Archive for November, 2017

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -3-9–

November 13, 2017

சொன்னால் விரோதம் -பிரவேசம் –
ஒன்பதாம் திருவாய் மொழியிலே –
இப்படி தாமும் கரண க்ராமமும் கூப்பிட்ட படியைக் கண்ட ஈஸ்வரன் -லோகம் அடங்க இதர ஸ்தோத்ரம் பண்ணி அநர்த்தப்படா நிற்க –
நீர் நம்மை ஸ்தோத்ரம் பண்ணும்படி பண்ணினோமே -என்று இவருடைய பேற்றை பிரகாசிப்பிக்கக் கண்டு ஸந்துஷ்டாராய்
1-அவனுடைய ஸ்துத்யத்துவக்கு ஏகாந்தமான சவ்லப்ய அதிசயத்தையும் ‘
2-ஸூ லாபனுடைய சம்பந்த உத்கர்ஷத்தையும்
3-நித்ய ஸூரி நிர்வாஹகத்வத்தையும்
4-ஸ்துத்யதைக்கு அனுரூபமான -ஏகாந்தமான -சேஷித்வத்தையும்
5-அபேக்ஷித பல ப்ரதத்வமான உதார குண அதிசயத்தையும்
6-அதுக்கு ஏகாந்தமான ஸ்ரீ யபதித்வத்தையும்
7-ஸ்துதி விஷயமான குண நாம பூர்த்தியையும்
8-அவனுடைய ப்ராப்ய பாவத்தையும்
9-புருஷார்த்த ப்ரதத்வத்தையும்
10-ஜகத் ஸ்ரஷ்ட்ருதவத்தையும்
அனுசந்தித்து -எவம்ப்தா விஷயத்தை ஸ்தோத்ரம் பண்ணாதே -நிஷ்பிரயோஜனமான இதர ஸ்தோத்திரங்களைப் பண்ணி அநர்த்தப் படுகிறிகோளே–என்று
லௌகிகரைக் குறித்து ஸ்வ நிஷ்டையை உபதேசித்து அருளுகிறார் –

———————————–

அவதாரிகை –
முதல் பாட்டில் -என்னை ஸ்துதிப்பைக்காகத் திருமலையிலே சந்நிதி பண்ணின உபகாரகனை ஒழிய
வேறு ஒருவரை ஸ்தோத்ரம் பண்ணேன் -என்று ஸ்வ மதத்தை அருளிச் செய்கிறார் –

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1-

சொன்னால் விரோதம் இது, –நீங்கள் இதர ஸ்தோத்ரம் தவிருகைக்கு உறுப்பான இந்த ஹிதம் சொன்னால் உங்கள் அபிமதத்துக்கு விரோதம் –
ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!–ஆயிருக்கிலும் உங்கள் அநர்த்தம் பொறுக்க மாட்டாமையாலே சொல்லக் கடவேன் –நீங்கள் செவி தாழ்த்துக் கேளுங்கள்
வண்டு முரல் திரு வேங்கடத்து-–வண்டுகளானவை மதுபான ப்ரீதியாலே தென்னா தென்னா என்று ஆளத்தி வைப்பாரைப் போலே சப்திக்கிற திருமலையிலே -சந்நிஹிதனாய்–
-என் ஆனை என் அப்பன், –எனக்குக் கவி பாடுகைக்கு விஷயம் போந்து -கவிக்கு பரிசிலாகத் தன்னைத் தரும் உபகாரகனாய் –
எம்பெருமான் உளனாகவே.- ப்ராப்தனான ஸ்வாமியானவன் இக் கவி பாட்டாலே தான் உளனாய் இருக்க
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்-என் நாவினுடைய சத்தைக்கு பிரயஜனமாய் -கவி பாட்டுண்கிற ஈஸ்வரனுக்கு
இனிதான கவியை -அவனுக்கு அநந்யார்ஹ சேஷ பூதனான நான் வேறு ஒருவர்க்கும் கொடுக்க சக்தன் அல்லேன் —

——————————————————–

அவதாரிகை –
அநந்தரம் -இந்த சவ்லப்யாதி குணங்களோடு திருக் குறுங்குடியிலே நிற்கிற என் குலா நாதனை ஒழிய
மனுஷ்யரைக் கவி பாடி பிரயஜனம் என் -என்கிறார் –

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–3-9-2-

குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி –நீர் நிலங்களாலே கழனி சூழ்ந்து இடமுடைத்தாய் நன்றான திருக் குறுங்குடியிலே
மெய்ம்மையே-உளன் ஆய —பரமார்த்தமான சவ்லப் யாதி குணங்களை பிரகாசிப்பித்துக் கொண்டு நித்ய சந்நிதி பண்ணின
எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–தன்னை உளனாகவே ஒன்றாக எண்ணி- உபகாரகனான என் குல நாதனை ஒழிய –
பகவத் ஞானம் இல்லாமையாலே அசத் சமனாய் இருக்கிற தன்னை சத்தாவானாய்க் கொண்டே ஒரு வஸ்துவாக நினைத்து
தன் செல்வத்தை-வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்–தனக்கு இன்றியே இருக்கத் தன்னதாக அபிமானித்த ஷூத்ர சம்பத்தை
அத்யந்த விலக்ஷணமாக தானே அபிமானித்து இருக்கும் அதி ஷூத்ரையான இந்த மனுஷ்ய ஜாதியை கவி பாடி என்ன பிரயஜனம் உண்டு –

பரமார்த்த குண விபூதி விசிஷ்டனை ஒழிய ஆபிமாநிக சம்பத்தை யுடையாரைக் கவிபாடி பிரயோஜனம் இல்லை என்று கருத்து –

———————————————————————–

அவதாரிகை –
அநந்தரம் -நித்ய ஸூரி ஸேவ்யனான ப்ராப்ய பூதனை ஒழிய -உங்களுக்கு விலக்ஷணமான கவிகளைக் கொண்டு
ஷூத்ர ஸ்தோத்ரம் பண்ணினால் ஒரு நன்மையில்லை -என்கிறார் –

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3-

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்–வழியைத் தரும்-ஒரு விச்சேதம் இல்லாத படி -யாவதாத்ம பாவியான
காலம் எல்லாம் நிலை நின்று அனுபவிக்கும் படி செல்லக் கடவதாயுள்ள வழிப் பாடான கைங்கர்யத்தை தரும்
நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்–நமக்கு சேஷியான நித்ய ஸூரி சேவ்யனை ஒழிய புறம்பே போய் –
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!–அதி லோகமாம் படி மிக்க நன்மையை யுடைத்தான சீரிய கவிகளைக் கொண்டு அறிவுடையரான நீங்கள் –
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?––அறிவில்லாதாரைப் போலே அத பதிக்க நினைத்து –
ஓர் பற்றாசு இல்லாத மனுஷ்ய ஜாதியை பாடுகையாலே என்ன லாபம் யுண்டாம்

ஸ்தோத்தாக்களான உங்களுக்கும் ஸ்துத்யரானவர்களுக்கும் -ஸ்துதிக்கும் -ஒரு நன்மையில்லை என்று கருத்து –

———————————————–

அவதாரிகை –
அநந்தரம் -சர்வாதிகனானவனை ஒழிய அஸ்திரரான மநுஷ்யர்களைக் கவி பாடி என்ன பிரயோஜனம் உண்டு -என்கிறார் —

என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4-

புலவீர்காள்!–சப்தார்த்தங்களில் வாசி அறியும் புலவீர்காள் –
மன்னா மனிசரைப் பாடிப்-படைக்கும் பெரும்பொருள்! –என்னாவது,– எத்தனை நாளைக்குப் போதும், –நீங்கள் பாடிச் செல்லுந்தனையும்
நிலை நில்லாத மநுஷ்யர்களை கவி பாடி பெறாப் பேறாகப் படைக்கும் உங்கள் பாரிப்பாலே பெரிய அர்த்தமானது எது உண்டாம் –
உண்டானாலும் எத்தை நாளைக்கு விநியோக அர்ஹமாம்
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,–பேர் ஒலியை யுடைத்தான ரத்ன அபிஷேகத்தை யுடையனாய் பரமபத வாசிகளுக்கு
சத்தாதி ஹேது பூதனான -சர்வாதிகனை பாடினால்
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–தனக்கே அநந்யார்ஹமாக நினைத்து –
இதர ஸ்தோத்ர ஹேதுவான ஜென்மம் கழியும்படியும் அங்கீ கரிக்கும்

தானாகவே கொண்டு -என்று சாம்யா பத்தியைப் பண்ணிக் கொடுக்கும் -என்றுமாம் –

—————————————————————-
அவதாரிகை –
அநந்தரம் -நிஷ் ப்ரயோஜனமான இதர ஸ்தோத்ரத்தைத் தவிர்ந்து சர்வ பல ப்ரதனான மஹா உதாரனைக் கவிபாட வாருங்கோள்-என்கிறார் –

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதுஇல் என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.–3-9-5-

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை-வள்ளல் புகழ்ந்து–கொள்ளலாவது ஒரு பிரயோஜனம் இன்றியே -குப்பையைக் கிளறினால் போலே
தோஷமே தோற்றும் படியான சம்பத்தையுடைய ஷூத்ர ஜாதியை மஹா உதாரையாக புகழ்ந்து
நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!–உங்கள் சத்யவாதித்தவம் ஆகிற வாக்மித்வத்தை இழக்கிற புலவீர்காள்
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் –கவி பாடுகைக்கு உள்ளுறையாகக் கொள்ளுகைக்கும் -கவிக்கு பிரயஜனம் கொள்ளுகைக்கும்
குறைவற்ற பூர்ணனாய் நாம் வேண்டியவற்றை எல்லாம் தரும் இடத்தில்
கோதுஇல் –தாரதம்யம் பார்த்தல் -பிரதியுபகாரம் பார்த்தல் கொடுத்ததை நினைத்தால் செய்யும் குற்றம் இல்லாதவனாய்
என் வள்ளல்- –இதுக்கு உதாஹரணம் என்னலாம்படி எனக்குத் தன்னை அபகரித்த மஹா உதாரனாய் –
மணிவண்ணன் தன்னைக் .-உபகாரம் இல்லையே யாகிலும் விட ஒண்ணாத படி -நீல ரத்னம் போலே ஸ்லாக்யமான வடிவையுடையவனை –
கவி சொல்ல வம்மினோ-கவி செல்லும்படி வாருங்கோள்-

——————————————

அவதாரிகை –
அநந்தரம் -நீங்கள் யாரையேனும் கவி பாடிலும் ஸ்ரீ யபதியான-சர்வ சேஷிக்கே அது சேரும் அத்தனை -என்கிறார் –

வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6-

வம்மின் புலவீர்!–புலவராகையாலே விசேஷஞ்ஞரான நீங்கள் -இதர ஸ்தோத்ரத்தைத் தவிர்ந்து வாருங்கோள் -தேஹ யாத்ரா சேஷமாக
நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!–உங்கள் சரீரத்தை வருந்தி கைத் தலில் செய்து உஜ்ஜீவியுங்கோள்
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;–ப்ரவாஹ நித்தியமான இந்த லோகத்தில்
ஸ்ரீ மான்களாய் இருப்பர்-இக்காலத்தில் இல்லை -ஆராய்ந்து பார்த்தோம் -இனி
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்–உங்களுடைய ஸ்லாக்கியமான கவிகளைக் கொண்டு உம் தம்முடைய ருசி அனுகுணமாக
இஷ்ட தேவதைகளை ஸ்துதித்தால்-அவர்களுக்கு நீங்கள் சொல்லுகிற குணங்கள் சித்தியாமையாலே அவர்களுக்குச் சேராதே –
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–அப்ரதிஹ பிரகாசமான தேஜஸ்ஸை யுடைத்தாய் இருக்கிற
திரு அபிஷேகத்தை யுடையனாய் எனக்கு ஸ்வாமியான ஸ்ரீயபதிக்கே சேரும் அத்தனை –

உங்களுக்கு பகவத் குண சவ்ர்யமே பலம் -சப்த அர்த்தங்கள் இரண்டும் ஸ்ரீ யபதிக்கே சேருவது என்று கருத்து –

——————————————————–

அவதாரிகை –
அநந்தரம் -ஸ்துத்யமான குணங்களையும் திரு நாமங்களையும் ப்ரணமாக யுடையவனை ஒழிய
வேறு ஒரு விஷயத்தை பொய்க் கவி பாட சக்தன் அல்லேன் -என்கிறார்

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால்,மற்று யான்கிலேன்;
மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–3-9-7-

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,–தனக்குத் தகுதியான கொடையும் -ஆத்தாள் வந்த குண ப்ரதையும் எல்லை இறந்து இருக்குமவனாய்
ஓர் ஆயிரம்-பேரும் உடைய பிரானை அல்லால்,மற்று -அத்விதீயமாய் சஹஸ்ர அஸந்யாதமான திருநாமங்களையும் யுடைய மஹா உபகாரகனை ஒழிய வேறு
பாரில் ஓர் பற்றையை -மாரி அனைய கை,-என்று -பூமியிலே தூறு போலே நிஷ் பிரயோஜனமாய் இருபத்தொரு பதார்த்தத்தை
கை மாரி அனைய -கை வழங்கங்கள் -மேகத்தை ஒத்தன என்றும்
திண்தோள் மால்வரை ஒக்கும் என்றும் -,–திறலிய தோள்கள் பெரிய மலையை ஒக்கும் என்றும்
பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–யான்கிலேன்;–மெய் கலவாத புதுப் பொய்களை பேச– பூர்ண விஷயத்தைப் பற்றின நான் -சக்தன் அல்லேன் –

——————————————————–

அவதாரிகை –
அநந்தரம் -பரம ப்ராப்ய பூதனான கிருஷ்ணனைக் கவி பாடி அவனைப் பெற ஆசைப்பட்டு
இருக்கிற நான் ஷூத்ரரைக் கவி பாட வல்லேனோ -என்கிறார் –

வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8-

வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை–பசுமைக்கும் திரட்சிக்கும் செவ்வைக்கும்-வேய் -ஒப்பாம் இடத்தில் -அதிலும் மிகைத்து விளங்குவதான
தோளையுடைய பின்னைக்கு நித்ய அபிமதனான கிருஷ்ணனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்–ஸ்வரூப அனுபந்தியாய் -தனித் தனி அபரிச்சின்னமாய் -அஸந்கயாதமான குணங்களை
பாடி நெடும் காலம் நடந்து -போய்–என்றது காயம் கழித்து ஒரு தேச விசேஷத்தே ஏறப் போய் -என்றுமாம் –
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,–சரீரத்தைக் கழித்து -பரம ப்ராப்ய பூதனான அவனுடைய திருவடிகளிலே
ஒதுங்குகையிலே ஆசையையுடைய நான்
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–ப்ரக்ருதி வஸ்யரான மனுஷ்யரை
பகவத் ஸ்துதி யோக்யமான என் வாக்கைக் கொண்டு எத்தைச் சொல்ல வல்லேன் —

—————————————–

அவதாரிகை –
அநந்தரம் -பரம புருஷார்த்த ப்ரதனானவன் தானே விஷயமாய் இருக்க இதர ஸ்தோத்ரத்துக்கு நான் அதி க்ருதன் அல்லேன் -என்கிறார் –

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;–ப்ராப்த விஷய ஸ்தோத்ர கரணமான வாக் இந்திரியத்தைக் கொண்டு -அப்ராப்த விஷயமான மனுஷ்யரை
பாடுகைக்கு வந்த கவியானவன் அல்லேன்
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;– வேதாந்தங்களிலே மீமாம்சிக்கப் பட்ட ஆனந்தாதி குணங்களை உடைய மஹா உதாரனாய்
கவி பாடுவார் நெஞ்சு தன் வசத்திலே யாம்படி நியமித்துக் கொடுக்கும் திருவாழியை யுடைய மஹா உபகாரகன்
எனக்கே அசாதாரண விஷயமாய் உளன் -அவன் தான் –
சாய் கொண்ட இம்மையும் சாதித்து,–அதிசயித உஜ்ஜ்வல்யத்தை யுடைத்தான ஐஹிகமான அர்ச்சாவதார அனுபவத்தையும் உண்டாக்கித் தந்து
வானவர் நாட்டையும் நீ கண்டு கொள் என்று –நித்ய
ஸூரிகளதான பாரா விபத்தியையும் சேனை முதலியாரைப் போலே நீ ஆராய்ந்து நிர்வஹி என்று
வீடும் தரும் நின்று நின்றே.–ஸ்வ கைங்கர்ய ஜெனிதமான மோக்ஷ ஆனந்தத்தையும் க்ரமத்திலே நின்று நின்று கொடுக்கும் –

சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்-நீ கண்டு கொள் என்று வீடும் தரும் -என்று உஜ்வாலாமான ஐஹிக ஐஸ்வர்யத்தையும்
ஸ்வர்க்காதி ஸூ கத்தையும் மேஷத்தையும் தரும் -என்பாரும் உளர் –

—————————————————————–

அவதாரிகை –
அநந்தரம் -ஸ்துத் வர்த்தமான காரண களேபர ப்ரத்தநாள அவனுக்குக் கவியான எனக்கு வேறு ஒருவரைக் கவி பாடுகை அனுரூபம் அன்று என்கிறார் –

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-

நின்று நின்று பல நாள் உய்க்கும்–காலமுள்ளதனையும் இடைவிடாதே நின்று தன் வசத்திலே சேதனனை ஆக்கும்
இவ்வுடல் நீங்கிப் போய்ச்-சென்று சென்றாகிலும் கண்டு–இஸ் சரீரத்தை விட்டுப் போய் நெடும் காலம் கழித்துச் சென்றாகிலும் –
இச் சேதனன் தன்னை அபரோக்ஷித்து
சன்மம் கழிப்பான் எண்ணி, ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் –ஜென்மத்தை கழிக்கைக்காக திரு உள்ளம் பற்றி ஸ்ருஷ்ட்டி தரும்
நெஞ்சு பொருந்திப் பொருந்தி லோகத்தை ஸ்ருஷ்டித்தவனுடைய
கவி ஆயினேற்கு–என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–கவியான எனக்கு இனி காலமுள்ளதனையும் மற்று ஒருவரைக் கவி பாடுகை தகுதியோ –

————————————————

அவதாரிகை
அநந்தரம் இத்திருவாய் மொழி சொல்ல வல்லார்க்கு ஜென்மம் இல்லை என்று பலத்தை அருளிச் செய்கிறார் –

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு–பரதவ சவ்லப்யங்களுக்குத் தகுதியான குண பரத்தையை யுடையனாய் -நித்ய ஸூ ரிகளுக்கு
நிர்வாஹகானான மேன்மையோடே ஸூலெனாய் அவதரித்த கிருஷ்ணனுக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்–ஸ்தோ தாக்களாகைக்கு அனுரூபமான ஞானாதி குண ப்ரதையை யுடையராய்
அழகிய திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் –பகவத் குணாதி ப்ரதிபாதனத்துக்கு அனுரூபமான லக்ஷண ப்ரதையை யுடைத்தாய்
இருக்கிற ஆயிரம் திருவாய் மொழிக்குள்ளே
ஏற்கும் பெரும்புகழ் இவை பத்தும் -இதர ஸ்தோத்ரத்தைத் தவிர்த்து பகவத் ஸ்தோத்ரத்தை ப்ரதிபாதிக்கை யாகிற
ஸ்வரூப அனுரூபமான குண ப்ரதையை உடைத்தாய்க் கொண்டு அத்விதீயமான இவை பத்தையும் –
சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–சொல்ல வல்லார்க்கு இதர ஸ்துதி ஹேதுவான ஜென்மம் இல்லை —
இது கலித் துறை

————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –3-9-

November 13, 2017

சொன்னால் விரோதம் இது, ஆகிலும் சொல்லுவன் கேண்மினோ!
என் நாவில் இன்கவி யான் ஒருவர்க்கும் கொடுக்கிலேன்
தென்னா தெனா என்று வண்டு முரல் திரு வேங்கடத்து
என் ஆனை என் அப்பன், எம்பெருமான் உளனாகவே.–3-9-1-

இப்படி தம்முடைய சர்வ கரணங்களும் தனித் தனியே ஸ்வ இதர கரணங்களினுடைய வ்ருத்திகளை எம்பெருமான் திறத்திலே ஆசைப்பட்ட படியே
பெறாமையாலே அத்யந்தம் அவசன்னரான ஆழ்வார் -இத்தசையிலே தமக்குத் துணையாகைக்காக-இந்த லோகத்திலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் உளரோ -என்று
பார்த்த இடத்திலே இந்த லோகம் எல்லாம் பகவத் வியதிரிக்த விஷய ப்ரவணமாய் பகவத் பராங்முகமாய் –
மனுஷ்யாதிகளைக் கவி பாடிக் கொண்டு திரிகிற படியைக் கண்டார் –
கண்டு தம்முடைய இழவு எல்லாம் மறந்து எம்பெருமானுக்கு அர்ஹமானவரும் அந்த கரணங்களை அவஸ்து பூத மனுஷ்யாதிகள் பக்கலிலே
விநியோகிக்கிற படி என்ன காண்-என்று இன்னாதாய் -அவர்களைக் குறித்து கல்யாணமாய் பகவத் அனுரூபமான கவிகளை ஷூத்ர மனுஷ்யாதிகள் பக்கலிலே
விநியமிக்க லாகாது என்று பார்த்து -நிஷேத்ய தயாவும் சலுகை யீடன்று -ஆகிலும் எம்பெருமானுக்கு ஈடான அழகிய கவிகளை இழக்க மாட்டாமையாலே
சொல்லுகிறேன் கேளுங்கள் என்று வைத்து -இப்படி பகவத் பராங்முகமான லோகத்திலே நான் எம்பெருமானை அல்லது
மற்று ஒருவரைக் கவி படுக்கைக்கு ஈடல்லாத ப்ரக்ருதியாகப் பெற்றேன் -என்று கண்டு ஸ்வ லாபத்தைப் பேசுகிறார் –

—————————————————-

உளனாகவே எண்ணித் தன்னை ஒன்றாகத் தன் செல்வத்தை
வளனா மதிக்கும் இம் மானிடத்தைக் கவி பாடி என்
குளன் ஆர் கழனி சூழ் கண்ணன் குறுங்குடி மெய்ம்மையே
உளன் ஆய எந்தையை எந்தை பெம்மானை ஒழியவே?–3-9-2-

நிரவதிக சம்பத்தை யுடையனாய் நித்ய நிர்தோஷ நிஸ் ஸீம கல்யாண குண மஹோ ததியாய் இருந்த எம்பெருமானை ஒழிய
தன்னையும் ஒரு வஸ்துவாகப் பார்த்து தன் சம்பத்தையும் ஒரு சம்பத்தாக மதித்து இருக்கிற இம் மனுஷ்யரைக் கவி பாடி
என்ன பிரயஜனம் உண்டு -என்று கொண்டு பூர்வ ப்ரக்ருதத்தை அருளிச் செய்கிறார் –

——————————————-

ஒழிவு ஒன்று இலாத பல் ஊழிதோறு ஊழி நிலாவப் போம்
வழியைத் தரும் நங்கள் வானவர் ஈசனை நிற்கப் போய்க்
கழிய மிக நல்ல வான்கவி கொண்டு புலவீர்காள்!
இழியக் கருதி ஓர் மானிடம் பாடல் என்னாவதே?–3-9-3-

இப்படி ஸமஸ்த கல்யாண குணாத்மகனான எம்பெருமானை உங்களுடைய கழிய மிக நல்ல வான்கவி கொண்டு பாடப் பெறலாவது –
பாடினால் பின்னையும் பெறும் பேறு -அநாக்ராத துக்க கந்தமாய் –நிரதிசய ஸூக ரூபமாய் நித்ய ஸித்தமான பகவத் கைங்கர்ய லக்ஷண மோஷமாவது –
அவஸ்து பூதராய் நிஸ்ஸ்ரீகரான மனுஷ்யரையாவது கவிகளைக் கொண்டு பாடுவது -பாடினால் பின்னைப் போய் அதோ கதியில் விழுவது –
ஆனபின்பு அவனை ஒழிய இம்மனுஷ்யரை எதுக்காகப் பாடுகிறீர்கள் -என்கிறார் –

—————————————————-

என்னாவது, எத்தனை நாளைக்குப் போதும், புலவீர்காள்!
மன்னா மனிசரைப் பாடிப் படைக்கும் பெரும்பொருள்!
மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப் பாடினால்,
தன்னாகவே கொண்டு சன்மம் செய்யாமையும் கொள்ளுமே.–3-9-4-

மனுஷ்யரைப் பாடிலும் சில ப்ரயோஜனங்கள் சித்திக்கக் காணா நின்றோம் இறே-என்னில் -அஸ்திரான மனுஷ்யரைப் பாடி என்ன பிரயஜனம் பெறுவது –
பெற்றால் தான் எத்தனை நாளைக்குப் போதும் -பலவீர்காள் -ஆனபின்பு -மின்னார் மணிமுடி விண்ணவர் தாதையைப்-பாடுங்கள் –
பாடினால் வேறு ஒரு பிரயஜனமும் வேணுமோ -ஸ்வ சேஷத ஏக ரதிகளாக்கி ஸ்வ விஷய கைங்கர்ய விரோதியான சம்சாரத்தையும் போக்கும் -என்கிறார் –

—————————————————

கொள்ளும் பயன் இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்று எல்லாம் தரும் கோதுஇல் என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவி சொல்ல வம்மினோ.–3-9-5-

பிரயோஜன ஸூன்யமாய் ஹேய விஷயங்களைக் கவி பாடி உங்களுடைய அழகிய கவிகளை இழவாதே-தன்னுடைய நிரவதிக -நித்ய -நிர்தோஷ –
கல்யாண குணங்களாலே உங்களுடைய கவிகளை க்ருதார்த்தமாக்க வல்லனாய் -உங்களுக்கு வேண்டிற்று எல்லாம் தரும்
பரம உதாரனாய் தந்தாலும் ஒன்றும் செய்யாதானாய் -இவர்களுக்கு என் செய்வோம் -என்று இருக்கும் ஸ்வ பாவனாய் –
ஆஸ்ரித ஸூலபனாய் இருந்த எம்பெருமானைக் கவி செல்ல வல்லீர்களோ -என்கிறார் –

——————————————————-

வம்மின் புலவீர்!நும் மெய் வருத்திக் கை செய்து உய்ம்மினோ!
இம்மன் உலகில் செல்வர் இப்போது இல்லை நோக்கினோம்;
நும் இன் கவி கொண்டு நும்நும் இட்டா தெய்வம் ஏத்தினால்
செம்மின் சுடர்முடி என் திருமாலுக்குச் சேருமே.–3-9-6-

மனுஷ்யரைக் கவி பாடியேயாகிலும் தேஹ யாத்திரையை நிர்வஹிக்க வேண்டாவோ -என்னில் -அதுக்கு உபாயம் சொல்வேன் -வாருங்கள் -எங்கனே என்னில் –
க்ருஷ்யாதிகளைப் பண்ணி ஜீவியுங்கள் -க்ருஷ்யாதிகள் ஆயாசாத்மகம் ஆகையாலே அவை துஷ்கரம் அல்லவே -அவற்றில் காட்டில் ஸ்ரீ மான்களான மநுஷ்யர்களை
ஜீவன அர்த்தமாகக் கவி படுக்கையே நன்று அன்றோ -என்னில் -உங்கள் அபேக்ஷித பல ப்ரதரான ஸ்ரீ மான்கள் இந்த லோகத்தில் உளரோ என்று பார்த்தோம் –
பார்த்த இடத்தில் ஒருவரும் இன்றியே இருந்தது -ஸ்ரீ மான்களான மநுஷ்யர்கள் இல்லையாகில் இந்த்ராதிகளை ஏத்தினாலோ என்னில்
உங்களுடைய அழகிய கவிகளைக் கொண்டு உங்கள் அபீஷ்ட தேவதைகளை நீங்கள் ஏத்தினாலும் பின்னையும் அது எல்லாம்
அந்த இந்த்ராதி தேவதைகளுக்கு அந்தராத்மா பூதனாய் ஸ்ரீ யபதியாய் இருந்த எம்பெருமான் திருவடிகளிலே சேரும் –
ஆனபின்பு எம்பெருமான் தன்னையே ஏத்துங்கள் -என்கிறார் –

———————————————-

சேரும் கொடை புகழ் எல்லை இலானை,ஓர் ஆயிரம்
பேரும் உடைய பிரானை அல்லால்,மற்று யான்கிலேன்;
மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசவே.–3-9-7-

ஸ்ரீ யபதியான தனக்கு சத்ருசமான நிரவதிக உதாராதி அஸந்கயேய கல்யாண குணங்களை யுடையனாய் இருந்த எம்பெருமானை அல்லால் –
மற்று இந்த லோகத்தில் த்ருண அல்பரான மனுஷ்யாதிகளை மாரி அனைய கை, மால்வரை ஒக்கும் திண்தோள் என்று,
பாரில் ஓர் பற்றையைப் பச்சைப் பசும்பொய்கள் பேசேன் -என்று கொண்டு ஸ்வ லாபத்தைப் பேசுகிறார் –

———————————————-

வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8-

நிரஸ்த ஸமஸ்த பிரதிபந்தகனாய்க் கொண்டு -வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனக் கல்யாண நிஸ் ஸீம நிரவதிக குணங்களைப் பாடி
அவன் தாளிணைக் கீழ் புகும் காதலை யுடையேனான நான் அவனை ஒழிய இந்த ப்ரக்ருதி வஸ்யரான
மனுஷ்யரைக் கவி பாடுவேன் -என்றால் தான் என் வாய் எனக்கு விதேயமோ -என்கிறார் –

————————————–

வாய் கொண்டு மானிடம் பாடவந்த கவியேன் அல்லேன்;
ஆய் கொண்ட சீர் வள்ளல் ஆழிப் பிரான் எனக்கே உளன்;
சாய் கொண்ட இம்மையும் சாதித்து, வானவர் நாட்டையும்
நீ கண்டு கொள் என்று வீடும் தரும் நின்று நின்றே.–3-9-9-

மனுஷ்யரைக் கவி பாடுகைக்கு ஈடல்லாத ப்ரக்ருதியாய்ப் பிறக்கப் பெற்றேன் -ஸமஸ்த கல்யாண குணோததியாய் -சங்கு சக்ர தரனாய் இருந்த எம்பெருமான்
தன்னுடைய பரம உதார குணத்தால் என்னுடைய கவிகளுக்குத் தன்னை விஷயமாகத் தந்து அருளப் பெற்றேன் –
இன்னமும் இப்படி இஹ லோகத்திலே தன்னை எனக்கு அனுபவிக்கத் தந்து அருளி பின்னை –
சர்வ காலமும் திரு நாட்டையும் கைக் கொள் -என்று அத்திருநாட்டையும் எனக்குத் தந்து அருளும் -என்கிறார் –

———————————————————-

நின்று நின்று பல நாள் உய்க்கும் இவ்வுடல் நீங்கிப் போய்ச்
சென்று சென்றாகிலும் கண்டு,சன்மம் கழிப்பான் எண்ணி,
ஒன்றி ஒன்றி உலகம் படைத்தான் கவி ஆயினேற்கு
என்றும் என்றும் இனி மற்றொருவர் கவி ஏற்குமே?–3-9-10-

என்றேனுமாக ஒரு காலம் நம்மை அறிந்து நின்று நின்று பல நாள் இஸ் சம்சாரத்திலே இவ்வாத்மாக்களை பிரவேசிப்பிக்கும் இவ்வுடலத்தை நீங்கிப் போய்
இவ்வாத்மாக்களை சம்சாரத்தைக் கழிக்க வேணும் என்று பார்த்து அருளி ததர்த்தமாக அவஹிதனாய்க் கொண்டு ஜகத் ஸ்ருஷ்ட்டி பண்ணி அருளின
பரம காருணிகனுடைய கவியான எனக்கு மற்று ஒருவரைக் கவி பாடப் போருமோ-என்கிறார் –

——————————————–

ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன் றனக்கு
ஏற்கும் பெரும் புகழ் வண் குருகூர்ச் சடகோபன் சொல்
ஏற்கும் பெரும் புகழ் ஆயிரத்துள் இவையும் ஓர்பத்து
ஏற்கும் பெரும்புகழ் சொல்ல வல்லார்க்கு இல்லை சன்மமே.–3-9-11-

ஸ்வ உசிதமான கல்யாண குணங்களை யுடையனான வானவர் ஈசன் கண்ணன் தனக்கு-ஏற்கும் பெரும் புகழான வண் குருகூர்ச் சடகோபன்
சொல்லான தன்மைக்கு சத்ருசமான அர்த்த வத்த்வ மதுரத்வாதி குணங்களை யுடையவான ஆயிரத்துள்-
ஏற்கும் பெறும் புகழையுடைய இப்பத்தைச் சொல்ல வல்லார்க்கு இல்லை ஜன்மம் -என்கிறார் –

—————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -3-8–

November 13, 2017

முடியானே -பிரவேசம் –
எட்டாம் திருவாய் மொழியிலே
கீழ் இவர் அனுபவித்த பாகவத சேஷத்வத்துக்கு அடியான பகவத் குண வைலக்ஷண்யமானது இவர் திரு உள்ளத்திலே அனுபவ அபி நிவேசத்தை ஜநிப்பிக்க
அத்தாலே ப்ரஸ்துதமான பாகவத சம்ச்லேஷம் விடாய்க்கு உத்தம்பகமாக-நெஞ்சு முதலான தம்முடைய கரணங்களோடு தம்மோடு வாசியற
அனுபவ அலாபத்தாலே ஆர்த்தி பிறந்து
1-அனுபாவ்யனுடைய சேஷித்தவாதி ஆகாரத்தையும்
2-அநிஷ்டத்தைப் போக்கி அநந்யார்ஹம் ஆக்கும் படியையும்
3-ஆஸ்ரித வ்யாமோஹத்தையும்
4-அவதார மூலமான அநந்த ஸாயித்வத்தையும்
5-ஆஸ்ரிதற்கு முகம் காட்டுகைக்கு ஈடான வாஹனத்வதையையும்
6-அவர்களுக்கு அனுபாவ்யமாம் படி கையும் திருவாழியுமான அழகையும்
7-இவ் வாஹன ஆயுத விசிஷ்ட வஸ்துவே தாரகாதிகளான படியையும்
8-அனுபவிப்பிக்கும் சவ்ந்தர்ய ஸ்வ பாவத்தையும்
9-அனுபவ பிரதிபந்தக நிவ்ருத்தி பிரகாரத்தையும்
10-நிவர்த்தனத்தில் அனாயாசத்தையும்
அனுசந்தித்து -அனுபவம் கிட்டாத ஆர்த்தியாலே அதிசயிதமாகக் கூப்பிடுகிறார் –

—————————————————————-

அவதாரிகை –
முதல் பாட்டில் -பிராப்தமுமாய் சரண்யமுமாய் ப்ராப்யமுமான பகவத் விஷயத்திலே
தம்முடைய நெஞ்சுக்கு யுண்டான அபி நிவேசத்தை அருளிச் செய்கிறார்

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! –உபய விபூதிக்கும் சேஷியான மேன்மைக்கு ஸூ சகமான முடியை யுடையவனே–
அந்த உறவு அடியாக சர்வ லோகமும் ஆஸ்ரயித்து ஸ்துதிக்கும் சரண்யத்வ ஏகாந்த குண பூரணமான திருவடிகளை யுடையவனே
ஆழ்கடலைக் கடைந்தாய்! -ஆஸ்ரிதர் ப்ரயோஜனாந்தரங்களை வேண்டிலும் -ஆழ் கடலை கடைந்து கொடுக்கும் உபகாரகனே
புள்ளூர்-கொடியானேஎ! -ஆஸ்ரிதர் இருந்த இடத்திலே வருகைக்கும் அவர்கள் தூரத்திலே கண்டு உகக்கைக்கும் அடியான பெரிய திருவடியை
வாஹனமாகவும் த்வஜமாகவும் யுடையவனே –
கொண்டல்வண்ணா! –அவர்களுக்கு அனுபாவ்யமாம் படி ஸ்ரமஹரமாய் காளமேகம் போன்ற வடிவை யுடையவனே
அண்டத்து உம்பரில் நெடியானேஎ! -இவ் வடிவு அழகை அனுபவிப்பித்து பரமபத வாசிகளான ஸூரி களுக்கு நிர்வாஹகனான பெரியவனே-
என்று கிடக்கும்என் நெஞ்சமே.–என்று தனித் தனியே இந்த ஸ்வ பாவங்களை அனுசந்தித்து என் நெஞ்சானது
ஒரு பிரவ்ருத்தி ஷமம் இன்றிக்கே சிதிலமாய் கிடவா நின்றது –

அண்டத்து உம்பர் என்று -ப்ரஹ்மாதிகள் ஆகவுமாம் –

——————————————————–

அவதாரிகை –
அநந்தரம் -அநிஷ்டத்தைக் கழித்து அநந்யார்ஹம் ஆக்கும் படியை என் வாக்கு எப்போதும் சொல்லா நின்றது என்கிறார் –

நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2-

எப்போதும் என் வாசகமே.–என் வாசகமானது சர்வ காலமும்
நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே!–நெஞ்சையே பெரிய திவ்ய நகரியாகக் கொண்டு -வர்த்திகையாலே எனக்கு நல் துணையானவனே
தண் இலங்கைக்கு இறையைச் செற்ற நஞ்சனே!–குளவிக் கூடு போலே ராக்ஷசர் சேர்ந்த தன்மையை யுடைத்தான இலங்கைக்கு நிர்வாஹகனான
ராவணனை முடித்த நஞ்சானவனே
ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! -மஹா பாலி அபிமானத்தைக் கழித்து பூமியை அநந்யார்ஹம் ஆக்கிக் கொள்ளுகைக்காக
வாமன வேஷனான க்ருத்ரிமனே
என்னும் -என்னா நிற்கும் –

ராவணனை அழித்தால் போலே இந்திரிய பாரவஸ்யத்தைத் தவிர்த்து பூமியைக் கொண்டால் போலே என்னை அநந்யார்ஹன் ஆக்க வேணும் -என்று கருத்து

——————————————————————-

அவதாரிகை –
அநந்தரம்-ஆஸ்ரித வ்யாமோஹத்தாலே அவர்கள் பதார்த்தங்களை விரும்படியான கிருஷ்ணனை என் கைகள் ஆராயா நின்றன என்கிறார் –

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3—

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! –வாசகமே ஏத்தும்படி அதுக்கே அருளைச் செய்யுமவனாய் –
அத்தாலே ஸூரிகளும் கொண்டாடும்படி நிர்வாஹகனானவனே
நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து–அபி நவனாய் இளையனான உதய சந்திரனுடைய அனுரக்தமான தேஜஸ்ஸை விரிக்குமா போலே
அதர சோபா விசிஷ்டமான ஸ்மிதா சந்திரிகையை பிரகாசிப்பித்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே! –மூங்கில் குடிலின் அகவாயிலே வைத்த வெண்ணெயை களவு கண்டு
அமுது செய்தத்தாலே இடையாருடைய சத்தாதிகளுக்கு வர்த்தகனானவனே
என்று தடவும் என் கைகளே.–என்று என் கைகளானவை களவு காணப் புக்க இடத்தே தடவிப் பிடிக்கத் தேடா நின்றன –

நாள் -புதுமை / இளமை -உதய அவஸ்தை / கோள்-ஒளி /விடுத்தல் -விரித்தல் /
நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து-என்று உபமான முகத்தாலே உபமேயமான ஸ்மிதத்தை லஷிக்கிறது –

———————————–

அவதாரிகை –
அநந்தரம் இவ்வாதார மூலமான அநந்த சாயியைக் காண ஆசைப்படா நின்றது என் கண்கள் -என்கிறார் –

கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4-

என் கண்களே.– கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை–என் கண்களானவை கைகளாலே உன்னை பரிபூர்ணமாகப் பல காலும் தொழுது
வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்-கால தத்வம் உள்ளதனையும் ரு க்ஷண மாத்ரமும் விடாதே
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் -விரிந்த பனங்களை௭ யுடைய திருவனந்த ஆழ்வான் மேலே
நித்ய வாசம் பண்ணுகிற பரம சேஷியே -உன்னையே அபரோக்ஷித்துக் காண வேணும் என்று ஆசைப்படா நின்றன

கண்களே.– கைகளால் ஆரத் தொழுகையாவது -அதினுடைய வ்ருத்தியிலும் அந்வயிக்கத் தேடுகை
பை -பணம்

—————————————————————-

அவதாரிகை –
அநந்தரம் என் செவிகளானவை காணவும் ஆசைப்பட்டு காட்சி கடுக்க வரும் போது
பெரிய திருவடியின் சிறகு ஒலியைக் கேட்கவும் ஆசைப்படா நின்றன -என்கிறார் –

கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத் திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–3-8-5-

கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால்–காண்கைக்கு கரணமான கண்களாலே அபரோக்ஷித்துக் காணும்படி வராகி கூடுமோ என்கிற ஆசையாலே
மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்–தன் வஸ்துவைப் பிறர்க்குக் கொடுக்காமல் அத்தியாயச் சென்று பூமியைக் கொண்ட
ஸ்ரீ வாமனானவன் ஆசைப்பட்டார்க்கு முகம் காட்டுகைக்காகத் தன்னை மேற் கொள்ள -அத்தாலே ப்ரீதனாய் செல்லக் கடவதான
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத் திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–பெரிய திருவடியினுடைய சாம ஸ்வரத்தை யுடைத்தான
சிறகு ஒலியை நினைத்து என் செவிகளானவை பரவசமாய்க் கிடந்தது திண்ணியதாக நிரூபியா நின்றன

பண் கொண்ட -என்று கலனை யுடைத்தான -என்றுமாம் –

—————————————————————-

அவதாரிகை
அநந்தரம் -கையும் திருவாழியுமான அழகை அனுபவிக்க வேணும் என்று என் பிராணன் ஆசைப்படா நின்றது -என்கிறார்

செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்றுப்
புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–3-8-6-

எனது ஆவியே- நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்றுப் செவிகளால் ஆர-என்னுடைய விளம்பாஷமமான பிராணனானது
உன்னுடைய கீர்த்தியின் பக்குவ பலம் என்னலாம்படியான கவிகளையே கால அனுரூபமான பண்ணாகிற தேனிலே
மிகவும் செறிய துற்று செவிகளாலே நிரம்ப அனுபவிக்கைக்காக
புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும்–பூமியிலே தர்ச நீயமாய் நிரதிசய போக்யமான
திருவாழியை யுடைய உன்னையே விச்சேத ரஹிதமாய் ஆதரியா நிற்கும் –

———————————————————–

அ௭வதாரிகை –
அநந்தரம் -இப்படி ஆஸ்ரித ஸூலபனாய் போக்யனான யுன்னை அனுபவிக்கப் பெறுகிறிலேன் -என்று
கரணங்களோபாதி கரணியான தம்முடைய இழவு செல்லுகிறார் –

ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7-

ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!–வ்யதிரேகத்தில் முடியும்படி தாரகமான பிராணனாய் –பரிபூரணமான நித்ய போக்ய பூதனாய்
என்னை அடிமை கொள்ளுகைக்கு ஈடான அழகிய சிறகையுடைய பெரிய திருவடியை வாஹனமாக யுடையனாய்
சுடர் நேமியாய்!–பிரதிபந்தகத்தைக் கழிக்கும் உஜ்ஜவலமான திருவாழியை யுடையவனே
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–உன்னுடைய நிரதிசய போக்யமான வடிவழகை மஹா பாபியான என்னுடைய
நெஞ்சானது ஆசைப்பட்டுக் கூப்பிட -அவ்வாசை யடியாக அநேக காலம் நான் கூப்பிட்ட இடத்திலும் கண்டு அனுபவிக்கப் பெறுகிறிலேன் –

தத் தஸ்ய சத்ருசம் என்கிற ஸ்வரூபமும் இழந்தேன் -அபிமதமும் இழந்தேன் -என்று கருத்து

——————————————————–

அவதாரிகை –
அநந்தரம் -அனுபாவ்யமான சவ்ந்தர்யாதிகளை யுடைய உன்னை எந்நாள் கண்டு அனுபவிக்கப் பெறுவது -என்கிறார் –

கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-

கோலமே! தாமரைக் கண்ணது –ஒப்பனை ரூபம் தரித்தால் போலே தர்சநீ யனாய்–தாமரை போன்ற கண்களை யுடைத்தாய்
ஓர் அஞ்சன நீலமே– அத்விதீயமான அஞ்சன த்ரவ்யத்தினுடைய நீல நிறம் தான் வடிவானவனாய்
இந்த ரூப குணத்து அளவன்றியே
நின்று எனது ஆவியை ஈர்கின்ற சீலமே!–ஸ்திரமாய் நின்று என் ஆத்மாவை ஈரா நிற்கிற சீலமே நிரூபகமானவனாய்
சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–சென்ற பூத காலமும் செல்லாத பவிஷ்யத் காலமும் –
முன்னே வர்த்தமானமாய் உள்ள காலமும் நீ இட்ட வழக்காம் படியானவனே -ஏவம் விதனான உன்னை என்று கண்டு அனுபவிப்பது

கோலமேய்ந்த தாமரைக் கண்ணன் -என்றுமாம் –

—————————————————-

அவதாரிகை –
அநந்தரம் -ஸமஸ்த பிரதிபந்தக நிவர்த்தகனான உன்னை நான் ப்ராப்பிப்பது என்று என்கிறார் –

கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்! உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?–3-8-9-

கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! –மாவலீ-நான் மூவடி கொள்வன் -தா என்ற முக்த உக்தியாலே அவனை வசீகரித்த க்ருத்ரிமனாய்
கஞ்சனை வஞ்சித்து -கம்சனுடைய வஞ்சகம் அவன் தன்னடி போம்படி பண்ணி
வாணனை-உள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள் துணித்த –வாணனை நெஞ்சு வலி அழியும்படி அத்விதீயமான தோல் ஆயிரத்தையும் துணித்துப் பொகட்ட
புள்வல்லாய்! உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?–கருட வாஹனனே இப்படி ஆஸ்ரித விரோதி நிரசன சமர்த்தனான உன்னை என்று சேர்வது –

———————————————————–

அவதாரிகை –
அநந்தரம் -பிரதிபந்தகத்தை அநாயாசேன போக்கும் உன் திருவடிகளைக் காண ஆசைப்பட்டு எத்தனை காலம் கூப்பிடக் கடவேன் -என்கிறார் –

பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-

பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று–தன்னில் தான் செறிந்து நிற்கிற பெரிய மருதுகளின் நடுவே அநாயாசேன போய்
அத்தை முறித்து -உன்னை எங்களுக்கு ஸ்வாமியாகத் தந்த பெரியவனே -உன்னுடைய அக்காலத்திலே மறிய விட்ட
சிவந்த திருவடிகளை காண வேணும் என்கிற ஈடுபாட்டை உடையேனாய்
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–க்ளேசித்து விளம்ப அஷமனான நான்
உன்னுடைய குண வாசகமான சப்த சந்தர்ப்பத்தைக் கொண்டு நிரதிசய போக்யனான உன்னையே நோக்கி
இளைத்திருந்து இருந்து எத்தனை காலம் கூப்பிடக் கடவேன்

காணிய -காண்கைக்கு –

———————————————–

அவதாரிகை –
அநந்தரம் -இத் திருவாய் மொழிக்குப் பலமாக பரமபத ப்ராப்தியை அருளிச் செய்கிறார் –

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்–எல்லாரும் கொண்டாடும் படியான குணங்களை யுடையனாய்க் கொண்டு
பூமியை அளந்த சர்வேஸ்வரனை -அனுபவ அபி நிவேசமாகிற நன்மையை யுடைய ஞானாதி குண விசிஷ்டராய்
நன்றான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிக் செய்த
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –அர்த்த ப்ரதிபாதன பலத்தை யுடைத்தான
ஆயிரம் திருவாய் மொழிக்குள்ளும் அத்விதீயமான இப்பத்தையும் சொன்னால் எல்லாரும் அதி உஜ்வலமான பரமபதத்தில் ஏறப் பெறுவார்கள் —

இது கலி விருத்தம் –

——————————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –3-8-

November 13, 2017

முடியானே -பிரவேசம் –
தேர் கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்கள் -என்று பிறந்த அபேக்ஷையானது மிகவும் உத்பூதையாய்-
அந்த அபேஷா அனுகுணமாகக் காணப் பெறாத வ்யஸனத்தினாலே அத்யந்தம் அவசன்னராய்க் கொண்டு
தம்முடைய சர்வ கரணங்களாலும் சர்வ பிரகாரத்தாலும் எம்பெருமானை அனுபவிக்க வேணும் என்று சொல்லிக் கொண்டு கூப்பிடுகிறார் –

—————————————————

முடியானேஎ! மூவுலகும் தொழுது ஏத்தும்சீர் அடியானேஎ! ஆழ்கடலைக் கடைந்தாய்! புள்ளூர்
கொடியானேஎ! கொண்டல்வண்ணா! அண்டத்து உம்பரில் நெடியானேஎ! என்று கிடக்கும்என் நெஞ்சமே.–3-8-1-

சர்வ லோகாதிபத்ய ஸூ சகமாய் -நிரதிசய தீப்தி யுக்தமாய் -அதி ரமணீய தர்சனமாய் இருந்த திரு அபிஷேகத்தாலே –அலங்க்ருதனாய்
ப்ரஹ்ம ஈஸா நாதிகளுக்கும் ஈஸ்வரனாய் வைத்து அநாலோசித விசேஷ அசேஷ லோக சரண்யனாய் ஆஸ்ரித ஜன சமீஹித நிவர்த்தகனாய் இருந்தவனே-
பொன்மலையின் மீமிசைக் கார் முகில் போலே பெரிய திருவடி திருத் தோளின் மேல் ஏறி அருளி இந்த லோகத்தில் வந்து தோன்றாய் -என்று
எம்பெருமானைக் காண ஆசைப்பட்ட போதே காணப் பெறாமையாலே குறைப் பட்டுக் கிடைக்கும் என் நெஞ்சம் -என்கிறார் –

——————————————

நெஞ்சமே நீள் நகராக இருந்த என் தஞ்சனே! தண் இலங்கைக்கு இறையைச் செற்ற
நஞ்சனே! ஞாலம் கொள் வான் குறளாகிய வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகமே.–3-8-2-

ஆஸ்ரித சமீஹித விரோதி நிரசன சமர்த்தனாய் தத் சமீஹித நிவர்த்தன உபாயஞ்ஞனாய் இருந்த நீ நெஞ்சு உன்னை நினைக்க அருள் செய்தால் போலே
நானும் உன்னை நினைக்க அருள் செய்து அருள வேணும் என்று எப்போதும் அலற்றா நிற்கும் என் வாசகம் -என்கிறார்

————————————

வாசகமே ஏத்த அருள் செயும் வானவர் தம் நாயகனே! நாள் இளந் திங்களைக் கோள்விடுத்து
வேய் அகம் பால் வெண்ணெய் தொடு வுண்ட ஆன் ஆயர் தாயவனே! என்று தடவும் என் கைகளே.–3-8-3—

வானவர் தம் நாயகனாய் வைத்து வாசகமே ஏத்த அருள் செய்து அருளினால் போலே அபிநவ பூர்ண சந்த்ர கிரணம் போலே திரு முத்தின் ஒளி புறப்படும்படி
திருப் பவளத்தைத் திறந்து -வெண்ணெய் தொடு உண்ட உன்னுடைய அழகை நானும் ஏத்தும்படி அருள் செய்ய வேணும் என்று தடவும் என் கைகள் -என்கிறார் –

————————————————

கைகளால் ஆரத் தொழுது தொழுது உன்னை வைகலும் மாத்திரைப் போதும் ஓர் வீடு இன்றிப்
பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை மெய்கொளக் காண விரும்பும் என் கண்களே.–3-8-4-

பைகொள் பாம்பு ஏறி உறை பரனே! உன்னை ஒரு க்ஷண மாத்ரமும் ஒழியாமே எப்போதும்
கைகளால் ஆரத் தொழுது மெய்கொளக் காண விரும்பும் என் கண்கள் -என்கிறார் –

———————————————

கண்களாற் காண வருங் கொல் என்று ஆசையால் மண் கொண்ட வாமனன் ஏற மகிழ்ந்து செல்
பண் கொண்ட புள்ளின் சிறகு ஒலி பாவித்துத் திண் கொள்ள ஓர்க்கும் கிடந்து என் செவிகளே.–3-8-5-

மண் கொண்ட வாமனன் ஏறி யருள –மது பணம் பண்ணின வந்து பிளே களித்துக் கொண்டு செல்லும் பெரிய திருவடி மேலே
அவன் ஏறி யருளி வரும்படியைக் காண வேணும் என்றும் வரும் பொது பெரிய திருவடியினுடைய
அத் திருச் சிறகின் ஒலி கேட்க வேணும் என்றும் ஆசைப்படா நிற்கும் என் செவிகள் -என்கிறார் –

——————————————–

செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும் கவிகளே காலப் பண் தேன் உறைப்பத் துற்றுப்
புவியின் மேல் பொன் நெடுஞ் சக்கரத்து உன்னையே அவிவு இன்றி ஆதரிக்கும் எனது ஆவியே.–3-8-6-

உன்னுடைய கீர்த்திக் கவி என்னும் கனிகளை காலப் பண்ணாகிற தேனில் கலந்து என் செவிகள் ஆரத் துற்று பொன்னெடும் சக்கரத்து உன்னை
இந்த லோகத்திலே காண வேணும் என்று அவிவின்றி ஆதரிக்கும் எனது ஆவி -என்கிறார்

——————————————

ஆவியே! ஆரமுதே;என்னை ஆளுடைத் தூவி அம் புள்ளுடையாய்!சுடர் நேமியாய்!
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பல காலும் கூவியும் காணப்பெறேன் உன கோலமே.–3-8-7-

என்னுடைய தாரகமே-என்னுடைய போக்யமே-உன்னை விஸிலேஷித்து நான் அவசன்னனான இந்த தசையிலே நான் முடிவதற்கு முன்னே
இச் க்ஷணத்தில் வந்து என்னை அடிமை கொள்ளுகைக்காகப் பெரிய திருவடியை திவ்ய வாஹனமாக யுடையவனே
த்வத் ஸம்ச்லேஷ விரோதியான என்னுடைய வினை கடிகைக்காக எப்போதும் கை கழலா நேமியாய்
பாவியேன் நெஞ்சம் புலம்பப் பலகாலம் குவியும் காணப் பெறுகிறிலேன் உன் அழகை -என்கிறார் –

—————————————-

கோலமே! தாமரைக் கண்ணது ஓர் அஞ்சன நீலமே! நின்று எனது ஆவியை ஈர்கின்ற
சீலமே! சென்று செல்லாதன முன் நிலாம் காலமே! உன்னை எந்நாள் கண்டு கொள்வனே?–3-8-8-

கோலமே! தாமரைக் கண்களை யுடையதொரு ஓர் அஞ்சன நீலமே!–இப்படி இருந்து வைத்து என்னுடைய நிகர்ஷம் பாராதே
என் நெஞ்சமே நீள் நகராக இருந்த நிரவாதிக சவ் சீல்யத்தாலே என்னை மயக்குகிறவனே உன்னை என்று நான் காண்பது -என்று செல்ல
எம்பெருமானும் காணக் கடவிய காலம் வந்தால் அண்டர் காணலாவது -என்று அருளிச் செய்ய -அக்காலம் தான் நீ இட்ட வழக்கன்றோ –
ஆனபின்பு இக்காலம் தன்னையே அந்தக் காணக் கடவிய காலம் ஆக்குவம் என்றால் உன்னால் ஆக்க முடியாதோ -என்கிறார்

————————————————–

கொள்வன் நான், மாவலி! மூவடி தா’என்ற கள்வனே! கஞ்சனை வஞ்சித்து வாணனை
உள்வன்மை தீர,ஓர் ஆயிரம் தோள் துணித்த புள்வல்லாய்! உன்னை எஞ்ஞான்று பொருந்துவனே?–3-8-9-

கோலின அளவை முடிக்க விரகு அறிவான் ஒருவனாய் -ஆஸ்ரித விரோதி நிராசன ஸ்வ பாவனாய் —
விரோதி நிராசன சமர்த்தனாய் -இருந்த உன்னை எஞ்ஞான்று பொருந்துவன் -என்கிறார் –

—————————————————

பொருந்திய மாமருதின்னிடை போய எம் பொருந் தகாய்! உன் கழல் காணிய பேதுற்று
வருந்தி நான் வாசக மாலை கொண்டு உன்னையே இருந்திருந்து எத்தனை காலம் புலம்புவனே?–3-8-10-

பொருந்தின மா மருதினிடை அகப்படாதே போய் -என்னை ரஷித்து அருளின பரம காருணிகனே-உன் திருவடிகளைக் காண ஆசைப்பட்டு பெறாது ஒழிந்து
இப்படி முடியவும் பெறாதே இருந்து பெரிய வருத்தத்தோடே உன் குணங்களைச் சொல்லிக் கொண்டு
நான் இன்னம் எத்தனை காலம் கிடந்தது அலற்றக் கடவேன் -என்கிறார் –

———————————————

புலம்பு சீர்ப் பூமி யளந்த பெருமானை நலங்கொள் சீர் நன் குருகூர்ச் சடகோபன் சொல்
வலங்கொண்ட வாயிரத்துள் இவையுமோர் பத்து இலங்குவான் யாவரும் ஏறுவர் சொன்னாலே –3-8-11-

எல்லாராலும் ஏத்தப்படும் குணங்களை யுடையனான பூமி யளந்த எம்பெருமானை குண ஏக தாரகத்வம் ஆகிற கல்யாண குணத்தை யுடையனாய் இருந்த
நன் குருகூர்ச் சடகோபன் சொன்ன இத்திருவாய் மொழியைச் சொன்னார் எல்லாரும் திரு நாட்டிலே புகப் பெறுவார் -என்கிறார் –

—————————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -3-7–

November 12, 2017

பயிலும் சுடர் ஒளி -பி௭ரவேசம் –
ஏழாம் திருவாய் மொழியிலே –
கீழ் சேஷத்வ பிரதிசம்பந்தியினுடைய சேஷித்வம் அர்ச்சாவதார பர்யந்தம் என்று அருளிச் செய்தாராய் –
அந்த சேஷத்வ ப்ரீதி அபி வ்ருத்தியாலே சேஷத்வம் தத் விஷய மாத்திரத்திலே நில்லாதே ததீயா பர்யந்தமாக அபி வ்ருத்தமாக-
அவர்களுடைய ஜென்ம வ்ருத்தாதி நிரபேஷமான பகவத் சம்பந்த உதகர்ஷத்தையே பற்றி அந்த உதகர்ஷத்துக்கு அடியான
1-சர்வேஸ்வரனுடைய ஷீரார்ணவ ஸாயித்வத்தால் வந்த பாரம்யத்தையும்
2-அவதார விக்ரஹ வைலக்ஷண்யத்தையும்
3-அந்நிலையில் விபூதி த்வயத்துக்கும் அனுபாவ்யமான போக்யதையையும்
4-போக்யதா வர்க்கமான ஆபரண சோபையையும்
5-ஆஸ்ரித அபேக்ஷித அர்த்த பிரதத்வத்தையும்
6-அநந்ய பிரயோஜனர்க்குத் தன்னைக் கொடுக்கும் உபகாரகத்வத்தையும்
7-கொடுக்கும் இடத்தில் ஸ்வரூப ஆவிர்பாவத்தைப் பிறப்பித்து அடிமை கொள்ளும் படியையும்
8-அடிமைக்கு விஷயமான ஸ்ரீ யபதித்வத்தையும்
9-ஆஸ்ரித தோஷ நிவர்த்தகமான பாவநத்வத்தையும்
10-ஆபத் ஸகத்வத்தையும்
அனுசந்தித்து -இந்த குணங்களில் ஈடுபட்ட பாகவதருடைய சம்பந்தி பரம்பரா பர்யந்த சேஷத்வத்தை அனுபவிக்கிறார் –

—————————————

அவதாரிகை –
முதல் பாட்டில் -விலக்ஷண விக்ரஹ குண விசிஷ்டானாய்க் கொண்டு ஷீரார்ணவ சாயியான சர்வாதிகனை ஸம்ஸலேஷிக்கும்
சம்பத்தை யுடைய பாகவதர்கள் ஜென்ம வ்ருத்தாதிகளில் தாழ நின்றாரே யாகிலும் எனக்கு சேஷிகள் -என்கிறார் –

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்–செறிந்த சவ்ந்தர்ய -லாவண்யாதிகளாகிற சுடரை யுடைத்தான தேஜோ மய
திவ்ய விக்ரஹத்தை யுடையனாய் -சர்வ ஸ்மாத் பரதவ ஸூசகமான புண்டரீகாக்ஷத்வத்தை யுடையனாய்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்–இவ்வடிவு அழகிலே செறிந்தார்க்கு நிரதிசய போக்யனாய்க் கொண்டு ஆஸ்ரித அர்த்தமாக
திருப் பாற் கடலிலே கண் வளர்ந்து அருளின விக்ரஹ குண போக்யதா பாரம்யத்தை யுடையவனை
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்–நிறைந்த அனுபவம் பண்ணிச் செறிகையாகிற சம்பத்தை யுடையவர்கள் –
அபிஜன வித்யா வருத்தங்களால் எத்தனையேனும் குறைய நின்றாரே யாகிலும் அந்நிலையிலே
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–எங்களுக்கு மேன்மேல் எனச் செறிந்து வருகிற ஜென்ம அவகாசங்கள் தோறும்
எங்களை அடிமையாகக் கொள்ளும் பரம சேஷிகள் கிடீர்

அவனுடைய பாராம்ய அனுபவம் -இவர்களுடைய பாரம்யத்துக்கு அடி என்று கருத்து –

—————————————————-

அவதாரிகை
அநந்தரம் அவதார விக்ரஹ வைலக்ஷண்யத்துக்கு ஈடுபட்டு இறைஞ்சும் பாகவதர் எனக்கு நாத பூதர் என்கிறார் –

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–3-7-2-

ஆளும் பரமனைக் -ஆஸ்ரிதரை அடிமை கொள்ளுகைக்கு அடியான சீலாதி பாரம்யத்தை யுடையனாய்
கண்ணனை -அதுக்குப் பிரகாசகமான அவதார சவ்லப்யத்தை யுடையனாய்
ஆழிப்பிரான் தன்னைத்–ஆஷ்ரித ரக்ஷண அர்த்தமாக அவதார திசையிலும் கையும் திருவாழியுமாய் இருக்குமவனாய்
அதுக்கும் மேலே ஆஸ்ரிதற்கு ஒதுங்க நிழலாய்
தோளும் ஓர் நான்குடைத் -அத்விதீயமான நாலு திருத் தோள்களை யுடையனாய் –
தூமணி வண்ணன் – அவர்களுக்கு அனுபாவ்யமாய் முடிந்து ஆளலாம் படி நீல ரத்னம் போலே விலக்ஷணமான வடிவை யுடையனாய் –
எம்மான் தன்னைத்- அவ்வடிவைக் காட்டி என்னை அடிமை கொண்ட ஸ்வாமியை
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்–தங்கள் ஒடுக்கம் தோன்றும் படி காலையும் கையையும் கூட்டி -பிராணாயாமம் பண்ணுமவர்கள் கிடீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–என்றும் ஜென்ம அவகாசம் தோறும் எம்மை அடிமையாகவுடைய நாத பூதர் –

—————————————————————–

அவதாரிகை –
அநந்தரம் உபய விபூதியும் மேல் விழுந்து அனுபவிக்கும் போக்யத்தையிலே ஈடுபட்டு
பாகவதருக்கு சேஷ பூதரானவர்கள் எம்மை அடிமை கொள்ளும் ஸ்வாமிகள் -என்கிறார் –

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.–3-7-3-

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்- போதனை– நிருபாதிக ஸ்வாமியாய் -அவிசேக்ஷஜ்ஞரான சம்சாரிகளோடு –
விசேக்ஷஜ்ஞரான-நித்ய ஸூ ரிகளோடு வாசியற கொண்டாடும்படி பரிமள பிரசுரமான திருத் துழாய்த் தாறாளே அலங்க்ருதனாய்
பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்-தர்ச நீயமாய் போக்யதையாலே விஞ்சி இருக்கிற திருவாழியும் கையுமான
அழகாலே எனக்கு நிரவாதிக ஸ்வாமியானவனை
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்–திருவடிகளிலே தாழ வல்லாரை தாழ்ந்து அனுவர்த்திக்குமவர் கிடீர்
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.–சாஸ்திரங்களில் ஓதப்பட்ட பிறப்பினுடைய அவகாசம் தோறும் எங்களை அடிமையாக யுடையவர்கள் –

அவதாரிகை –
அநந்தரம் -அவனுடைய ஆபரண சோபையில் ஈடுபட்டு அடிமை புக்கு அவர்களுடைய அடியார் எங்களுக்கு பெரிய சேஷிகள் -என்கிறார் –

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே.–3-7-4-

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்–உடையோடு பொருந்தின திருப் பரிவட்டத்தை யுடையனாய் -கண்டாபரணத்தை யுடையனாய்
பரிவட்டத்தின் மேலே சாத்தின கோவை நாணை யுடையனாய்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் -ஒரு பக்கத்திலே சேர்ந்த பொற் பூணூலை யுடையனாய் -ஸ்ப்ரு ஹணீயமான அபிஷேகத்தை யுடையனாய்
மற்றும் பல்கலன்-நடையா உடைத்– மற்றும் பலவகைப்பட்ட ஆபரணங்களையும் ஸ்வா பாவிகமாக யுடையனாய்
திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்–ஸ்ரீ மானான நாராயணனுக்கு சேஷ பூதரானவர்களுக்கு சேஷ பூதரானவர்கள் கிடீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே.–நிரந்தரமான பிறப்பினுடைய அவகாசம் தோறும் எங்களுக்கு அசாதாரண பரம சேஷிகள் –

இந்நாலு பட்டாலும் பாகவதருடைய சேஷித்வம் சொல்லிற்று –

————————————————

அவதாரிகை –
அநந்தரம் -ஆஸ்ரிதர் பிரயோஜனாந்தரத்தை அபேக்ஷிக்கிலும் அருமைப் படாமல் கொடுக்குமவனுடைய உபகாரகத்வ அதிசயத்தை
ஸ்துதிப்பாரை ஸ்துதிக்கும் அவர்கள் உபய விபூதியிலும் தமக்கு உபகாரகர் -என்கிறார் –

பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5-

பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை –பரம சாம்யா பத்தியாலே வரும் பெருமையையுடைய நித்ய ஸூரிகளுக்கு அசாதாரணனான அதிபதியாய்
அமரர்கட்கு-அருமை ஒழிய அன்று –சாவாமை வேண்டியிருக்கும் தேவர்களுக்கு அருமைப் படாதபடி -துர்வாசஸ் சாப உபஹதரான அன்று —
ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்– பூர்ணமாக அம்ருதத்தை புஜிப்பித்து -சத்தியை நோக்கினவனை உத்தேசித்து
பெருமை பிதற்ற வல்லாரைப் -அவன் உபகாரகத்வ மஹத்தையை ப்ரீதி பாரவஸ்யத்தாலே அக்ரமமாகப் பிதற்ற வல்லாரை –
பிதற்றுமவர் கண்டீர்– தாங்களும் ப்ரீதி பரவசராய்ப் பிதற்றுமவர் கிடீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–ஐஹிக ஆமுஷ்மிகங்களில் நம்மை உஜ்ஜீவிப்பிக்கும் உபகாரகர் –

———————————————————-

அவதாரிகை –
அநந்தரம் -அநந்ய ப்ரயோஜனர்க்குத் தன் வடிவு அழகை அனுபவிப்பிக்கும் உஜ்ஜ்வல ஸ்வ பாவனை அனுபவிப்பார் நமக்கு ரக்ஷகர் -என்கிறார் –

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன் எம்மான்தன்னை
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே.–3-7-6-

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் -அபகரிக்கும் இடத்தில் மேல் இல்லாதபடியாகத் தன்னை உபகரிப்பானாய் –
அவர்கள் இட்ட வழக்காம் படி பவ்யனாய் -கையும் திருவாழியுமான அழகையும்
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன் -மதுஸ் யந்தியாய்ப் பரிமள உத்தரமான மாலை அழகையும் அழுக்கற்ற மாணிக்கம் போன்ற வடிவையும்-
பிரான் தன்னைத்– எம்மான்தன்னை- உபகரித்து -என்னை எழுதிக் கொண்ட ஸ்வாமியாய்
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்–அத்தாலே மிகவும் நிறம் பெற்ற தேஜஸ்ஸை யுடையனானவனை நெஞ்சால் அனுபவிக்குமவர்கள் கிடீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே.–எம்மை பிரயோஜனாந்தரங்களில் போகாமல்
நிஸ் சலமாக அடிமை கொண்டு இஜ் ஜென்மத்தோடே ஜன்மாந்தரங்களோடு வாசியற ரக்ஷிக்குமவர்கள் –

—————————————————-

அவதாரிகை –
அநந்தரம் -ஸ்வ அனுபவம் பண்ணுவாராய் ஸ்வரூப ஆவிர்பாவத்தைப் பிறப்பித்து அனுபவிப்பிக்குமவனைப்
புகழுமவரைப் புகழுமவர்கள் நமக்கு நித்ய புருஷார்த்த ப்ரதர்-என்கிறார் –

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்–ஜென்ம பரம்பரைகள் வராதபடி பரிஹரித்து -சேஷத்வ ஞானம் யுடையவர்களை
ஒரு தேச விசேஷத்திலே கொண்டு போய்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்– ஸ்வரூப ஆவிர்பாவத்தைப் பிறப்பித்து –தன் திருவடிகளின் கீழே
அடிமை கொண்டு அருளும் ஸ்வாமியானவனை
தொன்மை பிதற்ற வல்லாரைப் -ஸ்வாபாவிக உபகாரகத்வத்தை சொல்லி அக்ரமமாகப் புகழ வல்லாரை
பிதற்றுமவர் கண்டீர்– தாங்களும் பிரேம வித்தகராய்ப் புகழுமவர்கள் கிடீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–நம்மை -அந்தமில் பேர் இன்பத்து அடியாரோடு இருக்கும்
நன்மையைப் பெறும்படி பண்ணி -யாவதாத்ம பாவி உஜ்ஜீவிப்பித்துக் கொள்வாராக விஸ்வசிக்கப் படுமவர்கள் –
நம்பர் -நம்பப்படுமவர்கள் –

இம்மூன்று பட்டாலும் –பாகவதருடைய சரண்யத்வம் சொல்லிற்று –

———————————————————————–

அவதாரிகை –
அநந்தரம் -ப்ராப்ய பூதனான ஸ்ரீ யபதியை ஸ்துதிக்கும் அவர்கள் எங்களுக்குக் கைங்கர்ய பிரதிசம்பந்தி தயா ப்ராப்யர் -என்கிறார்

நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8-

நம்பனை ஞாலம் படைத்தவனைத் –நிருபாதிகமாகத தஞ்சமானவனாய் -தன்னை ஆஸ்ரயித்து அனுபவிக்கைக்கு உறுப்பாக ஜகத் ஸ்ருஷ்ட்டியைப் பண்ணுமவனாய்
திரு மார்பனை–ஸ்ருஷ்ட்டி தசையோடு ஆச்ரயண தசையோடு ப்ராப்ய தசையோடு வாசியற அனுவ்ருத்தமான ஸ்ரீ யபதித்தவத்தை யுடையனாய்
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்–ஸ்வ ஸ்ருஷ்டமான உபரிதன லோகங்களில்
எத்தனையேனும் அதிசயித ஞானர்க்கும் -அறிவரிய பெருமையை யுடையவனை
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்-கும்பீ பாக்க நரக வாசிகளான பாப பிரசுரங்களும் ஏத்தினார்கள் ஆகில் -அவர்கள் தங்கள் கிடீர்
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–எங்கள் பலவகைப்பட்ட ஜென்ம அவகாசம் தோறும் எங்கள் சேஷ விருத்திக்கு பிரதி சம்பந்தியான குலம் –

இப்பாட்டு -ப்ராப்ய பரம் –இதினுடைய விவரணம் –நெடுமாற்கு அடிமை -8–10-திருவாய் மொழி –

——————————————————————————————–

அவதாரிகை –
அநந்தரம் -ஆஸ்ரிதருடைய ஜந்மாத் அபகர்ஷ தோஷ நிவர்த்தகமான பரம பாவநத்தை யுடையவனை
அநந்ய ப்ரயோஜனராய் அனுபவிப்பார் த்ரி புருஷம் எனக்கு சேஷிகள் என்கிறார்

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9-

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து –அநு லோம ப்ரதி லோம விவாஹத்தாலே ஆதார பூதரான ப்ராஹ்மணாதி ஜாதிகள் நாளிலும் கீழே போந்து
எத்தனை-நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்–மிகவும் -நாம் அபக்ருஷ்ட ஜன்மாக்கள் என்கிற அறிவும் இன்றியே இருக்கும் –
சண்டாளர் ப்ராஹ்மண ஸ்தானத்தில் யாம்படி அவர்களுக்கும் அநாதரணீயர்களான சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று –வலத்திலே ஏந்தப்பட்டு சரணம் பவித்ரம் -என்கிறபடியே
பவித்ர பூதனான ஆழ்வானை யுடைய ஸ்வாமியாய் -ஸ்வ ஸம்பந்தத்தாலே எல்லாரையும் பரிஸூ த்தராக்கும் ரத்னம் போலே பவித்ரமாய்
உஜ்ஜவலமான வடிவை யுடையவனுக்கு நாம் சேஷ பூதர் என்று நினைத்து
உள்-கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–அநந்ய பிரயோஜனராய்க் கலந்தவர்களுக்கு -அடியார்க்கு -அடியாரானவர்கள் எங்களுக்கு ஸ்வாமிகள் –

————————————————————

அவதாரிகை –
அநந்தரம் -பிரளய ஆபத் சகனான வடதள ஸாயிக்கு சேஷ பூதரானவர்களுடைய சம்பந்தி பரம்பரையான எழுபடி காலுக்கு நாம் அடிமை -என்கிறார் –

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-8-10-

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்–த்ரை விக்ரம அபதா நத்திலே-தன் திருவடிகளோடு சேர்ந்த பூமியை
பிரளய ஆபத்தில் அமுது செய்து -ஓர் ஆலிலையில் உண்டது ஜரியாதபடி கண் வளர்ந்து அருளக் கடவனாய்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு–ஒப்பு ஒன்றும் இல்லாத முக்த சிஸூ விக்ரஹத்தை யுடையனாய்
அந்த ஸ்வ பாவத்தாலே எங்களுக்கு ஸ்வாமியானவனுக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு-அடியார் அடியார் தம்மடியார்–அடியாரானவர்களுடைய சம்பந்தி பாரம்பரியத்தின் எல்லை நிலத்துக்கே
அடியோங்களே.–அடியோங்கள் நாங்கள் –

பாட்டு முடிந்தவாறே எழு படி காலிலே நின்றார் அத்தனை -சேஷத்வ ப்ரீத்திக்கு முடிவு இல்லாமையால் –
ததீயாரான சேஷி பாரம்பர்யத்துக்கு முடிவு இல்லை என்று கருத்து
படி -ஒப்பு / குழவிப்படி -குழவி வடிவு –

———————————————–

அவதாரிகை –
அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக ஜென்ம நிவ்ருத்தியை அருளிச் செய்கிறார் –

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே.–3-8-11-

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு –தங்கள் ராஜ்ய ப்ரதிஷ்டை உயர்ந்து வரும்படியான துர்யோத நாதிகள் நூற்றுவரும் முடியும்படி
அவர்களால் நிரஸ்தரான அன்று பாண்டவர்கள் ஐவருக்கும்
அருள்செய்த-நெடியோனைத் –சர்வ பிரகார உபகாரத்தைப் பண்ணி -பின்பு ஒன்றும் செய்யாதவரைப் போலே பெரிய பாரிப்பை யுடையவனைப் பற்ற
தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்–கட்டளைப் பட்ட திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வாருடைய அந்தரங்க வ்ருத்தி ரூபமாய்
அடி ஆர்ந்த ஆயிரத்துள்–அவன் தொண்டர் மேல்-முடிவு – இவை பத்து,–பாத பந்தாதி லக்ஷணங்களால் பூரணமான ஆயிரத்துள்ளும் –
அவன் தொண்டர் மேல் முடிவான இவை பத்தையும்
ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே.–நெஞ்சிலே பொருந்த அப்யஸிக்க வல்லராகில்
ததீய சேஷத்வ பிரதிபந்தகமான ஜென்மம் உண்டாக்காத படி முடிந்து போம் –

இது கலித்துறை –

—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –3-7-

November 12, 2017

பயிலும் சுடர் ஒளி -பி௭ரவேசம் –
இப்படி எம்பெருமானுடைய நிரவதிக ஸூலபத்வ ரூப மஹா குண அனுபவ ஜெனித நிரவதிக ப்ரீதியாலே
பகவத் சேஷத்வ காஷ்டா ரூப பாகவத சேஷத ஏக போகராய் அந்த பாகவத சேஷத்வம் தமக்கு ப்ராப்யம் -என்கிறார் –

—————————————————————

பயிலும் சுடரொளி மூர்த்தியைப் பங்கயக் கண்ணனைப்
பயில இனிய நம் பாற்கடற் சேர்ந்த பரமனைப்
பயிலும் திருவுடையார் எவரேலும் அவர்கண்டீர்
பயிலும் பிறப்பிடை தோறு எம்மைஆளும் பரமரே.–3-7-1-

பிராட்டியுடைய ஜென்ம பூமியாகையாலே திருப் பாற் கடலைத் தனக்கு பிரியமான தாமமாக யுடையனாய் -ஸர்வதா அனுபூதனானாலும்
அபூர்வத் போக்ய பூதனாய் நிரதிசய தீப்தி யுக்தனாய்- திவ்ய ரூபனாய் -பங்கயக் கண்ணனாய் இருந்த எம்பெருமானுடைய
அனுபவ ஸம்பூதா ப்ரீதி காரித தாஸத்வ சம்பத்தை யுடையார் ஆரேனுமாகிலும் அவர் கிடீர் நமக்கு ஸ்வாமிகள் -என்கிறார் –

————————————————————-

ஆளும் பரமனைக் கண்ணனை ஆழிப்பிரான் தன்னைத்
தோளும் ஓர் நான்குடைத் தூமணி வண்ணன் எம்மான் தன்னைத்
தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர்
நாளும் பிறப்பிடை தோறு எம்மை ஆளுடை நாதரே.–3-7-2-

திருப் பாற் கடலின் நின்றும் ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாக சதுர்புஜத்வ சங்க சக்ர கதா ஸார்ங்காதி திவ்யாயுத
ஸ்வ அசாதாரண ஆகார விசிஷ்டானாய்க் கொண்டு வஸூ தேவ க்ருஹே அவதீர்ணனாய்-ஸமஸ்த ஹேய ப்ரத்ய நீகனாய் இருந்த
எம்பெருமானைத் தாளும் தடக்கையும் கூப்பிப் பணியுமவர் கண்டீர் நமக்கு என்றைக்கும் ஸ்வாமிகள் -என்கிறார் –

—————————————————

நாதனை ஞாலமும் வானமும் ஏத்தும் நறுந்துழாய்ப்
போதனைப் பொன்னெடுஞ் சக்கரத்து எந்தை பிரான் தன்னைப்
பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர்
ஓதும் பிறப்பிடைதோறு எம்மை ஆளுடை யார்களே.–3-7-3-

சர்வ ஸ்வாமியாய் தேவ மனுஷ்யாத்ய ஆஸ்ரிதருடைய உத்கார்ஷ அபகர்ஷம் பாராதே அவர்கள் எல்லாருக்கும் ஓக்கத் தன்னைக் கொடுத்து அருளும் ஸ்வபாவனாய்
திருவாழி யாழ்வானாலே அலங்க்ருதனாய் இருந்த எம்பெருமானைப் பாதம் பணிய வல்லாரைப் பணியுமவர் கண்டீர் நமக்கு என்றைக்கும் ஸ்வாமிகள் -என்கிறார் –

———————————————-

உடை ஆர்ந்த ஆடையன் கண்டிகையன் உடை நாணினன்
புடையார் பொன் நூலினன் பொன்முடியன் மற்றும் பல்கலன்
நடையா உடைத் திரு நாரணன் தொண்டர் தொண்டர் கண்டீர்
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்களே.–3-7-4-

நிரதிசய ஸூகந்தமாய் -நிரதிசய ஸூ க ஸ்பர்சமாய் நிரதிசய உஜ்ஜ்வல்யமாய் நித்ய ஸித்தமாய் அஸந்கயேயமான திவ்ய பூஷணங்களாலே
பூஷிதனாய் இருந்த எம்பெருமானுடைய அழகுக்குத் தோற்று அடிமையாய் இருப்பார்க்கு அடிமையாய் இருப்பார் கிடீர் –
இடையார் பிறப்பிடை தோறு எமக்கு எம் பெரு மக்கள் -என்கிறார் –

————————————————

பெருமக்கள் உள்ளவர் தம் பெருமானை அமரர்கட்கு
அருமை ஒழிய அன்று ஆர்அமுது ஊட்டிய அப்பனைப்
பெருமை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
வருமையும் இம்மையும் நம்மை அளிக்கும் பிராக்களே.–3-7-5-

ப்ரஹ்ம ஈஸாநாதி சர்வ தேவர்களுக்கும் ஈஸ்வரனாய் அம்ருத ப்ரத நாதிகளாலே-அவர்களுக்கு ரக்ஷகனாய் இருந்த
அவனுடைய இப்பெருமையைப் பிதற்றும் அவர் கண்டீர் சர்வ காலமும் நமக்கு ரக்ஷகரான ஸ்வாமிகள் என்கிறார் –

—————————————————

அளிக்கும் பரமனைக் கண்ணனை ஆழிப் பிரான் தன்னைத்
துளிக்கும் நறுங்கண்ணித் தூமணி வண்ணன் எம்மான்தன்னை
ஒளிக்கொண்ட சோதியை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
சலிப்பின்றி யாண்டு எம்மைச் சன்ம சன்மாந்தரம் காப்பரே.–3-7-6-

தேவ மனுஷ்யாதி ரூபேண அவதீர்ணனாய்–சர்வ ஜகத் ரக்ஷகனாய் -சங்க சக்ராதி திவ்ய ஆயுத தரனாய் -திவ்ய மால்ய உபசோபிதனாய்
ஹேய ப்ரத்ய நீகனாய் -நிரதிசய தேஜோ விசிஷ்டானாய் இருந்த எம்பெருமானை உள்ளத்துக் கொள்ளுமவர் கண்டீர்
ஒரு சலனம் இல்லாத படி ஆண்டு எம்மைச் ஜன்மம் சன்மாந்தரம் காப்பார் -என்கிறார் –

——————————————————–

சன்ம சன்மாந்தரம் காத்து அடியார்களைக் கொண்டு போய்த்
தன்மை பெறுத்தித் தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனைத்
தொன்மை பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
நன்மை பெறுத்து எம்மை நாள் உய்யக் கொள்கின்ற நம்பரே.–3-7-7-

ஜென்மங்கள் தோறும் இந்த லோகத்தில் தானும் வந்து பிறந்து அருளி ஆஸ்ரிதரை ரஷித்து பின்னை அவர்களைக் கொண்டு போய் அங்குசித ஞானராக்கித்
தன் தாளிணைக் கீழ்க் கொள்ளும் அப்பனுடைய இந்த ஸ்வாபாவிகமான குணத்தைப் பிதற்ற வல்லாரைப் பிதற்றுமவர் கண்டீர்
ஸ்வ சேஷதைக ரதித்வ சம்பத்தை நமக்குத தந்து அத்தை நித்ய சித்தமாக்குவர் -என்கிறார் –

—————————————————

நம்பனை ஞாலம் படைத்தவனைத் திரு மார்பனை
உம்பர் உலகினில் யார்க்கும் உணர்வு அரியான் தன்னைச்
கும்பி நரகர்கள் ஏத்துவரேலும் அவர் கண்டீர்
எம்பல் பிறப்பிடைதோறு எம் தொழு குலம் தாங்களே.–3-7-8-

சர்வ ஸ்வாமியாய் -ஜகத் ஸ்ரஷ்டாவாய்–ஸ்ரீ யபதியாய்-ப்ரஹ்மாதிகளுக்கு வாங் மனசா அபரிச்சேதய மஹிமானாய் இருந்தவனை
அநந்ய பிரயோஜனராய்க் கொண்டு ஏத்துவார் கும்பீ நரகயாதன அனுபவ அனுகுண பாபங்களைப் பண்ணினாரே யாகிலும்
அவர் கண்டீர் எம் பல் பிறப்பிடை தோறும் எம் தொழு குலம் தங்கள் -என்கிறார் –

—————————————–

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழ் இழிந்து எத்தனை
நலந்தான் இலாத சண்டாள சண்டாளர்கள் ஆகிலும்
வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு ஆள் என்று உள்
கலந்தார் அடியார் தம்மடியார் எம் அடிகளே.–3-7-9-

வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கு அடிமை செய்யும் இதுவே பிரயோஜனமாக ஆஸ்ரயிப்பார்
ஜாதி யாசாராதிகளால் எத்தனையேனும் தண்ணியரே யாகிலும் அவர் அடியார் நமக்கு ஸ்வாமிகள் -என்கிறார் –

—————————————-

அடி ஆர்ந்த வையம் உண்டு ஆலிலை அன்ன வசஞ்செயும்
படியாதும் இல் குழவிப்படி எந்தை பிரான் தனக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியார் தமக்கு
அடியார் அடியார் தம்மடியார் அடியோங்களே.–3-8-10-

இந்த லோகத்தை அளந்து அருளி உண்டு அருளி ஆலிலையில் கண் வளர்ந்து அருளின அவனுடைய
காருண்ய சவ்ந்தார்யாதி குணங்களுக்குத் தோற்று அடிமையாய் இருப்பார்
அடியார் தம் அடியார் அடியார் தமக்கு அடியார் அடியார் தம் அடியார் அடியோங்கள் -என்கிறார் –

———————————————

அடி ஓங்கு நூற்றுவர் வீய அன்று ஐவர்க்கு அருள்செய்த
நெடியோனைத் தென் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அடி ஆர்ந்த ஆயிரத்துள் இவை பத்து,அவன் தொண்டர் மேல்
முடிவு ஆரக் கற்கில் சன்மம் செய்யாமை முடியுமே.–3-8-11-

பாண்டவர் பக்கல் உள்ள நிரவதிக வாத்சல்யத்தாலே தத் விரோதிகளாய் ஐஸ்வர்ய பல தர்ப்பித்தரான துர்யோத நாதிகளை நிரசித்து அருளின எம்பெருமானுடைய
வாத்சல்ய சவ்சீல்ய காருண்ய சவ்ந்தர்ய சவ்கந்தய சவ்குமார்யாத் அஸந்கயேய கல்யாண குணங்களுக்குத் தோற்று அடிமையாய் இருக்கும்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் யாரேனும் ஆகிலும் அவர்களுக்கு அடிமை பரம ப்ராப்யம் என்று சொன்ன இத்திருவாய் மொழியை ஆரக் கற்க வல்லராகில்
அவர்களுடைய பாகவத சேஷதைகரதித்வ விரோதிகள் எல்லாம் போம் -என்கிறார் –

————————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -3-6-

November 12, 2017

செய்ய தாமரைக் கண்ணன் -பிரவேசம் –
ஆறாம் திருவாய் மொழியில் -கீழ் சேஷத்வ ஸாரஸ்யத்தால் பிறந்த ப்ரீதி விகாரம் உத்தேச்யம் என்று அருளிச் செய்தவர்
அந்த இனிமை இல்லாமையால் அவிகிருதரான சம்சாரிகளுக்கும் பகவச் சேஷத்வத்தை உபதேசிப்பதாக
சேஷியினுடைய அர்ச்சாவதார பர்யந்தமான சவ்லப் யத்தை உப பாதிப்பதாக நினைத்து
1-அந்த சவ்லப்யத்துக்கு ஊற்றான ஜகத் ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
2-ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய ரக்ஷண அர்த்தமான அவதார கந்தத்வத்தையும்
3-அவதீர்ணனுடைய அதிசயித சேஷ்டிதத்வத்தையும்
4-ஈஸ்வர அபிமானிகளுக்கும் ஆஸ்ரயணீயனான ஸீலாதிசயத்தையும்
5-அவதார திசையிலும் அகில விபூதித்வம் தோற்றும் படியான ஆதிக்யத்தையும்
6-ஆஸ்ரித விஷயத்தில் அதிசயித வாத்சல்யத்தையும்
7-நிரவதிக போக்யதையும்
8-பற்றினாரை நழுவ விடாத பக்ஷபாதத்தையும்
9-சர்வவித பந்துவுமாய்க் கொண்டு ஆஸ்ரிதர் இட்ட வழக்கான அர்ச்சாவதார பாரதந்த்ரியத்தையும்
10-ஆஸ்ரித பரதந்த்ரனான அவன் பக்கல் தமக்குப் பிறந்த அபி நிவேசத்தையும்
அருளிச் செய்து பகவச் சேஷத்வத்தை பிரதிபாதித்து அருளுகிறார் –

——————————————————-

அவதாரிகை –
முதல் பாட்டில் அப்யய பூர்வியான ஸ்ருஷ்ட்டி அவன் இட்ட வழக்கு என்கிறார் –

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்
பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-

செய்ய தாமரைக் கண்ணனாய் –சர்வ ஸ்மாத் பரத்வத்தால் வந்த ஐஸ்வர்ய ஸூசகமாய்ச் சிவந்த தாமரை போலும் கண் அழகை யுடையனாய்க் கொண்டு –
ஸம்ஹ்ருதி சமயத்திலே -அத்தா சராசர க்ராஹணாத் –என்கிறபடியே –
உலகு-ஏழும் உண்ட அவன் கண்டீர்–சகல லோகங்களையும் தனக்குள்ளே ஒடுக்கினஅவன் கிடீர்
ஒரு மூவர் ஆகிய மூர்த்தியே.–அத்விதீயமான ப்ரஹ்ம விஷ்ணு சிவாத்மக மூர்த்தி த்ரயத்தை யுடையனாய்க் கொண்டு
வையம் வானம் மனிசர் தெய்வம்-மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்–பூமியும் -ஊர்த்வ லோகங்களும் -தத் வாசிகளான மனுஷ்யரும் தேவரும்
மற்றும்- திர்யக்குகளும் மற்றும் -ஸ்தாவரங்களும் மற்றும்- பூத பஞ்சகமும்-முற்றும் என்றது – -மஹதாதி சமஷ்டியும் என்றபடி -ஆய் –உண்டாம்படி உபாதானமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்-பட்டு இவை படைத்தான் பின்னும்-அமோகமாகையாலே செவ்விதாய் ஸ்ருஜ்ய பதார்த்தங்கள் அடையச் சூழ்வதாய்க் கொண்டு –
பிரகாசிக்கிற சங்கல்ப ரூப ஞான ஸ்வரூபனாய் ஸ்ருஷ்ட்டி அபி முகனாய்க் கொண்டு தோற்றி -யுக்தமான ஸமஸ்த பதார்த்தங்களையும்
நிமித்தமாய்க் கொண்டு ஸ்ருஷ்டித்து –பின்னும் -அதுக்கு மேலே
மொய்கொள் சோதியோடு ஆயினான் –செறிந்த தேஜோ மயமான திவ்ய தேசத்தோடு கூடியிருந்தவன்

முற்றுமாய் -என்கிற சாமா நாதி காருண்யம் –கார்ய காரண பாவத்தால்
ஞானமாய் -என்கிறவிடம் -குண குணி பாவத்தால்
மூவர் -என்று ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்களைச் சொல்லவுமாம் –

————————————-

அவதாரிகை –
அநந்தரம் -ஸ்ருஷ்டமான ஜகத்தினுடைய ரக்ஷண அர்த்தமாய் அவதார கந்தமான ஷீரார்ணவ ஸாயி ஆஸ்ரயணீயன் -என்கிறார் –

மூவர் ஆகிய மூர்த்தியை முதல்
மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத்
தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை
எரி எழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங்
கண்ணனைப் பரவுமினோ.–3-6-2-

மூவர் ஆகிய மூர்த்தியை –ச ப்ரஹ்மா ச சிவஸ் ஸேந்த்ர-என்கிறபடியே ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்களும் தான் என்னலாம் படி அவர்களுக்கு சரீரியாய் இருப்பானாய் —
சரீர பூதராய்
முதல்–மூவர்க்கும் முதல்வன் தன்னைச்–லோக பிரதானரான அவர்கள் மூவர்க்கும் காரண பூதனாய் –
சாவம் உள்ளன நீக்குவானைத்–அவர்களுக்கு குரு பாதகாதி சாபங்கள் உள்ளவற்றை போக்குமவனாய் –
பின்பு கூப்பிட்ட குரல் கேட்க்கும்படி
தடங் கடற் கிடந்தான் தன்னைத்–இடமுடைத்தான ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளி
தேவ தேவனைத் தென்னிலங்கை-எரி எழச்செற்ற வில்லியைப்–ராவண வதார்த்திகளான தேவர்களுக்கு ஆஸ்ரயணீயனாய்க் கொண்டு அவதரித்து –
லங்கையில் செல்லப் பெறாத அக்னி தலை எடுக்கும் படி சத்ரு நிரசனம் பண்ணின வில்லை யுடையனாம்
பாவ நாசனைப் பங்கயத் தடங்-கண்ணனைப் பரவுமினோ.– சேதுவில் வராதா நாதி முகத்தாலே
பாப விநாசகனான புண்டரீகாக்ஷனை ஸ்தோத்ர முகத்தாலே ஆஸ்ரயிங்கோள் –

——————————————-

அவதாரிகை –
அநந்தரம் -அந்த ஷீரார்ணவ ஸாயியினுடைய ராம அவதாரத்தில் காட்டில் ஆஸ்ரித அர்த்த ப்ரவ்ருத்திகளையுடைய
கிருஷ்ண அவதார சவ்லப் யத்தை அனுசந்தித்து -அவனை ஆஸ்ரயிங்கோள் என்கிறார் –

பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணி
வண்ணனைக் குடக்கூத்தனை
அரவம் ஏறி அலைகடல் அம
ருந் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3-

பரவி வானவர் ஏத்த நின்ற–பூ பார நிரகரண அர்த்தமாக -குண கணங்களைப் பரக்கச் சொல்லி தேவர்கள் ஸ்தோத்ரம் பண்ண –
அவர்களுக்கு சந்நிதி பண்ணி நின்ற
பரமனைப் பரஞ்சோதியைக்–பாரம்யத்தை யுடையனாய் -அவதீர்ண தசையிலே-தேவ தேவேச என்னும்படியான நிரவதிக ஜ்யோதிஸ்ஸை யுடையனாய் –
அவதார சவ்ந்தைர்யத்திலே அகப்பட்ட கோப கன்யகைகளுக்கு
குரவை கோத்த குழகனை –திருக் குரவை முகத்தாலே இஷ்ட விநியோக அர்ஹமாம் படி பவ்யனாய்
மணி-வண்ணனைக் -மாணிக்கம் போலே முடிந்து ஆளலாம் படி ஸூலபமான வடிவை யுடையனாய் –
பெண்களே அன்றியே ஊராக அனுபவிக்கும் படி
குடக்கூத்தனை–குடக் கூத்தாடினவனாய் –
இப்படி ஆஸ்ரித கார்யம் செய்க்கைக்காக
அரவம் ஏறி அலைகடல் அமருந் துயில் கொண்ட அண்ணலை–திருவனந்த ஆழ்வான் மேலே ஏறி தன் சந்நிதியாலே கொந்தளித்து
அலை எறிகிற-கடலிலே -ரக்ஷண சிந்தையிலே பொருந்தின நித்திரையை ஸ்வீகரித்த ஸ்வாமியை
இரவும் நன் பகலும் விடாது என்றும்–ஏத்துதல் மனம் வைம்மினோ.–ஸ்தோத்ர உபயோகத்தாலே நன்றான அஹோ ராத்ர விபாகம் இன்றியே
ஓவாதே என்றும் ஸ்தோத்ரம் பண்ணுகையிலே நெஞ்சை வையுங்கோள் —

விஷய வைலக்ஷண்யத்தாலே இது தானே கொண்டு முழுகும் என்று கருத்து —

——————————————–

அவதாரிகை —
அநந்தரம் -ஈஸ்வர அபிமானிகளுக்கும் ஆஸ்ரயிக்கலாம் படியான ஷீலாதிசயத்தை யுடையவனை ஆஸ்ரயியுங்கோள் என்கிறார்-

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்
கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது
நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முக
னும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4-

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்கின்ற மாயவன் சீர்மையை–உங்கள் நெஞ்சிலே வையுங்கோள் என்று நான் சொல்லுகிற
ஆச்சர்ய குண சேஷ்டிதங்களை யுடையவனுடைய சீரிதான சீலவத்தையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அதுநிற்க; — ப்ரவணரான எம் போல்வார் சொல்லுவது என் –அது கிடைக்க –
நாடொறும் வானவர்-தம்மை ஆளுமவனும் நான்முகனும் சடைமுடி அண்ணலும்–தனித தனியே பதஸ்தரான வானவர் தங்களையும் –
தன்னளவிலே ஆளும்படியான இந்த்ரனும்-சர்வதோ முகமான ஸ்ருஷ்ட் யுபதேசாதிகளைப் பண்ணும் ப்ரஹ்மாவும் –
ஜடா மகுடதாத்வத்தால் வந்த தபோ மஹாத்ம்யத்தாலே லோகத்துக்கு ஈஸ்வரனான ருத்ரனும்
செம்மையால் அவன் பாத பங்கயம்-சிந்தித்து ஏத்தித் திரிவரே.–தங்கள் துரபிமானத்தால் வந்த அடைவுக்கேட்டை விட்டு
சேஷ சேஷி பாவத்தால் வந்த ஆர்ஜவத்தாலே -சேஷியான அவனுடைய நிரதிசய போக்யமான திருவடிகளை
நாள்தோறும் சிந்தித்து ஸ்தோத்ரம் பண்ணி இது தானே யாத்திரையாக வர்த்தியா நிற்பர் –

ஆதலால் அவனை ஆஸ்ரயிங்கோள் என்று கருத்து –

—————————————————-

அவதாரிகை –
அநந்தரம் -அவனுடைய அவதாரம் அகில விபூதியோடும் அவிநா பூதம் -என்கிறார் –

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-

கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன்-ஸ்யாமளமான வடிவை யுடையவனாய் -அதுக்குப் பரபாகமாய்ச் சிவந்த தாமரை போன்ற கண்களை யுடையனாய்
விண்ணோர் இறை-நித்ய ஸூரிகளுக்கு நித்ய அனுபாவ்யமான மேன்மையை யுடையனாய்
சுரியும் பல் கருங்குறிஞ்சி –சுருண்டு -வெடித்து அலகலகாய்-கருகின குழலை யுடையனாய்
எங்கள் சுடர் முடி யண்ணல் –எண்களையும் அடிமை கொள்ளும் உஜ்ஜ்வல்யத்தை யுடைய திரு அபிஷேகத்தை யுடையனான ஸ்வாமியாயுள்ள
கண்ணன் தோற்றமே -கிருஷ்ணனுடைய ஆவிர்பாவமானது –
திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்—சதா கதியாயுள்ள வாயுவோடே கூட -விஸ்தீர்ணமான ஆகாசம் –
கடினையான பூமி – கரை கடவாது கிடந்த கடல்
எரியும் தீயோடு –ஊர்த்வ ஜ்வலநமான அக்னியோடே கூட
வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டி அந்தரகதமான
இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்–சந்த்ர ஆதித்ய ப்ரமுகமான தேவதா வர்க்கம் –மற்றும் என்று மனுஷ்யர் –
மற்றும் என்று திர்யக்குகள் -முற்றுமாய் -என்று ஸ்தாவரமான முற்றுமாய் இருக்கும்

முற்றுமாய் -என்று சாமாநாதி கரண்யம் -விஸ்வ ரூபாத்யாய க்ரமத்திலே கார்ய தாரகத்வாதி நிபந்தமான சரீராத்மா பாவ ப்ரயுக்தம் –
அவனை –ஏத்துதல் மனம் வைம்மின் -3-6-3–என்று அந்வயம் –

——————————–

அவதாரிகை –
அநந்தரம் -ஆஸ்ரித விஷயத்தில் அனவதிக வாத்சல்யத்தை யுடையவனை ஒழிய -எனக்கு
சர்வ காலமும் சர்வ பிரகார உத்தேச்யராய் இருப்பார் வேறு ஒருவரை உடையேன் அல்லேன் -என்கிறார் –

தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற எம்வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.–3-6-6-

அவை-தோற்றக் கேடு-இல்லவன் –இதர சஜாதீயமான உத்பத்தி விநாசங்கள் இல்லாதவனாய் –
உடையான்–கார்ய காலங்களிலே ஆஸ்ரித அர்த்தமான ஆவிர்ப்பவாதி ரோபங்களை உடையனாக
அவன் ஒரு மூர்த்தியாய்ச்–பிராமண ப்ரசித்தனானவன் -லோகத்தில் நடையாடாத அத்விதீயமான ஸ்ரீ நரஸிம்ஹ மூர்த்தியாய்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற –ஹிரண்ய விஷயத்தில் சீற்றத்தோடே -ஸ்வ விஷயத்தில் அருளை பெற்ற
ப்ரஹ்லாதனானவன் தன் திருவடிகளின் கீழே ஒதுங்கும் படி அவனுக்கு ஸூலபனாய் நின்ற
செங்கண்மால்- சிவந்த கண்களையும் –வாத்சல்யத்தையும் யுடையவனாய்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற –கந்த ரூப ரஸ சப்த ஸ்பர்சங்களை யுடைத்தான வஸ்துக்களுக்கு நியாந்தாவாய்க் கொண்டு நின்று
எம்வானவர்-ஏற்றையே அன்றி –எங்களுக்கு ஸூரிகளை அனுபவிப்பிக்கும் மென்மையோடே ஓக்க அனுபாவ்யமானவனையே ஒழிய
மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.–நான் சர்வ காலத்திலும் வேறு ஒருவரை உத்தேச்யமாக உடையேன் அல்லேன்

ஆதலால் -தொழுமின் -என்று மேலே அந்வயம்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் -என்று சிஸூபாலனாகவும் சொல்லுவர் –

————————————————-

அவதாரிகை –
அநந்தரம் -இப்படி நிரதிசய போக்யனாய்க் கொண்டு ஸூலபனானவனை ஆஸ்ரயியுங்கோள -என்கிறார்

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–3-6-7-

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்–சர்வ அவஸ்தையிலும் என் ஆத்மாவுக்கு நிரதிசய போக்ய பூதனாய் –
என்னுடைய ஸ்வரூபத்தோடே செறிய-
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை–கலந்து அத்தாலே -பிரகாசித்தமான தேஜஸ்ஸை யுடையனாய் –
என்னோடு கலக்கைக்கு அடியான வடிவு அழகையும் சேஷ்டிதத்தையும் யுடையனாய்
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்–புஜிக்கும் கண்ணால் சேர்ந்த கனி போலே நிரதிசய போக்யனானவனை
தொழுமின் தூய மனத்தராய்;–ப்ரயோஜனாந்தரத்தாலே நெஞ்சை தூஷியாதே அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயியுங்கோள –
இறையும் நில்லா துயரங்களே.––அனுபவ பிரதிபந்தகமான துரிதங்கள் ஏக தேசமும் நில்லாது –

———————————————-

அவதாரிகை –
அநந்தரம் -ஆஸ்ரிதரை நழுவ விடாத சக்ரவர்த்தி திருமகனை ஒழிய வேறு தஞ்சம் இல்லை -என்கிறார்

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8-

துயரமே தரு துன்ப – –நிஷ்க்ருஷ்ட பரிதாபத்தையே தரக் கடவதான துக்கத்துக்கும் –
இன்ப –துக்க சாத்யத்வ துக்க மிஸ்ரத்வ-துக்கோ தர்க்கத்வ விசிஷ்டம் ஆகையாலே நிஷ்க்ருஷ்ட பரிதாப கரமான ஸூகத்துக்கும்
வினைகளாய்- ஹேது வான பாப ரூபமாயும் புண்ய ரூபமாயும் உள்ள கர்மங்களுக்கு நிர்வாஹகனாய்
அவை அல்லனாய்–அவற்றுக்கு தான் வச்யன் அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் –விஸ்வத ப்ருஷ்டே ஷூ ஸர்வத ப்ருஷ்டே ஷூ -என்கிற உயர்த்தியை யுடைத்தாய் –
நித்தியமாய் -அத்விதீயமான தேஜோ மய திவ்ய தேஹத்தை யுடையனாய்
உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை–கர்ம வஸ்யமான சகல லோகங்களுக்கும் பிரளய ஆபத்து வந்தால் உண்டு -உமிழ்ந்து ரக்ஷிக்குமவனாய்
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை –மோஹிக்கும் படி பிராண அபஹாரம் பண்ணும் யமபடர்க்கு மீட்க அரிய நஞ்சாய்க் கொண்டு
அச்சுதன் தனைத்–ஆஸ்ரிதரை நழுவ விடாத ஸ்வ பாவனான
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–சக்கரவர்த்தித் திரு மகனை ஒழிய மற்றொரு பகவத் வ்யக்தியும் அகப்பட தஞ்சமாக உடையேன் அல்லேன்
தஞ்சம்-ஆபத்துக்கு உறு துணை –

———————————————-

அவதாரிகை –
அநந்தரம் -கீழ் யுக்தமான பரத்வமும் அவதாரங்களும் அஸ்மதாதிகளுக்கு நிலம் அன்று என்று இறாயாதே -பிற்பட்டாருக்கும் ஆஸ்ரயிக்கலாம் படி
ஸூலபமுமாய் -சர்வவித்த பந்துவுமான அர்ச்சாவதாரத்தை சம்சய ரஹிரராய்க் கொண்டு ஆஸ்ரயியுங்கோள் என்கிறார் –

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு -ஓர் அவஸ்தையில் பொகட்டுப் போம் தாயும் தந்தையும் அன்றியே இவன் விடும் அளவிலும் தான் விடாதே –
தஞ்சமாய் -ஹித பரத்வத்தாலும் ப்ரிய பரதத்தாலும் தந்தையும் தாயுமாய் -அவர்களோடே கூட
தானுமாய் -தனக்கு விநாசகரன் அன்றித் தஞ்சமாய்த் தனக்கு நன்மையைப் பார்க்கும் தானுமாய்
அவை அல்லனாய்-அவ்வளவு அல்லாத -சர்வவித்த பந்துவுமாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை–அனுபவ சங்கோச ரஹிதரான நித்ய ஸூரி ஸமூஹத்துக்கு-சத்தாதி ஹேது பூதனாய் –
ப்ரஹ்மாதி மூர்த்தி த்ரயத்திலும் வைத்துக் கொண்டு ப்ரதாநனாவனைப் பற்ற
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் -லௌகிகரான நீங்கள் மேன்மையைக் கண்டு கலங்கி அபரிச்சின்ன மஹிமனானவன் -அவன்
இவன் என்று கூழேன்மின்;–நாம் நினைத்தது வடிவானவன் இவன் -என்கிற உத்கர்ஷ அபகர்ஷ புத்தியால் –
இவன் ஆஸ்ரயணீயனாகக் கூடுமோ கூடாதோ என்று சம்சயியாதே
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–நெஞ்சால் நினைத்து உகந்து அருளுவிக்கப் பட்டவன் யாவன் ஒருவன் அவன்
கடல் போலே அளவிறந்த ஸ்வபாவத்தை யுடைய சர்வேஸ்வரன் ஆகும்

தாமர்ச்சயேத் –என்கிற கணக்கிலே ஆஸ்ரயணீயமான இந்த விக்ரஹத்துக்குள்ளே தாமேவ ப்ரஹ்ம ரூபிணீம் என்று ப்ராப்ய விக்ரஹமும் அந்தர்பூதம் என்று கருத்து
கூழ்ப்பு -சம்சயம்

———————————————————–

அவதாரிகை –
அநந்தரம் -இப்படி ஆஸ்ரித பராதீ நதைக்குச் சிரமம் செய்த கிருஷ்ண வ்ருத்தாந்தத்தை அனுசந்தித்து –
உபதேச அநந்தரம் தாம் அனுபவிக்க ஆசைப்படுகிறார் –

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-

விண்ணவர் கருமாணிக்கம் –பரமபத வாசிகளுக்கு நீல ரத்னம் பிளே அவிகாராகாரனாய்க் கண்டு போக்யனாய்
லீலா விபூதி நிர்வஹணார்த்தமாக
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர்–ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசித பானங்களை யுடையனாய் -ஜாதி ப்ரயுக்தமான மென்மை-குளிர்த்தி -நாற்றங்காலை யுடைய
அநந்தனாகிற அணையின் மேலே -பர பாகத்தால் வந்த தேஜஸ்ஸாலே சர்வாதிகன் என்று தோன்றும்படியான
பேர் ஒளியை யுடையனாய் -அபரிச்சின்ன மஹாத்ம்யத்தை யுடையனாய்
கடல் வண்ணன் கண்ணன்-கடல் போலே அளவிறந்த குணங்களை யுடையனாய் ஸ்ரமஹரமான வடிவையுடைய கிருஷ்ணன்
எனது ஆர்உயிர்-எனக்கு தன்னை ஒழியச் செல்லாதபடி தாரகனாய்க் கண்டு
பண்டு நூற்றுவர்-அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி –
முற் காலத்திலேயே துர்யோத நாதிகள் நூற்றுவரதாய தன் பக்கலிலே தீங்கு நினைத்து வருகிற படையானது நசிக்கும் படியாக
பாண்டவர்கள் ஐவருக்கும் -சர்வ பிரகார ரக்ஷகனாய்
வெஞ்சமத்து அன்று தேர் தடவிய -வெவ்விதான ஸமரத்திலே சத்ருக்கள் மேலிட்டு வந்த அன்று சாரதியாய் நின்று தேரை நடத்தின
பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?––சீலாதிக்கனுடைய ஸூஸ்விமான வெற்றி வீரக் கழல் செறிந்த
திருவடிகளை கண்கள் தம் ஆசை தீரக் காண்பது என்றோ –

————————————————-

அவதாரிகை –
அநந்தரம் -இத்திருவாய் மொழிக்குப் பலமாக பகவத் பக்தி லாபத்தை அருளிச் செய்கிறார் –

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்–கண்கள் அபரோஷிக்கைக்கு அரியனாய் -நெஞ்சுக்கு விஷத்தை அனுபவ விஷய பூதனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்–ப்ருத்வீ பிரதானமான கத்தில் பிராணிகளுக்கு எல்லாம்
அர்ச்சாவதார முகத்தாலே உபகரித்துக் கண்டு ஸூரிகளுக்கு கொடுக்கும் அனுபவத்தைப் பண்ணுவிக்கும் ஸ்வாமியானவனை
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்–வண்டுகள் ஒலியாலே பண் விஞ்சின சோலையை
யுடைத்தான திருவழுதி நாட்டுக்கு நிர்வாஹகராய் -திருநகரிக்கு ஸ்வாமியான ஆழ்வார் அருளிச் செய்த
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால்–பண்ணோடு கூடின ஆயிரத்தில் அர்ச்சாவதார சவ்லப்ய ப்ரகாசகமான இப்பத்தாலே
பத்தராகக் கூடும் பயிலுமினே.–ச மஹாத்மா ஸூ துர்லப-என்னும்படி பெறுதற்கு அரிய பக்தியுடையர் ஆகை ஸித்திக்கும்-
இத்திருவாய் மொழியை அப்யசியுங்கோள் –

இது எழு சீர் ஆசிரிய விருத்தம் –

————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –3-6-

November 12, 2017

செய்ய தாமரைக் கண்ணன் -பிரவேசம் –
பிதற்றுமின் பேதைமை தீர்ந்து -என்று கொண்டு எம்பெருமானை ஆஸ்ரயுங்கள்-என்று
முன்பு சொல்லப் பட்டவர்களைக் குறித்து எம்பெருமானுடைய ஸூலபத்வ காஷ்டயை அருளிச் செய்கிறார் –

————————————————–

செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு
ஏழும் உண்ட அவன் கண்டீர்
வையம் வானம் மனிசர் தெய்வம்
மற்று மற்றும் மற்றும் முற்றுமாய்
செய்ய சூழ் சுடர் ஞானமாய் வெளிப்
பட்டு இவை படைத்தான் பின்னும்
மொய்கொள் சோதியோடு ஆயினான் ஒரு
மூவர் ஆகிய மூர்த்தியே.–3-6-1-

சங்கல்ப சஹஸ்ர ஏக தேசத்தாலே வையம் வானம் மனிசர் தெய்வம்-மற்றும் மற்றும் மற்றும் முற்றுமாய்க் கொண்டு தோற்றுகிற இவற்றுக்கு ஸ்ரஷ்டாவாய்
பின்னையும் தேஜஸ் ப்ரப்ருத்ய அஸந்க்யேய கல்யாண குண விசிஷ்டானாய் -ப்ரஹ்ம ருத்ர அந்தராத்மக அவஸ்தாய சர்வ ஜகாத் ஸ்ருஷ்ட்டி சம்ஹார ஹேது பூதனாய் –
ஸ்வேந ரூபேண அவஸ்தாய சர்வ ஜகத் ரக்ஷகனாய் இருந்த சர்வேஸ்வரன் ஆகிறான் -செய்ய தாமரைக் கண்ணனாய் உலகு-ஏழும் உண்ட அவன் கண்டீர்-
என்று கொண்டு ஸமாச்ரயணீய புருஷன் இன்னான் -என்கிறார் –

—————————————————-

மூவர் ஆகிய மூர்த்தியை முதல்
மூவர்க்கும் முதல்வன் தன்னைச்
சாவம் உள்ளன நீக்குவானைத்
தடங் கடற் கிடந்தான் தன்னைத்
தேவ தேவனைத் தென்னிலங்கை
எரி எழச்செற்ற வில்லியைப்
பாவ நாசனைப் பங்கயத் தடங்
கண்ணனைப் பரவுமினோ.–3-6-2-

இதில் மேலே ஸமாஸ்ரயணீயனான எம்பெருமானுடைய எளிமையைச் சொல்லுகிறது -இப்படி திரிமூர்த்தி ரூபேண அவஸ்திதனாய்-
சர்வ லோக நிர்வாஹகரான ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்களுக்கு நிர்வாஹகனாய் -அவர்களுடைய வேத அபஹார குரு பாதக தைத்ய பீடாத்ய ஆபத் விமோசன கரனாய்
ஷீரார்ணவ நிகேதனாய் -இருந்து வைத்து ஆஸ்ரித ஸமாச்ரயணீயத்வ அர்த்தமாக தசாரதாத்மஜனாய் வந்து அவதீர்ணனாய்–
இப்படி மனுஷ்யனாய் இருக்கச் செய்தே ரூப குண விபவ சேஷ்டிதாதிகளால்-மனுஷ்யரில் காட்டிலும் தேவர்கள் யாதொருபடி விலக்ஷணராய் இருப்பார் –
அப்படியே தேவர்களிலும் விலக்ஷணனாய் ஆஸ்ரித விரோதி நிரசன ஏக போகனாய் -தரிசன மாத்திரத்தாலே
சர்வ ஐந்தூ நாம் சர்வ பாப க்ஷய கரனாய் இருக்கிற எம்பெருமானைப் பரவுமினோ -என்கிறார் –

—————————————————-

பரவி வானவர் ஏத்த நின்ற
பரமனைப் பரஞ்சோதியைக்
குரவை கோத்த குழகனை மணி
வண்ணனைக் குடக்கூத்தனை
அரவம் ஏறி அலைகடல் அம
ருந் துயில் கொண்ட அண்ணலை
இரவும் நன் பகலும் விடாது என்றும்
ஏத்துதல் மனம் வைம்மினோ.–3-6-3-

அயர்வறும் அமரர்களாலே அநவரத சம்ஸ் தூயமானனாய் நிரதிசய தேஜோ விசிஷ்டானாய் நாக பர்யங்க ஸாயியாய் இருந்து வைத்து
வஸூதேவ க்ருஹே அவதீர்ணனாய்-ஆஸ்ரித ஸம்ச்லேஷ ஏக ஸ்வபாவனாய் -ஆஸ்ரித ஸூலபனாய் அதி மநோ ஹாரா திவ்ய சேஷ்டிதனாய் இருந்தவனை
இரவும் நன் பகலும் விடாது என்றும் ஏத்துதல் மனம் வைம்மினோ -என்கிறார் –

—————————————————-

வைம்மின் நும் மனத்து என்று யான் உரைக்
கின்ற மாயவன் சீர்மையை
எம்மனோர்கள் உரைப்பது என்? அது
நிற்க; நாடொறும் வானவர்
தம்மை ஆளுமவனும் நான்முக
னும் சடைமுடி அண்ணலும்
செம்மையால் அவன் பாத பங்கயம்
சிந்தித்து ஏத்தித் திரிவரே.–3-6-4-

இப்படி ஆஸ்ரயித்தால் அவன் நம்மை விஷயீ கரித்து அருளுமோ என்னில் –ஐஸ்வர்ய ப்ரவணராய் அதி ஷூத்ரரான
ப்ரஹ்ம ஈஸா நாதிகளுக்கும் கூட ஒரு தடை இன்றியே ஆஸ்ரயிக்கலாம் படி தன் திருவடிகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கிற
அளவிறந்த நீர்மையை யுடையனாய் இருந்தவன்
அநந்ய ப்ரயோஜனராய்க் கொண்டு ஆஸ்ரயிக்குமவர்களைக் கை விடுமோ -என்கிறார் –

——————————————————–

திரியும் காற்றோடு அகல் விசும்பு திணிந்த மண் கிடந்த கடல்
எரியும் தீயோடு இரு சுடர் தெய்வம் மற்றும் மற்றும் முற்றுமாய்
கரிய மேனியன் செய்ய தாமரைக் கண்ணன் கண்ணன் விண்ணோர் இறை
சுரியும் பல் கருங்குறிஞ்சி எங்கள் சுடர் முடி யண்ணல் தோற்றமே –3-6-5-

ஸ்வ சங்கல்ப அதீனமான வாயு ஆகாசாதி சகல பதார்த்தங்களையும் -கத்வரத்வ விசாலத்வாதி தத் தத் தர்மங்களையும் யுடையனாய்
இந்தீ வரதள ஸ்யாமனாய்– பத்ம பத்ர அஷணனாய் -நீலாளக பந்த பந்துரனாய் -சேஷ சேஷாசன வைநதேய ப்ரப்ருத்ய அஸந்கயேய
நித்ய சித்த பரம ஸூரிபி ஸேவ்யனாய் இருந்த எம்பெருமானை நான் காணப் பெற்றேனாகாதே-என்கிறார்-

——————————————-

தோற்றக் கேடு அவை இல்லவன் உடையான் அவன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத்தோடு அருள் பெற்றவன் அடிக்கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல்ஆகி நின்ற எம்வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.–3-6-6-

ஜென்ம மரணாதி தோஷைர சம்ஸ்ப்ருஷ்டனாய் –ஜென்ம மரணாதி தோஷ யுக்த பதார்த்தங்களுக்கு நியாந்தாவாய் –
ஆச்சர்ய தம ந்ருஸிம்ஹ வேஷ பூஷிதனாய் ஹிரண்ய விஷய நிரவதிக க்ரோதத்தினாலே அத்யந்தம் அநபிபவ நீயனாய் இருக்கச் செய்தே
ஆஸ்ரிதனான ஸ்ரீ ப்ரஹ்லாத ஆழ்வான் கூசாதே சென்று திருவடிகளின் கீழே புகலாம் படி அவனுக்கு ஸூலபனாய் –
தத் ஸம்ச்லேஷ ஜெனித நிரதிசய ப்ரீதியாலே ஆதாம்ராயத லோசனனாய் இருந்த எம்பெருமான்
அயர்வறும் அமரர்களுடைய சர்வ கரணங்களுக்கும் போக்யமானால் போலே என்னுடைய சர்வ கரணங்களுக்கும் போக்யமானான் –
இனி ஆத்மாந்தமாக இவன் அல்லது எனக்கு மற்றொரு ப்ராப்யம் இல்லை -என்கிறார் –

———————————————————-

எழுமைக்கும் எனது ஆவிக்கு இன்அமுதத்தினை எனது ஆருயிர்
கெழுமிய கதிர்ச் சோதியை மணிவண்ணனைக் குடக் கூத்தனை
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியினைத்
தொழுமின் தூய மனத்தராய்;இறையும் நில்லா துயரங்களே.–3-6-7-

எற்றைக்கும் எனக்குப் பரம போக்யமாய் -மத ஸம்ச்லேஷ ஏக போகமாய் இருக்கை யாகிற மஹா குணத்தை யுடையனாய் –
விழுமிய அமரர் முனிவர் விழுங்கும் கன்னற் கனியாய் இருந்து வைத்து எனக்கு ஸூலபனாய் அதி மநோஹர திவ்ய சேஷ்டிதனாய் இருந்த எம்பெருமானை –
அரியன்-என்று கூசாதே தொழுங்கோள -தொழ-உங்களுடைய ஸமஸ்த துக்கங்களும் போம் -என்கிறார் –

———————————————————-

துயரமே தரு துன்ப இன்ப வினைகளாய் அவை அல்லனாய்
உயர நின்றது ஓர் சோதியாய் உலகு ஏழும் உண்டு உமிழ்ந்தான் தனை
அயர வாங்கும் நமன் தமர்க்கு அரு நஞ்சினை அச்சுதன் தனைத்
தயரதற்கு மகன் தனையன்றி மற்றிலேன் தஞ்சமாகவே.–3-6-8-

ஸ்வ அதீன புண்ய பாப ஸ்வரூபனாய் -அகர்ம வசியனாய் -நிரவதிக தேஜோ விசிஷ்டானாய் -சர்வ லோக ரக்ஷகனாய் –
ஸ்வ ஆஸ்ரித ஜனங்களை யம கிங்கரர் பாதியாதபடி அவர்களை ரஷித்து அருளும் ஸ்வபாவனாய் -அவர்களோடே ஆத்மாந்தமாக ஸம்ஸ்லேஷிக்கும்
ஸ்வபாவனாய் இருந்த தயரதற்கு மகன் தன்னை யன்றி மற்றிலேன் தஞ்சமாக -நீங்களும் ஆஸ்ரயியுங்கள் -என்கிறார்

—————————————-

தஞ்சம் ஆகிய தந்தை தாயொடு தானுமாய் அவை அல்லனாய்
எஞ்சல் இல் அமரர் குல முதல் மூவர் தம்முளும் ஆதியை
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் அவன் இவன் என்று கூழேன்மின்;
நெஞ்சினால் நினைப்பான் எவன்?அவன் ஆகும் நீள்கடல் வண்ணனே.–3-6-9-

எம்பெருமான் திருவவதாரம் பண்ணி சர்வ ஸூல பனாய் வர்த்தித்து அருளுகிற காலத்தில் உதவப் பெற்றிலோம் –
ஸ்ரீ வைகுண்டத்திலே எழுந்து அருளி இருக்கும் இருப்பு நமக்குக் கோசாரம் அன்று
ஆனபின்பு எங்கனே அவனை ஆஸ்ரயிக்கும் படி -என்னில் –
ப்ரஹ்ம ருத்ர இந்த்ரர்களுக்கும் த்யேயனாய் –காரண பூதனுமாய் –
அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் ஆஸ்ரிதற்கு சர்வ அவஸ்தைகளிலும் ரக்ஷகனாய்ப் பிதாவுமாய் மாதாவுமாய்த் தானுமாய் மாற்று எல்லாமுமாய் இருந்த
எம்பெருமானை உகந்து அருளப் பண்ணி ஆஸ்ரயிப்பது–நாம் அவனுக்கு ஒரு ரூபத்தை சங்கல்பித்தால் அது அவனுக்கு ரூபமோ
ஸ்ரீ வைகுண்டத்தில் யாதொரு ரூபத்தை யுடையனாய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கும் -அது வன்றோ அவனுக்கு ரூபம்-என்னில்
அஞ்சி நீர் உலகத்துள்ளீர்கள் -இப்படி சம்சயிக்க வேண்டா –
யாது ஒன்றை அவனுக்கு ரூபமாக நினைத்திக்கோள் அத்தையே அவன் திவ்ய ரூபமாகக் கொண்டு அருளும் -என்கிறார் –

——————————————–

கடல் வண்ணன் கண்ணன் விண்ணவர் கருமாணிக்கம் எனது ஆர்உயிர்
பட அரவின் அணைக் கிடந்தபரஞ்சுடர் பண்டு நூற்றுவர்
அடவரும் படை மங்க ஐவர்கட்கு ஆகி வெஞ்சமத்து அன்று தேர்
கடவிய பெருமான் கனை கழல் காண்பது என்று கொல் கண்களே?–3-6-10-

அபரிச்சேதய மஹாத்ம்யனாய் –அயர்வறும் அமரர்களுக்கு போக்யமாய் -நாக பர்யங்க ஸாயியாய் –இருந்து வைத்து
வஸூ தேவ க்ருஹே அவத்தீர்ணனாய் -எனக்கு பிராணனாய் -துர்யோத நாதிகள் ச ஸைன்யமாக நசிக்கும் படி பாண்டவர்களுக்காக
ஸாரத்யே ஸ்திதனாய் இருந்த எம்பெருமானுடைய திருவடிகளை என்றோ என்னுடைய கரணங்கள் காண்பது -என்கிறார் –

——————————————-

கண்கள் காண்டற்கு அரியனாய்க் கருத்துக்கு நன்றும் எளியனாய்
மண்கொள் ஞாலத்து உயிர்க்கெலாம் அருள்செய்யும் வானவர் ஈசனைப்
பண்கொள் சோலை வழுதி வளநாடன் குருகைக்கோன் சடகோபன் சொல்
பண்கொள் ஆயிரத்து இப் பத்தால் பத்தராகக் கூடும் பயிலுமினே.–3-6-11-

அயர்வறும் அமரர்களுக்கு அருள் செய்யுமா போலே ஸ்வ ஆஸ்ரிதரான மனுஷ்யாதிகளுக்கும் அருள் செய்யும் ஸ்வ பாவனாய் இருந்து வைத்து
என்னுடைய கருத்துக்கு நன்றும் எளியனாய் -என் கண்கள் காண்டற்கு அரியனாய் இருந்த எம்பெருமான் விஷயமான
இத்திருவாய் மொழியை வல்லார் வைஷ்ணவராவார் -இத்தைச் சொல்லுங்கள் -என்கிறார் –

—————————————————————

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -3-5-

November 11, 2017

மொய்ம் மாம் பூம் பொழில் — பிரவேசம் –
அஞ்சாம் திருவாய் மொழியில் –கீழ்ச் சொன்ன பகவத் பிரகார தயா சேஷத்வத்தில் தமக்குப் பிறந்த ரசாதிசயத்தாலே அத்யந்த ஹ்ருஷ்டராய்
1-பிரதிசம்பந்தியான சேஷியினுடைய ஆபந் நிவாரகத்வத்தையும் –
2-அஸூரா நிராசன சாமர்த்யத்தையும்
3-ஆர்த்த சம்ரக்ஷணத்தையும்
4-அபிமத விரோதி நிவர்த்தகத்வத்தையும்
5-அவதார ப்ரயோஜனத்தையும்
6-அதிசயித போக்யதையையும்
7-ஆஸ்ரித பக்ஷபாதத்தையும்
8-அர்ச்சாவதார சவ்லப் யத்தையும்
9-உபய விபூதி நாதத்வத்தையும்
10-விலக்ஷண விக்ரஹ யோகத்தையும் —
அனுசந்தித்து -ப்ரீதி ப்ரகரஷத்தாலே சம்ப்ராந்த ராகாதாரை நிந்தித்தும்– உகந்து ஆடுவது பாடுவதாவாரை உகந்தும்–
இந்த சேஷத்வ சாரஸ்யத்தை உபபாதிக்கிறார்

————————————–

அவதாரிகை –
முதல் பாட்டில் -ஆபந்நமான ஆனைக்கு உதவினைப்படியை அனுசந்தித்து ஹர்ஷ விகாரம் பிறவாத அங்கத்தை
யுடையரால் என்ன பிரயோஜனம் யுண்டு -என்று லௌகிகரைப் பார்த்து அருளிச் செய்கிறார் –

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர்,
தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை–செறிந்து உயர்ந்து பூத்த பொழில்களை யுடைத்தான பொய்கையிலே
முதலைச் சிறைப்பட்டு நின்ற–முதலையாலே சிறைப்பட்டு -கரையேற மாட்டாமல் நிஸ் சேஷ்டமாய் நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த–ஆனைக்கு அதின் கையிலே புஷ்பத்தைச் செவ்வி குலையாமல் அலங்கரிக்கை யாகிற அருளைப் பண்ணினவனாய்
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்–அது தன் ஆர்த்தி தீரக் கண்டு -களிக்கும்படியாய்-உகக்கும்படியாய் -ஸ்ரமஹரமாய்
காளமேக நிபமான வடிவையும் உள்ளே இழிந்து எடுத்துக் கரை ஏற்றும்படியான சவ்லப் யத்தையும்
எம்மானைச் சொல்லிப் பாடி- எழுந்தும்–இரண்டுக்கும் அடியான உறவையும் யுடையவனை வாயாலே பேசி– உகப்பாலே பாடி –இருந்த இடத்தில் இராதே —
பறந்தும் துள்ளாதார்-தம்மால் கருமம் என்? –தரையில் கால் பாவாதபடி பறந்து ச சம்ப்ரம ந்ருத்தம் பண்ணாதாருடைய ஸத்பாவத்தால்-என்ன கார்யம் யுண்டு
தண் கடல் வட்டத்து உள்ளீரே!–சொல்லீர்,-குளிர்ந்த கடலால் சூழப் பட்ட பூமியிலே பகவத் அனுபவ அர்த்தமாக யுளரான பீன்கள் சொல்லுங்கோள் –

இங்கு கைம்மா -என்று ஆனையைச் சொல்லிற்று -துதிக்கை ஒழிய அழுந்தின படியை நினைத்து –

—————————————————-

அவதாரிகை –
அநந்தரம் -விபூதியை அழிக்கும் ஆஸூர ப்ரக்ருதிகளை நிரசிக்கும் சாமர்த்தியத்தை அனுசந்தித்து
விக்ருதாராகாதவர்கள் சம்சாரத்தில் மஹா பாபம் மேலிடப் பிறந்தவர்கள் என்கிறார் –

தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத்
தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே.–3-5-2-

தண் கடல் வட்டத்து உள்ளாரைத்–குளிர்த்தியை குணமாக யுடைய கடல் சூழ்ந்த பூமியில் உண்டானவர்களை
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்–தங்கள் சரீர போஷணமே பிரயோஜனமாக கொன்று ஜீவிப்பாராய்
இந்த பாதகத்வத்துக்குக் கிட்ட
திண் கழற்கால் அசுரர்க்குத்–திண்ணிய வீரக் கழலை காலிலே யுடையரான அஸூரர்க்கு
தீங்கு இழைக்கும் திருமாலைப்-வி நாசமாகிற தீமையை நிரூபித்து -அத்தாலே-பிராட்டி உகப்புக்கு விஷயமானவனை
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப் பறந்தும் குனித்தும் –உழலாதார்-பெண்கள் மேலாம் படி பாடி -ஆகாசத்தே கிளம்பி ஆடி -எங்கும் திரியாதார்
மண் கொள் உலகிற்–வல்வினை மோத மலைந்தே.-பிறப்பார்–மண் மிஞ்சின லோகத்தில் கழிக்க வரிய மஹா பாபங்கள் மேலிட்டு
தரையோடு எற்றும் படி பிறக்குமவர்கள்

தடிதல்–சொல்லுதல் –

—————————————————

அவதாரிகை –
அநந்தரம் -ஆர்த்தங்களான கோக்களை ரசித்த படியை அனுசந்தித்து சம்ப்ராந்த ராகாதார் நரக வாசிகளாய் க்லேசிப்பர் -என்கிறார்

மலையை எடுத்துக் கல் மாரி
காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினொடு ஆதனம் தட்டத்
தடு குட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்
கிடந்து உழக்கின்ற வம்பரே.–3-5-3-

மலையை எடுத்துக் கல் மாரி-காத்துப் பசு நிரை தன்னைத்-தொலைவு தவிர்த்த பிரானைச்–கோவர்த்தனத்தை எடுத்து ஆராதன பங்கம் அடியாக
இந்த்ரனால் வந்த கல் மாரியை தொலைந்து அபேக்ஷிக்கவும் அறியாத பசுத்திரளை விநாசம் அணுகாதபடி நீக்கின உபகாரகனை
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்-தலையினொடு ஆதனம் தட்டத்-தடு குட்டமாய்ப் பறவாதார்–பலகாலும் சொல்லி -சர்வ காலமும் -ஓவாதே நின்று –
தரையோடு தலை தட்டும்படியாக கீழது மேலாய் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்-கிடந்து உழக்கின்ற வம்பரே.– அநேக துக்கங்களை யுடைத்தான மஹா நரகத்திலே கரை ஏறாதபடி
அழுந்தி கிடந்தது க்லேசிக்கிற புதுமை மாறாதவர் –

தொலைவு -நாசம்–துலைவு என்றுமாம் / ஆதனம் -நிலம் /தடு கூட்டம் -மேலேதாகை / வம்பர் -புதியராகை / –

—————————————————–

அவதாரிகை –
அநந்தரம் -அபிமத விரோதி நிவ்ருத்தியால் வந்த பிரணயித்வத்திலே விக்ருதர் ஆகாதார் ஜென்மத்தாலே பிரயோஜனம் என் -என்கிறார் –

வம்பு அவிழ் கோதை பொருட்டா
மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன்
சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்
கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
சாது சனங்க ளிடையே?–3-5-4-

வம்பு அவிழ் கோதை பொருட்டா-மால் விடை ஏழும் அடர்த்த–செவ்வியை யுடைத்தாய் மலர்ந்த மாலையை யுடையளான நப்பின்னைப் பிராட்டியைக்
கிட்டுகை யாகிற புருஷார்த்தம் ஹேதுவாக மிகவும் பெரியதான எருது ஏழையும் நெரித்துக் கொன்ற அத்தாலே
செம் பவளத்திரள் வாயன்-சிரீதரன் தொல் புகழ் பாடிக்–சிவந்த பவளம் போலே திரண்ட அதரத்தின் ஸ்புரத்தையை யுடையனாய்க் கொண்டு —
வீர ஸ்ரீ யோடே நின்ற கிருஷ்ணனுடைய ஸ்வா பாவிகமான குணத்தை பாடி
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்-கோகு உகட்டு உண்டு உழலாதார்–தலை கீழாகக் கூத்தாடி அக்ரமமான ஆரவாரத்தை செய்து திரியாதார்
தம் பிறப்பால் பயன் என்னே-சாது சனங்க ளிடையே?–-தங்களுடைய ஜென்மத்தால் சாத்விக சங்கத்தின் நடுவே என்ன பிரயோஜனம் உண்டு

கோகு கட்டுண்கை –ஆரவாரம் கொட்டுகை / கோகு கொட்டு என்றும்- பாடம் –

———————————————————-

அவதாரிகை –
அநந்தரம் -ஆஸ்ரித விரோதி நிராசன அர்த்தமாகிற அவதாரத்துக்கு ஈடுபடாதார் என்ன ஜபாதிகள் பண்ணுவது -என்கிறார் –

சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என் சவிப்பார் மனிசரே?–3-5-5-

சாது சனத்தை நலியும்-கஞ்சனைச் சாதிப்பதற்கு–சாத்விக ஜனமான தேவகீ வஸூ தேவாதிகளை நலியும் கம்சனை நியமிக்கைக்காக –
ஆதி அம் சோதி உருவை-அங்கு வைத்து இங்குப் பிறந்த–பிரதானமாய் -அப்ராக்ருதமான திவ்ய தேஜஸ்ஸை யுடைய
விக்ரஹத்தை பரம பதத்தில் வைத்த கணக்கிலே இவ்விடத்தில் வைத்துக் கொண்டு பிறந்தவனாய்
வேத முதல்வனைப் பாடி-வீதிகள் தோறும் துள்ளாதார்–அஜாயமான -இத்யாதியாலே வேத ப்ரதிபாத்யமான
அவதார வைலக்ஷண்யத்தை யுடையனான பிரதான பூதனை -இவ் வைலஷண்யத்தைப் பாடி எல்லா வீதியிலும் ஆடாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா-என் சவிப்பார் மனிசரே?– சாஸ்த்ர அப்யாஸ யுக்தரான ஞானாதிகர் சந்நிதியிலே மனுஷ்யரைப் போலே என்ன ஜபம் பண்ணுவது –

மனுஷ்யரும் அல்லர் –ஜபமும் நிரர்த்தகம் -என்று கருத்து –

——————————————————

அவதாரிகை –
அநந்தரம் அவதாரத்தில் அவதார கணிதத்திலும் உண்டான போக்யதையை அறிந்து விக்ருதரானவர்களை சர்வஞ்ஞர்-என்கிறார்

மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத்
தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்
கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6-

மனிசரும் மற்றும் முற்றும் ஆய்–ராம கிருஷ்ணாதி ரூபேணவும்-உபேந்த்ராதி ரூபேணவும்-மத்ஸ்ய கூர்மாதி ரூபேணவும் -இப்படி
மனுஷ்யரும் –மற்ற தேவ ஜாதியும் -அல்லாத திர்யக் ஜாதியும் எல்லாமாய்க் கொண்டு
மாயப் பிறவி பிறந்த-தனியன் பிறப்பிலி தன்னைத்–ஆச்சர்யமான அவதாரங்களைப் பண்ணி -சஜாதீயனாய் இருக்கச் செய்தே
அத்யந்த வ்யாவ்ருத்தனான அத்விதீயனாய் -இந்த வ்யாவ்ருத்திக்கு ஹேதுவான கர்மாதீன ஜென்ம ராஹித்யத்தை யுடையனாய் -அவதார அர்த்தமாக
தடங்கடல் சேர்ந்த பிரானைக்–இடமுடைத்தான-ஷீராப்தியிலே கண் வளர்ந்து அருளும் உபகாரகனாய்
கனியைக் -கரும்பின் இன் சாற்றைக்-கட்டியைத் தேனை –அமுதை -கண்டபோதே நுகர வேண்டும் கனியை -கோதற்ற இனிய கருப்பஞ்சாறும் –
சர்வதோமுகமான ரசத்தை யுடைய அதின் கட்டியும் -சர்வ ரஸ சமவாயமான தேனும் -போக்தாவை நித்யனாக்கும் அம்ருதமும் போலே போக்ய பூதனானவனை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்-முழுது உணர் நீர்மையினாரே.–அவதாரத்தில் நிகர்ஷ புத்தியாகிற த்வேஷம் –இன்றியே அவதார ப்ரயுக்த
சீல சவலபி யாதிகளை ஸ்தோத்ரம் பண்ணி -அந்த ப்ரீதியாலே ச சம்ப்ரம ந்ருத்தம் பண்ணுவார் -சகல சாஸ்திரங்களையும் அறிந்த ஸ்வ பாவத்தை யுடையவர்கள்

கனியை -என்று தொடக்கி தேன் என்னும் அளவும் -போஜ்யமாயும் பேயமாயும் காத்யமாயும் லேஹ்யமாயும் உள்ள சதுர்வித போஜ்யத்தையும் சொல்லிற்று ஆகவுமாம் –

—————————————————————–

அவதாரிகை –
அநந்தரம் ஆஸ்ரித பக்ஷபாதத்துக்கு ஈடுபடாதார் பாகவதருக்கு எதுக்கு உறுப்பு -என்கிறார்

நீர்மை இல் நூற்றுவர் வீய
ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த
பரஞ் சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்
உத்தமர்கட்கு என் செய் வாரே!–3-5-7-

நீர்மை இல் நூற்றுவர் வீய–பந்துக்களோடே புஜிக்க வேணும் என்கிற நீர்மை ல்லாத துரியோ நாத்திகள் நூற்றுவரும் நசிக்கும் படி
ஐவர்க்கு அருள்செய்து நின்று–பாண்டவர்கள் ஐவருக்கும் நிரவதிக கிருபையை பண்ணி -கிருஷ்ண ஆஸ்ரயா-கிருஷ்ண பலா கிருஷ்ண நாதஸ் ச பாண்டவர் –
என்னும்படி அவர்களுக்கு சர்வ வித பந்துவுமாய் நின்று
பார் மல்கு சேனை அவித்த–பூமி நிரம்பும்படி விஞ்சின சேனையை -விளக்கு அவித்தால் போலே நசிப்பித்த
பரஞ் சுடரை நினைந்து ஆடி–நிரவதிக உஜ்ஜ்வல்ய யுக்தமான வடிவு அழகை யுடையவனை இக்குண சவ்ந்தர்யா வித்தராய்க் கொண்டு நினைந்து -பிரேம பரவசராய் ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி-நெஞ்சம் குழைந்து நையாதே–ஆனந்த அஸ்ரு பூரணமான கண்களை யுடையராய் நினைத்த நெஞ்சு
கட்டுக் குழைந்து ரோமாஞ்சா திகளாலே சிதில சரீரரகாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்-உத்தமர்கட்கு என் செய் வாரே!––மாம்சோத்தரமாய்-பிடரியில் பிசல் பருக்கும் படி உடம்பை வளர்ப்பார் –
ஞானாதிகராய் -உத்தமரான பாகவதர்களுக்கு எது செய்கைக்கு உறுப்பாவார் –
அநுப யுக்த ஸ்வ பார் -என்று கருத்து –

———————————————–

அவதாரிகை –
அநந்தரம் -திருமலையிலே அர்ச்சாவதாரமாய் ஸூலபனான சர்வேஸ்வரனுடைய நீர்மைக்கு ஈடுபட்ட
ப்ரவ்ருத்திகளை யுடையவர்கள் ஸூரி களாலே ஆதரிக்கப் படுவார்கள் -என்கிறார் –

வார் புனல் அம் தண் அருவி
வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப்
பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படுவாரே.–3-5-8-

வார் புனல் அம் தண் அருவி-வட திரு வேங்கடத்து எந்தை–வீழா நிற்கிற புனலை யுடைத்தாய் தர்ச நீயமாய் குளிர்ந்த
அருவிகளையுடைய தமிழுக்கு வட எல்லையான பெரிய திருமலையில் நிற்கிற ஸ்வாமியுடைய
பேர் பல சொல்லிப் பிதற்றிப்–பித்தர் என்றே பிறர் கூற–ஸ்வரூப ரூப குண விபூதி விஷயமான திரு நாமங்களை பலவும் சொல்லி –
அடைவு கெடப் பிதற்றி -அத்தாலே -பகவத் ப்ரேமம் இல்லாதவர் -அந்நியர் -பித்தர் என்று சொல்லும்படியாக
ஊர் பல புக்கும் புகாதும்–உலோகர் சிரிக்க நின்று ஆடி–மனுஷ்யர் நடையாடுகிற பல ஊர்களிலே புக்கும் -மனுஷ்யர் நடையாடாத இடங்களிலும்
லௌகிகர் சிரிக்கும் படியாக -பரவசராய்க் கொண்டு நின்று நடையாடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்- அமரர் தொழப்படுவாரே.––அபி நிவேசம் விஞ்சி ச சம்ப்ரம ந்ருத்தம் பண்ணுவார்
நித்ய அனுபவரரான ஸூ ரிகளாலே ஆதரிக்கப் படுவார்கள் –

————————————————–

அவதாரிகை –
அநந்தரம் -உபய விபூதி நாதனானவன் விஷயத்தில் யோக ஜெனித பக்தி விகார யுக்தரானவர்கள் அன்றியே அது இல்லாத
அல்லாதார்க்கும் அவர்களைக் கணிசித்தும் அவர்கள் வியாபாரங்களைப் பண்ணுகை கர்த்தவ்யம் -என்கிறார்

அமரர் தொழப் படுவானை
அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு
புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக
அமரத் துணிய வல்லார்கள்
ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
அலற்றுவதே கருமமே .–3-5-9-

அமரர் தொழப் படுவானை-அனைத்து உலகுக்கும் பிரானை–நித்ய ஸூ ரிகளுக்கு நிரதிசய போக்ய பூதனாய் ஸமஸ்த லோகத்துக்கு சேஷியான சர்வேஸ்வரனை
அமர மனத்தினுள் யோகு-புணர்ந்து அவன் தன்னோடு -ஒன்றாக –ஸ்திரமாம் படி மனசிலே யோக முகத்தால் செறிந்து பரம சாம்யா பத்தி பெறும்படி
அமரத் துணிய வல்லார்கள்-ஒழிய அல்லாதவர் எல்லாம்-நிலை நின்ற அத்யாவசாயத்தைப் பண்ண வல்ல பக்தி நிக்நர்கள் அன்றியே –
இந்த யோக ஜன்ய பக்தி கைவராதவர்கள் எல்லாரும்
அமர நினைந்து எழுந்து ஆடி–அலற்றுவதே கருமமே .–இதிலே அமர வேணும் என்று நினைத்து உத்யுக்தராய்
அவர்களைப் போலே ஆடுவது அலறுவது ஆகையே கர்த்தவ்யம் –

பக்திபாகம் பிறவாதார்க்கும் நிஷ் பன்ன பக்திக ப்ரவ்ருத்தியை அநு விதானம் பண்ணுகை பிராப்தம் -என்று கருத்து –

——————————————————-

அவதாரிகை –
அநந்தரம் -கீழ் விலக்ஷண விக்ரஹ விசிஷ்டனானவன் விஷயத்தில் உபாசகருடைய பக்தி பாரவஸ்யத்தை அதில் அந்வயம் இல்லாதாரும்
அநு விதானம் பண்ண பிராப்தம் -என்றார் -இதில் அநந்ய சாதனரான அநந்ய ப்ரயோஜனரும்
பகவத் ப்ராவண்ய பாரவசயத்தாலே விக்ருதராய் வர்த்தியுங்கோள் -என்கிறார்

கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.-3-5-10-

கருமமும் கரும பலனும்-ஆகிய காரணன் தன்னைத்–கர்மங்களும் -தத் சாத்தியமான பலன்களும் தானிட்ட வழக்கமாய்ப்படி ஸமஸ்த காரண பூதனாய்
திரு மணி வண்ணனைச் செங்கண்-மாலினைத் தேவ பிரானை-தன்னையே உபாயமாகவும் உபேயமாகவும் பற்றுவார்க்கு தர்ச நீயமான மாணிக்கம் போன்ற
ஸூப ஆஸ்ரயமான வடிவை யுடையனாய் -அவர்களைப் பூர்ண கடாக்ஷம் பண்ணும் சிவந்த கண்களையும் வாத்சல்யத்தையும் யுடையனாய்
ஸூரிகளுக்குப் போலே அவர்களுக்கு அநு பாவ்யனானவனை
ஒருமை மனத்தினுள் வைத்து-உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்–உபாய உபேயங்களில் பேதம் பிரவாதபடி ஒருமைப்பாட்டை நெஞ்சிலே வைத்து –
இவ்வாகார த்வயத்துக்கு ஈடுபட்டு நெகிழ்ந்த நெஞ்சை யுடையராய் கிளர்ந்து ஆடி
பெருமையும் நாணும் தவிர்ந்து-பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.—தூரமான கார்யமான பெருமையையும் அதடியான மனுஷர் முன்னே யாடும்படி என் என்கிற
லஜ்ஜையையும் தவிர்ந்து -பி பாரவஸ்யம் நிகர்ஷமாக நினைக்கும் அறிவு கேட்டையும் தவிர்த்து அவனுடைய குண கணங்களை அக்ரமமாகப் பிதற்றுங்கோள்

அநந்ய சாதனர்க்கும் சேஷத்வ சாரஸ்ய காரிதமான பாரவஸ்யம் உத்தேச்யம் என்று கருத்து –

——————————————————

அவதாரிகை –
அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக அனுப விரோதி நிவ்ருத்தியை அருளிச் செய்கிறார்-

தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை
அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண்
வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும்
அரு வினை நீறு செய்யுமே.–3-5-11-

தீர்ந்த அடியவர் தம்மைத்-திருத்திப் பணிகொள்ள வல்ல-ஈஸ்வரனுடைய உபாய உபேயங்களில் வியாவசிதராய் இருக்கும் அடியவர்களை
பிரதிபந்தக நிவ்ருத்தி பூர்வகமாக பரபக்தி பரஞாநாதிகளைக் கொடுத்துத் திருத்தி நித்ய கைங்கர்யத்தைக் கொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை-அமரர் பிரானைஎம் மானை–சர்வ சக்தி யுக்தனாகையாலே பரிபூரணமான குண கணங்களை யுடையனாய்
ஆஸ்ரிதரை நழுவ விடாதவனாய் -நித்ய ஸூ ரிகளோடே ஓக்க அடிமை கொள்ளும் சர்வேஸ்வரனை
வாய்ந்த வளவயல் சூழ்தண்-வளம் குரு கூர்ச்சட கோபன்–நன்றான வளப்பத்தை யுடைய வயல் சூழ்ந்து ஸ்ரமஹரமாய்
சர்வ சம்பத் சம்ருத்தமான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும்-அரு வினை நீறு செய்யுமே.–பக்தி பரவசருடைய உத்கர்ஷத்தையும் -அல்லாதாருடைய நிந்தையையும் நேர்ந்து
அருளிச் செய்த அத்விதீயமான ஆயிரத்தில் வைத்துக் கொண்டு இந்த பத்தும்
பகவத் குண அனுசந்தானத்தில் விக்ருதாராகாத படி பண்ணும் மஹா பாபங்களை பஸ்ம சாத்தாம் படி பண்ணும் –

வளங்குருகூர் –வாய்ந்த சடகோபன் -என்றாகவுமாம்
இது அரு சீர் ஆசிரிய விருத்தம் –

—————————————————–

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

பரம காருணிகரான திருக் குருகைப் பிரான் பிள்ளான் அருளிச் செய்த ஆறாயிரப்படி –3-5-

November 11, 2017

மொய்ம் மாம் பூம் பொழில் — பிரவேசம் –
ஏவம் பூதனான எம்பெருமானுடைய ஆஸ்ரித வாத்சல்யாதி கல்யாண குணங்களை அனுபவித்து -அவ்வனுபவ ஜெனிதமான ப்ரீதி அதிசயத்தாலே
அப்ரக்ரு திங்கதராய்க் கொண்டு அக்குணங்களைச் சொல்லிப் பிதற்றி ஊர் பல புக்கும் புகாதும் உலகர் சிரிக்க நின்றாடி –
ஆர்வம் பெருகிக் குனிக்குமவர்களுடைய மாஹாத்ம்யத்தையும் -இப்படிச் செய்யாதாருடைய அவஸ்துத் வாதத்தையும் சொல்லுகிறார் –

———————————-

மொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை
முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மாவுக்கு அருள் செய்த
கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மானைச் சொல்லிப் பாடி
எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் கருமம் என்? சொல்லீர்,
தண் கடல் வட்டத்து உள்ளீரே!–3-5-1-

முதலைச் சிறையிலே அகப்பட்டுத் தன்னால் ஒரு செயல் இன்றிக்கே நின்ற கைம்மாவுக்குத் தன்னளவிலே அருள் செய்த
நிரவதிக ஆஸ்ரித வாத்சல்யத்தை யுடையனான எம்பெருமானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதார்
தம்மால் என்ன பிரயோஜனம் உண்டு -என்று அவர்களை நிந்திக்கிறார் –

———————————————–

தண் கடல் வட்டத்து உள்ளாரைத்
தமக்கு இரையாத் தடிந்து உண்ணும்
திண் கழற்கால் அசுரர்க்குத்
தீங்கு இழைக்கும் திருமாலைப்
பண்கள் தலைக் கொள்ளப் பாடிப்
பறந்தும் குனித்தும் உழலாதார்
மண் கொள் உலகிற் பிறப்பார்
வல்வினை மோத மலைந்தே.–3-5-2-

பர துக்க அஸஹிஷ்ணு தையாலே பர துக்க நிரசன ஏக ஸ்வபாவனாய் இருந்தவனைப் பண்கள் தலைக் கொள்ளப்
பாடிப் பறந்தும் குனித்து உழலாதார் நித்ய சம்சாரிகள் -என்கிறார் –

——————————————————

மலையை எடுத்துக் கல் மாரி
காத்துப் பசு நிரை தன்னைத்
தொலைவு தவிர்த்த பிரானைச்
சொல்லிச் சொல்லி நின்று எப்போதும்
தலையினொடு ஆதனம் தட்டத்
தடு குட்டமாய்ப் பறவாதார்
அலை கொள் நரகத்து அழுந்திக்
கிடந்து உழக்கின்ற வம்பரே.–3-5-3-

உபகாரா நபிஜ்ஞபஸ்வாதி ரக்ஷண ஏக போகத்வம் ஆகிற -மஹா குணத்தை யுடையனானவனை அனுசந்தித்து
அப்ரக்ரு திங்க தராகாதார் யாவர் சிலர் அவர்கள் ரவ்ரவாதி நரக யாதனையை அனுபவிக்கிறார்-கிடீர் -என்கிறார்

——————————————————-

வம்பு அவிழ் கோதை பொருட்டா
மால் விடை ஏழும் அடர்த்த
செம் பவளத்திரள் வாயன்
சிரீதரன் தொல் புகழ் பாடிக்
கும்பிடு நட்டம் இட்டு ஆடிக்
கோகு உகட்டு உண்டு உழலாதார்
தம் பிறப்பால் பயன் என்னே
சாது சனங்க ளிடையே?–3-5-4-

ஸ்ரீதரனாகையாலே நப்பின்னைப் பிராட்டியோடு ஸம்ஸ்லேஷிக்கைக்காக எருது ஏழு அடர்க்கப் பெற்றதனாலுள்ள ப்ரீதி அதிசயத்தினாலே
புதுக் கணித்த திருப் பவளத்தை யுடையவனுடைய இந்த பிரணயித்வாதி குண அனுசந்தான ஜெனித ப்ரீதி அதிசயத்தாலே
அப்ரக்ருதிங்கத ராகாதார் -பகவத் ஏக போகரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் நடுவே என்ன பிரயோஜனத்துக்காகப் பிறந்தார்கள் -என்கிறார் –

——————————————————-

சாது சனத்தை நலியும்
கஞ்சனைச் சாதிப்பதற்கு
ஆதி அம் சோதி உருவை
அங்கு வைத்து இங்குப் பிறந்த
வேத முதல்வனைப் பாடி
வீதிகள் தோறும் துள்ளாதார்
ஓதி உணர்ந்தவர் முன்னா
என் சவிப்பார் மனிசரே?–3-5-5-

சர்வ வேதங்களாலும் சர்வேஸ்வரத் வேந ப்ரதிபாத்யமானனாய் இருந்து வைத்து -ஆஸ்ரித ஜன விரோதி கம்சாதி யஸூர நிரசன அர்த்தமாக
ஸ்வ அசாதாரண திவ்ய ரூப விசிஷ்டானாய்க் கொண்டு இந்த லோகத்தில் மனுஷ்யனாய் வந்து பிறந்த மஹா குணத்தை யுடையனாய் இருந்தவனைப் பாடி
வீதிகள் தோறும் திரியாதார் எத்தனையேனும் அறிவுடையாரே யாகிலும் -அவர்களால் ஒரு பிரயோஜனம் இல்லை -என்கிறார் –

———————————————————-

மனிசரும் மற்றும் முற்றும் ஆய்
மாயப் பிறவி பிறந்த
தனியன் பிறப்பிலி தன்னைத்
தடங்கடல் சேர்ந்த பிரானைக்
கனியைக் கரும்பின் இன் சாற்றைக்
கட்டியைத் தேனை அமுதை
முனிவு இன்றி ஏத்திக் குனிப்பார்
முழுது உணர் நீர்மையினாரே.–3-5-6-

ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விஸஜாதீயனாய்-கர்மாதீன ஜனன ரஹிதனாய் -ஷீரார்ணவ நிகேதநனாய் –ஆஸ்ரித பரித்ராண அர்த்தமாக
ஸ்வ சங்கல்பத்தினாலே பிராகிருத தோஷங்கள் ஒன்றும் கந்தியாமே மனுஷ்யாதி சர்வ யோனிகளிலும் வந்து அவதீர்ணனாய்-
நிரதிசய போக்ய பூதனாய் இருந்தவனை அநஸூ யுக்களாய்க் கொண்டு ஏத்திக் குனிப்பார் யாவர் சிலர் அவர் கிடீர் சர்வஞ்ஞராகிறார் -என்கிறார்

—————————————-

நீர்மை இல் நூற்றுவர் வீய
ஐவர்க்கு அருள்செய்து நின்று
பார் மல்கு சேனை அவித்த
பரஞ் சுடரை நினைந்து ஆடி
நீர் மல்கு கண்ணினர் ஆகி
நெஞ்சம் குழைந்து நையாதே
ஊன் மல்கி மோடு பருப்பார்
உத்தமர்கட்கு என் செய் வாரே!–3-5-7-

பாண்டவர்கள் பக்கலுள்ள வாத்சல்யத்தாலே தத் விரோதிகளான துர்யோத நாதிகளையும் மற்றுமுள்ள பிரதிகூல வர்க்கத்தையும் அடங்க நிரசித்ததுவே
தனக்கு நிரதிசய தேஜஸ்ஸாக இருந்து அருளினவனை நினைத்து நீர் மல்கு கண்ணினாராகி நெஞ்சம் குழைந்து நையாதே -கேவலம்
சரீர போஷகராய் இருப்பார் இந்த ஸ்ரீ வைஷ்ணவர்கள் வர்த்திக்கிற தேசத்திலே என் செய்ய வுளரானார் -என்கிறார்

—————————————————

வார் புனல் அம் தண் அருவி
வட திரு வேங்கடத்து எந்தை
பேர் பல சொல்லிப் பிதற்றிப்
பித்தர் என்றே பிறர் கூற
ஊர் பல புக்கும் புகாதும்
உலோகர் சிரிக்க நின்று ஆடி
ஆர்வம் பெருகிக் குனிப்பார்
அமரர் தொழப்படுவாரே.–3-5-8-

நிரதிசய போக்யமான திருமலையிலே நின்றருளி என்னை அடிமை கொண்ட திருவேங்கடமுடையானுடைய திரு நாமங்களைச் சொல்லிப் பிதற்றி
வைஷ்ணவர்கள் அல்லாதார் பித்தர் என்று சொல்லும்படி மனுஷ்யர் சந்நிதானத்தோடு அசந்நிதானத்தோடு வாசி இன்றிக்கே
லௌகிகர் சிரிக்க அதுவே -உத்தம்பகமாம் படி ச சம்ப்ரம சேஷ்டிதத்தை யுடையராய் அபி நிவேசம் மிகுத்து ஆடுமவர்கள்
அயர்வறும் அமரர்களிலும் ஸ்ரேஷ்டர்–என்கிறார் –

—————————————————–

அமரர் தொழப் படுவானை
அனைத்து உலகுக்கும் பிரானை
அமர மனத்தினுள் யோகு
புணர்ந்து அவன் தன்னோடு ஒன்றாக
அமரத் துணிய வல்லார்கள்
ஒழிய அல்லாதவர் எல்லாம்
அமர நினைந்து எழுந்து ஆடி
அலற்றுவதே கருமமே .–3-5-9-

அயர்வறும் அமரர்கள் அதிஅத்தியாய் சர்வ லோக ஈஸ்வரனாய் இருந்த எம்பெருமானைக் கைவல்ய அர்த்தமாக ஆஸ்ரயிக்கும் அந்த ஷூத்ரரானவர்கள் ஒழிய
அல்லாதவர் எல்லாம் இப்படி எம்பெருமானை அனுசந்தித்து அப்ரக்ரு திங்க தராம்படியாக அவனை ஆஸ்ரயிங்கோள்–என்கிறார் –

——————————————————-

கருமமும் கரும பலனும்
ஆகிய காரணன் தன்னைத்
திரு மணி வண்ணனைச் செங்கண்
மாலினைத் தேவ பிரானை
ஒருமை மனத்தினுள் வைத்து
உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப்
பெருமையும் நாணும் தவிர்ந்து
பிதற்றுமின் பேதைமை தீர்ந்தே.-3-5-10-

புண்ய பாப கர்மங்களுக்கும்–கர்ம பலன்களுக்கும் நியாந்தாவாய் -சர்வ ஜகத் காரணமாய் –நிரதிசய உஜ்ஜ்வல்ய நீல ரத்ன சத்ருச திவ்ய ரூபனாய்
பத்ம பத்ர அஷணனாய் -சேஷ சேஷாசநாத் பரம ஸூரிபிஸ் ஸேவ்யனாய் இருந்த எம்பெருமானை அநந்ய ப்ரயோஜன மனஸ்கராய் –
நிரதிசய பக்தி யுக்தராய் நிரஸ்த அஹங்காரதி தோஷாராய் பகவத் வ்யதிரிக்த விஷய சங்க ரஹிதராய்க் கொண்டு ஏத்துங்கள் -என்கிறார்

—————————————————–

தீர்ந்த அடியவர் தம்மைத்
திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை
அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண்
வளம் குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்த ஓர் ஆயிரத்து இப் பத்தும்
அரு வினை நீறு செய்யுமே.–3-5-11-

தன் திருவடிகளே ப்ராப்யமும் ப்ராபகமும் என்று அத்யாவசித்து இருக்கும் ஆஸ்ரிதரை நிரஸ்த பிரதிபந்தகராக்கி அடிமை செய்வித்துக் கொள்ள வல்ல
ஆர்ந்த புகழை யுடையனாய் அயர்வறும் அமரர்களோடே ஸம்ஸ்லேஷிக்குமா போலே ஆஸ்ரிதரோடு ஸம்ஸ்லேஷிக்கும் ஸ்வபாவனாய் —
எனக்கு ஸ்வாமியாய் இருந்த எம்பெருமானைச் சொன்ன இத்திருவாய் மொழி பகவத் பக்தி விரோதி களைப் போக்கும் -என்கிறார் –

———————————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-