ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -175-193-தத் அதிகாரி க்ருத்யம் /பெறுவான் முறை /-சித்த உபாய நிஷ்டா வைபவம்– ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

ஆறாகப் பார்ப்பதில் – முதல் -நான்காவது -ஐந்தாவது -ஆறாவது- பிரகரணங்கள் –
ஒன்பதாக பார்ப்பதில்- முதல்- ஆறாவது – எட்டாவது- ஒன்பதாவது பிரகரணங்களாக இருக்கும் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை /-மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————–

சூரணை -175–

ஆகையாலே தோஷ நிவ்ருத்தி போலே
ஆந்தர குணமும் விரோதியாய் இருக்கும் –

இப்படி தோஷ நிவ்ருத்தி பர அனுபவத்துக்கு விலக்கு என்னும் இடம் ஸூ ஸ்பஷ்டமாம் படியான ஹேதுக்கள்–
பலவற்றையும் அருளிச் செய்கையாலே அத்தை சித்திப்பித்தராய்–,அது தன்னை திருஷ்டாந்தம் ஆக்கி
சிம்ஹா அவலோகன நியாயத்தாலே கீழ் சொன்ன சேஷத்வ பாரதந்த்ர்ய ரூப ஆத்ம குணத்தின் உடைய
பர அனுபவ விரோதித்வத்தை  ஸ்தீ ரிக்கிறார்—ஆகையாலே என்று தொடங்கி-

ப்ரஸ்துதமான ப்ராசங்கிகமான அர்த்தத்தை நிகமிக்கிறார் -/ உவமானம் உபமேயம் மாறாடலமே / உண்மை ஸ்வரூபமும் அபிமதமும் மாறாடலாமே /
அந்யோன்ய ஆஸ்ரய தோஷம் இல்லை –
குணம் -ஞான ஆனந்தங்கள் / ஆந்திர குணம் -சேஷத்வ பாரதந்த்ரங்கள் /-கேவல சேஷத்வ பாரதந்தர்யங்கள் தானே விரோதி யாகும்
ஸ்வாதீன தோஷ நிவ்ருத்தி -நிர்பந்தித்து பண்ணுதல் -பராதீன ஸ்வரூபத்துக்கு விரோதி உனக்கும் /
அவனுக்கு அதீனமான பாரதந்தர்யம் இருந்தால் நைச்ய அனுசந்தானம் பண்ணி போக மாட்டான் /
அவனுக்கு அதீனமான சேஷத்வம் இருந்தால் எதிர்விழி கொடுப்பான் /
குணம் போலே-ஜாதி வாக்கியம்-பஹு முகமாக – என்றும் பாரதந்தர்யம் என்றுமாம் –
குணம் போலே தோஷ நிவ்ருத்தி என்றத்தை மாறாடி அருளிச் செய்து ஸ்தீகரித்து நிகமிக்கிறார் –

ஆகையாலே என்று கீழே சித்திப்பித்த அர்த்தத்தை அனுவதிக்கிறார் –தோஷ நிவ்ருத்தி -போலே என்றது-
தோஷம் கழிகை  ஸ்வரூப உஜ்வல்யத்துக்கு உறுப்பாய் இருக்க செய்தேயும் தோஷத்தையே போக்யமாய்
விரும்புகிற பிரணயியான   அவனுக்கு அபிமதம் ஆகையாலே யாதொரு படி பர அனுபவத்துக்கு விரோதி ஆகிறது-
அது போலே என்ற படி ..ஆந்தர குணம் -என்கிறது சேஷத்வ பாரதந்த்ர்யங்களை–இவற்றை ஆந்திர குணம் என்கிறது
ஞான ஆனந்தங்களிலும் காட்டில் ஆத்மாவுக்கு அந்தரங்கம் ஆகையாலே–
இதன் உடைய  பர அனுபவ விரோதி பிரகாரம்  கீழ் சொல்லப் பட்டது இறே–
இவ் இடத்திலும் ஆந்தர குணம் என்றது பார தந்த்ர்யம் ஒன்றையுமாம்

————————————–

சூரணை -176–

தோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம் இறே —

இப்படி சொல்லுகைக்கு தோஷ நிவ்ருத்தியில் வரும் தோஷம் ஏது என்ன ;வேறு ஒரு தோஷமும் வேண்டா
இது தானே தோஷமாம் என்கிறார் –தோஷ இத்யாதியால்-

ஸ்வாதீன தோஷ நிவ்ருத்தி தானே -நாமே நிர்பந்தித்து போக்கிய தோஷம் -தோஷத்துக்கு சாதனமாக இல்லாமல் -மட்டும் இன்றி
அதுவே பரதந்த்ர ஸ்வரூப நாசகமான தோஷமாகவே இருக்கும் -/
சரீரத்தை போக்க கேட்பதே தோஷம் -என்றவாறு -சரீரம் போனதை பற்றிச் சொல்ல வில்லை -/
விரோதி என்றது தோஷ அனுபந்தியை தானே-கர்மம் போலே – -இந்த தோஷ நிவ்ருத்தியை சொல்வது எவ்வாறு பொருந்தும் என்னில் –
தோஷத்தை இது கட்டி வைக்காதே -போக்குமது அன்றோ -அனுபந்துத்வம் வராமல் எவ்வாறு விரோதி என்னலாம்–/
நமக்கு மோக்ஷ விரோதி சரீரம் -கர்மம் தோஷ அனுபந்தி -தத் த்வாரா தோஷ அனுபந்திக்கும் விரோதித்வம் வரும் —
தோஷ நிவ்ருத்தி தோஷத்தில் மூட்டி -விடுவது போலே -விமல சரம சரீரம் -அவனுக்கு பிடித்தமாய் உள்ளதே –
சாண்டில்ய ஸ்ம்ருதி -தோஷம் அற்ற திருமேனி -மநோ வாக் காயங்கள் ஒருமைப்பாட்டு பிரசன்னதமா -இருப்பதை கொண்டு வாழ்பவர் கிடைத்தால் –
தேவிகள் சரீரம் பார்த்தாவுக்கு அபிமதம் போலே உபாதேயத்வம்/
குணம் தோஷம் சப்தங்கள் யார் கோணத்தில் பார்த்து -நரகம் ஸ்வர்க்கம் -சீதை பெருமாளுக்கு சொன்னது போலே /
பகவத் அபிப்ராயத்தால் எது குணம் தோஷம் /புண்ய பாப லக்ஷணம் -உனக்கு பிரியம் அது தானே புண்யம் -இல்லாதது பாபம் -கூரத் தாழ்வான்/
சித்துக்கும் அசித்துக்கும் சத்தை ஸ்திதி நியமனம் அனைத்தும் தன்னை நோக்கியே ரெங்கநாதர் நீர் செய்து அருளுகிறீர் –பட்டர்
நிருபாதிக உபாதாதா அவரே -தன்னைக் கொண்டே -உத்தேசித்து /நம்மை வைத்து தோஷ நிவ்ருத்திக்கு அர்த்தம் கொள்ளக் கூடாதே -/
சரீரம் நம் அபிப்ராயத்தால் தோஷம் / ஆக தோஷ நிவ்ருத்தி குணம் நிவ்ருத்தி ஆகுமே /

அதாவது காமிநியானவள் தன உடம்பில் அழுக்கு கழற்றி போகத்தில் அந்வயிக்க இச்சிக்குமா போலே-
ஸ்வத பரிசுத்தமான ஆத்ம ஸ்வரூபத்துக்கு வந்தேறியான தோஷத்தை கழித்து ஸ்வ சேஷிக்கு  போக்யமாக விநியோக பட வேணும் என்ற
ஸ்வ நிர்பந்தத்தாலே இவன் பண்ணுவித்து கொள்ளுகிற சேஷ நிவ்ருத்தி தானே-
காமிநி உடைய அழுக்கு உகக்கும் காமுகனை போலே தோஷமே அபிமதமாய் இத்தோடே தன்னை புஜிக்க
ஆதரிக்கிற அவன் உடைய போகத்துக்கு விலக்கு ஆகையாலே தோஷம் ஆம் இறே என்கை–
அவனுக்கு அநிஷ்டம் ஆவது இறே தோஷம் ஆவது –இறே -என்று பிரசித்தி தோன்ற அருளி செய்தது
கீழ் உபாதித்ததை எல்லாம் நினைத்து

——————————————

சூரணை –177-

தன்னால் வரும் நன்மை விலைப் பால்-போலே
அவனால் வரும் நன்மை முலைப் பால் போலே—என்று பிள்ளான் வார்த்தை

ஆக நன்மை தானே தீமை ஆயிற்று என்றும் தனக்கு தான் தேடும் நன்மை தீமை யோபாதி விலக்காய் இருக்கும் -என்றும்
தோஷ நிவ்ருத்தி தானே தோஷமாம் இறே -என்றும் –தான் தனக்கு தேடும் நன்மை ஹேயம் என்னும் இடம் சொல்லுகையாலே
அவன் தேடும் நன்மையே உபாயதேயம் என்னும் இடம் பலித்தது இறே —
இப்படி தான் தனக்கு தேடும் நன்மை ஹேயம் அவன் தேடும் நன்மை உபாதேயம் என்னும் இடத்தை
ஆப்த வசநத்தாலே தர்சிப்பிகிறார்  மேல்-தன்னால் -என்று தொடங்கி-

கீழே உபாய அதிகாரி விஷயத்தில் ஸ்வகத ஸ்வீ காரத்துக்கும் பரகத ஸ்வீ காரத்துக்கும் வாசி –
ஸ்ரீ -குகப் பெருமாள் -ஸ்ரீ பரத ஆழ்வான் விஷயத்தில்-முன்பு பார்த்தோம் –
கீழே மதுரா பிந்து அஹங்கார கர்ப்பம் ஆப்த வசனம் பார்த்தோம்
இங்கு ப்ராப்ய விஷயத்தில் -ஆப்த வசனத்தால் -பிள்ளான் -அபிமான புத்திரர் நம் ஸ்வாமிக்கு /
தோஷம் நிவ்ருத்தி கேட்டாலே தோஷம் என்றால் சுபத்துக்கு ஆர்ஜனம் செய்யலாமோ என்னில் -நாம் தேடும் நன்மை ஹேயம்
திருமாலை -தோஷங்கள் எல்லாம் உண்டு நன்மைகள் இல்லை என்ற பத்து பாசுரங்கள் போலே /
தனக்கு உரியன அல்லாத தன்னால் –அடியேன் -சொல்ல வேண்டுமே –தனக்கு வருத்தப்பட்டு வரும் ஞான பக்தியாதிகள்-நன்மை விலைப் பால் போலே –
விரசமுமாய் அபிராப்தமுமாய் இருக்கும் -கன்றுக்குட்டிக்கு உரியதால் அப்ராப்தம் தானே -நீர் கலந்து விரசம் / காசு கொடுத்து -மூன்று குற்றங்கள் உண்டே
தாய் பால் நிருபாதிகம் – ரசம்- பிராப்தம் அன்றோ / தனக்கு உரிய ஸ்வாமியால் வருத்தமற்று வரும் -ஸ்வரூப ஞானம்-மயர்வற —

ஸ்வயத்னத்தாலே தான் தனக்கு உண்டாக்கி கொள்ளும் நன்மை -விலைப் பால்-போலே -ஔபாதிகமாய் ,விரசமுமாய் அபிராப்தமுமாய் இருக்கும்
நிருபாதுக   ஸ்வாமியான அவன் தானே இவனுக்கு இது வேணும் என்று உண்டாக்கும் நன்மை முலைப் பால் போலே என்றது
நிருபாதிகமாய் ,சரசமுமாய்  பிராப்தமுமாய் இருக்கும் என்கை

———————————————

சூரணை -178-

அவனை ஒழிய தான் தனக்கு நன்மை தேடுகை யாவது –
ஸ்தநந்தய பிரஜையை மாதா பிதாக்கள் கையில் நின்றும் வாங்கி
காதுகனான ஆட்டு வாணியன் கையிலே
காட்டி கொடுக்குமா போலே –
இருப்பது ஓன்று –

இவ்வளவு அன்றிக்கே -எம்பெருமானை ஒழிய தான் தனக்கு நன்மை தேட இழிந்தால்
ஸ்வ விநாசமே பலிக்கும் என்னும் இடத்தை ச நிதர்சனமாக-அருளிச் செய்கிறார் –

ப்ராப்தனுமாய் ஆப்தனுமான -அவன் -தன் உடைமையான இவனுக்கு நன்மையை அவன் தேடுவது ஒழிய அப்ராப்தனுமாய் அநாப்தானுமுமாய் –
பிரிய ஹித பரையாய் ரஷிக்கிற மாத பிதாக்கள் கையில் இருந்தும் கத்த கத்த பறித்து வாங்கி துடிக்க துடிக்க வெட்டி
வியாபாரம் செய்யும் ஆட்டு வாணியன் இடம் பயலை பசலை பேணி ரஷிக்க கொடுப்பது போலே உயிர் கொலை போலே அன்றோ
பிராப்தம்–ஸூவ -வஸ்து ரஷிக்க உசிதம் பொருத்தம் / ஆப்தம் -ரக்ஷணத்துக்கு உசிதமாக உண்மையை கண்டவன்
ஜீவாத்மா -அநந்ய பர சேஷத்வம் -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னையும்-

அதாவது –
பிராப்தனுமாய்
ஆப்தனுமான அவன் இவனுக்கு நன்மை தேடுமது ஒழிய -அதற்க்கு எதிர் தட்டான தான்
தனக்கு உஜ்ஜீவன அர்த்தமான நன்மை சம்பாதிகையாவது -ஸ்வ ரக்ஷண உபயோகியான
ஞான சக்திகள் ஒன்றும் இன்றிகே -ஸ்வ மாத்ரதிகள்  உணர்ந்து நோக்க வேண்டும்படியான
ஸ்த நந்தய பிரஜையை -ரஷகரான மாதா பிதாக்கள் கையில் நின்றும் வலிய வாங்கி –
கொலைக்கு கூசாதே உயிர் கொலையாக கொன்று மாம்சங்களோடு கலசி விற்று விடும்
காதுகனான ஆட்டு வாணியன் கையிலே -இத்தை நோக்கி கொள் என்று -காட்டி கொடுக்குமா போலே
இருப்பது ஓன்று என்கை -இத்தால் சர்வேஸ்வரனே ரஷகன் -தான் தனக்கு நாசகன் –
என்னும் இடம் சொல்லப் பட்டது —

——————————————–

சூரணை -179-

தன்னை தானே இறே முடிப்பான் –

இப்படி இவன் தன்னை தானே முடித்து கொள்ளுமோ என்ன –
அருளி செய்கிறார்-

பிராப்தம் ஆப்தன் ஸ்வாமி அவன் – ததேக ரக்ஷகனான -தன்னை -தீமையை நன்மை என்று தேடி ஹிம்சித்து கொள்ளும் அஹிதகரனான தான் –
சத்தா ஹானி போகும் படி –ஸ்வரூபம் மாறி அசத் சமம் ஆகும் படி -உரு மாயும் படி -கண்ணற்று முடித்துக் கொள்ளுமே –
யானே என்று -நான் தேகம் ஸ்வ தந்த்ரன் என்னுடைய உடைமை -/ யான் சொல்லாமல் யானே -ஏகாரம் -பகவான் நாசகரன் அல்லன் -என்றாரே /
எதிர் சூழல் புக்கு உபாயமாக அவன் இருக்க– -என் இழவு பகவத் க்ருதம் இல்லையே –

அதாவது –
சர்வேஸ்வரனின் உஜ்ஜீவிப்பிகைக்கு அவசர ப்ரதீஷனாய் போரும் அவன் ஆகையாலே –
இவனுடைய விநாசதுக்கு ஒரு நாளும் அவன் ஹேது அன்று -இனி -அசந்நேவ  -என்னும்படி
தன்னை நசிப்பித்து கொள்ளுவான் தானே இறே என்கை –
யானே என்னை-திரு வாய் மொழி -2 -9 -7 – என்கிற பாட்டிலே யானே -என்று என் இழவு பகவத் க்ருதம் அல்ல –
அவன் எதிர் சூழல் புக்கு திரியா நிற்க நானே கிடீர் விநாசத்தை சூழ்த்துக் கொண்டேன் –
என்றார் இறே ஆழ்வார் –

—————————————————

சூரணை -180-

தன்னை தானே முடிக்கை யாவது –
அஹங்காரத்தையும்
விஷயங்களையும்
விரும்புகை —

இவன் தன்னை தானே முடிக்கை யாவது ஏது-என்னும்
ஆகாங்ஷையிலே அருளி செய்கிறார் –

தேஹாத்ம அபிமானம் விரும்புகையும் -ஸூவ ஸ் வா தந்திர அபிமானம் விரும்புகையும் – -விரும்புகையும் –
விஹித விஷயங்கள் விரும்புகையும் – நிஷித்த விஷயங்கள் /
ஆத்ம ஸ்வரூப நாசம் இவற்றால் -/ சேஷத்வ பாரதந்தர்யங்களை அழிப்பதே-இவை தானே ஆந்திர குணங்கள் -/
கீழில் அர்த்த நிகமான மேலில் அர்த்த அவதாரிகை /
ஸ்வ அதீனம் தோஷ நிவ்ருத்தம் -பர அதீன ஸ்வரூபத்தை முடிப்பதே யுக்த அர்த்த நிகமனம் -கேவல சேஷத்வமும் பாரதந்த்ரமும் கூடாதே /
ஸ்வரூப நாஸகம் -அநர்த்தகரம் அபோக்யம் என்று அறியாமல் விளக்கை விரும்பு மாயும் வீட்டில் பூச்சி போலே /இதுவே தன்னைத் தானே முடிக்கை /
திருமந்த்ரத்திலே இவை எல்லாம் போனதே -ஸூ போக்த்ருத்வ நிவ்ருத்தி மட்டுமே உத்தரார்த்த நமஸ் -புருஷார்த்தத்துக்கு இடையில் உள்ள-
ஆய -கைங்கர்யத்துக்கு -உள்ள – பிரதிபந்தகங்கள் போக வேண்டும்
மநோ வாக் -கத்ய த்ரயத்தில் உண்டே -எல்லாமே-அசேஷமாக தள்ளுண்ண பிரார்த்தித்தார் –
முமுஷுப்படியில் -இந்த உத்தர நமஸ் -அவித்யாதிகளும் போக வேணும் என்று அருளிச் செய்தார்
கைங்கர்யத்தில் ஸ்வார்த்ததை கூடாதே – -இது அந்யதா ஞானத்தால் வரும் -அது பிரகிருத சம்பந்தத்தால் தானே –
சரீரம் இருக்கவே -அழுக்கு உடும்பு -இது பொல்லா ஒழுக்கம் பண்ண வைக்கும் -இது பொய் நின்ற ஞானம் மூலம் –

அஹங்காரம் ஆவது -தேக ஆத்மா அபிமானமும் -ச்வாதந்த்ர்யா அபிமானமும்
விஷயங்கள் ஆவன -விஹித நிஷித்த விஷயங்கள் –
இவற்றை விரும்புகையாவது -இவற்றிலே மிகவும் பிரவணனாய் இருக்கை –
ஆத்ம ஸ்வரூபம் தான் -பகவத் அனந்யார்க்க விசேஷமாய் -பகவத் ஏக போகமாய் இறே இருப்பது –
தாத்ருச ஸ்வரூபத்தை நசிப்பிகை இறே -இவற்றிலே இவன் பிரவணன் ஆகையாவது –
உத்தர வாக்ய நமஸ் சப்தார்த்தம் சொல்லுகிறார் ஆகில் -இவை எல்லாம் என் என்னில் –
உத்தர வாக்யத்திலே நமஸிலே-புருஷார்ததுக்கு  இடை சுவரான விரோதிகள் எல்லாம்
தள்ளுண்ணும் என்னும் இடம் தோற்ற இறே -மநோ வாக் காயை  -என்று தொடங்கி மூன்று
சூர்னையாலே சகல விரோதி நிவ்ருதியையும் பாஷ்ய காரர் அருளி செய்தது –
இவர் தாமும் முமுஷு படியில் -இந்த நமஸ் சப்தார்த்தம் சொல்லுகிற அளவில் –
இதில் அவித்யாதிகளும் கழி உண்ணும் -என்றார் இறே –
ஆகையால்-இவ்விடத்திலும் -தேகாத்ம அமிமானாதி ரூபமான அஹங்காரம் –
தத் கார்யமான விஷய ப்ராவண்யம் –
தத் உபய கார்யமான பாகவத அபசாரம் –
முதலான விரோதிகள் எல்லாம் பிரசக்த அனுபிரசக்தமாக அருளி செய்கிறார் –
ஆகையால் விரோதம் இல்லை-

—————————————–

சூரணை -181-

அஹங்காரம் அக்நி ஸ்பர்சம் போலே –

இவ் அஹங்காராதிகளின் கொடுமையை விஸ்தரேண உபபாதிப்பதாக திரு உள்ளம் பற்றி
பிரதமம் அஹங்காரத்தின் கொடுமையை அருளிச் செய்கிறார் –

முந்துற அஹங்கார கொடுமையை இத்தாலும் அடுத்த சூரணையாலும் விசதீகரிக்கிறார் –
பட்ட இடம் எங்கும் எரிக்குமே-அதே போலே ஆத்ம ஸ்வரூபமும் அழியும் –
தேஹாத்ம அபிமான ரூபமாயும் விஷய ப்ராவண்ய ஜனகமாயும் -இது கொண்டு விஷயாந்தரத்திலும் மூட்டும்–
இவை தானே காரிய காரண பாவமாயும் இருக்கும் –
வேம் உயிர் -விரஹ தாபத்தால் ஆழ்வாருக்கு -சித்தம் –உடல் ஆத்ம தர்மம் கொள்ள -உருகிற்றே-நல்ல கோணத்தில் அது –
இங்கு அஹங்காரம் பட்டு கெட்டதால்-காற்று உலர்த்தாது இத்யாதியால் சொல்லி இவை பண்ணாது என்னால் முடியும் –
விரஹ தாபத்தால் பண்ணுவேன் -ஆழ்வாரை நினைத்தே ஸ்ரீ கீதா ஸ்லோகம்
ஆஸ்ரய அசியாய் -உண்ட வீட்டுக்கு இரண்டகம் -அசனம் சாப்பிடுவது –

அக்நி ஸ்பர்சம் போலே என்றது -அக்நி ஸ்பர்சம் ஆனது அன்வயித்த இடம் எங்கும்
சுட்டு உரு அழிக்குமா போலே -இதுவும் ஆஸ்ரய அசியாய் ஸ்வரூபத்தை நேராக
உரு அழித்து விடும் -என்கை-

———————————

சூரணை -182–

ந காம கலுஷம் சித்தம் –
ந ஹி மே ஜீவிதே நார்த்த-
ந தேஹம் –
எம்மா வீட்டு திறமும் –

இவ் அஹங்கரத்தினுடைய க்ரௌர்யத்துக்கு பிரமாணங்கள் காட்டுகிறார் மேல் –

பட்டு அறிந்து அருளிய இந்த வார்த்தைகள் -ஜிதந்தே -சீதா வசனம் –ஆளவந்தார் ஆழ்வார் -நான்கும் –
கீழே கீழே இருப்பதை விட மேலே மேலே உயர்ந்தது
தீர்க்க சிந்தையந்தி கீழேயே நான்கு பேரையும் பார்த்தோமே அதே போலே /
அஹங்காரம் ஸ்பர்சம் உள்ள அனைத்தும் பரித்யாகம் –பகவானால் விரும்பப்பட்ட ஒன்றையே பற்ற வேண்டும் /
ஆத்மாத்மீயங்கள் வைராக்யம் -எறாளும் இறையோன் பதிகம் –நம்மால் விரும்ப பட்டது அஹங்காரம் /ஒரு நாயகம் ஐஸ்வர்யம் /
சொன்னால் விரோதம் அஸேவ்ய சேவை வைராக்யம் / கலுஷம் ஆளுக்காள் கலங்காமல் சித்தம் தெளிந்து -வைஷ்ணவத்தும் ஒன்றே விரும்புவேன் —

ஜிதந்தே -திருவடி வட்டத்துக்குள்ளே வைத்து அருள் -வைகுண்டாதி காமத்தாலும் கலங்காதே /
அவை எல்லாம் உன்னை பற்றி அல்லாமல் என்னைப் பற்றி வந்தால் த்யாஜ்யங்கள் –
ஜிதந்தே -ஜிதம் சேஷித்வம் புண்டரீகாக்ஷ போக்யத்வம் / காம சப்தம் -இங்கே ஜென்மம் அற்றதை காட்டி –
ஸ்ரீ வைகுண்டமும் வேண்டாம் -கீழே வைஷ்ணத்வம் ஜன்மா பிரார்த்திப்பதால்
போந்து என் நெஞ்சு என் பொன் வண்டு-தேவரீர் திருவடிகளில் வ்யவச்திதமான என் நெஞ்சு- சர்வ ஜன்மங்களிலும்
தேவர்க்கே ரசமாம் படி இருக்கிற தாஸ்யத்தையே ஆசைப் படா நின்றது-து -அத்தை மட்டுமே -என்று சொல்லி –
உனக்காகவே -தனக்கே யாக என்னைக் கொள்ளும் இதே வேண்டுவது -சரக் சந்தனாதிகளைப் போலே –

ராமனை பிரிந்து ராக்ஷஸி மத்யத்தில் உள்ளேன் அவன் திருவடி பார்ஸ்வத்தில்லே இருக்க விரும்புகிறேன் -சீதா வசனம் –
ஜீவனமோ அர்த்தமோ பூஷணமோ -என்னது என்றால் தூஷணம் -நான் என்னது என்று அழுக்கு த்யாஜ்யங்கள் /–உபேஷா விஷயங்கள் /
அர்த்தம் -பிரயோஜனம் -தாதர்த்தம் -அவனுக்காகவே -மகா ரதனான பெருமாளை பிரிந்து இவற்றால் என்ன பிரயோஜனம் –
பிராணாதிகள் எல்லாம் அத்தலைக்கு வினியோகம் கொள்ளவே -/இதில் -அஹங்கார குரூரம் –
அநதிஸ்ப்ஷடை-ராமனை விட்டு பிரிந்ததால் -வி நா சப்தம் கொண்டு அர்த்தாத் சித்தம் /
தேக சுகம் வேண்டாம் –ஆத்மாவை சொல்ல வில்லையே குறைவு உண்டே

ஸ்தோத்தர ரத்னம் -57-மது கைடவரை அழித்தவனே -தேகம் பிராணம் சுகம் அசேஷ அபிலாஷைகள் ஆத்மாநாம் தன்னது என்று நினைக்கும் எதிலும் விருப்பம் இல்லை —
தேவர் சேஷத்வ்வுக்கு உள்ளே இருப்பாரையே வேண்டும் -பஹிற்பூதம் வெளியே உள்ளவற்றில் காமம் இல்லை -க்ஷணம் கூட சமிக்க மாட்டேன்-
நூறு நூறு பற்றி அருள வேண்டும் -விஞ்ஞாபனம் உண்மை – மெய் நின்று கேட்டு அருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பம் -இது மெய் –
சத்யம் சத்யம் -சரீரத்தில் இருந்து கேட்டு அருள வேண்டும் என்றும் -மெய் -இருப்தின் கால் இனி இனி —
மாதா பிதா எல்லாம் ஆழ்வார் -சொட்டை குலத்தில் உதித்தார் வந்தார் உண்டோ -ஆழ்வார் பாசுரத்தை சத்யம் என்று தமிழ் படுத்தி இந்த ஸ்லோகம்
இமையோர் தலைவா அங்கு -மது சூதனன் -இங்கே /மாம் மதியஞ்ச அசேஷமும் – தேசிகன் -வரத தேவரீர் கைங்கர்யத்துக்கு உபகரணம் ஆக்கு /
சேஷத்வத்துக்கு வெளி போனால் ஆத்மாத்மீயங்களுக்கு சத்தை இல்லையே -இருந்தும் இல்லாததும் சமம் –
தேகத்தையும் ஸஹியேன் -தாரகமான பிராணன் -இவற்றால் வரும் சுகம் -அசேஷ அபிலாஷைகள் -ஆத்மாவையும் கூட -குறை கழிந்து /
ந அந்யத் புத்ர மித்ராதிகள் -வேண்டேன் -ஆத்மாவை சொன்ன பின்பு அ அந்யத் என்றது -அசேதனங்களை சொல்லி ஆத்மாவை சொல்லி
சேதனங்களை அப்புறம் சொல்கிறார் / வந்த கோபத்துக்கு அக்ரமமாக சொல்கிறார் என்றுமாம் –
இப்படி அல்லா விடில் மது பட்டது நான் பட வேண்டும் -சத்யம் என்கிறார் –/தத் வி நாசம் -அவை எல்லாம் நாசமாகட்டும் இது சத்யம் –முகம் மாற வைத்து சொல்கிறார் –
ஆத்மாவை -நிர் அவயவம் -விசேஷண-சேஷத்வம் குணம் போகும் -குணி போகாதே -நடை பிணம் போலே இருக்குமே விசேஷணம் போன பின்பு /
மதுவை நிரசித்தவனுக்கு ஆத்மாவையும் போக்கும் அகடி கடனா சாமர்த்தியம் உண்டே அதனாலும் சொல்கிறார்
பகவத் ஏக ரஸ விநியோக அர்ஹம் –சேஷத்வம் சப்தத்தில் மறைந்த குறை இங்கு உண்டு / மோக்ஷம் வேண்டாம் சொல்ல வில்லையே அதனாலும் குறை /

எம்மா வீட்டு திறமும் செப்பம் -பேர் கூட சொல்ல அர்ஹதை -இல்லையே /ஆழ்வார் –நின் செம் மா பாதம் தலை சேர்த்து ஒல்லை –பெரும் தாளுடை பிரான் -/
நெருப்பு வாயாலே சொன்னாலே சுடுமே -நினைத்தாலே சுடுமே இவை செப்பம்-மூன்று -திருவடி முதலில் சொல்லி –
வெந்து போன வாயுக்கு தண்ணீர் வைக்கிறார் பின்பு ஒல்லை -குளிர்ந்த நீரை சடக்கென வை -என்கிறார் –
ராமன் திருவடிகளை தரிக்கும் வரை தாங்காது -வழி எல்லாம் ராஜன் சொல்லிய சூட்டை தணிக்க சொல்லிக் கொண்டே பரதன் வந்தது போலே /
பிரார்த்தித்து வந்ததாய் இருந்தால் அஹங்கார கர்ப்பமாக இருக்குமே / விலக்ஷணமாய் இருந்தாலும் -அதாகும் போலே-எடுத்து கழிக்கவும் கூடாது /
சண்டாளர் ஸ்பர்சம் த்யாஜ்யம் போலே –அஹம் மம என்றால் சண்டாளன் ஆவான் -/
இது கொண்டு ஸூ த்ர வாக்கியங்களை ஒருங்க விடுவார் ஸ்ரீ பாஷ்ய காரர் –ஜிதந்தா -இதிகாசம் -ஸ்தோத்ர ரத்னம் -சமஸ்க்ருதம் –
இவை ஒன்றை நினைக்கும் ஒன்றை சொல்லுமே –தாத்பர்யம் சொல்ல ஆழ்வார்கள் அருளிச் செயல் -/ சாத்விகர்களுக்கு மட்டுமே /அதிக்ருதா அதிகாரம் –
வர்ணாஸ்ரம த்ரை வர்க்கத்துக்கு வேதம்/ அருளிச் செயல் அனைவருக்கும் என்றாலும் முக்குணத்தவர்களுக்கும் இல்லை –
ஸ்ருதியாதி உபாதானம் அநந்தரம் தாத்பர்யம் சொல்ல இங்கும் ஆழ்வார் ஸ்ரீ ஸூ க்திகள்-/
இடையாட்டம் -பிரகாரம் -என்றவாறு -செப்பம் -நான் சொல்ல மாட்டேன் உத்தம புருஷ வினை சொல் /
நின் செம் மா பற்பு தலை சேர்த்து மன்னு -விஹித வியதிரிக்த விஷயத்தை நிஷேதம் -வைகுந்தம் விஹித விஷயம் தானே செப்பம்- வேண்டாம் என்கிறார் –
மோக்ஷம் வேண்டாம் என்கிறார் அல்லர் -என் உகப்புக்காக என்ற விசேஷணம் -இன்று அங்கே தான் உள்ளார் -அவன் உகப்புக்காக தானே –
மறுக்கும் வார்த்தையும் வேறே இல்லை செப்பம் -தானே அனைத்துக்கும் -இடையாட்டமும் வேண்டாம் என்பதால் –
-செப்பம் இருவருக்கும் -பிரஸ்தாபமே வேண்டாம் –செப்பு -செப்பல் சொல்லாமல் செப்பம் -உத்தம புருஷ பன்மையால் –
நீயும் பிரசங்கிக்கவும் வேண்டாம் நானும் வேண்டாம் என்று சொல்லவும் வேண்டோம்-என்கிறார் –

அதில் பிரதமத்தில் -ருக்வேதகிலமான ஜிதந்தா வசனத்தை அருளி செய்கிறார் –
ந காம கலுஷம் சித்தம் மமதே பாதயோஸ் ஸ்திதம்
காமயே வைஷ்ணவத்வந்து  சர்வ ஜன்மசூ  கேவலம் -இதுக்கு அர்த்தம் –
நிருபாதிக   சேஷியாய் நிரதிசய போக்யரான தேவரீர் திருவடிகளிலே
வ்யவச்திதமான என் நெஞ்சு ஆனது -ஸ்ரீ வைகுண்டாதிகள் ஆகிற வேறு ஒன்றை
ஸ்வயம் புருஷார்த்தமாக நினைத்து கலங்கி இருக்கிற தன்று -சர்வ ஜன்மங்களிலும்
தேவர்க்கே ரசமாம் படி இருக்கிற தாஸ்யத்தையே ஆசைப் படா நின்றது என்று –
கேவல பதத்தாலே -இத் தலைக்குமே இருக்கும் இருப்பை கழிக்கிறது-
து சப்தம் அவதாரண அர்த்தம் –
இத்தால் -மோஷ பர்யந்தமாக தான் உகப்பால் வரும் அது எல்லாம்
அஹங்கார கர்ப்பம் ஆகையாலே த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது –

அநந்தரம் பிராட்டி வசனத்தை அருளி செய்கிறார் –
நஹிமே ஜீவிதே நார்த்தோநைவார்த்தைர் நச பூஷணை
வசந்த்யா ராஷசீ மத்யே விநா ராமம் மகா ரதம் -இதுக்கு அர்த்தம்
மகா ரதரான பெருமாளை பிரிந்து ராஷசிகள் நடுவே வஸியா நிற்கிற
எனக்கு பிராணனால் ஒரு பிரயோஜனம் இல்லை –
அர்த்தங்கலாளுமொரு பிரயோஜனம் இல்லை –
ஆபரணங்களாலும் ஒரு பிரயோஜனம் இல்லை -என்று –
இத்தால் -பிராணாதிகள் எல்லாம் அத்தலையில் வினியோகத்துக்கான அன்றிக்கே –
தனக்கான போது-அஹங்கார ஸ்பர்சி ஆகையாலே -த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது

அநந்தரம் பரமாச்சார்யான ஆளவந்தார் வசனத்தை அருளி செய்கிறார் –
ந தேஹம் ந பிராணான் ந ச சுக மசேஷாபிலஷிதம் நசாத்மானம்
நாந்யத் கிமபி தவ சேஷத்வ விபவாத் பஹிர்பூதம் நாத
க்ஷணம் அபி சஹே யாது சததா விநாசம் தத் சத்யம் மது மதன விஞ்ஞா பநமிதம்-
இதுக்கு அர்த்தம் -எனக்கு வகுத்த சேஷியானவனே-உன்னுடைய சேஷத்வம் ஆகிற ஐச்வர்யதுக்கு
புறம்பான தேகத்தையும் -ஷணமும் சஹியேன்இத் தேகத்துக்கு தாரகங்களானே பிராணங்களையும்
சஹியேன் -எல்லாராலும் ஆசைபடபட்ட சுகத்தையும் சஹியேன் –
புத்திர மித்ர களத்ராதிகளான மற்று ஒன்றையும் சஹியேன் –
இவை இத்தனைக்கும் போக்தாவான ஆத்மா தன்னையும் சஹியேன் –
இது எல்லாம் உருக் காண ஒண்ணாதபடி சததாவாக  நசித்து போக வேணும் –
இந்த விஜ்ஞாபனம் சத்யம் –
இங்கன் அன்றாகில் தேவர்க்கு பொய்யனான மது பட்டது படுகிறேன் என்று –
இத்தால் -இத்தலையில் சேஷத்வத்துக்கு புறம்பானது எல்லாம்
அஹங்கார துஷ்டம் ஆகையாலே த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது —

அநந்தரம் -மயர்வற மதிநலம் அருளப் பெற்றவர்களில் தலையானவர்
வசனத்தை அருளி செய்கிறார் -எம்மா வீட்டு திறமும் -என்று –
அதாவது –
ஆழ்வார் மோஷத்தை கொள்ளும் -என்ன-
என் உகப்புக்காக தரும் மோஷம் -எப் பிரகாரத்தாலும் விலக்ஷணமாய் இருந்ததே ஆகிலும்
அதின் இடையாட்டமும் பிரசங்கிக்கக் கடவோம் அல்லோம் என்கை –
இத்தால் -தன் உகப்பால் வரும் மோஷமும் அஹங்கார கர்ப்பம் ஆகையாலே
ஐஸ்வர்யாதிகலோபாதி த்யாஜ்யம் என்னும் இடம் சொல்லப் பட்டது –

———————————————

சூரணை -183–

பிரதிகூல விஷய ஸ்பர்சம் விஷ ஸ்பர்சம் போலே
அனுகூல விஷய ஸ்பர்சம் விஷ மிஸ்ர போஜனம் போலே

ஆக அகங்காரத்தின் கொடுமையை அருளிச் செய்தார் கீழ்–விஷயங்களின் கொடுமையை அருளிச் செய்கிறார் மேல்-

விஷயாந்தரங்கள் அனுகூலமாகவும் பிரதிகூலமாகவும் இருக்குமே / நேரான விஷம்/ பிரசாதத்தில் கலந்த விஷம் போலே இவை /
பகவத் ஏக போகத்வமாக இவை இருக்காதே /ஆத்ம நாசகரம் / சாஸ்த்ர நிஷேத நரக ஹேது -அறிந்து அறிந்து -முடிக்கும் பிரதிகூல விஷயாந்தரங்கள் /
சாஸ்திரம் விலக்காத விஷய விஷயாந்தரங்கள் –இவையும் பகவத் வியாதிரிக்தம் -மேலோட்டமாக நன்மையாய் இருந்தாலும் தள்ளாத தக்கது –
அநந்ய போகத்வத்தை கொன்று முடிக்கும் இரண்டும் -/ அப்ராப்தம் -வாசி அற்று நிலை நின்ற சரம வேஷம் அநந்ய போகாதவம் -தானே /
ஓன்று சாஸ்த்ர நிஷிதம் -மற்று ஓன்று சாஸ்த்ர தாத்பர்ய நிஷிதம் -சாஸ்திரம் முக்குணத்தாருக்கும் தானே -/உபய
விஷய நினைவே விஷ ஸ்பர்சத்தை விட கொடியதாகுமே -அத்யந்தம் தூரம் அந்தரம் –
விசிஷ்ட வேஷ அனுகூலமாக இருந்தாலும் -அநந்ய போகத்வத்துக்கு எதிராகுமே –

லோக விருத்தமுமாய் நரக ஹேதுவுமுமாய் இருந்து உள்ள நிஹித்த விஷயம் பிரதி கூல விஷயம்-
தத் ஸ்பர்சம் விஷ ஸ்பர்சம் என்றது -பிராணனையும் சொரூபத்தையும் முடிக்கும்-
அனுகூல விஷய ஸ்பர்சம் அநந்ய போகத் ரூபமான சொரூபத்தை அழிக்கும்–
விஷம் உண்டால் தான் முடிக்கும்– இதுவோ நினைத்தாலே முடிக்கும் -விஷயம் அதி க்ரூரம்

————————————————–

சூரணை -184—

அக்னி ஜ்வாலையை விழுங்கி விடாய் கெட நினைக்குமா போலேயும்-
ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்க நினைக்குமா போலேயும்-
விஷய பிரவண னாய் சுகிக்க நினைக்கை —

இப்படி விநாசகரமான விஷயங்களில் பிரவணனாய் ஸூகிக்க நினைக்குமது -விபரீத ஞான கார்யம் என்னுமத்தை
பிராமண பிரசித்த த்ருஷ்டாந்த முகேன அருளிச் செய்கிறார் –

விஷயாந்தரங்கள் சுகத்தால் மேல் விழ பண்ணுமே -விபரீத ஞானமே -/ விழுங்குவதுவோ ஒதுங்குவதோ வேண்டாம் விழுங்க ஒதுங்க நினைப்பதே ஆபத்தே /
சேர்ந்து குளிர்ந்த தண்ணீரால் -கொழுந்து பட்டு சிவந்து உள்ள அக்னி ஜ்வாலை -சப்த ஜிஹ்வா ஏழு மனைவிகள் அக்னிக்கு–
மிடறு நாக்கு பல்லும் குளிர்ந்து விடாய் தீரலாம் என்று நினைந்து மநோ ரதம் ஆசை கொண்டு விழுங்க நினைப்பது போலே தானே விஷயாந்தரங்களால் சுகிக்க நினைக்கை -/
தேக பாதகங்கள் இவற்றை -பிரமத்தால் சுகிக்க நினைப்பது -ஸ்வரூப பாதகங்கள் அவற்றை பிரமத்தால் சுகம் என்று நினைப்பது –

அதாவது -ஆச்வாத்ய தஹந ஜ்வாலா முதன்யா சமனம் யதா ததா விஷய ஸம்ஸர்காத் ஸூ க சிந்தா சரீரிண–என்றும் –
விஷயாணாந்து ஸம்ஸர்காத் யோ பிபர்த்தி ஸூ கம் நர ந்ருத்யத பணி நச்சாயாம் விஸ்ரம் ஆஸ்ரயதே ச -என்றும்
சொல்லுகிறபடியே தண்ணீருக்கு விடாய்ப்பட்டவன் விபரீத ஞானத்தால் தாப ஹேதுவான அக்னி ஜ்வாலையை விழுங்கித் தன் விடாய் தீர நினைக்குமா போலேயும்
ஆதித்ய கிரணங்களாலே அதி மாத்ர தப்தனானவன் அந்த தாபத்தை ஆற்றுகைக்காக நிழல் என்கிற மாத்ரத்தைக் கொண்டு ஆகாம்ய அநர்த்தத்தை நிரூபியாதே
அத்யந்த குபிதமாய் படத்தை விரித்து நின்று ஆடுகிற பாம்பின் நிழலிலே ஒதுங்க நிலைக்குமா போலேயும் இருப்பது ஓன்று –
பாதக விஷயங்களை சுகாவஹமாக பிரமித்து அவற்றில் பிரவணனாய்  அவற்றை அனுபவித்து ஸூ கிக்க நினைக்குமது என்றபடி –

————————————

சூரணை -185–
அசுணமா முடியுமா போலே பகவத் அனுபவைக பரனாய்-
ம்ருது பிரக்ருதயாய் இருக்கும் அவன் விஷய தர்சனத்தாலே முடியும் படி.–

விஷய ஸ்பர்சம் ஸ்வரூப நாஸகம் -விஷய ப்ரவணனாய் ஸூகிக்க நினைக்குமது விபரீத ஞான கார்யம் என்று இ றே கீழ்ச் சொல்லி நின்றது –
இவ் விஷய ஸ்பர்சம் வேண்டா -பகவத் குணங்களில் நைந்து இருக்குமவன் இவற்றை காணவே முடியும்-என்கிறார் -மேல் –

பக்ஷி விசேஷம் -அசுணமா –/ தர்சன மாத்ரத்திலே / மானிடவற்கு என்று பேச்சுப்படில் வாழ கில்லேன் /
ஸூ போக விதுரமாக ஸ்வாமி ஏகைக பரனாய் -ஸ்வாமி தான் சொத்தை அனுபவிக்க வேணும் /
ஸ்வாமி இவனை அனுபவிக்க இசைந்து-நினைந்து நினைத்து உள் கலங்கி நைந்து இருப்பவனாய் -/விஷயாந்தரங்களைக் கண்டாலே
பீத பித்தனாய் முடிந்ததே போவான் -ம்ருது பிரகிருதி உடலாலும்-மனசில் அனுபவத்தாலும் உள்ளத்தாலும் -என்றபடி-

அசுணமா என்கிற பஷி அதி மதுரமான கான ஸ்ரவணத்தாலே
நெஞ்சு நீர் பண்டம் ஆகி இளகின தசையிலே அதி கடினமான பறையை அடிக்கக் கேட்டு
பட்டு கிடக்கும் போல் ஆய்த்து
பகவத் அனுபவம் ஒன்றிலுமே தத் பரனாய்-தத் குண  ரசத்திலே நைந்து ,
இதர விஷய பேர் கேட்கிலும் மாய்ந்து போம் படி ம்ருது பிரக்ருதயாய் இருக்கும் அவன்
பகவத் ஏக போகத்வ ரூப  சொரூப நாசகங்களான விஷயங்களை கண்ட மாத்ரத்திலே ஏங்கி முடியும் படி என்கை

————————————————-

சூரணை -186–

காட்டி படுப்பாயோ என்ன கடவதிரே—

ஆப்த வசனத்தாலே இந்த அர்த்தம் இசைவிகிறார்-

பல நீ காட்டு படுப்பாயோ -6–9–9-/பஹு வித த்ருஷ்ட்டி விஷயங்களை -விஹிதமாக காட்டி -ஆவி திகைக்க ஐவர் -மனம் திகைக்கும் படி குமைக்கும் சிற்றின்பம் –
படுப்பாயோ -ஸ்வரூப நாஸகம் -பட்டு போதல் -கெட்டு போதல் -ஆழ்வார் பிராமண பலத்தால் இந்த பிரயோகம் /விஷயாந்தரங்களை கண்கள் பெற வாங்கும் படி –
அகல விரித்து -பார்க்கும் படி -பண்ணி / பாவியேனை –கர்மங்களால் தானே -வைஷம்யம் இல்லையே உனக்கு -இவ்வாறு ம்ருதி பிரக்ருதிகள் சொல்லுவார்கள் –
இவற்றுடன் பொருந்தாமல் -அவற்றுக்கு பாங்கான நிலத்தில் இருக்கும்படி பாபங்களை பண்ணி உள்ளேன் -/

அல்ப ரசங்களாய் அநேக விதங்களாய் இருக்கிற துர் விஷயங்கள் காட்டி
அவற்றுக்கு பொருந்தாத படியாய் அவற்றுக்கு பாங்கான நிலத்திலே இருக்கைக்கு ஈடான
பாபத்தை பண்ணின என்னை முடிக்க பார்கிறோயோ  -என்கிறார் ஆழ்வார்-

————————————-

சூரணை-187–

அஜ்ஞானான விஷய பிரவணன்
கேவல நாஸ்திகனை போலே –
ஞானவானான விஷய பிரவணன்
ஆஸ்திக நாஸ்திகனை போலே –

ஏவம் பூத விஷய தோஷத்தை அறியாமையாலே இதிலே பிரவணனனான அவனுக்கும் –
இத்தை அறிந்து வைத்தே பிரவணனான அவனுக்கும் வாசியை அருளி செய்கிறார் மேல் –

ராவண பிரகிருதி -ராமனை பற்றி அறிந்து வைத்தும் ஸ்வ பாவம் திருத்த முடியாமல் -/விஷயாந்தரம் அநேக தோஷ துஷ்டம் என்றும் தத் ப்ராவண்யம்
அநர்த்த ஹேது என்று அறியாமல் அஞ்ஞானானவன் கேவல நாஸ்திகன்-ச்வரை சஞ்சார பரனாய் திரிகிற சுத்த நாஸ்திகன் –மனம் போல் திரியும் சுத்த நாஸ்திகன் –
ஹிதம் சொன்னால் இசைந்து விரக்தனாய் திருந்த யோக்யதை உள்ளவன்-
குழந்தை மண் உண்டால் தாய்-விலக்க -முதலில் ரஷிக்க -அறிவித்து திருத்துமா போலே – / சக்தன் ஞானவான்-அறிந்து வைத்தும்
விஷயாந்தர பிரவணனான இவன் -சொல்லிற்று கேட்டு திருந்த யோக்யதை இல்லை /

அஞ்ஞான விஷய பிரவணன் ஆகிறான் -விஷயங்களினுடைய தோஷ பூயஸ்தையும்-
ஸ்வரூப விருத்தத்தையும் அறியாதே -அவற்றை ஆசைப் பட்டு மேல் விழுகிறவன் –
கேவல நாஸ்திகன் ஆகிறான் -தர்ம அதர்ம பரலோக சேதன ஈச்வராதிகளுக்கு
பிரதிபாதகமான சாஸ்த்ரத்தில் பிரமாணிய புத்தி ஒன்றும் இன்றிக்கே –
ச்வரை சஞ்சார பரனாய் திரிகிற சுத்த நாஸ்திகன் –
ஞானவானான விஷய பிரவணன் ஆகிறான்-விஷயங்களினுடைய தோஷ
துஷ்டத்தையும் -ஸ்வரூப விருத்தத்தையும் அறிந்து வைத்தே -அவற்றை
விரும்பி மேல் விழுகிறவன் –
ஆஸ்திக நாஸ்திகன் ஆகிறான் -தர்ம அதர்மாதி சகல பிரதிபாதகமான சாஸ்த்ரத்தை
பிரமாணம் என்று இசைகையாலே -ஆஸ்திகன் என்று -சொல்லலாம் படி இருப்பானாய்-
அந்த சாஸ்திர மரியாதையில் அடங்காதே தோற்றிற்று செய்து திரிகையாலே -நாஸ்திக
சமனாய் இருக்கும் அவன் –

——————————————————

சூரணை -188-

கேவல நாஸ்திகனைத் திருத்தலாம்
ஆஸ்திக நாஸ்திகனை
ஒரு நாளும் திருந்த ஒண்ணாது –

த்ருஷ்டாந்தர பூதரான இவர்கள் இருவருக்கும் விசேஷம் எது என்ன –
அருளிச் செய்கிறார் –

சாஸ்த்ர தர்மாதிகளிலே பிராமண புத்தி இல்லாத கேவல நாஸ்திகனை நியாய உபதேசத்தால் மெல்ல திருத்தாலும் –
அறிந்தும் உதாசீனனாய் மனம் போலே யதா இஷ்டம் சஞ்சரிப்பவனை கால தத்வம் உள்ளதனையும் சர்வ சக்தனாலும் திருத்த ஒண்ணாது -/
அஞ்ஞான சுகம் ஆராத்யா -இசைவடைய செய்யலாம் எளிதாக /களிமண் ஈரமாக இருக்க பானை பண்ணலாமே /
தூங்குபவனை எழுப்பலாம் பாவனை பண்ணுபவனை எழுப்ப முடியாதே /

அதாவது –
சாஸ்த்ரத்தை இல்லை  என்று தோற்றிற்று செய்து திரிகிறவனை-
சாஸ்திர ஆஸ்திக்யம் பிறக்கைக்கு உறுப்பான உபதேசங்களைப் பண்ணி –
விதிநிஷேத வச்யனாம் படி திருத்தலாம் –
சாஸ்திர ஆஸ்திக்யம் உடையனாய் -தத் பிரதிபாத்ய பிரமேயங்களையும்
அறிந்து வைத்து -பாப பயம் இன்றியே -நாஸ்திகவத் ச்வைரம் சஞ்சரிக்கிறவனை
சொல்லி  அறிவிக்க தக்கது ஒன்றும் இல்லாமையாலே -உபதேச முகத்தால் ஒரு நாளும்
திருத்த ஒண்ணாது என்கை –
இத்தால் அஞ்ஞான விஷய பிரவணனை -விஷய தோஷத்வ உபதேச முகத்தாலே
விரக்தனாம் படி திருத்தலாம் -ஞானவானான விஷய பிரவணனை -விஷய தோஷாதிகளை
வ்யக்தமாக அறிந்து வைத்தே ப்ரவர்த்திக்கிறவன் ஆகையாலே -தத் உபதேசத்தால்
ஒருநாளும் திருத்த அரிது என்றது ஆய்த்து-
அஜ்ஞ்ஞஸ் சூகமாராத்யஸ் சூகதர மாராத்யதே விசேஷஞ்ச –
ஜ்ஞான லவதுர் விதத்தம் பிரஹ்மாபி நரம்  நரஞ்சபதி -என்னக் கடவது இறே-
ஆகையால் அவனிலும் இவன் நிக்ருஷ்ட தமன் என்று கருத்து –

——————————————-

சூரணை -189-

இவை இரண்டும் ஸ்வரூபேண முடிக்கும் அளவு அன்றிக்கே
பாகவத விரோதத்தையும் விளைத்து முடிக்கும் –

தன்னைத் தானே -சூரணை -180 – என்ற வாக்யத்தின் ஸ்வரூப நாசகங்களாகச் சொன்ன
அஹங்காரத்தின் உடையவும் -விஷயங்களின் உடையவும் க்ரௌர்யத்தை தனித் தனியே
அருளிச் செய்தார் கீழ் -உபயத்துக்கும் உள்ளதொரு க்ரௌர்ய விசேஷத்தை தந்த்ரேனே( சேரப் பிடித்து ஒரே வாக்கியமாக ) அருளிச் செய்கிறார் மேல் –

அகங்காரமும் விஷயாந்த ப்ராவண்யமும் சேர்ந்து விளைக்கும் அநர்த்தத்தை அருளிச் செய்கிறார் / பாகவத அபசாரம் உண்டாகும்
பகவத் சம்பந்தம் உணர்ந்து இருந்தால் வேறே எங்கும் தப்பு சொல்லாமல் நாநா வித வினைகளை நாமே செய்வதாக சொல்லிக் கொள்வோமே /
விரோதம் -வேறே அபசாரம் வேறே -இங்கே விரோதம் பகைமை பாராட்டி -அபசாரத்துக்கு மேலே -என்றவாறு –
ஸ்வரூப நாசத்தையும் -பாகவத விரோதத்தையும் -விளைத்தும் முடிக்கும் /-வந்தே தீரும் கூட்டணி பலத்தால் -/
ஸ்வரூப உஜ்ஜீவன யோக்யதையும் அழிக்கும் /அஹங்காரம் ஸ்வரூபம் மழுங்கி -திருந்த யோக்யதை உண்டே /நித்ய சம்சாரி ஆக்கி விடும் இது /
நிலை நின்ற பாகவத விரோதம் வளர்க்கும் -தானான தீமை -என்றது ஸ்வ அசாதாரணம் -தீமை / சேர்ந்தால் பலம் மிக்கு -அத்வாரக சத்வாராக தீமைகள் சேர்ந்து /
அநந்யார்ஹ சேஷத்வம் அநந்ய போக்யத்துவுக்கும் ஹானி தானான தீமை –நரகாதி துக்க அனுபவத்துக்கு ஹேது இவைகள் /
இவை நீங்கினால் ஒரு காலத்தில் அனுக்ரஹத்துக்கு இலக்காக்கலாம் -பாகவத அபசாரமோ என்றால் -ஸ்வரூப நாசம் -பண்ணி –
அனுக்ரஹத்துக்கு இலக்காவது மாத்திரம் இன்றிக்கே -நிக்ரஹத்துக்கும் இலக்காகுமே/ விஷ்ணு பக்தர்களை பூஜிப்பதே புருஷார்த்தம் -அபசாரம் அதி குரூரம் /
காலாந்தரத்திலும் உஜ்ஜீவனத்துக்கு யோக்யதை இல்லாமல் -ஆக்குமே /பகவத் அபிமதம் இருந்தால் தானே நமக்கு ஸ்வரூபம் -சத்தை /
கல்ப கோடி சஹஸ்ரானாம் ஜன்மானாம் -ந ஷாமாமி -வராஹ புராணம் -என்று தானே அருளிச் செய்கிறானே /
இவன் என்னுடையவன் அல்லன் -என்று -இவன் ஒதுங்க -காலதேவாதிகள் இடையாட்டம் இனி உண்டே இவனுக்கு /

அதாவது –
உக்த தோஷ யுக்தமான இவ் அஹங்காரமும் விஷய பிரவணமும் ஆகிய இரண்டும்
தானான ஆகாரத்திலே நின்று நசிப்பிக்கும் அளவு அன்றிக்கே –
பாகவத அபசாரம் ஆகிற மகா அனர்த்தத்தையும் விளைத்து -ஸ்வரூப நாசத்தை பண்ணும் என்கை-
ஸ்வரூபேண என்றது -ஸ்வேன ரூபேண என்றபடி –
அஹன்காராதிகளிலே ப்ரவணனால் உள்ள அளவு அன்று இறே
பாகவத அபசாரம் பண்ணினால் உள்ள பகவத் நிக்ரஹம்-

————————————————-

சூரணை-190-

நாம ரூபங்களை உடையராய்
பாகவத விரோதம் பண்ணிப் போருமவர்கள்
தக்த படம் போலே –

ஆனால் பாகவத விரோதம் விளைந்த போதே ஸ்வரூப நாசம் பிறக்கும் ஆகில்
பாகவத விரோதத்தை பண்ணிப் போரா நிற்க செய்தே -ஸ்வரூப அநு ரூபமான
நாம ரூபங்களை உடையராய் கொண்டு இருக்கிற படி எங்கனே என்ன –
அருளிச் செய்கிறார் –

வைஷ்ணவர்களை விசேஷித்து உரு மாய்க்கும் பாகவத அபசாரம் -வெந்து போன புடவை போலே /உண்டை பாவு இருந்தாலும் காற்று அடிக்க பறந்து போகுமே /
பகவத் சீற்றம் தான் காற்று –
வைஷ்ணவ நாமம் -தாஸ்ய நாமம் -இருந்தாலும் -திரு இலச்சினைகளும் -இருந்தாலும் -உள்ளு போட்கனாய் அஹங்காரத்தால் பீடித்து
பாகவத விரோதம் பண்ணினவர்கள் வெந்தும் உருவம் உடைத்தால் போலே இருப்பார்கள் –
அவனுக்கு இவன் விஷயம் ஆக மாட்டானே -புடவையை அணிய முடியாதாப் போலே -பயன் பட மாட்டான் -அநர்த்தம் –
பகவத் கோபத்தால் எரிக்கப்பட்டவர்கள் ஆகிறார்கள்

அதாவது வைஷ்ணத்வ சிஹ்னமான தாஸ்ய நாமத்தையும் -தத் அநு குணமான ரூபத்தையும்
உடையராய்க் கொண்டு -உள்ளொரு பசை இன்றிக்கே -அஹங்காராதி வச்யராய் பாகவதர்கள் திறத்தில்
விரோதியைப் பண்ணிப் போருமவர்கள் -உருக்குலைய வெந்து இருக்கச் செய்தே உருவுடைத்து
போலே தோற்று இருக்கும் தக்த படத்தோடு சத்ருசர் என்கை-

—————————————

சூரணை -191–

மடி புடவை வெந்தால் உண்டையும் பாவும் ஒத்து கிடக்கும் .காற்று அடித்தவாறே பறந்து போம் –

தக்த படத்தின் படி தன்னை தர்சிப்பிகிறார் மேல் -மடி என்று தொடங்கி-

உண்டை குற்றிழை- பாவு நெடும் இழை -/ சாம்பலும் காண ஒண்ணாத படி -சிற்றாறு பட்டுப் போகுமே -அருகில் உள்ளாரையும் துன்புறுத்தும்
அதே போலே பாக்கவே அபசாரம் -நிலை நின்ற பாகவத அபசாரத்தால் -பசை அற சேஷத்வ சத்தை அகன்று -நூல் சத்தை இல்லை -சாம்பலாகவே இருக்கும் – –
நிக்ரஹத்தால் உரு மாய்ந்து போவார்கள் -என்றவாறு பத்தராவியின் சீற்ற பெரும் காற்று -பக்தர்களை ஆவியாக கொண்டவன் அன்றோ —
கொண்ட சீற்றம் ஓன்று உண்டு -அசன்னநேவ-அசத் சமமாக ஆவார்கள் –

அதாவது தட்டி மடித்து இருக்கிற புடைவை யானது தட்டுருவ மெங்கும் வெந்து இருக்க செய்தே-
உண்டையும் பாவும் முன்பு போலே ஒத்திருக்கும் ..ஒரு காற்று வந்து சிதறிடித்த வாறே-
உருக் காண ஒண்ணாத படி பாறி பறந்து  போம் என்கை ..
அப்படியே அபசார அக்நி தக்தராய்-வைத்து நாம ரூபங்களோடு இருகிறவர்களும்-திருமண் தாசர் அடையாளம் இருந்தாலும் –
பகவத் நிக்ரக விசேஷத்தாலே பாற அடி உண்டு   ,  உருமாய்ந்து போவார்கள் என்று கருத்து

—————————————-

சூரணை -192-

ஈஸ்வரன் பண்ணின ஆனை தொழில்கள் எல்லாம் பாகவத அபசாரம் பொறாமை என்று ஜீயர் அருளி செய்வார்-

பாகவத அபசாரம் பண்ணினால் ஈஸ்வரன் அசஹமானாய் உசித தண்டம் பண்ணும் என்னும் அத்தை ஆப்த வசனத்தாலே
அருளிச் செய்கிறார் —

பூமியை ரஷிக்க -ஈஸ்வரன் நியாந்தா -தாழ நின்று பரிமாறி -பூ பாரம் நீக்கி -ஸ்ரீ பூமி பிரஹ்லாத விபீஷணன் –சீதா பிராட்டி பூமி தேவி – –
ஆள் இட்டு செய்யாமல் தானே பாகவதருக்கு அனுக்ரஹித்து ராவணாதிகளை நிரசனம் சித்ரவதம் /ஆனை தொழில்கள் அதி மானுஷ சேஷ்டிதங்கள்
சாது பரித்ராணாம் பிரதானம் எம்பெருமானார் / நஞ்சீயர் பாகவத அபசாரம் பொறாமை தான் பிரதானம் /
ரோஷ ஆதிக்யம் -சேஷ்டிதங்கள் மூலமாக காட்டி அருளுகிறார் / ராகவ யாதவ நர ஸிம்ஹங்கள்//
கார்ய வைகுண்டத்தில் இருந்து ஜனகாதிகள் நுழை தடுத்த -காரணத்தால் ஜெய விஜயர்கள் சாபம் -மூன்று யுகம் -இரண்டு இரண்டு –
இவர் சொல்லி நடந்தது தானே -இவர் சங்கல்பத்தால் நடந்த விஷயத்திலே இவ்வளவு கோபம் என்றால் –
ஸூ இச்சை அன்றிக்கே கேவலம் அஹங்காரத்தால் பாகவத அபசாரம் பட்டால் கேட்க வேண்டாமே -உசித தண்டனை –
கீழ் லோகம் ஜென்மம் இவர்களுக்கு என்றால் -26-நகரமாக இருக்கலாம் -சொல்லவே முடியாதே -என்றவாறு –

அதாவது சங்கல்ப மாத்ரத்திலே சர்வத்தையும் நிர்வஹிக்க வல்ல ,சர்வ சக்தியான சர்வேஸ்வரன் தன்னை-
அழிய மாறி  இதர ,சஜாதீயனாய் ,அவதரித்ததும் ,கை தொடானாய் நின்று செய்த ஹிரண்ய ராவணாதி நிரசன ரூபம் இத்யாதி
அதி மானுஷ சேஷ்டிதங்கள் எல்லாம் பிரகலாதன் மகரிஷிகள் தொடக்கமான அவ்வோ பாகவத விஷயங்களில் அவ்வவர் பண்ணின
அபசாரம் சகியாமையாலே என்று ஆப்த தமரான நஞ்சீயர் அருளிச் செய்வர் என்கை –

————————————

சூரணை -193–

அவமாநக்ரியா–

இந்த பாகவத அபசாரத்தின் உடைய க்ரவ்யத்தில் பகவத் யுக்தியை தர்சிப்பிகிறார் இத்தால்-

என் இடம் உள்ள பக்தி போலே பக்தர்கள் இடம் அதே அளவு அன்பு வை -எப்பொழுதும் வேண்டும்/
அபசாரம் செய்தால் சர்வ ஜகத்தையும் சம்ஹரிக்கும் /ராவணனுக்காக இலங்கையே போனதே /
ஈஸ்வரன் நிரபேஷையாக இந்த செயலே ஜகத்தை அழிக்கும் –அவமான க்ரியா தேஷாம் சம்ஹரித் அகிலம் ஜக-பகவான் வருந்த வேண்டாம்படி –ஜகமே சம்ஹரிக்கும்
நல்லவனுக்கு பெய் என பெய்யும் மழை / ஆழ்வார் சம்பந்தம் நாம் வாழ /
யா பிரீதிர் மயி சம்விருத்தா மத் பக்தேஷு சதாச்துதே –பாகவத விஷயத்தில் பகவத் விஷயத்து அளவாகிலும் வை –
அப்படிச் செய்யா விடில் வரும் அநர்த்தம் மேலே –
சர்வஞ்ஞன் சர்வ சக்தன் கூட அளவிட்டு சொல்ல முடியாத ப்ரீதி அவர்களது -என்னாலும் அவ்வளவு பிரியம் வைக்க முடியாதே —
மஹா நீயா விஷய பிரியம் பக்தி -ஏக தேச லேசத்தையும் அனுபவித்து முடிக்க – முடியாத என்னிடத்தில் மட்டும் இருந்தால் வியக்தமாகுமே
காட்டில் எரித்த நிலா போலே —என் ப்ரீதி கூட கடலில் இட்ட பெருங்காயம் போலே அல்பம் அன்றோ –
மஹாத்மா ஸூ துர்லபம் -அறப் பெரியவர்கள் – -யான் பெரியவன் -பக்திக்கு வகுத்த விஷயம் மத் பக்தேஷூ
அவமான க்ரியா தேஷாம் ,சம்ஹரித் அகிலம் ஜகத் –
ஈஸ்வரனை இல்லை செய்தவரும் ஆச்சார்யர்களை இல்லை செய்ய மாட்டார்களே /
கதா சித் கேசவ பக்தி / மத் பக்த பக்தி -துல்ய விகல்பம் இல்லை விவஸ்தித விகல்பம் ஸ்ரீ -ராமானுஜர் /
இடைவிடாமல் பாகவத பக்தி / விஷயாந்தர ப்ராவண்யம் போலே தன்னிடம் மட்டும் வைக்கும் ப்ரீதி அசத் கல்பம் -என்பதே இவன் கருத்து –
பாகவத சமாஹம் முக்கியம் / விவேகம் பண்ணாமல் கைக்கு எட்டின வற்றை உண்ணுமா போலே பகவத் விஷய ப்ரீதி -/
பாகவதர்கள் பெருமைக்கு தக்க பிரியம் வைக்க முடியாவிடில் என் இடம் உள்ள அளவாவது வைக்க வேண்டும்
பக்தி பண்ணா விடில் -அவமானம் ஆகுமே -சூஷ்ம அம்சமும் மீளாத படி சம்ஹரிக்கும் -/ இவன் சம்ஹாரத்தில் சூஷ்ம அவஸ்தை உண்டே /
மஹான்கள் தொட்டாலே எந்த சின்னதும் மேலாகும் -அவமதித்த ஒருவன் இடம் சம்பந்தம் உள்ள அனைத்தும் -மீளவும் சர்க்க யோக்யதை இல்லாமல்
சூஷ்ம அம்சமும் இல்லாத படி -தத்வ த்ரயமும் நித்யம் -இருந்தாலும் -நடைப் பிணமாகுமே ஈஸ்வரன் இடம் இவ்வளவு கோபம் வந்தால் -/
பகவானை சிந்தித்து சரணாரவிந்தம் அடைந்து பிரதிபந்தகங்களை போக்கி கொண்டவனும் -அவனை யார் ஒருவன் நிந்தித்தால் –
அவனது பிள்ளை பெண் நிலம் புலம் எல்லாம் நாசமாகும்-/திரி சூலம் வஜ்ராயுதம் -பயம் வேண்டாம் ப்ரஹ்ம வித்தை அவமதித்தால் பெரிய துக்கம் பாகவதம் சொல்லுமே –

யா பிரீதிர் மயி சம்விருத்தா மத் பக்தேஷு சதாச்துதே அவமான க்ரியா
தேஷாம் ,சம்ஹரித் அகிலம் ஜகத் -மகா பாரதம்-என்று அருளினான் இறே

————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: