ஸ்ரீ வசன பூஷணம் – சூர்ணிகை -23-40–சாதனஸ்ய கௌரவம் -ஆறு — உபாய பிரகரணம்-திருமால் திருவடி சேர்வழி நன்மை -ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள்/ ஸ்ரீ மணவாள மா முனிகள் அருளிச் செய்த வியாக்யானம் —ஸ்ரீ உ. வே. வேளுக்குடி ஸ்வாமிகள் விளக்க காலக்ஷேப குறிப்புக்கள்–

உபாய ஸ்வீ கார வைபவம் -பிரகரணம்-சூர்ணிகை -23-114/115-244-
சாதனஸ்ய கௌரவம் -ஆறு-உபாய பிரகரணம் -திருமால் திருவடி சேர் வழி நன்மை / அவ் வழி ஒழிந்தன அனைத்தின் புன்மை –

—————————-

சூரணை -23-

பிரபத்திக்கு
தேச நியமமும்
கால நியமமும்
பிரகார நியமமும்
அதிகாரி நியமமும்
பல நியமும் -இல்லை-

கீழ் உக்தமான உபாயத்தின் உடைய ஸ்வீகார ரூபையாய்-பிரபத்தி உபதேசம் பண்ணிற்றும் -என்று
ப்ராசங்கிகமாக ப்ரஸ்துதையான பிரபத்தியினுடைய படியை -விஸ்தரேண அருளி செய்கிறது மேல் –

சித்த உபாயம் ஸ்வீகாரம் -சரண வரணம் -கீழே உபாய வைபவம் பார்த்தோம் —
மேல் சரணாகதி -உபாயமாக வரிப்பது பற்றி –
அதிகாரி விசேஷம் -சரணாகதி -/

கீழே ஸ்ரீ மன் நாராயண -சொல்லி மேல்- சரணம் பிரபத்யே – 114 வரை -அர்ஜுனனுக்கு இவளுக்காக பிரபத்தி உபதேசம் –
ப்ராசங்கிக்கமாக கீழே சொல்லி -தேசாதி நியதி கண்டிலோம் -/ விஷய நியதி ஒன்றே உண்டு -எதை நோக்கி என்பதே உண்டு /
கர்ம ஞான பக்திகளுக்கு உண்டு -சித்த உபாய ஸ்வீகாரம் பிரபத்திக்கு இல்லை -உபாயாந்தர நிரபேஷன்-/
நிவ்ருத்தி ரூபம் -சர்வ தர்மான் பரித்யஜ்ய -நிவ்ருத்தி பூர்வகம் அன்றோ
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் இத்யாதி பிரசித்தம் -நிஷ்க்ருஷ்ட ஸ்வரூபம் சரீரம் இல்லா ஆத்ம ஸ்வரூபம் –
உபாயாந்தரங்கள் விசிஷ்ட ஸ்வரூபம் வர்ணாஸ்ரமம் தர்மம் உண்டே /
அநந்யார்ஹ சேஷன் ஜீவாத்மா ஸ்வரூப அனுரூபம் -சரணாகதி –மஹா விசுவாச ரூப சித்த உபாயம் –
தர்ம க்ஷேத்ரே தேச விசேஷம் நியமம் இல்லை -பிரமாணம் உபாசகனுக்கு -சரம ஸ்லோகமும் அங்க பிரபத்தி –
ப்ரஹ்ம முஹூர்த்தம் கால நியமும் இல்லை -ஸ்நானம் பிரகார நியமும் இல்லை- த்ரைவர்ணிக அதிகாரி நியமும் இல்லை
பல நியமும் இல்லை -ஜ்யோதிஷட ஹோமாதிகள் போலே -சுவர்க்கம் மட்டும் இதுக்கு -போலே இல்லையே –

அதில் பிரதமத்தில் அர்ஜுனனுக்கு பிரபத்தி உபதேசம் பண்ணுகிற அளவில் -யுத்த பூமியில் -ஒரு கால விசேஷம் பாராமல் –
ஸ்நாநாதிகளும் இன்றிகே இருக்க -உபதேசிப்பான் என் –
இதுக்கு தேசாதி நியமங்கள் இல்லையோ -என்கிற சங்கையிலே அருளி செய்கிறார்

பிரபத்தி யாவது -பகவச் சரண வரணம்-
பகவத் ஏக உபாயமாக பிரார்த்தனை –மஹா விசுவாச பூர்வகம் -வரணம் =பிரார்த்தனம் –கிருபையால் தான் இதுவும் —
பிரார்த்தனைக்கு உபாயத்வம் கூடாதே -தத் ஏக உபாயம் தானே பிரார்த்தனை —
தேச நியமம் ஆவது -புண்ய தேசங்களில் செய்ய வேணும்-அந்ய தேசங்களில் ஆகாது என்னும் அது –
கால நியமம் ஆவது -வசந்தாதி காலங்களிலே செய்ய வேணும் –
அந்ய காலங்களில் ஆகாது என்னும் அது –வசந்தே வசந்தே ஜ்யோதிஷ்டோமம் யஜதே போலே இல்லை
பிரகார நியமம் ஆவது -ஸ்நான பாத ப்ரஷாள நாதி பூர்வகமாக செய்ய வேணும் -ஆதி -ஆசமனம் போல்வன வேண்டாம் –
பிரகாராந்தரத்தாலே செய்ய ஒண்ணாது என்னும் அது –
அதிகாரி நியமம் ஆவது -த்ரை   வர்ணிகராக வேணும் -அத்ரை வர்ணிகராக ஒண்ணாது என்னும் அது –
பல நியமம் ஆவது -த்ருஷ்ட அத்ருஷ்ட பலங்களில் இன்ன பலத்துக்கு இது சாதனம் –த்ருஷ்டா பலம் மழை /
அதிருஷ்டம் சுவர்க்கம் -போலே இங்கு இல்லை –
அந்ய பலத்துக்கு சாதனம் அன்று என்னும் அது –
தேச கால சாத்குண்யா வைகுண்யங்கள் அடியாக வரும் அதிசய அனதிசயங்களை உடைத்தாவது ஓன்று அல்லாமையாலும் –
உத்கர்ஷம் அபகர்ஷம் -தேச காலம் பொறுத்து கர்மாதிகள் போலே இதுக்கு இல்லை –
தீர்த்தத்திலே அவஹாகிக்கும் அளவில் -சுத்த அசுத்த விபாகம் அற அவஹாக்கிக்கலாய் இருக்குமா போலே
ஸ்வயமேவ பவித்ரமாய் -சுத்த அசுத்த விபாகம் அற -தன்னோடு அன்வயிகலாம் படி இருக்கையாலும் –
வர்ணாத் அநு ரூபமாய் இருப்பது ஓன்று அன்றிக்கே -ஸ்வரூப அநு ரூபமாய் இருப்பது ஓன்று ஆகையாலும் –
சேதனருடைய ருசி அநு குணமான பல விசேஷங்களுக்கு சாதனம் ஆவது ஒன்றாலும் –
இந் நியமங்கள் ஒன்றும் இதுக்கு இல்லை என்கிறது –

ந ஜாதி பேதம் ந குலம் ந லிங்கம் ந குண க்ரியா
ந தேச காலவ் ந வஸ்தாம் யோகோ ஹயய மபேஷதே
பிரம்மா ஷத்ரே விச்ஸ் சூத்ரா ஸ்த்ரியச்சாந்தர ஜாதய
சர்வ ஏவ ப்ரபத்யேரன் சர்வ தாதர மச்யுதம் -என்று
பிரபத்திக்கு-தேச கால பிரகார அதிகாரி நியம அபாவம் பாரத்வாஜ சம்ஹிதையிலும் –
பிரபத்தே க்வசித ப்யேவம் பராபேஷா ந வித்யதே
சாஹி சர்வத்ர சர்வேஷாம்  சர்வகாம பலப்ரதா -என்று பல நியம அபாவம் சனத் குமார சம்ஹிதையிலும் சொல்லப் பட்டது இறே

—————————————-

சூரணை -24-

விஷய நியமமே உள்ளது –

இவை இல்லையாகில் -மற்றும் சில நியமங்கள் இதுக்கு உண்டோ என்ன
அருளி செய்கிறார் –

சுலபமான வஸ்துவே விஷயமாக வேணும் என்பது ஒன்றே உள்ளது
அதாவது
இன்ன விஷயத்தில் செய்ய வேணும் என்கிற நியமமே இதுக்கு உள்ளது என்ற படி –
இவை எல்லாம் தாமே மேலே உபபாதித்து அருளுகிறார் இறே-

———————————————

சூரணை-25-

கர்மத்துக்கு புண்ய ஷேத்ரம்
வசந்தாதி காலம்
சாஸ்திர உக்தங்களான தத் தத் பிரகாரங்கள்
த்ரை வர்ணிகர்-என்று இவை எல்லாம்
வ்யவஸ்திதங்களாய்  இருக்கும்  –

இதுக்கு இவை ஒன்றும் இல்லையாகில் பின்னை எதுக்கு தான் இவை எல்லாம் உள்ளது என்ன –
அருளிச் செய்கிறார் –

ப்ரவ்ருத்தி ரூபமான சாதனத்துக்கு இந்த நியதிகள் ஒன்றுமே குலைய ஒண்ணாது -விசிஷ்ட வேஷ அனுரூபமாய் –
வைதிக கர்மத்துக்கு -வேதம் கற்றவர்களுக்கே -காசி காஞ்சி போன்ற புண்ய க்ஷேத்ரம் வசந்தாதி காலமும்
ஸ்தாக்தா புஞ்சீத குளித்தே சாப்பிடு -தர்ம சாஸ்த்ர யுக்தமான -அக்னி வித்யா அங்கதா கர்ம த்ரை வர்ணிக்கர்
ஷேத்ராதி யான -சாபல்ய யோக்யதா -ஆபாத்தான யோக்யதா தத் அனுகுண தப்ப ஒண்ணாத வியவசதித்தங்களாய் இருக்கும்
ஸ்வரூபத்தை பற்றி வரும் இதுக்கு நியம விவஸ்தை இல்லை –
தோல் புரையே போமதுக்கு தத் தாது நியமம் தப்பில் விபரீதமாய் தலைக் கட்டும் – சரீரத்தை பார்த்து –
மர்ம ஸ்பர்சி இது மனமுடையீர் ஒன்றுமே போதும் –

கர்மம் ஆவது ஜியோதிஷ்டோமாதிகள் –
புண்ய ஷேத்ரங்கள் ஆவன சாஸ்த்ரங்களில் பாவன தயா அபிஹிதங்களான தேசங்கள் –
வசந்தாதி -என்கிற இடத்தில் ஆதி சப்தாதாலே -க்ரீஷ்ம சரச்சுக்ல கிருஷ்ண பஷ
பூர்வாஹ்ன அபராஹ்னாதி காலங்களை சொல்லுகிறது –
வசந்தே வசந்தே ஜியோதிஷா யஜதே -இத்யாதிகளாலே கால நியமம் சொல்லப் படா நின்றது இறே-
சாஸ்த்ரோத்தங்கள் ஆன தத்தத் பிரகாரங்களான ஸௌ சாமசமான -ஸ்நான -வ்ரத-ஜபாதி
ரூபேண அவ்வவ கர்மங்களுக்கு அநு குணமாக சாஸ்திர விஹிதங்களானஅவ்வவ பிரகாரங்கள் –
தர்ம தர்மான்-பன்மை – சர்வ தர்மான் -அங்கங்கள் உடன் -கூடி என்றபடி —
த்ரை வர்ணிகர் -என்றது உபநயன சம்ஸ்கார பூர்வகமாக வேதாதி  அதிகாரிகளானவர்களுக்கே
வைதிக கர்ம அதிகாரம் உள்ளது ஆகையாலே –சம்பூகன் -தண்டனை -ஸ்ரீ ராமாயணம் -உண்டே
இது தான் -க்ருக மேதித்வ கிருஷ்ண கேசித்வ வேத வேதாங்க உக்த த்வாதிகளுக்கும் உப லஷணம்—
க்ருஹஸ்தன் -ஆன தன்மை க்ருகமேதி / கறுப்புத் தலை மயிர் -உள்ளோர் -வாயோ விவஸ்திதமும் உண்டே /
வ்யவஸ்திதங்களாய் இருக்கும் -என்றது -நியதங்களாய் இருக்கும் என்ற படி-

————————————————

சூரணை -26-

ச ஏஷ தேச கால -என்கையாலே
இதுக்கு தேச கால நியமம் இல்லை –

பிரபத்திக்கு இவை ஒன்றும் இல்லை என்று கீழ் பண்ணின பிரதிக்ஜையை
உபபாதிகையிலே பிரவ்ருத்தராய் -பிரதமம்- தேச கால -நியம
ராஹித்யத்தை உபபாதிக்கிறார் –

அவன் வந்ததே தேசமும் காலமும் -என்றவாறு -திருவடி வாக்கியம் -இத்தைக் கேட்ட பின்பு தான் பெருமாள் திரு உள்ளம் மலர்ந்தது –
தோஷ துஷ்டனான ராவணன் த்யாஜ்யம்- ராவணனை விட்டு பெருமாளை பற்றும் எண்ணம் வந்தாலே போதும் -வந்ததே புண்ய தேசம் புண்ய காலம் –
குறை பார்க்க வேண்டாம் ஸூமத உபன்யாசம் திருவடி சொல்ல -இன்ன தேச கால நியதி இல்லை -என்றவாறு –

பத்த வைராச்ச பாபச்ச ராஷ சேந்தராத் விபீஷண
அதேச கால சம்ப்ராப்தஸ் சர்வதா சங்க்யதா மயம்-என்று முன்பு  ஸ்ரீ ஜாம்பவான் மகா ராஜர்-பயந்து –
பெருமாளுக்கு விண்ணப்பம் செய்த பஷத்தை தூஷிக்கிற திருவடி –
அதேச காலே சம்ப்ராப்த இத்யயம் ச விபீஷண
விவஷா சாத்ர மேஸ்தீயம் தாந்நிபோத யதாமதி
ச ஏஷ கால தேச காலச்ச  பவதீஹ யதா ததா
புருஷாத் புருஷம் ப்ராப்ய ததா தோஷ குணாவபி
தவ் ராத்மயம்  ராவேணா த்ருஷ்ட்வா விக்ரமஞ்ச  ததா த்வயி யுக்தம் ஆகமனம்  தஸ்ய சத்ருசம் தஸ்யபுத்தித -என்று
ராவணனாலே அவமாநிதனாய்  ஸ்வ நிகர்ஷத்தை முன்னிட்டு கொண்டு-
ராவணன் அனுஜத்வம் தோஷம் -விசேஷேண பீஷயதி எல்லாரையும் பயப்படுத்தும் பெயரை சொல்வதே தன் தாழ்ச்சியை சொன்ன படி –
சரணம் என்று வந்த ஸ்ரீ விபீஷண ஆழ்வான்-அதேசத்திலே அகாலத்திலே வந்தான் என்று-சுக்ரீவனைப் பார்த்து
தேவருடைய மந்த்ரிகளாலே யாதொன்று சொல்லப் பட்டது -இந்த பஷத்திலே விசேஷித்து
எனக்கு இந்த விவஷை உண்டாகா நின்றது -அவன் வருகிற அளவில் யாதொரு தேசத்திலே
யாதொரு காலத்திலேயே வந்தான் -அவன் வரவுக்கு அந்த இதுவே தேசமும் அந்த இதுவே காலமும்
யாதொரு படி -அப்படி பட்ட விவஷையை நான் அறிந்த அளவு விண்ணப்பம் செய்ய கேட்டு அருள வேணும் –
எங்கனே என்னில்
தம பிரகிருதி ஆகையாலே -பர ஹிம்சையே யாத்ரையான ராவணனில் காட்டில்–பிறப்பால் தமஸ் இருந்தாலும் மனசில் சத்யம் வளர்க்கலாம் –
ஆழ்வார் அதனால் தான் மனசை கூட்டி அருளிச் செய்கிறார்கள் பல இடங்களில் —
சத்வோத்தர் ஆகையாலே -பர ரஷணம் யாத்ரையாய் இருக்கிற தேவரீரை பிராப்யராக புத்தி பண்ணி
அப்படியே அவனை விட்டு போராது ஒழிந்தால் அவனுடைய அக்ருத்யத்துக்கு சஹகாரியாய்-அந்த
ப்ராதிகூல்யத்தோடே முடிந்து போகிற தோஷத்தையும் -தார்மிகரான தேவரீர் உடன் கூடப் பெற்றால்
தத் பலமாக தேவரீர் உடைய திருவடிகளில் கைங்கர்யத்தை லபித்து வாழுகையாகிற நன்மையையும்-புத்தி பண்ணி
அப்படியே தேவரீர் திரு உள்ளத்தில் புண் படும் படி குற்றத்தை தீர கழிய செய்து நிற்கிற ராவணன்
தவ்ராத்மத்தையும் -துராத்மாக்களை அநாயேசன அழிக்க வல்ல தேவரீர் ஆண் பிள்ளை
தனத்தையும் கண்டால் விசேஷ ஞானன் அவனுக்கு இவ் வரவு பிராப்தம் –
நியாயத்திலே சஞ்சரிக்கும் அவனுடைய புத்திக்கும் இது சத்ருசம் என்றான் இறே-
ஆக இப்படி பாவ சுத்தியை உடையனான ஸ்ரீ  விபீஷண ஆழ்வான் சரணம் என்று வந்த
தேச காலங்களில் குறை பார்க்க கடவது அல்ல -அவன் வந்த அதுவே தேசமும் காலமும்
என்று சரணாகதி  தர்மஜ்ஞனான திருவடி -ஆச்சார்யர் ஸ்தானம் அன்றோ -நிர்ணயிக்கையாலே
பிரபத்திக்கு தேச கால நியமம் இல்லை என்கை-

———————————————

சூரணை-27-

இவ் அர்த்தம் மந்திர ரத்னத்தில்
பிரதம பதத்தில்-ஸூ ஸ்பஷ்டம்

இது தான்  பிரபத்திய அனுஷ்டான ரூபமான த்வ்யத்தில்
பிரதம பதத்தில் காணலாம் என்கிறார் –

மந்த்ர ரத்னத்திலே உண்டே-சர்வ அதிகாரமாய் -அவிளம்பிய பல ப்ரதம்–பிரபத்திக்கு விஷயத்தை பிரகாசப்படுத்தும் -முதல் பதம் –
ஸ்ரீ மன் -புருஷகார உபாயங்கள் இரண்டும் தேச காலம் உபாதி இல்லாமல் எப்போதும் எங்கும் நித்யம் ருசி பிறந்த போது எல்லோரும்
ஆஸ்ரயிக்கும் படி இருக்குமே -ஸ்பஷ்டமாக இருக்கிறது -ஆரப்த வாக்ய அனுஷ்டான சித்தம் –மது பிரத்யயத்தாலே -கூடியே இருப்பதால் –
பிராட்டியாலே பெருமை பெற்ற த்வயம்-பிராட்டியாலே பேறு த்வயம் -/ஆத்மாவால் பேறு திருமந்திரம் -பெருமாளாலே பேறு சரம ஸ்லோகம்
மந்த்ர ரத்னம் த்வயம் நியாஸ பிரபத்தி சரணாகதி -பர்யாய நாமங்கள் –ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் –விருந்தை மருந்தாக்கி கொள்கிறோம் –
தபசுக்களில் மிக ஸ்ரேஷ்டமான சரணாகதி -பிராட்டியை சொன்னபடியால் ஸ்ரேஷ்டம் ரத்னம் என்கிறோம் –
அதாவது
சகல உபநிஷத் சாரமாய்–சர்வாதிகாரமாய் – -அவிளம்ப்ய பல பிரதமாய் -சர்வேஸ்வரனுக்கு அத்யந்த அபிமதமாய் -சர்வ மந்த்ர உத்க்ருஷ்டதயா-
என்கிறபடியே மந்திர ரத்னமாய் இறே த்வயம் இருப்பது –
அந்த வைபவம் தோற்றுகைகாக-மந்திர ரத்னம் என்கிறார் -த்வயம் – என்னாதே
அதில் பிரதம பதத்தில் மதுப் அர்த்தமான -புருஷகார உபாய நித்ய யோகத்துக்கு பிரயோஜனம் –
ஏதேனும் ஒரு தேசத்தில் -ஏதேனும் ஒரு காலத்தில் -ஒரு சம்சாரி சேதனனுக்கு சமாஸ்ரயண ருசி விளைந்தால் –
சஞ்சலம் ஹி மன –
நின்றவா நில்லா நெஞ்சு -பெரிய திருமொழி -1-1-4-என்கிறபடியே சூறாவளி காற்று போலே சுழன்று வருகிற நெஞ்சு தளமாக அங்குரித்து
க்ஷண பங்குரையான ருசி தீருவதற்கு முன்னே–நிவேதியதே –க்ஷிப்ரம் என்றானே -தத் உத்பத்தி ஷணத்திலே ஆஸ்ரயிக்கலாய் இருக்கை இறே-
ஆகையாலே பிரபத்தியினுடைய தேச கால நியம ராஹித்யம்-அந்த பதத்தில் நன்றாக தோற்றும் என்கிறார்

——————————

சூரணை-28-

பிரகார நியதி இல்லை என்னும் இடமெங்கும் காணலாம் –

பிரகார நியம ராஹித்யத்தை தர்சிப்பிக்கிறார் மேல் -க்ருஸ்த்தனமாய் முழுவதுமாய் எங்கும் காணலாமே –
அனுஷ்டித்தது திரௌபதி -ஸ்ரவணம் பண்ணிய அர்ஜுனன் /
அனுஷ்டித்தும் ஸ்ரவணம்- பண்ணியும் -ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பக்கலிலும் காணலாம்

எங்கும் காணலாம் -என்றது –
இத்தை அனுஷ்டிப்பார்-ஸ்ரவிப்பார் -எல்லார் பக்கலிலும் காணலாம் என்ற படி –

———————————————

சூரணை-29-

திரௌபதி ஸ்நாதையாய் அன்றே பிரபத்தி பண்ணிற்று –
அர்ஜுனன் நீசர் நடுவே இறே இவ் அர்த்தம் கேட்டது –

அது எங்கே கண்டது என்ன -பூர்வ பிரக்ருத விஷயங்களிலே தர்சிப்பிக்கிறார் -வாக்ய த்வயத்தாலே –
நடுவில் இடத்தை பற்றி இல்லை -கர்ம சண்டாளத்வம் வந்ததே துரியோதனாதிகள் பக்கல் இருந்ததால் –

உத்க்ருஷ்ட ஜென்ம திரௌபதி -உத்க்ருஷ்ட பார்யை -ஆபன்னையாய் சுத்தியை அபேக்ஷிக்காமல் -தன் நிரபேஷ பிரபத்தி -எதிர்பார்க்காத பிரபத்தியை பண்ணினாள் –
ஆசார பிரதானரான அர்ஜுனன் -சுத்தியை அறிந்தவர்கள் என்று இந்த அடை மொழி –சோகார்த்தனாய் -வேதாந்த அர்த்த ஸ்ரவணம் -செய்கிற இடத்தில்
நெடும் தகையை நினையாதார் நீசர் -என்னும் பகவத் ஸ்மரணம் அற்ற நீச ஹீனர் நடுவில் ஏகாந்தத்தில் கேட்க வேண்டிய சரம அர்த்தத்தை
கூசாமல் கேட்டான் -நியம ஸ்தான அனுஷ்டான சித்தம் என்கிறார் –பிரகார நியமம் இல்லை –

திரௌபதி இத்யாதி வாக்ய த்வ்யத்தாலே –
ஸ்நாததையா ரஜஸ் வலைக வச்த்ராஹம் நது மாம் நேது  மர்ஹசி குரூணாஞ்ச புரச்ஸ்தாதும்
சபாயாம் நாஹா முத்சஹே–சபா பர்வம் மஹா பாரதம் –என்னும் படி
அசுத்தையாய் இருக்கிறவள் ஸ்நானம் பண்ணி அன்றே பிரபத்தி பண்ணிற்று என்றபடி –
இத்தால் பிரபத்தி பண்ணுவார்  பிரயதராய் பண்ண வேணும் என்னும்–செய்ய வேண்டிய முறைப்படி -செய்ய வேண்டும் என்கிற
நியதி இல்லாமை காட்டப் பட்டது –
நித்ய ஸ்நானத்தை சொல்ல வில்லை –கர்ம அங்க ஸ்நானம் இல்லை -நைமித்திக ஸ்நானம் -நிமித்தீ பூத ரஜஸ் -விடாய் காலம் -சதசமாக பேச வேண்டுமே –
ஆபத் விஷயம் ஆகையால் -பண்ணின சரணாகதியை ஆசமனம் போன்றவை வேண்டாம் என்பதற்கு திருஷ்டாந்தமாக சொல்லலாமோ என்னில்
பெரும் ஆபத்து காலத்தில் கஜேந்திரன் நினைத்து -பிரமாணங்கள் உண்டே —
ஆபத்து வரும் காலத்தில் சடக்கென சரண் அடை ரிஷி வாக்கியங்கள் உண்டே –
பிரகார நியமம் இல்லை என்கிற பிரமாணங்களை உண்டே –
வசிஷ்டர் வாக்கியம் –அசத்தி தசா சாதாரண துக்க சங்கடம் ஏற்படும் காலம் -தன் நிவர்த்தன சரணாகதிக்கு காலம் -என்றாரே –
இந்த வாக்கியத்துக்கே திரௌபதி அனுஷ்ட்டித்து காட்டினாள் என்றபடி –
நீசர் நடுவே இறே இவ் அர்த்தம் கேட்டது -என்ற இடத்தில்
நீசர் என்கிறது -நெடும் தகையை நினையாதார் நீசர் -பெரியதிரு மொழி -11 -6 -8 –
ஆழ்வார் அருளிச் செய்த ஸௌரி சிந்தா விமுகரான ஹேயரை-
விஷ்ணு பக்தி விஹிநச்து யதிச்ச ச்வபசாதம
விப்ராத் த்விஷட்குனயுதா தரவிந்த நாப பாதாரவிந்த விமுகாஸ் ச்வபசம் வரிஷ்டம் -என்று
பகவத் விமுகரை ச்வபசதமராக சொல்லிற்று இறே —
யதியாக இருந்தாலும் விஷ்ணு பக்தி இல்லாதவரை நாய் மாமிசம் உண்பவரை விட தாழ்ந்தவன் –
12-குணம் உள்ளவராக இருந்தாலும் பாகவத பக்தி இல்லாதவனும் அப்படியே
சமம் தமம் தபஸ் சுத்தம் சாந்தி ஆர்ஜவம் விரக்தன் ஞானம் விஞ்ஞானம் ஸந்தோஷம் கிடைத்ததை கொண்டு சத்யம் ஆஸ்திக்யம் போன்றவை
-12-குணங்கள் -தவி ஷட் குண ப்ராஹ்மணர் -என்பர் –
அதுக்கு மேல் சரணாகதையை  பரிபவித்தும் சரணாகதரான பாண்டவர்கள் திறத்திலே
தீங்குகளை செய்தும் போருகையாலே -சத்யஸ் சண்டாலதாம் வ்ரஜேத் -என்கிற கர்ம சண்டாளர் இறே
கை கலந்து நிற்கிறது –அநாசாரம் துராசாரம் இருந்தவர்கள் என் பக்தர்களாக இருந்தால் –சரணாகதர்களான பாண்டவர்கள் –
அவர்களை நிந்தித்தால் -கர்ம சண்டாளர்கள் ஆவார் -என்கிறது —
முன்பு இருந்த இவை பகவத் சம்பந்தத்தால் அழிந்து போகும் -வராஹ புராணம் ஸ்லோகம் -இது
நீசர் நடுவே என்கையாலே நீசஸ்   ப்ருஷ்டியால் இவனுக்கு உண்டான அசுத்தியும்
நீச சகாசத்திலே என்னும் இடமும் தோற்றுகிறது-
இத்தால் பிரபத்தி ஸ்ரவணம் பண்ணும் போது-நீசர் மத்யத்தில் ஆகாது என்னும் நியதி
இல்லாமை காட்டப் பட்டது- பிரகார நியதி வேண்டாம் என்பதற்கு இந்த த்ருஷ்டாந்தம் -தேச நியதிக்கு இல்லை –

—————————————–

சூரணை -30-

ஆகையால் சுத்தி அசுத்திகள் இரண்டும் தேட வேண்டா –
இருந்தபடியே அதிகாரியாம் இத்தனை –

இத்தால் பலித்ததை சொல்லா நின்று கொண்டு இவ் அர்த்தத்தை நிகமிக்கிறார் –

சர்வ தர்மான் பரித்யஜ்ய என்பதில் அதர்மம் புகாதே அதே போலே இங்கும் -சுத்தி அசத்தி இரண்டும் நின்ற நின்ற நிலையிலே அமையும் —
பிரகார நியம அபேக்ஷை இல்லாமை பிரபத்திக்கு ஸ்வபாவம் -யோக்யதா ஆபாதக சுத்தியும் –
அயோக்யதா ஆபாதக அசுத்தியும் பிரவ்ருத்தி ரூபமான இரண்டும்
-பாவனுமுமாய் -பிரவ்ருத்தி அஸஹ்யமுமான -நிவ்ருத்தி ரூப நிரபேஷ பிரபத்திக்கு -நின்ற நிலைக்கு மேற்பட்ட தேட வேண்டா –

பிரவ்ருத்தி ரூப உபாயம் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபமான கிரியை -ஈஸ்வர ப்ரவ்ருத்தி விரோதி ஸூ பிரவ்ருத்தி நிவ்ருத்தி -ஏக கிரியை சஹிப்பார் –
சுத்தனாகவும் வேண்டா அசுத்தனாகவும் வேண்டா -ஆகவும் -வார்த்தை முக்கியம் -இருந்தபடியே அதிகாரியும் -ஆனால் சாத்தியமாகும் -சித்த உபாயம்
பாலை கறந்து அடுப்பு ஏற்றவும் பிடிக்காதே அவனுக்கு -இறைப் பொழுது -பேச சாளக்கிராமம் உடைய நம்பி சாய்த்து பருகி போவான் –
கண்ணன் சாப்பிட்டு போவதை பார்த்த பெண் மனசும் காணோம் –
அபவித்ர பவித்ரனாகவோ சர்வ அவஸ்தை த்வயம் சொன்ன மாத்திரம் -மோஷம் கொடுக்க –
திரௌபதி அர்ஜுனன் சாஸ்திரம் வழி நடப்பவர்கள் அசுத்தியை தேட வேண்டுமோ என்ற சங்கைக்கு நிவ்ருத்தி இது –

ஆகையால் -என்றது -அனுஷ்டான தசையிலும் ஸ்ரவண தசையிலும் இவர்கள் இருவரும் இப்படி-செய்கையால் என்றபடி –
சுத்தி அசுத்திகள் இரண்டும் தேட வேண்டா -என்றது -பிரபத்தியில் அன்வயிக்கும் அளவில்
அசுத்தனாய் இருக்கும் அவனுக்கு சுத்தி சம்பாதிக்க வேண்டா –
சுத்தனாய் இருக்கும் அவனுக்கு அசுத்தி சம்பாதிக்க வேண்டா என்றபடி –
அசுத்தி தேட வேண்டாம் என்றது -கீழ் சொன்னவர்கள் இருவரும் அசுத்தமான தசையில்
பிரபத்தியில் அன்வயித்தமை சொல்லுகையாலே -அசுத்தி தான் இதுக்கு வேணும் என்று-சங்கியாமைக்கு-
இருந்தபடியே அதிகாரியாம் இத்தனை -என்றது -பிரபதன காலத்தில் அசுத்தனாய் ஆதல் –
சுத்தனாய் ஆதல் -யாதொரு படி இருந்தான் -இருந்ததொரு பிரகாரத்திலே -இதுக்கு அதிகாரியாம் இத்தனை என்றபடி
திரௌபதியும் அர்ஜுனனும் -பிரபத்தி அனுஷ்டான -தத் ஸ்ரவண தசைகளில் –
தத் அங்கமாக சுத்தி சம்பாதியாதவோபாதி அசுத்தியும் சம்பாதித்து கொண்டமை இல்லை இறே –
இருந்தபடியே அதிகாரிகளான இத்தனை இறே –

———————————————

சூரணை -31-

இவ் இடத்திலே வேல் வெட்டி பிள்ளைக்கு பிள்ளை
அருளி செய்த வார்த்தையை ஸ்மரிப்பது-

இவ் அர்த்த விஷயமாக ஆப்த வசனத்தை ஸ்மரிப்பிக்கிறார் மேல் –

அபய பிரதானம் கேட்க்கும் இவருக்கு –வேல் வெட்டி சோமயாஜி பிள்ளைக்கு நம்பிள்ளை –
அஞ்சலி கிழக்கு முகமாக பெருமாள் -தேச பிரகார நியமங்கள் –
பெருமாள் சாமான தர்மம் ஸம்ஸ்தாபகர் -அப்படி செய்தார் அத்தனை காண்-விபீஷணன் கணைக்காலைக் கூட நனைக்காமல் சரணம் –
அநாசார சீலன் -நின்ற நிலையிலே இதுக்கு அதிகாரம் அத்தனை காண் –

அதாவது -வேல் வெட்டி நாராயண பிள்ளை -பெருமாள் கடலை சரணம் புகுகிற இடத்தில்
பிரான் முகத்வாதி நியமோபேதராய் சரணம் புகுருகையாலே –
இதர உபாயங்களோபாதி பிரபத்திக்கும் சில நியமங்கள் வேண்டி இருக்கிறதோ -என்று
நம்பிள்ளையை கேட்க -பெருமாள் பக்கல் கண்ட நியமம் -இவ் உபாயத்துக்கு
உடன் வந்தியாய் இருப்பது ஓன்று அன்று -பெருமாள் தமக்கு சமுத்ரம்-ராகவோ ராஜா சரணம் கந்துமர்ஹதி –
என்று உபதேசித்தான் ஸ்ரீ  விபீஷண ஆழ்வான் இறே -அவன் தான் பெருமாளை சரணம் புகுகிற இடத்தில்
கடலிலே ஒரு முழுக்கு இட்டு வந்தான் என்று இல்லையே –
இத்தால் சொல்லிற்று ஆய்த்து -பெருமாள் இஷ்வாகு வம்சராய் -ஆசார பிரதானராய்  இருக்கையாலே –
தம்முடைய நியமங்களோடே சரணம் புக்கார் –
இவன் ராஜச சஜாதீயன் ஆகையாலே நின்ற நிலையிலே சரணம் புக்கான் –
சரணாகதி ஆனபின்பு -ராக்ஷஸாம் பலம் என்ன கேட்டதால் ராக்ஷஸ கோஷ்ட்டியில் இல்லை -விபீஷணன் தர்மாத்மா என்றாள் சூர்ப்பணகை –
ராக்ஷஸ சஜாதீயன் என்றது -நின்ற நிலையில் -சரணம் புக்கான் -சரணாகதிக்கு பின்பு அன்றோ பெருமாள் ஸ்பரிசத்தால் அசத்தி போனது என்பதே –
ராக்ஷஸ சேஷ்டிதங்கள் இல்லை என்றது அதற்க்கு உரிய செயல்கள் இல்லாதவன் என்றவாறு
ஆகையாலே யோக்யனுக்கு அயோக்யதை சம்பாதிக்க வேண்டா
அயோக்யனுக்கு யோக்யதை சம்பாதிக்க வேண்டா
நின்ற நின்ற நிலைகளிலே அதிகாரிகளாம் இத்தனை என்னும் அது -என்று அருளி செய்த வார்த்தை —

————————————

சூரணை -32-

அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் –
தர்ம புத்ராதிகளும்
திரௌபதியும்
காகமும்
காளியனும்
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வானும்
பெருமாளும்
இளைய பெருமாளும்
தொடக்கமானவர்கள்
சரணம் புகுருகையாலே
அதிகாரி நியமம் இல்லை –

அநந்தரம்-
அதிகாரி நியம அபாவத்தையும் உபபாதிப்பதாக -தத் ஞிஜ்ஜாஸூ   பிரச்னத்தை அனுவதிக்கிறார் –
அதிகாரி நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என் என்னில் -என்று –
அதுக்கு உத்தரம் அருளி செய்கிறார் -தர்ம புத்ராதிகளும் -என்று தொடங்கி-

வரணங்களுக்குள் ப்ராஹ்மணர் -ஒரு படி தாழ நின்ற தர்ம புத்ராதிகள் க்ஷத்ரியர் —விஸ்வஸித்து சரணம் புகுகையாலும்
மந்த்ரம் அதிகாரம் அற்ற திரௌபதியும் -கூச்சம் அற்று சரணம் புகுகையாலும் -இரு கையை விட்டேனோ திரௌபதியை போலே
பிரதிகூலனான காகாசுரன் -சாஸ்த்ர வஸ்ய ஜென்மம் இல்லை -போக்கற்று- சரணம் புகுகையாலும்
தமோ குணம் காளியனும் -கிருபா மாத்திரம் -தேவரீர் உள்ளம் -மிடுக்கு அற்று சரணம் புகுந்தபடியும்
திர்யக் ஜென்மம் அனுகூலனான கஜேந்திரன் -பரம ஆபத்து தசையில் -நாராயணா பராயணா மூச்சற்று சரணம் புகுந்தபடியாலும்
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் பிரதிகூல சம்பந்தமுடையவன் -ராக்ஷஸ ஜன்மாவாய் -அனைத்தையும் விட்டு -அந்நிய சம்பந்தம் அற்று சரணம் புகுகையாலும்
அற்று சப்தம் -நிவ்ருத்தி ரூபம் தானே சரணாகதி –
ஸ்வரூப நிரூபக பரதந்தர்ய வஸ்துவை தேடிப் பின் செல்லும் ஸ்வ தந்தர்ய சரண்யர் –
குழந்தை காலை முகத்தில் அடிக்க வைத்து மகிழும் அப்பா போலே பெருமாள் -சமுத்திர ராஜன் இடம் -ஸ்வாபாவத்தை மறைத்து –
சரண்யன் என்பதை மறைத்து -கீழே அற்று என்றவர் இங்கு மறைத்து -அறுக்க முடியாதே இவருக்கு -குண கடல் -இவர் –
நிரூபித்த ஸ்வ தந்த்ரனை பின் செல்லும் பரதந்த்ரனான இளைய பெருமாளும் தரிப்பு அற்று சரணம் புகுகையாலும்
இன்னமும்
முசுகுந்த பிரகலாத ஸுபரி சுமுகன் கோப ஜனங்கள் பிரவருத்திகள் -விரும்பியதை நடக்க சரணம் புகுகையாலும்
மந்த்ர தந்த்ர அதிகாரிகள் சாஸ்த்ர வஸ்யர் அசாஸ்த்ர வஸ்யர் அனுகூலர் பிரதிகூலர் ஸ்வ தந்த்ரன் பரதந்த்ரர்
ஆண் பெண் சர்வரும் பிரபத்தி -அனைவரும் அதிகாரிகள் —

அதாவது
1–திரௌபத்யா சஹிதாஸ் சர்வே நமஸ் சக்ரூர் ஜனார்த்தனம்
என்று ஷத்ரியரான தர்ம புத்ராதிகளும் –
2–சங்க சக்ர கதா பாணே த்வாரகா நிலயாச்சுதா -கோவிந்த புண்டரீகாஷம்
ரஷமாம் சரணா கதாம் -சபா பர்வம் –என்று ஸ்திரீயான திரௌபதியும் -ஷத்ரிய பெண் -கீழ் இருந்து வேறு படுத்த பெண் -என்கிறார்
3–ச பித்ராச பரித்யக்தஸ் சூரைச்ச சமஹர்ஷிபி
த்ரீன் லோகன் சம்பரிக்ரம்ய தமேவ சரணம் கத-என்று
தேவ ரூபத்தை மறைத்து வந்து மகா அபராதத்தை பண்ணின காகமும் –கீழே மனுஷ்யர்-இங்கு தேவன் -மறைத்து வந்தவன் –
4–சோஹந்தே தேவ தேவேச நார்ச்ச நாதவ் ச்துதவ் நச
சாமர்த்யவான் க்ருபாமாத்ர மனோவ்ருத்தி ப்ரசீத மே-என்று-திர்யக் யோநி ஜனாய்
பிரதிகூலனுமான காளியனும் -விதி நிஷேத வத்ஸயத்வம் இல்லாத திர்யக் -பிரதிகூல்ய ஜாதி –
க்ருபா மாத்திரம் விசுவாசம் பிரார்த்தனை ஆகிஞ்சன்யம்-உண்டே இந்த ஸ்லோகத்தில்
5–பரம பதமா பந்தோ மனசா சிந்த யத்ஹரிம் சது நாகவரஸ் ஸ்ரீ மான் நாராயண பராயண -விஷ்ணு தர்மம் –
சாஸ்த்ர விதி நிஷேத வத்ஸ்யம் இல்லாத அனுகூல திர்யக் -என்றுதிர்யக் ஜன்மாவாய் அனுகூலனுமாயும் இருக்கிற
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானும் -/ஸூ ரக்ஷண ஸ்வான்வயம் ஒழிந்த ஸ்ரீ மத்வம்
6 –சோஹம் பருஷிதஸ் தேன தாச வச்சாவமா நித
த்யக்த்வா புத்ராம்ச தாராம்ச ராகவம் சரணம் கத -என்று-
ராக்ஷஸ சஜாதீயனான  ஸ்ரீ விபீஷண  ஆழ்வானும் –ராக்ஷஸ ஜாதியால் இவனுக்கு வேறுபாடு –
7–பாஹும் புஜக போகாப முபதாயாரி சூதன
அஞ்சலிம் பிரான்முக க்ருத்வா  பிரதிசிச்யே மகோததே -என்று-சர்வ சரண்யரான பெருமாளும் —
கீழே பகவத் ரஷ்யர்கள் இங்கு பகவானே -அரி சூதனான பெருமாள் –
8–சப்ராதுஸ் சரணவ்காடம் நிபீட்ய ரகு நந்தன
சீதா முவாசா தியசா ராகவஞ்ச மகா வரதம் -என்று
அக்கரையராய் தொடர்ந்து அடிமை செய்ய வந்த இளைய பெருமாளும் –உவாச வாசிக பிரபத்தி -நிபீடிய காயிக பிரபத்தி –
இரண்டுக்கும் மாசம் இருக்க வேண்டுமே /-
அதி ரோஹித -சஹஜ தாஸ்யத்வம் இவருக்கு மட்டுமே -அதுவே இளைய பெருமாளுக்கு வியாவருத்தி –
தொடக்கமானவர்கள் -என்கையாலே-
9–சோஹம் த்வாம் சரண மபார மப்ரமேயம் சம்ப்ராப்த
பரமபதம் யதோ ந கிஞ்சித்  சம்சார ஸ்ரம பரிதாப தப்த சேத நிர்வானே
பரிணததாம் நி சாபிலஆஷா–பாகவத -10–59- -என்ற முசுகுந்தனும் –சம்சாரம் விடுபட அபிலாஷை கொண்டு -சரண் அடைந்தான்
10–மூடோய மல்பமதி ரல்ப விசேஷ்டி தோயம் க்லிஷ்டம் மனோச்ய விஷயர் நமயிப்ரசங்கி
இத்தம் க்ருபான் குரு மயிபிரண தே கிலேச தவாம் ஸ்தோது மம்புஜ பவோபிஹி  தேவ நேச -என்று
ஷத்ர பந்துவும் –பராங்கதி கண்டு கொண்டானே ஷத்ரபந்துவும் —
விஷயாந்தரங்களில் உழன்று இருந்தேன் -அம்புஜ பவன் நான்முகனும் ஸ்தோத்ரம் பண்ண முடியாத உன் கிருபையே வேண்டி –
11–பகவந்தம் பிரபன்நாஸா பகவன் தமவாப ஹ என்று மாதவியும் -சரணாகதி பண்ணி திருவடி அடைந்தாள்
12–தம் பிரபன்ன சிரோக்ரீவம் ஆச்யேப்ய ஸ்ருத சோணிதம் விலோக்ய சரணம் ஜக்முஸ்
தத் பத்ன்யோ மதுசூதனம்-ஸ்ரீ விஷ்ணு புராணம் -5-அம்சம் -என்று காளிய பத்நிகளும் —
13–பிரணாம ப்ரவண நாத தைத்ய சைனா பராஜித
சரணம் த்வா மனு பிராப்தாஸ் சமஸ்தா தேவதா தேவதா கணா-என்று இந்திராதி தேவர்களும் –
14–ராஷசைர் வைத்திய மாநானாம் வாநாரானாம் மகாசமூ
சரண்யம் சரணம் யாதா ராமம் தசரதாத்மஜம் -என்று ஸ்ரீ வானர சேனையும்
முதலாய் உள்ளவர்கள் எல்லாரும் சரணம் புகுருகையாலே –
பிரபதிக்கு இன்னார் அதிகாரிகள் என்ற ஒரு நியதி இல்லை -ருசி உடையார் எல்லாரும் அதிகாரிகள் என்கை–
பித்ரு மகா ரிஷியும் – ருத்ரன் உபதேசிக்க துர்வாசரும் சுனசேபனும் போன்றாரும் உண்டே –
ஆதி சப்தம் -அதிகாரம் இல்லை என்று சொன்னதற்கு ருசி யுடையார் அதிகாரிகள் என்று
இவர்கள் அனைவருக்கும் பொதுவான காரணம் –
பெருமாளுக்கு ருசி -சரணாகதி தர்மம் புரிய வைக்க உதாரணமாக இருக்க ருசி உண்டே பெருமாளுக்கும் –

———————————————

சூரணை-33-

பல நியமம் இன்றிக்கே ஒழிந்தபடி என்-என்னில்
தர்ம புத்ராதிகளுக்கு பலம் ராஜ்ஜியம் –
திரௌபதிக்கு பலம் வஸ்த்ரம் –
காகத்துக்கும் காளியனுக்கும் பலம் பிராணன்-
ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு பலம் கைங்கர்யம் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானுக்கு பலம் ராம பிராப்தி –
பெருமாளுக்கு பலம் சமுத்திர தரணம் –
இளைய பெருமாளுக்கு பலம் ராம அநு வ்ருத்தி–

அநந்தரம் பல நியம அபாவ பிரசனத்தை அனுவதிக்கிறார் –

ஐஹிக பல காங்க்ஷிகள் ஸூக போக்கி ராஜ்ஜியம் /
அத்யல்பமான வஸ்திரம்–இடுப்பை விட்டு நழுவாமல் இருப்பதே பலம் /
பிராண அபேக்ஷை -காகம் காளியன்-உபகரணம் பிராணம்-ஐஹிக ஆமுஷ்மிக போகம் அனுபவிக்க /
ஸ்வரூபம் அறிந்த கஜேந்திரன் -ஸ்வரூப ஸ்திதி கைங்கர்யம் /-
கைங்கர்யத்துக்கு பூர்வ பாவியான ராம பிராப்தி விபீஷணனுக்கு /-
கைங்கர்ய அனுரூப அனுவ்ருத்தி இளைய பெருமாளுக்கு எல்லா அடிமைகளும் பின் தொடர்ந்து -/
ஆக -அல்ப அஸ்திரம் ஸ்வரூப விருத்தம்–ஸ்வரூப அனுரூபமான -அநந்த ஸ்திர நிரவதிக ஆனந்த ரூப கைங்கர்யம் – –
ஸாத்ய ரூப பலம் சித்த ரூப பலம் -பிராப்தி சித்தம் -கைங்கர்யம் ஸாத்ய பலம் என்றவாறு —
சார்வே தவ நெறிக்கு -பக்தி பரமாக-ஸாத்ய ரூபமா சாதனா ரூபமா -விசாரம் உண்டே -ஆக – சர்வ பலத்துக்கும் ஏக சாதனம் பிரபத்தி –

இத்தால் கீழ் அதிகாரி நியம அபாவத்துக்கு உடலாக காட்டப் பட்ட தர்ம புத்ராதிகள் தொடக்கமான
பிரபத்தாக்கள் ஆனவர்கள் –உத்தேசித்து செய்தார்கள் -என்றவாறு-
சித்தித்த பலத்துக்கு என்று சொல்ல முடியாதே -பெருமாளுக்கு சமுத்திரம் தாண்டியது பிரபத்தியால் சித்திக்க வில்லையே –
மநோ ரதித்ததே -திரௌபதிக்கு வஸ்திரம் கிடைத்ததும் -பிரபத்தியால் பெற்ற பலம் இல்லை -ஆபத்தில் புடவை சுரந்தது திரு நாமத்தால் –
பிரபத்தி- சணல் கயிறு போலே நழுவுமே -வேறே உபாயம் பற்றினால்-திரு நாம சங்கீர்த்தனம் உபாயம் வந்ததும் அது நழுவுமே –
நாமத்தால் மகிழ்ந்த பெருமாளாலே என்றும் கொள்ளலாம் –
அதனால் தான் சித்தித்த என்று சொல்லாமல் தத் தத் உத்தேசித்த மநோ ரதித்த பலம் என்கிறார் –
ராஜ்ய அர்த்தமாகவும் –
வஸ்த்ர அர்த்தமாகவும் –
பிராண அர்த்தமாகவும்
கைங்கர்ய அர்த்தமாகவும்-காலை மாலை கமல மலரிட்டு கைங்கர்யம் செய்ய தானே
ராம பிராப்தி அர்த்தமாகவும்–ராஜ்ய பிராப்தம் இல்லை
சமுத்திர தரண அர்த்தமாகவும்
ராம அனுவ்ருத்தி அர்த்தமாகவும்-எல்லா இடமும் கூடவே சென்று கைங்கர்யம் என்பதால் ராம அனுவ்ருத்தி
பிரபத்தி பண்ணுகையாலே பிரபத்திக்கு பல நியமம் இல்லை என்றது ஆய்த்து–

விகட -வைகட்யம் -சேராமை வரும் -சித்திக்கும் என்று சொன்னால் பெருமாள் விஷயத்தில் -/ கடித கடக விகடனா பாந்தவம் அவ்வூரில் –
ஆசை இல்லாமல் அகற்றினீர் தொலை வில்லி மங்கலம் -பார்த்தோம் –
பல உபாதான அபாயம் -விஷய பூர்த்தி ரூப காரணாந்தர-விரஹம்- சரணாகதன் ஆகிஞ்சன்யம் -அநந்ய கதித்வம் -வேண்டும் –
கடல் அரசன் இடமும் சரண்யனுடைய லக்ஷணங்கள் இல்லையே
பெருமாளுக்கு இதனால் சித்திக்காதே –
திரௌபதிக்கு பலம் வஸ்திரம் சித்தித்தது என்றாலும் ஒவ்வாதே-புடவை சுரந்தது திரு நாமம் தானே –
நாம சங்கீர்த்தனத்தை சாதனமாக பண்ண கூடாதே பிரபன்னன் -ஆகையால் உத்தேசியத்தை மட்டுமே கொள்ள வேண்டும் –
விபீஷணனுக்கு பலம் ராம பிராப்தி -ராஜ்ஜியம் காஙக்ஷீ என்பார் –விபீஷணன் வார்த்தை -உன் திருவடிகளில் அனைத்தையும் விட்டேன் என்றானே –
திருவடி அபிப்ராயத்தால் ராஜ்ஜியம் கொடுத்து செய் நன்றி காட்ட / பெருமாள் ராஜ்ஜியம் எதிர்பார்த்து வந்தாலும் அண்ணனை விட்டான் என்றாலும்
சுக்ரீவன் பக்ஷம் -அதே காரணங்கள் அவன் இடமும் உண்டே -என்றார்

—————————————————-

சூரணை -34-

விஷய நியமம் ஆவது-
குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை-
பூர்த்தி உள்ளதும் அர்ச்சாவதாரத்திலே –

ஆக பிரபத்திக்கு தேச காலாதி நியம அபேஷை இல்லை என்ற பிரதிஞ்ஜையை உபபாதித்தார் கீழ் –
விஷய நியமமே உள்ளது -என்ற பிரதிஞ்ஜையை உபபாதிக்கிறார் மேல் –

ஸுலப்ய குண பூர்த்தி உள்ள இடமே விஷயமாகும் -உச்சாணிக் கொம்பில் உள்ள பரத்வம் உள்ள முடியாதே –
பிரபத்தி அங்கங்கள் எதிர்பார்க்காது -அங்க அஸஹம் ஸ்வரூப அனுரூப இதர சாதனா வியாவர்த்தமாய் –
பகவத் ஏக விஷய பிரபத்திக்கு விஷய நியதமாவது –
ஸுலப்யாதி குண பூர்த்தி நியமம் ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாதக குணங்கள் வேண்டுமே–
பரத்வம் போகம் அனுபவிப்பிக்க /வ்யூஹம் -ரக்ஷகத்வம்
ஸுந்தர்யம் விபவம்/ யோகி ஹிருதய யோக அர்ஹத்தை அந்தர்யாமி / அர்ச்சை தானே ஆஸ்ரயண உபயோகி -பூர்ணம் இத்யாதி -உண்டே –

உம்மைத் தொகை -இங்கும் மேலே ஆழ்வார் பிரபத்திபண்ணியதும் அர்ச்சையில் -பூர்த்தி உள்ளதும் -அர்ச்சை
பரத்வாதியில் சர்வம் பூர்ணம் ஸஹோம் -ஓம் -இசைதல்-அங்கு இருப்பதால் -அதே தான் பூர்த்தி என்றவாறு –

குண பூர்த்தி உள்ள இடமே விஷயம் ஆகை -என்றது
பரத்வாதிகள் ஐந்திலும் வைத்து கொண்டு ஸௌலப்யாதி குண பூர்த்தி உள்ள இடமே–ஆதி வாத்சல்யம் ஸுசீல்யம் ஸ்வாமித்வம் இத்யாதி –
விஷயமாகை என்ற படி –அந்த குண பூர்த்தி தான் உள்ளது எங்கே என்ன -பூர்த்தி உள்ளதும்
அர்ச்சாவதாரத்திலே என்கிறார் –
அர்ச்சாவதார விஷயே மயாப் உத்தேச தஸ் ததா உக்தா
குண நசக்யந்தே வக்தும்  வர்ஷ சதைரபி–பாத்ம சம்ஹிதையில் பகவான் ரிஷிகள் இடம் – -என்று
ஸ்வதஸ் சர்வஞ்ஞனான தானே சொல்லப் புக்காலும் சொல்லித் தலைக் கட்ட அரிதாம் படி இறே அர்ச்சாவதார குண பூர்த்தி இருப்பது –

———————————————-

சூரணை -35-

ஆழ்வார்கள் பல இடங்களிலும்
பிரபத்தி பண்ணிற்றும்
அர்ச்சாவதாரத்திலே –

இக் குண பூர்த்தி உள்ள அர்ச்சாவதாரமே ப்ரபத்திக்கு அடைத்த விஷயம்
என்னும் அத்தை -பிரபன்னஜன கூடஸ்தருடைய அனுஷ்டானத்தாலும்
பிரகாசிப்பிக்கிறார் மேல் –

சிஷ்டாசாரத்தை பற்ற -உபய விபூதியை -சாஷாத்காரித்து -பொன்னுலகு ஆளீரோ புவனம் எல்லாம் ஆளீரோ
பரத்வாதிகள் எல்லாம் கையில் உள்ள மாணிக்கம் போலே -உள்ளங்கை நெல்லிக்கனி பகவத் விஷயம் சொல்ல கூடாதே
அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -நின் அடி இணை அடைந்தேன் –
நின் அருளே புரிந்து இருந்தேனே இனி என் திருக் குறிப்பே –சரணாகதிக்கு வேறே வேறே சப்தங்கள் –
உன் அருளே பார்ப்பன் அடியேன் -உன பாதம் அன்ன -உன் கடைத்தலை நின்று வாழும் /
திருக் கமல பாதம் வந்து பரகத சுவீகாரம்/ எந்நாள் கெடும் மா இடர் /
கருக்கோட்டியுள் உட் புகுந்து கை தொழுதேன் -தாள் முதலே நங்கட்கு சார்வு
பல இடங்களிலே ஸ்வரூப அனுரூபமாக பிரபத்தி -உபாய அத்யாவசியம் -பண்ணிற்றும் சர்வ சுலபமான அர்ச்சையிலே -சிஷ்ட அனுஷ்டான சித்தம் –

அனுஷ்டானத்தாலும் -உம்மை தொகை -கீழே வேத வாக்கியம் பூர்ணம் காட்டி அருளினார் -இங்கு சிஷ்டாசாரத்தாலும் காட்டி அருளுகிறார்

மயர்வற மதிநலம் அருளிப் பெறுகையாலே-பரத்வாதிகளை எல்லாம் கரதலாமலகமாக
கண்டு இருக்கிறவர்கள் இறே ஆழ்வார்கள் -இப்படி இருக்கிறவர்கள் பிராப்யத் த்வரா அதிசயத்தாலே
பலகாலும் -விசுவாசம் இல்லாமல் பல காலும் பண்ணினால் குற்றமாகும் –பிரபத்தி பண்ணுகிற அளவில் பல இடங்களிலும்  அர்ச்சாவதாரத்திலே இறே
பிரபத்தி பண்ணிற்று -ஸ்தலாந்தரத்தில் க்வாசித்கமித்தனை இறே -மாம் ஏகம் விபவத்திலே தானே —
அங்கு ஓன்று இங்கு ஓன்று -நம்மாழ்வார் பிறந்தவாறும் கிருஷ்ண அவதாரத்தில் மோக்ஷ உபாயத்துக்கு இல்லை தரித்து நின்று அனுபவிக்க –
எங்கனே என்னில் -ஆழ்வார்களுக்கு எல்லாம் தலைவரான நம் ஆழ்வார் –
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக  தந்து ஒழிந்தாய்–5–7-
கழல்கள் அவையே சரணாக கொண்ட –5–8-
நம் பெருமான் அடி மேல் சேமம் கொள் தென் குருகூர் சடகோபன் -5–9-ஷேம கரம் திருவடிகளே
உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேன் -என்று இப்படி பல இடங்களிலும்-6-10-
பிரபத்தி பண்ணிற்று அர்ச்சாவதாரத்தில் இறே –
பிறந்தவாறும் -5–10–ஒன்றிலும் இறே அவதாரத்தில் சரணம் புக்கது –
திரு மங்கை ஆழ்வாரும் –
வந்து உன் திருவடி அடைந்தேன் நைமிசாரண்யத்துள் எந்தாய் –1–6-
விரையார் திருவேம்கடவா நாயேன் வந்து அடைந்தேன் –1 -9–
காவளம் பாடி மேய கண்ணனே களை கண் நீயே —
ஆழி வண்ணா நின் அடி இணை அடைந்தேன் அணி பொழில் திருவரங்கத்து அம்மானே –5–8-
இவ்வாறு பத்து இடங்களில் திருமங்கை ஆழ்வார் –
என்று இப்படி அர்ச்சாவதாரத்திலே இறே பல இடங்களிலும் பிரபத்தி பண்ணிற்று –

மற்றை ஆழ்வார்களுக்கும்  இப்படி தத்தத்  பிரபந்தங்களில் கண்டு கொள்வது –
பிரபந்தம் பண்ணிற்றும் என்கிற இந்த ச சப்தத்தாலே -பூர்த்தி உள்ளதும் -என்று கீழ் சொன்னதை சமுச்சயிக்கிறது –
பெரியாழ்வார் -அருளிச் செயல்களில் -சரணாகதி —
1–துப்புடையாரை –திருவரங்கம் –4–10-பதிகம்
2–வாக்குத் தூய்மை -5–1-பதிகம்
3–துக்கச் சூழலை –திருமாலிரும் சோலை –5–3-பதிகம்
4–சென்னியோங்கு –5–4-பதிகம் –

திருப்பாவை -அங்கண் / மாலே / கூடாரை / கறைவைகள்/சிற்றம் சிறு காலை /வங்கக் கடல் /

-திருமங்கை ஆழ்வார் -அருளிச் செயல்களில் -சரணாகதி –
1–நைமிசாரண்யம் – -பெரிய திருமொழி –1–6-பதிகம்
2–திருவேங்கடம் –பெரிய திருமொழி-1–9-பதிகம்
3–திருக் காவளம் பாடி -பெரிய திருமொழி–4–6-பதிகம்
4–திரு வெள்ளக் குளம் -பெரிய திருமொழி-4–7-பதிகம்
5–திருவரங்கம் -பெரிய திருமொழி–5-8-பதிகம்
6–திரு விண்ணகர் -பெரிய திருமொழி–6–2-பதிகம்
7–திருவழுந்தூர் -பெரிய திருமொழி–7–7-பதிகம்
8–திருச் சிறு புலியூர்–பெரிய திருமொழி- -7–9-பதிகம்
9–திருப் புல்லாணி –பெரிய திருமொழி–9–4-பதிகம்
10–திருக் குறுங்குடி –பெரிய திருமொழி—9–5-பதிகம்
11–திரு நெடும் தாண்டகம் –29–அன்றாயர் குல மகளுக்கு அரையன் தன்னை –அடி நாயேன் நினைந்திட்டேனே –

———————————————–

சூரணை -36-

பூர்ணம் -என்கையாலே எல்லா குணங்களும் புஷ்கலங்கள் –

இப்படி இவ் ஆழ்வார்கள் பிரபத்தி பண்ணும் இடங்களில் -பரத்வாதிகள் எல்லாம் இருக்க –
அர்ச்சாவதாரத்திலே பண்ணுகைக்கு அடி -இதின் குண பூர்த்தி இறே –
அந்த குண பூர்த்தி தன்னை ச பிரமாணமாக அருளிச் செய்கிறார் -மேல் –

சர்வம் பூர்ணம் கடவல்லி சொல்லுமே -சேஷிக்கு உபயோகியான ஸ்ரீ யபதித்தவம் -ஆஸ்ரயண உபயோகி ஸுலப்யாதிகள்-
கார்ய உபயோகிகளான ஞான சக்தியாதிகளும் -அனுபவ உபயோகிகளான ஸுந்தரிர்யாதிகளும்
என் திரு மக்கள் சேர் மார்பன்–ஸ்ரீய பதித்தவம் – அலர்மேல் மங்கை உறை மார்பா -சேஷித்வ உபயோகி /
கோநிரை காத்தவன்/ நிகரில் புகழாய்/ முன் செய்து இவ்வுலகம் யுண்டு /உலகம் உண்ட பெரு வாயா ஞான சக்திகள் -கார்ய உபயோகி /
கடல் வண்ணா சுடர் சூழ் ஒளி மூர்த்தி -யுக்த குணங்கள் எல்லாம் அர்ச்சாவதாரத்தில் காணலாம் –
பரத்வத்தில் பிரபத்தி பண்ணாது ஒழிவான் என் என்னில் -விசேஷித்து அவை இங்கே உண்டு என்கிறார் –
பரவாசுதேவன் இடம் பரத்வம் புஷ்கலம் -ஸுலப்யம் தேடிப்பிடிக்க முடியாது என்றால் அர்ச்சையில் பரத்வம் இல்லையோ என்னில் –
எல்லா குணங்களும்-நான்கு வகைகளும் – புஷ்கலம் இங்கே என்கிறார் –

பூர்ணமிதம் பூர்ணமத பூரணாத் பூர்ணம் உத்தேச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வசிஷ்யதே சர்வம் பூர்வம் ஸஹோம் -த்வய உபநிஷத்
சத்தியமான த்வயத்தை கொண்டு உபாஸிக்க வேண்டும் -பூர்வ வாக்கியம் சொல்லி –யாரும் எப்பொழுதும் எங்கும்-
குண பூர்த்தி உள்ள இடத்தில் செய்ய வேண்டும் -என்கிறது சுருதி –பூர்வ வாக்கியம் சொல்லி – -ஸஹோம் -வரை த்வயம் மத்யகதம் –
பலமாக கைங்கர்யம் -நடுவில் உள்ளவை விளக்கம் அதனால் மந்த்ர ரத்னத்தின் இல்லை
பூர்வ வாக்கியம் உபாயத்வம் / உத்தர வாக்கியம் -ஆஸ்ரயண உபயோகி இதுக்கு -பூர்வ வாக்ய நாராயண சப்தம் /
உபேயத்வம் -சேஷி கார்ய அனுபவம் உபயோகி மூன்றும் இதுக்கு -உத்தர வாக்ய நாராயண அர்த்தம் இது -பூர்ண சப்தம் –
இதம் என்று அந்தர்யாமியாய் சொல்லி -அத பரத்வம் சொல்லி -பூர்ணம் திரும்பி திரும்பி சுருதி சொல்ல
பூரணாத் பூர்ணம் / பூர்ணஸ்ய பூர்ணம்
சர்வம் பூர்ணம் -எட்டு தடவை சொல்லி -அங்கு இருந்து அது -இரண்டு தடவை சொல்லி–இவற்றை விட்டாலும் இன்னும் ஆறு –
அர்ச்சைக்கு இதுவே பூர்ணம் என்று முடிக்கிறது -/ அனைத்து குணங்கள் அனைத்து பிரகாரங்களை குறிக்க சுருதி வாக்கியம் –
பூர்வம் சொன்னதை விட உத்தர உத்தர இன்னும் இன்னும் உயர்ந்தது என்றும் சொல்கிறது
-ஆதிக்யம் பிரதிபாதனம் -லிங்க சந்நிதியால் அர்ச்சையில் தான் ஒய்வு எடுக்கும்
லிங்க சந்நிதி -என்றது -சப்த சாமர்த்தியம் சப்தத்துக்கு பொருள் கூறும் வல்லமை / அர்த்த சாமர்த்தியமும் உண்டே
புண்டரீகாக்ஷன் –தடாகம் தண்டுகள் உடன் ஆதித்யனால் மலர்ந்து அர்த்த சாமர்த்யங்கள் உண்டே -பூர்ணம் -பஞ்ச பிரகாரோணம்
அதிக அதிக பூர்வம் உத்தர உத்தர ஆதிக்யம் என்பதால் -சந்நிதி -அருகில் அருகில் இவ் ஐந்து இதை விட அது என்கிறதே –
இத சப்தம் அந்தர்யாமி-அருகில் / அத -பரத்வம்-லோகாந்தரம் /பூரணாத் பூர்ணம் தீபாத் உத்பன்னம் போலே உத்ருஜயதே –
ஆறு குணங்களால் பூர்ணம் வ்யூஹம் -/ அவதார கந்தம் -வாகன மண்டபம் போலே
ஏஷ நாராயண ஸ்ரீ மான் -இத்யாதி -வ்யூஹராத்மக பூர்ண சம்பந்தி விபவம் ஆதாய –
பூர்ணமேவ -அர்ச்சையே நித்ய ஆஸ்ரயணம் நித்ய சந்நிதி -சரமம் -சர்வம் பூர்வம் சக ஓம் –
பூர்ண ஏவ அவசிஷ்யதே -இதுக்கு மட்டும் -சொல்லி –
தீர்த்தம் பிரசாதியாமல் -விஸ்ராந்தி பூமி -மான மேய சரமம் நாயனார் –வேதத்துக்கு ஐந்து -பிரமேயம்-ஐந்து –
ரக்ஷகத்வ ப்ராபகத்வ -கூட்டி -மிளிதமாக இங்கு மட்டும் -முழு பூர்ணம்
இத்தால் – பர வ்யூஹம் கால சந்நிஹர்ஷமும் -அர்ச்சையிலும் உண்டு /
விபவத்தில் தேச சந்நிஹர்ஷமும் -கரண சந்நிஹர்ஷமும் -இவையும் அர்ச்சையிலும் உண்டே
அந்தர்யாமி தேச கால சந்நிஹர்ஷமும் இதில் உண்டே -அங்கே அப்பொழுதே -காணலாமே –
பூர்வ படித பூர்வ வாக்ய நாராயண அர்த்தங்கள் புஷ்கலம் இதில்
கடவல்லி ஆச்சார்யர் சிஷ்யர் த்வய உத்பத்தி இரண்டு வாக்கியம் ஆறு பதங்கள் -அர்த்தங்கள் பத்து -அஷ்ட ஸ்லோகி பட்டர்
26- எழுத்துக்கள் முன் வாக்கியம் -15-எழுத்துக்கள் பின் வாக்கியம் -10-எழுத்துக்கள் பிரதம பதம் 9-அக்ஷரம் /
இரண்டாவது -மூன்றாவது நான்காவது -சரணம் ப்ரபத்யே ஸ்ரீ மன் மூன்று எழுத்துக்கள் ஒவ் ஒன்றிலும் -/
நடுவில் யாரும் புகுத்த கூடாது என்று பிரித்து சாஸ்திரம் இப்படி காட்டுகிறது -ஐந்தாவது ஐந்து எழுத்து / ஆறாவதில் இரண்டு /
ஸ்ரீ /மத்/ ஒரு எழுத்து / நாராயண -4-அக்ஷரம் / மேலே நான்கும் மூன்று எழுத்துக்கள் சரணவ் சரணம் பிரபத்யே ஸ்ரீ மன்
ஸ்ரீ மதே நாராயண -எட்டாவது நான்கு -ஆய -இரண்டு எழுத்துக்கள் பத்தாவது நம இரண்டு எழுத்துக்கள் –
மந்த்ர ரத்னம் அநாதி சித்தம் -ஆச்சார்ய பரிஹீதம்–வேத சம்பன்ன விஷ்ணு பக்த -பொறாமை இல்லாமல் -அர்த்தங்கள் அறிந்து
அன்பு கொண்டு மந்த்ரத்தை சதா ஆஸ்ரயித்து சுத்தி உடையவன் ஆச்சார்யர் தனது குரு பக்தி உடன் -ஒரு தடவை சொன்னாலே முக்தி –
சர்வ பலன்களும் கிட்டும் -ஸ்ரீ மன் நாராயணனுக்கு ப்ரீதிக்கு ஆளாவாய் என்று உபநிஷத் சொல்லிற்று –

பூர்ணம் என்கையாலே -என்றது –
பூர்ணஸ்ய பூர்ண மாதாய பூர்ண மேவா வசிஷ்யதே சர்வம் பூர்ணம் சஹோம் –ப்ருஹதாரண்யம் -என்று
சுருதி சொல்லுகையாலே என்ற படி –
எல்லா குணங்களும் புஷ்கலங்கள் -என்றது –
ஆஸ்ரயண ஸுகர்ய ஆபாதகங்களான குணங்களோடு -ஆஸ்ரய கார்ய ஆபாதகங்களான
குணங்களோடு வாசியற சகல கல்யாண குணங்களும் -இவ் விஷயத்திலே சம்பூர்ணம் -என்றபடி-

மாம் அஹம் இரண்டு அர்த்தங்களிலும் உள்ள குணங்கள் –
கடவல்லி உபநிஷத் -பூர்ணம் விவஷிதம் -த்வயம் அந்தர்கதம் இதில்
குண பூர்த்தி உள்ள ஸ்ருதிக்குள் -நம்மாழ்வாரும் ஒன்பது பாசுரங்களில் குணங்களை சொல்லி அகலகில்லேன் -சரணம் புகுகிறார்
இதம் பூர்ணம் த்வயம் இரண்டு வாக்யங்களுக்கு நடுவில் -உபாயத்வம், உபேயத்வம் அபேக்ஷித கல்யாண குணங்களை சொல்லும் பூர்ணம் –
சர்வம் பூர்ணம் -முதலில் சொன்னதை கொள்ளக் கூடாதோ என்றால் –
உத்தர உத்தர ஆதிக்யத்தால் சுருதி அர்ச்சாவதாரம் சொல்லி ஒய்வு எடுத்துக் கொண்டது –
சப்தம் அர்த்தம் லிங்கம் சந்நிதி சாமர்த்தியம் -கொண்டு –
இதம் அந்தர்யாமி/ பர-அத /-பூர்ணாத் பூர்ணம் வியூஹம்/ பூர்ணஸ்ய பூர்ணம் வியூகம் /
பூர்ணமேவ அவசிஷ்யதே நித்ய -பரத்வாதிகளில் சரமம் -ரக்ஷகத்வ ப்ராபகத்வ -பூர்ணம் –

———————————————

சூரணை-37-

பிரபத்திக்கு அபேஷிதங்களான ஸுலப்யாதிகள்
இருட்டறையிலே விளக்குப் போலே
பிரகாசிப்பது இங்கே –

ஆனால்-வாசு தேவோசி பூர்ண -என்ற பரத்வத்தில் காட்டில் -இங்குத்தைக்கு ஏற்றம்
என் என்ன -அருளி செய்கிறார்-

இருள் தரும் மா ஞாலத்தில் தானே பிரகாசிக்கும்
மற்ற குணங்களை விட -பிரபத்திக்கு அபேக்ஷித்த குணம் ஸுலப்யாதிகள்-பிரகாசிப்பது அர்ச்சையிலே
அது தெளி விசும்பு திருநாடு -பகவத் விஷயத்தை பிரத்யஷித்து -மாம்ச த்ருஷ்டிக்கு விஷயமாவது இங்கே தானே ஸுலப்யம் —
பெருமை அற்று கலந்து பழகும் ஸுசீல்யம் -சம்யக் சீலம் -புரை அறக் கலந்து கலந்தோம் என்ற நினைவும் இல்லாமல் –
கலந்து சம்பந்தம் அற்று இல்லாமல் ஸ்வாமித்வம் ‘
குற்றம் குணமாக கொள்ளும் வாத்சல்யமும் -நான்கும் பிரகாசிக்கும் இங்கே -அங்கே பகல் விளக்கு பட்டு இருக்கும் –
நாம் பற்ற ஸுலப்யம் முதல்-திருவடியை எளிதாக பற்றலாமே – –
அவன் நம்மை பற்ற வாத்சல்யம் -இதனாலே வாத்சல்யம் நிகரில் புகழாய் முதலில் சொல்லி –
அவனை கூப்பிட்டு அருளிச் செய்வதால் -தன் விஷயம் பின்னால் வைத்தார் -வத்சலனே தேவரீர் ஏற்றுக் கொள்ள வேண்டும்
என்பதையே நிகரில் புகழாய் என்று தொடங்கி-திரு வேங்கடத்தானே உன் அடிக் கீழ் அமர்ந்துபுகுந்தேனே என்று
சுலபனான உன்னை அடியேன் பற்றினேன் என்கிறார் –
தயா -பர துக்க அஸஹிஷ்ணுத்வம் மட்டும் இல்லை -ஸ்வார்த்த நிரபேஷமாகவும் இருக்க வேண்டும் –
அர்ஜுனன் அஸ்தான சினேகா காருண்யம் -அது தயை இல்லையே –

பிரபத்திக்கு அபேஷிதங்களான -என்றது -உபாயமாக பற்றும் இடத்தில் வேண்டும் அவையான -என்றபடி —
உபாசகருக்கு இல்லை- சித்த உபாயமாக ஸ்வீகரிப்பவனுக்கே இது
சௌலப்யாதிகளாவன-கண்டு பற்றுகைக்கு உறுப்பான சௌலப்யமும் -மாம்ச சஷூசுக்கு விஷயமாக வேணுமே
மேன்மை கண்டு அகலாமைக்கு உறுப்பான சௌசீல்யமும்-
கார்யம் செய்யும் என்று விச்வசிக்கை உறுப்பான ஸ்வாமித்வமும்-
குற்றம் கண்டு வெருவாமைக்கு உறுப்பான  -வாத்சல்யமும் —
நிகரில் புகழாய்  -இத்யாதியாலே -இந் நாலு குணத்தையும் இறே ஆழ்வார் அருளி செய்தது –
இருட்டறையில் விளக்கு போலே பிரகாசிப்பது இங்கே -என்றது -பரத்வத்தில் இக் குணங்கள் எல்லாம் உண்டாய் இருக்கச் செய்தே –
பரம சாம்யாபன்னருக்கு முகம் கொடுக்கிற இடம் ஆகையாலே பகல் விளக்கு போலே பிரகாசம் அற்று இருக்கும் —
அதிதி இல்லாவிட்டால் தர்மம் கொடுக்க முடியாதே –
அர்ச்சாவதாரமான இடத்தில் தண்மைக்கு எல்லை நிலமான சம்சாரிகளுக்கு
முகம் கொடுத்து கொண்டு இருக்கையாலே -அந்தகாரத்திலே தீபம் போலே அத்யுஜ்வலமாய் தோற்றும் என்றபடி –
விஷயம் உள்ள இடத்தே-தேட்டம் உள்ள இடத்தே – இறே குணங்கள் பிரகாசிப்பது –
அங்கு உள்ளாரும்  சீலாதி குணம் அனுபவம் பண்ணுகைக்கு வருவது இங்கே இறே –
ஸூத்ரத்தில் –சௌலப்யம் முன்னாக அருளி செய்தது -கண்டு பற்றுகைக்கு உறுப்பான
சௌலப்யமே பிரபத்திக்கு பிரதான அபேஷிதம் என்று தோற்றுகைக்காக —

———————————————

சூரணை -38-

பூர்த்தியையும் ஸ்வா தந்தர்யத்தையும்
குலைத்து கொண்டு
தன்னை அநாதரிக்கிறவர்களை
தான் ஆதரித்து நிற்கிற இடம் –

இக் குணங்கள் பிரகாசிப்பது இங்கே -என்றதை உபபாதிக்கிறார் –

ஸ்வாதந்தர்யம் குலைத்துக் கொண்டு -அவாப்த ஸமஸ்த காமனாய் இருந்தும் -பூர்த்தியை குலைத்துக் கொண்டு –
இவன் இட்டது கொண்டு திருப்தனாய் -/
ஸூ இச்சா சாரித்தவம் இவன் இச்சா தீந வ்ருத்தியாய் குலைத்துக் கொண்டு -தானாகே குறைத்துக் கொண்டான் -நடிப்பு –
அபராதமாகவே பச்சையாகக் கொண்டு -மந்த்ர லோபம் கிரியா லோபம் இத்யாதிகளில் உண்டே –
காணாக் கண் இட்டு மட்டும் இல்லாமல் பச்சையாக ஸுலப்யத்தை பார்த்தே தாழ நினைப்பவர்கள் –
அநாதரித்தாலும் விட மாட்டாமல் -ஹீன சம்சாரிகளை -விட மாட்டாத ஸ்நேஹம்
அநாதரவு கந்தமும் இல்லா அர்ச்சாவதார பிரபத்திக்கு விஷயம் –

பூர்த்தி யாவது -அவாப்த சமஸ்த காமத்வம் -அத்தை குலைத்து கொள்கையாவது –
இவன் இட்டது கொண்டு த்ருப்தனாக வேண்டும் படி சாபேஷனாய் இருக்கை-
ஸ்வாதந்த்ர்யம் ஆவது -சுவாதீன ஸ்வரூபதிமத்த்வம்-அத்தை குலைத்து கொள்கையாவது –
ஆஸ்ரித ஆதீன ஸ்வரூப ஸ்திதி  யாதிகளை உடையவன் ஆகை   –
ததிச்சயா மகாதேஜோ புங்க்தேவை பக்தவத்சல
ஸ்நானம் பானம் ததா யாத்ரம்  குரு தேவை ஜகத்பதி
ஸ்வதந்த்ரஸ் ச ஜகன்னாத ப்யஸ் வதந்த்ரோ யதா ததா சர்வ சக்திர்
ஜகத் தாதாப்யசக்த இவ சேஷ்டதே—விஷ்வக் சேன சம்ஹிதை -என்னக் கடவது இறே –
அர்ச்சக பராதீனா கிலாத்மா ஸ்திதி –ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -என்று அருளிச் செய்தார் இறே பட்டர்-
தன் இச்சை ஒழிய இவற்றை குலைக்கைக்கு ஹேது இல்லாமையாலே -குலைத்து கொண்டு -என்கிறார் –
தன்னை அநாதரிக்கிறவர்களை தான் ஆதரித்து நிற்கிற இடம்-என்றது –
தான் இப்படி சுலபனாய் வந்து நின்றால் -அரியவன் எளியவனாய் -நிற்கப் பெற்றோமே என்று
விரும்பி மேல் விழுகை அன்றிக்கே -அவ எளிமை தானே ஹேதுவாக உபேஷிக்கிற
சம்சாரிகளை -தான் விட மாட்டாத அளவு அன்றிக்கே -அவர்களை ஒழிய
செல்லாமை தோற்றும் படி நிற்கிற ஸ்தலம் அர்ச்சாவதாரம் என்கை -சம்சாரம் கிழங்கு எடுத்தால் அல்லது பேரேன் என்று இருக்கிறானே
பூர்த்தியையும் ச்வாதந்த்ர்யத்தையும் குலைத்து கொண்டு நிற்க்கையாலே
ஸுலப்ய ஸுசீல்யங்களும்-தன்னை அநாதரிக்கிறவர்களை தான்
ஆதரித்து நிற்க்கையாலே-ச்வாமித்வ வாத்சல்யங்களும் இங்கே தோற்ற நின்றது இறே —
-அன்றிக்கே -பூர்த்தியையும் -என்று தொடங்கி இவ் வாக்கியம் எல்லா வற்றாலும் –
குண சதுஷ்டைத்திலும் பிரதானமான ஸுலப்யத்தையே யோட வைத்தார் ஆகவுமாம்-
அப்போது இவ் விஷயத்தினுடைய சௌலப்ய அதிசயத்தை தர்சிப்பிகிறார் என்று வாக்ய சங்கதியாக கடவது –
கண்ணுக்கு விஷயமாம் படி நித்ய சந்நிதி பண்ணுகிற அளவு அன்றிக்கே -சர்வ பிரகார பரி பூர்ணனாய் -நிரந்குச ச்வதந்த்ரனாய்
இருக்கிற தன்னை சாபேஷனும் பரதந்த்ரனும் ஆக்கி கொண்டு -தன்னை அநாதரிக்கிற சம்சாரிகளை
தான் ஆதரித்து நிற்க்கைக்கு மேல்பட்ட சௌலப்யம் இல்லை இறே –
ஏவம் பஞ்ச பிரகாரோஹா மாத்மானாம் பததாமத
பூர்வஸ் மாதபி பூர்வ ஸ்மாஜ் ஜ்யாயாம்சை வோத்தரோத்த்ர
சௌலப்யதோ  ஜகத்ச்வாமீ ஸோலபொஹ் யுத்தரோதர -என்று பரத்வாதிகள் ஐந்திலும்
சௌலப்யம் உண்டாய் இருக்கச் செய்தே -பூர்வ பூர்வத்தில் காட்டில் உத்தர உத்தரத்துக்கு
சௌலப்யம் அதிசயித்து இருக்கும் என்று தானே அருளிச் செய்கையாலே -சௌலப்யதுக்கு  எல்லை நிலம் அர்ச்சாவதாரம் இறே –

——————————————-

சூரணை-39-

பூகத ஜலம் போலே அந்தர்யாமித்வம் –
ஆவரண ஜலம் போலே பரத்வம் –
பால் கடல் போலே வியூஹம் –
பெருக்காறு போலே விபவங்கள் –
அதில் தேங்கின மடுக்கள் போலே அர்ச்சாவதாரம் —

பரத்வாதிகளுடைய துர் லப்யத்தையும் -அர்ச்சாவதார சௌலப்யத்தையும் திருஷ்டாந்த முகேன தர்சிப்பிக்கிறார் மேல் –

ஸந்நிஹிதம் -பிரயத்தன சாத்தியம் துர்லபம் பூ கத ஜலம் -அந்தர்யாமி -அஷ்டாங்க யோக சாதனம்
அதி விப்க்ரகர்ஷம் ஆவரண ஜலம் -சம்சாரிகளுக்கு எட்டாத பரத்வம்
அது போலே அதி விப்ருக்ருஷ்டமாய் இல்லா விட்டாலும் மனுஷ்யாதிகளுக்கு அலாப்யமான வ்யூஹம் -அண்டத்துக்கு உள்ளே –
தெய்வங்களே போகலாம் -மூல முடங்களான மநுஷ்யர்கள் போக முடியாதே –
ஸந்நிஹிதம் -ஆனாலும் -தத் கால வர்த்திகளுக்கு மட்டும் உபஜீவனம் -பெருக்காறு-விபவம் -பூமியிலே அவதரித்ததும் தத் காலம்
பிற்பட்ட பாவிகளுக்கு எட்டாமல் -பிரபத்திக்கு நித்ய விஷயம் ஆகாதே இவை அனைத்தும்
அயத்ன ஸித்தமாய் –அதி ஸந்நிஹிதனுமாய்-அஷ்டாங்க தூர கமன நிரபேஷமாய்- கோயில் முதலான திவ்ய தேசங்களிலும் -க்ருஹங்களிலும்
ஸ்தாவர ப்ரதிஷ்டையாய் இருந்து நிலைத்து
தத் தத் அவதாரங்களில் நித்ய விக்ரஹமாய் கண்ணுக்கு இலக்காய் கொண்டு- சர்வ ஸமாச்ரயணீயமாய் –
துர்லப பராங்முககையான பிரபத்திக்கு பிரிய விஷயம்
பெரிய விடாயான் -குளிர்ந்து தெளிந்து நிறைந்த –கிணறு கல்லியும் அண்டத்துக்கு பாய்ந்து பாற் கடலை கடைந்து வற்றின
ஆற்றிலே ஓடிச் சென்று தண்ணீர் தேடுவது போலே இத்தை விட்டு அங்கே தேடுகை –

த்ருஷ்ணார்த்தனுக்கு-தாகம் எடுத்தவனுக்கு – தேசாந்தரித்தில் போக வேண்டாதபடி நிற்கிற இடம் தன்னிலே –
உண்டாய் இருக்க செய்தேயும் -கொட்டும் குந்தாலியும் கொண்டு கல்லினால் அல்லது
குடிக்க கிடையாத பூகத ஜலம் போலே ஆய்த்து-
கண்டு பற்ற வேணும் என்று ஆசைப் பட்டவனுக்கு
ஹிருதயத்திலே இருக்க செய்தேயும் -கட்கிலீ -என்கிறபடியே -கண்ணுக்கு விஷயம் அன்றிக்கே –
அஷ்டாங்க யோக ரூப யத்னத்தாலே காண வேண்டும்படியான அந்தர்யாமித்வம் –
அவனுக்கு-தாகம் எடுத்தவனுக்கு – -அண்டத்துக்கு புறம்பே பெருகி கிடக்கிற ஆவரண ஜலம் போலே ஆய்த்து –
இவனுக்கும் அப்பால் -முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது -என்கிறபடியே லீலா விபூதிக்கு அப்பால் பட்டு இருக்கிற பரத்வம் –
அப்படி அதிவிப்ரக்ருஷ்டம் அன்றியே – அண்டாந்தர்பூதமாய் இருக்க செய்தேயும் அவனுக்கு துஷ்ப்ராபமான
பால் கடல் போலே ஆய்த்து -இவனுக்கும் பாலாழி நீ கிடக்கும் பண்பை யாம்  கேட்டேயும் -என்கிறபடியே
கேட்டு இருக்கும் அத்தனை அல்லது சென்று காண அரிதாம்படி இருக்கிற வ்யூஹம் –
ப்ரத்யா சன்னமாயும் -தாத்காலிகர்க்கு உப ஜீவ்யமாய் பச்சாத் யனானவனுக்கு துர்லபமான பெருக்காறு போலே
ஆய்த்து -மண் மீது உழல்வாய் -என்கிறபடியே பூமியிலே அவதரித்து சஞ்சரித்தும் -தத் காலவர்த்திகளுக்கு ஆஸ்ரயநீயமாய்
பிற் காலத்தில் உளனான இவனுக்கு கிட்டாத படியான விபவம் –
முன்பு சொன்னவை போல் அன்றிக்கே -அவனுக்கு விடாய் கெட  பருகலாம் படி -பெருக்காற்றிலே தேங்கின
மடுக்கள் போலே ஆய்த்து –இவனுக்கும் தேச கால கரண விப்ரக்ருஷ்டமின்றிக்கே –
கோயில்களிலும் கிருஹங்களிலும் -என்றும் ஒக்க எல்லாருக்கும் கண்ணுக்கு இலக்காம்படி நிற்கிற –
பின்னானார் வணங்கும் ஜோதி -யான அர்ச்சாவதாரம் –
பௌ மதி கேத நேஷ்வபி குடி குஞ்செஜ்ஷூ-என்கிறபடியே -பல இடங்களிலும்
சன்னதி பண்ணி நிற்கும் படியை நினைத்து இறே –
சீலம் குணம் கேட்டு உள்ளம் உறைந்து -பெரிய பெருமாளே -குணங்கள் ஓடி ஓடி வராஹ நரசிம்ம அவதாரங்கள் -குண பிரவாஹமே அவதாரம் –
எண்ணி பரிச்சேதிக்க ஒண்ணாதே -இருக்கும் -பஹு சப்தத்துக்கே விஷயம் -தேவரீர் கோயில்களிலும் க்ருஹங்களிலும் யதி ஸ்தானங்களில்
வான பிரஸ்த ஸ்தானங்களில் –பூமியிலே திவ்ய தேசங்கள் திருக்குறுங்குடி -ப்ருந்தாரண்யம் போன்ற செடித் தூறுகளிலும்
சாஷாத் அபசாரம் உபசாரம் என்ற பேராலே அபசாரம் -அலாப்ய லாபம் போலே நின்றீர் -ஆழ்வாராதிகள் உருகி பாடும்படி –
மடுக்கள் போலே – என்ற பஹு வசனத்தாலே அருளிச் செய்தது –
அவதார குணங்கள் எல்லாம் அர்ச்சா ஸ்தலங்களில் பரி பூரணமாய் இருக்கையாலும் –
அவதார விக்ரஹங்களை அர்ச்சா ரூபேண பல இடங்களிலும் பரிக்ரஹித்து கொண்டு இருக்கையாலும்
-அதிலே தேங்கின மடுக்கள் போலே -என்கிறது –
மடுக்கள் பன்மை ஓர் அவதாரத்துக்கு பல பல சேஷ்டிதங்களுக்கும் பல திவ்ய தேசங்கள் உண்டே –

—————————————————-

சூரணை -40-

இது தான் சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாதே
விஷயாந்தரங்களில் மண்டி
விமுகராய் போரும் சேதனருக்கு
வைமுக்யத்தை  மாற்றி
ருசியை விளைக்க கடவதாய்-
ருசி பிறந்தால்  உபாயமாய் –
உபாய பரிக்ரகம் பண்ணினால் –
போக்யமுமாய்
இருக்கும் —

இப்படி ஆச்ரயண ருசி பிறந்தார்க்கு ஆச்ரயணீயத்வே சுலபமாய் இருக்கும் அளவே அன்றிக்கே –
ருசி ஜநகத்வாதிகளும்-உபாயத்வ ப்ராப்யத்வங்களும் -போக்யத்வம் -ஆதி சப்தம் –
இவ் அர்ச்சாவதாரத்துக்கு உண்டு என்று இதன் வைபவத்தை அருளி செய்கிறார் மேல் –

இதுக்கு மூலம் -நம்பிள்ளை ஈடு -10-2-அவதாரிகை
உகந்து அருளின நிலங்களில் நிலை தான் முதலிலே பகவத் விஷயத்தில் ருசியைப் பிறப்பிக்கைக்கு உடலாய்
ருசி பிறந்தால் -யே எதா மாம் பிரபத்யந்தே என்கிறபடியே ஸுலப்யத்துக்கு நிலமுமாகையாலே உபாய பாவமும் பூர்ணமாய்
ப்ராப்ய பூமியில் கொடுபோம் இடத்தில் ஆதி வாஹிக கணத்தில் பிரதானனான தானே ஹார்த்த அநு க்ருஹீத -என்கிறபடியே வழியில் பிரதிபந்தகங்களைப் போக்கிக் கொடு போகக்கைக்கும் முற்பாடனாகைக்கும் உடலையும்
சம்சார சம்பந்தம் அற்று அவ்வருகே போனால் செய்யும் அடிமையை விரோதி கிடக்கச் செய்தே காதா சித்கமாகச் செய்கைக்கும் உடலாயும் இருக்கும் இறே

ஸுலப்யம் -பூர்த்தி ஸ்வாதந்தர்யம் குலைத்து -நாம் அநாதரித்தாலும் தான் விடாமல் ஆதரித்து நிற்கிறான் -மூன்றையும் அருளிச் செய்து மேலும் இதில்
ஸூசேஷனா-கன கங்காதி அழகிய திரு மேனி கொண்ட நல்ல சைன்யம் கொண்டவர் -தனது திரு மேனியே பெரிய சைன்யம் அவனுக்கு
செற்றத்தின் வயிற்றில் சிறியது பிறந்தால் -ருசி தானே சிறியது -கைங்கர்ய பர்யந்தமாக்கும் -இது முதல் –
வைமுக்யத்தை அர்ச்சை மாற்றும் -ருசி ஏற்படுத்தி -ஆறு எனக்கு நின் பாதமே -உலகம் அளந்த பொன்னடி அடைந்து -உபாயமாய் –
விஷயாந்தர வெறுப்பை மாற்றி -ருசி விளைவித்து -உபாயமாகியும் -பின்பு போக்யமாயும் -இந்த நான்கும் உண்டே -கண்ணுக்கு விஷயமாக்கி-
நேரே விஷயமான அர்ச்சை -விஷய நியமம் -முன்பு குண பூர்த்தி இருக்கும் இடம் -அதில் இருந்து தொடர்ச்சி –
ஹிதம் சொல்லும் சாஸ்திரங்கள் சாஸிக்க முடியாமல் -விதி நிஷேதம் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி -சொல்லியும் -திருத்த ஒண்ணாமல்-
அப்ராப்தங்கள் –அபோக்யங்களுமாய்-அல்ப காலத்தில் போக்யம் போலே இருக்குமே –
விஷயாந்தரங்கள் -வெறுக்கத் தக்கவைகளுமாய் -ஹேய விஷயங்களில் மீட்க ஒண்ணாத படி -பகவத் விஷயம் கண்டால்
முகம் திருப்பி அநாதி காலம் விமுகராய் அநர்த்தப்பட்டு அசத் கல்பமாய் -போகும் சேதனருக்கு
பகவத் விஷயம் என்றால் வேப்பங்குடி நீராய்- யாதானும் பற்றி நீங்கும் விரதம் -மறுவதலிடாத படி ருசி வாசனைகள் உடன் மாற்றி –
தன் பால் ஆதரம் பெறுக வைத்த அழகனூர் அரங்கன் – -மெய்யான தன் ருசியை -பற்று அற்று விடாத படி தன் பக்கல் உள்ள –
ஸுந்தர்ய ஆவிஷகர்யத்தாலே -திவத்தைத் தரும் மெய் -திரு மேனியே மோஷம் தரும் -அநிஷ்டம் போக்கி இஷ்டம் தரும் சித்த உபாயம் –
அயத்ன சித்தம் -இது அன்றோ உன் அடிக் கீழ் அமர்ந்து புகுந்தேனே -என்று -அர்ச்சாவதார திருமேனி இங்கும் –
உபாய அத்வயசாயிகளானால் எனக்கு தேனே பாலே கன்னலே நிரதிசய போக்யமான உபேயமாகவும் இருக்கும் -என்கிறார் –
ஆக -பிரபத்திக்கு விஷயம் அர்ச்சை -எதனால் என்னில்
1–உபாய உபேயமாய் –2-தத் உபய ருசி ஜனகமாய் -3–இதர விஷய ருசி மோசகமாய் -4–தேசாதி உபாதி அயத்ன சர்வ சுலபமாய் —
5-அநாதரிப்பாரையும் ஆதரிக்குமதாய்-
6- -பிரபத்தி அனுகுணமாய் -சர்வ சுலப உபாயம் நிவ்ருத்தி ரூபமாய் -பகவத் சரண வரணம் இரண்டும் சரம பர்வம் என்பதால்-
7- சர்வ குண சம்பூர்ணமாய் –8-பிரபன்ன ஜன கூடஸ்தர்க்கு சரண வரண விஷயமுமாய் –
ஆக எட்டு பெருமைகளும் உண்டே அர்ச்சாவதாரமே நியதி விஷயம் இந்நியதியே பிரபத்திக்கு என்று கீழோடே சம்பூர்ணம் –

பிரக்ருதமான சௌலப்யாதி குண யோகத்தை உள் கொண்டு -இது தான் -ஸுலப்யம் உடைய அர்ச்சை தான் –என்று பராமர்சிக்கிறார் –
சாஸ்த்ரங்களால் திருத்த ஒண்ணாமை யாவது –
ஹித அனுசானம் பண்ணுகிற சுருதி ஸ்ம்ருதி யாதி
சாஸ்திரங்கள் ஆனவை-ஆதி இதிஹாச புராணங்கள் -இதர விஷயங்களில் தோஷங்களையும் இவ்விஷயத்தில்
குண ஆதிக்யத்தையும் சொன்னாலும் -அருசி பிறக்கும் படி இதர விஷயங்களை விட்டு இவ் விஷயத்தை பற்றும் படி
பண்ணப் போகாமை துர் வாசன பலம் உபதேசத்தை நிரர்தகம் ஆக்கி விடும் இறே-
சாஸ்திரத்துக்கு பலம் போதாதா -எம்பெருமான் திரு உள்ளம் தானே சாஸ்திரம் –
வெளிச்சம் இருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டது போலே அன்றோ துர்வாசனாதிகள் –
ஜன்மாந்திர  சகஸ்ரேஷூ யா புத்திர் பாவிதா நிருணாம்
தமேவ பஜதே ஜந்துருபதேசோ நிரர்தக-என்னக் கடவது இறே- ஐந்து -மனுஷன் என்னவும் யோக்யதை இல்லையே –
-அர்ஜுனனுக்கு விபவமே -அர்ச்சை போலே கண்ணுக்கு முன்னே இருக்க -அத்தாலே திருந்தினான்-
சாஸனாத் சாஸ்திரம் -விதி நிஷேதம் பண்ணும் ஹித அனுசாசனம் -பிரவ்ருத்தி நிவ்ருத்தி -ரூபேண சொல்லும் –
தோஷம் ஞாபகப்படுத்தி விஷயாந்தரங்களில் நிவ்ருத்தி குணங்களை சொல்லி பகவத் விஷயத்தில் பிரவ்ருத்தனாகை —
ப்ரத்யக்ஷம் அனுமானம் பாதிக்காத வலிமை சாஸ்திரம் -சப்த பிரமாணம் -தெரிவிக்க முடியாத சக்தி குறைவும் இல்லை சாஸ்த்ரங்களுக்கு-
அநாதி கால வாசனா பலத்தால் -தான் விருப்பப்பட்ட படி இது தான் சாஸ்திரம் சொல்லிற்று என்று தப்பாகவும் சொல்லுகிறார்களே –
சாஸ்த்ர ஜன்ய ஞான-விபரீத விஷய ஞான ஜனக -சம்ஸ்காரம் -துர்வாசனை -இது முதல் நிலை
அதன் பலம் -அனுஷ்டானத்துக்கு விரோதமான துர் அனுஷ்டானம் பண்ண வைக்கும்
சாஸ்திரம் நிரார்த்தகம் -என்றது அனுஷ்டான ரூப பிரயோஜன சூன்யம்
உபதேசத்துக்கு யோக்யதை இல்லாமல் ஆக்கும் துர்வாசனை – –

விஷயாந்தரங்களிலே மண்டி விமுகராய் போருகை யாவது –
சிலம்படி உருவில் கரு நெடும் கண்ணார் திறத்தினால் யறத்தையே மறந்து-
புலம் படிந்து உண்ணும் போகமே பெருக்கி -நைமிசாரண்ய பதிகம் -என்றும் –
சுரி குழல் மடந்தையர் திறத்து காதலே மிகுத்து கண்டவா திரிந்து –நைமிசாரண்ய பதிகம்- என்றும் –
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை -என்றும் சொல்லுகிறபடி -திருமாலை –
இதர விஷயங்களிலே அத்யபி நிவிஷ்டராய் -யாதேனும் பற்றி நீங்கும் விரதத்தை-திரு விருத்தம் — ஏறிட்டு கொண்டு –
பகவத் விஷயத்தில் முகம் வைக்க இசையாதே வர்திக்கை-இப்படி போரும் சேதனருக்கு -வைமுக்யத்தை மாற்றி ருசியை விளைக்கை -யாவது –
போதரே என்று சொல்லி புந்தியில் புகுந்து தன் பால்
ஆதரம் பெருக வைத்த அழகன்–திருமாலை -16- -என்கிறபடியே
ஸ்வ சௌந்தர்யாதிகளாலே -சித்த அபஹாரம் பண்ணி -தன்னை காண வேண்டோம் என்று
ஸ்வரூபத்தால் சித்தம் அபஹரிக்க முடியாதே -பற்றவே முடியாதே –
பும்ஸாம் த்ருஷ்ட்டி சித்த அபஹாரிணாம் -கண்டவர் தம் மனம் வழங்கும் கண்ணபிரான் –
இருக்கும் இருப்பை குலைத்து கண்ட கண் மாற வைக்க மாட்டாதபடி பண்ணுகை-
ருசி பிறந்தால் உபாயம் ஆகையாவது –
இப்படி தன் வைலக்ஷண்ய   தர்சனத்தாலே
தன்னை நித்ய அனுபவம் பண்ண பெற வேணும் என்னும் ருசி பிறந்த அநந்தரம்-
ஆறு எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -5 -7–என்கிறபடி
சம்சார நிவ்ருத்தி பூர்விகையான  ஸ்வ ப்ராப்திக்கு தானே சாதனம் ஆகை-
உபாய பரிகிரகம் பண்ணினால் போக்யமுமாய் இருக்கை ஆவது –
தன்னை உபாயமாக பரிகிரகித்தால் உபேய சித்திக்கு ஒரு தேச விசேஷத்திலே போம் அளவும் பார்த்து இருக்க வேண்டாதே —
அதுக்கும் மேலே பரமபதமும் உபேக்ஷிக்கும் படி -என்று கைங்கர்யத்தையும் அர்ச்சையிலே கொடுத்து அருளி
அணி அரங்கன் என் அமுதினை கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணாதே -என்றும்
எனக்கு தேனே பாலே கன்னலே அமுதே  திரு மால் இரும் சோலை கோனே -என்றும்
சொல்லுகிறபடியே நிரதிசய போக்யமாய் இருக்கையாலே தானே உபேயமுமாய் இருக்கை–
ஸுலப்ய விசிஷ்ட அர்ச்சா திருமேனியை இந்த நான்கு அவஸ்தைகளிலும் கூட்டிச் செல்லுமே –

ஆக-
பிரபத்திக்கு நியம ஒன்றும் வேண்டாம் என்று உபக்ரமித்து –23-
பிரபதிக்கு குண பூர்த்தி  உள்ள இடமே விஷயமாக வேணும்-34 என்றும் –
அது தான் உள்ளது அர்ச்சாவதாரத்திலே என்றும் –
அத்தை பற்ற ஆழ்வார்கள் எல்லோரும்  பிரபத்தி பண்ணிற்றும் இவ் விஷயத்தில் என்றும் –
இவ் விஷயத்தில் எல்லா குணங்களும் புஷ்கலங்கள்  என்றும் –
விசேஷித்து ப்ரபத்திக்கு அபேஷித குணங்கள் விசதமாக பிரகாசிப்பது இங்கே–37- என்றும் –
இது தான் தன்னுடைய நைர பேஷ்யாதிகளை அழிய மாறி –
தன்னை அநாதரிப்பாரை ஆதரித்தது கொண்டு நிற்கிற ஸ்தலம்–38- என்றும் –
பரத்வாதிகள் ஒரொரு பிரகாரத்திலே துர்லபம் -இது சர்வ பிரகார சுலபம்-39- என்றும் –
இவ்வளவே அன்றி இவ் விஷயம்
ருசி ஜநகமுமாய்
உபாய
உபேயமுமாய்
இருக்கும் என்றும் சொல்லப் பட்டது -40-சூர்ணிகை –

இத்தால் உபாய உபேயங்கள் இரண்டும் தானேயாய்-
ஸூவ-இதர விஷயங்களில் அருசிகளையும் பிறப்பித்து –
தன் விஷயத்தில் -ருசியும் ஏற்படுத்துமதாய் –
தன் படிகளை அழிய மாறிக் கொண்டு -அநாதரிப்பவர்களையும் தான் ஆதரித்து —
அபேக்ஷித குண உஜ்ஜவலமாய் — ஸமஸ்த குண சம்பூர்ணமாய்–
பிரபன்ன ஜன கூடஸ்தர்க்கு உபாய வர்ண விஷயமாய் இருந்துள்ள சர்வ சுலபமுமான அர்ச்சா திருமேனி என்றதாயிற்று –

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: