ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -60-79–சாதனஸ்ய கௌரவம் -ஆறு — உபாய பிரகரணம்-திருமால் திருவடி சேர் வழி நன்மை -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்

உபாய ஸ்வீ கார வைபவம் -பிரகரணம்-சூர்ணிகை -23-40/41-59-/60-79/80-114/115-244
சாதனஸ்ய கௌரவம் -ஆறு-உபாய பிரகரணம் -திருமால் திருவடி சேர் வழி நன்மை / அவ் வழி ஒழிந்தன அனைத்தின் புன்மை –

சூரணை -60-

பலத்துக்கு ஆத்ம ஞானமும்
அப்ரதிஷேதமுமே
வேண்டுவது –

இப்படி இப் பிரபத்தி உபாயம் அல்லவா விட்டால் பல சித்திக்கு இவன் பக்கலிலும்
சில வேண்டாவோ என்ன -அருளிசெய்கிறார் –

ஸ்வதந்த்ர ஸ்வாமி கொடுக்கிற பல லாபத்துக்கு திருமந்த்ர யுக்தமான சேஷ சேஷி- சம்பந்த ஞானமும் –
தடுக்காமையும் -சாஸ்திரம் வீணாகாமல் இருக்க –
ஞானத்தால் மோக்ஷம் சாஸ்திரம் -சேஷ சேஷி சம்பந்த ஞானம் அதிகாரி விசேஷணம் -ஞான ஸ்வரூபம் தானே உபாயம் ஆகாதே –
சர்வ முக்தி பிரசங்கமும் வரக் கூடாதே -ச ஹேதுகத்வங்களும் வாராது -எதிர்பார்த்துக் கொடுக்க வில்லை –
இருப்பவனுக்குக் கொடுக்கிறார் -இவை ஹேதுக்கள் இல்லை –
த்வயம் பூர்வ வாக்கியம் உத்தர வாக்கியம் -இடை வெளி இல்லாமல் -தடுப்பு நீங்கி –
அவன் ரஷிக்க வரும் பொழுது விலக்காமை -இருப்பதால் விளம்பம் இல்லாமல் பிராப்தி
ப்ரீதி காரித கைங்கர்யம் -மந்த்ர -விதி அனுஷ்டானம்-ரஹஸ்ய ஞானம் வந்ததும் –
ஆத்ம ஸ்வரூப ஞானம் முதலில் வந்தது -வந்ததும் -அந்த ஞான கார்யமான -அப்ரதிஷேதமும்-விலக்காமையும் – வர வேணும் —

இத்தை ஒழிந்தாலும் ஈஸ்வரன் கார்யம் செய்வான் -ஆத்மாவையும் அழிக்க சக்தி உள்ளது –
ஆனால் ஸத்யஸங்கல்பத்துவம் உண்டே -அதனால் நித்யத்வம் –
அதே போலே சாஸ்திரம் சிலுக்கிடாமைக்கு காரணம் -வீணாக போகக் கூடாதே –
ஜடாயுவுக்கு -பறவை -தகுதி இல்லை -ப்ராஹ்மணானால் கொலை உண்டவன் –ஆனால் கொடுத்தானே —
சாஸ்திரம் மீறுவதற்கு வல்லமையும் உண்டே அவனுக்கு -சதா காருணிகன்–
இங்கு சொல்வது சர்வ முக்தி பிரசங்கம் வாராமை -ச ஹேதுதவமும் வாராமைக்காக -ஸ்வரூபத்துக்கு பின்னமாக எதிர்பார்க்க வில்லையே –

பலத்துக்கு -என்றது -பல சித்திக்கு -என்றபடி –
ஆத்ம ஞானம் ஆவது -ஸ்வ ஸ்வரூப ஞானம் -அதாவது
தத் ஏக சேஷத்வ-தத் ஏக ரஷகத்வங்களை அறிகை-
அப்ரதிஷேதம் ஆவது -நிருபாதிக சேஷியாய்-நிருபாதிக ரக்ஷகனான அவன் பண்ணும் ரஷணத்தை விலக்காமை-அதாவது
ஸ்வ ரக்ஷணே ச்வான்வய நிவ்ருத்தி –
அவதாரணத்தால்-இவை இரண்டும் ஒழிய பின்னை ஒன்றும் வேண்டாதபடி –
சரம பதத்தில் சொல்லுகிற பலத்துக்கு -பிரதம பதத்தில் சொல்லுகிற-ஆத்ம ஞானமும் –
மத்யம பதத்தில் சொல்லுகிற அபிரதிஷேதமும் இறே வேண்டுவது..-

நிர் ஹேதுகம்-சேஷி ரக்ஷகன் –மே-ஏவ காரம் -வேறே ஒன்றுமே வேண்டாம் –
திருமந்திரத்தில் மூன்று பதங்களின் அர்த்தமே -இங்கே சொல்கிறது –
நாராயணாயா கைங்கர்யம் கிட்ட–சேஷத்வ சம்பந்த ஞானமும் பிரணவ அர்த்தமும் —
அப்ரதிஷேதமும் -நமஸ் அர்த்தமும் வேண்டும் -என்றவாறு

————————————-

சூரணை-61-

அல்லாத போது
பந்தத்துக்கும்
பூர்த்திக்கும்
கொத்தையாம் –

இப்படி அன்றிக்கே -பல சாதனமாக இவனுக்கு சில செய்ய வேணும் என்றால்
வரும் தீங்கு என் என்ன -அருளி செய்கிறார் –

இவற்றை ஒழிய -அவன் சா பேஷமாக இவன் சிறிது செய்யும் பொழுது நிருபாதிக ரஷ்ய ரஷக பாவ சம்பந்தத்துக்கும் –
சா பேஷத்வம் கந்தம் இல்லாத பூர்த்திக்கும் –சோ பாதிகத்வ அபூர்த்திகத்வங்களுக்கும் -உபாதியால் கொடுப்பது –
சம்பந்த பூர்த்திகளுக்கும்- இரண்டுக்கும் கொத்தையாம்
சார்வபவ்மன்-சா பேஷமாய் மஹிஷிக்கு சமானமான ஜீவனை ரக்ஷணம் பண்ணுகையும் -அவள் ஸூரக்ஷண அர்த்தமாக யத்னம்
பண்ணுகையும் சம்பந்த பூர்த்திகளுக்கு கொத்தையாகும் -நம் சேஷத்வ அனுகுணமாக சத்தைக்கு கொடுக்க வேண்டும்

அல்லாத போது -என்றது -இவ்வளவு அன்றிக்கே பல ஹேதுவாக இவன் சில செய்ய வேண்டும் போது என்றபடி –
பந்தத்துக்கும் பூர்த்திக்கும் கொத்தையாகை -யாவது -இவனுடைய ரஷணம் தன் பேறாம் படியான
அவனுடைய நிருபாதிக நிரபேஷ உபாயத்வத்துக்கும்-அவத்யமாய் தலை கட்டும்-என்கை–

————————————-

சூரணை -62-

ஆபத்தை போக்கி கொள்ளுகிறோம் என்று –
பிரமித்து –
அத்தை விளைத்து கொள்ளாது
ஒழிகையே வேண்டுவது –

ஆனாலும்–அநந்த க்லேச பாஜனமான -சம்சார சாகரத்தில் அழுந்தி கிடந்து
அலைகிற தன் ஆபத்தை உணர்ந்தால்-ஆபத் சகனான ஈஸ்வரனை
1-ஸ்வ  பிரபத்தியால்-2 வசீகரித்து 3-தத் பிரசாதத்தாலே இத்தை
கழித்து கொள்ள வேண்டாவோ -என்ன -அருளி செய்கிறார்-

அநிஷ்டம் அபிவிருத்தமாகுமே -சம்சார வர்த்தகமாய் விடும் –ஆமச்ஜுரத்தை -அஜீரண ஜுரத்தை ஆற்றக் கோலி ஆற்றிலே முழுகுவாரை போலே
விபரீத ஞானம் ஸ்வா தந்திரம் -ஸூ யத்னத்தால் -அபத்ய சேவையாலே சதா சாகமாக விளைத்துக் கொண்டு வளர்த்துக் கொண்டு –
அந்த பிரமத்தை விட்டு ஸூ யத்ன நிவ்ருத்தனாய் இருக்கை ஒன்றே தந் நிவ்ருத்திக்கு வேண்டுவது –
ஆபத்து போக்க நீ போக வேண்டும் -சகாதேவன் கண்ணா நீ தூதனாக போனதே யுத்தத்துக்காக -என்றால் போலே
அநிஷ்ட நிவ்ருத்திக்கு இவன் கை முடங்கவே -வெறும் கை வீரன் ராவணன் ஆனான் -ராமன் வில் கை வீரன் –
ஸூ ரக்ஷணம் ஸ்வான்மயம் ஒழிய வேண்டுமே -அஞ்சலி பரமா முத்ரா –

அதாவது –
சர்வேஸ்வரன் திருவடிகளிலே பிரபத்தி பண்ணி -சம்சாரம் ஆகிற ஆபத்தை போக்கி கொள்ளுகிறோம்
என்று -தான் பண்ணுகிற பிரபத்தியாலே தன் ஆபத்தை போக்கி கொள்ளுகிறனாக பிரமித்து –
தத் ஏக பார தந்த்ர்யா ரூப ஸ்வரூப ஹானியாகிற-ஆபத்தை விளைத்து கொள்ளாது ஒழிகையே
தந் நிவ்ருத்திக்கு இவன் செய்ய வேண்டுவது என்ற படி –
ஓர் ஆபத்தை பரிஹரிக்க புக்கு-ஓர் ஆபத்தை விளைத்து கொள்ளாதே-
இவன் ஸ்வ யத்னத்திலே நிவ்ருத்தனாய் இருக்கவே -எம்பெருமான் தானே ரஷிக்கும் என்று கருத்து –
அத்தை -என்றது -ஆபத் சாமான்யத்தை பற்ற -அல்லது- பர க்ருத ஆபத்து தன்னையே பராமர்சித்த படி என்று ..

பிரபத்தியால் ஈஸ்வரன் கிருபை கிளப்ப முடியாதே -கிருபையால் தானே பிரபதிக்கே வந்து அவனை ஸ்வீ கரிக்கிறான்
தான் பண்ணும் ப்ரபத்தியும் இல்லை-தன் ஆபத்தும் இல்லை -தன் திருமேனி அழுக்கை தானே போக்கிக் கொள்வான் அன்றோ –
ஸ்வரூபம் பாரதந்தர்யத்துக்கு ஆபத்து போக்க -வேறே ஒன்றும் வேண்டாம் –சம்சாரக் கடலையும் நீங்க பாரதந்த்ரயம் ஸ்வரூபத்துக்கும்
ஹானி வாராமைக்கு அவனை மட்டும் விலக்காமல் இருந்தால் போதுமே –
ஒன்றும் செய்ய வேண்டாம் மார்பில் கை வைத்து உறங்க பிராப்தி துரும்பு நறுக்க பிராப்தி இல்லை -என்பதால் —
உபாய பாவமாக செய்யாதே -அனைத்தும் கைங்கர்யமாக பண்ண வேண்டும் –
அத்தை –பாரதந்த்ர ஆபத்து -ஆபத் சாமான்யம் –

———————————————-

சூரணை -63-

ரஷணத்துக்கு
அபேஷிதம்
ரஷ்யத்வ
அனுமதியே –

ஆனாலும் -ரஷ்ய அபேஷாம் ப்ரதீஷதே -என்று ரஷகனான சர்வேஸ்வரன்
ரஷ்ய பூதனான இச் சேதனனுடைய அபேஷையை பார்த்து இருக்கும் -என்கையாலே –
அவன் பண்ணும் ரஷணத்துக்கு இவன் அபேஷையும் வேண்டும் அன்றோ இருக்கிறது -என்ன-அருளி செய்கிறார் –

பலம் வேறே ரக்ஷணம் வேறே -கிருபா விசிஷ்டன் பலம் கொடுப்பது -ரக்ஷணம் அநிஷ்டம் போக்கி இஷ்டம் தருவது –
அவன் திரு உள்ளத்துக்கு பின் செல்லுகையே வேண்டுவது –
அபேக்ஷையை எதிர்பார்க்கிறான் -பிரார்த்தனையை -என்றபடி -நிருபாதிக ஸ்வாமி -அவன் பண்ணும் ரக்ஷணம் அதுக்கு பக்ஷபாதி ஆகாமைக்கு –
நீ என்னால் ரக்ஷிக்கப் பட வேண்டியவன் என்று அவன் சொன்னால்- ஓம் ஒக்கும் -அனுமதி ஒன்றே வேண்டுவதே –
அது இல்லாமையால் அநாதி காலமும் இழந்தது –

அதாவது –
நிருபாதிக ரஷகனானவன் பண்ணும் ரஷணத்துக்கு -இச் சேதனன் பக்கல்  வேண்டுவது –
நீ எனக்கு ரஷ்யம் என்றால் -அல்லேன் என்னாதே–
தன்னுடைய ரஷ்யத்வத்தை இசையும் இவ்வளவே என்கை –
ரஷ்யா அபேஷாம் -என்கிற இடத்தில் -சொல்லுகிற அபேஷை
ரஷ்யத்வ அனுமதி த்யோதகம் இத்தனை -என்று கருத்து –
யாச்னா பிரபத்தி பிரார்த்தனா மதி -என்கிற ச்வீகாரத்தை அப்ரேதிஷேத த்யோதகம்
என்று இறே இவர் தாம் அருளி செய்தது -முமுஷுபடி -சூரணை -233 –

இசைவித்து உன் தாளிணை கீழ் இருத்தும் அம்மான் ஆழ்வாராதிகளுக்கு –
நமக்கு அனுமதியே தான் பிரார்த்தனை -விலக்காமையை சொல்ல ரஷ்யத்தை அனுமதி பண்ணி ஏத்துக் கொள்வதே –

பிரசாதம் அருள் அதிருஷ்டம் -ஏற்பட ஒன்றும் எதிர்பாராது -இதுக்கு ஜனகம் பிரபத்தி கார்யம் இல்லை -சித்த உபாயம் -நிர்ஹேதுகமாக அருள்கிறான் –
ஸ்வரூப ஞானம் வந்து விலக்காமையிலே மூட்டும் -இரண்டும் இருப்பதால் த்ருஷ்டா ரூபமான யோக்யதைக்கு பிரயோஜனம் –
சம்சாரம் தாண்டுவது த்ருஷ்டம் தானே -பிரதி பந்தக அபாய விதயா-விலக்காமை -அன்வய வ்யதிரேக சாலிதயம் –
திரை விலக்கி வெளிச்சம் காணுமா போலே காரணம் அல்லாத சாதனாந்தர நிவ்ருத்தி –இதுவே அப்ரதிஷேதம் –
அதிகார ரூபமாக அன்றிக்கே பிரசாதம் கிளப்ப ஏதேனும் செய்ய முயன்றால் -பாதகம் -நம் இடம் மட்டும் இல்லை –
பூர்த்திக்கும் பந்தத்துக்கும் கொத்தை
பல சாதனமாக பலமான அவனை வரித்தலே பிரபத்தி -அவன் உபாய அ நபேஷா ரக்ஷணம் பண்ணினால்-
ரக்ஷண ரூபா அதிசயம் ஜீவனுக்கு இல்லாமல் சேஷிக்கே ஆகும்
பலத்துக்கு சாதனா அனுஷ்டானம் பண்ண வேண்டும் என்று நினைத்து செய்து -அதனால் பலம் பெற்றால் அதிசயம் ஜீவனுக்கு ஆகுமே –
நிருபாதிக சேஷித்வத்துக்கு வைக்கலயம் குறைபாடு வரும் -சாவதாரண சேஷத்வ ப்ரதிஸம்மிதத்வத்துக்கு குறைபாடு வரும்
-அவனுக்கே அவதாரணம் உனக்கே நாம் ஆட் செய்வோம் –
1-ஸ்வ  பிரபத்தியால்-2 வசீகரித்து 3-தத் பிரசாதத்தாலே இத்தை-கழித்து கொள்ள வேண்டாவோ -என்ன -அருளி செய்கிறார்-
பக்தி யோகம் போலே பிரபத்தி என்று நினைத்து -இந்த வார்த்தைகள் –
அத்யந்த பாரதந்தர்யம் அறிந்தவன் இத்தை சாதனமாக நினைக்க மாட்டானே –
பக்தி செய்ய செய்ய அபூர்வமாக முன்பு பார்த்து இராத பிரசாதம் பார்த்து மோக்ஷம் –
இதுவே வசீகரித்து -பக்தி யோக ஸ்தானத்தில் இதுவும் வருமே –
தத் பிரசாதம் -பிரபத்தியால் ஜன்ய என்றவாறு -/
பிரசாதத்தால் வந்த உபாய வர்ண ரூபமான பிரபத்தி –
அனுபாய பிரபத்தி என்றும் பிரபத்தியால் வந்த பிரசாதம் உபாய பிரபத்தி என்றும் ஆகுமே /
சித்த உபாய ஸ்வீ காரத்தை சாதிய உபாயமாக பிரமித்து -விளம்பம் -இத்யாதி பக்திக்கு உள்ள குறைகள் இதுக்கும் வருமே –
ரக்ஷணத்துக்கு அவன் திரு உள்ளத்துக்கு பின் செல்வதே வேண்டும் -அபேக்ஷை -விருப்பம் -சித்தமாக இருக்க தடுக்காமையே அபேக்ஷை —
சர்வேஸ்வரன் சதா காருணிகனான-சாத்தியம் -நித்யம் -சம்சாரம் நிர்வஹிக்க-அபேக்ஷை -தடுக்காமல் இருக்கவே ரஷிப்பேன்-
என் இசைவினை -என்றும் இசைவித்து என் தாளிணை கீழ் இருத்தும் அம்மான் -தன்னைத் தவிர வேறே உபாயத்தை எதிர்பார்க்க மாட்டார்
திரு உள்ளத்தை பின் தொடர்ந்து அநுவிதமான அனுமதி ஒன்றே வேண்டுவது -அப்ரஷேதம் அனுமதி -சம்மதம் தடுக்காமல் இருப்பதும் ஒன்றே –
பிரார்த்தனை மதி சரணாகதி –யத்ர அனுமதி அபாவ-தத்ர உபாயத்வ பிரார்த்தனை அபாவம்–ஜ்யோதிஷடஹோமத்தை பார்த்து பிரார்த்தனை இல்லையே
இங்கு சித்தமாக இருப்பதால் பிரார்த்தனை -வேண்டுமே –ஸ்வீ காரமே விலக்காமை விண்ணப்பித்தல் -ஸ்வயம் உபாயம் இல்லை உபாயத்வ வரணம் —
அதிகாரி -பிரசாதம் பெற அடையாளம் தானே இந்த அப்ரதிஷேதம் –/ பக்தியில் அறிவிக்க வேண்டிய தேவை இல்லை -அதுவே உபாயமாக இருப்பதால் –

————————–

சூரணை -64-

எல்லா உபாயத்துக்கும் பொது வாகையாலும் –
சைதன்ய கார்யம் ஆகையாலும் –
பிராப்தி தசையிலும் அநு வர்திக்கை யாலும் –
ஸ்வரூப வ்யதிரேகி யல்லாமையாலும்-
அசித் வ்யாவ்ருத்த வேஷத்தை சாதனமாகக ஒண்ணாது —

இப்படி அனுமதி சாபேஷனாய் ரஷிக்கும் ஆகில் –
இவ் அனுமதி தான் சாதனம் ஆகாதோ -என்ன -அருளி செய்கிறார் –

யாஜ்ஜா பிரார்த்தனா பிரபத்தி சரணாகதி –பிரபத்தியே அனுமதி ரூபம் -விருப்பப்படுகிற தசையை சொல்வதே –
பிரபத்தி சரணாகதி பர்யாயம் பிரார்த்தனா மதியே -பிரார்த்தனா ரூப ஞான விசேஷம்-
இதில் சரணாகதி ரஷ்யத்வ அத்வசாயாத்மகமான பிரபத்தி விசேஷத்தை வியாவர்த்திக்கிறது
கீழே உபாய அனு பாய பிரபத்தி இரண்டையும் பார்த்தோம் -பக்திக்கும் அனுமதி வேணும் -பக்தி பண்ணு- சாஸ்திரம் விதிக்க ஆம் பண்ணுகிறேன் –
அனுமதி உபாயம் இல்லை -பக்தி தானே உபாயம் – அனுமதி ஸ்வரூபம் -பாரதந்தர்யம் மூலம்- / ஈஸ்வரனுக்கு ஸ்வரூபம் உபாயத்வமும் ப்ராப்யமும் -/
உபாயம் ஸ்வரூப வியதிரேகமாக பரதந்த்ரனுக்கு இருக்குமே -அனுமதி ஸ்வரூபம் என்பதால் உபாயமாக ஒண்ணாதே –

எல்லா உபாயத்துக்கும்  பொதுவாகையாவது–போக மோஷ உபாயங்களில் -ஏதேனுமொன்றில் அதிகரிக்கும் அவனுக்கும் –
நீ இவ் உபாயத்தை அனுஷ்டி என்றால் -அப்படியே செய்கிறேன் என்று அனுமதி பூர்வகமாக அதில் இழிய வேண்டுகையாலே –
சகல உபாய சாதாரணமாய் இருக்கை-
இத்தால் ஓர் இடத்திலும் இவ் அனுமதிக்கு இவ் அதிகாரி விசேஷணத்வம் ஒழிய -பலசாதனத்வம் இல்லாமை  காட்டப் பட்டது –
சைதன்ய கார்யம் ஆகை யாவது -ரஷ்யத்வம் -சேதன அசேதன சாதாரணமாய்-இருக்க செய்தே -ஜ்ஞான சூன்யம் ஆகையாலே –
அவ் ஆகாரத்தை அறிகைக்கு-யோக்கியம் அல்லாத அசேதனம் போல் அன்றிக்கே -ஜ்ஞானாஸ்ரைய  பூதன்  ஆகையாலே –
அத்தை அறிகைக்கு யோக்யனாய் இருக்கிற இச் சேதனன் -பக்கல் உண்டான அனுமதி –
இவனுடைய ஜ்ஞான கார்யமாக கொண்டு வந்ததாய் இருக்கை –
இத்தால் இவ் அனுமதி இச் சேதனனுடைய வாசியை பற்றி வந்தது ஆகையாலே -சாதன கோடியில் அன்வயியாது-என்றபடி –

பிராப்ய தசையிலும் அன்வர்திகை யாவது -உபாய தசை  அளவில்  அன்றிக்கே -உபேய தசையிலும் –
அவன் வ்யாமோஹ அநு குணமாக கொள்ளும் விநியோக விசேஷங்களில் -திரு உள்ளமானபடி –
கொண்டு அருள வேணும் என்னும் அனுமதி இவனுக்கு நடந்து செல்லுகை-
இத்தால் சாதனம் ஆகில்-பல சித்தி அளவிலே மீள வேணும் என்று கருத்து –

ஸ்வரூப வ்யதிரேகி  அல்லாமை யாவது -சேஷி செய்யும் அதுக்கு உடன்பட்டு இருக்கை சேஷத்வ பாரதந்தர்ய கார்யம் ஆகையாலே –
இவ் அனுமதி ஸ்வரூபத்துக்கு  புறம்பு அன்றிக்கே ஸ்வரூபமாய் இருக்கை –
இத்தால் -சாதனம் ஆகில் -ஸ்வரூப வ்யதிரேகியாய் இருக்க வேணும் என்று கருத்து —
அசித் வ்யாவிருத்த வேஷம் ஆவது -ஜ்ஞாத்ருத்வத்தாலே -ஞான சூன்யமான அசித்தில் வேறு பட்டு இருக்கிற ஆத்மாவினுடைய ஆகாரம் –
இவ்விடத்தில் அவ் ஆகாரமாவது-ஜ்ஞான கார்யமான அனுமதி –
இத்தை சாதனம் ஆக ஒண்ணாது -என்றது -இப்படி இதனுடைய அசாதனத்வ ஹேதுக்கள்-
அநேகம் உண்டு ஆகையால் -இத்தை சாதனமாக ஆக்கப் போகாது என்றபடி –
அசித் வ்யாவ்ருத்தி வேஷம் -என்று பாடம் ஆகில் -ஜ்ஞான சூன்யமான அசித்தில் காட்டில்
ஆத்மாவுக்கு உண்டான ஜ்ஞாத்ருத்வ ரூப வ்யாவிருத்தியின் வேஷமான அனுமதியை-என்று சப்தார்த்தம் –

—————————————————

சூரணை -65-

அசித் வியாவிருத்திக்கு பிரயோஜனம்
உபாயத்தில் உபகார ஸ்ம்ருதியும்
உபேயத்தில் உகப்பும் –

ஆனால் இவ் அசித் வ்யாவிருத்தி தனக்கு ஒரு பிரயோஜனம் வேண்டாவோ என்ன –
அருளி செய்கிறார் –

பகவத் சேஷம் ஞான ஆனந்த ரூபமான அசித்தை விட வேறு பட்டு -பரம சேதனன் பக்கல்-உபகார ஸ்ம்ருதியும்
அதுக்கு மேலே நித்ய சேஷி பக்கல் நித்ய கைங்கர்யம் உகந்து
ஸ்ம்ருதி ப்ரீதி யோக்யதை அற்ற அசித்தைக் காட்டிலும் தத் உபய யோக்யதையே இவன் சேதனனாக பெற்ற பலம் –
பிரபலதர விரோதி -ஸூ போக்த்ருத்வ புத்தி கூடாதே -அவன் ப்ரீதியைக் கண்டு இவன் ஆனந்தப்பட வேண்டுமே

உபாயத்தில் உபகார ஸ்ம்ருதி யாவது –
என்னை தீ மனம் கெடுத்தாய் -திருவாய்மொழி – 2- 7- 8-
மருவித் தொழும் மனமே தந்தாய் -திருவாய்மொழி – 2- 7- 7-என்கிறபடியே
சித்த உபாயமான எம்பெருமான் தன் திறத்தில் பண்ணின உபகாரங்களை அனுசந்திக்கை –
உபேயத்தில் உகப்பு யாவது -அவன் திருவடிகளில் தான் பண்ணும் கைங்கர்யங்களில் –
உகந்து பணி செய்து -திருவாய்மொழி -10 -8 -10 -என்ற உகப்பும் –
அத்தால் அவனுக்கு விளைகிற ப்ரீதியை கண்டு தனக்கு விளைகிற ப்ரீதியும் –

———————————————–

சூரணை -66-

உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -என்கிறபடியே
பிராப்திக்கு உபாயம்
அவன் நினைவு —

இப்படி இவன் பக்கல் உள்ளது ஒன்றும் உபாயம் அன்று ஆகில் –
இவனுக்கு தத் பிராப்தி உபாயம் தான் எது என்ன அருளி செய்கிறார்-

குவளையம் கண்ணி என்னும் ஞானமும் -கொல்லியம் பாவை என்கிற பாரதந்தர்யமும் –
நின் தாள் நயந்த ஸ்வரூப அனு ரூபமான பக்தியும் -உபாயம் ஆகாதே
அங்கீகார ஹேது அன்றியே -இவற்றைப் பார்த்து கை விடவோ -உன்னையே பார்த்து கைக் கொள்ளவோ
எது திரு உள்ளம் என்கிற திருமங்கை ஆழ்வார்
திரு உள்ளக் கருத்துப் படி பரதந்த்ரனான ஸ்வம்மானை இவன் ஸ்வ தந்த்ரன் ஸ்வாமியை அடைய நினைத்தபடி செய்து
தலைக் கட்ட வல்லவனுமாய் பிராப்தனான அவனுடைய நினைவு -இவனை உஜ்ஜீவிக்கப் பண்ண வேண்டும் என்ற நினைவே உபாயமாகும் –
ஸ்வீகாரம்- அனுமதி- வரணம்- ஸூ பிரவ்ருத்தி நிவ்ருத்தி -நான்கும் உபாயம் இல்லை / இடவெந்தை எந்தை பிரானே –
பிரான் -உபகார ஸ்ம்ருதி /எந்தை கைங்கர்யத்தில் உகப்பு / அவன் நினைவு தான் பிரசாத ஜன்யம் என்றவாறு

அதாவது –
இத் தலையில் உள்ளது ஒன்றும் பேற்றுக்கு உபாயம் அல்லாமையாலே –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் -பெரிய திருமொழி -2 -7 -1 -என்று
கை கழிந்தவற்றுக்கும் ஒரு போக்கடி  பார்த்து இருக்க கடவ –
உன் திரு உள்ளத்தால் நினைத்து இருந்தது என் என்று -ஹிதைஷியான அவன் நினைவே உபாயம் என்று ஆழ்வார் அநு சந்தித்தபடியே-
அவனை பிராபிக்கைக்கு உபாயம் -சர்வஞ்ஞனாய்-சர்வ சக்தியாய் -பிராப்தனாய் –
பரம தயாளுவாய்-இருக்கிற அவனுடைய -இச் சேதன உஜ்ஜீவன அர்த்தமான நினைவு -என்றபடி –

———————————————————–

சூரணை -67-

அது தான் எப்போதும் உண்டு –

அந் நினைவுதான் அவனுக்கு எப்போது உண்டாவது என்ன –
அருளிச் செய்கிறார் –
சதா காருணிகன் சன் நித்ய காருணிகன் / உபாய உபேய அந்தர்பரனாய் திரிந்த காலத்திலும் –

எப்போதும் -என்றது -இவன் யாதானும் பற்றி நீங்கி திரிகிற-திரு விருத்தம் -96 – காலத்தோடு
இன்றோடு வாசி யற-சர்வ காலத்திலும் -என்றபடி –

—————————————–

சூரணை -68-

அது பலிப்பது
இவன் நினைவு மாறினால் –

ஆனால் இது நாள் வரை பலியாது இருப்பான் என் -என்ன
அருளிச் செய்கிறார் –

அநாதி ஸித்தமான அவன் நினைவு – பிராப்தி சாதனமாக பலிப்பது-தன் அனுமதி அளவாக தத் பிராப்தி சாதனம் –
இத்தை உபாயம் என்று பிரமிக்கிற அஞ்ஞனான சேதனனுடைய- -பிரதி பந்தகமாக ஸூ ரக்ஷண நிமித்தமாக நினைவும் —
சர்வஞ்ஞன் சர்வசக்தன் நினைவே தஞ்சம் என்னும் படி அவன் தன் நினைவாலே சவாசனமாக இத்தையும் மாற்றி-அதுவும் பலிப்பது

அதாவது –
அவன் நினைவு இவனுக்கு கார்ய கரமாவது
இவனுடைய ஸ்வ ரஷண சிந்தை மாறின காலத்தில் -என்றபடி –

————————————————–

சூரணை -69-

அந்திம காலத்துக்கு தஞ்சம் –
இப்போது தஞ்சம் என் –
என்கிற நினைவு குலைகை-என்று
ஜீயர் அருளி செய்வர் –

இவ் அர்த்தத்தினுடைய திட யர்த்தமாக நஞ்சீயர் வார்த்தையை அருளி செய்கிறார் –
அழகிய மணவாளா பட்டர் நோவு பட நஞ்சீயர் -எது தஞ்சம் எது தஞ்சம் என்று -அஹம் ஸ்மராமி மத் பக்தன் –
அவன் வாய் புகும் உணவை பறிப்பது போலே –
ஸூ ரக்ஷணம் சிந்தை விட்டு -பேறு இழவு தன்னதாம் படி பந்த விசேஷம் உடைய ஸ்வதந்த்ர ஸ்வாமி நினைவு பேற்றுக்கு உடலாய்
அத்தை தடுக்கும் இந்த நினைவு இழவுக்கு உடலாய் விடும்

அதாவது –
நஞ்சீயர் தம்முடைய ஸ்ரீ பாதத்தில் உள்ளார் ஒரு ஸ்ரீ வைஷ்ணவரை -நோவறிகைக்காக
சென்று எழுந்து அருளி இருக்கிற அளவில் -அந்த ஸ்ரீ வைஷ்ணவர் -அடியேனுக்கு அந்திம
காலத்துக்கு தஞ்சமாய் இருப்பது ஓன்று அருளிச் செய்ய வேணும் -என்ன –
அந்திம காலத்துக்கு தஞ்சம்- நமக்கு இப்போது தஞ்சம் என் என்கிற
தன்னுடைய ஸ்வ ரஷண சிந்தை குலைகை காணும் -என்று அருளிச் செய்த வார்த்தை –
ஆகையால் ஈஸ்வரன் இவ் ஆத்மா உஜ்ஜீவனத்துக்கு  உறுப்பாக பண்ணும் சிந்தை
பலிப்பது இவனுடைய ஸ்வ ரஷண சிந்தை மாறினால் என்றது ஆய்த்து-

———————————————-

சூரணை -70-

பிராப்தாவும்
பிராபகனும்
பிராப்திக்கு உகப்பானும்
அவனே —

பிராபகன் ஈஸ்வரன் ஆனாலும் -பிராப்தாவும்  பிராப்திக்கு  உகப்பானும் இவன் அன்றோ –
ஆன பின்பு இவன் நினைவை  இப்படி நேராக துடைக்கலாமோ என்ன –
அருளி செய்கிறார் –
அன்றிக்கே –
இச் சேதனன் கையில் உள்ளவற்றில் உபாயத்வ கந்தம் அற துடைத்து
ஈஸ்வரனை உபாயம் என்று நிஷ்கர்ஷித்த  போதே -பிராப்த்ருத்வமும் -பிராப்தியில் வரும் உகப்பும் -இவனது அன்றிகே –
உபாய பூதனான ஈச்வரனேதயதாய் பலித்து விடுகையாலே -பிராப்தாவும் -ப்ராபகனும் -பிராப்திக்கு உகப்பானும் -அவனே -என்று
நிகமித்து அருளுகிறார் ஆகவுமாம்–

பிராப்தி பந்தகமான நினைவுடைய இவனுக்கு -ப்ராப்தாவாகும் தன்மை இல்லை -அடையாவிடில் -அடையும் விருப்பமும் இல்லை என்றதாகுமே –
பிராப்பகமும் இல்லை என்றால் ப்ராப்தியால் வரும் ப்ரீதி பிராப்தியும் இல்லையே இவனுக்கு -என்றதாகுமே –
அனைத்தும் அவனுக்கே -அடைபவனும் அடைவிப்பவனும் அடைந்து மகிழ்பவனும் அவனே -மூன்று இடங்களிலும் உம்மை -/
தன் சொத்தை பிராப்தியுடன் பிராபிக்கும் அவன் ஒருவனே –பிராபிக்கும் இடத்தில் -ஸ்வாமி ஸ்வதந்த்ரன்
சேஷி -சொத்து பரதந்த்ரன் சேஷமான தன்மைக்கு விரோதம் வாராமல் -சூர்ணிகை –
அவதார ரூபமாகவும் ஸூவ சங்கல்ப ரூபமாகவும்-பிரதான பலித்தவம் பலத்தை அனுபவிக்கவும் – யுக்த த்ரயமாக தானேயாய் –
அவதாரம் பிராப்தம் சித்தம் -சங்கல்பமே நினைவு -பிராபகத்வம் -மூன்றாவதில் பிரதானம் என்பதால் –
சேதனன் அமுக்கியம் -அவன் உகப்பை பார்த்து தானும் உகப்பான் –
ஈஸ்வர லாபம் ஆத்மாவுக்கு அன்றியே ஆத்ம லாபம் ஈஸ்வரனுக்கே -சொத்து ஸ்வாமி பாவ சம்பந்தம் -ஸ்வாமிக்கு அடங்கிய சொத்து —
பராதீனம் என்பதால்–இவனுடைய ப்ராப்திக்கு வேண்டிய கர்த்ருத்வம் இல்லாமல் –ஸ்வதந்த்ர ப்ராபகத்வம் –
உபாயம் என்று ஏற்றுக் கொண்டு யத்னம் இல்லாமல் –
ஸ்வாரத்த போக்த்ருத்வத்தை மூச்சு அறுத்தும் பராதீன பிரயோஜனம் -பராதீன போக்த்ருத்வம் –
அவனுக்கு அடங்கியவை-ஸ்வாதீன த்ரிவித சேதனம் அசேதனம் அவனுக்கு – –
சொத்வம் பாரதந்தர்யம் சேஷத்வ சித்தி -மூன்றும் இம் மூன்றால் சித்திக்கும் –
அவனால் தூண்டப்பட்டு அவனால் காக்கப் பட்டு அவனுக்காக இருக்கும் சேதனன் –

ப்ராப்தா அவன் ஆகையாவது –
ஸ்வத்வ மாத்மனி சஞ்சாதம் ஸ்வாமித்வம்  ப்ரஹ்மணி ஸ்திதம் -என்கிற
ஸ்வதஸ் சித்தமான ஸ்வ ஸ்வாமித்வ சம்பந்தம் அடியாக -உடைமையை பிராபிக்கும் உடையானை போலே
இவ் ஆத்மாவை பிராபிப்பான் தானாய் இருக்கை –
பிராபகன் அவன் ஆகையாவது -தான் இவனை பிராபிக்கும் இடத்தில் பிராப்திக்கு உபாயமும் –
சர்வஜ்ஞத்வ சர்வ சக்தித்வ சத்ய சங்கல்பத்வாதி குண விசிஷ்டனாய் -நிரந்குச ஸ்வதந்த்ரனான-தானாய் இருக்கை –
பிராப்திக்கு  உகப்பான் அவன் ஆகையாவது -ஸ்வத்தினுடைய லாபத்திலே – தத்-போக்தாவான ஸ்வாமி ஹ்ருஷ்டனாப் போலே –
இவனை பிராபித்தால் பிராபிக்க பெற்றோமே -என்று உகப்பானும் -இவ் ஆத்மாவுக்கு நித்ய போக்தாவான தானாய் இருக்கை –
இவை மூன்றும் -அவனே -என்கிற அவதாரணத்தாலே-இவற்றில் இவனோடு அன்வயிப்பது ஒன்றும் இல்லை என்கை –
இதில் -பிராப்தாவும்  பிராபகனும்  அவனே -என்கையாலே -இவனுக்கு ஸ்வ யத்னத்திலே-அன்வயம் இல்லை என்னும் இடமும் –
பிராப்திக்கு உகப்பானும் அவனே -என்கையாலே-ஸ்வ பிரயோஜனத்தில் அன்வயம் இல்லை என்னும் இடமும் சித்தம் ஆய்த்து –

சங்கா முகேன ஒருவர் கேட்க பதிலுக்கு சூர்ணிகை அவதாரம்– ப்ரஹ்மத்தை அறிந்து ப்ரஹ்மம் அடைகிறான் –
சுருதிகள் -இவனுக்கு அடையும் தன்மை அடையப்படும் தன்மை சொல்லும்
மேலும் -ப்ரஹ்மம் அடைகிறான் என்னில் -அவாப்த ஸமஸ்த காமனாக இருந்தும் -அபூர்த்தி வருமே –
ப்ரஹ்மதுக்கு கார்யமோ காரியத்துக்கு கரணங்களோ இல்லை -சாதம் அனுஷ்டானம் அபாவம் லபிக்கையாலும்
உபய லிங்க ப்ரஹ்மதுக்கு ஸூத்ரனான இவனை அடைவது அனுப பன்னமாகுமே-
ப்ரஹ்மத்தை அடைந்து ஆனந்தம் அடைகிறான் -கூடி இருந்து கல்யாண குணங்களை அனுபவித்து ஆனந்தம் அடைகிறான் என்றும் சுருதிகள் உண்டே
உபேயத்தில் உகப்பும் என்று கீழே -சாஸ்திரம் அனுஷ்டா சேதனன் தன் உகப்பாக வேண்டும் –
இவனுடைய நினைவு-ஸாத்ய உபாயமாய் – பகவத் பிரசாதத்தால் சாதிக்கப்பட்டதாய் -அப்ரதானமாய் இருக்கும் -என்னவும் கூடாது –
இப்படி பூர்வ பக்ஷம் வாதம் -இதுக்கு சமாதானம் இந்த சூர்ணிகை –
சொத்வம் பாரதந்தர்யம் சேஷம் மூன்றும் இவன் இடம் உண்டே –
சொத்தாய் இருந்தால் ஆசைப்பட்டபடி எடுத்து விநியோகம் பண்ண அர்ஹமாய் இருக்குமே
ஸ்வாமித்வம் – விருப்பப்பட்ட படி செய்யலாமே-ஸ்வாமித்வம் ஸ்நிதம்
லௌகிக சொத்து ஸ்வாமி போலே இல்லையே -ஜென்மத்தால் வந்தது போலே இல்லையே
வியாபாரிக்கு ரத்னம் அடைந்து -அதனால் குறை வராதே -யாக உபாசனம் கைங்கர்யம் பண்ணி அடைய
சாஸ்திரம் சொல்வது அபூர்ணன் என்பதால் இல்லையே
ஸ்ரத்தையா தேவதா -பிராட்டியால் தேவன் ஆனான் -அதிசயம் மேன்மையை சொல்ல வந்ததே
கௌஸ்துபம் ஸ்தானம் -அதிசயம் -வத்சலன் ஸ்வாமி -அஹம் அன்னம் அன்னாதா இவன் உகப்பு அவன் உகப்புக்கு ஹேது அஹம் அன்னாதா –
அத்தை கண்டு அடியேன் உகப்பும் உண்டே -அசித் வியாவருத்தம் ஆக வேண்டுமே
கரணங்கள் இல்லை என்றது லௌகிக வியாபாரங்களுக்கு-போலே இல்லாமல் –ஸ்வ சங்கல்பத்தாலே செய்பவன் அன்றோ –
ப்ரஹ்மத்தை அறிந்து அடைகிறான் -உபாயாந்தரம் பற்றும் ஸ்வ தந்த்ரனை பற்றி இங்கு பிரபன்னனை பற்றி அன்றோ –
பாரதந்தர்யமே ஸ்வரூபம் என்று அறிந்து சரணம் அடைந்தவன்
அநந்ய பிரயோஜன பக்தனை அடையவே -அர்ச்சாவதார பர்யந்த அவதார பிரயோஜனம் —
சாதுக்களை ரக்ஷணம் துஷ்டர்களை நிரசித்து -தர்ம சமஸ்தானம் மூன்றும் இல்லை
சங்கல்ப சாத்தியம் -துஷ்க்ருதிகளை நிரசிக்க -அந்தர்யாமி -சாது ரக்ஷணம் -ஆவேசலித்து தர்மம் ஸ்தாபிக்கலாமே –
சேதனனை அடைய அவதரித்து -சாஸ்திரம் படைத்து -இத்யாதி -செயல்கள் / பகவானுக்கு போக்யமாவதற்காக போக்தா ஆகிறான் /
மாலைக்கும் ஜீவாத்மா என்கிற மாலைக்கும் வாசி உண்டே -கோரா மா தவம் செய்து அடைந்து -எதிர் விழி கொடுத்து
அவன் ஆனந்தத்தை வர்த்திப்பானே- அப்ரதான போக்த்ருத்வம் என்றவாறே -/
வாரிக் கொண்டு –என்னில் முன்னம் பாரித்து காட்கரை அப்பன் -போகத்தில் தட்டு மாறுமே —
ஆப்நோதி பரஸ்மை பதம் பிரயோகம் -ஆத்மனி பிரயோகம் இல்லையே -இதனால் –

——————————————-

சூரணை -71-

ஸ்வ யத்ன நிவ்ருத்தி
பாரதந்த்ர்ய பலம் –
ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி
சேஷத்வ பலம் –

ஆனால்  ஜ்ஞாத்ருத்வ கார்யமான -கர்த்ருத்த்வ  போக்த்ருத்வங்களை உடையவன் ஆகையாலே
ஸ்வயத்ன ஸ்வ பிரயோஜனங்களுக்கு அர்ஹனாய் இருக்க -இவை இரண்டின் உடைய நிவ்ருத்தி
இவனுக்கு எவ் வழியாலே வருகிறது  என்கிற சங்கையில் அத்தை அருளி செய்கிறார் -இந்த வாக்ய த்வத்தாலே –

சேஷ பூதனான ஜீவனுக்கு உண்டான ஞாத்ருத்வ போக்த்ருத்வங்களை பற்றி மேலே உள்ள சூரணைகள்-

பர இச்சா அதீன-ஸ்வரூப ஸ்தியை யுடையவனாய் இருக்கிற பாரதந்தர்யத்தின் சத்தா ஸ்திதியின்
பலநாள் ஸ்வ யத்னம் பண்ணாமல் இருக்க வேண்டுமே
பர ஏக பிரயோஜனத்வம் -அவரை தவிர எனக்கு இல்லை -ஸ்வரூப சித்தி–சேஷத்வத்தின் ரூபம் பலம்
யத்னமும் பிரயோஜனமும் -வந்தால் கிட்டும் கண்ட மாணிக்கம் போலே உருக் கெட்டு இருக்குமே –
அவை நிவர்த்தங்கள் ஆனால் மாணிக்கம் ஒளி பெற்று இருக்குமே
தத் த்வய நிவ்ருத்தியும் தத் உபய பலமாய் இருக்கும் –
அறிவாகவும் அறிவுடையவராயும் ஆனந்தம் உடையவராய் இருக்க -ஞாத்ருத்வம் இருந்தாலே கர்த்ருத்வமும் போக்த்ருத்வமும் வருமே –
அசேதனம் இல்லை என்பதற்காக இத்தைச் சொல்ல -இப்படி விபரீதம் உண்டாகும் –வெறும் ஞானி இல்லையே –
பாரதந்தர்யம் சேஷத்வம் கொண்ட ஞானி அன்றோ –
நடக்க வேண்டும் முதல் நிலை -பகவத் திரு உள்ளம் படி நடக்க வேண்டும் -அடுத்த நிலை –
அவன் திரு உள்ளம் ஒன்றுமே பண்ணாமல் -உபாயதயா-ஒன்றும் வேண்டாமே –
இதே போலே போக்த்ருத்வமும் –மேல் மேலும் அதிசயம் -செய்யும் கார்யங்கள் -பர அதிசய ஏவ -மீமாம்சகன் –சொல்ல
நம் ஸ்ரீ ராமானுஜரோ ஆதாயகத்வேன -ஆனந்தம் சம்பாதித்துக் கொடுக்கும் கைங்கர்யம் ஈடுபட வேண்டுமே –
அவ்வாகாரங்கள் இருக்கவே -என்னாமல்- அறியவே என்றது- ராவணாதிகளுக்கும் இவை இருக்கும் -ஆனால் அவர்கள் அறிய வில்லையே

அதாவது –
ஜ்ஞாத்ருத்வ  நிபந்தநமான கர்த்த்ருத்வம் உண்டாய் இருக்க செய்தே –
பகவத் பிராப்திக்கு தானொரு யத்னம் பண்ணாமல் இருக்கை யாகிற –
இந்த ஸ்வ யத்ன நிவ்ருத்தி -பராதீன ஸ்வரூப ஸ்தித்யாதி மத்தவமாகிற-பாரதந்த்ர்யத்தின் கார்யம் –
அப்படியே –
போக்த்ருத்வமுண்டாய் இருக்க செய்தே -அத தலையை ரசிப்பிக்கும் அது ஒழிய
தனக்கு என்று ஒன்றில் ரசம் இன்றிக்கே இருக்கை யாகிற -ஸ்வ பிரயோஜன நிவ்ருத்தி –
பராதிசய ஆதாயகத்வமே வடிவாய் இருக்கை யாகிற சேஷத்வத்தின் கார்யம் –
இத்தால்-
பாரதந்த்ர்ய சேஷத்வங்கள் இரண்டும் ஆத்மாவுக்கு ஸ்வரூபம் ஆகையாலே –
அவ்வாகாரங்களை அறியவே -இவை இரண்டும் தன்னடையே வரும் என்றது -ஆய்த்து –
உபாசகனுக்கும் இப்படியே -அத்யந்த பாரதந்தர்யம் இல்லையே /
ஐஸ்வர்யாதிகளும் பிரயோஜனாந்தரங்களை விரும்புவதும் இவ்வாகாரங்களை அறியாமல் இருப்பதால்

—————————————————

சூரணை -72-

பர ப்ரயோஜன பிரவ்ருத்தி
பிரயத்ன பலம் –
தத் விஷய ப்ரீதி
சைதன்ய பலம் –

ஆனால் இப்படி ஸ்வ யத்ன ஸ்வ பிரயோஜனங்களில் அன்வயம் அற்று
இருக்கும் ஆகில் -இவனுடைய பிரயத்னத்துக்கும் -சைதன்யத்துக்கும் -பிரயோஜனம் என்ன-என்ன
அருளிச் செய்கிறார்-இந்த வாக்ய த்வயத்தாலே –

கைங்கர்யம் அவன் பிரயோஜனத்துக்கு –ஆத்மாவுக்கு கர்த்ருத்வம் போக்த்ருத்வங்கள் இல்லை என்பார்களே பாட்டர் மதஸ்தர் –
பிரயத்னத்துக்கும் ஞானத்துக்கும் வடிகால் -பரனுக்கு பிரயோஜனமாய் நாம் செய்யும் கைங்கர்யம் ஆகிய ப்ரவ்ருத்தி -பிரயத்தன பலம் –
கைங்கர்யம் செய்து வடிகால் என்றபடி -அதனால் ப்ரீதி அவன் அடைவது -கண்டு ஜீவன் ஆனந்தித்து
ஸூ பிரயோஜனம் இல்லை -இதுவே சைதன்ய பலம் –
பாரதந்தர்யங்களுக்கும் சேஷத்வங்களுக்கும் விரோதம் இல்லாத படி
அதிசய -மாலை தொடுத்து விளக்கு ஏத்தி -திரு நாம சங்கீர்த்தனம் -த்வயம் உச்சாரணம் முதலியவை சிஷ்டாசாரம் -ஸூ பிரயத்தனம் –
இதுக்கு பலம் விஷய பூதனுமாய் ப்ரேரகனுகமான அவனுக்கு ப்ரீதி ஏற்பட -ப்ரவ்ருத்திகள் –
சேதனனுக்கு சைதன்ய பலம் -அத்யந்த சேஷியை விஷயீ கரித்து-அவன் ஆனந்தம் கண்டு சேதனன் ப்ரீதி அடைவது –
இதை பார்த்து அவன் ப்ரீதி இரட்டிக்குமே –
தத் அனுபவத்தால் உண்டான ப்ரீதி அவனுக்கே -என்றவாறு –
அறிந்து –ஆசைப்பட்டு -பிரயத்தனம் -கரோதி-நான்கு நிலைகள் -கரிஷ்யாமி -செய்ய வேண்டும் –
நான்காவது நிலை -ஸ்வார்த்ததா லேஸம் இல்லை என்று காட்ட
வழு விலா அடிமை அடுத்து -/ உனக்கே நாம் ஆள் செய்வோம் –
இதுவே வழு விலா அடிமை -அவனுக்கே- தனக்கும் அவனுக்கும் இல்லை –
படியாய் கிடந்து –ப்ரவ்ருத்தி -உன் பவள வாய்-அவனது ப்ரீதி – காண்பேனே– சேதன கார்யம் -சேதனன் பெற்ற ப்ரீதி

அதாவது –
அஹம் சர்வம் கரிஷ்யாமி –
வழு இலா அடிமை செய்ய வேண்டும் –
உனக்கே நாம் ஆள் செய்வோம் -என்கிறபடி
பரனுக்கு பிரயோஜனமாக பண்ணும் கைங்கர்ய ரூப பிரவ்ருத்தி – இவனுடைய பிரவ்ருத்தி  உத்யோக ரூபமான ப்ரயத்னத்துக்கு பிரயோஜனம் –
நித்ய கிங்கர ப்ரஹர்ஷ இஷ்யாமி-ஸ்தோத்ர ரத்னம் -என்கிறபடியே -அத் தலையில் உகப்புக்கு உறுப்பாக
தான் பண்ணுகிற கைங்கர்யத்தாலே -அத்யந்த ஹ்ருஷ்டனாய் இருக்கிற அந்த பரனை விஷயமாக உடைத்தான ப்ரீதி-
இவனுடைய அசித் வ்யாவிருத்தி ரூபமான சைதன்யதுக்கு பிரயோஜனம் -என்கை –
படியாய் கிடந்து உன் பவள வாய் காண்பேனே -என்னக் கடவது இறே –
இத்தால்-
பாரதந்த்ர்ய சேஷத்வங்களாலே பலித்த
ஸ்வ யத்ன ஸ்வ பிரயோஜன நிவ்ருத்திகளை உடையனான சேதனனுடைய-பிரயத்ன சைதன்யங்களுக்கு –
பாரதந்த்ர்ய சேஷத்வ அனுகுணமாக பிரயோஜனங்கள் சொல்லிற்று -ஆய்த்து –

——————————————————

சூரணை -73-

அஹம் -அர்த்தத்துக்கு
ஞான ஆனந்தங்கள்
தடஸ்தம் என்னும் படி
தாஸ்யம் இறே
அந்தரங்க நிரூபகம் –

சேஷத்வாதிகளும் -ஜ்ஞாத்ருவாதிகளும் -ஆத்மா தர்மங்களாய்  இருக்க செய்தே –
சேஷத்வாதிகளை பிரதானம் ஆக்கி -ஜ்ஞாத்ருவாதிகளை தத் அநு குணமாக யோஜிக்கைக்கு நியாமகம் எது -மற்றை படி தானானாலோ என்ன –
அருளி செய்கிறார் –

பஹிரங்கம்-புற இதழ் -அந்தரங்கம் உள் இதழ்/ ஞான ஆனந்தங்கள் பஹிரங்கம் -சேஷத்வம் அந்தரங்கம் -ரஹஸ்யம்
தாஸ்யம்- உள் இதழ் /தடஸ்தம் -புற இதழ் -ஞான ஆனந்தங்களை வாசலில் வைக்கும் படி அன்றோ தாஸ்யம் –
சேஷத்வம் இருப்பது இதழ்கள் போலே இவையும் –
ப்ரத்யக்காயாய்க் கொண்டு ஸ்யவம் பிரகாசமாய் –ஆத்ம ஸ்வரூபம்– பிரக்ருதியும் காலமும் ஜடம் /
நான்கு அஜடம் ஸ்வயம் பிரகாசம் /
தர்ம பூத ஞானமும் நித்ய விபூதியும் ஸ்வயம் பிரகாசம் /ஜீவாத்மா பரமாத்மா ப்ரத்யக்காயும் பிரகாசமுமாய் -இந்த நான்கும் அஜடம் /
அனுகூலத்வ ஆகாரத்தை -ஞான -ஆனந்த குணங்களையும் –பஹிரங்கமாய்க் கொண்டு -புற இதழ் என்னும் படி பர அதிசயகரமே வேஷமான
தாஸ்யம் -அந்தரங்கமாகக் கொண்டு -தன்னை புற இதழ் ஆக்கும் ஸ்வரூப நிரூபகாந்தரம் இல்லாமல் இதுவே நிரூபக விசேஷணம் –
ஆத்மாவுக்கு ஸத்பாவம் -பிரகாரம்-அவனைச் சார்ந்தே இருக்கும் – இதனால் -சேஷம் -அதனாலே சத்தை -/
பிரகாரம் ஆகவே சத்தா ஆகவே சேஷத்வம் என்பது பொருந்தாது –
மணம் புஷபத்துக்கு சேஷம் – –
சேஷமாய் இருப்பதால் தான் சத்தை -என்று உணர வேண்டும் -பிரகாரத்வம் முதலில் -அடிமை என்று அறிந்த ஞானவான் –
அஹம் அர்த்தத்துக்கு சத்தை சேஷம் –நித்ய விசேஷணம் பிரகாரம் –வியாவர்த்தத்துக்கா ஞான ஆனந்தங்கள் -என்றவாறு —
ஸ்வயம் பிரயோஜன அன்வயம் கூடாதே சேஷமாக சார்ந்தே இருக்கும் அஹம் அர்த்தத்துக்கு –
சேஷத்வயே சதி சேதனத்வம் தாஸ்ய லக்ஷணம் -ஆத்ம லக்ஷணம் சேஷத்வயே சதி ஞாத்ருத்வம் —
தாஸ்ய சப்தத்துக்கு வியவஹாரம் ஞானம் வேண்டுமே — –
ஆனந்த ஞானங்கள் பிரகாசத்வம் அனுகூலங்கள் /
தாஸ்யம் ஈஸ்வர வியாவர்த்தமாய் —பிரகிருதி புருஷ விபாகம் ஞான ஆனந்தங்கள் -நிரூபக த்வயமும் வஸ்துவுக்கு அபேக்ஷிதம் —
ஆத்மா உளதாவது சத்தைக்கு காரணம் -அதுக்கு ப்ரஹ்ம பிரகாரமே காரணம் –பிரகார ப்ரயுக்தமான சேஷத்வமே அந்தரங்க நிரூபணம் –
எப்படிப்பட்டவர் கேட்ட பின்பு ஞான ஆனந்தங்கள் -இருப்பதற்கு சேஷத்வமும் எப்படி என்பதற்கு இவைகளும் -/
அசித்துக்கும் சேஷத்வம் இருப்பதற்கும்- ஞான ஆனந்தங்கள் அதனால் இவை உயர்ந்தவை என்ற தப்பான எண்ணம் கூடாது –

அஹம் அர்த்தமாவது –
பிரத்யக்த்வேன அஹம் புத்தி  வியவஹாரார்ஹமான ஆத்ம வஸ்து -ஞான ஆனந்தங்கள் ஆவன -தத்கதமான பிரகாசத்வ அநு கூலத்வங்கள் –
ஞான ஆனந்தமயஸ் த்வாத்மா ஸ்வரூபம் அணு மாத்ரம் ஸ்யாத் ஞானாந்தைக லஷணம்-என்று இவற்றை இட்டு இறே வஸ்துவை நிரூபிப்பது –
தடஸ்தம் என்னும் படி -என்றது -பஹிரங்க நிரூபகதயா புற விதழ்  என்னும் படி -என்றபடி –
தாஸ்யம் ஆவது -சேஷத்வம் –
இது அந்தரங்க நிரூபகம் ஆகையாவது –
பகவத் ஸ்வரூபத்துக்கு பிரகாரதயா சேஷமாக கொண்டு தன் சத்தையாம் படி இருக்கும் வஸ்து ஆகையாலே -பிரதமம்
சேஷத்வத்தை இட்டு நிரூபித்து கொண்டே மற்றுள்ள ஆகாரங்களை இட்டு நிரூபிக்க வேண்டும்படி இருக்கை –
இத்தால் நிரூபகம் ஆகையாவது –
வஸ்துவை வஸ்துவந்தரத்தில் காட்டில் வ்யவர்த்திப்பிக்கும் அது ஆகையாலே –
தாஸ்யம் ஈஸ்வர வ்யவர்த்தகமாய் -ஞாநானந்தங்கள் அசித் வயாவர்த்தங்களாய்  இருக்கும் –
இப்படி நிரூபக த்வயமும் வஸ்துவுக்கு அபேஷிதமாய் இருக்க செய்தே
பகவத் பிரகார தயா லப்த சத்தாகமான  வஸ்துவுக்கு அசித்தில் காட்டில் உண்டான வாசியை
அறிவிக்கிற மாத்ரமான ஞாநானந்தங்கள் புற இதழாம் படி
பிரகாரத்வ பிரயுக்தமான  சேஷத்வமே அந்தரங்க நிரூபகமாய் இருக்கும் என்றது -ஆய்த்து இறே -என்று -இவ் அர்த்தத்தில் பிரமாண பிரசித்தி –
பிரதமம் சேஷத்வத்தை இட்டு வஸ்துவை நிரூபித்து கொண்டு (தாதார்த்ய சதுர்த்தி முன்னே வந்ததே -சேஷத்வமே நிரூபனம் என்பதால் )-
பின்னை- ஞான ஆனந்த  லஷணமுமாய்-ஞான குணகமுமாய்-அசித் வ்யாவிருதமுமாய் -இருக்கும் என்னும் இடத்தை
த்ருதீய பதத்தாலே-மகாரத்தாலே- நிரூபிக்கிற பிரணவமும் –
சமஸ்த வஸ்துகளும்  சர்வேஸ்வரனுக்கு பிரகாரம் என்னும் அத்தை பிரதிபாதிக்கிற நாராயண பதமும் -முதலானவை இதில் பிரமாணம் –
(ஆய -பிரார்த்தநாயாம் சதுர்த்தி -சேஷத்வம் -அசித் பிரார்த்திக்காது- நீ பிரார்த்திக்க வேண்டும் சேதனனாய் இருப்பதால் )
தாச பூதாஸ் ஸ்வதஸ் சர்வே ஹ்யாத்மானா பரமாத்மன ந அன்யதா லஷணம் தேஷாம் பந்தே  மோஷே ததைவ ச-ஹரிதஸ் ஸ்ம்ருதி -இத்யாதிகளும்  உண்டு இறே –
அடியேன் உள்ளான் -என்றார் இறே ஆழ்வாரும்- (அடி -திருவடி -அடியேன் -கர்த்ருத்வ-தாஸ்யத்தை செயல்படுத்துபவன் -உத்தம வருஷ ஏக வசனம் –
செய்தேன் பேசினேன் போலே அடியேன் -உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய் என்று விரித்ததை சுருக்கமாக ஆழ்வார் அருளிச் செய்கிறார் )
திரு கோட்டியூர் நம்பி ஸ்ரீ பாதத்திலே ஆறு மாசம் ஆழ்வான் சேவித்து நின்று மகா நிதியாய் பெற்ற அர்த்தம் இறே இது –
இப்படி சேஷத்வம் அந்தரங்க நிரூபகம் ஆகையால் நிரூபித ஸ்வரூப விசேஷணங்களான ஞாத்ருவாதிகளையே
தத் அநு குணமாக யோஜிக்க வேணும் என்று கருத்து –

இதம் இத்தம் இன்னான் இணையான போலே இவை இரண்டும் -ஸ்வரூப நிரூபக தர்மத்தால் இதம் -இன்னான் -என்று அறிந்த பின்பு –
சேஷத்வம் வைத்து ஆத்ம ஸ்வரூபத்தை அறிந்த பின்பு –நிரூபித்த வஸ்துவின் விசேஷணங்கள்-இத்தம் -இணையான –
இவை போலே ஞாத்ருத்வ ஆனந்தங்கள் –
சேஷம் என்றே ஆத்மாவை ஆதரிக்கும் மணத்தை கொண்டு புஷ்ப்பத்தை ஆதரிப்பது போலே – சேஷத்வத்துக்கு பிரதானம் காரணங்கள்
1—தர்மியின் சத்தைக்கு காரணம் -வஸ்துவின் சாமர்த்தியம் –
2–லுப்த சதுர்த்தியால் முன்னால் சொல்லி உபக்ரம நியாயத்தால் —
3-முக்கிய கிரம நியாயத்தால் ஸூ சேஷஸ்த்வத்தை காட்டிலும் -இங்கு பிரதி யோகியும் அனு யோகியும் ஜீவனே –
பகவத் சேஷத்வத்துக்கு –பிரதி யோகி ப்ரஹ்மம் அனு யோகி ஜீவாத்மா -இங்கு —
4-தாச சப்த பிரவ்ருத்தி நிவ்ருத்தத்தில் சேஷத்வயே சதி சேதனத்வம் சேஷத்வமே முதலில் –
5 சேஷத்வம் அறியாமல் எத்தை அறிந்தாலும் ஒன்றுமே அறிந்தவனாக மாட்டான் –
அறிந்து ஒன்றும் அறியாமல் இருந்தாலும் எல்லாமே அறிந்தவன் ஆகிறான் –
பிரமாணம் உண்டே -தாலி கிடந்தால் பூஷணங்கள் பண்ணி போகலாமே போலே -/ஸ்வேதகேது உத்தாரகர் சம்பாஷணம் இதே போலே /
6-அஹம் சொல்வதற்கு முன்பே சேஷத்வம் சொல்லும் பிரமாணங்கள் பலவும் உண்டே

————————————-

சூரணை-74-

இது தான் வந்தேறி அன்று –

இது ஸ்வரூப நிரூபகம் ஆகில் -ஆத்மா உள்ள வன்றே தொடங்கி உண்டாய் -போர வேண்டாவோ
இதுக்கு முன்பு இன்றிக்கே–(ஆச்சார்யர் உபதேசம் கடாக்ஷத்துக்கு முன்பு ) -இப்போது- உண்டாகையாலும் –
லோகத்தில் இது தான் ஓவ்பாதிகமாய் நடக்கக் காண்கையாலும்-
தாஸ்யம் ஆத்மாவுக்கு வந்தேறி அன்றே என்ன -அருளி செய்கிறார் –

தாஸ்யம் இயற்க்கை -நித்யம் -ஸ்வரூப நிரூபக தர்மம் / காதாசித்தம் இல்லை -ஸ்வஸ் சித்தம் –
மாதா பிதா சேஷத்வம் தானே வந்தேறி -பிறவியால் கர்மத்தால் -பூர்வ பஷ வாதம் —
திருமாலே நானும் உனக்கு -இவ்வளவு காலும் செருக்கித் திரிந்த நானும் -என்றவாறே -அது தான் வந்தேறி -அடிமைத் தானம் ஸ்வ பாவிகம் –
திருமாலே -அகாரம் குறை -நீக்கி ஸ்பஷ்டமாக அருளி /நானும் -மகார வாச்யனான -ஏக வசனம் ஜாதி சமஷடி வாசகம் -நாம் எல்லாரும் என்றபடி –
உனக்கு அகார வாச்யன் -அடியேன் ஆய லுப்த சதுர்த்தி அர்த்தம் / பழைமை -அடிமை த்வாரா தர்மியில் அந்வயிக்கும் –
அடியேன் -அடி என்பதால் தாஸ்யம் -யேன் என்பதால் ஆத்மா -பழமையை அடிமைத் தானத்தில் கூட்ட வேண்டும் –

இது தான் -என்று பிரக்ருதமான தாஸ்யத்தை பராமர்சிக்கிறது –
வந்தேறி -யாவது -ஆகந்துகம் –
அன்று -என்கையாலே -ஸ்வாபாவிகம் -என்ற படி –
ச்வோஜ் ஜிவநேச்சா யதி தே ஸ்வ சத்தாயாம் ஸ்ப்ருஹா யதி ஆத்மதாச்யம் ஹரேஸ் ஸ்வாம்யம்  ஸ்வ பாவஞ்ச சதா ஸ்மர-என்றும் –
நானும் உனக்கு பழ வடியேன் -என்னக் கடவது இறே-

———————————————-

சூரணை -75-

ஸ்வாதந்த்ர்யமும்
அந்ய சேஷத்வமும்
வந்தேறி —

ஆனால் வந்தேறியாக விவஷிதங்கள் எவை –
இதுக்கு விரோதிகள் ஆனவை எவை -என்று அருளிசெய்கிறார் –

சத்தா ப்ரயுக்தம் சேஷத்வம் -பிரகாரம் நித்ய சித்தம் -உபாதி கர்மத்தால் பிரயுக்தம் இவை -இவை தொலைய சேஷத்வம் சித்திக்கும்
கண்ணிலே பூ பட்டு இருக்கைப் போலே -மற்ற இடங்களில் தொண்டு பட்டு இருக்கை-தேவதாந்த்ரங்களிலே வேறே இடங்களிலோ –
அவித்யாதி -ஆதி கர்மா வாசனை ருசி இத்யாதி -உபாசகனுக்கு ஸ்வார்த்த பர கைங்கர்யம் -பிரபன்னனுக்கு அதுவும் இல்லை –
ஸ்வ சேஷத்வம் அங்கும் ஒட்டிக் கொண்டு இருக்கும் -பகவத் சங்கல்பம் என்கிற உபாதியால் -அவித்யாதிகள் அடியாக வருமே –

ஸ்வாதந்த்ர்யம் ஆவது -நான் எனக்கு உரியன் என்று இருக்கை-
அந்ய சேஷத்வம் ஆவது -பகவத் அந்ய விஷயங்களிலே தொண்டு பட்டு இருக்கை-
இவற்றை வந்தேறி என்கிறது -இவனுடைய அவித்யாதிகள் அடியாக வந்தவை ஆகையாலே –

————————————-

சூரணை -76-

சேஷத்வ விரோதி  ஸ்வாதந்த்ர்யம்-
தச் சேஷத்வ விரோதி ததிதர சேஷத்வம் –

இவை இதுக்கு (பகவத் சேஷத்வத்துக்கு ) விரோதிகள் ஆனமையை உபபாதிக்கிறார் மேல் –

சேஷத்வ பிரகாச விரோதி –ஸூ சேஷத்வ புத்தி -ஸ்வாதந்தர்யம் -/
அடுத்த நிலை -பகவத் சேஷத்வம் -தத் சேஷத்வம் –இதுக்கு விரோதி தத் இதர சேஷத்வம் –
நிருபாதிக சேஷிக்கு நிருபாதிக சேஷமாகிற -மாதா பிதா சேஷம் போலே இல்லையே -தத் சேஷத்வத்தை மறைக்கும் பிரபல விரோதி –
மாதா பிதா தேவதாந்த்ரங்கள் -சேஷம் என்னும் உணர்வு –மாத்ரு தேவோ பவ பித்ரு தேவோ பவ அதிதி தேவோ பவ —
பெரிய பிராட்டியார் பெரிய பெருமாள் -தர்ம சிந்தனை- சாஸ்த்ர வஸ்யராவாரே- இத்தை அறிந்தால்
தாயே -தந்தை -நோயே பட்டு ஒழிந்தேன் –பிதரம் மாதரம் –குரும் கூட விட்டுவிட்டு -சம்சார வர்த்தகமான உபதேசித்த குருவை சொல்லிற்று –
சம்சார நிவர்த்தகமான ரஹஸ்யார்த்தம் உபதேசித்த ஆச்சார்யரை சொல்ல வில்லை
-யதா வஸ்தித சேஷத்வம் பகவத் சேஷத்வம் ஒன்றுமே -அயதா சேஷத்வ பிரமம் –நீங்க வேண்டும் –

சேஷத்வ  விரோதி ஸ்வாதந்த்ர்யம் -என்றது நான் எனக்கு உரியேன் என்று இருக்கும் அளவில் –
ஒரு விஷயத்திலும்-(ஸூ வியதிரிக்த அனைத்தும் ) சேஷத்வம் இல்லாமையாலே -ஸ்வாதந்த்ர்யம் சேஷத்வத்தை உதிக்க ஒட்டாது என்ற படி –
தத் சேஷத்வ விரோதி ததிதர சேஷத்வம் -என்றது -ஸ்வாதந்த்ர்யம் குலைந்து -சேஷத்வத்துக்கு இசைந்தாலும் –
பகவத் வ்யதிரிக்த  விஷயங்களிலே ஒன்றுக்கு தன்னை சேஷம் என்று இருக்குமது –
நிருபாதிக சேஷியாக-அவன் பக்கலிலே சேஷத்வத்தை தலை எடுக்க ஒட்டாது என்றபடி –

———————————————

சூரணை -77-

அஹங்காரம் ஆகிற ஆர்ப்பை துடைத்தால் –
ஆத்மாவுக்கு அழியாத பேர் -அடியான் -என்று இறே-

இது தான் வந்தேறி அன்று -என்று தொடங்கி –உபபாதித்த அர்த்தத்தை முதலிக்கிறார் மேல் –

ஆகந்துக மாலினியம் – வந்தேறிய அழுக்கு-ஸூ ஸ்வா தந்தர்யம் -இதர சேஷத்வம் போன்றவை –
போனால் -பகவத் ஏக சேஷத்வம் -ஸ்வரூப ஞானம் பிரகாசிக்கும் –
அடியேன் -தாஸ்யத்தை ஸ்வரூப நிரூபகமாக உடையவன் -/ குணம் குணவான் போலே -/
பிரகிருதி சம்பந்தம் சரீரத்தால் -அஹங்காரம் -மமகாராம் -தேகாத்ம அபிமானம் ஸூ ஸ்வா தந்திரம் இரண்டும் -மறைக்கும் /
அஹம் -புத்தி -எனக்கு நான் புத்தி அஹங்காரம் -பிறர்க்கு உரியவன் அல்லேன்-ஸூவ ஸ்வா தந்தர்யம் என்றவாறு –
வந்தேறி என்றாலே போக வேண்டுமே -ஆச்சார்யர் ஞானக்கை- உபதேசத்தால்- துடைக்க–உபதேசம் நீடித்து இருக்க அனுகூல ஸஹவாசமும் வேண்டும்
தேவத்வம் மனுஷ்யத்வம் வந்தேறி போகலாம் – தாஸ்யம் சேஷத்வம் இப்படி அல்ல -அங்கும் இருக்குமே –
சேஷத்வமே -உயிர்கள் ஆதிப்பரனோடு ஒன்றாம் இவ்வல்லல் எல்லாம் ஒழித்தான் நம் இராமானுசன்
ஐக்கிய வாதம் ஒழித்து சாம்யா பத்தி மோக்ஷம் -நிர்மல முக்தாத்மா –
அழியாத பெயரே சேஷத்வம் உண்டே –குல தொல் அடியேன் உன பாதம் -கூடுமாறு -நிர்மல சேஷத்வம் –
சர்மா வர்மா குப்தா தாசன் -நான்கு வர்ணங்களின் பெயர் -நான்காவது வர்ணம் இயற்கையிலே தாஸ்யம் -ஜென்ம சித்தம் இவர்களுக்கு –
அடியேன் ராமானுஜ தாசன் அத்ர பரத்ர தோள் மாறாமல் இங்கும் அங்கும் –

அஹங்காரம் தான் -தேக ஆத்மா அபிமான ரூபமாயும் –ஸ்வாதந்த்ர்ய ரூபமாயும் -இரண்டு வகை பட்டு இறே இருப்பது –
அதில் இங்கே -ஸ்வாதந்த்ர்யத்தை சொல்லுகிறது –
ஆர்ப்பு -என்கையாலே -அதனுடைய திரோதாயாகத்வமும் -ஆகந்துகத்வமும் -தோற்றுகிறது –
அத்தை -துடைக்கை யாவது -சதாசார்யா உபதேசாதி களாலே சவாசனமாக போக்குகை-
ஆத்மாவுக்கு அழியாத பேர் அடியான் -என்றது ஒவ்பதிகமான வர்ண ஆஸ்ரமாதிகளாலே வந்து அழிந்து போம் நாமங்கள் போல் அன்றிக்கே –
யாவதாத்மா அநு வர்த்தியான நாமம் தாசன்  -என்னும் அது என்ற படி – இறே -என்று இவ்வர்த்தத்தில் -பிரமாண பிரசித்தி  –
தாச பூதாஸ் ஸ்வத-
ஆத்மா தாஸ்யம் –
இத்யாதிகள் இவ்விடத்தில் விவஷிதங்கள் –
ஆகையால் -ஸ்வா தந்த்ர்யாதிகள் ஒவ்பாதிகம் -தாஸ்யம் ஸ்வாபாவிகம் -என்ன-குறையில்லை என்று கருத்து –

———————————————–

சூரணை -78-

க்ராம குலாதிகளால்
வரும்பேர்
அநர்த்த ஹேது –

அது என்-க்ராம குலதிகளால் வரும்  வ்யபதேசம் அன்றோ நடந்து போகிறதோ என்ன
அருளிச் செய்கிறார் –

ஏகாந்தீ வியபதேஷ்டவ்யோ நைவ  க்ராம குலாதிபி -விஷ்ணுனா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம்  ச ஏவ ஹி-
வானமா மலை ரஹஸ்யம் பெண் பிள்ளை -ராமானுஜர் சம்பந்தம் பெற்ற அடியேன்-என்றாள்–
பகவத் சேஷத்வமே ஸ்வரூப நித்ய நிரூபனம் என்று -கட்ட -இந்த வசனம் / ஏகாந்தி -பரமை காந்தி -ஆர்த்தன திருப்தன்
விஷ்ணு சம்பந்தம் கொண்டே உள்ள இவனுக்கு அவனே ப்ராப்யம் ப்ராபகம் சர்வம் –
இந்த பிறவியில் உள்ள இந்த சரீரம் -பெயர் கொண்டு இல்லாமல் ஆத்மாவுக்கு நிலை நின்ற தாஸ்யம் –அடியேன் ராமானுஜ தாசன் –
ஜாதியாதி ப்ரயுக்தமான அழியும் பெயர் –/ முடும்பை உலகாசிரியர் ஏற்றுக் கொள்ள வேண்டும் -அத்தை விடுத்து தனக்கு என்று ஒன்றை கொள்ளாமல்
குலத்தை சொல்லி -இஷுவாகு குலம் போலே -ஆதி சப்தம் சரணம் சூத்ரம் -யஜுராதி சாகா விசேஷம் /
ஆபஸ்தம்பாதி சூத்ரம் / ரிஷிகள் வழி சொல்லி சாஸ்த்ர மரியாதை வழி நின்று
அலௌகிக புருஷார்த்தம் அடைய -உபாசகன் -ஸூ அதிசய ஆபாதகம் ஆகுமே –

அதாவது
க்ராம குலாதி வ்யபதேசம் அஹங்கார ஜனகம் ஆகையாலே
ஸ்வரூப ஹானி ரூப அநர்த்த கரம் என்ற படி –
ஆகையால் -அவற்றால் இவன்  வ்யபதேஷ்டவ்யன் அல்லன் என்று கருத்து –

————————————-

சூரணை -79-

ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்ய –

உக்தார்த்தத்துக்கு பிரமாணம் காட்டுகிறார் மேல் –

சாஸ்திரங்கள் விதிக்கும் அபிவாதய இத்யாதிகள் உண்டே என்னில் -இவை -சாமான்ய சாஸ்திரம் /
விசேஷ சாஸ்திரம் / முக்குணத்தாருக்கு வேதம் சொல்லுமே
காட்டு மார்க்கம் ததீயாராதனை பணம் கொண்டு போக சஹஸ்ர நாமம் சொல்லி ரக்ஷித்தால் பிரபன்னன் ஆக மாட்டான்–பட்டர் –
பாகவதர்களுக்காகவும் இப்படிக் கூடாது என்ற நம்பிக்கை வேண்டுமே / கண்ணனை சாதனமாக -கதி த்ரய மூலத்வாத் -மூன்றுக்கும் அவனே /
பரமை காந்தி -பகவத் ஏக பரன்
மாதா பிதா இத்யாதில் குலமும்/ நிவாஸ கிராமமும் சொல்லி -விசேஷ வசனம் -பகவானுக்கே அற்று தீர்ந்த -/
எல்லா நதிகளும் சமுத்திரம் -எல்லா பெயர்களும் கடல் வண்ணனான கேசவனை -சேரும் சேர்ந்த பின்பு பிரித்து பார்க்க முடியாதே /
தாமச ராஜஸ அடையாளம் கொண்டால் பக்தனுக்கு இழுக்கு ஆகுமே /

ஏகாந்தீ வியபதேஷ்டவ்யோ நைவ  க்ராம குலாதிபி -விஷ்ணுனா வ்யபதேஷ்டவ்யஸ் தஸ்ய சர்வம்  ச ஏவ ஹி-விஷ்வக் சேனர் சம்ஹிதை -இத்தால் –
பகவத் ஏக பரனாய் இருக்கும் அவன் -க்ராம குலாதி சம்பந்தங்களை இட்டு -சொல்லப் படும் அவன் அல்லன் –
பகவத் சம்பந்தத்தை இட்டு  சொல்லப் படுமவன் –
அவனுக்கு அந்த க்ராம குலாதிகள் எல்லாம் பகவானே என்கிறது –

ப்ராப்தாவும் -இத்யாதி வாக்யத்திலே
இச் சேதனனுடைய ஸ்வ யத்ன நிவ்ருத்தாதிகளை-தோற்றினபடியால் இவற்றுக்கு இன்னது நிதானம் என்றும் –
ஏவம் பூதனுடைய -பிரயத்ன -சைதன்ய -பிரயோஜனமும் –
சேஷத்வாதி பிரதான்ய  ஹேது -ஆத்மா ஸ்வரூபத்தின் உடைய தாஸ்யம் அந்தரங்க-நிரூபகத்வம் என்றும் –
இப்படி இருக்கிற இது ஸ்வாபாவிகம் -ஏதத் விரோதிகள் ஒவ்பாதிகம் என்றும் –
தந் நிவ்ருத்தியில் ஆத்மாவுக்கு தாஸ்யமே நித்ய நிரூபகமாய் இருக்கும் என்கையாலே – இவ் அர்த்தத்தை மூதலித்தும்-
க்ராம குலாதிகளால் இவன் வ்யபதேஷ்டவ்யன் அல்லன் என்றும் –
உத்தார்த்தத்தில் பிரமாணமும்  சொல்லுகையாலே –
ஸ்வ யதன நிவ்ருத்தி -இத்யாதி வாக்கியம் தொடங்கி-இவ்வளவும் பிராசங்கிகம்-

ஆக இப் பிரகரணத்தால் –
பிரபத்திக்கு தேசாதி நியமங்கள் இல்லை -விஷய நியமமே உள்ளது என்னும் இடமும் –
அவ் விஷயம் தான் என்னது என்னும் இடமும் –
அவ் விஷயத்தின் உடைய வை லக்ஷண்யத்தையும் –
அதில் பிரபத்தி பண்ணும் அதிகாரிகள் உடைய த்ரைவித்யமும் –
பிரபத்தியை உபாயம் ஆக்கினால் வரும் அவத்யமும் –
பிரபத்தி தன்னுடைய ஸ்வரூபாதிகளும்-
பிரபத்தவ்யனே உபாயம் என்னும் இடமும் –
பிரதி பாதிக்கப் பட்டது –

—————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: