ஆறு பிரகரணமாக பார்த்தால் இது மூன்றாம் பிரகரணம்-80-307/அதிகாரி நிஷ்டா க்ரமம்-/பெறுவான் முறை/
ஒன்பது பிரகரணமாக பார்த்தால்–
2-அவனே உபாயம் -உபாய வைபவம் –23-114
3-உபாயாந்தர தோஷம் -115–141
4-சித்த உபாய நிஷ்டா வைபவம் -142–242-
5-பிரபன்ன தினசரியா – –243 -307-
இப்படி பிரித்து அனுபவம் –
———————————–
த்வயத்தினுடைய – பூர்வ வாக்ய விவரணம்-159- சூரணைகள் –
இவற்றுள் -முதல் -4 சூரணைகள் அவதாரிகை /-மேலே -5–159–வரை -155-சூரணைகள் பூர்வ வாக்ய விவரணம்
உத்தர வாக்ய விவரணம் -160 -307–வரை -அடுத்த -148 -சூரணைகள் உத்தர வாக்ய விவரணம்
மேல் -156-த்வயம் உணர்ந்தவனுடைய நிஷ்டை –ஆக -463-சூரணைகள் –
————————————-
சூரணை -268-
உபாயம் ஸ்வீகார காலத்தில் -புருஷ சாபேஷமுமாய்-புருஷகார சாபேஷமுமாய் -இருக்கும் –
கார்ய காலத்தில் -உபய நிரபேஷமாய் இருக்கும் –
இப்படி புருஷகார சாபேஷம் என்னில் -உபாயத்தினுடைய நைரபேஷ்ய ஹானி வாராதோ -என்கிற சங்கையில்
அருளிச் செய்கிறார் –
அதாவது
சகாயாந்தர சம்சர்க்க அசஹமான சித்த உபாயம்
சரண வரண ரூப ஸ்வீகார காலத்தில் -ஸ்வீகர்த்தாவான புருஷனையும் –
ஸ்வீகரிப்பிக்கும் புருஷ காரத்வத்தையும் -அபேஷித்து இருக்கும் –
ஸ்வீக்ருதமான தான் இவனுக்கு அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வ இஷ்ட பிராப்தியைப் பண்ணுகை யாகிற -கார்ய காலத்தில் –
புருஷனும் -புருஷ காரமும் -ஆகிற உபயததையும் அபேஷியாதே-தானே செய்து தலைக் கட்டும் -என்கை –
கார்ய காலத்தில் ஸஹ காரி சபேஷம் உண்டாகில் இறே உபயத்தினுடைய நைர பேஷ்யதுக்கு ஹானி வருவது என்று கருத்து –
நிரபேஷமான சித்த உபாயம் சரண வரண ரூப ஸ்வீகாரத்தில்– -ஸ்வீ கர்த்தாவும்- ஸ்வீ கரிப்பிக்கும் அவளும் வேணுமே –
ஸ்வீ கர்த்தா இல்லை என்றால் ஸ்வீ காரமும் இல்லையே – புருஷகாரம் இல்லை என்னில் அதிகாரம் இல்லை
ஸ்வீகார அநந்தரம் -கார்ய பல -காலத்தில் -அநிஷ்ட நிவ்ருத்தி இஷ்ட பிராப்தி சமயத்தில் இருவரையும் எதிர் பார்க்காமல் தானே செய்யுமே-
ஆக நைர பேஷ்யத்துக்கு பங்கம் இல்லையே –
சரணமாகும் தன தான் அடைந்ததற்கு எல்லாம் மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்–சரம ஸ்லோகம் -ஏக சப்தம் -இரண்டு பக்ஷங்கள் –
என்னை தவிர வேறே ஒன்றுமே உபாயம் இல்லை ஸ் வீ காரத்தில் உபாய புத்தி தவிர்க்கிறது -புருஷகார புரஸ்காரம் விருத்தம் ஆகாதோ என்னில் –
ஐந்தாம் அதிகாரி -ஸ்வீ யகார ஸ் வீகாரம் உபாயம் -சித்த உபாய நைர பேஷ்ய பிரசங்கமே இல்லை –பிரபத்தியை எதிர் பார்க்கிறார் என்று
உபாய பிரதிபத்தி தானே அது -/அன்கே ஏக சப்தார்த்தம் -என்னைப் பற்று -இத்தை தவிர வேறே உபாயம் இல்லை என்றவாறு —
என்னை மட்டுமே பற்று என்றவாறு -பற்றுதலாகிற உபாயம் தவிர வேறே ஒன்றையும் பற்றாதே —
பிராட்டிக்கு உபாயத்வமும் -வேதாந்த தேசிகர் பக்ஷம் -/ஏக சப்தம் ஸ்வீ காரம் பிரதான பரம் என்பர் –
——————————————-
சூரணை -269-
ஸ்வ பிரயோஜன பரர் எல்லாரையும்
பிரதி கூலராக நினைக்கலாமோ என்னில் –
ஸ்வ பிரயோஜன பரரை-பிரதி கூலர் -என்று அவிசேஷண அருளிச் செய்தார் இறே –
இந்த ஸ்வ பிரயோஜன பரதை-அனுகூல அக்ரேசரான ஆழ்வார்கள் பக்கலிலும் –
தோற்றி இருக்கையாலே -தந் நிபந்தனமான பிரதி கூல்யம் அவர்கள் பக்கல் வராதபடி
பரிஹரிக்க வேணும் என்று திரு உள்ளம் பற்றி -தத் விஷய சங்கையை அனுவதிக்கிறார் –
நமக்கே நலம் ஆதலில் -என்றும் –
நாம் கண்டு உகந்து கூத்தாட ஞாலத்தூடே நடவாயே -என்றும் –
கண்டு நான் உன்னை உகக்க -என்றும் –
இத்யாதி வசனங்களாலும் –
மடல் எடுக்கை முதலான பிரவிருத்திகளாலும் –
ஆழ்வார்களுக்கும் இந்த ஸ்வ பிரயோஜன பரரத்வம் உண்டாகத் தோற்றா நின்றது இறே –
ஆன பின்பு ஸ்வ பிரயோஜன பரரை எல்லாரையும் பிரதி கூலர் என்று சொல்லப் பார்க்கில்
ஆழ்வார்களையும் அப்படி நினைக்க வேண்டி வாராதோ என்று சங்கைக்கு அபிப்ராயம் —
பிரதிகூலர் வகையை சொல்லுகிறது -/ விஷய தோஷம் ஒழிய ஆழ்வார்கள் தோஷம் இல்லையே –
பேர் அழகு லாவண்யம் ஸுந்தர்யம் குற்றம் -அத்தை ஆழ்வார்களால் விலக்க முடியாதே –
————————————–
சூரணை-270-
இங்கு ஸ்வ பிரயோஜனம் என்கிறது
ஆஸ்ரய தோஷ ஜன்ய மாநத்தை–
அத்தை பரிஹரிக்கிறார் –
அதாவது –
பிரதி கூலமாக சொல்லுகிற இவ்விடத்தில் -ஸ்வ பிரயோஜனம் -என்கிறது –
அனுபவ கைங்கர்யங்களுக்கு ஆஸ்ரயமான சேதனனுடைய அவித்யாதி தோஷத்தால் வந்த ஸ்வ பிரயோஜனத்தை என்கை –
இத்தை -ஆஸ்ரய தோஷம் ஜன்யம் -என்று ஒதுக்குகையாலே -ஆழ்வார்களுடைய ஸ்வ பிரயோஜனம் விஷய தோஷ ஜன்யம் என்று கருத்து –
இது தன்னை விஷய தோஷத்தால் வருமவை -சூரணை -272 – என்கிற வாக்யத்தில் வ்யக்தமாக அருளிச் செய்கிறார் இறே–
சேஷத்வ ஆஸ்ரயமான ஜீவ ஸ்வரூபத்துக்கு -பர ஏக பிரயோஜனத்துக்கு மட்டும் என்று இல்லாமல் -ஸூ பிரயோஜனமாக -தனக்காக இருந்தமை குற்றம்
பகவத் விஷயத்தில் உள்ள பேர் அழகு என்பதே விஷய தோஷம் -புத்தியை பேதலிக்க வைப்பதே தோஷம் –
அத்யந்த அசித்வத் பாரதந்தர்ய நிலையை மாற்றி நினைக்க வைத்த இதுவே தோஷம் என்றவாறு
இணைக் கூற்றங்களோ அறியேன் என்னப் பண்ணுமே திருக் கண்கள்
————————————–
சூரணை -271-
ஆகையாலே தோஷம் இல்லை –
இவ்வர்த்தத்தை நிகமிக்கிறார் –
அதாவது –
பிரதி கூல்ய ஹேதுவாக சொல்லப் பட்ட -ஸ்வ பிரயோஜனம் -ஆஸ்ரய தோஷ ஜன்யமாய் –
ஆழ்வார்கள் பக்கல் ஸ்வ பிரயோஜனம் விஷய தோஷ ஜன்யமாய் இருக்கையாலே –
அந்த பிரதி கூலம் இவர்கள் பக்கலிலும் வரும் என்கிற தோஷம் இல்லை என்கை –
அன்றிக்கே –
ஸ்வ பிரயோஜன பரரை சாமான்யேன பிரதிகூலர் என்று சொல்லும் அளவில் –
அனுகூலரான ஆழ்வார்கள் பக்கலிலும் இந்த ஸ்வ பிரயோஜன பரதை தோற்றுகையாலே –
அவர்களையும் பிரதிகூலர் என்று நினைக்க வேண்டி வருகையாலே -ஸ்வ பிரயோஜன பரரை
பிரதிகூலர் என்கை தோஷம் அன்றோ என்று நினைத்து பண்ணின சங்கையை அநு வதிக்கிறார்-
இங்கு -என்று தொடங்கி அர்த்தம் பூர்வவத் நிகமிக்கிறார் -ஆகையால் தோஷம் இல்லை -என்று –
ஆகையால்-என்ற இதுக்கு அர்த்தம் -பூர்வவத் -தோஷம் இல்லை என்றது -ஸ்வ பிரயோஜன பரரை
பிரதிகூலர் என்று சொன்னதில் தோஷம் இல்லை என்கை -என்று இங்கனே யோஜிக்கவுமாம் –
ஸூ பிரயோஜனத்வம் ஆழ்வார்கள் இடம் இல்லை -வருமா என்ன வேண்டி கொள்ள வேண்டுமே ஆழ்வார்கள் நிலையை –
ஆஸ்ரய தோஷ ஜன்யமாய் -அவித்யா அடியாக வந்தால் தானே தோஷம் -விஷய தோஷமே இங்கு –
ஸூ பிரயோஜன பரர்களை மட்டும் பிரதி கூலர் என்னலாம் –
——————————————–
சூரணை -272-
விஷய தோஷத்தால் வருமவை எல்லாம் -துஸ் த்யஜயமாய் இறே இருப்பது —
இப்படி ஆஸ்ரய தோஷ ஜன்யம் அன்றிக்கே -விஷய தோஷ ஜன்யம் ஆனாலும் –
ஸ்வரூப விருத்தமானது -த்யஜயமாய் அன்றோ -என்ன –
அருளிச் செய்கிறார் மேல் –
அதாவது –
அனுபவ விஷயமான அவனுடைய வயிர உருக்காய்-ஆண்களையும் பெண் உடை உடுத்தும் படி யான விக்ரஹ வைலஷண்யமாகிற தோஷத்தால்
வருகிற -ஸ்வ பிரயோஜன பரதை -தத் ஹேதுவான ப்ராவண்யம் தத் சித் யர்த்தமான வியாபாரங்கள் ஆகிற இவை எல்லாம் –
ஸ்வரூப விருத்தம் என்று விடப் பார்த்தாலும் -விட அரிதாய் இறே -இருப்பது என்கை –
விஷய தோஷத்தாலே வருமது -என்ற பாடமான போது- ஸ்வ பிரயோஜன மாத்ரத்தையே சொல்லுகிறது –
துஸ் த்யஜயமாய் – விடவே முடியாது என்றவாறு –விதி வாய்க்கின்றது காப்பார் ஆர் -நம்மால் தடுக்க முடியாதே –
சேஷனான அதிகாரிக்கு விஷயம் அனுபவத்துக்கும் கைங்கர்யத்துக்கும் -சேஷித்வம் -விக்ரஹ வை லக்ஷண்யம் என்கிற தோஷத்தால் வரும் ஸூ பிரயோஜனத்வம் –
நமக்கே நலமாதலால் -ஸூ போக்யத்வம் அனுசந்தானம் பண்ணி த்யஜிக்க தேடினாலும் போக்க முடியாதே -இருப்பதே என்று பரிக்ரஹிக்கிறார் –
ஆஸ்ரய தோஷத்தால் வந்த அவித்யை அடியாக வந்தால் போக்கத் தக்கதே–ஸ்வரூப ஞானம் பிறக்கவே விட்டுப் போகும் -விஷய தோஷம் அடியாக வந்த –
இது போகவே போகாதே –ஆழ்வார்கள் அனுகூல சீமா பூமி அன்றோ-அனுகூல விசேசஞ்ஞர்கள் அன்றோ இவர்கள் – -பிரதி கூல கேசமும் இல்லையே –
விஷய தோஷம் நித்யமாகையாலே-ஆடவர் பெண்கள் அவாவும் தோளினாய் -தானும் நித்தியமாய் -விடாய் பட வேண்டாதாய் -கொள்ளத் தக்கதாய் இருக்குமே –
விக்ரஹ வை லக்ஷண்யம் கல்யாண குணம் ஆகிலும் தோஷத்வ கதனம்-ஸ்வரூப விரோதம் ஸூ பிரயோஜனத்தை தூண்டி விட்டதால் –
வருமவை என்றது ஸ்வ பிரயோஜன புத்தி -அதுக்கு அடியான ப்ராவண்யம் -மடல் எடுப்பவை போன்ற பிரவ்ருத்திகள் எல்லாம்
———————————————
சூரணை -273-
ஊமையரோடு செவிடர் வார்த்தை –
கதம் அந்ய திச்ச்சதி-
விஷய தோஷத்தால் வரும் அதின் -துஸ் த்யஜ்யத்வத்தில்
பிரமாணம் காட்டுகிறார் மேல் –
மற்று இருந்தீர்கட்க்கு -என்று தொடங்கி -அத்தலையாலே பேறு என்று அறுதி இட்டால் அவன் வருமளவும்
க்ரம ப்ராப்தி பார்த்து ஆறி இருக்க வேணும் காண்-நீ இங்கனே பதறலாகாது -என்ற தாய்மாரைக் குறித்து –
இவ் விஷயத்தில் பிராவண்யமின்றிக்கே-என்னுடைய நிலைக்கு வேறாய் இருந்த உங்களுக்கு -எனக்கு ஓடுகிற தசை அறியப் போகாது –
அவன் அவன் என்று வாய் புலத்தும்படி -ஸ்ரீ யபதி விஷயமான பிராவண்யத்தை மாறுபாடு உருவ உடையளாய்-
இப்படி அவனை ஒழியச் செல்லாமை உண்டானால் -அவன் இருந்த இடத்தே சென்று கிட்டுகை ப்ராப்தமாய் இருக்க –
அதுக்கு கால்நடை தாராதபடி தாராதபடி இருக்கிற எனக்கு -நான் அவனோடு சென்று சேராமைக்கு உறுப்பாக -நீங்கள் செல்லும் வார்த்தை –
கேட்க்கைக்கு பரிகாரம் இல்லாத செவிடரோடே -சொல்லுகைக்கு பரிகரமிலாத ஊமைகள் சொன்னால் போலே -இருப்பது ஓன்று என்று -ஆண்டாள் அருளிச் செய்கையாலும் –
தவாம் ரு தச்யந்தினி-என்று தொடங்கி -வகுத்த சேஷியான தேவருடைய
தேனே மலரும் திருவடித் தாமரைகளில் போக்யதையில் அழுந்தின நெஞ்சு – மற்றொரு சூத்திர விஷயத்தை விரும்பும் படி எங்கனே –
மதுவே ஜீவனமான வண்டு – மது பரிபூரணமான தாமரைப் பூ வானது நில்லா நிற்கச் செய்தே -அதின் -சுவடு அறிந்த தான் –
கிட்டுகை அரிதாய் கிட்டினாலும் நாக்கு நனைக்க போகாதாய் இருக்கிற முள்ளிப் பூவில்
சென்று படியாத மாத்ரம் அன்றிக்கே -அத்தை கடாஷிப்பதும் செய்யாதே என்று -ஆளவந்தார் அருளிச் செய்கையாலும் –
விக்ரஹ வைல்ஷண்யம் கண்டு -பகவத் விஷயத்தில் பிரவணரானவர்களை மீட்க அரிது என்று
தோற்றுகையாலே -விஷய தோஷத்தால் வருமது துஸ் த்யாஜ்யம் என்னுமிடம் சித்தம் -இறே-
அனுஷ்டான சேஷமாக விட முடியாததை -காட்டி அருளுகிறார் செவிடரோடு ஊமையர் வார்த்தை போலே இது ஆண்டாள் –நீங்கள் சொல்வதை நான் கேட்க்கும் சக்தர் அல்ல
ஸ்ரீ யபதி விஷயமாக இரு புரி உண்டு வரும் -ஞானம் கனிந்த நலம் கொண்டு நாள் தோறும் நைபவர்கள் அன்றோ -பிராவண்ய விஷயம் –
உபேய கோடியிலே நின்ற நான் பட்டது பட்டா மடல் எடுத்த என் தாமப்பனார்கள் தான் அறிவார்
வல் வினையாட்டிகள் தான் அறியயலாம் -உபாய கோடியில் நின்று அந்த பிராப்யாம் கானா கூட கண்டு அறியாத உங்களுக்கு -வன் நெஞ்சினர் உங்கள் அறிவுக்கு விஷயம் அன்று
மடுவில் திரு முக்களம் -ஆழ்ந்து உள்ள எனக்கு ஆழம் கால் பட்டு சலனமே இல்லாத எனக்கு நீங்கள் சொல்லும் நிஷேத வசனம் எல்லாம் கேட்பதற்கும் சொல்வதற்கும் கரணம் அற்ற
இவள் கேட்க சக்தி அல்லள் -உங்களுக்கு தெரியாதே பேசுவதும் வெறும் வாய் ஆசைப்பதே –ஹிதம் சொல்லும் தாயாரை பார்த்து -விட முடியாது என்பதற்கு பிரமாணம் –
என்னோடு வேறு பட்டு இருந்தீர் -மற்று -என் நெஞ்சினால் நோக்கி காணீர் –
மாதவன் என்பதோர் அன்பு பிராவண்யத்தை நன்றாக கொண்ட எனக்கு இருந்தேன் -நகர முடியாமல் நான் இருக்க –
கமனம் தடுக்கும் உங்கள் பேச்சு எல்லாம் –
ஆளவந்தார் -ஸ்ரீ ஸூ க்தி -மதுவே ஜீவனமான வண்டு தாமரை தேனில் மூழ்கி நிற்க -முள்ளி பூவின் தேனை —
போந்தது- என் நெஞ்சு என்னும் பொன் வண்டு தெளி தேனை உண்டு இருக்க -விட முடியுமோ -திரும்பியே பார்க்காதே
—————————————————–
சூரணை -274-
இப்படி இவை இத்தனையும்-சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு –
1-வஸ்தவ்யம் ஆச்சார்ய சந்நிதியும் -பகவத் சந்நிதியும் –
2-வக்தவ்யம் -ஆசார்ய வைபவமும் -ஸ்வ நிகர்ஷமும் –
3-ஜப்தவ்யம் -குரு பரம்பரையும் -த்வயமும் –
4-பரிக்ராஹ்யம் -பூர்வாச்சார்யர்களுடைய வசனமும் அனுஷ்டானமும் –
5-பரித்யாஜம் -அவைஷ்ணவ சஹவாசமும் அபிமானமும் –
6-கர்த்தவ்யம் -ஆச்சார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் —
ஆக –
தினசர்யோக்த மங்களா சாசன அனுகூல சஹவாச பிரதி கூல சஹவாச நிவ்ருத்திகளை
விவரித்தார் கீழ் –
சதாசார்யா பிரசதத்தாலே வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போரக் கடவன் -என்றதை விவரிக்கிறார் மேல் –
இப்படி இவை அனைத்தும் சதாச்சார்ய பிரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு -என்றது –
கீழ் சொன்ன பிரகாரத்திலே இந்த ஸ்வபாவ விசேஷங்கள் எல்லாம் சதாசார்யனுடைய
பிரசாதத்தாலே கொழுந்து பட்டு வளர்ந்து வரும் போதைக்கு என்றபடி –
1–வஸ்தவ்யம் ஆச்சார்ய சந்நிதியும் -பகவத் சந்நிதியும் -அதாவது –
இவனுக்கு வாசஸ்தலம் -ஹிதைஷியாய்-உபதேசாதிகளால் இவற்றுக்கு உத் பாதகனான
ஸ்வாச்சார்யனுடைய சந்நிதியும் -அவன் காட்டிக் கொடுக்கக் கைக் கொண்டு -அவனுக்கு உகந்த விஷயமாய் –
தன் பக்கலிலே விசேஷ கடாஷாதிகளை பண்ணிக் கொண்டு போரும் அர்ச்சாவதாரமான பகவான் சந்நிதியும் -என்கை-
இது சமுச்ச்யமும் அன்று -சம விகல்பமும் அன்று ஆச்சார்ய சன்னிதியே பிரதானம் -தத் அலாபத்தில் அர்ச்சாவதார சந்நிதி என்றபடி –
ஆக இறே -ஆசார்ய சந்நிதியை முற்பட அருளி செய்தது-மத்பக்தைஸ் சஹ சம்வாசஸ் தத் அஸ்தி த்வ்ம மயா பிவா -என்று இறே பகவத் உக்தியும் –
இனி -வக்தவ்யம் -தொடங்கி -மேல் அடைய -சமுச்சயம் –
2-வக்தவ்யம் ஆச்சார்ய வைபவமும் ஸ்வ நிகர்ஷமும் –
அதாவது –
இவனுக்கு சர்வ காலமும் வாக்கால் சொல்லப்படுமது-துர்கதியே பற்றாசாக தன்னை அங்கீகரித்து அருளின -ஆசார்யனுடைய தயா ஷாண்யாதி வைபவமும் –
எத்தனை யேனும் தயாதி குண பரிபூர்ணரும் ஏறிட்டு பார்க்க அறுவருக்கும் படி நின்ற அநாத்மா குண பூர்த்தியாகிற தன்னுடைய நிகர்ஷமும் ஆகிற இவை என்கை –
ஸ்ரீ மதுர கவி ஆழ்வார் -நன்மையால்-என்ற பாட்டு தொடங்கி -இவை இரண்டையும் விசதமாக அருளிச் செய்தார் இறே —
3–ஜப்தவ்யம் குரு பரம்பரையும் த்வ்யமும் –
அதாவது -இவனுக்கு கால ஷேபத்துக்கும் போகத்துக்கும் உறுப்பாக ரகஸ்யமாக அனுசந்தித்து கொண்டு
போரப்படுமது -ராமானுஜா அங்க்ரி சரணோஸ்மி -இத்யாதில் படியே
சர்வேஸ்வரன் குளிர நோக்குகைக்கு உடலாய் -ஸ்வா ச்சார்யவம்சோ ஞேய ஆசார்யானாமசாவ ச வித்யா பகவத்த -என்கிறபடியே
ஸ்வ ஆசார்யாதி பரமாச்சார்ய பகவத் பர்யந்தையான குரு பரம்பரையும் -அந்த குரு பரம்பரா பிராப்தமாய் ஸ்வ ஆசார்யன் தனக்கு தஞ்சமாக உபதேசித்த-த்வயமும் -என்கை-
இத்தால் குருபரம்பரா பூர்வகமான த்வயமே இவனுக்கு ரகஸ்யமாக அநு சந்தித்து கொண்டு போரப்படும் என்றபடி –
பாஷ்யகாரருக்கு காலஷேபம் பிரகாரம் அருளி செய்கிற இடத்தில் -த்வயம் அர்த்த அநு சந்தாநேன சஹசதைவம் வக்தா -என்று இறே -பெரிய பெருமாள் அருளிச் செய்தது –
4–பரிக்ராஹ்யம் பூர்வாசார்யர்களுடைய வசனமும் அனுஷ்டானமும் -அதாவது –
தனக்கு ஞான அனுஷ்டானங்கள் உற்று இருக்கைக்கு உறுப்பாக -கண்ட கண்ட இடங்களில் இவனால் பரிகிரஹிக்கப்படுமது-நாத முனிகள் முதலாக
இவ்வருகுள்ள பூர்வசார்யர்கள் உடைய ஞாதவ்யார்த்த ப்ரகாசகமான திவ்ய வசனங்களும் -அந்த வசன அநு ரூபமாக மறுவற்ற அனுஷ்டானங்களும் -என்கை
சூவ்யாஹ்ருதா நிமஹதாம் சூக்ருதநி ததச்தாதா-சஞ்சின்வன் தீர ஆஸீத் சிலஹாரி சிலம்யதா -என்னக் கடவது இறே —
5-பரித்யாஜம் அவைஷ்ணவ சஹாவாசமும் அபிமானமும் –
அதாவது –
ஞான அனுஷ்டான நாசகம் என்னும் பயத்தாலே இவனுக்கு சவாசனமாக விடப்படுமது வைஷ்ணவ லஷணம் இல்லாதவர்களோட்டை சஹாவாசமும் –
அவர்கள் இவன் நம்முடையவன் என்று ஓர் அன்வயங்களால் தம் திறத்தில் பண்ணும் அபிமானமும் என்கை
6-கர்த்தவ்யம் ஆசார்ய கைங்கர்யமும் பகவத் கைங்கர்யமும் -அதாவது-இவனுக்கு ஸ்வரூப அனுகூலமாகவே எப்போதும் செய்யப்படுமது –
மகோ உபாகாராணன் ஸ்வ ஆசார்யன் விஷயத்தில் பிரேமா பூர்வகமாய் பண்ணும் கைங்கர்யமும் -தந்நியோக பரதந்த்ரனாய் பண்ணும் பகவத் கைங்கர்யமும் -என்கை –
ஆக
தினசர்யையில் சொன்ன ஸ்வபாவ விசேஷங்களை எல்லாம் -சதாச்சார்ய பிரசாதத்தாலே
வர்த்திக்கும் படி பண்ணிக் கொண்டு போருகை -யாவது –
இப்படி இருந்துள்ள
1-வஸ்தவய
2-வக்தவ்ய
3-ஜப்தவ்ய
4-பரிஹ்ராஹ்ய
5-பரித்யாஜ்ய
6-கர்தவ்யங்களை அறிந்து -இவற்றிலே நிஷ்டனாய் போருகை – என்றது ஆயிற்று –
மங்களாசாசனம் -அனுகூல பிரதிகூல -மூன்றையும் விஸ்தரித்த பின்பு -சதாசார்ய பிரசாதத்தால் -விளைந்த வளர்ந்த -தினசரியா அனுசந்தான குணங்கள் –
அதிகார பூர்த்தியர்த்தமாக -வளர்ந்து கொண்டு போக –
ஹித உபதேசத்தால் ஸ்வரூபம் மாறாத படி சதாசார்ய சந்நிதியும் -தத் அலாபத்தில்- கிடைக்காத பக்ஷத்தில் -அவன் காட்டிக் கொடுத்த
அர்ச்சாவதார பகவத் சந்நிதியும் – -பொன்னுலகு ஆளீரோ புவனா எல்லாம் ஆளீரோ குருவி காட்டும் இடத்தில் வாழலாமே –
சம விகல்பம் இல்லை -விவஸ்தித விகல்பம் -கதா சித் கேசவ பக்தி -தத் பக்த பக்தி -சம்சாரம் தாண்ட -விஷ மரம் -கேசவன் தமர் -அடியாரோடும் ஒன்றி நின்ற சடகோபன்
கர்ம பாகத்திலும் ப்ரஹ்மச்சாரி அத்யயனம் குருகுல வாசமே முற்பட வித்தித்து
ஞான அனுஷ்டான வைபவம் வாயார சொல்லி -தத் உபய அபாவம் தனக்கு -இது சமுச்சயம் அல்ல -பிரதானம் ஆச்சார்ய வைபவம் –
தாழ்ந்த என்னையும் தூக்கி விடும் வைபவம் காட்ட -வேறே ஒன்றையும் பேச கூடாதே என்பதால் இத்தை சொன்னதும் அதுக்கு அதிசயகாரம் என்பதை காட்டவே –
நீசத்தை பாராமல் அங்கீ கரித்து அருளும் வைபவம்
புன்மையாக -நம்பினேன் பிறர் நன் பொருள் தன்னை -விசேஷண அன்னையாய் அத்தனாய் ஹித பிரியம் -அருள் மிக்கதே -ஆச்சார்ய வைபவ கதனம்
அநதிகாரிகள் கேளாமல் -ஜபித்தவ்யம் த்வயம் போர்வை பாவியான குரு பரம்பரையும் -குரு பரம்பரையை முன்னிட்டு த்வயமும் –
இரண்டும் சேர்ந்தே இருக்க வேன்டும் பிரியாதே -சமுச்சயம் பின்னம் இல்லை -ஸஹ அனுசந்தான நியதி பரம் அத்தனை –
உத்தேசியர் குரு பரம்பரை -ஆச்சார்ய பிரியதயா என்பதால் ஆச்சார்யர் தனியனும் த்வயமும் -சேர்ந்தே அனுசந்திக்க வேன்டும்
ராமானுஜா அங்க்ரி சரணோஸ்மி –சரணம் சிஷ்யன்-ஸ்வா ச்சார்யவம்சோ ஞேய ஆசார்யானாம் அசவ் அசவ் ச வித்யா பகவத்த —
மேலே மேலே குரு பரம்பரை பகவான் வரைக்கும் என்றபடி -வியாபகம் குரு பரம்பரை -வியாப்யம் த்வயம் –
திட பிராமண புத்தி பூர்வகமாக நாத முனிகள் தொடக்கமான -ஸ்வரூபாதி அனுசந்தானம் -வசனமும் அனுரூபமான நிர்மல அனுஷ்டானமும் -பரம பிரமாணம் –
சமுச்சயம் சம பிரதானம் இவை இரண்டும் –
ஆழ்வார்களுடைய வாக்கால் நாத நுனியால் பரிக்ரஹிப்பட்டதே அருளிச் செயல்கள் –இவர் திருவாயால் பரிக்ரஹிப்பட்டதால் ஏற்றம்
ஆழ்வார் அனுஷ்டானம் நம்மால் பரிக்ரஹிக்கப் பட முடியாதே -வாமனன் மண் இது என்றும் -/ ஆச்சார்யர்கள் அனுஷ்டானம் நம் போல்வாருக்கு –
நாத முனிகள் முதலாக இவ்வருகுள்ள பூர்வசார்யர்கள் உடைய -வசனமும் அனுஷ்டானமும் பரிக்ராஹ்யம் –
ருசி வாசனைகள் உடன் பரித்யாஜ்யம் அவைஷ்ணவ ஸஹ வாஸம் -ஸ்வரூப நாசகார -அபிமானிக்கப் பாடவும் கூடாதே அவர்களால்-நாமும் அபிமானிக்க கூடாதே –
இதுவும் சம பிரதானம்
ஸ்வரூப ப்ராப்தமான கர்தவ்யம் நித்ய சேஷியான ஆச்சார்ய கைங்கர்யமும் -தத் ப்ரீதி வர்க்கமான பகவத் கைங்கர்யமும் -இந்த சமுச்சயம் -சமம் அல்ல –
பிரதானம் முதலில் -சகஜம் -பிற்பட்டது உபாத்தியால் வந்த -அப்ரதானம் –
கிங்கரனனுடைய கைங்கர்யம் சேஷியுடைய அபிமதம் செய்பவன் கிங்கரன் -பலத்தை எதிர்பார்க்காமல் –ஸூ வ ரசார்த்த கைங்கர்யமும் -கூடாதே /
————————————-
சூரணை -275-
கீழ் சொன்ன பகவத் கைங்கர்யம் அறிவது சாஸ்திர முகத்தாலே –
ஆசார்ய கைங்கர்யம் அறிவது – சாஸ்திர முகத்தாலும் ஆச்சார்ய வசனத்தாலும் —
இப்படி கர்தவ்யமான கைங்கர்யங்கள் இரண்டும் அறிவதும் எம் முகத்தாலே என்னும்
ஆ காங்ஷையிலே அருளிச் செய்கிறார்
கீழ் -என்றது வஸ்தவ்யாதிகளை சொன்ன இந்த கணனையில் என்றபடி –
பகவத் கைங்கர்யம் அறிவது சாஸ்திர முகத்தாலே -என்றது –
பகவான் இவனுக்கு இப்போது வாய் திறந்து ஒன்றை அருளிச் செய்யாமை யாலே –
தத் பிரதிபாதகமான ஸ்ருதி ஸ்ம்ருதி யாதி சாஸ்திர முகத்தாலே அறிய வேணும் -என்கை
ஆசார்ய கைங்கர்யம் அறிவது -சாஸ்திர முகத்தாலும் ஆச்சார்ய வசனத்தாலும் –என்றது –
ஆச்சார்ய விஷயத்தில் சிஸ்ருஷா பிரகாரங்களை பிரதிபாதிக்கிற சாஸ்திர முகத்தாலும் –
தனக்கு இஷ்ட அநிஷ்டங்கள் இன்னது என்னும் இடத்தை அவன் அருளி செய்த வசனத்தாலும் -என்கை –
கீழே வஸ்தாத்வாதி அவஸ்ய அனுஷ்டான விசேஷங்களை அருளிச் செய்து -ஆச்சார்ய பிரசாதம் நம் மேல் வளர இவை வேன்டும் —
தினசர்யா நடத்தைக்கு சமதர்ம ஆத்ம குணங்கள் வளர ஆச்சார்ய பிரசாதம் வேண்டுமே –
கைங்கர்யம் -ஸ் வார்த்த -நம் அனுபவம் நம் ரசத்துக்காக -என்ற எண்ணம் இல்லாமல் -வேதாந்த சாஸ்த்ர முகத்தால் –
காம ரூபியாக அநு சஞ்சரித்து -பகவானை தொடர்ந்து ஏதத் சாம காயன் –சாயுஜ்யம் அடைந்து கிங்காராம் பவதி -உபத்திரவம் இல்லாமல் –
ஆச்சார்ய தாத்பர்ய வசனம் –சாஸ்திரம் பொதுவான சொன்னதை ஆராய்ந்து யாதாம்யா தாத்பர்யம் விலக்கி அருளிச் செய்வார்கள்
கேவல சாஸ்த்ரத்தால் அறிவதை விட தாத்பர்யம் அறிந்து செய்வது ஸ்ரேஷ்டமாகும்
சாஸ்திரமும் சாஸ்த்ர தாத்பர்யமும் -ரஹஸ்ய த்ரய ஞானம் -இரண்டுக்கும் வேன்டும் / உபய சாஸ்த்ர முகத்தாலும் விசேஷித்து ஆச்சார்ய கைங்கர்யம் –
இதுக்கும் சாரம் -பால் தயிர் வெண்ணெய் நெய் -போலே -சாஸ்திரம் -சாஸ்த்ர தாத்பர்யம் -திரு மந்திரத்தில் வளர்ந்து –
த்வயத்திலே வளர்ந்து த்வய ஏக நிஷ்டராய் இருப்பவர் அனுஷ்டானமும் –சரம உபதேச சார விசேஷம் – தாத்பர்ய சாரம்/ .
உபாய பாவத்தில் கண் வைக்காமல் ப்ராப்ய பாவத்தில் கண் வைத்து -கைங்கர்ய நிஷ்டராய் இருப்பது
சாஸ்திரம் பக்தியும் அவனும் / தாத்பர்யம் -உபாய உபேயம்/-தாத்பர்ய சாரம் உபேயம் ஒன்றிலே கண் வைத்து –
இதில் இருந்து-ஸூஷ்ம தர்சி -சரம தசை ஸ்ரீ ஸூ க்திகள் பரம பிரமாணம் உபய வ்யாவ்ருத்தம் அன்றோ -பரார்த்த கைங்கர்யம் இதனாலே கிட்டும்
பரத்வாதி விஷயத்தில் கைங்கர்யம் நித்ய முக்தர்களுக்கு சார்வஞ்ஞதை / விபவம் தத் கால வர்த்திகளுக்கு தத் வசனத்தாலும் /
அர்ச்சையில் இப்பொழுது உள்ள அதிகாரிகளுக்கு சாஸ்திரம் ஒன்றுமே பிரமாணம் /
—————————————
சூரணை -276-
கைங்கர்யம் தான் இரண்டு –
இனிமேல் கைங்கர்யம் தன்னை அறிவிக்கைக்காக -கைங்கர்யம் தான் இரண்டு -என்கிறார் –
பிரவ்ருத்தி நிவ்ருத்தி ரூபேண இரண்டு வகைப் பட்டு இருக்கும் / பிரமாணம் சொல்லிய பின்பு லக்ஷணம் அருளிச் செய்கிறார் –
—————————-
சூரணை -277-
அதாவது
இஷ்டம் செய்கையும்-
அநிஷ்டம் தவிருகையும் –
அது ஆவது என்ன -அதாவது இஷ்டம் செய்கையும் அநிஷ்டம் தவிருகையும் -என்கிறார் –
ஆச்சார்யாருக்கும் பகவானுக்கும் -இஷ்டம் செய்வதும் -அநிஷ்டம் தவிருவதுவும் –
ஸ்வயம் பிரயோஜன- சேஷி இஷ்ட கரண- தத் அநிஷ்ட அகரண அந்நிய தரத்வம் -இரண்டில் ஒன்றாலும் செய்வதே -கைங்கர்ய லக்ஷணம் –
-பகவல் திமுக உல்லாசம் -திருமுக மலர்த்தி -இரண்டும் காரணம் -ஏதாவது ஒன்றோ இரண்டுமே கைங்கர்யம் -என்றவாறு
————————————–
சூரணை -278-
இஷ்ட அநிஷ்டங்கள்
வர்ண ஆஸ்ரமங்களையும்
ஆத்ம ஸ்வரூபத்தையும்
அவலம்பித்து இருக்கும் –
இவை தான் இரண்டும் எத்தை அவலம்பித்து இருக்கும் என்ன –
அருளிச் செய்கிறார் மேல் –
அதாவது –
கீழ் சொன்ன கைங்கர்ய பிரதிசம்பந்திகள் இருவருடையவும் இஷ்ட அநிஷ்டங்கள்
இவ் அதிகாரி உடைய வர்ண ஆஸ்ரமங்களையும் -ஆத்ம ஸ்வரூபத்தையும் -பற்றி இருக்கும் -என்கை –
1-இஷ்ட அநிஷ்டங்கள் வர்ண ஆஸ்ரமங்களை பற்றி இருக்கையாவது –
ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரமே உசிதமான தர்மங்களை பரார்த்த புத்த்யா அனுஷ்டிகை இஷ்டமாய் –
ஸ்வார்த்த புத்த்யாய்-அநிஷ்டமாய் இருக்கை-
பரார்த்த புத்த்யா அனுஷ்டிகை-யாவது -லோக சங்கரக தயாவாகவும் –
சிஷ்ய புத்ரர்களுடைய உஜ்ஜீவன அர்த்தமாகவும் ஆந்ரு சம்சயத்தலே அனுஷ்டிக்கை –
இவ் அர்த்தத்தை -இனி இவற்றில் நம் ஆசார்யர்கள் அனுஷ்டிக்கிற இவை சிஷ்ய புத்ரர்களுடைய
உஜ்ஜீவன அர்த்தமாக ஆந்ரு சம்சயத்தாலே அனுஷ்டிக்கிறார்கள் அத்தனை –
இப்படி அனுஷ்டியாத போது -பகவத் விபூதி பூதரான சேதனருக்கு நாச ஹேது வாகையாலே
ஈஸ்வரனுக்கு அநபிமத பூதனாவன் -ஆகையால் யாதொரு அளவாலே லோக
சங்கரகம் பிறக்கும் -யாதொரு அளவாலே சிஷ்யர் புத்ரருகளுக்கு உஜ்ஜீவனம் உண்டாம்
அவ்வளவும் அனுஷ்டேயம் என்றது ஆயிற்று –
பிரவ்ருத்தி தர்மம் தானே அபிசந்தி பேதத்தாலே நிவ்ருத்த தர்மமோபாதி-இந்த நிவ்ருத்த தர்மமும் பிராப்யமாக கடவது –
இவ்விடத்திலே அகரணே பிரத் யவாயம் -எம்பிரானுடைய அநபிமத்வமும் தன்னுடைய புருஷார்த்த ஹானியுமாக கடவது –
என்று தனி ஸ்லோகத்தில் இவர் தாமே அருளி செய்தார் இறே-
இனி ஸ்வார்த்ய புத்த்யா அனுஷ்டிக்கை யாவது -ஸ்வ வர்ண ஸ்வ ஆஸ்ரம உசிதமாக விஹிதமாகையாலே -நமக்கு இவை அனுஷ்டியாது ஒழியில்-
க்ருத்ய அகரண ரூப பாவம் வரும் என்று நினைத்து அனுஷ்டிக்கை –
இஷ்ட அநிஷ்டங்கள் ஆத்ம ஸ்வரூபத்தை பற்றி இருக்கை யாவது –
இச்சை ஸ்வ ரூபம் -என்கிறபடியே -விநியோக தசையில் -சேஷி உடைய இச்சா அநு குணமாக ஸ்வரூபத்தை விநியோக படுத்துகை -இஷ்டமாய் –
தட்டுமாறி விநியோகம் கொள்ளும் அளவில் தன்னுடைய சேஷத்வத்தை இட்டு இறாய்த்தல்-
பாரதந்த்ர்யத்தை இட்டு எதிர் விழி கொடாது ஒழிதல் செய்கை அநிஷ்டமாய் இருக்கை –
அங்கன் இன்றிக்கே –
2-இஷ்ட அநிஷ்டங்கள் -இத்யாதி
ஸ்வ வர்ண ஆஸ்ரம உசிதங்களை செய்கை இஷ்டம் -தத் விருத்தங்களை செய்கை அநிஷ்டம்-என்றும்
ஆத்ம ஸ்வரூபத்துக்கு உசிதமாக செய்கை இஷ்டம் -தத் விருத்தங்களை செய்கை அநிஷ்டம் –
என்றும் யோஜிக்க்கவுமாம் –
அங்கனும் அன்றிக்கே –
3-ஒவ்பாதிகமாயுமாய் அநித்யமுமாய் வர்ண ஆஸ்ரமங்களிலே ஊற்றி இருக்கை அநிஷ்டம்
நிருபாதிக நித்ய சேஷமான ஆத்ம ஸ்வரூபத்தில் ஊற்றி இருக்கை இஷ்டம் -என்றும்
யோஜிக்க்கவுமாம் –
இங்கன் ஊற்றத்தை பற்றி சொல்லுகை அன்றிக்கே அநிஷ்டம் வர்ண ஆஸ்ரமத்தை பற்றி இருக்கும் –
இஷ்டம் ஆத்ம ஸ்வரூபத்தை அவலம்பித்து இருக்கும் என்று இங்கனே விபஜித்து -வர்ண ஆஸ்ரமத்தை அநிஷ்ட கோடியாக சொல்லப் பார்க்கில் –
சுருதி ஸ்ம்ருதிர் மமை ஆக்ஜா ஆஸ்தா
முல்லன்க்ய வர்த்த -ஆக்ஜாச்ச்செதி மமத்ரோஹீ மத்பக்தோ பின வைஷ்ணவ –என்றும் –
அபிப்லவாய தர்மாணாம் பால நாயகுலசயச
ஸந்கரஹாய ச லோகச்ய மர்யாதாஸ் ததாப நாய்ச ப்ரியாய மம விஷ்ணோச்ச தேவ தேவஸ்ய சார்ந்கினா
மநீஷீ வைதிகாசாரம் மனசாபி நலன்கயேத் யதாஹி வல்லபோ ராஜ்ஞ்ஞோ நதீம் ராஞ்சா ப்ரவர்த்திதாம்
லோகோபயோகி நீம் ரம்யாம் பஹூசச்ய விவர்த்திநீம் லங்கயன் சூலமா ரோஹேதா அனபேஷா பிதாம்பிரதி–ஸ்ரீ லஷ்மீ தந்திரம்– என்றும்
ஏவம் விலங்க கயன் மர்த்யோ மாயாதாம் வேத நிர்மிதாம் ப்ரியோ சனப்ரியோ ஸௌ மே மதா ஜ்ஞாவ்யதி வர்த்த நாத் –
உபாயத்வ க்ரகம் தத்ர வர்ஜே யேன் மனசா சூதீ—ஸ்ரீ லஷ்மீ தந்திரம் -என்றும்
சர்வேஸ்வரனும் பிராட்டியும் அருளி செய்த வசனங்களோடும் -பூர்வாச்சார்யர்களுடைய அனுஷ்டானங்களோடும் விரோதிக்கும் இறே-
ஆன பின்பு கீழ் சொன்ன படியே -இவ்வாக்யத்துக்கு பொருளாகக் கடவது –
வர்ண ஆஸ்ரமங்களையும்- தர்மங்கள் என்று சொல்லாமல்–தேக ஸ்வரூபங்களையும் என்று சொல்லாமல் -ஆத்ம ஸ்வரூபத்தையும்-அவலம்பித்து-பற்றி இருக்கும் -என்றபடி –
இஷ்டங்கள் -வரண ஆஸ்ரமங்களையும் ஆத்ம ஸ்வரூபத்தையும் பற்றி இருக்கும் என்றும்
அநிஷ்டங்கள்-வா\ரண ஆஸ்ரமங்களையும் ஆத்ம ஸ்வரூபத்தையும் என்றும் –
மர்ம ஸ்பர்சி ஆத்ம -பழுத்திலா ஒழுகல் தேகத்துக்கு / இஷ்டங்கள் செய்வது பிரதானம் அநிஷ்டங்கள் தவிருவது அப்ரதானம் என்று இல்லை –
அச்சுஎழுத்து குறைத்தது முன்னால் அல்ப அக்ஷரம் பூர்வம் –
1-மேல் எழுந்து -தேகத்தை பற்றி -வந்தேறி வர்ணாஸ்ரமம் -நித்தியமான சேஷத்வம் -நிரூபகமான ஆத்ம ஸ்வ ரூபம் பார்ப்பதே இஷ்டம்
பாஹ்யமான த்யாஜ்யத்தை- வந்தேறி -அநிஷ்டம் அவலம்பித்தும் -இஷ்டம் ஆந்தரமான ஆத்ம ஸ்வரூபத்தை பற்றி இருக்கும்
2–தேக கதமான வர்ணத்தையும் தத் அனுகுணமான ஆஸ்ரமமும் பற்றுவதும் அநிஷ்டம்
ஸ்வரூப கத சேஷத்வ வர்ணத்தையும் அனுகுண பிரபன்ன ஆஸ்ரமத்தையும் பற்றுவதும் இஷ்டம்
3–போக்தாவாய் கொண்டு சேஹமாய் இருக்கும் ஸ்வரூபம் அநிஷ்டம்
போக்யமாய் கொண்டு பார்த்தந்திரமாய் இருப்பது இஷ்டம்
சேஷத்வ போக்த்ருவங்கள் போலே இல்லையே பாரதந்தர்ய போக்யங்கள்
இப்படி இஷ்ட அநிஷ்டங்கள் இரண்டிலும் கொள்ள வேன்டும்
அன்றியே
4-தர்சன தூஷணமாக வர்ணாஸ்ரம விபரீதம் செய்வது அநிஷ்டம் -செய்யாது இருப்பது இஷ்டம்
ஸ்வரூப விருத்தங்களை செய்வது அநிஷ்டம்- செய்யாமல் இருப்பது இஷ்டம்-
யாதொரு அளவாலே -என்றது -அவ்வளவும் அனுஷ்டேயம் என்றது -ஏதோ ஆன மட்டும் இல்லை – முடிந்த அளவும் பண்ண வேன்டும்
அகரணே பிரத் யவாயம் -எம்பிரானுடைய அநபிமத்வமும் தன்னுடைய புருஷார்த்த ஹானியுமாக கடவது-என்ற எண்ணம் வேன்டும் –
நரகத்துக்கு போவோமே என்ற எண்ணம் வந்தால் ஸ்வார்த்த காரணம் ஆகுமே
இச்சை ஸ்வரூபம் – இரக்கம் உபாயம் -இனிமை உபேயம் -விநியோக தசையில் சேஷியுடைய இச்சையே -போகத்திலே தட்டு மாறிய சீலம் காட் கரையிலே பிரசித்தம்
பிரபன்னன் ஆந்ரு சம்சயத்தால் -அனுஷ்ட்டித்தால் சாதனம் ஆகாது -இரக்கத்தோடே செய்தால் அவனுக்கு பிடித்தம் ஆகுமே -சம்சாரத்தில் கட்டுப் படுத்தாதே பிரவ்ருத்தி தர்மமாக இருந்தாலும் -ஆகையால் -குறை இல்லை / விநியோகம் பகவல் முக லாபத்துக்காக செய்வது கைங்கர்யமே -பலாந்தர ஹேது வாகாது -கர்மத்தின் ஸ்வரூபமே மாறுமே –/
பிரியாய மம விஷ்ணோ ச -பிராட்டிக்கு அவனுக்கும் பிரியகரமாய் இருக்குமே / எந்த நினைவுடன் செய்கிறாய் என்பதற்கு தகுந்த பந்த மோக்ஷம் -/
அதிகாரி -பர கத அதிசயம் -சேஷத்வம் -இச்சையே உபாதேயம் /
—————————————-
சூரணை -279-
புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன் பாபத்தைப் பண்ணான் இறே
இம் மூன்று யோஜனைக்கும் மேலில் வாக்யத்தோடு சங்கதி என் என்னில் –
பிரதம யோஜனையில்-இப்படி வர்ணாஸ்ரம அனுஷ்டானத்தில் பிரதிபத்தி விசேஷங்களிலும்-ஆத்ம ஸ்வரூபத்தினுடைய விநியோக தசையில்
அனுகூல்ய பிரதி கூல்யங் களிலுமாக இஷ்ட அநிஷ்டங்களுக்கு விஷய விபாகம் பண்ண வேணுமோ –
வர்ணாஸ்ரம ரூபமாயும் ஸ்வரூபமாயும் உள்ளவற்றைச் செய்கை இஷ்டம் -தத் விருத்தங்களான அக்ருத்யாதிகளைச் செய்கை அநிஷ்டம் என்றாலோ என்ன
அருளிச் செய்கிறார் -மேல் –
த்வதீய யோஜனையில் -இப்படி வர்ணாஸ்ரம விருத்தங்களையும் ஸ்வரூப விருத்தங்களையும் செய்கை அநிஷ்டம் என்று இவனுக்குச் சொல்லித்
தவிர்ப்பிக்கை தான் வேணுமோ உன்ன -புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன்-என்று தொடங்கி அருளிச் செய்கிறார்
த்ருதீய யோஜனையில் இப்படி வர்ணாஸ்ரமங்களில் ஊற்றம் அறுத்தால் அக்ருத்ய கரணங்கள் வந்து புகுராதோ என்ன –
புண்ணியத்துக்கு அஞ்சுகிறவன்-இத்யாதியாலே அருளிச் செய்கிறார்
பகவத் அனுக்ரஹ ஹேதுவாக சாஸ்த்ர சித்தமாக இருக்கச் செய்தேயும் மோக்ஷ விரோதி என்னும் அத்தாலே புண்ணியம் செய்கைக்கு உட்பட அஞ்சுகிற இவ்வதிகாரி
பகவத் நிக்ரஹ ஹேதுவாக சாஸ்த்ர சுத்தமாய் நரகாவஹம் என்று சாமான்யரும் உட்படச் செய்யாத பாபத்தை ஒருக்காலும் செய்யான் இறே
புண்யத்தை சாதனமாக நினைத்து செய்யாதே என்னில் -புண்யத்தை என் நினைவால் செய்ய வேணும் –
அவனுக்கு அநிஷ்டம் என்று விசிஷ்ட வேஷ அனுபந்திகளை விடில் பாப பிரவ்ருத்திகள் வாராதோ என்னில் –வராது –
மோக்ஷ விரோதி என்று புண்யத்தையும் செய்ய அஞ்சுபவன் சாமான்யரும் செய்யாத பாபத்தை செய்யான்
த்யஜிக்கைக்கு அடியான பிரவ்ருத்தி ரூபத்வம் – ஆகாரம் இரண்டுக்கும் -சர்வ தர்மான் பரித்யஜ்ய -கர்மத்தையே -இரு வினைகள் ரூபம் -ஒரே கோஷ்ட்டி –
எத்தை பண்ணுவான் புண்யத்தை மட்டும் சாதனம் என்று பண்ணாமல் கைங்கர்ய ரூபமாக செய்வான் -என்றபடி
தர்மங்களை பரித்யஜ்யம் -என்னில் அதர்மங்கள் புகுராதோ என்னில் -இது பிரபன்னனுக்கு சொன்னது அன்றோ –
உபாய புத்தி யுடன் செய்யாதே என்றே அருளிச் செய்தான் அதே போலே இங்கும்
————————————-
சூரணை -280-
இவன் புண்ணியத்தை பாபம் என்று இருக்கும் –
அவன் பாபத்தை புண்ணியம் என்று இருக்கும் –
அவனுக்கு அது கிடையாது
இவன் அது செய்யான் –
இவன் புண்ணியத்துக்கு அஞ்சும்படியையும்
வத்சலனான ஈஸ்வரனுக்கும் இடம் அறும்படி பாப பிரவிருத்தியில் அந்வயம் அற்று இருக்கும் படியையும் –
தர்சிப்பிக்கிறார் மேல் –
அதாவது –
ததா வித்வான் புண்ய பாபே விதூய நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -என்கையாலே –
புண்ணியம் பாபங்கள் இரண்டும் மோஷ விரோதி என்று இருக்கும் இவ்வதிகாரி –
நாட்டார்சுகள் ஹேது என்று விரும்பி இருக்கும் புண்ணியத்தை -பகவத் பிராப்தி பிரதிபந்தக தயா அநிஷ்டாவஹம் ஆகையாலே –
துக்க ஹேதுவான பாபம் என்று நினைத்து -வெருவி இருக்கும் –
ஆஸ்ரிதர் செய்த குற்றம் நற்றமாகவே கொள்ளும் அதிமாத்ரா வத்சலனான ஈஸ்வரன் –
இவ்வதிகாரி ஏதேனும் ஒரு பாபத்தை பண்ணினாலும் -அத்தைக் குற்றமாக நினையாதே நற்றமாக நினைத்து கொண்டு இருக்கும் –
அவன் அப்படி இருந்தானே ஆகிலும் -இவ்வதிகாரி பாப பிரவ்ருத்தியில் அந்வயம் அற்று
நியதனாய் வர்திக்கையாலே -பாபத்தை புண்ணியமாக கொள்ளும் வத்சலனனான அவனுக்கு
ஆசைப்பட்டு போம் இத்தனை ஒழிய கிடையாது என்கை –
ஆக –
கீழ் கர்தவ்யமாக சொன்ன கைங்கர்யம் அறிவது இன்னத்தாலே-276- என்றும் –
கைங்கர்யம் தான் த்விவிதம்-277- என்றும் –
அது தான் இன்னது-278- என்றும் –
தத் உபயமும் இன்னத்தை அவலம்பித்து இருக்கும் என்று சொல்லி –
அதில் பிரசங்கிக சங்கா பரிஹாரமும் பண்ணப் பட்டது –
பாபத்தையே புண்ணியமாக கொள்ள இருப்பானே வாத்சல்யம் காட்ட வாய்ப்பு என்று -அவன் பாபத்தை புண்ணியம் என்று இருக்கும் —
இவனோ புண்ணியத்தை பாபம் என்று இருக்கும் -இவன் அது செய்யான் -அதனால் அவனுக்கு அந்த பாக்யம் கிட்டாதே
வத்சலனானவனுக்கு இடம் அற -நியதனாய் இருக்கும் -நாட்டார் சுக ஹேது என்று நினைப்பார்கள் -அல்ப அஸ்திர சுகம் -துக்க ஹேது என்று-
த்யஜிக்கும் பாபம் போலே இவன் நினைத்து இருப்பானே -சாம்சாரிக போகம் எல்லாம் துக்கம் -சாதனம் எல்லாம் பாபம் -செய்த குற்றம் எல்லாம் நற்றமாக கொள்ள
கழுகு போலே காத்து இருப்பானே நம் குணத்துக்கு இறை பெற்றோம் -இது நம் புண்யம்-பெறாப் பேறு என்று இறுமாந்து -என்ற திரு உள்ளம் –
ஆசைப்பட்டு பேகணித்து போகிறவனுக்கு துராசையே சேஷிக்கும் -அவாப்த ஸமஸ்த காமனுக்கு -பாப ரூபமான போக்யம் ஒருக்காலும் கிடைக்காது –
குணம் போனது என்ற குற்றம் வாராதோ என்னில் -வாத்சல்யம் கார்யகரம் ஆக பிராமாதிகமாக செய்யும் உத்தராகம் இருக்குமே -அத்தை இதுக்கு விஷயமாகும்
தேக தோஷம் -அபுத்தி பூர்வக உத்தராகம் -புத்தி பூர்வக பூர்வாகம் உண்டே -/ புத்தி பூர்வக உத்தராகம் இல்லை -நியமாக இருக்கும் அதிகாரி —
அதிகாராந்தர விஷயத்தில் வாத்சல்யத்துக்கு விஷயம் உண்டே /
———————————————-
சூரணை -281-
கைங்கர்யம் தான் பக்தி மூலம் வர வேணும்
அல்லாத போது
பீதி மூலமாய் வர வேணும் —
ஈத்ருச கைங்கர்யம் இவனுக்கு ஏதேனும் ஒரு வழியாலே ஆகிலும் உண்டாக வேணும் -என்று இதனுடைய அவஸ்ய கரணீயத்வத்தை
அருளிச் செய்கிறார் மேல் –
பக்தி மூலம் வருகை யாவது -சேஷி உடைய முக மலர்த்திக்கு உறுப்பானவையே செய்து கொண்டு நிற்க வேண்டும்படியான -தத் விஷய ப்ரேமம் அடியாக வருகை –
அல்லாத போது பீதி மூலமாய் வருகை -யாவது -அது அன்றிகே ஒழிந்தால் -அகிஞ்சித் கரச்யய சேஷத்வா நுபபத்தி -என்கிறபடியே –
சேஷத்வ விருத்தி இல்லாத போது -சேஷத்வ ஹானி பிறக்கும் என்னும் பீதி அடியாக வருகை –
இதில் பக்தி மூலம் ஆனதுவே முக்கியம் – தத் அலாபத்தில் பீதி மூலம் தாம் ஆகிலும் வேணும் என்றபடி –
சர்வஞ்ஞனுக்கும் இடம் கொடுக்காத இந்த அதிகாரிக்கு —ப்ராசங்கிக்கத்தை தலைக்கட்டு -ப்ரஸ்துதமான -கைங்கர்ய விஷயம் –
தினசரியாவில் இறுதியில் அருளிச் செய்ததை தொடர்ந்து -அநிஷ்ட தியாக ரூபம் -இஷ்ட பிரவ்ருத்தி ரூபமான கைங்கர்யம் -பரம பக்தி உந்த –
பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யம் இல்லை யாகிலும் -அகிஞ்சித்கரத்வ சேஷத்வம் சித்திக்காதே –
இத்தைக் கண்டாவது செய்வான் -பக்தி மூலம் பிரதானம் -பீதி ரூபம் அப்ரதானம்
தட்டி கொட்டிக் கூட்டி வர பீதி அடியாக வாவது வரச் சொல்ல வேண்டுமே–ப்ரேமம் அடியாக என்று சொல்லி -ஒருவரும் பண்ணாமல் போக –
பீதி அடியாக வர வழி முறை வைக்க வேண்டுமே -வேற மதஸ்தர்கள் இத்தை முக்கியமாக கொண்டார்கள் –
—————————————
சூரணை -282-
அதுவும் இல்லாத போது
அதிகாரத்திலும்
உபாய
உபேயங்களிலும்
அந்வயம் இன்றிக்கே ஒழியும்-
அது தானும் இல்லா விடில் செய்வது என் -என்ன
அருளிச் செய்கிறார் –
அதாவது –
அதிமுக்க்யமான பீதி மூல கைங்கர்யம் தானும் இல்லாத போது –
கிஞ்சித் கார அபாவத்தாலே -சேஷத்வ ரூபமான அதிகாரத்திலும் –
அதிகாரி சா பேஷமாய் இருந்துள்ள சேஷி உடைய கிருபா ரூபமான உபாயத்திலும் –
இவனுடைய அனுகூல விருத்தி சா பேஷமான அவனுடைய முக மலர்த்தி யாகிற உபேயத்திலும்-
அந்வயம் அற்று விடும் -என்கை –
அமுக்யமான பீதி ரூபமும் இல்லாத போது -உபாய உபேய -தத் தத் அனுரூபமான பாரதந்தர்ய போக்யத்வ அதிகாரத்திலும் இழவாக போகும்
அநிஷ்டம் போக கைங்கர்யம் வேன்டும் -இதில் ஈடுபடாவிட்டால் விஷயாந்தர ப்ராவண்யத்தில் இழிய வைக்கும் –
விஷய பிரவ்ருத்தி இல்லை என்றால் விஷயாந்தரங்களில் மூட்டுமே
ஸ்வரூப ஸ்திதி இல்லாமல் ஒழியும்-கைங்கர்யம் இல்லா விடில் என்றோ ஒரு நாள் அடையும் வாய்ப்பும் இழந்து போவான் –
—————————————————-
சூரணை -283-
கைங்கர்யம் தன்னை
பல சாதனம் ஆக்காதே
பலமாக்க வேணும்
ஆக –
கீழ் இரண்டு வாக்யத்தாலும் -கைங்கர்ய அவஸ்ய கர்த்தவ்யமும் -கைங்கர்ய அபாவத்தில்
வரும் அநர்த்த விசேஷங்களும் காட்டப் பட்டது –
ஏவம் வித கைங்கர்யத்தில் சாதன புத்தியை தவிர்க்கிறார் மேல் –
அதாவது –
இப்படி அவஸ்ய கரணீயயக -கீழ் சொன்ன கைங்கர்யம் தன்னை பண்ணும் அளவில் –
த்ருஷ்ட அத்ருஷ்ட பலங்களில்-ஏதேனும் ஒன்றுக்கு -சாதனமாக -பிரதிபத்தி பண்ணாதே –
ஸ்வயம் பிரயோஜனமாக பிரதி பத்தி பண்ண வேணும் என்கை –
சாதன புத்தியை தவிர்க்கிறார் இத்தால் -நாம் கொடுக்க வேன்டும் -அவன் கொள்ள வேன்டும் -முக்கியமாகவும் அமுக்கியமாகவும் –
அல்ப அநல்ப போக மோக்ஷ ரூபமான ஏதேனும் ஒரு பலத்துக்கு சாதனம் ஆக்காமல் -பிசகாதே எல்லா பலனும் இதுவே என்ற எண்ணம் –
இதுவே புருஷார்த்தம் -என்று நினைக்க வேன்டும் -அதற்கு ஒரு பலன் இல்லை -அதுவே பலம் என்றவாறு
—————————————–
சூரணை -284-
அதாவது
தான் கை ஏலாதே
அவனை கை ஏற்க
பண்ணுகை–
இத்தை விசதீகரிக்கிறார் மேல் –
அதாவது -என்றது -இத்தை சாதனம் ஆக்காதே பலம் ஆக்குகை யாவது என்றபடி —
தான் கை ஏலாதே அவனை கை ஏற்கப் பண்ணுகை–யாவது -கைங்கர்யம் பண்ணுகிற தான் –
அதுக்கு பலமாக அவன் பக்கலிலே ஒன்றை அர்த்தியாதே -ஸ்வயம் பிரயோஜனமாக
செய்யா நின்று கொண்டு -கைங்கர்யம் கொள்ளுகிற அவனை –
தாஸ் சர்வாஸ் சிரசா தேவ பிரதிக்ருணா தி வைஸ்வயம்-என்கிறபடியே
தன் பூர்த்தி பாராதே -சா பேஷனாய் -விரும்பிக் கை கொள்ளும்படி பண்ணுகை –
சாதனத்தவ பிரதிபத்தி கந்தம் அற -சித்த ஸாத்ய பிரதிபத்தியே -பலம் என்ற புத்தியே -அவன் அனுக்ரஹத்தால் கிடைத்த இது என்று – –
இனிமை முக விலாசம் இதுவே -என்ற எண்ணம் வேன்டும் –
சாதனம் ஆக்காமல் பலம் ஆக்குவது -சேஷத்வ ஸ்வரூபத்துக்கு அநு ரூபமாக -உன்னை கைங்கர்யம் கொண்டோமே -இதுக்கு என்ன சமர்ப்பிக்க போகிறாய் –
உன் ஸ்வரூபம் சித்திக்க நாம் கைங்கர்யம் கொண்டோம் -பழைய நிலைமை மறந்து -இதுக்கு கை கூலி கொடுக்கலாகாதோ–என்ற திரு உள்ளம் –
மேலும் கைங்கர்யம் கொடுக்க -கைக் கூலி லஞ்சம் மேலே கைங்கர்யம் செய்வதே -பரிபூர்ணனான அவன் ஏங்கினது போலே குறைவாளனாக கை ஏந்தும் படி —
தன்னை வணங்க வைத்த கரணங்கள் இவை பெற்ற பிரயோஜனம் கைங்கர்யம் –
துருவன் -நிறைந்த சோதி வெள்ளம் -உள்ளே இருந்த உருவம் மறைக்க -எதிரே நின்ற -அதே சோதி -பேச முடியாமல் விக்கித்து நிற்க –
திருச் சங்காழ்வானால் ஸ்பர்சித்து -தரிசனமே பலன் -தரிசனத்துக்கு பலம் கேட்கக் கூடாதே –
தாஸ் சர்வாஸ் சிரசா தேவ பிரதிக்ருணா தி வைஸ்வயம்-தானே-விரும்பி ஆசைப்பட்டு தலையால் பெற்று கொள்கிறான் –
கடனாக நினைத்து -அடியார்க்கு என் செய்வான் என்றே இருத்தி –
கைங்கர்ய லக்ஷணம் -ஸ்வயம் பிரயோஜன தன் முக விலாச -உத்தேச்யக -சேஷிக்கு இஷ்டம் செய்து -அநிஷ்டம் தவிருவதாய் –
அந்நிய தரத்தில் -இவற்றில் ஓன்று என்று -இருப்பதே கைங்கர்யம் /
அகரணம் கரணம் – அந்நிய -பொய் சொல்லாமை -தர்ண பூச மாச யாகம்-இவற்றை கைங்கர்யம் என்னக் கூடாதே –
அதி வியாப்தி தோஷம் இல்லாத -லக்ஷணம் –இதனால் முக விலாசம் –
சேஷிக்கு இஷ்டமாகவும் -வேன்டும் –/ தலையில் குட்டி கன்னத்தில் அறைந்து -பிராந்தி ஹேதுக சேஷிக்கு இஷ்டம் என்ற எண்ணம் -அதி வியாப்தி கூடாதே
அந்நிய தரத்வம்-இரண்டில் ஓன்று -என்றது -அவ்யாப்தி இல்லாமல் போகும் இது இல்லாமல் இருந்தால் –
உத்தேச்யம் -கைங்கர்யம் -சாஷாத் முக விலாசம் -ஆந்ரு சம்சயம் -லோக சங்க்ரஹம்- புத்ராதிகள் நன்றாக இருக்கவும் இரக்கத்துடன் செய்வதும் கைங்கர்யம் ஆகாதே
அது பரம்பரையா முக விலாசத்துக்கு ஹேது -இது சாஷாத் முக விலாசம்
நாம சங்கீர்த்தனம் பண்ண பண்ண பக்தி வளர்ந்து மோக்ஷம் -அதனால் நாம சங்கீர்த்தனம் பரம்பரையா ஹேது பக்தி தான் சாஷாத் ஹேது -என்று
விசேஷணம் சேர்த்தே நம் பூர்வர் அதே போலே இங்கும் -கைங்கர்யம் யுக்த லக்ஷணம் -சாஷாத் முக விலாசத்துக்கு ஆகும் –
இரக்கம் பட்டாலும் அவனுக்கு பிடிக்கும் -அது தான் முக விலாசம் ஹேது -அதனால் பரம்பரையா ஹேது -இப்படி வாசி அறிய வேன்டும் –
நித்ய அனுஷ்டானம் செய்ய செய்ய -ஆந்ரு சம்சயம் -என்ற புத்தி இல்லாமல் நேராக முக விலாசம் என்ற எண்ணத்துடன் செய்ய வேன்டும் –
———————————————
சூரணை -285-
கொடுத்தக் கொள்ளாதே
கொண்டதுக்கு
கைக் கூலி கொடுக்க வேணும் –
இவ்வளவும் போராது-தான் கொடுத்ததை அவன் கொண்டதுக்கு
பிரத்யு உபகாரம் பண்ணவும் வேணும் என்கிறார் மேல் –
அதாவது –
தேஹி மே ததாமிதே -என்கிறபடியே -தான் அவனுக்கு ஒன்றை சமர்ப்பித்து -அவன் பக்கலிலே
ஒரு பிரயோஜனம் கொள்ளாதே –
இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் நான் ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -என்ற
பெரிய ஆழ்வார் திருமகளைப் போலே -தான் சமர்ப்பித்த த்ரவ்யத்தை அவன் அங்கீகரித்த உபகாரத்துக்காக -அப்படி இருந்துள்ளவற்றை –
தன் அபிநிவேச அநு குணமாக நிறைய கொண்டு வந்து சமர்ப்பியா நின்று கொண்டு -பின்னையும்
அடிமை செய்கையும் ஆகிற கைக் கூலி கொடுக்க வேணும் -என்கை –
கை ஏந்தாதவன் பரம பக்தன் -அவனுக்கு உரிய அடியவனாய் -அவனாலே தூண்டப் பட்டு அவனுக்கு கைங்கர்யம் செய்து பிரஜானாந்தரங்களை பெறாமல் –
அவன் கைங்கர்யம் கொண்டதுக்கு மென்மேலும் கைங்கர்யம் கொள்ள உடன்பட்டு கைக் கூலி கொடுக்க வேன்டும்-
பெரியாழ்வார் திரு மகள் -என்றது இந்த குணம் அவரால் வந்தது என்பதைக் காட்டவே / ஒன்றுக்கு லக்ஷம் -மேலே கொடுத்து
-வெள்ளி மலை ஒத்த வெண்ணெய் வாரி விழுங்குமவனுக்கு இது கிஞ்சித் தானே / உன் அபிப்பிராயம் –
லக்ஷம் / அவன் அபிப்பிராயம் அந்யத் பூர்ண கும்பத்துக்கும் தாழ்ந்தவை இவை / ஆய்ச்சியர் வெண்ணெய் தானே அவன் உகப்பான் -ஆழ்வார் /
ப்ராஹ்மணர் வெண்ணெய் இல்லை -/ அதனாலே இடைச்சி ஏறிட்டு கொண்டார்கள் இவளும் இவள் திருத் தமபனாரும் /
பால் சோறு மூட நெய் பெய்து கிளறி இன்றும் -பக்தி ஞானம் வைராக்யம் கலந்து -பூர்ணன் வேறே ஒன்றுமே அமுது செய்யாமல் கை எந்தும் அழகர் –
கோயில் அண்ணன்-ஸ்ரீ ராமானுஜர் -கைங்கர்யம் கோதாக்ரஜர்–/ ஞானம் பர்யவசாயம் பரம பக்தியில் -நாள் தோறும் நைந்து ஞானம் கனிந்த நலம் -மதி நலம் –
——————————————-
சூரணை -286-
ஸ்ரீ விதுரரையும்
ஸ்ரீ மாலா காரரையும்
கூனியையும் போலே
கிஞ்சித்கரித்தால்
ஸ்வரூபம் நிறம் பெறுவது –
ஆக இப்படி அநந்ய பிரயோஜனனாய் கிஞ்சித்கரித்தால் ஆயிற்று
ஸ்வரூபம் உஜ்ஜ்வலம் ஆவது என்னுமத்தை -சத்ருஷ்டாந்தமாக
அருளி செய்கிறார் மேல் –
மூவரும் ஸ்ரீ கிருஷ்ண அவதாரம் தோள் தீண்டி -அநந்ய பிரயோஜனராய் கைங்கர்யம் செய்வதே ஸ்வரூபம் உஜ்ஜ்வலம் ஆகும் -கௌஸ்துப ஸ்தானம் தானே ஜீவாத்மா –
அபிமதரான விதுரர் -முடுக்கு சந்தில் தேடி வரும் படி பரிவரான ஸ்ரீ மாலா காரர் -ஸ்பர்சம் பெற்று அங்கீகரிக்கப் பெற்ற ஸ்ரீ கூனி /
ஸூவ பிரயோஜன லேச கந்தம் இல்லாத -சேஷத்வ ஸ்வரூபம் உஜ்ஜவலமாகும்
—————————————-
சூரணை -287-
1-மடி தடவாத சோறும் –
2-சுருள் நாறாத பூவும் –
3-சுண்ணாம்பு தடவாத- படாத சாந்தும் இறே
இவர்கள் கொடுத்தது-
திருஷ்டாந்த பூதரான அவர்கள் கிஞ்சித்கரித்த பிரகாரம் தன்னை
அருளிச் செய்கிறார் –
1-மடி தடவாத சோறு ஆவது -முந்துற ஆதாரத்தோடு இட்டு பின்னை இதுக்கு காசு தரலாகாதோ என்று -மடி சீரை சோதிக்கைக்காக
மடி யை பிடித்து தடவி -உண்டவன் நெஞ்சு உளையும்படி பண்ணும் பிரயோஜனந்த பரர் இடும் சோறு போல் அன்றிக்கே -உண்டவன் நெஞ்சு உகக்கும் படி –
அநந்ய பிரயோஜனமான சோறு – இப்படி இருந்துள்ள சோறு இறே –
புக்தவத் சூத்விஜாக் ரேஷூ நிஷண்ணா பரமாசநே விதுர அன்னானி புபுஜே சுசீனி குணவந்திச-என்று
பாவனத்வ -போக்யத்வ -ப்ரசச்தமாம் படி ஸ்ரீ விதுரன் அவனுக்கு சமர்ப்பித்து –
2-சுருள் மாறாத பூ ஆவது -அக்நி ஸ்பர்சம் உண்டானால் சுருள் நாறும் படி இறே பூவின் ஸ்வாபம் இருப்பது –
அப்படியே பிரயோஜனாந்தர ஸ்பர்சம் ஆகிற சுருள் நாற்றம் இல்லாதபடி -அநந்ய பிரயோஜனத்வ பரிமள யுக்தமாக இடும் புஷ்பம் –
இப்படி இருந்துள்ள புஷ்பம் இறே -பிரசாத பரமவ் நாதவ் மமஹெக முபாகதவ் தந்யோ அஹம் அரச்ச இஷ்யாமீ த்யாகமால் யோப ஜீவன -என்று
விசேஷஜ்ஞர்-பராசரர் – ச்லாக்கிக்கும் படி -அத்யாதர பூர்வகமாக ஸ்ரீ மாலா காரர் அவனுக்கு கொடுத்தது –
3-சுண்ணாம்பு தடவாத சாந்தாவது -ஆயிரம் பொன் அழிய கூட்டியும் -சுண்ணாம்பு திவலை பட கெடும் படி இறே –
சாந்தின் ஸ்வாபம் -அப்படியே பிரயோஜனாந்தர ஸ்பர்சம் ஆகிற தோஷம் இன்றிக்கே -அநந்ய பிரயோஜனமான சாந்து -இப்படி இருந்துள்ள சாந்து இறே –
சூகந்தமேதத் ராஜார்ஹம் ருசிரம் ருசிரானனே ஆவயோர்கா த்ரசத்ருசம் தீயதாம நுலேபனம் -என்று அவன் அர்த்தித அநந்தரம்-
பூசும் சாந்தாம்படி கூனி கொடுத்தது –
ஆக இப்படி அநந்ய பிரயோஜனமாக கிஞ்சித் கரித்தால் ஆயிற்று -கைங்கர்ய ஆஸ்ரயமான
ஸ்வரூபம் உஜ்ஜ்வலம் ஆவது -என்கை
ஆக –
இவ்வளவும் வஸ்தவ்யாதி கணனையில் -சரம உக்தமான -கர்தவ்ய ரூப கைங்கர்யத்தை
சோதித்து -தாத்ருச கைங்கர்யத்தாலே -ஸ்வரூபம் உஜ்ஜ்வலமாம் என்னும் இடத்தையும்
அருளிச் செய்தார் ஆயிற்று –
சுரு-அக்னி பட்டு கருகல் இல்லாமல் என்றுமாம் -/ சோற்றை இட்டு மடியை பிடித்து முடிச் சரக்கை அறுத்து கொள்ளாமல்-/அநந்ய பிரயோஜன பக்தி பரவஸ்யம் —
இரண்டும் உள்ள விதுர அன்னாநி -பல வகைகள் -சுசீநீ குணம் -மனஸ் சுத்தி ரஸவத்-பாவானத்வ போக்யத்வங்கள் -நாவிலும் நெஞ்சிலும் வேர் விழும் படி நல்லதோர் சோறு
சுருள் சாபலம் வைத்து பார்த்து மோந்து சுருள் நாரா பண்ணி -அக்னி ஸ்பர்சம் போலே இவன் தலை அஹங்கார நெருப்பு பட்ட பூ இல்லாமல் –
பிரசாத பரமோ நாதவ் உபா கதவ் -சந்தில் உள்ள குடில் -தேர்ந்து எடுத்து மம கேகம்-மால்ய உப ஜீவனம் செய்பவன் –
வஸ்திரம் சந்தனம் புஷ்ப்பம் அலங்காரம் நகர பெண்களுக்காக –மிக்க சீர்த்தொண்டர் இட்ட பூ -தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் போலே /
அநேகம் பொன் காசி கொடுத்து சந்தனம் ஒரு பிந்து சுண்ணாம்பு -கலசாமல் -வடிவு அழகுக்கு தோற்று சாற்றி ஸ்ரீ கூனி –
பூசும் சாந்து என் நெஞ்சமே -பிரயோஜன ஸ்மரண லேசமும் இல்லாமல் -அவன் அர்த்தித்த அநந்தரம் -கொடுத்தாள் /
————————————-
சூரணை -288-
கைங்கர்ய தசை போலே முன்புள்ள தசைகளிலும்
ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்க வேணும் —
இப்படி அநந்ய பிரயோஜனனாய் கொண்டு கைங்கர்யம் செய்தாலே ஸ்வரூபம் உஜ்ஜ்வலம் ஆவது என்று சொன்ன இதிலே –
முக்த அவஸ்தையில் -கைங்கர்ய தசையில் ஸ்வரூப உஜ்ஜ்வல்யமும் அர்த்தாதுக்தம் என்று நினைத்து -இப்படி
கைங்கர்ய தசையில் ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்குமோபாதி-ஏதத் பூர்வ தசா விசேஷங்களிலும் ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்க வேணும் என்று
அருளிச் செய்கிறார் மேல் –
முன்புள்ள தசைகளிலும் -என்றது -கைங்கர்யத்துக்கு பூர்வ தசைகளிலும் -என்ற படி –
சதாசார்ய பிரசாத விருத்திக்கு ஹேதுவாக கர்தவ்யமான வஸ்தவ்யாதி நியமங்களில் சரமமாக உபய வித கைங்கர்ய சோதனம் —
ஆஸ்ரய ஸ்வரூப விரோதம் வராதபடி -சரம பாவி கைங்கர்ய தசை ஸூவ பிரயோஜன கந்தம் படாத படி பர ஏக பிரயோஜனம் போலே முன்பு உள்ள தசைகளிலும் –
அடைவே -வரிசையாக -தசா விசேஷங்களில் தது தது விரோதி விசேஷங்கள் ஸ்பர்சியாத படி பேணிக் கொண்டு ஆத்ம ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்க வேன்டும்
கைங்கர்யம் -முக்த தசையில் என்பதாகக் கொண்டு அதுக்கு முன்புள்ள நான்கு தசைகளையும் இங்கே அருளிச் செய்கிறார் –
——————————————-
சூரணை -289-
முன்பே நாலு தசை உண்டு –
முன்பு எத்தனை தசை உண்டு என்னும் மா கான்க்ஷையிலே அருளிச் செய்கிறார் –
அழுக்கு சோதித்து ஒவ் ஒரு தசையிலும் எடுக்க வேன்டும் –
————————————–
சூரணை -290-
அதாவது
1-ஞான தசையும் –
2-வரண தசையும் –
3-பிராப்தி தசையும் –
4-பிராப்ய அனுபவ தசையும் –
அந்த நாலு தசையும் தான் எது என்னும் அபேஷையில் அருளிச் செய்கிறார் –
1-ஞான தசையாவது -ஆசார்ய உபதேசத்தாலே தனக்கு ஞானம் பிறந்து செல்லுகிற தசை –
2-வரண தசையாவது -சித்த உபாய பூதனான சர்வேஸ்வரனை தனக்கு உபாயமாக வரிக்கை-
3-பிராப்தி தசை யாவது -சம்சாரிக சகல துரித நிவ்ருத்தி பூர்வகமாக அவன் திருவடிகளை ப்ராபிக்கிற தசை –
4-ப்ராப்ய அனுபவ தசை -யாவது -ப்ராப்ய பூதனான அவனைக் கிட்டு அனுபவிக்கிற தசை –
இவ் அனுபவ ஜனித ப்ரீதி காரித-கைங்கர்யம் இறே பரம புருஷார்த்தம் –
பிரதம அபேஷிதமான தத்வ ஞானமும் –
ஞான பலமான உபாய வரணமும் –
வரண பலமான பிராப்தியும் –
ப்ராப்தி பலமான அனுபவமும் -அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யமுமாய் இறே க்ரமம் இருப்பது –
ஆகையால் கைங்கர்ய தசை சரம தசையாய் –
பூர்வ தசைகள் நாலும் இதிலே வந்து யேறுகைக்கு இட்ட படி ஒழுங்காய் இருக்கும் –
ஸ்வரூப ஞான தசை -/ உபாய வரண தசை / பிராபிய பிராப்தி தசை / பிராப்தமான ப்ராப்யம் அனுபவிக்கும் தசை –
நான்கும் உண்டே முக்தனுக்கு /ஐந்தாவது பிராப்த கைங்கர்யம் -கிரமேண இந்த தசா விசேஷங்கள் உண்டே –
ஞப்தி பல முக்தி -விருத்தி -விரக்தி -பக்தி- பிரபத்தி -சக்தி யுக்தம்- பிராப்தி- பூர்த்தி -ஆர்த்தி ஹரத்வம் போலே இங்கும் –
—————————————–
சூரணை -291-
ஞான தசையில் அஞ்ஞானத்தை முன்னிடும் –
வரண தசையில் அபூர்த்தியை முன்னிடும் –
ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிடும் –
ப்ராப்ய அனுபவ தசையில் அபிநிவேசத்தை முன்னிடும் —
இவ்வோ தசைகளில் ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்கும் படியை தர்சிப்பிக்கிறார் மேல் –
ஞான தசையில் அஞ்ஞானத்தை முன்னிடுகை யாவது -ஆசார்யன் தனக்கு மேன்மேல் அஞ்ஞாத ஞாபனம் பண்ணும்படி –
தத்வ ஹித புருஷார்தங்களில் -தன்னுடைய அஞ்ஞானத்தை பலகாலம் விஞ்ஞாபிக்கை –
வரண தசையில் அ பூர்த்தியை முன்னிடுகை யாவது-நோற்ற நோன்பு இலேன் –
ந தர்மநிஷ்டோச்மி –
சத் கர்ம நைவ கில கிஞ்சன சஞ்சி நோமி -இத்யாதி படியே
பேற்றுக்கு ஹேதுவாக கொள்ளலாவதொரு சூக்ருதாதிகள் ஒன்றும் தனக்கு இல்லாமையாகிற -ஆகிஞ்சன்யத்தை புரச்கரிக்கை
ப்ராப்தி தசையில் ஆர்த்தியை முன்னிடுகையாவது -பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இராதே
வானுலகம் தெளிந்தே என்று எய்துவது –
தரியேன் இனி-
கூவிக் கொள்ளும் காலம் இன்னம் குறுகாதோ -இத்யாதிப் படியே -விளம்ப அசஹத்வ நிபந்தனமான தன்னுடைய க்லேச அதிசயத்தை தர்சிப்பிக்கை –
ப்ராப்ய அனுபவ தசையில் அபிநிவேசத்தை முன்னிடுகை யாவது –
பெரு விடாயனுக்கு கொடுத்த தண்ணீர் ஆராதாப் போலே -அனுபூதாம்சத்தால்
திருப்தி பிறவாதே மென்மேலும் தனக்கு விளைந்து செல்கிற அனுபவ அபிநிவேசத்தை
பிரகாசிப்பிக்கை –
ஆக –
ஞான தசை முதலான நாலு தசையிலும் ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்குகையாவது –
இவ்வோ ஆகாரங்களை முன்னிடுகை என்று கருத்து –
எத்தை வைத்து அணுக வேன்டும் என்று விவரிக்கிறார் -ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்கும் படி -அழுக்கு -விரோதம் நீக்கி –
ஞானி – அகங்காரம் மேலிடாத படி /-ஞானம் கொண்டு அறிய வேண்டியது சேஷத்வம் -இதுக்கு தானே ஞானம் சம்பாதிக்க வேன்டும் –
யானே என்னை அறிய கில்லாத – யானே என் தனதே இருந்தேன் -அறிவு ஒன்றுமே இல்லாத -அடியேன் சிறிய ஞானத்தன் –
அஞ்ஞானத்தை முன்னிட்டே உஜ்ஜ்வலம் ஆக்க வேன்டும் / பிராணவார்த்தம்
நோற்ற நோன்பிலேன்–சரம ஸ்லோகார்த்தம் -ஞானி ஆகிஞ்சன்யம் நிறம் பெரும் அடி -அபூர்த்தியை முன்னிட்டு கிஞ்சித் கார லேசம் அபாவ ரூபி அபூர்த்தி /
ஸஹேதுக கர்மத்தால் சம்சாரம் தொலைந்து -பெற்ற போது பெறுகிறோம் என்று ஆறி இல்லாமல் -ஆர்த்தி விளம்ப அஸஹத்வம் -துடிப்பை முன்னிட்டு பிராப்தி –
துடிப்பு தூண்ட ஆத்ம ஸ்வரூபம் ஒளி விடும் இந்த தசையில்
பிராப்ய அனுபவம் -ஸ்வரூப ரூப குணமும் பகல் விளக்கு போலே -நித்ய முக்த ப்ராப்யம் -அங்கும் திருப்தி பிறவாமல் வாய் மடுத்துப் பருகிக் களிப்பேனே –
அப்பொழுதைக்கு அப்பொழுது ஆராவமுதே –அபி நிவேசம் பொங்க பொங்க ஸ்வரூபம் உஜ்ஜ்வலம் அங்கே –
—————————————–
சூரணை-292-
அஞ்ஞானம் போவது ஆச்சர்ய ஞானத்தாலே –
அபூர்த்தி போவது ஈஸ்வர பூர்தியாலே –
ஆர்த்தி போவது அருளாலே –
அபிநிவேசம் போவது அனுபவத்தாலே –
இப்படி இவன் இவற்றை முன்னிட்டால் -இவனுக்கு இவை சமிபது எத்தாலே என்ன –
அருளிச் செய்கிறார் மேல் –
அதாவது –
தத்வ ஹித புருஷார்தங்களில் இவனுக்கு உள்ள அஞ்ஞானம் சவாசனமாக நிவ்ருதமாவது -அவற்றை அலகு அலகாக தர்சித்து –
அஞ்ஞாத ஞாபனம் பண்ணுகைக்கு ஈடான ஆசார்யனுடைய ஞானத்தாலே –
பேற்றுக்கு ஹேதுவாய் இருந்துள்ள சத்கர்மாதிகள் ஒன்றும் தனக்கு இல்லாமையாகிற அபூர்த்தி சமிப்பது -இத்தலையில் உள்ளது ஒன்றும் அபேஷியாமல்
கார்யம் செய்யும் உபாய பூதனான ஈஸ்வரனுடைய சககாரி நைர பேஷ்யம் ஆகிற பூர்த்தியாலே-
அவலம்பேன திருவடிகளை பெறாமையாலே உண்டான ஆர்த்தி தீருவது – ஆர்த்தி கண்டால் ஆற்ற மாட்டாதே -அப்போதே கார்யம் செய்து
தலைக் கட்டுகைக்கு உறுப்பான -பர துக்க அசஹிஷ்ணுத்வம் ஆகிற அவனுடைய கிருபையாலே –
அனுபவ தசையில் அநு ஷணம் பிறக்கும் அபிநிவேசம் அடங்குவது -அவ்விஷயத்தை மென்மேலும் அனுபவிக்கையாலே -என்கை –
தோஷங்கள் நிவ்ருத்தி -இவற்றால் என்று அருளிச் செய்கிறார் -அபி நிவேசம் குறைய கூடாதே -அனுபூவ அம்சம் குறைய -அனுபவிக்க வேண்டிய அம்சங்கள் நிறைய –
அனுபவமும் அபி நிவேசமும் தொடர்ந்தே போகுமே அங்கு -விரோதி ஸ்பர்சம் இல்லாத படி -இந்த தசைகளில் ஸ்வரூபம் உஜ்ஜ்வலம் ஆகும் படி –
ஸ்வரூபாதி ஞானம் இல்லாமை அஞ்ஞானம் மேலிடாமல் போவது ஸூ ஆச்சார்யனால் விகசிதமான நிர்மல ஞானத்தால் –நிர்ஹேதுகத்தால் -அனுக்கிரகத்தால் -போகும் /
அகிஞ்சித்க்காரனாய் கிஞ்சித் கார் லேச அபாவம் ஆகிய அபூர்த்தி அவாப்த ஸமஸ்த காமனுடைய நிரபேஷ பூர்த்தியால் போகுமே /
ஆர்த்தி -அடியார்க்கு ஆவா என்று அருளும் பெரு விசும்பு அருளும் பெரிய கிருபையால் போகும்
அபி நிவேசம் -ஸ்வரூபம் ரூபம் குணம் அனுபவிக்க -மேல் மேல் உண்டாகும் பகவத் அனுபவம் –
முன் உள்ள அபி நிவேசம் போக்கி அடுத்த அனுபவத்தில் மூட்டும் -இப்படி தொடரும்
————————————————
சூரணை -293-
அஞ்ஞானத்துக்கு அடி அபராதம் –
அபூர்திக்கு அடி ஞான பூர்த்தி –
ஆர்த்திக்கு அடி அலாபம் –
அபிநிவேசதுக்கு அடி அழகு –
இவ் அஞ்ஞா நாதி சதுஷ்டயத்துக்கும் ஹேது எது என்னும் ஆகாங்ஷையிலே
அருளிச் செய்கிறார் –
அதாவது –
ஞான தசையில் -முன்னிடுகிற அஞ்ஞானத்துக்கு மூலம் -அநாதி கால க்ருத்ய அகரண அக்ருத்ய கரண ஆதி ரூபமான அபராதம்
வரண தசையில் முன்னிடுகிற அபூர்த்திக்கு நிதானம் -பேற்றுக்கு ஹேதுவாக நினைக்கலாவது ஒன்றும் தனக்கு இல்லாமையை தர்சிப்பிக்கை க்கு உடலான ஞான பூர்த்தி –
ப்ராப்தி தசையில் முன்னிடுகிற ஆர்த்திக்கு ஹேது -ப்ராப்ய வஸ்துவை சீக்கிரமாக கிட்டப் பெறாமை யாகிற அலாபம் –
ப்ராப்ய அனுபவ தசையில் முன்னிடுகிற அபிநிவேசதுக்கு காரணம் அனுபவித்த அளவால் திருப்தி பிறவாதே மேன்மேலும் ஆசைப்பட பண்ணும் அவன் வடிவழகு -என்கை –
ஞான தசையில் அஞ்ஞானத்துக்கு முன்னிடுவதற்கு அடி அபராதம் -ஜனாதி அஞ்ஞான க்ருதமான ஸூ அபராத ஸ்மரணம்-
ஞானம் வந்தால் கூட பண்ணின அபராதம் நினைவிட அஞ்ஞானி என்பானே-
வரண தசையில் -ஸூவ கத தத் அங்கீ கார ஹேது ஒன்றுமே இல்லை என்கிற ஞானம் வந்த பின்பு -அபூர்த்தியை முன்னிட்டு சரண வரணம் பண்ணுவோம்
பிராப்தி தசையில் ஆர்த்திக்கு அடி -விளம்ப பிராப்தி அலாபம் -துடிக்க வேன்டும் / அனுபவ தசையில் அபி நிவேசத்துக்கு அடியான அழகு தானே
—————————————————-
சூரணை -294-
ஆர்த்தியும் அபிநிவேசமும் இருக்கும் படி
அர்ச்சிராதி கதியிலே சொன்னோம் –
ஆர்த்தி அபிநிவேசம் இருக்கும் படி என் -என்ன
அருளிச் செய்கிறார் –
இந்நின்ற நீர்மை இனி யாம் உறாமை -என்று துடங்கி
திருவாணை நின் ஆணை கண்டாய் -என்று
தடுத்தும் வளைத்தும் பெற வேண்டும்படி பரம பக்தி தலை எடுத்தது -என்னும் அளவாக ஆர்த்தி இருக்கும் படியையும் –
செய்ய உடையும் திரு முகமும் செங்கனி வாயும் குழலும் கண்டு -என்கிறபடியே
முன்புற்றை அழகை அனுபவித்து -என்று துடங்கி -தன்னைப் பெற்ற ப்ரீதியால் வந்த செவ்வியை அனுபவித்து -என்னும் அளவாக அபிநிவேசம் இருக்கும் படியையும்
அந்த பிரபந்தத்திலே சூச்பஷ்டமான அருளி செய்தார் இறே –
ஆக
கைங்கர்ய தசைக்கு முன்னே நாலு தசை உண்டு–289- என்றும் –
அவை தான் இன்னது என்றும் –
அவ் அவ் தசை அநு குணமான அஞ்ஞா நாதிகளை முன்னிடவே
அவ் அவ் தசைகளில் ஸ்வரூப உஜ்ஜ்வலம் ஆம் என்றும் –
அவ் அஞ்ஞாநாதிகளை போக்குமவை ஆச்சார்ய ஞானாதிகள் என்றும்
அவ அஞ்ஞாநாதிகளுக்கு நிதானங்களும் சொல்லிற்று ஆயிற்று -294
சரம தசையில் உள்ள ஆர்த்தி அபி நிவேசம் -அர்ச்சிராதி கதி நித்ய அனுசந்தானம், -திரு வேங்கட யாத்திரை -அர்ச்சிராதி கதி -அக்ரூரர் கதி மூன்றும்
பாம்பின் வாயில் சிக்கிய தவளை போலே -இனி இனி இருபதின் கால் கூவி –திருவாணை நின் ஆனை என்று
தடுத்தும் வளைத்தும் பெற வேன்டும் படி பரம பக்தி அடியாக ஆர்த்தி
செங்கனிவாய் அனுபவித்து வழு விலா அடிமை செய்ய நாநா தேகம் பரிகரித்து கேட்டவர்களுக்கு ஆர்த்தி
அபி நிவேசம் வரும் படி அங்கே அருளிச் செய்தவற்றை படித்து அறிய வேன்டும்
—————————————
சூரணை -295-
இவன் தனக்கு
நாலு தசை போலே
நாலு குணம் உண்டு –
இந்த தசை சதுஷ்டய பிரசங்கத்திலே -இவனுடைய குண சதுஷ்ட்யத்தையும்
அருளிச் செய்கிறார் மேல் –
அதாவது
இவ் அதிகாரிக்கு ஸ்வரூப ஒவ்ஜ்ஜ்வல்யதுக்கு உடலாக கீழ் சொன்ன தச சதுஷ்டியம் போலே –
ஸ்வரூப ஒவ்ஜ்ஜ்வல்ய ஹேதுவான குண சதுஷ்டைமும் உண்டு என்கை –
சம்பாவித ஸ்வபாவமான விருத்த சத் குண யோகத்தை -இந்த அதிகாரிக்கு -வருமே /உஜ்ஜவலமான இவனுக்கு -ஸ்வரூப உஜ்ஜ்வல பரிபாக தசைகள் கீழே நான்கும்
இங்கு ஒளி பெற்று இருக்கும் பரஸ்பரம் ஒன்றுக்கு ஓன்று கூட்டிக் கொடுக்கும் –
—————————————–
சூரணை-296-
அதாவது
ஞானமும்
அஞ்ஞானமும்
சக்தியும்
அசக்தியும் –
அவை தான் எவை என்னும் ஆகாங்ஷையிலே
எந்த எந்த குணங்கள் என்று அருளிச் செய்கிறார் –
யதார்த்த ஞானம் -உபாதேயமான அஞ்ஞானம் -ஸ்வரூப அநு ரூப சக்தி / ஸ்வரூப விருத்தமான வற்றில் சக்தியும்
———————————
சூரணை -297-
இது தான்
அவனுக்கும் உண்டு —
இவனுடைய குண சதுஷ்டயம் சொன்ன பிரசங்கத்திலே
ஈஸ்வரனுக்கும் இவை உண்டு என்னும் இடத்தை அருளிச் செய்கிறார் –
இது தான் அவனுக்கும் உண்டு -அவன் -என்று கீழ் சொல்லிக் கொண்டு வந்த
ஈஸ்வரனை பராமர்சிக்கிறது –
ஈஸ்வரனுக்கும் அஞ்ஞானமும் சக்தியும் உண்டே
——————————————
சூரணை -298-
அவனுடைய ஞானத்துக்கு இலக்கு இவனுடைய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய தோஷம் –
சக்திக்கு இலக்கு இவனுடைய ரஷணம் –
அசக்திக்கு இலக்கு பரித்யாகம் –
இப்படி இருந்துள்ள இவருடைய குணங்களுக்கு விஷயங்கள் எவை என்ன
அவற்றை விபஜித்து அருளிச் செய்கிறார் –
ஈஸ்வர குணங்களை முந்துற அருளிச் செய்தது
சேதன குண விசேஷங்களை சொல்லி முடித்தால்-அதின் தோஷத்தை சிஷிதாதா தசா துர் வித்யத்தை விஸ்தரேண அருளிச் செய்கைக்காக – –
அவனுடைய ஞானத்துக்கு இலக்கு இவனுடைய குணம் -என்றது
-யஸ் சர்வஞ என்றும் –
சகஸ்ராம்சு -என்றும் -சொல்லுகிற படியே
சர்வஞனான அவனுடைய திவ்ய ஞானத்துக்கு விஷயம் -அத்வேஷா ஆபி முக்கியம் தொடங்கி-இச் சேதனன் பக்கல் உண்டான ஆத்ம குணம் -என்கை
அஞ்ஞானத்துக்கு இலக்கு இவனுடைய தோஷம் -என்றது –
அவிஞ்ச்ஞாத சகஸ்ராம்சு -என்றும்
அவிஞ்ச்ஞாதாஹி பக்தாநாம் ஆகஸ் சூகமல லேஷனே சதா ஜகத் சமஸ்தஞ்ச பச்யன்நபி ஹ்ருதி ஸ்திதித-என்றும் சொல்லுகிற படியே
சர்வஞனாய் இருக்கச் செய்தே -அவிஜ்ஞாதாயா வாய் இருக்கும் அவனுடைய அஞ்ஞானதுக்கு விஷயம்-
பிரக்ருதி வச்யனான இவன் பண்ணும் அக்ருத்ய கரணாதி தோஷம் என்கை –
சக்திக்கு இலக்கு இவனுடைய ரஷணம் -என்றது -பராச்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே -என்கிற படியே சர்வ சக்தியான
அவனுடைய அகடிதகடனா சாமர்த்தியம் ஆகிற சக்திக்கு விஷயம் –
இவனுடைய சகல அநிஷ்டங்களையும் போக்கி -ஸ்வரூப அநு குணமான சகல இஷ்டங்களையும் கொடுக்கிற -ரஷணம் -என்கை –
அசக்திக்கு இலக்கு பரித்யாகம் -என்றது
அப்படி சர்வ சக்தியான அவனுடைய அசக்திக்கு விஷயம் துஸ் சஹமாக இவன் செய்யும் தோஷங்களாலே சீறிக் கை விடுகை -என்கை –
இவன் தோஷத்தை அவன் குணம் என்று திருவுள்ளம் /யுகபத் சர்வ தர்சி அவன் –ஞானத்துக்கு -தோஷ துஷ்டனான இவனுடைய
தோஷங்களால் மூடிய சிறிய குண திவலை-
வாத்சல்யத்துக்கு முழு இலக்கு -இவனுடைய தோஷம் –குற்றங்கள் கண்ணில் படாமல் –பட்டும் குணமாக கொள்வதே அவனுடைய அஞ்ஞானம் –
குண லவத்தை மறைக்கும்-புத்தி பூர்வகமாக பண்ணும் அக்ருத் கரணாதி தோஷங்கள் –
அக்டிதகடநா சக்திக்கு இலக்கு இவன் ரக்ஷணம் -அசக்திக்கு இலக்கு -தோஷங்கள் கண்டு விட மாட்டாமை
இவனுக்கே அநிஷ்டம் நிவர்த்திக்கவும் இஷ்டம் பெறவும் விருப்பம் இல்லாத போது செய்தவதால் சேராததைச் சேர்க்கும் சக்தி வேண்டுமே
280 -அவனுக்கு அது கிடையாது -மநோ ரதம் பூர்த்தி ஆகாது பார்த்தோம் -இங்கு குற்றம் பண்ணினவன் உண்டே என்னில் அங்கே உத்தம அதிகாரி -இங்கு மத்யம அதமர்கள்
—————————————————–
சூரணை -299-
இவனுடைய ஞானத்துக்கு இலக்கு ஆசார்ய குணம் –
அஞ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் –
சக்திக்கு இலக்கு ஆச்சர்ய கைங்கர்யம் –
அசக்திக்கு இலக்கு நிஷித்த அனுஷ்டானம் —
இப்படி ஈஸ்வர குணங்களை அருளிச் செய்து -மேல் சேதன
குண விஷயங்களை அருளிச் செய்கிறார் –
இவனுடைய ஞானத்துக்கு இலக்கு ஆசார்ய குணம் -என்றது –
இச் சேதனனுடைய ஞானத்துக்கு விஷயம் -மகோ உபாகாரனான ஆசார்யனுடைய சத் குண சமூகம் -என்கை —
அஞ்ஞானத்துக்கு இலக்கு ஆச்சார்ய தோஷம் -என்றது –
இவனுடைய அஞ்ஞானத்துக்கு விஷயம் -ஆசார்யன் திருமேனி ஸ்வபாவமாய் ஆகந்துகமாய் உள்ள தோஷம் என்கை –
சக்திக்கு இலக்கு ஆச்சர்ய கைங்கர்யம் -என்றது-
இவன் பிரவ்ருத்தி சக்திக்கு விஷயம் -ஸ்வ ஆசார்யனுக்கு உகப்பாக செய்யும் கைங்கர்யம் என்கை
அசக்திக்கு இலக்கு நிஷித்த அனுஷ்டானம் –என்றது –
இவனுடைய அசக்திக்கு விஷயம் -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதிகளான(-ப்ரபந்ந -) சாஸ்திர நிஷித்தங்களில் இவனுடைய அனுஷ்டானம் -என்கை –
இல்லாத குண கிரஹணமும் உள்ள தோஷ க்ரஹணமும் பண்ண மாட்டாமை –அரியன செய்து -எளியன விடாமல் –மேல் விழும் படி அபிமதானம் படி
இவனுடைய ஆச்சார்ய கடாக்ஷ விகசித ஞானத்துக்கு அசாதாரணமான இலக்கு -அஞ்ஞான ஞாபக சதாசார்யர் யுடைய ஞான பக்தியாதி குணங்கள்
விகசித ஞானவான் இவனுடைய ஞான கார்யமான அஞ்ஞானத்துக்கு அவஸ்யம் அபேக்ஷிதமான இலக்கு ஆச்சார்யர் இடம் இல்லாத உடைய ப்ரதிபக்ஷம் -தோற்றம்
மிஸ்ர சத்வம் -சுத்த சத்வம் -வாசி -தூ மணி துவளில் மா மணி -தோஷம் இருக்காது -நம் மந்த புத்திக்கு தெரிய வில்லை என்ற எண்ணம் வேண்டுமே –
ஸூ யத்னத்தில் அசக்தனான இவனுடைய சத்தா ப்ரயுக்த ப்ராவண்ய கார்யமான சக்திக்கு சரம இலக்கு-பகவத் கைங்கர்ய -தாண்டி பாகவத கைங்கர்யம் தாண்டி —
சுலபனாய் நித்தியமான ஆச்சார்ய கைங்கர்யம்
அசக்திக்கு முற்பட இலக்கு ஸூ விருத்த அக்ருத்ய காணாதி நிஷித்த அனுஷ்டானம் -இது முதலில் வர வேன்டும் -கைங்கர்யா திகள் அப்புறம் என்றபடி
ஸ்வரூபம் உஜ்ஜீவிக்க அபேக்ஷித்தமானவை இந்த நான்கும் -இச்சா கிருபை இரக்கம் இனிமை மூன்றுக்கும் இவை வேண்டுமே
ஆச்சார்ய கைங்கர்யம் செய்தால் அதற்குள் பகவத் கைங்கர்யமும் பாகவத கைங்கர்யமும் சேரும் -இதுவே சரம தசை –
——————————————————–
சூரணை -300-
நிஷித்தம் தானும்
நாலு படியாய் இருக்கும் –
இப்படி இருந்துள்ள நிஷித்தத்தின் படியை
அருளிச் செய்கிறார் –
அதாவது
உபாதேயமான குண சதுஷ்டயம் போலே -ஹேயமான நிஷித்தம் தானும்
சதுர் விதமாய் இருக்கும் -என்கை –
ஸ்வரூப ஹானி நிவர்த்தக அசக்தி ரூபமான குண விஷயமான -இது தோஷம் இல்லையே –
நிஷித்த அனுஷ்டானம் தான் விசிஷ்ட நிஷ்க்ருஷ்ட விசேஷத்வேன நான்கு வகைகள் –
டம்பம் க்ரோதம் அகங்காரம் தர்மம் விட்ட குருவை ஏற்றுக் கொள்ளக் கூடாது -ஸ்ருதி சொல்ல -/ ஆச்சார்யர்களை ஏற்படுத்தி தனித்து விடாமல் –
காரேய் கருணை ராமானுஜன் -/ தேர்ந்து எடுக்க வேண்டிய பாரம் நம் மேல் இல்லையே -/ பரம்பரையா கிடைத்த பின் இது பற்றி நினைவிலே கொள்ள வேண்டாமே /
மானஸ தோஷம் ஆச்சார்யருக்கு இல்லை -திருமேனி அடியாக உள்ளவையும் -ஆஸ்ரயிக்கும் பொழுது கண்ணிலே படாதே /
———————————
சூரணை-301-
அதாவது
அக்ருத்ய கரணமும்
பகவத் அபசாரமும்
பாகவத அபசாரமும்
அசஹ்ய அபசாரமும் —
அந் நாலு படியான அது தான் எது என்னும் -அபேஷையிலே-
அவை தன்னை உத்தேசிக்கிறார் –
நரக ஹேது -சாஸ்த்ர நிஷித்தம் செய்வதான -அக்ருத்ய கரணம் –க்ருத்ய அகரணம் சொல்லாமல் விட்டது – -விஷித்த கோஷ்ட்டியில் தானே இது உண்டு –
இயற்கையிலே க்ருத்யம் பண்ணுபவன் இல்லையே என்றுமாம் -/இத்தை பற்ற அத்யந்த குரூரமான பகவத் அபசாரம் -சம்சார ஹேது பாகவத அபசாரம் –
தத் ததீய விஷயத்தில் சத்தா நாசகமான ஆத்ம உளன் சொல்ல கூட முடியாத அஸஹ்யா அபசாரம் –
———————————————–
சூரணை -302-
அக்ருத்ய கரணம் ஆவது –
பர ஹிம்சை -பர ஸ்தோத்ரம் -பர தார பரிக்ரகம் -பர த்ரவ்ய அபஹாரம் –
அசத்திய கதனம் -அபஷ்ய பஷணம்-துடக்கமானவை –
இவற்றினுடைய வேஷம் தான் என்னும் ஆகாங்ஷையிலே -இத்தை அடைவே விவரிக்கிறார் –
பர ஹிம்சை யாவது -ந ஹிம்ச்யாத் சர்வ பூதானி -என்கிற விதியை அதிக்ரமித்து பண்ணும் பிராணி பீடை –
பர ஸ்தோத்ரம் ஆவது -ப்ராப்த விஷய ஸ்தோத்ர அர்ஹமான வாக்கைக் கொண்டு – அப்ராப்த விஷயங்களை ஸ்துதிக்கை –
பரதார பரிக்ரகம் ஆவது -பிறர்க்கு அனந்யார்ஹமான ஸ்த்ரீ விஷயங்களை மோஹாதிகளாலே ச்வீகரிக்கை –
பர த்ரவ்ய அபஹாரம் ஆவது -பிறர் உடைமை யானவற்றை -அவர்கள் இசைவு இன்றிக்கே இருக்க -பிரகாசமாகவாதல் -அப்ராகாசமாகவாதல் -க்ரஹிக்கை-
அசத்திய கதன -மாவது -யாதாத் த்ருஷ்டார்த்த விஷயமும் -பூத ஹிதமும் அன்றிக்கே இருக்கும் வசனத்தை சொல்லுகை –
அபஷ்ய பஷணம் ஆவது -ஜாத்ய ஆஸ்ரம நிமித்த துஷ்டங்களாய் கொண்டு -தனக்கு அப்யபஷம் அன்றிக்கே இருக்கும் அவற்றை பஷிக்கை –
துடக்கமானவை -என்றது –
பர த்ரவ்யேஷ வபித்த்யானம் மனசா நிஷ்ட சிந்தனம் விததாபி நிவேசச்ச த்ரிவிதம் கர்ம மானசம்
பாருஷ்ய மன்ரு தஞ்சைவ பைசு நஞ்சைவ சர்வச அநீ பத்த ப்ரலாபச்ச வான்மயம் ச்யாச்ச துர் விதம்
அதத்தா நாமு பாதானம் ஹிம்சா சைவா விதானத பர தாரா அபஹாரச்ச சாரீரம் த்ரிவிதம் ஸ்ம்ருதம் -இத்யாதி களாலே
மனு ஆதி ஸ்ம்ருதி களிலே சொல்லப் படுகிறவை அநேகம் ஆகையாலே
அடைவிலே விவரிக்கிறார் -சாஸ்த்ர நிஷித்தம் செய்வது -பகவத் -சரீர பூதர் -சரீர பர்யந்தம் அநர்த்த ஹேதுவாகும் என்ற அறிவு வேண்டுமே –
அச்சமும் இல்லாமல் -செய்கிறோம் -தர்ஜன பார்த்ததும் பிரகாரம் போன்ற பர ஹிம்சை
பகவத் ஸ்தோத்ரத்துக்கு அர்ஹமான நாக்கால் அபிராப்தமான அந்நிய ஸ்தோத்ரம்
நரக பீரோக்களான -மாம்சம் உண்ணும் சாமான்யம் – சாமான்யர் களும் செய்யாத பர தார பரிக்ராஹ்யம்
பர பொருளை கொள்ள நினைக்கும் பொழுதே நரகம் ஹேது -எடுத்தால் மட்டும் இல்லை
பூதங்கள் நெஞ்சு உளுக்கும் படி -உண்மை விளம்பி -அசத்தியம் கதனம் பிராணியை ஹிம்சை பண்ண உண்மையே பேசினாலும் அசத்யமாகுமே
சாஸ்த்ர நிஷித்தமான அபாஷ்ய பஷணம் -ஜாதியாதி -சிஷ்டர்களால் தொடக் கொடாத அவை உண்ணக் கூடாதே -அஸேவ்ய சேவாதிகள் /
பர ஹிம்சை -தனக்கு தானே ஹிம்சையும் கூடாது -ஸ்வ இதர
ஹிம்சை அர்த்தம் இல்லை / அபிசாரத்தால் பகவத் பாகவத ஹிம்சை பண்ணுமவர்களை -விலக்க வேண்டுமே –
தலையை இருப்பதே கருமம் கண்டாய் உண்டே -கிருத்யமாகுமே /பர தூர -அதிக்கிரமித்து செய்யப்பட ஹிம்சையை சொல்லிற்று என்றவாறு -/
பசு மாடு -கண் பார்த்தாலும் பேசாதே -வாய் பார்க்கவில்லை -ரிஷி தப்பிய கதை –
மனு ஸ்ம்ருதி மானஸ -மூன்றும் -அபிதானம் சிந்தனை -வீணான பேராசை / சாஸ்திரம் நிஷித்த வாக்கு தோஷம் / சாரீர த்ரிவிதம் -இப்படி பல உண்டே
———————————————
சூரணை -303-
பகவத் அபசாரமாவது –
தேவதாந்தரங்களோடு ஒக்க ஈஸ்வரனை நினைக்கையும் –
ராம கிருஷ்ணாதி அவதாரங்களில் – மனுஷ்ய சஜாதீயதா புத்தியும் –
வர்ண ஆஸ்ரம விபரீதமான உபசாரமும் –
அர்ச்சா அவதாரத்தில் உபாதான நிரூபணமும் –
ஆத்ம அபஹாரமும் –
பகவத் த்ரவ்ய அபஹாரமும் -துடக்கமானவை
அநந்தரம் பகவத் அபசாரத்தை விவரிக்கிறார் –
தேவதாந்தரங்களோடு ஒக்க ஈஸ்வரனை நினைக்கையாவது –
யேது சாமான்ய பாவேன மான்யந்தே புருஷோத்தமம் தேவை பாஷண்டி நோஞ்ஞேயா சர்வ கர்ம பஹிஷ்க்ருதா
யஸ்து நாராயணம் தேவம் சாமான்யே நாபிமன்யதே சயாதி நரகம் கோரம் யாவச் சந்திர திவாகரம் -என்று
தேவதாந்தரங்களோடு ஈஸ்வரனை சம புத்தி பண்ணலாகாது என்று சாஸ்திரம் சொல்லா நிற்க –
அந்தப் பிரவிஷ்டச்சாஸ் தாஜா நாநாம் சர்வாத்மா -தமீச்வராணாம் பரமம் மகேஸ்வரம் -நதஸ் சமஸ் சாப்ப்யதிகச்ச த்ருச்சயதே -என்கிறபடியே
ஸ்வ இதர சகல நியாமகனாய் -சாமாநாதிகரஹீதனான -ஈஸ்வரனை -அங்கான் அந்ய தேவதா -என்று -தச் சரீர தயா பிரமாதி தேவதைகளோடு சம புத்தி பண்ணுகை-
ராம கிருஷ்ணா ஆதி அவதாரங்களில் மனுஷ்ய சஜாதீயதா புத்தி -ஆவது –
அஜோபி சந் நவ்யயத்மா பூதானாம் ஈச்வரோபிசன் ப்ரக்ருதிம் ச்வாமதிஷ்டாய சம்பவாமி யாத்மா மாயா -என்கிறபடியே
அஜகத் ஸ்வாபனாய்-அப்ராக்ருத -திவ்ய சமஸ்தானத்தை -இதர சஜாதீயம் ஆக்கிக் கொண்டு –
துயரில் மலியும் மனிசர் பிறவி யில் தோன்றி -நிற்கிற நிலை அறியாதே அவதாரத்தில் மெய்ப்பாட்டுக்காக அவன் செய்து காட்டின
கர்ப்ப வாச -ஜனன -சோக -மோஹாதிகளை இட்டு -கர்மவச்யரான மனுஷ்யரோடு சஜாதீயனாக நினைக்கை –
வர்ண ஆஸ்ரம விபரீத மான உபசாரம் ஆவது -தத் ஆராதன தசையில் -த் ரை வர்ணிகார்ஹமான வைதிக மந்தரங்களாலே சதுர்த வர்ணரானவர்கள்
ஆராதித்தல் -உத்தம ஆஸ்ரமிகள் முதலானோர் க்ருஹச்தவத் தாம்பூல நிவேதனாதிகளை பண்ணுதல் துடக்கமானவை –
அர்ச்சாவதாரத்தில் உபாதான நிரூபணம் ஆவது -தமருகந்தது எவ்வ்ருவம் அவ்வுருவம் -இத்யாதிப் படியே
ஆஸ்ரிதர்க்கு அபிமான ஏதேனும் ஒரு த்ரவ்யத்தை -திருமேனியாக அங்கீகரித்து -அதிலே அப்ராக்ருத விக்கிரகத்தில் பண்ணும் ஆதரத்தை பண்ணி
எழுந்து அருளி இருக்கிற இத்தை அறியாதே -மாத்ரு யோனி பரிஷிகரை போலே -இது இன்ன த்ரவ்யம் அன்றோ என்று விக்ரக உபதானத்தை நிரூபிக்கை-
ஆத்ம அபஹாரம் ஆவது –
யோ அந்யதா சந்த மாத்மான மன்யதா ப்ரதிபத்யதே கிந்தே நந க்ருதுதம் பாபம் சோரேன ஆத்ம அபஹாரினா–என்று
சகல பாப மூலமாக சொல்லப் படுகிற -பகவத் ஏக சேஷ பூதமான ஆத்மா வஸ்துவில் -ஸ்வதந்திர புத்தி –
பகவத் த்ரவ்ய அபஹாரம் ஆவது –
அமுதுபடி சாத்துப்படிக்கு அர்ஹமானவற்றை-பிரகாசமாகவாதல் -அப்ரகாசமாகவாதல் -தனக்கு ஆக்குகை-
துடக்கமானவை -என்றது –
இன்னும் இப்படி க்ரூரமாக சாஸ்த்ரங்களில் சொல்லுமவை பலவும் உண்டாகையாலே
த்வா த்ரிம்சத அபசாராதிகளும்-32 அபசாரங்கள் – உண்டு இறே
அத்யந்த நிஷித்தம் இது -தேவதைகள் அங்கம் -என்று கொள்ளாமல் சமமாக சொல்வது -முதல் தெய்வம் மூன்று என்பர் -நம்பாடுவான் பிரதிஜ்ஜை செய்து போன விஷயம் -/
ப்ரஹ்ம ரஜஸ் கூட செய்யாததை செய்கிறார்களே / அங்கம் என்பதால் இகழவும் கூடாதே -மதிப்பும் வேன்டும் -அங்கி கூட சாம்யம் கொள்ள கூடாதே /
கூட பழக்க வந்தவனை சஜாதீய புத்தியுடன் பார்க்கக் கூடாதே -தர்மம் ரக்ஷணத்துக்காக அஜகத் ஸ்வ பாவனாய் ஆதி அம் சோதி உருவை அங்கே வைத்து இங்கே பிறந்தவன் /
கிருபையால் -பெருமையில் ஒன்றுமே குறையாமல் -அவதரித்த -ராம கிருஷ்ண முக்கிய அவதாரங்களில் சஜாதீய புத்தி கூடாதே / அமுக்கிய அவதாரங்கள் மனுஷ்யர் மேல் ஆவேசம் தானே -அங்கே குற்றம் வாராது /
கர்ப்ப வாஸம் -முத்தத்தின் பத்தாம் நாள் -மயங்கும் படி / ஜனன சோகம் மோகம் -சஜாதீய பாவனா சாதுர்யம் -அறியாமல் -பாமர மநுஷ்யராக புத்தி பண்ணி அநர்த்தம் படுக்கையும்
தர்சன தூஷண -சாஸ்திரம் படி இல்லாமல் -வர்ணாஸ்ரம விபரீதமான -செய்பவையும் கூடாதே / பிரபன்ன வர்ணம் ஆஸ்ரமம் மாறி -ஸ்வரூப கத விபரீதமான
சேஷத்வமும் பாரதந்தர்யம் இயற்க்கை தானே -உபாயாந்தரங்கள் -ஸூவ கத ஸ் வீகாரம் இவை விரோதம் ஆகுமே -ஸ்வார்த்த ஸ்வ தந்த்ர புத்தியும் கூடாதே
மாத்ரு யோனி பரீஷை யுடன் ஒக்கும் அர்ச்சையில் உபாதான புத்தி பண்ணுவது /
சர்வ பாப சாதன -ஸ்வதந்த்ர -ஆத்ம அபஹாரம் -நம்பினேன் பிறர் நன் பொருளை –
அமுதுபடி சாத்துப்படி பகவத் த்ரவ்யம் திருடுவது -ஆகமம் படி சமர்ப்பிக்கா விட்டாலே திருடு தான் /
யேது சாமான்ய பாவேன மான்யந்தே புருஷோத்தமம் தேவை பாஷண்டி-பாஷாண்டிகள் -கோரமான நரகத்தில் எழுந்து சந்த்ர சூரியர்கள் இருக்கும் வரை –
உபசாரம் -16-ஆரம்பித்து-32- அபசாரங்களை பண்ணுகிறோம் –சர்வான் க்ஷமஸ்வ புருஷோத்தம
—————————————-
சூரணை -304-
பகவத் த்ரவ்யத்தை தான் அபஹரிக்கையும் –
அபஹரிக்கிறவர்களுக்கு சஹகரிக்கையும் –
அவர்கள் பக்கலிலே யாசிதமாகவும்
அயாசிதமாகவும் பரிக்கிரகையும் –
பகவானுக்கு அநிஷ்டமாய் இருக்கும்–
கீழ் சொன்ன வற்றோபாதி -பகவத் த்ரவ்ய அபஹாரமும் பகவத அநிஷ்டமாய் இருக்குமோ
என்கிற சங்கையில் -தான் அபஹரிக்கிற மாத்திரம் அன்றிக்கே-அபஹரிப்பார்க்கு
சஹகரிக்கை முதலானவையும் அவனுக்கு அநிஷ்டமாய் இருக்கும் -என்கிறார் –
தான் அபஹரிக்கையாவது -நேர தானே இதுக்கு கர்த்தாவாக செய்கை –
அபஹரிப்பார்க்கு சஹகரிக்கை யாவது -நாம் அபஹரிக்கிறோம் இல்லை என்று நினைத்து அபஹர்த்தாக்களுக்கு அனுமத்யாதிகளாலே சகாயம் பண்ணுகை –
அவர்கள் பக்கலிலே யாசிதமாக பரிக்கிரகை-யாவது -நாம் இவ் அபஹாரத்துக்கு கூட்டு அன்றே என்று நினைத்து தான் அவர்கள் பக்கல் சிலவற்றை அபேஷித்து
வாங்கிக் கொள்ளுகை
அவர்கள் பக்கலிலே அயாசிதமாக பரிக்கிரகை-யாவது-நாம் அபேஷித்திலோம் என்று நினைத்து அவர்கள் தரும் அவற்றை வாங்குகை
பகவானுக்கு அநிஷ்டமாய் இருக்கும் -என்றது
இவை இத்தனையும் -இவனுடைய உஜ்ஜீவ பரனாய் கிருஷி பண்ணிப் போரும் சர்வேஸ்வரன் திரு உள்ளத்துக்கு அநபிமதமாய் இருக்கும் -என்கை
சர்வமும் அறிவான் உள்ளே இருந்து -சாஷிகளும் பல உண்டே அச்சம் இல்லாமல் -யாசித்து திருடினவற்றை வாங்குவதும் குற்றம் -/
அவர்களே தக்ஷிணையாக இவற்றை கொடுத்தாலும் குற்றமே
கையே அவனது -இத்தை கொண்டு பிடிக்காததை கூச்சம் இல்லாமல் -கொள்வதும் -/ பாபிஷ்டர்களுக்கு சஹகரிப்பதும் -/ கோயில் நிலங்கள் அபகரித்து பிரபலம் -/
செய்வார் செய்வது எல்லாம் அறிந்து தத் அனுரூபமாக தண்டிக்க வல்ல ஞான சக்தியாதி பரிபூர்ணனான சர்வேஸ்வரன் திரு உள்ளம் புண்படும் படி இருக்குமே
——————————————
சூரணை -305-
பாகவத அபசாரமாவது
அஹங்கார அர்த்த காமங்கள் அடியாக
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு பண்ணும் விரோதம் –
அநந்தரம் -பாகவத அபசாரத்தை விவரிக்கிறார் –
அதாவது
பரோத்கர்ஷம் கண்டு சஹியாமைக்கும் ஸ்வ உத்கர்ஷ புத்திக்கும் முதலான அஹங்காரம் அடியாகவும் –
அவர்கள் வைஷ்ண ஆகாரத்தைப் புத்தி பண்ணி -இவர்கள் ஆசைப் பட்டது ஒன்றாகில்
இவற்றை விட்டுப் பற்றுவோம் என்று இருக்க மாட்டாமல் -அர்த்த காமங்கள் அடியாகவும் –
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு செய்யும் விரோதம் -என்கை –
பகவத் அபசார பரிபாகமான பாகவத அபசாரம் ஆஸ்ரயத்தை அழிக்கும் அகங்காரம் அல்ப அஸ்திர அர்த்தம் அடியாகவும் –
துர் ஆசையை வர்த்தகம் -சத் ஜனங்கள் வெறுக்கும் காமம் அடியாக
இவற்றுக்கு -நிவர்த்தகராய் நிற்கும் பரம பாகவதர்கள் பக்கம் நிலை நின்ற அபசாரம்
——————————————
சூரணை -306-
அசஹ்ய அபசாரம் ஆவது –
நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால் –
அசஹமானனாய் இருக்கையும் –
ஆசார்ய அபசாரமும் –
தத் பக்த அபசாரமும் –
அநந்தரம் அசஹ்ய அபசாரத்தை விவரிக்கிறார் -(பகவானால் சகிக்க முடியாமல் இருப்பது அன்றோ -)
அல்லாத அபசாரங்களில் காட்டிலும் -ஈஸ்வரனுக்கு இது அத்யந்த அசஹ்யமாய்
இருக்கையாலே -அசஹ்ய அபசாரம் -என்கிறது –
நிர் நிபந்தனமாக பகவத் பாகவத விஷயம் என்றால் -அசஹமானனாய் இருக்கை-யாவது –
கீழ் சொன்னபடியே அர்த்த காமாதி நிபந்தனமாக அன்றிக்கே -ஹிரணியனைப் போலே பகவத் விஷயமும் பாகவத விஷயமும் என்றால்
காண கேட்க பொறாதபடி இருக்கை-
ஆசார்ய அபசாரம் ஆவது -அவன் அருளி செய்த அர்த்தத்தின் படி அனுஷ்டியாமையும் -அவன் உபதேசித்த மந்திர தத் அர்த்தங்களை -அல்ப பிரயோஜனங்களை நச்சி
அநாதிகாரிகளுக்கு உபதேசிக்கையும் -துடக்கமானவை –
தத் பக்த அபசாரமாவது -ஆச்சார்ய பக்தரான ச ப்ரமசாரிகளுடன் ஐக ரஸ்யம் உண்டாய் வர்த்திக்க வேண்டி இருக்க -அது செய்யாமல் –
அவர்கள் திறத்தில் பண்ணும் அசூயையும் அவஞ்சையும்-அவமரியாதையும் – துடக்கமானவை –
————————————————
சூரணை -307-
இவை ஒன்றுக்கு ஓன்று க்ரூரங்களுமாய்
உபாய விரோதிகளுமாய்
உபேய விரோதிகளுமாய்
இருக்கும்–
இப்படி அக்ருத்ய கரணாதி சதுஷ்டைத்தையும் அடைவே விவரித்து அருளி
இவற்றினுடைய க்ரௌர்ய விசேஷங்களையும் -இவை தான் இன்னதுக்கு
விரோதியாய் இருக்கும் என்னும் அத்தையும் அருளி செய்கிறார் மேல்-
ஓன்றுக்கு ஓன்று க்ரூரங்களாகையாவது –
அக்ருத்ய கரணத்தில் -பகவத் அபசாரம் க்ரூரமாய் -அதிலும் பாகவத அபசாரம் க்ரூரமாய் -அது தன்னிலும் அசஹ்யா அபசாரம் க்ரூரமாய் இருக்கை-
இதுக்கடி பூர்வங்களில் காட்டில் உத்தர உத்தரங்களில் -பகவன் நிக்ரஹம் அதிசயித்து இருக்கை –
அக்ருத்ய கரணத்தில் -ஸ்வ ஆஞ்ஞா அதிலங்கனம் அடியான சீற்றம் இறே-
அவ்வளவு அன்றிக்கே -இவ் ஆத்மாவுக்கு ஆத்மாவாய்-அதின் சத்தையே பிடித்து கொண்டு போரும் தன் திறத்தில் அபசாரத்தால் வரும் சீற்றம் –
அவ்வளவும் அன்று இறே -ஞாநீ த்வாத்மைவ – என்கிற படியே -தனக்கு உயிர் ஆக நினைத்து இருக்கும் பாகவத விஷயங்களில் –
அஹங்காராதிகள் அடியாக பண்ணும் அபசாரத்தால் வரும் சீற்றம் -அது தன்னளவும் அன்று இறே –
நிர் நிபந்தனமாக -தன் பக்கலிலும் தன் அடியார் பக்கலிலும் ஆதல் -உபய வைபவ ஞாயகனாய் –
உபய அபிமதனான ஆசார்யர் பக்கலிலே ஆதல் -மூவருக்கும் அபிமதரான தத் பக்தர் பக்கலிலே ஆதல் -செய்யும் அபதாரத்தால் வரும் சீற்றம் –
ஆகையால் ஒன்றுக்கு ஓன்று க்ரூரமாய் இருக்கும் –
அக்ருத்ய கரணத்திலே-பகவத அபசாராதிகளும் அந்தர் பவிக்குமதாய் இருக்க தனித் தனி
இப்படிப் பிரித்து சொல்லுகிறது இவற்றினுடைய க்ரூர விசேஷங்களைப் பற்ற இறே –
உபாய விரோதிகளுமாய் உபேய விரோதிகளுமாய் இருக்கை -யாவது –
இவ் ஆத்மாவினுடைய உஜ்ஜீவனத்தில் ஒருப்பட்டு -மென்மேலும் கிருஷி பண்ணுகைக்கு உறுப்பான எம்பெருமானுடைய கிருபைக்கும் –
எப்போதும் இவனுக்கு பிராப்யமாய் இருந்துள்ள அவனுடைய முகோல்லாசத்துக்கும் இலக்காய் இருக்கை –
இரக்கம் உபாயம் -இனிமை உபேயம்-என்னக் கடவது இறே –
ஆகையால் இவ் அக்ருத்ய கரணாதிகள்-நீரிலே நெருப்பு எழுமா போலே -அவன் திரு உள்ளத்திலே நிக்ரஹத்தை கிளப்பி -அவனுடைய கிருபையும் உகப்பும் –
இவன் பக்கல் அறும்படி பண்ணுகையாலே -அவற்றை உபாய உபேய விரோதிகள் என்னத் தட்டில்லை –
தனக்குத் தானே தேடும் நன்மை-160 -என்று துடங்கி நமஸ் சப்தார்த்தை விஸ்தரேண பிரதிபாதிக்கையாலும் –
உகந்து அருளின நிலங்களில் ஆதார அதிசயமும் -243–என்று உகந்து அருளின நில பிரசங்கத்தாலும் –
மேலே -பகவத் கைங்கர்யமும்-274 -என்கிற இடத்தில் -பகவத் சப்தத்தலும் –
கைங்கர்ய பிரதி சம்பந்தி பிரதி பாதகமான ஸ்ரீ மத் நாராயண -பதார்த்தங்களை சூசிப்பிக்கையாலும் –
244-258-மங்களா சாசன பிரகரணத்தாலும்-கர்த்தவ்யம் ஆசார்ய கைங்கர்யமும்
பகவத் கைங்கர்யமும் -274-என்று துடங்கி கிஞ்சித் கரித்தால் ஸ்வரூபம் நிறம் பெறுவது -286-என்னும் அளவும் சதுர்த்த்யர்தத்தை அருளிச் செய்கையாலும் –
நிஷித்த சாதுர்வித்ய பிரதிபாதன முகேன ப்ராசங்கிகமாக-மீளவும் நமஸ் சப்தார்த்தை பேசுகையாலும்-
இவ்வளவும் உத்தர கண்டார்தம் அருளிச் செய்தார் ஆயிற்று –
ஆக-
இப் பிரகரணத்தால்-
கீழ் உக்த உபாயத்தைக் கொண்டு -79-வரை -உபேயத்தை பெரும் சேதனனுக்கு
உபாய உபேய அதிகார பிரதான அபேஷிதங்களையும்-
115-133 வரை-பிரபகாந்தர பரித்யாக ஹேதுவான ஸ்வரூப நாசகத்வாதியையும் –
பிரபத்தியின் ஸ்வரூப அனுகூலத்வாதியையும் –
ஸ்வ கத ஸ்வீகார அனுபாயத்வத்தையும் –
பரகத ஸ்வீகார உபாயத்வத்தையும் –
தத் பிராபல்யத்தையும் –
அவனே ஸ்வீ கரிக்கும் இடத்தில் புருஷகாரத்தை முன்னிடும் படியையும் –
உபயரும் முன்னிடும் அதுக்கு பிரயோஜன விசேஷங்களையும் –
உபேய தசையிலும் ப்ராப்தி தசையிலும் -இவன் சேஷத்வ பாரதந்த்ர்யங்களும் –
ஸ்வ தோஷ நிவ்ருத்தியும் –
பர அனுபவ விரோதியாம் படியையும் –
160-தன்னால் வரும் நன்மை அவனால் வரும் நன்மைக்கும் உள்ள வாசியையும் –
ஈச்வரனே ரஷகன் -தான் தனக்கு நாசகன் -என்னும் அத்தையும் –
தன்னைத் தான் நசிப்பிக்கும் பிரகாரத்தையும் –
அஹங்காரமும் விஷயங்களும் ஸ்வரூபேணவும் பாகவத விரோதத்தை விளைத்தும்
இவன் ஸ்வரூபத்தை நசிக்கும் படியையும் –
பாகவத அபசார க்ரௌர்யத்தையும் –
தத் பிரசங்கத்திலே பாகவத மகாத்ம்யத்தையும் –
இவன் தினசர்யையும் –
தினசர்யோக்தங்கள் அடைய சதாசார்யா ப்ரசாதத்தாலே வர்த்திக்கும் போதைக்கு
அபேஷிதமான வச்தவ்யாதியையும் –
தத் சரம உக்த கர்தவ்ய ரூப கைங்கர்ய வேஷத்தையும் –
கைங்கர்ய தத் பூர்வ தசைகளிலே ஸ்வரூபத்தை உஜ்ஜ்வலம் ஆக்கும் படியையும் –
இவனுக்கு உண்டான குண சதுஷ்ட்யத்தையும்-
தத் விஷய விபாகத்தையும் –
அதில் அசக்தி விஷய நிஷித்த சாதுர்வித்த்யத்தையும்
சொல்லுகையாலே –
அதிகாரி நிஷ்டா க்ரமம் சொல்லப்பட்டது –
ஆறு பிரகரணங்களில் மூன்றாவதான -அதிகாரி நிஷ்டா பிரகரணம் முற்றிற்று –
ஒன்பது பிரகரணங்களில் ஐந்தாவது பிரகரணம் -பிரபன்ன தினசரியா பிரகரணம்- முற்றிற்று
உபய அபசார பரா காஷடை -பகவத் பாகவத -இரண்டுக்கும் எல்லை இது -அர்த்தாத் நிபந்தம் இல்லாமல் அஸஹ்யா அபசாரம் –
ஸ்ருத விபரீத ஆசரணம் -ஆச்சார்யர் இடம் கேட்டதுக்கு விபரீதம் –
ச ப்ரஹ்மசாரிகள் இடம் சமம் புத்தி பண்ணுவதும் ஸ்வரூப நாஸகம் –
சர்வ விரோதி நிவர்த்தக உபாய பூத வைமுக்யத் வே ண உபாய விரோதி
பிராப்திக்கு தடங்கலுமாய் உபேய விரோதியுமாய் இருக்கும்
அசக்திக்கு இலக்கான நிஷித்த அனுஷ்டானங்களை நான்கையும் விவரித்து
தினசர்யா அனுஷ்டானம் – கைங்கர்ய சோதனம் -பூர்வ தச உஜ்ஜ்வலம் ஆகும் ஸ்வரூபத்தையும் –
தத் குண விசேஷங்களும் -இதர தோஷ விசேஷங்களை சொல்லப் பட்டது
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ உ வே வேளுக்குடி ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் திரு அடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் –