ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -160-174-தத் அதிகாரி க்ருத்யம் /பெறுவான் முறை /-சித்த உபாய நிஷ்டா வைபவம்– ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ .வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/

ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –

ஆறாகப் பார்ப்பதில் – முதல் -நான்காவது -ஐந்தாவது -ஆறாவது- பிரகரணங்கள் –
ஒன்பதாக பார்ப்பதில்- முதல்- ஆறாவது – எட்டாவது- ஒன்பதாவது பிரகரணங்களாக இருக்கும் –

———————————–

த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை /-மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –

————————————————

சூரணை -160-
தனக்கு தான் தேடும் நன்மை தீமையோபாதி விலக்காய் இருக்கும் –

அவதாரிகை –
இப் பிரகரண ஆதியிலே உபாயத்துக்கு என்று தொடங்கி ,உபேய அதிகாரமும் சில சொல்லிற்றே ஆகிலும் ,அது
பிராசங்கிகம் இத்தனை–இனி உபேய அதிகார பரமான பிரகரண சேஷத்தாலும் உத்தர கண்ட அர்த்தத்தை அருளிச் செய்கிறார்-
அது செய்கிற இடத்தில் ,பாஷ்ய காரர் கத்யத்தில் ,உத்தர கண்ட அர்த்தம் அனுசந்த்து அருளின காலத்திலே நம சப்த
அர்த்தம் முன்னாக அருளி செய்கிறார் ..அதில் இந்த நமஸ் தான் பிராப்ய விரோதி நிவ்ருத்தி ,பிரதி பாதம் ஆகையாலே ,
பிராப்ய விரோதிகள் ஆனவற்றை ,தர்சிப்பதாக திரு உள்ளம் பற்றி
பிரதமம் அவற்றிலே ஒன்றை அருளி செய்கிறார் -தனக்கு தான் என்று தொடங்கி–

சேஷத்வ பாரதந்த்ர்யம் ஸ்வரூப அந்தரங்க குணங்கள் -ஸூ கதமானவை -இவையும் தீமையாகும் -அவன் அனுபவத்துக்கும் போகத்துக்கும்-
இங்கே -இஷ்ட விநியோக அர்ஹமான சேஷத்வத்தால் வரும் தீமை —
பிரமிக்கிற தான் -இந்த தசையில் கூடாதே -சேஷி இத்தை அழித்து விநியோகிக்கும் தசை –
தான் என்னை முற்றப்பருக -ஆள் கொள்வான் ஒத்து -போகத்திலே தட்டு மாறுமே –
விண்ணாட்டவர் மூத்தவர் -இவர் இங்கே பட்டத்தை யார் படுவார்-ஆர் உயிர் பட்டது – என்கிறாரே ஆழ்வார்
மநோ வாக் காயை –என்று தொடங்கி -நாநா வித அபசாரங்கள் பிரதிபந்தகங்களை க்ஷமிக்க –க்ஷமஸ்வ -என்று பிரார்த்தித்தால் போலே –
நமஸ் -சப்தார்த்தம் முன்னால் –திருமந்திர நமஸ் இல்லை த்வயத்தில் உள்ள உத்தர வாக்ய நமஸ் அர்த்தம் –
ப்ராப்ய விரோதி -இந்த நமஸ் தான் -என்று மா முனிகள் காட்டி -அருளுகிறார் -ஸூ போக்த்ருத்வ புத்தி கூடாதே /
சேஷத்வத்தை -ஸூ அர்ஹ சேஷத்வம் ஆகிய நன்மை -பர அர்ஹம் இல்லாமல் -தனக்கு தான் தேடும் சேஷத்வம் ஆகிய நன்மை —
அநாதி கால ஆர்ஜித தீமைகள் -அக்ருத கரண –நாநா வித -அவற்றுக்கு சமம் ஆகுமே —
ஸூவ அர்ஹ சேஷத்வத்தையும் போக்கி அருள பிரார்த்திக்க வேண்டும் -பாஷ்யகாரர் அருளிச் செய்தவற்றுக்கு மேலே –

வியாக்யானம்-
கீழே  ஸ்ரீ பரத ஆழ்வானுக்கு நன்மை தானே தீமை ஆய்த்து -என்று ஸ்கவத பிரபத்தி
சரண்ய ஹ்ருதய அநுசாரி அல்லாத போது தீமையாய் தலைக் கட்டும் படி சொன்ன இத்தாலே
உபாய தசையிலே தனக்கு தான் தேடும் நன்மை தீமை ஆம் என்னும் இடம் அருளி செய்தாராய்-
இப் பிரசங்கத்திலே உபேய தசையிலும் தனக்கு தான் தேடும் நன்மை தீமையாய் விடும் என்னும் இடம்
அருளிச் செய்கிறார் என்று கீழோடு இதுக்கு சங்கதி —
தனக்கு -இத்யாதி –அதாவது சேஷி யானவன் போக தசையிலே தன் வியாமோஹத்தாலே
ஆர் உயிர் பட்டது என் உயிர் பட்டது -திருவாய்மொழி -9-6-9
என்னும் படி தன் திறத்தில் மிகவும் தாழ நின்று ,பரிமாறும் அளவில்,நாம் சேஷ பூதர் அன்றோ –நம் சேஷத்வத்தை நோக்க வேண்டாவோ
என்று ஸ்வ நைச்ச்ய அனுசந்தானத்தாலே பிற்காலித்து ,தனக்கு தான் தேடுகிற சேஷத்வம் ஆகிய நன்மை அநாதி காலம் – ஸ்வதந்த்ரோஹம்
என்று இருந்த தீமை யோபாதி அவன் போகத்துக்கு பிரதி பந்தகமாய் இருக்கும் என்கை —
தீமை என்று அக்ருத்ய கரணாதிகளை சொல்லவுமாம்

————————————————-

சூரணை -161—

அழகுக்கு இட்ட சட்டை அணைக்கைக்கு விரோதி யாமாப்  போல —

சேஷி உடைய விருப்பத்துக்கு உடலாய் ஆத்மாவுக்கு அலங்காரமாய் இருக்கும் சேஷத்வம்
போக விரோதி ஆகிற படி எங்கனே என்ன அருளிச் செய்கிறார்–அழகுக்கு -என்று தொடங்கி-

நாயகன் உகக்கும் அழகுக்கு இட்ட சட்டை -போக தசையில் அணைக்கைக்கு கழற்றி வைக்குமா போலே –
ஆத்ம அலங்காரம் சேஷத்வம் போகத்துக்கு ஏற்புடையாமல் இருந்தால் விலக்கி வைக்க வேண்டுமே-
கௌஸ்துபத்துக்கு பிரபை போலே -ஆத்மாவுக்கு அலங்காரம் –
சட்டை போலே ஸ்த்ரீக்கு -இந்த அலங்காரம் சப்தம் வியபதேச அர்ஹம் -பிரயோஜகத்வேனே–

அதாவது ஸ்திரீக்கு அழகுக்கு இட்ட சட்டை நாயகன் உகப்புக்கு விஷயமுமாய் அவளுக்கு அலங்காரமாய் இருந்தது ஆகிலும் ,
போக தசையில், ஆலிங்கன விரோதியாம் போலே இதுவும் போக விரோதி யாம் என்ற படி-

————————————–

சூரணை -162–

ஹாரோபி—162–

அழகுக்கு உடல் ஆனது அனுபவ விரோதி யாம் என்னும் இடம் சேஷி வசனத்தாலே ,தர்சிப்பிகிறார் மேல் ஹரோபி-என்று-

இப்படி இருந்தும் – நூறு யோஜனை கடலும் மலையும் மரங்களும் பிரித்து வைத்து உள்ளதே என்று /
சட்டை போலே ஹாரம் -அலங்காரத்துக்கு தானே இது –
அபிமத ஆபரணமும் தசா விசேஷத்தில் அநபிமதமானதே –
ஹாரோபி -ஹாரம் கூட –சின்மயமான நித்ய ஸூ ரிகள்-தானே -லௌகிக ஹாரம் இல்லையே –
ஸ்வரூபத்துக்கு அனுரூபமான -நித்ய ஸூ ரிகள் -பிரியா அமரர்கள் –கூட இல்லாமல் –
பால் வழு லிங்க வியாக்த்யாயம் -பீருவா ஸ்த்ரீ லிங்கம் வர வேண்டும் –
பீருணா-என்பது -ரிஷிகள் இந்த பால் வழு பண்ணலாமே —
பயப்பட்டது சீதை –பயந்து தன் கழுத்தில் தான் அணியவில்லை என்றவாறு –அன்றிக்கே
ராமன் என்றும் கொள்ளலாமே -ராமன் பயந்து அணிவிக்காமல் இருந்தான் என்றுமாம் –
எடுத்து கொடுத்து பூணுவாள் -இவருக்கு பிடித்த சேஷத்வம் –
இந்திரன் பட்டாபிஷேகத்துக்கு முத்து வடம் வர வளைத்து –
பிராட்டிக்கு பிடித்ததால் தான் திருக்கண்ணால் நோக்கி திருவடிக்கு ஆம் பரிசு அருளினார்கள்
ஸூ பிரகாசம் தானே விளங்கும் – மற்றவற்றை விலக்கும் –விலகாது இருந்தாலும் பீதி அதிசயத்தாலே அதுவும் பூண வில்லை

ஹாரோபி  நார்பித கண்டே ஸ்பர்ச சம்ரோத பீருணா ஆவயோரந்தரே ஜாதா பர்வதாஸ் சரிதோ த்ருமா – என்று-
சம்ச்லேஷ தசையில் ,ஸ்பர்ச விரோதி யாம் என்னும் அச்சத்தாலே ,பிராட்டி திருக் கழுத்தில் ஒரு முத்து வடம் உட்பட பூண்பது இல்லை
என்றார் இறே பெருமாள் –பீருணா என்கிற லின்கவ்யத்யயம்  ஆர்ஷம் ..
அன்றிக்கே அழகுக்கு இட்டது அணைக்கைக்கு விரோதியாம் என்னும் இடம்
அறிவிக்கையே பிரயோஜனமாக்கி லிங்க அனுகுணமாக பெருமாள் தம் அளவிலே யோஜிக்க்கவுமாம் –
பீருணா சொல் ஆண் பால் என்பதால் அச்சம் கொண்ட சீதையாலே -பெருமாள் எந்த வித நகையும் அணிய வில்லை என்றும் கொள்ளலாம்
பிரதி கூல விஷய   ஸ்பர்சம்  விஷ ஸ்பர்சம் போலே–

——————————————

சூரணை -163–

புண்யம் போலே பாரதந்த்ர்யமும் பர அனுபவத்துக்கு  விலக்கு –

ஆனால் பின்னை பாரதந்தர்யமேயோ நல்ல தென்ன அருளி செய்கிறார் மேல்-

புண்யம் த்ருஷ்டாந்தம் -இங்கு -பாபங்களும் புண்யங்களும் விலக்காக வேண்டுமே —
பாபபுண்யம்- சேஷத்வ பாரதந்தர்யம் -சஜாதீயம் விஜாதீய சாம்யம் மூன்றும் உண்டே இவற்றுக்கும்
கர்மம் ஒரே ஜாதி இவை இரண்டும் / மோக்ஷ விரோதி என்பதால் சாம்யம் / சுகம் துக்கம் கொடுக்கும் என்பதால் விஜாதீயம்
சேஷிக்கு பிரியம் -சஜாதீயம் /சேஷத்வம் மட்டும் -நைச்ய அனுசந்தானம் பண்ணி நகரலாம் -பாரதந்தர்யம் அறிந்தவன் நகர முடியாதே -இதனால் -விஜாதீயம் -/
அனுபவிக்க இரண்டும் விரோதியாய் இருந்தால் அவனுக்கு பிடிக்காதே /புண்யம் -நன்மை என்றும் – ஸத்கர்மா போலவும் –துரும்பு போலே விலக்க வேண்டும் —
அநாதி கால ஆர்ஜித புண்யம் மோக்ஷத்துக்கு விலக்காகுமே–பர அனுபவத்துக்கும் மோக்ஷம் போவதற்கும் என்று –
ஸூ வாதீன சேஷத்வ பாரதந்தர்யங்கள் த்யாஜ்யம் -போக அதீனமானவை போக உபகரணங்கள் போலே உபாதேயம் –
தத் போக அனு ரூபமான சேஷத்வ பாரதந்தர்யங்கள் பர அதிசயத்வேன-சேஷித்வ ஸ்வ தந்த்ரனுடைய சரம -பரா காஷ்டை போலே இருக்க வேண்டுமே – –
போகத்துக்கு அனுகுணமாக எது இருப்பதோ அதுவே ஸ்வரூபம் –
கேவல பாரதந்தர்யம் -எதிர் விழி கொடுக்காமல் இருப்பது /கேவல சேஷத்வம் -நைச்ய அனுசந்தானம் பண்ணி விலகுவது –
இரண்டுமே அவனுக்கு – போக விரோதிகள் தானே –
நைச்ய அனுசந்தானம் பண்ணி விலக்க மாட்டானே இவன் -அனுபவிக்கும் போது விலக்காமல் இருக்க வேண்டும் -பரதந்த்ரன் விலக்க மாட்டான் –
எதிர் விழி கொடுக்க மாட்டான் -அவனை விட கொஞ்சம் தேவலை -அது விஜாதீயத்வம் –
கேவல இல்லாமல் சேஷத்வமும் பாரதந்த்ரயமும் சேர்ந்தே இருக்க வேண்டும் -என்றவாறு –

புண்யம் என்றது கீழ் நன்மை என்கிற சொல்லாலே சொன்ன சேஷத்வத்தை ..அது கீழ் சொன்ன படியே
ஸ்வ நைச்ய அனுசந்தாதாலே இறாய்க்கைக்கு உறுப்பாய் கொண்டு யாதொரு படி போக விரோதியாய் நிற்கும்
அப்படியே போக தசையிலே ,அவனுக்கு எதிர் விழி கொடாதே அசித் போலே கிடைக்கைக்கு உறுப்பான
கேவல பாரதந்த்ர்யமும் எதிர் விழி சாபேஷனான ஈஸ்வரனுடைய போகத்துக்கு இடறு படியாம் என்ற படி-
அன்றிக்கே புண்யம் என்கிறது சத் கர்மத்தையாய் அது யாதொரு படி பாபத்தை காட்டில் –
வியாவிருத்தமாய் இருக்கச் செய்தே பகவத் பிராப்தி பிரதி பந்தமாய் நிற்கும் .அப்படியே இறாய்க்கைக்கு உறுப்பான
சேஷத்வத்தில் காட்டில் ,அசித்து போலே எதிர் தலை இட்டது வழக்காய் இருக்கைக்கு உறுப்பு ஆகையாலே
வ்யாவிருதமான பாரதந்த்ர்யம் எதிர் விழி கொடுக்கைக்கு உறுப்பு அல்லாமையினாலே
பரனுடைய அனுபவத்துக்கு பிரதி பந்தகமுமாம்-என்னவுமாம்
இத்தாலே கேவல சேஷத்வமும் கேவல பாரதந்த்ர்யமும் ஓரோர் ஆகாரங்களாலே  போக விரோதியாய் நிற்கும்-
பாரதந்தர்யதோடு கூடின சேஷத்வமே உத்தேசம் என்கை

—————————————–

சூரணை -164–

குணம் போலே சேஷ நிவ்ருத்தி –164–

இப்படி உபேய தசையிலே சேஷத்வ பாரதந்தர்யங்கள் பர அனுபவத்துக்கு விலக்காம் படியை
அருளிச் செய்த அநந்தரம்
பிராப்தி தசையிலே இவன் உடைய நிர்பந்த மூலமாக உண்டான தோஷ நிவ்ருத்தி-
பர அனுபவத்துக்கு விலக்காம் படியை அருளிச் செய்கிறார் இத்தால்–

சரம சரீர ஆசை உண்டே / நிர்பந்திக்கக் கூடாதே -/கேவல சேஷத்வ பாரதந்தர்யங்கள் பிடிக்காதது போலே இதுவும் -பர அனுபவத்துக்கு இலக்கு /
நிச்சய அனுசந்தானம் கூடாதாப் போலேயும் / எதிர்விழி கொடுக்காமல் இருந்தாப் போலேயும் இதுவும் /
அருள் பெறுவார் தசையில் -திருவட்டாறு எம்பெருமானும் இருக்க –
ஆழ்வார் நிர்பந்திக்கும் சந்தர்ப்பம் பிராப்தி தசையில் இவனுடைய நிர்பந்தம் மூலமாக தோஷ நிவ்ருத்தியும் விலக்கு தானே /
குணம் ஏக வசனம் இங்கு -அந்தரங்க குணமாக இவை இருப்பதால் -ஏக வசனம் -ஜாதி ஏக வசனம் –
காம க்ரோத சத்ருவை வெல்ல வேண்டும் -ஒரே தாய் பிள்ளைகள் போலே /
தத்வமஸி போலே நடுவில் உள்ளவற்றை சேர்த்தே அர்த்தம் கொள்ள வேண்டும் இந்த சூரணைக்கு/
மங்க ஒட்டு உன் மா மாயை -விலக்கு ஆகுமே –எம்பார் ஸ்வாமி அரும் பொருளில் இதுக்கு சமாதானம் உண்டே -/
விமல சரம திருமேனியில் ரமித்து இருப்பான் -ரமதே தஸ்மத் ஜீரண -சுருதி /ஸ்வரூபஞ்ஞர் ஆழ்வார் -வேர் சூடுபவர் –விக்ரகத்தோடே ஆதரிக்கும் /
வஞ்சக் கள்வன் -பாட்டை / அவனுக்கே அருசி பிடிக்கும் படி உபதேசித்து –
தேகத்தின் ஹேயத்தை அறிவித்து அவனைக் கொண்டே விடுவித்துக் கொண்டாரே /
தோஷ நிவ்ருத்தி தன் விருப்பம் படி இல்லை-அவன் கேட்டு அவனே தள்ளினார் /
மாற்றி நினைக்கும் மருள் உண்டோ பகவானுக்கும் -ஆஸ்ரித வியாமோஹத்தால் வந்த மருள் தெருள் தானே /
ஸார்வ பவ்மன் உண்ணப் புக்கால் -நாலு ஆறும் அறிவிக்கும் ஆழ்வார் —
உண்மை ஸ்வ பாவம் அருளிச் செய்யத் தானே அடியிலே நீர் மயர்வற மதி நலம் அருளினீர் என்று –
அறிவிக்க -ஸ்வ பாவம் அறிந்த ஸார்வ பவ்மன்– – சொல்லிக் கொண்டு இருக்கும் தனது தொழிலை செய்யாமல் இருந்தால் மஹா அபராதம் /
சர்வ விஷயங்களையும் அறிவிக்க தானே இவன் கொடுத்த மதி நலம் / இதை பெற்ற இடத்திலேயே திரு நகரியிலே அங்கேயே சமித்து –
பொலிந்து நின்ற பிரான் தன் திவ்ய ஆஸ்தானத்திலே – இந்த சரீரம் பரம பதம் கூட்டி போக மாட்டேன்–இங்கேயே அனுபவிக்கக் குறை இல்லையே – –
பொலிந்து நின்ற பிரான் அனுபவித்திக் கொண்டே இருக்கிறானே -ஆத்மாவை அனுபவிக்கும் இடத்தில் அத்தை அங்கே அனுபவித்து –
இத்தை இங்கேயே அனுபவித்திக் கொண்டு இருக்கிறானே /

குணம் என்கிறது -கீழ் விரோதியாக சொன்ன சேஷத்வ பாரதந்த்ர்யங்கள் இரண்டையும்-
இவை தான் ஆத்மாவுக்கு அந்தரங்க குணமாய்  இறே இருப்பது —
இது போலே தோஷ நிவ்ருத்தி என்றது
இவ் ஆத்மா குண துயமும் கீழ் சொன்ன படியே யாதொரு படி பர அனுபவத்துக்கு விலக்கு ஆகிறது
அப்படியே இவன் நிர்பந்தித்துக் கொள்ளுகிற பிரகிருதி சம்பந்தம் ஆகிற தோஷத்தின் உடைய நிவ்ருத்தியும் –
சரம சரீரம் ஆகையாலே இத்தோடு சிறிது தான் வைத்து அனுபவிக்க இச்சிக்கிற அவனுடைய அனுபவத்துக்கு- விலக்காம் என்கை ..
குணம் போல என்று பாரதந்த்ர்யம் ஒன்றையும் திருஷ்டாந்தம் ஆகிறதாகவுமாம்–

———————————————

சூரணை -165–

ஆபரணம் அநபிமதமாய் அழுக்கு அபிமதமாய் நின்றது இறே  –

தோஷ நிவ்ருத்தியில் ஆத்ம ஸ்வரூபம் அத்யந்த பரிசுத்தமாய் போக்யமாயிருக்கும் அதனை அன்றோ-
ஆன பின்பு தோஷ நிவ்ருத்தி அநபிமதமாய் தோஷம் அபிமதமாய் இருக்க கூடுமோ என்ன அருளிச் செய்கிறார்-
ஆபரணம் என்று தொடங்கி-

தோஷம் அபிமதமாய் ஸூ தோஷத்தை போக்கும் அதுவும் அநபிமதமாகுமோ -என்னில் / கண் மூடி தனமாக ஒருவரை ஆசை கொண்டால் –
அசோகவனிகை பிராட்டி அணிந்த ஆபரணம் பெருமாளுக்கு அந பிதமாய் -பத்து மாதம் -உடை முடி பேணாத அழுக்கு அபிமதமாய் இருந்ததே –
அப்படியே ஸூ யத்ன க்ருத நிர் தோஷத்வம் –சரீரம் கழற்றும் பொறுப்பு அவரது -அங்கீ கார தசையில் அநபிமதமாய் –
ச தோஷத்வமே வத்சலனான ஸ்வாமிக்கு அபிமதமாய் இருக்குமே –
உண்ணும் சோற்றை திரு வாயில் இருந்து விலக்குவதுக்கு ஒக்குமே / லௌகீகத்திலே இப்படி காண்கிறோமே /
நீண்ட கண்கள் காது வரை நீலோத்பல புஷபம் போலே இருக்க வேறே பூ வேண்டுமோ வீண் தானே /அழுக்குடன் பீளை இருக்குமே -/அது உகந்தானே /
மலர்ந்த மார்பு இருக்க ஹாரம் பாரம் தானே / / இயற்க்கை மணம் இருக்க சந்தனம் வீணே

அதாவது லோகத்தில் விஷய பிரவணராய் இருப்பார்க்கு அபிமத விஷயத்தின் உடைய ஒவ்ஜ்வல்ய ஹேதுவான ஆபரணம்
அநபிமதமாய் அனவ்ஜ்வல்ய ஹேதுவான அழுக்கு அபிமதமாயிரா நின்றது இறே என்கை-

——————————————-

சூரணை -166–

ஸ்நானம் ரோஷ ஜனகம் என்கிற வார்த்தையை ஸ்மரிபது  –166-

இது தான் லௌகிகத்தில்  அன்றிக்கே ,பிராட்டி திறத்தில் அவன் தனக்கும் இப்படி இருந்தமைக்கு
ஸூ சுகமான வார்த்தையை ஸ்மரிக்கிறார்-மேல் ஸ்நானம் -என்று தொடங்கி-

ராம வார்த்தை /சீதா வார்த்தை / இருவர் அபிப்ராயப்படி அருளிச் செய்த ஸ்லோகங்கள் உண்டே /திருவடி நினைவு படுத்த பரபரப்புடன் விபீஷண பெருமாள்
அஸ் நாதா தர்ச இதி த்ரஷ்டும் இச்சாமி சீதை சொல்ல- ராமர் வார்த்தையை உள்ளர்த்தம் புரியாமல் விபீஷணன் சொல்ல /
சதஸ் வார்த்தை -வேறே உள்ளக கருத்து வேறே -விபீஷணன் நிர்பந்தம் -பிராட்டி மருந்து ஸ்நாநம் /
முதலிகளை தள்ளிய அபசாரம் மூடு பல்லக்கில் கூட்டி வந்ததை தப்பாக கொண்டு -இது இரண்டாவது காரணம் பெருமாள் கோபம் கிளப்ப
/பார்க்க பிரதிகூலயை-கண் புரை வந்த வனுக்கு தீபம் போலே /
ராக்ஷஸாதிப -என்னை இப்படியே காட்ட ஆசைப்படுகிறேன் -பர்த்தா ஆஜ்ஜா இது -வாய் வார்த்தையாக சொன்னதை -/
திருவடி பிராட்டி கருத்து அறிந்து விபீஷணனுக்கு கண்ணும் கண்ணநீருமாய் அழுக்கு உடம்புடன் ஸ்நானம் பண்ணாமல் இருக்கும் தன் திரு உடம்பை
பெருமாளுக்கு காட்ட ஆசை கொண்டதை – அறிவிக்க / பெருமாளுக்கு உண்டான ஹார்த்த பாவம் கண் மூக்கு தோள் இவை காட்டினாலும் –
அறியாமல் வாய் வார்த்தை மட்டும் கேட்டு நிர்பந்தித்தான் –
ஸ்நானம் பண்ணி வந்தால் பர்தாவுக்கு ரோஷம் வரும் என்று பிராட்டி சொன்னதாகவும் கொள்ளலாமே –

அதாவது பிராட்டி திரு மஞ்சனம் செய்து வந்தது -பெருமாளுக்கு ரோஷ ஜனகம் என்னும் அத்தை பிரகாசிப்பிக்கிற
தீபோ நேத்ரா துரச்யேவ பிரதிகூலாசி மே த்வம் –என்கிற வார்த்தையை இவ் அர்த்தத்துக்கு உடலாம் ஸ்மரிப்பது என்கை-
சபங்கா மலங்காரம் – இத்யாதி படியே –பத்து மாசம் திரு மஞ்சனம் பண்ணாமல் அழுக்கு அடைந்து இருந்த வடிவை காண ஆசை பட்டு இருந்தவருக்கு
இவள் திரு மஞ்சனம் பண்ண இது  ரோஷ ஜனகம் என்பது சொல்ல வேண்டா இறே ..
ஆனால் தீர்க்க முஷ்ணம் விநிச்வச்ய மேதிநீவ மவலோகயன்  உவாச மேகசங்காசம் விபீஷண உபச்திதம் —
திவ்ய அங்க ராகம் வைதேகீம் திவ்ய ஆபரண பூஷிதாம்  இஹா சீதாம் சிரச்ச்னான முபச்தாபாய மாசிரம்-என்று
இவர் தாமே அன்றோ திரு மஞ்சனம் பண்ணி அலங்கரித்து கொண்டு வரும்படி ஸ்ரீ விபீஷண ஆழ்வானைப் பார்த்து அருளிச் செய்தது ..
இப்படி இருக்கச் செய்தே பின்னை ரோஷம் ஜனிப்பான் என் என்னில் ..  நாம் நல் வார்த்தை சொல்லி விடக் கடவோம்- தானே அறியாளோ
என்று சொல்லி விட்டார் இத்தனை போக்கி அது சஹ்ருதமாய் சொன்ன வார்த்தை இல்லை– அல்லாத போது ருஷ்டராக கூடாது இறே ..
அவன் தான் -அஸ்நாதா த்ரஷ்டும் இச்சாமி பர்தாரம் ராஷசாதிப –என்று இருக்கச் செய்தே ,
யாதாஹா ராமோ   பார்த்தா தே ததாதத் கர்த்து மர்கசி–என்று
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் நிர்பந்தித்துச் சொன்ன பின்பு அன்றோ திரு மஞ்சனம் பண்ணிற்று என் என்னில் —
அவன் பெருமாள் திரு உள்ளக் கருத்தை அறியாதே ,அருளிச் செய்த வார்த்தையைக் கொண்டு ,சொன்னான் இத்தனை இறே
எல்லாம் செய்தாலும் பத்து மாசம் ராவண பவனத்திலே இருந்த இவள் சிறை இருந்த வேஷத்தோடே சென்று காணும் அத்தனை அல்லது ,
திரு மஞ்சனம் பண்ணேன் என்று இருக்க வேணும் இறே ..அது செய்யாதே சடக்கென திரு மஞ்சனம் செய்து வந்தாள் இறே
அது அவ் இருப்பு காண ஆசை பட்டு இருப்பார்க்கு ரோஷ ஹேது ஆயத்து –ஆகையாலே ஸ்நானம் ரோஷ ஜனகம் என்னக் குறை இல்லை
அன்றிக்கே-ஸ்நானம் ரோஷ ஜனகம் என்ற வார்த்தை யாவது-ஸ்ரீ விபீஷண ஆழ்வான் திரு மஞ்சனம் செய்து
அருள சொன்ன போது ,பெருமாள் திரு உள்ளத்தை அறியும் அவள் ஆகையாலே அவர்க்கு இது அநபிதம் ஆகையாலே
ரோஷ ஜனகமாய் வந்து முடியும் என்று நினைத்து -அஸ்நாதா த்ரஷ்டும் இச்சாமி பர்த்தாரம் ராஷச அதிப -என்று
பிராட்டி அருளிச் செய்த வார்த்தையும் ஆகவுமாம்..
ரோஷ ஜனகம் என்னும் அத்தை பிரகாசிப்பிக்கும் வார்த்தை என்று கீழ் சொன்ன நியாயம் இங்கும் ஒக்கும்

——————————————

சூரணை -167–

வஞ்ச கள்வன் மங்க ஒட்டு —

இப்படி அபிமத விஷயத்தில் ,அழுக்கு உகக்குமா போலே
ஆத்ம ஞானம் பிறந்தவன் அழுக்கு உடம்பு என்று கழிக்கிற இத் தேகத்தை
ஈஸ்வரன் விரும்ப எங்கே கண்டது என்ன அருளிச் செய்கிறார் -வஞ்ச கள்வன் -இத்யாதியாலே-

அனுஷ்டான சேஷமாக ஆஸ்ரிதர் அழுக்கை உகப்பது இதில் -கீழே அனுஷ்ட்டிக்க முடியாமல் கோபம் /-10–7-வஞ்சக கள்வன் தொடங்கி
மங்க ஒட்டு என்னும் அளவாக பத்து பாட்டுக்கள்
பூவோடு ஏறின நாறு -சம்பந்தம் கொண்டு விரும்புமா போலே ஒரு நீராகக் கலந்து –நின்றார் அறியா வண்ணம் -பெரிய பிராட்டியாரும் அறியாத படி
ஆத்மாத்மீயங்களை நெஞ்சும் உயிரும் உண்டு தானே போக்தாவாயும் பரிபூரணனனுமாய் ஆனான் –
விட இசையாமல் விரும்பி -ஆழ்வார் த்யாஜ்யமான தேகம் -அபிமத விஷயம் –ஆத்ம ஞானம் பிறந்த இவன்
அழுக்கு உடம்பு எச்சில் வாய் என்று கழிக்கும் தேகத்தை அன்றோ விரும்புகிறான் /
அதீத சபலமாக -விமல சரம திருமேனியுடன் திரு நாட்டுக்கு கொண்டு போக -இதனுடைய தோஷங்களை உணர்த்தி -மங்கும் படி இசைய கால் கட்டி –
நன்கு என் உடலம் கை விடான் -என்னை முற்றும் உயிர் உண்டான் –நாங்கள் குன்றம் கை விடான் -திருமலை அளவு இவர் இடம் வ்யாமோஹம் –

வியாக்யானம்
அதாவது வஞ்ச கள்வன் என்று தொடங்கி மங்கவோட்டு என்னும் அளவாக தன்னுடைய திரு மேனியிலே ,
அத்ய ஆதரத்தைத் பண்ணி அவன் அனுபவித்த படிகளையும்.
அவ் அளவுக்கு இன்றிக்கே அதி சாபலத்தாலே இத் திருமேனியோடு தம்மை திரு நாட்டில் கொண்டு
போவதாக அவன் அபிவிநிஷ்டானாய் இருக்கிற படியைக் கண்டு ,–பிரானே இப்படி செய்து அருள ஒண்ணாது –
என்று நிர்பந்தித்து இதின் உடைய தோஷத்தை அவனுக்கு உணர்த்தி ,இப்படி ஹேயமான இது  மங்கும் படி இசைய வேணும் என்று கால் கட்டி ,
அவன் இத்தை விடுவித்து கொண்டு ,போம்படி வருந்தி இசைவித்துக் கொண்ட படியும் அருளி செய்தார் இறே ஆழ்வார் –திருவாய்மொழி -10-7–

————————————

சூரணை -168–

வேர் சூடும் அவர்கள் மண் பற்று கழற்றாது போல் ஞானியை விக்ரஹத்தோடு ஆதரிக்கும் —

த்யாஜ்ய தேக வியாமோஹம் / மணத்தின் வாசி அறிந்து போகிகள் -மண்ணை உதறினால் மணம் குன்றும் என்னுமா போலே
பரம போகியான எம்பெருமானும் விமல சரம தேகியான ஞானியை -விக்ரஹத்தை விடுவிக்கில் ஞான வாசனை செவ்வி குலையுமே என்று ஆதரிப்பான் –
அபிமத விஷயத்தில் –அழுக்கு போலே ஆதரிப்பது மட்டும் இல்லை -கோபம் வரும் -பிடிக்காதது மட்டும் இல்லை –கீழே பார்த்தோம் –/
ஆதரிப்பது மட்டும் இல்லை –தேகத்தை கழற்ற ஒட்டான்-/தேகம் படைத்த அனைவருக்கும் இப்படி பட்ட ஆழ்வாரை காண்பது கர்தவ்யம் அன்றோ –
ஞான பரிமளம் தோற்றும் இந்த விக்ரஹத்திலே -/

————————————

சூரணை -169–
பரம ஆர்த்தனான இவனுடைய
சரீர ஸ்திதிக்கு  ஹேது
கேவல பகவத் இச்சை இறே –

இன்னம் முகாந்தரத்தாலே இவன் தேஹத்தில்- அவன் விருப்பத்தை-தர்சிப்பிக்கிறார் –

பகவத் ஸ்வா தந்தர்யம் -யாராலும் தாண்ட முடியாதே / சம்சாரம் அடிக் கொதித்து -உடன் கூடுவது என்று கொலோ திருஷ்ணை அதிகரித்து –
பரம ஆர்த்த திருப்த பிரபன்னனுடைய நிர்மூல கர்ம சரீரத்தை, -வஸ்து வாசி அறிந்த அவன் இச்சையால் –
முமுஷுத்வ பரிபாகம் ஏற்பட்ட பின்பும் இருக்கைக்கு அடி -நித்ய போக்தாவின் இச்சையே -போக அனுகுண கேவல இச்சை –
முன்பு உள்ளது -லீலா அனுகுண கர்ம நிபந்தன இச்சை /
வேறே கோணத்தாலே -என்றது -கீழே நம்மாழ்வார் ஸ்ரீ ஸூக்தி கொண்டு மங்க ஒட்டு இத்யாதி / இப்பொழுது பிரபத்தி ஸ்வ பாவம் விளக்கும் சாஸ்திரம் –
பிராரப்த கர்மங்கள் முடிந்த பின்பு சரீரம் தொலைந்து போவான் -இதுவும் அவன் இச்சித்தால் தான் நடக்கும் -சக ஹ்ருதயம் –வேண்டுமே –
பிராரப்த கர்மம் அடியாக இருக்கிற த்ருப்த விஷயத்திலும்-வர்த்தமான பிராரப்த கர்மம் உண்டே இவனுக்கு –
பகவத் இச்சை உண்டாகையாலே அத்தை வ்யாவர்த்திக்கிறார் கேவல சப்தத்தாலே

பரம ஆர்த்தன் ஆகிறான் –
இந்நின்ற நீர்மை இனியாம் உறாமை -திருவிருத்தம் -1
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் -திருவாய்மொழி -3-2-2 –
எங்கு இனி தலை பெய்வன் -திருவாய்மொழி -3-2-9 – – –
நாளேல் அறியேன் -திருவாய்மொழி -9 -8 -4 –
தரியேன் இனி -திருவாய்மொழி – 5- 8- 7-
கூவிக் கொள்ளும்  காலம் இன்னம் குறுகாதோ -திருவாய்மொழி -6 -9 -9 – என்று
சம்சாரத்தில் அடிக் கொதிப்பாலும் –
பகவத் அனுபவத்தில் பெரு விடாயாலும் –
இதுக்கும் மேல் இல்லை என்னும்படி ஆர்த்தி விளைந்தவன் -ஏவம் பூதனானவனுடைய சரீர ஸ்திக்குக்கு ஹேது- பிராரப்த  கர்மம் என்ன ஒண்ணாது இறே –
சர்வ பாபேப்யோ மோஷ இஷ்யாமி -என்றதோடு விரோதிக்கையாலே –
ஆர்த்தா  நா மாசுபலதா சக்ருதேவ  கருதா ஹ்யசவ் த்ருப்தா நாமபி ஜந்தூனாம் தேஹாந்தர  நிவாரிணீ-என்று இறே பிரபத்தி ஸ்வாபம் தான் இருப்பது –
ஆகையால் இவனுடைய  சரீர ஸ்திதுக்கு ஹேது -இன்னமும் சில நாள் இவனை  இச் சரீரத்தோடே வைத்து அனுபவிக்க வேணும் -என்கிற
ஈஸ்வர இச்சை ஒழிய வேறு ஓன்று இல்லாமையாலே -கேவல பகவத் இச்சை இறே -என்கிறார்-
பிராரப்த கர்மம் அடியாக இருக்கிற த்ருப்த விஷயத்திலும் -பகவத் இச்சை உண்டாகையாலே அத்தை வ்யாவர்த்திக்கிறார் கேவல சப்தத்தாலே

——————————————————-

சூர்ணிகை -170-

திருமாலிரும் சோலை மலையே–என்கிறபடியே -உகந்து அருளினை நிலங்கள்
எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் –

இப்படி தன் விருப்பத்துக்கு விஷயமான இவன் சரீரத்தை அவன் விரும்பும் பிரகாரம் அருளிச் செய்கிறார் மேல் –
திருமால் இரும் சோலை மலை-என்று தொடங்கி –

கேவல ஸூவ இச்சையாஸ்திதமான இவன் விமல சரம தேக ஏக தேசத்தில் –ஆழ்வார் -உகந்து அருளின நிலங்கள் –
இருப்பது கிடப்பது நிற்பது -மால் செய்கின்ற மால் அனைத்து வியாபாரங்களையும்
ஒரு மடை கொண்டு தான் உகந்து அருளின நிலமான-அவ்வுருவான – ஆழ்வார் திருமேனி ஏக தேசத்தில் செய்கிறார் –
இவ்வளவு நாளும் தன் விருப்பமான சரீரத்தை-வெறுத்து -மால் பால் மனம் சுளித்து முமுஷுவான பின்பு அதில் –
அவன் விருப்பம் கொள்ளும் பிரகாரத்தை அருளிச் செய்கிறார் -நாம் சரீரம் விரும்ப ஆத்மாவை அவன் வெறுப்பான் /
நாம் சரீரத்தை வெறுக்க -அவன் இந்த அசேதனத்தை கூட விரும்புகிறான் –
நாம் மேலோட்டமாக பாதுகாக்க அவன் திவ்ய தேசம் போலே அன்றோ பார்க்கிறான் –

அதாவது தெற்குத் திருமலையையும் திருப் பாற் கடலையும்-என் உத்தம அங்கத்தையும் ஓக்க விரும்பா நின்றான் –
ஸ்ரீ வைகுண்டத்தையும் வடக்குத் திரு மலையையும் -என்னுடைய சரீரத்தையும் ஓக்க விரும்பா நின்றான் என்றார் இ றே ஆழ்வார் –
இப்படி ஓரோர் அவயவங்களிலே இரண்டு இரண்டு திருப்பதிகளில் பண்ணும் விருப்பத்தைப் பண்ணினான் என்ற இது
எல்லா திருப்பதிகளில் பண்ணிய விருப்பத்தை ஓரோர் அவயவங்களிலே பண்ணி நின்றான் என்னும் அதுக்கு உப லக்ஷணம் –
பிரதானம் -விபூதி அத்யாயம் அருளிச் செய்தது போலே -இங்கும் -பிரதான இந்த திவ்ய தேசங்களை அருளிச் செய்கிறார் –
அப்ரதானம் உப லக்ஷணம் உண்டே –
ஆகையால் அப்பாட்டில் சொல்லுகிறபடியே தனக்கு அபிமதமான திவ்ய தேசங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை ஞானியான
இவனுடைய சரீர ஏக தேசத்திலே பண்ணும் என்கிறார் –

————————————————-

சூரணை -171-

அங்குத்தை வாசம் சாதனம் –
இங்குத்தை வாசம் சாத்யம் –

உகந்து அருளின தேசங்கள் எல்லா வற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவ் விஷயம்
ஒன்றிலுமே பண்ணும் என்றார் கீழ் -இவ் விஷயம் சித்தித்தால் உகந்து அருளின நிலங்களில்
ஆதாரம் அவனுக்கு சங்குசிதமாம் என்னும் இடம் அருளி செய்கைக்காக -இரண்டு இடத்துக்கும்
உண்டான வாசியை அருளி செய்கிறார்-

இரண்டு இடத்துக்கும் உள்ள வாசியை அருளிச் செய்கிறார் -இரண்டும் சமம் இல்லை அவனுக்கு —
திருக்கடித்தானமும் -ஸாத்ய ஹ்ருத்யஸ்தனாயும் சாதனம் ஒருக்கடுக்கும் -கிருதஞ்ஞயா கந்தம்- தாயப்பதியிலே –
பரமபதாதி திவ்ய தேச அங்குத்தை வாஸம் – -அலப்ய வாஸம் பெற -சித்த சாதனங்கள் /
பிராப்யம் இங்குத்தை நிச்சிந்தை வாஸம் -அவனுக்கு ஆழ்வார் திரு மேனி /சரம சாத்தியம் –
சாதன அனுஷ்டான யோக்கியமான தத் தத் ஸ்தலங்கள் -திருமால் வைகுந்தமும் / அதுவும் -சாதன பூமி ஆழ்வார் திருமேனி அடைய /
இத்தால் சாபேஷ்ய சாதனத்தைப் பற்ற நிரபேஷ சாத்தியம் ஏற்றம் வைபவம் யுடையது என்றவாறு –
நான்கு யானைகள் -ஒருத்தனை வளைக்க ஊரை வளைப்பாரை போலே அன்றோ –
நாகத்தணை -குடந்தை வெக்கா எவ்வுள் அன்பில் திருப் பாற் கடலிலும் – கிடக்கும் -அணைப்பார் கருத்தனாவான் -/
மலை மேல் தான் நின்று -திருமலையின் நின்று என் மனத்துள் இருந்தவனை -சாதன சாத்தியம் இங்கும்
பனிக் கடலில் -பள்ளி கொள்ளுகையை மறந்து விட்டு ஓடி வந்து என் மனக் கடலில் வாழ வல்ல -சுகிக்க வல்ல –
ஆஸ்ரித ஹிருதய வாஸம் சாத்தியம் / நின்று திருமலையில் வாசத்துக்கு அங்கத்தவமும் -ஆழ்வார் திரு உள்ளம் அங்கி சித்திக்கும் /
பள்ளி கோள் வாழ்வு -சாதன ஸாத்ய தசைகள் ஸ்பஷ்டம் இங்கு எல்லாம் /
பனிக்கடலில் இவரை அடைய யோக நித்திரை சிந்தனை செய்து -இருந்தானே /

உகந்து அருளின நிலங்களில் விரும்பி வர்திக்கிறது -உசித உபாயங்களாலே சேதனரை
அகப்படுத்தி கொள்ளுகையாலே -அங்குத்தை வாசம் சாதனம் -என்கிறது –
இச் சேதனன் திருந்தி இவன்ஹ்ருதயத்தினுள்ளே தான் வசிக்க பெற்ற இது
அங்கு நின்று பண்ணின கிருஷி பலம் ஆகையாலே -இங்குத்தை வாசம் சாத்யம் -என்கிறது –
நாகத்தணை குடந்தை -நான்முகன் திரு வந்தாதி – -36 –
மலை மேல் தான் நின்று -திரு வாய் மொழி -10 -4 -4 –
பனிக் கடலில் பள்ளி கோளை -பெரிய ஆழ்வார் திரு மொழி -5 -4 -9 –
இத்யாதிகளிலே இவற்றினுடைய சாதன சாத்யத்வங்கள் தொடரா நின்றது இறே —

———————————————

சூரணை -172-

கல்லும் கனை கடலும் –பெரிய திருவந்தாதி – 68-என்கிறபடியே
இது சித்தித்தால் –
அவற்றில் ஆதாரம்
மட்டமாய் இருக்கும் –

இந்த சாதன சாத்யத்வ பிரயுக்தமான ஆதர தாரதம்யத்தை
அருளி செய்கிறார் –

திவ்ய தேசங்கள் ஆதாரம் த்ருணவத் கரிக்கும் படியே இவர் திரு மேனியாகிய ஸாத்ய தேசம் தனக்கே அற்றுத் தீரும் படி நேராக சித்தித்து
அத்தால் சாதனமான அந்த திவ்ய தேசங்களின் ஆதாரம் முன்பு போல் அன்றியே இருக்கிலுமாம் போகிலுமாம் —
ஸாத்யத்தின் போக்யதா அதிசயம் -காண காண அதிசயிக்கிற சாதன அதிசயம் இது கிட்டினவாறே அதில் ஆதாரம் மட்டுப்படும்
இவருடைய சாத்தியம் அவனுக்கு சாதகமாய் அவனுக்கு சாத்தியம் இவருக்கு த்யாஜ்யமானதே /
சாத்யத்தில் – ஸ்வாரஸிக இச்சையும் -சாதனத்தில் தாதாத்மிக -ஆழ்வார் உகந்ததால் அவன் உகக்கிறான் -இது தான் அவனுடைய தாரதம்யம் /

அதாவது
தன் திரு உள்ளத்தில் புகுந்த பின்பு தனக்கு புறம்பு ஒன்றிலும் ஆதரம் இல்லை என்று தோற்றும்படி
அவன் இதிலே அத்ய ஆதரத்தை பண்ணி -நித்ய வாசம் பண்ணுகையாலே –
திரு மலையும் -தன் சந்நிதானத்தாலே கோஷிக்கிற திரு பாற் கடலும் – –
ஒருத்தருக்கும் எட்டாத பரம பதமான தேசமும்
புல்லிய வாய்த்தினவோ என்றார் இறே ஆழ்வார் –
இப்படியே சாத்தியமான இச் சேதன ஹ்ருதயம் சித்தித்தால் -இதுக்கு சாதன மாக முன்பு விரும்பி
போந்த திவ்ய தேசங்களில் ஆதரம் சங்குசிதமாய் இருக்கும் என்கை –
சாத்யம் கை புகுரும் அளவும் இறே சாதனத்தில் ஆதரம் மிக்கு இருப்பது –

———————————————

சூரணை -173-

இளம் கோவில் கை விடேல் –இரண்டாம் திருவந்தாதி -54-என்று
இவன் பிரார்த்திக்க வேண்டும் படியாய் இருக்கும் –

ஆதரம் மட்டமாம் படிக்கு அவதியை தர்சிப்பிக்கிறார் –

ஆதரம் மட்டமாம் படிக்கு அவதியை தர்சிப்பிக்கிறார் –பாலாலயம் -பெரிய ஆலயம் ஆழ்வார் திரு உள்ளம் -/
வடக்கு திருமலையும் தெற்குத் திருமலையும் இவை தான் நமக்கு கிடைத்தன என்று நின்று கொண்டு இருந்தானாம் –
இவர் வலிய மூட்டும்படி யாயத்து அவனது ஆதாரம் இவற்றின் மேல் –
தியாக அபாவ பிரார்த்தனை -தியாக அதிசங்கை அர்த்த சித்தம் –க்ருதஞ்ஞா ஹேதுகை இதுவே –
உளம் கோயில் வைத்து உள்ளினேன் -முன்னம் சொல்லி இளம் கோயில் பின் இருப்பதாலே –

அதாவது-
ஸ்ரீ பூதத்தார் தம்மை பெருகைக்கு உறுப்பாக முன்பு தான் விரும்பின
திவ்ய தேசங்களில் முன்புத்தை ஆதரம் இன்றிக்கே -தன் திரு உள்ளத்திலே
அத்ய ஆதரத்தை பண்ணி செல்லுகிற படியை கண்டு -அவ்வோ திவ்ய
தேசங்களில் கை விட புகுகிறானோ என்று அதி சங்கை பண்ணி –
என் ஹிருதயத்திலே புகுந்து இருக்கைக்கு பால ஆலயமான திரு பாற் கடலை
கை விடாது ஒழிய வேணும் என்றார் இறே –
ஆகையால்-
இப்படி இவன் பிரார்த்திக்க வேண்டும்படி ஆய்த்து அவனுக்கு அவற்றில் ஆதரம்
மட்டமாம் படி -என்கை-

————————————————

சூரணை -174-

ப்ராப்ய ப்ரீதி விஷயத் வத்தாலும்
க்ருதஞ்சதையாலும்
பின்பு அவை
அபிமதங்களாய்  இருக்கும் —

இப்படி இவன் அர்த்திததாலும் -சாத்யம் சித்தித்த பின்பு அவனுக்கு அவை
அபிமதங்களாய்  இருக்குமோ என்ன -அருளி செய்கிறார் –

ப்ராப்ய ப்ரீதி விஷயத்துவத்தாலும் -ஆழ்வார் உகந்த திவ்யதேசங்கள்–மண்டியே இருப்பார்களே – என்பதாலும் /கிருதஞ்ஞதையாலும் –
பின்பு அவை அபிமதங்களாய் இருக்கும் -சாத்தியம் கை புகுந்த பின்பும் ஏறி வந்த ஏணி விட்டு விடாமல் இருக்க இரண்டு காரணங்கள் –
அபிமத தமமான சாத்தியத்தை பற்றின பின்பு -அபிமத தார சாத்தியம் -அபிமத சாத்தியம் –ஆகார த்வயம் -/
மதுரகவி ஆழ்வார் நம்மாழ்வார் பொலிந்து நின்ற பிரான் -இவர்களுக்குள் சம்பந்தம் போலே இங்கும் –/
சரம ப்ராப்யம் ஆழ்வார் -போக்தாவான பெருமாள் -போக்யதா அதிசயமான ஆதாரம் மட்டும் அன்றிக்கே –
குயில் இனங்கள் சோலை இத்யாதி மட்டும் அன்றிக்கே —
பதின்மர் பாடும் பெருமாள் -இவர்கள் மண்டி இருப்பதால் -தத் சாதனத்வேன வந்த ஆதாரம்

பிராப்ய ப்ரீதி விஷயத்வம் ஆவது -தனக்கு பிராப்ய பூதனான இச் சேதனனுடைய
உகப்புக்கு விஷயமாய் இருக்கை-
கண்டியூர் அரங்கம் மேயம் கச்சி பேர் மலை -திரு குறும் தாண்டகம் – 19-
என்று மண்டி இறே இவன் இருப்பது –
க்ருதஜ்ஜதையாவது -இவ்வோ தேச வாசத்தால் அன்றோ நாம் இவனை பெற்றது என்று
அத்தேசம் தமக்கு பண்ணின உபகாரத்தை அநு சந்திக்கை –
இவை இரண்டாலும் சாத்தியமான இச் சேதனன் கை புகுந்து இருக்க செய்தேயும்
அவனுக்கு அவ்வோ தேசங்கள் அபிமதங்களாய்  இருக்கும் -என்கை

——————————————-

ஆக -11-சூரணை களாலே அருளிச் செய்தவற்றை தொகுத்து அருளிச் செய்கிறார்
குணம் போல் தோஷ நிவ்ருத்தி என்று கீழ் சொன்ன சேஷத்வ பார தந்த்ர்ய ரூப ஆத்ம குணம் போல தோஷ  நிவ்ருத்தியும் –164-
பர அனுபவத்துக்கு விலக்கு என்று பிரதிக்ஜை பண்ணி தத் உபபாதான அர்த்தமாக அபிமத விஷயத்தில்
அழுக்கு அபிமதமாய் இருக்கும்படியையும் —165-
இவன் அழுக்கு உடம்பு என்று கழிக்கிற இதிலே  அவன் அத் ஆதாரத்தை பண்ணும் படியையும் -167-
ஞானியான இவனை ச விக்ரஹமாக ஆதரிக்கைக்கு ஹேது விசேஷத்வத்தையும்–168-
மண் பற்று -ரஹஸ்ய த்ரயம் விளைந்த மண் என்று மா முனிகள் அபிமதமாய் விடாமல் இருந்தால் போலேயும் –
பரமார்தனான இவன் தேக ஸ்திதி கொண்டே   இவன் தேஹத்தில் அவன் விருப்பம் அறியலாம் என்னும் அத்தையும் ,—169-
அவன் இவன் உடைய தேகத்தை விரும்பும் பிரகாரத்தையும் —-170-
சாத்தியமானது இது சித்தித்தால் சாதன ஆதாரம் மட்டமாம் படியையும்-172-
அதின் எல்லையையும்-173- ,இவன் அவ்வோ தேசங்களை கை விடாது ஒழிய வேணும் என்று அர்தித்தால் ஸ்வசாத்யம் சித்தித்து இருக்கச் செய்தேயும்
ஹேது துவயத்தாலே அவனுக்கு அது அபி மதங்களாய் இருக்கும் படியையும்–174-
அருளிச் செய்தார் ஆயிற்று-

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: