவத் அபிமதம் ஆவான் -என்றது கிம் கார்ய சீதயா மம–பரதன் லஷ்மணன் சத்ருக்கனை அடைந்தும் லாபம் இல்லை என்னாலும் எனக்கு லாபம் இல்லை -/
சாதுக்கள் ஹிருதயம் -அந்தரங்கர் /தாரகம்/ஸூ ஹ்ருத் பலகாலம் அருளிச் செய்கிறானே

அதாவது -உபாப்யாம் ஏவ பாஷாப்யாம் ஆகாசே பக்ஷிணாம் கதி ததைவ ஞான கர்மப்யாம் ப்ராப்யதே பகவான் ஹரி -என்றும்
வீசும் சிறகால் பறத்தீர் விண்ணொடு நுங்கட்க்கு எளிது-திரு விருத்தம் -54- -என்றும் சொல்லுகிறபடியே
பகவல் லாப ஹேது வான தத்வ ஞானமும் தத் அனுரூப அனுஷ்டானம் இன்றிக்கே ஒழிந்தாலும்
பகவல் லாபத்துக்கு –பசுர் மனுஷ்ய பஷீ வா ஏச வைஷ்ணவ ஸம்ஸரயா தேநைவதே பிரயாஸ்யந்தி தத் விஷ்ணோ பரமம் பதம் –என்றும்
யம் யம் ஸ்ப்ருசதி பாணிப்யாம் யம்யம் பஸ்யதி சஷூஷா ஸ்தாவராண்யபி முச்யந்தே கிம் புநர் பாந்தவா ஜநா -என்றும் சொல்லுகிறபடியே
பாகவத சம்பந்தமே நிரபேஷ சாதனம் ஆகிறாப் போலே அந்த ஞான அனுஷ்டானங்கள் இரண்டும் குறைவற யுண்டாய்த்தாகிலும்
பகவத் விஷயத்தை இழந்து போகைக்கு பகவத் அபிமதரான அந்த பாகவத விஷயத்தில் பண்ணும் அபசாரமே நிரபேஷ சாதனமாகப் போரும் என்றபடி –

———————————————-

சூர்ணிகை -205-

இதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை

இதில் ஜென்ம வ்ருத்தாதி நியமம் யுண்டோ என்னும் ஆகாங்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –

ஞான அனுஷ்டான ஹீனரும் ததீய சம்பந்தம் -கொண்டே உஜ்ஜீவிக்க / ஞான அனுஷ்டான பூர்ணரும் பாகவத அபசாரத்தால் உஜ்ஜீவிக்காமல் அசலாவார் /
ஜென்மாதிகளால் மினுக்கும் அற்ற பாகவதருடைய சம்பந்தம் -பேறு இல்லை என்றும் மினுக்கும் உள்ள பாகவதருடைய சம்பந்தத்தால் பேறு என்றும்
மினுக்கம் உள்ளவர் அபசாரம் பட்டாலும் இழவு என்றும் -மினுக்கும் இல்லாதவர் அபசாரம் பட்டால் தான் இழவு என்கிற நியதிகள் இல்லை
பாகவதர்கள் அபக்ருஷ்டர்களே இல்லை -பிறப்பால் பார்த்து பிரமிக்கிறோம் –
சம்பந்தம் ஒன்றே சாதனம் -போலே அபசாரமே
சாஸ்த்ர சாதன அபாவம் -வைஷ்ணவ சம்பந்தமே பேறு / சாஸ்த்ர ஞான அனுஷ்டான பூர்த்தி இருந்தும் தத் அபசாரமே பகவத் பிராப்தி அபாவ ஹேது
லகு தண்டனை -கொடுத்து பிரபன்னனை திருவடி சேர்ப்பது பாகவத அபசாரத்துக்கு உட்படாத ஒருவனை
ஆழ்வான் மேலே அபசாரம் பட்ட ஸ்ரீ வைஷ்ணவன் கபோதமாக -பிறந்தது பிரசித்தம் இ றே

இதில் என்றது -பேற்றுக்கு பாகவத சம்பந்தமே அமையும் -இழவுக்கு அவர்கள் பக்கல் அபசாரமே போரும் என்று சொன்ன இவை இரண்டிலும் -என்றபடி –
ஜென்ம வ்ருத்தாதி நியமம் இல்லை -என்றது -ஜென்ம வ்ருத்தாதிகளால் உத்க்ருஷ்டரான பாகவதர்களோடு யுண்டான சம்பந்தமே பேற்றுக்கு ஹேது வாவது
அவற்றால் அபக்ருஷ்டரான வர்களோட்டை சம்பந்தம் பேற்றுக்கு ஹேதுவாகாது என்கிற நியமுமம் –
ஜென்ம வ்ருத்தாதிகளால் உத்க்ருஷ்டரானவர்கள் திறத்தில் பண்ணும் அபசாரமே இழவுக்கு உடலாவது
அவற்றால் அபக்ருஷ்டரானவர்கள் திறத்தில் பண்ணும் அபசாரம் அப்படி இழவுக்கு உடலாகாது என்கிற நியமம் இல்லை என்றபடி –

—————————————

சூர்ணிகை –206–

இவ்வர்த்தம் கைசிக வ்ருத்தாந்தத்திலும்
உபரிசர வ்ருத்தாந்தத்திலும் காணலாம் –

இவ்வர்த்தம் காணலாம் இடம் உண்டோ என்ன அருளிச் செய்கிறார் –

மினுக்கும் இல்லாத நம்பாடுவான் சரித்திரம் / மினுக்கும் உள்ள உபரி சரவசஸூ சரித்திரம் /ஆடி மாசம் சுக்ல பக்ஷம் -சயன ஏகாதசி –
கார்த்திகை மாசம் சுக்ல பக்ஷம் ஏகாதசி -தேவர்கள் வர்ஷம் படி – உத்தான ஏகாதசி-என்ற பெயர் உண்டே /
இந்த சரித்திரம் வந்த பின்பே கைசிக ஏகாதசி பெயர் / /மஹேந்திர கிரி -திருக்குறுங்குடி /சுந்தர பரிபூர்ணன் –
புஷப தியாக போக மண்டலங்களில் –அநு வர்த்தித்த க்ரமம் வீணையும் கையுமாக -/
கர்வித்து உபரி சரவஸூ -தேவ பக்ஷபாதியாக இருப்பதால் ரிஷிகள் சபிக்க -பாதாளம் வரை விழுந்தான் –
மினுக்கும் உள்ளவன் அபசாரம் பட்டாலும் -ஜென்மாதி மினுக்கும் அற்ற பாகவத அங்கீ காரம் உத்தாரகம் /
அம்மினுக்கம் உள்ளவனுக்கு அபசாரம் பட்டால் அநர்த்தகரம்-என்றதாயிற்று -சித்தாஸ்ரமம் -வாமன ஆஸ்ரமம் -குறுக்கியவனுடைய குடி திருக்குறுங்குடி /
வைஷ்ணவ வாமனத்திலே நிறைந்த நீல மேனியின் ருசி ஜனக விபவ லாவண்யம் பூர்ணம்
குறுங்குடி நெடுந்தகை–வாமன திருவிக்ரமன் -என்கிறார் கலியன் – -கரண்ட மாடு பொய்கை காக்கை உட்க்கார்ந்து பனங்காய் விழும் /

ப்ரத்யக்ஷ பசுவுக்கும் சுருதி வாக்கியம் உண்டே -பிட்ட பசுவும் உள்ளது – வேறே வேறே அதிகாரிகளுக்கு -யார் என்று பார்த்து இவன் பதில் –
கிருத யுகம் -கலி யுக தர்மம் என்று கொள்ளலாமோ என்னில்/
இது அஹிம்சை பற்றிய பேச்சு -பரமை காந்தி பிஷ்ட பசுவையும் -பிரத்யக்ஷ பசு மற்றவர்க்கும் -கர்தவ்யம் என்றவாறு
இரண்டு யுகத்திலும் அஹிம்சை -அஹிம்சையுடன் கூடிய யாகம் ஏற்புடையது -தேசிகன் /

சாண்டிலயை– பிள்ளை பிள்ளை ஆழ்வான்- இந்த இரண்டு சரித்திரம் நான்கும் -மூலம் தொண்டர் அடி பொடி ஆழ்வாரது –
அங்கே பாகவத அபசாரத்துக்கு நியமம் இல்லை -/ ஞானத்தால் ரிஷிகள் தாழ்வு -பிறப்பால் உயர்ந்தது -இந்த வாசி இதில் மட்டுமே /
நம்பாடுவான் உயர்ந்த ஜன்மா -அஹங்காரம் யோக்யதை இல்லாத ஜென்மம் இவனது /பிள்ளை பிள்ளை ஆழ்வான் -அஹங்கார ஹேது பிறவி –
வைநதேயனும் அஹங்காரம் மிக்கு -சாண்டிலயை உயர்ந்த ஜென்மம் /
மூன்று சரித்ரங்களிலும் அபசாரம் பட்டவர்கள் மீண்டும் நல்ல கதி / உபரி சரவ ஸூ மட்டும் இழந்தே போனான் –
ஞான ஜென்மம் பற்ற–ஞானம் என்றாலே அஹங்காரத்துக்கு ஹேது ஆகாதே – வைதிக ஜென்மம் -அஹங்கார ஹேது -ஆகவே உத்க்ருஷ்டம் தேக ஜன்மா விட /
சாண்டில்யய்யும் வைநதேயரும் -தேவ பிறவி -அஹங்காரம் கொடுக்கும் -ஆகையால் அபக்ருஷ்ட வர்கள் உத்க்ருஷ்ட விஷயத்தில் அபசாரம் –
மத் பக்தன் -சப்தத்தால் திக்குற்ற கீர்த்தி–பாசுரம் படி -அதுவே ஆள் கொள்ளும் -குணம் போலே அனுபாவ்யமாய் -இருக்கும் என்றபடி – –
பாகவத சம்பந்தம் உஜ்ஜீவனம் –ப்ரஹ்ம ராஜஸூ -நம்பாடுவான் சரித்திரம் –

அதாவது -சரக குலோத்பவனான சோமா சர்மாவாகிற ப்ராஹ்மணன் யாகத்தைச் செய்வதாக உபக்ரமித்து -யதா க்ரமம் அனுஷ்டியாமல்
அது சமாபிப்பதுக்கு முன்னே மரிப்பதும் செய்கையாலே ப்ரஹ்ம ராக்ஷசனாய் பிறந்து திரியா நிற்க –
மத்பக்தம் ஸ்வ வசம் வாபி-என்கிறபடியே ஜென்ம ஸித்தமான நைச்யத்தை யுடையராய் -பகவத் பக்தியே நிரூபகமாம் படி இருப்பார் ஒரு பாகவதர்
உத்தான ஏகாதசி யன்று ராத்திரி சித்தாஸ்ரமமான திருக் குறுங்குடியிலே நம்பியைப் பாடிப் பறை கொள்வதாக வீணா பாணியாய்க் கொண்டு போகா நிற்கச் செய்தே
அவரை பஷிப்பதாக வந்து அடர்க்க அவர் மீண்டு வருகைக்கு உறுப்பான அநேக சபதங்களைப் பண்ணிக் கொடுத்து தத் அனுமதி கொண்டு போய்
யதா மநோ ரதம் சேவித்து ஹ்ருஷ்டராய் அந்த ப்ரஹ்ம ராஷசன் நிற்கிற இடத்தில் மீளவும் விரைந்து வந்து யதேஷ்டம் இனி என் சரீரத்தை நீ புஜி என்ன
அவன் அவருடைய சத்யத்வாதி வைபவத்தை கண்டு -நீ இன்று பாடின பாட்டின் பலத்தை தா -நான் உன்னை பிராணனோடு போகவிடும்படி என்ன
அவர் அதுக்கு இசையாது ஒழிய -அர்த்த ராத்ரத்தில் பலம் -ஏக யாமத்தில் பலம் என்றால் போல் சொல்லிக் கொண்டு வந்த அளவிலும்
நான் அது செய்வது இல்லை -முன்பு நீ சொன்ன படியே என்னை பஷிக்கும் அத்தனை -என்று ஒரு நிலை நின்ற படியால்
த்வம் வை கீத பிரபாவேந நிஸ் தாரயிதும் அர்ஹஸி ஏவம் உக்த்வாத சண்டாள ராக்ஷஸம் சரணம் கத -என்கிறபடியே
நீ உன்னுடைய கீதா ப்ரபாவத்தாலே என்னை இப்பாபத்தின் நின்றும் கரை ஏற்ற வேன்டும் என்று சரணம் புகுர-அந்த பாகவதர்
யன்மயா பச்சிமம் கீதம் ஸ்வரம் கைசிமம் உத்தமம் -இத்யாதி படியே தாம் பின்பு பாடின கைசிகமாகிற பண்ணின் பலத்தை கொடுத்து
கர்ம தோஷத்தால் வந்த ராக்ஷஸ வேஷத்தை கழித்து முன்பு போலே ப்ராஹ்மணனாய் -அதுக்கும் மேலே பாகவதனுமாய்
உஜ்ஜீவிக்கும்படி பண்ணினார் என்கிற கைசிக வ்ருத்தாந்தத்திலே -ஜென்மாதிகளால் உத்க்ருஷ்டரான பாகவதர்களோட்டை சம்பந்தமே உஜ்ஜீவன ஹேது வாவது –
அவற்றால் அபக்ருஷ்டரானவர்களோட்டை சம்பந்தம் உஜ்ஜீவன ஹேதுவாகாது -என்கிற நியமும்ம் இல்லை என்னுமது காணலாம்

ரிஷிகளும் தேவர்களும் தன் பக்கலிலே தர்ம சந்தேகம் கேட்க்கும்படி வித்யாதிகனுமாய் -ஸ்வ வரண அனுரூப மாத்திரம் அன்றிக்கே
ஸாத்வத தந்த்ர நிஷ்ணாதனாய்-பாகவத ஆராதன தத் பரனாய்க் கொண்டு போருகையாலே வந்த வ்ருத்தாதிக்கனுமாய்
ஸ்வ தபோ பலத்தால் ச வாஹன பரிவாரனாய்க் கொண்டு அந்தரிக்ஷ சரனாய் திரியும் உபரி சரவஸூ என்கிற மஹா ராஜாவானவன்
யாகார்த்தமான பசு நிமித்தமாக ரிஷிகளும் தேவர்களும் தங்களிலே விவாதம் பண்ணுகிற அளவில்
மார்க்கா கதோ ந்ருப ஸ்ரேஷ்டஸ் தம் தேசம் ப்ராப்தவான் வஸூ -அந்தரிக்ஷ சர்ச் ஸ்ரீ மான் சமக்ர பல வாஹன
தம் த்ருஷ்ட்வா ஸஹாஸ யாந்தம் வஸூம் தேவந்தரிக்ஷகம் ஊசுர் த்வி ஜாதயோ தேவா ஏஷச் சேத்ஸ்யதி சம்சயம் -என்று
ஆகாசத்தில் போகா நின்ற இவனைக் கண்டு இவன் நம்முடைய ஸம்சயத்தை அறுக்க வல்லன் என்று அறுதி இட்டு
இவனைச் சென்று கிட்டி செய்ய வடுப்பது ஏது என்று கேட்க –
அவன் உம் தாமுடைய மதங்களைச் சொல்லுங்கோள் என்ன
தாந்யைர் யஷ்டவ்ய மித் யேஷ பஷோ ஸ்மாகம் நராதிப தேவதா நாம் ஹி பசுபி பஷோ ராஜன் வதஸ் வன என்று
தான்யங்களாலே யஜிக்கப்படும் என்று எங்களுக்கு பக்ஷம் -பசுக்களாலே யஜிக்க வேணும் என்று தேவர்களுக்கு பக்ஷம் –
நாங்கள் செய்வது என் சொல் என்று ரிஷிகள் கேட்க
தேவா நாத்து மதம் ச்ருத்வா வஸூநா பக்ஷ ஸம்ஸரயாத் சாகே நாஜேந யஷ்டவ்யமேம்வ யுக்தம் வசஸ் ததா -என்கிறபடியே
அவன் தேவர் அளவில் பக்ஷபாதத்தால் -சாகத்தாலே யஜிக்க வேணும் என்ன
குபிதாஸ் தே ததா சர்வே முனயஸ் ஸூர்ய வர்ச்சச ஊசுர்வஸூம் விமாநஸ்த்தம் தேவ பஷார்த்த வாதிநம்
ஸூர பஷோ க்ருஹீதஸ் தே யஸ்மாத் தஸ்மாத் திவ பத அத்ய ப்ரப்ருதி தே ராஜன் ஆகாஸே விஹதா கதி அஸ்மச் சாபாபி காதேந மஹீம்
பித்த்வா பிரவேஷ்யஸி விருத்தம் வேத ஸூத்ராணாம் யுக்தம் யதி பவேந் ந்ருப வயம் வ்ருத்த வசநா யதி ததா பதா மஹே-என்று
ரிஷிகள் எல்லாம் குபிதராய்-தேவ பஷாபாதியாய் வார்த்தை சொன்ன நீ த்யவ்வில் நின்றும் அதர்பதியாய்-இப்போது தொடங்கி யுன்னுடைய
ஆகாச கமனமும் மாறி பாதாளத்தில் விழக் கடவை-நாங்கள் தான் வ்ருத்த வசனம் சொன்னோமாகில் அப்படியே
பாதாளத்தில் விழக் கடவோம் என்று சொல்லி சபிக்க
ததஸ் தஸ்மிந் முஹூர்தேது ராஜோ பரிசரச் ததோ அதோவை சம்ப பூவாசு பூ மேர் விகரகோ ந்ருப -என்கிறபடியே –
அப்போதே பாதாளத்தில் விழுந்தான் என்கிற உபரி சரவ ஸூ வ்ருத்தாந்தத்தில் ரிஷிகளும் தர்ம சந்தேகங்கள் கேட்க்கும் படி வித்யாதிகளில்
அவர்களிலும் உத்க்ருஷ்டனாவான் அவர்கள் திறத்தில் அபசாரத்தால் அதிபதித்தமை காண்கையாலே
ஜென்ம விருத்தாதிகளால் உத்க்ருஷ்டரானவர்கள் அபக்ருஷ்டர் பண்ணும் அபசாரமே இழவுக்கு உடலாவது –
அவற்றால் உத்க்ருஷ்டரானவர்கள் அபக்ருஷ்டர் திறத்தில் பண்ணும் அபசாரம் இழவுக்கு உடலாகாது என்கிற நியமம் இல்லை என்னுமது காணலாம் என்கை –
ஜென்ம ஆதிக்யம் ரிஷிகளுக்கு உண்டானாலும் ஞான ஆதிக்யம் இவனுக்கு உண்டாகையாலே அவர்களில் இவனுக்கு ஏற்றம் சொல்லக் குறை இல்லை
ஜென்மமும் ஞானாதிகளும் ஒரு தலையானால் ஞானாதிகள் பிரபலங்களாய் இ றே இருப்பது –

கைசிக விருத்தாந்தம் ஸ்ரீ வராஹ புராணத்தில் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு ஸ்ரீ வராஹ நாயனார் அருளிச் செய்தது ஆகையாலும்
உபரி சரவச ஸூ விருத்தாந்தம் பஞ்சம வேதமான மஹா பாரதத்திலே மோக்ஷ தர்மத்தில் தர்மபுத்ரர்க்கு ஸ்ரீ பீஷ்மரால் சொல்லப்பட்டது ஆகையாலும்
இவை தான் ஆப்த பிராமண சித்தம் இ றே

—————————————————-

சூரணை -207-

பிராமணியம் விலை செல்லுகிறது-
வேதாத்யய நாதி முகத்தாலே-
பகவல் லாப ஹேது என்று –
அது தானே இழவுக்கு உறுப்பாகில் –
த்யாஜ்யமாம் இறே —

இப்படி ஜன்மாதிகளால் வரும் உத்கர்ஷத்தில் பசை இல்லை என்று
சொல்லாமோ –சாஸ்திரங்கள் எல்லாம் பிராமணியத்தை அத்யாதரம்
பண்ணி சொல்லா நிற்க செய்தே என்ன -அருளி செய்கிறார் -மேல் –

சரீரகதமான ப்ராஹ்மண ஜென்மம் -/ குண கர்ம விபாகத்துக்காக சாதுர் வர்ணயமாக ஸ்ருஷ்டித்து / சத்வ குணம் வளர்க்க சாஸ்த்ர அத்யயனம் பண்ணி /
பிரயோஜனம் பட வேண்டுமே /ப்ரஹ்மத்தை அடைய கொடுத்த கரணங்கள் கொண்டு வேறே இலக்கை நோக்கி போனால் அபக்ருஷ்டம் ஆகுமே /
வர்ணங்களில் ஸ்ரேஷ்டம் ப்ராஹ்மண்யம் -குரு –அதுவும் -அபசார ஹேதுவாகும் பொழுது த்யாஜ்யமாகுமே -/
ஜென்மாதிகள் – ஜென்ம வ்ருத்தங்கள்/ அத்யாயனாதிகள் -அத்யயனம் அனுஷ்டானம் /
மீமாம்சாதிகளாலே-வேத வேதாந்தம் இதிஹாசம் புராணங்கள் -/உபாசனாதிகளில் இழிந்து-பக்திகளிலும் பிரபத்திகளிலும் இழிந்து –
விதி பரதந்த்ரன் -விதி வஸ்யனாய் -சாஸ்திரம் விதிக்கும் –
பசு மனுஷ்ய பக்ஷி -பாகவத சம்பந்தத்தால் -பரம புருஷ பிராப்திக்கு ஜென்ம ஸ்ரேஷ்டம் வேண்டாமே
நம்பாடுவான் உஜ்ஜீவித்தானே அதுக்கும் வேண்டாம் /பாகவத அபசாரம் அநிஷ்ட நிவ்ருத்திக்கும் வேண்டாம் –
/ராஜ புத்ர அபராத நியாயம்-தள்ளுபடி -ஆகாதே உபரி சரவசூ வ்ருத்தாந்தம் -மூலம் அறிந்தோம் /அதிகாரி விசேஷணமாகவும் அபேக்ஷிதம் இல்லை /
உத்கர்ஷமும் அநர்த்த ஹேது /வேதம் எஜ்ஜம் தேவதைகள் ப்ராஹ்மணர்கள் -கீழ் சொன்னது மேல் சொன்னதுக்கு அடிமை -/
ப்ரஹ்மம் பூஜிப்பது போலே ப்ராஹ்மணர்களும் பூஜிக்கப் பட வேண்டியவர் -சுருதி வாக்கியங்கள் உண்டே /நிந்திக்கில் நாயாய் பிறப்பார்கள் /
இப்படி சொல்லா நிற்க செய்தாலும் -இவை சொன்னது ப்ரஹ்ம ப்ராப்திக்கு வகுத்த ஜென்மம் என்பதால் /அதுக்கு குறை இல்லாமல் நடக்க வேண்டுமே -/
கேவல ப்ராஹ்மண ஆதிக்ய வாதி–கேவல சப்தம் -ஜென்மத்தால் மட்டும் -பாகவதராக இல்லாமல் / மற்றவரை விட உயர்வு என்று அஹங்கரித்து —
ப்ராஹ்மண்யம் விலை செல்லுகிறது –என்றது –
கோத்வம் அஸ்வத்தாதிகள் பிரத்யக்ஷம் / ப்ராஹ்மண்யம் ப்ரத்யக்ஷம் இல்லையே /-சமஸ்தானம் விசேஷம் இல்லை /
சிகை யஜ்ஜோபவீதம்-சத் சூத்திரர்களை விட அசத் சூத்திரர்கள் இடமும் காணலாமே / விசுவாமித்திரர் ப்ராஹ்மணர் இடம் பிறக்க வில்லையே /
பின்னை ப்ராஹ்மண்யம் ஏது -கர்ம விசேஷம் அடியாக ரஜஸ் தமஸ் அவிபவித்து கொண்டு சத்வம் உயரும் சரீர விசேஷ சம்பந்தம் -பிறப்பால் –
அதுக்கு மேலே ஸ்வயம் பிரயோஜன பகவத் கைங்கர்ய ரூபமான -யஜானாதி-தானம் -அத்யயனம் அத்யயனம் -பண்ணி பண்ணுவித்து –
ஆறு வித -ஆத்ம குணங்கள்–12- எல்லாம்-சமம் தமம் இத்யாதிகளை அநாயாசேன உண்டு பண்ண யோக்கியன் -/
அதிருஷ்ட பிரயோஜனம் -ஸ்வரூபத்துக்கு ஆஸ்ரயம் // ஆறு கர்தவ்யம் பண்ண பகவானுக்கு ஆனந்தம் /கண்ணுக்கு தெரியாதே -பலம் அனுமானிக்கலாம் /
ஆதரிக்கத்தக்கதால் விலை செல்லுமே /இவ்வளவு இருந்தும் அஹங்கார ஹேதுவாய் -தேக விசேஷம் இருப்பதால் / கர்மம் அடியாக பெற்ற சரீரம் கொண்டு -/
நிர்ஹேதுக கடாக்ஷத்தால் பெற்ற சரீரமாக இருந்தால் சத்வ மயமாக இருக்கும் /
இங்கு சத்வ காதாசித்தம் -வளர்க்க போகிறானா இழக்க போகிறானா என்பது இவன் கையில் /
அஹங்காரத்துக்கு தோள் தீண்டி ரஜஸ் தமஸ்–ஒன்றுக்கு ஓன்று பேசி மூன்றும் வளரும் / அசலாக போக உறுப்பாகும் /அபசாரம் கால தத்வம் உள்ளதனையும் நீடிக்கும்
கீழே ரஜஸ் தமஸ் அடக்கி கொஞ்சம் சத்வம் காதா சித்தம் / குண அனுபவம் இழந்தது அன்றிக்கே -ஸ்வரூபம் சத்தையும் இழந்து சண்டாளர் போலே தூரஸ்தானாய் அகன்றே போவான் /
உறுப்பாகில் –ஆகில் -என்றது ப்ராஹ்மண ஜென்மம் பகவத் லாபத்துக்கு உறுப்பாம் என்பவர் பக்ஷம் தள்ளுபடி /பிறந்ததால் இழவு இல்லை -அஹங்காரம் பட்டதால் தானே /
இருக்குமானால் தள்ளத்தக்கது -சம்பாவனை உண்டு அத்தனை என்றபடி /
உண்ண புக்க சோற்றில் விஷம் இருக்க சம்பாவனை உண்டாகில் உண்ண மாட்டோம் இ றே -த்யாஜ்யமாவது போலே இங்கும் /
சத்தா நாசத்துக்கு அன்றோ இங்கே -அநர்த்த ஹேதுவாக சம்பாவனை உண்டே /
சேஷத்வ விபவ பஹிரபூர்வமாக இருந்தால் ப்ரஹ்ம பதமும் வேண்டாம் -தாஸ்யம் அறிந்தவன் குடிலில் புழுவாவது பிறப்பேனே என்பார்களே
தவ சேஷத்வ விபவாத் பஹிர்ப்பூதம்-நாத -க்ஷணம் அபி ஸஹ–யாது ஸததா நாசம் சத்யம் -ஆளவந்தார் –
த்ரிகுண தேக சம்பந்தம்-உபாதி பூத தேக ஸ்வ பாவத்தால் இழவுக்கு உறுப்பாகும் போது -என்றபடி
அஹங்கார ஹேதுக்கள் எல்லாம் த்யாஜ்யம் தானே / அஹங்காரம் நான்கு வர்ணத்தவர்களுக்கும் வரலாம் /
நான்காவது வர்ணம் உத்தேச்யம் என்றும் சொல்ல முடியாது -அஹங்காரம் வாய்ப்பு இல்லை –
கண்டிப்பாக நமக்கு பிராப்தி உண்டு என்ற எண்ணமே அஹங்கார ஹேது ஆகுமே /

விலை செல்லுகையாவது -விருப்பத்துக்கு விஷயமாக செல்லுகை –
வேதாத்யய நாதி முகத்தாலே பகவல் லாப ஹேது ஆகையாவது –
சர்வ வேதா யத்பத மாம நந்தி -என்றும் –
வேதைச்ச சர்வை ரஹமேவ வேத்யே -என்றும் சொல்லுகிறபடியே –
ஆராதன ஸ்வரூபத்தையும் -ஆராத்ய ஸ்வரூபத்தையும் -பூர்வோத்தர பாகங்களாலே
பிரதிபாதியா நின்று கொண்டு -பகவத் ஏக பரமாய் இருக்கிற வேதத்தை – ஸ்வத்யாயோ அத்யேதவ்ய-என்கிற
விதி பரதந்த்ரனாய் -அத்யயனம் பண்ணி -மீமாம்சாதிகளாலே ததர்த்த நிர்ணயம் செய்து –
பகவத் உபாசனாதிகளில் இழிந்து பகவத் விஷயத்தை பெருகைக்கு உறுப்பாகை-
அது தானே இழவுக்கு உறுப்பாகில்-என்றது -அந்த ப்ராஹ்மண்யம் தானே
அஹங்கார ஹேதுவாய் கொண்டு -மத பக்தான் ச்ரோத்ரியோ  நிந்தன் சத்யஸ் சண்டாளதாம் வ்ரஜேத் -என்கிறபடியே –
பகவத் அத்யந்த நிக்ரஹ ஹேதுவான பாகவத அபசாரத்தை பண்ணி –
பகவத் விஷயத்துக்கு அசலாய் போகைக்கு உறுப்பாகில் என்றபடி –
த்யாஜ்யமாம் இறே -என்று பிரசித்தி தோற்ற அருளி செய்தது –
யாதொன்று பகவல் லாபத்துக்கு உறுப்பு அது உபாதேயம் –
யாதொன்று தத் அலாபதுக்கு உறுப்பு அது த்யாஜ்யம் ஆய்த்த பின்பு
இதுவும் இழவுக்கு உறுப்பான போதே அப்படியாக குறை இல்லை என்கிற நிச்சயத்தாலே –

——————————–

சூரணை -208-

ஜன்ம விருத்தங்களினுடைய
உத்கர்ஷமும் அபகர்ஷமும்
பேற்றுக்கும் இழவுக்கும்
அபிரயோஜகம் –

இப்படி உத்க்ருஷ்ட ஜன்மாதிகள் இழவுக்கு உறுப்பமாகில்
அபக்ருஷ்ட ஜன்மாதிகள் பேற்றுக்கு உடலாமோ என்ன –
அருளி செய்கிறார் –

ப்ராஹ்மண்யம் என்பது பாகவதர்கள் மேல் -அபசாரப்பட்டு இழவுக்கு உறுப்பாக சம்பாவனை த்யாஜ்யம் என்று பார்த்தோம் ஆகில்
ஜென்மத்தின் உதகர்ஷம் பேற்றுக்கு அப்ரயோஜம் / இழவுக்கு அப்ரயோஜம்
இதே போலே ஜென்மத்தின் அபகர்ஷமும் /விருத்தங்களினுடைய உபகரஷமும் அபகரஷமும்
இவை காரணம் ஆகாது -ஏது காரணம் ஆகும் அடுத்த சூர்ணிகை /பேறு பகவத் லாபம் / இழவு தத் அ லாபம் /
இரண்டு வகையிலும் சிலர் பெறுவாரும் இழப்பாருமாக காண்கிறோம் -அவை அவற்றுக்கு பிரயோஜகம் இல்லை /
சர்வ வரண சாதாரண -அஹங்காரம் -த்வாரா –பாகவத அபசாரம் –கேவல அபக்ருஷ்ட வர்ணி ஸூ உதகர்ஷத்துக்கு அவகாசம் உண்டோ என்று
பார்த்து கேட்பது போலே ஜிஜ்ஜாசூ சாயை -விருப்பம் போலே கேட்க பதில் இது /
ஸ்ரோத்ரியத்வம் -வேதம் கற்றவன் –பாகவத வைபவ ஞானத்துக்கு உடலாக இருக்கையாலே —நிந்திக்க ஹேது என்னலாமோ என்னில் -/
ஸ்ரோத்ரியம் -வேதம் கற்று -ப்ராஹ்மண்யம் சரீர சம்பந்தம் -படித்தது அறிந்து அனுஷ்டானம் -சத்வ குணம் வளர்ந்து -இல்லாமல்–
இழவுக்கு உறுப்பாகில் -ஆகில் சப்தம் -இதுக்கு சம்பாவனை –தெளிவு படுத்துகிறார் /
ரஜஸ் தமஸ்-கலக்கும் பொழுது -நாம் ஸ்ரோத்ரியர் அன்றோ -இது தானே பற்றுக் கொம்பு ஆகிறது / பரம பாகவதர் -நமக்கு இல்லையே /
சிசுரூஷை பண்ண பிறந்தோமே சூத்திரர் சோகத்தை தவிர்க்கிறார் பரிசரியையால் -ஜென்ம சித்தம் என்று அவர்களும்
ஸ்த்ரீகளும் பாரதந்தர்யம் உண்டே யென்று அஹங்கரிக்கலாமே–/ இத்யாதியால் இவை எல்லாம் –
ஸ்ரோத்ரியத்வம் பாகவதத்வம் சூத்ரத்வம் ஸ்த்ரீத்வம் ஸூ பஷத்வம் –அஹங்கார ஆலம்பனம் -காண்கிறோம் /
விஷம் தலைக்கு ஏறினவனுக்கு பாயாசம் கசக்குமா போலேயும் கடுக்காய் இனிப்பானது போலேயும் -இந்திரியம் பதார்த்த குறை இல்லையே /
நிந்தைக்கு ஹேது ஸ்ரோத்ரியத்வம் ஹேது இல்லையே /அக்ருத்ய கரணாதிகள்-ரஜஸ் தமஸ் தூண்ட செய்கிறார்கள் /
நுமர்களை பழிப்பராகில் -அங்கே -ஆகில் -சாதி அந்தணர்கள் ஆகிலும் -பழிக்க மாட்டார்கள் என்று முதலில் அறிந்து கொள்–ஆகில் -ஒரு வேளை -செய்வார்கள் ஆகில் –
ஸ்ரோத்ரிய -நிந்தனை துர்லபம் –என்றவாறு / இழவுக்கு உறுப்பாகும் என்று சொல்லாமல் உறுப்பாகில் என்று அன்றோ உள்ளது /
ப்ராஹ்மண்யம் தேக சம்பந்த உபாதி காரணம் -முக்குண மயம் -புலி கிடந்த தூறு போலே பயப்பட இடம் கொடுக்கும் /

நான்கு வர்ணங்களுக்கு இது உண்டே -/உத்க்ருஷ்டஜென்மம் இழவுக்கு உறுப்பாகும் என்றால் அபக்ருஷ்ட ஜென்மம் பேற்றுக்கு உறுப்பாக்குமோ என்றாலோ
நாயை அடித்து உண்பானாக இருந்தாலும் விஷ்ணு பக்தி உண்டாகில் ப்ராஹ்மணாரில் உயர்ந்தவன் -யதியாய் இருந்தாலும் விஷ்ணு பக்தி இல்லை என்றால்
நாய் மாமிசம் உன்பானுக்கும் தாழ்வு /இவனுக்கு விஷ்ணு பக்தி பகவானை எதிர்பார்த்தே -அத்யயனம் இல்லையே –
வாத்சல்யாதிகள் -தோஷம் கொண்டே பிரகாசிக்கும் -தானே மேல் விழுந்து –பெரியாழ்வார் ஆண்டாள் இடையர் குலத்தை ஆசைப்பட்டதாலும் -கோப ஜென்மம் ஆஸ்தானம் /
நிக்ருஷ்ட ஜென்ம விருத்த ஞானம் இவை மூன்றும் பேற்றுக்கு காரணம் ஆகுமோ என்னில் -ஆகாது /
பேற்றுக்கும் இழவுக்கும் அசாதாரண ப்ரயோஜகம் அன்று இவை அனைத்தும் /
உத்க்ருஷ்ட ஜென்மம் இழவுக்கு உறுப்பு என்று சொல்லாமல் உறுப்பாகில் என்று அன்றோ அருளிச் செய்கிறார் / பாகவத அபசாரம் விளைய சம்பாவனை -பழிப்பர் ஆகில் –
நிக்ருஷ்ட -கஜேந்திர தாசர்-திருக் கச்சி நம்பி -ஸமாச்ரயணம் பண்ண ராமானுஜர் பிரார்த்திக்க -கொடுக்கலாம் கொள்ளலாம் -தொண்டர் அடி பொடி ஆழ்வார் –
-ஞானம் -விசேஷ சாஸ்த்ர மரியாதைக்கு போகும் / வைதிக மரியாதைக்கு ஒவ்வாது என்று விலக்கி ராமானுஜரை இழந்தார் வைஸ்யர் —
இவர் பேறு இந்த லக்ஷணம் / பகவத் பக்தி மஹாத்ம்யத்தாலே நிவ்ருத்தமானதே இவரது நிக்ருஷ்ட ஜென்மம் -சிஷ்யார்ஜமான பேற்றை இழந்தது
பூர்வ கால சம்பந்தம் -வைஸ்ய தேக சம்பந்தம் / இப்பொழுது தேவ பெருமாள் சம்பந்தம் /நிக்ருஷ்ட ஜென்மம் இழவுக்கு காரணம் ஆனதே என்னில் –
லாபம் -கேவல பரார்த்த தனக்கே யாக என்னைக் கொள்ளும் இதே -குண அனுபவ கைங்கர்யம் /பகவத் பாகவத ஆச்சார்யர் /
அனுபவ கைங்கர்ய விசிஷ்ட வேஷத்தாலே முமுஷுக்களுக்கு ப்ராப்யம் ஆகிறான்

அதாவது –
ஜன்ம விருத்தங்களினுடைய உத்கர்ஷமும் பேற்றுக்கும் இழவுக்கும் பிரயோஜகம் அன்று –
அவற்றினுடைய அபகர்ஷமும் இவை இரண்டுக்கும் பிரயோஜகம் அன்று -என்கை –
அன்றிக்கே –
இதில் ஜன்ம விருத்தாதி நியமம் இல்லை -எனபது -இழவுக்கு உறுப்பமாகில் த்யாஜ்யம் இறே –
என்பதாகா நின்றீர் -இங்கனே சொல்லலாமோ -வேதத்யாய நாதி முகத்தாலே பகவல் லாப ஹேதுவாகையாலே-
ஜன்ம விருத்தங்களினுடைய உத்கர்ஷம் பேற்றுக்கு உடலாகவும் –
அவற்றினுடைய அபகர்ஷம் அத்யய நாதிகளுக்கு அனர்ஹம் ஆகையாலே இழவுக்கு உடலாகவும் கொள்ள  வேண்டாவோ என்ன -அருளி செய்கிறார் –
ஜன்ம விருத்தங்களினுடைய -என்று -தொடங்கி-
அதாவது
ஜன்ம விருத்தங்களினுடைய உத்கர்ஷம் பேற்றுக்கு பிரயோஜகம் அன்று –
அவற்றினுடைய அபகர்ஷம் இழவுக்கு பிரயோஜகம் அன்று என்கை –
பேறு இழவுகள் ஆவன -பகவல் லாப -தத் அலாபங்கள் – பிரயோஜகம் ஆவது -பலிக்குமது
உத்க்ருஷ்ட ஜன்ம விருத்தங்கள் உடையவர்களில் சிலர் இழப்பாரும் – சிலர் பெறுவாருமாக காண்கையாலும் –
அபக்ருஷ்ட ஜன்ம விருத்தங்கள் உடையவர்களிலும் அப்படியே இரண்டு வகையும் உண்டாக காண்கையாலும்
இவை இரண்டும் இரண்டுக்கும் பிரயோஜகம் அன்று என்னும் இடம் பிரத்யஷ சித்தம் இறே

——————————————–

சூரணை-209–
பிரயோஜகம் பகவத் சம்பந்தமும்-
தத் அசம்பந்தமும் –

ஆனால் பேறு இழவுகளுக்கு பிரயோஜகம் ஆவது
என்ன -என்ன அருளி செய்கிறார் –

பிரயோஜகம் தல் லாபம் பேறு -சதாச்சார்ய அங்கீ கார ரூப பகவத் சம்பந்தம் / அங்கீகார மூலம் இல்லை -அங்கீகாரமே பேறு
தத் அபாவ ரூபமே இழவு / உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட நிர்பந்தம் இல்லை /
தத் அங்கீ கார விசேஷம் / இத்தை அயன சம்பந்தம் என்னாமல்–அது இல்லாதார் இல்லையே – ஆச்சார்ய சம்பந்தம் தானே அசாதாரணம் – –
உடல் மிசை உயிர் என கரந்து எங்கும் பரந்துள்ளதால் பகவத் சம்பந்தம் – அது லாபம் இல்லையே / அது இல்லை இழவு என்ன கூடாதே –
பகவத் சம்பந்தம் இல்லாத ஒன்றே இல்லையே —
ஆச்சார்ய சம்பந்தம் இருந்தால் பசுவோ மனுஷமோ பஷியோ பாகவத ஆச்சர்ய சம்பந்தத்தால் பேறு -பகவத் சம்பந்தம் பொது /
சர்வாத்மா அந்தராத்மா இல்லாமல் பகவத் கடாக்ஷம் என்னலாமோ என்னில் அது ஆச்சார்ய சம்பந்தம் மூலமே /
சாஷாத் நாராயண தேவோ பீதக வாடைப் பிரானார் -என்பதால் பேறு பகவத் சம்பந்தம் என்னவும் குறை இல்லையே -அவன் ஆச்சார்ய பீடத்தை ஆசைப்பட்டதால் /
ஆச்சார்ய ரூபமான பெருமாள் சம்பந்தம் / பந்த மோக்ஷ ஹேது பெருமாள் / ஆச்சார்யர் மோக்ஷ ஏக ஹேது /
பாப யோனிகள் என்னை அடைகிறார்கள் -ஸர்வத்ர ஸ்திரீகளோ -சர்வ வர்ணத்தவர்களோ -என்றானே கீதாச்சார்யர்
அநந்யார்ஹ சேஷபூதர் என்ற ஞானம் இருந்தால் தானே பகவத் சம்பந்தம் /இந்த ஞானம் இல்லாமல் அன்றோ இழக்கிறோம் /
ஆத்ம ஞானமும் அப்ரதிஷேதமும் வேணும் -விலக்காமை வேணும் என்றாரே / அநந்யார்ஹ சேஷத்வ ஞானம் உள்ளவன் விலக்க மாட்டானே /
அவனுக்கு பெருமை சேர்க்கும் செயல்களில் ஈடுபட வேண்டுமே /

அதாவது –
பகவல் லாபமாகிற பேற்றுக்கு பிரயோஜகம் -நாம் பகவத் அனந்யார்க்க
சேஷ பூதர் என்று இருக்கை யாகிற பகவத் சம்பந்தம் –
தத்  அலாபமாகிற இழவுக்கு பிரயோஜகம் -தத் அனந்யார்க்க சேஷத்வ
ஞான  அபாவம் ஆகிற தத் சம்பந்த அபாவம்  என்றபடி –

—————————————-

சூரணை -210-

பகவத் சம்பந்தம்
உண்டானால்
இரண்டும் ஒக்குமோ என்னில் –

உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ஜன்மாக்களில் இருவருக்கும் பகவத் சம்பந்தம்
உண்டானால் பாகவதத்வ சாம்யம் அன்றோ உள்ளது -அத்தோடு ஜன்ம உத்கர்ஷம் உடையவன்
மற்றை அவனைப் பற்ற விசிஷ்டன் அன்றோ என்று நினைத்து பண்ணுகிற
பிரசனத்தை அனுவதிக்கிறார் –

ஜென்மத்தால் உத்க்ருஷ்டர் -அபக்ருஷ்டர் -இருவருக்கும் பகவத் சம்பந்தம் உண்டானால் -இருவருக்கும் அநந்யார்ஹ சேஷத்வ ஞானம் இருந்தால் –
தார தம்யம் உள்ளதோ என்னில்-அடுத்த சூரணை யில் உண்டு என்கிறார் – –
இரண்டு பூர்வபக்ஷம் –வேதா பாஹ்யர் குத்ருஷ்டிகள் -இரண்டு வர்க்கம் -/
ரஹஸ்ய த்ரயம் ஆத்மாவைப் பார்க்கும் – சாஸ்திரம் சரீரத்தைப் பார்க்கும் -மர்ம ஸ்பர்சி அது தோல் புரையே போகும் –
இங்கு ரஹஸ்ய த்ரய பாஹ்யர்கள் குத்ருஷ்டிகள் -பிரமாணம் என்று ஒத்து கொள்ளாதவர் -தப்பு அர்த்தம் சொல்லுபவர் –
பள்ள மடையார்–தப்பு அர்த்தம் சொல்பவர் களுக்கு இந்த பெயர் / மிஸ்ர ஸம்ப்ரதாயர் பாஹ்யர் -பிரமாணம் என்று கொள்ளாதவர் /
ஜென்மத்தால் ப்ராஹ்மணன் தானே உசந்தவனாக இருக்க வேன்டும் -என்பர் பாஹ்யர் / நைச்யம் வராதே இவர்களுக்கு –
அருள் பள்ள மடையாக ஓடி வருவது நிஹீன ஜென்மம் தானே
மேலும் உபாயாந்தரங்களில் போக மாட்டானே -அதனால் இதுவே – உயர்ந்தது என்பான் பள்ள மடையார் /
இரண்டும் ஒக்குமோ என்று இந்த இருவர் கேள்விகளையும் சேர்த்தே சூரணை –
சமம் இல்லை -என்ற பதில் -/ பாகவதத்வ சாம்யம் மட்டுமே உண்டானது -/ சரீரத்தையா-ஜன்ம உத்கர்ஷமும் உடையவன் மற்றவனைப் பற்ற –
பூர்வபக்ஷம் இரண்டு என்பதால் பொதுவான சப்தம் -இதனால் அபகர்ஷண என்று சொல்லாமல் மற்றவன் என்கிறார் -/
கீழே ஒருவன் மற்றவனை பற்றி என்று சொல்லாமல் உதகர்ஷண என்றது பூர்வ பக்ஷிகள் இரண்டு பூர்வபக்ஷம்
தங்கள் தங்கள் பக்ஷம் உத்க்ருஷ்டன் என்று நினைத்து இருப்பதால் இருவர் நினைவும் தப்பு தானே –
கேவல ப்ராஹ்மணர் கேவல சூத்ரன் எல்லை -பாகவத ப்ராஹ்மணர் பாகவத சூத்ரன் எல்லை பற்றி கேள்விகளும் பதிலும்
மத பேதத்தால் உத்க்ருஷ்ட நிக்ருஷ்ட ஜன்மாக்கள் சஹகாரம் என்பர் இந்த இரண்டு பூர்வ பக்ஷிகளும் -/ பாகவதத்வம் -பகவத் சம்மதம் கார்யமது ஒழிய
முன்பு கேவல ஜென்ம வர்ணம் -இப்பொழுது பாகவதர் / பழைய நிலை நினைவே வராதே இவனுக்கு /நினைவு வந்தால் அதே கேவல நிலைமை வருமே
மிஸ்ர சத்வம் போக்கி சுத்த சத்வம் கொடுப்பார் / தமோ குணம் போக்கி சுத்த சத்வ குணம் கொடுப்பார் -அதனாலே பள்ள மடையாய் பாயும் என்பதும் சேராதே
பாரமாய் பழ வினை பற்று அறுத்த பின்பு -பழைய தமோ குணம் இருக்காதே -பள்ள மடை வாதம் ஒவ்வாதே /பாணர் குலத்தில் இருந்தாலும் தள்ளுபடி இல்லை என்பதே
பாணர் குலத்தில் பிறந்தால் தான் என்பது இல்லையே /
பகவானை நெருங்க வேண்டிய சஹகாரம் இருவருக்கும் பகவத் கடாக்ஷம் அடியாக வந்த சத்வ குணம் தானே /
நம்மை பார்க்காமல் தன்னைப் பார்த்து -தனக்கேயாக எங்களை கொள்ளும் ஈதே நாங்கள் வேண்டுவது /இதுவே நிலை நிற்கும் /
பாகவத ஜென்ம நிரூபணம் பண்ண கூடாதே முன்பே அருளிச் செய்தாரே –
ஜென்ம சித்த நைச்சியம் -உபாயாந்தர அதிகாரம் இல்லாமை இத்யாதிகளால் பிறப்பால் தாழ்ந்தாலும் உயர்ந்தது என்று ஒரு பக்ஷமும்
மிஸ்ர சத்வ குணம் இருப்பதாலும் வேத அத்யயயன அதிகாரம் இருப்பதால்-சாஸ்திரம் கொண்டே அவன் அபிமதம் ஏது என்று
அறிந்து -அறிவித்து -இதனால் உயர்ந்த ஜென்மம் -பகவத் சம்பந்தம் ஆனுகூல்யம் இருப்பது என்று ஒரு பக்ஷமும் –
அனைவரும் அறியவே அருளிச் செயல்கள் தமிழில் -ஸ்ருஷ்ட்டி முழுவதும் வாசியாய் இருந்தாலும் சமோஹம் சர்வ பூதானாம் -விஷம ஸ்ருஷ்ட்டி லீலோ பின்ன ருசி -/
வேதம் வர்ணாஸ்ரமம்-இத்யாதி சொல்லி உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ஜன்மாக்களையும் சொல்லி அருளிச் செயல்களும் அனைவருக்கும்
பகவல் லாபத்தை அருளுகிறார் தன் பேறாக என்றும் அறிவித்து -சர்வம் சமஞ்சயம் இது கொண்டு ஒருங்க விடுவாரே –

பகவத் சம்பந்தம் உண்டானால் இரண்டும் ஒக்குமோ என்னில் -என்று -இரண்டும் -என்று
உத்க்ருஷ்ட அபக்ருஷ்ட ஜன்மங்களை சொல்லுகிறது –

——————————————–

சூரணை -211-

ஒவ்வாது –

அப்ருஷ்டாவானவன் -உத்க்ருஷ்டமாக நினைத்ததை அபக்ருஷ்டமாகவும் –
அபக்ருஷ்டமாக நினைத்தத்தை உத்க்ருஷ்டமாகவும் திரு உள்ளம் பற்றி
அதற்க்கு உத்தரம் அருளி செய்கிறார் -ஒவ்வாது -என்று –

இது சித்தாந்தம் -கீழே பூர்வ பக்ஷங்கள் வாக்கியங்கள் -/ லாப ஹேதுவான இந்த பகவத் சம்பந்தம் -அநந்யார்ஹ சேஷத்வ ஞானம் – ஒக்குமோ -பிரஸ்னம் கீழே
ப்ருஷ்டா கேள்வி கேட்டவன்-நினைவு மாறி அன்றோ கொண்டான் -தாழ்ந்ததை உயர்ந்ததாகவும் உயர்ந்தத்தை தாழ்வாகவும்-இரண்டு பக்ஷங்களும் –
நினைத்ததை -ஒத்தது ஆகாது -என்று உத்தரம் அருளிச் செய்கிறார் –
கேட்ட படியே இல்லை /வாக்ய வையர்த்யம் -பொருந்த வேண்டுமே / இரண்டு வாதங்களும் தொடரும் -/ப்ரச்னத்தில் சப்தம் மாத்திரம் ஏக ரூபமாய் –
நினைவுகள் மாறி அன்றோ இருந்தது /சொல்லு மட்டும் ஓன்று -அர்த்தம் வேறே தானே /
பிராகிருத சரீரத்தால் வருமவை எல்லாம் த்யாஜ்யம் / பகவத் கிருபையால் நிர்ஹேதுகமாக வருமவை எல்லாம் உத்தேச்யம் –
தேக உபாதியால் வந்த எதுவானாலும் அநர்த்த ஹேதுக்களாக கொண்டு -என்பதால் இரண்டு பக்ஷங்களும் நிரஸ்தம் –
அவற்றில் சிலவற்றை கொண்டு -பகவத் சம்பந்தத்துக்கு அனுகூலமாகவும் -பிரதிகூலமாகவும் – இருவரும் வாதம் செய்வது வியர்த்தம் தானே -/
அனுகூலமானவற்றையுமே த்யாஜ்யம் என்றதன் பின்பு பிரதிகூலங்களை சொல்ல வேணுமோ -/
யதாவஸ்திதமாக திரு உள்ளம் பற்ற வேன்டும் –சில விஷயம் நீ குணம் என்பதே தோஷம் . தோஷம் என்பதே குணம் /
கிருபையால் சத்தை பெற்றால் நீங்கள் சொன்ன குணங்கள் அனைத்தும் இருவருக்கும் வரும் /
எல்லாம் உத்க்ருஷ்டம் அபக்ருஷ்டம் என்று சொல்லாமல் -நீ நினைப்பது ஒவ்வாது / தேக உபாதியால் உயர்வு தாழ்வு பார்க்கக் கூடாதே முதலிலே பார்த்தோமே /
பாகவதத்வம் பார்த்த பின்பு இன்னும் அத்தை பார்க்கலாமா /
சித்தாந்தி -விலக்ஷணன்-என்பது இருவர் இடமும் பூர்வ பக்ஷி சொன்ன நான்கு குணங்களும் உள்ளவன் —
ப்ராஹ்மணரும் இல்லை சூத்ரரரும் இல்லை எதிர்மறையால் அவை சித்திக்கும் –அது தான் விலக்ஷணம் -த்ருதீய விபூதி போலே /
கருணை அடியாக வந்தவை -தேகம் இருந்தாலும் இந்த நல்லவை இருக்குமே /
கேவலம் மதிய தயை -என்பான் பிராட்டி புருஷகாரம் செய்த பின்பு -சந்தோஷமாக பிராட்டியும் ஆச்சார்யர்களும் மகிழ்வார்கள் —
சொத்து ஸ்வாமி இடம் சேர்ந்ததே தம்மை போலே -என்று -அதே போலே இங்கும் —
விஷயீகாரத்துக்கு பின்பு சரீரகத தோஷங்கள் அனைத்தும் நீங்கி எல்லாமே உத்க்ருஷ்டமாகுமே /ரஜஸ் தமஸ் கலசாத சுத்த சத்வம் அன்றோ/
விலக்ஷணர்-இரண்டு வர்ணத்தவரும் என்று பிரதிபக்ஷம் மீண்டும் சொல்ல விலக்ஷணம் என்றாலே -வேறு பட்ட உயர்ந்த –என்பதால்
ப்ராஹ்மணரும் அல்லர் சூத்ரரும் அல்லர் -/ விலக்ஷணர்-அனைவரும் எந்த வர்ணத்தவராக முன்பு இருந்தாலும் உத்க்ருஷ்டர் என்பது பலிக்குமே/

————————————-

சூரணை -212-

உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம்-
பிரசம்ச  சம்பாவனையாலே-
சரீரே ச -என்கிற படியே பய ஜனகம் –

ஆபிஜாதி யாதிகளாலே -அஹங்கரித்து நசிக்கைக்கு உறுப்பு ஆகையாலே -அபக்ருஷ்டமாக இருக்கிற இத்தை –
உத்க்ருஷ்டமாக நினைத்து -பிரச்னம் பண்ணிற்று -அதச்மின் தத் புத்தியாலே -என்னும் இடம் தோற்ற –
உத்க்ருஷ்டமாக பிரமித்த ஜன்மம் -என்கிறார் –

ஜிதந்தே ஸ்லோகம்=புண்ய காலம்-புண்ய தேசம்-புண்ய தீர்த்தம் – சரீரம் இருக்க பயமாக உள்ளதே -சரீரம் தர்ம சாதனம் /
அவனே உபாயம் என்கிற விசுவாசம் குலையுமே இவற்றால் /
ச வாசனமாக த்யஜித்த -சர்வ தர்மான் பரித்யஜ்ய /ஸ்வரூப விருத்தம் என்று விட்டோமே -இவை மீளவும் மூட்டுமே/
தையும் அம்மாவாசையும் திருப்புல்லாணியும் சரீரமும் இருக்க பயமாகுமே / அவற்றை ஒழிக்க வேண்டாம் -சரீரத்தை விலக்கலாமே/ –
நிவ்ருத்தி அதிகார பிரம்சத்தை பிறப்பிக்கும் -தியாக நிஷ்டருக்கு மஹா பயத்தை விளைவிக்கதாய் இருக்கும் –
ஆபிஜாதி யாதிகளாலே-ஆதி வித்யா விருத்தங்களை சொல்லும் /அதச்மின் தத் புத்தியாலே-அது அல்லாததில் அது புத்தியால் என்றவாறு /
விரோதங்களை நல்லது என்று -தமோ குணம் உயர்ந்தது என்றானே பள்ளமடை வாதி / கர்மத்தால் வந்த இவை /
பயத்துக்கு காரணமான சரீரத்தால் வந்த ஜென்மங்களை உத்க்ருஷ்டம் என்று இரண்டு பேரும் சொல்கிறீர்களே -என்று நிரசிக்கிறார் –
தது தது குண தோஷங்களை ஐந்து வாக்யங்களால் தர்சிப்பிக்கிறார் / உயர்ந்த குலம் -அநந்யார்ஹ சேஷத்வ அனுகூல தயா – உத்தம குலம் -/
பிறப்பால் இல்லை / மாறனேர் நம்பி / விளாஞ்சோலை பிள்ளை போல்வார் /
உறி அடி கோஷ்ட்டியில் பட்டர் -கிருபை பொழியும் குலம் / கருணை விஷயமாகவே வேண்டுவது /
பள்ள மடையானுக்கு -சூத்ர ஜென்மம் உயர்ந்தது -சம்பந்தத்துக்கு அனுகூலமாக இருக்கும் / மிஸ்ர ஸம்ப்ரதாயனுக்கு த்ரை வர்ணிக்க குலம் /
இரண்டும் பிராகிருத உபாதியால் வந்தவை என்பதால் -அஹங்கார ஹேதுக்கள் ஆகுமே /
அருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைய அவர் உண்டே / சத்வ குணம் வேணும் தமோ குணம் கூடாது /
சாஸ்திரம் வேன்டும் -உபாயாந்தரங்கள் கூடாதே
பகவத் இச்சாதீன தேக ஸ்திதி வந்தால் –கிருபாதீனமாக -மிஸ்ர தத்துவமே இருக்காதே -பிராகிருத தேசத்தில் உண்டே சாஸ்திரம் சொல்லுமே /
சுத்த சத்வத்துக்கு நிகரான என்றவாறு /குலம் தரும் செல்வம் தரும் என்றாரே
பகவத் இச்சாதீன குலம் என்றவாறு -பூர்வமே நிவர்த்தங்கள் குலம் கிராமம் கோத்ரம் சரணம் இவை இல்லை என்றாலும் மோக்ஷம் பர்யந்தம் ப்ராரப்தம் –
பஞ்ச விம்சதி பிராக்ருதி அனுவர்த்தித்துக் கொண்டே இருக்குமே
ஸ்வ பாவத்தால் அஹங்காரத்தை விளைக்காதோ–துளியும் குறையாமல் – பகவத் பாகவத அனுவர்த்த அர்த்தமாக -பக்தி மாஹாத்ம்யத்தாலே –
நிர்ஹேதுக கடாக்ஷ ஆயத பகவத் பக்தி -ரஜஸ் தமஸ் பல் வாங்கின பாம்பு போலே -இருக்கும் -/ பாம்பு தான் -சரீரம் -பல்லை பிடுங்கின பின்பு பயம் இருக்காதே /
இருந்தாலும் பாம்பு பாம்பு தானே -சரீரம் சரீரம் தான் ரஜஸ் தமஸ் நீக்கப்பட்டு நிரவீர்யமாய் -அவற்றால் காதா சித்கமாக அபிபவம் பண்ண முடியாமல் –
அபிபவ -அர்ஹதை இருக்காதே -வாய்ப்பு ஒழிந்து /போனதே–ஞான ஜென்மம் வந்ததே /
அபி விருத்த தமோ குண தேகமும் போகுமே -அவித்யைகளும் அஹங்காரமும் உண்டாக யோக்கியதையும் இருக்காதே /
சரீர ரூப ஜென்மம் கழிந்து ஞான ரூப ஜென்மம் அன்றோ இவர்களுக்கு -அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன் –

நின்றது ஊரகத்து -இருந்தது பாடகத்து-கிடந்தது திருவெஃகா முன்பு –நின்றதும் இருந்ததும் -கிடந்ததும் -என் நெஞ்சுள்ளே இப்பொழுது /
அனவரத கால ஷேபம்-திரு மந்த்ராதிகள் -சகல அஞ்ஞானம் நிவர்த்தகம் -ஆனபின்பு விலக்ஷணன் ஆவான்
மகாரம் தேஹாத்ம / ஆய ஸூவ ஸ்வதந்த்ர அஞ்ஞானம் / உகாரம் அந்நிய சேஷத்வம்-நமஸ் -ஸூ வ சேஷத்வ / உபாயாந்தர /
ஆபாச பந்து நாராயண / பிராப்யாந்தர ஆய -அல்வழக்கு ஒன்றுமே இல்லா -ஏழும் -ஏழு நாழிகையில் ஏழு அர்த்தங்களையும் தொண்டைமான் சக்கரவர்த்திக்கு உபதேசித்து
விஸ்ம்ருதி இன்றிக்கே அனுவ்ருத்தமாய் செல்லுமே -அஹங்கார யோக்யதை இல்லையே / அ விலக்ஷணர் எல்லா வர்ணங்களிலும் –
பாகவத அனுவர்த்தனத்துக்கு இசையாதார்கள் -பகவத் விஷயத்தில் அத்யந்த அநு கூல்யம் இல்லையே /சர்வேஸ்வரன் பிரதம பிரவ்ருத்தியில் –
மகனே உன் சமத்து-கர்மாதீனம் -ஜென்மம் அஹங்காரம் வர குறை இல்லையே /
விலக்ஷணர் -பாகவத அனுவர்த்தனத்துக்கு இசைந்து விசேஷ அபிமதத்துக்கு ஆள் ஆவோம் /
த்வத் ஏக ரக்ஷகம்-பிரார்த்திக்குமவர்கள் பக்கல் -கல்யாண புத்தி யோகம் குருவன் கல்யாண பிரவ்ருத்தியில் மூட்டுவான் –
அதிமாத்ரம் அனுகூல்ய பிரவர்த்தி விஷயத்தில் அருளுவான் /
பாகவத அபசாரம் கிருபையை அழிக்குமே/ சர்வ அதிகாரங்கள் -சாதனாந்தரங்கள்–புண்ய காலம் புண்ய தேசம் விசேஷங்கள் உண்டே / பல தாரதம்யங்கள் உண்டே
பய ஹேதுக்கள் –அநந்ய உபாயத்வ நிஷ்டை குலையுமோ -என்ற அதிசங்கை உண்டே / கேவல பகவத் இச்சைக்காக செய்கிறோம் கைங்கர்ய ரூபமாக செய்ய வேண்டுமே /
திருமந்திரம் அனவரத கால ஷேபம் மூலமாகவே அநந்ய சேஷத்வம் அநந்ய சரண்யத்வம் அநந்ய போக்யத்வம் ஞானம் கொண்டு உபாயாந்தர கந்தம்
மானஸ ரூபமாக அடுத்தவர் ஒருவர் நினைக்க அவர் முகம் பார்க்கவும் சகிக்க மாட்டார் -இந்த அதிகாரி –
இவை எதில் மூட்டி அழிக்கும் என்ற பயம் இருக்குமே சரீரம் இருக்கும் வரை –

பிரசம்ச  சம்பாவனையாவது –உபாயாந்தரங்களில் அன்வயத்தாலே அன்யோபாவத்யமாகிற
வதிகாரத்தின் நின்றும் நழுவதல் வருகைக்கு யோக்யமாய் இருக்கை –
சரீரே ச -என்கிற படியே பய ஜனகம் –என்றது -காலேஷ் வபிச சர்வேஷு -என்று தொடங்கி –
உபாயாந்தர அனுஷ்டானந்தத்துக்கு யோக்யங்கள் ஆகையாலே -பய ஹேதுக்கள்  ஆன வற்றை சொல்லி வருகிற
அடைவிலே -அவை எல்லா வற்றிலும் பிரதானமாக -சரீரேச வர்த்ததே மே மகத்பயம் ஆகிற-என்று சொல்லுகிற படியே
ஸ்வரூப யாதாத்ம்ய வித்துகளாய்-உபாயாந்தர கந்த அசஹயராய் இருக்கும் அதிகாரிகளுக்கு இது இருக்க –
என் செய்ய தேடுகிறதோ -என்னும் பயத்தை விளைக்குமதாய் இருக்கும் என்ற படி–

—————————————

சூரணை-213-

அதுக்கு ஸ்வரூப ப்ராப்தமான நைசயம் பாவிக்க வேணும் –

இன்னமும் இதுக்கு ஒரு தோஷம் அருளி செய்கிறார் –

அதுக்கு -என்று கீழ் சொன்ன ஜென்மத்தை பராமர்சிக்கிறது –
ஸ்வரூப ப்ராப்தமான நைசயம் பாவிக்க வேணும் –என்றது-பாகவத அனுவர்த்த நாதிகளில் வந்தால் சேஷத்வமாகிற ஸ்வரூபத்துக்கு தகுதியான தாழ்ச்சி –
பிறர் செய்கிறது கண்டு அனுகரித்து கற்க வேணும் என்ற படி –

ஞான ஜென்ம ஸ்வரூப ப்ராப்தமான நைச்யம் ஏறிட்டு கொள்ள வேன்டும் கர்மாதீன சரீரத்துக்கு -உத்க்ருஷ்டமாக பிரமித்த சரீரத்துக்கு
இரண்டு பக்ஷங்களும் இதில் அடக்கம் – -தோஷம் சொல்லும் சூரணை இதுவும் / இன்னமும் இதுக்கு ஒரு தோஷம் அருளி செய்கிறார் -/இதிலும் இரண்டு கோஷ்டிகள்-
ப்ராஹ்மணர்க்கு இயற்கையில் வராது –பாவிக்க வேன்டும் அறிய முடியும் -ஸ்வரூப பிராப்தம் என்றது பள்ள மடையானுக்கும் சேர்த்து அருளிச் செய்கிறார் /
தேக ப்ராப்தமான நைச்யத்தை சொல்ல வில்லையே /
விசிஷ்ட ஜன்மத்துக்கு –சேஷத்வ ரூப ஸ்வரூப–ஞான ஸ்வரூப – ப்ராப்தமான நீச பாவத்தை -ஸ்வாதந்த்ரத்துக்கு எதிர்மறை சேஷத்வ ரூபம் /
ஸ்வரூப பிராப்தம் என்றதால் தேக பிராப்தம் இல்லை /
விலக்ஷணர் கோஷ்ட்டி தானே இது –பாகவத அனுவர்த்த நாதிகளில்-வந்தால் தானே பகவத் விசேஷ கடாக்ஷம் கிடைக்கும் —
பாவித்தல் என்றது பிறர் பண்ண பார்த்து அறிந்து செய்ய வேன்டும் என்றபடி -/
தத் பாத தீர்த்த ஸ்வீகாரம் –அவஸ்ய அபேக்ஷிதம் –/ ஸ்வரூபத்துக்கு சேராத தாழ்ச்சி கூடாதே / தேவ பாகவதர் நாரதர் /
மனுஷ்ய பாகவதர் -த்ரை வர்ணிக பாகவதர் / இத்யாதி தேக பிராப்தம் கூடாதே
ஆத்ம ஸ்வரூபம் பார்த்து தாழ்ச்சி வர வேன்டும் / சகல பாகவத சேஷத்வ பர்யந்தம் தாழ்ச்சி கற்று கொள்ள வேன்டும் /
ஞான ஜென்மம் உடையவனும் இயற்கையாக இருக்கும் -/அனுஷ்டானம் பல காலம் கண்டு கற்று கொள்ள வேன்டும் /
அபிமான விஷய பூதர்கள் எத்தனை ஹீனர்களாக இருந்தாலும் அடியில் தங்கள் முடியிலும்
அல்லாதார் எத்தனை உயர நின்றாலும் அவர்கள் முடியில் தங்கள் முடியுமாக இருப்பார்கள் ஞான ஜென்ம விசேஷணர்கள்/

———————————–

சூரணை -214-

அபக்ருஷ்டமாக பிரமித்த
உத்க்ருஷ்ட ஜென்மத்துக்கு
இரண்டு தோஷமும் இல்லை-

ஏதத் பிரதிகோடியான ஜென்மத்தின் உடைய தோஷ பாவத்தை அருளிச் செய்கிறார்-

ஆபிஜாத்யாதிகளால் -வரும் அகங்கார யோக்யதை இன்றிக்கே -சேஷத்வ அனுகூலமாய் இருக்கையாலே –
உத்க்ருஷ்டமாய் இருக்கிற இத்தை அபக்ருஷ்டமாக நினைத்ததும் அதச்மிம்ச்தத் புத்தி என்னும் இடம் தோற்ற –
அபக்ருஷ்டமாக பிரமித்த உத்க்ருஷ்ட ஜென்மம்-என்கிறார்-
இரண்டு தோஷமும் இல்லை -என்றது பிரமச சம்பாவனையாலே வரும் பய ஜனகத்வமும் –
ஸ்வரூப பிராப்தமான நைசயம் பாவிக்க வேண்டுகையும் ஆகிற தோஷ த்வயமும் இல்லை என்ற படி-

நிர்பயர் ததீயரை அனுவர்த்திக்கும் இடத்தில் ஜென்மம் உடைய நாம் அனுவர்த்திக்கிறோம் என்ற -எண்ணம் -சேஷத்வம் நிரூபிக்காமல் தானே உண்டாகும்
நிவ்ருத்தி அதிகாரம் போகாதே -சேஷத்வ ஸ்வரூப பிரயுக்த எண்ணம் தானே -அநந்யார்ஹ சேஷ பூதன் அன்றோ -சம்பாவனை வாய்ப்பே இல்லையே நழுவ /
நிஷ்க்ருஷ்ட வேஷம் -பய ஜனகமும் இல்லை / இரண்டு பிரபல தோஷமும் இல்லை / நைச்யம் பாவிப்பது துர்பல தோஷம் –
திருமந்திரம் அறியவே குலம் தரும் என்றது நிலை நிற்குமே /சேஷத்வ அனுகூலம் தானே -/
ஏதத் பிரதிகோடியான ஜென்மத்தின் உடைய–கர்மாதீனம் -அசித் 24-அதனால் உருவாக்க அதி ஹேயம் -யாவன் மரண பாவி -அஹங்கார மமகார /
புண்ய பாபம் கர்மங்கள் ஆர்ஜிதமாய் / கிராமம் குலம் -உத்க்ருஷ்டமாக பிரமிக்கப்பட்டதாய் -/ தோல் புரையே போமது -சரீர ஜென்மம் /
எதிர் மறை கிருபையால் -யாவதாத்மா பாவி -அஹங்கார மமகார பிரதிபடமாய் புண்ய பாப நிவர்த்தகமாய் -தாஸ்ய ஏக வியாபதேசம் ஆபாதகமாய் —
மர்ம ஸ்பர்சி -பயம் இல்லை -ஜென்ம சித்த நைச்யம் —
ஆகார த்ரய ஞான விசிஷ்டானாய் கொண்டு -பாகவதர் என்று மட்டும் பார்த்து அனுவர்த்தனம் -பூர்வ அபாகவதம் என்று பாராமல் —
சனகன் நாரதாதி தேவ பாகவத -கஜேந்த்ராதி திர்யக்
சபரி மனுஷ்ய பாகவத / பிருந்தாவன ஸ்தாவர பாகவத கொடி புல் அனைத்தும் /அனைவருக்கும் நைச்ய பாவம் -அறிய வேன்டும் /
எம்பெருமான் பொன் மலையில் ஏதேனும் ஆவேனே என்பார்களே / கண்ணன் -கோபிகள் திருவடி பட்ட லதையாகவோ ஓவ்ஷதியாகவோ-/
அணைய ஊர புனைய –அடியும் பொடியும் பட –பர்வத பவனங்களிலே –தாஸ்ய ஸூகம் கிரீட ஜென்மம் /உத்பத்தி விநாசங்கள் அங்கேயும் படியான ஜென்மம் –
ஆசைப்பட்ட பெரு மக்கள் -/ அத்யாதரத்துடன் பிரார்த்திப்பார்கள் /திருக் கண்ண மங்கை நாயை பார்த்தும் அறிந்தும் –
அனந்தாழ்வான் எறும்பு அனுவர்த்தித்தாப் போலேயும் /பெருமாள் பெரிய உடையார் இடத்தில் செய்தபடியும் -கச்ச லோகான் அநுத்தமான் –
நிவாஸ செய்யா -சென்றால் குடையும் -அணி விளக்கம் -தாச சஹா -ஸ்தாவராதி சரீர ஆஸ்தானம் பண்ணின படியையும்–
நெருப்பு கூண்டுக்குள் சிக்கி -சவுரி பெருமாளை சிந்திக்காமல் இருப்பவர் உடன் இருப்பது -எண்ணாத மானுடத்தை இறை பொழுதில் எண்ணோமே /
புல்லை திணிமினே / ஆளாகாதாரை அநாதரித்து வாழ வேண்டுமே /
அவைஷ்ணவர்கள் கூட சகவாசம் இல்லாமல் / வைஷ்ணவர்களுக்குள் தார தம்யம் பாராமல் நாள் தோறும் அனுவர்த்தித்தும் -திட விசுவாசம்
விலக்ஷணர்களுக்கு ஜென்ம சித்தம் -கற்றுக் கொள்ள வேண்டாம் –

——————————————

சூரணை -215-

நைசயம் ஜன்ம சித்தம்-

பிரசம்ச சம்பாவனை அன்றோ இல்லாதது -நைச்ய பாவனை இல்லையோ என்ன -அருளி செய்கிறார் –

அதாவது பாகவத அனுவர்தனாதிகளுக்கு உறுப்பான தாழ்ச்சி பிறந்து உடைமையாய் இருக்கையாலே –
பாவிக்க வேண்டாதே பள்ள மடையாய் இருக்கும் என்ற படி-

ஜென்ம சித்தம் -ஞான ஜென்மம் என்பதே இங்கே / பள்ள மடையார் -மிஸ்ர ஸம்ப்ரதாயத்தார் -இருவர் பக்ஷமும் நிரசனம் முன்னமே /
திருமந்த்ரார்த்தம் அறிந்து -காலஷேபம் பல காலும் -ததீய அனுவர்த்தனம் –
ததீய விஷய நைச்யம் ஞான ஜென்ம பிறந்த உடனே பிறக்கும் -தகுமோ என்னும் பிரபத்தியால் –
திரியக் ஸ்தாவர பாகவதர்கள் ஒவ் ஒருவரும் மற்றவர் இடம் நைச்யம் சித்தம் –
நமஸ் அர்த்தம் வந்ததும் -ப்ரம்ஹா சம்பாவனை -நழுவுதல் -உபாயாந்தர சம்பந்த சம்பாவனை வராதே -/ததேக ஏக உபாயத்வ புத்தி ஸ்திரமாகும் –
பகவத் சம்பந்தம் -அநந்யார்ஹ சேஷத்வ ஞானம் –பாகவத அனுவர்த்தனம் -அத்யந்த அபிமதம் –பிரதம பிரவ்ருத்தியும் தான் ஏற்றுக் கொள்வான் –
சகல பாகவதர்களுக்கும் நீசன் – நினைத்தால் மட்டும் போதாது முன்பு போலே -இங்கே கைங்கர்யம் பண்ண வேண்டுமே ததீயர்களுக்கு /
விலக்ஷண ஜென்மம் உடையவர்களுக்கு நைச்யம் பாவிக்க வேண்டிய தோஷம் இல்லையோ என்ன ஜென்ம சித்தம் என்ற பதில் /
வசிஷ்டாதி பாகவதர்களை மட்டும் சகல பாகவத அனுவர்தனம் -பூர்வ அபாகவத்பவ நினைவும் இல்லாமல் செய்கிறார்களே /
பிறந்து உடைமை -பால்யாத் ப்ரவ்ருத்தி போலே இவர்களுக்கு பள்ள மடையாக தாழ்ச்சி உண்டே /மந்த்ரம் தாயாக பெற்றவர்கள் அன்றோ /
திரு மந்த்ரத்திலே பிறந்து த்வயத்திலே வளர்ந்து த்வய ஏக நிஷ்டராக இருப்பார்கள் —
சேஷத்வ ஞானம் ஏற்பட்டதால் –வித்யை தாயாக பெற்று –விலக்ஷண ஜென்மம்
நமஸ் -தாத்பர்யம் ததீய சேஷத்வ ஞானம் -உற்றதும் உன் அடியார்க்கு அடிமை –நின் திரு எட்டு எழுத்தும் கற்று -புத்தியில் பட்டால் போதாது –
உபாயாந்தரங்கள் உபாயம் இல்லை -பண்ணி காட்ட முடியாதே -பிரவ்ருத்தி விஷயம் / கைங்கர்யம் பண்ணி காட்ட வேண்டுமே -வாசி உண்டே
பிரதிபத்தி தியாக புத்தி மட்டும் அங்கே போதும் -இங்கே வ்ருத்தி ரூப நைச்யம் அனுஷ்டான ரூபம் -/
சதுர்வித பாகவதர்களுக்கும் த்ரிவித கரணங்களாலும் செய்யும் கைங்கர்யம் /
பகவத் அபிமத விசேஷம் பிறந்த பின்பு தானே இவன் ஜென்மம் -அனுஷ்டான பர்யந்தமான காஷடை -விஷ்ணு சித்தர் கேட்டு இருப்பாரே –
செயல் படுத்தும் எல்லை -அநந்யார்ஹாதி சேக்ஷத்வாதி –பாகவத அநந்யார்ஹ சேஷத்வ சரண்யத்வ போக்யத்வ —ஆகார த்ரய ஞானத்தால் உண்டானது–
ததியர் அளவும் கூட்டிப் போகுமே–செறிவு அடைந்து -இதற்காக அனவரத கால ஷேபம் -பிறந்து உடைத்தாய் -பிறப்பதற்கு முன்பே இருக்க வேன்டும் –
அனந்தம் பிரதம ரூபம் -இருந்ததால் தானே பால்யாத் ப்ரவ்ருத்தி போலே /
ஜென்மத்துக்கும் பூர்வ பாவியாய் கொண்டு -அத்தோடு -பிறந்த காலத்தில் கூட வருமே நைச்யம் / கற்று வல்லரானார் ஆயிற்று
சந்தங்கள் ஆயிரம் அறிய கற்று வல்லார் வைஷ்ணவர் -கற்றார் ஞான மாத்திரம் கற்று -வல்லார் அனுஷ்டான பர்யந்தம் /
கற்று அதற்குத் தக்க நிற்க வேண்டுமே / சரீர ஜென்மமத்தில் பிறந்து ஞானம் பெற்று அனுஷ்டானம் / ஞான ஜன்மத்துக்கு அப்படி இல்லை
தொழுது எழு -இரண்டு கிரியை இல்லை – தொழுதால் உயர்வது -உயர்ந்தவன் தொழுவான் -பிறக்கை வேறே உயர்தல் வேறே இல்லை பிறந்தார் உயர்ந்தே /

————————————————-

சூரணை -216–

ஆகையால் உத்க்ருஷ்ட ஜன்மமே ஸ்ரேஷ்டம்-

இவ்வர்த்தத்தை நிகமிக்கிறார்-

ஆகையால் -என்றது இப்படி அது ச தோஷாமும் இது நிர் தோஷமும் ஆகையால் என்ற படி –
உத்க்ருஷ்ட ஜன்மமே ஸ்ரேஷ்டம் -என்றது –
சேஷத்வ உசிதமாய் கொண்டு உத்க்ருஷ்டமாய் இருக்கிற இந்த  ஜன்மமே ததுநிசித
ஜென்மத்தை பற்ற ஸ்ரேஷ்டம் என்ற படி-

ஸ்வரூப உசிதம் -சம்பந்த ரூபம் -அபக்ருஷ்ட ஜென்ம தோஷ த்வயமும் இல்லையே /
ஸ்வபாவ-ப்ரம்ஹா சம்பாவனை இது உபாயாந்தாரா சம்பந்த சம்பாவனை /
பாவனையும் -நைச்யம் பாவிக்க வேண்டிய தேவை இல்லையே / ஸ்வரூப அனுகுணமாக இருக்குமே /
அது தேகத்தால் வந்த ஜென்ம / இது ஞான ஜென்ம /
1-ஆபீஜாத்யாதி பிரயுக்த அஹந்காராதி தோஷம் /
2 உபாயாந்தர அன்வயம் யோக்யதையால் பய ஜனகம் /
3–பகவத் அபிமதத்துக்கு அவஸ்யம் அபேக்ஷித்தமான பாகவத அனுவர்த்தனத்துக்கு நைச்யம் பாவிக்க வேண்டுமே
இந்த மூன்று குறைகளும் இதுக்கு இல்லை – த்விஜன் இரண்டு பிறவி -ஞான ஜென்மமே உயர்ந்தது என்றவாறு

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: